Everything posted by ஏராளன்
-
வீரநகரை கடலரிப்பிலிருந்து பாதுகாக்க 6.47 மில்லியன் நிதி ஒதுக்கீடு
திருகோணமலை - வீரநகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பு பிரதேசத்தை கடலரிப்பிலிருந்து பாதுகாப்பதற்கு கல்வேலி நிர்மாணிக்கும் பணி இன்று (3) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆரம்பித்து வைத்தார். பொதுமக்களின் குடியிருப்புப் பகுதியை மையமாகக் கொண்டு, இந்த கல்வேலி, 100 மீட்டர் நீளத்திலும் 2 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்படவுள்ளது. மக்களின் தேவை இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், நீண்ட காலமாக மக்களின் தேவையாக இருந்த இந்தப் பிரதேச மக்களின் குடியிருப்புகளை பாதுகாப்பதற்கு புதிய அரசாங்கத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக, ரூபாய் 6.47 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் ஒரு பிரதேசத்தில் நடைபெறுகின்ற போது, பிரதேச மக்களின் பங்குபற்றல் ஜனநாயக முக்கியமானது. அப்போது தான் அபிவிருத்தி திட்டங்களின் வெளிப்படைதன்மை உறுதிப்படுத்தப்படும். எனவே, கல்வேலி அமைக்கும் இந்த திட்டத்தை பேச மக்கள் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். புதிய அரசாங்கத்தின் கீழ், கொந்ததராத்து வேலைகளுக்கு கமிஷன் எடுக்கும் கலாசாரம் ஒழிக்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் மக்களின் வரிப்பணம் நூறு வீதம் அவர்களுக்கே போய் சேரக்கூடிய புதிய கலாசாரத்தை உருவாக்கி இருக்கிறோம் என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்வில், திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோசான் அக்மீமன, திருகோணமலை மாவட்ட செயலாளர் ஹேமந்த குமார, மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர், மத குருமார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். https://tamilwin.com/article/6-mn-to-protect-veeranagar-from-coastal-erosion-1738576854
-
முல்லைத்தீவில் அரச இயந்திரங்களால் அத்துமீறித் தொடரும் காணி அபகரிப்பு - மக்கள் தெருவிலா இருப்பது? - ரவிகரன் கேள்வி
03 FEB, 2025 | 08:09 PM முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர், வனஇலாகா, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச கட்டமைப்புக்கள் மக்களுக்குரிய காணிகளை தொடர்ந்தும் அத்துமீறி அபகரிப்புச் செய்வதால், மக்கள் குடியிருப்பதற்கே காணிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு அரச இயந்திரங்கள் தொடர்ந்தும் மக்களின் காணிகளை ஆக்கிரமிப்புச்செய்தால் மக்கள் வீதிகளிலா குடியிருப்பது எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார். முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று (3) நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 255 குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கு காணியில்லை என முறையிடப்பட்டது. இந்நிலையில் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் ஐயங்கன் குளத்தில் 21குடும்பங்களுக்கு, பழைய முறிகண்டியில் 04 குடும்பங்ளுக்கும், புதுத்துவெட்டுவான் பகுதியில் 12 குடும்பங்களுக்கும், கல்விளான் பகுதியில் 15 குடும்பங்களுக்கும், தென்னியன்குளம் பகுதியில் 05 குடும்பங்களுக்கும், கோட்டைகட்டியகுளம் பகுதியில் 05குடும்பங்களுக்கும், அம்பலப்பெருமாள் குளம் பகுதியில் 05 குடும்பங்களுக்கும், அமதிபுரம் பகுதியில் 07 குடும்பங்களுக்கும், துணுக்காய் பகுதியில் 08 குடும்பங்களுக்குமாக மொத்தம் 255 குடும்பங்கள் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவிலே காணியற்றவர்களாகக் காணப்படுகின்றனர். இந் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் படையினராலும், வனஇலாகா, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச இயந்திரங்களால் மக்களினுடைய காணிகள் அதிகளவில் அபகரிக்கப்பட்டிருப்பதற்கான புள்ளிவிபரங்கள் எம்மிடமுள்ளன. இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ள இந்த காணிகள் மீட்கப்பட்டு இவ்வாறு வலிந்து காணிகள் இல்லாமல் செய்யப்பட்ட மக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். குறிப்பாக வன இலாகா மக்களிடமோ, கிராம அலுவலர், பிரதேச செயலாளர், மாவட்ட செயலர் எவருடனும் தொடர்புகொள்ளாமல், அறிவித்தல் வழங்கப்படாமலேயே இவ்வாறு மகாகளின் காணிகளில் எல்லைக்கற்கள் இடுகின்ற செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர். இனிஇவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும். எமது வன்னிப் பகுதிகளில் நீண்டகாலமாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக தமது பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், நீண்ட காத்திற்குப் பின்னரே தமது இடங்களில் மீளக்குடியேறியுள்ளனர். இந் நிலையில் அந்த மக்கள் இடப்பெயர்விற்கு முன்னர் வாழ்ந்த குடியிருப்புக் காணிகள், நெற்செய்கைக்காணிகள், மேட்டுப் பயிர்ச்செய்கைக் காணிகள் உள்ளிட்ட அனைத்துக்காணிகளும் பற்றைக் காடுகளாகக் காணப்படுகின்றன. இவ்வாறு பற்றைக்காடுகளாகக் காணப்படும் மக்களின் காணிகளையே வன இலாகா, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரசதிணைக்களங்கள் எந்த அறிவிப்புக்களையும் செய்யாது தமது எல்லைக்கற்களை இட்டு ஆக்கிரமிப்புச்செய்கின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். இவ்வாறு மக்களின் காணிகளை ஆக்கிரமிப்புச்செய்கின்ற திணைக்களங்களைச் சார்ந்தவர்கள் இவ்வாறான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களுக்கு வருவதில்லை. இந்த அபகரிப்பாளர்கள் இந்த கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறானவர்களின் செயற்பாடுளை மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன். இவ்வாறான அபகரிப்புச் செயற்பாடுகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றன. எனவே இந்த இந்தவிடயத்திற்கு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் முறையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ஏன் எனில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009இற்கு முன்னர் வனவளத் திணைக்களத்திடம் 2,22006ஏக்கர், 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் அடாவடித்தனமாக எமது மக்களின் காணிகளுக்கும் எல்லைக்கல்லிட்டு 4,35000ஏக்கர் காணிகள் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது. அந்தவகையில் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எமது மக்களின் காணிகளை விடுதலைப் புலிகள் பாதுகாத்தனர். அவ்வாறு எமது மக்களின் காணிகளை விடுதலைப்புலிகள் பாதுகாத்ததால்தான் எமது மக்கள் நிறைவாகவும், சிறப்பாகவும் வாழ்ந்தார்கள். நிலம்தான் எமது உரிமை, நிலம் இல்லையேல் எதுவுமில்லை. அவ்வாறிருக்க எமது மக்களின் காணிகள் அனைத்தையும் அபகரிப்புச்செய்தால், எமது மக்கள் காணியின்றி தெருவிலா இருப்பது எனவும் கேள்வி எழுப்பினார். https://www.virakesari.lk/article/205737
-
பாடசாலை மைதான பாதையினை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளமையால் சிரமத்திற்குள்ளாகும் மாணவர்கள்
50 மீற்றர் தொலைவிலுள்ள பாடசாலை மைதானத்துக்கு ஒரு கிலோ மீற்றர் நடந்து செல்லும் மாணவர்கள்! 03 FEB, 2025 | 08:13 PM கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்கள் தங்களது பாடசாலைக்கு முன்பாக 50 மீற்றர் தொலைவில் உள்ள மைதானத்திற்கு சுமார் ஒரு கிலோ மீற்றர் நடந்து சென்று வரும் அவலத்தை தீர்த்து தருமாறு பாடசாலை சமூகம் புதிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மாணவர்கள் பாடசாலையின் நிகழ்வுகளுக்கு மைதானத்திற்கு செல்ல வேண்டுமாயின் பாடசாலையின் வீதிக்கு வருகை தந்து அங்கிருந்து ஏ9 பிரதான் வீதி வழியாக மத்திய விளையாட்டு மைதானத்தை ஊடறுத்து கிளிநொச்சி மகா வித்தியாலய மைதானத்திற்கு செல்ல வேண்டும். இதற்காக மாணவர்கள் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு நடந்து செல்ல வேண்டும். இது மாணவர்களுக்கு ஆபத்தான பயணம் என்பதோடு, அதிக நேரத்தையும் செலவிட வேண்டும். தினமும் தற்போது பாடசாலைகளில் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டிகள் இடம்பெறுவதனால் தினமும் மாணவர்கள் அதிக நேரத்தை செலவு செய்து மைதானத்திற்கு சென்று வரவேண்டும். இதன் காரணமாக மைதானத்திற்கு சென்று வருவதிலேயே மாணவர்கள் களைத்துவிடுகின்றார்கள் எனத் தெரிவிக்கும் பாடசாலை சமூகம் பாடசாலைக்கு முன்பாக உள்ள மைதானத்திற்கு செல்லும் பாதையினை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளமையால் மாணவர்களுக்கு இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த பாதை விடுவிக்கப்படும் இடத்து பாடசாலைக்கும் மைதானத்திற்கும் இடையில் சுமார் 50 மீற்றர் தூரமே மாணவர்கள் பயணிக்க வேண்டும். நீண்ட காலமாக பல்வேறு தரப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்தபோதும் இதுவரை குறித்த பாதையினை இராணுவம் விடுவிக்கவில்லை. எனவே புதிய அரசு இந்த விடயத்தை கவனத்தில் எடுத்து 2000க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் இப் பாடசாலையின் நன்மை கருதி குறித்த பாதையினை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக இந்த அரசின் பாராளுமன்ற உறுப்பினராக உள்ள ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி அவர்கள் இப் பாடசாலையின் பழைய மாணவன் என்ற வகையில் இந்த விடயத்தில் கூடிய அக்கறை செலுத்தி தன்னுடைய பாடசாலை மாணவர்களின் அவலத்தை தீர்க்க உதவ வேண்டும் எனவும் பாடசாலை சமூகம் கோரியுள்ளது. https://www.virakesari.lk/article/205735
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்திய கடற்றொழிலாளர்களில் ஒருவருக்கு 40 இலட்சம் தண்டம்! கடந்த 8 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் 1 படகுடன் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 10 பேரினது வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த மாதம் 23 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இன்றையதினம் வரை இவர்களை விளக்கமறையில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்றையதினம் சிறைச்சாலை அதிகாரிகளால் 10 கடற்றொழிலாளர்களும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். வழக்கினை ஆராய்ந்த நீதவான் 10 பேரில் இருவர் சிறுவர்கள் என்பதால் அவர்களை வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்ய உத்தரவிட்டார். நிபந்தனையுடன் விடுதலை அத்துடன், ஏனைய 8 பேருக்கம் ஆறு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறை தண்டனை வழங்கி நிபந்தனையுடன் விடுதலை செய்தார். இந்த எட்டு பேரில் ஒருவர் படகோட்டி என்பதால் அவருக்கு ஆறுமாத கடூழிய சிறைத்தண்டனை வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. அத்துடன் படகோட்டிக்கு நான்கு இலட்சம் ரூபா அபராத தொகையும் விதிக்கப்பட்டது. இதனை செலுத்த தவறின் மேலும் 3 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதவான் நளினி சுவாஸ்கரன் உத்தரவிட்டிருந்தார். கடந்த மாதம் பத்தாம் திகதி நெடுந்தீவு கடலில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த வேளை ஒரு படகுடன் கடற் படையினர் இவர்களை கைது செய்திருந்தனர். https://tamilwin.com/article/indian-fishermen-arrested-in-nedunthivu-2-released-1738586363
-
சுயலாபத்திற்காக தேசிய தலைவரை அணுகும் சீமான் : எழுந்துள்ள கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு (Seeman), நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடபில் அமெரிக்காவின் (United States) நியூயார்க்கில் (New York) இயங்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமரன் (Visvanathan Rudrakumaran) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். தமிழீழ மக்கள் இது தொடர்பாக விசுவநாதன் ருத்ரகுமரன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தந்தை பெரியாரையும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனையும் எதிர்த்துருவங்களாக முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானால் கட்டியமைக்கபடும் பொய்விம்பத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இத்தகைய அணுகுமுறை தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு தமிழ்நாடு மக்கள் வழங்கும் ஆதரவுக்கு கேடு விளைவிக்கக் கூடியது என்பதனையும் நாம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். தேசியத் தலைவர் தமிழ்நாட்டின் உள்நாட்டு அரசியற் சூழலைக் கடந்து, ஒட்டு மொத்தத் தமிழ்நாடு மக்களும் அரசியற் கட்சிகளும் ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர். விடுதலை இயக்கம் நமது விடுதலை இயக்கத்துக்கு கடினமான நேரங்களில் உறுதுணையாக நின்றவர்களுக்கு என்றும் மரியாதையுடன் மதிப்பளித்து வந்தவர். தமிழ் உணர்வுடனும் தமிழீழ விடுதலைப் பற்றுடனும் திராவிட இயக்க வழிவந்த தோழர்கள் போராட்டத்தின் ஆரம்ப காலம் முதல் போராட்டத்துக்கு ஆற்றிய பங்களிப்பும் பணியும் என்றும் தேசியத் தலைவரதும் தமிழீழ மக்களதும் மனங்களை நெகிழச் செய்தவை. இத்தகைய நமது சொந்தங்களுக்கு எதிரான தளத்தில் நமது தேசியத் தலைவரை நிறுத்தும் முயற்சியினை சீமான் கைவிட வேண்டும் எனவும் நாம் அவரைக் கோருகிறோம். தேசியத் தலைவரால் தனது மாவீரர் நாள் உரைகளிலும் அறிக்கைகளிலும் கடிதங்களிலும் செவ்விகளிலும் அவரால் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட கருத்துகள் மட்டுமே அவரது கருத்துகளாகக் கருதப்படும். இவற்றை விட அவர் சார்பில் கருத்துரைக்கவோ அல்லது அவரது கருத்துகளை தமது அரசியற் தேவைக்கேற்ப வளைத்துத் திரித்துப் பயன்படுத்தவோ எவரும் முனையின் அது அரசியல் அறம் அற்ற ஒரு போக்காகும். தேசியத் தலைவர் இத்தகைய அணுகுமுறை தேசியத் தலைவர் கடைப்பிடித்த அறநெறிக்கு முரணானது ஆகும். தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினையும் தமிழ்நாட்டு மக்களின் தேசியப்பிரச்சினையும் வேறுபட்டவை, தனித்துவமானவை. தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தமிழீழ மக்களே தலைமை தாங்க முடியும் தலைமை தாங்க வேண்டும். சிங்களத்தின் தமிழின அழிப்பில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள தமிழ்நாட்டில் இருந்து கட்சி வேறுபாடு கடந்து பரந்து பட்ட ஆதரவைத் தமிழீழ மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இத்தகைய சூழலில் தமிழ்நாட்டின் உள்நாட்டு அரசியல் முரண்பாடுகளுக்குள் தமிழீழத் தேசியத் தலைவரையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் இழுத்து விடும் முயற்சிகளை சீமான் உட்பட எந்த அரசியற்கட்சித் தலைவர்களும் மேற்கொள்ளக்கூடாது என்பதே நமது வேண்டுதல்” என அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/gov-of-tamil-eelam-based-abroad-condemns-seeman-1738583911
-
இன்னும் 2 வருடங்களில் மீண்டுமொரு கடன் மறுசீரமைப்பை செய்ய வேண்டிவரும்; சஜித் எதிர்வுகூறல்
03 FEB, 2025 | 05:28 PM சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை மூலம் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்தபோது, சர்வதேச நாணய நிதியத்தோடு புதியதொரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவோம் என்று ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் போது கூறியது. இப்போது முந்தைய அரசாங்கம் இணக்கப்பாடு கண்ட அதே ஒப்பந்தத்தை அதே வழியில் முன்னெடுத்து வருகின்றது. இவற்றுக்கு மத்தியில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான பின்னணி உருவாக்கப்பட்டுள்ளதா என அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகிறேன். மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். குருநாகல், இப்பாகமுவ பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை (03) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு எதிர்கொள்ளும் உண்மையான யதார்த்தம் என்னவென்றால், நாட்டிற்கு வழங்கியுள்ள பல முக்கிய இலக்குகளை நாம் முடிக்க வேண்டும். அவற்றில், விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் உயர் அரசாங்க வருவாயைப் பேணுதல் முக்கியமானதாகும். தவறும் பட்சத்தில், இன்னும் 2-3 வருடங்களில் மற்றொரு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு செல்ல வேண்டி ஏற்படும். நான் இந்த விடயத்தை உறுதியாகச் சொல்கின்றேன். கடந்த காலங்களிலும் இதுபோன்ற எதிர்வுகூறல்களைச் சொன்னபோது நான் பரிகசிக்கப்பட்டேன், ஆனால் பின்னர் அவை அனைத்தும் நிகழ்ந்தன. உலகின் பல்வேறு நாடுகளால் இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்ட IMF ஒப்பந்தங்களை ஆராயும் போது, கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தங்களில் 59% மீண்டுமொரு கடன் மறுசீரமைக்கு இட்டுச் சென்றுள்ளன. இந்த உண்மைகள் மக்களிடமிருந்து மறைக்கின்றனர். இவற்றை யாரும் மக்களுக்குச் சொல்வதில்லை. மற்றொரு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு செல்வது என்பது மக்களை மேலும் சிக்கலில் தள்ளும் விடயமாகும். இது சவாலானது. முன்னோக்கிய பயணம் பல பிரச்சனைகளை கடந்து செல்ல உள்ளது. எனவே ஒரு நாடாக நாம் அந்த சவால்களை எதிர்கொண்டு நாட்டை பாதுகாக்க வேண்டும். எனவே நமது நாடு குறித்த விடயங்களில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்த அஞ்ச வேண்டாம். இந்த தருணத்திலும் கூட எமது நாட்டு மக்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் பதிலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நாட்டின் குடி மக்கள், நல்ல வலுவான கொள்கைகள் மூலம் மக்களுக்கும் நாட்டுக்கும் நல்ல நிலையை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தவே அரசாங்கமொன்றை ஆட்சில் அமர்த்துகின்றனர்.பிரச்சினைகளுக்கான பதில்களை வழங்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் வழங்கிய வாக்குறுதிகளில் எத்தனை வீதத்தை இந்த குறுகிய காலத்தில் நிறைவேற்றியுள்ளீர்கள் ? என்ன நடந்தது ? என்பது தொடர்பில் சாதாரண மக்களின் வாழ்வில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மத்தியில் இருந்து கொண்டு நாம் கேள்வி எழுப்பிப் பாரக்க வேண்டும். எனவே சமாளிப்பான பேச்சுகளை விடுத்து யதார்த்தமான ஆட்சியை முன்னெடுப்பதில் இந்த அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இன்று அரிசி தட்டுப்பாடு, தேங்காய் தட்டுப்பாடு, உப்பு தட்டுப்பாடு, பொருட்களின் விலை உயர்வு மறுபுறம் வருமான வீழ்ச்சி என பன்முக நெருக்கடிகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில் தற்போதைய அரசாங்கம் மக்களை வாழவைப்பதற்காக வேண்டி எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் பிரச்சினைகளுக்கான பதில்கள் நாட்டு மக்களை திருப்தியடையச் செய்துள்ளதா என்றார். https://www.virakesari.lk/article/205656
-
யோஷித ராஜபக்ஷ கைது
மகிந்த மகன் கைதுக்கு காரணமாகும் டெல்லி விவகாரம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச பணமோசடி குற்றச்சாட்டில் கடந்த ஜனவரி 25ஆம் திகதியளவில் கைது செய்யப்பட்டார். பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து விசாரணைகளின் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். யோஷித ராஜபக்சவிற்கு பிணை வழங்கப்பட்டதே தவிர வழக்கிலிருந்து விடுவிக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், யோஷித ராஜபக்சவின் கைதுக்கு பின்னால் இந்தியாவின் பின்புலமாக இருக்கலாம் என இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “இந்திய நிறுவனமொன்று அவுஸ்திரேலியாவில் இருக்கும் செல்வந்தரின் ஊடாக ஹில்டன் ஹோட்டலுக்கு பக்கத்தில் இலங்கை ரூபாவில் 600 கோடி மதிப்பிலான கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான பணப்பரிமாற்றம் தொடர்பில் தான் யோஷித கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. டெல்லியை தளமாக கொண்ட இந்திய நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கடல் கடந்த ஒரு திட்டமாகதான் அதை பார்க்கிறார்கள். டெல்லியிலிருந்து தான் இந்த திட்டத்திற்கான பணம் வந்துள்ளது” என குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் மேலும் விரிவாக அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு.... https://tamilwin.com/article/yoshitha-rajapaksa-arrested-udaruppu-today-1738591884
-
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
முக்கிய தொழிலதிபர் கென் பாலேந்திரா காலமானார் இலங்கையின் பெருநிறுவனத் தலைவரும் நிர்வாகியுமான தேசமான்ய கந்தையா ("கென்") பாலேந்திரா இன்று தனது 85ஆவது வயதில் காலமானார். இந்த தகவலை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் - இனுவில் பகுதியில் பிறந்த பாலேந்திரா கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர். 1940 இல் பிறந்த பாலேந்திரா இலங்கையிலும் தெற்காசிய பிராந்திய வலயத்திலும் செல்வாக்குமிக்க பல நிறுவன பதவிகளை வகித்துள்ளார். பல பதவிகள் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முதலாவது இலங்கைத் தலைவரான இவர், இறக்கும் போது பொதுநலவாய அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடமையாற்றியிருந்தார். சிலருக்கு கென் என்றும் சிலருக்கு பாலா என்றும் அறியப்பட்ட பாலேந்திரா ஒரு புகழ்பெற்ற நபராக இருந்தார். பாடசாலை காலத்தில் சிறந்த ரகர் வீரராக திகழ்ந்த பாலேந்திரா, பெருந்தோட்ட நிர்வாகியாகவும் ஆற்றல் மிக்க கூட்டாண்மை தலைவராகவும் தன்னை உருவாக்கிக் கொண்டார். 1980களில் ஜோன் கீல்ஸ் நிறுவனத்தை, காலனித்துவ காலத்து தேயிலை தரகு நிறுவனத்தில் இருந்து நாட்டின் மிகப்பெரிய கூட்டாண்மை நிறுவனமாக மாற்றியதில் பாலாவின் பங்களிப்பு அளப்பரியது. அதேவேளை, அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. https://tamilwin.com/article/ken-balandra-passes-away-1738562980#google_vignette
-
சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் அறிவிப்பு
இலங்கை சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பட மூலாதாரம்,HANDOUT கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை கருப்பு நாளாக அனுஷ்டிப்பதற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்கள் தீர்மானித்துள்ளனர். இலங்கையின் 77வது சுதந்திர தினம் எதிர்வரும் 04ம் தேதி (செவ்வாய்கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ளது. நாட்டில் 30 வருட காலமாக இடம்பெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இன்று வரை நீதி கிடைக்காத பின்னணியில், தமக்கு சுதந்திர தினம் கிடையாது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கூறுகின்றனர். இலங்கையில் காணப்பட்ட இனப் பிரச்னையை அடுத்து இடம்பெற்ற உள்நாட்டுப் போர் 2009ம் ஆண்டு மே மாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், ஆயிரக்கணக்கான தமிழர்கள் அரசாங்கத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக குற்றஞ்சுமத்தி, யுத்தம் முடிவடைந்த காலம் தொடக்கம் இன்று வரை அவர்களின் உறவினர்கள் பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். சார்லஸ் ஷோப்ராஜ்: திகார் சிறையில் அதிகாரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இவர் தப்பித்தது எப்படி? டிரம்ப் அச்சுறுத்தல்: அமெரிக்காவின் கடுமையான வரிகளைத் தவிர்க்க சீனா என்ன செய்கிறது? எப்படி தயாராகிறது? தமிழ் - ஜப்பானிய மொழிகள் இடையே இவ்வளவு ஒற்றுமையா? விளக்கும் மொழியியல் வல்லுநர்கள் ஸ்வீடனில் குர்ஆனை எரித்த இராக்கியர் சுட்டுக் கொலை - வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பு உள்ளதா? இதன் ஒரு கட்டமாக ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை கருப்பு தினமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் பிரகடனப்படுத்தி போராட்டங்களை நடத்துவது வழமையானதாக காணப்பட்டது. குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் கடந்த காலங்களில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு வாக்குகளை அளித்து அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், வரலாற்றில் முதல் தடவையாக ஆளும் அரசாங்கத்துக்கு வாக்களித்து அரசுக்கு எதிராகவே இந்தப் போராட்டத்தை நடத்த முற்படுகின்றனர். 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக மட்டக்களப்பு தவிர்த்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியை தன்வசப்படுத்தியது. மட்டக்களப்பு மாவட்டத்தின் அதிகாரத்தை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தனதாக்கிக் கொண்டது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்கள் தமக்கான தீர்வை வழங்குமாறு கோரி, கடந்த காலங்களில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தியது மாத்திரமன்றி, அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகவே வாக்களித்திருந்தனர். எனினும், இம்முறை அரசாங்கத்துக்கு சார்பாக வாக்களித்துவிட்டு, அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்கள் முன்வந்துள்ளனர். இந்த நிலையில், வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் எதிர்வரும் 4ம் தேதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பாரிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். சுதந்திர தினத்தை கருப்பு தினமாக பிரகடனப்படுத்தி, இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது. பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரின் தமிழர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் என்ன சொல்கின்றார்கள்? வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவியாக அமலராஜ் அமலநாயகி செயற்பட்டு வருகின்றார். கடந்த 2009ம் ஆண்டு வயலுக்கு வேலைக்கு சென்ற தனது கணவரான அந்தோனி அமலராஜ் ரஞ்ஜித், விசேட அதிரடி படையினரால் அழைத்து செல்லப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக அமலநாயகி குற்றஞ்சுமத்துகின்றார். ''தமிழனாக பிறந்த பாவம் தான் நாங்கள் இந்த நிலைமையில் இருப்பதற்கு காரணம்'' என அமலநாயகி தெரிவிக்கின்றார். மூன்று பிள்ளைகளின் தாயான அமலநாயகி, 2009ம் ஆண்டு முதல் இன்று வரை தனது கணவரை தேடிய பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, தனது கணவர் விசேட அதிரடி படையினரால் அழைத்து செல்லப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக அமலநாயகி குற்றஞ்சுமத்துகின்றார் ஆனால், கணவரை தேடும் கேள்விக்கான பதில் கிடைக்காத நிலையில், தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றார் அமலநாயகி. ''மாவட்ட ரீதியாக 2010ம் ஆண்டிலிருந்து எமது போராட்டம் தொடர் போராட்டமாக தொடங்கியது. ஒவ்வொரு விதங்களாக போராட்டங்களை நடத்தி வந்தோம். வழிபாடுகள், தியானங்கள், பேரணிகள், மௌன ஊர்வலங்கள் போன்ற விதமான போராட்டங்களை நாங்கள் 2010ம் ஆண்டே தொடங்கி விட்டோம். வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 2015ம் ஆண்டு ஒருங்கிணைந்து விட்டோம். சில அமைப்புக்களின் ஊடாக வடக்கு, கிழக்கில் ஒருங்கிணைந்து செயற்பட்டோம்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் அவர். எனினும், கடந்த 2017ம் ஆண்டு தனித்துவமாக வடக்கு-கிழக்கு ஒன்றிணைந்து செயற்பட ஆரம்பித்ததாக, அமலநாயகி கூறினார். இவ்வாறு போராட்டங்களை நடத்திவரும் தமது அமைப்பிலுள்ள 300க்கும் அதிகமான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தீர்வு எட்டப்படாத நிலையில், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார். போர் இடம்பெற்ற காலப் பகுதியில் மாத்திரம் சுமார் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தினர் குறிப்பிடுகின்றனர். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, காணாமல் போனதாக கூறப்படும் அந்தோனி அமலராஜ் இராசகேசரி பெருவழி: முதலாம் ஆதித்த சோழன் வணிகர்களுக்காக அமைத்த நிழல் படை என்ன செய்தது?2 பிப்ரவரி 2025 ராஜீவ் காந்தி ஓட்டிய விமானத்தை கடத்த முயன்ற தீவிரவாதிகள் - சாதுர்யமாக தடுத்த ரா உளவு அமைப்பு4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டிப்பதற்கான காரணத்தை தெளிவூட்டினார் அமலநாயகி. ''இலங்கை சுதந்திர தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில், நாங்கள் 15 வருடங்கள் தாண்டிய நிலையிலும் வடகிழக்கு தாயக மக்கள் எந்தவொரு அடிப்படை உரிமைகளும் அற்ற நிலையில் தான் வாழ்ந்துகொண்டு வருகின்றோம். முக்கியமாக காணாமல் ஆக்கப்பட்ட விடய பரப்பு, தமிழர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் தான் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். எங்களுக்கான உரிமைகள் கிடைக்கும் வரை இலங்கையின் சுதந்திர தினத்தை நாங்கள் கருப்பு தினமாக தான் அனுஷ்டிப்போம்,'' என அமலநாயகி குறிப்பிடுகின்றார். நாட்டில் கடந்த காலங்களில் தமிழ் கட்சிகளுக்கு ஆதரவு வழங்கிய நிலையில், சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டித்தமைக்கு மாறாக, மத்திய அரசாங்கத்துக்கு இம்முறை முழுமையான ஆதரவை வழங்கிய நிலையில் சுதந்திர தினத்தை கருப்பு தினமாக ஏன் அனுஷ்டிக்க வேண்டும் என பிபிசி தமிழ், அமலநாயகியிடம் கேள்வி எழுப்பிது. ''இந்த அரசாங்கம் கூட தமிழர்களின் உரிமைகளை தடுக்கும் வகையில் தான் செயற்பட ஆரம்பித்துள்ளது. எங்கள் இனத்துக்கு நடந்த இன அழிப்பு மற்றும் அநீதிகள், காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் காயங்களுக்கு மருந்து போடாமல் வெறும் அபிவிருத்தி மற்றும் மாயைக்குள் தான் நாங்கள் இருக்கின்றோம். எங்களுடைய உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை கூற சொல்லி, இந்த 15 வருட காலமாக நாங்கள் தெருக்களிலிருந்து போராடி வருகின்றோம்" என கூறுகிறார் அவர். மேலும் பேசிய அவர், "நாங்கள் தொலைத்தது ஆடோ, மாடோ பொருளோ இல்லை. விலைமதிக்க முடியாத எங்களின் வாழ்க்கையை தொலைத்திருக்கின்றோம். வாழக்கூடிய வல்லமை இப்போது எங்களிடம் இருந்தாலும், அந்த வலியுடனான சுதந்திர வாழ்க்கையை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கான ஒரு நீதியை பெற்றுக்கொள்ளாமல், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாங்கள் அறியாமல் இந்த போராட்டத்தை விட மாட்டோம்.'' என அவர் கூறுகின்றார். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, நீதி பெறாமல் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்கிறார், அமலராஜ் கர்ப்பிணியின் 35 வார கருவின் வயிற்றுக்குள் கை, கால்களுடன் இன்னொரு கரு; என்ன காரணம்? - இன்றைய செய்திகள்30 ஜனவரி 2025 இலங்கை : நாயை தூக்கிலிட்டு கொன்றதாக பெண் கைது - நடந்தது என்ன?27 ஜனவரி 2025 மேலும் ''இவர்கள் ஒரு இனத்தை காப்பாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். இதற்குள் இனவாதம் பேசப்படுகின்றது. அவர்களின் பெரும் ஆதிக்கத்தை தான் பேசுகின்றார்கள். மனிதர்களின் உணர்வுகளை கண்டுகொள்ள தவறுகின்ற பட்சத்தில் தான் நாங்கள் இவ்வாறான தினங்களை எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்துகின்றோம்'' என அவர் குறிப்பிடுகின்றார். இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வர இளம் சந்ததியினரே முன்வந்ததாக கூறிய அவர், இளைஞர், யுவதிகளை ஒரு மாயைக்குள் இந்த அரசாங்கம் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார். இந்த அரசாங்கத்தை இளைஞர், யுவதிகள் நம்பி வாக்களித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். அரசாங்கம் சில சோதனைச்சாவடிகளை அப்புறப்படுத்தியுள்ள போதிலும், தமிழர்களுக்குத் தேவையான விடயத்தை இன்னும் தொடவில்லை என அவர் கூறுகின்றார். இதனால், புதிய அரசாங்கம் தமக்கான தீர்வை வழங்கும் என்ற நம்பிக்கை தமக்குக் கிடையாது என அவர் குறிப்பிடுகின்றார். காணாமல் போன உறவினர்கள் இன்று அல்லது நாளை வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் போராட்டங்களை தொடர்ந்தும் நடத்தி வருவதாக, வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அமலராஜ் அமலநாயகி தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் பதில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் பிபிசி தமிழ் வினவியது. இவ்வாறான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையினால், அது தொடர்பில் அதிகாரபூர்வ பதிலொன்றை வழங்க முடியாதுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். மஹிந்த ராஜபக்ஸ பாதுகாப்பு குறைப்பு, அவரது மகன் கைது - இலங்கையில் என்ன நடக்கிறது? முழு விவரம்27 ஜனவரி 2025 மாவை சேனாதிராஜா காலமானார்: இலங்கை தமிழர்களுக்காக குரல் எழுப்பிய இவர் யார்?30 ஜனவரி 2025 அரசாங்கத்தின் பதில் பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, இலங்கை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் இந்த காணாமல் போனோர் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்த தாம் எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாக, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். 77வது சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டிக்கின்றமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ''நாங்கள் நஷ்ட ஈட்டை வழங்க தயாராக உள்ளோம். இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட தயாராக இருக்கின்றோம். உங்களின் கிராமங்களை கட்டியெழுப்ப தயாராக இருக்கின்றோம். கிராமத்திலுள்ள வீதிகளை கட்டியெழுப்ப தயாராக இருக்கின்றோம். இதைவிட வேறு என்ன செய்ய இருக்கின்றது?'' என அவர் கேள்வி எழுப்பினார். ''காணாமல் போனோரை கொண்டு வருமாறு கூறுகின்றார்கள். அவர்களை எங்கிருந்து கொண்டு வருவது? உலகத்தில் எங்காவது காணாமல் போனோரை கொண்டு வந்ததாக வரலாறு இருக்கின்றதா?. 100 வீதம் விசாரணைகள் நடத்தப்பட்டிருக்கின்றதா? எங்கேயும் கிடையாது. கூடுதலான அனுபவம் உள்ள நாடு தென் ஆப்பிரிக்கா. தென் ஆப்பிரிக்காவில் கூட 5 சதவிகிதம் தான் விசாரிக்கப்பட்டுள்ளனர்.'' என அவர் கூறுகின்றார். ''அவர்கள் அனுபவிக்கும் வேதனையை நாங்கள் அறிவோம். இனி எந்தவொரு காலத்திலும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என்ற உத்தரவாதத்தை வழங்க வேண்டும். இனங்களுக்கு இடையில் இனி முரண்பாடுகள் ஏற்படாத அளவுக் மக்களை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது" என்றார் அவர். தங்கள் தரப்பிலும் பல ஆயிரம் பேர் கொலை செய்யப்பட்டதாகவும் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாகவும் அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly91ved87eo
-
ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20 உலகக் கிண்ணம்
19 வயதின் கீழ் மகளிர் உலகக் கிண்ண சிறப்பு அணியில் இலங்கையின் சமோதி 03 FEB, 2025 | 03:26 PM (நெவில் அன்தனி) மலேசியாவில் நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண போட்டியில் அற்புதமாக பிரகாசித்த வீராங்கனைகளைக் கொண்ட 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கிண்ண சிறப்பு அணியில் இலங்கையின் சமோதி ப்ரபோதா பெயரிடப்பட்டுள்ளார். 12 வீராங்கனைகளைக் கொண்ட இந்த சிறப்பு அணியில் பந்துவீச்சில் திறமையாக செயற்பட்ட இலங்கையின் 15 வயதுடைய சமோதி ப்ரபோதா 10ஆம் இலக்க வீராங்கனையாக பெயரிடப்பட்டுள்ளார். ஐந்து போட்டிகளில் விளையாடிய சமோதி ப்ரபோதா 6.33 என்ற சராசரியுடன் மொத்தமாக 9 விக்கெட்களைக் கைப்பற்றினார். அவரது எக்கொனொமிக் ரேட் 3.80 ஆகும். மலேசியாவுக்கு எதிரான போட்டியில் ப்ரபோதா 5 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றி இருந்தார். உலகக் கிண்ணப் போட்டி ஒன்றில் அதுவே அவரது சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக இருந்தது. இந்த சிறப்பு அணியில் நான்கு இந்தியர்கள் இடம்பெறுவதுடன் அணியின் தலைவியாக தென் ஆபிரிக்காவின் கேலா ரினேக் பெயரிடப்பட்டுள்ளார். இந்த அணியில் தமிழ் வீராங்கனை ஒருவர் இடம்பெறுகின்றமையும் விசேட அம்சமாகும். தமிழகத்தின் மதுரையைப் பிறப்பிடமாகக் கொண்ட வீராங்கனை குணாலன் கமலினி என்ற வீராங்கனையே சிறப்பு அணியில் இடம்பெறும் தமிழ் வீராங்கனை ஆவார். இந்திய அணியின் ஆரம்ப வீராங்னையான கமலினி, 7 போட்டிகளில் 2 அரைச் சதங்கள் உட்பட 143 ஒட்டங்களை மொத்தமாக பெற்றிருந்தார். 19இன் கீழ் மகளிர் ரி20 உலகக் கிண்ண சிறப்பு அணி கொங்காடி ட்ரிஷா (இந்தியா - 309 ஓட்டங்கள், சராசரி 77.25, ஸ்ட்ரைக் ரேட் 147.34, அதிகூடிய எண்ணிக்கை 100 ஆ.இ.) ஜெம்மா போத்தா (தென் ஆபிரிக்கா - 105 ஓட்டங்கள், சராசரி 26.25, ஸ்ட்ரைக் ரேட் 123.52, அதிகூடிய எண்ணிக்கை 37 ஓட்டங்கள்) டாவினா பெரின் (இங்கிலாந்து - 176 ஓட்டங்கள், சராசரி 35.20, ஸ்ட்ரைக் ரேட் 138.38, அதிகூடிய எண்ணிக்கை 74 ஓட்டங்கள்) குணாலன் கமலினி (143 ஓட்டங்கள், சராசரி 35.75, ஸ்ட்ரைக் ரேட் 104.37, அதிகூடிய எண்ணிக்கை 56 ஆ.இ.) கொய்மே ப்றே (அவுஸ்திரேலியா - 119 ஓட்டங்கள், சராசரி 29.75, ஸ்ட்ரைக் ரேட் 96.74, அதிகூடிய எண்ணிக்கை 45), பூஜா மஹாட்டோ (நேபாளம் - 70 ஓட்டங்கள், சராசரி 23.33, ஸ்ட்ரைக் ரேட் 51.85, அதிகூடிய எண்ணிக்கை 27, பந்துவீச்சு: 9 விக்கெட்கள், சராசரி 7.00, எக்கொனொமி ரேட் 4.34, சிறந்த பந்துவீச்சு பெறுதி 9 - 4 விக்.) கேலா ரினேக் (தலைவி - தென் ஆபிரிக்கா - 11 விக்கெட்கள், சராசரி 6.27, எகொனொமி ரேட் 4.14, சிறந்த பந்துவீச்சப் பெறுதி 2 - 3 விக்.), கேட்டி ஜோன்ஸ் (விக்கெட் காப்பளார் - இங்கிலாந்து - 2 பிடிகள், 7 ஸ்ட்ம்ப்கள்), ஆயுஷி ஷுக்லா (இந்தியா - 14 விக்கெட்கள், சராசரி 5.71, எக்கொனொமி 3.01, சிறந்த பந்துவீச்சுப் பெறுதி 8 - 4 விக்.), சமோதி ப்ரபோதா (இலங்கை - 9 விக்கெட்கள், சராசரி 6.33, எக்கொனொமி ரேட் 3.80, சிறந்த பந்துவீச்சுப் பெறுதி 5 - 3 விக்.), வைஷ்ணவி ஷர்மா (இந்தியா - 17 விக்கெட்கள், சராசரி 4.35, எக்கொனொமி ரேட் 3.36, சிறந்த பந்துவீச்சுப் பெறுதி ஹெட்-ட்ரிக் உட்பட 5 - 5 விக்.) 12ஆவது வீராங்கனை: நிதாபிசெங் நினி (தென் ஆபிரிக்கா - 6 விக்கெட்கள், சராசரி 7.33, எக்கொனொமி ரேட் 4.00, சிறந்த பந்துவீச்சுப் பெறுதி 4 - 3 விக்.) https://www.virakesari.lk/article/205692
-
14ஆவது வருடாந்த 'இந்துக்களின் சமர்' யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் இம் மாதம் நடைபெறவுள்ளது
இந்துக்களின் சமருக்கு 3ஆவது வருடமாக ஜனசக்தி நிறுவனம் பிரதான அனுசரணை 03 FEB, 2025 | 03:05 PM (நெவில் அன்தனி) யாழ். இந்து கல்லூரிக்கும் பம்பலப்பிட்டி (கொழும்பு) இந்து கல்லூரிக்கும் இடையிலான 14ஆவது வருடாந்த 'இந்துக்களின் சமர்' யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் இம் மாதம் 7ஆம், 8ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இளைஞரையும் விளையாட்டுத்துறையையும் ஊக்குவிக்கும் நன்னோக்குடன் இந்துக்களின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கு ஜனசக்தி குழுமம் (JXG) தொடர்ச்சியான மூன்றாவது வருடமாக பிரதான அனுசரணை வழங்குகிறது. இந்த வருட அத்தியாயம் கொழும்பில் நடைபெறுவதாக இருந்த போதிலும் பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வருடப் போட்டியை நடத்த யாழ். இந்து கல்லூரி முன்வந்தமை பாராட்டுக்குரியதாகும். பம்பலப்பிட்டி கல்லூரி அடுத்த வருடம் தனது பவள விழா கொண்டாட்டங்களை மிகவும் பிரமாண்டமான முறையில் ஆரம்பிக்கவுள்ளதால் இந்துக்களின் சமரையும் அந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப் போட்டி தொடர்பான ஊடக சந்திப்பும், அனுசரணை வழங்கும் நிகழ்வும் தமிழ் யூனியன் அண்ட் அத்லெட்டிக் க்ளப் (TU & AU) கேட்போர்கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் பேசிய ஜனசக்தி நிறுவனத்தின் ஸ்தாபகரும் அதிபருமான சந்த்ரா ஷாவ்டர், 'வடக்கிலுள்ள இந்து கல்லூரிக்கும் தெற்கிலுள்ள இந்து கல்லூரிக்கும் இடையிலான இந்தப் போட்டி மிகவும் சிறப்வுவாய்ந்ததாகும். இந்த மாபெரும் கிரிக்கெட் சமருக்கு அனுசரணை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம்' என்றார். இதேவேளை, இந்துக்களின் சமர்' ஒரு மறக்க முடியாத மாபெரும் கிரிக்கெட் போட்டியாகும் என ஜனசக்தி குழுமத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி கமிக்க டி சில்வா தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், 'சமூகங்களையும் குழுக்களையும் ஒன்றிணைக்கும் ஒரு கருவி விளையாட்டுத்துறை யாகும். 400 கிலோ மீற்றர் வித்தியாச தொலைவில் இருக்கும் இந்த இரண்டு பாடசாலைகளும் விளையாட்டுத்துறை மூலம் சகோதரத்துவத்தை கட்டி எழுப்ப முடியும் என்பதையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை உருவாக்கமுடியும் என்பதையும் வெளிப்படுத்திவருகின்றன' என்றார். இப் போட்டிக்கான அனுசரணை உதவுத் தொகைக்குரிய மாதிரி ஆவணத்தை ஜனசக்தி குழுமத்தின் ஸ்தாபகரும் அதிபருமான சந்த்ரா ஷாவ்டரிமிருந்து யாழ். இந்து கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்பு கிளைத் தலைவர் ஜீ. வசந்தன் பெற்றுக்கொண்டார். https://www.virakesari.lk/article/205689
-
யுஎஸ்எயிட் சீர் செய்ய முடியாத நிலையை அடைந்துவிட்டது- மூடுவதற்கு தீர்மானம்- எலொன் மஸ்க்
03 FEB, 2025 | 04:49 PM யுஎஸ்எயிட் சீர்செய்ய முடியாத நிலைiயைஅடைந்துவிட்டது என தெரிவித்துள்ள அமெரிக்க கோடீஸ்வரர் எலொன் மஸ்க் அதனை மூடுவதற்கான நடவடிக்கைகளில் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் நேரலை விவாதமொன்றை நடத்தியுள்ள மஸ்க் யுஎஸ்எயிட் குறித்து அமெரிக்க ஜனாதிபதியுடன் நீண்டநேரம் ஆராய்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். நாங்கள் அதனை மூடவேண்டும் என்பதை டிரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளார் என மஸ்க் குறிப்பிட்டுள்ளார். யுஎஸ்எயிட் என்பது ஒரு புழு உள்ள அப்பிள் இல்லை பல புழுக்கள் காணப்படும் பொருள் என தெரிவித்துள்ள எலொன்மஸ்க் நீங்கள் அதனை முற்றாக இல்லாமல் செய்யவேண்டும், அது சீர் செய்ய முடியாத நிலையை அடைந்துவிட்டது நாங்கள் யுஎஸ்எயிட்டினை மூடுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை யுஎஸ்எயிட் அமைப்பின் இரண்டு சிரேஸ்ட அதிகாரிகளை டிரம்ப் நிர்வாகம் விடுப்பில் அனுப்பியுள்ளது. https://www.virakesari.lk/article/205720
-
சந்ததிப் பெருக்கமும் இன்மையும்
குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ளவேண்டும், அதற்கு பெண் பிள்ளைகள் 25 வயதிற்குள்ளும் ஆண்கள் 28-30 வயதிற்குள்ளும் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
-
1.65 லட்சம் வேலை விசாக்கள் வழங்கவுள்ள இத்தாலி
இத்தாலி தனது 2025 வேலை விசா திட்டத்தின் கீழ் 1,65,000 வேலை விசாக்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. கூடுதலாக 10,000 விசாக்கள் பராமரிப்பு பணியாளர்களுக்காக (caregivers) ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் Decreto Flussi திட்டத்தின் கீழ், வேலை விசாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. மேலும், இந்த விசா முறைமையை எளிதாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தாலியில் தொழிலாளர் பற்றாக்குறை, முதியோர் அதிகரிப்பு, குறைந்த பிறப்பு விகிதம் போன்ற காரணங்களால் அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க, பல துறைகளுக்கு வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை ஈர்ப்பதே இத்தாலி அரசின் நோக்கமாகும். தொழிலாளர் தேவை அதிகரித்துள்ள முக்கிய துறைகள்: மருத்துவம்: செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் கட்டிடக்கலை: தொழிலாளர்கள், பொறியாளர்கள் விருந்தோம்பல் துறை: உணவக பணியாளர்கள், சமையலர்கள், ஹோட்டல் ஊழியர்கள் தகவல் தொழில்நுட்பம்: மென்பொருள் மற்றும் தொலைத்தொடர்பு நிபுணர்கள் பயிர் உற்பத்தி மற்றும் மீன்பிடி தொழில் , வேலை விசா வகைகள் மற்றும் தேவைப்படும் ஆவணங்கள் 1. Non-seasonal work visa (Decreto Flussi – Skilled Work Visa) – ஒரு இத்தாலிய நிறுவனத்திலிருந்து வேலை வாய்ப்பு பெற்றிருக்க வேண்டும் – நுல்லா ஓஸ்டா (Nulla Osta) வேலை அனுமதி பெற்றிருக்க வேண்டும் – தங்குமிடம், மருத்துவ காப்பீடு, வேலை அனுபவம்/தகுதிகள் போன்ற ஆவணங்கள் தேவை 2. சீசனல் வேலை விசா (Seasonal Work Visa) – விவசாயம், சுற்றுலா, மற்றும் விருந்தோம்பல் துறைகளுக்கு விண்ணப்பிக்கலாம் – வேலை காலம் 9 மாதங்கள் வரை இருக்கும் 3. பராமரிப்பு பணியாளர் விசா (Caregiver Visa) – முதியோர் மற்றும் உடல் நலக்குறைவுள்ளோருக்கான பராமரிப்பு பணியில் அனுபவம் அல்லது சான்றிதழ் தேவை – தங்குமிடம், வேலை வழங்குநரின் அனுமதி, மருத்துவக் காப்பீடு போன்றவை தேவை 4. சுயதொழில் விசா (Self-Employment Visa – Lavoro Autonomo) – தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், மற்றும் சுயதொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம் – நிதி நிலைத்தன்மை, தொழில்திட்டம் (Business Plan), வர்த்தகக் குழுவில் பதிவு போன்றவை தேவை 5. EU Blue Card – உயர் நிபுணத்துவம் (Highly Skilled Workers) வாய்ந்தவர்களுக்கு வழங்கப்படும் – இத்தாலியின் சராசரி ஊதியத்தை விட அதிக சம்பளம் உள்ள வேலை வாய்ப்பு தேவை 2025 இத்தாலி வேலை விசா விண்ணப்பிக்கும் வழிமுறைகள் 1. வேலை வாய்ப்பு மற்றும் தகுதி சரிபார்க்கவும் – Decreto Flussi திட்டத்தின் கீழ் உள்ள பணியிடங்களுக்கே விண்ணப்பிக்க வேண்டும். 2. வேலை வழங்குநரின் அனுமதி பெறவும் – இத்தாலிய நிறுவனத்திலிருந்து வேலை நியமனம் மற்றும் Nulla Osta பெற வேண்டும். 3. இத்தாலி தூதரகத்தில் விண்ணப்பிக்கவும் – தகுதியுள்ளவர்கள் தங்கள் நாட்டிலுள்ள தூதரகத்தில் வேலை விசாவிற்காக விண்ணப்பிக்க வேண்டும். 4. உள்நுழைவு விசா (Entry Visa) பெற்று இத்தாலிக்கு செல்ல வேண்டும் 5. இத்தாலியில் குடியுரிமை அனுமதி (Permesso di Soggiorno) பெற வேண்டும் – நாட்டிற்கு வந்த 8 நாட்களில் உள்ளூர் குடியேற்ற அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இத்தாலியில் வேலைவாய்ப்புகளை நாடும் வெளிநாட்டவர்களுக்கு இந்த விசா திட்டம் ஒரு பெரிய சந்தர்ப்பமாக உள்ளது. மேலும், இது இத்தாலியின் தொழிலாளர்கள் பற்றாக்குறையை குறைக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. https://thinakkural.lk/article/315097
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
மன்னாரில் கைதான 10 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் Published By: DIGITAL DESK 3 03 FEB, 2025 | 04:45 PM இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (3) உத்தரவிட்டது. அத்துமீறி நுழைந்து மன்னார் கடற்பரப்பில் இழுவைப் படகு ஒன்றில் மீன் மிடித்துக்கொண்டிந்த 10 இந்திய மீனவர்களை இன்று திங்கட்கிழமை (3) அதிகாலை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தாழ்வுபாடு கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் மதியம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பதில் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/205718
-
அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்பிற்கும், போராளிகளிற்கும், குழந்தைகள் உட்பட அவர்களின் குடும்பத்தவர்களிற்கும் என்ன நடந்தது - ஐநா அமைப்பிற்கு உருத்திரகுமாரன் கடிதம்
அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்பிற்கும், விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளிற்கும், குழந்தைகள் உட்பட அவர்களின் குடும்பத்தவர்களிற்கும் என்ன நடந்தது என்பது தெரியாத நிலை நீடிக்கின்றது - ஐநா அமைப்பிற்கு ருத்திரகுமாரன் கடிதம் Published By: RAJEEBAN 03 FEB, 2025 | 04:03 PM முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நிமிடங்களில் தங்கள் பிள்ளைகளுடன் சரணடைய நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களின் பெயர் விபரங்களை இலங்கை அரசாங்கம் வெளியிடவேண்டும் என பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐக்கியநாடுகளின் செயற்குழு வேண்டுகோள் விடுக்கவேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். ஆஸ்விட்ஸ் விடுதலை இடம்பெற்று 80 வருடங்களாவதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இனி ஒருபோதும் வேண்டாம் என்பது சாத்தியமாகவில்லை, உலகின் பல நாடுகளில் பலவந்தமாக காணாமல் போகச்செய்தல் இனப்படுகொலையின் ஒரு கருவியாக தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். பலவந்தமாக காணாமல்போதல் தொடர்பான உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் வடிவில் இலங்கை அரசாங்கம் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களிற்கு இறுதிவிடையை வழங்கி இந்த விவகாரத்திற்கு முடிவு காணவேண்டும் என இலங்கை அரசாங்கத்தை ஐநா கேட்டுக்கொள்ளவேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைவர் வி.ருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யுத்தத்தின் இறுதியில் கொண்டுசெல்லப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசபிற்கும், விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளிற்கும், சிறு குழந்தைகள் உட்பட அவர்களின் குடும்பத்தவர்களிற்கும் என்ன நடந்தது என்பது தெரியாத நிலை நீடிக்கின்றது என தனது கடிதத்தில் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் தெரிவித்த விடயத்தை அவர் மேற்கோள்காட்டியுள்ளார். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இராணுவத்தினராக இருக்ககூடியவர்கள் தங்கள் குடும்பங்களுடன் சரணடைந்தார்கள். அந்த முழுக்குடும்பங்களும் காணாமல்போயுள்ளன என தெரிவித்துள்ள அவர் அவர்களில் சிறுகுழந்தைகளும் சிறுவர்களும் இருந்தனர் என தெரிவித்துள்ளார் என சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலெமார்ட் தெரிவித்ததை அவர் நினைவுபடுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/205710
-
ட்ரம்பின் வரி விதிப்பு போர்; ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு
Published By: DIGITAL DESK 3 03 FEB, 2025 | 12:48 PM கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததை தொடர்ந்து திங்கட்கிழமை ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. கனடா மற்றும் மெக்சிகோ நாட்டிலிருந்த இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரியும் விதிப்பதாக ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்க பதிலடி கொடுக்கப்போவதாக கனடாவும் மெக்சிகோவும் அறிவித்துள்ளதோடு, சீனாவும் எதிராக செயற்படபோவதாகவும், உலக வர்த்தக அமைப்பில் சவால் விடுவதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் குடியேற்றத்தை தடுக்க இந்த வரி விதிப்புகள் அவசியம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலக நாடுகளில் ஹொங்கொங்கின் ஹாங் செங் 0.7 சதவீதமாகவும், ஜப்பானின் நிக்கேய் 225 2.8 சதவீதமாகவும், தென் கொரியாவின் கோஸ்பி 3 சதவீதமாகவும், அவுஸ்திரேலியாவின் 200 1.9 சதவீதமாகவும் பங்கு விலைச் சுட்டெண் சரிந்தன. சீனாவில் புத்தாண்டு விடுமுறைக்காக பங்கு சந்தைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்தது. சீனாவின் யுவானுக்கு எதிராக பெறுமதி அதிகரித்தது. அதேவேளை, 2003 ஆம் ஆண்டு பின்னர் கனேடிய டொலரின் பெறுமதி குறைவடைந்தது. "உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே ஒரு நீண்ட மற்றும் நீடித்த வர்த்தக இடைவெளியைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பு முதலீட்டாளர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது" என நிதிச் சேவை நிறுவனமான KCM வர்த்தகத்தின் தலைமை சந்தை ஆய்வாளர் டிம் வாட்டர் குறிப்பிட்டுள்ளார். ட்ரம்பின் வரி விதிப்பு பட்டியலில் அடுத்து எந்ததெந்த நாடுகள் இருக்கும் என முதலீட்டாளர்களுக்கு கவலை அதிகரித்துள்ளது. ட்ரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதும் "மிக விரைவில்" வரிகளை விதிக்கவுள்ளார். குறுகிய காலத்தில் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு வரி விதிப்பு பயனளிக்கும் அதேவேளை, நீண்ட காலத்திற்கு அவை தாக்கத்தை ஏற்படுத்தும் என முதலீட்டு வங்கியான சாக்ஸோவின் தலைமை முதலீட்டு மூலோபாய நிபுணர் சாரு சனானா எச்சரித்துள்ளார். அதேவேளை, வரிவிதிப்பை மீண்டும் மீண்டும் அமுல்படுத்துவதால் மற்றைய நாடுகள் அமெரிக்காவை நம்புவதைக் குறைப்பதோடு, டொலரின் உலகளாவிய பங்கை பலவீனப்படுத்தும்," என அவர் மேலும் தெரிவித்துள்ளார். செவ்வாய்கிழமை நள்ளிரவில் அமலுக்கு வரவுள்ள வரிவிதிப்பு குறித்து திங்கட்கிழமை கனடா மற்றும் மெக்சிகோ தலைவர்களிடம் பேசவுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/205668
-
யாழில் அதீத போதையால் சுகவீனமுற்ற இளைஞன் உயிரிழப்பு
03 FEB, 2025 | 12:34 PM அதீத போதை காரணமாக சுகவீனமுற்ற இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) உயிரிழந்தார். திடீரென சுகவீனமுற்ற நிலையில் யாழ் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இளைஞன் உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடையவர் ஆவார். இளைனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீத போதை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் சிறு குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டவர் ஆவார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் நண்பர்களுடன் இணைந்து போதையை நுகர்ந்த நிலையிலையே, அதீத போதை காரணமாக சுகவீனமடைந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. https://www.virakesari.lk/article/205664
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மீண்டும் திறக்கப்பட்ட ரஃபா எல்லை; சிகிச்சைக்காக செல்லும் பாலத்தீனர்கள் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த ரஃபா எல்லை மீண்டும் திறக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் காஸாவில் இருந்து சிறுவர்கள் எகிப்துக்கு அழைத்து செல்லப்படும் காட்சி இது. கடந்த மே மாதம் எகிப்து- காஸா இடையே உள்ள ஒரே வழியான ரஃபா எல்லையை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றி மூடியது. அதன் பிறகு, முதன் முறையாக தற்போது இந்த எல்லை திறக்கப்பட்டு 50 நோயாளிகள் சிகிச்சைக்காக எகிப்துக்கு கடந்த சனிக்கிழமை அன்று அழைத்து செல்லப்பட்டனர் அவர்களுள் புற்றுநோய் மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் அடங்குவர் என்று பாலத்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஜனவரி மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த வழியாக காஸா மக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முழு விவரம் காணொளியில்... - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cx2pyl17ej4o
-
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம் - நா.வேதநாயகன்
Published By: DIGITAL DESK 2 03 FEB, 2025 | 11:34 AM பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் சிறந்து வரவேண்டும் என்றால் அவர்களது ஒவ்வொரு செயற்பாடுகள் தொடர்பிலும் கண்காணிப்புடன் இருங்கள். தற்போதைய இளம் சமூகத்தை திசைதிருப்பும் வகையில் பல்வேறு விடயங்கள் நடக்கின்றன. அவற்றில் சிக்காமல் உங்கள் பிள்ளைகளை வளர்க்கவேண்டும் என பெற்றோர்களிடம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்தார். ஏடு நிறுவனத்தால் மாணவர்களுக்கான கற்றல் உதவிகள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர், கல்விக்குச் செய்யும் உதவியே மேன்மையானதும் முதன்மையானதுமாகும். ஒரு சமூகம் முன்னேற்றமடைந்து ஒரு கிராமம் அபிவிருத்தியடையவேண்டுமாயின் கல்வியே அடிப்படையானது. அந்த அடிப்படையில் கல்விக்கான உதவிகளை 16ஆண்டுகளாக முன்னெடுத்துவரும் ஏடு நிறுவனம் பாராட்டுக்குரியது. ஏடு நிறுவனத்தை இயக்கும் அணியும் சிறப்பானது. கடந்த காலங்களில் புலம்பெயர் தேசங்களில் பலர் செய்யும் உதவிகள் உரியமுறையில் இங்கு கிடைப்பதில்லை. சிலர் ஏமாற்றியிருக்கின்றார்கள். ஆனால் ஏடு நிறுவனம் நம்பிக்கைக்குரியவர்களை இங்கு வைத்து சிறப்பாக செயற்பட்டு வருகின்றது. அரசின் எந்தத் திணைக்களமாக இருக்கலாம் அல்லது வங்கிச் சேவைகளாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் அங்குள்ள பணியாளர்கள் மத்தியில் எதிர்மறையான எண்ணங்களும், தட்டிக்கழிக்கும் போக்கும் அதிகரித்துச் செல்கின்றது. ஒரு வசதியும் இல்லாத காலத்தில் சகல இடங்களிலும் மக்கள்நேய வாடிக்கையாளர் சேவை இருந்தது. ஆனால் இன்று எல்லாமே இயந்திரமயப்பட்டு இணையம் ஊடான சேவையாகிய பின்னர் மனித உணர்வு இல்லாமல் மனிதர்களும் இயந்திரமாகிவிட்டனர். அதனால்தான் மற்றவர்களை மதிக்கும் பண்போ, உதவும் எண்ணமோ இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது. இதை இங்கு சொல்வதற்குக் காரணம் உண்டு. இன்று இங்குள்ள பிள்ளைகள் நீங்கள்தான் வளர்ந்து பெரியவர்களாகி இந்தப் பகுதி மக்களுக்கு சேவை செய்யப்போகின்றவர்கள். நீங்கள் உங்களிடம் மற்றவர்களுக்கு உதவும் குணத்தை, இரங்கும் பண்பை, மதிக்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்தால், உங்களுக்குத் தெரியாத இடத்தில் நீங்கள் இருக்கும்போதும் கூட உங்களுக்கு ஆயிரம் கைகள் உதவத்தயாராக இருக்கும். அதுதான் இயற்கையின் படைப்பு. நீங்கள் செய்வது உங்களுக்கு திருப்பிக் கிடைக்கும், என்றார் ஆளுநர். இந்த நிகழ்வுக்கு வடக்கு மாகாண திறைசேரியின் பிரதம கணக்காளர் பா.ஜெயராசா தலைமை தாங்கினார். ஏடு ஐக்கிய இராச்சிய கிளையின் இணைப்பாளர் மருத்துவர் அமிர்தலிங்கம் பகீரதன் மற்றும் பாக்கியராஜ் ஆகியோரும், இணைப்பாளர் பா.சோமசுந்தரம் அவர்களும் அதிதிகளாகக் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/205653
-
யாழில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறந்து வைப்பு!
03 FEB, 2025 | 10:38 AM தேசிய மக்கள் சக்தியின் மேலும் ஒரு பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) யாழ்ப்பாணம் கோப்பாய் வீதியில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், எஸ்.ஸ்ரீ. பவானந்தராஜா, ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், கட்சி உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். மக்களின் நலன் கருதி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/205652
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
அண்ணா பல்கலை., மாணவி வழக்கின் எஃப்.ஐ.ஆர் வெளியான விவகாரம்: சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு எதிராக போராட்டம் ஏன்? பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 2 பிப்ரவரி 2025 அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் நடவடிக்கைகளைக் கண்டித்து சென்னையில் சனிக்கிழமையன்று (பிப்ரவரி 1) செய்தியாளர்கள் போராட்டம் நடத்தினர். செய்தியாளர்களின் செல்போன்களை சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் பறிமுதல் செய்ததைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடந்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், அடையாறு பகுதியில் சாலையோர உணவகத்தை நடத்தி வரும் ஞானசேகரன் என்ற நபரைக் கைது செய்தனர். அண்ணா பல்கலை. விவகாரம்: கையில் சிலம்புடன் போராட்டத்தில் ஈடுபட்ட குஷ்பூ - என்ன பேசினார்? அண்ணா பல்கலை. மாணவி வழக்கு - சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை பற்றி டிஜிபி அறிக்கை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: நடந்தது என்ன? 9 கேள்விகளும் பதில்களும் - முழு விவரம் 'அந்த இடத்தில் இருந்தால்தான் புரியும்' - அண்ணா பல்கலை. மாணவிகள், பெற்றோர்கள் கூறுவது என்ன? கசிந்த எஃப்.ஐ.ஆர் காவல்துறையின் விசாரணை தீவிரமடைந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த சில விவரங்கள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகின. புகார் அளித்த மாணவியின் பெயர், பாடப்பிரிவு, முகவரி உள்ளிட்டவை எஃப்.ஐ.ஆரில் இடம்பெற்றிருந்த நிலையில், சமூக ஊடகங்களிலும், வாட்ஸாப்பிலும் இந்த எஃப்.ஐ.ஆர் பகிரப்பட்டது. இந்தநிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க மூன்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. இக்குழுவிடம் வழக்கின் ஆவணங்களை கோட்டூர்புரம் மகளிர் போலீசார் ஒப்படைத்தனர். எஃப்.ஐ.ஆர் வெளியானது தொடர்பாக சென்னை கிழக்கு சைபர் கிரைம் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். தற்போது இந்த இரண்டு வழக்குகளையும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. மத்திய பட்ஜெட் 2025: 'ஏழை, எளிய மக்களுக்கானது இல்லை' - பொருளாதார நிபுணர்கள் கூறுவது என்ன?2 பிப்ரவரி 2025 தமிழ் - ஜப்பானிய மொழிகள் இடையே இவ்வளவு ஒற்றுமையா? விளக்கும் மொழியியல் வல்லுநர்கள்2 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,WWW.ANNAUNIV.EDU படக்குறிப்பு, புகார் அளித்த மாணவியின் பெயர், பாடப்பிரிவு, முகவரி உள்ளிட்டவை எஃப்.ஐ.ஆரில் இடம்பெற்றிருந்தன செல்போன்கள் பறிமுதல் எஃப்.ஐ.ஆர் வெளியான விவகாரத்தில் நான்கு செய்தியாளர்களுக்கு சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஜனவரி 28, 29 ஆகிய தேதிகளில் சாட்சி (Witness) என்ற அடிப்படையில் செய்தியாளர்கள் ஆஜராகியுள்ளனர். அப்போது, அவர்களில் மூன்று பேரின் செல்போன்களை சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். "செல்போனை பறிமுதல் செய்ததற்கான சீசர் மகஜர் ரசீது (seizure mahazar) உள்பட எந்த ஆவணத்தையும் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் தரவில்லை. பின்னர் நாங்கள் அதுகுறித்து கேட்டபிறகுதான் தந்தார்கள்" என்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுச் செயலாளர் அசீஃப் பிபிசி தமிழிடம் கூறினார். "எஃப்.ஐ.ஆர் வெளியான விவகாரத்தில் சாட்சியாக விசாரிப்பதற்காக சம்மனை அனுப்பினர். ஆனால் அதை வாட்ஸ்ஆப்பில் அனுப்பினர். சென்னை பத்திரிகையாளர் மன்றம் எதிர்ப்பு தெரிவித்ததும் தபால் மூலமாக அனுப்பினர்" எனக் கூறுகிறார் அசீஃப். தொடர்ந்து பேசிய அவர், "முதல் தகவல் அறிக்கையைப் பதிவேற்றம் செய்யும் சிசிடிஎன்எஸ் (CCTNS) தளத்தில், அண்ணா பல்கலைக்கழக மாணவி தொடர்புடைய எஃப்.ஐ.ஆர் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் அதைச் சிலர் பார்த்துள்ளனர். அதில் பத்திரிகையாளர்களும் உள்ளனர். 'இது தேசிய தகவல் மையத்தின் தவறு' என்று காவல்துறை விளக்கம் கொடுத்தது. ஆனால் செய்தியாளர்களுக்கு சிக்கல் கொடுக்கும் வகையில் சிறப்பு புலனாய்வுக் குழு செயல்படுகிறது," என்றார். ராஜீவ் காந்தி ஓட்டிய விமானத்தை கடத்த முயன்ற தீவிரவாதிகள் - சாதுர்யமாக தடுத்த ரா உளவு அமைப்பு2 பிப்ரவரி 2025 டொனால்ட் டிரம்ப் ஆவணங்கள் இல்லாத புலம்பெயர்ந்தோரை எங்கு அடைத்து வைக்க திட்டமிட்டுள்ளார்?2 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, சிறப்பு புலனாய்வுக் குழுவை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் போராட்டம் விசாரணையில் என்ன நடந்தது? கடந்த 28-ஆம் தேதி சிறப்பு புலனாய்வுக் குழுவின் முன் ஆஜரான செய்தியாளர்களிடம் வழக்குக்குத் தொடர்பில்லாத கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறும் அசீஃப், "சொத்து மதிப்பு எவ்வளவு, இந்த எஃப்.ஐ.ஆரை எங்காவது விற்பனை செய்தீர்களா, எஃப்.ஐ.ஆரை பதிவேற்றும் சிசிடிஎன்எஸ் தளத்தில் நுழைந்தது ஏன் என்றெல்லாம் கேட்டுள்ளனர்" எனக் கூறுகிறார். குற்றம் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் செய்தியாளர்கள், சிசிடிஎன்எஸ் தளத்தில் முதல் தகவல் அறிக்கைககளைப் பார்ப்பது வழக்கமான ஒன்றாக உள்ளதாகவும் ஆனால் அதைக்கூட சிறப்பு புலனாய்வுக் குழு கேள்விக்கு உள்ளாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் முதல் தகவல் அறிக்கை விவரங்கள் தொலைக்காட்சி சேனல்களில் வெளியானது ஏன் என்று கேட்டபோது, "எஃப்.ஐ.ஆரில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் எதையும் காட்டாமல், குற்றம் குறித்த விவரங்கள் அடங்கிய எஃப்.ஐ.ஆர் பகுதியை மட்டுமே காட்டப்பட்டது." என்று அசீஃப் பதிலளித்தார். எஃப்.ஐ.ஆர் வெளியான விவகாரத்தில், விசாரணை என்ற பெயரில் செய்தியாளர்கள் துன்புறுத்தப்படுவதாக கடந்த செவ்வாய்க் கிழமையன்று (ஜனவரி 29) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்யபிரகாசம் முறையிட்டார். "ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட விவரங்களைக் கேட்டுத் துன்புறுத்துவதால் உயர்நீதிமன்றம் தலையிட வேண்டும்" எனவும் அவர் கேட்டுக் கொண்டார். வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், "பொதுத்தளத்துக்கு எஃப்.ஐ.ஆர் வந்துவிட்டால் அதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். காவல்துறை எல்லை மீறிச் செயல்பட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகலாம்" எனக் கூறினர். குஜராத் கலவரத்தில் எரிக்கப்பட்ட குடியிருப்பு: நீண்ட காலம் நீதிக்காக போராடிய பெண் மரணம் - யார் அவர்?1 பிப்ரவரி 2025 மத்திய பட்ஜெட் 2025: சாமானியர்கள் கவனிக்க வேண்டிய 10 முக்கிய அறிவிப்புகள்1 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுச் செயலாளர் அசீஃப் டிஜிபி சொன்னது என்ன? இதன்பிறகு தமிழ்நாடு டி.ஜி.பி சங்கர் ஜிவாலை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் குழு நேரில் சந்தித்துப் பேசியது. அப்போது அவர், நீதிமன்றமே அமைத்த குழு என்பதால் தன்னால் தலையிட முடியாது எனவும் பொருளைக் கைப்பற்றினால் உரிய ரசீதைக் கொடுக்குமாறு சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் நேரில் வலியுறுத்துமாறும் கூறியுள்ளார். "டிஜிபி கூறியதைத் தொடர்ந்து, ஜனவரி 31ஆம் தேதி சிறப்பு புலனாய்வுக் குழுவில் உள்ள பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஐமான் ஜமால், சினேக பிரியா, பிருந்தா ஆகியோரை எழும்பூரில் உள்ள சிறப்பு புலனாய்வுக் குழு அலுவலகத்தில் சந்தித்தோம். செல்போன்களை பறிமுதல் செய்துவிட்டு அதற்கான ரசீதைக் கொடுக்காமல் இருப்பதற்கான காரணத்தைக் கேட்டோம். அதற்கு ஒரு சட்டப் பிரிவைக் கூறினர். மீண்டும் கேட்டபோது, மூன்று பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனுக்கு ஆதாரமாக ஆவணத்தின் நகல் ஒன்றைக் கொடுத்தனர்" எனக் கூறுகிறார் அசீஃப். கடந்த 31ஆம் தேதியன்றும் வேறு ஆறு செய்தியாளர்களிடம் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகக் கூறிய அவர், "அவர்களில் நான்கு பேரிடம் செல்போனை கேட்டுள்ளனர். அவர்கள் தர மறுத்துவிட்டதால் திங்கள்கிழமையன்று ஆஜராகுமாறு கூறியுள்ளனர்" என்றார். இதுதொடர்பாக, சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகளிடம் உரிய விளக்கம் பெற முடியவில்லை. புதிய வருமான வரி: உங்கள் சம்பளம் என்ன? எவ்வளவு வரி கட்ட வேண்டும்?- எளிய விளக்கம்2 பிப்ரவரி 2025 மத்திய பட்ஜெட் 2025: நிர்மலா சீதாராமன் உரையின் முக்கிய அம்சங்கள்1 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, சங்கர் ஜிவால் "சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு சில அதிகாரங்கள் உள்ளன. வழக்குக்கு தொடர்பில்லாத கேள்விகளைக் கேட்பதில் தவறு எதுவும் இல்லை. அவர்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவை இருக்கலாம்" என்றார் ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி. இந்தக் குழுவின் விசாரணை தொடர்பாக சந்தேகத்தை எழுப்புவது குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு சாதகமாக மாறிவிடும் என்கிறார் அவர். அதோடு, "சில நேரங்களில் சம்மனுக்கு ஆஜரான நபரிடம் தொடர்பில்லாத கேள்விகளைக் கேட்டு திசை திருப்புவது வழக்கம். இவ்வாறு மடைமாற்றுவதன் மூலம் வழக்குக்குத் தேவையான தகவல்களைப் பெற முடியும். இது விசாரணை நடைமுறை. அதைத் தவறு என்று கூற முடியாது" என்றார். ''பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப் பிரிவு 72ன்படி பாலியல்ரீதியான சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்களை பொதுவெளியில் அடையாளப்படுத்தக் கூடாது. அதையும் மீறி அடையாளப்படுத்தும் நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கலாம். இது தண்டனைக்குரிய குற்றம். இது சட்டம் என்பதால் செய்தியாளர்களையும் இது கட்டுப்படுத்தும்'' என்கிறார் மூத்த வழக்கறிஞர் ராமமூர்த்தி. ''பெயரை வெளியில் கசியவிட்டால் தண்டனை வழங்குவதை புதிய சட்டம் உறுதிப்படுத்துகிறது. பழைய சட்டங்களில் இதுபோன்ற தண்டனை விவரங்கள் குறிப்பிடப்படவில்லை" எனக் கூறுகிறார் அவர். 'எட்டு பேர் மீது சந்தேகம்' "அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் எஃப்.ஐ.ஆரை சிசிடிஎன்எஸ் தளத்தில் 11 பேர் திறந்து பார்த்துள்ளனர். அதில் மூன்று பேர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். சந்தேகத்துக்கு உரியவர்கள் என்று பார்த்தால் எட்டு பேர் வருகின்றனர்" எனக் கூறுகிறார் பெயர் கூற விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர். "யாருடைய செல்போன் மூலம் எஃப்.ஐ.ஆர் பரவியது என்பது தொடர்பாகவே சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. நீதிமன்றத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய தேவை இருப்பதால் செல்போன்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g9wxvzz7yo
-
யாழ், கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்
மிதமான நிலையில் காற்றின் தரம் Published By: DIGITAL DESK 3 03 FEB, 2025 | 10:11 AM இன்று திங்கட்கிழமை (03) நாள் முழுவதும் மிதமான நிலையில் காற்றின் தரம் காணப்படும். அதன்படி, காற்றின் தரக்குறியீடு 30 மற்றும் 78க்கு இடையில் பதிவாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நுவரெலியாவில் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான நிலையிலும் கொழும்பு 07, குருணாகல், வவுனியா, கண்டி, கேகாலை, நுவரெலியா, எம்பிலிப்பிட்டிய, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் நல்ல நிலையிலும் காணப்பட்டது. அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் வேளைகளில், குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் 1 மணி முதல் 2 மணி வரை காற்றின் தரக் குறியீடு (AQI) ஆரோக்கியமற்று காணப்படும். நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு அடுத்த 24 மணிநேரத்துக்குள் ஒரு நல்ல நிலைக்கு மேம்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/205649
-
மன்னார் நீதிமன்றத்துக்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி சூடு - இராணுவ சிப்பாய் உட்பட மூவர் கைது
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச்சூடு; மேலும் ஒரு சந்தேகநபர் கைது! 03 FEB, 2025 | 10:05 AM கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சந்தேகநபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் - பெரியவிளான் பகுதியில் வசிப்பவர் ஆவார். இந்நிலையில் விசேட அதிரடிப் படை மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/205646
-
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
Published By: DIGITAL DESK 3 03 FEB, 2025 | 11:22 AM இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபரும் நிர்வாகியுமான தேசமான்ய கந்தையா பலேந்திரா (கென்) தனது 85ஆவது வயதில் காலமானார். 1940 ஆம் ஆண்டு பிறந்த பாலேந்திரா இலங்கையிலும் அதன் பிராந்தியத்திலுள்ள நிறுவனங்களில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். மிகப்பெரிய கூட்டு நிறுவனமான John Keells Holdings Ltd இன் முதல் இலங்கைத் தலைவராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார். அவர் பிரண்டிக்ஸ் லங்கா லிமிடெட் மற்றும் கொமன்வெல்த் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தெற்காசிய பிராந்திய நிதியத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். https://www.virakesari.lk/article/205660