Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சை : பாராளுமன்றத்துக்கு விசேட அறிவிப்பை விடுக்கவுள்ளார் சபாநாயகர் 12 DEC, 2024 | 05:04 PM (இராஜதுரை ஹஷான்) கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து சபாநாயகர் அசோக்க சபுமல் ரன்வல எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்றத்துக்கு விசேட அறிவிப்பை விடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது. பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17), புதன்கிழமை (18) ஆகிய இரு தினங்களில் கூடவுள்ளது. சபாநாயகர் அசோக்க சபுமல் ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பில் பாரிய சர்ச்சை எழுந்துள்ளன. முடிந்தால் கலாநிதி பட்டத்தை பகிரங்கப்படுத்துங்கள் அல்லது பதவி விலகுங்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பகிரங்க சவால் விடுத்ததை தொடர்ந்து சபாநாயகரின் கல்வி தகைமை குறித்து அனைவரும் கவனம் செலுத்தினர். சபாநாயகரின் கல்வி தகைமை குறித்த சர்ச்சை தீவிரமடைந்த நிலையில் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் சபாநாயகரின் சுயவிபரக் கோவையில் இருந்து கலாநிதி பட்டம் நீக்கப்பட்டு ' கௌரவ சபாநாயகர்' என்ற மரியாதைக்குரிய விழிப்பு மாத்திரம் சேர்க்கப்பட்டுள்ளது. சபாநாயகர் தனது கல்வி தகைமையை பகிரங்கப்படுத்த வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குறிப்பிடுகின்ற நிலையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அவதானம் செலுத்தியுள்ளது. சபாநாயகரின் கல்வி தகைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க, சபாநாயகர் அசோக்க ரன்வலவை காட்டிலும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் நேர்மையானவர். தனக்கு ஆங்கிலம் தெரியாது, புகையிரதத்தில் வடை விற்ற நிலையில் மக்களுக்கு சேவையாற்றி அரசியலுக்கு பிரவேசித்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாக சாமர சம்பத் பாராளுமன்றத்திலும், பொது இடங்களிலும் பலமுறை பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார். சபாநாயகர் அசோக்க ரன்வல இல்லாத கலாநிதி பட்டத்தை இருப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டார். படித்தவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு மக்கள் இவ்வாறானவர்களை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்துள்ளார்கள் என்று அதிருப்தி வெளியிட்டார். தான் மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்த சந்தர்ப்பத்தில் சபாநாயகர் அசோக்க ரன்வல மின்சார சபையின் தொழில்நுட்ப உத்தியோகஸ்த்தராக பணிபுரிந்தார். கலாநிதி பட்டம் உள்ளவர் தொழில்நுட்ப உத்தியோகஸ்த்தராக பணிபுரிய வேண்டிய அவசியம் கிடையாது. சபாநாயகர் விவகாரத்தில் விரைவான தீர்மானம் எடுக்க வேண்டும். நாட்டு மக்களும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/201105
  2. 12 DEC, 2024 | 03:42 PM ஊழல் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh) தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh) ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. ஊழல் மற்றும் மோசடியை ஒழிப்பது தொடர்பில் கனடா அரசாங்கத்தின் அனுபவங்களை இலங்கை அரசாங்கத்துடன் பகிர்ந்துகொள்வது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் பொருளாதார பின்னடைவுக்கு முன்பு காணப்பட்ட அரசியல் கலாசாரமே காரணம் என சுட்டிக்காட்டிய கனடிய உயர்ஸ்தானிகர், தற்போதைய அரசாங்கம் அந்த அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இலங்கைக்கான கனடிய தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் (அரசியல்) பெட்ரிக் பிகரிங் (Patrick Pickering) அவர்களும் இதன்போது கலந்துகொண்டார். https://www.virakesari.lk/article/201089
  3. ஐசிசியிடம் எழுத்துபூர்வமான உத்தரவாதம் கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான சலசலப்பு இன்னும் நிறைவடையாமல் உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம், ஐசிசியிடமிருந்து எழுத்துபூர்வமான உத்தரவாதத்தை கோரியுள்ளது. அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம்திகதியிலிருந்து மார்ச் 9 ஆம் திகதி வரை சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது. இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஏற்று நடத்துகிறது. ஆனால் இந்த தொடருக்காக பாகிஸ்தான் செல்ல இந்திய கிரிக்கெட் சங்கமான பிசிசிஐ மறுத்து வருகிறது. மேலும், இந்திய அணிக்கான போட்டிகளை, ‘ஹைபிரிட்’ மாடலில் வேறு நாட்டில் நடத்த வேண்டும் எனவும் ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் எழுதியிருந்தது. இந்த கோரிக்கையை ஐசிசி ஏற்றுக்கொள்ளும் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், இனி வரும் காலங்களிலும், ஐசிசி தொடர்களில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை ‘ஹைபிரிட்’ மாடலிலேயே நடத்த வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை ஐசிசி எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. ஐசிசி இதை கொடுக்கும் பட்சத்தில், இனி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஐசிசி தொடர்கள் என்றுமே ஹைபிரிட் மாடலில் தான் நடத்தப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஹெரிபை சந்தித்து பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசின் வழிமுறைகளை தான் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் பின்பற்றும் என ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் கூறியது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், இந்திய அணி விளையாடும் போட்டிகளை, துபாயில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான அட்டவணை நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://thinakkural.lk/article/313493
  4. 'எனக்கு இந்திய பிரஜாவுரிமையை வழங்குங்கள் அல்லது இலங்கைக்கு திருப்பிஅனுப்புங்கள்" - தமிழ்நாட்டில் இலங்கை தமிழர் மன்றாட்டமாக வேண்டுகோள் 12 DEC, 2024 | 03:18 PM இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் தனக்கு இந்திய பிரஜாவுரிமையை வழங்கவேண்டும் அல்லது தன்னை இலங்கைக்கு திரும்பி அனுவேண்டும் என மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் என இந்திய ஊடகங்கள்தெரிவித்துள்ளன. இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக இலங்கை தமிழ் இளைஞர் முழந்தாளிட்டு தனக்கு இந்திய பிரஜாவுரிமையை வழங்குமாறும் அல்லது இலங்கைக்கு அனுப்புமாறும் கோரும் வீடியோவை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இராமநாதபுரம் ஆட்சியர் இலங்கைக்கு தன்னை திருப்பி அனுப்பு மறுக்கின்றார் அதேவேளை தனக்கு இந்திய பிரஜாவுரிமை வழங்குவது தொடர்பிலான ஆவணங்களையும் வழங்க மறுக்கின்றார் என ஜொய் என்ற அந்த இளைஞன் இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தின் முன்னாள் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸாரிடம் தெரிவிப்பதை வீடியோவில் அவதானிக்க முடிகின்றது. இராமநாதபுரம் ஆட்சியரிடம் நான் பத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களை கையளித்துவிட்டேன்,என யாழ்ப்பாண இளைஞன் தெரிவிப்பதை வீடியோவில் அவதானிக்க முடிகின்றது. தான் பல வருடகாலமாக இந்த விடயத்துடன் போராடிக்கொண்டிருப்பதாக அவர் தெரிவிக்கின்றார். https://www.virakesari.lk/article/201095
  5. பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, கணேசன் பெண் பயணியிடம் 10 பவுன் நகையை வழிப்பறி செய்ததாகக் கூறி தனது தந்தையை மகனே காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம், புதன் கிழமையன்று (டிசம்பர் 11) சென்னையில் நடந்துள்ளது. "நம்மை நம்பி வாகனத்தில் வந்தவரிடம் வழிப்பறி செய்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது" என்கிறார் குற்றம் சுமத்தப்பட்ட நபரின் மகன். பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவத்தில் என்ன நடந்தது? காவல்துறை சொல்வது என்ன? ஆட்டோவில் திரையை வைத்து மறைத்து வேறு இடத்துக்கு கொண்டு சென்ற ஓட்டுநர் திருச்சி மாவட்டம் குண்டூரில் வசித்து வரும் 80 வயதான வசந்தா மாரிக்கண்ணு, தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த வாரம் ஐதராபாத்தில் உள்ள உறவினர்களின் வீட்டுக்குச் சென்றுவிட்டு கடந்த புதன்கிழமையன்று (டிசம்பர் 11) விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்துள்ளார். அங்கிருந்து தாம்பரம் சென்று திருச்சி செல்வதாக அவரது பயணத் திட்டம் இருந்தது. இதன்பிறகு நடந்த சம்பவங்களை பிபிசி தமிழிடம் விவரித்தார், தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன். "காலை 9.45 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த வசந்தா மாரிக்கண்ணு, அங்கு நின்றிருந்த ஆட்டோ மூலம் தாம்பரம் செல்வதற்காக ஏறியுள்ளார். வெளியில் மழை பெய்து கொண்டிருந்ததால் ஆட்டோவில் இரண்டு பக்கமும் இருந்த ஸ்க்ரீனை டிரைவர் இறக்கிவிட்டுள்ளார்." ஆனால், ஆட்டோ தாம்பரம் செல்லாமல் குரோம்பேட்டை அருகிலுள்ள பெட்ரோல் பங்க் அருகே திரும்பி, பச்சை மலை வழியாகச் சென்றுள்ளது," என்று தெரிவித்தார் உதவி ஆணையர் நெல்சன். அங்கு ஓர் இடத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு, வசந்தா மாரிக்கண்ணு அணிந்திருந்த இரண்டு தங்கச் சங்கிலிகளை அந்த நபர் மிரட்டிப் பறித்ததோடு, அதன்பிறகு வசந்தாவை கீழே தள்ளிவிட்டுச் சென்றுவிட்டதாகவும் கூறினார். சிரியாவில் அசத்தின் வீழ்ச்சி மற்றும் இஸ்ரேலிய தாக்குதல் பற்றி அரபு நாடுகள் என்ன சொல்கின்றன?11 டிசம்பர் 2024 குகேஷுக்கு ஊக்க மருந்து சோதனை செய்தது ஏன்? செஸ் விளையாட்டில் அவசியமா?11 டிசம்பர் 2024 தந்தையை போலீஸில் ஒப்படைத்த மகன் பட மூலாதாரம்,HANDOUT இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த வசந்தா மாரிக்கண்ணு, தாம்பரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதுதொடர்பாக போலீஸ் விசாரணை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் கணேசன் என்ற ஆட்டோ டிரைவரை அழைத்துக் கொண்டு அவரது மகன் ராமச்சந்திரன் வந்துள்ளார். இதுதொடர்பாக, தாம்பரம் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தான் திருடிய நகைகளை விற்று குடும்பச் செலவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தனது மகளிடம் கணேசன் கூறியதாகவும், இதை அறிந்த அவரது மகன் தாம்பரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் தனது தந்தையை ஆஜர் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. வசந்தாவிடம் இருந்து திருடப்பட்டதாகச் சொல்லப்படும் பத்து பவுன் நகை மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், ஆட்டோ ஓட்டுநர் கணேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தியாவில் ஸ்விக்கி, ஓலா, உபெர் ஊழியர்களை வாட்டும் வருமான சிக்கல், அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்11 டிசம்பர் 2024 நீலகிரியில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி - 8 நாட்களாக வீட்டில் முடக்கப்பட்ட இளம்பெண்!8 மணி நேரங்களுக்கு முன்னர் தனது தந்தையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமச்சந்திரன், "புதன்கிழமை காலையில வீட்டுக்கு வந்ததும் என் அப்பா நகைகளைக் காட்டினார். 'இந்த நகை எப்படி வந்தது?' எனக் கேட்டபோது, வாகனத்தில் வந்தவரிடம் வழிப்பறி செய்ததாகச் சொன்னார். 'நம்மை நம்பி ஆட்டோவில் ஏறும் ஒருவரிடம் இப்படியெல்லாம் செய்வது தவறு" எனக் கூறி வீட்டைவிட்டு வெளியே போகுமாறு சத்தம் போட்டேன். அவரும் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்" என்றார். இதன்பிறகு கணேசனை பின்தொடர்ந்து சென்ற ராமச்சந்திரன், அவரை தாம்பரம் காவல்நிலையத்திற்கு கூட்டிச் சென்றுள்ளார். "காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டாமென்று என் தந்தை கெஞ்சினார். அதைப் பொருட்படுத்தாமல் நான் கூட்டிப் போனேன்" என்றார், ராமச்சந்திரன், மேலும், குடிபோதையில் இப்படித் தொடர்ந்து செய்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும், தொடர்ந்து பேசிய அவர், "தவறுக்கு எப்போதும் உடன்பட மாட்டேன். அவர் செய்தது மிகத் தவறான காரியம் என்பதால் போலீசில் ஒப்படைத்தேன். அது என் தம்பி, தங்கையாக இருந்தாலும் இதைத்தான் செய்வேன்" என்றார். யுக்ரேன் போரில் காயமடைந்த வீரர்களின் மறுவாழ்வுக்கு உதவும் பெண்5 மணி நேரங்களுக்கு முன்னர் அதானி மீதான மோசடி வழக்கு: இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை பாதிக்குமா? எப்படி?11 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, திருடப்பட்ட நகை கஞ்சா விற்றதாக தாம்பரம் மற்றும் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் கணேசன் மீது ஏற்கெனவே இரண்டு வழக்குகள் பதிவாகியுள்ளதாகக் கூறுகிறார் காவல் உதவி ஆணையர் நெல்வன். அதுகுறித்துப் பேசியவர், "கஞ்சாவை புகைத்துவிட்டுப் பலமுறை கணேசன் தகராறு செய்துள்ளதால், மறுவாழ்வு மையத்திலும் அவரைச் சேர்த்துள்ளோம். ஆனால், அங்கு முறையாக சிகிச்சை பெறாமல் திரும்பிவிட்டார்" என்றார். கணேசனின் மனைவி சிங்கப்பூரில் வீட்டு வேலைக்காகச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவரை மீண்டும் இந்தியாவுக்கு வரவழைப்பதற்குப் பணம் தேவைப்பட்டுள்ளது. "கணேசனின் மனைவியை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு ஒரு லட்ச ரூபாய் வரை பணம் தேவைப்பட்டுள்ளது. அதற்கு இந்த நகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் அவரின் நோக்கமாக இருந்துள்ளது" என்கிறார் நெல்சன். ரஜினிகாந்த்: 'தலைமுறைகள் கடந்த வெற்றிக்குக் காரணம் இதுதான்' - அலசும் பிரபலங்கள், எழுத்தாளர்கள்9 மணி நேரங்களுக்கு முன்னர் மலையாக குவிந்த காட்டெருமை மண்டை ஓடுகள்: பூர்வகுடிகளுக்கு எதிரான இருண்ட வரலாற்றை நினைவுகூரும் புகைப்படம்4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இதை பிபிசி தமிழிடம் தெரிவித்த ராமச்சந்திரன், "உண்மைதான். இதற்காக நானும் கடன்களை வாங்கி ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன். அதற்காக திருடுவதை எப்படி அனுமதிக்க முடியும்?" என்கிறார். இந்த வழக்கில் கணேசன் மீது பி.என்.எஸ் சட்டப்பிரிவு 304(2)இன்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் உதவி ஆணையர் நெல்சன், "பொதுவெளியில் பயணிக்கும்போது வசந்தா மாரிக்கண்ணு எப்போதும் எச்சரிக்கையாக இருந்து வந்துள்ளதாகக் கூறினார். ஆனால், சம்பவம் நடந்த அன்று மழை பெய்ததால் அவர் கோட் அணிந்துள்ளார். 'இதனால் நகைகள் அணிந்திருப்பது வெளியில் தெரியாது' எனத் தான் அலட்சியமாக இருந்துவிட்டதாக" கூறுகிறார். விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றில் இருந்து வெளியே வரும் பயணிகள், மொபைல் செயலி மூலம் பதிவு செய்துவிட்டு வெளி வாகனங்களில் பயணித்தால் ஆட்டோ டிரைவரின் பெயர், வாகனம் ஆகியவற்றை அறிய முடியும். "அவ்வாறு இல்லாமல் தெருவில் செல்லும் எதாவது ஒரு வாகனத்தைத் தேர்வு செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். தங்களது உறவினர்களுக்கு வாகனத்தின் எண், டிரைவரின் அடையாளம் ஆகியவற்றைத் தெரிவித்துவிட்டுப் பயணிப்பது நல்லது" என்று அறிவுறுத்துகிறார் தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்வன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/cm2exyp63j0o
  6. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு பெப்ரவரி 27 இல் 12 DEC, 2024 | 02:46 PM முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, விசாரணைக்காக இன்று வியாழக்கிழமை (12) எடுத்துக்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் காணாமல்போனோர் அலுவலகம் (ஓ எம் பி ) சார்பில் அலுவலகத்தின் சட்டத்தரணி, ஓஎம்பி அலுவலகத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு பிராந்திய இணைப்பாளர் கிருஷாந்தி ரத்நாயக்க, சட்ட வைத்திய அதிகாரி சார்பாக மருத்துவ அதிகாரி, மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணிகளான கணபதிப்பிள்ளை கணேஸ்வரன், அனித்தா சிவனேஸ்வரன், கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் மன்றில் முன்னிலையாகி இருந்தனர். இன்றைய வழக்கின் பின்னர் சட்டத்தரணி கணபதிப்பிள்ளை கணேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான AR 804/23 வழக்கானது, இன்று (12) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட போது சட்ட வைத்திய அதிகாரி சார்பாக இன்றையதினம் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு போதுமான கால அவகாசம் இல்லை என்றும் இன்னும் இரண்டு மாத கால அவகாசம் வேண்டும் என்ற அடிப்படையில் மன்றில் திகதியினை கோரியிருந்தனர். அதன் அடிப்படையில் மன்றானது சட்ட அதிகாரியின் விண்ணப்பத்தினை ஏற்று குறித்த வழக்கானது மீண்டும் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதிக்கு தவணையிடப்படுள்ளது எனக் கூறியிருந்தார். இதற்கு முன்னர் இடம்பெற்ற கடந்த வழக்கின் பின்னர் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இதுவரை காலமும் மனித புதைகுழியில் இருந்தும் மற்றும் மனித எலும்பு கூட்டு தொகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட இலக்க தகடு சம்பந்தமான முழு விபரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அகழ்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இறுதி அறிக்கை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை காலமும் எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 20 வரையான எலும்புக்கூடுகள் முற்றாக பகுப்பாய்வுக்கு உட்பட்ட நிலையில் மிகுதி எலும்புக்கூடுகள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201088
  7. 12 DEC, 2024 | 01:11 PM (இராஜதுரை ஹஷான்) மின்சார சபையை ஆக்கிரமித்துள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாமல் மின்கட்டணத்தை குறைக்க முடியாது. அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் சேவை கட்டமைப்பில் உள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாவிடின் கோட்டபய ராஜபக்ஷவின் கதியே தற்போதைய ஜனாதிபதிக்கும் ஏற்படும் என இலங்கை மின்சார பொதுசேவை சங்கத்தின் தலைவர் மாலக விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் உள்ள மின்சார பொது சேவை சங்கத்தின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மின்சார சபை ஊழியர்கள் எவரும் போனஸ் கொடுப்பனவை கோரி போராட்டத்தில் ஈடுபடவில்லை. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடியாது என்று அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்திருந்தது. பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு நாங்களும் போனஸ் கோரி போராட்டத்தில் ஈடுபடவில்லை. மக்கள் விடுதலை முன்னணியின் மின்சார தொழிற்சங்கம் தான் மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டது. மின்சார சங்கத்தின் தலைவர் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் ரஞ்சன் ஜயலாலுக்கு தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இடமளிக்காத காரணத்தால் அவர் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை தற்போது குறிப்பிட்டுக் கொள்கிறார். ஆட்சிமாற்றம் மாத்திரமே ஏற்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கிறது. நீர்மின்னுற்பத்தி துறையின் ஊடாக மின்சாரம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்ற பின்னணியில் எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு மின்கட்டணத்தை குறைக்க முடியாது என்று மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளது. மின்சார சபையை ஆக்கிரமித்துள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாமல் மின்பாவனையாளர்களுக்கு ஒருபோதும் நிவாரணமளிக்க முடியாது. அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் சேவை கட்டமைப்பில் உள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாவிடின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு நேர்ந்த கதியே தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நேரிடும் என்றார். https://www.virakesari.lk/article/201077
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிரியாவில் நடைபெறும் மோதல் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர் கட்டுரை தகவல் எழுதியவர், ஃபாதிமா செலிக் பதவி, பிபிசி செய்திகள், துருக்கி சிரியாவில் 13 ஆண்டுகாலமாக நடைபெறும் மோதல் தற்போது தீவிரமடைந்து வந்தாலும், ஜிஹாதி குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS), கடந்த வார இறுதியில் அலெப்போ மற்றும் அந்நாட்டின் பிற பகுதிகளை கைப்பற்றிய பிறகு அந்த மோதல் தலைப்புச் செய்திகளில் இருந்து மறைந்துவிட்டது. சிரியா அதிபர் பஷர் அல் அசத்துக்கு எதிரான அமைதியான கிளர்ச்சி, 2011 ஆம் ஆண்டு முழு அளவிலான உள்நாட்டுப் போராக மாறியது. இதன் காரணமாக, சுமார் ஐந்து லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், அப்பிராந்திய நாடுகள், ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் இது ஒரு மறைமுக போராகவும் மாறியுள்ளது. அதிபர் அசத்தின் ஆட்சி, ஆயுதக் குழுக்கள், வெவ்வேறு சித்தாந்தங்கள் மற்றும் விசுவாசங்களைக் கொண்ட நிறுவனங்கள் என பல்வேறு தரப்புகளின் கட்டுப்பாட்டில், சிரியா இன்று நான்கு வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் எந்தப் பகுதியை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது போரின் தொடக்கத்திலிருந்து மாறி வருகிறது. ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து பல்வேறு பகுதிகளை இழந்த அதிபர் அசத்தின் ஆட்சி, 2015 முதல் ரஷ்யாவின் ஆதரவைப் பெற முடிந்தது. சமீபத்தில் அலெப்போ நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றும் வரை, சிரியாவின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளின் கட்டுப்பாட்டை ரஷ்யா ஆதரவுடனேயே அசத்தின் ஆட்சி மீட்டெடுத்தது. சிரியாவின் வடக்கு எல்லையில் துருக்கி இருக்கிறது. அங்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள், தாங்களாகவே கட்டுப்பாட்டை வரையறுத்துக்கொண்ட சிரியா பகுதிகளும் இருக்கின்றன. "சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸின் கிழக்கிலிருந்து யூப்ரடீஸ் நதி வரை இருக்கும் பகுதிகளில் இரானின் செல்வாக்கு உள்ளது," என்று ப்ரோஸ் & கான்ஸ் செக்யூரிட்டி மற்றும் ரிஸ்க் அனாலிசிஸ் சென்டரைச் சேர்ந்த செர்ஹாட் எர்க்மென் கூறுகிறார். "மத்தியதரை கடற்கரை பகுதியில் இருந்து டமாஸ்கஸ் வரை உள்ள பகுதிகளும், சிரியாவின் தெற்கு பகுதிகளும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன," என்று அவர் மேலும் கூறுகிறார். இரானும் ரஷ்யாவும் அசத் அரசாங்கத்திற்கு மிகவும் ஆதரவாக இருந்துள்ளனர். ஆனால், சமீபத்தில் இப்பகுதியில் நடந்த நிகழ்வுகள் காரணமாக, சிரியாவின் கட்டுப்பாட்டின் நிலை மாறியுள்ளது. மேலும், இரான் மற்றும் ஹெஸ்பொலா ஆயுதக்குழு இஸ்ரேலுடனான மோதலிலும், ரஷ்யா யுக்ரேனுடனான தனது போரிலும் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த நாடுகள் அனைத்தும் அசத் அரசாங்கத்திற்கு தங்களின் ஆதரவை தெரிவித்திருந்தாலும், தற்போதைய சூழலில் அந்நாடுகளின் ஆதரவு தளர்ந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அலெப்போ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் ஹமா மாகாணத்தின் சில பகுதிகள் இப்போது ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய அரசியல் மற்றும் ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளன. மத்தியதரைக் கடலில் உள்ள சிரியாவின் முக்கிய துறைமுகமான லதாகியா, அசத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது மற்றும் உள்நாட்டுப் போர் வெடித்ததில் இருந்து ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. டங்ஸ்டன் சுரங்கம்: சட்டமன்ற தீர்மானத்தால் என்ன நடக்கும்? மத்திய அரசின் சட்டத்திருத்தம் என்ன சொல்கிறது?11 டிசம்பர் 2024 புவிவெப்ப ஆற்றல்: பூமியை ஆழமாக தோண்டி எடுக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் சிறப்பு என்ன?11 டிசம்பர் 2024 இட்லிப்பைக் கட்டுப்படுத்துவது யார்? சிரியாவின் வடக்கு எல்லையை நோக்கி 120 கிமீ தொலைவில் இட்லிப் மாகாணம் உள்ளது. 2015 ஆம் ஆண்டில் இருந்து, இந்த பகுதியின் கட்டுப்பாட்டை அரசாங்கப் படைகள் இழந்ததில் இருந்து, பல எதிர் தரப்பினரின் கட்டுப்பாட்டில் இந்த பகுதி இருக்கின்றது. இப்போது இட்லிப் பெரும்பாலும் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. "ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் முன்பு நுஸ்ரா முன்னணி என்று அழைக்கப்பட்டது, பலருக்கு அந்த பெயர் தெரிந்திருக்கும். ஏனென்றால் அது சிரியாவில் அல்கொய்தாவின் கிளை அமைப்பாக இருந்தது", என்று பிபிசி மானிட்டரிங் பிரிவின் ஜிஹாதி ஊடக நிபுணர் மினா அல்-லாமி கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் முன்பு நுஸ்ரா முன்னணி என்று அழைக்கப்பட்டது அல்கொய்தா என்ற பெயரின் காரணமாக உள்நாட்டில் இருந்த கிளர்ச்சிக் குழுக்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்ற மறுத்து வருவதால், அல்கொய்தாவுடனான தனது உறவை முறித்துக் கொள்வதாக 2016 ஆம் ஆண்டு நுஸ்ரா முன்னணி அறிவித்தது. "எல்லோரும் அல்கொய்தா என்ற பெயரைக் கண்டு பயந்தனர். எனவே, அதிலிருந்து விலகுவதாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அறிவித்தது," என்கிறார் மினா அல்-லாமி. ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் இனி தனித்து செயல்படும் என்றும் எந்த அமைப்புடனும் தொடர்பில் இல்லை என்றும் அது வலியுறுத்தினாலும், அதற்கு உலகளாவிய ஜிஹாதி லட்சியங்கள் இல்லை என்று கூறினாலும், ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா மற்றும் துருக்கி ஆகியவை, அதனை அல்கொய்தாவுடன் தொடர்புடைய குழுவாகக் கருதி, ஒரு பயங்கரவாத அமைப்பாகவே பட்டியலிட்டன. சீன உய்குர் மக்கள் ஆதிக்கம் செலுத்தும் ஜிஹாதி குழுவான துர்கிஸ்தான் இஸ்லாமியக் கட்சி போல ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழுவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பல குழுக்கள் இங்கு இருப்பதாக, சிரியாவை சேர்ந்த பத்திரிகையாளர் சார்கிஸ் கசார்ஜியன் கூறுகிறார். பெரும்பாலான துருக்கி ஆதரவு போராளிகளை இட்லிபில் இருந்து வெளியேற்றிய பின்னர், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் இந்த பகுதியை கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளது. "இந்த குழுவில் அமைச்சகங்களும் இருக்கின்றன. அதன் அமைச்சர்கள் சமூக ஊடகங்களில் செயல்படுகிறார்கள், புதிய திட்டங்களைத் தொடங்குகிறார்கள், புனரமைப்பு செய்கிறார்கள், பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொள்கிறார்கள்" என்று மினா அல்-லாமி கூறுகிறார். "இட்லிப் தன்னை ஒரு தனி நாடாக கருதி, சொந்தமாக மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. மேலும், உலக நாடுகள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது". சிரியா அரசாங்கத்தையும், சிரியாவின் நட்பு நாடுகளான ரஷ்யா மற்றும் இரானையும் துருக்கி எதிர்த்து வந்தது. 2017 ஆம் ஆண்டில், கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடந்த பேச்சுவார்த்தையில், மோதலை நிறுத்தும் நோக்கில் இட்லிப் உட்பட பிற பகுதிகளில் போரின் தீவிரத்தைக் குறைக்கும் மண்டலங்களை அமைக்க துருக்கி ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்றியது. அதற்கு அடுத்த ஆண்டு, அங்குள்ள கிளர்ச்சியாளர்களிடம் இருந்து அரசாங்கப் படைகளைப் பிரிப்பதற்காக, ரஷ்யாவும் துருக்கியும் இட்லிப் மாகாணத்தில் ஒரு ராணுவ பாதுகாப்பு மண்டலத்தை (buffer zone) உருவாக்க ஒப்புக்கொண்டன. நீலகிரி வரையாடு: ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியில் இறந்த கர்ப்பிணி வரையாடு - முழு பின்னணி11 டிசம்பர் 2024 ஆற்று வெள்ளத்தில் சிக்கிய குடும்பம் - மனைவி, மகனை காப்பாற்ற உயிர்விட்ட தந்தை10 டிசம்பர் 2024 அஃப்ரினை கட்டுப்படுத்துவது யார்? சிரியாவின் வடமேற்கில் ஒரு காலத்தில் குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அஃப்ரின், இன்று துருக்கியின் ஆதரவு பெற்ற அசத்தின் எதிர்ப்பு குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில், குர்திஷ் ஒய்பிஜி (YPG) போராளிகளைக் கொண்ட ஒரு எல்லைப் பாதுகாப்புப் படையை அமைப்பதற்கான அமெரிக்காவின் முடிவைத் தொடர்ந்து, எல்லையின் மறுபக்கத்தில் உள்ள குர்திஷ் படைகள் மீது துருக்கி மிகப்பெரிய தாக்குதலைத் தொடங்கியது. குர்திஷ் ஒய்பிஜி போராளிகளை, தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்றும், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக துருக்கியின் தென்கிழக்கில் போரை நடத்திய பிகேகே (PKK) என்ற போராளிக் குழுவின் ஒரு பகுதியாகவும் துருக்கி கருதியது. அப்போதிலிருந்து, துருக்கி மற்றும் அதன் சிரிய ஆதரவு குழுக்கள் இப்பகுதியை கட்டுப்படுத்தி வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2017 இல் துருக்கி, தான் ஆதரித்த ஆயுதக் குழுக்களை 'சிரிய தேசிய ராணுவம்' என்ற பெயரில் ஒன்றிணைத்தது "2017 ஆம் ஆண்டு, துருக்கி தான் ஆதரித்த ஆயுதக் குழுக்களை 'சிரியா தேசிய ராணுவம்' (SNA) என்ற பெயரில் ஒன்றிணைத்தது. இதற்கு முன்பு அது சுதந்திர சிரியா ராணுவம் (FSA) என்ற பெயரில் அழைக்கப்பட்டன. 'சிரியா தேசிய ராணுவம்' ஆனது துருக்கி ராணுவத்துடன் நேரடியாக இணைக்கப்பட்ட குழுக்கள் அல்லது சுல்தான் முராத் பிரிவு போன்ற உளவு அமைப்புகள் மற்றும் முஸ்லிம் சகோதரர்கள் இயக்கம் (Muslim Brothers), கத்தாருடன் இணைந்த பிற குழுக்களை உள்ளடக்கியது. "எங்களுக்குத் தெரிந்தவரை, இந்த குழுக்கள் ஜிஹாதி குழுக்களுடன் இணைந்து செயல்படவில்லை, ஆனால் துருக்கியின் கொள்கைகள், பிராந்தியத்தின் முன்னுரிமைகள் மற்றும் லட்சியங்களுக்கு ஏற்ப செயல்படுகின்றது. எனவே, அவர்கள் குர்திஷ் தலைமையிலான சிரியா ஜனநாயகப் படைகளுக்கும், சிரியா அரசாங்கப் படைகளுக்கும் கடும் எதிராக உள்ளனர்", என்று பிபிசி மானிட்டரிங் பிரிவை சேர்ந்த மினா அல்-லாமி கூறுகிறார். துருக்கியின் ஆதரவுடன் சிரியா தேசிய ராணுவம், இன்று அஃப்ரின் முதல் ஜராப்லஸ் வரையிலும், யூப்ரடீஸ் நதியின் மேற்கில் உள்ள பகுதிகளையும், டெல் அபியாட் முதல் கிழக்கில் ராஸ் அல்-அய்ன் வரையிலான பகுதிகளையும் கட்டுப்படுத்துகிறது. நவம்பர் 30 ஆம் தேதியன்று, அவர்கள் அலெப்போவின் வடக்கில் குர்திஷ் படைகளுக்கு எதிராக ஒரு தாக்குதலை தொடங்கினர் மற்றும் முன்னர் குர்திஷ் படைகளால் கட்டுப்படுத்தப்பட்ட டெல் ரிஃபாத் நகரம் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றினர். சிரிய தேசிய ராணுவமானது சிரிய இடைக்கால அரசாங்கம் என்ற பெயரிடப்பட்ட சிரிய நிர்வாக அதிகாரத்தின் ஒரு பகுதியாகும், மேலும் துருக்கி அரசாங்கமும் ராணுவமும் இந்த பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. வரலாற்றாசிரியர்களின் பார்வையில் திப்பு சுல்தான் ஒரு ஹீரோவா அல்லது வில்லனா? - ஓர் ஆய்வு10 டிசம்பர் 2024 தியாகராய நகர்: நூற்றாண்டை கொண்டாடும் சென்னை அங்காடித் தெருவின் கதை9 டிசம்பர் 2024 மன்பிஜியை கட்டுப்படுத்துவது யார்? வடக்கில் இருக்கும் மற்றொரு முக்கியமான குழு, `சிரியா ஜனநாயகப் படை' (SDF) ஆகும். குர்திஷ் மற்றும் அரபு போராளிகள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்களின் இந்த கூட்டணி யூப்ரடீஸ் நதியின் கிழக்கில் இருந்து இராக் எல்லை வரையிலும் மற்றும் மேற்கில் மன்பிஜ் நகரம் வரையிலும் உள்ள பகுதிகளைக் கட்டுப்படுத்துகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டில், சிரியா ஜனநாயகப் படை வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் தன்னாட்சி நிர்வாகம் (Autonomous Administration) என்ற பெயரில் ஒருதலைப்பட்சமாக ஒரு நிறுவனத்தை அறிவித்தது. இது சிரியா பிராந்தியத்தின் கால்வாசி பகுதியை கட்டுப்படுத்துகிறது. மேலும், இங்கு அமெரிக்க மற்றும் ரஷ்ய ராணுவ தளங்களும் இருக்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிரியா ஜனநாயகப் படைகள் ஐஎஸ் குழுவிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் கூட்டாளியாகக் கருதப்படுகின்றனர் "சிரியா ஜனநாயகப் படை (SDF), மற்ற கிளர்ச்சிக் குழுக்களில் இருந்து வேறுபட்டு, ரஷ்யா மற்றும் அமெரிக்கா வழியாக இரண்டு நாடுகளின் ஆதரவை பயன்படுத்தி, ஒரு சர்வதேச சட்டபூர்வமான ஆட்சியை நிறுவ முயற்சிக்கிறது" என்கிறார் பாதுகாப்பு ஆய்வாளர் செர்ஹாட் எர்க்மென். "ஒருபுறம், அவர்கள் சிரியாவின் நல்ல எதிர்காலத்திற்காக சிரியா அரசாங்கத்துடன் எவ்வாறு ஒருங்கிணைய முடியும் என்பதை தீர்மானிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மறுபுறம், அவர்கள் சிரியா கடுமையாக எதிர்க்கும் அமெரிக்காவுடன் நெருக்கமான அரசியல், பொருளாதார மற்றும் ராணுவ ஒத்துழைப்பையும் பராமரிக்கிறார்கள்" என்றும் அவர் கூறுகிறார். துருக்கி எல்லையில் சிரியா ஜனநாயகப் படையின் (SDF) இருப்பு துருக்கிக்கு முக்கிய கவலையாக உள்ளது. பல ஆய்வாளர்களின் கூற்றுப்படி, அலெப்போவிற்கு கிளர்ச்சியாளர்கள் முன்னேறியதற்கான நோக்கங்களில் ஒன்று, வடக்கில் இருக்கும் ராணுவ நடவடிக்கையற்ற இடைப்பட்ட பகுதி தொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகனுடன் பேச்சுவார்த்தை நடத்த அசாத் அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த வேண்டும் என்பது தான். அமெரிக்காவில் ரூ.237 கோடிக்கு ஏலம் போன ஒரு ஜோடி காலணி - அதில் என்ன சிறப்பு?9 டிசம்பர் 2024 பிரெட் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? அதில் என்ன இருக்கிறது?7 டிசம்பர் 2024 சிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துவிட்டதா? அரபு மொழியில் `ஐஎஸ்ஐஎஸ்' அல்லது`தைஷ்' என்றும் அழைக்கப்படும் தங்களை ஐ.எஸ் அமைப்பு என்று கூறுகின்றனர். ஐஎஸ் அமைப்பு 2014 ஆம் ஆண்டு அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை பற்றி அறிவித்தது மற்றும் பல ஆண்டுகளாக சிரியா மற்றும் இராக்கின் பகுதிகளை கைப்பற்றியுள்ளது. ஐஎஸ் அமைப்பின் தோற்றம் சிரியாவில் போரின் போக்கை மாற்றியது. மேலும், இந்த அமைப்பை தோற்கடிக்க 70க்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கிய அமெரிக்கா தலைமையிலான ஒரு கூட்டணி உருவாவதற்கு வழிவகுத்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு, இந்த கூட்டணி சிரியாவில் இருந்து ஐஎஸ் அமைப்பை முற்றிலுமாக வெளியேற்றியது. ஆனால் சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் அச்சுறுத்தல் உண்மையிலேயே முற்றிலுமாக நீங்கிவிட்டதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தடுப்பு முகாம்களில் ஐ.எஸ் குழுவினர் என்று சந்தேகிக்கப்பட்டுபவர்களுடன், ஆயிரக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் "அது ஒரு கிளர்ச்சிக் குழுவாக உருமாறியுள்ளது,`ஹிட் மற்றும் ரன்' (திடீரென தாக்குதல் நடத்தி, உடனடியாக பின்வாங்குதல்) வகையில் தாக்குதல்களை நடத்துகிறது. சிரியாவில் அதன் பலம் மிகவும் தீவிரமாக உள்ளது, மேலும் இந்த ஆண்டு அதன் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன" என்று மினா அல்-லாமி கூறுகிறார். சிரியா ஜனநாயகப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு முகாம்களில் காவலில் வைக்கப்பட்டுள்ள ஐ.எஸ் படையினர் மற்றும் அவர்களின் குடும்பங்கள் விடுவிக்கப்பட்டால், சிரியாவில் ஐ.எஸ் அமைப்புக்கு மீண்டும் குறிப்பிடத்தக்க திருப்புமுனை ஏற்படும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். ஐ.எஸ் தோல்வியடைந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகியும், பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறுகிறது. சுமார் 11,500 ஆண்கள், 14,500 பெண்கள் மற்றும் 30,000 குழந்தைகள் குறைந்தது 27 தடுப்பு மையத்திலும் அல்-ஹோல் மற்றும் ரோஜ் ஆகிய இரண்டு தடுப்பு முகாம்களிலும் வைக்கப்பட்டுள்ளனர். "ஐ.எஸ் அமைப்பு அந்த முகாம்கள் மீது தனது கவனத்தை வைத்திருக்கிறது. அந்த முகாம்களில் ஏதேனும் நெருக்கடி ஏற்படுகிறதா, பாதுகாப்பு பலவீனமாகிறதா என்ற நிலைவர அது காத்திருக்கிறது. அப்போது, இந்த முகாம்கள் மற்றும் சிறைகளுக்குள் நுழைந்து அவர்களால் அங்குள்ள மக்களை விடுவிக்க முடியும்" என்கிறார் மினா அல்-லாமி. "வடக்கு சிரியாவில் துருக்கி தலைமையிலான ஒரு பெரிய ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் ஐஎஸ் எதிர்பார்க்கும் அந்த நெருக்கடி வரும். ஒருவேளை குர்திஷ் படைகளுக்கு எதிராக அல்லது சிரியாவில் ஷியா போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுத்தாலும் அங்கு நெருக்கடி ஏற்படும்" என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/cp31yxy2l4qo
  9. அரசியலமைப்பு தீர்வு விடயத்தில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒருதரப்பாக பயணிக்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு இனப்பிரச்சனைக்கான தீர்வு காணப்படவேண்டும் என்பதில் தமிழரசுக் கட்சி உறுதியாக இருக்கிறது. அவ்வாறான சந்தர்ப்பம் ஏற்ப்படும் போது ஒட்டுமொத்த தமிழ்மக்களின் குரலாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகள் ஒன்றாக இணைந்து தமிழ்மக்களின் நிலைப்பாடு இதுதான் என்பதை அரசுடனான பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கவேண்டும்.இதுதான் கட்சியின் நிலைப்பாடகவும் இருக்கும் இது தொடர்பாக எமது கட்சியின் மத்தியகுழுவில் ஆராய்ந்து உரிய முடிவை எடுப்போம். தமிழரசுக் கட்சியின் செயலாளர் என்றவகையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஈ.பி.ஆர்.எல்.எப்.,தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் , தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகிய கட்சிகளுடன் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையினை நடத்தியிருந்தோம். அப்போது தாங்கள் அனைவரும் ஒருகூட்டாக இருக்கிறோம். எனவே தமிழரசுக் கட்சிதான் தனித்துள்ளது. எனவே நீங்கள் வந்து எமது சின்னத்தில் கேட்கலாம் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் இருந்தனர்.அந்தவகையில் திருகோணமலையில் ஒன்றாக போட்டியிட்டமையினாலேயே ஒரு பிரதிநிதித்துவத்தை தக்கவைக்கக்கூடியதாக இருந்தது. எனவே நாங்கள் முயற்சிகளை எடுத்திருக்கின்றோம். கடந்த முறை உள்ளூராட்சி தேர்தல் முறைமையினால் அதில் தனித்தனியாக போட்டியிட்டு பின்னர் ஒன்றாகலாம் என்ற ஆலோசனையினை முன்வைத்திருந்தோம். ஏனெனில் அந்த தேர்தலில் வட்டார அடிப்படையில் நாம் பெரும்பான்மையாக வெற்றி பெற்றாலும் உள்ளூராட்சி அமைப்புக்களில் ஆட்சியை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. அதனை தவறுதலாக புரிந்துணர்ந்த ஏனைய கட்சிகள் தேர்தல்களில் தனித்து போட்டியிட்டிருந்தமை உங்களுக்கு தெரியும். இருப்பினும் அரசியல் அமைப்பு தீர்வு விடயத்தில் நாங்கள் அனைவரும் ஒருதரப்பாக பயணிக்க வேண்டும் என்பது எனது கருத்து. தமிழ்த் தேசிய கட்சிகள் இடையே வடகிழக்கில் அதிகமான பிரதிநிதித்துவத்தை எமது கட்சி பெற்றுள்ளது. அத்துடன் எமது கட்சி 75வருட வரலாற்றுபாரம்பரியம் கொண்ட தாய்கட்சி. எனவே தமிழ் கட்சிகளை பொதுவான நோக்கத்திற்காக ஒன்றுபட்டு செயற்படுவதற்கான நடவடிக்கையினை நாம் எடுப்போம் என்றார். https://thinakkural.lk/article/313624
  10. 12 DEC, 2024 | 03:04 PM அவுஸ்திரேலிய விமானப்படைக்குச் சொந்தமான Beechcraft King Air 350 விமானத்தை இலங்கை விமானப்படைக்கு அவுஸ்திரேலிய அரசு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டதன் மூலம் கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான அர்ப்பணிப்பு புதியதோர் மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதத்தின் இறுதிப் பகுதியில் இலங்கை விமானப்படையிடம் சட்டபூர்வமாக கையளிக்கப்பட்ட இந்த நவீன இரட்டை எஞ்சின் (Turboprop) விமானமானது, ஆட்கடத்தல் உட்பட நாடு கடந்த குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கையின் வான்வழி மற்றும் கடல்சார் கண்காணிப்புத் திறனை பாரிய அளவில் மேம்படுத்தும். இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பைப் பேணுவதற்கு இரு நாடுகளும் மேற்கொண்டு வரும் பரஸ்பர முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில், அவுஸ்திரேலியாவின் இதுபோன்ற அன்பளிப்புகள் அமைவதாக, இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்தார். எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ இங்கு மேலும் தெரிவிக்கையில், “King Air 350 விமானத்தை அன்பளிப்பாக வழங்கிய அவுஸ்திரேலிய அரசுக்கு விமானத்திற்காக, மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவுஸ்திரேலிய அரசின் இந்த அன்பளிப்பு, கடல்சார் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கான எமது திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிணைப்பை எடுத்துக் காட்டுகிறது. எமது நீண்டகால பங்காளியான அவுஸ்திரேலியாவுடன் இணைந்து பிராந்திய பாதுகாப்பு முயற்சிகளுக்காக தொடர்ச்சியாக ஆதரவளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்,” என்றார். இரத்மலானை விமானப்படைத் தளத்தில் இடம்பெற்ற இந்த சம்பிரதாயபூர்வ அன்பளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய, Joint Agency Task Force Operation Sovereign Borders (சுயாதிபத்திய எல்லைகள் நடவடிக்கைக்கான கூட்டு முகவரமைப்பு) கட்டளைத்தளபதியான ரியர் அட்மிரல் Brett Sonter, (RAN) (Royal Australian Navy), ( ரோயல் அவுஸ்திரேலிய கடற்படை) இன்றைய நிகழ்வு அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் காணப்படும் இருதரப்பு உறவை மேம்படுத்தும் மற்றுமொரு வெளிப்பாடாகும் எனத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்றைய சம்பிரதாயபூர்வமான அன்பளிப்பு வழங்கும் நிகழ்வானது, எமது நீடித்த கூட்டாண்மையைப் பிரதிபலிக்கும் ஒரு அற்புதமான சந்தர்ப்பமாக அமைவதோடு, இரு நாடுகளும் எதிர்நோக்குகின்ற சவால்களை எதிர்கொள்வதற்கு ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம், பல்வேறு தடைகளை நாம் கடக்க முடியும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்தவொருவரையும் தடுத்து நிறுத்துவதில் அவுஸ்திரேலியாவும், இலங்கையும் உறுதியாக உள்ளன.” என்றார். Beechcraft King Air 350 விமானமானது, கடல்சார் பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு அப்பால், இலங்கை விமானப்படை வீரர்களுக்கு பெறுமதிவாய்ந்த பயிற்சிக்கான வாய்ப்புகளையும் வழங்கும். "இவ்வாறான திறன் மேம்படுத்துகின்ற பொருட்களை மாத்திரம் வழங்குவதில் மட்டுப்படுத்தப்படாமல், அதனைப் பயன்படுத்துபவர்களின் திறன்களையும், அறிவையும் மேம்படுத்துவதும் அவசியமாகும். இலங்கை விமானப்படைக்கு இந்த விமானத்தை அன்பளிப்பாக வழங்குவதில் நாம் பெருமையடைகின்ற அதேவேளையில், இந்த முக்கியமான புதிய வளத்தை பயன்படுத்தி இலங்கை பாதுகாப்பு தரப்பு புதிய திறன்களைப் பெறுவதோடு, அடுத்த தலைமுறை படையினரின் பயிற்சி மற்றும் மேம்பாட்டிற்கு பங்களிப்பதற்கும் வாய்ப்பாக அமைவதாக ரியர் அட்மிரல் Brett Sonter தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201091
  11. வடக்கில் பரவுவது எலிக்காய்ச்சல்; பரிசோதனையில் உறுதி வடமாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் உயிரிழந்த 7 பேரிடம் எடுக்கப்பட்ட பல மாதிரிகளில் எலிக்காய்ச்சல் அல்லது லெப்டோஸ்பிரோசிஸ் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அதன் சமூக சுகாதார நிபுணர் டாக்டர் துஷானி பெரேரா இதனைத் தெரிவித்தார். உயிரிழந்த 7 பேரின் மாதிரிகள் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பல நோயாளிகளின் மாதிரிகள் எலிக்காய்ச்சல் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனைய ஆய்வுப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீண்ட நாள் காய்சல், கண் சிவத்தல், உடல் சோர்வு, கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், சிறுநீருடன் இரத்தம் கசித்தல் என்பன எலிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளாகும். எனவே இந்த நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் உடனடியாக வைத்தியரை நாடுவது அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/313608
  12. 10 DEC, 2024 | 12:27 PM இலங்கையர்களின் நினைவுகளிலிருந்து என்றும் அகலாத டச்மார்ட்டின் Dutch Martinair DC8 விமான விபத்து நிகழ்ந்து டிசம்பர் நான்காம் திகதியுடன் ஐம்பது வருடங்களாகியுள்ளது. இந்தோனேசியாவின் சுரபயா சர்வதேச விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் நோர்ட்டன் பிரிட்ஜின் ஏழு கன்னிமலையில் மோதி விழுந்துநொருங்கியது. அந்த விமானத்திலிருந்த 182 பயணிகள் உட்பட 191 பேரும் உயிரிழந்தனர். மக்காவிற்கு சென்றுகொண்டிருந்த யாத்திரிகர்கள் உட்பட 191 பேர் பயணித்துக்கொண்டிருந்த அந்த விமானம் கடும் காடுகள் மத்தியில் காணப்பட்ட மலையில் மோதி விபத்துக்குள்ளானது.விமானத்தின் சிதைவுகள் காணப்பட்ட பகுதியில் பயணிகளின் உடல்களும் உடமைகளும் சிதறிக்கிடந்தன. கடல்மைலிற்கு 36000 மீற்றர் மேலே பறந்துகொண்டிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து விமானி விமானத்தை கொழும்பு விமானநிலையத்தில் தரையிறக்குவதற்கு அனுமதியை கோரினார்.சிவில் விமானப்போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவின்படி விமானி விமானத்தை 4000 மீற்றருக்கு கீழே கொண்டுவந்தார் என குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்தன. எனினும் பொகவந்தலாவ காசல்ரி நீர்த்தேக்கத்திற்கு மேலே பயணித்துக்கொண்டிருந்த விமானம் உயரத்தை குறைத்து பயணித்துக்கொண்டிந்தவேளை அதன் இறக்கைகளில் ஒன்று மலையுடன் உரசியது இதனால் வெடிப்புநிகழ்ந்தது. அந்த விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டவர்கள் இன்னமும் அந்த விபத்து குறித்த துயரமான நினைவுகளை சுமக்கின்றனர். 'விமானப்பணிப்பெண்ணின் உடலை அவரின் காதலன் அடையாளம் காட்டினார் அவரது உடல் இந்தோனேசியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது "என அவர்கள் அன்றைய நினைவுகளை பகிர்ந்துகொள்கின்றனர் . இந்த கட்டுரையை எழுதியவர் அந்தபகுதி விமானவிபத்தின் 50 ஆண்டுகளை நினைவுகூருவதற்கு தயாராகிக்கொண்டிருந்தவேளை அங்கு சென்றார். நோர்ட்டன் பிரிட்ஜின் ஏழு கன்னிமலையின் அடிவாரத்தில் உள்ள முல்கம தோட்டத்திலேயே நினைவேந்தலிற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன. விமானவிபத்தில் உயிரிழந்தவர்களின் கல்லறைகள் உரிய பராமரிப்பின்றி கைவிடப்பட்டுள்ளமை கவலையை ஏற்படுத்தியது. அந்த விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டவர்கள் இன்னமும் அந்த விபத்து குறித்த துயரமான நினைவுகளை சுமக்கின்றனர் அந்த சம்பவத்தை நேரில் பார்த்த இருவரை பலத்த சிரமத்தின் மத்தியில் தொடர்புகொள்ள முடிந்தது.அவ்வேளை இளையவர்களாக காணப்பட்ட அவர்கள் தற்போது முதியவர்கள்எனினும் என்ன நடந்தது என்பது அவர்களின் நினைவுகளில் தெளிவாக பதிந்துள்ளது. அவர்களில் ஒருவர் நோர்வூட் கிளங்கன் தோட்டத்தை சேர்ந்த பிஎச் நிமால் டி சில்வா அவருக்கு அப்போது 19 வயதுஇதியத்தலாவ இராணுவமுகாமின் கெமுனுவோச் படைப்பிரிவின் வாகனச்சாரதியாக பணியாற்றிவந்தார். 'நான் அவ்வேளை 19 வயது இளைஞன்இகெமுனுவோட்ச் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகயிருந்தவர்லக்கி அல்கம அவர் 100 பேருடன் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு விரைந்தார். கொத்தன்லேனவில் உள்ள சிங்கள மகாவித்தியாலத்தில் நாங்கள் தங்கவைக்கப்பட்டோம்- உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதே எங்களிற்கு வழங்கப்பட்ட பணி - மலையின் உச்சியிலும் அடிவாரத்திலும் உடல்கள் சிதறிக்கிடந்தன.என தெரிவித்துள்ள நோர்வூட் கிளன்கனை சேர்ந்த பிஎச்நிமால் டி சில்வா நாங்கள் சிதறிக்கிடந்த உடல்களை மலைஅடிவாரத்தில் உள்ள பகுதியொன்றிற்கு கொண்டுவந்தோம்19 உடல்களை ஒரே புதைகுழியில் புதைத்தோம் எனது வாழ்க்கையில் மிகவும் வேதனையான அனுபவம் என அவர் தெரிவித்தார். அந்த துயரசம்பவத்தை நேரில் பார்த்த மற்றுமொரு நபர் தன்னை திலக் என அறிமுகப்படுத்தினார்- 62வயது எனக்கு அவ்வேளை 12 வயது ஆனால் சம்பவம் நன்றாக நினைவில் உள்ளது என அவர் குறிப்பிட்டார். 'பெருமளவானவர்கள் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் குவிந்தார்கள் அவர்கள் விமானத்தின் சிதைவுகளை எடுத்துச்சென்றார்கள்இவிமானவிபத்து இடம்பெற்ற பகுதியை பார்ப்பதற்காக பலர் பலநாட்களாக வந்தார்கள்" என அவர் தெரிவித்தார். ஏழுகன்னி மலையின் முன்னால் உள்ள திபேர்ட்டன் தோட்டத்தை சேர்ந்த வீரன் ராஜிற்கும் ( 58) அந்த விபத்து குறித்த விடயங்;கள் நினைவில் உள்ளது.சம்பவம் இடம்பெற்றபோது தனக்கு 8 வயது என அவர் தெரிவித்தார். இரவு பத்துமணியளவில் தோட்டத்தின் தீ அபாய மணி ஒலித்ததும்நாங்கள் அந்த தொழிற்சாலையை நோக்கி ஒடினோம்அந்த தோட்டத்தின் உரிமையாளர் சொய்சா என்ற கனவான்அவர் விமானமொன்று மலையில்மோதி விழுந்துள்ளது என தெரிவித்தார்அந்த பகுதி முழுவதும் கடும் பனியில் சிக்குண்டிருந்ததால் எங்களால் அங்கு செல்லமுடியவில்லை சொய்சா நோர்ட்டன் பிரிட்ஜ் பொலிஸாருக்கு அறிவித்தார்அதன் பின்னர் இரண்டு பொலிஸ் குழுக்களும் இரண்டு ஹெலிக்கொப்டர்களும் அவ்விடத்திற்கு வந்தன என அவர் தெரிவித்தார். அதன் பின்னரே விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொருங்கியுள்ளதையும் பலர் உயிரிழந்துள்ளதையும் நாங்கள் உணர்ந்தோம்இராணுவத்தினரும் பொலிஸாரும் உடல்களை மீட்டெடுத்தனர்." என அவர் தெரிவித்தார். ranjith rajapaksha தமிழில் -ரஜீவன் https://www.virakesari.lk/article/200883
  13. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி பாடசாலை வளாகத்தில் புத்தர் சிலையொன்றை வைத்துள்ளமை தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி பாடசாலைக்குள் சரஸ்வதி சிலைக்கு முன்பாகவே புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்கனவே பௌத்த மாணவர்கள், தாதியர்கள், வைத்தியர்களின் வழிபாட்டுக்காக பௌத்த விகாரையொன்று உள்ள நிலையில் தாதியர் பாடசாலைக்கு முன்பாகவும் புத்தர் சிலையொன்றை நிறுவியுள்ளமை தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த புத்தர் சிலை தொடர்பில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு முன்பாக அது தொடர்பிலான நடவடிக்கைகளை வைத்தியசாலை நிர்வாகம் முன்னெடுக்கவேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/313605
  14. மிக முக்கிய செய்தி . கடைசி வரை வாசியுங்கள்! அண்மையில் ஒரு நாள் நான் இங்கிலாந்தில் கடமையில் இருந்த போது விடுதி கடும் பிஸி ஆனது. விடுதியில் இருந்த பொறுப்பு மிட் வைfப் சமாளிக்க முடியாமல் மேலதிக சீனியர் மிட் வைfப் யைக் கூப்பிடுமளவு பிஸியானது. என்னிடம் பலமுறை வந்து டிஸ்கஸ் பண்ணி கொண்டே இருந்தார்கள். அப்படி என்ன பிஸி? எனது விடுதியில் ஐந்து தனியறைகள் மகப்பேற்றுக்காக இருக்கும். பிரசவ வலியில் இருக்கும் தாய்மார்கள், உறவினரோடு அந்த அறையிலேயே குழந்தை பிறக்கும் வரை தங்கியிருந்து குழந்தை பெறுவார்கள். பிரசவ வலி இல்லாத தாய்மார்கள் மற்றும் குழந்தை பிறந்த தாய்மார்கள் தங்கியிருக்க வேறு விடுதிகள் உள்ளன. அன்று பிரசவ அறைகள் நான்கில் தாய்மார்கள் பிரசவ வலியில் இருந்தனர். மிஞ்சிய ஒரு அறையில் மிக அவசியமான, அவசர நிலமை தாயை மட்டும் அனுமதிப்பதென அந்த அறை வெறுமையாக இருந்தது. இப்போது பொறுப்பு மிட் வைfப் பிஸி ஆனதுக்கான காரணம், அவசரமில்லாத கர்ப்பிணிகளின் பிரசவத்தை ஆரம்பிப்பபதா இல்லையா என்று முடிவெடுக்க வேண்டும்? விடுதி நிரம்பியதால் அவசரமில்லாத கர்ப்பிணிகளை வேறு வைத்தியசாலைக்கு அனுப்புவதா என்று முடிவெடுக்க வேண்டும். சில கர்பிணிகளை வீட்டுக்கு திரும்ப அனுப்பலாமா என்று முடிவெடுக்க வேண்டும். அனைத்து முடிவுகளையும் துல்லியமாக எடுக்க வேண்டும். பிழையாக முடிவெடுத்து குழந்தை பிறப்பைப் பின் போட்டு குழந்தைக்கோ தாய்க்கோ ஏதும் பிரச்சனை வந்தால் அது வைத்தியசாலைக்கு சிக்கலாகி விடும். அதற்காக ஒவ்வொரு முடிவெடுத்தலுக்காகவும் சீனியர் மருத்துவ மாது என்னை ஆலோசித்துக்கொண்டே இருந்தார். அதுதான் பிஸி ஆனதுக்கான காரணம். இது ஏன் நடந்தது? ஒரு பெண் பிரசவத்தின் போது தனி அறையில் கணவன், அம்மா, தங்கை, மாமி என உறவினர்களோடு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக. சரி இதை ஏன் இப்போது சொல்கிறேன்? நான் 2013 யாழ்ப்பாணத்தில் வேலை செய்யும்போது விடுதியில் ஒரே ஒரு அறை இருந்தது. அதற்குள் நெருக்கமாக ஐந்து கட்டில்கள். அந்த ஐந்து கட்டிலில் தான் பிரசவம் நடக்கும். உறவினர்கள் யாரும் வர முடியாது. மற்ற பெண்கள் முன்னால் எல்லா கர்ப்பிணிகளும் நிர்வாணத்துடன் இருக்க வேண்டும். மறுபுறம், பிரசவத்திற்காகக் காத்திருக்கும் தாய்மார்கள் ஜெயில் போல இன்னொரு அறையில் பாயில் படுப்பார்கள். குழந்தை பிறந்தபின் மட்டும் கட்டில் கிடைக்கும். சிலவேளை மூன்று அம்மாக்களுக்கு ஒரு கட்டில் கிடைக்கும். மூன்று பேரும் பிள்ளைகளை கட்டிலில் வளர்த்தி விட்டு அருகே தம்ரோ கதிரையில் இரவு முழுக்க இருப்பார்கள். குழந்தை பிறந்த முதல்நாளே இரவு முழுக்க தம்ரோ கதிரையில் இருக்கும் நிலமையை யோசித்து பாருங்கள். பத்து வருடம் தாண்டியும் இந்த நிலமை பெரிதாக மாறவில்லை என ஒரு வைத்திய நண்பன் அழைப்பெடுத்து எழுதச் சொல்லி கேட்டான். இப்படித்தான் எம் தாய்மார்களை நடத்தினோம். அவர்களை நெருக்கமான அறைகளில் அடைத்து, ஒரு பெண்ணின் நிர்வாணத்தை சம்பந்தமில்லாத மற்ற நபர்களுக்கும் காட்டித்தான் இனியும் பிள்ளை பெற வேண்டுமா? இன்னொரு புறம், பிறந்த குழந்தைகளை பராமரிக்கும் அதி தீவிரப் பிரிவு அடிக்கடி இடமாற வேண்டிய தேவை. அது அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இயங்குவதால் தடுக்கக்கூடிய கிருமித்தொற்றுக்கள் போன்றவற்றால்கூட பல குழந்தைகள் இறக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்காக தனி மகப்பேற்று , பெண்ணோயியல், குழந்தை பராமரிப்பு விடுதியை அமைக்க நிலம் உள்ளதாக அறிய முடிகின்றது. ஆனால் அதற்கான கட்டடத்தை அமைக்க 3000 மில்லியன் ரூபாய்க்கு மேல் தேவைப்படலாம். பெரிய தொகைதான். ஆனால் மக்கள் மனது வைத்தால் தமிழருக்கு இது பெரிய தொகை இல்லை. இப்போதைய நிலையில் அரசாங்கத்தை மட்டும் நம்பி இதை செய்ய முடியாது. தனி அமைப்பு , மனிதானால்கூட இது முடியாது. சாதி, மத , ஊர் பேதங்களை மறந்து எல்லோரும் இணைந்தால் இது இலகுவாக செய்யப்படலாம். என்ன செய்யலாம்? 1. தற்போதைய அரசியல் வாதிகள் இதற்கான முனைப்பை அரசாங்கத்துடன் பேச வேண்டும். அரசிடமிருந்து பெறக்கூடிய உதவியைப் பெற முயற்சிக்க வேண்டும். 2. இதற்கான சரியான திட்டமிடலை எழுதி அரச சார்பற்ற நிறுவனங்களை அணுக வேண்டும். 3. இறுதியாக பொதுமக்கள் நிதி சேகரிப்பு. யாழ் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு தலைமையில் ஒரு வெளிப்படையான நிதி சேகரிப்பைச் செய்யலாம். லைக்கா, IBC போன்ற பெரிய புலம்பெயர் வியாபார நிறுவனங்களை நேரடியாக அனுகி உதவி கேட்க வேண்டும். இடைத்தரகர்கள் இல்லாமல் அரச அங்கிகாரத்துடன் நேரடியாக பொதுக் கணக்கு ஒன்றில் வெளிப்படையான நிதிச் சேகரிப்பு செய்தால் நமது மக்கள் கொட்டிக் கொடுப்பார்கள். தனி மனிதனாக நான் 2500$ சிலநாட்களில் சேகரிக்க முடிந்தது. எல்லோரும் சேர்ந்தால் 3000 மில்லியன் சின்ன காசு. இதற்காக அனைத்து சமூக அமைப்புக்களும் சுயநலம் பார்க்காமல் ஒன்றிணைந்து இதை விளம்பரப்படுத்த வேண்டும். எல்லோரும் சுயநலம் மறந்து மனசு வைத்தால் சில வருடங்களில் நமது தாய்மார்களும் கெளரவமான பிரசவத்தை மேற்கொள்ளும் அடிப்படை உரிமை கிடைக்கும். இந்தப் பதிவை எந்த தனிநபர்களும் , ஊடகங்களும் எனது பெயர், அனுமதி இல்லாமல் அப்படியே எடுத்து பயன்படுத்தலாம். வைத்தியசாலை நிர்வாகம் , பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி , யாழ் மகப்பேற்று நிபுணர்கள் இது பற்றி அவர்களது திட்டங்களை வெளிப்படுத்தி இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க உங்களின் ஆதரவு உதவும். இந்த செய்தியை #Respectfulmaternitycare என்ற ஹஷ் tag உடன் பகிருங்கள். இந்த ஹஷ் tag 1000 என்ற அளவை தாண்டும் போது இது சர்வதேச அளவில் வைரலாகி உலகமெல்லாம் பரவி இருக்கும் நம் உறவுகள் அனைவரையும் போய்ச் சேரும். சிலவேளை இது சர்வதேச அளவில் ட்ரென்ட் ஆகும்போது வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் உதவியும் கிடைக்கும். சமூக வலைத்தள பிரபலங்களும் இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பகிருங்கள். பகிருங்கள். எல்லோரும் சேர்ந்து தட்டினால் நிறைய கதவுகள் திறக்கும். #Respectfulmaternitycare https://www.facebook.com/story.php?story_fbid=10237366930094514&id=1286697015&rdid=ew4TXgeiyWJmNwnH
  15. சிரியா மீது 2 நாட்களில் 500 முறை தாக்குதல் நடத்திய இஸ்ரேல் சிரியாவில் உள்ள ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்கு செல்வதை தடுக்க, அங்கு முப்படைகள் மூலம் இரண்டு நாட்களாக கிட்டத்தட்ட 500 முறை தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது. இதில் சிரியாவின் ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சிரியாவில் ஜனாதிபதி அல் ஆசாத்துக்கு எதிராக, சன்னி முஸ்லிம்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் இடையே நீண்டகாலமாக நடந்து வந்த மோதல் கடந்த டிசம்பர் 8-ம் திகதி முடிவுக்கு வந்தது. சிரியா ஜனாதிபதி ஆசாத் ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்தார். சிரியாவில் ஆசாத் குடும்பத்தினரின் 50 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது. சிரியாவில் முகமது அல் பஷீர் தலைமையில் எதிர்க்கட்சியினர் மாற்று அரசை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. கிளர்ச்சி படைக்கு அல்-கய்தா, ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் ஆதரவு உள்ளது. இதனால் சிரியாவின் ராணுவ கிடங்குகளில் இருந்த ஆயுதங்கள் எல்லாம் தீவிரவாதிகளின் கைகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இது ஆபத்து என உணர்ந்த இஸ்ரேல், சிரியாவில் உள்ள ஆயுத கிடங்குகளை எல்லாம் அழிக்க முடிவு செய்தது. இந்தப் பணியை முப்படைகளிடமும் இஸ்ரேல் ஒப்படைத்தது. இதையடுத்து, இஸ்ரேல் ராணுவத்தின் முப்படைகளும், சிரியாவில் உள்ள விமான எதிர்ப்பு ஏவுகணைக் கிடங்குகள், விமானப்படை தளங்கள், டமாஸ்கஸ், ஹாம்ஸ் மற்றும் லதாகியா ஆகிய இடங்களில் உள்ள ஆயுத தொழிற்சாலைகள் ஆகியவற்றை குறிவைத்து 480 தாக்குதல்களை 48 மணி நேரத்துக்கு மேலாக நடத்தின. இந்தத் தாக்குதல்களில் சிரியாவின் 15 போர்க்கப்பல்கள், நீண்ட தூர ஏவுகணைகள் அழிக்கப்பட்டன. மக்கள் மற்றும் போர்க்கப்பல்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்த இந்த தாக்குதல் நடவடிக்கை அவசியம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. சிரியா மீது இஸ்ரேல் திடீரென பயங்கர தாக்குதல் நடத்தியதால், சிரியாவை கைப்பற்றும் முயற்சியில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளதாக தகவல் பரவியது. இதை மறுத்த இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள், “சிரியா எல்லையில் உள்ள இஸ்ரேலின் பகுதியை கைப்பற்றத்தான் ராணுவம் நுழைந்தது. சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி இஸ்ரேல் டேங்க்குகள் செல்கின்றன, என்ற செய்தி தவறானவை” என்றனர். இஸ்ரேல் ராணுவ அமைச்சர் கட்ஸ் கூறுகையில், “தெற்கு சிரியாவை ராணுவம் பலம் அற்றதாக மாற்ற இந்த தாக்குதல் அவசியம். ஆசாத் ஆட்சியை பின்பற்ற முயற்சிக்கும் எந்த ஒரு படைக்கும் இதே கதிதான் ஏற்படும். சிரியா எல்லையில் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்காக ஆயுத கிடங்குகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது” என்றார். இதனிடையே, சிரியா எல்லையில் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் இஸ்ரேல் நுழைந்ததற்கு எகிப்து, ஜோர்டன், துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சிரியாவின் நிலையற்ற தன்மையை, தனது எல்லையை விரிவுபடுத்தும் நோக்கத்துக்கு இஸ்ரேல் பயன்படுத்தி கொள்வதாக அந்த நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. சிரியாவின் ஒரு பகுதிக்குள் இஸ்ரேல் ஊடுருவியது 1974-ம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுவதாக உள்ளது என ஐ.நா கூறியுள்ளது. https://thinakkural.lk/article/313597
  16. 12 DEC, 2024 | 11:15 AM இத்தாலியின் கடற்பரப்பிற்கு அருகில் படகு கவிழ்ந்ததில் 40க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள மீட்பு பணியினர் 11 சிறுமி உயிர் தப்பியுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர். படகு கவிழ்ந்ததில் அவர் ஒருவர் மாத்திரம் உயிர்பிழைத்திருக்கவேண்டும் 44 உயிரிழந்திருக்கவேண்டும் என கருதுகின்றோம் என கொம்பாஸ் கலெக்டிவ் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. மத்தியதரை கடலில் புலம்பெயர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு இந்த அமைப்பு உதவி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த குழுவின் டிரெட்டமார் 3 என்ற கப்பல் புதன்கிழமை அதிகாலை 2.20 மணியளவில் சிறுமியின் அபயக்குரலை செவிமடுத்தது என தெரிவித்துள்ள மீட்பு பணியாளர்கள் இன்னொரு மீட்பு முயற்சிக்கு செல்லும்போதே சிறுமியின் அலறல் கேட்டதாகதெரிவித்துள்ளனர். சியாரோ லியோனை சேர்ந்த 11 வயது சிறுமி உயிர்காப்பு அங்கிகளுடன் மூன்றுநாள் கடலில் மிதந்திருக்கின்றாள் என கொம்பஸ் கலெக்டிவ் தெரிவித்துள்ளது. அந்த சிறுமி காப்பாற்றப்படுவதை காண்பிக்கும் படங்களையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்த சிறுமி 12 மணித்தியாலங்கள் கடலில் தத்தளித்துள்ளார் என அவரை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவர் தெரிவித்துள்ளார். உலோக படகு துனிசியாவிலிருந்து புறப்பட்டது என தெரிவித்துள்ள அந்த சிறுமி கடும் புயல் 11 அடிஅலைகள் காரணமாக படகு புறப்பட்ட சில நிமிடத்திலேயே கவிழ்ந்தது என குறிப்பிட்டுள்ளார். தன்னுடன்வேறு இருவரும் கடலில் தத்தளித்தனர் ஆனால் அவர்களை பின்னர் காணவில்லை என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/201063
  17. 12 DEC, 2024 | 10:04 AM கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி இந்திய உயர்ஸ்தானிகருக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பின் போது இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகள் குறித்து தம்மால், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். அதேவேளை இந்திய உயர்ஸ்தானிகர் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்துவதாகத் தெரிவித்ததுடன், ஜனவரியில் முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொள்வதாகத் தெரிவித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உலக மீனவதின நிகழ்வில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த நவம்பர்மாதம் 21ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோது, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயம்தொடர்பில் பேசப்பட்டது. அத்தோடு இந்தச் சந்திப்பில் இந்திய இழுவைப்படகுகள் எமது கடல் பகுதிகளுக்குள் அத்துமீறி வருகைதந்து, எமது மீனவ மக்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடிச் செல்கின்ற விடயத்தினையும் முன்வைத்திருந்தேன். நாம் கரையில் இருந்து பார்க்கும்போது தெரியக்கூடிய அளவில் வெளிச்சமிட்டவாறு இந்திய இழுவைப் படகுகள் செய்கின்ற அட்டகாசமான செயற்பாடுகளைப் பற்றி அவரிடம் மிக அழுத்தமாகச் சுட்டிக்காட்டியிருந்தேன். அந்தவகையில் இந்திய மீனவர்களால் எமது மீனவர்களுக்கு ஏற்படும் இழப்புக்கள் தொடர்பில் அவரிடம் மிக விரிவாக எடுத்துக்கூறியிருந்தேன். இவ்வாறு அவரிடம் இந்த விடயத்தை முன்வைத்து நான் பேசும்போது ஏனைய தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாகப் பேசியிருந்தனர். இதன்போது உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதற்குப் பதிலளிக்கும்போது, இந்த இழுவைப் படகுகள் அத்துமீறி நுழையும் விடயத்தில் கவனம் செலுத்துவதாகவும், எதிர்வரும் ஜனவரியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் தாம் வருகைதரவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இவ்வாறாக இந்த விடயங்களில் நாம் தொடர்ந்தும் அவதானம் செலுத்திக்கொண்டேயிருக்கின்றோம். இதுமாத்திரமின்றி பாராளுமன்றத்தில் பேசக்கிடைக்கின்ற நேரங்களிலும் இந்த விடயம் தொடர்பில் பேசுவோம். இந்திய இழுவைப்படகுகள் எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தினைச் சூறையாடுவதற்கு எதிராக இதற்கு முன்னர் எவ்வாறு குரல்கொடுத்துவந்தோமோ அதேபோல் தொடர்ந்தும் இந்த விடயத்தில் குரல்கொடுப்போம். அதேபோல் தென்னிலங்கைமீனவர்களின் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் செயற்பாடுகளைத் தடுப்பதற்காகவும் தொடர்ந்தும் நாம் குரல்கொடுப்போம். இந்த விடயங்கள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சருடனும் பேசியிருக்கின்றேன். குறித்த விடயம் தொடர்பில் கவனம்செலுத்துவதாக கடற்றொழில் அமைச்சரும் உறுதியளித்திருக்கின்றார். அதேவேளை இந்த காற்றாலைத் திட்டம் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். கடந்த நாட்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின்போது மன்னாருக்குச் சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராயும்போது, அங்குள்ள மக்கள் கூடுதாலாக இந்த காற்றாலைத் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புத் தொடர்பில் தெரிவித்திருந்தனர். அந்தவிடயம் தொடர்பிலும் பேசியுள்ளோம். காற்றாலைத் திட்டத்தால் மன்னாரில் உள்ள பாதிப்பு நிலைமைகள் குறித்தும் சுட்டிக்காட்டியிருக்கின்றோம். அத்தோடு யாழ்ப்பாணத்திற்கும் இந்த காற்றாலைத் திட்டத்தைக் கொண்டுவரப்போவதாகத் தெரிவிக்கின்றனர். எனவே யாழ்ப்பாணம் காற்றாலை தொடர்பான விடயங்களையும், மன்னார் காற்றாலை தொடர்பானவிடயங்களையும் உரியவர்கள் விரிவாக எம்மிடம் கையளியுங்கள். இதேவேளை மன்னாரில் கனிய மணல் அகழ்வு தொடர்பான பிரச்சினையும் காணப்படுகின்றது. முல்லைத்தீவில் மக்கள் இடப்பெயர்வைச் சந்தித்திருந்த காலத்தில், கொக்கிளாயில் கனியமணல் அகழ்விற்கென மக்களின் காணிகள் சுமார் 44ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதன்பிற்பாடு கனியமணல் அகழ்விற்காக அவர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் எமது போராட்டங்களினால் கைவிடப்பட்டிருக்கின்றது. மேலும் சட்டவிரோத கடற்றொழில்கள் என அரசால் அறிவிக்கப்பட்ட கடற்றொழில் செயற்பாடுகள் அனைத்தையும் முற்றாகத் தடைசெய்து, எமது மீனவர்களின் முறையான கடற்றொழில் செயற்பாடுகளுக்கு உதவவேண்டும். இந்திய இழுவைப்படகுகளால் எமது மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டும். இந்த விடயங்களுக்காக நாம் தொடர்ந்தும் குரல் கொடும்போம் - என்றார். https://www.virakesari.lk/article/201051
  18. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வக்குமார் பதவி, பிபிசி தமிழ் நீலகிரி மாவட்டத்தில் வீட்டிலிருந்து பணி செய்து வந்த ஐ.டி. பெண் ஊழியர் ஒருவரை, 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்ததாகக் கூறி, 8 நாட்கள் வீட்டிற்குள் முடக்கி வைத்ததுடன், ரூ.16 லட்சத்தையும் ஏமாற்றிப் பறித்துள்ளனர். பல நாட்களுக்குப் பின் புகார் தெரிவித்ததால், பணத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடந்தது என்ன? டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி குறித்து, ஊட்டி சைபர் க்ரைம் போலீசார், பிபிசி தமிழிடம் விளக்கினர். அவர்கள் கூறிய தகவல்களின்படி, குன்னுாரைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர், தனது சேமிப்பை இழந்ததுடன், 8 நாட்கள் வீட்டிலும் முடக்கப்பட்டுள்ளார். பட்டப்படிப்பை முடித்துள்ள அந்தப் பெண், கோவையிலுள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக வீட்டிலிருந்து பணி புரியும் வாய்ப்பைப் பெற்று, அங்கிருந்து பணியை மேற்கொள்கிறார். கடந்த செப்டம்பர் மாதத்தில் அவருக்கு வாட்ஸ் ஆப் காலில் ஓர் அழைப்பு வந்துள்ளது. அதில் ஆங்கிலத்தில் பேசிய ஒரு நபர், மும்பையிலுள்ள ஒரு கூரியர் நிறுவனத்திலிருந்து பேசுவதாகத் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES அந்தப் பெண்ணின் ஆதார் எண் மற்றும் பான் எண்ணைப் பயன்படுத்தி, மும்பையிலிருந்து சீனாவுக்கு ஒரு பார்சல் சென்றிருக்கிறது. அதில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள், பாஸ்போர்ட், ஆதார் அட்டை போன்றவை இருந்தது என்று கூறியிருக்கிறார். அதற்கு இந்தப் பெண், தான் அப்படி எந்த பார்சலையும் அனுப்பவில்லை என்று மறுத்திருக்கிறார். ஆனால் தங்களுடைய ஆதார் எண்ணைப் பயன்படுத்தி அந்த பார்சல் அனுப்பப்பட்டுள்ளதால் சுங்கத்துறை அதிகாரிகள் உங்களிடம் இப்போது பேசுவார்கள் என்று கூறியுள்ளார். அந்த நேரத்தில் அலுவலகத்திலிருந்து புதிய லேப் டாப் அனுப்புவதாகக் கூறியிருந்ததால், அது தொடர்பான பார்சலாக இருக்குமோ என்று இந்தப் பெண் நினைத்துள்ளார். அதன்பின் சுங்கத்துறை, மும்பை சைபர் க்ரைம் என்று வெவ்வேறு துறை அதிகாரிகள் என்று கூறி, 'ஸ்கைப்' ஐடி கொடுத்து, அவற்றில் வீடியோ கால்களில் பேசியுள்ளனர். அதில் பேசியவர்கள், சுங்கத்துறை, போலீஸ் சீருடைகளிலும் இருந்துள்ளனர். ''அவர்கள்தான் இவரை டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருப்பதாகக் கூறி, வேறு யாரிடம் சொன்னாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது. உடனடியாக நேரில் வந்து கைது செய்து விடுவார்கள் என்று மிரட்டியுள்ளனர்” என்று விவரித்தார் ஊட்டி சைபர் க்ரைம் பிரிவு காவல் ஆய்வாளர் பிரவீணா. மேலும் ''அவர்கள் பேச்சு, நடவடிக்கை எதிலும் சந்தேகமே வராத அளவுக்கு, மிகவும் துணிச்சலாகவும், தெளிவாகவும் பேசியுள்ளனர். எல்லா நேரத்திலும் வீடியோ காலில் தொடர்பில் இருக்க வேண்டுமென்றும் கூறியதால், 8 நாட்களாக இவர் எங்குமே போகாமல் முடங்கியுள்ளார்.'' என்றார் பிரவீணா 'டங்ஸ்டன் திட்டம் நடந்தால் நான் பதவில் இருக்க மாட்டேன்' - சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் காட்டம்9 டிசம்பர் 2024 'அநீதிகளுக்கு எதிரான எனது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்' - விசிகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜூனா9 டிசம்பர் 2024 8 பரிவர்த்தனைகளில் பறிக்கப்பட்ட ரூ.16 லட்சம்! பட மூலாதாரம்,GETTY IMAGES பெற்றோர்களிடம் கூட சொல்லாமல் 8 நாட்களாக வீட்டை விட்டே வெளியேறாமல் இருந்துள்ளார் அந்தப் பெண். அந்த 8 நாட்களிலும் இயற்கை உபாதை கழிப்பது, குளிப்பது, உடை மாற்றுவது எல்லாவற்றுக்கும் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். பல நாட்கள் இப்படி மிரட்டியபின், தங்கள் கணக்கிலுள்ள பணத்தை, அவர்கள் கூறும் அக்கவுண்ட்டுக்கு அனுப்ப வேண்டுமென்று கூறியுள்ளனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மோசடியும் இதில் இருப்பதால், தவறு இல்லை என்று தெரிந்தபின்பே பணம் திருப்பி அனுப்பப்படும் என்று தெரிவித்து, அவரிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை தங்கள் கணக்கிற்கு மாற்றியுள்ளனர். இவ்வாறு மொத்தம் 8 பரிவர்த்தனைகளில் ரூ.15 லட்சத்து 90 ஆயிரத்தை அவர் மாற்றிக் கொடுத்துள்ளார் என்று அவர் ஏமாற்றப்பட்ட விதத்தை விளக்கினர் சைபர் க்ரைம் போலீசார். மொத்தப்பணத்தையும் அனுப்பிய பின், அவர்கள் கொடுத்த எண்களிலும் ஐடிகளிலும் அவர்களிடம் பேச முயன்றபோது யாரிடமும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதற்குப் பின்பே, தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார். சில நாட்களாக சரியாகப் பேசாமல், மிகவும் சோர்வுடனும், சோகத்துடனும் இருந்ததைப் பார்த்து, அவருடைய அப்பாவும், அம்மாவும் இதுபற்றி விசாரித்துள்ளனர். அதன்பின் முடிவெடுத்து, பல நாட்கள் கழித்தே புகார் தெரிவித்ததாக பிபிசி தமிழிடம் போலீசார் தெரிவித்தனர். ''பணத்தைச் செலுத்தியவுடனே ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வந்திருந்தால், மோசடி செய்த நபர்களின் கணக்கை முடக்கி பணத்தை மீட்டிருக்கலாம். குறிப்பாக 24 மணி நேரத்துக்குள் வந்திருந்தால் முழுதாகப் பணத்தை மீட்டிருக்க முடியும். இப்போதைக்கு அந்த வங்கிக் கணக்கை முடக்கியுள்ளோம்.'' என்று ஊட்டி சைபர் க்ரைம் பெண் காவலர் ஒருவர் தெரிவித்தார். பணம் அனுப்பப்பட்ட கணக்கை முடக்கினாலும் அதில் பணம் இருந்தால்தான் கோர்ட் உத்தரவை வைத்து, பணத்தை மீட்க முடியும். பணம் இல்லாவிட்டால் பணத்தை மீட்பதில் பெரும் சிரமம் இருப்பதையும் போலீசார் விளக்குகின்றனர். ஆயுள்கைதி தயாரித்த சோலார் ஆட்டோ - கோவை சிறையில் எப்படி பயன்படுகிறது?9 டிசம்பர் 2024 'தாயைப் பார்ப்பது போல் உணர வேண்டும்' - தெலங்கானா தல்லி சிலையை மாற்றிய காங்கிரஸ் அரசு9 டிசம்பர் 2024 ''நாங்கள் பள்ளிகள், கல்லுாரிகள், நிறுவனங்கள் என பல இடங்களிலும் இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். சமூக ஊடகங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வு குறிப்புகளைப் பரப்பி வருகிறோம். நாட்டின் பிரதமரே பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, இதுபற்றி தெளிவாகப் பேசியும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படாததுதான் இந்த மோசடி அதிகரிக்கக் காரணம்'' என்கிறார் கோவை சைபர் க்ரைம் பிரிவின் காவல் ஆய்வாளர் அருண். படித்தவர்களே அதிகமாக ஏமாறுகின்றனர் என்கிறார் ஊட்டி சைபர் க்ரைம் பிரிவு காவல் ஆய்வாளர் பிரவீணா. 'டிஜிட்டல் அரெஸ்ட்' அழைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்? கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் இணைய வழி மோசடிகள் தொடர்பாக 15 லட்சம் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக இந்திய சைபர் க்ரைம் ஒருங்கிணைப்பு அமைப்பின் தலைமை நிர்வாகி ராஜேஷ் குமார் தகவல் வெளியிட்டிருந்தார். அதற்கு முந்தைய ஆண்டில் 9.60 லட்சமாக இருந்ததாகவும், நடப்பாண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் இணைய வழி வர்த்தகம் என்ற பெயரில் ரூ.1420 கோடியும், முதலீட்டு மோசடியாக ரூ.222 கோடியும், ரொமான்ஸ் மோசடியால் ரூ.13.23 கோடியும் இந்திய மக்களிடம் இருந்து ஏமாற்றி பறிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தகவல் வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்ட தகவலின்படி, அந்த 4 மாதங்களில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடியில் ரூ.120 கோடியை பலர் இழந்துள்ளனர். இணைய வழி மோசடிகளில் ஏமாறாமலிருக்க சைபர் க்ரைம் போலீசார் கூறும் சில அறிவுரைகள்: * மோசடி நபர்கள் குறித்து தேசிய சைபர் கிரைம் உதவி எண் '1930'-ஐ தொடர்பு கொண்டு அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உடனே தகவல் தெரிவிப்பது அவசியம். * அரசுகளின் விசாரணை அமைப்பு அதிகாரிகள் ஒரு போதும் வங்கி விபரங்களைக் கேட்க மாட்டார்கள்; வாட்ஸ் ஆப், ஸ்கைப் போன்ற இணைய வழிகளில் தொடர்பு கொள்ள மாட்டார்கள். * இத்தகைய மிரட்டல் வந்தால் முதலில் அச்சப்படக்கூடாது. * விசாரணை அதிகாரி என்று பேசும் நபரிடம் துறை அலுவலக முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றைக் கேட்க வேண்டும். * இதுபோன்று மிரட்டல் வரும்போது, வங்கியை தொடர்பு கொண்டு தங்கள் வங்கிக் கணக்கை முடக்கி வைக்க வேண்டும். * முக்கியமாக அந்த அழைப்பு விபரங்கள், பணம் அனுப்பிய விபரங்கள், அவர்கள் அனுப்பிய தகவல்கள் ஆகியவற்றை ஆதாரங்களாக பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/c8781vzxwnro
  19. அசோக்க ரன்வலவின் கலாநிதி பட்டம் நீக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை 11 DEC, 2024 | 05:39 PM (நமது நிருபர்) பாராளுமன்ற உத்தியோகபூர்வ வலைத்தளத்தின் விபரத் திரட்டு கோவையில் சபாநாயகர் அசோக்க ரன்வலவின் கலாநிதி பட்டம் நீக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தில் உள்ளக மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. சபாநாயகர் அசோக்க ரன்வல தனது கலாநிதி பட்டத்தின் சான்றிதழை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும், அல்லது தவறை ஏற்றுக்கொண்டு கௌரவமான முறையில் பதவி விலக வேண்டும். நாட்டின் மூன்றாம் பிரஜையாக கருதப்படும் சபாநாயகர் ஒட்டுமொத்த மக்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது உத்தியோகபூர்வ முகப்பு புத்தகத்தில் கடந்த வாரம் ' சபாநாயகர் தனது கலாநிதி பட்டம் தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும். இல்லையேல் பதவி விலக வேண்டும்' என பதிவேற்றம் செய்திருந்தார். அதேபோல் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்னின்று செயற்பட்ட ஒருசில பேராசியிர்கள் மற்றும் சிவில் அமைப்பினர்கள் சபாநாயகரின் கலாநிதி பட்டத்தை சவாலுக்குட்படுத்தி தமது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் கேள்வியெழுப்பியிருந்தனர். இவ்வாறான பின்னணில் பொது நிகழ்வில் ஒன்றில் கலந்துக் கொண்டிருந்த சபாநாயகர் அசோக்க ரன்வலவிடம் இவ்விடயம் குறித்து ஊடகங்கள் வினவிய போது தன்னிடம் இரண்டு கலாநிதி பட்டங்கள் இருப்பதாகவும், முன்வைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு தற்போது பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று குறிப்பிட்டிருந்தார். சபாநாயகரின் கலாநிதி பட்டம் அரசியல் களத்தில் பிரதான பேசுபொருளானதன் பின்னர் பாராளுமன்ற உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் பாராளுமன்றத்தில் விபரகோவை பகுதியில் 'கலாநிதி கௌரவ அசோக்க ரன்வல' என்ற பதிவு நீக்கப்பட்டு 'கௌரவ சபாநாயகர் அசோக்க ரன்வல' என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. சபாநாயகராக அசோக ரன்வல்ல தெரிவு செய்யப்பட்டமை குறித்து பாராளுமன்ற ஊடக பிரிவு 2024.11.21 ஆம் திகதியன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் 'அசோக்க ரன்வெல, மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் தொடர்பில் இரசாயனவியல் தொடர்பான பொறியியல் பட்டத்தையும், ஜப்பானின் வஷேடா பல்கலைக்கழகத்தில் உயிரியல் தொடர்பில் கலாநிதி பட்டத்தை முழுமைப்படுத்தியுள்ளதாக' குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் கேள்வியெழுப்பியதை தொடர்ந்து ஒன்று சபாநாயகர் தனது கலாநிதி பட்டத்துக்கான சான்றிதழை பகிரங்கப்படுத்த வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். சபாநாயகர் அசோக்க ரன்வல ஜப்பான் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தை பூர்த்தி செய்ததாக குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.நாட்டு மக்களுக்கு தவறான கல்வி தகைமையை குறிப்பிட்டுள்ளமை ஒழுக்கமற்றது. ஆகவே சபாநாயகர் உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும். நாட்டின் மூன்றாம் பிரஜையாக கருதப்படும் சபாநாயகர் நாட்டு மக்களுக்கு உண்மையுடன் சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் சபாநாயகர் தொடர்பான விபர படிவத்தில் சபாநாயகரின் கலாநிதி பட்டம் நீக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பாராளுமன்றத்தின் உள்ளக மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. கல்வி தகைமை குறித்து இன்னும் ஓரிரு தினங்களின் சபாநாயகர் அறிவிப்பதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/201001
  20. தென் ஆபிரிக்காவிடம் 2ஆவது டெஸ்டில் 109 ஓட்டங்களால் தோல்வி அடைந்த இலங்கை, தொடரைப் பறிகொடுத்தது 09 DEC, 2024 | 03:38 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக போர்ட் எலிஸபெத், சென் ஜோர்ஜ் பார்க் கெபெர்ஹா விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 109 ஓட்டங்களால் தோல்வி அடைந்த இலங்கை, தொடரை 0 - 2 என பறிகொடுத்தது. இந்த வெற்றியுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் தென் ஆபிரிக்கா 63.33 சதவீத புள்ளிகளுடன் மீண்டும் முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஏற்கனவே 50.00 சதவீத புள்ளிகளுடன் 4ஆம் இடத்திலிருந்த இலங்கையின் சதவீத புள்ளிகள் 04.55 சதவீதத்தால் குறைந்துள்ளது. எனினும் 45.45 சதவீத புள்ளிகளுடன் தொடர்ந்தும் அதே இடத்தில் இருக்கிறது. அவுஸ்திரேலியா 60.71 சதவீத புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும் இந்தியா 57.29 சதவீத புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலும் இருக்கின்றன. இரண்டாவது போட்டியில் 348 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கையின் வெற்றிக்கு கடைசி நாளன்று மேலும் 143 ஓட்டங்களும் தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு 5 விக்கெட்களும் தேவைப்பட்டது. அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் கடைசி நாள் ஆட்டத்தை தலா 39 ஓட்டங்களுடன் தொடர்ந்தனர். அவர்கள் இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி இலங்கை அணிக்கு நம்பிக்கை ஊட்டிக்கொண்டிருந்தனர். ஆனால், மொத்த எண்ணிக்கை 219 ஓட்டங்களாக இருந்தபோது குசல் மெண்டிஸ் நிதானத்தை இழந்தவராக தனது விக்கெட்டை கேஷவ் மஹாராஜிடம் தாரைவார்த்தார். குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 103 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். குசல் மெண்டிஸ் 46 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் தனஞ்சய டி சில்வா (50) ஆட்டம் இழக்க இலங்கையிடம் இருந்த வெற்றிக்கான சொற்ப வாய்ப்பும் அற்றுப் போனது. கேஷவ் மஹாராஜ் கடைசியாக வீழந்த 5 விக்கெட்களில் நான்கை கைப்பற்றி தென் ஆபிரிக்காவுக்கு வெற்றியை வேளையோடு கிடைக்கச் செய்தார். எண்ணிக்கை சுருக்கம் தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 358 (கய்ல் வெரின் 105, ரெயான் ரிக்ல்டன் 101, டெம்பா பவுமா 78, லஹிரு குமார 79 - 4 விக்., அசித்த பெர்னாண்டோ 102 - 3 விக்., விஷ்வா பெர்னாண்டோ 65 - 2 விக்.) இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 328 (பெத்தும் நிஸ்ஸன்க 89, கமிந்து மெண்டிஸ் 48, தினேஷ் சந்திமால் 44, ஏஞ்சலோ மெத்யூஸ் 44, டேன் பெட்டர்சன் 71 - 5 விக்., கேஷவ் மஹாராஜ் 65 - 2 விக்., மார்க்கோ ஜென்சென் 100 - 2 விக்.) தென் ஆபிரிக்கா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 317 (டெம்பா பவுமா 66, ஏய்டன் மார்க்ராம் 55, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 47, டேவிட் பெடிங்டன் 35, ப்ரபாத் ஜயசூரிய 129 - 5 விக்., விஷ்வா பெர்னாண்டோ 47 - 2 விக்.) இலங்கை 2ஆவது இன்: - வெற்றி இலக்கு 348 ஓட்டங்கள் - சகலரும் ஆட்டம் இழந்து 238 (தனஞ்சய டி சில்வா 50, குசல் மெண்டிஸ் 46, கமிந்து மெண்டிஸ் 35, ஏஞ்சலோ மெத்யூஸ் 32, தினேஷ் சந்திமால் 29, கேஷ்வ் மஹாராஜ் 76 - 5 விக்., டேன் பெட்டர்சன் 33 - 2 விக்., கெகிசோ ரபாடா 63 - 2 விக்.) ஆட்டநாயகன்: டேன் பேட்டர்சன் தொடர்நாயகன்: டெம்பா பவுமா https://www.virakesari.lk/article/200815
  21. 19 வயதின் கீழ் ஆசிய கிண்ண கிரிக்கெட் சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது பங்களாதேஷ் 08 DEC, 2024 | 11:58 PM (நெவில் அன்தனி) துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 59 ஓட்டங்களால் வெற்றிபெற்ற பங்களாதேஷ் சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை 195 ஓட்டங்களால் வெற்றிகொண்டு பங்களாதேஷ் சம்பியனாகியிருந்தது. இந்த வருடம் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனான பங்களாதேஷ் இளையோர் அணிக்கு இலங்கையின் நவீத் நவாஸ் பயிற்சி அளித்து வருகின்றார். நான்கு வருடங்களுக்கு முன்னர் 19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷ் சம்பியனானபோதும் நவீத் நவாஸ் பயிற்றுநராக இருந்தமை குறிப்பிட்டத்தக்கது. இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 49.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது. மொஹம்மத் ஷிஹாப் ஜேம்ஸ் (40), ரிஸான் ஹொசெய்ன் (47) ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 62 ஓட்டங்கள் பங்களாதேஷை நல்ல நிலையில் இட்டது. அவர்களை விட பரித் ஹசன் 39 ஓட்டங்களையும் ஸவாத் அப்ரார் 20 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் யூதாஜித் குஹா 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹார்திக் ராஜ் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சேத்தன் ஷர்மா 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 199 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 35.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 139 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இந்திய துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் மொஹம்மத் அமான் (26), ஹார்திக் ராஜ் (24), கே.பி. கார்த்திகேயா (21), சி. அண்ட்றே சித்தார்த் (20) ஆகிய நால்வரே 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் அஸிஸுல் ஹக் 8 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் இக்பால் ஹொசெய்ன் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அல் பஹாத் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் பங்களாதேஷ் பந்துவீச்;சாளர் இக்பால் ஹொசெய்ன் வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/200760
  22. இந்தியாவை 10 விக்கெட்களால் வென்ற அவுஸ்திரேலியா, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முன்னிலை 08 DEC, 2024 | 04:59 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கு எதிராக அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்களால் அவுஸ்தேரேலியா இலகுவாக வெற்றிபெற்றது. அவுஸ்திரேலிய அணித் தலைவர் பெட் கமின்ஸ் மிகத் திறமையாக பந்துவீசி 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து தனது அணியின் வெற்றியை எளிதாக்கினார். இரண்டாவது போட்டி முடிவுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1 - 1 என சமப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெற்றியை அடுத்து ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் அவுஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறியதுடன் முதலிடத்தில் இருந்துவந்த இந்தியா 3ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் தென் ஆபிரிக்கா இப்போதைக்கு 2ஆம் இடத்தில் இருக்கிறது. இரண்டரை தினங்கள் கூட தாக்குப்பிடிக்காத அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்க 128 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இந்தியா சகல விக்கெட்களையும் இழந்து 175 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இந்தியாவின் கடைசி 5 விக்கெட்களில் 47 ஓட்டங்களே பெறப்பட்டது. முதலாவது இன்னிங்ஸில் போன்றே நிட்டிஷ் குமார் ரெட்டி 42 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். இவர் முதல் இன்னிங்ஸிலும் இதே எண்ணிக்கையையே பெற்றார். ரிஷாப் பான்ட், ஷுப்மான் கில் ஆகியோர் தலா 28 ஓட்டங்களையும் யஷஸ்வி ஜய்ஸ்வால் 24 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 57 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். தனது 64ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய பெட் கமின்ஸ் 13ஆவது தடவையாக 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தார். கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 180 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 337 ஓட்டங்களைக் குவித்தது. ட்ரவிஸ் ஹெட் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அபார சதம் குவித்தார். முதல் இன்னிங்ஸில் நிறைவில் 157 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த இந்தியா, இரண்டாவது இன்னிங்ஸில் 175 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனைத் தொடர்ந்து 19 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 3.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. எண்ணிக்கை சுருக்கம் இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 180 (நிட்டிஷ் குமார் ரெட்டி 42, கே.எல். ராகுல் 37, ஷுப்மான் கில் 31, மிச்செல் ஸ்டாக் 48 - 6 விக்., பெட் கமின்ஸ் 41 - 2 விக்., ஸ்கொட் போலண்ட் 54 - 2 விக்.) அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 337 (ட்ரவிஸ் ஹெட் 140, மானுஸ் லபுஷேன் 64, நேதன் மெக்ஸ்வீனி 39, ஜஸ்ப்ரிட் பும்ரா 61 - 4 விக்., மொஹமத் சிராஜ் 98 - 4 விக்.) இந்தியா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 175 ( நிட்டிஷ் குமார் ரெட்டி 42, ஷுப்மான் கில் 28, ரஷாப் பான்ட் 28, பெட் கமின்ஸ் 57 - 5 விக்., ஸ்கொட் போலண்ட் 51 - 3 விக்., மிச்செல் ஸ்டாக் 60 - 2 விக்.) அவுஸ்திரேலியா 2ஆவது இன்: - வெற்றி இலக்கு 19 ஓட்டங்கள் - விக்கெட் இழப்பின்றி 19. ஆட்டநாயகன்: ட்ரவிஸ் ஹெட் https://www.virakesari.lk/article/200745
  23. சிரியாவின் புதிய அரசின் பிரதமராக முகமது அல் பஷீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே முக்கியத் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், அடுத்தாண்டு மார்ச் ஒன்றாம் தேதி வரை இடைக்கால அரசு செயல்படும் என்று அறிவித்தார். அபு முகமது அல் கோலனி தலைமையிலான கிளர்ச்சி படைகள், கடந்த சில நாள்களாக முன்னேறி, தலைநகர் டமாஸ்கஸை கடந்த 8 ஆம் தேதி அடைந்தன. அப்போது அந்நாட்டு அதிபர் பஷார் அசாத், ரஷ்யா தப்பிச் சென்றார். இப்படியான சூழலில், சிரியா தங்கள் கட்டுபாட்டுக்குள் வந்ததாக கிளர்ச்சி படைகள் அறிவித்த நிலையில், அரசாங்கம் கிளர்ச்சிப் படைகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/313543
  24. 09 DEC, 2024 | 02:08 PM (நெவில் அன்தனி) ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 20.04 செக்கன்களில் ஓடி முடித்ததன் மூலம் அரை நூற்றாண்டு நீடித்த அவுஸ்திரேலியா மற்றும் ஓஷானியா சாதனையையும் 16 வயதுடையோருக்கான யுசெய்ன் போல்டின் சாதனையையும் அவுஸ்திரேலியாவின் கௌட் கௌட் முறியடித்து புதிய சாதனை நிலைநாட்டினார். அவுஸ்திரேலிய அனைத்துப் பாடசாலைகள் சம்பியன்ஷிப் போட்டியிலேயே கௌட் கௌட் (Gout Gout) இந்த புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். ஆண்களுக்கான 200 ஓட்டப் போட்டியில் 1968ஆம் ஆண்டு பீட்டர் நோமன் நிலைநாட்டிய ஓஷானியாவுக்கான (கடல்சூழ் நாடுகள்) 20.06 செக்கன்கள் என்ற சாதனையை முறியடித்த கௌட் கௌட், 2003ஆம் ஆண்டு யுசெயன் போல்டினால் நிலைநாட்டப்பட்ட 16 வயதுடையவர்களுக்கான 20.13 செக்கன்கள் என்ற உலக சாதனையையும் முறியடித்து வரலாறு படைத்தார். 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலக அரங்க 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரண்டாவது அதிசிறந்த நேரப் பெறுதியை அவர் கொண்டுள்ளார். ஏரியொன் நைட்டன் என்பவரே 19.84 செக்கன்கள் என்ற அதிசிறந்த நேரப் பெறுதியைக் கொண்டுள்ளார். கடந்த சனிக்கிழமை இந்த சாதனையை நிலைநாட்டிய கௌட் கௌட், அதற்கு ஒரு தினத்திற்கு முன்னர் 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.17 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார். இப் போட்டிக்கான தகுதிகாண் சுற்றை ஒரு செக்கனுக்கு 3.4 மீற்றர் நேர்த்திசை காற்று வேக உதவியுடன் 10.04 செக்கன்களில் கௌட் கௌட் நிறைவுசெய்திருந்தார். 'இந்த நேரப் பெறுதிகள் வயது வந்தவர்களுக்கானது. நான் ஒரு சிறுவனாக அதே நேரங்களில் ஓடுகின்றேன். அவை எனக்கு மிகச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்கும் என உறுதியாக நம்புகிறேன்' என மிக நீண்டகால அவுஸ்திரேலிய சாதனையை முறியடித்த பின்னர் கௌட் கௌட் தெரிவித்தார். 'என்னால் செய்ய முடியும் என்பதை நான் இப்போது செய்துள்ளேன். நான் எதையாவது செய்ய வேண்டும் என எனக்குள்ளே கூறிக்கொண்டால் அதை செய்துமுடிக்கும் வரை எனது முயற்சி தொடரும்' என அவர் மேலும் கூறினார். அவுஸ்திரேலிய அனைத்து பாடசாலைகள் சம்பியன்ஷிப்புக்கு முன்பதாக கௌட் கௌட்டின் அதிசிறந்த நேரப் பெறுதிகள் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் 10.29 செக்கன்களாகவும் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் 20.29 செக்கன்களாகவும் இருந்தது. சூடானிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த பெற்றோருக்கு குவின்ஸ்லாந்தின் இஸ்ப்விச் நகரில் 2007 டிசம்பர் 29ஆம் திகதி பிறந்த கௌட் கௌட், ஆரம்பத்தில் கால்பந்தாட்டத்தில் ஈடுபாடு காட்டினார். கிறிஸ்டியானோ ரொனால்டோ அவரது விருப்பத்திற்குரிய கால்பந்தாட்ட வீரராவார். ஆனால், காலப்போக்கில் அவர் மெய்வல்லுநர் விளையாட்டைத் தேர்ந்தெடுத்ததுடன் மூன்று வருடங்களில் அவுஸ்திரேலியாவின் அதிசிறந்த இளைய குறுந்தூர ஓட்ட மன்னனாக உருவெடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/200806
  25. வடக்கு மாகாணத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை வடக்கில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கள்ம் கூறியுள்ளது. குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுவதுடன் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் தமிழக கடற்கரையை நெருங்க வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 100 மி.மீ க்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா,மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. https://thinakkural.lk/article/313560

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.