Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 27 DEC, 2024 | 05:33 PM இலங்கை - இந்திய மீனவர்களுக்கு இடையே இனிமேல் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறாது என கடற்றொழில் இ.சந்திரசேகரன் அமைச்சர் இன்று வெள்ளிக்கிழமை (27) தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர், "ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் இந்தியாவுக்கு விஜயத்தினை மேற்கொண்டபோது இலங்கை - இந்திய மீனவர்களிடையே ஒரு மனிதாபிமானமான தீர்மானம் எட்டப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. அந்த தீர்மானத்துக்கான கலந்துரையாடல் எப்போது எங்கிருந்து ஆரம்பிக்கப்படும்?" என கேள்வி எழுப்பியவேளை அதற்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்துவிட்டது. இனி பேச்சுவார்த்தை எதுவும் இல்லை. மீன்பிடி அமைச்சில் இருக்கின்ற அதிகாரிகளும் இந்தியாவில் இருக்கின்ற அதிகாரிகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. அந்த பேச்சுவார்த்தைகள் தொடரும். அதில் தொழில்நுட்ப ரீதியான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பேசப்படுகின்றது. மனிதாபிமான உதவிகளை வாங்குவதோ கொடுப்பதோ தொடர்பாக ஒரு பேச்சுவார்த்தைக்கு நாங்கள் செல்லப்போவதில்லை. இதுதான் எங்களது மனிதாபிமான நடவடிக்கை என நாங்கள் கூறுகின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/202323
  2. திபெத்திய பீடபூமியின் கிழக்கு பகுதியில் மிகப்பெரிய நீர்மின் அணையை கட்டுவதற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அணைத் திட்டமானது இந்தியா மற்றும் பங்களாதேஷில் உள்ள லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. திபெத்தில் உருவாகும் நதி யார்லுங் சாங்போ. இந்த நதி திபெத்தை விட்டு தெற்கே இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களிலும் இறுதியாக வங்காளதேசத்திலும் பாயும் போது பிரம்மபுத்திரா நதியாக மாறுகிறது. இந்த யார்லுங் சாங்போ நதியைத் தடுத்து மிகப்பெரிய அணையை கட்ட சீனா முயற்சித்து வருகிறது. முன்னதாக, 2020ம் ஆண்டில், சீனாவில் உள்ள பவர் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப் என்ற நிறுவனம், தன்னாட்சி பெற்ற திபெத்தில் உற்பத்தியாகும் யார்லுங் சாங்போ ஆற்றில் அணை கட்டினால் ஆண்டுதோறும் 300 பில்லியன் கிலோவாட்-மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று கூறியிருந்தது. அதன் அடிப்படையில் யார்லுங் சாங்போ ஆற்றில் அணைகட்ட சீனா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அணையானது மத்திய சீனாவில் உள்ள உலகின் மிகப்பெரிய த்ரீ கோர்ஜஸ் அணையின் 88.2 பில்லியன் kWh வடிவமைக்கப்பட்ட கொள்ளளவை விட மூன்று மடங்கு அதிகமாகும். இத்திட்டத்தின் மூலம் சீனாவின் கார்பன் உச்சம் மற்றும் கார்பன் நடுநிலைமை இலக்குகளை அடைவதிலும், பொறியியல் போன்ற தொடர்புடைய தொழில்களை அதிகப்படுத்துவதிலும், திபெத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் இந்தத் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. அணை கட்டுவதற்காக 254.2 பில்லியன் யுவான் ($34.83 பில்லியன்) செலவாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த அணை கட்டும் திட்டத்தை திபெத்தில் அமல்படுத்தினால் எத்தனை பேரை இடமாற்றம் செய்யும் என்பதையும், பீடபூமியில் உள்ள பணக்கார மற்றும் மிகவும் வேறுபட்ட உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்பை அது எவ்வாறு பாதிக்கும் என்பதையும் அதிகாரிகள் குறிப்பிடவில்லை. ஆனால், திபெத்தில் கட்டப்பட உள்ள அணையினால் சுற்றுச்சூழலோ அல்லது கீழ்நிலை நீர் விநியோகத்திலோ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சீன அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும், இந்தியா மற்றும் வங்காளதேசத்திற்கு இது பெரும் தலைவலியை உண்டு பண்ணும். இந்த அணைக்கட்டுவதால் ஆற்றின் ஓட்டம் மற்றும் அதன் போக்கும் மாறக்கூடும் என்று சொல்லப்படுகிறது. https://thinakkural.lk/article/314181
  3. மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை! 27 DEC, 2024 | 04:25 PM எதிர்வரும் காலங்களில் மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளின், சாரதி அனுமதிப்பத்திரம் சுமார் 12 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படும் அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். ஆகையால், மதுபோதையில் வாகனம் செலுத்த வேண்டாம் என அனைத்து சாரதிகளையும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதேவேளை, நேற்று வியாழக்கிழமை (26) காலை 06 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 395 சாரதிகளுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில், பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய, நாடு முழுவதும் விசேட போக்குவரத்து நடவடிக்கை கடந்த 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சிறப்பு நடவடிக்கை பொலிஸாரால் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/202284
  4. மன்மோகன் சிங்கின் மறைவுக்கு மூத்த அரசியல் பிரமுகர்கள் இரங்கல் Published By: DIGITAL DESK 3 27 DEC, 2024 | 04:27 PM (எம்.மனோசித்ரா) இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் நேற்று வியாழக்கிழமை டில்லியில் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள இலங்கையின் மூத்த அரசியல் தலைவர்கள், போரின் பின்னரான காலப்பகுதியில் மீள் குடியேற்றம், மறுசீரமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்கள் போன்றவற்றில் இலங்கைக்கு அவர் வழங்கிய ஒத்துழைப்புக்களை நினைவு கூர்ந்துள்ளனர். அத்தோடு தமிழ்த் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உண்மையாக உழைத்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை டில்லியில் மன்மோகன் சிங்கின் உடலுக்கு நேரடியாக அஞ்சலி செலுத்திய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்நாட்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது, 'இலங்கை - இந்திய உறவுகளை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதில் மன்மோகன் சிங் ஆர்வத்துடன் செயற்பட்டிருந்தார். கடந்த சில வருடங்களாக அவரது உடல் நிலை ஆரோக்கியமானதாக இல்லாததால் நேரடியாக சந்தித்து பேச முடியாமல் போனது. இருப்பினும் இரு நாடுகளுக்குமான இழப்பாக அவரது மறைவை கருத முடிகிறது. இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்ததன் பின்னர் 50 ஆயிரம் வீட்டு திட்டத்தை இலங்கைக்கு வழங்குவதில் அவர் முன்னின்று செயற்பட்டிருந்தார். இந்தியாவின் பொருளாதாரத்துக்கு மன்மோகன் சிங்கின் சேவை என்பது முக்கியத்துவமுடையதாகக் காணப்பட்டது. அதேபோன்று தான் தற்போதும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தின் கீழ் இந்தியாவின் பொருளாதாரம் உலக தரத்தை நோக்கி பயணிக்கிறது. மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த காலத்தில் இலங்கையின் உள்ளகப் போர் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. இந்த போரின் பின்னரான காலப்பகுதியில் மீள் குடியேற்றம், மறுசீரமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்கள் போன்றவற்றில் இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்யிருந்தார். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது.' எனக் குறிப்பிட்டார். இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோரும் தமது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இரங்கல் செய்திகளைப் பகிர்ந்துள்ளனர். அந்த வகையில் 'முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. மன்மோகன் சிங் ஒரு தொலைநோக்கு பொருளாதார நிபுணர். இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலின் சிற்பியுமாவார். அவரது பங்களிப்புகள் இந்தியாவிற்கு ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இந்திய மக்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 'முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் மறைவைக் கேள்வியுற்று மிகுந்த வருத்தமடைகிறோம். அவர் அறிமுகப்படுத்திய பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவை மாற்றியமைத்தன. அவை முழு பிராந்தியத்திற்கும் ஒரு உத்வேகமாக அமைந்தன. முன்னேற்றம் மற்றும் நேர்மை மீதான அவரது அர்ப்பணிப்பு எமக்கு தொடர்ந்தும் ஊக்கமளிக்கும். இந்த துயரமான தருணத்தில், அவரது குடும்பத்தினருக்கும் இந்திய மக்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.' எனக் குறிப்பிட்டுள்ளார். 'முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்காக இந்திய மக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள். நவீன இந்தியாவின் பொருளாதார மறுமலர்ச்சியின் சிற்பியான ஒரு சிறந்த மனிதர், இலங்கையில் தமிழ்த் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உண்மையாக உழைத்தவர்.' என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, 'மன்மோகன் சிங், ஒரு தொலைநோக்கு பொருளாதார நிபுணரும் அரசியல்வாதியுமாவார். அவரது நுட்பமான தலைமையின் கீழ் 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியா குறிப்பிடத்தக்க மறுமலர்ச்சியடைந்தது. அவரது நடைமுறைக் கொள்கைகள் மற்றும் பொருளாதார தாராளமயமாக்கலுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை இந்தியாவின் வளர்ச்சி மற்றும் செழுமையை நோக்கிய பயணத்தை விரிவாக்கி , உலக அரங்கில் முடிவற்ற எழுச்சிக்கு களம் அமைத்தன.' எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/202285
  5. கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது கடும் தாக்குதல் கிளிநொச்சியில் கறுப்பு நிற வாகனமொன்றில் வந்தவர்கள் ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை கடத்த முற்பட்டவேளை அவர் அதில் இருந்து தப்ப முயன்றவேளை அவரை கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஏ9 வீதி ரெலிக்கொம் முன்பாக நேற்று மாலை 5.20 மணியளவில் நடைபெற்றுள்ளது. இனந்தெரியாத இரண்டு நபர்களே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரியவருகிறது. அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி புறப்பட்டுக்கொண்டிருக்கையில், கறுப்பு நிற வானில் வந்த இனந்தெரியாதவர்கள் தன்னை தாக்கி வானுக்குள் ஏற்றி கடத்த முயன்றதாகவும் தான் அங்கிருந்து தப்பியுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் தெரிவித்தார். இத் தாக்குதல் தொடர்பாக தொடர்பாக கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/314166
  6. இன்று என்னுடையது நாளையும் என்னுடையதாகயிருக்கும் என நான் ஒருபோதும் நம்புவதில்லை - மக்கள் என்னை கொண்டாடுவதையும் நம்புவதில்லை - மனம்திறந்தார் அஸ்வின் Published By: RAJEEBAN 27 DEC, 2024 | 12:16 PM சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வுபெறுவதற்கானதனது முடிவு குறித்து மனம் திறந்துள்ள இந்திய சகலதுறை வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் .இன்று என்னுடையது நாளையும் என்னுடையதாகயிருக்கும் என நான் ஒருபோதும் நம்புவதில்லை என குறிப்பிட்டுள்ளார். ஸ்கை ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் பொட்காஸ்டில் மைக்கல் ஆதர்டன் நசார் ஹ_சைனுடன் உரையாடுகையில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உங்களிற்குள் எப்போதும் ஒரு கேள்வியிருக்கும்.நான் எப்போதும் சரியான முடிவை எடுக்கிறேனா என உங்களை நீங்களே கேட்டுக்கொள்வீர்கள். எனது விடயத்தில் இது சற்று வித்தியாசமானது , நான் விடயங்களை இறுகப்பற்றிக்கொள்ளும் ஒருவன் இல்லை என ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். நான் வாழ்க்கையில் ஒருபோதும் பாதுகாப்பற்றவனாக உணர்ந்ததில்லை.இன்று என்னுடையது நாளையும் என்னுடையதாகயிருக்கும் என நான் ஒருபோதும் நம்புவதில்லை. என அஸ்வின் தெரிவித்துள்ளார். இதுவே இத்தனை வருடங்களாக என்னை உயர்த்தும் காரணியாகயிருந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மக்கள் என்னை கொண்டாடுவதை நான் நம்பாததால் எதனைபற்றியும் கவலைப்படாமல் விடயங்களில் இருந்து விடுபடவிரும்பினேன் என தெரிவித்துள்ள அஸ்வின் சில நேரங்களில் இந்தியாவில் எமக்கு கிடைக்கும் வரவேற்பை- கவனத்தை நான் நம்புவதில்லை விளையாட்டே எப்போதும் முக்கியமானதாக காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். 537 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தியுள்ள ரவிசந்தின் அஸ்வின் அந்த பொட்காஸ்டில் மேலும் கருத்து தெரிவிக்கையில் கடந்த காலங்களிலும் ஓய்வு குறித்து சிந்தித்ததாகவும் ஆனால் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஆக்கபூர்வ சக்தியை இழந்துவிட்டதாக கருதியதால் இம்முறைஓய்வு பெற தீர்மானித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/202281
  7. பாக்ஸிங் டே டெஸ்ட்: ஜெய்ஸ்வாலை கோலி அவுட் ஆக்கினாரா? இன்று என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி கட்டுரை தகவல் எழுதியவர்,க.போத்திராஜ் பதவி,பிபிசி தமிழுக்காக 27 டிசம்பர் 2024, 10:50 GMT மெல்போர்னில் நடந்து வரும் பாக்ஸிங் டே டெஸ்டின் இரண்டாவது நாளான இன்று ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை அபாரமாக முடித்தது. ஆனால், இந்திய அணி பதிலடி தர முடியாமல் திணறி வருகிறது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 122.4 ஓவர்களில் 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல்நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் சேர்த்திருந்த ஆஸ்திரேலிய அணி இன்று 163 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸை முடித்தது. இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களுடன் 310 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. ரிஷப் பந்த் 6 ரன்களிலும், ஜடேஜா 4 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். சச்சினின் இந்த இன்னிங்சை பார்த்து கோலி தவறுகளை திருத்திக் கொள்வாரா? 'அவரை மன்னித்து விடுங்கள்' - ஓய்வு குறித்து தந்தையின் சர்ச்சை கருத்துக்கு அஸ்வின் பதில் மூன்றாவது டெஸ்ட் டிரா: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியா முன்னேற முடியுமா? இரண்டாவது நாளில் கவனம் ஈர்த்தவை பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருப்பதால் இந்தப் போட்டியும், அடுத்து வரும் சிட்னி டெஸ்ட் போட்டியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அது மட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி 3வது முறையாகத் தகுதி பெறுவதற்கு இரு டெஸ்ட் வெற்றிகள் தேவை என்பதால், இந்த டெஸ்ட் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஸ்மித்தின் 34வது டெஸ்ட் சதம், இந்திய அணிக்கு எதிராக (11) அதிக சதம் அடித்து ஜோ ரூட்டின்(10 சதம்) சாதனையை முந்தியது, ஜெய்ஸ்வால் சதத்தைத் தவறவிட்டது, ஜெய்ஸ்வாலை ரன்-அவுட் ஆக்கிய கோலி, மூன்றாவது செஷனில் ஆட்டம் முடிய கடைசி 25 நிமிடங்கள் இருக்கையில் 6 ரன்களுக்குள் இந்திய அணி மளமளவென 3 விக்கெட்டுகளை இழந்தது ஆகியவை இரண்டாவது நாள் ஆட்டத்தின் முக்கிய அம்சங்களாக உள்ளன. பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆடுகளம் யாருக்கு சாதகம்? இந்தியாவுக்கு கவலை தரும் விஷயங்கள் என்ன?25 டிசம்பர் 2024 அஸ்வின்: ஆட்டத்தின் போக்கை மாற்றி, திருப்புமுனையை ஏற்படுத்திய 5 முக்கிய தருணங்கள்19 டிசம்பர் 2024 இந்தியாவுக்கு எதிராக ஸ்மித்தின் மைல்கல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியின் 34 வயதான ஸ்டீவ் ஸ்மித் பெர்த் டெஸ்டை தொடர்ந்து மெல்போர்ன் எம்சிஜி மைதானத்தில் இரண்டாவது சதத்தைப் பதிவு செய்து 140 ரன்களில் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் அரங்கில் 34வது சதத்தைப் பதிவு செய்த ஸ்மித், இந்திய அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்களை விளாசிய இங்கிலாந்தின் ஜோ ரூட் சாதனையை (10 சதம்) முறியடித்து 11வது சதத்தைப் பதிவு செய்தார். அது மட்டுமல்லாமல் டெஸ்ட் அரங்கில் 10,000 ரன்களை எட்டவும் ஸ்மித்துக்கு இன்னும் 51 ரன்கள்தான் தேவைப்படுகிறது. இந்த டெஸ்ட் தொடர் முடியும் முன்பாக ஸ்மித் அந்த மைல்கல்லை எட்டுவார் எனத் தெரிகிறது. ஸ்மித் 68 ரன்களுடன் இன்றைய 2வது நாள் ஆட்டத்தைத் தொடங்கி, 167 பந்துகளில் தனது 34வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். ஸ்மித்துக்கு துணையாக ஆடிய கேப்டன் கம்மின்ஸ் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் 7வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இன்று ஆட்டம் தொடங்கியதில் இருந்து ஸ்மித்தும், கம்மின்ஸும் வேகமாக ரன்களை சேர்த்தனர். இதனால் ஆஸ்திரேலிய ரன்ரேட் சீரான வேகத்தில் உயர்ந்தது. பும்ரா ஓவர் தவிர மற்ற எந்த இந்திய பந்துவீச்சாளர்களும் ஸ்மித்துக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் பந்துவீசவில்லை. கம்மின்ஸும் ஒரு கட்டத்தில் நிலைத்து ஆடத் தொடங்கி அரைசதத்தை நெருங்கினார். இன்னும் ஒரு ரன் எடுத்திருந்தால் கம்மின்ஸ் 4வது டெஸ்ட் அரைசதத்தை நிறைவு செய்திருப்பார். ஆஸ்திரேலிய அணி, முதல் 23 ஓவர்களில் 143 ரன்களை வேகமாகச் சேர்த்தது. கடைசி வரை களத்தில் இருந்த ஸ்மித் 140 ரன்கள் (13 பவுண்டரி, 3 சிக்ஸர்கள்) சேர்த்து ஆகாஷ் தீப் பந்துவீச்சில் போல்டானார். ஸ்மித் ஆட்டமிழந்தது துரதிர்ஷ்டமானது. ஆகாஷ் தீப் வீசிய பந்தை விலகி வந்து ஆஃப் திசையில் ஸ்மித் அடிக்க முயன்றபோது, பந்து பேட்டில் பட்டு, அவரின் கால்காப்பில் பட்டு பிறகு ஸ்டெம்பில் பட்டது. இதுபோன்று போல்டானதை ஸ்மித் சற்றும் எதிர்பாராததால் மிகுந்த ஏமாற்றத்துடன் வெளியேறினார். ஒருவேளை ஸ்மித் ஆட்டமிழக்காமல் இருந்தால், 150 ரன்களுக்கு மேல் குவித்திருப்பார். கடந்த 2023 ஜூன் மாதத்துக்குப் பின் டெஸ்ட் அரங்கில் சதம் விளாசமல் இருந்த ஸ்மித் பெர்த் டெஸ்டில் சதம் அடித்த பின் தொடர்ச்சியாக 2வது சதத்தைப் பதிவு செய்து இழந்த ஃபார்மை மீட்டுள்ளார். இந்தியாவுடன் மோதும் மனநிலையில் வங்கதேசம் உள்ளதா? நிபுணர்கள் சொல்வது என்ன?25 டிசம்பர் 2024 சுட்டெரிக்கும் சூரியனின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த நாசா விண்கலம் - அதீத வெப்பத்தை தாங்குவது எப்படி?25 டிசம்பர் 2024 ஆரோக்கியமான கிரிக்கெட் சம்பவங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES பும்ராவின் பந்துவீச்சை ஸ்மித் இன்று மிகவும் ரசித்து பேட் செய்தார். பும்ராவின் துல்லியமான லென்த், ஸ்விங் பந்துவீச்சை சமாளிக்க ஸ்மித் திணறினார். ஒரு கட்டத்தில் ஸ்மித்தால் விளையாட முடியாத வகையில் பும்ரா ஒரு ஸ்விங் பந்தை வீசினார். இந்தப் பந்தை எதிர்கொண்டபின் பும்ராவை பார்த்து கை கட்டைவிரலை உயர்த்தி பம்ப் செய்து ஸ்மித் பாராட்டினார். அதேநேரம் பும்ராவின் பந்தில் ஸ்மித் சிக்ஸர் விளாசியபோதும், பும்ரா சிரித்துக்கொண்டே சென்றார். ஸ்மித் டெஸ்ட் அரங்கில் 34வது சதம் விளாசிய நிலையில் அவரின் தோள்பட்டையில் தட்டிக்கொடுத்து விராட் கோலி பாராட்டு தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி - எஃப்.ஐ.ஆரை முடக்கிய காவல்துறை26 டிசம்பர் 2024 பீட்ரூட் ஜூஸ் 'அதிசய' பானமா? உடற்பயிற்சிக்கு முன் குடித்தால் உடலில் என்ன நடக்கும்?20 டிசம்பர் 2024 ஜெய்ஸ்வாலை கோலி அவுட் ஆக்கினாரா? பட மூலாதாரம்,GETTY IMAGES ஜெய்ஸ்வால், கோலி இடையிலான பார்ட்னர்ஷிப் இந்திய அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அதேநேரம், கோலியின் ஒத்துழைக்காத போக்குதான் இந்த பார்ட்னர்ஷிப் உடையக் காரணமாக இருந்ததாகவும் விவாதிக்கப்படுகிறது. மூன்றாவது விக்கெட்டுக்கு கோலி-ஜெய்ஸ்வால் கூட்டணி 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 81 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்த டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் 150 ரன்களை அடித்த ஜெய்ஸ்வால், அதன்பின் 2 டெஸ்ட்களிலும் பெரிதாக ஆடாத நிலையில் இந்த ஆட்டத்தில் அரைசதத்தை பதிவு செய்தார். இவருக்குத் துணையாக ஆடிய கோலி, 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க உதவினாலும் இருவருக்கும் இடையே சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததால் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் ரன்-அவுட் ஆக வேண்டிய நிலை ஏற்பட்டது. பொதுவாக டெஸ்ட் போட்டியில் வேகமாக ஓடி ரன் எடுக்க வேண்டிய தேவையில்லை. ஸ்ட்ரைக்கையும் ரொட்டேட் செய்ய இது டி20 ஆட்டமும் இல்லை. அப்படியிருக்கும்போது ஜெய்ஸ்வால் மிட்-ஆன் திசையில் தட்டிவிட்டு கோலியை வேகமாக ஒரு ரன்னுக்கு ஏன் அழைத்தார் எனத் தெரியவில்லை. கோலியிடம் இருந்து எந்த சமிக்ஞையும் வராத நிலையில் பேட்டில் பந்து பட்டவுடனே ஜெய்ஸ்வால் ஏன் வேகமாக ஓடினார், கோலி க்ரீஸை விட்டு நகராத நிலையில் கோலியின் இடத்திற்கே ஜெய்ஸ்வால் ஏன் வந்தார் என்பது கேள்வியாக இருக்கிறது. ஆனால், இதில் யார் மீது தவறு உள்ளது, ஏன் கோலி க்ரீஸை விட்டு நகரவில்லை, ஜெய்ஸ்வால் சதத்தை நெருங்கிய நிலையில் நல்ல ஃபார்மில் இருக்கும்போது கோலி ஏன் விக்கெட்டை தியாகம் செய்யவில்லை என்ற கேள்வி சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. அதேவேளையில், ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தது முற்றிலும் சரியான தகவல் தொடர்பு இல்லாததால் வந்த விளைவுதான் எனவும், நீடித்து ஆட வேண்டிய இருவருக்கும் இடையே சரியான தகவல் தொடர்பு இல்லாததால் வலுவான பார்ட்னர்ஷிப் உடைந்துவிட்டது எனவும் ரசிகர்கள் விவாதிக்கின்றனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி: எஃப்.ஐ.ஆர் வெளியானதால் அதிர்ச்சி - சமீபத்திய தகவல்கள்26 டிசம்பர் 2024 புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார்: திரைத்துறையினர் இரங்கல்26 டிசம்பர் 2024 மந்தமான ரோஹித்தின் பேட்டிங் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரோஹித் சர்மா கேப்டன் ரோஹித் சர்மா கடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் நடுவரிசையில் களமிறங்கிய நிலையில் இந்த டெஸ்டில் மீண்டும் தொடக்க வீரராகக் களமிறங்கினார். ஆனால் புதிய பந்தில் கம்மின்ஸ் பந்துவீச்சை சமாளிக்க ரோஹித் சர்மா தொடர்ந்து திணறி வருகிறார் என்பது இந்த டெஸ்டிலும் உறுதியானது. கம்மின்ஸ் வீசிய 2வது ஓவரிலேயே ஷார்ட் லென்த்தாக வந்த பந்தை ஃபுல் ஷாட் அடிக்க முற்பட்டு மிட்-ஆன் திசையில் போலந்திடம் கேட்ச் கொடுத்து ரோஹித் சர்மா 3 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா இந்தப் பந்தை எதிர்கொண்டு ஆடிய விதத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்தப் பந்தை ரோஹித் சர்மா ஆடாமல் விட்டிருந்தாலே விக்கெட்டை காப்பாற்றி இருக்கலாம், எந்த பந்தை விடுவது, அடிப்பது எனத் தெரியாமல் டெய்லெண்டர் பேட்டர் போல் ரோஹித் சர்மா நம்பிக்கையிழந்த வகையில் பேட் செய்ததாக விமர்சிக்கப்பட்டார். இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை ரோஹித் சர்மா (3,6,10,3) 22 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். ரோஹித் சர்மா கடந்த 14 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் உள்பட 155 ரன்கள் மட்டுமே சேர்த்து 11 சராசரி வைத்துள்ளார். சிட்னி டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ரோஹித் சர்மாவின் டெஸ்ட் வாழ்க்கை நீடிக்குமா என்பது சந்தேகமாகியுள்ளது. ரோஹித் சர்மாவுக்கு ஓய்வுகாலம் நெருங்கிவிட்டதாக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பேசி வருகிறார்கள். 'அவரை மன்னித்து விடுங்கள்' - ஓய்வு குறித்து தந்தையின் சர்ச்சை கருத்துக்கு அஸ்வின் பதில்20 டிசம்பர் 2024 ஹெட், ஸ்மித் சதம்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா - உலக டெஸ்ட் சாம்பியன் பைனலுக்கு இந்தியா முன்னேறுமா?15 டிசம்பர் 2024 கடைசி செஷனில் மளமள விக்கெட் இந்திய அணி மூன்றாவது செஷனில் ஆட்டம் முடிய இருக்கும் கடைசி 25 நிமிடங்களில் 6 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. அதற்கு முன்பு வரை, 153 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என இந்திய அணி வலுவாக இருந்தது. ஆனால், ஜெய்ஸ்வால் ரன்-அவுட் ஆனதும், அடுத்த ஒரு ரன்னில் விராட் கோலி 36 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் போலந்த் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கோலி வாக்குவாதம் பட மூலாதாரம்,GETTY IMAGES இதே மெல்போர்ன் எம்சிஜி மைதானத்தில் கோலி சதம் அடித்திருந்த நிலையில் இந்த டெஸ்டில் 36 ரன்களில் ஏமாற்றத்துடன் வெளியேறினார். கோலி பெவிலியன் திரும்புகையில் ரசிகர் ஏதோ கூற பெவிலியன் சென்று திரும்பி வந்து அந்த ரசிகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த பாதுகாவலர் ரசிகரை அடக்கி வைத்து, கோலியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். ஆகாஷ் தீப் சிங் கடந்த டெஸ்டில் ஓரளவு சிறப்பாக பேட் செய்தார் என்பதால், நைட்வாட்ச் மேனாக களமிறக்கப்பட்டார். ஆனால் அவரும் நிலைக்காமல் போலந்து பந்துவீச்சில் ஆகாஷ் தீப் டக்-அவுட்டில் ஆட்டமிழந்தார். ஏற்கெனவே 2வது டெஸ்டில் நைட்வாட்ச் மேனாக டெய்லெண்டரை களமிறக்கி பேட்டர்களை பாதுகாக்கும் உத்தியைத் தவறாகக் கையாண்டு, ரோஹித் சர்மா கையைச் சுட்டுக்கொண்ட நிலையில் ஜடேஜா, ரிஷப் பந்த் இருவரையும் இந்த டெஸ்டில் ஆட வைத்திருந்தால் ஒரு விக்கெட் எஞ்சியிருக்கும். ஆனால் நைட்வாட்ச் என்ற பெயரில் ஆகாஷ் தீப் விக்கெட்டை தேவையின்றி இந்திய அணி இழந்தது. பும்ராவை திணற வைத்த கான்ஸ்டாஸ், டாப் ஆர்டரில் 4 அரைசதம் - இந்திய அணிக்கு சிக்கலா?26 டிசம்பர் 2024 பாக்ஸிங் டே டெஸ்ட்: விராட் கோலி, சாம் கான்ஸ்டாஸிடம் செய்த செயல் - ஐசிசி அளித்த தண்டனை என்ன?26 டிசம்பர் 2024 ஃபாலோ ஆனை தவிர்க்குமா இந்திய அணி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆகாஷ் தீப் சிங் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களுடன் 310 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. ரிஷப் பந்த் 6 ரன்களிலும், ஜடேஜா 4 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். ஃபாலோ ஆனை தவிர்க்க இந்திய அணிக்கு இன்னும் 111 ரன்கள் தேவைப்படுகிறது. இந்திய அணியின் கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தாலும் இதில் வாஷிங்டன், நிதிஷ் ரெட்டி மட்டுமே ஓரளவு பேட் செய்யக் கூடியவர்கள், மற்றவர்கள் பேட்டர்கள் இல்லை என்பதால் ரிஷப் பந்த், ஜடேஜா இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைப்பது கட்டாயமாகியுள்ளது. பும்ராவின் சாதனை விக்கெட் பும்ரா டெஸ்ட் போட்டிக்கு அறிமுகமாகி விளையாடத் தொடங்கிய நாளில் இருந்து ஒரு டெஸ்ட் தொடரில் அதிகபட்சமாக 23 விக்கெட்டுகள்தான் வீழ்த்தியிருந்தார். அதைக் கடந்து இந்த டெஸ்ட் தொடரில் 25 விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தியுள்ளார். இந்த டெஸ்டிலும் பும்ரா 99 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, 25 விக்கெட்டுகளாக உயர்த்தினார். அதுமட்டுமல்லாமல் பும்ரா தனது டெஸ்ட் வாழ்க்கையில் ஒரு போட்டியில் ஒரு இன்னிங்ஸில்கூட 100 ரன்களை விட்டுக்கொடுத்து இல்லை, அந்தச் சாதனையையும் பும்ரா தொடர்கிறார். இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் பும்ரா 99 ரன்கள்தான் விட்டுக்கொடுத்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c8j9kyxnlrgo
  8. Published By: VISHNU 27 DEC, 2024 | 07:30 PM அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் தொடர்பாக இந்தியா இனிமேல் பேசாது விட்டால் அதனால் பெருமளவுக்கு மகிழ்ச்சியடையக்கூடிய ஒருவராக நானே இருப்பேன் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். எங்களது பிரச்சினைக்கு தீர்வாக 13ஆவது திருத்தத்தை பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுக் குறிப்பிட்டுள்ள அவர், மூன்று வருடங்களில் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் வரை மாகாண சபைகள் முறை தொடர்ந்து இருக்கும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறிக்கொண்டிருந்தால் மாத்திரம் போதாது. மாகாணசபை தேர்தல்களை நடத்தி 13ஆவது திருத்தத்தை சாத்தியமானளவு அதிகாரங்களுடன் நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் அது விடயத்தில் ஓரளவு நம்பகத்தன்மையைப் பெறமுடியும் என்று பத்திரிகையாளர் ஒருவர் எக்ஸ் தளத்தில் செய்த பதிவுக்குப் பதிலளித்தே கஜேந்திரகுமார் மேற்கண்ட கருத்தை அவர் வெளியிட்டிருக்கிறார். மாகாணசபை முறையையோ அல்லது 13ஆவது திருத்தத்தையோ இல்லாமல் செய்வதற்கு இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்று வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகள் இது வரையில் நம்பிக்கை வைத்திருக்கக் கூடும். ஆனால், அண்மையில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதுடில்லி சென்ற ஜனாதிபதி அநுராகுமார திசாநாயக்கவுடன் பேச்சு வார்த்தைகளை நடத்திய பிறகு அவருடன் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 13ஆவது திருத்தத்தை பற்றி எதையுமே கூறுவதை தவிர்த்தார். இதன் மூலமாக கூறப்பட்ட செய்தியை தமிழ்க்கட்சிகள் விளங்கிக் கொண்டிருக்கின்றனவோ தெரியவில்லை என்றும் அந்த பத்திரிகையாளர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பதிலளித்துள்ள கஜேந்திரகுமார், தமிழ் மக்களின் சார்பிலேயே இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையில் இந்தியா கைச்சாத்திட்டது என்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய தாகும். சமாதான உடன்படிக்கையில் தமிழர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் வரை தமிழ் மக்கள் சார்பில் தலையீடு செய்வதற்கான கடமைப்பாடு இந்தி யாவுக்கு உண்டு என்று நான் நினைக்கிறேன். ஆனால், இன்றைய சூழ்நிலையில் சமாதான உடனபடிக்கை பொருத்த மற்றது என்று இந்தியாவே உணருமானால், அது முற்றுமுழுதாக வேறுவிடயம். நாங்கள் விரைவாக சிறந்த ஒரு தெரிவை கண்டறிய முடியும். ஒற்றையாட்சி அரசின் கீழ் எந்த அதிகாரப்பரவலாக்கமும் சாத்தியமில்லை என்று நீதிமன்றங்கள் திரும் பத்திரும்ப கூறியிருக்கும்போது 13ஆவது திருத்தத் தின் நடைமுறைப்படுத் தல் எவ்வாறு நடக்கமுடியும்? அதனால் 13ஆவது திருத்தம் இனப்பிரச்னைக்கான அரசியல் தீர்வின் தொடக்கப்புள்ளியாகக்கூட ஒருபோதும் இருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/202331
  9. மன்மோகன் சிங்: இந்தியாவின் முன்னாள் பிரதமர் காலமானார் 26 டிசம்பர் 2024 இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. உடல்நலம் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் இன்று இரவு 10.30 மணியளவில் அறிவித்தது. இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிரிழப்பை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். வயது மூப்பு காரணமாக சிகிச்சையில் இருந்த அவர் டிசம்பர் 26ஆம் தேதி சுயநினைவை இழந்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இரவு 8.06 மணி அளவில் மன்மோகன்சிங் கொண்டுவரப்பட்டார். எவ்வளவோ முயற்சி செய்த போதிலும், அவர் உயிரை காப்பாற்ற முடியவில்லை. இரவு 9.51 மணியளவில் மன்மோகன் சிங் உயிரிழந்தார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cy7kj2rv2jpo
  10. யாரும் ஒரு காலமும் யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் தரமாட்டோம் என எப்போதும் தெரிவிக்கவில்லை எனவும் யாழ் மக்கள் அந்தளவிற்கு முட்டாள் இல்லை எனவும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்று (26) இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் யாழிற்கான கிளிநொச்சி இரணைமடுக்குளம் நீர் விநியோகத்திட்டம் குறித்து யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண குடிநீருக்கான இரணைமடுக்குளம் வேலைத்திட்டமானது கடந்த கால அரசாங்களில் இருந்து தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படாதமை தொடர்பில் சுட்டிக்காட்டியே அர்ச்சுனா தனது கேள்விகளை முன்வைத்திருந்தார். இது தொடர்பில் புள்ளி விபரங்களுடன் சிறீதரனை நோக்கி கேள்விகளை சரமாரியாக முன்வைத்த அர்ச்சுனா இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படாததன் பின்ணனியில் அன்றைய காலம் முதல் அரசியல் பின்புலங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டினார். இந்தநிலையில், அர்ச்சுனா முன்வைத்த கேள்விகளுக்கு சிறீதரன் திருப்திகரமான பதில் வழங்காமல் சுற்றிவளைத்தமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/sridharan-reply-to-archuna-mp-1735208465
  11. புட்டினின் கோர முகம் - அவசர அவசரமாக யுத்தத்திற்குத் தயாராகும் ஐரோப்பிய நாடுகள்!! ஐரோப்பிய நாடுகள் அவசர அவசரமாக ஒரு யுத்தத்தை எதிர்கொள்வதற்கு தமது பிரஜைகளைத் தயார்படுத்த ஆரம்பித்துள்ளன. யுத்தத்தை எதிர்கொள்வதற்காக இந்த நாடுகள் மேற்கொண்டுவருகின்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை அங்குள்ள ஊடகங்கள் பெரிய அளவில் பரபரப்பாக்காமல் மிக மிகக் கவனமாகக் கையாண்டுவருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. ஏற்பாடுகள் நடக்கின்றன.. அறிவுறுத்தல் செய்திகளும் மக்களுக்கு வழங்கப்படுகின்றன, ஆனால் எந்தவிதப் பரபரப்போ, ஆரவாரமோ இல்லாமல். அச்சத்தை ஏற்படுத்துகின்ற இந்த விடயம் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: https://ibctamil.com/article/war-preparatios-in-europe-1735027800#google_vignette
  12. ரஸ்யாவின் ஏவுகணை தாக்குதலா? அஜர்பைஜான் விமான விழுந்து நொருங்கியமை குறித்து ஊகங்கள் 26 DEC, 2024 | 04:45 PM ரஸ்யாவின் ஏவுகணைகளே அஜர்பைஜான் விமானவிபத்திற்கு காரணம் என உக்ரைன் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இன்று காலை பக்குவிலிருந்து குரொஸ்னிக்கு பயணித்துக்கொண்டிருந்த அஜர்பைஜான் எயர்லைன்சின் எம்பிரேர் 190 விமானம் ரஸ்யாவின் பாதுகாப்பு பொறிமுறையால் சுட்டு வீழ்த்தப்பட்டது என போலித்தகவல்களை கையாள்வதற்கான உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பேரவை நிலையத்தின் தலைவர் ஆன்ரி கோவெலென்கோ தெரிவித்துள்ளார். அவர் விமானத்திற்குள் காணப்பட்ட காட்சிகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்- விமானத்தின் உள்ளே உயிர்காக்கும் அங்கிகள் துளையிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளன. இதேவேளை உக்ரைனின் ஆளில்லா விமானம் என கருதி ரஸ்யாவின் ஏவுகணைகள் அஜர்பைஜான் விமானத்தை தாக்கியிருக்கலாம் என ரஸ்ய ஊடகங்களிலும் ஊகங்கள் வெளியாகியுள்ளன. கஜகஸ்தான் விமானவிபத்தில் 31 பேர் உயிர்பிழைத்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கஜகஸ்தானில் 69 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் விமானம் விழுந்து நொருங்கியதில் 38 பேர் உயிரிழந்துள்னர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அஜர்பைஜான் எயர்லைன்சிற்கு சொந்தமான விமானம் அகாட்டு நகரில் அவசரமாக தரையிறங்க முற்பட்டவேளை தீப்பிடித்தது. https://www.virakesari.lk/article/202220
  13. பட மூலாதாரம்,HANDOUT கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இரா.நல்லகண்ணுவுக்கு இன்று (டிசம்பர் 26) நூறாவது பிறந்தநாள். அவர் சார்ந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இது நூற்றாண்டு தொடக்க விழா. 'இப்படியொரு பொருத்தம் யாருக்கும் கிடைக்காது' என்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். தன்னுடைய பிறந்தநாள் குறித்து எதுவும் பேசாமல் கட்சி மற்றும் அதன் எதிர்காலம் குறித்தே அவர் அதிகம் பேசியதாகக் கூறுகிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த லெனின். யார் இந்த நல்லகண்ணு? கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி மற்றும் போராட்டங்களில் அவரின் பங்களிப்பு என்ன? தமிழ்நாட்டின் முதல் சட்டமன்றத் தேர்தல் எப்படி நடந்தது? - தமிழக அரசியல் வரலாறு தமிழுக்காக குழந்தைகளுடன் சிறைபுகுந்த 73 பெண்கள் - அறியப்படாத முதல் மொழிப்போர் வரலாறு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அரசியல் வரலாறு: அதிரடித் திருப்பங்கள், சுவாரசிய சம்பவங்கள் சிறையும், போராட்டங்களும் நிறைந்த வாழ்க்கை இந்திய சுதந்திர போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், கனிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் எனத் தனது வாழ்நாளில் குறிப்பிட்ட பகுதியை போராட்டம், சிறை வாழ்க்கை என வாழ்ந்தவர் நல்லகண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமன்றி இதர கட்சிகளின் தலைவர்களும் 'தோழர் ஆர்.என்.கே' என்ற அடைமொழியோடு அவரை அழைக்கின்றனர். அவரது நூற்றாண்டு விழாவை சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் வியாழன் அன்று அக்கட்சியினர் கொண்டாடியுள்ளனர். ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயக் குடும்பத்தில் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ராமசாமி-கருப்பாயி தம்பதியின் மூன்றாவது மகனாக நல்லகண்ணு பிறந்தார். ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள காரனேஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்த நல்லகண்ணுவுக்கு பொதுவுடைமைக் கருத்துகளை பள்ளி ஆசிரியராக இருந்த பலவேசம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். பட மூலாதாரம்,HANDOUT பாரதியார், திரு.வி.கல்யாணசுந்தரம், விவேகானந்தர் ஆகியோரது படைப்புகளும் ஆசிரியர் பலவேசம் மூலமாகவே நல்லகண்ணுவுக்கு அறிமுகம் ஆகியுள்ளது. பாரதியாரின் பாடல்களும் திரு.வி.கவின் எழுத்துகளும் தன்னை மாற்றியதாகக் கடந்த 2016ஆம் ஆண்டில் அவருடன் நான் கலந்துரையாடியபோது கூறினார். "சாதிக் கட்டமைப்பை உடைப்பதும் சுரண்டல் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதுவும்தான் தன்னுடைய லட்சியமாக இருந்தது" என்றும் அப்போது அவர் தெரிவித்தார். கடந்த 1943ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த நல்லகண்ணு, இன்றுவரை அதே கட்சியில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறார். அதுகுறித்து நினைவுகூர்ந்த நல்லகண்ணு, "என்னுடைய 16 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர முயன்றேன். அவர்கள் என்னைச் சேர்க்கவில்லை. '18 வயது ஆகட்டும், சேர்த்துக் கொள்கிறோம்' என்றனர். 18 வயது வந்ததும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்தேன்" என்றார். "பள்ளிப் பருவத்தில் காந்தியவாதியாக நல்லகண்ணு இருந்தார். அதன்பிறகு கம்யூனிஸ்ட்டாக மாறினார். 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் மாணவர்களைத் திரட்டி போராட்டம் நடத்தினார். திருநெல்வேலியில் நடந்த சுதந்திர போராட்டங்களில் அவர் பங்கெடுத்தார்" என்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் லெனின். சென்னை மாணவி பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை வெளியிட்டால் என்ன தண்டனை?3 மணி நேரங்களுக்கு முன்னர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி - எஃப்.ஐ.ஆரை முடக்கிய காவல்துறை5 மணி நேரங்களுக்கு முன்னர் நெல்லை சதி வழக்கு பட மூலாதாரம்,HANDOUT இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த சில ஆண்டுகளில் நல்லகண்ணுவுக்கு கிளைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 1948ஆம் ஆண்டில் 'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்ற போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. ஆயுதம் தாங்கிய போராட்டமாக இது இருந்ததாகக் கூறும் லெனின், "இந்திய அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகத் தொடரப்பட்ட நெல்லை சதி வழக்கில் நல்லகண்ணு சேர்க்கப்பட்டார். அவரது மீசையை போலீஸ்காரர்கள் சுருட்டை வைத்துப் பொசுக்கினர். ஆனாலும், சக தோழர்களை அவர் காட்டிக் கொடுக்கவில்லை" என்றார். இந்த வழக்கில் ஏழு ஆண்டுகள் நல்லகண்ணு சிறையில் இருந்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு அன்னசாமி என்பவர், தனது மகள் ரஞ்சிதத்தை திருமணம் செய்து கொடுத்தார். இந்தத் திருமணம் 1958ஆம் ஆண்டு நடந்தது. இதே காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் நிலச்சுவான்தார்களின் கைகளில் நிலம் இருந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் தலித் மக்கள் வீடுகளையோ நிலங்களையோ வைத்துக்கொள்ள முடியாத நிலை இருந்துள்ளது. "நிலையான வீடு இல்லாததால் தலித் மக்களை 'ஓடும் குடிகள்' என அழைத்தனர். இதற்கு எதிராக தலித் மக்களைத் திரட்டிப் போராடி அவர்கள் குடியிருப்பதற்கான மனை உரிமையை நல்லகண்ணு பெற்றுத் தந்தார்" என்கிறார் லெனின். நல்லகண்ணுவின் அரசியல் பயணத்தில் விவசாய சங்கத்தின் பணிகளே பிரதானமாக இருந்துள்ளது. 1970 ஆம் ஆண்டில் நடந்த நில மீட்சிப் போராட்டத்தில் ஒரு சிலரின் கைகளில் இருந்த நிலங்களை மீட்பதற்காக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்தது. அப்போது தமிழ்நாட்டில் மடங்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் தொடர்பான விவரங்களைத் தொகுத்து சிறிய நூல் ஒன்றை நல்லகண்ணு வெளியிட்டார். டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை 'வாங்க விரும்புவது' ஏன்? சீனாவை சமாளிக்க அது உதவுமா?3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய வீரர் மீது மோதிய விராட் கோலிக்கு என்ன தண்டனை?5 மணி நேரங்களுக்கு முன்னர் சாதிக் கலவரத்தைத் தடுத்த நல்லகண்ணு பட மூலாதாரம்,HANDOUT "நல்லகண்ணுவின் பிரதான காலகட்டம் என்பது விடுதலைப் போராட்டமும் அதற்குப் பிந்தைய காலகட்டமும்தான்" எனக் கூறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், 1996ஆம் ஆண்டு நடந்த சாதிக் கலவரத்தைக் குறிப்பிட்டு பிபிசி தமிழிடம் சில தகவல்களைத் தெரிவித்தார். தென் மாவட்டங்களில் 1996ஆம் ஆண்டு முக்குலத்தோர் மற்றும் தலித் மக்களுக்கு இடையே சாதிக் கலவரம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக நல்லகண்ணுவின் மாமனார் அன்னசாமி கொல்லப்பட்டார். "அது கொந்தளிப்பான நேரம். சற்று பிசகினாலும் அசம்பாவிதம் நடந்திருக்கும். ஆனால் அமைதியை ஏற்படுத்தும் பணியில் நல்லகண்ணு ஈடுபட்டார். 'சிலர் செய்த தவறுக்காக ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்க முடியாது' என்பதை அவர் நிலை நிறுத்தினார்" என்கிறார் கனகராஜ். மதுரையில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தலித் ஊராட்சித் தலைவர்கள் பதவியேற்க முடியாத சூழல் நிலவியது. இதை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்த நல்லகண்ணு, சுமார் நான்காயிரம் பேரைத் திரட்டி மாபெரும் உண்ணாவிரதம் இருந்தார். "இந்தப் போராட்டம் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியது. 2006ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த கருணாநிதி தலைமையிலான அரசு, தேர்தலை நடத்தியே தீருவது என முடிவெடுத்து தேர்தலை நடத்தியது" என்று விவரித்தார் லெனின். புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார்: திரைத்துறையினர் இரங்கல்26 டிசம்பர் 2024 நிதி மோசடி புகார்: இலங்கைக்கு குடும்பத்துடன் அனுப்பப்பட்ட பெண் அகதி - 'சட்டவிரோத நடவடிக்கை' என புகார்7 மணி நேரங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் வாதாடிய நல்லகண்ணு பட மூலாதாரம்,KANAGARAJ KARUPPAIAH/FB தன்னுடைய 86 வயதிலும் கனிம வளக் கொள்ளைக்கு எதிராக நல்லகண்ணு போராடிய சம்பவம் ஒன்றை பிபிசி தமிழிடம் கனகராஜ் நினைவு கூர்ந்தார். கடந்த 2010ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் அரசு மற்றும் தனியார் மணல் அள்ளுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு நீதிபதிகள் பானுமதி, நாகமுத்து அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நேரடியாக ஆஜராகி நல்லகண்ணு வாதாடியதாகக் கூறுகிறார் கனகராஜ். "அப்போது அவருக்கு 86 வயது. இந்த வழக்கில் சட்டரீதியான வாதங்களைவிட அவர் முன்வைத்த உணர்வுபூர்வமான வாதங்கள் எடுபட்டன. தாமிரபரணி ஆற்றுக்கும் ஊருக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் தனது இளமைக் காலத்துடன் ஆற்றுக்கு உள்ள தொடர்பைப் பற்றியும் அவர் நீதிமன்றத்தில் பேசியதாக" கூறுகிறார் கனகராஜ். தாமிரபரணி ஆறு செல்லும் இடத்தின் மணல் திட்டில் கொங்கராயன் குறிச்சி, ஆறாம் பண்ணை ஆகிய கிராமங்கள் உள்ளதாகக் கூறி அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நல்லகண்ணு வாதிட்டதாகக் கூறினார் கனகராஜ். மேலும், "இதன்பிறகு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நிலவியல் தொழில்நுட்பத்துறையின் தலைவர் முனைவர் சந்திரசேகர், அதே பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் அருணாச்சலம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் பதிவாளர் சேஷஷாயி ஆகியோர் கொண்ட சட்ட ஆணையத்தை நீதிமன்றம் நியமித்தது. அந்த ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் ஐந்து ஆண்டுகளுக்கு மணல் அள்ளுவது தடுக்கப்பட்டது" என்றார் அவர். இந்த மணலின் மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் என நிபுணர் குழு அப்போது அறிக்கை அளித்ததாகவும் கனகராஜ் குறிப்பிட்டார். 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மூத் யானைக் குட்டியின் உடல் மீட்பு - சுவாரசிய தகவல்கள்6 மணி நேரங்களுக்கு முன்னர் 'என்னை பேய் என நினைத்தனர்' - சுனாமியின்போது 3 வாரங்களாக தனியே இருந்து உயிர்பிழைத்த 'அதிசய சிறுவன்'26 டிசம்பர் 2024 தேர்தல் அரசியலில் நல்லகண்ணு பட மூலாதாரம்,LENIN DAKSHINAMURTHI/FB இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் கிளைச் செயலாளர், இடைக் கமிட்டி செயலாளர், விவசாய சங்கத்தின் மாநில செயலாளர், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர், கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர், நிர்வாகக் குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், மாநில செயலாளர் எனப் பல பொறுப்புகளை நல்லகண்ணு வகித்துள்ளார். தேர்தல்களிலும் அவர் போட்டியிட்டுள்ளார். 1980ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்பாசமுத்திரத்தில் போட்டியிட்டு நல்லகண்ணு தோல்வியைத் தழுவினார். "அந்தத் தேர்தலில் அதிமுக-வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்தது. எம்.ஜி.ஆர் நேரடியாகப் பிரசாரம் செய்தார்" என்கிறார் லெனின். கடந்த 1999ஆம் ஆண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் நல்லகண்ணு தோல்வியடைந்தார். அப்போது கோவையில் குண்டுவெடிப்பு சம்பவம் பிரதானமாகப் பேசப்பட்டதால், 'முஸ்லிம்களுக்கு ஆதரவானவர் நல்லகண்ணு' என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. "இதை மறுக்காத நல்லகண்ணு, 'வாக்கு வங்கிக்காக மாற மாட்டோம். சிறுபான்மையினர் நலனில் எப்போதும் அக்கறையுடன் இருப்போம்' என பிரசாரம் செய்தார்" என்கிறார் லெனின். மோதியுடன் மோகன் பாகவத் மறைமுக யுத்தமா? கோவில் - மசூதி பற்றிய பாகவத் பேச்சுக்கு துறவிகள் எதிர்ப்பு25 டிசம்பர் 2024 கீழ்வெண்மணி: உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவசாய தொழிலாளர்கள் - 1968 டிசம்பர் 25 இரவில் நடந்தது என்ன?5 மணி நேரங்களுக்கு முன்னர் மழை கொடுத்த சோகம் பட மூலாதாரம்,HANDOUT மாற்றுக் கட்சியினரும் மதிக்கும் நல்லகண்ணுவின் வாழ்வில் ஆறாத சோகத்தை 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளம் ஏற்படுத்தியது. சென்னை சி.ஐ.டி காலனியில் நல்லகண்ணு வசித்த வீட்டுக்குள் மழை வெள்ளம் புகுந்தபோது அவரைக் காப்பாற்ற படகு ஒன்று வந்துள்ளது. "மற்றவர்களையும் காப்பாற்றிவிட்டு என் அருகே வாருங்கள்" என அவர் கூறியதை இன்றளவும் நினைவு கூர்கின்றனர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள். அந்த வெள்ளத்தில், தான் சேர்த்து வைத்திருந்த 2,000க்கும் மேற்பட்ட அரசியல், தத்துவம், சங்க இலக்கியங்கள் தொடர்பான புத்தகங்கள் நீரில் கரைந்து தூளாகிவிட்டதாக என்னிடம் வேதனையை வெளிப்படுத்தினார். "மழை எனக்குக் கொடுத்த சோகம் இதுதான்" என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார். 'நூற்றாண்டு' - நல்லகண்ணு சொன்னது என்ன? தமிழ்நாட்டுக்கும் தமிழின் வளர்ச்சிக்கும் பாடுபட்டதாகக் கூறி கடந்த 2022ஆம் ஆண்டு தகைசால் தமிழர் விருதை, முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இதற்காகத் தனக்குக் கொடுக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் தன்னுடைய பணமான 5,000 ரூபாயையும் சேர்த்து முதலமைச்சரின் நிவாரண நிதிக்கே நல்லகண்ணு வழங்கினார். தன்னுடைய பிறந்தநாளுடன், தான் அங்கம் வகிக்கும் கட்சிக்கும் நூற்றாண்டு என்பதால் அதுகுறித்து நல்லகண்ணு பேசியுள்ளார். "நூறாண்டு என்பது அரசியல் கட்சிக்கு ஒரு வயதல்ல. வைரம் பாய்ந்த அனுபவம் செறிந்த ஓர் அமைப்பு இது. ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களுக்காகத் தொடர்ந்து போராட வேண்டும். வகுப்புவாத அபாயத்தை உணர்ந்து கவனமாகச் செயலாற்ற வேண்டும்" என்றார் நல்லகண்ணு. "தனது 100வது பிறந்தநாள் குறித்து எதுவும் பேசாமல் கட்சி மற்றும் அதன் எதிர்காலம் குறித்தே அவர் அதிகம் பேசியதாக" லெனின் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c1d366rpg2qo
  14. கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுச் சின்னம் அகற்றப்பட்டு கலாச்சார மண்டபம் அமைக்கப்பட வேண்டும் என தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஒரு இராணுவ நினனைவுச் சின்னம் உள்ளது. டிப்போவிற்கு பின்னால் இரண்டு ஏக்கர் காணி இராணுவத்தின் வசமுள்ளது. தற்போது பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியில் முன்னாள் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனால் மிகப்பெரிய கலாச்சார மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. அதனை இராணுவம் தான் இடித்து அழித்தது. கிளிநொச்சி டிப்போவிற்கு பின்னால் உள்ள காணியின் இரண்டு ஏக்கர் நிலத்தை மாவட்ட செயலகத்தின் ஊடாக பெற்று, இராணுவ சின்னம் அகற்றப்பட்டு அதில் முன்னாள் அமைச்சர் சந்திரசேகரனின் பெயரில் ஒரு கலாச்சார மண்டபம் அமைக்கப்பட வேண்டும். யுத்தம் நிறைவடைந்த பின்னர் இந்த நகரப் பகுதிக்குள் இவ்வாறு காணிகள் இராணுவத்திற்கு தேவையில்லை என்றார். அதற்கு பதிலளித்த அமைச்சர், காணி உரிமை கோருபவர்களது மத்தியில் பல்வேறு குளறுபடிகள் இருக்கின்றது. கிராம சேவகர்கள் உண்மையான காணி உரிமையாளர்களை கண்டுபிடிக்க முடியும் எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/314154
  15. மூதூரில் சுனாமி நினைவேந்தலும் நினைவுத்தூபி திறப்பும் 26 DEC, 2024 | 02:32 PM 20ஆவது ஆண்டு சுனாமி நினைவுகூரலை முன்னிட்டு மூதூர் பிரதேச செயலக ஒருங்கிணைப்பில் பொதுமக்களின் பங்களிப்புடன் இன்று (26) காலை 9 மணியளவில் மூதூர் இறங்குதுறைமுக வாசலில் சுனாமி நினைவுத்தூபி திறந்துவைக்கப்பட்டது. நினைவுத்தூபி திறப்பு நிகழ்வில் 2004.12.26 அன்று இடம்பெற்ற சுனாமி ஆழிப்பேரலையினால் மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உயிரிழந்தவர்களுக்கான நினைவாஞ்சலியும் மற்றும் சமய அனுஷ்டானங்களும் நடைபெற்றன. மேலும், இதன்போது இரத்ததான முகாம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நினைவேந்தலுக்கு முதன்மை அழைப்பாளராக மாவட்ட அரசாங்க அதிபர் கலந்துகொண்டார். அத்துடன் அரச நிறுவன பணிப்பாளர்கள், சமூக நிறுவன உறுப்பினர்கள், சர்வமத தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் வருகைதந்திருந்தனர். மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக்கின் புத்தாக்கமான சமூகவியல் செயற்பாடுகள் கவனிக்கத்தக்கது. குறிப்பாக இலக்கியம், சமூக அபிவிருத்தி மற்றும் சகவாழ்வு தொடர்பாக மக்களை மையப்படுத்திய வேலைத்திட்டங்களை சமூக நிறுவனங்களின் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தி அரச நிறுவனத்தினது சமூகம் சார்ந்த இயங்கியலை உறுதி செய்து வருகிறார். https://www.virakesari.lk/article/202196
  16. டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை 'வாங்க விரும்புவது' ஏன்? சீனாவை சமாளிக்க அது உதவுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அரிசோனாவில் நடைபெற்ற மாநாட்டில் டொனால்ட் டிரம்ப் பேசினார். 26 டிசம்பர் 2024, 12:21 GMT அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், யுக்ரேன் போர் போன்ற வெளிநாட்டு மோதல்களில் இருந்து அமெரிக்காவை தனிமைப்படுத்துவது, வெளிநாட்டு வர்த்தக கூட்டாளிகளின் மீதான வரிகளை அதிகரிப்பது, உள்நாட்டு உற்பத்தியை மீண்டும் கட்டியெழுப்புவது போன்ற கொள்கைகளை முன்னிறுத்தினார். ஆனால் சமீபத்திய நாட்களில் அவர் தனது வெளியுறவுக் கொள்கையில் மிகவும் ஆக்ரோஷமான அணுகுமுறையைப் பரிந்துரைத்துள்ளார். முதலில், கனடா கூடுதலான ஒரு அமெரிக்க மாகாணம் என்று டிரம்ப் கேலி செய்தார். அடுத்ததாக, பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறப் போவதாக அவர் அச்சுறுத்தியுள்ளார். டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில், டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிரீன்லாந்தை வாங்க விரும்பினார். அந்த விருப்பதைத் தற்போது அவர் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். வி. ராமசுப்பிரமணியன்: தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்ட இவர் யார்? நியமனத்திற்கு எதிர்ப்பு ஏன்? 'சிரியாவால் உலகிற்கு அச்சுறுத்தல் இல்லை' - கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அகமது அல்-ஷாரா பிபிசிக்கு பேட்டி கிசெல் பெலிகாட்: பாலியல் வன்புணர்வு செய்த 51 பேர் - முன்னாள் கணவருக்கு 20 ஆண்டுகள் சிறை கிரீன்லாந்தை உற்றுநோக்கும் டிரம்ப் கடந்த வார இறுதியில், டிரம்ப் ஒரு சமூக ஊடகப் பதிவில், தேசிய பாதுகாப்பு மற்றும் உலகளாவிய சுதந்திரத்தின் காரணங்களுக்காக, கிரீன்லாந்தின் உரிமை மற்றும் கட்டுப்பாடு ஒரு முழுமையான தேவை என்பதை அமெரிக்கா உணர்வதாகக் குறிப்பிட்டார். அமெரிக்கா, கிரீன்லாந்தில் பிட்டுஃப்ஃபிக் (Pituffik) விண்வெளி தளத்தை நிர்வகிக்கிறது. பூமியில் கிடைக்கும் அரிய கனிமங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள், அந்த பிரதேசத்தில் நிறைந்துள்ளன. மேலும் ஆர்டிக் வட்டத்தில் உலகளாவிய சக்திகள் தங்கள் வரம்பை விரிவுபடுத்த முயல்வதால் வர்த்தகத்திற்கான ஒரு முக்கிய இடமாகவும் அது பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரஷ்யா, இப்பகுதியை ஒரு பாதுகாப்பு உத்தியாகப் பார்க்கிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி: எஃப்.ஐ.ஆர் வெளியானதால் அதிர்ச்சி - சமீபத்திய தகவல்கள்4 மணி நேரங்களுக்கு முன்னர் கீழ்வெண்மணி: உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் - 1968, டிசம்பர் 25 அன்று இரவு நடந்தது என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவுடன் மோதும் மனநிலையில் வங்கதேசம் உள்ளதா? நிபுணர்கள் சொல்வது என்ன?25 டிசம்பர் 2024 கிரீன்லாந்தின் பதில் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பனாமா கால்வாய் "தவறான கைகளில்" விழாமல் இருக்க வேண்டும் என்று சீனாவை குறிப்பிட்டு டிரம்ப் கூறினார். கடந்த 2019இல், அதிபராகத் தனது முதல் பதவிக் காலத்தில், கிரீன்லாந்தை வாங்கும் எண்ணத்தை டிரம்ப் முன்மொழிந்தார். ஆனால் அது ஒருபோதும் நிறைவேறவில்லை. "நாங்கள் விற்பனைக்கு இல்லை, நாங்கள் விற்கப்படவும் மாட்டோம்" என கிரீன்லாந்தின் பிரதமர் மூட் பி எகேடே, டிரம்பின் சமீபத்திய கருத்துகளுக்கு இந்த வாரம் பதிலளித்தார். ஆனால், கிரீன்லாந்து மக்கள் தங்கள் அண்டை நாடுகளுடன் ஒத்துழைக்கவும் வர்த்தகம் செய்யவும் சுதந்திரமானவர்கள் மற்றும் இறையாண்மை கொண்டவர்கள் என்று அவர் கூறினார். சுட்டெரிக்கும் சூரியனின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த நாசா விண்கலம் - அதீத வெப்பத்தை தாங்குவது எப்படி?25 டிசம்பர் 2024 கஜகஸ்தான்: விமானம் பறவை மோதியதால் விபத்தில் சிக்கியதா? பயணிகள் என்ன ஆனார்கள்?25 டிசம்பர் 2024 டிரம்பின் உத்தி என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனாலும், டிரம்ப் தனது அறிக்கைகளைத் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார். தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பக்கத்தில், பனாமா கால்வாய்க்கு நடுவில் அமெரிக்க கொடி நடப்பட்டிருப்பது போன்ற ஒரு படத்தை டிரம்ப் வெளியிட்டார். அவரது இரண்டாவது மகனான எரிக் டிரம்ப், எக்ஸ் பக்கத்தில் ஒரு படத்தை வெளியிட்டார். அமேசான் ஷாப்பிங் இணையதளத்தில் கிரீன்லாந்து, பனாமா கால்வாய் மற்றும் கனடாவை அமெரிக்கா வாங்குவதற்காகச் சேர்த்து வைத்திருப்பது போல் அந்தப் படம் பிரதிபலிக்கிறது. டிரம்பை பொறுத்தவரை, அமெரிக்காவின் பலத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதற்கான வாக்குறுதிகள் அவரது இரண்டு வெற்றிகரமான அதிபர் பிரசாரங்களுக்கு உதவியது. அதிபராகத் தனது முதல் பதவிக்காலத்தில், டிரம்ப் ஓர் உத்தியைப் பயன்படுத்தினார். வரி விதிப்பதாகவும் "ஆயுதம் ஏந்திய வீரர்களை" அனுப்புவதாகவும் அச்சுறுத்தி, அமெரிக்காவுடனான அதன் எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்கவும் மெக்சிகோவுக்கு அழுத்தம் கொடுத்தார். அவரது இரண்டாவது பதவிக்காலத்தை நோக்கிச் செல்லும்போது, டிரம்ப் ஜனவரி 20 அன்று பதவியேற்றவுடன் இதேபோன்ற உத்தியைப் பயன்படுத்த திட்டமிடலாம். ஆஸ்திரேலிய வீரர் மீது மோதிய விராட் கோலிக்கு என்ன தண்டனை?4 மணி நேரங்களுக்கு முன்னர் கஜகஸ்தான்: விமானம் பறவை மோதியதால் விபத்தில் சிக்கியதா? பயணிகள் என்ன ஆனார்கள்?25 டிசம்பர் 2024 டிரம்பின் அறிக்கைக்குப் பிறகான மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப் ஜனவரி 20 அன்று பதவியேற்றவுடன் இதே போன்ற உத்தியை பயன்படுத்த திட்டமிடலாம். அடுத்தடுத்து நடக்கப் போகும் நிகழ்வுகளைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றாலும், டென்மார்க் அவரது நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளது. இதுதவிர, ஆர்டிக் பகுதியைப் பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தை, டிரம்ப் மீண்டும் கூறிய சில மணிநேரங்களில், கிரீன்லாந்து மீதான பாதுகாப்புக்கான செலவினங்கள் அதிகரிக்கப்பட்டதாக டென்மார்க் அறிவித்தது. கிரீன்லாந்தின் பாதுகாப்பு செலவினம் 1.5 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளதாக, டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர் ட்ரோல்ஸ் பவுல்சன் கூறினார். மேலும், கிரீன்லாந்தின் பாதுகாப்பு செலவினத்தை அதிகரிப்பது அவர்களுக்குக் கடினமான முடிவாக இருந்ததாகவும் தெரிவித்தார். டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர் பவுல்சன், கூடுதல் பாதுகாப்பு தொகுப்பின் மூலம் தீவின் நிலையைக் கண்காணிக்கும் இரண்டு புதிய கப்பல்களையும், நீண்ட தூரம் பறக்கும் இரண்டு புதிய ட்ரோன்களையும், மரம் அல்லது இரும்பால் ஆன சிறிய பனிச்சறுக்கு வண்டியில் சரக்குகளை ஏற்றி, எட்டு முதல் பத்து நாய்களின் உதவியுடன் பனிப் பகுதிகளில் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு நகர்த்தப்படும் வண்டிகளையும் பெற்றிருப்பதாகக் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிரீன்லாந்தின் குடிமக்கள் பயணிக்கும் மூன்று முக்கிய விமான நிலையங்களில் ஒன்றில் F-35 போன்ற அதிவேக போர் விமானங்களை இயக்குவதற்கான திறனை உயர்த்தவும் உதவும். மேலும், "நாங்கள் பல ஆண்டுகளாக இந்தத் தீவுக்கு அதிக கவனம் செலுத்தவில்லை அல்லது முதலீடு செய்யவில்லை, ஆனால் இப்போது இந்தத் தீவில் தங்களது பிடியைப் பலப்படுத்துவதற்கு முறையான திட்டங்களை உருவாக்கி வருகிறோம்" என்றும் பவுல்சன் தெரிவித்தார். டென்மார்க்கின் பாதுகாப்பு அமைச்சர் இதன் சரியான மதிப்பை வெளிப்படுத்தவில்லை, ஆனால் டென்மார்க் ஊடகங்கள் இதன் மதிப்பு 12 முதல் 15 பில்லியன் க்ரோன் (டென்மார்க் நாணயம்) என மதிப்பிட்டுள்ளன. கிரீன்லாந்தின் பாதுகாப்பு செலவினத்தை அதிகரிக்கும் திட்டம் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதேவேளையில், இதை டிரம்பின் அறிக்கைகளுக்கு நேரடியான பதிலாகக் கருதக்கூடாது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் கிரீன்லாந்தில் தனது ராணுவ திறனை அதிகரிக்க டென்மார்க் மெதுவாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் சீனா மற்றும் ரஷ்யாவின் அத்துமீறல்களுக்கு எதிராக டென்மார்க் அப்பகுதியைப் பாதுகாக்க முடியாவிட்டால், கட்டுப்பாட்டுக்கான கோரிக்கைகளை அமெரிக்கா அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். டிரம்பின் நோக்கம், இத்தகைய நடவடிக்கைகளை எடுக்குமாறு டென்மார்க்குக்கு அழுத்தம் கொடுப்பதாக இருக்கலாம் என்று டென்மார்க் பாதுகாப்பு அகாடமியின் தலைவர் ஸ்டீன் க்ஜேர்கார்ட் கூறுகிறார். கிரீன்லாந்தை சுற்றியுள்ள வான்பகுதி மற்றும் கடல் கட்டுப்பாட்டு அமைப்புகளின் தேவை குறித்தும், கிரீன்லாந்தின் முன்னேற்றங்கள் குறித்தும் டிரம்ப் தனது கவனத்தைச் செலுத்துவார். அங்கு சிலர் அமெரிக்காவிற்கு ஆதரவாக இருக்கிறார்கள், சொல்லப்போனால் அதை எதிர்நோக்கியுள்ளார்கள்" என்று ஸ்டீன் பிபிசியிடம் கூறினார். "இருப்பினும், இவை அனைத்திற்கும் மத்தியில், கிரீன்லாந்தின் தலைநகரான நூக்கில் ஒரு புதிய சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளதாகவும்" அவர் தெரிவித்தார். சிரியா: செட்னயா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 'எலும்புக்கூடு போல் தோற்றமளித்த' மர்ம கைதி19 டிசம்பர் 2024 ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலை நெருங்குவதில் இத்தனை ஆபத்துகளா? ஆய்வாளரின் நேரடி அனுபவம்24 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்பின் நோக்கம், இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க டென்மார்க்குக்கு அழுத்தம் கொடுப்பதாக இருக்கலாம் என்று ஸ்டீன் க்ஜேர்கார்ட் கூறுகிறார். "டிரம்ப் மிகவும் புத்திசாலித்தனமாகச் செயல்படுவதாக நான் நினைக்கிறேன். கிரீன்லாந்தை வாங்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்துவதன் மூலம், அதன் ராணுவ திறன்களுக்கு முன்னுரிமை அளிக்க டென்மார்க்கை அவர் கட்டாயப்படுத்துகிறார்," என்கிறார் ஸ்டீன் க்ஜேர்கார்ட். கோபன்ஹேகனில் இருந்து கிரீன்லாந்து அதிக அளவில் மானியங்களை நம்பியிருப்பதையும் அவர் குறிப்பிட்டார். 2019இல் முதன்முதலில் கிரீன்லாந்தை வாங்க டிரம்ப் விருப்பம் தெரிவித்தார். இதற்கு டென்மார்க் தலைவர்கள் வலுவாக எதிர்வினையாற்றினார்கள். அந்த நேரத்தில், டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சன் இந்த யோசனையை "முட்டாள்தனம்" என்று அழைத்தார். அதற்குப் பிறகு டிரம்ப் தனது டென்மார்க் அரசுப் பயணத்தை ரத்து செய்தார். அமெரிக்கா கிரீன்லாந்தை வாங்க விரும்புவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதிகளவிலான கனிம வளங்கள் இருப்பினும், கிரீன்லாந்து தனது செலவுகளில் மூன்றில் இரண்டு பங்கைப் பராமரிக்க டென்மார்க்கை நம்பியுள்ளது. அமெரிக்கா கிரீன்லாந்தை வாங்க விரும்புவதற்கான காரணங்கள் என்ன? அதிகளவிலான கனிம வளங்கள் இருப்பினும், கிரீன்லாந்து தனது செலவுகளில் மூன்றில் இரண்டு பங்கைப் பராமரிக்க டென்மார்க்கை நம்பியுள்ளது. இந்தக் கனிமங்களில் நிலக்கரி, தாமிரம், துத்தநாகம் போன்றவை அடங்கும். கடந்த 2019இல், கிரீன்லாந்தை வாங்குவதற்கான அமெரிக்காவின் உயர்மட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்த இருவர், அதிபர் டிரம்ப் அதன் பாதுகாப்பு முக்கியத்துவத்தால் கிரீன்லாந்தை வாங்க விரும்பியதாக நியூயார்க் டைம்ஸிடம் தெரிவித்தனர். ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் இடையே உள்ள பாதையில் அமைந்துள்ள முக்கிய பாதுகாப்புப் பகுதியாக கிரீன்லாந்து இருப்பதால் அங்கு அமெரிக்கா தனது கவனத்தைக் குவித்து வைத்திருந்தது. அமெரிக்கா பனிப்போரின் ஆரம்பத்தில், வான்பகுதி மற்றும் ரேடார் தளம் ஒன்றை இத்தீவில் நிறுவியது. இது தற்போது விண்வெளியைக் கண்காணிப்பதற்கும், அமெரிக்காவின் வட எல்லைப் பகுதிகளில் ஏவுகணை எச்சரிக்கைகளை வழங்கவும் உதவுகின்றது. இதற்கிடையே, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் புவி வெப்பமடைதல் காரணமாக, உறைந்த ஆர்டிக் கடல் பகுதி போக்குவரத்துக்கு உகந்ததாக மாறி வருகிறது. அதோடு இங்கு கடல் வழிப் பாதையும் உருவாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில், கிரீன்லாந்தை வாங்குவதற்கான அதிபர் டிரம்பின் விருப்பம் சீனாவும் கிரீன்லாந்தில் பெரிய ஆர்வம் காட்டிய காலத்தில் ஏற்பட்டது. சீன அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம், 2018ஆம் ஆண்டு கிரீன்லாந்தில் புதிய விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்கான திட்டங்களை அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்பு 2019இல் திரும்பப் பெறப்பட்டது. அதேவேளையில், 2019ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியின் மைக் கல்லாகர் அதிபர் டிரம்பின் முன்மொழிவை பாதுகாப்பு நோக்கில் மிகவும் புத்திசாலித்தனமான முடிவு எனக் குறிப்பிட்டார். "பாதுகாப்பு அடிப்படையில் கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமானது. கிரீன்லாந்து உலகின் மிகப்பெரிய தீவு. இது வட அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் வட துருவத்திற்கு இடையே அமைந்துள்ள டென்மார்க்கின் தன்னாட்சிச் பகுதி," என்று அவர் தனது எக்ஸ் பதிவில் கூறினார். தாலிபன் அமைப்பில் விரிசலா? தலைமையை விமர்சிக்கும் இந்த மூத்த அமைச்சர் யார்?24 டிசம்பர் 2024 பனாமா கால்வாயை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் எடுக்க டிரம்ப் விரும்புவது ஏன்?24 டிசம்பர் 2024 ஒரு கையில் பைபிள், மறு கையில் துப்பாக்கி - பிரேசில் நகரை நடுங்கச் செய்யும் இவர்கள் யார்?24 டிசம்பர் 2024 கிரீன்லாந்தின் அதிகாரங்கள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாதுகாப்பு அடிப்படையில் கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமானது. கிரீன்லாந்து உலகின் மிகப்பெரிய தீவு. இது வட அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் வட துருவம் இடையே அமைந்துள்ள டென்மார்க்கின் தன்னாட்சிப் பகுதி இந்தத் தீவில் சுமார் 56,000 மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் கடற்கரையை ஒட்டி வாழ்கின்றனர். கிரீன்லாந்தின் மக்கள்தொகையில் 90%, பூர்வீக கிரீன்லாண்டிக் இன்யூட் மக்களால் ஆனது. அங்கு அத்தீவுக்குச் சொந்தமான நாடாளுமன்றம் மற்றும் அதன் அரசுக்குக் குறிப்பிட்ட அளவிலான அதிகாரங்களும் உள்ளன. இந்தத் தீவின் 80% பகுதி, ஆண்டின் 12 மாதங்களிலும் தடிமனான பனிப்படலத்தால் மூடப்பட்டுள்ளது. இந்தப் பனி தற்போது புவி வெப்பமடைவதால் உருகத் தொடங்கியுள்ளது. இது பனிப்போர் காலத்தில் சில அமெரிக்க ராணுவ தளங்களில் புதைக்கப்பட்ட அணுக் கழிவுகளை வெளிப்படுத்தும் அபாயத்தை உருவாக்குகிறது. கிரீன்லாந்தை கைப்பற்றுவது அமெரிக்காவின் நீண்டகால திட்டமா? இந்தத் தீவைக் கைப்பற்றும் அமெரிக்காவின் விருப்பம், மிகப் பழமையானது மற்றும் 1860இல் முதல் முறையாகப் பரிசீலிக்கப்பட்டது. கிரீன்லாந்து, அதன் தாதுப்பொருள் வளங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்பின் காரணமாக மிகவும் முக்கியமானதாக உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை 1867ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது. ஆனால், 1946 வரை கிரீன்லாந்து குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்போது டென்மார்க்குக்கு 100 மில்லியன் டாலர் அளிக்கப்படும் என்று ஹென்றி ட்ரூமேன் அதிபராக இருந்தபோது பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், கிரீன்லாந்துக்கு பதிலாக அலாஸ்காவின் சில பகுதிகளை டென்மார்க்குக்கு வழங்கவும் அவர் தயாராக இருந்தார். - இந்தக் கட்டுரைக்கான கூடுதல் தகவல்கள் பிபிசி செய்தியாளர் ராபர்ட் கிரீனல், பால் கிர்பி ஆகியோரின் கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cgm9lzlvz9ro
  17. சுனாமி அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் 'சுனாமி பேபி' 26 DEC, 2024 | 11:59 AM ஆழிப்பேரலையில் உயிர் நீத்த உறவுகளுக்கு “சுனாமி பேபி” அபிலாஷ் அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பாக இன்று (26) அஞ்சலி செலுத்தினார். கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலையின்போது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை அல்லோலகல்லோலப்பட்டது. இரண்டு மாதமும் ஒரு வாரமும் நிறைந்த குழந்தையாக “சுனாமி பேபி 81” எனும் பெயருடன் உலகம் முழுவதும் பேசும் குழந்தையாக ஜெயராசா அபிலாஷ் விளங்கினார். “இந்தக் குழந்தை என்னுடையது” என ஒன்பது தாய்மார்கள் போராடினர். பின்னர் அங்கு ஏற்பட்ட குழப்ப நிலையால் வைத்தியசாலை நிர்வாகம் கல்முனை நீதவான் நீதிமன்றத்தை நாடியது. இந்நிலையில், ஒன்பது தாய்மார்களையும் மரபணு பரிசோதனை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார். அதனையடுத்து, 52 நாட்களின் பின்னர், ஜெயராசா - யுனித்தலா தம்பதியினரின் புதல்வனே அபிலாஷ் என்பது நிரூபணமாகியது. பின்னர் அந்த குழந்தை ஜெயராசா - யுனித்தலா தம்பதியினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது மட்டக்களப்பு குருக்கள்மடம் கிராமத்தில் வசித்து வரும் அபிலாஷ் அவரது இல்லத்தில் சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுத்தூபி ஒன்றையும் அமைத்து வழிபாடு செய்து வருகிறார். தற்போது 20 வயதுடைய “சுனாமி பேபி” என அறியப்படும் அபிலாஷ் அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பாக ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்காக பெற்றோருடன் அஞ்சலி செலுத்தினார். https://www.virakesari.lk/article/202187
  18. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனாவுக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதன்போது சகாதேவன் அர்ச்சுனாவை பார்த்து, பாராளுமன்ற உறுப்பினர் போல இல்லாமல் நீங்கள் ஏன் பைத்தியக்காரத்தனமாக பேசுகின்றீர்கள் என்று கூறினார். அதற்கு shut up (வாயை மூடுங்கள்) என்று அர்ச்சுனா கூறினார். இதன்போது குறிக்கிட்ட தம்பிராசா, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். Shut up என்று எல்லாம் கூற முடியாது. இங்கே அதிகாரிகள் தான் உள்ளார்கள் என்றார். இதன்போது குறுக்கிட்ட அர்ச்சுனா, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கதைக்கும் போது, கதைப்பதற்கு உங்களுக்கு உரிமை இருக்கின்றது என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றீர்களா என்றுவிட்டு தம்பிராசாவை பார்த்து “can you shut up” (உங்களது வாயை மூட முடியுமா?) என்றார். அத்துடன் சகாதேவனை பார்த்து “உங்களுடன் திருப்பி கதைத்ததற்காக ஒரு நாளில் 8 அல்லது 10 பேரை இடமாற்றம் செய்துள்ளீர்கள். இதனை உங்களது கட்சியோடு வைத்துக் கொள்ளுங்கள் என்றார். இதன்போது குறுக்கிட்ட தம்பிராசா, ஒரு அரச அதிகாரியை பொது வெளியில் வைத்து அவமானப்படுத்த கூடாது. இடமாற்றம் பெற்றவர்கள் வேண்டும் என்றால் அமைச்சுக்கு முறையிடலாம் என்றார். இதன்போது குறுக்கிட்ட அர்ச்சுனா “நீங்கள் எந்த கட்சி? உங்களுக்கு கிடைக்கவில்லை தானே nomination ஆகையால் அடுத்த முறை முயற்சியுங்கள். தயவு செய்து தம்பிராசாவை வெளியே அகற்றுங்கள். ஒரு பொம்பிளை பிள்ளையை பற்றி முகநூலில் எவ்வளவு எழுதுகின்றீர்கள். வெளியே போம் என்றார். அதற்கு பதிலளித்த தம்பிராசா “நீங்கள் இரவு பகலாக ஒரு பொம்பிளையை கொண்டு திரிகிறாய் என்றார். அதற்கு பதிலளித்த அர்ச்சுனா “நான் ஒன்றைத்தான் கொண்டு திரிகிறேன். நீங்கள் எத்தனையை கொண்டுபோய் வெளிநாடுகளில் கொடுத்தீர்கள் என்று எங்களுக்கு தெரியும். எதற்காக இவரை அழைக்கின்றீர்கள். இவர் ஒரு அழையா நபர் ஆகையால் வெளியே செல்லுங்கள். அமைச்சர் அவர்களே ஒரு அழையா நபரை உள்ளே விட்டு ஏன் பிரச்சினையை உருவாக்குகின்றீர்கள். இவர் யார்? என்ன அடிப்படையில் உள்ளே வந்தார் என்றார். அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில் இனிமேல் பொதுமக்களுக்கோ ஊடகங்களுக்கோ அனுமதி இல்லை. பொதுமக்கள் முறையிட வேண்டுமாக இருந்தால் நாங்கள் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் உள்ளோம், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள், அவர்களிடம் முறையிடுங்கள் என்றார். https://thinakkural.lk/article/314151
  19. ஆஸ்திரேலிய வீரர் மீது மோதிய விராட் கோலிக்கு என்ன தண்டனை? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 10வது ஓவருக்குப் பிறகு விராட் கோலி மற்றும் சாம் கான்ஸ்டாஸ் இடையே மோதல் ஏற்பட்டது. 26 டிசம்பர் 2024, 09:27 GMT மெல்போர்னில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான பாக்ஸிங் டே டெஸ்டின் முதல் நாளிலேயே, பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. பும்ரா உள்ளிட்ட இந்திய பந்துவீச்சாளர்களைத் திணற வைத்த ஆஸ்திரேலியாவின் இளம் வீரருக்கும் இந்தியாவின் விராட் கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மைதானத்துக்கு உள்ளேயே உடல் ரீதியாகவும், வார்த்தைகளாலும் நடந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர கள நடுவர் தலையிட வேண்டியிருந்தது. இந்த மோதல் தொடர்பாக பெரும்பாலும், விராட் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து விராட் கோலிக்கு போட்டியின் சம்பளத்தில் 20 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டது. ஒரு தகுதிக் குறைப்பு புள்ளியும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது. சச்சினின் இந்த இன்னிங்சை பார்த்து கோலி தவறுகளை திருத்திக் கொள்வாரா? 'அவரை மன்னித்து விடுங்கள்' - ஓய்வு குறித்து தந்தையின் சர்ச்சை கருத்துக்கு அஸ்வின் பதில் மூன்றாவது டெஸ்ட் டிரா: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியா முன்னேற முடியுமா? மைதானத்துக்குள் என்ன நடந்தது? பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4-வது டெஸ்ட் வியாழக்கிழமை மெல்போர்னில் தொடங்கியது. ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். சாம் கான்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா ஆஸ்திரேலியாவுக்காக இன்னிங்ஸை தொடங்கினர். இது சாம் கான்ஸ்டாஸின் முதல் டெஸ்ட். 19 வயதான அவர், தனது பேட்டிங் திறனுக்காக உள்ளூர் போட்டிகளில் பிரபலமானவர். சாம் கான்ஸ்டாஸ் ஆரம்பத்தில் இருந்தே இந்திய பந்துவீச்சை திறமையாகச் சமாளித்து ஆடினார். ஜஸ்ப்ரீத் பும்ராவின் பந்துகளையும் அவர் விட்டு வைக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலி மற்றும் சாம் கான்ஸ்டாஸ் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர கள நடுவர் தலையிட்டு விசாரித்தார் ஆறாவது ஓவரில் பும்ராவின் பந்தில் 2 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடித்து இந்திய அணியை அச்சுறுத்தினார் கான்ஸ்டாஸ். இந்த சிக்சருக்கு முன்புவரை டெஸ்ட் போட்டிகளில் 4,562 பந்துகளை சிக்சர் விட்டுக்கொடுக்காமல் வீசியிருக்கிறார் பும்ரா. அதனால் பும்ராவின் பந்தில் சிக்சர் அடிக்கவே முடியாது என்ற பெருமை அவருக்கு இருந்தது. இதற்கு முன் 2021-ஆம் ஆண்டில் சிட்னியில் நடந்த டெஸ்டில் கேமரன் கிரீன் சிக்சர் அடித்திருந்தார். தான் ஆடிய டெஸ்ட் போட்டிகளிலேயே ஒரு ஓவரில் அதிக ரன்களை பும்ரா விட்டுக் கொடுத்ததும் இந்த ஓவரில்தான். அதில் 18 ரன்கள் எடுக்கப்பட்டன. "பும்ராவை சமாளிக்க என்னிடம் திட்டம் இருக்கிறது" என்று போட்டிக்கு முன்னரே கூறி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார் கான்ஸ்டாஸ். கான்ஸ்டாஸின் ஆக்ரோஷமான பேட்டிங் காரணமாக இந்தியா தரப்பில் பரபரப்பு ஏற்பட்டது. கான்ஸ்டாஸின் விக்கெட்டை வீழ்த்த கேப்டன் ரோஹித் சர்மா எடுத்த ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடைந்தது. இந்தியாவுக்காக முகமது சிராஜ் 10-வது ஓவரை வீசினார். அந்த ஓவர் முடிந்த பிறகுதான் கோலிக்கும் கான்ஸ்டஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பத்தாவது ஓவர் முடிந்த பிறகு கான்ஸ்டாஸ் தனது சக வீரர் உஸ்மான் கவாஜாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த கோலி, கான்ஸ்டாஸின் தோளில் மோதினார். பின்னர் இருவரும் கோபமாக வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, நடுவர் தலையிட்டு இருவரையும் கலைந்து போக வைத்தார். பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆடுகளம் யாருக்கு சாதகம்? இந்தியாவுக்கு கவலை தரும் விஷயங்கள் என்ன?25 டிசம்பர் 2024 அஸ்வின்: ஆட்டத்தின் போக்கை மாற்றி, திருப்புமுனையை ஏற்படுத்திய 5 முக்கிய தருணங்கள்19 டிசம்பர் 2024 கிரிக்கெட் வீரர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலி தவறு செய்து விட்டார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார் இந்த மோதல் தொடர்பாக சமூக ஊடகங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. இப்போது விவாதம் கோலி தற்செயலாக கான்ஸ்டாஸுடன் மோதினாரா அல்லது அவர் வேண்டுமென்றே அதைச் செய்தாரா என்பதுதான். சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கோலியின் நடத்தையை விமர்சித்துள்ளனர். முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், போட்டி நடுவர் நிச்சயமாக இந்த விஷயத்தை ஆராய்வார் என்று கூறியிருக்கிறார். கோலி பெருமை கொள்ளத் தகாத வகையில் நடந்து கொண்டதாக அவர் கூறினார். "கான்ஸ்டாஸ் தனது வழியில் சென்று கொண்டிருந்தார். விராட் தனது பாதையை மாற்றினார்" என்று கூறினார். அந்த நேரத்தில் மைக்கேல் வாகன் போட்டியை வர்ணனை செய்து கொண்டிருந்தார். போட்டி நடுவர் இந்த விஷயத்தை ஆராய்வாரா என்று கேட்டபோது, "நிச்சயமாக" என்று கூறினார். தவறு விராட் கோலியின் மீதுதான் என்பதில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறுகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விராட் கோலியின் இந்த நடத்தை தேவையற்றது என்று கூறியுள்ளார். முன்னாள் இந்திய கேப்டனும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கரும் இந்த விஷயத்தில் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். விராட் கோலி இதைத் தவிர்த்திருக்கலாம் என்று கவாஸ்கர் கூறுகிறார். யாராவது உங்கள் திசையில் வருவதைக் கண்டால், நீங்கள் வழிவிட்டு விலகிச் செல்லலாம், அவ்வாறு செய்வதன் மூலம் யாரும் சிறியவர்களாகிவிட மாட்டார்கள் என்று அவர் கூறினார். இருப்பினும், போட்டியின்போது இப்படியெல்லாம் நடக்கும் என்றும், மைதானத்தில் என்ன நடந்தாலும் அது அதற்குள்ளே மட்டுமாகத்தான் இருக்கும் என்றும் சாம் கான்ஸ்டாஸ் பின்னர் கூறினார். ஆஸ்திரேலிய மகளிர் அணித் தலைவர் அலிசா ஹீலி, கோலியின் நடத்தையை விமர்சித்துள்ளார். மேலும் ஒரு நட்சத்திர பேட்ஸ்மேன் தற்போதைய ஆஸ்திரேலிய அணியில் உள்ள இளம் வீரரை குறிவைத்துள்ளார் என்றும் கூறினார். "இது மிகவும் ஏமாற்றமளிக்கும் விஷயம் என்று நான் நினைக்கிறேன். விராட் கோலி போன்ற அனுபவம் வாய்ந்த மற்றும் அவரது நாட்டின் சிறந்த வீரர்களில் ஒருவரிடம் இருந்து இந்த வகையான நடத்தையை எதிர்பார்க்கவில்லை" என்று அவர் கூறியுள்ளார். இந்தியாவுடன் மோதும் மனநிலையில் வங்கதேசம் உள்ளதா? நிபுணர்கள் சொல்வது என்ன?25 டிசம்பர் 2024 சுட்டெரிக்கும் சூரியனின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த நாசா விண்கலம் - அதீத வெப்பத்தை தாங்குவது எப்படி?25 டிசம்பர் 2024 விராட் கோலி மீது என்ன நடவடிக்கை? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐசிசியின் நடத்தை விதிகளின்படி விராட் கோலிக்கு தடை விதிக்கப்படலாம் ஐசிசி நடத்தை விதிகளின்படி, கிரிக்கெட்டில் எந்தவொரு பொருத்தமற்ற 'உடல் ரீதியான மோதலும்' தடைசெய்யப்பட்டுள்ளது. ஒரு வீரர் வேண்டுமென்றே அல்லது அவரது அலட்சியம் காரணமாக எந்த வீரருடனோ அல்லது நடுவருடனோ மோதினால், அது நடத்தை விதிகளை மீறுவதாகக் கருதப்படும். போட்டி நடுவர் அதை லெவல்-2 குற்றமாகக் கருதினால், சம்பந்தப்பட்ட வீரருக்கு மூன்று முதல் நான்கு அபராதப் புள்ளிகள் (Demerit points) வரை விதிக்கப்படலாம், இந்த அடிப்படையில் விராட் கோலிக்கு போட்டியின் சம்பளத்தில் 20 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டதுடன் ஒரு தகுதிக் குறைப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரின்போது, ககிசோ ரபாடா மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வழக்கில் ரபாடா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு எதிராக மூன்று பெனால்டி புள்ளிகள் விதிக்கப்பட்டன. இருப்பினும், பின்னர் அவரது மேல்முறையீட்டின் பேரில் பெனால்டி தள்ளுபடி செய்யப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி - எஃப்.ஐ.ஆரை முடக்கிய காவல்துறை4 மணி நேரங்களுக்கு முன்னர் பீட்ரூட் ஜூஸ் 'அதிசய' பானமா? உடற்பயிற்சிக்கு முன் குடித்தால் உடலில் என்ன நடக்கும்?20 டிசம்பர் 2024 கான்ஸ்டாஸின் அதிரடி ஆட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சாம் கான்ஸ்டாஸ் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்து 60 ரன்களில் ஆட்டமிழந்தார் விராட் கோலியுடனான மோதலுக்குப் பிறகு கான்ஸ்டாஸ் மிகவும் கோபமாகத் தெரிந்தார். அடுத்த ஓவரிலேயே ஜஸ்பிரித் பும்ரா வீசிய ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகளை அவர் அடித்தார். போட்டியின் 11-வது ஓவரில் கான்ஸ்டாஸ் 18 ரன்கள் எடுத்தார். தனது முதல் டெஸ்டை விளையாடிய கான்ஸ்டாஸ், வெறும் 52 பந்துகளில் தனது அரை சதத்தை நிறைவு செய்தார். போட்டியின் 20வது ஓவரில் 60 ரன்கள் எடுத்த பிறகு அவர் அவுட் ஆனார். ரவீந்திர ஜடேஜா அவரது விக்கெட்டை வீழ்த்தினார். கான்ஸ்டாஸ் வெறும் 65 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அவர் தனது இன்னிங்ஸில் ஆறு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை அடித்தார். பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் இதுவரை நடந்தது என்ன? தற்போதைய பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்காக இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே ஐந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிந்துவிட்டன. ஒரு டெஸ்ட் போட்டி டிரா ஆனது, இரு அணிகளும் தலா ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வலுவான மறுபிரவேசம் செய்து ஸ்கோரை சமன் செய்தது. மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இந்தத் தொடர் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற, இந்தியா இந்தத் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி: எஃப்.ஐ.ஆர் வெளியானதால் அதிர்ச்சி - சமீபத்திய தகவல்கள்4 மணி நேரங்களுக்கு முன்னர் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார்: திரைத்துறையினர் இரங்கல்26 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தற்போதைய டெஸ்ட் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒரு டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளன. தற்போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா இந்தத் தரவரிசையில் முதலிடத்திலும் உள்ளது. இதுவரை ஜஸ்பிரித் பும்ரா இந்தத் தொடரில் இந்தியாவின் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். முதல் டெஸ்டில், தனது தலைமையில் இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றது மட்டுமல்லாமல், அவர் அற்புதமாகப் பந்து வீசினார். அவர் மூன்று டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை (21) வீழ்த்தியுள்ளார். அவருக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் கே.எல். ராகுல் இந்தியாவுக்காக அதிகபட்சமாக 235 ரன்கள் எடுத்துள்ளார், அதே நேரத்தில் ஜெய்ஸ்வால் 193 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் அதிக ரன்கள் (409) எடுத்துள்ளார். அவர் இந்திய அணிக்கு ஒரு பெரிய தலைவலியாக இருக்கிறார். இந்தத் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் இந்தியா திரும்பியுள்ளார், அவருக்குப் பதிலாக தனுஷ் கோட்டியன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c75we1qxqqqo
  20. சுனாமி ஆழிப்பேரலையில் உயிர் நீத்தோரின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் 26 DEC, 2024 | 03:27 PM சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இரண்டு தசாப்த காலங்கள் கடந்துள்ளன. கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தில் சிக்கி நாட்டில் பெருமளவான மக்கள் உயிரிழந்தனர். கடல் கொந்தளிப்பால் பலியானவர்களின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் (26) நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. முல்லைத்தீவு முல்லைத்தீவில் உள்ள சுனாமி நினைவாலயத்தில் இன்று (26) உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் உறவுகள் கதறி அழுது கண்ணீர் மல்க, உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரி மலர் தூவி, தீபமேற்றி, உணவுப் பொருட்களைப் படையலிட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர். அதேவேளை உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி மத வழிபாடுகளும் நடைபெற்றன. மேலும், இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபைச் செயலாளர் இராஜஜோகினி ஜெயக்குமார், முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் நடராசா தசரத ராஜகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. வவுனியா வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகர சபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கான 20ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவுத் தூபியில் பிரார்த்தனை நடைபெற்றது. இதன்போது உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நினைவுத்தூபியானது சுனாமி பேரலை ஏற்பட்டு 31ஆம் நாளில் நரசிங்கர் ஆலய நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டிருந்ததுடன், இலங்கையில் முதலாவதாக அமைக்கப்பட்ட சுனாமி தூபியாகவும் விளங்குகிறது. தற்போது இந்த நினைவுத்தூபி நகர சபையால் புனர்நிர்மானம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது. நரசிங்கர்ஆலயத்தின் தலைவர் கோ.சிறிஸ்கந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ. திலகநாதன், முத்துமுகமது மற்றும் இந்து, பௌத்த மதகுருமார்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். திருகோணமலை - குச்சவெளி சுனாமி ஆழிப்பேரலையில் உயிரிழந்த மற்றும் காணாமல்போன உறவுகளுக்காக இன்று (26) காலை 09.25 மணி முதல் 02 நிமிடங்கள் மௌன அஞ்சலி மற்றும் பிரார்த்தனை நிகழ்வானது திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் வெ.இந்திரஜித்தின் ஆலோசனைக்கமைய பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் T.பிரதீப் தலைமையில் குச்சவெளி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுனாமி அனர்த்தம் தொடர்பான விசேட உரையை குச்சவெளி பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் S.தட்சாயினி மற்றும் பேரழிவின் பாதிப்புகள் மற்றும் பிரார்த்தனைகளை பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மௌலவி A.R.பர்சூக்கும் நிகழ்த்தினர். மட்டக்களப்பு சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் நடைபெற்றது. இலங்கையில் மிக உயரமான சுனாமி நினைவுத்தூபியை கொண்டிருப்பதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்ததின்போது அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்டதுமான நாவலடி கிராமத்தில் உள்ள சுனாமி நினைவுத்தூபியில் இன்றைய தினம் உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. நாவலடி சுனாமி நினைவுக்குழுவின் ஏற்பாட்டிலான இந்த நிகழ்வில் நாவலடி சித்திவிநாயகர் ஆலயத்தில் காலையில் விசேட பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து சுனாமி நினைவுத்தூபியில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது விசேட ஆத்மசாந்தி பூஜைகளை தொடர்ந்து, உயிர்நீத்த உறவுகளால் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. இதேவேளை, நாவலடி கடற்கரையிலும் உயிர்நீத்தோரின் ஆத்மசாந்திக்காக விசேடபூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் அருட்தந்தையர்களான ஜோசப் மேரி, க.ஜெகதாஸ் அடிகளார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், இரா.துரைரெட்னம், முன்னாள் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோன்று மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் நினைவுத்தூபியிலும் நினைவேந்தல் உணர்வூர்வுமாக முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு நாவலடி, புதுமுகத்துவாரம் பகுதியில் சுனாமி அனர்த்தம் காரணமாக சுமார் 1100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. பாசிக்குடா பாசிக்குடா கடற்கரையில் உள்ள நினைவுத் தூபியில் சுனாமி கடற்கோள் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு உறவினர்களால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது சர்வமதத் தலைவர்களும் கலந்துகொண்டு இரங்கல் உரை நிகழ்த்தினார்கள். பாசிக்குடா வலம்புரி விளையாட்டுக் கழகத்தினர் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது ஆழிப்பேரலை நினைவஞ்சலி பாடல்கள் அடங்கிய இறுவட்டுக்கள் வெளியிடப்பட்டன. இந்த பாடல்களை கவிஞர்களான பாசியூர் மாரிதாசன், ஆதித்திய தயானந்த சர்மா ஆகியோர் இயற்றியிருந்தனர். மன்னார் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் தேசிய பாதுகாப்பு தினம் இன்று (26) மன்னார் மாவட்டச் செயலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது. இதன்போது உயிரிழந்த மக்களை நினைவுகூர்ந்து தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. சர்வமத தலைவர்களின் பிரார்த்தனைகளும் அவ்வேளை நடைபெற்றன. இந்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். புத்தளம் சுனாமியினால் உயிர்நீர்த்தவர்களுக்கு புத்தளத்தில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு ஆத்ம ஷாந்தி வேண்டி பிரார்த்தனையும் நடைபெற்றது. சுனாமி பேரழிவால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று காலை புத்தளம் மாவட்ட செயலகத்தில் புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.எஸ்.பி ஹேரத் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட சர்வமதத் தலைவர்கள், புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள், முப்படையினர் கலந்துகொண்டனர். இதன்போது சர்வமதத் தலைவர்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டன. கிளிநொச்சி கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (26) காலை நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. தேசியக்கொடி ஏற்றலுடன் சுனாமி மற்றும் ஏனைய அனர்த்தங்களால் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ச.சிறீபவானந்தராஜா, இ.அர்ச்சுனா உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் அரச அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர். கண்டி, அஸ்கிரிய பீடம் அஸ்கிரிய மகா விகாரையில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு பௌத்த சமய சடங்குகள் இன்று (26) நடைபெற்றன. கண்டி மாவட்ட அரச அதிபர் இந்திக உடவத்த, உதவி மாவட்ட செயலாளர் நிலூக்கா புலத்வத்த, கண்டி இடர் முகாமைத்துவப் பணிப்பாளர் இந்திக லனவீர ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க வேண்டறுவே உபாதி தேரர் இந்த சமய நிகழ்வுகளை நடத்திவைத்தார். https://www.virakesari.lk/article/202181
  21. 26 DEC, 2024 | 04:31 PM யாழ்ப்பாணத்தில் குடும்பம் ஒன்றின் மீது தந்தையும் மகனும் இணைந்து நடாத்திய தாக்குதலில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆலயம் ஒன்று தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டினை அடுத்து வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த தந்தையும் மகனும், வீட்டில் இருந்த குடும்பத்தலைவர், வயோதிப பெண் மற்றும் சில வாரங்களுக்கு முன்னர் குழந்தை பிரசவித்த இளம் தாய் ஆகிய மூவர் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/202209
  22. Published By: DIGITAL DESK 7 25 DEC, 2024 | 11:29 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கையின் தேசிய பாதுகாப்பின் பிரதான ஒரு அம்சமாக கச்சத்தீவு காணப்படுகிறது. கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. இவ்விடயத்தில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியமற்றது. இந்தியாவின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக விதிக்கப்படும் நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டிய தேவை கிடையாதென முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் இந்தியாவின் திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானம் ஒன்றை அண்மையில் நிறைவேற்றியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கச்சத்தீவு விவகாரத்தை இந்திய அரசாங்கம் அரசியல் பிரச்சாரத்துக்காகவே பயன்படுத்திக் கொள்கிறது. இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் சென்று சட்ட விரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை. இந்திய மீனவர்கள் தான் இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் உள்நுழைந்து கடல் வளத்தையும், மீள் வளத்தையும் நாசம் செய்கிறார்கள். இந்திய மீனவர்கள் இலங்கையின் கடல் பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிப்பதை தடுப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்விடயத்தில் இந்திய அரசாங்கம் மந்த கதியில் தான் செயற்படுகிறது. கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. இவ்விடயம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டிய அவசியம் கிடையாது. இலங்கை இவ்விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவிப்பதும் பிற்காலத்தில் பல நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதற்கு காரணியாக அமையும். இலங்கையின் தேசிய பாதுகாப்பின் பிரதான அம்சமாக கச்சத்தீவு காணப்படுகிறது. இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக விதிக்கப்படும் சகல நிபந்தனைகளுக்கும் அடிபணிய வேண்டிய அவசியம் கிடையாது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயம் பல விடயங்களை உணர்த்தியுள்ளது. அரசியலமைப்பில் 13ஆவது திருத்தம் முழுமையாக இரத்துச் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்ற நிலையில் அதன் அம்சங்களின் பிரதான ஒன்றாக கருதப்படும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக இந்தியாவுக்கு வாக்குறுதியளித்துள்ளமை தவறானதொரு செயற்பாடாகும். புதிய அரசியலமைப்பு ஊடாக சமஷ்டியாட்சி முறைமையின் அம்சங்களை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. எக்காரணிகளுக்காகவும் சமஸ்டியாட்சி முறைமையை உருவாக்க இடமளிக்க போவதில்லை என்பதை அரசாங்கத்துக்கு தெரிவித்துக்கொள்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/202155
  23. பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு,முகமது ஷிஹாப் மற்றும் அவரது மனைவி பாத்திமா பர்சானா மார்க்கர் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் திருச்சி இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த தம்பதிக்கு எதிராக இலங்கையில் பல கோடி ரூபாய் நிதி மோசடி புகார் இருப்பதால், அவர்கள் மீண்டும் இன்று (டிச. 26) இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுடன் தம்பதியின் 13 வயது மகனும் அனுப்பி வைக்கப்பட்டார். திருச்சி விமான நிலையத்திலிருந்து அவர்கள் இலங்கை சென்றனர். இந்த விவகாரத்தில் தங்களை வலுக்கட்டாயமாக இலங்கைக்கு அனுப்புவதாக, பிபிசி தமிழிடம் பேசிய அப்பெண் தெரிவித்திருந்தார். முதலமைச்சரின் தனிப்பிரிவில் அதுகுறித்து முறையிட்டும் சட்டவிரோதமாக இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்தார், அப்பெண்ணின் வழக்கறிஞர். இலங்கையில் இவர்கள் மீது பல நூறு கோடி ரூபாய் நிதி மோசடிப் புகார் உள்ளதால், உரிய நடைமுறைகளின்படியே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறுகிறார், முகாமின் துணை ஆட்சியர். திருச்சி முகாமில் உள்ள இந்த தம்பதி மீது இலங்கையில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு என்ன? இந்தியாவுடன் 'எட்கா' உடன்படிக்கையில் கைச்சாத்திட இலங்கையில் எதிர்ப்பு ஏன்? இந்தியாவுக்கு இலங்கை அளித்த உறுதிமொழி - தமிழர்கள் பற்றி மோதி கூறியது என்ன? இந்தியா vs சீனா: இலங்கை ஜனாதிபதி முதல் பயணமாக இந்தியா செல்வதன் மூலம் உணர்த்தும் சேதி என்ன? இலங்கையில் திடீரென அதிகரித்த விலைவாசி - ரூ 260க்கு விற்கப்படும் ஒரு கிலோ அரிசி நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 2020 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி இரவு சுமார் 11 மணியளவில் கடலோர பாதுகாப்புப் படை ஆய்வாளர் செல்வராசு, கோடியக்கரை பேருந்து நிலையத்தில் சிறுவனுடன் ஒரு தம்பதி இருப்பதைப் பார்த்துள்ளார். அவர்களிடம் விசாரித்த போது, இலங்கையில் இருந்து படகு மூலமாக தமிழ்நாட்டுக்கு வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். 'உரிய அனுமதியில்லாமல் இலங்கையில் இருந்து வந்துள்ளனர். 1967 ஆம் ஆண்டு பாஸ்போர்ட் சட்டப்பிரிவு 12(1)(c)-ன்படி அவர்கள் கைது செய்யப்பட்டனர்' என வேதாரண்யம் காவல்நிலைய ஆய்வாளர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் முகமது ஷிஹாப் - பாத்திமா பர்சானா மார்க்கர் தம்பதியர் ஆவர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்த காவலர்கள், அவர்களின் பத்து வயது மகனை நாகையில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர். இந்த வழக்கில் இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்த தம்பதி, திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தனித்தனியாக அடைக்கப்பட்டனர். சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?52 நிமிடங்களுக்கு முன்னர் கஜகஸ்தான்: விமானம் பறவை மோதியதால் விபத்தில் சிக்கியதா? பயணிகள் என்ன ஆனார்கள்?25 டிசம்பர் 2024 இலங்கையில் நிதி மோசடிப் புகார் இந்த நிலையில், இலங்கையில் அத்தம்பதிக்கு எதிராக நிதி மோசடி புகார் இருப்பதால், அவர்களை தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதுதொடர்பாக, இலங்கைக்கு புறப்படுவதற்கு முன்பாக டிச. 25 அன்று பிபிசி தமிழிடம் பேசினார், பாத்திமா பர்சானா மார்க்கர். இதன் பின்னணியில் தங்கள் மீது இலங்கையில் நிதி மோசடிப் புகார் ஒன்று நிலுவையில் உள்ளதாக அவர் தெரிவித்தார். கொழும்புவில் பிரிவெல்த் குளோபல் (Privelth Global) என்ற நிதி நிறுவனம், இஸ்லாமிய சட்டப்படி செயல்படுவதாகக் கூறி முதலீட்டாளர்களிடம் வைப்புத் தொகையைப் பெற்று வந்ததாகவும், பொதுமக்களிடம் இருந்து சுமார் 150 கோடி இலங்கை ரூபாய் வைப்புத் தொகையைப் பெற்று மோசடி செய்ததாகவும் அங்குள்ள காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் கிழக்கு மாகாணம், கல்முனையில் உள்ள பிரிவெல்த் குளோபல் நிறுவனத்தின் கிளையில் இந்த மோசடி நடந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளராக முகமதுவும் இயக்குநராக அவரது மனைவியும் உள்ளனர். இந்த வழக்கின் தகவல்கள் அடங்கிய காவல்துறை தரப்பு ஆவணங்களை பிபிசி தமிழ் பார்த்தது. இந்தியாவுக்குள் ஒரு 'பாகிஸ்தான்' - எங்கே உள்ளது? அதனால் மக்களுக்கு என்ன பிரச்னை?25 டிசம்பர் 2024 அமெரிக்கா, பிரிட்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாடவே பல ஆண்டுகள் தடை இருந்தது ஏன் தெரியுமா?25 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தம்பதிகள் தனித்தனியாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டுக்குத் தப்பி வந்த தம்பதி அந்த வகையில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஏமாற்றப்பட்டதாக அவர்கள் மீது காவல்துறையில் வழக்குப் பதிவாகியுள்ளது. கல்முனை நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஷிகாப், அவரது மனைவி மற்றும் மகன் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். இதனை அறிந்து தம்பதியை இலங்கைக்கு வரவழைக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது. தங்கள் மீது 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்ததாக வழக்குப் பதிவாகியுள்ளதாக கூறும் பாத்திமா, "கொழும்புவில் எங்களுக்கு இருந்த ஒரே வீட்டையும் சிலர் அபகரித்துவிட்டனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்" என்கிறார். இயேசு காலத்தில் பல இறைத்தூதர்கள் தோன்றினாலும் அவர் மட்டும் பிரபலமாக இருப்பது ஏன்?25 டிசம்பர் 2024 "தலையில் எப்போது விழும் என்றே தெரியாது" - சென்னை பட்டினம்பாக்கம் குடியிருப்பின் நிலை என்ன? பிபிசி கள ஆய்வு25 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,HAND OUT படக்குறிப்பு, பாத்திமாவின் கணவர் முகமது ஷிஹாப் "இலங்கையில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை" கடந்த வாரம் திருச்சி முகாமில் பாத்திமாவை சந்தித்த வருவாய் ஆய்வாளர் ஒருவர், சில நாட்களில் அவர்களை இலங்கைக்கு அனுப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். "அதற்கான உத்தரவை அவர் காட்டிய போது, 'எங்களால் இலங்கைக்கு செல்ல முடியாது. அங்கே எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை' என்றேன். அவர் எனது குறைகளைக் கேட்கவில்லை" என்கிறார் பாத்திமா. "இந்த வழக்கு முடிவுக்கு வர வேண்டும் என்பது இலங்கை அரசின் நோக்கமாக உள்ளது. வங்கிக் கணக்கு உள்பட அனைத்து ஆவணங்களையும் அரசு ஆய்வு செய்யட்டும். எங்கள் மூலமாக பணப் பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக எந்த ஆதாரங்களும் இல்லை." எனக் கூறுகிறார் பாத்திமா. 404 ஏக்கருக்கு உரிமை கோரும் வக்ஃப் வாரியம், 2 மாதங்களாக போராடும் கிராமம் - கேரளாவில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு21 டிசம்பர் 2024 கிசெல் பெலிகாட்: பாலியல் வன்புணர்வு செய்த 51 பேர் - முன்னாள் கணவருக்கு 20 ஆண்டுகள் சிறை19 டிசம்பர் 2024 அயலக தமிழர் நலத்துறை சொன்னது என்ன? தங்களை இலங்கைக்கு அனுப்பும் முயற்சி நடப்பதை அறிந்து, தமிழக அரசின் தனிப்பிரிவுக்கு பாத்திமாவின் கணவர் முகமது ஷிஹாப் முகாமில் இருந்து மனு ஒன்றை அனுப்பியுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி அனுப்பப்பட்ட அந்த மனுவில், தங்களால் இலங்கைக்கு மீண்டும் செல்ல முடியாத காரணங்களை அவர் பட்டியலிட்டுள்ளார். இதற்கு அதே ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதியன்று தமிழ்நாடு அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் பதில் அளித்துள்ளார். அதில், 'முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் விருப்பத்தின்படியே இலங்கை செல்ல வழிவகை செய்யப்படுகிறது' எனக் குறிப்பிட்டுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல்: சாமானியர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன? கூட்டாட்சிக்கு எதிரானதா?18 டிசம்பர் 2024 இந்தியாவுக்கு இலங்கை அளித்த உறுதிமொழி - தமிழர்கள் பற்றி மோதி கூறியது என்ன?17 டிசம்பர் 2024 "சட்டவிரோதமானது" "ஆணையர் இவ்வாறு கூறினாலும் சட்டவிரோதமாக ஷிஹாப் தம்பதியை இலங்கைக்கு அனுப்ப உள்ளனர். இலங்கை செல்வதற்கு அவர்கள் விருப்பப்படவில்லை" என்கிறார், பாத்திமாவின் வழக்கறிஞர் பா.புகழேந்தி. பிபிசி தமிழிடம் பேசிய அவர், " இந்தியா, இலங்கைக்கு இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் உள்ளது. இலங்கை அரசுக்கு இவர்கள் தேவை என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்தால் மட்டுமே இவர்களை அனுப்ப முடியும்" என்கிறார். "ஆனால் அப்படி எந்த முயற்சிகளும் நடக்கவில்லை" எனக் கூறும் புகழேந்தி, " நிதி மோசடிப் புகார் என்பதால் வெளிநாடுகளில் இவர்களுக்கு அடைக்கலம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. அவர்களுக்கு விருப்பம் இல்லாதபோது, இலங்கைக்கு அனுப்புவது சரியானதல்ல" என்கிறார். குற்ற விசாரணைக்காக ஒருவரை தங்கள் நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றால், அவர் ஏன் தங்கள் நாட்டுக்குத் தேவைப்படுகிறார் என்பதற்கான ஆவணங்களுடன் அந்நாட்டு வெளியுறவுத் துறை இந்திய அரசை அணுக வேண்டும் என்றும் அதை அடிப்படையாக வைத்து இங்குள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அதற்கான உத்தரவைப் பெற வேண்டும் என்றும் வழக்கறிஞர் புகழேந்தி குறிப்பிடுகிறார். ஆனால், ஷிகாப் தம்பதி வழக்கில் இவை எதுவும் பின்பற்றப்படவில்லை என்றும் இலங்கை அரசு கேட்டுக் கொண்டதால் சட்டவிரோதமாக அவர்களை அங்கு அனுப்புவதாகவும் புகழேந்தி தெரிவித்தார். காஸா: போர் சூழலில் சின்னஞ்சிறு குழந்தைகளை வளர்க்கும் ஊடகவியலாளரின் அனுபவம்23 டிசம்பர் 2024 சிரிய தலைநகர் டமாஸ்கஸில் பூமிக்கு அடியில் இருந்த ரகசிய தளத்தில் என்ன இருந்தது?22 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,HANDOUT துணை ஆட்சியர் சொல்வது என்ன? ஆனால், பாத்திமாவின் குற்றச்சாட்டுகளை திருச்சி சிறப்பு முகாமின் சிறப்பு துணை ஆட்சியர் நஜிமுன்னிஷா முற்றிலும் மறுக்கிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டுக்குள் அவர்கள் சட்டவிரோதமாக நுழைந்தது தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது. புழல் சிறையில் இருந்து அவர்கள் வெளியில் வந்த உடன் சிறப்பு முகாமில் வைத்திருப்பது வழக்கம். தற்போது தமிழக அரசிடம் இருந்து உத்தரவு வந்ததால் அதன் அடிப்படையில் அவர்களை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்கிறார். தம்பதியை அனுப்புமாறு கோரி பாஸ்போர்ட் மற்றும் பயண டிக்கெட்டை இலங்கை தூதரகம் அனுப்பியுள்ளதாக கூறும் நஜிமுன்னிஷா , "இலங்கை அரசு கேட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/cgkx2y27ykyo
  24. Published By: VISHNU 26 DEC, 2024 | 02:03 AM இந்திய அரச வங்கியொன்றுக்கு இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் புலனாய்வுப்பிரிவு 2 மில்லியன் ரூபா அபராதம் விதித்துள்ளது. இலங்கையின் 2006 ஆம் ஆண்டு 6 ஆம் இலக்க நிதியியல் பரிமாற்ற அறிக்கையிடல் சட்டத்தின் சரத்துக்களுக்கு அமைவாக செயற்படாமையினாலேயே மத்திய வங்கியினால் மேற்குறிப்பிட்டவாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவ்வங்கி, இலங்கையில் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் தமது வங்கியின் கிளைகள் இயங்கிவருவதாகவும், எதிர்வருங்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/202168
  25. நாட்டில் இனங்காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பைத் தொடர்ந்து 15 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இம்மாதம் 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 47 ஆயிரத்து 599 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த மாதம் சுமார் 3,178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். சில நாட்களாக நிலவிவந்த மழையுடன் கூடிய வானிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக டெங்கு பரவல் அதிகரித்துள்ளது. அதற்கமைய அனைத்து மாவட்டங்களிலும் பதிவாகக்கூடிய டெங்கு நோயாளர்களின் வீதமும் சடுதியாக அதிகரித்துள்ளது. டெங்கு பரவலைக் கருத்திற் கொண்டு 15 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் அதி உயர் டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 23 ஆக உயர்வடைந்துள்ளது. கொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், காலி, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான அதிகரிப்பைக் காணக் கூடியதாக உள்ளது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/314139

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.