ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: வாசுகி கணேசானந்தனின் “Brotherless Night”
Everything posted by ஏராளன்
-
ஐநா மனித உரிமை பேரவை இலங்கை குறித்து ஒரு நிலைப்பாடு உக்ரைன் குறித்து வேறொரு நிலைப்பாடு - ரணில் சாடல்
27 FEB, 2025 | 10:28 AM ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை தொடர்பில் ஒரு நிலைப்பாட்டையும் உக்ரைன் தொடர்பில் வேறு ஒரு நிலைப்பாட்டையும் பின்பற்றுவதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் இது குறித்து தீவிர கவனம் செலுத்தவேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளார். இலங்கை குறித்து செப்டம்பர் மாதம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானமொன்றை நிறைவேற்றவுள்ளதால் இது குறித்து இப்போதே இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச அரசியல் மாற்றமடைந்துள்ளது, அமெரிக்கா உக்ரைன் ரஸ்ய யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கு முயல்கின்றது, ரஸ்யர்கள் தங்கள் நோக்கங்களிற்காக தியாகம் செய்துள்ளனர். அவர்கள் நெப்போலியனை தோற்கடிப்பதற்காக தங்கள் தலைநகரத்தையே தீயிட்டவர்கள். பல ஐரோப்பிய தலைநகரங்கள் உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி குறித்து மௌனமாக உள்ளன, அவர் ஜனாதிபதி தேர்தலை நடத்தாது குறித்து மௌனமாக உள்ளன என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் மார்சல் சட்டம் நடைமுறையிலிருந்தால் தேர்தலை பொதுத்தேர்தலை நடத்தாமலிருக்கலாம் என அந்த நாட்டின் அரசமைப்பு தெரிவிக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் ஆனால் அரசமைப்பு ஜனாதிபதி தேர்தல் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். முதலாம் இரண்டாம் உலக யுத்தங்களின் போது பிரிட்டன் தேர்தல்களை பிற்போட்டது, பொதுச்சபை பிரபுக்கள் சபையின் ஆதரவுடன் இது இடம்பெற்றது. விடுதலைப்புலிகள் வடக்கில் போரிட்டபோதும் ஜேவிபியின் கிளர்ச்சியின் காலத்திலும் நாங்கள் தேர்தல்களை நடத்தியுள்ளோம், 2024 இல் நாங்கள் தேர்தல்களை நடத்தினோம். ஜேவிபி தற்போது ஆட்சியில் உள்ளது, ஆனால் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவை இலங்கை இரட்டைநிலைப்பாடுகளை பின்பற்றுகின்றது. இலங்கையை வேறுமாதிரி நடத்துகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/207797
-
நாடளாவிய ரீதியில் போராட்டத்திற்கு தயாராகும் தாதியர்கள்!
Published By: DIGITAL DESK 2 27 FEB, 2025 | 10:10 AM நாடளாவிய ரீதியில் தாதியர் சேவையிலுள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளனர். வரவு - செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அந்தவகையில், பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை (27) அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று மதிய உணவுவேளை, நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துடன், போராட்டத்தால் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாதென்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/207796
-
இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம்
யாழில் வெடித்த மாபெரும் போராட்டம்...! குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டமானது இன்றைய தினம் (27.02.2025) யாழ்ப்பாணம் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் ஆரம்பமாகிய நிலையில் பேரணியாக யாழ்ப்பாண நகர் பகுதி ஊடாக ஆளுநர் செயலகம் நோக்கி சென்று கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான கடற்றொழில் சங்கங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கடற்றொழிலாளர்கள் இதில் பங்குபற்றியுள்ளனர். மாபெரும் போராட்டம் "தாண்டாத தாண்டாத எல்லையை தாண்டாதே, அழிக்காதே அழிக்காதே எமது வளங்களை அழிக்காதே, இந்திய அரசே எங்களை வாழ விடு, மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே" போன்ற கோஷங்களை எழுப்பிய நிலை கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாணம் நீரில் வளர்த்தினை களத்திற்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்த கடற்றொழிலாளர்கள் பேரணியாக சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தை அடைந்தனர். இருப்பினும் துணை தூதரகத்தின் வீதியில் வீதித்தடை போடப்பட்டு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மீனவ அமைப்புகளைச் சேர்ந்த ஐந்து பிரதிநிதிகள் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையகடற்றொழிலாளர்கள் வெளியில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செய்திகள் : பு.கஜிந்தன் மற்றும் பிரதீபன் https://ibctamil.com/article/fishermen-stage-massive-protest-in-jaffna-1740634187
-
இன்றைய வானிலை - 2025
27 FEB, 2025 | 06:43 AM வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மாத்தளை நுவரெலியா, பொலன்னறுவை, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். கொழும்பு தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 55 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 - 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார். https://www.virakesari.lk/article/207792
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
கொழும்பு நீதிமன்றப் படுகொலையின் பின்னணியில் இந்தியா? இலங்கையின் தலைநகர் கொழும்பில் (Colombo) உள்ள புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் ஒரு சட்டத்தரணி போன்ற தோற்றத்துடனும், சட்டத்தரணியின் அடையாள அட்டையுடன் நுழைகின்றார். சட்டத்தரணியின் தேற்றத்தில் வருகின்ற ஒரு பெண் - கொலையாளியிடம் ஒரு சட்டப் புத்தகத்தை ஒப்படைக்கின்றார். சட்டப்புத்தகத்தின் உள்ளே - அதன் பக்கங்கள் கச்சிதமாக நீக்கப்பட்டு, அதனுள்ளே ஒரு கைத்துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது - விசாரணைக் கூண்டில் நின்றுகொண்டிருந்த கனேமுல்ல சஞ்சீவ என்ற பாதாள உலக குழு ஒன்றின் தலைவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, சாதாரணமாக மக்களோடு மக்களாகக் கலந்து தப்பிச் சென்றிருந்தார் கொலையாளி. இந்தக் கொலையின் பின்னணியிலி இந்தியாவின் (India) கரங்கள் இருக்கின்றதா என்கின்ற கோணத்தில் ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: https://ibctamil.com/article/conspiracy-over-colombo-court-incident-1740496285#google_vignette
-
இன்று மகா சிவராத்திரி விரதமாகும்!
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விரத பூஜை வழிபாடுகள் நடைபெற்றது Published By: VISHNU 27 FEB, 2025 | 04:33 AM பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாய் திகழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேரோடும் ஆலயமென பெயர் பெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விரத பூஜை வழிபாடுகள் 26ஆம் திகதி புதன்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றன. உலகநாச்சி அம்மையாரால் பூஜிக்கப்பட்ட ஆலயமான கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய சிவராத்திரி விரத பூஜை வழிபாடுகளில் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு சாம பூசை இடம்பெற உள்ளதாக பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தெரிவித்தார். பூசை வழிபாடுகளில் கலந்துகொண்ட பக்த அடியார்கள் நெய் விளக்கேற்றியும், கற்பூரச் சட்டி ஏந்தியும், வில்வ இலைகளால் சிவலிங்கப்பெருமானை பூஜித்தும் தங்களது நேர்த்திகளை நிறைவேற்றியதுடன், கண் விழித்து சிவபுராணத்தினை ஓதி, ஓம் நமசிவாய எனும் மந்திரத்தை உச்சரித்து பக்திபூர்வமாக மகா சிவராத்திரி விரதத்தை அனுட்டித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/207791
-
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 - செய்திகள்
சாம்பியன்ஸ் டிராஃபி: ஆப்கானிஸ்தான் திரில் வெற்றி, இங்கிலாந்து ஏமாற்றம் - சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அணியின் வெற்றியை கொண்டாடும் ஒமர்ஸாய் 27 பிப்ரவரி 2025, 03:37 GMT புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர் லாகூரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் இங்கிலாந்து அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆப்கானிஸ்தான் அணி. இதனால், சாம்பியன்ஸ் டிராஃபி தொடரிலிருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, 325 ரன்கள் எடுத்தது. 326 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் விளையாடியது இங்கிலாந்து. ஆனால், 49.5 ஓவர்களில் 317 ரன்கள் எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது இங்கிலாந்து அணி. இந்தியா - பாகிஸ்தான் 'ஆயுதமில்லா போரை' இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பது எது? ஒரு பகுப்பாய்வு இந்தியாவிடம் தோல்வி - பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கூறியது என்ன? இந்தியா அரையிறுதிக்கு தகுதி, பாகிஸ்தான் வெளியேற்றம்: நியூசிலாந்து - வங்கதேசம் ஆட்டத்தில் என்ன நடந்தது? சேவாக் சாதனை சமன்: இங்கிலாந்துக்கு எதிராக 352 இலக்கை எட்டிப் பிடித்து வரலாறு படைத்த ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 111 பந்துகளில் 120 ரன்கள் எடுத்தார். 11 ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து இந்த ஸ்கோரை அடைந்தார் ஜோ ரூட். அவருடைய காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக, இறுதியில் 26 பந்துகளுக்கு 39 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜோ ரூட் அவுட் ஆனார். ஜோ ரூட் ஆட்டத்தில் இருந்து வெளியேறியது ஆப்கானிஸ்தானின் தோல்வி முகம் வெற்றியின் பக்கம் திரும்பியது. இங்கிலாந்து அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் மிக விரைவாகவே அவுட் ஆகினர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபில்ட் சால்ட் 13 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். பென் டக்கெட் 45 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். ஜேமி ஸ்மித் 9, ஹேரி ப்ரூக் 25, கேப்டன் ஜோஸ் பட்லர் 38, லியம் லிவிங்ஸ்டோன் 10, ஜேமி ஓவர்டன் 32, ஜோஃப்ரா ஆர்ச்சர் 14, அடில் ரஷித் 5 ரன்களை எடுத்தனர். மேலும், மார்க் வுட் 2 ரன்களை எடுத்த நிலையில் பெவிலியனுக்கு திரும்பினார். இங்கிலாந்து அணி வீரர் ஜேமி ஓவர்டன் 32 ரன்கள் அடித்த நிலையில், வெற்றி நோக்கி வந்த இங்கிலாந்துக்கு மூன்று விக்கெட்டுகள் மீதமிருக்கும் நிலையில், 14 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆல் அவுட் ஆனது. தொழிலதிபர் ஷியாம் சுந்தர் பார்டியா மீது பாலியல் வன்கொடுமை புகார் - புகார்களை மறுத்து அறிக்கை3 மணி நேரங்களுக்கு முன்னர் அரசுப் பள்ளி கழிப்பறையில் சடலமாக கிடந்த 14 வயது மாணவர் - என்ன நடந்தது? இன்றைய முக்கிய செய்திகள்2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் 111 பந்துகளில் 120 ரன்கள் எடுத்தார். இதில், 11 ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார் அசத்திய ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை அஸ்மதுல்லா ஒமர்ஸாய் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை எடுத்தார். முகமது நபி 2 விக்கெட்டுகளையும் ஃபஸல்ஹக், ரஷித் கான் மற்றும் குல்பதின் நயிப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இந்த தோல்வியின் மூலம் இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரிலிருந்து வெளியேறியது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிராக வலுவாக பேட்டிங் செய்தது. 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்தது. அந்த அணி வீரர் ஸத்ரான் 146 பந்துகளில் 177 ரன்களை குவித்தார். இதில் 6 சிக்ஸர்களும் 12 ஃபோர்களும் அடங்கும். இது, ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபியில் இதுவரை ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும். முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 37 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அந்த அணி தோற்று விடுமோ என கருதப்பட்டது. ஆனால், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஸத்ரான் மற்றும் ஹஸ்மத்துல்லா இருவரும் சேர்ந்து 103 ரன்கள் எடுத்து அணி அதிக ஸ்கோர் குவிக்க உதவினர். அஸ்மத்துல்லா ஒமர்ஸாய் 31 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். முகமது நபி 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். 2020 டெல்லி கலவரம்: ஐந்து ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களுக்கு விடுதலை எப்போது? பிபிசி கள ஆய்வு25 பிப்ரவரி 2025 தவெக ஆண்டு விழாவில் விஜய் பேசிய 5 முக்கிய விஷயங்கள்26 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆட்டநாயகன் விருதைப் பெற்ற ஸத்ரான் சாதனை படைத்த ஸத்ரான் ஆப்கானிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஸத்ரான் சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இதுவரை ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பு இங்கிலாந்து பேட்ஸ்மேன் பென் டக்கெட் 165 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. மேலும், உலகக் கோப்பைக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராஃபியில் ஆப்கானிஸ்தான் அணியிலிருந்து சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்ற ஸத்ரானுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. ஸத்ரான் 146 பந்துகளில் 177 ரன்களை குவித்தார். இதில் 6 சிக்ஸர்களும் 12 ஃபோர்களும் ஏமாற்றத்தை ஏற்படுத்திய இங்கிலாந்து அணி போட்டியின் ஆரம்பத்தில் இங்கிலாந்து வெளிப்படுத்திய பிரமாதமான ஆட்டத்தோடு ஒப்பிட்டால் போட்டியின் முடிவு மறக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. முதல் நான்கு ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே வழங்கினார்கள் வுட் மற்றும் ஆர்ச்சர். அதனைத் தொடர்ந்து ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் சேதிக்குல்லா அதால் ஆகியோர் ஐந்தாவது ஓவரில் அவுட் ஆனார்கள். சில நிமிடங்களிலேயே ரஹ்மத் ஷாவும் அவுட்டானார். கடந்த 14 ஒரு நாள் போட்டிகளுக்குப் பிறகு, நேற்று பவர்ப்ளேயில் 3 விக்கெட்டுகளை இங்கிலாந்து வீழ்த்தியது. வுட் அவருடைய நான்காவது ஓவரில் காலில் பிரச்னை ஏற்பட்டு வெளியேற, இப்ராஹிம் தன்னுடைய அணிக்கான ரன்களை குவிக்க ஆரம்பித்தார். இப்ராஹிமும் ஹஸ்மத்துல்லா ஷாஹிதியும் சேர்ந்து 124 பந்துகளுக்கு 103 ரன்கள் குவித்து அபாரமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். பின்பு ஷாஹிதி ரஷித்தின் பந்தில் அவுட் ஆனார். ஆப்கானிஸ்தான் அணி 30-வது ஓவரில் 140 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த போதும் இங்கிலாந்து தான் போட்டியை கட்டுப்பட்டுத்தியது. முகமது நபியும் இப்ராஹிமும் சேர்ந்து 9.1 ஓவர்களுக்கு 111 ரன்களை எடுத்தனர். முகமது நபி 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தனர். மீண்டும் களத்துக்கு வந்த வுட் 4.2. ஓவர்களுக்கு 37 ரன்களை வாரி வழங்கினார். 47-வது ஓவரில் பந்து வீசிய ரூட் ஆப்கானிஸ்தானின் 6-வது விக்கெட்டை எடுத்தார். முதல் ஓவரில் இருந்து கடைசி ஓவர் வரை களத்தில் நின்று ஆடிய இப்ராஹிம் பவுண்டரிகளை விளாசினார். நான்கு நாட்களுக்கு முன்பு டக்கெட் புரிந்த சாதனையை அவர் முறியடித்து புதிய சாதனையை சாம்பியன்ஸ் டிராஃபி வரலாற்றில் அவர் பதிவு செய்தார். இங்கிலாந்து ஆட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டது. ஆனால் ஆப்கானிஸ்தான் வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணி டி20 போட்டிகள் போல் விளையாடுவது சரியான அணுகுமுறை இல்லை என்று முன்னாள் வீரர் கருத்து இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் கூறியது என்ன? இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் விக் மார்க்ஸ் இது குறித்து பேசும் போது, "இது பிரபலமற்ற கருத்தாகக் கூட இருக்கலாம். ஆனால் சர்வதேச அளவில் நீங்கள் 50-ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை என்றால் அத்தகைய போட்டி ஆட்டங்களில் சிறப்பான பங்களிப்பை தர இயலாது. ஜோ ரூட்டைப் பாருங்கள். அவர் 50-ஓவர் இன்னிங்க்ஸை சிறப்பாக ஆடினார். ஆனால் டி20 விளையாட்டு அனுபவம் மற்றும் அதில் உள்ள திறன்களை மையமாக கொண்டு நீங்கள் அணியை உருவாக்கி இருந்தால், 10 ஓவர்களுக்கு மேல் பந்து வீசாதவர்களாகவே அவர்கள் இருப்பார்கள்," என்ற விமர்சனத்தை முன்வைத்தார். "இதில் கவனமும் மிக முக்கியம். பில் சால்ட் இந்த குளிர்காலத்தின் துவக்கத்தில் நல்ல ஆரம்பத்தைக் கொண்டிருந்தார். ஆனால் அது டி20க்கு என்று வரும் போது சரியாக இருக்கும். ஒரு நாள் போட்டிகளில் இதே போக்கு இருந்தால் அது விரைவாக விக்கெட்டுகளை இழக்கவே வழிவகை செய்யும். அது அடுத்தடுத்து விளையாட வரும் பேட்ஸ்மென்களுக்கும் நெருக்கடியைக் கொடுக்கும். இது டி20-ல் இருந்து முழுமையாக மாறுபட்டது. நீங்கள் இதை வேறொரு விதத்தில் அணுக வேண்டும். இதனை பெரும்பாலான இங்கிலாந்து வீரர்கள் உணர்ந்திருப்பதாக தோன்றவில்லை," என்றும் அவர் கூறினார். இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் இது குறித்து பேசும் போது, "தொடரில் இருந்து வெளியேறியது வருத்தமே அளிக்கிறது. எங்களுக்கான வாய்ப்புகள் இருந்தது. இது சிறப்பான விளையாட்டு. ஆனால் போட்டி முடிவுகள் எங்களுக்கு வேறுவிதமாக அமைந்துவிட்டது," என்று கூறினார். ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, "ஒரு அணியாக இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்கள் மொத்த நாடும் மகிழ்ச்சி அடைந்திருக்கும் என்று எனக்கு தெரியும். நாங்கள் அடுத்த ஆட்டத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் முதல்முறையாக இங்கிலாந்தை 2023 உலக கோப்பைப் போட்டியின் போது தோற்கடித்தோம். ஒவ்வொரு நாளும் ஒரு அணியாக நாம் முன்னேறி வருகிறோம் என்று நான் அடிக்கடி கூறுவது உண்டு. போட்டி முடிவுகள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது," என்று அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgkmm1l0jlxo
-
அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை : அநுரவின் அதிரடி அறிவிப்பு
அர்ஜூன மகேந்திரனை நாடு கடத்த முடியாது - சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் 27 FEB, 2025 | 11:23 AM மத்தியவங்கி பிணைமுறிமோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை சிங்கப்பூர் இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு மறுத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்ற மத்தியவங்கி பிணைமுறிமோசடியுடன் தொடர்புடையவர் என குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநரை நாடுகடத்துவதற்கான வேண்டுகோளை இலங்கை சட்டமாஅதிபர் திணைக்களம் விடுத்திருந்தது. எனினும் சிங்கப்பூரின் சட்டங்களின் கீழ் இலங்கைக்கு அவரை நாடு கடத்த முடியாது என சிங்கப்பூரின் சட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/207808
-
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 - செய்திகள்
ஐசிசி சம்பியனஸ் கிண்ணத்தில் ஆப்கன் வீரர் இப்ராஹிம் ஸத்ரான் துடுப்பாட்ட சாதனை Published By: VISHNU 26 FEB, 2025 | 08:58 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு எதிராக லாகூர் கடாபி விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் பி குழுவுக்கான ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இப்ராஹிம் சத்ரான் 177 ஓட்டங்களைக் குவித்து ஒரு போட்டியில் தனிநபருக்கான அதிக ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சம்பியன்ஸ் கிண்ண சாதனையை நிலைநாட்டினார். சில தினங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பென் டக்கெட் 165 ஓட்டங்களைக் குவித்து ஏற்படுத்திய சாதனையை இப்ராஹிம் ஸத்ரான் இன்று முறியடித்தார். இப்ராஹிம் ஸ்த்ரான் குவித்த அபார அதிரடி சதத்தின் உதவியுடன் ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 325 ஓட்டங்களைக் குவித்தது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தானின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. ஒன்பதாவது ஓவரில் 3ஆவது விக்கெட் வீழந்தப்பட்டபோது ஆப்கானிஸ்தானின் மொத்த எண்ணிக்கை வெறும் 37 ஓட்டங்களாக இருந்தது. ஆனால், ஆரம்ப வீரர் இப்ராஹிம் ஸத்ரான் துணிச்சலை வரவழைத்து அற்புதமாகவும் ஆக்ரோஷமாகவும் துடுப்பெடுத்தாடி சாதனைமிகு சதம் குவித்து அணியை மீட்டெடுத்தார். 2025 சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு முன்னர் உபாதை காரணமாக சுமார் 11 மாதங்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த 23 வயதான இப்ராஹிம் ஸத்ரான் தனது மீள்வருகையில் இரண்டாவது போட்டியில் 146 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள் 6 சிக்ஸ்களுடன் 177 ஓட்டங்ளைக் குவித்தார். இதனிடையே 4ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷஹிதியுடன் 102 ஓட்டங்களையும் 5ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களையும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாயுடன் 6ஆவது விக்கெட்டில் மொஹமத் நபியுடன் 111 ஓட்டங்களையும் இப்ராஹிம் ஸத்ரான் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார். இங்கிலாந்து பந்துவீச்சில் ஜொவ்ரா ஆச்சர் 64 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லியாம் லிவிங்ஸ்டோன் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 326 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து 16 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. https://www.virakesari.lk/article/207773
-
அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு ‘தங்க அட்டை’; விலை 5 மில்லியன் அமெரிக்க டொலர் - ட்ரம்ப் அறிவிப்பு
26 FEB, 2025 | 05:08 PM அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் 5 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவித்தார். அதன்படி அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ளது. மெக்சிகோ கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பலகட்டங்களாக சட்டவிரோதமாக குடியேறியவர்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் அமெரிக்காவில் குடியேறியவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டாலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: “நாங்கள் தங்க அட்டை ஒன்றை விற்பனை செய்ய இருக்கிறோம். க்ரீன் கார்டு போல இது கோல்டு கார்டு. இந்த அட்டைக்கு நாங்கள் 5 மில்லியன் டாலர்கள் என விலை நிர்ணயம் செய்துள்ளோம். இதில் க்ரீன் கார்டில் இருக்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்கும். இது குடியுரிமைக்கான ஒரு வழியாகும். பணக்காரர்கள் எங்கள் நாட்டுக்கு இந்த கார்டை பெற்று வரலாம். அவர்கள் இங்கே வசதியுடனும் வெற்றிகரமாகவும் இருப்பார்கள். அவர்கள் நிறைய பணம் செலவு செய்வார்கள் நிறைய வரி செலுத்துவார்கள். நிறைய பேரை வேலைக்கு அமர்த்துவார்கள்” இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார். மேலும் இந்த திட்டம் இரண்டு வாரங்களில் நடைமுறைக்கு வரும் என்றும் இதற்கு காங்கிரஸின் ஒப்புதலை பெறவேண்டிய அவசியம் தனது நிர்வாகத்துக்கு இல்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்த தெளிவான தகவல்கள் எதையும் அவர் வெளியிடவில்லை. அமெரிக்காவில் குடியேறும் முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து கிரீன் கார்டுகளைப் பெற அனுமதிக்கும் திட்டத்துக்கு இது மாற்றாக இருக்கும் என்று அமெரிக்க வர்த்தகத் துறை செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/207759
-
விமானத்தில் உயிரிழந்த பயணியின் உடலிற்கு அருகில் அமர்ந்து நான்கு மணிநேரம் பயணம் - தங்கள் மனஉளைச்சல் குறித்து அவுஸ்திரேலிய தம்பதியினர் தகவல்
Published By: RAJEEBAN 26 FEB, 2025 | 12:59 PM கட்டார் எயர்வேய்ஸ் விமானத்தில் உயிரிழந்த பயணியொருவரின் உடலுடன் பயணித்த அனுபவங்களை அவுஸ்திரேலிய தம்பதியினர் பகிர்ந்துகொண்டுள்ளனர். வெனிசிலிருந்து தங்களின் கட்டார் எயர்வேய்ஸ் விமானத்தில் பயணித்த மிச்செல் ரிங்கும் ஜெனிபர் கொலினும் மெல்பேர்னிலிருந்து டோஹா பயணத்தின்போது தங்கள் விமானத்தில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்தார் என அவுஸ்திரேலியாவின் சனல் 9 க்கு தெரிவித்துள்ளனர். விமான பணியாளர்கள் போர்வையால் சுற்றி அந்த உடலை தங்களிற்கு அருகில் வைத்தனர் என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய தம்பதியினர் விமானத்தில் வேறு ஆசனங்கள் காலியாகயிருந்த போதிலும் நான்கு மணித்தியாலங்கள் அந்த உடலை தங்களிற்கு அருகிலேயே வைத்திருந்தனர் என தெரிவித்துள்ளனர். கட்டார் எயர்வேய்ஸ் இதனால் ஏற்பட்ட அசௌகரியத்திற்காக மனம் வருந்துவதாக தெரிவித்துள்ளதுடன் குறிப்பிட்ட பயணிகளை தொடர்புகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும் இதுவரை எவரும் தங்களை தொடர்புகொள்ளவில்லை என அவுஸ்திரேலிய தம்பதியினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பயணிகளை கவனித்துக்கொள்வதற்கான விதிமுறைகள் அவசியம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தங்களுடன் விமானத்தில் பயணித்த பெண் மயங்கி விழுந்ததும் விமான பணியாளர்கள் உடனடியாக தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தனர் என தெரிவித்துள்ள ரிங் ஆனால் அந்த பெண்ணை காப்பாற்ற முடியவில்லை அதனை பார்ப்பது துரதிஸ்டவசமானதாகயிருந்தது என குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணின் உடலை வேறு பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றனர், ஆனால் அவர் மிகவும் பருமனானவராக காணப்பட்டதால் அது முடியவில்லை, எங்களிற்கு பின்னால் ஆசனங்கள் இருப்பதை விமானப்பணியாளர்கள் அவதானித்தனர், சற்றே விலக முடியுமா என கேட்டனர் நாங்கள் ஆம் என்றோம் அவர்கள் நான் இருந்த ஆசனத்தில் உடலை வைத்தனர் என ரிங் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/207721
-
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு ஆரம்ப விழா-‘Get Out’ கையெழுத்து இயக்கமும் ஆரம்பம்!
தவெக ஆண்டு விழாவில் விஜய் பேசிய 5 முக்கிய விஷயங்கள் பட மூலாதாரம்,TVK 26 பிப்ரவரி 2025, 09:44 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா செங்கல்பட்டு மாவட்டத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 26) காலை நடைபெற்றது. அப்போது பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மாநில அரசும் மத்திய அரசும் பேசி வைத்துக் கொண்டு நாடகமாடுவதாகக் குற்றம் சாட்டினார். இந்த நிகழ்வில் விஜய் பேசிய ஐந்து முக்கிய விஷயங்கள் யாவை? இந்தத் தொகுப்பில் காணலாம். அதிமுக வாக்கு வங்கியை விஜய் குறி வைக்கிறாரா? அவருக்கான வாக்குகள் எங்கிருந்து வரும்? விஜய் நாம் தமிழரின் கொள்கை எதிரியா? சீமான் பேச்சுக்கு த.வெ.க.வின் பதில் என்ன? விஜய் வருகைக்கு பிறகு தமிழக அரசியலில் என்ன நடக்கிறது? 2026 சட்டமன்ற தேர்தலில் புதிய கூட்டணி உருவாகுமா? விசிக - தவெக: 'திருமாவுக்கு கூட்டணிக் கட்சிகளால் அழுத்தம்' - விஜய் திருமாவளவன் குறித்துக் கூறியது என்ன? 1. 'எல்லோருக்கும் பிடித்தவன் அரசியலுக்கு வந்தால் சிலருக்கு எரிச்சல் வரும்' "அரசியலில் யார் எப்போது யாரை எதிர்ப்பார்கள், ஆதரிப்பார்கள் என்று தெரியாது. அரசியலில் நிரந்தர நண்பனும் நிரந்தர எதிரியும் கிடையாது என்று கூறுவார்கள். மக்களுக்கு அதிகமாகப் பிடித்த ஒருவர் அரசியலுக்கு வந்தால் நல்லவர்கள் அதை வரவேற்பார்கள், ஆனால் ஒரு சிலருக்கு எரிச்சல் ஏற்படும்," என்று விஜய் பேசினார். அதோடு, "இதுவரை நாம் சொன்ன பொய்களை நம்பி மக்கள் வாக்களித்தார்களே, ஆனால் இவன் இன்று மக்களுக்கு நெருக்கமாக இருக்கிறானே, எப்படி இவனைச் சமாளிக்கலாம் என்று நினைப்பார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் நமக்கு எதிராகப் பேசுகிறார்கள் இல்லையா அந்த மாதிரி," என்று குறிப்பிட்டார். பட மூலாதாரம்,PTI 2. 'கட்சி நிர்வாகிகள் இளைஞர்களாக இருந்தால் என்ன தவறு?' கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் இளைஞர்களாக இருப்பது குறித்து விமர்சிக்கப்படுவதாகக் கூறிய விஜய் அதற்கான தனது பதிலையும் தெரிவித்தார். அப்போது, "ஏன் இருந்தால் என்ன? அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் கட்சி தொடங்கியபோது அவர்களின் பின்னால் இருந்தவர்கள் இளைஞர்கள்தானே! அவர்களால்தான் 1967, 1977 தேர்தல்களில் வெற்றி கிடைத்தது," என்று பேசினார். பூமியை நெருங்கிய பிரமாண்ட விண்கல் நிலவின் மீது மோதுமா?நாசா புதிய தகவல்5 மணி நேரங்களுக்கு முன்னர் கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே உள்ளது? தொலைநோக்கியின் ரகசியம் என்ன? - 5 அரிய தகவல்கள்25 பிப்ரவரி 2025 3. 'பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவோம்' அதோடு, கட்சி நிர்வாகிகளின் பின்னணி குறித்தும் பேசப்படுவதாகக் குறிப்பிட்ட த.வெ.க. தலைவர் விஜய், "கட்சி நிர்வாகிகள் சாதாரண குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் என்பதையும் நம் மீதான புகாராகக் கூறுகிறார்கள். சாதாரணமானவர்கள்தான் பெரிது பெரிதாகச் சாதித்துள்ளனர். இது எளிய மக்களுக்கான கட்சி, பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது," என்று கூறினார். "அந்தக் காலத்தில், பண்ணையார்கள் கட்சியில் இருப்பார்கள். ஆனால் இப்போது கட்சியில் இருப்பவர்கள் பண்ணையாளர்களாக மாறிவிடுகிறார்கள். மக்கள் நலன், வளர்ச்சி ஆகியவை குறித்துக் கவலைப்படாமல், எந்தெந்த வழிகளில் எல்லாம் பணம் பெறலாம் என்று நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட பண்ணையார்களை அரசியலை விட்டே அகற்றுவதுதான் நமது நோக்கம்," என்று விமர்சித்தார். ஆதவ் அர்ஜுனா: திமுக-வில் அரசியலை தொடங்கியவர் விஜய் உடன் இணைந்தது எப்படி?31 ஜனவரி 2025 விஜய், திமுக கூட்டணி, 2026 சட்டமன்ற தேர்தல் வியூகம் பற்றி திருமாவளவன் பிபிசி தமிழுக்கு பேட்டி25 டிசம்பர் 2024 4. 'மும்மொழிக் கொள்கை' பட மூலாதாரம்,@TVKVIJAYTRENDS "புதிதாக ஒரு பிரச்னையைக் கிளப்பிவிடுகிறார்கள்" என்று கூறி மும்மொழிக் கொள்கை குறித்தும் விஜய் தனது கருத்தைத் தெரிவித்தார். அப்போது, "மும்மொழிக் கொள்கையைச் செயல்படுத்தாவிட்டால் மாநில அரசுக்கு கல்விக்கான நிதியை கொடுக்க மட்டார்கள் என்பது எல்கேஜி, யுகேஜி சிறுவர்கள் சண்டை போட்டுக் கொள்வது போல உள்ளது" எனக் கூறிய அவர், கொடுக்க வேண்டியது அவர்களது கடமை, வாங்க வேண்டியது இவர்களது உரிமை என்றார். மேலும், "இரண்டு பேரும் – அதாவது பாசிசமும் பாயாசமும் - அதாவது நமது அரசியல் எதிரியும் கொள்கை எதிரியும் பேசி வைத்துக் கொண்டு சமூக ஊடகத்தில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இருவரும் அடித்துக் கொள்வது மாதிரி நடிப்பார்களாம், அதை மக்கள் நம்ப வேண்டுமாம்," என்று பாஜக, திமுக இருதரப்புமே மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் அரசியல் செய்வதாக விமர்சித்தார் விஜய். மேற்கொண்டு பேசியவர், "நமது ஊர் சுயமரியாதை ஊர், அனைவரையும் மதிப்போம், அனைத்து மொழிகளையும் மதிப்போம். தனிப்பட்ட முறையில் எந்தப் பள்ளியில் வேண்டுமானாலும் படிக்கலாம், எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் கூட்டாட்சித் தத்துவத்தை மீறி மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக மாநில அரசின் கல்விக் கொள்கையை மொழிக் கொள்கையை கேள்விக்குறியாக்கி வேறொரு மொழியை அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி?" என்றும் பாஜகவை விமர்சித்தார். செலவிட பணமில்லாமல் திணறும் 100 கோடி இந்தியர்கள் - ஆய்வு கூறுவது என்ன?6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவுடன் முரண்படும் வங்கதேசத்தை வளைக்க சீனா முயற்சியா?6 மணி நேரங்களுக்கு முன்னர் 5. 'கட்சி கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்' பட மூலாதாரம்,TVK தமிழக வெற்றிக் கழகம் இப்போது முக்கியமான கட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிட்ட விஜய், மாநில அளவில் நிர்வாகிகளை நியமித்து வருவதாகவும், கட்சியின் கட்டமைப்புதான் ஒரு கட்சிக்குப் பலமே என்பதால் அதை வலுவாகக் கட்டமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். பிரஷாந்த் கிஷோருடன் கை கோர்க்கும் விஜய் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் கடந்த வாரம் சென்னையில் விஜயை சந்தித்துப் பேசியிருந்தார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்துக்கான தேர்தல் உத்திகளை வகுத்துத் தரும் பணியில் ஈடுபடப் போவதாக, இன்று தவெக விழாவில் பங்கேற்ற பிரஷாந்த் கிஷோர் தெரிவித்தார். அப்போது, "அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை வெற்றி பெறச் செய்ய உதவுவேன்" என்று கூறினார். "எனது நண்பர், எனது சகோதரர்" என்று பிரஷாந்த் கிஷோரை குறிப்பிட்டுப் பேசிய விஜய், "தமிழ்நாட்டில் 1967 மற்றும் 1977 சட்டமன்றத் தேர்தல்களைப் போல, 2026 சட்டமன்றத் தேர்தலில் வரலாறு படைப்போம் என்ற தீர்க்கமான உறுதியுடன் இயங்கி வரும் வளர்ந்து வரும் முதன்மை அரசியல் சக்தி தவெக" என்றார். கட்சியின் கொள்கைகளில் சமரசம் செய்யாமல் பிரஷாந்த் கிஷோருடன் பணியாற்றப் போவதாகவும் அவர் பேசினார். விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பின் பின்னணி என்ன? தி.மு.க-வுக்கு பாதிப்பா? த.வெ.க-வில் குழப்பம் வருமா?11 பிப்ரவரி 2025 விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஓராண்டாக என்ன செய்தது? தாக்கம் ஏற்படுத்தியதா?4 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,@TVKVIJAYTRENDS நிகழ்வில் பேசிய பிரஷாந்த் கிஷோர் "கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாக குஜராத் மாடல் வளர்ச்சியே சிறந்தது என ஒப்புக்கொள்ள இந்தியா கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு வளர்ச்சி மாடல்தான் சிறந்தது" என்றார். எனினும் இதுவரை இல்லாத அளவிலான அரசியல் ஊழல் தமிழ்நாட்டில் நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டார். "தமிழ்நாடு பிற மாநிலங்களைவிட பல குறியீடுகளில் முன்னோடியாக உள்ளது. ஆனால் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கான அரசியல் ஊழல் இங்கு நடைபெறுகிறது. வாரிசு அரசியல் குறித்து நாம் பெரிதாகக் கவனிப்பதில்லை. கிரிக்கெட்டில் சுனில் கவாஸ்கரின் வாரிசுகள் மட்டுமே ஆட வேண்டும் என்றால் நமக்கு எப்படி சச்சின், தோனி போன்ற வீரர்கள் கிடைத்திருப்பார்கள்? தமிழ்நாட்டில் பிரபலமாக உள்ளவர், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தோனி. அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் அவரைவிடப் பிரபலமான பிகாரி நானாக இருக்க வேண்டும். அடுத்த 100 நாட்களில் தமிழக வெற்றிக் கழக குடும்பத்தைப் பத்து மடங்கு பெருக்க வேண்டும் என்று சூளுரை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று பேசினார். இந்த விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து தவெகவில் அண்மையில் இணைந்திருந்த ஆதவ் அர்ஜூனா மேடையில் பேசினார். முன்னதாக 'கெட் அவுட்' என்று மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் கூறும் வகையில் கையெழுத்திடும் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் விஜய் முதல் கையெழுத்திட்டார். அந்த பேனரில் பிரஷாந்த் கிஷோரை கையெழுத்திடுமாறு ஆதவ் அர்ஜுனா கூறியபோது, அவர் மறுத்துவிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgl0ydngg9yo
-
வடக்கு கிழக்கில் 92,000 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள்
வடக்கு கிழக்கில் 92,000 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ளன இவர்களுக்கு நிலையான வருமான வழிமுறைகள் இல்லை, இதனால் இக்குடும்பங்களில் உள்ள பிள்ளைகளது எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது. எனவே பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வருவாய் பெறக்கூடிய சுய தொழில்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். என தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட எம்.பி. கே.எஸ்.குகதாசன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் விரிவாக்கமானது, ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் நம்பிக்கைக்குரிய ஒரு படியாகும். பொருளாதார மாற்றச் சட்டத் திருத்தம், அரச-தனியார் கூட்டுச் சட்ட அறிமுகம் முதலியன வணிக நம்பிக்கை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளன. எனினும், இந்த ஒப்பந்தங்கள் எவ்வாறு கட்டமைக்கப்படும் அல்லது எந்தக் குறிப்பிட்ட தொழில்கள் பயனடையும் என்பது பற்றிய தெளிவான வரைபடத்தை அரசு வழங்கவில்லை என்றார். https://thinakkural.lk/article/315462
-
நாகப்பட்டினம்-இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு!
மாறும் வானிலை | இலங்கைக்கான கப்பல் போக்குவரத்து 3 நாட்களுக்கு ரத்து 26 FEB, 2025 | 03:01 PM சென்னை: வங்கக் கடலில் நிலவும் மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக பிப். 26 முதல் 28 வரை நாகை - இலங்கை பயணிகள் இடையேயான கப்பல் போக்குவரத்து மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகம் வரை இந்தியா-இலங்கை இடையே கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ம் தேதி 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23-ம் தேதி முதல் அந்த கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையிலிருந்து காங்கேசன் துறைக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ம் தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் சேவையை தொடங்கியது. வாரத்தில் ஐந்து நாட்களுக்கு கப்பல் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் பாதுகாப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் தற்காலிமாக சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்தாண்டுக்கான கப்பல் போக்குவரத்து இம்மாதம் 22 ம் தேதி தொடங்கியது. தினமும் காலை 7.30 க்கு நாகையில் கிளம்பி 11.30 க்கு காங்கேசன் துறைமுகத்தை அடையும் கப்பல், அங்கிருந்து மறு மார்க்கத்தில் மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 க்கு நாகையை வந்தடைந்தது. இதனை பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் நேற்று முதல் 28 ம் தேதி வரை பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படியே நேற்று முன்தினம் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வங்கக்க்கடலில் பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக கப்பலை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் 26 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், மார்ச் 1 ம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெறும் என்றும் கப்பலை இயக்கும் சுபம் நிறுவனம் அறிவித்துள்ளது. நாகை - இலங்கை இடையே நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு கப்பல் போக்குவரத்து தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற்ற நிலையில் மீண்டும் 3 நாட்களுக்கு தடைப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/207735
-
இந்தியாவுடன் முரண்படும் வங்கதேசத்தை வளைக்க சீனா முயற்சியா?
பட மூலாதாரம்,CCTV படக்குறிப்பு, வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் தௌஹித் ஹொசைன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை ஜனவரி மாதம் சந்தித்தார். கட்டுரை தகவல் எழுதியவர், எத்திராஜன் அன்பரசன் பதவி, பிபிசி உலக சேவை, தெற்காசிய ஆசிரியர் 26 பிப்ரவரி 2025, 03:08 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை கொண்ட வங்கதேச குழு ஒன்று சீனாவுக்கு 10 நாள் பயணத்தை தொடங்கியுள்ளது. அவர்கள் சீன அரசு அதிகாரிகளுடனும், அங்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடனும் ஆலோசனை நடத்துவார்கள் என அந்த குழுவில் இடம்பெற்ற தலைவர் ஒருவர் பிபிசியிடம் உறுதி செய்தார். பல்வேறு விவகாரங்களில் இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் சீனா வங்கதேசத்தை கவர முயற்சி செய்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வங்கதேசத்தில் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஷேக் ஹசீனா இந்தியாவில் வசிப்பதும் அதில் ஒன்று. அவரை ஒப்படைக்க வேண்டும் என்று வங்கதேசம் கேட்டுக்கொண்டது. இந்தியா அதை ஏற்க மறுத்துவிட்டது. "அடிப்படையில் இது சீனா முன்னெடுத்துள்ள ஒரு நல்லெண்ண பயணம்" என பெய்ஜிங் சென்றுள்ள குழுவிற்கு தலைமை தாங்கியிருக்கும் பி என்பி எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சியை சேர்ந்த அப்துல் மொயின் கான் பிபிசியிடம் தெரிவித்தார். "வங்கதேசத்தின் பல்வேறு குழுக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளை சீனா அழைத்திருப்பதால் இந்த பயணம் தனித்துவமானது." என்றார் அவர். அந்த குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் பலரும் வங்கதேச தேசியவாத கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ஹசீனா தலைமையிலான அவாமி லீக் தவிர முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியா தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சியும் வங்கதேசத்தில் ஒரு முக்கிய கட்சியாகும். கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்படுவதற்கு காரணமான எழுச்சியை தொடங்கிய மாணவர் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகளும் குழுவில் இடம்பெற்றுள்ளனர். நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, வங்கதேசத்தில் தற்போது பதவியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் 'புதிய குடிமக்கள்' சந்திக்கும் பிரச்னைகள் என்ன? பிபிசி கள ஆய்வு வங்கதேசம்: வங்காள தேசியவாதத்தில் இருந்து இஸ்லாமிய தேசியவாதத்தை நோக்கி நகர்கிறதா? அமெரிக்க நிதியுதவி நிறுத்திவைப்பு: டிரம்ப் உத்தரவால் இந்தியா, வங்கதேசத்திற்கு என்ன பாதிப்பு? மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை எதிர்கொள்ள ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டை ஆளும் இடைக்கால அரசு இந்தியாவை வலியுறுத்தியுள்ளது. வங்கதேசத்தில் போராட்டத்தை ஒடுக்க ஹசீனா அரசு எடுத்த நடவடிக்கையில் சுமார் 1400 பேர் கொல்லப்பட்டதாக ஐநா கூறுகிறது. மறுபுறம், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் ஹசீனாவை ஒப்படைக்க இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரது எதிர்ப்பாளர்களால் இந்தியாவுக்கு ஆதரவானவராக பார்க்கப்படும் ஹசீனாவின் 15 ஆண்டு ஆட்சி காலத்தில் இந்தியாவும் வங்கதேசமும் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தன. டெல்லியுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்த அதே நேரம், அவர் சீனாவுடனான உறவையும் பராமரித்து வந்தார். ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு, வங்கதேச தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் இஸ்லாமிய கட்சிகள் உள்ளிட்டவற்றின் குழுக்களோடு சீனாவின் தொடர்பு அதிகரித்துள்ளது. ஜனவரியில் வங்கதேச இடைக்கால அரசின் வெளியுறவு கொள்கை ஆலோசகர் தௌஹித் ஹொசைன், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை பெய்ஜிங்கில் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து, இந்த வாரம் வங்கதேச குழு சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. கடந்த ஆண்டின் பிற்பகுதியில் பிஎன்பி குழு பெஜிங் சென்று வந்த நிலையில் அதன் நிர்வாகிகள் சீனாவிற்கு பயணம் மேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும். வங்கதேசத்தில் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதுடன், இந்தியாவின் செல்வாக்கும் இல்லாத நிலையில், சுமார் 170 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டின் மீது சீனா தனது பிடியை வலுப்படுத்திக் கொள்ள முயற்சிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வங்கதேசத்தின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக சீனா உள்ளது. அதில் பெரும்பாலானவை, சீனாவின் ஏற்றுமதியாக தெற்காசிய நாடான வங்கதேசத்துக்குச் செல்கிறது. சீன உபகரணங்கள் மற்றும் வெடிமருந்துகளையே, வங்கதேச ராணுவம் பெரிதும் நம்பியுள்ளது. அதற்குத் தேவையான 70 சதவீதத்துக்கும் அதிகமான பொருட்கள் சீனாவிலிருந்தே வருகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வங்கதேச தேசியவாதக் கட்சியின் மூத்த தலைவரான அப்துல் மொயீன் கான், பெய்ஜிங்கில் உள்ள தூதுக்குழுவிற்கு தலைமை தாங்குகிறார். சீனாவின் அணுகுமுறையோடு ஒப்பிடுகையில், கடந்த ஆறு மாதங்களில் வங்கதேச இடைக்கால அரசு மற்றும் பிற வங்கதேச அரசியல் தலைவர்களுடன் இந்தியா மிகக் குறைவான தொடர்புகளையே மேற்கொண்டுள்ளது. ஹசீனாவுக்கு இடமளிப்பதன் மூலம் வங்கதேசத்தின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாகக் கூறி வங்கதேச தேசியவாத கட்சி கடந்த டிசம்பர் மாதம் போராட்டம் நடத்தியது. கூடுதலாக, இடைக்கால அரசின் சில ஆலோசகர்களும் இதே காரணத்திற்காக இந்தியாவை விமர்சித்துள்ளனர். இந்த விமர்சனத்திற்கு இந்தியாவில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "எங்களுடன் என்ன வகையான உறவைப் பேண விரும்புகிறார்கள் என்பதை வங்கதேசம் முடிவு செய்ய வேண்டும்" என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த வாரம் கூறினார். வங்கதேச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இந்தியாவை விமர்சிப்பது "முற்றிலும் அபத்தமானது" என்றும் அவர் கூறினார். இந்திய தூதருக்கு வங்கதேசம் மீண்டும் சம்மன் - இருநாட்டு எல்லையில் என்ன பிரச்னை?14 ஜனவரி 2025 மோதி - டிரம்ப் உறவு எப்படி இருக்கப் போகிறது? 2025இல் இந்தியா சந்திக்கவுள்ள 6 சவால்கள்2 ஜனவரி 2025 வங்கதேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த வாக்குவாதம் வங்கதேசத்தை சீனாவை நோக்கி தள்ளக்கூடும் என்று சிலர் வாதிடுகின்றனர். இலங்கை, மாலத்தீவு, நேபாளத்திற்கு அடுத்தபடியாக வங்கதேசமும் இந்தியா - சீனா இடையிலான போட்டியின் இலக்காக மாறியுள்ளது என்பதை சமீபத்திய நிகழ்வுகள் வெளிக்காட்டுகின்றன. ஏனெனில் இந்தியாவும் சீனாவும் தங்களின் செல்வாக்கை அதிகரிக்க முயற்சி செய்கின்றன. "இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள நாடுகள் முழுவதும் இந்தியாவின் செல்வாக்கிற்கு உட்பட்ட பிராந்தியமாக வருவதாக இந்தியா கருதக் கூடாது என்று நான் நம்புகிறேன். அந்த அணுகுமுறை இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்," என்று பெய்ஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக் கழகத்தின் மூத்த சீன ஆய்வாளர் ஜோ போ பிபிசியிடம் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62zqq9y5z0o
-
இலங்கை - இந்திய பொருளாதார உறவுகளை வலுப்படுத்தல் குறித்து வட்ட மேசை மாநாடு
26 FEB, 2025 | 05:30 PM (எம்.மனோசித்ரா) இந்திய உயர் ஸ்தானிகரகம் 'ஐ.என்.ஆர். - எல்.கே.ஆர். (INR - LKR) வர்த்தக தீர்வு : இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல்' என்ற தொனிப்பொருளில் கொழும்பில் ஒரு வட்ட மேசை மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாட்டில் அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள், இலங்கை மற்றும் இந்திய வங்கிகளின் பிரதிநிதிகள், பல்வேறு வர்த்தக சபைகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிந்தனையாளர் குழுக்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் இந்நிகழ்வை வழிநடத்தினர். இந்திய உயர் ஸ்தானிகரின் வரவேற்புரையுடன் நிகழ்வு ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து இந்திய சேமிப்பு வங்கியின் தலைமைப் பொது முகாமையாளர் ஆதித்யா கைஹாவின் விரிவான விளக்கவுரை வழங்கப்பட்டது, இந்திய ரூபாவை சர்வதேசமயமாக்கல் மற்றும் இலங்கை - இந்திய வர்த்தக தீர்வு குறித்தும், இலங்கையில் இந்திய ரூபாவில் முதலீடுகளை அனுமதிக்கும் இந்திய சேமிப்பு வங்கியின் முக்கிய கொள்கைகளையும் அவர் இதன் போது எடுத்துரைத்தார். எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளில் இந்திய - இலங்கை நாணய பயன்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தில் இந்திய சேமிப்பு வங்கியின் சமீபத்திய திருத்தங்கள் குறித்து அவர் மேலும் விரிவாகக் குறிப்பிட்டிருந்தார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, இந்திய ரூபாய் மதிப்பிலான வர்த்தக தீர்வு கட்டமைப்பைப் பற்றிய நுண்ணறிவுகள் தொடர்பில் விளக்கமளித்தார். இந்த பொறிமுறையின் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும் இந்த பொறிமுறையை நெறிப்படுத்துவதில் இரு நாடுகளிலும் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் மத்திய வங்கிகளுடன் இணைந்து செயற்படுவதையும் அவர் வலியுறுத்தியிருந்தார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சமீபத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்து, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது, உயர்மட்டத் தலைமைகளால் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட உறுதிப்பாட்டுடன் இந்த முயற்சி ஒத்துப்போகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை ஆழப்படுத்துவதற்காக இந்திய - இலங்கை ரூபாய் மதிப்புள்ள வர்த்தக தீர்வுகளை மேம்படுத்துவது குறித்து இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது. https://thinakkural.lk/catagory/local_news
-
யாழ். போதனா நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டம்!
நோயாளிகள் நலன் கருதி எனில் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதே நன்மை அளிக்கும், மாறாக தொழிற்சங்க நடவடிக்கைக்காக சிகிச்சை அளிக்காது விடுவதல்ல. வேறு முறைகளில் எதிர்ப்பைக் காட்டலாமே?!
-
தனித்தே போட்டி; சுமந்திரன் அறிவிப்பு
நாட்டில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடும் என தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, உள்ளூராட்சி சபைத் தேர்தலில், நாம் ஏற்கனவே எடுத்துக்கொண்ட தீர்மானத்திற்கமைவாக தனித்துப் போட்டியிடுவோம். சபைகளில் ஆட்சி அமைக்கும்போது, கூட்டாக ஆட்சி அமைக்க முடியும். இது தொடர்பாக எமது கட்சித் தலைவர் தமிழ்த் தேசிய கட்சிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/315488
-
பாலஸ்தீன மருத்துவர்கள் உட்பட 160க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் - கைது செய்யப்பட்ட பலர் காணாமல்போயுள்ளனர்
Published By: RAJEEBAN 26 FEB, 2025 | 11:38 AM பாலஸ்தீனத்தை சேர்ந்த மருத்துவர்கள் உட்பட 160க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன என கார்டியன் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கார்டியன் மேலும் தெரிவித்துள்ளதாவது. பாலஸ்தீனத்தை சேர்ந்த மருத்துவர்கள் உட்பட 160க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என நம்பப்படுகின்றது உலக சுகாதார ஸ்தாபனம் இவர்களின் நலன்கள் பாதுகாப்பு குறித்து கரிசனை வெளியிட்டுள்ளது. 162 மருத்துவ பணியாளர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தன்னால் உறுதிப்படுத்த முடிந்துள்ளதாக பாலஸ்தீன மருத்துவ அரசசார்பற்ற அமைப்பான சுகாதார பணியாளர்கள் நலன் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. காசாவின் சிரேஸ்ட மருத்துவர்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்இமோதல்களின் போது மருத்துவமனைகளில் கைதுசெய்யப்பட்ட24 பேர் காணாமல்போயுள்ளனர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் உட்பட பெருமளவு சுகாதார பணியாளர்களை தடுத்துவைத்திருப்பது சர்வதேச சட்டங்களின் சட்டவிரோதமான செயல் என சுகாதார பணியாளர்கள் நலன் கண்காணிப்பு அமைப்பின் இயக்குநர் முவாத் அல்செர் தெரிவித்துள்ளார். மருத்துவநிபுணத்துவம் பராமரிப்பு போன்றவற்றை மறுப்பது பொதுமக்களின் துன்பங்களை மேலும் அதிகரிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார பணியாளர்களை இஸ்ரேல் இந்த விதத்தில் இலக்குவைப்பது பாலஸ்தீன மக்களிற்கான சுகாதார சேவை மீது கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் பெரும் துன்பங்கள் நிகழ்கின்றன இ தடுத்திருக்ககூடிய உயிரிழப்புகள் பல நிகழ்கின்றனஇமருத்துவ நிபுணத்துவம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது என தெரிவித்துள்ளார். யுத்தம் ஆரம்பித்த பின்னர் 297 சுகாதார பணியாளர்கள் இஸ்ரேலிய படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என உறுதி செய்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. எனினும் எத்தனை பேர் விடுதலை செய்ய்பட்டனர் என்ற புள்ளிவிபரங்கள் இல்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேலால் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனிய சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பு நலன் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/207713
-
மக்களை தாக்கிய AI ரோபோ: சீனாவில் பரபரப்பு
காணொளி
-
இந்தோனேசியாவில் 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்
Published By: DIGITAL DESK 3 26 FEB, 2025 | 10:21 AM இந்தோனேசியாவில் 6.1 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்களில் நிலநடுக்கம் காரணமாக எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 6:55 மணிக்கு (2255 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது வடக்கு சுலவேசி மாகாணத்திற்கு அருகில் கடலோரத்தில் 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளின் படி நிலநடுக்கம் 6.0 ரிச்டர் அளவில் பதிவாகி இருப்பாகவும், சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறியுள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி 2021ம் ஆண்டு சுலவேசியை உலுக்கிய 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். https://www.virakesari.lk/article/207701
-
இன்று மகா சிவராத்திரி விரதமாகும்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி 26 FEB, 2025 | 09:19 AM உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானை பூஜிக்கும் நாளாக மகா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது. இது சிவன், பார்வதியின் சங்கமத்தையும், சிவபெருமானால், தெய்வீக நடனமான தாண்டவம் நிகழ்த்தப்படும் சந்தர்ப்பமாகவும் இது நினைவுகூறப்படுகிறது. இது உலகிலும், வாழ்விலும் "மாயை இருளை" வெற்றிகொள்ளவதை குறிக்கிறது. எனவே,மாயை இருள் நீங்கி ஒளி பிரகாசிக்கும்' என்ற நம்பிக்கையுடன் இந்து பக்தர்கள் இந்த நாளில் இரவு முழுவதும் விரதமிருந்து தான தர்மங்களில் ஈடுபடுகின்றனர். மேலும் மகா சிவராத்திரி நாளில் வாழ்வில் சுபீட்சம் கிட்ட பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது. சிவன், பார்வதியின் சங்கமம் ஞானம் மற்றும் ஆற்றலின் சங்கமாகும். அது கண்களை மறைத்திருக்கும் மாயையின் திரைகளை கிழித்து யதார்த்தத்தின் வெளிச்சத்திற்கு கண்களை திறக்கிறது. பல யுகங்களாக எம்மை சகோதரத்துவத்திலிருந்து ஒதுக்கி வைத்த பிரிவு - பிளவுகளை உருவாக்கிய இருள் திரையைக் கிழித்து, ஒற்றுமையை கட்டியெழுப்பி இந்த பூமியில் ஒரு புதிய யுகத்தின் உதயத்தை காணும் வேளையில் இந்த தருணம் வந்திருக்கிறது. இது, மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை முன்பை விடவும் வரவேற்று, பாதுகாத்து நாட்டின் அனைத்து மக்கள் குழுக்களும் ஒருவருக்கொருவர் மத்தியில் கௌரவம் - அன்பை முன்னிலைப்படுத்தி எமது தாய்நாட்டின் சுபீட்சத்துக்காக அர்ப்பணிக்கும் தருணமாகும். இந்த வலுவான களத்திலிருந்து சிறந்ததொரு நாட்டை உருவாக்கிக்கொள்ள ஒரே தேசமாக நாம் அனைவரும் முன்னோக்கி செல்ல வேண்டும். அனைவரும் கோரும் நல்லதொரு அரசியல் கலாசாரத்துடன் கூடிய வளமான நாட்டைக் கட்டியெழுப்பும் பல புதிய அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்கள் பலவற்றுடன் தற்போது நாம் மறுமலர்ச்சி யுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம். மஹா சிவராத்திரி தினத்தில் ஒளிரச் செய்யப்படும் விளக்குகளின் ஒளியால் ஒருமித்த மனங்களுடன் நாம் தேர்ந்தெடுத்த பாதையை மென்மேலும் ஔிரச் செய்ய இலங்கையர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். மகா சிவராத்திரியை கொண்டாடும் இலங்கை இந்து பக்தர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள இந்து மக்களின் நல்ல எண்ணங்களும், விருப்பங்களும் நிறைவேறி அவர்களின் வாழ்வு அர்த்தமுள்ளதாக அமைய வேண்டுமென பிரார்த்திக்கிறேன். https://www.virakesari.lk/article/207666
-
அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!
அமெரிக்காவுடன் கனிம ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் - யுக்ரேன் அதிகாரிகள் தகவல் பட மூலாதாரம்,BLOOMBERG VIA GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அப்துஜலில் அப்துராசுலோவ், ஜரோஸ்லாவ் லுகிவ், அந்தோணி சுர்சர் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவுடனான முக்கிய கனிம ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு யுக்ரேன் ஒப்புக் கொண்டுள்ளது என்று கீவில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். "நாங்கள் உண்மையில் பல நல்ல திருத்தங்களுடன் அதை ஒப்புக் கொண்டுள்ளோம். இதை ஒரு நேர்மறையான முடிவாக பார்க்கிறோம்" என்றும் தெரிவித்தார். அந்த அதிகாரி இந்த ஒப்பந்தம் குறித்து மேலும் எந்த விவரத்தையும் வழங்கவில்லை. இந்தியாவின் 'புதிய குடிமக்கள்' சந்திக்கும் பிரச்னைகள் என்ன? பிபிசி கள ஆய்வு ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா - டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் பேசியது என்ன? 'யுக்ரேன் நேட்டோ உறுப்பினராகச் சேர்க்கப்பட்டால் பதவி விலக தயார்' - ஸெலன்ஸ்கி டிரம்பின் திடீர் அணுகுமுறையால் அதிர்ந்து போன யுக்ரேன் - போர் முனையில் நடப்பது என்ன? ஒப்பந்தத்தில் என்ன கூறப்பட்டுள்ளது? இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சாத்தியமான வருவாயில் 500 பில்லியன் டாலர் (£395 பில்லியன்) உரிமைக்காக ஆரம்பத்தில் வைத்த கோரிக்கைகளை அமெரிக்கா கைவிட்டுவிட்டதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் யுக்ரேனுக்கு உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா வழங்கவில்லை. இது யுக்ரேன் முன் வைத்த முக்கிய கோரிக்கையாகும். இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் கடுமையான வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்ட நிலையில், இந்த வாரம் வாஷிங்டனில் யுக்ரேனிய அதிபர் ஜெலன்ஸ்கி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். ஓர் உடன்பாடு எட்டப்பட்டதை உறுதிப்படுத்தாமல் பேசிய டிரம்ப், இந்த ஒப்பந்தத்திற்கு ஈடாக யுக்ரேன் "போராடுவதற்கான உரிமையை" பெறும் என்று தெரிவித்திருந்தார். "அவர்கள் மிகவும் துணிச்சலானவர்கள்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால் "அமெரிக்காவும் அதன் நிதியும் ராணுவ தளவாடங்களும் இல்லாவிட்டால், இந்த போர் மிகக் குறுகிய காலத்தில் முடிந்திருக்கும்" என்றார். 5,000 ஆண்டுக்கு முந்தைய மம்மிகளில் வெளிப்பட்ட நறுமணம் - எகிப்தியர் எவ்வாறு தயார் செய்தனர்?4 மணி நேரங்களுக்கு முன்னர் பூமியை நெருங்கிய பிரமாண்ட விண்கல் நிலவின் மீது மோதுமா?நாசா புதிய தகவல்4 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனுக்கு அமெரிக்க ராணுவ தளவாடங்கள் மற்றும் வெடிமருந்துகளின் விநியோகம் தொடருமா என்று கேட்டதற்கு, "ஒருவேளை ரஷ்யாவுடன் ஓர் ஒப்பந்தம் செய்யும் வரை... நாம் ஒரு உடன்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும், இல்லாவிட்டால் இது தொடர்ந்து கொண்டே இருக்கும்," என்றார். எந்தவொரு சமாதான ஒப்பந்தம் போடப்பட்டாலும், அதை தொடர்ந்து யுக்ரேனில் "ஒருவித அமைதி காத்தல்" தேவைப்படும், ஆனால் அது "அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக" இருக்க வேண்டும் என்று டிரம்ப் மேலும் கூறினார். கடந்த வாரம், டிரம்ப் ஜெலன்ஸ்கியை ஒரு "சர்வாதிகாரி" என்று வர்ணித்தார். ஜெலன்ஸ்கி, அமெரிக்காவின் 500 பில்லியன் டாலர் கனிம வளத்திற்கான ஒப்பந்த கோரிக்கைகளை நிராகரித்திருந்தார். இதன் பின்னர், போரைத் தொடங்கியதற்கு யுக்ரேனை குற்றம் சாட்டியிருந்தார் டிரம்ப். பட மூலாதாரம்,GETTY IMAGES நிதியுதவிக்கு ஈடாக கனிம உரிமை கோரும் அமெரிக்கா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து யுக்ரேனுக்கு வழங்கிய முந்தைய ராணுவ மற்றும் பிற உதவிகளுக்கு ஈடாக யுக்ரேனின் கனிமங்களை தருமாறு டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். அந்த அளவுக்கு அமெரிக்க உதவிகள் வழங்கப்படவில்லை என்று வாதிடும் ஜெலன்ஸ்கி, "எங்கள் நாட்டை என்னால் விற்க முடியாது" என்று கூறினார். அமெரிக்கா யுக்ரேனுக்கு 300 பில்லியன் டாலர் முதல் 350 பில்லியன் டாலர் வரை வழங்கியதாக டிரம்ப் செவ்வாய்க்கிழமை கூறினார். "நாங்கள் அந்த பணத்தை திரும்பப் பெற விரும்புகிறோம்," என்று டிரம்ப் கூறினார். "ஒரு நாட்டின் ஒரு மிகப் பெரிய பிரச்னையை எதிர்கொள்ள உதவிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அமெரிக்காவில் வரி செலுத்தும் மக்கள் இப்போது தங்கள் பணத்தை மீண்டும் பெறப் போகிறார்கள்." என்று அவர் தெரிவித்துள்ளார். யுக்ரேன் துணைப் பிரதமர் ஸ்டெபானிஷினா செவ்வாய்க்கிழமை கனிம ஒப்பந்தம் குறித்து முதலில் செய்தி வெளியிட்ட பைனான்சியல் டைம்ஸ் ஊடகத்திடம் இந்த ஒப்பந்தம் "பெரிய திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே" என்று கூறினார். "இது ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதி என்று அமெரிக்க நிர்வாகம் கூறுவதை நாங்கள் பல முறை கேட்டுள்ளோம்" என்று பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கிய ஸ்டெபானிஷினா கூறினார். யுக்ரேனிய வட்டார தகவல்களின் படி, போரால் பாதிக்கப்பட்ட யுக்ரேனுடனான ஒப்பந்தத்தில் அமெரிக்கா அதன் சில கடுமையான நிபந்தனைகளில் இருந்து பின்வாங்க வேண்டியிருந்தது. கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே உள்ளது? தொலைநோக்கியின் ரகசியம் என்ன? - 5 அரிய தகவல்கள்25 பிப்ரவரி 2025 முதல்வர் மருந்தகத்தில் மருந்துகளின் விலை எவ்வளவு குறைவு? எப்படிப்பட்ட மருந்துகள் இங்கு கிடைக்கும்?24 பிப்ரவரி 2025 உதவிகள் வழங்குவதில் கொள்கை மாற்றம் ஆரம்பம்? எவ்வாறாயினும், ஒரு முன்னுதாரணம் உருவாகியுள்ளது. டிரம்ப் காலத்தில் அமெரிக்க உதவிகள் முன்பை போல கிடைக்கப் போவதில்லை. திருப்பித் தர வேண்டியிராத நல்லலெண்ண உதவிகள் என்பது முடிந்து போன விஷயமாகிவிட்டது. அவை மனிதாபிமான உதவியாக இருந்தாலும் சரி அல்லது மூலோபாய காரணங்களுக்காக வழங்கப்படும் உதவியாக இருந்தாலும் சரி. இது மார்ஷல் திட்டம் முதல் 75 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்பட்ட அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஒரு அடிப்படை மாற்றம் குறிக்கிறது. யுக்ரேன் ஒரு தொடக்கம்தான். டிரம்பும் அவரது வெளியுறவுக் கொள்கை குழுவும் அடுத்த நான்கு ஆண்டுகளில் உலகெங்கிலும் அவர்களின் "அமெரிக்காவுக்கு முன்னுரிமை" கோட்பாடுகளை செயல்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். யுக்ரேன் செய்தி இணையதளமான யுக்ரேன்ஸ்கா பிராவ்தா, கனிம வள ஒப்பந்தத்தில் யுக்ரேனிய வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோர் கையெழுத்திட இருப்பதாக தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் புனரமைப்பு முதலீட்டு நிதியம் ஒன்றை அமைக்க உடன்பட்டுள்ளதாக செய்தி தளத்தின் பொருளாதார பிரிவு கூறுகிறது. லித்தியம் மற்றும் டைட்டானியம் உட்பட முக்கிய கனிமங்களின் பெரும் இருப்புகளை யுக்ரேன் கொண்டுள்ளது. அத்துடன் கணிசமான நிலக்கரி, எரிவாயு, எண்ணெய் மற்றும் யுரேனிய இருப்புகள் உள்ளன. இவை பல பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டவை. கடந்த ஆண்டு, ஜெலன்ஸ்கி யுக்ரேன் மற்றும் அதன் மேற்கத்திய கூட்டாளிகளிடம் "ரஷ்யாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்கான திட்டத்தை" முன்வைத்தார். அது போரின் முடிவில் வெளிநாட்டு நிறுவனங்கள் யுக்ரேனின் சில கனிம வள ஒப்பந்தங்களைப் பெற முடியும் என்று முன்மொழிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் யுக்ரேனிய அதிபர் ஜெலன்ஸ்கி இடையே கடுமையான வார்த்தைப்போர் கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், இந்த கனிம ஒப்பந்தம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவில் புதிய பறக்கும் கார் சோதனை24 பிப்ரவரி 2025 காலநிலை மாற்றம்: ஆணுடன் ஒப்பிடுகையில் பெண்ணுக்கு இரட்டைச் சுமை என்று நிபுணர்கள் எச்சரிப்பது ஏன்?23 பிப்ரவரி 2025 செவ்வாயன்று, ரஷ்ய அதிபர் புதின் அரிய கனிமங்களை அமெரிக்கா அணுக அனுமதி அளிக்க தயாராக இருப்பதாக கூறினார். இதில் யுக்ரேனில் உள்ள ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளும் அடங்கும். யுக்ரேனும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் கடந்த வாரம் சௌதி அரேபியாவில் நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள் உட்பட, அமெரிக்கா - ரஷ்யா இடையே சமீப காலமாக நிலவும் சுமூக உறவுகள் குறித்து அதிக எச்சரிக்கை கொண்டுள்ளன. யுக்ரேனிலும் ஐரோப்பா முழுவதிலும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கம் கொண்ட எந்தவொரு பேச்சுவார்த்தைகளில் இருந்தும் அவர்கள் ஒதுக்கப்படலாம் என்ற கவலை நிலவுகிறது. ஐரோப்பிய கண்டத்தின் எதிர்கால பாதுகாப்பு ஒட்டுமொத்தமாக அவர்களே இடம் பெறாத பேச்சுவார்த்தைகளில் தீர்மானிக்கப்படலாம் என்று அஞ்சுகின்றனர். யுக்ரேனில் உள்ள தாதுக்கள் எவை? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரஷ்யா ஆக்கிரமித்துள்ள யுக்ரேனின் பகுதிகளில் 350 பில்லியன் டாலர் மதிப்புள்ள கனிம வளங்கள் உள்ளன என்று யுக்ரேன் கூறுகிறது. உலகின் "முக்கியமான மூலப்பொருட்களில்" சுமார் 5% யுக்ரேனில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க பயன்படும் கிராபைட்டின் நிரூபிக்கப்பட்ட இருப்பு 19 மில்லியன் டன் ஆகும். ஐரோப்பாவில் அனைத்து லித்தியம் இருப்புகளில் மூன்றில் ஒரு பங்கு, இவை தற்கால பேட்டரிகளில் முக்கிய அங்கமாகும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்குவதற்கு முன்பு, யுக்ரேன் உலகின் 7% டைட்டானியத்தை உற்பத்தி செய்தது. இது விமானங்கள் முதல் மின் நிலையங்கள் வரை கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது. யுக்ரேனில் அரிய உலோகங்களின் குறிப்பிடத்தக்க இருப்பும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை, நவீன உலகில் முக்கியமான ஆயுதங்கள், காற்றாலைகள் , மின்னணுவியல் மற்றும் பிற தயாரிப்புகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் 17 கனிமங்களின் தொகுப்பாகும். சில கனிம வளங்கள் நிறைந்த பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. யுக்ரேனின் பொருளாதார அமைச்சர் யூலியா ஸ்வைரிடென்கோ, 350 பில்லியன் டாலர் மதிப்புள்ள வளங்கள் இன்று ரஷ்யா ஆக்கிரமித்த பகுதிகளில் உள்ளன என்று கூறியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2kg54wz47no
-
அரசியலமைப்புக்கு அமைய ஸ்தாபிக்கப்படும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீனமாகவும் நம்பகமான முறையிலும் இயங்கும் - ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் விஜித்த ஹேரத்
26 FEB, 2025 | 06:29 AM (நா.தனுஜா) சகல தரப்பினரதும் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவகையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான கலந்துரையாடல்கள் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்படும். இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரிப்பதற்கான ஆணை அக்கட்டமைப்புக்கு வழங்கப்படும். இவ்வாறு நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக ஸ்தாபிக்கப்படும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீனமாகவும், நம்பகமான முறையிலும் இயங்கும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் அறிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர்திங்கட்கிழமை (24) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின் புதன்கிழமை (25) அமர்வில் இலங்கை சார்பில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு தமது அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்தினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: எமது நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்றுமுடிந்த தேர்தல்களின் ஊடாக அரசியல், பொருளாதார மற்றும் சமூக மறுசீரமைப்பை ஏற்படுத்தும் நோக்கில் நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த மக்கள் பெரும்பான்மை வாக்குகள் ஊடாக எம்மைத் தெரிவுசெய்தனர். அதனையடுத்து இலங்கை வரலாற்றிலேயே எம்மால் கட்டமைக்கப்பட்ட பாராளுமன்றமே மலையகத்தைச்சேர்ந்த இருவர் உள்ளடங்கலாக அதிகளவு பெண் பிரதிநிதிகளையும், மாற்றுத்திறனாளி ஒருவரையும் உள்ளடக்கிய சகல தரப்பினருக்குமான பிரதிநிதித்துவத்துடன்கூடிய பாராளுமன்றமாகத் திகழ்கிறது. தற்போது நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்திருப்பதுடன், அதனை சகலருக்குமான சமபங்கீட்டை உறுதிப்படுத்தக்கூடிய பொருளாதாரமாக நிலைமாற்றமடையச்செய்வதை நோக்கி நாம் பயணிக்கிறோம். அதேபோன்று எமது அரசாங்கம் சமர்ப்பித்துள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்களுக்கு அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதன் ஊடாக நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் மக்களுக்கான நிவாரணத்தை வழங்கியிருக்கிறோம். அதுமாத்திரமன்றி வட, கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம், வீடமைப்பு மற்றும் நட்டஈடு வழங்கல் ஆகியவற்றுக்கு அவசியமான நிதியொதுக்கீடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேவேளை நாம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள 'க்ளீன் ஸ்ரீலங்கா' செயற்திட்டத்தின் ஊடாக நேர்மைத்தன்மை வாய்ந்ததும், பொறுப்புக்கூறத்தக்கதுமான ஆட்சிநிர்வாக முறைமையொன்றை நாட்டில் கட்டியெழுப்புவதற்கு உத்தேசித்துள்ளோம். அடுத்ததாக தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்கு உறுதிபூண்டிருக்கிறது. அதன்பிரகாரம் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளிட்ட உள்ளகப்பொறிமுறைகள் மேலும் வலுப்படுத்தப்படுவதுடன், அவை சுயாதீனமானதும், நம்பகத்தன்மை வாய்ந்த முறைமையிலும் இயங்குவது உறுதிசெய்யப்படும். அதேபோன்று சகல தரப்பினரதும் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவகையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான கலந்துரையாடல்கள் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்படும். இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரிப்பதற்கான ஆணை அக்கட்டமைப்புக்கு வழங்கப்படும். இவ்வாறு நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக ஸ்தாபிக்கப்படும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீனமாகவும், நம்பகமான முறையிலும் இயங்கும். மேலும் எமது நாடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளடங்கலாக ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களிலும், உபகுழுக்களிலும் அங்கம் வகிக்கின்றது. அக்குழுக்களினால் மேற்கொள்ளப்படும் கூட்டங்கள் மற்றும் மீளாய்வுகளில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிப் பங்கேற்கிறது. நாட்டின் தேசிய சட்டதிட்டங்களுக்கு அமைவாக இந்த ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/207694
-
பூமியை நெருங்கிய பிரமாண்ட விண்கல் நிலவின் மீது மோதுமா? நாசா புதிய தகவல்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி செய்தியாளர் 25 பிப்ரவரி 2025 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த வாரம், 2024 YR4 என்று பெயரிடப்பட்ட ஒரு பெரிய விண்கல் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விண்கல் பூமியைத் தாக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் கவலைப்பட்டனர், ஆனால் பின்னர் அது பாதுகாப்பானது என்று அறிவித்தனர். இந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 3.1 சதவீதம் என்று விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் மதிப்பிட்டனர். ஆனால், இந்த விண்கல் 2032ஆம் ஆண்டில் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 0.28 சதவீதம் மட்டுமே என்று சமீபத்தில் தெரிய வந்தது. அதே விண்கல் நிலவைத் தாக்க ஒரு சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா இப்போது மதிப்பிட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, 2024 YR4 என்ற விண்கல் சிலியில் உள்ள ஒரு பாலைவனத்தில் தொலைநோக்கி மூலம் விண்வெளியைக் கவனித்துக் கொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் பத்து வான் பொருட்கள் பூமியை நெருங்கி வருவதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். வானியல் ரீதியாகப் பார்த்தால், இவை மிகச் சிறிய விண்கற்கள். அவற்றில் பெரும்பாலானவை பூமிக்கு அருகில் வந்திருக்கலாம் அல்லது பூமியுடன் மோதியிருக்கலாம். சில விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த பிறகு எரிந்திருக்கலாம். அவை அனைத்தும் மனிதர்களின் கண்ணில் தென்படாமலேயே நடந்திருக்கும். டைனோசரை அழித்ததை விட 200 மடங்கு பெரிய விண்கல் மோதிய பிறகு பூமியில் உயிர்கள் செழித்தது எப்படி? வீட்டுக் கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்த விண்கல் - சுவாரசிய தகவல்கள் அபோபிஸ் விண்கல் - நெருங்கி வந்த ஆபத்து; அடுத்த 100 ஆண்டுகளுக்கு கவலை இல்லை என கூறிய நாசா விண்வெளி: சூரிய மண்டலத்தின் கதையை சொல்லும் 'வினோத விண்கல்' பூமிக்கு நெருக்கமாக வரும் விண்கற்கள் பூமிக்கு அருகில் அல்லது தொலைவில் விண்வெளியில் பயணிக்கும் விண்கற்கள் ஃப்ளை-பைஸ் (fly-bys) என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான விண்கற்களால் ஆபத்து இல்லை. இருப்பினும், பிரபஞ்சத்தில் மனிதனால் தீர்க்கப்படாத பல மர்மங்களை அவை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. அவை விண்வெளி குறித்த நிறைய அறிவையும் தகவல்களையும் வழங்குகின்றன. இந்தக் கற்கள் சில நேரங்களில் சிறிய கோள்களாகவும் அடையாளம் காணப்படுகின்றன. மேலும், அவை 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நமது சூரிய மண்டலம் உருவாக்கப்பட்டபோது உருவான எச்சங்கள் எனவும் கூறப்படுகின்றன. இந்த விண்கல் துண்டுகள் கோள்களின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்டவை மற்றும் பூமிக்கு நெருக்கமாகச் சுற்றி வரக்கூடியவை. இப்போது வரை, ஒரு பெரிய விண்கல் பூமிக்கு எவ்வளவு அருகில் வரும், அது எவ்வளவு கடினமாகத் தாக்கும் என்பதை மனிதர்களால் சரியாக அறிய முடியவில்லை. நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மார்க் போஸ்லாஃப் கூறுகையில், பூமிக்கு அருகிலுள்ள பொருட்களைத் தீவிரமாகக் கண்காணிப்பது 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கியதாகவும் அதற்கு முன்பு யாரும் அவற்றை அதிகம் கவனிக்கவில்லை என்றும் கூறினார். நாற்பது மீட்டர் அகலம் அல்லது அதைவிடப் பெரிய வான் பொருட்கள் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் ஒவ்வோர் ஆண்டும் பலமுறை கடந்து செல்வதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்து வருகின்றனர். கடந்த 1908ஆம் ஆண்டில் சைபீரியா மீது அத்தகைய பெரிய விண்கல் ஒன்று வெடித்தது. இது 500 சதுர கி.மீ பரப்பளவில் உள்ள கட்டடங்களைச் சேதப்படுத்தியது, மக்கள் பலர் காயமடைந்தனர். இஸ்ரேல் - பாலத்தீனம்: அமைதிக்காக உருவாக்கப்பட்ட திட்டம் காணாமல் போனது ஏன்?25 பிப்ரவரி 2025 இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு வணிக நோக்கில் பரபரப்பு கூட்டப்படுகிறதா?2 மணி நேரங்களுக்கு முன்னர் விண்கல் நகரத்தைத் தாக்கினால் என்ன ஆகும்? பட மூலாதாரம்,DRS. BILL AND EILEEN RYAN, MAGDALENA RIDGE OBSERVATORY 2.4M TELESCOPE, NEW MEXICO TECH முன்னதாக, 2004ஆம் ஆண்டில் அபோபிஸ் என்ற விண்கல்லும் YR4-ஐ போலவே பூமிக்கு அருகில் வருவதாக அடையாளம் காணப்பட்டது. இது 375 மீட்டர் அகலம் மற்றும் ஒரு பயணக் கப்பல் போன்ற வடிவத்தில் இருக்கும் என்று கருதப்பட்டது. பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் (சி.என்.ஆர்.எஸ்) பேராசிரியர் பேட்ரிக் மைக்கேல், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட விண்கற்களில் இது மிகவும் ஆபத்தான விண்கல் என்று கூறினார். அதை அவதானித்த பிறகு, கடந்த 2013ஆம் ஆண்டு வரை அது பூமியைத் தாக்காது என்பதை விஞ்ஞானிகளால் தீர்மானிக்க முடிந்தது. இவ்வளவு பெரிய விண்கல் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளைத் தாக்கியிருந்தால், அது பேரழிவை ஏற்படுத்தியிருக்கும். YR4 விண்கல் எவ்வளவு பெரியது என்பது இன்னும் தெரியவில்லை, ஆனால் சில மதிப்பீடுகள் அதன் மேல்முனை 90 மீட்டர் அகலமாக இருந்தால், அது பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது சேதமடையால் வரக்கூடும் என்று கூறுகின்றன. "இத்தகைய விண்கற்களால் பூமியில் ஒரு பெரிய பள்ளத்தை உருவாக்க முடியும். அவை பூமியில் மோதக்கூடிய பகுதிக்கு அருகிலுள்ள கட்டமைப்புகள் சேதமடையும். ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளவர்களுக்குக் கடுமையான காயம் ஏற்படும் அபாயம் உள்ளது," என்று லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகத்தின் பேராசிரியர் கேத்தரின் குனமோட்டோ கூறினார். இது நடந்தால், உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளதாகக் கூறினார் அவர். அபோபிஸ் விண்கல் பற்றி அறிந்ததில் இருந்து விஞ்ஞானிகள் பூமியை விண்கற்களில் இருந்து பாதுகாப்பதுல் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். பேராசிரியர் மைக்கேல் சர்வதேச விண்வெளி மிஷன் திட்டமிடல் ஆலோசனைக் குழுவின் ஒரு பகுதியாகவும் உள்ளார். விண்கல் தாக்கங்களை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து அவர்கள் அரசுகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். அது நேரடியாகத் தாக்கும்போது என்ன தாக்கம் இருக்கும் என்பதை அறிய அவர்கள் ஒத்திகை பார்க்கிறார்கள். 5,000 ஆண்டுக்கு முந்தைய மம்மிகளில் வெளிப்பட்ட நறுமணம் - எகிப்தியர் எவ்வாறு தயார் செய்தனர்?4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் புதிய பறக்கும் கார் சோதனை24 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,NASA ஒரு விண்கல் ஒரு நகரத்தைத் தாக்கினால், அதன் தாக்கம் ஒரு பெரிய சூறாவளியைப் போலவே இருக்கும் என்று மார்க் போஸ்லாஃப் கூறுகிறார். உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும், அப்பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறுகிறார். YR4 பற்றி என்ன செய்வது என்பதைத் தீர்மானிக்க விண்வெளிப் பணி திட்டமிடல் ஆலோசனைக் குழு ஏப்ரல் மாதம் மீண்டும் கூடும். நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியவை ஆபத்தான விண்கற்களைத் தவிர்ப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளன. டிமோர்போஸ் என்ற விண்கல்லின் பாதையை திசை திருப்ப இரட்டை விண்கல் திசை திருப்பல் சோதனையில் (Double Asteroid Redirection Test) ஒரு விண்கலத்தை நாசா வெற்றிகரமாக அனுப்பியது. இருப்பினும், YR4 விஷயத்தில் இது செயல்படுமா என்பது விஞ்ஞானிகளுக்குத் தெரியவில்லை. அதை வெற்றிகரமாகத் திசை திருப்பிவிட மிகக் குறைந்த நேரமே உள்ளது. அன்டார்டிகாவில் சுமார் 50,000 விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மிகவும் பிரபலமானது ALH84001. இது செவ்வாய் கோளில் தோன்றியதாக நம்பப்படுகிறது. இதில், கோள்களின் வரலாற்றுக்கான முக்கியத் தடயங்களும் கனிமங்களும் உள்ளன. இது மிகவும் சூடாக இருந்ததாகவும், அதன் மேற்பரப்பில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. விஞ்ஞானிகள் 2023இல், விண்வெளியில் 33 பாலிஹிம்னியா என்ற விண்கல்லைக் கண்டுபிடித்தனர். பூமியில் காணப்படும் அனைத்துக் கனிமங்களையும்விட கனமான கனிமங்கள் அதில் நிரம்பியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது பூமிக்கு முற்றிலும் புதியது. 33 பாலிஹிம்னியா, குறைந்தது 170 மில்லியன் கி.மீ தொலைவில் உள்ளது. இந்த விண்கற்கள் அறிவியலை மேலும் புரிந்துகொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளன. இரண்டு பாண்டா குட்டிகளை காண வரும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள்24 பிப்ரவரி 2025 இந்தியாவில் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவர்களை அதிகம் பாதிக்கும் 'செகண்ட் இயர் சிண்ட்ரோம்' பற்றி தெரியுமா?22 பிப்ரவரி 2025 விண்வெளியை அவதானிக்க பெரிய டிஜிட்டல் கேமரா பட மூலாதாரம்,GETTY IMAGES சில விஞ்ஞானிகள் YR4இன் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள், ஏனெனில் அது சந்திரனைத் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரிகிறது. லண்டன் இம்பீரியல் கல்லூரியின் பேராசிரியர் கரேத் காலின்ஸ் கூறுகையில், "நிஜ வாழ்க்கை நிகழ்வுகளில் இருந்து கிடைக்கும் தரவுகளுக்கு அதிக பயன்பாடு உள்ளது" என்கிறார். விண்கல் மோதலுக்குப் பிறகு எவ்வளவு பொருள் வெளியேற்றப்படும்? அது எவ்வளவு வேகமாகப் பயணிக்கும்? அது எவ்வளவு தூரம் பயணிக்கும்? பூமியில் விண்கற்களின் தாக்கங்களைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் இதுவரை உருவாக்கிய கருவிகளைச் சோதிக்கவும் மேம்படுத்தவும் இது பயனுள்ளதாக இருக்கும். சிறந்த கணிப்புகளைச் செய்வதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும். சூரிய குடும்பம் முழுவதும் சிதறிக் கிடக்கும் பாறைச் சிதைவுகள் ஒரு கட்டத்தில் பூமியைத் தாக்கும் என்பதை YR4 மீண்டும் நினைவூட்டுகிறது. ஒரு பெரிய விண்கல் எப்போது மனித உயிர் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை அறிவது முக்கியம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இது வரவிருக்கும் ஆண்டுகளில் இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் வரவிருக்கும் நூற்றாண்டுகளில் அபாயங்களைக் கணிக்க உதவும். மேலும், மனிதர்கள் விண்வெளியைக் கண்காணிக்கும் திறனை மேம்படுத்த வேண்டும். இந்த ஆண்டின் பிற்பகுதியில், மிகப் பெரிய அளவிலான டிஜிட்டல் கேமரா கிடைக்கும். அது சிலியில் உள்ள வேரா ராபின் ஆய்வகத்தில் இருந்து செயல்படும். இரவு வானத்தின் பல அதிசயங்களை அந்த டிஜிட்டல் கேமரா படம்பிடிக்கும். நாம் எவ்வளவு அதிகமாக விண்வெளியைக் கவனிக்கிறோமோ, அவ்வளவு அதிகமான விண்கற்களை பூமிக்கு அருகில் கண்டறிய முடியும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2013j5rn7xo