Everything posted by ஏராளன்
-
தையிட்டி விகாரை விவகாரம்: மக்களின் விருப்பமே எமது தீர்மானம்; இன, மத வாதத்துக்கு இடமில்லை - அமைச்சர் சந்திரசேகரர்
Published By: VISHNU 10 FEB, 2025 | 05:33 PM தையிட்டி விகாரை விடயத்தில் மக்களின் விருப்பத்துக்கு அமைவாக எமது தீர்மானம் இருக்கும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மீண்டும் இனவாதம், மதவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார். யாழ்.மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை (9) சீன அரசாங்கத்தின் உதவிப்பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் பங்கெடுத்திருந்த அவர் அதன்பின்னர் தையிட்டி விகாரை சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், முதலில் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களின் கருத்து என்னவென்பதை நாம் பார்க்க வேண்டும். தையிட்டியில் விகாரை கட்டப்படும்போது அதுதொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்காதவர்கள் தற்போது அந்தப்பிரச்சினையை பூதகரமாக தூக்கிப்பிடிக்கின்றார்கள். தையிட்டி விகாரை விடயத்தினை தூக்கிப்பிடிப்பவர்கள் உண்மையிலேயே அந்த விடயத்தினை முன்னெடுக்கின்றார்களா? இல்லை விரைவில் உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தல் வரவிருப்பதால் அதற்கான துருப்புச்சீட்டாக இதனைப் பயன்படுத்தப் பார்க்கின்றார்களா? தையிட்டி விகாரை விடயம் இனவாதத்தினை, மதவாத்தினை தூண்டக்கூடியது. இனவாதத்தினையும், மதவாத்தினையும் மக்கள் தோற்கடித்திருக்கின்றார்கள். அதுமட்டுமன்றி, நாட்டின் அபிவிருத்தி வேகமாக முன்னெடுக்கப்படுகின்றது. ஆகவே அதுபற்றிக் கதைப்பதற்கு ஒன்றுமில்லை. அந்த வகையில் மதவாத்தினை இலகுவாகத் தூண்டி அதன் மூலமாக அரசியல் இலாபத்தைப் பெற்றுக்கொள்ளவே பார்க்கின்றார்கள். எவ்வாறாக இருந்தாலும் எமது அரசாங்கத்தின் கீழேயே இந்தப்பிரச்சினைக்கும் தீர்வினை எட்டுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். மக்களுடன் கலந்துரையாடி, மக்கள் பரிந்துரைக்கும் தீர்மானத்துக்கு செல்வதற்கு நாம் தயாராகவே உள்ளோம். விகாரை அமைக்கப்பட்டமை சட்டவிரேதமானதா இல்லையா என்பது தொடர்பில் நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட கருத்துக்களை முன்வைக்க முடியும். ஆனால், விகாரை அமைக்கப்பட்டுள்ள நிலமானது மக்களுடையது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அதனால் அந்தக் நிலத்துக்குச் சொந்தக்காரர்களுக்கு மாற்றுக் காணிகளை அல்லது நட்டஈட்டை வழங்க வேண்டிய தேவையுள்ளது. விகாரையை உடைத்து நொருக்குவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா என்பது பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. ஆகவே சுமூகமான தீர்வொன்றிணை மேற்கொள்ள வேண்டும். இனவாதம், மதவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கக் கூடாது. அதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/206339
-
இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு
இலங்கையில் இன்று முதல் மின் தடை - மக்களை இருளில் தள்ளியதா குரங்கு? பின்னணி என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் இன்று முதல் எதிர்வரும் ஓரிரு தினங்களுக்கு மின்சார தடையை ஏற்படுத்த இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. இதன்படி, இன்று (பிப்ரவரி 10) மற்றும் நாளை (பிப்ரவரி 11) ஆகிய இரு தினங்களில் ஒன்றரை மணிநேர சுழற்சி முறையில் மின்சாரத்தை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்றைய தினம் (பிப்ரவரி 09) ஏற்பட்ட முழு மின் தடையை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. மின்சார தடையுடனான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையற்ற நிலைமையை முகாமைத்துவம் செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடாளாவிய ரீதியில் நேற்றைய தினம் ஏற்பட்ட மின்சார தடையுடன் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ளன. இந்த மின்பிறப்பாக்கிகளை மீண்டும் தேசிய மின்சார கட்டமைப்புடன் இணைப்பதற்கு சில தினங்கள் தேவை என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த தீர்மானத்தை இலங்கை மின்சார சபை எட்டியுள்ளது. இலங்கை மின்சார சபை எட்டிய தீர்மானத்திற்கு, இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இன்று பிற்பகல் 3.30 முதல் இரவு 9.30 வரையான கால எல்லைக்குள் ஒன்றரை மணிநேர மின் தடையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான்கு கட்டங்களின் கீழ் இந்த மின்சார தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. டிரம்ப் உத்தரவு எதிரொலி: USAID இடைநிறுத்தத்தால் இலங்கைக்கு என்ன பாதிப்பு? தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு - நடுக்கடலில் என்ன நடந்தது? இலங்கை : நாயை தூக்கிலிட்டு கொன்றதாக பெண் கைது - நடந்தது என்ன? யாழ்ப்பாணத்தில் 'திருவள்ளுவர் கலாசார மையம்' என்ற பெயருக்கு எதிர்ப்பு ஏன்? புதிய பெயர் என்ன? நாடு முழுவதும் மின்சார தடை இலங்கை முழுவதும் நேற்றைய தினம் திடீரென மின்சார தடை ஏற்பட்டது. நேற்று (பிப்ரவரி 09) முற்பகல் 11.30 அளவில் ஏற்பட்ட இந்த திடீர் மின் விநியோக தடையானது, மாலை 4.30 அளவில் வழமைக்கு கொண்டு வரப்பட்டது. பாணந்துறை உப மின் உற்பத்தி நிலைய கட்டமைப்பில் குரங்கு பாய்ந்தமையே இந்த மின்சார தடைக்கான காரணம் என மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி ஊடகங்களுக்கு நேற்றைய தினம் தெரிவித்திருந்தார். ''பாணந்துறை பகுதியிலுள்ள மின் பிறப்பாக்கி ஒன்றில் குரங்கொன்று மோதியுள்ளதை அடுத்து, ஏற்பட்ட கோளாறே இதற்கான காரணமாகியுள்ளது. அதனாலேயே நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.'' என மின்சக்தி அமைச்சர் குறிப்பிட்டார். குரங்கு பாய்ந்தமையே மின்சாரம் தடைப்பட காரணம் என மின்சக்தி அமைச்சர் கூறிய நிலையில், பாணந்துறை மின் உற்பத்தி நிலையத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் அதனை மறுத்துள்ளார். மின் பிறப்பாக்கி கட்டமைப்பில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரே இவ்வாறு இதனை நிராகரித்துள்ளார். ''வழமையாக குரங்குகள் பாயும். குரங்குகள் பாயும் போது செயலிழந்து மீண்டும் வழமைக்கு திரும்பி விடும். ஆனால் குரங்கு பாயவில்லை. அப்படியென்றால் குரங்கின் உடல் இருக்க வேண்டும் அல்லவா? குரங்கை காணவில்லை. கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் மூன்று குரங்குகள் பாய்ந்தன. உடனே இறந்து விட்டன. அதைவிடுத்து, இந்த இடத்தில் பாயவில்லை. குரங்கு பாயும் நேரங்கள் இருக்கின்றன. எனினும், இன்று பாயவில்லை.'' என பாணந்துறை மின் உற்பத்தி நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் சாலையில் பாடிய எட் ஷீரனை தடுத்து நிறுத்திய காவலர் - எட் ஷீரன் கூறியதென்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர் திருப்பதி லட்டில் கலப்பட நெய் சர்ச்சை: தமிழ்நாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கைது - என்ன நடக்கிறது?8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MINISTRY OF ENERGY படக்குறிப்பு, மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி தேசிய மின்சார கட்டமைப்பை சமநிலையாக நடத்திச் செல்வது தொடர்பில் தெளிவின்றி கடந்த கால அரசாங்கங்கள் செயற்பட்டமையே இதற்கான காரணம் என மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவிக்கின்றார். அறிக்கையொன்றின் ஊடாக அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ''பாணந்துறை உப மின் உற்பத்தி நிலையத்தில் திடீரென ஏற்பட்ட சமநிலையற்ற நிலைமையே நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட காரணம். தேசிய மின்சார கட்டமைப்பை சமநிலையாக நடத்தச்செல்வது தொடர்பில் தெளிவின்றி கடந்த கால அரசாங்கங்கள் செயல்பட்டன. தொழில்நுட்பம் தொடர்பில் தெளிவற்ற வழிகாட்டல் இந்த நிலைமை ஏற்பட காரணம் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் மிக ஆழமாக ஆராய்ந்து மீண்டும் இவ்வாறான நிலைமை ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம். மின்சார தடையினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கவலையை தெரிவித்துக்கொள்கின்றோம்", என மின்சக்தி அமைச்சர் குறிப்பிடுகின்றார். இந்த மின்சார தடை தொடர்பில் இலங்கை மின்சார சபை தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. காஸாவில் டிரம்ப் செய்ய நினைக்கும் இனச் சுத்திகரிப்பு என்றால் என்ன? இனப் படுகொலையில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?5 மணி நேரங்களுக்கு முன்னர் கைட் ரன்னர்கள்: பார்வை மாற்றுத் திறனாளிகள் தடகளப் போட்டிகளில் பங்கெடுக்க உதவும் இவர்கள் யார்?4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்பு படம் இலங்கையின் மின்சார தடை சர்ச்சை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பல மாத காலம் தொடர் மின்சார தடையை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதன்படி, 2022ம் ஆண்டு காலப் பகுதியில் நாளொன்றிற்கு சுமார் 12 மணிநேரத்திற்கு அதிக மின்சார தடை அந்த காலப் பகுதியில் ஏற்படுத்தப்பட்டமையினால், நாடு முழுவதும் வாழும் மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். இந்த நிலையில், ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதை அடுத்து, மின்சார தடை படிப்படியாக குறைக்கப்பட்டு, மீண்டும் மின்சார விநியோகம் முழுமையாக வழமைக்கு கொண்டு வரப்பட்டது. எவ்வாறாயினும், 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 09ம் தேதி கொத்மலை முதல் பியகம வரையான மின்சார விநியோக கட்டமைப்பில் மின்னல் தாக்கியதை அடுத்து, நாடு முழுவதும் மின்சார தடை ஏற்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cde9w348w4wo
-
யாழில் மீனவ அமைப்பை சந்தித்த சீன உதவித் தூதுவர்
10 FEB, 2025 | 10:30 AM யாழ். மாவட்ட மீனவ அமைப்பின் பிரதிநிதிகளை, யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் உதவித் தூதுவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) சந்தித்தார். குறித்த சந்திப்பில் சீனா நாட்டினால் வடமாகாண மீனவர்களுக்கு வழங்கப்பட்ட வலைகள் மற்றும் உணவுப் பொதிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் தொடர்ந்தும் வடக்கு மீனவ சமூகத்துக்கு சீனாவின் உதவிகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மீனவர்கள் முன்வைத்தனர். https://www.virakesari.lk/article/206276
-
வெள்ளத்தால் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு சீன தூதரகத்தினால் உலர்பொருட்கள் பொதி வழங்கி வைப்பு
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனாவின் உதவி வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கான நிவாரணப்பொருட்களை இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei) அவர்கள் வழங்கி வைத்தார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட செயலாளர் எஸ்.முரளிதரன் உள்ளிட்ட சீன தூதரகத்தின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://tamil.adaderana.lk/news.php?nid=199914
-
ஜனாதிபதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம்!
ஜனாதிபதி அநுரகுமார ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விஜயம் இந்த ஆண்டுக்கான உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (10) ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு பயணிக்கிறார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியாவின் அழைப்பிற்கிணங்க ஜனாதிபதியின் இந்த விஜயம் அமையவுள்ளது. இந்த விஜயத்தின் போது இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதுடன், ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணைத் தலைவரும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமையும் சந்திக்க உள்ளார். மேலும், மாநாட்டில் பங்கேற்கும் பல நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களுடன் இருதரப்பு சந்திப்புகள் நடத்தப்படும். இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகத்துறைகளில் உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் பல தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துரையாடவுள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=199937
-
அரச பணியாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும்! -பிரதமர் ஹரிணி அமரசூரிய
அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல் 09 FEB, 2025 | 07:55 PM (எம்.வை.எம்.சியாம்) அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று சனிக்கிழமை (09) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. ஆசிரியர் அதிபர் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் கல்வித்துறையில் முககொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கு உரிய தீர்வினைப்பெற்றுத்தருமாறும் தொழிற் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே இந்த சந்திப்பின் பின்னர் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், இந்த நாட்டில் 2 இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிபர்களும் கல்வித்துறையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இது தொடர்பில் நாம் கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம். குறிப்பாக பதவி உயர்வு தொடர்பில் விடயங்களை முன்வைத்தோம். இது குறித்து அரச சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய புதிய சுற்றுநிருபம் வெளியிட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த வருடம் முதல் பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை. ஆசிரியர்கள் சம்பளம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் எமக்கு வாக்குறுதியளித்தார். எனவே எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நாம் நம்புகிறோம். அதேபோன்று இதன்போது ஆசிரியர் அதிபர் ஆசிரிய ஆலோசகர்கள் கல்வித்துறையில் முகங்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வைப்பெற்றுத்தருவதாக பிரதமர் எமக்க உறுதியளித்தார் என்றார் இந் நிலையில் இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மேலதிக கற்றல் செயற்பாடுகளுக்காக சுமார் 07கிலோமீற்றர் தூரத்திலுள்ள முத்துஐயன்கட்டு இடதுகரை அரசினர் தமிழ்கலவன் பாடசாலைக்கும், சுமார் 09 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கற்சிலைமடு பண்டாரவன்னியன் மகாவித்தியாலயத்திற்கும், சுமார் 15 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்குமே செல்லவேண்டிய அவலநிலை காணப்படுவதால் குறித்த மன்னாகண்டல் பாடசாலையை தரம்-09 வரையாவது தரமுயர்ததித்தருமாறும் இதன்போது கிராம மக்களால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டது. இவ்வாறு தரமுயர்த்தினால் கனகரத்தினபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களும் மன்னாகண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்பதற்காக வருகை தருவார்கள் எனவும் கிராமமக்களால் சுட்டிக்காட்டப்பட்டது. இதனைவிட மன்னாகண்டல் கிராமத்திற்கான வீதிச் சீரமைப்பு, பொதுப்போக்குவரத்தை ஏற்படுத்தல், மன்னாகண்டல் கமக்கார அமைப்பிற்குட்பட்ட மூன்றாம் கண்டம் பகுதியில் வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுமார் 150ஏக்கர் காணிகளை விடுவிப்புச்செய்தல், எம்.பி கமம் விவசாய நிலங்களில் சுமார் 200ஏக்கரில் மேற்கொள்ளப்படும் நெற்செய்கைக்கு உரமானியம் வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்தல், முன்பள்ளியை இயங்கச்செய்தல், வனவளத்திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுள்ள நீர்ப்பாசன வாய்க்கால்களை விடுவிப்புச்செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளும், குறைபாடுகளும் மக்களால் இதன்போது மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் மன்னாகண்டல் கிராமத்தில் காணப்படும் குறைபாடுகளை ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இதுதொடர்பான மகஜர்களையும் பெற்றுக்கொண்டார். அதேவேளை மக்களால் முன்வைக்கப்பட்ட குறித்த கோரிக்கைகள்தொடர்பால் தம்மால் கவனம் செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/206253
-
இந்தியா - இங்கிலாந்து ரி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்
305 ரன் இலக்கை ஊதித் தள்ளிய இந்தியா - இங்கிலாந்தை சிதறடித்து புதிய மைல்லை எட்டிய ரோஹித் சர்மா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரோஹித் சர்மாவின் அற்புதமான சதத்தால் இங்கிலாந்தை இந்திய அணி எளிதில் வீழ்த்தியது. கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ரோஹித் சர்மாவின் அற்புதமான சதத்தால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி. ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்று பகலிரவாக நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 305 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 33 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் சேர்த்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. இதன் மூலம், இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 10-வது சர்வதேச தொடரை வென்றுள்ளது. ரோஹித் சர்மா அதிரடி சதத்தால் மிகப்பெரிய இலக்கை இந்தியா எளிதில் எட்டியது எப்படி? அபிஷேக் சர்மா: யுவராஜ் சிங் உருவாக்கிய வீரர் சிக்சர்களை பறக்கவிடும் ரகசியம் கோலி, ரோஹித்துக்கு கடைசி வாய்ப்பு - இந்திய அணிக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் என்னென்ன? இந்தியா VS இங்கிலாந்து: இந்திய அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்ற மூவர் கூட்டணி சொதப்பிய இங்கிலாந்து அணி டாஸ் வென்ற இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட், பில் சால்ட் அருமையான தொடக்கம் அளித்தனர். பவர்ப்ளே முடிவில் 80 ரன்களுக்கு மேல் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தனர். சால்ட் 26 ரன்களில் வருண் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பென் டக்கெட் அரைசதம் அடித்து 65 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட், ஹேரி ப்ரூக் கூட்டணி ஓரளவுக்கு நிலைத்து ஆடி ஸ்கோரை உயர்த்தி 66 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஹேரி ப்ரூக் 31 ரன்னில் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கேப்டன் பட்லர், ஜோ ரூட்டுடன் சேர்ந்து 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஜோ ரூட் 60 பந்துகளில் அரைசதம் எட்டினார். பட்லர் 34 ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ததைப் பார்த்தபோது 330 ரன்களை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி 85 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து 304 ரன்களில் ஆட்டமிழந்தது. லிவிங்ஸ்டன் கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 32 பந்துகளில் 2 பெரிய சிக்ஸர்கள் உள்பட 41 ரன்கள் சேர்த்தார். IND vs ENG: கோலி வருகையால் ஸ்ரேயாஸ் நீக்கம்? - ஆடுகளம் யாருக்கு சாதகம்?9 பிப்ரவரி 2025 ரொனால்டோ: உலகின் சிறந்த கால்பந்து வீரரா? தமிழக, கேரள கால்பந்து ரசிகர்கள் சொல்வது என்ன?5 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜோ ரூட் 60 பந்துகளில் அரைசதம் எட்டினார். இந்திய அணியும் பல வாய்ப்புகளை இழந்தது. பில் சால்ட் 12 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்சை அக்ஸர் படேல் நழுவவிட்டார், ரூட் 16 ரன்களில் இருந்த போது அக்ஸர் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கினார், இதற்கு அப்பீல் செய்திருந்தால் அவுட் கிடைத்திருக்கும். ஆனால், கேப்டன் ரோஹித் டிஆர்எஸ் முடிவை எடுக்கவில்லை. இதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்தும் அதை இங்கிலாந்து பயன்படுத்தவில்லை. 30 நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தம் இந்திய அணி சேஸிங்கில் ஈடுபட்டு நல்ல ஃபார்மில் இருந்தது. 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 48 ரன்கள் சேர்த்திருந்தது இந்திய அணி. அப்போது மின்விளக்கில் திடீரென பழுது ஏற்பட்டு, ஒருபகுதி மின்விளக்குகள் சரியாக எரியவில்லை. இதனால் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டு 30 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டு 30 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது. ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம் ரோஹித் சர்மா, தன் ஃபார்ம் மீது இதுவரை சந்தேகம் எழுப்பியவர்களை, இந்த ஒரே ஆட்டத்தின் மூலம் அமைதி ஆக்கிவிட்டார். அடுத்த வாரம் தொடங்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில், அணியை வழிநடத்த தனக்கு தகுதி இருக்கிறது என்பதை ரோஹித் சர்மா ஒரே ஆட்டத்தில் நிரூபித்தார். கடந்த ஆட்டத்தில் பேட்டில் எட்ஜ் எடுத்து ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில், தொடக்கத்தில் நிதானமாக பேட் செய்து அட்கின்சன் பந்துவீச்சில் டீப் தேர்டு திசையில் ரோஹித் பவுண்டரி அடித்தபின் இயல்பான ஆட்டத்தை ஆடத் தொடங்கினார். மெஹ்மூத் முதல் ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய நிலையில் அடுத்த ஓவரில் ரோஹித் சர்மாவின் பேட்டுக்கு பதில் சொல்ல முடியாமல் சிக்ஸர்களை வாரிக்கொடுத்துச் சென்றார். அதில் ரஷித் ஓவரில் நிதானமாக ஆடிய ரோஹித் சர்மா 2 பவுண்டரிகளை விளாசி 30 பந்துகளில் அரைசதத்தை விளாசினார். அதன்பின் பொறுமையாக பேட் செய்யத் தொடங்கினார். 30 பந்துகளில் அரைசதம் எட்டிய ரோஹித், அடுத்த 50 ரன்களை 46 பந்துகளில் நிதானமாகச் சேர்த்து 32வது சதத்தை நிறைவு செய்தார். ரோஹித் சர்மா இழந்த ஃபார்மை மீட்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகி இருப்பது மற்ற அணிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக, சவாலாகவும் இருக்கும். அடுத்ததாக இந்திய அணிக்கு மிகப்பெரிய கவலை விராட் கோலியின் ஃபார்ம்தான். IND vs SA: 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது எப்படி?3 பிப்ரவரி 2025 டி20 தொடரை வென்ற இந்தியா; அபிஷேக் சர்மாவின் ரன்களை கூட எடுக்க முடியாமல் இங்கிலாந்து தோற்றது எப்படி?3 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரோஹித் சர்மா, தன் ஃபார்ம் மீது இதுவரை சந்தேகம் எழுப்பியவர்களை, இந்த ஒரே ஆட்டத்தின் மூலம் அமைதி ஆக்கிவிட்டார். கில், ஸ்ரேயாஸ் பொறுப்பான ஆட்டம் ரோஹித் சர்மாவுடன் இணைந்து ஆட்டத்தைத் தொடங்கிய சுப்மான் கில் மிகுந்த பொறுப்பான ஆட்டத்தை ஆடி, தொடர்ந்து 2வது அரை சதத்தைப் பதிவு செய்தார். 45 பந்துகளில் அரைசதம் அடித்த சுப்மான் கில் 60 ரன்கள் சேர்த்த நிலையில் ஓவர்டன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித்- கில் கூட்டணி 136 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ஸ்ரேயாஸ் அய்யர், அணியில் இருந்து நீக்கப்படலாம் என்று சந்தேகங்கள் எழுப்பிய நிலையில் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினார். ரோஹித் சர்மாவுடன் இணைந்து 70 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை ஸ்ரேயாஸ் ஏற்படுத்தி 6 ரன்களில் 2வது அரைசதத்தை தவறவிட்டார். ஸ்ரேயாஸ் 44 ரன்களில் ரன்அவுட் ஆனார். இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங்கும் மெல்ல ஸ்திரப்பட்டு வருகிறது. இரு ஆட்டங்களிலும் ஸ்ரேயாஸ் பேட்டிங் அதற்கான நம்பிக்கையை அளித்து வருகிறது. பந்துவீச்சிலும் 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் இந்திய பேட்டர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதில் ரஷீத் பந்துவீச்சு கட்டுக்கோப்பாக இருந்தாலும், அவரால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. வேகப்பந்துவீச்சில் அட்கின்சன், மார்க்உட் இருவருமே ரன்களை வழங்கினர். லிவிங்ஸ்டன் மட்டும் 7 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி சிக்கனமாகப் பந்துவீசினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரோஹித்- கில் கூட்டணி 136 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. ஆல்ரவுண்டராக மாறும் அக்ஸர் படேல் அக்ஸர் படேல் சுழற்பந்துவீச்சு மட்டுமல்ல, டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளிலும் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்று தன்னை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஆட்டத்தில் முதல் அரைசதத்தை நிறைவு செய்த அக்ஸர், இந்தப் போட்டியில் 41 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு பந்துவீச்சாளராக அறிமுகமாகிய அக்ஸர் படேல் ஆல்ரவுண்டராக மாறிவருவது இந்திய அணிக்கு பெரிய பலமாகும். விளையாட்டுத் துறையில் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை குவிப்பதை நிதிப் பற்றாக்குறை தடுக்கிறதா?31 ஜனவரி 2025 கபடியால் மாறிய வாழ்க்கை - ஒரு கிராமத்துப் பெண்களின் நெகிழ்ச்சி கதை27 ஜனவரி 2025 ரோஹித் சர்மா- புதிய மைல்கல் இந்த ஆட்டத்தில் 30 பந்துகளில் அரைசதத்தையும், 76 பந்துகளில் சதம் அடித்து, 90 பந்துகளில் 119 ரன்கள் (7 சிக்ஸர், 12 பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்த கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ரோஹித் சர்மா தனது ஒருநாள் போட்டி வாழ்க்கையில் 32-வது சதத்தை இன்று பதிவு செய்தார். கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பின் ரோஹித் சர்மா பங்கேற்ற 5வது ஒருநாள் போட்டியாகும். இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 2 அரைசதங்களை அடித்திருந்தாலும், சதம் அடிக்கவில்லை. உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மா சதம் அடித்தபின், ஏறக்குறைய ஒன்றறை ஆண்டுகளுக்குப்பின் தற்போது சதம் அடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் 7 சிக்ஸர்கள் விளாசினார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்டர்கள் வரிசையில் கிறிஸ் கெயில் (331) சாதனையை முறியடித்து 338 சிக்ஸர்கள் விளாசி, ரோஹித் சர்மா 2வது இடத்தைப் பிடித்தார். பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். அது மட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களை விளாசிய இந்திய பேட்டர்களில் ரோஹித் சர்மா 32 சதங்களுடன் 3வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் கோலி 50 சதங்களுடனும், 2வது இடத்தில் உள்ள சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடனும் உள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் 7 சிக்ஸர்கள் விளாசினார். வருணின் முதிர்ந்த அறிமுகம் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி தனது முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். தற்போது வருணுக்கு 33 வயது 164 நாட்களாகிறது. அதிகமான வயதில் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய 2வது வீரர் என்ற பெருமையை வருண் பெற்றார். இதற்கு முன், பரூக் எஞ்சினியர் 36-வது வயது 138 நாட்களாக இருந்தபோது ஒருநாள் தொடரில் அறிமுகமாகினார். மஞ்சள் கரு, வெள்ளைக்கரு சிதையாமல் முட்டையை சரியாக வேக வைப்பது எப்படி?4 மணி நேரங்களுக்கு முன்னர் 'அவரை காப்பாற்ற முயன்று நானும் சிக்கினேன்' - பாலியல் இன்பத்தை போதைப்பொருள் அதிகரிக்குமா?8 பிப்ரவரி 2025 இந்தியப் பந்துவீச்சு - பலவீனம் இந்திய வேகப்பந்துவீச்சின் சுமை முகமது ஷமி மீது விழுந்துள்ளது. ஷமிக்கு துணையாக பந்துவீச ஹர்சித் ராணா கொண்டுவரப்பட்டாலும் அவரால் துல்லியத் தன்மையை கொண்டுவர முடியவில்லை. அர்ஷ்த்தீப் வந்தால் ஷமியின் சுமை குறையலாம். மற்றவகையில் பும்ரா உடல்நலன் சாம்பியன்ஸ் டிராபிக்குள் தேறினால், பந்துவீச்சில் இந்திய அணி முழுவலிமையைப் பெறும். சுழற்பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தியின் அறிமுகம் சிறப்பாக இருந்தது. டி20 போட்டிகளில் ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளராக இருக்கும் வருண், சாம்பியன்ஸ் டிராபிக்கும் தேர்ந்தெடுக்கப்படலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி தனது முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். 73 வினாடிகளில் ஒரு ஓவர் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடியபின் ஜடேஜாவின் பந்துவீச்சு சிறப்பாக இருந்து வருகிறது. இந்த ஆட்டத்தில் ஜடேஜா 10 ஓவர்கள் வீசி, ஒரு மெய்டன் 35 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டையும் வீழ்த்தினார். துல்லியத்தன்மை, வேகமாகப் பந்துவீசுவது என ஜடேஜாவின் பந்துவீச்சு மிரட்டலாக இருக்கிறது. ஜடேஜா 24-வது ஓவரை வெறும் 73 வினாடிகளில் வீசி முடித்தார். ஹேரி ப்ரூக்கிற்கு எதிராக ஒரு ரன்கூட வழங்காமல் அந்த ஓவரை மெய்டன் ஓவராக ஜடேஜா மாற்றினார். ஜடேஜாவின் பந்துவீச்சில் இருக்கும் வேகம், துல்லியத்தன்மை சாம்பியன்ஸ் டிராபியில் மிரட்டலாக இருக்கும். இந்தியத் தரப்பில் ஜடேஜா தவிர்த்து, ஷமி, ராணா, வருண், பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்திய வரலாற்றையே மாற்றிய 'நாகா சாதுக்கள்' - கையில் வாளுடன் நிர்வாண கோலத்தில் வலம் வரும் இவர்கள் யார்?8 பிப்ரவரி 2025 திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? லண்டன் பிரிவி கவுன்சிலின் 1931 தீர்ப்பு கூறுவது என்ன?7 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜடேஜா 24-வது ஓவரை வெறும் 73 வினாடிகளில் வீசி முடித்தார். நடுப்பகுதி ஓவர்கள் முக்கியம் வெற்றிக்குப்பின் ரோஹித் சர்மா பேசுகையில், "அணிக்காக சிறப்பாக ஆடியது, ரன்கள் சேர்த்துக் கொடுத்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஒருநாள் தொடரில் மிக முக்கியமான ஆட்டம் இது என்பதால், நான் எவ்வாறு பேட் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தேன். டி20 போட்டியைவிட பெரியது, டெஸ்ட் போட்டியைவிட சிறியது ஒருநாள் போட்டி என்பதால் அதற்கு ஏற்றார்போல் விளையாட நினைத்தேன். நீண்டநேரம் களத்தில் நின்று பேட் செய்வது என் நோக்கமாக இருந்தது." என்றார். "கருப்பு மண் கொண்ட ஆடுகளத்தில் பந்து பேட்டை நோக்கி வேகமாக வரும், இந்த ஆடுகளத்தில் நாம் வேகமாகவும், பேட்டை இறுக்கமாகவும் பிடித்து பேட் செய்தால்தான் நினைத்த ஷாட்களை ஆட முடியும்." என்று அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய ரோஹித் சர்மா, "நான் பேட் செய்தபோது என் உடம்புக்கும், ஸ்டெம்புக்கும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். அவர்களின் நுட்பத்தை புரிந்து கொண்டு, திட்டத்தைத் தெரிந்து என் திட்டத்தை வகுத்தேன். கில், ஸ்ரேயாஸிடம் இருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைத்தது. கில்லுடன் பேட்டிங் செய்தது நல்ல அனுபவம்." என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "நான் பேட் செய்தபோது என் உடம்புக்கும், ஸ்டெம்புக்கும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர்." "நடுப்பகுதி ஓவர்கள்தான் முக்கியம், இதுதான் ஆட்டத்தை எந்தப் பக்கம் கொண்டு செல்லும் என்பதை தீர்மானிக்கும். நடுப்பகுதி ஓவர்களை வெளுத்து வாங்கினாலே, டெத் ஓவர்கள் குறித்து பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. நாக்பூர் ஆட்டத்தில் கூட நடுப்பகுதி ஓவர்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்தோம், விக்கெட்டுகளை வீழ்த்தினோம். நடுப்பகுதி ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால் டெத் ஓவர்களில் ரன் சேர்ப்பது கடினமாகிவிடும்." "ஒவ்வொரு வீரரும் சிறப்பாக ஆட வேண்டும், அணியாக முழுமையாக பங்களிப்பு செய்ய வேண்டும் என திட்டமிட்டோம். அதை சிறப்பாகச் செய்தோம். அணியில் உள்ள வீரர்களும் தங்களின் திட்டத்தை சிறப்பாகச் செய்து முடித்தனர்" என ரோஹித் சர்மா தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm29g902lw3o
-
பாலச்சந்திரனின் மரணச் செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த! இப்படிக் கூறுகிறார் நாமல்
குடும்பத்தில் ஒருவரையும் விடாது அழிக்க வேற ஒரு அதிகாரத்தரப்பு கேட்டுக்கொண்டதாக எங்கோ வாசித்த நினைவு.
-
நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
இப்போது இரவு 8.30 மணியில் இருந்து தற்போது வரை மின்தடை ஏற்பட்டுள்ளது. இரவு 9.30 மணிக்கு வழமைக்குத் திரும்பும் என மின்சாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன. இரவு 9.26 ற்கு மின்சாரம்வந்துவிட்டது.
-
பாலச்சந்திரனின் மரணச் செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த! இப்படிக் கூறுகிறார் நாமல்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது இளைய மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்ட முன்னாள் ஜனாதிபதியும் எனது தந்தையுமான மகிந்த ராஜபக்ச மிகவும் மன வருத்தம் அடைந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சமூக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அதிகாலையில் வந்த தொலைபேசிச் செய்தி... மேலும் தெரிவிக்கையில், பிரபாகரனின் மகனது மரணச் செய்தி அதிகாலையில் கிடைக்கப்பெற்றது. இந்தச் செய்தியைக் கேட்டு எனது தந்தை மிகவும் மனவருத்தம் அடைந்தார். எனது தந்தை மிகவும் கவலை அடைந்து நான் பார்த்த சந்தர்ப்பம் இதுதான். அதிகாலையில் வந்த அந்த தொலைபேசிச் செய்தி தொடர்பில் இன்றும் எனக்கு நினைவிருக்கின்றது. பிரபாகரனின் இளைய மகன் போரில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்பதால் எனது தந்தை மிகவும் மனவருத்தம் அடைந்தார். இந்த மரணம் வேண்டுமென்று செய்யப்பட்ட ஒன்று அல்ல. தவறுதலாக(க்ரோஸ் பயரிங்) நடந்தது. பிரபாகரனின் மகன் வேண்டுமென்றே கொல்லப்பட்டார் என சிலர் கதைகளை உருவாக்கினர். உண்மை அதுவல்ல. இது தவறுதலாக நடந்த விடயம் என்பதுகூட பின்னர் தான் தெரியவந்தது. போர் காலத்தின் போது எனது தந்தை மிகவும் மனம் வருந்திய சம்பவம் இதுவாகத்தான் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/balachandran-prabhakaran-cause-of-death-1739072133?itm_source=article
-
நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
மின்வெட்டு தொடர்பில் நாளை வௌியாகவுள்ள தகவல் நாடு முழுவதும் இன்று (09) ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பான விரிவான தகவல்களை இலங்கை மின்சார சபை நாளை (10) வெளியிடும் என்று அதன் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து மின்சார சபையின் உள்ளக குழு ஊடாக விசாரணை நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து மின்சக்தி அமைச்சும் விரிவான விசாரணையை நடத்தி வருவதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்தார். இதேபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்க தொடர்புடைய விசாரணை நடத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, நாடு முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் இவ்வாறு மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது, இறுதியாக 2023 டிசம்பர் 9ஆம் திகதி மின்வெட்டு ஏற்பட்டது, மேலும் மின்சாரத்தை மீட்டெடுக்க சுமார் 6 மணிநேரம் சென்றது. கொத்மலையிலிருந்து பியகம வரையிலான மின்சார விநியோகக் கம்பியில் ஏற்பட்ட கோளாறுதான் இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. இதேபோன்று, 2016 மார்ச், 2020 ஓகஸ்ட் மற்றும் 2021 டிசம்பர் மாதமும் நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=199913
-
டென்மார்க்கின் 'கருணை' மிக்க ஏகாதிபத்தியத்தில் இருந்து கிரீன்லாந்து விடுபடுமா? சுதந்திர தாகத்திற்கு புது வெளிச்சம் பாய்ச்சிய டிரம்ப்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த படத்தில் பூர்வகுடி ஆணும் பெண்ணும் தங்கள் பாரம்பரிய ஆடைகளை அணிந்திருக்கிறார்கள் , இது 1865ம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம். கட்டுரை தகவல் எழுதியவர், பீட்டர் ஹார்ம்சன் பதவி, பிபிசி செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் நூக் பேராலயத்துக்கு மேலே உள்ள ஒரு மலையில், புராட்டஸ்டன்ட் (கிறிஸ்தவத்தில் உள்ள ஒரு பிரிவு) மறைப்பணியாளரான ஹான்ஸ் எகெடேவின் 2 மீட்டர் உயர சிலை உள்ளது. 1700களின் முற்பகுதியில், கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்காக கிரீன்லாந்திற்கு வந்த அவர், கிரீன்லாந்து தீவை வடக்கு ஐரோப்பாவுடன் மீண்டும் இணைக்க உதவினார். அவரது பணியால், கிரீன்லாந்தை டென்மார்க் கட்டுப்படுத்தும் முறை எளிதானது. அதனைத் தொடர்ந்து, கிரீன்லாந்து டென்மார்க்கின் முக்கிய காலனி ஆனது. வரலாற்றில் ஹான்ஸ் எகெடேவின் பங்கை, அவரது சிலை இன்றும் மக்களுக்கு நினைவூட்டுகிறது. ஆனால் அவரது பாரம்பரியம் விவாதத்திற்கு உரிய பொருளாக உள்ளது. சிலர் அவரை ஒரு நல்ல தலைவராக பார்க்கிறார்கள். ஆனால், கிரீன்லாந்தில் டென்மார்க்கின் காலனித்துவ ஆட்சி நடைபெற ஹான்ஸ் எகெடே உதவினார் என மற்றவர்கள் நினைக்கிறார்கள். 1970களின் பிற்பகுதியில் ஒரு நாள், அவரது வெண்கல சிலை திடீரென்று சிவப்பு வண்ணம் பூசப்பட்டு காணப்பட்டது. நான் பள்ளிக்குச் செல்லும் வழியில், அந்தச் சிலையை தினமும் கடந்து செல்வேன். அதனால் அந்த நாள் எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது. என் தந்தை நூக் நகரத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் புவியியல் கற்பித்து வந்த போது, நான் இரண்டு ஆண்டுகள் கிரீன்லாந்தில் வாழ்ந்தேன். அப்போது, வட அமெரிக்காவின் ஆர்க்டிக் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட பல பூர்வகுடி மக்கள், 250 ஆண்டுகளுக்கு முன்பு கிரீன்லாந்தில் எகேட் செய்த மாற்றங்களால் மகிழ்ச்சியடையவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது . பெரும்பாலும், டென்மார்க் மக்களை விட மிகச் சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வந்த பூர்வகுடி மக்கள், அவர்களது வீட்டிற்கு பிளாஸ்டிக் பைகளை எடுத்துச் செல்வர். அதிலிருந்து கேட்கும் பீர் பாட்டில்களின் சத்தம், அங்கு இருந்த பரவலான குடிப்பழக்கத்தின் சான்றாக இருந்தது. டென்மார்க் கிரீன்லாந்திற்கு கொண்டு வந்த தீங்கு விளைவிக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று. ஆனால் அதே சமயம், நவீன சுகாதாரம் மற்றும் நல்ல கல்வி போன்ற மறுக்க முடியாத பல நல்ல விஷயங்களையும் டென்மார்க் கிரீன்லாந்து மக்களுக்கு அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சிலை மீது சிவப்பு வண்ணம் பூசப்பட்டது எதிர்ப்பின் அடையாளத்தைக் குறித்தது. ஆனால் கிரீன்லாந்தின் சுதந்திர இயக்கம், அப்போது ஆரம்ப கட்டத்தில்தான் இருந்தது. என் பள்ளிக்கு அடுத்ததாக இருந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில், கிரீன்லாந்தில் தீவிர மாணவர் இயக்கம் ஒன்று வளர்ந்து வருவதைக் கண்டேன். சில இளம் மாணவர்கள் டேனிஷ் மொழிக்குப் பதிலாக தங்கள் சொந்த மொழியான கிரீன்லாண்டிக்கில் கற்பிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனையடுத்து, இரண்டு நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த அதிகாரப்பூர்வ பெயரான கோதாப்பைக் கைவிட்டு, 1970 களின் பிற்பகுதியில், கிரீன்லாந்தின் தலைநகரின் பெயர் நூக் என மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற டொனால்ட் டிரம்ப் ஆர்வம் காட்டுவதால், தற்போது மீண்டும் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி மாதம் கிரீன்லாந்து (டென்மார்க் தன்னாட்சிப் பகுதி) அல்லது பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டைப் பெற ராணுவ அல்லது பொருளாதார சக்தியைப் பயன்படுத்துவீர்களா என்ற கேள்விக்கு, "இல்லை, இரண்டு விஷயங்களைப் பற்றியும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு அவை தேவை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்" என டிரம்ப் பதிலளித்தார். பின்னர், ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் அளித்த பேட்டியில், "நாங்கள் அதைப் (கிரீன்லாந்தை) பெறப் போகிறோம் என்று நினைக்கிறேன்," என செய்தியாளர்களிடம் டிரம்ப் தெரிவித்தார். கிரீன்லாந்து தீவின் 57,000 குடியிருப்பாளர்கள் "எங்களுடன் இருக்க விரும்புகிறார்கள்" என்றும் அவர் குறிப்பிட்டார். கேள்வி என்னவென்றால், அந்த மக்கள் விரும்புகிறார்களா? என்பது தான். இதற்கிடையில், டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன், கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்ற கருத்தை வலியுறுத்தினார். "கிரீன்லாந்து மக்களுக்கு சொந்தமானது தான் கிரீன்லாந்து" என்றும் அவர் குறிப்பிட்டார். அது மட்டுமின்றி, "கிரீன்லாந்து மக்களே தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும்"என்றும் மெட்டே பிரெடெரிக்சன் கூறினார் . எனவே, கிரீன்லாந்து மக்கள் எப்படிப்பட்ட எதிர்காலத்தை விரும்புகிறார்கள்? அவர்கள் டென்மார்க்கின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை என்றால், அவர்களுக்கு வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன? என்பதை விளக்குகிறது இத்தொகுப்பு. டீப்சீக் வெற்றி எதிரொலி: சீனா குறி வைத்த 10 உயர் தொழில்நுட்பங்களில் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது?8 பிப்ரவரி 2025 'அவரை காப்பாற்ற முயன்று நானும் சிக்கினேன்' - பாலியல் இன்பத்தை போதைப்பொருள் அதிகரிக்குமா?8 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தென்கிழக்கு கிரீன்லாந்தில் கிங் ஃபிரடெரிக் VI கடற்கரையில் உள்ள ஸ்கின்ஃபாக்ஸ் பனிப்பாறையின் படம். டென்மார்க் மக்களுடன் உள்ள பதற்றமான உறவு கிரீன்லாந்து மக்களின் கருத்துக் கணிப்பில், 6 சதவீத மக்கள் மட்டுமே தங்கள் நாடு அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும், 9 சதவீத மக்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், 85 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. ஆனாலும், கிரீன்லாந்து மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது ஒரு நுட்பமான கேள்வி என்பதை ஃபிரடெரிக்சன் அறிவார். 1720 களில் கிரீன்லாந்தில் தனது காலனித்துவத்தைத் தொடங்கியதிலிருந்து, டென்மார்க் தன்னை உலகின் கருணை மிகுந்த ஏகாதிபத்தியவாதியாக பல காலமாக வெளிக்காட்டி வருகின்றது. இருப்பினும், கடந்த காலங்களில் கிரீன்லாந்து மக்களிடம் சர்வாதிகார முறையில் அவர்கள் நடந்துகொண்ட விதம் வெளிப்பட்டதால், இந்த பிம்பம் சமீபத்திய ஆண்டுகளில் பலவீனமடைந்துள்ளது. குறிப்பாக, கிரீன்லாந்து மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கடுமையான அநீதிகள் வெளிவந்துள்ளன. இந்த அநீதிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்தவை அல்ல, தற்போதும் உயிருடன் உள்ள மக்களின் காலத்தில் நடந்தவை தான். பெரிய அளவில் நடந்த, சர்ச்சைக்குரிய கருத்தடை நடவடிக்கையும் இவற்றுள் அடங்கும். கிரீன்லாந்தைச் சேர்ந்த பெண்களின் ஒப்புதல் இல்லாமல் அல்லது அவர்களுக்குத் தெரியாமல் அவர்களின் உடலில் IUD கள் (ஒரு வகையான குழந்தை பிறப்பு கட்டுப்பாட்டுக் கருவி) வைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அதிகாரிகள் இணைந்து விசாரித்து வருகின்றனர். 1966 மற்றும் 1970க்கு இடையில், கிரீன்லாந்தில் உள்ள பருவமடைந்த பெண்களில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு அவர்களின் அனுமதியின்றி குழந்தை பிறப்பு கட்டுப்பாடுக் கருவிகள் ( IUD ) வைக்கப்பட்டதாக ஆதாரங்கள் கூறுகின்றன. கடந்த டிசம்பரில், கிரீன்லாந்து பிரதமர் முட் எகெட் இதனை "கிரீன்லாந்து மக்களுக்கு எதிராக டென்மார்க் அரசால் நடத்தப்பட்ட நேரடி இனப்படுகொலை" என்று விவரித்தார். கிரீன்லாந்துக்கும் டென்மார்க்கிற்கும் இடையிலான உறவுகளைப் பற்றி பொதுவாக விவாதித்த டென்மார்க் தொலைக்காட்சி நிறுவனத்திடம் பேசிய போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். கூடுதலாக, 1960கள் மற்றும் 1970களில், கிரீன்லாந்து நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குழந்தைகள், அவர்களின் சொந்த தாய்மார்களிடமிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். அதாவது வளர்ப்பு பெற்றோரால் டென்மார்க்கில் வளர்க்கப்படுவதற்காக கொண்டுசெல்லப்படுகிறார்கள் என்பது போன்ற சந்தேகம் எழுந்தது. ஒருபுறம், சில குழந்தைகளுடைய சொந்த தாய்மார்களின் சம்மதமின்றி இவ்வாறு நடந்துள்ளது. மறுபுறம், இத்துடன் தங்கள் குழந்தைகளுடனான அனைத்து தொடர்புகளையும் நிரந்தரமாக இழக்க நேரிடும் என்று மற்ற தாய்மார்களிடம் கூறப்படவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகள், பல ஆண்டுகள் கழித்தும் ஆறாத ஒரு ஆழமான காயத்தை விட்டுச் சென்றுள்ளது. தத்தெடுக்கப்பட்ட கிரீன்லாந்து குழந்தைகள் சிலரால் பின்னாளில் தங்களது சொந்த பெற்றோரைக் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் இன்னும் பலரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக, ஒரு சிறிய குழு 2024 ஆம் ஆண்டில் டென்மார்க் அரசிடமிருந்து இழப்பீடு கோரியுள்ளது. இது வெற்றி பெற்றால், தத்தெடுக்கப்பட்டவர்கள் பலராலும் இதேபோன்று ஏராளமான கோரிக்கைகளை முன் வைக்கமுடியும். கிரீன்லாந்தில் வளர்ந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியர் இபென் மாண்ட்ரூப், இந்த சமீபத்திய நிகழ்வுகளை டென்மார்க் மக்களுக்கான கடுமையான எச்சரிக்கை மணியாகக் கருதுகிறார். அவர்கள் நீண்ட காலமாக கிரீன்லாந்தில் நேர்மறையான மற்றும் நல்ல செல்வாக்கைக் கொண்டவர்களென தங்களைப் பார்க்க பழகிவிட்டனர். "டென்மார்க் எதையும் திரும்பப் பெறாமல் கிரீன்லாந்திற்கு உதவி செய்து கொண்டிருந்தது என்ற கதையை அடிப்படையாகக் கொண்டு முழு உறவும் கட்டப்பட்டது" என்று அவர் கூறுகிறார். "கிரீன்லாந்தை பாதுகாத்து, அதன் சொந்தக் காலில் நிற்கக் கற்றுக் கொடுத்த தாய்நாடாக நாங்கள் டென்மார்க்கை விவரித்துள்ளோம். டென்மார்க் ஒரு ஆசிரியர் அல்லது பெற்றோர் என்றும், கிரீன்லாந்தை ஒரு மாணவர் அல்லது குழந்தை என்றும், கிரீன்லாந்துடனான டென்மார்க்கின் உறவை மக்கள் அடிக்கடி குறிப்பிடுகிறார்கள்" எனக் கூறி தொடர்ந்து பேசிய இபென், "டென்மார்க் எந்த நன்மையும் எதிர்பார்க்காமல் கிரீன்லாந்திற்கு உதவுகிறது என்று இந்த உறவு எப்போதும் விவரிக்கப்படுகிறது" என்றும் கூறுகிறார். மேலும், "ஏதோ கிரீன்லாந்து எங்களுக்கு கடன்பட்டிருப்பது போல, கிரீன்லாந்து எங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று டென்மார்க் மக்களாகிய நாங்கள் அடிக்கடி நம்புகிறோம்." எனவும் அவர் விவரிக்கிறார். மேற்குவங்கம்: விரட்ட வந்த ஜேசிபி வாகனத்தை முட்டித்தூக்கிய யானை5 பிப்ரவரி 2025 இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு - ஏன்?5 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1853 ஆம் ஆண்டு தெற்கு கிரீன்லாந்தில் ஒரு டென்மார்க் குடியிருப்பை இது காட்டுகிறது. "கிரீன்லாந்து ஏற்கனவே வளர்ச்சியடைந்துள்ளது" சமீபத்திய ஆண்டுகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள், கிரீன்லாந்தின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், கிரீன்லாந்து சுதந்திரமாக இருக்க விரும்புவதாக தெரிவிக்கின்றன. 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், கிரீன்லாந்து சுதந்திர நாடாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு, கிரீன்லாந்து மக்களிடையே 67.7 சதவீத ஆதரவு இருப்பதாக தெரியவந்தது. "என்னுடைய பார்வையில், கிரீன்லாந்து ஏற்கனவே வளர்ச்சியடைந்துள்ளது. மற்ற நாடுகளுடன் சமமான நிலையில், நமது சொந்த முடிவுகளை நாமே எடுக்கத் தொடங்க வேண்டும் என்பதை நமது சுய மதிப்பு மற்றும் தன்னம்பிக்கை உணர்வு வெளிப்படுத்துகிறது" என்று நூக்கில் உள்ள சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனமான ஓஷன்ஸ் நார்த் கலாஅல்லிட் நுனாட்டின் இயக்குனர் ஜென்சீராக் பவுல்சன் கூறுகிறார். தொடர்ந்து பேசிய ஜென்சீராக், "ஒரு நாடு தனது சொந்த முடிவுகளை எடுக்க சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும். மற்றொரு தேசத்தால் கட்டுப்படுத்தப்பட கூடாது" என்றும் குறிப்பிடுகிறார். மேலும், "நாம் எதையும் செய்ய அனுமதி கேட்க வேண்டியதில்லை, (ஒரு குழந்தையாக) உங்கள் பெற்றோரிடம் ஏதாவது கேட்க வேண்டியிருக்கும் போது, அவர்கள் உங்களால் முடியாது என்று கூறினால், அப்போது எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? அப்படித்தான் இதுவும்"என்று விளக்குகிறார் ஜென்சீராக் பவுல்சன். ஆனால், "சுதந்திரம்" என்பது கிரீன்லாந்திற்கு ஒரு எளிய விஷயம் அல்ல, கடினமான சவால்கள் மற்றும் முடிவுகளை எதிர்காலத்தில் கிரீன்லாந்து சமாளிக்க வேண்டியிருக்கும் என்று போல்சன் கருதுகிறார். ஏனென்றால், "இன்றைய உலகில் அனைத்து நாடுகளும் ஒருவரையொருவர் நம்பியிருப்பதால், உண்மையான சுதந்திரம் சிக்கலானது" என்றும் ஜென்சீராக் குறிப்பிடுகிறார். இதுகுறித்து தொடர்ந்து விளக்கிய அவர், "டென்மார்க் கூட, ஒரு இறையாண்மை கொண்ட நாடாக, மற்ற நாடுகளைச் சார்ந்திருக்கிறது. எனவே, நான் 'சுதந்திரம்' என்பதற்குப் பதிலாக 'அரசுரிமை' என்ற வார்த்தையை பயன்படுத்த விரும்புகிறேன்"என்கிறார். தோல் புற்றுநோய்: ஏற்படுவது ஏன்? தடுப்பதற்கான வழி என்ன? மருத்துவர்கள் விளக்கம்5 பிப்ரவரி 2025 பனாமா: கடலுக்கு அடியில் 11 மீட்டர் ஆழத்தில் வீடு கட்டி 120 நாட்கள் வாழ்ந்த மனிதர்5 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெரும்பாலான கிரீன்லாந்து மக்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள். சுதந்திரத்திற்கான முக்கியக் கூறுகள் கிரீன்லாந்தை கைப்பற்ற டிரம்ப் எப்படி திட்டமிட்டார் என்பது பற்றி அதிகம் தெரியவில்லை. 2019ஆம் ஆண்டு அவர் இந்த யோசனையை முதன் முதலில் பரிந்துரைத்த போது, அது "அடிப்படையில் ஒரு பெரிய ரியல் எஸ்டேட் ஒப்பந்தமாக" இருக்கும் என்று கூறினார். அமெரிக்க ஆட்சியின் கீழ் கிரீன்லாந்து எந்த அளவுக்கு தன்னாட்சி கொண்ட நாடாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர்களின் சமூக நலன்கள் அமைப்பு எவ்வாறு செயல்படும் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. கிரீன்லாந்தை பெறுவதற்கான அவரது அறிவிப்பைத் தொடர்ந்து, டிரம்ப் தனது நிலைப்பாட்டை வலுப்படுத்தினார். அதனையடுத்து, வடக்கு அட்லாண்டிக்கில் அமெரிக்கப் பகுதியை விரிவுபடுத்தும் தனது இலக்கை அடைய ராணுவத்தை பயன்படுத்தலாம் என்றும் அவர் வெளிப்டையாகப் பகிர்ந்துள்ளார். டொனால்ட் டிரம்பின் மூத்த மகன் மற்றும் டிரம்ப் குழுவினரின் வருகை, தீவை கையகப்படுத்தும் தனது யோசனையில் டிரம்ப் தீவிரமாக இருப்பதாக, அவரது கருத்துகளுக்கு வலு சேர்த்தது. ஆனால் கிரீன்லாந்தில் உள்ள பலர் அவர்களின் வருகையால் ஈர்க்கப்படவில்லை. "அது எங்களை அமெரிக்காவின் அழுத்தத்தை எதிர்த்து உறுதியாக நிற்க வைக்கிறது. மேலும்,'தயவுசெய்து உங்களை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்' என்று சொல்ல வைக்கிறது," என்கிறார் கிரீன்லாந்து அரசாங்கத்தின் ஐடி அதிகாரி ஜானஸ் கெம்னிட்ஸ் க்ளீஸ்ட். மேலும், "அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைப் பற்றி முன்னர் நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருந்த சிலர் தங்களது கருத்தை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளனர்" என்றும் குறிப்பிடுகிறார் கெம்னிட்ஸ். இடதுசாரி இனுயிட் அட்டாகாடிகிட் கட்சியைச் சேர்ந்த டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினரான ஆஜா கெம்னிட்ஸ், சுதந்திரம் எப்படி கிடைத்தாலும் சரி, ஆனால் சுதந்திரம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தனது சொந்தக் கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளார். முதலாவதாக, திறமையான இளைஞர்கள் கிரீன்லாந்திலிருந்து வெளியேறுவதை நிறுத்த வேண்டியது முக்கியம் என்கிறார் கெம்னிட்ஸ். அவர் இதை 'அறிவு இழப்பு' எனக் குறிப்பிடுகிறார். அதாவது பல திறமையான நபர்கள், கிரீன்லாந்திலிருந்து கல்விக்காக வெளிநாட்டுக்குச் செல்கிறார்கள் ஆனால் அவர்கள் திரும்பி வருவதில்லை. அவரது கூற்றுப்படி, டென்மார்க் மற்றும் பிற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இளம் கிரீன்லாந்து மக்களில் 56 சதவீதத்தினர் மட்டுமே தங்கள் படிப்பை முடித்த பிறகு திரும்பி வருகிறார்கள். "இந்த எண்ணிக்கை அதிகமில்லை. அதனால், இளைஞர்கள் கிரீன்லாந்துக்குத் திரும்பி வந்து, இந்த பகுதியை மேம்படுத்த உதவும் முக்கியமான வேலைகளை மேற்கொண்டால் நன்றாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார். பிபிசி செய்தி அறைக்குள் நுழைய விருப்பமா? - மெட்டாவெர்ஸ் உலகுக்கு உங்களை வரவேற்கிறோம்3 பிப்ரவரி 2025 மனித மூளையின் மோசமான நினைவுகளை அழிக்க முடியுமா? எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனை கூறுவது என்ன?3 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் ஒரு பரந்த பொருளாதார பிரச்னையும் உள்ளது என சுட்டிக்காட்டுகிறார் கெம்னிட்ஸ். "அரசியல் மற்றும் பொருளாதாரச் சுதந்திரம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது" எனக் கருதுகிறார் கெம்னிட்ஸ். மேலும் கிரீன்லாந்தில் வணிகத்தை வளர்ப்பதில் டென்மார்க் அரசுடன் ஒத்துழைப்பது மிகவும் முக்கியம், அதேபோல் மூலப்பொருட்களைப் பிரித்தெடுப்பதிலும் சுற்றுலா வளர்ச்சியிலும் அமெரிக்க அரசுடன் ஒத்துழைப்பதும் மிக முக்கியம்" என்றும் விளக்குகிறார். தற்போது, டென்மார்க் அரசாங்கத்தால் தரப்படும் "பிளாக் கிராண்ட்ஸ்" எனும் மானியத்தை கிரீன்லாந்து பொருளாதாரம் பெரிதும் சார்ந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில், டென்மார்க் அரசாங்கம் கிரீன்லாந்திற்கு ஆண்டுக்கு 480 மில்லியன் பவுண்டுகள் (சுமார் 610 மில்லியன் டாலர்கள்) மானியமாக வழங்கியது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்த மானியம் கிடைக்காமல் போகும் என்பதால், அதனை மாற்றுவதற்கான வழியைக் கண்டுபிடிப்பதும் கிரீன்லாந்து மக்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக உள்ளது என நூக்கில் உள்ள கிரீன்லாந்து பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் சேவியர் அர்னாட் கூறுகிறார். "சுதந்திரத்தை நோக்கிய நகர்வுகளைத் தடுத்து நிறுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்று பொருளாதாரம்" என்றும் குறிப்பிடுகிறார் சேவியர் . "கிரீன்லாந்தின் பொருளாதாரம் டென்மார்க் வழங்கும் "நிதி ஆதரவை பெரிதும் நம்பியுள்ளது". டென்மார்க், நிதி வழங்குவதை நிறுத்தினால், கிரீன்லாந்தின் நிதி ஆதாரத்தில் ஏற்படும் பெரும் பின்னடைவை சரி செய்ய வேண்டி வரலாம்" என்பதையும் விளக்குகிறார் சேவியர் அர்னாட். ஆனால், அது "எப்படி என்பதுதான் கேள்வி. எடுத்துக்காட்டாக, புதிய கூட்டணிகளுடன் சுரங்கத் திட்டங்களை உருவாக்கி, அதில் கிடைக்கும் வரியின் மூலம் வருவாயை அதிகரிக்கும் போது, இந்த இடைவெளியை நிரப்ப முடிந்தால், பொருளாதார சுதந்திரத்திற்கான தெளிவான பாதை வெளிப்படும்"என விவரிக்கிறார் சேவியர். இராசகேசரி பெருவழி: முதலாம் ஆதித்த சோழன் வணிகர்களுக்காக அமைத்த நிழல் படை என்ன செய்தது?2 பிப்ரவரி 2025 தண்ணீரை எப்போது குடிக்க வேண்டும்? உணவு உண்ணும் போது நீர் அருந்தலாமா?1 பிப்ரவரி 2025 நல்வாழ்வுக்கான காரணி பொருளாதாரத்தின் பெரும்பகுதியைக் அரசாங்கம் கட்டுப்படுத்தும் நோர்டிக் பாணியிலான (ஸ்காண்டிநேவியா, பின்லாந்து அல்லது ஐஸ்லாந்துக்கு தொடர்புடைய) மக்கள் நல அரசில் மற்றொரு கேள்வியும் முக்கியமானது. அதாவது, டென்மார்க்குடனான உறவின் விளைவாக கிரீன்லாந்து தற்போது பெறும் அனைத்து சுகாதார மற்றும் சமூக நன்மைகளுக்கும் என்ன நடக்கும்? என்பது தான் அக்கேள்வி. தற்போது, டென்மார்க் வழங்கும் நன்மைகளின் ஒரு பகுதியாக கிரீன்லாந்து நாட்டு மக்கள், டென்மார்க் மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான அனுமதியும் அடங்கும். கிரீன்லாந்து மக்களிடம் டென்மார்க்கிலிருந்து பிரிந்து செல்ல விரும்புகிறீர்களா என்று கேளுங்கள், பெரும்பாலானவர்கள் ஒரு எச்சரிக்கையுடன் ஆம் என்று கூறுகிறார்கள். ஆனால் நலத்திட்டங்களை இழக்காவிட்டால் மட்டுமே அவர்கள் ஆம் என்று கூறுவார்கள். மேலும், கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டை அமெரிக்கா எடுத்துக் கொண்டால், அதன் மக்கள் நல அமைப்புகள் (சுகாதாரம் மற்றும் சமூக நலன்கள் போன்ற அரசாங்க நிதியுதவி சேவைகள்) என்னவாகும் என்பதில் தீவிரமான கவலைகள் ஏற்படும். ஏனென்றால், நார்டிக் நாடுகள் மற்றும் பல மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது அமெரிக்கா குறைவான சலுகைகளையே வழங்குகிறது. ஆனால், கிரீன்லாந்து சுதந்திரமடைந்தால், அதன் மக்கள் புற்றுநோய் சிகிச்சை போன்ற மருத்துவ வசதிகளை இழக்க நேரிடும் என்ற கருத்துகளை சிலர் நம்புவதில்லை. கிரீன்லாந்தின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், தற்போதைய நலெராக் அரசியல் கட்சியின் தலைவருமான பீலே ப்ரோபெர்க், 1944 இல் டேனிஷ் ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறிய ஐஸ்லாந்தை இதற்கு ஒரு உதாரணமாகக் குறிப்பிடுகிறார். அதாவது, "ஐஸ்லாந்து தொடர்ந்து தனது நோயாளிகளை டென்மார்க்கிற்கு அனுப்புகிறது" என்று உதாரணத்தை விளக்குகிறார் ப்ரோபெர்க். தொடர்ந்து பேசிய அவர், "டென்மார்க்கில் ஐஸ்லாந்து மாணவர்கள் இன்னும் படிக்கிறார்கள், அதேபோல் டென்மார்க் மாணவர்கள் ஐஸ்லாந்திலும் படிக்கிறார்கள். நாங்கள் ராஜ்ஜியத்தை விட்டு வெளியேற முடிவு செய்தால் டென்மார்க் எந்த வகையில் தடை விதிக்க விரும்பும் என்பதைப் புரிந்துகொள்வது எனக்கு கடினமாக உள்ளது" என்றும் ப்ரோபெர்க் தெரிவித்தார். "சுதந்திரம் பற்றி விவாதிப்பதிலிருந்து நம்மை பயமுறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட கருத்துகள் அவை" என்றும் அவர் வாதிடுகிறார். மறுபுறம், இதுபோன்ற கவலைகளின் காரணமாக ஒருபோதும் உண்மையான சுதந்திரம் கிடைக்காது என்று சில கிரீன்லாந்து மக்கள் நம்புகிறார்கள். "டென்மார்க், பெல்ஜியம் அல்லது அங்கோலா போன்ற நாடுகளில் காணப்படும் சுதந்திரம் இங்கு ஒருபோதும் நடக்காது" என்று கெம்னிட்ஸ் க்ளீஸ்ட் வாதிடுகிறார். தொடர்ந்து பேசிய அவர், "இவ்வளவு சிறிய மக்கள் தொகையுடன், அதிலும் நன்கு படிக்காத ஒரு பகுதியினருடன், நாங்கள் பராமரிக்க விரும்பும் ஒரு சிக்கலான மக்கள் நல அமைப்புகளுடன், சுதந்திரம் என்ற சொல் பொதுவாகப் புரிந்து கொள்ளப்படும் அர்த்தத்தை நாம் ஒருபோதும் அடைய முடியாது" என விவரிக்கிறார். டீப்சீக் செயலி: தடை விதித்த அமெரிக்க கடற்படை, சந்தேகம் கிளப்பும் ஆஸ்திரேலியா - என்ன நடக்கிறது?1 பிப்ரவரி 2025 பூமியின் வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸை கடந்தால் என்ன ஆகும்?4 பிப்ரவரி 2025 டிரம்பின் தந்திரோபாயங்கள் இந்தப் பிரச்னைகள் அனைத்தும் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகின்றன, ஆனால் கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற டிரம்ப் வெளிப்படையாக முயன்றதன் மூலம், அவை திடீரென்று ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் அமெரிக்க அதிபராக யார் இருந்தாலும், கிரீன்லாந்து மக்கள் அமெரிக்காவுடன் நெருக்கமான ஒத்துழைப்பதன் மூலம் பயன்பெறுவார்களா? அப்படியானால், எந்த அளவிற்கு பயன்பெறுவார்கள் என்பதுதான் கேள்வி. "மற்ற நாடுகளைச் சார்ந்திருக்கும் கிரீன்லாந்தின் சார்புநிலையை விரிவுபடுத்தி, முடிந்தவரை பல வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டிருப்பது தான், கிரீன்லாந்தின் தேசிய திட்டம்" என டேனிஷ் சர்வதேச ஆய்வுகள் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் நிபுணருமான உல்ரிக் பிராம் காட் கூறுகிறார். இந்த சூழலில், சில கிரீன்லாந்து மக்கள் டென்மார்க் அல்லது அமெரிக்காவுடனான "சுதந்திர கூட்டணி" மாதிரியை ஆதரிக்கின்றனர். அமெரிக்காவிற்கும் சில பசிபிக் தீவுகளுக்கும் இடையில் உள்ள இதேபோன்ற முறையை இந்த கருத்து பிரதிபலிக்கிறது. ஆனால் "பிரச்னை என்னவென்றால், கிரீன்லாந்து டென்மார்க்கால் அதிகமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உணர்கிறது," என்கிறார் பிரம் காட். தொடர்ந்து பேசிய அவர், "கிரீன்லாந்தின் குறிக்கோள், குறைவான கட்டுப்பாட்டோடு, எந்தவொரு நாட்டையும் அதிகமாகக் சார்ந்திருப்பதைக் குறைப்பதாகும். சுதந்திரமான கூட்டுறவு என்பது 'கூட்டணி' பற்றியது அல்ல, மாறாக 'சுதந்திரம்' பற்றியது. இது ஒரு நாட்டின் சொந்த இறையாண்மையைப் பற்றியது" என்றும் விளக்குகிறார். கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்தது ஆச்சரியமாக இருந்திருக்கலாம். ஆனால், இது ஒரு முக்கியமான பிரச்னை என்பதை அவரது குழு அறிந்திருந்தது. குறிப்பாக பல கிரீன்லாந்து மக்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தனர். கிரீன்லாந்தில் செல்வாக்கு செலுத்துவதற்கு இதை ஒரு வாய்ப்பாக அவர்கள் கருதினர். "சமீபத்திய ஆண்டுகளில், இந்தக் கதைகள் அனைத்தும் வெளிவந்து, நவீனமயமாக்கல் சார்ந்து சொல்லப்பட்ட கதைக்கு புத்தொளி பாய்ச்சியுள்ளது. டென்மார்க் கிரீன்லாந்திற்கு நற்பண்புடன் உதவியது என்ற கருத்து கேள்விக்குள்ளாக்கப்பட்டது," என்கிறார் இபென் மாண்ட்ரூப். மேலும், "கிரீன்லாந்து மக்களின் நலனுக்காகவே என்று கூறப்பட்ட திட்டம் உண்மையில் அவர்களுக்கு நல்லதல்ல. இந்தச் சூழல் டென்மார்க் மண்டலத்தில் உள்ள கிரீன்லாந்து மக்களின் நிலையைப் பற்றிய பல சிந்தனைகளைத் தூண்டுகிறது. டென்மார்க்குடன் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற கருத்தைச் சுற்றி, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல், சமீப ஆண்டுகளில் கிரீன்லாந்தில் எழுந்துள்ள விமர்சனத்தை இது தீவிரப்படுத்துகிறது." என்கிறார் மாண்ட்ரூப். மகாராஷ்டிரா: பெண்ணின் கருவில் இருந்த குழந்தை வயிற்றில் ஒரு கரு உருவானது எப்படி?1 பிப்ரவரி 2025 சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் அதிக நேரம் நடந்து சாதனை - ஈலோன் மஸ்க், டிரம்ப் கூறியது என்ன?31 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜனவரி தொடக்கத்தில் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் தீவுக்கு பயணம் செய்தார். நார்வே, ஐஸ்லாந்து மற்றும் கனடா ஆனால் டென்மார்க்கும், அமெரிக்காவும் இல்லையென்றால், கிரீன்லாந்து வேறு யாருடன் இணைய முடியும்? பெரும்பாலான கிரீன்லாந்து மக்கள், கனடா மற்றும் ஐஸ்லாந்துடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. நலேரக் கட்சித் தலைவர் ப்ரோபெர்க் இந்த யோசனையை வரவேற்கிறார். இந்தக் கருத்துக் கணிப்பில் வெளிவந்துள்ள முடிவுகளில் நார்வேயையும் அவர் சேர்க்கிறார். "டென்மார்க்கை விட நார்வே மற்றும் ஐஸ்லாந்துடன் எங்களுக்கு பொதுவான விஷயங்கள் அதிகம் உள்ளன" என்று அவர் குறிப்பிடுகிறார். "டென்மார்க்கைப் போலல்லாமல், ஆர்க்டிக்கில் நாங்கள் அனைவரும் ஒரு தொடர்பைக் கொண்டுள்ளோம். சுதந்திரத்திற்குப் பிறகும் டென்மார்க்குடன் ஒருவித தொடர்பைப் பேண வேண்டும் என்ற எண்ணத்தில் நான் வெளிப்படையாக இருக்க ஒரே காரணம், அது சில கிரீன்லாந்து மக்களுக்கு உறுதியளிக்கக்கூடும் என்பதால்தான். ஏனெனில் அவர்கள் டென்மார்க்குடனான உறவுக்குப் பழகிவிட்டனர்."எனத் தெரிவித்தார் ப்ரோபெர்க். இன்னும், ஒரு கேள்வி எஞ்சியுள்ளது. அதாவது, கிரீன்லாந்து மக்கள் விரும்பும் சமூக நலன்களை வழங்குவதற்கு கனடாவும் ஐஸ்லாந்தும் பொறுப்பேற்கத் தயாராகுமா? என்பது தான் அக்கேள்வி. ஆனால், நிச்சயமாக இல்லை என்பதாகவே கிட்டத்தட்ட அந்தக் கேள்விக்கான பதிலாக இருக்கும். இதனால் ஒருபுறம், புதிய வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சிக்கான சாத்தியங்களுடனும், மறுபுறம், அவர்களைத் தடுக்கக் கூடிய சவால்களுடனும் கிரீன்லாந்து மக்கள் நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்களைக் கொண்ட எதிர்காலத்தை எதிர்கொள்கின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c9vm2rgmrr3o
-
வெள்ளத்தால் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு சீன தூதரகத்தினால் உலர்பொருட்கள் பொதி வழங்கி வைப்பு
வவுனியாவில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 350 குடும்பங்களுக்கு சீன தூதரகத்தினால் உலர்பொருட்கள் பொதி வழங்கி வைப்பு 09 FEB, 2025 | 05:29 PM வவுனியா மாவட்டத்தில் கடந்த காலத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீன தூதரகத்தினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்றது. சீனத்தூரகத்தின் பிரதிப் பிரதானி சூ.யன்வெய் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் 350 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன. வடமாகாணத்தில் 2470 குடும்பங்களுக்கு 6490ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்படவுள்ளதுடன் அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் 350 குடும்பங்களுக்கு இன்று வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர , மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் , மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ந.கமலதாசன் மற்றும் சீன தூதரக இடைக்கால பொறுப்பாளர் ஜுயானுவேல், சீன தூதரக அரசியல் பிரிவுத் தலைவர் குயின் லிகோங், மற்றும் சீன தூதரக அதிகாரிகள் , மாவட்ட செயலக அதிகாரிகள் , கிராம சேவையாளர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/206242
-
பிரபல மூத்த ஊடகவியலாளர் பாரதி காலமானார்!
சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி காலமானார் Published By: DIGITAL DESK 3 09 FEB, 2025 | 05:02 PM சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி தனது 62 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானார். சுமார் 40க்கும் மேற்பட்ட வருட ஊடகத்துறை அனுபவத்தை கொண்ட இராஜநாயகம் பாரதி தினக்குரல் பத்திரிகையின் வாரமலர் மற்றும் இணையத்தளத்தின் முன்னாள் ஆசிரியரும் ஆவார். உயிரிழக்கும் போது இராஜநாயகம் பாரதி வீரகேசரியின் யாழ். பிராந்திய கிளையின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். https://www.virakesari.lk/article/206247
-
நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
நாட்டில் 80 வீதமான பகுதிகளுக்கு மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது Published By: DIGITAL DESK 2 09 FEB, 2025 | 05:20 PM நாட்டில் சுமார் 80 வீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. மீதமுள்ள பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க தேவையான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/206245
-
இளைஞனை கடத்தி 80 இலட்சம் ரூபா பணத்தை அபகரித்த கும்பல்!
யாழ் நகரில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபா பணம் அபகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வெளிநாடு செல்வதற்கு ஆர்வமாகவிருந்த இளைஞரொருவரிடம் 80 இலட்சம் ரூபா வரையான பணத்தை வங்கியில் வைப்பிலிட்டு வங்கி அறிக்கையை நேரடியாக வந்து தமக்கு காட்டுமாறு வெளிநாட்டு முகவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை நம்பி சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதிக்குச் சென்ற இளைஞனை காரில் கடத்திச் சென்ற குறித்த குழு இளைஞரின் வங்கிக் கணக்கில் இருந்த 80 இலட்சம் ரூபா பணத்தை மற்றுமொருவரின் வங்கி கணக்கிற்கு மாற்றிவிட்டு இளைஞரை கோப்பாய் பகுதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்தார். சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் பணம் மாற்றப்பட்ட வங்கி கணக்கிற்கு உரித்தான பெண்ணொருவரை கைது செய்ததுடன் கடத்தலில் ஈடுபட்ட மேலும் மூவரை கைது செய்தனர். இந்நிலையில் குறித்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து பணம் வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் பணத்தை மீட்பது தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைதான நான்கு சந்தேக நபர்களையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://tamil.adaderana.lk/news.php?nid=199915
-
மஞ்சள் கரு, வெள்ளை கரு ஆகிய இரண்டையும் சாப்பிட ஏதுவாக முட்டையை மிகச்சரியாக வேக வைப்பது எப்படி?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜாஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி பதவி, 2 மணி நேரங்களுக்கு முன்னர் முட்டைகளை வேக வைப்பதற்கான சிறந்த முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் இந்த புது செயல்முறையில் ஒரு முட்டையை வேக வைப்பதற்கு சுமார் அரை மணி நேரம் வரை ஆகலாம் என்று அந்த ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரு முட்டையை சரியான பதத்தில் வேக வைப்பது என்பது மக்களின் தினசரி வாழ்க்கையின் மறுக்க முடியாத உண்மைகளில் ஒன்று ஆகும். நீங்கள் காலை உணவுக்காக முட்டைகளை வேக வைப்பீர்கள். சில நிமிடங்கள் கழித்து, முட்டை சுவையாகவும் நன்றாகவும் வெந்திருக்கும் என்ற நம்பிக்கையில், வேக வைத்த முட்டையின் ஓடுகளை உடைத்து, ஒரு துண்டு பிரெட்டை எடுத்து முட்டையோடு சாப்பிட தயாராவீர்கள். ஆனால் முட்டையை உடைத்துப் பார்த்தால், அதன் மஞ்சள் கரு உடைந்திருக்கும். மறுபுறம், முட்டையின் வெள்ளைக்கரு கலங்கிய நீர் போல இருக்கும். இப்படித்தான் சரியாக வேகாத முட்டை தரும் ஏமாற்றத்தோடு காலைப் பொழுது தொடங்கும். இதற்கு என்ன காரணம் என்பதையும், மஞ்சள் கரு, வெள்ளை கரு ஆகிய இரண்டையும் சாப்பிட ஏதுவாக முட்டையை மிகச்சரியாக வேக வைப்பது எப்படி? என்பதற்கு ஆய்வாளர்கள் கூறும் புதிய வழிமுறைகளும் விளக்குகிறது இத்தொகுப்பு. புற்றுநோய்: மனித உடலில் எப்படிப் பரவுகிறது? அதில் எத்தனை வகைகள் உள்ளன? அன்டார்டிக் கிரில்: இந்த 'குட்டி ஹீரோ' இல்லை என்றால் திமிங்கலத்துக்குக் கூட பிரச்னைதான் - ஏன்? இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு - ஏன்? முட்டையின் மஞ்சள் கரு மற்றும் ஆல்புமின் (முட்டையின் வெள்ளைப் பகுதி) ஆகிய இரு பகுதிகளும் வெவ்வேறு வெப்பநிலைகளில் வேகும் என்பதுதான், முட்டையை வேக வைப்பதில் உள்ள பெரிய சவால். மஞ்சள் கருவை சரியாக சமைக்க வெறும் 65 டிகிரி செல்சியஸ் (149°F) வெப்பநிலை போதுமானது. அதே சமயம் ஆல்புமினுக்கு (முட்டையின் வெள்ளைப் பகுதி) 85 டிகிரி செல்சியஸ் (185°F) அதாவது, மஞ்சள் கருவை விட சற்று அதிகமான வெப்பநிலை தேவைப்படுகிறது. முட்டைகளை வேக வைப்பதற்கான பாரம்பரிய முறைகள், இந்த இரண்டு முரண்பாடுகளுக்கு இடையிலான மையப்புள்ளியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றன. உதாரணமாக, நீங்கள் 100°C (212°F) வெப்பநிலையில் முட்டையை வேக வைக்கும் போது, முட்டையின் வெள்ளைக்கரு மென்மையாகவும், நன்றாகவும் வெந்திருக்கும். அதே சமயம், முட்டை நீண்ட நேரம் வேக வைக்கப்படும் போது, மஞ்சள் கரு திடமாகவும் உறுதியாகவும் மாறும். நீங்கள் திடமான மஞ்சள் கருவை விரும்பினால், உங்களுக்கு இந்த முறை மிகப் பொருத்தமானது. ஆனால், உங்களுக்கு மென்மையான மஞ்சள் கரு தான் பிடிக்குமென்றால், இப்படி நீண்ட நேரம் வேக வைத்த முட்டை உங்களுக்கு ஏமாற்றமளிக்கும். முட்டையை வேக வைப்பதில் உள்ள மற்றொரு அணுகுமுறை ஸூ விடே முறையாகும். அதில், முட்டையானது 60-70 டிகிரி செல்சியஸ் (140-158°F) வெப்பநிலையில் சுமார் ஒரு மணி நேரம் தண்ணீரில் வேக வைப்பதன் மூலம் சமைக்கப்படுகிறது. அவ்வாறு செய்தால் மஞ்சள் கரு உடைந்துவிடாமல் இருக்கும், அதைச் சுற்றி வெள்ளைக்கருவும் சரியாக வேகாமல் மென்மையாக இருக்கும். ஆனால், கவலை வேண்டாம். முட்டையை சரியாக வேக வைப்பதற்கான வழிமுறையை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனித மூளையின் மோசமான நினைவுகளை அழிக்க முடியுமா? எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனை கூறுவது என்ன?3 பிப்ரவரி 2025 மகாராஷ்டிரா: பெண்ணின் கருவில் இருந்த குழந்தை வயிற்றில் ஒரு கரு உருவானது எப்படி?1 பிப்ரவரி 2025 உங்களால் இரவில் தூங்க முடியவில்லையா? - நீங்கள் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும் என்ன?31 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மஞ்சள் கருவை சரியாக சமைக்க வெறும் 65 டிகிரி செல்சியஸ் (149°F) வெப்பநிலை போதுமானது. இந்த புதிய முறையில் முட்டைகளை சமைக்கும் போது, முட்டை சரியாகவும், சுவையாகவும் வெந்திருப்பது மட்டுமின்றி, உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருப்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர். ஏனென்றால், இந்த புதிய முறையின் மூலம் சமைக்கப்படும் முட்டைகளில் அதிக பாலிஃபினால்கள் உள்ளன. இந்த நுண்ணூட்டச் சத்துக்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று கருதப்படுகின்றன. பஸ்வோலியில் உள்ள இத்தாலியின் தேசிய ஆராய்ச்சி கவுன்சிலைச் சேர்ந்த விஞ்ஞானி பெல்லெக்ரினோ முஸ்டோ தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், கணக்கீட்டுத் திரவ இயக்கவியலை (CFD - computational fluid dynamics) பயன்படுத்தி முட்டை சமைப்பதற்கான மாதிரியை உருவாக்கத் தொடங்கினர். அவர்களின் ஆராய்ச்சியின்போது, இந்த செயல்முறை ஒரு புதிய வழிமுறைக்கு இட்டுச்சென்றது. ஆனால் பெரும்பாலான சமையல்காரர்களுக்கும், வீட்டில் தினசரி சமைப்பவர்களுக்கும் அறிமுகமில்லாத இந்த முறை, சிறந்த முடிவுகளைத் தரும் எனக் கருதப்படுகிறது. அதாவது, இரண்டு வெவ்வேறு வெப்பநிலைகளுக்கு இடையில் மாறிமாறி முட்டையை வேக வைப்பது தான் இந்தச் செயல்முறை. இதனை குறிப்பிட்ட இடைவெளியில் சமைக்கும் முறை என ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதாவது, முட்டை முதலில் 100 டிகிரி செல்சியசில் உள்ள (212 ° F) கொதிக்கும் நீரில் வேக வைக்கப்படுகிறது. பின்னர் அது 30 டிகிரி செல்சியஸ் (86 ° F) வெப்பநிலையில் உள்ள தண்ணீருடன் வேறு கிண்ணத்திற்கு மாற்றப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும், கொதிக்கும் நீர் (100°C) மற்றும் வெதுவெதுப்பான நீருக்கு (30°C) இடையே முட்டையை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இதேபோல் மொத்தம் 32 நிமிடங்களுக்கு இந்த செயல்முறையைத் தொடர வேண்டும். எனவே சமைக்கும் போது, முட்டையை ஒருபக்கம் வேக வைத்து விட்டு, மறுபுறம் வேறு வேலையை பார்க்கச் செல்பவர்களுக்கு இது பலனளிக்காது. ஆனால், அதிக நேரமெடுத்து, கவனமான முயற்சிகளுடன் முட்டையை சமைக்க நீங்கள் தயாராக இருந்தால் இந்த முறை உங்களுக்கு சிறந்த பலனளிக்கும். உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? - அறிவியல் கூறும் 7 எளிய வழிகள்30 ஜனவரி 2025 உயிர்காக்கும் மருந்துகளை உருவாக்க விஷமுள்ள கம்பளிப் புழுக்கள் எப்படி உதவ முடியும்?30 ஜனவரி 2025 கியான் பரே சின்ட்ரோம் : மகாராஷ்டிராவில் அரிய நோய்க்கு 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு - என்ன அறிகுறி?29 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரண்டு வெவ்வேறு வெப்பநிலைகளுக்கு இடையில் மாறிமாறி வேகவைத்து சமைக்கப்பட்ட முட்டைகள் மென்மையான மஞ்சள் கருவைக் கொண்டிருந்தன. முட்டையின் அமைப்பு, சுவை மற்றும் அதன் ரசாயனச் சேர்க்கை ஆகியவற்றை ஆய்வு செய்து முட்டையின் தன்மையை ஆராய்ச்சியாளர்கள் சரிபார்த்தனர். அணு காந்த அதிர்வு (NMR) மற்றும் உயர் திறன் கொண்ட மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி போன்ற மேம்பட்ட அறிவியல் நுட்பங்களைப் பயன்படுத்தி முட்டையை விரிவாக ஆய்வு செய்து அதன் உயர் தரத்தையும் உறுதிப்படுத்தினர். இரண்டு வெவ்வேறு வெப்பநிலைகளுக்கு இடையில் மாறிமாறி வேகவைத்து சமைக்கப்பட்ட முட்டைகள் மென்மையான மஞ்சள் கருவைக் கொண்டிருந்தன. அவை சூ விடே முறையைப் பயன்படுத்தி சமைக்கப்பட்ட முட்டைகளைப் போலவே இருந்தன. ஆனால், முழுவதும் சூ விடே முறையில் சமைக்கப்பட்ட முட்டைகளைப் போல் இல்லாமல் , வெள்ளைக்கரு முழுமையாக சமைக்கப்பட்டு, பாரம்பரியமாக, மென்மையாக வேக வைத்த முட்டையைப் போன்ற அமைப்பைக் கொண்டிருந்தன. இந்த புதிய முறையை பயன்படுத்தி சமைக்கும் போது, முட்டையில் உள்ள வெள்ளைக்கருவின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் (95°F) மற்றும் 100 டிகிரி செல்சியஸ் (212°F) வரை மாறுபடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறினர். அதே சமயம் மஞ்சள் கருவானது இந்தச் செயல்முறை முழுவதும் 67 டிகிரி செல்சியஸ் (153°F) எனும் ஒரே வெப்பநிலையில் தொடரும். இந்த வெப்பநிலை மாற்றம் தான் வேறுபாட்டிற்கு காரணமாக இருக்கலாம் என அறியப்படுகின்றது. சுவாரஸ்யமாக, பிற முறைகளைப் பயன்படுத்தி சமைத்த முட்டைகளுடன் வேதியியல் பகுப்பாய்வில் ஒப்பிடும்போது, இந்த முறையில் சமைக்கப்பட்ட முட்டையின் மஞ்சள் கருவில் அதிக பாலிஃபினால்கள் இருப்பது தெரியவந்தது. இந்த பாலிஃபினால்கள், அவற்றின் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்காக அறியப்படுகின்றன. புற ஊதா கதிர்வீச்சு, வறட்சி அல்லது பூச்சிகளின் தாக்குதல்கள் போன்ற சுற்றுச்சூழல் அழுத்தங்களுக்கு எதிரான பாதுகாப்பு செயல்முறையாக தாவரங்கள் பாலிஃபினால்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால் இந்த பாலிஃபினால்கள் மனிதர்களுக்கும் நன்மை பயக்கும் என ஆராய்ச்சி முடிவுகள் குறிப்பிடுகின்றன. உதாரணமாக, அதிகமான பாலிஃபினால்களை உணவில் சேர்த்து கொள்வதன் மூலமாக, இதய நோய்கள், சில வகையான புற்றுநோய்கள் மற்றும் அரியவகை நரம்புத் தளர்ச்சி நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கலாம் என தொற்றுநோயியல் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே, மென்மையான வேக வைத்த முட்டைகளை காலை உணவாக நீங்கள் சாப்பிட விரும்பினால், நிச்சயமாக இந்த புதிய முறையை முயற்சித்துப் பார்க்கலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp3w6z7kp7vo
-
துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் தலைமறைவு
கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கி மற்றும் பல தோட்டாக்களுடன் தப்பிச் சென்றுள்ளார். மேலும், குறித்த கான்ஸ்டபிள் நேற்று (08) இரவு வீதி சோதனை நடவடிக்கைக்காக சென்றபோது மேற்படி துப்பாக்கியையும் 30 தோட்டாக்களையும் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், சம்பந்தப்பட்ட அதிகாரி வீதி சோதனை நடவடிக்கைக்கு சமூகமளிக்காததால், அவரைத் தொடர்பு கொண்டபோது அவரது கையடக்க தொலைபேசி நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய்க்கு சென்றுள்ளமை தெரியவந்தது. அதன்படி, சந்தேகத்திற்குரிய பொலிஸ் அதிகாரியை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு சர்வதேச பொலிஸ் மூலம் தேவையான நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் வைத்திருந்த துப்பாக்கி இன்னும் மீட்கப்படவில்லை, மேலும் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://tamil.adaderana.lk/news.php?nid=199888
-
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டிய தேசிய மக்கள் சக்தியின் வரவு-செலவுத் திட்டம்
இலங்கையின் 2025 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் - சர்வதேச நாணய நிதியம் Published By: DIGITAL DESK 7 09 FEB, 2025 | 11:09 AM (லியோ நிரோஷ தர்ஷன்) தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு தொடர்பில் கடந்த நவம்பர் மாதம் இலங்கை அரசாங்கத்தை பிரிதிநித்துவம் செய்ய அதிகாரிகளுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஊழியர் மட்ட உடன்பாடுகள் எட்டப்பட்டது. இதன் போது 2025 ஆம் ஆண்டு வரவு - செலவு திட்டத்தின் உள்ளடக்கங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டிருந்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் குறிப்பிட்டார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு - செலவு திட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளதுடன், மார்ச் மாதம் 21 ஆம் திகதி வாக்கெடுப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறானதொரு நிலையிலேயே கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை இன்னும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தில் உள்ளது. மேலும் இந்த மாத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தை இலங்கை அரசாங்கம் முன்வைக்க உள்ளது. இந்த வரவு - செலவு திட்டத்தில் நாணய நிதியத்தின் எதிர்பார்ப்புகள் அல்லது நிபந்தனைகள் எத்தகையதாக உள்ளது என்று கேள்வியெழுப்பியுள்ளீர்கள். 2024 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி இலங்கையில், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வு குறித்து பணியாளர் மட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இதன் பிரகாரம் நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 333 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இலங்கைக்கு கிடைக்கும். எவ்வாறாயினும் இந்த நிதியுதவிக்கான மேலதிக உறுதிப்பாடல்களுக்கான கலந்துரையாடல்கள் எதிர்வரும் வாரங்களில் நடைபெற உள்ளது. இலங்கையின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரல் பாராட்டத்தக்க விளைவுகளைத் ஏற்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டின் நான்காவது - மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.5 சதவீதம் வளர்ச்சியடைந்தது. 2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் சராசரி பணவீக்கம் இலக்கை விட மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் சர்வதேச இருப்புக்கள் 6.1 பில்லியனாக அதிகரித்துள்ளது. எனினும் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தை கருத்தில் கொள்ளும் போது, கடந்த நவம்பரில் எட்டப்பட்ட பணியாளர் நிலை ஒப்பந்துடன் தொடர்புப்படுகிறது. இதனை அடுத்த வாரங்களில் இடம்பெற கூடிய கலந்துரையாடல்களின் போது நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு உட்படுத்தப்படும். எனவே விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட நிபந்தனைகளுக்கு இணங்கும் வகையில், 2025 வரவு -செலவு திட்டத்தை சமர்ப்பது முக்கியமாகும் என குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/206207
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
தமிழக மீனவர்கள் 14 பேர் இரண்டு மீன்பிடி படகுடன் கைது February 9, 2025 11:43 am ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று இலங்கை வடக்கு மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இரண்டு மீன்பிடி விசைப்படகையும் அதிலிருந்த 14 மீனவர்களையும் கைது செய்து இரணைத்தீவு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மீனவர்களிடம் முதற்கட்ட விசாரணை முடித்துக் கொண்டு மீனவர்கள் 14 பேரும் விசைப்படகுடன் கிளிநொச்சி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://tamil.adaderana.lk/news.php?nid=199890
-
லசந்த படுகொலை சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை - நாளை எதிர்ப்பு போராட்டம்
சந்தேகநபர்களை விடுவிப்பதற்கான சட்டமா அதிபரின் தீர்மானம் ஏற்புடையதல்ல - ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டு 09 FEB, 2025 | 09:35 AM (நா.தனுஜா) ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சாரதி கடத்தப்பட்டார் என்பதை அனைவரும் அறிந்திருக்கும் நிலையில், அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் கூறுவது பொருத்தமானதல்ல என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் கல்கிசை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டிருக்கும் பிரேம் ஆனந்த உதலாகம, தொன் திஸ்ஸ சிறி சுகதபால மற்றும் பிரசன்ன நாணயக்கார ஆகிய மூவரையும் அவ்வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க சிபாரிசு செய்திருப்பது குறித்து கண்டனங்கள் வலுத்திருக்கின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் குறித்தவொரு குற்றவியல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் உள்ளிட்ட விசாரணை அதிகாரிகள், அவ்விசாரணை அறிக்கைகள் மற்றும் சாட்சியங்களை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கவேண்டும் எனச் சுட்டிக்காட்டிய எம்.ஏ.சுமந்திரன், அவற்றின் அடிப்படையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதா, இல்லையா எனும் தீர்மானத்தை சட்டமா அதிபரால் மேற்கொள்ளமுடியும் எனத் தெளிவுபடுத்தினார். அதேபோன்று சட்டமா அதிபர் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானங்களை மேற்கொள்ளும்போது, அதில் அரசாங்கம் தலையீடு செய்யக்கூடாது எனவும், மாறாக சட்டமா அதிபர் சுயாதீனமாக இயங்குவதை உறுதிசெய்யவேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தினார். இருப்பினும் சட்டமா அதிபரின் அண்மைய தீர்மானத்தைப் பொறுத்தமட்டில், லசந்த விக்ரமதுங்கவின் சாரதி கடத்தப்பட்டார் என்பதை அனைவரும் அறிந்திருக்கும் நிலையில், அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விடுவிக்குமாறு கூறுவது பொருத்தமானதல்ல என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார். அத்தோடு ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டு 16 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், இன்னமும் இவ்வழக்கில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை என விசனம் வெளியிட்ட அவர், இதுகுறித்த விசாரணைகளை விரைவுபடுத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டியது அவசியம் என்றார். https://www.virakesari.lk/article/206194
-
நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
மின்சக்தி அமைச்சு விடுத்துள்ள விசேட கோரிக்கை கூரைகளில் சூரிய சக்தி அமைப்புகள் பொருத்தப்பட்டவர்களுக்கு மின்க்தி அமைச்சு விசேட கோரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை தேசிய மின் கட்டமைப்பிலிருந்து தங்கள் சூரிய மின் சக்தி இணைப்பை துண்டிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=199901
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
நாம் தமிழர் கட்சிக்கு டெபாசிட் காலி: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன? 5 கேள்விகளும் பதில்களும் பட மூலாதாரம்,FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 9 பிப்ரவரி 2025, 01:29 GMT ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 90 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்றுள்ளார். திமுகவை எதிர்த்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது. அக்கட்சிக்கு கிட்டதட்ட 24 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. பெரியார் மண்ணில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு என்ன உணர்த்துகிறது? 'ஒரே இரவில் மாறிய வேட்பாளர்' - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரசுக்குப் பதிலாக திமுக போட்டி ஏன்? 15 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஈமு கோழி மோசடி: நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை, 19 கோடி அபராதம் - இழந்த பணம் கிடைக்குமா? பிரசவத்தின்போது வயிற்றில் பேன்டேஜ்: பெண்ணுக்கு ரூ.13 லட்சம் இழப்பீடு வழங்க தனியார் மருத்துவமனைக்கு உத்தரவு மேட்டுப்பாளையம்: தம்பி மற்றும் அவரின் மனைவியை ஆணவக் கொலை செய்த அண்ணனுக்கு மரண தண்டனை நாம் தமிழர் கட்சி மட்டுமே நேரடி போட்டியில் இருந்ததால், ஆளும்கட்சியின் அமைச்சர்கள் யாரும் கிழக்குத் தொகுதியில் பெரிதாக பிரசாரம் மேற்கொள்ளவில்லை. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் முத்துசாமி, வேட்பாளர் சந்திரகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மட்டுமே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். சனிக்கிழமையன்று (பிப்ரவரி 8) நடந்த வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே தி.மு.க வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் வெளியான இறுதி தரவுகளின்படி தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் 1,15,709 வாக்குகளையும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 24,151 வாக்குகளையும் பெற்றுள்ளனர். நோட்டாவுக்கு 6,109 வாக்குகளும் கிடைத்துள்ளன. 'இந்து மதத்தை மதிக்கவில்லை'; 18 ஊழியர்கள் மீது திருப்பதி தேவஸ்தானம் ஒழுங்கு நடவடிக்கை - இன்றைய முக்கிய செய்திகள்6 பிப்ரவரி 2025 மேற்குவங்கம்: விரட்ட வந்த ஜேசிபி வாகனத்தை முட்டித்தூக்கிய யானை5 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 1.பெரியார் மீதான விமர்சனம் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் 10,827 வாக்குகளைப் பெற்றிருந்தார். அதைவிட கூடுதலான வாக்குகளை தற்போது அக்கட்சி பெற்றுள்ளது. பிரதான கட்சிகள் தேர்தலில் போட்டியிடாததால் நாம் தமிழர் கட்சிக்குக் கூடுதல் வாக்குகள் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், அதற்கு மாறாக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெறும் என்று கடந்த ஜனவரி 7 ஆம் தேதியன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதே காலகட்டத்தில் பெரியார் மீது கடுமையான விமர்சனங்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்வைத்தார். பெண்ணிய உரிமை தொடர்பாக பெரியார் கூறியதாக சீமான் பேசிய பேச்சு, பெரியாரிய அமைப்புகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்திலும் பெரியார் மீது பல்வேறு விமர்சனங்களை அவர் முன்வைத்தார். கடந்த தேர்தலைவிட13 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றிருந்தாலும் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது. அன்டார்டிக் கிரில்: இந்த 'குட்டி ஹீரோ' இல்லை என்றால் திமிங்கலத்துக்குக் கூட பிரச்னைதான் - ஏன்?7 பிப்ரவரி 2025 பெண் பிறப்புறுப்பு சிதைப்பு: இந்த வலிமிகுந்த நடைமுறையால் ஏற்படும் பாதிப்புகள்7 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் 2. தேர்தல் உத்தி தவறா? "வரும் காலங்களில் தனது தேர்தல் உத்திகளை நாம் தமிழர் கட்சி மாற்றிக் கொள்ள வேண்டும். வாக்கு அரசியலுக்கு பெரியாரும் பிரபாகரனும் பயன்படுவதில்லை. பழைய சித்தாந்தங்கள் எதுவும் மக்கள் மத்தியில் எடுபடுவதில்லை" என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். "பெரியார் மறைந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. அவர் உயரத்தில் இருந்த காலத்தில்கூட வாக்கு அரசியலில் வெற்றி பெறும் நபராக தன்னை அவர் அடையாளப்படுத்தியதில்லை" எனக் கூறுகிறார். மேலும், "பெரியார் எதிர்ப்பு என்ற நிலையை எடுத்தால் அது பா.ஜ.க ஆதரவு என்ற நிலையாக மக்கள் பார்ப்பார்கள். தேர்தல் முடிவுகளின்படி மக்கள் மத்தியில் அதற்கு ஆதரவு இல்லை என்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்" என்கிறார். "ஈரோடு கிழக்குத் தொகுதியில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சியின் பிரசாரம் அமையவில்லை" எனக் கூறும் ஷ்யாம், " கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பை சீமான் பலப்படுத்த வேண்டும்" என்கிறார். இதனை மறுக்கும் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி, "கடந்த காலத்தைவிட கட்டமைப்பில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். 2026 தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் முகவர்களை நியமிப்பது எங்களின் இலக்காக உள்ளது" எனக் கூறினார். பொதுக்கூட்டங்களில், தொகுதி மக்களின் பிரச்னைகளைப் பற்றி மட்டுமே சீமான் அதிகம் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார். "சித்தாந்த ரீதியாக பேசும்போதும் திராவிடம் குறித்துப் பேசும்போதும் பெரியார் குறித்தும் பேசினோம். அதிலும் 10 சதவீதம்தான் பெரியார் பற்றிப் பேசினோம்" என்கிறார் இடும்பாவனம் கார்த்தி. "திமுகவும் பெரியார் பெயரை சொல்லி வாக்குகளைக் கேட்கவில்லை. நாம் தமிழர் கட்சியின் வாக்குவங்கியிலும் பெரியார் குறித்த விமர்சனம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை" எனக் கூறுகிறார் அவர். புற்றுநோய்: மனித உடலில் எப்படிப் பரவுகிறது? அதில் எத்தனை வகைகள் உள்ளன?7 பிப்ரவரி 2025 திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? லண்டன் பிரிவி கவுன்சிலின் 1931 தீர்ப்பு கூறுவது என்ன?7 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி 3. புறக்கணித்த எதிர்க்கட்சிகள்- யாருக்கு லாபம்? பிரதான அரசியல் கட்சிகள் போட்டியிடாத சூழலில் நாம் தமிழர் கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "அதிமுக வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெறவில்லை. அதற்கான வாய்ப்பு தொடக்கத்தில் இருந்தே இல்லை. ஆளும்கட்சி எதிர்ப்பு வாக்குகள் ஒன்று சேர்ந்திருந்தால் நாம் தமிழர் கட்சி, இன்னும் அதிக வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்" எனக் கூறுகிறார். "எதிர்கட்சிகள் போட்டியிட்டு தங்களின் வாக்குவங்கியைக் காட்டியிருக்க வேண்டும். அப்போது தான் திமுக எதிர்ப்பு வாக்குகளை அடையாளம் காண முடியும். அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது" என்கிறார். இதற்கு மாற்றான கருத்தை முன்வைக்கும் அதிமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளருமான பாபு முருகவேல், "ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டபோதே என்ன நடக்கும் என்பதை அறிந்து தான் போட்டியிட்டோம். தற்போது போட்டியிடுவது என்பது தேவையில்லாத ஒன்று" எனக் கூறுகிறார் இடைத்தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதை சுட்டிக் காட்டும் பாபு முருகவேல், "ஆளும்கட்சியின் மீதான அதிருப்திக்கு இதுவே காரணம். 80 சதவீதத்துக்கும் வாக்குகள் பதிவாகியிருந்தால் அதிமுக வாக்குகள் மடை மாறியிருக்கும் என நம்பலாம்" எனக் கூறுகிறார். "கடந்த முறை நடைபெற்ற இடைத்தேர்தலில் 25 சதவீத வாக்குகளை அதிமுக வாங்கியது. அப்படிப் பார்க்கும் போது அ.தி.மு.க வாக்குகள் வேறு கட்சிகளுக்கு திசை மாறிச் செல்லவில்லை" என கூறுகிறார் பாபு முருகவேல். 2021 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெரா போட்டியிட்டார். அவர் 62,495 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. அக்கட்சியின் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட யுவராஜாவுக்கு கிட்டதட்ட 56 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. கடந்த 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட தென்னரசுவுக்கு 43,922 வாக்குகள் கிடைத்தன. அந்தவகையில், ''நாம் தமிழர் கட்சிக்கு எதிர்க்கட்சி வாக்குகள் பெரிதாக சென்று சேரவில்லை'' என ஷ்யாம் குறிப்பிட்டார். இந்திய வரலாற்றையே மாற்றிய 'நாகா சாதுக்கள்' - கையில் வாளுடன் நிர்வாண கோலத்தில் வலம் வரும் இவர்கள் யார்?8 பிப்ரவரி 2025 அமெரிக்கா: இன்னும் எத்தனை இந்தியர்கள் வெளியேற்றப்பட உள்ளனர்? - மத்திய அரசு கூறியது என்ன?8 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,@BABUMURUGAVEL படக்குறிப்பு, அதிமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளருமான பாபு முருகவேல் 4. வழக்கமான இடைத்தேர்தலை போல இந்த முறையும் ஆளும் கட்சிக்கு ஆதரவா? தனது வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார், "ஆளும்கட்சி போட்டியிடும்போது கடந்த காலங்களில் பிரதான கட்சிகள் போட்டியிடாமல் இருந்துள்ளன. அப்போது யாராவது ஒருவர் போட்டியிட்டு குறிப்பிட்ட சதவீத வாக்குகளை வாங்குவார்கள். அதை விபத்தாக பார்க்க வேண்டும்" எனக் கூறினார். இதை எப்படி விபத்தாக பார்க்க முடியும் என செய்தியாளர்கள் கேட்டபோது, "நான் கூறியதை தவறாக திரிக்க வேண்டாம்" எனக் கூறிய சந்திரகுமார், "யாரைப் பார்த்தும் திமுக பயந்தது இல்லை. பயப்படுவதாக கூறினால் அது அவர்களின் அறியாமை" என்றார். ஆட்சியை மக்கள் ஆதரிப்பதால், எதிர்க்கட்சிக்கு விழக் கூடிய வாக்குகளும் தங்களுக்கு வந்துள்ளதாகக் கூறிய சந்திரகுமார், "அதன் வெளிப்பாடு தான் இவ்வளவு பெரிய வெற்றி" எனக் கூறினார். "இந்த தேர்தலால், நாம் தமிழர் கட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை" எனக் கூறுகிறார் அக்கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த தேர்தலை விடவும் அதிக வாக்குகளை நாம் தமிழர் பெற்றுள்ளது" எனக் கூறினார். பெரியாரை விமர்சித்த காரணத்தால் வாக்குகள் குறையவில்லை எனக் கூறியுள்ள சீதாலட்சுமி, "நாம் தமிழர் கட்சி மீது புரிதல் உள்ளவர்கள், எங்களுக்கு வாக்களித்துள்ளனர். பணம், கள்ள ஓட்டு ஆகியவற்றைத் தாண்டி இவ்வளவு வாக்குகளைப் பெற்றுள்ளோம்" எனக் கூறுகிறார். டீப்சீக் வெற்றி எதிரொலி: சீனா குறி வைத்த 10 உயர் தொழில்நுட்பங்களில் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது?8 பிப்ரவரி 2025 'அவரை காப்பாற்ற முயன்று நானும் சிக்கினேன்' - பாலியல் இன்பத்தை போதைப்பொருள் அதிகரிக்குமா?8 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, திமுக செய்தித் தொடர்பு செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் 5. தி.மு.க வெற்றி - எதைக் காட்டுகிறது? "இந்த வெற்றியின் மூலம் திமுக மகிழ்ச்சியடைவதற்கு எதுவும் இல்லை" எனக் கூறும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "இந்த வெற்றி 2026 சட்டமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்க முடியாது" என்கிறார். அதேநேரம், தேர்தல் களம் என்பது சரிசமமாக இல்லை எனக் கூறுகிறார் நாம் தமிழர் கட்சியியின் இடும்பாவனம் கார்த்தி. வீதிக் கூட்டம், தெருமுனைக் கூட்டம் என திமுக பிரசாரம் செய்யவில்லை எனக் கூறும் அவர், "பணத்தை நம்பி திமுக போட்டியிட்டது. கோடிக்கணக்கில் செலவு செய்து திமுக இந்த வெற்றியை விலைக்கு வாங்கியுள்ளது" என குற்றம்சாட்டினார். திமுகவின் வெற்றி குறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, "யாரும் களத்தில் இல்லை. இது போலி வெற்றி. எங்கள் நிர்வாகிகள் ஓட்டைக் கூட அவர்களே பதிவு செய்துவிட்டனர். கள்ள ஓட்டுகளின் மூலம் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் என்ன நடக்கப் போகிறது எனப் பாருங்கள்" எனக் கூறினார். ஆனால், இதை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பு செயலர் கான்ஸ்டன்டைன், " இது பெரியார் மண் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த வெற்றி அமைந்துள்ளது. திமுக ஆட்சிக்கு மக்கள் அளித்துள்ள வரவேற்பு இது" எனக் கூறுகிறார். கள்ள ஓட்டு, பண விநியோகம் தொடர்பான குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த கான்ஸ்டன்டைன், "தோற்றவர்கள் ஆயிரம் காரணங்களைக் கூறுவார்கள்" என்றார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆவடியில் பொதுக்கூட்ட மேடை ஒன்றில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "பெரியார் மண்ணில் மகத்தான வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். நம்மை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் அனைவரும் டெபாசிட்டை இழந்துள்ளனர்" எனக் கூறியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c0m1yrez971o
-
14ஆவது வருடாந்த 'இந்துக்களின் சமர்' யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் இம் மாதம் நடைபெறவுள்ளது
14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை 64 ஓட்டங்களால் வெற்றிகொண்டது யாழ். இந்து; தொடரிலும் 4 - 3 என முன்னிலை Published By: VISHNU 08 FEB, 2025 | 09:05 PM (நெவில் அன்தனி) யாழ். இந்து கல்லூரிக்கும் கொழும்பு இந்து (பம்பலப்பிட்டி) கல்லூரிக்கும் இடையில் யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை (08) முடிவுக்கு வந்த 14ஆவது இந்துக்களின் சமரில் யாழ். இந்து கல்லூரி 64 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. கொழும்பு இந்து கல்லூரியின் கடைசி 3 விக்கெட்ளை ஹெட் - ட்ரிக் முறையில் வீழ்த்தி 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்த யாழ். இந்து வீரர் சுதர்சன் சுபர்னன் தனது அணி வெற்றிபெறுவதை உறுதிசெய்தார். இந்த வெற்றியுடன் இந்துக்களின் சமரில் யாழ். இந்து கல்லூரி 4 - 3 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை அடைந்துள்ளது. யாழ். இந்து கல்லூரியினால் நிர்ணயிக்கப்பட்ட 252 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்து கல்லூரி சகல விக்கெட்களையும் இழந்து 187 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. கொழும்பு இந்து கல்லூரி ஒரு கட்டத்தில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 130 ஓட்டங்களைப் பெற்று சிறப்பான நிலையில் இருந்ததால் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் கடைசி 7 விக்கெட்கள் 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்ததால் யாழ். இந்து மகத்தான வெற்றியை ஈட்டியது. ஆரம்ப வீரர் சுரேஷ் குமார் மிதுஷிகன் மிகவும் பொறுமையாகத் துடுப்பெடுத்தாடி 144 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகளுடன் 77 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் அது பலனற்றுப் போனது. திவேந்திரன் யதுஷனுடன் ஆரம்ப விக்கெட்டில் 49 ஓட்டங்களையும் தவக்குமார் சந்தோஷுடன் இரண்டாவது விக்கெட்டில் 48 ஓட்டங்களையும் மிதுஷிகன் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டார். மிதுஷிகனை விட மத்திய வரிசை வீரர் சுரேஷ் சர்விஷ் 39 ஓட்டங்களையும் ஆரம்ப வீரர் திவேந்திரன் யதுஷன் 25 ஓட்டங்களையும் தவக்குமார் சந்தோஷ், பத்மநாதன் ஸ்ரீ நிதுசான் ஆகிய இருவரும் தலா 16 ஓட்டங்களையும் பெற்றனர். கொழும்பு இந்துவின் கடைசி 3 துடுப்பாட்ட வீரர்களான சுரேஷ் சர்விஷ், விஸ்வநாதன் யுவராஜ், அணித் தலைவர் ராமநாதன் தேஷ்கர் ஆகிய மூவரை ஹெட் - ட்ரிக் முறையில் சுபர்னன் ஆட்டம் இழக்கச் செய்து 58 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். அவரை விட கனகராஜ் நிதீஸ் 75 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். முன்னதாக போட்டியின் இரண்டாம் நாளான இன்று சனிக்கிழமை காலை தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 71 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த யாழ். இந்து கல்லூரி 9 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை டிக்ளயார் செய்து நிறுத்திக்கொண்டது. அணித் தலைவர் கிருஷ்ணராஜ் பரஷித் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 8 பவுண்டறிகளுடன் 39 ஓட்டங்களைப் பெற்றதுடன் 2ஆவது விக்கெட்டில் சுதர்சன் சுபர்னனுடன் 40 ஓட்டங்களைப் பகிர்ந்தார். தொடர்ந்து சுபர்னன் (16), அன்டன் விமலதாஸ் விதுசன் (25) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் மேலும் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 93 ஓட்டங்களாக உயர்த்தினர். ஆனால், 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 6 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டதால் யாழ். இந்து கல்லூரி தடுமாற்றம் அடைந்தது. (110 - 8 விக்.) எனினும், இந்திரலிங்கம் ஸ்ரீவஸ்தன் (26), 10ஆம் இலக்க வீரர் சுதர்சன் அபிவர்ணன் (27 ஆ.இ.) ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 40 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர். கொழும்பு இந்து பந்துவீச்சில் ராமநாதன் தேஷ்கர் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் விஸ்வநாதன் யுவராஜ் 47 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர். வெள்ளிக்கிழமை (07) ஆரம்பமான இந்த இரண்டு நாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். இந்து கல்லூரி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. கொழும்பு இந்து கல்லூரி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விககெட்களையும் இழந்து 91 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. எண்ணிக்கை சுருக்கம் யாழ். இந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 172 (ஏ. விதுஷன் 49, கே. பரஷித் 20, வி. யுவராஜ் 27 - 4 விக்.) கொழும்பு இந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 91 (ரீ. சந்தோஷ் 42, கே. நித்தீஸ் 12 - 4 விக்.), யாழ். இந்து 2ஆவது இன்: 170 - 9 விக். டிக்ளயார்ட் (கே. பரஷித் 39, எஸ். அபிவர்ணன் 27, ஆர். தேஷ்கர் 35 - 4 விக்., வி. யுவராஜ் 47 - 4 விக்.) கொழும்பு இந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 187 (சுரேஷ்குமார் மிதுசிகன் 72, எஸ். சர்விஷ் 39, சுதர்சன் சுபர்னன் 58 - 6 விக். விசேட விருதுகள் ஆட்டநாயகன்: சுதர்சன் சுபர்னன் (யாழ் இந்து) சிறந்த துடுப்பாட்ட வீரர்: சுரேஷ்குமார் மிதுசிகன் (கொழும்பு இந்து) சிறந்த பந்துவீச்சாளர்: விஸ்வநாதன் யுவராஜ் (யாழ். இந்து) சிறந்த களத்தடுப்பாளர்: தினேஷ்ராமன் பிரீத்திகன் (யாழ். இந்து) https://www.virakesari.lk/article/206181
-
சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது தெளிவாக விளங்குகிறது - உதய கம்மன்பில
Published By: DIGITAL DESK 2 08 FEB, 2025 | 04:54 PM (இராஜதுரை ஹஷான்) அரசியல் பழிவாங்கலுக்காக அரசாங்கம் நீதிக்கட்டமைப்பையும் பயன்படுத்துகிறது. சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது தெளிவாக விளங்குகிறது. எதிர்வரும் காலங்களில் பலர் கைதாகலாம் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் சனிக்கிழமை (08) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளது. அரசாங்கத்தின் மீது மக்களின் வெறுப்பு தீவிரமடையும் போது மக்களின் கவனத்தை திசைத்திருப்புவதற்காக கடந்த அரசாங்கத்துடன் தொடர்புடைய விடயங்களை அரசாங்கம் வெளியிடும். ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றவர்கள், மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றவர்கள் விபரத்தை அரசாங்கம் வெளியிட்டது. தற்போது 2022 மே கலவரத்தின் போது வீடுகளை இழந்த அரசியல்வாதிகள் பெற்றுக் கொண்ட இழப்பீட்டுத் தொகை தொடர்பான விபரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றவர்களின் பெயர் விபரங்களை வெளியிட்ட அரசாங்கம் அந்த நிதியை மீளப் பெற்றுக் கொள்வதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அதேபோல் கடந்த அரசாங்கத்தில் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக் கொண்டவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டன. மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்வதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வியெழுப்பிய போது அந்த மதுபானசாலை பத்திரங்கள் சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் சட்ட சிக்கல் ஏற்படும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குறிப்பிடுகிறார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பிரச்சார மேடைகளில் மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களையும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான கொடுப்பனவை இரத்துச் செய்வதாகவும் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளது. மக்களை தூண்டிவிடுவதற்காக குறிப்பிட்ட விடயங்களை சட்டத்துக்கு முரணாக செயற்படுத்த முடியாது என்பதை அரசாங்கம் தற்போது விளங்கிக் கொண்டுள்ளது. அரசியல் பழிவாங்கலுக்காக அரசாங்கம் நீதிக்கட்டமைப்பை பயன்படுத்திக் கொள்கிறது. அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தி வழக்குத் தாக்கல் செய்யப்படுகின்றன. சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது தெளிவாக விளங்குகிறது. எதிர்வரும் காலப்பகுதியில் பலர் கைதாகலாம் என்றார். https://www.virakesari.lk/article/206163