Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. சீரற்ற வானிலை - வடக்கு, கிழக்கில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின : வடக்கில் மாத்திரம் 15,284 பேர் பாதிப்பு! 25 NOV, 2024 | 05:40 PM நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக வடக்கு, கிழக்கில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, வட மாகாணத்தில் மாத்திரம் 15,284 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல இந்நிலையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடளாவிய ரீதியில் மழை, வெள்ளம் காரணமாக 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (25) காலை மத்திய - தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு இன்று (25) காலை 8.30 மணியளவில் திருகோணமலைக்கு தென்கிழக்கே 600 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இது மேலும் வளர்ச்சியடைந்து நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானம் காணப்படலாம். வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. கிளிநொச்சி கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 208 குடும்பங்களைச் சேர்ந்த 592 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. வவுனியா சீரற்ற வானிலையால் வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ராமயன்குளம் உடைப்பெடுக்கும் அபாயம் காணப்படுகிறது. 100 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலப்பரப்பு வெள்ள நீரில் அழிவடைவதைத் தடுக்க விவசாயிகள் மண்மூடைகளை அடுக்கி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக தாழ் நிலப் பிரதேசங்கள், வீடுகள் நீரில் மூழ்கி காணப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, பொத்துவில், நிந்தவூர், இறக்காமம், கல்முனை, சம்மாந்துறை ஆகிய பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதுடன் சில நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் இறந்த நிலையில் முதலைகள், கரையொதுங்குகின்றமை மக்கள் மத்தியில் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலம் கன மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல் பெருக்கெடுத்துள்ளமையால் வட்டுவாகல் பாலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அந்த வீதியால் பயணிப்பவர்கள் கடுமையான போக்குவரத்து இடர்ப்பாடுகளை எதிர்நோக்கியுள்ளனர். மன்னார் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் 43 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு 12 ஆயிரத்து 463 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 629 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் 3 கிராம அலுவலர் பிரிவுகளிலும் 16 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மன்னார் மாவட்டத்தில் 14 தற்காலிக நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கு 367 குடும்பங்களைச் சேர்ந்த 1,248 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குறைந்த தாழமுக்கம் காரணமாக ஏற்படவுள்ள அனர்த்தத்தை தடுக்க முப்படையினர், பொலிஸார் மற்றும் திணைக்கள அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாகவும், மன்னார் மாவட்டத்தில் இருந்து மீனவர்களை மறு அறிவித்தல் வரை கடற்றொழிலுக்குச் செல்ல வேண்டாமெனவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/199664
  2. காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் வெளியிட்ட கருத்து மிகுந்த மனக் கவலையை அளிப்பதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் லீலாவதி ஆனந்த நடராசா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் யாழில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் கருத்து தெரிவித்ததாக அறிய முடிந்தது. அவ் ஊடக சந்திப்பில் எமது உறவுகள் காணாமலாக்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்துள்ளதாகவும் அவர்கள் இனி உயிருடன் திரும்பப் போவதில்லை எனவும் காணாமலாக்கப்பட்டவர்கள் காணாமலாக்கப்பட்டவர்களே என்றவாறும் கருத்து தெரிவித்திருந்தார். உண்மையாகவே அவர் ஒரு தமிழராக இருந்தும் இப்படி ஒரு கருத்தை தெரிவிப்பது எமக்கு மிகுந்த மனக்கவலையை அளிக்கின்றது. நாம் எமது உறவுகளை தேடி 2836 ஆவது நாட்களாக போராடி வருகின்றோம். எமது தொடர்போராட்டத்தில் இதுவரை 300 க்கும் மேற்பட்ட பெற்றோர்களை போராட்ட களத்திலே ஆகுதியாக்கியுள்ளோம். அவர்கள் தமது பிள்ளைகளை தேடும் போராட்டத்தில் மரணத்தை தழுவியுள்ளனர். எமது வலிகளை புரியாது ஒரு தமிழ் அமைச்சர் இவ்வாறு கருத்து கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. காணாமல் போன பிள்ளைகள் உயிருடன் இருக்கின்றார்கள் என்ற எண்ணத்தில் தேடிக்கொண்டிருக்கின்றோம். அதை அவர் எமக்கு கூறவேண்டிய விதமாக கூறவேண்டும். அவர் இப்படி கூறுவதை மனிதாபிமானமற்ற செயலாக தான் பார்க்க வேண்டும். கடந்த அரசாங்கத்திலே ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் வெல்லும் வரை என்னை வெல்லச் செய்யுங்கள் நான் உங்கள் பிள்ளைகளை கண்டுபிடித்து தருகின்றேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு தேர்தலில் வென்றவுடன் பலாலிக்கு வந்து தைப்பொங்கல் அன்று எமது உறவுகள் மனம் நோகும்படி காணாமல் போன உறவுகள் யாவரும் உயிரிழந்து விட்டார்கள் என்று தெரிவித்திருந்தார். அதேபோல தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலே, காணாமலாக்கப்பட்டோருக்கு தீர்வு வழங்க வேண்டும் எனவும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்கள். ஆனால் இந்த அரசு பதவிக்கு வந்து 15 நாட்கள் ஆக முன்னரேயே இப்படியான ஒரு கருத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அமைச்சரவை பதவியேற்று சில நாட்களிலேயே ஒரு தமிழ் அமைச்சரால் இப்படியொரு கூற்று வெளியிடப்பட்டது எமக்கு அதிர்ச்சியளிக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/312621
  3. 25 NOV, 2024 | 05:29 PM அனர்த்த முகாமைத்துவ நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மட்டும் போதுமானதல்ல, தீர்வுகளை அடிமட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒழுங்கற்ற மனித நடவடிக்கைகளே இயற்கை பேரழிவுகளுக்கு காரணம் நிறுவன மட்டத்தில் விதிமுறைகள் இருந்தும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர பதவியேற்பு நிகழ்வில் இன்று (25) இணைந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அனர்த்த முகாமைத்துவத்தில் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மட்டும் போதாது எனவும், தீர்வுகளை அடி மட்டத்திற்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். உள்ளூராட்சி நிறுவனங்களை பலப்படுத்தி அச்சுறுத்தல் உள்ள பிரதேசங்களில் ஏற்படும் அனர்த்தங்களை தடுப்பதற்கு புதிய தீர்வுகள் வழங்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக் காட்டினார். ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டே அனர்த்த முகாமைத்துவ சட்ட முறைமைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்தார். அவ்வாறு பணியாற்றும் எந்தவொரு அதிகாரிக்காகவும் முன்னிற்பேன் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் அரச ஊழியர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார். அனர்த்த முகாமைத்துவத்திற்காக அரசாங்கம் அதிகளவு செலவிடுவதாகவும், சட்டங்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் அந்த செலவைக் குறைக்க முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வைஸ் எயார் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்தா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவப்படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/199636
  4. 10வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார். புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இன்று (25) நடைபெற்ற திசைமுகப்படுத்தல் செயலமர்வில் அவர் இவ்வாறு மன்னிப்பு கோரினார். “எங்கே அமர வேண்டும் என்று கேட்டேன்.. அப்போது சொன்னார்கள் மறுபுறம் போய் உட்காருங்க. எந்த பிரச்சனையும் இல்லை டொக்டர், நீங்கள் எங்கே வேண்டும் என்றாலும் அமருங்கள் என்று. பிறகு நாம் முன்னே சென்று அமர்ந்தோம். எமக்கு கெம்பஸ் சென்று பழக்கம்.. கையை உயர்த்தி பாராளுமன்றத்துக்கு வரவில்லை. எங்கு வேண்டுமானாலும் போய் உட்காரலாம் என்று நினைத்தேன். அப்போது நாலு பேர் வந்து என்னுடன் பேசினார்கள். எதிர்க்கட்சித் தலைவர் தினமும் உட்காரும் நாற்காலி இது என்று என்னிடம் வந்து சொன்னார்கள். பிறகு மற்றைய நாற்காலியில் உட்காரலாம் என்று நினைத்தேன். நான் 8வது நாற்காலியில் போய் உட்கார எந்த காரணமும் இல்லை. எல்லா ஊடகங்களிலும் என்னை புலி என்று அழைத்தது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியில் புலி ஒன்று வந்து அமர்ந்துள்ளது என்று. நான் வேண்டுமென்றே இப்படிப் போய் உட்காரவில்லை... எனக்குக் குரூப் இல்லை. நான் சுயேட்சையாக வந்தேன். அதனால் எங்கு உட்காருவது, எப்படி செல்வது என்று தெரியவில்லை. அவ்வாறு நான் செய்த தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். மன்னிக்கவும். வேண்டுமென்றே அந்த நாற்காலியில் உட்கார நான் எதிர்பார்க்கவில்லை. https://tamil.adaderana.lk/news.php?nid=196394
  5. 162 புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட செயலமர்வு! பொதுமக்களின் அபிலாஷைகள் மிகவும் தீவிரமடைந்திருக்கும் நேரத்தில் அந்த அபிலாஷைகளை நிறைவேற்ற பாராளுமன்ற முறைமையைப் பிரயோகப்படுத்துவது மிகவும் முக்கியமானது என சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று தெரிவித்தார். பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திசைமுகப்படுத்தல் செயலமர்வை இன்று (25) ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே சபாநயாகர் இவ்வாறு குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் மேற்கொள்ளும் கலந்துரையாடல்கள் ஊடாக மக்களுக்கு சேவையை செய்வதற்கு பாராளுமன்ற பாரம்பரியம், அரசியலமைப்பு, பாராளுமன்ற நிலையியற் கட்டளை போன்றவை குறித்து நல்ல புரிதலும், அறிவும் அவசியம் என்பதால் இவ்வாறான செயலமர்வை ஏற்பாடு செய்வது மிகவும் அவசியமானது எனக் குறிப்பிட்ட சபாநாயகர், இதனை ஏற்பாடு செய்த பாராளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட செயலகத்தின் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இச்செயலமர்வில் கலந்துகொண்ட பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய குறிப்பிடுகையில், நாட்டு மக்கள் மிகவும் பலமான பாராளுமன்றத்தைத் தெரிவுசெய்திருக்கும் சூழ்நிலையில், மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றுவதே அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பிரதான எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும் என்றார். பாராளுமன்றம் தொடர்பில் மக்களின் அபிப்பிராயத்தை மாற்றும் செயற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல், சமூக பரிமாற்றம் பொது மக்கள் மத்தியில் காணப்பட்ட அரசியல் முதிர்ச்சியை எடுத்துக் காட்டுவதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தச் செய்தியைப் புரிந்துகொண்ட நபர்கள் என்ற ரீதியில் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாரிய பொறுப்பு இருப்பதாகக் கூறினார். இதற்கு அமைய அர்ப்பணிப்புடன் பணியாற்ற இந்தச் செயலமர்வு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார். இம்முறை பாராளுமன்றம் இந்த நாட்டின் வரலாற்றில் தனித்துவமிக்க பாராளுமன்றம் எனவும், பெண்களின் அதிகூடிய பிரதிநிதித்துவமான 22 பெண் உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றமாக அமைவது சாதகமான முன்னேற்றம் எனவும் அவர் தெரிவித்தார். திறந்த பாராளுமன்றம் என்ற கருத்தை வலுப்படுத்துவதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பை பிரஜைகளுக்கு நெருக்கமாக கொண்டு செல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் பாராளுமன்ற முறைமை மற்றும் அதன் மரபுகள் தொடர்பில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் 162 பேர் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பது பத்தாவது பாராளுமன்றத்தின் தனிச்சிறப்பு என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். பாராளுமன்ற முறைமைகள் தொடர்பில் சிறந்த அறிவும் அனுபவமும் கொண்ட அதிகாரிகளின் வளப்பங்களிப்பின் ஊடாக நடத்தப்படும் இச்செயலமர்வை அனைத்து உறுப்பினர்களும் சிறப்பாகப் பயன்படுத்துவார்கள் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். இங்கு பாராளுமுன்ற முறைமைகள் மற்றும் நடைமுறைகள் பற்றி பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை தொடர்பில் பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன விளக்கமளித்தார். இந்தச் செயலமர்வில் பிரதிச் சபாநாயகர் வைத்தியகலாநிதி மொஹொமட் ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னாயக, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் வைத்தியகலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ, பாராளுமன்ற செயலாளர் நாயகம், பிரதிச் செயலாளர் நாயகம், உதவிச் செயலாளர் நாயகம், பாராளுமன்ற செயலகத்தின் திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். செயலமர்வின் முதலாவது நாளான இன்று 168 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். புதிய பாராளுமன்றம் ஆரம்பிக்கப்படும்போது சம்பிரதாயபூர்வமாக மேற்கொள்ளப்படும் செயற்பாடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தச் செயலமர்வு நாளை (26) மற்றும் நாளைமறுதினம் (27) ஆகிய தினங்களிலும் தொடரவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=196392
  6. 19 வயதின் கீழ் ஆசிய கிண்ண கிரிக்கெட் : இலங்கை அணியில் நியூட்டன், மாதுளன், ஷாருஜன் 25 NOV, 2024 | 03:55 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தில் இந்த வார இறுதியில் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் நியூட்டன் , குகதாஸ் மாதுளன், கொழும்பைச் சேர்ந்த சண்முகநாதன் ஷாருஜன் ஆகியோர் இடம்பெறுகின்றனர். இந்த மூவரில் கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியின் முன்னாள் அணித் தலைவர் ஷாருஜன் ஏற்கனவே கனிஷ்ட தேசிய அணியில் இடம்பெற்றவராவார். இடதுகை துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான ஷாருஜன், இந்த வருட முற்பகுதியில் தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தார். யாழ். மத்திய கல்லூரியைச் சேர்ச்த இடதுகை வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் ரஞ்சித்குமார் நியூட்டன், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த குகதாஸ் மாதுளன் ஆகிய இருவரும் 19 வயதுக்குட்பட்ட தேசிய கனிஷ்ட அணியில் இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும். வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியின் கடந்த இரண்டு அத்தியாயங்களில் பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் திறமையை வெளிப்படுத்திய நியூட்டன், தம்புள்ளை பிராந்திய அணியில் இடம்பெற்றதன் மூலம் இலங்கை தெரிவாளர்களைப் பெரிதும் கவர்ந்தார். அதேவேளை, லசித் மாலிங்க பாணியில் பந்துவீசும் குகதாஸ் மாதுளன், யோக்கர் பந்துவீசுவதில் தேர்ச்சிபெற்றவர். அவரது பந்துவீச்சுப் பாணியை சமூக வலைத்தளத்தில் பார்த்து பெரிதும் கவரப்பட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவர் எம். எஸ். தோனி அவரை சென்னைக்கு அழைப்பித்து அவருக்கு ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக தேர்ஸ்டன் கல்லூரி வீரர் விஹாஸ் தெவ்மிக்க நியமிக்கப்பட்டுள்ளார். 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி விபரம் விஹாஸ் தெவ்மிக்க (தலைவர்), தனுஜ ராஜபக்ஷ (இருவரும் தேர்ஸ்டன்), புலிந்து பெரேரா, லக்வின் அபேசிங்க (இருவரும் தர்மராஜ), துல்னித் சிகேரா (மஹநாம), சண்முகநாதன் ஷாருஜன் (புனித ஆசீர்வாதப்பர்), ரஞ்சித்குமார் நியூட்டன் (யாழ். மத்திய கல்லூரி), குகதாஸ் மாதுளன் (யாழ். சென். ஜோன்ஸ்), விமத் தின்சார, ரமிரு பெரேரா (இருவரும் றோயல்), கவிஜ கமகெ (கிங்ஸ்வூட்), விரான் சமுதித்த (மாத்தறை புனித சர்வேஷியஸ்), ப்ரவீன் மனீஷ (லும்பினி) யெனுல தெவ்துச (புனித சூசையப்பர்), கீத்திக்க டி சில்வா (குருநாகல் புனித ஆனாள்) https://www.virakesari.lk/article/199629
  7. இலங்கையின் மின்சாரத் துறையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 200 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இதன் ஊடாக மின்சாரம் பரிமாற்றம் மற்றும் விநியோக வலையமைப்பின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிக அளவில் ஒருங்கிணைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில், வீடுகளுக்கு 100% மின்சார விநியோகத்தை இலங்கை அடைந்தது. மேலும், இந்த நாட்டில் மின்சாரத் தேவை 2023 ஆம் ஆண்டில் அதிகபட்சமாகப் பதிவு செய்யப்பட்டதுடன், அதன் அளவு 2800 மெகாவோட் ஆகும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியும் அதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தது. இது 2030 ஆம் ஆண்டில் கணிசமாக வளரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில், நாட்டின் மின்சார உற்பத்தியில் சுமார் 50% அனல் மின் நிலையங்களால் பங்களிக்கப்பட்டது. புதிய திட்டங்கள் மூலம் மின் உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களின் பங்களிப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=196379
  8. அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்நில பிரதேசங்கள், வீதிகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கிக் காணப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, அக்கறைப்பற்று, ஆலையடிவேம்பு, பொத்துவில், நிந்தவூர், இறக்காமம், கல்முனை,சம்மாந்துறை மற்றும் பல பிரதேசங்களிலும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. தாழ்நில பகுதிகளில் உள்ள வீதிகள் நீரில் முழ்கிக் காணப்படுவதால் மக்கள் பிரயாணம் செய்வதில் பல கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர். நாட்டில் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல இராணுவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. அதிக பருவத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் சில நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்து வருவதுடன் பல கிராமங்கள் வீதிகள் நீருக்குள் மூழ்கியுள்ளன. வானிலை மாற்றத்தால் மீனவர்களை குறிப்பிட்ட தினங்கள் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். கழிவு நிர் வாய்க்கால்களை நேரத்துடன் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் விவசாயிகளும் கவனம் செலுத்தி புனரமைக்கப்படாமையால் விதைக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு அழிவு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பல கிராம புறங்களில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் உட்புகுந்தும் சூழ்ந்தும் காணப்படுவதால் பலர் பாதுகாப்பாக தங்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கி வாழும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. -அம்பாறை நிருபர் ஷிஹான்- https://tamil.adaderana.lk/news.php?nid=196375
  9. 25 NOV, 2024 | 09:15 AM யாழ்ப்பாணத்தில் ஆணொருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர் மாய்த்துள்ளார். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. நீர்வேலி வடக்கு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். இந்த இளைஞனை காணவில்லை என உறவினர்கள் தேடியவேளை அவரது சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/199597
  10. வெள்ளத்தில் மூழ்கிய வட்டுவாகல் பாலம் : கடற்படையினர், பொலிஸார் பாதுகாப்புக் கடமையில்! 25 NOV, 2024 | 02:17 PM முல்லைத்தீவு பரந்தன் ஏ35 வீதியில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மழை, வெள்ளம் காரணமாக இப்பாலத்தினூடாக பயணம் செய்யும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். பாலம் வெளியே தெரியாதபடி, வெள்ளம் சூழ்ந்த நிலையில், அங்கு விபத்து ஏற்படக்கூடும் என்ற காரணத்தால் பாலத்தின் இருமருங்கிலும் பொலிஸார் மற்றும் கடற்படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிக மழை தொடர்ச்சியாக பெய்துவருகிறது. இதனால் நந்திக்கடல் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன் வட்டுவாகல் பாலத்திலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதேவேளை, பாலத்தை மூழ்கடித்த வெள்ள நீர் வழிந்தோட இடமின்றி தேங்கி காணப்படுகிறது. அத்தோடு பாலத்தின் அணைக்கட்டுகளும் வெள்ளம் காரணமாக வெளித்தெரியாதபடி உள்ளது. பாலத்தின் பல பகுதிகள் உடைந்து, சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. இதனால் இந்த ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டு பயணிகள் அப்பாலத்தினூடாக செல்லவேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளனர். இதேவேளை, வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் பாலத்தின் இரு கரைகளையும் அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். 1950ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்டதாக கூறப்படும் வட்டுவாகல் பாலம் கிட்டதட்ட 440 மீற்றர் நீளம் கொண்டது. வட்டுவாகல் பாலம் 2004ஆம் ஆண்டு சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம், 2009ஆம் ஆண்டுக்கு முன்னரான யுத்தம் என்பவற்றினால் கடுமையாக சேதமடைந்துள்ளது. இருப்பினும், சிறு சிறு திருத்தங்கள் இடம்பெற்று இன்று வரை வட்டுவாகல் பாலம் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. https://www.virakesari.lk/article/199628
  11. 25 NOV, 2024 | 03:12 PM யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனக்கு தனிப்பட்ட பாதுகாப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் போது தான் நடந்துகொண்ட விதத்திற்கு எதிர்ப்பு வெளியாகியுள்ளதால் தனக்கு தனிப்பட்ட பாதுகாப்பை வழங்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிதாக தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான செயலமர்வில் கலந்துகொண்டவேளை தான் கடும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ஆசனம் தொடர்பான சம்பவத்தினால், என்னால் வீதியில் நடக்ககூட முடியாத நிலை காணப்படுகின்றது, ஊடகங்கள் 45 ஐம்பது நிமிடங்கள் என்னை பேட்டி கண்டன, அவர்கள் நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவனா என கேள்வி எழுப்பினார்கள் நான் இல்லை என பதிலளித்தேன் என அர்ச்சுனா தெரிவித்துள்ளார். எனினும் இரண்டாவது கேள்விக்கான எனது பதிலை அவர்கள் வேண்டுமென்றே தவிர்த்துக்கொண்டுள்ளனர். இதனால் வீதியில் இறங்க முடியாத நிலையில் நான் இருக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற சிறப்புரிமையின் கீழ் எனக்கு வழங்கப்படும் பாதுகாப்பை நாடாளுமன்ற அதிகாரிகள் எப்போது வழங்குவார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். https://www.virakesari.lk/article/199643
  12. உக்ரைனின் 2025ம் ஆண்டுக் கனவு தகர்ந்துவிட்டதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆண்ட்ரேய் பெலூசொவ் தெரிவித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் இடையே மோதல் வெடித்தது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேரப் போவதாகத் தகவல் வெளியான நிலையில், இதனால் தனது நாட்டிற்கு ஆபத்து எனச் சொல்லி உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்தது. கிட்டதட்ட 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போர் நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர மற்ற நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிகின்றன. இந்நிலையில், உக்ரைனில் உள்ள ரஷ்ய ராணுவ நிலையை நேரில் பாா்வையிட்ட ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் ஆண்ட்ரேய் பெலூசொவ் , அங்கு பணியாற்றும் வீரா்களுக்கு பதக்கங்கள் அணிவித்தார். பின்னர், ரஷ்ய ராணுவ அதிகாரிகளிடையே அவர் பேசியதாவது : “நமது படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மிகவும் சிறப்பாக உள்ளன. உக்ரைனின் மிகச் சிறந்த படைப் பிரிவுகள் அனைத்தையும் நமது வீரர்கள் ஒடுக்கிவிட்டனர். தற்போது நமது படையினரின் முன்னேற்றம் வேகப்படுத்தப்படுகிறது. உக்ரைனின் 2025ம் ஆண்டுக் கனவு தகர்ந்துவிட்டது” இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக, உக்ரைன் போரின் ஆயிரமாவது தினத்தை முன்னிட்டு அந்த நாட்டு அதிபர் ஸெலென்ஸ்கி ஆற்றிய உரையில், ரஷிய முன்னேற்றத்தை உறுதியுடன் தடுத்து நிறுத்தி 2025-ஆண்டுக்குள் வெற்றிவாகை சூடப்போவதாக சூளுரைத்திருந்தார். https://thinakkural.lk/article/312601
  13. பங்களாதேஷை பிரமிக்க வைத்த யாழ். வீரர் ஆகாஷ்; கன்னி முயற்சியில் 5 விக்கெட் குவியல், நால்வர் நேரடியாக போல்ட் 24 NOV, 2024 | 10:03 PM (நெவில் அன்தனி) காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான கனிஷ்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லி வீரர் விக்னேஸ்வரன் ஆகாஷ் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்து வரலாறு படைத்தார். எனினும் மழை காரணமாக அப் போட்டி இடையில் கைவிடப்பட்டதால் முடிவு கிட்டவில்லை. கனிஷ்ட சர்வதேச போட்டியில் விளையாடிய முதலாவது சந்தர்ப்பத்திலேயே மிகத் திறமையாக பந்துவீசிய ஆகாஷ், எதிரணியின் நான்கு வீரர்களை நேரடியாக போல்ட் செய்ததுடன் மற்றையவரை தனது பந்துவீச்சிலேயே பிடி எடுத்து ஆட்டம் இழக்கச் செய்தார். அவர் 7.5 ஓவர்களில் 27 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 5 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 17 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 33.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றது. பங்களாதேஷ் அணி 19ஆவது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 76 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் இருந்தது. ஆரம்ப வீரர்களான மொஹமத் ரிதோய் ஹொசெய்ன் 40 ஓட்டங்களுடனும் அப்துல்லா அல் முஹி 31 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். அப்போது தனது 3ஆவது ஓவரை வீசிக்கொண்டிருந்த விக்னேஸ்வரன் ஆகாஷ், ஆரம்ப வீரர்கள் இருவரினதும் விக்கெட்களை நேரடியாக பதம்பார்த்து ஆட்டம் இழக்கச் செய்து இலங்கை அணிக்கு உற்சாசத்தைக் கொடுத்தார். தொடர்ந்து தனது 5ஆவது ஓவரில் பங்களாதேஷ் அணித் தலைவர் பர்ஹான் சாதிக்கை தனது பந்துவீச்சிலேயே பிடி எடுத்து ஆகாஷ் ஆட்டம் இழக்கச் செய்தார். அவரது 6ஆவது ஓவரில் எதிரணி வீரர் ஒருவர் ரன் அவுட் ஆக்கப்பட்டார். ஆகாஷ் தனது 8ஆவது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் கடைநிலை வீரர்கள் இருவரை நேரடியாக போல்ட் ஆக்கி ஆட்டம் இழக்கச்செய்தார். ஆகாஷைவிட ரசித் நிம்சார 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 17 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 5.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 23 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது. ரெஹான் பீரிஸ் 11 ஓட்டங்களுடனும் ஜனிது ரணசிங்க 6 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். துல்சித் தர்ஷன 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந் தார். இரண்டு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது 50 ஓவர் போட்டி செவ்வாய்க்கிழமையும் 3ஆவது 50 ஓவர் போட்டி வியாழக்கிழமையும் இதே விளையாட்டரங்கில் நடைபெறும். https://www.virakesari.lk/article/199589
  14. 25 NOV, 2024 | 02:09 PM இரண்டு அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புதிய செயலாளர்களை நியமித்துள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டன. இதன்படி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார். கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக மலர்மதி கங்காதரன் நியமிக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/199632
  15. கடும் மழையினால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு! 25 NOV, 2024 | 11:53 AM நாட்டில் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் மாத்திரம் 15,284 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல இராணுவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதேவேளை, பொலன்னறுவை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல தாழ்வான நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. அதிக பருவத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் மழை காரணமாக பொலன்னறுவையில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன், பராக்கிரம சமுத்திரத்தின் நீர்மட்டம் தற்போது 92,000 ஏக்கர் அடியை தாண்டியுள்ளதாக நீர்ப்பாசன பொறியியலாளர் அஞ்சன குமார தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/199616
  16. ஐக்கிய அரபு அமீரகத்தில் காணாமல்போன மால்டோவா நாட்டைச் சேர்ந்த இஸ்ரேல் குடியுரிமை பெற்ற யூத மத குரு பயங்கரவாத சம்பவத்தில் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘மத குரு ஸ்வி கோகனின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க இஸ்ரேல் அனைத்து வழிகளிலும் பாடுபடும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு ‘ஆபிரகாம்’ உடன்படிக்கையில் இரு நாடுகளுக்கும் ராஜீய உறவு தொடங்கியதையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏராளமான இஸ்ரேலியர்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் தாக்குதலால் ஓராண்டுக்கும் மேல் தொடரும் பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியிலும் இந்த ஒப்பந்தம் நீடிக்கிறது. ஆனால், காஸாவில் பேரழிவை ஏற்படுத்திய இஸ்ரேலின் பதிலடி தாக்குதல், லெபனானை ஆக்கிரமித்து ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவுடன் பல மாதங்களாக மோதல் ஆகியவற்றால் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மற்ற அரபு நாட்டவர்கள் மத்தியில் இஸ்ரேலியர்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், துபாயின் பரபரப்பான அல்-வாசல் சாலையில் யூதர்களுக்கான பிரத்யேக மளிகைக் கடை நடத்தி வந்த கோகன் கடந்த நவ. 21-ம் தேதி காணாமல் போனார். கோகன் காணாமல் போனது குறித்து நேற்று (நவ. 24) அதிகாலை செய்தி வெளியிட்ட ‘டபிள்யூ.ஏ.எம்.’ செய்தி நிறுவனம், அவர் இஸ்ரேல் நாட்டு குடியுரிமை பெற்றவர் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. அவரது இறப்பை இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ள நிலையிலும், இந்த விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. நியூயோர்க் நகரைத் தளமாகக் கொண்டு செயல்படும் யூத மதத்தின் கவனிக்கத்தக்க கிளையான சாபாத் லுபாவிச் இயக்கத்தின் தூதராக கோகன் செயல்பட்டார். அமெரிக்க குடியுரிமை பெற்றவரான அவரது மனைவி ரிவ்கி, 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட மத குரு கவ்ரியல் ஹோல்ட்ஸ்பெர்க்கின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/312598
  17. முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா நிர்வாக செயலாளருமான குலசிங்கம் திலீபன் கட்சியில் இருந்தும் அதன்அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் வெளியேறுவதாக இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளாதவது ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் (தமிழரசுக் கட்சியில்) ஆரம்பித்த எனது அரசியல் பயணம், பின்பு, 2013ம் ஆண்டிலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) உடன் இணைந்து கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளராக பொறுப்பேற்று மக்கள் பணியாற்றினேன். மேலும், 2020 இல் பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவாகினேன். தற்போது நடைபெற்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளே கிடைக்கப் பெற்றன. இதுவரை காலமும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் பயணித்து மக்கள் சேவையாற்றினேன். சில விடயங்கள் காரணமாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து விலகுகிறேன். இது தொடர்பான கடிதத்தினை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்பியுள்ளேன். இக் கட்சியில் இருந்து நான் வெளியேறுவதற்கு, கட்சியோ அல்லது கட்சியின் தலைமையோ காரணமில்லை, எனது தனிப்பட்ட முடிவு என்பதை தெரிவித்துள்ளேன். என்றுள்ளது. https://thinakkural.lk/article/312608
  18. முல்லையில் பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய வட்டுவாகல் பாலம் முல்லைத்தீவு – பரந்தன் A-35 வீதியின் வட்டுவாகல் பாலத்தினை மூடி வெள்ளநீர் பாய்வதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து ஏற்படும் சாத்தியங்கள் அதிகளவாக இருப்பதனால் பாலத்தின் இருமருங்கிலும் பொலிஸார் மற்றும் கடற்படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் பல பகுதிகளிலும் நிலவிவரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிக மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது. இதனால், நந்திக்கடல் நீர் மட்டம் நிரம்பியுள்ளது. இதனால் வட்டுவாகல் பாலத்தின் நீர்மட்டம் உயர்ந்து பாலத்தினை மூடியதுடன், நீர் பாய்ந்தோடாமல் தேங்கியிருக்கும் நிலை காணப்படுகின்றது. அத்தோடு பாலத்தின் அணைக்கட்டுகள் சரியாக தெரியாமலிருக்கின்ற அதேவேளை,பாலத்தின் பல இடங்களில் உடைவுகள் ஏற்பட்டு சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது. இதனால் வீதி எது கடல் எது என தெரியாத நிலையிலையே பயணிகள் பயணம் செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/312572
  19. என்னை கொலை செய்தால் ஜனாதிபதியை கொலை செய்வதற்கு ஆட்களையமர்த்தியுள்ளேன் - பிலிப்பைன்ஸ் துணை ஜனாதிபதி தெரிவிப்பு 25 NOV, 2024 | 01:02 PM பிலிப்பைன்ஸ் துணை ஜனாதிபதி சரா டட்டெர்டே ஜனாதிபதி பேர்டினன்ட் மார்கோஸ் தன்னை கொலை செய்தால் அதன் பின்னர் அவரை கொலை செய்வதற்கு ஒருவரை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளார். தென்கிழக்காசியா நாட்டின் இரு முக்கிய அரசியல் குடும்பங்களிடையே மோதல் தீவிரமடைவதை வெளிப்படுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்துள்ள துணை ஜனாதிபதி என்னை கொலை செய்தால் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அவரது மனைவி சபாநாயகர் ஆகியோரை கொலை செய்வதற்கு கொலைகாரன் ஒருவனை நியமித்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். நான் ஒருவரிடம் பேசியுள்ளேன், நான் கொலைசெய்யப்பட்டால், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அவரது மனைவி சபாநாயகர் ஆகியோரை கொலை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன், இது வேடிக்கையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்களை கொலை செய்யும்வரை ஓயவேண்டாம் என நான் கேட்டுக்கொண்டுள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக செயற்படுவது எப்படி என தெரியாத ஒருவரால் பொய் சொல்பவரால் நாங்கள் நரகத்தை நோக்கி இழுத்துச்செல்லப்படுகின்றோம் என பிலிப்பைன்சின் துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த அச்சுறுத்தல் குறித்து பாதுகாப்பு பேரவை ஆராயும் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இது தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயம் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு எதிரான அனைத்து அச்சுறுத்தல்கள் குறித்தும் ஆராயப்படும் இது தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இதேவேளை துணை ஜனாதிபதியின் இந்த கருத்தினை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிலிப்பைன்ஸ் துணை ஜனாதிபதி சரா டட்டெர்டேயும் ஜனாதிபதி பேர்டினன்ட் மார்கோசும் ஒருகாலத்தில் அரசியல் சகாக்களாக விளங்கியவர்கள் இருவரும் 2022 இல் மக்கள் ஆணையை வென்று இரு முக்கிய பதவிகளையும் பொறுப்பேற்றனர். எனினும் வெளிவிவகார கொள்கை முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டட்டெர்டேயின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தம் போன்றவை குறித்து எழுந்த கருத்து வேறுபாட்டினால் இந்த கூட்டணி இந்த வருடம் வீழ்ச்சியடைந்தது. முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டட்டெர்டேயின் மகளான துணை ஜனாதிபதி அமைச்சரவையிலிருந்து விலகியுள்ள போதிலும் தொடர்ந்தும் துணை ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றார். https://www.virakesari.lk/article/199627
  20. 25 NOV, 2024 | 11:07 AM லெபனானிலிருந்து ஹெஸ்புல்லா அமைப்பினர் 250க்கும் மேற்பட்ட ரொக்கட்களை இஸ்ரேலை நோக்கி ஏவியுள்ளனர் என இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். செப்டம்பரில் இஸ்ரேல் ஹெல்புல்லா அமைப்பினருக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்த பின்னர் ஹெஸ்புல்லா அமைப்பினர் மேற்கொண்ட கடும் ரொக்கட் தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஹெஸ்புல்லா அமைப்பின் ரொக்கட்கள் இஸ்ரேலிய தலைநகரையும்,வடக்கு மத்திய இஸ்ரேலையும் தாக்கியுள்ளன இதன் காரணமாக பலர் காயமடைந்துள்ளனர். மத்திய பெய்ரூட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 30 பேர் உயிரிழந்த நிலையிலேயே ஹெஸ்புல்லா அமைப்பு இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலிற்கும் ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் இடையிலான போர்நிறுத்தத்திற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்திருந்த நிலையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இஸ்ரேலிய தலைநகரில் ரொக்கட்களின் சிதறல்கள் விழுந்து வெடித்துள்ளன என தெரிவித்துள்ள இஸ்ரேலிய பொலிஸார் குடியிருப்பு பகுதியை ரொக்கட்கள் தாக்கியதில் வீடொன்று தீப்பிடித்து எரிந்து அழிந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/199611
  21. 25 NOV, 2024 | 10:22 AM நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் சமீபத்தைய சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் குறித்து அவருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக அசோக ரன்வல தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினருடன் நான் நேரடியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளேன். இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பேன் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். அர்ச்சுனாவின் தனிப்பட் நோக்கங்கள்எங்களிற்கு தெரியாது, இருப்பினும் அவர் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் அபிலாசைகள் குறித்து சந்தேகமில்லை, என கண்டியில் தெரிவித்துள்ள சபாநாயகர் தற்போதைய அரசியல் சூழலில் இதுபோன்ற செயற்பாடுகளை மக்கள் ஆதரிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். வடக்கு மேற்கு கிழக்கு எந்த பகுதியை சேர்ந்தாலும் அவர்கள் ஐக்கியத்தையும் இந்த நாட்டின் அபிவிருத்தியையும் விரும்புகின்றனர் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். தனிநபர் ஒருவரே இந்த செயலில் ஈடுபட்டார் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம், நாங்கள் அவரின் செயற்பாடுகள் சமூக ஊடக பதிவுகளை ஆராய்ந்துள்ளோம், இந்த விடயத்தை விவேகத்துடன் அணுகி அவருடன் தீர்வை காண்பதற்கு முயல்வோம் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/199605
  22. 25 NOV, 2024 | 10:00 AM இலங்கையில் அதானி குழுமத்தின் ஆதரவுடனான துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு 500 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்த அமெரிக்க நிறுவனம் கௌதம் அதானி உட்பட அதானி குழுமத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து துறைமுக அபிவிருத்தி திட்டம் குறித்து ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனம் என்ற அமைப்பு இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு கடன்வழங்குவது குறித்து இன்னமும் இறுதிமுடிவை எடுக்கவில்லை என அதிகாரியொருவர்தெரிவித்துள்ளார். கடன் வழங்குவதற்கு முன்னர் திட்டத்தின் அனைத்து அம்சங்களும் எங்களின் கடுமையான தராதரங்களை பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக நாங்கள் தொடர்ந்தும் ஆராய்ந்துவருகின்றோம், என தெரிவித்துள்ள அமெரிக்க நிறுவனத்தின் அதிகாரியொருவர் இந்த திட்டத்திற்கான நிதிகடன் தொடர்பில் இறுதி தீர்மானத்தை எடுக்கவில்லை இறுதி உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனம் அதானி குழுமமும் இலங்கையின் தலைநகரில் முன்னெடுத்துள்ள துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு உதவப்போவதாக அறிவித்திருந்தது. ஆசியாவில் அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடாக இது கருதப்பட்டது. https://www.virakesari.lk/article/199602
  23. 25 NOV, 2024 | 09:15 AM நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து இன்று திங்கட்கிழமை (25) காலை முதல் மறு அறிவித்தல் வரும் வரை இடம்பெறமாட்டாதென நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக யாழ் வைத்தியசாலை செல்லவேண்டியவர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலவும் சீரற்ற காலநிலையே இதற்கு காரணமாகும். https://www.virakesari.lk/article/199598
  24. தாழமுக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு 25 NOV, 2024 | 07:52 AM வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியிற்கு மேலாக நிலைகொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசமானது இன்று காலை மேலும் தீவிரமடைந்து வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியின் மத்தியில் தாழ் அமுக்கமாக மாற்றமடையும். இந்த தாழ் அமுக்கமானது மட்டக்களப்பில் இருந்து சுமார் 500 கிலோமீற்றர் தொலைவில் காணப்படும். இது மேலும் விருத்தியடைந்து நாட்டின் கிழக்குக் கரையை அண்மித்ததாக நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். ஆகையினால் இன்று முதல் மறு அறிவித்தல் வரையில் நாட்டை சூழ உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். இதன் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் 150 மில்லிமீற்றரிலும் கூடிய மிகப் பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 35 - 45 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோமீற்றராக அடிக்கடி அதிகரித்துக் காணப்படும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் அடிக்கடி கொந்தளிப்பான நிலையில் இருந்து மிகவும் கொந்தளிப்பான நிலையிலும் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார். https://www.virakesari.lk/article/199594

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.