Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: DIGITAL DESK 2 05 JAN, 2025 | 05:44 PM (நமது நிருபர்) நாட்டின் பாடசாலை கல்வியை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் உலக வங்கியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் கல்வி அமைச்சில் இடம்பெற்றது. கடந்த பல வருடங்களாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலைகளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் விசேடமாக பாடசாலை மாணவர்களின் சுகாதாரத்தை கட்டியெழுப்புதல் தொடர்பில் பிரதமர் இதன்போது தனது விசேட அவதானத்தை செலுத்தினார். அத்துடன் நாட்டின் இரண்டாம் நிலைக் கல்வியை முன்னிட்டு தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. கல்வி உயர் கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர். https://www.virakesari.lk/article/203039
  2. மூன்றே நாளில் இந்தியா சரண் - 5 மாதங்களில் அணியில் மாற்றம் வரும் என்ற கம்பீர் பேட்டியால் புதிய யூகம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பார்டர் - கவாஸ்கர் கோப்பையுடன் ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக சிட்னியில் நடந்த 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 10 ஆண்டுகளுக்கு பிறகு, ஆஸ்திரேலிய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. சிட்னி டெஸ்ட் தொடங்கி மூன்றாவது நாளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்று ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணியானது இந்த தொடரை இழந்து, கோப்பையையும் பறிகொடுத்துள்ளது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறாமல் படுதோல்வியுடன் தாயகம் திரும்ப உள்ளது. ஆஸ்திரேலியா அணியுடன் கற்றுக்கொண்டவற்றை வைத்து இந்திய அணி அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் என்று அணியின் கேப்டன் பும்ரா கூறினார். மேலும் வரும் 5 மாதங்களில் இந்திய அணியில் அதிக மாற்றங்கள் வரக்கூடும் என்று தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதனால், இந்திய அணியில் எவ்வாறான மாற்றங்கள் வரக்கூடும் என்று ரசிகர்களிடையே இப்போதே பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன. 'புஷ்பா' ஸ்டைல் ஆரவாரம்: ஆட்டத்தையே மாற்றிய நிதிஷ்குமார் முறியடித்த 122 ஆண்டு சாதனை என்ன? பாக்ஸிங் டே டெஸ்ட்: ஜெய்ஸ்வாலை கோலி அவுட் ஆக்கினாரா? இன்று என்ன நடந்தது? பும்ரா சாதனை: கடிவாளத்தை நழுவ விட்ட ரோஹித் - ஆடுகளம் நாளை எப்படி இருக்கும்? 100 ஆண்டு வரலாறு மாறுமா? பும்ராவை திணற வைத்த கான்ஸ்டாஸ், டாப் ஆர்டரில் 4 அரைசதம் - இந்திய அணிக்கு சிக்கலா? இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியதையடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் ஆஸ்திரேலிய அணி விளையாட இருக்கிறது. இந்த போட்டி வரும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 2வது முறையாக ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி மூன்றாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டெஸ்ட் தொடரை பரிதாபமாக இழந்த நிலையில் அந்த வாய்ப்பை இந்திய அணி இழந்துள்ளது. மத்ஸயா 6000: பெருங்கடலில் 6000 மீட்டர் ஆழத்திற்கு செல்லப் போகும் இந்திய விஞ்ஞானிகள்9 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட உணவை சாப்பிட்டே தீர வேண்டும் என்ற எண்ணத்தை கட்டுப்படுத்துவது எப்படி?4 ஜனவரி 2025 போட்டிச் சுருக்கம் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 181 ரன்களும் எடுத்தன. 4 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, நேற்றைய 2வது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்திருந்தது. 3-வது நாளான இன்று, கூடுதலாக 16 ரன்கள் சேர்த்தநிலையில் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்து 39.5 ஓவர்களில் 157 ரன்களை குவித்தது. இதையடுத்து, 162 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 27 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது. விமர்சனங்களுக்கு ஆஸ்திரேலியா பதிலடி பெர்த் டெஸ்டில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தபின் ஆஸ்திரேலியாவின் பேட்டிங், பந்துவீச்சு பற்றி அந்நாட்டு ஊடகங்களும், முன்னாள் வீரர்களும் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால், இந்திய அணியை ஒவ்வொரு போட்டியிலும் தங்களின் பந்துவீச்சாலும், பேட்டிங்காலும் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 10 ஆண்டுகளுக்குப்பிறகு ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தமிழ்நாட்டை அச்சுறுத்தும் ஸ்க்ரப் டைபஸ் தொற்று - எந்த 7 மாவட்டங்களில் அதிகம் பரவுகிறது? தடுப்பது எப்படி?4 ஜனவரி 2025 மதுரையில் காவி உடுத்தி, பூணூல் அணிந்து மதமாற்ற பணி செய்த பாதிரியார்- கிறிஸ்தவ மிஷனரிகள் எப்படி செயல்பட்டன?24 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியை தனி ஒருவனாக தாங்கிப் பிடித்த பும்ரா பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் இந்திய அணியை ஒவ்வொரு போட்டியிலும் தோளில் தூக்கி சுமந்து, திருப்புமுனையை ஏற்படுத்தியது வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மட்டும்தான் என்பதில் சந்தேகமில்லை. பும்ரா என்ற ஒற்றை பந்துவீச்சாளரை நம்பிதான் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரை எதிர்கொண்டது. இந்தத் தொடரில் மட்டும் பும்ரா 32 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 1977 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் சுழற்பந்துவீச்சாளர் பிஷன் சிங் பேடி 31 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்ததே டெஸ்ட் தொடரில் ஒரு பந்துவீச்சாளர் வீழ்த்திய அதிகபட்ச விக்கெட்டுகளாக இருந்தது. 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த சாதனையை பும்ரா தற்போது முறியடித்துள்ளார். பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரின் தொடர்நாயகனாகவும் பும்ரா அறிவிக்கப்பட்டார். இந்தத் தொடரில் 3 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பும்ரா. பும்ரா வீசும் ஒவ்வொரு 28 பந்துகளுக்கு ஒருமுறை ஒரு விக்கெட்டை வீழ்த்துபவராக இந்த தொடரில் இருந்தார். ஆட்டநாயகனாக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் போலந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாட்டில் இரண்டு மடங்கு அதிகரித்த ரேபிஸ் நோய் மரணங்கள் - என்ன காரணம்?3 ஜனவரி 2025 வானியல் அதிசயம்: 2025ஆம் ஆண்டின் சிறந்த எரிகல் பொழிவை எங்கு, எப்போது பார்க்கலாம்?2 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரின் தொடர்நாயகனாகவும் பும்ரா அறிவிக்கப்பட்டார். தோல்விக்கு காரணங்கள் என்ன? இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ஜஸ்பிரித் பும்ராவுக்கு 2வது நாளான நேற்று திடீரென முதுகு பிடிப்பு ஏற்பட்டு பந்துவீச முடியாமல் அவதிப்பட்டார். இதையடுத்து அணியின் மருத்துவரின் உதவியோடு விளையாட்டு அரங்கிலிருந்து வெளியேறி பும்ரா மருத்துவனைக்குப் புறப்பட்டார். இருப்பினும் 2வது இன்னிங்ஸில் பேட் செய்த பும்ரா 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் போலந்து பந்துவீச்சில் போல்டாகி டக்அவுட்டில் வெளியேறினார். ஆனால், முதுகு தசைப்பிடிப்பு காரணமாக முன்னெச்சரிக்கையாக 2வது இன்னிங்ஸில் பும்ரா பந்துவீசவில்லை. இதனால் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, நிதிஷ் ரெட்டி ஆகியோர் மட்டுமே பந்துவீசினர். பும்ரா இல்லாமல் இந்திய அணி பந்துவீசியதும் தோல்விக்கான முக்கியக் காரணமாகும். அது மட்டுமல்லாமல் போட்டி முடிய இன்னும் 2 நாட்கள் முழுமையாக இருக்கும் போது இந்திய அணி முன்னிலைக்காக குறைந்தபட்சம் 350 ரன்களாக இலக்கு வைத்திருந்தால்தான் வெற்றியை கைப்பற்ற முடியும் என்ற நிலை இருந்தது. சிட்னி போன்ற கிரீன்டாப் பிட்சில் 162 ரன்கள் இலக்காக வைத்துக்கொண்டு போட்டியை வெல்வது சாத்தியமில்லாதது. அதிலும் பும்ரா அணியில் பந்துவீசியிருந்தால்கூட வெற்றி கிட்டும் என்று நம்பலாம். ஆனால், பும்ரா இல்லாமலும், வெற்றியைக் கைப்பற்ற போதுமான ஸ்கோரும் இல்லாத நிலையில் தோல்வி அடைவது உறுதியானது. இந்தத் தொடரை இந்திய அணி இழப்பதற்கு மிக முக்கியக் காரணங்களில் ஒன்று பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற பேட்டிங் மட்டும்தான். அனுபவமான வீரர்களான புஜாரா, ஹனுமா விஹாரி, ரஹானே ஆகியோர்களை உள்நாட்டு போட்டியில் விளையாட வைத்துவிட்டு அனுபவம் குறைந்த கே.எல்.ராகுல், சுப்மன் கில், ஜெய்ஸ்வால் போன்றோரை நம்பினர். ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரின் மீதும் பெரிய நம்பிக்கை இருந்தநிலையில் இருவரும் பேட்டிங்கில் சொதப்பினர். இதில் கோலி முதல் போட்டியில் சதம் அடித்ததோடு சரி மற்ற எந்த போட்டியிலும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. ரோஹித் சர்மா எந்தப் போட்டியிலும் ஒற்றை இலக்க ரன்னையே கடக்கவில்லை. இந்தத் தொடரில் கோலியின் பேட்டிங் சராரசி 23.75 ஆக இருக்கிறது. ஒரு டெஸ்ட் தொடரில் சதம் அடித்தபின் ஒரு பேட்ஸ்மேன் தொடர்ந்து சொதப்பி மோசமான சராசரி வைத்துள்ள 3வது பேட்ஸ்மேனாக கோலி இருக்கிறார் என்று கிரிக்இன்போ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2024-25 டெஸ்ட் சீசனில் கோலியும், ரோஹித் சர்மாவும் 10 முறை ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்துள்ளனர். இந்த டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் சரியில்லையா அல்லது தேர்வே சரியில்லையா, அல்லது தேர்வுக்குழுவே சரியில்லையா என்பது ஆய்வு செய்யப்பட வேண்டியது, என வர்ணனையாளர்கள் கடுமையாக விமர்சித்தனர். கன்னரதேவன்: போரில் சோழ இளவரசனை வீழ்த்திய ராஷ்டிரகூட மன்னர் - கல்வெட்டு தரும் சுவாரஸ்ய தகவல்கள்2 ஜனவரி 2025 ஒரே அறையில் ஒன்றாக தூங்க விரும்பாத மில்லினியல் தம்பதியர் - என்ன காரணம்?1 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES போராடிய பிரிசித், சிராஜ் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 162 ரன்களை இலக்காக இந்திய அணி நி்ர்ணயித்திருந்தது. இது வெற்றி பெற போதுமான இலக்கு அல்ல என்பது தெரிந்தபோதிலும் பும்ரா இல்லாத சூழலில் இந்திய அணி களமிறங்கியது, கேப்டன் பொறுப்பை கோலி ஏற்று செயல்பட்டார். சாம் கோன்ஸ்டாஸ், கவாஜா அதிரடியாகத் தொடங்கினர். கோன்ஸ்டாஸ் ஒரு கேமியோ ஆடி 17 பந்துகளில் 22 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். லாபுஷேன் 6 ரன்னில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஸ்லிப்பில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த ஸ்டீவ் ஸ்மித்தும் 6 ரன்னில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஜெய்ஸ்வாலிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார் ஆஸ்திரேலிய அணி 58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதைப் பார்த்தபோது இந்திய வீரர்களுக்கு சற்று நம்பிக்கை துளிர்விட்டது. . கவாஜா, டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 46 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் கவாஜா 41 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் வெளியேறினார். 104 ரன்களுக்கு 4 வது விக்கெட்டைஆஸ்திரேலியா இழந்தது. இந்த பார்ட்னர்ஷிப்பை விரைவாக உடைத்திருந்தால் நிச்சயம் ஆட்டம்மாறியிருக்கும். 5வது விக்கெட்டுக்கு வெப்ஸ்டர், டிராவிஸ் ஹெட் கூட்டணி நிதானமாக பேட் செய்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அறிமுக வீரர் வெப்ஸ்டர் 39, ஹெட் 34 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். அமெரிக்க கருவூலத்துறை கணினிக்குள் சீனா ஊடுருவியதா? என்ன நடந்தது?31 டிசம்பர் 2024 சிங்கப்பூர் மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழும் ரகசியம்31 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரசித் கிருஷ்ணா "உடல்நிலைக்கும் மதிப்பளிக்க வேண்டும்' இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா போட்டி முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசுகையில், " இந்த தோல்வி சிறிது வருத்தமாக இருக்கிறது, இருப்பினும் உடல்நிலைக்கும் மதிப்பளிக்க வேண்டும், உடல்நிலையோடு சண்டையிட முடியாது. சில நேரங்களில் அதற்கும் மதிப்பளிக்க வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுபோன்ற பிட்சில் பந்துவீச எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், முதல் இன்னிங்ஸில் இருந்தே சிறிய பிரச்சினை எனக்கு ஏற்பட்டது. மற்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பந்துவீசலாம் என்று முடிவு செய்துதான் உடற்தகுதி நிபுணர்களுடன் பேசினேன் ஆனால், அவர்கள் வேண்டாம் என்று கூறினர். இந்தத் தொடர் முழுவதும் ஆஸ்திரேலியாவுடன் கடுமையாக போட்டியிட்டோம், சவாலான தொடராக இருந்தது. இந்த டெஸ்டிலும் அப்படித்தான் இருந்தது. ஏராளமான அனுபவங்கள் கிடைத்தன, அதிகமாகக் கற்றுக்கொண்டோம். இளம் வீரர்கள் பலர் அணிக்குள் வந்துள்ளர், அவர்களும் கற்றுக்கொண்டது எதிர்காலத்தில் உதவும், அணியை மேலும் பலமாக்கும். இந்த கற்றுக்கொண்ட உணர்வோடு அடுத்தக் கட்டத்துக்கு நகர்வோம். சிறந்த தொடராக அமைத்து தந்தமைக்கு ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள்" எனத் தெரிவித்தார். அமெரிக்காவில் கொந்தளிக்கும் எரிமலையின் விளிம்பிற்குச் சென்ற குழந்தை - என்ன நடந்தது?29 டிசம்பர் 2024 பாலை காய்ச்சாமல் அப்படியே பருகலாமா? மருத்துவர்கள் விளக்கம்28 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் 5 மாதங்களில் மாற்றம் வரும் என கம்பீர் தகவல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு பிறகு இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், "அணியின் ஒரு பிரிவு மட்டுமே காரணம் என்று சொல்லி அவர்கள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. அணியின் ஒவ்வொரு பிரிவிலும் முன்னேற்றம் தேவைப்படுகிறது", என்றார். வரும் ஜூன் மாதம், இந்திய அணி அடுத்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இது குறித்து கம்பீர் பேசுகையில், அடுத்த ஐந்து மாதங்களில் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று சுட்டிக்காட்டினார். இருப்பினும், "அடுத்த ஐந்து மாதங்களுக்கான திட்டம் குறித்து பேசுவது இப்போது மிகவும் சீக்கிரமாக இருக்கும். அணியின் ஃபார்ம், அணுகுமுறை, வீரர்கள் என அனைத்திலும் மாற்றங்கள் வரக்கூடும்", என்றும் குறிப்பிட்டார். ஐந்தாவது டெஸ்டில் ரோஹித் சர்மாவின் விலகல் குறித்து கேட்டதற்கு, "அவராக முன்வந்துதான் இந்த போட்டியில் இருந்து விலகிக்கொண்டார்", என்று கம்பீர் பதில் அளித்தார். பேட்ஸ்மேன்களின் செயல்திறன் பற்றிய கேள்விக்கு, "எல்லா வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த அளவுக்கு உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால், ஒரு அணிக்கு தேவையான சிறப்பான வீரர்களை பெற முடியாது", என்று தெரிவித்தார். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு யூகங்கள் குறித்து பேசிய கௌதம் கம்பீர், "அவர்கள் அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் அவர்களுக்கு இந்த விளையாட்டின் மீது இன்னும் பசி இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்ல தங்களால் முடிந்த அனைத்தையும் அவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் என்ன செய்தாலும், இந்திய கிரிக்கெட்டின் நலனை முன்வைத்தே செய்வார்கள்", என்று கூறினார். கம்பீர் பதவி மீது தொங்கும் கத்தி இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பின் இந்திய அணி பல தோல்விகளைச் சந்தித்துள்ளது. குறிப்பாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 27 ஆண்டுகளுக்குப்பின் 0-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது, உள்நாட்டில் 12 ஆண்டுகளுக்குப்பின் நியூசிலாந்து அணியிடம் டெஸ்ட் தொடரை 3-0 என இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகியது. இப்போது பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை 3-1 என 10 ஆண்டுகளுக்குப்பின் இழந்துள்ளது. இந்திய அணிக்கு பயிற்சியாளராக ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் இருந்தபோது வீரர்களுடன் சுமூகமான தொடர்பு, பேச்சு, அனுசரணையான போக்கு இருந்தது. அதேபோன்ற போக்கு கம்பீர் பயிற்சியாளராக வந்தபின் வீரர்களிடம் இல்லை, வீரர்களைக் கையாள்வதும் சரியான முறையில் இல்லை, வீரர்கள் ப்ளேயிங் லெவனில் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறார்கள் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி இழந்தால் கம்பீர் பயிற்சியாளர் பதவியில் தொடர்வது இந்திய அணிக்கு பாதுகாப்பானதாக இருக்காது, அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிறது என்பதால் அதற்குள் முடிவு செய்வோம், அதிபட்சமாக ஜனவரி 12ம் தேதிக்குள் ஏதாவது முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 'விடாமுயற்சி' தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?4 ஜனவரி 2025 ரோஜா ஆதித்யா: ஒப்பாரிப் பாடல் முதல் கர்நாடக சங்கீதம் வரை... சுயாதீன இசைக் கலைஞர் சந்திக்கும் சவால்கள் என்ன?30 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் எங்களுக்கு சிறப்பான நாள் 10 ஆண்டுகளுக்குப்பின் பார்டர் கவாஸ்கர் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறுகையில் "என்னால் நம்ப முடியவில்லை. ஆனால், எங்கள் அனைவருக்கும் தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது. எங்கள் திட்டங்கள் குறித்து தெளிவான பார்வையுடன் செயல்பட்டோம். ரன்களைக் குறைவாகக் கொடுக்க வேண்டும், விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று திட்டமிட்டோம். பேட்ஸ்மேன்களும் சிறப்பாக செயல்பட்டனர். உண்மையில் பெருமையாக இருக்கிறது. இந்தத் தொடரை கைப்பற்ற குழுவாக அதிகமான நேரத்தை செலவிட்டுள்ளோம். சில வெற்றிகள் எப்போதும் மறக்கமுடியாததாக அமைந்துவிடுகிறது. இந்த வெற்றியை, நாங்கள் அடைந்ததை நினைத்து பெருமைப்படுகிறோம். இளம் வீரர்களின் பங்களிப்பும் அற்புதமாக இருந்தது. ரசிகர்களும் எங்களுக்கு தொடர் முழுவதும் நல்ல ஆதரவு அளித்தனர். இந்த 2025ம் ஆண்டில் இந்தநாள் எங்களுக்கு சிறப்பான நாளாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/czr3dn4lddyo
  3. Nimisha Priya: Yemen-ல் Kerala Nurse-க்கு மரணதண்டனை; இறுதி நாட்கள் நெருங்குகிறதா? பின்னணி என்ன? கேரளாவைச் சேர்ந்த செவிலியரான நிமிஷா பிரியா, ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார். அவரை மீட்க முயற்சிகள் நடந்துவரும் நிலையில், குருதிப்பணம் அளித்தால் அவர் தண்டனையில் இருந்து தப்ப வாய்ப்புள்ளது. ஒரு இந்திய பெண்ணுக்கு ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டது ஏன்? குருதிப்பணம் என்றால் என்ன? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
  4. க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தால் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளோம் முறையாக செயற்படாவிடின் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோம் - இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை Published By: VISHNU 05 JAN, 2025 | 05:53 PM (இராஜதுரை ஹஷான்) 'க்ளீன் ஸ்ரீ லங்கா' திட்டத்தால் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். பதில் பொலிஸ்மா அதிபருடன் இவ்வாரம் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம். முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். கொழும்பில் உள்ள இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டை தூய்மைப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ' க்ளீன் ஸ்ரீ லங்கா' நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. சேவையில் ஈடுபடும் பேருந்துகளை இடைநிறுத்தி பொலிஸார் சோதனை செய்கிறார்கள். க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தின் பிரதான நோக்கம் என்னவென்பதை முதலில் அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும். மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் பேருந்தின் முன் மற்றும் பின் பக்க கண்ணாடிகளில் அலங்காரங்கள் மற்றும் பொருத்தமற்ற ஸ்டிக்கர்கள் ஆகியவற்றை இணைப்பது தவறு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸார் இந்த சட்டத்தின் பிரகாரம் செயற்பட வேண்டும். க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தை அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு பொலிஸார் முன்னெடுக்கும் செயற்பாடுகளினால் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் பேருந்து நடத்துனர்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள். இதனால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இந்த வாரம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்திருந்தனர். பொலிஸாரின் செயற்பாடுகளினால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் இந்த வாரம் பதில் பொலிஸ்மா அதிபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம். நாம் முன்வைக்கும் கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் பணிப்புறணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். பொலிஸார் சிவில் உடையில் பேரூந்தில் பயணித்தவாறு பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. மோட்டார் வாகன கட்டளைச்சட்டத்தில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை. ஆகவே பொலிஸார் மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்துக்கு அமைய செயற்பட வேண்டும். தனியார் பேருந்து சாரதிகள் கவனயீனமாக செயற்படுவதால் வாகன விபத்து இடம்பெறுவதாக குறிப்பிடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டில் போக்குவரத்து சபைக்கு சொந்தமாக 3500 முதல் 4000 பேரூந்துகள் உள்ளன. தனியார் துறையில் 13500 பேருந்துகள் உள்ளன. ஆகவே தனியார் பேருந்துகளை காட்டிலும் அரச பேருந்துகளே அதிகளவில் விபத்துக்குள்ளாகுகின்றன என்றார். https://www.virakesari.lk/article/203051
  5. 05 JAN, 2025 | 03:53 PM இலங்கையில் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருக்கும் மாகாண சபை தேர்தல்களை மிக விரைவாக நடத்தி தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ்நாடு மாநில பிரிவு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கேட்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மகாநாட்டில் இது தொடர்பில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அந்த மகாநாடு ஜனவரி 3ஆம் திகதி தொடக்கம் 5ஆம் திகதி வரை விழுப்புரத்தில் கட்சியின் தேசிய மத்தியகுழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. மகாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், எம்.ஏ. பேபி, ஜி. இராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உட்பட மத்திய குழு, மாநிலச் செயற்குழு, மாநிலக்குழு ஆகியவற்றின் உறுப்பினர்களும் தமிழகம் முழுவதிலும் இருந்து 550க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இலங்கை தொடர்பிலான தீர்மானத்தை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முன்மொழிய தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர் எம்.சின்னத்துரை வழிமொழிந்தார். 'இலங்கை தமிழர்கள், இஸ்லாமியர்கள், மலையகத் தமிழர்கள் சமத்துவத்துடன் வாழவும் - மாகாணங்களுக்கான அதிகாரப் பரவலாக்கலை உறுதிசெய்திடவும் கோரும் தீர்மானம்” என்ற தலைப்பிலான அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது; இலங்கையில் தமிழ் மக்கள் சமத்துவமின்மைக்கும் நீண்டகாலமாக இனவெறித் தாக்குதலுக்கும் ஆளாகிவந்த நிலையில், அது உள்நாட்டு யுத்தத்துக்கும் அமைதியின்மைக்கும் வழிவகுத்தது. அதனால் அனைத்துப் பகுதி மக்களும் பாதிக்கப்பட்டனர். தற்போது இலங்கைத் தமிழர்கள் உட்பட அனைத்து சிறுபான்மைச் சமூகங்களினதும் ஆதரவுபெற்ற தேசிய மக்கள் சக்தி அமோக பெரும்பான்மையுடன் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கிறது. இந்த சுமுகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி சமத்துவத்தையும் மாகாணங்களுக்கான அதிகாரப் பரவலாக்கலையும் உறுதிசெய்ய வேண்டும் என்று இந்த மகாநாடு கேட்டுக்கொள்கிறது. நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருந்துவரும் மாகாணசபை தேர்தல்களை மிக விரைவாக நடத்தி மாகாணசபைகளுக்கு உரிய அதிகாரங்களை வழங்குவதன் மூலம் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என்றும் மகாநாடு கேட்டுக்கொள்கிறது. இலங்கை தமிழர்கள், இஸ்லாமியர்கள், மலையகத் தமிழர்களின் நம்பிக்கையைப் பெறும்வகையில் உரிய பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வுகளைக் காணவேண்டும். மாகாணங்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்தின்போது எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் விதிக்காமல் கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி, நிலம், காவல்துறை போன்ற அம்சங்களில் மாகாண அரசாங்கங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று இந்த மகாநாடு இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறது. https://www.virakesari.lk/article/203025
  6. வாள் எடுத்துப் போர் புரிந்த காலத்தில் இரு தரப்பும் தயார்நிலையில் இருந்து சண்டையிட்டு மாண்டனர். ஆனால் ஆயுதம் ஏதுமில்லாதவரை வாளால் வெட்டுவது!!
  7. ஒருசிலர் தூக்கத்தில் இருக்கும்போதே இறந்துபோனது குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். இவ்வாறு தூக்கத்தில் இருக்கும்போதே ஒருவர் மரணம் அடைவது ஏன் என்பது குறித்து விளக்குகிறார். தூக்கவியல் நிபுணர் மருத்துவர் ஜெயராமன். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  8. "அமெரிக்கா வீழ்ச்சியை நோக்கி செல்கின்றது" - விழித்துக்கொள்ளவேண்டிய தருணம் இது - டிரம்பின் ஹோட்டலின் முன்னால் வாகனத்தை வெடிக்க வைத்தவரின் கையடக்க தொலைபேசியில் குறிப்பு 05 JAN, 2025 | 11:38 AM அமெரிக்காவின் லாஸ்வெகாசில் கடந்த வாரம் டொனால்ட் டிரம்பின் ஹோட்டலின் முன்னால் வெடித்து சிதறிய வாகனத்தை செலுத்திய நபர் அமெரிக்கா வீழ்ச்சியை நோக்கி செல்கின்றது என குறிப்பொன்றை எழுதிவைத்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. மத்தியு லிவெல்ஸ்பேர்கெர் அமெரிக்கா விழித்துக்கொள்வதற்காக தான் இந்த வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக எழுதியுள்ளார். லாஸ்வெகாசில் டொனால்ட் டிரம்பின் ஹோட்டலிற்கு வெளியே வெடித்து சிதறிய டிரக் வண்டியின் வாகனச்சாரதி அமெரிக்க இராணுவத்தில் பணிபுரிபவர் என விசாரணைகளை மேற்கொள்ளும் தரப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். வாகனத்தை செலுத்தியவர் மத்தியுஅலன் லிவல்ஸ்பேர்கெர் இவர் அமெரிக்க இராணுவத்தின் விசேட படைப்பிரிவான கிறீன் பெரெட்டில் பணியாற்றியவர் என விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். விசேட படைப்பிரிவின் சிரேஸ்ட தரத்தில் உள்ள ஒருவர் ஜேர்மனியில் பணியில் உள்ள இவர் சம்பவம் இடம்பெற்றவேளை விடுமுறையில் இருந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மரணித்த வேளை அவர் விடுப்பிலிருந்தார் என தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவம் எனினும் அவர் தன்னைதானே சுட்டுதற்கொலை செய்து கொள்ள முயன்றவேளை உயிரிழந்தார் என்பதை தெரிவிக்கவில்லை. டிரம்ப் சர்வதேச ஹோட்டலிற்கு வெளியே இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தின் நோக்கம் குறித்து கண்டறிவதற்காக அதிகாரிகள் மத்தியு லிவெல்ஸ்பேர்கெரின் இலத்திரனியல் சாதனங்களை தொடர்ந்தும் ஆராய்ந்து வருகின்றனர். மத்தியு லிவெல்ஸ்பேர்கெரின் ஐபோனில் கண்டெடுக்கப்பட்ட குறிப்புகளில் அவரது தனிப்பட் துயரங்கள் மற்றும் அரசியல் எதிர்பார்ப்புகள் குறித்த பல விடயங்கள் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 'இராணுவத்தில் உள்ள எனது சகாக்கள்முன்னாள் போர்வீரர்கள் மற்றும் அனைத்து அமெரிக்கர்களும் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. தங்களை வளப்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் மாத்திரம் செயற்படும் பலவீனமான தகுதியற்றவர்களால் நாங்கள் ஆளப்படுகின்றோம்" என அவர் தெரிவித்துள்ளார். இரண்டாவது குறிப்பில் அவர் "நாங்கள் அமெரிக்காவின் மக்கள் உலகில் வாழ்ந்த தலைசிறந்த மக்கள்ஆனால் நாங்கள் தற்போது நோய்வாய்ப்பட்டு வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றோம்" என தெரிவித்துள்ளார். "இது ஒரு பயங்கரவாத தாக்குதல் இல்லை, இது விழித்துக்கொள்வதற்கான ஒரு அழைப்புஅமெரிக்கர்கள் விந்தையான வேடிக்கையான விடயங்கள் குறித்தும் வன்முறைகள் குறித்தும் கவனம் செலுத்துகின்றார்கள் இதன் காரணமாக இவ்வாறானதொரு சம்பவத்தின் மூலமே எனது செய்தியை தெரிவிக்க முடியும் என கருதினேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார். 'நான் ஏன் தனிப்பட்ட முறையில் இதனை செய்தேன்"? நான் இழந்த சகோதரர்கள் பற்றிய என் மனதை நான் தூய்மைப்படுத்தவேண்டும். நான் பலியெடுத்த உயிர்கள் குறித்த வாழ்க்கையின் சுமைகளில் இருந்து என்னை விடுவித்துக்கொள்ளவேண்டும" என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/202998
  9. வடக்கு – கிழக்குப் பகுதிகளில், அதிகளவு தமிழ்ப் பொலிஸாரை நியமிப்பதற்கு சிறப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பொலிஸ் வெற்றிடங்கள் தமிழ்ப் பொலிஸாரை வைத்து மிக விரைவாக நிரப்பப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார். இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது; இலங்கையின் அனைத்துப் பகுதிகளைப் போலவே வடக்கிலும் எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல் பொலிஸாரால் பணியாற்ற முடியும். கடந்த காலங்களைப் போல் அல்லாமல், பொலிஸாரின் சுதந்திரமான செயற்பாட்டை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். சட்டத்தின் அடிப்படையில் செயற்படுவதற்குப் பொலிஸாருக்கு முழுமையான சுதந்திரம் உண்டு. சட்டத்தின் அடிப்படையில் செயற்படும்போது பொலிஸாருக்கு ஏதேனும் அழுத்தம் முன்வைக்கப்பட்டால், அது தொடர்பில் எனக்குத் தெரிவியுங்கள். நிச்சயம் நான் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வேன். தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் பகுதிகளில் தமிழ்ப் பொலிஸாரை நியமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடக்கு – கிழக்கில் இருந்து அதிகளவான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அத்துடன், வடக்கில் நிலவும் இதர பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். https://thinakkural.lk/article/314348
  10. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வக்குமார் பதவி, பிபிசி தமிழ் 4 ஜனவரி 2025 தமிழகத்தில் தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது; கடந்த கோடையில் நிலவிய கடும் வெப்பத்தால் தேங்காய் உற்பத்தி குறைந்ததே இதற்குக் காரணம் என்று விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது விலை உயர்ந்தாலும் தங்களுக்கு எந்த வகையிலும் பயன் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். பதுக்கலும் மற்றொரு முக்கியக் காரணமென்று இவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் அதுபோன்ற எந்தப் புகாரும் தங்களுக்கு வரவில்லை என்று தமிழக அரசின் வேளாண் துறை செயலர் அபூர்வா மறுத்துள்ளார். உற்பத்தி குறைவா? பதுக்கலா? இவை இரண்டில் தமிழ்நாட்டின் தேங்காய் விலை அதிகரிக்க என்ன காரணம்? மக்கானா: வட இந்தியாவில் அதிகரிக்கும் தாமரை விதை விவசாயம் - நவீனமயமாகும் அறுவடை முறை நைஜீரியா: வெள்ளத்தால் அழிந்த விவசாயம், உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் வறட்சி நிலத்தில் பேரீச்சை சாகுபடி- ஆண்டுக்கு ரு. 30 லட்சம் வரை வருமானம் ஈட்டும் விவசாயி தேங்காய் விலை மூன்றே மாதங்களில் 50% உயர்வு மத்திய அரசின் வேளாண் துறை புள்ளி விபரங்களின்படி, தேங்காய் உற்பத்தியில் கேரளா, கர்நாடகாவுக்கு அடுத்தபடியாக தமிழகம் மூன்றாமிடத்தில் உள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் பிபிசி தமிழிடம் பகிர்ந்த புள்ளி விபரங்களின்படி, தமிழகத்தில் 4.72 லட்சம் ஹெக்டேர் (11.66 லட்சம் ஏக்கர்) தென்னை பயிரிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 8 கோடியே 26 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. தமிழகத்தில் தென்னை பயிரிடும் பரப்பும், தேங்காய் உற்பத்தியும் அதிகமாக இருந்தாலும், தேங்காயின் விலை கடந்த சில மாதங்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. உதாரணமாக, கோவை உழவர் சந்தையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 20 ரூபாயாக இருந்த சிறிய தேங்காயின் விலை டிசம்பர் கடைசி வாரத்தில் 30 ரூபாயாகவும், 35 ரூபாயாக இருந்த பெரிய தேங்காயின் விலை டிசம்பர் கடைசியில் 50 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. வெளிச்சந்தையில் இந்த விலை இன்னும் அதிகம். அஜ்மீர் தர்காவுக்கு சால்வை வழங்கிய பிரதமர் மோதி: இந்து சேனா எதிர்ப்பது ஏன்?3 ஜனவரி 2025 தமிழ்நாட்டில் இரண்டு மடங்கு அதிகரித்த ரேபிஸ் நோய் மரணங்கள் - என்ன காரணம்?3 ஜனவரி 2025 தேங்காய் விலை நிர்ணயம் எப்படி? பட மூலாதாரம்,THANGAVEL படக்குறிப்பு,கொப்பரை வர்த்தகத்தில் நீண்ட கால அனுபவம் உடைய கப்பளாங்கரை தங்கவேல் கொப்பரை விலை (எண்ணெய் எடுப்பதற்கான தேங்காய்), எண்ணெய் விலையை அடிப்படையாக வைத்தே தேங்காய்க்கான விலையும் சந்தையில் நிர்ணயிக்கப்படுகிறது. மத்திய அரசின் தேசிய வேளாண் விற்பனை நிலையம் (NAFED-National Agricultural Cooperative Marketing Federation of India Ltd) ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவிலான கொப்பரையை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்கிறது. இவற்றைத் தவிர்த்து தமிழக அரசின் கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளின் தேங்காய்கள் கொள்முதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படுகின்றன. சந்தை நிலவரத்தைப் பொருத்தே, இவற்றின் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. ''நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை, தமிழகத்தில் விளையும் தேங்காயில் 20 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட்டது. உள்ளூர்ச் சந்தையில் 10 சதவீதம் விற்கப்பட்டது; மீதி 70 சதவீதம் கொப்பரை (தேங்காய் எண்ணெய்) உற்பத்திக்குப் போனது. சமீப காலமாக அரபு நாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. சமையலுக்கு தேவை அதிகரிப்பு, சபரிமலை சீசன் போன்றவற்றால் தேங்காய் தேவை இப்போது அதிகமாகியுள்ளது. தற்போதைய நிலையில், ஒரு டன் பச்சைத் தேங்காய் ரூ.55 ஆயிரம், கருப்புத் தேங்காய் (கொப்பரைக்கான தேங்காய்) ரூ.61 ஆயிரம், கொப்பரை கிலோ ரூ.148 என்று விலை உள்ளது.'' என்றார் கப்பளாங்கரை தங்கவேல். தென்னை உற்பத்தியாளர் சங்க மாநிலப் பிரதிநிதியாக உள்ள இவர், கொப்பரை வர்த்தகத்தில் நீண்ட கால அனுபவம் உடையவர். மனு ஸ்மிருதி குறித்த பேச்சு: திருமாவளவனுக்கு எதிரான மனு தள்ளுபடி - நீதிமன்றம் சொன்னது என்ன?3 ஜனவரி 2025 கடற்பாசி மூலம் தயாரிக்கப்படும் உள்ளாடைகள் - மார்பக புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு உதவுவது எப்படி?3 ஜனவரி 2025 ''பொதுவாக ஒரு தேங்காயின் எடை 500 கிராம் இருக்கும். அதன்படி இன்று நிர்ணயிக்கப்படும் ஒரு கிலோ 61 ரூபாய் விலைக்கு விவசாயிக்கு ஒரு தேங்காய்க்கு 30 ரூபாய் 50 பைசா கிடைக்க வேண்டும். ஆனால் அந்த விலை கிடைப்பதில்லை. இப்போது விளையும் தேங்காய் எதுவுமே அதிகபட்சம் 350 கிராம் எடைக்குள்ளாகவே இருப்பதே அதற்குக் காரணம்.'' என்கிறார் பரம்பிக்குளம்–ஆழியார் பாசனத் திட்டத்தின் திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழுத் தலைவர் மெடிக்கல் பரமசிவம். இவ்வாறு தேங்காய் எடை குறைந்ததற்கும், விவசாயிகளுக்கு விலை குறைவாகக் கிடைப்பதற்கும் வெவ்வேறு விவசாயிகளும் பல்வேறு காரணங்களைத் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டில் கோடையில் ஏற்பட்ட கடும் வெப்பம் என்பதே, இவர்களில் பலரும் கூறும் ஒருமித்த கருத்தாகவுள்ளது. ''தென்னைக்கு 37 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைத் தாண்டினால் பல பாதிப்புகள் ஏற்படும். கடந்த கோடையில் 40 டிகிரிக்கும் அதிகமாகவே வெப்பநிலை பதிவானது. அதனால் பாளைகள் வெடித்து குரும்புகள் உதிர்ந்துவிட்டன. காய்ப்புத் திறன் குறைந்து விட்டது. இதனால் வழக்கமான விளைச்சலில் 60 சதவீதம்தான் விளைச்சல் கொடுத்தது. தேவைக்கேற்ற வரத்து இல்லாததே இப்போதைய விலையேற்றத்துக்கு மிக முக்கியக் காரணமாகவுள்ளது.'' என்றார் தங்கவேல். வங்கதேசம்: இந்தியா, சீனா உடனான உறவு குறித்து அந்நாட்டு ராணுவ தளபதி கூறியது என்ன?2 ஜனவரி 2025 அங்குரிபாய்: கஞ்சா விற்பனையில் ஆதிக்கம் செலுத்திய பெண் - யார் இவர்?3 ஜனவரி 2025 பட மூலாதாரம்,KALI PRAKASH படக்குறிப்பு,விவசாயி காளி பிரகாஷ் கோடையில் பதிவான அதிகப்படியான வெப்பம் தவிர, கேரளா வாடல் நோயும் தேங்காய் உற்பத்தி குறைய முக்கியக் காரணம் என்று விவசாயிகள் கூறுகின்றனர். கேரளா வாடல் நோய் காரணமாக, தமிழக–கேரள எல்லையில் உள்ள தென்னந்தோப்புகளுக்கு அதிகமான பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார் பொள்ளாச்சி அருகேயுள்ள தா.கி.புதுாரைச் சேர்ந்த விவசாயி காளி பிரகாஷ். கேரளாவிலிருந்து அரை கி.மீ. துாரத்தில் இவரது தோட்டம் உள்ளது. ''ஏழாண்டுகளுக்கு முன்பே, எனது தோட்டத்தில் கேரளா வேர் வாடல் நோயின் தாக்கம் துவங்கிவிட்டது. அந்த பாதிப்பால் 50 வண்டி தேங்காய் எடுத்த தோப்பில் இப்போது 5 வண்டி தேங்காய் மட்டுமே கிடைக்கிறது.'' என்றார் காளி பிரகாஷ். அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: எஃப்.ஐ.ஆர் வெளியான விவகாரத்தின் பின்னணி என்ன?1 ஜனவரி 2025 ரயிலில் பயணிக்கப் போகிறீர்களா? ரயில்கள் புறப்படும், சேரும் நேரத்தில் மாற்றம் - முழு விவரம்1 ஜனவரி 2025 விவசாயிகள் ஆதங்கம் படக்குறிப்பு,பரம்பிக்குளம்–ஆழியார் பாசனத் திட்டத்தின் திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழுத் தலைவர் மெடிக்கல் பரமசிவம் கேரளா வாடல் நோய்க்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த தமிழக அரசு முயற்சி எடுக்காமல், அவற்றை வெட்டுவது மட்டுமே இதற்குத் தீர்வு என்று ஆலோசனை தருவதாக விவசாயிகள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர். பாதிப்பைக் கணக்கிடுகையில், தமிழக அரசு தரும் இழப்பீடும் மிகமிகக் குறைவு என்பது விவசாயிகள் பலருடைய ஆதங்கமாகத் தெரிகிறது. ''ஒரு தென்னை மரத்தை வெட்டி அகற்றுவதற்கு ஆயிரம் ரூபாய் தமிழக அரசு தருகிறது. அதிலும் எத்தனை மரங்களை அகற்றினாலும் ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் ரூ.32 ஆயிரம் மட்டுமே தருவது எந்த விதத்திலும் விவசாயிக்கு உதவுவதாக இல்லை.'' என்றார் பரமசிவம். கேரளா வாடல் நோய்க்கு தீர்வு காண்பதற்கு தென்னை ஆராய்ச்சி நிலையம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பிபிசி தமிழ் கேட்டதற்கு, இதன் தலைவர் சுதா லட்சுமி சில விளக்கங்களை அனுப்பியுள்ளார். அதில், ''நோய் பாதிப்புள்ள பகுதிகளில், செயல் விளக்கத்திடல் அமைத்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். உயிரி இடுபொருட்களான பேசில்லஸ் சப்டிலிஸ், டிரைக்கோடெர்மா விரிடி, வேப்பம்புண்ணாக்கு மற்றும் உயிர் உரங்கள் வழங்குகிறோம்.'' என்று தகவல் தெரிவித்துள்ளார். தீவிரமாக நோய் தாக்குதலுக்குள்ளான மரங்களை, தென்னை வளர்ச்சி வாரியத்தின் பங்களிப்புடன் முற்றிலும் அகற்றுவதற்கு விவசாயிகளுக்கு துணை நிற்பதாகவும், மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கி வருவதாகவும் அவர் பதிலளித்துள்ளார். கேரளா வாடல் நோயால் தென்னை மரங்களை விவசாயிகள் வெட்டி அகற்றி வருவதால் தென்னை பயிரிடும் பரப்பு குறைந்து வருவதாக விவசாயிகள் பலரும் தகவல் தெரிவித்தனர். அதுபற்றிய கேள்விக்கு பிபிசி தமிழுக்கு பதிலளித்துள்ள தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் சுதா லட்சுமி, ''இந்திய அளவில் கடந்த 20 ஆண்டுகளில், தென்னை சாகுபடி பரப்பு 17.9 சதவீதம் அதிகரித்துள்ளது; அதே காலகட்டத்தில் தமிழகத்தில் 35.27 சதவீதம் அதிகரித்துள்ளது; கேரளா வாடலால் மரத்தை வெட்டி அகற்றினாலும் மறுநடவு செய்வதால் குறிப்பிடத்தக்க அளவு சாகுபடி பரப்பு குறையவில்லை.'' என்று கூறியுள்ளார். 'இஸ்ரேல் அமெரிக்காவை கடவுள் பழிவாங்கட்டும்' - காஸாவில் கதறும் பெண்28 டிசம்பர் 2024 இயேசு காலத்தில் பல இறைத்தூதர்கள் தோன்றினாலும் அவர் மட்டும் பிரபலமாக இருப்பது ஏன்?25 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் எண்ணெய் நிறுவனங்கள் தேங்காய்களை பதுக்குகின்றனவா? வெயிலின் தாக்கம், கேரளா வாடல் நோய் பாதிப்பால் தேங்காய் உற்பத்தி குறைந்திருப்பதுடன், சில எண்ணெய் நிறுவனங்கள் தேங்காய்களை பதுக்கி வைத்திருப்பதுமே தற்போதைய விலையேற்றத்துக்குக் காரணம் என்றும் விவசாயிகள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தென்னை உற்பத்தியாளர் சங்க மாநிலப் பிரதிநிதி தங்கவேல், ''கடந்த ஆண்டில் தேசிய வேளாண் விற்பனை நிலையம் மூலமாக 8 லட்சம் மூட்டைகள் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டன. அவற்றை ஜனவரி, பிப்ரவரியில் விற்பனை செய்யுமாறு விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்தோம். ஆனால் சிலர் அவசரமாக தனியார் நிறுவனம் மூலமாக விற்று விட்டனர். கோவை, திருப்பூரில் மட்டும் 6 லட்சம் மூட்டைகள் தனியார் குடோன்களில் தேங்கியுள்ளன. தற்போதைய விலையேற்றத்துக்கு இதுவும் முக்கியக் காரணம். இதைத் தடுக்க வேண்டும்.'' என்றார் அவர். விவசாயிகளின் குற்றச்சாட்டு குறித்து, தமிழக அரசின் வேளாண் துறை செயலாளர் அபூர்வாவிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''கொப்பரைக்கு மத்திய அரசின் தேசிய வேளாண் விற்பனை நிலையம்தான் விலை நிர்ணயிக்கிறது. தமிழகத்தில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TANFED) மூலமாக தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகளுக்கு எங்கு விலை அதிகம் கிடைக்கிறதோ அங்குதான் அவர்கள் விற்பனை செய்வார்கள். தேங்காய்களை மொத்தமாக கொள்முதல் செய்து பதுக்கி விற்பனை செய்வதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. இருந்தாலும் அதுகுறித்து ஆய்வு செய்வோம்.'' என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3rqeey5247o
  11. 04 JAN, 2025 | 07:17 PM (எம்.வை.எம்.சியாம்) வடக்கு மக்கள் எமக்குப் பெற்றுத் தந்த மக்களாணையின் அர்த்தத்தை நாம் ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம். கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக அந்த மக்களுக்கு சிறந்த மனித நேய பொலிஸ் சேவையை பெற்றுக் கொடுப்போம். அதேபோன்று சட்டம் ஒழுங்கை பேணக்கூடிய ஒழுக்கமான சமூகத்தையும் உருவாக்க நாம் முன்னிற்போமென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார். அநுராதபுரம் மாவட்ட பொலிஸ் பிரிவுகளில் இயங்கும் பொலிஸ் பிராஜ குழுக்களுக்கு கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களம் இணைந்து வடக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களுக்கு சென்றிருந்தோம். யாழ் உள்ளிட்ட வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள பொலிஸ் பிரிவுகளில் இயங்கும் பொலிஸ் பிராஜ குழுக்களுக்கு கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுப்படுத்தினோம். இந்த வேலைத்திட்டத்தில் பொலிஸாருக்கு உள்ள பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் என்ன என்பது தொடர்பில் அவதானம் செலுத்தினோம். குறிப்பாக கடந்த இரண்டு பிரதான தேர்தலின் போதும் வடக்கு மக்கள் எமக்கு பெற்றுத்தந்த மக்கள் ஆணையின் நோக்கத்தை நாம் ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம். இந்த மக்களுக்கு சிறந்த மனித நேய பொலிஸ் சேவை பெற்றுக் கொடுக்க நாம் தயாராக உள்ளோம். அதேபோன்று அந்த மக்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கவும் வினைத்திறனான பொலிஸ் சேவைப் பெற்றுக் கொடுக்கவும் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். மேலும் வடக்கில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் பொலிஸ் திணைக்களங்களுக்கு தமிழர்களை உள்ளீர்ப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தினோம். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் திட்டம் மாத்திரம் அல்ல. நாட்டின் முழு கட்டமைப்பையும் சீரமைக்கும் தேசிய வேலைத்திட்டமாகும். அதற்குஅப்பால் சென்று ஒழுக்கமான சமூகமொன்றை உருவாக்குதல்,சட்டத்தின் ஓழுங்கை உறுதிப்படுத்தல், இலஞ்சம், ஊழல், மோசடி, வீண் விரயம் அற்ற நாட்டை கட்டியெழுப்புதல் என்பவையும் இதிலடங்கும். இவை அனைத்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கை மாத்திரம் அல்ல.கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத் திட்டத்தின் நோக்கமும் கூட.எனவே இந்த இலக்குகளை அடைய பொலிஸாரின் தலையீடு மிக முக்கியமானதாகும். இந்த கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல பொலிஸார் நேரடியாகவும் மறைமுகமாகவும் தலையீடு செய்ய வேண்டும். நிச்சயம் இந்த திட்டத்தின் ஊடாக போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் உலகபாதாளா குழுக்களின் செயற்பாடுகளை எம்மால் கட்டுப்படுத்த முடியும். எனவே இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாகவும் உறுதியாகவும் மிகவும் திட்டமிட்ட வகையிலும் நாம் முன்னெடுத்துச் செல்வோம் என்றார். https://www.virakesari.lk/article/202975
  12. கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் "கடல் உங்கள் ஆணவத்தைக் கொன்றுவிடும்." தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மூத்த விஞ்ஞானி சுப்பிரமணியன் அண்ணாமலையைச் சந்தித்தபோது அவர் கூறிய வார்த்தைகள் இன்னமும் எதிரொலிக்கிறது. முனைவர் சுப்பிரமணியன், இந்தியாவின் சமுத்ரயான் திட்டத்தின்கீழ் உருவாகி வரும் மத்ஸயா 6000 நீர்மூழ்கியின் ஆற்றல் பிரிவின் தலைவராக இருக்கிறார். "இந்த உலகில் எதைப் பற்றியும் யாருக்கும் முழுதாகத் தெரிந்துவிடாது. பெருங்கடல் அதை மிகச் சரியாக உணர்த்திக் கொண்டே இருக்கிறது. அத்தகைய பெருங்கடலுக்குள் நேரில் மனிதர்களை அனுப்பிப் பார்ப்பது கடல் ஆய்வில் எவ்வளவு உதவிகரமாக இருக்கும். அதைத்தான் மத்ஸயா 6000 நீர்மூழ்கி செய்யப் போகிறது," என்று கூறினார் அவர். பூமியை விட்டுப் பிரியும் நிலா: எதிர்காலம் என்ன ஆகும்? ஆழ்கடல் அற்புதம்: சூரிய ஒளி புகாத ஆழத்தில் ஒளிச்சேர்க்கை இல்லாமல் ஆக்சிஜன் உற்பத்தி ஆவது எப்படி? ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலை நெருங்குவதில் இத்தனை ஆபத்துகளா? ஆய்வாளரின் நேரடி அனுபவம் இன்று முதல் பூமியை வலம் வரும் 'இரண்டாம் நிலா' - வெறுங்கண்களால் பார்க்க முடியுமா? சமுத்ரயான் திட்டத்தின்கீழ் கடந்த மூன்று ஆண்டுகளாக தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழு மத்ஸயா 6000 என்ற நீர்மூழ்கியை வடிவமைத்து வருகின்றனர். சென்னை பள்ளிக்கரணையில் அமைந்திருக்கும் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகளின் கருத்துரு மற்றும் வடிவமைப்பில், அதன் வளாகத்திலேயே உருவாக்கப்பட்டு வரும் இந்த நீர்மூழ்கியை பிபிசி தமிழ் குழுவினர் பார்வையிட்டோம். இந்த நீர்மூழ்கியை சென்னை கடல் பகுதியில் விரைவில் விஞ்ஞானிகள் பரிசோதனை செய்யவிருக்கின்றனர். இந்தியாவிலேயே முதல்முறையாக 2026இல் ஆழ்கடலுக்கு மனிதர்களை அனுப்பும் இந்தத் திட்டம் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மத்ஸயா 6000 குழுவினரை சந்தித்தோம். தமிழ்நாட்டை அச்சுறுத்தும் ஸ்க்ரப் டைபஸ் தொற்று - எந்த 7 மாவட்டங்களில் அதிகம் பரவுகிறது? தடுப்பது எப்படி?4 ஜனவரி 2025 க்ரிம்ஸி: கோடிக்கணக்கான பறவைகளோடு 20 மனிதர்கள் மட்டுமே வாழும் ஆர்டிக் தீவு2 ஜனவரி 2025 ஆழ்கடலுக்குச் செல்லப்போகும் இந்திய விஞ்ஞானிகள் படக்குறிப்பு, மத்ஸயா 6000 நீர்மூழ்கியில் மூன்று பேர் ஆழ்கடலுக்குச் செல்வார்கள் என்று தெரிவித்தார் திட்ட இயக்குநர் முனைவர் வேதாச்சலம் இந்த ஆண்டு முழுவதும் பல கட்ட பரிசோதனைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள விஞ்ஞானிகள், அனைத்தும் வெற்றிகரமாக முடிந்தால் 2026இல் மத்திய இந்தியப் பெருங்கடலின் 6000 மீட்டர் ஆழத்தில் இந்திய விஞ்ஞானிகள் தடம் பதிப்பார்கள். கடந்த 2020ஆம் ஆண்டு சீனா, உலகின் மிகவும் ஆழமான மரியானா ஆழ்கடல் அகழிக்கு 10,909 மீட்டர் ஆழத்திற்கு மனிதர்களை நீர்மூழ்கியில் அனுப்பியது. அதோடு, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் மட்டுமே ஆழ்கடலுக்கு மனிதர்களை இதுவரை அனுப்பியுள்ளன. அந்தப் பட்டியலில் விரைவில் இந்தியாவும் இணையப் போவதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக கடல் தொழில்நுட்பங்களை உருவாக்கி வரும் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம், பல நீர்மூழ்கிகளை வடிவமைத்துள்ளது. "இந்தியாவிலேயே நீர்மூழ்கியை தயாரிக்கும் திறனுடைய ஒரே நிறுவனம் இதுதான். ஆகவே, எங்கள் விஞ்ஞானிகளே இதை முற்றிலுமாகத் திட்டமிட்டு, வடிவமைத்து, நாட்டில் முதல்முறையாக மனிதர்களை ஆழ்கடலுக்குக் கொண்டு செல்லக்கூடிய நீர்மூழ்கியை உருவாக்கியுள்ளோம்," என்கிறார் திட்ட இயக்குநர் முனைவர் வேதாச்சலம். ''மத்ஸயா 6000 நீர்மூழ்கி, அதை இயக்கப்போகும் ஒரு மாலுமி, அவருக்குத் துணையாக இருக்கும் இணை-மாலுமி மற்றும் ஒரு விஞ்ஞானி ஆகியோரை ஆழ்கடலுக்குள் கொண்டு செல்லும்" என்று விளக்கினார் அதன் திட்ட இயக்குநரான முனைவர் வேதாச்சலம். இதன் வடிவமைப்புப் பணியில் இருந்தே இதில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் விஞ்ஞானியான ரமேஷ் ராஜுவே மாலுமியாக நீர்மூழ்கியை இயக்கப் போவதாகக் கூறும் வேதாச்சலம், "அவருக்குத் துணைபுரியும் இணை-மாலுமியாக இந்திய கடற்படையைச் சேர்ந்த ஒருவர் இருப்பார் மற்றும் மூன்றாவதாக ஆழ்கடலை ஆய்வு செய்யப் போகும் விஞ்ஞானி ஒருவர் உடன் செல்வார்," என்று தெரிவித்தார். "இந்த நீர்மூழ்கியின் மூலம், உலகளவில் இதைச் சாதித்துக் காட்டிய மிகச் சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணையும்" என்று பிபிசி தமிழிடம் கூறிய மத்ஸயா 6000 குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் முகம் பெருமிதத்தால் பூரித்தது. மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம்: மத்திய அரசின் மறுஆய்வு முடிவால் என்ன நடக்கும்? சுற்றுச்சூழல் நிபுணர்கள் தகவல்29 டிசம்பர் 2024 புத்தாண்டு உறுதிமொழியை கடைபிடிப்பதில் பலரும் தோல்வியடைவது ஏன்?31 டிசம்பர் 2024 இந்தியா மனிதர்களை ஆழ்கடலுக்கு அனுப்பப்போவது எப்படி? பட மூலாதாரம்,NIOT திட்ட இயக்குநர் வேதாச்சலத்தின் கூற்றுப்படி, மத்ஸயா 6000 நீர்மூழ்கி, ஆய்வு செய்யவுள்ள பகுதிக்கு கப்பலில் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கடலில் இறக்கப்படும். "கப்பலில் இருந்து பெருங்கடலின் மேற்பரப்பில் இறக்கிவிடப்பட்டு, மனிதர்களை அமர வைத்த பிறகு, அங்கிருந்து நேராகக் கீழ்நோக்கி அனுப்பப்படும்," என்று அவர் விளக்கினார். நீளமான டைட்டானியம் உலோகத்தால் ஆன ஒரு கட்டமைப்பில் பேட்டரி முதல் நீர்மூழ்கி இயங்கத் தேவையான அனைத்து தொழில்நுட்பங்களையும் விஞ்ஞானிகள் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர். அதன் முன்பகுதியில் இருந்த உருளை வடிவ பாகத்தில்தான் மூன்று பேர் உட்கார்ந்து பயணிக்கப் போகிறார்கள். மத்ஸயாவின் மின்னணு அமைப்புகளை வடிவமைக்கும் முனைவர் ரமேஷ்தான் அதை இயக்கவும் போகிறார். தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளில்லா தானியங்கி நீர்மூழ்கிகளைக் கடலில் இயக்கிய அனுபவமுள்ளவர். நீர்மூழ்கி கீழ்நோக்கிச் செல்லும்போது அதிக ஆற்றலைச் செலவழிப்பதைத் தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட ஆழத்தை நெருங்கும்போது நீர்மூழ்கியின் அனைத்து செயல்பாடுகளும் தொடங்கும் எனவும் கூறுகிறார் ராஜேஷ். பூமிக்கும் வானில் இரட்டை சூரியன்கள் இருந்தனவா? ஆய்வில் புதிய தகவல்28 டிசம்பர் 2024 கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?28 டிசம்பர் 2024 சமுத்ரயான் திட்டத்தின் நோக்கம் என்ன? இந்தியப் பெருங்கடலின் மத்தியப் பகுதி பல்லுலோகம் (Polymetal) நிறைந்துள்ளதாகக் கூறுகிறார் மத்ஸயா குழுவின் மூத்த விஞ்ஞானியான முனைவர் சத்யநாராயணன். "நிக்கல், தாமிரம், மாங்கனீசு, கோபால்ட் போன்ற உலோகங்களின் கலவையான பல்லுலோகம் இந்திய பெருங்கடலில் மிக அதிக அளவில் இருக்கிறது. இது சர்வதேச கடற்பரப்பில் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியின் ஆழ்கடலில் தரைப் பரப்பில் பரவிக் கிடக்கிறது," என்று கூறினார் அவர். அவை குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் முதல்கட்டமாக ரோசுப் 6000 (ROSUB 6000) என்ற ஆளில்லா நீர்மூழ்கியை உருவாக்கியது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, மனிதர்களைக் கடலுக்குள் அனுப்பி அப்பகுதிகளை ஆய்வு செய்ய கடந்த மூன்று ஆண்டுகள் உழைப்பில் மத்ஸயா உருவாக்கப்பட்டுள்ளது. அதுகுறித்துப் பேசியபோது, "நாம் எவ்வளவுதான் ஆளில்லா தொழில்நுட்பங்களை அனுப்பினாலும், நமது கண்களால் பார்த்து ஆய்வு செய்யும்போது இன்னும் பல விஷயங்கள் நமக்குத் தெரிய வரும்," என்று தெரிவித்தார் சத்யநாராயணன். "இந்திய பெருங்கடலின் ஆழ்கடல் பரப்பில் இருக்கும் கனிம வளங்கள் முதல் உயிரினங்கள் வரை பலவற்றையும் மத்ஸயா ஆய்வு செய்யும். மத்ஸயாவின் முன்பகுதியில் இரண்டு நீளமான ரோபோடிக் கைகள் இருக்கின்றன. அதோடு ஒரு கூடை வடிவ சேமிப்பு அமைப்பும் இருக்கிறது. அதில் 200 கிலோ வரை மாதிரிகளைச் சேகரிக்க முடியும்," என்கிறார் ரமேஷ். அவரது கூற்றுப்படி, ஆழ்கடல் ஆய்வுகளில் பாறை அல்லது கனிமம் போன்ற மாதிரிகளைச் சேகரிக்க வேண்டிய தேவை ஏற்படும்போது, ரோபோடிக் கைகளைப் பயன்படுத்தி அவற்றை எடுத்து, சேமிப்புக் கூடையில் வைத்து மேலே கொண்டுவர முடியும். இயேசுவின் குழந்தைப் பருவ வாழ்க்கை எப்படி இருந்தது? பழங்கால பிரதிகளில் கிடைத்த தகவல்27 டிசம்பர் 2024 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மூத் யானை குட்டியின் உடல் மீட்பு - சுவாரஸ்ய தகவல்கள்26 டிசம்பர் 2024 இந்திய விஞ்ஞானிகளின் புதுமையான பேட்டரி தொழில்நுட்பம் படக்குறிப்பு,தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மத்ஸயா 6000 நீர்மூழ்கியில் லித்தியம் பாலிமர் பேட்டரிகளை பயன்படுத்துகின்றனர் இந்த நீர்மூழ்கியில், இதுவரை எந்தவொரு நாடும் செய்திராத, வழக்கத்திற்கு மாறான அணுகுமுறையைக் கையில் எடுத்துள்ளதாக மத்ஸயா குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வழக்கமாக லெட்-ஆசிட் பேட்டரி, சில்வர்-துத்தநாக பேட்டரி, லித்தியம் அயான் பேட்டரி போன்றவையே பயன்படுத்தப்படும். ஆனால், மத்ஸயா நீர்மூழ்கியில் விஞ்ஞானிகள் லித்தியம் பாலிமர் பேட்டரிகளை பயன்படுத்துகின்றனர். அதுகுறித்துப் பேசியபோது, "இந்தியாவில்தான் முதல்முறையாக இத்தகைய மேம்பட்ட பேட்டரிகளை பயன்படுத்துகிறோம்," என்று கூறினார் சுப்பிரமணியன் அண்ணாமலை. "இதன் அளவு, கொள்ளளவு, எடை ஆகியவை குறைவு. அதனால், நீர்மூழ்கியில் இது எடுத்துக்கொள்ளப் போகும் இடத்தின் அளவும் குறைவு. உதாரணமாக, நமது வீடுகளில் பயன்படுத்தும் பேட்டரிகளைவிட ஐந்து முதல் ஆறு மடங்கு குறைவான இடத்தையே இவை எடுத்துக்கொள்ளும். ஆனால், அதிகளவிலான மின்சாரத்தை இவற்றால் வழங்க முடியும்," என்று விவரித்தார் அவர். நீர்மூழ்கி பெருங்கடலில் 6000 மீட்டர் ஆழம் வரை செல்வதற்கு நான்கு மணிநேரம் ஆகும். ஆழ்கடலில் ஆய்வுப் பணிகளை நான்கு மணிநேரம் மேற்கொள்ளும். மொத்தமாக 12 மணிநேரம் ஆழ்கடலில் இந்த நீர்மூழ்கி இயங்கும். ஆனால், பாதுகாப்பு கருதி சுமார் 108 மணிநேரத்திற்குத் தேவையான மின்சார இருப்பு இருக்கும் அளவுக்கு பேட்டரிகளை பொருத்தியுள்ளதாகக் கூறுகிறார் திட்ட இயக்குநர் வேதாச்சலம். சுட்டெரிக்கும் சூரியனின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த நாசா விண்கலம் - அதீத வெப்பத்தை தாங்குவது எப்படி?25 டிசம்பர் 2024 இந்த ஆண் திமிங்கலம் 13,000 கி.மீ. தூரம் நீந்திச் சென்றது ஏன்? வியக்கும் விஞ்ஞானிகள்23 டிசம்பர் 2024 ஆழ்கடலில் சந்திக்கப்போகும் சவால்கள் என்ன? படக்குறிப்பு,ஆழ்கடலில் ஜிபிஎஸ் கருவிகள் பயன்படாது என்கிறார் முனைவர் பால நாக ஜோதி முதல் சவால் காரிருள். மேற்பரப்பில் இருப்பதைப் போன்று ஆழ்கடலில் சூரிய ஒளி புகாது. அதுமட்டுமின்றி, அங்கு செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் வேலை செய்யாது. அத்தகைய சூழலில் நீர்மூழ்கியின் இருப்பிடத்தைக் கண்டறிவது முதல் அதன் பாதையில் இருக்கும் இடர்பாடுகளை அறிவது வரை அனைத்துமே சவால் நிறைந்திருக்கும். இதைச் சமாளிக்க ஒலி நிலைப்படுத்தல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. திமிங்கிலம், டால்பின் போன்ற ஆழ்கடல் உயிரினங்களைப் போல ஒலியைப் பயன்படுத்தி தனது சுற்றத்தை அறிந்துகொள்ளும் தொழில்நுட்பமே ஒலி நிலைப்படுத்தல் தொழில்நுட்பம். இதே வகையில் ஒலி அலைகளை அனுப்புவதன் மூலமே மேலே கப்பலில் இருந்து நீர்மூழ்கியுடனான தொடர்புகளும் அமையும். மத்ஸயா 6000 நீர்மூழ்கியின் திசையறிதல் குறித்த பிரிவைச் சேர்ந்த விஞ்ஞானியான முனைவர் பால நாக ஜோதி இதுகுறித்து பிபிசி தமிழிடம் விளக்கினார். "ஆழ்கடலில் ஒரு பொருளின் நிகழ்நேர இருப்பிடத்தைக் கண்டறிவது மிகவும் சவாலானது. அங்கு ஜிபிஎஸ் பயன்படுத்த முடியாது. அதற்குப் பதிலாக, ஒலி நிலைப்படுத்தல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். அதாவது, ஆழ்கடல் உயிரினங்களைப் போலவே, கடலடியில் மத்ஸயா 6000இன் இருப்பிடத்தை அறிவது, அதன் பாதையைத் தீர்மானிப்பது, அதில் பயணிப்போருடன் தொடர்புகொள்வது ஆகியவற்றைச் செய்வோம்," என்று விளக்கினார் பால நாக ஜோதி. இதைவிட மிக முக்கியமான மற்றொரு சவால் அதீத அழுத்தம். நிலப்பரப்பில் இருக்கும் சரசாரி அழுத்தத்தைவிட ஆழ்கடலில் அழுத்தம் பல நூறு மடங்கு அதிகமாக இருக்கும் என்று விவரித்தார் சத்யநாராயணன். "ஆழ்கடலில் ஒவ்வொரு 1000 மீட்டருக்கும் அழுத்தம் 100 மடங்கு அதிகரித்துக்கொண்டே போகும். ஆக, 6000 மீட்டர் ஆழத்தில் இங்கு நாம் உணரும் அழுத்தத்தைவிட 600 மடங்கு அதிக அழுத்தம் இருக்கும். அதைச் சமாளிக்க, டைட்டானியம் உலோகத்தில் நீர்மூழ்கி உருவாக்கப்படுகிறது," என்று அவர் விளக்கினார். மேலும், மனிதர்கள் அமர்ந்து பயணிக்கும் உருளை வடிவ உட்பகுதியை டைடானியம் உலோகத்தில் தயாரித்துக் கொடுக்க இஸ்ரோ உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மாணவர்களுக்கு 'கணித' பயம் வருவது ஏன்? கற்றல் குறைபாட்டின் அறிகுறியா?22 டிசம்பர் 2024 குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? ஆண் குட்டிகளை மட்டும் விரட்டி விடுவது ஏன்?22 டிசம்பர் 2024 மத்ஸயா 6000 ஆபத்துகளை சமாளிக்கும் திறன் கொண்டதா? படக்குறிப்பு,இந்தியாவில் முதல்முறையாக ஆழ்கடலுக்கு பயணிக்கும் குழுவில் இருப்பது குறித்துப் பெருமைப்படுவதாகத் தெரிவித்தார் முனைவர் ரமேஷ் ராஜு அடிப்படையில் இந்த நீர்மூழ்கி ஆழ்கடலில் செயல்படப் போவது மொத்தமாக 12 மணிநேரம் மட்டுமே. ஆனால், எதிர்பாராத விதமாக ஏதேனும் சவால்கள் அல்லது தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு மேலே வருவதில் சிக்கல் ஏற்பட்டால், அதிலுள்ள மூன்று பேரும் பாதுகாப்பாக இருக்க ஏதுவாக 108 மணிநேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டிருக்கும். அதுமட்டுமின்றி, மத்ஸயாவின் இரட்டையர் கட்டமைப்பு ஒன்று பெருங்கடலின் மேற்புறத்தில் கப்பலில் அமைக்கப்பட்டிருக்கும். அங்கு அதை இயக்கும் மாலுமி, இணை-மாலுமி, விஞ்ஞானி ஆகிய மூவருக்கும் மாற்றாக வேறு மூன்று பேர் இருப்பார்கள். அவர்கள் தொடர்ச்சியாக ஆழ்கடல் பணியின்போது கண்காணித்துக் கொண்டிருப்பார்கள் என்றும் நீர்மூழ்கியில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதைச் சரிசெய்வதில் வழிநடத்துவார்கள் என்றும் கூறினார் திட்ட இயக்குநர் வேதாச்சலம். தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இந்த நீர்மூழ்கி, ஆழ்கடல் தேடுதல், மீட்புப் பணி, கனிம வளங்களின் ஆராய்ச்சி, அங்கு வாழும் உயிரினங்கள் குறித்த ஆய்வு எனப் பலவற்றுக்கும் இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் உதவிகரமாக இருக்கும் என்கிறார் சத்யநாராயணன். "இந்தியாவில் இப்படியொரு விஷயத்தை செய்ய முடியும் என்பதை நிரூபிப்பது மட்டுமின்றி, இந்தத் திட்டத்தின் மூலம் மேலும் பல்வேறு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நிகழும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என்று சமுத்ரயான் திட்டம் குறித்து பிபிசி தமிழிடம் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் தெரிவித்தார். அவரது கூற்றுப்படி, இந்தியாவின் கடல் ஆய்வுகளில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமையும். அத்தகைய திட்டத்தின்கீழ் ஆழ்கடலுக்குள் பயணிக்கப் போகும் நாட்டின் முதல் குழுவில் தானும் உள்ளது பெருமையாக இருப்பதாகக் கூறுகிறார் ரமேஷ் ராஜு. அதோடு, இது முழுவதுமாக தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகளின் கைகளிலேயே தயாராவாதல், அச்சம் ஏதுமின்றி முழு நம்பிக்கையோடு இருப்பதாகவும் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyx77p0xg9o
  13. நாட்டில் சீனி உற்பத்தியினை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சீனி கம்பனிக்கு சொந்தமான பெல்வத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளுக்கு கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி நேற்றுமுன்தினம் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, கரிம உரம் மற்றும் ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்டு கரிம சீனி உற்பத்தி தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், சீனி உற்பத்தியை விநியோகிப்பதற்கான முறையான விநியோக வலையமைப்பை உருவாக்குவது மற்றும் தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க வேலை சுட்டெண்ணை தயாரிப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/314360
  14. நான் வாசித்ததில் பூவரசங்கதியால் நட்டு வளர்ப்பது போல பெரிய உரப்பை போன்ற பாக்கில் எருவூட்டப்பட்ட மண்ணைப்போட்டு அங்கே கதியால் போன்ற பெரிய மாந்தடியை நட்டு வளர்ப்பதாக படத்தோடு குறிப்பிட்டு இருந்தார்கள். இதன் மூலம் குறுகிய காலத்தில் மாம்பழங்களை பெறலாம் என்பதும் ஒரு காரணம். எனக்கு உங்களது காணொளிப் பகிர்வின்படி மாந்தடியை வெட்டி வேர்வளர்ச்சியைத் தூண்டும் பொடி அல்லது கத்தாளைப்பசையை பூசி நட்டு வளர்த்துப் பார்க்கும் எண்ணம் பிறந்துள்ளது. ஏற்கனவே பெரியம்மாவின் மகன்(தம்பி) மூலம் மாந்தடி நட்டுப் பார்த்து வெற்றி பெறவில்லை. வேர்வளர்ச்சியை தூண்டும் முறையும் தெரியவில்லை, வெட்டி 2/3 நாளின் பின்னர் தான் மாந்தடி நடப்பட்டது. 7 POWERFUL FREE HOMEMADE ROOTING HORMONES| Natural Rooting Hormones
  15. நீங்கள் குறிப்பிடுவதில் உண்மையுள்ளது அக்கா. ஆனாலும் உண்மையான தேவை உள்ளவை வெளித்தெரியாமல் யாரிடம் கேட்பது எனத் தெரியாதும் இருக்கின்றனர்.
  16. ஐந்தாவது தரம் 03/06/2024 இல் 25000ரூபாவை திரு ரஜிந்தன் உடைய வங்கிக் கணக்கில் வைப்பிட்டுள்ளார். 9) திரு திருமதி சந்திரமோகன் புஸ்பமலர் தம்பதிகளின் திருமணநாளை முன்னிட்டு வீட்டுத்திட்டப் பணிகளை பூரணப்படுத்த 25000 ரூபா நன்கொடை அளித்துள்ளனர். ஆறாவது தரம் 05/06/2024 இல் வீடு, மலசல கூடம் ஆகியவற்றை கட்டி முடிக்க 20000ரூபாவை திரு ரஜிந்தன் உடைய வங்கிக் கணக்கில் வைப்பிட்டுள்ளார். 10) திரு துரைசிங்கம் துர்க்கைநாதன்(ராஜன்) 20000 ரூபா வீட்டுத்திட்டப் பணிகளை நிறைவு செய்ய பற்றாக்குறையாக இருந்த பணத்தை வழங்கியுள்ளார். மொத்தமாக 2,50,000 ரூபா பயனாளியின் வங்கிக் கணக்கில் வைப்பிடப்பட்டது. பங்களித்த நட்புகளுக்கும் உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றோம். அவரது குடும்பம் வீடமைப்புப் பணிகளை பூரணப்படுத்தி வீட்டில் குடிபுக அண்ணளவாக இரண்டரை இலட்ச ரூபா பணம் தேவையாக இருந்தது. கருணை உள்ளம் கொண்ட உறவுகள் பலர் இணைந்து அவருடைய வீட்டை கட்டி முடிக்க உதவியிருக்கிறார்கள். ஒரு குடும்பத்தை குடியிருக்க வைத்துள்ளார்கள். தற்போது அவர்கள் அவ்வீட்டில் வசிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறோம். (ஒரு அறைக்கு காறை வேலை முடியவில்லை)
  17. மாமரத்தின் கிளைத் தடியை பூவரசந்தடி நடுவதை போல தமிழ்நாட்டில் ஒருவர் நட்டு வளர்ப்பதாக வாசித்திருந்தேன். இது சம்பந்தமான விபரம் ஏதும் தெரிந்தால் இங்கு பகிருங்கள் @valavan @vasee @உடையார் @குமாரசாமி @ரசோதரன் வீட்டில் உள்ள கறுத்தக் கொழும்பான் மரம் 2008 நிசா புயலில் விழுந்தது, அதன் கிளைகளை வெட்டி ஓரளவு நிமிர்த்தி இப்போதும் சுவையான மாம்பழம் காய்க்கிறது. ஆனால் மரம் நன்றாக சரிந்து உள்ளதால் பெரும் மழைக்காலம், பலத்த காற்று நேரம் தப்புமோ என அச்சமாக இருக்கும். அதன் கிளையில் கன்று உருவாக்க முடிந்தால் என்ற எண்ணத்தில்தான் கேட்கிறேன்.
  18. கனடாவில்(Canada) வங்கிக் கொள்ளையில் ஈடுபட முயற்சித்த திருடனின் சைக்கிள் களவாடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் கனடாவின் ஹமில்டன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மொன்றியல் வங்கியின் கிளையொன்றில் புகுந்த நபர் ஒருவர் வங்கிப் பணியாளரை அச்சுறுத்தி பணம் கொள்ளையிட முயற்சித்துள்ளார். கொள்ளை சம்பவம் இதன்போது, துப்பாக்கி இருப்பதாகக் கூறி வங்கிப் பணியாளரை கொள்ளையர் அச்சுறுத்தியுள்ளார். இந்நிலையில், சக வங்கிப் பணியாளர்கள் குறித்த கொள்ளையரை தடுக்க முயற்சித்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது கொள்ளையரினால் பணம் கொள்ளையிட முடியவில்லை எனவும் வெறும் கையுடன் வங்கியை விட்டு தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், சைக்கிள் ஒன்றில் வங்கியில் கொள்ளையிட சென்றிருந்த குறித்த நபர், வெளியே நிறுத்தியிருந்த சைக்கிளை தேடியுள்ளார். எனினும், சைக்கிளை வேறு ஒருவர் களவாடிச் செல்லப்பட்ட நிலையில் வங்கிக் கொள்ளையர் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார். மேலும், வங்கிக் கொள்ளையில் ஈடுபட முயற்சித்த நபர் மற்றும் சைக்கிளை கொள்ளையிட்ட நபர் ஆகியோரை அந்நாட்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர். https://ibctamil.com/article/thief-s-bicycle-stolen-in-canada-1735891615#google_vignette
  19. சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ் கொவிட் -19 வைரஸ் பரவலுக்குப் பின் சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Human metapneumovirus (HMPV) (HMPV) எனப்படும் ஒரு வைரஸ் நிலை பரவலாக இருப்பதாகவும், அவர்களில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களும் இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்களில் தகவல்கள் வௌியாகியுள்ளன. மேலும், இன்ஃபுளுவென்சா (influenza) வைரஸூம் பரவி வருகிறது. சீனாவில் பல வைரஸ்களின் தாக்கம் வேகமாக பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு சீனாவில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், இது தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இந்த வைரஸ் பரவல் நிலை குறித்து சீன அதிகாரிகள் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. https://thinakkural.lk/article/314323
  20. யாழ் நோக்கி படையெடுக்கும் ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் : ஏற்படவுள்ள பேராபத்து அண்மையில் தொடர்ந்த சீரற்ற காலநிலை காரணமாக தமிழர் பிரதேசங்கள் பாரிய சேதங்களுக்கு உள்ளானதுடன் மக்கள் தொடர்ச்சியாக பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. இதில் முக்கிய விடயமாக ஆபிரிக்கா பெரும் நத்தைகள் (Giant African land snai) சமீபத்தில் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. இந்தநிலையில், இவை பயிர்பச்சைகளை எல்லாம் தின்று தீர்ப்பதுடன் உள்ளூர் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாகவும் நோய்களைப் பரப்பும் காவிகளாகவும் செயற்படுகின்றன. இவற்றை இப்போதே கட்டுப்படுத்தத்தவறின் விரைவில் பேராபத்துகளை விளைவிப்பவையாக அமையும் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் (P. Ayngaranesan) அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்தநிலையில், இது குறித்து பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய அகளங்கம் நிகழ்ச்சி, https://ibctamil.com/article/disaster-from-african-giant-snails-for-farmers-1735910964#google_vignette
  21. ''தன்னுடைய 30 வருட போராட்டம் இந்த முள்ளிவாய்க்கால் இறுதியோடு முடிவுக்கு வருகின்றது என முன்னாள் போராளி சூசை எங்களிடம் தெரிவித்தார்.'' என யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி (T. Sathiyamoorthy) தெரிவித்துள்ளார். ஐபிசி தமிழின் நக்கீரன் சபை - புட்டுக்கதை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”2008 ஆம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி முள்ளிவாய்க்காலில் முக்கிய போராளிகளான சூசை, பானு, சொர்ணம் ஆகிய மூவரையும் சந்தித்தோம். தன்னுடைய 30 வருட போராட்டம் இந்த முள்ளிவாய்க்கால் இறுதியோடு முடிவுக்கு வருகின்றது எனவும் ஐக்கிய நாடுகள் முகவர்கள் வருகின்ற போது இந்த ஆயுதங்களை கையளித்து விட்டு நான் போகப் போகின்றேன் என சூசை எங்களிடம் தெரிவித்தார். இருப்பினும் ஏனையவர்கள் இறுதி வரை போராடப்போவதாக தெரிவித்தனர். எனக்கு 2009 இற்கும் 2024 இற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. முள்ளிவாய்க்காலை உணர்வுபூர்வமாக கடமை செய்த இடமாக தான் பார்க்கின்றேன். அதைக்கூறி எனக்கு ஒரு பதவியோ அல்லது ஏதோவொன்றைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. முள்ளிவாய்க்கால் இடம்பெயர் வைத்தியசாலையில் பணியாற்றிய ஒவ்வொரு நாட்களையும் மறக்க முடியாது. உடையார்கட்டு வைத்தியசாலையில் பணியாற்றிய போது ஒரு தாதியர் செல் விழுந்த உடனேயே கண் முன்னாலே இறந்து போனமை மறக்க முடியாத ஒரு சம்பவம், அத்துடன் முள்ளிவாய்க்காலின் கடைசி 3 நாட்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத வடு.” என தெரிவித்தார். மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க..... https://ibctamil.com/article/ex-combatants-said-mullivaikal-dr-sathiyamoorthy-1735898720#google_vignette
  22. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள காரைநகர் படகுத் தளத்தை புனரமைப்பதற்காக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. இந்திய அரசாங்கத்தின் 290 மில்லியன் ரூபாய் மானிய உதவியுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2024 டிசம்பர் 16ஆம் திகதியன்று இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் அப்போதைய இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் க்சேணுகா திரேனி செனிவிரத்ன ஆகியோரால் கையெழுத்திடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டது. இதன்படி, இலங்கையின் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், காரைநகர் படகுத் தளத்தை புனரமைக்க இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம், தொழிற்சாலை, இயந்திரங்கள், உபகரணங்கள், பொருட்கள், சேவைகள் போன்றவற்றை நிறுவுதல் உள்ளிட்ட குடிமைப் பணிகள் மற்றும் கொள்முதல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்ததும், புனரமைக்கப்பட்ட படகுத் தளம், உள்ளூர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படகுத் தளத்தைச் சுற்றியுள்ள சிறிய நிறுவனங்கள் உட்பட அந்தப்பகுதியில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும், அத்துடன் தரமான மீன்வளப் பொருட்களின் விநியோகத்தை மேம்படுத்த உதவும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/314318
  23. Published By: DIGITAL DESK 3 03 JAN, 2025 | 02:25 PM வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி பழையமாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பெற்றோர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (03) காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி அதிபர் கல்லூரியின் வளர்ச்சியை சீர்குலைப்பதாகவும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும், அவரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பெற்றோர்கள் இணைந்து இன்றையதினம் காலை 7.30 மணியளவில் பாடசாலை நுழைவாயிலில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டமானது 14 ஆசிரியர்களுக்கு அண்மையில் அவர்களுக்கான பதிலீடு இன்றி, தனிப்பட்ட பழிவாங்கல் நோக்கில், இடமாற்றத்திற்கு சிபாரிசு செய்தமை, இவரது பொறுப்பற்ற வார்த்தை பிரயோகங்கள், தனிப்பட்ட பழிவாங்கல்கள் காரணமாக இவர் பாடசாலையை பொறுப்பேற்கும் போது இருந்த ஆசிரியர்கள் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி (83 ஆசிரியர்களிலிருந்து 63 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது) ஏற்பட்டுள்ளது. இவரால் பாடசாலையின் ஏனைய ஊழியர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு பாடசாலையின் அகச்சூழல் சீரின்றியும், பாதுகாப்பின்றியும் உள்ளது. பாடசாலை சொத்துகளை பாதுகாப்பது மற்றும் அது தொடர்பான வெளிப்படை தன்மை இல்லாது உள்ளது. (தொழில்நுட்ப ஆய்வுகூட பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில் கல்வித்திணைக்கள விசாரணைகள் நடைபெறுகின்றன) அதிபர் மீதான நிதிமோசடி விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. குறித்த விடயங்கள் தொடர்பாக அதிபருடன் பல தடவைகள் SDS/ OBA இணைந்து நடத்திய கலந்துரையாடல்களில் மேற்கொண்ட தீர்மானங்கள், ஆலோசனைகள் எதனையும் கருத்தில் கொள்ளாமல் தான்தோன்றிதனமான அதிபரின் செயற்பாடுகளால் மாணவர் கல்வி பாதிக்கப்படுகிறது. குறிப்பாக உயர்தர மாணவர்களுக்கு சில பாடங்களுக்கு பொருத்தமான பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை. பல பாட வேளைகளில் வகுப்புகள் நடைபெறுவதில்லை. இவ்வாறான காரணங்களாளே குறித்த போராட்டம் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த அதிபர் தொடர்பான விடயங்கள் இரு செயலாளர்களாலும் வலயகல்விபணிப்பாளர், செயலாளர் கல்வி அமைச்சு, பிரதிக் கல்விப்பணிப்பாளர் - தேசிய பாடசாலை, கல்வி அமைச்சு என்பவற்றிற்கு நேரிலும், தொலைபேசியிலும், கடிதம் மூலமும் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படாத நிலையிலே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. போராட்ட இடத்திற்கு சென்ற அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் குறித்த போராட்டத்திற்கான காரணங்களை கேட்டறிந்திருந்தார். அதன்பின்னர் போராட்டத்திற்கான காரணம் தொடர்பான மகஜர் அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இது ஒரு தேசிய பாடசாலை ஆகையினால் மாகாணத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் தான் இருக்கின்றது. எனவே மத்திய அரசின் கல்வி அமைச்சின் செயலாளருக்கு இந்த மகஜரை அனுப்புவதாகவும், அதன் பிரதியை சம்பந்தப்பட்ட அரச அலுவலகங்களுக்கு வழங்கி இதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்திருந்தார். குறித்த போராட்டத்தில் பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினர், பெற்றோர்கள், பழையமாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/202876
  24. கெஹலிய ரம்புக்வெலவின் குடும்பத்தினருக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகளின் முடக்க நிலை நீடிப்பு 03 JAN, 2025 | 12:09 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதி திட்டங்களைத் தற்காலிகமாக முடக்குமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவை மேலும் மூன்று மாத காலங்களுக்கு நீடிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (04) உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சுமார் 97 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதித் திட்டங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வரை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/202866
  25. 03 JAN, 2025 | 03:17 PM சீனாவில் பரவிவரும் புதிய வைரஸ் தொடர்பில் இலங்கை எச்சரிக்கை நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சீனாவில் காணப்படும் நிலைமையை உன்னிப்பாக அவதானிப்பதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு சீனாவில் பரவும் புதிய வைரஸ் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. சீனாவில் காணப்படும் நிலைமை குறித்து முழுமையாக ஆராய்ந்த பின்னர் மேலதிக தகவல்களை பொதுமக்களிற்கு வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/202887

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.