Everything posted by ஏராளன்
-
மைத்திரி ஆட்சியில் அமைக்கப்பட்ட மருதங்கேணி - பருத்தித்துறை வீதி தொடர்பில் வழக்கு தொடரத் தீர்மானம் - வட மாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர்
07 FEB, 2025 | 08:21 PM மருதங்கேணி - பருத்தித்துறை வீதியில், அண்ணளவாக ஒரு கிலோ மீட்டர் தூரம் கொண்ட வீதியை புனரமைக்க 8 கோடியே 2 இலட்சத்து 92 ஆயிரம் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் அமைக்கப்பட்ட இவ்வீதி தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடுக்கவிருப்பதாகவும் வட மாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார். முரளிதரன் தனது இல்லத்தில் நேற்று (6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், மருதங்கேணி தொடக்கம் அம்பன் வரையான 16 கி.மீ. தூரம் கொண்ட வீதி பயணிக்க முடியாத நிலையில் சிதைவடைந்து காணப்படுகிறது. வைத்திய தேவைகள், வியாபார நடவடிக்கைகளுக்காக முன்வைக்கப்பட்ட தொடர் கோரிக்கைகளால் வீதி திருத்தும் பணிக்கு நிதி வந்ததாக தெரிவிக்கப்படும்போதும் வீதி இன்னும் புனர்நிர்மாணம் செய்யப்படவில்லை. நோயாளிகளை கொண்டுசெல்வதற்கு பெரும் சிரமம் காணப்படுவதாக மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி கூறுகிறார். பலதரப்பட்ட கடிதங்களை அனுப்பியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் தொடர்ந்து பணி செய்வதற்கு சிரமமாக உள்ளதாக அவர் தெரிவிக்கிறார். மருதங்கேணி - பருத்தித்துறை வீதியில் அண்ணளவாக ஒரு கிலோ மீட்டர் புனரமைப்பதற்கு 8 கோடியே 2இலட்சத்து 92 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 16 கி.மீ தூரம் கொண்ட வீதிக்கு பெருந்தொகையான பணத்தை செலவிட்டு தரம் குறைந்த வீதியாக புனர்நிர்மாணம் செய்துள்ளனர். வீதி படுமோசமாக பாதிக்கப்பட்டு பயணிக்க முடியாத நிலையில் உள்ளது. வீதியை புனர்நிர்மாணம் செய்யாவிடில் இதற்கு எதிராக பொதுநல வழக்கு ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம். இந்த வழக்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம், பிரதேச சபையினர் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்படுமென தெரிவித்தார். https://www.virakesari.lk/article/206083
-
காசாவில் இன அழிப்புக்கு எதிராக ட்ரம்புக்கு ஐ.நா.தலைவர் எச்சரிக்கை!
காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் எச்சரிக்கை Published By: RAJEEBAN 07 FEB, 2025 | 02:08 PM காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் எச்சரித்துள்ளார். காசாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் அமெரிக்க ஜனாதிபதியின் யோசனை குறித்து கருத்துதெரிவிக்கையில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ் இனச்சுத்திகரிப்பு குறித்து எச்சரித்துள்ளார். பாலஸ்தீன மக்களின் பிரிக்க முடியாத உரிமைகளை பயன்படுத்துவது என்பது பாலஸ்தீன மக்கள் தங்கள் சொந்த நிலத்தில் மனிதர்களாக வாழ்வதற்கான உரிமை பற்றியது என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அந்த உரிமைகள் சாத்தியமாவது எட்டாத தூரத்தில் கைநழுவிகொண்டிருப்பதை பார்க்க முடிவதாக தெரிவித்துள்ளார். ஒரு இனக்குழுவை அச்சம்தரும்வகையில் ,திட்டமிட்ட முறையில் மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்துவதை பூதாகரமானவர்களாக சித்தரிப்பதை நாங்கள் பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். காசாவில் போரை ஆரம்பித்துவைத்த ஹமாசின் தாக்குதலை எதுவும் நியாயப்படுத்தவில்லை என தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் பழிவாங்கும் விதத்தில் இஸ்ரேல் காசாவை இடைவிடாமல் தாக்கியபோது ஏற்பட்டுள்ள அழிவையும் வார்த்தைகளால் சொல்ல முடியாத பயங்கரங்களையும் நியாயப்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை டிரம்பின் யோசனை குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் ஸ்டீபனே துஜாரிக் மக்களை பலவந்தமாக வெளியேற்றுவது இனச்சுத்திகரிப்பிற்கு ஒப்பானது என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/206067
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு எதிராக ட்ரம்ப் பொருளாதார தடை!
டிரம்பின் அடுத்த உத்தரவு: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு தடை விதிக்கக் காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மன் ஜூனியர் பதவி, பிபிசி நியூஸ், வெள்ளை மாளிகை 5 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) மீது தடை விதித்து நிர்வாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அந்த உத்தரவில் "அமெரிக்கா மற்றும் அதன் நெருங்கிய கூட்டணி நாடான இஸ்ரேல் மீது ஆதாரமற்ற, பொய்யான குற்றச்சாட்டுகளை ஐசிசி சுமத்துவதாக" அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க குடிமக்கள் அல்லது அமெரிக்கக் கூட்டாளி நாடுகளில் உள்ளவர்கள் மீது ஐசிசி விசாரணை மேற்கொள்வதற்கு துணைபோகும் நபர்கள் மீது நிதி மற்றும் விசா தடையை அறிவித்துள்ளார் அவர். வாஷிங்டனுக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வருகை தந்த பிறகு இப்படியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்ப் பேச்சு பற்றி பாலத்தீனர்கள் கூறுவது என்ன? காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்ப் பேச்சு பற்றி பாலத்தீனர்கள் கூறுவது என்ன? காஸா குறித்த டிரம்பின் பேச்சு இஸ்ரேல், ஹமாஸின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஆபத்தில் தள்ளுமா? அமெரிக்கா: இந்திய குடியேறிகள் நாடு கடத்தப்படுவது இரு நாட்டு உறவை பாதிக்குமா? கடந்த நவம்பர் மாதம், ஐ.சி.சி. காஸாவில் போர்க்குற்றங்கள் புரிந்ததாகக் கூறி, நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தது. அதேபோன்று, ஹமாஸ் அமைப்பின் தளபதிக்கும் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. வியாழக்கிழமை அன்று வெள்ளை மாளிகையில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் அறிக்கையில், நெதர்லாந்தின் ஹேக் எனும் நகரை மையமாகக் கொண்டு செயல்படும் ஐ.சி.சி. தார்மீக ரீதியில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு ஒரே நேரத்தில் வாரண்டை பிறப்பித்து சமமாக நடத்துவது வெட்கக்கேடானது என்று குறிப்பிட்டிருந்தது. நிர்வாக உத்தரவில் குறிப்பிட்டிருந்தது என்ன? ஐ.சி.சியின் சமீபத்திய நிகழ்வுகள் அனைத்தும் முன்னேப்போதும் இல்லாத வகையில் அபாயகரமானதாக உள்ளது என்றும், 'துன்புறுத்தல், துஷ்பிரயோகம், மற்றும் சாத்தியமான கைதுக்கு' அமெரிக்கர்களை ஆளாக்கும் வகையிலும் அதன் செயல்பாடுகள் உள்ளது என்றும் டிரம்பின் நிர்வாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. "இத்தகைய நடத்தை, அமெரிக்காவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட அதன் கூட்டணி நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் முக்கிய தேசிய பாதுகாப்பை குறைமதிப்புக்கு உள்ளாக்குகிறது," என்றும் அந்த நிர்வாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கொண்டு, "இரு நாடுகளும் (அமெரிக்காவும், இஸ்ரேலும்) வளர்ந்து வரும் ஜனநாயக நாடுகள். இவை முறையாக போர் விதிமுறைகளை பின்பற்றி வருகின்றன," என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?5 பிப்ரவரி 2025 டொனால்ட் டிரம்ப் ஆவணங்கள் இல்லாத புலம்பெயர்ந்தோரை எங்கு அடைத்து வைக்க திட்டமிட்டுள்ளார்?2 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காஸாவில் ஹமாஸுக்கு எதிராக நடைபெற்ற போரில், போர் குற்றங்களை நிகழ்த்தியதாகக் கூறி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை தொடர்ந்து விமர்சிக்கும் அமெரிக்கா அமெரிக்கா, ஐ.சி.சி.யில் உறுப்பினராக இல்லை. மேலும், அமெரிக்க அதிகாரிகள் மற்றும் குடிமக்கள் தொடர்பாக வெளியாகும் அனைத்து விதமான குற்றச்சாட்டுகளையும் அமெரிக்கா தொடர்ச்சியாக மறுத்துவருகிறது. தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான இஸ்ரேலின் உரிமை மீது ஐ.சி.சி. கட்டுப்பாடுகள் விதிக்கிறது என்றும், இரான் மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான குழுக்களை ஐ.சி.சி. கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்றும் வெள்ளை மாளிகை குற்றம்சாட்டுகிறது. டிரம்ப் தொடர்ச்சியாக இந்த நீதிமன்றத்தை விமர்சனம் செய்து வந்தார். இதற்கு முன்பு அதிபராக பதவி வகித்த போதும் இந்த நீதிமன்றத்தின் மீது தடை விதிக்க சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆப்கானிஸ்தானில் போர்க் குற்றங்களில் அமெரிக்கா ஈடுபட்டதா என்பதை விசாரித்த ஐ.சி.சி. அதிகாரிகள் மீது அவர் தடை விதித்தார். ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் அந்தத் தடைகள் நீக்கப்பட்டன. கடந்த மாதம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஐ.சி.சிக்கு தடை விதிக்க வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆனால், அந்த மசோதா செனட் அவையில் தோல்வி அடைந்தது. யுகோஸ்லாவியா அரசு கலைப்பு, ருவாண்டா இனப்படுகொலை போன்ற நிகழ்வுகளைளைத் தொடர்ந்து, வன்முறை குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் வகையில் 2002-ம் ஆண்டு ஐ.சி.சி. உருவாக்கப்பட்டது. ஐ.சி.சியை உருவாக்கிய ரோம் உடன்படிக்கையை 120 நாடுகள் அங்கீகரித்துள்ளன. மேலும், 34 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. எதிர்காலத்தில் அந்த நாடுகளும் ஐ.சி.சியை அங்கீகரிக்கலாம். ரோம் உடன்படிக்கையை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அங்கீகரிக்கவில்லை. இதுபோன்ற சர்வதேச விவகாரத்தில் ஐசிசி என்பது கடைசி முயற்சியாகும். இது தேசிய அளவிலான அதிகாரிகளால் வழக்குத் தொடர முடியாத நிலையோ, விசாரணை செய்ய முடியாத நிலையில் தான் ஐ.சி.சி வழக்கை விசாரிக்க முன்வரும். முன்னாள் அதிபர் பைடனும், நெதன்யாகுவுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக கருத்துகளை முன்வைத்தார். அவர் ஐ.சி.சியின் நடவடிக்கை மூர்க்கத்தனமாக உள்ளது என்றும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸை சமமாக பாவிக்கக்கூடாது என்றும் கூறினார். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான டிரம்பின் நட்பு இந்த ஆட்சியில் தொடருமா? சவால்கள் என்ன?31 ஜனவரி 2025 ஸ்வீடனில் குர்ஆனை எரித்த இராக்கியர் சுட்டுக் கொலை - வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பு உள்ளதா?31 ஜனவரி 2025 பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, டிரம்பும் நெதன்யாகுவும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தப் பிறகு ஐ.சி.சி. தொடர்பான நிர்வாக உத்தரவை பிறப்பித்தார் டிரம்ப் காஸாவை கைப்பற்றும் முனைப்பில் அமெரிக்கா செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவும் கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்கள். அப்போது, காஸாவை அமெரிக்கா எடுத்துக்கொண்டு அங்கே பாலத்தீனர்களை மறுகுடியிருப்பு செய்து, மத்திய கிழக்கின் 'சொர்க்கபூமியாக' மாற்ற திட்டம் ஒன்று அமெரிக்காவிடம் உள்ளது என்று தெரிவித்தார் டிரம்ப். அதனைத் தொடர்ந்து, இந்த நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரபு நாடுகளின் தலைவர்களும், ஐக்கிய நாடுகளின் சபையும் அமெரிக்காவின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிறகு, டொனால்ட் டிரம்ப் அவரின் ட்ரூத் சோசியல் பக்கத்தில் மீண்டும் தன்னுடைய முடிவை உறுதி செய்யும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டார். "சண்டையின் முடிவில் காஸா கரையை இஸ்ரேல் அமெரிக்காவுக்கு வழங்கிவிடும்," என்று டிரம்ப் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருந்தார். அங்கே பாலத்தீனர்கள் மறுகுடியிருப்பு செய்யப்படுவார்கள் என்றும் அமெரிக்க ராணுவத்தினர் யாரும் அங்கே பணிக்கு அமர்த்தப்பட மாட்டார்கள் என்றும் மீண்டும் உறுதி அளித்தார் டொனால்ட் டிரம்ப். வடக்கு காஸாவில் காணப்படும் 'பேரழிவு நிலை' - அங்கே என்ன நடக்கிறது?30 ஜனவரி 2025 அமெரிக்க அதிபரான பிறகு முதன் முறையாக மோதியுடன் பேச்சு - டிரம்ப் முன்வைத்த 2 விஷயங்கள் என்ன?29 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முன்மொழிதலின்படி, இந்த கட்டுமானப் பணிகள் நடைபெறும் காலத்தில் காஸா மக்கள் அங்கிருந்து தற்காலிகமாக வேறொரு இடத்துக்கு செல்வார்கள் ஆனால் அங்கே வசித்து வந்த 2 மில்லியன் பாலத்தீனர்கள் அனைவரும் அங்கே மறுகுடியிருப்பு செய்யப்படுவார்களா என்பது தொடர்பான எந்த தகவலையும் அவர் தெளிவாக தெரிவிக்கவில்லை. வெள்ளை மாளிகை ஊடகத்துறை செயலர் கரோலின் லிவிட் இது தொடர்பாக புதன்கிழமை பேசியபோது, எந்த ஒரு பணியமர்த்தலும் தற்காலிகமானதே என்று தெரிவித்தார். வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, முன்மொழிதலின்படி, இந்த கட்டுமானப் பணிகள் நடைபெறும் காலத்தில் காஸா மக்கள் அங்கிருந்து தற்காலிகமாக வேறொரு இடத்துக்கு செல்வார்கள் என்று குறிப்பிட்டார். கேபிடல் ஹில்லுக்கு வந்த நெதன்யாகு அங்கே குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களை சந்தித்துப் பேசினார். டிரம்புடன் முக்கிய உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டார். நெதன்யாகு டிரம்புக்கு தங்கத்தால் ஆன 'பேஜர்' ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேஜர் கருவிகள் மூலம் ஹெஸ்பொலா அமைப்பினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை குறிக்கும் வகையில் இந்த அன்பளிப்பு இருந்தது. இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். சில ஆயிரம் மக்கள் காயம் அடைந்தனர். இஸ்ரேலோ, இரானால் ஆதரிக்கப்படும் ஹெஸ்பொலா உறுப்பினர்களை தாக்கும் நோக்கில் மட்டுமே உருவாக்கப்பட்டது என்று குறிப்பிடுகிறது. ஆனால், லெபனானில் பாதிக்கப்பட்டவர்களில் குடிமக்களும் இருந்தனர் என்று கூறுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz6p20565qdo
-
‘GovPay’ வசதி இன்று ஜனாதிபதியால் தொடக்கிவைக்கப்படுகிறது
டிஜிட்டல் மயமாக்கல் நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும் என்பது உறுதி - ஜனாதிபதி Published By: DIGITAL DESK 3 07 FEB, 2025 | 04:10 PM டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, அரச டிஜிட்டல் கொடுப்பனவு தளமொன்றை உருவாக்குதல் (GovPay) ,ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்திற்கு கொண்டுச் செல்லல், தூதரகங்களிலிருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு (eBMD) சான்றிதழ்களை மென்பொருள் மூலம் பெற்றுக் கொள்ளல் என்பன மேற்கொள்ளப்படும். டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, ICTA நிறுவனம் மற்றும் லங்கா பே (Lanka Pay) ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன், கொடுப்பனவு முறையின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை உறுதி செய்ய மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. "Govpay" மென்பொருள் மூலம் ஆரம்ப கட்டமாக 16 அரசு நிறுவனங்களின் அனைத்து விதமான கொடுப்பனவுகளை செய்ய முடியும் என்பதுடன், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் மேலும் 30 அரச நிறுவனங்களில் இந்த மென்பொருளை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சகல அரச நிறுவனங்களையும் இதனுடன் இணைக்க எதிர்பார்க்கப்படுவதோடு ஏற்கெனவே 12 அரச மற்றும் தனியார் வங்கிகள் இதில் இணைந்துள்ளன இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தொழிநுட்பம் மற்றும் அறிவியலினால் ஏற்படும் முன்னேற்றங்கள் மக்களின் வாழ்வை இலகுவாக்குவதாகவும், இதன் மூலம் வினைத்திறனான, தரமான மற்றும் விரயம் குறைந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார். தொழிநுட்பத்தின் வெற்றிகளின் காரணமாகவே உலக வரலாற்றில் படிப்படியாக முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, மனித நாகரிகத்தை ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு நிலைக்கு உயர்த்த விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்தின் புதிய கண்டுபிடிப்புகள் என்பன செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஜனாதிபதி நிதியத்தின் பணிகள் இதுவரை காலமும் கொழும்பில் இருந்தே செயற்படுவதாகவும், அதனால் தூர பிரதேசங்களில் உள்ள பிரஜைகள் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று முதல் பிரதேச செயலக மட்டத்தில் குறித்த முறைமையை செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். நீண்ட காலத்துக்கு முன்னரே இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், சரியான நேரத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படாமையினால் மக்களின் வாழ்க்கையும் நாட்டின் பொருளாதாரமும் பின்னடைந்து காணப்படுவதோடு, இன்றைய தினம் டிஜிட்டல் மயமாக்கல் மூலமாக நகரமும் கிராமமும் ஒன்றிணைந்துள்ளதால், கிராமிய வறுமையை ஒழிப்பதற்கும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் அவசியமானது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். எமது நாட்டை தற்போதைய நிலையில் இருந்து புதிய நிலைக்கு உயர்த்தும் ஒரே வழி டிஜிட்டல் மயமாக்கல் எனவும், அதனால் மக்களின் தேவைகளை எந்தவிதமான அழுத்தம் மற்றும் அலைச்சல் இன்றி நிறைவேற்ற முடியும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இயந்திரமயமான வாழ்க்கை முறையினால் எமது நாட்டு மக்கள் பண்பாட்டு ரீதியான வாழ்க்கையை இழந்துள்ளதாகவும், பண்பாட்டு வாழ்வை உருவாக்கிகொள்ள டிஜிட்டல் மயமாக்கல் வசதியாக அமையும் எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இத்திட்டம் வெற்றியடைய வேண்டும் என்றும், டிஜிட்டல் அடையாள அட்டை இதன் முக்கிய திருப்புமுனையாக அமையும் என்றும் சுட்டிக்காட்டினார். இந்த மாற்றங்கள் மிக விரைவாக செய்யப்பட வேண்டும் என்றும், வெளிப்படைத்தன்மை, வினைத்திறன், கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையிலான இடைவௌியை குறைத்து டிஜிட்டல் மயமாக்கல் என்பன எமது நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும் எனவும், அதற்காக அரசாங்கம் என்ற வகையில் நாம் கடுமையாக பாடுபடுகிறோம் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார். தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் (ICTA) தலைவரும், டிஜிட்டல்மயமாக்கல் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய உரையாற்றுகையில், வலுவான டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான திறன்களில் 75% இலங்கை கொண்டிருப்பதாக கூறினார். எவ்வாறாயினும், அதன் அடிப்படையை முழுமையாக திறப்பதற்கு, நாடு எஞ்சியுள்ள இடைவெளியை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் முழுமைப்படுத்த வேண்டும் என்றும் ஹான்ஸ் விஜேசூரிய கூறினார். பிரதேச செயலக மட்டத்தில் ஜனாதிபதி நிதியத்தை செயல்படுத்தும் நடவடிக்கை இதன்போது ஆரம்பிக்கப்பட்டதுடன், அடையாளரீதியாக இணையத்தளத்தில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. புதிய டிஜிட்டல் மாற்றத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளை இலங்கையர்கள் தாம் வசிக்கும் நாடுகளின் தூதரகத்திலிருந்து பெற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப கட்டமாக தென்கொரியாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவருக்கு இணையவழி ஊடாக பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கான பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள் அவர்கள் வசிக்கும் நாடுகளின் தூதரகத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளமை மிக முக்கியமான ஒரு முன்னெடுப்பாகும் என்பதுடன், இது அவர்களின் வாழ்க்கையைப் பல வழிகளில் இலகுபடுத்தும். பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்டமேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதிய செயலாளருமான ரொஷான் கமகே உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/206081
-
கச்சதீவு திருவிழாவிற்கான திகதி அறிவிப்பு
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் 8 ஆயிரம் யாத்திரீகர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு - யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் 07 FEB, 2025 | 03:24 PM எதிர்வரும் மார்ச் மாதம் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கான ஏற்பாடு குறித்த கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (07) யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடலின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கச்சதீவு பிரதேசத்தை பொது மக்களின் வழிபாட்டுக்கு ஏற்ற வகையில் தயார்படுத்தல் குறித்தான நடவடிக்கைகள் கடற்படையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் பிரதேச சபையின் உத்தியோகத்தர்களும் இணைந்துள்ளார்கள். இந்த திருவிழாவில் கலந்துகொள்ளவுள்ள யாத்திரிகர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன. குடிநீர் விநியோகம் மற்றும் மலசலகூட வசதிகள் குறித்து ஆராயப்பட்டது. இவ்வருடம் இலங்கையை சேர்ந்த 4,000 யாத்திரீகர்களும் இந்தியாவை சேர்ந்த 4,000 யாத்திரீகர்களும் என 8 ஆயிரம் யாத்திரிகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மேலதிகமாக உத்தியோகத்தர்கள், ஏனையோர் என ஆயிரம்பேர் உள்ளடங்கலாக 9 ஆயிரம்பேர் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கலந்து கொள்பவர்களுக்குரிய உணவு வசதிகள் குறித்து ஆராயப்பட்டது. அந்தவகையில் யாத்திரிகர்களுக்கு 14ஆம் திகதி இரவு உணவும், 15ஆம் திகதி காலை உணவும் வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. போக்குவரத்துக்காக இ.போ.ச இன் பேருந்துகளும் தனியார் போக்குவரத்து துறையினரின் பேருந்துகளும் பயன்படுத்தப்படவுள்ளன. 14ஆம் திகதி காலை 4 மணிமுதல் 11.30 வரை யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து அந்த பேருந்துகள் புறப்படும். அவர்களுக்குரிய போக்குவரத்து கட்டணமாக, நெடுந்தீவில் இருந்து கச்சதீவு செல்வதற்குரிய ஒருவழி கட்டணமாக ஆயிரம் ருபாவும், குறிகட்டுவானில் இருந்து கச்சதீவு செல்பவர்களுக்குரிய ஒருவழி கட்டணமாக ஆயிரத்து முந்நூறு ரூபாவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே இவ்வாறு படகு சேவையில் ஈடுபடுகின்ற படகின் உரிமையாளர்கள், பொதுமக்களின் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் அதற்குரிய சான்றிதழ்களை கடற்படையினரிடம் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் எம்மால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ள யாத்திரிகர்கள் தங்களுடைய சுகாதார செயற்பாடுகளை பரிசீலிப்பதற்காக எங்களுடைய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டார். கடந்த வருடத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் அல்லது அதில் அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. சுங்கத் திணைக்களத்தின் பிரசன்னமும் இன்றைய கூட்டத்தில் இருந்தது. இந்தியாவில் இருந்து வருகின்ற யாத்திரிகர்களை, சரியான நடைமுறைகளுக்கு அமைவாக வரவேற்று அவர்களை ஆலய வழிபாட்டு செயற்பாடுகளில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து அடுத்தகட்ட கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டு, எடுக்கப்படவுண்டிய இறுதித் தீர்மானங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது என்றார். யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் யாழ். மறை மாவட்ட குருமுதல்வர், யாழ். இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், கடற்படையின் பிரதி தளபதி, பொலிஸ் அதிகாரிகள் ஏனையோர் பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/206066
-
யாழ்.மாவட்டத்தில் வளி மாசுபடுதல் தொடர்பில் சுற்றாடல் அதிகார சபையினால் கண்காணிப்பு
Published By: DIGITAL DESK 3 07 FEB, 2025 | 03:17 PM யாழ்.மாவட்டத்தில் வளி மாசுபடுதல் தொடர்பாக சுற்றாடல் அதிகார சபையினால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை (07) அவரது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே இருந்த இயந்திரங்கள் பழுதுபார்க்கப்பட்டு அவை தற்போது மீளப் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் வளி மாசுபடுதலின் தன்மைகள் குறித்து அவதானிக்கப்பட்டு அவர்களால் அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது என்றார். https://www.virakesari.lk/article/206074
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
தலைமன்னாரில் கைதான 13 இந்திய மீனவர்களுக்கு விடுதலை; நால்வருக்கு விளக்கமறியல் Published By: DIGITAL DESK 3 07 FEB, 2025 | 04:35 PM இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களில் 13 பேர் விடுதலை செய்யப் பட்டதோடு, ஏனைய நால்வரையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். 17 இந்திய மீனவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி அதிகாலை தலை மன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு முதற்கட்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தில் ஒப்படைக்கபட்டிருந்தனர். கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளின் விசாரணையின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் 17 சந்தேக நபர்களையும் ஆஜர்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட 17 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் குறித்த மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (7) மீண்டும் வழக்கு விசாரணைகளுக்கு அழைத்து வரப்பட்டனர். விசாரணை முடிவில் குறித்த 17 இந்திய மீனவர்களில் இரு மீனவர்களுக்கு கைவிரல் அடையாளங்கள் பெறப்படாத காரணங்களினால் இரண்டு மீனவர்களையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறும்,மேலும் இரண்டு மீனவர்களுக்கு இரண்டாவது தடவையாகவும் எல்லை தாண்டி சட்டவிரோத இழுவை மடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்த குற்றத்திற்காக இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. ஏனைய 13 பேருக்கும் தளா 50 ஆயிரம் ரூபாய் தண்ட பணத்துடன் கூடிய இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு 13 பேரையும் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்தது. https://www.virakesari.lk/article/206080
-
ரஸ்ய உக்ரைன் போர்முனையில் 56 இலங்கையர்கள் இதுவரை பலி
07 FEB, 2025 | 12:40 PM ரஸ்ய உக்ரைன் போர்முனையில் இதுவரை 56 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுப்பிய கேள்விக்கு ரஸ்ய தூதரக தகவல்களை அடிப்படையாக கொண்டு பதிலளிக்கையில் வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலை பணியகம் போன்றவற்றிற்கு கிடைத்துள்ள தகவல்களின்படி உக்ரைனிற்கு எதிராக போரிடுவதற்காக 554 இலங்கையர்களை ரஸ்யா சேர்த்துக்கொண்டுள்ளது என தெரிவித்துள்ள விஜித ஹேரத் எவரையும் ரஸ்யா பலவந்தமாக சேர்த்துக்கொண்டது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளார். 2025 ஜனவரி 20 ம் திகதி வரை 59 இலங்கையர்கள் ரஸ்ய உக்ரைன் போர்முனையில் கொல்லப்பட்டுள்ளனர், என தெரிவித்துள்ள அமைச்சர் இவர்கள் குறித்த விபரங்கள் என்னிடம் உள்ளன இவற்றை நாடாளுன்ற ஹன்சார்ட்டில் சேர்ப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/206056
-
இந்தியா - இங்கிலாந்து ரி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்
இந்தியா VS இங்கிலாந்து: இந்திய அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்ற மூவர் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அரை சதம் அடித்த மகிழ்ச்சியில் ஷ்ரேயாஸ் அய்யர் 7 பிப்ரவரி 2025, 02:47 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஷ்ரேயாஸ் அய்யர், சுப்மான் கில், அக்ஸர் படேல் ஆகியோரின் அபாரமான அரை சதத்தால், நாக்பூரில் வியாழக்கிழமை (பிப். 06) பகலிரவாக நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 249 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியின் வெற்றிக்கு நடுவரிசை பேட்டர்கள் ஷ்ரேயாஸ் அய்யர் (59), சுப்மான் கில் (87), அக்ஸர் படேல் (52) ஆகியோரின் அரைசதம் முக்கியக் காரணமாக அமைந்தது. 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து தடுமாறியபோது, 3-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ், சுப்மான் கில் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து 94 ரன்கள் சேர்த்தது ஆட்டத்தின் போக்கைத் தீர்மானித்தது. 4-வது விக்கெட்டுக்கு சுப்மான் கில், அக்ஸர் படேல் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றது, இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இந்த 3 பேரும் சேர்ந்து அமைத்த இரு பார்ட்னர்ஷிப்கள்தான் வெற்றியை எளிதாக்கியது. சாம்பியன்ஸ் டிராஃபி நெருங்கி வரும் நேரத்தில் நடுவரிசை பேட்டர்கள் வலுவாக பிரகாசிப்பது இந்திய அணிக்கு பலமாகும். 96 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்த சுப்மான் கில் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கோலி, ரோஹித்துக்கு கடைசி வாய்ப்பு - இந்திய அணிக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் என்னென்ன? ரொனால்டோ: உலகின் சிறந்த கால்பந்து வீரரா? தமிழக, கேரள கால்பந்து ரசிகர்கள் சொல்வது என்ன? அபிஷேக் சர்மா: யுவராஜ் சிங் உருவாக்கிய வீரர் சிக்சர்களை பறக்கவிடும் ரகசியம் IND vs SA: 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது எப்படி? விராட் கோலி இல்லை முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இந்த ஆட்டத்தில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டிருந்தார். "ஒருவேளை கோலி ஆடியிருந்தால், எனக்கு அணியில் இடம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம், "என்று ஷ்ரேயாஸ் அய்யரே பேட்டியில் தெரிவித்தார். வெற்றிக்கு யார் காரணம்? வெற்றிக்குப் பின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், "நீண்ட காலத்துக்குப் பின் ஒருநாள் போட்டியில் ஆடி வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. விரைவாக இந்த ஃபார்முக்கு மாற வேண்டும், புரிந்துகொண்டு ஆடவேண்டும் என நினைத்தேன். நல்ல தொடக்கத்தை நாங்கள் வழங்கவில்லை, இருப்பினும் நடுவரிசை பேட்டர்கள் அற்புதமாக ஆடினர். பந்துவீச்சாளர்கள்தான் கட்டுக்கோப்புடன் பந்துவீசி இங்கிலாந்து அணியை குறைந்த ஸ்கோரில் சுருட்டினர். தொடர்ந்து கட்டுக்கோப்புடன் பந்துவீசியது, முக்கிய நேரத்தில் விக்கெட்டை வீழ்த்தியது, உத்வேகம் குறையாமல் இருந்தது வெற்றிக்கான காரணம். அக்ஸர் படேலை நடுவரிசையில் களமிறக்க விரும்பினோம், அவரும் சிறப்பாக பேட் செய்தார். கடந்த சில ஆண்டுகளில் அக்ஸர் பேட்டிங் மேம்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராஃபி வரும் நேரத்தில் நடுவரிசை பேட்டிங் வலுப்பெறுவது நல்ல அம்சம். ஒரு அணியாக சரியான திசையில் செல்கிறோம், பேட்டிங், பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார் இந்தியர்களை கைவிலங்கிட்டு அனுப்பிய அமெரிக்கா - இதுவரை நடந்தது என்ன? முழு விவரம்5 மணி நேரங்களுக்கு முன்னர் காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்ப் பேச்சு பற்றி பாலத்தீனர்கள் கூறுவது என்ன?6 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முக்கிய நேரத்தில் விக்கெட்டை வீழ்த்தியது வெற்றிக்கான காரணம் என ரோஹித் சர்மா கூறினார் அனுபவம், இளமை இந்திய பந்துவீச்சில் அனுபவமும், இளமையும் கலந்திருந்தது. முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய ஹர்சித் ராணா 3 விக்கெட்டுகளையும், அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதிலும் ஜடேஜா 9 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன், 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார். ஷமி 8 ஓவர்களில் ஒரு மெய்டன் 38 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். இந்திய அணி பந்துவீச்சைப் பொருத்தவரை ராணா, ஷமி இருவருமே சிறப்பாகப் பந்துவீசினர். தொடக்கத்தில் ராணா பந்துவீச்சை இ்ங்கிலாந்து பேட்டர்கள் அடித்தாலும் அதன்பின் கட்டுக்கோப்பாக வீசினார். அதேநேரம், அறிமுகப் போட்டியில் ஒரே ஓவரில் 26 ரன்கள் கொடுத்த மோசமான சாதனையையும் ராணா பதிவு செய்தார். அக்ஸர் படேல், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் என 3 பேருமே ஓரளவுக்குக் கட்டுக்கோப்பாகவே பந்துவீசினர். சுழற்பந்துவீச்சுக்கு இங்கிலாந்து பேட்டர்கள் திணறுவது இந்த ஆட்டத்தில் தெளிவாகத் தெரிந்தது. ஜடேஜாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜோ ரூட், பெத்தல் ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளும் ரஷித் விக்கெட்டும் வீழ்ந்தது. பவர்பிளே ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஓரளவுக்கு ரன்கள் கொடுத்தாலும், நடுப்பகுதி ஓவர்களில் குல்தீப், அக்ஸர், ஜடேஜா ஆகியோரின் ஓவர்கள் இங்கிலாந்து ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தது. கேரளா: 15 வயது தனியார் பள்ளி மாணவர் தற்கொலையில் நீடிக்கும் மர்மம் - கொடூரமான ரேகிங் காரணமா?6 பிப்ரவரி 2025 காஸா குறித்த டிரம்பின் பேச்சு இஸ்ரேல், ஹமாஸின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஆபத்தில் தள்ளுமா?6 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோஹித் சர்மா, ஹர்சித் ராணா திறம்பட விளையாடாத ரோஹித் இந்திய பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா கூட்டணி ஏமாற்றம் அளித்தது. 19 ரன்களுக்குள் இருவருமே ஆட்டமிழந்து நெருக்கடியான சூழலை ஏற்படுத்தினர். கேப்டன் ரோஹித் சர்மா நியூசிலாந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர், ரஞ்சிக் கோப்பைத் தொடர் இரண்டிலும் திறம்பட விளையாடாத நிலையில் இந்த ஒருநாள் தொடர் அவருக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2 ரன்னில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்து ஏமாற்றினார். கடந்த 10 இன்னிங்ஸில் ரோஹித் சர்மா 70 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்ஸ்வால் 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஷ்ரேயாஸின் அனல்பறக்கும் அரைசதம் 2 விக்கெட்டுகள் விரைவாக இழந்த நிலையில் களமிறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிலும், ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் தொடர்ந்து 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, ரன் ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்றார். பவர்பிளேயை சரியாகப் பயன்படுத்திய ஷ்ரேயாஸ் அய்யர் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். 8 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 30 பந்துகளில் அரைசத்தை ஷ்ரேயாஸ் அய்யர் நிறைவு செய்தார். ஷ்ரேயாஸ் களத்தில் இருந்தவரை அணியின் ரன்ரேட் 7-க்குக் குறையாமல் சென்றது. 36 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்த ஷ்ரேயாஸ் அய்யர், பெத்தல் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் களத்தில் இருந்த 45 நிமிடங்களில் ஆட்டத்தில் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. பெண் பிறப்புறுப்பு சிதைப்பு: இந்த வலிமிகுந்த நடைமுறையால் ஏற்படும் பாதிப்புகள்6 மணி நேரங்களுக்கு முன்னர் விடாமுயற்சி: இரண்டாம் பாதியால் வீண்முயற்சி ஆனதா? - ஊடக விமர்சனம்6 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் சுப்மான் கில் கில், அக்ஸர் பொறுப்பான அரைசதம் 4-வது விக்கெட்டுக்கு சுப்மான் கில், அக்ஸர் படேல் கூட்டணி நிதானமாக ஆடி அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர். அக்ஸர் படேல் வழக்கமாக 7-வது பேட்டராக களமிறங்கிய நிலையில், அவரை நடுவரிசையில் களமிறக்கினர். தனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திய அக்ஸர் படேல் கட்டுப்பாடின்றி, சுதந்திரமாக ஷாட்களை அடித்தார். சுப்மான் கில் 38 ரன்கள் சேர்த்திருந்தபோது லிவிங்ஸ்டன் பந்துவீச்சில் கால்காப்பில் டிஆர்எஸ் அப்பீல் சென்று தப்பித்தார். அதன்பின் விழித்துக்கொண்டு ஆடிய கில், மிகுந்த கவனத்துடன் ஷாட்களைத் தேர்ந்தெடுத்து ஆடி 14-வது அரைசதத்தையும், இங்கிலாந்துக்கு எதிராக முதல் அரைசதத்தையும் பதிவு செய்தார். கிருஷ்ணகிரி: பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது எப்படி?6 பிப்ரவரி 2025 அமெரிக்கா: இந்திய குடியேறிகள் நாடு கடத்தப்படுவது இரு நாட்டு உறவை பாதிக்குமா?6 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 4வது விக்கெட்டுக்கு சுப்மான் கில், அக்ஸர் படேல் கூட்டணி நிதானமாக ஆடி அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர் மிகுந்த பொறுப்புடன் ஆடிய அக்ஸர் படேல் 46 பந்துகளில் தனது முதல் அரைசதத்தையும் நிறைவு செய்தார். 28 ஓவர்களில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது. ரஷித் பந்துவீச்சில் அக்ஸர் படேல் 52 ரன்களில் க்ளீன்போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் 2 ரன்னில் ரஷீத் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். சுப்மான் கில் 87 ரன்கள் சேர்த்திருந்தபோது மெஹ்மூத் பந்துவீச்சில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 221 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்த இந்திய அணி, அடுத்த 14 ரன்களுக்குள் விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்தது. ஹர்திக் பாண்டியா (9), ஜடேஜா (12) இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மிகுந்த பொறுப்புடன் ஆடிய அக்ஸர் படேல் 46 பந்துகளில் தனது முதல் அரைசதத்தையும் நிறைவு செய்தார் அதிரடி தொடக்கமும், திடீர் சரிவும் இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை பில் சால்ட், டக்கெட் இருவரும் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். தொடக்கத்திலிருந்தே ராணாவின் திறமையாக பந்துவீசினார். ராணாவின் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டர்கள் என 26 ரன்கள் சேர்த்து சால்ட் அதிரடியாக ஆடினார். இதனால் விரைவாகவே ராணாவின் ஓவரை நிறுத்திவிட்டு அக்ஸர் படேலை பந்துவீச கேப்டன் ரோஹித் அழைத்தார். ஹர்திக் பாண்டியா வீசிய 9-வது ஓவரில் அவுட்சைட் ஆஃப் திசையில் தட்டிவிட்டு சால்ட் ரன் ஓடினார். 2 ரன்கள் ஓடியநிலையில், 3வது ரன் ஓடத் தொடங்கும்போது, ஷ்ரேயாஸ் ஃபீல்டிங் செய்து பந்தை விக்கெட் கீப்பர் ராகுலிடம் எறிந்தார். ஆனால், சால்ட் ஓடிய வேகத்துக்கு, டக்கெட் ஒத்துழைக்கவில்லை. இதனால், பில் சால்ட் 26 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து ரன் அவுட் ஆகினார். டக்கெட்டுடன் தகவல் பரிமாற்றம் சரியாக அமையாததால் சால்ட் விக்கெட்டை இழந்தார். ஒருவேளை சால்ட் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் இங்கிலாந்து அணி பெரிய ஸ்கோரை எட்டியிருக்கும். 75 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி ஆடிய இங்கிலாந்து அணி, அடுத்த 2 ரன்கள் சேர்ப்பதற்குள் சால்ட், டக்கெட், ஹேரி ப்ரூக் விக்கெட்டுகளை பறிகொடுத்து 77 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அனுபவ வீரர் ஜோ ரூட் 2023 உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் விளையாடியதால், ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துவார் என கருதப்பட்டது. ரூட் 19 ரன் சேர்த்திருந்தபோது, ஜடேஜா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். 111 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து நிலைகுலைந்தது. அதன்பின், கேப்டன் பட்லர், ஜேக்கப் பெத்தல் இருவரும் நடுவரிசையில் விக்கெட்டை ஸ்திரப்படுத்தி, நிதானமாக பேட் செய்தனர். நிதானமாக ஆடிய பட்லர் 58 பந்துகில் அரைசதம் அடித்து (52), ரன்களில் அக்ஸர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்து பட்லர், பெத்தல் கூட்டணி பிரிந்தது. பொறுமையாக பேட் செய்த பெத்தல் 2வது அரைசதம் அடித்து (51) ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவரும் ஆட்டமிழந்தபின், இங்கிலாந்து அணியின் கடைநிலை பேட்டர்கள் லிவிங்ஸ்டோன் (5), பிரைடன் கார்ஸ் (10), ரஷித் (8), மெஹ்மூத் (2) என சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். 206 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணி அடுத்த 42 ரன்களில் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20327ddq54o
-
அதிகரிக்கும் சீன - அமெரிக்க வர்த்தகப் போர்; வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு புதிய வர்த்தகப் போர் அச்சத்துக்கு மத்தியில் தங்கத்தின் விலையானது வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. சீனப் பொருட்கள் மீதான புதிய அமெரிக்க வரிகளுக்கு பதிலடியாக பீஜிங் அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை விதித்ததை அடுத்து இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஸ்பாட் தங்கம் 02.53 GMT மணியளவில் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.2 சதவீதம் உயர்ந்து 2,848.69 அமெரிக்க டொலர்களாக இருந்தது. முந்தைய நாள் அமர்வில் 2,853.97 அமெரிக்க டொலர்களை எட்டிய பின்னர் தங்கத்தின் விலையானது புதனன்று உச்சத்தை அடைந்தது. அதேநேரம், அமெரிக்க தங்க எதிர்காலம் 0.2 சதவீதம் அதிகரித்து 2,879.70 டொலர்களாக இருந்தது. உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் பதட்டத்தைத் தணிக்க சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தை இந்த வாரம் இடம்பெறாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். சீனா, அமெரிக்க இறக்குமதிகள் மீது புதிய வரிகளை விதித்தது மற்றும் ட்ரம்பின் கட்டணங்களுக்கான பதிலில் சாத்தியமான தடைகளுக்கு கூகுள் உட்பட பல நிறுவனங்களை பட்டியலிட்டது. இவ்வாறான பின்னணியில் இரு நாடுளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்தால் தங்கத்தின் விலையானது 3,000 அமெரிக்க டொலர்களை விஞ்சியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மூன்று பெடரல் ரிசர்வ் அதிகாரிகள் ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக கட்டணங்களுக்கான திட்டங்கள் பணவீக்க அபாயங்களை முன்வைக்கின்றன என்று எச்சரித்தனர். இதனிடையே புதனன்று ஸ்பாட் வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 0.5% உயர்ந்து $32.26 ஆகவும், பிளாட்டினம் 0.8% அதிகரித்து $970.95 ஆகவும் இருந்தது. இந்த விலை உயர்வுக்கு அமைவாக இலங்கையிலும் தங்கத்தின் விலையானது இன்றைய தினம் உச்சத்தை அடைந்துள்ளது. https://thinakkural.lk/article/315124
-
2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க மின்சார சட்டத்தை இரத்து செய்து, மின் பாவனையாளர்களின் உரிமையை உறுதிப்படுத்துங்கள்! - அரசுக்கு சஜித் வலியுறுத்தல்
07 FEB, 2025 | 11:13 AM 2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க மின்சார சட்டத்தை உடனடியாக இரத்து செய்து, மின் பாவனையாளர்களின் உரிமையையும் மின்சாரத் துறையின் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்துக்கு வலியுறுத்துகிறார். இன்று (07) வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச, அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: 2002ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு சட்டத்தின் கீழ் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நிறுவப்பட்டது. இது நாட்டின் மின்சார துறை, பெற்றோலிய துறை மற்றும் நீர் சேவை துறையை ஒழுங்குபடுத்துவதற்காக ஆகும். பின்னர் 2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டம் அமுலுக்கு வந்த பின்னர், மின்சாரத் துறையை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரங்கள் இந்த ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டன. மின்சாரத் துறையின் பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் அன்றிலிருந்து ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்டன. எவ்வாறாயினும், 2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டம் மற்றும் 2002ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு சட்டம் ஆகியவற்றின் ஏற்பாடுகளின் கீழ் செயல்படும் பொறிமுறையின் கீழ், கொள்கை வகுத்தல் பணி அமைச்சிற்கும், ஒழுங்குபடுத்தல் பணி இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கும், உரிமம் பெற்றவர்களின் பொறுப்புகள் இலங்கை மின்சார சபை உள்ளிட்ட உரிமம் பெற்றவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. எனினும், 2024 ஜூன் 27ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க இலங்கை மின்சாரத் துறை சட்டமானது, இதுவரை தெளிவாக செயல்பட்டு வந்த கொள்கை வகுத்தல் பணிகள், ஒழுங்குபடுத்தல் பணிகள் மற்றும் உரிமம் பெற்றவர்களின் பணிகளை குழப்பமான முறையில் சிக்கலாக்கி, மின்சார துறையின் ஒழுங்குபடுத்தலில் இதுவரை இருந்த தெளிவான செயல்முறையை சிக்கலான நிலைக்கு தள்ளும் சட்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இதற்கிடையில், 2024 ஜூன் 27ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட இந்த புதிய சட்டம் 2025 ஜூன் மாதத்தில் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால், தற்போது நடைமுறையில் உள்ள 2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தில் உள்ள துறையின் முன்னேற்றத்திற்கு மிக அவசியமான அம்சங்கள் நீக்கப்படும். 1. நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கான ஏற்கனவே இருந்த ஏற்பாடுகளை நீக்குதல். 2. தொடர்ச்சியான மின் விநியோகத்திற்கான ஏற்பாடுகளை நீக்குதல். 3. அனைத்து தரப்பினரின் கருத்துக்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட குறைந்த செலவு உற்பத்தித் திட்டம் இந்த வரைவின் மூலம் நீக்கப்படும். அதன்படி உற்பத்தித் திட்டத்தை அங்கீகரிக்கும் அதிகாரம் அமைச்சுக்கு வழங்கப்படும். 4. புதுப்பிக்கத்தக்க மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் கொள்வனவு செய்யும் கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரமும் அமைச்சுக்கு வழங்கப்படும். 5. மக்கள் கருத்துக்களின் அடிப்படையில் நியாயமான செலவின் அடிப்படையில் மின் கட்டணத்தை தீர்மானிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு இருந்த அதிகாரங்கள் அமைச்சருக்கும் அவரால் நியமிக்கப்படும் குழுவிற்கும் மாற்றப்படும். சமீபத்தில் தற்போதைய மின்வலு அமைச்சர் பாராளுமன்றத்தில் மின் கட்டணங்களை 37% உயர்த்த வேண்டும் என கூறினாலும், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நாட்டின் மின் நுகர்வோருக்கு 20% கட்டணக் குறைப்பை மேற்கொண்டது 2009ஆம் ஆண்டு சட்டத்தின் மூலம் கிடைத்த அதிகாரங்களின் காரணமாகும். எனினும், எதிர்காலத்தில் 2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், இலங்கை மின்சார சபை மற்றும் மின்சார அமைச்சின் அதிகாரிகளின் விருப்பப்படி மின் கட்டணங்கள் தீர்மானிக்கப்படும். இதன் மூலம் மின் நுகர்வோரை சுரண்டும் முறைமை உருவாகும். தற்போதைய அரசாங்கத்தின் 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' கொள்கை அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை இந்த தருணத்தில் நினைவுபடுத்துவது முக்கியம். மேற்கோள்: பக்கம் 167 "மின் கட்டண முறைமை, பெற்றோலியம், எரிவாயு விலை சூத்திரம் மற்றும் விலை திருத்த செயல்முறையை மிகவும் நியாயமான மற்றும் வெளிப்படையான முறைக்கு இற்றைவரைப்படுத்தல்" மேலும், தேசிய மக்கள் சக்தி 2024.08.15 அன்று வெளியிட்ட அவர்களின் 'தேசிய வலுசக்தி கொள்கை கட்டமைப்பில்' பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கோள்: "சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட மின்சார சட்டம் போதுமான பங்குதாரர் பங்களிப்புடன் செய்யப்படவில்லை. இந்த அழிவுகரமான சட்டத்தை மிகவும் முற்போக்கான சட்டமாக மாற்ற பல்வேறு தரப்பினர் முயற்சித்த போதிலும், தற்போதைய அரசாங்கம் இந்த சட்டத்தை ரகசியமாக வரைவு செய்தது. முறையான பொது ஆலோசனையுடன் மின்சார துறைக்கான புதிய சட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுப்போம்" எனவே, அவர்களே குற்றம் சாட்டிய இந்த அழிவுகரமான சட்டத்தை நடைமுறைப்படுத்த தற்போதைய திசைகாட்டி அரசாங்கத்திற்கு நெறிமுறை உரிமை இல்லை. அதன்படி, 2024 ஜூன் 27 மின்சார சட்டத்தை இரத்து செய்வதற்கும், மின்சார துறைக்கான புதிய முற்போக்கான சட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கும், மேலும் அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி பெற்றோலிய துறையை ஒழுங்குபடுத்த இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கும் புதிய துறை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் எதிர்க்கட்சியாக நாம் அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இதன் மூலம் மின் பாவனையாளர்களின் உரிமையையும் மின்சார துறையின் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துமாறு நாம் அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/206043
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
காரும் இரட்டிப்பு பவுண்சும் இரட்டிப்பு! அப்ப கணக்கு சரி தானே அண்ணை? அடிபட்ட வாகனங்களே வடிவாக மீளமைத்து விக்கிறாங்கள்! appreciating asset ற்கான காரணம் இறக்குமதி வரி அதிகம்(300%) என நினைக்கிறேன். கடந்த சில வருடங்கள் தான் வாகன இறக்குமதித் தடை உள்ளது என நினைக்கிறேன்.
-
தென்னாபிரிக்கா, பாக்கிஸ்தானுக்கு தூதுவர்களாக முன்னாள் கடற்படை தளபதிகள் ;வெளிநாட்டு தூதரகங்களிற்கு அரசியல் நியமனங்கள்
Published By: RAJEEBAN 07 FEB, 2025 | 10:55 AM முன்னைய அரசாங்கங்களைபோல தேசிய மக்கள் சக்தியும் வெளிநாட்டு தூதரகங்களிற்கு அரசியல் நியமனங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் டெய்லிமிரர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் வெளிநாட்டு சேவை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என கடந்தகாலங்களில் விமர்சனங்களை முன்வைத்திருந்த போதிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அரசியல் நியமனங்களில் ஈடுபடவுள்ளது. கடந்த வருடம் ஜனாதிபதியாக அனுரகுமார திசநாயக்க பதவியேற்ற பின்னர் அமெரிக்க தூதுவர் மகிந்த சமரசிங்கவை தவிர அரசியல்ரீதியில் நியமிக்கப்பட்ட அனைத்து தூதுவர்களையும் அரசாங்கம் மீள அழைத்திருந்தது. இது குறித்து ஏற்கனவே அதிருப்தி வெளியிட்டுள்ள இராஜதந்திரிகள் மகிந்த சமரசிங்கவின் நியமனமும் அரசியல் நியமனமே ஏன் அவரை மீள அழைக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர். எனினும் சர்வதேச நாணயநிதியத்துடன் ஈடுபாட்டை பேணுவதற்கு மகிந்தசமரசிங்க அமெரிக்க தூதுவராக தொடர்ந்தும் பணிபுரிவது அவசியம் என அரசாங்கம் தெரிவிக்கின்றது. எனினும் சர்வதேச நாணயநிதியத்துடன் தொடர்ந்தும் ஈடுபாட்டை பேணுவதற்கு தூதுவரின் பங்களிப்பு அவசியமில்லை என கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை உலகநாடுகளின் தலைநகரங்கள் சிலவற்றிற்கு அரசியல் நியமனங்கள் சிலவற்றை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பானிற்கான இலங்கை தூதுவராக பேராசிரியர் ஜானக குமாரசிங்க நியமிக்கப்படவுள்ளார். தென்னாபிரிக்காவிற்கான தூதுவராக முன்னாள் கடற்படை தளபதி உதேனி ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளார். இதேவேளை நியுயோக்கில் ஐக்கிய நாடுகளின் தூதுவராக சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மனைவி சொனாலி சமரசிங்கவை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாக்கிஸ்தானிற்கான தூதுவராக முன்னாள் கடற்படை தளபதி நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் முன்னையஅரசாங்கங்கள் தூதுவர் பதவிகளிற்கு இலங்கை வெளிநாட்டு சேவை சாராதவர்களை நியமித்துவந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/206041
-
லசந்த படுகொலை விவகாரம் குறித்து புதிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய பரிசீலனை - பிரதமர்
07 FEB, 2025 | 11:46 AM படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க விவகாரம் குறித்து புதிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய பரிசீலனை செய்யவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்துடன் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க விவகாரம் குறித்து ஒரு நாள் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்தத் தயார் என்றும் இன்று வெள்ளிக்கிழமை (7) பாராளுமன்றத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/206050
-
ஸ்வீடன் கல்வி மையத்தில் துப்பாக்கி சூடு: 10 பேர் வரை பலி
சுவீடனில் துப்பாக்கிச் சூடு; 11 பேர் பலி சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே சுமார் 200 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஓரேப்ரோ நகரில் வயது வந்தோருக்கான கல்வி நிறுவனம் ஒன்று உள்ளது. கேம்பஸ் ரிஸ்பெர்க்ஸ்கா என்று அழைக்கப்படும் இந்தப் கல்வி நிறுவனம், 20 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கிறது. இந்த கல்வி நிறுவனத்தில் தங்கி படித்து வந்த மாணவர்கள் பெரும்பாலானோர் பரீட்சை முடிந்ததை அடுத்து தங்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். எனினும் ஒரு சில மாணவர்கள் கல்வி நிறுவனத்தில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் இந்த கல்வி நிறுவனத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 11 பேர் பலியானார்கள். அதை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? இந்த சம்பவத்தின் பின்னணி என்ன? என்பது குறித்து அந்நாட்டு பொலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். https://thinakkural.lk/article/315106
-
புதிய முப்படைத் தளபதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்
Published By: VISHNU 06 FEB, 2025 | 07:24 PM புதிய முப்படைத் தளபதிகள் வியாழக்கிழமை (06) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர். புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க ஆகியோர் ஜனாதிபதியைச் சந்தித்தனர். பதவியேற்ற பின்னர், முப்படைத் தளபதிகள் சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதியைச் சந்தித்ததோடு ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினர். https://www.virakesari.lk/article/206015
-
போராட்டத்தில் எரிக்கப்பட்ட வீடுகளுக்காக எம்.பி.க்கள் பெற்ற இழப்பீட்டு தொகைகளை வெளியிட்ட அரசாங்கம்
2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட வீடுகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்ற இழப்பீட்டுப் பட்டியலை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் வெளியிட்டார். அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை 122.41 கோடி ரூபாவாகும் என அவர் மேலும் தெரிவித்தார். இவர்களில், கெஹெலிய ரம்புக்வெல்ல 959 மில்லியன் ரூபா இழப்பீட்டைப் பெற்றுள்ளதோடு, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ 934 மில்லியன் ரூபாவும், காமினி லொக்குகே 749 மில்லியன் ரூபாவும், அலி சப்ரி ரஹீம் 709 மில்லியன் ரூபா மற்றும் நிமல் லன்சா 692 மில்லியன் ரூபாவை இழப்பீட்டுத் தொகையாக பெற்றுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். கபில நுவன் அத்துகோரள – ரூ. 504,000 விமலவீர திசாநாயக்க – ரூ. 550,000 கீதா குமாரசிங்க – ரூ. 972,000 ஜனக திஸ்ஸகுட்டிஆராச்சி – ரூ. 1,143,000 குணபால ரத்னசேகர – ரூ. 1,412,780 பிரேம்நாத் சி. தொலவத்த – 23 இலட்சம் ரூபா பிரியங்கர ஜயரத்ன – ரூ. 2,348,000 சம்பத் அத்துகோரள – ரூ. 2,540,610 ஜயந்த கெடகொட – ரூ. 2,814,800 விமல் வீரவன்ச – ரூ. 2,954,000 பேராசிரியர் சன்ன ஜயசுமன – ரூ. 3,334,000 அகில எல்லாவல – ரூ. 3,554,250 சமல் ராஜபக்ஷ – ரூ. 6,539,374 சந்திம வீரக்கொடி – ரூ. 6,948,800 அஷோக பிரியந்த – ரூ. 7,295,000 சமன் பிரிய ஹேரத் – 105.2 இலட்சம் ரூபா ஜனக பண்டார தென்னகோன் – 105.5 இலட்சம் ரூபா ரோஹித அபேகுணவர்தன – 116.4 இலட்சம் ரூபா விசேட வைத்தியர் கீதா அம்பேபொல – 137.8 இலட்சம் ரூபா சஹன் பிரதீப் – 171.3 இலட்சம் ரூபா செஹான் சேமசிங்க – 185.1 இலட்சம் ரூபா இந்திக்க அநுருத்த – 195.5 இலட்சம் ரூபா மிலான் ஜயதிலக – 223 இலட்சம் ரூபா வைத்தியர் ரமேஷ் பத்திரன – 281 இலட்சம் ரூபா துமிந்த திசாநாயக்க – 288 இலட்சம் ரூபா கனக ஹேரத் – 292 இலட்சம் ரூபா டீ.பி.ஹேரத் – 321 இலட்சம் ரூபா பிரசன்ன ரணவீர – 327 இலட்சம் ரூபா டபிள்யு டீ.வீரசிங்க – 372 இலட்சம் ரூபா ஷாந்த பண்டார – 391 இலட்சம் ரூபா எஸ்.எம்.சந்திரசேன – 438 இலட்சம் ரூபா சனத் நிஷாந்த – 427 இலட்சம் ரூபா சிரிபால கம்லத் – 509 இலட்சம் ரூபா அருந்திக்க பெர்னாண்டோ – 552 இலட்சம் ரூபா சுமித் உடுக்கும்புர – 559 இலட்சம் ரூபா பிரசன்ன ரணதுங்க – 561 இலட்சம் ரூபா கோகிலா குணவர்தன – 587 இலட்சம் ரூபா மொஹான் பீ டி சில்வா – 601 இலட்சம் ரூபா நிமல் லன்சா – 692 இலட்சம் ரூபா அலி சப்ரி ரஹீம் – 709 இலட்சம் ரூபா காமினி லொக்குகே – 749 இலட்சம் ரூபா ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ – 934 இலட்சம் ரூபா கெஹெலிய ரம்புக்வெல்ல – 959 இலட்சம் ரூபா https://thinakkural.lk/article/315167
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்ப் பேச்சு பற்றி பாலத்தீனர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு பாலத்தீனர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் செவ்வாய்க்கிழமை பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காஸா முனையை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வது தொடர்பான முன்மொழிவை வழங்கியதோடு, அமெரிக்கா "அதற்கான (காஸா) வளர்ச்சிப் பணிகளையும் செய்யும்" எனக் கூறினார். பாலத்தீனர்கள் நிரந்தரமாக ஜோர்டான் அல்லது எகிப்துக்கு மாற்றப்பட வேண்டும் என டிரம்ப் முன்னதாகப் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து அவரது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடனான சந்திப்புக்குப் பிறகு டிரம்ப் இப்படிப் பேசியிருந்தார். இது குறித்துப் பேசிய நேதன்யாகு, "இது கவனிக்கத் தகுந்த விவகாரம்" என்றதோடு, "இதுபோன்ற சிந்தனைகள் மத்தியக் கிழக்கின் வடிவத்தை மாற்றியமைப்பதோடு, அமைதியைக் கொண்டு வரும்" என்றார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மத்தியக் கிழக்கில் புதிய பதற்றத்தை ஏற்படுத்துமா என்பது போன்ற கேள்விகள் எழுந்த நிலையில், பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களிடம் இருந்து இதற்கான எதிர்வினைகளும் வந்துள்ளன. காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா? வடக்கு காஸாவுக்கு மீண்டும் திரும்பும் பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் - காத்திருக்கும் அதிர்ச்சிகரமான நிலை காஸாவில் அமைதி: பிரிந்த சொந்தங்கள் மீண்டும் சேர்ந்த உணர்ச்சிமிகு தருணங்கள் காஸா இப்போது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? கடந்த 2007ஆம் ஆண்டு முதல் காஸா ஹமாஸ் அமைப்பின் நிர்வாகத்தின்கீழ் உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு பாலத்தீன பகுதிகளில் நடந்த தேர்தல்களில் ஹமாஸ் வெற்றி பெற்றதோடு, அதன் போட்டியாளரான ஃபத்தா அமைப்பைப் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றியதன் மூலம் காஸாவில் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாக உருவெடுத்தது. ஹமாஸ் அமைப்பானது இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் சில மேற்குலக நாடுகளால் தீவிரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. காஸாவின் 41 கி.மீ நீளமும் 10 கி.மீ அகலமும் கொண்ட நிலப்பரப்பு, சுற்றிலும் இஸ்ரேல், எகிப்து மற்றும் மத்தியத் தரைக்கடலால் சூழப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே பல பெரிய மோதல்கள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு மோதலின்போதும் இரு தரப்பிலும் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் காஸாவில் வசிக்கும் பாலத்தீனர்களே. கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி, ஹமாஸ் ஆயுதக் குழுவினர் காஸா மீது தாக்குதல் நடத்தினர். அதில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர், 250க்கும் மேற்பட்டோர் பணயக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். இது காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தின் 15 மாத தொடர் தாக்குதலுக்கு வித்திட்டது. இதில் 47,540 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையினர் பெண்களும் குழந்தைகளும் என்று ஹமாஸால் இயக்கப்படும் மருத்துவ அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த ஜனவரி மாதம், இஸ்ரேல், ஹமாஸ் இருதரப்பும் போர்நிறுத்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டது. பல மாதங்களாக நடைபெற்ற மறைமுகமான கடினமான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டது. போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவது, ஹமாஸால் சிறை பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பது ஆகியவற்றுக்கு மாற்றாக பாலத்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிப்பது போன்ற உடன்படிக்கைகள் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் எட்டப்பட்டன. அமெரிக்கா: இந்தியர்களை கைவிலங்கிட்டு அழைத்து வந்தது குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது என்ன?8 மணி நேரங்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி: பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது எப்படி?7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸா முனையை டிரம்ப் எடுத்துக் கொள்ள முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES காஸா முனையைக் கைப்பற்றுவது குறித்து டிரம்ப் என்ன திட்டம் வைத்துள்ளார் என்பது இதுவரையிலும் வெளிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் இந்த அறிவிப்பு உலகளாவிய கண்டனங்களைப் பெற்றுள்ளது. பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், ஆஸ்திரேலியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் இந்தத் திட்டத்தைப் புறக்கணித்துள்ளன. பாலத்தீனர்களை இடம்பெயரச் செய்யும் எந்த முடிவிலும் தங்களின் நிலைப்பாடு தெளிவாகவும், வெளிப்படையாகவும் இருப்பதாக வளைகுடா பிராந்திய நாடான சௌதி அரேபியா கூறியுள்ளது. ஜோர்டான், எகிப்து போன்ற நாடுகளும் பாலத்தீனர்களை வெளியேற்றுவதற்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. சர்வதேச சட்டங்களின்படி மக்களை வலுக்கட்டாயமாக இடம் மாற்றுவது கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. பாலத்தீனர்களும் அரபு நாடுகளும் டிரம்பின் இந்தத் திட்டத்தைக் கட்டாய வெளியேற்றம் மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு சற்றும் குறையாத ஒன்று எனக் கருதுகின்றன. அமெரிக்காவை பொருத்தவரை, டிரம்ப் அதிபராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்புவரை, வெளிவிவகாரங்களில் தலையிடுவது முதன்மையாக இருக்கவில்லை. நாட்டின் பொருளாதாரம், குடியேற்றம் போன்றவையே டிரம்ப் ஆதரவாளர்களின் முக்கியப் பிரச்னையாக இருந்தன. தேர்தலுக்கு முன்னதாக வெளியான இப்சோஸ், யுகோவ் கருத்துக் கணிப்புகளின்படி, வாழ்க்கைச் செலவில் கவனம் செலுத்தும் அரசை அமெரிக்கர்கள் விரும்புகிறார்கள் எனக் கூறப்பட்டது. காஸாவை கைப்பற்ற வேண்டுமென்ற டிரம்பின் நோக்கத்தில், அமெரிக்க படைகளை அனுப்பும் நடவடிக்கையும் உள்ளடங்குமா என்பது தெரியவில்லை. இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், "என்ன தேவையோ அதைச் செய்வோம்" என்று பதிலளித்தார். அரசியலமைப்பின்படி ராணுவத்தைப் பயன்படுத்துவதற்கான தீர்மானத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். தற்போதைய சூழலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளும் குடியரசு கட்சிக்குப் பெரும்பான்மை உள்ளது. பெரும் எண்ணிக்கையில் ஆயுத விற்பனையை மேற்கொள்ளவும் நாடாளுமன்ற ஒப்புதல் தேவைப்படும், அதோடு அது தொடர்பான குழுக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். வாஷிங்டனில் உள்ள மத்தியக் கிழக்கு நிறுவனத்தில் பேராசிரியராக இருக்கும் ஹசன் மீயம்னா இது குறித்துப் பேசுகையில், "டிரம்ப் இது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் அவருக்கு நாடாளுமன்றத்தின் வலுவான ஆதரவு இருக்கிறது" என்றார். பேராசிரியர் மீயம்னாவின் கூற்றுப்படி, காஸாவை மீட்டுருவாக்கம் செய்வதற்காகப் பெரும் தொகையைச் செலவிடுவது பற்றி டிரம்ப் இதுவரை எதுவும் பேசவில்லை, இதுகுறித்த திட்டங்கள் இன்னமும் தெளிவற்ற நிலையில் இருக்கின்றன. அதோடு, அரபு நாடுகளிடம் இருந்து நிதியைப் பெற்று காஸா மற்றும் மேற்குக் கரையையை மறுகட்டமைப்பு செய்ய அவர் திட்டமிட்டிருக்கலாம் எனவும் கருதப்படுவதாக மீயம்னா குறிப்பிட்டார். காஸா குறித்த டிரம்பின் பேச்சு இஸ்ரேல், ஹமாஸின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஆபத்தில் தள்ளுமா?5 மணி நேரங்களுக்கு முன்னர் விடாமுயற்சி: இரண்டாம் பாதியால் வீண்முயற்சி ஆனதா? - ஊடக விமர்சனம்4 மணி நேரங்களுக்கு முன்னர் வரலாற்று ரீதியாக காஸா முனை யாருக்கு சொந்தம்? பட மூலாதாரம்,REUTERS கடந்த 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் என்ற நாடு நிறுவப்படுவதற்கு முன்னதாக காஸா பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் கீழ் இருந்தது. தன்னைச் சுதந்திர நாடாக இஸ்ரேல் அறிவித்துக் கொண்டதற்கு மறுநாளே ஐந்து அரபுலக நாடுகளின் ராணுவங்கள் அதைச் சூழ்ந்து தாக்குதல் நடத்தின. கடந்த 1949ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலமாக சண்டை முடிவுக்கு வந்தபோது பிராந்தியத்தின் பெரும்பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியிருந்தது. ஒப்பந்தத்தின்படி, காஸா முனையை எகிப்து ஆக்கிரமித்திருந்தது, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமை ஜோர்டானும், மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலும் ஆக்கிரமித்திருந்தன. பின்னர், 1967ஆம் ஆண்டு போருக்குப் பின்னர் காஸாவில் இருந்து எகிப்து விரட்டப்பட்டு, இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டது. இதன் பின்னர் இஸ்ரேலிய குடியிருப்புகள் கட்டப்பட்டு காஸாவின் பாலத்தீன மக்கள் ராணுவ அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனர். இஸ்ரேல் 2005ஆம் ஆண்டில் தனது ராணுவத்தையும், இஸ்ரேலிய குடியேறிகளையும் முழுமையாக விலக்கிக் கொண்டது. ஆனாலும் எல்லைகள், வான் எல்லை கடற்கரை போன்றவற்றில் தனது கட்டுப்பாட்டை இஸ்ரேல் தக்கவைத்துக் கொண்டது. இது நடைமுறையில் மக்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து மீதான முழுமையான கட்டுப்பாட்டை இஸ்ரேலுக்கு வழங்கியது. காஸா மீது இஸ்ரேல் கொண்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு, காஸாவை இப்போதும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகவே கருதுகிறது. 2006ஆம் ஆண்டு பாலத்தீன தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்றது. இதன் பின்னர் வந்த ஆண்டில் அதன் போட்டிக்குழுக்களை கடுமையான சண்டையின் மூலம் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றியது. இதற்கு எதிர்வினையாக இஸ்ரேலும் எகிப்தும் கடுமையான தடைகளை விதித்தன. இஸ்ரேல் தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளை இறுக்கியது. இதன் பிறகு வந்த ஆண்டுகளில் ஹமாஸ், இஸ்ரேல் இடையே, 2008-09, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் பல பெரிய மோதல்கள் நிகழ்ந்தன. 2021ஆம் ஆண்டு மே மாதத்தில் பெரிய மோதல் ஒன்று தொடங்கியது. பின்னர் 11 நாட்கள் கழித்து போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்கா: இந்திய குடியேறிகள் நாடு கடத்தப்படுவது இரு நாட்டு உறவை பாதிக்குமா?8 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்கா: பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்க தடை விதிக்கும் டிரம்ப் - பிற நாடுகளில் என்ன நிலை?5 பிப்ரவரி 2025 காஸாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளதா? பட மூலாதாரம்,GETTY IMAGES ஐக்கிய நாடுகள் அமைப்பின் கூற்றுப்படி, காஸாவில் ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீன பிராந்தியங்களில் அறியப்படாத அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டு ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு வெளியிட்ட அறிக்கைப்படி, மூன்று பில்லியன் பேரல் அளவுக்கு எண்ணெய் வளம் அங்கு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. "நிலவியலாளர்கள், இயற்கை வளப் பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் பாலத்தீன பிராந்தியத்தில் மேற்குக் கரையின் சி-ஏரியா மற்றும் காஸாவின் மத்திய தரைக்கடல் கடற்கரைப் பகுதி ஆகியவை குறிப்பிடத்தக்க அளவுக்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளப்படுகையின் மீது அமைந்துள்ளது" என்று அந்த அறிக்கை கூறுகிறது. மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள லாவன்ட் படுகையில் கண்டறியப்பட்டுள்ள புதிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு படுகைகளைச் சுட்டிக்காட்டும் அந்த அறிக்கை "2017ஆம் ஆண்டு விலை நிலவரப்படி இந்திய மதிப்பில் சுமார் 39.66 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் (453 பில்லியன் அமெரிக்க டாலர்) 122 டிரில்லியன் கனஅடி அளவுக்கான இயற்கை எரிவாயு மற்றும் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் (71 பில்லியன் அமெரிக்கடாலர்) மதிப்பிலான 1.7 பில்லியன் பேரல் எண்ணெய் வளம் இருக்கலாம்" எனக் கூறுகிறது. டிரம்பின் பரிந்துரைகள் எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தை எடுப்பது தொடர்பானதாக இருக்கலாம் என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர். மற்றவர்களின் கூற்றுப்படி காஸா மீதான அவரது விருப்பங்களுக்கு பொருளாதாரத்தைக் காட்டிலும் அரசியல் காரணங்களே இருப்பதாகக் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES புவிசார் அரசியலில் சிறப்பு ஆர்வம் கொண்ட எரிசக்திக் கொள்கை நிபுணரான லாரி ஹேடன் பிபிசியிடம் பேசுகையில் காஸாவின் கடலோரப் படுகைகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பது 2000ஆம் ஆண்டின் முற்பகுதியிலேயே கண்டறியப்பட்டதாகவும், அப்போதிருந்தே அப்பகுதியின் வளர்ச்சிக்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் கூறுகிறார். காஸாவை கையகப்படுத்துவது குறித்து டிரம்ப் முன்மொழிவுகளை வைத்திருப்பதற்கு "இதுவும் ஒரு காரணியாக இருக்கலாம்" என்றாலும் இது மட்டுமே காரணமாக இருக்காது என்று கூறினார். "காஸாவில் இருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அளவிடுவதற்கு இன்னமும் நிறைய வேலைகளைச் செய்ய வேண்டும் மற்றும் நமது எதிர்பார்ப்புகளையும் மேலாண்மை செய்ய வேண்டும்" என்கிறார் லாரி. காஸாவை சேர்ந்த மற்றொரு பொருளாதார நிபுணரான மஹர் டாபா பேசுகையில், "காஸாவுடன் ஒப்பிடுகையில் எண்ணெய் வளத்தை அதிகமாகக் கொண்ட வளைகுடா உள்ளிட்ட நாடுகள் டிரம்பின் வசம் உள்ளன. காஸா மீதான கவனக் குவிப்புக்கு அரசியல் காரணங்களே இருக்கின்றன" என்றார். பிபிசியிடம் பேசிய இஸ்ரேலுக்கான அமெரிக்க முன்னாள் தூதரான டென்னிஸ் ராஸ், "காஸாவில் நிலவும் பிரச்சனையை ஒரு ரியல் எஸ்டேட் கட்டட பிரச்னையைப் போல டிரம்ப் பார்ப்பதாக" குறிப்பிட்டார். "எப்போதுமே வறுமையில் வாடும் இப்பகுதியை நாங்கள் மாற்றிக் காட்டப் போகிறோம்" என டிரம்ப் கூறியதைச் சுட்டிக்காட்டிய டென்னிஸ், அவர் இதில் மிகத் தீவிரமாக இருப்பதாகத் தான் கருதுவதாகவும் குறிப்பிட்டார். இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு - ஏன்?5 பிப்ரவரி 2025 ராஜீவ் காந்தி ஓட்டிய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயன்றது ஏன்? ரா உளவு அமைப்பு தடுத்தது எப்படி?3 பிப்ரவரி 2025 டிரம்பின் அறிவிப்பு பற்றி பாலத்தீனர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, டெய்ர் அல் பலாவில் குளிர்காலத்தில் மோசமான வானிலை நிலைமைகளுடன் போராடி, இடிபாடுகளுக்கு மத்தியில் தற்காலிக கூடாரங்களில் உயிர்வாழ முயலும் பாலத்தீனர்கள் டிரம்பின் முன்மொழிவை நேரடியாகத் தங்களை காஸாவில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையாகவே பாலத்தீனர்கள் பார்க்கின்றனர். பாலத்தீன அதிபரான முகமது அப்பாஸ், காஸாவில் இருந்து பாலத்தீனர்களை வெளியேற்றும் எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அதை எதிர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். டிரம்பின் அழைப்பை "சர்வதேச சட்டங்களின் மீதான தீவிர விதிமீறல்" எனவும் அப்பாஸ் குறிப்பிடுகிறார். "எங்கள் மக்களின் உரிமைகள் மீதான எந்த மீறலையும் அனுமதிக்க முடியாது, நாங்கள் பல்லாண்டுக் காலமாகச் சிரமப்பட்டிருக்கிறோம், மிகப்பெரிய தியாகங்களைச் செய்திருக்கிறோம்" என்று அப்பாஸ் கூறுகிறார். ஐக்கிய நாடுகள் சபைக்கான பாலத்தீன குழுவின் தலைவரான ரியாத் மன்சூர் பேசுகையில் பாலத்தீனர்கள் ஒரு காலத்தில் தங்கள் வீடுகளாக இருந்தவற்றைத் திரும்பப் பெற அனுமதிக்கப்பட வேண்டும் என்றார். "பாலத்தீனர்களை நல்ல இடங்களுக்கு அனுப்ப வேண்டும் என விரும்புபவர்கள், தற்போது இஸ்ரேல் என்று அழைக்கப்படும் தங்களின் அசலான வாழ்விடங்களுக்குத் திரும்புவதை அனுமதிக்கட்டும்" எனவும் மன்சூர் குறிப்பிட்டார். காஸா முனையில் வசிக்கும் சாதாரண பாலத்தீன மக்கள் இதை தண்டனையின் வடிவமாகப் பார்க்கின்றனர். காஸாவில் இருந்து பிபிசியிடம் பேசிய 43 வயதான மகமூத் அல்மாஸ்ரி காஸாவில் வசிக்கும் ஒருவர்கூட டிரம்ப் கூறுவதை ஒப்புக் கொள்ளவில்லை என்றார். "நாங்கள் இடிபாடுகளின் குவியலுக்கு நடுவே இருந்தாலும் சரி, எங்கள் வீடுகளை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டோம், டிரம்ப் போன்றோர் அமெரிக்கர்கள் யாரையாவது அவர்களின் வாழ்விடத்தில் இருந்து வெளியேறி நிரந்தரமாக வேறு எங்கேனும் குடியேறுமாறு கேட்பார்களா?" என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார். காஸாவில் வசிக்கும் 28 வயது பெண்ணான செனபெல் அல்கவுல் டிரம்பின் முன்மொழிவுகளை "மிகவும் அபாயகரமானது" எனக் குறிப்பிடுகிறார். "வலி, பட்டினி, அழிவு, மரணம் போன்றவற்றை எதிர்கொள்வதால் காஸா மீதான எங்கள் உரிமையை எளிதாக விட்டுத் தருவோம் என்று டிரம்ப் நினைக்கிறார்" எனவும் செனபெல் கூறுகிறார். பிபிசியிடம் பேசிய பாலத்தீன வழக்கறிஞரான யூஸ்ஸெஃப் அல்யாதத், "காஸாவை மறுகட்டமைப்பு செய்யும் திட்டத்தை, அழுத்தம் கொடுக்கும் கருவியாக டிரம்ப் பயன்படுத்தி வருகிறார். இது காஸா மக்களைத் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறக் கட்டாயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவொரு தீங்கிழைக்கும் நடவடிக்கை" என்று குறிப்பிடுகிறார். நெவின் அப்தெலால் போன்ற பாலத்தீனர்கள் மறுகட்டமைப்பு திட்டம் என்ற ஒன்று இருக்குமானால், அதை பாலத்தீனர்களின் கரங்களால் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர். மறுகட்டமைப்பு முடியும் வரை அங்கு தற்போது இருக்கும் நல்ல இடங்களுக்கு மக்கள் நகர வேண்டும். ஆனால் ஒருவரும் வெளியேறக்கூடாது எனவும் அவர்கள் கூறுகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3vp2lq375ro
-
அதிகாரிகள் தவறுகளை விட்டுள்ளனர் காணிகளை விடுவிக்க அனைத்து முயற்சிகளும் எடுப்பேன் - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்
படிப்படியாக காணிகளை விடுவிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்கிறார் வடக்கு ஆளுநர் இடம்பெயர்ந்த மக்களின் வலி – வேதனை எனக்குத் தெரியும். காணி என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உணர்வுபூர்வமான விடயம். மீள்குடியமர்வுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருகின்றேன். அரசாங்கமும் அந்த விடயத்தில் நேரான சிந்தனையில்தான் உள்ளது. படிப்படியாக காணிகளை விடுவிக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநருக்கும் காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினருக்கும் (Pயுசுடு) இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் காணி தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மக்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். வலி. வடக்கில் முன்னைய ஜனாதிபதியின் காலத்தில் 243 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருந்தது. அந்தக் காணியை விவசாயக் காணி என்று தவறாக அடையாளப்படுத்துகின்றனர். அது மக்களின் குடியிருப்புக் காணி. அந்தப் பகுதியிலுள்ள இராணுவ முகாமும் இன்னமும் அகற்றப்படவில்லை. மக்கள் குடியிருக்கவும் அனுமதிக்கப்படவில்லை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்ட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் வலி. வடக்கில் இன்னமும் மீள்குடியமர வேண்டியவர்களின் எண்ணிக்கை தொடர்பில் தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளது. எமது காணிகளில் பாதுகாப்புத் தரப்பினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இப்போதும் எமது காணிகளுக்குள் பாதுகாப்புத் தரப்பினர் புதிய கட்டடங்களை அமைக்கின்றனர். பலாலி வீதியில், இன்னமும் மூன்று கிலோ மீற்றர்கள் விடுவிக்கப்பட்டாலே மக்களுக்கு முழுமையான நன்மை கிடைக்கும். விமான நிலையத்துக்கு மேலதிகமாக காணிகள் சுவீகரிக்கப்படத் தேவையில்லை. ஏற்கனவே சுவீகரித்த காணிகளே போதுமானது’ என ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. அதேபோன்று தையிட்டி திஸ்ஸவிகாரை சட்டவிரோதக் கட்டடம் எனவும் விகாரைக்கு உரியதான காணியை மாற்றுக் காணியாக வழங்கினாலும் அது தொடர்பிலும் சந்தேகம் இருப்பதாகவும் காணி உரிமையாளர்கள் இந்தச் சந்திப்பில் தெரிவித்தனர். மாற்றுக்காணியின் உறுதியில் சிக்கல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய அவர்கள், தமது காணிகளை விடுவித்துத்தரவேண்டும் என்று கோரினர். இதன்போது கருத்து வெளியிட்ட ஆளுநர், காணி உரிமையாளர்களின் கோரிக்கைக்கு மாறாக நான் நடந்து கொள்ளமாட்டேன். காணி உரிமையாளர்கள் விரும்பாத எந்தவொரு தீர்வையும் திணிப்பதற்கும் நான் தயாரில்லை எனக் குறிப்பிட்டார். கிளிநொச்சியில் இரணைதீவில் கடற்படையினர் இப்போதும் பாஸ் நடைமுறையைப் பேணுகின்றனர் என்றும் பாதுகாப்புத் தரப்பினரால் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. அதேபோன்று மன்னார் மாவட்டத்திலும் சிறப்பு அதிரடிப்படையினராலும் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன என ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன், கேப்பாபிலவு மாதிரிக் கிராமத்தில் சமூக சீர்கேடுகள் அதிகரித்துள்ள என்றும் காணி விடுவிப்பின் அவசியத்தை முல்லைத்தீவு மாவட்டப் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர். மேலும் யாழ். மாவட்டத்தில் காணியற்ற 114 குடும்பங்கள் மருதங்கேணியில் குடியமர்வதற்கு இணக்கம் வெளியிட்டபோதும் அவர்களுக்கு காணிகள் இதுவரை பகிர்ந்தளிக்கப்படவில்லை எனவும் இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் அரச காணிகள் பகிர்ந்தளிப்பில் நிலவும் சிக்கல் தொடர்பில் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. அவை தொடர்பில் கவனமெடுப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், அதிகாரிகளும் சில இடங்களில் தவறிழைத்துள்ளனர் எனத் தெரிவித்ததுடன் வவுனியா மாவட்டத்தில் விரைவில் நடமாடும் சேவை நடத்தி தீர்க்கக் கூடிய காணிப் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டார். மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்படவேண்டும் என்பது ஜனாதிபதியினது நிலைப்பாடு எனவும் அந்த நிலைப்பாட்டையே நானும் வலியுறுத்துகின்றேன் எனக் குறிப்பிட்ட ஆளுநர், மாவட்டச் செயலர்களாக 4 மாவட்டங்களில் பதவி வகித்தவன் என்ற அடிப்படையில் பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ள காணிகள் தொடர்பான விவரங்கள் தெரியும் என்றும் அதனடிப்படையில் இது தொடர்பில் ஏற்கனவே பாதுகாப்புத் தரப்பினருடன் பேச்சு நடத்தி வருவதாகவும் இதன்போது தெரிவித்தார். https://thinakkural.lk/article/315161
-
யாழ், கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்
வளி மாசடைதல் காரணமாக வருடாந்தம் சுமார் 7 மில்லியன் பேர் உயிரிழப்பு - வைத்திய நிபுணர் நிரஞ்சன் திஸாநாயக்க Published By: VISHNU 06 FEB, 2025 | 06:41 PM (செ.சுபதர்ஷனி) உலகளாவிய ரீதியில் வருடாந்தம் வளி மாசடைதல் காரணமாக சுமார் 7 மில்லியன் பேர் ஆயுட்காலம் நிறைவடைவதற்கு முன்னரே உயிரிழப்பதாக சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்களின் சங்கத் தலைவர் சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நிரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புதன்கிழமை (5) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் வாழும் சூழலில் உள்ள வளி மாசடைந்திருக்குமாயின் எம்மால் காற்றை சுவாசிக்காமல் இருக்க முடியாது. நாளாந்தம் 10 ஆயிரம் லிட்டர் காற்றை உள்ளெடுத்து வெளியிடுகிறோம். அவ்வாறு உடலை வந்தடையும் வளியில் உள்ளடங்கியுள்ள நச்சுப் பதார்த்தங்களும், தீங்கு விளைவிக்கும் காரணிகளும் நுரையீரல் மாத்திரமல்லாமல் உடல் முழுவதும் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஒருவரது ஆயுட்காலமும் குறைவடைந்துச் செல்வதாக தெரியவந்துள்ளது. வருடாந்தம் வளி மாசடைதல் காரணமாக சுமார் 7 மில்லியன் பேர் ஆயுட்காலம் நிறைவடைவதற்கு முன்னரே உயிரிழப்பதாக, 70 ஆயிரம் ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இது மிகப் பெரிய தொகையாகும். வெளியிடங்கள் மற்றும் வீட்டின் உட்புற சூழலில் நிகழும் காற்று மாசு என்பன சுவாச நோய்களை ஏற்படுத்துவதுடன் நாட்பட்ட நோயாளர்களின் நோய் நிலைமையை தீவிரப்படுத்துகிறது. புகைப்பிடித்தல் உள்ளிட்ட ஏனைய காரணிகளால் ஆண்களே அதிகளவில் நுரையீரல் புற்றுநோயால் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனினும் அண்மைகாலமாக பெண்கள், புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களிடையேயும் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்துள்ளதாகவும், இதற்கு வளி மாசடைதலே பிரதான காரணம் என இந்திய ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. காற்றில் உள்ள நுண்ணுயிர் கிருமிகள் சுவாசத்தின் ஊடக உடலினுள் சென்று இரத்த அணுக்களுடன் கலப்பதால் அடுத்த தலைமுறையினரும் சுவாச நோய்களுக்கு ஆளாக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. கர்ப்பிணித் தாய் ஒருவர் நச்சு வாயுக்கள் அடங்கிய காற்றை சுவாசிப்பதால் அவற்றின் தாக்கம் கருவில் உள்ள குழந்தையையும் பாதிக்கலாம் என்றார். https://www.virakesari.lk/article/206012
-
“ஜனாதிபதியும் சி.ஐ.டியினரும் முட்டாள்கள்” - சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)
ஆசாத் மௌலானவை கைது செய்ய சிஐடியினருக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் ஆசாத் மௌலானவை நாட்டிற்கு மீண்டும் அழைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை சிறந்த விடயம். சிஐடியினருக்கு ஒத்துழைப்பு வழங்கி ஆசாத் மௌலானவை கைது செய்ய உதவுவேன் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து முன்னாள் செயலாளர் ஆசாத் மௌலானா வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து ஊடகமொன்றுக்கு பிள்ளையான் இதனை தெரிவித்துள்ளார். உயிர் அச்சுறுத்தல் என தெரிவித்து வெளிநாட்டில் நிரந்தரவதிவிடத்தை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஆசாத் மௌலானா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் ஆறு வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்றது. ஏன் அவர் அந்தவேளை அது குறித்த விபரங்களை அம்பலப்படுத்தாமல், நான்கு வருடங்கள் காத்திருந்த பின்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கும் சனல் 4ற்க்கும் சென்றார்? ஜனாதிபதியும் சிஐடியினரும் முட்டாள்கள்.அவர்களிற்கு ஆயுதங்களை கைவிட்டவர்களிற்கும்,ஐஎஸ் மற்றும் முஸ்லீம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளிற்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியாதா? நான் ஆயுதப்போராட்டத்தை விரும்பாததால் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து முதலமைச்சரானேன். 2015 முதல் 2020 வரைசிறையிலிருந்த ஒருவரால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற பேரழிவு தாக்குதலை எவ்வாறு திட்டமிட முடியும். ஆசாத் மௌலானவை நாட்டிற்கு மீண்டும் அழைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை சிறந்த விடயம். சிஐடியினருக்கு ஒத்துழைப்பு வழங்கி ஆசாத் மௌலானவை கைது செய்ய உதவுவேன் என தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/315159
-
யாழ். பல்கலையில் தேசிய கொடி இறக்கப்பட்டு கறுப்புக்கொடி ஏற்றப்பட்டு போராட்டம்
தேசியக் கொடியை இறக்கிவிட்டு கறுப்புக் கொடியை ஏற்றியதற்கு யாழ். பல்கலை நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும் - சரத் வீரசேகர 06 FEB, 2025 | 07:11 PM (எம்.வை.எம்.சியாம்) கடந்த சுதந்திர தினத்தின்போது யாழ். பல்கலைக்கழகத்தில் பிரதான கம்பத்தில் தொங்கவிடப்பட்டிருந்த தேசியக் கொடியை கீழே இறக்கி அதற்கு பதிலாக அங்கு கறுப்புக் கொடியை ஏற்றியமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும். அதேபோன்று உரிய தரப்பினருக்கு எதிராக அரசாங்கம் கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த சுதந்திர தினத்தின்போது யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான கம்பத்தில் தொங்கவிடப்பட்டிருந்த தேசியக் கொடியை கீழே இறக்கி அங்கு கறுப்புக்கொடியொன்று ஏற்றப்பட்டது. இது நாட்டுக்கு ஏற்படும் அவமரியாதை மாத்திரமல்ல. ஆங்கிலேயர்களிடமிருந்து நாட்டை மீட்பதற்காகவும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும் போராடிய இராணுவ வீரர்களுக்கு செய்யும் அகௌரவமாகும். வக்கிர குணம் உள்ளவர்களால் மாத்திரமே இவ்வாறு நடந்துகொள்ள முடியும். அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, தெற்கில் இனவாதத்தை தூண்டுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார். அவ்வாறாயின் சுதந்திர தினத்தை நாட்டின் அனைத்து மக்களும் கொண்டாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் வடக்கில் மாத்திரம் கறுப்புக்கொடி ஏற்றுவது என்பது தெற்கில் உள்ள மக்களின் உணர்வை தூண்டுவதாக அமையும். யாழ். பல்கலைக்கழகம் ஏனைய பல்கலைக்கழகங்களை போன்று இந்த நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. எனவே இவ்வாறு நடந்துகொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கு அனுமதி அளித்தமை தொடர்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மற்றும் அதன் நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும். விடயத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/205998
-
எனக்கு எதுவும் தெரியாது; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச தெரிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்த சதி செய்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது அசாத் மவுலானா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கோட்டாபய ராஜபக்ச, இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார். “தயவு செய்து, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை படியுங்கள், குற்றப்புலனாய்வு அதிகாரிகள் வழங்கியுள்ள சாட்சியங்கள் உட்பட.. குறித்த அறிக்கையில் உள்ளதைத் தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது” என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச டெய்லி மிரர் நாளிதழுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/315155
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
"காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை" Published By: RAJEEBAN 05 FEB, 2025 | 03:32 PM காசாவை விட்டு வெளியேறும் எண்ணமில்லை என காசா மக்கள் தெரிவித்துள்ளனர். காசா மக்களை வேறு பகுதிகளில் மீள்குடியேற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் யோசனை குறித்து மிகுந்த வெறுப்படைந்துள்ளதாக காசாவில் வசிக்கும் ஒருவர் தெரிவித்தார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து பிபிசி மேலும் தெரிவித்துள்ளதாவது, அக்ரம்கான் ரபாவிற்கும் கான் யூனிசிற்கும் இடையில் காசாவின் தென்பகுதியில் வசிக்கின்றார். யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு பின்னர் காசாவின் வடபகுதியில் பலர் தங்கள் பகுதிகளிற்கு திரும்புவதை அவர் பார்த்துள்ளார். 2023 ஒக்டோபர் மாதம் 7 ம்திகதி மோதல் வெடித்த பின்னர் காசாவிலிருந்த 70 வீதமான கட்டிடங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக ஐ.நா மதிப்பிட்டுள்ள போதிலும் பாலஸ்தீனியர்கள் வேறு நாட்டிற்கு செல்வதை விட தற்காலிக தங்குமிடங்களிலேயே வாழ விரும்புவார்கள் என அக்ரம் கான் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன மக்கள் மீள்எழும் திறன் கொண்டவர்கள், அவர்கள் இன்னமும் இங்கேயே வாழ விரும்புகின்றனர், அவர்கள் வேறு எங்கும் செல்வார்கள் என நான் கருதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் குடிநீரை போக்குவரத்தை அடிப்படை வாழ்விற்கான விடயங்களை பெறுவதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர், ஆனால் அவர்கள் இந்த மண்ணிலிருந்து வெளியேறுவது வேறு எங்காவது செல்வது குறித்து ஒருபோதும் சிந்தித்ததில்லை என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/205871
-
டிஜிட்டல் பிரதி அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு மக்கள் போராட்டக் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது; புபுது ஜயகொட
05 FEB, 2025 | 05:21 PM (எம்.வை.எம்.சியாம்) டிஜிட்டல் மயமாக்கல் என்ற போர்வையில் அரசாங்கம் இலங்கை மக்களின் உயிரியல் தரவுகளை சேகரித்தல் தொடர்பான பகிரங்க விவாதத்திற்கு வருமாறு டிஜிட்டல் அமைச்சர், டிஜிட்டல் பிரதி அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு மக்கள் போராட்டக் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் பதில் வழங்க வேண்டும் எனவும் இதுபோன்ற விடயங்களை திருட்டுத்தனமாகவும் மறைத்தும் செய்வதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது எனவும் முன்னிலை சோசலிஸக்கட்சியின் கல்விச்செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார். கொழும்பில் இன்று புதன்கிழமை (05) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, மக்களின் உயிரியல் தரவுகளை சேகரித்தல் குறித்து எமது கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். நாட்டை டிஜிட்டல் மயமாக்கும் போதும் டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தும் போதும் உயிரியல் தரவுகளின் அவசியம் எதற்கு? டிஜிட்டல் மயமாக்கல் என்பது வேறு. உயிரியல் தரவுகள் என்பது வேறாகும். எனவே இதில் இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். உதாரணமாக இத்தாலியில் டிஜிட்டல் அடையாள அட்டை பாவனை உள்ளது. ஆனால் அந்த அரசாங்கம் அந்த தரவுகளை கோரவில்லை. அவ்வாறாயின் அரசாங்கம் எவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்தத் தரவுகளைப் பயன்படுத்தும் என்பதைக்கூற வேண்டும்? குறிப்பாக நவீன தொழில்நுட்பத்தின் முதல்நிலையில் இருப்பவர்கள் எனக்கூறிக்கொள்ளும் அமெரிக்கா தென்கொரியாவிலும் எமக்குத் தற்போது டிஜிட்டல் மயமாக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகக்கூறும் இந்தியாவிலும் கடந்தகாலங்களில் தரவுக்கட்டமைப்பு திருடப்பட்டது. எமது நாட்டிலும் அண்மையில் அரச அச்சகத்திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையப்பக்கங்கள் ஊடுறவப்பட்டது. எனவே இந்தத் தரவுகள் எதிர்காலத்தில் திருடப்படாது என்பதற்கு அரசாங்கம் வழங்கும் உத்தரவாதம் என்ன? அத்துடன் இந்தத்திட்டத்தை எந்த இந்திய நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது?அந்த நிறுவனம் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டது? அந்த நிறுவனத்தைப் பற்றிய தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதா? குறித்த இந்திய நிறுவனத்தின் தலையீடு எந்த மட்டத்தில் இருக்கும்? இந்த தரவுத்தள கட்டமைப்பிற்குள் மாற்று முறையை பயன்படுத்தி குறித்த நிறுலனம் ஊடுரூவதை தடுப்பதற்கான மாற்றுவழி உள்ளதா? அவ்வாறாயின் அதனை தடுக்க வழி என்ன? இந்த திட்டத்தில் இலங்கையில் எந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது? அந்த நிறுவனம் எந்த முறையில் தெரிவு செய்யப்பட்டது? இடைப்பட்ட காலப்பகுதியில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டால் இந்திய நிறுவனம் மீண்டும் அழைக்கப்படுமா? அந்த சந்தர்ப்பத்தில் தரவுகள் திருடப்படமாட்டது என்பதற்கு உத்தரவாதம் என்ன என இது போன்ற பல பிரச்ச்சினைகளுக்கு அரசாங்கம் பதில் வழங்க வேண்டும். இது குறித்து விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மற்றும் பிரதி அமைச்சருக்கும் எமது கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு சவால் விடுக்கிறோம். இருவரில் ஒருவர் எமது கேள்விகளுக்கு பதில் வழங்க முடியும். இது பற்றி பேசும் அமைச்சர்களை அழைத்து வரலாம். விசேட நிபுணர்கள் எனக் கூறிக்கொள்ளும் தரப்பினரையும் அழைக்கலாம். நாங்கள் தயார். எனவே இந்த விடயத்தில் அரசாங்கம் பின்வாங்கக்கூடாது. மக்களுக்கு உண்மைகளை கூற வேண்டும். இதுபோன்ற விடயங்களை திருட்டுத்தனமாகவும் மறைத்தும் செய்வதற்கு எம்மால் அனுமதிக்க முடியாது. எமது அழைப்பை புறக்கணித்து உண்மைகளை மறைக்க அரசாங்கம் முயற்சித்தால் மக்கள் உயிரியல் தரவுகளை வழங்கமாட்டார்கள் என்றார். https://www.virakesari.lk/article/205892