Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. இன்று மிதமான நிலையில் காற்றின் தரம் Published By: DIGITAL DESK 3 30 JAN, 2025 | 10:45 AM இன்று வியாழக்கிழமை (30) நாள் முழுவதும் மிதமான நிலையில் காற்றின் தரம் காணப்படும். அதன்படி, காற்றின் தரக்குறியீடு 44 மற்றும் 72க்கு இடையில் பதிவாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நுவரெலியாவில் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் நேற்று புதன்கிழமை (29) பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையிலும் வவுனியா, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, பதுளை, திருகோணமலை, முல்லைத்தீவு, களுத்துறை ஆகிய பகுதிகளில் மிதமான நிலையிலும் காணப்பட்டது. அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் வேளைகளில், குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் 1 மணி முதல் 2 மணி வரை காற்றின் தரக் குறியீடு (AQI) ஆரோக்கியமற்று காணப்படும். நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு அடுத்த 24 மணிநேரத்துக்குள் ஒரு நல்ல நிலைக்கு மேம்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/205300
  2. ஐசிசியின் வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீரருக்கான சேர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதை பும்ரா வென்றார் Published By: VISHNU 28 JAN, 2025 | 07:33 PM (நெவில் அன்தனி) ஐசிசியன் வருடத்தின் (2024) அதிசிறந்த கிரிக்கெட் வீரருக்கான சேர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதை இந்தியாவின் வேகபந்துவீச்சு நட்சத்திரம் ஜஸ்ப்ரிட் பும்ரா வென்றெடுத்தார். வருடத்தின் சிறந்த ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரராகத் தெரிவாகி ஒரு நாள் ஆன நிலையில் இந்த பிரதான விருதையும் பும்ரா தனதாக்கிக்கொண்டார். கடந்த வருடம் டெஸ்ட் அரங்கிலும் சரவ்தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கிலும் தனது அதிவேகப் பந்துவீச்சின் மூலம் எதிரணி வீரர்களைத் திக்குமுக்காட செய்து அந்த இரண்டு வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் மொத்தமாக 21 போட்டிகளில் 86 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். 13 டெஸ்ட் போட்டிகளில் 71 விக்கெட்களையும் 8 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 15 விக்கெட்களையும் அவர் கைப்பற்றியிருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் அவர் பதிவு செய்த 45 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்கள் என்பதே அவரது அதிசிறந்த இன்னிங்ஸ் பந்துவீச்சுப் பெறுதியாக கடந்த வருடம் அமைந்திருந்தது. அது மட்டுமல்லாமல் ஒரே வருடத்தில் டெஸ்ட் போட்டிகளில் 70 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்திய இந்தியர்களில் ரவிச்சந்திரன் அஷ்வின், அணில் கும்ப்ளே, கபில் தேவ் ஆகியோருடன் நான்காவது வீரராக பும்ரா இணைந்துகொண்டுள்ளார். பந்துவீச்சாளர்களை சிதறடிக்கும் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ட்ரவிஸ் ஹெட், இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர்களான ஜோ ரூட், ஹெரி ப்றூக் ஆகியோரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். அவர்களை எல்லாம் பின்தள்ளி வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீரர் விருதை பும்ரா தனதாக்கிக்கொண்டார். ராகுல் ட்ராவிட் (2004), சச்சின் டெண்டுல்கர் (2010), ரவிச்சந்திரன் அஷ்வின் (2016), விராத் கோஹ்லி (2017, 2018) ஆகியோரைத் தொடரந்;து இந்த விருதை வென்றெடுத்த ஐந்தாவது இந்தியர் பும்ரா ஆவார். https://www.virakesari.lk/article/205164
  3. காப்பாற்றப்பட்ட பின்னர் மீண்டும் குளத்தில் குதித்த இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு Published By: DIGITAL DESK 2 30 JAN, 2025 | 09:58 AM மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல் போன நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் நேற்று (29) புதன்கிழமை ஆலயத்தின் தீர்த்தோற்சவ நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மது போதையில் அப்பகுதிக்கு சென்ற நபர் ஓருவர் குளத்தில் பாய்ந்துள்ளார். சிலர் அவரை தூக்கி வெளியில் எடுத்த பொழுது மீண்டும் குளத்தில் பாய்ந்துள்ளார். பின்பு அப்பகுதி இளைஞர்களால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/205294
  4. 30 JAN, 2025 | 10:03 AM (இராஜதுரை ஹஷான்) மாகாண ஆளுநருக்கு சொந்தமானது என்பதால் சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பரிசோதிக்கப்படாமல் சுங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த கொள்கலன்களில் என்ன இருந்தது என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். துறைமுகத்தில் இருந்த சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் விடுவிடுக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை. பேச்சளவில் மாத்திரமே பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படுகிறது. ஊழல் மோசடிக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் ஊழலுக்கு எதிராக என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் இருந்து எவ்வித பரிசோதனைகளும் இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த கொள்கலன்கள் மாகாண ஆளுநர் ஒருவருக்கு சொந்தமானது என்று குறிப்பிடப்படுகிறது. அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. கொள்கலன்களை பரிசோதனை செய்யாமல் விடுவிப்பதற்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் அமைச்சருக்கு கிடையாது. 323 கொள்கலன்களில் இருந்த பொருட்கள் தொடர்பான விபரத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.இந்த அரசாங்கத்தின் உண்மை முகத்தை மக்கள் வெகுவிரைவில் அறிந்துக் கொள்வார்கள். எதிர்க்கட்சிகள் முதலில் எதிர்க்கட்சியாக செயற்பட்டு அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம் என்றார். https://www.virakesari.lk/article/205239
  5. மோட்டார் போக்குவரத்து திணைக்களம் புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. பொதுமக்களிடமிருந்து எழுத்துப்பூர்வ முறைப்பாடுகளை துரிதமாக பெறுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிற்கு பொதுமக்கள் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கும் முறைப்பாடுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஏற்கனவே பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையர் நாயகத்திடம் அல்லது அந்த திணைக்களத்தில் சமர்ப்பிக்க வேண்டிய மேல்முறையீடுகள் அல்லது முறைப்பாடுகளை 071 40 33 300 என்ற வட்ஸ்அப் எண்ணுக்கு எழுத்துப்பூர்வமாக அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது. இதேவேளை, TELL DMT என்ற முகநூல் பக்கம் மூலமும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் இணைவதற்கான மற்றொரு வாய்ப்பும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/315036
  6. Published By: VISHNU 30 JAN, 2025 | 10:16 AM ஜனநாயகத்தை பின்பற்றும் நாடுகள் என்ற ரீதியில் அவற்றின் மதிப்புக்களை இரு நாடுகளும் பகிர்ந்துக் கொண்டுள்ளன. வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பிரஜைகளின் பங்கேற்பு என்பவற்றை ஊக்குவிக்கும் திறந்த அரசுப் பங்குடமை போன்ற திட்டங்கள் மூலம் ஆழமான ஒத்துழைப்புக்களை ஏற்படுத்த முடியும் என இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவுக்குத் தனது வாழ்த்துக்களையும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார். அத்துடன், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் தெரிவுக்கு சபாநாயகர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை-ஐக்கிய அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கம் மீளமைக்கப்படவிருப்பதை வரவேற்ற அமெரிக்கத் தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் இலங்கையின் அண்மைய பொருளாதார நெருக்கடி போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் அமெரிக்கா வழங்கிய உறுதியான ஒத்துழைப்புக்களுக்கு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நன்றி தெரிவித்தார். இலங்கைப் பாராளுமன்றத்திற்கு அமெரிக்க அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் உதவிகளை நினைவுகூர்ந்த சபாநாயகர் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் மேம்படுத்தப்படுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். ஜனநாயகத்தைப் பின்பற்றும் நாடுகள் என்ற ரீதியில் அவற்றின் மதிப்புக்களை இரு நாடுகளும் பகிர்ந்து வருவதாக அமெரிக்கத் தூதுவர் இங்கு தெரிவித்தார். வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பிரஜைகளின் பங்கேற்பு என்பவற்றை ஊக்குவிக்கும் திறந்த அரசுப் பங்குடமை போன்ற திட்டங்கள் மூலம் ஆழமான ஒத்துழைப்புக்களை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கைப் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்திருப்பதைப் பாராட்டிய அமெரிக்கத் தூதுவர், பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்திற்கு அமெரிக்கா வழங்கிவரும் ஒத்துழைப்புக்களையும் நினைவுகூர்ந்தார். பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை ஆழப்படுத்தல், திறன் மேம்பாடு மற்றும் ஜனநாயக ஆட்சியைப் பலப்படுத்தக்கூடிய சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வது உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன. https://www.virakesari.lk/article/205289
  7. எங்களுடைய உறவுகளை பாதுகாக்கும் முயற்சிக்கு வேட்டு வைப்பதாகவே இந்திய மீனவர்களது செயற்பாடு உள்ளது பேச்சுவார்த்தை மூலம் இலங்கை – இந்திய மீனவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படுமாக இருந்தால் அதற்கு இரண்டு கரங்களையும் உயர்த்தி நாங்கள் ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணம் – சங்கானை பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மீனவர்களின் தலைவர்களை நாங்கள் வினயமாக கேட்டுக் கொள்வது என்னவென்றால், நாங்கள் உங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு தயார். உங்களுடைய பிள்ளைகள் எங்களுடைய தொப்புள்கொடி உறவுகள், எங்களுக்கு அண்மித்த நாடு அந்தவகையில் நாங்கள் நல்ல முறையில் எங்களுடைய உறவுகளை பேணி பாதுகாப்பதற்கே முயற்சிக்கின்றோம். அந்த முயற்சிக்கு வேட்டு வைக்கின்ற வேலையாகவே இந்திய தமிழ்நாட்டு மீனவர்களுடைய செயற்பாடுகள் காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/315041
  8. Published By: VISHNU 30 JAN, 2025 | 03:36 AM (நா.தனுஜா) அடுத்த தேர்தலில் தான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் தரப்பினரை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டுச் செல்வதற்கு அவசியமான தலைமைத்துவத்தை வழங்கத் தயாராகவிருப்பதாக கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொய்லிவ் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கனடாவின் டொரன்டோ நகரில் 'ஹார்வெஸ்ட் ஒஃப் ஹோப்' எனும் மகுடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே பியெர் பொய்லிவ் மேற்கொண்டவாறு தெரிவித்தார். தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை நிகழ்த்திய இலங்கை அரசாங்கத்தை தனிமைப்படுத்தி தண்டிக்கும் நோக்கில் 2013 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டை கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் புறக்கணித்தமையினை நினைவுக் கூர்ந்த பியெர் பொய்லிவ், கனடாவின் வளர்ச்சிக்கு தமிழ் மக்கள் ஆற்றிய பங்களிப்பினை பெரிதும் பாராட்டினார். அத்தோடு தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களைப் புரிந்த ராஜபக்ஷர்களையும், ஏனைய குற்றவாளிகளையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு அவசியமான தலைமைத்துவத்தை கொன்சவேட்டிவ் கட்சியின் பிரதமரான நான் வழங்குவேன் எனவும் பியெர் பொய்லிவ் உறுதியளித்தார். https://www.virakesari.lk/article/205288
  9. கொழும்பில் காற்றின் தரம் குறைவு; பாதுகாத்துக் கொள்ள 8 பாதுகாப்பு குறிப்புகள் Published By: VISHNU 29 JAN, 2025 | 10:21 PM இந்தியாவின் காற்று ஓட்டம் காரணமாக இலங்கை முழுவதும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற மட்டத்திற்குக் குறைந்துள்ளது, கொழும்பு உட்பட பல மாவட்டங்கள் அதிகரித்த மாசுபாட்டை அனுபவித்து வருகின்றன என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) தெரிவித்துள்ளது. தெற்காசிய நாடுகளில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவது கவலைக்குரியது என்று NBRO இன் சுற்றுச்சூழல் ஆய்வுகள் மற்றும் சேவைகள் பிரிவின் இயக்குனர் சரத் பிரேமசிறி தெரிவித்தார். காற்றின் தரம் மோசமடைவதால் சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் எச்சரித்தார். மோசமான காற்றின் தரத்திற்கு மத்தியில் பாதுகாப்பு குறிப்புகள் சுகாதார அபாயங்களைக் குறைக்க இந்த நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர் வெளிப்புற செயல்பாடுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள் முகக்கவசங்களை அணியுங்கள் ஜன்னல்களை மூடி வைக்கவும் காற்று சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்துங்கள் நிறைய தண்ணீர் குடியுங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுங்கள் அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் மூலம் காற்றின் தர அளவுகள் குறித்து கண்காணித்துகொள்ளுங்கள் ஆஸ்துமா, இதய நோய் மற்றும் பிற சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் குறிப்பாக எச்சரிக்கையாக இருக்கவும், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாடவும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். https://www.virakesari.lk/article/205283
  10. AI உலகில் புதுமுகம் DeepSeek DeepSeek (டீப்சீக்) என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு [Artificial Intelligence (AI)] மாடல். இதை உருவாக்கியவர் Liang Wenfeng. இதன் புதிய பதிப்பு ஜனவரி 20 அன்று வெளியாகி AI தொழில்நுட்ப வல்லுநர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. OpenAI போன்ற முன்னணி நிறுவனங்கள் அதிக செலவில் advanced chips-ஐ பயன்படுத்தி AI மாடல்களை உருவாக்குகின்றன. ஆனால் DeepSeek குறைந்த computational resources-ஐ மட்டும் பயன்படுத்தி அதே அளவிற்கு திறமையான AI மாடலை உருவாக்கியிருக்கிறது. இதன் சிறப்பம்சம் மிக குறைந்த செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. DeepSeek மொத்தம் $6 million செலவில் train செய்யப்பட்டது, அதே நேரத்தில் OpenAI-ன் GPT-4 போன்ற மாடல்கள் $100 million செலவாகின்றன. குறைவான memory footprint-ஐ கொண்டதால் இது computational efficiency-யை அதிகரிக்கிறது. இதனால் Nvidia போன்ற chip-making நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தன. ஜனவரி 27 அன்று Nvidia-வின் பங்கு மதிப்பு $600 billion வரை சரிந்தது, இது அமெரிக்காவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒரு நாள் இழப்பு ஆகும். DeepSeek-ன் தொழில்நுட்ப அடிப்படை DeepSeek ஒரு Generative AI ஆகும், இது ChatGPT போன்ற chatbots போன்றே செயல்படும். இது Natural Language Processing (NLP) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனிதர்களைப் போல பதிலளிக்க முடியும். DeepSeek Mixture-of-Experts (MoE) எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இது 671 billion parameters கொண்ட ஒரு மாடல் ஆக இருந்தாலும், எந்த ஒரு குறிப்பிட்ட பணிக்காக மட்டும் 37 billion parameters-ஐ செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டு: ஒரு மொழிபெயர்ப்பு (Translation) செயலில் MoE System எப்படி செயல்படுகிறது என்பதை பார்ப்போம். ஆங்கிலத்தில் உள்ள “The weather is pleasant today” என்ற ஒரு வாக்கியத்தை தமிழ் மொழிக்கு மொழிபெயர்க்க வேண்டும் என்று வைத்துக் கொள்ளலாம். ஒரு பொதுவான LLM மாடல் அனைத்துப் parameters-ஐ செயல்படுத்தும். ஆனால் MoE அமைப்பில்: ஒரு set of parameters “Weather-related translations”-ஐ கவனிக்கும். இன்னொரு set “Sentence structure”-ஐ பார்க்கும். மற்றொரு set “Context-based translation”-ஐ கவனிக்கும். இதனால் MoE முறை சரியான மொழிபெயர்ப்பை வழங்கும். இதுவே task-specific precision-ஐ மேம்படுத்துகிறது. இதன் மூலம்: கணிப்பொறி திறன் (Computational Efficiency) அதிகரிக்கிறது. சிக்கனமான செயல் முறை (Cost-Effective Processing) உருவாக்கப்படுகிறது. DeepSeek-ன் Multi-Head Latent Attention (MLA) திறமை, இது பல்வேறு தகவல்களை ஒரே நேரத்தில் ஆராய்ந்து நுண்ணிய தொடர்புகளை கண்டறிந்து, சிறப்பான முடிவுகளை வழங்க உதவுகிறது. DeepSeek அதிக நீளமான context-ஐ பாதுகாக்கும் திறனைக் கொண்டுள்ளது. இது 128K tokens வரை விவரங்களை புரிந்துகொள்ள முடியும். இது ஒரு Open-Source AI Model ஆகும், இது GPT-4 போன்ற மாடல்களுக்கு மாற்றாக இருக்கும். இது 95% குறைந்த செலவில் செயல்படுகிறது. DeepSeek-ன் வளர்ச்சி அமெரிக்க நிதி சந்தையை அதிகமாக பாதித்துள்ளது. DeepSeek-ன் வெற்றியால் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன. Nasdaq Index 3% வீழ்ச்சியடைந்தது. Nvidia-வின் Market Capitalization $3.5 trillion-ல் இருந்து $2.9 trillion-ஆக குறைந்தது. Apple, Microsoft போன்ற நிறுவனங்களும் பங்குச் சந்தையில் பாதிக்கப்பட்டன. DeepSeek இப்போது சீனாவின் AI Renaissance (மறுமலர்ச்சி) எனக் கருதப்படுகிறது. ஆனால் Western market-ல் இது regulatory scrutiny (ஒழுங்குமுறை சோதனை) மற்றும் security concerns-ஐ எதிர்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து, DeepSeek AI உலகளவில் முக்கியமான AI போட்டியாளராக வளருமா என்பது பார்க்க வேண்டிய விஷயம். முனைவர் ப. தமிழ் அரசன் tamilarasanbakthavatchalam@gmail.com https://kaniyam.com/deepseek/
  11. இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வொன்று கிடையாது - வெளிவிவகார பேச்சாளர் Published By: DIGITAL DESK 7 29 JAN, 2025 | 08:42 PM (எம்.மனோசித்ரா) இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வொன்று கிடையாது. தீர்வை நோக்கிய பேச்சுவார்த்தைகளே தற்போதும் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய இராஜதந்திர மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் நிலுக கதுருகமுவ தெரிவித்தார். இந்திய மீனவர்கள் காயமடைந்தமை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக பத்தரமுல்லையிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் புதன்கிழமை (29) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை குறித்து நீண்ட காலமாக அதிகாரிகள் மட்டத்திலிருந்து அரச தலைவர்கள் மட்டம் வரை இந்தியாவுடன் மிக ஆழமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவை தவிர இரு நாட்டு கடற்றொழில் அமைச்சுக்களின் செயலாளர்களால் தலைமைத்துவம் வகிக்கப்படும் ஒன்றித்த செயற்குழுவும் காணப்படுகிறது. 2015ஆம் ஆண்டு இக்குழு நியமிக்கப்பட்டது. இதுவரை 6 சந்தர்ப்பங்களில் இந்த குழு கூடியுள்ளது. இறுதி கலந்துரையாடல் கடந்த ஆண்டு ஒக்டோபர் 29ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. இதன் போது இவ்வாறான சகல விடயங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும். அந்த வகையில் தீர்வை நோக்கிய பேச்சுவார்த்தைகளே தற்போதும் இடம்பெற்று வருகின்றன. இது ஒரு நாளில் நிறைவடையும் பிரச்சினையல்ல. இந்த பிரச்சினைக்கு தீர்வினைக் காண்பதற்காக இராஜதந்திர மட்டத்தில் உரிய நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்திருக்கின்றோம். ஆனால் இதற்கு தீர்வு என்ற ஒன்று இல்லை. இழுவைப் படகு முறைமை என்பது இலங்கையில் மாத்திரமின்றி இந்தியாவிலும் தடை செய்யப்பட்ட ஒரு மீன்பிடி முறைமையாகும். எனினும் அந்த முறைமையைப் பயன்படுத்தியே இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடி நடவடிக்கைளில் ஈடுபடுகின்றனர். சட்டதுடன் தொடர்புடைய தரப்புக்களின் ஊடாகவே கைதுகள், அதனையடுத்த சட்ட நடவடிக்கைககள் முன்னெடுக்கப்படுகின்றன. வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனையும் வழங்கப்படுகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சு இந்த சம்பவம் தொடர்பில் எம்மிடம் நேரடியாக கேள்வியெழுப்பவில்லை. எனினும் டில்லியிலுள்ள பதில் உயர்ஸ்தானிகரை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இவ்வாறான சம்பவம் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயமும் இது குறித்து அறிவித்துள்ளது என்றார். https://www.virakesari.lk/article/205266
  12. இலங்கையுடனான 1ஆவது டெஸ்ட்: கவாஜா, ஸ்மித் அபார சதங்கள் குவிப்பு; அவுஸ்திரேலியா 330-2 விக்., ஸ்மித் 10000 டெஸ்ட் ஓட்டங்கள் பூர்த்தி Published By: VISHNU 29 JAN, 2025 | 06:30 PM (நெவில் அன்தனி) இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (29) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலாம் நாள் ஆட்டம் மழையினால் தடைப்பட்டு முடிவுக்கு வந்தபோது அவுஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 330 ஓட்டங்களைக் குவித்திருந்தது. ஆரம்ப வீரர் உஸ்மான் கவாஜா, பதில் அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி குவித்த ஆட்டம் இழக்காத சதங்கள், ட்ரவிஸ் ஹெட் பெற்ற அரைச் சதம் என்பன அவுஸ்திரேலியாவை பலமான நிலையில் இட்டுள்ளன. இப் போட்டியை 9999 டெஸ்ட் ஓட்டங்களுடன் எதிர்கொண்ட ஸ்டீவன் ஸ்மித் முதலாவது ஓட்டத்தைப் பெற்றபோது 10000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்திசெய்து பலத்த பாராட்டைப் பெற்றார். ரிக்கி பொன்டிங் (13378 ஓட்டங்கள்), அலன் போர்டர் (11174), ஸ்டீவ் வோ (10927) ஆகியோரைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா சார்பாக 10000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்த நான்காவது வீரரானார் ஸ்டீவன் ஸ்மித். தனது 115 டெஸ்ட் போட்டியில் விளையாடும் அவர் மொத்தமாக 10103 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா, ட்ரவிஸ் ஹெட் ஆகிய இருவரும் முதல் விக்கெட்டில் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து ஸ்திரமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் தடவையாக ஆரம்ப வீரராக களம் இறங்கிய ட்ரவிஸ் ஹெட் 57 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து மானுஸ் லபுஷேன் 20 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். உஸ்மான் கவாஜாவும் மானுஸ் லபுஸ்ஷேனும் 2ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அதன் பின்னர் உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 195 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவை மிகவும் பலமான நிலையில் இட்டனர். உஸ்மான் கவாஜா 210 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 147 ஓட்டங்களுடனும் ஸ்டீவன் ஸ்மித் 188 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 104 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். தனது 79ஆவது டெஸ்டில் விளையாடும் கவாஜா 16ஆவது சதத்தையும் 115ஆவது டெஸ்டில் விளையாடும் ஸ்மித் 35ஆவது சதத்தையும் பூர்த்திசெய்தனர். பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய, ஜெவ்றி வெண்டசே ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். https://www.virakesari.lk/article/205273
  13. ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணம் : பந்துவீச்சிலும் களத்தடுப்பிலும் லிமன்சா அபாரம்; அவுஸ்திரேலியாவை அதிரவைத்தது இலங்கை 29 JAN, 2025 | 04:34 PM (நெவில் அன்தனி) மலேசியாவில் நடைபெற்றுவரும் இரண்டாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் கடைசி சுப்பர் சிக்ஸ் போட்டியில் அவுஸ்திரேலியாவை 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பவுள்ளது. இலங்கை பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சுகளும் லிமன்சா திலக்கரட்னவின் பந்துவீச்சு மற்றும் அதிசிறந்த களத்தடுப்பு என்பனவும் இலங்கையை வெற்றி அடையச் செய்தன. ஹம்பாந்தோட்டையில் கடந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 மும்முனை தொடரின் ஆரம்பப் போட்டியில் அவுஸ்திரேலியாவை 7 ஓட்டங்களால் வெற்றிகொண்டிருந்த இலங்கைக்கு, மலேசியாவில் 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் கிடைத்த வெற்றி மகத்தான வெற்றியாக அமைந்தது. இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா தோல்வி அடைந்த போதிலும் அவ்வணி ஏற்கனவே அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றிருந்தது. பாங்கி YSD-UKM கிரிக்கெட் ஓவல் மைதானத்தில் இன்று பகல் நடைபெற்ற முதலாம் குழுவுக்கான சுப்பர் சிக்ஸ் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்றது. முன்வரிசை வீராங்கனைகளான சஞ்சனா காவிந்தி (19), சுமுது நிசன்சலா (18), மனுதி நாணயக்கார (15), ஹிருணி குமாரி (14) ஆகிய நால்வரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் லில்லி பாசிந்த்வெய்ட் 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹஸ்ரத் கில் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டேகான் வில்லியம்சன் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்டெக்களை இழந்து 87 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. முதல் 3 விக்கெட்களை குறைந்த ஓட்டங்களுக்கு இழந்த அவுஸ்திரேலியாவுக்கு 4ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த கயோமே ப்றே, எலினோர் லரோசா ஆகிய இருவரும் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து தெம்பூட்டினர். ஆனால், 15ஆவது ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்த அவுஸ்திரேலியா அதன் பின்னர் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 5 விக்கெட்களை இழந்து தோல்வியைத் தழுவியது. கயோமே ப்றே 27 ஓட்டங்களளையும் எலினோர் லரோசா 18 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களை விட ஐன்ஸ் மெக்கியொன், லூசி ஹெமில்டன், க்றேஸ் லயன்ஸ் ஆகியோர் தலா 10 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் சமுதி ப்ரபோதா 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ரமுதி மெத்சரா 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசேனி தலகுனே 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். மிக முக்கியமான ப்றேயின் விக்கெட்டை வீழ்த்திய லிமன்சா திலக்கரட்ன, 2 பிடிகளை எடுத்ததுடன் ஒரு ரன் அவுட்டிலும் பங்காற்றி ஆட்டநாயகி விருதை தனதாக்கிக்கொண்டார். நைஜீரியா வெற்றி இப் போட்டிக்கு முன்னர் நடைபெற்ற இரண்டாம் குழுவுக்கான கடைசி சுப்பர் சிக்ஸ் போட்டியில் அயர்லாந்தை நைஜீரியா 6 ஓட்டங்களால் வெற்றிகொண்டிருந்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட நைஜீரிய மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்றது. பதிலக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட அயர்லாந்து மகளிர் அணி 18.4 ஓவர்களில் 88 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. வெள்ளிக்கிழமை அரை இறுதிகள் சுப்பர் சிக்ஸ் சுற்று இன்றுடன் நிறைவடைந்ததுடன் அரை இறுதிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (31)நடைபெறவுள்ளன. முதலாவது அரை இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவை அவுஸ்திரேலியாவை எதிர்த்தாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் இந்தியாவை இங்கிலாந்து சந்திக்கவுள்ளது. அரை இறுதிகளில் வெற்றிபெறும் அணிகள் பெப்ரவரி 2ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாடும். https://www.virakesari.lk/article/205251
  14. 2024ஆம் ஆண்டுக்கான அதிசிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான ஐசிசி விருதை வென்றெடுத்தார் அமேலியா கேர் Published By: DIGITAL DESK 2 28 JAN, 2025 | 12:20 PM (என்.வீ.ஏ.) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வருடாந்தம் வழங்கப்படும் ஐசிசி உயர்விருதுகளில் ஒன்றான வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீராங்கனைக்கான ரஷேல் ஹேஹோ ஃப்ளின்ட் விருதை நியூஸிலாந்தின் ரி20 மகளிர் உலகக் கிண்ண நாயகி அமேலியா கேர் வென்றெடுத்துள்ளார். கடந்த வருடத்திற்கான சிறந்த ஐசிசி ரி20 கிரிக்கெட் வீராங்கனை விருதையும் வென்ற மெலி என செல்லமாக அழைக்கப்படும் அமேலியா கேர் ஒரே வருடத்தில் வென்றெடுத்த இரண்டாவது ஐசிசி விருது இதுவாகும். ரஷேல் ஹேஹோ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த இலங்கை மகளிர் அணித் தலைவி சமரி அத்தபத்து, தென் ஆபிரிக்காவின் லோரா வுல்வார்ட், அவுஸ்திரேலியாவின் அனாபெல் சதர்லண்ட் ஆகியோரைவிட சகலதுறைகளிலும் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தியதால் வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீராங்கனை விருதை அமேலியா கேர் தனதாக்கிக்கொண்டார். 2017இல் அறிமுகப்படுத்தப்பட்ட ரஷேல் ஹேஹோ விருதை அவுஸ்திரேலியாவின் எலிஸ் பெரி, இந்தியாவின் ஸ்ம்ரித்தி மந்தனா, இங்கிலாந்தின் நெட் சிவர்-ப்ரன்ட் ஆகிய மூவரே இதுவரை மாறிமாறி வென்றெடுத்துள்ளனர். நியூஸிலாந்து வீராங்கனை ஒருவர் இந்த உயர் விருதை வென்றிருப்பது இதுவே முதல் தடவையாகும். கடந்த வருடம் இரண்டு வகை மகளிர் சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சகலதுறைககளிலும் அமேலியா கேர் பிரகாசித்திருந்தார். 2024இல் 9 மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்போட்டிகளில் 267 ஓட்டங்களைப் பெற்ற அமேலியா கேர் 14 விக்கெட்களையும் கைப்பற்றினார். ஆனால், மகளிர் சர்வதேச ரி20 போட்டிகளில் அமேலியா கேர் வெளிப்படுத்திய அபரிமிதமான சகலதுறை ஆற்றல்கள், மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் சகலதுறைகளிலும் வெளிப்படுத்திய ஆற்றல்கள் என்பனவே அவருக்கு இந்த உயரிய விருதை வென்றுகொடுத்தது. கடந்த வருடம் 18 மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருந்த அமேலியா கேர், 24.18 என்ற சராசரியுடன் 387 ஓட்டங்களைப் பெற்றதுடன் 29 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார். இது நியூஸிலாந்து மகளிர் கிரிக்கெட்டுக்கான தேசிய சாதனையாகவும் பதிவாகியுள்ளது. அத்துடன் ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருடம் நடைபெற்ற ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண போட்டியில் இறுதி ஆட்டநாயகியாகவும் தொடர்நாயகியாவும் அமேலியா கேர் தெரிவாகியிருந்தார். https://www.virakesari.lk/article/205117
  15. வேங்கைவயல் விவகாரம் | அரசின் குற்றப்பத்திரிகைக்கு சீமான், விஜய் கண்டனம்! வேங்கைவயல் விவகாரத்தில் அரசு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும் கண்டனம் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், தமிழக அரசு தரப்பில் சமீபத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். அதில் முத்துக்கிருஷ்ணன், சுதர்சன், முரளி ராஜா ஆகிய 3 பேர்தான் இந்த செயலை செய்தது என்றும் முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கவே இதுபோல் செய்ததாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இச்சம்பவத்தில் வேறு யாருக்கோ தொடர்பிருக்கும் நிலையில், பட்டியலினத்தைச் சேர்ந்த 3 பேரை குற்றம்சாட்டுவதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சீமான் கண்டனம்! இதுகுறித்து சீமான், “புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட வன்கொடுமையில், பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பழியினைச் சுமத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள திமுக அரசின் நிர்வாகச் செயல்பாடு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. எந்த மக்கள் பாதிக்கப்பட்டார்களோ, அதே மக்களையே குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் தமிழகக் காவல்துறையின் போக்கு ஏற்கவே முடியாத கொடும் அநீதியாகும். சாதி ஒழிப்பு, சமூக விடுதலை, விளிம்பு நிலை மக்களின் மேம்பாடு என வாய்கிழியப் பேசும் திமுக அரசின் சமூக நீதி இதுதானா? பாதிக்கப்பட்டோரையே குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதுதான் எல்லா மக்களுக்குமான திராவிட மாடல் ஆட்சியா?‌ பேரவலம்! அநீதிக்குத் துணைபோகும் திமுக அரசின் இக்கொடுங்கோல் செயல்பாடுகள் யாவும் கடும் கண்டனத்திற்குரியது. ஆதித்தமிழ் குடிமக்கள் வசிக்கும் பகுதியில் நடந்தேறிய சாதிய வன்மம் கொண்ட இக்குற்றச்செயலினை முற்றிலுமாக மடைமாற்றி, தனிநபர் நோக்கம் கொண்ட மோதல்போல சித்தரித்து, அப்பகுதியைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய தம்பிகள் மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருப்பது சகித்துக் கொள்ளவே முடியாத பெருங்கொடுமையாகும். ஏற்கனவே, குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதில் உடல்நலக்கேடும், மன அழுத்தத் தாக்குதல்களுக்கும் ஆளான வேங்கைவயல் மக்களுக்கு மேலும் அநீதி இழைக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் அமைந்திருப்பது வெட்கக்கேடானது. முரளிராஜா எனும் ஊர்க்காவல் படையினைச் சேர்ந்த தம்பி, நீரின் தன்மை சீரழிந்தது குறித்து ஆராய்கையில் குடிநீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்டதனைக் கண்டறிந்து புகார் அளித்தவராவார். மனிதக்கழிவு கலந்த நீரினை உட்கொண்டு பாதிக்கப்பட்ட அவரையே இறுதியில் குற்றவாளியாக மாநிலப்புலனாய்வுத்துறை வழக்கில் சேர்த்திருப்பது விசாரணையின் அடிப்படையையே கேள்விக்குறியாக்குகிறது. மாநிலம் முழுவதும் பேசுபொருளாகி, மிகுந்த முதன்மைத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கக்கூடிய இவ்வழக்கிலேயே புகார் அளித்த மக்கள் மீது காவல்துறை குற்றம் சுமத்தி இருக்கிறதென்றால், இனி எந்த வன்கொடுமைக்கு புகார் அளிக்க உழைக்கும் மக்கள் முன்வருவார்கள்? வேங்கைவயலில் நிலவும் சாதியச் சிக்கலினை மூடி மறைத்து, தனிநபர் பழிவாங்கல் போக்கலினால் இக்கொடுமை நடந்திருப்பதாக முடிவெழுதுவதுதான் பெரியார் வழியிலான ஆட்சியா பெருமக்களே? இதுதான் நீங்கள் கட்டிக் காக்கும் சமூக நீதியா? இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் அம்மக்களுக்கான நீதி கிடைக்காத நிலையில், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லக்கூட முதல்வர் ஸ்டாலின் முன்வராததுதான் விளிம்பு நிலை மக்கள் மீதான திமுக அரசின் அக்கறையா? சாதியத்தோடு இக்குற்றம் நடந்தேறி இருப்பது உறுதியாகத் தெரிய வந்திருக்கும் நிலையில், அதனைத் தனிநபர் விரோதத்தினால் விளைந்தது என திசைதிருப்ப முற்படுவது உண்மையானக் குற்றவாளிகளைத் தப்பவிடும் கொடுஞ்செயலாகும். இது குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவைக் கலந்ததற்கு நிகரான வன்கொடுமையாகும். வழக்கின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலேயே, அப்பகுதியைச் சேர்ந்த மக்களின் அலைபேசி உரையாடல்களும், புகைப்படங்களும் வெளியே கசிய விட்டிருப்பது வெளிப்படையான மோசடித்தனமாகும். பாதிக்கப்பட்ட மக்களைக் குற்றப்படுத்த இந்த இழிவான செயலில் ஈடுபடுகிறதா காவல்துறையும், அதிகார வர்க்கமும் எனும் ஐயம் எழுகிறது. வெளியே விடப்பட்ட ஒலிநாடாவை வைத்து வழக்கின் கோணத்தையே மாற்றி முடிவெழுத முற்படுவது மிக மோசமான அதிகார முறைகேடாகும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வரும் நிலையில், ஒடுக்கப்பட்ட ஆதிக்குடி மக்கள் மீதான வன்முறைகளும், வன்கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. இதனைத் தடுத்து, அடித்தட்டு மக்களைக் காக்க முயற்சிகள் எதையும் மேற்கொள்ளாமல், பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பழி சுமத்துவது வரும் காலங்களில் குற்றச்செயல்கள் அதிகரிக்கவே வழிவகை செய்யும் என்பது உறுதியாகும். ஆகவே, முதல்வர் ஐயா ஸ்டாலின் இவ்வழக்கில் சிறப்புக் கவனமெடுத்து, பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களை இவ்வழக்கிலிருந்து விடுவிப்பதோடு, மறுவிசாரணை மேற்கொண்டு உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். https://www.puthiyathalaimurai.com/tamilnadu/seeman-and-vijay-condemnation-on-vengaivayal-chargesheet-by-govt
  16. உக்ரைன் ரஸ்ய போர்முனை - வடகொரிய படையினர் உயிருடன் பிடிபடுவதை தவிர்ப்பதற்காக கைக்குண்டுகளை வெடிக்கவைத்து மரணிக்கின்றனர் Published By: RAJEEBAN 29 JAN, 2025 | 02:50 PM ரஸ்ய உக்ரைன் போர்முனையில் ரஸ்யாவின் சார்பில் போரிடும் வடகொரிய படைவீரர்கள் உயிருடன் பிடிபடுவதை தவிர்ப்பதற்காக கைக்குண்டுகளை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொள்கின்றனர் என உக்ரைனிய படையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஸ்கைநியுஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது, வடகொரிய படையினர் பெரும் உயிரிழப்புகளை சந்தித்த பின்னர் ரஸ்ய உக்ரைன் முன்னரங்கிலிருந்து தற்காலிகமாக பின்வாங்கியுள்ளனர் என போல தோன்றுவதாக உக்ரைனின் விசேட படைப்பிரிவின் தளபதியொருவர் தெரிவித்தார். பல்ஸ் என்ற சங்கேத பெயரை கொண்டுள்ள அந்த தளபதி வடகொரிய போர்வீரர்கள் உக்ரைனிய படையினருடான இரத்தக்களறி மிகுந்த முதல்கட்ட மோதல்களின் போது இழைத்த தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்கின்றனர் அல்லது மேலதிக படையினரின் வருகைக்காக காத்திருக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் மீண்டும் விரைவில் போர்முனைக்கு திரும்புவார்கள் என இரகசிய தளமொன்றிலிருந்து உக்ரைன் தளபதி தெரிவித்துள்ளார். கடந்தமாதம் கேர்ஸ்க் போர்முனைக்கு வந்து ரஸ்ய படையினருடன் இணைந்து கொண்டது முதல் வடகொரிய படையினர் எவ்வாறு போரிடுகின்றனர் என்ற தகவல்களை உக்ரைனிய படையினர் வெளியிட்டுள்ளனர். உக்ரைன் படையினர் தெரிவித்துள்ளதாவது, ஆளில்லா விமானங்கள் ஆட்டிலறிகளின் ஆபத்தை அறியாத வடகொரிய படையினர் இரண்டாம் உலக யுத்தம் போல சிறியசிறிய குழுக்களாக போரிட்டனர். இதனால் அவர்களை இலகுவாக இலக்குவைக்க முடிந்தது. மூளைச்சலவைக்கு உட்படுத்தப்பட்டதால் அவர்கள் உக்ரைன் படையினரின் கடும் தாக்குதலின் மத்தியிலும் முன்னோக்கி நகர முயன்று பெருமளவில் உயிரிழந்தனர், காயமடைந்தனர். ரஸ்ய உக்ரைன் போர்முனையில் தாங்கள் போரிடுவதற்கான ஆதாரங்களை அகற்றுவதற்காக வெள்ளை தலைக்கவசம் அணிந்த வடகொரிய போர்வீரர்கள் கொல்லப்பட்ட காயமடைந்த தங்களின் சகாக்களை போர்முனையிலிருந்து அகற்ற முயன்றனர். உயிருடன் பிடிபட விரும்பாத வடகொரியா இராணுவத்தினர் காயமடைந்தால் கைக்குண்டுகளை வெடிக்கவைத்து உயிரிழக்கின்றனர், கைக்குண்டுகளை வெடிக்க வைப்பதற்கு முன்னர் வடகொரிய ஜனாதிபதியின் பெயரை அவர்கள் உச்சரிப்பதை கேட்க முடிகின்றது. https://www.virakesari.lk/article/205227
  17. 29 JAN, 2025 | 01:02 PM அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூதஇலக்கொன்றை தாக்குவதற்கான சதிதிட்டத்தை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பொலிஸார் பெருமளவுவெடிபொருட்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஜனவரி 19ம் திகதி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் கரவன் ரக வாகனமொன்றை வீடொன்றில் மீட்டனர் என தெரிவித்துள்ள நியுசவுத்வேல்ஸ் மாநிலத்தின் பிரதிபொலிஸ் ஆணையாளர் டேவிட் ஹட்சன் அந்த கரவனில் வெடிபொருட்கள் பெருமளவில் காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வெடிபொருட்களை யூதஇலக்கினை தாக்குவதற்கு பயன்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள அவர் இந்த அச்சுறுத்தலை தீவிரமாக எடுத்துள்ளதாகவும் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/205217
  18. 29 JAN, 2025 | 11:55 AM சென்னை: சென்னையில் மூளைச்சாவு அடைந்த 2 பேரின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. செங்கல்பட்டு வல்லம் பகுதி ஆலப்பாக்கம் காலனியைச் சேர்ந்த பி.சதீஷ்குமார்(33) என்பவர் தலைவலி, கையில் உணர்வின்மை மற்றும் நினைவின்மை காரணமாக போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பக்கவாத அறிகுறிகள் இருந்ததைக் கண்டறிந்த மருத்துவர்கள், தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்தார். அதேபோல், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆர்.குணசுந்தரி (52) என்பவர் அதிகப்படியான வியர்வை, நினைவின்மை காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரின் மூளை தசையில் போதுமான ரத்த ஓட்டம் இல்லாமல் பாதிக்கப்பட்டு, நினைவற்ற தன்மையில் இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அந்த பெண் மூளைச்சாவு அடைந்தார். மூளைச்சாவு அடைந்த இருவரின் உடல் உறுப்புகளை தானம் கொடுக்க இருவரின் குடும்பத்தினரும் முன்வந்தனர். இதையடுத்து, 4 சிறுநீரகங்கள், 2 கல்லீரல்கள், 2 கணையங்கள், இதய வால்வுகள், ஒரு சிறுகுடல் மற்றும் வயிற்றுப்பகுதி, 4 கண்விழிப்படலங்கள் எடுக்கப்பட்டன. உறுப்பு மாற்று சிகிச்சை: இதில், ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள 43 வயது பெண்ணுக்கு ஒரு சிறுநீரகம், 36 வயது ஆணுக்கு ஒரு சிறுநீரகம், 61 வயது ஆணுக்கு ஒரு கல்லீரல், 48 வயது ஆணுக்கு ஒரு கல்லீரல், 36 வயது பெண்னுக்கு ஒரு கண் விழிப்படலம், 46 வயது ஆணுக்கு ஒரு கண் விழிப்படலம் பொருத்தப்பட்டது. 2 கண் விழிப்படலங்கள் இருவருக்கு பொருத்துவதற்காக ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை கண் வங்கியில் வைக்கப்பட்டுள்ளது. பிற உறுப்புகள் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி மற்ற மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்திய மருத்துவ சிகிச்சைத் துறையில் சாதனையாக ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ மையத்தில் 24 மணிநேர இடைவெளிக்குள் ஏற்பட்ட இரண்டு மூளைச்சாவு நோயாளிகளின் உறுப்புகளைத் தானமாகப் பெற்று மற்றவர்களுக்கு பொருத்தி புதிய வாழ்க்கை அளிக்க 6 அறுவை சிகிச்சை கூடங்களும், சம்பந்தப்பட்ட மருத்துவக் குழுக்களும் துரிதமாகச் செயல்படுத்தப்பட்டன. மருத்துவர்கள் குழு: இந்த சிகிச்சைகளில் 30 மருத்துவர்களும், 50 துணை மருத்துவர்களும் இணைந்து பணியாற்றினர். இதனால் இயல்பாக நடக்கும் மற்ற அறுவை சிகிச்சைகள் பாதிக்கப்படவில்லை. இதன்மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. மாற்று உறுப்பு பெற்ற அனைத்து நோயாளிகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனையின் சிறுநீரக அறுவை சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்று துறை பேராசிரியர் மருத்துவர் கே.நடராஜன் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/205203
  19. Published By: DIGITAL DESK 3 29 JAN, 2025 | 03:02 PM ஆசியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள சீனர்கள் குடும்பத்தினர், நண்பர்கள், பிரார்த்தனைகள் மற்றும் ஏராளமான உணவுகளுடன் சீனப் புத்தாண்டை வரவேற்றுள்ளனர். அதன்படி, ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு விலங்கின் பெயர் வைக்கப்படும் நிலையில், இவர்கள் டிராகன் ஆண்டுக்கு விடைகொடுத்து பாம்பு ஆண்டை வரவேற்றுள்ளனர். "வசந்த விழா" என்றும் அழைக்கப்படும் லூனார் புத்தாண்டு அல்லது சந்திரப்புத்தாண்டு இன்று 29 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி வரை 15 நாள் நாட்கள் சீன மக்களால் கொண்டாடப்படுகிறது. சீனாவிலும் பிற இடங்களிலும் உள்ள சீன மக்கள் இந்த ஆண்டின் மிக முக்கியமான பண்டிகையாகக் கருதுகின்றனர். இந்த புத்தாண்டு கொரியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆசியாவின் பிற பகுதிகளிலும் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டின் முதல் இரண்டு நாட்களில் குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்று கூடி விருந்து, பரிசுகள் மற்றும் சிவப்பு கடதாசி உறைகளில் பணம் போன்றவற்றை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கின்றனர். மிகவும் பொதுவான சீன மொழி சொற்றொடர்களான Gong Xi Fa Cai மற்றும் Xin Nian Kuai Le ஆகிய வார்த்தைகளை கூறி வாழ்த்துகள் மற்றும் நல்வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன, இவை வரவிருக்கும் நாட்களில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு என தோராயமாக மொழிபெயர்க்கப்படுகின்றன. சீனப் புத்தாண்டு சீனா, ஹாங்காங், மக்காவு, தாய்வான், சிங்கப்பூர், தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மொரிசியஸ், மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட சீன மக்கள் கணிசமாக உள்ள நாடுகள் மற்றும் பிரதேசங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த புத்தாண்டின் தோற்றம் சீனாவில் இருந்தாலும், மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள சீன சமூகங்கள் ஒரே பெயரில் மற்றும் இதே போன்ற மரபுகளுடன் கொண்டாடுகின்றன, வியட்நாம் மற்றும் கொரிய தீபகற்பம் போன்ற மற்றவை சந்திர புதிய பெயருக்கு முற்றிலும் மாறுபட்ட பெயரைக் கொண்டுள்ளன. பாரம்பரியமாக சீனாவில் 'சுஞ்சி' (Chunjie) எனவும் கொரியாவில் 'சியோலால்' எனவும் வியட்நாமில் 'டெட்' எனவும் அழைக்கப்படுகிறது. திபெத்தில் ‘லோசர்’ மற்றும் மங்கோலியாவில் ‘சகான் சார்’ எனவும் அழைக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/205201
  20. கிலன் பரே சின்ட்ரோம் : மகாராஷ்டிராவில் அரிய நோய்க்கு 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு - என்ன அறிகுறி? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் கியான் பரே சின்ட்ரோம் (Guillain-Barré syndrome) பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை நூற்றுக்கணக்கானோருக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சோலாபூரில் ஒருவர் இந்த நோயால் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக மகாராஷ்டிரா சுகாதாரத் துறை தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் 16 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. அம்மாநிலத்தில் நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு ஒர் உயர்நிலைக் குழுவை அனுப்பியுள்ளது. இந்த நோய் ஏற்படுவதற்கான சரியான காரணம் இன்னும் மருத்துவ உலகில் கண்டறியப்படவில்லை. எனினும் சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் உணவு காரணமாக ஏற்படும் தொற்று, இந்த நோய் பாதிப்புக்கு இட்டுச் செல்லலாம் என்று நம்பப்படுவதால், பொது மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நோயின் அறிகுறிகள் என்ன? தசை சார்ந்த பாதிப்புகளே இந்த நோயின் முதல் கட்ட அறிகுறிகள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கைகள் அல்லது கால்கள் திடீரென பலவீனமடைதல் அல்லது மரத்துப் போகுதல் நடப்பதில் சிரமம் அல்லது திடீரென தசை பலவீனம் ஏற்படுவது தொடர்ச்சியான வயிற்றுப் போக்கு அமெரிக்க நிதியுதவி நிறுத்திவைப்பு: டிரம்ப் உத்தரவால் இந்தியா, வங்கதேசத்திற்கு என்ன பாதிப்பு? கே.எம்.செரியன்: இஸ்லாமிய பெண்ணுக்கு இந்துவின் இதயத்தை பொருத்திய கிறிஸ்தவர் ரஞ்சி கோப்பை : 42 முறை வென்ற மும்பை அணி ஜம்மு காஷ்மீரிடம் தோல்வி, போட்டியில் நடந்தது என்ன? கபடியால் மாறிய வாழ்க்கை - ஒரு கிராமத்துப் பெண்களின் நெகிழ்ச்சி கதை நோய்த் தடுப்பு வழிகள் என்ன? இந்த நோய் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று ஏற்பட்ட பிறகு உருவாவதால், சுகாதாரம் பேணுவதே இந்த நோயைத் தடுக்க முக்கியமான வழி என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தண்ணீரைக் கொதிக்க வைத்து குடிப்பது சாப்பிடும் உணவு சுத்தமானதாக இருக்க வேண்டும், சமைத்தவுடன் சாப்பிட வேண்டும். தனிநபர் சுகாதாரம் பேண வேண்டும் சமைத்த மற்றும் சமைக்காத உணவை ஒன்றாகக் கலக்க வேண்டாம். இதனால் தொற்று ஏற்படலாம். யாழ்ப்பாணத்தில் 'திருவள்ளுவர் கலாசார மையம்' என்ற பெயருக்கு எதிர்ப்பு ஏன்? புதிய பெயர் என்ன?26 ஜனவரி 2025 மனைவியை கொன்று, உடலை துண்டாக்கி குக்கரில் சமைத்ததாக புகார் - விடை தெரியாத 12 கேள்விகள்26 ஜனவரி 2025 கியான் பரே சின்ட்ரோம் என்றால் என்ன? கியான் பரே சின்ட்ரோம் என்பது அரிய வகை நோயாகும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, தவறுதலாக நரம்பு மண்டலத்தைத் தாக்கும்போது இந்த நோய் ஏற்படும். இந்த நோய் முதல் உலகப் போரின்போது முதலில் கண்டறியப்பட்டது. சோம் போரில் இரண்டு வீரர்களுக்கு கை கால்கள் முடங்கிப் போயின. அப்போது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ராணுவ நரம்பியல் மருத்துவர்கள் கியான், பரே மற்றும் ஸ்ட்ரால் இந்த நோய் குறித்து ஆராய்ந்தனர். பிறகு இந்த நோய் கியான் பரே சின்ட்ரோம் என்றழைக்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த நோய் எதனால் ஏற்படுகிறது? இந்த நோய் ஏற்படுவதற்கான காரணம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் ஒரு பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று ஏற்பட்ட பிறகு இந்த நோய் பாதிப்பு உடலில் உருவாகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காம்பிலோபாக்டர் ஜெஜுனி (Campylobacter jejuni ) எனும் தொற்று காரணமாக வயிற்றுக் கோளாறு ஏற்படும். வாந்தி, குமட்டல், வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படக்கூடும். பல பேருக்கு இந்தத் தொற்று ஏற்பட்ட பிறகே, கியான் பரே சின்ட்ரோம் பாதிப்பு உருவாகியுள்ளது. சில நேரங்களில் ஜிகா, சிக்குன்குனியா, தடுப்பூசிகள், அறுவை சிகிச்சைகள், காயங்கள் ஆகியவற்றோடு கியான் பரே சின்ட்ரோம் தொடர்புபடுத்தப்படுகிறது. ராமர் கோயில் திறந்து ஓராண்டு நிறைவு - மாறி வரும் அயோத்தியின் பேசப்படாத மறுபக்கம்25 ஜனவரி 2025 சீனாவுடன் சமரசம், இந்தியாவுக்கு நெருக்கடியா? டிரம்பின் சவால்களை இந்தியா எப்படி சமாளிக்கப் போகிறது?25 ஜனவரி 2025 உடலில் என்ன பாதிப்பு ஏற்படும்? உடலின் எதிர்ப்பு சக்தி நரம்பு மண்டலத்தைத் தாக்குவதால் மூளைக்கும் தசைகளுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றம் பாதிக்கப்படுகிறது. இதனால் தசை பலவீனம், மரத்துப் போகுதல் ஆகியவை ஏற்படக்கூடும். நோய் பாதிப்பு தீவிரமாக இருந்தால், முடக்குவாதம் ஏற்படலாம். இந்த நோய் எந்த வயதினருக்கும் ஏற்படலாம். எனினும் பெரியவர்கள் குறிப்பாக ஆண்களுக்கே பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. தீவிர பாதிப்புகள் காரணமாக முடக்குவாதம் மட்டுமின்றி சுவாசக் கோளாறுகளும் ஏற்படக்கூடும். உரிய நேரத்தில் சிகிச்சை கிடைத்தால், பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடைந்துவிடுகிறார்கள். தசை பாதிப்பு ஏற்படுவதால், பல நோயாளிகள் ஃபிசியோதெரபி, பேச்சு பயிற்சி செய்ய வேண்டியுள்ளது. நரம்பியல் மருத்துவர் கஸ்துப் மஹஜன், "இந்த நோய் எந்த வயதிலும் ஏற்படலாம், நோய் அறிகுறிகள் எப்போது வேண்டுமானாலும் தென்படலாம். அறிகுறிகள் ஆரம்பக் காலத்திலேயே கண்டறியப்படுவதும், உரிய நேரத்தில் சிகிச்சை வழங்குவதும் நோயாளி முழுமையாகக் குணமடைய அவசியம்" என்கிறார். பொதுவாக உடலில் ஒரு தொற்று ஏற்படும்போது, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் அதை எதிர்ப்பதற்காகப் புரதங்களை வெளியிடும். அது ஆன்டிபாடி எனப்படும். கியான் பரே சின்ட்ரோம் நோய் பாதிப்பின்போது, "உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆன்டிபாடிகள் இருக்கின்றனவா என்று நவீன மருத்துவ தொழில்நுட்பம் கொண்டு கண்டறிந்து மருந்துகள் கொடுக்கப்படும். பிளாஸ்மா மாற்று சிகிச்சை இதற்கு உதவக்கூடும். டயாலிசிஸ் போன்ற அந்த சிகிச்சையில் ரத்தத்தில் உள்ள தீங்கு செய்யும் ஆன்டிபாடிகளை வெளியேற்றப்படும்" என்கிறார் கஸ்துப் மஹஜன் மக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தீவிர சிகிச்சை நிபுணர், மருத்துவர் அஜித் தம்போல்கர் கூறுகிறார். "பதற்றமடைய வேண்டாம். உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்பட்டால், பெரும்பாலான நோயாளிகள் குணமாகிவிடுவர். குடிநீர் மற்றும் சுற்றுச்சூழலை சுகாதாரமாகப் பேணுவது நோய் வராமல் தடுக்க மிக முக்கியம். அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கூட்டிச் செல்ல வேண்டும்" என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES 'உலகிலேயே முதன் முதலில் தமிழ்நாட்டில்தான் இரும்பு பயன்பாடு தொடங்கியது' - இரும்புக் காலம் ஏன் முக்கியம்?25 ஜனவரி 2025 ஈர்ப்பு விசை விதிகளை மீறும் கல் சிற்பக் கலையில் அசத்தும் மகாராஷ்டிரா இளைஞர்24 ஜனவரி 2025 இந்த நோயால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்டு, மீண்டு வந்த நிலேஷ் அபங் பிபிசியிடம் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். "கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி எனக்கு கியான் பரே சின்ட்ரோம் இருப்பது கண்டறியப்பட்டது. நான் மே மாதம் 30ஆம் தேதி வரை வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்தேன். நான்கு மாதங்களுக்கும் மேல் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்துள்ளேன். கழுத்துக்குக் கீழே எனது உடல் முடங்கிவிட்டது. எனது நுரையீரல்கள் மிகவும் பலவீனமாயின. ஆனால் மருத்துவ சிகிச்சை மற்றும் பிசியோதெரபி மூலம் நான் முழுவதுமாகக் குணமடைந்தேன்" என்று நினைவு கூர்ந்தார். உடல் பாதிப்பு மட்டுமல்லாமல் நோயாளியும் அவருடன் குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்று கூறும் நிலேஷ், தன்னைப் போன்று பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு நேர்மறையான ஆலோசனைகள் வழங்கி வருகிறார். "கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏராளமான நோயாளிகளை நான் பார்த்துள்ளேன், அவர்களுடன் பேசியுள்ளேன். அவர்களில் பலர், முழுவதும் குணமடைந்து வாழ்கிறார்கள். வென்டிலேட்டரில் இருந்தவர்கள்கூட முழுவதுமாக குணமடைந்துள்ளனர்" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8634n09g1jo
  21. 29 JAN, 2025 | 04:28 PM சென்னை: “பிரதமர் மோடி இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவோடு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்தை போட வேண்டும். அந்த ஒப்பந்தத்தின் மூலமே தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினையை தீர்க்க முடியும். இத்தகைய ஒப்பந்தத்தினால் யாழ்ப்பாண தமிழ் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற உறுதியை இந்திய அரசு தர வேண்டும். அந்த வகையில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பதன் மூலமே தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு நடத்தி நாகப்பட்டினம் மயிலாடுதுறை காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து அட்டூழியம் செய்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் கடுமையாக காயமடைந்த இரண்டு மீனவர்கள் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காயடைந்த 3 மீனவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை கடற்படையினரின் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் தகுந்த சிகிச்சை பெற்று தமிழகம் திரும்ப உரிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2024-ம் ஆண்டில் மட்டும் இலங்கை கடற்படை 72 மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்தும் 554 தமிழக மீனவர்களையும் கைது செய்தும் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய பாஜக அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பலமுறை கடிதம் எழுதியும் இப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. ஆனால் பாஜகவினர் கச்சத்தீவு குறித்து பேசி பிரச்சினையை திசைத்திருப்பும் முயற்சியை செய்து வருகின்றனர். தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கும் கச்சத்தீவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அனைத்து மீனவர்களும் நன்கு அறிவார்கள். ராமேஸ்வரத்திலிருந்து சர்வதேச கடல் எல்லை 12 கடல் மைல் தூரத்திலும் கச்சத்தீவு என்பது 14 கடல் மைல் தூரத்திலும் உள்ளது. இந்நிலையில் சர்வதேச கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். தமிழக மீனவர்களை பொறுத்தவரை இந்திய கடல் பகுதியில் மீன்வளம் இல்லாத நிலையில் இலங்கை கடல் பகுதியில் மீன்வளம் அதிகமாக இருப்பதாலும் அங்கே மீன்பிடிக்க செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மன்மோகன்சிங் எடுத்த முயற்சியின் விளைவாக இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கிற உரிமையை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அந்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்ட நிலையை அடைந்த நிலையில் தமிழக மீனவர்கள் பின்பற்றுகிற இழுவலை மீன்பிடி முறையை இலங்கை அரசு அனுமதிக்க மறுத்து விட்டது. இதற்கான மாற்று ஏற்பாடுகள் பேசப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக ஆட்சிக்கு வந்தது. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 31 ஜனவரி 2014-ல் தமிழக பாஜக சார்பாக ராமேஸ்வரம் மண்டபத்தில் கடல் தாமரை மாநாடு நடைபெற்றது. இதில் அன்றைய மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்று உரையாற்றும் போது பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தற்போது மீனவர்கள் கைது செய்யப்படுகிற நிலை தொடராது. படகுகள் பறிமுதல் செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்படும். இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கிற உரிமை பெற்றுத் தரப்படும். மீனவர் துறைக்கென மத்திய அரசில் தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும். கச்சத்தீவையும் மீட்க நடவடிக்கை எடுக்கபப்டும். அதன்மூலம்இ தமிழகம் உள்ளிட்ட இந்திய மீனவர்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்று வாக்குறுதி வழங்கியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜோ பிரதமர் மோடியோ தொடர்ந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் கைது செய்யப்படுவதையும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? என்பது தான் தமிழக மீனவர்களின் கேள்வியாகும். கடந்த 10 ஆண்டு காலத்தில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு 42 கடிதங்கள் எழுதியும் மீனவர்கள் கைது செய்யப்படுவது நிறுத்தப்படவில்லை என்று அன்று குற்றம்சாட்டியதை எவரும் மறந்திட இயலாது. அதேபோல தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2021-ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து பல கடிதங்களை பிரதமர் மோடிக்கு எழுதியிருக்கிறார். ஆனால் இப்பிரச்சினையை தீர்க்க பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுஷ்மா சுவராஜ் கொடுத்த எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தமிழக மீனவர்கள் நீண்ட நெடுங்காலமாக பாரம்பரியமாக இந்திய - இலங்கை கடல் பகுதியில் சுதந்திரமாக மீன்பிடிக்கிற தொழிலை மேற்கொண்டு வந்தனர். இந்திய - இலங்கை அரசுகள் மேற்கொண்ட 1974 - 1976 ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் சர்வதேச கடல் எல்லை வகுக்கப்பட்டது. சர்வதேச கடல் எல்லை என்பது பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த மீனவர்களுக்கு தடையாக இருக்க முடியாது. சர்வதேச கடல் எல்லையை மீறி மீன்பிடிக்க வருபவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதற்கு எந்த உரிமையும் இல்லை. ஏனெனில்இ இலங்கை கடல் பகுதியில் காலம் காலமாக பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த அனுபவ உரிமையை இலங்கை அரசு மறுக்க முடியாது. இந்திய அரசு இலங்கைக்கு 4 பில்லியன் ரூபாய் 35இ000 கோடி அளவுக்கு நிதியுதவி செய்ததோடுஇ கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கு நிறைய உதவிகளை செய்து வருகின்றது. இந்தப்பகுதியில் மிகப்பெரிய வல்லரசாக இருக்கிற இந்தியாவின் பிரதமரான மோடி சின்னஞ்சிறிய நாடான இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவோடு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்தை போட வேண்டும். அந்த ஒப்பந்தத்தின் மூலமே தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினையை தீர்க்க முடியும். இத்தகைய ஒப்பந்தத்தினால் யாழ்ப்பாண தமிழ் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற உறுதியை இந்திய அரசு தர வேண்டும். அந்த வகையில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பதன் மூலமே தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்” என்று அவர் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/205248
  22. 29 JAN, 2025 | 04:06 PM (நமது நிருபர்) கடந்த காலங்களில் அரசியல் தரப்பினால் வழங்கப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பாடுகள் எழுந்தன, எனினும் அரசியல் தரப்பிடம் எவ்வித மறைமுக நோக்கங்களும் இல்லை என்பதை நாம் தற்போது நிரூபித்துள்ளோம். அரச பொறிமுறை எங்களுக்கு ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கிறோம், ஆனால் அரசு பொறிமுறையின் மனப்பாங்கு மாற்றமடைய வேண்டும். மக்களின் மனப்பான்மைகளை மாற்றாமல் ஒரு நாடென்ற வகையில் முன்னேற முடியாது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) பிற்பகல் நடைபெற்ற 2025 பொருளாதார உச்சி மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந்தமாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்த காலங்களில் அரசியல் தரப்பினால் வழங்கப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பாடுகள் எழுந்தன. அரசியல் தரப்பு மறைந்துள்ள எதனையோ செயல்படுத்தப் போகிறது என்ற எண்ணமே அரச பொறிமுறைக்குள் எப்போதும் காணப்பட்டது. ஆனால் தற்போது அரசியல் தரப்பிடம் எவ்வித மறைமுக நோக்கங்களும் இல்லை என்பதை நிரூபித்துள்ளோம். எனவே அரச பொறிமுறை எங்களுக்கு ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதன்போது அரசு பொறிமுறையின் மனப்பாங்கு மாற்றமடைய வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் முடிவுகள் எடுக்கப்படாவிட்டால் எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்காது. டிஜிட்டல் மயமாக்கல் மூலம் வசதி, செயல்திறன் என்பவைகளை மட்டுமல்லாமல் நாட்டை இருக்கும் இடத்திலிருந்து புதிய நிலைக்கு உயர்த்தும் இயலுமையும் காணப்படுகிறது. எனவே இந்த சந்தர்ப்பத்தில் அரச பொறிமுறையை டிஜிட்டல்மயமாக்கலை கட்டாயமாக செய்ய வேண்டும். டிஜிட்டல் அடையாள அட்டை பற்றிய போலிக் கதைகளை அறிவியல் ரீதியாக உடைத்து புதிய உலகத்திற்கு ஏற்ற அடையாளத்தை உருவாக்கும் இயலுமை காணப்படுகிறது. அதற்காக இந்திய அரசாங்கம் 10 பில்லியன் ரூபாய் அன்பளிப்பையும் வழங்குகிறது. நிர்வாகத்திற்கென ஒரு புதிய வேலைத்திட்டம் அவசியப்படுகிறது. இதுவரையில் காணப்பட்ட அரச நிர்வாகம் தோல்வியடைந்த மற்றும் ஊழல் மிகுந்தது மேலும் அரச சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு பெருமளவான செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே சில அரச நிறுவனங்களை ஒன்றிணைத்து அவற்றின் பங்குகளை சேகரித்து பங்குச் சந்தைக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். சில நிறுவனங்களில் செய்ய வேண்டிய விடயங்கள் எவையும் இல்லை. காலத்தின் தேவைக்கேற்ப இந்த நிறுவனங்கள் நிறுவப்பட்டாலும் தற்காலத்தில் அந்த நிறுவனங்களுக்கான செயற்திட்டங்கள் எவையும் இல்லை. ஒரு துறைக்கு பல அரச நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். நாட்டை கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். அரச சேவையை வழங்க அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது. அரச சேவையில் 1.3 மில்லியன் பேர் உள்ளனர். அடிமட்ட அரச ஊழியர்களின் அளவு தன்னிறைவாக காணப்பட்டாலும் இடைநிலை அரச ஊழியர் எண்ணிக்கையில் பற்றாக்குறை உள்ளது. இதற்காக தேர்வு நடத்தினால், தனியார் துறையில் பணிபுரிபவர்களும் வருகின்றனர். தனியார் துறையினால் ஈர்க்கப்படாத அரச துறையில் ஈர்க்கப்படும் பொதுச் சேவையே இங்கு உள்ளது. எனவே தனியார் துறையும் சேவைகளை வழங்குவதற்கான இடம் என்ற கருத்தாடலை உருவாக்க வேண்டும். 1991 அரச தோட்டங்கள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால் முப்பத்திரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1700 ரூபாவை வழங்க முடியாமல் உள்ளது. அவ்வாறிருக்கையில் அந்த நிறுவனங்கள் வெற்றியளிக்குமா இல்லையா என்பதை சிந்திக்க வேண்டும். நேற்று சுங்கத்தில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட கொள்கலன்கள் திறக்கப்பட்டன. அவற்றை கொண்டு வந்தவர்கள் யாரும் இல்லை. ஆனால், கொள்கலன்கள் திறந்து பார்த்தபோது பிரபல நிறுவனத்தின் லேபிள்கள் ஒட்டப்பட்டிருந்தன. எனவே மக்கள் தங்கள் மனப்பாங்கை மாற்றிக் கொள்ள வேண்டும். அரசியல் அதிகார தரப்பிற்குரிய பண்புகளை நாம் கொண்டு வந்துள்ளோம். ஆனால் உங்களுக்குள் மாற்றம் ஏற்படாமல் ஒரு நாடென்ற வகையில் முன்னேற முடியாது என்றார். https://www.virakesari.lk/article/205231
  23. பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது! Published By: DIGITAL DESK 3 29 JAN, 2025 | 04:47 PM பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை யாழ்ப்பாணத்தில் வைத்து அநுராதபுர பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் அநுராதபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை, கடமையில் இருந்த பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா மீது சுமத்தப்பட்டது. அந்நிலையில் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் அர்ச்சுனா இராமநாதன் முன்னிலையாகிய வேளை , சந்தேகநபரான சுலோச்சனா இராமநாதன் என பெயர் குறிப்பிட்டு இருந்தமையால் அர்ச்சுனா விடுவிக்கப்பட்டு இருந்தார். குறித்த வழக்கு தொடர்பில் எதிர்வரும் 03ஆம் திகதி விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு அநுராதபுர நீதிமன்று பொலிஸாருக்கு கட்டளையிட்டு இருந்தது. இந்நிலையில், அநுராதபுர பொலிஸ் நிலையத்தின் விசேட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து யாழ்ப்பாணத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்து, அநுராதபுரம் அழைத்து சென்றுள்ளனர். https://www.virakesari.lk/article/205245
  24. ஐசிசி உலக டெஸ்ட் சம்பயின்ஷிப்பில் 3ஆம் இடத்தை அடையும் குறிக்கோளுடன் அவுஸ்திரேலியாவை இலங்கை எதிர்கொள்ளும் - அணித் தவைவர் தனஞ்சய Published By: VISHNU 28 JAN, 2025 | 09:30 PM (நெவில் அன்தனி) ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் 3ஆம் இடத்தை அடையும் குறிக்கோளுடன் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நாளை ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட வோர்ன் - முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை எதிர்கொள்ளவுள்ளதாக ஊடவியலளர்களிடம் இலங்கை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா தெரிவித்தார். காலி விளையாட்டரங்க மைதான வெளியில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். 'நடப்பு ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சியில் (2023 - 2025) 3ஆம் இடத்தை அடைவதே எமது இலக்கு. இந்த தொடருக்கான சுழற்சி பருவகாலத்தை நாங்கள் சாதுரியமாக எதிர்கொள்ளவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் நாங்கள் அடைந்த தோல்வியே டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி ஆட்ட வாய்ப்பு எம்மைவிட்டு நழுவிச் சென்றதற்கான முக்கிய காரணமாகும். அது கடந்துபோன விடயம். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முழுமையாக வெற்றிபெற்று மூன்றாம் இடத்தை அடைவதே எமது இலக்கு' என தனஞ்சய டி சில்வா கூறினார். ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் தற்போது 45.45%புள்ளிகளுடன் 5ஆம் இடத்தில் உள்ள இலங்கை, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் கடைசி தொடரில் அவுஸ்திரேலியாவை 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முழுமையாக வெற்றிகொண்டால் 53.85% புள்ளிகளைப் பெற்று 3ஆம் இடத்திற்கு முன்னேறும். இந் நிலையில் அவுஸ்திரேலிய அணியை வெற்றிகொள்ள முடியும் என நம்புகிறீர்களா என அவரிடம் கேட்டபோது, 'அவுஸ்திரேலிய அணி சமபலம்வாய்ந்தது. ஆனால், மிகத் திறமையாக விளையாடினால் எமக்கு அனுகூலமான முடிவு கிடைக்கும். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2022இல் கடைசியாக இதே மைதானத்தில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட தொடர் துரதிர்ஷ்டவசமாக 1 - 1 என சமநிலையில் முடிவடைந்தது. எனினும் 2016இல் நடைபெற்ற தொடரில் நாங்கள் முழுமையாக (3 - 0) வெற்றிபெற்றிருந்தோம். இந்த இரண்டு தொடர்களிலும் விளையாடிய வீரர்கள் அணியில் இடம்பெறுகின்றனர். எனவே அந்த அனுபவத்துடன் நாங்கள் சிறப்பாக விளையாடி வெற்றிபெற முயற்சிப்போம். 'இந்த வருடம் இலங்கைக்கு 4 டெஸ்ட் போட்டிகள் மாத்திரமே கிடைத்துள்ளது. இது எமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விடயம். ஆனால், எங்களுக்கு நிறைய டெஸ்ட் வாய்ப்புகள் வழங்கப்படுவது சரி என்பதை எமது திறமை மூலம் நிரூபிப்போம். அதற்காக போட்டிகள் நடைபெறாத காலத்தில் டெஸ்ட் போட்டிகளை ஏற்பாடு செய்து விளையாடுவது பலன் தரக்கூடியதாக இருக்கும்' எனவும் அவர் தெரிவித்தார். இந்த மைதானம் சுழல்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானபோதிலும் முதல் நாளிலிருந்தே அவ்வாறு இருக்கும் என எதிர்பார்க்க முடியாது, ஆனால், 3ஆம், 4ஆம், 5ஆம் நாட்களில் சுழல்பந்துவீச்சுக்கு சாதகமாக அமையலாம் என தனஞ்சய டி சில்வா மேலும் குறிப்பிட்டார். இலங்கையும் அவுஸ்திரேலியாவும் நாளைய தினம் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னரே விளையாடவுள்ள 11 வீரர்களை அறிவிக்கவுள்ளன. உபாதையிலிருந்து மீளாமல் இருக்கும் பெத்தும் நிஸ்ஸன்க முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் எனவும் இரண்டாவது போட்டியில் பெரும்பாலும் அவர் விளையாடுவார் எனவும் தனஞ்சய டி சில்வா மேலும் தெரிவித்தார். பெத்தும் நிஸ்ஸன்கவுக்கு பதிலாக ஓஷத பெர்னாண்டோ ஆரம்ப வீரராக விளையாடவுள்ளார். அத்துடன் ப்ரபாத் ஜயசூரிய, நிஷான் பீரிஸ் அல்லது ரமேஷ் மெண்டிஸ் ஆகிய 3 சுழல்பந்துவீச்சாளர்கள் அல்லது அவர்களில் இருவர் இறுதி அணியில் இடம்பெறுவர் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, இலங்கைக்கு எதிரான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் புதிய ஆரம்ப ஜோடி அறிமுகமாகும் என்பதை அவுஸ்திரேலியாவின் பதில் அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் இன்று பகல் உறுதிசெய்தார். உஸ்மான் கவஜாவின் ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியாக ட்ரவிஸ் ஹெட் விளையாடுவார் என அவர் குறிப்பிட்டார். அதேவேளை, இந்தியாவுக்கு எதிரான போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் அறிமுகமான நேதன் மெக்ஸ்வீனி, சாம் கொன்ஸ்டாஸ், போ வெப்ஸ்டர் ஆகிய மூவரும் இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவார்கள் எனவும் விக்கெட் காப்பளார் ஜொஷ் இங்லிஸ் டெஸ்ட் அறிமுகம் பெறுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. குழாம்கள் இலங்கை: திமுத் கருணாரட்ன, ஓஷத பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா (தலைவர்), கமிந்து மெண்டிஸ், குசல் மெண்டிஸ், ரமேஷ் மெண்டிஸ், நிஷான் பீரிஸ், ப்ரபாத் ஜயசூரிய, மிலான் பெர்னாண்டோ, லஹிரு குமார, விஷ்வா பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, அறிமுக வீரர்களான சொனால் தினுஷ மற்றும் லஹிரு உதார, சதீர சமரவிக்ரம, ஜெவ்றி வெண்டசே. அவுஸ்திரேலியா: ஸ்டீவன் ஸ்மித் (தலைவர்), ட்ரவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மானுஸ் லபுஷேன், அலெக்ஸ் கேரி, ஜொஷ் இங்லிஷ், நேதன் லயன், சாம் கொன்ஸ்டாஸ், நேதன் மெக்ஸ்வீனி, சோன் அபொட், கூப்பர் கொனொலி, போ வெப்ஸ்டர், ஸ்கொட் போலண்ட், மெத்யூ குனேமான், டொட் மேர்பி, மிச்செல் ஸ்டார்க். https://www.virakesari.lk/article/205166
  25. ட்ரிஷாவின் சாதனைமிக்க சதத்தின் உதவியுடன் இந்தியா 150 ஓட்டங்களால் வெற்றி Published By: VISHNU 28 JAN, 2025 | 11:26 PM (நெவில் அன்தனி) ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் முதலாவது சதத்தை ட்ரிஷா கொங்காடி குவித்து சாதனை படைக்க, ஸ்கொட்லாந்தை 150 ஓட்டங்களால் இந்தியா மிக இலகுவாக வெற்றிகொண்டது. கோலாலம்பூர் பேயுமாஸ் ஓவல் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற முதலாம் குழுவுக்கான சுப்பர் சிக்ஸ் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 208 ஓட்டங்களைக் குவித்தது. இந்த வருட 19 வயதுக்குட்பட்ட ரி20 மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். ட்ரிஷா கொங்காடி, குணாலன் கமலினி ஆகிய இருவரும் 81 பந்துகளில் 147 ஓட்டங்களைப் பகிர்ந்த இந்தியாவுக்கு பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். இந்த இணைப்பாட்டம் 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் சகல விக்கெட்களுக்குமான சாதனையுடன் கூடிய அதிகூடிய இணைப்பாடடமாகும். தமிழ்நாடு மதுரையைச் சேர்ந்த குணாலன் கமலினி ஜீ 42 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகளுடன் 51 ஓட்டங்களைப் பெற்று முதலாவதாக ஆட்டம் இழந்தார். அதனைத் தொடர்ந்து ட்ரிஷாவும் சானிக்கா சோல்கேயும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 39 பந்துகளில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ட்ரிஷா கொங்காடி அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 59 பந்துகளில் 13 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 110 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். சானிக்கா சோல்கே ஆட்டம் இழக்காமல் 29 ஓட்டங்களைப் பெற்றார். பதிலுக்க துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 14 ஒவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 58 ஓட்டங்களை மட்டும் பெற்று தோல்வி அடைந்தது. பிப்பா கெலி (12), எம்மா வால்சிங்கம் (12), பிப்பா ஸ்ப்ரூல் (11), நய்மா ஷெய்க் (10 ஆ.இ.) ஆகிய நாலவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் மிதிலா விநோத் 8 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வைஷ்ணவி ஷர்மா 5 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ட்ரிஷா கொங்காடி 6 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: ட்ரிஷா கொங்காடி. பங்களாதேஷுக்கு வெற்றி ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் தனது கடைசி முதலாம் குழுவுக்கான சுப்பர் சிக்ஸ் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொண்ட பங்களாதேஷ் 10 விக்கெட்களால் வெற்றிபெற்றது. பேயுமாஸ் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி 13 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 54 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 8.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 55 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. தென் ஆபிரிக்காவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையிலான இரண்டாம் குழு சுப்பர் சிக்ஸ் போட்டி மழையினால் முழுமையாகக் கைவிடப்பட்டது. நாளைய தினம் கடைசி சுப்பர் சிக்ஸ் போட்டிகள் ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் கடைசி 2 சுப்பர் சிக்ஸ் போட்டிகள் நாளை புதன்கிழமை (29) நடைபெறவுள்ளது. இலங்கை தனது கடைசி போட்டியில் அவுஸ்திரேலியாவை பாங்கி YSD - UKM கிரிக்கெட் ஓவல் மைதானத்தில் எதிர்தாடவுள்ளது. நைஜீரியாவுக்கும் அயர்லாந்துக்கும் இடையிலான போட்டியும் இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளுடன் சுப்பர் சிக்ஸ் சுற்று நிறைவடைகிறது. https://www.virakesari.lk/article/205168

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.