Everything posted by ஏராளன்
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது - பாலஸ்தீன தேசமே உறுதியான தீர்வு - சவுதி அரேபியா Published By: RAJEEBAN 05 FEB, 2025 | 10:31 AM காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ள சவுதிஅரேபியா பாலஸ்தீன தேசமொன்று உருவாக்கப்படாவிட்டால் இஸ்ரேலுடன் உறவினை ஏற்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது. பாலஸ்தீனியர்களிற்கு என ஒரு தேசம் என்ற தனது நீண்டகால நிலைப்பாட்டை புதன்கிழமை சவுதி அரேபியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. காசாவை அமெரிக்கா கையகப்படுத்த விரும்புகின்றது என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள பின்னர் சவுதி அரேபியாவின்வெளிவிவகார அமைச்சு இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தனது முன்னைய நிலைப்பாட்டை மீள வலியுறுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் நிலைப்பாடு உறுதியானதாகவும் தளர்ச்சியற்றதாகவும் காணப்படுவதாக தெரிவித்துள்ள அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சு சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர்- பிரதமர் செப்டம்பர் 18ம் திகதி 2024 சூரா கவுன்சிலின் முதலாவது அமர்வில் ஆற்றிய உரையில் தனது இந்த நிலைப்பாட்டினை தெளிவாக வெளியிட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளது. 2024 இல் ரியாத்தில் இடம்பெற்ற அராபிய- இஸ்லாமிய உச்சிமாநாட்டில் அவர் இதனை வலியுறுத்தினார், 1967ம் ஆண்டின் எல்லைகளை அடிப்படையாக கொண்ட பாலஸ்தீன தேசத்தின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார், பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை நிறுத்தவேண்டும் என கோரினார் என சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/205830
-
அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை இந்தியா கொண்டு வரும் ராணுவ விமானம் - நிலவரம் என்ன?
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய, 205 பேர் இந்தியர்கள் அந்நாட்டு ராணுவ விமானத்தில் இன்று மதியம் 1 மணிக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் வந்தடைய உள்ளது. கடந்த வாரம் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் கொலம்பியா நாட்டவர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியது. அமெரிக்க ராணுவ விமானங்கள் தரையிறங்க அனுமதி அளிக்காத அந்நாட்டின் அதிபர், தங்கள் நாட்டு குடிமக்களை ராணுவ விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கக்கூடாது எனவும், தன்னுடைய விமானத்தையே அவர்களுக்காக அனுப்பத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். வரி விதிப்பு குறித்த எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்திருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் ராணுவ விமானங்கள் மூலம் குடியேறிகளை ஏற்றுக்கொள்ள கொலம்பியா ஒப்புக்கொண்டது. அதற்கு அடுத்த முறை, கொலம்பியா தனது விமானப் படையின் விமானங்களை அனுப்பி தங்கள் நாட்டவரை திருப்பி அழைத்து வந்தது. ராய்ட்டர்ஸ் முகமையின் செய்திப்படி, கொலம்பியா தவிர்த்து, குவாட்டமாலா, பெரு, ஹோண்டுராஸ் ஆகிய இடங்களுக்கு அமெரிக்க ராணுவ விமானம் சட்டவிரோத குடியேறிகளைத் திருப்பி அனுப்பியுள்ளது. கனடா, சீனாவுக்கு எதிரான டிரம்பின் முடிவால் அமெரிக்காவுக்கு என்ன இழப்பு ஏற்படும்? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? ராஜீவ் காந்தி ஓட்டிய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயன்றது ஏன்? ரா உளவு அமைப்பு தடுத்தது எப்படி? அமெரிக்கா: டிரம்ப், பைடன், ஒபாமா உள்பட 5 அதிபர்களுக்கு சமைத்த சமையல் கலைஞர் கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்? நாடு கடத்தப்படும் 205 இந்தியர்கள் அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பின், இவ்வாறு இந்திய சட்டவிரோத குடியேறிகள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது இதுவே முதன்முறை. இந்திய நேரப்படி செவ்வாய்கிழமை காலை புறப்பட்ட விமானம், அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமைக்கு அமெரிக்க அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்திருந்தார். பஞ்சாப் புலம்பெயர் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சர் குல்தீப் சிங் தலிவால், அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது தொடர்பான கேள்விகளுக்கு விரிவாக பதிலளித்தார். இது மிகவும் தீவிரமான விவகாரம் என்று அவர் குறிப்பிட்டார். அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் 205 இந்தியர்கள் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் வந்து இறங்குவார்கள் என்றும் தான் அங்கு நேரில் செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, பஞ்சாப் காவல் துறை டிஜிபி கௌரவ் யாதவ் ஊடகத்திடம் கூறுகையில், மாநில முதலமைச்சர் பகவத் சிங் மான் உடன் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும், அமெரிக்காவில் இருந்து அனுப்பப்படும் இந்தியர்கள் பஞ்சாப் அரசாங்கத்தால் சிறந்த முறையில் வரவேற்கப்படுவர் என்றும் கூறினார். பிபிசிக்காக செய்தியாளர் ரவீந்தர் சிங் ராபின், இந்தியா வருபவர்களுள் சிலர் தங்களுடைய கிராமங்களுக்கு காவல்துறை வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுவர் என்றும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுவர் என்றும் கூறியுள்ளார். எட் ஷீரன்: திக்குவாய் பிரச்னையை கடந்து, 600 கோடி பார்வைகளை பெற்று இசையில் சாதித்த இவர் யார்?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? - அறிவியல் கூறும் 7 எளிய வழிகள்30 ஜனவரி 2025 பஞ்சாப் அரசு மற்றும் காவல்துறை கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பஞ்சாப் அமைச்சர் தலிவால் பஞ்சாப் மாநில அமைச்சர் குல்தீப் சிங் தலிவால், அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது மிகவும் தீவிரமான விவகாரம் எனக் கூறியுள்ளார். இதை மத்திய அரசும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பஞ்சாபின் புலம்பெயர் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சரான தலிவால், அமெரிக்காவின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்திருப்பதாகத் தெரிவித்தார். மேலும், இந்தியர்கள் பலரும் பணி அனுமதி பெற்றே அமெரிக்கா சென்றதாகவும், ஆனால் பின்னர் அது காலாவதியாகிவிட்டதாகவும், அதனாலேயே அவர்கள் சட்டவிரோத குடியேறிகள் என்ற பிரிவின்கீழ் வந்ததாகவும் கூறினார். இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் இந்தியர்கள் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்காற்றியுள்ளதாகவும் அவர்களைத் திருப்பி அனுப்புவதற்குப் பதிலாக அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கியிருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக தலிவால், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை அடுத்த வாரம் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாகச் செல்ல வேண்டாம் என்று பஞ்சாப் மாநில மக்களை தலிவால் கேட்டுக் கொண்டார். பஞ்சாப் டிஜிபி கௌரவ் யாதவ் கூறுகையில், "இதுதொடர்பாக, நாங்கள் மத்திய அரசுடன் தொடர்பில் உள்ளோம். இது குறித்த மேலதிக தகவல்கள் வந்தவுடன் அவற்றைப் பகிர்வோம்" என்றார். "இந்தியா வருபவர்களின் அடையாளம் குறித்த எந்த விவரங்களும் தெரிய வரவில்லை. மத்திய அரசின் முகமைகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம்." மேலும் அவர் கூறுகையில், "உறுதி செய்யப்படாத பல தகவல்கள் உள்ளன. பெருமளவிலான மக்கள் இங்கு வருவதாகவும் கூறப்படுகிறது." ஆஸ்கர் விருதுக்கு கங்குவா போட்டியிடுகிறதா? படங்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி?9 ஜனவரி 2025 சென்னை: மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளியதாக பெற்றோர் கைது - ஆபாச வீடியோக்களை விற்று வருமானம் ஈட்டியதாக புகார்17 ஜனவரி 2025 குடியேற்றம் தொடர்பான டிரம்பின் உத்தரவுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சமாக குடியேற்ற விவகாரம் இருந்து வந்தது. "குடியேற்ற விதிகளை கடுமையாக்குவோம், 'மெக்சிகோவிலேயே இருங்கள்' என்ற தனது முந்தைய ஆட்சியில் அமல்படுத்திய கொள்கையை நடைமுறைப்படுத்துவோம், எல்லையில் பாதுகாப்பும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்படும்" என்பன டிரம்பின் தேர்தல் வாக்குறுதிகளாக இருந்தன. டிரம்ப் அதிபரான முதல் நாளில் கையெழுத்திட்ட உத்தரவுகளில் குடியேற்றம் சம்பந்தப்பட்ட உத்தரவுகள் முக்கியமானவை. "அமெரிக்க வரலாற்றில் நாட்டைவிட்டு பெருமளவில் நிகழ்த்தப்படும் வெள்யேற்றத் திட்டத்தை" அதிபராகத் தனது முதல் நாளிலேயே தொடங்கப் போவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். நாட்டின் தெற்கு எல்லைப் பகுதியில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பாக அமெரிக்க குடியுரிமை வழங்கப்படுவதற்கு எதிராகவும் அவர் உத்தரவு பிறப்பித்தார். அமெரிக்க அகதிகள் மறுகுடியமர்த்தல் திட்டத்தை நான்கு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கும் உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டார். பிபிசி செய்தி அறைக்குள் நுழைய விருப்பமா? - மெட்டாவெர்ஸ் உலகுக்கு உங்களை வரவேற்கிறோம்3 பிப்ரவரி 2025 மனித மூளையின் மோசமான நினைவுகளை அழிக்க முடியுமா? எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனை கூறுவது என்ன?3 பிப்ரவரி 2025 எல்லையை மூடும்படி ராணுவத்திற்கு உத்தரவிட்ட டிரம்ப், சட்டவிரோத போதைப் பொருட்கள், மனிதக் கடத்தல், எல்லையைக் கடக்கும் குற்றங்கள் உள்ளிட்டவற்றை அதற்கு காரணமாகக் கூறினார். போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மற்றும் சர்வதேச சட்டவிரோத கும்பல்களை அந்நிய பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கும் உத்தரவிலும் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். 'மெக்சிகோவிலேயே இருங்கள்' என்ற தனது கொள்கையை முதல் நாளிலேயே ஒரு செயல் உத்தரவு மூலம் டிரம்ப் அமல்படுத்தினார். அவரது முதல் ஆட்சிக்காலத்தின் நடவடிக்கைகளில் ஒன்றான இதன் மூலம், எல்லைக்கு வெளியே தஞ்சம் கேட்கத் தங்களது முறைக்காக காத்திருந்த சுமார் 70,000 மெக்சிகோவை சேராதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c14nmd08dg7o
-
யாழ். சிறைச்சாலையில் வெற்றிகரமாக நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்!
நன்றியும் வாழ்த்துகளும்.
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்பின் கருத்தை, "கவனம் செலுத்தப்பட வேண்டிய யோசனை" எனக் குறிப்பிட்டார் நெதன்யாகு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், செவ்வாய்கிழமை நெதன்யாகுவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் வெள்ளை மாளிகையில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, காஸா முனையை அமெரிக்கா கையிலெடுத்து, அங்கு தேவையான பணிகளை மேற்கொள்ள முடியும் என்று டிரம்ப் கூறினார். அவர் இதுகுறித்துப் பேசியது என்ன? செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், தான் இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்ற நிலையில், அவரைச் சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவர் நெதன்யாகுதான் எனக் கூறி, அதற்காக நன்றி தெரிவித்தார். அமெரிக்க முன்னாள் அதிபர் பைடன், தான் ஆட்சியிலிருந்த நான்கு ஆண்டுகளில் இஸ்ரேலின் எதிரிகள் மிகவும் வலுவாக வளர்வதற்கு அனுமதித்துவிட்டதாக விமர்சித்தார். "அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான பிணைப்பைத் தகர்க்க முடியாது" என்றும் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்கா: பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்க தடை விதிக்கும் டிரம்ப் - பிற நாடுகளில் என்ன நிலை? உலகெங்கிலும் மனிதாபிமான உதவிகளை செய்து வரும் USAID அமைப்பை டிரம்ப் மூட நினைப்பது ஏன்? அமலுக்கு வந்த அமெரிக்காவின் வரி விதிப்பு - சீனாவின் பதிலடி என்ன? கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்? மேலும் பேசிய டொனால்ட் டிரம்ப், எவ்வித மாற்று வழிகளும் இல்லை என்பதால்தான் பாலத்தீனர்கள் மீண்டும் காஸாவுக்கு செல்வதாக, எவ்வித ஆதாரங்களுமின்றி கூறினார். மேலும், காஸா 'அழிவின் தலமாக' இருப்பதாக அவர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, காஸாவில் வாழும் சுமார் 18 லட்சம் மக்கள், மற்ற அரபு நாடுகளுக்கு இடம்பெயர வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், காஸா முனையை அமெரிக்கா கையிலெடுத்து, அங்கு தேவையான பணிகளை மேற்கொள்ள முடியும் என்று அவர் கூறினார். வெடிக்காத குண்டுகளை அகற்றுதல், காஸாவை மறு கட்டமைப்பு செய்தல் மற்றும் பொருளாதாரத்தைச் சீர்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை அமெரிக்காவால் மேற்கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டார். பூமியின் வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸை கடந்தால் என்ன ஆகும்?4 பிப்ரவரி 2025 உங்களால் இரவில் தூங்க முடியவில்லையா? - நீங்கள் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும் என்ன?31 ஜனவரி 2025 காஸா குறித்த டிரம்பின் பேச்சு பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, காஸாவில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள விரும்புவதாக டிரம்ப் தெரிவித்தார் எதிர்காலத்தில் காஸா முனையை அமெரிக்கா "சொந்தமாக்குவது" குறித்து டிரம்ப் கூறியது பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். "இறையாண்மை கொண்ட ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றுவது குறித்தா நீங்கள் பேசுகிறீர்கள்?" என செய்தியாளர் ஒருவர் டிரம்பிடம் கேள்வியெழுப்பினார். அதற்கு ஆம் என பதிலளித்த டிரம்ப், "எதிர்காலத்தில் (காஸா முனையைக் கைப்பற்றி) அமெரிக்கா நீண்ட காலத்துக்கு வழிநடத்துவது குறித்து தான் கற்பனை செய்து பார்ப்பதாக" குறிப்பிட்டார். "அந்த நிலத்தைச் சொந்தமாக்கி, மேம்படுத்தி, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அது மிகவும் அற்புதமானதாக இருக்கும்." "எல்லோரும் அந்த யோசனையை விரும்புகின்றனர்" என்று அவர் கூறினார். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: வாக்குப் பதிவு தொடக்கம்41 நிமிடங்களுக்கு முன்னர் ராஜீவ் காந்தி ஓட்டிய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயன்றது ஏன்? ரா உளவு அமைப்பு தடுத்தது எப்படி?3 பிப்ரவரி 2025 நெதன்யாகு கூறியது என்ன? பட மூலாதாரம்,REUTERS இதன் பிறகு பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்பின் இந்த யோசனை குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவரது யோசனை 'கவனம் செலுத்தப்பட வேண்டிய யோசனை" என்று நெதன்யாகு குறிப்பிட்டார். அந்தப் பிராந்தியம் (காஸா) தங்கள் நாட்டுக்கு இனியும் ஆபத்தாக இருக்காது என்பதை உறுதி செய்வதில் தான் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். "காஸாவுக்கு டிரம்ப் வித்தியாசமான எதிர்காலத்தை வழங்கும் யோசனையைக் கொண்டிருப்பதாக" கூறிய அவர், "அது வரலாற்றை மாற்றும் ஒன்றாக இருக்கும் எனத் தான் நினைப்பதாகவும்" குறிப்பிட்டார். நெதன்யாகுவுக்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பைடனுடனான உறவு அடிக்கடி பதற்றமானதாகவே இருந்தது. இந்நிலையில், டிரம்ப் அதிபரானது குறித்த தனது மகிழ்ச்சியை நெதன்யாகு வெளிப்படையாகக் காட்டினார். "வெள்ளை மாளிகையில் உள்ள இஸ்ரேலின் மிகச் சிறந்த நண்பர்" என்று நெதன்யாகு டிரம்பை குறிப்பிட்டார். இந்தப் பயணத்தின்போது முன்னதாக அமெரிக்காவுக்கான மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃபிடம் நெதன்யாகு பேசினார். எட் ஷீரன்: சென்னை வருவது ஏன்? திக்குவாய் பிரச்னையை கடந்து இசையில் சாதித்த இவர் யார்?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமலுக்கு வந்த அமெரிக்காவின் வரி விதிப்பு - சீனாவின் பதிலடி என்ன?4 பிப்ரவரி 2025 பிபிசியின் சர்வதேச உறவுகள் செய்தியாளர் பால் ஆடம்ஸின் பகுப்பாய்வு பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, டிரம்பின் பேச்சு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக பால் ஆடம்ஸ் கூறுகிறார் காஸாவுக்கான முன்மொழிவுகள் தொடர்பாகப் பேசியுள்ள டிரம்ப், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். "காஸா முனையைக் கைப்பற்றி", அங்கு இடிபாடுகளை அகற்றுதல், வெடிக்காத குண்டுகளை அகற்றுதல், மற்றும் "கணக்கிலடங்கா வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்", "அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்துதல்" ஆகியவற்றை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார். ஆனால், அவர் யார் குறித்துப் பேசுகிறார் என்பதை டிரம்ப் தெரிவிக்கவில்லை. காஸா முனையில் வாழும் ஒட்டுமொத்த பாலத்தீன மக்களும் அதாவது 20 லட்சத்துக்கும் அதிகமானோர் ஜோர்டான், எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு இடம் பெயர வேண்டும் என முன்பு டிரம்ப் கூறிய நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்தார். "மத்திய கிழக்கின் சொர்க்கபுரியாக காஸாவை மாற்ற வேண்டும்" என்றும் அவர் கூறினார். அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள காஸாவில், "பாலத்தீனர்கள் உள்பட உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் வாழ்வார்கள்," என்ற விநோதமான கருத்தையும் அவர் தெரிவித்தார். அவருடைய இந்தக் கூற்று தலைசுற்ற வைப்பதாக உள்ளது. மேலும், எந்த சர்வதேச அதிகாரத்தின் கீழ் அமெரிக்கா செயல்படும் என்பதை டிரம்ப் குறிப்பிடவில்லை. இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் வாழும் பாலத்தீனர்கள், தங்களைப் பற்றி டிரம்ப் என்ன யோசனை வைத்துள்ளார் என்பது குறித்த ஆச்சரியத்தில் உள்ளனர். மேற்கு கரையின் சில பகுதிகளை இஸ்ரேலுடன் இணைப்பது குறித்து தான் இன்னும் யோசிக்கவில்லை எனக் கூறியுள்ள டிரம்ப், "இன்னும் நான்கு வாரங்களில் அதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவதாக" கூறினார். தன்னுடைய யோசனை, இஸ்ரேல் மற்றும் பாலத்தீனர்களுக்கு இடையிலான 'இரு நாடு' தீர்வுடன் தொடர்புடையது அல்ல என்றும், ஆனால் பாலத்தீனர்களால் அப்படித்தான் பார்க்கப்படும் என்றும் அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czxkry7dqe7o
-
யுஎஸ்எயிட் சீர் செய்ய முடியாத நிலையை அடைந்துவிட்டது- மூடுவதற்கு தீர்மானம்- எலொன் மஸ்க்
உலகெங்கிலும் மனிதாபிமான உதவிகளை செய்து வரும் USAID அமைப்பை டிரம்ப் மூட நினைப்பது ஏன்? பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், சியன் செட்டான் பதவி, பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அரசின் சர்வதேச வளர்ச்சி முகமையின் (USAID) எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது. இதன் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு, இந்த அமைப்பை அமெரிக்க அரசின் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அமெரிக்க அரசின் சர்வதேச வளர்ச்சி முகமை (USAID) ஆனது, இனி வெளியுறவு அமைச்சகத்தின் ஒரு பகுதியாக செயல்படும். ஆனால் பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் ரிப்போர்ட்டின் அடிப்படையில், இச்செயல்பாடுகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மனிதவளத்தை குறைக்கும் திட்டங்களும் அமெரிக்க அரசிடம் உள்ளன. இது குறித்து திங்கட்கிழமை பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சக செயலாளர் மார்கோ ரூபியோ, USAID அமைப்பின் தலைமை தனது உத்தரவுகளை ஏற்க மறுப்பதாக குற்றம் சாட்டியதோடு, தானே தற்போது அந்த அமைப்பின் "செயல் தலைமையாக" இருப்பதாகவும் கூறினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது முதன்மை ஆலோசகர்களில் ஒருவரான தொழிலதிபர் ஈலோன் மஸ்க் ஆகியோர் இந்த முகமை மீதான கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் இந்த முகமையை மூடுவது உலகெங்கிலும் செயல்பட்டு வரும் மனிதாபிமான திட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது. USAID என்றால் என்ன? அது என்ன செய்கிறது? உலகெங்கிலும் அமெரிக்க அரசின் சார்பில் மனிதாபிமான உதவிகளை செய்வதற்காக 1960களின் முற்பகுதியில் இந்த முகமை நிறுவப்பட்டது. இந்த முகமையின் கீழ் 10,000 ஊழியர்கள் பணியாற்றும் நிலையில், இதில் மூன்றில் இரண்டு பகுதியினர் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர். 60 நாடுகளில் பணிக்கான தளங்களை கொண்டுள்ள இந்த முகமை, இதற்கும் மேலாக சுமார் ஒரு டஜன் நாடுகளில் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பெரும்பாலான களப்பணிகளை மற்ற அமைப்புகளை பயன்படுத்தி ஒப்பந்த அடிப்படையிலோ, நிதி உதவி அளித்தோ USAID செய்து வருகிறது. இந்த அமைப்பு மேற்கொள்ளும் பணிகள் விரிவானவை. உதாரணத்திற்கு பட்டினியால் பாதிக்கப்பட்ட நாடுகளில் உணவு அளிப்பதோடு, உலக அளவில் பஞ்சத்தை அளவிடும் அமைப்பையும் இயக்கி வருகிறது. இந்த அமைப்பானது தரவுகளை ஆராய்ந்து எந்த நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படக் கூடும் என்பதை முன்கூட்டியே கணிக்கும் பணியைச் செய்கிறது. USAID-ன் நிதியில் கணிசமான அளவு சுகாதாரம் சார்ந்த பணிகளுக்காக செலவிடப்படுகிறது. போலியோ பாதிப்பு இன்னமும் தீர்க்கப்படாத நாடுகளில் தடுப்பூசி வழங்குவது மற்றும் பெருந்தொற்றுக்களை ஏற்படுத்தும் வைரஸ் பரவலை தடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பிபிசியின் சர்வதேசத் தொண்டு அமைப்பான பிபிசி மீடியா ஆக்ஷன் USAID வழியாக நிதியைப் பெறுகிறது. 2024ம் ஆண்டு அறிக்கையின் படி, USAID அமைப்பானது 3.23 மில்லியன் டாலர்களை நிதியாக வழங்கியதன் மூலம் அந்த நிதியாண்டின் 2வது மிகப்பெரிய நன்கொடையாளராக உள்ளது. ராஜீவ் காந்தி ஓட்டிய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயன்றது ஏன்? ரா உளவு அமைப்பு தடுத்தது எப்படி?3 பிப்ரவரி 2025 இராசகேசரி பெருவழி: முதலாம் ஆதித்த சோழன் வணிகர்களுக்காக அமைத்த நிழல் படை என்ன செய்தது?2 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,EPA அமெரிக்க அரசுக்கு எவ்வளவு செலவாகிறது? அமெரிக்க அரசு வழங்கிய தரவுகளின் அடிப்படையில், 2023ம் ஆண்டு சர்வதேச நாடுகளுக்கான உதவியாக 68 பில்லியன் டாலர்களை அந்நாடு செலவிட்டுள்ளது. இந்த செலவில் பல்வேறு முகமைகள் மற்றும் துறைகளுக்கான செலவீனங்கள் அடங்கும் என்றாலும், USAID-ன் நிதி ஒதுக்கீடானது இந்த தொகையில் பாதிக்கும் மேலாக உள்ளது. அதாவது சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்த பணத்தில் பெரும்பங்கு ஆசியா, ஆஃபிரிக்க நாடுகளில் செலவிடப்படுகிறது. ஐரோப்பாவைப் பொருத்தவரையிலும் யுக்ரைனில் போர் பாதித்த பகுதிகளில் மனிதாபிமான செயல்பாடுகளுக்காக செலவிடப்படுகிறது. சர்வதேச வளர்ச்சிப் பணிகளுக்காக செலவிடுவதில் உலகின் மிகப்பெரிய நாடாக அமெரிக்கா உள்ளது. இந்த வகையில் மனிதநேய உதவிகளுக்காக செலவிடுவதில் பிரிட்டன் உலகின் 4வது பெரிய நாடாக உள்ளது. 2023ம் ஆண்டில் 15.3 பில்லியன் பவுண்டுகளை பிரிட்டன் செலவிட்டுள்ளது. இது அமெரிக்கா செலவிட்ட தொகையில் 4ல் ஒரு பகுதியே ஆகும். USAID-ஐ மறு ஆய்வு செய்ய வேண்டும் என டிரம்ப் மற்றும் மஸ்க் விரும்புவது ஏன்? சர்வதேச நாடுகளுக்கான உதவியை நீண்டநாட்களாகவே விமர்சிப்பவராக டிரம்ப் இருக்கிறார். இது அமெரிக்க வரி செலுத்துவோரின் நலனை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்பது அவரது குற்றச்சாட்டாக உள்ளது. முந்தைய பேச்சுக்களின் போதும் USAID மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள அவர், இந்த நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகளை "இனவெறி கொண்ட மனப்பிறழ்வாளர்கள்" என்றும் விமர்சித்துள்ளார். இது போன்ற வெளிநாடுகளுக்கு உதவும் நிறுவனங்களை நீக்குவது வெகுஜன ஆதரவைப் பெற உதவலாம். வெளிநாடுகளுக்கான உதவித் தொகையை குறைப்பதை அமெரிக்க வாக்காளர்கள் விரும்புகிறார்கள் என்பதை நீண்டகாலமாக கருத்துக் கணிப்புகளும் வெளிப்படுத்தி வருகின்றன. டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவியேற்ற உடன் மேற்கொண்ட முதல் நடவடிக்கைகளில், அனைத்து சர்வதேச செலவீனங்களையும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதற்கான உத்தரவும் இருந்தது. இவை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் எனவும் கூறப்பட்டிருந்தது. அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட ஒரு குறிப்பாணையின் அடிப்படையில் களத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த பெரும்பான்மை பணிகள் நிறுத்தப்பட்டன. மனிதாபிமான செயல்பாடுகளுக்கான விதி விலக்குகள் பின்னர் அறிவிக்கப்பட்டன. எனினும் அமெரிக்க அரசின் நடவடிக்கை சர்வதேச வளர்ச்சிப் பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, சேவைகளில் பரவலான சிக்கலை ஏற்படுத்தியது. உலகின் ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளில் மருத்துவ சேவை, சுத்தமான குடிநீர் வசதி ஏற்படுத்தும் பணிகளும் இரவோடு இரவாக நிறுத்தப்பட்டன. மனிதாபிமான செயல்பாடுகளில் ஈடுபட்ட மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் பேசும் போது இதனை "மனிதநேய சேவைகளில் ஏற்பட்டுள்ள பூகம்பம் போன்றது" என விமர்சிக்கிறார். USAID தலைமையகத்தை அணுகிய ஈலோன் மஸ்க்கின் அதிகாரிகளுக்கு பாதுகாக்கப்பட்ட நிதி விவரங்கள் மறுக்கப்பட்டன. மத்திய அரசு செலவினங்களை குறைப்பது தொடர்பான பணியில் ஈலோன் மஸ்க்-கிற்கு உதவுவதற்காக டிரம்ப் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டவர்கள் இவர்கள் என்பதால் வெள்ளை மாளிகை மற்றும் USAID இடையே பிரச்சனை ஏற்படும் சூழல் நிலவியது. இதன் பின்னதாக இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. தான் நிர்வகித்து வரும் எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் நடந்த உரையாடல் ஒன்றில் திங்கட்கிழமை ஈலோன் மஸ்க் பேசும் போது, "USAID விவகாரம் தொடர்பாக அதிபர் டிரம்பிடம் விரிவாக பேசினேன். இதனை இழுத்து மூட வேண்டும் என்பதை அவர் ஒப்புக் கொண்டார்." என்றார் USAID-ன் இணையதளம் செயல்பாட்டை நிறுத்தியது, மற்றும் ஊழியர்கள் வீட்டிலேயே இருக்குமாறு திங்கட்கிழமை அறிவுறுத்தப்பட்டனர். திங்கட்கிழமை பேசிய அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, USAID அமைப்பின் தலைமை உத்தரவுகளுக்கு கீழ்ப்படிய மறுப்பதாக குற்றம் சாட்டிதோடு, தானே தற்போது அந்த அமைப்பின் செயல் தலைமையாக இருப்பதாகவும் கூறினார். அந்த அமைப்பு மேற்கொண்டு வரும் பெரும்பான்மைப் பணிகள் தொடரும் என்றாலும், செலவீனங்கள் தேசிய நோக்கத்துடன் ஒன்றிணைவதாக இருக்க வேண்டும் என கூறினார். சியரா ஸ்பேஸ்: காற்றே இல்லாத நிலவில் ஆக்சிஜன் தயாரிக்க உதவும் கருவி - எப்படி செய்யும்?30 ஜனவரி 2025 உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? - அறிவியல் கூறும் 7 எளிய வழிகள்30 ஜனவரி 2025 பட மூலாதாரம்,REUTERS USAID அமைப்பை டிரம்ப்பால் மூட முடியுமா? USAID அமைப்பின் மீது வெள்ளை மாளிகைக்கு குறிப்பிடத்தக்க அதிகாரம் இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும், அதிகாரம் வரம்புகளுக்குட்பட்டதாகவே உள்ளது 1961ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி USAID அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த சட்டம், ஒரு அரசு முகமையானது உருவாக்கப்பட்டு, வெளிநாட்டு செலவுகளை நிர்வகிப்பதற்கு ஆணை பிறப்பித்தது. 1998ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் USAID-யை சுய உரிமைகள் பெற்ற நிர்வாக முகமையாக தரம் உயர்த்தியது. சுருக்கமாக சொல்வதென்றால் டிரம்ப் தன்னிச்சையாக நிர்வாக உத்தரவின் மூலம் USAID அமைப்பை நீக்கி விட முடியாது. இந்த அமைப்பை நீக்கும் எந்த முடிவும் நீதிமன்றத்திலும், அமெரிக்க காங்கிரசிலும் கடுமையான சவால்களை சந்திக்கும். USAID அமைப்பை முழுமையாக ஒழிக்கும் நடவடிக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தின் முடிவுக்குட்பட்டது எனில், டிரம்பின் குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குறைந்த வித்தியாசத்திலேயே பெரும்பான்மையை தாண்டி நிற்கிறது. டிரம்ப் நிர்வாகம் முன்வைக்கும் கருதுகோள்களில் ஒன்றான USAID அமைப்பை வெளியுறவு அமைச்சகத்தின் கிளையாக மாற்றும் முடிவும் இருக்கிறது. தன்னுரிமை பெற்ற அமைப்பாக அது இருப்பதற்கு நேர் எதிரான முடிவு இதுவாகும். இது போன்ற முடிவு முன்னெப்போதும் கேட்காதது அல்ல, 2020ம் ஆண்டில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சர்வதேச வளர்ச்சிக்கான துறையை வெளியுறவு அலுவலகத்துடன் இணைத்தார். அப்போது போரிஸ் அரசின் அமைச்சர்கள் இந்த முடிவால், அரசின் வெளியுறவு கொள்கை இலக்குகளுடன் சர்வதேச செலவீனங்கள் ஒத்துப்போகும் என கூறி ஆதரவு தெரிவித்தனர். ஆனால் சர்வதேச உதவிகளில் இது நிபுணத்துவத்தைக் குறைக்கும் எனவும், வெளிநாடுகளில் பிரிட்டனின் செல்வாக்கை சரிக்கும் எனவும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். USAID யை மூடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன? USAID அமைப்புக்கு வழங்கப்படும் நிதியில் பெரும்பான்மை அமெரிக்காவால் வழங்கப்படும் நிலையில், நிதி எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்ற கொள்கையில் மேற்கொள்ளப்படும் மாற்றம் உலகெங்கிலும் உணரப்படும். USAID அமைப்பின் செயல்பாடுகள் உண்மையிலேயே உலகளாவியவை. யுக்ரைன் போரில் காயமடையும் வீரர்களுக்கு செயற்கை உடலுறுப்புகள் வழங்குவது முதல் ஆஃப்ரிக்காவில் எபோலா பரவலை கட்டுப்படுத்துவது வரை இந்த அமைப்பின் செயல்பாடுகள் பரந்துபட்டவையாக உள்ளன. சர்வதேச செலவீனங்கள் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதும், வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ பேசுகையில் ஒவ்வொரு டாலர் செலவும் அது அமெரிக்காவின் பாதுகாப்புக்காகவும், வலிமைக்காகவும், செழிப்புக்காவும் செலவிடப்படுகிறது என்பதை நிறுவி நியாயப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டார். ஜனநாயக கட்சியின் அரசியல்வாதிகள் இந்த முடிவை சட்டவிரோதமானது மற்றும் தேச பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியது என விமர்சிக்கின்றனர். சிரியாவில் ஆயிரக்கணக்கான ஐஎஸ் அமைப்பினர் அடைக்கப்பட்டுள்ள சிறையின் காவலர்களுக்கான ஊதியமும் அமெரிக்காவின் நிதியால் வழங்கப்படும் நிலையில், இவர்கள் பணியிலிருந்து வெளியேறும் நிலை உருவாகும் என்ற செய்தியை ஜனநாயக கட்சியினர் சுட்டிக்காட்டுகின்றனர். "அமெரிக்காவே முதன்மை" என்ற அணுகுமுறைக்கு ஏற்ப வெளிநாடுகளுக்கான செலவீனங்களும் இருக்க வேண்டும் என்பதை டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். இதனால் சர்வதேச வளர்ச்சிக்கான திட்டங்கள் மேலும் அதிர்ச்சியலைகளுக்கு தயாராகி வருகிறது. அரசின் பட்ஜெட்டிலிருந்து வெளிநாடுகளுக்கான நிதிச்செலவை குறைக்கும் பொறுப்பு ஈலோன் மஸ்க்கிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், வரும் ஆண்டுகளில் வெளிநாடுகளுக்காக எவ்வளவு தொகை செலவிடப்படும் என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0e45vd5jy3o
-
மன்னார்: கனிய மணலை அகழும் முயற்சில் சர்வதேச நிறுவனங்கள்!
மன்னார் வங்காலை கிராமத்தில் கடற்கரை பகுதியில் கணிய மணல் ஆராய்ச்சிக்காக வருகை தந்த குழுவை திருப்பி அனுப்பிய குழுவினர் Published By: VISHNU 04 FEB, 2025 | 06:50 PM மன்னார் வங்காலை கிராமத்தில் கடற்கரை பகுதியில் செவ்வாய்க்கிழமை(4) மாலை கணிய மணல் ஆராய்ச்சிக்காக வருகை தந்த குழு ஒன்றை அக்கிராம மக்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேற்றி உள்ளனர். செவ்வாய்க்கிழமை(2) மாலை 2.30 மணியளவில் கணிய மணல் ஆராய்ச்சிக்காக குழு ஒன்று நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கிராமத்தில் கடற்கரை பகுதியில் கணிய மணல் ஆராய்ச்சிக்காக வருகை தந்துள்ளனர். கிராமத்தில் உள்ள எந்த தரப்பிடமும் எவ்வித அனுமதியும் பெற்றுக்கொள்ளாமல் சுமார் 20 பேர் அடங்கிய குழுவினர் அவ்விடத்திற்கு வருகை தந்து கணிய மண் ஆராய்ச்சியை முன்னெடுத்தனர். இந்த நிலையில் சந்தேகம் கொண்ட கிராம மக்கள் அவ்விடத்திற்கு சென்று அவர்களுடன் விசாரணைகளை முன்னெடுத்த போது, தாம் பல்கலைக்கழகத்தில் இருந்து வருகை தந்துள்ளதாகவும், கணிய மண் ஆராய்ச்சியை மேற்கொண்டு ஆராய்ச்சி வெற்றி பெற்றால் கணிய மணல் அகழ்வு முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் அக்கிராம மக்கள் உடனடியாக வங்காலை பங்குத்தந்தை அருட்தந்தை லக்கோன்ஸ் அடிகளாரின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் அருட்தந்தை சம்பவ இடத்திற்கு வருகை தந்தார். ஆராய்ச்சிக்காக வருகை தந்த குழுவுடன் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி ஒருவரும் வருகை தந்திருந்தார். தாங்கள் உரிய அனுமதியை பெற்று கொண்டு வருகை தந்ததாக குறித்த குழுவினர் தெரிவித்த போதும் எவ்வித அனுமதியும் பெற்றுக் கொள்ளாத நிலையில் அவர்கள் வருகை தந்தமை தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கணிய மணல் ஆராய்ச்சிக்காக வருகை தந்த குறித்த குழுவினர் அங்கிருந்து சென்றனர். மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கணிய மணல் அகழ்வுக்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை முன்னெடுத்து வரும் நிலையில் மன்னார் தீவுக்கு வெளியில் பெருநிலப்பரப்பில் குறித்த ஆராய்ச்சி நடவடிக்கை முன்னெடுக்க இருந்தமை அக்கிராம மக்கள் மத்தியில் பாரிய விசனத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/205807
-
வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டம் - சுதந்திர தினம் கரிநாளாக அனுஷ்டிப்பு
04 FEB, 2025 | 06:26 PM (நமது நிருபர்கள்) இலங்கையில் 77ஆவது சுதந்திர தினம் வடக்கு, கிழக்கில் கரிநாளாக பிரகடனம் செய்யப்பட்டு இன்றைய தினம் (4) அனுஷ்டிக்கப்பட்டதோடு பாரிய கவனயீர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, இனப்படுகொலைக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். போராட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்கள், மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர். யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர் போராட்டம் முதலில் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான கொடி கம்பத்தில் பறந்த இலங்கைத் தேசியக் கொடி பல்கலைக்கழ மாணவர்களால் இறக்கப்பட்டு பின்னர் கறுப்புக் கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களால் பல்கலைக்கழக வளாகத்தின் பல பாகங்களிலும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்ட நிலையில் பிரதான வாயிலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முற்பகல் 11 மணியளவில் போராட்டத்தினை ஆரம்பித்த மாணவர்கள், இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்து, இலங்கையை குற்றவியல் கூண்டில் நிறுத்து, இறுதிப்போரில் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் எங்கே, ஓலம் நிறைந்த தமிழர் வாழ்வுக்கு எப்போது விடிவு, உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியிருந்ததோடு கோசங்களையும் எழுப்பினார்கள். போராட்டத்தின் இறுதியில் 'எங்கள் தாய்நிலம் விடிவுறும் நாளே, தமிழர் எமக்கு சுதந்திர நாள்' என்ற தலைப்பிலான பிரகடனத்தையும் வெளியிட்டனர். நல்லூரில் போராட்டம் இதேவேளை, நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் கறுப்புக்கொடி ஏந்திய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் சிவகுரு ஆதீனத்தில் ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட இளையோர் பங்கேற்றிருந்தனர். கிளிநொச்சியில் நீதி கோரிய போராட்டம் வழிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் ஆரம்பமாகிய போராட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றது. இந்தப்போராட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், முன்னாள், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும், இலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், ஆக்கிரமிப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும், சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது? உட்பட பல கோசங்களை எழுப்பினர். மட்டக்களப்பு - செங்கலடியில் போராட்டம் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் மட்டக்களப்பு - செங்கலடி பகுதியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. செங்கலடி சித்தி விநாயகர் ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பமான பேரணி கொம்மாதுறை பிள்ளையார் ஆலய முன்றலைச் சென்றடைந்து, அங்கு போராட்டம் தொடர்ந்தது. மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினர், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பாராளுமன்றக் குழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்களென பெருமளவானோர் கலந்துகொண்டனர். அவர்கள், 'இலங்கையின் சுதந்திர தினம் எங்களுக்கு கரிநாள்', 'நீங்கள் சுதந்திரம் அனுபவிக்கும்போது நாங்கள் ஒடுக்கப்படுவதா', 'உங்களுக்கு சுதந்திர நாள் எங்களுக்கு திண்டாட்ட நாள', 'காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே?', 'எமது மேய்ச்சல் தரை எமக்கு வேண்டும்', 'நிம்மதியில்லாத நாட்டில் சுதந்திரம் எதற்கு?', 'சுதந்திரம் இல்லாத நாட்டில் சுதந்திர தினம் எதற்கு?', 'எங்கே எங்கே உறவுகள் எங்கே?' போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு ஈடுபட்டனர். இலங்கையின் தேசிய சுதந்திர தினத்தினை வட,கிழக்கு தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டிக்கும் வகையில் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு நகரில் முன்னதாக போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதும் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தினால் நீதிமன்றத்தின் ஊடாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த போராட்டம் செங்கலடியில் முன்னெடுக்கப்பட்டதோடு, போராட்டத்தின் இறுதியில் சர்வதேச சமூகத்துக்கு அனுப்புவதற்கான மகஜரொன்று அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி செல்வராணியினால் வாசிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/205805
-
த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்கம்: தலைவர்களின் சிலைகளை விஜய் இன்று திறந்து வைக்கிறார்
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஓராண்டாக என்ன செய்தது? தாக்கம் ஏற்படுத்தியதா? பட மூலாதாரம்,@TVKVIJAYHQ/X கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க நாள் பிப்ரவரி 2-ஆம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. அக்கட்சியின் கொள்கைத் தலைவர்களாக அறிவிக்கப்பட்ட ஐந்து தலைவர்களின் சிலையை திறந்து வைத்தார், தவெக தலைவர் விஜய். சென்னை பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாளின் திருவுருவச் சிலைகள் திறந்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளன்று கட்சியின் தலைவரான விஜய், அதிகாரப்பகிர்வுடன் கூடிய ஆகப்பெரும் ஜனநாயகப் பெருநிகழ்வைத் தமிழகத்தில் உருவாக்கிக் காட்ட இருப்பதாக தெரிவித்தார். தன்னுடைய அறிக்கையில், "மக்கள் இயக்கமாக, மக்களுக்கான நலத்திட்டங்களைச் செய்து வந்த நாம், அரசியல் களத்தைக் கையாளத் தொடங்கி, இதோ இப்போது இரண்டாம் வருடத்தின் வாயிலில். கட்சி தொடங்கியதற்கான அறிவிப்பு, உறுப்பினர் சேர்க்கை என நமது அரசியல் பயணத்தின் ஒவ்வோர் அடியையும் அளந்து, நிதானமாக வைத்து முன்னேறி வருகிறோம்," என்று குறிப்பிட்டிருந்தார். இந்த சூழலில் தமிழக அரசியல் தளத்தில் நன்கு அறிமுகமான பலர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு மிக முக்கியப் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. ஓராண்டு காலத்தில் இக்கட்சி செய்தது என்ன? தமிழகத்தின் அரசியல் தளத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன என விளக்குகிறது இந்த கட்டுரை. ஆதவ் அர்ஜுனா இடை நீக்கம்: திருமாவளவனின் முடிவுக்கு என்ன காரணம்? கூட்டணி கணக்குகள் மாறுபடுமா? விஜய் பற்றி மீண்டும் விமர்சனம் செய்த சீமான்; இந்த முறை என்ன சொன்னார்? ஆதவ் அர்ஜுனா: திமுக-வில் அரசியலை தொடங்கியவர் விஜய் உடன் இணைந்தது எப்படி? 'பாசிசம், கடவுள் மறுப்பு, ஊழல், பிளவுவாதம், ஆட்சியில் பங்கு' - விஜய் பேசியது என்ன? முழு விவரம் "மக்களுக்கான அரசியலை, மக்களோடு மக்களாக நிற்பதை, மக்களுடன் நின்றே அறிவித்தோம். அதுதான் நமது முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவானது. அதில் தான் கழகத்தின் ஐம்பெரும் கொள்கைத் தலைவர்களை, மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகளை, மாபெரும் செயல்திட்டங்களை அறிவித்தோம். அதன் வாயிலாக, அரசியல் களத்தின் அத்தனை திசைகளையும் அதிர வைத்தோம். இதோ, இந்த ஓராண்டுக்குள் எத்தனை எதிர்ப்புகளை, ஏகடியங்களைக் கடந்திருப்போம். எதற்கும் அஞ்சாமல், எதைக் கண்டும் பதறாமல் நம் கருத்திலும் கருத்தியலிலும் நின்று, நிதானித்து, நேர்மையாக நடைபோட்டு வருகிறோம்," என்று குறிப்பிட்டிருந்தார் விஜய். கட்சி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டே, நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சி போட்டியிடவில்லை. அதேபோன்று, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவால் காலியான ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் அக்கட்சி போட்டியிடவில்லை. 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் என்ற இலக்குடன் அக்கட்சி செயல்பட்டு வருகிறது. கட்சியில் சேரும் புதுமுகங்கள் ஆரம்ப காலம் தொட்டே 'ஆட்சியிலும் பகிர்வு, அதிகாரத்திலும் பகிர்வு' என்ற விஜயின் முழக்கம், விடுதலைச் சிறுத்தைக் கட்சி விஜயின் கட்சியுடன் இணையும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. ஆனால், தற்போது அந்த கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, ஜனவரி 31-ம் தேதி பனையூரில் அமைந்திருக்கும் தவெக தலைமை அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் கட்சியில் சேர்ந்தார். அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளராக இருந்த நிர்மல் குமாரும் விஜயின் கட்சியில் இணைந்தார். வெவ்வேறு பெரிய கட்சிகளிலிருந்து தவெகவில் இணைந்த இருவருக்கும் அக்கட்சியில் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் பொறுப்பையும், நிர்மல் குமாருக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பையும் வழங்கியுள்ளார் விஜய். மேலும், நான்கு கட்டங்களாக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில், விஜயும், விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் ஒன்றாக பங்கேற்பார்கள் என்ற செய்தி பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இறுதியில் அந்த நிகழ்வில் விசிகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில், ஆளும் திமுகவை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் கருத்துகளை கூறினார் ஆதவ் அர்ஜுனா. '2026 தேர்தலில் மன்னராட்சியை ஒழிப்போம்' என்று கூறியிருந்தார் அவர். அவருடைய இந்த கருத்து தமிழக அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டார். காவல்துறை தேர்வில் முறைகேட்டை வெளிப்படுத்தியதால் ஏடிஜிபியின் அறை எரிக்கப்பட்டதா?4 பிப்ரவரி 2025 கனடா, சீனாவுக்கு எதிரான டிரம்பின் முடிவால் அமெரிக்காவுக்கு என்ன இழப்பு ஏற்படும்? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?3 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,@AADHAVARJUNA/X படக்குறிப்பு, ஜனவரி 31-ம் தேதி அன்று பனையூரில் அமைந்திருக்கும் தவெக தலைமை அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் கட்சியில் சேர்ந்தார் ஆதவ் அர்ஜுனா கட்சியின் ஓராண்டு பயணம் கடந்த 2024-ஆம் ஆண்டு விஜய் தன்னுடைய கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்தார். கட்சி தொடங்கி ஒன்பது மாதங்களான பிறகே கொள்கைகள் தொடர்பான விவரங்களையும், கொள்கை மற்றும் அரசியல் எதிரிகள் யார் என்பதையும் விக்கிரவாண்டியில் மாநாடு ஒன்றை நிகழ்த்தி அதில் அறிவித்தார் விஜய். அதன் பின்னர், ஃபெஞ்சல் புயலுக்கு நிவாரணம், பரந்தூர் போராட்டக்காரர்களை நேரில் சந்தித்துப் பேசுவது, வேங்கைவயலுக்கு செல்லத் திட்டமிடுவது போன்ற அரசியல் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தார். தலைவர்களின் பிறந்த நாள், நினைவு தினத்தின்போது கட்சி அலுவலகத்திலேயே அவர்களின் திருவுருவப் படங்களுக்கு மரியாதை செய்வது போன்றவை தொடர்ச்சியாக நடைபெறுகிறது. அவ்வப்போது ஏற்படும் அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக, தொடர்ச்சியாக தன்னுடைய கருத்தையும் முன்வைத்து வருகிறார் விஜய். புதுச்சேரியில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டபோது, அதற்கு எதிராக தன் கண்டனங்களை பதிவு செய்தார். சமீபத்தில், பிப்ரவரி 1-ம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எந்த நலத்திட்டமும் இல்லை என்று கூறி அறிக்கையும் வெளியிட்டிருந்தார். பொதுமக்களை சந்திக்க விஜய் மிகவும் யோசிக்கிறார், தயங்குகிறார் என்று சில விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. தவெகவின் ஓராண்டு பயணம் அரசியல் தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சிலர் கருதுகின்றனர். சிலரோ அக்கட்சி பயணிக்க வேண்டிய தொலைவு வெகுதூரம் உள்ளது என்ற விமர்சனத்தை முன்வைக்கின்றனர். அயோத்தியில் தலித் பெண் படுகொலை: கதறி அழுத எம்.பி - என்ன நடந்தது?3 பிப்ரவரி 2025 இலங்கை சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்3 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,TVK படக்குறிப்பு, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சிலர் கருதுகின்றனர் ஆளுங்கட்சி மீதான அதிருப்தி சாதகமாக அமையுமா? "மக்களின் நேரத்தை விரயம் ஆக்காமல், 4 மணிநேரத்தில் மாநாட்டை முடித்த ஒரே கட்சியாக நான் இதனை பார்க்கின்றேன்," என்று கூறுகிறார் சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் ஆராய்ச்சிப் படிப்பை படித்துவரும் திருநாவுக்கரசு. பாதுகாப்பு மற்றும் போரியல் துறை மாணவரான அவர், 2021 சட்டமன்ற தேர்தலில் முக்கிய தேர்தல் வியூக வகுப்பாளர் குழுவாக விளங்கிய நிறுவனத்தில் பணியாற்றினார். திமுக ஆட்சி மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பரந்தூர் விமான நிலைய திட்டம், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம், தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் போன்ற காரணங்கள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. "பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு கோட்பாடுகளுக்கு எதிராக இருக்கும் மக்கள், அதிமுகவின் பக்கம் சாய்வதை பெரும்பாலாக தவிர்த்தே வருகின்றனர். மேலும், கொள்கை தலைவர்களாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ள தலைவர்கள் மற்றும் அவர்களின் அரசியல் கோட்பாடுகள் போன்றவை மக்கள் மத்தியில் இன்று பேசுபொருளாக இருக்கிறது. எனவே, ஆளுங்கட்சி மீது அதிருப்தி கொண்டவர்களுக்கான இடமாக தமிழக வெற்றிக் கழகம் இருக்கலாம் என்பதில் அச்சம் இல்லை," என்று விவரிக்கிறார். "அரசியல் மயமாக்கப்படாத இளைஞர்கள் இதுநாள் வரை நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளுக்கு வாக்களித்தனர். ஆனால் சிக்கலான சித்தாந்தங்கள் என்பது இல்லாமல், எளிமையான, எளிதில் அணுகக்கூடிய ஒரு கட்சியாக தவெக இருப்பது இளைஞர்களின் வாக்குகளை விஜய் பக்கம் மடைமாற்றம் செய்யும்," என்றும் தெரிவித்தார் அவர். மக்கள் அணுகக்கூடிய ஒரு தளமாக இக்கட்சியை உருவாக்கி வருவதே ஓராண்டு முன்னேற்றம் என்று கூறலாம், என்கிறார் அவர். மேற்கொண்டு பேசிய அவர், "திமுகவுக்கு எதிரான வாக்குகள் மேலும் சிதறத் துவங்கும். திமுக தன்னுடைய 'கோர்' (முதன்மை) வாக்காளர்களின் வாக்குகளை அடுத்தத் தேர்தலில் வென்றால் கூட மீண்டும் அவர்களால் ஆட்சி அமைக்க இயலும்" என்று கூறுகிறார், திருநாவுக்கரசு. நீங்கள் எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும்? - 5 கேள்விகளும் அதற்கான எளிய விளக்கமும்3 பிப்ரவரி 2025 இலங்கை சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்3 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,@TVKVIJAYHQ/X படக்குறிப்பு, "அரசியல் மயமாக்கப்படாத இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழத்தில் இணையலாம்" தவெக தாக்கத்தை ஏற்படுத்தவில்லையா? பிபிசி தமிழிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள் தமிழக வெற்றிக் கழகம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று கூறுகின்றனர். "ஒரு தேர்தலில் போட்டியிட்டு அதன் முடிவுகள் வந்தால் மட்டுமே ஒரு கட்சி கள அளவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று தெரியவரும்," என்று கூறினார் ஆழி செந்தில்நாதன். அரசியல் விமர்சகரும், எழுத்தாளருமான ஆழி செந்தில்நாதன், "ஒரு கட்சி உருவாக வேண்டும் என்றால், ஒன்று ஒரு வெற்றிடத்தை நிரப்ப வேண்டும், அல்லது தனக்கான ஒரு இடத்தை உருவாக்க வேண்டும். இதில், எதை நோக்கமாக வைத்து விஜய் அரசியலுக்கு வந்தார் என்பதில் இன்று வரை எந்த தெளிவும் இல்லை," என்று குறிப்பிடுகிறார். பெரிய அளவிலான ஒரு அரசியல் கொள்கை ஒன்றும் இல்லாமல் அரசியலுக்கு வந்தவர் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்று கூறும் ஆழி செந்தில்நாதன், அன்று திமுகவுக்கும், அதிமுகவுக்கும் எதிராக ஒரு மாற்று தேவையாக இருந்தது, அந்த இடத்தை அவர் நிரப்பியதாக கூறுகிறார். "அந்த நேரத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தாலும் அதே வரவேற்பும் கிடைத்திருக்கும். ஆனால் ஒரு தனிப்பெரும்பான்மையை உருவாக்கும் ஒரு கட்சியாக உருவெடுத்திருக்க இயலாது," என்று மேற்கோள்காட்டுகிறார் அவர். ஒரு சினிமா பிரபலம் அல்லது ஒரு தொழிலதிபர் என்று ஒரு தனிநபர் அரசியலுக்கு வருகிறார் என்ற காரணத்துக்காக மட்டுமே ஒருவர் பின் மக்கள் நின்றுவிடமாட்டார்கள் என வலியுறுத்தும் அவர், 2014-ஆம் ஆண்டு மோதி அரசு ஆட்சியை கைப்பற்றிய காலத்துக்குப் பிறகு இங்கு நடைபெறும் தேர்தல்கள் அனைத்தும் சித்தாந்தம் சார்ந்தே நடைபெறுவதாக சுட்டிக்காட்டுகிறார். "ஒரு கட்சி, ஒரு சித்தாந்தம் சார்ந்து செயல்பட வேண்டும். இல்லையென்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாக ஒரு அடையாள அரசியல் சார்ந்து செயல்பட வேண்டும். இல்லையென்றால், ஆம் ஆத்மி போன்று ஒரு பொது பிரச்னையை, மக்கள் நலனை அடிப்படையாக கொண்டு ஒரு கட்சியாக செயல்பட வேண்டும். இதில், விஜய் எந்த பக்கம் நின்று யாருக்காக குரல் தருகிறார் என்பதில் எந்த தெளிவும் இல்லை," என்று குறிப்பிடுகிறார். "சினிமாத்துறையில் இருந்து அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்த அரசியல்வாதிகளிலேயே மிகவும் பலவீனமான ஒரு கட்சியாக நான் தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்க்கிறேன்," என்று அவர் குறிப்பிட்டார். மேலும், தவெகவில் தற்போது இணைந்தவர்கள் பெரிய தலைவர்கள் அல்ல என்றும் அவர்களின் பக்கம் பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர்களும் இல்லை என அவர் தெரிவித்தார். "ஒரு அரசியல் கட்சி தோன்றுவதற்கான அடிப்படையும் வெற்றிடமும் இல்லாமல் வரும் ஒரு கட்சி சில காலங்கள் தாக்குப்பிடிக்கும். பிறகு கூட்டணி அரசியலுக்குள் சேர வேண்டிய நிலையே ஏற்படும்" என்பதையும் அவர் தெரிவித்தார். கேரளாவில் பள்ளி மாணவர் தற்கொலை: 'உடல் ரீதியாக தாக்கி ராகிங்' செய்ததாக தாய் புகார் - முக்கிய செய்திகள்3 பிப்ரவரி 2025 அண்ணா பல்கலை., மாணவி வழக்கின் எஃப்.ஐ.ஆர் வெளியான விவகாரம்: சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு எதிராக போராட்டம் ஏன்?2 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,@TVKVIJAYHQ/X படக்குறிப்பு, "திராவிடம், தமிழ் தேசியம், இடதுசாரி, வலதுசாரி என்று ஒரு சித்தாந்தம் சார்ந்து செயல்பட வேண்டும்" வாக்கு வங்கி அரசியல் "கட்டமைப்பே ஏதும் இன்றி ஒரு கட்சியை அறிமுகம் செய்துள்ளார் விஜய். இந்த கட்சி ஓராண்டாக எதையும் செய்யவில்லை," என்று குறிப்பிடுகிறார் மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ஆர்.கே. ராதாகிருஷ்ணன். "களத்தில் இறங்கி ஏன் செயல்படவில்லை என்று எழுப்பப்படும் கேள்விகளுக்கு விஜயின் கட்சியினர் கூறும் பதில் கட்டமைப்பு ஏதும் இல்லை என்பது தான். முதலில் கட்சியை கட்டமைத்து, களத்தில் சென்று பணியாற்றி இருக்க வேண்டும். பிறகு தேர்தலுக்கு ஐந்தாறு மாதங்களுக்கு முன்பு கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிருந்தால் இந்த கட்சி ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பது புரிந்திருக்கும்," என்று அவர் மேற்கோள்காட்டினார். மேற்கொண்டு பேசிய அவர், "இன்று திமுகவின் ஆட்சி மீது இருக்கும் அதிருப்தி, தவெகவுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்துமா? வாக்கு பலத்தை அதிகரிக்குமா என்பது குறித்தெல்லாம் யோசிக்க வேண்டிய தேவையில்லை. தேர்தலுக்கு இன்னும் குறைந்தது ஒரு வருடம் 2 மாதங்கள் இருக்கின்றன," என்று குறிப்பிடுகிறார். "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போன்ற ஒரு பெரிய அதிருப்தி தரும் நிகழ்வோ, அசாத்திய சூழலோ இங்கே எழவில்லை. ஒரு அசாத்திய சூழலின் பின்னணியிலோ, ஒரு இயக்கத்தின் அடிப்படையிலோ இந்த கட்சி உருவாகவில்லை. இது ஏற்படுத்திய தாக்கம் என்பது ஒன்றும் இல்லை," என்றும் அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20g41vrkpeo
-
முல்லைத்தீவில் பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு சுதந்திர தினம் அனுஷ்டிப்பு
Published By: DIGITAL DESK 7 04 FEB, 2025 | 05:26 PM முல்லைத்தீவில் உள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு இன்று (4) சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகர் பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டும், இலங்கையின் தேசியக் கொடிகள் அப்பகுதி நகர சுற்று வட்டாரத்தில் பறக்கவிடப்பட்டும் சுற்றுவட்ட வீதி அலங்கரிக்கப்பட்டும் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. https://www.virakesari.lk/article/205793
-
இளம் வயதினரிடையே புற்றுநோய் அதிகரிப்பது ஏன்?
பட மூலாதாரம்,LUISA TOSCANO படக்குறிப்பு, பிரேசிலைச் சேர்ந்த 38 வயதான லுயிசா டோஸ்கானோ, தனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டபோது அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார். கட்டுரை தகவல் எழுதியவர், லூயிஸ் பாருச்சோ பதவி, பிபிசி உலக செய்திகள் 4 பிப்ரவரி 2025, 03:47 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் தனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாக லுயிசா டோஸ்கேனோவுக்கு தெரிந்தபோது அவர் திகைத்துப் போனார். "இது முற்றிலும் எதிர்பாராதது," என்கிறார் பிரேசிலை சேர்ந்த லுயிசா. அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. "நான் சிறப்பாக, ஆரோக்கியமாக, முழு உடற்தகுதியோடு இருந்தேன், எந்த ஒரு நோய்க்கான அபாயமும் இல்லை. இது எனக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. என்னால் இதை நம்ப முடியவில்லை. எனது வாழ்க்கையில் எனக்கு புற்றுநோய் ஏற்படும் என்பதை நான் கற்பனை செய்துகூட பார்த்ததில்லை". கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் லுயிசாவுக்கு மூன்றாம் நிலை புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, அப்போதே அவருக்கு புற்றுநோய் பாதிப்பு மிகவும் தீவிரமாக இருந்தது. நான்கரை மாதத்துக்கு மேல் அவருக்கு கீமோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும், அவரது மார்பகத்தின் ஒரு பகுதியை நீக்க அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. பின்னர் ரேடியோதெரபி சிகிச்சையும் வழங்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் லுயிசாவுக்கு புற்றுநோய் சிகிச்சை நிறைவடைந்தது, ஆனால் புற்றுநோய் மீண்டும் வராமல் இருக்க அவர் தொடர்ந்து மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருக்கிறது. "கீமோதெரபி மிக தீவிரமாக இருந்தது, ஆனால் எனது உடல் அதனை நன்கு தாங்கிக்கொண்டது. அதற்கு நான் சுறுசுறுப்பாக இருந்ததும் உடலை வலுவாக வைத்திருந்ததும்தான் காரணம் என்பேன்", என்று அவர் நினைவுகூர்ந்தார். அதன் பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. புற்றுநோய் வராமல் ப்ரோக்கோலி தடுக்குமா? ஆய்வில் புதிய தகவல் இந்த நான்கு வகை புற்றுநோயாளிகளின் ஆயுளை நீட்டிக்கும் புதிய சிகிச்சை முறைகள் பற்றித் தெரியுமா? சர்க்கரை, செயற்கை இனிப்பு, செல்போன் கதிர்வீச்சு ஆகிய மூன்றும் புற்றுநோயை உண்டாக்குமா? பானிபூரியில் சேர்க்கப்படும் கண்கவர் நிறமிகளால் புற்றுநோய் ஆபத்து - எச்சரிக்கும் உணவுப் பாதுகாப்புத் துறை "நல்வாய்ப்பாக, எனது மார்பகத்தை முழுமையாக அகற்றவேண்டிய தேவை ஏற்படவில்லை. எனது முடியை இழக்க வேண்டியிருந்ததுதான் இதில் எனக்கு மிகவும் கடுமையாக இருந்தது. ஒவ்வொரு முறையும் கண்ணாடியில் என்னைப் பார்க்கும்போது, நான் பயந்துபோவேன். இது எனது குழந்தைகளையும் பாதித்தது." லுயிசாவைப் போலவே உலக அளவில் பலருக்கும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு அதிக அளவில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோரின் முன்னோர்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உடல் ரீதியாகவோ, சூழலியல் மற்றும் வாழ்வியல் காரணங்களால் வயது முதியவர்கள் மத்தியில் புற்றுநோய் அதிக அளவில் காணப்படுகிறது. உதாரணமாக ஒரு நபர் வயதடையும்போது, உயிரணு பிரிதல் அதிகரிக்கும். இது பிறழ்வுகள் (mutation) உருவாக வழிவகுக்கிறது மற்றும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது எனவே, புற்றுநோயியல் நிபுணர்கள் நீண்ட காலமாக இளம் வயதினரிடையே மார்பகப் புற்றுநோயில் BRCA1 மற்றும் BRCA2 பிறழ்வுகள் போன்ற மரபணு காரணிகளுடன், இளம் வயதினருக்கு ஏற்படும் ஆரம்பகால புற்றுநோய் வருவதைக் கண்டறிவதை இணைத்து வருகின்றனர். இருப்பினும், லுயிசாவைப் போன்ற அதிகமான நோயாளிகளுக்கு, மரபணு காரணங்களால் புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. பிபிசி செய்தி அறைக்குள் நுழைய விருப்பமா? - மெட்டாவெர்ஸ் உலகுக்கு உங்களை வரவேற்கிறோம்3 பிப்ரவரி 2025 மனித மூளையின் மோசமான நினைவுகளை அழிக்க முடியுமா? எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனை கூறுவது என்ன?3 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மார்பக புற்றுநோய் அதிகரித்து வருவதாக ஆரம்பகால புற்றுநோய்கள் குறித்த ஓர் அறிக்கை தெரிவிக்கின்றது. அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்புகள் பிஎம்ஜே என்னும் புற்றுநோய் இதழில் சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகளின்படி, 1990 மற்றும் 2019க்கு இடைப்பட்ட காலத்தில் உலகம் முழுவதும் 50 வயதுக்குட்பட்டவர்களின் ஆரம்பகால புற்றுநோயின் பாதிப்பு 9% அதிகரித்திருப்பதாகவும், இவர்கள் மத்தியில் புற்றுநோய் தொடர்புடைய மரணங்கள் 28% அதிகரித்திருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு 204 நாடுகளில் 29 வகையான புற்றுநோய்களை பகுப்பாய்வு செய்தது. இதேபோல், தி லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியான அறிக்கையின்படி, அமெரிக்காவில் தலைமுறை தலைமுறையாக 17 வகையான புற்றுநோய் பாதிப்பு சதவிகிதங்கள் படிப்படியாக அதிகரித்து வருவதாகக் காட்டுகிறது, குறிப்பாக Gen X மற்றும் மில்லினியல்ஸ் (1965 மற்றும் 1996க்கு இடையில் பிறந்தவர்கள்) மத்தியில் இது அதிகரித்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. 2012 மற்றும் 2021க்கு இடையில் 50 வயதுக்குட்பட்ட வெள்ளையின பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் ஏற்படும் விகிதம் ஆண்டுக்கு 1.4% உயர்ந்த நிலையில், அது 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மத்தியில் 0.7% ஆக இருந்ததாக, அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் (ACS) புதிய அறிக்கை தெரிவிக்கின்றது. பிஎம்ஜே புற்றுநோய் இதழில் நாசித் தொண்டை, வயிறு, பெருங்குடல் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்களும் இளைஞர்களிடம் அதிகரித்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கலிஃபோர்னியா காட்டுத்தீயின் போது மீட்கப்பட்ட 100 வயது மூதாட்டி3 பிப்ரவரி 2025 ராஜீவ் காந்தி ஓட்டிய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயன்றது ஏன்? ரா உளவு அமைப்பு தடுத்தது எப்படி?3 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இளம் வயதினரிடையே புற்றுநோய் அதிகரிப்பதற்கான காரணங்களை கண்டறிய ஆய்வாளர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள் புற்றுநோய் ஏன் வருகிறது? இதற்கான காரணங்களை கண்டறிய ஆய்வாளர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதிகரிக்கும் புற்றுநோய் வளர்ச்சி, பல பத்தாண்டுகளாக புற்றுநோய் தடுப்பில் ஏற்பட்ட முன்னேற்றங்களை மாற்றியமைக்கக்கூடும் என்ற அபாயம் இருப்பதாக லேன்செட் ஆய்வு எச்சரிக்கிறது. பிஎம்ஜே புற்றுநோய் இதழ் மற்றும் லேன்செட் அறிக்கைகளின்படி, சிவப்பு இறைச்சி (ஆடு, மாட்டிறைச்சி போன்றவை) மற்றும் சோடியம் அதிகம் உள்ள உணவுகள், பழங்கள் மற்றும் பால் குறைவாக உள்ள உணவுமுறை போன்றவற்றுடன், அதிகளவு மது அருந்துதல் மற்றும் புகையிலை பயன்பாடு போன்றவையே முக்கிய காரணிகளாக கருதப்படுகின்றன. மேலும் உடல் பருமன் ஏற்படுவதால் வரும் உடல் வீக்கம் மற்றும் ஹார்மோன் ஒருங்கின்மை போன்றவையும் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. அமெரிக்காவில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் 17 வகை புற்றுநோய்களில் சிறுநீரகம், கருப்பை, கல்லீரல், கணையம் மற்றும் பித்தப்பை போன்ற 10 வகை புற்றுநோய்கள் உடல் பருமன் தொடர்பானவை என்று லான்செட் அறிக்கை குறிப்பிடுகிறது. இருப்பினும், இந்த காரணிகள் அனைத்தும் நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்களை விளக்கவில்லை. ஆனால், அனைத்து புற்றுநோய் நேர்வுகளையும், இந்த காரணங்கள், விளக்குவதில்லை. புற்றுநோய்க்கான மற்ற காரணங்களையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மின் சாதனங்கள் அல்லது தெருவிளக்குகள் மூலம் செயற்கை ஒளி தொடர்ச்சியாக உடலில் படுவது நமது உடல்நிலையை பாதித்து மார்பு, பெருங்குடல், கருப்பை மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக சிலர் வாதிடுகின்றனர். இரவில் அதிக நேரம் ஒளி படும்படியாக இரவு நேர பணியில் பணியாற்றுவது மெலடோனின் அளவுகளை குறைத்து, புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதை ஊக்குவிக்கக்கூடும் என பிற ஆய்வுகள் கூறுகின்றன. ஜூன் 2023-ல் நியூசிலாந்தை சேர்ந்த பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணர் பிரான்க் பிரிசெல் பெருங்குடல் புற்றுநோயை உண்டாக்குவதில் நுண் நெகிழிகளின் பங்கு குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்தார். இது ஆணுறையில் ஊசியால் ஓட்டையிடுவதைப் போல பெருங்குடலின் மேல் உள்ள பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்துவது போன்றது என்று குறிப்பிட்டார். கர்நாடகாவில் குணப்படுத்த முடியாத நோயாளிகள் கண்ணியத்துடன் இறக்க அனுமதி - முக்கிய செய்திகள்1 பிப்ரவரி 2025 மகாராஷ்டிரா: பெண்ணின் கருவில் இருந்த குழந்தை வயிற்றில் ஒரு கரு உருவானது எப்படி?1 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,LUISA TOSCANO படக்குறிப்பு, மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான தனது போராட்டத்தில் தனது குடும்பத்தினரின் ஆதரவு முக்கிய பங்கு வகித்ததாக லுயிசா கூறுகிறார் உயரமாக இருந்தால் புற்றுநோய் அபாயம் அதிகரிக்குமா? உணவில் சேர்க்கப்படும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட எமல்சிஃபையர்கள் மற்றும் நிறமூட்டிகள், குடல் அழற்சி மற்றும் டிஎன்ஏ பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். புற்றுநோய் ஆய்வுக்கான அமெரிக்க சங்கத்தின் கூற்றின்படி, குடற் செயல்பாடு கோளாறு, பெருங்குடல் புற்றுநோயோடு மட்டுமல்லாது, மார்பக மற்றும் ரத்த புற்றுநோயோடும் தொடர்புப்படுத்தப்படுகிறது. ஆன்டிபயாடிக் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் பயன்பாடு குடல் நுண்ணுயிரிகளை பாதிப்பதால், அதுவும் புற்றுநோய்க்கு ஒரு காரணமாக இருக்கிலாம் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள். ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்பாடு 2000-ம் ஆண்டிலிருந்து சுமார் 45 விழுக்காடு அதிகரித்திருப்பதாக, குறிப்பாக சிறார்கள் மத்தியில் அதிகரித்திருப்பதாக கணிக்கப்படுகிறது. இது, நுரையீரல் புற்றுநோய், நிணநீர் மண்டல புற்றுநோய், கணைய புற்றுநோய், சிறுநீரக செல் புற்றுநோய், எலும்பு மஜ்ஜை பிளாஸ்மா செல்களில் உருவாகும் ரத்தப் புற்றுநோய் ஆகியவற்றுடன் தொடர்புடையது என, 2019-ல் வெளியான அறிக்கையில் இத்தாலியை சேர்ந்த ஒரு விஞ்ஞானிகள் குழு தெரிவித்திருந்தது. தலைமுறைகளுக்கிடையில் அதிகரிக்கும் சராசரி உயரம் கூட புற்றுநோய் உருவாவதற்கு பங்களிக்கலாம் என, ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பெருங்குடல் சிகிச்சை நிபுணரும், பிஎம்ஜே ஆன்காலஜி அறிக்கையின் இணை ஆசிரியருமான பேராசிரியர் மால்கம் டன்லப் குறிப்பிடுகிறார். "மனித இனத்துக்கு பொதுவாக உலகம் முழுவதும் உயரம் கூடிக்கொண்டிருக்கிறது. உயரத்துக்கும் பெருங்குடல் புற்றுநோய் உட்பட பல புற்றுநோய்களுக்கும் வலுவான நேரடித் தொடர்பு உள்ளது." என்கிறார் அவர். அதிக செல் உற்பத்தி, இயல்பாக உருவாகும் வளர்ச்சி ஹார்மோன் தாக்கம், அதிக பெருங்குடல் பரப்பு போன்றவற்றை அவர் புற்றுநோயுடன் தொடர்புப்படுத்துகிறார். புற்றுநோய் மரபியலில் உலகில் முன்னணி நிபுணர்களில் ஒருவரான மருத்துவர் டன்லப், ஒரே ஒரு காரணமல்லாமல், பல்வேறு காரணிகள் ஒரே நேரத்தில் இணைவதுதான் இளம் வயதில் புற்றுநோய் ஏற்பட காரணம் என்றும் இருப்பினும் அவற்றை அடையாளம் காண்பது கடினம் என்றும் நம்புகிறார். "பெரும்பாலான அபாய காரணிகள் உரிய சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை," என குறிப்பிடுகிறார். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், ஒட்டுமொத்த அபாயம் குறைவு என்பதால் இளையவர்கள் அனைவரையும் புற்றுநோய் சோதனைக்கு உட்படுத்துவது பொருத்தமான பொருட்செலவாக இருக்காது என்றும் கூறுகிறார். என்ஐசி எனப்படும் அமெரிக்க தேசிய புற்றுநோய் மையத்தின் கூற்றுப்படி, 80 விழுக்காடு புற்றுநோய்கள் 55 வயதுக்கு மேற்பட்டோரிடம்தான் கண்டறியப்படுகிறது. இராசகேசரி பெருவழி: முதலாம் ஆதித்த சோழன் வணிகர்களுக்காக அமைத்த நிழல் படை என்ன செய்தது?2 பிப்ரவரி 2025 தண்ணீரை எப்போது குடிக்க வேண்டும்? உணவு உண்ணும் போது நீர் அருந்தலாமா?1 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,BRAZILIAN SOCIETY OF CLINICAL ONCOLOGY படக்குறிப்பு, தாமதமாக நோயை கண்டறிவது நோயாளி குணமடையும் வாய்ப்புகளை பாதிக்கும் என்கிறார், மருத்துவர் லெக்ஸாண்ட்ரே ஜேகோம் புற்றுநோயின் புறக்கணிக்கக்கூடாத அறிகுறிகள் இருப்பினும் வளர்ந்து வரும் இந்த சூழ்நிலை, இளம் நோயாளிகளிடம் தோன்றும் அறிகுறிகள் கவனிக்காமல் விடப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக, இளம் வயதிலேயே புற்றுநோய் ஏற்படுவது குறித்த விழிப்புணர்வை பொது மருத்துவர்களிடையே ஏற்படுத்த சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் (UICC) போன்ற முக்கிய அமைப்புகள் ஏற்படுத்தி வருகின்றன. "60 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் மலம் கழிப்பதில் சிரமம், சோர்வு, வயிறு வீக்கம் போன்ற அறிகுறிகளை சொல்லும்போது , மருத்துவர்கள் அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு முழு உடல் பரிசோதனை செய்ய பரிந்துரைப்பார்கள். இருப்பினும், 30களில் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியமுள்ளவர்களாக கருதப்படாதவர்களுக்கும் இந்த அறிகுறிகள் சாதாரண வலிகளாக கண்டுகொள்ளாமல் விடப்படலாம்." என விளக்குகிறார் பிரேசிலின் புற்றுநோய் மருத்துவத்திற்கான சங்கத்தின் இயக்குநர் மருத்துவர் அலெக்ஸாண்ட்ரே ஜேகோம். தாமதமாக நோயை கண்டறிவது நோயாளி குணமடையும் வாய்ப்புகளை பாதிக்கும் என அவர் விளக்குகிறார். "இவர்கள், தங்கள் இளமை காலத்தின் உச்சத்தில் இருப்பவர்கள், தங்களுக்கான குடும்பம் ஒன்றைத் தொடங்குபவர்கள், சிறப்பாக வாழ்பவர்கள். புற்றுநோய் இருப்பதாக கண்டுபிடிப்பது அவர்களையும் அவர்களது அன்புக்குரியவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது," என்கிறார். ஆனால் நோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால், இளம் நோயாளிகள் பெரும்பாலும் தீவிர சிகிச்சைகளை சிறப்பாக தாங்கிக்கொள்வார்கள். இதனால் அவர்கள் குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று மருத்துவர் ஜாகோம் குறிப்பிடுகிறார். இளமையிலேயே வரும் புற்றுநோய்களின் நீண்ட கால பாதிப்புகள் குறித்து கவலை தெரிவிக்கிறார் மருத்துவர் டன்லப். "இந்த புற்றுநோய்களால் பாதிக்கப்படும் இளைஞர்கள் இந்த அபாயத்தை தங்களது வயதான காலத்துக்கும் அனுபவிக்கக் கூடும்", என்று அவர் எச்சரிக்கிறார். "இது எதிர்காலத்தில் அதிகரிக்கப்போகும் புற்றுநோய் தாக்கத்தின் தொடக்கமா அல்லது ஒரு குறிப்பிட்ட வயதினருக்கு மட்டும் ஏதாவது பாதிப்பு ஏற்படுகிறதா?" சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் அதிக நேரம் நடந்து சாதனை - ஈலோன் மஸ்க், டிரம்ப் கூறியது என்ன?31 ஜனவரி 2025 டீப்சீக் செயலி என்பது என்ன? இது சாட்ஜிபிடி-க்கு சவால் விடுவது எப்படி?31 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இளமையிலேயே வரும் புற்றுநோய்களின் நீண்ட கால பாதிப்புகள் குறித்து கவலை தெரிவிக்கிறார் மருத்துவர் டன்லப் வாழ்க்கையை மாற்றும் அனுபவம் "கடினமான நாட்களையும், மகிழ்ச்சியான நாட்களையும் ஒரே விதமாக இருண்ட எண்ணங்கள் தோன்றியபோது, அவற்றை கடந்து செல்ல முயற்சி செய்கிறேன். நான் வலிமையாக உணர்ந்தபோது, இதுவும் கடந்து போகும் என்பதை அறிந்ததால் அந்த தருணங்களை நான் மிகவும் நேசித்தேன்", என்று புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்ற லுயிசா கூறுகிறார். "ஒவ்வொரு நாளையும் பொறுமையாக அணுகுங்கள். உங்கள் உடல் சொல்வதை கேளுங்கள்- சில நாட்களில் ஓய்வு எடுப்பதுதான் நீங்கள் செய்யக்கூடியதில் சிறந்தது, அவ்வாறு செய்வது தவறில்லை. புற்றுநோய் ஒருவரின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம், ஆனால் நீங்கள் யார் என்பதை வரையறுக்க அதை நீங்கள் அனுமதிக்க வேண்டியது இல்லை. மிகவும் கடினமான நேரத்திலும் வாழ்க்கை, வளர்ச்சி மற்றும் ஒரு அர்த்தம் இருக்கிறது", என்று அவர் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62q08xejgxo
-
யாழ். பல்கலையில் தேசிய கொடி இறக்கப்பட்டு கறுப்புக்கொடி ஏற்றப்பட்டு போராட்டம்
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கரி நாள் போராட்டத்தில் பிரகடனம் வாசிப்பு 04 FEB, 2025 | 02:23 PM இலங்கையின் சுதந்திர தினத்தினை கரி நாளாக அனுஷ்டித்து, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று (4) பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, பிரகடனமும் வாசிக்கப்பட்டது. அந்த பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: எங்கள் தாய்நிலம் விடிவுறும் நாளே, தமிழர் எமக்கு சுதந்திர நாள்! ஈழத் தமிழர்களாகிய நாம் மரபு வழி தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக்கு உரித்துடைய ஒரு தேசிய இனம் என்பதை மீண்டும் உலகுக்கு பிரகடனப்படுத்துகிறோம். வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்பு கோட்பாடு, பொங்கு தமிழ் பிரகடனம் என்பவற்றின் ஊடாக வரலாற்றில் தமிழ் மக்களின் அபிலாசைகள் கூட்டாக பல முறை வெளிப்படுத்தப்பட்ட போதிலும், ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வினை காண்பதற்காக மீண்டும் ஒரு தடவை எமது ஏகோபித்த வெளிப்படுத்தலை வலியுறுத்திக் கூறவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நாங்கள் இங்கு திரண்டுள்ளோம். தமிழ், சிங்கள தனித்தனி அரசுகளைக் கொண்டிருந்த இலங்கைத் தீவு காலனித்துவ ஆட்சியாளர்களின் நிர்வாகத் தேவையின் நிமிர்த்தம் இணைக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை முதலில் சிங்கள தேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும். வரலாற்று நிகழ்வுகளை முற்றாக புறந்தள்ளி எண்ணிக்கையில் பெரும்பான்மை அடிப்படையில் முழு நாட்டினதும் அதிகாரங்கள் சிங்கள தேசத்திடம் கையளிக்கப்பட்டமை என்பது ஈழத் தமிழினம் மீது தொடர்ச்சியான இன ஒடுக்குமுறைகளுக்கே வழிகோலியது என்பதோடு, சிறிலங்காவின் மாறி மாறி வரும் அரசுகள் அனைத்துமே தமிழ் மக்களிடையே எழும் போராட்டங்கள் மற்றும் உரிமைக்கான குரல்களை இராணுவ பலம் கொண்டு நசுக்குவதிலும், சிங்கள வன்முறைக் கும்பல்களின் வெறியாட்டத்துக்கு அனுமதிப்பத்திரம் அளிப்பதிலுமே நம்பிக்கை கொண்டிருக்கிறது. அதில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி முலாமிட்டுள்ள தேசிய மக்கள் சக்தி அரசும் விதிவிலக்கல்ல! சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனியான சுதந்திர தமிழின அரசை அமைப்பற்கான வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு 1977ஆம் ஆண்டு மக்கள் மகத்தான ஆணையை வழங்கி தங்கள் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்தியிருந்ததோடு, 1985ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தையில் தமிழர்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டமையும் தீர்வுக்கான வழிகளில் முன்னேற்றம் காணப்படாமையின் விளைவாகவே தமிழரிடம் ஆயுதப் போராட்டம் கருக்கொண்டது என்பதும் இங்கு நோக்கத்தக்கது. தமிழர் மீதான திட்டமிட்ட இனப்படுகொலைகளை கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்களின் துணையோடு தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட, நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிற கட்டமைக்கப்பட்ட படுகொலைகள், 2009ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அதியுயர் இன அழிப்பு படுகொலைகள் உட்பட மனித படுகொலைகள், நிலங்களை கையகப்படுத்துதல், பாலியல் வன்முறைகள், பண்பாட்டு மற்றும் பொருளாதார கட்டுமானங்களை அழித்தல் போன்ற வன்முறைகள் மூலம் தமிழ் மக்களுடைய தேசத்துக்கான தகுதிப்பாட்டை தாங்கி நிற்கும் அனைத்து விழுமியங்களும் அழித்தொழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என ஏற்றுக்கொள்ளப்படாமல், தமிழர் தேசம், சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்படாமல் தமிழ் மக்களின் இறைமை இந்த நிலத்தில் உறுதி செய்யப்படமாட்டாது. சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் என்பது தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரமே ஆகும். பெறப்பட்ட சுதந்திரத்தின் இறைமை தமிழ் மக்களுடன் பகிரப்பட்டதாகக் கொள்ள முடியாது. தமிழ் மக்களுக்கான தீர்வு முயற்சிகள் யாவும் திம்புக் கோட்பாட்டினை அடியொற்றியே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு, தமிழ் மக்களின் அபிலாசைகளை சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் பதின்மூன்றாம் (13ஆம்) திருத்தம் மற்றும் ஏக்கிய ராஜ்ஜிய சதிக் கோட்பாடுகளினுள் தமிழர் தேசத்தின் இறைமைக்கான அரசியலை முடக்க எத்தனிக்கும் அனைத்து முயற்சிகளையும் முற்றாக நிராகரிப்பதோடு, தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக தமிழர்களை ஒரு தனித்த இறைமையுள்ள தேசமாக அவர்களின் பாரதீனப்படுத்தப்பட முடியாத சுயநிர்ணய உரிமை அங்கீகரிப்பது மட்டுமே மேலே குறிப்பிட்ட அனைத்து ஒடுக்குமுறைகளும் மீள நிகழாது இருப்பதை உறுதி செய்யும் என்பதை வலியுறுத்துகிறோம். இவ்வாறானதொரு சூழ்நிலையில் பின்வரும் தமிழ் மக்களைச் சூழும் சதிக்கோட்பாடுகள் மற்றும் சமகால அடிப்படை சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டுக்கொள்கிறோம். 1. தமிழ் மக்களின் தீர்வு முயற்சிகளை சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினுள்ளும் ஏக்கிய ராஜ்ஜிய அரசியலமைப்பு சதிவலைக்குள்ளும் தமிழ் மக்களின் இறைமைக்கான அரசியலை முடக்குவதற்கு எத்தனிக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட வேண்டும். 2. எமது உறவுகளை தேடும் உரிமை, கருத்துரிமை, பேச்சுரிமை, வளங்களை அனுபவிக்கும் உரிமை, நீதி கோரும் உரிமை என்பன பயங்கரவாத தடைச் சட்டம், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்டவற்றை முன்னரே சிறிலங்காவின் நடப்பு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னரே வாக்களித்தது போன்று இவற்றை மீளப்பெற முன்வர வேண்டும். 3. தொல்பொருள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், வனவள பாதுகாப்பு திணைக்களம், மகாவலி அபிவிருத்தித் திணைக்களம் என்னும் போர்வையில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான நில அபகரிப்புத் திட்டங்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதோடு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் உரியவர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 4. தேசிய மக்கள் சக்தியினால் தேர்தல் காலங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக, தமிழர் தாயகத்தின் நில ஒருமைப்பாட்டை சிதைக்கும் நோக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து சிங்கள குடியேற்றங்களும் அகற்றப்பட வேண்டும். 5. விடுவிக்கப்படாது எஞ்சியுள்ள ஏனைய தமிழ் அரசியல் கைதிகளும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும். 6. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான அனைத்துலக விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுவதுடன் அவர்களுக்கு அனைத்துலக நீதி வழங்கப்படுவதோடு குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். 7. வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் இளையோர்கள் கூட்டாக சிந்திப்பதைத் தடுத்து உளவியல் ரீதியாக சிதறடிக்கும் நோக்கம் கொண்டு அரச படைகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் விநியோகம் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். 8. பிராந்திய – பண்பாட்டுப் பல்கலைக்கழகங்களாக விளங்கும் எமது யாழ்ப்பாண, கிழக்கு, வவுனியா பல்கலைக்கழகங்கள் பிராந்தியம் சார் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு அம்சங்களை மையமாகக் கொண்டு செயற்படுவதையும் தமிழ் மாணவர்களின் கல்வி மற்றும் கல்வி சாரா செயற்பாடுகளில் அவர்களது வாய்ப்புக்களின் இருத்தலையும் உறுதி செய்ய வேண்டும். 9. காலகாலமாக நடைபெற்று வரும் தமிழின அழிப்புக்கு அனைத்துலக நீதி பொறிமுறை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் (ICC), அனைத்துலக நீதிமன்றம் (ICJ) ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பரிகார நீதி வழங்கப்பட வேண்டும். அத்துடன் ஐக்கிய நாடுகள் அவையில் சிறப்பாக உருவாக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் பொறிமுறைகளும் அனுமதிக்கப்பட வேண்டும். 10. தமிழினப் படுகொலையை நிகழ்த்தி தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து தொடர்ந்தும் உரிமை மீறல்கள், சமூக விரோதச் செயல்களுக்கு பாதுகாப்பாக உள்ள இராணுவத்தினர் தமிழர் தாயகத்திலிருந்து வெளியேறுவதுடன், மக்களின் செயற்பாடுகளில் தலையிடுவதையும் முற்றாக நிறுத்த வேண்டும். இலங்கையில் நிலையான அமைதி ஏற்படுவதற்கு ஈழத்தமிழர்களின் தேசிய இன பிரச்சினையில் மரபு வழித் தாயகம், தமிழ்த் தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் எட்டப்படும் எந்தவொரு அரசியல் தீர்வும் அனைத்துலக சமூகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் ஆணை பெறப்பட வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும். அத்துடன் ஈழத் தமிழர்களின் தலைவிதியை ஈழத் தமிழர்களே தீர்மானித்து, எம்மை நாமே ஆளக்கூடிய நிரந்தர தீர்வும் பொது வாக்கெடுப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை தமிழ் மக்கள் சார்பாக இந்த பிரகடனத்தின் ஊடாக உலகுக்கு அறிவிக்கின்றோம் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/205784
-
யாழ். பல்கலையில் தேசிய கொடி இறக்கப்பட்டு கறுப்புக்கொடி ஏற்றப்பட்டு போராட்டம்
Published By: DIGITAL DESK 2 04 FEB, 2025 | 01:16 PM யாழ். பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டு இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 77 ஆவது தேசிய சுதந்திர தினம் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், யாழ். பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை பல்கலைகழக சூழலில் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன. சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ். பல்கலைகழக மாணவர்கள் பல்கலை கழக பிரதான வாயிலின் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். https://www.virakesari.lk/article/205778
-
நல்லிணக்கத்தினை வலியுறுத்தி வவுனியாவில் வாகன பேரணி
Published By: DIGITAL DESK 3 04 FEB, 2025 | 12:53 PM இலங்கையின் 77வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நல்லிணக்கத்தினை வலியுறுத்தி வவுனியாவில் மூவின மக்களினை இணைத்து வாகன பேரணி ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (04) முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த பேரணியானது வன்னி மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றிருந்தது. இப்பேரணியானது வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்தகர மற்றும் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் காஞ்ச ஆகியோர் கலந்து கொண்டதுடன், மாவட்ட செயலாளரால் குறித்த பேரணியானது ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேலும் இப்பேரணியானது பஜார் வீதியின் ஊடாக வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக முடிவடைந்திருந்தது. இதேவேளை குறித்த பேரணியில் கலந்து கொண்ட வாகனங்கள் அனைத்திலும் தேசியக்கொடி கட்டப்பட்டு, மூவின மக்களின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் நடனங்கள் இடம்பெற்றதுடன், நாடோடிகளும், விசேட தேவைக்குட்பட்டவர்களும் கலந்து கொண்டமையை அவதானிக்க கூடியதாக இருந்தது. https://www.virakesari.lk/article/205777
-
சீன AI தொழில்நுட்பத்தை கண்டு அதிர்ந்த அமெரிக்கா
AI போரை தொடங்கியதா சீனா? 😱 China's DeepSeek சம்பவம் | Mr.GK DeepSeek AI is at the forefront of artificial intelligence, developing state-of-the-art models that push the boundaries of what AI can achieve. From advanced natural language processing to AI-powered search and coding, DeepSeek is revolutionizing the way we interact with technology.
-
கிளிநொச்சியில் இடம் பெற்ற சுதந்திரதின எதிர்ப்பு போராட்டம்!
சுதந்திர தினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் நீதிகோரி போராட்டம்! Published By: DIGITAL DESK 2 04 FEB, 2025 | 12:39 PM இலங்கையின் சுதந்திரம் தினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நீதி கோரி போராட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை (04) முன்னெடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/205775
-
மத்திய பட்ஜெட் 2025: நிர்மலா சீதாராமன் உரையின் முக்கிய அம்சங்கள்
Anand Srinivasan on Budget 2025: "ஏழை ஏழையாவே இருப்பான்; Railway-ஐ பத்தியே பேசலயே?" மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், வருமான வரி தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, புதிய வருமான வரி முறையில் (New Tax Regime), ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
கடலுக்கடியில் 'வீடு' அமைத்து 120 நாட்கள் இவர் வாழ்ந்தது ஏன்?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ருடிகர் கோச் நீருக்கடியில் நீண்ட காலம் வாழ்ந்ததற்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி நியூஸ், முண்டோ பதவி, செய்திக்குழு 9 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த நான்கு மாதங்களாக, ஒவ்வொரு நாள் காலையிலும், ருடிகர் கோச் ஒரு வித்தியாசமான காட்சியின் முன் கண் விழிக்கிறார். கடலுக்கடியில் சுமார் 11 மீட்டர் ஆழத்தில், மீன்களும் கடல்வாழ் உயிரினங்களும் தனது ஜன்னல்களைச் சுற்றி நீந்துவதை பார்த்து தான் அவரது நாள் விடிகிறது. கடந்த 2023ம் ஆண்டில், 100 நாட்கள் நீருக்கடியில் தங்கியிருந்து, அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசப் டிடுரி என்பவர் செய்த சாதனையை கோச் தற்போது முறியடித்துள்ளார். 120 நாட்கள் கோச் நீருக்கடியில் வாழ்ந்திருக்கிறார். 59 வயதான விண்வெளிப் பொறியாளரான கோச், கடலுக்கடியில் நீண்டநாள் வாழ்ந்தவரின் சாதனையை மட்டும் முறியடிக்கவில்லை. மாறாக, "கடலுக்கடியில் வாழ்வது சாத்தியம்" என்பதும், அது மனித குலம் வாழ்வதற்கு மற்றொரு இடமாக இருக்க முடியும் என்பதையும் நிரூபித்துள்ளார். மனித மூளையின் மோசமான நினைவுகளை அழிக்க முடியுமா? எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனை கூறுவது என்ன? தண்ணீரை எப்போது குடிக்க வேண்டும்? உணவு உண்ணும் போது நீர் அருந்தலாமா? கர்நாடகாவில் குணப்படுத்த முடியாத நோயாளிகள் கண்ணியத்துடன் இறக்க அனுமதி - முக்கிய செய்திகள் மகாராஷ்டிரா: பெண்ணின் கருவில் இருந்த குழந்தை வயிற்றில் ஒரு கரு உருவானது எப்படி? பனாமாவின் கரீபியன் கடற்கரையில் உள்ள புவேர்ட்டோ லிண்டோவுக்கு அருகில், தானே வடிவமைத்த ஒரு நீர்மூழ்கி அமைப்பில், கோச் தனது சாதனையை நிகழ்த்திக் காட்டினார். இது ஏற்கனவே பல்வேறு கடல்வாழ் உயிரினங்களின் தாயகமாக மாறிவிட்டது என்றும் அவர் கூறுகிறார். நீருக்கடியில் வாழ்வதை முடித்துக்கொள்வதற்கு முன்பு பிபிசி செய்தியிடம், தன்னுடைய வசிப்பிடத்தில் இருந்து பேசிய அவர், "இது ஒரு அழகான, தனித்துவமான யோசனை" என்று தெரிவித்தார். "எனது மகளுக்கு கூடுதல் படுக்கை தேவைப்பட்டபோது, நான் தண்ணீருக்கு அடியில் ஒரு படுக்கையை அமைத்தேன். நாங்கள் அங்கேயே நிறைய நேரம் செலவழித்தோம், அப்போதுதான் டிடுரியின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது." என்கிறார் கோச். 30 சதுர மீட்டர் வாழ்விடம் நீருக்கடியில் உள்ள கோச்சின் "வீடு" சுமார் 30 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. ஒரு செங்குத்து குழாய் மூலம் மேற்பரப்பில் உள்ள ஒரு மிதக்கும் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது இந்த வீடு. கோச்சின் சில பொருட்கள் மற்றும் வெளி உலகத்துடன் தொடர்பில் இருக்க உதவும் தகவல் தொடர்பு அமைப்பு ஆகியவற்றை அணுகுவதற்கு இந்த குழாய் உதவியாக உள்ளது. அவர்களின் வித்தியாசமான வீட்டில், ஒரு படுக்கை, இணையம், ஒரு கணினி மற்றும் உடற்பயிற்சிக்கு உதவும் ஒரு சைக்கிள் இருந்தன. இருப்பினும், குளிக்க தண்ணீர் இல்லாமல் இருப்பது, ஆரோக்கியதைப் பேணுவது, காற்றின் தரம் போன்று பல தடைகள் இருந்தன. "என்னிடம் CO2 சென்சார்கள் போன்ற பல்வேறு சென்சார்கள் உள்ளன. நான் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை அளவிடும் கருவிகளையும் கொண்டிருக்கின்றேன், மேலும் எனது உடலின் அடிப்படை ஆரோக்கியத்தைத் தொடர்ந்து பதிவு செய்யும் கடிகாரத்தையும் நான் அணிந்திருக்கிறேன்," என்று பிபிசி செய்தியிடம் கூறிய கோச், வீடு போன்ற அந்த அமைப்பு முழுவதும் காணப்பட்ட சாதனங்களை சுட்டிக்காட்டினார். இவ்வாறு, தனது சொந்த பாதுகாப்பை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாமல், கடலுக்கு அடியில் நீண்ட காலம் தங்கியிருப்பதன் விளைவுகளை அறிய ஆர்வமுள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்களுக்கான தரவுகளையும் உருவாக்கியுள்ளார், கோச். பிரசவத்தின்போது வயிற்றில் பேன்டேஜ்: பெண்ணுக்கு ரூ.13 லட்சம் இழப்பீடு வழங்க தனியார் மருத்துவமனைக்கு உத்தரவு31 ஜனவரி 2025 உங்களால் இரவில் தூங்க முடியவில்லையா? - நீங்கள் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும் என்ன?31 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோச்சின் சில பொருட்கள் மற்றும் வெளி உலகத்துடன் தொடர்பில் இருக்க உதவும் தகவல் தொடர்பு அமைப்பு ஆகியவற்றை அணுகுவதற்கு இந்த குழாய் உதவியாக உள்ளது மீன்களும் பவளப்பாறைகளும் அந்த வீட்டைச் சுற்றியுள்ள ஆறு ஜன்னல்கள் வழியாக, வியப்பில் ஆழ்த்தும் கடல்வாழ் உயிரினங்களைக் கண்டார் கோச். அவர் ஒவ்வொரு நாளும் குழுக்களாக நீந்தும் மீன்களைக் கவனித்ததாகவும், அவரது வசிப்பிடத்தைச் சுற்றி வாழும் கடல்வாழ் உயிரினங்களின் தொடர்ச்சியான ஒலிகளைக் கேட்டதாகவும் குறிப்பிட்டார். "நீர்வாழ் உயிரினங்கள் எழுப்பும் தொடர்ச்சியான சத்தங்களை நான் கேட்டுக்கொண்டே இருந்தேன். அந்த உயிரினங்கள், அவற்றின் நகம் போன்ற உறுப்புகளை மிக வேகமாக நகர்த்தும் திறன் கொண்டவை. அதன்மூலம், நீர்க் குமிழிகளை அவை உருவாக்குகின்றன. அந்த குமிழிகள் உடையும்போது, கிட்டத்தட்ட ஒரு சவுக்கடி போன்ற ஒரு உரத்த ஒலி உருவாகிறது," என்று அவர் பிபிசி செய்திக்கு விளக்கினார். நீண்ட காலமாக நீருக்கடியில் இல்லாதவர்களால் இந்த சத்தத்தை கவனிக்க முடியாது என்பதையும், அவர் இருக்கும் இடம், ஒரு செயற்கைப் பாறை உருவாவதற்கு சாதகமாக இருப்பதையும் இந்தச் சத்தம் அவருக்கு நினைவூட்டியது. அவரது வசிப்பிடத்தின் மேற்பரப்பில் பாசிகள், பவளப்பாறைகள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் தஞ்சம் அடையத் தொடங்கின. இந்த சாகசத்தில் கோச் மட்டும் தனியாக ஈடுபடவில்லை. அவரது ஆழ்கடல் வீடு, மேல் அறையில் இருந்து செயல்படும் ஒரு ஆதரவுக் குழுவைக் கொண்டிருந்தது. அது அவருக்கு உணவு வழங்குவதையும் மின்சாரம் மற்றும் வானிலையை மேற்பார்வை செய்வது போன்ற பிற முக்கிய அம்சங்களையும் கவனித்துக்கொண்டது. கூடுதலாக, அவர், கடல் பகுதிகளில் அமைந்துள்ள கட்டமைப்புகளில் நிரந்தர குடியேற்றங்களை நிறுவும் நடைமுறையில் ஈடுபட்டுள்ள மக்களின் ஆதரவையும் அவர் கொண்டிருந்தார். ஒரு புதிய சாதனையை உருவாக்குவதற்கான முயற்சியாக மட்டும், கோச்சின் அனுபவத்தை அந்த மக்கள் பார்க்கவில்லை. மாறாக, திறந்த கடலில் நிலையான வாழ்விடங்களை நிறுவுவது சாத்தியம் என்ற கருத்தை நிரூபிப்பதின் முதல்கட்டமாக கோச்சின் சாதனையைப் பார்க்கிறார்கள். "நீருக்கடியில், அழுத்தம் நிறைந்த சூழலில் 100 நாட்கள் வாழ்ந்த டிடுரி என்ன செய்தார் என்பதற்கான ஒரு 'அளவுகோலைப்' போல் நான் கண்காணிக்கப்படுகிறேன்," என்று கோச் கூறினார். டிடுரி என்பவர், இதுவரை நீருக்கடியில் அதிக நேரம் செலவழித்ததற்காக உலக சாதனை படைத்த அமெரிக்க ஆராய்ச்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இருவருக்குமான "வேறுபாடு என்னவென்றால், அறைக்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல ஸ்கூபா கியர் தேவையில்லாமல், என்னைச் சுற்றியுள்ள இயற்கையான நீரின் அழுத்தத்தை நான் உணர்கிறேன்."என்றார் கோச். 2023 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் அழுத்தம் நிறைந்த நீருக்கடியில் அமைந்துள்ள வாழ்விடத்தில் 100 நாட்கள் தங்கி டிடுரி சாதனை படைத்தார். சியரா ஸ்பேஸ்: காற்றே இல்லாத நிலவில் ஆக்சிஜன் தயாரிக்க உதவும் கருவி - எப்படி செய்யும்?30 ஜனவரி 2025 கியான் பரே சின்ட்ரோம் : மகாராஷ்டிராவில் அரிய நோய்க்கு 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு - என்ன அறிகுறி?29 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அந்த வீட்டைச் சுற்றியுள்ள ஆறு ஜன்னல்கள் வழியாக, வியப்பில் ஆழ்த்தும் கடல்வாழ் உயிரினங்களைக் கண்டார் கோச் தினசரி வாழ்வும் சவால்களும் தொழில்நுட்ப சோதனைகள் செய்தல், காணொளிகளைப் பதிவு செய்தல் மற்றும் இணையம் மூலம் தொலைதூரத்தில் நடக்கும் அன்றாடப் பணிகளை கவனிப்பது போன்ற செயல்களில், தனது பெரும்பாலான நேரத்தை கோச் செலவிட்டார். அதிக ஈரப்பதம் மற்றும் நீருக்கடியில் அவர் வசிக்கும் சிறிய இடத்தை சமாளிப்பதில் இருக்கும் சவால்களை அறிந்திருந்தார் அவர். கூடுதலாக, அச்சூழ்நிலையில் குளிக்காமல் இருப்பதும் அவருக்கு சிரமமாக இருந்தது. அவரைக் காண வந்த அவரது பார்வையாளர்களை அவ்வப்போது பார்த்தாலும், மேலே உள்ள காப்ஸ்யூல் போன்ற அமைப்பின் மூலம் தனது குழுவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தாலும், அந்த அனுபவம் சில சமயங்களில் தனிமையை உணர வைக்கும் என்று கோச் ஒப்புக்கொண்டார். இவற்றுக்கு அப்பால், கடலுக்கு அடியில் தங்கியிருந்த போதிலும், ஒரு வகையான "சாதாரண வாழ்க்கையை" வாழ முடிந்தது என்று அவர் கருதுகிறார். ஜனவரி 24 அன்று, கடலுக்கடியில் உள்ள அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, பிபிசியிடம் கூறியது போல், "வெற்றியை கொண்டாடும் வகையில் சுருட்டு புகைத்தார்" கோச். 100-வது ராக்கெட் வெற்றி: முதல் தோல்விக்குப் பிறகு அடுத்தடுத்து சிகரம் தொட்ட ஸ்ரீஹரிகோட்டா29 ஜனவரி 2025 போபால் விஷவாயு கசிவு: ஆலையின் நச்சுக்கழிவுகள் இந்த கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது ஏன்?27 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நீரைவிட்டு வெளியேறியதும் வெற்றிச் சுருட்டைப் புகைத்தார் அவர் "அதன் பிறகு, நான் நன்றாக குளிக்க விரும்புகிறேன். நிஜமாகவே, நன்றாக குளிக்க விரும்புகிறேன்," என்றும் கோச் தெரிவித்தார். பலருக்கு, கோச் செய்தது, ஒரு அசாதாரணமான செயல். ஆனால் அவரைப் பொறுத்தவரை, மேற்பரப்பில் வாழ்வதற்கும் நீருக்கடியில் வாழ்வதற்கும் இடையிலான வாழ்க்கை வாழ முடியாதது அல்ல என்பதற்கான ஒரு சான்று. "மனிதர்கள் புதிய சூழலில் வாழ முடியும் என்பதைப் புரிந்துகொள்வதற்கான கூடுதல் முயற்சி தான் இந்த சாதனை" என்றும் அவர் குறிப்பிட்டார். "மனிதர்கள் விரிவடைந்து வாழ்வதற்கு, கடல் ஒரு நல்ல இடமாக இருக்கும்" என்பதைத்தான் இதிலிருந்து நாங்கள் கூற விரும்புகிறோம் என்றார் கோச். தொடர்ந்து பேசிய அவர், "எதிர்காலத்தில் இதுபோன்ற திட்டங்கள் அதிகரிக்கக்கூடும் என்றும், நிலத்தில் உள்ள வளங்கள் குறித்தான பிரச்னைகள் மற்றும் விண்வெளியில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க இதுபோன்ற கடல் சார்ந்த வாழ்க்கை முறை உதவக்கூடும்" என்றும் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c17e8wr490lo
-
இந்தியா - இங்கிலாந்து ரி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்
துடுப்பாட்ட சாதனையுடன் பந்துவீச்சிலும் அசத்திய அபிஷேக் ஷர்மா; இந்தியாவிடம் இங்கிலாந்து படுதோல்வி 03 FEB, 2025 | 06:09 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு எதிராக மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் நேற்று (2) இரவு நடைபெற்ற ஐந்தாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அபிஷேக் ஷர்மா துடுப்பாட்ட சாதனையுடன் பந்துவீச்சிலும் பிரகாசிக்க, இந்தியா 150 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை இந்தியா 4 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 247 ஓட்டங்களைக் குவித்தது. 24 வயதுடைய அபிஷேக் ஷர்மா 37 பந்துகளில் சதம் குவித்து ஐசிசியில் பூரண அங்கத்துவம் பெற்ற நாடுகளுக்கான இரண்டாவது அதிவேக சதத்தை சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் பெற்றார். பூரண அங்கத்துவம் பெற்ற நாடுகளின் வீரர்கள் வரிசையில் 35 பந்துகளில் சதம் குவித்த தென் ஆபிரிக்காவின் டேவிட் மில்லர், இந்தியாவின் ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு அடுத்ததாக அபிஷேக் ஷர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 54 பந்துகளில் 7 பவுண்டறிகள், 13 சிக்ஸ்களுடன் 135 ஓட்டங்களைக் குவித்த அபிஷேக் ஷர்மா, இந்தியா சார்பாக சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்ளைப் பெற்ற தனிநபருக்கான சாதனையை நிலைநாட்டினார். நியூஸிலாந்துக்கு எதிராக 2023இல் ஷுப்மான் கில் குவித்த ஆட்டம் இழக்காத 126 ஓட்டங்களே இதற்கு முன்னர் இந்தியரால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாக இருந்தது. அது மட்டுமல்லாமல் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸ்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் நிலைநாட்டினார். இதற்கு முன்னர் ரோஹித் ஷர்மா 10 சிக்ஸ்களுடன் இந்தியர்களில் முதலிடத்தில் இருந்தார். இந்த இன்னிங்ஸில் அபிஷேக் ஷர்மா 17 பந்துகளில் 50 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் இந்தியா சார்பாக சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது அதிவேக அரைச் சதத்தைப் பூர்த்திசெய்த வீரரானார். இங்கிலாந்துக்கு எதிராக 2012ல் யுவ்ராஜ் சிங் 12 பந்துகளில் அதிவேக அரைச் சதத்தைக் குவித்து சாதனை நிலைநாட்;டியிருந்தார். அபிஷேக் ஷர்மாவை விட ஷிவம் டுபே 30 ஓட்டங்களையும் திலக் வர்மா 24 ஓட்டங்களையும் பெற்றனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ப்றைடன் கார்ஸ் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 10.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 97 ஓட்டங்களைப் பெற்றது. அபிஷேக் ஷர்மா பெற்ற எண்ணிக்கையைவிட இது 38 ஓட்டங்கள் குறைவாகும். பில் சோல்ட் மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 23 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 55 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் மொஹம்மத் ஷமி 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அபிஷேக் ஷர்மா 3 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷிவம் டுகேப 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வருண் சக்ரவர்தி 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: அபிஷேக் ஷர்மா https://www.virakesari.lk/article/205727
-
யுஎஸ்எயிட் சீர் செய்ய முடியாத நிலையை அடைந்துவிட்டது- மூடுவதற்கு தீர்மானம்- எலொன் மஸ்க்
யுஎஸ்எயிட்டின் பணியாளர்கள் அலுவலகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுப்பு – பலர் விடுப்பில் அனுப்பப்பட்டனர் - அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்குள் உள்வாங்க திட்டம் Published By: RAJEEBAN 04 FEB, 2025 | 02:42 PM அமெரிக்காவின் பல மில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டு உதவி திட்டங்களிற்கு பொறுப்பான யுஎஸ்எயிட் திங்கட்கிழமை முதல் கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளது. யுஎஸ்எயிட்டின் பணியாளர்களிற்கு அலுவலகத்தில் நுழைவதற்கும் கணிணிகளை பயன்படுத்துவதற்குமான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. யுஎஸ்எயிட்டின் செயற்பாடுகளை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்குள் உள்வாங்குவதற்கு டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதை தொடர்ந்து யுஎஸ்எயிட்டின் சிரேஸ்ட ஊழியர்கள் பலர் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். யுஎஸ்எயிட்டின் இயக்குநர் தானே என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க் ரூபியோ தெரிவித்துள்ளார். யுஎஸ்எயிடடின் செயற்பாடுகள் அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கைக்கு ஏற்ற விதத்தில் அமைவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். யுஎஸ்எயிட் வரலாற்றுரீதியாக அமெரிக்க காங்கிரஸிற்கும் வெள்ளை மாளிகைக்கும் பதிலளிக்காத ஒன்று என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் அது ஒரு அமைப்பாகயிருந்தாலும் அது அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திலிருந்தே உத்தரவுகளை பெறவேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் யுஎஸ்எயிட் அதனை புறக்கணித்து தொண்டு என்பது அமெரிக்காவின் நலன்களில் இருந்து வேறுபட்டதாகயிருக்கவேண்டும் என்ற கருத்தினை கொண்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார். யுஎஸ்எயிட் வழங்குவது அமெரிக்க மக்களின் வரிப்பணத்தையே நாங்கள் ஒவ்வொரு டொலருக்கும் பதிலளிக்கவேண்டும் ஒவ்வொரு டொலரும் எங்கள் தேசிய நலனை அடிப்படையாக கொண்டது என்ற உத்தரவாதத்தை மக்களிற்கு வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/205786
-
இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் இன்று : ஜனாதிபதி அநுர தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் விசேட நிகழ்வுகள்
நாடளாவிய ரீதியில் நடைபெற்ற 77 ஆவது தேசிய சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்! Published By: DIGITAL DESK 3 04 FEB, 2025 | 03:29 PM இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை (04) காலை நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டது. திருகோணமலை திருகோணமலையில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையான க்ரீன்விச் பாடசாலையானது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வை வெகு விமர்சையாக கொண்டாடியது. இதன்போது, ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து இலங்கையின் வரைபடத்தை மிகவும் துல்லியமாகவும் பிரமாண்டாகவும் காட்சிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இத்தினத்தை கொண்டாடும் விதமாக வீதியில் சென்ற வாகனங்களுக்கு இலங்கையின் தேசிய கொடியை ஒட்டி தங்களின் தேசப்பற்றை வெளிக்காட்டினர். இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன. யாழ். மாவட்ட செயலர் அணிவகுப்பு மரியாதைகளை தொடர்ந்து 08.04 மணிக்கு தேசிய கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மதகுருமார்களின் ஆசியுரை இடம்பெற்று, மாவட்ட செயலரின் உரை நடைபெற்றது. நீர்கொழும்பு நீர்கொழும்பு ஜம்மியத்துல் உலமா கிளையின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன. நீர்கொழும்பு அஹமதியா முஸ்லிம் ஜமாத்தின் ஏற்பாட்டில் இலங்கையின் 77 வது சுதந்திர தின நிகழ்வு பள்ளிவாசல் முன்றில் நடைபெற்றது. நீர்கொழும்பு ஜமாத்தின் தலைவர் ஐ.ஏ. அஸ்லம் ஷாஹிப் தலைமையில் நிகழ்வு நடத்தப்பட்டது. நிகழ்வின் ஆரம்பத்தில் தலைவரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பின்னர் தலைவர் உரையாற்றினார். தொடர்ந்து நாட்டின் நலனுக்காக துஆ பிரார்த்தனை நடைபெற்றது. வவுனியா வவுனியா மாவட்ட செயலகத்தில் எளிமையான முறையில் மூவின கலாசார பாரம்பரியத்துடன், இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றிருந்தது. மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் குறித்த நிகழ்வானது காலை 9 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றதுடன், தேசியக் கொடியினை அரசாங்க அதிபர் ஏற்றி வைத்திருந்தார். இதன்போது மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் தமிழ் சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களிற்காக இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தமிழ் சிங்கள முஸ்லிம் கலாசாரங்களை பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் கலாசார ஆடைகளுடன் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். கிளிநொச்சி இலங்கையின் 77ஆவது சுகந்திரதின நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் கொண்டாடப்பட்டது. பாண்ட் வாத்திய இசை அணிவகுப்புடன் உத்தியோகத்தர்கள் அழைத்து வரப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டன. குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்-முரளிதரன் உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். மன்னார் 'தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்' எனும் தொனிப்பொருளில் இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. அதற்கு அமைவாக சுதந்திர தின நிகழ்வுகள் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சமாதான புறா பறக்கவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்றது. கல்முனை இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 77 ஆவது சுதந்திர தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக, கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் அதிபர் ஏ.ஜீ.எம்.றிசாத் தலைமையில் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து மரியாதையுடன் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது. இலங்கைத் திருநாட்டை கடந்த 77 வருடங்களுக்கு முன்னர் போத்துக்கீசர் , ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சிப் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு இதுபோன்ற ஒரு தினத்திலேயே எமக்கு இந்த சுதந்திரம் பெற்றுத்தரப்பட்டது என்பது தொடர்பாகவும் அதற்காக பாடுபட்ட தலைவர்கள் பற்றிய வரலாறுகளும் அதிபரினால் நினைவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் இலங்கையின் 77வது சுதந்திரதின நிகழ்வு இன்று யாழ். மாவட்ட செயலகத்தின் முன்றலில் "தேசிய மறு மலர்ச்சிக்காக அணிதிரள்வோம்" என்னும் கருப்பொருளில் சிறப்பாக நடைபெற்றது. யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அணிவகுப்பு மரியாதை முன்னே செல்ல, மாவட்ட செயலாளர், பதவிநிலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், இராணுவ, பொஸில், கடற்படை, விமான படை அதிகாரிகள், பொதுமக்கள் மாவட்ட செயலக முன்றலுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் 08.10 மணியளவில் தேசியக் கொடியினை யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தேசியகீதம் பாடப்பட்டு, பின்னர் மாவட்ட செயல கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி அவர்களால் ஆற்றிய சுதந்திரதின செய்தி காணொளி மூலமாக ஒளிபரப்பப்பட்டது. பின்னர் சர்வமத ஆசியினை தொடர்ந்து ஜனாதிபதியின் சுதந்திரதின வாழ்த்து செய்தியினையும், யாழ். மாவட்ட முன்னேற்ற வாழ்த்துச் செய்தியினையும் யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் வாசித்தார். இதில் யாழ். மேலதிக அரசாங்க அதிபர் (காணி) செ.ஸ்ரீமோகனன், யாழ். மாவட்ட பிரதி பொஸில் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, யாழ்ப்பாண மாவட்ட முப்படைகளின் கட்டளை தளபதிகள், பதவிநிலை அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், சாரண மாணவர்கள், ஊடகவியாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். நுவரெலியா 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நுவரெலியா மாவட்ட சுதந்திர தின நிகழ்வு காலை 09.30 மணிக்கு நுவரெலியா விக்டோரியா பூங்காவில் எலிசபெத் மகா ராணியினால் 120 ஆண்டுகளுக்கு முதல் உலகத்துக்கு அமைதி நிலவ வேண்டும் என்று பிரார்த்தனை செய்து நடப்பட்ட அமைதி மரத்தை மையமாக கொண்டு நடைபெற்றது. நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான திரிமேஸ் மஞ்சுள சுரவீர ஆராச்சி, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. முதலாவதாக, நுவரெலியா காமினி தேசிய பாடசாலையின் மேற்கு வாத்தியக் குழுவினர் மற்றும் நுவரெலியா இராணுவத்தின் மூன்றாம் சிங்கப் படையணியின் சல்யூட் அணிவகுப்பு அணியினரால் அனைத்து அதிதிகளும் விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நுவரெலியா மாவட்ட சுதந்திர தின நிகழ்வில் எலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் திரு.திரிமேஸ் மஞ்சுள சுரவீர ஆராச்சியினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன், நல்ல மேய்ப்பர் மடாலய மாணவர்களால் தேசிய கீதம் மற்றும் ஜெயமங்கல காதைகள் பாடப்பட்டது. மேலும், நுவரெலியா மாவட்ட சுதந்திர விழா, நுவரெலியாவை சுற்றியுள்ள பல பாடசாலைகள் மற்றும் கலை நிறுவனங்களின் குழந்தைகளின் கலாச்சார அம்சங்களுடன் வண்ணமயமாக இருந்தது. இந்நிகழ்வில் நுவரெலியாவிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்கள், திரிபிட இராணுவ அதிகாரிகள் மற்றும் பொலிஸார், பாதுகாப்புப் படையினர், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். எதிர்பாராத சம்பவமாக, முதன்முறையாக தேசியக் கொடி ஏற்றப்பட்டதும், அது தலைகீழாக ஏற்றப்பட்டதால், மீண்டும் தேசியக் கொடி இறக்கப்பட்டு, இரண்டாவது முறையாக ஏற்றப்பட்டது. தலவாக்கலை எமது நாட்டின் 77 ஆவது சுதந்திர தினத்தையொட்டி தலவாக்கலை கிறேட்வெஸ்டன் பாடசாலையில் சுதந்திர தின நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.பாரிஸ் தலைமையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன்போது பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.பாரிஸ், பிரதி அதிபர் இளங்கோ, பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர். முல்லைத்தீவு இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 77 ஆவது சுதந்திரதின நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை 7.45 மணிக்கு முல்லைத்தீவு நகர மையத்தில் உண்ணாப்பிலவு றோமன் கத்தோலிக்க மகளீர் பாடசாலை மாணவிகளின் பாண்ட் வாத்திய அணிநடையுடன் மாவட்ட செயலக முன்றலுக்கு உத்தியோகத்தர்கள் அழைத்துவரப்பட்டு காலை 8.04 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபரினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு அகவணக்கம் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து 8.10 மணிக்கு அரசாங்க அதிபரினால் தலைமையுரை நிகழ்தப்பட்டது. குறித்த உரையில் இன மத பேதமின்றி தேசத்தை கட்டியெழுப்பிடவும் மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கி வறுமையைப் போக்கிடவும் அனைவரும் வினைத்திறனாக செயலாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து காலை 8.25 ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க அவர்களின் 77 ஆவது சுதந்திரதின சிறப்புரையினை காணொளியாக அனைத்து உத்தியோகத்தர்களும் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பார்வையிட்டனர். மேலும் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட முதியவர்கள் எட்டுப் பேருக்கு கண்வில்லைகள் வழங்கி வைக்கப்பட்டன. இறுதியாக மாவட்ட செயலக வளாகத்தில் மரநடுகைத் திட்டத்தை ஆரம்பித்ததுடன் சுதந்திரதின நிகழ்வு இனிதே நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மாவட்ட செயலகத்தின் ஓய்வுநிலை பிரதம கணக்காளர், மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம கணக்காளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/205758
-
காவல்துறை தேர்வில் முறைகேட்டை வெளிப்படுத்தியதால் ஏடிஜிபியின் அறை எரிக்கப்பட்டதா?
பட மூலாதாரம்,X கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 3 பிப்ரவரி 2025 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் காவல்துறையினர் தேர்வில் இருந்த முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியதால், தனது உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் வகையில் தனது அறை எரிக்கப்பட்டதாக தமிழக ஏடிஜிபி ஒருவர் குற்றம்சாட்டிய கடிதம் வெளியாகியிருக்கிறது. ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளை காவல் துறை மறுத்திருக்கிறது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் ஏடிஜிபி மற்றும் உறுப்பினராக இருந்தவர் கல்பனா நாயக். சென்னை எழும்பூரில் உள்ள அவரது அலுவலக அறை, கடந்த ஆண்டு ஜூலை மாத இறுதியில் தீ பிடித்து எரிந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதியன்று அவர் தமிழக காவல்துறை தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். காவல்துறையினருக்கான தேர்வில் நடந்த குளறுபடிகளைத் தான் சுட்டிக்காட்டியதாலேயே தனது உயிருக்குக் குறி வைக்கப்பட்டதாக அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தில் உள்ள தகவல்கள் என கூறி ஆங்கில நாளிதழ் ஒன்றில் இன்று செய்தி வெளியானது. வியட்நாமில் பிறந்து திகார் சிறையில் 'தனி ராஜ்ஜியம்' நடத்திய சார்லஸ் ஷோப்ராஜ் யார்? தப்பித்தது எப்படி? அயோத்தியில் தலித் பெண் படுகொலை: கதறி அழுத எம்.பி - என்ன நடந்தது? ஆவடி: தந்தை, மகள் உடலை அழுகாமல் 5 மாதம் பூட்டிய வீட்டில் பதப்படுத்திய மருத்துவர் - என்ன நடந்தது? சென்னை: ஈசிஆர் சாலையில் பெண்களை காரில் துரத்திய இளைஞர்கள் யார்? காவல்துறை வெளியிட்ட தகவல் என்ன நடந்தது? தமிழ்நாடு காவல்துறையின் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், சிறையின் வார்டன்கள், தீயணைப்புத் துறையினர் ஆகியோரை தமிழ்நாடு சீருடைப் பணியார் தேர்வு வாரியம் தேர்வுசெய்து வருகிறது. 'அப்படி தேர்வுசெய்வதில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும்போது பல முறைகேடுகளைத் தான் சுட்டிக்காட்டியதாகவும் அதன் காரணமாக, அவை சரிசெய்யப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்தை தவிர்த்ததாகவும் அதன் மூலம் தமிழ்நாடு அரசுக்கு ஏற்படவிருந்த சங்கடம் தவிர்க்கப்பட்டதாகவும்' கல்பனா நாயக் தனது கடிதத்தில் கூறியுள்ளார் என அந்த நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதன் காரணமாகவே தனது உயிருக்கு ஆபத்து விளைந்ததாகவும் அரசு சொத்துக்கு சேதம் ஏற்பட்டதாகவும் அவர் கடிதத்தில் கூறியுள்ளார். 'துணை ஆய்வாளர்களையும் மற்றவர்களையும் தேர்வுசெய்யும்போது இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் மிகப் பெரிய குளறுபடிகள் இருந்ததை தான் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுட்டிக்காட்டியபோதும் அவை கண்டுகொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்' என அந்த நாளிதழ் செய்தி குறிப்பிட்டது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: சீமான் பெரியார் குறித்து பேசுவதற்கு இதுதான் காரணமா? கள நிலவரம் என்ன?2 பிப்ரவரி 2025 சார்லஸ் ஷோப்ராஜ்: திகார் சிறையில் அதிகாரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இவர் தப்பித்தது எப்படி?3 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,X படக்குறிப்பு, ஏடிஜிபி கல்பனா நாயக் கருகிப்போன அறை "நான் என் அறையைச் சென்று பார்த்தபோது, எனது நாற்காலி எரிந்து, கருகிப் போயிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். நான் எனது அலுவலகத்திற்கு சற்று முன்பாக வந்திருந்தால் நான் என் உயிரைக் கூட இழந்திருப்பேன். காவல்துறையினரைத் தேர்வுசெய்வதில் அந்த ஆண்டு மட்டுமல்லாமல் அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் இருந்த மிகப் பெரிய தவறுகளைச் சுட்டிக்காட்டியதே என் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்குச் சென்றுவிட்டது" என்று கல்பனா நாயக் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக அந்த நாளிதழ் கூறியது. இந்தச் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டுமெனக் கோரி ஆகஸ்ட் 15ஆம் தேதி காவல்துறை தலைவர் சங்கர் ஜிவாலுக்கு இது குறித்து கல்பனா நாயக் இந்தக் கடிதத்தை எழுதியிருந்தார். மேலும் இந்தக் கடிதத்தில், "தீ விபத்து நடந்ததற்கு அடுத்த நாள், தன்னை பரிசீலிக்காமலும் தன்னுடைய ஒப்புதல் இல்லாமலும் தேர்வுசெய்யப்பட்டவர்களின் புதிய பட்டியல் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் வெளியானது. மற்ற காவலர்கள் சூழ்ந்திருக்கும்போதே ஒரு மூத்த காவல்துறை அதிகாரியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாதது காவல்துறையின் மீதே களங்கத்தை ஏற்படுத்துகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார். டி20 தொடரை வென்ற இந்தியா; அபிஷேக் சர்மாவின் ரன்களை கூட எடுக்க முடியாமல் இங்கிலாந்து தோற்றது எப்படி?3 பிப்ரவரி 2025 கும்பமேளா: தீட்சை பெற பெண் சாதுக்கள் இதையெல்லாம் செய்ய வேண்டுமா?3 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,X படக்குறிப்பு, குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறை விளக்கம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது காவல்துறை கூறுவதென்ன? இந்தச் செய்தி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காவல்துறை இது தொடர்பாக விளக்கம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, தேர்வு வாரியத்தில் நடந்ததாகக் கூறப்படும் குளறுபடி சரிசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ''750 காவல்துறை துணை ஆய்வாளர்கள், தீயணைப்புத் துறையின் நிலைய அதிகாரிகளைத் தேர்வுசெய்து, தற்காலிகப் பட்டியல் கடந்த ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் கடைபிடிக்கப்பட்டிருந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஐந்து விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர். உச்ச நீதிமன்றம் 2020ஆம் ஆண்டில் அளித்த தீர்ப்பின்படி பட்டியலை வெளியிட வேண்டும் என அவர்கள் கோரியிருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இட ஒதுக்கீட்டு முறை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது என்றும் அதனைச் சரிசெய்து, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி புதிய பட்டியல் வெளியிடப்படும் என்றும் நீதிமன்றத்தில் தேர்வு வாரியம் ஒப்புக்கொண்டது. இதனை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் தேவையான மாற்றங்களைச் செய்து புதிய பட்டியலை வெளியிடும்படி கூறியது. அதன்படி புதிய பட்டியல் கடந்த ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆகவே, பட்டியலில் இருந்த குளறுபடி, உயர் நீதிமன்றம் கூறியிருந்தபடி சரிசெய்யப்பட்டுவிட்டது. ஆகவே ஏடிஜிபியின் பரிந்துரைகள் முழுமையாக பரிசீலிக்கப்பட்டன. இது தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மையானவை அல்ல" என அந்த விளக்கத்தில் கூறப்பட்டிருக்கிறது. இலங்கை சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்3 பிப்ரவரி 2025 பிபிசி செய்தி அறைக்குள் நுழைய விருப்பமா? - மெட்டாவெர்ஸ் உலகுக்கு உங்களை வரவேற்கிறோம்3 பிப்ரவரி 2025 ஏடிஜிபியின் அலுவலகம் தீ பிடித்த விவகாரம் தொடர்பாக, உடனடியாக அவரது புகார் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு அனுப்பப்பட்டு, முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டதாக விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது. ''தீ பிடித்த விவகாரம் தொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்தில் அதே நாளில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு புலனாய்வு துவங்கியது. மின்துறை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள், தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், தனியார் ஏசி நிறுவனத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப பணியார்களை உள்ளடக்கிய குழு திருவல்லிக்கேணி காவல்துறை துணை ஆணையர் தலைமையில் சம்பவ இடத்திற்குச் சென்று விரிவான விசாரணையை நடத்தினர். தொடர்ந்து இந்த விவகாரம் சென்னை நகர மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு 31 சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டன. தீ எப்படி ஏற்பட்டது என்பதைத் தீர்மானிக்க தடயவியல், தீயணைப்புத் துறை, மின்வாரியத்தைச் சேர்ந்தவர்கள் கலந்தாலோசிக்கப்பட்டனர். நிபுணர்களின் அறிக்கைகள் தற்போது பெறப்பட்டிருக்கின்றன. தடயவியல் நிபுணர்களின் கருத்துப்படி, மின்சார வயர்களில் short circuit ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. பெட்ரோல், டீசல் போன்ற எந்த ஒரு எரியத் தக்க பொருளும் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரமும் இல்லை என்றும் தடயவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, ஏடிஜிபி கல்பனா நாயக்கின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் யாரும் வேண்டுமென்றே தீ வைக்கவில்லை எனத் தெரிகிறது" என இது தொடர்பாக டிஜிபி அலுவலகம் கூறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எடப்பாடி கே. பழனிச்சாமி அரசியல் தலைவர்கள் விமர்சனம் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை முன்வைத்து அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி கே. பழனிச்சாமி, "ஒரு ஏடிஜிபி, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டதாக சொல்வதும், காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவதும்தான் (வேறொரு சம்பவத்தில்) சட்டம் - ஒழுங்கு காக்கப்படும் ஆட்சியா?" என கேள்வி எழுப்பியிருக்கிறார். பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையும் இது தொடர்பாக கண்டனம் தெரிவித்திருக்கிறார். "காவல்துறை உயர் அதிகாரிகள் இதை மின்சாரப் பழுது காரணமாக ஏற்பட்ட தீ விபத்து என்று கூறி மறைக்க முயன்றாலும், தீ விபத்துக்கு முந்தைய நிகழ்வுகள், காவல்துறையின் இந்தக் கூற்றை நம்பமுடியாததாக ஆக்குகிறது. ஏனெனில், ஏடிஜிபி கல்பனா நாயக், முடிவெடுக்கும் பொறுப்பில் இருந்து விலக்கி வைக்கப்பட்டதோடு, துணை ஆய்வாளர்களின் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிடுவதற்கு முன்பு அவரது ஒப்புதலும் பெறப்படவில்லை" என்று கூறியிருக்கிறார். ஏடிஜிபி கல்பனா நாயக் தற்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக இருந்து வருகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c1we5pged7go
-
அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒடுக்குமுறை தின பேரணி - நாடாளுமன்றத்திடம் இனப்படுகொலை அறிக்கை கையளிப்பு
Published By: RAJEEBAN 04 FEB, 2025 | 03:35 PM அவுஸ்திரேலியாவில் இன்று (4) இடம்பெற்ற தமிழர் ஒடுக்குமுறை தின பேரணியின் பின்னர் இனப்படுகொலை அறிக்கையொன்று அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. தமிழ் ஏதிலிகள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று தமிழர் ஒடுக்குமுறை நாள் பேரணி இடம்பெற்றது. ஈழ தமிழ் மக்களிற்கு எதிரான 77 வருட இனப்படுகொலையை நினைவுகூறும் வகையில் இன்று அவுஸ்திரேலியாவின் கான்பெராவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளியே தமிழர் ஒடுக்குமுறை தின பேரணி இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு நீதி பொறுப்புக்கூறலை கோரியதுடன்; இலங்கை அரசாங்கத்தின் கீழ் தொடர்ந்தும் ஒடுக்குமுறையை அனுபவிக்கும் தமிழ் அகதிகளிற்கு பாதுகாப்பை கோரினார்கள். இந்த பேரணியின் பின்னர் அதில் கலந்துகொண்டவர்கள் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்குள் சென்று ஈழ தமிழர்களிற்கு எதிராக திட்டமிட்ட முறையில் இனப்படுகொலை முன்னெடுக்கப்படுவதை வெளிப்படுத்தும் ஆவணத்தை அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர். தமிழர் ஏதிலிகள் பேரவையால் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணம் இலங்கையில் தமிழர்களிற்கு எதிரான திட்டமிடப்பட்ட இனப்படுகொலை குறித்து தெளிவான பல விடயங்களை உள்ளடக்கியுள்ளதுடன் ஏன் தமிழ அகதிகளை திருப்பி அனுப்புவது ஆபத்தானது என்பதையும் தெளிவுபடுத்துகின்றது. இலங்கையின் தசாப்தகால யுத்த குற்றங்கள், பலவந்தமாக காணாமல்போகச்செய்தல், இராணுவ ஆக்கிரமிப்புகள் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை துல்லியமாக பதிவு செய்துள்ள இந்த ஆவணம் இலங்கை அரசாங்கத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றது. https://www.virakesari.lk/article/205788
-
இவ் வருடத்தில் 11 துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் : 7 பேர் பலி, இருவர் காயம்
03 FEB, 2025 | 08:26 PM (எம்.வை.எம்.சியாம்) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்டக்குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 5 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன்போது 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இதனிடையே வெளிநாட்டில் தலைமறைவாகி நாட்டில் திட்டமிட்ட குற்றச் செயல்களை ஒழுங்குபடுத்தும் 68 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்டக்குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 5 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன்போது 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். அதேபோன்று இதர காரணங்களால் மேலும் 6 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எவ்வாறாயினும் இந்தத் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய பொலிஸார் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். அண்மையில் கல்கிசை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியையும் மீட்கப்பட்டிருந்தது. மன்னார் மேல் நீதிமன்றத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இந்தக்குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஒரு கைத்துப்பாக்கி, 3 ரி-56 ரக துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் வெளிநாட்டில் தலைமறைவாகி நாட்டில் திட்டமிட்ட குற்றச் செயல்களை ஒழுங்குபடுத்தும் 68 பேரை நாம் அடையாளம் கண்டுள்ளோம்.அவர்களை கைது செய்ய சர்வதேச சிவப்பு எச்சரிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) துபாயில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் எமக்கு அறிவித்துள்ளனர். எனவே குறித்த சந்தேக நபர்களை நாட்டுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/205725
-
கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் இந்த திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்?
பட மூலாதாரம்,GETTY IMAGES மெக்சிகோ மீதான வரி விதிப்பை நிறுத்தி வைத்ததை அடுத்து, செவ்வாய்கிழமை முதல் கனடா மீது 25% வரி விதிப்பதாக இருந்த திட்டத்தை 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்கவும், போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது. அமெரிக்கா அதிக வர்த்தகம் செய்யும் இரு நாடுகள் – மெக்சிகோ மற்றும் கனடா. டிரம்ப் இறக்குமதி வரி விதிப்பை அறிவிப்பை அறிவித்த பிறகு, எதிர்வினையாற்றுவது குறித்து இரு நாடுகளும் பேசி வந்தனர். எல்லையில் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க பிரத்தியேகமாக ஒரு அதிகாரியை நியமிப்பதாக கனடா தெரிவித்திருந்தது. டிரம்ப் உடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில், எல்லையில் 10 ஆயிரம் துருப்புகளை நிறுத்துவதாக மெக்சிகோ தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது வரி விதிப்புகள் மேற்கொள்ளப்படும் என்று டிரம்ப் கூறியிருந்தாலும், பிரிட்டனுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் என்று குறிப்பிட்டார். மனித மூளையின் மோசமான நினைவுகளை அழிக்க முடியுமா? எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனை கூறுவது என்ன? உயிர்காக்கும் மருந்துகளை உருவாக்க விஷமுள்ள கம்பளிப் புழுக்கள் எப்படி உதவ முடியும்? ஏ.ஐ. உலகில் புதிய அலை: ஒரே செயலி மூலம் அமெரிக்க நிறுவனங்களை மிரளச் செய்த சீன நிறுவனம் நாகரிக வளர்ச்சியில் தமிழ்நாட்டிற்குள்ளேயே வேறுபாடுகள் இருந்தனவா? அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பை ஏன் நிறுத்தி வைத்தார்? கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். அது குறித்து சிஎன்என் ஊடக செய்தியாளர் கேட்டபோது, அந்த உரையாடல் " மிகவும் நன்றாக" இருந்தது என்று டிரம்ப் கூறினார். "நமது வட எல்லையில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக கனடா தெரிவித்துள்ளது" என்று தனது சமூக ஊடக பக்கமான ட்ரூத் சோசியலில் டிரம்ப் பதிவிட்டிருந்தார். எல்லைப் பாதுகாப்புக்காக 130 கோடி கனடிய டாலர்களை செலவிடவுள்ளதாக கூறிய கனட பிரதமரின் ட்வீட்டை குறிப்பிட்டு டிரம்ப் இதனை பதிவிட்டிருந்தார். மேலும், போதைப் பொருள் விற்பனை தடையை கண்காணிக்க அதிகாரி நியமிக்கப்பட உள்ளதாகவும் போதைப் பொருள் கடத்தல்காரர்களை "பயங்கரவாதிகள்" என்று அங்கீகரிப்பதாகவும் ட்ரூடோ தனது பதிவில் தெரிவித்திருந்தார். "முதல்கட்ட முடிவுகள் திருப்திகரமாக உள்ளதால், வரி விதிப்பு நடவடிக்கை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது, இந்தக் காலக்கட்டத்தில் கனடாவுடன் ஒரு பொருளாதார ஒப்பந்தம் முடிவு செய்ய முயற்சி எடுக்கப்படும்" என்றும் டிரம்ப் சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்திருந்தார். "அனைவருக்கும் நீதி" என்று தனது பதிவின் இறுதியில் கூறியிருந்தார் டிரம்ப். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அனைவருக்கும் நீதி என டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார் ஸ்வீடனில் குர்ஆனை எரித்த இராக்கியர் சுட்டுக் கொலை - வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பு உள்ளதா?31 ஜனவரி 2025 கர்ப்பிணியின் 35 வார கருவின் வயிற்றுக்குள் கை, கால்களுடன் இன்னொரு கரு; என்ன காரணம்? - இன்றைய செய்திகள்30 ஜனவரி 2025 எல்லைப் பாதுகாப்புக்கு 1.3 பில்லியன் டாலர் செலவு செய்ய கனடா முடிவு வரி விதிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் இரு நாடுகளும் கூட்டாக இணைந்து வேலை செய்யும் என்பதை கனட பிரதமரும் முன்னதாக தெரிவித்திருந்தார். "எல்லைப் பாதுகாப்புக்காக செலவிடப்படும் 130 கோடி டாலர் பணம் புதிய ராணுவ ஹெலிகாப்டர்கள் வாங்கவும், துருப்புகளை எல்லையில் நிறுத்தவும், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும் செலவிடப்படும். ஃபெண்டனில் (போதைப் பொருள்) கடத்தல் நிறுத்தப்படும். அதை கண்காணிக்க ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார். கனடா-அமெரிக்கா கூட்டுப் படை, ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள், பண மோசடி, ஃபெண்டனில் கடத்தல் ஆகியவற்றை கண்காணிக்க உருவாக்கப்படும். அந்த படை 24 மணிநேரமும் நிலைமைகளை கண்காணிக்கும்" என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா வரி விதிப்பை நிறுத்தி வைத்த பிறகு, கனடா அரசியல்வாதிகளும் தொழிலபதிகர்களும் பெருமூச்சுவிடுகின்றனர். எல்லையை கண்காணிக்க ட்ரோன்களை கனடா செலுத்தப் போவதாக, டொராண்டாவில் உள்ள பிபிசி செய்தியாளர் ஜெசிக்கா மர்ஃபி கூறுகிறார். வரி விதிப்பு தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், அது எப்போது வேண்டுமானாலும் விதிக்கப்படலாம் என்று அச்சம் நிலவுகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார். எனினும், இந்த நிறுத்தி வைப்பை ட்ரூடோ மற்றும் டிரம்ப் அரசியல் வெற்றியாக காண்பிக்கிறார்கள் என்று ஜெசிக்கா தெரிவிக்கிறார். எல்லையில் அதிக பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக, டிரம்ப் கூறுவார், அதே நேரம் வரி விதிப்பை தடுத்து நிறுத்தியதாக ட்ரூடோ கூறுவார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த நிறுத்தி வைப்பை ட்ரூடோ மற்றும் டிரம்ப் அரசியல் வெற்றியாக காண்பிக்கிறார்கள் என்று ஜெசிக்கா தெரிவிக்கிறார் டிரம்ப் அச்சுறுத்தல்: அமெரிக்காவின் கடுமையான வரிகளைத் தவிர்க்க சீனா என்ன செய்கிறது? எப்படி தயாராகிறது?2 பிப்ரவரி 2025 அமெரிக்கா: வெடித்துச் சிதறிய விமான ஆம்புலன்ஸ், குழந்தை நோயாளியுடன் சென்றபோது நடந்த விபத்து1 பிப்ரவரி 2025 கனடா அமெரிக்க உறவுகள் குறித்த கனட பிரதமரின் கவுன்சிலின் உறுப்பினரான லானா பெய்னே, "இது கனடாவுக்கு ஒரு திருப்புமுனை" என்று குறிப்பிடுகிறார். அவர் கனடாவின் பெரிய தனியார் துறை சங்கமான யுனிஃபோரின் தலைவராவார். "இப்போது திரும்பி செல்வது குறித்த கேள்விக்கு இடமே இல்லை. முப்பது நாள் வரி விதிப்பு நிறுத்தி வைப்புக்குப் பிறகு, ஒருவரும் நம் மீது கை வைக்கக் கூடாது" என்று அவர் தெரிவித்திருந்தார். "இந்த 30 நாட்களை ஒரு வர்த்தகப் போருக்கு தயாராக கனடா பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வலுவான, மீண்டெழும் சக்தி கொண்ட, பன்முகத்தன்மை கொண்ட பொருளாதாரத்தை உருவாக்க இந்த காலத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார். கனடா, சீனாவுக்கு எதிரான டிரம்பின் முடிவால் அமெரிக்காவுக்கு என்ன இழப்பு ஏற்படும்? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?3 பிப்ரவரி 2025 தமிழ் - ஜப்பானிய மொழிகள் இடையே இவ்வளவு ஒற்றுமையா? விளக்கும் மொழியியல் வல்லுநர்கள்2 பிப்ரவரி 2025 தொழில் துறையினருக்கு ஏற்படும் சிக்கல் என்ன? இந்த வரி விதிப்பு நிறுத்தி வைப்பு தொழிலதிபர்களுக்கு சிக்கலான சூழலை உருவாக்கியிருப்பதாக, பிபிசி செய்தியாளர் ஜோனதன் ஜோசஃப் தெரிவிக்கிறார். தொழில் துறையினர் வெறுக்கும் ஒரு விஷயம் என்றால், அது "நிச்சயமற்ற தன்மை". இதன் சிறிய விளைவை உலக பங்குச் சந்தை திங்கட்கிழமை கண்டது. டிரம்ப் தனது முடிவை இவ்வளவு உடனடியாக மாற்றிக்கொள்கிறார் என்றால், அடுத்து வரும் நான்கு ஆண்டுகளில் அவரது ஆட்சியில் எந்த முடிவிலும் தெளிவான நிலைப்பாடு இருக்காது என்று குறிக்கிறது. வரி விதிப்புகளை தவிர்ப்பதற்காக சமீபத்தில், நிறைய நிறுவனங்கள் தங்கள் தொழில்முறையை சற்று மாற்றியமைத்துக் கொண்டுள்ளன. உதாரணமாக, நிறைய நிறுவனங்கள் அமெரிக்காவில் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு பதிலாக சீனா, மெக்சிகோ மற்றும் இந்தியா நோக்கி நகர்ந்துள்ளன. டிரம்பின் வரி விதிப்புப் பட்டியலில் அடுத்து எந்த நாடு உள்ளது என்பது தெரியாததால், முதலீட்டாளர்களுக்கு எந்த நாட்டில் முதலீடு செய்யலாம் என முடிவு செய்வது சிக்கலாக உள்ளது. எனினும் அமெரிக்காவின் இந்த முடிவை பல அரசு அதிகாரிகளும் தொழிலதிபர்களும் இதனை நல்ல செய்தி என்று கூறுகின்றனர். ஆனால், இந்த வரி விதிப்பை நிறுத்தி வைத்திருப்பது தற்காலிகமானது தான் என்பது அவர்களுக்கு தெரியும். அமெரிக்கா ஆட்டோ மொபைல் நிறுவனத்துக்கான சங்கத்தின் தலைவர் பில் ஹான்வே, ஆட்டோ மொபைல் துறை வரி விதிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாகவும், எனினும் நிலைமைகள் நிச்சயமில்லாமல் இருப்பது கவலையளிப்பதாகவும் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஆட்டோ மொபைல் துறையை பன்னாட்டு துறை என்று குறிப்பிட்ட அவர், அமெரிக்க விநியோகஸ்தர்கள், கார் தயாரிப்பு பாகங்களை அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்க தயாராக இல்லை என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES கனடாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பெர்ரின் பியட்டி, வரி விதிப்பை நிறுத்தி வைத்தது நல்ல விஷயம் என்றாலும், ஃபெண்டனில் டிரம்புக்கு உண்மையிலேயே ஒரு பிரச்னை தானா என்று கேள்வி எழுப்பியுள்ளார். கனட வர்த்தக அமைப்பின் முன்னாள் தலைவருமான பியட்டி, அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு கனடா பணியவில்லை என்று கூறுகிறார். டிரம்ப் மற்றும் ட்ரூடோவுக்கு இடையிலான ஒப்பந்தத்தை குறித்து, "இந்த ஒப்பந்தம் முடியப் போவதில்லை, இது இரு நாடுகளுக்கும் சரியானதே" என்று கூறியுள்ளார் . பிபிசி செய்தி அறைக்குள் நுழைய விருப்பமா? - மெட்டாவெர்ஸ் உலகுக்கு உங்களை வரவேற்கிறோம்3 பிப்ரவரி 2025 ராஜீவ் காந்தி ஓட்டிய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயன்றது ஏன்? ரா உளவு அமைப்பு தடுத்தது எப்படி?3 பிப்ரவரி 2025 சீனா மீதான வரி விதிப்பு என்னவாகும்? பட மூலாதாரம்,GETTY IMAGES சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரியை செவ்வாய்கிழமை முதல் நடைமுறைக்குக் கொண்டு வருகிறது டிரம்பின் அரசு. இந்த முடிவில் எந்த மாற்றமும் இருப்பதாக தெரியவில்லை. இந்த வார இறுதிவரை சீன அதிபரிடம் டிரம்ப் பேசப்போவதில்லை என்று வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியிருந்தார். சீனா மீதான வரிகள் மேலும் உயர்த்தப்படலாம் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். "சீனா ஃபெண்டினில் அனுப்பாது என்று நம்புகிறோம், அப்படி செய்தால் வரிகள் மேலும் அதிகரிக்கப்படும்" என்று டிரம்ப் கூறியிருந்தார். ஃபெண்டனில் அமெரிக்காவின் பிரச்னை என்று சீனா கூறுகிறது. உலக வர்த்தக அமைப்பில், இந்த வரி விதிப்புகளை சீனா எதிர்க்கும் என்றும் பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சீனா தெரிவிக்கிறது. அதே நேரம் சீனா பேச்சுவார்த்தைகளுக்கு தனது கதவுகளை திறந்து வைத்திருப்பதாகவும் சொல்கிறது. வெள்ளை மாளிகையின் அறிக்கை வெளிவருவதற்கு முன்பாக, அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு அழைப்பு இருக்கலாம், என்று டிரம்ப் கூறியிருந்தார். சீனா மீதான 10% வரி விதிப்பை "ஆரம்பம்" மட்டுமே என்று கூறும் டிரம்ப், ஒப்பந்தம் ஏதும் எட்டப்படவில்லை என்றால், வரிகள் மேலும் உயர்த்தப்படும் என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c30d9ymzgmno
-
இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் இன்று : ஜனாதிபதி அநுர தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் விசேட நிகழ்வுகள்
இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் இன்று : பல மாற்றங்களுடன் ஜனாதிபதி அநுர தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் விசேட நிகழ்வுகள் 04 FEB, 2025 | 06:38 AM (எம்.மனோசித்ரா) இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் இன்றாகும். சுதந்திர தினத்தை முன்னிட்டு 'தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம்' என்ற தொனிப்பொருளில் சுதந்திர சதுக்கத்தில் கொண்டாட்டத்துக்கான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய இன்று காலை ஏழு மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாக உள்ளன. பிரதமர் உட்பட ஏனைய பிரதம அதிதிகளின் வருகையை அடுத்து எட்டு மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வருகை தருவார். ஜனாதிபதியால் தேசிய கொடி ஏற்றப்பட்டதையடுத்து ஜயமங்கள கீதம் இசைக்கப்பட உள்ளது. அதனை அடுத்து நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும். தொடர்ந்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்காக விசேட உரையாற்றவுள்ளார். அவரது உரையை அடுத்து முப்படைகளின் படை அணிவகுப்பு மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் சுதந்திர தின கொண்டாட்டங்கள் 9.40 மணியளவில் நிறைவடையவுள்ளன. நிகழ்வுகளுக்கான பயிற்சிகள் மற்றும் ஒத்திகைகள் ஜனவரி 29ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தன. கடந்த ஆண்டை விட இவ்வாண்டு மரியாதை அணி வகுப்புக்களில் பங்கேற்கும் படை வீரர்களின் எண்ணிக்கை 1511ஆல் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இம்முறை 4421 முப்படை வீரர்கள், பொலிஸ், விசேட அதிரடிப்படையினர் மரியாதை அணிவகுப்புக்களில் பங்கேற்கவுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி.) அடிப்படையாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது சுதந்திர தின கொண்டாட்டம் இதுவாகும். அத்தோடு தேசிய கொடியை ஏந்திச் செல்வதற்காக விமானப்படையின் 3 உலங்கு வானூர்திகள் மாத்திரமே பயன்படுத்தப்படவுள்ளன. கடந்த ஆண்டு 19 உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், இம்முறை எவ்வித வாகன அணிவகுப்பும் இடம்பெறாது. முப்படை வீரர்களின் மரியாதை அணிவகுப்பு மாத்திரமே இடம்பெறவுள்ளது. அத்தோடு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உரையும் இடம்பெறவுள்ளது. 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது நிர்வாக அமைச்சினால் அரச நிறுவனங்கள் அல்லது திணைக்களங்கள் தொடர்பில் புதுப்பிக்கத்தக்க சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 10ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த சுற்று நிரூபத்தில் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 7ஆம் திகதி வரை சகல அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் தேசிய கொடி ஏற்றப்பட வேண்டும் என்றும், 3 மற்றும் 4ஆம் திகதிகளில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் மின்சார வீண்விரயத்தைத் தடுக்கும் நோக்கில் மின் அலங்காரம் செய்ய வேண்டும் என்ற அறிவித்தலை இரத்து செய்து புதுப்பிக்கப்பட்ட சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளைப் பார்வையிடுவதற்கு விசேட சந்தர்ப்பம் வழங்க சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய இன்றைய தினம் கைதிகளுக்கு வீடுகளிலிருந்து கொண்டு வரப்படும் உணவுகளை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4.30 மணிமுதல் சுதந்திர சதுக்கம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் 1000க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.மனதுங்க தெரிவித்தார். இம்முறை பொது மக்கள் பெருமளவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/205749 இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி அநுர தலைமையில் ஆரம்பம் - நேரலை 04 FEB, 2025 | 07:41 AM இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் சற்று முன்னர் கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுர்க்கத்தில் விசேட நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. சுதந்திர தினத்தை முன்னிட்டு 'தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம்' என்ற தொனிப்பொருளில் சுதந்திர சதுக்கத்தில் கொண்டாட்டத்துக்கான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் உரையை அடுத்து முப்படைகளின் படை அணிவகுப்பு மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் சுதந்திர தின கொண்டாட்டங்கள் 9.40 மணியளவில் நிறைவடையவுள்ளன. https://www.virakesari.lk/article/205750