Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. 06 JAN, 2025 | 10:24 PM இலங்கை ஆயுதப்படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான 33 வருடகாலப் போர் இப்போதெல்லாம் நினைவில் இருந்து மெதுவாக அருகிக் கொண்டு போகிறது. விடுதலை புலிகள் இயக்கம் 1976 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி முறைப்படி ஆரம்பிக்கப்பட்டது. மூன்று தசாப்தகால போருக்கு பிறகு விடுதலை புலிகள் முல்லைத்தீவின் நந்திக்கடல் ஏரியில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி தங்களது தோல்வியைச் சந்தித்தார்கள். வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான அந்த இயக்கத்தினால் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட போர் சுதந்திரத்தின் பின்னரான இலங்கையின் வரலாற்றில் முக்கியமான ஒரு பாகமாகும். மேலும் வாசிக்க https://www.virakesari.lk/article/203167
  2. 01 FEB, 2025 | 05:02 PM பேராசிரியர் அம்பலம் புஸ்பநாதன் 1964 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 24ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை அல்வாய் நகரில் உள்ள வதிரிக் கிராமத்தில் பிறந்தார். யா.தேவரையாளி இந்துக்கல்லூரியில் தரம் ஒன்று முதல் உயர்தரம் வரை தனது பாடசாலைக் கல்வியை நிறைவுசெய்தார். 1989இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாக இளங்கலைப் பட்டத்தையும், 1996 இல் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டப் பின் படிப்பாக முகாமைத்துவத்தில் டிப்ளோமாவையும், 2008இல் சீனாவின் சியாமென் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ விஞ்ஞானத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார். 2006 இல் சீனாவின் சியாமென் பல்கலைக்கழகத்தில் சிறந்த சர்வதேச மாணவர் ஊக்குவிப்பு விருது அவருக்கு வழங்கப்பட்டது. பேராசிரியர் புஸ்பநாதன் அவர்கள் 1994ஆம் ஆண்டு முதல் வடமாகாணத்தின் இணைக்கப்பட்ட பல்கலைக்கழகக் கல்லூரியில் விரிவுரையாளராக தனது சேவையினை ஆரம்பித்து, யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் தொடர்ச்சியான தனது சேவையினையாற்றி இன்றைய வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வியாபாரக் கற்கைகள் பீடத்தின் மூத்த விரிவுரையாளராக இற்றைவரை கடமையாற்றிய அர்ப்பணிப்புள்ள கல்விமானாவார். பேராசிரியர் 2010ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை வியாபாரப் பொருளியல் துறையின் துறைத்தலைவராகவும், 2013ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை வியாபாரக் கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியாகவும் தனது கல்வி நிர்வாகப் பணியினைத் திறம்பட ஆற்றினார். மேலும் தனது சேவைக்காலம் முதல் 2024ஆம் ஆண்டு வரை வவுனியாப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு நிர்வாக அலகுகளில் பணிப்பாளராகவும் சிறந்த ஆலோசகராகவும் திகழ்ந்தார். பேராசிரியர் தொழில் முயற்சியாண்மை மற்றும் சந்தைப்படுத்தல், முகாமைத்துவத் துறைகளில் குறிப்பிடத்தக்க தனது பங்களிப்பினை வழங்கியதுடன், 2021ஆம் ஆண்டு முகாமைத்துவத்தில் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்று வியாபார கற்கைகள் பீடத்திற்கும் வவுனியாப் பல்கலைக்கழகத்திற்கும் பெருமையை ஈட்டித்தந்த மகானாவார். அன்னாரினால் வழங்கப்பட்ட சேவைகள் அவரது நாமத்தை என்றும் இச் சமூகத்திலும் பல்கலைக்கழகத்திலும் நிலைத்திருக்கச் செய்யும். அன்னாரின் பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வியாபாரக் கற்கைகள் பீடத்தின் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். https://www.virakesari.lk/article/205520
  3. 01 FEB, 2025 | 07:33 PM (துரைநாயகம் சஞ்சீவன்) தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை (01) காலை தம்பலகாமம் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி பகுதியில் உறவினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களினால் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபிக்கு மலர்தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர். தம்பலகாமம் பிரதேசத்தின் பாரதிபுரம் கிராமத்தில் 01.02.1998 அன்று இடம்பெற்ற படுகொலை சம்பவத்தில் ஆறுமுகம் சேகர் (வயது 32), அமிர்தலிங்கம் சுரேந்திரன் (வயது 13), அமிர்தலிங்கம் கஜேந்திரன் (வயது 17), பொன்னம்பலம் கனகசபை (வயது 47), முருகேசு ஜனகன் (வயது 18), நாதன் பவளநாதன் (வயது 29), சுப்பிரமணியம் திவாகரன் (வயது 23), குணரத்தினம் சிவராஜன் (வயது 23) உள்ளிட்ட 8 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். குறித்த படுகொலைகள் தொடர்பாக திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு முறையிடப்பட்டது. அந்தவகையில் 13 காவல்துறையினருக்கு எதிராக முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் குறித்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இங்கு 5 பேர் மீது 37 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. குற்றம் இடம்பெற்று 26 ஆண்டுகளின் பின்னர் 2024 ஏப்ரல் 26 அன்று இவ்வழக்குத் தொடர்பான தீர்ப்பு அநுராதபுரம் வடமத்திய மாகாண மேல்நீதிமன்ற நீதிபதி மனோஜ் தல் ஹொடபிட்டிய அவர்களினால் அன்றைய காலப்பகுதியில் கந்தளாய் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய அதிகாரி, பிரதிக் காவல்துறைப் பரிசோதகர், மேலும் 3 காவல்துறையினருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. https://www.virakesari.lk/article/205552
  4. பட மூலாதாரம்,YAAKKAI TRUST கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் கோவையில் காட்டுப் பகுதிக்குள் மறைந்திருக்கும் ஒரு கல்வெட்டு, முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் இருந்த ராசகேசரிப் பெருவழியையும், வணிகர்கள் மற்றும் மக்களுக்குப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டிருந்த சீருடையற்ற நிழல் படையையும் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கிறது. அது எந்தக் கல்வெட்டு? கோவை மாவட்டத்தில் கோவைப் புதுார் என்ற மாநகர எல்லைப் பகுதிக்கு அருகிலேயே சில மலைப் பகுதிகள் இருக்கின்றன. வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த காப்புக் காட்டுப் பகுதி, பாலக்காடு கணவாய்க்கு நேர் பாதையில் உள்ளது. அங்கு பாறைகள் சூழ்ந்த புதர்களுக்கு மத்தியில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. வட்டெழுத்துகளில் பொறிக்கப்பட்ட அந்தக் கல்வெட்டு, சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பிற்காலச் சோழ மன்னர்களின் வரிசையில் இரண்டாவது மன்னனாக இருந்த முதலாம் ஆதித்த சோழன் காலத்தைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டு, இராஜகேசரிப் பெருவழி என்ற நெடுஞ்சாலையைப் பற்றிக் கூறுகிறது. "இப்போது தொழில் மற்றும் வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் மேற்கு மண்டலப்பகுதி, அக்காலத்தில் இராசகேசரிப் பெருவழியின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. மேற்குக் கடற்கரைப் பகுதியையும் கிழக்குக் கடற்கரைப் பகுதியையும் இணைக்கின்ற பெருவழியாக இந்தப் பாதை இருந்துள்ளது. அந்த பெருவழியில், வணிகப் பண்டங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, சோழமன்னனால் ஒரு நிழல்படை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்புப் பலகையாகத்தான் இந்த கல்வெட்டு காணப்படுகிறது" என்கிறார் யாக்கை மரபு அறக்கட்டளையின் செயலாளர் குமாரவேல் ராமசாமி. பொங்கல் பண்டிகை வரலாறு: எப்போது தொடங்கியது? பழந்தமிழர் எவ்வாறு கொண்டாடினர்? சிந்து சமவெளி: தமிழ்நாட்டுக்கு தொடர்பு இருப்பதாக கூறும் புதிய ஆய்வு - எப்படி? என்ன தொடர்பு? மதுரையில் காவி கட்டி, பூணூல் அணிந்து மதமாற்ற பணி செய்த பாதிரியார் - கிறிஸ்தவ மிஷனரிகள் என்ன செய்தன? கன்னரதேவன்: போரில் சோழ இளவரசனை வீழ்த்திய ராஷ்டிரகூட மன்னர் - கல்வெட்டு தரும் சுவாரஸ்ய தகவல்கள் சோழ மன்னரால் அமைக்கப்பட்ட நிழல் படை கடந்த 1976ஆம் ஆண்டில் இந்த கல்வெட்டைப் பற்றிய தகவலறிந்து அதை நேரில் சென்று பார்த்து, அதிலுள்ள தகவல்களை பதிவு செய்தவர் தொல்லியல் ஆய்வாளர் அர.பூங்குன்றன். அப்போது கோவை மாவட்ட தொல்லியல் ஆய்வாளராக இருந்த பூங்குன்றன், பிறகு தமிழக தொல்லியல் துறையின் இணை இயக்குநராக இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். "காட்டுப் பகுதிக்குள் இருக்கும் இந்த கல்வெட்டைப் பார்த்த சிலர், புலவர் ராஜூவிடம் தெரிவித்துள்ளனர். அவர் இதைப் பற்றி என்னிடம் சொன்னார். அப்போது சுண்டக்காமுத்துாரிலிருந்து ஆறேழு கி.மீ. துாரம் நடந்து வந்து இந்த கல்வெட்டை பார்த்தேன். அதிலிருந்த எழுத்துக்கள் வட்டெழுத்துக்களாக இருந்தன. இராசகேசரிப் பெருவழி என்ற பெயர் மட்டும், வட்டெழுத்துடன் தமிழ் எழுத்துகளிலும் எழுதப்பட்டிருந்தது. அப்போதிருந்த தொல்லியல் துறை இயக்குநருக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தேன்" என இந்தக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதை விவரித்தார் பூங்குன்றன். பட மூலாதாரம்,YAAKKAI TRUST படக்குறிப்பு, இந்த கல்வெட்டைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று யாக்கை மரபு அறக்கட்டளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது அக்காலத்தில் இவ்வழியே வரும் பல நாட்டு வணிகர்கள் அனைவருக்கும் புரியும் வகையில், இரண்டு வரி வடிவங்களிலும் இது எழுதப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் பூங்குன்றன். "ஸ்வஸ்திஸ்ரீ கோ இராசகேசரிப் பெருவழி திருநிழலு மன்னுயிருஞ் சிறந்தமைப்ப ஒருநிழல் வெண்டிங்கள் போலோங்கி ஒருநிழல்போல் வாழியர் கோச்சோழன் வளங்காவிரி நாடன் கோழியர் கோக்கண்டன்குலவு" என இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. "சோழனின் குறியீடு சூரியன். பாண்டியர்களுக்கு சந்திரன். ஆனால் இந்த கல்வெட்டில் திங்கள் என்று குறிப்பிடுவதற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை. அதேபோல இதில் 3 இடங்களில் குறிப்பிடப்படும் நிழல் என்பதற்கும் அர்த்தம் புரியாமலிருந்தது. கேரளாவைச் சேர்ந்த மொழியியல் அறிஞர் ஒருவர், இதை விளக்கினார். அதாவது அக்காலத்தில் மன்னர்கள் பயணம் செய்யும்போது, அவர்களுக்கு சீருடையில்லாமல் பாதுகாப்புக்குச் செல்லும் படையைக் குறிப்பதுதான் அந்த நிழல். மன்னரே இல்லாத இப்பகுதியில் எதற்கு இந்த நிழல் படை என்ற கேள்வி எழும். அது வணிகர்களையும், மக்களையும் காப்பதற்கு மன்னரால் உருவாக்கப்பட்ட படையைக் குறிக்கிறது" என்கிறார் பூங்குன்றன். 'தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்பாடு' - மனித நாகரிக வளர்ச்சியில் இது ஏன் முக்கியம்?25 ஜனவரி 2025 ஆலிவ் ரிட்லி: மீனவர்கள் தெய்வமாக வழிபடும் இந்த ஆமைகள் சென்னை கடற்கரைகளில் இறந்து கரை ஒதுங்குவது ஏன்?24 ஜனவரி 2025 'கோ கண்டன்- ஆயிரம் வீரர்களைக் கொன்றவன்' பட மூலாதாரம்,XAVIER SELVAKUMAR படக்குறிப்பு, சோழர்களின் ஆட்சிப் பரப்பு பரந்து விரிந்த காலகட்டத்தில் கொங்கு நாட்டில் நிர்வாக ரீதியாகப் பதிவு செய்த முதல் கல்வெட்டு என்று இதைக் கூற முடியும் என்கிறார் குமாரவேல் ராமசாமி கொங்கு நாட்டையும் முதலாம் ஆதித்த சோழன் வென்றதற்கு இந்த கல்வெட்டும் ஒரு சான்று என்று கூறும் பூங்குன்றன், அந்த மன்னனைப் பற்றி மேற்கு மண்டலத்தில் வேறு எங்கும் கல்வெட்டு கிடைத்ததில்லை என்கிறார். இந்தக் கல்வெட்டில் கோ கண்டன் என்றொரு வார்த்தை இடம்பெற்றுள்ளது. "ஆயிரம் வீரர்களைக் கொன்றவருக்குதான் கோ கண்டன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிற்காலச் சோழர்களில், முதலாம் ஆதித்தன், இரண்டாம் இராஜராஜன் இருவருக்கும்தான் இந்த கோ கண்டன் என்ற பெயர் தரப்பட்டுள்ளது. தஞ்சாவூர் அருகே தில்லை தானம் என்ற ஊரில் கிடைத்த கல்வெட்டின்படி, 'தொண்டை நாட்டில் பாவிய இராசகேசரி' என்பது முதலாம் ஆதித்தனை மட்டுமே குறிக்கும். அதனால் இது முதலாம் ஆதித்தனால் உருவாக்கப்பட்ட பெருவழிக் கல்வெட்டு என்பது உறுதி" என்றார் பூங்குன்றன். மதுரை டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து - டெல்லியில் அமைச்சரை சந்தித்த மக்கள் கூறியது என்ன?23 ஜனவரி 2025 பரந்தூர்:'முப்பாட்டன் வாழ்ந்த இடத்தை விட்டுப் போக முடியாது' - 900 நாட்களைக் கடந்து போராடும் மக்கள் - கள நிலவரம்23 ஜனவரி 2025 பட மூலாதாரம்,YAAKKAI TRUST படக்குறிப்பு, நிழல்படை என்பது வணிகர்களையும், மக்களையும் காப்பதற்கு மன்னரால் உருவாக்கப்பட்ட படை என்கிறார் பூங்குன்றன் ஆனால், இந்த இராஜகேசரிப் பெருழியை உருவாக்கியது ஆதித்த சோழன் அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த பெருவழி பயன்பாட்டில் இருந்தாலும், அந்தப் பாதையில் வணிகர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தி, தன் பெயரைச் சூட்டியது முதலாம் ஆதித்த சோழன்தான் என்கிறார் வரலாற்று ஆய்வாளர் சி.ஆர். இளங்கோவன். "வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வாணிகம் செய்ய வந்தவர்கள், வெகுகாலமாக கேரள கடற்கரைக்கு வந்து, அங்கிருந்து கடல் வழியாகவே தஞ்சாவூர் கடற்கரைப் பகுதியை வந்தடைந்தனர். தரைவழியில் செல்வதற்கான பாதையின் நடுவே மேற்குத் தொடர்ச்சி மலை இருப்பதால், அது காடாக இருக்குமென்று கருதியுள்ளனர். பாலக்காடு கணவாய் வழியாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பழமையான ஒரு பாதை இருப்பதை பின்பே கண்டறிந்துள்ளனர். அந்த வழிதான் இராசகேசரிப் பெருவழி" என்கிறார் அவர். இந்திய பங்குச் சந்தையில் ரூ.7 லட்சம் கோடி சரிவு - டிரம்ப் காரணமா? முதலீடு செய்யலாமா, கூடாதா?22 ஜனவரி 2025 டாலருக்கு எதிராக ரூபாயின் வரலாறு காணாத வீழ்ச்சி சாமானியர்களை எவ்வாறு பாதிக்கும்? இதற்கும் டிரம்புக்கும் என்ன தொடர்பு?21 ஜனவரி 2025 பட மூலாதாரம்,YAAKKAI TRUST படக்குறிப்பு, இந்தியாவில் பயன்பாட்டிலுள்ள ஒரே பழமையான பெருவழி இதுதான் என்று இளங்கோவன் கூறுகிறார் ரோமானிய நாணயங்கள் "தஞ்சாவூர் பகுதியிலுள்ள பூம்புகார் போன்ற ஒரு துறைமுகத்திலிருந்து, கேரளாவின் கோழிக்கோடு போன்ற துறைமுக நகரத்தை இணைக்கின்ற பாதையாக இந்த இராசகேசரிப் பெருவழி இருந்திருக்கலாம். தோராயமாக 500 கி.மீ. துாரமுள்ள இந்த வழி, வணிகத்துக்கு பெரும் பங்காற்றியுள்ளது. அதனால் கொள்ளையர்களிடமிருந்து வணிகர்களையும், பொருட்களையும் காப்பாற்ற ஒவ்வொரு 50 கி.மீ. துாரத்துக்கும் நிழல் படை அமைத்து, பொருள் பாதுகாப்பு அறை போன்ற ஓர் அமைப்பை சோழ மன்னன் ஏற்படுத்தியதையே இந்த கல்வெட்டு சுட்டிக்காட்டுகிறது" என்கிறார் சி.ஆர். இளங்கோவன். மேற்கு பகுதியில் 20 பெருவழிகள் இருந்ததாகவும் அதில் இந்த இராசகேசரிப் பெருவழிதான் மிக முக்கியமானதாக இருந்தது என்று குறிப்பிடும் பூங்குன்றன், இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலிருந்து கிழக்குக் கடற்கரையை இணைக்கும் இந்தப் பெருவழியைப் பயன்படுத்தி, ரோமானியர்கள் வணிகம் செய்தனர் என்கிறார். இந்தியாவில் கிடைக்கும் ரோமானிய நாணயங்களில் 80 சதவீதம் மேற்கு பகுதியில்தான் கிடைத்தது என்கிறார் அவர். மதுரை: 'புதைக்க சுடுகாடுகூட இல்லை' - விமான நிலைய விரிவாக்கத்தை எதிர்த்து போராடும் மக்கள்25 ஜனவரி 2025 தந்தை இறந்து 15 நாட்களுக்கு மேலாகியும் இறுதிச் சடங்குகளை செய்ய முடியாத மகன் - கிறிஸ்தவர் என்பதால் புறக்கணிப்பா?24 ஜனவரி 2025 பட மூலாதாரம்,XAVIER SELVAKUMAR படக்குறிப்பு, கொங்கு நாடு வணிக வழிகளின் பிரதான சந்திப்பு என்று பெயர் பெற்றிருந்தது, அதில் முக்கியமானது இந்த இராசகேசரிப் பெருவழி என்கிறார் வரலாற்று ஆய்வாளர் இளங்கோவன் இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பெருவழிக்கு, ஓரிரு கி.மீ. துாரத்தில்தான், தற்போதுள்ள சேலம்– கொச்சி நெடுஞ்சாலையும் அமைந்துள்ளது. புறவழிச்சாலை அமைக்கப்படுவதற்கு முன்பே, பல ஆண்டுகளாக அந்த சாலையே பிரதான சாலையாக பயன்பாட்டில் இருந்தது. கல்வெட்டு அமைந்துள்ள பகுதிக்கு அருகில் அறிவொளி நகர் என்ற தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட வாரியக் குடியிருப்பு உள்ளது. சற்று தொலைவில் மேற்குப் புறவழிச்சாலை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. அதனால் மனிதர்களாலோ, இயற்கையாலோ இந்த கல்வெட்டு அழியாமல் பாதுகாக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இராசகேசரிப் பெருவழி கல்வெட்டு குறித்து, கோவை மாவட்ட தொல்லியல் அலுவலர் (பொறுப்பு) சுரேஷிடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு, ''அந்த கல்வெட்டைப் பாதுகாப்பது குறித்து, இதுவரை எந்த கோரிக்கையும் தொல்லியல் துறைக்கு வரவில்லை. ஆனாலும் அதன் முக்கியத்துவம் கருதி, அந்த கல்வெட்டை ஆய்வு செய்து, தேவைப்படின் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c62qgd8jl30o
  5. 01 FEB, 2025 | 04:15 PM இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைகின்ற மீனவர்களை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் குறிப்பாக கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழுமையாக உறுதுணையாக இருப்போம் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச தலைவர் நூர் மொஹமட் ஆலம் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (31) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய மீனவர்கள் கடந்த வாரம் இலங்கை கடற்பரப்பில் நுழைந்த போது ஏற்பட்ட அசம்பாவிதத்தை இந்திய தரப்பு பூதாகாரமான விடையமாக மாற்றியுள்ளனர். அதை எங்களால் சகித்துக் கொள்ள முடியாத நிலையில் அவர்களின் வார்த்தைப் பிரயோகங்கள் அமைந்துள்ளது. நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். இந்திய மீனவர்களை அத்து மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைய வேண்டாம். அவர்கள் நுழைகின்ற சமயத்தில் இலங்கை கடற்படை அவர்களை கட்டுப்படுத்தாமல் அசமந்தப் போக்குடன் நடந்து கொண்டு இருக்கிறது. இவ்விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்தையும் நாங்கள் விமர்சித்து குறை கூறி வருகிறோம். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுல் நுழைகின்ற நாட்களில் இலங்கை மீனவர்கள் குறிப்பாக வட பகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் துன்பங்களை அந்த மீனவர்களுக்கு ஏற்படுகின்ற சொத்து இழப்புக்களை கணக்கிட்டு பார்த்தால் சுமார் 700 மில்லியன் ரூபாய் சொத்துக்களை வடபகுதி கடலில் இழந்திருக்கிறோம். இந்திய மீனவர்களின் அத்து மீறிய நடவடிக்கையினால் மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் இவ்வளவு நாசமாகியுள்ளது. இந்த விடையங்கள் அனைத்தும் இந்திய தரப்பிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதை நாங்கள் ஆதார பூர்வமாக கூறுகின்றோம். எனவே இந்திய மீனவர்கள் உள்நுழைவதை தடுப்பதற்கு நாங்கள் அரசுக்கு விடுக்கின்ற கோரிக்கைகள் அல்லது அழுத்தங்கள் காரணமாக கடற்படையினர் இலங்கை கடல் எல்லையில் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். எனினும் இலங்கை எல்லையில் இன்றி எமது கரையோர பகுதிகளில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த இந்திய மீனவர்கள் இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய தரப்பினரால் கூறப்படுகின்ற விடையங்களை சகித்துக் கொள்ள முடியாத நிலை உள்ளது. வெறுமனே இலங்கை கடற்படை, வட பகுதி மீனவர்கள், இலங்கை அரசின் மீதும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். குறித்த துன்பியல் சம்பவமானது இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் படகில் கடற்படை வீரர் ஒருவர் பாய்ந்து படகை நிறுத்தக் கோரிய போது குறித்த கடற்படை வீரரை கடத்த முயன்ற போது குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. மீனவர்களின் படகில் 5 முதல் 8 மீனவர்கள் மாத்திரம் கடலில் பயணிப்பதை நாம் பார்க்கின்றோம். ஆனால் குறித்த படகில் 13 பேர் வரை பயணித்துள்ளனர். ஒரு படகில் 13 பேர் பயணிக்க இந்திய தரப்பு எவ்வாறு அனுமதி வழங்கியது? பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் இந்திய மீனவர்களுக்கு மீன் பிடிச் சிட்டை வழங்குகின்றனர். இந்த நிலையில் இவர்கள் அனைவரும் ஒரு படகில் எவ்வாறு பயணித்தார்கள்? இந்திய கடல் இல்லையை தாண்டக்கூடாது என்கின்ற நிபந்தனையும் குறித்த சிட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையிலே குறித்த நிபந்தனைகளையும் மீறி அவர்கள் வருகின்றனர். எனினும் அவ்வாறு வருகின்றவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட்டு, மீண்டும் விடுவிக்கப்படுகின்றனர். இந்த நிலையிலே அவர்கள் தொடர்ந்து இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான மீனவர்கள் மீது இந்திய தரப்பு இது வரை என்ன நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தியா ஒரு வல்லரசு நாடு என்று கூறிக்கொண்டு, சந்திர மண்டலத்திற்கும், செவ்வாய்க்கிரகத்திற்கும் ஆய்வுக்காக அனுப்புகின்றனர். எனினும் தங்கள் நாட்டு மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை தாண்டுகின்ற போது உயிரிழப்புக்களையும் சந்திக்கின்றார்கள். கடற்படையினரால் கைதும் செய்யப்படுகின்றனர். எனினும் இலங்கை அரசாங்கத்திடம் எவ்வித தொழில்நுட்பமும் இல்லை. எனவே இந்தியாவினால் இயலாதா? தமது நாட்டின் எல்லையை பாதுகாக்க? தமது நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படுகின்றார்கள் என கூறும் இந்திய அரசு தமது மீனவர்களை பாதுகாக்க அவர்களே முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமது நாட்டு எல்லையையும் பாதுகாக்க வேண்டும். ஏன் இவ்வாறான ஒரு நிலைப்பாட்டிற்கு இந்திய அரசு வருகின்றது இல்லை. இலங்கையில் தனது ஆதிக்கத்தை காண்பிக்கவே இந்தியா இவ்வாறு செயல்படுகின்றது. இதனை வட பகுதி மீனவர்களும் இலங்கை மக்களும் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அத்து மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைகின்ற மீனவர்களை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் குறிப்பாக கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழுமையாக உறுதுணையாக இருப்போம். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வருவதை தடுப்பதற்கு கடற்படைக்கும் இலங்கை அரசுக்கும் ஒத்துழைப்பு வழங்குவோம். இந்திய தரப்பிற்கு ஒரு செய்தியை கூற விரும்புகின்றோம். இலங்கை எல்லையை தாண்டி மீன் பிடிக்க வராதீர்கள். இவ்வாறு எல்லையை தாண்டினால் இவ்வாறான துன்பியல் சம்பவம் நடப்பதை தவிர்க்க முடியாது என்றார். https://www.virakesari.lk/article/205514
  6. 01 FEB, 2025 | 02:40 PM யாழ்ப்பாண மாவட்டத்தின் கலாசார ரீதியான சுற்றுலாவை மேன்மைப்படுத்தும் வகையில், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சுற்றுலா மையங்கள் தொடர்பில் டிஜிற்றல் அடிப்படையிலான சுற்றுலா வழிகாட்டி நூலானது நேற்று வெள்ளிக்கிழமை (31) ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வைத்து, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் முன்னிலையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்துப் பிரதேச செயலகங்க பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் நூற்றுக்கு மேற்பட்ட கலாசார ரீதியான சுற்றுலா மையங்களை உள்ளடக்கிய வகையில் விஞ்ஞான ரீதியான ஆய்வினூடாகவும், களத்தரிசிப்பினூடாகவும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தினால் தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாக யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலா மையங்களையும் சுற்றுலாப் பயனிகளையும் இணைப்பதற்கான பிரதான சரியான பெறுமதிப்படுத்தப்பட்ட தகவல் நூல் இன்மையினால் சுற்றுலா அபிவிருத்தியில் அவை எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதனை உணர்ந்து, இவ் பிரதான இடை வெளியை நிவர்த்தி செய்யும் நோக்கில் மாவட்டச் செயலகத்தால் பல்வேறு நூல்கள் மற்றும் கையேடுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு அங்கமாக மேற்படி நூல் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/205503
  7. 01 FEB, 2025 | 01:17 PM (செ.சுபதர்ஷனி) இந்நாட்டில் அதிகரித்துள்ள தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் சுகாதார கட்டமைப்பின் மீது பெரும் சுமையாக மாறியுள்ளன. ஆகையால் நோய்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதுடன் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுபாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இலங்கை போஷாக்கு சங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆய்வறிக்கை வெயிட்டு அமர்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில், நாட்டின் போசாக்கு நிலையை உயர்த்துவதன் மூலம் சுகாதாரத்தை பாதுகாப்பதுடன், உடலியல் செயற்பாடுகளுக்கு வாய்பளிப்பதன் மூலம் தொற்றா நோய்களில் இருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பாக பொதுமக்களை தெளிவுபடுத்துவதும், நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுவது அவசியம். இது தனிநபர் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், நாட்டின் சுகாதார கட்டமைப்பு மீதான தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும் உதவும். இந்த இலக்கை அடைய, மருத்துவ வல்லுநர்கள், போசாக்கு நிபுணர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய சமூகம் சார்ந்த பல பங்குதாரர்களின் பங்களிப்புடன் நோய் தடுப்புக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். மேற்படி விடயத்தில் இலங்கை ஊட்டச்சத்து சங்கம் தனது முதன்மையான பங்களிப்பை வழங்கி வருவதும் பாராட்டத்தக்க விடயமாகும். இது ஊட்டச்சத்து நிபுணர்கள், வைத்தியர்கள், மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் பரந்த அமைப்பாக உள்ளது. ஆகையால் இந்நாட்டில் அதிகரித்துள்ள தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் சுகாதார கட்டமைப்பின் மீது பெரும் சுமையாக மாறியுள்ளன. ஆகையால் நோய்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதுடன் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுபாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/205493
  8. அமெரிக்க சந்தையை ஆட்டம் காண வைத்துள்ள டீப்சீக் ஏஐ செயலி பற்றி ஆஸ்திரேலியா சந்தேகத்தை கிளப்புகிறது. அமெரிக்கா கடற்படை தனது வீரர்கள் இந்த செயலியை பயன்படுத்த தடை விதித்திருப்பதாக ஊடக செய்திகள் கூறுகின்றன. உண்மையில் என்ன நடக்கிறது. இந்த ஏஐ செயலி பாதுகாப்பானதா? டெக் உலகில் பரபரப்பை ஏற்படுத்திய ஏ.ஐ செயலியான டீப் சீக் குறித்து ஆஸ்திரேலிய அறிவியல் துறை அமைச்சர் எட் ஹுசிக், தனியுரிமை பாதுகாப்பு குறித்த கவலைகளை வெளிப்படுத்தி உள்ளார். இந்த சீன செயலி குறித்து முதல் மேற்கத்திய அரசாங்க உறுப்பினராக பாதுகாப்பு கவலைகளை வெளிப்படுத்தி உள்ளார் எட் ஹுசிக். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "டீப்சீக் அமெரிக்கா விழித்தெழுவதற்கான ஒரு அழைப்பு" என்று கூறினார். ஆனால், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அவர் குறிப்பிடவில்லை. இந்த செயலி குறித்த கவலைகளை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அமைச்சர் ஹுசிக், தரவு மற்றும் தனியுரிமை மேலாண்மை உட்பட பல பதிலளிக்கப்படாத கேள்விகள் உள்ளன என, ஏபிசி செய்தியிடம் கூறினார். எனினும், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள பயனர்கள் இதுவரை அத்தகைய எச்சரிக்கையைக் வெளிப்படுத்தவில்லை. டீப் சீக் செயலியை இந்த இரண்டு நாடுகளிலும் 3 மில்லியன் பேர் டவுண்லோடு செய்திருப்பதாக டிஜிட்டல் சந்தை ஆய்வுத் தளமான சென்சார் டவர் கூறுகிறது. சாத்தியமான பாதுகாப்பு மற்றும் நெறிமுறை கவலைகள் காரணமாக அமெரிக்க கடற்படை அதன் உறுப்பினர்கள் டீப்சீக் செயலிகளைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக தடை செய்துள்ளதாக CNBC ஊடகம் தெரிவித்துள்ளது. விரிவாக காணொளியில்... - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cnvqgdvz554o
  9. 01 FEB, 2025 | 11:38 AM (எம்.வை.எம்.சியாம்) நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுப்பதே எமது இலக்காகும். அந்த இலக்கை நோக்கியே நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மீண்டும் இந்த நாட்டை தோல்வி அடைந்த பழைய பாதையில் அழைத்துச் செல்ல முடியாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்ற யாழ். வல்வெட்டித்துறை கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அமைச்சர் மேலும்தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ளன, எனினும் எமது மக்களின் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை. இந்த மக்கள் பெரும் துன்பத்திற்கு மத்தியில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நாட்டில் வறுமைக் கோட்டில் வாழும் மக்களை கொண்ட மாகாணமாக வட மாகாணம் உள்ளது. குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். அன்று எமது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்த மக்களை மீட்டெடுப்பதே தனது நோக்கம் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மக்களுக்கு வளமான வாழ்க்கையை உருவாக்கிக் கொடுப்பதே தனக்கும் மக்களுக்கும் இடையே உள்ள பிணைப்பு எனக் கூறியிருந்தார். வட பகுதியில் தற்போது போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. வாள்வெட்டு சம்பவங்களும் அதிகரித்துள்ளன. சுதந்திரமாக வாழமுடியாத சூழ்நிலை உள்ளதாக தேர்தலுக்கு முன்னதாக என்னை சந்தித்த மக்கள் கூறினார். இதற்கு நிரந்தர தீர்வை பெற்றுத் தருமாறு கோரினார்கள். நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுப்பதே எமது இலக்காகும். அதுவே எமது கனவாகும். அந்த இலக்கை நோக்கியே நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இரண்டு பிரதான தேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். எமக்கு வாக்களிக்காத மக்களையும் இதில் இணைத்துக் கொண்டு ஒன்றாக பயணிக்க நாம் தயாராகவே உள்ளோம். மீண்டும் இந்த நாட்டை தோல்வி அடைந்த பழைய பாதையில் அழைத்துச் செல்ல முடியாது என்றார். https://www.virakesari.lk/article/205489
  10. பட மூலாதாரம்,GETTY IMAGES 1 பிப்ரவரி 2025, 03:33 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிர்மலா சீதாராமன் தனது உரையைத் தொடங்கினார். அவர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சியினர் அமைதியாகினர். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். "அனைத்து பெரிய பொருளாதார நாடுகளுள் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் ஒன்றாக உள்ளது. இந்தியாவின் கடந்த 10 ஆண்டு வளர்ச்சிப் பாதை மற்றும் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் உலகளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் திறன் மீது நம்பிக்கை உயர்ந்துள்ளது" என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இன்று பட்ஜெட் தாக்கல்: வேலைவாய்ப்பு, பணவீக்கம் - இந்திய அரசு முன் உள்ள சவால்களும் எதிர்பார்ப்புகளும் பாகிஸ்தானில் பல்லாயிரம் கோடி ரூபாய் தங்க இருப்பு கண்டுபிடிப்பா? என்ன நடக்கிறது? டொனால்ட் டிரம்பின் திட்டங்களால் அமெரிக்காவுக்கே ஆபத்தா? ஐ.எம்.எஃப் எச்சரிப்பது ஏன்? ஹிண்டன்பர்க்: அதானி குழுமத்தின் ஆணிவேரை அசைத்துப் பார்த்த நிறுவனம் மூடப்படுவது ஏன்? வருமான வரி மசோதா வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ரூ. 12 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி கிடையாது. புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். காப்பீட்டுத் துறையில் வெளிநாட்டு முதலீடு 74 சதவீதத்தில் இருந்து, 100 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. பட மூலாதாரம்,ANI விவசாய துறை அறிவிப்புகள் பிகாரில் மக்கானா வாரியம் அமைக்கப்படும். வேளாண் உற்பத்தி மற்றும் விற்பனையில் இது உதவும். மக்கானா (தாவர விதைகள்) விவசாயிகளுக்கு இது பயனளிக்கும். உலகளவில் 85% மக்கானா உற்பத்தி இந்தியாவில் நடைபெறுகிறது. இதில், இந்தியாவில் 90% மக்கானா பிகாரில் உற்பத்தியாகிறது. பிகாரில் உணவு பதப்படுத்துதலுக்காக தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் நிர்வாக மையம் அமைக்கப்படும். இந்த பட்ஜெட்டில் 10 முக்கியப் பகுதிகள் உள்ளன. விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் மீது இந்த பட்ஜெட் கவனம் செலுத்துகிறது. வேளாண் திட்டத்தில் 100 மாவட்டங்கள் ஊக்குவிக்கப்படும். பிரதம மந்திரி தன் தானியா எனும் திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படும். அதிக விளைச்சல் தரும் விதைகளுக்கென புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். காய்கறிகள் மற்றும் பழங்களுக்கென ஒருங்கிணைந்த வகையில், மாநிலங்களுடன் இணைந்து புதிய திட்டம் தொடங்கப்படும். உணவுத் துறையில் தன்னிறைவு அடைவதற்கு கவனம் செலுத்தப்படும். எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளுக்கு என ஆறு ஆண்டுகளாக திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் துவரை, உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளின் உற்பத்தி ஊக்குவிக்கப்படும். கிசான் கடன் அட்டை மூலம் விவசாயிகள் கடன் பெறும் தொகையின் அளவு உயர்த்தப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதன்படி, ஏற்கெனவே உள்ள ரூ.3 லட்சம் எனும் தொகையிலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்கா: வெடித்துச் சிதறிய விமான ஆம்புலன்ஸ், குழந்தை நோயாளியுடன் சென்றபோது நடந்த விபத்து4 மணி நேரங்களுக்கு முன்னர் கர்நாடகாவில் குணப்படுத்த முடியாத நோயாளிகள் கண்ணியத்துடன் இறக்க அனுமதி - முக்கிய செய்திகள்7 மணி நேரங்களுக்கு முன்னர் தொழில் துறை தொடர்பான அறிவிப்புகள் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் அரசு வழங்கும் பங்காக ஏற்கெனவே உள்ள ரூ.10,000 கோடியுடன் கூடுதலாக ரூ.10,000 கோடி ஒதுக்கப்படும். முதன்முறையாக ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தொடங்கும் 5 லட்சம் பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்படும். காலணிகள் மற்றும் தோல் துறையில் கவனம் செலுத்தும் வகையில் திட்டம் ஒன்று தொடங்கப்படும். இதன்மூலம், 22 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் பொம்மைகள் தயாரிப்பில் இந்தியா மையமாக உருவெடுக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை வழங்கப்படும். இது, யூபிஐயுடன் இணைக்கப்படும். இ-ஷ்ரம் (e-shram) இணையதளத்தில் கிக் தொழிலாளர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன்மூலம், அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும். மேலும், பிரதம மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா திட்டத்தின் கீழ் அவர்களுக்கு சுகாதார காப்பீடு வழங்கப்படும். நிரந்தர, முழுநேர வேலைகளுக்குப் பதிலாக, குறுகிய கால அளவில், நேர நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும் வேலைவாய்ப்புகளைக் கொண்ட சந்தையே கிக் பொருளாதாரம் என அறியப்படுகிறது. இவை பெரும்பாலும், ஓலா, உபெர், ஸ்விக்கி, ஜொமாட்டோ, அர்பன் கம்பெனி போன்ற செயலி-சார் பணிகளாகச் சமீப காலங்களில் அடையாளப்படுத்தப்படுகின்றன. ஆவடி: தந்தை, மகள் உடலை அழுகாமல் 5 மாதம் பூட்டிய வீட்டில் பதப்படுத்திய மருத்துவர் - என்ன நடந்தது?3 மணி நேரங்களுக்கு முன்னர் விராட் கோலி: ரஞ்சி கோப்பை போட்டியில் க்ளீன் போல்ட் – சாம்பியன்ஸ் கோப்பையில் தொடர வேண்டுமா?31 ஜனவரி 2025 கல்வி பள்ளிகளில் குழந்தைகளிடையே அறிவியல் சிந்தனையை வளர்க்கும் வகையில் அடல் டிங்கெரிங் ஆய்வு மையங்கள் அமைக்கப்படும். நாடு முழுதும் 50 ஆயிரம் ஆய்வு மையங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உருவாக்கப்படும். ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இணையத் தொடர்பை ஏற்படுத்துவதற்கு பிராட்பேண்ட் வசதி ஏற்படுத்தப்படும். கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி நிறுவனங்களில் மாணவர்களின் எண்ணிக்கை 100% அதாவது 65,000இல் இருந்து 1.35 லட்சம் எனும் அளவில் உயர்ந்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்குப் பிறகு அமைக்கப்பட்ட 5 ஐஐடி நிறுவனங்களில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். ஐஐடி பாட்னா விரிவுபடுத்தப்படும். மற்ற அறிவிப்புகள் உயிர்காக்கும் மருந்துகள் சிலவற்றின் விலைகள் குறையும் எனத் தெரிவித்துள்ளார். புற்றுநோய் உள்ளிட்ட தீவிரமான நோய்களுக்கான மருந்துகளுக்கான சுங்க வரி குறைக்கப்படும். ஆறு உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் புற்றுநோய் தொடர்பான 36 மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். இந்திய அரசின் வட்டார விமான நிலையங்களின் வளர்ச்சி தொடர்பான உடான் திட்டம் (UDAN), 120 பிராந்திய அளவில் புதிய பகுதிகளை இணைக்கும் வகையில் மாற்றியமைக்கப்படும். இதன்மூலம், அடுத்த 10 ஆண்டுகளில் 4 கோடி பயணிகள் விமானங்களில் பயணிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. சக்‌ஷம் அங்கன்வாடி போஷன் 2.0 திட்டத்துக்கு உரிய நிதி ஒதுக்கப்படும். இதன்மூலம், 8 கோடி குழந்தைகள் பயன் பெறுவர். இதனுடன், ஒரு கோடி கர்ப்பிணிகளும் பயனடைவர். புத்தரின் காலம் மற்றும் வாழ்க்கையுடன் தொடர்புடைய இடங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். தனியார் துறையுடன் இணைந்து மருத்துவ சுற்றுலா மேம்படுத்தப்படும். மாநிலங்களுடன் இணைந்து 50 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும். துளசிமதி முருகேசன்: அவமானங்களை கடந்து தந்தை உதவியுடன் சாதித்த தமிழக வீராங்கனையின் வெற்றிக் கதை18 ஜனவரி 2025 நடிகர் அஜித் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 53 வயதில் மீண்டும் கார் ரேஸில் பங்கேற்று சாதிக்க உதவியது எது?14 ஜனவரி 2025 வருமான வரியில் புதிய மாற்றம் என்ன? பட மூலாதாரம்,SANSAD TV முன்னதாக, ரூ.7 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு இந்த விலக்கு இருந்தது. இதற்கு முன்பு ரூ. 12.75 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரியிலிருந்து ரூ.75 ஆயிரம் என்பது நிலையான கழிவாக (Standard deduction) இருந்தது. அதாவது, ரூ.75,000ஐ திரும்பி பெற்றுக்கொள்ள முடியும். தற்போது புதிய அறிவிப்பின் மூலம், ரூ.75,000 கழிவு என்பதே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்போது பேசிய நிர்மலா சீதாராமன், "ரூ.2.5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 2014இல் வருமான வரி விலக்கு அறிவிக்கப்பட்டது. இந்த வரம்பு 2019இல் ரூ.5 லட்சமாகவும் 2023இல் ரூ.7 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது" எனத் தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சிக்கு நடுத்தர மக்கள் பெரும் பங்கு அளிப்பதாகவும், அதைக் கருத்தில் கொண்டு வெவ்வேறு காலகட்டங்களில் அவர்களின் வருமான வரி சுமை குறைக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தனது உரையில் தெரிவித்தார். 8வது முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் தொடர்ச்சியாக, 8வது முறையாக நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதற்கு முன்பு மொரார்ஜி தேசாய் 10 பட்ஜெட்டுகளை வெவ்வேறு காலகட்டங்களில் தாக்கல் செய்துள்ளார். மொரார்ஜி தேசாய் நிதியமைச்சராக 1959-64 காலகட்டத்தில் 6 பட்ஜெட்டுகளையும் பின்னர் 1967-69 காலகட்டத்தில் 4 பட்ஜெட்டுகளையும் தாக்கல் செய்திருக்கிறார். தற்போது, நிர்மலா சீதாராமன் அந்தச் சாதனையை நெருங்கி வந்துள்ளார். பொருளாதார ஆய்வறிக்கை முன்னதாக, இந்தியாவின் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். அதில், 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3-6.8% என்ற விகிதத்தில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், நீண்ட கால தொழில் வளர்ச்சியை வலுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இந்தியாவின் பொருளாதார அடிப்படைகள் அனைத்தும் வலுவாக இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து வலுவாக இருப்பதாகவும் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c77r3742476o
  11. அமெரிக்காவில் வீடுகள் மீது விழுந்து நொருங்கிய விமானம்! Published By: DIGITAL DESK 2 01 FEB, 2025 | 11:26 AM ஒரு குழந்தை உட்பட 6 பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய அம்பியூலன்ஸ் விமானமொன்று அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு மேல் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது, விமானம் வீழ்ந்து வெடித்ததில் அங்கிருந்த பல வீடுகளில் தீ பற்றியுள்ளது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேத விபரங்கள் பற்றி இதுவரை செய்திகள் வெளியாவில்லை. நான்கு பணியாளர்கள், ஒரு குழந்தை நோயாளி மற்றும் அவரது தாய், விமானி உள்ளிட்ட 3 மருத்துவ பணியாளர்கள் குறித்த விமானத்தில் பயணித்துள்ளதாக ஏர் அம்பியூலன்ஸ் நிறுவனமான ஜெட் ரெஸ்க்யூ ஏர் அம்பியூலன்ஸ் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/205488
  12. IND vs ENG: இந்திய அணி டி20 தொடரை வென்றது எப்படி? ராணாவை களமிறக்கியது சர்ச்சையாவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் புனேவில் நேற்று நடந்த நான்காவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. 182 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்து 15 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியது. சூர்யகுமார் யாதவ் கேப்டன்சியில் இதுவரை தொடரை இழக்காமல் இந்திய அணி பயனித்துள்ளது. அது மட்டுமின்றி 2019ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இரு நாடுகளுக்கு இடையிலான டி20 தொடரைத் தொடர்ந்து 17வது முறையாக இந்திய அணி வென்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்திய அணி ஒரு கட்டத்தில் 12 ரன்களுக்கு 3 விக்கெட், 79 ரன்களுக்கு 5 விக்கெட் என இக்கட்டான நிலையில் இருந்தபோது, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே இடையிலான பார்ட்னர்ஷிப்தான் அணியை பெரிய ஸ்கோருக்கு இட்டுச் சென்றது. ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகள் உள்பட 53 ரன்களும், ஷிவம் துபே 33 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகள் உள்பட 53 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இருவரும் சேர்ந்து 6வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்து பெரிய ஸ்கோருக்கு உதவினர். பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி இரண்டு விக்கெட்டுகளையும், ஹர்சித் ராணா, ரவி பிஸ்னோய் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினர். குறிப்பாக களத்தில் வலுவாகக் காலூன்றிய ஹேரி ப்ரூக் ஆட்டத்தை இங்கிலாந்து பக்கம் திருப்பியபோது, அவரின் விக்கெட்டை வருண் வீழ்த்தியதோடு, அதே ஓவரில் கார்ஸ் விக்கெட்டை சாய்த்து ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்தியபோது இங்கிலாந்து தோல்விப் பாதைக்குள் பயணிக்கத் தொடங்கியது. மேலும், 19வது ஓவரின் இறுதிவரை களத்தில் நின்று 53 ரன்கள் சேர்த்த ஷிவம் துபேவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. விராட் கோலி: ரஞ்சி கோப்பை போட்டியில் க்ளீன் போல்ட் – சாம்பியன்ஸ் கோப்பையில் தொடர வேண்டுமா? ஜஸ்பிரித் பும்ரா வேகத்தில் எதிரணிகளை கலங்கடித்த மறக்க முடியாத 10 தருணங்கள் வருண் வித்தியாசமான சாதனை: இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றியை பறித்த 'மோசமான முடிவுகள்' இந்தியா த்ரில் வெற்றி: ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய வாஷிங்டன் சுந்தர் விமர்சனத்திற்கு உள்ளாகும் இந்திய அணியின் வெற்றி ஆனால், இந்திய அணி வெற்றி பெற்றதில்தான் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஓவர்டன் வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்டபோது, 143 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட 5வது பந்து ஷிவம் துபேவின் தலைக் கவசத்தில் பட்டு பந்து தெறித்தது. இதுபோன்ற நேரத்தில் உரிய முதலுதவியும், தேவைப்பட்டால் வீரரின் உடல்நிலைக்கு ஏற்ப மாற்று வீரர் விளையாடுவதற்கான வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும் என்பது ஐசிசி விதி. இன்னிங்ஸ் முடிந்து பெவிலியன் சென்றபின் ஷிவம் துபேவுக்கு ஃபீல்டிங் செய்ய முடியாததால் அவருக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ஹர்சித் ராணா கன்கசன் மாற்றுவீரராகக் களமிறக்கப்பட்டு பந்துவீச வைக்கப்பட்டார். ராணா எடுத்துக் கொடுத்த 3 விக்கெட்டுகளும் வெற்றிக்கு முக்கியமானவையாக, திருப்புமுனையாக மாறின. ஐசிசி விதிப்படி, காயமடைந்த ஒரு வீரர் எந்தத் தகுதியில் இருக்கிறாரோ அதே தகுதியில்தான் கன்கசன் மாற்றுவீரரையும் களமிறக்க வேண்டும். ஒரு பேட்டர் கன்கசனில் வெளியேறினால் பேட்டரை களமிறக்கலாம், பந்துவீச்சால் காயமடைந்தால் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரையும், ஆல்ரவுண்டருக்கு பதிலாக ஆல்ரவுண்டரையும் களமிறக்கலாம். இந்நிலையில் ஷிவம் துபே ஒரு பேட்டர், ஆனால், அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரான ஹர்சித் ராணாவை களமிறக்கி விளையாட வைத்து இந்திய அணி பெற்ற வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது என வர்ணனையாளர்களும், இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், இங்கிலாந்து பயிற்சியாளர் பிரண்டென் மெக்கலமும் போட்டி முடிந்தபின் நடுவர்களுடன் மைதானத்தில் நீண்ட ஆலோசனை நடத்தினார். அமெரிக்கா: வெடித்துச் சிதறிய விமானம், குழந்தை நோயாளியுடன் சென்றபோது விபரீதம் - நிலவரம் என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர் இன்று பட்ஜெட் தாக்கல்: வேலைவாய்ப்பு, பணவீக்கம் - இந்திய அரசு முன் உள்ள சவால்களும் எதிர்பார்ப்புகளும்6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் "எங்கள் தோல்விக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், கன்கசனில் லைக் டூ லைக் மாற்றுவீரர் சரியானதாக எனக்குத் தெரியவில்லை, அதில் விருப்பமும் இல்லை," என்று தெரிவித்தார். அதோடு, "இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஷிவம் துபேவால் 25 கி.மீ வேகத்தில்கூட பந்துவீச முடியாது. ஆனால், ஹர்சித் ராணா 145 கி.மீ வேகத்தில் பந்துவீசக் கூடியவர், பேட்டிங் சரியாக வராது. ஆனால், துபே சிறந்த பேட்டர். எப்படி இது சரியான கன்கசன் மாற்று வீரராக இருக்கும். இந்த ஆட்டத்தில் நாங்கள் உண்மையாக வென்றிருக்க வேண்டும். கன்கசனில் மாற்று வீரராகச் சேர்க்கப்பட்ட முடிவை நாங்கள் ஏற்கவில்லை," என்றும் கூறினார். மாற்று வீரராக இதுபோன்ற வீரரைக் களமிறக்கும் முன்பாக எதிரணியிடம் ஆலோசனை நடத்த வேண்டும் எனவும் ஆனால் தன்னிடம் எதுவும் கேட்கவில்லை எனவும் ஜோஸ் பட்லர் குறிப்பிட்டார். "நான் பேட்டிங் செய்ய வந்தபோது, திடீரென ஹர்சித் ராணா பந்துவீச வருகிறார். இவர் எப்படி பந்து வீசுகிறார் என்று எனக்கு குழப்பம் ஏற்பட்டது. இது உண்மையில் ஏற்க முடியாத முடிவு. சரியான மாற்று வீரர் முடிவும் அல்ல. இது போட்டி நடுவர் ஸ்ரீநாத் எடுத்த முடிவு என்று இந்திய அணி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் போட்டி நடுவரிடம் சில கேள்விகளை எழுப்பி நாங்கள் எங்கள் நிலையைத் தெளிவுபடுத்துவோம். எங்களுக்கு வெற்றி பெறுவதற்குப் பல வாய்ப்புகள் இந்த ஆட்டத்தில் இருந்தன. ஆனால், பயன்படுத்த முடியாததற்குப் பல காரணங்கள் இருந்தாலும் அதில் இதுவும் ஒன்று" எனத் தெரிவித்தார். மகாராஷ்டிரா: பெண்ணின் கருவில் இருந்த குழந்தை வயிற்றில் ஒரு கரு உருவானது எப்படி?8 மணி நேரங்களுக்கு முன்னர் கோவையில் ஒரே இமெயிலில் 3,000 பேரை வேலையை விட்டு நீக்கிய அமெரிக்க நிறுவனம் – என்ன நடந்தது?31 ஜனவரி 2025 இந்திய அணி கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் மோர்கல் கூறுகையில், "இது முற்றிலும் எங்களின் முடிவல்ல. கன்கசன் மாற்றுவீரராக ராமன்தீப் சிங், ஹர்சித் ராணா இருவர் பெயரைக் கொடுத்தபோது, போட்டி நடுவர் ஸ்ரீநாத் தேர்வு செய்ததுதான் இறுதி முடிவு. ராணாவின் பெயரைத் தேர்வு செய்தபோது, அவர் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார் உடனடியாகக் களமிறங்க அவரை அவசரப்படுத்தினோம். இந்த முடிவு எங்களை மீறியது, பெயரை மட்டுமே நாங்கள் அளிக்க முடியும், முடிவெடுப்பது போட்டி நடுவர்தான்" எனத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி வர்ணணனையாளர்களாக இருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் கெவின் பீட்டர்சன், நிக் நைட் இருவரும், இந்திய அணி கன்கசன் மாற்றுவீரராக துபேவுக்கு பதிலாக ஹர்சித் ராணா களமிறங்கியது குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பி விமர்சித்தனர். கன்சனில் செல்லும் வீரரின் தகுதிக்கு நிகரான மாற்றுவீரரைக் களமிறக்க வேண்டும், மாற்றுவீரரை களமிறக்கும் முன் எதிரணியினரிடம் ஆலோசிக்கலாம் என்ற இரு ஐசிசி விதிகளுமே நேற்று கடைபிடிக்கப்படவில்லை என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுகின்றன. ஒருவேளை ஐசிசி விதியின்படி துபேவுக்கு மாற்றாக ராமன்தீப் சிங் அல்லது பேட்டரை களமிறக்கி இருந்தால், நேற்றைய ஆட்டம் இங்கிலாந்து அணியின் பக்கம் திரும்பியிருக்கக் கூடும். ஏனென்றால், ஹர்சித் ராணா கடைசி நேரத்தில் எடுத்துக் கொடுத்த 3 விக்கெட்டுகள்தான் ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தது. அப்படியிருக்கையில் ஹர்சித் ராணாவால் வெற்றி பறிபோனதை, இங்கிலாந்து வீரர்கள் ஏற்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்திய அணி வெற்றி பெற்ற விதம் சரியானதா, இது நேர்மையானதா என்ற கேள்விகள், விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் ரசிகர்களால் முன்வைக்கப்படுகிறது. ஆதவ் அர்ஜுனா: திமுக-வில் அரசியலை தொடங்கியவர் விஜய் உடன் இணைந்தது எப்படி?31 ஜனவரி 2025 சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் அதிக நேரம் நடந்து சாதனை - ஈலோன் மஸ்க், டிரம்ப் கூறியது என்ன?31 ஜனவரி 2025 இந்திய அணியின் டாப் ஆர்டர் தோல்வி பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் பேட்டிங்கில் நேற்றும் வழக்கம்போல் டாப் ஆர்டர் தோல்வி அடைந்தனர். சாம்ஸன் தொடர்ந்து 4வது போட்டியில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடினாலும் 29 ரன்களில் ரஷித் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்தத் தொடரில் இரண்டாவது முறையாக டக்அவுட்டில் வெளியேறினார், இவரின் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வருகிறது. ரிங்கு சிங் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி, 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் இழந்து மோசமான நிலையில் இருந்தது. 6வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே இருவரும் சேர்ந்து ஆட்டத்தைக் கையில் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கி இருவரும், சரிந்திருந்த ரன்ரேட்டை உயர்த்தினர். ஹர்திக் 27 பந்துகளிலும், துபே 31 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். ஆறாவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தநிலையில் பாண்டியா 53 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசிவரை களத்தில் இருந்த துபே 53 ரன்களில் ரன்அவுட் ஆனார். கடைசி ஓவரில் மட்டும் இந்திய அணி அக்ஸர் படேல், அர்ஷ்தீப், துபே ஆகிய 3 விக்கெட்டுகளை இழந்தது. 180 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என இருந்த இந்திய அணி ஒரு ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆட்டம் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து பக்கம் இருந்தது. 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என இக்கட்டான நிலையில் இருந்தபோது, ஹர்திக், துபேவின் ஆட்டம்தான் திருப்புமுனையாக மாறியது. அதேநேரம் இருவரும் பிரிந்த பிறகு களமிறங்கிய எந்த பேட்டரும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. இந்தத் தொடரில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட அக்ஸர் படேல் இதுவரை ஒரு போட்டியில்கூட பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. 'சரியான திசையில் செல்கிறோம்' வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், "அணியில் உள்ள ஒவ்வொருவரும் தொடக்கம் முதல் கடைசி வரை சிறப்பாகச் செயல்பட்டோம். 12 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்த தருணத்தில்கூட நம்பிக்கையை இழக்காமல் அதிரடியாகவே பேட் செய்தோம். துபே, பாண்டியா தங்களின் அனுபவத்தை இந்த ஆட்டத்தில் வெளிப்படுத்தியது சிறப்பு. இதைத்தான் வலைப்பயிற்சியில் பேசினோம், அதைச் செய்துள்ளனர். சரியான திசையில் நாங்கள் செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. பவர்ப்ளேவுக்கு அடுத்து வரும் ஓவர்கள் முக்கியமானவை என்று எனக்குத் தெரியும், அந்த நேரத்தில் ஆட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. சில விக்கெட்டுகளை வீழ்த்தினோம், ராணா 3வது பந்துவீச்சாளராக வந்து சிறப்பாகப் பந்துவீசினார்" எனத் தெரிவித்தார். உங்களால் இரவில் தூங்க முடியவில்லையா? - நீங்கள் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும் என்ன?31 ஜனவரி 2025 சியரா ஸ்பேஸ்: காற்றே இல்லாத நிலவில் ஆக்சிஜன் தயாரிக்க உதவும் கருவி - எப்படி செய்யும்?30 ஜனவரி 2025 இங்கிலாந்து தோல்விக்கு என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் அற்புதமாக இருந்தது, நடுவரிசையில் ஹேரி ப்ரூக்கின் ஆட்டமும் வெற்றியின் அருகே கொண்டு சென்றது. ஆனால், முக்கியமான தருணத்தை கைப்பற்றத் தவறியதே இங்கிலாந்து அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. பென் டக்கெட், பில் சால்ட் இருவரும் அருமையான தொடக்கத்தை அளித்தனர். இந்தத் தொடரில் இதுவரை அதிரடியாக ஆடாத சால்ட் இந்த ஆட்டத்தில் நிதானமாக ஆடி பவுண்டரிகளை அடித்தார். பவர்ப்ளே முடிவில் 62 ரன்கள் சேர்த்து ட்கெட்(39) விக்கெட்டை பிஸ்னாயிடம் இங்கிலாந்து இழந்திருந்தது. இங்கிலாந்து அணி வெற்றிக்கு 120 ரன்கள் தேவைப்பட்டது, 14 ஓவர்கள் இருந்தன, கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்தன. அந்த நிலையில், அக்ஸர் படேல் வீசிய 7வது ஓவரில் சால்ட்(23) போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் பட்லர் 2 ரன்னில் பிஸ்னாய் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 62 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி இருந்த இங்கிலாந்து 67 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. லிவிங்ஸ்டோன், ஹேரி ப்ரூக் இருவரும் களத்தில் நிலைக்கத் தொடங்கினர். ஹேரி பரூக் வழக்கத்துக்கு மாறாக இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக ராணா பந்துவீச்சில் சிக்ஸர்கள், பவுண்டரி என 18 ரன்கள் சேர்த்து, 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். ராணா பந்துவீச்சில் 9 ரன்னில் லிவிங்ஸ்டோன் ஆட்டமிழந்தார். விக்கெட் சரிந்தபோதிலும் இங்கிலாந்து அணியை ஹேரி ப்ரூக் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். வருண் 15-வது ஓவரை வீசினார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது. களத்தில் செட்டில் ஆன பேட்டர் ஹேரி ப்ரூக்கை(51) வீழ்த்தி, அதே ஓவரில் பிரைடன் கார்ஸும் விக்கெட்டை பறிகொடுத்தார். ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து சற்று ஆட்டம் கண்டது. அதன் பிறகு கடைசி வரிசை வீரர்கள் பெரிதாக பேட்டிங்கில் பங்களிக்கவில்லை, ஓவர்டன் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹேரி ப்ரூக் ஆட்டமிழந்த பின், யாரேனும் ஒரு பேட்டர் பொறுப்பெடுத்து பேட் செய்திருந்தால் வெற்றி இங்கிலாந்து அணியின் கையிலிருந்து நழுவிச் சென்றிருக்காது. கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 36 ரன்களும், கடைசி 2 ஓவர்களில் 25 ரன்களும் தேவைப்பட்டன. இது டி20 போட்டிகளில் நிச்சயமாக அடைந்துவிடக்கூடிய ஸ்கோர்தான். ஆனால், இங்கிலாந்து அணியில் கடைசி வரிசை பேட்டர்கள் பொறுப்பெடுத்து பேட் செய்யாமல் இருந்தது தோல்விக்கான காரணங்களில் ஒன்று. பந்துவீ்ச்சில் சிறப்பாகச் செயல்பட்டு இந்திய அணியின் 5 விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்திய நிலையில் அதன் பிறகு நெருக்கடி கொடுக்கத் தவறியதும் தோல்விக்கான காரணங்களில் ஒன்று. ஹர்திக் - துபே பார்ட்னர்ஷிப்பை தொடக்கத்திலேயே உடைத்திருந்தால், நிச்சயமாக இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்கக்கூடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c07k57l34l7o
  13. பட மூலாதாரம்,NASA 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நடையில் புதிய சாதனை படைத்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், ஜனவரி 30ஆம் தேதி, அதிக நேரம் விண்வெளி நடை மேற்கொண்டவர் என்ற சாதனையைச் செய்துள்ளார். விண்கலத்தை விட்டு வெளியேறி, பிரத்யேக பாதுகாப்பு உடையை அணிந்துகொண்டு, விண்வெளியில் பணிகளை மேற்கொள்வதே விண்வெளி நடை எனப்படுகிறது. சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வெளியே வந்து 5 மணிநேரம் 26 நிமிடங்கள் இதைச் செய்துள்ளார். இதன் மூலம், மொத்தமாக 60 மணிநேரம் 21 நிமிடங்கள் விண்வெளி நடை மேற்கொண்ட முன்னாள் விண்வெளி வீரர் பெக்கி விட்சனியின் சாதனையை, 62 மணிநேரத்திற்கு மேலாக விண்வெளி நடை புரிந்து அவர் முறியடித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,NASA இந்த விண்வெளி நடையின்போது, அவர் சர்வதேச விண்வெளி மையத்தின் வன்பொருட்களின் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். அங்கு இருந்த தேவையற்ற தொலைத்தொடர்பு சாதனங்களை அவர் அகற்றினார். மேலும், சுனிதா வில்லியம்ஸ் டெஸ்டினி ஆய்வகம் மற்றும் குவெஸ்ட் ஏர்லாக் என்ற பகுதிகளின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளைச் சேகரித்தார். அந்த மாதிரிகளில் நுண்ணுயிரிகள் ஏதேனும் இருக்கின்றனவா, வேறு என்ன பொருட்கள் இருக்கின்றன என்று ஆய்வு செய்யப்படும். உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? - அறிவியல் கூறும் 7 எளிய வழிகள் மதுரை: அரசு செவிலியரின் மூன்றாவது கர்ப்பத்திற்கு மகப்பேறு விடுப்பு மறுப்பு - நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன? AI உலகில் புதிய சகாப்தம்: சீன செயலியின் சவாலை அமெரிக்க நிறுவனங்கள் சமாளிக்குமா? கே.எம்.செரியன்: இஸ்லாமிய பெண்ணுக்கு இந்துவின் இதயத்தை பொருத்திய கிறிஸ்தவர் இவை அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் 72வது விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டன. இந்த பயணம் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. தற்போது சுனிதா வில்லியம்ஸ் மேற்கொண்டிருப்பது அமெரிக்காவின் 92வது விண்வெளி நடை. அவர் அமெரிக்க நேரப்படி காலை 8 மணிக்கு (EST) இந்த விண்வெளி நடையை தொடங்கினார். சுனிதா வில்லியம்ஸ் சிவப்புக் கோடுகள் கொண்ட விண்வெளி வீரருக்கான உடையை அணிந்திருந்தார். அவருடன் விண்வெளிக்குப் பயணித்த மற்றொரு வீரரான புட்ச் வில்மோரும் இதில் பங்கேற்றார். பட மூலாதாரம்,X/@SPACE_STATION இந்த மாதத்திலேயே இதற்கு முன்பாக, விண்வெளி வீரர் நிக் ஹேக்குடன் இணைந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றொரு விண்வெளி நடையை மேற்கொண்டிருந்தார். புட்ச் வில்மோர் ஐந்தாவது முறையாகவும், சுனிதா வில்லியம்ஸ் ஒன்பதாவது முறையாகவும் விண்வெளி நடையை மேற்கொள்கின்றனர். 'உலகிலேயே முதன் முதலில் தமிழ்நாட்டில்தான் இரும்பு பயன்பாடு தொடங்கியது' - இரும்புக் காலம் ஏன் முக்கியம்?25 ஜனவரி 2025 தினமும் தொழ மாட்டார்கள், ரமலான் நோன்பு இருக்க மாட்டார்கள் - இஸ்லாம் மதத்தில் இப்படி ஒரு குழு இருப்பது தெரியுமா?26 ஜனவரி 2025 8 மாதங்களாக விண்ணில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். ஒரு சில நாட்களே இருக்க வேண்டியிருக்கும் என்று திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக எட்டு மாதங்கள் ஆகியும் அவர்கள் இருவரும் இன்னும் பூமிக்குத் திரும்பவில்லை. கடந்த ஆண்டு, விண்வெளிக்கு அவரை ஏந்திச் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் அவர்கள் முதலில் எட்டு நாட்கள் மட்டுமே தங்குவதற்காகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் பயணித்த விண்கலனின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு, வேறு சில கசிவுகள் காரணமாக அந்த விண்கலத்தைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்காது எனக் கருதப்பட்டது. எனவே அமெரிக்க தொழிலதிபர் ஈலோன் மஸ்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ்-இன் விண்கலத்தைக் கொண்டு அவர்களை பூமிக்குத் திரும்ப அழைத்து வருவது என 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவு செய்யப்பட்டது. அவர்களை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்குக் கொண்டு வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. பிறகு மார்ச் மாதம் என முடிவு செய்யப்பட்டது. பிரசவத்தின்போது வயிற்றில் பேன்டேஜ்: பெண்ணுக்கு ரூ.13 லட்சம் இழப்பீடு வழங்க தனியார் மருத்துவமனைக்கு உத்தரவு8 மணி நேரங்களுக்கு முன்னர் சுனிதா வில்லியம்ஸ்: எட்டே நாளில் பூமிக்கு திரும்ப வேண்டியவர் 8 மாதம் தங்கும் நிலை வந்தது ஏன்?9 ஆகஸ்ட் 2024 ஈலோன் மஸ்கிடம் வலியுறுத்திய டிரம்ப் பட மூலாதாரம்,REUTERS இந்நிலையில், இரு விண்வெளி வீரர்களையும் பூமிக்கு அழைத்து வரும்படி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு அதிபர் டிரம்ப் அறிவுறுத்தி இருப்பதாக அதன் நிறுவனரான மஸ்க் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கதில், "சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள இரண்டு விண்வெளி வீரர்களையும் விரைவில் பூமிக்கு அழைத்து வருமாறு அதிபர் கூறியுள்ளார். நாங்கள் அப்படியே செய்வோம். பைடன் நிர்வாகம் இத்தனை காலம் அவர்களை அங்கேயே விட்டுவிட்டது மிகவும் மோசமானது," என்று பதிவிட்டுள்ளார். பைடன் நிர்வாகம் இரு வீரர்களையும் கைவிட்டுவிட்டதாக அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கமான ட்ரூத் சோசியலில் பதிவிட்டுள்ளார். "மிகவும் தைரியமான இரண்டு வீரர்களையும் திரும்பக் கொண்டு வருமாறு அறிவுறுத்தியுள்ளேன், ஈலோன் விரைவில் செல்வார். அவர்கள் பத்திரமாகத் திரும்புவார்கள் என நம்புவோம், ஈலோனுக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்திருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3vp1zp01dro
  14. 19 இன் கீழ் மகளிர் ரி - 20 உலகக் கிண்ண இறுதி ஆட்டம் : சம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் குறிக்கோளுடன் தென் ஆபிரிக்காவை சந்திக்கிறது இந்தியா 31 JAN, 2025 | 10:03 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் கோலாலம்பூர், பேயுமாஸ் ஓவல் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெறவுள்ள ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் குறிக்கோளுடன் தென் ஆபிரிக்காவை நடப்பு சம்பியன் இந்தியா சந்திக்கிறது. இந்த இறுதிப் போட்டி இலங்கை நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தென் ஆபிரிக்காவில் 2023இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்த்தாடிய ஷஃபாலி வர்மா தலைமையிலான இந்தியா 7 விக்கெட்களால் வெற்றிபெற்று முதலாவது சம்பியனாகியிருந்தது. இப்போது அங்குரார்ப்பண அத்தியாயத்தை முன்னின்று நடத்திய தென் ஆபிரிக்காவை இறுதிப் போட்டியில் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்தியா களம் இறங்கவுள்ளது. இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இரண்டு அணிகளும் தோல்வி அடையாத அணிகளாக இருப்பதால், இறுதிப் போட்டி பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப் போட்டிக்கு முன்னோடியாக கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 9 விக்கெட்களால் இந்தியாவும் மற்றைய அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை 5 விக்கெட்களால் தென் ஆபிரிக்காவும் வெற்றிகொண்டு இன்றைய இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. இந்தியா முதல் சுற்றில் 3 போட்டிகளிலும் சுப்பர் சிக்ஸ் சுற்றில் 2 போட்டிகளிலும் அரை இறுதிப் போட்டியிலுமாக தான் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றிபெற்றது. தென் அபிரிக்கா முதல் சுற்றில் 3 போட்டிகளிலும் சுப்பர் சிக்ஸ் சுற்றில் ஒரு போட்டியிலும் அரை இறுதிப் போட்டியிலுமாக 5 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தது. சுப்பர் சிக்ஸ் சுற்றில் ஒரு போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. இந்த இரண்டு அணிகளில் இந்தியா சகலதுறைகளிலும் பலம்வாய்ந்த அணியாகத் தென்படுவதால் இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்கா கடும் சவாலை எதிர்கொள்ளும் என கருதப்படுகிறது. இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய வீராங்கனைகளே அதிகூடிய மொத்த ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் அதிகூடிய விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர். ட்ரிஷா கொங்காடி 6 போட்டிகளில் ஆட்டம் இழக்காத ஒரு சதம் உட்பட 265 ஓட்டங்களைக் குவித்துள்ளதுடன் தமிழக வீராங்கனை குணாலன் கமலினி 2 அரைச் சதங்களுடன் 135 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். பந்துவீச்சில் வைஷ்ணவி ஷர்மா 5 போட்டிகளில் 15 விக்கெட்களையும் ஆயுஷி ஷுக்லா 6 போட்டிகளில் 12 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர். முதலாவது போட்டியில் விளையாடாமல் இருந்த வைஷ்ணவி, மற்றொரு சுழல்பந்துவீச்சாளர் காயமுற்றதால் இரண்டாவது போட்டியில் விளையாடினார். அப் போட்டியில் 5 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன் அணியில் நிரந்தர இடத்தைப் பிடித்துக்கொண்டார். இந்த நால்வருடன் ஏனைய வீராங்கனைகளும் இந்தியாவை மீண்டும் உலக சம்பியனாக்கும் குறிக்கோளுடன் களம் இறங்கவுள்ளனர். தென் ஆபிரிக்க அணியில் ஜெம்மா போத்தா (86 ஓட்டங்கள்), கேலா ரினேக் (10 விக்கெட்கள்) ஆகிய இருவரே துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் ஓரளவு பிரகாசித்துள்ளனர். அணிகள் விபரம் இந்தியா: குணாலன் கமலினி, ட்ரிஷா கொங்காடி, சானிக்கா சோல்கே, நிக்கி ப்ரசாத் (தலைவி), ஈஷ்வரி அவாசரே, மிதிலா வினோத், ஆயுஷி ஷுக்லா, வி.ஜே. ஜோஷித்தா, ஷப்னம், பாருணிக்கா சிசோடியா, வைஷ்ணவி ஷர்மா. தென் ஆபிரிக்கா: ஜெம்மா போத்தா, சிமோன் லௌரென்ஸ், ஃபே கௌலிங், கேலா ரினேக் (தலைவி), கராபோ மெசோ, மியெக் வென் வூர்ஸ்ட், செஷ்னி நாயுடு, ஏஷ்லி வன் வைக், லுயண்டா நிசூஸா, மோனாலிசா லெகோடி, நிதாபிசெங் நினி. https://www.virakesari.lk/article/205474
  15. இலங்கை முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ஓட்டங்கள் : அவுஸ்திரேலியாவைவிட 518 ஓட்டங்கள் பின்னிலையில் 31 JAN, 2025 | 09:55 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது வோர்னர் - முரளிதரன் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று பகல்போசன இடைவேளைக்கு சற்று முன்னர் கடும் மழை பெய்ததால் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததுடன் இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதன்படி முதல் இன்னிங்ஸில் மேலும் 5 விக்கெட்கள் மாத்திரம் மீதம் இருக்க அவுஸ்திரேலியாவை விட 518 ஓட்டங்களால் இலங்கை பின்னிலையில் இருக்கிறது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 44 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை மேலும் இரண்டு விக்கெட்களை இழந்து இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. கடந்த வருடம் துடுப்பாட்டத்தில் அசத்தி, ஐசிசியின் வளர்ந்துவரும் வீரர் விருதை வென்ற கமிந்து மெண்டிஸ் தனது சொந்த மைதானத்தில் திறமையை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். தினேஷ் சந்திமாலும் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது தனஞ்சய டி சில்வா 22 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் தினேஷ் சந்திமாலும் குசல் மெண்டிஸும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை 136 ஓட்டங்களாக உயர்த்தியபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. மிகத் திறமையாகவும் பொறுமையாகவும் துடுப்பெடுத்தாடிவரும் தினேஷ் சந்திமால் 115 பந்துகளை எதிர்கொண்டு 63 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். குசல் மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 10 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். பந்துவீச்சில் மிச்செல் ஸ்டாக் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மெத்யூ குனேமான் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 6 விக்கெட்களை இழந்து 654 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. உஸ்மான் கவாஜா 232 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 141 ஓட்டங்களையும் ஜொஷ் இங்லிஸ் 102 ஓட்டங்களையும் பெற்று அவுஸ்திரேலியாவை பலப்படுத்தி இருந்தனர். https://www.virakesari.lk/article/205473
  16. முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொடவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரிப்பதற்காக புதிய ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிரதிவாதியாக பெயரிடுமாறு கோரி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐவரடங்கிய குழுவின் உறுப்பினர் அமல் ரணராஜா நேற்று விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதன்படி, புதிய பெஞ்ச் ஒன்றை பெயரிடுவதற்கான உரிய மனு இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்படி, குறித்த மனுவை விசாரிப்பதற்காக யாதுன்னே கோரயா, பி குமரன் ரட்ணம், சஷி மகேந்திரன், தமித் தோட்டவத்த மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டது. இது தொடர்பான மனு பெப்ரவரி 7ஆம் திகதி புதிய நீதியரசர்கள் முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 11 இளைஞர்கள் காணாமல் போனமை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தம்மை பிரதிவாதியாக பெயரிட சட்டமா அதிபர் எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என முன்னாள் கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார். எனவே, சட்டமா அதிபரின் தீர்மானத்தை செல்லுபடியாகாத ஆணை பிறப்பிக்குமாறு அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். https://thinakkural.lk/article/315092
  17. அமெரிக்க விமான விபத்து: கருப்புப் பெட்டி மீட்பு, உடல்களை தேடும் பணி நிறுத்தம் - சமீபத்திய தகவல்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 30 ஜனவரி 2025 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் புதன்கிழமை இரவு, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று, ராணுவ ஹெலிகாப்டருடன் மோதி விபத்துக்குள்ளானது. நொறுங்கிய விமானம், போடோமேக் ஆற்றில் விழுந்தது. அந்த விமானத்தில் 60 பயணிகளும் 4 விமான குழுவினரும் இருந்தனர். ஹெலிகாப்டரில் ராணுவ வீரர்கள் 3 பேரும் இருந்தனர். மொத்தமாக, 67 பேரும் இந்த விபத்தில் இறந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், விமானத்தின் தரவுகளும் விமானி அறையின் குரல் பதிவுகளும் அடங்கிய முக்கியமான கருவியான கருப்புப் பெட்டியை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிபிசியின் அமெரிக்க கூட்டாளி செய்தி நிறுவனமான சிபிஎஸ் ஊடகத்துக்கு இந்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கருப்புப் பெட்டியின் மூலம், விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதை கண்டுபிடிக்க முடியும். தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆய்வகத்தில் கருப்புப் பெட்டி சோதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், ஆபத்தான சூழல் காரணமாக இப்பணி நிறுத்தப்பட்டுள்ளதாக டைவிங் குழுவினர் தெரிவித்துள்ளனர். சிபிஎஸ் ஊடகத்துக்கு இந்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான இடங்கள் அனைத்திலும் தாங்கள் தேடிவிட்டதாக கடலில் மூழ்கி தேடும் டைவர்கள் தெரிவித்தனர். தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்த வாஷிங்டன் டிசியின் தீ மற்றும் அவசர உதவி சேவைகள் துறையின் தலைவர் ஜான் டொனெல்லி, அவர்களின் முயற்சிகள் இருந்தபோதிலும், இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று குறிப்பிட்டார். அதுகுறித்துப் பேசியபோது அவர், "இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருப்பதாக நாங்கள் நம்பவில்லை," என்று கூறினார். மேலும், தனது குழுக்கள் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து 27 உடல்களையும், ஹெலிகாப்டரில் இருந்து ஒரு உடலையும் மீட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES என்ன நடந்தது? ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தின் 33வது ஓடுதளத்தை நோக்கி அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்துகொண்டிருந்தபோது, உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் (இந்திய நேரப்படி காலை 7.30 மணியளவில்) இந்த விபத்து நிகழ்ந்ததாக, விமானப் போக்குவரத்து நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பம்பார்டியர் சிஆர்ஜே 700 என்ற இந்தப் பயணிகள் விமானம், அமெரிக்காவின் கன்சாஸ் நகரின் விசிட்டா பகுதியில் இருந்து புறப்பட்டது. இதில் 60 பயணிகளும் நான்கு விமான பணியாளர்களும் இருந்ததாக அமெரிக்க ஏர்லைன்ஸ் கூறியுள்ளது. அதே நேரம், விபத்தில் சிக்கியது சிக்கோர்ஸ்கி எச்-60 என்ற ராணுவ ஹெலிகாப்டர் என்றும் அது வர்ஜீனியாவில் உள்ள பெல்வாய்ர் என்ற இடத்தில் இருந்து புறப்பட்டதாகவும் என்று அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது. கும்பமேளா: 'அங்கு செல்ல வேண்டாம்' என யோகி ஆதித்யநாத் கூறிய திரிவேணி சங்கமம் என்றால் என்ன? உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? - அறிவியல் கூறும் 7 எளிய வழிகள் மதுரை: அரசு செவிலியரின் மூன்றாவது கர்ப்பத்திற்கு மகப்பேறு விடுப்பு மறுப்பு - நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன? ஹிட்லரின் யூத படுகொலை மையமாக திகழ்ந்த 'அவுஷ்விட்ஸ்' வதை முகாம் எவ்வாறு இயங்கியது? விபத்துக்கு பைடன் நிர்வாகத்தை குற்றம் சாட்டிய டிரம்ப் இந்த விபத்து குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிபர் டிரம்ப், "இந்த விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகள் நடந்து கொண்டிருப்பதாக" குறிப்பிட்டார். "இதன் பின்னணியைக் கண்டறியும் வரை ஓய மாட்டோம்" என்று குறிப்பிட்ட டிரம்ப், விமான போக்குவரத்து துறையில் பணியாற்றுவோர் அதிகபட்ச தரத்துடனும் அறிவுடனும் இருக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார். மேலும், இந்த விபத்துக்கு பைடன் நிர்வாகத்தைக் குற்றம் சாட்டிய டிரம்ப், பன்முகத்தன்மை, சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகளை இதற்குக் காரணமாகக் குறிப்பிட்டார். "விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பதவிகளுக்கு, மாற்றுத் திறனாளிகள், உளவியல் பிரச்னைகள் உள்ளவர்களை பணியமர்த்தியதாக" குற்றம் சாட்டிய டிரம்ப், வெளிப்படையாக "பைடன் நிர்வாகத்தை, குறிப்பாக முன்னாள் போக்குவரத்து செயலாளரை" குற்றம் சாட்டியுள்ளார். ஃபெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் 35,000 ஊழியர்களைக் கொண்ட ஒரு பெரிய நிர்வாக அமைப்பு. அவர்களில் ஒரு பகுதியினர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள். அங்கு "முன்னாள் போக்குவரத்து செயலாளர் பீட் புட்டிகீக்கால் நியமிக்கப்பட்டவர்கள் விமானப் போக்குவரத்தைப் பாதுகாப்பாகக் கட்டுப்படுத்தும் தகுதியுடையவர்கள் என்று தான் நம்பவில்லை" என்றும் கூறினார். ஃபெடரல் விமானப் போக்குவரத்து அமைப்பு வெள்ளையர்களால் நிரம்பியுள்ளதாகக் கூறி, அதில் பன்முகத்தன்மை கொள்கையின்படி பணியிடங்கள் நிரப்பப்பட்டதால் அதன் தரம் குறைந்துவிட்டதாக" டிரம்ப் கூறியுள்ளார். மேலும், தான் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் "டேப்களை" கேட்டதாகக் கூறிய அவர், "விமானம் அனைத்தையும் சரியாகச் செய்து கொண்டிருந்ததாகவும்" வழக்கமான "பாதையில் இருந்ததாகவும்" அவர் கூறுகிறார். ஆனால், ஏதோ காரணத்தால் ஹெலிகாப்டர் அதே உயரத்தில் இருந்ததாகவும் அது நம்ப முடியாத அளவுக்கு மோசமான கோணத்தில் சென்றதாகவும் டிரம்ப் கூறினார். பட மூலாதாரம்,BERND DEBUSMANN JR/BBC அதோடு ஹெலிகாப்டர், மேலே, கீழே அல்லது பக்கவாட்டில் என எப்படி வேண்டுமேனாலும் திருப்பக்கூடிய திறன் கொண்டது எனக் குறிப்பிட்ட டிரம்ப், அந்த ஹெலிகாப்டர் தவறான பக்கமாகத் திருப்பியுள்ளது," என்று கூறினார். இந்த விபத்துக்கு பன்முகத்தன்மை கொண்ட பணியமர்த்தல் கொள்கைகளுக்குப் பங்கு உண்டு எனக் குற்றம் சாட்டுகிறாரா என்பதைத் தெளிவுபடுத்துமாறு செய்தியாளர் ஒருவர் டிரம்பிடம் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த டிரம்ப், "மூளை திறன் மற்றும் உளவியல் தரத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டிய சில வேலைகள் உள்ளன" என்றார். மேலும், தனது நிர்வாகம் மிக உயர்ந்த தரநிலைகளைக் கொண்டுள்ளதாகவும் முந்தைய அரசின் கீழ் தரநிலைகள் அதற்கு எதிர்மாறாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என்ன கூறுகிறார்கள்? விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஜார்ஜ் வாசிங்டன் பார்க்வே வழியாக கார் ஓட்டிச் சென்றபோது, விமானம் மோதியதை தான் பார்த்ததாக அரி ஷுல்மன் என்பிசி வாசிங்டன் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். முதலில் விமானம் சரியாகச் சென்று கொண்டிருப்பதாகத்தான் தெரிந்தது என்று கூறும் அவர், திடீரென விமானம் வலதுபுறமாகத் திரும்பியதாகவும், விமானத்தின் அடிப்பகுதியில் இருந்து தீப்பொறிகள் சீராக வரத் தொடங்கியதாகவும் அவர் கூறுகிறார். கிரீன்லாந்து: பனி சூழ்ந்த மலைகளுக்கு அடியில் என்ன இருக்கிறது? எதற்காக இந்த போட்டி?30 ஜனவரி 2025 விமானத்தை தாக்கிய மின்னல் - பின்னர் நடந்தது என்ன? (காணொளி)28 ஜனவரி 2025 அந்த நேரத்தில் அது "மிகவும் தவறு" என்று எனக்கு தெரிந்துவிட்டது. அந்த பகுதியில் விமானங்கள் தரையிறங்குவதை கடந்த காலங்களில் பார்த்திருந்த அவர், ஒரு விமானத்தின் அடிப்பகுதி அந்த இருட்டான நேரத்தில் தெரியக்கூடாது என்று கூறினார். அந்த தீப்பொறிகள் விமானத்தின் முன் பகுதியிலிருந்து பின்பகுதி வரை நீண்டு சென்றது. விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு பூங்காவில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, இந்த விமான விபத்தை பார்த்ததாக ஜிம்மி மசியோ கூறுகிறார். வானில் ஒரு 'ஒளிவீச்சு' உருவானதை பார்த்ததாக அவர் நினைவுகூறுகிறார். ரீகன் விமானநிலையத்தை நோக்கி செல்லக் கூடிய விமானங்கள் வழக்கமான பாதையில் செல்லவில்லை என்று தோன்றியதாக அவர் குறிப்பிடுகிறார். அந்த பகுதிக்கு அவசர சேவைகள் வந்தடையும் வரை, அவர் வானில் பார்த்தது குறித்து, பெரிதாக எதையும் யோசிக்கவில்லை என்கிறார். உறையும் குளிரில் மீட்புப் பணி படக்குறிப்பு,வாசிங்டன் டிசி மேயர் முரியல் பவுசர் தண்ணீரில் குதித்து தேடக்கூடிய காவலர்களும், காவல் படகுகளும் பல மணி நேரங்களாக மீட்புப் பணியை மேற்கொண்டு வந்ததாகவுவந்ததாகவும். உறையும் குளிர் அவர்களின் பணியை சவாலாக்கியுள்ளது. வாஷிங்டன் டிசியின் ஆளுநர் மேயர் பவுசர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவசர சேவை பணியாளர்கள் "மிகவும் இருட்டான, குளிரும் சூழலில்" மீட்புப் பணியில் ஈடுப்பட்டு வந்தனர் என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள ஹெலிகாப்டஹெலிகாப்டர் "எனது மனைவி 20 நிமிடங்களில் தரையிறங்க போவதாக எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்" என்று ஹமாத் ராசா கூறுகிறார். அவர் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த தனது மனைவி வருவதற்காக ரீகன் வாசிங்டன் தேசிய விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். "இன்னும் 20 நிமிடங்களில் தரையிறங்குவோம் என்று கூறினார். அவரை யாராவது தண்ணீரிலிருந்து மீட்டு எடுப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES டிரம்ப் என்ன கூறினார்? பட மூலாதாரம்,GETTY IMAGES 'இந்த விபத்து தவிர்த்திருக்கக் கூடியது' - டிரம்ப் இந்த மோசமான சம்பவம் குறித்து தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவசர கால உதவியை மேற்கொண்டு வரும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "அவர்களின் ஆன்மாக்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்" என்று கூறியிருந்தார். "விமானம் சரியான பாதையில் விமான நிலையத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. ஹெலிகாப்டர் குறிப்பிட்ட நேரத்துக்கு விமானத்தின் எதிரே நேராக சென்றுள்ளது. இரவு வானம் தெளிவாக உள்ளது. விமானத்தின் விளக்குகள் பிரகாசமாக எரிந்துக் கொண்டிருந்தன." "அந்த ஹெலிகாப்டர் மேலேயோ, கீழேயோ அல்லது வேறுபுறமாக திரும்பியோ ஏன் செல்லவில்லை. விமானத்தை பார்த்தீர்களா என்று கேட்டதற்கு பதிலாக, ஹெலிகாப்டர் என்ன செய்ய வேண்டும் என கட்டுப்பாட்டு மையம் ஏன் கூறவில்லை" "இது மிகவும் மோசமான நிலை, இதை தவிர்த்திருக்க வேண்டும். இது சரியே இல்லை" என்று ட்ரூத் சோசியல் என்ற தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார். சம்பவத்தில் ஈடுப்பட்டிருந்தவர்களுக்காக பிரார்த்திக்க அமெரிக்க துணை அதிபர் ஜே டி வான்ஸ் கேட்டுக் கொண்டார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் மற்றும் போக்குவரத்து செயலர் சீயன் டஃபி நிலைமைகளை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c6275988jyeo
  18. Published By: RAJEEBAN 31 JAN, 2025 | 02:30 PM உயிராபத்தை எதிர்நோக்கியுள்ளனர் என மருத்துவர்கள் எச்சரித்துள்ள காசாவை சேர்ந்த 2500 சிறுவர்களை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அங்கிருந்து வெளியேற்றுவதற்கு அனுமதி வழங்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்க மருத்துவர்களுடனான சந்திப்பின் பின்னர் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். 15 மாதகாலமாக நீடித்த இஸ்ரேல் காசா யுத்தத்தின்போது காசாவில் மருத்துவ சேவையை வழங்கிய நான்கு மருத்துவர்களை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் சந்தித்துள்ளார். காசாவில் 2500 சிறுவர்களிற்கு உடனடி மருத்துவசிகிச்சை தேவைப்படுவதாக கடந்த வருடம் ஏப்பிரல் முதல் மே மாதம் வரை காசாவில் பணியாற்றிய கலிபோர்னியாவை சேர்ந்த மருத்துவர் பெரோஸ் சித்வா தெரிவித்துள்ளார். அடுத்த சில வாரங்களில் உயிரிழக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள 2500 சிறுவர்கள் உள்ளனர், சிலர் உயிரிழந்துகொண்டிருக்கின்றனர், சிலர் நாளை அல்லது நாளை மறுதினம் உயிரிழக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த 2500 பேரில் அனேகமானவர்களிற்கு சாதாரண சிகிச்சை போதும் என தெரிவித்துள்ள அவர் 3வயது சிறுவனிற்கு கையில் எரிகாயம் ஏற்பட்டுள்ளது, அந்த காயம் ஆறிவிட்டது, ஆனால் காயம்பட்ட திசு இரத்த ஓட்டத்தை துண்டிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சிறுவனிற்கு ஆபத்து என அவர் தெரிவித்துள்ளார். ஸ்டான்போர்ட் பல்கலைகழக மருத்துவமனையின் அவசரசேவை மருத்துவர் ஆயிசா கானும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி முதலாம் திகதி வரை காசாவில் மருத்துவசேவையை வழங்கியுள்ளார். அவர் கைதுண்டிக்கப்பட்ட பல சிறுவர்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளதுடன் அவர்களிற்கு புனர்வாழ்வு இல்லை என தெரிவித்துள்ளார். கைகள் துண்டிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளின் புகைப்படங்களை அவர் காண்பித்துள்ளார், அவர்கள் இருவரும் ஒரு சக்கரநாற்காலியில் காணப்படுகின்றனர். அவர்கள் அந்த தாக்குல் காரணமாக அநாதைகளாக்கப்பட்டனர் என தெரிவித்துள்ள ஆயிசா கான், அவர்களை அங்கிருந்து வெளியேற்றி மருத்துவசிகிச்சை வழங்கினால் மாத்திரமே காப்பாற்றலாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/205428
  19. சுவீடனில் குரானை எரித்த நபர் சுட்டுக்கொலை - பின்னணியில் வேறு நாடு என சந்தேகம் Published By: RAJEEBAN 31 JAN, 2025 | 01:35 PM சுவீடனில் குரானை எரித்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணியில் வெளிநாடு ஒன்றிற்கு தொடர்புள்ளதாக சுவீடனின் பிரதமர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தரப்பினர் இது குறித்த விசாரணைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் ஏனென்றால் இந்த கொலையின் பின்னணியில் வேறு ஒருநாடுஇருக்கலாம் என சந்தேகம் நிலவுகன்றது என சுவீடனின் பிரதமர் உல்வ் கிரிஸ்டேர்சன் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த கொலையை கண்டித்துள்ள சுவீடனின் பிரதிபிரதமர் எபாபுஸ் இது எங்களின் ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல்இ எங்கள் சமூகம் இதனை முழுமையாக எதிர்க்கவேண்டும் என சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கின்றனர் எனினும் நாங்கள் இந்த சம்பவம் சுவீடனின் பாதுகாப்பிற்கு எவ்வாறான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என பார்ப்பதற்காக நிலைமைய உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் என சுவீடனின் தேசிய பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. ஏனைய நாடுகள் அமைப்புகள் தனிநபர்களிற்கு எதிரான வன்முறைகளிற்காக ஈரான் அரசாங்கம் சுவீடனிற்குள் ஆயுத குழுக்களை பயன்படுத்துகின்றது என கடந்த வருடம் சுவீடனின் தேசிய பாதுகாப்பு சேவை எச்சரித்திருந்தது. மொமிகா டிக்டொக்கில் நேரலையில் ஈடுபட்டிருந்தவேளையே சுடப்பட்டார் என சுவீடன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சுவீடனில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 2023ம் ஆண்டு சுவீடனில் குரானை எரித்ததன் மூலம் வன்முறை ஆர்ப்பாட்டங்களிற்கு வித்திட்ட சல்வான் மொமிகா என்ற 38 வயது நபர் ஸ்டொக்ஹோமில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுவீடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுவீடனில் வசித்த ஈராக்கியரான மொமிகாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகயிருந்த நிலையிலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மொமிகா இஸ்லாமிய மதத்தி;ற்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகத்தில் மொமிகா இரண்டு தடவைகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்இ முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகள் அவரின் நடவடிக்கைகளிற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டன. https://www.virakesari.lk/article/205418
  20. திருமணத்திற்காக காத்திருந்த இளம் விமானி, இந்திய வம்சாவளியினரின் மகள் - பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்கள் - அமெரிக்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் Published By: RAJEEBAN 31 JAN, 2025 | 11:40 AM அமெரிக்க இராணுவ ஹெலிக்கொப்டருடன் மோதி ஆற்றில் விழுந்து நொருங்கிய அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 67 பேரும் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும் துயரத்தில் சிக்குண்டுள்ள குடும்பங்களின் இதயங்களை மேலும் நொருங்கச் செய்யும் தகவலாக இது அமைந்துள்ளது. 2001ம் ஆண்டுக்கு பின்னர் அமெரிக்காவில் ஏற்பட்ட மோசமான விமானப் பேரழிவாக இந்த துயரம் மிக்க சம்பவம் கருதப்படும். துணை விமானி சாம் லில்லே --கப்டன் ஜொனதன் கம்போஸ் சாம் லில்லே தனது திருமண நாளிற்காக காத்திருந்த இளம் விமானி, ஓடுபாதையில் தரையிறங்குவதற்கு ஒருசில நிமிடங்களிற்கு முன்னர் அமெரிக்க இராணுவ ஹெலிக்கொப்டருடன் மோதிய அமெரிக்க எயர்லைன்ஸ் பயணிகள் விமானத்தை செலுத்தியவர். நடுவானில் மோதுண்ட விமானமும் ஹெலிக்கொப்டரும் அதன் பயணித்தவர்களுடன் வேர்ஜீனியாவின் பொட்டொமக் ஆற்றில் விழுந்தன. சாம் விமானவோட்டியாக பணிபுரிய ஆரம்பித்தவேளை நான் மிகவும் பெருமிதம் அடைந்தேன் என தெரிவிக்கின்றார் அவரின் தந்தை டிமோதி. முகநூல் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மகனின் இழப்பு என்னை மிக மோசமாக பாதிக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் என்னால் அழக்கூடியமுடியவில்லை உறங்கமுடியவில்லை என தெரிவிக்கின்றார். நான் அவனை மீண்டும் பார்ப்பேன் என தெரியும், ஆனால் எனது இதயம் வேதனையால் துடிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த விமானத்தின் துணை விமானி லில்லேயின் தந்தை, தனது முகநூல் பதிவில் தெரிவித்திருப்பது அவன் தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறந்து விளங்கினான். நான் மிகவும் நேசித்த ஒருவரை இழப்பது பெரும்துயரம் என தெரிவித்துள்ள தந்தை, எனது வாழ்க்கையின் மிக மோசமான நாள் இது எனவும் தெரிவித்துள்ளார். துயரத்தில் சிக்குண்டுள்ள தந்தை 20 வருடங்களாக அமெரிக்க இராணுவ விமானியாக பணிபுரிந்தவர். பயணிகள் விமானம் சரியான நடைமுறையையே பின்பற்றியது என கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஹெலிக்கொப்டரின் இராணுவ விமானி மிகப்பெரும் தவறிழைத்துள்ளார். அது என்னை காயப்படுத்தியுள்ளது ஏனென்றால் அவர்கள் எனது சகோதாரர்கள் நான் எனது மகனையும் இழந்துவிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தின் தலைமை விமானியான ஜொனதன் கம்போசும் உயிரிழந்துள்ளார், 2022 இல் கொம்போஸ் விமானத்தின் கப்டனாக பணிபுரிய ஆரம்பித்தார் என அவரை நன்கு அறிந்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் அற்புதமான மனிதன் பறப்பது அவருக்கு பிடிக்கும் குடும்பத்தை அவர் மிகவும் நேசித்தார் என அவரை பற்றியறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார். அஸ்ரா ஹூசைன் ராசா விமானவிபத்தில் உயிரிழந்தவர்களில் அஸ்வரா ஹூசைன் ராசாவும்( 26) ஒருவர் என அவரின் மாமனார் வைத்தியர் ஹசீம் ராசா சிஎன்என்னிற்கு தெரிவித்தார். இந்திய வம்சாவளியினரின் மகளான இவர் 2020 இல் இந்தியானா பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து 2023 ஆகஸ்ட்டில் தனது காதலனை கரம்பிடித்தார். ராசா வோசிங்டன் டிசியை தளமாக கொண்ட ஒரு ஆலோசகர், அவர் விசிட்டாவிற்கு மாதத்திற்கு இரண்டு முறை பயணம் செய்து அங்குள்ள ஒரு மருத்துவமனை திட்டத்தில் பணியாற்றினார் என அவரது மாமனார் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/205408
  21. 31 JAN, 2025 | 03:42 PM (எம்.மனோசித்ரா) பங்களாதேஷ் கடற்படையின் பி.என்.எஸ். சொமுத்ரா ரோய் போர் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று வெள்ளிக்கிழமை (31) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. நாட்டை வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர். இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்த போர்க்கப்பல் 115.2 மீற்றர் நீளமுடையதாகும். 274 பணியாட்களைக் கொண்ட இக்கப்பலின் கப்டனாக சஹ்ரியார் அலாம் செயற்படுகின்றார். இக்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான நட்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் அதன் குழுவினர் பங்கேற்க உள்ளனர். அத்துடன் தீவின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கியமான இடங்களைப் பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கப்பலின் செயல்பாட்டுத் திறன்கள் குறித்து இலங்கை கடற்படை வீரர்களுக்குக் கற்பிக்கும் ஒரு நிகழ்ச்சியும் கப்பலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நிரல்களை நிறைவு செய்து கொண்டு ஞாயிற்றுக்கிழமை இப்போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்படவுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/205438
  22. யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர : கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள் 31 JAN, 2025 | 03:44 PM ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்றைய யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட ஆளும் தரப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மக்களின் நிலங்கள் மக்களிற்கு வழங்கப்படவேண்டும், வடக்கில் காணப்படும் காணி பிரச்சினைகள் குறித்து ஆராயப்படுகின்றது. நிலங்களை மக்களிற்கு மீள வழங்க நடவடிக்கை பலாலியில் உள்ள ஜனாதிபதி மாளிகை பிராந்திய மக்களிற்கு நன்மையை குறிப்பிடத்தக்க அபிவிருத்தி திட்டங்களிற்காக முழுமையாக விடுவிக்கப்படும். தமிழ் இளைஞர்களிற்கு பொலிஸ் சேவையில் மேலும் வேலைவாய்ப்பு பரந்தன், மாங்குளம், காங்கேசன்துறையில் கைத்தொழில் பேட்டைகள் போன்ற விடயங்கள் முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/205436
  23. 19இன் கீழ் மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிகள்: தென் ஆபிரிக்கா எதிர் அவுஸ்திரேலியா, நடப்பு சம்பியன் இந்தியா எதிர் இங்கிலாந்து Published By: VISHNU 30 JAN, 2025 | 10:51 PM (நெவில் அன்தனி) மலேசியாவில் நடைபெற்றுவரும் 2ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் விளையாடப் போகும இரண்டு அணிகளைத் தீர்மானிக்கும் அரை இறுதிப் போட்டிகள் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளன. கோலாலம்பூர் பேயுமாஸ் ஓவல் விளையாட்டரங்கில் நாளை நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவும் அவுஸ்திரேலியாவும் விளையாடவுள்ளன. தொடர்ந்து நடைபெறவுள்ள இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் இந்தியாவை இங்கிலாந்து எதிர்த்தாடவுள்ளது. இந்த நான்கு அணிகளில் தென் ஆபிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய 3 அணிகளும் தோல்வி அடையாத அணிகளாக அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றன. ஆனால், முதலாம் குழுவுக்கான தனது கடைசி சுப்பர் சிக்ஸ் போட்டியில் இலங்கையிடம் முற்றிலும் எதிர்பாராத விதமாக அவுஸ்திரேலியா தோல்வி அடைந்திருந்தது. தென் ஆபிரிக்கா எதிர் அவுஸ்திரேலியா தென் ஆபிரிக்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான போட்டியில் வெற்றிபெறுவதற்கு அனுகூலமான அணியாக தென் ஆபிரிக்கா திகழ்கின்ற போதிலும் அவுஸ்திரேலியா தலைகீழ் முடிவுவை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தென் ஆபிரிக்கா விளையாடிய 5 போட்டிகளில் (முதல் சுற்று மற்றும் சுப்பர் சிக்ஸ் சுற்று) நான்கில் வெற்றிபெற்றது. ஒரு போட்டி முழமையாக கைவிடப்பட்டது. தென் ஆபிரிக்க துடுப்பாட்டத்தில் எவரும் பெரியளவில் பிரகாசிக்கவில்லை. ஏனெனில் அவர்களில் ஒருசிலரே துடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், சிறப்பான பந்துவீச்சே தென் ஆபிரிக்காவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியிருந்தது. தென் ஆபிரிக்கா சார்பாக துடுப்பாட்டத்தில் சிமோன் லௌரென்ஸ் 4 போட்டிகளில் 66 ஓட்டங்களையும் ஜெம்மா போத்தா 52 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட கேலா ரினெக் 9 விக்கெட்களையும் மோனா லிசா லெகோடி 6 விக்கெட்களையும் நிதாபிசெங் நினி 5 விக்கெட்களையும் கைப்பற்றினர். அவுஸ்திரேலியா 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை ஈட்டியதுடன் ஒரு தோல்வியைத் தழுவியது. அவுஸ்திரேலியவின் துடுப்பாட்டமும் பந்துவீச்சும் பலம்வாய்ந்ததாக போட்டி முடிவுகளிலிருந்து தெரிகிறது. அவுஸ்திரேலிய சார்பாக துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்திய கயோமே ப்றே 83 ஓட்டங்களையும் லூசி கேய் ஹெமில்டன் 71 ஓட்டங்களையும் கேட் மாரி பேலே 60 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஹஸ்ரத் கில் 8 விக்கெட்களையும் டேகான் வில்லியம்சன், எலினோர் லரோசா, கயோமே ப்றே ஆகியோர் தலா 7 விக்கெட்களையும், லில்லி பாசிங்வெய்ட் 6 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர். இந்தியா எதிர் இங்கிலாந்து இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை பலம்வாய்ந்த இந்தியா வெற்றிகொள்ளும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய இரண்டு துறைககளிலும் இந்தியா பலம்மிக்கதாக இருக்கிறது. முதல் சுற்றல் மிகக் குறைந்த எண்ணிக்கைளைக் கொண்ட போட்டிகளில் இலகுவாக வெற்றிபெற்ற இந்தியா, சுப்பர் சி;க்ஸ் சுற்றில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி கணிசமான மோத்த எண்ணக்கைகளைப் பெற்றது. 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் ட்ரிஷா கொங்காடி குவித்த முதலாவது சதத்தின் உதவியுடன் ஸ்கொட்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 200க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்தது. இந்தியா சார்பாக துடுப்பாட்டத்தில் ட்ரிஷா கொங்காடி ஒரு ஆட்டம் இழக்காத சதம் உட்பட 230 ஓட்டங்களையும் குணாலன் கமலினி ஒரு அரைச் சதத்துடன் 71 ஓட்டங்களை யும் பெற்றுள்ளனர். ஆறு துடுப்பாட்ட வீராங்கனைகளின் ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் மேற்பட்டதாக இருப்பது இந்தியாவுக்கு பலம்சேர்ப்பதாக அமைகிறது. பந்துவீச்சில் 5 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்கள் என்ற சிறந்த பந்துவீச்சுப் பெறுதியுடன் வைஷ்ணவி ஷர்மா 12 விக்கெட்களைக் கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறார். ஆயுஷி ஷுக்லா 10 விக்கெட்களையும் வி.ஜே. ஜோஷித்தா 6 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் அனைவரும் இங்கிலாந்துக்கு சவாலாக விளங்குவர் என நம்பப்படுகிறது. மறுபக்கத்தில் இங்கிலாந்து விளையாடிய 5 போட்டிகளில் 2 போட்டிகள் கைவிடப்பபட்டன. இதன் காரணமாக அதன் வீராங்கனைகளுக்கு துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் அதிகளவில் ஈடுபட முடியாமல்போனது. ஆனால், விளையாடப்பட்ட 3 போட்டிகளில் இங்கிலாந்து வீராங்கனைகள் சிறப்பான ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தனர். இங்கிலாந்து துடுப்பாட்டத்தில் டாவினா பெரின் ஓர் அரைச் சதத்துடன் 131 ஓட்டங்களையும் ஜெமிமா ஸ்பென்ஸ் 66 ஓட்டங்களையும் ட்ருடி ஜோன்சன் 60 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். பந்துவீச்சில் டில்லி கோர்டீன் கோல்மன் 7 விக்கெட்களையும் ப்ரிஷா தனவாலா 5 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர். இந்த இரண்டு அணிகளில் சகலதுறைகளிலும் இந்தியா பலம்வாய்ந்ததாக இருக்கின்றது. எனவே இந்தியாவை வெற்றிகொள்வதாக இருந்தால் இங்கிலாந்து அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்த வேண்டிவரும். இந்த இரண்டு அரை இறுதிப் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் பெப்ரவரி 2ஆம் திகதி நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும். https://www.virakesari.lk/article/205377
  24. கவாஜா இரட்டைச் சதம், அறிமுகப் போட்டியில் இங்லிஸ் சதம்; இலங்கையை பந்தாடியது அவுஸ்திரேலியா இக்கட்டான நிலையில் இலங்கை Published By: VISHNU 30 JAN, 2025 | 08:03 PM (நெவில் அன்தனி) சுழல்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என கருதப்படும் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாடரங்கில் நடைபெற்றுவரும் இலங்கைக்கு எதிரான முதலாவது வோர்ன் - முரளிதரன் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 6 விக்கெட்களை இழந்து 654 ஓட்டங்களைக் குவித்திருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. முதல் இரண்டு தினங்கள் தட்டையாகக் காட்சிகொடுத்த ஆடுகளத்தில் அவுஸ்திரேலியா கணிசமான ஓட்டங்களைக் குவித்தது. ஆனால், இலங்கை துடுப்பெடுத்தாடியபோது நிலைமை மாறி ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக திரும்ப, அவுஸ்திரேலியா 3 விக்கெட்களைக் கைப்பற்றி ஆட்டத்தில் தனது ஆதிக்கத்தை பலப்படுத்திக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் இலங்கை போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் மாலை மழையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டபோது அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 44 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. இதற்கு அமைய முதல் இன்னிங்ஸில் இன்னும் 7 விக்கெட்கள் மீதமிருக்க அவுஸ்திரேலியாவை விட 610 ஓட்டங்களால் இலங்கை பின்னிலையில் இருக்கிறது. பலோ ஒன்னை தவிர்ப்பதாக இருந்தால் இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் மேலும் 410 ஓட்டங்ளைப் பெறவேண்டும். அது சாத்தியப்படும் என எதிர்பார்க்க முடியாது. ஓஷத பெர்னாண்டோ (7), திமுத் கருணாரட்ன (7), ஏஞ்சலோ மெத்யூஸ் (8) ஆகிய மூவரே ஆட்டம் இழந்தவர்களாவர். கமிந்து மெண்டிஸ் 13 ஓட்டங்களுடனும் தினேஷ் சந்திமால் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருப்பதுடன் அவர்கள் இருவரும் நாளைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி முதல் ஒரு மணித்தியாலத்திற்குள் ஆட்டமிழக்காமல் இருக்கவேண்டும். பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க், மெத்யூ குணேமான், நேதன் லயன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 330 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா கணிசமான மொத்த எண்ணிக்கையைக் குவித்தது. தனது துடுப்பாட்டத்தை 104 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த ஸ்டீவன் ஸ்மித் 251 பந்துகளில் 12 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 141 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். ஸ்டீவன் ஸ்மித் 3ஆவது விக்கெட்டில் கவாஜாவுடன் 266 ஓட்டங்களைப் பகிர்ந் து அணியை பலமான நிலையில் இட்டார். மறுபக்கத்தில் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய உஸ்மான் கவாஜா, 352 பந்துகளில் 16 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 232 ஓட்டங்களைக் குவித்தார். இதன் மூலம் இலங்கை மண்ணில் இரட்டைச் சதம் குவித்த முதலாவது அவுஸ்திரேலியர் என்ற வரலாற்றுச் சாதனையை கவாஜா நிலைநாட்டினார். தென் ஆபிரிக்காவுக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கவாஜா ஆட்டம் இழக்காமல் 195 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழையினால் அவுஸ்திரேலியா தனது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது. இதனால் கவாஜாவால் இரட்டைச் சதத்தை பெறமுடியாமல் போனது. ஆனால், காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இரட்டைச் சதம் குவித்து அந்தக் குறையை கவாஜா நிவர்த்திசெய்துகொண்டார். இதேவேளை, உஸ்மான் கவாஜா, ஜொஷ் இங்லிஸ் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 146 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர். அறிமுக வீரரான போதிலும் அனுவம்வாய்ந்தவர்போல் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஜொஷ் இங்லிஸ் 94 பந்துகளில் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 102 ஓட்டங்களைப் பெற்று 5ஆவதாக ஆட்டம் இழந்தார். அவரது மேற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் பயிற்றுநர் அடம் வோக்ஸ் 2015இல் அறிமுக வீரராக டெஸ்ட் சதம் குவித்த பின்னர் அறிமுகப் போட்டியில் சதம் குவித்த அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை இங்லிஸ் பெற்றுக்கொண்டார். அத்துடன் மைக்கல் க்ளார்க், ஷோன் மார்ஷ் ஆகியோருக்குப் பின்னர் ஆசிய மண்ணில் அறிமுக வீரராக சதம் குவித்த மூன்றாவது அவுஸ்திரேலிய வீரரானார் ஜொஷ் இங்லிஸ். ஜொஷ் இங்லிஸ் சதம் குவித்தபோது அவரது பெற்றோரும் காலி சர்வதேச அரங்கில் போட்டியை இரசித்துக்கொண்டிருந்தனர். பெற்றோர் முன்னிலையில் சதம் குவிக்க கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுவதாகவும் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் இன்னிங்ஸ் நிறைவில் இங்லிஸ் கூறினார். அதன் பின்னர் அலெக்ஸ் கேரி, போ வெப்ஸ்டர் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். போ வெப்ஸ்டர் 23 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டபொது, அலெக்ஸ் கேரி 46 ஓட்டங்களுடனும் மிச்செல் ஸ்டார்க் 19 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் ஜெவ்றி வெண்டசே 182 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 193 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இப் போட்டியில் அசித்த பெர்னாண்டோ, நிஷான் பீரிஸ், ப்ரபாத் ஜயசூரிய, ஜெவ்றி வெண்டசே ஆகிய நான்கு பந்துவீச்சாளர்ளை மாத்திரமே இலங்கை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா பயன்படுத்தினார். அவரது இந்த செயல் இரசிகர்கள் மத்தியில் பெரும் வியப்பையும் அதிருப்தியையும் தோற்றுவித்தது. 61 டெஸ்ட் போட்டிகளில் 40 விக்கெட்களை வீழ்த்தியுள்ள தனஞ்சய டி சில்வா ஏன் தன்னை பந்துவீச்சில் பயன்படுத்திக்கொள்ள வில்லை என்ற கேள்வியை எழவைத்துள்ளது. பகுதிநேர பந்துவீச்சாளர் கமிந்து மெண்டிஸையும் அவர் பயன்படுத்தவில்லை. குறைந்தது பத்து ஓவர்களாவது இருவரும் பந்துவீசியிருக்கலாம் என்பது கிரிக்கெட் விமர்சகர்களின் அபிப்பிரயாமாகும். எதிரணி பலமான நிலையில் இருக்கும்போது சில துணிச்சலான தீர்மானங்களை அணித் தலைவர் எடுக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாராணமாக விளங்கியவர்கள் அர்ஜுன ரணதுங்க, அரவிந்த டி சில்வா ஆகியோராவர். அதேபோன்று தனஞ்சய டி சில்வாவும் எதிர்காலத்தில் துணிச்சலுடன் செயற்படுவது வரவேற்கத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/205372

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.