Everything posted by ஏராளன்
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
"காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை" Published By: RAJEEBAN 05 FEB, 2025 | 03:32 PM காசாவை விட்டு வெளியேறும் எண்ணமில்லை என காசா மக்கள் தெரிவித்துள்ளனர். காசா மக்களை வேறு பகுதிகளில் மீள்குடியேற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் யோசனை குறித்து மிகுந்த வெறுப்படைந்துள்ளதாக காசாவில் வசிக்கும் ஒருவர் தெரிவித்தார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து பிபிசி மேலும் தெரிவித்துள்ளதாவது, அக்ரம்கான் ரபாவிற்கும் கான் யூனிசிற்கும் இடையில் காசாவின் தென்பகுதியில் வசிக்கின்றார். யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு பின்னர் காசாவின் வடபகுதியில் பலர் தங்கள் பகுதிகளிற்கு திரும்புவதை அவர் பார்த்துள்ளார். 2023 ஒக்டோபர் மாதம் 7 ம்திகதி மோதல் வெடித்த பின்னர் காசாவிலிருந்த 70 வீதமான கட்டிடங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக ஐ.நா மதிப்பிட்டுள்ள போதிலும் பாலஸ்தீனியர்கள் வேறு நாட்டிற்கு செல்வதை விட தற்காலிக தங்குமிடங்களிலேயே வாழ விரும்புவார்கள் என அக்ரம் கான் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன மக்கள் மீள்எழும் திறன் கொண்டவர்கள், அவர்கள் இன்னமும் இங்கேயே வாழ விரும்புகின்றனர், அவர்கள் வேறு எங்கும் செல்வார்கள் என நான் கருதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் குடிநீரை போக்குவரத்தை அடிப்படை வாழ்விற்கான விடயங்களை பெறுவதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர், ஆனால் அவர்கள் இந்த மண்ணிலிருந்து வெளியேறுவது வேறு எங்காவது செல்வது குறித்து ஒருபோதும் சிந்தித்ததில்லை என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/205871
-
டிஜிட்டல் பிரதி அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு மக்கள் போராட்டக் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது; புபுது ஜயகொட
05 FEB, 2025 | 05:21 PM (எம்.வை.எம்.சியாம்) டிஜிட்டல் மயமாக்கல் என்ற போர்வையில் அரசாங்கம் இலங்கை மக்களின் உயிரியல் தரவுகளை சேகரித்தல் தொடர்பான பகிரங்க விவாதத்திற்கு வருமாறு டிஜிட்டல் அமைச்சர், டிஜிட்டல் பிரதி அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு மக்கள் போராட்டக் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் பதில் வழங்க வேண்டும் எனவும் இதுபோன்ற விடயங்களை திருட்டுத்தனமாகவும் மறைத்தும் செய்வதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது எனவும் முன்னிலை சோசலிஸக்கட்சியின் கல்விச்செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார். கொழும்பில் இன்று புதன்கிழமை (05) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, மக்களின் உயிரியல் தரவுகளை சேகரித்தல் குறித்து எமது கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். நாட்டை டிஜிட்டல் மயமாக்கும் போதும் டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தும் போதும் உயிரியல் தரவுகளின் அவசியம் எதற்கு? டிஜிட்டல் மயமாக்கல் என்பது வேறு. உயிரியல் தரவுகள் என்பது வேறாகும். எனவே இதில் இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். உதாரணமாக இத்தாலியில் டிஜிட்டல் அடையாள அட்டை பாவனை உள்ளது. ஆனால் அந்த அரசாங்கம் அந்த தரவுகளை கோரவில்லை. அவ்வாறாயின் அரசாங்கம் எவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்தத் தரவுகளைப் பயன்படுத்தும் என்பதைக்கூற வேண்டும்? குறிப்பாக நவீன தொழில்நுட்பத்தின் முதல்நிலையில் இருப்பவர்கள் எனக்கூறிக்கொள்ளும் அமெரிக்கா தென்கொரியாவிலும் எமக்குத் தற்போது டிஜிட்டல் மயமாக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகக்கூறும் இந்தியாவிலும் கடந்தகாலங்களில் தரவுக்கட்டமைப்பு திருடப்பட்டது. எமது நாட்டிலும் அண்மையில் அரச அச்சகத்திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையப்பக்கங்கள் ஊடுறவப்பட்டது. எனவே இந்தத் தரவுகள் எதிர்காலத்தில் திருடப்படாது என்பதற்கு அரசாங்கம் வழங்கும் உத்தரவாதம் என்ன? அத்துடன் இந்தத்திட்டத்தை எந்த இந்திய நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது?அந்த நிறுவனம் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டது? அந்த நிறுவனத்தைப் பற்றிய தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதா? குறித்த இந்திய நிறுவனத்தின் தலையீடு எந்த மட்டத்தில் இருக்கும்? இந்த தரவுத்தள கட்டமைப்பிற்குள் மாற்று முறையை பயன்படுத்தி குறித்த நிறுலனம் ஊடுரூவதை தடுப்பதற்கான மாற்றுவழி உள்ளதா? அவ்வாறாயின் அதனை தடுக்க வழி என்ன? இந்த திட்டத்தில் இலங்கையில் எந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது? அந்த நிறுவனம் எந்த முறையில் தெரிவு செய்யப்பட்டது? இடைப்பட்ட காலப்பகுதியில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டால் இந்திய நிறுவனம் மீண்டும் அழைக்கப்படுமா? அந்த சந்தர்ப்பத்தில் தரவுகள் திருடப்படமாட்டது என்பதற்கு உத்தரவாதம் என்ன என இது போன்ற பல பிரச்ச்சினைகளுக்கு அரசாங்கம் பதில் வழங்க வேண்டும். இது குறித்து விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மற்றும் பிரதி அமைச்சருக்கும் எமது கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு சவால் விடுக்கிறோம். இருவரில் ஒருவர் எமது கேள்விகளுக்கு பதில் வழங்க முடியும். இது பற்றி பேசும் அமைச்சர்களை அழைத்து வரலாம். விசேட நிபுணர்கள் எனக் கூறிக்கொள்ளும் தரப்பினரையும் அழைக்கலாம். நாங்கள் தயார். எனவே இந்த விடயத்தில் அரசாங்கம் பின்வாங்கக்கூடாது. மக்களுக்கு உண்மைகளை கூற வேண்டும். இதுபோன்ற விடயங்களை திருட்டுத்தனமாகவும் மறைத்தும் செய்வதற்கு எம்மால் அனுமதிக்க முடியாது. எமது அழைப்பை புறக்கணித்து உண்மைகளை மறைக்க அரசாங்கம் முயற்சித்தால் மக்கள் உயிரியல் தரவுகளை வழங்கமாட்டார்கள் என்றார். https://www.virakesari.lk/article/205892
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: வாக்குப்பதிவு நிலவரம் 5 பிப்ரவரி 2025, 03:31 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 5 மணி நிலவரப்படி 64.02% வாக்குகள் பதிவாகியுள்ளன. இடைத்தேர்தல் களத்தில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலட்சுமி உள்பட 46 பேர் போட்டியிடுகின்றனர். முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக, தேமுதிக மற்றும் பாஜக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: சீமான் பெரியார் குறித்து பேசுவதற்கு இதுதான் காரணமா? கள நிலவரம் என்ன? 'ஒரே இரவில் மாறிய வேட்பாளர்' - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரசுக்குப் பதிலாக திமுக போட்டி ஏன்? ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக, பாஜக, தேமுதிக புறக்கணிப்பால் நாம் தமிழர் கட்சி பலன் பெறுமா? வாக்கை வேறொருவர் செலுத்தியதாக பெண் புகார் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது வளையக்காரன் வீதியில் ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 168 எண் வாக்குச்சாவடியில் ஃபரிதா பேகம் என்பவர் கணவருடன் வாக்கு செலுத்த வந்தார். இந்நிலையில், அப்பெயரில் ஏற்கெனவே ஒருவர் வாக்கு செலுத்தியதாக வாக்குச்சாவடியில் உள்ள அலுவலர்கள் தெரிவித்துள்ளார், இதையடுத்து, தன் வாக்கை வேறொருவர் செலுத்தியதாக, அப்பெண் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டார். தான் மீண்டும் வாக்களிக்க வழிசெய்யும் வகையில், சட்டப்பிரிவு 49பி-ஐ (49P) பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு கோரினார் அப்பெண். இதைத்தொடர்ந்து, வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர் இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுங்கரா, ஈரோடு சம்பத் நகரில் வாக்குச் சாவடியில் வாக்களித்தார். திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பு அருகே உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் தன்னுடைய வாக்கைப் பதிவு செய்தார். தொகுதி முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருவதாக மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுங்கரா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைந்ததை அடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலின் முடிவுகளைவிட, இவ்விரு கட்சிகளில் எந்தக் கட்சியின் வாக்கு வங்கி கூடுகிறது, குறைகிறது என்பது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. வாக்குப்பதிவு காரணமாக அங்குள்ள வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக உள்ளது. இந்த இடைத்தேர்தலின் முடிவுகள் பிப்ரவரி 8ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. 4 ஆண்டுகளில் மூன்றாவது தேர்தல் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா, போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2023 ஜனவரி 4 அன்று , அவர் மாரடைப்பால் இறந்தார். அதையடுத்து, கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி அன்று அங்கு மீண்டும் இடைத்தேர்தல் நடந்தது. அதில் அவரது தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்குப் பின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட இளங்கோவன், அந்தப் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே, கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதியன்று, உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பதவி மீண்டும் காலியிடமாக அறிவிக்கப்பட்டு, இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து கடந்த 4 ஆண்டுகளுக்குள் இந்தத் தொகுதியில் மூன்றாம் முறையாக தேர்தல் நடக்கிறது. படக்குறிப்பு, இடைத்தேர்தலில் குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்திய திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் கடந்த 2023ஆம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில் சுமார் 2 லட்சத்து 26 ஆயிரம் வாக்காளர்கள் இருந்த இத்தொகுதியில் இப்போது சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 9 வாக்குச்சாவடி மையங்கள், பதற்றம் நிறைந்தவை என்று கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி, ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையம் பொது விடுமுறை அறிவித்துள்ளது. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் கூறியது என்ன? ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தனது குடும்பத்தினருடன், கொசுவண்ண வீதியிலுள்ள பிவிபி குழந்தைகள் பள்ளியில் வாக்கு செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நல்வாழ்த்துகளுடன், அமைச்சர் சு.முத்துசாமி வழிகாட்டுதலோடு இந்த இடைத்தேர்தலைச் சந்தித்துள்ளேன். இந்த இடைத்தேர்தலைப் பொருத்தவரை திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும்," என்று தெரிவித்தார். மேலும், "அந்த மிகப்பெரிய வெற்றிக்குக் காரணமாக இருக்கப் போவது கடந்த நான்கு ஆண்டுகால திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்களாகவே இருக்கும்," என்றும் குறிப்பிட்டார். தமிழ்நாட்டை விஞ்சிய உத்தர பிரதேசம்: மாணவர்களின் கல்வித் திறன் பற்றிய ஆய்வில் தகவல் - இன்றைய செய்திகள்29 ஜனவரி 2025 ஹிட்லரின் யூத படுகொலை மையமாக திகழ்ந்த 'அவுஷ்விட்ஸ்' வதை முகாம் எவ்வாறு இயங்கியது?28 ஜனவரி 2025 'வாக்குச் சாவடியில் பாரபட்சம்' - நாம் தமிழர் வேட்பாளர் குற்றச்சாட்டு இந்தத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, கோபிச்செட்டிபாளையம் தொகுதியைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு இங்கு வாக்கு இல்லை. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு வாக்குச்சாவடி மையங்களை சீதாலட்சுமி ஆய்வு செய்தார். ''முதல் 2 மணிநேரத்தில் வாக்குப்பதிவு வேகமாக நடந்துள்ளது. நான் 30க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் ஆய்வு செய்தேன். என்னைப் பார்த்த வாக்காளர்கள் பலர், யார் பணம் கொடுத்தாலும் இந்த முறை சிந்தித்து வாக்களிப்போம் என்று தெரிவித்தனர். இனிமேல் இவர்களை நம்பி வாக்களித்துப் பயனில்லை என்றும் கூறினர்'' என்றார். படக்குறிப்பு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஆய்வு செய்தபோது மேலும் அவர் கூறுகையில், ''நான் எனது கட்சித் துண்டைப் போட்டுக் கொண்டு வாக்குச்சாவடி மையத்துக்குச் சென்றபோது, அதை அகற்றுமாறு கூறினர். இந்தத் துண்டில் சின்னம் எதுவுமில்லை. இதைப் பார்த்து, மக்கள் எங்களுக்கு வாக்களிக்கும் அளவுக்கு மாறிவிட்டார்கள் என்றால் அதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. ஆனாலும் நான் பிரச்னை வேண்டாமென்று அதை அகற்றிவிட்டேன். ஆனால், திமுக வேட்பாளர் அவருடைய கட்சிக் கொடி நிறத்திலான துண்டை அணிந்து செல்ல அனுமதிக்கின்றனர். இப்படி அதிகாரிகள் அப்பட்டமாகப் பாரபட்சம் காட்டுகின்றனர்'' என்றார். ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு மட்டும் பொது விடுமுறை அறிவித்ததைச் சுட்டிக்காட்டிய சீதாலட்சுமி, இங்குள்ள மக்கள் பலர், அருகிலுள்ள வேறு தொகுதிகளுக்கும் பணிக்குச் செல்கின்றனர். ஏராளமான கூலித்தொழிலாளர்கள், இன்று பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதனால் மாவட்டம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8edjpelz14o
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
அதிர்வலையை கிளப்பிய Trump; Netanyahu-வை சந்தித்த பின் பேசியது என்ன? இதன் நிஜ பொருள் என்ன? Explained Greenland, Panama Canal, Canada- வை தொடர்ந்து Gaza -வை கட்டுப்படுத்த விரும்புவதாக America President Trump கூறியது உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. #Trump #Gaza #Netanyahu இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
"குடியுரிமை ரத்து.." பகீர் கிளப்பிய டிரம்ப்.!
அமெரிக்கா: பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்க தடை விதிக்கும் டிரம்ப் - பிற நாடுகளில் என்ன நிலை? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தன் நாட்டில் பிறந்த எவருக்கும் அமெரிக்கா குடியுரிமையை வழங்குகிறது கட்டுரை தகவல் எழுதியவர், லூயிஸ் பார்ருச்சோ பதவி, பிபிசி உலக சேவை அமெரிக்காவில் பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்த அதிபர் டிரம்பின் உத்தரவு பல்வேறு சட்ட சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, புலம்பெயர் குடும்பங்கள் நிச்சயமற்ற சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 160 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் 14வது திருத்தம், அமெரிக்காவில் பிறக்கும் எந்தவொரு குழந்தைக்கும் இயல்பாகவே அமெரிக்க குடியுரிமை கிடைப்பதை உறுதி செய்கிறது. ஆனால், அதிபர் டிரம்பின் உத்தரவு, இந்த 14வது சட்டத் திருத்தத்திற்கு மறுவிளக்கம் அளித்து, சட்டவிரோதமாக அல்லது தற்காலிக விசாவில் அமெரிக்காவில் வாழும் புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளுக்குக் கிடைக்கும் அமெரிக்கக் குடியுரிமைக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. இந்த புதிய கொள்கை 19 பிப்ரவரி 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். அதேபோல், இந்தத் தேதிக்கு முன் பிறக்கும் குழந்தைகளுக்கு இதனால் எந்த பாதிப்புமில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள குடியுரிமைச் சட்டங்களுடன் இதை ஒப்பிட்டுக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. உலகெங்கிலும் மனிதாபிமான உதவிகளை செய்து வரும் USAID அமைப்பை டிரம்ப் மூட நினைப்பது ஏன்? அமலுக்கு வந்த அமெரிக்காவின் வரி விதிப்பு - சீனாவின் பதிலடி என்ன? கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்? டிரம்ப் அச்சுறுத்தல்: அமெரிக்காவின் கடுமையான வரிகளைத் தவிர்க்க சீனா என்ன செய்கிறது? எப்படி தயாராகிறது? பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை கிடைக்கும் நாடுகள் பிறந்த இடத்தின் அடிப்படையிலான குடியுரிமை அல்லது ஜூஸ் சோலி (jus soli-பிறந்த மண்ணுக்கான உரிமை) என்பது உலகம் முழுவதும் பின்பற்றப்படும் பொதுவான நடைமுறை அல்ல. தங்கள் எல்லைகளுக்குள் பிறந்த எவருக்கும் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் சுமார் 30 நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. ஒரு நாட்டின் எல்லைக்குள் பிறந்த அனைவருக்கும் குடியுரிமை வழங்கும் பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமைக்கு (jus soli) மாறாக, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் சில நாடுகள் ஜூஸ் சாங்குனிஸ் (லத்தீன் மொழியில் 'ரத்த உறவின் அடிப்படையிலான உரிமை') எனும் கொள்கையைப் பின்பற்றுகின்றன. அதாவது, குழந்தைகள் பிறந்த இடத்தின் அடிப்படையில் இல்லாமல், அவர்களது பெற்றோரை அடிப்படையாகக் கொண்டு, தங்களது குடியுரிமையைப் பெறுகிறார்கள். மற்ற நாடுகளின் குடியுரிமைச் சட்டம், இந்த இரண்டு கொள்கைகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளது. மேலும், நிரந்தர குடியுரிமை பெற்றவர்களின் குழந்தைகளுக்கு அந்த நாடுகள் குடியுரிமை வழங்குகின்றன. கனடா, சீனாவுக்கு எதிரான டிரம்பின் முடிவால் அமெரிக்காவுக்கு என்ன இழப்பு ஏற்படும்? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?3 பிப்ரவரி 2025 இலங்கை சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்3 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிறந்த இடத்தின் அடிப்படையிலான குடியுரிமை என்பது உலகம் முழுவதும் பின்பற்றப்படும் பொதுவான நடைமுறை அல்ல சான் டியாகோவில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியரான ஜான் ஸ்க்ரென்ட்னி, பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமை அல்லது ஜூஸ் சோலி, அமெரிக்கா முழுவதும் பொதுவானது என்றாலும், "ஒவ்வொரு தேசமும்- மாநிலமும் அதன் தனித்துவமான பாதையைக் கொண்டுள்ளது" என்று நம்புகிறார். "உதாரணமாக, சில நாடுகள் பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ஏற்றுக்கொள்ளும்போது, அடிமைகளும் முன்னாள் அடிமைகளும் குடியுரிமை பெறலாம் என்பதை ஏற்றுக்கொண்டனர். ஆனால் சில நாடுகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த வரலாறு சிக்கலானது" என்கிறார் அவர். மேலும், விடுதலை செய்யப்பட்ட அடிமைகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கும் வகையில், அமெரிக்காவில், 14வது திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று விளக்குகிறார். இருப்பினும், பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ஏற்றுக்கொண்ட பெரும்பாலான நாடுகள் பொதுவான ஓர் அம்சத்தைப் பகிர்ந்துகொள்கின்றன. "முன்னாளில் காலனிய நாடுகளாக இருந்து, பின்னர் தேசிய-அரசுகளாக தங்களை நிலைநிறுத்திக்கொள்வது" தான் அந்த நாடுகளுக்கு இடையில் காணப்படும் பொதுக்கூறு என ஸ்க்ரென்ட்னி விவரிக்கிறார். "அவர்கள் யாரைச் சேர்க்க வேண்டும், யாரை விலக்க வேண்டும் மற்றும் தேசிய அரசை எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்பது குறித்து ராஜதந்திரமாக செயல்பட வேண்டியிருந்தது" என்று அவர் விவரிக்கிறார். "பல நாடுகளில், தங்கள் நாட்டில் பிறந்த எவருக்கும் குடியுரிமை வழங்குவது அவர்களின் தேசத்தைக் கட்டியெழுப்ப உதவும் ஒரு நடைமுறை உத்தியாக இருந்தது. ஒரு நிலையான மற்றும் ஒருங்கிணைந்த நாட்டை உருவாக்கும் அவர்களின் இலக்குகளுக்கு இது உதவியது" என்றும் குறிப்பிடுகிறார். "சில நாடுகளில், பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமை ஐரோப்பியர்களின் குடியேற்றத்தை ஊக்குவித்தது. மற்ற நாடுகளில், பழங்குடியின மக்கள், முன்னாளில் அடிமைகளாக இருந்தவர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் நிரந்தர குடிமக்களாகச் சேர்க்கப்படுவதையும் உறுதி செய்தது. இந்த அணுகுமுறை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஏற்றதாக இருந்தது. ஆனால், அந்த காலம் மாறியிருக்கலாம்" என்றும் கூறுகிறார். டொனால்ட் டிரம்ப் ஆவணங்கள் இல்லாத புலம்பெயர்ந்தோரை எங்கு அடைத்து வைக்க திட்டமிட்டுள்ளார்?2 பிப்ரவரி 2025 வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான டிரம்பின் நட்பு இந்த ஆட்சியில் தொடருமா? சவால்கள் என்ன?31 ஜனவரி 2025 கொள்கை மாற்றங்கள் மற்றும் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிசம்பர் 2004 முதல், இந்தியாவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோர் இருவரும் இந்தியராக இருந்தால் மட்டுமே குழந்தைக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும் சமீபத்திய ஆண்டுகளில், சில நாடுகள் தங்கள் குடியுரிமைச் சட்டங்களை மாற்றியமைத்துள்ளன. பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையைக் கடுமையாக்கியுள்ளன அல்லது ரத்து செய்துள்ளன. குடியேற்றத்தையும், தங்களது தேசிய அடையாளத்தைப் பாதுகாப்பதிலும் அந்த நாடுகள் கவனமாக உள்ளன. மேலும், வேறொரு நாட்டைச் சேர்ந்த மக்கள், குழந்தைகளைப் பிரசவிப்பதற்காகவே மற்றொரு நாட்டுக்கு வருகை தரும் நடைமுறையான "பிறப்பு சுற்றுலா" எனும் நடைமுறை குறித்தும் கவனித்துத்தங்களது சட்டங்களைக் கடுமையாக்கியுள்ளார்கள். உதாரணமாக, இந்தியா ஒருமுறை தன் மண்ணில் பிறந்த அனைவருக்கும் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கியது. ஆனால் காலப்போக்கில், சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக வங்கதேசத்தில் இருந்து எழுந்த கவலைகள், கட்டுப்பாடுகளுக்கு வழிவகுத்தது. டிசம்பர் 2004ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோர் இருவரும் இந்தியராக இருந்தால் மட்டுமே குழந்தைக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும் அல்லது குழந்தையின் பெற்றோரில் ஒருவர் இந்திய குடியுரிமை பெற்று, மற்றவர் சட்டவிரோதமாக குடியேறியவராகக் கருதப்படாவிட்டால் மட்டுமே அவர்களின் குழந்தைக்கும் இந்திய குடியுரிமை கிடைக்கும். பல ஆப்பிரிக்க நாடுகள் காலனித்துவ காலத்தில் தங்கள் நாட்டில் பிறந்த எவருக்கும் (jus soli) பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கின. இருப்பினும், சுதந்திரம் பெற்ற பிறகு, இந்த நாடுகளில் பெரும்பாலானவை தங்கள் சட்டங்களை மாற்றிக்கொண்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போது, ஒரு குழந்தை அந்த நாட்டின் குடியுரிமையைப் பெற வேண்டுமெனில், குறைந்தபட்சம் அதன் ஒரு பெற்றோராவது, அந்நாட்டின் குடியுரிமை பெற்றவராகவோ, அல்லது நிரந்தரமாக அங்கு வசிப்பவராகவோ இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளன. சீனா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் காணப்படுவது போல, பெரும்பாலான ஆசிய நாடுகளில் குடியுரிமை பெறுவதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன. அந்த நாடுகளில், குடியுரிமை பெறுபவரின் வம்சாவளியை முதன்மையாகக் கொண்டு அது தீர்மானிக்கப்படுகிறது. ஐரோப்பாவிலும் குடியுரிமைச் சட்டங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்தப் பிராந்தியத்தில், பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை (ஜூஸ் சோலியை) அனுமதித்த கடைசி நாடு அயர்லாந்துதான். ஒரு குழந்தை குடியுரிமை பெற குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது அந்த நாட்டின் குடியுரிமை கொண்டவராக, நிரந்தரமாக அங்கு வசிப்பவராக அல்லது சட்டப்பூர்வ அனுமதி பெற்று, அங்கு தற்காலிகமாக குடியிருக்க வேண்டும் என்று புதிய திருத்தம் குறிப்பிடுகிறது. ஆனால், ஜூன் 2024இல், 79 சதவிகித வாக்காளர்கள் இந்தக் கொள்கையை மாற்றுவதற்கான அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்தனர். மேலும், தங்கள் குழந்தைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பாஸ்போர்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காக, வெளிநாட்டுப் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள அயர்லாந்துக்கு வருவதால் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று அரசாங்கம் கூறியது. தமிழ் - ஜப்பானிய மொழிகள் இடையே இவ்வளவு ஒற்றுமையா? விளக்கும் மொழியியல் வல்லுநர்கள்2 பிப்ரவரி 2025 ராஜீவ் காந்தி ஓட்டிய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயன்றது ஏன்? ரா உளவு அமைப்பு தடுத்தது எப்படி?3 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, கடந்த 1929 முதல் பிறந்த அனைவருக்கும், புதிய குடியுரிமை விதி பொருந்தும் என்று டொமினிகன் குடியரசின் உச்ச நீதிமன்றம், 2013ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது அதேபோல், டொமினிகன் குடியரசில் மிகவும் கடுமையான மாற்றம் ஒன்று ஏற்பட்டது. 2010ஆம் ஆண்டில், குடியுரிமை சார்ந்து ஒரு அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டது. இதன் விளைவாக, ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகள், குடியுரிமை பெறுவதில் இருந்து விலக்கப்பட்டனர், கடந்த 1929 முதல் பிறந்த அனைவருக்கும், புதிய குடியுரிமை விதி பொருந்தும் என்று டொமினிகன் குடியரசின் உச்ச நீதிமன்றம், 2013ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது. இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள், பெரும்பாலும் ஹைட்டியன் வம்சாவளியினர், டொமினிகன் குடியுரிமையை இழந்துள்ளனர். இவர்களில் பலரிடம் ஹைட்டியன் ஆவணங்களும் இல்லை. எனவே அவர்களுக்கு எந்த நாட்டின் குடியுரிமையும் கிடைக்காமல் போகலாம் என உரிமைக் குழுக்கள் எச்சரித்தன. இந்த நடவடிக்கையை சர்வதேச மனித உரிமை அமைப்புகள், மனித உரிமை வழக்குகளைக் கையாளும் அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச நீதிமன்றம் ஆகியவை கடுமையாகக் கண்டித்தன. பொதுமக்களுடைய எதிர்ப்பின் காரணமாக, டொமினிகன் குடியரசு 2014இல் ஒரு சட்டத்தை இயற்றியது. இதன்மூலம், டொமினிகன் நாட்டில் பிறந்த புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கு, குறிப்பாக ஹைட்டிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக இந்தச் சட்டம் உதவுகிறது. ஸ்க்ரென்ட்னி இதை உலகளாவிய மாற்றங்களின் ஒரு பகுதியாகப் பார்க்கிறார். "இப்போதெல்லாம், வெகுஜன இடப்பெயர்வு மற்றும் எளிதான போக்குவரத்தின் மூலம், நீண்ட தூரம் கடல் வழியாகக்கூட பயணிக்க முடியும். இதன் காரணமாக, எந்த நாட்டின் குடியுரிமை பெற விரும்புகிறார்கள் என்பது குறித்தும் மக்கள் சில உத்திகளைக் கொண்டிருக்க முடியும். அதனால்தான் தற்போது அமெரிக்காவில் குடியுரிமை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது," என்கிறார். ஸ்வீடனில் குர்ஆனை எரித்த இராக்கியர் சுட்டுக் கொலை - வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பு உள்ளதா?31 ஜனவரி 2025 மாவை சேனாதிராஜா காலமானார்: இலங்கை தமிழர்களுக்காக குரல் எழுப்பிய இவர் யார்?30 ஜனவரி 2025 சட்ட சிக்கல்கள் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அதிபர் டிரம்பின் நிர்வாக உத்தரவு ஏற்கெனவே சட்ட சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது அதிபர் டிரம்ப், குடியுரிமை குறித்து ஆணை பிறப்பித்த சில மணிநேரங்களுக்குள், ஜனநாயகக் கட்சி தலைமையிலான 22 மாநிலங்கள், சான் பிரான்சிஸ்கோ நகரம், கொலம்பியா மாவட்டம், சிவில் உரிமைக் குழுக்கள் ஆகியவை அவரது நடவடிக்கையை எதிர்த்து கூட்டாட்சி அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தன. டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற நான்காவது நாளில், அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜான் கோகெனோர் புதிய குடியுரிமைக் கொள்கை "முற்றிலும் அரசியலமைப்புக்கு எதிரானது" என்று கூறி தற்காலிகமாகத் தடை செய்தார். மேலும், அதிபர் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவின் மூலம் பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை முடிவுக்குக் கொண்டு வர முடியாது என்பதைப் பெரும்பாலான சட்ட அறிஞர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். "அவர் அதிகளவு மக்களை வருத்தமடையச் செய்யும் ஒரு காரியத்தைச் செய்கிறார். ஆனால் இறுதியில் இதுகுறித்து நீதிமன்றமே தீர்மானிக்கும்" என்று அரசியலமைப்பு நிபுணரும் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் சட்டத் துறைப் பேராசிரியருமான சாய்கிருஷ்ண பிரகாஷ் கூறினார். மேலும் "இது அவர் சொந்தமாக முடிவு செய்யக்கூடிய விஷயம் அல்ல" என்றும் அவர் குறிப்பிட்டார். அதிபர் டிரம்பின் நிர்வாக உத்தரவு அரசியலமைப்பில் ஏற்கெனவே உள்ள திருத்தத்தை மறு விளக்கம் செய்கிறது. இந்தத் திருத்தத்தை மாற்ற, பிரதிநிதிகள் சபை, செனட் ஆகிய இரண்டிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் தேவை, அதனோடு சேர்த்து பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்க மாகாணங்களின் ஒப்புதலும் தேவை. இந்நிலையில், சட்ட நடவடிக்கைகள் தொடரும் நிலையில் அதிபரின் உத்தரவு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், கூட்டாட்சி அரசின் வழக்கறிஞர்கள் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், இறுதியில் இந்த வழக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr53l5qp8l2o
-
யுஎஸ்எயிட் சீர் செய்ய முடியாத நிலையை அடைந்துவிட்டது- மூடுவதற்கு தீர்மானம்- எலொன் மஸ்க்
யுஎஸ்எயிட்டின் பணியாளர்கள் அனைவரும் பணி நீக்கம்? Published By: RAJEEBAN 05 FEB, 2025 | 09:43 AM சர்வதேச அளவில் யுஎஸ்எயிட் அமைப்பு நேரடியாக பணிக்கு அமர்த்திய அனைத்து ஊழியர்களையும் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் யுஎஸ்எயிட்டிற்காக பணியாற்றும் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை மீள அழைக்கப்போவதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏழாம் திகதி முதல் யுஎஸ்எயிட் பணிக்கு அமர்த்திய அனைவரும் நிர்வாகவிடுப்பில் வைக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு யுஎஸ்எயிட்டின் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. நெருக்கடியா சூழலில் செயற்படுவதற்கு அவசியமானவர்கள், முக்கிய தலைவர்கள், சிறப்பாக நியமிக்கப்பட்ட திட்டங்களிற்கு பொறுப்பானவர்களிற்கு இதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக யுஎஸ்எயிட்டின் இணையத்தளம் தெரிவித்துள்ளது. யுஎஸ்எயிட்டிற்காக பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் பணியாற்றுகின்றனர் இவர்களில் பெருமளவானவர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர். உலகின் 60நாடுகளில் யுஎஸ்எயிட்டின் அலுவலகங்கள் உள்ளன. வெளிநாடுகளில் பணியாற்றும் அமெரிக்கர்களிற்கான திட்டமொன்றை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ள இணையதளம், அவர்கள் அமெரிக்காவிற்கு மீள பயணித்தமைக்கான செலவீனங்களை30 நாட்களிற்குள் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த அதிர்ச்சி நடவடிக்கை காரணமாக ஆயிரக்கணக்கான பணியாளர்களும் அவர்களின் குடும்பத்தவர்களும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. அமெரிக்காவின் பல மில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டு உதவி திட்டங்களிற்கு பொறுப்பான யுஎஸ்எயிட் திங்கட்கிழமை முதல் கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளது. யுஎஸ்எயிட்டின் பணியாளர்களிற்கு அலுவலகத்தில் நுழைவதற்கும் கணிணிகளை பயன்படுத்துவதற்குமான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. யுஎஸ்எயிட்டின் செயற்பாடுகளை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்குள் உள்வாங்குவதற்கு டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதை தொடர்ந்து யுஎஸ்எயிட்டின் சிரேஸ்ட ஊழியர்கள் பலர் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். யுஎஸ்எயிட்டின் இயக்குநர் தானே என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க் ரூபியோ தெரிவித்துள்ளார். யுஎஸ்எயிட்டின் செயற்பாடுகள் அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கைக்கு ஏற்ற விதத்தில் அமைவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். யுஎஸ்எயிட் வரலாற்றுரீதியாக அமெரிக்க காங்கிரஸிற்கும் வெள்ளை மாளிகைக்கும் பதிலளிக்காத ஒன்று என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் அது ஒரு அமைப்பாகயிருந்தாலும் அது அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திலிருந்தே உத்தரவுகளை பெறவேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் யுஎஸ்எயிட் அதனை புறக்கணித்து தொண்டு என்பது அமெரிக்காவின் நலன்களில் இருந்து வேறுபட்டதாகயிருக்கவேண்டும் என்ற கருத்தினை கொண்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார். யுஎஸ்எயிட் வழங்குவது அமெரிக்க மக்களின் வரிப்பணத்தையே நாங்கள் ஒவ்வொரு டொலருக்கும் பதிலளிக்கவேண்டும் ஒவ்வொரு டொலரும் எங்கள் தேசிய நலனை அடிப்படையாக கொண்டது என்ற உத்தரவாதத்தை மக்களிற்கு வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/205823
-
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் இல்லை; அமைச்சரவைப் பேச்சாளர் மீண்டும் அறிவிப்பு
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் வாகனங்களை வழங்காது என்று மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ. நாட்டில் நிலவும் பொருளாதார சூழ்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவது முன்னுரிமை அல்ல என்றும் அவர் தெரிவித்தார். வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/315141
-
ஜனாதிபதி நிதியம் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவித்தல்
ஜனாதிபதி நிதிய நிவாரணத்தை சகல பிரதேச சபைகளினூடாக வழங்க தீர்மானம் - பிரதமர் தெரிவிப்பு 05 FEB, 2025 | 04:04 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை விரிவுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சகல பிரதேச சபைகள் ஊடாக நிதியத்தின் நிவாரணத்தை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிப்பதற்கும் பிரதேச சபைகள் ஊடாக குறித்த விண்ணப்பதாரிகளுக்கு நிவாரண நிதியத்தை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (5) நடைபெற்ற அமர்வின்போது பிரதமருடனான கேள்வி நேரத்தின்போது ஆளும் தரப்பின் உறுப்பினர் டி.கே. ஜயசுந்தர முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் பதிலளித்ததாவது, ஏழ்மை ஒழிப்பு, கல்வி மற்றும் மத மேம்பாடு மற்றும் நாட்டுக்கு சேவையாற்றிய தரப்பினருக்கு நிவாரணமளித்தல் மற்றும் நலன்புரி சேவைகளுக்காக ஜனாதிபதி நிதியம் உருவாக்கப்பட்டது. 1978ஆம் ஆண்டு 07ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் நிதியத்தின் தலைவராக ஜனாதிபதியும் நிர்வாக சபையின் உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர். ஜனாதிபதி நிதியத்தின் சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கமைய சகல பிரதேச சபைகள் ஊடாக நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு நிகழ்நிலை முறைமை ஊடாக விண்ணப்பம் செய்வதற்கும், பிரதேச சபைகள் ஊடாக நிவாரண நிதியை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு புதிய கணினி கட்டமைப்பு உருவாக்கப்பட்டு அரச உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் நலனை கருத்திற்கொண்டே ஜனாதிபதி நிதியம் உருவாக்கப்பட்டது. ஆனால், கடந்த கால அரசாங்கங்களில் ஜனாதிபதிகளின் நண்பர்கள் மற்றும் அவர்களுக்கு சார்பான அரசியல்வாதிகளுக்கு மாத்திரமே நிதி வழங்கப்பட்டது. நிதியம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது. இதனை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முறையற்ற வகையில் நிதி பெற்றுக்கொண்டவர்கள் நாட்டுக்கு சேவையாற்றியவர்கள் என்ற அடிப்படையில் நிதி பெற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, இவ்விடயம் குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார். https://www.virakesari.lk/article/205857
-
கடன் மறுசீரமைப்பு; ஜப்பான், ஜைக்காவுடன் திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட அரசாங்கம் தீர்மானம்
Published By: DIGITAL DESK 7 05 FEB, 2025 | 05:21 PM (எம்.மனோசித்ரா) வெளிநாட்டுக் கடன் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்கமைய இலங்கை, ஜப்பான் அரசாங்கங்களுக்கும் இடையிலான பரிமாற்றுப் பத்திரம் மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை நிறுவகத்திற்கும் (ஜைக்கா) நிறுவனத்துக்கும் இடையிலான திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை அரசால் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் கடன் மீள்கட்டமைப்புக் கலந்துரையாடல்களைப் பூர்த்தி செய்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்ட பின்னர், ஜப்பான் அரசுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கமைய, அந்நாட்டு அரசுடன் கடன் மீள்கட்டமைப்பு செயன்முறையைப் பூர்த்தி செய்வதற்கான பரிமாற்றுப் பத்திரம் மற்றும் திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்பட வேண்டியுள்ளது. கையொப்பமிடப்பட வேண்டிய குறித்த ஆவணங்களுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய, ஜப்பான் அரசுடன் பரிமாற்றுப் பத்திரம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை நிறுவகத்துடனான திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/205881
-
எவரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டு செயற்பட முடியாது - அர்ச்சுனாவை நோக்கி சபாநாயகர் தெரிவிப்பு
அர்ச்சுனா எம்.பி.க்கு தலையில் பிரச்சினை; தயாசிறியின் பேச்சால் சபையில் சலசலப்பு இராமநாதன் அர்ச்சுனாவின் தலையில் பிரச்சினை என்றும், அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து நாடாளுமன்றில் சாசலப்பு ஏற்பட்டது. கடந்த 29 ஆம் திகதி அநுராதபுரம் பகுதியில் வைத்து திட்டமிட்ட வகையிலேயே என்னை போக்குவரத்து பொலிஸார் மறித்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். மேலும், கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெறவிருந்த நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக வந்து கொண்டிருந்த போதே இவ்வாறு பொலிஸார் மறித்து விசாரணை நடத்தினர். எனது, வாகனத்தில் விஐபி விளக்குகள் போடப்பட்டிருந்ததாக தெரிவித்து அவர்கள் என்னை மறித்தார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இதன்போது சுட்டிக்காட்டினார். இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் உரையை இடைநிறுத்திய சபாநாயகர் நீங்கள் ஆங்கிலத்தில் உரையாற்றவுள்ளதாக அறிவித்திருந்தீர்கள் எனவே தமிழில் அல்லாமல் ஆங்கிலத்தில் உரையாற்றுங்கள் என அறிவித்த பின்னர் தனது உரையை ஆங்கிலத்தில் ஆற்றியமை குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் உரையாற்றிய அர்ச்சுனா, “தன்னை அநுராதபுரம் பகுதியில் வைத்து பொலிஸார் மறித்ததாகவும், தனது அடையாள அட்டையை கேட்டதாகவும், தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் என்னுடைய அடையாள அட்டை நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது, நாடாளுமன்றத்தால் தரப்பட்ட தற்காலிக அட்டை என்னிடம் உள்ளது என்று அதனைக் காட்ட முற்பட்டும் அந்த போக்குவரத்து பொலிஸார் அதனை ஏற்க மறுத்துவிட்டதாக கூறினார். இதனையடுத்து, குறுக்கிட்ட சபாநாயகர், அர்ச்சுனா எம்.பியைப் பார்த்து “உங்களுடைய அடையாள அட்டை நாடாளுமன்ற அலுவலகத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் தான் பெற்றுக் கொள்ள தவறியுள்ளீர்கள் என சுட்டிக்காட்டினார். இதனையடுத்து மீண்டும் உரையாற்ற ஆரம்பித்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் அநுராதபுரத்தில் வைத்து இடைமறிக்கப்பட்ட பின்னர், தனக்கும் பொலிஸாருக்கும் இடையில் நடந்த உரையாடலை பொலிஸார் பதிவு செய்து அதனை ஊடகங்களில் வெளியிட்டதாகவும், பொலிஸாரின் இந்த செயல் வெட்கப்பட வேண்டிய ஒன்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற காரணத்தினால் இவ்வாறு பொலிஸார் பதிவு செய்து ஊடகங்களில் வெளியிட்டதாகவும் கூறினார். இந்த நாடாளுமன்றம் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோர் இது தொடர்பில் வெட்கப்பட வேண்டும் என்றும் சபையில் மீண்டும் மீண்டும் சத்தமாக தெரிவித்தார் இதன்போது, இடையில் குறுக்கிட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு உரையாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது, சபையைப் பார்த்தும், சபாநாயகரைப் பார்த்தும் இவ்வாறு உரையாற்றுவதை இந்த சபை எப்படி அனுமதிக்கின்றது என்றும், இங்கு பாகுபாடு இல்லை என்றும் கடும் தொனியில் பேசினார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு தலையில் பிரச்சினை என்றும் தயாசிறி சுட்டிக்காட்டினார். இதனையடுத்து, உரையாற்றிய சபாநாயகர், நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது, எனவே அது சாதாரண மனிதர் என்றாலும், எம்.பியாக இருந்தாலும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் அவ்வாறே பின்பற்றப்படும். இதில் பாகுபாடு இல்லை என அறிவித்ததுடன், அர்ச்சுனா எம்.பி சபையில் கூறிய தகாத வார்த்தைகள் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்படும் என்றும் அறிவித்தார். எவ்வாறாயினும், சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, இந்த உரைகளை ஹன்சாட்டில் இருந்து நீக்குவதால் பயனில்லை என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பிரபல யூடியூபர் என்றும், அவர் உரையாற்றும் இந்த நேரத்திலேயே அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டிருக்கும் என்றும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/315139
-
ஈஸ்டர் தாக்குதல் வழக்கு; கோத்தாபய கைதாவார்- முன்னாள் அமைச்சர் கம்மன்பில ஆருடம்
கோட்டாபய கைது செய்யப்படுவார் என்பதை கம்மன்பில எவ்வாறு அறிவார்? - அமைச்சரவை பேச்சாளர் கேள்வி 05 FEB, 2025 | 05:20 PM (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் யாரை எப்போது கைது கைது செய்வது என்பதை விசாரணைகளை முன்னெடுப்பவர்களே தீர்மானிப்பர். அவ்வாறிருக்கையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்படுவார் என்பதை கம்மன்பில முன்கூட்டியே ஊகித்திருக்கின்றார் என்றால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலும் அவர் முன்னரே அறிந்திருக்கின்றார் என்று தோன்கிறது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நேற்று செவ்வாய்கிழமை (04) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்படுவாரா என்பது எமக்குத் தெரியாது. அது விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரிவினரின் கடமையாகும். அவை அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படுபவையல்ல. விசாரணை முன்னெடுக்கும் திணைக்களங்கள் கூறினால் மாத்திரமே நாமும் அறிவோம். எனவே யார் எப்போது கைது செய்யப்படுவார் என்பது எமக்குத் தெரியாது. அவ்வாறிருகையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய கைது செய்யப்படுவார் என்பதை கம்மன்பில எவ்வாறு அறிவார் என்பதும் எமக்கு தெரியாது. ஒருவேளை அவருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அனைத்தும் தெரிந்திருக்கலாம். அதனால்தான் யார் கைது செய்யப்படப் போகின்றார்கள் என்பதை முன்கூட்டியே கூறுகின்றார் என்றார். https://www.virakesari.lk/article/205889
-
ரி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி ராஷித் கான் புதிய சாதனை
05 FEB, 2025 | 01:38 PM (நெவில் அன்தனி) சகலவிதமான ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தானின் சுழல்பந்துவீச்சு நட்சத்திரம் ராஷித் கான் நிலைநாட்டியுள்ளார். தென் ஆபிரிக்காவில் தற்போது நடைபெற்றுவரும் SA20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் கேப் டவுன் அணிக்காக விளையாடிவரும் ராஷித் கான், பார்ல் றோயல்ஸ் அணி வீரர் துனித் வெல்லாலகே கேயை ஆட்டம் இழக்கச் செய்ததன் மூலம் 632ஆவது ரி20 விக்கெட்டைக் கைப்பற்றி புதிய சாதனை நிலைநாட்டினார். MI கேப் டவுன் அணியின் தலைவரான ராஷித் கான் அப் போட்டியில் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். அத்துடன் இதுவரை 461 ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ராஷித் கான் 633 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் மேற்கிந்தியத் தீவுகளின் ட்வேன் ப்ராவோவுக்கு இதுவரை சொந்தமாக இருந்த 632 ரி20 விக்கெட்கள் என்ற சாதனை ராஷித் கானினால் முறியடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு மகத்தான சாதனை எனவும் இதனையிட்டு பெரு மகிழ்ச்சி அடைவதாகவும் ராஷித் கான் தெரிவித்துள்ளார். பத்து வருடங்களுக்கு முன்னர் யாராவது ரி20 பந்துவீச்சில் சாதனை படைப்பீர்களா என என்னிடம் கேட்டிருந்தால், நான் அப்படி நினைக்கவில்லை என்றுதான் கூறியிருப்பேன் என்றார் ராஷித் கான். 'நீங்கள் பத்து வருடங்களுக்கு முன்னர் நான் சாதனை நிலைநாட்டுவேனா என கெட்டிருந்தால், நான் அப்படி நினைக்கவில்லை என்றுதான் பதிலளித்திருப்பேன். ஆப்கானிஸ்தானியனாக இந்த சாதனையை நிலைநாட்டியது பெருமை தருகிறது. ரி20 பந்துவீச்சாளர்களில் ட்வேன் ப்ராவோ மிகச் சிறந்த பந்துவீச்சாளர் ஆவார். அவரது சாதனையை முறியடித்தது பெருமை தருகிறது. எனது சாதனைகளை தொடர்வேன்' என ராஷித் கான் மேலும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/205856
-
சந்தோஷ் ஜா - மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் வைத்து புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/315130
-
இலங்கை - அவுஸ்திரேலிய வோர்ன் - முரளி டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்
முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியினைத் தழுவிய இலங்கை வீரர்கள் சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு, இரு போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்துள்ளது. காலியில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (31) மழையின் காரணமாக நிறைவுக்கு வந்த நிலையில், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி வந்த இலங்கை அணி 136 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. இலங்கை அணி சார்பில் களத்தில் நின்ற தினேஷ் சந்திமால் 63 ஓட்டங்களை பெற்றிருக்க, குசல் மெண்டிஸ் 10 ஓட்டங்களை எடுத்திருந்தார். இன்று போட்டியின் நான்காம் நாளில் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தினை தொடர்ந்த இலங்கை அணியினர் குறுகிய இடைவெளிகளில் தம்முடைய எஞ்சிய விக்கெட்டுக்கள் அனைத்தினையும் பறிகொடுத்து 52.2 ஓவர்களுக்கு 165 ஓட்டங்கள் மாத்திரம் பெற்றனர். இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பாக தினேஷ் சந்திமால் அதிகபட்சமாக 09 பௌண்டரிகளுடன் 72 ஓட்டங்கள் பெற்றார். ஆஸி. பந்துவீச்சில் மெதிவ் குஹ்னமேன் 63 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சாய்க்க, நதன் லயன் 3 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் பெற்ற ஓட்டங்கள் போதாது என்கிற காரணத்தினால் அவர்கள் மீண்டும் பலோவ் ஒன் முறையில் மீண்டும் ஆடப்பணிக்கப்பட்டதோடு, இரண்டாம் இன்னிங்ஸிலும் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 54.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 242 ஓட்டங்கள் பெற்று போட்டியில் படுதோல்வி அடைந்தனர். இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் சார்பாக ஜெப்ரி வன்டர்செய் தன்னுடைய கன்னி டெஸ்ட் அரைச் சதத்தோடு 47 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் அஞ்செலோ மெதிவ்ஸ் 41 ஓட்டங்கள் பெற்றார். அவுஸ்திரேலிய பந்துவீச்சில் மீண்டும் சிறப்பாக செயற்பட்ட மெதிவ் குஹ்னமென் மற்றும் நதன் லயன் ஜோடி தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தது. போட்டியின் ஆட்டநாயகனாக உஸ்மான் கவாஜா தெரிவானார். போட்டியின் சுருக்கம் RESULT Sri Lanka 165/10 (52.2) & 247/10 (54.3) Australia 654/6 (154) AUSTRALIA WON BY AN INNINGS AND 242 RUNS Updated at 03:18 PM 2025-02-01 https://www.thepapare.com/australia-tour-of-sri-lanka-2025-1st-test-day-04-report-tamil/
-
எட் ஷீரன்: திக்குவாய் பிரச்னையை கடந்து, 600 கோடி பார்வைகளை பெற்று இசையில் சாதித்த இவர் யார்?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எட் ஷீரன் கட்டுரை தகவல் எழுதியவர், ஜெ.பஷீர் அஹமது பதவி, பிபிசி தமிழுக்காக அண்மைக் காலமாக இந்தியாவில் சர்வதேச இசைக் கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்தும் நிகழ்வு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் எட் ஷீரனின் இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளது. தனது பாடல்கள் மூலம் உலக அளவில் ரசிகர்களைக் கொண்டிருக்கும் 33 வயதான எட் ஷீரன், சென்னையில் தனது இசை நிகழ்ச்சியை பிப்ரவரி 5ஆம் தேதி நடத்துகிறார். சமீபத்திய ஆண்டுகளில் உலகளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட பிரபல இசைக் கலைஞர் சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்துவது இதுவே முதல்முறை. இந்தியாவில் கான்செர்ட் பொருளாதாரம் உலகளாவிய சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஸ்டாடிஸ்டா(statista), "இந்திய இசைத்துறையின் மதிப்பு 2021ஆம் ஆண்டு 1900 கோடி ரூபாயாக இருந்தது. 2026ஆம் ஆண்டுக்குள் 3700 கோடி ரூபாயாக உயரும்", என மதிப்பிடுகிறது. அண்மையில் ஆமதாபாத்தில் நடைபெற்ற கோல்ட் ப்ளே(Cold Play) கான்செர்ட்(இசை நிகழ்ச்சி) குறித்து கருத்து தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, "இசை, நடனம் மற்றும் கதை சொல்லுதல் ஆகியவற்றில் வளமான பாரம்பரியத்தைக் கொண்டது இந்தியா. இசை நிகழ்ச்சிகளுக்கான மிகப்பெரிய நுகர்வோர் தளம், அதிக அளவில் இளைஞர்கள் இருப்பதால் கான்செர்ட் பொருளாதாரத்துக்கு பரந்த வாய்ப்புகள் உள்ளன. கோல்ட் ப்ளே கான்செர்ட் இந்தியாவில் லைவ் நிகழ்ச்சிகளுக்கு எவ்வளவு வாய்ப்பு உள்ளது என்பதற்கு சிறந்த சான்றாகும்," என்றார். இந்தியாவில் கான்செர்ட் பொருளாதாரம் வளர்ந்து வந்தாலும், மிகப்பெரிய இசை நிகழ்ச்சிகளை நடத்தும் அளவுக்கு வெளிநாடுகளில் உள்ளது போல அரங்கம் இந்தியாவில் இல்லை என்ற கருத்து சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படுகிறது. அண்மையில் பாடகர் தில்ஜித் டெல்லி மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் நடத்திய இசை நிகழ்ச்சிக்கு பிறகு, அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று ரசிகர்கள் தெரிவித்தனர். டெல்லியில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சிக்கு பயன்படுத்திய விளையாட்டு மைதானம், சேதமானது குறித்து தடகள வீரர் ஒருவர் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார். சென்னையில் இசை நிகழ்ச்சி பற்றி ரசிகர்கள் கூறுவது என்ன? உலகம் முழுவதும் தனது ரசிகர்களுக்காக இசை நிகழ்ச்சி நடத்தி வரும் எட் ஷீரன், இந்தியாவில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார். சென்னை உட்பட இந்தியாவின் சில நகரங்களில் தனது இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இதற்கு முன்பாக மும்பையில் எட் ஷீரன் தனது இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். எட் ஷீரனின் இசை நிகழ்ச்சிக்கு(கான்செர்ட்) செல்ல டிக்கெட் வாங்கியுள்ள சென்னையைச் சேர்ந்த நஜீலா பிபிசி தமிழிடம் பேசினார். "2014 முதல் வெஸ்டெர்ன் பாடல்களை கேட்டு வருகிறேன். எட் ஷீரன் பாடல் மிகவும் பிடிக்கும். அவரது பாடல்கள் மெதுவான இசையில் மெலடியாகவும் உணர்வுப் பூர்வமாகவும் இருக்கும். அவரது பாடல் வரிகள் எல்லோரையும் இணைக்கும்படி இருக்கும். குறிப்பாக அவரது போட்டோகிராஃப் பாடல் நான் தினமும் கேட்கும் பாடல். இதற்கு முன் கான்செர்ட்களில் நான் பங்கேற்றதில்லை. இந்த கான்செர்ட்டுக்காக ஆர்வமாக காத்திருக்கிறேன்." என்றார் ராம்குமார் என்ற ரசிகர் பிபிசியிடம் பேசும் போது, "பெரும்பாலும் மும்பையில்தான் இது போன்ற இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற எட் ஷீரன் நிகழ்ச்சிக்கு செல்ல முடிவெடுத்தோம். ஆனால், ஆரம்பத்தில் குறிப்பிட்ட கட்டணத்தை மிகவும் அதிகப்படுத்திவிட்டனர். விமான கட்டணமும் அதிகமாக இருந்தது என்பதால் செல்லவில்லை. இப்போது சென்னைக்கே எட் ஷீரன் வருகிறார் என்பதால் இதை தவறவிடக் கூடாது என செல்கிறேன்," என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES யார் இந்த எட் ஷீரன் இணையத்தில், உலகளவில் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் 10 வீடியோக்கள் என்ன என்று தேடினால் அதில் எட் ஷீரனின் பாடல் இடம்பெற்று இருக்கும். பல நூறு கோடி பார்வைகளைப் பெற்ற ஷேப் ஆஃப் யூ (Shape Of You) என்ற பாடல் மூலம் இசை உலகில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை எட் ஷீரன் ஏற்படுத்தியுள்ளார். எட் ஷீரன் 1991 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி பிரிட்டனில் பிறந்தவர். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்கன் இன்ஸ்டியூட் ஃபார் ஸ்டட்டரிங் என்ற அமைப்பின் 9-ஆவது ஆண்டு விழாவின் போது எட் ஷீரனுக்கு விருது ஒன்று வழங்கப்பட்டது. அப்போது அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "எனக்கு பிறக்கும்போதே உடலில் பல்வேறு குறைபாடுகள் இருந்தன. மேலும் எனது முகத்தில் இருந்த மச்சத்தை (Birthmark) நீக்க லேசர் சிகிச்சை செய்யப்பட்டது. மயக்க மருந்து கொடுக்காமல் எனக்கு இந்த சிகிச்சை செய்யப்பட்டதால் புதிய சிக்கல் உருவானது. அதன் பின்விளைவாக எனக்கு பேசுவதில் சிரமம் ஏற்பட்டு, 'திக்குவாய்' பிரச்னை ஏற்பட்டது. மேலும் எனது ஒரு பக்க காதிலும் கேட்கும் குறைபாடு இருந்தது. பள்ளிப்பருவத்திலேயே எனக்கு பார்வைத்திறனில் குறைபாடு இருந்ததால் பெரிய கண்ணாடி அணிய வேண்டியிருந்தது. இத்தனை பிரச்னைகள் இருந்தபோதிலும் எனக்கு சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் மிகவும் இருந்தது. ஆகவே திக்குவாய் பிரச்னை எனக்கு மிகவும் குறைந்தபட்ச பிரச்னையாகவே இருந்தது" என்றார். கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்?4 பிப்ரவரி 2025 தமிழ்நாடு: நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஜிபிஎஸ் நோயால் 9 வயது சிறுவன் உயிரிழப்பு - நாளிதழ்களில் முக்கிய செய்திகள்4 பிப்ரவரி 2025 தடையாக இருந்த 'திக்குவாய்' பிரச்னை பட மூலாதாரம்,GETTY IMAGES "பேசும் போது வார்த்தைகளை உச்சரிப்பில் பிரச்னை இருந்தநிலையில், அதனை மீறி எப்படி பாடுவது என்று யோசித்து அதற்காக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொண்டேன். ஸ்பீச் தெரபி, ஹோமியோபதி என சிகிச்சை முறைகளையும் எடுத்திருக்கிறேன். ஆனால் அவை எதுவும் எனக்கு பலன் தரவில்லை. சிறு வயதில் இருந்தே எனக்கு இசை மீது ஆர்வம் இருந்தது, குறிப்பாக ராப் இசை. எனது தந்தை எனக்கு ராப் இசைப்பாடகர் எமினெமின் (Eminem) பாடல்களின் இசைத்தொகுப்பு கேசேட்களை வாங்கி கொடுத்தார். அப்போது எனக்கு 9 வயதுதான் ஆகியிருந்தது. அதில் இருந்த அனைத்து பாடல்களையும் முழுமையாக மனப்பாடம் செய்து அதே போல பாட முயற்சி செய்தேன். இது எனது திக்கிப் பேசும் பிரச்னையை தீர்க்க உதவியாக இருந்தது", என்றும் எட் ஷீரன் அந்த நிகழ்ச்சியின் பேசினார். இளமைப் பருவத்தில் எமினெம் பாடல்களை மனப்பாடம் செய்து பாடிய இவர், பிற்காலத்தில் எமினெம் உடன் ஒரே மேடையில் பாடவும் செய்தார். பாடல்கள் பாடுவதோடு இவர் கிட்டார் போன்ற இசைக்கருவிகளையும் இசைப்பார். கனடா, சீனாவுக்கு எதிரான டிரம்பின் முடிவால் அமெரிக்காவுக்கு என்ன இழப்பு ஏற்படும்? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?3 பிப்ரவரி 2025 ஜப்பான்: சாலையில் தீடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த லாரி - 7 நாட்களாக ஓட்டுநரை தேடும் பணி தீவிரம்3 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எமினெமுடன் எட் ஷீரன் வைரலான பாடல்கள் இசை தொழில் முனைவோரான ஜமால் எட்வர்ட்ஸ் என்பவர் எஸ்பி டிவி மீயூசிக் (SBTV: Music) என்ற தனது யூட்யூப் சேனலில் 2010ஆம் ஆண்டு எட் ஷீரனை பாடவைத்தார். அவர் பாடிய You Need Me, I Don't Need You பாடல் அப்போது மிகப்பெரிய அளவில் வைரல் ஆக எட் ஷீரன் குறித்து பலரும் பேசத் தொடங்கினர். அதனைத்தொடர்ந்து, + (Plus), X (Multiply), ÷ (Divide), No.6 Collaborations Project, = (Equals) ஆகிய பல இசை ஆல்பங்களை எட் ஷீரன் வெளியிட்டார். இந்த ஆல்பங்கள் மூலம் உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உருவாகினர். பட மூலாதாரம்,GETTY IMAGES எட் ஷீரனுக்கு கணிதத்தில் ஆர்வமா? இந்தக் கேள்விக்கு எட் ஷீரனே ஒரு தனியார் யூட்யூப் சேனலின் நேர்காணலில் விடை சொல்கிறார். "நான் எனது இசை வாழ்க்கையின் ஆரம்பக் காலத்திலேயே ஒரு முடிவு எடுத்தேன். ஆல்பம் போஸ்டரில் என்னுடைய படம் இடம்பெறுவதை நான் விரும்பவில்லை. அதனால் ஆல்பத்தின் போஸ்டர் ஒரு கலர் மற்றும் ஒரு அடையாளக் குறியுடன் இருக்கும்படி அதை அமைத்தேன்," என்கிறார். 600 கோடி பார்வைகள் கடந்து சாதனை இவரது ஷேப் ஆஃப் யூ என்ற பாடல் இதுவரை 600 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து யூட்யூப் தளத்தில் அதிக பார்வைகளை பெற்ற வீடியோக்கள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. எட் ஷீரனின் பல பாடல்கள், யூட்யூபில் 100 கோடி பார்வைகளை கடந்துள்ளன. பெர்ஃபெக்ட், திங்கிங் அவுட் லௌட், போட்டோகிராஃப் போன்றவை இவரது ஹிட் பாடல்கள் ஆகும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cvgl5657d27o
-
ரொனால்டோ: உலகின் சிறந்த கால்பந்து வீரரா? தமிழக, கேரள கால்பந்து ரசிகர்கள் சொல்வது என்ன?
படக்குறிப்பு, ஃபீரி கிக், பெனால்டி என கோல் அடிக்க கிடைக்கும் வாய்ப்பின் முன்பு மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டு மிகுந்த கவனத்துடன் கோல் கம்பத்தை நோக்கி ரொனால்டோ பந்தை செலுத்துவார் கட்டுரை தகவல் எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆட்டத்தின் 88வது நிமிடம் அது. 2-3 என்ற கோல் கணக்கில் பின் தங்கியிருந்த அணிக்கு, பெனால்டி பாக்ஸ்க்கு வெளியே ஃபீரி கிக் வாய்ப்பு கிடைத்தது. துளியும் தவறின்றிச் செயல்பட்டு தோல்வியைத் தவிர்க்க வேண்டிய கட்டாயம் அந்த வீரனிடம் இருந்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்களின் இதயத் துடிப்பு அதிகரித்த அந்தத் தருணத்தில் ஆழ்ந்து மூச்சை இழுத்து விடுகிறான் அந்த வீரன். எதிரில் நிற்கும் ஆறு தடுப்பாட்ட வீரர்களையும் ஏமாற்றி வளைந்து சென்று, கோல் கீப்பரை கடந்து யாராலும் தொட முடியாதபடி அந்தப் பந்து வலைக்குள் நுழைந்து கோலானது. அடுத்த நொடி ஓடிச்சென்று காற்றில் பறந்தபடி 180 டிகிரி சுற்றித் தரையிறங்கும்போது தனது இரண்டு கைகளையும் மேலிருந்து கீழே இறக்கி ஸ்பானிஷ் மொழியில் 'ஷ்ஷியூ' என்று சொல்லித் தனது கொண்டாட்டத்தை நிறைவு செய்த அந்தத் தருணம் நவீன கால்பந்து தருணங்களில் முக்கியமானவற்றில் ஒன்று. இது ஆதிக்கம் மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்று கால்பந்து வர்ணனையாளர்கள் கூறுவார்கள். ஸ்பெயின் அணிக்கு எதிராக அந்த கோலை அடித்தவர், போர்ச்சுகல் அணியின் கேப்டனும், முன்கள ஆட்டக்காரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ. கடந்த 2018ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அடித்த அந்த கோல், ரொனால்டோவின் கிளாசிக் கோல்களில் ஒன்று. யமால்: மெஸ்ஸியின் கையில் தவழ்ந்த குழந்தை, 16 ஆண்டுக்குப் பிறகு கால்பந்து உலகை வியக்கவைக்கும் பின்னணி பெனால்டி தவறியதால் மைதானத்தில் கண்ணீர்விட்ட ரொனால்டோ சௌதி அரேபியாவில் பெரும் பணத்துடன் புதிய வரலாறு படைக்கும் ரொனால்டோ 'மெஸ்ஸி' என உலகம் உச்சரிக்கும் இந்த கால்பந்து மாயாவி கடந்து வந்த பாதை 'GOAT' போட்டி ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 5ஆம் தேதி போர்ச்சுகல் வீரர் ரொனால்டோவின் பிறந்த நாளின்போதும், ஜூன் 24ஆம் தேதி அர்ஜென்டினா வீரர் லியோனெல் மெஸ்ஸி பிறந்த நாளின்போதும் சமூக ஊடகங்களில் முக்கியமான ஒரு விவாதம் கிளம்பும். கால்பந்து உலகில் தற்போது விளையாடி வரும் முக்கியமான இந்த இரண்டு வீரர்களில் யார் சிறந்த வீரர் என்பதுதான் அந்த விவாதம். கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்(GOAT - Greatest of All of Time) யார் என்பதை இருவரது ரசிகர்களும் புள்ளி விவரங்களை முன்வைத்து விவாதம் செய்வார்கள். கேரளாவை சேர்ந்த ஜோஸ் மேத்யூவுக்கு, ரொனால்டோதான் 'கோட்'. "முன்கள ஆட்டக்காரரான ரொனால்டோதான் உலகிலேயே 923 கோல் அடித்து இன்னும் விளையாடி வரும் ஒரே வீரர். அதனால் அவரைவிடச் சிறந்த கால்பந்து வீரர் யாரும் இல்லை" என்கிறார் அவர். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மெஸ்ஸி ரசிகரான தாரிணி, இதற்குப் பதிலடி கொடுக்கும் தரவுகளை முன்வைக்கிறார். படக்குறிப்பு, சிறந்த கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் பேலோன் டோர் விருதை ரொனால்டோ 5 முறை வென்றுள்ளார் "ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக தேசிய அணிக்காகவும், கிளப் அணிகளுக்காகவும் விளையாடி மெஸ்ஸி 850 கோல்கள் அடித்துள்ளார். அத்துடன் 379 முறை அசிஸ்ட் செய்து மற்றவர்கள் கோல் அடிக்கவும் மெஸ்ஸி உதவியுள்ளார். ஆனால் ரொனால்டோவின் அசிஸ்ட் கவுன்ட் 257 மட்டுமே. அவரைவிட இரண்டு வயது இளையவரான மெஸ்ஸியால் அடுத்த சீசனுக்குள் ரொனால்டோவின் கோல் சாதனையை முறியடிக்க முடியும்" என்கிறார் தாரிணி. இதைவிட நுணுக்கமான பல தரவுகளை முன்வைத்து உலகம் முழுவதும் உள்ள இருவரது ரசிகர்களும் யார் சிறந்த வீரர் என்று விவாதிக்கின்றனர். இருவரில் யார் GOAT என்ற விவாதம் எழுந்தபோது ரொனால்டோ பற்றி, லியோனெல் மெஸ்ஸி சொன்ன வார்த்தைகள் இவை. "கிறிஸ்டியானோ உடனான போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்தது, அது வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். இதை இருவரது ரசிகர்களும் விரும்புகின்றனர். அவர் எப்போதும் என்னை ஒரு சிறந்த வீரராக இருக்கத் தூண்டினார், நானும் அவருக்கு அப்படி ஒரு தூண்டுதலாக இருந்தேன் என்று நினைக்கிறேன்." செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களான ChatGPT, Deepseek AI ஆகிய தேடுபொறிகளிடம் யார் சிறந்த கால்பந்து வீரர் என்ற கேள்வியைக் கேட்டபோது, "மெஸ்ஸி, ரொனால்டோ இருவருமே சிறந்தவர்கள். ஆனால் சில தரவுகளின் அடிப்படையில், ரொனால்டோவைவிட மெஸ்ஸி இந்தப் பந்தயத்தில் முந்துகிறார்" என்று இரண்டும் ஒரே மாதிரியான பதிலை அளித்தன. அதற்கு அடித்தளமாக இரண்டு சாட்பாட்களும் சுட்டிக்காட்டிய தரவுகளில் ஒன்று பேலோன் டோர் விருதின் எண்ணிக்கை. ஆனால் மற்றொன்று மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வென்ற கால்பந்து உலகக்கோப்பையைச் சுட்டிக்காட்டியது. அமெரிக்கா: பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்க தடை விதிக்கும் டிரம்ப் - பிற நாடுகளில் என்ன நிலை?5 மணி நேரங்களுக்கு முன்னர் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: வாக்குப் பதிவு தொடக்கம்29 நிமிடங்களுக்கு முன்னர் உலகக்கோப்பை எனும் அங்கீகாரம் படக்குறிப்பு, கடந்த ஆண்டு நடந்த யூரோ கோப்பை தொடரில் ஸ்லோவேனியாவுக்கு எதிரான பெனால்டி வாய்ப்பைக் கோட்டைவிட்ட பிறகு ரொனால்டோ மைதானத்திலேயே உணர்ச்சி பெருக்கெடுத்து அழுதார் ஆம், தனது 18 வயது முதல் போர்ச்சுகல் அணிக்காக முன்கள ஆட்டக்காரராகத் தொடங்கி அணியின் கேப்டன் பொறுப்பு வரை பல்வேறு விதங்களில் பங்கு வகித்துள்ள கிறிஸ்டியானோவுக்கு, ஃபிஃபாவின் உயரிய கோப்பையான உலகக்கோப்பை மட்டும் கைக்கு எட்டவில்லை. போர்ச்சுகல் அணிக்காக யூரோ கோப்பை உள்படப் பல கோப்பைகளை ரொனால்டோ வென்றுள்ளார். ஆனால் அந்த அணியால் தற்போது வரை உலகக்கோப்பையை வெல்ல முடியாதது ரொனால்டோவின் சாதனை மகுடத்தை முழுமை அடையச் செய்யாமல் உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு மொராக்கோ அணிக்கு எதிராக நடந்த உலகக்கோப்பை காலிறுதிப் போட்டியில் மாற்று வீரராகக் களமிறங்கி மிகச் சொற்ப நேரமே விளையாடிய ரொனால்டோ கோல் எதுவும் அடிக்காமல் ஆட்டம் முடிவடைந்தது. போர்ச்சுகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அரையிறுதிக்கு முன்னேறியது. கண்களில் கண்ணீருடன் 37 வயதான ரொனால்டோ ஆடுகளத்தில் இருந்து வெளியேறினார். அடுத்த உலகக்கோப்பை வரை ரொனால்டோ தேசிய அணியில் விளையாடுவாரா என்று விளையாட்டு விமர்சகர்கள் கேள்வியெழுப்பும் நிலையில், ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு இன்னும் நிறைவேறாமல் உள்ளது. உலகையே வியக்க வைக்கும் வகையில், முன்கள ஆட்டத்தால் எதிரணியைத் தடுமாறச் செய்தாலும், சொந்த நாட்டு மக்களுக்காக கால்பந்து உலக்கோப்பையை அவரால் வெல்ல முடியாமல் இருப்பதில் அவரது ரசிகர்களுக்கு சற்று வருத்தம்தான். கேரளாவை சேர்ந்த அருண்லால் பிபிசியிடம் பேசும்போது, உலகின் தலைசிறந்த வீரர் ரொனால்டோ என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் தனக்கு இல்லை என்றார். அதோடு, "உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணியின் வெற்றிக்கு மெஸ்ஸி மட்டுமின்றி டி மரியா, எமி மார்ட்டினஸ் என நட்சத்திரப் பட்டாளமே உதவியது. ஆனால் போர்ச்சுகல் அணியில் ரொனால்டோ மீது அழுத்தம் அதிகமாக உள்ளது. ஒரு தனி நபரால் உலகக்கோப்பையை வெல்ல முடியாது," என்றார். எட் ஷீரன்: சென்னை வருவது ஏன்? திக்குவாய் பிரச்னையை கடந்து இசையில் சாதித்த இவர் யார்?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமலுக்கு வந்த அமெரிக்காவின் வரி விதிப்பு - சீனாவின் பதிலடி என்ன?4 பிப்ரவரி 2025 தொலைக்காட்சி நேர்காணல் இந்த ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி தனது 40 வயதை நிறைவு செய்யும் ரொனால்டோவை, எல் சிரிங்கீதோ எனும் ஸ்பானிய தொலைக்காட்சி நேர்காணல் கண்டது. "உங்களுக்கு வேண்டுமானால் மெஸ்ஸி, மாரடோனா, பீலே ஆகியோரைப் பிடிக்கலாம். அவர்கள் சிறந்த வீரர்கள் என்று கூறலாம். ஆனால் உலகிலேயே நான்தான் முழுமையான கால்பந்து வீரன்," என்றார் ரொனால்டோ. அந்த நேர்காணலின்போது, அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் தான் முன்னிலையில் இருப்பதாக அவர் கூறினார். "தலையில் முட்டி கோல் அடிப்பது, ஃபிரீ கிக், இடது காலால் கோல் அடிப்பது என கால்பந்தின் அனைத்து அம்சங்களிலும் நான் சிறந்து விளங்குகிறேன். என்னைவிடச் சிறந்த ஒரு வீரரை நான் பார்த்தில்லை. இதை என் இதயத்தில் இருந்து கூறுகிறேன்" என்று கூறியிருந்தார். அதோடு, தன்னால் இன்னும் சில காலம் வரை கால்பந்து விளையாட முடியும் என்றும், ஆயிரம் கோல்களை விரைவிலேயே அடிக்கப் போவதாகவும் ரொனால்டோ அந்த நேர்காணலில் கூறியிருந்தார். தோல் புற்றுநோய்: ஏற்படுவது ஏன்? தடுப்பதற்கான வழி என்ன? மருத்துவர்கள் விளக்கம்5 மணி நேரங்களுக்கு முன்னர் அபிஷேக் சர்மா: யுவராஜ் சிங் உருவாக்கிய வீரர் சிக்சர்களை பறக்கவிடும் ரகசியம்3 பிப்ரவரி 2025 ஃபிட்னஸ் மீதான காதல் படக்குறிப்பு,கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையின்போது மைன்ஸ் டிகிரி வெப்பநிலையில் ரொனால்டோ 'ஐஸ் பாத்' எடுத்தார் கால்பந்து விளையாடும் பெரும்பாலான வீரர்கள் பலரும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தாலும், ரொனால்டோவின் உடல் அமைப்பை நிர்வகிப்பது குறித்து கால்பந்து உலகை அறிந்தவர்களுக்கு அது எவ்வளவு கடினமானது என்று தெரியும். ரொனால்டோவின் மனைவி ஜார்ஜினா அவரைப் பற்றி இப்படிச் சொன்னார்: "விடுமுறைக்காக வீட்டுக்கு வரும்போதுகூட காலையில் தூங்கி எழுந்து பார்க்கும்போது அவர் ஜிம்மில் பயிற்சி மேற்கொண்டிருப்பார். பல நேரங்களில் என்னையும் அவருடன் உடற்பயிற்சி செய்ய வலியுறுத்துவார். ஆனால் அவரின் வேகத்திற்கு என்னால் ஈடுகொடுக்க முடியாது." தற்போது சௌதியின் அல்-நாசர் அணிக்காக நடுகளத்தில் இருந்து பந்தைக் கடத்திக் கொண்டு முன்களத்துக்குச் செல்லும் அவரது ஓட்டத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் எதிரணி தடுப்பாட்ட வீரர்கள் பல நேரங்களில் திணறுகின்றனர். கடந்த ஆண்டு யூரோ கோப்பையில் விளையாடும்போது ஓர் ஆட்டத்தில் கோல் அடிக்க மணிக்கு 32.7 கி.மீ வேகத்தில் அவர் ஓடினார். "கிறிஸ்டியானோ ஓர் இயந்திரம் போலச் செயல்படுவார். அவர் இந்த வயதிலும் வேகத்தையும் வலிமையையும் தக்க வைத்துக்கொள்வது ஆச்சரியமானது. அவர் ஒரு ஓட்டப்பந்தய வீரராக இருந்திருந்தால் நிச்சயம் அதிலும் சிறந்து விளங்கியிருப்பார்." ரொனால்டோவின் ஃபிட்னஸ் குறித்து இப்படிக் கூறியவர், ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்ற தடகள வீரரான உசைன் போல்ட். விராட் கோலி: ரஞ்சி கோப்பை போட்டியில் க்ளீன் போல்ட் – சாம்பியன்ஸ் கோப்பையில் தொடர வேண்டுமா?31 ஜனவரி 2025 மனித மூளையின் மோசமான நினைவுகளை அழிக்க முடியுமா? எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனை கூறுவது என்ன?3 பிப்ரவரி 2025 சௌதி அரேபியாவும் ரொனால்டோவும் படக்குறிப்பு,அல் நாசர் அணிக்காக இதுவரை 87 கோல்களை ரொனால்டோ அடித்துள்ளார். இங்கிலிஷ் பிரீமியர் லீக், லா லிகா, சீரி ஏ என இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி என ஐரோப்பிய கிளப்புகளில் விளையாடி வந்த கிறிஸ்டியானோ, சௌதி அரேபியாவின் ப்ரோ லீக்கில் விளையாட வருவார் என யாருமே எதிர்பார்க்காத நிலையில், 2022 உலகக்கோப்பை முடிந்ததும் ஒப்பந்தமானார். ஐரோப்பாவின் மேஜர் லீக்கில் விளையாடிய வீரர் ஆசியாவில் கால்பந்து விளையாட வந்தபோது, "ஐரோப்பிய கால்பந்தில் நான் வெற்றிபெற நினைத்த அனைத்தையும் பெற்றது எனது அதிர்ஷ்டம். ஆசியாவில் எனது அனுபவத்தைப் பெற இது சரியான தருணம் என்று உணர்கிறேன்," என்றார் ரொனால்டோ. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அல் நாசர் அணியில் ரொனால்டோ விளையாடி வரும் நிலையில், சௌதி ப்ரோ லீக்கில் 64 கோல்களும், பிற போட்டிகளையும் சேர்த்து அல் நாசர் அணிக்காக 87 கோல்களை அவர் அடித்துள்ளார். இதில் 2023-24 சீசனில் மட்டும் சௌதி அல் நாசர் அணிக்காக 35 கோல்களை அடித்து முன்னிலையில் உள்ளார் ரொனால்டோ. அவரின் வருகைக்குப் பிறகு மேலும் சில ஐரோப்பிய வீரர்கள் சௌதி ப்ரோ லீக்கில் விளையாட வெவ்வேறு அணிகளில் ஒப்பந்தமாகியுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES சௌதி அரேபியா மட்டுமின்றி, கத்தார், துபை போன்ற பிற மத்திய கிழக்கு நாடுகளிலும் ரொனால்டோவின் வருகைக்குப் பிறகு கால்பந்து விளையாட்டின் மீதான் ஆர்வம் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார், சௌதியில் ஆசிரியராக பணியாற்றும் சாஜித் அகமது. "நான் பணியாற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் கால்பந்து விளையாட்டு மீதான ஆர்வம் கடந்த இரண்டு ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. கால்பந்தை முழுநேரமாக விளையாட தொழில்முறை வாய்ப்புகளும் இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்துள்ளது. இதன் பின்னணியில் ரொனால்டோவின் வருகை இருப்பதை நிச்சயம் என்னால் புறந்தள்ள முடியாது," என்று பிபிசியிடம் பேசும்போது தெரிவித்தார். ஐரோப்பிய கால்பந்து கிளப்புகளை ரொனால்டோ விளையாடி வரும் சௌதியுடன் ஒப்பிட்டுப் பலரும் விமர்சித்து வந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபையில் நடைபெற்ற ஒரு விருது விழாவில் பேசிய ரொனால்டோ, பிரான்ஸின் லீக் 1 கால்பந்து தொடரைவிட சௌதியின் கால்பந்து தொடர் சிறந்தது. ஆசியாவின் கடினமான தட்பவெப்ப சூழலுக்கு நடுவே விளையாடுவது சவாலாக இருந்தாலும், சௌதி ப்ரோ லீக்கில் இருக்கும் திறமையான வீரர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர்," என்றார். நாற்பது வயதை ரொனால்டோ நிறைவு செய்திருக்கும் நிலையில், 2026ஆம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிக்கோவில் நடக்கவுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அவர் விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் நிலவுகிறது. கோப்பை வென்று 'தான் GOAT' என்பதை ரொனால்டோ உலகுக்குப் பறைசாற்ற வேண்டும் என்று அவருக்கு எழுதியிருந்த பிறந்தநாள் வாழ்த்தில் ஒரு ரசிகர் தனது விருப்பத்தைப் பகிர்ந்திருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyne8jg6zjo
-
ஜப்பான் துணை அமைச்சர் - பிரதமர் ஹரிணி விசேட சந்திப்பு
05 FEB, 2025 | 11:17 AM ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சர் அகிகோ இகுயினா (Akiko Ikuina) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (4) அலரி மாளிகையில் சந்தித்தார். இச்சந்திப்பு இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தியது. சந்திப்பின்போது இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. இக்கலந்துரையாடலின்போது கடந்த காலங்களில், குறிப்பாக இலங்கையின் மறுசீரமைப்பு திட்டத்துக்காகவும் உலக மற்றும் பிராந்திய சவால்களுக்கு தீர்வு காணும் முயற்சிகளுக்காகவும் ஜப்பானின் ஆதரவுக்காகவும் பிரதமர் நன்றி தெரிவித்தார். கல்வியின் முக்கியத்துவம், குறிப்பாக பாடசாலை மட்டத்திலான தொழிற்பயிற்சிகள் தொடர்பாகவும் இக்கலந்துரையாடலின்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டம் பற்றியும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. மேலும், வெளிப்படைத்தன்மையான ஆட்சி, பொறுப்புக்கூறல் மற்றும் சுற்றுச்சூழலை நிலையாகப் பேணுவதில் மக்களின் ஆதரவு என்பன தொடர்பாகவும் பிரதமர் பல்வேறு விடயங்களை இதன்போது தெரிவித்தார். இச்சந்திப்பில் ஜப்பான் தூதுவர் அகியோ இசோமாட்டாவுடன் (Akio Isomata) ஜப்பானின் உயர் அதிகாரிகள் குழுவினரும், இலங்கை சார்பாக பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்ரி உட்பட உயர் அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/205833
-
இலங்கைக்கு யுஎஸ்எயிட் வழங்கிய நிதியால் 100க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்கள் நன்மையடைந்துள்ளனர் - விசாரணையை கோருகின்றார் நாமல்
Published By: RAJEEBAN 05 FEB, 2025 | 09:56 AM யுஎஸ்எயிட்டின் நிதி உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் குறித்து அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். யுஎஸ்எயிட்டின் திட்டங்கள் மூலம் நன்மையடைந்த அரசசார்பற்ற அமைப்புகளின் விபரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச திட்டங்களில் யுஎஸ்எயிட் அமைப்பின் தலையீடுகள் குறித்து மேற்குலக ஊடகங்கள் எழுப்பியுள்ள கரிசனைகள் குறித்து அவர் சமூக ஊடகத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். மனிதாபிமான உதவிகள் என்ற போர்வையில் உலக நாடுகளில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கு யுஎஸ்எயிட்டின் நிதி பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த சில வருடங்களில் இலங்கைக்கு யுஎஸ்எயிட் பல மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச 100க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும் நன்மையடைந்துள்ளனர் எனினும் இந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதற்கான தெளிவான உரிய கணக்கு வழக்குகள் இல்லை குறிப்பிட்டுள்ளார். அரசசார்பற்ற அமைப்புகளிற்கான நிதிகளை ஒழுங்குபடுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/205827
-
யாழ், கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்
பெரும்பாலான நகரங்களில் சற்று ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்; முகக்கவசம் அணியவும் Published By: DIGITAL DESK 3 05 FEB, 2025 | 09:19 AM நாட்டில் பெரும்பாலான நகரங்களில் இன்று புதன்கிழமை (05) நாள் முழுவதும் சற்று ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம் காணப்படும். அதன்படி, காற்றின் தரக்குறியீடு 85 மற்றும் 128க்கு இடையில் பதிவாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வவுனியா, நுவரெலியா, புத்தளம், முல்லைத்தீவு, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிதமான நிலையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான நிலையிலும், குருநாகல், கண்டி, காலி, இரத்தினபுரி, எம்பில்பிட்டிய, திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் சற்று ஆரோக்கியமற்ற நிலை காணப்பட்டது. அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் வேளைகளில், குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் 1 மணி முதல் 2 மணி வரை காற்றின் தரக் குறியீடு (AQI) ஆரோக்கியமற்று காணப்படும். நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு அடுத்த 24 மணிநேரத்துக்குள் ஒரு நல்ல நிலைக்கு மேம்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எல்லை கடந்து வரும் மாசுபட்ட காற்று சுற்றோட்டத்தினால் நாடு முழுவதும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் சில நாட்களுக்கு அதிகரிக்கலாம். காற்றின் தரம் குறைவதால், முகக்கவசம் அணிவதோடு, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். https://www.virakesari.lk/article/205821
-
நீரிழிவு நோயாளர்களுக்கான மருந்து கொள்வனவுக்காக மாத்திரம் சுமார் 7300 மில்லியன் ரூபா செலவு; நளிந்த ஜயதிஸ்ஸ
04 FEB, 2025 | 09:11 PM (செ.சுபதர்ஷனி) கடந்த வருடம் அரச வைத்தியசாலைகளுக்கு அவசியமான இன்சுலின் உள்ளிட்ட நீரிழிவு நோயாளர்களுக்கான மருந்து கொள்வனவுக்காக மாத்திரம் சுமார் 7300 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நீரிழிவு நோயாளர்களுக்கான மருந்துக் கொள்வனவுக்காக செலவிடப்படும் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையில் திங்கட்கிழமை (03) , புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வைத்திய பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் மருத்துவ விநியோகப் பிரிவு மூலம் அரச வைத்தியசாலைகளுக்கு தேவையான இன்சுலின் உள்ளிட்ட நீரிழிவு நோயாளர்களுக்கான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக மாத்திரம் சுமார் 7300 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நீரிழிவு நோயாளர்களுக்கான மருந்துக் கொள்வனவுக்காக செலவிடப்படும் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதையே காணக்கூடியதாக உள்ளது. ஆகையால் திரைசேரியில் இருந்து ஒதுக்கப்படும் பணத்தை மருந்து கொள்வனவு மற்றும் சிகிச்சை சேவைகளுக்காக பயன்படுத்தத் திட்டமிடுவதற்குப் பதிலாக, நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்துவது அவசியம். ஆரோக்கியமான தேசத்திற்கு நோய்களைத் தடுப்பதிலும் சிகிச்சையளிப்பதிலும் மருத்துவத்திற்கு அப்பாற்பட்ட ஓர் உலகம் உள்ளதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். நோய்களுக்கான சிகிச்சை மற்றும் தடுப்புக்கு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியை மருந்தாகப் பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். பாடசாலை விளையாட்டு வீரர்கள் உட்பட அனைத்து விளையாட்டு வீரர்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவது தொடர்பில் அதிகாரிகள் முதற் கொண்டு பொறுப்புக் கூற வேண்டிய அனைவரும் அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கிறேன். விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி என்பது சுகாதார சேவையுடன் ஒன்றிணைந்த ஓர் அம்சமாக உள்ளது. ஆகையால் சுகாதார அமைச்சு இது தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதுடன் எதிர்வரும் நாட்களில் இதை வலுப்படுத்துவதும் அவசியம் என்றார். https://www.virakesari.lk/article/205794
-
அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட முடியாது - சுனில் வட்டகல
Published By: DIGITAL DESK 2 04 FEB, 2025 | 03:11 PM (இராஜதுரை ஹஷான்) அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட முடியாது. மக்களால் புறக்கணிக்கப்பட்ட தரப்பினர் அரசாங்கத்துக்கு எதிராக கூட்டணியமைக்க முயற்சிக்கிறார்கள். மக்களாணையை மலினப்படுத்த போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வரவு செலவுத் திட்டத்தை தொடர்ந்து கிளின் ஸ்ரீ லங்கா செயற்திட்டம் சகல அமைச்சுக்கள் ஊடாக அமுல்படுத்தப்படும். சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் பணிக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஊழல் ஒழிப்பு என்பது கிளின் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தின் ஒரு அங்கமாகும். கடந்த கால ஊழல் மோசடிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட முடியாது. சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது ஊழல்வாதிகள் அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட்டுக் கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். எவரையும் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு கிடையாது. ஊழல்வாதிகளை மக்கள் அறிவார்கள். அவர்களின் ஊழல் மோசடிகளையும் அறிவார்கள். சட்டம் அனைவருக்கும் பொதுவானதாகவும். கடந்த அரசாங்கங்களைப் போன்று சட்டத்தை தமது விருப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்த போவதில்லை. ஊழல்வாதிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்து கூட்டணியமைக்க முயற்சிக்கிறார்கள். தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்கப் பெற்றுள்ள ஆணையை மலினப்படுத்த இடமளிக்க போவதில்லை என்றார். https://www.virakesari.lk/article/205783
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது - பாலஸ்தீன தேசமே உறுதியான தீர்வு - சவுதி அரேபியா Published By: RAJEEBAN 05 FEB, 2025 | 10:31 AM காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ள சவுதிஅரேபியா பாலஸ்தீன தேசமொன்று உருவாக்கப்படாவிட்டால் இஸ்ரேலுடன் உறவினை ஏற்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது. பாலஸ்தீனியர்களிற்கு என ஒரு தேசம் என்ற தனது நீண்டகால நிலைப்பாட்டை புதன்கிழமை சவுதி அரேபியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. காசாவை அமெரிக்கா கையகப்படுத்த விரும்புகின்றது என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள பின்னர் சவுதி அரேபியாவின்வெளிவிவகார அமைச்சு இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தனது முன்னைய நிலைப்பாட்டை மீள வலியுறுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் நிலைப்பாடு உறுதியானதாகவும் தளர்ச்சியற்றதாகவும் காணப்படுவதாக தெரிவித்துள்ள அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சு சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர்- பிரதமர் செப்டம்பர் 18ம் திகதி 2024 சூரா கவுன்சிலின் முதலாவது அமர்வில் ஆற்றிய உரையில் தனது இந்த நிலைப்பாட்டினை தெளிவாக வெளியிட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளது. 2024 இல் ரியாத்தில் இடம்பெற்ற அராபிய- இஸ்லாமிய உச்சிமாநாட்டில் அவர் இதனை வலியுறுத்தினார், 1967ம் ஆண்டின் எல்லைகளை அடிப்படையாக கொண்ட பாலஸ்தீன தேசத்தின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார், பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை நிறுத்தவேண்டும் என கோரினார் என சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/205830
-
அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை இந்தியா கொண்டு வரும் ராணுவ விமானம் - நிலவரம் என்ன?
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய, 205 பேர் இந்தியர்கள் அந்நாட்டு ராணுவ விமானத்தில் இன்று மதியம் 1 மணிக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் வந்தடைய உள்ளது. கடந்த வாரம் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் கொலம்பியா நாட்டவர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியது. அமெரிக்க ராணுவ விமானங்கள் தரையிறங்க அனுமதி அளிக்காத அந்நாட்டின் அதிபர், தங்கள் நாட்டு குடிமக்களை ராணுவ விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கக்கூடாது எனவும், தன்னுடைய விமானத்தையே அவர்களுக்காக அனுப்பத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். வரி விதிப்பு குறித்த எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்திருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் ராணுவ விமானங்கள் மூலம் குடியேறிகளை ஏற்றுக்கொள்ள கொலம்பியா ஒப்புக்கொண்டது. அதற்கு அடுத்த முறை, கொலம்பியா தனது விமானப் படையின் விமானங்களை அனுப்பி தங்கள் நாட்டவரை திருப்பி அழைத்து வந்தது. ராய்ட்டர்ஸ் முகமையின் செய்திப்படி, கொலம்பியா தவிர்த்து, குவாட்டமாலா, பெரு, ஹோண்டுராஸ் ஆகிய இடங்களுக்கு அமெரிக்க ராணுவ விமானம் சட்டவிரோத குடியேறிகளைத் திருப்பி அனுப்பியுள்ளது. கனடா, சீனாவுக்கு எதிரான டிரம்பின் முடிவால் அமெரிக்காவுக்கு என்ன இழப்பு ஏற்படும்? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? ராஜீவ் காந்தி ஓட்டிய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயன்றது ஏன்? ரா உளவு அமைப்பு தடுத்தது எப்படி? அமெரிக்கா: டிரம்ப், பைடன், ஒபாமா உள்பட 5 அதிபர்களுக்கு சமைத்த சமையல் கலைஞர் கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்? நாடு கடத்தப்படும் 205 இந்தியர்கள் அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பின், இவ்வாறு இந்திய சட்டவிரோத குடியேறிகள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது இதுவே முதன்முறை. இந்திய நேரப்படி செவ்வாய்கிழமை காலை புறப்பட்ட விமானம், அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமைக்கு அமெரிக்க அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்திருந்தார். பஞ்சாப் புலம்பெயர் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சர் குல்தீப் சிங் தலிவால், அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது தொடர்பான கேள்விகளுக்கு விரிவாக பதிலளித்தார். இது மிகவும் தீவிரமான விவகாரம் என்று அவர் குறிப்பிட்டார். அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் 205 இந்தியர்கள் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் வந்து இறங்குவார்கள் என்றும் தான் அங்கு நேரில் செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, பஞ்சாப் காவல் துறை டிஜிபி கௌரவ் யாதவ் ஊடகத்திடம் கூறுகையில், மாநில முதலமைச்சர் பகவத் சிங் மான் உடன் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும், அமெரிக்காவில் இருந்து அனுப்பப்படும் இந்தியர்கள் பஞ்சாப் அரசாங்கத்தால் சிறந்த முறையில் வரவேற்கப்படுவர் என்றும் கூறினார். பிபிசிக்காக செய்தியாளர் ரவீந்தர் சிங் ராபின், இந்தியா வருபவர்களுள் சிலர் தங்களுடைய கிராமங்களுக்கு காவல்துறை வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுவர் என்றும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுவர் என்றும் கூறியுள்ளார். எட் ஷீரன்: திக்குவாய் பிரச்னையை கடந்து, 600 கோடி பார்வைகளை பெற்று இசையில் சாதித்த இவர் யார்?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? - அறிவியல் கூறும் 7 எளிய வழிகள்30 ஜனவரி 2025 பஞ்சாப் அரசு மற்றும் காவல்துறை கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பஞ்சாப் அமைச்சர் தலிவால் பஞ்சாப் மாநில அமைச்சர் குல்தீப் சிங் தலிவால், அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது மிகவும் தீவிரமான விவகாரம் எனக் கூறியுள்ளார். இதை மத்திய அரசும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பஞ்சாபின் புலம்பெயர் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சரான தலிவால், அமெரிக்காவின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்திருப்பதாகத் தெரிவித்தார். மேலும், இந்தியர்கள் பலரும் பணி அனுமதி பெற்றே அமெரிக்கா சென்றதாகவும், ஆனால் பின்னர் அது காலாவதியாகிவிட்டதாகவும், அதனாலேயே அவர்கள் சட்டவிரோத குடியேறிகள் என்ற பிரிவின்கீழ் வந்ததாகவும் கூறினார். இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் இந்தியர்கள் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்காற்றியுள்ளதாகவும் அவர்களைத் திருப்பி அனுப்புவதற்குப் பதிலாக அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கியிருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக தலிவால், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை அடுத்த வாரம் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாகச் செல்ல வேண்டாம் என்று பஞ்சாப் மாநில மக்களை தலிவால் கேட்டுக் கொண்டார். பஞ்சாப் டிஜிபி கௌரவ் யாதவ் கூறுகையில், "இதுதொடர்பாக, நாங்கள் மத்திய அரசுடன் தொடர்பில் உள்ளோம். இது குறித்த மேலதிக தகவல்கள் வந்தவுடன் அவற்றைப் பகிர்வோம்" என்றார். "இந்தியா வருபவர்களின் அடையாளம் குறித்த எந்த விவரங்களும் தெரிய வரவில்லை. மத்திய அரசின் முகமைகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம்." மேலும் அவர் கூறுகையில், "உறுதி செய்யப்படாத பல தகவல்கள் உள்ளன. பெருமளவிலான மக்கள் இங்கு வருவதாகவும் கூறப்படுகிறது." ஆஸ்கர் விருதுக்கு கங்குவா போட்டியிடுகிறதா? படங்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி?9 ஜனவரி 2025 சென்னை: மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளியதாக பெற்றோர் கைது - ஆபாச வீடியோக்களை விற்று வருமானம் ஈட்டியதாக புகார்17 ஜனவரி 2025 குடியேற்றம் தொடர்பான டிரம்பின் உத்தரவுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சமாக குடியேற்ற விவகாரம் இருந்து வந்தது. "குடியேற்ற விதிகளை கடுமையாக்குவோம், 'மெக்சிகோவிலேயே இருங்கள்' என்ற தனது முந்தைய ஆட்சியில் அமல்படுத்திய கொள்கையை நடைமுறைப்படுத்துவோம், எல்லையில் பாதுகாப்பும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்படும்" என்பன டிரம்பின் தேர்தல் வாக்குறுதிகளாக இருந்தன. டிரம்ப் அதிபரான முதல் நாளில் கையெழுத்திட்ட உத்தரவுகளில் குடியேற்றம் சம்பந்தப்பட்ட உத்தரவுகள் முக்கியமானவை. "அமெரிக்க வரலாற்றில் நாட்டைவிட்டு பெருமளவில் நிகழ்த்தப்படும் வெள்யேற்றத் திட்டத்தை" அதிபராகத் தனது முதல் நாளிலேயே தொடங்கப் போவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். நாட்டின் தெற்கு எல்லைப் பகுதியில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பாக அமெரிக்க குடியுரிமை வழங்கப்படுவதற்கு எதிராகவும் அவர் உத்தரவு பிறப்பித்தார். அமெரிக்க அகதிகள் மறுகுடியமர்த்தல் திட்டத்தை நான்கு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கும் உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டார். பிபிசி செய்தி அறைக்குள் நுழைய விருப்பமா? - மெட்டாவெர்ஸ் உலகுக்கு உங்களை வரவேற்கிறோம்3 பிப்ரவரி 2025 மனித மூளையின் மோசமான நினைவுகளை அழிக்க முடியுமா? எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனை கூறுவது என்ன?3 பிப்ரவரி 2025 எல்லையை மூடும்படி ராணுவத்திற்கு உத்தரவிட்ட டிரம்ப், சட்டவிரோத போதைப் பொருட்கள், மனிதக் கடத்தல், எல்லையைக் கடக்கும் குற்றங்கள் உள்ளிட்டவற்றை அதற்கு காரணமாகக் கூறினார். போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மற்றும் சர்வதேச சட்டவிரோத கும்பல்களை அந்நிய பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கும் உத்தரவிலும் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். 'மெக்சிகோவிலேயே இருங்கள்' என்ற தனது கொள்கையை முதல் நாளிலேயே ஒரு செயல் உத்தரவு மூலம் டிரம்ப் அமல்படுத்தினார். அவரது முதல் ஆட்சிக்காலத்தின் நடவடிக்கைகளில் ஒன்றான இதன் மூலம், எல்லைக்கு வெளியே தஞ்சம் கேட்கத் தங்களது முறைக்காக காத்திருந்த சுமார் 70,000 மெக்சிகோவை சேராதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c14nmd08dg7o
-
யாழ். சிறைச்சாலையில் வெற்றிகரமாக நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்!
நன்றியும் வாழ்த்துகளும்.
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்பின் கருத்தை, "கவனம் செலுத்தப்பட வேண்டிய யோசனை" எனக் குறிப்பிட்டார் நெதன்யாகு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், செவ்வாய்கிழமை நெதன்யாகுவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் வெள்ளை மாளிகையில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, காஸா முனையை அமெரிக்கா கையிலெடுத்து, அங்கு தேவையான பணிகளை மேற்கொள்ள முடியும் என்று டிரம்ப் கூறினார். அவர் இதுகுறித்துப் பேசியது என்ன? செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், தான் இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்ற நிலையில், அவரைச் சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவர் நெதன்யாகுதான் எனக் கூறி, அதற்காக நன்றி தெரிவித்தார். அமெரிக்க முன்னாள் அதிபர் பைடன், தான் ஆட்சியிலிருந்த நான்கு ஆண்டுகளில் இஸ்ரேலின் எதிரிகள் மிகவும் வலுவாக வளர்வதற்கு அனுமதித்துவிட்டதாக விமர்சித்தார். "அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான பிணைப்பைத் தகர்க்க முடியாது" என்றும் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்கா: பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்க தடை விதிக்கும் டிரம்ப் - பிற நாடுகளில் என்ன நிலை? உலகெங்கிலும் மனிதாபிமான உதவிகளை செய்து வரும் USAID அமைப்பை டிரம்ப் மூட நினைப்பது ஏன்? அமலுக்கு வந்த அமெரிக்காவின் வரி விதிப்பு - சீனாவின் பதிலடி என்ன? கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்? மேலும் பேசிய டொனால்ட் டிரம்ப், எவ்வித மாற்று வழிகளும் இல்லை என்பதால்தான் பாலத்தீனர்கள் மீண்டும் காஸாவுக்கு செல்வதாக, எவ்வித ஆதாரங்களுமின்றி கூறினார். மேலும், காஸா 'அழிவின் தலமாக' இருப்பதாக அவர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, காஸாவில் வாழும் சுமார் 18 லட்சம் மக்கள், மற்ற அரபு நாடுகளுக்கு இடம்பெயர வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், காஸா முனையை அமெரிக்கா கையிலெடுத்து, அங்கு தேவையான பணிகளை மேற்கொள்ள முடியும் என்று அவர் கூறினார். வெடிக்காத குண்டுகளை அகற்றுதல், காஸாவை மறு கட்டமைப்பு செய்தல் மற்றும் பொருளாதாரத்தைச் சீர்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை அமெரிக்காவால் மேற்கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டார். பூமியின் வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸை கடந்தால் என்ன ஆகும்?4 பிப்ரவரி 2025 உங்களால் இரவில் தூங்க முடியவில்லையா? - நீங்கள் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும் என்ன?31 ஜனவரி 2025 காஸா குறித்த டிரம்பின் பேச்சு பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, காஸாவில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள விரும்புவதாக டிரம்ப் தெரிவித்தார் எதிர்காலத்தில் காஸா முனையை அமெரிக்கா "சொந்தமாக்குவது" குறித்து டிரம்ப் கூறியது பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். "இறையாண்மை கொண்ட ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றுவது குறித்தா நீங்கள் பேசுகிறீர்கள்?" என செய்தியாளர் ஒருவர் டிரம்பிடம் கேள்வியெழுப்பினார். அதற்கு ஆம் என பதிலளித்த டிரம்ப், "எதிர்காலத்தில் (காஸா முனையைக் கைப்பற்றி) அமெரிக்கா நீண்ட காலத்துக்கு வழிநடத்துவது குறித்து தான் கற்பனை செய்து பார்ப்பதாக" குறிப்பிட்டார். "அந்த நிலத்தைச் சொந்தமாக்கி, மேம்படுத்தி, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அது மிகவும் அற்புதமானதாக இருக்கும்." "எல்லோரும் அந்த யோசனையை விரும்புகின்றனர்" என்று அவர் கூறினார். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: வாக்குப் பதிவு தொடக்கம்41 நிமிடங்களுக்கு முன்னர் ராஜீவ் காந்தி ஓட்டிய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயன்றது ஏன்? ரா உளவு அமைப்பு தடுத்தது எப்படி?3 பிப்ரவரி 2025 நெதன்யாகு கூறியது என்ன? பட மூலாதாரம்,REUTERS இதன் பிறகு பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்பின் இந்த யோசனை குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவரது யோசனை 'கவனம் செலுத்தப்பட வேண்டிய யோசனை" என்று நெதன்யாகு குறிப்பிட்டார். அந்தப் பிராந்தியம் (காஸா) தங்கள் நாட்டுக்கு இனியும் ஆபத்தாக இருக்காது என்பதை உறுதி செய்வதில் தான் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். "காஸாவுக்கு டிரம்ப் வித்தியாசமான எதிர்காலத்தை வழங்கும் யோசனையைக் கொண்டிருப்பதாக" கூறிய அவர், "அது வரலாற்றை மாற்றும் ஒன்றாக இருக்கும் எனத் தான் நினைப்பதாகவும்" குறிப்பிட்டார். நெதன்யாகுவுக்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பைடனுடனான உறவு அடிக்கடி பதற்றமானதாகவே இருந்தது. இந்நிலையில், டிரம்ப் அதிபரானது குறித்த தனது மகிழ்ச்சியை நெதன்யாகு வெளிப்படையாகக் காட்டினார். "வெள்ளை மாளிகையில் உள்ள இஸ்ரேலின் மிகச் சிறந்த நண்பர்" என்று நெதன்யாகு டிரம்பை குறிப்பிட்டார். இந்தப் பயணத்தின்போது முன்னதாக அமெரிக்காவுக்கான மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃபிடம் நெதன்யாகு பேசினார். எட் ஷீரன்: சென்னை வருவது ஏன்? திக்குவாய் பிரச்னையை கடந்து இசையில் சாதித்த இவர் யார்?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமலுக்கு வந்த அமெரிக்காவின் வரி விதிப்பு - சீனாவின் பதிலடி என்ன?4 பிப்ரவரி 2025 பிபிசியின் சர்வதேச உறவுகள் செய்தியாளர் பால் ஆடம்ஸின் பகுப்பாய்வு பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, டிரம்பின் பேச்சு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக பால் ஆடம்ஸ் கூறுகிறார் காஸாவுக்கான முன்மொழிவுகள் தொடர்பாகப் பேசியுள்ள டிரம்ப், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். "காஸா முனையைக் கைப்பற்றி", அங்கு இடிபாடுகளை அகற்றுதல், வெடிக்காத குண்டுகளை அகற்றுதல், மற்றும் "கணக்கிலடங்கா வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்", "அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்துதல்" ஆகியவற்றை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார். ஆனால், அவர் யார் குறித்துப் பேசுகிறார் என்பதை டிரம்ப் தெரிவிக்கவில்லை. காஸா முனையில் வாழும் ஒட்டுமொத்த பாலத்தீன மக்களும் அதாவது 20 லட்சத்துக்கும் அதிகமானோர் ஜோர்டான், எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு இடம் பெயர வேண்டும் என முன்பு டிரம்ப் கூறிய நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்தார். "மத்திய கிழக்கின் சொர்க்கபுரியாக காஸாவை மாற்ற வேண்டும்" என்றும் அவர் கூறினார். அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள காஸாவில், "பாலத்தீனர்கள் உள்பட உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் வாழ்வார்கள்," என்ற விநோதமான கருத்தையும் அவர் தெரிவித்தார். அவருடைய இந்தக் கூற்று தலைசுற்ற வைப்பதாக உள்ளது. மேலும், எந்த சர்வதேச அதிகாரத்தின் கீழ் அமெரிக்கா செயல்படும் என்பதை டிரம்ப் குறிப்பிடவில்லை. இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் வாழும் பாலத்தீனர்கள், தங்களைப் பற்றி டிரம்ப் என்ன யோசனை வைத்துள்ளார் என்பது குறித்த ஆச்சரியத்தில் உள்ளனர். மேற்கு கரையின் சில பகுதிகளை இஸ்ரேலுடன் இணைப்பது குறித்து தான் இன்னும் யோசிக்கவில்லை எனக் கூறியுள்ள டிரம்ப், "இன்னும் நான்கு வாரங்களில் அதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவதாக" கூறினார். தன்னுடைய யோசனை, இஸ்ரேல் மற்றும் பாலத்தீனர்களுக்கு இடையிலான 'இரு நாடு' தீர்வுடன் தொடர்புடையது அல்ல என்றும், ஆனால் பாலத்தீனர்களால் அப்படித்தான் பார்க்கப்படும் என்றும் அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czxkry7dqe7o