Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. ஐசிசி வளர்ந்துவரும் வீரர் விருதை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த கமிந்து மெண்டிஸ் 26 JAN, 2025 | 05:05 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்படும் 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகளில் சிறந்த வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்றெடுத்த கமிந்து மெண்டிஸ், தனது தாய்நாடாம் இலங்கைக்கு பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார். 26 வயதான கமிந்து மென்டிஸ், 2024ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட், சரவ்தேச ஒருநாள் கிரிக்கெட், சர்வதேச ரி20 கிரிக்கெட் ஆகிய மூன்ற வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் 50.03 என்ற சராசரியுடன் மொத்தமாக 1451 ஓட்டங்களைக் குவித்திருந்தார். எவ்வாறாயினும் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் கடந்த வருடம் அவர் வெளிப்படுத்திய சாதனைமிகு ஆற்றல் வெளிப்பாடுகளே அவருக்கு இந்த விருதை வென்றுகொடுத்தது. இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன், பாகிஸ்தானின் சய்ம் அயூப், மேற்கிந்தியத் தீவுகளின் ஷமர் ஜோசப் ஆகியோரைவிட சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்ததால் கமிந்து மெண்டிஸுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 13 இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்ததன் மூலம் விரைவாக 1000 டெஸ்ட ஓட்டங்களைக் கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் சேர் டொனல்ட் ப்றட்மனின் சாதனையை சமப்படுத்திய பெருமையையும் கமிந்து மெண்டிஸ் பெற்றுக்கொண்டார். இதன் மூலம் இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீரராக தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். கமிந்து மெண்டிஸ் கடந்த வருடம் விளையாடிய 9 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 16 தடவைகள் துடுப்பெடுத்தாடி 1049 ஓட்டங்களை மொத்தமாக குவித்திருந்தார். அவரது சராசரி வியத்தகு 74.92ஆக இருந்தது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி மூலம் 2022இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், கடந்த வருடமே இலங்கை டெஸ்ட் அணியில் நிலையான இடத்தைப் பிடித்தார். தனது முதல் 8 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 9 தடவைகள் 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அரிய உலக சாதனை ஒன்றை நிலைநாட்டியிருந்தார். இதில் 5 சதங்கள் அடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷுக்குக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்து அரிய மைல்கல்லை கமிந்து மெண்டிஸ் எட்டியிருந்தார். இங்கிலாந்துக்கு எதிராக மென்செஸ்டர் விளையாட்டரங்கில் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் குவித்த சதமும், கியா ஓவல் விளையாட்டரங்கில் செப்டெம்பர் மாதம் அவர் பெற்ற அரைச் சதமும் அவரது வாழ்நாளில் மறக்க முடியாத இன்னிங்ஸ்களாகும். கியா விளையாட்டரங்கில் அவர் குவித்த அரைச் சதம் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் 10 வருடங்களின் பின்னர் இலங்கையை வெற்றி கொள்ள வைத்தது. இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் கமிந்து மெண்டிஸ் 267 ஓட்டங்களை மொத்தமாக பெற்றிருந்தார். தொடர்ந்து காலியில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் முறையே 114 ஓட்டங்களையும் ஆட்டம் இழக்காமல் 182 ஓட்டங்களையும் குவித்திருந்தார். கடந்த வருடம் வருடம் 7 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 104 ஓட்டங்களையும் 18 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 305 ஓட்டங்களையும் பெற்றார். கடந்து வருடத்திற்கான ஐசிசி டெஸ்ட் சிறப்பு அணியிலும் கமிந்து மெண்டிஸ் பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய ஆற்றல்களை வெளிப்படுத்திய கமிந்து மெண்டிஸ் கடந்த வருடம் இரண்டு தடவைகள் மாதத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் விருதை வென்றிருந்தார். நேற்று வரை 2024க்கான ஏனைய ஐசிசி விருதுகளை வென்றவர்கள் வருடத்தின் சிறந்த ரி20 கிரிக்கெட் வீரர்: அர்ஷ்தீப் சிங் (இந்தியா) வருடத்தின் சிறந்த ரி20 கிரிக்கெட் வீராங்கனை: அமேலியா கேர் (நியூஸிலாந்து) வருடத்தின் சிறந்த மத்தியஸ்தர்: ரிச்சர்ட் இலிங்வேர்த் (இங்கிலாந்து) இணை அங்கத்துவ நாடுகளில் வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர்: ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ் (நைஜீரியா) இணை அங்கத்துவ நாடுகளில் வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை: ஈஷா ஓஸா (ஐக்கிய அரபு இராச்சியம்) வருடத்தின் சிறந்த ஐசிசி வளர்ந்துவரும் வீராங்கனை: ஆன்ரீ டேர்க்சன் (தென் ஆபிரிக்கா) https://www.virakesari.lk/article/204953
  2. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 14, 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/314998
  3. இலங்கை - அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம் Published By: DIGITAL DESK 2 28 JAN, 2025 | 02:53 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை புதன்கிழமை (29) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது. தனஞ்ஜய டி சில்வா தலைமையில் களமிறங்குகின்ற இலங்கை அணியில் புதுமுக வீரரான ஷொனால் தினூஷ 15 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளதுடன், ஓஷத பெர்னாண்டோவுக்கும் மீள அழைக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் உள்ளூர் போட்டிகளில் அண்மைக்காலமாக சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்தியவர்கள் ஆவர். உபாதை காரணமாக இந்த தொடரில் பங்கேற்காத பெட் கம்மின்ஸுக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் அவுஸ்திரேலிய அணிக்கு தலைவராக செயற்படவுள்ளார். உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023/2025 இன் ஓர் அங்கமாக இப்போட்டித் தொடர் நடத்தப்பட்டாலும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தென் ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் ஏற்கனவே தகுதிபெற்றுவிட்டன என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தொடரின் முதலாவது போட்டி இன்று (29) ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டாவது போட்டி எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதியன்று இதே மைதானத்தில் நடைபெறும். இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகளையும் வெல்வதுடன், அவுஸ்திரேலிய அணி தண்ட குறைப்பு புள்ளிகளை பெற்றால் புள்ளிகள் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் புள்ளிகள் வெகுவாக குறையும் சாத்தியம் ஏற்படக்கூடும் எனவும் சில தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் தற்போது 5 ஆவது இடத்திலுள்ள இலங்கை அணி இபபோட்டித் தொடரை கைப்பற்றிக்கொள்ளும் பட்சத்தில் புள்ளிப்பட்டியில் முன்னேற இடமுண்டு. இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறுவது இலங்கை அணிக்கு மிகவும் முக்கியமானது, மேலும் இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றால், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023/2025 இல் மூன்றாவது இடத்தை கைப்பற்ற முடியும். அவ்வாறு, இலங்கை அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தால், இலங்கை அணிக்கு நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் டொலர்கள் பணப்பரிசை வென்றெடுக்கும். இதற்கு முன்னர் இலங்கைக்கு 7 தடவைகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்‍கெட் அணி, 4 தொடர்களில் வெற்றியை ஈட்டியுள்ளது. இதில் 2 தொடர்களில் தோல்வியைத் தழுவியுள்ளதுடன், ஒரு தொடர் சமநிலையில் முடிவடைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவுஸ்திரேலியா, இலங்கையில் ஒரு டெஸ்ட் தொடரை கூட வெல்லவில்லை. ஒரே ஒரு போட்டியில் மாத்திரமே வென்றுள்ளது. https://www.virakesari.lk/article/205131
  4. உலகக் கிண்ண ஹீரோ அமேலியா கேர் வருடத்தின் அதிசிறந்த ஐசிசி மகளிர் ரி20 கிரிக்கெட் வீராங்கனையானார் 25 JAN, 2025 | 07:02 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருடம் நடைபெற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்ட நாயகியாகவும் தொடர் நாயகியாகவும் தெரிவான நியூஸிலாந்தின் அமேலியா கேர், 2024ஆம் ஆண்டுக்கான அதிசிறந்ந ஐசிசி ரி20 கிரிக்கெட் வீராங்கனையானார். இந்த விருதை வென்றெடுத்த இரண்டாவது நியூஸிலாந்து வீராங்கனை அமேலியா கேர் ஆவார். 9 வருடங்களுக்கு முன்னர் இந்த விருதை சுசி பேட்ஸ் வென்றிருந்தார். மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்த நொக் அவுட் சுற்றில் நியூஸிலாந்து வெற்றிபெறுவதில் மிக முக்கிய பங்காற்றி இருந்தவர் 24 வயதான அமேலியா கேர். தென் ஆபிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 43 ஓட்டங்களைப் பெற்ற அமேலியா கேர், பந்துவீச்சில் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றி நியூஸிலாந்து உலக சம்பியனாக்கி இருந்தார். மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் 6 போட்டிகளில் 135 ஓட்டங்களைப் பெற்ற அமேலியா கேர், 15 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார். கடந்த வருடம் 18 மகளிர் சர்வதேச ரி20 போட்டிகளில் விளையாடடிய அமேலியா கேர், 24.18 என்ற சராசரியுடன் 387 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் 29 விக்கெட்களை வீழ்த்தி சகலதுறைகளிலும் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். https://www.virakesari.lk/article/204891
  5. காணாமல்போன வெளிநாட்டு பிரஜை யாழில் கண்டுபிடிப்பு 29 JAN, 2025 | 10:42 AM அநுராதபுரத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் காணாமல்போன நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) அவர் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மூன்று சுற்றுலாப் பயணிகள் பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த நிலையில் அவர்களில் ஒருவர் நேற்று (28) காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் குறித்து அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் குறித்த வெளிநாட்டு பிரஜை யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் யாழ். நகரப் பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/205186
  6. அரசாங்கத்துடன் மோதுவதற்கு தயாராகவுள்ளோம் ; நாமல் ராஜபக்ஷ 29 JAN, 2025 | 09:06 AM (இராஜதுரை ஹஷான்) விடுதலை புலிகள் அமைப்புடன் ஒப்பந்தம் செய்திருந்தால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபவுக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கும். சவால்களை கண்டு அச்சமடைவதாயின் விடுதலை புலிகளுடன் மோதியிருக்கமாட்டோம். இதன் தாக்கம் எமக்கும், எமது பிள்ளைகளுக்கும் செல்வாக்கு செலுத்தும் என்பதை நன்கு அறிவோம். அரசாங்கத்துடன் மோதுவதற்கு தயாராகவுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (28) ' ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்றத் ஒன்றியம்' கிளை அலுவலகம் திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 2015 ஆம் ஆண்டு தேசிய மற்றும் சர்வதேச சூழ்ச்சியினால் தோற்கடிக்கப்பட்டோம். தோல்வியை கண்டு நாங்கள் ஒருபோதும் தளர்வடையவில்லை. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் மீண்டும் எழுச்சிப் பெற்றோம். 2019 கொவிட் பெருந்தொற்றுத் தாக்கம் மற்றும் பொருளாதார தாக்கம் உள்ளிட்ட காரணிகளால் மீண்டும் நெருக்கடிக்குள்ளானோம். 69 இலட்ச மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது நம்பிக்கை கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள். ஆகவே மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம். மக்களின் அடிப்படை பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு அரசாங்கத்துக்கு நேரமில்லை. ஏனெனில் எவ்வாறு அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுக்கலாம் என்பதற்கு இரவு வேளைகளில் ஒன்று கூடி பேச்சுவார்த்தையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் போட்டியிடுவோம். வேட்புமனுத்தாக்கலுக்கான பணிகள் மற்றும் நேர்காணலை எதிர்வரும் வாரம் முதல் முன்னெடுப்போம்.2018 ஆம் ஆண்டை போன்று உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இருந்து எமது எழுச்சியை ஆரம்பிப்போம். அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல்களுக்கு அச்சமடைய வேண்டிய தேவை எமக்கு கிடையாது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரமுடியாது என்று பல அரச தலைவர்கள் பின்வாங்கிய போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்காக யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். ஏனைய அரச தலைவர்களை போன்று விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்திருந்தால் அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தால் ஏற்படும் எதிர்கால விளைவுகளை மஹிந்த ராஜபக்ஷ நன்கு அறிந்திருந்தார். அந்த சவால்களை நாங்களும் எதிர்கொண்டுள்ளோம். எமது பிள்ளைகளுக்கும் அதன் தாக்கம் செல்வாக்கு செலுத்தும். யுத்தம் முடிவடைந்தாலும் அதன் கொள்கை இன்றும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வியாபித்துள்ளது. இவ்வாறான நிலையில் தான் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டு அவர்களை அரச உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து வெளியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். https://www.virakesari.lk/article/205148
  7. மன்னார்தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கணிய மணல் அகழ்வு குறித்து மன்னார் பிரஜைகள் குழு மற்றும் கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ரிஷாட் பதியுதீன்,காதர் மஸ்தான், து.ரவிகரன், பா. சத்தியலிங்கம்.,மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், செல்லத்தம்பி திலகநாதன், முத்து முஹமட் ஆகியோர் கலந்து கொண்டனர். குறித்த கூட்டத்தில் மாவட்ட மட்டத்தில் கலந்துரையாட பட வேண்டிய பல்வேறு விடயங்கள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக 2ஆம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த விடயம் தொடர்பாகவும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/314993
  8. 29 JAN, 2025 | 09:08 AM (எம்.மனோசித்ரா) அதானி நிறுவனத்துடன் வலுசக்தி கொள்வனவு விலை தொடர்பில் கடந்த அரசாங்கத்தால் எட்டப்பட்டிருந்த இணக்கப்பாடு ஏற்றுக் கொள்ள முடியாததாகும். எனவே 8 டொலருக்கு எட்டப்பட்டிருந்த இணக்கப்பாட்டை இரத்து செய்து 6 டொலரை விட குறைந்த விலைக்கு வலுசக்தி கொள்வனவை முன்னெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு மீளாய்வு இடம்பெற்று வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்கிழமை (28) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வலுசக்தி கொள்வனவு விலை தொடர்பில் கடந்த அரசாங்கத்தால் எட்டப்பட்டிருந்த இணக்கப்பாடு ஏற்றுக் கொள்ள முடியாததாகும். 8 டொலர் என்பது அதிக விலையாகும். எனவே நாட்டுக்கு நன்மை கிடைக்கும் வகையில் 6 டொலரை விட குறைந்த விலையில் வலுசக்தி கொள்வனவை முன்னெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம் என்ற ரீதியிலும் நாடு என்ற ரீதியிலும் இது நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமையாகும். அதற்கமைய இந்த வேலைத்திட்டம் இரத்து செய்யப்படவில்லை. அதில் உள்ளடக்கப்பட்டிருந்த வலுசக்தி கொள்வனவு இணக்கப்பாடு மாத்திரமே மீளப் பெறப்பட்டுள்ளது. நாட்டுக்கு இலாபம் கிடைக்கும் வகையில் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம். மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி எனக் கூறுவது மாத்திரமின்றி, அது நாட்டுக்கு இலாபமீட்டிக் கொடுப்பதாகவும் அமைய வேண்டும். அந்த வகையில் இந்த விலையை மேலும் குறைக்க முடியும் என்று நாம் நம்புகின்றோம். பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு மீளாய்வும் இடம்பெற்று வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/205142
  9. வருண் சக்ரவர்த்தி வித்தியாசமான சாதனை: இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றியை பறித்த 'மோசமான முடிவுகள்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியும் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை தவறவிட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியும், ராஜ்கோட்டில் நேற்று நடந்த 3வது டி20 போட்டியில் இந்திய அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. 172 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி ஒரு ஆட்டத்திலும் வென்று 2-1 என்ற கணக்கில் தொடரை உயிர்ப்புடன் வைத்துள்ளது இங்கிலாந்து அணி. ராஜ்கோட் மைதானத்தில் கடைசியாக 2017ம் ஆண்டு டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. அதன்பின் 8 ஆண்டுகளுக்குப்பின் இப்போது தோற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்திய மண்ணில் தொடர்ந்து 10 டி20 போட்டிகளாக வெற்றி நடை போட்டுவந்த இந்திய அணி, 446 நாட்களுக்குப் பின் தோல்வி அடைந்துள்ளது. இங்கிலாந்து அணியின் நடுவரிசை பேட்டிங்கை குலைத்து திக்குமுக்காட வைத்து 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்ரவர்த்திக்கு ஆட்டநாயகன் விருதுக்கு வழங்கப்பட்டது. இந்தத் தொடரில் 2வது முறையாக ஆட்டநாயகன் விருதை வருண் பெற்றுள்ளார். வருண் சக்ரவர்த்தியின் கணிக்க முடியாத பந்துவீச்சில் சிக்கி இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 8 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது. 140 ரன்களுக்குள் இன்னிங்ஸ் முடிந்துவிடும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் லியாம் லிவிங்ஸ்டோனின் சிறப்பான பேட்டிங்கால் இங்கிலாந்து அணி கூடுதல் ரன்களை சேர்த்தது. ஹாட்ரிக் வெற்றியுடன் டி20 தொடரை வெல்லும் முனைப்பில் உள்ள இந்திய அணிக்கு புதிய 'சிக்கல்' கபடியால் மாறிய வாழ்க்கை - ஒரு கிராமத்துப் பெண்களின் நெகிழ்ச்சி கதை வருண் மாயஜாலம், அபிஷேக் அதிரடி: முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்தின் பேஸ்பால் வியூகத்தை நொறுக்கிய இந்திய அணி ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் - யார் இவர்? இந்தியா ஹாட்ரிக் வெற்றியை தவற விட்டது ஏன்? ராஜ்கோட் மைதானம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரி. இந்த ஆடுகளத்தின் தன்மை குறித்து வர்ணனையாளர் முரளிகார்திக் கூறும் போதுகூட " என் தலை எவ்வாறு வழுக்கையாக இருக்கிறதோ அதுபோன்று இந்த ஆடுகளம்" என்றார். பேட்டர்கள் முதலில் நிதானமாக ஆடி, களத்தில் நிலைத்துவிட்ட பிறகு பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியும். இங்கிலாந்து அணி இங்கு சேர்த்த 171 ரன்கள் என்பது இந்த மைதானத்தில் சேர்க்கப்பட்ட சராசரி ஸ்கோரைவிட குறைவுதான். அப்படி இருக்கையில் இந்திய அணியின் பேட்டர்கள் எளிய ஸ்கோரை கூட சேஸ் செய்யாமல் தோற்றதற்கு பேட்டர்களின் பொறுப்பற்ற செயல்தான் காரணம். சாம்ஸன்(3), அபிஷேக் சர்மா(24), கேப்டன் சூர்யகுமார்(14), திலக் வர்மா(18), துருவ் ஜூரெல்(2), பாண்டியா(40) அக்ஸர் படேல்(15), வாஷிங்டன் சுந்தர்(6) என 8 பேட்டர்கள் வைத்திருந்தும் 171 ரன்களை சேஸ் செய்ய முடியவில்லை. ஹர்திக் பாண்டியா(40), தவிர மற்ற எந்த பேட்டரும் 25 ரன்களைக் கடக்கவில்லை, ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. இந்த டி20 தொடரிலேயே இந்திய அணி சார்பில் இருவர் மட்டும்தான் அரைசதம் இதுவரை அடித்துள்ளனர். சாம்ஸன் தொடர்ந்து 3 டி20 போட்டிகளிலும் ஆர்ச்சர் பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்துள்ளார். சாம்ஸனின் பலவீனம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு அவரின் மார்பு உயரத்துக்கு பவுன்ஸர் போடும்போது அதை தூக்கி அடிக்க முற்பட்டு ஒரே மாதிரியாக ஆட்டமிழந்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சாம்ஸனின் பலவீனம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு அவரின் மார்பு உயரத்துக்கு பவுன்ஸர் போடும்போது அதை தூக்கி அடிக்க முற்பட்டு ஒரே மாதிரியாக ஆட்டமிழந்துள்ளார். ஏ.ஐ. உலகில் புதிய அலை: ஒரே செயலி மூலம் அமெரிக்க நிறுவனங்களை மிரளச் செய்த சீன நிறுவனம்3 மணி நேரங்களுக்கு முன்னர் ஹிட்லரின் யூத படுகொலை மையமாக திகழ்ந்த 'அவுஷ்விட்ஸ்' வதை முகாம் எவ்வாறு இயங்கியது?28 ஜனவரி 2025 இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றியை பறித்த 'மோசமான முடிவுகள்' கேப்டன் சூர்யகுமார் ஃபார்மின்றி தவிக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. கடந்த 5 இன்னிங்ஸ்களிலும் ஸ்கே ஒற்றை இலக்க ரன்னில்தான் ஆட்டமிழந்துள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்தே அவரது பேட்டிங் பெரிதாக சொல்லும் அளவுக்கும், ஸ்கோரும் பெரிதாக எடுக்கவில்லை. கேப்டன் பொறுப்பு அவரின் இயல்பான பேட்டிங்கிற்கு சுமையாக இருக்கிறதா எனத் தெரியவில்லை. இந்தத் தொடரிலும் களத்துக்கு வந்தவுடன் பெரிய ஷாட்டுக்கு முற்பட்டுதான் சூர்யகுமார் விக்கெட்டை இழந்துள்ளார். ஓரளவு நிலைத்து பேட் செய்திருந்தால் நடுவரிசை ஸ்திரப்பட்டு ரன்கள் வந்திருக்கும். பவர்ப்ளே முடிவதற்குள்ளே இந்திய அணி 48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் வந்த பேட்டர்களும் ஓரளவு பொறுப்புடன் பேட் செய்திருக்கலாம். திலக் வர்மா கடந்த 5 இன்னிங்ஸ்களாக நாட்அவுட் முறையில் இருந்தே அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற நிலையில், அடில் ரஷித் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 2024, நவம்பர் 10ம் தேதியிலிருந்து திலக் வர்மா பங்கேற்ற போட்டிகளில் நாட்அவுட் முறையில்தான் ஆடி வருகிறார், இந்த இடைப்பட்ட காலத்தில் 336 ரன்கள் சேர்த்துள்ளார், ஒரு சதம் மற்றும் அரைசதமும் அடித்த நிலையில் நடுவரிசையில் அவரின் மீது சுமையை ஏற்றுவது தவறாகும். அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தரைவிட சிறந்த பேட்டரான துருவ் ஜூரெலை 8வது வீராகக் களமிறக்கி நெருக்கடியில் தள்ளினர். இடது, வலது பேட்டர்கள் களத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக பேட்டிங் வரிசையை குழப்பி, முறையான பேட்டரை நடுவரிசையில் களமிறக்காமல் 8-வது வரிசையில் களமிறக்கி அவரை வீணடித்தனர். உயிர்காக்கும் மருந்துகளை உருவாக்க விஷமுள்ள கம்பளிப் புழுக்கள் எப்படி உதவ முடியும்?27 ஜனவரி 2025 சென்னை போல 4 மடங்கு பெரிய பிரமாண்ட பனிப்பாறை ஒரு தீவின் மீது மோதும் அபாயம் - என்ன நடக்கும்?27 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, துருவ் ஜூரெலை 8வது வீராகக் களமிறக்கி நெருக்கடியில் தள்ளினர். தொடக்க வீரர்கள் நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தால்தான் அடுத்தடுத்து வரும் வீரர்களுக்கு சுமை, அழுத்தம் குறையும். ஆனால், கடந்த 3 போட்டிகளிலும பவர்ப்ளே ஓவர்களுக்குள் தொடக்க வீரர்களில் யாரேனும் ஒருவர் ஆட்டமிழந்துவிடும் போது, பவர்ப்ளே ஓவர்களை பயன்படுத்தும் வகையில் அடுத்துவரும் பேட்டர்கள் அதிரடி ஆட்டத்தை கையாள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விக்கெட்டை இழக்கிறார்கள். ஒட்டுமொத்தத்தில் இந்திய அணியின் பேட்டர்களின் ஒட்டுமொத்த பங்களிப்பு கடந்த 3 போட்டிகளிலும் இல்லை. யாரேனும் ஒரு வீரர்தான் வெற்றியை தோளில் சுமந்து செல்ல வேண்டிய நிலைதான் இருந்தது. கடந்த இரு போட்டிகளில் அபிஷேக் சர்மா, திலக்வர்மா தோளில் சுமந்தநிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றியை சுமக்க யாரும் முன்வராத நிலையில் தோல்வி அடைந்துள்ளது. அதுமட்டுமல்ல இங்கிலாந்து அணி 127 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது கூட ஆட்டம் இந்திய அணியின் கைவசம்தான் இருந்தது. ரவி பிஸ்னாய் வீசிய 16வது ஓவர்தான் ஆட்டத்தின் போக்கை மாற்றி இங்கிலாந்தின் கை ஓங்கச் செய்தது. பிஸ்னாய் ஓவரில் லிவிங்ஸ்டன் அடித்த 3 சிக்ஸர் ஸ்கோரை உயர்த்தியது. 2023ம் ஆண்டுக்குப்பின் முகமது ஷமி இந்த ஆட்டத்தில் பந்துவீசியும் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அழியும் ஆபத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைவாழ் நன்னீர் மீன்கள்: தமிழ்நாட்டு மீன்கள் எவை - விளைவுகள் என்ன?13 ஜனவரி 2025 நீரிழிவு நோயாளிகள் 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்த பரிசோதனை செய்வது அவசியம் ஏன்?12 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முகமது ஷமி இந்த ஆட்டத்தில் பந்துவீசியும் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வருண் சக்ரவர்த்தி வித்தியாசமான சாதனை டி20 தொடர் தொடங்கியதிலிருந்து வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சு இங்கிலாந்து பேட்டருக்கு புரியாத புதிர் போன்று இருக்கிறது. இந்த ஆட்டத்தில் ஆர்ச்சர் போல்டான போது, பந்து எப்படி தனது கட்டுப்பாட்டை மீறி போல்டாகியது எனத் தெரியாமல் புலம்பிக்கொண்டே ஆட்டமிழந்து சென்றார். புதிராகப் பந்துவீசும் வருணின் உழைப்பை இந்திய அணி இந்த ஆட்டத்தில் பயன்படுத்தவில்லை. நடுப்பகுதி ஓவர்களில் இங்கிலாந்து ரன்ரேட்டை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல அடித்தளத்தை வருண் அமைத்துக்கொடுத்தார். இந்திய அணிக்குள் மீண்டும் வந்ததில் இருந்து வருணின் பந்துவீச்சு மெருகேறி வருகிறது. கடந்த 10 போட்டிகளில் மட்டும் வருண் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த ஆட்டத்தையும் சேர்த்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி சர்வதேச டி20 போட்டியில் 5 விக்கெட் எடுப்பது இது 2-வது (ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக) முறையாகும். ஆனால் அந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியையே சந்தித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் தோல்வியடைந்த போட்டிகளில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற வித்தியாசமான சாதனையை வருண் சக்ரவர்த்தி படைத்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 10 போட்டிகளில் மட்டும் வருண் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். "வெற்றியைத் தவறவிட்டோம்" தோல்விக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் " பனியின் தாக்கம் லேசாக இருந்ததாக நினைக்கிறேன். அக்ஸர்-ஹர்திக் களத்தில் இருந்தபோது 24 பந்துகளில் 55 ரன்கள்தான் தேவைப்பட்டன. ஆட்டம் எங்கள் கைகளில் இருந்தது என நினைத்தோம். அதில் ரஷித் எங்ளை ரன் சேர்க்கவிடாமல் கட்டிப்போட்டார். ஒவ்வொரு போட்டியிலும் கற்றுக்கொள்கிறோம். 127 ரன்களி்ல் 8 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்திருந்த நிலையில் 170 ரன்களை அடிக்க வைத்தது தவறுதான். பேட்டிங்கிலும் அதிகம் கற்றுக்கொண்டிருக்கிறோம். ஷமியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது, வருண் கடினமாக உழைக்கிறார், அதற்கான பலன் கிடைத்துள்ளது" எனத் தெரிவித்தார். தினமும் தொழ மாட்டார்கள், ரமலான் நோன்பு இருக்க மாட்டார்கள் - இஸ்லாம் மதத்தில் இப்படி ஒரு குழு இருப்பது தெரியுமா?26 ஜனவரி 2025 'உலகிலேயே முதன் முதலில் தமிழ்நாட்டில்தான் இரும்பு பயன்பாடு தொடங்கியது' - இரும்புக் காலம் ஏன் முக்கியம்?25 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2 போட்டிகளிலும் செய்த தவறுகளை கேப்டன் பட்லர் செய்யவில்லை. இந்திய பேட்டர்களை திணறவிட்ட ரஷித் இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் அந்த அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். நடுப்பகுதியில் ரன் ரேட்டை கட்டுப்படுத்தி இந்திய அணியை தோல்வியில் தள்ளினார். 4 ஓவர்கள் வீசி ரஷித் 15 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், தனது ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்ஸரைக் கூட அடிக்க ரஷித் அனுமதிக்கவில்லை. அதிலும் திலக் வர்மாவை போல்டாக்கிய ரஷித்தின் பந்துவீச்சு, மறைந்த ஷேன் வார்ன் பந்துவீச்சுக்கு ஓப்பாக அமைந்தது. மிகக் குறைந்த 75 கி.மீ வேகத்தில் பந்தை டாஸ் செய்யும் விதம், அதை அடிக்க முடியாமல் பேட்டர்கள் திணறுவது என ரஷித்தின் பந்துவீச்சு இந்திய பேட்டர்களுக்கு நேற்று சிம்மசொப்பனமாகவே இருந்தது. நடுப்பகுதியில் 7 முதல் 15 ஓவர்கள் வரை இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் சேர்த்த நிலையில் இங்கிலாந்து 7 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் சேர்த்தது. இலங்கையில் செல்போன் வாங்க புதிய கட்டுப்பாடு - ஜன.28 முதல் புதிய விதிகள் அமல்25 ஜனவரி 2025 ஒரே ஆண்டில் 8 மடங்கு அதிகம்: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வைரஸ் பரவலுக்கு அரசு தடுப்பூசி வழங்காதது ஏன்?19 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் அந்த அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். 4 பேர் 8 விக்கெட்டுகள் ராஜ்கோட் மைதானம் வேகப் பந்துவீச்சுக்கும், ஸ்விங் பந்துவீச்சுக்கும் பெரிதாக ஒத்துழைக்காத நிலையில்கூட இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் மைதானத்தை நன்கு புரிந்து அதற்கு ஏற்றபடி பந்துவீசினர். அதுமட்டுமல்லாமல் இந்திய பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டத்துடன் களமிறங்கி கட்டம்கட்டி தூக்கினர். குறிப்பாக சாம்ஸனுக்கு பவுன்ஸர் பந்துவீச்சு எரிச்சலைத் தரும் என்பதைத் தெரிந்து ஆர்ச்சர் தொடர்ந்து பவுன்ஸராக வீசி விக்கெட்டை வீழ்த்தினார். மார்க் உட்டின் 150 கி.மீ வேகத்தில் வீசப்படும் பந்துவீச்சு, சூர்யகுமார் விக்கெட்டை பதம் பார்த்தது. இந்தத் தொடரில் அறிமுகமாகிய பிரென்டன் கார்ஸ், ஓவர்டன் என இருவரும் இந்திய பேட்டர்களுக்கு சரியான லைன் லென்த்தில் வீசி திணறவிட்டனர். ஆஸ்திரேலியா: நீர் இருக்கும் இடமெங்கும் நிரம்பி வழியும் முதலைகள், பணம் புரளும் தோல் வியாபாரம்17 ஜனவரி 2025 குளித்த பிறகு பயன்படுத்தும் துண்டை வாரத்திற்கு எத்தனை முறை, எப்படி துவைக்க வேண்டும்?16 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்து அணியில் டக்கெட் அரைசதம் அடித்திருந்தார். இங்கிலாந்து வெற்றிக்கு காரணம் என்ன? இங்கிலாந்து அணியினர் இந்திய பேட்டர்கள் ஒவ்வொருக்கும் ஒரு திட்டத்துடன் வந்து அதை களத்தில் சரியாகப் பயன்படுத்தினர். கடந்த 2 போட்டிகளிலும் செய்த தவறுகளை கேப்டன் பட்லர் செய்யவில்லை. எந்த பேட்டருக்கு யாரை பந்துவீசச் செய்யலாம், எந்த பேட்டருக்கு எவ்வாறு பீல்டிங் அமைக்கலாம் எனத் தெரிந்து அதை சரியாக அமைத்தார். சூர்யகுமார் யாதவுக்கு அதிவேகமாக பந்துவீசினால் சிக்ஸர் அல்லது விக்கெட் இழப்பார் எனத் தெரிந்து மார்க் உட்டை பந்துவீசச் செய்தார். சாம்ஸனுக்கு விரித்த வலையில் அவரி எளிதாக வீழ்ந்தார். இதுபோல் ஒவ்வொரு வீரரையும் கட்டம்கட்டி இங்கிலாந்து அணி தூக்கியது. இங்கிலாந்து அணியிலும் எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. டக்கெட் மட்டுமே அரைசதம் அடித்திருந்தார். பட்லர் 24 ரன்கள் சேர்த்தார். நடுவரிசையில் லிவிங்ஸ்டோன் பிஞ்ச் ஹிட்டராக ஆடியவிதம் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியது. இந்த மைதானத்தில் 171 ரன்கள் எளிதாக சேஸ் செய்யக்கூடியதுதான். ஆனால் அதை சேஸ் செய்யவிடாமல் இங்கிலாந்து அணியினர் தங்களின் திட்டமிட்ட பந்துவீச்சால் டிபெண்ட் செய்துள்ளார்கள் என்பதில்தான் அவர்களது வெற்றியின் சூட்சுமம் இருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpdx2xzyypeo
  10. காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு; புதுச்சேரி அமைச்சர் கடும் கண்டனம் 29 JAN, 2025 | 09:39 AM இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமில்லாமல் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருப்பது கண்டிக்கத்தது என்று புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இரண்டு மீனவர்கள் படுகாயம் அடைந்து யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவேலு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில்மாணிக்கவேல், தினேஷ், கார்த்திசேன், செந்தமிழ் உள்ளிட்ட 13 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். கோடியக்கரைக்கு கு தென்கிழக்கு கடலில் மீன் பிடித்து கொண்டு இருக்கும் போது இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்தாதாக கூறி படகை நோக்கி இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.இதில் படுகாயமடைந்த இரண்டு மீனவர்கள் யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். படகின் உரிமையாளர் ஆனந்தவேலுவின் படகு ஏற்கனவே இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் மற்றொரு புதிய விசைப்படகும் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி விசைப்படகை மீட்டு தர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். மற்றொரு படகிலிருந்த மீனவர் தாமரைச்செல்வன் இது குறித்து தெரிவித்த போது "இந்திய எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென வந்த இலங்கை கடற்படையினர் காரைக்கால் படகு ஒன்றின் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் அதில் இரண்டு மீனவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இது குறித்த தகவலை தெரிவிக்க தாங்கள் கரை திரும்பியதாகவும், அப்போது இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவிக்க முயற்சித்த போது அவர்கள் அந்த தகவலை ஏற்கவில்லை எனவும் மனக்குமுறலுடன் தெரிவித்தார். இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமில்லாமல் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருப்பது கண்டிக்கத்தது என்று புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இரண்டு மீனவர்கள் படுகாயம் அடைந்து யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட 13 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோர் வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் இலங்கை கடற்படையின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறுகையில், “காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது துரதிஷ்டவசமானது, இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமில்லாமல் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது கண்டிக்கதக்கது” என்றார். கடலில் மீனவர்கள் மீன் பிடிப்பது என்பது அவர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டது, இது போன்று விவகாரங்களில் இலங்கை கடற்படை நடந்து கொள்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்றார். மீனவர்களை விடுவிக்க கோரி முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளார் மேலும் இலங்கை தூதரகத்தின் மூலம் 13 பேரையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார். துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்து இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு மருத்துவம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அமைச்சர் லட்சுமி நாராயணன்.. இலங்கை கடற்பகுதியில் அத்து மீறி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்ய வேண்டும் என்று இலங்கை மீனவர்கள் போராட்டம் நடத்தியதாகவும் அதன் அடிப்படையிலேயே இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் கடலில் மீன் பிடிக்கும்போது தொடர்ந்து இலங்கை கடற்படை இதுபோன்று நடந்து கொள்வதால் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் கவனமுடன் மீன்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். https://www.virakesari.lk/article/205184
  11. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,பால் ஆடம்ஸ் பதவி,பிபிசி ராஜ்ஜீய செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நடை பயணமோ அல்லது கார் பயணமோ, தங்கள் வீடுகளை நோக்கிய பயணத்தை பாலத்தீனர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 15 மாதங்களாக புலம்பெயர்ந்து வாழ்ந்த காஸா மக்களுக்கு இது அதிக தூரம் இல்லை, ஏனெனில் காஸா ஒரு சிறிய பகுதிதான். போரால் கடுமையாக சேதமடைந்துள்ள இந்த பகுதியை நோக்கிய இவர்களது பயணம் என்பது ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தின் தொடக்கம் மட்டுமே. இந்தப் பகுதியில் நிலவக்கூடிய மனிதாபிமான நெருக்கடியின் அளவைப் புரிந்துகொள்வது கடினம். "இங்கு எந்த வசதிகளும் இல்லை, பொதுச் சேவைகள் இல்லை, மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, உள்கட்டமைப்புகள் இல்லை" என்று காஸா பத்திரிகையாளர் காடா எல்-குர்த் கூறுகிறார். இவர் பல மாதங்களாக டெய்ர் எல்-பலாவில் தங்கியிருந்தார், இப்போது வடக்கு காஸாவிற்கு திரும்பிச் செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார். "நாங்கள் மீண்டும் எங்களை தொடக்கத்திலிருந்து நிறுவிக்கொள்ளவேண்டும், பூஜ்ஜியத்திலிருந்து." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாலஸ்தீனர்கள் தங்குவதற்கு இடம் கண்டுபிடிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உடனடித் தேவைகளான உணவும், தங்கும் இடமும் அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. "இந்த சண்டை தொடங்கியது முதல் நாங்கள் பார்த்திராத அளவு உதவிகள் வந்துகொண்டிருக்கின்றன," என ஐநாவின் பாலஸ்தீன அகதிகள் முகமையான UNRWA-ஐ சேர்ந்த சாம் ரோஸ் சொல்கிறார். "எனவே உணவு, தண்ணீர், போர்வைகள், சுகாதாரப் பொருட்கள் போன்ற அடிப்படை தேவைகளை எங்களால் பூர்த்தி செய்ய முடிகிறது. ஆனால் அதைத் தாண்டி மிக நீண்ட பாதை இது." காஸாவின் இடிபாடுகளில் இருப்பிடங்களை கண்டுபிடிப்பது மிகப்பெரிய நீண்ட கால சவால்களில் முதன்மையானது. யுத்தத்தின் தொடக்க வாரங்களில் 70,000 பேர் காஸா நகரையும் அதன் சுற்றுப்புறங்களையும் விட்டு வெளியேறினர். எவ்வளவு என தெரியாத அளவிலானவர்கள்- ஒருவேளை கிட்டதட்ட 40,000 பேர், தங்களது இடங்களிலேயே இருந்தனர். காலி செய்யப்பட்ட இடங்களில் சில முற்றாக அழிக்கப்பட்டன, மற்றவை பெயரளவில் பிழைத்திருக்கின்றன. அக்டோபர் 2023 முதல் காஸாவில் 70% வீடுகள் சேதப்படுத்தப்பட்டோ அல்லது அழிக்கப்பட்டோ இருப்பதாக ஐநா மதிப்பிட்டுள்ளது. வடக்குப் பகுதியில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. படக்குறிப்பு,காஸாவில் சேதமடைந்த பகுதிகளை காட்டும் வரைபடம். ஜனவரி 11 வரையில் சேதமடைந்த பகுதிகள் சிவப்பு வண்ணத்தில் குறிக்கப்பட்டிள்ளது போருக்கு முன் 2,00,000 மக்கள் தொகையிருந்த ஜபலியா கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது. இந்த பகுதி மக்களில் பாதி பேர் காஸாவின் மிகப் பழமையானதும், மிகவும் பெரியதுமான ஒரு அகதிகள் முகாமில் வசிக்கின்றனர். கூடாரத்தில் வசிக்கும் நாட்கள் பலருக்கு இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்பது தெளிவு. ஹாமாஸால் நடத்தப்படும் காஸா அரசு ஊடக அலுவலகம் உடனடியாக 135,000 கூடாரங்கள் மற்றும் மூடிய வாகனங்கள் (கேரவன்) தேவை என அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் எல்லையில் தேங்கிக்கிடந்த 20,000 கூடாரங்களையும், பெருமளவிலான தார்ப்பாய் மற்றும் படுக்கைகளையும் தற்போது கொண்டுவர முடிவதாக ஐநா தெரிவித்துள்ளது. ஆனால் தங்குமிடத்திற்கு திடீரென ஏற்பட்டுள்ள தேவையை பூர்த்திசெய்ய போராடவேண்டியிருக்கும் எனவும் கூறியுள்ளது. "நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உலகில் எங்குமே இவ்வளவு கூடாரங்கள் தயார் நிலையில் இல்லை," என்கிறார் ரோஸ். பட மூலாதாரம்,GETTY IMAGES ஏற்கனவே இருப்பிடத்திற்கான தேவை அதிகமாக உள்ள நிலையில், வீடுகளை விட்டு ஓராண்டுக்கு முன் வெளியேறியவர்கள் திரும்பவந்து இருக்க இடம் தேடும்போது, இருப்பிடத்திற்கான அழுத்தம் அதிகரிக்கும் என யுத்தகாலம் முழுவதும் வடக்கிலேயே இருந்தவர்கள் அஞ்சுகிறார்கள். "இது ஒரு மிகப்பெரிய பிரச்னை, ஏனென்றால் மக்கள் இதுவரை தெற்கில் உள்ள உறவினர்கள் அல்லது நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்தனர்," என்கிறார் ஜாபலியாவை விட்டு வெளியேறினாலும் வடக்கை விட்டு செல்லாத அஸ்மா தாயே. "இப்போது அவர்கள் அந்த வீடுகளை காலி செய்து அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கவேண்டும். எனவே ஒரு புது வகையான இடமாற்றம் தொடங்கியுள்ளது.'' தனது கட்டடத்தில் ஏற்கனவே நான்கு குடும்பங்கள் வசிப்பதாகவும், மேலும் மூன்று குடும்பங்களை எதிர்பார்ப்பதாகவும் சொல்கிறார் அஸ்மா. போதிய இடமின்மையும், தனிமையின்மையும் ஏற்கனவே பிரச்னைகளை உருவாக்கியிருப்பதாகவும் கூறுகிறார். அகதிகள் திரும்புவது மேலும் பல விளைவுகளையும் ஏற்படுத்தி வருகிறது. " உறையவைத்த மீன் வாங்குவதற்காக இன்று சந்தைக்கு முதல் முறையாக சென்றேன்," என்றார் ஆஸ்மா. "ஆனால் ஏற்கனவே வியாபாரிகள் விலையை உயர்த்தத் தொடங்கிவிட்டனர்." ஏற்கனவே அரிதான தண்ணீர் மற்றும் மின்சார விநியோகத்தின் தேவையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,REUTERS இவ்வளவு கஷ்டங்கள் எதிர்பார்க்கப்பட்டாலும், வீடு திரும்புவோர் தங்களது நிம்மதியை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் சொல்கின்றனர். "ஒருவழியாக நாங்கள் ஆறுதலை கண்டறியக்கூடிய வடக்கிற்கு திரும்புவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்." என ஒருப் பெண் பிபிசியிடம் தெரிவித்தார். "தெற்கில் நாங்கள் அனுபவித்த துன்பங்களை விட்டுவிட்டு, 'பெய்ட் ஹனவுனின்' கண்ணியத்திற்கு திரும்புகிறோம்." காஸாவின் வடகிழக்கு மூலையில் இஸ்ரேலுடனான எல்லைக்கு அருகில் உள்ள பெய்ட் ஹனவுன் அடையாளம் தெரியாத அளவு உருகுலைந்திருப்பதாக அங்கிருந்து அண்மையில் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. மக்கள் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ எகிப்து அல்லது ஜோர்டானுக்கு செல்லவேண்டும் என டொனால்ட் டிரம்ப் ஓர் ஆலோசனையை முன்வைத்துள்ளர். இந்த ஆலோசனைக்கு எகிப்திய மற்றும் ஜோர்டான் அதிகாரிகள் உடனடியாக கண்டனம் தெரிவித்தனர். திடீரென அகதிகள் வருகை அதிகரித்தால் ஏற்படும் சமூக மற்றும் பாதுகாப்பு பிரச்னைகளை நினைத்து இருநாடுகளும் அஞ்சுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES "ஜோர்டான், ஜோர்டான் மக்களுக்கானது, பாலஸ்தீனம் பாலஸ்தீனர்களுக்கானது," என்றார் ஜோர்டானின் வெளியுறவு அமைச்சர் அய்மான் சஃபாடி. அவரது நாட்டில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட 2.4 மில்லியன் பாலத்தீன அகதிகள் உள்ளனர். அமெரிக்க அதிபர் டிரப்பின் ஆலோசனைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவின் அமைச்சரவையில் உள்ள வலதுசாரியினர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. காஸாவை இஸ்ரேலுடன் இணைக்கவேண்டும் என்பதற்கு ஆதரவானவரான நிதியமைச்சர் பெஜலெல் ஸ்மோட்ரிச் அதை ஒரு "சிறந்த திட்டம்" என விவரித்தார். கடந்த ஆண்டு தனது ஆதரவாளர்களின் மாநாட்டில் பேசிய அவர், " காஸாவின் மக்கள்தொகை இரண்டு ஆண்டுகளில் இப்போது இருப்பதில் பாதியாக குறைக்கப்படும்" என கூறியிருந்தார். காஸா உடனடியாக புனரமைக்கப்பட்டு, காஸா மக்களுக்கு சிறந்த எதிர்காலத்திற்கு நம்பிக்கை விதைக்கப்படாவிட்டால் ஸ்மோட்ரிச் அவர் நினைத்ததை சாதிக்கக்கூடும். "முதல் சில மாதங்களில் என்ன நடக்கிறது என பார்ப்பார்கள் என நினைக்கிறேன்," என்கிறார் பத்திரிகையாளர் காடா எல்-குர்த்."அவர்கள் எல்லாவற்றையும் இழந்து, மறுசீரமைப்பு பணிகள் தாமதமனால், மக்கள் காஸாவில் தங்க மாட்டார்கள் என நினைக்கிறேன்." அக்டோபர் 2023-ல் யுத்தம் தொடங்கியது முதல் சுமார் 150000 பேர் ஏற்கனவே வெளியேறிவிட்டனர். வசதி படைத்தவர்கள் நல்ல எதிர்காலத்தை தேடிக்கொண்டு அரபு நாடுகள் அல்லது வேறு நாடுகளுக்கு சென்றுவிடுவார்கள் என எதிர்பார்ப்பதாக சொல்லும் காடா இருப்பதிலேயே ஏழைகளே எஞ்சியிருப்பார்கள் என்றும் கூறுகிறார். "மக்களுக்கு இதைவிட நல்ல வாழ்க்கை வேண்டும் என்ற டிரம்பின் கூற்றை ஏற்றுக்கொள்கிறேன்." என்று அவர் சொல்கிறார். " அது ஏன் காஸாவில் இருக்கக்கூடாது?" - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/c983e6n2k3xo
  12. 2024ஆம் ஆண்டின் சிறந்த ஐசிசி ஆடவர் ரி20 கிரிக்கெட் வீரர் இந்திய வேகப்பந்துவீச்சு நட்சத்திரம் அர்ஷ்தீப் சிங் 25 JAN, 2025 | 06:57 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த விருதுகளில் ஒன்றான 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த ஐசிசி ஆடவர் ரி20 கிரிக்கெட் வீரராக இந்தியாவின் நட்சத்திரம் அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய அமெரிக்காவிலும் கரிபியன் தீவுகளிலும் கடந்த வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா சம்பியனாவதற்கு பெரும் பங்காற்றியவர்களில் அர்ஷ்தீப் சிங்கும் ஒருவராவார். பவர் ப்ளே மற்றும் டெத் ஓவர்களில் அசாத்திய திறமையுடன் பந்துவீசி அனைவரினதும் பாராட்டைப் பெற்றிருந்தார். ரி20 சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளராக அர்ஷ்தீப் சிங் கடந்த வருடம் தன்னை நிலைநிறுத்திக்கொண்டர். தான் பங்குபற்றிய சகல போட்டிகளிலும் டெத் ஓவர்களில் மிகத் திறமையாக பந்துவீசியதுடன் விக்கெட்களையும் தாராளமாக வீழ்த்தியிருந்தார். கடந்த வருடம் 18 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரம் விளையாடிய அர்ஷ்தீப் சிங் 36 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அவரது சராசரி 15.31 ஆக இருந்ததுடன் ஸ்ட்ரைக் ரேட் 10.80ஆகும். அவரது எக்கொனொமிக் ரேட் 7.49 ஆக இருந்தது. https://www.virakesari.lk/article/204890
  13. பட மூலாதாரம்,SIERRA SPACE படக்குறிப்பு, நிலவு போன்ற சூழலில் ஆக்ஸிஜன் உருவாக்கும் கருவியை சியாரா ஸ்பேஸ் உருவாக்கிக்கொண்டிருக்கிறது கட்டுரை தகவல் எழுதியவர், க்றிஸ் பரானியுக் பதவி, தொழில்நுட்ப செய்தியாளர் 28 ஜனவரி 2025, 10:01 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு ராட்சச கோளத்தின் உள்ளே பொறியாளர்கள தங்களது உபகரணங்களை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் முன்னே வண்ணமயமான வயர்களால் சூழப்பட்ட பளபளப்பான உலோக கருவி ஒன்று இருந்தது. இந்தக் கருவி எதிர்காலத்தில் நிலவில் ஆக்ஸிஜன் தயாரிக்க உதவும் என நம்புகிறார்கள். அந்த கோளத்தை விட்டு அவர்கள் வெளியேறியவுடனே பரிசோதனை தொடங்கியது. பெட்டி போன்ற அந்த கருவியினுள் -நிலவின் மண்ணில் காணப்படுவதற்கு இணையான துகள்கள் மற்றும் கூரான கற்களால் ஆன ரெகோலித் ரசாயன கலவை சிறிய அளவில் செலுத்தப்படுகிறது. விரைவில் அந்த கலவை உருகி அரை நீர்ம வடிவெடுத்துவிட்டது. அதில் ஒரு அடுக்கு 1650 செல்சியஸ் வெப்பத்திற்கு மேல் சூடுபடுத்தப்படுகிறது. அதனுடன் சில எதிர்விளைவு மூலக்கூறுகள் சேர்க்கப்பட்டவுடன், ஆக்ஸிஜன் அடங்கிய குமிழிகள் எழத் தொடங்குகின்றன. "பூமியில் பரிசோதிக்கக் கூடிய எல்லாவற்றையும் சோதனை செய்து பார்த்துவிட்டோம், நிலவுக்கு செல்வது அடுத்த கட்டம்"என்கிறார் சியாரா ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனத்தில் திட்ட மேலாளராக இருக்கும் பிராண்ட் வைட். சியாரா ஸ்பேஸ் நிறுவனத்தின் பரிசோதனை நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் 2024 கோடையில் நடைபெற்றது. எதிர்காலத்தில் நிலவின் தளத்தில் ஆராய்ச்சி செய்ய செல்லும் விண்வெளி வீரர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்கக்கூடிய அமைப்புகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் விண்வெளி வீரர்கள் சுவாசிக்க மட்டுமல்ல, செவ்வாய் உள்ளிட்ட தொலைதூர கோள்களுக்கு நிலவிலிருந்து விண்கலங்கள் செலுத்தப்பட்டால், அப்பணிக்கான ராக்கெட் எரிபொருள் தயாரிக்கவும் ஆக்ஸிஜன் தேவைப்படும். நிலவில் வசிப்போருக்கு உலோகமும் தேவைப்படலாம். அவற்றை அவர்கள் நிலவின் மேற்பரப்பில் காணப்படும் பொருள்களிலிருந்து பிரித்தெடுக்கலாம். இதுபோன்ற வளங்களை திறம்பட பிரித்தெடுக்கும் ஆற்றல் மிக்க உலைகளை உருவாக்கமுடிவதை பொறுத்தே இவையெல்லாம் அமையும். "இது விண்வெளி திட்ட செலவுகளில் பல பில்லியன் டாலர்களை சேமிக்கக் கூடும்," என்கிறார் வைட். இதற்கு மாற்றாக பூமியிலிருந்து ஏராளமான ஆக்ஸிஜன் மற்றும் உதிரி பாகங்களை நிலவுக்கு கொண்டு செல்வது கடினமானதாகவும் அதிக பொருட்செலவுள்ளதாகவும் இருக்கும் எனவும் விளக்குகிறார். சென்னை போல 4 மடங்கு பெரிய பிரமாண்ட பனிப்பாறை ஒரு தீவின் மீது மோதும் அபாயம் - என்ன நடக்கும்? அடர்த்தியாக வளர்ந்து நிழல் தரும் இந்த அழகான மரங்களை வளர்க்க தமிழ்நாட்டில் தடை ஏன்? 'புலியை செல்லப்பிராணியாக வீட்டில் வளர்க்க விருப்பமா?' - நேபாளத்தில் வெற்றிக்கதையே ஆபத்தாக மாறியது எப்படி? அமெரிக்காவில் தடை அமலாவதற்கு முன்பே செயலிழந்த டிக்டாக் - என்ன நடந்தது? நிலவில் இது சாத்தியமா? நல்வாய்ப்பாக, நிலவின் ரெகொலித்தில் உலோக ஆக்ஸைடுகள் நிறைந்துள்ளன. பூமியில் உலோக ஆக்ஸைடுகளில் இருந்து ஆக்ஸிஜனை பிரித்தெடுப்பது குறித்து நல்ல புரிதல் இருந்தாலும், அதை நிலவில் செய்வது மிகவும் கடினம். அதற்கு சூழலும் ஒரு முக்கிய காரணம். ரெகோலித்தின் அதீத கரடுமுரடான அமைப்பை சமாளித்து நீண்ட காலம் செயல்படும் வகையில் கருவியை மேம்படுத்தவேண்டியிருப்பதாக அந்த நிறுவனம் சொல்கிறது. " ரெகோலித் எல்லா பக்கமும் நுழைந்து அனைத்து வகையான கருவிகளையும் தேய்மானம் அடையச் செய்துவிடுகிறது," என்கிறார் வைட். பூமியின் ஈர்ப்புவிசையில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே உள்ள நிலவின் ஈர்ப்புவிசை தொடர்பான ஆய்வுகள், பூமியிலோ, பூமியை சுற்றிய நீள்வட்டப் பாதையிலோ கூட பரிசோதித்து பார்க்கமுடியாத ஒன்று. சியாரா ஸ்பேஸ் தனது கருவியை உண்மையான ரெகோலித்தை பயன்படுத்தி குறைந்த ஈர்ப்புவிசை சூழலில் பரிசோதிப்பது 2028 வரை சாத்தியமாகாமல் போகலாம். புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் துளிர் விட்ட தட்டைப்பயறு - இஸ்ரோ சாதித்தது எப்படி?5 ஜனவரி 2025 மத்ஸயா 6000: பெருங்கடலில் 6000 மீட்டர் ஆழத்திற்கு செல்லப் போகும் இந்திய விஞ்ஞானிகள்5 ஜனவரி 2025 பட மூலாதாரம்,SIERRA SPACE படக்குறிப்பு, இந்த அறை நிலவில் இருப்பதைப் போன்ற வெப்பம் மற்றும் அழுத்தத்தை உருவாக்குகிறது. நிலவின் ஈர்ப்பு விசையே பிரச்னையாகக் கூடும் நிலவின் ஈர்ப்பு விசைக்கென பிரத்யேகமான வடிவமைக்கப்படாவிட்டால், ஆக்ஸிஜனை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பங்களுக்கு, நிலவின் ஈர்ப்பு விசையே ஒரு பெரிய பிரச்னையாகிவிடலாம் என்கிறார் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பால் பர்க். ஆக்ஸிஜனை பிரித்தெடுக்கும் ஒரு நடைமுறை, நிலவின் மென்மையான ஈர்ப்புவிசையால் எப்படி பாதிக்கப்படக்கூடும் என்பதை கணினி உருவகங்கள் மூலம் விளக்கி அவரும், அவரது சகாக்களும் கடந்த ஏப்ரலில் ஒரு கட்டுரையை வெளியிட்டனர். நிலவின் தாதுப்பொருட்களிலிருந்து, ஆக்ஸிஜனை பிரித்தெடுக்க, அவற்றை மின்சாரத்தால் பிளக்கும் 'மோல்டென் ரெகோலித் எலெக்ட்ரோலிசிஸ்' என்ற முறைதான் இங்கு ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. இதுபோன்ற தொழில்நுட்பங்கள், உருகிய ரெகோலித்தின் உள்ளேயே இருக்கும் எலக்ட்ரோடுகளின் மேற்பரப்பில் குமிழிகளை உருவாக்குவதன் மூலம் செயல்படுகின்றன என்பதுதான் இதிலிருக்கும் சிக்கல். " அதன் தன்மை தேன்போன்ற நிலையில் இருக்கும், மிகுந்த பிசுபிசுப்பாக இருக்கும்," என்கிறார் பர்க். "அந்த குமிழிகள் அவ்வளவு விரைவாக எழப்போவதில்லை – உண்மையில் அவை எலக்ட்ரோடுகளிலிருந்து பிரிவதில் தாமதம் ஏற்படலாம்." இதற்கு தீர்வுகள் இருக்கவும் வாய்ப்புகள் உண்டு. ஆக்ஸிஜன் தயாரிக்கும் கருவியை அதிரச் செய்வதன் மூலம், குமிழிகளை பிரிய வைக்கமுடியலாம். மேலும், குமிழிகள் பிரிவதை கூடுதல் வழுவழுப்புள்ள எலக்ட்ரோடுகள் எளிதாக்கிவிட வாய்ப்புள்ளது. ஆராய்ச்சியாளர் ப்ரூக் மற்றும் அவரது சகாக்கள் இது போன்ற கருத்தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். சியாரா ஸ்பேஸ் நிறுவனத்தின் 'கார்போதெர்மல்' நடைமுறையோ, வேறுவிதமானது. அவர்களது நடைமுறையில் ஆக்ஸிஜன் அடங்கிய குமிழிகள் எலக்ட்ரோடுகளின் மேற்பரப்பில் உருவாகாமல் தன்னிச்சையாக ரெகோலித்தில் உருவாகின்றன. இதனால் அவை உள்ளேயே சிக்கிக்கொள்வதற்கான வாய்ப்பு குறைவு என்கிறார் வைட். எதிர்கால நிலவு பயணங்களுக்கு ஆக்ஸிஜனின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பர்க், ஒரு விண்வெளி வீரரின் உடற்தகுதி மற்றும் செயல்திறனை பொறுத்து அவருக்கு சுமார் இரண்டு முதல் மூன்று கிலோ ரெகோலித்தில் உள்ள அளவு ஆக்ஸிஜன் ஒவ்வொரு நாளும் தேவைப்படும் என கணிக்கிறார். ஆனால் நிலவில் அமையும் ஒரு மையத்தின் உயிர் காக்கும் அமைப்புகள் விண்வெளிவீரர்கள் சுவாசத்தின் மூலம் வெளியேற்றும் ஆக்ஸிஜனையும் மறுசுழற்சி செய்வதற்கு வாய்ப்பு அதிகம். அப்படி இருந்தால், நிலவு மையத்தில் உள்ள மனிதர்களை உயிரோடு வைத்திருக்க அதிக ரெகோலித்தை மாற்றவேண்டிய தேவை இருக்காது. பெரிய அளவிலான விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ராக்கெட் எரிபொருட்களுக்கு ஆக்சிஜன் வழங்கும் கருவிகளை உருவாக்குவதில்தான் ஆக்ஸிஜனை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பங்கள் உண்மையில் அதிகம் பயன்படக்கூடும் என்று கூறுகிறார் பர்க். க்ரிம்ஸி: கோடிக்கணக்கான பறவைகளோடு 20 மனிதர்கள் மட்டுமே வாழும் ஆர்டிக் தீவு2 ஜனவரி 2025 இன்றைய நவீன நாட்காட்டியை உருவாக்க வரலாற்றில் தொலைக்கப்பட்ட 10 நாட்கள் பற்றி தெரியுமா?31 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,நாசாவின் ஆர்டெமிஸ் விண்கலம், 2027-ல் நிலவில் விண்வெளி வீரர்களை தரையிறக்க திட்டமிட்டுள்ளது நிலவில் உருவாக்குவதே நல்லது! நிலவில் கூடுதலாக எவ்வளவு மூலாதரங்களை தயாரிக்க முடிந்தாலும் அவ்வளவு நல்லது என்பது வெளிப்படை. சியாரா ஸ்பேஸ்ன் நடைமுறையில் சிறிது கார்பன் சேர்க்கவேண்டியிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறை ஆக்ஸிஜன் உருவக்கப்பட்டபின் கார்பனை மறுசுழற்சி செய்யமுடியும் என அந்த நிறுவனம் சொல்கிறது. நிலவின் மண்ணில் இருந்து ஆக்ஸிஜன் மற்றும் உலோகங்களை பிரித்தெடுக்க பரிசோதனைமுறையில் மோல்டென் ரெகோலித் எலெக்ட்ரோலிஸிஸ் முறையை மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி பாலக் படேல் தனது சகாக்களுடன் இணைந்து உருவாக்கினார். "நிலவுக்கு பொருட்களை எடுத்துச்செல்லும் பயணங்களை குறைப்பது என்ற நோக்கத்தோடுதான் நாங்கள் இதைப் பார்க்கிறோம்," என்கிறார் அவர். படேலும் அவரது சகாக்களும் தங்களது கருவியை வடிவமைத்த போது, குறைவான ஈர்ப்புவிசை, ஆக்ஸிஜன் குமிழிகள் எல்க்ட்ரோடுகளிலிருந்து பிரிவதை பாதிக்கக்கூடும் என பர்க் விவரித்திருந்த பிரச்னையை கவனத்தில் எடுத்துக்கொண்டனர். இதை சமாளிக்கும் வகையில் குமிழிகளை ஒலி அலைகளால் தாக்கி அவற்றை எலக்ட்ரோடுகளிலிருந்து பிரிக்கும் "சோனிக்கேட்டர்" என்ற கருவியை அவர்கள் பயன்படுத்தினர். ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் வானில் எரிகற்கள் பொழியும் அதிசயம் பற்றி தெரியுமா?24 டிசம்பர் 2024 மனிதர்கள் நிலா மற்றும் செவ்வாயில் வீடு கட்ட வித்திடும் ஆய்வு - லடாக்கில் ஒரு விண்வெளி அனுபவம்19 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,MIT AND SHAAN JAGANI படக்குறிப்பு, நிலவின் துகள்களிலிருந்து ஆக்ஸிஜனை பிரித்தெடுக்கும் முறையை பாலக் படேல் உருவாக்கி வருகிறார் எதிர்காலத்தில் நிலவில் பயன்படுத்தப்படும் வளங்களை பிரித்தெடுக்கும் இயந்திரங்கள், ரெகோலித்திலிருந்து இரும்பு, டைட்டேனியம் போன்றவற்றை எடுக்க வாய்ப்பிருப்பதாக படேல் சொல்கிறார். இந்த மூலப்பொருட்கள், முப்பரிமாண அச்சு முறையில் உதிரி பாகங்களை உருவாக்கவோ, அல்லது சேதமடைந்த பாகங்களுக்கு மாற்றை தயாரிக்கவோ நிலவில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு உதவக்கூடும். நிலவின் ரெகோலித்தின் பயன் அத்துடன் நின்றுவிடுவதில்லை. வேறு பரிசோதனைகளில் உருவாக்கம் செய்யப்பட்ட ரெகோலித்தை கடினமான கருமையான கண்ணாடி போன்ற பொருளாக உருக்கியிருப்பதாக படேல் சொல்கிறார். இந்தப் பொருளை வலுவான கட்டடக் கல்லாக உருவாக்கும் முறையை அவரும் அவரது சகாக்களும் கண்டறிந்துள்ளனர். இது நிலவில் கட்டடங்களை கட்ட பயன்படக் கூடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cq6g52jv4gvo
  14. 28 JAN, 2025 | 04:54 PM சீனப் புத்தாண்டை முன்னிட்டு (வசந்தகால விழா) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சீன மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; இந்த பாரம்பரிய பண்டிகையானது நாளை புதன்கிழமை (29) கொண்டாடப்படவுள்ளது. சீன மக்களின் பாரம்பரிய உடைகள், உணவுகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சாரத்தை நினைவுகூரும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகின்றது. சுமார் 3,500 வருடங்கள் பழமையான இந்த பண்டிகை மூலம் சீன மக்களின் மகத்தான கலாச்சாரம் மற்றும் உணர்வுகள் எடுத்துக்காட்டப்படுகின்றன. சீனாவில் உள்ள பல்வேறு பிரதேசங்களில் இந்த விழா கலாச்சாரத்துடன் கூடிய வகையில் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும். அனைத்து சீன மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். https://www.virakesari.lk/article/205143
  15. Published By: DIGITAL DESK 2 28 JAN, 2025 | 04:29 PM கொள்கை ரீதியான இணக்கப்பாடு இல்லாமல் கட்சிகள் ஒன்றிணைவது தொடர்பில் சிந்திக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (28) ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அதாவது அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறைமையாக அமைய போகிறது. நாடாளுமன்றில் அநுர தரப்பு அதீத பெரும்பான்மையுடன் உள்ளது. அவர்களுக்கு எமது தரப்பின் ஆதரவு தேவையில்லை. அந்த நிலையில் தமிழர் தரப்பில் நாடாளுமன்றில் உள்ள 19 உறுப்பினர்களில் குறைந்த பட்சம் 10 உறுப்பினர்களாவது ஒன்றிணைந்து வரவுள்ள ஒற்றையாட்சியை எதிர்க்க வேண்டும். அதற்காகவே தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து, வரவுள்ள அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாட முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பில் நாம் சிந்திக்கவில்லை. தற்போது வரவுள்ள அரசியலமைப்பு எவ்வாறு அமையவுள்ளது என்பது தொடர்பிலையே சிந்திக்கின்றோம். எங்கள் கட்சிகள் உறுப்பினர்கள், கொள்கைகள் மீது பலருக்கும் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் பொதுவாக தமிழ் மக்களின் இருப்பை இல்லாதாக்கும் அரசியலமைப்பை தமிழ் மக்களாக நாம் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். ஒற்றையாட்சி சிந்தனையோடு வரும் எந்த அரசியலமைப்பை ஏற்க முடியாது. சமஷ்டி தீர்வை மாத்திரமே ஏற்றுக்கொள்வோம். சமஷ்டி என்பதில் எந்த ஒளிவுமறைவும் இன்றி நேரடியாக சமஷ்டி தீர்வாகவே தீர்வுத்திட்டம் முன் வைக்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டமானது, இதுவரையிலான தீர்வு திட்டங்களில் சிறப்பானது. அதனை வைத்து அதில் திருத்தங்களை கொண்டு வரவேண்டும். குறிப்பாக அதில் மலையக மற்றும் முஸ்லீம் மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு, அதனை பூரணப்படுத்த வேண்டும். அவ்வாறு பூரணப்படுத்தப்பட்டால் அதனை தமிழர்களின் தீர்வு யோசனையாக முன் வைக்க முடியும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/205139
  16. 2025 ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக்குழு கூடியது : பிரதேச மட்டத்தில் ஜனாதிபதி நிதிய சேவைகளை வழங்க அனுமதி Published By: DIGITAL DESK 2 28 JAN, 2025 | 05:16 PM மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளை துரிதப்படுத்துவதற்காக, கடமை நேரத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான ஜனாதிபதி நிதியிலிருந்து பணியாளர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கவும், நோயாளிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில், ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை கிராம மட்டத்திற்கு விரிவுபடுத்துவதற்கும் பிரதேச செயலகம் மூலம் சேவைகளை இணையவழி(ஒன்லைன் முறை) மூலம் வழங்குவதற்கும் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (28) ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியபோது, இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஜனாதிபதி நிதியத்தின் நன்மைகள் உண்மையாக மக்களைச் சென்றடையும் வகையில் வினைத்திறனான சேவைகளை வழங்கும் வகையில் திட்டம் தயாரித்தல், புதிய யோசனைகள் மற்றும் தற்போதுள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அரச மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளுக்காக காத்திருப்போர் பட்டியலில் அதிக எண்ணிக்கையிலானோர் காத்திருப்பது குறித்து இதன் போது ஆராயப்பட்டது. இதற்கான தீர்வாக கடமை நேரத்திற்குப் பிறகு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கும் அந்த சேவையை முன்னெடுக்கும் பணியாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்க ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி ஒதுக்குவது குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. தற்பொழுது இந்த முறைமை கராபிடிய மருத்துவமனையில் மாத்திரம் முன்னெடுக்கப்படுகிறது. எதிர்காலத்தில் அதனை தேசிய மருத்துவமனை, கண்டி பெரியாஸ்பத்திரி மற்றும் ரிச்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனை என்பவற்றிலும் முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வசதிகளை வழங்குவதை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதோடு க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகளை மையமாகக் கொண்டு புதிய திட்டங்களை ஆரம்பிப்பதற்கும் தற்பொழுது முன்னெடுக்கப்படும் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரொசான் கமகே, பேராசிரியர் ஜே.ஆர்.பி. ஜயக்கொடி, முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சரத் சந்திரசிறி மாயாதுன்னே மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/205156
  17. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு : இந்தியா கடும் கண்டனம் Published By: DIGITAL DESK 3 28 JAN, 2025 | 05:15 PM இலங்கைக் கடற்பரப்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட தமிழக மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியமைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்களை இன்று செவ்வாய்க்கிழமை (28) அதிகாலை கைது செய்த போது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, 13 மீனவர்களில் இருவருக்கு படுகாயங்களும் மூவருக்கு சிறு காயங்களும் ஏற்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய துணைத்தூதவர் சாய் முரளி காயமடைந்த மீனவர்களை வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்து, மீனவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் இன்றையதினம் புதுடெல்லியில் உள்ள இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகரை நேரில் அழைத்து இந்திய வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயமும் இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சிடம் இந்த விடயம் தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வாழ்வாதார பிரச்சினை என்பதால் மனிதாபிமான முறையில் மீனவர்களின் பிரச்சினையை கையாள வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் இத்தகைய தாக்குதல்களை நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்விடயத்தில் இரு அரசாங்கங்களுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/205144
  18. மாவை சேனாதிராஜா குணமடைய பிரார்த்திக்கிறேன் - நாமல் ராஜபக்ஷ Published By: VISHNU 28 JAN, 2025 | 08:30 PM தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும் அவர் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய மனதார பிரார்த்திக்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது டுவீட்டரில் பதிவிட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டதால் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்று செவ்வாய்க்கிழமை (28) அனுமதிக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/205165
  19. சீனாவின் ஜின்ஸி பகுதியில் நெடுஞ்சாலை அமைக்க அரசு திட்டமிட்டது. அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. நெடுஞ்சாலை அமைக்கும் இடத்தில் வசித்த மக்கள், அரசு அளித்த பெருந்தொகையை பெற்றுகொண்டு காலி செய்தனர். ஆனால், ஹுவாங் பிங் என்ற தாத்தா மட்டும் தன்னுடைய 2 மாடி வீட்டை அரசுக்கு விற்க மறுத்துவிட்டார். தன்னுடைய 11 வயது பேரனுடன் கடைசி காலம் வரை அந்த வீட்டில்தான் இருப்பேன் என்று கூறிவிட்டார். அரசு அதிகாரிகள் பல முறை தாத்தா விடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ரூ.2 கோடி வரை அந்த வீட்டுக்கு நஷ்ட ஈடு தருவதாகவும், வேறு இடத்தில் வீடு கட்ட நிலம் ஒதுக்குவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் கூறிய எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை தாத்தா. கடைசி வரை பிடிவாதம் பிடித்தார். வேறு வழியில்லாமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர். ஆனால் நடந்ததே வேறு. நெடுஞ்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. பெரிய பெரிய இயந்திரங்களை கொண்டுவந்து தாத்தா வீட்டை நடுவில் விட்டு விட்டு இருபக்கமும் நெடுஞ்சாலை அமைத்து முடித்தனர். தற்போது தாத்தா தனது தவறை உணர்ந்து வருந்திக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எனது வீட்டுக்காக சீன அரசு பணம் தருவதாக சொன்னது நியாயமானதாக இப்போது தெரிகிறது. நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கு வந்த பிறகு இந்த வீட்டில் என்னால் வசிக்க முடியுமா என்று தெரியவில்லை. வாகனங்கள் இரைச்சல், தூசியுடன், தனி வீட்டில் இருக்க முடியாது. முந்தைய காலத்துக்கு என்னால் செல்ல முடிந்தால், அரசு கொடுக்கும் பணத்தை வாங்கி கொண்டு என் வீட்டை இடிக்க ஒப்புக் கொள்வேன். ஆனால், தற்போது மிகப் பெரிய பந்தையத்தில் தோற்றுவிட்டு நிற்கிறேன். இவ்வாறு அந்த தாத்தா தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ள தாத்தாவின் வீடு, தற்போது பள்ளத்தில் கிடக்கிறது. அந்த வீட்டின் கூரையும் நெடுஞ்சாலையும் சமமாக உள்ளது. அவர் வீட்டுக்கு வந்து செல்வது மிகவும் சவாலாக உள்ளது. https://thinakkural.lk/article/314987
  20. டீப்சீக்: செயற்கை நுண்ணறிவு உலகில் அமெரிக்க ஆதிக்கத்திற்கு 'செக்' வைத்த சீன செயலி பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பீட்டர் ஹாஸ்கின்ஸ் & இம்ரான் ரஹ்மான் – ஜோன்ஸ் பதவி, வணிகம் & தொழில்நுட்ப செய்தியாளர்கள் 28 ஜனவரி 2025, 07:18 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீனாவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் ChatGPT உள்ளிட்ட செயலிகளை சீன செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக் (DeepSeek) பின்னுக்கு தள்ளியுள்ளது. அதிகம் வரவேற்பை பெற்ற இலவச செயற்கை நுண்ணறிவு (AI) செயலியாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது. சீன செயலிக்கு அதிகரிக்கும் வரவேற்பு, செயற்கை நுண்ணறிவு தொடர்புடைய அமெரிக்க நிறுவனங்களின் பங்குகள் விற்பனையை தூண்டியிருக்கிறது. இதனால் என்விடியா, மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா ஆகிய பெருநிறுவனங்களின் பங்குகள் திங்கட்கிழமை வீழ்ச்சியடைந்தன. இது ஐரோப்பிய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் அமெரிக்காவை விஞ்ச முடியாது என்ற பரவலான நம்பிக்கைக்கு சவால் விடும் வகையில், அறிமுகமான முதல் நாளில் இருந்தே இச்செயலி பிரபலமடைந்து வருகிறது. இதனால் அமெரிக்க நிறுவனங்கள் இந்தத் துறையில் செய்ய திட்டமிட்டிருக்கும் முதலீடுகளின் அளவு குறித்து கேள்விகளையும் எழுப்பியுள்ளது. மலிவு விலை ஏ.ஐ. சாத்தியமானது எப்படி? இது ஓபன் சோர்ஸ் டீப்சீக்-வி3 மாடலால் செயல்படுகிறது. இதை உருவாக்க 6 மில்லியன் டாலர்களைவிட குறைவான தொகையே செலவானதாக அதன் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தத் தொகை அதன் போட்டியாளர்கள் செலவிட்ட பல பில்லியன் டாலர்களைவிட கணிசமான அளவு குறைவு. ஆனால் இந்த கூற்றை இத்துறையில் இருக்கும் மற்றவர்கள் மறுக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவிற்கு தேவையான உயரிய சிப் தொழில்நுட்பத்தை சீனாவிற்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துவரும் சூழலில்தான் டீப்சீக்சின் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கையில் செல்போன் வாங்க புதிய கட்டுப்பாடு - ஜன.28 முதல் புதிய விதிகள் அமல் அமெரிக்காவில் தடை அமலாவதற்கு முன்பே செயலிழந்த டிக்டாக் - என்ன நடந்தது? பங்குச்சந்தையில் சில நிமிடங்களில் பல கோடிகளை குவித்த 'கேதன் பரேக்' சிக்கியது எப்படி? கிரீன்விச்சை அடிப்படையாகக் கொண்டு உலகின் நேர மண்டலம் உருவானது எப்படி தெரியுமா? உயரிய தொழில்நுட்பத்துடனான இறக்குமதி செய்யப்பட்ட சிப்கள் சீராக கிடைக்காத நிலையில், சீன செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள் தங்களது பணியை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொண்டதுடன், அந்த தொழில்நுட்பம் தொடர்பான புதிய அணுகுமுறைகளையும் முயற்சித்திருக்கின்றனர். இதனால் முன்பைவிட குறைவான அளவே கணினி ஆற்றல் தேவைப்படும் செயற்கை நுண்ணறிவு மாடல்கள் உருவாகியுள்ளன. இதற்கு முன்பு நினைத்ததைவிட குறைவாகவே செலவாகும் என்பதால், இந்த துறை மேம்பட வாய்ப்புகள் உள்ளன. முன்னதாக இம்மாதத்தில் டீப்சீக்-ஆர் 1 அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், கணிதம், கோடிங் மற்றும் மொழி பகுத்தறிதல் போன்றவற்றில் இதன் செயல்பாடு சாட்ஜிபிடி தயாரிப்பாளரான ஓபன்ஏஐ உருவாக்கிய மாடல்களுக்கு இணையாக இருப்பதாக அந்த நிறுவனம் பெருமிதத்துடன் தெரிவித்தது. அமெரிக்க அதிபராக முதல் வாரத்திலேயே முத்திரை பதித்த டிரம்ப் - என்ன சாதித்தார்? ஓர் அலசல்3 மணி நேரங்களுக்கு முன்னர் வடக்கு காஸாவுக்கு மீண்டும் திரும்பும் பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் - காத்திருக்கும் அதிர்ச்சிகரமான நிலை27 ஜனவரி 2025 பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, சீனாவுக்கு உயர் ரக சிப்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ள இந்த சூழலில் டீப்சீக் செயலி வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது முதலீடுகள் பாதிக்கப்படக் கூடும் சிலிகான் பள்ளத்தாக்கு முதலீட்டாளரும், டொனால்ட் டிரம்பின் ஆலோசகருமான மார்க் ஆண்டர்சன், டீப்சீக்-ஆர்1 -சோவியத் யூனியன் 1957இல் செயற்கைக்கோள் ஏவியதை போன்றது என்று சுட்டிகாட்டும் வகையில் "ஏ.ஐ. துறையின் ஸ்புட்னிக் தருணம்" என விவரித்தார் . அந்த காலகட்டத்தில், அமெரிக்கா எதிராளியின் தொழில்நுட்ப சாதனை குறித்து அறியாமல் இருந்ததாக கருதப்பட்டது. டீப்சீக் செயலிக்கு மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்பு பங்குச் சந்தைகளை திடுக்கிடச் செய்துள்ளது. சிப் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நெதர்லாந்தை சேர்ந்த ஏஎஸ்எம்எல் நிறுவனத்தின் பங்குகள் 10%-க்கு மேல் சரிவடைந்தன. ஏ.ஐ தொடர்பான பொருட்களை தயாரிக்கும் சீமென்ஸ் எனர்ஜி நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 21% குறைந்தது. "ஒரு குறைந்தவிலை சீனத் தயாரிப்பு என்ற எதிர்பார்ப்பு இல்லாததால், இது சந்தைகளை சற்றே ஆச்சரியமடைய வைத்துள்ளது," என்றார் சிட்டி இண்டெக்ஸில் மூத்த சந்தை ஆய்வாளரான ஃபியோனா சின்கோட்டா. "திடீரென இந்த குறைந்த விலை ஏ.ஐ மாடல் கிடைத்ததால், விலை உயர்ந்த ஏ.ஐ கட்டமைப்புகளில் முதலீடு செய்துள்ள அதன் போட்டி நிறுவனங்களின் லாபம் குறித்த கேள்விகளை எழுப்பப் போகிறது." இது "ஏ.ஐ தொழில்நுட்ப விநியோக சங்கிலியில் செய்யப்படும் முதலீடுகளை தடம்புரள செய்யக்கூடும்" என சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில்நுட்ப பங்குகள் ஆலோசகர் வே-செர்ன் லிங் பிபிசியிடம் தெரிவித்தார். ஓபன்ஏஐ போன்ற அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு டீப்சீக் சவாலாக இருந்தாலும், சீன நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் அவற்றின் வளர்ச்சியை தடுக்கக் கூடும் என பெருவங்கியான சிட்டி பேங்க் எச்சரித்துள்ளது. "தவிர்க்க முடியாத கூடுதல் கட்டுப்பாடுகள் நிறைந்த சூழலில், உயரிய தொழில்நுட்பம் கொண்ட சிப்கள் அதிக அளவில் கிடைப்பது அமெரிக்காவிற்கு ஒரு சாதகம், என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். டெக்ஸாஸில் செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பிற்காக 500 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் ஸ்டார்கேட் புராஜெக்ட் என்ற நிறுவனத்தை தொடங்குவதாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்ட கூட்டமைப்பு கடந்த வாரம் அறிவித்தது. கே.எம்.செரியன்: இஸ்லாமிய பெண்ணுக்கு இந்துவின் இதயத்தை பொருத்திய கிறிஸ்தவர்28 ஜனவரி 2025 மஹிந்த ராஜபக்ஸ பாதுகாப்பு குறைப்பு, அவரது மகன் கைது - இலங்கையில் என்ன நடக்கிறது? முழு விவரம்27 ஜனவரி 2025 பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இத்தனை மலிவான விலையில் ஏ.ஐ மாடல் கிடைத்ததால், ஏ.ஐ கட்டமைப்புகளுக்காக பல கோடி முதலீடு செய்யும் போட்டி நிறுவனங்களின் லாபம் கேள்விக்குறியாகிறது. டீப்சீக்கை உருவாக்கியது யார்? இந்த நிறுவனம் தென்கிழக்கு சீனாவின் ஹேங்ஜூ நகரில் லியாங் வென்ஃபெங் என்பவரால் 2023-ல் தொடங்கப்பட்டது. 40 வயதான இவர், தகவல் மற்றும் மின்னணு பொறியியல் பட்டதாரி என்பதுடன் டீப்சீக்கை ஆதரித்த 'ஹெட்ஜ்' நிதியை உருவாக்கியவரும் இவர்தான். இவர் தற்போது சீனாவுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது தடை விதிக்கப்பட்டுள்ள என்விடா ஏ100 சிப்களை வாங்கிச் சேர்த்திருப்பதாக கூறப்படுகிறது. இது சுமார் 50,000 சிப்கள் என கணிக்கப்படுகிறது. இந்த சேகரிக்கப்பட்ட சிப்புகளை, மலிவு விலையில் இறக்குமதி செய்யக்கூடிய சிப்புகளுடன் இணைத்து , டீப்சீக்கை இவர் உருவாக்கியிருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். அண்மையில் தொழில்துறை நிபுணர்களுடன் சீன பிரதமர் நடத்திய சந்திப்பில் லியாங்கும் காணப்பட்டார். 2024, ஜூலையில் சீன அகாடமிக்கு அளித்த பேட்டியில் தனது முந்தைய ஏஐ மாடலுக்கு கிடைத்த வரவேற்பை கண்டு ஆச்சரியமடைந்ததாக கூறினார். "கட்டணம் இவ்வளவு முக்கியமான விஷயமாக இருக்கும் என்று நாங்கள் கருதவில்லை," என அவர் தெரிவித்தார். "நாங்கள் எங்களுடைய வேகத்தில் செயல்பட்டு, செலவுகளை கணக்கிட்டு, அதன் அடிப்படையில் கட்டணங்களை நிர்ணயித்தோம்." என்றார் அவர். கூடுதல் தகவல்கள் - ஜோவா டா சில்வா மற்றும் டியர்பெய்ல் ஜோர்டன் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgp94py1r6o
  21. 28 JAN, 2025 | 09:59 AM அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டையும் அரசின் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதோடு அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதமாக்குமாறும் அதற்கான நாள் குறிக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றோம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அருட்தந்தை மா.சத்திவேல் இன்று செவ்வாய்க்கிழமை (28) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடாளுமன்றத் தேர்தலை பின்னர் இந்திய மற்றும் சீன பிரயாணங்களைத் தொடர்ந்து நாடு உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கையில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள அபிவிருத்திக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கிற்கு வருகை தருவது என்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பலப்படுத்தும் அரசியல் பயணமாக அமையாது தமிழர்கள் எதிர்நோக்கம் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார பிரச்சினைகளின் தீர்வுக்கு அடித்தளமிடும் விஜயமாக இருக்க வேண்டுமென வலியுறுத்துகின்றோம். விசேடமாக தமிழர் தாயகத்தில் மக்கள் முன் நின்று ஜனாதிபதி "அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்" என நம்பிக்கை அளித்ததை நாம் மறக்கவில்லை. ஆனால் அதனை மறுத்தலிக்கும் வகையில் அண்மையில் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார அவர்கள் அரசியல் கைதிகள் என்று சிறைகளில் எவருமில்லை என தெரிவித்திருக்கையில் இது விடயத்தில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டையும் அரசின் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதோடு அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதமாக்குமாறும் அதற்கான நாள் குறிக்குமாறும் கோரிக்கை விடுப்பதோடு அதற்கான துரித நடவடிக்கையை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம். அத்தோடு சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சியும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நாம் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை எனக் கூறியிருக்கும் சந்தர்ப்பத்தில் அதனை உரிய வகையில் பயன்படுத்தி அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்யுமாறு கேட்கின்றோம். மேலும் முன்னாள் போராளிகள் மற்றும் நீண்ட நாள் சிறை கொடுமையின் பின்னர் நீதிமன்றத்தினால் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகள் மீளவும் விசாரணை என அச்சுறுத்துவதும், கைது செய்யப்படுவதும் தடுத்து வைப்பதையும் நிறுத்துவதோடு அவ்வாறு விசாரணை அழைத்து செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுதலை செய்யுமாறும் கேட்கின்றோம். அது மட்டுமல்ல தேசிய மக்கள் சக்தியும் நீங்களும் தெற்கின் மேடைகளில் அடிக்கடி பாராயணம் செய்யும் லஞ்சம், ஊழல், அரசியல்வாதிகளின் மோசடி என்பவற்றை மீண்டும் வடக்கு அபிவிருத்தி குழு கூட்டத்தில் பேசி மக்களை பொது மயக்க நிலைக்கு தள்ளாது வடக்கு கிழக்கு தமிழர்களின் தேசியத்திற்கு தடையாக இருக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அரச பயங்கரவாத செயற்பாடுகளை கிளீன் செய்வதற்கான உத்தரவாதத்தை வெளிப்படுத்துவதும் வடக்கின் அபிவிருத்திக்கு துணையாக அமையும் எனவும் கூறுகின்றோம். அபிவிருத்தி என்பது பாதைகள் அமைத்தல் கட்டிடங்களை நிர்மாணித்தல் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் பல புதிய சமூக நலத் திட்டங்களை முன்வைப்பதாக கூறுவது மட்டுமல்ல உண்மையான அபிவிருத்தி மக்கள் மனதில் அரசியல் நம்பிக்கை பலப்படுத்தி தமிழர்களின் தேசியத்தின் தூண்களை காப்பதிலும் தங்கி இருக்கின்றது என்பதே எமது நம்பிக்கை. ஆனால் இந்த தூண்களை திட்டமிட்டு வகையில் பெரும் தேசியவாதம் அழித்துக் கொண்டு வெளிநாட்டு முதலீடுகள் மூலம் எமது தாயகத்தில் துறைமுகங்களின், விமான நிலையங்களின் அபிவிருத்தி என அயலக அரசியல் சக்திகளின் அதிகாரத்திற்கு இடமளித்து எமது அரசியல் அபிலாசைகளை மண்தோண்டி புதைப்பதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது அபிவிருத்தி என மகிழவும் இயலாது. முன்னாள் ஜனாதிபதிகளை போன்று தேசிய மக்கள் சக்தியாகிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமாகிய அனுர குமார திசாநாயக்கவும் இந்திய மற்றும் சீன விஜயங்களில் பல்வேறு உடன்படிக்கைகளை செய்ததற்குப் பின்னால் அரசியலே உள்ளது எவரும் அறிவர். தமிழர் தாயகத்திலும் அபிவிருத்தி என தாயகத்தை அரசியலை அழிப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆ னால் தொடர்ந்து அதுவே நடக்கிறது. இவ்வாறு அழிப்பதற்கு இடம் கொடுப்பது முழு நாட்டின் அரசியலையும் இறைமையையும் அழித்துவிடும் என்பதையும் இச்சந்தர்பத்தில் நினைவுறுத்த விரும்புகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/205095
  22. யோஷிதவிற்கு பிணை வழங்குவதனால் அவர் குற்றமற்றவர் என்று அர்த்தமில்லை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ச, குற்றப் பிரேரணையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது ஒரு மாத காலத்துக்குள் பணச் சலவை குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்படும் எனவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். யோஷிதவிற்கு பிணை வழங்குவதனால் அவர் குற்றமற்றவர் என்று அர்த்தமில்லை எனவும் பிணைமுறி சட்டத்தின் விதிகளின் பிரகாரம் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கங்களைப் போன்று அரசாங்கம் செயற்படுவதாகவும், யோஷித விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் தொடர்பில் சந்தேகம் எழுப்பப்படுவதாகவும் சிலர் நம்ப வைக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “இந்த சந்தேகங்கள் அனைத்தும் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவுடன் இன்னும் ஒரு மாதத்தில் நிவர்த்தி செய்யப்படும்,” என்றார். இந்த சம்பவம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகவும், எனினும் அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கில் சந்தேக நபராக அவர் பெயரிடப்படவில்லை என்றும் அவர் கூறினார். மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன் சந்தேக நபரிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்வது அவசியம் என அவர் மேலும் கூறினார். https://thinakkural.lk/article/314951
  23. ஹாட்ரிக் வெற்றியுடன் டி20 தொடரை வெல்லும் முனைப்பில் உள்ள இந்திய அணிக்கு புதிய 'சிக்கல்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் மற்றும் இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ராஜ்கோட்டில் இன்று நடக்கும் 3வது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றும் முயற்சியில் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றபின் சூர்யகுமார் தலைமையிலான டி20 அணி இதுவரை எந்த டி20 தொடரையும் இழக்காமல் இருந்து வருகிறது. அந்த நற்பெயரை தக்க வைக்கும் முயற்சியில் விளையாடும் என நம்பலாம். டி20 உலகக்கோப்பைத் தொடருக்குப்பின் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது அதில் 15 ஆட்டங்களில் வென்று 2 ஆட்டங்களில் மட்டும் தோல்வி அடைந்துள்ளது. இந்த 17 போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது ஷமி இ்ல்லாமல்தான் இந்த வெற்றிகளைப் பெற்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2 வெற்றிகளைப் பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வென்றால், 3-0 என தொடரைக் கைப்பற்றும். கபடியால் மாறிய வாழ்க்கை - ஒரு கிராமத்துப் பெண்களின் நெகிழ்ச்சி கதை ஸ்மிருதி மந்தனா: 16 வயதில் சர்வதேச அரங்கில் அறிமுகம், பெண்கள் கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன் - யார் இவர்? துளசிமதி முருகேசன்: அவமானங்களை கடந்து தந்தை உதவியுடன் சாதித்த தமிழக வீராங்கனையின் வெற்றிக் கதை கோலி, ரோஹித் பேட்டிங்கில் என்ன பிரச்னை? ரஞ்சி போட்டியில் ஆடுவது மட்டுமே தீர்வாகுமா? ரஞ்சி கோப்பை : 42 முறை வென்ற மும்பை அணி ஜம்மு காஷ்மீரிடம் தோல்வி, போட்டியில் நடந்தது என்ன? சராசரி 389, அடுத்தடுத்து 5 சதம் கண்ட கருண் நாயருக்கு இந்திய அணியில் இடம் தரப்படாதது ஏன்? ஸ்கை மீண்டும் சதம் அடிப்பாரா? இந்திய அணியைப் பொறுத்தவரை கடந்த இரு போட்டிகளிலும் திலக் வர்மா, அபிஷேக் சர்மா இருவரின் ஆட்டம்தான் அணிக்கு வெற்றி தேடித்தந்தது. சாம்ஸன், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல் என யாரும் தங்களின் பங்களிப்பை முழுமையாக வழங்கவில்லை. அதிலும் கேப்டன் சூர்யகுமார் கடந்த 5 இன்னிங்ஸ்களிலும் 20 ரன்களைக் கூட தாண்டவில்லை. அவர் ஃபார்மின்றி தவிக்கிறாரா அல்லது கேப்டன் பதவிக்கான சுமையால் திணறுகிறாரா என்று தெரியவில்லை. இதே ராஜ்கோட் மைதானத்தில்தான் கடந்த 2023-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக சூர்யகுமார் சதம் விளாசினார். அதே நினைவுகளுடன் இந்த ஆட்டத்திலும் விளையாடி அவர் பெரிய ஸ்கோரை எட்டினால் இந்திய அணிக்கு வெற்றி நிச்சயம். 2வது ஆட்டத்தில் வெற்றிக்காக போராடிய இந்திய அணியை திலக்வர்மாவின் அற்புதமான பேட்டிங் காப்பாற்றியது. தொடக்க வீரர்களும் நடுவரிசை வீரர்களும் கடந்த இரு போட்டிகளிலும் பெரிதாக பங்களிப்பு செய்யவில்லை. சூர்யகுமார், சாம்ஸன், ஹர்திக் பாண்டியா, அபிஷேக் ஓரளவுக்கு சிறப்பாக ஸ்கோர் செய்தால் அடுத்து களமிறங்குவோருக்கு சுமை குறையும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இரண்டாவது ஆட்டத்தில் வெற்றிக்காக போராடிய இந்திய அணியை திலக்வர்மாவின் அற்புதமான பேட்டிங் காப்பாற்றியது. ஷிவம் துபேவுக்கு வாய்ப்பு இந்திய அணியில் நிதிஷ்குமார் ரெட்டி காயம் காரணமாக விலகியதால் அவருக்குப் பதிலாக ஷிவம் துபே சேர்க்கப்பட்டுள்ளார். சென்னையில் நடந்த ஆட்டத்தில் துருவ் ஜூரெல் சிறப்பாக ஆடாததால் இன்றைய ஆட்டத்தில் ஷிவம் துபேவுக்கு வாய்ப்புக் கிடைக்கலாம். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இந்த மைதானத்தில் பெரிதாக வேலையிருக்காது என்பதால் அர்ஷ்தீப், ஹர்திக் பாண்டியா இருவருடன் மட்டும்தான் இந்திய அணி களமிறங்கும். அதேசமயம், அக்ஸர் படேல், ரவி பிஸ்னாய், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவரத்தி ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்களுக்கு இடம் உறுதியாகும். ஷிவம் துபே இடம் பெற்றால், 7-வது பந்துவீச்சாளராக இருப்பார். அபிஷேக் சர்மா பந்துவீசினாலும் வியப்பில்லை. டிரம்ப் மிரட்டல்: அமெரிக்காவுடன் மோத துணிந்த சில மணி நேரத்தில் பின்வாங்கிய கொலம்பியா4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை : நாயை தூக்கிலிட்டு கொன்றதாக பெண் கைது - நடந்தது என்ன?27 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஷிவம் துபே இடம் பெற்றால், 7-வது பந்துவீச்சாளராக இருப்பார். இந்திய அணிக்கு புதிய 'சிக்கல்' சூர்யகுமார் தலைமையில் விளையாடி வரும் அணியில் ஒவ்வொரு வீரர்களும் தங்களுக்குரிய இடத்தை வலிமையாக பிடித்துவிட்ட நிலையில் அபிஷேக் சர்மா, ஜெய்ஸ்வால், சாம்ஸன் ஆகிய மூவரிடையே தொடக்க வரிசைக்கு கடும் போட்டி நிலவுகிறது. ரோஹித் சர்மா, ஜடேஜா, கோலி டி20 போட்டியிலிருந்து ஓய்வு அறிவித்த நிலையில் இவர்களின் இடத்தை நிரப்ப வீரர்களைத் தேர்வு செய்வதுதான் பயிற்சியாளர் கம்பீர் முன்னுள்ள மிகப்பெரிய பணியாக இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு வீரரும் ஏதாவது ஒரு ஆட்டத்தில் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக, காரணமாக அமைந்துவிடும் நிலையில் யாரை பெஞ்சில் அமர வைப்பது, ப்ளெயிங் லெவனில் இடம் அளிப்பது என முடிவு செய்வது கடினமான பணியாக மாறிவிட்டது. நாஜி அவுஷ்விட்ஸ் வதை முகாம்: 'சோவியத் படை எங்களை விடுவித்தபோது வாழ்த்தவில்லை, புன்னகைக்கவில்லை'ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வடக்கு காஸாவுக்கு மீண்டும் திரும்பும் பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் - காத்திருக்கும் அதிர்ச்சிகரமான நிலை27 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அபிஷேக் சர்மா, ஜெய்ஸ்வால், சாம்ஸன் ஆகிய மூவரிடையே தொடக்க வரிசைக்கு கடும் போட்டி நிலவுகிறது. இங்கிலாந்து அணியின் செயல்பாடு எப்படி? இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை 2019-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, 2022 டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின், அந்த அணியால் வெள்ளைப் பந்தில் நடக்கும் ஆட்டங்களில் பெரிதாக வெற்றியை குவிக்க முடியவில்லை. ஜோஸ் பட்லர் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, 2023 உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை ஆகிய தொடர்களில் இங்கிலாந்து அணி மோசமாகவே செயல்பட்டது. டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக வந்த பிரண்டென் மெக்கலம் ஒருநாள், டி20க்கும் சேர்த்து பணியைக் கவனித்த போதிலும் இவரின் பேஸ்பால் பாணி ஆட்ட முறை பெரிதாக கைகொடுக்கவில்லை. டி20 உலகக் கோப்பை, ஒருநாள் போட்டி உலகக் கோப்பையும் மோசமாக அமைந்தது. இந்திய அணிக்கு எதிராக இந்த டி20 தொடரும் கடும் சவாலாக மாறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வருண் வீசும் கூக்ளி பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் ஹேரி ப்ரூக், லிவிங்ஸ்டன் இருவரும் திணறுகின்றனர். இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பின் வந்துள்ள ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சும் பெரிதாக பலன் அளிக்கவில்லை. மார்க் உட் பந்துவீச்சில் வேகம் இருக்கிறதே தவிர, பேட்டர்களை திணறடிக்கும் வகையில் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்வதில்லை (சரியான லைன் அன்ட் லென்த் இல்லை). ஆல்ரவுண்டர்களையும், ஸ்பெசலிஸ்ட் பேட்டர்களையும் வைத்திருந்தாலும் இரு ஆட்டங்களிலும் அந்த அணி பெரிதாக ரன் குவிக்கவில்லை. இந்தியாவின் சுழற்பந்துவீச்சுப் படையைப் பார்த்து இங்கிலாந்து பேட்டர்கள் எப்படி ஆடுவது எனத் தெரியாமல் விக்கெட்டை இழக்கிறார்கள். அதிலும் வருண் வீசும் கூக்ளி பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் ஹேரி ப்ரூக், லிவிங்ஸ்டன் இருவரும் திணறுகின்றனர். இங்கிலாந்து அணிக்கு இந்திய வீரர்களின் சுழற்பந்துவீச்சை சமாளிப்பது பெரிய தலைவலியாக இருக்கும். கொரோனா 'சீன ஆய்வகத்திலிருந்து' பரவியதற்கான வாய்ப்புகள் அதிகம் - அமெரிக்க உளவு முகமையான சிஐஏ கூறுவது என்ன?26 ஜனவரி 2025 தினமும் தொழ மாட்டார்கள், ரமலான் நோன்பு இருக்க மாட்டார்கள் - இஸ்லாம் மதத்தில் இப்படி ஒரு குழு இருப்பது தெரியுமா?26 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணிக்கு இந்திய வீரர்களின் சுழற்பந்துவீச்சை சமாளிப்பது பெரிய தலைவலியாக இருக்கும். மைதானம் யாருக்கு சாதகம்? ராஜ்கோட் நிரஞ்சன் மைதானம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரி. தட்டையான பிட்சை கொண்டுள்ள இந்த ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்விங் செய்ய படாதபாடு படவேண்டும். சரியான லைன் லெத்தில் (Line Length?) மட்டுமே பந்தை பிட்ச் செய்ய முயல வேண்டும், இல்லாவிட்டால் பந்தை பவுண்டரி லைனுக்கு வெளியேதான் பார்க்க முடியும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஓரளவு ஒத்துழைக்கும், ஆனால் பந்து நன்றாக திரும்பும் எனக் கூற முடியாது. ஒட்டுமொத்தத்தில் பேட்டர்களுக்கு விருந்தாக இந்த ஆடுகளம் இருக்கும். இந்த ஆடுகளத்தில் குறைந்தபட்ச ஸ்கோரே 189 ரன்கள்தான். அதிகபட்சமாக 228 ரன் சேர்க்கப்பட்டுள்ளது. ஆதலால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து பெரிய ஸ்கோரை எட்டுவது பாதுகாப்பானது. இரவு நேர பனிப்பொழிவுதான் ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும். இந்த மைதானத்தில்இந்திய அணி இதுவரை 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 4 போட்டிகளில் வென்று, ஒரு ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளது. இந்த 5 ஆட்டங்களிலும் 3 போட்டிகள் முதலில் பேட் செய்த அணிகள் வென்றுள்ளன, 2 ஆட்டங்களில் சேஸிங் செய்த அணிகள் வென்றுள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj027ndd407o
  24. கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம் Published By: DIGITAL DESK 3 28 JAN, 2025 | 09:53 AM நாட்டில் நேற்றைய தினம் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு மிதமான அளவிலும், கொழும்பு 07, யாழ்ப்பாணம், காலி, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையிலும் காணப்பட்டது. இன்றும் மேற்கூறிய பகுதிகளில் 58 மற்றும் 120 க்கு இடையில் காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமற்ற மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்து காணப்படும் என கணிக்கப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் குறைவதால், உடல்நலக் பிரச்சினைகள் உள்ள நபர்கள் குறிப்பாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்துடன், பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் 1 மணி முதல் 2 மணி மணி வரை காற்றுத் தரக் குறியீடு (AQI) ஆரோக்கியமற்று காணப்படும். நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான நகரங்களில் காற்றுத் தரக் குறியீடு அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஒரு நல்ல நிலைக்கு மேம்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/205092
  25. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று (27) முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அவசர கலந்துரையாடலின் பின்னர் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் முழு வடிவம் வருமாறு, அண்மையில் இடம்பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவை கூட்டத்தின் பின்னர் பல்கலைக்கழகத்தின் கலை பீடாதிபதி தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவினை அடுத்துப் பல்கலைக்கழகம் பற்றி பல கருத்துக்கள் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் நிலைமை குறித்து கலந்துரையாடும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் விசேட பொதுக்குழு கூட்டம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கலைப்பீடத்தில் இடம்பெற்றது. மீறல்களிலும், வன்முறைகளிலும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தினை பாதிக்கும் வகையிலும், உடைமைச் சேதங்களை விளைவிப்பதிலும் சீரழிவு மிக்க நடவடிக்கைகளிலும் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் கடந்த காலத்திலே உறுதியான நடவடிக்கைகளை எடுக்க தவறியமை குறித்து இந்தக் கூட்டத்தில் பல உறுப்பினர்களும் தமது கருத்துக்களை வெளியிட்டனர். திட்டமிட்ட முறையில் விசாரணைகளில் தாமதங்கள் ஏற்படுத்தப்பட்டு மாணவர்கள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தண்டனைகளில் இருந்து தப்பித்துச் செல்ல நிர்வாகம் வழிசமைத்துக் கொடுப்பதாகக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. தண்டனையின் நோக்கம் மாணவர்களை விரோதிப்பது அல்ல; மாறாக தாம் செய்யும் தவறுகளை மாணவர்கள் உணர்ந்து எதிர்காலத்திலே செம்மையாகச் செயல்படும் வகையில் ஊக்குவிப்பதே என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இன்று திங்கட்கிழமை அன்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஓர் அடையாள வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடுவது எனவும், நாளை செவ்வாய்க்கிழமை முதல் தொடர் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடுவதும் எனவும் முடிவெடுக்கப்பட்டது. கோரிக்கைகள்: 1. மோசமான செயல்களில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ராஜினாமா செய்த கலைப் பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் அவர்கள் முன்வைத்த கோரிக்கை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். பேராசிரியர் ரகுராம் தனது பதவி விலகலை வாபஸ் பெற்று மீளவும் பீடாதிபதி பொறுப்பை ஏற்பதற்கு உரிய ஒரு சூழலை பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக்கழகத்திலே ஏற்படுத்த வேண்டும். 2. மாணவர்களுக்கு எதிரான‌ ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற பேரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும். 3. மோசமான செயல்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் உறுதியாக இருக்கும் போதிலும், அவற்றைப் பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் வேண்டுமென்றே கால தாமதங்கள் ஏற்படுத்தல், வேண்டுமென்றே நிருவாகத் தவறுகளை இழைத்தல் போன்ற செயன்முறைகள் மூலம் மீறல்களில் ஈடுபட்ட மாணவர்கள் தண்டனையில் இருந்து தப்புவதற்கு நிர்வாகம் வழிசமைத்துக் கொடுக்கும் போக்கு உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்படல் வேண்டும். 4. இரண்டு மாணவர்கள் கணித புள்ளிவிபரவியல் துறையின் வாயிலில் இருந்த பூட்டினை உடைத்தமை தொடர்பிலே இடம்பெற்ற விசாரணையினை வேண்டுமென்றே தாமதமடையச் செய்த பல்கலைக்கழக நிருவாகிகளுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும். அதே போன்று கலைப் பீடத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை வேண்டுமென்றே இழுத்தடிப்போர் மீதும் விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இது தொடர்பிலே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலையீட்டினையும் கோருவதற்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது. 5. கலைப்பீடத்திலும் விஞ்ஞானப் பீடத்திலும் மோசமான செயல்களிலே ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதில் இருந்து தவறிய பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களின் மீது எமது ஆசிரியர் சங்கம் நம்பிக்கையினை இழந்துள்ளது. எனவே எல்லா வெளிவாரி உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும். புதிய உறுப்பினர்கள் பேரவைக்கு நியமிக்கப்பட வேண்டும். இது தொடர்பான சங்கத்தின் விண்ணப்பம் ஒன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், உயர் கல்வி அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்படும். மேற்கூறிய ஐந்து கோரிக்கைகளையும் உள்ளடக்கிய கடிதம் ஒன்று பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கும், எல்லாப் பீடாதிபதிகளுக்கும் ஆசிரியர் சங்கத்தினால், இன்றைய கூட்டத்திலே மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் ஒன்றுக்கு அமைய‌ அனுப்பிவைக்கப்பட்டது – என்றுள்ளது. https://thinakkural.lk/article/314949

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.