Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. வெடித்துச் சிதறிய தென்கொரியா விமானம் - நிபுணர்கள் எழுப்பிய சந்தேகம்: நீடிக்கும் மர்மம் புதிய இணைப்பு தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து அங்கு எதிர்வரும் ஏழு நாட்களுக்கு தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதன்படி, அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடி அரை கொடிக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது முதலாம் இணைப்பு தாய்லாந்தின் பாங்காங் நகரில் இருந்து தென்கொரியா நோக்கி 181 பேருடன் பயணித்த விமானம் முவான் விமான நிலையத்தில் கோர விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. இந்த கோர விபத்து சம்பவம் மட்டுமின்றி தென்கொரியாவை முழு உலகையும் உலுக்கி சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. விபத்தில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் மீதம் உள்ளவர்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக தென்கொரியாவின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பறவை மட்டுமின்றி மோசமான வானிலையும் இந்த கோர விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. வழக்கத்திற்கு மாறான லேண்டிங் இந்நிலையில் சமூக வலைதளங்களில் முன்னாள் விமானிகள் உள்ளிட்ட பலரும் விபத்து குறித்து பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். அந்நாட்டின் ஊடக அறிக்கைகளின்படி, "விமானத்தின் சக்கரங்கள் உள்ளிட்ட லேண்டிங் கியர் தரையிறங்கும் போது செயல்படவில்லை. எனவேதான் வழக்கத்திற்கு மாறாக லேண்டிங் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. சக்கரங்களில் பறவை சிக்கியிருந்தால் கூட இதுபோல் அவை செயல்படாமல் போக வாய்ப்புள்ளது" என தெரிவிக்கப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் யாரையும் பார்க்க முடியவில்லை எனினும் 3 கி.மீ., நீளமுள்ள விமான ஓடுபாதையில் அந்த விமானம் ஏன் இவ்வளவு வேகமாக வந்தது என்பது தான். மேலும், இந்த விமானம் முன்னரே திட்டமிடப்பட்டு வழக்கத்திற்கு மாறாக லேண்டிங் செய்யப்பட்டது என்றால் ஏன் தீயணைப்பு வீரர்கள் யாரையும் அங்கு பார்க்க முடியவில்லை என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது. இதுபோல் லேண்டிங் கியர் பழுதானால் அந்த விமானம் நீண்ட நேரத்திற்கு வானில் வட்டமிட வேண்டும். அதாவது, பழுதுக்கான தீர்வை கண்டுபிடிக்கும் வரையோ அல்லது தீப்பிடிப்பதை தடுக்க எரிபொருள் முழுவதுமாக காலியாகும் வரையோ வட்டமிட வேண்டும் என்பது ஒரு வழிமுறையாக உள்ளது. ஆனால், இந்த விமானம் வழக்கத்திற்கு மாறாக தரையிறங்குவதற்கு தாயாராகும் முன்னர் வானில் வட்டமிடவில்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. எனவே, இதற்கு என்ன காரணம் எனவும் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். https://ibctamil.com/article/179-dead-south-koreas-worst-plane-crash-in-decades-1735531506
  2. நாகப்பட்டினம் - காங்கேசன் துறை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம் 30 DEC, 2024 | 02:06 PM நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன் துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை நாற்பது ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக அந்த சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டது. பிறகு மீண்டும் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்த சேவை நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நிறுத்தம் செய்யப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக மற்றும் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் திகதி முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இதற்கான முன்பதிவு நத்தார் தினமான டிசம்பர் 25 ஆம் திகதி முதல் தொடங்கியிருக்கிறது. மேலும் வாரத்திற்கு ஆறு நாட்கள் இந்த சேவை கிடைக்கும் என்றும், ஒரு முறை சென்று வருவதற்கான போக்குவரத்து கட்டணம் இந்திய மதிப்பில் 35 ஆயிரம் ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முறையேனும் தமிழகம் மற்றும் இலங்கைக்கு இடையேயான கப்பல் சேவை தொடர்ந்து நீடிக்குமா..!? என்ற எண்ணம் பயணிகளிடத்தில் ஏற்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிட்டதக்கது. https://www.virakesari.lk/article/202535
  3. பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, ஸ்பேடெக்ஸ் திட்டத்தில் இரண்டு சிறிய விண்கலங்கள் ஏவப்பட்ட உள்ளன இந்தியாவின் ஸ்பேடெக்ஸ் (SpaDeX) விண்கலன்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி டிசம்பர் 30ஆம் தேதி இரவு 10:00 மணிக்கு விண்ணில் ஏவப்படுகின்றன. 'ஸ்பேடெக்ஸ்' என்பது Space Docking Experiment (விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வு பணி) என்பதன் சுருக்கம். ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் நோக்கம் விண்கலத்தை 'டாக்' (Dock- இணைப்பது) மற்றும் 'அன்டாக்' (Undock- இணைப்பைத் துண்டிப்பது) செய்வதற்குத் தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கி அதை செயல்படுத்துவதாகும். இவை பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. டிசம்பர் 21 அன்று இந்த திட்டத்திற்கான ராக்கெட், ஏவுதளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பூமிக்கும் வானில் இரட்டை சூரியன்கள் இருந்தனவா? ஆய்வில் புதிய தகவல் சூரியனுக்கு மிக அருகில் பாதிப்பின்றி நெருங்கிச் சென்று வரலாறு படைத்த பார்க்கர் விண்கலம் சுட்டெரிக்கும் சூரியனின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த நாசா விண்கலம் - அதீத வெப்பத்தை தாங்குவது எப்படி? மனிதர்கள் நிலா மற்றும் செவ்வாயில் வீடு கட்ட வித்திடும் ஆய்வு - லடாக்கில் ஒரு விண்வெளி அனுபவம் ஸ்பேடெக்ஸ் திட்டம் என்றால் என்ன? ஸ்பேடெக்ஸ் திட்டத்தில் இரண்டு சிறிய விண்கலங்கள் ஏவப்பட உள்ளன. இந்த இரண்டு விண்கலங்களும் தோராயமாக 220 கிலோ (தனித்தனியாக) எடை கொண்டவை. இவை பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும். இவை பூமியில் இருந்து 470 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு, புவியின் சுற்று வட்டப்பாதையில் பயணிக்கும். இவற்றில் ஒன்றின் பெயர் சேசர் (Chaser- SDX01), மற்றொன்று டார்கெட் (Target- SDX02). இந்த திட்டத்தின் நோக்கங்கள் என்பது, வெற்றிகரமாக விண்கலன்களை ஒருங்கிணைப்பது (Docking), இணைக்கப்பட்ட விண்கலங்களுக்கு இடையேயான ஆற்றல் பரிமாற்றம், இணைப்பைத் துண்டித்த பிறகு பேலோட் (Payload- ஒரு விண்கலம் சுமந்து செல்லக்கூடிய பொருட்கள் அல்லது அதன் திறன்) தொடர்பான நடைமுறைகளை கையாளுதல். ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ், ஒரு விண்கலத்தை 'டாக்' மற்றும் 'அன்டாக்' செய்வதற்கான திறன் நிரூபிக்கப்படும். ஒரு விண்கலத்தை மற்றொரு விண்கலத்துடன் இணைப்பது 'டாக்கிங்' (Docking) என்றும், விண்வெளியில் இணைக்கப்பட்ட இரண்டு விண்கலங்களைப் பிரிப்பது 'அன்டாக்கிங்' (Undocking) என்றும் அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் கொந்தளிக்கும் எரிமலையின் விளிம்பிற்குச் சென்ற குழந்தை - என்ன நடந்தது?29 டிசம்பர் 2024 மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம்: மத்திய அரசின் மறுஆய்வு முடிவால் என்ன நடக்கும்? சுற்றுச்சூழல் நிபுணர்கள் தகவல்29 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, விண்வெளிக்கு அனுப்பப்படும் செயற்கைக்கோள்கள் பூமியிலிருந்து 470 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றுவட்டப்பாதையில் பயணிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் ஏன் மிகவும் முக்கியமானது? ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் மற்றொரு நோக்கம் குறைந்த செலவில் தொழில்நுட்பத் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதை நடைமுறையில் நிரூபித்துக்காட்டுவதாகும். இந்தியாவின் விண்வெளி தொடர்பான எதிர்கால லட்சியங்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் மிகவும் அவசியம். விண்வெளியில், இந்திய விண்வெளி நிலையத்தை உருவாக்கி, அதை செயல்படுத்துவது, இந்திய விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்புவது போன்றவை இந்த எதிர்கால திட்டங்களில் அடங்கும். ஒரு பொதுவான திட்டத்திற்காக பல ராக்கெட்டுகளை ஏவ வேண்டியிருக்கும் போது 'இன்-ஸ்பேஸ் டாக்கிங்' (In-space docking) தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. உதாரணத்திற்கு, ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்பப்படும் இரண்டு செயற்கைக்கோள்களில் ஒன்று சேசர் (Chaser- SDX01) மற்றும் மற்றொன்று டார்கெட் (SDX02), இவை இரண்டுமே அதிவேகத்தில் பூமியைச் சுற்றி வரும். அவை இரண்டும் ஒரே சுற்றுப்பாதையில் ஒரே வேகத்தில் நிலைநிறுத்தப்படும். ஆனால் இரண்டுக்கும் இடையே சுமார் 20 கிலோமீட்டர் இடைவெளி இருக்கும். இந்த உத்தி 'ஃபார் ரெண்டெஸ்வஸ்' (Far Rendezvous) என்று அழைக்கப்படுகிறது. பிரம்மபுத்திராவின் குறுக்கே பிரமாண்ட அணை கட்ட தயாராகும் சீனா - இந்தியா, வங்கதேசத்திற்கு என்ன பாதிப்பு?29 டிசம்பர் 2024 கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?28 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் இரண்டு சிறிய விண்கலங்களை இந்தியா அனுப்பவுள்ளது இந்தியாவுக்கு இத்திட்டம் ஏன் முக்கியமானது? ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றிக்குப் பிறகு, விண்வெளி டாக்கிங் (Docking) தொழில்நுட்பத்தைக் கொண்ட உலகின் நான்காவது நாடாக இந்தியா திகழும். விண்வெளியில் இந்த டாக்கிங் என்பது மிகவும் சிக்கலான ஒரு பணி. அதாவது விண்கலன்களை இணைப்பது விண்வெளியில் அவ்வளவு சுலபமல்ல. தற்போது, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே இந்த டாக்கிங் தொழில்நுட்பம் உள்ளது. ஸ்பேடெக்ஸ் திட்டம் மூலம் விண்வெளித் துறையின் டாக்கிங் தொழில்நுட்பத்தில் இந்தியாவும் கால் பாதிக்கிறது. இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ஜிதேந்திர சிங் கூறுகையில், "டாக்கிங் தொழில்நுட்பத்தில் நாம் நிபுணத்துவம் பெறுவதன் மூலம், விண்வெளித்துறையில் சிறந்து விளங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறும்" என்று கூறினார். 'சந்திரயான் -4' போன்ற இந்தியாவின் நீண்ட கால விண்வெளித் திட்டங்களுக்கும், எதிர்காலத்தில் இந்திய விண்வெளி நிலையத்தை உருவாக்குவதற்கும் இந்த ஸ்பேடெக்ஸ் திட்டம் முக்கியமானது என்று ஜிதேந்திர சிங் கூறினார். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் 'ககன்யான்' திட்டத்திற்கும் இந்த 'டாக்கிங்' தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார். 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மூத் யானை குட்டியின் உடல் மீட்பு - சுவாரஸ்ய தகவல்கள்26 டிசம்பர் 2024 அமெரிக்கா, பிரிட்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாடவே பல ஆண்டுகள் தடை இருந்தது ஏன் தெரியுமா?25 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, இந்த திட்டத்தின் கீழ், மணிக்கு 28,800 கிலோமீட்டர் வேகத்தில் சுழலும் இரண்டு செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த இஸ்ரோ முயற்சிக்கும் வேறு என்ன நடக்கும்? இந்த திட்டத்தின் நோக்கங்களில் ஒன்று, 'டாக்கிங்' தொழில்நுட்பம் மூலம் இணைக்கப்படும் விண்கலங்களுக்கு இடையேயான ஆற்றல் பரிமாற்றத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது. இது ஸ்பேஸ் ரோபோடிக்ஸ் (Space robotics- விண்வெளித் திட்டங்களில் மனிதர்களுக்கு மாற்றாக பிரத்யேக ரோபோக்களைப் பயன்படுத்துவது) போன்ற எதிர்கால ஆய்வுத் திட்டங்களுக்கு உதவியாக இருக்கும். இதுதவிர, விண்கலத்தை முழுமையாக கட்டுப்படுத்துவது மற்றும் இணைப்பைத் துண்டித்த பிறகு (Undock) பேலோட் தொடர்பான நடைமுறைகளை கையாள்வது போன்ற விஷயங்களும் இந்த திட்டத்தின் நோக்கங்களில் ஒரு பகுதியாகும். ஸ்பேடெக்ஸ் பிஎஸ்எல்வி-இன் நான்காவது கட்டத்தை, அதாவது POEM-4 (PSLV Orbital Experimental Module) என்பதை சோதனைகளுக்குப் பயன்படுத்தும். இந்த கட்டத்தில், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட 24 பேலோடுகள் எடுத்துச் செல்லப்படும். இந்த திட்டத்தின் கீழ், மணிக்கு 28,800 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இரண்டு செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த இஸ்ரோ முயற்சிக்கும். இது மிகவும் சவாலான ஒரு பணியாக இருக்கும். எனவே இதை மிகவும் எச்சரிக்கையாகவும் கையாள வேண்டியது அவசியம். ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் வானில் எரிகற்கள் பொழியும் அதிசயம் பற்றி தெரியுமா?24 டிசம்பர் 2024 ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலை நெருங்குவதில் இத்தனை ஆபத்துகளா? ஆய்வாளரின் நேரடி அனுபவம்24 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, இது ஸ்பேஸ் ரோபோடிக்ஸ் போன்ற எதிர்கால ஆய்வுத் திட்டங்களுக்கு உதவியாக இருக்கும் சந்திரயான்-4 திட்டம் என்றால் என்ன? சந்திரயான்-4 திட்டத்தின் கீழ் எல்எம்வி-3 மற்றும் பிஎஸ்எல்வி ஆகிய இரண்டு ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி, நிலவுக்கு வெவ்வேறு கருவிகளின் இரண்டு தொகுப்புகள் அனுப்பப்படும். இந்த விண்கலம் நிலவில் தரையிறங்கி, மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து, ஒரு பெட்டியில் வைத்து நிலவில் இருந்து பூமிக்கு திரும்பும். இதில் ஒவ்வொரு செயலையும் நிறைவேற்ற பல்வேறு கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் வெற்றி பெற்றால், விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இந்தியா மேலும் ஒருபடி முன்னோக்கிச் செல்லும். இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து, 2104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 2040ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவில் தரையிறக்கும் இலக்கை நோக்கிய இந்தியாவின் அடுத்தபடியாக இது பார்க்கப்படுகிறது. இதுகுறித்து முன்னர் பிபிசி தமிழிடம் பேசிய விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன், "முதலில் நமக்கு கிடைத்த தகவல்கள், நிலவை சுற்றி வந்த விண்கலத்திடம் இருந்து வந்தன. அதன் பின், நிலவில் தரையிறங்கிய போது, ஏற்கெனவே கிடைத்த தகவல்களுடன் ஒப்பிட்டு பார்த்து, நமது புரிதலை மேம்படுத்திக் கொண்டோம். இப்போது அடுத்தக்கட்ட விரிவான ஆய்வுக்காக நிலவின் மண், பாறை மாதிரிகளை சேகரிக்கவுள்ளோம்." என்று கூறியிருந்தார். சந்திரனின் மேற்பரப்பு மாதிரிகளை சேகரிப்பது இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது என்றும் த.வி.வெங்கடேஸ்வரன் தெரிவித்திருந்தார். "1967 முதல் சர்வதேச அளவில் நடைமுறையில் உள்ள சந்திரன் ஒப்பந்தத்தின்படி, எந்தவொரு தனி நாடும் சந்திரனுக்கு உரிமை கோர முடியாது. அந்த ஒப்பந்தத்தின்படி, சந்திரனில் இருந்து கொண்டு வரப்பட்ட மாதிரிகள், பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்ட நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்." என்று கூறியிருந்தார் த.வி.வெங்கடேஸ்வரன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, சந்திரயான்-3க்கு பிறகு இஸ்ரோ தற்போது சந்திரயான்-4 திட்டத்திற்கு தயாராகி வருகிறது https://www.bbc.com/tamil/articles/clyjp4rjrz4o
  4. அண்ணா பல்கலையில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் : தமிழகத்தில் பரபரப்பு சென்னையில் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் டிசம்பர் 23 ஆம் திகதியன்று மாணவி ஒருவர் பாலியல் வன்னொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாதிக்கப்பட்ட மாணவி டிசம்பர் 23 ஆம் திகதியன்று இரவு உணவுக்குப் பிறகு மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். பாலியல் வன்கொடுமை அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குறித்த மாணவியை அச்சுறுத்தி பிறகு மாணவியின் நண்பரை அங்கிருந்து அடித்து விரட்டிவிட்டு குறித்த பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார். அத்தோடு, இந்த விடயத்தை வெளியில் கூறினால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய காணொளியை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என மிரட்டியதால் பாதிக்கப்பட்ட மாணவி பயத்தில் இருந்துள்ளார். இதையடுத்து, உடன் இருக்கும் மாணவிகள் கேட்கவும் நடந்ததை தெரிவித்த பாதிக்கப்பட்ட மாணவி இதையடுத்து, அவரின் பெற்றோருக்கும் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அடுத்த நாள் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மாணவி அளித்த புகாரின் பேரில் அந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். காவல்துறை விசாரணை அதன் அடிப்படையில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபரை பாதிக்கப்பட்ட மாணவி அடையாளம் காட்டியுளள்ளார். இதையடுத்து, டிசம்பர் 25 ஆம் திகதியன்று 37 வயதான ஞானசேகரன் என்ற நபர் நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்யும் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரிவித்த மாணவி, குறித்த நபர் சம்பவத்தன்று பல்கழைக்கழகத்தில் தனக்கு தெரிந்தவர் இருப்பதாக தெரிவித்து தொலைபேசியில் ஒருவருடன் உரையாடியதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், குறித்த நேரத்தில் சந்தேக நபரின் தொலைபேசி இயங்கவில்லை என காவல்துறை விசாரணையில் தெரிவித்த நிலையில் காவல்துறையினர் உண்மைகளை மறைப்பதாக கூறி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. அத்தோடு, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஞானசேகரன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்டதாக கூறப்படும் பழைய புகைப்படம் ஒன்று வைரலாகி வந்தது. தொடர் சர்ச்சை இவ்வாறு குறித்த விடயம் தொடர் சர்ச்சைக்குள்ளாக்கபட்டு வந்த நிலையில், இது போல சம்பவம் இனி நடக்க கூடாது என தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாட்டையடி போராட்டத்தை மேற்கொண்ட விடயமும் பரப்பரப்பாக பேசப்பட்டது. இவ்வாறான பிண்ணனியில், குறித்த சம்பவம் தொடர்பில் தவெக கட்சியின் தலைவர் விஜய் தனது கைப்பட எழுதிய கடித நகலை இன்று (30) காலை வெளியிட்டிருந்தார். இந்தநிலையில், தவெக நிர்வாக தலைமை கட்சி உறுப்பினர்களுக்கு குறித்த கடித நகலை அனைத்து பெண்களுக்கு விநியோகிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சென்னையின் பல்வேறு பல்கழைக்கழக நுழைவாயில், பேருந்து நிலையம் மற்றும் பல இடங்களில் பெண்களுக்கு குறித்த கடித நகல் வழங்கப்பட்டு விளிப்புணர்வை ஏற்படுத்தி வந்துள்ளனர். இந்தநிலையில், டீநகரில் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறித்த கடித நகலை வழங்கிக்கொண்டிருந்த போது அங்கு அவர் உட்பட கட்சி நிருவாகிகள் அணைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னனுமதி இன்றி குறித்த கடித நகல் வழங்கப்பட்டதால் கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்திருக்கும் தவெக கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்ட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியுள்ளதுடன் இது குறித்து இந்திய ஊடகங்கள் அடுத்தடுத்து செய்தி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/anna-university-abuse-tvk-pussy-anand-arrested-1735557097#google_vignette
  5. பிரபல சிங்கள ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட (Prageeth Ekneligoda) இராணுவத்தினரால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கண்கண்ட சாட்சியொருவர் பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார். சிங்கள மொழி யூடியூப் ஊடகவியலாளரான சுதந்த திலகசிறியின் சுதா கிரியேசன்ஸ் SUDA CREATION சேனலில் நேற்று (29) மாலை நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் மூலம் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. மெக்கானிக்கல் பிரிவின் சிப்பாய் குறித்த நிகழ்ச்சியில் தற்போதைக்கு வெளிநாட்டில் வதியும், இலங்கைக் கடற்படையின் முன்னாள் சிப்பாய என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒருவர் கலந்து கொண்டிருந்தார். இவர் முன்னர் கடற்படையின் மெக்கானிக்கல் பிரிவில் சிப்பாயாக கடமையாற்றிய பிரியசாந்த என்று அடையாளப்படுத்தப்படுகின்றது. கடற்படைச் சிப்பாய் பிரியசாந்தவின் தகவல்களின் பிரகாரம் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு, மட்டக்களப்பின் எருமைத் தீவில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார். பிரகீத் எக்னெலிகொடவைக் கடத்திச் சென்ற குழுவில் எதிர்பாராதவிதமாக தானும் இணைக்கப்பட்டிருந்ததாகவும், அவரைக் கடத்திச் சென்ற போது அவர் ஊடகவியலாளர் என்பதோ, பிரகீத் எக்னெலிகொட என்பதோ தனக்குத் தெரிந்திருக்கவில்லை என்றும் குறித்த சிப்பாய் தெரிவித்துள்ளார். மர்மமான முறையில் வாகன விபத்து அதன் பின்னர் மட்டக்களப்பின் எருமைத் தீவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரகீத் எக்னெலிகொடவின் தலையில் மூன்று துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும், செயலாளர் ஒருவரின் உத்தரவின் பேரிலேயே குறித்த படுகொலை நடத்தப்பட்டதாக அதற்குப் பொறுப்பாக இருந்த உயரதிகாரி தன்னிடம் தெரிவித்ததாகவும் கடற்படைச் சிப்பாய் பிரியசாந்த தொடர்ந்தும் தெரிவித்துள்ளார். பிரகீத் எக்னெலிகொடவின் தலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய ரில்வான் எனப்படும் கொலையாளியும் பின்னொரு காலத்தில் மர்மமான முறையில் வாகன விபத்தொன்றில் கொல்லப்பட்டதாகவும் பிரியசாந்த தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டதாக நம்பப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் சம்பவத்தில், முதன்முறையாக அவர் படுகொலை செய்யப்பட்டதாக நம்பகமான ஒரு தகவல் முதல்தடவையாக கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். https://tamilwin.com/article/prageeth-eknaligoda-kidnapped-and-murder-1735559483
  6. ஜிம்மி கார்டர் காலமானார்: வெள்ளை மாளிகையில் தடம் பதித்த வேர்க்கடலை விவசாயி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம் வாழ்ந்த முன்னாள் அதிபர் என்ற பெருமையைப் பெற்றார் ஜிம்மி கார்டர் 30 டிசம்பர் 2024, 02:02 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் காலமானார். அவருக்கு வயது 100. கார்டரின் இறப்பை அவரது அறக்கட்டளையான கார்டர் சென்டர் உறுதிப்படுத்தியுள்ளது. ''ஜார்ஜியாவில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினர் சூழ்ந்திருக்க கார்டர் அமைதியாகக் காலமானார்'' என கார்டர் சென்டர் தெரிவித்துள்ளது. ''எனது தந்தை ஒரு ஹீரோ. எனக்கு மட்டுமல்ல அமைதி, மனித உரிமை, தன்னலமற்ற அன்பு ஆகியவற்றை நம்புவர்களுக்கு அவர் ஒரு ஹீரோ'' என ஜிம்மி கார்டரின் மகன் சிப் கார்டர் கூறியுள்ளார். அமெரிக்காவின் 39ஆவது அதிபராக 1977 முதல் 1981 வரை ஜிம்மி கார்டர் பதவி வகித்தார். 100 வயதான அவர், அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம் வாழ்ந்த முன்னாள் அதிபர் என்ற பெருமையைப் பெற்றார். அவரது பதவி காலத்தில் வெளியுறவுக் கொள்கை தொடர்பாகப் பல பிரச்னைகளை எதிர்கொண்டார். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர், மீண்டும் அதிபராகும் முயற்சியில் ரொனால்ட் ரீகனிடம் தோல்வியடைந்தார். மெலனொமா எனும் தோல் புற்றுநோய் அவருக்கு இருந்தது. மெலனோமா அவரது கல்லீரல் மற்றும் மூளைக்குப் பரவியது. கடந்த ஆண்டு அவரது மருத்துவச் சிகிச்சை முடிந்ததைத் தொடர்ந்து, அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார் என அறிவிக்கப்பட்டது. பிரம்மபுத்திராவின் குறுக்கே பிரமாண்ட அணை கட்ட தயாராகும் சீனா - இந்தியா, வங்கதேசத்திற்கு என்ன பாதிப்பு?29 டிசம்பர் 2024 சூரியனுக்கு மிக அருகில் பாதிப்பின்றி நெருங்கிச் சென்று வரலாறு படைத்த பார்க்கர் விண்கலம்27 டிசம்பர் 2024 இயேசுவின் குழந்தைப் பருவ வாழ்க்கை எப்படி இருந்தது? பழங்கால பிரதிகளில் கிடைத்த தகவல்27 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,THE CARTER CENTER/X படக்குறிப்பு, சக ஜனநாயக கட்சி உறுப்பினரான கார்டரை "அன்புள்ள நண்பர்" என்று அழைத்த பைடன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார் தனது மனிதாபிமான செயல்களால் நோபல் பரிசை ஜிம்மி கார்டர் பெற்றார். அமெரிக்க அதிபராக அவரது பதவி காலம் முடிந்தபிறகு நோபல் பரிசை பெற்றார். 100 வயதில் காலமான முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டரை "கொள்கை, நம்பிக்கை மற்றும் பணிவு கொண்டவர்" என்று கூறி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். சக ஜனநாயக கட்சி உறுப்பினரான கார்டரை "அன்புள்ள நண்பர்" என்று அழைத்த பைடன், வாஷிங்டன் டிசியில் அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என தெரிவித்தார். அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப், ஜிம்மி கார்டருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். ''நம் நாட்டிற்கு ஒரு முக்கியமான நேரத்தில் வந்த சவால்களை ஜனாதிபதியாக இருந்த ஜிம்மி எதிர்கொண்டர். மேலும் அவர் அனைத்து அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். அதற்காக, நாம் அனைவரும் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்.'' என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். யார் அவர்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜார்ஜியாவில் உள்ள தனது வேர்க்கடலை பண்ணையில் ஜிம்மி கார்டர் ஜேம்ஸ் ஏர்ல் கார்ட்டர், அக்டோபர் 1, 1924 அன்று ஜார்ஜியாவில் பிறந்தார். கார்ட்டர், நான்கு குழந்தைகளில் மூத்தவர். அவர்களது குடும்ப வியாபாரமான வேர்க்கடலை வியாபாரத்தை,அவரது தந்தை தொடங்கினார். அவரது தாயார் ஒரு செவிலியர். பொருளாதார வீழ்ச்சி மற்றும் அவரது மத நம்பிக்கையின் தாக்கத்தால், கார்டரின் அரசியல் தத்துவம் வடிவம் பெற்றது. உயர்நிலைப் பள்ளியில் ஒரு நட்சத்திர கூடைப்பந்து வீரரான அவர் அமெரிக்க கடற்படையில் ஏழு ஆண்டுகள் பணி புரிந்தார். அப்போது அவர் தனது சகோதரியின் நண்பரான ரோசலினை மணந்தார். பின்னர், நீர்மூழ்கிக் கப்பல் அதிகாரியானார். ஆனால் 1953 இல் அவரது தந்தை இறந்த பிறகு, குடும்பப் பண்ணையை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு ஊருக்குத் திரும்பினார். முதல் ஆண்டு பயிர் வறட்சியால் தோல்வியடைந்தது, ஆனால் கார்ட்டர் திறமையாகக் செயல்பட்டு லாபம் ஈட்டினார். உள்ளூர் பள்ளி மற்றும் நூலக வாரியங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் அவர் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு அனுபவம் பெற்ற பிறகு, கார்ட்டர் ஜார்ஜியா செனட்டிற்கு போட்டியிட முடிவு செய்தார். கருக்கலைப்பு கருக்கலைப்பு பற்றிய தாராளவாதக் கருத்துக்களுடன் தனது கிறிஸ்தவ நம்பிக்கையை சமநிலைப்படுத்த கார்டர் போராடினார். கருக்கலைப்பு தொடர்பான பெண்களின் உரிமைகளை அவர் ஆதரித்தார், ஆனால் அதற்கான நிதியை அதிகரிக்க மறுத்துவிட்டார். 1974 இல் அவர் தனது அதிபர் பிரசாரத்தைத் தொடங்கியபோது, வாட்டர்கேட் ஊழல் பிரச்னையில் இருந்து தேசம் மீண்டு கொண்டிருந்தது. நேர்மையான கடலை விவசாயியாக கார்ட்டர் தன்னை வெளிப்படுத்தினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cvgnz031326o
  7. புதிய இராணுவ, கடற்படை தளபதிகள் நியமனம் Published By: DIGITAL DESK 3 30 DEC, 2024 | 04:48 PM (எம்.மனோசித்ரா) இராணுவம், கடற்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரின் சேவை நீடிப்பு நிறைவடைந்துள்ளதோடு, விமானப்படை தளபதியின் சேவை நீடிப்பு அடுத்த மாதம் நிறைவடையவுள்ளது. அதற்கமைய நாளை புதன்கிழமை இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள் பதவியேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவின் ஓய்வையடுத்து, இலங்கை இராணுவத்தின் 25ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பதவியேற்கவுள்ளார். மேலும் கடற்படையின் தலைமை அதிகாரியான ரியர் அட்மிரல் காஞ்சன பனகொட கடற்படையின் 26 ஆவது தளபதியாக பதவியேற்க உள்ளார். பண்டாரவளை எஸ். தோமஸ் கல்லூரியின் பழைய மாணவரான ரியர் அட்மிரல் பனாகொட, 1989ஆம் ஆண்டு நிறைவேற்றுப் பிரிவின் 19ஆவது உள்வாங்கலின் கெடட் அதிகாரியாக கடற்படையில் சேர்ந்தார். இதேவேளை விமானப்படையின் தற்போதைய தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்சவின் பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடையவுள்ளது. ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவுக்கான பாரம்பரிய அணிவகுப்பை இலங்கை இராணுவம் திங்கட்கிழமை நடத்தியது. மேலும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவிக்கு ஓய்வுபெற்ற இராணுவ, விமானப்படை அல்லது கடற்படைத் தளபதி ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/202532
  8. “காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா” : வவுனியாவில் ஆர்ப்பாட்டம் 30 DEC, 2024 | 03:48 PM “காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா” என கோஷம் எழுப்பி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் இன்று (30) நடத்தப்பட்டது. வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களையும் ஏந்தியவாறு “காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே”, “இராணுவத்தினரிடம் கையில் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன?”, “ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா”, “15 வருடமாக போராடும் எமக்கு விடிவு இல்லையா” என பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா அமர்வில் எமக்கான நீதியை பெற்றுத் தர ஐ.நா வலியுறுத்த வேண்டும். 2025ஆம் ஆண்டிலாவது எமது 15 வருட போராட்டத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றனர். இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/202556
  9. இலங்கைக்கான உதவிகள் தொடரும் இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை சீன அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என இலங்கைக்கான சீன தூதுவர் குயி சேகன்ஹோங் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சீன நாட்டு அரசாங்கத்தின் நிவாரணப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. கிழக்கு மாகாண ஆளுனர் இலங்கைக்கான சீன தூதுவரிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த நிவாரணம் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வு மட்டக்களப்பு திராய்மடுவில் உள்ள புதிய மாவட்ட செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான சீன தூதுவர் குயி சேகன்ஹோங் கலந்துகொண்துடன் சீனதூதரகத்தின் பிரதம அரசியல் பிரிவிற்கான அதிகாரி குயின் லிஹோன்,மேலதிக அரசாங்க அதிபர்களான சிறிக்காந்த், முகுந்தன் மற்றும் தூதரக அதிகாரிகள்,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 770 குடும்பங்களுக்கான நிவாரண பொருட்கள் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக மாவட்ட அரசாங்க அதிபரிடம் வழங்கிவைக்கப்பட்டன. -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- https://tamil.adaderana.lk/news.php?nid=197997
  10. இஸ்ரேலிய படையினரால் கைதுசெய்யப்பட்ட மருத்துவர் சர்ச்சைக்குரிய தடுப்பு முகாமில் - விடுதலையான கைதிகள் தகவல் 30 DEC, 2024 | 11:22 AM இஸ்ரேலிய படையினரால் கைதுசெய்யப்பட்ட காசாமருத்துவமனையின் இயக்குநர் தடுப்பு முகாம் என கருதப்படும் இஸ்ரேலின் சர்ச்சைக்குரிய இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வார இறுதியில் விடுதலை செய்யப்பட்டுள்ள இரண்டு பாலஸ்தீனிய கைதிகள் இதனை தெரிவித்துள்ளனர். கமால் அத்வான் மருத்துவமனை மீது இஸ்ரேலிய படையினர் வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்ட பின்னர் மருத்துவர் அபு சபியாவை எவரும் இதுவரை காணவில்லை. ஹமாஸ் உறுப்பினர் என சந்தேகிப்பதால் அவரை தடுத்துவைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.மருத்துவமனை ஹமாசின் கட்டளை பீடமாக செயற்பட்டது என இஸ்ரேல் தெரிவித்துள்ள போதிலும் அதற்கான ஆதாரங்களை வெளியிடவில்லை. இதேவேளை கைதுசெய்யப்பட்ட வைத்தியர் எங்கிருக்கின்றார் என்பதற்கான விபரங்களை வெளியிடுமாறு அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேவேளை வைத்தியரும் மருத்துவமனையில் கைதுசெய்யப்பட்ட ஏனையவர்களும் காசா எல்லையில் உள்ள இஸ்ரேலின் நெகெவ் பாலைவனத்தில் உள்ள இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என விடுதலை செய்யப்பட்டுள்ள கைதிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவரை தாங்கள் பார்த்ததாக வார இறுதியில் விடுதலை செய்யப்பட்டுள்ள இரண்டு கைதிகள் தெரிவித்துள்ளனர் இதேவேளை அவரது பெயர் வாசிக்கப்பட்டதை கேட்டதாக விடுதலை செய்யப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/202523
  11. 30 DEC, 2024 | 11:34 AM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வேக்கு எதிராக புலாவாயோ, குவீன்ஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 234 ஓட்டங்களைக் குவித்த ரஹ்மத் ஷா, ஆப்கானிஸ்தான் சார்பாக அதிகூடிய டெஸ்ட் இன்னிங்ஸ் ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனையை நிலைநாட்டினார். இதற்கு முன்னர் அபு தாபி விளையாட்டரங்கில் இதே அணிக்கு எதிராக 2021ஆம் ஆண்டு ஹஷ்மத்துல்லா ஷஹிதி குவித்த ஆட்டம் இழக்காத 200 ஓட்டங்களே ஆப்கானிஸ்தான் சார்பாக தனிநபருக்கான அதிகூடிய டெஸ்ட் ஓட்டங்களாக இருந்தது. எவ்வாறாயினும், இப் போட்டியில் ஹஸ்மத்துல்லா ஷஹிதி ஆட்டம் இழக்காமல் 179 ஓட்டங்களைப் பெற்றுள்ளதால் ரஹ்மத் ஷாவின் புதிய சாதனை முறியடிக்கப்படலாம் என கருதப்படுகிறது. ரஹ்மத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷஹிதி ஆகிய இருவரே ஆப்கானிஸ்தான் சர்பாக இதுவரை டெஸ்ட் போட்டிகளில் இரட்டைச் சதங்கள் குவித்துள்ள வீரர்களாவர். இரண்டு அணிகளும் தத்தமது முதலாவது இன்னிங்ஸ்களில் 500 க்கும் மேற்பட்ட மொத்த எண்ணிக்கைகளைக் குவித்துள்ள இப் போட்டியில் ஸிம்பாப்வே சார்பாக மூவரும் ஆப்கானிஸ்தான் சார்பாக இருவரும் சதங்கள் குவித்து அசத்தினர். ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷஹிதி ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 364 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இந்த இணைப்பாட்டம் சகல நாடுகளுக்கும் எதிராக ஆப்கானிஸ்தான் சார்பாக பெறப்பட்ட சகல விக்கெட்களுக்குமான அதிகூடிய இணைப்பாட்ட சாதனையாகவும் பதிவானது. இப் போட்டியில் இன்னும் ஒரே ஒருநாள் மாத்திரம் மீதம் இருப்பதால் ஆட்டத்தில் முடிவு கிடைக்க வாய்ப்பில்லை. எண்ணிக்கை சுருக்கம் ஸிம்பாப்வே 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 586 (சோன் வில்லியம்ஸ் 154, ப்றயன் பெனட் 113 ஆ.இ., க்றெய்க் ஏர்வின் 101, பென் கரன் 68, ஏ.எம். கஸன்பார் 127 - 3 விக்.) ஆப்கானிஸ்தான் 1ஆவது இன்: - 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் - 515 - 3 விக். (ரஹ்மத் ஷா 234, ஹஷ்மத்துல்லா ஷஹிதி 179 ஆ. இ., அப்சார் ஸஸாய் 46 ஆ. இ.) https://www.virakesari.lk/article/202524
  12. Published By: RAJEEBAN 29 DEC, 2024 | 12:22 PM காசாவில் இறுதியாக செயற்பட்டுக்கொண்டிருந்த மருத்துவமனையும் செயல் இழந்துள்ளது அதன் இயக்குநர் இஸ்ரேலிய படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். உலக சுகாதார ஸ்தாபனம் இதனை தெரிவித்துள்ளது. காசாவின் சுகாதார அதிகாரிகளும் இதனை உறுதி செய்துள்ளனர். காசாவின் கமால் அத்வான் மருத்துவமனையே செயல் இழந்துள்ளது. அதற்கு அருகில் இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இஸ்ரேலிய படையினர் இந்த மருத்துமவனையை இலக்குவைத்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது மருத்துவமனையின் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன, தீக்கிரையாகியுள்ளன என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. காசாவில் கடந்த வருடம் இஸ்ரேலிய படையினர் தங்கள் நடவடிக்கைகளை ஆரம்பித்தது முதல் இந்த மருத்துவமனை பயங்கரவாதிகளின் முக்கிய இடமாக மாறியுள்ளது, அவர்கள் தாங்கள் மறைந்திருப்பதற்கு இந்த மருத்துவமனையை பயன்படுத்துகின்றனர் என இஸ்ரேலிய இராணுவம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. 65மருத்துவமபணியாளர்களும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட நிலையிலிருந்த நோயாளிகள் உட்பட 25 நோயாளிகளும் மருத்துவமனைக்குள்ளேயே உள்ளனர் என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் கடும் உயிராபத்தற்ற நிலையிலிருந்த மருத்துவர்கள் வேறு அழிக்கப்பட்ட இயங்காத நிலையிலிருந்த மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. அவர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. கமால் அத்வான் மருத்துவமனையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் இந்த வாரம் கடும் தாக்குதலிற்குள்ளாகியிருந்தன. மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் ஹ_சாம் அபு சபியா தெரிவித்திருந்தார். வியாழக்கிழமை தாக்குதலில் ஐந்து மருத்துவம பணியாளர்கள் உயிரிழந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதேவேளை ஹ_சாம் அபுசபியாவையும் பல மருத்துவமபணியாளர்களையும் இஸ்ரேலிய படையினர் தடுப்பு முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர் என காசாவின் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மருத்துவமனையின் இயக்குநர் கைதுசெய்யப்பட்டுள்ளதை காசாவின் சிவில் பாதுகாப்பு முகவர் அமைப்பும் உறுதிசெய்துள்ளது. "நாங்கள் உள்ளே இருக்கின்ற போதே சத்திரகிசிச்சைக்கான அவசியமான அனைத்தையும் ஆக்கிரமிப்பு இராணுவம் தீயிட்டுகொழுத்துகின்றது, மருத்துவ பணியாளர்கள் உட்பட அனைவரையும் மருத்துவமனைக்குள்ளிலிருந்து வெளியேற்றிய இராணுவம் பலரை கைதுசெய்துள்ளது என மருத்துவ பணியாளர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், மருத்துவமனையின் கட்டிடங்களும் சாதனங்களும் சேதமடைந்துள்ளன" என இன்ஸ்டகிராமில் பதிவிட்டிருந்தார். கமால் அத்வான் மருத்துவமனை மீது டாங்கிகள் புல்டோசர்களை கொண்டு இஸ்ரேலிய படையினர் தாக்குதலை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ள தாதிகள் பிரிவின் தலைவர் எய்ட் சபா நாங்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு 15 நிமிடங்களே தந்தார்கள், என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/202445
  13. காசாவில் கடும் குளிர்காலம் ஆரம்பம் - இதுவரை மூன்று குழந்தைகள் பலி 29 DEC, 2024 | 11:03 AM காசாவில் கடும் குளிர்காலம்; ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து இதுவரை மூன்று குழந்தைகள் குளிரில் விறைத்து உயிரிழந்துள்ளன. காசாவின் தென்பகுதியில் உள்ள அல்- மவசியில் புதிதாக பிறந்த குழந்தையொன்று கடும் குளிர்காரணமாக உயிரிழந்துள்ளது. இது இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களிற்கு மத்தியில் தங்கள் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ள காசா சிறுவர்களின் உயிர்வாழ்தல் கடும் அச்சுறுத்தலிற்குள்ளாகியுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. அல்மவசியில் சேலா மஹ்மூத் அல் -பாசிஹ் என்ற குழந்தை கடும்குளிரில் விறைத்து உயிரிழந்தது என காசாவின் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கடந்த 48 மணித்தியாலத்தில் அல்பாசிஹ் உட்பட மூன்று குழந்தைகள் - மூன்று நாள்- ஒருமாதம் - உயிரிழந்துள்ளன கடும் குளிரிலிருந்து பாதுகாப்பு அளிக்ககூடியதங்குமிடம் இன்மையே இதற்கு காரணம் என கான் யூனிசில் உள்ள நாசெர் மருத்துவமனையின் மருத்துவர் அஹமட் அல் பரா சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார். அல்மாவசியில் ஒரு வீட்டு முற்றத்தில் பாசிஹ்வின் சிறிய உடல் வெள்ளை துணியால் போர்த்தப்பட்டிருப்பதையும், குழந்தையின்31 வயது தந்தை அதனை ஏந்தியிருப்பதையும் காண்பிக்கும் படம் கிடைத்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனிய ஆண்கள் குழந்தையின் உடலை புதைகுழிக்குள் வைப்பதை காண்பிக்கும் படங்கள் கிடைத்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. செலா குளிரினால் உயிரிழந்தாள், என தெரிவிக்கும் அவளது தாயார் நரிமன் நான் கையில் வைத்து அவளுக்கு உடல் சூட்டை அளிக்க முயன்றேன் எங்களிடம் மேலதிக ஆடைகள் இருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். குழந்தையின் முகம் நீல நிறத்திற்கு மாறியுள்ளதை அவதானிக்க முடிவதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/202434
  14. போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 7,676 சாரதிகள் கைது! 30 DEC, 2024 | 02:54 PM நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (29 ஆம் திகதி காலை 06.00 மணி முதல் 30 ஆம் திகதி காலை 06.00 மணி வரை) போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 7,676 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கு அமைய, நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மது போதையில் வாகனங்களை செலுத்திய 413 சாரதிகளும், பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களை செலுத்திய 49 சாரதிகளும், அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்திய 110 சாரதிகளும், சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான குற்றங்கள் தொடர்பில் 694 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் 5,324 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/202555
  15. காலநிலை மாற்றத்தின் தாக்கமாக 2024ஆம் ஆண்டில் வழக்கத்தை விட கூடுதலாக 41 நாட்கள் மோசமான வெப்பநிலை நிலவியதாக காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். World Weather Attribution மற்றும் Climate Central அமைப்பு இணைந்து நடப்பு ஆண்டில் நிகழ்ந்த காலநிலை மாற்றப் பாதிப்புகள் குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் இவ்வாண்டு 219 மோசமான பருவநிலை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இதில் 26 நிகழ்வுகளில் 3,700 பேர் உயிரிழந்ததோடு லட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர். இதுவரையில் இல்லாத அளவில் 2024 ஆம் ஆண்டில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், வழக்கத்தை விட கூடுதலாக 41 நாட்கள் மோசமான வெப்பநிலை நிலவியுள்ளது. தற்போது நிகழும் அதீத வெப்பம், பஞ்சம், புயல்கள், கனமழை ஆகியவற்றுக்கு காலநிலை மாற்றம் முதன்மைக் காரணமாக இருப்பதாகவும் இதனால், உயிரிழப்பும் வாழ்வாதார இழப்பும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ள காலநிலை ஆராய்ச்சியாளர்கள் புதைபடிவ எரிபொருள் பயன்பாடு தொடரும்பட்சத்தில், இந்த நிலைமை இன்னும் மோசமடையும் என்று எச்சரித்துள்ளனர். https://thinakkural.lk/article/314211
  16. யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் Published By: DIGITAL DESK 7 30 DEC, 2024 | 03:21 PM இலங்கையில் உள் நாட்டு யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் வாழும் உறவுகள் இன்றையதினம் திங்கட்கிழமை (30) தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். நீதி வேண்டி வடக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் தோறும் மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஒரு அங்கமாகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராடமானது ஊர்வலமாக யாழ். பிரதான வீதி மற்றும் காங்கேசன்துறை வீதியூடாக சென்று யாழ் மத்திய பேருந்து நிலையத்தை அடைந்தது. யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒன்று கூடிய வாழும் உறவுகள் தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலைகுறித்து சர்வதேசமே தீர்வை வழங்க வேண்டும் போன்ற சுலோகங்களை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர். https://www.virakesari.lk/article/202553
  17. மன்னாரில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் Published By: DIGITAL DESK 2 30 DEC, 2024 | 01:08 PM அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மன்னாரில் கையெழுத்து போராட்டம் இன்று திங்கட்கிழமை (30) நடைபெற்றது. போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தின் முன்பாக கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும் புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது. இதில் அருட்தந்தையர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். https://www.virakesari.lk/article/202531
  18. அரச வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர், பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்டமைக்காக யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கியில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 15 லட்சம் ரூபாவை ஒருவரிடம் இருந்து மோசடி செய்ததாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்தே அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தான் பெற்றுக்கொண்ட பணத்துக்காக சந்தேகநபர் காசோலை வழங்கிய போதிலும், குறித்த காசோலை திரும்பியதைத் தொடர்ந்தே அவர் மீதான முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் தலைமறைவாக இருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/314202
  19. பாக்ஸிங் டே டெஸ்டில் தோல்வி: கோலி, ரோஹித்தை விமர்சிக்கும் ரசிகர்கள் - டெஸ்ட் சாம்பியன் பைனலுக்கு இந்தியா முன்னேறுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 3வது முறையாக விளையாடுவதற்கான வாய்ப்பு அருகிவிட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 184 ரன் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலிய அணி. இரண்டாவது இன்னிங்ஸில் 340 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய அணி 79.1 ஓவர்களில் 155 ரன்களுக்கு ஆட்டமிழந்து 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடைசி 7 விக்கெட்டுகளை 34 ரன்களுக்கு, 20 ஓவர்களில் இந்திய அணி இழந்தது. இந்திய அணி சேர்த்த 155 ரன்களில் ஜெய்ஸ்வால் மட்டும் 84 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் 5 போட்டிகள் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 3வது முறையாக விளையாடுவதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளனவா? 'புஷ்பா' ஸ்டைல் ஆரவாரம்: ஆட்டத்தையே மாற்றிய நிதிஷ்குமார் முறியடித்த 122 ஆண்டு சாதனை என்ன? பாக்ஸிங் டே டெஸ்ட்: ஜெய்ஸ்வாலை கோலி அவுட் ஆக்கினாரா? இன்று என்ன நடந்தது? பும்ரா சாதனை: கடிவாளத்தை நழுவ விட்ட ரோஹித் - ஆடுகளம் நாளை எப்படி இருக்கும்? 100 ஆண்டு வரலாறு மாறுமா? பும்ராவை திணற வைத்த கான்ஸ்டாஸ், டாப் ஆர்டரில் 4 அரைசதம் - இந்திய அணிக்கு சிக்கலா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணி சேர்த்த 155 ரன்களில் ஜெய்ஸ்வால் மட்டும் 84 ரன்கள் சேர்த்துள்ளார் தோல்விக்கான காரணம் என்ன? இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாகக் கருதப்பட்ட டாப்ஆர்டர் பேட்டர்கள் கேப்டன் ரோஹித் சர்மா(8), கே.எல்ராகுல்(0), விராட் கோலி(5), ஜடேஜா(2), ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது தோல்விக்கு முக்கியக் காரணமாகும். 121 ரன்கள் வரை இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து மட்டுமே வலுவாகத்தான் இருந்தது. ஆனால், அடுத்த 34 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளையும் இந்திய அணி பறிகொடுத்துள்ளது. ரிஷப் பந்த், ஜெய்ஸ்வால் கூட்டணி 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை ஓரளவுக்கு காத்து நின்றனர். அதன்பின் வந்த பேட்டர்கள் யாரும் ஜெய்ஸ்வாலுக்கு ஒத்துழைத்து பேட் செய்யவில்லை. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தங்களால் இயன்ற சிறந்த பங்களிப்பை இந்த டெஸ்ட் தொடர் முழுவதும் அளித்து வருகிறார்கள். குறிப்பாக பும்ரா இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிராஜ், ஆகாஷ் தீப் இருவரும் சிறப்பாகவே பந்துவீசி வருகிறார்கள் ஆனால், பேட்டிங்கைப் பொருத்தவரை முன்னணி வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ஜடேஜா, ரிஷப் பந்த் ஆகியோர் இதுவரை தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கவில்லை. ஜெய்ஸ்வால் முதல் போட்டியில் 150 ரன்களை அடித்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். இந்த டெஸ்ட் போட்டியில் 84 ரன்கள் சேர்த்து இந்த அளவு போராடினார். உலக அதி வேக சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தை இரண்டாம் முறை வென்ற இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி4 மணி நேரங்களுக்கு முன்னர் பீட்ரூட் ஜூஸ் 'அதிசய' பானமா? உடற்பயிற்சிக்கு முன் குடித்தால் உடலில் என்ன நடக்கும்?20 டிசம்பர் 2024 டிரா செய்வதற்கான வாய்ப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிராவிஸ் ஹெட் வீசிய ஓவரில் ரிஷப் பந்த் லாங் ஆன் திசையில் தூக்கி அடித்து கேட்சாகி விக்கெட்டை இழந்தார் ரிஷப் பந்த், ஜெய்ஸ்வால் கூட்டணி ஆட்டத்தை டிராவை நோக்கி மெல்ல நகர்த்தியது. இதனால் வெற்றி கிடைக்காவிட்டாலும் டிரா செய்யலாம் என்று ரசிகர்கள் ஆறுதல் அடைந்தனர். ஆனால், டிராவிஸ் ஹெட் வீசிய பந்தை தேவையில்லாமல் அவுட்சைட் ஆஃப் திசையில் சென்ற பந்தை லாங் ஆன் திசையில் தூக்கி அடிக்க ரிஷப் பந்த் முயன்றார், ஆனால், பவுண்டரி எல்லையில் மார்ஷால் கேட்ச் பிடிக்கப்பட்டார். போட்டியில் ஒரு பேட்டர் ஆட்டமிழந்தவுடன் பந்துவீச்சாளர் உள்ளிட்ட எதிரணியினர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கமானது. ஆனால், ரிஷப் பந்த் ஆட்டமிழந்தவுடன் டிராவிஸ் ஹெட் அதைக் கொண்டாடும் வகையில் ரசிகர்களை நோக்கி காட்டிய செய்கை முகம் சுழிக்கும் வகையில் இருந்தது. அமெரிக்காவில் கொந்தளிக்கும் எரிமலையின் விளிம்பிற்குச் சென்ற குழந்தை - என்ன நடந்தது?29 டிசம்பர் 2024 மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம்: மத்திய அரசின் மறுஆய்வு முடிவால் என்ன நடக்கும்? சுற்றுச்சூழல் நிபுணர்கள் தகவல்29 டிசம்பர் 2024 கோலி, ரோஹித் ஏமாற்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இதுவரை ரோஹித் சர்மா 3 டெஸ்ட் போட்டிகளில் 100 பந்துகளைச் சந்திக்கவில்லை பார்டர் - கவாஸ்கர் கோப்பைத் தொடரை இந்திய அணி தக்கவைக்குமா அடுத்து கடைசியாக நடக்கவுள்ள சிட்னி டெஸ்டில்தான் தெரியும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்திய அணி முன்னேறுமா என்பதும் அப்போது தெளிவாகும். அதே நேரத்தில் ரோஹித் சர்மா, கோலி, ஜடேஜா ஆகியோரின் டெஸ்ட் வாழ்க்கையும் முடிவுக்கு வருமா என்பது சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தை கிளப்பியிருக்கிறது. இதுவரை ரோஹித் சர்மா 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியும் மொத்தமாக 100 பந்துகளைக் கூட சந்திக்கவில்லை. 2வது இன்னிங்ஸில் 9 பந்துகளை மட்டுமே சந்தித்துள்ளார். கோலி முதல் போட்டியில் சதம் அடித்தபின் பெரிதாக எந்த போட்டியிலும் ஸ்கோர் செய்யவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் இருவருமே ஜாம்பவான்களாக திகழ்பவர்கள்தான். ஆனால், இப்போது இருவரும் ஃபார்மின்றி தவிப்பதுடன் அணிக்கு சுமையாக மாறிவிட்டார்கள் என்று ரசிகர்கள் ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். பிபிசி தமிழ் இணையதளத்தில் இந்த ஆண்டு அதிகம் பேர் படித்த டாப்-10 கட்டுரைகள்29 டிசம்பர் 2024 பிரம்மபுத்திராவின் குறுக்கே பிரமாண்ட அணை கட்ட தயாராகும் சீனா - இந்தியா, வங்கதேசத்திற்கு என்ன பாதிப்பு?29 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணிக்கு இன்னும் ஒரு டெஸ்ட் மட்டுமே மீதமிருக்கிறது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பு உள்ளதா? இந்திய அணி மெல்போர்ன் டெஸ்டில் அடைந்த தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு குறைந்துவிட்டது. தற்போது இந்திய அணி 18 போட்டிகளில் 9 வெற்றி 7 தோல்வி, 2 டிரா என 114 புள்ளிகளுடன் 52.78 வெற்றி சதவீதமாகக் குறைந்து 3வது இடத்தில் இருக்கிறது. இந்த டெஸ்டில் பெற்ற வெற்றியால் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி சதவீதம் 61.46 ஆக உயர்ந்துள்ளது. இந்திய அணிக்கு இன்னும் ஒரு டெஸ்ட் மட்டுமே மீதமிருக்கிறது. ஆனால், ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு பயணம் செய்து 2 டெஸ்ட்களில் விளையாட இருக்கிறது. அதில் ஒரு டெஸ்டில் வென்றாலோ அல்லது டிரா செய்தாலோ பைனலுக்கு தகுதி பெற்றுவிடும். சிட்னி டெஸ்டில் இந்திய அணி வென்றால் டெஸ்ட் தொடர் 2-2 என்று சமனில் முடியும். அப்போது இந்திய அணி 55.26 சதவீதத்துடன் முடிக்கும். இலங்கை அணி 1-0 என்று ஆஸ்திரேலிய அணியை வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றினால், இந்திய அணிக்கு வாய்ப்புள்ளது. எனவே இந்திய அணி கடைசி டெஸ்டில் கட்டாயமாக வென்றால் மட்டும் போதாது, ஆஸ்திரேலிய அணியை 1-0 என்று இலங்கை அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றினால்தான் வாய்ப்புக் கிடைக்கும். ஒருவேளை சிட்னி டெஸ்டில் இந்திய அணி டிரா செய்தால் 51.75 சதவீதத்துடன் முடிக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பு பறிபோய்விடும். அவ்வாறான சூழலில், ஆஸ்திரேலிய அணி இலங்கையிடம் டெஸ்ட் தொடரை இழந்தாலும் அந்த அணி பைனல் செல்வதில் எந்த சிக்கலும் இல்லை. ஆதலால், சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி டிரா செய்தாலே அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் செல்வது உறுதியாகிவிடும். பூமிக்கும் வானில் இரட்டை சூரியன்கள் இருந்தனவா? ஆய்வில் புதிய தகவல்28 டிசம்பர் 2024 சூரியனுக்கு மிக அருகில் பாதிப்பின்றி நெருங்கிச் சென்று வரலாறு படைத்த பார்க்கர் விண்கலம்27 டிசம்பர் 2024 'வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டோம்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தோல்விக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் "போதுமான அளவு எங்களின் திறனையை வெளிப்படுத்த முடியவில்லை" என்றார் தோல்விக்குப் பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. நாங்கள் முழுமையான போராட்டக் குணத்தை வெளிப்படுத்தி விளையாடவில்லை, கடைசிப் பந்து வரை போராட நினைத்தோம். ஆனால், எங்களால் முடியவில்லை." என்றார். கடைசி இரு செஷன்களிலும் ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றார்போல் விளையாடுவது கடினமாக இருந்தது என்று கூறிய அவர், "இந்த டெஸ்ட் முழுவதையும் கவனித்தால் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது, ஆனால், நாங்கள் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை." என்று கூறினார். "ஆஸ்திரேலிய அணியை 2வது இன்னிங்ஸில் 90 ரன்களுக்கு 6 விக்கெட் என்று நிலைக்கு கொண்டுவந்தோம். ஆனால் அதன்பின் ஆட்டத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியவில்லை, சில விஷயங்கள் கடினமானவை என எங்களுக்குத் தெரியும். கடினமான சூழலில் நாங்கள் கடினமான கிரிக்கெட்டை விளையாட விரும்பினோம்." "போதுமான அளவு எங்களின் திறனையை வெளிப்படுத்த முடியவில்லை, இது குறித்து அணி வீரர்களிடமும் ஆலோசித்தோம். கடைசி விக்கெட் வரை போராடியும் எங்களால் வெல்ல முடியவில்லை. 340 ரன்கள் இலக்கு கடினமானது என எங்களுக்குத் தெரியும். கடைசி இரு செஷன்களில் விக்கெட்டை கைவசம் வைத்திருக்க விரும்பினோம். ஆனால், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சிறப்பாகப் பந்துவீசினர். வெற்றி பெறுவதற்கான வழியை தேடுவதில் நாங்கள் தோற்றுவிட்டோம்." என்றும் கூறினார் ரோஹித் சர்மா. நிதிஷ் குமார் பற்றி பேசிய ரோஹித், "இங்கு முதல் முறையாக வந்துள்ளார். இந்த சூழல் கடினமானதுதான். ஆனால் அவர் அருமையாக விளையாடினார் பேட் செய்தார். அவரின் சிறப்பான ஆட்டத்தை அளித்தார்." என்று கூறினார். மேலும், "பும்ராவின் பந்துவீச்சு இந்தத் தொடரில் அற்புதமாக இருக்கிறது. அவருக்கான பணியை சிறப்பாகச் செய்தார். நாட்டுக்காக, அணிக்காக விளையாடக் கூடியவர் பும்ரா, சுய சாதனையை விரும்பாதவர், ஆனால், அவருக்கு துணையாக மற்ற பந்துவீச்சாளர்கள் பந்துவீசவில்லை" எனத் தெரிவித்தார் கேப்டன் ரோஹித் சர்மா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c07g2rr7zppo
  20. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டஹிடி தீவில் அலைகளில் சவாரி செய்யும் சர்ஃபர் கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி குரோவர் பதவி, பிபிசி நியூஸ் டஹிடி தீவில், அலைகளில் சவாரி செய்யும் சர்ஃபர் ஒருவரின் வியத்தகு புகைப்படத்தில் இருந்து, புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அமெரிக்க அதிபர், தேர்தல் பிரசாரத்தின் போது நடந்த படுகொலை முயற்சியில் உயிர் பிழைத்த சிறிது நேரத்திலேயே எடுக்கப்பட்ட புகைப்படம் வரை கடந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க 12 படங்களின் தொகுப்பு இது. மன்மோகன் சிங் உடலுக்கு இறுதிச்சடங்கு: நினைவிடம் குறித்து எழுந்துள்ள சர்ச்சை என்ன? கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து? யானை மீது ஊர்வலமாக சென்ற பிரிட்டிஷ் வைஸ்ராய் மீது வெடிகுண்டு தாக்குதல் - புரட்சியாளர்கள் திட்டமிட்டது எப்படி? அமெரிக்காவில் சூரிய கிரகணம் அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள ப்ளூமிங்டனில் ஏப்ரல் 8ஆம் தேதி முழு சூரிய கிரகணத்தின் ஊடாக ஒரு விமானம் பறந்தது. முழு சூரிய கிரகணத்தின் ஊடாகப் பறக்கும் போது, விமானத்தின் வெளிப்புற அமைப்பு சூரியனின் (கொரோனா) பிரகாசமான வெளிப்புற விளிம்புக்கு இணையாக இருண்ட கோடுகளாகத் தெரியும். நிச்சயமாக, ஒரு விமானம், சந்திரன், சூரியன் மற்றும் பூமிக்கு குறுக்காகச் செல்வது இது முதல் முறை அல்ல. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள ப்ளூமிங்டனில் ஏப்ரல் 8ஆம் தேதி முழு சூரிய கிரகணத்தின் ஊடாக ஒரு விமானம் பறந்தது. கடந்த 1925-ஆம் ஆண்டு ஜனவரியில், அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். லாஸ் ஏஞ்சலஸ் கப்பலில் இருந்து தொலைநோக்கிகள் மற்றும் ஏழு விஞ்ஞானிகளுடன் வானூர்தி ஒன்று சூரிய கிரகணத்தை நெருக்கமாகப் பார்க்கும் நோக்குடன் பறந்தது. இந்த நிகழ்வு வரலாற்றில் மிகவும் பரவலாக பார்க்கப்பட்ட கிரகணங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. நிலத்தில் இருந்து அமெரிக்க ஓவியர் ஹோவர்ட் ரஸ்ஸல் பட்லர் அந்தத் தருணத்தை, கலைஞர்களுக்கு ஓவியம் வரைய பயன்படுத்தும் ஈசல்(Easel) எனும் பொருளுடன் உன்னிப்பாகக் கவனித்தார். அவர் மூன்று குறிப்பிடத்தக்க கிரகணங்களை (1918, 1923, மற்றும் 1925) வரைந்து பின்னர் அவற்றை ஒன்றாகக் காட்சிப்படுத்தியுள்ளார். சூரியனுடன் ஒன்றாக பிறந்த இரட்டையராக பார்க்கப்படும் இன்னொரு நட்சத்திரம் எங்கே?28 டிசம்பர் 2024 கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?28 டிசம்பர் 2024 பாரிஸ் 2024 தொடக்கத்தில் டியோனிசியோ பட மூலாதாரம்,THOMAS JOLLY படக்குறிப்பு, பாரிஸ் 2024 தொடக்க விழாவில் நடந்த காட்சியை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டதால் பல சர்ச்சைகள் கிளம்பின. கலையின் வரலாற்றை அறிந்துகொள்வது உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தையும் ஏமாற்றத்தையும் தவிர்க்கும். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தால் எழுந்த சர்ச்சையில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களில் அதுவும் ஒன்று. சில கிறிஸ்தவர்கள் மற்றும் பழமைவாதிகள் இந்த புகைப்படம் 'தி லாஸ்ட் சப்பர்'-ஐ சித்தரிக்கிறது என்று தவறாகப் புரிந்துகொண்டு, மத நம்பிக்கைக்கு அவமரியாதை ஏற்படுத்துவதாகவும், புண்படுத்தும் படமாகவும் அதனை கருதினர். இந்தக் குழப்பத்திற்கு மன்னிப்பு கேட்ட ஏற்பாட்டுக் குழு, இது லியோனார்டோ டாவின்சியின் தலைசிறந்த படைப்பை நினைவுபடுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்படவில்லை என்றும், மாறாக 1635ஆம் ஆண்டு ஜான் வான் பிஜ்லெர்ட்டின் ஓவியமான "தி ஃபீஸ்ட் ஆஃப் தி காட்ஸ்" ("The Feast of the Gods") என்ற கிரேக்கக் கடவுளான டியோனிசஸை நினைவுபடுத்துவதற்காக அமைக்கப்பட்டது எனவும் தெளிவுபடுத்தியது. சூரியனுக்கு மிக அருகில் பாதிப்பின்றி நெருங்கிச் சென்று வரலாறு படைத்த பார்க்கர் விண்கலம்27 டிசம்பர் 2024 யானை மீது ஊர்வலமாக சென்ற பிரிட்டிஷ் வைஸ்ராய் மீது வெடிகுண்டு தாக்குதல் - புரட்சியாளர்கள் திட்டமிட்டது எப்படி?28 டிசம்பர் 2024 தெற்கு சூடானின் போக்குவரத்து மையம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வண்ணமயமான அச்சுகளுடன் கூடிய ஆடை தெற்கு சூடானில் பாரம்பரியமானது. பிப்ரவரியில் தெற்கு சூடானின் ரெங்க் பகுதியில் உள்ள போக்குவரத்து மையத்தில் நெரிசலான வரிசையில் சூடான் அகதிகள் உதவிக்காகக் காத்திருந்தார்கள். சூடானிய ராணுவத்திற்கும் துணை ராணுவ படைகளுக்கும் இடையிலான சண்டையில், 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது தெற்கு சூடானில் கடுமையான நெருக்கடியை உருவாக்கியது. பலருக்கு அவசர உதவி மற்றும் ஆதாரங்கள் தேவைப்பட்டன. புலம்பெயர்ந்தோர் அணிந்துள்ள பிரகாசமான வண்ணத் துணிகள் அவர்களின் நிலைமையின் தீவிரத்தன்மை மற்றும் கஷ்டங்களுக்கு எதிராக ஒரு குறிப்பிடத்தக்க முரண்பாட்டை காட்டுகின்றன. இந்தப் புகைப்படம், புகழ்பெற்ற சூடானிய கலைஞரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஹுசைன் ஷெரிஃபின் படைப்புகளை நினைவூட்டுகிறது. அவரது ஓவியங்கள் அவற்றின் வடிவங்கள் மற்றும் செழுமையான அமைப்புகளுக்காக அறியப்பட்டவை. அவை காட்சி மற்றும் உணர்ச்சிகளுக்கு இடையிலான எல்லைகளை மங்க வைக்கும் கவிதை உணர்வை உருவாக்குகின்றன. இந்த ஆண் திமிங்கலம் 13,000 கி.மீ. தூரம் நீந்திச் சென்றது ஏன்? வியக்கும் விஞ்ஞானிகள்23 டிசம்பர் 2024 ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் வானில் எரிகற்கள் பொழியும் அதிசயம் பற்றி தெரியுமா?24 டிசம்பர் 2024 இந்தோனீசிய எரிமலை பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, மவுண்ட் ருவாங், ஏப்ரலில் பலமுறை வெடித்து, சூடான எரிமலைக் குழம்புகளையும், சாம்பலையும் உமிழ்ந்தது. இந்தோனீசிய எரிமலையான மவுண்ட் ருவாங், ஏப்ரலில் பலமுறை வெடித்து, சூடான எரிமலைக் குழம்புகளையும், சாம்பலையும் உமிழ்ந்தது. இது அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும் பார்வையாளர்களையும் ஈர்ப்பதாக அமைந்தது. எரிமலை அதன் சக்தி வாய்ந்த வெடிப்புகளால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களைக் கவர்ந்து வந்துள்ளது. சூடான எரிமலைப் பொருட்கள் மற்றும் சாம்பல், வானத்தில் தூக்கி எறியப்படுவதைக் காட்டும் சமீபத்திய புகைப்படம் பிரிட்டிஷ் கலைஞரான ஜான் மார்ட்டின் வரைந்த வியத்தகு மற்றும் தீவிரமான காட்சிகளைப் போலவே உள்ளது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, மார்ட்டின் தனது அபோகாலிப்டிக் ஓவியமான "தி டிஸ்ட்ரக்ஷன் ஆஃப் பாம்பீ அண்ட் ஹெர்குலேனியம்" எனும் ஓவியத்துக்காக கி.பி. 79இல் வெசூவியஸ் எரிமலை வெடிப்பதைப் போலக் கற்பனை செய்தார். 100 வயதை கடந்தவர்கள் இத்தனை லட்சம் பேர் இருப்பார்களா? உடல்நல ரகசியம் என்ன?22 டிசம்பர் 2024 கந்தஹார் விமான கடத்தல்: 25 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இந்தியா - நேபாள உறவில் நெருடல் ஏன்?21 டிசம்பர் 2024 டிரம்ப் மீதான தாக்குதல் பட மூலாதாரம்,AP படக்குறிப்பு, பென்சில்வேனியாவில் நடைபெற்ற பேரணியில் டொனால்ட் டிரம்ப் துப்பாக்கியால் சுடப்பட்டார். சில புகைப்படங்கள், குறிப்பிடத்தகுந்த நினைவுச் சின்னங்களாக மாறும் என்ற கணிப்பில் இயற்கையாகவே தங்களை வடிவமைத்துக் கொள்கின்றன. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய தீவான ஐவோ ஜிமாவில் அமெரிக்க கொடி உயர்த்தப்பட்டது அல்லது 1968ஆம் ஆண்டு மெக்சிகோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்ற ஆப்பிரிக்க-அமெரிக்க விளையாட்டு வீரர்கள் வெற்றிக் களிப்பில் கைகளை உயர்த்தியது ஆகியவற்றை உதாரணமாகக் கூறலாம். அந்த இரண்டு படங்களையும் நினைவூட்டும் வகையில், ஜூலை மாதம், அதிபர் தேர்தல் பிரசார கூட்டத்தில், தனது வலது காதில் தோட்டா துளைத்ததைத் தொடர்ந்து, ரத்தக்கறை படிந்த முகத்துடன் தனது கரத்தை உயர்த்தியபடி தோன்றும் டொனால்ட் டிரம்பின் புகைப்படம் பதிவுசெய்யப்பட்டது. அந்த நேரத்தில் அவருக்குப் பின்னால் இருந்த கொடி, அவர் தேர்தலில் வெற்றி பெற்ற தருணமோ என்று பலரையும் வியக்க வைத்தது. ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலை நெருங்குவதில் இத்தனை ஆபத்துகளா? ஆய்வாளரின் நேரடி அனுபவம்24 டிசம்பர் 2024 எண்ணூர்: 'மனிதர்கள் வாழவே தகுதியற்ற பகுதியா?' - அனல் மின் நிலைய திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு19 டிசம்பர் 2024 காஸாவில் உள்ள பாலத்தீன அகதிகள் முகாம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2023இன் பிற்பகுதியில் இருந்து, காஸாவில் பாலத்தீனர்களின் இடப்பெயர்வு பெரிய அளவில் உள்ளது. பிப்ரவரி 29 அன்று தெற்கு காஸாவில் நெரிசலான அகதிகளின் கூடாரங்களை அலங்கரிக்கும் விதமாக இரண்டு பாலத்தீன சிறுமிகள், ரமலான் பண்டிகைக்குத் தயாராகி, விளக்குகளை ஏற்றினர். அந்த விளக்குகளின் பிரகாசம், தொலைதூரத்தில் மறையும் சூரியனின் அமைதியற்ற இருளுக்கு எதிராக நின்றது. கோடையில் காஸாவின் 90% மக்கள் (சுமார் 20 லட்சம் மக்கள்) போரினால் இடம்பெயர்ந்தனர். சிறுமிகள் விளக்கு ஏற்றும் இந்தக் காட்சி ஜான் சிங்கர் சார்ஜென்ட்டின் புகழ்பெற்ற ஓவியமான "கார்னேஷன், லில்லி, லில்லி, ரோஸை"(Carnation, Lily, Lily, Rose) நினைவுபடுத்துகிறது. தென்மேற்கு பிரிட்டனில் அந்தி நேரத்தில் தென்படும் ஒரு நண்பரின் மகள்களை அந்த ஓவியம் சித்தரிக்கிறது. அவர் 1885ஆம் ஆண்டின் இலையுதிர்க் காலத்தில் பல மாதங்களாக அதை வரைந்தார், ஒவ்வொரு மாலையும் சூரியன் மறையும் வேளையில் அதன் ஒளியைச் சரியாகக் கவனித்து அதை வரைந்தார். அந்த ஓவியத்தில் விளக்குகளை ஏற்றும் இரண்டு இளம் பெண்கள் பசுமையான பகுதியில் மலர்களால் சூழப்பட்டுள்ளனர். அந்த ஓவியத்தில் இருப்பது போன்ற பச்சைப் புல், காட்டுப் பூக்கள் மற்றும் அமைதி மட்டும் இந்தப் புகைப்படத்தில் இல்லை. மனிதர்கள் நிலா மற்றும் செவ்வாயில் வீடு கட்ட வித்திடும் ஆய்வு - லடாக்கில் ஒரு விண்வெளி அனுபவம்19 டிசம்பர் 2024 4,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த பழிவாங்கும் படலம் - மனிதர்கள் நரமாமிசம் சாப்பிட்டார்களா?18 டிசம்பர் 2024 டஹிடி தீவில் ஒலிம்பிக் சர்ஃபிங் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எதிர்பாராத விதமாக, மதீனாவின் புகைப்படம் பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் சிறந்த ஒன்றாக மாறியது. ஜூலை 29 அன்று பிரெஞ்சு பாலினேசியாவில் உள்ள டஹிடி தீவில் பிரேசிலியன் கேப்ரியல் மதீனா என்பவர் ஒரு பெரிய அலையில் சர்ஃபிங் செய்த பிறகு உயர எழும்பி வானத்தில் மிதப்பது போன்று செய்தார். அப்போது எடுக்கப்பட்ட படம் உடனடியாக வைரலானது. சர்ஃபிங் செய்யும் போது கேப்ரியல் மதீனா சிரமமின்றி காற்றில் மிதப்பது போன்று செய்தது மேற்கத்திய கலை வரலாற்றின் முக்கியமான பல மத கலைப் படைப்புகளை நினைவுபடுத்துகிறது. ஜியோட்டோ, ரெம்ப்ராண்ட், இல் கரோஃபாலோ மற்றும் சால்வடார் டாலி போன்ற கலைஞர்களின் படைப்புகள் இதில் அடங்கும். அவரது வலது கை மற்றும் ஆள்காட்டி விரல், மதீனாவின் தடகள செயல் திறனுக்கும் மத நம்பிக்கை பற்றிய பார்வைக்கும் இடையே உள்ள குறிப்பிடத்தக்க தொடர்பைப் படம் பிடிக்கிறது. அவர் வானத்தை நேரடியாகச் சுட்டிக்காட்டுவது, அவரது உடல் மற்றும் ஆவி இரண்டையும் மேல்நோக்கி வழிநடத்துவது போலத் தோன்றுகிறது. பசையை மென்று சாப்பிட்டு ஆதிகால மனிதன் கண்டுபிடித்தது என்ன?24 டிசம்பர் 2024 கூகுள் மேப் பார்த்து கோவா செல்ல முயன்ற 4 பேர் நள்ளிரவில் நடுக்காட்டில் சிக்கியது எப்படி?16 டிசம்பர் 2024 ஸ்பெயினைத் தாக்கிய டானா புயல் பட மூலாதாரம்,AP படக்குறிப்பு, நவம்பரில் டானா புயல் ஸ்பெயினில் நூற்றுக்கணக்கான இறப்புகளையும் எண்ணற்ற அழிவையும் ஏற்படுத்தியது. அக்டோபர் 30ஆம் தேதியன்று கடுமையான மழை காரணமாக வலென்சியா நகரம் கடுமையான வெள்ளத்தைச் சந்தித்தது. ஒரு பெண் தனது பால்கனியில் இருந்து கீழே தெரிந்த காட்சியைப் பார்த்தார். அங்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கிடந்தன. தெருக்களில் காணப்படும் காளைகளின் நெரிசலைப் போன்று அக்காட்சி தோற்றமளித்தது. புயல் காரணமாக கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. அக்டோபர் 30 அன்று, வெறும் எட்டு மணி நேரத்தில் 500 மிமீ மழை பெய்து பேரழிவை ஏற்படுத்தியது. வெள்ளம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பமான நிகழ்வுகளை உற்றுநோக்கும் பெண்ணின் இக்காட்சி, இத்தாலிய கியூபிஸ்ட் ஓவியரான கார்லோ காராவின், 1912ஆம் ஆண்டைச் சேர்ந்த ஓவியமான லா டோனா அல் பால்கோனின் சைமெல்டனெய்தா என்ற ஓவியத்தை நினைவுபடுத்துகிறது. குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? ஆண் குட்டிகளை மட்டும் விரட்டி விடுவது ஏன்?22 டிசம்பர் 2024 இந்தியாவின் 'ஹாங்காங்' திட்டத்தால் இந்த தீவில் வாழும் மக்கள் கலக்கம் ஏன்?15 டிசம்பர் 2024 பில்லி எலிஷின் தோற்றம், நியூயார்க் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பில்லி எலிஷ் நியூயார்க்கில் ஹிட் மீ ஹார்ட் அண்ட் சாஃப்ட் எனும் பாடல் ஆல்பத்தை வெளியிட்டார். நியூயார்க்கில் இந்த ஆண்டின் மே மாதத்தில், தனது புதிய ஆல்பமான "ஹிட் மீ ஹார்ட் அண்ட் சாஃப்ட்" ஆல்பத்தை பில்லி எலிஷ் வெளியிட்டார். அந்த விழாவில், எடுக்கப்பட்ட பில்லி எலிஷின் புகைப்படம், ஒளி மற்றும் புகையால் சூழப்பட்டு, கனவில் கரைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அவரது உடல் மங்கலாகி, ஏறக்குறைய, கண்ணுக்குத் தெரியாத நிழற்படத்தை உருவாக்கியது. இந்தப் புகைப்படம், ஜே.எம்.டபிள்யூவின் புகழ்பெற்ற லைட் அண்ட் கலர் - தி மார்னிங் ஆஃப்டர் தி டெலுஜ் என்ற ஓவியத்தை நினைவூட்டுகிறது. சிரியாவில் நடந்த சிலை உடைப்புச் சம்பவம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிசம்பர் 9 2024 அன்று, சிரியாவில் முன்னாள் அதிபர் ஹஃபீஸ் அல்-அசத்தின் இடிக்கப்பட்ட சிலையை ஒரு பிரிவினர் காலால் உதைத்தனர். டிசம்பர் 9 2024 அன்று, முன்னாள் அதிபர் ஹஃபீஸ் அல்-அசத்தின் இடிக்கப்பட்ட சிலையை காலால் உதைத்து ஒரு பிரிவினர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். சிரியாவில் பஷார் அல்-அசத் குடும்பம் நாட்டைவிட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்த பஷர் அல்-அசத்தின் தந்தையான ஹஃபீஸ் அல்-அசத்தின் சிலைகள் வீழ்த்தப்பட்டன. அதிகாரத்தை இழந்துவிட்ட ஆட்சியாளர்களின் சிலைகளைக் கவிழ்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியில் ஒரு வகையான வகுப்புவாத உணர்வு உள்ளது. கிறிஸ்துமஸ் மரம் போல தோன்றும் விண்மீன் திரள் உணர்த்தும் அறிவியல் உண்மைகள்18 டிசம்பர் 2024 ஆப்பிரிக்காவுக்கு வெளியே மனித குலம் தழைக்க 'நியாண்டர்தால்' அடிகோலியது எப்படி?14 டிசம்பர் 2024 டான்சர்ஸ் மீட்டிங், நியூயார்க் பட மூலாதாரம்,BESS ADLER படக்குறிப்பு, நியூயார்க்கில் 350 நடனக் கலைஞர்கள் இணைந்து கின்னஸ் சாதனை படைத்தனர். நியூயார்க்கில் ஏப்ரல் மாதம் 350க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் ஒன்றுகூடி, ஒரே நேரத்தில் போஸ் கொடுத்து கின்னஸ் சாதனை படைத்தனர். பங்கேற்பாளர்களில் பலர் போட்டிக்கு ஆர்வத்துடன் தயாராகிக் கொண்டிருக்கும் புகைப்படம் அந்த முக்கியமான சந்தர்ப்பத்தின் நேர்த்தியையும் ஆற்றலையும் படம் பிடித்தது. எட்கர் டெகாஸ் எனும் பிரெஞ்சு இம்ப்ரெஷனிஸ்ட் கலைஞர், பல இளம் பெண்கள் நடனமாடுவதைப் பார்த்து ஈர்க்கப்பட்டிருப்பார். திறமையான நடனக் கலைஞர்களைப் பார்த்து மகிழ்ந்தது மட்டுமின்றி, அவர்கள் நடனமாடும் போது அவர்களின் மூட்டுகள் "உராய்வதால்" ஏற்படும் ஒலிகளிலும் அவர் ஒரு விசித்திரமான ஆர்வம் காட்டினார். கருவின் மூளைகளை 0.5 மைக்ரான் அளவில் வெட்டி மெட்ராஸ் ஐஐடி செய்த ஆய்வு - மூளை நோய்களைத் தடுக்க உதவுமா?14 டிசம்பர் 2024 ஸ்மார்ட் வாட்ச் பயன்பாடு உடல்நலனை பேண உதவுகிறதா? மருத்துவர்கள் சொல்வது என்ன?13 டிசம்பர் 2024 சியோல் தேசிய சட்டமன்றத்தில் காவலர்களை எதிர்கொண்ட பெண் பட மூலாதாரம்,OHMYTV VIA AP படக்குறிப்பு, அஹ்ன் க்வி-ரியோங் தென் கொரிய காவலர்களை துணிச்சலுடன் எதிர்கொண்டார். தென் கொரிய பெண்ணான 35 வயது, அஹ்ன் க்வி-ரியோங், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் செய்தித் தொடர்பாளர். அஹ்ன் க்வி-ரியோங், சுடுவதற்குத் தயார் நிலையில் இருந்த ஒரு வீரரின் துப்பாக்கியை தைரியமாகப் பிடித்தார். அதிபர் யூன் சுக் யோல் ராணுவ சட்டத்தை அறிவித்த சிறிது நேரத்திலேயே இந்தச் சம்பவம் நடந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வருவதைத் தடுக்குமாறு வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதுகுறித்து அஹ்ன் க்வி-ரியோங் அவர்களுடன் சண்டையிடுவதைக் காண முடிந்தது. "எனது ஒரே எண்ணம் நான் அவர்களைத் தடுக்க வேண்டும் என்பதுதான்" என அங்கு நடந்த மோதலைப் பற்றி அஹ்ன் பின்னர் கூறினார். "நான் அவர்களைத் தள்ளிவிட்டு, என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்" என்றும் அவர் கூறினார். அஹ்ன் க்வி-ரியோங்கின் அசைக்க முடியாத உறுதியும், அவரது ஆடைகளின் பிரகாச ஒளியும் பிரிட்டிஷ் கலைஞரான ஜான் கில்பர்ட்டின், ஜோன் ஆஃப் ஆர்க் எனப்படும் 19ஆம் நூற்றாண்டின் வாட்டர் கலர் ஓவியத்தை நினைவுபடுத்துகிறது. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c8dqlnyy48eo
  21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முன்னாள் அதிபர் போரிஸ் யெல்ட்சன், தான் ராஜினாமா செய்வதாக அறிவித்து, 1999 டிசம்பர் 31 அன்று புதினிடம் அதிபர் அதிகாரங்களை ஒப்படைப்பதார். கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்டீவ் ரோசன்பெர்க் பதவி, ஆசிரியர், பிபிசி ரஷ்ய சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் என்னால் 1999-ஆம் ஆண்டு புத்தாண்டை மறக்கவே முடியாது. பிபிசியின் மாஸ்கோ அலுவலகத்தில் தயாரிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அன்றைய தினம் யாரும் எதிர்பார்க்காத ஒரு அவசர செய்தி வந்தது. 'ரஷ்ய அதிபர் போரிஸ்யெல்ட்சன் பதவி விலகினார்' என்னும் செய்திதான் அது. அவரது ராஜினாமா முடிவு மாஸ்கோவில் இயங்கி வந்த பிரிட்டிஷ் பத்திரிகை குழு உள்பட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. செய்தி வெளியான நேரத்தில் அலுவலகத்தில் செய்தியாளர் யாரும் இருக்கவில்லை. ஆகையால் பிபிசிக்கான எனது முதல் ரிப்போர்ட்டிங்கையும் செய்தி ஒளிபரப்பும் பணியையும் நானே செய்யத் தயாரானேன். "முழு பதவிக் காலத்தை நிறைவு செய்வேன் என போரிஸ் யெல்ட்சன் கூறி வந்தார். ஆனால், இன்று அவர் தனது மனதை மாற்றிக்கொண்டதாக ரஷ்யர்களிடம் கூறியுள்ளார்" என்று நான் எழுதினேன். அன்று ஒரு செய்தியாளராக என் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினேன். அதேநேரம், ரஷ்யாவின் அதிபராக விளாதிமிர் புதினின் ஆட்சிக்காலமும் ஆரம்பமானது. டிரம்ப் - புதின் நட்பால் இந்தியாவுக்கு என்ன நன்மை? ஓர் அலசல் யுக்ரேன் உடனான போரில் ரஷ்யாவை தொடர்ந்து முன்னேற வைக்கும் ஒரு 'பயங்கர' உத்தி இதுதான் ரஷ்யா - யுக்ரேன் போரை இந்தியாவால் நிறுத்த முடியுமா? அமெரிக்காவில் டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம் - என்ன நடக்கிறது? யெல்ட்சன் ராஜினாமாவை தொடர்ந்து, ரஷ்ய அரசியலமைப்பின்படி பிரதமர் புதின் தற்காலிக அதிபரானார். மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர் தேர்தலில் வெற்றி பெற்றார். அதிபர் மாளிகையான கிரெம்ளினை விட்டு வெளியேறும்போது, யெல்ட்சன், "ரஷ்யாவை கவனித்துக் கொள்ளுங்கள்!" என்று புதினிடம் கேட்டுக்கொண்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புதின் ரஷ்ய இறையாண்மையின் பாதுகாவலராகத் தன்னைக் காட்டிக் கொள்கிறார். அவருடைய முன்னோடியான போரிஸ் யெல்ட்சன் அதைச் செய்யத் தவறியதாகவும் அவர் கூறுகிறார். கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கிய யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள நேரம் நெருங்கும் நிலையில், முன்னாள் அதிபர் யெல்ட்சனின் அந்த அறிவுரை எனக்கு மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறது. யுக்ரேன் மீதான அதிபர் புதினின் முழு அளவிலான படையெடுப்பு பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதே அதற்குக் காரணம். முதன்மையாக, யுக்ரேன் அதன் நகரங்களில் மிகப்பெரிய அழிவையும் உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளது. அதன் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 20 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, ஒரு கோடி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கால் நூற்றாண்டுக்கு முன்பு புதின் ஆட்சிக்கு வந்ததில் இருந்து நான் அவரைப் பற்றிச் செய்தியளித்து வருகிறேன். ரஷ்யாவில் புதிதாகப் பதவியேற்கும் அதிபர் 25 ஆண்டுகள் கழித்தும் ஆட்சியில் இருப்பார் என்றோ, யுக்ரேன் மீது போர் தொடுத்ததோடு மேற்குலகுடனுன் மோதும் என்றோ, 1999 டிசம்பர் 31-ஆம் தேதியன்று யார் நினைத்திருப்பார்கள்? தென் கொரியா: தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான விமானம் - 167 பேர் உயிரிழப்பு29 டிசம்பர் 2024 ஹெஸ்பொலா: லெபானான் பேஜர் வெடிப்பு மொசாட்டால் எப்படி நடத்தப்பட்டது - முன்னாள் ஏஜெண்ட்கள் கூறிய தகவல்29 டிசம்பர் 2024 Play video, "ரஷ்யா: புதின் முன் நேரடியாக கேள்வி எழுப்பிய பிபிசி ரஷ்ய ஆசிரியர் - அதிபர் என்ன கூறினார்?", கால அளவு 3,42 03:42 காணொளிக் குறிப்பு, புதின் முன் நேரடியாக கேள்வி எழுப்பிய பிபிசி ரஷ்ய ஆசிரியர் - ரஷ்ய அதிபர் என்ன கூறினார்? யெல்ட்சன் தனக்குப் பிறகு, புதினுக்கு பதிலாக வேறு ஒருவரைத் தேர்வு செய்திருந்தால் வரலாற்றின் போக்கு முற்றிலும் மாறியிருக்குமா என்று நான் அடிக்கடி சிந்தித்து உள்ளேன். இந்தக் கேள்வி நிச்சயமாக ஓர் ஊகம் மட்டுமே. வரலாறு என்பதே 'ஆயின், ஆனால், இருக்கலாம்' என்பவற்றால் நிறைந்ததுதானே! இருப்பினும் என்னால் ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும்: கடந்த 25 ஆண்டுகளில் நான் வெவ்வேறு புதின்களை பார்த்துள்ளேன். அப்படி வெவ்வேறு புதின்களை பார்த்திருப்பது நான் மட்டுமே அல்ல. "நேட்டோ-ரஷ்யா கவுன்சிலை உருவாக்குவது, வணிகத்தின் மீது கவனம் செலுத்துவது, நேட்டோவுடன் ஒத்துழைப்பது போன்றவற்றில் கவனம் செலுத்திய புதினை நான் சந்தித்தேன். அவர், நாம் இப்போது பார்க்கும் தனது சொந்த அதிகாரத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்தும் தற்புகழ்ச்சி கொண்ட புதினில் இருந்து முற்றிலும் வேறுபட்டவராக இருந்தார்," என்று முன்னாள் நேட்டோ தலைவர் லார்ட் ராபர்ட்சன் 2023இல் என்னிடம் கூறினார். "மே 2002இல் எனக்குப் பக்கத்தில் நின்று, யுக்ரேன் தனது பாதுகாப்பு பற்றிய சொந்த முடிவுகளை எடுக்கவல்ல ஓர் இறையாண்மை கொண்ட, சுதந்திரமான தேசம் என்று கூறியவர், இப்போது யுக்ரேன் ஒரு தனிநாடு அல்ல என்கிறார்." அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும் - முழு விவரம்29 டிசம்பர் 2024 திபெத்தில் உலகின் மிகப்பெரிய அணையை கட்ட சீனா திட்டம் - இந்தியாவுக்கு ஏற்படப்போகும் பாதிப்பு என்ன?29 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, கடந்த 2022இல் யுக்ரேனில் அதிபர் புதின் தனது சிறப்பு 'ராணுவ நடவடிக்கையை'தொடங்கியதில் இருந்து ரஷ்யா போர்க்களத்தில் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளது. "விமர்சனங்களை ஏற்காத விளாதிமிர் புதினுக்கு தனது நாடு குறித்து மிகப்பெரிய லட்சியம் உள்ளதாக நான் நினைக்கிறேன். சோவியத் யூனியன் உலகின் இரண்டாவது வல்லரசாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், அப்படியொரு பெயரை ரஷ்யாவால் பெற முடியவில்லை. இது புதினின் ஈகோவை காயப்படுத்தி இருக்கும் என்று நான் கருதுகிறேன்," என்றார் ராபர்ட்சன். புதினிடம் நாம் கண்டுள்ள இந்த மாற்றத்திற்கு அதுவொரு காரணமாக இருக்கக்கூடும். "ரஷ்யாவை மீண்டும் சிறந்ததாக்க வேண்டும்" (அதோடு, பனிப்போரில் ரஷ்யா தோல்வியடைந்து விட்டதாகப் பலர் கூறுவதை ஈடு செய்ய வேண்டும்) என்பதே அவரது லட்சியமாக இருந்தது. அண்டை மற்றும் மேற்கு நாடுகளுடன் தவிர்க்க முடியாத மோதல் போக்கு சூழ்நிலையில் ரஷ்யாவை இது தள்ளியது ஆனால், ரஷ்ய அதிபர் மாளிகையிடம் இதற்கு வேறு விளக்கம் உள்ளது. 'பல ஆண்டுகளாக ரஷ்யா பொய்யுரைக்கப்பட்டு, அவமரியாதைக்கு ஆளாகப்பட்டுள்ளது, அதன் பாதுகாப்புக் கவலைகள் மேற்கு நாடுகளால் நிராகரிக்கப்பட்டது' போன்ற உணர்வுகளால் தனக்கு ஏற்பட்ட மனக்கசப்பின் விளைவாக புதின் செயல்படுவதைப் போல, அவரது உரைகள், கருத்துகள் இருக்கின்றன. ஆனால், "ரஷ்யாவை கவனித்துக் கொள்ளுங்கள்" என்ற யெல்ட்சனின் கோரிக்கையைத் தான் நிறைவேற்றி விட்டதாக புதின் நம்புகிறாரா? அதைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ஒன்று சமீபத்தில் கிடைத்தது. கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?28 டிசம்பர் 2024 யானை மீது ஊர்வலமாக சென்ற பிரிட்டிஷ் வைஸ்ராய் மீது வெடிகுண்டு தாக்குதல் - புரட்சியாளர்கள் திட்டமிட்டது எப்படி?28 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES ரஷ்ய அதிபர் புதின் ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும், அந்த ஆண்டில் நடந்த நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிப்பது வழக்கம். அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான செய்தியாளர் சந்திப்பு நான்கு மணிநேரத்திற்கும் மேலாக நடந்தது. புதின் என்னை ஒரு கேள்வி கேட்பதற்கு அழைத்தார். "ரஷ்யாவை கவனித்துக் கொள்ளுங்கள் என்று போரிஸ் யெல்ட்சன் உங்களிடம் கூறினார்" என்று அதிபருக்கு நினைவூட்டிய நான், "ஆனால் நீங்கள் மேற்கொண்டுள்ள 'சிறப்பு ராணுவ நடவடிக்கையால்' ஏற்பட்டுள்ள கணிசமான இழப்புகள், குர்ஸ்க் பிராந்தியத்தில் இருக்கும் யுக்ரேனிய படைகள், பொருளாதாரத் தடைகள், அதிக பணவீக்கம் ஆகியவற்றுக்கு என்ன பதில்? உங்கள் நாட்டை நீங்கள் நன்றாக கவனித்துக் கொண்டதாகக் கருதுகிறீர்களா?" என்று கேள்வியெழுப்பினேன். அதிபர் புதின் அதற்கு "ஆம்" என்று பதிலளித்தார். அதோடு, "நான் என் நாட்டைக் கவனித்துக்கொள்வது மட்டுமில்லை, அதை பாதாளத்தின் விளிம்பில் இருந்து காப்பாற்றியுள்ளேன்," என்று குறிப்பிட்டார். அவர் யெல்ட்சன் ஆட்சியில் இருந்த ரஷ்யா அதன் இறையாண்மையை இழந்து கொண்டிருந்த ஒரு நாடாகச் சித்தரித்தார். "ரஷ்யாவை தனது சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொண்ட" மேற்கு நாடுகள் அதனால் யெல்ட்சனுக்கு "ஆதரவாக இருந்ததாக" அவர் குற்றம் சாட்டினார். ஆனால் ரஷ்யா ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடு என்பதை உறுதிப்படுத்த தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வதாக புதின் கூறினார். புதின் தன்னை ரஷ்ய இறையாண்மையின் பாதுகாவலராகக் காட்டிக் கொள்கிறார்: இது யுக்ரேன் போரை நியாயப்படுத்தும் முயற்சியில் அவருக்குக் கிடைத்த பார்வையா? அல்லது நவீன ரஷ்ய வரலாற்றில் புதின் உண்மையாகவே இப்படி நம்புகிறாரா? அது இன்னும் எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், இதுவொரு முக்கியக் கேள்வி என்பதை நான் உணர்கிறேன். அதற்கான பதில், போரின் முடிவு எப்படி இருக்கப் போகிறது, ரஷ்யாவின் எதிர்கால திசை எதை நோக்கி இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்தே அமையும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c5yd9vn49r5o
  22. 30 DEC, 2024 | 10:59 AM இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 350 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டில் காட்டு யானைகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகளவான காட்டு யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ள நிலையில் அவற்றின் மொத்த எண்ணிக்கை 70 ஆகும். அத்துடன், மின்சாரம் தாக்கி 50 காட்டு யானைகளும், யானை வெடி வெடித்து 35 காட்டு யானைகளும், ரயிலில் மோதி 10 காட்டு யானைகளும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/202520
  23. Published By: DIGITAL DESK 3 30 DEC, 2024 | 10:32 AM தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஓய்வு பெறவுள்ள நிலையில், இலங்கை இராணுவத்தின் 25 ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிக்கோ பதவியேற்கவுள்ளார். மேஜர் ஜெனரல் ரொட்ரிக்கோவின் நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று (30) வெளியாகுமென அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிக்கோ இலங்கை இராணுவத்தின் பிரதி பிரதானியாக கடமையாற்றி வருகிறார். அவர் முன்னர் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் தளபதியாகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/202513
  24. 30 DEC, 2024 | 10:38 AM யாழ்ப்பாணத்தில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பனை மரங்களை வெட்டியவர்கள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இருபாலை மற்றும் நீர்வேலிப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பனை மரங்களை வெட்டியவர்கள் மீது சட்ட நடவடிக்கையின் பிரகாரம் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை தனங்கிளப்புப் பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்களை வெட்டியவர்கள் மீதும் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் விடுமுறைநாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இவ்வாறு சட்டவிரோதமாக பனை மரங்கள் வெட்டப்படுவதாகவும் தெரிவித்த அவர் பனை வளங்களை பாதுகாக்கும் நோக்கில் தாம் விரைந்து செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதேவேளை மக்கள் தமது தேவைகளுக்கு பனை மரங்களை வெட்டுவதற்கு பொருத்தமான பனை மரங்களைப் பாதுகாக்கும் நோக்கோடு கூடிய திட்டம் ஒன்று விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதால் அதுவரை மக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் தாழ்மையான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளதுடன் எந்தப் பகுதியிலாவது பனை மரங்கள் வெட்டுவதை அறிந்தால் மக்கள் உடனடியாக 0779273042 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரியப்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/202516
  25. விமானம் தரையிறங்குவதற்கு ஐந்து நிமிடங்களிற்கு முன்னர் பறவை மோதலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது – தென்கொரிய அதிகாரி 30 DEC, 2024 | 10:32 AM தென்கொரிய விமானம் விமானநிலையத்தில் விபத்துக்குள்ளாவதற்கு முன்னர் பறவைமோதலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தென்கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. தென்கொரிய வரலாற்றில் மிக மோசமான விமானவிபத்திற்கான காரணங்கள் குறித்த விசாரணைகளின் போது இது தெரியவந்துள்ளதாக தென்கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. முயான் சர்வதேச விமானநிலையத்தின் கட்டுப்பாட்டு கோபுரத்திலிருந்து ஜெசுஎயர் 7சி 2216 விமானத்திற்கு பறவை தாக்கலாம் என்ற எச்சரிக்கை அனுப்பப்பட்டது சற்று நிமிடத்தில் விமானி ஆபத்திலிருப்பதற்கான சமிக்ஞையை அனுப்பினார் என தென்கொரியாவின் நிலம் உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சகத்தின் விமானப்போக்குவரத்து கொள்கை இயக்குநர் ஜீ – ஜாங்- வான் தெரிவித்துள்ளார். காலை 9.30 மணியளவில் விமானி தரையிறங்குவதற்கான கியரை பயன்படுத்தாமல் தரையிறங்க முயன்றார் இதனால் ஓடுபாதையை தாண்டிச்சென்று சுற்றுமதிலில் மோதியது என அவர் குறிப்பிட்டுள்ளார். முதலில் தரையிறங்க முயற்சித்தவேளை பறவை தாக்குதல் குறித்த எச்சரிக்கை அனுப்பபட்டது,அதன் பின்னர் அவர் மேடே சமிக்ஞையை வெளியிட்டார்,இதனை தொடர்ந்து முதலில் இறங்க தீர்மானித்திருந்த இடத்திற்கு எதிரே உள்ள பகுதியில் தரையிறங்குவது உறுதி செய்யப்பட்டது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். விமானியும் துணைவிமானியும் வர்த்தக விமானங்களை 9000 மணித்தியாலங்களிற்கு மேல் செலுத்திய அனுபவம் உள்ளவர்கள் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். விமானவிபத்திற்கான உறுதியான காரணம் குறித்து எதனையும் சுட்டிக்காட்ட விரும்பாத அதிகாரிகள் விசாரணைகள் இடம்பெறுகின்றன விமானம் விபத்துக்குள்ளான பின்னர் தீப்பிடித்ததாலேயே பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டன என தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/202515

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.