Everything posted by ஏராளன்
-
இங்கிவனை யான் பெறவே
மகாபாரதம் சிறுவயதில் வாசித்தும், அம்மப்பாவிடமும்(அப்பு) செவி வழி கேட்டும் வளர்ந்தாலும் மேலுள்ள ஆக்கம் அளவிற்கு பல்வேறு கோணங்களைக் காட்டியதில்லை! நன்றி பகிர்விற்கு கிருபன் அண்ணை.
-
குளிர்ந்த நீரில் நீச்சல்: பெண்ணின் மனநலனை மேம்படுத்தியது எப்படி?
குளிர்ந்த நீரில் நீச்சல்: யுக்ரேன் போரிலிருந்து தப்பித்த பெண்ணின் மனநலனை மேம்படுத்தியது எப்படி? "கடலில் குளிர்ந்த நீரில் நீச்சலடிப்பது, என்னை தொடர்ந்து பயணிக்க வைக்கிறது." என்கிறார், யுக்ரேனை சேர்ந்த ஸ்விட்லானா. ரஷ்யா போர் தொடங்கியவுடன் அயர்லாந்துக்கு தப்பித்து வந்தார். 2022-ல் யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளார். "எதுவுமே சாப்பிட முடியாது. வாந்தி எடுத்துவிடுவேன். உடல்நிலை பாதிக்கப்பட்டது. கடும் மன அழுத்தம் இருந்தது. என் குழந்தைக்காக தொடர்ந்து பயணித்தேன்." என கூறுகிறார் அவர். அவரை, குளிர்ந்த நீரில் நீச்சலடிக்குமாறு மருத்துவர் கூறியுள்ளார். குளிர்ந்த நீரில் நீச்சலடிப்பது அவருடைய மனநலனை மேம்படுத்தியுள்ளது. எப்படி என்பதை அவரே விளக்குகிறார். "அப்படி நீச்சலடிப்பவர்களை நான் பார்த்துள்ளேன். தண்ணீரில் இருந்து ஹீரோ போன்று வெளியே வருவார்கள். குளிர்ந்த நீரில் நீச்சலடிக்க தைரியம் வேண்டும். ஒருநாள் நாங்கள் கடற்கரை சென்றோம். நீச்சல் உடையை அணிந்துகொண்டு கடலில் இறங்கினேன். இறங்கியதும் ஆச்சர்யமாக இருந்தது. என் உடலில் வலி இருந்தது, ஆனால் கடலில் இறங்கியதும் இதமாக இருந்தது." குறுகிய நேரம் குளிர்ந்த நீரில் மூழ்குவது உடல், மன நலனை மேம்படுத்தும். மன அழுத்த ஹார்மோன்களை விடுவிப்பதுடன் இது தொடர்புடையது என நிபுணர்கள் கூறுகின்றனர். "இது மன நலனை மேம்படுத்தியது, நம்பிக்கையும் தந்தது. எப்படி என தெரியவில்லை, ஆனால் இது வேலை செய்கிறது," என்கிறார் ஸ்விட்லானா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3e3e42g4jjo காணொளிக்கு பிபிசி இணைப்பை அழுத்தவும்.
-
அத்துமீறி நுழையும் இந்திய இழுவைப் படகுகள் - யாழ். சுழிபுரம் மீனவர்களின் வலைகள் நாசம்!
09 JAN, 2025 | 03:24 PM இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமையால் யாழ்ப்பாணம் - சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி மீனவர் ஒருவரின் 7 இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றிரவு இந்த மீனவர் திருவடி நிலை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகுகள் அவரது வலைகளை அறுத்துள்ளன. இதனால் அவரிடமிருந்த 32 வலைகளில் 26 வலைகள் அறுக்கப்பட்ட நிலையில் 6 வலைகளே மீதமாகின. எஞ்சிய வலைகளும் சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர் கருத்து தெரிவிக்கையில், நேற்றிரவு 10 மணியளவில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ரோலர்கள் எமது வலையை மட்டுமல்லாமல் வேறு சங்கங்களின் வலைகளையும் அறுத்துள்ளன. தற்போது மீன்பிடி பருவ காலம். இந்திய இழுவைப் படகுகளின் இதுபோன்ற செயற்பாடுகளால் நாங்கள் உழைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏழு இலட்சம் ரூபா வங்கியில் கடன் பெற்றே இந்த வலை முதல்களை உருவாக்கி கடலில் தொழில் செய்தேன். எனது வலைகளை இந்திய இழுவைப் படகு அறுத்துச் சென்றதால் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வேன்? வங்கிக் கடனை செலுத்த என்ன செய்வேன் என்று தெரியாமல் தவிக்கிறேன். புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி பல நல்ல வேலைத்திட்டங்களை செய்கிறார். அதுபோல இந்திய மீனவர்கள் பிரச்சினையையும் தீர்த்து வையுங்கள். புதிதாக வந்த அமைச்சர் இதற்கு ஒரு தீர்க்கமான முடிவெடுத்து இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த வேண்டும். அரசாங்கம் எனக்கு இழப்பீட்டை வழங்கி, நான் மீண்டும் தொழில் செய்ய வழிவகுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/203406
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
சமஷ்டிக்கு உதவ வேண்டும்; தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்காவிடம் வலியுறுத்தல் உலகின் பல நாடுகளில் இருக்கின்ற மிக உன்னதமான அரசியல் தீர்வாக பார்க்கப்படும் சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வுக்காகவே தமிழ் மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் கோரி நிற்கும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்பது நாட்டை பிரிக்கும் நோக்கம் கொண்டதல்ல. எனவே புதிய ஆட்சியாளர்கள் ஒரு அரசியல் சாசனத்தை கொண்டுவரும்பொழுது அதில் இணைந்த வடக்கு – கிழக்கில் அர்த்தபுஷ்டியான -கௌரவமான -நீடித்து நிலைத்துநிற்கக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டுமென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங்கிடம் எடுத்துக் கூறியுள்ளனர். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் மற்றும் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தலைமையில் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். மேற்படி சந்திப்பில் பேசும்போதே தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்படி விடயத்தை ஒரே குரலில் எடுத்துக் கூறியுள்ளனர். இந்த சந்திப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தினக்குரலுக்கு கருத்து தெரிவிக்கையில்; புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்கப்போவதாக ஆட்சியாளர்கள் கூறி வருகிறார்கள். அவ்வாறு ஒரு அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டால் அதில் இணைந்த வடக்கு – கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்பதே எங்களுடைய எதிர்பார்ப்பும் கோரிக்கையும் ஆகும். நாங்கள் கோரி நிற்கும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்பது நாட்டை பிரிக்கும் நோக்கம் கொண்டதல்ல. உலகின் பல நாடுகளில் இருக்கின்ற மிக உன்னதமான அதிகாரப்பகிர்வு இந்த சமஷ்டி முறைமையாகும். ஆகவே,ஒரே நாட்டுக்குள் ஒற்றுமையாக; இனங்களுக்கிடையில் ஒற்றுமை பலப்பட்டு சுதந்திரமாக அனைத்து இன மக்களும் வாழவேண்டுமாகவிருந்தால் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று அவசியமாகும். அந்த அடிப்படையில் புதிய அரசியல் சாசனம் ஒன்று நாட்டில் உருவாகும்பொழுது மேற்படி தீர்வொன்றுக்கு அரசாங்கம் நகர்வதற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கவேண்டுமென எடுத்துக்கூறினோம். அதேபோல்,பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அமெரிக்காதான் ஜெனீவாவில் ஒரு தீர்மானத்தை கொண்டுவந்திருந்தது. ஆனால்,அத்தீர்மானம் அடுத்த கட்டத்துக்கு நகராமல் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் பின்னடைவாக.எனவே ஜெனீவா தீர்மானத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கு அமெரிக்கா கூடியளவில் கரிசனை கொள்ளவேண்டும் என்றும் தூதுவரிடம் எடுத்துக்கூறினோம். 70 வருடங்களாக மாறி மாறி வந்த அரசுகளினால் துன்பங்களை அனுபவித்த இனமாக தமிழர்கள் இருக்கிறார்கள். நாங்கள் (தமிழர்கள்) தான் பசியோடு இருக்கின்றோம்.ஏற்கனவே ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களுடன் பேசி – பேசி தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்துள்ளோம். ஆகவே தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது சமஷ்டி அடிப்படையிலான தீர்வாக இருக்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதேபோல் வழங்கப்படும் அதிகாரங்கள் மீளப்பறிக்கப்பட கூடாததாக இருக்கவேண்டும். அவ்வாறானதொரு தீர்வு ஏற்படும்பொழுதுதான் இந்த நாட்டில் அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக-சுதந்திரமாக வாழும் சூழல் ஏற்படும்.இதற்கு பல நாடுகள் உதாரணங்களாக இருக்கின்றன என்பதனையும் தூதுவரிடத்தில் சுட்டிக்காட்டினோம். அர்த்தபுஷ்டியான -கௌரவமான -நீடித்து நிலைத்துநிற்கக்கூடிய அரசியல் தீர்வு என்பது உலகத்தில் சமஷ்டி அடிப்படையில்தான் பகிரப்பட்டிருக்கிறது. ஆகவே தமிழர்களுக்கும் அந்த அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.அதற்கு அமெரிக்காவும் இயன்ற ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டோம் என சிறீரீதரன் தெரிவித்தார். https://thinakkural.lk/article/314504
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
பெரியார் குறித்து சீமான் சர்ச்சைப் பேச்சு, கொந்தளித்த தி.க.வினர் - பாஜகவின் பி டீம் என குற்றச்சாட்டு பட மூலாதாரம்,@NAAMTAMILARORG 2 மணி நேரங்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து அவதூறான கருத்துகளைப் பேசியது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் குறித்து பெரியார் பேசியதாக, அவமதிக்கும் வகையிலான கருத்துகளை சீமான் பதிவு செய்திருந்தார். இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். அவரின் சர்ச்சை கருத்து குறித்து வியாழக்கிழமை அன்று புதுச்சேரியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார் சீமான். பெண்களை அவமதிக்கும் வகையில் பெரியார் பேசினார் என்று கூறியதற்கான ஆதாரத்தை தாருங்கள் என்று கேள்வி எழுப்பியபோது, "அரசு மற்ற தலைவர்கள் எழுதிய புத்தகங்களை நாட்டுடமை ஆக்கியது போன்று பெரியாரின் புத்தகத்தை நாட்டுடமையாக்குங்கள். அதில் உள்ளது ஆதாரங்கள்," என்று குறிப்பிட்டார். சீமான் மன்னிப்பு கேட்க தூது விட்டாரா? வருண்குமார் ஐ.பி.எஸ்.சுடன் என்ன பிரச்னை? முழு பின்னணி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகுவது ஏன்? கட்சிக்குள் என்ன நடக்கிறது? திராவிடம் - தமிழ்த் தேசியம் என்ன வேறுபாடு? பிராமணர் மீதான அவற்றின் பார்வை என்ன? விஜய் நாம் தமிழரின் கொள்கை எதிரியா? சீமான் பேச்சுக்கு த.வெ.க.வின் பதில் என்ன? பெரியார் தமிழ் மொழியை அவமதிக்கும் வகையில் பல கருத்துகளைப் பதிவு செய்திருப்பதாகச் சுட்டிக்காட்டி பேசிய சீமான், "பெரியார் தமிழ் மொழியை இப்படிப் பேசிவிட்டுப் பிறகு தன்னுடைய கருத்தியலை இதே மொழியில்தான் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்," என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். மேற்கொண்டு பேசிய அவர், வள்ளலாரைத் தாண்டி என்ன சமூக சீர்திருத்தத்தை செய்தார் பெரியார் என்று கேள்வியை எழுப்பியுள்ளார். பிறகு அம்பேத்கரையும் பெரியாரையும் சமமாகப் பேசுவது சரியா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். முன்பு பெரியாரை தன்னுடைய தாத்தா என்று கூறியது ஏன் என்ற கேள்வியை செய்தியாளர்கள் சந்திப்பில் சீமானிடம் கேட்ட போது, "முன்பு பெரியார் பற்றிய தெளிவில்லாமல் அவருக்கு ஆதரவு தெரிவித்தேன். தற்போது தொடர்ச்சியாகப் படித்து வரும்போது எனக்கு அந்தத் தெளிவு கிடைத்துள்ளது" என்றும் கூறியுள்ளார் சீமான். திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் மரணம் - வைகுண்ட ஏகாதசி டிக்கெட்டுகளை வாங்கச் சென்றபோது நிகழ்ந்த அசம்பாவிதம்9 மணி நேரங்களுக்கு முன்னர் துணை வேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர்களுக்குக் கூடுதல் அதிகாரம்: புதிய வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு ஏன்?6 மணி நேரங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை (ஜனவரி 9), தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் நீலாங்கரையில் அமைந்துள்ள சீமானின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். கூட்டமாக வந்த தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புதுவையிலும் நாம் தமிழர் கட்சியின் கொடியைப் பறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சீமானின் பேச்சைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை புதுவை காவல்துறை கைது செய்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தினர் சார்பில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் கூறியதாக பொய்யான தகவல்களைக் கூறி அவதூறு பரப்பியதற்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக திராவிடர் கழகத்தினர் காவல் ஆணையரிடம் தெரிவித்தனர். சென்னை மட்டுமின்றி, தஞ்சாவூர், ஈரோடு காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. HbA1C: நீரிழிவு நோயாளிகள் மட்டும்தான் இந்த பரிசோதனையை செய்ய வேண்டுமா? முடிவுகள் உணர்த்துவது என்ன?5 மணி நேரங்களுக்கு முன்னர் சிந்து சமவெளி: தமிழ்நாட்டுக்கு தொடர்பு இருப்பதாக கூறும் புதிய ஆய்வு - எப்படி? என்ன தொடர்பு?8 ஜனவரி 2025 'சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' பட மூலாதாரம்,TVK படக்குறிப்பு, விஜய் கட்சி தொடங்கிய பிறகு, சீமானின் பேச்சுகள் அதிதீவிரமாக இருப்பதை உணர முடிவதாக சுபகுணராஜன் தெரிவித்தார் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய திராவிடர் கழக வட்டாரங்கள், "சீமானின் கருத்து குறித்து அதிகம் விவாதிக்க ஒன்றும் இல்லை. அவரின் பேச்சுகளுக்கு எதிராக காவல்நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. அவர் சட்டரீதியாக இந்த வழக்குகளை எதிர்கொள்ளட்டும்," என்றும் தெரிவித்தனர். பிபிசி தமிழிடம் பேசிய திராவிட இயக்க ஆய்வாளர் வீ.எம்.எஸ். சுபகுணராஜன், "தரம் தாழ்ந்த பேச்சுகளைப் பேசுவது சீமானுக்கு ஒன்றும் புதிதல்ல. முன்பு திராவிடம் குறித்து அதிகமாக அவர் விமர்சனம் செய்து வந்தார். ஆனால் அவரின் சமீபத்திய பேச்சுகள் மிகவும் முகம் சுளிக்க வைக்கின்றன," என்றார். ஆர்.எஸ்.எஸ் - பாஜகவினர், தங்களால் இயன்ற அளவு பெரியாருக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டும் ஒன்றும் நடக்கவில்லை என்ற காரணத்தால் தற்போது சீமானை பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேற்கொண்டு பேசிய அவர், "விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அறிமுகமான பிறகு, சீமானின் ஆதரவும், வாக்கு வங்கியில் சரிவும் ஏற்படும் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அதனால், இங்கு அரசியல்மயமாக்கப்படாத வாக்காளர்களைத் தன்னுடைய கட்சியின் பக்கம் ஈர்ப்பதற்காக இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்," என்று கூறினார். "சீமானின் கருத்துகள் அனைத்தும், சமூகத்திற்கு எதிரானது. அவருடைய பாணியில் அவருக்கு பதில் அளிக்க இயலாது. ஆனால் இதற்கு சட்டரீதியாக நிச்சயம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்," என்றும் சுபகுணராஜன் குறிப்பிட்டார். தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் லயோலா மணி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் சீமானின் பேச்சுக்கு கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். ஜனவரி 8ஆம் தேதியன்று வெளியிட்ட அந்தப் பதிவில், பேசாத ஒன்றைப் பேசியதாக சீமான் சொல்வது கண்டிக்கத்தக்கது என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், சீமான் அவர்கள் நாகரிகமாக பேசக் கற்றுக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், "பொதுவெளியில் பேசும்போது சிந்தித்துப் பேசுங்கள். வாயில் வந்ததை எல்லாம் பேசக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். பெண்ணுரிமைக்காகப் போராடிய பெரியாரை இழிவுப்படுத்தும் விதத்தில் சீமான் பேசிய பேச்சு அநாகரிகமானது. முகம் சுளிக்கும் வகையில் பேசி இருப்பது வேதனையளிக்கிறது," என்று லயோலா மணி தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5ygy52n899o
-
மின்கலம் திருடனை தேடி 4 கிலோ மீற்றர் பயணித்த ஜோனி என்ற மோப்ப நாய்
Published By: DIGITAL DESK 3 09 JAN, 2025 | 05:07 PM வாரியப்பொல பகுதியில் ஜோனி என்ற மோப்ப நாய் 4 கிலோ மீற்றர் பயணித்து மின்கலம் திருடனை தேடிப்பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வாரியப்பொல மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குச் சான்றுப் பொருட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மின்கலங்களை திருடி சென்றுள்ளனர். மின்கலங்கள் திருடப்பட்ட இடத்தில் சொகுசு பஸ் உட்பட பல வாகனங்கள் வாரியபொல நீதவான் நீதிமன்றினால் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. திருட்டு சம்பவம் தொடர்பில் தடயங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் குருணாகலில் உள்ள பொலிஸ் கெனல் பிரிவிலுள்ள பயிற்சி பெற்ற மோப்ப நாயான ஜோனியை பொலிஸார் வரவழைத்துள்ளனர். ஜோனியை அழைத்து வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ரணசிங்க (90426) தேடுதல் நடவடிக்கைகாக மின்கலத்துடன் பொருத்தப்பட்டிருந்த முனையத்தை நாய்க்கு வழங்கினார். நாய் அதனை மோப்பம் பிடித்து வாரியபொல ஊடாக கிட்டத்தட்ட நான்கு கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த விளக்கடுபொத்த பகுதியில் வீடொன்றுக்கு சென்றுள்ளது. அங்கு ஐந்து மின்கலங்களுடன் கையும் களவுமாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/203412
-
தொலைபேசிகள் தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு விடுத்திருக்கும் அறிவிப்பு
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் (TRC) பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவது எதிர்காலத்தில் நாட்டினுள் தடைசெய்யப்படும் என்று அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டிற்குள் சட்டவிரோதமாக தகவல் தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவதே இதன் நோக்கம் என்று அதன் பணிப்பாளர் ஜெனரல் ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்தார். இந்த மாத இறுதிக்குள் இதற்காக ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இந்த புதிய திட்டம் தற்போது பயன்படுத்தப்படும் கையடக்க தொலைபேசிகளில் தலையிடாது என்று அவர் தெரிவித்தார். “முறையான தரநிலைகள் இல்லாமல் சட்டவிரோத தகவல் தொடர்பு சாதனங்களை வாங்குவதன் மூலம் நாட்டு மக்கள் பல்வேறு சிரமங்களையும் தடைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நாட்டில் உள்ள நுகர்வோருக்கு இதுபோன்ற சாதனங்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பது எமது நிறுவனத்தின் முக்கிய பொறுப்பாகும். இதற்காக, இந்த மாத இறுதிக்குள் ஒரு தானியங்கி அமைப்பை செயல்படுத்த எதிர்பார்க்கின்றோம். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், இறுதியில் நாட்டிற்குள் சட்டவிரோதமாக கையடக்க தொலைபேசிகளை இறக்குமதி செய்வதைத் தடுப்பதும் இதன் நோக்கமாகும். “இந்த அமைப்பு தற்போது பயன்பாட்டில் உள்ள எந்த கையடக்க தொலைபேசிகளையும் பாதிக்காது என்பதுடன், வெளிநாட்டினர் பயன்படுத்தும் தொலைபேசிகளுக்கும் எந்த தடையும் ஏற்படுத்தாது என்றார். https://thinakkural.lk/article/314510
-
சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் நூற்றாண்டு விழா இன்று
“தங்கம்மா என்றால் தொண்டு தங்கம்மா என்றாற் பண்பு தங்கம்மா என்றாற் சக்தி தங்கம்மா என்றாற் பக்தி தங்கம்மா என்றாற் சைவம் என்றெல்லாந் தரணி காணும் தங்கம்மா தமிழர் பெற்ற தனிப்பெருஞ் செல்வி வாழி.” என்ற கவிஞர் வி.கந்தவனம் ஐயாவின் பாடல் வரிகளை இவ்விடத்தில் நினைவு கூர்கின்றேன். ஆம் அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியின் நூற்றாண்டு விழா ஞாபகார்த்தமாக இக்கட்டுரையை எழுத விளைகின்றேன். அன்னை சைவசமயத்துக்கும் தமிழ்மொழிக்கும், சமுதாயத்துக்கும் அளப்பரிய பணிகளை ஆற்றி சைவத்தமிழ் மக்களின் மனங்களில் இன்றும் நீங்காத இடத்தைப் பெற்று மிளிர்கின்றார் என்றால் மிகையில்லை. அன்பு நெறியை அடிப்படையாகக் கொண்டு அவர் வாழ்ந்த வாழ்வு தமிழுக்காகவும் சைவசமயத்துக்காகவும் அமைந்தது. தனது பத்தொன்பது வயதில் பயிற்றப்பட்ட ஆசிரியராகவும் பண்டிதர், சைவப்புலவர் போன்ற பயிற்சி அனுபவத்தையும் பெற்றவராகவும் விளங்கிய இவர் ஒரு சாதாரண குடும்பத்தில் அவதரித்து தனது முயற்சியினாலும் கடின உழைப்பினாலும், ஆழ்ந்த அறிவினாலும். பக்தியினாலும், தன்னிகரில்லாத் தனிப்பெருந்தலைவியாக மிளிர்ந்தார். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராக இருந்து இறக்கும் வரை தனது உடல்இ பொருள், ஆவி அனைத்தையும் ஆலயத்துக்கே அர்ப்பணமாக்கி ஆலயத்தினூடாகப் பல அறப்பணிகளை ஆற்ற முடியுமென நிரூபித்துக் காட்டினார். அம்மையாரின் பன்னூல், அறிவு, சொல்லாற்றல், ஆழ்ந்த பக்தி, நிர்வாகத்திறன், தலைமைத்துவப் பண்பு, பண்டைத்தமிழ், இலக்கியப்புலமை, சைவசித்தாந்த சாஸ்திர அறிவு, பன்னிரு திருமுறைப்பாராயணம், வேத ஆகம விளக்கம், இதிகாச புராண அறிவு போன்ற பன்முக ஆளுமை கொண்டவராக இவர் விளங்கினார். “சொந்த சுகதுக்கங்களையும் எல்லாவித இச்சைகளையும் மூட்டை கட்டிக் கடலில் எறிந்துவிட்ட பின்னரே தொண்டில் நாட்டங்கொள்ள வேண்டும்” என்ற சுவாமி விவேகானந்தரின் கூற்று இவ்விடத்தில் அம்மையாருக்குப் பொருந்தும். இத்தகைய தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயம் என்னும் உருவாக்க ஆளுமையில் அம்மாவின் பங்கு மிகவும் காத்திரமானது. அவரது வழிகாட்டலும் ஆளுமைத்திறனும் சமூகம் சார் சிந்தனையில் உலக வரலாற்றில் பேசப்படும் ஆலயமாக உயர்த்தியது. ஒரு சைவப் பெண்மணியாக ஆலயத்தை எவ்வாறு நிர்ணயிக்க வேண்டும் என்று திட்டமிட்டு நல்ல முகாமையாளராக இவர் பணியாற்றியுள்ளார். ஆலயத்தை மக்கள் நேசிக்கும் இடமாக, அருளை வழங்கும் இடமாக, நம்பிக்கைக்குரிய இடமாக மாற்றியவர் இவர். சமுதாயத்தின் அனைத்துத் துறைகளிலும் ஆலயத்தை இணைத்து ஒப்பற்ற சமூகக் கருவியாக்கி வழிநடத்தி ஆலயமும் வளர்ச்சி கண்டது. இதனைச் சார்ந்த மக்களும் வளர்ச்சி அடைய வழிகாட்டியவர் அன்னை. பக்தியை வளர்க்கும் மூலமாகவும் கல்வியை வழங்கும் கல்விச்சாலையாகவும், மருத்துவத்தை வழங்கும் மருத்துவச் சாலையாகவும், அல்லற்பட்டோரை வாழ்விக்கும் சமுதாய நிலையமாகவும், கலைகளை வளர்க்கும் கலைக்கோயிலாகவும், தமிழை வளர்க்கும் சங்கமாகவும், இவ்வாலயம் அம்மையாரால் மாற்றப்பட்டது என்பதே உண்மை ஆகும். அம்மையாரின் சொற்பொழிவுகள், எழுத்துக்கள், என்பன இதற்குக் காரணமாகின. அவரின் நாவசைவின் மூலம் ஆயிரமாயிரம் பக்தர்கள் ஆலயத்தை நோக்கி ஈர்த்து சமூகப்பணிகளுக்கு வேண்டிய உதவிகளை அம்மா அவர்கள் பெற்றார். இவ் ஈர்ப்பு என்பது மக்களின் நம்பிக்கையைப் பெற்றதாக மாறியமையே இவரின் வெற்றிக்குக் காரணமாக அமைந்ததென்றால் மிகையில்லை. இதன் விளைவே இன்று “துர்க்காபுரம்” என்னும் ஒரு கிராமம் விரிவாகவும் துர்க்காபுரம் மகளிர் இல்லம், அன்னையர் இல்லம், சைவத்தமிழ் ஆய்வு நூலகம், திருமகள் அழுத்தகம், ஆயுள்வேத வைத்தியசாலை, நூல்வெளியீடுகள், பதிப்புக்கள், சமூக உதவிகள் என விரிவடைந்து தனித்துவமான ஆலயமாக உருவாகுவதற்கு வழிசமைத்த வகையில் அம்மாவின் பங்களிப்பு காத்திரமானது. ஏனைய சைவ ஆலயங்களுக்கும், இந்து நிறுவனங்களுக்கும் வழிகாட்டியதன் பெயரில் சைவத்தமிழ் வரலாற்றில் அம்மையாருக்கென்று அழிக்கமுடியாத ஒரு பதிவாகிறது. “ஒரு சமூகத்தில் ஒரு பெண்மணி வேலையை மனிதாபிமான ஊழியமாக மாற்றிக் கொண்டுள்ளமை பெருத்த ஆச்சரியத்தை விளைவித்தது.” என்று பேராசிரியர் கா.சிவத்தம்பி குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது. மேலைத்தேயத்தவர்களின் வருகையினால் வீழ்ச்சி அடைந்த இந்துப் பண்பாட்டு மரபுகள் ஆறுமுகநாவலரினால் மறுமலர்ச்சி பெற்றது என்பதும் இது அன்னையினால் துர்க்காதேவி ஆலயத்தோடு இணைந்து சைவத்தமிழ்ப் பண்பாடு மேலும் ஒருபடி வளர்ச்சியடைந்தது என்றால் மிகையில்லை. துர்க்கையம்மன் ஆலயம் பண்பாட்டு வளர்ச்சியின் இருப்பிடம் என்னும் அளவிற்கு இங்கு நடைபெறும் ஆலய விழாக்கள், கலைகள், சொற்பொழிவுகள் நூலாக்கங்கள், நூலகம், வைத்தியசாலை, பெண்கள் கல்வி, பழக்கவழக்கங்கள், திருமணம், முத்தமிழ் வளர்ச்சி, சரியைத் தொண்டு, கூட்டுவழிபாடுகள் என்ற அனைத்தும் பண்பாடு சார்ந்ததாக அமைய வழிகாட்டியவர் அம்மா. இத்தகைய பண்பாட்டு நிலைக்கழத்தின் உச்சமாக விளங்கிய ஆலயத்தின் உன்னத பணியாக அம்மாவால் ஆரம்பிக்கப்பட்டதே திக்கற்ற பெண்பிள்ளைகளுக்கான துர்க்காபுரம் மகளிர் இல்லமாகும். வறுமை, யுத்தம், பெற்றோர் இழப்பு, நோய் போன்ற பல்வேறு காரணிகளினால் பாதிக்கப்பட்ட பெண்குழந்தைகளை வளர்த்து கல்வி அளித்து கலை கலாசாரம் பண்பாடு விழுமியம் போன்றவற்றைக் கற்பித்து சமூகத்தில் அவர்களும் தலைநிமிர்ந்து வாழக்கூடியதாக அமைத்த பெருமை அம்மாவுக்கே உண்டு. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்பிள்ளைகள் இவ்வில்லத்தில் இருந்து வளர்ந்து பல்வேறுபட்ட பதவிகளிலும் பணிகளிலும் தலைநிமிர்ந்து வாழ்கின்றனர். இன்னும் இவ்வில்லம் செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகனின் தலைமையில் தர்மகர்த்தா சபை. நிர்வாக சபையினரின் ஒத்துழைப்பில் மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். கல்வியிலும் இணைபாடச் செயற்பாடுகளிலும் இவர்கள் பெருவெற்றியைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வில்லம் ஆரம்பித்த காலம் முதல் அம்மா இறக்கும் வரை பேச்சும் மூச்சும் பிள்ளைகளாகவே இருந்தது. பிள்ளைகளின் கல்வி, உடை, உணவு ஏனைய செயற்பாடுகள் யாவற்றையும் சிந்தித்து செயல்திறன் கொண்ட பணிகளை அம்மையார் தொடர்ந்தார். இதனால் பிள்ளைகள் கல்வியிலும் ஒழுக்கத்திலும் இணைபாடச் செயற்பாடுகளிலும் கலைகளிலும் சிறப்புற்றனர். கல்வி, இசை, யோகாசனம், தொழிற்பயிற்சி, ஆன்மீக நாட்டம், கலையுணர்வு, பிரசங்கமென எவ்வெவ் துறைகளில் அவர்களுக்கு ஈடுபாடு உள்ளதோ அந்தவகையில் அவர்களைப் பயிற்றுவித்தார். நோயுற்ற காலத்தில் தாயாகவும், கல்வியளிப்பதில் குருவாகவும், கண்டிப்பில் தந்தையாகவும், சமயத்தில் ஆன்மீகவாதியாகவும், தன்னுடைய சகல ஆளுமைத் திறன்களையும் பிள்ளைகளும் பின்பற்றி நடந்ததற்கான கடமை, நேர்மை, நேரமுகாமைத்துவம் என அனைத்து விடயங்களிலும் அவரைப் பின்பற்றக் கூடியதான ஒழுங்குமுறையுடன் பயிற்சிகள் வழங்கப்பட்டன. யாத்திரைகள், கூட்டுவழிபாடுகள், குருபூசைகள், ஆண்டு விழாக்கள், பரிசில் வழங்கல், போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்வுகள், மாணவர் மன்றமென அவர் சிந்தித்து செயலாற்றும் வண்ணம் பிள்ளைகளை வழிப்படுத்தினார். இவ்வாறு இல்லப்பிள்ளைகளை இருபத்துநான்கு மணி நேரமும் அவரது கண்காணிப்பும், வழிகாட்டலும் இடம்பெறுவது வழமையாகும். இடம்பெயர்ந்து இராமநாதன்கல்லூரி, கைதடி சைவச்சிறுவர் இல்லம், உசன்கந்தசாமி ஆலய வளாகம் எனத் தங்கியிருந்த போதும் கோழிகள் தன் குஞ்சுகளைக் காவிக் கொண்டு திரிவது போல அம்மையார் ஆற்றிய சேவை என்றும் மறக்க முடியாது. தாய் தன் பிள்ளைகளில் எவ்வாறு அன்பு வைப்பாரோ அதற்குச் சற்றும் குறைவுபடாது நோய் வந்த காலத்திலும் சரி, அவர்களின் இன்ப, துன்பங்களில் பங்கெடுப்பதிலும் சரி அவர்காட்டும் ஈடுபாடும், அன்பும் முன்மாதிரியான செயற்பாடுகள் ஆகும். அவர்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் அன்புத்தாயாகவும், பெரியம்மாவாகவும், அநாதைகளின் இரட்சகியாகவும், ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டவராகவும் விளங்கினார். “கோயில் என்பது நவீன சமூக அமைப்பிலே மானசீக உணர்வுகளைத் தக்கபடி நெறிப்படுத்தும் குறியீடாகவும் அமையும் எனலாம். சமூக மக்களை ஒன்றிணைத்து அவர்களின் ஆற்றலையும், ஆக்க சக்தியையும் பூரணமாக வெளிக்கொணர உதவும் வகையில் சமுதாயத்தில் கோயிலின் இடம் அமைகின்றது.” என்ற பேராசிரியர் கைலாசபதியின் கூற்றை மெய்ப்பித்தவர் அம்மா. தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கம், பெண்கள் தொண்டர் சபையினர், மகளிர் இல்லம், அன்னையர் இல்லம் போன்றவற்றினூடாக சமூகத்தை ஆலயத்தோடு இணைத்து வழிநடத்தியவர் அம்மா. அம்மாவின் வழிநடத்தலில் பத்தொன்பது ஆண்டுகள் வளர்ந்து பல்கலைக்கழகம் சென்று ஆசிரியையாகி இன்று புலம் பெயர் தேசத்தில் கடமையாற்றும் என்னைப் போன்ற எத்தனையோ பெண் குழந்கைகளை வளர்த்து ஆளாக்கிய எம் தாயை என்றும் எம் உள்ளத்தில் இருத்தி வணங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மையாகும். நூற்றாண்டு காணும் இந்நாளில் அம்மா அவர்களின் பணிகளில் ஒரு சிறு பகுதியை நினைவு கூர்ந்து எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் ஆனந்தம் அடைகின்றோம். தவனேஸ்வரி சிவகுமார் (BA (u;ons) Dip.in.Edu,MA) https://www.virakesari.lk/article/202776
-
இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கு புதிய தலைவர் நியமனம்!
வி.நாராயணன்: இஸ்ரோ தலைவராக மீண்டும் ஒரு தமிழர் - அரசுப் பள்ளியில் பயின்று சாதித்த பின்னணி பட மூலாதாரம்,ISRO 3 மணி நேரங்களுக்கு முன்னர் ராக்கெட் மற்றும் விண்கல உந்துவிசை வல்லுநரான முனைவர் வி.நாராயணன், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்(இஸ்ரோ) அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவன் ஏற்கனவே இஸ்ரோ தலைவராக பதவி வகித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பின் மூலம் மீண்டும் ஒரு தமிழர் இஸ்ரோ தலைவராகிறார். சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, இந்திய விண்வெளி ஆய்வு நிலையத் திட்டம், ககன்யான் திட்டம் என இந்தியாவின் விண்வெளித் துறை ஒரு புதிய சகாப்தத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில், இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்துக்கு அடுத்ததாக அவர் பதவியேற்கவுள்ளார். முனைவர் நாராயணன் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இஸ்ரோவின் திரவ உந்துவிசை அமைப்பு மையத்தின் (LPSC) இயக்குநராக இருந்து வருகிறார். சந்திரயான் 1, 2, 3, மங்கள்யான் திட்டம், ஆதித்யா எல்1, ககன்யான் திட்டம் ஆகிய முக்கியத் திட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை அவர் செய்துள்ளார். இஸ்ரோவின் திரவ உந்துவிசை அமைப்பு மையத் தகவல்களின்படி, இந்தியாவின் விண்வெளி உந்துவிசை அமைப்புகளின் வளர்ச்சி மற்றும் வெற்றியில் நாராயணனின் பங்கு மிகவும் முக்கியமானது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலக்காட்டுவிளை என்ற கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயின்ற நாராயணன் இஸ்ரோ தலைவராக உயர்ந்தது எப்படி? அவர் செய்த சாதனைகள் யாவை? முழு பின்னணியைப் பார்க்கலாம். புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் துளிர் விட்ட தட்டைப்பயறு - இஸ்ரோ சாதித்தது எப்படி? மத்ஸயா 6000: பெருங்கடலில் 6000 மீட்டர் ஆழத்திற்கு செல்லப் போகும் இந்திய விஞ்ஞானிகள் பூமிக்கும் வானில் இரட்டை சூரியன்கள் இருந்தனவா? ஆய்வில் புதிய தகவல் விண்வெளியில் இஸ்ரோ நிறுவும் ஆய்வு மையம் என்ன செய்யப் போகிறது? விண்வெளித் துறையில் 40 ஆண்டு அனுபவம் முனைவர் நாராயணனுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, இஸ்ரோவில் உதவியாளர் நிலையில் பணிக்குச் சேர்ந்து, இன்று அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்துள்ளார். இதற்குப் பின்னால் எத்தகைய ஆர்வமும், கடின உழைப்பும் இருக்கும் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை," என்று பாராட்டியுள்ளார். மேலும், "அவரது பயணம், பல தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும்," என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். கடந்த 1984ஆம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் உறுப்பினராக இணைந்த போது நாராயணனின் இஸ்ரோ பயணம் தொடங்கியது. அவரது ஆரம்பக்கால ஆண்டுகளில், சவுண்டிங் ராக்கெட்டுகள், ஏஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் ஆகியவற்றுக்கான திட உந்துவிசை அமைப்புகளை உருவாக்குவதில் பணியாற்றினார். சதீஷ் தவன்: ராக்கெட் தொழில்நுட்பத்தை அடித்தட்டு மக்களுக்காக பயன்படுத்த நினைத்த விஞ்ஞானி25 செப்டெம்பர் 2024 நாசா கைவிட்ட நிலா ஆய்வுத் திட்டத்தை இஸ்ரோ கையில் எடுக்குமா? ரூ.3,767 கோடி ரோவர் என்ன ஆகும்?29 ஜூலை 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1989ஆம் ஆண்டு ஐஐடி காரக்பூரில் எம்.டெக் கிரையோஜெனிக் பொறியியல் பாடப்பிரிவில் முதல் ரேங்கில் தேர்ச்சி பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார். இந்தச் சாதனை, கிரையோஜெனிக் உந்துவிசையில் அவரது பணியின் தொடக்கமாக அமைந்தது. பிற்காலத்தில் அந்தத் துறையில் தவிர்க்க முடியாத வல்லுநராக உயர்ந்தார் முனைவர் நாராயணன். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் துறையில் பணியாற்றி வரும் அவர், ராக்கெட் உந்துவிசை, கிரையோஜெனிக் அமைப்புகள், செயற்கைக்கோள் உந்துவிசை ஆகிய துறைகளில் அற்புதமான முன்னேற்றங்களுக்கு வழிவகுத்ததாக எல்.பி.எஸ்.சி குறிப்பிட்டுள்ளது. சந்திரயான், மங்கள்யான் உள்பட இஸ்ரோவின் பல முக்கியமான பணிகளை நிறைவேற்றுவதில் அவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார். கடந்த 40 ஆண்டு அனுபவம் மற்றும் அவரது நிபுணத்துவம் இஸ்ரோவின் மேம்பட்ட உந்துவிசை அமைப்புகளை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது. சந்திரயான்-4 திட்டம் தயார் - இஸ்ரோ அனுப்பும் விண்கலம் நிலவில் என்ன செய்யும்?21 செப்டெம்பர் 2024 ஸ்பேடெக்ஸ் என்பது என்ன? இதன் மூலம் விண்வெளியில் இஸ்ரோ என்ன சாதிக்க நினைக்கிறது?31 டிசம்பர் 2024 இஸ்ரோவில் அவரது பங்களிப்பு பட மூலாதாரம்,ISRO இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளுக்கான கிரையோஜெனிக் உந்துவிசை அமைப்புகளை உருவாக்குவதில் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். "அவரது பங்களிப்புகள் சிக்கலான மற்றும் உயர் செயல்திறன் கொண்ட கிரையோஜெனிக் உந்துவிசை அமைப்புகளைக் கொண்ட உலகின் ஆறு நாடுகளில் ஒன்றாக இந்தியாவை உயர்த்தியது. 2017-2037 வரையிலான 20 ஆண்டுகளுக்கு இஸ்ரோவின் உந்துவிசை திட்டங்களுக்கான பாதையை அவர் இப்போதே இறுதி செய்துவிட்டார்," என்று எல்.பி.எஸ்.சி குறிப்பிட்டுள்ளது. விண்வெளிப் பொறியியலில் அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பைப் போற்றும் வகையில், சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம் மற்றும் ஐஐடி காரக்பூரில் சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருது வழங்கி முனைவர் நாராயணன் கௌரவிக்கப்பட்டார். சிந்துவெளியில் கிடைத்த குறியீடுகள் தமிழ்நாட்டிலும் கிடைப்பது எப்படி? புதிய ஆய்வு சொல்வதென்ன?8 ஜனவரி 2025 மதுரையில் காவி கட்டி, பூணூல் அணிந்து மதமாற்ற பணி செய்த பாதிரியார் - கிறிஸ்தவ மிஷனரிகள் என்ன செய்தன?5 ஜனவரி 2025 பட மூலாதாரம்,ISRO முனைவர் நாராயணனின் தலைமை இந்தியாவின் விண்வெளி உந்துவிசை அமைப்புகளின் எதிர்காலத்தை வடிவமைத்துள்ளதாகவும் அவரது பங்களிப்பு இஸ்ரோ முன்னணியில் இருப்பதை உறுதி செய்வதாகவும் எல்.பி.எஸ்.சி குறிப்பிட்டுள்ளது. திரவ உந்துவிசை அமைப்பு மையத்தின் இயக்குநராக, 41 ராக்கெட் மற்றும் 31 விண்கலப் பயணங்களுக்கான 164 திரவ உந்துவிசை அமைப்புகளை வழங்குவதை அவர் மேற்பார்வையிட்டுள்ளார். 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு முனைவர் நாராயணன் அளித்துள்ள பேட்டியில், இஸ்ரோ தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது "ஒரு மிகப்பெரிய பொறுப்பு" என்று தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இஸ்ரோவை வழிநடத்தப் போகும் அவரது தலைமையில், அதன் எதிராகல்த் திட்டங்களான ககன்யான், சந்திரயான்-4, இந்திய விண்வெளி நிலையம், மங்கள்யான்-2, சுக்ரயான் ஆகிய முக்கியத் திட்டங்களுக்கான பணிகள் முழுவீச்சில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0mvm0j7m2zo
-
வவுனியாவில் கிராம சேவகர் ஒருவர் பதவியில் இருந்து இடைநிறுத்தம்
Published By: VISHNU 08 JAN, 2025 | 09:23 PM வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றிய கிராம சேவகர் ஒருவர் தனது கல்விச் சான்றிதழை உறுதிப்படுத்த தவறியமையால் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு கிராம சேவகராக நியமனம் பெற்ற ஒருவர் தனது மூன்று வருட நிறைவில் பதவியினை உறுதிப்படுத்த வேண்டும். குறித்த பதவியினை மூன்று வருடம் கடந்தும் தாமதாக கடந்த வருடமே குறித்த கிராம அலுவலர் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்போது குறித்த கிராம அலுவலர் நியமனத்திற்காக சமர்ப்பித்த க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றை பரீட்சை திணைக்களத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை. இதனையடுத்து குறித்த கிராம அலுவலர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/203354
-
16ஆம் ஆண்டு நினைவு நாளில் லசந்த விக்ரமதுங்கவிற்கு கல்லறையில் அஞ்சலி
லசந்த விக்கிரமதுங்கவின் மரணம் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவோம் - நீதியமைச்சர் Published By: DIGITAL DESK 7 08 JAN, 2025 | 07:35 PM ( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) லசந்த விக்கிரமதுங்கவின் மரணம் தொடர்பில் நீதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு காரணிகளால் தாமதப்படுத்தப்பட்டுள்ள வழக்குகள் முறையாக விசாரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்போம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் உட்பட பல ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமினால் லசந்த விக்கிரதுங்கவின் மரணம் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நீதியமைச்சர் மேலும் உரையாற்றியதாவது, லசந்த விக்கிரமதுங்கவின் மரணம் தொடர்பிலும் அந்த சம்பவம் தொடர்பில் நீதி, நியாயம் வழங்கப்பட வேண்டும் என்றும் ரவூப் ஹக்கீம் கூறினார். லசந்த விக்கிரமதுங்கவின் விவகாரத்துக்கு நீதியை நிலைநாட்டுவோம். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். அரசாங்கம் என்ற வகையில் நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும். கடந்த காலங்களில் வழக்குகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு காரணிகளால் தாமதப்படுத்தப்பட்டுள்ள வழக்குகள் முறையாக விசாரணை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/203329
-
முதல் ஆசிய அணியாக சாதனை படைத்த ஆப்கானிஸ்தான்
ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்த ஆப்கானிஸ்தான் அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடியது. டி20 தொடரை 2-1 எனவும், ஒருநாள் தொடரை 2-0 எனவும் வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்திய ஆப்கானிஸ்தான் அணி, ஜிம்பாப்வேவின் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரையும் 1-0 என வென்று அசத்தியுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் 699, ஜிம்பாப்வே 586 ஓட்டங்கள் என குவிக்க ஆட்டம் சமன் செய்யப்பட்டது. இந்த நிலையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னின்ஸில் 157 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த போதும், இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷீத் கானின் அபார பந்துவீச்சால் 72 ஓட்டங்களில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. போட்டியை பொறுத்தவரையில் முதலிரண்டு இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் 157 மற்றும் 363 ஓட்டங்களும், ஜிம்பாப்வே அணி 243 மற்றும் 205 ஓட்டங்களும் அடித்தன. இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 11 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரசீத் கான், 7/66 என ஒரு ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளராக சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். இந்த வெற்றியின் மூலம் 1-0 என தொடரை வென்று அசத்தியது ஆப்கானிஸ்தான் அணி. தங்களுடைய முதல் வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதல் வெளிநாட்டு டெஸ்ட் தொடரையே வென்ற முதல் ஆசிய அணியாக சாதனை படைத்துள்ளது. சிறந்த பந்துவீச்சு: ஒரு ஆப்கனிஸ்தான் பந்து வீச்சாளராக சிறந்த டெஸ்ட் பந்துவீச்சை பதிவுசெய்த ரஷீத் கான், 7/66. 2வது சிறந்த அணி: முதல் 11 டெஸ்ட் போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று இரண்டாவது சிறந்த அணியாக ஆப்கானிஸ்தான் மாறியுள்ளது. முதலிடத்தில் 6 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா உள்ளது. ரஷீத் கான் சாதனை: ஒரு பந்து வீச்சாளர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 20 ஓட்டங்களுக்கு மேல் அடித்து, 10 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 10வது முறையாகும். இதில் இரண்டுமுறை இந்த சாதனையை படைத்த முதல் வீரராக ரசீத் கான் சாதனை. 45 விக்கெட்டுகள்: 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 45 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் ரஷீத் கான், 19ம் நூற்றாண்டில் கிரிக்கெட் விளையாடிய ஆஸ்திரேலியா பவுலர் சார்லி டர்னருக்கு பிறகு இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். இந்த சாதனையை தென்னாப்பிரிக்கா பவுலர் பிலேண்டருடன் சமன்செய்துள்ளார் ரஷீத் கான். https://thinakkural.lk/article/314481
-
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 50-க்கும் மேற்பட்டோர் பலி
திபெத்தை உலுக்கியுள்ள பூகம்பம் - 450 பேர் உயிருடன் மீட்பு 08 JAN, 2025 | 02:47 PM திபெத்தை உலுக்கியுள்ள பூகம்பத்தினால் 126 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தொலைதூர பகுதிகளில் உயிருடன் இருக்ககூடியவர்கள் என கருதப்படுபவர்களை மீட்பதற்காக 15000 மீட்பு பணியாளர்களை சீனா திபெத்திற்கு அனுப்பியுள்ளது. 450 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்திலிருந்து 50 மைல் தொலைவில் உள்ள பகுதியை தாக்கிய பூகம்பம் ஆயிரக்கணக்கான வீடுகளை அழித்துள்ளது என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடும் குளிர் நிலவுகின்றது இதனால் மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள சீனஊடகங்கள் மீட்பு நடவடிக்கைகளை பார்வையிடுவதற்கான சீனாவின் துணை பிரதமர் திபெத் சென்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளன. இந்த பகுதி ஒரு பெரிய பிழைக்கோட்டில் அமைந்துள்ளதால் இங்கு பூகம்பங்கள் என்பது பரவலான விடயம். எனினும் செவ்வாய்கிழமை பூகம்பம் சமீபத்தைய சீன வரலாற்றில் மிக மோசமான ஒன்று. ரிச்டர் அளவையில் 7.1 ஆக பதிவாகியுள்ள இந்த பூகம்பத்தின் அதிர்வுகள் நேபாளம் இந்தியாவிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திபெத்தினை சீனா கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது . இங்கு இணையசேவைகள் கட்டுப்படுத்தப்பட்டு;ள்ளன, அரசாங்கத்தின் அனுமதியின்றி செய்தியாளர்கள் செயற்பட முடியாது. இதன் காரணமாக பூகம்பம் குறித்து சீன ஊடகங்களின் மூலமே அறிந்து கொள்ளவேண்டிய நிலை காணப்படுவதாக பிபிசி தெரிவித்துள்ளது. உயிரிழப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட மக்களை அவர்களின் பகுதிகளில் மீள குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் சீன ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மீட்பு பணியாளர்களிற்கு உதவுவதற்காக சீன விமானப்படையின் விமானங்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன, ஆளில்லா விமானங்களையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். 30,000 மக்கள் அந்த பகுதியில் இடம்பெயர்ந்துள்ளனர் என சீன அரசாங்கத்தின் பீப்பிள்ஸ் டெய்லி தெரிவித்துள்ளது. பூகம்பம் மையம் கொண்டிருந்த டிங்கிரி கன்ரியில்; தொலைபேசி இணையசேவைகளை சரி செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 35000 கட்டிடங்கள் தரைமட்டமாகியிருக்கலாம் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/203310
-
சிந்துவெளியில் மறைந்திருக்கும் புதிரை விடுவிக்க… மூன்று மெகா பரிசை அறிவித்த ஸ்டாலின்
சிந்து சமவெளி: தமிழ்நாட்டுக்கு தொடர்பு இருப்பதாக கூறும் புதிய ஆய்வு - எப்படி? என்ன தொடர்பு? பட மூலாதாரம்,DEPARMENT OF ARCHAEOLOGY, TN கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 8 ஜனவரி 2025, 04:25 GMT தென்னிந்தியாவில் கிடைக்கும் குறியீடுகளுடன், சிந்து சமவெளியில் கிடைக்கும் குறியீடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால், சுமார் 90 சதவீதம் அளவுக்கு ஒற்றுமை இருப்பதாகச் சொல்கிறது புதிய ஆய்வு ஒன்று. சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டதன் நூற்றாண்டு நிறைவு சென்னையில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, சிந்துவெளிப் பண்பாட்டைக் கண்டுபிடித்து அறிவித்த பிரிட்டிஷ் இந்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர் சர் ஜான் ஹீபர்ட் மார்ஷலின் சிலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட ஓர் ஆய்வின் முடிவு பல சுவாரஸ்யமான தகவல்களைத் தருகிறது. 'Indus Signs and Graffiti Marks of Tamilnadu: A morphological Study' என்ற இந்த ஆய்வை புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் கே. ராஜனும் ஆர். சிவானந்தமும் இணைந்து மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவுகளின்படி, சிந்துவெளி நாகரீகத்தில் கிடைக்கும் எழுத்துகள் மற்றும் குறியீடுகளுக்கும் தமிழ்நாடு, தென்னிந்தியாவில் கிடைத்த பானை ஓடுகளில் காணப்படும் குறியீடுகளுக்கும் பெருமளவு ஒற்றுமை இருப்பது தெரிய வந்துள்ளது. சிந்து சமவெளியில் வளர்ச்சியடைந்த ஒரு எழுத்து முறை இருந்தது பல ஆதாரங்களின் மூலம் ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எழுத்துகள், முத்திரைகள், மட்பாண்ட ஓடுகள், உலோகப் பொருட்கள் ஆகிவற்றில் இருந்து கிடைத்தன. இம்மாதிரி கிடைத்த 4,000 பொருட்களில் இருந்து சுமார் 450 தரப்படுத்தப்பட்ட குறியீடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. சிந்து சமவெளி: சங்க இலக்கியத்தோடு ஒத்துப்போகும் வாழ்வியலை கொண்ட பண்டைய நாகரிகம் 'சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே' சிந்து சமவெளி நாகரிக குறியீடுகளின் ரகசியம் என்ன? முத்திரைகளில் மத அடையாளமா? தோலாவிரா: ஆரியர் படையெடுப்பால் அழிந்து போனதா இந்த சிந்து சமவெளி நகரம்? மிக நீளமான வாக்கியம் பொதுவாக எழுத்து வடிவத்தைப் பொறுத்தவரை தொடக்கத்தில் சித்திர எழுத்துகள், பிறகு ஒரு கருத்தை வெளிப்படுத்துவதைப் போன்ற சித்திரங்கள், அதன் பின் ஒரு வார்த்தையை குறிக்கும் வகையிலான முத்திரைகள் இறுதியாக ஒரு ஒலியைக் குறிப்பிடும் எழுத்துகள் என வளர்ச்சியடைகின்றன. சிந்துவெளியில் கிடைத்த தரப்படுத்தப்பட்ட குறியீடுகளைப் பொறுத்தவரை, அவை சித்திரங்களை எழுத்தாகப் (Logo-syllabic) பயன்படுத்தும் எழுத்து முறையை சார்ந்தவை என்றே பலரும் கருதுகிறார்கள் என்கிறது இந்த ஆய்வு. சிந்து சமவெளியில் கிடைத்த வாக்கியங்கள் 4-5 குறியீடுகளை மட்டுமே கொண்டிருக்கின்றன. 50க்கும் மேற்பட்ட வாக்கியங்களில் பத்து குறியீடுகள் இருந்தன. தோலாவிராவில் கிடைத்த ஒரு பலகையில் 10 எழுத்துகள் இருந்தன. இதுவரை கிடைத்தவற்றிலேயே மிக நீளமான வாக்கியத்தில் 26 எழுத்துகள் இருந்தன. ஒரே ஆண்டில் 268 பேர் தானம்: தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்பு தானம் அதிகரிப்பது ஏன்?7 ஜனவரி 2025 ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகலால் இந்தியா - கனடா உறவு மேம்படுமா? ஓர் அலசல்7 ஜனவரி 2025 பட மூலாதாரம்,DEPARMENT OF ARCHAEOLOGY, TN சிந்துவெளி எழுத்துகள் பரிணாம வளர்ச்சிக்கு உள்ளாகவில்லை என்பது சிந்துவெளி குறியீடுகளில் இருக்கும் மற்றொரு முக்கியமான அம்சம் என்கிறது இந்த ஆய்வு. அந்த பரிணாம வளர்ச்சிக் கட்டத்தை அடைவதற்கு முன்பாகவே அவை தரப்படுத்தப்பட்டுவிட்டன. மேலும், பிராந்திய ரீதியான வேறுபாடுகளும் அக்குறியீடுகளில் இல்லை. கமில் ஸ்வலபில், அஸ்கோ பர்போலா, சுனிதி குமார் சாட்டர்ஜி ஆகியோர் சிந்துவெளி குறியீடுகள் தொல் திராவிட மொழிக்கானவை எனக் கருதுகிறார்கள். ஆனால், வேறு சில ஆய்வாளர்கள் அவை இந்தோ - ஐரோப்பிய மொழிக்கானவை எனக் கருதுகிறார்கள். மைக்கல் மிட்சல், ஸ்டீவ் ஃபார்மர் போன்றவர்கள் அவை எந்த மொழியையும் சார்ந்தவை அல்ல, வெறும் குறியீடுகள் மட்டுமே என்கிறார்கள். பகதா அன்சுமாலி முகோபத்யாய், இந்தக் குறியீடுகள் பொருளியல் சார்ந்த வடிவவியலைக் கொண்டவை என்றும் அவற்றுக்கு ஒலி கிடையாது என்றும் சொல்கிறார்கள். வங்கிக் கடன் - கிரெடிட் ஸ்கோர் என்ன தொடர்பு? சிபில் ஸ்கோரை மேம்படுத்துவது எப்படி? 5 முக்கிய விஷயங்கள்7 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை: வாகனங்களில் கடவுள் சிலையை அகற்ற உத்தரவா? புதிய நடவடிக்கையால் சர்ச்சை7 ஜனவரி 2025 திராவிட கலாசாரத்துடன் இணைத்து ஆராய்ச்சி பட மூலாதாரம்,DEPARMENT OF ARCHAEOLOGY, TN இந்த சிந்துவெளி எழுத்துகளைப் புரிந்துகொள்ள பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஐராவதம் மகாதேவன், பகதா அன்சுமாலி முகோபத்யாய் ஆகியோர் இதில் சில முன்னேற்றங்களைக் கண்டிருக்கின்றனர். மற்றொரு பக்கம், சிந்து சமவெளி நாகரீகத்தை திராவிட கலாசாரத்துடன் இணைத்து ஆராய்வதிலும் பல ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாகவே சிந்துவெளி குறியீடுகளையும் தமிழ்நாட்டில் அகழாய்வுகளில் கிடைத்த பானை ஓடுகளில் இருந்த குறியீடுகளையும் இந்த ஆய்வு ஆராய்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 140 தொல்லியல் தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 15,184 பானை ஓடுகளில் இருந்து, 14,165 பானை ஓடுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதில், 2,107 குறியீடுகள் ஒழுங்குபடுத்தப்பட்டு, அதிலிருந்து 42 குறியீடுகள் அடிப்படைக் குறியீடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 544 குறியீடுகள் அவற்றின் வேறுபாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,DEPARMENT OF ARCHAEOLOGY, TN இப்படி தொகுத்துப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் கிடைத்த பல குறியீடுகள் சிந்து வெளி எழுத்துகளுக்கு இணையாக விளங்குகின்றன என்கிறது இந்த ஆய்வு. தமிழ்நாட்டில் வகைப்படுத்தப்பட்ட 42 குறியீடுகள் மற்றும் அவற்றை ஒத்த குறியீடுகளில் 60 சதவீத குறியீடுகளுக்கு இணை எழுத்துகள் சிந்துவெளி எழுத்துகளில் கிடைத்துள்ளன. இவை தற்செயலாக நடந்திருக்க முடியாது என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். மேலும், சிந்துவெளி எழுத்துகளும் குறியீடுகளும் எவ்வித தடயங்களும் இல்லாமல் மறைந்திருக்காது என்ற அடிப்படையில் அவை வெவ்வேறு வடிவங்களாக மாறியிருக்கும் அல்லது பரிணாம வளர்ச்சியை அடைந்திருக்கும் என நம்புகிறார்கள். கோவை: பிறந்த நாளன்று ஆடியோ பதிவிட்டு இறந்த மாணவர் - கல்லூரிகளில் உளவியல் ஆலோசனை தீர்வாகுமா?7 ஜனவரி 2025 அமெரிக்காவில் கடும் பனிப்புயல் - 5 பேர் உயிரிழப்பு, நூற்றுக்கணக்கான விபத்துகள்7 ஜனவரி 2025 வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பட மூலாதாரம்,DEPARMENT OF ARCHAEOLOGY, TN தென்னிந்தியாவில் ஒரே வகையான குறியீடுகள் கிடைப்பது, தென்னிந்தியாவுக்கும் சிந்துவெளி நாகரீகத்துக்கும் இடையில் இருந்த ஒருவித பண்பாட்டுத் தொடர்பைக் குறிப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. ஆனால், இதை உறுதிசெய்யக் கூடுதல் ஆய்வுகள் தேவை என்பதையும் இந்த ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சிந்துவெளி பண்பாடு செப்புக் காலத்தில் இருந்தபோது, தென்னிந்தியா இரும்புக் காலத்தில் இருந்தது. ஆகவே, இரு பகுதிகளுக்கும் இடையில் நேரடியாகவோ இடைநிலை மண்டலங்கள் வழியாகவோ பண்பாட்டுப் பரிமாற்றங்கள் நடந்திருக்கலாம். தென்னிந்தியாவில் உள்ள இரும்புக் கால கல்லறைகளில் கிடைக்கும் சூது பவளம், அகேட் மணிகள், செப்பு மற்றும் வெண்கலப் பொருட்கள் ஆகியவை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்திருக்கலாம் என்கிறது ஆய்வு. பட மூலாதாரம்,DEPARMENT OF ARCHAEOLOGY, TN சிந்து சமவெளி நாகரீகம் முடிவுக்கு வந்ததற்கு காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அங்கிருந்த மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தபோது, அவர்கள் தங்களுடன் தங்கள் மொழி, கலாசாரம் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றனர். இந்த ஆய்வை மொழியியல் ரீதியான ஒப்பீட்டு ஆய்வு என்பதைவிட வடிவரீதியிலான ஒப்பீட்டு ஆய்வு என்று சொல்வதே சரி என்கிறார்கள் ஆய்வாளர்கள். பட மூலாதாரம்,DEPARMENT OF ARCHAEOLOGY, TN சிந்து சமவெளி கண்டுபிடிக்கப்பட்டதன் நூற்றாண்டு நிறைவை ஒட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். அதன்படி, சிந்து சமவெளியில் கிடைத்த குறியீடுகள் அல்லது எழுத்துகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும் வழியைக் கண்டறியும் அமைப்பு அல்லது நபருக்கு ஒரு மில்லியன் டாலர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சிந்துவெளி ஆய்வு மையமும் இணைந்து சிந்துவெளிப் பண்பாடு குறித்தான ஆராய்ச்சிக்கு அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கும் பொருட்டு இரண்டு கோடி ரூபாய் நிதி நல்கை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj0r5de2pqvo
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
Published By: VISHNU 08 JAN, 2025 | 09:12 PM 08ஆம் திகதி புதன்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர் யூலி சங் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் பொருளாதார சவால்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட அமெரிக்காவின் தொடர்சியான பங்களிப்பின் முக்கியத்துவம் தேவையென எடுத்துரைக்கப்பட்டது. அதனுடன் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. https://www.virakesari.lk/article/203353
-
தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை விடுவிக்குமாறு கோரி கையெழுத்து போராட்டம்
விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவித்து மாவீரர் தினத்தில் தமது பிள்ளைகளுக்கான நினைவேந்தலை சுதந்திரமாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கையெழுத்து போராட்டம் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணிக் குழு உறுப்பினர்கள், மாவீரர்கள், பெற்றோர்கள், உரித்துடையவர்கள் இணைந்து குறித்த கையெழுத்து போராட்டத்தை முன்னெடுத்தனர். தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தின் காணியின் பெரும்பகுதி இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டிருக்கின்ற நிலைமையில்,குறித்த துயிலுமில்ல காணிக்கு முன்பாக கையெழுத்து போராட்டம் நடைபெற்றது. https://thinakkural.lk/article/314489
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
'கைதான நபர் திமுக அனுதாபி' - அண்ணா பல்லைகக்கழக மாணவி வன்கொடுமை பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது என்ன? பட மூலாதாரம்,TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY படக்குறிப்பு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் இன்று தமிழக சட்டப்பேரவையில் எதிரொலித்தது. அ.தி.மு.க உறுப்பினர்கள் கறுப்பு சட்டை அணிந்தும் பேட்ஜ் அணிந்தும் அவைக்கு வந்திருந்தனர். மாணவி விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த அதிமுக, "கடந்த ஆட்சியில் 3 முறை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்ட நபர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்தது எப்படி?" என்று கேள்வி எழுப்பியது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த விளக்கம் என்ன? கைதான நபர் குறித்தும், 'யார் அந்த சார்?' என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்தும் அவர் கூறியது என்ன? இந்த தீர்மானத்தின் மீது காங்கிரஸ், விசிக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பேசியது என்ன? அண்ணா பல்கலை. மாணவி வழக்கு: எஃப்.ஐ.ஆர். வெளியானது எப்படி? சிறப்பு விசாரணைக் குழுவில் உள்ள 3 அதிகாரிகள் யார்? 'வளாகம் மட்டுமல்ல, வகுப்பறையிலும் கூட பிரச்னைதான்' - அண்ணா பல்கலை. மாணவிகள் கூறியது என்ன? சென்னை மாணவி பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை வெளியிட்டால் என்ன தண்டனை? அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம்: இந்த முடிவை எடுத்தது ஏன்? விமர்சனங்கள் பற்றி என்ன கூறினார்? அ.தி.மு.க சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதி.மு.க உறுப்பினர்கள் கறுப்பு சட்டை அணிந்தும் பேட்ஜ் அணிந்தும் வந்திருந்தனர். இதில் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், இந்த விவகாரத்திற்கு, பல்கலைக் கழகத்தின் வேந்தரான ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டுமெனக் குறிப்பிட்டார். புரட்சி பாரதம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான பூவை ஜெகன்மூர்த்தி, பல்கலைக்கழக பதிவாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பினார். கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியைச் சேர்ந்த ஈஸ்வரன் பேசும் போது, பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாததுதான் இதற்குக் காரணம் எனக் குற்றம்சாட்டினார். தமிழக கல்விக் கட்டமைப்பின் மீது ஆளுநரால் மோசமான தாக்குதல் நடைபெற்று வருவதாக வி.சி.கவின் சிந்தனைச் செல்வன் குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சியின் செல்வப் பெருந்தகை தெரிவித்த சில கருத்துகளுக்கு அ.தி.மு.கவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதற்குப் பிறகு அ.தி.மு.க சார்பில் பேசிய எதிர்க் கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், "மூன்று முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தது எப்படி? இந்த விவகாரத்தில் முதலமைச்சர் இதுவரை பதில் சொல்லாதது ஏன்" எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் ரகுபதி, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அந்த நபர் மீது போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார். பட மூலாதாரம்,TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY படக்குறிப்பு, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல் – பதிலடி கொடுத்த ட்ரூடோ8 ஜனவரி 2025 ஹெச்.எம்.பி.வி: கொரோனா போன்றதா? பயப்பட வேண்டுமா? 7 முக்கிய கேள்விகளும் பதில்களும்4 மணி நேரங்களுக்கு முன்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் இதற்குப் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்தார். "குற்றம் நடந்த பிறகு குற்றவாளியைக் கைதுசெய்யாமல் விட்டிருந்தாலோ, காப்பாற்ற முடிவுசெய்திருந்தாலோ அரசை நீங்கள் குறை சொல்லலாம். ஆனால், சில மணி நேரங்களில் குற்றவாளி கைது செய்யப்பட்ட பிறகும், அரசைக் குறை செல்வது அரசியல் ஆதாயத்திற்கானது. டிசம்பர் 24ஆம் தேதி பிற்பகல் மாணவி கோட்டூர்புரம் காவல்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு அடுத்த நாள் காலை குற்றவாளி கைது செய்யப்பட்டார். இதற்குப் பிறகு முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்துக் கேட்கிறார்கள். அதற்கு காரணம், மத்திய அரசின் கீழ் செயல்படும் என்.ஐ.சி.தான். காவல்துறை சுட்டிக்காட்டியவுடன் அது சரிசெய்யப்பட்டது. சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லையென பொத்தாம்பொதுவாக சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் சரியானவையல்ல. குற்றவாளி அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில்தான் கைது செய்யப்பட்டார். முதல் தகவல் அறிக்கையின்படி, 'யார் அந்த சார்?' எனக் கேட்கிறீர்கள். உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி நியமிக்கப்பட்ட புலனாய்வுக்குழுதான் இதனை விசாரிக்கிறது. கைது செய்யப்பட்டவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தப் புலன் விசாரணையில் வேறு யாராவது குற்றவாளிகள் இருந்தால் அவர்கள் மீது தயவுதாட்சண்யம் இல்லாமல் காவல்துறை நடவடிக்கை எடுக்கும்", என்று பேசினார். பொங்கல் வெளியீடு திரைப்படங்கள் சொல்லும் கதை என்ன? இறுதிப் பட்டியலில் எத்தனை படங்கள்?4 மணி நேரங்களுக்கு முன்னர் ஓயோ: மீரட்டில் திருமணமாகாத ஜோடிகளுக்கு இனி அறை கிடைக்காதா? - புதிய விதி கூறுவது என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தொடர்ந்து பேசிய அவர், "இந்த வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்படும். விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கும். எதிர்க்கட்சிகள் மீண்டும் மீண்டும் 'யார் அந்த சார்?' என குற்றம்சாட்டுகிறார்கள். உங்களிடம் அதற்கு ஆதாரம் இருந்தால் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் சொல்லுங்கள். அதை விட்டுட்டு ஒரு மாணவி சம்பந்தப்பட்ட வழக்கில் மலினமான அரசியலில் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டாம். இது மக்கள் மத்தியில் எடுபடாது. இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான முதல் பத்து மாநகரங்களில் கோவையும் சென்னையும் இருக்கின்றன. பெண்கள் அதிகம் பேர் வேலைக்குச் செல்லும் மாநிலம் தமிழ்நாடுதான். மனசாட்சி இல்லாமல் பெண்களின் பாதுகாவலர் மாதிரி பேசுபவர்கள், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என நினைத்துப் பாருங்கள். பொள்ளாச்சியில் நடந்தது, ஒரே ஒரு பெண்ணுக்கு நடக்கவில்லை. பல பெண்களுக்கு நடந்தது. ஒரு கும்பலே இதைச் செய்தது. அ.தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சி.பி.ஐ.க்கு போன பிறகுதான் வழக்கில் முன்னேற்றம் இருந்தது. பாதிக்கப்பட்ட பெண் தன் அண்ணனிடம் இதைப் பற்றிச் சொன்னவுடன் அவர் சம்பந்தப்பட்டவர்கள் நான்கு பேரை பொள்ளாச்சி டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பாலியல் தொல்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தினார். ஆனால், காவல்துறை வழக்குப் பதிவுசெய்யவில்லை. எல்லோரையும் விடுவித்துவிட்டார்கள். இதுதான் அன்றைய 'சார்' ஆட்சியில் சட்டம் - ஒழுங்கின் லட்சணம். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை, குற்றம்சாட்டியவரிடமே கொடுத்தார்கள். அ.தி.மு.க பிரமுகர் நாகராஜ், பெண்ணின் சகோதரரை தாக்கினார். பிரச்னை பெரிதானதும் முக்கிய நபரான திருநாவுக்கரசை கைது செய்யாமல், மூன்று பேரை கைது செய்து விவகாரத்தை முடிக்கப்பார்த்தார்கள். ஆனால், சிபிஐ விசாரணையில் அ.தி.மு.கவினர்தான் இதில் ஈடுபட்டனர் எனத் தெரியவந்து" என்றார். சென்னை: 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பெண் காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் கைது8 ஜனவரி 2025 ஒரே ஆண்டில் 268 பேர் தானம்: தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்பு தானம் அதிகரிப்பது ஏன்?7 ஜனவரி 2025 படக்குறிப்பு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்தத் தருணத்தில் அ.தி.மு.கவினர் எழுந்து கடுமையாக கோஷமிட்டனர். பிறகு வெளிநடப்புச் செய்தனர். இதற்குப் பிறகு மு.க.ஸ்டாலின் தனது பேச்சை மீண்டும் தொடர்ந்தார் . "இப்படி, பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய 'சார்'ங்க எல்லாம் இப்பொழுது பேட்ஜ் அணிந்துகொண்டு உட்கார்ந்திருந்து, பாதியிலேயே எழுந்து போய்விட்டார்கள். இதுபோன்று 100 சார் கேள்விகளை அ.தி.மு.கவைப் பார்த்து என்னால் கேட்க முடியும். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்திட அ.தி.மு.க. ஆட்சியில் 12 நாட்கள் ஆனது. ஆனால், சென்னை மாணவி வழக்கிலே புகார் கொடுத்த உடனே முதல் தகவல் அறிக்கை போடப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சில மணி நேரத்திலேயே குற்றவாளி கைது செய்யப்பட்டிருக்கிறார். தி.மு.க. அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக நினைத்துக்கொண்டு, உயர்கல்வி கற்க வருகிற மாணவிகளை அச்சுறுத்தி, அவர்களுடைய கல்வியைக் கெடுத்துவிடாதீர்கள் என கேட்டுக்கொள்கிறேன்" என்று மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். படக்குறிப்பு,அண்ணா பல்கலைக்கழக வளாகம் தொடர்ந்து, அண்ணா நகர் பாலியல் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும் போது, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன், தி.மு.க. அனுதாபி என்பதைத் தாங்கள் ஒப்புக் கொள்வதாகவும் முதல்வர் குறிப்பிட்டார். சென்னை அண்ணா நகர் பகுதியில் பத்து வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இது அந்தச் சிறுமியின் உறவினரான இளஞ்சிறார் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில், காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி தங்களை மோசமாக நடத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்ட சதீஷ் என்பவரைக் கைது செய்யவில்லை என்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதற்குப் பிறகு, இந்த வழக்கை சி.பி.ஐக்கு உயர்நீதிமன்றம் மாற்றியது. இதனை எதிர்த்து காவல்துறை மேல் முறையீடு செய்தது. அந்த மேல் முறையீட்டில் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை எனக் கூறிய நீதிமன்றம் மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் தற்போது அ.தி.மு.கவைத் சேர்ந்த சுதாகர் என்பவரையும், பெண் காவல் ஆய்வாளர் ராஜீ என்பவரையும் சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. இது தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கமளித்தார். அண்ணா நகர் வழக்கு தொடர்பான விவரங்களை வெளியிட்டார். அதற்குப் பிறகு, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட ஞானசேகரனைப் பற்றிக் குறிப்பிட்ட முதல்வர் அந்த நபர் தி.மு.க. அனுதாபி எனக் குறிப்பிட்டார். "சென்னை மாணவி வழக்கில் கைது செய்யப்பட்டவர் – நிச்சயமாக, உறுதியாகச் சொல்கிறேன். அவர் தி.மு.கவில் உறுப்பினராக இல்லை. தி.மு.க. ஆதரவாளர். அதை நாங்கள் மறுக்கவில்லை. அமைச்சர்களுடன் அரசியல்வாதிகளுடன் புகைப்படம் எடுத்திருக்கலாம். அது தவறில்லை. ஆனால், யாராக இருந்தாலும், தி.மு.கவினராக இருந்தாலும், நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதில் எந்த மாற்றமும் கிடையாது. அவர் தி.மு.க. உறுப்பினர் அல்ல; தி.மு.க. அனுதாபி. அதுதான் உண்மை" என்று குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cz0r0m1zr7jo
-
16ஆம் ஆண்டு நினைவு நாளில் லசந்த விக்ரமதுங்கவிற்கு கல்லறையில் அஞ்சலி
16ஆம் ஆண்டு நினைவு நாளில் லசந்த விக்ரமதுங்கவின் கல்லறைக்கு அஞ்சலி Published By: VISHNU 08 JAN, 2025 | 08:30 PM சிரேஷ்ட ஊடகவியலாளரும், 'சன்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியருமான லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், புதன்கிழமை (8) பொரளை பொதுமயானத்திலுள்ள அவரது கல்லறைக்கு முன்பாக அவரின் குடும்பத்தார், நண்பர்கள், அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியபோது.... (படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/203350 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நீதி நிலைநாட்டப்படும் என நம்புகின்றோம் - லசந்த விக்கிரமதுங்க குடும்பத்தினர் Published By: RAJEEBAN 08 JAN, 2025 | 08:33 PM தேசிய மக்கள்சக்தி அரசாங்கத்தின் கீழ் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் என அவரது குடும்பத்தினர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர். லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பிலான உண்மையை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் கண்டறிந்து நீதியை நிலைநாட்டும் என அவரது குடும்பத்தினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையின் பின்னர் நான்கு அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்துள்ளன எனினும் எந்த அரசாங்கத்திற்கு இந்த கொலைகள் குறித்து விசாரணை செய்வதற்கான அரசியல் உறுதிப்பாடு இல்லை என லசந்த விக்கிரமதுங்கவின் சகோதரர் லால் விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை குறித்து விசாரணை செய்வதாக உறுதியளிக்கவில்லை வேறு பல முக்கியமான சம்பவங்கள் குறித்தும் விசாரணை செய்வதாக உறுதியளித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் இந்த சம்பவம் குறித்து பயங்கரவாத விசாரணை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர், விடுதலைப்புலிகளே இதனை செய்தனர் என்ற ஊகத்தின் அடிப்படையில் இந்த விசாரணைகளை அவர்கள் முன்னெடுத்தனர், எனினும் 2015 இல் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் எங்கள் சட்டத்தரணி சிஐடிக்கு இந்த விசாரணையை மாற்றுமாறு கோரினார், அதனை தொடர்ந்து அதனை சிஐடிக்கு மாற்றினார்கள் அவ்வேளை ஷானி அபயசேகரவும் இந்த விசாரணைகளின் ஒரு பகுதியாக காணப்பட்டார் என லசந்தவின் சகோதரர் தெரிவித்துள்ளார். சிஐடியினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது லசந்தவின் மரணம் குறித்து பல தகவல்கள் வெளிவந்தன, இந்த கொலைகளில் ஈடுபட்டவர்களின் பெயர் முகவரிகள் கூட தெரியவந்தது என அவர் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தின் கீழ் ஷானி அபயசேகர மீண்டும் விசாரணைகளிற்கு திரும்பியுள்ள நிலையில் புதிய விசாரணைகள் அவசியமில்லை, விசாரணைகளை பூர்த்தி செய்தாலே போதும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/203351
-
கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம்!
புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம் இன்று (08) காலை 11 மணியளவில் இடம்பெற்றது. போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கையெழுத்து போராட்டம் பல்வேறு தரப்பினரதும் பேராதரவுடன் இடம்பெற்றது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும், புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. குறித்த கையெழுத்து போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ச.ஜீவராசா, வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன், கலைஞர் மாணிக்கம் ஜெகன், போராளிகள் நலன்புரி சங்கத்தினர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், வர்த்தக சங்கத்தினர், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். https://thinakkural.lk/article/314493
-
வில்பத்து தேசிய பூங்கா பகுதியில் உயிரிழந்த நிலையில் 11 டொல்பின்கள் மீட்பு
Published By: VISHNU 08 JAN, 2025 | 08:45 PM வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லைக்குட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 சாதாரண குப்பி டால்பின்கள் உயிரிழந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (7) மீட்கப்பட்டுள்ளது. முள்ளிக்குளம் தள பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய அப்பகுதிக்குச் சென்ற வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று சோதனை செய்தனர். இதன் போது டால் பின்கள் குழு ஒன்று இறந்து கிடந்ததை அவதானித்துள்ளனர். பின்னர் இறந்த டால்பின்களை மீட்டு பரிசோதித்ததன் பின்னர் இது தொடர்பான தகவல்கள் புத்தளம் நீதிவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (7) சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி அனுராதபுரம் வனவிலங்கு கால்நடை வைத்திய அலுவலக அதிகாரிகள் உயிரிழந்த டால்பின்களின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை யை மேற்கொண்டனர். இதன் போது வலையில் சிக்கியதால் அவை இறந்ததாக மருத்துவர்கள் ஊகிக்கின்றனர். மேலும் அவற்றின் மரணத்தை உறுதிப்படுத்துவதற்காக விலங்குகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பேராதனை கால்நடை மருத்துவ பீடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிய வருகிறது. https://www.virakesari.lk/article/203352
-
ரிக்ல்டன் இரட்டைச் சதம், வெரின் சதம், பலமான நிலையில் தென் ஆபிரிக்கா; பாகிஸ்தான் தடுமாறுகிறது
பாகிஸ்தானுடனான 2ஆவது டெஸ்டில் வெற்றியீட்டிய தென் ஆபிரிக்கா தொடரை முழுமையாகக் கைப்பற்றியது 06 JAN, 2025 | 10:38 PM (நெவில் அன்தனி) கேப் டவுடன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பலோ ஒன்னில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்த தென் ஆபிரிக்கா 10 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது. போட்டியில் ஒரு நாள் மீதம் இருக்க இப் போட்டியில் வெற்றியீட்டிய தென் ஆபிரிக்கா, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என முழுமையாகக் கைப்பற்றியது. இந்த வெற்றியுடன் நடப்பு ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சிக்கான அணிகள் நிலையில் 69.44 சதவீத புள்ளிகளுடன் முதலாம் இடத்தை தென் ஆபிரிக்கா நிரந்தரமாக்கிக்கொண்டது. 58 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு நான்காம் நாளான இன்று திங்கட்கிழமை மாலை இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா விக்கெட் இழப்பின்றி 61 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. அப் போட்டியில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் 425 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்த பாகிஸ்தான் பலோ ஒன் முறையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட நிர்ப்பந்திக்கப்பட்டது. போட்டியின் 3ஆம் நாளான நேற்றைய தினம் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான், நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் சகல விக்கெட்களையும் இழந்து 478 ஓட்டங்களைப் பெற்றது. இன்று காலை தனது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஷான் மசூத் 145 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். மத்திய வரிசையில் மொஹமத் ரிஸ்வான், சல்மான் அகா, ஆமிர் ஜமால் ஆகிய மூவரும் 30க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றதுடன் மேலும் இருவர் 20க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர். மொஹம்மத் ரிஸ்வான், சல்மான் அகா ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவுக்கு சிறு சோதனையைக் கொடுத்தனர். அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்ததும் தென் ஆபிரிக்கா இன்றைய தினத்திற்குள் வெற்றிபெற்றுவிடும் என்பது உறுதியானது. முதல் நாளன்று உபாதைக்குள்ளான சய்ம் அயூப் இரண்டு இன்னிங்ஸ்களிலும் துடுப்பெடுத்தாடவில்லை. பந்துவீச்சில் கெகிசோ ரபாடா, கேஷவ் மஹராஜ் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். தென் ஆபிரிக்கா சார்பாக முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதம் குவித்த ரெயான் ரிக்ல்டன் 3ஆவது நாளன்று உபாதைக்குள்ளானதால் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடவில்லை. அவருக்கு பதிலாக டேவிட் பெடிங்ஹாம் ஆரம்ப வீரராக ஏய்டன் மார்க்ராமுடன் துடுப்பெடுத்தாடினார். எண்ணிக்கை சுருக்கம் தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 615 (ரெயான் ரிக்ல்டன் 259, டெம்பா பவுமா 106, கய்ல் வெரிசன் 100, மார்க்கோ ஜென்சன் 62, கேஷவ் மஹராஜ் 40, மொஹம்மத் அபாஸ் 94 - 3 விக்., சல்மான் அகா 148 - 3 விக்.) பாகிஸ்தான் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 194 (பாபர் அஸாம் 58, மொஹம்மத் ரிஸ்வான் 46, கெகிசோ ரபாடா 55 - 3 விக்., கேஷவ் மஹராஜ் 14 - 2 விக்., க்வேனா மஃபாக்கா 43 - 2 விக்.) பாகிஸ்தான் 2ஆவது இன்: (ஃபலோ ஆன்) சகலரும் ஆட்டம் இழந்து 478 (ஷான் மசூத் 145, பாபர் அஸாம் 81, சல்மான் அகா 48, மொஹம்மத் ரிஸ்வான் 41, ஆமிர் ஜமால் 31, கம்ரன் குலாம் 28, சவூத் ஷக்கீல் 23, கெகிசோ ரபாடா 118 - 3 விக்., கேஷவ் மஹராஜ் 137 - 3 விக்., மார்க்கோ ஜென்சன் 101 - 2 விக்.) தென் ஆபிரிக்கா - வெற்றி இலக்கு 58 ஓட்டங்கள் - 2ஆவது இன்: விக்கெட் இழப்பின்றி 61 (டேவிட் பெடிங்ஹாம் 47 ஆ.இ., ஏய்டன் மார்க்ராம் 14 ஆ.இ.) ஆட்டநாயகன்: ரெயான் ரிக்ல்டன். தொடர்நாயகன்: மார்க்கோ ஜென்சன். https://www.virakesari.lk/article/203168
-
ஒரே ஆண்டில் 268 பேர் தானம்: தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்பு தானம் அதிகரிப்பது ஏன்?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை "என்னுடைய அப்பாவுக்கு 54 வயது. டீக்கடை வைத்து நடத்தி வந்தார். ஜூலை மாதம் அவருடைய டூவீலரில், ஆலங்குளத்தில் இருந்து வீட்டுக்கு வந்த போது விபத்தில் சிக்கிக் கொண்டார். காயமடைந்த அவரை நாங்கள் திருநெல்வேலி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால், அவருடைய மூளை செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரியவில்லை.," என்று விவரிக்கிறார் மகேஷ். "அவர் வாழ்நாள் முழுவதும் படுக்கையிலேயே தான் இருக்கும் நிலைமை வரும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். அவருடைய உடல் உறுப்புகளை தானமாக தந்தால் மற்றவர்கள் வடிவில் அப்பா உயிர் வாழ்வார் என்று நினைத்தோம். முதலில் சற்று யோசித்தோம். பின்னர் அதுவே சரியான முடிவு என்று பட்டது.," என்கிறார் மகேஷ். திருநெல்வேலி மாவட்டம் கரும்பனூர் பகுதியில் வாழ்ந்து வந்த மகேஷின் தந்தை எம்மேல்பாண்டியனின் (Emmelpandian) 6 உடல் உறுப்புகள் ஜூலை மாதம் 9-ஆம் தேதி அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், உடல் உறுப்புகளுக்காக காத்துக் கொண்டிருந்த நோயாளிகளுக்கு, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இருந்து வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தின் துணை ஆட்சியர் ஷேக் அய்யூப், ஆலங்குளம் தாசில்தார் ஐ. கிருஷ்ணவேல், எம்மேல்பாண்டியனின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தி, இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனர். இறந்த உறவினரின் சிறுநீரகத்தை தானம் கொடுப்பவர்கள் கைகளை தானம் கொடுக்க முன்வராதது ஏன்? 'என் கணவர் இறக்கவில்லை, உடல் உறுப்பு தானம் மூலம் 6 பேர் உருவத்தில் வாழ்வார்' உடல் உறுப்பு தானம் செய்த 6 வயது குழந்தை - இந்தியாவுக்கே முன்னுதாரணம் ஆன ரோலி பிரஜபதி முதுமை, இறப்பு இரண்டையும் வெல்ல முடியுமா? நோபல் பரிசு பெற்ற தமிழர் வெங்கி ராமகிருஷ்ணன் பேட்டி ஒரே ஆண்டில் 268 பேர் உடல் உறுப்பு தானம் கடந்த ஆண்டில், எம்மேல்பாண்டியனின் உடல் உறுப்பு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடைந்த 268 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. முன்பு எப்போதும் இல்லாத வகையில் 200க்கும் அதிகமான நபர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. 2023-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கூடுதலாக 90 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். சமீபத்தில் இத்தகைய தானங்கள் அதிகரித்து வரக் காரணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும், அதற்காக செயல்படும் மருத்துவ கட்டமைப்பும் தான் என்று தமிழக அரசு தெரிவிக்கிறது. 2024-ஆம் ஆண்டு உடல் உறுப்பு தானம் செய்தவர்கள் தொடர்பாக வெளியான தரவுகள் தெரிவிப்பது என்ன? விளக்குகிறது இந்த கட்டுரை. தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் சென்னை வேளச்சேரியில் வசித்து வந்த ரோஸ்மேரி என்பவர் கடந்த ஜூன் மாதம் 24-ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரின் குடும்பத்தினர் அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவரின் கல்லீரல் மற்றும் நுரையீரல் தானமாக வழங்கப்பட்டன. அவரின் இறுதிச் சடங்கின் போது, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவின் பேரில் ரோஸ்மேரிக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், நாகையகவுண்டபட்டியை சேர்ந்தவர் அஜய். 23 வயதான அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கினார். திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடலை தானம் செய்வதாக அவரது தந்தை தெரிவித்தார். சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரசுக்கு இந்தியாவிலும் 2 பேர் பாதிப்பு - எவ்வாறு பரவும்? எப்படி தடுப்பது?6 ஜனவரி 2025 உலகத்திலேயே 50 பேருக்கும் குறைவாக உள்ள ரத்த வகை எது?22 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயிரிழந்த எம்மேல்பாண்டியனின் இதயம் உட்பட 6 உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. "ஆரம்பத்தில் தயங்கினேன்" எம்மேல்பாண்டியன் விபத்தில் சிக்கிய பிறகு நடந்தவற்றை பிபிசி தமிழிடம் விவரித்தார் அவருடைய மகன் மகேஷ். விபத்துக்கு பிறகு திருநெல்வேலியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்மேல்பாண்டியனை சேர்த்துள்ளனர் அவருடைய உறவினர்கள். மூளைச்சாவு அடைந்துவிட்டதால் அவருக்கு எந்த சிகிச்சையும் பலனளிக்காது என்பதை மருத்துவர்கள் தெரிவித்ததாக அவருடைய மகன் மகேஷ் தெரிவித்தார். பிறகு, மற்றவர்களுக்கு அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்யலாம் என்று மருத்துவர்கள் ஒரு யோசனை வழங்கியதாகவும் தெரிவித்தார் மகேஷ். "உடனே என்னால் அப்படி ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அதனால அன்றைய தினம் நான் வீட்டுக்கு வந்து அம்மா, சித்தி, பாட்டி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் பேசினேன். தானம் செய்வது நல்ல விஷயமாகவே அவர்களுக்கும் தெரிந்தது. மறுபடியும் ஆஸ்பத்திரிக்கு சென்ற போது, மருத்துவரிடம் பேசினோம். தானம் வழங்குவது எப்படி? என்னென்ன உறுப்புகளை எடுப்பார்கள்? எப்படி அது அனுப்பப்படும்? என்பன உள்ளிட்ட எல்லா தகவல்களையும் மருத்துவர்கள் எங்களுக்கு விளக்கமாக கூறினார்கள். எங்கள் அப்பாவின் உடல் உறுப்புகளை தானமாக தருவதால் மற்றவர்களுக்கு மறுவாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்ததும், சரி என்று சொல்லி விட்டோம்" என்று விவரித்தார் மகேஷ். அதன் பிறகு அவருடைய அப்பாவின் இதயம், கல்லீரல், தோல், சிறுநீரகம் மற்றும் கார்னியாக்களை எடுத்து தேவைப்படும் நோயாளிகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டை விட உடல் உறுப்பு தானம் அதிகம் 2023-ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பின் அடிப்படையில், உடல் உறுப்புகளை தானம் செய்த அனைவரது உடலுக்கும் அரசு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட தரவுகளில், உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகரித்து வரும் போக்கை அந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. சாலை விபத்துகளில் சிக்கி மூளைச்சாவு அடைந்தவர்களின் எண்ணிக்கை 186-ஆகவும், இதர காரணங்களால் மூளைச்சாவு அடைந்தவர்களின் எண்ணிக்கை 82-ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. உடல் உறுப்புகளை தானமாக வழங்கியவர்களில் 218 பேர் ஆண்கள். 50 பேர் பெண்கள் என்றும் தமிழக அரசின் தரவு தெரிவிக்கிறது. மொத்தமாக அவர்களிடம் இருந்து பெறப்பட்ட 1,500 உடல் உறுப்புகள் பிறருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளன. சிறுநீரகத்தில் கல் உருவாவது எப்படி? அது எப்போது உயிருக்கே ஆபத்தாக முடியும்?14 டிசம்பர் 2024 உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?29 நவம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2024-ஆம் ஆண்டு உடல் உறுப்புகளை தானமாக வழங்கியவர்களில் 218 பேர் ஆண்கள். 50 நபர்கள் பெண்கள் அதிகரிக்கும் உடல் உறுப்பு தானம் 2008-ஆம் ஆண்டு முதல் முறையாக உடல் உறுப்பு தானம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அந்த திட்டத்தை அறிமுகம் செய்தார். அதன் பிறகு அதிமுக ஆட்சியின் போது 2015-ஆம் ஆண்டு தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் உருவாக்கப்பட்டு இன்று முதல் செயல்பட்டு வருகிறது. 2008-ம் ஆண்டில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை 7. அதன் பிறகு படிப்படியாக அதிகரித்து வந்த உடல் உறுப்பு தானம், கொரோனா தொற்று காலத்தில் மட்டும் குறைந்தது. 2023-ஆம் ஆண்டில் 178 பேரும், 2024ம் ஆண்டில் 268 பேரும் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர் என்கிறது தமிழக அரசின் தரவுகள். 2022ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் படி டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிக அளவில் உடல் உறுப்பு தானங்கள் நிகழ்ந்துள்ளன. டெல்லியில் 3,818 உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டிருப்பதாக அந்த தரவு தெரிவிக்கிறது. தமிழ் நாட்டில் 2,245 உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த உறுப்புகள் உயிருடன் இருப்பவர்கள் மற்றும் இறந்தவர்களிடம் இருந்து தானமாக பெறப்பட்டு மற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த தரவில், வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் 85 பேருக்கு இதயம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. நுரையீரல் தானத்தில் தெலுங்கானாவுக்கு அடுத்தபடியாக 50 நுரையீரல்கள் தமிழ் நாட்டில் தானம் வழங்கப்பட்டுள்ளன என்றும் அந்த தரவுகள் கூறுகின்றன. தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் அதிகரிப்பது ஏன்? தமிழ்நாட்டில் உடல் உறுப்புகளை தானம் செய்வது அதிகரித்து வருவது ஏன்? என்ற கேள்வியை பிபிசி தமிழ், தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையத்தின் (TRANSTAN) உறுப்பினர் செயலராக பணியாற்றும் மருத்துவர் என்.கோபாலகிருஷ்ணனிடம் முன்வைத்தது. "அரசு, அதிகாரிகள், மருத்துவக் குழுக்கள், ஊடகங்கள் மற்றும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்ற ஐந்து அம்சங்களே உடல் உறுப்பு தானங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருவதற்கு காரணமாக அமைந்துள்ளது," என்று தெரிவிக்கிறார் கோபாலகிருஷ்ணன். "ஆரம்பத்தில் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி (MMC)-யில் தான் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட பிறகு 'மரியாதை அணிவகுப்பு' நடத்தப்பட்டது. உறுப்புகளை தானம் செய்தவரின் உடலை, ஆம்புலன்ஸிற்கு மாற்றும் வரை மருத்துவர்கள், மருத்துவக் குழுவினர் அந்த அணிவகுப்பை நடத்தி மரியாதை செய்தனர். 2023-ஆம் ஆண்டு அரசு வெளியிட்ட அரசாணைக்குப் பிறகு, இவ்வாறு தானம் செய்யப்பட்ட நபர்களின் உடல்களுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு மரியாதை வழங்கப்படுகிறது. அவர்கள் இல்லாத போது, அவர்களின் உத்தரவுகளின் பேரில் இந்த அரசு மரியாதை தரப்படுகிறது," என்று தெரிவித்தார் அவர். மருத்துவர்களின் பங்களிப்பு குறித்து பேசும் போது, "அவர்களின் இதர பணிகளுக்கு மத்தியில் இதனை கூடுதல் பொறுப்பாக, தன்னார்வத்துடன் மருத்துவர்கள் எடுத்துக் கொண்டனர். நோயாளிகள் மூளைச்சாவு அடைந்துவிட்டார்களா என்பதை உறுதி செய்வது முதல், அவர்களின் உடல் உறுப்புகளில் தானம் வழங்க ஆரோக்கியமாக இருக்கும் உறுப்புகளை தேர்வு செய்தல் போன்ற பணிகள் வரை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்." என்று அவர் குறிப்பிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வந்த ஓரிரு நிமிடங்களில் வெளியேறிய ஆளுநர் ரவி - என்ன நடந்தது?6 ஜனவரி 2025 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான பனிப்புயலை எதிர்கொள்ளும் அமெரிக்கா - மாகாணங்களில் அவசர நிலை6 ஜனவரி 2025 பட மூலாதாரம்,TRANSTAN.TN படக்குறிப்பு,தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையத்தின் (TRANSTAN) உறுப்பினர் செயலராக பணியாற்றும் மருத்துவர் என்.கோபாலகிருஷ்ணன் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கட்டமைப்பு வசதிகளையும் ஒரு முக்கியமாக அம்சமாக அவர் தெரிவிக்கிறார். "ஆரம்பத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வழங்க போதுமான வசதிகள் இருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் தான் இத்தகைய உறுப்பு தான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இறந்தவர்களின் உடல் உறுப்புகளை சரியான முறையில் பயன்படுத்தும் வகையில், உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் பெற்று இதர மருத்துவமனைகளுக்கு அனுப்ப Non-Transplant Organ Retrieval Centres அமைப்பதற்கான உரிமம் பல மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலமும் உறுப்பு தானங்கள் அதிகரித்துள்ளன," என்பதை அவர் தெரிவிக்கிறார். "இந்த ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் வெளிப்படையாக தமிழக அரசு செய்து வருகிறது. யாருக்கு எந்த உறுப்புகள் தேவை என்பது துவங்கி, யார் மூளைச்சாவு அடைந்துள்ளார்கள், அவர்களின் உறுப்புகள் எங்கே வழங்கப்படுகிறது என்பது வரை தெரிந்து கொள்வதற்கு வெளிப்படையான இணையதளம் செயல்படுகிறது. இதனால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையும் ஒரு முக்கிய காரணம்," என்றும் கோபாலகிருஷ்ணன் தெரிவிக்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cj0rl57364ro
-
இந்தியாவின் சத்தீஸ்கரில் நக்சல் கண்ணிவெடி தாக்குதலில் 8 வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு
07 JAN, 2025 | 12:44 PM சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தீவிரவாதிகள் நேற்று நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 33 மாவட்டங்கள் உள்ளன. இதில் 13-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நக்சல் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சத்தீஸ்கர் காவல் துறை சார்பில் கடந்த 2008-ம் ஆண்டில் மாவட்ட ரிசர்வ் குரூப் (டிஆர்ஜி) என்ற சிறப்பு படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. இதில் தற்போது 3இ500 வீரர்கள் உள்ளனர். டிஆர்ஜி படைப் பிரிவு வீரர்கள்இ வனப்பகுதிகளில் முகாம் அமைத்து நக்சல் தீவிரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர். இதன்காரணமாக கடந்த 2008-ம் ஆண்டு முதல் இதுவரை சத்தீஸ்கரில் 80 சதவீத நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 90-க்கும் மேற்பட்ட என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டன. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த சனிக்கிழமை சத்தீஸ்கரின் நாராயண்பூர் தண்டேவாடா மாவட்ட எல்லைப் பகுதிகளில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட டிஆர்ஜி படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அபுஜ்மாத் வனப்பகுதியில் நக்சல் தீவிரவாதிகள் மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருதரப்புக்கும் இடையே நள்ளிரவு வரை துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 5 நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். டிஆர்ஜி படையின் தலைமை காவலர் சன்னு கரம் வீரமரணம் அடைந்தார். அபுஜ்மாத் வனப்பகுதியில் என்கவுன்ட்டர் நடத்திய டிஆர்ஜி படை வீரர்களில் ஒரு பிரிவினர் நேற்று பிஜாப்பூர் மாவட்ட வனப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தனியார் காரில் அம்பிலி பகுதியில் அவர்கள் சென்றபோது சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்துச் சிதறியது. இதில் கார் தூக்கி வீசப்பட்டது. காரில் பயணம் செய்த 8 டிஆர்ஜி வீரர்கள் ஓட்டுநர் உயிரிழந்தனர். இதுகுறித்து பஸ்தர் பகுதி காவல் துறை ஐஜி சுந்தர்ராஜ் கூறியதாவது: கடந்த 3 நாட்களாக மாநில காவல் துறையும் டிஆர்ஜி வீரர்களும் இணைந்து நக்சல் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதில் ஒரு பிரிவினர் காரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சனிக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு அவர்களின் கார் கண்ணிவெடியில் சிக்கியது. காரின் பாகங்கள் சுமார் 30 அடி தொலைவுக்கு வீசப்பட்டு உள்ளன. சுமார் 25 அடி உயரம் உள்ள மரத்தின் கிளைகளில் இருந்தும் காரின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. கண்ணிவெடி வெடித்த இடத்தில் 10 மீட்டர் ஆழத்துக்கு மிகப்பெரிய பள்ளம் உருவாகி உள்ளது. சம்பவ இடத்துக்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டு உள்ளன. வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. இவ்வாறு ஐஜி சுந்தர்ராஜ் தெரிவித்தார். சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ கூறும்போது “நக்சல் தீவிரவாதிகள் விரக்தியில் உள்ளனர். இதனால் கோழைத்தனமான தாக்குதலை நடத்தி உள்ளனர். உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். நக்சல் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்" என்று தெரிவித்தார். சத்தீஸ்கர் துணை முதல்வர் அருண் கூறும்போது “நக்சல் தீவிரவாதிகள் கோழைத்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். உயிரிழந்த டிஆர்ஜி வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் உயிர்த்தியாகம் வீணாகாது. நக்சல் தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதம் வேரறுக்கப்படும்" என்று தெரிவித்தார். சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பை (என்ஐஏ) சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் கண்ணிவெடி நேரிட்ட பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். தாக்குதலுக்கு என்ன வகையான வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து மாநில காவல் துறையிடம் அவர்கள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். முதல்கட்ட விசாரணையில்இ கண்ணிவெடி தாக்குதலுக்கு சுமார் 100 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. https://www.virakesari.lk/article/203209
-
ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு தொடர்ச்சியான நிதி, தொழில்நுட்ப உதவி - "Clean Sri Lanka" வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக JICA உறுதி
07 JAN, 2025 | 03:18 PM இலங்கைக்கு தொடர்ச்சியான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஹாரா சொஹெய் (Hara Shohei) தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஹாரா சொஹெய் ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது. ஜப்பான் உதவியில் முன்னெடுக்கப்படும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாக அபிவிருத்தி தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. ஜயிக்கா உதவியில் முன்னெடுக்கப்படும் அனைத்து வேலைத்திட்டங்களையும் விரைவில் நிறைவு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டிற்கு ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய உதவி மற்றும் எதிர்காலத்தில் இலங்கைக்கு தேவையான நிதி உதவிகளை வழங்க ஜயிக்கா நிறுவனம் எதிர்பார்ப்பதாகவும் ஹாரா சொஹெய் மேலும் தெரிவித்தார். இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் முன்னணி வேலைத்திட்டமான "Clean Sri Lanka" திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்த சிரேஷ்ட உப தலைவர், அந்த வேலைத்திட்டத்திற்கு அவசியமான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார். இந்நாட்டின் போக்குவரத்து கட்டமைப்பு மறுசீரமைப்பு மற்றும் நகர தூய்மையாக்கல் பணிகளுக்கு ஜயிக்கா நிறுவனத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளக்கூடிய நிதி மற்றும் பௌதீக உதவிகள் தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஜனப்பான் தூதுவர் இசோமதா அகியோ, ஜப்பான் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் கென்ஜி ஒஹாஷி,ஜயிக்கா நிறுவனத்தின் இலங்கைக்கான முதன்மைப் பிரதிநிதி டெட்சுயா யமடா, சிரேஷ்ட பிரதிநிதி யூரி இடே உள்ளிட்ட ஜப்பான் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/203218
-
ஜனவரி நடுப் பகுதியில் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!
14 ஆம் திகதி ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் Published By: DIGITAL DESK 3 07 JAN, 2025 | 03:46 PM ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 14 ஆம் திகதி சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இதனை இன்று செவ்வாய்க்கிழமை (07) அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/203230