Everything posted by ஏராளன்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரைன் குறித்த தனது இலக்குகளை அடையும் நிலையில் ரஸ்யா - புலனாய்வு பிரிவு 11 DEC, 2024 | 07:41 AM ரஸ்யா உக்ரைன் குறித்த தனது இலக்குகளை அடையும் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வெளிநாட்டு புலனாய்வின் தலைவர் சேர்கேய் நரிஸ்கின் தெரிவித்துள்ளார். அனைத்து பகுதிகளிலும் மூலோபாயரீதியிலான முன்முயற்சி எங்களிற்கு சாதகமாக உள்ளது, எங்கள் இலக்குகளை அடையும் நிலையில் உள்ளோம் என தெரிவித்துள்ள அவர் உக்ரைன் படையினர் வீழும் நிலையில் உள்ளனர் என தெரிவித்துள்ளார். ரஸ்யாவை பொறுத்தவரை உக்ரைன் ஜனாதிபதி தனது நியாயபூர்வ தன்மையையும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான திறiனையும் இழந்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். ரஸ்யாவின் வெளிநாட்டு புலனாய்வு பிரிவின் தலைவரின் கருத்துக்கள் கிரெம்ளினின் சிந்தனைகளை வெளிப்படுத்துபவை என்பது குறிப்பிடத்தக்கது https://www.virakesari.lk/article/200947
-
சர்ச்சைக்குள்ளான சபாநாயகரின் கலாநிதி பட்டம்!
சபாநாயகருடனான தொடர்புகளை இராஜதந்திர சமூகங்கள் புறக்கணிக்க வேண்டும் - கீதநாத் தெரிவிப்பு 11 DEC, 2024 | 03:59 PM சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் "கலாநிதி ” பட்டம் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் சபாநாயகருடனான தொடர்புகளைப் பேணுவதை இராஜதந்திர சமூகங்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்தார். இது குறித்து கீதநாத் காசிலிங்கம் கூறுகையில், சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் "கலாநிதி ” பட்டம் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியள்ளனர். சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுடன் தொடர்புகளைப் பேணுவதை இராஜதந்திர சமூகங்கள் புறக்கணிக்க வேண்டும். சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனக்கு "கலாநிதி” பட்டம் கழங்கியதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர் கலாநிதி பட்டம் பெறவில்லை. நாட்டின் சபாநாயகர் தனது தகுதிகளைத் தவறாகச் சித்தரித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுக்கள் உரிய முறையில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்று தாம் நம்புவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர் என்றார். https://www.virakesari.lk/article/200998
-
கலாச்சாரப் பாதுகாப்பிற்கான அமெரிக்கத் தூதுவர்கள் நிதியத்தினால் மறுசீரமைக்கப்பட்ட கண்டி அரசர்களின் அரண்மனை
11 DEC, 2024 | 05:27 PM புதிதாக மறுசீரமைக்கப்பட்ட பழைய கண்டி அரசர்களின் அரண்மனை மற்றும் தொல்பொருள் நூதனசாலை ஆகியவற்றினை மீண்டும் திறந்து வைக்கும் நிகழ்வை கலாச்சார அமைச்சு மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றின் பங்காண்மையுடன் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் பெருமையுடன் கொண்டாடியது. அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் பேராசியர் ஹினிதும சுனில் செனவி ஆகியோர் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர். கலாச்சாரப் பாதுகாப்பிற்கான அமெரிக்கத் தூதுவர்கள் நிதியத்தினால் வழங்கப்பட்ட 265,000 அமெரிக்க டொலர்கள் (ரூ.77 மில்லியனுக்கும் அதிகமான) மானியத்தின் காரணமாக இந்த முக்கியமான கலாச்சாரப் பாதுகாப்புச் செயற்திட்டம் சாத்தியமானது. 2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்செயற்திட்டமானது இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது. முதலாம் கட்ட நடவடிக்கைகளின் போது அரசர்களின் அரண்மனையின் வரலாற்று அடிப்படைக் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதிலும், பார்வையிடுவதற்காக வருகை தரும் மாற்றுத்திறனுடைய விருந்தினர்களுக்கான அணுகலை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் வளமான கலாச்சார மரபுரிமையினைப் பாதுகாக்கும் அதேவேளை பார்வையிட வருகைதரும் விருந்தினர்களுக்கு மிகவும் ஈடுபாட்டுடன் கூடிய மற்றும் கற்றல் நிறைந்த ஒரு அனுபவத்தை வழங்கும் வகையில் தொல்பொருள் நூதனசாலையின் காட்சியமைப்புகள் மற்றும் வசதிகளை இரண்டாம் கட்டம் மேம்படுத்தியது. வைபவத்தில் கலாச்சாரப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தினை அடிக்கோடிட்டுக்காட்டிய தூதுவர் ஜுலீ சங் “பழைய கண்டி அரசர்களின் அரண்மனை மற்றும் தொல்பொருள் நூதனசாலை ஆகியவற்றின் மறுசீரமைப்பானது அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையில் காணப்படும் பங்காண்மையின் சக்திக்கான ஒரு சான்றாகும். இவ்வாறான முன்முயற்சிகளூடாக, இலங்கையின் கலாச்சார மரபுரிமைகளை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பது மட்டுமன்றி, அதன் வரலாற்றையும் பாரம்பரியங்களையும் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறோம். இந்த நூதனசாலை கலாச்சார சுற்றுலாவிற்கு ஆதரவாக விளங்கும் அதே வேளை புரிந்துணர்வை வளர்த்து இலங்கையர்கள் மற்றும் உலகளாவிய சுற்றுலாப்பயணிகள் ஆகிய இருசாராருமே இலங்கை வரலாற்றின் ஆழத்தைப் பார்வையிடுவதற்கான ஒரு நுழைவாயிலாகவும் அமைகிறது. இலங்கையின் மரபுரிமைகளை கொண்டாடுகின்ற மற்றும் அதன் பொருளாதார மற்றும் கலாச்சார செழிப்பிற்குப் பங்களிப்புச் செய்யும் செயற்திட்டங்களில் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்.” எனத் தெரிவித்தார். “கலாச்சாரப் பாதுகாப்பிற்கான தூதுவர்கள் நிதியத்தின் ஊடாக அமெரிக்காவினால் நிதியுதவி வழங்கப்பட்ட இச்செயற்திட்டமானது, கண்டி அரசர்களின் அரண்மனை மற்றும் தொல்பொருள் நூதனசாலை ஆகியவற்றை பொதுமக்களுக்கு மிகவும் அணுகக்கூடியதாகவும் செழிப்பானதாகவும் ஆக்கியுள்ளதென” அமைச்சர் பேராசிரியர் சுனில் செனவி தெரிவித்தார். “வரலாற்றுச் சிறப்புமிக்க உட்கட்டமைப்புகளை பாதுகாப்பதன் மூலமும், நூதனசாலையின் அருங்காட்சியகத்தின் காட்சியமைப்புகளை மேம்படுத்துவதன் மூலமும், மாற்றுத்திறனாளிகள் உட்பட நூதனசாலையினைப் பார்வையிட வருகை தரும் விருந்தினர்கள் அனைவரும் இலங்கையின் கலாச்சார மரபுரிமையுடன் ஒரு அர்த்தமுள்ள தொடர்பினை ஏற்படுத்துவதற்கான இயலுமையினை நாங்கள் உறுதி செய்துள்ளோம். இவ்வொத்துழைப்பானது எமது வரலாற்றினைப் பாதுகாப்பது மட்டுமன்றி, எமது கலாச்சார அடையாளத்தினை இலங்கைக்கும் உலகிற்கும் எடுத்துக்காட்டும் விதத்தில் அந்த வரலாற்றினைக் கற்றுக்கொள்வதற்கும், அதை நயப்பதற்குமான ஒரு வெளியினையும் உருவாக்குகிறது.” என அவர் மேலும் குறிப்பிட்டார். கலாச்சாரப் பாதுகாப்பிற்கான தூதுவர்கள் நிதியமானது கலாச்சார மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமெரிக்காவின் உலகளாவிய அர்ப்பணிப்பில் ஒரு மிகவும் இன்றியமையாத சாதனமாகும் என வலியுறுத்திய இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பொது அலுவல்களுக்கான ஆலோசகர் ஹைடி ஹட்டன்பக், “கலாச்சாரப் பாதுகாப்பிற்கான தூதுவர்கள் நிதியத்தினூடாக கண்டி அரசர்களின் அரண்மனையினை மறுசீரமைத்தமையானது, நிலைபேறான சுற்றுலாத்துறையினையும் பொருளாதார வளர்ச்சியினையும் மேம்படுத்தும் அதேவேளை இலங்கையின் கலாச்சார மரபுரிமைகளையும் பாதுகாப்பதற்கான எமது உறுதிப்பாட்டிற்கான ஒரு சான்றாகும். இவற்றைப் பாதுகாப்பதற்கான பணியானது, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு கண்டி இராச்சியத்தின் வளமான வரலாறு மற்றும் மரபு பற்றிய மிகவும் ஆழமான மற்றும் அர்த்தமுள்ள ஒரு அனுபவத்தை வழங்கும் வகையில் இத்தலத்தை மேம்படுத்துகிறது.” எனக் குறிப்பிட்டார். கலாச்சாரப் பாதுகாப்பிற்கான அமெரிக்கத் தூதுவர்கள் நிதியம் (AFCP) பற்றி: கலாச்சாரப் பாதுகாப்பிற்கான அமெரிக்கத் தூதுவர்கள் நிதியமானது (AFCP) கடந்த 23 வருடங்களாக உலகளாவிய ரீதியில் 140இற்கும் மேற்பட்ட நாடுகளில் கலாச்சாரப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு உதவி செய்துள்ளது. 2001ஆம் ஆண்டு முதல் இலங்கையில் குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பாதுகாப்பதற்கான 17 செயற்திட்டங்களில் இலங்கையின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் பல்வேறு சமயம்சார்ந்த சமூகங்களுடன் அமெரிக்கா ஒத்துழைப்புடன் பணியாற்றியுள்ளது. அமெரிக்க மக்களிடமிருந்து வழங்கப்பட்ட 1.3 மில்லியன் டொலர்கள் பெறுமதியுடைய நிதியுதவியினால் உதவி செய்யப்பட்ட இம்முன்முயற்சிகளுள், ரஜகல பௌத்த வன மடாலயத்தினை பாதுகாத்தல், அனுராதபுரம் தொல்பொருள் நூதனசாலையிலுள்ள சேகரிப்புகளைப் பாதுகாத்தல், மட்டக்களப்பு டச்சுக் கோட்டையினை மறுசீரமைத்தல் என்பனவும் உள்ளடங்குகின்றன. இப்பாதுகாப்பு முயற்சிகள் தரையினையும் தாண்டி விரிவடைகின்றன. ஹம்பாந்தோட்டை கடற்பகுதியில் காணப்படும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் காணப்படும் மிகவும் பழமை வாய்ந்த கப்பல் சிதைவான கொடவாய கப்பல் சிதைவினை பாதுகாப்பதற்கு AFCP ஊடாக அமெரிக்கா உதவி செய்கிறது. இரு நாடுகளுக்குமிடையே ஆழமான தொடர்புகளை வளர்க்கும் அதேவேளை இலங்கையின் வளமான கலாச்சார மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மரபுரிமைகளை பாதுகாப்பதில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாட்டினை இச்செயற்திட்டங்கள் பிரதிபலிக்கின்றன. https://www.virakesari.lk/article/201000
-
திடீர் காய்ச்சலால் யாழ்.போதனாவில் மூவர் உயிரிழப்பு
யாழில் இனங்காணப்படாத காய்ச்சல் பரவி வருவதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவிப்பு 11 DEC, 2024 | 02:18 PM யாழ். மாவட்டத்தில் இனங்காணப்படாத காய்ச்சல் பரவி வருவதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த நிலை எலிக்காய்ச்சலா என்பதை உறுதிப்படுத்துவதற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தொற்றுநோயியல் திணைக்களத்தின் வைத்தியர் குமுது வீரகோன் கூறுகிறார். எலிக்காய்ச்சல் மேலும் பரவும் அபாயம் தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று புதன்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அப்பகுதிகளில் காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், தற்போது சம்பந்தப்பட்ட காய்ச்சல் நோயாளிகளின் மாதிரிகளை எடுத்து பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2023ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 9,000க்கும் மேற்பட்ட எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவர்களில் கிட்டத்தட்ட 200 பேர் இறந்தனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருட காலப்பகுதியில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நெல் விவசாயம் தொடர்பான சேறு மற்றும் நீர் தொடர்பான பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், நெல் வயல் மற்றும் நீர் தொடர்பான பிற கடமைகளில் அடிக்கடி ஈடுபடுபவர்கள், சுரங்கங்கள் மற்றும் நீர் தொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்கள் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம். வாந்தி, தலைவலி, உடல் பலவீனம், சிறுநீரில் இரத்தம், சிறுநீர் கழித்தல் குறைதல் போன்றவற்றுடன் கடுமையான காய்ச்சல், கடுமையான தசைவலி மற்றும் கண் சிவத்தல் ஆகியவை எலிக் காய்ச்சலின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தொடர்ந்தால், ஆரம்பகால சிகிச்சையானது நோயின் தீவிர நிலையை அடைவதைத் தடுக்கலாம். இல்லையெனில், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தலாம். மேலும் மரணம் கூட ஏற்படலாம். வயல் மற்றும் நீர் தொடர்பான வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் மக்களுக்கு சுகாதார அமைச்சினால் நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகள் வழங்கப்படுவதாகவும், அதற்கமைய அவர்களின் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர் உரிய நுண்ணுயிர் எதிர்ப்பிகளை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என்றார். இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையில் கடத்த சில நாட்களில் மர்ம காய்ச்சலால் ஐவர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் திடீர் காய்ச்சல் காரணமாக போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் காய்ச்சலால் 30 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/200989
-
இலங்கையில் திடீரென அதிகரித்த விலைவாசி - ரூ 260க்கு விற்கப்படும் ஒரு கிலோ அரிசி
படக்குறிப்பு, அரிசி, வெங்காயம், தேங்காய் உள்ளிட்ட சில பொருட்களுக்கான விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதுடன் பொருட்களுக்கான தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. இலங்கையில் கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காலப் பகுதியில் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டு, தட்டுப்பாடு நிலவிவந்த பின்னணியில், கடந்த இரண்டு வருடங்களில் பொருட்களின் தட்டுப்பாடு படிப்படியாக குறைந்தது. விலைகளிலும் வீழ்ச்சி காணப்பட்டது. இந்தநிலையில் தற்போது மீண்டும் விலைவாசி உயந்துள்ளது. குறிப்பாக அரிசி, வெங்காயம், தேங்காய் உள்ளிட்ட சில பொருட்களுக்கான விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு நிலவி வருவதை காண முடிகின்றது. இலங்கையில் புதிதாக ஆட்சி பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நாட்டில் எதிர்கொள்ளும் பிரதான சவால் மிகுந்த விடயமாக இந்த அரிசி, தேங்காய் விலையேற்றம் காணப்படுகின்றது. இந்தநிலையில், எதிர்வரும் நத்தார் தினம், புதுவருடம் மற்றும் தைப்பொங்கல் காலப் பகுதிக்குள் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எனினும், இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் கடந்த நவம்பர் மாதம் முதல் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஆனால், இந்த பிரச்னைக்கான சரியான தீர்வு இன்று வரை கிடைக்கவில்லை. ஆற்று வெள்ளத்தில் சிக்கிய குடும்பம் - 17 மணிநேரம் மரக்கிளையை பிடித்து உயிர் தப்பிய தாய்-மகன்; தந்தைக்கு நேர்ந்த துயரம்10 டிசம்பர் 2024 படக்குறிப்பு, இலங்கையில் நாட்டரிசி என்பது வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் அரிசி வகையாகும். தற்போது அரிசி விலைகளின் பட்டியல் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் 200 ரூபாவிற்கு (இலங்கை ரூபாய்) விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டரிசி தற்போது 260 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்ற போதிலும், நாட்டரிசிக்கான தட்டுப்பாடு சந்தையில் இன்றும் காணப்படுகின்றது. இலங்கையில் நாட்டரிசி என்பது வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் அரிசி வகையாகும். கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் 190 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பச்சரிசி தற்போது 250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன், 240 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சம்பா அரிசி, தற்போது 260 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. 290 ரூபாவிற்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கீரி சம்பா அரிசி, தற்போது 280 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. சாதாரண மக்கள் பயன்படுத்தும் நாட்டரிசி மற்றும் பச்சரிசி ஆகியவற்றின் விலைகளே அதிகரித்து காணப்படுகின்றது. அத்துடன், 100 முதல் 130 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட தேங்காய் ஒன்றின் தற்போதைய விலை, 180 ரூபா முதல் 220 ரூபா வரை காணப்படுகின்றது. கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயம், நாட்டில் சில இடங்களில் 510 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. காய்கறி வகைகள் மற்றும் மீன்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன. ஜார்ஜ் சோரோஸ்: காங்கிரஸ், சோனியா காந்திக்கு எதிராக பாஜக பயன்படுத்தும் இவர் யார்?10 டிசம்பர் 2024 குகேஷ்: பொழுதுபோக்காக செஸ் ஆடத் தொடங்கி உலக சாம்பியன்ஷிப் போட்டி வரை சென்ற இவர் யார்?10 டிசம்பர் 2024 படக்குறிப்பு, ஒரு தேங்காய் 200 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது கடந்த காலங்களில் மழையுடனான வானிலை மற்றும் புயல் காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்ற நிலையில், எதிர்வரும் ஓரிரு வாரங்களில் காய்கறி மற்றும் மீன் வகைகளின் விலைகள் குறைவடையும் என நம்பிக்கை வெளியிடுகின்றனர். பொருட்கள் விலைகள் மற்றும் பொருட்களுக்கான தட்டுப்பாடு தொடர்பில் பொதுமக்கள் இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்கின்றனர். ''நாட்டில் பொருட்களே இல்லை. அரிசி இல்லை. தேங்காய் இல்லை. தேங்காய் இருந்தாலும் 200 ரூபா வரை விற்கின்றார்கள். தெரிந்த கடைகளில் கேட்டால் மாத்திரமே அரிசி தருகின்றார்கள். இல்லையென்றால், அரிசி இல்லை. சம்பளம் கிடைத்த அடுத்த நாள் கையில் ஒன்றும் இல்லை. வாங்கிய கடனை கொடுப்பதற்கே சரியாக இருக்கின்றது. அடுத்த மாதத்தில் இன்னும் கொஞ்சம் கடனில்தான் ஓட வேண்டியிருக்கின்றது." என யாழ்ப்பாணத்தில் வசிக்கும் குடும்ப தலைவியான பிரசாந்த் புகலினி தெரிவிக்கின்றார். ''பொருட்கள் தட்டுப்பாடு இருக்கின்றது. விலைகளிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளன. சாதாரணமாக வாழகூடிய சூழ்நிலை இன்று மக்களுக்கு இல்லை. பொருட்கள் விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை. இன்று பொருட்களும் இல்லை. விலையும் அதிகமாக காணப்படுகின்றது." என வெலிமடை பகுதியைச் சேர்ந்த சத்திவேல் கோகுலன் தெரிவிக்கின்றார். சிரியா: பஷர் அல்-அசத்தின் வீழ்ச்சி ரஷ்யாவின் கெளரவத்திற்கு விழுந்த பெரிய அடியா?10 டிசம்பர் 2024 ஆதவ் அர்ஜுனா இடை நீக்கம்: திருமாவளவனின் முடிவுக்கு என்ன காரணம்? கூட்டணி கணக்குகள் மாறுபடுமா?10 டிசம்பர் 2024 ''டிசம்பர் காலப் பகுதியில் கட்டாயம் காய்கறியின் விலை அதிகரிக்கும். காரணம், மழையுடனான காலநிலை ஏற்படுகின்றமையினால், அது சாதாரணமாக நடக்கின்ற ஒன்று. ஆனால், அரிசி விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாட்டில் எங்களுக்கு நிறையவே சந்தேகம் இருக்கின்றது.'' என கண்டியைச் சேர்ந்த குமாரவேல் கணேஷ் பிபிசி தமிழுக்கு குறிப்பிடுகின்றார். ''சம்பளம் கூடவில்லை. அதனால், இந்த விலை அதிகரிப்பு வாழ்க்கையில் பாரியளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரிசி, தேங்காய் என்பது ஆக அடிப்படையாக இருக்கக்கூடிய ஒருவரின் தேவை. சம்பா அல்லது பாசுமதி அரிசி விலை கூடியிருந்தால், பிரச்னை இல்லை. ஆனால், ஏழைகளின் அரிசியான நாட்டரிசியின் விலையே கூடியுள்ளது. அது நேரடியாகவே மக்களின் வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுகின்றது." என்கிறார் அவர் பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் பொருட்களுக்கான விலை அதிகரிப்பு குறித்து, கண்டி பகுதியைச் சேர்ந்த வர்த்தகரான யோகா பிபிசி தமிழுக்கு கருத்து வெளியிட்டார். ''வியாபாரம் நல்ல போகின்றது. ஆனால், விலைதான் அதிகரித்துள்ளன. அரிசி தட்டுப்பாடு இருந்தது. இப்போது அரிசி தட்டுப்பாடு குறைந்துள்ளது" என அவர் கூறுகின்றார். ஒரு கிலோ நாட்டரிசியை அரிசி ஆலை உரிமையாளர்கள் தமக்கு 245 ரூபாவிற்கு விற்பனை செய்வதாகவும், அந்த அரிசியை கொண்டு வருவதற்கான செலவு மற்றும் நுகர்வோருக்கு வழங்கும் போது அதற்கான பைகளை வழங்குவதற்கான செலவுகள் என்பது உள்ளடக்கப்படும் பட்சத்தில் 260 ரூபா செலவு காணப்படுகின்றது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். எனினும், அதற்கு மேல் லாபத்தை வைத்து விற்பனை செய்ய முடியாத சூழ்நிலையில், எந்தவித லாபமும் இன்றி 260 ரூபாவிற்கே அரிசியை விற்பனை செய்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் 'டங்ஸ்டன் திட்டம் நடந்தால் நான் பதவில் இருக்க மாட்டேன்' - சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் காட்டம்9 டிசம்பர் 2024 'தாயைப் பார்ப்பது போல் உணர வேண்டும்' - தெலங்கானா தல்லி சிலையை மாற்றிய காங்கிரஸ் அரசு9 டிசம்பர் 2024 படக்குறிப்பு, கண்டியைச் சேர்ந்த குமாரவேல் கணேஷ் அரிசி பிரச்னைக்கு தலையீடு செய்த ஜனாதிபதி அரிசி பிரச்னைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலையீடு செய்துள்ளார். இதன்படி, நாட்டரிசி ஒரு கிலோவுக்கான மொத்த விற்பனை விலையாக 225 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், சில்லறை விலையாக 230 ரூபா ஜனாதிபதியினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். எதிர்வரும் 10 நாட்களுக்கு இந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதுடன், தமது தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி இந்த சந்திப்பின் போது கூறியுள்ளார். ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை அடுத்து, சந்தையில் நேற்று வரை காணப்பட்ட அரிசிக்கான தட்டுப்பாடு இன்றைய தினத்தில் ஓரளவு குறைந்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/cwy8ddqy9exo
-
பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பன தொடர்பில் அவசியமான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் - நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்
11 DEC, 2024 | 09:55 AM (இராஜதுரை ஹஷான்) பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பன தொடர்பில் அவசியமான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தான் வலுவாக நம்புவதாக தெரிவித்துள்ள நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, தாம் பெரும்பான்மை ஆணையை பெற்றிருப்பதை காரணம் காட்டி தன்னிச்சையாக செயற்பட மாட்டோம் எனவும், சகல தரப்பினரதும் ஆலோசனைகளை பெற்று முன்னகர்வோம் எனவும் குறிப்பிட்டார். சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு 'சர்வஜன நீதி' அமைப்பினால் நேற்று செவ்வாய்க்கிழமை (10) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பலஸ்தீனத்துக்கும், இலங்கைக்கும் இடையில் நீண்டகால நல்லுறவு காணப்படுகிறது. ஆகவே பலஸ்தீன விவகாரத்தில் உணர்வுபூர்வமாகவே செயற்படுவோம். நாடு என்ற ரீதியில் பலஸ்தீன மக்களுக்கு குரல் கொடுப்போம். காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியன இயங்கு நிலையில் உள்ளன. இருப்பினும் இங்கே கூறப்பட்டதை போன்று பல்வேறு பிரச்சினைகள் நிலவுவதை ஏற்றுக் கொள்கிறேன். 2019 ஆம் ஆண்டு கோட்டபய ராஜபக்ஷ ஒரு இனவாத அலையுடனேயே ஆட்சிக்கு வந்தார். எனவே அப்போது இக்கட்டமைப்புக்கள் உரிய முறையில் அவற்றின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்ற தேவைப்பாடு அவ்வரசுக்கு இருந்ததா ? என்பது தெரியவில்லை. இப்போது இக்கட்டமைப்புக்கள் மீதான நம்பகத்தன்மையை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய தேவைப்பாடு தோற்றம் பெற்றுள்ளது. நம்பிக்கையை கட்டியெழுப்புவதன் மூலம் அக்கட்டமைப்புக்களின் வெளிப்படைத்தன்மை, செயற்திறன் என்பவற்றையும் உறுதிப்படுத்த முடியும். அடுத்ததாக சட்ட உருவாக்கம் மற்றும் சட்ட நடைமுறைப்படுத்தல் ஆகிய இரு முக்கிய விடயங்கள் உள்ளன. அதேபோன்று சட்ட மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் அதேநேரம் மக்களின் மனநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பன தொடர்பில் அவசியமான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நான் வலுவாக நம்புகிறேன். அதேவேளை இச்சட்ட உருவாக்கங்களின் போது எமது அரசாங்கம் தொடக்கத்தில் இருந்து செயற்பட வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில் ஏற்கெனவே பல்வேறு சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிலுவையில் உள்ளன.அவற்றை முன்னகர்த்த வேண்டும். மேலும், எமது அரசாங்கம் பெரும்பான்மை மக்களாணையை பெற்றுள்ளது.அதன் அர்த்தம் நாம் எதேர்ச்சதிகரமாக , தன்னிச்சையாக செயற்பட முடியும் என்பதல்ல, மாறாக எமது அரசாங்கம் முன்னெடுக்கும் முக்கிய நகர்வுகளில் நாம் சகல சம்பந்தப்பட்ட தரப்பினரதும், கருத்துக்களை கேட்டறிந்தே செயற்படுவோம் என்றார். https://www.virakesari.lk/article/200953
-
வடக்கு, கிழக்கில் அதிக மழைக்கான வாய்ப்பு!
11 DEC, 2024 | 06:58 AM வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த தாழ் அமுக்கப் பிரதேசமானது மேற்கு - வடமேற்குத் திசையை நோக்கி தொடர்ச்சியாக பயணம் செய்து அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் இலங்கையின் வட பகுதியை அண்மித்தாக தமிழ் நாட்டுக் கரையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு இன்று மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். வடக்கு, கிழக்கு , வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வட மாகாணத்தின் சில இடங்களில் 100 மில்லிமீற்றிலும் பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து வடமேற்குத் திசையை நோக்கி காற்று வீசும். திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். புத்தளம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் காற்று வீசும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோமீற்றர் வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடல் பிராந்தியங்கள் அடிக்கடி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். புத்தளம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாக் காணப்படும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். https://www.virakesari.lk/article/200944
-
அடுத்த வருடம் கடுமையான மருந்து தட்டுப்பாடு ஏற்படலாம் - மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான சங்கம் எச்சரிக்கை விடுப்பு !
10 DEC, 2024 | 06:38 PM (செ.சுபதர்ஷனி) அடுத்த வருடத்துக்கு தேவையான மருந்து கொள்வனவு இவ்வருடத்தின் மூன்றாம் காலாண்டுக்குள் நிறைவு பெற்றிருப்பது அவசியம். எனினும் சுகாதார அமைச்சு இது குறித்து ஆர்வம் செலுத்தாமையினால் அடுத்த வருடம் பொதுமக்கள் கடுமையான மருந்து தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள வேண்டியேற்படலாம் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரித்துள்ளார். மருந்துதட்டுபாடுத் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்த வருடத்துக்குள்ள நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம். மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான ஆவணங்கள் உரிய நேரத்தில் சமர்ப்பிக்கப்படாமையால் இவ்வாறான நெருக்கடி உருவாகக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ஹீமோபிலியா நோயாளர்களுக்கு குருதி வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வழங்கப்படும் எட்டாவது காரணி என அழைப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஹீமோபிலியா நோயாளர்களுக்கு சிறு கீறல் ஏற்பட்டலும் அதிக இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இரத்தம் உறைதலுக்கு (பெக்டர்) VII மற்றும் (பெக்டர்) XI ஆகிய இரு காரணிகள், உலக முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் எமிசிசுமோப் ஆகிய மருந்துகள் வழங்கப்படுகின்றன. எனினும் மேற்படி மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் ஹீமோபிலியா நோயாளர்களுக்கு உயிராப்பத்துக்கள் ஏற்படக் கூடிய ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. கடந்த அரசாங்கம் (பெக்டர்) VII மருந்துகளை கொள்வனவு செய்திருந்தது. எனினும் மருந்துகளின் தரம் குறித்து விசேட வைத்திய நிபுணர்கள் கேள்வி எழுப்பியமையால் அந்த நிறுவனத்திடமிருந்து மருந்துகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை முழுமையாக நிறுத்தப்பட்டது. சுகாதார அமைச்சில் கடமையாற்றும் அதிகாரிகளின் தேவைக்கேற்ப மருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் தான்தோன்றித்தனமான போக்கால் பொதுமக்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடலாம் எனவும் விசேட வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். சுகாதார அமைச்சு ஹீமோபிலியா நோயாளர்களுக்காக வருடாந்தம் பெருமளவான தொகையை செலவிடுகிறது. ஆகையால் எமிசிசுமோப் எனப்படும் மருந்துவகைளை பயண்படுத்துவதன் மூலம் செலவீனங்களை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவர முடியும். மேலும் இவை வினைத்திறன் மிக்க மருந்தாக வைத்திய நிபுணர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி மருந்தின் ஒரு குப்பிக்காக 1700 அமெரிக்க டொலர்கள் செலவிட வேண்டியுள்ளதுாக சுகாதார அமைச்சு மருந்து கொள்வனவுக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. நோயாளிகளின் வாழ்க்கை தரத்தை கருத்தில் கொண்டு மருந்து கொள்வனவுக்கு ஒப்புதல் வழங்கினால் அது அவர்களுக்கு நிவாரணமாக அமையும். அடுத்த வருடத்துக்கு தேவையான மருந்து கொள்வனவு இவ்வருடத்தின் மூன்றாம் காலாண்டுக்குள் நிறைவு பெற்றிருப்பது அவசியம். எனினும் சுகாதார அமைச்சு இது குறித்து ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை. தரமற்ற மருந்து கொள்வனவு மோசடியில் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளருடன் கடமையாற்றிய அதிகாரிகள் தொடர்ந்து மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பணியாற்றி வருகின்றனர். ஆகையால் மருந்து கொள்வனவில் தொடர்ந்தும் பல சிக்கல்கள் நிலவி வருவதை காணக் கூடியதாக உள்ளது. ஒரு சில நிறுவனங்களுடன் இரு நாட்களில் மருந்து கொள்வனவு ஒப்பந்தகங்களை பதிவு செய்த மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மேலும் ஒரு சில நிறுவனங்களில் மருந்து கொள்வனவுக்கான ஒப்பந்தங்களை பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்படுத்தி வருவதாக இறுதியாக வெளியிடப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இன்சுலின், இமியூனோகுளோபியுளின் உள்ளிட்ட பல மருந்துகளுக்கு சந்தையில் ஏகாதிபத்தியத்தை ஏற்படுத்தியது அதிகாரிகளின் தவறாகும். இது தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு சுகாதாரத் துறைக்கு உரிய அதிகாரிகளை நியமிப்பது புதிய சுகாதார அமைச்சரின் பொறுப்பாகும். இவ்வாறான செயற்பாடுகளால் அடுத்த வருடம் பொதுமக்கள் கடுமையான மருந்து தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள வேண்டியேற்படலாம் என்றார். https://www.virakesari.lk/article/200917
-
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போதான இராஜதந்திர பேச்சு குறித்து டில்லியிலிருந்து கூட்டு அறிவித்தல் வெளியிடப்படும் - அரசாங்கம் 10 DEC, 2024 | 06:42 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 3 நாட்கள் உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தின் போது முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. பேச்சுவார்த்தைகளின் போது அவதானம் செலுத்தப்படும் விடயங்கள், எட்டப்படும் இணக்கப்பாடுகள் குறித்து டில்லியிலிருந்து கூட்டு அறிவித்தல் வெளியிடப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (10) இடம்பெற்ற போது ஜனாதிபதியின் இந்திய விவகாரம் தொடர்பில் கேள்வியெழுப்பிய போது, அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளார். அவருடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்டோரும் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளனர். ஜனாதிபதி தலைமையிலான இந்த உயர்மட்ட தூதுக்குழு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்ட முக்கிய இராஜதந்திரிகளை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளது. எனினும் இதன் போது அவதானம் செலுத்தப்படவுள்ள விடயங்கள், கையெழுத்திடப்படவுள்ள ஒப்பந்தங்கள் குறித்து டில்லியிருந்து கூட்டு ஊடக அறிவித்தல் விடுக்கப்படும். விஜயத்துக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் உத்தியோகபூர்வ ஊடக அறிவித்தல் வெளியிடப்படும் என அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/200902
-
பூமியில் மிக ஆழமான துளை போடும் திட்டம் - எதற்கான தேடுதல் வேட்டை இது?
பட மூலாதாரம்,QUAISE ENERGY கட்டுரை தகவல் எழுதியவர்,நோர்மன் மில்லர் பதவி நமது நிலத்தடியில் அதிகளவு ஆற்றல் உள்ளது. அதிர்ஷ்டவசமாக, சில இடங்களில், பூமியின் மேற்பரப்புக்கு அருகில் புவிவெப்ப ஆற்றல் கிடைக்கும். ஆனால், உலகின் மற்ற பகுதிகளில் ஆழமாக தோண்ட வேண்டியிருக்கும். புவிவெப்ப ஆற்றலைப் பெற போதுமான ஆழத்தை எவ்வாறு அடைவது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள சில இடங்களில், புவிவெப்ப ஆற்றல் நிலத்தின் மேற்பரப்பில் கிடைக்கும். ஐஸ்லாந்தில், 200க்கும் மேற்பட்ட எரிமலைகள் மற்றும் இயற்கையாக அமைந்த பல வெப்ப நீரூற்றுகள் உள்ளன. அங்கு அந்த ஆற்றலைப் பெறுவது கடினம் அல்ல. அந்த நாடு முழுவதும் நீராவி குளங்கள் உள்ளன. அவை, பூமியின் கீழே எரியும் புவிவெப்ப நெருப்பால் சூடாகின்றன. சூடான நீர் மற்றும் நீராவி அழுத்தத்தை உருவாக்கி, பின்னர் தரையில் இருந்து வெளியேறி, கொதிக்கும் நீர் மற்றும் நீராவியை வெந்நீருற்று உருவாக்குகிறது. ஐஸ்லாந்து புவிவெப்ப ஆற்றலைப் பயன்படுத்துகிறது. அதாவது, பூமியின் உள்ளே புவிவெப்ப ஆற்றல், அங்குள்ள 85% வீடுகளுக்கு வெப்பம் அளிக்க பயன்படுகிறது. நாட்டின் மின்சார உற்பத்தில் 25% இதில் இருந்து கிடைக்கிறது. புதுப்பிக்கத்தக்க வளத்தைப் பயன்படுத்துவதற்கு, இது ஒரு அருமையான வழியாகும். வற்றாத பசுமை ஆற்றல் மூலமான, புவிவெப்ப ஆற்றலை பூமி வழங்குகிறது. பூமியின் மையத்திலிருந்து வெப்பம் தொடர்ந்து உமிழப்படுவதாலும், நமது பூமியின் மேலோட்டத்தில் இயற்கையாக நிகழும் கதிரியக்கத் தனிமங்களின் சிதைவாலும், காற்று அல்லது சூரிய சக்தியைப் போலல்லாமல், புவிவெப்ப ஆற்றல் "எப்போதும் இயங்கும்". புவிவெப்ப ஆற்றல், ஒரு நம்பிக்கைக்குரிய ஆற்றல் மூலமாகும். இது ஒரு நல்ல தீர்வாக இருந்தாலும், இந்த பரந்த ஆற்றல் மூலத்தை திறம்பட பயன்படுத்தக் கூடிய தொழில்நுட்பத்தை நாம் உருவாக்க வேண்டும். பூமி தொடர்ந்து அதிகளவு வெப்பத்தை வெளியிட்டு வருகிறது. பூமியில் பல மடங்காக உள்ள தேவைகளைச் சமாளிக்க இந்த வெப்பம் போதுமானது. இருப்பினும், இந்த வெப்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கண்டுபிடிப்பது சவாலானது . பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐஸ்லாந்து புவிவெப்ப ஆற்றலையே அதிகம் பயன்படுத்துகிறது. உலகெங்கிலும் உள்ள புவிவெப்ப மின் நிலையங்கள் தற்போது உலகில் 32 நாடுகளில் மட்டுமே புவிவெப்ப மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. உலகம் முழுவதும் 700க்கும் குறைவான மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இவற்றில் 2023 இல் சுமார் 97 டெராவாட் மணிநேர மின்சாரம்(TWh) உற்பத்தி செய்யப்பட்டது. இது அமெரிக்காவில் மட்டும் சூரிய சக்தியால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவில் பாதிக்கும் குறைவானது. மேலும் உலகளாவிய ஆற்றல் தொகுதியில், புவிவெப்ப ஆற்றலின் சாத்தியமான பங்களிப்புக்கான மதிப்பீடுகளை விட இந்த அளவு மிகவும் குறைவு. ஏனென்றால், புவிவெப்ப ஆற்றல் இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆண்டுக்கு 800 - 1400TWh மின்சாரத்தை மேலும் 3,300-3800TWh வெப்பத்தையும் வழங்க முடியும் என்று சிலர் மதிப்பிடுகின்றனர் . புவிவெப்ப ஆற்றல் நிபுணரான அமண்டா கோல்கர், அமெரிக்காவில் உள்ள தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகத்தில் (NREL) புவிவெப்ப திட்ட மேலாளராக உள்ளார். "பூமியின் இயற்கையான வெப்ப ஆற்றல், தூய்மையான எதிர்காலத்தை நோக்கிச் செல்ல உதவும்" என்று அமண்டா கோல்கர் நம்புகிறார். 2023 ஆம் ஆண்டு அறிக்கையில், தூய்மையான ஆற்றலுக்கான மாற்றத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள புவிவெப்ப ஆற்றலின் திறனை அவர் எடுத்துரைத்தார். அணுக்கரு கடிகாரம்: பிரபஞ்சத்தின் மர்மங்களை கட்டவிழ்க்கும் வழியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்30 நவம்பர் 2024 ஐ.வி.எஃப்: வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பது ஏன்? இதை மாற்ற முயற்சிக்கும் விஞ்ஞானிகள் கூறுவது என்ன?29 நவம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐஸ்லாந்தின் முக்கிய புவிவெப்பத் தளமான ரெய்க்ஜேன்ஸில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு பத்து மடங்கு அதிக ஆற்றலை வழங்கும் 'சூப்பர்ஹாட்' கிணறுகள் ஆனால் ஒவ்வொரு நாடும் ஐஸ்லாந்தைப் போல் அதிர்ஷ்டசாலிகள் அல்ல, அங்கு சுமார் 120-240C (248-464F) வெப்பநிலையில் சூடான நீரின் நீர்த்தேக்கங்களை பூமியின் மேற்பரப்பிற்கு அருகில் எளிதாக அணுக முடியும் . நாட்டின் பிற பகுதிகளில், 1.5 மைல் (2.5 கிமீ) ஆழம் வரை தோண்டப்பட்ட கிணறுகள் 350C (662F) வரையிலான வெப்பநிலைக்கு அணுகலை வழங்குகின்றன. உதாரணமாக, ரெய்க்ஜேன்ஸில் உள்ள ஐஸ்லாந்தின் முக்கிய புவிவெப்பத் தளம், 600C (1112F) அளவுக்கு அதிக வெப்பமடையும் திரவங்களை அணுகுவதற்கு 2.9 மைல்கள் (4.6 கிமீ) சோதனைக் கிணறுகளைத் தோண்டியுள்ளது. ஏற்கனவே, ஆண்டுக்கு 720 ஜிகாவாட் மணிநேரம் (GWh) மின்சாரத்தை உற்பத்தி செய்ய 320C (608F) வெப்பநிலையில் ஆழமற்ற கிணறுகளைப் பயன்படுத்தி தினசரி வெப்பப் பிரித்தெடுத்தல் நடைபெறுகிறது. புவிவெப்ப ஆற்றல் பரவலாக இல்லாததற்கு ஒரு காரணம், அந்த ஆற்றலைப் பிரித்தெடுக்கத் தேவையான அதிக முன் முதலீடு ஆகும். ஆனால் தொழிநுட்ப உதவியின்றி அதைச் செய்வதும் கடினமாகும். புவிவெப்ப ஆற்றலின் பலன்களை உலகின் பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்ல, பூமியின் உள்ளே ஆழமாக தோண்டி எடுக்க வேண்டும். மின்சாரம் உற்பத்தி செய்ய அல்லது வீடுகளுக்குத் தேவையான அளவு வெப்பநிலை அதிகமாக கிடைக்கும் பகுதிகளை நாம் அடைய வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐஸ்லாந்தில் காணப்படும் வெந்நீரூற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எப்போது புயலாக மாறும் தெரியுமா? எளிய விளக்கம்28 நவம்பர் 2024 ஆதித்யா எல்1: பூமியை தாக்கும் சூரியப் புயல்களை துல்லியமாக கண்டறிய எப்படி உதவுகிறது?28 நவம்பர் 2024 இதில் இருக்கும் சவால்கள் என்ன? பூமியின் பெரும்பகுதி முழுவதிலும், பூமியின் வெளிப்புற அடுக்கின் வழியாக நீங்கள் செல்லும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் சராசரியாக 25-30C (77-86F) வெப்பநிலை அதிகரிக்கிறது . எடுத்துக்காட்டாக, பிரிட்டனில், பூமியின் வெளிப்புற அடுக்கின் உள்ளே 5 கிமீ தூரத்திற்கு, சுமார் 140C (284F) ஆக மேற்பரப்பு வெப்பநிலை உள்ளது என்று பிரிட்டிஷ் புவியியல் ஆய்வு கூறுகிறது. 220பார்களுக்கு (கடல் மட்டத்தில் பூமியின் மேற்பரப்பில் உள்ள சராசரி அழுத்தம் ஒரு பார் எனப்படும்) மேலான அழுத்தத்தில் நீர் வெப்பநிலை 374C (705F) ஐத் தாண்டிய ஒரு புள்ளியை அடைய முடியும். இங்குதான் நீர், அதன் தீவிர ஆற்றலை அடைகின்றது. இது 'சூப்பர் கிரிட்டிக்கல் நிலை' என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் , நீர் திரவமாகவோ அல்லது வாயுவாகவோ இல்லாத வடிவத்தில் உள்ளது . அது வெப்பமாகவும் அதிக அழுத்தத்தோடும் இருந்தால், அங்கு புவி வெப்ப ஆற்றல் அதிகமாக கிடைக்கும். உண்மையில், அதி சூடான புவி வெப்பக்கிணறு ஒன்று, வணிக புவிவெப்ப கிணறுகள் உற்பத்தி செய்யும் ஆற்றலை விட ஐந்து முதல் 10 மடங்கு ஆற்றலை உற்பத்தி செய்யும் என்று அமெரிக்காவின் தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகம் கூறுகிறது. புவிவெப்ப ஆற்றலில் உள்ள ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், வெப்பமான பகுதிகளை அடைய பூமியில் போதுமான ஆழத்தில் துளையிடுவது கடினம். பாரம்பரிய கருவிகள், வைர நுனிகளைப் போல் கூர்மையான கருவிகள் கூட, மிகவும் வெப்பமான பகுதிகளை அடைந்து பூமியில் ஆழமாக துளையிடும் அளவுக்கு வலுவாக இல்லை. நிலத்தடியில் உள்ள அதீத வெப்பம் மற்றும் அழுத்தம் துளையை எளிதில் சேதப்படுத்தும். மேலும் குப்பைகள் இல்லாமல் துளையை வைத்திருப்பதும் கடினம். எடுத்துக்காட்டாக, 2009-ஆம் ஆண்டில், ஐஸ்லாந்தின் துளையிடல் திட்டத்தில் பணிபுரியும் ஒரு குழு , பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 1.2 மைல் (2 கிமீ) கீழே உள்ள கிராஃப்லா எரிமலையில் உள்ள மாக்மா அறைக்குள் (பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள திரவ பாறையின் உட்பகுதி) துளையிட்டபோது கவனக்குறைவாக 'சூப்பர் கிரிட்டிகல்' பகுதியை அடைந்தது. அந்தத் துளையிலிருந்து வெளிப்படும் சூடான நீராவி, அதிக அமிலத்தன்மை கொண்டது. இதனைப் பயன்படுத்துவதும் கடினமாக இருந்தது . அங்கு உயர் அழுத்தங்கள் மற்றும் வெப்பநிலை அதிகமாக இருந்ததால், அதனை கட்டுப்படுத்துவதும் கடினமாக இருந்தது. மேலும் வால்வு செயலிழந்து துளைக்கு சீல் வைக்கப்படுவதற்கு முன்பு அதை இரண்டு ஆண்டுகளுக்கு இடைவிடாமல் வெளியேற்ற வேண்டியிருந்தது . ஆழமான துளையிடுதல் முறை, விலையுயர்ந்தது. மேலும் துளையிடுவதற்கு நீண்ட நேரம் ஆகலாம். மனிதர்களால் தோண்டப்பட்ட ஆழமான துளை, பனிப்போருக்கு முந்தையது. இருப்பினும், பூமியின் மேலோட்டத்தில் முடிந்தவரை துளையிடுவதற்கு வல்லரசுகளுக்கு இடையே ஒரு போட்டி இருந்தபோது. சோவியத்தால் 7.6 மைல் (12.2 கிமீ) வரை பாறை வழியாக ஊடுருவ முடிந்தது. கோலா தீபகற்பத்தில், ஆர்க்டிக் வட்டத்தில் 'கோலா சூப்பர் டீப்' போர்ஹோலை (மிக ஆழமான துளை ) சோவியத் உருவாக்கியது. அந்த ஆழத்தை அடைய அவர்களுக்கு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தேவைப்பட்டன. தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகத்தின் (NREL) மதிப்பீட்டின்படி , 1 கிமீ ஆழத்தில் கிணறு தோண்டுவதற்கான செலவு சுமார் 2 மில்லியன் டாலர் செலவாகும். அதே நேரத்தில் இதே அளவில் நான்கு மடங்கு ஆழம் தோண்டுவதற்கு 6 மில்லியன் டாலர் முதல் 10 மில்லியன் டாலர் வரை செலவாகும். உ. பி: பாதி கட்டப்பட்ட பாலத்திலிருந்து விழுந்த கார்; மேப்ஸ் மீது புகார் - கூகுள் அளித்த பதில் என்ன?27 நவம்பர் 2024 இருபது வீதிகள், பள்ளி, கல்லூரி, நீதிமன்றம் என ஒரு நகரத்தையே உள்ளடக்கிய இலங்கையின் பிரமாண்ட கோட்டை27 நவம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யாவில் மனிதர்களால் தோண்டப்பட்ட மிக ஆழமான துளையான 'கோலா சூப்பர் டீப்' போர்ஹோலின் காட்சி ஆராய்ச்சியில் எம்.ஐ.டி ஆழமான புவிவெப்ப ஆற்றலை அணுகுவது சவாலானதாக இருந்தாலும், அது குறிப்பிடத்தக்க பலன்களையும் வழங்குகிறது. பூமியின் மிக வெப்பமான பகுதிகளை நாம் அடைந்தவுடன், மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். எரிவாயு போன்ற பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்துவதை விட இது மலிவானது, மேலும் புவி வெப்ப ஆற்றல், குறைவான பசுமை இல்ல வாயுக்களை உற்பத்தி செய்வதால் சுற்றுச்சூழலுக்கு மிகவும் சிறந்தது. இந்த சவால்களை சமாளிக்க, விஞ்ஞானிகளும் நிறுவனங்களும் பூமியில் ஆழமாக துளையிடுவதற்கு புதிய நுட்பங்களையும் தொழில்நுட்பங்களையும் உருவாக்கி வருகின்றன. அவ்வாறு செய்வதன் மூலம், முன்னர் பொருத்தமற்றதாகக் கருதப்பட்ட பகுதிகளில் புவிவெப்ப ஆற்றலின் திறனைக் கண்டறிய முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். உதாரணமாக, மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் (Massachusetts Institute of Technology- MIT) விஞ்ஞானிகளால் தொடங்கப்பட்ட குவைஸ் எனர்ஜி என்ற நிறுவனம், 500C (932F) அல்லது அதற்கும் அதிகமான வெப்பநிலையை அணுகுவதற்கு 12 மைல்கள் (20km) வரை ஆழமான பகுதிகளில் துளைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. "மற்றவர்கள் தரையில் மண்வெட்டிகளை வைக்கும்போது, நாங்கள் முதல் முறையாக மைக்ரோவேவ்களைத் தரையில் வைக்கிறோம்," என்று நிறுவனத்தின் இணை நிறுவனர் மாட் ஹவுட் கூறுகிறார். அவரும் அவரது நண்பர்களும் மில்லிமீட்டர் அலை ஆற்றல் கற்றைகளைப் பரிசோதித்து வருகின்றனர். அதன் மூலம் கடினமான பாறையும் கூட ஆவியாகின்றன. இது நுண் அலைகளைப் போன்ற உயர் ஆற்றல் கொண்ட கதிர்வீச்சை மையப்படுத்துகிறது. பாறையின் ஒரு பகுதியின் மீது, அதை 3,000C (5,432F) வரை சூடாக்குகிறது. இதனால் அது உருகி ஆவியாகிறது. கதிர்வீச்சை இயக்குவதன் மூலம் அது பாறை வழியாக துளையிடும். இதன் மூலம், பாரம்பரிய துளையிடும் நுட்பங்களால் உருவாக்கப்பட்ட தூசி மற்றும் உராய்வு இல்லாமல் துளைகளை உருவாக்க முடியும். இது பூமியின் ஆழமான, வெப்பமான பகுதிகளில் துளையிட அனுமதிக்கிறது. "மில்லிமீட்டர்-அலை துளையிடுதல் என்பது ஆழத்தில் இருந்து சுயாதீனமாக செயல்படக்கூடிய ஒரு செயல்முறையாகும். மேலும் அழுக்கு, தூசி நிறைந்த சூழல்கள் மூலமாகவும் மில்லிமீட்டர்-அலை ஆற்றலை கடத்த முடியும்." என்று ஹவுட் கூறுகிறார். மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் 'பிளாஸ்மா சயின்ஸ் அண்ட் ஃப்யூஷன் சென்டரின் பொறியியலாளர் பால் வோஸ்கோவ்' நடத்திய அணுக்கரு இணைவு பிளாஸ்மா சோதனைகளிலிருந்து இத்தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. குறைந்த வருவாய் கொண்ட ஆண்களிடையே 'குழந்தையின்மை' அதிகமாக இருப்பது ஏன்?17 நவம்பர் 2024 "யுரேனஸின் நிலவில் மீன்கள் நீந்தலாம்" - 40 ஆண்டு கருதுகோளை தலைகீழாக மாற்றிய புதிய கண்டுபிடிப்பு16 நவம்பர் 2024 பட மூலாதாரம்,QUAISE ENERGY படக்குறிப்பு, பாரம்பரிய துளையிடும் நுட்பங்களால் உருவாக்கப்பட்ட தூசி மற்றும் உராய்வு இல்லாமல் துளைகளை உருவாக்க முடியும் தொழில்நுட்பத்தில் உருவான மாற்றங்கள் 1970 களில் இருந்து அணுக்கரு இணைவு உலைகளில் பிளாஸ்மாவை சூடாக்குவதற்கான ஒரு வழியாக, மில்லிமீட்டர்-அலை ஆற்றல் ஆராயப்பட்டது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு வோஸ்கோவ் இத்தொழில்நுட்பத்திற்கான மற்றொரு பயனும் இருப்பதாக வெளிப்படுத்தினார். பாறை உருகுவதற்கு 'கைரோட்ரான்'(கைரோட்ரான் என்பது வெற்றிட மின்னணு சாதனம் (VED) அதிக சக்தியும், உயர் அதிர்வெண் மின்காந்த அலைகளையும் உருவாக்குகிறது) எனப்படும் சாதனத்தால் உருவாக்கப்பட்ட மில்லிமீட்டர்-அலை கற்றைகளைப் பயன்படுத்தத் தொடங்கினார். ஆனால் இதுவரை இந்த தொழில்நுட்பத்தை ஆய்வகத்தில், சிறிய பாறை மாதிரிகளில் மட்டுமே சோதித்துள்ளனர். இருப்பினும், இந்த முறையைப் பயன்படுத்தி ஒரு மணி நேரத்திற்கு சுமார் 3.5 மீ (11.5 அடி) வரை பாறை வழியாக துளையிட முடியும் என்று அந்நிறுவனம் கூறுகிறது . மேலும் மைக்ரோவேவ் பீம், பாரம்பரிய முறையைப் போல தேய்ந்து போகாது அல்லது அதனை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்பதால் மற்ற நன்மைகள் உள்ளன. குவைஸ் ஆற்றலானது, 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் களச் சோதனைகளைத் தொடங்குவதற்கு முன், மில்லிமீட்டர்-அலை தொழில்நுட்பம் ஆய்வக சோதனையின் இறுதி கட்டத்தில் உள்ளது. ஆனால் மில்லிமீட்டர்-அலை துளையிடும் தொழில்நுட்பத்தை ஆய்வகத்திலிருந்து, துளையிடும் செயல்பாட்டிற்கு எடுத்துச் செல்வது இன்னும் சவாலாக இருக்கும். "ஆழமான உயர் அழுத்த மேற்பரப்பு சூழலில் அவை இதற்கு முன் பயன்படுத்தப்படவில்லை" என்று வோஸ்கோ கூறுகிறார். "துளையிடுதலில் பயன்படுத்தப்படும் தீவிர ஆற்றல்- பொருள் இரண்டின் தொடர்பு காரணமாக ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ள ஒரு புதிய கற்றல் முறை தேவைப்படுகிறது." என்கிறார் வோஸ்கோ. இதற்கிடையில், ஸ்லோவாக்கியாவை தளமாகக் கொண்ட 'ஜிஏ டிரில்லிங்', பூமியின் மேலோட்டத்தில் துளையிடுவதற்கு உயர் ஆற்றல் துளையிடும் தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வருகிறது. இந்த முறை, பிசுபிசுப்பான உருகிய பாறை உருவாகுவதைத் தவிர்க்கிறது. உருகிய பாறைகளை அகற்றுவது கடினம். "பாறையை நொறுங்கும் அளவு அதிர்வுடன் இந்தச் செயல்முறை மிக விரைவாக நடப்பதால், பாறை உருகுவதற்கு நேரம் இல்லை" என்கிறார் ஜிஏ டிரில்லிங்கின் தலைமை நிர்வாகியும் தலைவருமான இகோர் கோசிஸ். "ஐந்து முதல் எட்டு கிலோமீட்டர்கள் (3-5 மைல்கள்) வரை செல்வது, நமது தற்போதைய மேம்பாட்டுத் திட்டத்திற்கான இலக்காகும். பின்னர் 10 கிமீக்கு அதிகமாக துளையிடுவது" என்று அவர் மேலும் கூறுகிறார். ஆறே நாட்களில் கோட்டை கட்டி ஆங்கிலேயருக்கு எதிராக சைகை மொழியில் படை நடத்திய 'ஊமைத்துரை'16 நவம்பர் 2024 உலக வரைபடத்திலேயே இல்லாத சோவியத் உருவாக்கிய மிதக்கும் 'மர்மத்தீவு' - உள்ளே என்ன இருக்கிறது?12 நவம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாறை உருகுவதற்கு 'கைரோட்ரான்' எனப்படும் சாதனத்தால் உருவாக்கப்பட்ட மில்லிமீட்டர்-அலை கற்றைகளை பயன்படுத்தப்பட்டது. நகரங்களிலும் இந்த வேலை நடைபெறலாம் புவிவெப்ப துளையிடுதலுக்கான மற்றொரு நம்பிக்கைக்குரிய அணுகுமுறை, Geothermal energy and Geofluids (GEG) குழுவின் தலைமையிலான ஐரோப்பிய கூட்டமைப்பால் ஆராயப்படுகிறது. அவர்கள் பாறையை உடைக்க 6,000 டிகிரி செல்சியஸில் நம்பமுடியாத அளவிற்கு அயனியாக்கம் (ionised gas ) செய்யப்பட்ட வாயுவின் மூலம் சக்திவாய்ந்த வெடிப்புகளைப் உருவாக்க ஆராய்ச்சி செய்கிறார்கள். இந்த முறை, பாறை உருகுவதைத் தவிர்க்கிறது, மேலும் ஆழமாக துளையிடுவதை எளிதாக்குகிறது மற்றும் பூமியின் வெப்பத்தை மிகவும் திறமையாக அணுகுகிறது. GA டிரில்லிங், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான கான்ஸ்டான்டினா வோகியாட்சாகியுடன் இணைந்து, மேம்பட்ட கணிதத்தைப் பயன்படுத்தி சூப்பர் கிரிட்டிகல் திரவங்களைப் புரிந்துகொண்டு கட்டுப்படுத்துகிறது. பிளாஸ்மா துளையிடல் மூலம் அணுகப்பட்ட பூமி மூலங்களிலிருந்து ஆற்றலைப் பிரித்தெடுக்க இந்த திரவங்களைப் பயன்படுத்தலாம். சில நிறுவனங்கள் புவிவெப்ப துளையிடல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த விண்வெளி ஆய்வுகளை எதிர்பார்க்கின்றன. 475C (887F) வெப்பநிலையை எட்டக்கூடிய வீனஸின் மேற்பரப்பில் கிரக ஆய்வுப் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம், புவிவெப்ப துளையிடும் நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. உதாரணமாக, Ozark Integrated Circuits என்ற நிறுவனம், மிக அதிக வெப்பநிலையைத் தாங்கக்கூடிய மின்னணு பாகங்களை உருவாக்கி வருகிறது. குறிப்பாக, இந்த மின்னணு பாகங்கள் புவிவெப்ப ஆற்றலுக்காக துளையிடும் கருவிகளுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் அதிக வெப்பநிலை கொண்ட இடங்களை அடையலாம். தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகம், அதன் சொந்த பங்கிற்கு, சிக்கலான நிலத்தடி சூழல்களை பகுப்பாய்வு செய்ய செயற்கை நுண்ணறிவு பக்கம் திரும்பியுள்ளது. இது, சூப்பர் கிரிட்டிகல் நீருக்கான சிறந்த இடங்களைக் கண்டறிய முயற்சிக்கிறது. அதே போல், அவற்றைக் கண்டறியும் முயற்சிகள் பெரிய சிக்கல்களை ஏற்படுத்துவதற்கு முன்பு அவற்றின் தவறுகளைக் கணிக்கவும் , கண்டறியவும் உதவுகின்றன. மஞ்சள், மிளகாய் உள்பட மசாலாப் பொருட்களை உணவில் சேர்ப்பது உடலுக்கு நல்லதா?11 நவம்பர் 2024 ஐநா காலநிலை மாற்ற மாநாடு: கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த ஏழை நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் நிதி அளிக்குமா?12 நவம்பர் 2024 பட மூலாதாரம்,MIT மேலும் சில நிறுவனங்கள் ஏற்கனவே பூமியில் ஆழமாக ஊடுருவி வருகின்றன. 2024 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் பவேரியாவில் உள்ள ஜெரெஸ்ட்ரீடில் உள்ள ஒரு தளத்தில் இரண்டு செங்குத்து கிணறுகளுடன் மூன்று மைல் (5 கிமீ) ஆழத்தை அடைந்ததாக புவிவெப்ப ஆற்றல் நிறுவனமான ஈவர், பிபிசியிடம் கூறிகிறது. ஈவர் லூப் என அழைக்கப்படும் மூடிய லூப் வடிவமைப்பிற்குள் நீரை சுற்றுவதன் மூலம் புவிவெப்ப வெப்பத்தை மேற்பரப்பிற்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த ஆலை பூமியின் வெப்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும். மேலும் இம்முறை மூலம், அவர்கள் குளிர்ந்த நீரைச் சுழற்ற திட்டமிட்டுள்ளனர். அதை ஆழமான நிலத்தடியில் சூடாக்குகிறார்கள். பின்னர் இந்த சூடான நீரை மீண்டும் மேற்பரப்புக்கு கொண்டு வந்து மின்சாரம் தயாரிக்கவும், அப்பகுதியில் உள்ள வீடுகளின் பயன்பாட்டிற்கு அனுப்பவும் முடியும். ஈவர், 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த அமைப்பிலிருந்து புவி வெப்ப ஆற்றலை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜான் ரெட்ஃர்ன் கூறுகிறார் "எங்கள் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் 11 கிமீ (6.8 மைல்கள்) வரை துளையிட விரும்புகிறது" என்று புவியியலாளரும் ஈவர் இணை நிறுவனருமான ஜீனைன் வானி கூறுகிறார். "அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் அதி வெப்ப பாறைகளை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்." என்றும் அவர் தெரிவித்தார். ஆழமான புவிவெப்ப ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான உந்துதல், பழைய படிம எரிபொருள் மின் நிலையங்களுக்கு புதிய பரிமாணத்தை கொண்டு வரக்கூடும். ஏனெனில் நாடுகள் தங்களின் பாரம்பரிய கார்பன்-உமிழும் ஆற்றல் மூலங்களை கைவிட விரும்புகின்றன . நியூயார்க்கின் அப்ஸ்டேட்டில் கைவிடப்பட்ட நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை அடையாளம் கண்டுள்ளார், வோஸ்கோவ். அடுத்த பத்தாண்டுகள் முடிவதற்குள் நிலத்தடியிலிருந்து எடுக்கப்படும் ஆழமான வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிக்க, இந்த நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் மீண்டும் திறக்கப்படலாம் என்று அவர் நம்புகிறார். ஒரு காலத்தில் படிம எரிபொருட்களை நம்பியிருந்த நிலக்கரி மின் நிலையத்தை கற்பனை செய்து பாருங்கள், இப்போது அது சுத்தமான ஆற்றல் மையமாக மாற்றப்படும் என்பது புவிவெப்ப ஆற்றல் குறித்து எதிர்காலத்திற்கான பார்வை. பூமியின் வெப்பத்தை நிலத்தடியின் ஆழத்தில் இருந்து எடுப்பதன் மூலம், சுத்தமான மின்சாரத்தை உருவாக்க முடியும். இருப்பினும், உயர் வெப்பநிலை ஆற்றல் மூலங்களை அணுகும் அளவுக்கு ஆழமாக துளையிடுவதில் சவால் உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/ckg90lxnj17o
-
கொழும்பு துறைமுக திட்டத்திற்கான அமெரிக்க நிறுவன உதவியை நிராகரித்த அதானி போர்ட்ஸ்!
கொழும்பு துறைமுக திட்டத்திற்கு அமெரிக்க நிதியை பயன்படுத்தப்போவதில்லை - அதானி குழுமம் 11 DEC, 2024 | 10:38 AM கொழும்பு துறைமுகதிட்டத்திற்கு அமெரிக்காவின் நிதியுதவியை பயன்படுத்தப்போவதில்லை என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. அதானி குழுமம் கொழும்பு துறைமுக திட்டத்திற்கு தனது நிதியை பயன்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது. கொழும்புதுறைமுக திட்டத்திற்கான பணிகள் தொடர்கின்றன அடுத்தவருட ஆரம்பத்தில் அவற்றை ஆரம்பிக்கலாம் என தெரிவித்துள்ள அதானி குழுமமும் எஸ்ஈஜட் நிறுவனமும் தங்கள் மேலாண்மை மூலோபாயத்தின் அடிப்படையில் உள்திரட்டல் மூலம் தற்போதைய திட்டத்திற்கு நிதி வழங்கப்போவதாக தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/200961
-
அதிதீவிர சிகிச்சை பிரிவில் முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஐயா நலம்பெற வேண்டுகிறேன்.
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
அத்துமீறினால் நடவடிக்கை எடுப்போம்! அர்ச்சுனாவை எச்சரிக்கும் வைத்தியர் சத்திய மூர்த்தி
-
எரிசக்தி துறைக்கு அமெரிக்காவின் ஆதரவு!
10 DEC, 2024 | 04:12 PM இலங்கையின் எரிசக்தி துறையின் அபிவிருத்திக்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளமை மிகுந்த நம்பிக்கையளிப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடியை நேற்று திங்கட்கிழமை (9) கொழும்பு 7 இல் அமைந்துள்ள எரிசக்தி அமைச்சில் சந்தித்த போதே அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும், இலங்கையின் சிறப்பு நண்பன் என்ற வகையில் அமெரிக்காவின் நட்புறவையும் ஆதரவையும் தாம் பெரிதும் பாராட்டுவதாகவும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/200866
-
மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி போராட்டம்
இழப்பீட்டையோ, மரணச் சான்றிதழையோ நாம் கேட்கவில்லை; உறவுகள் எங்கே என்று தான் கேட்கின்றோம்; மட்டக்களப்பில் உறவுகள் போராட்டம் “இழப்பீட்டையோ, மரணச் சான்றிதழையோ நாம் கேட்கவில்லை. எமது உறவுகள் எங்கே? அவர்களுக்கான நீதி எங்கே? என்று தான் கேட்கின்றோம்”- இவ்வாறு பல கோஷங்களை எழுப்பியவாறும் வாசகங்களை தங்கியவாறும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தினரால் நீதிகோரி மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று காலை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இ. சிறிநாத், ஞா. சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் நடராசா உட்பட பலர் கலந்து கொண்டனர். “நாங்கள் கேட்பது இழப்பீட்டையோ, மரணச் சான்றிதழையோ அல்ல முறையான நீதியை”, “எமது உரிமை ?, எமது எதிர்காலம்? இப்போது, எமது உறவுகள் எங்கே?, ஓ. எம். பி. ஒரு கண்துடைப்பு நாடகம் என பல வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். https://thinakkural.lk/article/313501
-
வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 40 இலட்சம் ரூபா பணத்தைத் திருடிய நபருக்கு விளக்கமறியல்!
10 DEC, 2024 | 03:11 PM நுகேகொடை பிரதேசத்தில் உள்ள நபரொருவரின் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 40 இலட்சம் ரூபா பணத்தைத் திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று திங்கட்கிழமை (09) உத்தரவிட்டுள்ளார். கொழும்பு, கொலன்னாவை பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நுகேகொடை பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முறைப்பாட்டாளர் காணி ஒன்றை விற்பனை செய்வதற்காக சமூக ஊடகங்களில் விளம்பரம் ஒன்றைப் பதிவிட்டுள்ள நிலையில் சந்தேக நபர் அந்த காணியைக் கொள்வனவு செய்யும் போர்வையில் முறைப்பாட்டாளரிடமிருந்து வங்கிக் கணக்கைப் பெற்றுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் மேலும் சில நபர்களுடன் இணைந்து முறைப்பாட்டாளரின் வங்கி கணக்கிற்குள் ஊடுருவி 40 இலட்சம் ரூபா பணத்தைத் திருடியுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/200889
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
யுத்த குற்றவாளிகளை பொறுப்புக்கூறலிற்குட்படுத்துவோம் - சிரிய கிளர்ச்சி குழுவின் தலைவர் 10 DEC, 2024 | 03:20 PM சிரிய மக்களை சித்திரவதைக்குட்படுத்திய முன்னாள் ஜனாதிபதி பசார் அல் ஆசாத்தின் அதிகாரிகளின் பெயர் விபரங்களை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ள சிரியாவின் கிளர்ச்சி குழுவின் தலைவர் யுத்த குற்றவாளிகளை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவேன் என தெரிவித்துள்ளார். யுத்த குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ உயர் அதிகாரிகள் பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த தகவல்களை வெளியிடுபவர்களிற்கு சன்மானம் வழங்கப்படும் என அபுமுகமட் அல் ஜொலானி தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை, கொலைகாரர்களை சிரிய மக்களை சித்திரவதை செய்த பாதுகாப்பு தரப்பினரை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவோம் யுத்த குற்றவாளிகளை தேடுவோம். அவர்கள் வெளிநாடுகளில் இருந்தால் அவர்களை ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/200908
-
யுக்ரேன் உடனான போரில் ரஷ்யாவை தொடர்ந்து முன்னேற வைக்கும் ஒரு 'பயங்கர' உக்தி இதுதான்
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சமீப மாதங்களில் ரஷ்யா கிழக்கு யுக்ரேன் பிராந்தியத்தில் நிலையாக முன்னேறி வருகிறது எழுதியவர், பால் ஆடம்ஸ் பதவி, பிபிசி செய்திகள் இந்த 2024-ஆம் ஆண்டு முடியப்போகிறது. குளிர் காலமும் வந்துவிட்ட நிலையில், ரஷ்யப் படைகள் யுக்ரேன் படைகளைப் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளி சண்டையிட்டு வருகிறது. மொத்தமாக, கிழக்கு உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் சுமார் 2,350 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றியுள்ளது மற்றும் மீட்டுள்ளது இதில் பயங்கரமான உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. "நவம்பரில், 45,680 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பிப்ரவரி 2022 இல் போர் தொடங்கியதிலிருந்து எந்த மாதத்திலும் இல்லாத அளவுக்கு ரஷ்யா சந்தித்த அதிகபட்ச உயிரிழப்பு இது" என்று பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. பிரிட்டன் பாதுகாப்பு உளவுத்துறையின் கணக்குப்படி, ரஷ்யாவில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1,523 ஆண்கள் கொல்லப்படுகின்றனர் மற்றும் காயம் அடைகின்றனர். நவம்பர் 28 அன்று, ஒரே நாளில் 2,000 க்கும் மேற்பட்ட ஆண்களை ரஷ்யா இழந்தது. இவ்வளவு பெரிய இழப்பு நடப்பது இதுவே முதல் முறையாகும். "ரஷ்யா தொடர்ந்து முன்னேறி வருகிறது. ஆனால் அதற்கு அந்த நாடு கொடுக்கும் விலை அதிகமானது" என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார். இறந்த அல்லது காயமடைந்த வீரர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களைப் பொது தரவுகளில் இருந்து பெறப்பட்டதாகவும், ரகசிய தரவுகளோடு அது ஒப்பிடப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒட்டு மொத்தமாக, ரஷ்யா தனது இலையுதிர் கால ( செப்டம்பர் முதல் நவம்பர் வரை) தாக்குதல்களின் போது சுமார் 125,800 வீரர்களை இழந்துள்ளதாக, வாஷிங்டனை தளமாகக் கொண்ட போர் ஆய்வுக்கான நிறுவனம் (ISW) தெரிவித்துள்ளது. "ரஷ்யாவின் 'மீட் - க்ரிண்டர்' என்ற ராணுவ உத்தியின் மூலம், அவர்கள் கைப்பற்றும் ஒவ்வொரு சதுர கிலோமீட்டர் பரப்பிற்கு 50க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷ்யா இழக்கிறது" என்று போர் ஆய்வு நிறுவனம் (ISW) தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK யுக்ரேன் படைக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? யுக்ரேன் தனது வீரர்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்பதை வெளியிட அனுமதிக்கவில்லை. எனவே கடந்த சில மாதங்களாக நடைபெற்ற தாக்குதலில் இறந்து போன யுக்ரேன் ராணுவ வீரர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை. குர்ஸ்க் பகுதியில் மட்டும் 38,000 யுக்ரேனிய வீரர்கள் இறந்துள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று ரஷ்யா கூறுகிறது. இருப்பினும், இது உறுதிப்படுத்தப்படாத தகவல். நல்ல தொடர்புகளை கொண்ட அதே சமயம் சர்ச்சைக்குரிய யுக்ரேன் போர் செய்தியாளரான யூரி புடுசோவ், பிப்ரவரி 2022-ஆம் ஆண்டு துவங்கி இதுவரை 70 ஆயிரம் யுக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 35 ஆயிரம் பேர் காணவில்லை என்கிறார். அமெரிக்க ஊடகங்கள், 80 ஆயிரம் யுக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று வெளியிட்ட செய்தியை மறுத்துள்ளார் யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாகக் கூறினார். ஆனாலும் அவர் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை கொடுக்கவில்லை. குர்ஸ்க் மற்றும் யுக்ரேனின் கிழக்குப் பகுதிகளில் நடக்கும் சண்டையின் தீவிரத்தை, உயிரிழப்பு எண்ணிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யாவின் தாக்குதலால் யுக்ரேனில் ஏற்பட்ட சேதம் "இந்த நிலை மாறுவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை" என்று மேற்கத்திய அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தச் சண்டை நீண்ட காலத்திற்கு தொடரும் என்று மேற்கத்திய அதிகாரிகள் நம்புகின்றனர். ' ரஷ்யா இப்போது முன்பை விட வேகமாக நகர்கிறது. ஆனால் போர் தொடங்கிய போது இருந்த வேகத்தைப் போல் அல்ல. யுக்ரேன் அனுப்பிய ஒவ்வொரு குண்டுக்கும் ஒரு காலத்தில் ரஷ்யாவால் 13 குண்டுகளைத் திருப்பிச் சுட முடிந்த நிலையில், இப்போது அந்த விகிதம் 1.5 முதல் 1 வரை குறைந்து உள்ளது. இப்போது யுக்ரேனால் ரஷ்யாவிற்கு எதிராக திறம்பட எதிர்த்துப் போராட முடிகிறது. இதற்கு உள்நாட்டு ஆயுத உற்பத்தியும், ரஷ்ய மற்றும் வட கொரிய ஆயுத கிடங்குகள் மீது அவர்கள் நடத்திய தாக்குதலும் ஒரு காரணம். போரில் பீரங்கி முக்கியமானது என்றாலும், அது முன்பு இருந்த முக்கியத்துவதோடு இப்போது இல்லை. ''கிளைடு குண்டுகளின் பயன்பாட்டை கடந்த ஆண்டை விட 10 மடங்கு ரஷ்யா அதிகரித்துள்ளது'' என்று ஒரு மேற்கத்திய அதிகாரி கூறினார். இந்த குண்டுகள் ரஷ்ய பிரதேசத்தில் பறக்கும் விமானங்களில் இருந்து ஏவப்பட்டு யுக்ரேனைச் சென்றடைந்து, அங்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்துகின்றன. கிளைடு குண்டுகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் போரில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்துகின்றன. இரு தரப்பினரும் , தொடர்ந்து புதிய ஆயுதங்கள் மற்றும் திட்டங்களை உருவாக்கி மோதலில் ஆதாயம் பெறுகின்றனர். பாரம்பரிய காலாட்படை சண்டையின் முக்கியத்துவத்தை, ஆளில்லா விமானங்கள் குறைத்துவிட்டதாக, போரின் முன் கள வீரரான செர்ஹி வாட்சப்பில் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிளைடு குண்டுகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் போரில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்துகின்றன ராணுவ பணிசேர்ப்பு தொடர்பாக இரு நாடுகளும் சந்திக்கும் பிரச்னைகள் ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இரண்டு நாடுகளும் போர் வீரர்களைப் பயன்படுத்துவதில் வெவ்வேறு வகையான சவால்களை எதிர்கொள்கின்றன. தன்னார்வத்தோடு வருபவர்களைத் தவிர, 18-24 வயதுடைய இளைஞர்களைப் போருக்குப் பயன்படுத்த வேண்டாம் என யுக்ரேன் முடிவு செய்துள்ளது. வீரர்கள் பற்றாக்குறையை யுக்ரேன் எதிர்கொண்டாலும், ரஷ்யாவால் அப்பாற்றாக்குறையை ஈடுசெய்ய முடிகிறது. ஆனாலும், பல காரணங்களால் ராணுவ வீரர்கள் அணிதிரட்டலுக்கு மற்றொரு சுற்று அழைப்பு விடுக்க அதிபர் புதின் தயங்குகிறார். அதிக பணவீக்கம், நிரம்பிய மருத்துவமனைகள், இறந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் உள்ள சிக்கல்கள் ஆகியவை அவரின் தயக்கத்துக்கு காரணமாக இருக்கலாம். அதிகளவு தன்னார்வலர்களை ஈர்க்க, சில ரஷ்ய பிராந்தியங்கள் மூன்று மில்லியன் ரூபிள் வரை ஊக்கத்தொகை வழங்குகின்றன. "ரஷ்யப் பொருளாதாரம் முற்றிலுமாக வீழும் நிலையில் இல்லை என்றாலும், குறிப்பிட்டளவு சிரமங்களை எதிர்கொள்கிறது. பொருளாதார அழுத்தம் அங்கு உள்ளது" என்று ஒர் அதிகாரி கூறுகிறார். சிரியாவில் சமீபகாலமாக அதிகரித்து வரும் சண்டைகள் ரஷ்யாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. ரஷ்யாவின் தற்போதைய போக்கு, அதன் எதிர்கால முன்னுரிமையைத் தீர்மானிப்பதில் கடினமான சவால்களை ஏற்படுத்தக்கூடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwydd188lwwo
-
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!
ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பில் வெளியான தகவல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இதேவேளை, இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதி நிதியமைச்சர் ஆகியோரும் பங்குபற்றவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/313470
-
கார் இருக்கு, இனி யார் உதவியும் தேவையில்ல - கனவை காத்திருந்து நிஜமாக்கிய மாற்றுத்திறனாளி
இவர் குஜராத் மாநிலம் தஹேகம் எனும் பகுதியைச் சேர்ந்த 49 வயதான சுரேஷ். பல தடைகளுக்கு எதிராகப் போராடி, தனக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனம் ஒன்றை இவர் வடிவமைத்திருக்கிறார். இந்த வாகனத்தை வடிவமைக்க சுமார் ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் சுரேஷ் செலவழித்துள்ளார். இதில் தான் அக்கிராமத்தில் உள்ள தனது சிறிய கடைக்கு அவர் செல்கிறார். குறைவான உயரத்துடன் வாழ்வது எளிதானது அல்ல என்கிறார் அவர். எல்லா சவால்களையும் கடந்து சுரேஷ் நம்பிக்கையுடன் இருக்கிறார். இந்த வாகனத்தில் குழந்தைகளை ஏற்றிச் செல்வதன் மூலம் அந்த நிறைவை உணர்கிறார் சுரேஷ். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
நான்கு வருடங்களின் பின்னர் சிரியாவின் அலப்போ நகரம் மீண்டும் கிளர்ச்சியாளர்கள் வசம் - சர்வதேச ஊடகங்கள்
சிரியாவின் அலப்போ நகரம் மீண்டும் கிளர்ச்சியாளர்கள் வசம் - 2016 இல் தோற்கடிக்கப்பட்டவர்கள் மீண்டும் புதிய வலுவுடன் போர்க்களத்தில் 02 DEC, 2024 | 10:48 AM bbc பலவருடங்களிற்கு பின்னர் கிளர்ச்சியாளர்கள் சிரிய அரசாங்கத்திற்கு எதிரான இராணுவநடவடிக்கையை புதன் கிழமை ஆரம்பித்தனர். சனிக்கிழமையளவில் அவர்கள் அலப்போவின் பெருமளவு பகுதியை கைப்பற்றியுள்ளனர். கிளர்ச்சியாளர்களின் இந்த எதிர்பாராத நடவடிக்கையை தொடர்ந்து ரஸ்யா அவர்களின் நிலைகள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளது – 2016ம் ஆண்டின் பின்னர் ரஸ்யா கிளர்ச்சியாளர்கள் மீது மேற்கொண்ட முதலாவது தாக்குதல் இது. 2016ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக சிரியபடையினர் இந்த நகரத்திலிருந்து பின்வாங்கியுள்ளனர். ஹயட் டஹ்ரிர் அல் சாம் என்ற இஸ்லாமிய அலப்போ மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளது. சிரிய மோதலில் இந்த அமைப்பிற்கு நீண்டகால வரலாறுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஹயட் டஹிரிர் அல் சாம் அமைப்பின் வரலாறு என்ன? 2011 இல் இந்த அமைப்பு ஜபாட் அல் நுஸ்ரா என்ற பெயரில் அல்ஹைதாவின் இணை அமைப்பாக செயற்பட்டது. ஐஎஸ் அமைப்பின் கொல்லப்பட்ட தலைவர் அபு பக்கர் அல் பக்தாதியும் இந்த அமைப்பின் உருவாக்கத்துடன் தொடர்புபட்டிருந்தார். சிரிய ஜனாதிபதிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட குழுக்களில் இந்த குழுவே மிகவும் வலிமை வாய்ந்தத- ஆபத்தான குழுவாக கருதப்பட்டது. இந்த அமைப்பின் உந்துசக்தியாக அதன் ஜிகாத் கொள்கைகாணப்பட்டது.புரட்சிகர கொள்கைகளை விட ஜிகாத் உணர்வே மேலோங்கி காணப்பட்டது. சுதந்திர சிரியா என்ற பதாகையின் செயற்பட்ட பிரதான அமைப்பின் கொள்கைகளுக்கு முரணாண கொள்கைகளை இந்த குழு கொண்டிருந்தது. எனினும் 2016 இல் இந்த அமைப்பின் தலைவர் அபு முகமட் அல் ஜவ்லானி அல்ஹைடாவுடன் பகிரங்கமாக முரண்பட்டார்,ஜபாட் அல் நுஸ்ராவை கலைத்துவிட்டு புதிய அமைப்பை ஏற்படுத்தினார்.இதுவேஹயட் டஹ்ரிர் அல் சாம் அமைப்பின் உருவாக்கம். சிரியாவை யார் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர்.? சிரியாவின் உள்நாட்டு யுத்தம் உத்தியோகபூர்வமாக முடிவிற்கு வந்துவிட்டது என்ற உணர்வே கடந்த நான்கு வருடங்களாக காணப்பட்டது. நாட்டின் பிரதான நகரங்களில் ஜனாதிபதி பசார் அல் அசாட்டிற்கு எதிர்ப்போ போட்டியோ இருக்கவில்லை. எனினும் சிரியாவின் சில பகுதிகள் இன்னமும் அவரின் கட்டுப்பாட்டின் இல்லாததும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிரியாவின் கிழக்கில் உள்ள குர்திஸ் இனத்தவர்கள் அதிகமாக வாழும் பகுதி 2011 முதல் சிரியாவிலிருந்து பிரிந்த ஒரு பகுதி போல காணப்படுகின்றது. 2011 இல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பமான சிரியாவின் தென்பகுதியில் தொடர்ந்தும் சிறியளவு அமைதியின்மை காணப்படுகின்றது. சிரிய பாலைவனத்தில் ஐஎஸ் அமைப்பின் எஞ்சியுள்ள சில பிரிவினர் இன்னமும் செயற்படுகின்றனர் சிரியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர். சிரியாவின் வடமேற்கு இட்லிப்பில் ஜிகாத் இயக்கங்களும் கிளர்ச்சியாளர்களும் செயற்படுகின்றனர். பல வருடங்களாக சிரியாவில் கடும் மோதல்கள் இடம்பெறும் பகுதியாக இட்லிப் காணப்பட்டது.சிரிய படையினர் அந்த பகுதியை கைப்பற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். எனினும் சிரிய அரசாங்கத்தினதும்,துருக்கியினதும் நெருங்கிய சகாவான ரஸ்யாவின் முயற்சியால் சாத்தியமான யுத்த நிறுத்தம் கடந்த நான்கு வருடங்களாக நீடித்தது. அலப்போவில் நான்கு மில்லியன் மக்கள் வசிக்கின்றனர், இவர்கள் ஜனாதிபதி அசாத் கடும் ஒடுக்குமுறையை பயன்படுத்தி கைப்பற்றிய நகரங்களில் வசித்தவர்கள். அலப்போ மிக மோசமான இரத்தக்களறியை சந்தித்த ஒரு நகரம்.கிளர்ச்சிக்காரர்கள் மிகமோசமான தோல்வியை சந்தித்த நகரமாகவும் இது காணப்பட்டது. ரஸ்யாவின் வான்வலு ஈரானின் ஆதரவு ,ஈரான் சார்பு குழுக்களின் ஆதரவு ஆகியவற்றின் மூலமே சிரிய ஜனாதிபதி 2016 இல் இந்த நகரத்தை கைப்பற்றியிருந்தார். ஹெஸ்புல்லா அமைப்பினரும் அவருக்கு உதவியிருந்தனர். சமீபத்தில் லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலிடம் எதிர்கொண்ட தோல்விகள் சிரியாவில் உள்ள ஈரான் இராணுவ தளபதிகள் மீதான இஸ்ரேலின் தாக்குதல், கிளர்ச்சிக்காரர்கள் அலப்போவை கைப்பற்றுவதற்கு உதவியாக அமைந்துள்ளன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. https://www.virakesari.lk/article/200201
-
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் செய்திகள்
19 வயதின் கீழ் ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா - பங்களாதேஷ் 06 DEC, 2024 | 05:35 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இந்தியாவும் பங்களாதேஷும் தகுதிபெற்றன. ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஓர் அரை இறுதிப் போட்டியில் இலங்கையை 7 விக்கெட்களால் இந்தியாவும், துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றைய அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்களால் பங்களாதேஷும் வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. இந்தியாவுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 46.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை இளையோர் அணி 8 ஓட்டங்ளைப் பெற்றிருந்தபோது 3 விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன. இந் நிலையில் ஜோடி சேர்ந்த சண்முகநாதன் ஷாருஜன், லக்வின் அபேசிங்க ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வீழ்ச்சியை சீர்செய்தனர். ஆனால், அது போதுமானதாக அமையவில்லை. மத்திய மற்றும் பின்வரிசையில் எவரும் பிரகாசிக்கவில்லை. லக்வின் 69 ஓட்டங்களையும் சண்முகநாதன் ஷாருஜன் 42 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சேத்தன் ஷர்மா 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு அதிரடியாக துடுப்பெடுத்தாடிய இந்தியா 21.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ராஜஸ்தான் றோயல்ஸினால் ஐபிஎல் ஏலத்தில் 1.1 கோடி இந்திய ரூபாவுக்கு வாங்கப்பட்ட 13 வயதுடைய வைபவ் சூர்யாவன்ஷி 36 பந்துகளில் 6 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 67 ஓட்டங்களைக் குவித்தார். பங்களாதேஷ் வெற்றி பங்களாதேஷுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரை இறுதிப் போட்டியில் மிகவும் இலகுவாக 7 விக்கெட்களால் பங்களாதேஷ் வெற்றிபெற்றது. ஏ குழுவிலிருந்து தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்ற பாகிஸ்தான் வெற்றிபெறும் என எதிர்பாரக்கப்பட்டது. ஆனால், மிக மோசமாகத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 37 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 116 ஓட்டங்களுக்கு சுருண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 22.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான இறுதிப் போட்டி துபாய் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/200609
-
நான்கு வருடங்களின் பின்னர் சிரியாவின் அலப்போ நகரம் மீண்டும் கிளர்ச்சியாளர்கள் வசம் - சர்வதேச ஊடகங்கள்
சிரியாவின் இரண்டாவது நகரமும் கிளர்ச்சியாளர்கள் வசம் 05 DEC, 2024 | 07:59 PM சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் ஹமா நகரை கைப்பற்றியுள்ளனர். சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் அந்த நகரை முற்றுகையிட்டிருந்த நிலையில் சிரிய படையினர் அந்த நகரிலிருந்து வெளியேறியுள்ளனர். கடந்த சில மணித்தியாலங்களில் எங்கள் படையினருக்கும் பயங்கரவாதிகளிற்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ளன, எங்கள் தரப்பில் பலர் மரணித்துள்ளனர். அந்த குழுக்கள் ஹமா நகரின் பல பகுதிகளிற்குள் நுழைந்துள்ளன என சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது. சிரிய அரசாங்கம் அலப்போவை அவர்களிடமிருந்து மீள கைப்பற்றுவதற்கான நடவடிக்கையை ஆரம்பித்துள்ள போதிலும் சிரிய கிளர்ச்சியாளர்கள் ஹமா நகரை கைப்பற்றும் நிலையில் உள்ளனர். சிரியாவிற்கும் ஜனாதிபதி பசார் அல் அசாத்திற்கும் மூலோபாய ரீதியில் ஹமா நகரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிரியாவை ஆட்சி செய்பவர்களிற்கும் தங்கள் அதிகாரத்தை தக்கவைப்பதற்கு இந்த நகரம் மிகவும் முக்கியமானது. https://www.virakesari.lk/article/200535
-
விசிக - தவெக கூட்டணி சர்ச்சை: விஜய் குறித்த திருமாவளவனின் அறிக்கை உணர்த்துவது என்ன?
பட மூலாதாரம்,@THIRUMAOFFICIAL/TVK எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை அம்பேத்கர் நினைவு தினமான இன்று (டிசம்பர் 6) 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தகத்தை விகடன் பதிப்பகம் வெளியிடுகிறது. அம்பேத்கர் குறித்து 36 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பான இந்த நூலின் வெளியீட்டு விழா கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சர்ச்சையை எழுப்பியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் துவங்கியிருக்கும் விஜயுடன் இந்த நூல் வெளியீட்டு விழா மேடையை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் பகிர்ந்துகொள்ள இருப்பதாக வெளியான தகவல்கள், இரண்டு கட்சிகளுக்கும் கூட்டணி வாய்ப்புகள் சாத்தியமா என்ற கேள்வியை எழுப்பியது. திமுக தலைமை வகிக்கும் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, விஜயுடனான கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக மறுத்தது. இருப்பினும் திருமாவளவனும், விஜயும் ஒரே மேடையில் சந்திக்கும் நிகழ்வுகள் பல்வேறு கேள்விகளுக்கு வழி வகுத்தது. இந்ததச் சூழலில் இன்று (டிசம்பர் 6) இதற்கான விளக்கம் ஒன்றை அறிக்கையாக வெளியிட்ட திருமாவளவன், இந்தப் புத்தக வெளியீட்டு விழா சார்பாக உருவான விவாதங்கள் அனைத்தும் ஒருதலைபட்சமாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஒரு சில நபர்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த விழா தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்குத் தெரிவித்தது யார் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். அதோடு, ஒரு நூல் வெளியீட்டு விழாவாக, அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடக்க வேண்டிய நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசியது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து திருமாவளவன் கூறியது என்ன? திருமாவளவன் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாதது குறித்து த.வெ.க தரப்பு கூறுவது என்ன? தமிழக அரசியலில் இந்த நிகழ்வு எவ்வாறாகப் பார்க்கப்படுகிறது? எதனால் இந்த சர்ச்சை? கொள்கைகளும் கோட்பாடுகளும் வேறாக இருந்தாலும் இருவேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்பது பல சமயங்களில் மக்கள் பார்த்த ஒன்றாகவே இருக்கிறது. பட மூலாதாரம்,@THIRUMAOFFICIAL ஆனால் திருமாவளவன் விஜயுடன் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வது, விஜயின் விக்கிரவாண்டி மாநாட்டிற்குப் பிறகு பெரும் சர்ச்சையாக மாறியது. அக்டோபர் 7ஆம் தேதியன்று நடைபெற்ற அந்த மாநாட்டில் தன்னுடைய கட்சியின் அரசியல் எதிரி திமுக என்று கூறினார். "பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.கவின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியார், அண்ணாவின் பெயரை வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி," என்றார் விஜய். பிறகு, கூட்டணி குறித்துப் பேசிய அவர், "2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இருப்பினும், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கும், அதிகாரப் பகிர்வும் கொடுக்கப்படும்" என்று கூறினார். ஆனால், இந்த மாநாடு நடைபெறுவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு "ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு" என்றும், 'அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதுதான் ஜனநாயகம், குவித்து வைப்பது அல்ல, இது யாரையும் மிரட்டுவதற்காகச் சொல்லப்படும் கருத்து அல்ல" என்றும் திருமாவளவன் கூறியிருந்தார். இந்தச் சூழலில் விஜய் தன்னுடைய மாநாட்டில் பேசியது, விசிக உடனான கூட்டணிக்கான அழைப்பாகக் கருத்தப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திருமாவளவன், தாங்கள் திமுக கூட்டணியில் உறுதியாக நீடிப்பதாகவும், விஜயுடன் ஒரே மேடையில் பங்கேற்பதாலேயே அவருடன் கூட்டணி சேர்வோம் எனக் கூறுவது சரியல்ல என்றும் கூறினார். அதிருப்தி தெரிவித்த திருமாவளவன் பட மூலாதாரம்,@THIRUMAOFFICIAL/X படக்குறிப்பு, விஜயுடன் ஒரே மேடையில் பங்கேற்பதாலேயே அவருடன் கூட்டணி சேர்வோம் எனக் கூறுவது சரியல்ல என்று திருமாவளவன் குறிப்பிட்டார். அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி அன்றே இந்த புத்தக வெளியீட்டு விழா திட்டமிடப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட, திருமாவளவன் அதைப் பெற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறவில்லை. விஜயின் கட்சி அதிகாரப்பூர்வமாக நிறுவப்படுவதற்கு முன்பாகவே இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார் திருமாவளவன் என்பது அவரது அறிக்கையின் மூலம் உறுதியாகிறது. டிசம்பர் 6ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் "விஜய் விழாவில் பங்கேற்க இசைவளித்துள்ளதாகச் சொல்லப்பட்டது. அவரது கட்சியின் விக்கிரவாண்டி மாநாடு நடைபெறுவதற்கு முன்பு அவ்வாறு சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது" என்று மேற்கோள் காட்டிய திருமாவளவன், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளிவராத சூழலில் ஒரு தமிழ் நாளிதழ் இதைப் பெரிய செய்தியாக வெளியிட்டதாகக் கூறியுள்ளார். மேலும், "ஒரு நூல் வெளியீட்டு விழாவைப் பூதாகரப்படுத்தி அந்நாளேடு அதை அரசியலாக்கியது," என்றும் தன்னுடைய அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார். "திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையிலுள்ள நட்புறவில் ஐயத்தைக் கிளப்பி, கருத்து முரண்களை எழுப்பி, திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதும், அதன் மூலம் கூட்டணியில் விரிசலை உருவாக்குவதும்தான் இதன் உள்நோக்கமாக இருக்க முடியும்," என்று பெயர் ஏதும் குறிப்பிடாமல் குற்றச்சாட்டை முன்வைத்தார் அவர். இந்த விழாவில் திருமாவளவன் பங்கேற்கவில்லை என்ற தகவல்கள் உறுதியானதும், பலர் பல்வேறு ஊகங்களை பரப்பி வருவதாகக் கூறும் அவர், "இவர்களில் பெரும்பாலானோர், திமுக கூட்டணியை உடைக்க வேண்டுமென்ற செயல் திட்டத்தோடு," இருப்பதாகக் குறிப்பிட்டார். 'காய் நகர்த்தும் அரசியல் எதிரிகள்' பட மூலாதாரம்,@THIRUMAOFFICIAL/X திருமாவளவனை விட்டுவிட்டு இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம் என்ற விகடனின் முடிவை ஏன் யாரும் விமர்சிக்கவில்லை என்ற கேள்வியையும் அவர் முன்னெழுப்பியுள்ளார். மேலும், இதற்குத் தானும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் எனக் குறிப்பிட்ட அவர், "உங்களுக்கு துளியும் சங்கடத்தை உருவாக்க மாட்டேன். அவரை (விஜயை) வைத்தே விழாவைச் சிறப்பாக நடத்துங்கள்," என்று விகடன் பதிப்பகத்திடம் தான் கூறிவிட்டதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். "என்னை ஒரு கருவியாகக் கொண்டு தமிழக அரசியல் களத்தில் அரசியல் எதிரிகள் காய் நகர்த்தப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்த பின்னர், எங்ஙனம் நான் அதற்கு இடம் கொடுக்க இயலும்?" என்றும் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் திருமாவளவன். திருமாவளவனின் முடிவு குறித்து த.வெ.க கூறுவது என்ன? பட மூலாதாரம்,TVK VIJAY/FACEBOOK படக்குறிப்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் த.வெ.கவின் செய்தித் தொடர்பாளர் லயோலா மணி இதுகுறித்து பிபிசியிடம் பேசியபோது, "கொள்கைகளும் கருத்துகளும் வெவ்வேறாக இருந்தபோதும் இரண்டு வெவ்வேறு தலைவர்கள் ஒரே நிகழ்வில் கலந்து கொள்வதும், ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்வதும் இயல்பான ஒன்று. இந்த நிகழ்வில் திருமாவளவன் பங்கேற்காமல் போனது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது," என்று கூறினார். "அம்பேத்கரை எங்கள் கொள்கைத் தலைவர்களில் ஒருவராகக் கொண்டிருக்கிறோம். இடதுசாரி சிந்தனையாளர்கள், முற்போக்குவாதிகள் என்று பலரால் எழுதப்பட்டுள்ள கட்டுரையின் தொகுப்பே அந்த நூல். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோரின் கட்டுரைகளும் அதில் இடம் பெற்றுள்ளன. இந்த புத்தக வெளியீட்டு விழாவை அரசியல் நிகழ்வாகப் பார்ப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும்," என்று கூறினார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் திருமாவளன் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தால், அம்பேத்கரின் தியாகங்களும், சமூக நீதி, சமத்துவ அரசியல் கருத்தாக்கங்களும் பல கோடி மக்களிடம் போய் சேர்ந்திருக்கும் எனக் குறிப்பிட்ட லயோலா மணி, "கூட்டணி வேறு, கொள்கை வேறு. சூழல் காரணமாகவே திருமாவளவனால் இந்த நிகழ்வில் பங்கேற்க இயலவில்லை," என்று மேற்கோள் காட்டினார். "திருமாவளவன் சுயம்பாக வந்த தலைவர். அவர் மீது எங்களுக்கு கோபமோ, விமர்சனமோ இல்லை," என்றும் அவர் கூறினார். இந்த அறிக்கையை எவ்வாறு அணுகுவது? பட மூலாதாரம்,@LOYOLAMANI/X படக்குறிப்பு, த.வெ.கவின் செய்தித் தொடர்பாளர் லயோலா மணி (இடது) கூட்டணிகளைப் பொறுத்தவரை நிரந்தரமான கூட்டணி என்ற ஒன்று இல்லவே இல்லை எனக் கூறுகிறார் அரசியல் ஆய்வாளரும், பேராசிரியருமான கிளாட்சன் சேவியர். "புத்தக வெளியீட்டு விழாவை ஒரு அறிவுசார் தளமாகவே பார்க்க வேண்டும். இன்றைய சூழலில், சமகால நிகழ்வுகள் குறித்த ஊடக மற்றும் பொதுமக்களின் நினைவானது ஓரிரு நாட்கள் மட்டுமே இருக்கக் கூடியது. ஆனால் இந்த நிகழ்வில் திருமாவளவன் கலந்து கொள்ளாமல் இருப்பது குறித்து மௌனித்து இருந்தால் அது தொடர்பாகவும் விமர்சனங்கள் ஏற்படும். இத்தகைய விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அறிக்கையாகவே இதை அணுக வேண்டும்," என்று கூறினார். மேலும், ஒரு அரசியல் மேடையை இரு தலைவர்கள் பகிர்ந்து கொண்டால் அது கூட்டணிக்கு வழிவகுக்கும் என்று கூறிவிட இயலாது, கொள்கை ரீதியாகப் பல பத்தாண்டுகளாக திருமாவளவன் உறுதியாக இருந்திருக்கிறார் என்றும் சேவியர் குறிப்பிட்டார். "திமுகவின் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே அதைச் செய்திருக்கலாம். அவருக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, பாஜகவில் இணைந்து, மேலும் சில தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பை அவர் உறுதி செய்திருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. இந்திய அரசியல் சூழலில் அறிவு முதிர்ச்சி பெற்ற ஒரு தலைவராக திருமாவளவன் அறியப்படுகிறார். தனது நிலைப்பாட்டை உறுதி செய்யவே இந்த அறிக்கையை அவர் வெளியிட்டிருக்கிறார். மேலும் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்த தகவல்களை ஊடகத்திற்கு வெளியிட்டது யார் என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். இதில் அதிகமாக உள்ளர்த்தங்களைத் தேடிக்கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லை," என்றும் கூறினார் அரசியல் ஆய்வாளரான பேராசிரியர் கிளாட்சன் சேவியர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cnv3j011y3yo
-
இலங்கை நாடாளுமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் - விசேட தேவையுடைய நாடாளுமன்ற உறுப்பினரின் கன்னி உரை!
விசேட தேவையுடையவர்களுக்கு தேவையான தீர்மானங்களை மேற்கொள்ளவே எனக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது; சுகத் வசந்த டி சில்வா 06 DEC, 2024 | 05:40 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் விசேட தேவையுடையவர்களின் கொடுப்பனவை 7ஆயிரத்தி 500 ரூபாவில் இருந்து 10ஆயிரம் ரூபாவரை நிச்சியமாக அதிகரிப்போம் என சுகத் வசந்த டி சில்வா தெரிவி்த்தார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06) அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வாக்குப்பதிவு கணக்கறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகாெண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், விசேட தேவையுடையவர்கள் என்பது இந்த உலகுக்கு அழகை கொண்டுவந்த தூதுக்குழுவினராகும். பன்முகத்தன்மையின் அடிப்படையிலேயே வர்ணமயங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. உங்கள் மத்தியில் கண் பார்வை அற்ற என்னால், இந்த இடத்தில் பன்முகத்தன்மை ஏற்பட்டிருக்கிறது. மனித சமூகத்தில் வர்ணமயங்கள் ஏற்பட்டிருப்பது இந்த பன்முகத்தன்மையினால் ஆகும். இது என்னுடைய கன்னி உரையாகும். அதேபோன்று இது வரலாற்று கதையாகும். இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் 76 வருடங்களுக்கு பின்னர் விசேட தேவையுடைய ஒருவருக்கு பாராளுமன்ற வரம் கிடைத்திருக்கிறது. இந்த வரம் தற்செயலாகவோ வேறுமனே கிடைத்த வரம் அல்ல. இதற்காக பாடுபட்ட குழுவொன்று இருக்கிறது. 17இலட்சத்துக்கும் அதிக எனது விசேட தேவையுடைய சமூகம் சார்ப்பாக அந்த குழுவுக்கு நன்றி செலுத்துகிறேன். மேலும் விசேட வேவையுடைய சமூகத்துக்கு தற்போது வழங்கப்படும் 7500 ரூபா கொடுப்பனவு போதுமானதாக இல்லை. அதனால் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அந்த கொடுப்பனவை 10ஆயிரமாக நிச்சயமாக அதிகரிப்போம். மேலும் விசேட தேவையுடைய சமூகத்துக்கு தேவையான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு பாராளுமன்றத்தில் ஒரு பிரதிநிதித்துவம் தேவையாகும். அதனை உணர்ந்துகொண்டது தேசிய மக்கள் சக்தி மாத்திரமாகும். எமது இந்த விசேட தேவைப்பாடு நாங்கள் பலவந்தமாக எடுத்துக்கொண்டது அல்ல. அந்தவகையில் விசேட தேவையுடைய சமூகத்தினருக்கு பல அடிப்படை தேவைகள் இருக்கின்ற. அந்த தேவைகளை இந்த அரசாங்கத்தில் நிவர்த்தி செய்ய என்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்வேன். குறிப்பாக ரயில் போக்குவரத்து சேவையில் விசேட தேவையுடைவர்களுக்கு என எந்த வசதியும் இல்லை. அதனால் ரயிலில் தனியான ஒரு பெட்டியை விசேட தேவையுடையவர்களுக்கு ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/200593