Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 07 JAN, 2025 | 05:08 PM நாட்டின் ஆரம்பநிலைக் கல்வியைத் தொடரும் பிள்ளைகளுக்கான கிராமிய அபிவிருத்திக்கான அறக்கட்டளை (CFRD)' மற்றும் அலிபாபா நிறுவனத்தின் உதவியுடன் panda pack வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை உபகரணங்கள் அடங்கிய 5,000 பாடசாலை பைகள் அடங்கிய நன்கொடை செவ்வாய்க்கிழமை (07) பிரதமர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டன. இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொக்கினால் (Qi Zenhong) குறித்த பாடசாலை பைகள் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்னவிடம் நன்கொடையின் அடையாளமாகக் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரி, கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வியமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட அதிகாரிகளும் கிராமிய அபிவிருத்திக்கான சீன அறக்கட்டளையின் உதவிப் பணிப்பாளர் Zou Zhiqiang அவர்களும் பங்கேற்றிருந்தார்கள். https://www.virakesari.lk/article/203238
  2. இதே போன்ற சம்பவம் எனது வீட்டிலும் நடந்திருந்தது, ஊசி போட்ட அடுத்த சில நாட்களில் வளர்ப்பு நாய் இறந்துவிட்டது. காலாவதியான ஊசி போட்டிருப்பினமோ?! நண்பர் வீட்டில் இரண்டு பொக்கற் நாய்கள் தடுப்பூசியின் பின் இறந்தன.
  3. China-ன் மெகா திட்டம்; Brahmaputra-ல் World Biggest Hydropower Dam? இந்திய பொருளாதாரத்துக்கு ஆபத்தா? உலகின் மிகப்பெரிய நீர்மின் அணையை கட்ட சீனா ஒப்புதல் அளித்துள்ளது. இது திபெத்தின் பகுதிகளில் உள்ள மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்வது குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது. அதே போல, இந்த அணை மூலம் இந்திய பொருளாதாரத்தை சீனா கட்டுப்படுத்த வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சீனாவின் திட்டம்தான் என்ன? இது குறித்து இந்தியா கவலைப்பட வேண்டுமா?
  4. 07 JAN, 2025 | 11:09 AM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான உள்ளகப்பொறிமுறையொன்றை நிறுவுவதாகத் தமது அரசாங்கம் வாக்குறுதியளித்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, எனவே தற்போதைய அரசாங்கம் அவ்வாக்குறுதியிலிருந்து பின்வாங்கும் பட்சத்தில் இலங்கை அரசாங்கம் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும் என விசனம் வெளியிட்டார். நாட்டில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த அரசாங்கத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூல வரைபைத் தயாரிப்பதற்குமென கலாநிதி அசங்க குணவன்ச தலைமையில் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகமொன்று நிறுவப்பட்டு இயங்கிவந்தது. இருப்பினும் கடந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதித்தேர்தலின் ஊடாக இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தை அடுத்து, அந்த இடைக்கால செயலகத்தின் செயற்பாடுகள் புதிய அரசாங்கத்தினால் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டன. அதேவேளை அந்த இடைக்கால செயலகத்தினால் தயாரிக்கப்பட்ட சட்ட வரைபு மற்றும் அதனுடன் தொடர்புடைய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, தாம் பணிகளை ஆரம்பித்து சொற்ப காலமே பூர்த்தியடைந்திருப்பதாகவும், எனவே இவ்விடயம் தொடர்பில் உரிய கோப்புகளை ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் அதுபற்றி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்குரிய பணிகளை முனைப்புடன் முன்னெடுத்துவந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் இதுபற்றி வினவியபோது, பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களுக்குரிய பதிலோ அல்லது நீதியோ இன்றிக் காத்திருப்பதாகவும், எனவே அவர்களுக்கான தீர்வை வழங்குவதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு செயன்முறையொன்று இயங்கவேண்டியது அவசியம் எனவும் சுட்டிக்காட்டினார். அதேபோன்று இதுவொரு அரசியல் சார்ந்த விடயமல்ல எனக் குறிப்பிட்ட அவர், ஆகவே உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதை இலக்காகக்கொண்டு கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவந்த நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் தொடரவேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான உள்ளகப்பொறிமுறையொன்றை நிறுவுவதாகத் தமது அரசாங்கம் வாக்குறுதியளித்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய அலி சப்ரி, எனவே தற்போதைய அரசாங்கம் அவ்வாக்குறுதியிலிருந்து பின்வாங்கும் பட்சத்தில் இலங்கை அரசாங்கம் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும் எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/203188
  5. உயிரை மாய்த்துக்கொள்ளும் இஸ்ரேல் வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். இவர்களை மீட்கும் முயற்சியில், இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லாவும் இயங்கி வந்தது. இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய இருநாடுகள் எடுத்த முயற்சியின் பலனாக இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே, கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. இஸ்ரேல் மற்றும் லெபனான் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டிய நிலையிலும், இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வரவில்லை. இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் போரில் உயிரிழக்கும் வீரர்கள் ஒருபுறமிருக்க, மறுபுறம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்ளும் இஸ்ரேல் ராணுவ வீரர்களின் விகிதம் அதிகரித்து இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் 38 பேர் வரை உயிரை மாய்த்துக்கொண்டு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் 14 பேரும் 2021ஆம் ஆண்டில் 11 பேரும் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இது 2023இல் 17 ஆகவும், 2024இல் 21 ஆகவும் உயர்ந்துள்ளது. 2023ஆம் ஆண்டில் மட்டும், போர், விபத்துக்கள் மற்றும் நோய்கள் உள்ளிட்ட காரணங்களால் மொத்தம் 558 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் சமீபத்திய காஸா போர் நடவடிக்கை வீரர்களிடையே கடுமையான மனநல கவலைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் பாதுகாப்புப் படையில் (IDF) மனநல பிரச்னைகள் அதிகரித்து வருவதைக் குறிக்கும் பரந்த போக்கை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுவதாகக் கூறப்படுகிறது. 2023ஆம் ஆண்டு அக்டோபரில் போர் தொடங்கப்பட்டதில் இருந்து 3,900க்கும் மேற்பட்ட மனநல அழைப்புகளை அந்நாட்டு ராணுவ வீரர்கள் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, 24/7 மனநல ஹாட்லைன் போன்ற நடவடிக்கைகளை IDF செயல்படுத்தியதாகவும், கூடுதலாக, 800 மனநல அதிகாரிகளை ராணுவம் நியமித்ததாகவும் கூறப்படுகிறது. https://thinakkural.lk/article/314431
  6. திபெத் நிலநடுக்கம்: குறைந்தது 95 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன 7 ஜனவரி 2025, 02:48 GMT புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர் திபெத் பகுதியில் உள்ள மலைத்தொடரில் செவ்வாய்க்கிழமை அன்று காலை ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 130 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. திபெத்தில் உள்ள புனித நகரமான ஷிகாட்சேயில் உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணியளவில் (01:00 GMT) நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.1 என்ற அளவில் மேற்பரப்புக்கு கீழே 10 கிலோமீட்டர் (சுமார் ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க புவியியல் ஆய்வின் தரவுகளின்படி, பெரிய நிலநடுக்கத்திற்கு பிறகு சிறிய நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த நிலநடுக்கத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன நேபாளம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டது. ஒரு புவியியல் பிழைக் கோட்டில் அமைந்துள்ள இப்பகுதியில் பூகம்பங்கள் பொதுவானவை. திபெத்தின் புனித நகரங்களில் ஒன்றாக ஷிகாட்சே கருதப்படுகிறது. இது திபெத்திய புத்த மதத்தின் முக்கிய நபரான பஞ்சன் லாமாவின் பாரம்பரிய இடமாகும். அவரது ஆன்மீக அதிகாரம் தலாய் லாமாவுக்கு அடுத்தபடியாக உள்ளது சீன அரசு ஊடகங்கள் ஒளிபரப்பிய வீடியோ பதிவுகள் வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்ததையும், இடிபாடுகளுக்குள் சென்று மீட்புப் பணியாளர்கள் அங்கு சிக்கி உள்ள மக்களுக்கு தடிமனான போர்வைகளை வழங்குவதைக் காட்டுகின்றது. கைபேசிகள் மூலம் நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறிய முடியுமா? கூகுள் நிறுவனத்தின் புதிய திட்டம் என்ன? 'வயநாடு சம்பவம் நீலகிரிக்கான எச்சரிக்கை மணி'- மேற்குத் தொடர்ச்சி மலை நிலச்சரிவுகள் குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன? சோழ, பாண்டிய மன்னர்கள் 1,000 ஆண்டுக்கு முன்பு பூகம்பம், புயல், வெள்ளம், வறட்சியை எவ்வாறு சமாளித்தனர்? சீனா பூகம்ப வலையமைப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர் ஜியாங் ஹைகுன் சீன ஊடகமான சிசிடிவியிடம், "ஒரு பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்படும் சிறிய அதிர்வுகளின் வலிமை மற்றும் நடுக்கம் படிப்படியாக குறையும்" என்று கூறினார். 5 என்ற அளவிலான மற்றொரு நிலநடுக்கம் இன்னும் நிகழக்கூடும் என்றாலும், "பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது"என்று ஜியாங் கூறினார். நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள இப்பகுதி, எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. உறைபனிக்குக் கீழே வெப்பநிலை உள்ள இப்பகுதியில், சீன விமானப்படை மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது மற்றும் ஆளில்லா விமானங்களையும் அனுப்பியுள்ளது. அப்பகுதியில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இரண்டும் துண்டிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் 2 குழந்தைகளுக்கு ஹெச்.எம்.பி.வி வைரஸ் தொற்று- எவ்வாறு பரவும்? தற்காப்பு என்ன?6 ஜனவரி 2025 அமெரிக்காவில் பனிப்புயல்: 30 மாகாணங்களில் கடுங்குளிர், 7 மாகாணங்களில் அவசர நிலை - 1,500 விமானங்கள் ரத்து6 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நேபாளத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது, அங்கு உயிரிழப்புகள் ஏற்படவில்லை நேபாளத்தில் அதிர்வு இதற்கிடையில், நேபாள தலைநகர் காத்மாண்டுவில் செவ்வாய்க்கிழமை காலை நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாக ஏஃப்பி செய்தி முகமையின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார். நிலநடுக்க அதிர்வுக்கு பிறகு ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்புகளை நேபாள அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக ஏஃப்பி தெரிவித்துள்ளது. "அதிர்வு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது, இங்குள்ள அனைவரும் கண்விழித்துகொண்டனர். இதுவரை சேதமும் ஏற்பட்டதாக எந்த தகவலுக்கு எங்களுக்கு வரவில்லை" என்று எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகிலுள்ள நாம்சே பகுதியின் அரசு அதிகாரி ஜகத் பிரசாத் ஏஃப்பியிடம் தெரிவித்தார். ''ஒரு வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை'' என்கிறார் நேபாளத்தின் சொலுகும்பு மாவட்ட உதவி தலைமை மாவட்ட அதிகாரி ரூபேஷ் விஸ்வகர்மா. 3 புலிகள் பலி: இந்தியாவில் முதன் முறையாக புலிகளுக்கு பறவைக் காய்ச்சல் - மனிதர்களுக்குப் பரவுமா?6 ஜனவரி 2025 இலங்கை: வாகனங்களில் உள்ள கடவுள் சிலை அகற்றப்படுகிறதா?2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒரு புவியியல் பிழைக் கோட்டில் அமைந்துள்ள இப்பகுதியில் பூகம்பங்கள் பொதுவானவை (கோப்புப்படம்) "பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது போல் உணர்ந்தேன். நான் வெளியே வந்து பார்த்தேன், இங்கு எந்த சேதமும் இல்லை. லோபுச்சேவை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று விஸ்வகர்மா பிபிசி நேபாள சேவையிடம் தொலைப்பேசியில் தெரிவித்தார். தேசிய நிலநடுக்க அளவீடு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் செய்தித் தொடர்பாளர் மனிகா ஜா பிபிசியிடம், "இந்த நிலநடுக்கத்தின் மையம் நேபாளம் அல்ல, சீனாதான். ஆனால் அதன் தாக்கம் நேபாளத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது." என்றார். இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியானது, இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகள் மோதும் புவியியல் பிழைக் கோடுக்கு அருகே அமைந்துள்ளது. இதனால் அப்பகுதி அடிக்கடி நில அதிர்வுகளுக்கு உள்ளாகிறது. 2015ம் ஆண்டில், நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு அருகே 7.8 ரிக்டர் அளவில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இந்த துயர நிகழ்வில் கிட்டத்தட்ட 9,000 மக்கள் இறந்தனர் மற்றும் 20,000க்கும் அதிகமான மக்கள் காயமடைந்தனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cj90mv1399yo
  7. Published By: DIGITAL DESK 2 07 JAN, 2025 | 11:06 AM (எம்.ஆர்.எம்.வசீம்) வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் திங்கட்கிழமை (06) முதல் பிறப்புச்சான்றிதழ், விவாகச் சான்றிதழ் மற்றும் மரணச் சான்றிதழ்களை இலத்திரனியல் தொழிநுட்பம் ஊடாக அந்த நாடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியும். இதன் ஆரம்பகட்டமாக 7 நாடுகளில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் டிஜிட்டல் மயமாக்கல் நிகழ்ச்சிதிட்டத்தின் கீழ் செயற்படுத்தப்பட்ட வேலைத்திட்டமாக வெளிநாட்டுகளில் வாழும் இலங்கையர்களுக்கு அந்த நாடுகளில் அமைந்திருக்கும் தூதரகங்கள் ஊடாக தாமதமின்றி பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச்சான்றிதழ்களை விரைவாக பெற்றுக்கொள்ள முடியுமான டிஜிட்டல் வசதியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது வெளிவிவகார, வெளிநாட்டு தொழில், சுற்றுலா அமைச்சு ஊடாக செயற்படுத்தப்படும் இந்த இணையத்தளத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பிறப்புச்சான்றிதழ், மரணச் சான்றிதழ் மற்றும் விவாகச் சான்றிதழ்களை திங்கட்கிழமை (06) முதல் இலத்திரனியல் தொழிநுட்பம் முறைமை ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். இந்த நடவடிக்கையை மேற்கொள்ள ஜனாதிபதி செயலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு கடந்த இரண்டு மாதங்களாக மிகவும் தேவையுடன் செயற்பட்டு வந்தன. அதன் பெறுபேறாகவே இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க இந்த வாய்ப்பு வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு கிடைக்கிறது. உலகம் பூராகவும் பரந்துவாழும் 35இலட்சம் இலங்கை பிரஜைகளுக்கு தங்களின் பிள்ளைகளின் பிறப்புச்சான்றிதழை நீங்கள் வாழும் இடத்தில் இருந்தே ஒரு சில நிமிடங்களில் உங்களுக்கு தற்போது பெற்றுக்கொள்ள முடியும்.அதேபோன்று உங்களது விவாக சான்றிதழ் மற்றும் உங்களது உறவினர்கள் யாராவது மரணித்தால் அவரின் மரணச் சான்றிதழை பெற்றுக்கொள்ளவும் தற்போது இலங்கைக்கு வரவேண்டிய தேவையில்லை. இது பல வருடங்களாக இருந்துவந்த திட்டமாகும். என்றாலும் செயற்பாட்டில் வரவில்லை. இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்த புதிய அரசியல் தலைமையுடன் இந்த அதிகாரிகளுக்கு முடியுமாகி இருக்கிறது. எங்களுக்கு தேவைப்பாடு இருந்தால் செய்ய முடியாத எதுவும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. ஜனாதிபதியின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தில் இது முதலாவது வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டமாகும். அந்த வகையில் ஆரம்பமாக இந்த வேலைத்திட்டத்தை உலகில் 7 நாடுகளில் நேற்று (06) ஆரம்பமானது. எதிர்காலத்தில் அனைத்து நாடுகளிலும் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படும். அந்த வகையில் ஜப்பான், கட்டார், குவைட் தூதரக காரியாலயம் மிலானோ, டொரன்டோ, மெல்பேர்ன் மற்றும் டுபாய் கன்சியுளர் காரியாலயம் ஊமாக இந்த நாடுகளில் இருக்கும் இலங்கையர்களுக்கு இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும். இந்த வேலைத்திட்டம் மூலம் இலட்சக்கணக்கான மக்களுக்கு பாரியதொரு வசதி கிடைக்கப்பெறுகிறது. இல்லாவிட்டால் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் இந்த சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள இலங்கைக்கு வந்து, அதற்கு தேவையாக ஆவணங்களை தயாரித்துக்கொள்ளவும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு சென்று தேவையான சேவையை பெற்றுக்கொள்ள அவர்களுக்கு நீண்ட நாட்கள் விரயமாக்கவேண்டிவரும். அதேபோன்று அதிக செலவு ஏற்படும். என்றாலும் தற்போது அவர்களின் நேரம், காலம் செலவு அனைத்தும் இந்த வேலைத்திட்டம் மூலம் மீதப்படுத்தப்பட்டுகிறது. சுமார் 22 டொலருக்கு உங்களுக்கு தேவையான சான்றிதழை இருக்கும் இடத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். இதேபோன்று ஏனைய சேவைகளையும் இருக்கும் நாட்டில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியுமான வேலைத்திட்டத்தை மேற்கொள்வதே எமது திட்டமாகும். அதனையும் நாங்கள் மேற்கொள்வோம். தற்போது எங்களுக்கு இருக்கும் சவால் கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதாகும். அது எங்களது பிரச்சினை அல்ல. இதற்கு முன்னர் எடுத்த பிழையான தீர்மானத்தின் பெறுபேறாகும். கடவுசீட்டை பெற்றுக்கொள்ள முடியாமல் பல மாதங்களாக சிலர் காத்திருப்பதை நாங்கள் அறிகிறோம்.அதனால் தற்போது நாங்கள் ஒருதொகை கடவுச்சீட்டுக்கு கேள்விக் கோரல் முன்வைத்திருக்கிறோம். மிக விரைவில் கடவுசீட்டுக்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேபோன்று பிறப்புச்சான்றிதழ், மரணச்சான்றிதழ் மற்றும் விவாகச் சான்றிதழ்களை வெளிநாடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியுமாகி இருப்பது போன்று கடவுச்சீட்டையும் இலத்திரனியல் தொழிநுட்பம் ஊடாக புதுப்பிக்கவும் புதிய கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளவும் நாங்கள் விரைவில் நடவடிக்கை எடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/203182
  8. கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்புரை சத்திரசிகிச்சை காரணமாக பார்வையிழந்த நோயாளர்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மேலும், குறித்த மருந்து இறக்குமதிக்கு காரணமான அனைத்து தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தெரிவித்தார். நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண்புரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பல நோயாளர்கள் பார்வையிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டு அக்குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் பார்வையிழந்த 17 நோயாளர்களுக்கு அரசினால் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என நேற்று அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. இதுபோன்ற இழப்பீடு வழங்குவது இதற்கு முன் நடந்ததில்லை. எனவே, நாங்கள் இப்போது இழப்பீட்டு முறையைத் தயாரித்து வருகிறோம். அது மாத்திரமன்றி, இந்த மருந்தை இறக்குமதி செய்வதற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது என்றார். https://thinakkural.lk/article/314443
  9. எமது அன்புக்குரியவர்களை பாதுகாப்பாக மீட்டுத்தாருங்கள் ரஷ்ய படையில் இணைக்கப்பட்டுள்ள இளையவர்களின் உறவினர்கள் ஜனாதிபதி அநுர, அமைச்சர் விஜிதவுக்கு கடிதம் Published By: DIGITAL DESK 2 07 JAN, 2025 | 12:26 PM ஆர்.ராம்- ரஷ்யப்படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள எமது உறவுகளை பாதுகாப்பாக எம்மிடத்தில் மீட்டுத்தருவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுங்கள் என்றுகோரிக்கை விடுத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு தாய்மார் கடிதம் அனுப்பியுள்ளனர். ஜனாதிபதி செயலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது உறவுகள் முகவர்கள் ஊடாக ஐரோப்பாவுக்குச் செல்வதற்காக பயணமாகியபோது இறுதித் தருணத்தில் ரஷ்யாவின் ஊடாக பயணத்தினை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டனர். அதற்கமைவாக அவர்கள் ரஷ்யாவுக்குச் சென்றபோது அங்கு இலங்கை இராணுவத்தில் கடமையாற்றிய அதிகாரியொருவர் அவர்களை சில நாட்களுக்கு பராமரித்ததோடு பின்னர் ரஷ்ய படையில் பயிற்சிகளைப் பெறுவதற்கான இணைப்புச் செய்துள்ளார். அப்போதும் கூட அவர் அடையாள அட்டையைப் பெறுவதற்காகவே அவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். எனினும் பயிற்சியின் பின்னர் எமது உறவுகள் போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை மீட்டுத்தருமாறு ஏற்கனவே டிசம்பர் 2ஆம் திகதி நாம் எழுத்துமூலமான கோரிக்கையை விடுத்துள்ளபோதும் இதுவரையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுத்ததாக நாம் அறியவில்லை. எமக்கும் வெளிவிவகார அமைச்சு எவ்விதமான பதில்களையும் வழங்கவில்லை. இந்நிலையில், எமது உறவுகளுடன் காணப்பட்ட தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இற்றையக்கு ஒருமாதமாக எமக்கு எந்தவிதமான பதில்களும் அளிக்கப்படாதுள்ள நிலையில் எமது உறவுகளை மீட்டுத் தருவதற்காக உரிய நடடிவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். விசேடமாக, எமது அன்புக்குரியவர்கள் தொடர்புகள் துண்டிக்கப்படுவதற்கு முன்னதாக அவர்கள் உயிருக்கு ஆபத்தான போர்க்களத்தில் இருப்பதாக வெளிப்படுத்தியிருந்தார்கள். அவர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தது. ஆகவே அவர்களை பாதுகாப்பாக மீட்டெடுத்து எம்மிடத்தில் ஒப்படைக்குமாறு நாம் கோரிக்கை விடுப்பதோடு கிளீர் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறு ஆட்கடத்தில் வலையமைப்புக்களையும் முழுமையாக அகற்றுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகின்றோம். எமது நீதியையும், நியாயத்தையும் பெற்றுத்தருவீர்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு காணப்படுவதோடு விரைந்து இந்த விடயத்தில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் இதனால் நாம் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பாதிப்படைந்து வருகின்றோம் என்பதையும் குறிப்பிடுகின்றோம் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/203199
  10. யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இடம்பெறும் சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதிகளில் சட்டவிரோதமான முறையிலும், வழங்கப்பட்ட அனுமதிகளுக்கு மேலதிகமாகவும் சுண்ணக்கல் அகழ்வுகள் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், சுண்ணக்கல் ஏற்றி சென்ற கனரக வாகனங்களை பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். அதனை அடுத்து, சுண்ணக்கற்களை உரிய அனுமதிகளுடனேயே எடுத்து செல்வதாகவும், கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக சுண்ணக்கல் வர்த்தகத்தில் தாம் ஈடுபட்டு வருவதாகவும், சிட்டி ஹாட்வெயாரின் உரிமையாளர் யாழில் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சடடவிரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்படுவதாக கூறப்பட்ட பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உள்ளிட்ட குழுவினர் சென்று, சுண்ணக்கல் அகழப்பட்டு பாரிய பள்ளங்களாக காணப்பட்ட இடங்களை பார்வையிட்டனர். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கடற்தொழில் அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போது, யாழில் இடம்பெறும் சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கைகளுக்கும், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் அரச அதிகாரிகளே பொறுப்பு கூற வேண்டும். இது தொடர்பிலான விசாரணைகள் விரைந்து முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/314405
  11. யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக இருந்து அகற்றப்பட்ட சோதனைச் சாவடிகள் மீண்டும் திடீரென அமைக்கப்பட்டு வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. யுத்தத்தின் போதும் யுத்தம் முடிவுற்ற பின்னரும் கூட பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. குறித்த சோதனைச் சாவடிகளை அகற்றுமாறு அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்திருந்தனர். இந்த நிலையில் நாட்டில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்ற பின்னர் அங்கு இருந்த சோதனைச் சாவடிகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டன. இவ்வாறான நிலையில் திடீரென அகற்றப்பட்ட அந்த சோதனைச் சாவடிகள் தற்போது மீண்டும் அதே இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. மாற்றம் என்று கூறி புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அனுர அரசாங்கம் சோதனைச் சாவடிகளை தாமே அகற்றுவதும் மீண்டும் தாமே அமைக்கின்ற இந்த நடவடிக்கை தொடர்பில் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகத்தையும் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/314426
  12. Published By: DIGITAL DESK 7 07 JAN, 2025 | 10:22 AM வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (06) மாலை தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்டுள்ள பதாகையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. “1 KM வட்டவான் தொல்லியல் நிலையம்” என குறிப்பிட்டு குறித்த பதாகை நடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் இது பெரும் பரபரப்பையும், விசனத்தையும் ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் எவ்வளவு பகுதி தொல்லியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது? அதற்காக வர்த்தமான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதா? ஏதிர்காலத்தில் அப்பகுதியில் புத்த விகாரை வருமா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தொல்லியல் திணைக்களத்தின் குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரியவருகின்றது. கடந்த 28.12.2024 அன்று இரவோடு இரவாக குச்சவெளி பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் பதாகை நடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 01ஆம் திகதியன்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/203181
  13. பட மூலாதாரம்,AFP கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 6 ஜனவரி 2025 எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். சென்னையில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 43 வயதான நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிக்கு தண்டனை கிடைப்பதில் சிறுமியின் பாட்டிக்கு பிரதான பங்கு உள்ளதாகக் கூறுகிறார், அரசு சிறப்பு வழக்கறிஞர் அனிதா. வழக்குப் பதிவான ஓராண்டில் நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. போக்சோ வழக்குகளில் முன்னுதாரண வழக்காக இது இருப்பதாகக் கூறுகின்றனர், குழந்தைகள் நல ஆர்வலர்கள். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் என்ன நடந்தது? ஒரே ஆண்டில் நீதிமன்ற தீர்ப்பு வந்தது எப்படி? குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கிடைத்ததன் பின்னணியில் சிறுமியின் பாட்டி செய்தது என்ன? 'பாலியல் வன்புணர்வு செய்தி வந்தால் சேனலை மாற்றிவிடுவோம்' - சவாலாக இருக்கிறதா ஆண் குழந்தை வளர்ப்பு? அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் அரசியலாக்கப்படுகிறதா? சியாரா லியோன்: அவசர நிலையை ஏற்படுத்திய குழந்தை பாலியல் வல்லுறவு வழக்குகளில் நீதி கிடைத்ததா? ராஜஸ்தான்: 18 வயதில் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்ணின் 32 வருட சட்டப் போராட்டம் சிறுமிக்கு நடந்தது என்ன? சென்னை பாரிமுனை பகுதியில் கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் நடந்த சம்பவம் இது. பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை அவருக்கு நன்கு அறிமுகமான சையது இப்ராஹிம் என்ற நபர் தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். சிறுமி வசிக்கும் வீட்டிலிருந்து சற்று தொலைவில் தனது தாயார் வசிக்கும் வீட்டுக்கு சிறுமியை சையது இப்ராஹிம் கூட்டிச் சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியை வீட்டுக்குள் வருமாறு இப்ராஹிம் அழைத்துள்ளார். சிறுமி மறுக்கவே அவரை வீட்டுக்குள் தள்ளி தாடையில் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனால் சிறுமி மயக்கமடைந்ததாக நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இதன் பிறகு கண் விழித்த சிறுமி தனக்கு ஏதோ நடந்திருப்பதை அறிந்து அங்கிருந்து தடுமாறி தனது வீட்டுக்கு வந்துள்ளார். "சிறுமி வசிக்கும் குடியிருப்புக்கு அருகில் இப்ராஹிம் குடும்பம் வசித்து வருகிறது. சம்பவத்துக்குப் பிறகு சிறுமி நடந்து வருவதை இப்ராஹிம் கவனித்துள்ளார். நடந்த சம்பவத்தை உன் அம்மாவிடமோ, என் மனைவிடமோ சொன்னால் உன் தம்பியைக் கொன்றுவிடுவேன்" என மிரட்டியதாக நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. "இப்ராஹிமின் மகளுக்கும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் ஏறக்குறைய ஒரே வயதுதான். இருவரும் ஒன்றாக பள்ளிக்குச் சென்று வந்துள்ளனர். சம்பவம் நடந்த நாளில், நான் உனக்கு அப்பா மாதிரி எனக் கூறி சிறுமியை கூட்டிச் சென்றுள்ளார்" என்கிறார் இந்த வழக்கில் வாதாடிய அரசு சிறப்பு வழக்கறிஞர் அனிதா. சிறுமியின் தந்தை சிறு வயதிலேயே பிரிந்து சென்றுவிட்டார். அதன் பிறகு தெருவோரத்தில் வியாபாரம் செய்யும் ஒரு நபரை சிறுமியின் தாயார் மறுமணம் செய்துள்ளார். இவர்களுக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறார். 'ரூ.25 லட்சத்தை இழந்தேன்' - இந்தியாவில் வேலைக்குச் செல்லும் மணமான பெண்கள் ஊதியத்தை என்ன செய்கிறார்கள்?4 ஜனவரி 2025 உங்கள் குழந்தைகளை 'வக்கிர ஆண்களின்' பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்க என்ன செய்யவேண்டும்?5 ஆகஸ்ட் 2023 பாட்டி கொடுத்த தைரியம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் தனது தம்பியைக் கொன்றுவிடுவதாக இப்ராஹிம் மிரட்டியதால் சிறுமியும் அவரது தாயும் பயந்து போய் அமைதியாக இருந்துள்ளதாகக் கூறுகிறார் அரசு வழக்கறிஞர் அனிதா. இதுதொடர்பாக சையது இப்ராஹிமிடம் நியாயம் கேட்கச் சென்ற சிறுமியின் தாயாருக்கு தொடர்ச்சியாக மிரட்டல்கள் வந்ததால் தாயும் மகளும் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளனர். மேற்கொண்டு பேசிய அனிதா, "பல நாட்களாக சிறுமி தூக்கத்தில் எழுந்து, 'தம்பியை கொன்றுவிடுவார்களா?' எனக் கேட்டு அழுதுள்ளார். தன் மகளுக்கு நேர்ந்த துன்பத்தால் சிறுமியின் தாயாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்" என்றார். ''சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் கழித்து (அக்டோபர்) தனது மகளின் உடல்நலனை விசாரிப்பதற்காக சிறுமியின் பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தனது பேத்திக்கு நடந்த சம்பவம், அவருக்குத் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சையது இப்ராஹிமை அவரது வீட்டில் சந்தித்து சண்டை போட்டுள்ளார். அப்போது பாட்டியை சையது மிரட்டியுள்ளார். இதன் பிறகும் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையம் செல்வதற்கு அஞ்சியுள்ளனர். ஆனால், அவரது பாட்டிதான் தனது மகளுக்கு தைரியம் கொடுத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வைத்தார்" என்கிறார் அரசு வழக்கறிஞர் அனிதா. புதிய சாதனை படைத்த பும்ரா இல்லாமல் இந்திய அணி ஆவேசம் - கடைசி டெஸ்ட் மூன்றாவது நாளே முடிவுக்கு வருமா?4 ஜனவரி 2025 காதலி சத்தியத்தை நம்பி ஒரே வீட்டில் 50 ஆண்டு காத்திருந்த இவர் என்ன ஆனார்? காதலி எங்கே போனார்?4 ஜனவரி 2025 சட்டப் பிரிவை மாற்றிய நீதிபதி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் சிறுமியின் தாயார் புகார் கொடுத்த பிறகு குற்றம் சுமத்தப்பட்ட நபர் மீது 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் போக்சோ சட்டப்பிரிவு 8-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின்படி ஐந்து முதல் எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும். "இது குழந்தைகளைத் தவறாக தொடுவதற்காகப் போடப்படும் சட்டப் பிரிவு" எனக் கூறிய அனிதா, இந்த வழக்கில் கைதான இப்ராஹிமின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, 'சிறுமியிடம் பேச வேண்டும்' என நீதிபதி கூறியதாகத் தெரிவித்தார். சிறுமியை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி நேரில் அழைத்துப் பேசினார். அப்போது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதை உறுதி செய்து, மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இதன் பின்னரே இந்த வழக்கில் சட்டப் பிரிவுகள் மாற்றப்பட்டதாகக் கூறுகிறார் அனிதா. மருத்துவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், போக்சோ பிரிவு 6-இன் கீழ் வழக்கு மாற்றப்பட்டது. "அதன்படி ஆயுள் தண்டனை கிடைக்கும்'' என்றார் அவர். பூமிக்கும் வானில் இரட்டை சூரியன்கள் இருந்தனவா? ஆய்வில் புதிய தகவல்28 டிசம்பர் 2024 பிரம்மபுத்திராவின் குறுக்கே பிரமாண்ட அணை கட்ட தயாராகும் சீனா - இந்தியா, வங்கதேசத்திற்கு என்ன பாதிப்பு?29 டிசம்பர் 2024 படிப்பை தொடர்ந்த மாணவி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் அதேநேரம், காவல் நிலையம், நீதிமன்றம் என அலைந்து கொண்டிருந்ததால் சிறுமியின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி நீதிபதியிடம் அரசுத் தரப்பு வழக்கறிஞர் எடுத்துக் கூறியதும், 'அதே பள்ளியில் சிறுமி படிக்க வேண்டும். காவல் துறை அதிகாரிகளிடம் நான் கூறியதாகப் பேசுங்கள்' என நீதிபதி கூறினார் என்கிறார் அரசு வழக்கறிஞர் இதையடுத்து, தற்போது அதே பள்ளியில் சிறுமி படித்து வருகிறார். "மிக நன்றாகப் படிக்கக் கூடிய மாணவி அவர். இந்தச் சம்பவத்தால் அவருக்கு ஓர் ஆண்டு படிப்பு வீணாகிவிட்டது" எனக் கூறுகிறார் அனிதா. ''கடந்த பத்து மாதங்களில் பல்வேறு சவால்களை இந்த வழக்கு சந்தித்துள்ளது. குற்றம் நடந்த நேரத்தில் சிறுமி மயக்கமாகிவிட்டதால் சையது இப்ராஹிமை தொடர்புபடுத்தும் நேரடிகள் சாட்சிகள் எதுவும் இல்லை. தன்னுடைய தரப்பை நியாயப்படுத்துவதற்கு ஏழு சாட்சிகளை சையது இப்ராஹிம் கொண்டு வந்தார். அவர்களின் சாட்சிகளில் முரண்பாடு உள்ளதை அரசுத் தரப்பு நிரூபித்தது" எனக் கூறுகிறார் அனிதா. குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? ஆண் குட்டிகளை மட்டும் விரட்டி விடுவது ஏன்?22 டிசம்பர் 2024 கூகுள் மேப் பார்த்து கோவா செல்ல முயன்ற 4 பேர் நள்ளிரவில் நடுக்காட்டில் சிக்கியது எப்படி?16 டிசம்பர் 2024 தண்டனை விவரம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி நீதிபதி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி அளித்த தீர்ப்பில், 'குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையுடன் 30 ஆயிரம் ரூபாய் அபராதம்' விதிப்பதாக அறிவித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 10 லட்ச ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கவும் நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டார். "கைதான நாளில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் வரையில் குற்றம் சுமத்தப்பட்ட நபர் சிறையில்தான் இருந்தார். இந்த வழக்கில் விரைந்து விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது" என்கிறார் அரசு வழக்கறிஞர் அனிதா. சிறுமி வழக்கில் பாட்டியின் தைரியத்தால் இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வந்ததாகக் கூறிய அனிதா, "தற்போது அந்தப் பாட்டியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை விசாரணைக்கு அழைக்கவில்லை" என்றார். கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?28 டிசம்பர் 2024 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மூத் யானை குட்டியின் உடல் மீட்பு - சுவாரஸ்ய தகவல்கள்26 டிசம்பர் 2024 'எந்த விவரமும் வெளிவராது' பட மூலாதாரம்,GETTY IMAGES மேலும், "குழந்தைகளுக்கு முதலில் தன்னம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். இவ்வாறான சம்பவங்களில் முதல் அடி, குழந்தைக்குத்தான் விழுகிறது. சில பெற்றோர், குடும்ப மானம் போய்விடும் என அஞ்சுகின்றனர். போக்சோ வழக்குகளில் குழந்தைகள் தொடர்பான எந்த விவரங்களும் வெளியில் செல்லாது. இத்தகைய வழக்குகளில் அனைத்துத் தகவல்களையும் மிக ரகசியமாகவே கையாள்கிறோம். ஆவணங்களில் சிறுமியின் பெயர், பெற்றோர் பெயர் என அனைத்தும் மறைக்கப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான சட்ட உதவியும் மனநல ஆலோசனையும் உடனுக்குடன் கிடைக்கிறது" எனக் கூறினார் அனிதா 'அறிமுகமான நபர்களால்தான் பிரச்னை' இந்தியாவில் குழந்தைகளுக்கு நேரும் பாதிப்புகள் தொடர்பாக 2007ஆம் ஆண்டு மத்திய அரசு ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதுகுறித்துப் பேசிய குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன் அரசு, "13 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமான நபர்கள், பாலியல் தொல்லை தருவது தெரிய வந்தது" எனக் கூறுகிறார். பட மூலாதாரம்,DEVANEYAN ARASU/FB படக்குறிப்பு, குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன் அரசு இதே விவரங்கள், 2022-ஆம் ஆண்டு தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிய வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். "ஒரே நாளில் இது நடப்பதில்லை" எனக் கூறும் அவர், "குழந்தைகளுக்கு பரிசுகள் கொடுப்பதில் தொடங்கிப் பல்வேறு நிலைகளில் அவர்களிடம் அத்துமீறுகின்றனர்," என்றார். சென்னை சிறுமி வழக்கில் பாட்டியின் தைரியத்தால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதை வரவேற்றுப் பேசிய தேவநேயன் அரசு, "தன்னுடைய குழந்தைக்கு ஏற்பட்ட துன்பம், வேறு குழந்தைக்கு நடக்கக்கூடாது என்ற எண்ணம் பாராட்டப்பட வேண்டியது" என்றார். மேலும், சமூகத்தில் மாற்றத்தை உருவாக்குவதிலும் சமூகரீதியான கட்டுப்பாடுகளை உடைப்பதிலும் இந்த வழக்கு உதாரணமாக உள்ளதாக தேவநேயன் அரசு தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c1j06djxndjo
  14. ஜஸ்டின் ட்ரூடோ சகாப்தம் முடிவுக்கு என்ன காரணம்? - டிரம்ப் அச்சுறுத்தலா? உள்கட்சி மோதலா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ட்ரூடோ தான் பதவி விலகுவதை அறிவித்தார் கட்டுரை தகவல் எழுதியவர்,மைக் வென்ட்லிங், நாடின் யூசிஃப், ஜான் சுட்வொர்த் பதவி,பிபிசி நியூஸ் கனடாவின் லிபரல் கட்சிக்குள் அதிகரித்துவரும் அழுத்தங்களைத் தொடர்ந்து, ஒன்பது ஆண்டுகாலமாக தான் வகித்து வந்த பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். தனது லிபரல் கட்சி ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை மட்டுமே தான் பதவியில் நீடிக்கப் போவதாகவும், மார்ச் 24 வரை நாடாளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படும் எனவும் ட்ரூடோ கூறினார். "அடுத்த தேர்தலில், மக்கள் விரும்பும் தலைவரை தேர்வு செய்வதற்கான உரிமை கனடாவுக்கு உள்ளது. உட்கட்சி மோதல்களை மட்டுமே கவனித்துக்கொண்டிருந்தால், என்னால் அந்த தேர்தலில் ஒரு நல்ல வேட்பாளராக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது." என திங்கட்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் ட்ரூடோ கூறினார். கனடாவில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நாடாளுமன்ற தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில், ட்ரூடோ மீதான கனேடியர்களின் அதிருப்தி அவரது கட்சியின் வெற்றிக்கு ஒரு பெரிய தடையாக மாறியுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவிப்பு - என்ன காரணம்? டிரம்ப் கனடாவை அமெரிக்க மாகாணமாக மாற்ற விரும்புவது ஏன்? இதற்கு கனடாவின் பதில் என்ன? கனடாவில் ட்ரூடோ அரசு தப்புமா? இந்திய வம்சாவளி தலைவரின் கட்சி ஆதரவு வாபஸ் கனடாவுக்கு எதிராக டிரம்ப் எடுத்த முடிவு, சிக்கலில் ஜஸ்டின் ட்ரூடோ - இந்தியாவை பாதிக்குமா? 'ட்ரூடோவின் ராஜினாமாவால் எதுவும் மாறவில்லை' ஒட்டாவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இந்த முடிவைப் பற்றி, நேற்று இரவு உணவு உண்ணும்போது என் குழந்தைகளிடம் சொன்னேன்" என்று கூறினார். "ஒரு முறையான, நாடு தழுவிய போட்டி செயல்முறை மூலம் கட்சிக்கான அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலக விரும்புகிறேன்," என்று அவர் கூறினார். லிபரல் கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறையைத் தொடங்க, இயக்குநர்கள் குழுவின் கூட்டம் இந்த வாரம் நடைபெறும் என்று கட்சியின் தலைவர் சச்சித் மெஹ்ரா கூறினார். "எங்கள் கட்சிக்கும் நாட்டிற்கும் பத்தாண்டுகளுக்கும் மேலாக தலைமை வகித்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நாடு முழுவதும் உள்ள லிபரல் கட்சியினர், மிகவும் கடமைப்பட்டுள்ளோம்." என தனது அறிக்கையில் சச்சித் மெஹ்ரா தெரிவித்திருந்தார். "ஒரு பிரதமராக, அவரது தொலைநோக்குப் பார்வை கனேடியர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியது," என்று அவர் கூறினார். குழந்தைகள் நலத் திட்டம் உள்பட ட்ரூடோ ஆட்சியில் நாட்டின் மருத்துவத்துறையில் கொண்டுவரப்பட்ட சில நலத்திட்டங்களை மேற்கோள் காட்டி இவ்வாறு அவர் தெரிவித்தார். "ட்ரூடோவின் ராஜினாமாவால் எதுவும் மாறவில்லை" என்று கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்ரே கூறினார். "லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமைப் பதவிகளுக்கு போட்டியிட்டவர்கள், 9 ஆண்டுகளாக ட்ரூடோ செய்த அனைத்தையும் ஆதரித்தனர். இப்போது அவர்கள் பெயரளவுக்கு தங்கள் தலைமையின் முகத்தை மாற்றி, அடுத்த நான்கு வருடங்களுக்கு, கனேடியர்களை ஏமாற்ற விரும்புகிறார்கள். அதாவது ஜஸ்டினைப் போலவே" என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பொய்லிவ்ரே தெரிவித்தார். தமிழ்நாட்டிலும் 2 குழந்தைகளுக்கு ஹெச்.எம்.பி.வி வைரஸ் தொற்று- எவ்வாறு பரவும்? தற்காப்பு என்ன?6 ஜனவரி 2025 அமெரிக்காவில் பனிப்புயல்: 30 மாகாணங்களில் கடுங்குளிர், 7 மாகாணங்களில் அவசர நிலை - 1,500 விமானங்கள் ரத்து6 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 53 வயதான ட்ரூடோ பதவி விலக வேண்டுமென்ற அழுத்தங்கள் அவரது லிபரல் கட்சிக்குள் இருந்து எழுந்தன ட்ரூடோவுக்கு எதிரான உள்கட்சி அழுத்தங்கள் ட்ரூடோ பதவி விலக வேண்டுமென்ற அழுத்தங்கள் அவரது லிபரல் கட்சிக்குள் இருந்து எழுந்தன. டிசம்பரில் கனடாவின் துணைப் பிரதமரும் ட்ரூடோவின் நீண்ட கால நண்பருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் திடீரென ராஜினாமா செய்தபோது, இந்த அழுத்தம் அதிகரித்தது. ஃப்ரீலேண்ட் தனது ராஜினாமா கடிதத்தில், "அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் கனேடிய பொருட்கள் மீதான வரி தொடர்பாக பல அச்சுறுத்தல்களை விடுக்கிறார். ஆனால் டிரம்ப் முன்வைக்கும் இந்த 'கடுமையான சவாலை' எதிர்கொள்ள ட்ரூடோ போதுமான அளவு பணியாற்றவில்லை" என்று குற்றம் சாட்டினார். கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் உறுதியளித்துள்ளார். இது கனடாவின் பொருளாதாரத்தை கணிசமாக பாதிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். "ஃப்ரீலாண்ட் துணைப் பிரதமராகத் தொடர்ந்து செயல்படுவார் என்று நம்பினேன். ஆனால் அவரது முடிவு வேறுவிதமாக இருந்தது" என்று ட்ரூடோ செய்தியாளர்களிடம் கூறினார். டிரம்பின் இந்த அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவுடனான எல்லையில் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தப்போவதாக கனடா அறிவித்துள்ளது. டிரம்ப் ஒரு ஆன்லைன் பதிவில், வரிகள் தொடர்பான அழுத்தம் ட்ரூடோவின் ராஜினாமாவுக்கு வழிவகுத்தது என்று கூறினார், மேலும் கனடாவை, 'அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்ற வேண்டும்' என்ற தனது வழக்கமான கருத்தை மீண்டும் கூறினார். "கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், வரிகள் குறையும். கனடாவைத் தொடர்ந்து சுற்றி வரும் ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலில் இருந்து கனடா முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும்," என்றும் டிரம்ப் அந்த பதிவில் கூறினார். அதிபர் பதவியின் கடைசி கட்டத்தில் இஸ்ரேலுக்கு 8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்க பைடன் முடிவு5 ஜனவரி 2025 தென் கொரியா: பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபரை ஏன் கைது செய்ய முடியவில்லை - தடுப்பது யார்?5 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் உறுதியளித்துள்ளார் லிபரல் கட்சியின் அடுத்த தலைவர் கனடாவில் 2019 முதல், லிபரல் கட்சி பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி செய்து வருகிறது. ஃப்ரீலாண்டின் ராஜினாமாவைத் தொடர்ந்து, ஆட்சியைத் தக்கவைக்க லிபரல் கட்சிக்கு உதவிய பிற கட்சிகளின் ஆதரவை ட்ரூடோ இழந்தார். அதாவது இடதுசாரி சார்பு கொண்ட புதிய ஜனநாயகவாதிகள், மற்றும் கியூபெக் தேசியவாத கட்சியான பிளாக் கியூபெகோயிஸ் (Bloc Quebecois) போன்ற கட்சிகளின் ஆதரவை இழந்தார் கனடாவின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி, கருத்துக்கணிப்புகளில் பல மாதங்களாக லிபரல் கட்சியை விட முன்னிலையில் உள்ளது. ஒரு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால், லிபரல் கட்சி கணிசமான தோல்வியை சந்திக்க நேரிடும் என்று கன்சர்வேடிவ் கட்சி கூறுகிறது. இப்போது லிபரல் கட்சியினர் அடுத்த தேர்தலுக்கான தங்கள் கட்சியின் முகமாக இருக்க ஒரு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். இந்தத் தேர்தல் அக்டோபர் 20 அல்லது அதற்கு முன் நடைபெற வேண்டும். இந்த உட்கட்சி தேர்தல் வெளிப்படையாக நடைபெறும் என்றும், பிரதமர் அலுவலகம் இந்த செயல்முறையிலிருந்து முற்றிலும் விலகி இருக்கும் என்றும், லிபரல் கட்சி உறுப்பினர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை அவர்களிடமே வழங்கப்படும் என்றும் மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பிளாக் கியூபெகோயிஸ் தலைவர் ஈவ்ஸ்-பிரான்சுவா பிளான்செட், 'லிபரல் கட்சியினர் தங்கள் புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்தவுடன், கனடாவுக்கான தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வேண்டும்' என்று பரிந்துரைத்தார். ஹெச்1பி தவிர, அமெரிக்காவில் இந்தியர்களுக்கு அதிக வேலை அனுமதி தரும் மேலும் ஒரு திட்டத்திற்கும் எதிர்ப்பு4 ஜனவரி 2025 அமெரிக்க அதிபராக தயாராகும் டிரம்புக்கு ஆபாசப் பட நடிகை வழக்கில் என்ன தண்டனை? நீதிமன்றம் புதிய அறிவிப்பு4 ஜனவரி 2025 ட்ரூடோ சகாப்தத்தின் முடிவு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ட்ரூடோவின் முதல் பதவிக்காலத்தில் ஊழல் புகார்கள் எழுந்தன 1970கள் மற்றும் 80களில் கனடாவின் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய முன்னாள் கனேடிய பிரதமர் பியர் ட்ரூடோவின் மகன் தான் ஜஸ்டின் ட்ரூடோ. ஜஸ்டின் ட்ரூடோ யாரும் எதிர்பாராத சமயத்தில், 2015இல் தனது கட்சியை பெரும்பான்மை ஆதரவுடன் கனடாவின் அதிகாரத்திற்கு கொண்டு வந்தார். ட்ரூடோவின் அமைச்சரவையில் வழங்கப்பட்ட பாலின சமத்துவம் (இப்போதும் 50% பெண் உறுப்பினர்கள் என்ற அமைப்பே தொடர்கிறது), கனடாவில் பழங்குடி மக்களுடனான நல்லிணக்கச் செயல்பாடுகளில் முன்னேற்றம், தேசிய கார்பன் வரி கொண்டு வரப்பட்டது, குடும்பங்களுக்கு வரி இல்லாத குழந்தை நலத் திட்டத்தை அமல்படுத்துதல், மற்றும் கஞ்சாவை (Recreational cannabis) சட்டப்பூர்வமாக்குதல் போன்றவை அவரது புகழ்பெற்ற அரசியல் திட்டங்களில் அடங்கும். ட்ரூடோவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அசெம்பிளி ஆஃப் ஃபர்ஸ்ட் நேஷன்ஸ் (Assembly of First Nations) அமைப்பின் தேசியத் தலைவர் சிண்டி உட்ஹவுஸ் நெபினாக், பழங்குடியின பிரச்னைகளில் ட்ரூடோ முன்னெடுத்த நடவடிக்கைகளை பாராட்டினார். நெபினாக் வெளியிட்ட அறிக்கையில், "அசெம்பிளி ஆஃப் ஃபர்ஸ்ட் நேஷன்ஸ் அமைப்பின் முக்கியமான பிரச்னைகளைத் தீர்க்க பல அர்த்தமுள்ள நடவடிக்கைகளை ட்ரூடோ எடுத்துள்ளார்" என்று கூறினார். "இதில் இன்னும் நிறைய வேலைகள் எஞ்சியுள்ளன, ஆனால் ட்ரூடோவின் நடவடிக்கைகள் எதிர்கால முன்னேற்றத்திற்கான ஒரு அடித்தளத்தை அமைத்துள்ளன." என்று கூறினார் நெபினாக். ட்ரூடோவின் முதல் பதவிக்காலத்தில் ஊழல் புகார்கள் எழுந்தன. அதன் பிறகு கொரோனா பெருந்தொற்று காலத்தின் தடுப்பூசி தொடர்பான ஆணைகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளும் சில கனேடியர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டன. இது 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 'ஃப்ரீடம் கான்வாய் டிரக்' (Freedom Convoy truck) போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இறுதியில் போராட்டக்காரர்களை அகற்ற அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தினார் ட்ரூடோ. மிக சமீபத்திய ஆண்டுகளில், கனடாவில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம் மற்றும் ட்ரூடோவின் ஆட்சி மீதான விரக்தி காரணமாக அவரின் செல்வாக்கு குறைந்து வருகிறது. செப்டம்பர் மாதம் `Ipsos' தளத்திற்கு பதிலளித்தவர்களில் 26% பேர் மட்டுமே ட்ரூடோ பிரதமருக்கான சிறந்த தேர்வு என்று கூறினர். ஒட்டாவாவில், ட்ரூடோவின் ராஜினாமாவைக் கொண்டாடும் வகையில், ஒரு சிறிய எதிர்ப்பாளர்கள் குழு நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியே நடனமாடினர். ஆனால், அங்கிருந்த ஒரு நபர் 'ட்ரூடோவின் ஆட்சியில் அனைத்தும் சரியாகவே இருப்பதாக தான் கருதுவதாகக்' கூறினார். "நான் ஒரு தச்சன். நான் என் சொந்த வணிகத்தில் கவனம் செலுத்துகிறேன், எனக்கு வருமானம் வருகிறது, அதை வைத்து வாழ்க்கையை நடத்துகிறேன். எல்லாம் சரியாகவே இருக்கிறது" என்று பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஹேம்ஸ் கமர்ரா பிபிசியிடம் கூறினார். மற்றொரு கனேடியரான மரிஸ் காசிவி, இது ஒரு அரசியல் சகாப்தத்தின் முடிவு போல தோன்றுகிறது என்றார். ட்ரூடோ பதவி விலகியதற்கு வருத்தப்படுகிறீர்களா என்று அவரிடம் கேட்டதற்கு, "இல்லை, இதுதான் சரி" என்று பதிலளித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c9wl91r4qdno
  15. Published By: DIGITAL DESK 7 07 JAN, 2025 | 09:03 AM கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் திங்கட்கிழமை (06) கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். கிளிநொச்சியின் முழங்காவில் மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். எலிக்காய்ச்சல் நோய்க்காரணி Leptospirosis பக்டீரியாவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். கால்நடைகளின் சிறுநீருடன் நீர் கலந்திருக்கும் பகுதிகளில் மனிதர்கள் நடமாடும் போது தோலில் ஏற்பட்டுள்ள வெடிப்புகள் அல்லது காயங்கள் ஊடாக குறித்த கிருமி பரவுவதற்கு வாய்ப்புகள் காணப்படுகின்றன. இதன் அறிகுறிகளாக கடுமையான காய்ச்சல், தலைவலி, கண் சிவப்பாக இருத்தல், உடல் நோவு, தசை நோவு, வயிற்று நோவு, இருமல், மூச்சு எடுத்தலில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்படும். எனவே காய்ச்சல் ஏற்பட்டாலும் இவ்வாறான அறிகுறிகள் காணப்பட்டாலும் உடனடியாக வைத்திய பரிசோதனை செய்து கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார். இதைவிட தற்போதைய பனியுடனான காலநிலையில் சளி அதிகரித்து நிமோனியா போன்ற காய்ச்சலும் ஏற்பட வாய்ப்புண்டு அதனைவிட மழையுடனான காலநிலையைத் தொடர்ந்து டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இதிலும் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/203177
  16. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒரு புவியியல் பிழைக் கோட்டில் அமைந்துள்ள இப்பகுதியில் பூகம்பங்கள் பொதுவானவை (கோப்புப்படம்) சீனாவின் திபெத் பகுதியில் உள்ள மலைத்தொடரில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. திபெத்தில் உள்ள புனித நகரமான ஷிகாட்சேயில் உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணியளவில் (01:00 GMT) நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.1 என்ற அளவில் மேற்பரப்புக்கு கீழே 10 கிலோமீட்டர் (சுமார் ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க புவியியல் ஆய்வின் தரவுகளின்படி, பெரிய நிலநடுக்கத்திற்கு பிறகு சிறிய நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளன. அண்டை நாடான நேபாளம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டது. ஒரு புவியியல் பிழைக் கோட்டில் அமைந்துள்ள இப்பகுதியில் பூகம்பங்கள் பொதுவானவை திபெத்தின் புனித நகரங்களில் ஒன்றாக ஷிகாட்சே கருதப்படுகிறது. இது திபெத்திய புத்த மதத்தின் முக்கிய நபரான பஞ்சன் லாமாவின் பாரம்பரிய இடமாகும். அவரது ஆன்மீக அதிகாரம் தலாய் லாமாவுக்கு அடுத்தபடியாக உள்ளது நிலநடுக்கத்திற்குப் பிறகு கட்டடங்கள் இடிந்து விழும் படங்களும் காணொளிகளும் சமூக ஊடகப் பதிவுகளில் வெளியாகியுள்ளன. சீனா பூகம்ப வலையமைப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர் ஜியாங் ஹைகுன் சீனா சீன ஊடகமான சிசிடிவியிடம், "ஒரு பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்படும் சிறிய அதிர்வுகளின் வலிமை மற்றும் நடுக்கம் படிப்படியாக குறையும்" என்று கூறினார். 5 என்ற அளவிலான மற்றொரு நிலநடுக்கம் இன்னும் நிகழக்கூடும் என்றாலும், "பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது"என்று ஜியாங் கூறினார். நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள இப்பகுதி, எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. உறைபனிக்குக் கீழே வெப்பநிலை உள்ள இப்பகுதியில், சீன விமானப்படை மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது மற்றும் ஆளில்லா விமானங்களையும் அனுப்பியுள்ளது. அப்பகுதியில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இரண்டும் துண்டிக்கப்பட்டுள்ளன. நேபாளத்தில் அதிர்வு இதற்கிடையில், நேபாள தலைநகர் காத்மாண்டுவில் செவ்வாய்க்கிழமை காலை நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாக ஏஃப்பி செய்தி முகமையின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார். நிலநடுக்க அதிர்வுக்கு பிறகு ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்புகளை நேபாள அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக ஏஃப்பி தெரிவித்துள்ளது. "அதிர்வு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது, இங்குள்ள அனைவரும் கண்விழித்துகொண்டனர். இதுவரை சேதமும் ஏற்பட்டதாக எந்த தகவலுக்கு எங்களுக்கு வரவில்லை" என்று எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகிலுள்ள நாம்சே பகுதியின் அரசு அதிகாரி ஜகத் பிரசாத் ஏஃப்பியிடம் தெரிவித்தார். ''ஒரு வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை'' என்கிறார் நேபாளத்தின் சொலுகும்பு மாவட்ட உதவி தலைமை மாவட்ட அதிகாரி ரூபேஷ் விஸ்வகர்மா. " பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது போல் உணர்ந்தேன். நான் வெளியே வந்து பார்த்தேன், இங்கு எந்த சேதமும் இல்லை. லோபுச்சேவை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று விஸ்வகர்மா பிபிசி நேபாள சேவையிடம் தொலைப்பேசியில் தெரிவித்தார். தேசிய நிலநடுக்க அளவீடு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் செய்தித் தொடர்பாளர் மனிகா ஜா பிபிசியிடம், "இந்த நிலநடுக்கத்தின் மையம் நேபாளம் அல்ல, சீனாதான். ஆனால் அதன் தாக்கம் நேபாளத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது." என்றார். இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியானது, இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகள் மோதும் புவியியல் பிழைக் கோடுக்கு அருகே அமைந்துள்ளது. இதனால் அப்பகுதி அடிக்கடி நில அதிர்வுகளுக்கு உள்ளாகிறது. 2015ம் ஆண்டில், நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு அருகே 7.8 ரிக்டர் அளவில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இந்த துயர நிகழ்வில் கிட்டத்தட்ட 9,000 மக்கள் இறந்தனர் மற்றும் 20,000 க்கும் அதிகமான மக்கள் காயமடைந்தனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cj90mv1399yo
  17. நீதித்துறை கட்டமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பாகும் - ஜனாதிபதி Published By: DIGITAL DESK 7 07 JAN, 2025 | 08:47 AM நீதித்துறை கட்டமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பாகும். அரசியல் அதிகாரத்தின் மீதான மக்களின் அபிப்பிராயங்களை மாற்றி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகள் வீழ்ச்சியடைய ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுவதாக ஒருசில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. மேலும் கடந்த முதலாம் திகதி ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெற்ற க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்ட ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய ஜனாபதிபதி அநுரகுமார திசாநாயக்க சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் குறித்து விசேடமாக சுட்டிக்காட்டியிருந்தார். 'அரசியல் கட்டமைப்பு மற்றும் முழு சமூகத்திற்குள்ளும் ஊழல் மோசடி வீண் விரயம் என்பன பரவியுள்ளன. எமது முழு நாட்டுக்குள்ளும் புற்றுநோயினைப் போல பரவியுள்ளது. ஊழல் மோசடியை நிறுத்த நாம் பாரிய முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது. அதற்குள் எமது நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பெரும் பணி உள்ளது. அதற்கான பணியை ஆற்றுவதற்கு தேவையான ஒத்துழைப்பை சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கும் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். இந்த பின்னணியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை (06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மக்கள் மத்தியில் கடும் சர்ச்சையையும், எதிர்ப்பையும் ஏற்படுத்திய வழக்குகள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றத்தன்மை குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. சட்டத்தை அமுல்படுத்துவதற்காக செயற்படும் அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். நீதித்துறை கட்டமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பாகும் எனவும் அரசியல் அதிகாரத்தின் மீதான மக்களின் அபிப்பிராயங்களை மாற்றி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனவும் மக்களின் எதிர்பார்ப்புகள் வீழ்ச்சியடைய ஒருபோதும் இடமளிக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு தெரிவித்தார். அவ்வாறு மக்களின் எதிர்பார்ப்புகளை வீழ்ச்சியடையச் செய்யும் வகையில் அரசாங்கம் செயற்படாது என்றும் சட்டத்தை நிலைநாட்டுவது தொடர்பில் மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதோடு அதனை மீளமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/203172
  18. இந்தியாவின் தொடர் தோல்விகளுக்கு கம்பீரின் தவறான முடிவுகளே காரணமா? விஸ்வரூபம் எடுக்கும் கேள்விகள் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர்,மனோஜ் சதுர்வேதி பதவி,மூத்த விளையாட்டு பத்திரிகையாளர், பிபிசி இந்தி 6 ஜனவரி 2025 இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் தொடரை இழந்ததை தொடர்ந்து, அணியில் மாற்றம் தேவை என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது. அதோடு, அணியின் தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மீதும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் பல வெற்றிகளை குவித்த இந்திய அணி, திடீரென துவண்டு போய் காணப்படுகிறது. கம்பீர் பயிற்சியாளராக பதவியேற்ற பிறகு வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. ஆனால் அதன் பிறகு, நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் முதல் முறையாக இந்திய அணி `ஒயிட் வாஷ்' ஆனது. கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழந்த இந்தியா அணி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை எதிர்கொண்டது. மூன்றே நாளில் இந்தியா சரண் - 5 மாதங்களில் அணியில் மாற்றம் வரும் என்ற கம்பீர் பேட்டி 'புஷ்பா' ஸ்டைல் ஆரவாரம்: ஆட்டத்தையே மாற்றிய நிதிஷ்குமார் முறியடித்த 122 ஆண்டு சாதனை என்ன? பாக்ஸிங் டே டெஸ்ட்: ஜெய்ஸ்வாலை கோலி அவுட் ஆக்கினாரா? இன்று என்ன நடந்தது? பும்ரா சாதனை: கடிவாளத்தை நழுவ விட்ட ரோஹித் - ஆடுகளம் நாளை எப்படி இருக்கும்? 100 ஆண்டு வரலாறு மாறுமா? பும்ராவை திணற வைத்த கான்ஸ்டாஸ், டாப் ஆர்டரில் 4 அரைசதம் - இந்திய அணிக்கு சிக்கலா? கம்பீரின் தவறான முடிவுகளே காரணமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது இந்தியா இந்த டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கியது என்பதே உண்மை. ஆனால் இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்திலிருந்து இந்திய அணியின் பேட்டிங்கின் பலவீனம் வெளிப்படத் தொடங்கியது. மூன்றாவது டெஸ்டில் இந்தியா பலவீனமான பேட்டிங் காரணமாக தோல்வியடைந்தது. இந்நிலையில் நான்காவது டெஸ்டில் பேட்டிங்கை வலுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு அணியில் இடம் கொடுப்பதற்காக சுப்மன் கில் வெளியேற்றப்பட்டது இந்திய அணியின் பேட்டிங்கை மேலும் பலவீனப்படுத்தியது. சிட்னி டெஸ்டில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் இடம்பெறச் செய்தது தவறான முடிவு. இரண்டாவது சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சுடன் பேட்டிங்கும் வலுப்பெறும் வகையில் ஆல்ரவுண்டராக கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த டெஸ்ட் போட்டி முழுவதும் அவர் ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசினார். பேட்டிங்கிலும் அவரால் சிறப்பாக எதுவும் செய்ய முடியவில்லை. ஆகாஷ்தீப் அல்லது ஹர்ஷித் ராணா போன்ற மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் சிட்னியில் விளையாடி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும், இந்திய அணிக்கு சாதகமான முடிவுகள் கிடைத்திருக்கலாம். மூன்றே நாளில் இந்தியா சரண் - 5 மாதங்களில் அணியில் மாற்றம் வரும் என்ற கம்பீர் பேட்டியால் புதிய யூகம்5 ஜனவரி 2025 சச்சினால் ஒரே நாளில் பிரபலமான 10 வயது சிறுமி - ஜாகீர் கான் போன்று பந்துவீசும் இவர் யார்?31 டிசம்பர் 2024 கம்பீர், உதவியாளர்கள் மீது கவாஸ்கர் விமர்சனம் பட மூலாதாரம்,IZHAR KHAN/GETTY IMAGES படக்குறிப்பு,சுனில் கவாஸ்கர் பயிற்சியாளரின் விருப்பத்திற்கேற்பவே உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போதைய உதவியாளர்களின் நியமனமும் அப்படி தான் நடந்துள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் கவாஸ்கர் பேசுகையில், உதவியாளர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்க வேண்டும்' என்று கூறினார். பேட்டிங்கில் ஏன் முன்னேற்றம் இல்லை என்றும் கேள்வி எழுப்பினார். "நம்முடைய பேட்ஸ்மேன்களால் சிறப்பான பந்துவீச்சை எதிர்க்கொள்ள முடியாது என்பது கூடபரவாயில்லை. சில சமயம் பெரிய பேட்ஸ்மேன்களுக்கு கூட சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்வதில் சிக்கல்கள் இருக்கும். ஆனால் சாதாரண பந்துகளை கூட அவர்களால் எதிர்கொள்ள முடியாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது" என்று கவாஸ்கர் குறிப்பிட்டார். ஜூன்-ஜூலையில் இங்கிலாந்துக்கு எதிராக அடுத்த டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அந்த நேரத்தில் இந்த உதவியாளர்களை தக்க வைப்பதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றார் கவாஸ்கர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அடுத்த சுழற்சி இங்கிலாந்துக்கு எதிரான தொடருடன் தொடங்கும் என்றும், இந்த சுழற்சியின் இறுதிப் போட்டி ஜூன் 2027 இல் நடைபெறும் போது, அணியின் மூத்த வீரர்கள் யார் என்பதை மனதில் வைத்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தற்போதைய சூழலை மனதில் வைத்து இளம் வீரர்கள் மீது கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றார் கவாஸ்கர். டெஸ்ட் தொடர்களுக்கான சுற்றுப்பயணங்களின் போது பயிற்சி போட்டிகளை நடத்துவது தேவை என்று கவாஸ்கர் கருதுகிறார். சில காலமாக பயிற்சி ஆட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. "சிறப்பாக விளையாடும் வீரர்கள் பயிற்சி போட்டிகளில் விளையாட விரும்பாமல் இருக்கலாம். ஆனால் ப்ளேயிங் லெவனில் இல்லாத வீரர்களை தயார்படுத்த இந்த போட்டிகள் மிகவும் முக்கியம். அந்த வீரர்கள் தேவைப்படும் நேரத்திற்கு ஏற்றவாறு தயாராக முடியும்." என்றார் கவாஸ்கர். 60 ஆண்டு பழமையான விருத்தாசலம் பீங்கான் தொழிற்பேட்டை மற்றும் கல்லூரி - தற்போதைய நிலை என்ன?6 ஜனவரி 2025 தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக கூறி சட்டப்பேரவையை விட்டு வெளியேறிய ஆளுநர்: என்ன நடந்தது?6 ஜனவரி 2025 கம்பீர் பயிற்சியின் கீழ் நடக்கும் அடுத்த டெஸ்ட் தொடரும் கடினமானது பட மூலாதாரம்,LIGHTROCKET VIA GETTY IMAGES படக்குறிப்பு,கௌதம் கம்பீர் வரயிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான கடினமான டெஸ்ட் தொடருடன் கெளதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ஓராண்டு காலத்தை நிறைவு செய்வார். இதுவரை அவரின் பயிற்சியின் கீழ் நடந்த அனைத்து ஆட்டங்களையும் பார்க்கும் போது, டி20யில் மட்டும்தான் இந்திய அணி விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதுதவிர 10 டெஸ்ட்களில் மூன்றில் வெற்றியும், 6 தோல்வியும், ஒன்று டிராவும் ஆகியுள்ளது. மூன்று ஒருநாள் போட்டிகளில் இரண்டில் இந்தியா தோல்வியடைந்தது, ஒன்று டையில் முடிந்துள்ளது. இங்கிலாந்தில் ஒரு தொடரில் விளையாடுவது எளிதல்ல. இங்கிலாந்தில் கம்பீரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்றால், அவர் மீதான விமர்சனம் மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி. 'வெளிப்படையாகப் பேசத் தயக்கம்’ பட மூலாதாரம்,PATRICK HAMILTON/AFP படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஆட்டம் சிறப்பாக இல்லை இந்த தொடரில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இரு சிறந்த இந்திய வீரர்களின் மோசமான ஆட்டம் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ஆனால் போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் அணியில் மாற்றம் வருமா என்பது குறித்து கேட்டபோது, கம்பீர், "இதை விவாதிப்பதற்கான சரியான நேரம் இது இல்லை. இன்னும் ஐந்து மாதங்கள் உள்ளது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு நாம் எந்த நிலையில் இருப்போம் என்பதே கேள்வி? விளையாட்டில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. விளையாட்டின் ஃபார்ம் மாறுகிறது. வீரர்கள் மத்தியில் மாற்றம் ஏற்படுகிறது, அணுகுமுறை மாறுகிறது, எல்லாம் மாறுகிறது." "இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஆனால் எது நடந்தாலும் அது இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காகவே இருக்கும்" என்றார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது அணி தொடர்பாக சில கடினமான முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதை கம்பீரின் இந்த கருத்துகள் சுட்டிக்காட்டுகின்றன. அவர் தனது முடிவுகளை பற்றி இப்போது வெளிப்படையாக கூறவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது. மூன்றே நாளில் முடிவுக்கு வந்த கடைசி டெஸ்ட் - கோலி, ரோஹித் பற்றி கம்பீர் கூறியது என்ன?5 ஜனவரி 2025 கோலி, ரோஹித் மட்டும்தானா? இந்திய அணியின் மோசமான தோல்விக்கு காரணமான 7 முக்கிய விஷயங்கள்5 ஜனவரி 2025 உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட அறிவுறுத்தும் கம்பீர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய அணி வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளதாகவும், அதன் பிறகு சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட உள்ளதாகவும் கம்பீர் கூறினார். இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர். பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, சர்வதேச அளவில் சிறப்பாக விளையாட முடியாத வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்தியா வரையறுக்கப்பட்ட ஓவர்கள் (டி20, ஒருநாள்) கொண்ட தொடர்களில் விளையாட உள்ளதாகவும், அதன் பிறகு சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட உள்ளதாகவும் கம்பீர் கூறினார். இப்போட்டிகளில் பங்கேற்காத வீரர்கள், வரும் ஜனவரி 23-ஆம் தேதி முதல் மீண்டும் துவங்கும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இந்த போட்டிகளில் விளையாடினால் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் செயல்திறனை மேம்படுத்த முடியும். உண்மையில் முன்பு, வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டை விளையாடுவதன் மூலம் தங்கள் ஆட்டத்தின் குறைபாடுகளை மேம்படுத்திக் கொண்டனர். ஆனால் இப்போது வீரர்களின் விளையாட்டில் உள்ள குறைபாடுகள் நீண்ட காலமாக சரி செய்யப்படாமல் உள்ளன. இதற்குக் காரணம், இந்த குறைபாடுகளை மேம்படுத்த எந்த முயற்சியும் செய்யப்படவில்லை. உதாரணமாக, விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அடிக்க முயன்று அவுட் ஆகிறார். இந்த தொடரிலும் பலமுறை இதே முறையில் அவுட்டாகியுள்ளார். ஆனால் அவர் பல ஆண்டுகளாக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடவில்லை. உள்நாட்டு கிரிக்கெட்டை விளையாடுவது, பல்வேறு வகையான ஆடுகளங்களில் விளையாடுவதற்கு வீரர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது. (இந்த கட்டுரையில் இடம் பெற்ற கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளே.) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cvg6dg54d42o
  19. சென்னை பெங்களூரு குஜராத்தில் ஒரே நாளில் 5 குழந்தைகளுக்கு ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு: நிபுணர்கள் சொல்வது என்ன? 07 JAN, 2025 | 10:44 AM பெங்களூருஃசென்னை: தமிழ்நாடு கர்நாடகா குஜராத் உட்பட நாட்டில் ஒரே நாளில் 5 குழந்தைகளுக்கு ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது சாதாரண வைரஸ்தான் அச்சப்படத் தேவையில்லை என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்தது. கொரோன வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 3 ஆண்டுகளாக உலகம் மெல்ல மீண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனாவில் ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் (HMPV) என்று அழைக்கப்படும் குழந்தைகளை தாக்கக்கூடிய புதிய தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் முதல்முறையாக கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் 2 ஹெச்எம்பிவி (HMPV) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பெங்களூருவில் உள்ள பேப்டிஸ்ட் மருத்துவமனையில் டிசம்பர் கடைசி வாரத்தில் அனுமதிக்கப்பட்ட 3 மாத பெண் குழந்தைக்கு முதலில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டது. மூச்சுக்குழாய் நிமோனியா தொற்றாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் ஹெச்எம்பிவி தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 3-ம் தேதி சளி காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட 8 மாத ஆண் குழந்தைக்கு இதே வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுஇ உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலில் கண்டறியப்பட்ட குழந்தை குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டு கண்காணிக்கப்படுவதாக கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில் ‘‘ஹெச்எம்பிவி வைரஸ் பரவல் குறித்து பீதியடைய தேவையில்லை. அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை நலமோடு வீடு திரும்பியுள்ளது. மற்றொரு குழந்தையும் ஓரிரு நாட்களில் வீடு திரும்பும். இந்த வைரஸ் புதிதாக கண்டறியப்பட்ட ஒன்று அல்ல. 2001-ம் ஆண்டு நெதர்லாந்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. கர்நாடக சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்திய சுகாதாரத் துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொற்று பரவலை தடுக்க பொது இடங்களில் அனைவரும் முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும்'' என்றார். இதற்கிடையே மூன்றாவது பாதிப்பாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 மாத குழந்தைக்கு இதே வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24-ம் தேதி சளி காய்ச்சல் இருமல் காரணமாக அனுமதிக்கப்பட்ட இந்த குழந்தைக்கு ஜனவரி 5-ம் தேதி ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த 3 குழந்தைகளும் அவர்களின் பெற்றோரும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. எப்படி பரவுகிறது? - மத்திய சுகாதாரத்துறை விடுத்த செய்திக் குறிப்பில் ‘‘இருமல் காய்ச்சல்இமூக்கடைப்பு தொண்டை வலி சோர்வு மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகளாகும். இருமல் தும்மல் ஆகியவற்றின் மூலம் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது. சிறு குழந்தைகள் பெரியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். வைரஸ் பரவியுள்ள இடங்களை தொட்டுவிட்டு பிறகு அப்படியே வாய் மூக்கு கண்களை தொடும்போது இந்த வைரஸ் உடலில் பரவுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஹெச்எம்பிவி வைரஸால் தற்போது சென்னையில் ஒருவரும் சேலத்தில் ஒருவரும் என 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை செயலர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இந்த காலகட்டத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவது வழக்கமான ஒன்று ஆகும். இதைவிட இன்ஃப்ளூயன்சா பாதிப்பு ஏற்பட்டால்தான் கூடுதல் கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். அதனால் சென்னையில் குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த வைரஸ் புதிதாக வந்தது இல்லை. இதை பெரிதுபடுத்தி கூறுவதும் அச்சுறுத்துவதும் தவறான செயல் ஆகும். பெரும்பாலான குழந்தைகளுக்கு எச்எம்பிவி வைரஸ் பரவினாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனாலும்இ விழிப்புணர்வு நடவடிக்கையாக முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகள்இ முதியவர்கள்இ இணை நோயாளிகள்இ எதிர்ப்பாற்றல் குறைப்பு சிகிச்சையில் இருப்பவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்ளலாம். சமூக இடைவெளியை கடைபிடிக்கலாம். இதன்மூலம் வைரஸ் தொற்றுகள் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள முடியும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். சாதாரண வைரஸ்தான்: தமிழக சுகாதாரத் துறை கூறியதாவது: ஹெச்எம்பிவி வைரஸ் என்பது பல ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள சாதாரண வைரஸ் தொற்றுதான். ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு வேண்டுமானால் நுரையீரலில் அது தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதுவும் உரிய சிகிச்சை பெற்றால் குணமடைந்துவிடலாம். பெரியவர்களுக்கோஇ வளரிளம் பருவத்தினருக்கோ அது அச்சுறுத்தக் கூடிய பாதிப்பாக இருப்பதில்லை. இன்ஃப்ளூயன்சாஇ ஆர்எஸ்வி சுவாச தொற்றுகளை காட்டிலும் பலவீனமான நோயாகவே ஹெச்எம்பிவி உள்ளது. https://www.virakesari.lk/article/203191
  20. புதிய இராணுவத் தளபதி லசந்த ரொட்ரிகோ ஶ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் Published By: DIGITAL DESK 2 06 JAN, 2025 | 05:28 PM இலங்கையின் 25 வது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பதவி ஏற்பின் பின் கண்டி ஶ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார். இந்த விஜயம் இன்று திங்கட்கிழமை (06) இடம்பெற்றது. தலதா மாளிகையின் தியவடன நிலதே பிரதீப் நிலங்க தேல அவரை வரவேற்றார். அதேநேரம் ஶ்ரீ தலதா மாளிகைக்கு வழிபாட்டிற்காக வருகை தந்திருந்த வௌிநாட்டு யுவதி ஒருவர் இராணுவத் தளபதி சல்யூட் அடித்து மரியாதை தெரிவித்து அங்கு குழுமி இருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. https://www.virakesari.lk/article/203149
  21. பட மூலாதாரம்,SOCIAL MEDIA கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் அவ்வப்போது எழும் பிரச்னைகள் குறித்து போராட்டங்கள் நடத்தவோ, ஆர்ப்பாட்டங்கள் நடத்தவோ சமீப காலமாக அனுமதி கொடுக்கப்படுவதில்லை என பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் குற்றம் சாட்டுகின்றன. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் ஆளும் தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளே இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்துவதுதான் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. என்ன நடக்கிறது? போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பு தமிழ்நாட்டில் கடந்த நான்கைந்து மாதங்களாகவே, அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து போராட அனுமதி கோரினால் அவை கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதாக கட்சிகளும், இயக்கங்களும் குற்றம்சாட்டியுள்ளன. குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவத்தில் பல கட்சிகளுக்கும் இதுபோல அனுமதி மறுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியினர் சீமான் தலைமையில் டிசம்பர் 31ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய போது, அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியினரையும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் காவல்துறை கைதுசெய்தது. பத்திரிகையாளர்களிடம் கூட பேசவிடாமல் காவல்துறை கைது செய்து அழைத்துச் செல்வதாக சீமான் குற்றம்சாட்டியிருந்தார். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வந்த ஓரிரு நிமிடங்களில் வெளியேறிய ஆளுநர் ரவி - என்ன நடந்தது? அண்ணா பல்கலை. மாணவி வழக்கு - சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை பற்றி டிஜிபி அறிக்கை அண்ணா பல்கலை. விவகாரம்: கையில் சிலம்புடன் போராட்டத்தில் ஈடுபட்ட குஷ்பூ - என்ன பேசினார்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: நடந்தது என்ன? 9 கேள்விகளும் பதில்களும் - முழு விவரம் ஜனவரி 2ஆம் தேதியன்று இதே பிரச்னைக்காக பா.ம.க மகளிரணி சார்பில் சௌமியா அன்புமணியின் தலைமையில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பெரும் எண்ணிக்கையில் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். போராட்டத்திற்கு வந்த சௌமியா அன்புமணி உடனடியாக கைது செய்யப்பட்டார். பத்திரிகையாளர்களை சந்திக்க விடாமல் கைதுசெய்வதாக அவரும் குற்றம்சாட்டினார். இதேபோல, மதுரையில் பா.ஜ.க சார்பில் நீதி கேட்புப் பேரணி நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். குஷ்பு உள்பட அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இதே விவகாரத்திற்காக அ.தி.மு.கவின் மாணவரணிச் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் போராட்டம் ஜனவரி ஆறாம் தேதி நடைபெற இருந்தது. அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. ஜோதிடர் 'உதவியால்' பெரும் கோடீஸ்வரரான டால்மியா, நேரு மருமகனால் சிறைக்குச் சென்றது எப்படி?6 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் பனிப்புயல்: 30 மாகாணங்களில் கடுங்குளிர், 7 மாகாணங்களில் அவசர நிலை - 1,500 விமானங்கள் ரத்து3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு,அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தி போராட்டம் நடத்தினர் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் மட்டுமல்ல, வேறு சில பிரச்னைகள் குறித்து ஆர்ப்பாட்டம் நடத்த விரும்பியவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, அதானி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட விவகாரமும் பெரிதாக வெடித்தது. இதுகுறித்து வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஜனவரி 5 ஆம் தேதி நடத்த அறப்போர் இயக்கத்தின் சார்பில் காவல்துறையிடம் டிசம்பர் 10ஆம் தேதியே அனுமதி கோரப்பட்டதாகவும் ஆனால், ஜனவரி 3ஆம் தேதி இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியது. இதனால், தனது அலுவலகத்திலேயே அந்த இயக்கம் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. கடந்த டிசம்பர் 17ஆம் தேதி போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தத் தவறியதாக ஆற்காட்டில் பேருந்து நிலையம் அருகில் பா.ம.க. ஆர்ப்பாட்டம் ஒன்றை அறிவித்தது. அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து டிசம்பர் 13ஆம் தேதி போராட்டம் நடத்த நாம் தமிழர் கட்சியின் சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், அதற்கு மதுரை மாவட்டக் காவல்துறை அனுமதி மறுத்தது. அதேபோல, சாம்சங் ஊழியர்கள் பிரச்னையின் போது, போராடிய ஊழியர்களுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி போராட்டம் நடத்த சிஐடியூஉள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அனுமதி கோரின. அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை அப்போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டித்தது. மரணத்தை வென்ற முதியவர்: நின்று போன இதயம் ஆம்புலன்ஸ் வேகத்தடையில் ஏறி, இறங்கியதும் மீண்டும் துடித்தது எப்படி?8 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரசுக்கு இந்தியாவிலும் 2 பேர் பாதிப்பு - எவ்வாறு பரவும்? எப்படி தடுப்பது?49 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@TNCPIM படக்குறிப்பு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டும் முரசொலி விமர்சனமும் இந்தப் பின்னணியில்தான், விழுப்புரத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சியின் அப்போதைய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்," தமிழகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டத்திற்கு நடத்த அனுமதி தர மறுப்பது ஏன்? நான் முதல்வர் ஸ்டாலினை பார்த்து கேட்கிறேன்... தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர பிரகடனம் செய்துவீட்டீர்களா? இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும். சீப்பை மறைத்து வைத்துவிட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்று நினைக்க வேண்டாம்." என்று தி.மு.க அரசை விமர்சித்திருந்தார். இது கூட்டணிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தும் அளவுக்குச் சென்றது. அடுத்த நாளே இது தொடர்பாக, முரசொலியில் கே. பாலகிருஷ்ணனைத் தாக்கி கடுமையான கட்டுரை ஒன்று வெளியானது. "'தமிழகத்தில் அவசர நிலைப் பிரகடனமா?' என்று கே.பாலகிருஷ்ணன் பேசிய பேச்சுக்கு 'தினமலர்' கொடுத்த முக்கியத்துவத்தைப் பார்க்கும் போதே, தி.மு.க. ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்துக்கு தீனி போடத் தொடங்கிஇருக்கிறார் கே.பி. என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று அந்தக் கட்டுரை குற்றம் சாட்டியது. மேலும், "சென்னையில் ஒரு மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி, 'தமிழ்நாட்டில் மாணவிகளுக்குப் பாதுகாப்பே இல்லை' என்று 'ட்ரெண்ட்' உருவாக்கத் துடிக்கிறார்கள் சிலர். அதற்காகப் போராட்டம் என்ற பெயரால் குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். அவர்களுக்கும் சேர்த்து எதற்காக வக்கீலாக மாறுகிறார் பாலகிருஷ்ணன்? அப்படிக் காட்ட வேண்டியஅவசியம் என்ன வந்தது?" என்றும் முரசொலி கேள்வி எழுப்பியது. அதானி விவகாரத்தில் போராட அனுமதிப்பதில் என்ன பிரச்னை? இப்படி கூட்டணிக் கட்சிகளுக்கே போராட அனுமதி மறுப்பது அரசியல் தலைமைக்குத் தெரிந்துதான் நடக்கிறதா எனக் கேள்வியெழுப்புகிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர். மணி. "இது துரதிர்ஷ்டவசமானது. எடப்பாடி ஆட்சிக் காலத்தில் பல போராட்டங்கள் நடந்தன. ஆனால், இப்போது எல்லாப் போராட்டங்களுக்கும் அனுமதி மறுக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அனுமதி மறுக்கிறார்கள் என்றால், அந்த விவகாரம் அரசுக்கு நெருக்கடியாக மாறும் என்பதால் மறுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அதானி விவகாரத்தில் யாராவது போராட விரும்பினால் அதை அனுமதிப்பதில் என்ன பிரச்னை? இது மிகப் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. அதன் அரசியல் விலை என்ன என்பது தி.மு.கவுக்கு புரிந்திருக்கிறதா என்றே தெரியவில்லை" என்கிறார் மணி. சமீபத்தில் விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடந்தபோது, அக்கட்சி பேரணி ஒன்றை நடத்த அனுமதி கோரியது. ஆனால், விழுப்புரம் மாவட்ட காவல்துறை அதற்கு அனுமதி மறுத்தது. "இப்படி ஒரு கூட்டணிக் கட்சி தனது மாநில மாநாட்டை ஒட்டி நடத்தும் பேரணிக்கே அனுமதி மறுப்பது என்றால், அதனை வெறும் காவல்துறை தலைமை மட்டுமே முடிவெடுக்காது. அரசியல் தலைமைதான் முடிவெடுத்திருக்கும். அம்மாதிரி சூழலில் கே. பாலகிருஷ்ணனின் கேள்வி நியாயமானதுதானே? அப்படி அரசுத் தலைமை முடிவெடுக்காமல் காவல்துறைதான் முடிவெடுத்தது என்றால் அது மிக மிக மோசமான விஷயம். அப்படி நடப்பது இந்த அரசுக்கே பாதகமாக முடியும்" என்கிறார் மணி. நிலத்தடி நீரில் அதிக நைட்ரேட்- இந்தியாவில் தமிழ்நாடு 3-ஆம் இடம்; மக்களுக்கு என்ன பாதிப்பு?2 மணி நேரங்களுக்கு முன்னர் மத்ஸயா 6000: பெருங்கடலில் 6000 மீட்டர் ஆழத்திற்கு செல்லப் போகும் இந்திய விஞ்ஞானிகள்5 ஜனவரி 2025 பட மூலாதாரம்,@JAYARAMARAPPOR படக்குறிப்பு,அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் "ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது" இப்படி போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளையே மறுப்பதாகும் என்கிறார் அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன். "அரசமைப்புச் சட்டத்தின் 19வது பிரிவின்படி கூடுவது, பேசுவது என்பதெல்லாம் அடிப்படை உரிமை. எங்களுடைய போராட்டத்திற்கு அதிக கூட்டம் வரலாம்; அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சட்டம் - ஒழுங்கும் பாதிக்கப்படலாம் என அனுமதி மறுத்தார்கள். சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கக்கூடாது என ஏற்கனவே நீதிமன்றம் கூறியிருக்கிறது. இருந்தும் இப்படிச் செய்கிறார்கள். எங்களுக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால், நீதிமன்றத்திற்கும் செல்ல முடியவில்லை. இதுபோல ஜனநாயக உரிமைகளை மறுக்கப்படுவதை அனைவரும் கண்டிக்க வேண்டும்" என்கிறார் அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன். ஒரு குறிப்பிட்ட உணவை சாப்பிட்டே தீர வேண்டும் என்ற எண்ணத்தை கட்டுப்படுத்துவது எப்படி?4 ஜனவரி 2025 தமிழ்நாட்டில் இரண்டு மடங்கு அதிகரித்த ரேபிஸ் நோய் மரணங்கள் - என்ன காரணம்?3 ஜனவரி 2025 படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் திமுக விளக்கமும் எதிர் கேள்வியும் ஆனால், இந்தக் கூற்றுகளை எல்லாம் மறுக்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டைன்டீன். "நாம் ஒரு போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த வேண்டும் என்றால் குறைந்தது 7 நாட்களுக்கு முன்பாக அனுமதி கோர வேண்டும். நடத்தவிருக்கும் இடம், எவ்வளவு பேர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் என்பது போன்ற எல்லாத் தகவல்களையும் தர வேண்டும். ஆனால், அரசியலைப் பொருத்தவரை, ஒரு விஷயம் வெளியாகும்போது போராட்டம் நடத்த ஏழு நாட்கள் காத்திருக்க முடியாது. இது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும். தி.மு.கவும் அடுத்த நாளே போராட்டம் நடத்த விரும்பும். கடந்த ஆட்சியில் எங்களுக்கும் அனுமதி தரவில்லை. கொடுக்கவும் முடியாது. நாங்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவோம், கைதுசெய்து விடுவிப்பார்கள். இது வழக்கமான நடைமுறைதானே" என்கிறார் அவர். ஆனால், "நாளை ஆளுநரைக் கண்டித்து தி.மு.க. போராட்டம் நடத்தப் போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது. போராட்டம் நடத்துவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும் என காவல் துறை சொல்கிறது. ஆனால், நாளை போராட்டத்தை இன்று எப்படி தி.மு.க. அறிவிக்கிறது?" எனக் கேள்வி எழுப்புகிறார் ஜெயராமன். கூட்டணிக் கட்சியின் போராட்டங்களுக்கே அனுமதி தரவில்லையென்றால் எதிர்க்கட்சிகளின் நிலை என்ன எனக் கேள்வி எழுப்புகிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். கன்னரதேவன்: போரில் சோழ இளவரசனை வீழ்த்திய ராஷ்டிரகூட மன்னர் - கல்வெட்டு தரும் சுவாரஸ்ய தகவல்கள்2 ஜனவரி 2025 க்ரிம்ஸி: கோடிக்கணக்கான பறவைகளோடு 20 மனிதர்கள் மட்டுமே வாழும் ஆர்டிக் தீவு2 ஜனவரி 2025 படக்குறிப்பு,தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் "பொள்ளாச்சி விவகாரத்தில் தி.மு.க. எவ்வளவு போராட்டங்களை நடத்தியது. இப்படி போராட்டங்களை ஒடுக்கினால் அது நெருக்கடியாகத்தான் முடியும். கூட்டணிக் கட்சியே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்த ஆரம்பித்திருக்கிறது என்றால், எதிர்க்கட்சிகளின் நிலை என்ன? போராட்டங்களை எதிர்கொள்ள தயாரில்லை என்றால் ஆட்சியிலேயே இருக்க முடியாது. இதையெல்லாம்விட மோசம், தொல்லியல் துறை நடத்தும் நிகழ்ச்சியில் கறுப்பு உடை அணிந்து வரக்கூடாது என்பது. இதையெல்லாம் யார் முடிவெடுக்கிறார்கள், என்றே தெரியவில்லை" என்கிறார் குபேந்திரன். ஆனால், தி.மு.க. ஆளும் கட்சியாக இருக்கும் போதே, தங்கள் கட்சியின் இளைஞரணி மாநாட்டையே பல முறை இடமாற்றம் செய்ய வேண்டியிருந்தது என்கிறார் கான்ஸ்டைன்டீன். "நாங்கள் இளைஞரணி மாநாட்டிற்கு முதலில் சங்ககிரியில் ஒரு இடத்தைத் தேர்வுசெய்தோம். அதனை காவல் துறை ஏற்கவில்லை. பிறகு நகரத்திற்குள் ஒரு இடத்தைச் சொன்னோம். அதற்கும் அனுமதி தரவில்லை. பிறகு அயோத்தியாபட்டணம் தாண்டி ஒரு இடத்தைத் தேர்வுசெய்தோம். பிறகுதான் அனுமதி அளித்தார்கள். ஆகவே, காவல்துறை ஆளுங்கட்சிக்கே அனுமதி மறுத்தது எனச் சொல்ல முடியுமா? எல்லாவற்றையும் பார்த்துத்தான் அனுமதி அளிப்பார்கள். புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் இதைப் பேசினால் புரிந்துகொள்ள முடியும். பல காலம் அரசியல் கட்சியில் செயல்பட்டவர்கள் இப்படியெல்லாம் குற்றம்சாட்டுவது விந்தையாக இருக்கிறது" என்கிறார் கான்ஸ்டைன்டீன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cj0r544j2dqo
  22. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பனிப்புயல் காரணமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ், 46 விமான நிலையங்களுக்கு பயண எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது அமெரிக்கா, கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு கடுமையான பனிப்புயலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. 2011ஆம் ஆண்டுக்கு பிறகு, மிக மோசமான பனிப்பொழிவு மற்றும் குளிரான வெப்பநிலை நிலவக்கூடும் என்பதால், அமெரிக்காவின் 30 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கென்டக்கி, விர்ஜீனியா, கான்சஸ், ஆர்கன்சா மற்றும் மிசோரி உள்ளிட்ட 7 மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் நிலைமைகள் ஏற்கனவே மோசமடைந்துள்ளன, பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக சில விபத்துக்களும் நிகழ்ந்துள்ளன. மிசிசிப்பி மற்றும் புளோரிடா போன்ற கடுமையான குளிரை இதுவரை எதிர்கொள்ளாத அமெரிக்காவின் சில பகுதிகளில் கூட, வானிலை மோசமாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் கிழக்கு நோக்கி நகரும் போது, இன்னும் மிகக்குறைந்த வெப்பநிலையை அமெரிக்கர்கள் எதிர்கொள்வார்கள் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்தனர். ஆர்க்டிக் பகுதியைச் சுற்றி வரும் குளிர்ந்த காற்றின் ஒரு பகுதியான துருவச் சுழல் (Polar Vertex) காரணமாக இந்த தீவிர வானிலை ஏற்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வாஷிங்டன் டி.சி-இல் 5 முதல் 9 அங்குலம் வரையிலான பனிப்பொழிவு உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் பெற்ற வெற்றிக்கு சான்றளிக்க அமெரிக்க நாடாளுமன்றம், திங்கள்கிழமை (ஜனவரி 6) பிற்பகலில் கூடவுள்ளது. ஆனால் மோசமான வானிலை காரணமாக சில உறுப்பினர்கள், தங்கள் தொகுதிகளிலிருந்து தலைநகருக்கு பயணிப்பதில் சிக்கல் இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ், அண்டை நாடுகள் கவலை - இந்தியா கூறுவது என்ன?45 நிமிடங்களுக்கு முன்னர் அதிபர் பதவியின் கடைசி கட்டத்தில் இஸ்ரேலுக்கு 8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்க பைடன் முடிவு5 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கென்டக்கி, விர்ஜீனியா, கான்சஸ், ஆர்கன்சா மற்றும் மிசோரி ஆகிய மாநிலங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது கிழக்கு நோக்கி நகரும் புயல் அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் தொடங்கிய இந்த புயல் அடுத்த ஓரிரு நாட்களில் கிழக்கு நோக்கி நகரும் என்று தேசிய வானிலை சேவை (NWS) தெரிவித்துள்ளது. 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு, மிகவும் குளிரான ஒரு ஜனவரி மாதத்தை அமெரிக்கா எதிர்கொள்ள இது வழிவகுக்கும் என்று 'அக்யூவெதர்' முன்னறிவிப்பாளர் டான் டிபோட்வின் கூறினார். "மிகவும் குறைவான வெப்பநிலை, ஒரு வாரத்திற்கு நீடிக்கக்கூடும்" என்று அவர் கூறினார். இந்த பனிப்புயலுக்கு காரணமான துருவச் சுழல் (Polar Vertex), பொதுவாக வட துருவத்தைச் சுற்றியே இருக்கும். ஆனால் அது நகர்ந்து விரிவடையவும் கூடும். அவ்வாறு நகர்வதால், தெற்கு பகுதிகளில் வழக்கத்தை விட மிகக் குறைவான வெப்பநிலை நிலவும். சனிக்கிழமை (ஜனவரி 4) மாலை பனிப்புயல் தாக்கத் தொடங்குவதற்கு முன்பாகவே, சமீப நாட்களாக துருவ சுழல் அமெரிக்காவில் விரிவடைந்து வந்தது. இது வரும் நாட்களில் கிழக்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் மோசமான பனிப்பொழிவு மற்றும் பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலை நிலவக்கூடும். கடுமையான பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் பயணிப்பதை முடிந்தளவு தவிர்க்குமாறும், அமெரிக்காவின் வழக்கமான திங்கட்கிழமை காலை போல இருக்காது என்றும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு ஜனவரியில், சராசரி வெப்பநிலை -1 செல்ஸியஸாக இருந்தது. அந்த ஆண்டிற்குப் பிறகு இந்த வருடம்தான், மிகவும் குளிரான ஒரு ஜனவரி மாதத்தை அமெரிக்கா எதிர்கொள்ளவிருக்கிறது. 2011-ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் பல பனிப்புயல்கள் வடகிழக்கு அமெரிக்காவைத் தாக்கின, இதனால் நியூயார்க் நகரம் போன்ற பகுதிகளில் வரலாறு காணாத பனிப்பொழிவு இருந்தது. அமெரிக்க அதிபராக தயாராகும் டிரம்புக்கு ஆபாசப் பட நடிகை வழக்கில் என்ன தண்டனை? நீதிமன்றம் புதிய அறிவிப்பு4 ஜனவரி 2025 தென் கொரியா: பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபரை ஏன் கைது செய்ய முடியவில்லை - தடுப்பது யார்?5 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் தொடங்கிய இந்த புயல் அடுத்த ஓரிரு நாட்களில் கிழக்கு நோக்கி நகரும் 1,500 விமானங்கள் ரத்து பனிப்புயல் காரணமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ், 46 விமான நிலையங்களுக்கு பயண எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. கான்சஸ் மற்றும் மிசௌரி முதல் பென்சில்வேனியா மற்றும் நியூ ஜெர்சி வரை பல மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிக்கெட் மாற்றத்திற்கான நிபந்தனைகளின் முழு பட்டியலையும் விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது. கண்காணிப்பு வலைத்தளமான ஃப்ளைட்அவேர் படி, 2,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன. அமெரிக்காவிற்கு உள்ளே வரக்கூடிய மற்றும் வெளியே செல்லக்கூடிய 1,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கான்சஸ் நகர சர்வதேச விமான நிலையம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, அங்கிருந்து புறப்படக்கூடிய 86% விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gl1ynwj0jo
  23. Published By: DIGITAL DESK 7 06 JAN, 2025 | 07:06 PM (செ.சுபதர்ஷனி) கடந்த வருடம் பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளர்களில் சுமார் 6,700 பேர் விசர்நாய் கடிக்கு ஆளானவர்கள் என அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவரும் அரச வைத்தியர் சங்கத்தின் உதவிச் செயலாளரும் ஊடக குழு உறுப்பினருமான வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிடுகையில், கடந்த வருடம் பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் மாத்திரம் 42,700 நோயாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6,700 பேர் விசர்நாய் கடி நோய்க்கு ஆளாகியவர்கள் என வைத்தியசாலை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அவ்வாறு விசர்நாய் கடி நோய்க்கு ஆளாகிய 6,700 நோயாளர்களில் சுமார் 95 சதவீதமானோர் தாம் வாழும் வீட்டை அண்டிய பகுதிகளில் ஏற்பட்ட விபத்து காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வளர்ப்பு பிராணிகள் மூலம் விசர்நாய் கடி நோய்க்கு ஆளாகுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் ஐவரில் ஒருவர் விசர்நாய் கடி நோயாளராவார். ஆகையால் வளர்ப்பு நாய்கள் மற்றும் உரிமையாளர்கள் இல்லாத வீதியில் நடமாடும் நாய்களுக்கு ஊசி வழங்குவதை உள்ளூராட்சி அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். அத்தோடு வீட்டில் வளர்ப்பு பிராணிகளை வைத்திருப்பவர்கள் அவற்றுக்கு உரிய ஊசிகளை வழங்கி அதற்கான அட்டைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதும் அவசியம் என்றார். https://www.virakesari.lk/article/203159
  24. படக்குறிப்பு,பாண்டுரங் உல்பே கட்டுரை தகவல் எழுதியவர், பிரியங்கா ஜக்தாப் பதவி, பிபிசி மராத்திக்காக ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவரால் அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் போது, திடீரென அந்த நபரின் உடலில் அசைவு தெரிந்து, அந்த நபர் உயிருடன் இருப்பது தெரிய வந்தால் எப்படி இருக்கும்? இந்த அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் நடந்துள்ளது. இருப்பினும், இந்த சம்பவத்தின் தீவிரம் அதிகம். முதியவரின் உறவினர்களால் இது ஒரு அதிசயமான நிகழ்வு என்று கூறப்பட்டாலும், மருத்துவர்களின் அலட்சியமே இதற்கு காரணம் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. கோலாப்பூரில் உள்ள கஸ்பா-பவ்டாவைச் சேர்ந்த ஒரு முதியவர் மரணப் படுக்கையில் இருந்து 'திரும்பி வந்தார்' என்று அப்பகுதி முழுவதும் பேசப்பட்டது. இச்சம்பவத்தை அடுத்து இந்த செய்தி ஊடகங்களிலும் பகிரப்பட்டு வைரலாக பரவி வருகிறது. இறந்து போன முதியவர் மீண்டும் உயிர் பெற்று வந்தது பெரிய அதிசயம் என்று அனைவரும் கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் இது அதிசயமா அல்லது மருத்துவ அலட்சியமா என்பதுதான் கேள்வி. உண்மையில் என்ன நடந்தது? முதியவருக்கு என்ன ஆனது? ரத்தன் டாடாவுக்கு அவரது வீட்டிற்கே சென்று பாரம்பரிய தமிழ் மருத்துவம் செய்த கோவை வைத்தியர் தாவரம் மூலம் சுய மருத்துவம் செய்யும் கொரில்லா- புதிய மருந்து கண்டுபிடிப்புக்கு இந்த குரங்குகள் உதவுமா? சென்னை, மும்பை, டெல்லி மருத்துவமனைகளில் பெண் மருத்துவருக்கு பாதுகாப்பு எப்படி? பிபிசி கள ஆய்வு 'முதியவர் இறந்து கொண்டிருக்கிறார்' பாண்டுரங் உல்பேவின் பேரன் ஓம்கார் ரமணே இந்த விவகாரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார். டிசம்பர் 16-ஆம் தேதி மாலை பாண்டுரங் உல்பேக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதனால், மாலை 6:30 மணியளவில் அவரது குடும்பத்தினர் கங்கவேஷில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். முதியவருக்கு மாரடைப்பு வந்ததாக மருத்துவர் சொன்னார். பாண்டுரங் உல்பேவின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும் அவரது உடல்நிலை மோசமடைந்தது. எனவே, அவரது ஒரே மகள் மற்றும் மருமகன் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டனர். இதற்கிடையில், சிகிச்சை நடந்து கொண்டிருந்த போது, பாண்டுரங் உல்பேவின் உடல் முற்றிலும் அசைவற்றுப் போனது. இதயத் துடிப்பும் நின்றுவிட்டது. இறுதியாக, பாண்டுரங் உல்பேவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மதியம் 12.30 மணியளவில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து வருவதாகத் தெரிவித்தனர் என்று ஓம்கார் கூறுகிறார். மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளனர். இதனால், கடந்த 17-ஆம் தேதி நள்ளிரவில் பாண்டுரங் உல்பேவை குடும்பத்தினர் ஆம்புலன்சில் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவனையில் இருந்து கிளம்பும் போது கூட அவரது உடல் அசைவற்று இருந்துள்ளது. எனவே அவர் இறந்துவிட்டதாக உறவினர்கள் கருதினர். அவரது இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளை உறவினர்கள் தொடங்கினர். காதலி சத்தியத்தை நம்பி ஒரே வீட்டில் 50 ஆண்டு காத்திருந்த இவர் என்ன ஆனார்? காதலி எங்கே போனார்?4 ஜனவரி 2025 தமிழ்நாட்டை அச்சுறுத்தும் ஸ்க்ரப் டைபஸ் தொற்று - எந்த 7 மாவட்டங்களில் அதிகம் பரவுகிறது? தடுப்பது எப்படி?4 ஜனவரி 2025 எல்லாவற்றையும் மாற்றிய வேகத்தடை படக்குறிப்பு,பாண்டுரங் உல்பே வீட்டில் பாண்டுரங் உல்பேவின் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில், உறவினர்கள் அவரை ஆம்புலன்சில் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். உல்பே சென்ற ஆம்புலன்ஸ் சாலையில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது, பாண்டுரங்கின் உடல் கடுமையாக ஆட்டம் கண்டது. சிறிது நேரம் கழித்து, அவரது விரல்கள் அசைந்ததை பேரன் ஓம்கார் ரமணே கவனித்தார். தாத்தாவின் விரல்கள் அசைவதைக் கண்டவுடன், தன்னிடம் இருந்த ஆக்ஸிமீட்டரைக் கொண்டு அவரது உடலில் ஆக்ஸிஜன் அளவைச் சரிபார்த்ததாக ஓம்கார் கூறினார். அதன் பிறகு, தாத்தா உயிருடன் இருப்பதை உணர்ந்த அவர், உடனடியாக ஆம்புலன்ஸை கஸ்பா பவ்டாவில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மருத்துவமனைக்கு திருப்பினார். இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர், இதன் காரணமாக, டிசம்பர் 17 அன்று பிற்பகல் 3 மணியளவில் உல்பே சுயநினைவுக்கு திரும்பினார். அதன் பின்னர் அவர் சிகிச்சை பெற்று வந்தார். பூரண குணமடைந்து டிசம்பர் 30-ஆம் தேதி வீடு திரும்பினார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வீடு திரும்பிய பிறகு, அவரது வீடியோ மற்றும் இந்த சம்பவங்களின் முழுப் பின்னணி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. ஆனால், எந்த மருத்துவமனைக்கு அவரை முதலில் அழைத்துச் சென்றார்கள், எந்த மருத்துவர் அவர் இறந்துவிட்டார் எனக் கூறியது என்று எந்தத் தகவலையும் தெரிவிக்க குடும்பத்தினர் தயாராக இல்லை. மாவட்ட சுகாதார சேவைகள் பிரிவு தலைவர், இது அலட்சியத்தால் நிகழ்ந்த சம்பவம் என்று கூறினார். மத்ஸயா 6000: பெருங்கடலில் 6000 மீட்டர் ஆழத்திற்கு செல்லப் போகும் இந்திய விஞ்ஞானிகள்9 மணி நேரங்களுக்கு முன்னர் 'ரூ.25 லட்சத்தை இழந்தேன்' - இந்தியாவில் வேலைக்குச் செல்லும் மணமான பெண்கள் ஊதியத்தை என்ன செய்கிறார்கள்?4 ஜனவரி 2025 சிவில் சர்ஜன் என்ன சொன்னார்? படக்குறிப்பு,பாண்டுரங் உல்பே பாண்டுரங் உல்பேவுக்கு என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள, பிபிசி மராத்தி கோலாப்பூர் மாவட்ட சுகாதார சேவைகள் பிரிவு தலைவரான மருத்துவர் சுப்ரியா தேஷ்முக்கிடம் பேசியது. இது தொடர்பாக பாண்டுரங் உல்பேவின் குடும்பத்தினரிடம் தகவல் கேட்டுள்ளதாக அவர் கூறினார். "பாண்டுரங் உல்பேவின் ஈசிஜியில் நேர் கோடு தோன்றியதை அடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் பாண்டுரங் உல்பே இறந்துவிட்டதாக அறிவித்ததாக ஓம்கார் ரமணே எங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்" என்று மருத்துவர் தேஷ்முக் கூறினார். இருப்பினும், விதிகளின்படி, அவ்வாறு நேர் கோடு தோன்றியதுமே எந்த நோயாளியும் உடனடியாக இறந்ததாக அறிவிக்கப்படுவதில்லை என்று அவர் கூறினார். "ஒரு மணி நேரத்திற்குப் பிறகே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படும். அதுவரை நோயாளியின் இதயத்துடிப்பை மீட்டெடுக்க பல்வேறு அவசர சிகிச்சைகள் அளிக்கப்படுவது வழக்கம் "என்றும் அவர் கூறினார். "முதியவர் விஷயத்தில் இப்படி எதுவும் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக, அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, ஆம்புலன்சில் உறவினர்களிடம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்" என்று மருத்துவர் தேஷ்முக் கூறினார். இதில் சம்பந்தப்பட்ட மருத்துவரின் அலட்சியம் ஏதேனும் உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த தேஷ்முக்,"சம்பந்தப்பட்ட மருத்துவர் இரண்டு முக்கிய தவறுகளை செய்துள்ளார். முதல் தவறு, இதயம் துடிப்பதை கவனிக்காமல் நோயாளி இறந்துவிட்டதாக உடனடியாக அறிவித்தது, இரண்டாவது தவறு, பிரேத பரிசோதனை செய்யாமல் வீட்டுக்கு அனுப்பி வைத்தது." "இறப்புக்கான சரியான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனை அவசியம் என்று கூறிய மருத்துவர் தேஷ்முக், இறப்புச் சான்றிதழை வழங்காமல் இதயம் துடிக்கவில்லை என்று வெறுமனே கூறி பாண்டுரங் உல்பேவை வீட்டுக்கு அனுப்பியது பெரிய தவறு" என்று தெரிவித்தார். தென் கொரியா: பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபரை கைது செய்வது ஏன் மிகவும் கடினமாக உள்ளது?8 மணி நேரங்களுக்கு முன்னர் IND vs AUS: 10 ஆண்டு ஆதிக்கத்தை இழந்த இந்தியா - 5 மாதங்களில் இந்திய அணியில் மாற்றமா? கம்பீர் பதவி மீது தொங்கும் கத்தி4 மணி நேரங்களுக்கு முன்னர் இறந்ததாக கருதப்பட்ட முதியவர் உயிர் பிழைத்தது எப்படி? படக்குறிப்பு,பாண்டுரங் உல்பே அப்படியானால், பாண்டுரங் உல்பே எப்படி சுயநினைவுக்கு வந்தார் என்று மருத்துவர் தேஷ்முக்கிடமும் கேட்டோம். "மாரடைப்புக்குப் பிறகு, இதயம் திடீரென நின்றுவிடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இதயத்தை மீண்டும் செயல்பட வைக்க, நோயாளிக்கு இதய மசாஜ் அல்லது இதயத்தில் ஊசி செலுத்தப்படும். ஆம்புலன்ஸ் வேகத்தடையின் மேல் ஏறிய போது பாண்டுரங் உல்பேவின் உடல் ஒரு அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டது. அந்த அதிர்ச்சி அவரது இதயத்தை செயல்பட செய்திருக்கலாம்" என்று அவர் தெரிவித்தார். இதற்கிடையில், பாண்டுரங் உல்பே இறந்துவிட்டதாக அறிவித்த மருத்துவரோ, சம்பந்தப்பட்ட மருத்துவமனையோ இந்த விவகாரம் குறித்து இதுவரை பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்த மருத்துவமனையின் பெயரை தெரிவிக்க பாண்டுரங் உல்பேவின் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். குடும்பத்தின் மூத்தவர் மரணப் படுக்கையில் இருந்து மீண்டு வந்திருப்பது அந்த குடும்பத்திற்கு ஒரு அதிசயமான நிகழ்வு. ஆனால் வேகத்தடை மீது ஆம்புலன்ஸ் ஏறாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? என்ற கேள்வியும் உள்ளது. எனவே 'அந்த' மருத்துவரின் அலட்சியம், குடும்பத்தினருக்கு பெரிய சோகத்தை கொடுத்திருக்கும். https://www.bbc.com/tamil/articles/c0lgd0zk4pro
  25. 04 JAN, 2025 | 10:51 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தடுமாற்றம் அடைந்துள்ளது. தென் ஆபிரிக்கா முதலாவது இன்னிங்ஸில் குவித்த 615 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முதல் இன்னிங்ஸில் மேலும் 7 விக்கெட்கள் மீதம் இருக்க தென் ஆபிரிக்காவைவிட 551 ஓட்டங்கள் பின்னிலையில் பாகிஸ்தான் இருக்கிறது. முன்னாள் அணித் தலைவர் பாபர் அஸாம் 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் கெகிசோ ரபாடா 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மார்க்கோ ஜென்சன் 14 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 316 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த தென் ஆபிரிக்கா, சகல விக்கெட்களையும் இழந்து 615 ஓட்டங்களைக் குவித்தது. தனது இன்னிங்ஸை 176 ஓட்டங்களிலிருந்து இன்று காலை தொடர்ந்த ரெயான் ரிக்ல்டன் இரட்டைச் சதம் குவித்து அசத்தினார். 343 பந்துகளை எதிர்கொண்ட ரெயான் ரிக்ல்டன் 29 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 259 ஓட்டங்களைக் குவித்தார். போட்டியின் முதலாம் நாளன்று டெம்பா பவுமாவுடன் 4ஆவது விக்கெட்டில் 235 ஓட்டங்களைப் பகிர்ந்த ரிக்ல்டன் இன்றைய தினம் கய்ல் வெரினுடன் 6ஆவது விக்கெட்டில் 148 ஓட்டங்களையும் மார்க்கோ ஜென்சனுடன் 7ஆவது விக்கெட்டில் 86 ஓட்டங்களையும் பகிர்ந்தார். கய்ல் வெரின் சரியாக 100 ஓட்டங்களைப் பெற்றதுடன் தென் ஆபிரிக்காவின் முதலாவது இன்னிங்ஸில் சதம் குவித்த மூன்றாவது வீரரானார். முதல் நாளன்று டெம்பா பவுமா 106 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். மார்க்கோ ஜென்சன் 62 ஓட்டங்களையும் கேஷவ் மஹராஜ் 40 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மொஹம்மத் அபாஸ் 94 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சல்மான் அகா 148 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் குரம் ஷாஸாத் 123 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிர் ஹம்ஸா 127 ஓட்டங்களையும் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/202982

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.