Everything posted by ஏராளன்
-
அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய நாடுகடத்தல் – 500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கைது.
அகதிகளை திருப்பி அனுப்பிய அமெரிக்கா; அனுமதி மறுத்த மெக்சிகோ அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப், தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறார். பல்வேறு திட்டங்களை ரத்து செய்தும், புதிய பணிகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். அதில், அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையும் ஒன்று. அதாவது, அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்கும் வகையில் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி உள்ளார். மெக்சிகோ எல்லை வழியாக ஆயிரக்கணக்கான அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடுக்க எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார் விரைவில் இங்கு, தடுப்புச் சுவர் அமைக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், சட்டவிரோதமாக அங்கு குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கான ராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், 80 அகதிகள் அமெரிக்காவின் ராணுவ விமானம் மூலம் மெக்சிகோவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால் அகதிகளை அழைத்து வந்த விமானம் தரையிறங்க மெக்சிகோ அரசு அனுமதி மறுத்தது. இதனால் அவர்கள் கவுதமாலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அகதிகள் விவகாரத்தில் மெக்சிகோ- அமெரிக்கா இடையே ஏற்கனவே மோதல் நிலவி வரும் சூழலில், இது கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. https://thinakkural.lk/article/314898 கைவிலங்கிடப்பட்டு போர்விமானங்களில் ஏற்றப்படும் குடியேற்றவாசிகள் Published By: RAJEEBAN 27 JAN, 2025 | 10:26 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நாடு கடத்தும் உத்தரவை தொடர்ந்து கைகளில் விலங்கிடப்பட்டவர்கள் அமெரிக்காவின் இராணுவ விமானங்களில் ஏற்றப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் டெலிகிராவ் தெரிவித்துள்ளதாவது பெருமளவில் குடியேற்றவாசிகளை வெளியேற்றும் டிரம்பின் நடவடிக்கை முழுமூச்சில் இடம்பெறுகின்றது, குடியேற்றவாசிகள் தங்கள் நாடுகளிற்கு அனுப்பப்படுவதற்காக கைவிலங்கிடப்பட்ட நிலையில் விமானங்களில் ஏற்றப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. நாடுகடத்தும் விமானங்கள் பயணத்தை ஆரம்பித்துள்ளன என டிரம்பின் ஊடக அதிகாரி கரோலின் லியவிட் தெரிவித்துள்ளார். கணுக்கால் மற்றும் மணிக்கட்டுகளில் விலங்கிடப்பட்ட நபர்கள் விமானங்களை நோக்கி செல்வதை காண்பிக்கும் படங்களை அவர் வெளியிட்டுள்ளார். நூற்றுக்கணக்கான சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் வரலாற்றில் மிகப்பெரிய நாடுகடத்தல் இது என குறிப்பிட்டுள்ளார். நாடுகடத்தப்பட்டவர்களில் பயங்கரவாத சந்தேநபர்கள் என கருதப்படும் நால்வரும்,வெனிசுவேலாவை சேர்ந்த குற்றக்கும்பல் ஒன்றை சேர்ந்தவர்களும் சிறுவர்களிற்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட பலரும் உள்ளதாக டிரம்பின் அதிகாரி தெரிவித்துள்ளார். வெனிசுவேலாவின் டிரென் டி அராகுவா வன்முறைக்கும்பல் குறித்து அமெரி;க்க ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கடும் வாதபிரதிவாதங்கள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் கொலராடோவில் உள்ள நகரமொன்றை போர்க்களமாக மாற்றியுள்ளனர் என டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். சுமார் 169 குடியேற்றவாசிகளுடன் இரண்டு அமெரிக்க விமானங்கள்புறப்பட்டுள்ளன,அமெரிக்க வரலாற்றில் சமீப காலத்தில் நாடு கடத்தப்படும் குடியேற்றவாசிகளுடன் அமெரிக்க விமானங்கள் புறப்பட்டமை இதுவே முதல்தடவை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/204992
-
மகிந்தவிற்கு வசிப்பதற்கு வீடில்லை என்றால் வீடொன்றை வழங்க அரசாங்கம் தயார்- ஜனாதிபதி
27 JAN, 2025 | 10:05 AM முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச வசிப்பதற்கு வீடு இல்லை என்றால் அவருக்கு வீடொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தயார் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். தம்புத்தேகமவில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள ஜனாதிபதி நானும் அமைச்சர்களும் மாளிகைகளில் வசிக்க ஆரம்பிக்கவில்லை முன்னாள் ஜனாதிபதியால் ஏன் அதனை செய்ய முடியாது என கேள்வி எழுப்பியுள்ளார். பொதுமக்களின் வரிப்பணத்தில் மாளிகைகளில் வசிப்பது நியாயமான விடயம் இல்லை, நாங்கள் எவரையும் பழிவாங்கவில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி நாங்கள் நாட்டை புதியதிசையில் இட்டுச்செல்கின்றோம், வெளியேறுங்கள் என நாங்கள் வேண்டுகோள் விடுப்பதற்கு முன்னர் அவர்கள் வெளியேறவேண்டும் என தெரிவித்துள்ளார். மாறுங்கள் என நாங்கள் அவர்களை கேட்டுகின்றோம் மக்களின் வரிப்பணத்தை செலவிடுவதற்கு முன்னர் இரண்டுதடவை யோசிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/204988
-
அமெரிக்காவில் தீவிர பனிப்புயல்: 13 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயலால் 10 பேர் பலி: 2,100 விமானங்கள் ரத்து அமெரிக்கா முழுவதும் அரிய வகை பனிப்புயல் வீசியதன் காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 2,100 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் சில நாட்களாக பனிப்புயல் தாக்கம் ஏற்படுத்தி வருகிறது. இதனால் டெக்சாஸ் லூசியானா, மிசிசிபி, அலபாமா, ஜார்ஜியா, தென் கரோலினா மற்றும் புளோரிடா மாகாணங்களின் பல பகுதிகளில் 10 அங்குலம் அளவிலான பனிப்பொழிவு காணப்படுகிறது. அந்நாட்டில் 62 ஆண்டுகளில் இல்லாத வகையில், பனிப்புயல் பாதிப்பால் 2,100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அடர்பனியால் டெக்சாஸ் மற்றும் ஜார்ஜியா, மிசிசிபி மற்றும் மில்வாகீ பகுதிகளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கடுமையான பனிப்பொழிவால் சாலை மற்றும் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் உள்ள பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பல விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பள்ளிகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. பனிப்பொழிவு அதிகம் உள்ளதால் ஜார்ஜியா, மிசிசிபி மற்றும் புளோரிடா மாகாண ஆளுநர்கள் அவசர நிலையை அறிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/314830
-
ஈராக்கில் பெண்களின் திருமண வயதெல்லையை 9 ஆகக் குறைக்கத் தீர்மானம்!
பெண்களின் திருமண வயது 9; ஈராக் அரசின் முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைத்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்காசிய நாடான ஈராக் நாடாளுமன்றத்தில், ஷியா முஸ்லிம் பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிக்கின்றனர். இந்நாட்டில் முகமது ஷியா அல் சுடானி பிரதமராக உள்ளார். இந்த நாட்டில், பெண்களுக்கான திருமண வயது வரம்பு, 18 ஆக உள்ளது. கடந்த 1950- ம் ஆண்டு குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டாலும், 28 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து கொள்வதாக, 2023 ஐ.நா ஆய்வறிக்கை தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஈராக்கில் பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 9 ஆக குறைக்க சட்ட திருத்தம் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டு மசோதா தாக்கதாக்கல் செய்யப்பட்டது. ஈராக் அரசின் இந்த முடிவுக்கு பெண்கள், மனித உரிமை குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து பெண்களின் திருமண வயதில் திருத்தங்கள் செய்துள்ள இந்த மசோதாவை சட்டமாக இயற்றும் முயற்சிகளில் ஈராக் அரசு ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், ஈராக்கில் பெண்களின் திருமண வயது 18 ஆக இருந்த நிலையில், அந்நாட்டில் பெரும்பான்மையாக வசிக்கும் ஷியா முஸ்லிம் பெண்களின் திருமண வயது 9 ஆகவும், சன்னி முஸ்லிம் பெண்களின் திருமண வயது 15 ஆகவும் குறைத்து சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், திருமணம், விவாகரத்து உள்ளிட்ட குடும்ப விவகாரங்கள் குறித்து முடிவெடுத்துக் கொள்ள இஸ்லாமிய நீதிமன்றங்களுக்கு அதிக அதிகாரத்தை வழங்கும் வகையில் திருத்தங்களை கொண்டு வந்துள்ளனர். நீதியை மேம்படுத்துவதற்கும், மக்களின் அன்றாட வாழ்க்கையை ஒழுங்குப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நடவடிக்கைதான் இந்த சட்டம் என்று ஈராக் நாடாளுமன்றத் தலைவர் தெரிவித்துள்ளார். பல நாடுகளில் பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து மேலும் அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஈராக்கில் குழந்தை திருமணச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. https://thinakkural.lk/article/314827
-
அரசாங்கத்துக்கு முடியாமல் போகும் போது ரணில் நாட்டை பொறுப்பேற்பார் - வஜிர அபேவர்த்தன
26 JAN, 2025 | 07:13 PM (எம்.ஆர்.எம்.வசீம்) அரசங்கத்துக்கு முடியாமல் போனால் ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று எப்படியாவது மீட்டித்தருவார். அதற்கான இயலுமை அவரிடம் இருக்கிறது. என்றாலும் நாட்டின் தற்போதைய நிலைமைக்கு நாங்கள் காரணம் அல்ல. ரணில் விக்ரமசிங்க நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும்போது நாட்டு மக்களே அவரை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பினார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். காலியில் ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் காலி தொகுதி அரசியல் சபை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் 76 வருட சாபத்தை தெரிவித்தே ஆட்சிக்கு வந்தது. ஆனால் இந்த சாபம் இருந்த 76 வருடங்களும் தேங்காய் 100 ரூபாவாகும். ஆனால் தற்போது தேங்காய் விலை எத்தனை என கேட்கிறேன். சில இடங்களில் 250 ரூபாவுக்கே தேங்காய் விற்பனையாகிறது. எதிர்வரும் காலங்களில் 300 ரூபாவுக்கு செல்லும் நிலையே இருக்கிறது. அப்படியானால் இன்றைய நிலையை விட சாபம் இருந்த காலம் நல்லது. கடந்த இரண்டு வருடங்களில் நாட்டில் குரங்குகளும் இருந்தன. ரணிலும் இருந்தார். தேங்காயும் இருந்தது. அதே போன்று பிரதான அரிசி ஆலை உரிமையாளர்கள் 5 பேரும் இருந்தனர். ரணிலும் இருந்தார். நாட்டில் அரிசியும் இருந்தது. அதனால் மக்கள் இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான் அனுபவம் என்பது மிகவும் முக்கியமானது என ரணில் விக்ரமசிங்க அடிக்கடி தெரிவித்து வந்தார். அனுபவம் இல்லாதவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டாம் என தெரிவித்திருந்தார். என்றாலும் மக்கள் அதனை கேட்கவில்லை. தற்போது இந்த அநியாயங்களை நாட்டு மக்கள் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. பச்சை அரிசிக்கு தட்டுப்பாடு தொடர்ந்து இருந்து வருகிறது. தமிழ் சிங்கள புத்தாண்டாகும்போது இது இன்னும் பாரிய பிரச்சினையாக மாறும். அரிசி இருந்தாலும் கடைகாரர்கள் அதனை விற்பனை செய்ய கொண்டுவருவதில்லை. கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்தால், வியாபாரிகள் தண்டிக்கப்படுகின்றனர். கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலையில் வியாபாரிகள் இருந்து வருகின்றனர். சிங்கள புத்தாண்டு வரும்போது பச்சை அரிசி ஒரு கிலாே 400 ரூபா வரை செல்லும். அரசங்கத்துக்கு இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் பதில் இல்லாமல்போகும்போது 76 வருடங்கள் நாங்கள் ஆட்சி செய்ததன் சாபம் என எங்களை கூறிவருகிறது. அரசாங்கம் நாட்டை எந்த திசைக்கு கொண்டு செல்கிறது என உண்மையில் எங்களுக்கு புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது. அதனால் மக்கள் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும். அத்துடன் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆனதன் பின்னர் 25 தடவைகள் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கிறார்கள். அவர் நாட்டை பொறுப்பேற்ற பின்னர் வீட்டில் உட்கார்ந்து இருக்கவில்லை. சர்வதேச நாடுகளுக்கு சென்று நாட்டை கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவர் செய்த அர்ப்பணிப்பு காரணமாகவே வரிசைகளில் இருந்து மக்கள் வீடுகளுக்கு சென்றார்கள். அதனால்தான் வங்குரோத்து அடைந்திருந்த நாட்டை இந்த நிலைக்கு கொண்டுவர முடியுமாகி இருக்கிறது. அத்துடன் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் ஒரு நாள்கூட அலரி மாளிகையில் நித்தரை கொண்டதில்லை. அவர் கடமை முடிந்தவுடன் வீட்டுக்கு சென்றுவிடுவார்.அதேபோன்று ஜனாதிபதியாக இருந்த 2வருடங்களில் ஒரு நாள்கூட ஜனாதிபதி மாளிகையில் நித்திரை கொண்டதில்லை. அதனால் அரசாங்கத்துக்கு நாட்டை கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டால் நிச்சயமாக ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று கட்டியெப்புவார். என்றாலும் தற்போதைய நிலைக்கு நாங்கள் காரணமில்லை. ரணில் விக்ரமசிங்க நாட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்லும்போது நாட்டு மக்களே தேர்தலில் அவரை வீட்டுக்கு அனுப்பினார்கள் என்றார். https://www.virakesari.lk/article/204958
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
கிளிநொச்சி இரணைதீவுக்கு அன்மித்த கடற்பகுதியில் மூன்று படகுகளுடன் 33 இந்திய மீனவர்கள் கைது Published By: VISHNU 27 JAN, 2025 | 04:34 AM கிளிநொச்சி இரணைதீவுக்கு அன்மித்த கடற்பகுதியில் மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்ட 33 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறையில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இரணைதீவிற்கு அன்மித்த கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடியில் ஈடுபட்ட மூன்று இந்திய இழுவைப்படகுகளையும் அதிலிருந்த 33 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர் இவ்வாறு கைது செய்யப்பட்ட 33இந்திய மீனவர்களும் கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை ஒப்படைக்கப்பட்டதையடுத்து குறித்த 33 பேருக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் குறித்த 33 பேரையும் இரவு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற வாசல் தலத்தில் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ். சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர் படுத்தியதையடுத்து குறித்த 33 பேரையும் எதிர்வரும் 05திகதி வரை விளக்கமறையில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/204979
-
உறவுகளின் போராட்டம் நீர்த்து விடக்கூடாது
உறவுகளின் போராட்டம் நீத்து விடக்கூடாது என்பதற்காக போராட்டத்தை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்வோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்தனர். முல்லைத்தீவு மாவட்ட சங்கத்தின் நிர்வாக தெரிவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரின் புதிய நிர்வாகத்தெரிவு நேற்று இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி ம.ஈஸ்வரி பதவியில் இருந்து விலகியதன் காரணமாக இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரின் புதிய நிர்வாகத்தெரிவு முல்லைத்தீவு போராட்ட இடத்திற்கு அருகாமையில் இடம்பெற்றிருந்தது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி யோ.கனகனகரஞ்சினி , மன்னார் மாவட்ட தலைவி ம.உதயசந்திரா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சங்க உறுப்பினர்கள் மத்தியில் ஆரம்பமாகிய தெரிவு கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட தலைவியாக நி.வசந்தினி, செயலாளராக பொ.கரன், பொருளாளராக நாகேஸ்வரி, உப தலைவராக ப.வீரமணி, உப செயலாளராக றஞ்சினிதேவியும் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறித்த தெரிவு கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திரதினம் அன்று கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெற இருக்கின்றது. குறித்த போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும். அத்தோடு உறவுகளின் போராட்டம் நீத்து விடக்கூடாது என்பதற்காக உண்மைக்கும் நீதிக்குமான போராட்டத்தை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்வோம் என இதன் போது தெரிவித்திருந்தார்கள். https://thinakkural.lk/article/314896
-
யோஷித ராஜபக்ஷ கைது
யோஷித்த ராஜபக்ஷ பிணையில் விடுதலை 27 JAN, 2025 | 10:43 AM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித்த ராஜபக்ஷவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (27) உத்தரவிட்டுள்ளது. யோஷித்த ராஜபக்ஷ 50 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 34 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான காணி ஒன்றை வாங்கியமை தொடர்பாக யோஷித்த ராஜபக்ஷவை சந்தேக நபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து யோஷித்த ராஜபக்ஷ பெலியத்த பகுதியில் வைத்து கடந்த சனிக்கிழமை (25) குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/204995
-
இலங்கையின் சொத்துக்களை மீட்பதற்கு ஆதரவு வழங்க தயார்; சுவிட்சர்லாந்து தூதுவர் தெரிவிப்பு
இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் உதவி வழங்கும் என்று இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் தெரிவித்தார். இலங்கையின் சொத்துக்களை மீட்பதற்கு எடுக்க வேண்டிய சர்வதேச நடவடிக்கைகள் குறித்து சுவிட்சர்லாந்து தூதுவர் இதன்போது வழிகாட்டுதல் வழங்கினார். இதற்காக பூர்வாங்க வசதிகளை வழங்க தேவையாயின் எந்த நேரத்திலும் அதற்கு உதவி வழங்க அவர் உடன்பாடு தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போதே தூதுவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் ஊழல் எதிர்ப்பு திட்டத்திற்கு சுவிட்சர்லாந்தின் அனுபவத்தையும் தொழில்நுட்ப அறிவையும் வழங்குவது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. அரசாங்க முன்னுரிமை திட்டங்களுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் தொழில்நுட்ப மற்றும் ஏனைய தேவையான உதவிகள் மற்றும் “Clean Sri Lanka” திட்டத்திற்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. வடக்கு அபிவிருத்தி, தேசிய ஒற்றுமை மற்றும் ஏனைய சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கும் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் சுவிட்சர்லாந்து தூதுவர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரொஷான் கமகேவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார். https://thinakkural.lk/article/314882
-
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தார் ஜானிக் சினெர்
நடப்பு சம்பியன் சபாலென்காவை வீழ்த்தி முதலாவது க்ராண்ட் ஸ்லாம் பட்டத்தை சுவீகரித்தார் மெடிசன் கீஸ் Published By: VISHNU 26 JAN, 2025 | 08:49 PM (நெவில் அன்தனி) மெல்பர்னில் நடைபெற்ற இந்த வருடத்திற்கான முதலாவது க்ராண்ட் ஸ்லாம் போட்டியான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஐக்கிய அமெரிக்க வீராங்கனை மெடிசன் கீஸ் சம்பியனானார். அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் மகளிர் ஒற்றையருக்கான இறுதிப் போட்டியில் இரண்டு தடவைகள் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற நடப்பு சம்பியன் அரினா சபாலென்காவை முற்றிலும் எதிர்பாராதவிதமாக 2 - 1 செட்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு வருடத்தின் முதலாவது க்ராண்ட் ஸ்லாம் பட்டத்தை மெடிசன் கீஸ் வென்றெடுத்தார். மெடிசன் கீஸ் தனது தொழில்முறை டென்னிஸ் வாழ்க்கையில் வென்றெடுத்த முதலாவது கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டம் இதுவாகும். தொழில்முறை டென்னிஸ் விளையாட்டை ஆரம்பித்து 15 வருடங்களின் பின்னர் தனது 29ஆவது வயதில் மெடிசன் கீஸ் முதலாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தினால் ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் இந்த நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் நடுநிலையாளர்களாக பங்குபற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அமைய பெலாரசைச் சேர்ந்த நடப்பு சம்பியன் அரினா சபாலென்கா நடுநிலையாராகவே இம்முறை போட்டியிட்டார். சன்கிழமை (25) நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் மகளிருக்கான டென்னிஸ் தரவரிசையில் முதல் நிலை வீராங்கனையான அரினா சபாலென்காவை எதிர்த்தாடிய மெடிசன் கீஸ், முதல் செட்டில் அபார திறமையை வெளிப்படுத்தி சற்று இலகுவாக 6 - 3 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று முன்னிலை அடைந்தார். ஆனால். அடுத்த செட்டில் முதல்நிலை வீராங்கனை என்பதை நிரூபிக்கும் வகையில் அபார ஆற்றலுடன் விளையாடிய சபலென்கா 6 - 2 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று செட்கள் நிலையை 1 - 1 என சமப்படுத்தினார். இதனை அடுத்து போட்டியில் சூடுபிடிக்க ஆரம்பித்தது. மூன்றாவதும் தீர்மானம் மிக்கதுமான செட்டில் இரண்டு வீராங்கனைகளும் ஒருவரை ஒருவர் விஞ்சும் வகையில் வினையாடி புள்ளிகளை வென்றதால் யார் வெற்றிபெற்று சம்பியானாவார் என்று கூறமுடியாத அளவுக்கு போட்டியில் விறுவிறுப்பு ஏற்பட்டது. கடுமையாக மோதிக்கொள்ளப்பட்ட கடைசி செட் சமநிலை முறிப்புவரை நீடித்ததுடன் இறுதியில் மெடிசன் கீஸ் 7 - 5 என வெற்றிபெற்று தனது சம்பயின் பட்டத்திற்கான நீண்ட நாள் கனவை நிறைவேற்றிக்கொண்டார். https://www.virakesari.lk/article/204972 அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை தக்கவைத்தார் ஜனிக் சின்னர் Published By: VISHNU 26 JAN, 2025 | 08:53 PM (நெவில் அன்தனி) மெல்பர் டென்னிஸ் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஜேர்மன் வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ்வை 3 நேர் செட்களில் வெற்றிகொண்ட நடப்பு சம்பியன் இத்தாலி வீரர் ஜனிக் சின்னர் சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார். அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் இரண்டாவது தொடர்ச்சியான சம்பியன் பட்டத்தை வென்றெடுத்த ஜனிக் சின்னர், க்ராண்ட் ஸ்லாம் போட்டிகளில் மூன்றாவது சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார். பத்து தடவைகள் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸில் சம்பியனானவரும் 24ஆவது க்ராண்ட் ஸ்லாம் பட்டத்துக்கு குறிவைத்து அவுஸ்திரேலியா பயணமானவருமான நோவாக் ஜோகோவிச், அரை இறுதிப் போட்டியின் முதலாவது செட்டுடன் உபாதைக்குள்ளாகி போட்டியிலிருந்து சுயமாக ஓய்வுபெற்றார். விளையாடப்பட்ட முதல் செட்டில் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ் 7 - 6 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றிருந்தார். இதன் காரணமாக அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ்வுக்கு வெற்றி அளிக்கப்பட்டது. மற்றைய அரை இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டனை 3 நேர் செட்களில் (7 - 6, 6 - 2, 6 - 2) ஜனிக் சின்னர் வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார். இறுதிப் போட்டியில் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ்வை எதிர்கொண்ட முதல் நிலை வீரர் ஜனிக் சின்னர், முதலாவது செட்டில் 6 - 3 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஆனால், இரண்டாவது செட்டில் கடும் சவாலை எதிர்கொண்ட சின்னர் கடைசிக் கட்டத்தில் திறமையாக விளையாடி 7 - 6 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றார். அடுத்து நடைபெற்ற 3ஆவது செட்டில் திறமையாக விளையாடிய சின்னர் மீண்டும் 6 - 3 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியனானார். https://www.virakesari.lk/article/204975
-
தென்னை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அவசியம்; வந்தது அரசின் அறிவிப்பு
தென்னை மரங்களை வெட்டுவதற்கு எதிர்காலத்தில் பிரதேச செயலகம் அல்லது தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையிடம் அனுமதி பெற வேண்டும் என தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் கடுமையான தேங்காய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், தேங்காய் மரங்களை வெட்டுவதற்கு முன்பு தனிநபர்கள் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்ற புதிய கொள்கையை தெங்கு தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை பணிப்பாளர் சமன் ஹேவகே தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/314877
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
சுமந்திரனுக்கு ஏன் இந்த சலுகை? இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய் பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மெய்பாதுகாவலர்களின் பாதுகாப்பை பெற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய் பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. https://thinakkural.lk/article/314885
-
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின!
அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவி; 18 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் 2024 புலமைப்பரிசில் பரீட்சையில் ஹொரணை ரோயல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அகில இலங்கை ரீதியில் அதிக மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். குறித்த மாணவி 188 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இதேவேளை, 2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று (24) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். அதன்படி, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர், 188 மதிப்பெண்களை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், 17 மாணவர்கள் 187 மற்றும் 186 என்ற மதிப்பெண்களை பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். இவ்வாறு அதிக மதிப்பெண் பெற்ற 18 மாணவர்களில் 11 பேர் ஆண் பிள்ளைகள் என்றும் அவர் தெரிவித்தார். 2024 ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் 319,284 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில் அதில் 51,244 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். அதன்படி, பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் சதவீதம் 16.05% ஆகும். இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். 2023 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 15.12% பேர் சித்தியடைந்திருந்தனர். மேலும், இந்த ஆண்டு பெறுபேறுகளின் படி, 77.96% மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றுள்ளனர். இதுவும் கடந்த ஆண்டை விட சற்று அதிகமாகும். 2023 ஆம் ஆண்டில், 77.75% மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றிருந்தனர். மேலும், பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 37.70% பேர் 100 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றுள்ளனர். இருப்பினும், 2023 உடன் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும். கடந்த ஆண்டு, பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 45.06% பேர் 100 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/314872
-
கொரோனா 'சீன ஆய்வகத்திலிருந்து' பரவியதற்கான வாய்ப்புகள் அதிகம் - அமெரிக்க உளவு முகமையான சிஐஏ கூறுவது என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிஐஏவின் புதிய இயக்குநர் ஜான் ரட்கிளிஃப் கட்டுரை தகவல் எழுதியவர், ஹோலி ஹோண்டெரிச் பதவி, வாஷிங்டனிலிருந்து 26 ஜனவரி 2025, 14:31 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் உளவு முகமையான சிஐஏ சனிக்கிழமை வெளியிட்ட பகுப்பாய்வு முடிவின்படி, கொரோனா பெருந்தொற்று விலங்குகளிலிருந்து அல்லாமல் சீன ஆய்வகத்திலிருந்து ஏற்பட்டிருக்கதான் "வாய்ப்புகள் அதிகம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதன் முடிவுகள் குறித்து தங்களுக்கு "அதிக நம்பிக்கை" இல்லை என உளவு முகமை தெரிவித்துள்ளது. "ஏற்கனவே உள்ள தரவுகளின்படி, கொரோனா பெருந்தொற்றுக்கு இயற்கையான காரணத்தைவிட 'ஆய்வு ரீதியாக உருவாகியிருப்பதற்கான' சாத்தியக்கூறுகள்தான் அதிகம்" என, சிஐஏ செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறினார். டொனால்ட் டிரம்பால் நியமிக்கப்பட்டு, கடந்த வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட சிஐஏவின் புதிய இயக்குநர் ஜான் ரட்கிளிஃப் எடுத்த முதல் முடிவு, இந்த மதிப்பாய்வை வெளியிடுவதுதான். இவர், முந்தைய டிரம்ப் ஆட்சியில் தேசிய உளவு முகமையின் இயக்குநராக பணியாற்றினார். அப்போது, சீனாவின் வூஹான் வைராலஜி ஆய்வகத்திலிருந்துதான் கொரோனா பரவியது எனும் வாதத்தை அவர் ஆதரித்துவந்தார். இந்த ஆய்வகத்திலிருந்து 40 நிமிடத்தில் செல்லக்கூடிய தூரத்தில்தான் ஹூனான் இறைச்சி சந்தை உள்ளது. இந்த சந்தையிலிருந்துதான் கொரோனா பெருந்தொற்று அதிகளவில் பரவ ஆரம்பித்தது. குடியேறிகளே இல்லாத அமெரிக்கா எப்படி இருக்கும்? ஓர் அலசல் எய்ட்ஸ், காச நோய்: உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? சீனாவுடன் சமரசம், இந்தியாவுக்கு நெருக்கடியா? டிரம்பின் சவால்களை இந்தியா எப்படி சமாளிக்கப் போகிறது? 'தீவிர இடதுசாரி' என டிரம்ப் இந்த பாதிரியாரை விமர்சித்தது ஏன்? சர்ச்சை என்ன? பிரெயிட்பார்ட் நியூஸ் ஊடகத்துக்கு ஜான் ரட்கிளிஃப் வெள்ளிக்கிழமை அளித்திருந்த பேட்டியில், கொரோனா வைரஸ் பெருந்தொற்று எங்கிருந்து தொடங்கியது எனும் விவகாரத்தில் சார்பற்ற நிலைப்பாட்டை சிஐஏ கைவிட்டு, "நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார். "பல வழிகளில் சீனாவிலிருந்து வரும் தாக்குதல்கள் குறித்து நான் அதிகம் பேசிவருகிறேன், இது, பல லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் ஏன் தங்கள் உயிரை இழந்தனர் என்பதுடன் தொடர்புடையது. கோவிட் எங்கிருந்து தொடங்கியது எனும் மதிப்பாய்வை கடந்த ஐந்து ஆண்டுகளாக மேற்கொள்ளாமல் சிஐஏ வெறுமனே அமர்ந்து வேடிக்கை பார்த்தது ஏன்?" என அவர் தெரிவித்தார். "இதுதான் என்னுடைய முதல் நாள் வேலை." ஆனால், இந்த மதிப்பாய்வு டிரம்ப் ஆட்சியின் புதிய உளவு முகமையால் மேற்கொள்ளப்பட்டது அல்ல என்றும், அதற்கு முந்தையை ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது என்றும் அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களில் கூறியுள்ளனர். இந்த மதிப்பாய்வு, முந்தைய பைடன் நிர்வாகத்தின் கடைசி வாரங்களில் உத்தரவிடப்பட்டு, திங்கட்கிழமை டிரம்ப் பதவியேற்பதற்கு முன்பாக முடிக்கப்பட்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. காஸா: போர் நிறுத்தத்திற்கு பிறகும் வீடு திரும்பும் பாலத்தீனர்களை இஸ்ரேல் தடுப்பது ஏன்?6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் 76-வது குடியரசு தின விழா வண்ணமயமான கொண்டாட்டம் - புகைப்படத் தொகுப்பு7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப் இந்த முடிவுகள் மீது "அதிக நம்பிக்கை இல்லை" என சிஐஏ கூறியுள்ளது, அதாவது இது முடிவுறாமலும், முரணாகவும், குறைபாடுகளுடனும் உள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கான காரணம் என்ன என்பதில் ஒருமித்த கருத்து இல்லை. இந்த வைரஸ், விலங்கிலிருந்து "இயற்கையாகவே பரவியிருக்கலாம்" என்றும், விஞ்ஞானிகள் அல்லது ஆய்வகங்களுக்கு இதில் பங்கு இல்லை என்ற கருத்தை சிலர் ஆதரிக்கின்றனர். ஆய்வகத்திலிருந்து இது பரவியிருக்கலாம் எனும் அனுமானம் குறித்து பல விஞ்ஞானிகள் தீவிரமாக விவாதித்து வருகின்றனர், அவர்களுள் பலரும் இதற்கு வலுவான ஆதாரம் இல்லை என கூறிவருகின்றனர். இது அமெரிக்காவின் "அரசியல் சூழ்ச்சி" என சீனா கடந்த காலத்தில் இந்த கூற்றை நிராகரித்துள்ளது. இந்த அனுமானம், சில உளவு அமைப்புகளால் மீண்டும் கவனம் பெற்று வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டில், அமெரிக்காவின் புலன் விசாரணை அமைப்பான எஃப்.பி.ஐ-யின் இயக்குநர் கிறிஸ்டோஃபர் வ்ரே, தங்களின் அமைப்பு மேற்கொண்ட மதிப்பாய்வில்தான் "கொரோனா பெருந்தொற்று ஆய்வகத்திலிருந்து பரவியதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பது" தெரியவந்ததாக ஃபாக்ஸ் நியூஸிடம் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cednvz6n370o
-
“நமது கதைகள் பின்னிப்பிணைந்துள்ளன, நமது எதிர்காலம் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டது" - 76ஆவது குடியரசு தின செய்தியில் இந்திய பதில் உயர்ஸ்தானிகர்
26 JAN, 2025 | 02:25 PM “இலங்கையின் நம்பகத்தன்மை மிக்க நண்பர் என்பதை மீண்டும் மீண்டும் இந்தியா நிரூபித்துள்ளது” என குறிப்பிட்டுள்ள இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் சத்யாஞ்சல் பாண்டே, “நமது கதைகள் பின்னிப்பிணைந்துள்ளன. நம் எதிர்காலம் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் 76ஆவது குடியரசு தின செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. “இலங்கை இந்தியாவின் ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது. இந்தியாவும் இலங்கையும் சக ஜனநாயக நாடுகள் மாத்திரமல்ல. நாங்கள் நமது பன்முகத்தன்மை மற்றும் முனைப்புடமை ஆகியவற்றையும் பகிர்ந்துகொள்கின்றோம். நாங்கள் நாகரிகம் மிக்க சகாக்கள். எங்கள் வரலாறு, மொழி, மதம், நெறிமுறைகளை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்கின்றோம். நமது கதைகள் பின்னிப்பிணைந்துள்ளன. எங்களின் எதிர்காலம் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டது. எங்கள் புவியியல் ரீதியிலான நெருக்கம் எங்களை இயற்கையான பங்காளிகளாக மாற்றியுள்ளது. அதேவேளை அருகில் இருப்பதால் இரு நாடுகளும் பரஸ்பரம் ஏனைய நாட்டின் நலன்கள் குறித்த உணர்வை கொண்டிருப்பது அவசியமாகிறது. மேலும், ஒப்பிட முடியாத தன்னிச்சையுடன் மூன்றாம் தரப்பின் அழுத்தங்களால் பாதிக்கப்படாமல் நாம் ஒருவரையொருவர் ஆதரிக்கவேண்டும். இந்தியா இலங்கையின் நம்பகமான சகா என்பதை இலங்கையின் நம்பகத்தன்மை மிக்க நண்பர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. இயற்கை பேரிடர்களாக இருக்கலாம், கடலில் ஏற்படும் விபத்துக்களாக இருக்கலாம், கொவிட் பெருந்தொற்றாக இருக்கலாம் அல்லது சமீபத்தைய பொருளாதார நெருக்கடியாக இருக்கலாம்... எதுவாக இருந்தாலும், இந்தியா முதலாவது நாடாக இலங்கைக்கு உதவ விரைந்து முன்வந்துள்ளது. எங்கள் ஆதரவு உரிய தருணத்தில் விரைவானதாக நிபந்தனையற்றதாக காணப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/204933
-
அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகளை 90 நாட்களிற்கு இடைநிறுத்த டிரம்ப் உத்தரவு - இலங்கை உட்பட பல நாடுகளிற்கு பாதிப்பு
Published By: RAJEEBAN 26 JAN, 2025 | 09:47 AM அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகளை நிறுத்திவைப்பதற்கும் எதிர்காலத்தில் வெளிநாட்டு உதவிகளை அரைவாசியாக குறைப்பதற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளதால் இலங்கை உட்பட பல நாடுகள் நெருக்கடியை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அமெரிக்காவின் புதிய இராஜாங்க செயலாளர் மைக்ரூபியோ இதுகுறித்த அறிவிப்பை அமெரிக்காவின் அனைத்து வெளிநாட்டு தூதரகங்களிற்கும் அனுப்பிவைத்துள்ளார். இதன் காரணமாக வெளிநாடுகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி தி;ட்டங்களிற்கு யுஎஸ்எயிட் அமைப்பும் அமெரிக்க இராஜாங்க திணைக்களமும் வழங்கிவந்த நிதி நிறுத்தப்படும் நிலை நிலை எழுந்துள்ளது. அமெரிக்கா வெளிநாடுகளிற்கு வழங்கும் வெளிநாட்டு உதவி திட்டங்களை 90 நாட்களிற்கு நிறுத்திவைக்குமாறு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார் இதனை அமெரிக்கா வெளிநாடுகளிற்கு வழங்கும் நிதி உதவி அமெரிக்கா ஜனாதிபதியின் வெளிவிவகார கொள்கைக்கு இசைவான விதத்தில் காணப்படுகின்றதா என ஆய்வினை மேற்கொள்ளுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. 1956ம் ஆண்டு முதல் அமெரிக்கா இலங்கைக்கு 2 பில்லியன் டொலர் உதவிகளை வழங்கியுள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிதிஉதவி சந்தையை அடிப்படையாக கொண்ட பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதற்கும்,சுற்றுச்சுழல் பேண்தகுதன்மை மற்றும் மீள் எழுச்சி தன்மை ஆகியவற்றை வளர்ப்பது,நல்லாட்சியை ஊக்குவிப்பது போன்றவற்றிற்கு அமெரிக்கா இந்த நிதியுதவியை வழங்குகின்றது. இதேவேளை அமெரிக்காவின் புதிய இராஜாங்க செயலாளர் இஸ்ரேலிற்கான இராணுவஉதவிகளை நிறுத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/204898
-
தசை செயலிழப்பை ஏற்படுத்தும் ‘கில்லியன் பேர் சிண்ட்ரோம் நோய்’ – புனேவில் 73 பேர் பாதிப்பு
Guillain-Barre syndrome Guillain-Barre syndrome is rare, and the exact cause is not known. But two-thirds of people have symptoms of an infection in the six weeks before Guillain-Barre symptoms begin. Infections can include a respiratory or a gastrointestinal infection, including COVID-19. Guillain-Barre also can be caused by the Zika virus. There's no known cure for Guillain-Barre syndrome. Several treatment options can ease symptoms and help speed recovery. Most people recover completely from Guillain-Barre syndrome, but some serious illnesses can be fatal. While recovery may take up to several years, most people are able to walk again six months after symptoms first began. Some people may have lasting effects, such as weakness, numbness or fatigue. Symptoms Guillain-Barre syndrome often begins with tingling and weakness starting in the feet and legs and spreading to the upper body and arms. Some people notice the first symptoms in the arms or face. As Guillain-Barre syndrome progresses, muscle weakness can turn into paralysis. Symptoms of Guillain-Barre syndrome may include: A pins and needles feeling in the fingers, toes, ankles or wrists. Weakness in the legs that spreads to the upper body. Unsteady walk or not being able to walk or climb stairs. Trouble with facial movements, including speaking, chewing or swallowing. Double vision or inability to move the eyes. Severe pain that may feel achy, shooting or cramplike and may be worse at night. Trouble with bladder control or bowel function. Rapid heart rate. Low or high blood pressure. Trouble breathing. People with Guillain-Barre syndrome usually experience their most significant weakness within two weeks after symptoms begin. Types The symptoms of Guillain-Barre syndrome can vary based on the type. Guillain-Barre syndrome has several forms. The main types are: Acute inflammatory demyelinating polyradiculoneuropathy (AIDP), the most common form in North America and Europe. The most common sign of AIDP is muscle weakness that starts in the lower part of the body and spreads upward. Miller Fisher syndrome (MFS), in which paralysis starts in the eyes. MFS also is associated with an unsteady walk. MFS is less common in the U.S. but more common in Asia. Acute motor axonal neuropathy (AMAN) and acute motor-sensory axonal neuropathy (AMSAN) are less common in the U.S. But AMAN and AMSAN are more frequent in China, Japan and Mexico. When to see a doctor Call your healthcare professional if you have mild tingling in your toes or fingers that doesn't seem to be spreading or getting worse. Seek emergency medical help if you have any of these serious symptoms: Tingling that started in your feet or toes and is now moving up your body. Tingling or weakness that's spreading quickly. Trouble catching your breath or shortness of breath when lying flat. Choking on saliva. Guillain-Barre syndrome is a serious condition that requires immediate hospitalization because it can worsen quickly. The sooner treatment is started, the better the chance of a complete recovery. Causes The exact cause of Guillain-Barre syndrome isn't known. It usually appears days or weeks after a respiratory or digestive tract infection. Rarely, recent surgery or vaccination can trigger Guillain-Barre syndrome. In Guillain-Barre syndrome, your immune system — which usually attacks only invading organisms — begins attacking the nerves. In AIDP, the nerves' protective covering, known as the myelin sheath, is damaged. The damage prevents nerves from transmitting signals to your brain, causing weakness, numbness or paralysis. Guillain-Barre syndrome may be triggered by: Most commonly, an infection with campylobacter, a type of bacteria often found in undercooked poultry. Influenza virus. Cytomegalovirus. Epstein-Barr virus. Zika virus. Hepatitis A, B, C and E. HIV, the virus that causes AIDS. Mycoplasma pneumonia. Surgery. Trauma. Hodgkin lymphoma. Rarely, influenza vaccinations or childhood vaccinations. COVID-19 virus. Risk factors Guillain-Barre syndrome can affect all age groups, but the risk increases as you age. It's also slightly more common in males than females. Complications Guillain-Barre syndrome affects your nerves. Because nerves control your movements and body functions, people with Guillain-Barre syndrome may experience: Trouble breathing. Weakness or paralysis can spread to the muscles that control your breathing. This can potentially be fatal. Up to 22% of people with Guillain-Barre syndrome need temporary help from a machine to breathe within the first week when they're hospitalized for treatment. Residual numbness or other sensations. Most people with Guillain-Barre syndrome recover completely or have only minor, residual weakness, numbness or tingling. Heart and blood pressure problems. Blood pressure fluctuations and irregular heart rhythms are common side effects of Guillain-Barre syndrome. Pain. One-third of people with Guillain-Barre syndrome experience nerve pain, which may be eased with medicine. Trouble with bowel and bladder function. Sluggish bowel function and urine retention may result from Guillain-Barre syndrome. Blood clots. People who are not mobile due to Guillain-Barre syndrome are at risk of developing blood clots. Until you're able to walk independently, you may need to take blood thinners and wear support stockings to improve blood flow. Pressure sores. You may be at risk of developing bedsores, also known as pressure sores, if you're not able to move. Changing your position often may help avoid this problem. Relapse. A small percentage of people with Guillain-Barre syndrome have a relapse. A relapse can cause muscle weakness even years after symptoms ended. When early symptoms are worse, the risk of serious long-term complications goes up. Rarely, death may occur from complications such as respiratory distress syndrome and heart attacks. https://www.mayoclinic.org/diseases-conditions/guillain-barre-syndrome/symptoms-causes/syc-20362793
-
ரில்வின் சில்வா சீனாவுக்கு விஜயம் : சீன கம்யூனிஸ்ட் கட்சி - ஜே.வி.பி இடையில் அரசியல் ஒப்பந்தம்
26 JAN, 2025 | 09:50 AM (லியோ நிரோஷ தர்ஷன்) சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி) இடையிலான உத்தேச இருதரப்பு அரசியல் ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்காக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இந்த விஜயத்திற்கான திகதி இன்னும் நிறைவுப்படுத்தப்படாத நிலையில் பெரும்பாலும் எதிர்வரும் ஏப்ரல் மாத்திற்கு முன்னர் இந்த விஜயம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது 15 ஒப்பந்தங்கள் வரை நிறைவுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் யாவும் இருநாடுகளுக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விடயங்களாகும். எனினும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று குறித்தும் இந்த விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் அரசியல் ரீதியிலான பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்புகள் உள்ளடங்களாக இருகட்சிக்கும் இடையில் பரஸ்பர ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்தும் வகையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/204897
-
இந்தியா - இங்கிலாந்து ரி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்
இந்தியா த்ரில் வெற்றி: ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய வாஷிங்டன் சுந்தர், கடைசி வரை நின்று சாதித்த திலக் வர்மா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்டுரை தகவல் எழுதியவர்,போத்திராஜ் பதவி,பிபிசி தமிழுக்காக சென்னை சேப்பாக்கத்தில் ஏற்கெனவே நடந்த 2 டி20 சர்வதேச போட்டிகளும் கடைசிப் பந்து வரை வந்துதான் இந்திய அணி வென்றிருந்தது. அதுபோலவே ஜனவரி 25-ஆம் தேதி அன்று நடந்த 3-வது டி20 ஆட்டத்திலும் முடிவைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் கடைசி ஓவர் வரை காத்திருக்கும் பரபரப்பான ஆட்டமாக அமைந்தது. வெற்றி யார் கைகளில் வேண்டுமானாலும் தவழலாம் என்ற சூழல் கடைசி ஓவர் வரை இருந்தது. ஆனால், திலக் வர்மா அடித்த பவுண்டரி அவரின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக மாறியது. சேப்பாக்கத்தில் நேற்று நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி வென்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. 166 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 4 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் உள்நாட்டில் தொடர்ந்து 10-வது டி20 போட்டிகளில் வெற்றியை 2வது முறையாக இந்திய அணி பெற்றுள்ளது. 3-வது வீரராகக் களமிறங்கி, 55 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 'பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளியா?' - சிபிசிஐடி அறிக்கைக்கு வேங்கைவயல் மக்கள் எதிர்ப்பு இலங்கை: கலாசார மண்டபத்துக்கு 'திருவள்ளுவர்' பெயரை சூட்டியதால் சர்ச்சையா? - இந்தியா செய்தது என்ன? வங்கதேசம் சென்ற பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் - இந்தியா சொன்னது என்ன? அண்ணா நகர் போக்சோ வழக்கு: '15 வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தை அவள், இப்படியொரு நிலையா?' - கலங்கும் தாய் ஒரு கட்டத்தில் இந்திய அணி 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் இருந்தது. அந்த நேரத்தில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருடன்(26) இணைந்து, 38 ரன்கள் பார்ட்னர்ஷிப், அர்ஷ்தீப் சிங்குடனும், ரவி பிஸ்னாயுடனும் சேர்ந்து தலா 20 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து திலக் வர்மா அணியை கரை சேர்த்தார். குறிப்பாக ரவி பிஸ்னாய் கடைசி இரு ஓவர்களில் அடித்த இரு பவுண்டரிகள், ஆட்டத்தில் இந்திய ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் பதற்றத்தையும், அழுத்தத்தையும் 90 சதவீதம் குறைத்தது. குறிப்பாக வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரவி பிஸ்னாய் ஆகியோருடன் கடைசி நேரத்தில் திலக் வர்மா பார்ட்னர்ஷிப் அமைத்து சேர்த்த ரன்கள்தான் ஆட்டத்தின் போக்கை மாற்றி, வெற்றியை இங்கிலாந்து அணியின் கரங்களில் இருந்து பறித்தது. இங்கிலாந்து அணி கைமேல் கிடைத்த வெற்றியை கோட்டைவிட்டது என்றுதான் சொல்ல முடியும். 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு நெருக்கடி அளித்த நிலையில், சரியான நேரத்தில் சரியான பந்துவீச்சாளர்களை கேப்டன் பட்லர் பயன்படுத்தாதது தோல்விக்கு காரணமாக அமைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணி 4 சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது. சுழற்பந்துவீச்சு தாக்குதல் இந்திய அணி இந்த ஆட்டத்தில் 4 சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது. வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, அக்ஸர் படேல், ரவி பிஸ்னாய் என 14 ஓவர்களை சுழற்பந்தாக வீசி 118 ரன்களையும், 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இங்கிலாந்து பேட்டர்கள், சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள அச்சப்படுகிறார்கள் எனத் தெரிந்து அவர்களுக்கு 4 முனைத் தாக்குதலையும் சுழற்பந்துவீச்சு மூலம் இந்திய அணி கொடுத்தது. ஆனாலும், ரன் சேர்க்கப் போராடிய இங்கிலாந்து அணி கடைசி நேரத்தில் நடுவரிசை பேட்டர்களின் பின்ச்ஹிட் ஆட்டத்தால் 165 ரன்களைச் சேர்த்தது. கடந்த போட்டியிலாவது இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்திருந்தார், இந்த ஆட்டத்தில் அந்த அணியில் ஒருவரும் அரைசதம் அடிக்கவில்லை. சேப்பாக்கம் மைதானம், சுழற்பந்துவீச்சுக்கு அதிகமாக ஒத்துழைத்தது என்று கூறமுடியாது. அதேசமயம், வேகப்பந்துவீச்சாளர்களை நன்கு பவுன்ஸ் செய்யவும், பேட்டர்களை நோக்கி பந்து வேகமாக வரவும் உதவியது. இந்த மைதானத்தில் வேகத்தைக் குறைத்து வீசியிருந்தால் நிச்சயம் இந்திய பேட்டர்கள் விளையாட சிரமமாக இருந்திருக்கும். ஆனால் அதிவேகத்தில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள், பந்துவீசி ரன்களைத்தான் வாரிக் கொடுத்தனர். குறிப்பாக ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்கள் வீசி 60 ரன்களையும், மார்க்உட் 3 ஓவர்களில் 28 ரன்களையும், ஓவர்டன் 2 ஓவர்களில் 20 ரன்களையும் வாரி வழங்கினர். ஆனால் அதில் ரஷித் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே வழங்கி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். நடிகர் பாலகிருஷ்ணா மேடையிலேயே நடிகையிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதால் சர்ச்சை4 மணி நேரங்களுக்கு முன்னர் ராமர் கோயில் திறந்து ஓராண்டு நிறைவு - மாறி வரும் அயோத்தியின் பேசப்படாத மறுபக்கம்25 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்து அணி நடுவரிசை பேட்டர்களின் பின்ச்ஹிட் ஆட்டத்தால் 165 ரன்களைச் சேர்த்தது. வாய்ப்பை தவறவிட்டதா இந்திய அணி? இந்த ஆட்டத்திலும் அர்ஷ்தீப் சிங் கடந்த போட்டியைப் போன்று புதிய பந்தில் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தினார். இந்த முறை பில் சால்ட்டுக்கு பவுன்ஸரை வீசிய நிலையில் ஹூக் ஷாட்டுக்கு முயன்று விக்கெட்டை இழந்தார். வாஷிங்டன் சுந்தர் வீசிய முதல் ஓவர் முதல் பந்திலேயே டக்கெட் விக்கெட்டை இழந்தார். வருண் சக்ரவர்த்தி பந்தை முதல்முறையாக கிரிக்கெட்டில் எதிர்கொண்ட ஹேரி புரூக், க்ளீன் போல்டாகி வெளியேறினார். அக்ஸர் படேல் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி ஜோஸ் பட்லர், லிவிங்ஸ்டோன் விக்கெட்டை வீழ்த்தினர். இவர்கள் 4 பேரும் சேர்ந்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை முடிக்கும்நிலைக்கு கொண்டு வந்தனர். இங்கிலாந்து அணி 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் அதன்பின் கிடைத்த தருணத்தை இந்திய பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தவில்லை. ஜேம் ஸ்மித், பிரைடன் கார்ஸ் ஓரளவுக்கு ஸ்கோர் செய்து அணியைக் காப்பாற்றினர். அதிலும் பிரைடன் கார்ஸ் 17 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உள்பட 31 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேபோல, ஜேம் ஸ்மித் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 12 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து கடைசி நேரத்தில் இங்கிலாந்து அணிக்கு உதவினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிரைடன் கார்ஸ் 17 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உள்பட 31 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். விக்கெட்டில் கவனம் இல்லை இந்திய அணி இந்த ஆட்டத்தில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தமைக்கு பேட்டர்களின் தவறான ஷாட்களே முக்கியக் காரணம். இந்திய அணியில் திலக்வர்மா(72) ரன்களுக்கு அடுத்தபடியாக அதிகபட்ச ஸ்கோர் வாஷிங்டன் சுந்தர் சேர்த்த 26 ரன்கள்தான். களத்துக்கு வந்தவுடன் பெரிய ஷாட்டுக்கு முயற்சிக்கும் பேட்டர்கள், பந்துவீச்சையும், ஆடுகளத்தின் தன்மையையும் கணிக்க தவறிவிட்டனர். அபிஷேக் சர்மா 3 பவுண்டரிகளுடன் அதிரடியாகத் தொடங்கினாலும், அதிவேகமாகப் பந்துவீசிய மார்க் வுட் பந்துவீச்சை கணித்து ஆடாமல் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். சாம்ஸன் 5 ரன்னில் ஆர்ச்சரின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கேப்டன் சூர்யகுமார் வந்தவேகத்தில் 3 பவுண்டரி அடித்தாலும் கார்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார். இந்த ஆட்டத்தில் முக்கியமான சேஸிங்கில் நிதானமாக பேட் செய்யாமல் தவறான ஷாட்களை ஆடினார். நடுவரிசையில் ஹர்திக் பாண்டியா(7), துருவ் ஜூரெல்(4) இருவரும் ஏமாற்றினர், இருவரும் ஓரளவுக்கு கைகொடுத்திருந்தால் இந்திய அணி சிரமமின்றி வெற்றி பெற்றிருக்கலாம். 58 ரன்கள் வரை இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது, ஆனால் அடுத்த 20 ரன்களில் 3 விக்கெட்டுகளை வேகமாக இழந்தது. கோலி, ரோஹித் பேட்டிங்கில் என்ன பிரச்னை? ரஞ்சி போட்டியில் ஆடுவது மட்டுமே தீர்வாகுமா?18 ஜனவரி 2025 நடிகர் அஜித் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 53 வயதில் மீண்டும் கார் ரேஸில் பங்கேற்று சாதிக்க உதவியது எது?14 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கேப்டன் சூர்யகுமார் வந்தவேகத்தில் 3 பவுண்டரி அடித்தாலும் கார்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் அதில் ரஷித் 4 ஓவர்கள் வீசி இந்திய ரன்ரேட்டை கட்டுப்படுத்தினார். இருப்பினும் இவர் கோட்டை விட்ட கேட்ச் வெற்றிக்கு வழி வகுத்தது. வாஷிங்டன் சுந்தர் அடித்த கேட்சை ரஷித் தவறவிட்டதால்தான் திலக்-சுந்தர் பார்ட்னர்ஷிப் வலுவாக அமைந்தது. மார்க் உட் வீசிய அந்த ஓவரை சரியாகப் பயன்படுத்திய சுந்தர் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரி விளாசி 18 ரன்களைச் சேர்த்து 19 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தரின் பிஞ்ச் ஹிட்டிங்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றிய தருணமாகும் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மார்க் உட் வீசிய அந்த ஓவரை சரியாகப் பயன்படுத்திய சுந்தர் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரி விளாசி 18 ரன்களைச் சேர்த்தார். கடைசி வரை களத்தில் நின்று சாதித்த திலக் வர்மா கடைசி 3 ஓவர்களில் இந்திய அணி வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் செட்டில் பேட்டர் திலக் வர்மாவும், டெய்லெண்டர் ரவி பிஸ்னாய் இருந்தனர். கார்ஸ் வீசிய 18-வது ஓவரில் ஏதாவது விக்கெட் இழந்துவிடுவோமா என அச்சப்பட்ட நிலையில் பிஸ்னாய் அருமையான பவுண்டரி அடித்து நெருக்கடியைக் குறைத்தார். கடைசி 2 ஓவர்களில் இந்திய அணி வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை லிவிங்ஸ்டோன் வீசினார். இந்த ஓவரை பிஸ்னாய், திலக் கட்டுக்கோப்பாக ஆடினர். லிவிங்ஸ்டோன் வீசிய 5வது பந்தில் பிஸ்னாய் பவுண்டரி அடிக்க பதற்றம் குறைந்தது. கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. ஓவர்டன் வீசிய முதல் பந்தில் 2 ரன்களும், அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து திலக் வர்மா வெற்றிக்கு அழைத்துச் சென்றார். பும்ரா சந்தேகம், தடுமாறும் கோலி, ரோஹித் - சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா சாதிக்குமா? ஓர் அலசல்19 ஜனவரி 2025 துளசிமதி முருகேசன்: அவமானங்களை கடந்து தந்தை உதவியுடன் சாதித்த தமிழக வீராங்கனையின் வெற்றிக் கதை18 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யாரேனும் ஒருவர் பொறுப்பெடுத்து பேட் செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் கேப்டன் சூர்யகுமார். "பொறுப்புடன் ஆடியது மகிழ்ச்சி" வெற்றிக்குப் பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் " இந்த வெற்றியால் சிறிய மன நிம்மதி கிடைத்துள்ளது. 160 ரன்கள் நல்ல ஸ்கோர் என நினைத்தோம். நாங்கள் பந்துவீசியவிதமும் சிறப்பாக இருந்தது. கடந்த சில தொடர்களாக கூடுதலாக ஒரு பேட்டருடன் ஆட்டத்தை சந்தித்து வருகிறோம். அந்த பேட்டரும் எங்களுக்கு 3 ஓவர்கள் வரை பங்களித்துவிடுகிறார். ஆவேசமான கிரிக்கெட்டை விளையாடும் அதேநேரத்தில் இக்கட்டான நேரங்களில் வீரர்கள் சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டத்தை திருப்பிவிடுகிறார்கள். யாரேனும் ஒருவர் பொறுப்பெடுத்து பேட் செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. பேட்டிங்கில் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக ரவி பிஸ்னாய் அதிக பயிற்சியில் ஈடுபட்டார். பெரும்பகுதி அழுத்தத்தை களத்திலேயே குறைத்துவிடுவதால், ஓய்வு அறை மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோன்ற நாட்கள் திரும்பவராது, ஆனால், அதை தக்கவைண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். இதேபோன்ற ஃபார்மில் இருந்தால், நல்ல விஷயங்கள் தொடர்ந்து நடக்கும்" எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/clye77p1dpgo
-
யோஷித ராஜபக்ஷ கைது
யோசித்த ராஜபக்ஷவை மகிந்தவின் மகன் என்பதற்காக கைதுசெய்யவில்லை - அமைச்சரவை பேச்சாளர் 26 JAN, 2025 | 10:58 AM யோஷித்த ராஜபக்ஷவை, அவர் மகிந்தவின் மகன் என்பதற்காக கைதுசெய்யவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ தெரிவித்துள்ளார். எவராவது சந்தேகத்திற்கிடமான முறையில் அல்லது சட்டவிரோதமாக நிலத்தை கொள்வனவு செய்திருந்தால் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார். சிலர் தெரிவிப்பது போல சமீபத்தைய கைதுகளுக்கு அரசியல் பழிவாங்கல் காரணமில்லை என தெரிவித்துள்ள அமைச்சரவை பேச்சாளர் எவராவது சந்தேகத்துக்கிடமான முறையில் அல்லது சட்டவிரோதமாக நிலத்தை கொள்வனவு செய்திருந்தால் சிஐடியினர் அது குறித்து விசாரணை செய்வார்கள். சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். யோஷித்த மகிந்தவின் மகன் என்பதற்காக கைதுசெய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார். விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. அவை தொடர்கின்றன. சிஐடியினரும் பொலிஸாரும் தங்கள் விசாரணைகள் குறித்த விபரங்களை நீதிமன்றத்திற்கு தெரிவித்து உரிய முறையில் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/204907
-
புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்
முதலாம் ஆண்டில் கற்கவுள்ள 31 பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டது 25/01/2025 அவுஸ்திரேலியா சிட்னி நகரத்தில் வசிக்கும் சுழிபுரம் மத்தி ராசாப்பா மகன் தவவரதராஜலிங்கம் அவர்களின் பேர்த்தியான செல்வி ஆரியா கண்ணன் முதன் முதல் பாடசாலைக்கு இவ்வருடம் செல்கின்றார், அதனை முன்னிட்டு தாயகத்தில் முதல் முதல் பாடசாலை செல்லும் 31 மாணவர்களுக்கு புத்தக பைகளை இன்று வழங்கி உள்ளார்கள். செல்வி ஆரியா கண்ணன் குடும்பத்தினருக்கு 31 பிள்ளைகளின் பெற்றோர் சார்பாக உளமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம். இங்கே வருகை தந்த மாணவச் செல்வங்களிற்கும் அவர்களை அழைத்து வந்த பெற்றோருக்கும் எமது நன்றிகள். இந்த நிகழ்விற்கான நன்கொடையை பெற்றுத் தந்த விக்ரோறியன் செந்தில் அண்ணாவிற்கும் புத்தகப் பைகளை தைத்துப் பெற வழிகாட்டிய சின்னையா அன் சன்ஸ் கெனத் ஜீவகுமார் அண்ணாவிற்கும் நியாய விலையில் தைத்து வழங்கிய சகோதரி ஜெனிலா குமரன் அவர்களிற்கும் புத்தகப் பைகளை சரியான நேரத்தில் எடுத்து வந்து தந்த வினோதரன் அவர்களுக்கும் இந்த நிகழ்வை சிறப்புற ஒழுங்கமைத்த நிர்வாகிகளுக்கும் புத்தகப் பைகளை வழங்கி வைத்த விருந்தினர்களுக்கும் உளமார நன்றி கூறுகின்றோம். தம்பிமார் கஜறூபன், மகிந்தன், விஜயறூபன், சிறிசுபாஸ் ஆகியோருக்கும் எமது நிர்வாகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம். ஆலோசனைகள் மற்றும் உதவிகளுக்கு தொடர்புகொள்ள +94777775448(WhatsApp, Viber)
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பணயக் கைதிகளாகயிருந்த 4 இஸ்ரேலிய இராணு வீராங்கனைகளை விடுதலை செய்தது ஹமாஸ் 25 JAN, 2025 | 05:34 PM ஹமாசின் பிடியில் பணயக்கைதிகளாகயிருந்த நான்கு இஸ்ரேலிய இராணுவவீராங்கனைகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் தற்போது இஸ்ரேல் சென்றுள்ளனர். காசாவின் பாலஸ்தீன சதுக்கத்தில் இவர்கள் விடுதலைசெய்யப்பட்டவேளை ஆயுதமேந்தியவர்களும் பொதுமக்களும் அப்பகுதியில் பெருமளவில் காணப்பட்டனர் என பிபிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/204874
-
காற்றாலை மின்திட்டத்தை முன்னெடுப்பதற்காக அதானி குழுமத்திற்கு வழங்கிய அனுமதி இரத்து - அமைச்சரவை தீர்மானம்
அதானியின் எந்தவொரு அபிவிருத்தி திட்டத்தையும் இரத்து செய்ய தீர்மானிக்கவில்லை - நளிந்த ஜயதிஸ்ஸ 25 JAN, 2025 | 07:07 PM (எம்.மனோசித்ரா) அதானி குழுமத்தின் எந்தவொரு அபிவிருத்தி திட்டத்தையும் இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. மாறான வலுசக்தி கொள்வனவு தொடர்பில் அதானி குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திடுவதற்கு கடந்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்து, அந்த இணக்கப்பாட்டை மீளாய்வு செய்வதற்கு மாத்திரமே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். குறித்த மீளாய்வு குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையிலேயே அதானி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அதானி குழுமத்தினால் மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவிருந்த காற்றாலை மின்உற்பத்தி திட்டங்கள் அரசாங்கத்தால் இரத்து செய்யப்பட்டதாக வெள்ளிக்கிழமை வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இது தொடர்பில் அதானி நிறுவனமும் தெளிவுபடுத்தியிருந்தது. மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவிருந்த காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. இது தொடர்பில் இதுவரையில் நீதிமன்றத்தில் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மே மாதத்தில் இவ்வழக்கு விசாரணைகள் இடம்பெறவுள்ளன. அதேவேளை கடந்த அரசாங்கத்தால் இந்த திட்டம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீளாய்வு செய்வதற்கு எமது அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய மீளாய்வு குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை மாத்திரமே அரசாங்கம் எடுத்துள்ளது. அதனைவிடுத்து வேறு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. மீளாய்வுக்குழு அதன் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. மீளாய்வின் பின்னர் அந்த அறிக்கைக்கமைய எவ்வாறான திருத்தங்களை மேற்கொள்வது என்பது குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும். வலுசக்தி கொள்வனவு தொடர்பில் அதானி குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திடுவதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை அங்கீகாரமளித்திருந்தது. குறித்த அமைச்சரவை தீர்மானத்தை இரத்து செய்து, கொள்வனவு விலைகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டுள்ளன. காரணம் கடந்த அரசாங்கம் இணக்கப்பாடு தெரிவித்திருந்த விலைகளுடன் எம்மால் இணங்க முடியாது. எனவே தான் அதனை மீளாய்வு செய்து திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது என்றார். https://www.virakesari.lk/article/204881
-
பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது - அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார் மகிந்த
புலிகளின் மீள் எழுச்சி குறித்த தகவல்கள் இருந்தால் நீதிமன்றத்தின் ஊடாக நாட்டுக்கு வெளிப்படுத்துங்கள் ; முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் அரசாங்கம் வலியுறுத்தல் 25 JAN, 2025 | 05:29 PM (எம்.மனோசித்ரா) மீளப் பெறப்பட்ட தனது பாதுகாப்பு பிரிவை மீள வழங்குமாறு உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு குறித்த வழக்கு நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். மீண்டும் விடுதலைப் புலிகளின் ஒன்று கூடல் மற்றும் எழுச்சி தொடர்பான தகவல்கள் அவர் வசம் காணப்படுமாயின் அவற்றை நீதிமன்றத்தின் ஊடாக நாட்டுக்கு வெளிப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று சனிக்கிழமை (25) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாதுகாப்பினை அதிகரிக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் வழக்கு நாட்டில் சிறந்தவொரு வழக்காக அமையும். நாட்டின் பாதுகாப்பு சபை கூட அறியாத தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி குறித்த தகவல்கள் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரிடம் காணப்பட்டால் அவற்றை நீதிமன்றத்தின் ஊடாக நாட்டுக்கு வெளிப்படுத்துவதே சிறந்ததாகும். அவை தேசிய பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமையும். புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அறிக்கைகளின் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சபைக்கு அப்பாற்பட்ட தகவல்கள் அவர்களிடம் காணப்பட்டால் அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கமையவே அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 30 534 சதுர அடி மாளிகையிலேயே வசிக்கின்றார். ஒரு ஏக்கரும் 13 பேர்ச் கொண்ட இடமாகும். அது அரசாங்கத்தின் மதிப்பீட்டாளர்களின் மதிப்பீட்டுக்கமைய 3357 மில்லியன் ரூபா பெறுமதியுடையதாகும். விஜேராமமாவத்தையிலுள்ள அந்த இல்லம் 46 இலட்சம் மாதாந்த வாடகை பெறக்கூடியது என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் இந்த இல்லத்தின் மீள்புனரமைப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக மாத்திரம் 472.5 மில்லியன் ரூபா அரச நிதி செலவிடப்பட்டுள்ளது. 2021இல் 252 மில்லியன் ரூபாவும், 2022இல் 181.5 மில்லியன் ரூபாவும், 2023இல் 38.7 மில்லியன் ரூபாவும் இவ்வாறு செலவிடப்பட்டுள்ளது. இந்த வீட்டில் மொத்த மதிப்பீட்டு பெறுமதியில் இந்த செலவும் சேர்க்கப்பட வேண்டும். தற்போதும் அரசாங்கம் என்ற ரீதியில் பாரியதொரு செலவை அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. தொடர்ந்தும் இவ்வாறு அநாவசியமாக பாரியதொரு செலவை அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது. இவர்கள் அரசியலமைப்பில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இல்லம் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். நாமறிந்த அரசியலமைப்பில் அவ்வாறானதொரு விடயம் குறிப்பிடப்படவில்லை. சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களிடம் அரசியலமைப்பில் எந்த உறுப்புரையில் அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கேட்க விரும்புகின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/204879
-
யாழில் நிர்மாணிக்கப்பட்ட கலாசார மண்டபத்துக்கு மூன்றாவது முறையாக பெயர் மாற்றம்
இலங்கை: கலாசார மண்டபத்துக்கு 'திருவள்ளுவர்' பெயரை சூட்டியதால் சர்ச்சையா? - இந்தியா செய்தது என்ன? பட மூலாதாரம்,INDIAN HIGH COMMISSION IN COLOMBO படக்குறிப்பு, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையம் கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக இந்திய அரசின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மண்டபத்திற்கான பெயர் சூட்டு நிகழ்வினால் எழுந்த சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட கலாசார மண்டபத்திற்கு ''திருவள்ளுவர் கலாசார மையம்'' எனப் பெயர் சூட்டப்பட்டமைக்கே இவ்வாறு எதிர்ப்பு எழுந்திருந்தது. தமிழ் மக்களின் அடையாளங்களுள் ஒன்றான 'யாழ்ப்பாணம்' என்ற பெயர் நீக்கப்பட்டிருப்பதானது, தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்கும் முயற்சி என அரசியல்வாதிகள் மற்றும் புத்திஜீவிகள் குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையம் எனத் தற்போது பெயர் மாற்றப்பட்டு, சர்ச்சைக்குத் தீர்வு வழங்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையில் செல்போன் வாங்க புதிய கட்டுப்பாடு - ஜன.28 முதல் புதிய விதிகள் அமல் சீனா தொடர்பான பார்வையை இலங்கை ஜனாதிபதி மாற்றிக் கொண்டுள்ளாரா? என்ன நடக்கிறது? இலங்கை: இஸ்லாம் மதம் குறித்து சர்ச்சையாகப் பேசிய பௌத்த துறவிக்கு சிறைத் தண்டனை இந்தியாவுடன் 'எட்கா' உடன்படிக்கையில் கைச்சாத்திட இலங்கையில் எதிர்ப்பு ஏன்? யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தின் நிர்மாணம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரினால் யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் 2015ஆம் ஆண்டு நடப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் முழுமையான நிதியுதவித் திட்டத்தின் கீழ், 12 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் இந்த கலாசார மண்டபம் நிர்மாணிக்கப்பட்டது. இந்த கட்டட நிர்மாணப் பணிகள் 2020ஆம் ஆண்டு நிறைவு பெற்ற போதிலும், சில காரணங்களால் கலாசார மண்டபத்தின் திறப்பு நிகழ்வு பிற்போடப்பட்டது. இதன்படி, இலங்கையில் அப்போதயை பிரதமரான மஹிந்த ராஜபக்ஸ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரால் 2022ஆம் ஆண்டு மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்தக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. எனினும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் இந்தக் கட்டடத்தின் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. பட மூலாதாரம்,MOD SRI LANKA படக்குறிப்பு, யாழ்ப்பாணம் கலாசார மையம் எனப் பெயர் சூட்டப்பட்டிருந்த மண்டபத்திற்கு, திருவள்ளுவர் கலாசார மையம் எனக் கடந்த 18ஆம் தேதி இந்திய அரசாங்கத்தால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோரால் 2023ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கலாசார மண்டபம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டு செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த நிலையில், யாழ்ப்பாணம் கலாசார மையம் எனப் பெயர் சூட்டப்பட்டிருந்த மண்டபத்திற்கு, திருவள்ளுவர் கலாசார மையம் எனக் கடந்த 18ஆம் தேதி இந்திய அரசாங்கத்தால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ''சிறந்த தமிழ் கவிஞரும், தத்துவஞானியுமான திருவள்ளுவரை கௌரவிக்கும் வகையில், யாழ்ப்பாணத்திலுள்ள கலாசார மண்டபத்திற்கு திருவள்ளுவர் கலாசார மையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது" என்று கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இந்த நிலையில், பெயர் மாற்றம் செய்யப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். ''இந்தியாவின் நிதியுதவித் திட்டத்தின்கீழ் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் கலாசார மையம் எனப் பெயரிடப்பட்டதை வரவேற்கிறேன். இதன்மூலம் திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துவது மட்டுமல்லாமல், இந்திய - இலங்கை மக்களுக்கு இடையில் ஆழமான கலாசார, மொழி வரலாற்று மற்றும் நாகரீக பிணைப்புகளுக்கு இதுவொரு சான்று'' என இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தியா vs சீனா: இலங்கை ஜனாதிபதி முதல் பயணமாக இந்தியா செல்வதன் மூலம் உணர்த்தும் சேதி என்ன?17 டிசம்பர் 2024 குடியேறிகளே இல்லாத அமெரிக்கா எப்படி இருக்கும்? ஓர் அலசல்9 மணி நேரங்களுக்கு முன்னர் திருவள்ளுவர் கலாசார மையம் எனப் பெயரிடப்பட்டமைக்கு எதிர்ப்பு படக்குறிப்பு,இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் அடையாளங்களுள் ஒன்று யாழ்ப்பாணம் என்ற பெயர் என்கிறார் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ''ஈழத் தமிழர்களின் கலாசார பாரம்பரியங்களைப் பேணிப் பாதுகாத்து வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்திய அரசால் வழங்கப்பட்ட இந்தக் கலாசார மையம் தமிழ் மக்களின் அடையாளமாக தற்போது காணப்படுகின்றது.'' ''உலகப் பொதுமறையான திருக்குறளை எமக்களித்த திருவள்ளுவர் எமது மதிப்பிற்குரியவர். அவரையும் அவருடைய ஆளுமையையும் போற்றிப் புகழ்வதில் தமிழர்கள் யாருமே பின்நிற்கப் போவதில்லை. கடந்த காலங்களில் இந்திய அரசால் வழங்கப்பட்ட திருவள்ளுவர் சிலைகளை எமது மக்கள் ஆர்வத்துடனும் பெருமிதத்துடனும் பிதிஷ்டை செய்து பராமரித்து வருகின்றனர்'' என்று டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். ''எனினும் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களின் அடையாளங்களுள் ஒன்றான 'யாழ்ப்பாணம்' என்ற பெயர் நீக்கப்பட்டிருப்பதானது, தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்க முனைகின்ற தீய சக்திகளின் மறைகரம் இந்தப் பெயர் மாற்றத்தின் பின்னணியில் இருக்குமோ என்ற நியாயமான சந்தேகத்தை எமது மக்களுக்கு ஏற்படுத்தி இருப்பதை அவதானிக்க முடிகின்றது'' என்று முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். மனித முகங்களைக் காண முடியாததால் சோகத்தில் வாடிய சூரிய மீன் - மீண்டும் புத்துணர்வு பெற வைத்த விநோத யோசனை24 ஜனவரி 2025 எரிமலை வெடிப்பால் நகரமே அழிந்தபோது இந்த ஆண், பெண் கைகளில் பற்றி இருந்தது என்ன? 2,000 ஆண்டுக்கு முந்தைய அற்புத வாழ்க்கை23 ஜனவரி 2025 யாழில் தமிழ் மொழிக்கு மூன்றாவது இடமா? படக்குறிப்பு,"கலாசார மண்டபத்தின் பெயர் சூட்டு நிகழ்வில் தமிழுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டமை கவலை தரும் விடயமாக இருந்தது" என்கிறார் இராமலிங்கம் சந்திரசேகரன் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ் மொழிக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டுள்ளதைப் பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதைக் குறிப்பிட்டிருந்தார். ''இந்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மையமானது திருவள்ளுவர் கலாசார மையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் நானும் அதிதியாகக் கலந்து கொண்டவன் என்ற வகையில் பெயர் மாற்றம் தொடர்பில் திரை நீக்கத்தின்போதுதான் அவதானித்தேன். திருவள்ளுவர் கலாசார மையம் எனப் பெயர் மாற்றியது குற்றம் அல்ல. யாழ்ப்பாணத்திற்கே உரித்தான பெயர்களான 'யாழ் கலாசார மையம்' அல்லது 'யாழ் பண்பாட்டு மையம்' என்று பெயர் சூட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து" என்று தெரிவித்தார். அதோடு, "பெயர் சூட்டும் நிகழ்வில் திருவள்ளுவர் கலாசார மையம் எனக் காட்சிப்படுத்தப்பட்ட இலத்திரனியல் திரையில் தமிழுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டமை கவலை தரும் விடயமாக இருந்தது. அதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்'' என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கூறியுள்ளார். ராமர் கோயில் திறந்து ஓராண்டு நிறைவு - மாறி வரும் அயோத்தியின் பேசப்படாத மறுபக்கம்8 மணி நேரங்களுக்கு முன்னர் மேடையில் நடிகையிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட நடிகர் பாலகிருஷ்ணா - என்ன நடந்தது?51 நிமிடங்களுக்கு முன்னர் சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்தது இந்தியா பட மூலாதாரம்,MOD SRI LANKA படக்குறிப்பு,சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, தற்போது யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் கலாசார மையம் எனப் பெயரிடப்பட்ட கலாசார மண்டபத்தின் பெயர் திருவள்ளுவர் கலாசார மையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் பிபிசி தமிழ், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் மின்னஞ்சல் மூலம் வினவிய போதிலும், இந்திய உயர்ஸ்தானிகராலயம் அதற்கு இதுவரை பதில் வழங்கவில்லை. திருவள்ளுவர் கலாசார மையம் எனப் பெயர் சூட்டமைப்பட்டதை அடுத்து எழுந்த சர்ச்சைக்கு இந்திய அரசாங்கம் தற்போது முற்றுபுள்ளி வைத்துள்ளது. இதன்படி, கலாசார மையத்திற்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையம் எனத் தற்போது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெயர் மாற்றம் தொடர்பில் எழுந்த சர்ச்சை முடிவடைந்துள்ளதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czxkp6gg2d3o