Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரை ஒதுங்கிய மியன்மார் படகு - வெளியானது புதிய தகவல் 20 DEC, 2024 | 06:59 PM (துரைநாயகம் சஞ்சீவன்) முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் நேற்றைய தினம் (19) கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்று (20) காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. இந்த படகில் பயணித்த 115 பயணிகளும் அஷ்ரப் துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டு குருதி மாதிரிகள் பெறப்பட்டு சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் கர்ப்பிணித் தாய் ஒருவர் உட்பட 39 ஆண்களும் 27 பெண்களும் 49 சிறுவர்களும் அடங்குகின்றனர். இவர்களை பிற்பகல் 3 மணியளவில் திருகோணமலை நீதிமன்ற நீதிபதி அர்யூன் அரியரெட்ணம் விஜயம் மேற்கொண்டு விசாரணைகள் மேற்கொண்டிருந்தார். மாலை 4.30 மணிக்குப் பின்னர் அவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களுக்கு தேவையான உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் உட்பட அரச திணைக்களங்களும், பொலிஸாரும், தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றார்கள். அத்துடன் இவர்களை தங்கவைப்பதற்காக நாமகள் வித்தியாலயமும் ஒழுங்குபடுத்தப்பட்டு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உத்தரவின் பின்னர் அவர்களை தங்க வைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்றைய தினம் (20) இவர்களுக்கான மதிய உணவை AHRC தொண்டர் நிறுவனம் வழங்கியிருந்தது. மியன்மார் நாட்டில் 12 வருடகாலமாக தாம் புனர்வாழ்வு முகாம்களில் வசித்து வந்ததாகவும் தம்மை UN பராமரித்து வந்த நிலையில் அவர்கள் கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் இதனால் வாழமுடியாத சூழ்நிலையில் இலங்கை நாட்டுக்கு செல்ல முடிவெடுத்ததாகவும் தெரிவிக்கின்றார்கள். இலங்கைக்கு வருகை தரும் நோக்கில் மூன்று படகுகளில் 120 பேர் வருகை தந்ததாகவும் இடைநடுவே இரண்டு படகுகள் பழுதடைந்ததாகவும் இதனால் ஒரு படகில் மற்றைய படகில் வந்த நபர்களும் சேர்ந்து பயணித்ததாகவும் குறிப்பிடுகின்றனர். அத்துடன் வரும் வழியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஐந்து பேர் பசியினால் உயிரிழந்ததாகவும் அவர்களின் உடல்களை கடலில் வீசிவிட்டு வந்ததாகவும் அந்த குடும்பத்தில் ஒரு சிறுமி உயிர் தப்பி தம்முடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கைக்கு வருவதற்காக தங்களுடைய சொத்துகளை விற்று தங்கள் நாட்டின் பெறுமதியில் ஒவ்வொருவரும் 8 இலட்சம் ரூபா வழங்கி படகினை கொள்வனவு செய்து கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி அங்கிருந்து புறப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா இந்த நபர்களை பார்வையிட்டு அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக அரச அதிகாரிகளுடனும் பொலிஸாருடனும் கலந்துரையாடியிருந்தார். அதன்படி, படகில் வந்தவர்களை திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201762
  2. சட்டவிரோத நிதி திட்டங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த திட்டங்கள் தொடர்பில் ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களில், சில நிறுவனங்கள் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. ஏனைய நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் நோக்கில் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய வங்கியால் வௌியிடப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட திட்டங்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் பின்வருமாறு... 01. Tiens Lanka Health Care (Pvt) Ltd 02. Best Life International (Pvt) Ltd 03. Mark-Wo International (Pvt) Ltd 04. V M L International (Pvt) Ltd 05. Fast3Cycle International (Pvt) Ltd 06. Sport chain app, Sport chain zs society Sri Lanka 07. Onmax DT 08. MTFE App, MTFE SL Group, MTFE Success Lanka, MTFE DSCC Group 09. Fastwin (Pvt) Ltd. 10. Fruugo Oline App/Fruugo Oline (Pvt) Ltd. 11. Ride to Three Freedom (Pvt) Ltd. 12. Qnet 13. Era Miracle (Pvt) Ltd and Genesis Business School 14. Ledger Block 15. Isimaga International (Pvt) Ltd. 16. Beecoin App and Sunbird Foundation 17. Windex Trading 18. The Enrich Life (Pvt) Ltd 19. Smart Win Entreprenuer (Private) Limited 20. Net Fore International (Private) Limited / Netrrix https://tamil.adaderana.lk/news.php?nid=197582
  3. எந்தவொரு உத்தியோகத்தருக்கும் அநீதி இழைக்கப்பட்டால் அந்த நபரின் பாதுகாப்பிற்காக நான் முன் நிற்பேன் - ஜனாதிபதி Published By: DIGITAL DESK 7 20 DEC, 2024 | 05:51 PM (நமது நிருபர்) அரச நிறுவனமொன்றில் நியாயமான சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்களுக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை. அரசாங்கம் என்ற வகையில் முழுக் கட்டமைப்பும் சரிவை கண்டுள்ளது. மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளுக்கு அரசியல் அதிகாரம் மட்டுமல்ல அரச சேவையும் பொறுப்புக் கூற வேண்டும் என்பதாகும். தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்டிருக்கும் புதிய குழுவின் ஊடாக அரசியல் செல்வாக்கை பொருட்படுத்தாமல் அவை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அத்துடன் எமது நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தி வைப்பதற்காக மேற்கொள்ளப்படும் பணியை நிறைவேற்றும் போது எந்தவொரு உத்தியோகத்தருக்கும் அசௌகரியம், அநீதி அல்லது அசாதாரணம் இழைக்கப்பட்டால் அந்த நபரின் பாதுகாப்பிற்காக நான் முன் நிற்பேன். எவரேனும் அதிகாரியொருவர் அந்த திட்டத்தை சிதைக்கும் நோக்கில் தாமதப்படுத்தாவாராயின் அதற்கும் நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார். நாரஹேன்பிட்டியில் உள்ள 'நில மெதுர' கட்டிடத்தில் அமைந்துள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற மாவட்ட செயலாளர் ஃ அரசாங்க அதிபர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரசாங்க அதிபரிலிருந்து மாவட்டச் செயலாளர் என பதவிப் பெயர் மாற்றம் பெற்ற இந்த சேவையானது 200 வருடங்கள் பழமையானது. எமது நாட்டை புதிய திசையில் வழிநடத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளது. இருப்பினும் இறுதி நோக்கம் மற்றும் இலக்கு தொடர்பில் திருப்தியடையும் வகையில் தற்போதைய நிலைமை இல்லை. அரச நிறுவனமொன்றில் நியாயமான சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்களுக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை. அரசு என்ற வகையில் முழுக் கட்டமைப்பும் சரிவை கண்டுள்ளது. சரிவடைந்திருக்கும் கட்டமைப்பை மீள உருவாக்க நாம் தயாரா? இல்லையா? என்பது குறித்து எம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும். மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளுக்கு அரசியல் அதிகாரம் மட்டுமல்ல அரச சேவையும் பொறுப்புக் கூற வேண்டும் என்பதாகும். அரச சேவையில் இருக்கின்ற கதிரை தொடர்பான பிரச்சினை எனக்கு இல்லை. கதிரையில் அமர வைப்பதற்கு யார் இருக்கின்றார்கள் என்ற பிரச்சினையே எனக்கு உள்ளது. உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உள்வாங்கி அவற்றுக்கு இசைவான மாற்றங்களை செய்துகொண்டு தமது துறைக்கு தலைமைத்துவம் வழங்கி அதனை வெற்றியை நோக்கி வழிநடத்தும் கதிரைகள் வெற்றிடமாக காணப்படுகின்றது. எனது இந்திய விஜயத்தின் போது 1500 அதிகாரிகளை இந்தியாவிற்கு அனுப்பி பயிற்சி அளிக்க இணக்கம் எட்டப்பட்டது. அடுத்த வருடத்தில் உயர்தரத்தில் சித்தியடையும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி கற்பதற்கு அரசாங்கத்தின் புலமைப்பரிசில்களை வழங்க எதிர்பார்க்கிறோம். சில நிறுவனங்கள் மற்றும் பதவிகள் எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டன என்பது பிரச்சினையாக உள்ளது. எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் காணப்படுவதால் அதற்கான புதிய வியூகம் ஒன்று அவசியப்படுகிறது. எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்வதற்கான புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அரசியல் செல்வாக்குகளை பொருட்படுத்தாமல் அவை தொடர்பிலான தீர்மானங்கள் எடுக்கப்படும். அரச சேவையை மட்டுப்படுத்தும் எதிர்பார்ப்பு தனக்கு இல்லை. ஆனால் அரச சேவையை நடத்திச் செல்வதற்கான செலவில் பிரச்சினைகள் இருப்பதால் அரச சேவையை ஒரே நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்து முறையான பொறிமுறைக்கு கொண்டு வர வேண்டும். இந்தப் பணிகளை நடைமுறைப்படுத்த அரசியல் அதிகார அடிப்படையில் தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவோம். அரச அதிகாரிகளின் பங்களிப்பே இந்தப் பணிகளின் வெற்றிக்கு வழிவகுக்கும். மக்கள் ஆணையின் 80 வீதம் எதிர்பார்ப்புகளை அரச உத்தியோகத்தர்களே வௌிப்படுத்தியுள்ளனர் என்ற வகையில் அரசியல் அதிகார தரப்பின் பணிகளுக்கு அவர்கள் இணக்கம் மற்றும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். எனவே இவை இரண்டும் இருவேறு முரண்பாடான குழுக்கள் அல்ல. இரண்டும் இணக்கமான குழுக்கள். அதன்படி அரசியல் அதிகாரம் மற்றும் பொதுச் சேவையின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் இலக்குகள் சமநிலையானதாக காணப்படுவதை கடந்த மக்கள் ஆணை வௌிப்படுத்தியிருப்பதால் இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட பணியே எம்முன் உள்ளது. மேலும் மக்களுடன் தொடர்புபடும் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும். டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் விரைவுபடுத்தப்பட்டு புதிய வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் 'ஊடநயn ளுசடையமெய' திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எமது நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தி வைப்பதற்காக வறுமையை ஒழித்தல் டிஜிட்டல் மயமாக்கல் சமூகத்தை கருத்தியல் ரீதியாக மாற்றியமைத்தல் என்ற மூன்று துறைகளின் கீழ் 'ஊடநயn ளுசடையமெய' ஊடாக பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அந்த பணியை நிறைவேற்றும் போது எந்தவொரு உத்தியோகத்தருக்கும் அசௌகரியம் அநீதி அல்லது அசாதாரணம் இழைக்கப்பட்டால் அந்த நபரின் பாதுகாப்பிற்காக தாம் முன் நிற்போம். எவரேனும் அதிகாரியொருவர் அந்த திட்டத்தை சிதைக்கும் நோக்கில் தாமதப்படுத்தாவாராயின் அதற்கும் நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய. அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ. எச். எம். எச். அபயரத்ன, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க, பிரதமரின் செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்திரி, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். அலோக பண்டார, மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/201758
  4. வரி திருத்தம் தொடர்பில் IMF விசேட அறிவிப்பு இலங்கையின் அண்மைய வரி திருத்தங்களை மீளாய்வு செய்யவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார். அதேபோல், இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்திற்கு நிறைவேற்று சபையின் ஒப்புதலைத் தொடர்ந்து பணியாளர் அறிக்கையில் முழுமையான மதிப்பீடு உள்ளடக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=197568
  5. எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்டிருக்கும், புதிய குழுவின் ஊடாக அரசியல் செல்வாக்கை பொருட்படுத்தாமல், அவை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நாரஹேன்பிட்டியில் உள்ள 'நில மெதுர' கட்டிடத்தில் அமைந்துள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (20) நடைபெற்ற மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசாங்க அதிபரிலிருந்து மாவட்டச் செயலாளர் என பதவிப் பெயர் மாற்றம் பெற்ற இந்த சேவையானது 200 வருடங்கள் பழமையானது எனவும், எமது நாட்டை புதிய திசையில் வழிநடத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார். இருப்பினும், இறுதி நோக்கம் மற்றும் இலக்கு தொடர்பில் திருப்தியடையும் வகையில் தற்போதைய நிலைமை இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரச நிறுவனமொன்றில் நியாயமான சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்களுக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை என்றும், அரசு என்ற வகையில் முழுக் கட்டமைப்பும் சரிவை கண்டுள்ளதெனவும் தெரிவித்தார். சரிவடைந்திருக்கும், கட்டமைப்பை மீள உருவாக்க நாம் தயாரா? இல்லையா? என்பது குறித்து எம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளுக்கு அரசியல் அதிகாரம் மட்டுமல்ல, அரச சேவையும் பொறுப்புக் கூற வேண்டும் என்பதையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார். அரச சேவையில் இருக்கின்ற கதிரை தொடர்பான பிரச்சினை தனக்கு இல்லை எனவும், கதிரையில் அமர வைப்பதற்கு யார் இருக்கின்றார்கள் என்ற பிரச்சினையே தனக்கு இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உள்வாங்கி, அவற்றுக்கு இசைவான மாற்றங்களை செய்துகொண்டு , தமது துறைக்கு தலைமைத்துவம் வழங்கி அதனை வெற்றியை நோக்கி வழிநடத்தும் கதிரைகள் வெற்றிடமாக காணப்படுகின்றதென கூறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது இந்திய விஜயத்தின் போது 1500 அதிகாரிகளை இந்தியாவிற்கு அனுப்பி பயிற்சி அளிக்க இணக்கம் எட்டப்பட்டது என்றும் கூறினார். அடுத்த வருடத்தில் உயர்தரத்தில் சித்தியடையும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி கற்பதற்கு அரசாங்கத்தின் புலமைப்பரிசில்களை வழங்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். சில நிறுவனங்கள் மற்றும் பதவிகள் எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டன என்பது பிரச்சினையாக உள்ளதாகவும், எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் காணப்படுவதால், அதற்கான புதிய வியூகம் ஒன்று அவசியப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்வதற்கான புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் செல்வாக்குகளை பொருட்படுத்தாமல் அவை தொடர்பிலான தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டார். அரச சேவையை மட்டுப்படுத்தும் எதிர்பார்ப்பு தனக்கு இல்லை எனவும், ஆனால் அரச சேவையை நடத்திச் செல்வதற்கான செலவில் பிரச்சினைகள் இருப்பதால், அரச சேவையை ஒரே நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்து முறையான பொறிமுறைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். இந்தப் பணிகளை நடைமுறைப்படுத்த அரசியல் அதிகார அடிப்படையில் தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதாகவும், அரச அதிகாரிகளின் பங்களிப்பே இந்தப் பணிகளின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மக்கள் ஆணையின் 80% எதிர்பார்ப்புகளை அரச உத்தியோகத்தர்களே வௌிப்படுத்தியுள்ளனர் என்ற வகையில், அரசியல் அதிகார தரப்பின் பணிகளுக்கு அவர்கள் இணக்கம் மற்றும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். எனவே, இவை இரண்டும் இருவேறு முரண்பாடான குழுக்கள் அல்ல என்பதையும் இரண்டும் இணக்கமான குழுக்கள் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அதன்படி, அரசியல் அதிகாரம் மற்றும் பொதுச் சேவையின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் இலக்குகள் சமநிலையானதாக காணப்படுவதை கடந்த மக்கள் ஆணை வௌிப்படுத்தியிருப்பதால், இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட பணியே எம்முன் உள்ளதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், மக்களுடன் தொடர்புபடும் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். https://tamil.adaderana.lk/news.php?nid=197592
  6. Published By: VISHNU 20 DEC, 2024 | 08:09 PM உள்ளுராட்சி மன்ற தேர்தல் அடுத்த வருடம் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக நடத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (20) கண்டிக்கு விஜயம் செய்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலும் அடுத்த வருடத்திற்குள் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார். முதலில் மல்வத்து விகாரைக்கு சென்ற ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரர் வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து அவரிடம் நலம் விசாரித்ததுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அதனையடுத்து மல்வத்து மகாநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர். அதனையடுத்து அஸ்கிரிய விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வண. வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் வண. ஆணமடுவே தம்மதஸ்ஸி தேரர், பிரதி பதிவாளர் வண. நாரம்பனாவே ஆனந்த தேரர்,முதியங்கன ரஜமகா விகாரையின் விகாராதிபதி வண.முருத்தெனியே தம்மரத்தன தேரர் உள்ளிட்டோர் இதன்போது வருகை தந்திருந்ததுடன் அவர்கள் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதியின் எதிர்கால பணிகளுக்கு ஆசி வழங்கினர். போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/201771
  7. சுனிதா வில்லியம்ஸ் மார்ச் மாதம் தான் பூமிக்கு திரும்புவார் சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் சிக்கியுள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான் திரும்புவார் என நாசா தெரிவித்துள்ளது. 2025 பிப்ரவரி மாதம் அவர் பூமி திரும்புவார் என கடந்த ஆகஸ்ட் மாதம் நாசா தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது அவரது வருகை மேலும் தாமதமாகி உள்ளது. நாசா விண்வெளி வீரர்கள் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலக்ஸாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் க்ரூ-9 மிஷனுக்கான விண்கலம் மூலம் பிப்ரவரியில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்தது. இந்நிலையில், தற்போது அதன் புறப்பாடு மேலும் தாமதம் அடைந்துள்ளதாக தகவல். இதை நாசாவின் கமர்ஷியல் க்ரூ திட்டத்தின் மேலாளர் ஸ்டீவ் ஸ்டிச் உறுதி செய்துள்ளார். https://thinakkural.lk/article/313979
  8. மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரத்தில் அரசியல் லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறிவிட்டு இப்பொழுது, அந்த விடயத்திலிருந்து பின்வாங்குவது, இந்த அரசாங்கம் மீதும் ஊழல் தொடர்பில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வருடத்தில் 361மதுபான சாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னதாக, இவ்வாறான மதுபான சாலை உரிமைப்பத்திரங்கள் வழங்குவதில் அரசியல் லஞ்சம் இருப்பதாக சொல்லியிருந்தார்கள். அப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த பலரது சிபாரிசின் அடிப்படியில் ஏராளமான மதுபானசாலைகளுக்கான உருமைப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என சொல்லியிருந்தார்கள். அந்த அரசியல் லஞ்சம் என்ற விவகாரத்தில் தங்கள் பதவிக்கு வந்து மூன்று நாள்களில் வெளிப்படுத்துவோம் என்றும் கூறியிருந்தார்கள். ஆனால், இரண்டு, மூன்று மாதங்கள் ஆகியும் யார் யாருக்கு உரிமை பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை மாத்திரம்தான் வெளிப்படுத்தியுள்ளனர். இது அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த விடயம்தான். யாருடைய சிபாரிசில் இந்த உரிமை பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்தினால் தான், அரசியல் லஞ்சம் வழங்கப்பட்டமை என்பதை உறுதி செய்யமுடியும். ஆகவே, லஞ்சம், ஊழல் அனைத்தையும் முற்றுமுழுதாக ஒழித்துவிடுவோம் என்று கூறி பதவிக்கு வந்த இந்த அரசாங்கம். மதுபானசாலை அனுமதிப்பத்திர விடயத்தில் சுற்றுப் பின்வாங்குவதாக தோன்றுகிறது. ஒவ்வெரு மதுபானசாலைகளும் யாரோ ஒரு அரசியல்வாதியின் சிபாரிசின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்பதை, அரசாங்க கட்சியே தேர்தலுக்கு முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தது. அப்படியானால், அந்த பெயர் பட்டியலை அரசாங்கம் வெளியிடவேண்டும். இதுவொரு பாரதூரமான விடயம். இதனை நாங்கள் தொடர்ச்சியாக கூறிவருகின்றோம். முக்கிய முறைப்பாடு ஒன்றை தேர்தலுக்கு முன்னர் கூறிவிட்டு, அதாவது அரசியல் லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறிவிட்டு இப்பொழுது அந்த விடயத்திலிருந்து பின்வாங்குவது, இந்த அரசாங்கம் மீதும் ஊழல் தொடர்பான பாரிய சந்தேகம் ஒன்றை எழுப்புகின்றது. இவர்களுக்கும் லஞ்சம் கொடுத்து இந்த தகவல்கள் மறைக்கப்படுகின்றனவா என்ற கேள்விகள் எழுகின்றன என்றார். https://thinakkural.lk/article/313974
  9. 20 DEC, 2024 | 03:54 PM எம்.எம்.பி.எல் - பாத்ஃபைன்டர் நிறுவனக்குழுமம் மற்றும் எச்.சி.எல் எட் டெக் இலங்கை தொழில்நுட்ப மற்றும் வர்த்தக நிறுவனத்துக்கும் இடையில் இலங்கையில் தொழில்நுட்பக்கல்வியை மேம்படுத்துவதில் ஒன்றிணைந்து பணியாற்றுவதை இலக்காகக்கொண்டு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று வியாழக்கிழமை (19) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்பட்டது. (படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/201736
  10. பட மூலாதாரம்,HAYAT TAHRIR AL-SHAM படக்குறிப்பு, சிரியாவின் கிளர்ச்சிக் குழுத் தலைவர் அகமது அல்-ஷாராவிடம் பிபிசி பேசியது கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரேமி போவென் பதவி, சர்வதேச ஆசிரியர், பிபிசி நியூஸ் சிரியா போரினால் சோர்வடைந்துள்ளதாகவும், அதன் அண்டை நாடுகளுக்கோ அல்லது மேற்கத்திய நாடுகளுக்கோ, தங்கள் நாட்டால் அச்சுறுத்தல் இல்லை என்றும், சிரியாவின் தற்போதைய தலைவர் அகமது அல்-ஷாரா கூறியுள்ளார். சிரியாவின் தலைநகரம் டமாஸ்கஸில் பிபிசிக்கு அளித்தப் பேட்டியில், சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். "ஆட்சி மாற்றம் நடந்த பிறகு, பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும். ஏனெனில், அவை முந்தைய ஆட்சியை இலக்காக வைத்து மேற்கொள்ளப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களையும் ஒடுக்குமுறையில் ஈடுபட்டவர்களையும் ஒரே மாதிரியாக நடத்தக்கூடாது," என்று அல்-ஷாரா கூறினார். இரண்டு வாரங்களுக்கு முன்னர், சிரிய முன்னாள் அதிபர் பஷர் அல்-அசத்தின் ஆட்சியைக் கவிழ்த்த திடீர் தாக்குதல்களுக்கு ஷாரா தலைமைத் தாங்கினார். அகமது அல்-ஷாரா, கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின் (HTS) தலைவர். முன்பு அவர் அபு முகமது அல்-ஜொலானி எனும் பெயரால் அறியப்பட்டார். இஸ்ரேல் சிரியாவை தாக்குவது ஏன்? கோலன் குன்றுகளில் என்ன நடக்கிறது? சிரியா போர்: நாட்டின் எந்தெந்த பகுதிகளை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? - விரிவான விளக்கம் செட்னயா சிறை: சிரியாவின் ரகசிய 'மனிதப் படுகொலை கூடம்' சிரியா: செட்னயா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 'எலும்புக்கூடு போல் தோற்றமளித்த' மர்ம கைதி ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பு, பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று அகமது அல்-ஷாரா தெரிவித்தார். கடந்த 2016 இல் அல்-கொய்தாவிலிருந்து பிரிந்துவந்து தொடங்கப்பட்ட குழுவாக, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பு அறியப்படுவதால், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா. உட்பட பல சர்வதேச அமைப்புகளால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம், ஒரு பயங்கரவாத குழு அல்ல என்று ஷாரா கூறினார். அக்குழுவைச் சேர்ந்தவர்கள், பொதுமக்களையோ அல்லது பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளையோ குறிவைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். முந்தைய அசத் ஆட்சியில் நடந்த குற்றங்களால் தாங்கள் பாதிக்கப்பட்டதாக அக்குழுவினர் கருதுகின்றனர். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம், ஒரு பயங்கரவாத குழு அல்ல என்று ஷாரா கூறினார் பெண் கல்வி பற்றி கருத்து மேலும், சிரியாவை ஆப்கானிஸ்தானாக மாற்ற அவர் விரும்புவதாகக் கூறப்படும் கருத்தையும் மறுத்தார். ஒவ்வொரு நாடும் வெவ்வேறு விதமான கலாசாரங்களுடன் வித்தியாசமானவை என அவர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் ஒரு பழங்குடி சமூகமாக இருந்தது. சிரியாவில், வித்தியாசமான மனநிலை இருப்பதாக அவர் தெரிவித்தார். பெண்களுக்குக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதை தான் நம்புவதாக அவர் கூறினார். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிரியாவின் வடமேற்கு மாகாணமான இட்லிப் பற்றி குறிப்பிடுகையில், "எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பல்கலைக்கழகங்கள் உள்ளன," என்று ஷாரா கூறினார். அதுகுறித்து மேலும் பேசிய அவர், "பல்கலைக்கழகங்களில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான பெண்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன்." என்றும் அவர் குறிப்பிட்டார். யுக்ரேன் உடனான போரில் ரஷ்யாவை தொடர்ந்து முன்னேற வைக்கும் ஒரு 'பயங்கர' உத்தி இதுதான்10 டிசம்பர் 2024 சிரியா: மக்களின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது? அடுத்து என்ன நடக்கும்?11 டிசம்பர் 2024 சிரியா: பஷர் அல்-அசத்துக்கு புகலிடம் கொடுத்த ரஷ்யா9 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,HTS படக்குறிப்பு, சிரிய மக்களுள் பலர் அகமது அல்-ஷாராவை நம்பவில்லை மது அருந்துவது குறித்து என்ன கூறினார்? மேலும், மது அருந்துவது அனுமதிக்கப்படுமா என்ற கேள்விக்கு, "பல விஷயங்கள் சட்ட ரீதியானவை என்பதால் அதைப் பற்றி பேச எனக்கு உரிமை இல்லை" என்று ஷாரா தெரிவித்தார். "அரசியலமைப்பை இயற்றுவதற்கு சிரிய சட்ட நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று உள்ளது. இந்த குழு சட்ட ரீதியான பிரச்னைகள் குறித்து முடிவு செய்யும். எந்த ஆட்சியாளரோ அல்லது அதிபரோ, அந்தச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும்" என்றும் அவர் கூறினார். ஷாரா நேர்காணல் முழுவதும் நிதானமாக இருந்தார். குடிமக்கள் அணியும் உடைகளை அணிந்திருந்தார். மேலும், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பு, அதன் கடந்த கால பயங்கரவாதத்திலிருந்து விலகவில்லை என நம்புபவர்களுக்கு, `அது உண்மையில்லை' என்று உறுதியளிக்க அவர் முயன்றார். சிரிய மக்களுள் பலர் அவரை நம்பவில்லை. அடுத்த சில மாதங்களில், சிரியாவின் புதிய ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள், சிரியா எந்த மாதிரியான நாடாக இருக்க வேண்டும் என்பதையும், அவர்கள் எப்படி ஆட்சி செய்ய விரும்புகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்தும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cwyxwn49gpko அசாத் அரசாங்கத்தை பதவியிலிருந்த அகற்றிய சிரிய கிளர்ச்சியாளர்களின் எதிர்காலம் என்ன? 19 DEC, 2024 | 08:58 AM சிரியாவில் பசார் அல் அசாத் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்றிய கிளர்ச்சிக்குழு கலைக்கப்படும் என அந்த குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். சிரிய கிளர்ச்சிகுழு கலைக்கப்படும் அதன் உறுப்பினர்கள் சிரிய இராணுவத்தில் இணைக்கப்படுவார்கள் என எச்டிஎஸ் அமைப்பின் தலைவர் அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார். அனைவரும் சட்டத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் பல்லின சமூகத்தை கொண்ட நாட்டில் ஐக்கியம் ஏற்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். சிரியா ஐக்கிய தேசமாக தொடரவேண்டும் என தெரிவித்துள்ள அவர் சமூக நீதி நிலவவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சிரிய அகதிகள் மீண்டும் தாயகம் திரும்பவேண்டும் என்றால் சிரியா மீதான சர்வதேச தடைகள் நீங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/201616
  11. யாழில் விலங்குகளின் இரத்த மாதிரிகள் சேகரிப்பு யாழ்ப்பாணம், வடமராட்சி கரவெட்டி மற்றும் பருத்தித்துறை கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்றைய தினம் (19) விலங்குகளிலிருந்து இரத்த மாதிரிகள் பெறப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அண்மைக் காலமாக எலிக் காச்சல் நோயால் பாதிக்கப்பட்ட பலர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். சிலர் உயிரிழந்தனர். இந்த நிலையில், எலிக் காச்சல் விலங்குகளில் இருந்து பரவி இருக்கலாம் என்ற அச்சத்தில், தொற்றுநோயியல் பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைய விலங்குகளிலிருந்து இரத்த மாதிரிகள் பெறப்பட்டன. கண்டி பெரதேனியாவிலிருந்து வருகைதந்த விலங்கியல் பிரிவினர் எலிக் காச்சல் நோயால் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று, சுற்றுச் சூழல் பகுதிகளை ஆய்வு செய்ததுடன், அந்த பகுதிகளில் உள்ள விலங்குகளில் இருந்து இரத்த மாதிரிகளையும் பெற்றுக்கொண்டனர். https://thinakkural.lk/article/313971
  12. 20 DEC, 2024 | 02:58 PM பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை நிறுத்து எனும் தொனிப்பொருளில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் மற்றும் ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு இணைந்து நடத்திய போராட்டம் கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக நடைபெற்றது. (படப்பிடிப்பு – ஜே. சுஜீவ குமார்) https://www.virakesari.lk/article/201730
  13. 20 DEC, 2024 | 12:56 PM (எம்.மனோசித்ரா) பொதுமக்களுக்கு தற்பாதுகாப்பிற்காக ஒருவருக்கு ஒரு துப்பாக்கி மட்டுமே வழங்கப்படும். மேலும் அது புலனாய்வவுத்துறை அறிக்கைகளுக்கமைய மேற்கொள்ளப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பொதுமக்களுக்கு தற்பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை தற்காலிகமாக மீளப்பெறுதல் குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : தற்பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை கடந்த நவம்பர் 21ஆம் திகதிக்கு முன்னர் அளவு மதிப்பாய்வுக்காக அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சு ஏற்கனவே அறிவித்துள்ளது. இவ்வறிவிப்புக்கு அமைய, அனுமதி பத்திரம் பெற்றவர்களில் 85 சதவீதமானோர் துப்பாக்கிகளை மீள ஒப்படைத்துள்ளனர். மேலும், அவர்கள் தொடர்ந்தும் துப்பாக்கிகளை வைத்திருக்க விரும்பினால், அதன் அவசியத்தை விளக்கி ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சிடம் மேல் முறையீடுகளை சமர்ப்பிக்கவும் அவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்நது. அந்த மேல் முறையீடுகளைச் சமர்ப்பித்த உரிமதாரர்களின் துப்பாக்கிகளை ஆய்வு செய்வதற்கும் மறுபரிசீலனை செய்வதற்கும் துப்பாக்கிகள் மற்றும் அவற்றின் ஆவணங்களை பாதுகாப்பு அமைச்சிடம் சமர்ப்பிக்குமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. தற்பாதுகாப்பிற்காக ஒருவருக்கு ஒரு துப்பாக்கி மட்டுமே வழங்கப்படும் என்பது பாதுகாப்பு அமைச்சின் முடிவாகும், மேலும் அது புலனாய்வவுத்துறை அறிக்கைகளுக்கமைய மேட்கொள்ளப்படும். துப்பாக்கிகள் தொடர்பான அனைத்து மேல் முறையீடுகள் மற்றும் துப்பாக்கிச் தொடர்பான ஆய்வுகள் 2025 ஜனவரி 20 அன்று முடிவடையும் என்றும், மற்றும் அனுமதி பத்திரம் அந்தத் திகதிக்கு முன்னர் துப்பாக்கிகளை ஆய்வுக்காக சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடந்த காலங்களில் இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரும் குறிப்பிடத்தக்களவு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை வழங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே, டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. எனவே, அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்படுகிறது. குறித்த திகதிக்கு முன்னர் துப்பாக்கிகள் கணக்கெடுப்பு/ஆய்வுக்கு உட்படாத உரிமதாரர்களுக்கு எதிராக 1916 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சினால் எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானத்தின்படி, சிவில் சமூகத்தில் துப்பாக்கிப் பாவனை மற்றும் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பான சமூகத்தை உறுதி செய்வதற்காக, பாதுகாப்பு அமைச்சினால் எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கமைய, இதுவரைக்கும் ஒப்படைக்கப்படாத அனைத்து அனுமதி பத்திரம் பெற்ற துப்பாக்கிகளும் 2025 ஜனவரி 20 திகதிக்கு முன் ஆய்வுக்காக ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/201722
  14. எலிக்காய்ச்சல் நோயால் இதுவரை 121 பேர் பாதிப்பு – 8300 பேருக்கு தடுப்பு மருந்துகள் யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 32 பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 8 பேரும் சிகிச்சைபெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 6 நோயாளர்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் இந்நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் ஏற்படவில்லை. எலிக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்காக தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. நேற்றுவரை ஏறத்தாழ 8300 பேருக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் காய்ச்சல் நோயாளர்களை இனங்காண்பதற்காக சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள கால்நடைகளில் இக்கிருமித்தொற்று உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக கொழும்பிலிருந்து கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்திலிருந்து குழு ஒன்று யாழ் மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்தது. இக்குழு பருத்தித்துறை, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்குச் சென்று கால்நடைகளிலிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு குருதி மாதிரிகளை எடுத்துள்ளனர் என்றார். https://thinakkural.lk/article/313966
  15. பட மூலாதாரம்,GETTY IMAGES நாடாளுமன்ற பாதுகாப்புத்துறை நிலைக்குழு, மானியங்களுக்கான கோரிக்கை மீதான அறிக்கையைச் சமர்பித்துள்ளது. அதில் முப்படைகளின் முன்னாள் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது தொடர்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த விபத்து 'மனிதப் பிழை (விமானத்தை இயக்கியவர்களின் பிழை) காரணமாக ஏற்பட்டது' என்று பாதுகாப்புத்துறை நிலைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் முதல் முப்படை தளபதி பிபின் ராவத் – யார் இவர்? பிபின் ராவத் மரணம்: இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தகவல் பிபின் ராவத்: இந்தியாவில் வான் விபத்தில் உயிரிழந்த முக்கிய தலைவர்கள் மதுலிகா ராவத்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் மனைவி – யார் இவர்? பிபின் ராவத் மரணம் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் இதர ராணுவ வீரர்கள் சூலூர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக உதகையில் உள்ள வெலிங்டன் ராணுவ தளத்திற்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். பிபின் ராவத், வெலிங்டன் ராணுவத் தளத்தில் நடைபெற இருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு வந்திருந்தார். 12 அதிகாரிகளைக் கொண்ட எம்.ஐ. 17 ரக ஹெலிஹாப்டர் வெலிங்டனை அடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக குன்னூரில் விபத்துக்கு உள்ளானது. விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிக்கா மற்றும் 11 அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஹெலிகாப்டரை இயக்கிய க்ரூப் கேப்டன் வருண் சிங் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரும் சிகிச்சைப் பலனின்றி ஒரு வாரத்திற்குள்ளாகவே உயிரிழந்தார். அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் கருத்து: பாஜகவுக்கு என்ன சிக்கல்? கட்சியின் 'தலித் அரசியலை' பாதிக்குமா?7 மணி நேரங்களுக்கு முன்னர் அந்தரத்தில் தண்டவாளம், சுற்றி வெள்ளம் : 800 பேரின் உயிரை காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டருக்கு உயரிய விருது43 நிமிடங்களுக்கு முன்னர் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு - 'கௌரவமாக கருதுவதாக' காங்கிரஸ் கூறியது ஏன்?5 மணி நேரங்களுக்கு முன்னர் நிலைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிக்கா மற்றும் 11 அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த அறிக்கை, கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2022 வரையிலான காலத்தில் 34 பாதுகாப்புப் படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் விபத்துக்கு உள்ளானதாகக் குறிப்பிட்டுள்ளது. அறிக்கைப்படி, 2017-18 காலகட்டத்தில் 8 விபத்துகள் பதிவாகியுள்ளன. மேலும், அதிகபட்சமாக 2018-19 காலகட்டத்தில் 11 விபத்துகள் நடைபெற்றுள்ளன. அதைத் தொடர்ந்து 2021-22 காலகட்டத்தில் 9 விபத்துகளும் பதிவாகியுள்ளன. கடந்த 2019-20 மற்றும் 2020-21 காலகட்டத்தில் ஆண்டுக்கு தலா மூன்று விபத்துகள் என 6 விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2017 முதல் 2011 வரை ஏற்பட்ட 34 விபத்துகளில் 19 விபத்துகள் மனிதப் பிழையால் (ஏர் க்ரூ) ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது, பயணத்தின்போது விமானக் குழுவினரால் செய்யப்பட்ட தவறுகள் அல்லது தவறான மதிப்பீடுகள், விபத்துகளுக்கு வழிவகுப்பதைக் குறிக்கிறது. இதுபோக, ஒன்பது விபத்துகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பறவை மோதி ஒரு விபத்து ஏற்பட்டதாகவும், மற்றொரு விபத்து இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 'அவரை மன்னித்து விடுங்கள்' - ஓய்வு குறித்து தந்தையின் சர்ச்சை கருத்துக்கு அஸ்வின் பதில்5 மணி நேரங்களுக்கு முன்னர் சாம்சங் இந்தியா: தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம் - என்ன பிரச்னை? அரசு கூறுவது என்ன?19 டிசம்பர் 2024 எண்ணூர்: 'மனிதர்கள் வாழவே தகுதியற்ற பகுதியா?' - அனல் மின் நிலைய திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு19 டிசம்பர் 2024 குறைந்த விபத்துகள் நிலைக்குழு கமிட்டியிடம் பாதுகாப்புத்துறை அமைச்சகம், இந்த 34 விபத்துகள் தொடர்பாக விபத்து நடந்த காலத்திலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ளது. அதோடு, இதுபோன்ற விபத்துகள் வருங்காலத்தில் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு விசாரணைக் குழுக்கள் முன்வைத்த பரிந்துரைகள் பற்றியும் நிலைக்குழுவிடம் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் விபத்துகள் பெரும் அளவில் குறைக்கப்பட்டு இருப்பதையும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் சுட்டிக் காட்டியிருப்பதாக நிலைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அறிக்கைப்படி 2000 முதல் 2005 காலகட்டம் வரை 0.93% ஆக இருந்த விபத்துகள், 2017-22 காலகட்டத்தில் 0.27 ஆக குறைந்துள்ளது. மேலும், 2020 மற்றும் 2024 காலகட்டத்தில் விபத்துகள் 0.20% ஆகக் குறைந்துள்ளதாகவும் அமைச்சகம் அறிவித்ததாக பாதுகாப்புத்துறை நிலைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c5y8jy2zvjeo
  16. 20 DEC, 2024 | 03:16 PM சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 05 கோடி ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பல்வேறு இலத்திரனியல் உபகரணங்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மூன்று சந்தேக நபர்கள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 38, 25 மற்றும் 32 வயதுடையவர்கள் ஆவார். சந்தேக நபர்களில் இருவர் இன்றைய தினம் அதிகாலை 12.30 மணியளவில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். மற்றைய சந்தேக நபர், இன்றைய தினம் காலை 09.45 மணியளவில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 309 கையடக்கத் தொலைபேசிகள் , 08 டெப்கள் , கையடக்கத் தொலைபேசிகளின் துணைக்கருவிகள்12 மடிக்கணினிகள், 20 ஸ்மார்ட் கைக் கடிகாரங்கள் , 05 ரவுடர்கள் மற்றும் பல்வேறு இலத்திரனியல் உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/201737
  17. எலான் மஸ்க் G-மெயிலுக்கு மாற்றாக எக்ஸ் மெயிலை கொண்டு வரப்போவதாகத் தகவல் வெளியாகிவுள்ளது. விண்வெளியில் மார்ஸில் வீடு கட்டுவது தொடங்கி அரசியல் பரப்புரைகள் வரை எல்லாவற்றிலும் ஏதோவொரு பெரும் திட்டத்துடனே செயல்பட்டு வருகிறார் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் விண்வெளி ஆராய்ச்சிகள், ஏவுகணைகளை ஏவுதல் என மும்முரமாக இருந்த அவர், டெஸ்லா என்ற நிறுவனத்தின் மூலம் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தினார். தற்போது G-மெயில் மென்பொருளுக்கு மாற்றாக எக்ஸ் மெயில் மென்பொருளைப் புதிதாக அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக அண்மையில் அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவும் வைரலாகி வருகின்றது. ஏற்கனவே அவர் ஐபோனுக்கு மாற்றாக புதிய மொபைலை கொண்டு வரப்போவதாகவும் கூறப்படுகிறது. https://thinakkural.lk/article/313950
  18. கிசெல் பெலிகாட்: பாலியல் வன்புணர்வு செய்த 51 பேர் - முன்னாள் கணவருக்கு 20 ஆண்டுகள் சிறை பட மூலாதாரம்,EPA 19 டிசம்பர் 2024 எச்சரிக்கை: இக்கட்டுரையில் பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரணைகள் உள்ளன. சில விவரங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம். பிரான்ஸில் தன் முன்னாள் கணவர் உட்பட 51 ஆண்களால் கிசெல் பெலிகாட் எனும் பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், அவருடைய முன்னாள் கணவர் டொமினிக் பெலிகாட் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. தன் மனைவிக்கு டொமினிக் தூக்க மருந்து அளித்து, பல ஆண்களை வைத்து அவரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியதாக அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தன் மகள் மற்றும் இரு மருமகள்களை ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்ததாக கூறப்பட்ட வழக்கிலும் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 50 பேருக்கான தீர்ப்பும் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெரும்பாலான நபர்களும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான சிறைத் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. கிசெல் பெலிகாட்: 60 வயது பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த 51 பேர் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு அமேசான்: சட்டவிரோத தங்க சுரங்கங்களில் பாலியல் தொழில் செய்யும் பெண்களின் உண்மை நிலை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து உடலுறவு கொண்ட பின் அதை மீறுவது சட்டப்படி குற்றமா? பெல்ஜியம்: உலகிலேயே முதன்முறையாக பாலியல் தொழிலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு மற்றும் ஓய்வூதியம் மற்றவர்களுக்கு என்ன தண்டனை? இவ்வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜீர்ன் பியர் எனும் நபருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இவர், டொமினிக் மூலம் தாக்கம் பெற்று தன் மனைவிக்கும் தூக்க மருந்து கொடுத்து ஐந்து ஆண்டுகள் பாலியல் வன்புணர்வு செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், இந்நபர் டொமினிக்கும் தன் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்ய வைத்துள்ளார். இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட 50 பேரில் பத்திரிகையாளர், டி.ஜே., தீயணைப்பு வீரர், லாரி ஓட்டுநர்கள், பாதுகாவலர்கள் என பலதரப்பட்ட நபர்கள் அடங்குவர். கடந்த செப்டம்பர் மாதம் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. பட மூலாதாரம்,BENOIT PEYRUCQ படக்குறிப்பு, இன்றைய நீதிமன்ற நிகழ்வுக்கு பிறகு டொமினிக் பெலிகாட்டின் முதல் நீதிமன்ற ஓவியம் வெளியானது 72 வயதான கிசெல் பெலிகாட் இன்று பிரான்ஸின், பெண் உரிமைகளுக்காகப் போராடும் அடையாளமாக அறியப்படுகிறார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவருடைய முன்னாள் கணவர் டொமினிக்கால் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளானார். பெலிகாட்டிற்கு தொடர்ச்சியாக மயக்க மருந்து அளிக்கப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இக்குற்றச்சாட்டை டொமினிக் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். பெலிகாட்டும், டொமினிக்கும் குடியிருந்த வீட்டின் சுற்றுவட்டாரத்தில் உள்ள பலதரப்பட்ட 51 ஆண்கள் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. 27 வயதில் இருந்து 74 வயது வரை உள்ள அந்த ஆண்களுக்கு இன்று (டிச. 19) பிரான்சில் உள்ள ஏவிக்னான் நகர நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. `விசாரணையை எண்ணி ஒருபோதும் வருத்தப்படவில்லை' பட மூலாதாரம்,REUTERS இன்றைய நீதிமன்ற நிகழ்வு முடிந்ததும் கிசெல் செய்தியாளர்களை சந்தித்தார். "எனது வழக்கறிஞர்களுக்கு எனது நன்றியையும் மரியாதையையும் தெரிவிக்க விரும்புகிறேன்." என்றார். இந்த விசாரணையை நினைத்து, "எப்போதும் வருத்தப்பட்டதே இல்லை, இந்த விசாரணை மூலமாக இந்த வழக்கில் என்ன நடக்கிறது என்பதை சமூகம் பார்க்க வேண்டும்" என்றும் அவர் கூறினார். இதேபோல், பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் கூட்டமைப்புக்கும் நன்றி தெரிவித்த கிசெல், அவர்கள் தனக்கு உறுதுணையாக இருந்ததாகக் குறிப்பிட்டார். இந்த வழக்கை மிகவும் பொறுப்புடன் கையாண்ட பத்திரிகையாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். பின்னணி என்ன? கடந்த 2011ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையில் டொமினிக் தன்னுடைய மனைவி கிசெலுக்கு மயக்கு மருந்துகளை உணவு மற்றும் பானங்களில் கலந்து கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளார். பிறகு, ஆன்லைன் மூலமாக அறிமுகமான ஆண்களை வீட்டிற்கு அழைத்து வந்து, கிசெலை பாலியல் வன்புணர்வு சித்ரவதைக்கு ஆளாக்கியுள்ளார் டொமினிக். தொடர்ச்சியாக மயக்க மருந்துகளை எடுத்துக் கொண்டதால் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டுள்ளார் கிசெல். கிசெலுக்கு அப்போது வயது 58. 38 ஆண்டுகள் டொமினிக்குடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார் கிசெல். இருவருக்கும் கரோலின், டேவிட் மற்றும் ஃப்ளோரின் என்று மூன்று பிள்ளைகள். தற்போது அனைவரும் நன்கு வளர்ந்து இளைஞர்களாக உள்ளனர். தன்னுடைய ஓய்வு காலத்தை, பிரான்ஸின் தெற்கில் உள்ள மஸான் என்ற கிராமத்தில் செலவிட திட்டமிட்டிருந்தனர் அந்த தம்பதியினர். 1970களில் இருவரும் முதன்முறையாக சந்தித்துக் கொண்டனர். நிதி பற்றாக்குறை போன்ற சிரமங்களை அவர்கள் சந்தித்து இருந்தாலும், அவர்களின் 38 ஆண்டுகால திருமண வாழ்க்கையை அதிர்ஷ்டம் கொண்டதாக நினைத்திருந்தார் கிசெல். ஆனால், 2011ம் ஆண்டு கிசெல் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக தூங்கிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி என்ன நடந்தது என்ன என்பதே அவருக்கு நினைவில் இல்லை. இன்று மஸானுக்கு அருகே அமைந்துள்ள ஏவிக்னான் நீதிமன்றத்தில் கிசெலும் டொமினிக்கும் எதிரெதிராக அமர்ந்து உள்ளனர். டொமினிக் சிறை ஆடையை உடுத்தியுள்ளார். கிசெல் அவருடைய குழந்தைகள் மற்றும் வழக்கறிஞர்கள் சூழ அமர்ந்துள்ளார். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, அந்த மாத்திரைகளை சரியான முறையில் எப்படி பயன்படுத்துவது என்பதை கற்றுக் கொண்ட டொமினிக் அதனை கிசெலுக்கு அளித்து அவரை ஆழ்ந்த தூக்கத்திற்குக் கொண்டு சென்றார் 2014 வரை நடந்து என்ன? டொமினிக் தன்னுடைய 50களின் தொடக்கத்தில் அதிகமாக ஆன்லைனில் நேரத்தை செலவிட்டார். பாலியல் தொடர்பான இணையங்களில் பலருடன் பேசுவது, பாலியல் தொடர்பான தகவல்களை பகிர்வது போன்ற செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 2010-2011 ஆண்டுவாக்கில், செவிலியராக பணியாற்றும் ஓர் ஆண், டொமினிக்கிற்கு அந்த தளத்தின் வாயிலாக அவருடைய மனைவியின் புகைப்படங்களை அனுப்பியுள்ளார். மேலும், அவருடைய மனைவிக்கு எவ்வாறு மயக்கமருந்து கொடுத்து நினைவிழக்க வைத்தார் என்பதையும் தகவல்களாக அவர் பகிர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் தயக்கம் அடைந்தாலும், டொமினிக் அதேபோன்று தன் மனைவிக்கு மயக்க மருந்தை கொடுத்தார். அந்த மாத்திரைகளை சரியான முறையில் எப்படி பயன்படுத்துவது என்பதை கற்றுக் கொண்ட டொமினிக் அதனை கிசெலுக்கு அளித்து அவரை ஆழ்ந்த தூக்கத்திற்குக் கொண்டு சென்றார். சுய நினைவில் அணிய விரும்பியிருக்காத ஆடைகளை டொமினிக் கிசெலுக்கு அணிவித்தார். மேலும், பல பாலியல் நடவடிக்கைகளில் கிசெலின் நினைவின்றி அவரை ஈடுபடுத்தியுள்ளார் டொமினிக். மொத்த நிகழ்வுகளையும் வீடியோ காட்சிகளாக பதிவு செய்துள்ளார். ஆரம்பத்தில் இந்த குற்றங்களை அவர் மட்டுமே செய்து வந்தார். 2014ம் ஆண்டு அவர்கள் மஸானுக்கு குடி வந்த பிறகு இந்த திட்டத்தை பெரிதாக்கினார் டொமினிக். கேரளா: வக்ஃப் வாரியம் உரிமை கோரும் 404 ஏக்கர் நிலம், எதிர்த்து போராடும் மக்கள் - என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு19 டிசம்பர் 2024 சிரியா: செட்னயா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 'எலும்புக்கூடு போல் தோற்றமளித்த' மர்ம கைதி19 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஓய்வு காலத்தை மஸானில் கழிக்கத் திட்டமிட்டார் கிசெல் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சந்தேகம் பிறகு ஆன்லைன் சாட் ரூம் மூலமாக அனைத்து வயது ஆண்களையும் கிசெலை பாலியல் ரீதியாக துன்புறுத்த அழைத்துள்ளார் டொமினிக். அதை வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறார் டொமினிக். நீதிமன்ற விசாரணையின் போது, கிசெல் சுயநினைவின்றி இருக்கும் போது இந்த செயல்களில் ஈடுபட கடந்த 10 ஆண்டுகளில் 71 ஆண்கள் அவர்களின் வீட்டிற்கு வந்துள்ளதாக கூறியுள்ளார். தொடர்ச்சியாக பாலியல் சித்ரவதைக்கு ஆளான காரணத்தாலும் மயக்க மருந்துகள் கலந்த உணவை உட்கொண்டதாலும் சுகாதார பிரச்னைகளை எதிர்கொண்டார் கிசெல். உடல் எடை குறைந்தது. முடி கொட்டியது. அடிக்கடி மயக்கம் அடைந்தார். மன உளைச்சலுக்கு ஆளான அவர் இறக்கப் போவதாகவும் நம்பினார். அவரின் உடல் நிலையைக் கண்டு கவலை அடைந்தனர் அவரின் குடும்பத்தினர், எப்போது மொபைலில் அழைத்தாலும் டொமினிக்கே பேசி வந்தார். "அவர் எங்களிடம், பட்டப் பகலிலும் கிசெல் தூங்கிக் கொண்டிருப்பதாக கூறுவார். ஆனால், எங்களுடன் எங்கள் வீட்டில் இருக்கும் போது பேரக்குழந்தைகளுடன் ஓடியாடி விளையாடிய வண்ணம் இருப்பார் கிசெல்," என்று கூறுகிறார் அவரின் மருமகன் பியரி. மும்பை: பயணிகள் படகு மீது மோதிய கடல் படை படகு - 13 பேர் கடலில் மூழ்கி பலி19 டிசம்பர் 2024 மனிதர்கள் நிலா மற்றும் செவ்வாயில் வீடு கட்ட வித்திடும் ஆய்வு - லடாக்கில் ஒரு விண்வெளி அனுபவம்19 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,வழக்கறிஞருடன் டொமினிக் பெலிகாட் (வலது) காவலர்களின் வருகையால் வெளிவந்த உண்மை கிசெலுக்கு சந்தேகம் ஏற்பட தொடங்கியது. ஒரு சமயத்தில், நீ எனக்கு மயக்க மருந்து ஏதும் கொடுக்கவில்லையே என்று டொமினிக்கிடம் கேட்டுள்ளார் கிசெல். "என்னை எப்படி நீ இப்படி சந்தேகப்படுவாய்?" என்று கேட்டு அழுதுள்ளார் டொமினிக். அல்சைமர் அல்லது மூளையில் கட்டி போன்ற காரணங்களால் உடல் நிலை மோசமடைகிறதா என்று சந்தேகம் அடைந்தார் கிசெல். அதனால் மருத்துவ சிகிச்சைகளை அவர் மேற்கொண்டார். ஆனால், அவருக்கு அப்படியாக எந்த பிரச்னையும் இல்லை என்று முடிவுகள் வெளியாகின. மஸான் பகுதியை விட்டு வெளியே வந்தால் மட்டுமே அவரால் நிம்மதியாக இருக்க முடிந்தது. அதுவும் சில தருணங்களில் மட்டுமே சாத்தியமானது. கடந்த 2020ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் வெளியூர் சென்றுவிட்டு திரும்பிய பிறகு, டொமினிக் அவரிடம்,"நான் ஒரு முட்டாள்தனமான காரியத்தை செய்துவிட்டேன். பெண்களின் ஆடைகளை சூப்பர் மார்க்கெட்டில் படம் பிடித்த போது மாட்டிக் கொண்டேன்," என்று கூறியுள்ளார். இதற்கு முன்பு பெண்கள் குறித்துத் தவறாக ஒரு வார்த்தை கூட பேசாத காரணத்தால் டொமினிக் மீது எந்த வருத்தமும் கோபமும் கிசெலுக்கு ஏற்படவில்லை. அதனால் அவர் டொமினிக்கை மன்னித்துவிட்டார். ஆனால், சில காலம் கழித்து சூப்பர் மார்க்கெட்டில் வைத்து டொமினிக் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து இரண்டு போன்கள் மற்றும் லேப்டாப் கைப்பற்றப்பட்டது. அதில், 20 ஆயிரம் வீடியோக்களும் புகைப்படங்களும் இருந்தன. அதில், கிசெல் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறை காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. '36 நிமிட தியானம் குபேரன் ஆக்கும்' - ஜோதிடர் பேச்சால் நாமக்கல் கோவிலில் ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்18 டிசம்பர் 2024 கிசெல் பெலிகாட்: 60 வயது பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த 51 பேர் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு19 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, அவர்கள் மூவரும் வந்து வீட்டில் பல இடங்களை சோதித்த போது, அவர்களின் மகள் கரோலினும் இதுபோன்று மயக்க மருந்து கொடுத்த புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன தீவிரமான காவல்துறை விசாரணை "அனைத்து வீடியோக்களையும் மணிக்கணக்கில் நான் பார்க்க நேரிட்டது. அது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அது நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று அந்த விசாரணையை நடத்திய இயக்குநர் ஜெரேமி பாஸ் ப்ளாடியர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். அவருடைய குழு, அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்த ஆண்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டிருந்தது. 54 ஆண்களை அவர்கள் அடையாளம் கண்டனர். 21 நபர்களின் அடையாளம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. நவம்பர் 2020, 2ம் தேதி அன்று டொமினிக்கும் கிசெலும் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கே காவல்துறையினர் சூப்பர் மார்க்கெட் விவகாரத்தை விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது காவலர் ஒருவர் கிசெலை அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது காவல்துறையினர், கிசெல் இரண்டு ஆண்களுடன் இருக்கும் புகைப்படம் அவரிடம் காட்டப்பட்டது. அதில் இருப்பவர்கள் யார் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார் கிசெல். பிறகு வீட்டிற்கு வந்த பிறகு தன்னுடைய மகன் மற்றும் மகள்களை அழைத்த கிசெல் காவல் நிலையத்தில் நடந்ததைக் கூறியுள்ளார். அவர்கள் மூவரும் வந்து வீட்டில் பல இடங்களை சோதித்த போது, அவர்களின் மகள் கரோலினும் இதுபோன்று மயக்க மருந்து கொடுத்த புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன. அனைத்து குடும்ப புகைப்படங்களையும் அழித்துவிட்டதாக கூறுகிறார் டேவிட். டொமினிக் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டார். காவல் நிலையத்தில் அவர்கள் சந்தித்துக் கொண்ட பிறகு 2024ம் ஆண்டில் நீதிமன்றத்தில் தான் அவர்கள் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். அம்பேத்கர் பற்றி அமித் ஷா என்ன பேசினார்? எதிர்க்கட்சிகள் போராட்டம் ஏன்?18 டிசம்பர் 2024 மாஸ்கோவில் ரஷ்ய அணுஆயுதப் படைகளின் தலைவர் கொல்லப்பட்டது எப்படி?18 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, தனக்கு ஏற்பட்ட அநீதியில் இருந்து மீண்டு வர தன்னுடைய வாழ்நாள் காலம் போதாது என்று கிசெல் கூறியுள்ளார் வாழ்நாள் காலம் போதாது இந்த வழக்கு, உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிசெல் தன்னுடைய அடையாளத்தை மறைத்து, இந்த வழக்கை எதிர்கொள்ளும் உரிமையை நிராகரித்தார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களின் எதிர்காலம் மற்றும் அவரின் அடையாளத்தைக் கருத்தில் கொண்டு இந்த உரிமை வழங்கப்படுகிறது. மாறாக, கிசெல் இந்த விசாரணையில் தன் அடையாளத்தை வெளிக்காட்டினார். பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் இந்த விசாரணையின் தன்மையை அறிந்துகொள்ள வழிவகை செய்தார். அவர் மயக்க நிலையில் இருந்தார் என்பது எங்களுக்குத் தெரியாது என்று விசாரணையில் பல ஆண்கள் கூறியிருந்ததால் அது, 'தற்செயலாக நிகழ்ந்த பாலியல் வன்புணர்வு' (accidental rape) என்ற ஒரு பார்வை அதில் இருந்தது. ஆனால், கிசெலின் வழக்கறிஞர்கள் குழு, இதற்கு எதிராகப் போராடி, கிசெல் வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோக்களை நீதிமன்றத்தில் ஒளிபரப்பினர். எந்த நிலையில் கிசெல் இருந்தார் என்பதை அந்த வீடியோக்கள் வெளிப்படுத்தின. தனக்கு நடந்த அநீதியில் இருந்து மீண்டு வர அவருடைய வாழ்நாள் காலம் போதாது என்று கிசெல் கூறியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cqx8zedrxvno
  19. 20 DEC, 2024 | 10:08 AM உக்ரேன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் இணைய முயன்ற உக்ரேன் மீது ரஷ்யா 2022 ஆம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரேனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் வழங்கி, பொருளாதார உதவிகளை வழங்குகின்றன. அதேபோல் ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடுகளான சீனா உள்ளிட்டவை ஆதரவாக செயல்படுகின்றன. தற்போது உக்ரேனுக்குள் நுழைந்து ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேபோல் உக்ரேனும், ரஷ்ய படைகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றன. இந்த சூழலில் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட பலநாடுகள் முயன்றன. ஆனால் ரஷ்ய - உக்ரேன் இடையேயான போர் இன்று வரை முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே தான் சமீபத்தில் இருநாடுகள் இடையேயான மோதல் சற்று குறைந்திருந்தநிலையில், கடந்த ஒரு மாதமாக மீண்டும் மோதல் வலு பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா, பிரித்தானியா தயாரிப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரேன், ரஷ்யா மீது தாக்குதல் நடத்தியது தான் காரணம். இதனால் கோபமான ரஷ்யா, உக்ரேன் மீதும் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இதனால் மோதல் மீண்டும் தீவிரமானது. இதற்கிடையே தான் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்ற டொனால்ட் ட்ரம்ப் போரை நிறுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டி வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போதே, தான் அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்திருந்தால் போர் வந்து இருக்காது. இருப்பினும் பதவியேற்ற அடுத்த 24 மணிநேரத்தில் போரை என்னால் நிறுத்த முடியும் என்று அவர் கூறியிருந்தார். மேலும் தேர்தலில் வென்ற பிறகு உக்ரேன், ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள தயார் என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. https://www.virakesari.lk/article/201708
  20. 'அவரை மன்னித்து விடுங்கள்' - ஓய்வு குறித்து தந்தையின் சர்ச்சை கருத்துக்கு அஸ்வின் பதில் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர், ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அவருடைய ஓய்வு குறித்து அவரின் தந்தை அளித்த பேட்டியும் அதற்கு அஸ்வின் கொடுத்த விளக்கமும் கிரிக்கெட் ஆர்வலர்களிடையே விவாதப் பொருளாகியுள்ளது. "அஸ்வின் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட விதத்திற்கு பல காரணங்கள் உள்ளன. அஸ்வின் அவமானப்படுத்தப்பட்டிருக்கலாம், அது அஸ்வினுக்கு மட்டுமே தெரியும். எவ்வளவு காலத்துக்குதான் அவரும் பொறுத்துக்கொண்டிருப்பார்." என அவருடைய தந்தை ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார். இதற்கு,தன்னுடைய தந்தை ஊடகங்களில் பேசி பழக்கப்பட்டவர் கிடையாது' என விளக்கம் அளித்திருக்கிறார் அஸ்வின். அஸ்வினின் ஓய்வு விவாதமாவது ஏன்? அஸ்வின்: ஆட்டத்தின் போக்கை மாற்றி, திருப்புமுனையை ஏற்படுத்திய 5 முக்கிய தருணங்கள் இடது கை பேட்டர்களின் எதிரி: முரளிதரன், வார்னேவை விஞ்சி அஸ்வின் படைத்துள்ள சாதனை என்ன? ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு - என்ன கூறினார்? இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இதேபோன்றுதான் ஆஸ்திரேலியத் தொடரின் நடுவே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். அதேபோன்ற முடிவே அஸ்வினும் எடுத்து, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென டிச. 18 அன்று அறிவித்தார். குழப்பம், சந்தேகம் அடுத்ததாக சிட்னி மற்றும் மெல்போர்னில் நடக்கவிருக்கும் இரு டெஸ்ட் போட்டிகளிலும் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பது தெரிந்த நிலையில், அஸ்வின் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்திருப்பது பல்வேறு கேள்விகளையும், குழப்பங்களையும் கிரிக்கெட் விமர்சகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அஸ்வினின் திடீர் ஓய்வு அறிவிப்பு குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ள நிலையில், திடீரென இந்த முடிவை அவர் எடுத்தது ஏன் என்ற காரணத்தையும் ஆராய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ரவிச்சந்திரன் அஸ்வின் டிசம்பர் 18 அன்று தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட நிலையில், மாலையிலேயே அங்கிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை காலை சென்னை வந்தார். வழக்கமாக, இந்திய அணியில் ஒரு வீரர் ஓய்வு அறிவிப்பு வெளியிட்டால், வீரர்கள் அனைவருடன் நடக்கும் தேநீர் விருந்து, பிரியாவிடை கூட்டம் ஆகியவைகூட நடக்கவில்லை என்று சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டதை பார்க்க முடிந்தது. சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் தமிழக வீரர்கள்: இந்தியாவின் செஸ் மையமாக தமிழ்நாடு உருவானது எப்படி?14 டிசம்பர் 2024 குகேஷ்: இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த பிறகு கூறியது என்ன?13 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரவிச்சந்திரன் அஸ்வின் டிசம்பர் 18 அன்று தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட நிலையில், மாலையிலேயே அங்கிருந்து புறப்பட்டு நேற்று சென்னை வந்தார் தந்தை வருத்தமும் அஸ்வினின் விளக்கமும் அஸ்வின் டிசம்பர் 19ம் தேதி அன்று காலை சென்னை வந்தபின் அவரின் இல்லத்தில் அவரின் குடும்பத்தினர் இசை வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேசமயம், அஸ்வினின் ஓய்வு அறிவிப்பு குறித்து அவரின் தந்தை ரவிச்சந்திரன் தன்னுடைய சில வருத்தங்களை எழுப்பியுள்ளார். அஸ்வின் தந்தை ரவிச்சந்திரன் தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்தப் பேட்டியில் "என் மகன் தொடர்ந்து சீனியர் அணியில் விளையாட விருப்பமாக இருந்தார். ஆனால், அஸ்வினின் ஓய்வு அறிவிப்பு எனக்குக் கடைசி நிமிடத்தில்தான் தெரிந்தது" என்றார். "ஓய்வு பெறுவது அவரின் விருப்பம் அவரின் முடிவில் நான் தலையிட விரும்பவில்லை. ஆனால், ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட விதத்திற்கு பல காரணங்கள் உள்ளன" என்றும் அவர் கூறினார். அஸ்வினின் திடீர் மாற்றம், ஓய்வு அறிவிப்பு உண்மையில் அதிர்ச்சியாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார். "என்னுடைய தந்தை ஊடகங்களில் பேசி பழக்கப்பட்டவர் கிடையாது. அனைவரும் அவரை மன்னித்து, தனியே விடுங்கள்," என்று அஸ்வின் எக்ஸ் தளத்தில் அவருடைய தந்தையின் கருத்து குறித்து அறிவித்துள்ளார். பும்ராவிடம் மன்னிப்புக் கேட்ட இஷா - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் போது என்ன நடந்தது?17 டிசம்பர் 2024 ரூ.1.6 கோடிக்கு ஏலம் போன மதுரை கிரிக்கெட் வீராங்கனை - 16 வயதில் சாதித்தது எப்படி?18 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் தொடர்களில் அஸ்வின் தொடர்ந்து இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் புறக்கணிக்கப்பட்டு வந்தார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது பிளேயிங் லெவனில் இடம் மறுப்பு வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் தொடர்களில் அஸ்வின் தொடர்ந்து இந்திய அணியின் பிளேயிங் லெவனில் புறக்கணிக்கப்பட்டு வந்தார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடருக்கு அஸ்வின் தேர்வு செய்யப்பட்டாலும் அவர் அணியில் பெஞ்சில் அமரவைப்பது பல காலமாக நடந்துள்ளது. இப்போது நடந்துவரும் ஆஸ்திரேலியத் தொடரின் முதல் டெஸ்டில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு அஸ்வின் அமரவைக்கப்பட்டார். அடிலெய்ட் டெஸ்டில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, பிரிஸ்பேன் டெஸ்டில் அஸ்வினுக்குப் பதிலாக ஜடேஜாவுக்கு இடம் அளிக்கப்பட்டது. முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும் சேனல் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில், "அஸ்வின் அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதும், வாஷிங்டன் சுந்தருக்கு அளிக்கப்படும் வாய்ப்பும் கூட அஸ்வின் ஓய்வு அறிவிப்புக்குக் காரணமாக இருக்கலாம்" என விமர்சித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c8ewxzdkkjeo
  21. முள்ளிவாய்க்காலில் கரை ஒதுங்கிய மியன்மார் படகு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது 20 DEC, 2024 | 09:47 AM முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்று (20) காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த நபர்கள் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் நாமகள் வித்தியாலயத்தில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அவர்களுக்கான உணவு உட்பட ஏனைய வசதிகளை திருகோணமலை பட்டணம் சூழலும் பிரதேச செயலகம் முன்னெடுத்து வருவதோடு ஏனைய அரச திணைக்களங்களும் தயார் நிலையில் உள்ளனர். முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகளுடன் படகொன்று நேற்று வியாழக்கிழமை (19) கரை ஒதுங்கியிருந்தது. குறித்த படகொன்று திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளதாகவும், குறித்த படகில் 35 சிறுவர்களும் ஒரு கற்பிணி பெண்ணும் உள்ளடங்குகின்றனர். https://www.virakesari.lk/article/201707
  22. பலஸ்தீன மக்களைக் கொன்ற இஸ்ரேலிய இராணுவ வீரர் இலங்கையில் இருக்கிறார் - உடன் கைதுசெய்யுமாறு இலங்கை அரசிடம் 'த ஹின்ட் ரஜாப் பவுன்டேஷன்' வலியுறுத்தல் 20 DEC, 2024 | 02:05 AM (நா.தனுஜா) பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டமைக்கும், உயிரிழந்தோரின் சடலங்கள் அவமரியாதை செய்யப்பட்டமைக்கும் பொறுப்புக்கூறவேண்டிய இஸ்ரேலிய இராணுவ வீரரான கல் ஃபெரென்புக் என்பவர் கொழும்பில் இருப்பதாகவும், அவரைக் கைதுசெய்வதற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் 'தி ஹின்ட் ரஜாப் பவுன்டேஷன்' வலியுறுத்தியுள்ளது. 'த ஹின்ட் ரஜாப் பவுன்டேஷன்' என்பது இஸ்ரேலின் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவுக்குக்கொண்டுவருவதுடன், காஸாவில் கொல்லப்பட்ட சகலரையும் நினைவுகூரும் நோக்கில் பெல்ஜியத்தைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் அரச சார்பற்ற அமைப்பாகும். குறித்த அமைப்பானது பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டமைக்கும், அவ்வாறு கொல்லப்பட்டோரின் சடலங்கள் அவமரியாதை செய்யப்பட்டமைக்கும் பொறுப்புக்கூறவேண்டிய இஸ்ரேலிய இராணுவ வீரரான கல் ஃபெரென்புக் என்பவர் கொழும்பில் இருப்பதாக தமக்கு அறியக்கிடைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதுமாத்திரமன்றி அவரை உடனடியாகக் கைதுசெய்வதற்கும், இவ்விவகாரத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அவ்வமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முறைப்பாடளித்திருக்கும் 'த ஹின்ட் ரஜாப் பவுன்டேஷன்', குறித்த இராணுவ வீரருக்கு எதிராக சிவப்பு அறிவிப்பை வெளியிடுவது பற்றி இன்டர்போலுடனும் கலந்துரையாடியுள்ளது. https://www.virakesari.lk/article/201702
  23. 19 DEC, 2024 | 04:13 PM (எம்.மனோசித்ரா) விவசாய நடவடிக்கைகள் மற்றும் மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் குறித்து குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்தக் கூடிய திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. எனினும் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை (19) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், குரங்குகள் தொடர்பான பிரச்சினை குறித்து விவசாய அமைச்சு அவதானம் செலுத்தி அதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. தொழிநுட்ப அமைச்சு இது குறித்து அவதானம் செலுத்தியுள்ளது. ஆனால் இது வெ வ்வேறு மட்டங்களில் சிக்கலுக்குரிய பிரச்சினையாகியுள்ளது. சூழல் சமநிலையின்மையால் இப்பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது. இது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான யோசனைகள் நீண்டகால திட்டங்களாகும். அவற்றை நடைமுறைப்படுத்தும் வரை விவசாயிகளுக்கும், மக்களுக்கும் காத்திருக்க முடியாது. எனவே குறுகிய கால திட்டங்கள் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருகிறது. குரங்குகள் போன்ற மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விலங்குகளை நாட்டின் வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லல் மற்றும் இனப்பெருக்க கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மாறாக குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றார். https://www.virakesari.lk/article/201661
  24. கெங்கிஸ் கான் புழுக்களை ஆயுதமாகப் பயன்படுத்தியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES உலகின் மிகப் பரந்த நிலப்பரப்பை ஆண்ட மங்கோலிய பேரரசர் கெங்கிஸ் கானுக்கும், அமெரிக்க உள்நாட்டுப் போருக்கும், பிரிட்டிஷ் மருத்துவ சேவைக்கும் தொடர்பு இருக்கிறதா? இது என்ன மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக இருக்கிறதே என்று எண்ணத் தொன்றுகிறதா? மேலே கூறிய மூன்றுமே ஒரே புள்ளியில் இணையவே செய்கின்றன. அவை தான் புழுக்கள். ஆம்... இறந்த விலங்குகளின் உடல்கள் மீதும், நாள்பட்ட புண்கள் மீதும் நெளியக் கூடிய, நீங்கள் அருவெருப்புடன் நோக்கும் அதே புழுக்கள் தான். 12-ம் நூற்றாண்டின் இறுதியில் உலகையே ஒரு கொடியின் கீழ் கட்டி ஆளும் வேட்கையுடன் சீற்றத்துடன் புறப்பட்ட கெங்கிஸ் கான் தன்னுடன் பெரும்படையை மட்டுமல்ல, இந்த புழுக்களையும் எடுத்துச் சென்றுள்ளார். மங்கோலியர்கள் பிறந்தது முதலே அவர்களது வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்து விட்ட குதிரைகள் மட்டுமல்ல, இந்த புழுக்களும்தான் கெங்கிஸ் கானின் வியக்கத்தக்க வெற்றிக்கு அடிகோலின என்றால் மிகையல்ல. பதின் பருவத்திலேயே போர்க்களம் கண்டு விட்ட கெங்கிஸ் கானின் மாபெரும் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் படை வீரர்களின் நலனில் அவர் காட்டிய அக்கறையும் ஒன்று. அந்த வகையில், போர்க்களத்தில் எதிரிகளால் காயமடையும் வீரர்களை குணப்படுத்த புழுக்களையே பெரிதும் பயன்படுத்தினார் கெங்கிஸ் கான். காயத்தின் மீது இந்த புழுக்களை அடைத்து கட்டினால் காயம் விரைந்து குணமடையும் என்பதை மங்கோலியர்கள் அப்போதே அறிந்திருந்தார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கெங்கிஸ் கான் வரலாறு நெடுகிலும் உற்று நோக்கினால், கெங்கிஸ் கான் மட்டுமின்றி, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நகியம்பா பழங்குடியினரும், வடக்கு மியான்மரில் மலைவாழ் மக்களும், மத்திய அமெரிக்காவில் மாயன் பழங்குடிகளும் காயங்களை குணப்படுத்த புழுக்களை பயன்படுத்தியிருப்பதை காண முடிகிறது. உலகம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக காயங்களுக்கு சிகிச்சை அளிக்க புழுக்கள் பயன்படுத்தப்பட்டாலும் கூட, மருத்துவத் துறையின் ஒட்டுமொத்த கவனத்தையும் அது ஈர்க்கவில்லை. 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வெடித்த உள்நாட்டுப் போரின் விளைவாக, இந்தப் புழுக்கள் மீண்டும் பரவலாக கவனம் பெற்றன. அப்போது, டென்வில் நகர மருத்துவமனையில் பணிபுரிந்த ஜான் ஃபார்னெ ஜாக்கரியாஸ் என்ற மருத்துவர், முதன் முறையாக உடலில் சிதைந்து போன திசுக்களை அகற்ற இந்த புழுக்களை பயன்படுத்தினார். அதன் முடிவு அவருக்கு மிகவும் திருப்தி அளிப்பதாக அமைந்தது. இந்த புழுக்கள் சிதைந்த திசுக்களை மட்டுமல்ல, காயங்களில் இருந்த பாக்டீரியாக்களையும் அகற்றியதை அவர் கண்டுபிடித்தார். நவீன பாக்டீரியாவியலை தோற்றுவித்த ராபர்ட் கோச், நுண்ணியிரியலின் தந்தை என்று அழைக்கப்படுபவரும், இன்றைய தடுப்பூசிகளுக்கு முதலில் விதை போட்டவருமான லூயி பாஸ்டர் ஆகியோரின் வருகைக்குப் பின்னர், மருத்துவத் துறையில் இந்த புழுக்களின் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES நோய்க்குக் காரணமான பாக்டீரியாக்களும், நுண் கிருமிகளும் தாமாக தோன்றுவதில்லை, அவை தொற்றாக நம்மை பற்றிக் கொள்கின்றன என்பதை கண்டுபிடித்து உலகிற்கு அவர்கள் அறிவித்தனர். சுத்தமும் சுகாதாரமுமே காயங்களையும், நோய்களையும் ஆற்ற அருமருந்து என்பதை அவர்கள் நிரூபித்தனர். நோய்த் தொற்றை ஏற்படுத்தும் பாக்டீயாக்களை கொன்று நோயை குணப்படுத்தும் பென்சிலினை கண்டுபிடித்ததன் மூலம், அலெக்சாண்டர் பிளமிங், மருத்துவத் துறையில் புழுக்களின் பயன்பாட்டிற்கு முடிவுரை எழுதினார். ஏனெனில், நோய்க் கிருமிகளை விரட்டியடித்து நோயில் இருந்து நம்மை காக்க ஒரு சிறிய மாத்திரையே போதும் என்றால், உடல் திசுக்களில் நெளியும் புழுக்களை விட யார் தான் விரும்புவார்? ஆனால், இந்த மாயவித்தை செய்யும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளையும் முறியடிக்க 1980-களில் புதிய வில்லன் தோன்றியது. மெத்திசிலின் ரெசிஸ்டென்ட் ஸ்டெபிலோகாக்கஸ் ஆரெயஸ் (Methicillin Resistant Staphylococcus Aureus) என்ற பாக்டீரியா ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தோற்கடித்தது. ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எதிர்த்து தாக்குப்பிடித்தது மட்டுமின்றி, மருத்துவமனைகள், வாழிடம், பணிபுரியும் இடம், பள்ளிகள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் எளிதாக மற்றவர்களுக்கு பரவியது. இதனைக் கட்டுப்படுத்த புதிய ஆயுதத்தைத் தேடிய மருத்துவ உலகத்தின் கவனம் மீண்டும் புழுக்களின் மேல் பதிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஈக்களின் வாழ்க்கை சுழற்சியை விளக்கும் படம் கெலிபேரைடெ என்ற ஈக்களின் லார்வாப் பருவம்தான் இந்தப் புழுக்கள். வயிறும் மத்திய பாகமும் பிரகாசமான நீலம் மற்றும் பச்சை நிறத்தில் தோற்றமளிக்கும் இந்த ஈக்கள் இறந்த உடல்கள் மீது மொய்த்திருப்பதை நாம் காண முடியும். இந்த ஈக்களின் முட்டைகளில் இருந்து வெளிவரும் லார்வாப் பருவ புழுக்கள் குறுகிய காலகட்டத்திலேயே 100 மடங்கு வளர்ச்சியை எட்டுகின்றன. அதற்கான உணவு முழுமையுமே இறந்த திசுக்கள் தான். காயங்களில் உள்ள இறந்த திசுக்களை மட்டுமின்றி, அதில் உள்ள தீங்கு விளைவிக்கும் மெத்திசிலின் ரெசிஸ்டென்ட் ஸ்டெபிலோகாக்கஸ் ஆரெயஸ் பாக்டீரியாக்களையும் இந்த புழுக்கள் தின்றுவி டும். இதன் மூலம் முழு சுத்தம் பெறுவதால் காயங்கள் விரைந்து ஆறிவிடும். பிரிட்டிஷ் மருத்துவ சேவையில் இன்றும் இந்த புழுக்களின் பயன்பாடு இன்றியமையாததாக இருக்கிறது. பிரிட்டிஷ் தேசிய சுகாதார சேவைக்கு உட்பட்ட எல்லா மருத்துவமனைகளிலும் காயங்களை ஆற்ற இந்த புழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காயத்தின் மீது புழுக்கள் நிரம்பிய சிறு பைகளை கொண்டு கட்டுப் போடும் சிகிச்சை முறை எனினும், நெளியும் புழுக்கள் மீதான ஒவ்வாமையைத் தவிர்க்க, சிறிய தேநீர்ப் பை அளவே கொண்ட பைகளில் இந்த புழுக்களை அடைத்து காயத்தின் மீது கட்டுகிறார்கள். அடுத்த சில நாட்களில் காயம் ஆறிய பிறகு இந்த கட்டு அவிழ்க்கப்படுகிறது. மருத்துவ உலகம் எவ்வளவோ உச்சங்களை தொட்டுவிட்ட பிறகும் கூட, காயங்களை ஆற்றுவதில் இந்த புழுக்களின் பயன்பாடு தவிர்க்க இயலாதாக தொடரவே செய்கிறது. ஆகவே, நாமும் சொல்வோம், வல்லமை மிக்க இந்த புழுக்கள் நீடூடி வாழ்க. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c2jgv8x520vo
  25. 19 DEC, 2024 | 04:21 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி நிதியத்திடமிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆட்சி காலத்திலும் பலர் இலட்சக்கணக்கான நிதியைப் பெற்றிருக்கின்றனர். அது தொடர்பான ஆவணங்களையும் விரைவில் நாட்டுக்கு வெளிப்படுத்தவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை (19) இடம்பெற்றபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 1978ஆம் ஆண்டு ஜனாதிபதி நிதிய சட்டத்தின் கீழ் 5 கட்டங்களின் கீழ் நிதியை வழங்குவதற்கு வாய்ப்புள்ளது. அதில் இறுதித் தொகுதியில் சபையால் தீர்மானிக்கப்படுபவர்களுக்கு வழங்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த காலங்களில் உண்மையான தேவைகளுக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது என நாம் நம்பவில்லை. நாட்டிலுள்ள சாதாரண மக்கள் ஏதேனும் சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டால் அதற்காக ஜனாதிபதி நிதியத்திடமிருந்து சுமார் 2 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொள்வதற்கு கூட பாரிய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கோரப்படும் நிதி கிடைப்பதுமில்லை. ஆனால், என்னால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தைப் பார்க்கும்போது முற்றிலும் தலை கீழான நிலைமையே காணப்படுகிறது. 2005 - 2024 வரையான பட்டியலையே நான் முன்வைத்திருக்கிறேன். இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆட்சி காலத்திலும் இவ்வாறு பலர் நிதியைப் பெற்றுள்ளனர். என்னால் முன்வைக்கப்பட்ட ஆவணங்கள் தவிர, பிரதேச சபை உறுப்பினர்கள், தலைவர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதியைப் பெற்றுள்ளனர். இது உண்மையில் ஒழுக்கத்துடன் தொடர்புடைய பிரச்சினையாகும். ஒரு சிலருக்கு சுமார் 100 இலட்சம் ரூபா என்ற பாரிய தொகை கூட கட்டம் கட்டமாக அன்றி நேரடியாக முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. அதிகாரத்தை தம்வசம் வைத்திருந்தவர்கள் அதனை பயன்படுத்திக் கொண்டு இவ்வாறு செயற்பட்டிருக்கின்றனர். இது தொடர்பில் மேலும் பல ஆவணங்களை தேட வேண்டியுள்ளது. அதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. வெகு விரைவில் இதனை விட தெளிவாக மேலும் பல ஆவணங்களை வெளிப்படுத்துவோம் என்றார். https://www.virakesari.lk/article/201663

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.