Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 08 FEB, 2025 | 04:53 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய இந்திய விஜயமானது மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் மயமாக்கலுக்கு மேலும் உத்வேகத்தை அளித்துள்ளது. அந்த வகையில் இந்திய உதவியுடன் 300 கோடி ரூபா மதிப்பிலான தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயல்படுத்துவதை விரைவுபடுத்த இலங்கை தலைவர்கள் ஒப்புக்கொண்டதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போ தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகள் வர்த்தகம், முதலீடு, அபிவிருத்தி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், பாதுகாப்பு, விவசாயம், உணவுப் பாதுகாப்பு, மக்களிடையே தொடர்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் இணைப்பு உள்ளிட்ட துறைகளில் கூட்டு ஒத்துழைப்பு நோக்கங்களை ஆராய்ந்து வருகின்றன. கடந்த பத்தாண்டுகளில் இந்தியா வேகமாக டிஜிட்டல் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. டிஜிட்டல் மயமாக்கலை இணைப்புக்கான வழிமுறையாக மட்டுமல்லாமல் - சமத்துவம் மற்றும் வாய்ப்புக்கான ஊடகமாகவும் இந்தியா ஏற்றுக்கொண்டது. அதுவே எமது டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் சாராம்சமாகும். இந்தியா இன்று அதன் 1.3 பில்லியன் மக்களுக்கு டிஜிட்டல் அட்டைகளை வழங்கியுள்ளது. எம்மத்தியில் 1.2 பில்லியன் நவீன கையடக்க தொலைபேசி பயனர்கள், 950 மில்லியன் இணைய பயனர்கள் உள்ளனர். உலகின் நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது. கடந்த பத்தாண்டுகளில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட எட்டு மடங்கு அதிகமான ஒப்டிகல் பைபர்களை இந்தியா அமைத்துள்ளது. அந்த வகையில் முழு பிராந்தியத்துக்கும் வாய்ப்புகள் மற்றும் சாத்தியக்கூறுகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான விரைவான வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய இந்திய விஜயமானது இந்த மிக முக்கியமான ஒத்துழைப்புத் தூணான மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் மயமாக்கலுக்கு மேலும் உத்வேகத்தை அளித்தது. இந்திய உதவியுடன் 300 கோடி ரூபா மதிப்பிலான தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயல்படுத்துவதை விரைவுபடுத்த இலங்கை தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த கூட்டுப் பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் டிஜிலொக்கரை செயல்படுத்துவது குறித்த தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டணங்களை எளிதாக்குவதற்காக கடந்த ஆண்டு இலங்கையில் யு.பி.ஐ. கொடுப்பனவுகள் ஆரம்பிக்கப்பட்டன. இரு நாடுகளின் நலனுக்காக யு.பி.ஐ. டிஜிட்டல் கொடுப்பனவுகளின் பயன்பாட்டை விரிவுபடுத்துவது குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எமது ஒவ்வொரு நாடுகளின் டிஜிட்டல் பயணங்களுக்கும் உத்வேகமளிக்கவும், பிம்ஸ்டெக் பிராந்தியத்துக்கான முன்னேற்றத்துக்கான புதிய பாதைகளை மேலும் திறக்கவும் இந்த தளத்தைப் பயன்படுத்துவோம் என்று நம்புகின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/206162
  2. மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை : பௌர்ணமியன்று போராட்டம் ; பூர்வீக நிலத்தின் உரிமையாளர்கள் அழைப்பு 08 FEB, 2025 | 03:49 PM மாற்றுக் காணி என்ற பேச்சுக்கே இடமில்லை - பூர்வீக நிலத்தின் உரிமையாளர்களாகிய நாம் உரிமங்களுடன் இருக்க தையிட்டி விகாரை நிர்மாணிக்கப்பட்ட நிலப்பரப்பும், அதனை அண்டிய மக்களின் காணி நிலங்களும் விகாரைக்குரியதென்று கூறுவதை ஏற்க முடியாது என கூறியுள்ள தையிட்டி காணி உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் பௌர்ணமி நாளன்று போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை (08) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்த குறித்த காணி நிலங்களின் உரிமையாளர்கள் இவ்வாறு தெரிவித்திருந்தனர். குறித்த சந்திப்பில் கலந்துகொண்டு க.ஜெயகுமார்,பா.பாஷ்கரன், சுகுமாரி சாருஜன் ஆகியோர் மேலும் கூறுகையில், மக்களது காணி நிலங்கள் மக்களுக்கே சொந்தம். அவை மக்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி அனுர அண்மையில் யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் கூறிய கருத்துக்கு முரணாக தையிட்டி விவகாரம் இருக்கின்றது. அகில இலங்கை பௌத்த மகாசபை ஒருபடி மேல் சென்று விகாரை கட்டப்பட்ட காணி நிலம் மட்டுமல்ல, அயலில் உள்ள காணி நிலங்களும் சுவீகரிக்கப்படும் என இறுமாப்புடன் கூறியுள்ளது. அதேநேரம் தேர்தல் கலங்களில் தேசிய மக்கள் சக்தியின் இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூவரும் எம்முடன் இவ்விடையம் தொடர்பில் பேசி, கடந்த கால யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றல்லாது, கடந்த அரசுகள் போலல்லாது தாம் ஆட்சிக்கு வந்ததும் இவ்விடையம் தீர்க்கப்படும் என எமக்கு வாக்குறுதியும் வழங்கியிருந்தனர். ஆனால் இன்று இம் மூவரும் பொம்மைகள் போன்று வாய்பேசாதுள்ளனர். நாம் எமது பூர்வீக நிலங்களையே கேட்கின்றோம். ஆளுநர் கூட எம்முடன் பேசிய விடையத்தை வேறு திசை நோக்கி கொண்டு செல்ல முயற்சித்து தவறான அர்த்தத்துடன் ஜனாதிபதிக்கு கூறியிருந்தார். ஆனாலும் அன்று கஜேந்திரகுமார் எம்.பி எமது பிரச்சினையை எடுத்திருந்தாலும் அவருக்கு பலமாக ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைக்கொடுத்திருக்கவில்லை. இது வாக்களித்த எமக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. இந்நிலையில் எதிர்வரும் 11 ஆம்திகதி மாலை 4 மணியிலிருந்து மறுநாள் மாலை 6 மணிவரை எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நாம் முன்னெடுக்கவுள்ளோம். காணி உரிமையாளர்களாகிய எமது போராட்டத்துக்கு பாரபட்சமற்ற வகையில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், போக்குவரத்து மற்றும் சிற்றூர்தி, முச்சக்கர வண்டி சங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவை வழங்கி வலுச்சேர்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/206150
  3. இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின் விளிம்பில் அவுஸ்திரேலியா Published By: VISHNU 08 FEB, 2025 | 08:46 PM (நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது வோர்னர் - முரளிதரன் டெஸ்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றியின் விளிம்பில் உள்ள அவுஸ்திரேலியா 2 போட்டிகள் கொண்ட தொடரையும் முழுமையாக கைப்பற்றும் நிலையில் இருக்கிறது. போட்டியின் மூன்றாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் இலங்கை அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு அமைய 2ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட்கள் மாத்திரம் மீதம் இருக்க, அவுஸ்திரேலியாவைவிட 54 ஓட்டங்களால் இலங்கை முன்னிலையில் இருக்கிறது. போட்டியில் இன்னும் இரண்டு நாட்கள் மீதம் இருப்பதால் இலங்கை தோல்வியைத் தவிர்க்கும் என எதிர்பார்க்க முடியாது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 330 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா, சகல விக்கெட்களையும் இழந்து 411 ஓட்டங்களைக் குவித்தது. மொத்த எண்ணிக்கை 350 ஓட்டங்களாக இருந்தபோது ஸ்டீவன் ஸ்மித் 131 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். 5 மணித்தியாலங்கள் துடுப்பெடுத்தாடிய ஸ்டீவன் ஸ்மித் 254 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸை விளாசி இருந்தார். தனது அறிமுகப் போட்டியில் சதம் குவித்த ஜொஷ் இங்லிஸ் (0) அதே மொத்த எண்ணிக்கையில் களம் விட்டகன்றார். அலெக்ஸ் கேரி நான்கரை மணித்தியாலங்கள் துடுப்பெடுத்தாடி 188 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 156 ஓட்டங்களைப் பெற்றார். போ வெப்ஸ்டர் 31 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 151 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் நிஷான் பீரிஸ் 94 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரமேஷ் மெண்டிஸ் 81 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியாவைவிட 157 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்த இலங்கை, இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தில் பெரிய அளவில் பிரகாசிக்கவில்லை. ஏஞ்சலோ மெத்யூஸ் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 149 பந்துகளில் 76 ஓட்டங்களைப் பெற்றார். முதல் இன்னிங்ஸில் அரைச் சதம் குவித்த குசல் மெண்டிஸ் 48 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார். ஏஞ்சலோ மெத்யூஸ், குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 70 ஓட்டங்களே இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸில் சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. அவர்கள் இருவரைவிட தனஞ்சய டி சில்வா (23), கமிந்து மெண்டிஸ் (14), திமுத் கருணாரட்ன (14), தினேஷ் சந்திமால் (12) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்து வீச்சில் மெத்யூ குனேமான் 52 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நேதன் லயன் 80 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 257 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. நான்காம் நாள் ஆட்டம் நாளை தொடரும். https://www.virakesari.lk/article/206182
  4. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ டைடி பதவி, சைபர் நிருபர், பிபிசி உலக சேவை 8 பிப்ரவரி 2025, 15:37 GMT சீன ஏஐ சாட்பாட் டீப்சீக்கின் எழுச்சி உலகளவில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. ஆனால், சீனாவின் வளர்ச்சியை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த வெற்றி ஆச்சரியமளிக்கவில்லை. ஏனென்றால், 'மேட் இன் சீனா 2025' என்ற லட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த பத்து ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட உயர் தொழில்நுட்பத் தயாரிப்புகளில் தனது நிபுணத்துவத்தை சீனா மெதுவாக வளர்த்து வருகிறது. ஆய்வாளர்களைப் பொறுத்தவரை, டீப்சீக்கின் வெற்றி என்பது பிரமாண்டமான ஒரு திட்டம் வெற்றியடைந்தது என்பதற்கான மற்றுமொரு சான்றாகும். 'மேட் இன் சைனா 2025' எனும் திட்டம் 2015-இல் சீன அரசால் பெரும் ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்டது. லட்சக்கணக்கான அன்றாடப் பொருட்களின் அடியில் காணப்படும் பொதுவான லேபிளை மலிவான மற்றும் குறைவான தரம் கொண்ட உற்பத்தியின் அடையாளம் என்பதில் இருந்து, மேம்பட்ட, உயர்தர தொழில்நுட்பத்தின் அடையாளமாக மாற்றுவதே அத்திட்டத்தின் குறிக்கோளாக இருந்தது. பொருளாதார வளர்ச்சியில் சீனாவைவிட இந்தியா பின்தங்கி இருப்பது ஏன்? பிரபல முதலீட்டாளர் ருசிர் ஷர்மா கூறுவது என்ன? அமலுக்கு வந்த அமெரிக்காவின் வரி விதிப்பு - சீனாவின் பதிலடி என்ன? கனடா, சீனாவுக்கு எதிரான டிரம்பின் முடிவால் அமெரிக்காவுக்கு என்ன இழப்பு ஏற்படும்? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? டிரம்ப் அச்சுறுத்தல்: அமெரிக்காவின் கடுமையான வரிகளைத் தவிர்க்க சீனா என்ன செய்கிறது? எப்படி தயாராகிறது? அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்குள் சீனா ஆதிக்கம் செலுத்த வேண்டிய பகுதிகளாக பத்து தொழில்நுட்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், மின்சார கார்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பேட்டரி தொழில்நுட்பம் போன்ற துறைகள், அந்த திட்டத்துக்கான விரிவான ஆவணங்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. குறிப்பிட்ட இந்த தொழில்நுட்பங்கள் பலவற்றில் சீனா ஒரு பெரிய சாதனையாளராக உருவாகி வெற்றி பெற்றுள்ளது. மேலும் சில தொழில்நுட்பங்களில் மிகுந்த நம்பிக்கை தரும் இலக்குகளையும் எட்டியுள்ளது. காஸா குறித்த டிரம்பின் பேச்சு இஸ்ரேல், ஹமாஸின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஆபத்தில் தள்ளுமா?6 பிப்ரவரி 2025 அமெரிக்கா: இந்தியர்களை கைவிலங்கிட்டு அழைத்து வந்தது குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது என்ன?6 பிப்ரவரி 2025 மேட் இன் சீனா 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிஒய்டி போன்ற மின்சார கார் தயாரிப்பாளர்கள் காரணமாக, மோட்டார் வாகன தொழில்களில், முன்னணி நாடுகளை சீனா முந்தியுள்ளது "'மேட் இன் சீனா 2025' எனும் திட்டம் மிகவும் வெற்றிகரமாக இருந்தது என்பது என் கருத்து. பல தொழில்களில் சீனா முன்னணி இடத்தை அடையும் போட்டியில் உள்ளது மற்றும் சில தொழில்களில் சீனா முன்னணி இடத்தில் உள்ளது," என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் வளர்ச்சிப் பொருளாதாரத்தின் நிபுணர் டாக்டர் யுண்டன் காங் தெரிவித்தார். குறிப்பாக, பிஒய்டி போன்ற மின்சார கார் தயாரிப்பாளர்கள் காரணமாக, மோட்டார் வாகன தொழில்களில் முன்னணி இடங்களில் உள்ள நாடுகளை (ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா) சீனா முந்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய பேட்டரி தயாரிப்பாளராக இருப்பது சீனாவிற்கு மின்சார வாகனங்கள் தயாரிக்கும் தொழில் துறையில் பெரும் நன்மையை அளித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலில், சர்வதேச எரிசக்தி ஏஜென்சியின் (IEA) படி, சோலார் பேனல்கள் தயாரிப்பின் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் 80-95 சதவீதம் சீனாவின் வசம் உள்ளது. சீனா, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையமாக இருப்பதாகவும், 2028 ஆம் ஆண்டுக்குள் உலகின் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் 60 சதவீதம் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதேபோல், ட்ரோன் தொழிலும் சீனா முன்னணியில் உள்ளது. ஷென்செனை தளமாகக் கொண்ட டிஜேஐ நிறுவனம், உலகளாவிய சந்தையில் 70 சதவீத பங்கைக் கொண்டுள்ளது. உலகின் முதல் 10 ட்ரோன் உற்பத்தியாளர்களில் மூவர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று பிபிசி ஆராய்ச்சியின் படி அறியப்படுகின்றது. முன்னதாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தனது நோக்கங்களை அடைவதற்காக, 250க்கும் மேற்பட்ட சிறு இலக்குகளைக் கொண்ட ஒரு விரிவான திட்டத்தை உருவாக்கியது. சவுத் சீனா மார்னிங் போஸ்ட் பகுப்பாய்வின்படி, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளில் 86 சதவீதம் எட்டப்பட்டுள்ளது. ஜெர்மனியின் மார்ஷல் ஃபண்ட் சிந்தனைக் குழுவின் நிர்வாக இயக்குநரும், அமெரிக்க அதிபர் பைடனின் முன்னாள் ஆலோசகருமான லிண்ட்சே கோர்மன் கூறுகையில், "அரசு ஆதரவு பெற்ற முதலாளித்துவத்தின் மாதிரியைப் பயன்படுத்துவதில் சீனா வெற்றி பெற்றுள்ளது" எனக் குறிப்பிடுகிறார். அமெரிக்கா: இந்திய குடியேறிகள் நாடு கடத்தப்படுவது இரு நாட்டு உறவை பாதிக்குமா?6 பிப்ரவரி 2025 இந்தியாவின் வரி குறைப்பு நடவடிக்கைகள் டிரம்பின் வரி அச்சுறுத்தலை தவிர்க்க போதுமா?6 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 'மேட் இன் சைனா 2025' எனும் திட்டம் 2015-ல் சீன அரசால் பெரும் ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்டது வெளிநாட்டுத் திறன்களை ஈர்ப்பதிலும், கூட்டு முயற்சிகள் மூலம் சீன நிறுவனங்களுடன் ஒத்துழைக்க சர்வதேச நிறுவனங்களை ஊக்குவிப்பதிலும் சீனா வெற்றிகரமாக உள்ளது என்பதை லிண்ட்சே கோர்மன் எடுத்துரைக்கிறார். அதற்காக பெரும் தொகையும் செலவிடப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆய்வின்படி, சீன அரசாங்கம் 1.5 டிரில்லியன் டாலர்களை ஆராய்ச்சி, மேம்பாடு அல்லது வெளிநாட்டு நிறுவனங்களை வாங்குவதற்கு மானியமாக சேகரிக்க திட்டமிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில் 627 பில்லியன் டாலருக்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளது என அறியப்படுகின்றது. 'மேட் இன் சீனா 2025' எனும் திட்டம் மிகப்பெரும் வெற்றியடைந்தது. அதனால் மற்ற நாடுகளுடன் பதற்றம் ஏற்பட்டதால், சில ஆண்டுகளுக்குப் பிறகு சீன அரசாங்கம் இதனைப் பயன்படுத்துவதை நிறுத்தியது. ஆனால் அந்த நடவடிக்கை மிகவும் தாமதமாகத் தான் எடுக்கப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில் மேற்கில் உள்ள பல நாடுகள் தங்கள் தொழில்நுட்பம் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்கு கடுமையான தடைகளை விதித்துள்ளன. அதாவது, சில தொழில்நுட்பங்களில் சீனாவின் வளர்ச்சியை மட்டுப்படுத்துவதே மேற்கத்திய நாடுகளின் திட்டம். எடுத்துக்காட்டாக, மைக்ரோசிப் கண்டுபிடிப்பில், இந்த உத்தி பயனுள்ளதாக இருக்கிறது என அறியப்படுகின்றது. வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை: ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வீடு தீயிட்டு எரிப்பு - ஷேக் ஹசீனா கூறியது என்ன?6 பிப்ரவரி 2025 'இந்து மதத்தை மதிக்கவில்லை'; 18 ஊழியர்கள் மீது திருப்பதி தேவஸ்தானம் ஒழுங்கு நடவடிக்கை - இன்றைய முக்கிய செய்திகள்6 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,CFOTO/FUTURE PUBLISHING VIA GETTY IMAGES படக்குறிப்பு, உலகின் முதல் 10 ட்ரோன் உற்பத்தியாளர்களில் மூவர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று பிபிசி ஆராய்ச்சியின் படி அறியப்படுகின்றது மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட தடைகள் மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், இந்த தடை நடவடிக்கைகளின் மூலம், சில தொழில்நுட்பங்களில் கடினமாக முயற்சி செய்ய சீனா ஊக்கம் பெற்றதாக சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, சீனா தற்சார்புடன் செயல்படத் தொடங்கியிருப்பது, 'மேட் இன் சீனா 2025' எனும் திட்டத்துக்கான முக்கிய உந்துதலாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. "சீனாவில் ஒரு பழைய பழமொழி உள்ளது. வாழ்க்கை எப்போதும் அதன் சொந்த வழியைக் கண்டுபிடிக்கும், என்பது தான் அந்தப் பழமொழி" என நினைவுகூருகிறார் கார்டிஃப் யுனிவர்சிட்டி பிசினஸ் ஸ்கூலின் பயன்பாட்டு பொருளாதாரப் பேராசிரியரான பெங் சோவ். "கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் அதன் வேரை மட்டுமே மாற்றுகின்றன, அதன் திசையை அல்ல," என்றும் அவர் குறிப்பிடுகிறார். பேராசிரியர் சோவ் போன்ற வல்லுநர்கள் டீப்சீக் தொழில்நுட்பத்தை இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகக் குறிப்பிடுகின்றனர். அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி கட்டுப்பாடுகள் இருப்பதால், மிகவும் சக்தி வாய்ந்த சிப்களை டீப்சீக் நிறுவனத்தால் பெற முடியவில்லை. அதற்குப் பதிலாக, பழைய மற்றும் சக்தி குறைந்தவற்றைக் கொண்டு டீப்சீக்கின் சிப்களைச் செய்ததாகவும், மிகக் குறைவான கிட் மூலம், மிகக் குறைந்த பணத்தில், கவனம் ஈர்க்கும் அதன் தொழில்நுட்பத்தை உருவாக்க புதிய திட்டங்களை கண்டுபிடித்ததாகவும் அந்நிறுவனம் கூறுகிறது. இந்த கூற்றுகள் சில போட்டியாளர்களால் நிராகரிக்கப்படுகின்றன. ஆனால் டீப்சீக் அமெரிக்காவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு "எச்சரிக்கை ஒலி" என்று அதனைக் குறிப்பிட்டுள்ளார். அலிபாபா மற்றும் பைட் டான்ஸ் போன்ற சீனாவின் தொழில்நுட்ப முன்னோடிகள் கூகுள் மற்றும் ஓபன் ஏஐ போன்றவற்றைப் போலவே அதிக முதலீடு செய்கின்றன. ஆனால், 'மேட் இன் சீனா 2025' திட்டம் இருந்த போதிலும், ஏஐ தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைமையாக, தற்போதும் அமெரிக்காவே கருதப்படுகிறது. உலகெங்கிலும் மனிதாபிமான உதவிகளை செய்து வரும் USAID அமைப்பை டிரம்ப் மூட நினைப்பது ஏன்?5 பிப்ரவரி 2025 அமெரிக்கா: பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்க தடை விதிக்கும் டிரம்ப் - பிற நாடுகளில் என்ன நிலை?5 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி கட்டுப்பாடுகள் இருப்பதால் மிகவும் சக்திவாய்ந்த சிப்களை டீப்சீக் நிறுவனத்தால் பெற முடியவில்லை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள சீனா சீன விஞ்ஞானிகள் மற்ற எந்த நாட்டையும் விட குவாண்டம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை ஆண்டுதோறும் வெளியிட்டாலும், குவாண்டம் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்கள் பெரும்பாலானவற்றில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. மறுபுறம், நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் மதிப்பிலான தனியார் மற்றும் பொதுப் பணத்தை மைக்ரோசிப் உற்பத்தி, அறிவியல் மற்றும் ஏஐ உட்கட்டமைப்பு ஆகியவற்றில் செலுத்துவதன் மூலம் சீனாவின் சவாலை எதிர்கொள்ள அமெரிக்காவும் முன்னேறி வருகிறது. ஆனால், தொழில்நுட்பத்தில் சீனா அடைந்துள்ள வேகமான முன்னேற்றங்கள் பிற நாடுகளில் தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன. அமெரிக்காவைச் சாராத உலகளவில் பிரபலமான முதல் சமூக வலைதள நிறுவனமாக டிக் டாக் அறியப்படுகின்றது. அதன் பெரும் வெற்றியானது, உளவு பார்க்க பயன்படுத்தப்படலாம் என்ற பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. அதன் எதிரொலியாக அமெரிக்கா விதித்துள்ள தடையின் மூலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது சீனா. டீப்சீக்கின் வெற்றியைத் தொடர்ந்து, டெமு மற்றும் ஷீன் போன்ற சீன இணையவழி பயன்பாடுகளும் பாதுகாப்பு காரணங்களுக்கான தடை போன்ற அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg4504g67z5o
  5. டெல்லியில் ஆட்சியை பிடித்த பாஜக - ஆம் ஆத்மி தோல்வி குறித்து அரவிந்த் கேஜ்ரிவால் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 8 பிப்ரவரி 2025, 01:49 GMT புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கு பிப்ரவரி 5 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகளின்படி, பாஜக ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. இதன்மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின்படி, பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி, 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2025 பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள்- 36 ஆம் ஆத்மி22Seat count of ஆம் ஆத்மி22 பாஜக+48Seat count of பாஜக+48 காங்கிரஸ்0Seat count of காங்கிரஸ்0 மற்ற கட்சிகள்0Seat count of மற்ற கட்சிகள்0 கடைசியாகப் புதுப்பிக்கப்பட்ட நேரம்: 9:00 pm சமீபத்திய முடிவுகளைக் காண இந்த பக்கத்தை புதுப்பிக்கவும். முழு முடிவுகளையும் பார்க்க ஆட்சி அமைக்கத் தேவையான தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தொண்டர்கள் பட்டாசு வெடித்து வெற்றியைக் கொண்டாடினர். பிப்ரவரி 5ஆம் தேதி அன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. அதன் முடிவுகளையும் தேர்தல் ஆணையம் அறிவித்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் குறித்த அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும். பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோதி பேசியது என்ன? டெல்லி சட்டமன்றத்தில், 27 ஆண்டுகளுக்குப் பிறகூ பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, "வளர்ச்சி வெற்றி பெற்றுள்ளதாக" கூறினார். "இன்று, டெல்லி மக்களிடையே டெல்லியை பேரழிவில் இருந்து விடுவித்த உற்சாகமும் அமைதியும் நிலவுகிறது. 21ஆம் நூற்றாண்டில் டெல்லியில் பணியாற்ற பாஜகவுக்கு வாய்ப்பளிக்குமாறு நான் ஒவ்வொரு டெல்லிவாசிக்கும் ஒரு கடிதம் அனுப்பி கேட்டுக் கொண்டேன்" என்று பிரதமர் மோதி கூறினார். "மோதியின் உத்தரவாதத்தை நம்பியதற்காக டெல்லியின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக நான் தலை வணங்குகிறேன். டெல்லி திறந்த மனதுடன் எங்கள் மீது அன்பைப் பொழிந்துள்ளது." பாஜக பெரும்பான்மையைப் பெற்ற பிறகு, பிரதமர் மோடி பாஜக தலைமையகத்தை அடைந்தார். அங்கு பேசிய பிரதமர் மோதி, "டபுள் எஞ்சின் அரசாங்கம் டெல்லியை விரைவாக மேம்படுத்துவதன் மூலம் நன்றிக்கடனை திருப்பிச் செலுத்தும். இன்றைய வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது. இது சாதாரண வெற்றி அல்ல. டெல்லி மக்கள் பேரழிவை விரட்டியடித்துள்ளனர் " என்று கூறினார். அதோடு, "இன்று, டெல்லியில் வளர்ச்சி, தொலைநோக்குப் பார்வை மற்றும் நம்பிக்கை வெற்றி பெற்றுள்ளன. இன்று, அராஜகம், ஆணவம் மற்றும் டெல்லியை சூழ்ந்திருந்த பேரழிவு தோற்கடிக்கப்பட்டுள்ளன" என்றும் அவர் பேசினார். சென்னையில் இந்திய விஞ்ஞானிகள் குழு ஆழ்கடலில் 19,685 அடி ஆழத்திற்குச் செல்ல தயாராவது ஏன்?7 ஜனவரி 2025 சிந்து சமவெளி: தமிழ்நாட்டுக்கு தொடர்பு இருப்பதாக கூறும் புதிய ஆய்வு - எப்படி? என்ன தொடர்பு?8 ஜனவரி 2025 முக்கிய தலைவர்களின் நிலை என்ன? டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி புது டெல்லி சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தோல்வியடைந்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரவேஷ் வர்மா வெற்றி பெற்றுள்ளார். கால்காஜி தொகுதியில் டெல்லி முதல்வர் ஆதிஷி, பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் கோபால் ராய், பாபர்பூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் பாஜகவின் அனில் குமார் வஷிஷ்தை எதிர்த்து போட்டியிட்டார். ஆம் ஆத்மி கட்சியின் மற்றொரு தலைவரான சௌரப் பரத்வாஜ், கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் சிக்கா ராய் வெற்றி பெற்றுள்ளார். பத்பர்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மியின் ஆவாத் ஓஜா தேர்தலில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அங்கு பாஜக சார்பில் போட்டியிட்ட ரவீந்திர் சிங் நெகி வெற்றி பெற்றுள்ளார். பேரூர் பட்டீஸ்வரர் கோவில் குட முழுக்கை தமிழில் நடத்த அரசு அனுமதிக்காதது ஏன்? - பின்னணி என்ன?9 மணி நேரங்களுக்கு முன்னர் காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்பின் திட்டம் என்ன? - 5 கேள்விகளும் பதில்களும்7 பிப்ரவரி 2025 படக்குறிப்பு, வெறிச்சோடிய ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் ஜங்பூராவில் தோல்வி அடைந்த சிசோடியா Play video, "டெல்லி சட்டமன்றத் தேர்தல்: கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்கள்", கால அளவு 0,22 00:22 காணொளிக் குறிப்பு, டெல்லி சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்கள் ஜங்பூரா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லியின் முன்னாள் துணை முதல் அமைச்சருமான மணீஷ் சிசோடியா 600 வாக்குகள் வித்யாசத்தில் தோல்வியுற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். "ஜங்பூரா தொகுதியில் நாங்கள் கடுமையாக போட்டியிட்டோம். 600 வாக்குகள் வித்யாசத்தில் நாங்கள் தோல்வி அடைந்தோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்," என்று அவர் தெரிவித்திருந்தார். இதற்கு முன்பு போட்டியிட்ட தொகுதியில் இருந்து மாறி முதல்முறையாக ஜங்பூராவில் போட்டியிட்டார் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் சிசோடியா. அவரை எதிர்த்து பாஜக சார்பில் தர்விந்தர் சிங் களம் இறக்கப்பட்டார். பாஜக தற்போது வெற்றியை உறுதி செய்துள்ளது. அமெரிக்கா: இந்தியர்களை கைவிலங்கிட்டு அழைத்து வந்தது குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது என்ன?6 பிப்ரவரி 2025 அமெரிக்கா: இந்திய குடியேறிகள் நாடு கடத்தப்படுவது இரு நாட்டு உறவை பாதிக்குமா?6 பிப்ரவரி 2025 படக்குறிப்பு, அரவிந்த் கேஜ்ரிவால் புது டெல்லி தொகுதியில் 4089 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி சிறுத்தைகளின் உடலில் சிப் பொருத்தும் பெண் வனக் காவலர்8 பிப்ரவரி 2025 திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? லண்டன் பிரிவி கவுன்சிலின் 1931 தீர்ப்பு கூறுவது என்ன?7 பிப்ரவரி 2025 ஆம் ஆத்மியின் தோல்வி பற்றி ஸ்வாதி மாலிவால் கூறுவது என்ன? படக்குறிப்பு, மணீஷ் சிசோடியா ஜங்பூராவில் 675 வாக்குகள் வித்யாசத்தில் தோல்வி ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசிய அவர், "பெருமையும் ஆணவமும் நீண்ட காலம் நீடிக்காது. ராவணனின் பெருமைகூட உடைக்கப்பட்டது. அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அதே நிலைதான்," என்றார். "வரலாற்றைப் பார்த்தால், ஒரு பெண்ணுக்கு எதிராக ஏதேனும் தவறு நடந்த போதெல்லாம், கடவுள் தண்டித்துள்ளார். மோசமான, சேதமடைந்த சாலைகள், மாசடைந்த குடிநீர் என டெல்லி முற்றிலும் குப்பைக் கிடங்காக மாறிவிட்டது" என்று ஸ்வாதி மாலிவால் கூறினார். "டெல்லி மக்கள் அனைத்துப் பிரச்னைகளையும் கருத்தில் கொண்டு வாக்களித்துள்ளனர். அரவிந்த் கேஜ்ரிவால் தனது இடத்தை இழந்துள்ளார்," என்றும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,ANI ஆம் ஆத்மி தோல்வி குறித்து அரவிந்த் கேஜ்ரிவால் கூறியது என்ன? டெல்லி சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "மக்களின் முடிவை ஏற்றுக்கொள்கிறோம். இந்த வெற்றிக்காக பாஜக-வுக்கு எனது வாழ்த்துகள். எங்களுக்கு வாக்களித்தவர்களின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன்," என்று கேஜ்ரிவால் கூறியுள்ளார். "கடந்த பத்து ஆண்டுகளில் மக்கள் எங்களுக்கு வழங்கிய வாய்ப்பில் நாங்கள் நிறைய பணிகளைச் செய்துள்ளோம். கல்வி, சுகாதாரம், நீர்வளத் துறை மற்றும் டெல்லியின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நாங்கல் பணியாற்றினோம். இப்போது மக்கள் எங்களுக்கு இந்த முடிவை வழங்கியுள்ளனர். நாங்கள் ஓர் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவது மட்டுமின்றி, சமூக சேவையையும் செய்வோம்," என்று தனது வீடியோ அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதோடு, "மக்களின் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் உதவுவோம். நாங்கள் யாருக்கெல்லாம் தேவைப்படுகிறோமோ அவர்கள் அனைவருக்கும் உதவுவோம். ஏனெனில், நாங்கள் அதிகாரத்திற்காக அரசியலுக்கு வரவில்லை. அரசியலை மக்களுக்கு சேவை செய்யவும், அவர்களி சுக, துக்கங்களில் உதவவும் பயன்படும் ஓர் ஊடகமாகக் கருதுகிறோம்," என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா: USAID ஊழியர்களை விடுப்பில் அனுப்ப திட்டமிட்ட டிரம்ப் - நீதிமன்ற உத்தரவு என்ன?8 பிப்ரவரி 2025 புற்றுநோய்: மனித உடலில் எப்படிப் பரவுகிறது? அதில் எத்தனை வகைகள் உள்ளன?7 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,ANI டெல்லி தேர்தல் முடிவுகள் பற்றி பிரதமர் மோதி கூறுவது என்ன? முன்னதாக, டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோதி கருத்து தெரிவித்துள்ளார். அப்போது, இதை வளர்ச்சி மற்றும் நல்லாட்சியின் வெற்றி என்று கூறியுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், "நல்லாட்சி வென்றுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ள அவர், "பாஜகவுக்கு வரலாற்று வெற்றியை வழங்கிய டெல்லியின் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் என வாழ்த்துகள். நீங்கள் அளித்த ஏராளமான ஆசீர்வாதங்களுக்கும் அன்புக்கும் மிக நன்றியுள்ளனவனாக இருக்கிறேன். டெல்லியின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் அதன் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் இருக்கும் வாய்ப்புகளைத் தவறவிட்டுவிட மாட்டோம் என உத்தரவாதம் அளிக்கிறோம்," என்று தெரிவித்துள்ளார். ஊழலே தோல்விக்கு காரணம் - அன்னா ஹசாரே சமூக செயற்பாட்டாளரான அன்னா ஹசாரே, ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகளே இந்த தேர்தல் பின்னடைவுக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார். டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடும் இதற்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசிய அவர், "ஆரம்ப காலம் தொட்டே நான் இதைக் கூறி வருகிறேன். தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் சுத்தமானவராக இருக்க வேண்டும். சுத்தமான எண்ணங்களும், கறைபடாத வாழ்க்கையையும், அவமானங்களை தாங்கிக் கொள்ளக் கூடியவராகவும் இருக்க வேண்டும். இந்த தகுதிகள் இருந்தால் மட்டுமே, அந்த வேட்பாளர் நமக்கு ஏதேனும் செய்வார் என்ற நம்பிக்கை வாக்காளர்கள் மத்தியில் கிடைக்கும்," என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சமூக செயற்பாட்டாளரான அன்னா ஹசாரே, ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகளே இந்த தேர்தல் பின்னடைவுக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார் மேற்கொண்டு பேசிய அவர், "இதை நான் கூறிக் கொண்டே இருந்தேன். ஆனால் அது அவர்களின் மனதில் ஏறவில்லை. பிறகு ஒரு நாள் மதுபானம் தொடர்பான பேச்சு அடிபட்டது. மதுபானக் கொள்கைகள் காரணமாகவே கேஜ்ரிவாலுக்கு மோசமான பெயர் கிடைத்தது," என்றும் குறிப்பிட்டார். அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு பக்கம் குணாம்சம் குறித்து பேசுகிறார். மற்றொரு பக்கம் மதுபான ஊழலில் அவருடைய பெயர் அடிபடுகிறது என்பதை மக்கள் பார்த்தனர். அரசியலில் குற்றச்சாட்டுகள் எழுவது நிதர்சனம். ஒருவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். ஆனால் உண்மை என்றும் உண்மையாகவே இருக்கும். ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற போது, நான் கட்சியின் ஒரு அங்கமாக இருக்கமாட்டேன் என்பதை தெளிவுபடுத்தினேன். அதையே நான் இன்றுவரை கடைபிடித்து வருகிறேன், என்று அவர் தெரிவித்தார். ஆம் ஆத்மியிடம் இருந்து மக்கள் டெல்லியை விடுவித்துள்ளனர் - அமித் ஷா முன்னதாக, டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பொய்யான வாக்குறுதிகளின் மூலம் தங்களைத் தொடர்ந்து தவறாக வழிநடத்த முடியாது என்பதை டெல்லி மக்கள் காட்டியுள்ளனர்," என்று கூறியுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, "அசுத்தமான யமுனை, மாசுபட்ட குடிநீர், சேதமடைந்த சாலைகள், நிரம்பி வழியும் சாக்கடைகள், தெருவுக்குத் தெரு திறந்திருக்கும் மதுபானக் கடைகள் ஆகியவற்றுக்கு" பொதுமக்கள் தங்கள் வாக்குகளின் மூலம் பதிலளித்துள்ளதாகப் பதிவிட்டுள்ளார். டெல்லி மக்கள் பொய்கள், வஞ்சகம், ஊழல் நிறைந்த கண்ணாடி மாளிகையை அழித்து ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து டெல்லியை விடுவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு, "வாக்குறுதிகளை மீறுவோருக்கு டெல்லி பாடம் கற்பித்துள்ளது. இது நாடு முழுவதும் மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை அளிப்போருக்கு ஒரு முன்மாதிரியாக அமையும். இது டெல்லியில் வளர்ச்சி மற்றும் நம்பிக்கையின் புதிய அத்தியாயத்தின் தொடக்கம்," என்றும் அவர் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,ANI மத்திய வர்க்கத்தினர் ஆம் ஆத்மி மீது அதிருப்தியில் இருந்தனர் - காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் உதித் ராஜ் ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசிய போது, "தற்போது வெளியாகி வரும் முடிவுகள் பாஜகவே டெல்லியில் ஆட்சி அமைக்கும் என்பதை சுட்டிக் காட்டுகிறது. காங்கிரஸ் கட்சியின் செயல்பாடும் மோசமானதாகவே இருந்தது. அதனால் தான் ஆம் ஆத்மியின் வாக்குகள் எங்களுக்கு வந்து சேருவதற்கு பதிலாக பாஜகவின் வாக்குகளாக மாறிவிட்டன," என்று தெரிவித்தார். மேற்கொண்டு பேசிய அவர் மத்திய வர்க்கத்தினர் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது கடுமையான கோபத்தில் உள்ளனர். ஏன் என்றால் அவர் பொய்யை பரப்புகிறார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். அவரை ஒரு ஏமாற்றுக்காரராக மக்கள் பார்க்கின்றனர்," என்று கூறினார். "ஆம் ஆத்மி கொண்டு வந்த திட்டங்களுக்காகவே அவர்களுக்கு வாக்குகள் கிடைத்துள்ளதே தவிர அவரின் கொள்கைகளுக்காக யாரும் வாக்களிக்கவில்லை. தொழில்முனைவோர்கள், நடுத்தர வர்க்கத்தினர், மேட்டுக்குடியினர், தலித்கள் உட்பட பலரும் அந்த கொள்கைகளை நிராகரித்துவிட்டனர்," என்று ஆம் ஆத்மி கட்சியின் தோல்வி குறித்து பேசினார். காங்கிரஸின் தோல்விக் குறித்து பேசிய அவர், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன் கார்கேவை தவிர வேறு யாரும் சமூக நீதி குறித்து பேசுவதில்லை. கள அளவில் யாரும் இது குறித்து பேசவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பிரச்னைகள் இப்போதும் நிலவுகிறது என்றும் அவர் கூறினார். இந்தியா கூட்டணித் தலைவர்கள் ஒற்றுமையாக செயல்படவில்லை - ஆம் ஆத்மி தோல்வி குறித்து திருமா பேச்சு மதுரை திருமங்கலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். இந்தியா கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் ஒற்றுமையாக இல்லை என்றும், பாஜகவின் டெல்லி தேர்தல் வெற்றி தேசத்திற்கான பின்னடைவு என்றும் விமர்சித்துள்ளார். பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் "டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முன்னிலை வகிப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. ஆம் ஆத்மி இந்த அளவு பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. டெல்லியில் பாஜக ஆட்சி அமையுமானால் அது தேசத்திற்கான ஒரு பின்னடைவாகவே கருத வேண்டியதாக உள்ளது. நியாயமான முறையில் இந்த தேர்தல் நடைபெற்றிருக்குமா என்ற ஐயத்தை இது எழுப்புகிறது. இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. காங்கிரஸ், ஆம் ஆத்மி ஒற்றுமையாக இந்தத் தேர்தலை சந்திக்கவில்லை. இந்தியா கூட்டணி தலைவர்கள் இது குறித்து தீவிரமாக கலந்தாய்வு செய்ய வேண்டும். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஈகோ பிரச்னைகளை பின்னுக்குத்தள்ளி விட்டு, நாட்டையும் மக்களையும் காப்பாற்றும் திசை வழியே சிந்திக்க வேண்டும்," என்று அவர் தெரிவித்தார். விதி மாற்றத்தால் விலை போகும் பொது பயன்பாட்டு நிலங்கள்; 'வருங்கால சந்ததிக்கு ஆபத்து' - எச்சரிக்கும் ஆர்வலர்கள்6 பிப்ரவரி 2025 வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை: ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வீடு தீயிட்டு எரிப்பு - ஷேக் ஹசீனா கூறியது என்ன?6 பிப்ரவரி 2025 முந்தைய தேர்தல் டெல்லியில் 2015 மற்றும் 2020 சட்டமன்றத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. 2015ஆம் ஆண்டில், ஆம் ஆத்மி கட்சி 70 இடங்களில் 67 இடங்களையும், 2020இல் 62 இடங்களையும் வென்றது. ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியை இழந்தால், அது அக்கட்சிக்கு மிகப்பெரிய தோல்வியாக அமையும். கடந்த பத்தாண்டுகளில், டெல்லி மற்றும் பஞ்சாபில் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததன் மூலம், ஒரு தேசிய கட்சியாக உருவெடுத்தது ஆம் ஆத்மி. அமெரிக்கா: இந்தியர்களை கைவிலங்கிட்டு அழைத்து வந்தது குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது என்ன?6 பிப்ரவரி 2025 ஆவணமற்ற இந்திய குடியேறிகளை கைவிலங்கிட்டு திருப்பி அனுப்பியது பற்றி அமெரிக்க ஊடகங்கள் சொல்வது என்ன?7 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார் 2025 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பலவும் பாஜகவே வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்தன. ஆம் ஆத்மி இரண்டாம் இடத்திற்கு வரும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த முறை சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவானது 60.4% மட்டுமே. கடந்த காலத்தோடு ஒப்பிடும் போது இது மிகவும் குறைவான வாக்குப்பதிவு. 2013-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 66% வாக்குகள் பதிவாகியிருந்தது. 2015-ம் ஆண்டு தேர்தலில் 67% ஆக வாக்குகள் பதிவாகின. 2020-ம் ஆண்டு தேர்தலில் 63% ஆக வாக்குகள் பதிவாகின. தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவில் 60.4% வாக்குகளே பதிவாகியுள்ளன. டெல்லி சட்டமன்றத்தில் உள்ள 70 தொகுதிகளில் 12 தொகுதிகள் தனித்தொகுதிகளாகும். டெல்லியில் மொத்தம் 1.55 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 83.49 லட்சம் வாக்காளர்கள் ஆண்கள். 71.74 லட்சம் வாக்காளர்கள் பெண்களாவார்கள். டெல்லியில் 26 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடிக்குமா பாஜக? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன?5 பிப்ரவரி 2025 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தற்போதைய நிலவரம் என்ன?2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SONU MEHTA/HINDUSTAN TIMES VIA GETTY IMAGES படக்குறிப்பு,டெல்லி முதல்வர் ஆதிஷி கடந்த மூன்று சட்டமன்ற தேர்தல்களில் நடந்தது என்ன? காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களுக்கு எதிராக 2011-ம் ஆண்டு அண்ணா ஹசாரேவுடன் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றன. அண்ணா ஹசாரேவுடன் அர்விந்த் கேஜ்ரிவாலும் அந்த போராட்டங்களில் பங்கேற்றார். மேலும் காங்கிரஸை வெளிப்படையாக அவர் விமர்சனம் செய்தார். 2013-ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி முதல்முறையாக டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. 70 தொகுதிகளில் போட்டியிட்டு 28 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸை அர்விந்த் கேஜ்ரிவால் விமர்சனம் செய்தார். இருப்பினும் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஆம் ஆத்மி கட்சியை காங்கிரஸ் ஆதரித்தது. முதல்முறையாக அரவிந்த் கேஜ்ரிவால் முதல் அமைச்சரானார். 2013-ஆம் ஆண்டு தேர்தலில் தான் இறுதியாக பாஜக இரட்டை இலக்கங்களில் தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக அந்த தேர்தலில் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் வெகு சில தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 2013-ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு ஆம் ஆத்மி 2015 மற்றும் 2020 தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. 2013-ஆம் ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மி 29% வாக்கு வங்கியை கைப்பற்றியது. காங்கிரஸின் வாக்கு வங்கி அப்போது 25% ஆக இருந்தது. மேலும் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போது பாஜக டெல்லியில் 30%-க்கும் மேல் வாக்கு வங்கியை வைத்திருந்தது. 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2015-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வெறும் மூன்றே தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் அதன் வாக்கு வங்கியானது 30%க்கும் அதிகமாகவே இருந்தது. ஆனால் ஆம் ஆத்மி 67 தொகுதிகளில் வெற்றி பெற்று 50% வாக்கு வங்கியை தன் வசமாக்கியது. 2020-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. அதன் வாக்கு வங்கி 50%க்கும் அதிகமாகவே இருந்தது. பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் கூறிக் கொள்ளும்படியான வெற்றியைக் கூட பெறவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy12ep8g0mo
  6. உயிரோடு இருப்பவரை போட்டுத் தள்ளலாமா?! நீங்கள் சொல்பவர் சுப முத்துக்குமார் அண்ணை.
  7. 08 FEB, 2025 | 12:18 PM (கனகராசா சரவணன்) பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர மற்றும் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித்ரோகன ஆகியோர் உட்பட 12 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 154 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, இந்த இடமாற்றங்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படவுள்ளது. குறித்த இடமாற்றங்களுக்கு அமைய, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தங்கள் வழமையான பணிகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/206128
  8. Published By: DIGITAL DESK 3 07 FEB, 2025 | 05:21 PM சீனாவின் விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகளில் முதன்முறையாக ஒட்சிசன் மற்றும் ரொக்கெட்டுக்கு தேவையான எரிபொருளுக்கான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த ஆய்வு மனிதர்கள் உயிர்வாழ்வதற்கும் விண்வெளியின் எதிர்கால ஆய்வுக்கும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. முதல் முறையாக பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் செயற்கை ஒளிச்சேர்க்கை தொழில்நுட்பம், ஒட்சிசன் மற்றும் ரொக்கெட் எரிபொருளுக்கு தேவையான பொருட்களை உருவாக்கி டியாங்காங் விண்வெளி நிலையத்தில் உள்ள Shenzhou-19 குழுவினர் 2030 க்கு முன் நிலவில் தரையிறக்கம் உட்பட நீண்ட கால விண்வெளி ஆய்வுக்கு வழி வகுத்துள்ளனர். 12 பரிசோதனைகள் டிராயர் வடிவ சாதனத்திற்குள் நடத்தப்பட்டுள்ளது. செமிகண்டக்டர் வினையூக்கிகளைப் பயன்படுத்தி கார்பன் டை ஒக்சைட் மற்றும் தண்ணீரை ஒட்சிசனாக மாற்றுகிறது, அதேநேரத்தில் எத்திலீன், ஹைட்ரோகார்பனை உருவாக்குகிறது, இது விண்கல உந்துசக்திகளை உருவாக்க பயன்படுகிறது என சீனா மேன்ட் ஸ்பேஸ் (சிஎம்எஸ்) இணையதளம் தெரிவித்துள்ளது. மனித உயிர்வாழ்வதற்கும், விண்வெளியில் ஆய்வு செய்வதற்கும் முக்கியமான தொழில்நுட்ப ஆதரவை இந்த வேலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/206087
  9. ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் மிக மோசமான நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் - தயாசிறி Published By: DIGITAL DESK 2 07 FEB, 2025 | 08:00 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமான முறையில் இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் மிக மோசமான நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பிரதமரிடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (7 ) நடைபெற்ற தொழிலாளர் நலன்புரி அலுவலர்களை நியமனஞ் செய்வதற்கு பொருத்தமான முறையியலொன்றைத் தயாரித்தல் தொடர்பான தனியார் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமான முறையில் இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் மிக மோசமான நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். கடந்த ஆண்டு நாங்கள் ரஷ்யாவுக்கு சென்று இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்தோம். அந்நாட்டின் வெளிவிவகாரத்துறை பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு துறை பொறுப்பான அமைச்சர் இலங்கையர்கள் தொடர்பில் தவறான நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர். இலங்கையர்கள் பலவந்தமான முறையில் ரஷ்ய - உக்ரைன் எல்லைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இலங்கையர்களில் பெருமளவிலானோர் உயிரிழந்துள்ளார்கள். அவர்களின் உடல்களை இலங்கைக்கு அனுப்புவதாக ரஷ்ய அதிகாரிகள் ஆரம்பத்தில் குறிப்பிட்டார்கள். ஆனால் அவ்வாறு அவர்கள் செயற்படவில்லை.. ஆகவே ரஸ்யாவில் நெருக்கடிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறேன். நீர் சுத்திகரிப்பின் போது பயன்படுத்தப்படும் குரோமியம் இராசாயன பதார்த்தத்தின் மூலக்கூறின் அளவு 10 மி.கி அதிகமாகவே காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. இதனால் மனித உடலுக்கு மிக மோசமான விளைவுகள் ஏற்படும். ஆகவே இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துங்கள். நாட்டில் இன்று குழாய் நீர் பிறிதொரு பிரச்சினையாக காணப்படுகிறது. நீர் சுத்திகரிப்பின் போது பயன்படுத்தப்படும் குரோமியத்தின் அளவு 10 மி.கி ஆக காணப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் கிரீன் எனர்ஜி என்ற தனியார் நிறுவனம் இறக்குமதி செய்த குரோமியத்தின் அளவு 10 மி.கி இற்கும் அதிகமாகவே காணப்படுகிறது. 10 மி.கி இற்கும் அதிகமானதாக அளவுடைய குரோமியத்தை நீர் சுத்திகரிப்புக்கு பயன்படுத்தப்படும் போது மனித உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். ஆகவே இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/206106
  10. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் 7 பிப்ரவரி 2025 எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம் "என் வயிற்றில் குழந்தை உள்ளது. நான் அந்த மாதிரி பெண் இல்லை. உனக்கும் அக்கா, தங்கை இருக்கும் என சத்தம் போட்டேன். ஆனால், அந்த நபர் எனது வலது கையை உடைத்து ரயிலில் இருந்து வெளியில் தள்ளிவிட்டான்" எனக் கூறி கலங்குகிறார் ஆந்திராவை சேர்ந்த அந்தப் பெண். வியாழக்கிழமையன்று காலை (பிப்ரவரி 6) கோவை-திருப்பதி இன்டெர்சிட்டி ரயிலில் வந்த பெண்ணுக்கு ஜோலார்பேட்டை அருகே நேர்ந்த துயரம் இது. இந்த வழக்கில் கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த ஹேமந்த்ராஜ் என்ற நபரை ரயில்வே போலீஸ் கைது செய்துள்ளது. ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் என்ன நடந்தது? பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் கூறியது என்ன? கிருஷ்ணகிரி: பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது எப்படி? இரவில் தனியாக பயணிக்கும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் அண்ணா பல்கலை., மாணவி வழக்கின் எஃப்.ஐ.ஆர் வெளியான விவகாரம்: சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு எதிராக போராட்டம் ஏன்? ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர், தனது கணவருடன் திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் தங்கி டெய்லரிங் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். தற்போது நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கும் அந்தப் பெண், கடந்த 6ஆம் தேதி காலை கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இன்டெர்சிட்டி ரயிலில் பயணிப்பதற்காக திருப்பூரில் ஏறியுள்ளார். சித்தூரில் உள்ள தனது தாயைப் பார்ப்பதற்காக அவர் இந்தப் பயணத்தைத் தனியாக மேற்கொண்டுள்ளார். ரயிலில் என்ன நடந்தது? ரயிலின் பின்பக்கத்தில் பெண்களுக்கான பொதுப் பெட்டியில் அவர் பயணித்துள்ளார். இந்த ரயில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை நெருங்கும்போது அந்தப் பெண் மட்டுமே பெட்டியில் இருந்துள்ளார். "காலை 10.45 மணியளவில் ஜோலார்பேட்டைக்கு ரயில் வந்தபோது என்னுடன் பயணம் செய்த பெண்கள் அனைவரும் இறங்கிவிட்டனர். ரயில் கிளம்பும் நேரத்தில் அந்த நபர் ஏறினார். இது பெண்கள் பெட்டி எனக் கூறிவிட்டு உடனே இறங்குமாறு கூறினேன்," என்கிறார் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண். பெண் பிறப்புறுப்பு சிதைப்பு: இந்த வலிமிகுந்த நடைமுறையால் ஏற்படும் பாதிப்புகள்7 பிப்ரவரி 2025 தலித் பெண் படுகொலை: 'பதவியை ராஜினாமா செய்வேன்' என கூறிய எம்.பி4 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு,விசாரணையில், கர்ப்பிணிப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஹேமந்த் ராஜ் என்பது தெரிய வந்தது ஆனால், "அந்த நபரோ, 'தெரியமல் ஏறிவிட்டேன். ரயில் கார்டு கொடியைக் காட்டிவிட்டார். அடுத்து காட்பாடி ஸ்டேஷன் வரும்போது இறங்கிவிடுகிறேன். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்' எனக் கூறினார். அதற்குள் ரயில் நகர்ந்துவிட்டது," என பாதிக்கப்பட்ட பெண் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். தொடர்ந்து பேசியுள்ள அவர், "ரயில் பெட்டியில் அங்கும் இங்கும் அவன் உலாவிக் கொண்டிருந்தான். பிறகு பாத்ரூமுக்குள் சென்று ஆடையைக் கழட்டிவிட்டு வந்தான். என்னுடைய ஆடையைக் கழட்ட முயற்சி செய்தான். 'என் வயிற்றில் குழந்தை உள்ளது. நான் அந்த மாதிரி பெண் இல்லை. உனக்கும் அக்கா, தங்கை இருக்கும். இப்படியெல்லாம் பண்ண வேண்டாம்' என சத்தம் போட்டேன். ரயிலை நிறுத்துவதற்காக செயினை இழுக்க முயன்றேன். அதற்குள் தலைமுடியைப் பிடித்து தரதரவென இழுத்து அடித்தான்" என்று அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். அந்த நபரிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியாக கழிவறைக்குள் செல்லவும் அந்தப் பெண் முயன்றுள்ளார். "என்னை ரயில் படிக்கட்டுக்கு அருகில் வைத்து அடித்தான். வலது கையை உடைத்தான். அவனிடம் இருந்து தப்பிக்க பத்து நிமிடம் வரை பேராடினேன். திடீரென எட்டி உதைத்தான். அதன் பிறகு என்ன நடந்தது எனத் தெரியவில்லை" என அவர் கூறியுள்ளார். ஆவணமற்ற இந்திய குடியேறிகளை கைவிலங்கிட்டு திருப்பி அனுப்பியது பற்றி அமெரிக்க ஊடகங்கள் சொல்வது என்ன?7 பிப்ரவரி 2025 அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகள் பிடிபடுவது எப்படி? அவர்களை நாடு கடத்தும் முடிவை எடுப்பது யார்?7 பிப்ரவரி 2025 'அரை மணிநேர போராட்டம்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இதே தகவலை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் கூறியதாக ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ளது. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அந்தப் பெண் கடுமையாகப் போராடியதாகவும் உதவி கேட்டு சத்தம் போட்டதாகவும் ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. அந்த நபர் கீழே தள்ளிவிட்டதில் லத்தேரி என்ற ரயில் நிலையத்தில் அந்தப் பெண் விழுந்திருக்கிறார். தலை, கை, கால் என பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்து பொதுமக்கள் மீட்டுள்ளனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலமாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றுள்ளனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. "ஜோலார்பேட்டையில் ரயில் நகரத் தொடங்கிய நொடியில் இருந்து அரை மணிநேரம் அவனிடம் இருந்து தப்பிக்கப் போராடினேன். வேறு எந்தப் பெண்ணுக்கும் இதுபோன்று நடக்கக் கூடாது. இப்படிப்பட்ட நபர்கள் வெளியிலேயே நடமாடக்கூடாது" என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். 'வழியில் சடலங்களைப் பார்த்தோம்' - காடு, மலை, கடலைத் தாண்டி உயிரைப் பணயம் வைத்து அமெரிக்கா சென்ற இந்தியர்கள்7 பிப்ரவரி 2025 டிரம்பின் அடுத்த உத்தரவு: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு தடை விதிக்கக் காரணம் என்ன?7 பிப்ரவரி 2025 தமிழ்நாடு அரசின் மீதான விமர்சனம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை தொடர்பாக ஆளும் கட்சியை அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன. "கர்ப்பிணிப் பெண் என்றுகூடப் பாராமல் பாலியல் தொல்லை அளித்துள்ள நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ரயிலில்கூட பெண்கள் பாதுகாப்பாகப் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் காட்பாடியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்துள்ளனர். விசாரணை முடிவில் கர்ப்பிணிப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஹேமந்த் ராஜ் என்பது தெரிய வந்தது. அவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். இந்த நபர் மீது, இளம்பெண் ஒருவரைத் தாக்கி ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டது, பெண் ஒருவரைக் கொலை செய்தது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் ஏற்கெனவே வழக்குகள் நிலுவையில் இருப்பதாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? லண்டன் பிரிவி கவுன்சிலின் 1931 தீர்ப்பு கூறுவது என்ன?7 பிப்ரவரி 2025 கேரளா: 15 வயது தனியார் பள்ளி மாணவர் தற்கொலையில் நீடிக்கும் மர்மம் - கொடூரமான ரேகிங் காரணமா?6 பிப்ரவரி 2025 தேசிய மகளிர் ஆணையம் விசாரணை Twitter பதிவை கடந்து செல்ல NCW condemns the brutal sexual harassment of a pregnant woman on a moving train near Chennai. Despite traveling in the women’s compartment, she was attacked by a group of men—raising serious concerns about women’s safety in the state. Under the directions of NCW Chairperson, the… — NCW (@NCWIndia) February 7, 2025 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு கர்ப்பிணிப் பெண் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளதாக, தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பெட்டியில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம், தமிழ்நாட்டில் பெண்களுக்கு உள்ள பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்குவதாகக் கூறியுள்ளது. தமிழ்நாடு டிஜிபிக்கு இதுதொடர்பாகக் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறியுள்ள தேசிய மகளிர் ஆணையம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுவதோடு குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை உள்பட விரிவான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் தேசிய மகளிர் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gz8yl0j58o
  11. 07 FEB, 2025 | 08:30 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு மக்கள் சேவைக்காக அன்றி அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காகவே வழங்கப்படுகின்றது. ஆகவே இந்த நிதியை கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் . அரசியல்வாதிகள் ஓய்வூதியம் பெறுவதை மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆகவே உடன் அமுலுக்கு வரும் வகையில் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்ய வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நீக்குதல் குறித்த தனியார் உறுப்பினர் பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, மக்கள் மத்தியில் பெரும் விரக்தி ஏற்பட்டுள்ள விடயமொன்றை குறிப்பிடுகின்றேன். பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிக்காலத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் ஓய்வூதியம் பெறுவதை மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர் ஆகவே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்க வேண்டுமென வலியுறுத்துகின்றேன். பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் மக்கள் சேவைக்காக அன்றி அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காக வழங்கப்படுகின்றது என்ற விமர்சனங்கள் உள்ளன. இதனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்காக சேவை செய்பவர்களாக இருக்க வேண்டும். அந்த நிதியை சுகாதாரம், கல்வி உள்ளிட்ட சேவைகளுக்காக பயன்படுத்த வேண்டும் என்று கேட்கின்றேன். இதன்மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான மக்கள் நம்பிக்கை குறைவடைந்துள்ளது. இந்த நம்பிக்கையை அதிகரிக்கும் வகையிலேயே இந்த தீர்மானத்தை கொண்டு வருகின்றேன். மக்களின் எண்ணங்களின் வெளிப்பாடாகவே நாங்கள் இருக்கின்றோம். இதன்படி நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கோரிக்கையை செயற்படுத்த வேண்டும். 215 பேர் ஓய்வூதியத்தை பாராளுமன்றத்தின் ஊடாக பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் நாட்டுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஓய்வூதியத்தை பெறுவது போன்றே காண்பிக்கப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த யோசனையை முன்வைக்க வேண்டியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குங்கள். அப்போது அவர்கள் மக்களுக்கான சேவையாளர்களாக இருப்பர். மலேசியா, இந்தியா போன்ற நாடுகளை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இதனூடாக புதிய கலாச்சாரத்தை உருவாக்கி பாராளுமன்றத்தை நம்பிக்கையுடனான கௌரவான இடமாக மாற்ற வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/206095
  12. Published By: DIGITAL DESK 2 07 FEB, 2025 | 08:01 PM (எம்.மனோசித்ரா) இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில், குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் அசைக்க முடியாத ஆதரவை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற எயா வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா ஆகியோருக்கிடையில் வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் இதன் போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டதோடு, பண்டைய வரலாற்றிலிருந்து பிணைந்திருக்கும் இந்திய - இலங்கை இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பிராந்திய பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு மூலம் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில், குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், கடல்சார் பாதுகாப்பு சவால்கள் மற்றும் அவசரகால பேரிடர் சூழ்நிலைகளுக்கு பதிலளிப்பதில் இந்தியாவின் அசைக்க முடியாத ஆதரவை இந்திய உயர் ஸ்தானிகர் உறுதிப்படுத்தினார். இந்தியா இன்றுவரை வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவுக்கு பாதுகாப்பு செயலாளர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய - இலங்கை பாதுகாப்பு கூட்டாண்மையின் முக்கிய பங்கையும் உறுதிப்படுத்தினார். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரியும் இந்தக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டார். https://www.virakesari.lk/article/206105
  13. Published By: DIGITAL DESK 2 07 FEB, 2025 | 08:05 PM (எம்.மனோசித்ரா) மலையக மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் கடந்துள்ளன. சனத்தொகை மதிப்பீட்டு ஆவணத்தில் அவர்கள் 'மலையகத் தமிழர்கள்" என அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும், பிறப்புசான்றிதழ் உள்ளிட்டவற்றில் அவ்வாறு அடையாளப்படுத்த முடியாத நிலைமையே காணப்படுகிறது. எனவே அந்த மக்களை சகல ஆவணங்களிலும் 'மலையகத் தமிழர்கள்" என அடையாளப்படுத்துமாறு அரசாங்கம் சுற்று நிரூபத்தின் ஊடாக உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றதிகாரி பி.முத்துலிங்கம் வலியுறுத்தினார். கண்டி - சமூக அபிவிருத்தி நிறுவனம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து மலையக தமிழ் சமூகம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில்துறை என்பவற்றின் சமூக, பொருளாதார அந்தஸ்தை விருத்தி செய்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய, பெருந்தோட்ட அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் உள்ளிட்டோரு முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளன. அவை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக வெள்ளிக்கிழமை (07) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மலையக மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200 வருடங்கள் கடந்துள்ளன. அதற்காக பல்வேறு நிகழ்வுகள் கூட ஏற்பாடு செய்யப்பட்டன. அதற்கமைய கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனம் மலையக மக்களின் 200 வருட வரலாற்றை நினைவு கூறும் வகையில் நுவரெலியாவில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்ததோடு, அந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த ஏற்புரைகளையும் அரசாங்கத்திடம் கையளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்த முன்மொழிவுகளை தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களிடமும் கட்சிகளிடமும் கையளித்திருந்தோம். இந்நிலையிலேயே கடந்த ஜனவரி 30ஆம் திகதி பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து அந்த முன்மொழிவுகளில் நிறைவேற்றக் கூடிய சில பரிந்துரைகள் தொடர்பில் எடுத்துரைத்திருந்தோம். இந்த பரிந்துரைகள் பெருந்தோட்ட அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் கடற்றொழில் அமைச்சர்ஆகியோருக்கும் கையளிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அந்த மக்களுக்காக சட்ட ரீதியில் இலகுவாக நிறைவேற்றக் கூடிய யோசனைகளையே பரிந்துரைத்துள்ளோம். அந்த வகையில் 200 ஆண்டுகள் இலங்கையில் வாழும் பிரஜைகள் என்ற அடிப்படையில் அந்த மக்கள் தம்மை 'மலையகத் தமிழர்கள்" என அடையாளப்படுத்திக் கொள்ளவே விரும்புகின்றனர். கடந்த காலங்களில் பல தரப்பினரால் வலியுறுத்தப்பட்டதற்கமைய தற்போதைய சனத்தொகை மதிப்பீட்டு ஆவணத்தில் 'இந்திய வம்சாவளி தமிழர்" என்ற சொற் பதத்துக்கு அருகில் 'மலையகத் தமிழர்" என்ற சொற்பதமும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதும் மலையகப் பகுதிகளில் குழந்தைகள் பிறந்த பின்னர் பிறப்புச்சான்றிதழைப் பெற்றுக் கொள்ளும் போது 'மலையகத் தமிழர்" என்று அடையாளப்படுத்திக் கொள்ள முடியாத நிலைமையே காணப்படுகிறது. எனவே சனத்தொகை மதிப்பீட்டு ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டதைப் போன்று ஏனைய சகல அரச ஆவணங்களிலும் 'மலையகத் தமிழர்" என அடையாளப்படுத்துமாறு அரசாங்கம் சகல அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கும் சுற்றுநிரூபத்தின் ஊடாக உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும். அதற்கமைய பிறப்பு பதிவு மற்றும் திருமணப் பதிவு உள்ளிட்ட முக்கிய சந்தர்ப்பங்களில் அவர்களை 'மலையகத் தமிழர்" என அடையாளப்படுத்த வாய்ப்பளிக்குமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம். மேலும் தோட்டப் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுமார் 74 000 வீடுகளுக்கு இன்னும் உரித்து வழங்கப்படவில்லை. அவற்றை வழங்குவதற்கான சுற்று நிரூபத்தையும் வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதேசசபையின் நிர்வாகம் தோட்டத் துறைக்கு செல்ல வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டதன் விளைவாக 2018ஆம் ஆண்டு பிரதேசசபை திருத்தச்சட்டத்தின் ஊடாக அவற்றின் செயற்பாடுகளை தோட்டங்களில் முன்னெடுப்பதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனையும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருக்கின்றோம். இவை தவிர மலையக மக்களின் சுகாதார பிரச்சினைகள், தோட்ட வைத்தியசாலைகளை கிராம வைத்தியசாலைகளாக்குதல், கல்வித்துறை மேம்பாடு, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள லயன் அறைகளுக்கான மாற்று குடியிருப்புக்கள் என்பவை தொடர்பில் தற்போதைய அரசாங்கத்திடம் முன்மொழிவுகளைக் கையளித்திருக்கின்றோம். பிரதமர் மற்றும் அமைச்சர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதால் அவர்கள் இதனை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/206101
  14. 07 FEB, 2025 | 08:25 PM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் இருக்கும் நாங்கள் மலையகத்தில் இருக்கின்ற கல்வி, வீடமைப்பு மற்றும் வீதி போக்குவரத்து பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கிட்ணன் செல்வராஜா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற தோட்டங்கள் சார்ந்து காணப்படுகின்ற வீதிகளை அரசாங்கத்திற்கு சுவீகரிக்க வேண்டுமென வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகேவினால் முன்வைக்கப்பட்ட தனி நபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த ஹேஷா விதானகே முன்வைத்த பிரேரணையை நாங்கள் ஆதரிக்கின்றோம். ஆனால் அவருடைய பிரேரணையானது முதலைக் கண்ணீர் வடிக்கும் பிரேரணை போன்றது. 1992ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள 449 பெருந்தோட்டங்களை தனியார் முதலாளிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியே அடகு வைத்தது. அதன்போது எந்தவொரு வேலைத்திட்டங்களையும் முன்வைக்காத அமைப்பைச் சேர்ந்த ஒருவரே இன்று இந்த பிரேரணையை முன்வைத்திருக்கிறார். மலையகத்திலுள்ள தோட்டங்களை வகைப்படுத்தினாலும் அங்குள்ள வீதிகள் வகைப்படுத்தப்படவில்லை. தேசிய நெடுஞ்சாலைகள் ஏ, பி மற்றும் ஈ வகுப்பு சாலைகள் உள்ளன. இவ்வாறாக 12,567 கிலோ மீற்றர் தூர வீதிகள் உள்ளன. தோட்டங்களிலும் அவ்வாறான வீதிகள் உள்ளன. அவை வீதிகளாக அன்றி குன்றும் குழியுமாக காணப்படுகின்றன. இவ்வாறான நிலையிலேயே இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. 76 வருடங்களாக நாட்டை ஆண்ட பிற்போக்குவாத ஆட்சியாளர்கள் மாத்திரமல்ல, ஆட்சியாளர்களுக்கு தூணாகவும் துணையாகவும் வாளாகவும் இருந்த மலையகத்து ஜாம்பவான்கள் என கூறிக்கொள்கின்ற தமிழ் தலைவர்களும் இதற்கு வகை சொல்ல வேண்டும். எனவே ஜனாதிபதி தோழர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமத்தில் இருக்கும் நாங்கள் மலையகத்தில் இருக்கின்ற கல்வி, வீடமைப்பு மற்றும் வீதி போக்குவரத்து பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து, மலையகத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/206093
  15. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தற்போதைய நிலவரம் என்ன? படக்குறிப்பு, திமுக சார்பில் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் இந்த தொகுதி இடைத்தேர்தலில் களம் காண்கின்றனர். 8 பிப்ரவரி 2025, 01:54 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ளது. முதல் சுற்று முடிவில் திமுக முன்னிலை வகிக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், தி.மு.க, நாம் தமிழர் கட்சி, சுயேச்சைகள் உள்பட 46 பேர் களத்தில் உள்ளனர். திமுக சார்பில் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். நிலவரம் என்ன? முதல் சுற்று முடிவில் திமுக முன்னிலை வகிக்கிறது. திமுக - 7,961 வாக்குகள் நாதக - 1081 வாக்குகள் வித்தியாசம் - 6,880 வாக்குகள் இந்தத் தொகுதியில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர் என்றும், மொத்தம் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவானதாகவும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg5yp3pr9n6o
  16. 14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில் யாழ். இந்து Published By: VISHNU 07 FEB, 2025 | 08:17 PM (நெவில் அன்தனி) யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) ஆரம்பமான 14ஆவது இந்துக்களின் சமர் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ். இந்து கல்லூரி அணி பலமான நிலையில் இருக்கிறது. போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் யாழ். இந்து கல்லூரி அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 71 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. கே. பரஷித் 39 ஓட்டங்களையும் வி. விதுசன் ஆட்டம் இழக்காமல் 20 ஓட்டங்களையும் எஸ். சுபர்ணன் ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களையும் பெற்றனர். இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் மீதம் இருக்க, கொழும்பு இந்து கல்லூரி அணியை விட 152 ஓட்டங்களால் யாழ். இந்து கல்லூரி அணி முன்னிலையில் இருக்கிறது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த யாழ். இந்து அணி, முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அறுவர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்று தங்களது அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர். அவர்களில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மத்திய வரிசை வீரர் வி. விதுஷன் 9 பவுண்டறிகளுடன் 49 ஓட்டங்களைப் பெற்றார். அவரைவிட அணித் தலைவர் கே. பரஷித் (20), எஸ். சுபர்ணன் (16), ரி. பிரீத்திகன் (14), ரீ. பிரீமிகன் (12), ஜே. பவானன் (12), ஐ. ஸ்ரீவஸ்தன் (11) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். கொழும்பு இந்து பந்துவீச்சில் விஸ்வநாதன் யுவராஜ் 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் பத்மநாதன் ஸ்ரீ நிதுசன் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ராமநாதன் தேஸ்கர் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்து (பம்பலப்பிட்டி) சகல விக்கெட்களையும் இழந்து 91 ஓட்டங்களை மட்டும் பெற்றது. துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்திய தவகுமார் சந்தோஷ் 8 பவுண்டறிகளுடன் 42 ஓட்டங்களைப் பெற்றார். அவரை விட சுரேஷ் குமார் மிதுஷிகன் (13) மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார். யாழ். இந்து பந்துவீச்சில் கே. நித்தீஸ் 12 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வி. விதுசன் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் எஸ். சுபரணன் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும். இந்துக்களின் சமருக்கு ஜனசக்தி குழுமம் 3ஆவது வருடமாக அனுசரணை வழங்குகிறது. https://www.virakesari.lk/article/206111
  17. குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு கைகொடுத்தது; ஆனால், பலமான நிலையை நோக்கி அவுஸ்திரேலியா; ஸ்மித், கேரி ஆகியோர் சதங்கள் குவித்து அசத்தல் Published By: VISHNU 07 FEB, 2025 | 08:48 PM (நெவில் அன்தனி) இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் வோர்ன் - முரளிதரன் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் அமோக வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா, இரண்டாவது போட்டியிலும் பிடியை தன்பக்கம் திருப்பிக்கொண்டுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் பதில் அனித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் குவித்த தொடர்ச்சியான இரண்டாவது சதம், அலெக்ஸ் கேரி குவித்த சதம் என்பன அவுஸ்திரேலியாவை பலமான நிலையை நோக்கி நகர வைத்துள்ளது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்புக் 229 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, 257 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது. தனது துடுப்பாட்டத்தை 59 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த குசல் மெண்டிஸ், 139 பந்துகளை எதிர்கொண்டு 85 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார். அவர் மொத்தமாக 3 மணித்தியாலங்கள் 34 நிமிடங்கள் களத்தில் இருந்தார். அவரது துடுப்பாட்டமே இலங்கை அணியை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டது. லஹிரு குமாரவுடன் கடைசி விக்கெட்டில் 33 ஓட்டங்களை குசல் மெண்டிஸ் பகிர்ந்தார். 44 நிமிடங்கள் தாக்குப் பிடித்த லஹிரு குமார 20 பந்துகளை எதிர்கொண்டு 2 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தார். இலங்கையின் முதல் இன்னிங்ஸில் முதலாம் நாளன்று தினேஷ் சந்திமால் 74 ஓட்டங்களையும் திமுத் கருணாரட்ன 36 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மெத்யூ குனேமான் 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நேதன் லயன் 96 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இலங்கை முதல் இன்னிங்ஸில் பெற்ற 257 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலியா போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 330 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையை நோக்கி நகர்ந்துள்ளது. முதலாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்கள் மீதமிருக்க இலங்கையை விட 73 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது. அவுஸ்திரேலியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ட்ரவிஸ் ஹெட் (21), மானுஸ் லபுஷேன் (4) ஆகிய இருவரும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். முதல் போட்டியில் இரட்டைச் சதம் குவித்து ஹீரோவான உஸ்மான் கவாஜா இந்தப் போட்டியில் 36 ஓட்டங்களுடன் வெளியேறினார். ஆனால், 3ஆவது விக்கெட்டில் பதில் அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித்துடன் கவாஜா 54 ஓட்டங்களைப் பகிர்ந்தார். தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித், அலெக்ஸ் கேரி ஆகிய இருவரும் நிதானத்துட னும் சிறந்த நுட்பத்திறனுடனும் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 239 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவை நல்ல நிலையில் இட்டனர். நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிவரும் ஸ்டீவன் ஸ்மித் 239 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 1 சிக்ஸ் உட்பட 120 ஓட்டங்களுடனும் அலெக்ஸ் கேரி 156 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 139 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். பந்துவீச்சில் நிஷான் பீரிஸ் 70 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/206112
  18. இந்துக்களின் சமர் - நாணய சுழற்சியில் வென்ற யாழ். இந்து முதலில் துடுப்பெடுத்தாடுகிறது 07 FEB, 2025 | 11:38 AM யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கும் கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரிக்கும் இடையிலான 14ஆவது “இந்துக்களின் சமர்” கிரிக்கெட் போட்டி யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் இன்று (7) காலை ஆரம்பமாகியுள்ள. இந்த இரண்டு நாள் கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் இந்து கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. https://www.virakesari.lk/article/206047
  19. இன்றும் சர்ச்சைக்குரிய க்ரிஷ் கட்டிடத்தில் மீண்டும் தீ Published By: VISHNU 07 FEB, 2025 | 07:49 PM கொழும்பு கோட்டையில் உள்ள சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிடத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 24வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கட்டிடத்தின் 35வது மாடியில் நேற்று 06ஆம் திகதி வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது, இன்று அதிகாலை தீயணைப்புத் துறையினர் அதை அணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/206109
  20. GovPay மூலம் பணம் செலுத்துவது எப்படி தெரியுமா? அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான நடவடிக்கையாக 'GovPay' எனப்படும் கட்டண வசதி இன்று (7) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. 'GovPay' திட்டத்தை டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) மற்றும் Lanka Pay ஆகியவை இணைந்து ஆரம்பித்துள்ளன. இதன் கீழ் முதல் கட்டமாக, இன்று முதல் 16 முக்கிய அரச நிறுவனங்களில் பொது சேவைகளை பெற்றுக் கொள்ளும் போது பொது மக்கள் ஒன்லைனில் பணம் செலுத்த முடியும். இந்த நிறுவனங்களில் சில நகர சபைகள் மற்றும் பிரதேச செயலகங்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. கம்பஹா நகர சபை, யாழ்ப்பாண பிரதேச செயலகம், கேகாலை பிரதேச செயலகம், மஹர பிரதேச செயலகம், ரம்புக்கனை பிரதேச சபை, இரத்மலானை பிரதேச செயலகம் மற்றும் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகம் ஆகியவை குறித்த நிறுவனங்களாகும். மேலும், துறைமுக அதிகாரசபை, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு, தொழிற்பயிற்சி அதிகார சபை, தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் நம்பிக்கை மேம்பாட்டுக் குழு, அணுசக்தி ஆணைக்குழு, நில அளவைத் திணைக்களம், மொரட்டுவ பல்கலைக்கழகம், ஆயுர்வேதத் திணைக்களம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் ஆகியவையும் 'GovPay' திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், ஜனாதிபதி நிதிய சேவைகளை பிரதேச செயலக மட்டத்திற்கு விரிவுபடுத்தும் பணியும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1978 முதல் தற்போது வரை, ஜனாதிபதி நிதியத்துக்கான விண்ணப்பங்கள் கொழும்பு தலைமை அலுவலகத்தில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், இன்று முதல், நாடு முழுவதும் உள்ள 341 பிரதேச செயலகங்கள் மூலம் ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளைப் பெறும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலம் ஒன்லைனில் பெறுவதற்கான EBMD வசதி ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்ட மூன்றாவது திட்டமாகும். https://tamil.adaderana.lk/news.php?nid=199839
  21. புற்றுநோய்: மனித உடலில் எப்படிப் பரவுகிறது? அதில் எத்தனை வகைகள் உள்ளன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மருத்துவர் திலிப் நிகம் பதவி, புற்றுநோய் சிகிச்சை மருத்துவர், பாம்பே மருத்துவமனை, மும்பை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் புற்றுநோய். இந்தப் பெயரைக் கேட்டாலே நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் மட்டுமல்லாது, மருத்துவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியிலும் அச்ச உணர்வும், விரக்தியும் தோன்றுகிறது. புற்றுநோயின் வரலாறு என்ன? எத்தனை வகையான புற்றுநோய்கள் மனிதகுலத்தைப் பாதித்துள்ளன? இவற்றை அழிப்பதற்கான முயற்சிகளின் பலன் என்ன? உலகத்தில் புற்றுநோயின் வரலாற்றைப் பார்த்தால், கிரேக்க, ரோமானிய புத்தகங்களில் அதுகுறித்த குறிப்புகளைப் பார்க்க முடிகிறது. கிமு 470 முதல் 370 வரை, கிரேக்க மருத்துவத்தின் தந்தை எனக் கருதப்படும் ஹிபோகிரேடஸ், புற்றுநோயைக் குறிப்பிட கார்சினோஸ் அல்லது கார்சினோமா என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார். கார்சினோஸ் என்றால் கிரேக்க மொழியில் நண்டு எனப் பொருள். இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு - ஏன்? தோல் புற்றுநோய்: ஏற்படுவது ஏன்? தடுப்பதற்கான வழி என்ன? மருத்துவர்கள் விளக்கம் மனித மூளையின் மோசமான நினைவுகளை அழிக்க முடியுமா? எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனை கூறுவது என்ன? தண்ணீரை எப்போது குடிக்க வேண்டும்? உணவு உண்ணும் போது நீர் அருந்தலாமா? பல புற்றுநோய் நோயாளிகளைப் பார்த்த பின்னர், அவர்களுக்கு கடினமான கட்டிகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அவை உடலின் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்குப் பரவுவதையும் கண்டுபிடித்தனர். நோயின் இறுதிக் கட்டங்களில் வலி பொறுத்துக் கொள்ள முடியாததாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். புற்றுநோய்க்கு நண்டின் பெயர் ஏன்? நண்டின் முதுகுப் பகுதி மிகவும் கடினமாக உள்ளதுடன் அது தனது கொடுக்கு மூலம் உங்களைக் கடித்தால், தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. இந்த இரண்டு அறிகுறிகளும் புற்றுநோயாளிகளிடமும் காணப்படுகின்றன. அதனால்தான் இந்த நோய்க்கு கேன்சர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. பெண் பிறப்புறுப்பு சிதைப்பு: இந்த வலிமிகுந்த நடைமுறையால் ஏற்படும் பாதிப்புகள்7 பிப்ரவரி 2025 அன்டார்டிக் கிரில்: இந்த 'குட்டி ஹீரோ' இல்லை என்றால் திமிங்கலத்துக்குக் கூட பிரச்னைதான் - ஏன்?7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கிரேக்க மருத்துவரான கேலன், ஆன்சோஸ் என்ற பதத்தைப் பிரபலப்படுத்தினார். கிரேக்க மொழியில் ஆன்சோஸ் என்றால் வீக்கம் எனப் பொருள். ரோமானிய மருத்துவரான செல்சஸ் முதல்முறையாக கேன்சர் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். லத்தீன் மொழியில் நண்டு, கேன்சர் என அழைக்கப்படுகிறது. எனவே இந்த நோயைக் குறிக்க கேன்சர் என்ற சொல் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் புற்றுநோயைக் கண்டறிவது மிகவும் கடினமாக இருந்தது. புற்றுநோய் புரிந்துகொள்ள முடியாத, குணப்படுத்த முடியாத நோயாகக் கருதப்பட்டது. புற்றுநோய் குறித்த உண்மையான ஆய்வு 17ஆம் நூற்றாண்டில் நுண்நோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் தொடங்கியது. கடந்த 19ஆம் நூற்றாண்டில் மருத்துவம் முன்னேற்றம் கண்டபோது, புற்றுநோய் குறித்த மர்மங்கள் விலகத் தொடங்கின. உயிர்காக்கும் மருந்துகளை உருவாக்க விஷமுள்ள கம்பளிப் புழுக்கள் எப்படி உதவ முடியும்?30 ஜனவரி 2025 உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? - அறிவியல் கூறும் 7 எளிய வழிகள்30 ஜனவரி 2025 உடலில் புற்றுநோய் எப்படித் தொடங்குகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புற்றுநோய் குறித்த உண்மையான ஆய்வு 17ஆம் நூற்றாண்டில் நுண்நோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் தொடங்கியது ஆனால் உடலில் புற்றுநோய் எப்படித் தொடங்குகிறது? அது எப்படி வளர்கிறது? அது உடலின் மற்ற பகுதிகளுக்கு எப்படிப் பரவுகிறது? இவற்றையெல்லாம் கண்டுபிடித்தது, இதுவரை செய்யப்பட்ட கண்டுபிடிப்புகளிலேயே இதை மிக முக்கியமானதாக மாற்றுகிறது. இந்தக் கண்டுபிடிப்புகள் புற்றுநோய் குறித்த பல கட்டுக்கதைகளைச் சிதறடிக்கச் செய்துள்ளது. புற்றுநோய் குறித்து தெரிந்துகொள்வதற்கு முன், உடலின் வடிவம் குறித்தும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். மனித உடல் பல பில்லியன் உயிர் அணுக்களால் உருவானது, பல தசைகள் ஒன்றாக இணைந்து உடல் உறுப்புகளை உருவாக்குகின்றன. புதிய உயிரணுக்களின் உற்பத்தி, அவை தங்களது வேலைகளை முறையாகச் செய்வது, அவற்றின் வேலை முடிந்ததும் அழிக்கப்படுவது, புதிய உயிரணுக்கள் உருவாக்கப்படுவது என அனைத்து செயல்பாடுகளும் நமது உடலில் நமக்குத் தெரியாமலேயே நடைபெற்று வருகின்றன. இந்த உயிரணுக்களில் உள்ள மரபணு இவற்றையெல்லாம் கட்டுப்படுத்துகிறது. அதனால்தான் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம். புற்றுநோயை உண்டாக்கக் கூடிய காரணிகளுடனான தொடர்பு, தொற்று பாதிப்பு, அல்லது பரம்பரைக் காரணங்களால் மரபணுக்களில் சீர்குலைவு ஏற்பட்டால், மேலே குறிப்பிட்ட கட்டுப்பாடு இழக்கப்படுகிறது. உயிரணுக்கள் கட்டுப்பாடின்றி வளரத் தொடங்குகின்றன. அவற்றின் அளவு மற்றும் இயல்பில் மாற்றங்கள் நிகழ்கின்றன. இதுவே புற்றுநோய் எனப்படுகிறது. புற்றுநோய் அணுக்கள், சாதாரண அணுக்களைவிட குறைவான வேகமுடையவையாக இருப்பதுடன், கட்டுப்படுத்தப்படாத விகிதத்தில் வளரக் கூடியவை புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் இருப்பதால் புற்றுநோய் உயிரணுக்கள் இறப்பதில்லை. அவை உடலின் தற்காப்பு அமைப்பில் இருந்து தப்பி, ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் பரவுகின்றன. அங்கே அவை மற்ற உயிரணுக்களையும் உறுப்புகளையும் சேதப்படுத்துகின்றன. இதைத் தடுப்பது மிகவும் கடினம். இருப்பினும், உடலில் உருவாகும் அனைத்து கட்டிகளும் புற்றுநோயுடன் தொடர்புடையவை அல்ல. சில நேரங்களில், சாதாரண கட்டிகள்கூட உருவாகலாம். ஒரு சாதாரண கட்டி ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் பரவுவதில்லை. ஆனால் ஒரு புற்றுநோய்க் கட்டி உடலின் எந்த உறுப்புக்கு வேண்டுமானாலும் பரவலாம். அது பரவுவதை வைத்து அது புற்றுநோயா இல்லையா என்பதைக் கூறமுடியும். கியான் பரே சின்ட்ரோம் : மகாராஷ்டிராவில் அரிய நோய்க்கு 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு - என்ன அறிகுறி?29 ஜனவரி 2025 புகைப் பிடிப்பதை நிறுத்தினால் சர்க்கரை, கொழுப்பு உணவுகளை அதிகம் சாப்பிடத் தோன்றுவது ஏன்?24 ஜனவரி 2025 எத்தனை வகையான புற்றுநோய் பரவல் உள்ளன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றல் இருப்பதால் புற்றுநோய் உயிரணுக்கள் இறப்பதில்லை நேரடிப் பரவல்: புற்றுநோய் உயிரணுக்கள் நேரடியாக அடுத்துள்ள உயிரணுக்கள் அல்லது உறுப்புகளைத் தாக்குகின்றன. நிணநீர் பரவல்: புற்றுநோய் அணுக்கள் நிணநீர் அமைப்புக்குள் புகுந்து நிணநீர்க் கணுக்களில் வளர்கின்றன. ரத்தம் மூலம் பரவல்: புற்றுநோய் அணுக்கள் ரத்த நாளங்கள் மூலம் நுரையீரல், எலும்புகள், கல்லீரல் மற்றும் மூளைக்குப் பரவுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உடலில் இருக்கும் அனைத்து கட்டிகளும் புற்றுநோயுடன் தொடர்புடையவை அல்ல எத்தனை வகையான புற்றுநோய்கள் உள்ளன? புற்று நோய்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். உடல் உறுப்பு வகையைப் பொறுத்து வகைப்படுத்துதல்: புற்றுநோய் எந்த உறுப்பில் தொடங்குகிறதோ அதைப் பொறுத்து பெயரிடப்படும். உதாரணமாக நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் உள்ளிட்டவை. உயிரணு அடிப்படையில் வகைப்படுத்துதல் கார்சினோமா: இது சாதாரணமான புற்றுநோய் வகை. இது எபிதீலியல் உயிரணுக்கள் அல்லது உடல் உறுப்புகளில் தோன்றுகிறது. கார்சினோமாவின் கீழ் அடினோகார்சினோமா (நுரையீரல், மார்பகம்), பேஸல் செல் கார்சினோமா (தோல்), டிரான்சிஸ்னல் (சிறுநீரகம்) உள்ளிட்டவை உள்ளன. சர்கோமா: இந்த வகைப் புற்றுநோய் இணைப்புத் திசுக்கள் மற்றும் உடலின் துணை உயிரணுக்களில் ஏற்படுகிறது. மெலனோமா: இந்தப் புற்றுநோய், தோலில் மெலனின் உற்பத்தி செய்யும் மெலனோடைப் அணுக்களில் ஏற்படுகிறது. இதுவே உடலில் மிக வேகமாகப் பரவும் புற்றுநோய் எனக் கருதப்படுகிறது. மூளைக்கட்டி: கிளியோபிளாஸ்டோமா மற்றும் அஸ்ட்ரோசைடோமா போன்ற புற்றுநோய்கள் இந்தப் பிரிவின் கீழ் வருகின்றன. இது மூளையில் உள்ள பல்வேறு செல்களால் உருவாகிறது. காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்பின் திட்டம் என்ன? - 5 கேள்விகளும் பதில்களும்6 மணி நேரங்களுக்கு முன்னர் 'வழியில் சடலங்களைப் பார்த்தோம்' - காடு, மலை, கடலைத் தாண்டி உயிரைப் பணயம் வைத்து அமெரிக்கா சென்ற இந்தியர்கள்7 மணி நேரங்களுக்கு முன்னர் ரத்தப் புற்றுநோய் வகைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரு புற்றுநோய் கட்டி உடலின் எந்த உறுப்புக்கு வேண்டுமானாலும் பரவலாம் பல்வேறு வகையான ரத்தப் புற்றுநோய்கள் உள்ளன. அவை லுக்கீமியா, லிம்போமா மற்றும் மல்டிபிள் மைலோமா. லுக்கீமியா: எலும்பு மஜ்ஜை வெள்ளை ரத்த அணுக்களை முறையாக உருவாக்குவதில்லை. இதன் விளைவாக, முற்றிலும் வளர்ச்சியடையாத அணுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி ரத்த நாளங்கள் மூலம் உடல் முழுவதும் பரவுகின்றன. இந்த நோயில் எந்தக் கட்டியும் காணப்படாமல் போகலாம். லிம்போமா: நிணநீர்க் கணுக்களில் (Lymph Node), நிணநீர் உயிரணுக்கள் கட்டுப்பாடின்றி வளர்ந்து நிணநீர்கணுக் கட்டிகளை உருவாக்குகின்றன. மல்டிபிள் மைலோமா: நோய் எதிர்ப்பு அமைப்புக்குக் காரணமான எலும்பு மஜ்ஜையில் உள்ள பிளாஸ்மா செல்கள் கட்டுப்பாடின்றி வளர்ந்து எலும்புகளைச் சேதப்படுத்தும் மைலோமா அணுக்களை உருவாக்குகின்றன. நண்டு போன்ற நோய் என்று ஹிபோகிரேட்டஸ் விவரித்ததில் தொடங்கிய புற்றுநோயின் பயணம் தற்போது உயர்தர அறிவியல் ஆய்வு மூலம் சிகிச்சையளிக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளது. உலகம் முமுவதும் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், புற்றுநோய் போன்ற நோய்கள் வெல்லக் கூடியவைதான் என்ற நம்பிக்கையைத் தந்துள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgkjp0lj8x1o
  22. மாவை சேனாதிராஜாவின் வீட்டில் பொலிஸார் விசாரணை 07 FEB, 2025 | 08:20 PM (எம்.நியூட்டன்) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த அரசியல்குழுத் தலைவரும் மூத்த தலைவருமான மாவை.சோ.சேனாதிராஜாவின் குடும்பத்தவர்களிடத்தில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே மேற்படி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த மாவை.சோ.சேனாதிராஜாவின் இறுதி நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தருணத்தில் அன்னாரது பூதவுடல் தகனம் செய்யப்பட்ட தச்சன்காடு இந்து மயானத்தில் தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் வடக்கு, கிழக்கு தமிழர்களின் சார்பில் 'மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசுக் கட்சியின் துரோகிகள்' என்னும் தலைப்பிடப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அப்பதாகை காட்சிப்படுத்தப்பட்டமையின் காரணமாக தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கலாம் என்ற அச்சம் காணப்பட்ட நிலையில் தன்னால் இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்க முடியாது போனதாகவும், ஆகவே குறித்த பதாகையை காட்சிப்படுத்தியவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறும் சி.வி.கே.சிவஞானத்தால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த பதாகையில், சுமந்திரன், சேயோன், பீற்றர் இளஞ்செழியன், சாணக்கியன், ரஞ்சினி, கலையரசன், சத்தியலிங்கம், சயந்தன், குலநாயகம், துரைராஜசிங்கம், சாந்தி ஸ்ரீறிஸ்கந்தராசா, கமலேஸ்வரன், இரத்தினவேல், கண்ணதாசன், சேனாதிராசா, பரஞ்சோதி, செல்வராசா ஆகியோரின் பெயர்களே காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/206084
  23. 07 FEB, 2025 | 07:10 PM ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் ஜப்பானின் நிப்பொன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (7) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையான பணி என்றும், அந்தத் திட்டத்திற்கு ஏற்ப கல்வியை மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் இந்த சந்திப்பில் ஜனாதிபதி தெரிவித்தார். இந்த நாட்டின் மக்களின் சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதற்கும், மாற்றுத்திறனாளி சமூகத்தின் நலனை மேம்படுத்துவதற்கும் பங்களிப்பதாக நிப்பொன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவா (Yohei Sasakawa) இதன்போது தெரிவித்தார். குறிப்பாக யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கு ஆதரவை வழங்க தனது அமைப்பு எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். இந்த நாட்டின் கிராமப்புற மக்களிடையே வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக விசேட திட்டங்களைத் தொடங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் இதன்போது கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமாடா (Akio ISOMATA), சசகாவா சுகாதார மன்றத்தின் தலைவர் கலாநிதி டகஹிரோ நன்ரி (Takahiro Nanri), நிப்பொன் மன்றத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இசிரோ கபசாவா (Ichiro Kabasawa) முதலானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/206104
  24. கொழும்பு – கோட்டையில் உள்ள 60 மாடி கிரிஷ் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கட்டிடத்தின் 35ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தீ கட்டிடத்தின் 6 தளங்களுக்கும் பரவியுள்ளதாகவும், தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு பிரிவினர் கடுமையாகப் போராடி வருவதாகவும் கூறப்படுகிறது. https://thinakkural.lk/article/315164

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.