Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 17 DEC, 2024 | 07:39 PM யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 23 பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 6 பேரும் சிகிச்சைபெற்று வருகின்றனர் என யாழ்ப்பாண மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 9 நோயாளர்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் இந்நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் ஏற்படவில்லை. இதுவரை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்நோய் காரணமாக 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பருத்தித்துறை, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலே எலிக்காய்ச்சலை பரப்புகின்ற பற்றீரியா அந்த பிரதேசங்களில் இருக்கின்ற கால்நடைகளில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே அதனை உறுதிப்படுத்துமாறு நாங்கள் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திடம் அனுமதி கோரியிருந்தோம். அதனடிப்படையில் நாளை கொழும்பில் இருந்து கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஒரு விசேட குழுவினர் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்கள். அந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற கால்நடைகளின் குருதி மாதிரிகளை பெற்று கொழும்புக்கு கொண்டு சென்று ஆய்வு செய்து, கால்நடைகளில் கிருமித் தொற்று இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்த இருக்கின்றார்கள். 99 நோயாளர்களில் இதுவரை 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் எவரும் இந்த நோயால் பாதிக்கப்படவில்லை. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஆண்கள் மருத்துவ விடுதயில் எங்களுக்கு ஒரு நெருக்கடியான நிலை காணப்பட்டது. அதிகமான நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதற்காக நாங்கள் தனியான விடுதி ஒன்றையும் நாங்கள் நேற்றையதினம் (16) ஆரம்பித்துள்ளோம். எலிக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்காக தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. நேற்றுவரை ஏறத்தாழ 6000 பேருக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் காய்ச்சல் நோயாளர்களை இனங்காண்பதற்காக சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள கால்நடைகளில் இக்கிருமித்தொற்று உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக கொழும்பிலிருந்து கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்திலிருந்து குழு ஒன்று யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு நாளை வருகை தரவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/201534
  2. அண்ணை இது எனக்குத் தெரியலயே! கண்டக்ரரிடம் கட்டவேண்டுமீ!
  3. படிச்சானோ என்னவோ தெரியல! ஆனால் வேலையில சீரியஸ் ஆனவன். அண்மையில் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் அவன் வளர்க்கும் மாடு கட்டி நின்ற இடங்கள் எல்லாம் வெள்ளம். ஒரு மாடு வழுக்கி நிலத்தில் விழுந்து விட்டது. பெரியம்மா மகனுக்கு போனடிச்சா றிங் போகுது எடுக்கவில்லை. எனக்கு போனடிச்சா மாடு விழுந்து போச்சு என்று, உடன முதியோர் சங்கத்தில இருந்த அப்பாவையும் அழைத்து பக்கத்தில இருக்கும் இளைஞர்கள் நால்வரும் சென்று மாட்டை எழுப்பி பாதுகாப்பான இடத்தில் நிப்பாட்டி புகைபோட்டு வெப்பப்படுத்தி இளஞ்சூட்டுதண்ணீர் குடிக்கவைத்து பசுமாடு காப்பாற்றப்பட்டது. அந்த நேரம் தம்பி காரைநகரில் மழைவெள்ளம் தனது உதவியாளர்களுடன் வெட்டி விட்டுக்கொண்டிருந்திருக்கிறான்.
  4. அண்ணை, வீதியின் அடிப்பகுதியில் நீரினால் ஏற்படும் அரிப்பு, நிலம் கீழிறங்குவதை தடுப்பதற்காக நெருக்கடி நேரத்தில்/யுத்த காலத்தில் இந்தமுறையை பயன்படுத்தியதாக தம்பி சொன்னான். தற்போது பொறியியலாளர்கள்/எந்திரிகள் ஓலை போட அனுமதிப்பதில்லையாம்.
  5. மணல்தறையள் தண்ணீர் நிக்கக்கூடிய இடங்களிற்கு தடிப்பான பொலித்தீன் போட்டு வீதி போடவேணுமாம். அது விலை கூட என்றபடியால் மாற்றுவழியாக ஓலைகள் போடுவார்களாம்! தொழில்நுட்ப உத்தியோகத்தர் தம்பி சொன்னதைக் கேட்டு பகிர்ந்துகொண்டேன்.
  6. நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா(Ramanathan Archchuna), யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நோயாளர் என்ற ரீதியில் மாத்திரமே உள்நுழைய அனுமதிக்கப்படுவார் என்று யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. வைத்திசாலைக்குள் உள்நுழைந்து கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினார் என தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ். போதனா வைத்தியசாலையினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வைத்தியசாலை நிர்வாகத்திடம் முன் அனுமதி இந்தநிலையில், குறித்த வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி என். கௌசல்யா ஆகியோரை தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல யாழ்.நீதவான் நீதிமன்றம் அனுமதித்தது. மேலும், நோயாளர் என்பதை தவிர்த்து வேறு காரணங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா யாழ். போதனா வைத்தியசாலைக்குள் உள்நுழைய வேண்டுமெனில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் முன் அனுமதி பெறவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நோயாளர் என்பதைத் தவிர்த்து வேறு ஏதேனும் காரணங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உள்நுழைய முற்பட்டால், அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு வைத்தியசாலையின் பணிப்பாளர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. https://tamilwin.com/article/dr-archuna-ramanathan-latest-news-1734414336?itm_source=parsely-api#google_vignette
  7. வர்த்தகர்களும், பொதுமக்களும் சாவகச்சேரி நகரசபை முன்றலில் போராட்டம்! 17 DEC, 2024 | 04:17 PM யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகர வர்த்தகர்களும், பொதுமக்களும் சாவகச்சேரி நகரசபை முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை (17) போராட்டத்தில் ஈடுபட்டனர். சாவகச்சேரி நகர சபையால் அண்மையில் கட்டப்பட்ட புதிய கடைகளை குத்தகைக்கு வழங்குவதற்காக பகிரங்கமாக கேள்வி கோரப்பட்டுள்ளது. கடைகளை கட்ட ஆரம்பிக்கும்போது 2000 ஆம் ஆண்டு யுத்தத்தில் கடைகள் அழிவடைந்த வர்த்தகர்களுக்கு புதிய கடைத் தொகுதியில் முன்னுரிமை வழங்கப்படும் என கடைகள் வழங்கப்படும் என நகர சபையால் உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த வாக்குறுதியை மீறி கேள்வி கோரப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், விண்ணப்பதாரி நகராட்சி மன்ற எல்லைக்குள் வசிக்க வேண்டும் என்ற நிபந்தினையை உள்ளடக்க வேண்டும் எனக்கோரியுமே இந்தப் போராட்டம் இடம்பெற்றது. இதன்போது போராட்டக்காரர்கள் நகரசபையின் பிரதான நுழைவாயிலை பூட்டி போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனையடுத்து, அங்கு வந்த சாவகச்சேரி பொலிஸார் பூட்டை உடைத்து அகற்றியதோடு போராட்டகாரர்களை கலைக்க முற்பட்டனர். இதனால் நுழைவாயிலில் அமர்ந்தவாறு அவர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். இத்தருணத்தில் நகரசபை வாகனங்களுக்கு பொறுப்பான அதிகாரி கழிவகற்றும் உழவியந்திரத்தால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மோத முயற்சித்ததோடு அதை வீடியோ எடுத்த ஊடகவியலாளரையும் கடுமையாக அச்சுறுத்தினார். இதனால் அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதேவேளை, குறித்த கேள்வி கோரலை இரு வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/201512
  8. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என தெரிவித்து புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தேர்தல்கள் சட்ட விதிகளுக்கு முரணானது இந்தநிலையில், இந்த மனுவை ஜனவரி 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உண்மைகளை உறுதிப்படுத்துமாறு நீதியரசர்கள் இன்று உத்தரவிட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடந்த பொதுத் தேர்தலின் போது அரச வைத்தியராகக் கடமையாற்றிய நிலையில், வேட்பு மனுவை சமர்ப்பித்ததாக மனுதாரர் கோரியுள்ளார். அரச சேவையில் இருந்து விலகாமல் இவ்வாறு வேட்புமனுத் தாக்கல் செய்வது சட்டவிரோதமானது எனவும், தேர்தல்கள் சட்ட விதிகளுக்கு முரணானது எனவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் எனப் பிரகடனப்படுத்தி, அந்த ஆசனத்தை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/archchuna-disqualified-to-be-mp-1734425548
  9. 16 DEC, 2024 | 05:28 PM (இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம், மாகாண சபை முறைமை இந்த நாட்டுக்கு அவசியமா, அவசியமற்றதா,? என்பதை இலங்கையர்களே தீர்மானிக்க வேண்டும். இந்தியாவின் விருப்பத்துக்கு அமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துவது முறையற்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். சமஷ்டி ஆட்சி முறைமையை வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய அரசமுறை விஜயத்தின் போது கைச்சாத்திடப்படும் ஒப்பந்தங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தால் இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையிலான செயற்திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபை முறைமை நாட்டுக்க அவசியமா, அவசியமற்றதா என்பதை இலங்கையர்களே தீர்மானிக்க வேண்டும். எதிர்வரும் ஆண்டு இரண்டாம் காலாண்டளவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகிறது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் இந்தியாவினால் பலவந்தமான முறையில் அமுல்படுத்தப்பட்டது.ஆகவே இந்தியாவின் விருப்பத்துக்கமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துவது முறையற்றது. மாகாண சபைத் தேர்தல் குறித்து மக்கள் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள் என்பதை அரசாங்கமும், இந்தியாவும் விளங்கிக் கொள்ள வேண்டும். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டுக்கும், தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த பணிகளை நிறைவு செய்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். சமஷ்டி முறைமையிலான அரசியலமைப்பு உருவாக்கத்துக்கே நல்லாட்சி அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது. சமஷ்டியாட்சி முறைமை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் அம்சங்களை இல்லாதொழிக்கும். ஆகவே எக்காரணிகளுக்காகவும் சமஷ்டியாட்சி அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இடமளிக்க மாட்டோம் என்றார். https://www.virakesari.lk/article/201418
  10. கபில்தேவ் சாதனையை முறியடித்த பும்ரா கிரிக்கெட் வீரர் பும்ரா இந்திய அணியின் முன்னாள் கப்டன் கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்திய அணியும், 2வது ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியும் வெற்றிப் பெற்றன. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. இதில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து, 2வது நாள் ஆட்டம் நேற்று (டிச.15) நடைபெற்றது. இதில் அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து துடுப்பெடுத்தாடியது. இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 405 ஓட்டங்கள் குவித்தது. அவுஸ்திரேலியா அணி தரப்பில் டிராவிஸ் ஹெட் 152 ஓட்டங்களும் ஸ்டீவ் ஸ்மித் 101 ஓட்டங்களும் எடுத்தனர். மேலும், அலெக்ஸ் கேரி 45 ஓட்டங்களுடனும் ஸ்டார்க் 7 ஓட்டத்துடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த தொடரின் 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா இந்திய அணியின் முன்னாள் கப்டன் கபில்தேவின் சாதனையை முறியடித்துள்ளார். பும்ரா டெஸ்ட் இன்னிங்சில் அவர் 5 விக்கெட் எடுப்பது இது 12வது முறையாகும். அதே சமயம் அவர் ஆசிய கண்டத்துக்கு வெளியே இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்துவது இது 10வது நிகழ்வாகும். இதற்கு முன்பு இந்திய பவுலர்களில் கபில்தேவ், ஆசியாவுக்கு வெளியே 9 முறை 5 விக்கெட் எடுத்ததே சாதனையாக இருந்தது. அச்சாதனையை பும்ரா முறியடித்துள்ளார். https://thinakkural.lk/article/313804
  11. 19 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆசிய கிண்ணம் : மலேசியாவை வீழ்த்திய இலங்கை, பங்ளாதேஷிடம் தோற்றது 16 DEC, 2024 | 05:23 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் கோலாலம்பூர், பெயுமாஸ் கிரிக்கெட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஆசிய கிண்ண ரி20 கிரிக்கெட் போட்டியில் பி குழுவில் இடம்பெறும் இலங்கை பெரும்பாலும் அரை இறுதி வாய்ப்பை அண்மித்துள்ளது. இப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியன ஏ குழுவிலும் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா ஆகியன பி குழுவிலும் இடம்பெறுகின்றன. மலேசியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற தனது ஆரம்பப் போட்டியில் மிக இலகுவாக வெற்றிபெற்ற இலங்கை, இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பங்களாதேஷிடம் தோல்வி அடைந்தது. எனினும் நிகர ஓட்ட வேக அடிப்படையில் அரை இறுதி வாய்ப்பை இலங்கை பெறும் என நம்பப்படுகிறது. துடுப்பாட்டத்தில் மனுதி நாணயக்கார அபாரம் மலேசியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை 94 ஓட்டங்களால் மிக இலகுவாக பெற்றிபெற்றது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 20 ஓவர்ளில் 4 விக்கெட்களை இழந்து 153 ஓட்டங்களைக் குவித்தது. ஒரு கட்டத்தில் 9.5 ஓவர்களில் இலங்கை அணி 4 விக்கெட்களை இழந்து 44 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. எனினும், அணித் தலைவி மனுதி நாணயக்கார மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 40 பந்துகளில் 10 பவுண்டறிகள். ஒரு சிக்ஸ் உட்பட ஆட்டம் இழக்காமல் 74 ஓட்டங்களைக் குவித்து அணியைப் பலப்படுத்தினார். அவருக்கு பக்கபலமாக பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய லிமன்சா திலக்கரட்ன ஆட்டம் இழக்காமல் 41 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 61 பந்துகளில் 110 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மலேசியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 59 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பந்துவீச்சில் ஹிருணி ஹன்சிகா 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசேனி தலகுனே 6 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ப்ரமுதி மெத்சரா 7 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் சமுதி முனசிங்க 13 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். பங்களாதேஷிடம் பணிந்தது இலங்கை மலேசியாவுடனான ஆரம்பப் போட்டியில் இலங்கை, இரண்டாவது போட்டியில் பங்களாதேஷிடம் பணிந்தது. அப் போட்டியில் 28 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. கோலாலம்பூரில் பெய்த மழை காரணமாக இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான போட்டி 17 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. பங்களாதேஷ் பெண்கள் அணியிடம் 19 வயதுக்குட்பட்ட இலங்கை பெண்கள் அணி 28 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 17 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றது. சாடியா அக்தர் 31 ஓட்டங்களையும் ஆபிகா ஆஷிமா ஈரா 25 ஓட்டங்களையும் சுமய்யா அக்தர் சுபோர்னா 24 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரஷ்மிக்கா செவ்வந்தி 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ப்ரமுதி மெத்சரா 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், அசெனி தலகுனே 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 17 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. சஞ்சனா காவிந்தி (21), ரஷ்மிக்கா செவ்வந்தி (20) ஆகிய இருவரே ஒரளவு திறமையாகத் துடுப்பெடுத்தாடினர். பந்துவீச்சில் சுமய்யா அக்தர் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பர்ஜானா ஈஸ்மின் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நிஷிட்டா அக்தர் நிஷி 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/201427
  12. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் கடும் நெருக்கடியில் இந்தியா 16 DEC, 2024 | 02:28 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பிறிஸ்பேன், கபா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 3ஆவது போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா குவித்த 445 ஓட்டங்களுக்கு பதிலளித்து முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இந்தியா, மழையினால் பாதிக்கப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 4 விக்கெட்களை இழந்து 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முதல் இன்னிங்ஸில் மேலும் 6 விக்கெட்கள் மீதம் இருக்க, இந்தியா 394 ஓட்டங்களால் பின்னிலையில் இருக்கிறது. யஷஸ்வி ஜய்ஸ்வால் (4), ஷுப்மான் கில் (1), விராத் கோஹ்லி (3), ரிஷாப் பான்ட் (9) ஆகிய நால்வரும் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் நடையைக் கட்டினர். போட்டியின் 3ஆம் நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் கே.எல். ராகுல் 33 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா ஓட்டம் பெறாமலும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 7 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். போட்டியின் 3ஆம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 405 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா சகல விக்கெட்களையும் இழந்து 445 ஓட்டங்களைப் பெற்றது. தனது துடுப்பாட்டத்தை 45 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அலெக்ஸ் கேரி 70 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். ட்ரவிஸ் ஹெட் (156), ஸ்டீவன் ஸ்மித் (101) ஆகிய இருவரும் 2ஆம் நாள் ஆட்டத்தில் சதங்கள் குவித்து அசத்தியிருந்தனர். இந்திய பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 76 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ் 97 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 43ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜஸ்ப்ரிட் பும்ரா இப் போட்டியில் தனது 12ஆவது 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தார். https://www.virakesari.lk/article/201416
  13. வில்லியம்சன் அபார சதம்; மிகவும் பலமான நிலையில் நியூஸிலாந்து 16 DEC, 2024 | 12:35 PM (நெவில் அன்தனி) ஹெமில்டன் சிடொன் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து மிகவும் பலம்வாய்ந்த நிலையில் இருக்கிறது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று திங்கட்கிழமை (16) நினைத்தப் பார்க்க முடியாததும் மிகவும் கடினமானதுமான 658 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 18 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இது இவ்வாறிருக்க, இன்றைய ஆட்டத்தின்போது இங்கிலாந்து அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் உபாதைக்குள்ளாகி ஓய்வு பெற நேரிட்டது. நியூஸிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் 56ஆவது ஓவரில் 2ஆவது பந்தை வீசிய நிலையில் பென் ஸ்டோக்ஸ் தனது இடது தொடைப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக அரங்கைவிட்டு வெளியெறினார். இது இங்கிலாந்து அணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதேவேளை, இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றியீட்டிய இங்கிலாந்து, தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில், கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றியைக் குறிவைத்து நியூஸிலாந்து விளையாடி வருகிறது. போட்டியின் 3ஆம் நாளான இன்று காலை 3 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்களிலிருந்து தனது 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்த நியூஸிலாந்து, சகல விக்கெட்களையும் இழந்து 453 ஓட்டங்களைக் குவித்தது. முன்னாள் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் மிகத் திறமையாக, அதேவேளை, சற்று வேகமாகத் துடுப்பெடுத்தாடி நியூஸிலாந்து அணியைப் பலப்படுத்தினார். 204 பந்துகளை எதிர்கொண்ட கேன் வில்லியம்சன் 20 பவுண்டறிகள் ஒரு சிக்ஸ் உட்பட 156 ஓட்டங்களைக் குவித்ததுடன் ரச்சின் ரவிந்த்ராவுடன் 4ஆவது விக்கெட்டில் 107 ஓட்டங்களையும் டெரில் மிச்செலுடன் 5ஆவது விக்கெட்டில் 92 ஓட்டங்களையும் பகிர்ந்தார். ரச்சின் ரவிந்த்ரா 44 ஓட்டங்களையும் டெரில் மிச்செல் 60 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களை விட மிச்செல் சென்ட்னர் 49 ஓட்டங்களையும் டொம் ப்ளண்டெல் ஆட்டம் இழக்காமல் 44 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜெக்கப் பெத்தெல் 72 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பென் ஸ்டோக்ஸ் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷொயெப் பஷிர் 179 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். கடந்த 14ஆம் திகதி ஆரம்மான இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் 347 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 143 ஓட்டங்களுக்கு சுருண்டது. எண்ணிக்கை சுருக்கம் நியூஸிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 347 (மிச்செல் சென்ட்னர் 76, டொம் லெதம் 63, கேன் வில்லியம்சன் 44, வில் யங் 42, மெத்யூ பொட்ஸ் 90 - 4 விக்., கஸ் அட்கின்சன் 66 - 3 விக்.) இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 143 (ஜோ ரூட் 32, பென் ஸ்டோக்ஸ் 27, மெட் ஹென்றி 48 - 4 விக்., மிச்செல் சென்ட்னர் 7 - 3 விக்., வில் ஓ'ப்றூக் 33 - 3 விக்.) நியூஸிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 453 (கேன் வில்லியம்சன் 156, வில் யங் 60, டெரில் மிச்செல் 60, மிச்செல் சென்ட்னர் 49, டொம் ப்ளன்டெல் 44 ஆ.இ., ரச்சின் ரவிந்த்ரா 44, ஜேக்கப் பெத்தெல் 72 - 3 விக்., பென் ஸ்டோக்ஸ் 52 - 2 விக்., ஷொயெப் பஷிர் 170 - 2 விக்.) இங்கிலாந்து - வெற்றி இலக்கு 658 ஓட்டங்கள் - 2ஆவது இன்: 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 18 - 2 விக்.) https://www.virakesari.lk/article/201406
  14. மகளிர் பிரீமியர் லீக்: ரூ.1.6 கோடிக்கு ஏலம் போன இந்த மதுரை வீராங்கனை யார்? 16 வயதில் எப்படி சாதித்தார்? பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு, கமலினி கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) போன்றே மகளிருக்கு நடத்தப்படும் மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்) போட்டிக்கான ஏலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயதான ஆல் ரவுண்டரான கமலினியை 1.60 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. கமலினி மதுரை அருகே பொருளாதார ரீதியில் பின்தங்கிய சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். மும்பை இந்தியன்ஸ் அணி இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் எடுத்திருப்பதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் அவர் மீது திரும்பியுள்ளது. ஒரே நாளில் கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பிய கமலினி யார்? சாதாரண குடும்பத்தில் பிறந்து சிறு வயதிலேயே கிரிக்கெட் சாதித்தது எப்படி? 'உலக சாம்பியன்ஷிப் போட்டி போல இல்லை' மேக்னஸ் கார்ல்சனின் விமர்சனத்திற்கு குகேஷின் பதில் என்ன? Ind vs Aus: பகலிரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் நிற பந்து தேர்வு செய்யப்பட்டது ஏன்? - யாருக்கு சாதகமாக அமையும்? கேரம் உலகக்கோப்பையில் 3 தங்கம் - அமெரிக்காவில் வாகை சூடிய சென்னை ஆட்டோ ஓட்டுநரின் மகள் சேத்தன் கொரடா: இரு கால்களும் இல்லாமலே கார் பந்தயத்தில் சாதிக்கும் வீரர் கமலினியை ஏலம் எடுக்க கடும் போட்டி 2025ஆம் ஆண்டிற்கான மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் கமலினியை வாங்க மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இந்த ஏலம் டிசம்பர் 15ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது. ஒவ்வொரு வீராங்கனைக்கும் அடிப்படை ஏலத் தொகையாக 10 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதில் கமலினியின் பெயர் அறிவிக்கப்பட்டதுமே அவரை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் முனைப்பு காட்டின. இரு அணிகளும் போட்டிபோட்டு ஏலம் கேட்டதால் கமலினியின் ஏலத் தொகை கிடுகிடுவென உயர்ந்தது. முடிவில் 1.60 கோடி ரூபாய்க்கு (ஒரு கோடியே 60 லட்சம்) கமலினியை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்தது.. "சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?16 டிசம்பர் 2024 சினைப்பையில் நீர்க்கட்டி: டயட் மற்றும் ஊட்டச்சத்து மூலம் குணப்படுத்தலாம் என்ற சமூக ஊடக டிப்ஸ்கள் சரியா?16 டிசம்பர் 2024 யார் இந்த கமலினி? 16 வயதேயான கமலினி, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த குணாளன் - சரண்யா தம்பதியின் மகள் ஆவார். லாரி உரிமையாளரான குணாளன், கல்லூரி மாணவராக இருந்த போது கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை நிறைவேறாத நிலையில் தனது மகனை கிரிக்கெட் வீரராக்க அவர் விரும்பியுள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய குணாளன், "கொரோனா கால கட்டத்தில் என் மகனுக்கு வீட்டிற்கு அருகே உள்ள மைதானத்தில் வலை கட்டி தினசரி கிரிக்கெட் பயிற்சி அளித்தேன். எங்களுக்கு உதவியாக கமலினி கூடைகளில் பந்துகளை சேகரித்து கொடுத்து வந்தார். அப்போது 12 வயதாக இருந்த கமலினி பந்தை எடுத்து அசாதாரணமாக வீசியதை பார்த்து பிரமித்துப் போனேன். அதன் பின்னரே மகளுக்கும் கிரிக்கெட் பயிற்சி அளித்தேன்." என்று கூறினார். குணாளன் அளித்த பயிற்சியில் நன்றாக விளையாட தொடங்கி இருக்கிறார். ஆனால் மதுரையில் கிரிக்கெட் வீராங்கனைகள் பயிற்சி பெறுவதற்கான உயர்தர புல் தரை மைதானம் இல்லாததால் அவர் குடும்பத்துடன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே சென்னைக்கு இடம் பெயர்ந்துள்ளார். அதன் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூப்பர் கிங்ஸ் அகாடமியில் சேர்ந்து கமலினி பயிற்சி பெற்றார். மாதம் ரூ.8 ஆயிரம் கட்டி தினமும் 5 மணி நேரம் அவர் பயிற்சி பெற்று வந்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து பிரேசிலுக்கு சென்று தேவாலயங்களில் பணியாற்றும் பாதிரியார்கள்35 நிமிடங்களுக்கு முன்னர் தூக்கி வீசப்படும் சிகரெட் துண்டுகளில் உருவாக்கப்படும் பொம்மைகள் - எப்படி தயாரிக்கப்படுகிறது?16 டிசம்பர் 2024 தமக்கு கிடைத்த வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திய கமலினி, உள்ளூர் போட்டிகளில் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் என்ற பெயரை பெற்றார். 2021ஆம் ஆண்டு 15 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணியின் கேப்டனாக கமலினி விளையாடினார். 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கலந்து கொண்ட அந்த தொடரில் அதிக ரன்கள் (485 ரன்கள்) குவித்து அவர் முதல் இடத்தை பிடித்தார். ஆனால் தமிழ்நாடு அணி அரை இறுதியில் தோல்வியடைந்தது. பின்னர் 19 வயதுக்குட்டோருக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி அதிக ரன் குவித்தவர்களில் இரண்டாவது இடம் பிடித்தார். அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான கமலினி, அவ்வப்போது சுழற்பந்து வீசவும் செய்வார். தற்போது மலேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய டி20 கோப்பை கிரிக்கெட் போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் விளையாடி வருகிறார். அண்மையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போட்டியில் கமலினி ஆட்டம் இழக்காமல் 29 பந்துகளுக்கு 44 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெறுவதில் முக்கிய பங்கு வகித்தார். உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் காலமானார்16 டிசம்பர் 2024 சிரியாவில் அசத் ஆட்சி வீழ்ச்சி - ஆக்கிரமிப்பு கோலன் குன்று குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரேல்16 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,SOCIAL MEDIA "என் மகளின் கனவு நனவாகியுள்ளது" "என் மகளை மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் போட்டியில் விளையாட ரூ.1.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது, பேச வார்த்தைகள் இல்லை" என கமலினியின் தந்தை குணாளன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். "என் மகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்ந்து விளையாட வேண்டும் என்பது கனவு. அதற்காக மூன்று முறை பயிற்சிக்காக மும்பை சென்றுள்ளார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி கமலினியை ஏலத்தில் எடுத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்கள் குடும்பத்தின் ஐந்து வருட உழைப்புக்கு கிடைத்த பரிசு. மகளிர் பிரீமியர் லீக்கில் என் மகள் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்வார் என்ற நம்பிக்கை உள்ளது. எனது மகள் ஒவ்வொரு முறையும் விளையாடச் செல்லும் போது என்னிடம் ஒரு சில அறிவுரைகளை கேட்டு பெற்று விளையாடி வருகிறார். எனவே ஒரு தந்தை என்பதை காட்டிலும் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்", என்றார் குணாளன். ஆப்கானிஸ்தான்: தாலிபன்களின் எதிர்ப்பை மீறி காபுல் தெருக்களில் புத்தகம் விற்கும் பெண்15 டிசம்பர் 2024 சிரிய முன்னாள் அதிபர் பஷர் அல்-அசத் தனது மனைவியுடன் ரஷ்யா சென்றது ஏன்? எதிர்காலம் என்ன?15 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,KAMALINI படக்குறிப்பு, குடும்பத்தினருடன் கமலினி திட்டிய உறவினர்கள் " என் குடும்பத்தார் 'பெண் பிள்ளையை கிரிக்கெட் விளையாட அனுப்பி ஏன் இப்படி கஷ்டப்படுத்துற' என்று பலமுறை என்னை திட்டியதுண்டு. அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் கிரிக்கெட் விளையாட அனுப்பியதன் பலனாக என் மகள் இன்று கிரிக்கெட் அரங்கில் சாதிக்கிறார்", என்று கூறுகிறார் அவரது தாய் சரண்யா. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த நாங்கள் சாதாரண பொருளாதார பின்புலத்தை கொண்டவர்கள். எனது மகன் மற்றும் மகள் இருவருக்கும் கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் இருந்தது. எதிர்காலத்தில் இருவரும் நல்ல கிரிக்கெட் வீரர்களாக வர வேண்டும் என்பதற்காகவே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தோம்", என்றார். "குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எங்களுடைய வாழ்க்கையை தியாகம் செய்தோம். அதன் பலனாக என் மகளின் கனவு இப்போது நனவாகி இருப்பதை நினைத்தால் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி என் மகளை ஏலத்தில் எடுத்த செய்தி அறிந்ததும் மலேசியாவில் உள்ள என் மகள் கமலினி வீடியோ கால் மூலம் எங்களிடம் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார். மகளிர் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி கோப்பையை ஜெயிப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்குள்ளது", என்றும் சரண்யா கூறினார். "பெண் குழந்தையை கிரிக்கெட் விளையாட அனுப்பியதற்காக என்னுடைய தாயும், தந்தையும் உறவினர்களும் கூட என்னை திட்டினர். ஆனால் அதை எதையும் பொருட்படுத்தாமல் கமலினியை கிரிக்கெட் விளையாடுவதற்கு ஊக்கப்படுத்தி அனுப்பினோம். இன்று அவர் சாதித்து காட்டியுள்ளார்" என்று கூறினார் கமலினியின் தாய் சரண்யா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/ced8g47vqx1o
  15. 17 DEC, 2024 | 11:03 AM தமிழ் மக்களைப் பாதிக்கும் பல பிரச்சனைகள் தொடர்பாக ஐ. நா. வதிவிடப் பிரதிநிதியை நேற்று திங்கட்கிழமை (16) தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து கலந்துரையாடினர். https://www.virakesari.lk/article/201471
  16. பட மூலாதாரம்,RONNY SEN/BBC படக்குறிப்பு, புச்சுவுக்கு ஒன்பது வயதாகும் போது, அவர் பந்து என்று நினைத்த ஒரு பொருள், பயங்கரமான வெடிப்பை ஏற்படுத்தியது. கட்டுரை தகவல் எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ், நுபுர் சோனர் மற்றும் தனுஸ்ரீ பாண்டே பதவி, பிபிசி உலக சேவை இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் குறைந்தது 565 குழந்தைகள் நாட்டு வெடிகுண்டுகளால் காயமடைந்துள்ளனர், உடல் உறுப்புகளை இழந்துள்ளனர், பார்வை இழந்துள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர் என்று பிபிசி உலக சேவை புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொடிய பொருட்கள் என்ன, அவை மேற்கு வங்கத்தில், அரசியல் வன்முறையுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன? ஏன் பல வங்க குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்? 1996-ஆம் ஆண்டு மே மாதம், பிரகாசமான கோடைகாலத்தின் ஒரு காலை வேளையில், மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு குடிசைப்பகுதியில் இருந்து ஆறு சிறுவர்கள், ஒரு குறுகிய சந்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காக சென்றனர். ஜோத்பூர் பூங்காவின் நடுத்தர வர்க்க சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள அவர்களது குடிசைப்பகுதி, சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நாள் என்பதால் அன்று விடுமுறை. ஒன்பது வயதான புச்சு சர்தார் என்ற சிறுவன், கிரிக்கெட் மட்டையை எடுத்துக்கொண்டு, தூங்கிக் கொண்டிருந்த தன் தந்தையைக் கடந்து அமைதியாகச் சென்றார். சிறிது நேரத்தில், பந்தைத் தாக்கும் கிரிக்கெட் மட்டையின் கூர்மையான சத்தம் குறுகிய சந்தின் வழியாக எதிரொலித்தது. அவர்களின் தற்காலிக ஆடுகளத்தின் எல்லைகளுக்கு வெளியே அடிக்கப்பட்ட பந்தை, அருகிலுள்ள ஒரு சிறிய தோட்டத்தில் சிறுவர்கள் தேடினர். அங்கு, ஒரு கருப்பு பிளாஸ்டிக் பையில், ஆறு உருண்டையான பொருட்களை அவர்கள் கண்டனர். யாரோ விட்டுச்சென்ற கிரிக்கெட் பந்துகள் போல அவை காணப்பட்டன. கிரிக்கெட் பந்துகள் என்று நம்பி அவற்றை எடுத்துக்கொண்டு, சிறுவர்கள் மீண்டும் விளையாடத் திரும்பினர். பையில் இருந்த "பந்து" ஒன்று புச்சுவுக்கு வீசப்பட்டது. அவர் அதை தனது மட்டையால் அடித்தார். உடனே அங்கே பயங்கரமான வெடிப்பு நிகழ்ந்தது. சிறுவர்கள் பந்து என நினைத்த அந்த பொருள், உண்மையில் ஒரு வெடிகுண்டு. புகை வெளியேறியதும், அக்கம் பக்கத்தினர் வெளியே விரைந்தபோது, புச்சு மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேர் தெருவில் விழுந்து கிடந்ததைக் கண்டனர். அவர்களின் தோல் கருப்பாகி, உடைகள் கருகி, உடல்கள் கிழிந்த நிலையில் இருந்தன. கொந்தளிப்புக்கு மத்தியில், பயங்கரமான அலறல் சத்தம் கேட்டது. அத்தையால் வளர்க்கப்பட்ட, ஆதரவற்ற சிறுவரான ஏழு வயது ராஜு தாஸ் மற்றும் ஏழு வயதான கோபால் பிஸ்வாஸ் ஆகியோர் காயங்களால் இறந்தனர். மேலும் நான்கு சிறுவர்கள் காயமடைந்தனர். இந்த வெடிப்புச் சம்பவத்தால், புச்சு பலத்த தீக்காயங்களை அடைந்தார். அவரது மார்பு, முகம் மற்றும் வயிற்றில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் அவதிப்பட்டார். புச்சு ஒரு மாதத்திற்கும் மேல் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருந்தது. அவர் வீடு திரும்பியதும், அவரது குடும்பத்தினரால் மருத்துவ சிகிச்சைக்கு பணம் செலவழிக்க முடியவில்லை. எனவே அவர் உடலில் சிக்கிக் கொண்டிருந்த சிறு உலோகத் துண்டுகளை அகற்ற சமையலறையில் பயன்படுத்தபடும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. தென் மாநிலங்களில் குழந்தை பிறப்பு குறைவு: எம்.பி தொகுதி குறையும் ஆபத்தை தாண்டியும் காத்திருக்கும் புதிய சவால் திண்டுக்கல் தீ விபத்து: 'புகைசூழ்ந்து கண்ணே தெரியவில்லை' - உயிர் பிழைத்தவர்கள் கூறுவது என்ன? பிபிசி கள ஆய்வு ஆப்ரிக்காவை விட மோசம்: இந்தியாவில் குழந்தை வளர்ச்சி குறைபாட்டிற்கு சாதி ஒடுக்குமுறையே காரணமா? ஆய்வில் புதிய தகவல் குறைந்த வருவாய் கொண்ட ஆண்களிடையே 'குழந்தையின்மை' அதிகமாக இருப்பது ஏன்? குண்டுகளால் கொல்லப்பட்ட அல்லது கடுமையாக காயமடைந்த பல குழந்தைகளில் புச்சுவும் அவரது நண்பர்களும் அடங்குவர். பல ஆண்டுகளாக மேற்கு வங்க மாநிலத்தில், அரசியலில் ஆதிக்கம் செய்ய வன்முறை போராட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேற்கு வங்க மாநிலத்தில், வெடிகுண்டு தாக்குதலில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை. மேற்கு வங்கத்தின் இரண்டு முக்கிய செய்தித்தாள்களான ஆனந்தபஜார் பத்ரிகா மற்றும் பர்தாமன் பத்ரிகா ஆகியவற்றின் 1996 முதல் 2024 வரையிலான ஒவ்வொரு பதிப்பையும் மதிப்பாய்வு செய்து, குண்டுகளால் குழந்தைகள் காயமடைந்ததை அல்லது கொல்லப்பட்டதைக் கண்டறிய பிபிசி விரிவான புலனாய்வை நடத்தியது. நவம்பர் 10 வரை, குறைந்தது 565 பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறிந்துள்ளோம். 94 குழந்தைகள் இறந்துள்ளனர் மற்றும் 471 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். அதாவது சராசரியாக ஒவ்வொரு 18 நாட்களுக்கும் ஒரு குழந்தை வெடிகுண்டு வன்முறைக்கு பலியாகிறது. வெடிகுண்டுகளால் குழந்தைகள் காயமடைந்த சம்பவங்களை பிபிசி கண்டறிந்துள்ளது. இதுகுறித்த செய்திகள் அந்த இரண்டு செய்தித்தாள்களிலும் இடம்பெறவில்லை. எனவே உயிரிழப்புகளின் உண்மையான எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கலாம். இந்த சம்பவங்களில் 60% க்கும் அதிகமானவை குழந்தைகள் வெளியில் விளையாடும் போது நடந்துள்ளன. பொதுவாக தேர்தல்களின் போது எதிரிகளை பயமுறுத்துவதற்காக பயன்படுத்தப்படும் குண்டுகள் தோட்டங்கள், தெருக்கள், பண்ணைகள், பள்ளிகளுக்கு அருகில் கூட மறைத்து வைக்கப்பட்டிருந்தன. பிபிசியிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெரும்பாலோனோர் ஏழைகளாக , வீட்டு உதவியாளர்களாக, தற்காலிக வேலை செய்பவர்களாக அல்லது பண்ணையில் வேலை செய்பவர்களின் குழந்தைகளாக இருந்தனர். அமெரிக்கா, ஜெர்மனியில் மாறும் நிலவரம்: 2025-ஆம் ஆண்டில் மக்களின் இடப்பெயர்வு எப்படி இருக்கும்?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சிரியாவின் கோலன் குன்றுகளில் இஸ்ரேலியரை குடியமர்த்த நெதன்யாகு திட்டம் - அசத் வீழ்ந்த பிறகு என்ன நடக்கிறது?16 டிசம்பர் 2024 மேற்கு வங்கத்தில் வெடிகுண்டுகளின் வரலாறு 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் நான்காவது பெரிய மாநிலமான மேற்கு வங்கம், அரசியல் வன்முறையில் நீண்ட காலமாக சிக்கியுள்ளது. 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து, மேற்கு வங்கத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சியில் இருந்துள்ளன. காங்கிரஸ் கட்சி இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தது. அதைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது முன்னணி முப்பது ஆண்டுகளாக ஆட்சி செய்தது. 2011 முதல் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. 1960 களின் பிற்பகுதியில், நக்சலைட்டுகள் என்று அழைக்கப்படும் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையே கடுமையான ஆயுத மோதலை, மேற்கு வங்கம் சந்தித்தது. பல ஆண்டுகளாக எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், குறிப்பாக தேர்தல் காலங்களில் எதிரிகளை அச்சுறுத்துவதற்கு , அரசியல் கட்சிகளால் குண்டுகள் முக்கிய கருவியாக பயன்படுத்தப்படுகின்றன. "குண்டுகள் மோதல்களைத் தீர்ப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன. மேற்கு வங்காளத்தில் நீண்ட காலமாக, 100 ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்று நடந்து வருகிறது" என்று மேற்கு வங்க காவல்துறையின் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பங்கஜ் தத்தா எங்களிடம் கூறினார். பட மூலாதாரம்,RONNY SEN/ BBC படக்குறிப்பு, மேற்கு வங்காளத்தில் உள்ள வெடிகுண்டுகள் தற்போது சணல் கயிறுகளால் கட்டப்பட்டு, ஆணிகளைப் போன்ற சிறு உலோகத் துண்டுகள் மற்றும் கண்ணாடிகளால் அடைக்கப்பட்டுள்ளன. 1900 களின் முற்பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியில் இருந்து , வங்காளத்தில் வெடிகுண்டு தயாரிப்பு முறை அதன் வேர்களைக் கொண்டுள்ளது. வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்ட ஆரம்ப காலத்தில், அது தொடர்பான விபத்துகள் பொதுவானவை: கிளர்ச்சியாளர் ஒருவர் தனது கையை இழந்தார், மற்றொருவர் வெடிகுண்டு சோதனையில் இறந்தார். அதன் பிறகு ஒரு கிளர்ச்சியாளர் பிரான்சில் இருந்து வெடிகுண்டு தயாரிக்கும் திறமையுடன் திரும்பினார். அவரது புத்தக குண்டில், வெடிமருந்துகள் மறைத்து வைக்கப்பட்ட கேட்பரி கோகோ டின் இருக்கும். அவரது இலக்கான பிரிட்டிஷ் மாஜிஸ்திரேட் அதைத் திறந்திருந்தால், அவர் கொல்லப்பட்டிருப்பார். 1907-ஆம் ஆண்டு மிட்னாபூர் மாவட்டத்தில் முதல் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. கிளர்ச்சியாளர்கள் ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்ததால், ஒரு மூத்த பிரிட்டிஷ் அதிகாரியை ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டது. இச்சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பிறகு, முசாஃபர்பூரில் ஒரு மாஜிஸ்திரேட்டைக் கொல்ல குதிரை வண்டி மீது வீசப்பட்ட வெடிகுண்டு இரண்டு ஆங்கிலேயப் பெண்களின் உயிரைப் பறித்தது. "ஊரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மிகப்பெரிய வெடிப்பு" என்று ஒரு செய்தித்தாள் இந்தச் சம்பவத்தை விவரித்தது. இந்த நிகழ்வு, குதிராம் போஸ் என்ற இளம் வயது கிளர்ச்சியாளரை ஒரு தியாகியாகவும், பல குழுக்களின் இந்திய புரட்சியில் முதல் ''சுதந்திரப் போராளியாகவும்'' மாற்றியது. 1908-ஆம் ஆண்டு தேசியவாதத் தலைவரான பாலகங்காதர திலகர், வெடிகுண்டுகள் வெறும் ஆயுதங்கள் அல்ல என்றும், வங்காளத்தில் இருந்து இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவும் ஒரு புதிய வகை "மாயக் கதை" அல்லது "மாந்திரீகத்தின்" ஒரு வடிவம் என்றும் எழுதினார். இன்று மேற்கு வங்கத்தில் பெட்டோ என்று அழைக்கப்படும் இந்த குண்டுகள் சணல் கயிறுகளால் சுற்றப்பட்டு, ஆணிகளைப் போன்ற சிறு உலோகத் துண்டுகள் மற்றும் கண்ணாடிகளால் அடைக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுகளை எஃகு கொள்கலன்கள் அல்லது கண்ணாடி பாட்டில்களிலும் அடைத்து வைக்கலாம். போட்டி மிகுந்த அரசியல் கட்சிகளுக்கு இடையிலான வன்முறை மோதல்களின் போது பிரதானமாக இவை பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக கிராமப்புறங்களில், அரசியல்வாதிகள் எதிரிகளை மிரட்டவும், வாக்களிக்கும் நிலையங்களை சீர்குலைக்கவும் அல்லது எதிரிகளுக்கு எதிராக பதிலடி கொடுக்கவும் இந்த வெடிகுண்டுகளைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் பெரும்பாலும் வாக்குச்சாவடிகளை சேதப்படுத்தவோ அல்லது அந்தப் பகுதிகளின் மீது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தவோ இக்குண்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து பிரேசிலுக்கு சென்று தேவாலயங்களில் பணியாற்றும் பாதிரியார்கள்2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் 'ஹாங்காங்' திட்டத்தால் இந்த தீவில் வாழும் மக்கள் கலக்கம் ஏன்?15 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,RONNY SEN/ BBC படக்குறிப்பு, பௌலமி ஹால்டர் பூக்களை பறித்துக்கொண்டிருந்தபோது பந்து என்று நம்பிய ஒரு பொருளைக் கண்டார். பௌலமி ஹல்டர் போன்ற குழந்தைகள் இத்தகைய வன்முறைகளின் சுமைகளை சுமக்கிறார்கள். 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஏழு வயதான பௌலமி ஹல்டர், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் குளங்கள், நெல் வயல்கள் மற்றும் தென்னை மரங்கள் நிறைந்த கோபால்பூர் கிராமத்தில் காலை பிரார்த்தனைக்காக பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தார். கிராம சபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருந்தது. பக்கத்து வீட்டுக்காரரின் தண்ணீர் பம்ப் அருகே ஒரு பந்து கிடப்பதை பௌலமி பார்த்தார். "நான் அதை எடுத்து வீட்டிற்கு கொண்டு வந்தேன்," என்று அவர் நினைவு கூர்ந்தார். பௌலமி உள்ளே நுழைந்ததும், டீ குடித்துக் கொண்டிருந்த அவரது தாத்தா, பௌலமியின் கையில் இருந்த பொருளைப் பார்த்து உறைந்து போனார். " 'இது பந்து அல்ல - வெடிகுண்டு! தூக்கி எறி!' என்று அவர் சொன்னார். நான் அதைச் செய்யும் முன்பே, அது என் கையில் வெடித்தது." அந்த குண்டுவெடிப்பு கிராமத்தின் அமைதியைக் குலைத்தது. பௌலமியின் கண்கள், முகம் மற்றும் கைகளில் அடிபட்டது, அவரைச் சுற்றி குழப்பம் நிலவியதால் பௌலமி மயக்கமடைந்தார் . ''என்னை நோக்கி மக்கள் ஓடி வருவது எனக்கு நினைவில் உள்ளது. ஆனால், என்னால் மிகவும் குறைவாகவே பார்க்க முடிந்தது. எனக்கு எல்லா இடங்களிலும் அடிப்பட்டது." கிராம மக்கள் விரைவாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது காயங்கள் கடுமையாக இருந்தன. அவரது இடது கையை இழந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருந்தது. ஒரு சாதாரண காலைப் பழக்கம் கெட்ட கனவாக மாறி, ஒரே ஒரு நொடியில் பௌலமியின் வாழ்க்கையை மாற்றிவிட்டது. பெங்களூரு பொறியாளர் தற்கொலை வழக்கில் அவரது மனைவி உள்பட 3 பேர் கைது - என்ன நடக்கிறது?15 டிசம்பர் 2024 OpenAI மீது குற்றம்சாட்டிய இந்திய வம்சாவளி கணினி ஆய்வாளர் திடீர் மரணம் - என்ன நடந்தது?15 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,RONNY SEN/ BBC படக்குறிப்பு, ஏப்ரல் 2020 இல் சபீனா காதுன் கையில் ஒரு வெடிகுண்டு வெடித்தபோது அவருக்கு 10 வயதுதான். இது போன்ற சம்பவங்கள் பௌலமிக்கு மட்டும் நடக்கவில்லை. ஏப்ரல் 2020 இல் சபீனாவின் கையில் ஒரு வெடிகுண்டு வெடித்தபோது அவருக்கு 10 வயதுதான். இந்த சோகமான சம்பவம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நெல் மற்றும் சணல் வயல்களால் சூழப்பட்ட கிராமமான ஜித்பூரில் நடந்தது. அவர் ஆட்டை மேய்ச்சலுக்கு வெளியே அழைத்துச் சென்ற போது, புல்வெளியில் வெடிகுண்டு கிடந்ததை தற்செயலாக கவனித்தார். ஆர்வத்தால், சபீனா அதை எடுத்து விளையாட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அது சபீனாவின் கைகளில் வெடித்தது. "வெடிப்புச் சத்தம் கேட்டவுடனே நான் நினைத்தேன், இந்த முறை யார் பாதிக்கப்படப் போகிறார் ? சபீனா மாற்றுத்திறனாளியாகப் போகிறாரா?," என்று தான் நினைத்ததாக அவரது தாயார் அமீனா பீபி கூறுகிறார், அவரது குரல் வேதனையுடன் கனத்தது. "நான் வெளியில் அடியெடுத்து வைத்த போது, சபீனாவைக் கைகளில் ஏந்தியவர்களைக் கண்டேன். சபீனாவின் கையிலிருந்து சதை தெரிந்தது." சபீனாவின் கையை துண்டிக்க வேண்டிய நிலைக்கு மருத்துவர்கள் தள்ளப்பட்டனர். வீடு திரும்பியதில் இருந்து, சபீனா தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப சவால்களை எதிர்கொண்டார். அவருடைய பெற்றோர் சபீனாவின் நிச்சயமற்ற எதிர்காலத்தை நினைத்து விரக்தியில் மூழ்கினர். இந்தியாவில் குறைபாடுகள் உள்ள பெண்கள் பெரும்பாலும் சமூக புறக்கணிப்பை எதிர்கொள்ள நேரிடுகிறது. அந்த குறைபாடு அவர்களது திருமணம் மற்றும் வேலை வாய்ப்புகளை பாதிக்கும். "என் கைகள் திரும்ப கிடைக்காது என என் மகள் அழுதுகொண்டே இருந்தாள்" என்கிறார் அமீனா. "உன் கை மீண்டும் வளரும், உன் விரல்கள் மீண்டும் வளரும்" என்று நான் அவருக்கு ஆறுதல் கூறிக்கொண்டே இருந்தேன்." சபீனா இப்போது கையின்றி வாழ்வதில் அன்றாட சவால்களை எதிர்கொள்கிறார். "நான் தண்ணீர் குடிக்கவும், சாப்பிடவும், குளிக்கவும், ஆடை அணியவும், கழிப்பறைக்குச் செல்லவும் சிரமப்படுகிறேன்." சினைப்பையில் நீர்க்கட்டி: டயட் மற்றும் ஊட்டச்சத்து மூலம் குணப்படுத்தலாம் என்ற சமூக ஊடக டிப்ஸ்களை நம்பலாமா?16 டிசம்பர் 2024 கூகுள் மேப் பார்த்து கோவா செல்ல முயன்ற 4 பேர் நள்ளிரவில் நடுக்காட்டில் சிக்கியது எப்படி?16 டிசம்பர் 2024 குண்டுவெடிப்பில் இருந்து உயிர் பிழைத்த போதிலும், உடல் உறுப்பு இழப்பால் இத்தகைய குழந்தைகளின் வாழ்க்கை நிரந்தரமாக மாறிவிட்டது தற்போது 13 வயதாகும் பௌலமி செயற்கைக் கையைப் பெற்றுள்ளார். ஆனால் அதைப் பயன்படுத்த முடியவில்லை. செயற்கைக் கை, மிகவும் கனமாக இருந்ததாலும், பௌலமி விரைவாக வளர்ந்துவிட்டதாலும் அவரால் அதை பயன்படுத்த முடியவில்லை. தற்போது 14 வயதாகும் சபீனா, கண் பார்வை குறைபாட்டுடன் போராடுகிறார். அவரது கண்களில் இருந்து வெடிகுண்டு துண்டை அகற்ற மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள். ஆனால் அதற்கான பணம் அவர்களிடம் இல்லை இப்போது புச்சுவுக்கு 37 வயதாகிறது. இந்தச் சம்பவத்தால் பயந்த புச்சுவின் பெற்றோர், அவரைப் பள்ளியில் இருந்து நீக்க முடிவு செய்தனர். புச்சு பல ஆண்டுகளாக வெளியே செல்ல மறுத்து, சிறிய சத்தம் கேட்டால் கூட படுக்கைக்கு அடியில் ஒளிந்து கொண்டார். அதன்பிறகு அவர் மீண்டும் கிரிக்கெட் மட்டையை எடுக்கவில்லை. அவரது குழந்தைப் பருவம் களவாடப்பட்டுவிட்டது. அவ்வப்போது கிடைக்கும் கட்டுமான வேலைகளில் ஈடுபட்டு வாழ்க்கையை நடத்துகிறார். அவரது கடந்த காலத்தின் வடுக்களை சுமந்து வாழ்கிறார். ஆனால் , இன்னும் எல்லா நம்பிக்கையும் இழக்கப்படவில்லை. . பௌலமி, சபீனா இருவரும் ஒரு கையால் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டு பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இருவருக்கும் ஆசிரியர்களாகும் கனவு உள்ளது. புச்சு, ஐந்து வயதாகும் தனது மகன் ருத்ராவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். ஒரு காவல்துறை அதிகாரியாக சீருடை அணியும் வகையில் அவரது மகனின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டும் என புச்சு எதிர்பார்க்கிறார். செவ்வாய் கோளில் உயிர்கள் வாழ்ந்தனவா? நாசா ஆய்வில் புதிய மைல்கல்15 டிசம்பர் 2024 ஆப்பிரிக்காவுக்கு வெளியே மனித குலம் தழைக்க 'நியாண்டர்தால்' அடிகோலியது எப்படி?14 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,RONNY SEN/ BBC படக்குறிப்பு, சபீனாவும் பௌலமியைப் போலவே ஒரு கையால் பைக் ஓட்டக் கற்றுக் கொண்டு ஆசிரியையாக வேண்டும் என்று கனவு காண்கிறார். கொடூரமான பல சம்பவங்கள் நடந்தபோதிலும், மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு வன்முறை முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அரசியல் லாபத்திற்காக வெடிகுண்டுகளை பயன்படுத்துவதை எந்த அரசியல் கட்சிகளும் ஒப்புக்கொள்ளவில்லை. மேற்கு வங்கத்தில் உள்ள நான்கு முக்கிய அரசியல் கட்சிகள் நேரடியாகவோ அல்லது இடைத்தரகர்கள் மூலமாகவோ வெடிகுண்டுகளை தயாரிப்பதில் அல்லது பயன்படுத்துவதில் ஈடுபட்டுள்ளதா என்று பிபிசி கேட்டதற்கு, ஆளும் திரிணாமுல் காங்கிரஸும் (டிஎம்சி) எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவும் (பிஜேபி) பதிலளிக்கவில்லை. தாங்கள் இதில் ஈடுபடுவதில்லை என கூறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), ''சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த உறுதிபூண்டுள்ளோம். மனித உரிமைகள் மற்றும் உயிர்களைப் பாதுகாக்கும் விஷயத்தில், குழந்தைகள் மீது மிகவும் அக்கறை கொண்டுள்ளோம்'' என தெரிவித்துள்ளது இந்திய தேசிய காங்கிரஸும் (INC) தேர்தல் ஆதாயத்திற்காக குண்டுகளைப் பயன்படுத்துவதில்லை என்று தெரிவித்தது. மேலும் "அரசியல் அல்லது தனிப்பட்ட ஆதாயத்திற்காக எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை" என்றும் அக்கட்சி கூறியது. எந்தவொரு அரசியல் கட்சியும் இச்சம்பவங்களுக்கான பொறுப்பை ஏற்காது என்றாலும், இந்த படுகொலைச் சம்பவங்கள் மேற்கு வங்க அரசியல் வன்முறை கலாசாரத்தில் வேரூன்றியுள்ளது என்பதில் சந்தேகமில்லை என பிபிசியிடம் பேசிய நிபுணர்கள் கூறினர். ''எல்லா முக்கியத் தேர்தலின் போதும் இங்கு வெடிகுண்டுகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதை நீங்கள் காண்பீர்கள்" என்று பங்கஜ் தத்தா கூறினார். "குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இது சமூகத்தின் அக்கறையின்மை" என்று கூறினார் நவம்பர் மாதம் காலமான தத்தா. "குண்டுகளை வைத்தவர்கள் இன்னும் சுதந்திரமாக உள்ளனர். குண்டுகளை யாரும் அலட்சியமாக கைவிடக்கூடாது. இனி எந்த குழந்தைக்கும் இதுபோல் தீங்கு நடக்கக்கூடாது." என்று பௌலமி மேலும் கூறுகிறார். அமேசானின் இந்த 'கொதிக்கும் நதி' சூடாவது எப்படி? மனித குலத்திற்கு விடுக்கும் எச்சரிக்கை என்ன?14 டிசம்பர் 2024 கருவின் மூளைகளை 0.5 மைக்ரான் அளவில் வெட்டி மெட்ராஸ் ஐஐடி செய்த ஆய்வு - மூளை நோய்களைத் தடுக்க உதவுமா?14 டிசம்பர் 2024 'என் மகனுக்கு என்ன செய்தார்கள் என்று பாருங்கள்' ஹூக்ளி மாவட்டத்தில் ஒரு மே மாதம் காலை, ஒரு குளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள், பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகளை எதிர்கொண்டனர். இந்த வெடிப்பில் ஒன்பது வயதான ராஜ் பிஸ்வாஸ், கொல்லப்பட்டார் மற்றும் அவரது நண்பர் ஒரு கையை இழந்து, மாற்றுத்திறனாளியானார். மற்றொரு சிறுவன் கால் எலும்பு முறிவுகளுடன் உயிர் தப்பினார் . "எனது மகனை என்ன செய்துவிட்டார்கள் பாருங்கள்" என்று ராஜின் தந்தை தனது இறந்த குழந்தையின் நெற்றியை வருடியபடி அழுதார். ராஜின் உடல் புதைகுழியில் இறக்கப்பட்டபோது, அருகிலுள்ள தேர்தல் பேரணியில் இருந்து அரசியல் கோஷங்கள் காற்றில் ஒலித்தன: "வங்காளம் வாழ்க!" என்றும் "வாழ்க பெங்கால்!" என்றும் கூட்டத்தினர் கோஷமிட்டனர். அது தேர்தல் நேரம். மீண்டும், குழந்தைகள் அதற்கான விலையைக் கொடுத்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cge9qz35p8go
  17. புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன தெரிவு Published By: DIGITAL DESK 3 17 DEC, 2024 | 09:52 AM 10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இடம்பிட்டிய கெதரயோ வணிகசூரிய முதியான்சலாகே ஜகத் விக்கிரமரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/201475
  18. 16 DEC, 2024 | 07:57 PM தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமென நாம் நம்புகின்றோம். அத்துடன் இலங்கை அரசியலமைப்பினை முழுமையாக அமுல்படுத்தவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குமான தமது உறுதிமொழியினை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கும் போதே இந்தியப் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் உரையாற்றிய இந்தியப் பிரதமர் மேலும் உரையாற்றுகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இந்தியாவுக்கு நான் அன்புடன் வரவேற்கின்றேன். ஜனாதிபதியாக இந்தியாவுக்கு முதலாவது விஜயத்தினை மேற்கொள்வதற்கு நீங்கள் மேற்கொண்ட தீர்மானம் குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்த விஜயமானது நமது உறவுகளில் புத்துணர்ச்சியுடனான ஆற்றல்களையும் சக்தியினையும் உட்புகுத்தியுள்ளது. நமது பங்குடைமைக்கான எதிர்கால நோக்கினை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். அத்துடன் நமது பொருளாதார பங்குடைமையில் முதலீட்டினை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சி மற்றும் இணைப்புக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். நேரடியான தொடர்புகள், டிஜிட்டல் மற்றும் ஆற்றல் அடிப்படையிலான இணைப்பு ஆகியவை எங்கள் கூட்டாண்மையின் முக்கிய தூண்களாக இருக்கவேண்டுமென நாம் தீர்மானித்துள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையிலான மின்சார வலையமைப்பிற்கான இணைப்பு மற்றும் பல்பொருள் பெற்றோலிய உற்பத்திகளை விநியோகிக்கும் குழாய் கட்டமைப்பு ஆகியவற்றை ஸ்தாபிப்பதற்காகவும் நாம் பணியாற்றவுள்ளோம். சம்பூர் சூரியக் கல மின்சக்தி திட்டம் துரிதப்படுத்தப்படும். இவற்றுக்கு மேலதிகமாக இலங்கையில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு LNG வழங்கப்படும். இருதரப்பு வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ETCA உடன்படிக்கையினை நிறைவேற்றும் முயற்சிகள் இரு தரப்பாலும் மேற்கொள்ளப்படும். இன்றுவரை 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான நன்கொடை மற்றும் கடனுதவி இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களுக்கும் நாங்கள் ஆதரவினை வழங்கி வருகின்றொம். எமது பங்காளி நாடுகளின் அபிவிருத்தித் தெரிவுகளுக்கு அமைவாகவே எமது திட்டங்கள் தெரிவு செய்யப்படுகின்றன. இந்த ஆதரவினை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் வகையில், மாகோ முதல் அனுராதபுரம் வரையிலான ரயில் பாதை சமிக்கைகள் மற்றும் காங்கேசன்துறை துறைமுக மீளமைப்புக்காக நன்கொடை அடிப்படையிலான ஆதரவினை வழங்க தீர்மானித்துள்ளோம். அத்துடன் எமது கல்வி ரீதியான ஒத்துழைப்பின் அங்கமாக இலங்கையில் உள்ள கிழக்கு பல்கலைக் கழகம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு நாம் மாதாந்த புலமைப் பரிசில்களை வழங்கவுள்ளோம். அடுத்துவரும் ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் இலங்கையைச் சேர்ந்த 1500 சிவில் சேவை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சிகள் வழங்கப்படும். வீடமைப்புத் திட்டம், புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த திட்டங்களுடன் இலங்கையின் விவசாயம் பால்பொருள் உற்பத்தி மற்றும் மீன்பிடி ஆகிய துறைகளுக்கும் இந்தியா தனது ஆதரவை வழங்கும். இலங்கையின் பிரத்தியேக டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தில் இந்தியா பங்காளராக இருக்கும். எமது பாதுகாப்பு ஒன்றுடனொன்று இணைக்கப்பட்டுள்ளது என்பதில் ஜனாதிபதி திசாநாயக்கா அவர்களும் நானும் முழுமையான இணக்கப்பாட்டினைக் கொண்டிருக்கின்றோம். பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கையினை துரிதமாக நிறைவேற்றவேண்டுமென நாம் தீர்மானித்துள்ளோம். அத்துடன் நீரியல் சார்ந்த துறைகளிலும் ஒத்துழைப்புடன் செயற்பட நாம் இணங்கியுள்ளோம். பிராந்தியத்தின் சமாதானம், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கு கொழும்பு பாதுகாப்பு குழுமம் மிகவும் முக்கியமான தளம் என நாம் நம்புகின்றோம். இவ்வாறான குடையின் கீழ், கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு, இணையப் பாதுகாப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் கடத்தல்களுக்கு எதிரான போராட்டங்கள், மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம் ஆகிய விடயங்களிலும் ஆதரவு வழங்கப்படும். இந்திய - இலங்கை மக்களிடையில் காணப்பட்டும் உறவுகள் நமது நாகரிகங்களில் வேரூன்றியவை ஆகும். பாளி மொழியினை செம்மொழியாக அறிவித்த தருணத்திலும் அதனுடன் இணைந்த கொண்டாட்டங்களிலும் இலங்கையும் எம்முடன் இணைந்திருந்தது. கப்பல் சேவைகளும், சென்னை யாழ்ப்பாண விமான இணைப்புகளும் சுற்றுலாத்துறையினை மாத்திரம் மேம்படுத்தவில்லை, ஆனால் கலாசார உறவுகளையும் வலுவாக்கியுள்ளன. நாகபட்டினம் மற்றும் காங்கேசன் துறைக்கு இடையிலான கப்பல் சேவைகள் வெற்றிகரமாக மீள ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையிலான கப்பல் சேவையினையும் ஆரம்பிக்க நாங்கள் கூட்டாக தீர்மானித்துள்ளோம். பௌத்த மத வளாகம் மற்றும் இலங்கையின் இராமாயணச் சுவடுகள் மூலம் சுற்றுலாத்துறையில் காணப்படும் மகத்தான ஆற்றலை உணர்ந்துகொள்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். நமது மீனவர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக மனிதாபிமான ரீதியிலான அணுகுமுறையினை கடைப்பிடிக்க வேண்டுமென நாம் இருவரும் இணங்கியுள்ளோம். அத்துடன் இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் புனரமைப்பு குறித்தும் நாம் கலந்துரையாடியுள்ளோம். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அனைவரையும் உள்ளடக்கிய தனது நோக்கு குறித்து என்னிடம் கூறியுள்ளார். தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமென நாம் நம்புகின்றோம். அத்துடன் இலங்கை அரசியலமைப்பினை முழுமையாக அமுல்படுத்தவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குமான தமது உறுதிமொழியினை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். தேசத்தைக் கட்டியெழுப்பும் அவரது முயற்சிகளில் இந்தியா உண்மையானதும் நம்பத்தகுந்ததுமான பங்காளியாக இருக்குமென நான் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கா அவர்களிடம் உறுதியளித்துள்ளேன். ஜனாதிபதி திசநாயக்க அவர்களையும் அவரது தூதுக்குழுவினரை மீண்டும் ஒரு முறை அன்புடன் இந்தியாவுக்கு வரவேற்கின்றேன். அத்துடன் புத்தகயாவிற்கு அவர் மேற்கொள்ளும் விஜயம் சிறப்பானதாக அமைய வாழ்த்துவதுடன் அவ்விஜயமானது ஆன்மீக சக்தி மற்றும் புத்துணர்ச்சி ஆகியவற்றால் நிறைந்திருக்குமென நம்புகின்றேன் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201456
  19. 16 DEC, 2024 | 07:22 PM (இராஜதுரை ஹஷான்) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிரத்தியேக குளிர் அறையில் இரண்டு சட்டத்தரணிகளின் ஒத்துழைப்புடன் சட்டமாணி பரீட்சை எழுதினார் என்ற குற்றச்சாட்டு ஆதாரபூர்வமாக முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டத்தை இரத்துச் செய்து முறைகேடான செயற்பாட்டுக்கு ஒத்தாசையளித்த அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துவதாக இலஞ்ச, ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷாரா தெரிவித்தார். நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் திங்கட்கிழமை (16) முறைப்பாடளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ 11 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டமாணி பரீட்சைக்கு தோற்றிய விவகாரம் இன்று வரை பேசப்படுகிறது. முறையற்ற வகையில் பரீட்சைக்கு தோற்றியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமை தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகின்ற நிலையில் வெளிநாட்டில் இருந்து இலங்கையர் ஒருவர் நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டத்தை சவாலுக்குட்படுத்தியுள்ளார். 11 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டமாணி பரீட்சையின் போது பிரத்தியேக குளிர் அறையில் இருந்தவாறு நாமல் ராஜபக்ஷ தோற்றியதாக குறித்த நபர் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிக்கு முறைப்பாடளித்ததாகவும், அதனை அவர் கண்டு கொள்ளவில்லை என்றும் அதனைத் தொடர்ந்து சட்டக்கல்லூரியின் அதிபரிடம் குறிப்பிடுவதற்கு சென்றபோது அவர் இருக்கவில்லை என்றும் கல்லூரியின் பதிவாளருக்கு குறிப்பிட்ட போதும் அவரும் அந்த முறைப்பாட்டை கவனத்திற் கொள்ளவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அப்போதைய நீதியமைச்சின் செயலாளர் சுஹத் கம்லத்திடம் குறிப்பிட்ட போதும் அவர் அந்த முறைப்பாட்டை எழுத்துமூலமாக பெற்றுக் கொள்ளவில்லை என்றும், அதன் பின்னர் இவ்விடயம் குறித்து கொழும்பு வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடளிக்க சென்ற போது அங்கும் முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை என்று அந்த நபர் குறிப்பிட்டுள்ளார். 2010.12.03 ஆம் திகதியன்று பொலிஸ்மா அதிபரை சந்தித்து முறைப்பாடளிக்க முயற்சித்ததாகவும், அதுவும் பயனலிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடளிப்பதற்கு சென்ற வேளை பெரிய மீன்கள் சிறிய மீன்களை விழுங்குவது இயல்பானது என்று அதிகாரிகள் குறிப்பிட்டதாக அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.முறைப்பாடளிக்க முயற்சித்ததால் தனக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும் அதனால் தான் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார். திருடர்களை பிடிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இந்த அரசாங்கத்தை திருடர்கள் பிடித்துக் கொண்டார்களா அல்லது திருடர்களை அரசாங்கம் பிடித்துக் கொண்டதா என்ற சந்தேகம் காணப்படுகிறது. நாமல் ராஜபக்ஷ பிரத்தியேக குளிர் அறையில் இரண்டு சட்டத்தரணிகளின் ஒத்துழைப்புடன் சட்டமாணி பரீட்சை எழுதினார் என்ற குற்றச்சாட்டு ஆதாரபூர்வமாக முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டத்தை இரத்துச் செய்து முறைகேடான செயற்பாட்டுக்கு ஒத்தாசை அளித்த அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/201453
  20. பட மூலாதாரம்,KOURTNEY SIMMANG படக்குறிப்பு, கோர்ட்னி PCOS உள்ள பெண்களுக்கு அங்கீகரிக்கப்படாத சோதனைகள் மற்றும் மருந்துகளை விற்பனை செய்கிறார் கடந்த 12 வருட காலமாக சோஃபிக்கு வலிமிக்க மாதவிடாய், உடல் எடை அதிகரிப்பு, மனச்சோர்வு மற்றும் உடல் சோர்வு ஆகியவை ஏற்படுகின்றன. அவர் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) எனப்படும் சினைப்பையில் நீர்க்கட்டிகள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது 10 பெண்களில் ஒருவருக்கு ஹார்மோன் மாற்றங்களால் உடலில் ஏற்படக்கூடிய ஒரு பாதிப்பு ஆகும். இதற்கான சிகிச்சை பெற சோஃபி போராடினார். தனது ஆரோக்கியத்தை தன் கைகளில் எடுத்துக் கொள்வதே, இதற்கான சிகிச்சை பெறுவதற்கான ஒரே வழி என்று அவர் உணர்ந்தார். அந்த நேரத்தில்தான், கோர்ட்னி சிம்மாங் (Kourtney Simmang) என்பவரது பக்கம் இன்ஸ்டாகிராமில் அவருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. PCOS பாதிப்பு ஏற்படுவதற்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் இன்று வரை அடையாளம் காணவில்லை. ஆனால் "மூல காரணத்தை கண்டுபிடித்து அதனை குணப்படுத்தப் போவதாக" கோர்ட்னி உறுதியளித்திருந்தார். அவர் வாடிக்கையாளர்களுக்கு மருத்துவ சோதனைகள், என்ன உணவு உண்ண வேண்டும் மற்றும் பிற ஊட்டச்சத்து குறித்த முறையான திட்டம் மற்றும் விரிவான பயிற்சி முறைகள் ஆகியவற்றை வழங்கி வருகிறார். இதற்காக அவர்களிடம் இருந்து 3,600 அமெரிக்க டாலர் கட்டணமாக பெறுகிறார். நூற்றுக்கணக்கான டாலர்களை செலுத்தி, கோர்ட்னியிடம் இருந்து சோஃபி அவற்றை வாங்கியுள்ளார். பிசிஓடி ஹார்மோன் பிரச்னை வந்தால் கருவுற முடியாதா? மருத்துவர் ஜலதா ஹெலன் விளக்கம் இந்தியாவில் அவசர கருத்தடை மாத்திரைகளை மருந்தகங்களில் நேரடியாக வாங்க தடை வருமா? கண் மையினால் பாதிப்புகள் வரக்கூடுமா? மருத்துவர்கள் கூறுவது என்ன? மார்பகப் புற்றுநோயின் 12 அறிகுறிகள் என்ன? "அந்த மருத்துவ பரிசோதனைகளை மக்களுக்கு பரிந்துரை செய்ய கோர்ட்னிக்கு எந்த ஒரு அங்கீகாரமும் இல்லை. அவை குறைந்த அளவிலே மருத்துவ ரீதியாக பயன்படுத்தப்படும் சோதனைகள் ஆகும்", என்று மகப்பேறு மருத்துவரும், பெண்கள் உடல்நலம் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துபவருமான மருத்துவர் ஜென் கண்டர் கூறுகிறார். சுமார் ஒரு வருடத்திற்கு கோர்ட்னியின் மருத்துவ திட்டங்களை பின்பற்றிய பின்னரும், சோஃபிக்கு எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. அதனால் அவர் கோர்ட்னியின் சிகிச்சை முறையை பின்பற்றுவதை கைவிட்டார். "எனது PCOS பிரச்னைக்கான தீர்வில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்பது போல தோன்றியது. உடல்நிலை மற்றும் உணவு பழக்கம் மிகவும் மோசமானதால், நான் கோர்ட்னியின் சிகிச்சை முறையை பின்பற்றுவதில் இருந்து விலகினேன்", என்று சோஃபி கூறினார். இந்த கட்டுரைக்காக கோர்ட்னியிடம் பேச முயன்றபோது, அவர் பதிலளிக்கவில்லை. PCOS பாதிப்புக்கு எளிதான மருத்துவ தீர்வு இல்லாததால், மருத்துவரல்லாத சமூக ஊடகங்களில் மில்லியன்கணக்கில் பின்தொடர்பவர்களைக் கொண்டவர்கள் பலர் தங்களை நிபுணர்களாக காட்டிக்கொண்டு போலியான மருந்துகளை விற்பனை செய்து வருகின்றனர். இதில் சிலர் தங்களை ஊட்டச்சத்து நிபுணர்கள் அல்லது "ஹார்மோன் பயிற்சியாளர்கள்" என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். செப்டம்பர் மாதத்தில் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் " PCOS" ஹேஷ்டேக் கொண்ட அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களை பிபிசி உலக சேவை கண்காணித்து வந்தது, அவற்றில் பாதி தவறான தகவல்களைப் பரப்புவதாக இருந்தது என்று கண்டறிந்தது. பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு, டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் போலி மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றது உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, உலகில் 70% வரையிலான பெண்கள் தங்களுக்கு PCOS பாதிப்பு இருக்கிறது என்பதை அறியாமல் இருக்கின்றனர். மேலும் அவ்வாறு கண்டறியப்பட்டாலும் கூட, அதனை முழுமையாக குணப்படுத்தக் கூடிய சிகிச்சைகளைக் கண்டறிய பெண்கள் போராடுகிறார்கள். "உரிய சிகிச்சை கிடைப்பதில் இடைவெளி இருக்கும் போது கிடைக்கும் வாய்ப்பினை இதுபோன்ற போலி மருத்துவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்", என்று மருத்துவர் கண்டர் தெரிவித்தார். சமூக ஊடக இன்ஃப்ளூயென்சர்கள் இது போன்ற தவறான கருத்துகளை முன்வைக்கின்றனர்: உணவு பழக்கங்கள் மூலம் PCOS பாதிப்பை குணப்படுத்த முடியும் குறைந்த மாவுச் சத்து மற்றும் அதிக கொழுப்புள்ள கீட்டோ டயட் போன்ற உணவுமுறை மூலம் PCOS பாதிப்பை குணப்படுத்த முடியும் கருக்கலைப்பு மாத்திரைகள் PCOS பாதிப்பு ஏற்படுத்தும் அல்லது நோய் அறிகுறிகளை மோசமாக்கும் இந்த மருந்துகள் எல்லாம் PCOS பாதிப்பை கட்டுப்படுத்த மட்டுமே உதவும், ஆனால் அதற்கான "மூல காரணத்தை" சரி செய்யாது மிகவும் குறைவான கலோரி கொண்ட உணவுகள் சிறந்த பலன் அளிக்கும் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. கீட்டோ டயட் இருப்பது PCOS பாதிப்பை இன்னும் மோசமாக்கலாம். கருக்கலைப்பு மாத்திரைகள் PCOS பாதிப்பை ஏற்படுத்தாது, மாறாக அது பல பெண்களுக்கு உதவியாகவே இருக்கின்றன, ஆனால் அது அனைவருக்கும் பலன்னளிக்காது. PCOS பாதிப்பிற்கான அடிப்படைக் காரணம் என்ன என்று எதுவும் கண்டறியப்படவில்லை, அதற்கான உரிய சிகிச்சையும் இல்லை. "எங்கள் நிறுவனம் தவறான உள்ளடக்கத்தை தளத்தில் பதிவிட அனுமதிக்காது. அது பார்வையாளர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடும்", என்று டிக்டாக் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறினார். பெண்களின் ஆரோக்கியம் குறித்த பயனர்களின் உள்ளடக்கம் "எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல்" தளத்தில் பதிவிட அனுமதிக்கப்படுகிறது என்றும், உடல்நலம் தொடர்பான தவறான தகவல்களைத் தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES PCOS என்றால் என்ன? பெண்களுக்கு கருப்பையின் இரு பக்கங்களிலும் ஓவரி என்று சொல்லக்கூடிய சினைப்பைகளில் சிறிய, சிறிய நீர்க்கட்டிகள் தோன்றுவது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்று அழைக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, உலகில் 8-13% PCOS-யால் பாதிக்கப்பட்டுள்ளனர். வலி மிகுந்த ஒழுங்கற்ற மாதவிடாய், அதிகப்படியான முடி வளர்ச்சி மற்றும் எடை அதிகரிப்பு ஆகியவை PCOS அறிகுறிகளில் அடங்கும் என்று தேசிய சுகாதார சேவை (NHS ) தெரிவிக்கின்றது. கருவுறாமைக்கு PCOS மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும் என்றும் NHS குறிப்பிட்டது. ஆனால் இந்த பாதிப்பு ஏற்படும் பெரும்பாலான பெண்கள் சிகிச்சை மூலம் கர்ப்பமாகலாம். கென்யா, நைஜீரியா, பிரேசில், பிரிட்டன், அமெரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 14 பெண்களிடம் பிபிசி இந்த கட்டுரைக்காக பேசியது. அவர்கள் சமூக ஊடகங்களில் இன்ஃப்ளூயென்சர்களால் விளம்பரப்படுத்தப்பட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை பயன்படுத்தியுள்ளனர். டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் முழுவதும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட டாலீன் ஹேக்டோரியனின் பெயரை இவர்களில் பெரும்பாலானோர் குறிப்பிட்டனர். அங்கீகரிக்கப்பட்ட உணவியல் நிபுணரான டாலீன் 219 அமெரிக்க டாலர்களுக்கு ஊட்டச்சத்துகளை விற்பனை செய்து வருகிறார். அவர் உடல் எடையை குறைப்பதற்கான தனது செயலியை மக்கள் பயன்படுத்த 29 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக பெறுகிறார். பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு, டாலீன் ஹேக்டோரியன் தனது மில்லியன்கணக்கான பின்தொடர்பவர்களுக்கு போலி மருந்துகளை விற்கிறார் PCOS பாதிப்பு உள்ள பெண்களுக்கு உதவியாக இருப்பதாக கண்டறியப்பட்ட கருக்கலைப்பு மாத்திரை, நீரழிவு நோய்க்கான மாத்திரை, மெட்ஃபோர்மின் போன்ற மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று மக்களை எச்சரித்து வருகிறார். அதற்கு பதிலாக, தனது வாடிக்கையாளர்களிடம் அவர் தனது ஊட்டச்சத்து திட்டத்தை பயன்படுத்தி "இயற்கையாக" குணமடைய ஊக்குவிக்கிறார். அவர் எடை மற்றும் "PCOS தொப்பை" என்று கூறப்படும் அடிவயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த ஏமி, தனது மருத்துவரின் சிகிச்சை மூலம் இந்த பாதிப்பை குணப்படுத்த போராடிய பிறகு, டாலீனின் சில ஆலோசனைகளைப் பின்பற்ற முடிவு செய்தார். "PCOS-யால் உனக்கு இருக்கும் தொப்பையே உனது பலவீனம்", என்று டாலீன் என்னிடம் கூறினார். நான் க்ளூட்டன் மற்றும் பால் உணவுப் பொருட்களை குறைவாக உண்ண வேண்டும் என்று டாலீன் எனக்கு ஆலோசனை வழங்கினார். ஒரு நல்ல உணவு பழக்கத்தினால் PCOS பாதிப்பை குணப்படுத்த முடியும் என்றாலும், க்ளூட்டன் அல்லது பால் பொருட்களைத் தவிர்ப்பது உண்மையில் பலன் அளிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. க்ளூட்டன் மற்றும் பால் பொருட்களைக் குறைத்து உண்ண ஏமி மிகவும் சிரமப்பட்டார். "இது உங்களை தோல்வியடைந்ததைப் போல் உணர வைக்கிறது," என்று அவர் கூறினார். "அதிக உடல் எடையுடன் இல்லை என்றாலும் இவர்கள் என்னை மோசமாக உணர வைப்பார்கள். இந்த சிகிச்சைக்காக உங்களை பல டயட்களை மேற்கொள்ள வைப்பார்கள் அல்லது கூடுதல் ஊட்டச்சத்து பொருட்களை வாங்க வைப்பார்கள்", என்றும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த இன்ஃப்ளூயன்சர்கள் பரிந்துரைக்கும் உணவு முறைகளால் உங்கள் உணவு பழக்க வழக்கத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்று மருத்துவர் கண்டர் பிபிசியிடம் தெரிவித்தார். தான் விற்கும் ஊட்டச்சத்து பொருட்கள் மிகவும் பாதுகாப்பானவை என்றும் அவை உயர் தரத்தில் இருப்பவை என்றும் டாலீன் பிபிசியிடம் கூறினார். மற்ற மருந்துகளை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதில்லை என்றாலும், அவற்றை பயன்படுத்துவதால் வரும் சாத்தியமான நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் குறித்த ஆதார அடிப்படையிலான தகவல்களை வழங்குகிறேன் என்று அவர் தெரிவித்தார். தன்னைத்தானே நேசிப்பதையும், தனது உடலை ஏற்றுக்கொள்வதையும் ஊக்குவிப்பதே அவரது அணுகுமுறை என்று அவர் கூறினார். PCOS பாதிப்பை குணப்படுத்த எந்த சிகிச்சையும் இல்லாத காரணத்தினால், தனது அறிகுறிகளை சீர்படுத்த ஹார்மோன் மாத்திரைகளை அவரது மருத்துவர் ஏமிக்கு வழங்கியுள்ளார். எதிர்காலத்தில் அவர் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினால், மீண்டும் தன்னிடம் வந்து சிகிச்சை எடுக்குமாறு ஏமிக்கு அவரது மருத்துவர் ஆலோசனை வழங்கினார். "இவர்கள், இதற்கான சிகிச்சை கிடைக்காத நிலையில், தன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணத்தால் தவிக்கும் மக்கள் ஆவார்கள்", என்று மருத்துவர் கண்டர் கூறினார். படக்குறிப்பு, மெட்லின் தனது PCOS பாதிப்பை ஏற்று மற்ற பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்கிறார் தவறான தகவல்களால் இவர்கள் மருத்துவ உதவி பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகவும், இதனால் இரண்டாம் வகை நீரிழிவு நோய் (Type 2) போன்ற மேலும் பாதிப்புகள் ஏற்பட வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார். நைஜீரியாவில், மருத்துவ மாணவியான மெட்லின், PCOS பாதிப்பினால் வரும் அவமானங்களை சமாளிக்க முயற்சிக்கிறார். டயட் மற்றும் பிற ஊட்டச்சத்துகள் என எதுவும் பலன் அளிக்கவில்லை. அவர் இப்போது மற்ற பெண்களை மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்கவும், அதற்கான உரிய சிகிச்சையை எடுக்கவும் ஊக்குவிக்கிறார். "உங்களுக்கு PCOS இருப்பது கண்டறியப்பட்டால், அது உங்களுக்கு அவமானம் தருகிறது. நாங்கள் சோம்பேறி என்று மக்கள் நினைக்கிறார்கள், நாங்கள் எங்களை கவனித்துக் கொள்ளவில்லை, நாங்கள் குழந்தை பெற வாய்ப்பில்லை என்று நினைக்கிறார்கள். எனவே யாரும் எங்களை காதலிக்க மாட்டார்கள். எங்களை யாரும் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள்", என்று அவர் கூறினார். ஆனால் அவர் இப்போது தனது PCOS பாதிப்புகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்துள்ளார். "எனது PCOS பாதிப்பு, எனது முடி, எடை ஆகியவற்றை ஏற்றுக்கொள்வது கடினமான ஒரு பயணம். இது மற்றவர்களிடம் இருந்து என்னை வேறுபடுத்தி காட்டுகிறது", என்று அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c0q08dxxyw5o
  21. தலைமன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலை : தடுப்பு காவலில் இருந்து தப்பிச் சென்றவர் 6 மாதங்களின் பின் கைது! 16 DEC, 2024 | 05:43 PM தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்பிரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேககபர் தடுப்பிலிருந்து தப்பிச் சென்ற நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படிருந்த நிலையில் அவர் தப்பிச் சென்றுள்ளார். தப்பிச் சென்ற சந்தேகநபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் மீண்டும் கைது செய்யப்பட்டு, தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். தலைமன்னார் பொலிஸார் தடுத்து வைத்து மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை (16) காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். பிண்ணனி தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி மாலை காணாமல் போன அக்கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி தனது அம்மம்மாவின் வீட்டில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள தென்னந் தோப்பில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். சடலம் மீதான பரிசோதனையின் போது குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தெரியவந்தது. குறித்த கொலை தொடர்பாக தோட்டத்தில் வேலை செய்த 55 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந்நிலையில், சந்தேகநபர் கடந்த மே மாதம் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வேளை, வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றார். கடந்த 6 மாதங்களாக குறித்த நபர் தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201446
  22. 16 DEC, 2024 | 08:33 PM இந்தியாவின் பாதுகாப்புக்கும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கை மண்ணை பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ஹைதராபாத் மாளிகையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இரட்டை வரி விதிப்பைத் தடுப்பது மற்றும் அரசு அதிகாரிகளின் திறன் மேம்பாடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்திய - இலங்கை தலைவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன. இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் இலங்கைக்கு விசேடமான இடமுள்ளது என்பதை தாம் நன்கு அறிவதாக கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நினைவு கூர்ந்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்திற்காக இந்தியாவை தெரிவு செய்தமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதன்போது தெரிவித்தார். எதிர்கால நோக்குடன் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை புதிய கோணத்தில் கொண்டு செல்லும் வகையில் பௌதீக, டிஜிட்டல் மற்றும் எரிசக்தி ஆகிய பிரதான தூண்களை பலப்படுத்துவதற்காக இலங்கைக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதும், இரு நாடுகளுக்குமிடையே மின்சார வலையமைப்பு இணைப்பு மற்றும் பல் உற்பத்தி, பெற்றோலியக் குழாய் இணைப்பை ஏற்படுத்துவது என்பன குறித்தும் இக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. இந்திய அபிவிருத்தி ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில், அநுராதபுரம் புகையிரத பாதை சமிக்ஞைக் கட்டமைப்பு மற்றும் காங்கேசன்துறை துறைமுக புனரமைப்பு என்பவற்றுக்கு உதவி வழங்குவது தொடர்பிலும் இதன் போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தியக் கல்வி ஒத்துழைப்பின் கீழ் அடுத்த வருடம் முதல் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாண பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு மாதாந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. அடுத்த ஐந்து வருடங்களில் 1500 இலங்கை அரச ஊழியர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க இந்தியப் பிரதமர் உடன்பாடு தெரிவித்தார். அத்தோடு வீடமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு, இலங்கையில் விவசாயத்துறை, பால் உற்பத்தித்துறை மற்றும் கடற்றொழில்துறை முன்னேற்றம் என்பவற்றுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும். இந்தியாவின் பாதுகாப்புக்கும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கை மண்ணை பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு தெரிவித்தார். பாதுகாப்பு ஒத்துழைப்பின் (Colombo Security Conclave) கீழ் கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு , இணையப் பாதுகாப்பு, கடத்தல் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களுக்கு எதிராக போராடுதல், மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம் போன்ற விடயங்களில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பகல்போசன விருந்து வழங்கினார். இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார். இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் எனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக புதுடெல்லிக்கு வருகைதருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்காகவும், அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் மேதகு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கும், மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரு நாடுகளுக்கும் இடையே ஆழமாக வேரூன்றிய நாகரீக உறவுகளையும் வலுவான இருதரப்பு ஒத்துழைப்பையும் மேம்படுத்த இந்த விஜயம் உதவியது. ஜனநாயக ரீதியில் நிறுவப்பட்ட தேர்தல் முறைகள் மூலம் இரு நாட்டு மக்களும் தங்கள் கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.இந்தப் பின்னணி மற்றும் நிலையான அபிவிருத்தி, சமூக வலுவூட்டல் மற்றும் பௌதீக பாதையின் ஊடாக இருநாடுகளையும் வழிநடத்துவதற்கு மக்கள் வழங்கியுள்ள ஆணை என்பன இரு நாடுகளின் அரசியல் சூழலின் முக்கிய மைல்கல்லாக உள்ளது. இந்த நிலையிலே எனது இந்த விஜயம் அமைந்துள்ளது. ஒரே மக்கள் ஆணையின் கீழ் இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றமாக இலங்கைப் பாராளுமன்றம் தற்போது மாறியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனது தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு இலங்கை மக்களால் கிடைத்த இந்த மகத்தான ஆதரவு இலங்கை வரலாற்றில் ஒருபோதுமில்லாத வரலாற்றுத் தருணமாகும். இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் ஒருபோதுமில்லாதவாறு வெளிப்படுத்தப்பட்ட மக்கள் ஆணை, எமது நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்பக்கூடிய அரசியல் மாற்றத்திற்கான விதைகளை விதைத்துள்ளது. வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளில் அமைந்துள்ள அனைத்து மாகாணங்களிலும் உள்ள பல்வேறு சமூகங்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களும் இந்த மக்கள் ஆணைக்கு பங்களித்தனர். எனது மக்களால் இத்தகைய முக்கியமான பொறுப்பை ஒப்படைத்த ஒரு தலைவர் என்ற வகையில், ஜனநாயகத்தின் நோக்கம் பல்வேறு அரசியல் கருத்துக்கள் மற்றும் குழுக்களின் சகவாழ்வில் உள்ளது என்பதை நான் தெளிவாக புரிந்துகொள்கிறேன். தர்ம போதனைகளைப் பகிர்ந்துகொள்வது முதல் எமது அபிவிருத்தி முன்னேற்றத்தின் ஒரு அங்கமாக இருப்பது வரை இந்தியா எப்போதுமே இலங்கையின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியின் ஒரு கட்டாய அங்கமாக இருந்து வருகிறது. எனது இன்றைய இந்தியப் பயணம், நீண்டகாலம் தொட்டு நாம் அனுபவித்து வரும் இந்த நெருங்கிய நட்புறவின் வெளிப்பாடாகும். சிறிது நேரத்திற்கு முன்பு, பிரதமர் மோடியும் நானும் எங்கள் பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையை நிறைவு செய்தோம். எங்கள் உறவுகளின் தற்போதைய நிலை குறித்து விரிவாக மீளாய்வு செய்தோம். அத்தோடு எதிர்காலத்தில் அந்நியோன்ய ஆர்வம் செலுத்தும் துறைகளில் எமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் பற்றிய கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டோம். குறிப்பாக 2022ல் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது இலங்கைக்கு வழங்கப்பட்ட வலுவான ஆதரவிற்காக பிரதமர் மோடி மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு நான் நன்றி தெரிவித்தேன். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக் கட்டமைப்பில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விசேட இடத்திற்கு இணங்க, இலங்கையின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா முழு அர்ப்பணிப்புடன் இருப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தார். இரு நாட்டு பாராளுமன்றங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு மட்டத்திலான அரசியல் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடியும் நானும் அடையாளங் கண்டுள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு மற்றும் முக்கிய துறைகளில் முதலீடுகள் குறித்தும் நாம் ஆராய்ந்தோம். பாதுகாப்பு , மின்சக்தி மற்றும் வலுசக்தி, பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி, கல்வி, விவசாயம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு பற்றிய கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டோம். நிர்வாகம், சேவை வழங்கல் மற்றும் சமூக நலத் துறைகளை டிஜிட்டல் மயமாக்குவதில் இந்தியா அடைந்துள்ள வெற்றியைப் பாராட்டுகிறேன். இதேபோன்ற பொதுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பை இலங்கையில் ஏற்படுத்துவதற்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று பிரதமர் மோடி என்னிடம் உறுதியளித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார உறவுகள் நமது உறவுக்கு வலுவான அடித்தளத்தை வழங்குகின்றன. நபர்களுக்கு இடையிலான வலுவான தொடர்புகளுக்காக இந்த பிணைப்புகளை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடன், சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பைப் பற்றி நாம் ஆராய்ந்தோம். பிராந்திய மற்றும் பலதரப்பு சூழல்களில், உலகளாவிய தெற்கில் ஒரு முன்னணி நாடாக இந்தியாவின் பங்கை நான் பாராட்டினேன். அயோரா அமைப்பின் தலைவர் பதவி இலங்கைக்குக் கிடைப்பதற்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பிரிக்ஸ் அமைப்பில் அங்கத்துவம் பெறுவதற்கான இலங்கையின் லட்சியத்திற்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை நான் அவரிடம் கோரினேன். விசேட பொருளாதார வலயத்திற்கு அப்பால் கண்ட மட்டத்திலான எல்லைகளுக்கு அப்பால் எல்லைகளை ஸ்தாபிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் கண்ட எல்லை தொடர்பான ஆணைக்குழுவிற்கு இலங்கை முன்வைத்த கோரிக்கை தொடர்பாக இருதரப்பு தொழில்நுட்ப கலந்துரையாடல்களை மிக விரைவில் கூட்டுவதற்கு பிரதமர் மோடியின் தலையீட்டை நான் கோரினேன். அண்மையில் நடைபெற்ற மீன்பிடி தொடர்பான ஆறாவது கூட்டுச் செயற்குழுக் கூட்டத்திற்கு பாராட்டு தெரிவிக்கும் அதேவேளையில், மீன்பிடி பிரச்சினைக்கு நிலையான தீர்வு காண்பதில் கூட்டு அணுகுமுறையின் அவசியத்தையும் நாங்கள் ஆராய்ந்தோம். இரு நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட முறையில் மீன்பிடிப்பதினால் ஏற்படும் சீர்செய்ய முடியாத சுற்றுச்சூழல் பாதிப்பை உணர்ந்து, அந்த நடைமுறையை நிறுத்தவும், சட்டவிரோதமான, அறிக்கையிடப்படாத மற்றும் கண்காணிக்கப்படாத மீன்பிடித்தலை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு நான் கோரிக்கை விடுத்தேன். பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பது ஆகிய துறைகளில் இன்று கையெழுத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். பரஸ்பர ரீதியில் வசதியான தினமொன்றில் இலங்கைக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன். இந்தியாவின் பாதுகாப்புக்கும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் பாதகமான எந்தவொரு வகையிலும் இலங்கை மண்ணை பயன்படுத்த அனுமதிக்காது என இந்தியப் பிரதமரிடம் உறுதியளித்தேன். எதிர்வரும் சில வருடங்களில் இந்தியாவுடனான உறவு மேலும் பலமடையும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. இந்தியாவுடனான ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னேற்றி விரிவாக்கத்திற்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை மீண்டும் வலியுறுத்தி எனது உரையை நிறைவு செய்கிறேன். https://www.virakesari.lk/article/201440

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.