Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. 04 MAR, 2025 | 11:23 AM யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களை பார்வையிடுமாறு இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் தரப்பில் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் நேற்று திங்கட்கிழமை (03) சிறைச்சாலைக்கு நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கக்கோரி இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தொடர் போராட்டம் நடாத்தி வருகின்றனர். இதேநேரம் இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்துமாறு உள்ளூர் மீனவர்களும் கோரிக்கை விடுத்து வருவதனால் அதுதொடர்பில் ஆராயும் நோக்கில் இந்திய மீனவர்களை சிறையில் சென்று சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது 40 நாட்களாக சிறையில் உள்ளபோதும் ஒரேயொரு தடவை மட்டும் குடும்பத்தினருடன் தொலைபேசியில் உரையாடும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. எனவே தொலைபேசியில் உரையாடுவதற்கான அனுமதியை வழங்குவதற்கு உதவுமாறும், சிறைச்சாலையில் இருந்தாலும் வெளியுலக நடப்புகளை அறிந்துகொள்ள செய்திகளை பார்வையிட சிறைக் கூடத்தில் ஓர் தொலைக் காட்சி வசதியினை ஏற்படுத்தி தருமாறு இந்திய மீனவர்கள் தரப்பில் கோரப்பட்டது. https://www.virakesari.lk/article/208224
  2. நாக்அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் - இந்தியா வெற்றி பெற இந்த உத்திகள் கைகொடுக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மார்ச் 2025 கடந்த 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி நாக்அவுட் போட்டிகளில் வென்றதில்லை. கடைசியாக 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் வீழ்த்தியது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் நாளை (மார்ச் 04) ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொள்ள இருக்கிறது. இந்திய அணிக்கு சாதகமான அம்சங்கள் என்ன? காத்திருக்கும் சவால்கள் என்ன? சாதகமான அம்சங்கள் இந்த முறை டி20 உலகக் கோப்பையை வென்று இந்திய அணி வலுவாக இருக்கிறது. ரோஹித் சர்மா தலைமையில் வலுவான சுழற்பந்துவீச்சுப் படை, பேட்டிங் வரிசை என மிகுந்த நம்பிக்கையுடன் இந்திய அணி இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணிக்கு சாதகமாக பல அம்சங்கள் இந்த முறை உள்ளன. சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான துபை மைதானம், அணியில் உள்ள சுழற்பந்துவீச்சாளர்கள், ஆஸ்திரேலிய அணியில் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாதது, சுழற்பந்துவீச்சுக்கு திணறும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஐசிசி தொடர்களில் வல்லவர்கள் முக்கிய வீரர்கள் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபிக்கு ஆஸ்திரேலிய அணி வந்திருந்தாலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக 352 ரன்களை சேஸ் செய்து பேட்டிங்கில் மிரட்டல் விடுத்தது ஆஸ்திரேலியா. அந்தப் போட்டியில் டிராவிஸ் ஹெட் விரைவாகவே ஆட்டமிழந்தநிலையில் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கி தங்களின் பேட்டிங் பராக்கிரமத்தை வெளிப்படுத்தினர். அனுபவம் குறைந்த வீரர்களைத்தான் அந்த அணி சாம்பியன்ஸ் டிராபிக்கு அனுப்பி இருந்தாலும், இதுபோன்ற ஐசிசியின் முக்கியமான தொடர்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்கள் என்பதை நிரூபித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES தோல்விக்கு பழிதீர்க்குமா இந்திய அணி 2011ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் யுவராஜ் சிங்கின் அற்புதமான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணியின் திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியானது. ஆனால் அதன்பின் இந்திய அணியை நாக்அவுட் சுற்றில் வீழ்த்திவந்தது ஆஸ்திரேலிய அணி. 2015 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டம், 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப்போட்டி, 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என அனைத்திலும் இந்திய அணியின் கனவுகளை தகர்த்தது ஆஸ்திரேலிய அணி. ஆனால், அந்தப் போட்டிகளில் எல்லாம் ஆஸ்திரேலிய அணி முழுவலிமையுடன், திறமையான பந்துவீச்சுப்படையுடன், பேட்டிங் வரிசையுடன் இருந்தது. ஆனால், இந்தமுறை ஆஸ்திரேலியா அணி அவ்வாறே இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான். இந்த அம்சத்தைத்தான் இந்திய அணி பயன்படுத்தலாம். ரூ.53 கோடி மதிப்பு, 98 கிலோ; ஐந்தே நிமிடங்களில் திருடப்பட்ட தங்கக் கழிவறை இருக்கை - எப்படி நடந்தது?27 பிப்ரவரி 2025 'வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை' - சமையல், வீட்டை சுத்தப்படுத்துவதில் ஆண், பெண் குழந்தைகளுக்கிடையே பாகுபாடா?27 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப்படம் எப்படி தயாராக வேண்டும்? ஆஸ்திரேலிய அணியிடம் கடந்த 2015 முதல் 2024ம் ஆண்டுவரை அடைந்த தோல்விகளுக்கு எல்லாம் மொத்தமாக பதில் அளிக்கும் களமாக இந்த அரையிறுதியைப் பயன்படுத்த வேண்டும் இந்திய அணி நினைக்கலாம். இந்திய அணியிடம் என்னென்ன உத்திகள் உள்ளன? இந்திய அணியின் வெற்றி பெறுவதற்கு முழுமையாக துணை செய்ய இருப்பது சுழற்பந்துவீச்சுதான். துபையில் நடக்கும் ஆட்டம் என்பதால் முன்னெப்போதும் இல்லாத அளவாக 5 சுழற்பந்துவீச்சாளர்களை இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தேர்வு செய்தது. துபை மைதானம் கருப்பு மண்ணால் உருவாக்கப்பட்டது. இந்த மைதானத்தில் தொடக்கத்தில் 10 ஓவர்கள்வரைதான் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும், அதன்பின் ஆடுகளம் நெகிழ்வுத்தன்மை அடைந்து,பந்து தேயத்தொடங்கியதம், சுழற்பந்துவீச்சாளர்களின் கைகளே ஓங்கும். பேட்ஸ்மேன்கள் ரன் சேர்ப்பது கடினமாக இருக்கும். ஆதலால், ஆட்டத்தின் பெரும்பகுதியை ஆளப்போவது சுழற்பந்துவீச்சாளர்கள்தான் இவர்களை எவ்வாறு பயன்படுத்துவதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது. குறிப்பாக டிராவிஸ் ஹெட்டை தொடக்கத்திலேயே ஆட்டமிழக்கச் செய்தால் வெற்றியை நெருங்குவது எளிதாக அமையும். டிராவிஸ் ஹெட் வலதுகை சுழற்பந்துவீச்சாளர்கள், குறிப்பாக ஆஃப்ஸ்பின்னுக்கு திணறக்கூடியவர் என்பதால், வருண் சக்ரவர்த்தி அல்லது குல்தீப் யாதவை இவருக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டும். சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக இலங்கைக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இலங்கை சுழற்பந்துவீச்சை சாமாளிக்க முடியாமல் திணறினர். ஆதலால், தரமான, துல்லியமான சுழற்பந்துவீச்சை வெளிப்படுத்தினால் ஆஸ்திரேலிய அணியை வீழ்வது உறுதி. ஸெலன்ஸ்கியை அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் மிக தீவிரமாக தாக்கி பேசியது ஏன்? பின்னணியில் உள்ள தந்திரம் இதுவா?2 மார்ச் 2025 காதலனுக்கு தேநீரில் எலி மருந்து கலந்து கொடுத்த காதலி – இன்றைய டாப்5 செய்திகள்3 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES மிஸ்ட்ரி ஸ்பின்னர் - வருண் சக்ரவர்த்தி சாம்பியன்ஸ் டிராபியின் அறிமுக ஆட்டத்திலேயே வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். "மிஸ்ட்ரி ஸ்பின்னர்" என அழைக்கப்படும் வருண் சக்ரவர்த்தியின் சுழற்பந்துவீச்சை புதிதாக களத்துக்கு வரும் பேட்ஸ்மேன் அனுமானித்து ஆடுவது கடினம். ஆடுகளத்தில் பிட்ச்ஆகும் பந்து லெக் ஸ்பின்னாக வருகிறதா அல்லது ஆஃப் ஸ்பின்னாக வருகிறதா என்பதை பந்து நெருங்கிவரும்போதுதான் பேட்ஸ்மேன்களால் கண்டறிய முடிகிறது. மேலும், வருணின் பந்துவீச்சு வேகம் குறைவாக இருப்பதால், பந்து நன்கு டர்ன் ஆகி, பெரிய ஷாட்களை அடிக்க பேட்ஸ்மேன்கள் சரியான இடத்தில் பந்தை பிக் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பெரும்பாலும் கேட்ச் ஆவதற்கு வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் வேரியேஷனோடு பந்துவீசுவதில் வருண் திறமையானவர். ஆதலால், நாளை ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தி இந்திய அணிக்கு கைகொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. டாப் ஆர்டர் ஜொலிப்பது அவசியம் இந்திய அணியின் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒரே போட்டியில் அனைவருமே சிறந்த ஸ்கோரை அடித்து நீண்டகாலம் ஆகிவிட்டது. டாப் ஆர்டரில் யாரேனும் இருவர், அல்லது ஒருவர் மட்டுமே சிறப்பாக ஆடுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள். டாப்ஆர்டரில் இந்த 3 பேட்ஸ்மேன்களும் சிறந்த பங்களிப்பை ரன்களாக வழங்கினாலே ஆட்டத்தின் பெரும்பகுதி இந்திய அணியின் ஆதிக்கத்தின் கீழ்வந்துவிடும். நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 7வது ஓவருக்குள் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்துவிட்டனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 3 பேரும் குறைந்தபட்சம் 30 ஓவர்கள் விளையாடிக் கொடுத்து 200 ரன்களை சேர்த்தால் மிகப்பெரிய ஸ்கோருக்கு இந்திய அணியை அழைத்துச் செல்ல முடியும். அடுத்துவரும் நடுவரிசை வீரர்கள் ஸ்ரேயஸ் ஐயர், கே.எல். ராகுல், அக்ஸர் படேல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு அழுத்தம் குறைந்து, பெரிய ஸ்கோருக்கு இந்திய அணி செல்ல டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடுவது அவசியமாகும். நிலவில் தரையிறங்கிய தனியார் லேண்டர் - என்ன செய்யப் போகிறது?3 மார்ச் 2025 'நிரந்தரமாக காது கேட்காமல் போகலாம்' - இயர்போன், ஹெட்போனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?3 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஆபத்பாந்தவன் ஸ்ரேயஸ் ஐயர் சாம்பியன்ஸ் டிராபியிலும் சரி, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சரி ஸ்ரேயஸ் ஐயரின் பங்களிப்பு சத்தமில்லாமல் அற்புதமாக இருந்து வருகிறது. இந்திய அணி தடுமாறும் நேரங்களில் தாங்கிப் பிடிக்கும் நம்பிக்கையான பேட்ஸ்மேனாக, சூழலுக்கு ஏற்ப ஆடும் பேட்ஸ்மேனாக ஸ்ரேயஸ் ஐயர் இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் நடுவரிசைக்கு தூணாகவும், பேட்டிங்கில் துருப்புச்சீட்டாகவும் இருக்கப்போவது ஸ்ரேயஸ் ஐயரின் ஆட்டமாக இருக்கும். ஆதலால், ஸ்ரேயஸ் ஐயர் நடுவரிசையில் நிலைத்து நின்று ஆடினால் பெரிய ஸ்கோரை பெற முடியும். முதல் 10 ஓவர்களை பயன்படுத்த வேண்டும் இந்திய அணி நாளை நடக்கும் ஆட்டத்தில் 4 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறதா அல்லது 2 வேகப்பந்துவீச்சாளர்கள் 3 சுழற்பந்துவீச்சாளர்கள் என கணக்கில் விளையாடுகிறதா எனத் தெரியவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வருண் சிறப்பாகச் செயல்பட்டதால், 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் விளையாடும் பட்சத்தில் குல்தீப் யாதவுக்குப் பதிலாக வருண் சேர்க்கப்படலாம். வேகப்பந்துவீச்சில் அர்ஷ்தீப், ஷமி இருவரும் விளையாடலாம். இல்லாவிட்டால் நியூசிலாந்துக்கு எதிராக களமிறங்கிய அதே அணி மாற்றமில்லாமல் களமிறங்கும் எனத் தெரிகிறது. துபை ஆடுகளத்தில் முதல் 10 ஓவர்கள் வரை வேகப்பந்துவீச்சுக்கும், பவுன்ஸருக்கும் ஒத்துழைக்கும் என்பதால், அதைப் பயன்படுத்தி இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்துவது அவசியம். அதன்பின் ஸ்விங் இருக்காது என்பதால், முதல் 10 ஓவர்களை ஷமி, அர்ஷ்தீப், ராணா ஆகியோர் பயன்படுத்தி விக்கெட் வீழ்த்துவது அவசியம். கிருஷ்ணரின் 'துவாரகா' நகரம் உண்மையில் இருந்ததா? அகழாய்வில் புதிய தகவல்கள்3 மார்ச் 2025 தமிழ்நாட்டில் ஃபிளாட், வில்லா வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன? 11 கேள்வி - பதில்கள்3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நடுப்பகுதி ஓவர்கள் முக்கியம் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை சுழற்பந்துவீச்சாளர்கள் எடுத்து நடுப்பகுதி ஓவர்களில் திறமையை வெளிப்படுத்த வேண்டும். 20 முதல் 40 ஓவர்கள் வரை ஆஸ்திரேலிய ரன்குவிப்பை கட்டுப்படுத்திவிட்டாலே கடைசி 10 ஓவர்களில் நெருக்கடிக்கு தள்ளப்படுவார்கள். இந்த நடுப்பகுதி 20 ஓவர்களில் விக்கெட்டுகளையும் வீழ்த்தும்பட்சத்தில் ஆட்டம் இந்திய அணி பக்கம் இருக்கும். ஆதலால் நடுப்பகுதி ஓவர்களை பந்துவீசினாலும், பேட் செய்தாலும் சிறப்பாகப் பயன்படுத்துவது அவசியம். ஆஸ்திரேலிய அணியில் முழுநேர சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லை ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஸாம்பா தவிர முழுநேர சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லை. மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட் ஆகியோர் மட்டுமே இருக்கிறார்கள். கூடுதலாக தன்வீர் சங்காவை தேவைப்பட்டால் களமிறக்கலாம். ஆதலால் தேர்ச்சி பெற்ற சுழற்பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியில் இல்லாதது இந்திய அணிக்கு சாதகமான அம்சம். மேத்யூ ஷார்ட் கனுக்கால் காயத்தால் தொடரிலிருந்து விலகியிருப்பது கூடுதல் சாதகம். நடுப்பகுதி ஓவர்கள்தான் முக்கியமானது. இந்த ஓவர்களில் இந்திய அணியைக் கட்டுப்படுத்தும் வகையில் பந்துவீச தேர்ந்த சுழற்பந்துவீச்சாளர்கள் அவசியம். ஆனால், பகுதிநேரப் பந்துவீச்சாளர்களை வைத்திருப்பது எந்த அளவு ஆஸ்திரேலியாவுக்கு கை கொடுக்கும் என்பது தெரியாது. ஸ்மித், ஹெட், மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய அணியில் அனுபவம் மிகுந்த பேட்ஸ்மேன்கள் என்றால் அது ஸ்மித்,ஹெட், மேக்ஸ்வெல், லாபுஷேன் ஆகியோர்தான். இவர்கள் ஓரளவுக்கு இந்திய சுழற்பந்துவீச்சை ஆடக்கூடிய அனுபவம் கொண்டவர்கள். அதிலும் ஆபத்தான டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெலை மட்டும் விரைவாக ஆட்டமிழக்கச் செய்துவிடுவது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும். மற்ற பேட்ஸ்மேன்கள் ஐபிஎல் தொடரில் மட்டுமே அனுபவம் கொண்டவர்கள், இவர்களால் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை ஐசிசி தொடர்களில் கணிக்கவும், எடைபோட முடியாது. இலங்கையில் 5 நிமிடங்களில் மிருகங்களை கணக்கெடுக்கும் திட்டம் - இது சாத்தியமாகுமா?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யுக்ரேனுக்கு ஆதரவாக திரளும் ஐரோப்பிய நாடுகள் - லண்டன் மாநாட்டில் முடிவான 4 அம்ச செயல் திட்டம் என்ன?3 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES அனுபவம் இல்லாத வேகப்பந்துவீச்சு ஆஸ்திரேலிய அணி அனுபவம் இல்லாத வேகப்பந்துவீச்சாளர்களுடன் இந்தத் தொடரை சந்திக்கிறது. ஸ்பென்சர் ஜான்சன், நேதன் எல்லீஸ், இங்கிலிஸ், ஷான் அபாட், பென் வார்சூஸ் என 20 ஒருநாள் போட்டிகளில்கூட விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள். துபை மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதை அறிந்துள்ள ஆஸ்திரேலிய அணி எந்தமாதிரியான வியூகத்தில் களமிறங்கப்போகிறது என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்திய அணிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சு இல்லை என்பது ஆறுதலானது. அதிலும் குறிப்பாக கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க் ஆகியோர் இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய சாதகமான அம்சம். எளிதில் எடைபோட முடியாது ஆஸ்திரேலிய அணி அனுபவம் குறைந்த வீரர்களுடன் களமிறங்கினாலும், ஐசிசி தொடர்களில் ஆஸ்திரேலிய அணி கடந்த காலங்களில் விஸ்வரூபமெடுத்து பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் செயல்படும். ஆதலால் இந்திய பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் எச்சரிக்கையுடனே அணுக வேண்டும். சர்வதேச போட்டிகளில் அதிகமாக ஆடி அனுபவம் இல்லாவிட்டாலும்கூட, உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ள வீரர்களை ஆஸ்திரேலிய அணி களமிறக்கியுள்ளது. 352 ரன்களை எளிதாக சேஸ் செய்துள்ளதால் பேட்டிங்கில் எளிதாக எந்த வீரரையும் எடை போட முடியாது. புதினைப் போல் சிந்திக்கிறாரா டிரம்ப்? தாராளவாத உலக ஒழுங்கு முடிவுக்கு வருகிறதா?- ஓர் ஆய்வு3 மணி நேரங்களுக்கு முன்னர் சிம்ஃபொனி என்றால் என்ன? இளையராஜாவின் முதல் சிம்ஃபொனி லண்டனில் வெளியிடப்படுவது ஏன்?4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு 6-வதுமுறையாக முன்னேறியுள்ளது. இதற்கு முன் 1998, 2000, 2002, 2013, 2017 ஆண்டுகளில் அரையிறுதிவரை இந்திய அணி வந்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை 4 போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளநிலையில் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது, ஆஸ்திரேலிய அணி ஒரு வெற்றியுடன் இருக்கிறது, ஒருபோட்டியில் முடிவு இல்லை. ஒட்டுமொத்த ஐசிசியின் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டி20 தொடர் , டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் என 4 வகையான தொடர்களிலும் இரு அணிகளும் ஏறக்குறைய சிறிய வித்தியாசத்தில்தான் உள்ளன. 38 போட்டிகளில் இரு அணிகளும் மோதிய நிலையில் அதில் இந்திய அணி 16 வெற்றிகளும், ஆஸ்திரேலிய அணி 18 வெற்றிகளும் பெற்றுள்ளன, 4 போட்டிகளில் முடிவில்லை. ஒருநாள் போட்டிகளைப் பொருத்தவரை இரு அணிகளும் 151 போட்டிகளில் இதுவரை ஆடியுள்ளன அதில் ஆஸ்திரேலிய அணி 84 போட்டிகளிலும், இந்திய அணி 57 போட்டிகளிலும் வென்றுள்ளன, 10 போட்டிகளில் முடிவு இல்லை. இந்திய அணி விவரம் ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி ஆஸ்திரேலிய அணி விவரம்: ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), ஷான் அபாட், அலெக்ஸ் கேரெ, பென் வார்சூயஸ், நேதன் எல்லீஸ், பேரேசர் மெக்ருக், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்கஸ் லாபுஷேன், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஆடம் ஜம்பா, கூப்பர் கான்லே - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c9vyg3mdmlmo
  3. யுக்ரேனுக்கு ஆதரவாக திரளும் ஐரோப்பிய நாடுகள் - லண்டன் மாநாட்டில் முடிவான 4 அம்ச செயல் திட்டம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,விக்கி வாங்க் பதவி,பிபிசி நியூஸ் 3 மார்ச் 2025, 06:12 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் போரை முடிவுக்கு கொண்டு வரவும், ரஷ்யாவிடம் இருந்து யுக்ரேனை பாதுகாக்கவும் யுக்ரேனுடன் இணைந்து செயல்பட பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் நான்கு அம்ச திட்டத்தை அறிவித்துள்ளார். பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளை உள்ளடக்கிய கூட்டணியை அமைத்து முயற்சிகளை முன்னெடுப்போம் என்றும், யுக்ரேனுக்கு சார்பாக அமெரிக்காவையும் இருக்கச் செய்ய முயல்வோம் என்றும் அவர் கூறினார். "நாம் இன்று வரலாற்றில் ஒரு முக்கிய கட்டத்தில் இருக்கிறோம்" என்று 18 தலைவர்கள் பங்கேற்ற மாநாட்டின் முடிவில் ஸ்டார்மர் கூறினார். அந்த மாநாட்டில் யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி உள்ளிட்ட பெரும்பாலும் ஐரோப்பாவைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். யுக்ரேன் ஒரு "வலுவான ஆதரவை" உணர்ந்ததாகவும், இந்த மாநாடு " பல காலமாக பார்த்திராத வகையில், ஐரோப்பிய ஒற்றுமையை மிக உயர்ந்த மட்டத்தில் காட்டியது" என்றும் ஸெலன்ஸ்கி கூறினார். வெள்ளை மாளிகையில் யுக்ரேன் அதிபருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே வாக்குவாதம் நடந்த 2 நாட்களுக்குப் பிறகு லண்டனில் இந்த மாநாடு நடைபெற்றுள்ளது. "உண்மையான அமைதி மற்றும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த அமெரிக்காவுடன் ஒத்துழைப்பதற்கான அடிப்படையைக் கண்டறிய நாங்கள் அனைவரும் ஐரோப்பாவில் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்" என்று மாநாட்டுக்குப் பிறகு ஸெலன்ஸ்கி கூறினார். 'ஐரோப்பாவை பாதுகாக்க தலைமுறைக்கான வாய்ப்பு' யுக்ரேன் குறித்த உச்சி மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் பேசியது என்ன? 'யுக்ரேனுக்கு முழு ஆதரவு' உறுதியளித்த பிரிட்டன் பிரதமர் ஸெலன்ஸ்கியை அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் மிக தீவிரமாக தாக்கி பேசியது ஏன்? பின்னணியில் உள்ள தந்திரம் இதுவா? டிரம்ப் - ஸெலன்ஸ்கி மோதல் பற்றி அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் கூறுவது என்ன? ஐரோப்பிய நாடுகள் ஒப்புக் கொண்ட 4 அம்ச செயல் திட்டம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யுக்ரேனை ரஷ்யாவிடமிருந்து பாதுகாக்க ஐரோப்பிய நாடுகள் நான்கு அம்ச திட்டத்திற்கு ஒப்புக் கொண்டதாக பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் கூறினார். தலைவர்களின் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஸ்டார்மர், கூட்டத்தில் 4 அம்சங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டதாகக் கூறினார்: யுக்ரேனுக்கு ராணுவ உதவிகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும், ரஷ்யா மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் எந்தவொரு நீடித்த சமாதானமும் யுக்ரேனின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். எந்தவொரு அமைதிப் பேச்சுவார்த்தையிலும் யுக்ரேன் இருக்க வேண்டும் சமாதான உடன்பாடு ஏற்பட்டால், எதிர்கால படையெடுப்பைத் தடுக்க யுக்ரேனின் தற்காப்பு திறன்களை அதிகரிப்பது யுக்ரேனில் ஒரு உடன்பாட்டை கோரவும், அதற்குப் பின்னர் சமாதானத்தை உத்தரவாதப்படுத்தவும் ஒரு கூட்டணியை கட்டமைப்பது. 5,000 க்கும் மேற்பட்ட வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க பிரிட்டன் ஏற்றுமதி நிதியில் கூடுதலாக 2 பில்லியன் டாலர் வழங்குவதாகவும் ஸ்டார்மர் அறிவித்தார். முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகளில் இருந்து கிடைக்கும் லாபத்தின் மூலம் யுக்ரேனுக்கு கூடுதல் ராணுவ உதவி வழங்க 2.77 பில்லியன் டாலர்கள் கடன் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. "கடந்த கால தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ரஷ்யா எளிதாக மீறக்கூடிய ஒரு பலவீனமான ஒப்பந்தத்தை நாம் ஏற்க முடியாது. அதற்கு பதிலாக எந்தவொரு ஒப்பந்தமும் மீறப்பட முடியாத அளவுக்கு வலிமையானதாக இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார். பிளாஸ்டிக் தாளில் வேக வைத்த இட்லியால் என்ன ஆபத்து? மருத்துவர்கள் விளக்கம்6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கும் ஓட்டோமான் பேரரசின் கடைசி கலீபாவுக்கும் என்ன உறவு? ஒரு ஆவணத்தின் மர்மம்2 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES பிரிட்டன், "தரையில் துருப்புகள், வான்வெளியில் விமானங்கள்" கொண்டு யுக்ரேனுக்கான தனது ஆதரவை உறுதிப்படுத்தும் என்று அவர் கூறினார். "ஐரோப்பா அதிக சுமையை ஏற்க வேண்டும்," என்று கூறிய அவர், இந்த உடன்படிக்கைக்கு அமெரிக்க ஆதரவு தேவைப்படும் என்பதுடன், ரஷ்யாவையும் உள்ளடக்க வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டார். ஆனால் விதிகளை வகுக்க ரஷ்யாவை அனுமதிக்க முடியாது என்றும் கூறினார். "நான் தெளிவாக கூறுகிறேன், நீடித்த அமைதிக்கான அவசர தேவை குறித்து நாங்கள் டிரம்புடன் உடன்படுகிறோம். இப்போது நாம் ஒன்றாக அதனை வழங்க வேண்டும்" என்று ஸ்டார்மர் கூறினார். டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா ஒரு நம்பமுடியாத கூட்டாளியாக உள்ளதா என்று கேட்கப்பட்ட போது, "கடந்த வெள்ளிக்கிழமை நடந்ததை யாரும் பார்க்க விரும்பவில்லை, ஆனால் அமெரிக்கா ஒரு நம்பமுடியாத கூட்டாளி என்பதை நான் ஏற்கவில்லை" என்றார் ஸ்டார்மர். இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிப்பது ஏன்? 8 கேள்விகளும் பதில்களும்2 மார்ச் 2025 பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு கடன் கொடுத்த இந்திய வணிகரைப் பற்றி தெரியுமா?2 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயன் இந்த மாநாட்டில் பிரான்ஸ், போலந்து, ஸ்வீடன், துருக்கி, நார்வே, செக் குடியரசு, டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, ருமேனியா, பின்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் கனடா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயன் கூறுகையில், "ஐரோப்பா மீண்டும் ஆயுதமேந்த" வேண்டிய அவசர தேவை இருப்பதாக தெரிவித்தார். இதே உணர்வுகளை நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவும் வெளிப்படுத்தினார். யுக்ரேன் "போரை தொடர வேண்டியிருக்கும் வரை" அதற்கு தேவையானவற்றை உறுதி செய்ய ஐரோப்பிய நாடுகள் முன் வருவதை இந்த மாநாட்டின் போது காண முடிந்தது என்று கூறினார். கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட யுக்ரேன் தயார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த வெள்ளிக்கிழமை டிரம்ப் மற்றும் ஸெலன்ஸ்கி இடையில் சூடான விவாதம் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்குப் பிறகு, ஸெலன்ஸ்கி சாண்ட்ரிங்ஹாமுக்குச் சென்றார். அங்கு அவர் மூன்றாம் சார்லஸ் மன்னரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவுடன் கனிம வளங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருப்பதாக கூறினார். ஸெலன்ஸ்கியின் வாஷிங்டன் பயணத்தின் போதே இந்த ஒப்பந்தத்தில் யுக்ரேன் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓவல் அலுவலகத்தில் டிரம்புடன் ஏற்பட்ட ஒரு சூடான விவாதத்துக்குப் பிறகு யுக்ரேனிய தூதுக்குழு உடனே புறப்பட்டுவிட்டது. யுக்ரேனின் அரிய கனிம வளங்களை அமெரிக்கா அணுகுவதற்கு வழிவழி செய்யும் வகையில் அது இருந்தது. லண்டன் மாநாட்டைத் தொடர்ந்து, கனிம ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்து பிபிசி கேட்டபோது, அது கையெழுத்திட தயாராக இருப்பதாக ஸெலன்ஸ்கி கூறினார். "சம்பந்தப்பட்ட தரப்புகள் தயாராக இருந்தால் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்," என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,மூன்றாம் சார்லஸ் மன்னரை ஸெலன்ஸ்கி சந்தித்த போது அவருக்கு நல்ல வரவேற்பு வழங்கப்பட்டது. புதினின் ரகசிய ஆயுதம்: ஐரோப்பிய நாடுகளுக்கு கடலுக்கு அடியில் மறைந்துள்ள ஆபத்து1 மார்ச் 2025 சென்னை நீர்நிலைகளில் நச்சுக் கழிவுகளா? ஐஐடி ஆய்வும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மறுப்பும்28 பிப்ரவரி 2025 பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன், பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் மற்றும் ஸெலன்ஸ்கி ஆகியோரின் வாஷிங்டன் பயணங்களுடன் ஒரு வாரம் முழுக்க நிலவிய பரபரப்பை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக இந்த மாநாடு நடைபெற்றது. ஸெலன்ஸ்கியின் வாஷிங்டன் பயணம் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸுடன் ஒரு சூடான கருத்து பரிமாற்றத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது. டிரம்ப் ஸெலன்ஸ்கியை மூன்றாம் உலகப் போர் என்ற பேராபத்துடன் விளையாடுவதாக குற்றம் சாட்டினார். யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாகவும், ரஷ்ய அதிபர் புதின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். யுக்ரேனை தவிர்த்து விட்டு ரஷ்யாவுடன் அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அண்டை நாடான யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பை 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கியவர் புதின் என்றாலும், யுக்ரேன் போரைத் தொடங்கியதாக ஒரு கட்டத்தில் ஸெலன்ஸ்கியை டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8x4g1yerrpo
  4. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பிலும் போட்டியிட தமிழரசுக்கட்சி உத்தேசம் ; விண்ணப்பங்களை 7 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு கோரிக்கை 03 MAR, 2025 | 03:13 PM எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் கொழும்புவாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கொழும்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து இலங்கைத் தமிழரசுக்கட்சி விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத்தேர்தலின்போது கொழும்புவாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழரசுக்கட்சி கொழும்பு மாநகரசபையில் ஆசனங்களைக் கைப்பற்றுவது தொடர்பில் கட்டம் கட்டமாக ஆலோசனை நடைபெறவுள்ளது. இதுகுறித்து கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கொழும்புக்கிளைத் தலைவர் சி.இரத்தினவடிவேல் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கமைய முதற்கட்டமாக எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் பொருட்டு கட்சியின் செயற்பாட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இத்தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புபவர்கள் தமது முழுப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், வட்டாரம், அரசியல் செயற்பாடுகளில் கொண்டிருக்கும் அனுபவம் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியவகையில் செயலாளர், இலங்கைத் தமிழரசுக்கட்சி, இலக்கம் 40, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியின் ஊடாக கட்சியின் தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிவைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்துக் கருத்து வெளியிட்டிருக்கும் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தற்போது நாட்டில் தோற்றம் பெற்றிருக்கும் அரசியல் கலாசாரத்துக்கு ஈடுகொடுக்கும் விதமாகவும், கொழும்புவாழ் தமிழ் மக்களால் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையிலும் கட்சியினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208165
  5. 6 மணி நேரங்களுக்கு முன்னர் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொள்ள புதிய லேண்டர் ஒன்று தரையிறங்கியுள்ளது. இதுவே நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் இரண்டாவது தனியார் லேண்டராகும். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (நாசா) தனியார் நிறுவனங்களுடன் மேற்கொள்ளும் கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக ஃபயர்ஃப்ளை விண்வெளி நிறுவனத்தின் லேண்டர், நிலாவில் "sea of crises" எனப்படும் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இந்தப் பகுதி பூமியிலிருந்து தெரியும் நிலவில் உள்ள ஒரு பெரிய பள்ளமாகும். லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கும் தருணம் காணொளியில்... https://www.bbc.com/tamil/articles/cx2eqgn7w6lo
  6. ஒஸ்கர் விருது விழாவில் பாலஸ்தீன இன அழிப்புக்கு எதிராக குரல் கொடுத்த இயக்குநர்கள் 03 MAR, 2025 | 10:22 AM ஒஸ்கர் விருது விழாவில் ‘நோ அதர் லேண்ட்’ ஆவணப்படத்தின் இயக்குநர்கள் பாலஸ்தீன மக்களின் இன அழிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். 97-வது ஒஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் நோ அதர் லேண்ட் என்ற குறும்படம் சிறந்த குறும்படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தினை யுவால் ஆப்ரஹாம் பேஸல் அட்ராஇ ஹம்தான் பலால் மற்றும் ரேச்சர் ஸோர் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். இவர்களில் ஒருவர் பெண் இயக்குநராவார். விருது மேடையில் அவர்கள் பாலஸ்தீன இன அழிப்புக்கு எதிராக குரல் கொடுத்து கவனம் ஈர்த்தனர். காசா போருக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். இயக்குநர் அட்ரா கூறுகையில் “இந்த உலகம் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான அநீதி குறித்து தீவிர நடவடிக்கைகளுக்கு முற்பட வேண்டுகிறோம். பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் நான் தந்தையானேன். என் மகளுக்கும் என்னைப்போன்றதொரு வாழ்க்கை அமைந்துவிடக் கூடாது என்று நம்புகிறேன். நோ அதர் லேண்ட் குறும்படம் நாங்கள் எதிர்கொள்ளும் கடினமான வாழ்க்கையை பிரதிபலிப்பதோடு ஆண்டாண்டு காலமாக அதை அனுபவித்துக் கொண்டே எப்படி எதிர்த்தும் போராடுகிறோம் என்பதைக் காட்டுகிறது” என்றார். அட்ரா பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும் சமூகநல செயற்பாட்டாளரும் ஆவார். படத்தின் இன்னொரு இயக்குநரான ஆப்ரஹாம் கூறுகையில் “இந்தப் படத்தை நாங்கள் இணைந்து உருவாக்கியுள்ளோம். காரணம் இஸ்ரேல் பாலஸ்தீனமும் இணைந்து குரல் கொடுத்தால் அந்தக் குரல் வலுவானதாக இருக்கும். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்க்கிறோம். காசா பேரழிவையும் அந்த மக்களின் துயரத்தையும் பார்க்கிறோம். அவர்களின் துயர் முடிவுக்கு வர வேண்டும். அக்டோபரில் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய சிறைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். நான் குடிமைச் சட்டத்துக்கு உட்பட்ட நாட்டில் சுதந்திரமாக வாழ்கிறேன். ஆனால் என்னுடன் இந்தப் படத்தை இயக்கிய பஸேல் ராணுவ ஆட்சியின் கீழ் வாழ்கிறார். அது அவர் வாழ்க்கையை சிதைக்கிறது. அதை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. எல்லா பிரச்சினைக்கும் வேறு ஒரு பாதையில் தீர்வு இருக்கிறது. அது அரசியல் தீர்வு. இன ரீதியிலான ஆதிக்க சிந்தைகளை விடுத்து எங்கள் இருநாட்டு மக்களுக்குமான உரிமைகள் வழங்கக்கூடிய தீர்வு அதுவே.” என்றார். ஆப்ரஹாம் இஸ்ரேலிய பத்திரிகையாளர் ஆவார். மேலும் இஸ்ரேல் - பாலஸ்தீன் விவகாரத்தில் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையை விமர்சித்த ஆப்ரஹான் “நாங்கள் ஒன்றிணைந்து வாழ்வதை ஏன் உங்களால் யோசிக்க முடியவில்லை. எனது மக்கள் பாதுகாப்பாக இருந்தால் பேஸலின் மக்கள் சுதந்திரமாக பாதுகாப்பாக இருப்பார்கள்.” என்றார். இஸ்ரேல் - பாலஸ்தீன கூட்டணியில் உருவாக்கப்பட்ட நோ அதர் லேண்ட் இஸ்ரேலிய அரசால் புலம்பெயரும் ஒரு பாலஸ்தீனிய குடும்பத்தைப் பற்றிய கதையாகும். https://www.virakesari.lk/article/208125
  7. Published By: RAJEEBAN 02 MAR, 2025 | 12:13 PM துருக்கியுடன் நாற்பது வருடகாலமாக போரிட்ட குர்திஸ் போராளிகள் அமைப்பான பிகேகே யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளது. சிறையில் உள்ள அதன் தலைவர் அப்துல்லா ஒகலான் ஆயுதங்களை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்து இரண்டு நாட்களின் பின்னர் அந்த அமைப்பு யுத்த நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிகேகே அமைப்பிற்கு நெருக்கமான பிராட் செய்தி நிறுவனம் அமைப்பு யுத்த நிறுத்த அறிவிப்பை முதலில் வெளியிட்டுள்ளது. 1999 முதல் துருக்கியின் சிறையில் வாடும் பிகேகே அமைப்பின் தலைவரை மேற்கோள்காட்டி இந்த யுத்த நிறுத்த அறிவிப்பு குறித்து செய்தி வெளியிட்டுள்ள பிராட் செய்தி நிறுவனம் சமாதான ஜனநாயக சமூகத்தினை ஏற்படுத்துவதற்காக பிகேகே தலைவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று யுத்த நிறுத்தத்தை அறிவிப்பதாக பிகேகே அமைப்பு தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. தாக்குதல் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் எங்கள் படைப்பிரிவினர் ஆயுதத்தை பயன்படுத்த மாட்டார்கள் என பிகேகே அமைப்பு அறிவித்துள்ளது. மத்தியகிழக்கில் அடிப்படை மாற்றங்கள் பல நிகழ்ந்துகொண்டுள்ள சூழ்நிலையிலேயே குர்திஸ் அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. துருக்கியின் அயல்நாடான சிரியாவில் பசார் அல் அசாத் அரசாங்கம் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் அதிகார மறுசீரமைப்பு இடம்பெறுகின்றது, லெபானில் ஹெஸ்புல்லா அமைப்பு பலவீனமடைந்துள்ளது மேலும் காசாவில் இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் போரிடுகின்றன. 1984 இல் ஆரம்பித்த துருக்கி அரசாங்கத்திற்கும் பிகேகே அமைப்பிற்கும் இடையிலான மோதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். 2015 இல் இரு தரப்புபிற்கும் இடையிலான யுத்த நிறுத்தம் முடிவடைந்ததும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஒகலானை தனிமைதீவு சிறையில் சந்தித்த பின்னர் அவரது அறிவிப்பை வெளியிட்ட குர்திஸ் அரசியல்வாதிகள் குர்திஸ் போராளிகள் ஆயுதங்களை கைவிடவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார் என தெரிவித்தனர். இதேவேளை தங்கள் தலைவரின் அறிவிப்பு குர்திஸ்தானிலும் மத்திய கிழக்கிலும் புதிய வரலாற்று செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளதை வெளிப்படுத்துவதாக பிகேகே அமைப்பின் மத்திய குழு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகனிற்கு சாதகமாக அமையலாம். https://www.virakesari.lk/article/208059
  8. தெலுங்கானா சுரங்கத்தில் சிக்கிய 8 பேர் உயிரிழப்பு: 02 MAR, 2025 | 09:38 AM தெலுங்கானாவில் சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலாளர்கள் உயிரிழந்து விட்டனர். அவர்களின் உடல்கள் சேற்றில் புதைந்திருப்பது ரேடார் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது என்று மாநில அமைச்சர் ஜூபல்லி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார். ஸ்ரீசைலம் இடது தண்ணீர் கால்வாய் திட்டத்தில் எஸ் எல்பிசி சுரங்கம் தோண்டப்பட்டது. கடந்த வாரம் சுரங்கத்தின் மேற்கூரை திடீரென சரிந்ததால் 8 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கி கொண்டனர். இவர்களை மீட்க ராணுவம், பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு படை, காவல் துறை என 9 படைகளின் வீரர்கள் இரவு, பகலாக போராடி வருகின்றனர். சுரங்கத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்க ரேடார் கருவிகள், ட்ரோன்கள் உபயோகப்படுத்தப்பட்டன. 13.85 கி.மீ. தூரம் வரை உள்ள சுரங்கப்பாதையில் வெள்ளிக்கிழமை இரவு வரை 13.61 கி.மீ. தொலைவை மீட்புப் படை வீரர்கள் அடைந்தனர். வழி நெடுகிலும் சேறும் சகதியுமாக இருந்தது. தற்போது ஐந்தரை அடி உயரத்தில் சேறு நிறைந்திருக்கிறது. இந்நிலையில் நேற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்தன. தண்ணீரை ஒருபுறம் வெளியேற்றினாலும், மறுபுறம் சுரங்கத்துக்குள் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் மீட்பு பணிகள் தாமதமாகி வருகின்றன. இந்நிலையில், கட்டர்கள் கொண்டு சுரங்கத்தில் பைப்புகளை அகற்றி மீட்புப் பணிகள் தொடர்ந்தன. ரேடார் கருவி மூலம் நேற்று ஸ்கேன் செய்ததில் ஓர் இடத்தில் 4 தொழிலாளர்கள் சேற்றில் புதைந்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து ஸ்கேன் செய்ததில் சற்று தொலைவில் மேலும் 4 பேர் சேற்றில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தெலுங்கானாஅமைச்சர்கள் உத்தம் குமார் ரெட்டி, ஜூபல்லி கிருஷ்ணா ராவ் மற்றும் தலைமை செயலர் சாந்திகுமாரி ஆகியோர் சம்பவ இடத்தில் நேற்று ஆய்வு செய்தனர். அதன் பின்னர் அமைச்சர் ஜூபல்லி கிருஷ்ணா ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுரங்க விபத்து நடந்தது முதல் தற்போது வரை தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் எதிர்கட்சியினர் இதனை தவறாக சித்தரித்து வருகின்றனர். சுரங்கத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழந்துவிட்டனர். ஞாயிற்றுக்கிழமைக்குள் 4 பேரின் சடலங்கள் மீட்கப்படும். மீதியுள்ள நால்வரின் சடலங்கள் சற்று தாமதமாக மீட்கப்படும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அமைச்சர் ஜூபல்லி கிருஷ்ணா ராவ் தெரிவித்தார். சுரங்கத்துக்குள் சிக்கிய தொழிலாளர்களின் உறவினர்கள் சுரங்க வாயிலில் காத்திருக்கின்றனர். அமைச்சரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். https://www.virakesari.lk/article/208036
  9. உண்மை அண்ணை. கருத்து மோதல்கள் என்றால் மட்டும் ஏற்றுக்கொள்ளலாம். கருத்தாளர்களை சீண்டாமல் அவர்களின் கருத்துகள்/எழுத்துகளின் தவறை அவர்கள் விளங்கிக் கொள்ளும் வண்ணம் பதில் எழுதும் போது அவர்களே ஏற்றுக்கொள்ளும் நிலையை உருவாக்கலாம். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கருத்துகளை சொல்லலாம். இவ்வளவு காலமும் இங்கு வாசித்து புரிந்துகொண்டதின் அடிப்படையில் தலைவர் போல சீமான் அவர்கள் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறோமோ?! ஒரு நாளும் அது சாத்தியமில்லை. நாம் எமது மக்களுக்கான பணிகள், சேவைகளில் ஒன்றுபட்டே ஆகவேண்டும்.
  10. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிரிகோர் அட்டானேசியன் பதவி, பிபிசி ரஷ்ய சேவை 54 நிமிடங்களுக்கு முன்னர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு யுக்ரேன் மீது ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சர்வதேச சட்டங்களை மீறிய குற்றத்திற்காக ரஷ்யாவை உலக அளவில் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக நடத்தி வந்தன. தற்போது அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நிலைமையை தலைகீழாக மாற்றியுள்ளார். ரஷ்யாவுடன் மீண்டும் உறவை நிறுவியுள்ள டிரம்ப், ரஷ்யாவை தாக்குதலை தொடங்கிய நாடு என்று அழைக்கவும் அல்லது யுக்ரேனை போரில் பாதிக்கப்பட்ட நாடாக அறிவிக்கவும் மறுத்துள்ளார். வெள்ளிக்கிழமையன்று, டிரம்ப் மற்றும் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி இடையே நடந்த காரசாரமான சந்திப்பின் போது இது மிகவும் பகிரங்கமாக வெளிப்பட்டது. அங்கு அவர்கள் யுக்ரேன் போரைப் பற்றியும் அதை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்பது பற்றியும் வெளிப்படையாக வாதிட்டனர். இதனால்,1990களில் தொடங்கிய " தாராளவாத உலக ஒழுங்கு" அழிந்து கொண்டிருக்கிறது போல சிலருக்கு தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அவ்வாறு நடக்கிறதா? 'ஐரோப்பாவை பாதுகாக்க தலைமுறைக்கான வாய்ப்பு' யுக்ரேன் குறித்த உச்சி மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் பேசியது என்ன? யுக்ரேனுக்கு ஆதரவாக திரளும் ஐரோப்பிய நாடுகள் - பிரிட்டிஷ் பிரதமர் குறிப்பிட்ட 4 அம்ச செயல் திட்டம் என்ன? ஸெலன்ஸ்கியை அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் மிக தீவிரமாக தாக்கி பேசியது ஏன்? பின்னணியில் உள்ள தந்திரம் இதுவா? தாராளவாத மேலாதிக்கத்தின் காலம் 'தாராளவாத உலக ஒழுங்கு' என்ற சொல், உடன்படிக்கைகள், கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச உறவுகளின் அமைப்பை உள்ளடக்கியது. இதன் மையத்தில் சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (UN), அதன் பொது சபை மற்றும் பாதுகாப்பு கவுன்சில் போன்ற அமைப்புகள் உள்ளன. மேலும் 'தாராளவாத உலக ஒழுங்கு' என்பது, உலக வர்த்தக அமைப்பு (WTO), சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்களால் ஆதரிக்கப்படும் தடையற்ற வர்த்தகம் போன்ற குறிப்பிட்ட மதிப்பீடுகளையும் குறிக்கிறது. மேலும் மேற்கத்திய தாராளவாத ஜனநாயக அமைப்பு, அரசாங்கத்தின் சிறந்த மாதிரியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற கருத்தியல் நம்பிக்கையே இதிலுள்ள பொதுவான கருத்தாகும். சர்வதேச சட்ட மீறல்களை ஐக்கிய நாடுகள் பொது சபையின் தீர்மானங்கள் அல்லது சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம். பின்னர், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் பொருளாதார தடைகளை விதிக்கலாம் அல்லது தீவிர சூழ்நிலைகளில் ராணுவ நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளிக்கலாம். நடைமுறையில், பொருளாதாரத் தடைகள் மற்றும் ராணுவத் தலையீடுகள் பெரும்பாலும் ஐ.நாவின் அனுமதியின்றி மேற்கொள்ளப்படுகின்றன. இதை ரஷ்யா நீண்ட காலமாக விமர்சித்து வருகிறது. 2007 மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பேசுகையில், "ஐ.நா. அனுமதித்தால் மட்டுமே ராணுவத்தைப் பயன்படுத்துவது சட்டபூர்வமானதாகக் கருதப்படும். நேட்டோ அல்லது ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றின் துணை அமைப்பாக ஐ.நாவை நாம் மாற்றிவிடக்கூடாது'' என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்தார். 2023 இல் வார்சாவில் பேசிய அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், விதிமுறைகள் அடிப்படையிலான ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடற்ற அமைப்புக்கும் இடையிலான நடக்கும் "சுதந்திரத்திற்கான மாபெரும் போர்" என்று யுக்ரேன் போரை விவரித்தார். யுக்ரேனில் முழுமையான படையெடுப்பை தொடங்கியதன் மூலம், ரஷ்யா பல்வேறு நாடுகளின் பார்வையில் சர்வதேச சட்டத்தை மீறியது மட்டுமல்லாமல், பொதுவாக உலகளாவிய விவகாரங்கள் நிர்வகிக்கப்படும் விதத்தையும் சவால் செய்தது. 2014ல் இருந்து ஐ.நா.வின் ஒப்புதலின்றி, புதின் தானாகவே ராணுவ சக்தியை பயன்படுத்தியுள்ளார். யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு என்பது, பனிப்போருக்குப் பின்னர் விதிமுறைகளின் அடிப்படையிலான ஒழுங்கை வெளிப்படையாக மீறிய மிக மோசமான செயலாக, மேற்கத்திய கண்ணோட்டத்தில் கருதப்படுகின்றது. "மூன்று முக்கியமான ஒழுங்குமுறைக் கொள்கைகள் மீறப்பட்டிருப்பதை நாங்கள் கண்டுள்ளோம்," என்று பிரின்ஸ்டன் பல்கலைக்கழக அரசியல் மற்றும் சர்வதேச விவகாரங்களின் பேராசிரியரான ஜி. ஜான் ஐகென்பெரி, பைனான்சியல் டைம்ஸிடம் தெரிவித்தார். "ஒன்று, பிராந்திய எல்லைகளை மாற்ற நீங்கள் பலத்தை பயன்படுத்தக் கூடாது. இரண்டாவதாக, பொதுமக்களுக்கு எதிரான வன்முறையை போர்க் கருவியாகப் பயன்படுத்தக் கூடாது. மூன்றாவதாக, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்று மிரட்டக்கூடாது. முதல் இரண்டையும் செய்துள்ள புதின், மூன்றாவது அச்சுறுத்தலையும் விடுத்துள்ளார். எனவே இது விதிமுறைகள் அடிப்படையிலான ஒழுங்கிற்கான உண்மையான நெருக்கடியாகும்," என்று அவர் கூறினார். இதற்கு பதிலளித்த ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ், மேற்கத்திய அணுகுமுறை சர்வதேச சட்டங்களையும் ஐ.நா சபையின் விதிமுறைகளையும் பின்பற்றவில்லை என்று தெரிவித்துளார். 1999ல் யுகோஸ்லாவியா மீதான நேட்டோவின் குண்டுவீச்சு, 2003ல் இராக் மீதான அமெரிக்கத் தலைமையிலான படையெடுப்பு மற்றும் 2008ல் கொசோவோ சுதந்திரத்தை அங்கீகரித்தது ஆகியவற்றை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனுமதியின்றி மேற்கத்திய நாடுகளால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எடுத்துக்காட்டுகளாக ரஷ்யா அடிக்கடி சுட்டிக்காட்டுகிறது. மேலும் ஐநா சாசனத்தில் உள்ள அடிப்படைக் கோட்பாடுகள் மீறப்படுவதாகவும் ரஷ்யா கூறுகிறது. பட மூலாதாரம்,REUTERS தாராளவாத உலக ஒழுங்கு குறித்து சமகாலத்தில் இடம்பெற்ற மிக முக்கியமான சோதனைகளில் ஒன்றாக, இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் அமெரிக்காவின் நிலைப்பாடு பார்க்கப்படுகிறது. பைடன் நிர்வாகம் இஸ்ரேலுக்கு ராணுவ ஆதரவை வழங்கியதற்காக பல நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளன. மேலும் பல்லாயிரக்கணக்கான பாலத்தீனர்கள் இறந்தது குறித்து அமெரிக்கா அலட்சியமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றன. "இது மிக வெளிப்படையான பாசாங்குத்தனம், இரட்டை நிலைப்பாடு," என்று துருக்கி நாடாளுமன்ற சபாநாயகர் நுமான் குர்துல்முஷ் வாஷிங்டன் போஸ்ட்டுக்கு அளித்த பேட்டியில் கூறினார். "இது ஒரு வகையான இனவெறியாகும், ஏனென்றால் பாதிக்கப்பட்ட யுக்ரேன் மக்களுக்குச் சமமாக, பாதிக்கப்பட்ட பாலத்தீன மக்களை நீங்கள் ஏற்கவில்லை என்றால், மனிதகுலத்திற்குள் ஒரு வகையான படிநிலையை நீங்கள் உருவாக்க விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். இது ஏற்றுக்கொள்ள முடியாதது."என்றும் அவர் தெரிவித்தார். தாராளவாத உலக ஒழுங்கு' என்பது, "அமெரிக்கா, அமெரிக்காவின் டாலர் மற்றும் அமெரிக்கப் பொருளாதாரம் ஆகியவற்றுடன் இணைந்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலை விட, நேட்டோவும் அதன் கூட்டணிகளும் மேலோங்கி இருக்கின்றன. மொத்தத்தில், இதை அமெரிக்காவின் 'தாராளவாத மேலாதிக்கம்' என்று கருதலாம்'' என்கிறார் ஐகென்பெரி. வங்கதேசத்தில் தொடங்கியுள்ள 'சாத்தான் வேட்டை' என்றால் என்ன? அங்கு பயமும், நிச்சயமற்ற சூழலும் நிலவுவது ஏன்?2 மார்ச் 2025 இலங்கை குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு: கைது உத்தரவை அடுத்து தலைமறைவான போலீஸ் மாஅதிபர்2 மார்ச் 2025 சீர்குலைப்பவராக மாறிய அமெரிக்கா பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,மார்ச் 2022 இல் வார்சாவில் பேசிய முன்னாள் அதிபர் பைடன் தற்போதுள்ள சர்வதேச ஒழுங்கை சவால் செய்ய விரும்பும் நாடுகள் வழக்கமாக "திருத்தல்வாத சக்திகள்" என்று முத்திரை குத்தப்படுகின்றன. அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள், சீனா மற்றும் ரஷ்யாவைக் குறிக்க நீண்ட காலமாக இந்த சொல்லைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் உலக அரங்கில் அமெரிக்க செல்வாக்கைக் குறைக்கும் நோக்கில் இந்நாடுகள் செயல்படுகின்றன என்றும் வாதிடுகின்றனர். ஆனால் சமீப மாதங்களில், அமெரிக்காவே உலகின் முன்னணி திருத்தல்வாத சக்தியாக மாறியுள்ளது என்றும், வர்த்தகம், கூட்டணிகள் முதல் ஜனநாயக ஒற்றுமை, மனித உரிமைகள் பாதுகாப்பு வரை "தாராளவாத உலக ஒழுங்கின் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களையும்" களைவதற்காக டிரம்ப் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என்றும் பேராசிரியர் ஐகென்பெரி கூறுகிறார். "முந்தைய நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை தோல்விகளிலிருந்து, வெளிப்படையாக, கடந்த காலத்திலிருந்து எனது நிர்வாகம் தீர்மானமாக விலகுகிறது" என்று டிரம்ப் சமீபத்தில் கூறினார். அவரது குழுவால் அறிமுகப்படுத்தப்பட்ட பிற தீவிர மாற்றங்களைப் போலல்லாமல், வெளியுறவுக் கொள்கையானது அதிபரின் அதிகாரத்தின் கீழ் வருவதால், நடாளுமன்றத்தாலும், நீதித்துறையாலும் இந்த மாற்றத்தைத் தடுப்பது கடினமாக இருக்கும். மேலும் அமெரிக்க நலன்களின் நோக்கில் அதை வடிவமைத்ததன் மூலம், ரஷ்யாவுடன் நல்லுறவை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நியாயப்படுத்தியுள்ளது. "தொடர்ச்சியான மோதல்கள் ரஷ்யாவிற்கும், யுக்ரேனுக்கும், ஐரோப்பாவிற்கும் மோசமானது என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் மிக முக்கியமாக, இது அமெரிக்காவிற்கு மோசமானது" என்று சமூக ஊடகத்தில் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பதிவிட்டார். இருப்பினும், டிரம்பின் ராஜ்ஜீய உறவு புரட்சி அவரது மிகக் குறைவான ஆதரவை பெற்ற கொள்கையாக உள்ளது. சமீபத்திய கருத்துக் கணிப்பில் அமெரிக்கர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக அவரது குடியேற்றக் கொள்கைகளை ஆதரிப்பதாகத் தெரியவந்தது. அதே சமயம் ரஷ்யா- யுக்ரேன் போர் மற்றும் இஸ்ரேல்-பாலத்தீன மோதல் பற்றிய அவரது நிலைப்பாடு குறைந்த ஆதரவையே பெற்றுள்ளது. இதற்கிடையில், மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள் யுக்ரேனை ஒரு நட்பு நாடாக கருதுகின்றனர், கிட்டத்தட்ட பாதி பேர் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கிக்கு சாதகமான கருத்தை வழங்கியுள்ளனர். யுக்ரேன் போர்: அமெரிக்கா துணையின்றி ஐரோப்பாவால் ரஷ்ய ராணுவத்தை சமாளிக்க முடியுமா?2 மார்ச் 2025 டிரம்ப் - ஸெலன்ஸ்கி சந்திப்பு: கொந்தளிப்பான 10 நிமிடங்களில் என்ன நடந்தது?2 மார்ச் 2025 டிரம்பின் ராஜ்ஜீய உறவு எழுச்சி பட மூலாதாரம்,GETTY IMAGES "பிப்ரவரி 2025 இல், விதிமுறைகளின் அடிப்படையிலான ஒழுங்கை மாற்றக்கூடிய நாடாக இப்போது அமெரிக்காதான் அச்சுறுத்துகிறது" என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ரஷ்யா மற்றும் யூரேசியா ஆய்வுகள் ஆராய்ச்சியாளர் முனைவர் ஜூலி நியூட்டன் கூறினார். இதற்கான ஆதாரமாக, யுக்ரேனின் இயற்கை வளங்கள் மீதான கட்டுப்பாட்டிற்கான டிரம்பின் கோரிக்கைகளை அவர் சுட்டிக்காட்டுகிறார். மேலும் ரஷ்யாவுடனான உறவுகளை வெளிப்படையாக இயல்பாக்கிய விதம், அதிபர் ஸெலென்ஸ்கி மீது பொதுவெளியில் வாக்குவாதம் செய்தது மற்றும் ஐரோப்பாவில் தீவிர வலதுசாரி கட்சிகளை டிரம்பின் கூட்டாளிகள் ஆதரிப்பது ஆகியவற்றையும் குறிப்பிடுகிறார். யுக்ரேன் மீது முழு அளவில் ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய மூன்றாம் ஆண்டு நிறைவு நாளான கடந்த பிப்ரவரி 24 அன்று, ரஷ்யாவின் தாக்குதலையும், யுக்ரேனிய பிரதேசத்தை ஆக்கிரமித்ததையும் கண்டிக்கும் ஐ.நா பொது சபை தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா வாக்களித்தது. இதற்குப் பதிலாக, "ரஷ்யா-யுக்ரேன் மோதலின் மூலம் நிகழ்ந்த துயரமான உயிர் இழப்புகளுக்கு" இரங்கல் தெரிவிக்கும் ஒரு மேலோட்டமான உரையை அமெரிக்கா தூதர்கள் முன்மொழிந்தனர். இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் பொருளாதார உறவுகளை மீட்டெடுப்பது குறித்து புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டிரம்ப் அறிவித்தார். "டிரம்பின் ராஜ்ஜீயபுரட்சி ஹெல்சின்கி சாசனத்தின் கொள்கைகளை சிதைத்து, கூட்டாளிகளின் பார்வையில் அமெரிக்காவை எதிரியாக நிலைநிறுத்துகிறது" என்று நியூட்டன் கூறினார். 1975 ஆம் ஆண்டின் ஹெல்சின்கி உடன்படிக்கை என்பது, அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான உடன்படிக்கை ஆகும். பிராந்திய ஒருமைப்பாடு, எல்லைகளை மீறாத தன்மை மற்றும் ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையீடு செய்யக்கூடாது போன்ற கொள்கைகளை வலுப்படுத்துவதை, இந்த உடன்படிக்கைகள் நோக்கமாகக் கொண்டிருந்தன. "19 ஆம் நூற்றாண்டின் ஏகாதிபத்தியவாதியான புதினைப் போலவே டிரம்ப் சிந்திக்கிறார்" என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ரஷ்யா நிபுணர் செர்கேய் ரட்சென்கோ கூறினார். மேலும் "ஐரோப்பாவிடம் குறிப்பிடத்தக்க பொருளாதார வலிமையும், ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்க தேவையான பொருளாதார வழிகளும் உள்ளன," என்று ரட்செங்கோ குறிப்பிட்டார். "டிரம்ப் புதினுடன் தனது உரையாடலை எவ்வளவு தூரம் எடுத்துச் சென்றாலும், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடனான உறவுகளை இயல்பாக்குவது குறித்து கற்பனை செய்வது கடினம்." 'தாராளவாத உலக ஒழுங்கு' முடிந்துவிட்டதாக இப்போதே அறிவிப்பது சரியானதாக இருக்காது என்று அட்லாண்டிக் கவுன்சிலின் யூரேசியா மையத்தின் ஷெல்பி மேகிட் கூறினார். மேலும் ரஷ்யா மீதான அமெரிக்கத் தடைகள் இன்னும் நடைமுறையில் உள்ளன, மேலும் யுக்ரேனில் ரஷ்யா போரை நிறுத்தினால் மட்டுமே அவை நீக்கப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. "நாடுகளுக்கிடையேயான உறவுகளை இயல்பாக்கும் செயல்முறை மிக விரைவாகவும், ஆபத்தானதாகவும் இருக்கலாம் என்று நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நாம் இன்னும் முழுமையாக அந்த நிலையை எட்டவில்லை," என்று மேகிட் கூறினார். "இறுதியில், உலக ஒழுங்கின் நீடித்த தாக்கம் என்பது, அதற்காக பயன்படுத்தப்படும் வழிமுறைகளை விட, போர் எப்படி முடிவு வருகிறது மற்றும் அமைதி எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பதன் மூலம் தீர்மானிக்கப்படும்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cly23wyd952o
  11. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 3 மார்ச் 2025, 04:50 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இயர்போன் அல்லது ஹெட்போன் இல்லாமல் உங்களால் ஒருநாளைக் கூட கடக்க முடியாதா? 'அப்படியென்றால் உங்களுக்கு நிரந்தர காது கேளாமை பாதிப்பு ஏற்படும்' எனக் கூறுகிறது தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை. பாதுகாப்பற்ற இயர்போன்களின் பயன்பாடு மற்றும் அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளை பொது சுகாதாரத்துறை பட்டியலிட்டுள்ளது. 'இரைச்சல் மூலம் ஏற்படும் செவித்திறன் பாதிப்பை மாத்திரைகள் மூலம் பழைய நிலைக்கு கொண்டு வர முடியாது' என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். இயர்போன் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல் என்ன? ஆய்வு முடிவுகள் என்ன சொல்கின்றன? டீப்சீக் ஏஐ: செயற்கை நுண்ணறிவு துறையில் சீனாவுக்கு நிகராக இந்தியா வளர முடியுமா? செவ்வாய் மற்றும் நிலாவில் மனிதன் குடியேற சென்னை ஐஐடியின் இந்த ஆய்வு எவ்வாறு உதவும்? பிரபஞ்சத்தின் மிகப்பெரிய, பிரமாண்ட கட்டமைப்பு கண்டுபிடிப்பு - உள்ளே என்ன இருக்கிறது? டீப் ஃபேக்: நெருங்கிப் பழகி ரகசியமாக ஆபாசப் படங்களை வெளியிட்ட நண்பன் - தம்பதி செய்தது என்ன? 'செவித்திறன் பாதுகாப்பு' வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம், கடந்த வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 27) அன்று 'செவித்திறன் பாதுகாப்பு' என்ற தலைப்பில் சில வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டிருந்தார். அதில், இயர்போன் மற்றும் ஹெட்போன் பயன்படுத்துவதால் காது கேளாமை எனப்படும் முக்கிய பிரச்னை ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார். ஒலி சாதனங்களைப் பயன்படுத்தி நீண்டநேரம் மற்றும் அதிக அளவில் இசை மற்றும் பிற ஒலிகளைக் கேட்பதன் மூலம் திரும்பப் பெற முடியாத செவித்திறன் இழப்பு ஏற்படலாம் என சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இயர்போன், ஹெட்போன் மற்றும் இயர்பிளக் ஆகியவற்றைப் பயன்படுத்திய பிறகு தற்காலிகமாக செவித்திறனில் மாற்றம் ஏற்படுவதாக மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் செல்வ விநாயகம் கூறியுள்ளார். 'நீண்ட காலம் பாதுகாப்பற்ற ஒலி சாதனங்களைப் பயன்படுத்துவதால் செவித்திறனில் நிரந்தர மாற்றம் ஏற்பட்டு காது கேளாமை ஏற்படும். சிலருக்கு நிரந்தர காது இரைச்சல் ஏற்படும்' என்கிறது தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை. இந்தியாவுக்கும் ஓட்டோமான் பேரரசின் கடைசி கலீபாவுக்கும் என்ன உறவு? ஒரு ஆவணத்தின் மர்மம்2 மார்ச் 2025 புதினின் ரகசிய ஆயுதம்: ஐரோப்பிய நாடுகளுக்கு கடலுக்கு அடியில் மறைந்துள்ள ஆபத்து1 மார்ச் 2025 பட மூலாதாரம்,FB படக்குறிப்பு,செல்வ விநாயகம் பொது சுகாதாரத்துறை சொல்வது என்ன? தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் முக்கியமானவை சில கீழே தரப்பட்டுள்ளன. * தினமும் ஒயர் மூலம் இணைக்கப்பட்ட இயர்போன், புளூடூத், ஹெட்போன், இயர்ப்ளக் பயன்பாட்டை 2 மணிநேரத்துக்கு மேல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். * ஒலி சாதனங்களை பயன்படுத்துவதில் இடைவேளை எடுத்துக் கொள்ள வேண்டும். * சாதாரண அளவில் ஒலி இருந்தாலும் ஒயர் மூலம் இணைக்கப்பட்ட இயர்போன், புளூடூத், ஹெட்போன், இயர்ப்ளக் ஆகியவற்றின் தேவையற்ற பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். இது செவியின் கேட்கும் திறனைக் குறைத்து நிரந்தர காது கேளாமையை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது. * தேவை ஏற்பட்டால் இயர்போன், ஹெட்போன் போன்ற தனிப்பட்ட ஒலி சாதனங்களை 50 டெசிபல் ஒலிக்கு மேல் இல்லாமல் பயன்படுத்த வேண்டும். *பொது இடங்களில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவர்கள், சராசரி ஒலி அளவு 100 டெசிபலுக்கு அதிகமாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். * குழந்தைகள் இணையத்தில் விளையாடும் (online game) விளையாட்டின் நேரத்தை குறைப்பதன் மூலம் அவர்கள் காது அதிக சத்தத்திற்கு ஆட்படுவதை தவிர்க்க முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப்படம் "தூரமாக அமர்ந்து கேட்பது பிரச்னை அல்ல" "தினமும் 6 முதல் 8 மணி நேரம் வரை தூரமாக அமர்ந்து பாடல்களைக் கேட்பது, தொலைக்காட்சி பார்ப்பது போன்றவற்றால் காதில் பாதிப்புகள் வராது." எனக் கூறுகிறார் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை துறையின் இணைப் பேராசிரியர் இளஞ்செழியன். டி.ஜே போன்ற இசைக் கச்சேரி நிகழ்வுகள், ஆன்லைன் விளையாட்டுகள் ஆகியவற்றில் அதிக ஒலிகளைக் கேட்கும் போது காதில் அதிக பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். "உதாரணமாக, மழைத்துளி ஓரிடத்தில் விழுந்து கொண்டே இருந்தால் அந்த இடத்தில் குழி போன்ற பாதிப்பு ஏற்படுவதைப் போலவே காதுக்குள் தொடர்ந்து அதிக ஒலிகளைக் கேட்கும் போது பாதிப்பு ஏற்படும்" என்கிறார் அவர். இதை இரைச்சல் மூலம் ஏற்படும் செவித்திறன் பாதிப்பு (noise induced hearing loss) என்று மருத்துவர்கள் குறிப்பிடுவதாகக் கூறும் இளஞ்செழியன், "இதனை மருந்து, மாத்திரைகள் மூலம் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியாது. அதாவது பாதிப்பு ஏற்பட்டால் சரிசெய்ய முடியாது" என்கிறார். உயிரை பணயம் வைத்து இந்தியா வந்து இவர்கள் சிறுநீரகங்களை விற்பது ஏன்?28 பிப்ரவரி 2025 'இப்போது தவறவிட்டால் 2040ல் தான் தெரியும்': வானில் ஒரே நேரத்தில் அணிவகுக்கும் ஏழு கோள்கள் - 5 கேள்வி பதில்கள்28 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன? இதுதொடர்பாக, பிஎம்ஜே பப்ளிக் ஹெல்த் (BMJ Public Health) என்ற சர்வதேச மருத்துவ இதழ், கடந்த ஆண்டு விரிவான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆன்லைனில் வீடியோ கேம் விளையாடுகிறவர்களின் செவித்திறனில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. பாதுகாப்பற்ற ஒலி அளவுகள் காரணமாக இவை ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது. பாதுகாப்பான ஒலி அளவுகளைத் தாண்டி நீண்டநேரம் அதிக சத்தத்துடன் விளையாடும் போது காது கேளாமை, காது இரைச்சல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாவதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது. சுமார் 50,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இவை தெரியவந்துள்ளதாக பிஎம்ஜே மருத்துவ இதழ் கூறியுள்ளது. ஆன்லைன் விளையாட்டால் என்ன ஆபத்து? "ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடும் நபர்கள், அதிக ஒலியை அடிக்கடி கேட்பதால் செவித்திறன் குறையும் நிலைக்கு உள்ளாவதாகக் கூறுகிறார் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகம். "ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு அதிக சத்தத்துடன் ஆடுவது தான் உற்சாகத்தைக் கொடுக்கிறது. இதற்காக ஹெட்போன் பயன்படுத்துகின்றனர். இது வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது" எனக் கூறுகிறார் மருத்துவர் இளஞ்செழியன், "ஆன்லைன் விளையாட்டில் அதிக ஒலியைக் கேட்டு விளையாடும் மாணவர்களுக்கு வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது கேட்பதில் சிரமம் ஏற்படும்" எனவும் அவர் குறிப்பிட்டார். இயர்போன் பயனாளர்களுக்கு கூறுவதைப் போலவே ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடும் இளைஞர்களுக்கும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிறார் அவர். குடல் ஆரோக்கியம்: ஒரு நாளில் எத்தனை முறை மலம் கழிப்பது ஆரோக்கியமானது?28 பிப்ரவரி 2025 சந்தரா: சமணர்கள் கடைபிடிக்கும் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிரை விடும் நடைமுறை26 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல் இதை உலக சுகாதார நிறுவனமும் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, ஒலிகளின் அளவு அதிகமாகவும் அதைக் கேட்கும் நேரம் அதிகமாகவும் இருந்தால் செவித்திறன் குறையும் அபாயம் உள்ளதாகக் கூறியுள்ளது. 80 டெசிபல் ஒலி அளவில் வாரத்துக்கு 40 மணிநேரம் வரையில் பாதுகாப்பாக கேட்கலாம் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஒலி சாதனக் கருவியில் ஒலியின் அளவை (Volume) 60 சதவீதம் வரை வைக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இதுதொடர்பாக சில ஆலோசனைகளையும் அந்நிறுவனம் வழங்கியுள்ளது. சத்தம் அதிகம் உள்ள இடங்களில் இயர்பிளக்குகளை (earplugs) பயன்படுத்தலாம். ஒலிபெருக்கிகள் மற்றும் அதிக சத்தத்தை ஏற்படுத்தும் இயந்திரங்களில் இருந்து விலகியே இருக்க வேண்டும். அதிக ஒலிகளில் இருந்து காதுகளுக்கு அவ்வப்போது இடைவெளிகளைக் கொடுப்பதன் மூலம் காதுகளில் உள்ள உணர்வு செல்களை (sensory cells) மீட்டெடுக்க முடியும். காதுகளில் இரைச்சலோ அதிக ஒலிகளைக் கேட்பதில் சிரமமோ இருந்தால் மருத்துவ நிபுணரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகள் குறித்து பிபிசியிடம் பேசிய மருத்துவர் இளஞ்செழியன், "டி.ஜே போன்ற பார்ட்டி நிகழ்வுகளில் 130 டெசிபல் அளவுக்கு சத்தம் கேட்கும். அப்போது ஸ்பீக்கர் அருகில் அமர்ந்தால் காது ஜவ்வு கிழிந்துவிடும். திருவிழாவில் பட்டாசு வெடிக்கும் போதும் இதே பாதிப்பு ஏற்படும்" எனக் கூறுகிறார். செவித்திறன் பாதிப்பு - தீர்வு என்ன? "தொடர்ச்சியாக சத்தத்தைக் கேட்டுக் கொண்டே இருக்கும் போது காதில் பூச்சி கத்துவதைப் போன்ற இரைச்சல் ஏற்படும். இது முதற்கட்ட அறிகுறி. காதில் எங்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பரிசோதனையின் மூலம் அறியலாம்" எனக் கூறுகிறார் மருத்துவர் இளஞ்செழியன். இதையே செய்தி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகம், "காது கேட்கும் திறன் பரிசோதனைகளை செய்து கொள்வதன் மூலம் உரிய நேரத்தில் சிகிச்சையை மேற்கொண்டு செவித்திறன் இழப்பை தவிர்க்க முடியும்" எனக் கூறியுள்ளார். மேலும் விவரித்துள்ள அவர், "காதுகேட்கும் திறன் முற்றிலும் பாதிக்கப்படும்போது. உதவி கருவிகள் மூலம் கேட்கும் திறனை மீண்டும் பெற முடியாது" எனக் கூறியுள்ளார். மேலும் சிறு வயதிலிருந்தே நிரந்தர காது இரைச்சல் தொடர்ந்தால் மன அழுத்தம் உட்பட மனரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தும் எனவும் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். "காதில் இரைச்சல் ஏற்பட்ட பிறகாவது கூடுதல் சத்தத்தைக் கேட்பதைக் குறைத்துக் கொண்டால் செவித்திறன் பாதிப்பை ஓரளவுக்கு சரிசெய்ய முடியும்" எனக் கூறுகிறார் மருத்துவர் இளஞ்செழியன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/clydqwp2zgqo
  12. ஓம் அண்ணை. இன்னொன்று பிளாஸ்ரிக் வடிகட்டியில் கொதிக்கும் சுடுநீரை ஊற்றி தேநீர் தயாரிப்பது. இதுவும் பாதிப்புகளை உருவாக்கும்.
  13. உ்ங்களை தர்க்கத்தில் வெல்லும் நோக்கம் எனக்கில்லை அண்ணை. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட தகவல்களில் தவறு இருக்கலாம் என கருதியே கைத்துப்பாக்கி அனுமதி தொடர்பான விபரங்களை பகிர்ந்தேன். கைத்துப்பாக்கி அனுமதி உள்ள பாதுகாவலர்களுக்கு சம்பளம் அதிகமாம் என குறிப்பிடுகிறார்கள். சீமானுடைய பேச்சு, முன்னைய செயற்பாடுகளால் அவர் மீது உங்களுக்கு கடும் கோபமும் வெறுப்பும் ஏற்பட்டுள்ளது என எனக்கு புரிகிறது, ஆனால் எல்லோருக்கும் அந்த புரிதல் வருகையில் உங்கள் நிலைக்கு எல்லோரும் வருவார்கள். சில வேளைகளில் அவரை திட்டமிட்டு வீழ்த்த செய்கிறார்களோ என்ற எண்ணமும் வருகிறது. எல்லாவற்றையும் விட யாழ் இணையமும் இங்குள்ள ஒவ்வொருவரும் ஒற்றுமையோடு இருக்கவேண்டும். அதற்கு பாதகமாக எந்த ஒரு எழுத்தையும் எழுத விரும்பவில்லை. அளவுக்கு அதிகமாக சிதறிவிட்டோம்.
  14. வெளிநாடு என்ற உடன கேட்பது கிடைக்கும் என எண்ணியிருக்கலாம். உதவி கேட்கும்போது எவ்வளவு காலத்திற்கு என்பதும் என்ன மாதிரியான உதவி எனவும் அறிந்து செய்யவேண்டும் அண்ணை. கல்வி கற்பதற்கான(சூம்) ஸ்மார்ட் போன்கள் 50-60 ஆயிரம் ரூபாவுக்குள் வாங்கலாம், ஆனால் ஐபோன் புதிது புதிய மொடல் எனில் அவர்கள் உழைத்துத் தான் வாங்கவேண்டும் என கறாராக சொல்லவேணும்.
  15. உக்ரைனில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பிரான்சுடன் இணைந்து விருப்பமுள்ளவர்களின் கூட்டணி - பிரிட்டிஸ் பிரதமர் 03 MAR, 2025 | 05:32 PM உக்ரைனிற்கான சமாதான உடன்படிக்கையை உருவாக்குவதற்காக பிரான்சுடன் இணைந்து விருப்பமுள்ளவர்களின் கூட்டணியை உருவாக்கவுள்ளதாக பிரிட்டிஸ் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மெர் தெரிவித்துள்ளார். லண்டனில் இடம்பெற்ற 19 நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பிரிட்டிஸ் பிரதமர் இதனை அறிவித்துள்ளார். உக்ரைனுடன் இணைந்து ஐரோப்பிய கூட்டணி டிரம்ப் முன்வைத்துள்ள சமாதான திட்டத்திற்கு மாற்றீடான ஒன்றை உருவாக்கும் என தெரிவித்துள்ள பிரிட்டிஸ் பிரதமர் இந்த தீர்வை நடைமுறைப்படுத்துவதற்காக கூட்டு படையணியொன்றை பயன்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பிரிட்டிஸ் பிரதமரும் பிரான்ஸ் ஜனாதிபதியும் இணைந்து இந்த திட்டத்தினை உருவாக்குவார்கள் பின்னர் அதனை அமெரிக்க ஜனாதிபதியிடம் கையளிப்பார்கள். பிரான்ஸ் பிரிட்டிஸ் தலைவர்கள் ரஸ்யா உக்ரைன் இடையிலான ஒருமாத யுத்த நிறுத்தம் குறித்த யோசனையை முன்வைத்துள்ளனர். இந்த காலப்பகுதியில் வான்வெளி கடல் மற்றும் உட்கட்டமைப்புகளை இலக்குவைத்கும் தாக்குதல்கள் நிறுத்தப்படும். இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் உக்ரைனிற்கு ஐரோப்பிய படையினர் அனுப்பப்படுவர். யுத்த நிறுத்தம் சாத்தியமானதும் உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கும் ரஸ்யா ஆக்கிரமித்துள்ள பகுதிகளிற்கும் இடையில் உள்ள 800மைல் யுத்த சூன்ய பிரதேசத்தின் பொறுப்பு உக்ரைன் படையினருக்கு வழங்கப்படும். உக்ரைனிய படையினருக்கு பின்னால் ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடாவை சேர்ந்த 30,000 உறுதியளிக்கும் படை நிலைகொண்டிருக்கும். அவர்கள் உக்ரைனின் நகரங்கள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கவுள்ளனர். https://www.virakesari.lk/article/208187
  16. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முதல் கட்டமாக குரங்கு, மந்தி, மர அணில் மற்றும் மயில் ஆகியவற்றை மட்டுமே இந்த கணக்கெடுப்பில் உள்வாங்கப்படுகின்றன கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் பயிர் செய்கைகளுக்கு சேதம் விளைவிக்கும் வன மிருகங்களை கணிப்பிடும் நடவடிக்கையை 5 நிமிடங்களில் நடத்த அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். நாடு முழுவதும் காணப்படுகின்ற பயிர்களை, வன மிருகங்கள் கடுமையாக சேதப்படுத்தி வருவதாக கடந்த காலங்களில் கூறப்பட்டு வந்தன. குறிப்பாக குரங்கு, யானை, மர அணில் உள்ளிட்ட பல்வேறு மிருகங்கள் வீட்டு தோட்டங்களில் செய்யப்படுகின்ற பயிர்களை சேதப்படுத்தியிருந்தன. இவ்வாறான பின்னணியில், வன மிருகங்களினால் பயிர்களுக்கு ஏற்படுகின்ற சேதங்களை தவிர்த்துக்கொள்ளுதல் உள்ளிட்ட சில விடயங்களை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், குரங்குகளை பிடித்து, சீனாவிற்கு அனுப்பி வைக்க கடந்த அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருந்த வேளையில், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்கு மத்தியில் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. எனினும், இந்த மிருகங்களினால் பயிர்களுக்கு தொடர்ச்சியாக சேதம் விளைவிக்கப்பட்டு வருகின்ற பின்னணியில், அதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் முன்னெடுத்து வருகின்றன. இலங்கை குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு: கைது உத்தரவை அடுத்து தலைமறைவான போலீஸ் மாஅதிபர் டிரம்ப் உத்தரவு எதிரொலி: USAID இடைநிறுத்தத்தால் இலங்கைக்கு என்ன பாதிப்பு? இலங்கை சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மாவை சேனாதிராஜா: இலங்கை தமிழர்களுக்காக குரல் எழுப்பிய இவர் யார்? கணக்கெடுப்பு எப்போது நடைபெற இருக்கிறது? இவ்வாறான பின்னணியில், நாடு முழுவதும் உள்ள பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் மிருகங்களை கணக்கெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள கிராம சேவையாளர் பிரிவுகளில் இந்த நடவடிக்கை எதிர்வரும் 15ம் தேதி இடம்பெறும் என விவசாய மற்றும் மிருக வன பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். மக்கள் தமது வீட்டு தோட்டங்களிலுள்ள இவ்வாறான மிருகங்களை ஐந்தே நிமிடங்களில் கணக்கெடுத்து, உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார். ''குரங்கு, மர அணில், மயில் போன்றவற்றை கணக்கெடுப்பதற்காக ஐந்து நிமிடங்கள் வழங்கப்படும். கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள அனைத்து அதிகாரிகளும் இந்த நடவடிக்கைகளில் தொடர்புப்படுவார்கள். ஐந்து நிமிடங்களுக்குள் தமது தோட்டத்தில் எத்தனை குரங்குகள் இருந்தன, எத்தனை மர அணில்கள் இருந்தன, எத்தனை மயில்கள் இருந்தன, வேறு மிருகங்கள் இருந்தனவா என்பதை தோட்ட உரிமையாளர்கள் கணிப்பிட வேண்டும். இதற்காக ஐந்து நிமிடங்கள் வழங்கப்படும். ஐந்து நிமிடங்களுக்கு வேறு தோட்டங்களுக்கு இந்த மிருகங்கள் பாய்ந்து செல்லக்கூடும். ஒரே மிருகத்தை மீள கணக்கெடுக்காதிருப்பதற்காகவே ஐந்து நிமிடங்களில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அதனால் ஒரு திட்டம் தேவைப்படுகின்றது.'' என விவசாய மற்றும் மிருக வன பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு,அமைச்சர் நாமல் கருணாரத்ன 15 பேர் கொண்ட நிபுணர் குழு நியமனம் வன மிருகங்களினால் பயிர் நிலங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக 15 பேரை கொண்ட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக காணி மற்றும் நீர்பாசன பிரதி அமைச்சர் டொக்டர் சுனில் ரணசிங்க குறிப்பிடுகின்றார். ''15 பேரை கொண்ட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. வன மிருகங்களினால் ஏற்படுகின்ற சேதங்கள் எவ்வளவு, அதனால் ஏற்படுகின்ற பொருளாதார பாதிப்புக்கள் எவ்வளவு, வன மிருகங்களினால் ஏற்படுகின்ற பாதிப்புக்களை குறைத்துக்கொள்வது எவ்வாறு? போன்ற விடயங்களை இந்த நிபுணர் குழு ஆராயவுள்ளது. இந்த நிபுணர் குழுவின் ஆய்வுகளின் பின்னரே எமது எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்'' என காணி மற்றும் நீர்பாசன பிரதி அமைச்சர் டொக்டர் சுனில் ரணசிங்க தெரிவிக்கின்றார். யுக்ரேனுக்கு ஆதரவாக திரளும் ஐரோப்பிய நாடுகள் - லண்டன் மாநாட்டில் முடிவான 4 அம்ச செயல் திட்டம் என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்: நியூசிலாந்தை வென்ற இந்தியாவுக்கு காத்திருக்கும் புதிய சவால்கள்5 மணி நேரங்களுக்கு முன்னர் அரசியல் களத்தில் ஏற்பட்ட கடும் விமர்சனம் ''கேலி கூத்தான விடயங்களை கூறுகின்ற அமைச்சர்களே தற்போதுள்ளனர். கேலி செய்வதை நிறுத்தி விட்டு மக்களின் தேவைகளுக்காக முன்னின்று செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்'' என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவித்துள்ளார். பயிர் செய்கைகளுக்கு சேதம் விளைவிக்கும் மிருகங்களை ஐந்து நிமிடங்களில் கணக்கெடுக்கும் தீர்மானம் தொடர்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ''மிருகங்கள் வருகின்ற நேரங்களின் அடிப்படையில் இவ்வாறு ஐந்து நிமிடங்களில் முழுமையாக தீர்மானமொன்றை எடுக்க முடியுமா?. முன்னேற்றமடைந்துள்ள இந்த உலகத்தில் நடைமுறை சாத்தியமற்ற செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளனர். இதனை செய்ய முடியாது.'' என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த தெரிவிக்கின்றார். இதேவேளை, ஐந்து நிமிடங்களில் மிருகங்களை கணக்கெடுக்கும் நடவடிக்கைக்கு விவசாய அமைப்புக்களும் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றன. ''வீட்டு தோட்டங்களிலுள்ள மிருகங்களை கணக்கெடுத்தால், காடுகளிலுள்ள மற்றும் வீதிகளிலுள்ள மிருகங்களை யார் கணக்கெடுப்பது. தோட்டமொன்றிலிருந்து அடுத்த நொடியே அடுத்த தோட்டத்திற்கு அந்த மிருகம் செல்லும் பட்சத்தில், அந்த மிருகத்தை அடுத்த வீட்டுகாரரும் கணக்கெடுத்தால் கணக்கெடுப்பு சரியாக அமையுமா? முறையாக இந்த கணக்கெடுப்பை முன்னெடுக்க முடியாது.'' என அநுராதபுர மாவட்ட நீர்பாச ஒன்றிணைந்த விவசாய அமைப்பின் தலைவர் புஞ்ஜிரால ரத்நாயக்க தெரிவிக்கின்றார். கிருஷ்ணரின் 'துவாரகா' நகரம் உண்மையில் இருந்ததா? அகழாய்வில் புதிய தகவல்கள்3 மார்ச் 2025 'நிரந்தரமாக காது கேட்காது' : இயர்போன் பயன்பாடு பற்றி அரசு எச்சரிக்கை - பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப்படம் காடுகளை வளப்படுத்த திட்டம் காடுகளை வளப்படுத்தும் திட்டமொன்றை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக விவசாய மற்றும் மிருக வன பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். வன மிருகங்கள் தொடர்பான கணக்கெடுப்பு தொடர்பில் கருத்தை வெளியிட்ட சந்தர்ப்பத்திலேயே அவர் இந்த விடயத்தையும் வெளியிட்டிருந்தார். காடுகளில் வாழும் மிருகங்கள் காடுகளை விட்டு ஏன் வெளியேறுகின்றன என்ற பிரச்னைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார். காடுகளில் போதுமானளவு மிருகங்களுக்கு தேவையான உணவு வகைகள் மற்றும் நீர் இருக்கும் பட்சத்தில், மிருகங்கள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் பிரவேசிக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயங்களை கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் காடுகளை வளப்படுத்தும் திட்டமொன்றை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் விவசாய மற்றும் மிருக வன பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறுகின்றார். காதலனுக்கு தேநீரில் எலி மருந்து கலந்து கொடுத்த காதலி – இன்றைய டாப்5 செய்திகள்3 மார்ச் 2025 ஸெலன்ஸ்கியை அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் மிக தீவிரமாக தாக்கி பேசியது ஏன்? பின்னணியில் உள்ள தந்திரம் இதுவா?2 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப்படம் காலை 8 மணி முதல் 8.05 வரை சரியான திட்டத்திற்கு அமைவாகவே இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக விவசாய அமைச்சின் விவசாய அபிவிருத்தி மேலதிக செயலாளர் திஸ்னா ரத்னசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ( மார்ச் 03) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முதல் கட்டமாக குரங்கு, மந்தி, மர அணில் மற்றும் மயில் ஆகியவற்றை மட்டுமே இந்த கணக்கெடுப்பில் உள்வாங்கப்படுவதாகவும் அவர் கூறுகின்றார். இலங்கையில் இதற்கு முன்னர் இவ்வாறான கணக்கெடுப்பொன்று நடத்தப்படவில்லை என விவசாய அமைச்சின் விவசாய தொழில்நுட்ப பணிப்பாளர் தனுஜ ஹேமந்த அமரசிங்க தெரிவிக்கின்றார். ''இந்த கணக்கெடுப்பை நடத்துவதற்காக பத்திரமொன்று வழங்கப்படும். மிகவும் இலகுவான பத்திரமாக காணப்படும். பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட விடயங்கள் முதல் கட்டமாக நிரப்பப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட மிருகங்கள் எத்தனை இருந்தன என்பது தொடர்பான தகவல்களை இந்த பத்திரத்தில் நிரப்ப வேண்டும். காலை 8 மணி முதல் 8.05 வரையான நேரம் வரை தமது தோட்டத்தில் மாத்திரம் உள்ள மிருகங்களை இந்த பத்திரத்தில் குறிப்பிட வேண்டும். கிராம சேவையாளர்கள் 15ம் தேதிக்கு முன்னர் இந்த பத்திரத்தை தமது அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு வழங்குவார்கள். 15ம் தேதி இந்த நிரப்பிய பத்திரத்தை மீள கிராம சேவையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து, பிரதேச, மாவட்ட, மாகாண மற்றும் தேசிய ரீதியான கணக்கெடுப்பை நாம் முன்னெடுப்போம். அவ்வாறே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.' என அவர் கூறுகின்றார். பொது இடங்களிலுள்ள மிருகங்களை எவ்வாறு கணக்கெடுப்பது? பொது இடங்களிலுள்ள மிருகங்களை கணக்கெடுப்பது தொடர்பில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் வேலைத்திட்டமொன்றை திட்டமிட வேண்டும் என விவசாய அமைச்சின் விவசாய தொழில்நுட்ப பணிப்பாளர் தனுஜ ஹேமந்த அமரசிங்க தெரிவிக்கின்றார். ''பேரூந்து தரிப்பிடங்கள், கடைகள், பொது இடங்களிலுள்ள மிருகங்களை கணக்கெடுப்பதற்காக பொறுப்பான நபர் ஒருவர் ஈடுபடுத்தப்பட வேண்டும். மேலும் தேயிலை, இறப்பர் போன்ற தோட்டங்களிலுள்ள மிருகங்களை எவ்வாறு கணக்கெடுப்பது என்ற கேள்வி எழுகின்றது. அந்த தோட்டங்களிலுள்ள அதிகாரிகள் அல்லது பொறுப்பானர்களை அதற்காக ஈடுபடுத்த முடியும்", என அவர் குறிப்பிடுகின்றார். 'இந்தி திணிப்பு' என்ற தமிழ்நாடு அரசின் குற்றச்சாட்டு சரியா? ஓர் அலசல்2 மார்ச் 2025 வங்கதேசத்தில் தொடங்கியுள்ள 'சாத்தான் வேட்டை' என்றால் என்ன? அங்கு பயமும், நிச்சயமற்ற சூழலும் நிலவுவது ஏன்?2 மார்ச் 2025 பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு,கலாநிதி ஜகத் குணவர்தன ஐந்து நிமிடங்களில் மிருகங்களை கணக்கெடுப்பது சாத்தியமா? வீட்டுத் தோட்டங்களுக்குள் வருகைத் தரும் வன மிருகங்களை ஐந்து நிமிடங்களில் கணக்கெடுப்பது சாத்தியமான விடயமா என கேட்டபோது, முறையான திட்டமொன்றின்றி இவ்வாறு செயற்படுத்துகின்றமையானது நடைமுறை சாத்தியமற்ற விடயம் என சூழலியலாளரும், வழக்கறிஞருமான கலாநிதி ஜகத் குணவர்தன பிபிசி தமிழிடம் தெரிவித்தார். ''கணக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் என்றால், விஞ்ஞான ரீதியாக அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கான விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு, அந்த குழுவிற்கு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். அது உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். ஒரே நேரத்தில் ஒரே மிருகத்தை இரண்டு தடவைகள் கணக்கெடுப்பதை தவிர்ப்பதற்கு பல்வேறு நடைமுறைகள் காணப்படுகின்றன. மக்களுக்கு ஊடகங்களில் அறிவித்து, ஐந்து நிமிடங்களில் கணக்கெடுப்பொன்றை நடத்த முடியாது. பயிற்சிகளை பெற்ற நிறுவனங்கள் இருக்கின்றன. அந்த நிறுவனங்களின் ஊடாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் அந்த நடவடிக்கை வெற்றியளிக்காது.'' என குறிப்பிட்டார் அவர். இதேவேளை, விஞ்ஞான ரீதியில் உரிய நடைமுறைகளை பின்பற்றியே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு இன்று அறிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/ckgnxvgxzzlo
  17. உள்ளூராட்சித் தேர்தல்; வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி அறிவிப்பு உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மார்ச் 17 முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. போட்டியிட விரும்பும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் இந்தக் காலப்பகுதிக்குள் வேட்புமனுக்களை சமர்ப்பிக்க வேண்டும். https://thinakkural.lk/article/315540
  18. யாழ். அரியாலை மனித எச்சங்கள் மீட்கப்பட்ட விவகாரம் ; விசாரணைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் ; அமைச்சர் சந்திரசேகரன் 03 MAR, 2025 | 10:01 AM யாழ். அரியாலை சித்துப் பாத்தி மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக நீதிமன்றம் தலையிட்டுள்ள நிலையில் அரசாங்கம் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். சித்துப் பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசாங்கம் நீதியான விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற கருத்து தொடர்பில் அமைச்சரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மயானத்தில் தகனமேடை அமைப்பதற்காக குழி தோண்டப்பட்ட போது மனித எச்சங்கள் வெளிவந்தன. குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண நீதிமன்றம் கவனம் செலுத்திய நிலையில் குறித்த இடத்தை நீதிபதி மற்றும் சட்ட வைத்திய அதிகாரி சென்ற பார்வையிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நீதிபதி கலந்துரையாடி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராய உள்ளதாக அறிந்தேன். ஆகவே கடந்த காலங்களைப் போன்று நீதிமன்ற விவகாரத்தில் நாங்கள் தலையிட போவதில்லை அரசாங்கம் என்ற வகையில் நீதித்துறையின் செயல்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் என்றார். https://www.virakesari.lk/article/208123
  19. வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்: நியூசிலாந்தை வென்ற இந்தியாவுக்கு காத்திருக்கும் புதிய சவால்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,க.போத்திராஜ் பதவி,பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி 6-வது முறையாகத் தகுதி பெற்றுள்ளது. துபையில் நேற்று நடந்த குரூப் ஏ பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் சேர்த்தது. 250 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்து 44 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று, முதலிடத்தைப் பிடித்தது. குரூப் பி பிரிவில் 2வது இடம் பெற்ற ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நாளை மோதுகிறது. விளம்பரம் தென் ஆப்ரிக்காவை வெளியேற்றி, ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறுமா? சாம்பியன்ஸ் டிராபி: துபையில் அனைத்து போட்டிகளையும் விளையாடுவதன் மூலம் இந்தியா பயனடைகிறதா? சாம்பியன்ஸ் டிராஃபி: ஆப்கானிஸ்தான் திரில் வெற்றி, இங்கிலாந்து ஏமாற்றம் - சறுக்கியது எங்கே? கோலி சாதனை சதம்: இந்தியா பெற்ற வெற்றியால் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்தே வெளியேறுமா? டாப்ஆர்டர் தோல்வி இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சுப்மான் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் நேற்று 7 வது ஓவருக்குள்ளேயே விரைவாக ஆட்டமிழந்தனர். 10 ஓவர்களுக்குள் இந்திய அணி 3 விக்கெட்டுகளையும் இழந்தது. 2வது முறையாக டாப்ஆர்டர் பேட்டர்கள் இந்த 3 பேரும் விரைவாக ஆட்டமிழந்துள்ளனர். இதற்குமுன் 2023ல் ஈடன்கார்டனில் நடந்த ஆட்டத்திலும் இந்த 3 பேட்டர்களும் விரைவாக விக்கெட்டை பறிகொடுத்திருந்தனர். 15 ஓவர்களில் இந்திய அணி நேற்று 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் சேர்த்திருந்தது. 15 ஓவர்களில் இந்த அளவு குறைவாக ரன்கள் சேர்த்தது 2020ம் ஆண்டுக்குப்பின் இது2வது முறையாகும். 2022ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்களை இந்திய அணி சேர்த்தது. ஆனால் தொடக்கத்தில் மந்தமாக இந்திய அணி பேட் செய்தாலும், அடுத்த 25 ஓவர்களில் 139 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி பேட்டிங்கில் டாப் ஆர்டர் சொதப்பினாலும், நடுவரிசையில் அக்ஸர் படேல்(42), ஸ்ரேயாஸ் அய்யர்(79), ஹர்திக் (45) ஆகியோரின் சிறப்பான ஆட்டம் ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை பெற்றுக்கொடுத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆபத்பாந்தவன் ஸ்ரேயாஸ் இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங்கிற்கு தூணாக கிடைத்துள்ளார் ஸ்ரேயாஸ் அய்யர். சிறந்த பேட்டராக இருந்தபோதிலும் இன்னும் "அன்சங் ஹீரோவாகவே" இருந்து வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து, சாம்பியன்ஸ் டிராபி வரை இந்திய அணியின் டாப்ஆர்டர்கள் சறுக்கிய போதெல்லாம் அணியை தூக்கி நிறுத்தியது ஸ்ரேயாஸ் பேட்டிங்தான். எந்த நேரத்தில் எப்படிப்பட்ட பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் கைதேர்ந்தவராகி, அதற்கேற்றபடி ஸ்ரேயாஸ் பேட் செய்வது சிறப்பாகும். ஆடுகளம் மெதுவாக இருக்கிறது, டாப் ஆர்டர்கள் வீழ்ந்துவிட்டார்கள் எனத் தெரிந்தவுடன் ரன் சேர்க்கும் வேகக்தைக் குறைத்து ஆங்கர் ரோல் எடுத்து ஸ்ரேயாஸ் பேட் செய்தார் அக்ஸர், ஸ்ரேயாஸ் இருவரும் 51 பந்துகளாக ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் இருந்தனர். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஸ்ரேயாஸ் அய்யர் 75 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அவரின் ஒருநாள் போட்டி வாழ்க்கையில் மெதுவாக அடிக்கப்பட்ட அரைசதமாகும், இதற்கு முன் 2022ல் அகமதாபாத்தில் 74 பந்துகளில் ஸ்ரேயாஸ் அரைசதம் அடித்திருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES நியூசிலாந்துக்கு எதிராக 8 ஒருநாள் போட்டிகளில் ஆடிய ஸ்ரேயாஸ் இதுவரை 4 அரைசதங்கள், 2 சதங்கள் என 563 ரன்கள் குவித்துள்ளார். வேகப்பந்துவீச்சைவிட சுழற்பந்துவீச்சை பிரமாதமாக ஆடக் கூடியவராக ஸ்ரேயாஸ் உள்ளார். 8 முறையுமே வேகப்பந்துவீச்சில் ஆட்டமிழந்த ஸ்ரேயாஸ் 394 ரன்களும், சுழற்பந்துவீச்சுக்கு ஆட்டமிழக்காத ஸ்ரேயாஸ் 175 பந்துகளில் 169 ரன்கள் சேர்த்துள்ளார். ஹர்ஷித் ராணாவுக்கு ஓய்வளிக்கப்பட்டதால் 2வது பிரதான பந்துவீச்சாளராக ஹர்திக் பாண்டியா பந்துவீசினார். தொடக்கத்திலேயே அப்பர் கட் ஷாட்டில் ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை சாய்த்து ஹர்திக் பலம் சேர்த்தரா். பேட்டிங்கிலும் கடைசி நேரத்தில் களமிறங்கி 45 ரன்கள் சேர்த்து சிறந்த ஆல்ரவுண்டர் என்பதையும் நிரூபித்தார். பிளாஸ்டிக் தாளில் வேக வைத்த இட்லியால் என்ன ஆபத்து? மருத்துவர்கள் விளக்கம்2 மார்ச் 2025 இந்தியாவுக்கும் ஓட்டோமான் பேரரசின் கடைசி கலீபாவுக்கும் என்ன உறவு? ஒரு ஆவணத்தின் மர்மம்2 மார்ச் 2025 வில்லியம்ஸன் ஆறுதல் நியூசிலாந்து அணிக்கு நேற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் மாட் ஹென்றி எடுத்த 5 விக்கெட்டுகள், வில்லியம்ஸனின் போராட்ட பேட்டிங்தான். 120 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்து வில்லியம்ஸன் ஆட்டமிழந்தார். வில்லியம்ஸன் தவிர வேறு எந்த பேட்டர்களும் 30 ரன்களைக் கடக்கவில்லை. அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பும் 43 ரன்களைக் கடக்காததும் நியூசிலாந்து தோல்விக்கு முக்கியக் காரணமாகும். எந்த பேட்டரும் நல்ல பார்ட்னர்ஷிப்பை வழங்காதது தோல்விக்கு பெரிய காரணம். இந்திய சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நேற்று டேரல் மிட்ஷெல், லேதம், பிரேஸ்வெல், பிலிப்ஸ் ஆகியோர் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தனர். 30 ஓவர்கள் முடியும் வரை நியூசிலாந்து வெற்றிக்கான பாதி இலக்கை கடந்துவிட்டது, கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால், லேதம் ஆட்டமிழந்தபின் சீரான இடைவெளியில் நியூசிலாந்து பேட்டர்கள் விக்கெட்டை இழந்தவாறு இருந்தனர். சான்ட்னர் நேற்று வருண் சக்ரவர்த்தியின் அற்புதமான பந்தில் போல்டாகினார். ஆட்டமிழந்த பின் சில வினாடிகள் ஸ்டம்பையும், வருணையும் பிரமிப்புடன் பார்த்துவிட்டு சான்ட்னர் பெவிலியன் திரும்பினார். வருண் தனது 10-வது ஓவரில் சான்ட்னரையும், ஹென்றி விக்கெட்டையும் வீழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES சுழற்பந்து வீச்சுக்கு சாதகம் ஆடுகளம் நேரம் செல்லச்செல்ல சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மாறியது. அங்கே, பனிப்பொழிவும் இல்லாமல் இருந்ததால், பந்துவீச்சாளர்களுக்கு நல்ல 'கிரிப்' கிடைத்தது. இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது சற்று கடினமாக இருந்ததாகவே தோன்றியது. அரைசதம் அடித்த ஸ்ரேயாஸ், வில்லியம்ஸன் இருவருமே அதிக பந்துகளை எதிர்கொண்டனர். நியூசிலாந்து அணி 133 ரன்கள் வரை 2 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்ததால், ஆட்டம் அந்த அணிக்கு சாதகமாக இருப்பது போல் தோன்றியது. ஆனால், இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் நடுப்பகுதியில் நெருக்கடி அளித்ததால், அடுத்த 72 ரன்களுக்குள் மீதமிருந்த 8 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணி இழந்தது. இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிப்பது ஏன்? 8 கேள்விகளும் பதில்களும்2 மார்ச் 2025 இந்திய அணி வென்றபோதும் ரோஹித் மன்னிப்புக் கேட்டது ஏன்?21 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES 14 ஆண்டுகளுக்குப் பின்.. இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்களான ஷமி, ஹர்திக் பாண்டியா இருவருமே 8 ஓவர்கள் மட்டுமே வீசினர். ஆனால், சுழற்பந்துவீச்சாளர்கள் அக்ஸர் படேல், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் சேர்ந்து 37 ஓவர்கள் வீசி, 166 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். குல்தீப் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா, அக்ஸர் படேல் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் சேர்ந்து ஒரு போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 5-வது முறையாகும். 2011-ம் ஆண்டுக்குப்பின் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அதேபோல நியூசிலாந்து அணியும் சுழற்பந்துவீச்சாளர்களிடம் 9 விக்கெட்டுகளை இழப்பது 3வது முறை, இதற்கு முன் இலங்கை அணியிடம் 1998, 2001 ஆண்டுகளில் சுழற்பந்துவீச்சாளர்களிடம் 9 விக்கெட்டுகளை நியூசிலாந்து அணி இழந்திருந்தது. நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் 25 ஓவர்கள் வீசி 128 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினர்.மாறாக, வேகப்பந்துவீச்சாளர் ஹென்றி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு கடன் கொடுத்த இந்திய வணிகரைப் பற்றி தெரியுமா?2 மார்ச் 2025 உயிரை பணயம் வைத்து இந்தியா வந்து இவர்கள் சிறுநீரகங்களை விற்பது ஏன்?28 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES வருண் சக்ரவர்த்தி அறிமுகமே அசத்தல் ஐசிசி சாம்பியன்ஸ் போட்டித் தொடரில் முதல் முறையாக விளையாடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, 42 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். சாம்பியன்ஸ் டிராபியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது இந்திய பந்துவீச்சாளர் வருண், இதற்குமுன் ஜடேஜா, ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். அது மட்டுமல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி அறிமுக ஆட்டத்திலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் வருண் பெற்றார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட், முகமது ஷமி ஆகியோர் இந்த பெருமையைப் பெற்றிருந்தனர் நடுப்பகுதி ஓவர்களில் நியூசிலாந்து பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த வருண் சக்வர்த்தி, அந்த அணியின் விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார். பாகிஸ்தானின் பலவீனம் இந்தியாவின் பலமாக மாறுமா? கோலி, ரோஹித் சரியாக பயன்படுத்துவார்களா?23 பிப்ரவரி 2025 குடல் ஆரோக்கியம்: ஒரு நாளில் எத்தனை முறை மலம் கழிப்பது ஆரோக்கியமானது?28 பிப்ரவரி 2025 அரையிறுதி புள்ளிவிவரங்கள் யாருக்கு சாதகம்? இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு 6-வது முறையாக முன்னேறியுள்ளது இதற்கு முன் 1998, 2000, 2002, 2013, 2017 ஆண்டுகளில் அரையிறுதி வரை இந்திய அணி வந்துள்ளது. இந்த முறை பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை அரையிறுதியில் இந்திய அணி எதிர்கொள்கிறது. துபை ஆடுகளம் இந்திய சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான அம்சம், ஆஸ்திரேலிய அணியில் 3 பிரதான வேகப்பந்துவீச்சாளர்களான கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க் ஆகியோர் இல்லாதது சாதகமான அம்சமாகும். மற்ற வகையில் அனுபவம் குறைந்த வீரர்களை வைத்திருந்தாலும், கடுமையான சவால்களை அளிக்கிறது ஆஸ்திரேலியா. இங்கிலாந்துக்கு எதிராக 350 ரன்களை சேஸ் செய்து தனது பேட்டிங் வலிமையை வெளிப்படுத்தியுள்ளது ஆஸ்திரேலியா. ஐசிசி தொடர்களில் நாக்அவுட் சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதினாலே கடுமையான போட்டியாகத்தான் இருக்கும். இரு அணிகளும் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்றாலும், கடந்த காலங்களில் ஆஸ்திரேலிய அணியின் கைதான் ஓங்கியுள்ளது. ஐசிசி நாக்அவுட் போட்டிகளில் இதுவரை ஆஸ்திரேலியா, இந்திய அணிகள் 7 முறை மோதியுள்ளன. ஒருநாள் போட்டி உலகக் கோப்பைத் தொடரில் 4 முறை மோதியதில் ஆஸ்திரேலிய அணி 3 முறையும், இந்திய அணி ஒருமுறையும் வென்றது. டி20 உலகக் கோப்பைத் தொடரில் 6 போட்டிகளில் இந்திய அணி 4 வெற்றியும், ஆஸ்திரேலிய அணி 2 வெற்றியும் பெற்றுள்ளன. பூமியை நெருங்கி வரும் பிரமாண்ட 2024 YR4 விண்கல் நிலவில் மோதப் போகிறதா? நாசா புதிய தகவல்26 பிப்ரவரி 2025 ரூ.53 கோடி மதிப்பு, 98 கிலோ; ஐந்தே நிமிடங்களில் திருடப்பட்ட தங்கக் கழிவறை இருக்கை - எப்படி நடந்தது?27 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை நாக்அவுட் சுற்றில் 2003 காலிறுதியில் ஆஸ்திரேலிய அணியும், 2011 காலிறுதியில் இந்திய அணியும் வென்றன. 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பை காலிறுதியில் ஆஸ்திரேலிய அணி வென்றது. 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. சாம்பியன்ஸ் டிராபியைப் பொருத்தவரை இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் 2 முறை இந்திய அணியும், ஒருமுறை ஆஸ்திரேலிய அணியும் வென்றன. ஆனால் இந்திய அணி பெற்ற இரு வெற்றிகளும் காலிறுதியில் நாக்அவுட் சுற்றில் பெற்றதாகும், ஆஸ்திரேலியா லீக் சுற்றில்தான் இந்திய அணியை வென்றுள்ளது. புள்ளிவிவரங்களைப் பொருத்தவரை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் ஆதிக்கமே ஓங்கியுள்ளது. ஒட்டுமொத்த ஐசிசியின் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டி20 தொடர் , டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் என 4 வகையான தொடர்களிலும் இரு அணிகளும் ஏறக்குறைய சிறிய வித்தியாசத்தில்தான் உள்ளன. 38 போட்டிகளில் இரு அணிகளும் மோதிய நிலையில் அதில் இந்திய அணி 16 வெற்றிகளும், ஆஸ்திரேலிய அணி 18 வெற்றிகளும் பெற்றுள்ளன, 4 போட்டிகளில் முடிவில்லை. ஒருநாள் போட்டிகளைப் பொருத்தவரை இரு அணிகளும் 151 போட்டிகளில் இதுவரை ஆடியுள்ளன அதில் ஆஸ்திரேலிய அணி 84 முறையும், இந்திய அணி 57 முறையும் வென்றுள்ளன, 10 போட்டிகளில் முடிவு ஏதும் இல்லை. இந்தியாவுக்கு காத்திருக்கும் புதிய சவால்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்தான் இந்திய அணிக்கு பெரிய சவாலாக இருக்கும். குறிப்பாக டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், மெக்ருக், ஸ்மித், அலெக்ஸ் கேரெ, ஹார்டி ஆகியோர் பெரிய தலைவலியாக இருப்பார்கள். ஹெட் இதுவரை பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டி என அனைத்திலுமே சிறப்பாக பேட் செய்யக்கூடியவர் டிராவிஸ் ஹெட். இவரின் விக்கெட்டை தொடக்கத்திலேயே எடுத்துவிட்டாலே பாதி வெற்றி கிடைத்தது போலத்தான். பந்துவீச்சில் அனுபவமான வீரர்கள் பெரிதாக யாருமில்லை. ஸ்பென்சர் ஜான்சன், நேதன் எல்லீஸ் தவிர மற்றவர்கள் பெரிதாக அச்சுறுத்தும் அளவுக்கு பந்துவீசுவதில்லை. சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளம் என்பதால் ஆடம் ஸம்பா, தன்வீர் சங்கா, மேக்ஸ்வெல் பலம் சேர்ப்பார்கள். ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை நம்புவதைவிட பேட்டர்களை நம்பியே களமிறங்குகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவில் உள்ள பேட்டர்களில் பெரும்பாலானவர்களுக்கு முறையான சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு ஆடி பழகியதில்லை என்பது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாகும். துபை ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் முதல்முறையாக ஆடுவதால், பிட்ச்சின் தன்மையை அறிந்து பந்துவீசுவது கடினம். ஆடுகளத்துக்கு ஏற்றபடி பேட்டிங்கையும், பந்துவீச்சையும் மாற்ற வேண்டிய சவால்கள் உள்ளன. அரையிறுதி ஆட்டம் துபையில் நடப்பது இந்திய அணிக்கு சாதகமான அம்சமாகும். இதுவரை 3 லீக் ஆட்டங்களையும் இதே மைதானத்தில் ஆடியுள்ளதால் ஆடுகளத்தின் தன்மை இந்திய அணிக்கு நன்கு தெரியும், இந்திய அணிக்கு சுழற்பந்துவீச்சாளர்கள் பெரிய பலமாக உள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn52yqkkr2go
  20. 15 நிமிடத்தில் 6 இலட்சத்து ஐம்பதினாயிரத்தை வென்றமை கனவு போலுள்ளது - அந்தனி இரேஷா ராஜலட்சுமி Published By: VISHNU 03 MAR, 2025 | 02:30 AM ‘நான் இருபது வருடங்களுக்கு மேல் கொழுந்து பறித்தல் தொழிலோடு இணைந்துள்ளேன். இம்முறை இடம்பெற்ற கொழுந்து பறித்தல் போட்டியில் நான் வெற்றி பெற்றமையை மிகவும் பெருமிதமாக உணர்கிறேன். எமக்கான போட்டி நேரம் 15 நிமிடங்கள். குறித்த நேரத்தில் நான் இரண்டு பிரிவுகளில் வெற்றியீட்டி ஆறு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா பணப்பரிசை வென்றுள்ளேன். 15 நிமிடத்தில் இவ்வளவு தொகை பணப்பரிசை நான் வென்றமையை கனவு போல் உணர்கின்றேன். பல வழிகளிலும் என்னை ஊக்குவித்த எனது தோட்ட முகாமையாளர், ஊழியர்கள் மற்றும் தோட்ட கம்பனிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறுகிறார் கிரேட் வெஸ்டர்ன் தோட்டத்தைச் சேர்ந்த அந்தனி இரேஷா ராஜலட்சுமி என்ற பெண்மணி. ஹேலீஸ் குழுமத்தின், களனிவெலி ,ஹொரண பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் தலவாக்கலை தேயிலை பெருந்தோட்ட நிறுவனங்களின் நிர்வாகத்தின் கீழ் வரும் தேயிலைத்தோட்டங்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில் , சிறந்த கொழுந்து பறிப்பாளர்களுக்கான போட்டி நிகழ்வு சனிக்கிழமை முதலாம் திகதி ரதல்ல பெருந்தோட்டத்தில் இடம்பெற்றது. அதில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் கருத்துத் தெரிவித்த போதே அவர் அவ்வாறு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இப்போட்டியில் அறுபது தோட்டங்களைச் சேர்ந்த ஐம்பது பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பதினைந்து நிமிடங்களில் அதிக எடை கொழுந்து மற்றும் சிறந்த கொழுந்து கொய்தல் செயன்முறையில் கீழ் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெற்றியாளர்களை தீர்மானிக்கும் குழுவினராக தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் விளங்கினர். இவ்வருடம் இப்போட்டியில் தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் வரும் கிரேட்வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த அந்தனி இரேஷா ராஜலட்சுமி வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டதுடன் அவர் மொத்தமாக ஆறு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா ரொக்கப்பரிசையும் சிங்கர் ஒலியிசை உபகரணத்தையும் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வுகளில் ஹேலிஸ் குழுமத்தின் தலைவர் மொஹான் பண்டிதகே மற்றும் ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி ரொஷான் ராஜதுரை, முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர். ஹேலிஸ் குழுமமானது ஒவ்வொரு வருடமும் சிறந்த கொழுந்து பறிப்பாளர்களுக்கான போட்டியை நடத்தி ஊழியர்கள் மற்றும் கொழுந்து பறிக்கும் தொழிற்றுறையோடு இணைந்திருப்பவர்களை ஊக்குவிக்கும் திட்டத்தினை முன்னெடுத்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/208115
  21. எரிபொருள் நிலைய உரிமையாளர்களே திட்டமிட்டு மீள வாகன வரிசையை ஏற்படுத்தியுள்ளனர்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ 02 MAR, 2025 | 06:57 PM (செ.சுபதர்ஷனி) நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் மீண்டும் எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். எனினும் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக எவ்வித தடையும் இன்றி விநியோகிக்கப்படுகிறது. எரிபொருள் நிலையத்தில் உரிமையாளர்களே திட்டமிட்டு இவ்வாறானதொரு நிலையை உருவாக்கியுள்ளனர் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். கடந்த ஒரு சில நாட்களாக எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது காணக்கூடியதாக உள்ளது. மீண்டு நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு ஏற்பட்டுள்ளதா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் எரிபொருளுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளமையால் மீண்டு எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். எனினும் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கு தேவையான தொடர்ச்சியாக எவ்வித தடையும் இன்றி விநியோகிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் மாத இறுதியில் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என்பதற்காக ஒரு சில எரிபொருள் நிலையங்களில் வரிசைகள் உருவாகியுள்ளன. ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாட்டில் எரிபொருளுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாக பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர். சில பகுதிகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டமைத் தொடர்பில் தெரியவந்ததை அடுத்து விரைந்து அப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. எனினும் தற்போது எவ்வித சிக்கலும் இல்லை. அவசியமான எரிபொருள் எம்மிடம் உள்ளது. கடந்த அரசாங்கங்களில் அமைச்சுப் பதவியை வகித்தவர்கள் மற்றும் அவர்ளுடன் தொடர்புடையோருக்கு சொந்தமாக பல எரிபொருள் நிலையங்கள் உள்ளன. அதை இந்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். எரிபொருள் நிலையத்தின் உரிமையாளர்கள் திட்டமிட்டு இவ்வாறானதொரு நிலையை உருவாக்கியுள்ளனர். எரிபொருள் கூட்டுத்தாபனத்துடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாட உள்ளோம். எரிபொருள் கூட்டுத்தாபனம் பொதுமக்களுக்கான சேவையை வழங்கும் நிறுவனமாகும். மக்களின் பெரும்பான்மை ஆனையை பொறுப்பேற்று அரசாங்கம் செயல்படுகிறது. ஏனைய சிறு குழுக்களின் செயல்களைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார். https://www.virakesari.lk/article/208098
  22. Published By: RAJEEBAN 03 MAR, 2025 | 11:01 AM காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் செல்வதை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளதை ஐநாவும் ஏழு அராபிய நாடுகளும் கடுமையாக கண்டித்துள்ளன. காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு இஸ்ரேல்தடைவிதித்துள்ளது. ஹமாஸ் உணவுப்பொருட்கள் உட்பட மனிதாபிமான உதவிகளை திருடி அவற்றை விற்பனை செய்து தன்னை நிதிரீதியாக பலப்படுத்துகின்றது என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பு யுத்தநிறுத்தத்தை நீடிப்பதற்கான அமெரிக்காவின் யோசனையை நிராகரித்துள்ளது என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். எனினும் இஸ்ரேலிய பிரதமரின் இந்த கருத்தினை மலினமான பயமுறுத்தும் நடவடிக்கை என தெரிவித்துள்ள ஹமாஸ் பேச்சாளர் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு எதிரான சதி என தெரிவித்துள்ளார். இதேவேளை மனிதாபிமான பொருட்கள் காசாவிற்குள் செல்வதற்கு இஸ்ரேல் தடைவிதித்துள்ளதை கடுமையாக கண்டித்துள்ள கத்தார் இது தெளிவான யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறல், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல் என தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பட்டினியை பாலஸ்தீன மக்களிற்கு எதிராக ஆயுதமாக பயன்படுத்துகின்றது என எகிப்து குற்றம்சாட்டியுள்ளது. காசாவில் யுத்த நிறுத்தம் சாத்தியமாவதற்கான மத்தியஸ்த முயற்சிகளை எகிப்தும் கத்தாரும் மேற்கொண்டிருந்தன. இஸ்ரேலின் நடவடிக்கையை சவுதி அரேபியாவும் கடுமையாக கண்டித்துள்ளது. சர்வதேச மனிதாபிமான சட்டம் தெளிவானது முக்கியமான உயிர்காக்கும் பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் அனுமதிக்கவேண்டும் என ஐக்கியநாடுகளின் மனிதாபிமான விவகாரங்களிற்கான பிரதி செயலாளர் நாயகம் டொம் பிளெச்சர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208133
  23. கன்னடத்தில் உரையாடினாலும், எனக்கு விளங்கியது அக்காவிற்கு மருத்துவம் செய்ய 3.5 லட்சம் பெற்றுக்கொள்வதாக. அண்ணை, கொஞ்சம் பொறுத்தால் தெரியவரும்.
  24. 02 MAR, 2025 | 06:52 PM ‘வல்வெட்டித்துறை : ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்’ என்ற அறிக்கை வெளியீடும் ஊடக சந்திப்பும் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்றது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையை இந்திய இராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வெளியிட்டு வைத்தனர். இந்த நிகழ்வில் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/208106
  25. Trump, Zelensky கடும் மோதல்; 1949-ல் அமெரிக்கா கொடுத்த வாக்குறுதியை Trump காப்பாற்றுவாரா? வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலன்ஸ்கிக்கும் இடையே நடந்த காரசார விவாதம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பிபிசி நியூஸின் சர்வதேச ஆசிரியர் ஜெர்மி போவன் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.