Everything posted by ஏராளன்
-
தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுக்கு தயார் என்கிறார் கஜேந்திரகுமார்
தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்றத் தேர்தல் நிறைவடைந்துள்ளது. அத்தேர்தலின் முடிவுகளை நாம் பார்க்கின்றபோது, தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்டுள்ளது. இவ்வாறான நிலையில் அவர்கள் அடுத்து வரும் காலப்பகுதியில் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். இந்தத் தருணத்தில் அவர்கள் ஏலவே மைத்திரி-ரணில், கூட்டாட்சி அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றையாட்சியை மையப்படுத்திய புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் இருந்து ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். குறித்த இடைக்கால அறிக்கையானது தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதாக இல்லை. அது ஒற்றையாட்சியை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ள ஒன்றாகும். ஆகவே, குறித்த இடைக்கால அறிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுவதன் காரணமாக அவர்கள் எந்தவிதமான முடிவுகளுக்கும் செல்ல முடியும். ஆனால் தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாகவே அவர்கள் செயற்படுகின்றார்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும். அதற்காக, தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்கின்ற வகையில் தயாரிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுக்கான வரைவினை அடிப்படையாக வைத்து ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு நாம் தயாராகவே உள்ளோம். குறித்த வரைவு தயாரிக்கப்பட்ட போது சுமந்திரன் தவிர ஏனைய கட்சிகள் அனைத்துப் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தார்கள். துரதிர்ஷ்டவசமாக தொடர்ச்சியாக அவர்களின் பங்கேற்பு முழுமை பெறும் வரையில் நீடித்திருக்கவில்லை. எவ்வாறாயினும், கொள்கை அளவில் அனைவரும் தமிழ் மக்கள் பேரவையின் வரைவினை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அதனை மையப்படுத்தி பேச்சுக்களை ஆரம்பிப்பது பொருத்தமானதாக இருக்கும். இந்தச் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கும் ஏனையவர்கள் அதில் பங்கேற்பதற்குமான பகிரங்க அறிவிப்பை நாம் விடுக்கின்றோம் எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/312564
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
ஐபிஎல் ஏலம்: சென்னை, மும்பை, பெங்களூரு அணிகள் யாரை வாங்கின? நடராஜன், அஸ்வின் எந்த அணிக்கு? பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2025-ஆம் ஆண்டு சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலத்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை இதுவரை ஐபிஎல் வரலாற்றில் இல்லாத வகையில் ரூ.27 கோடிக்கு லக்னெள சூப்பர்ஜெயின்ட்ஸ் அணி வாங்கியது. நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. சிஎஸ்கே அணியில் தொடக்கத்தில் ஆடிய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் சிஎஸ்கே அணிக்குத் திரும்பியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் நடராஜனை டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கியுள்ளது. ஐபிஎல் மெகா ஏலம் 2025 சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜத்தா நகரில் நேற்று தொடங்கியது. இரு நாட்கள் நடக்கும் இந்த மெகா ஏலத்தில் ஐபிஎல் தொடரில் இருக்கும் 10 அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்களைத் தவிர்த்து மீதமுள்ள வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மெகா ஏலம் நடக்கிறது. இந்த ஏலத்தில்தான் வீரர்கள் ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டு ஏலமிடப்படுகிறார்கள். இதில் 367 இந்திய வீரர்கள், 210 வெளிநாட்டு வீரர்கள் என 577 வீரர்கள் ஏலத்தில் கொண்டு வரப்படுகிறார்கள். இந்த ஏலத்தில் வீரர்களை விலைக்கு வாங்க ஒவ்வொரு அணியும் ரூ.120 கோடி செலவு செய்யலாம். இந்த தொகையில் தக்கவைப்பு வீரர்களுக்காக வழங்கப்பட்ட தொகையை கழித்தபின், மீதமுள்ள தொகைக்கு வீரர்களை ஒவ்வொரு அணியும் வாங்க முடியும். அணிகளின் கையிருப்பு எவ்வளவு? பஞ்சாப் கிங்ஸ் அணி 2 வீரர்களை மட்டுமே தக்கவைத்து அதிகபட்சமாக ரூ.110.50 கோடி கையிருப்பு வைத்திருந்தது. அடுத்ததாக ஆர்சிபி அணி ரூ.83 கோடி, டெல்லி கேபிடல்ஸ் ரூ.73 கோடி, குஜராத் மற்றும் லக்னௌ அணிகள் தலா ரூ.69 கோடி கையிருப்பு வைத்திருந்தன. சிஎஸ்கே அணி ரூ.55 கோடி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி ரூ.51 கோடி ரூபாயும், மும்பை, ஹைதராபாத் அணிகள் தலா ரூ.45 கோடி, ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 41 கோடி வைத்திருந்தன. இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கிய ஏலம், இரவு வரை நீடித்தது. முதல் நாள் ஏலத்தில் விக்கெட் கீப்பர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள், சுழற்பந்துவீச்சாளர்கள், பேட்டர்கள், அன்கேப்டு வீரர்கள், கேப்டு வீரர்கள், கேப்டு வெளிநாட்டு வீரர்கள், நட்சத்திர வீரர்கள் என பிரித்துப் பிரித்து ஏலம் விடப்பட்டனர். முதல் நாளில் மட்டும் ஒட்டுமொத்தமாக 72 வீரர்களை அணிகள் ஏலத்தில் எடுத்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் அதிகபட்சம் அதிகபட்சமாக இதுவரை ஐபிஎல் ஏலத்தில் இல்லாத வகையில் ரூ.27 கோடிக்கு ரிஷப் பந்தை லக்னெள அணி விலைக்கு வாங்கியது. கடந்த சீசனில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் ரூ.24 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது, அதைவிட ரிஷப் பந்த் விலைக்கு வாங்கப்பட்டார். ரிஷப் பந்த் ஏலத்தில் அறிவிக்கப்பட்டதும் அவரை வாங்க லக்னெள, ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் போட்டியிட்டன. ஒரு கட்டத்தில் சன்ரைசர்ஸ், லக்னெள அணிகள் கடுமையாக மோதின. முடிவில் ரூ.27 கோடிக்கு ரிஷப் பந்தை லக்னெள அணி வாங்கியது. இந்த சீசனுக்கு லக்னெள அணிக்கு கேப்டனாக ரிஷப் பந்த் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக ஸ்ரேயாஸ் அய்யரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி விலைக்கு வாங்கியது. ஸ்ரேயாஸ் அய்யரை வாங்க கொல்கத்தா அணி போட்டியிட்டாலும் ரூ.10 கோடிக்கு அதிகமாக ஏலம் கேட்கவில்லை. ஆனால், டெல்லி, பஞ்சாப் அணிகள் கடும் போட்டியிட்டன, இறுதியாக அவரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES 10 ஆண்டுகளுக்குப் பின் சிஎஸ்கே அணியில் அஸ்வின் முதல்நாள் ஏலத்தில் சிஎஸ்கே அணி 7 வீரர்களை விலைக்கு வாங்கியது. ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசியாக 2015-ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியில் விளையாடிய நிலையில், 10 ஆண்டுகளுக்குப்பின் ரூ.9.75 கோடிக்கு சிஎஸ்கே வாங்கியது. அஸ்வின் ஐபிஎல் தொடரில் பெறும் அதிகபட்ச விலையாகும். ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமதுவை ரூ.10 கோடிக்கும், நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவை ரூ.4 கோடிக்கும், டேவான் கான்வே ரூ.6.25 கோடிக்கும் சிஎஸ்கே அணி வாங்கியது. வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது ரூ.4.80 கோடி, ராகுல் திரிபாதி ரூ.3.40 கோடி, தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் ரூ.1.20 கோடிக்கும் வாங்கப்பட்டனர். சிஎஸ்கே அணிக்கு தற்போது வலுவான வேகப்பந்துவீச்சாளர்கள், நடுவரிசை பேட்டர்கள் இல்லை. இதனால் இந்த தேவையை தீர்க்க 2வது ஏலத்தில் வீரர்களை எடுக்க முயலும். தற்போது சிஎஸ்கே அணியிடம் ரூ.15.60 கோடி கையிருப்பு இருக்கிறது, 13 வீரர்களை வாங்க முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பை இந்தியன்சுக்கு என்ன தேவை? மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைப்பில் பெரும்பகுதி பணத்தை செலவிட்டதால் முதல்நாள் ஏலத்தில் குறைந்த அளவே வீரர்களை வாங்கியது. வேகப்பந்துவீச்சாளர் டிரன்ட் போல்ட்டை மீண்டும் வாங்கியது மும்பை நிர்வாகம். போல்ட்டுக்கு ரூ.12.50 கோடி கொடுத்து அணிக்குள் மும்பை கொண்டு வந்தது. இது தவிர அன்கேப்டு வீரர் நமன் திர் ரூ.5.25 கோடி கொடுத்து மும்பை வாங்கியது. மும்பை அணி தங்கள் அணியை பலப்படுத்த இன்னும் 9 வீரர்களை வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறது. குறிப்பாக ரோஹித் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்க வீரரைத் தேட வேண்டும். விக்கெட் கீப்பர், கீழ்வரிசை மிடில் ஆர்டர் பேட்டர், வேகப்பந்துவீச்சாளர்கள், சுழற்பந்துவீச்சாளர்களை வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறது. மும்பை அணியின் கையிருப்பாக ரூ.26.10 கோடி உள்ளது, 16 வீரர்களை வாங்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபி என்ன செய்தது? ஆர்சிபி அணி முதல்நாள் ஏலத்தில் வேகப்பந்துவீச்சாளர், ஆல்ரவுண்டர், விக்கெட் கீப்பர் என வகையாக வீரர்களைத் தேர்ந்தெடுத்தது. ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட்டை ரூ.12.50 கோடிக்கும், இங்கிலாந்து வீரர் பில் சால்ட் ரூ.11.50 கோடிக்கும், லிவிங்ஸ்டோன் ரூ.8.75 கோடிக்கும் ஆர்சிபி அணி வாங்கியது. விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவை ரூ.11 கோடிக்கு ஆர்சிபி வாங்கியது. ஆர்சிபி அணியில் தற்போது 9 வீரர்கள் மட்டுமே உள்ளனர். தொடக்க வீரர், நடுப்பகுதி பேட்டர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள், சுழற்பந்துவீச்சாளர்களை வாங்க வேண்டிய நிலையில் ஆர்சிபி அணி இருக்கிறது. ஆர்சிபி அணியிடம் ரூ.30.65 கோடி கையிருப்பு இருக்கிறது, 16 வீரர்களை வாங்கலாம், ஆர்டிஎம் வாய்ப்பை இதுவரை பயன்படுத்தவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES 8 வீரர்களை வாங்கிய சன்ரைசர்ஸ் சன்ரைசர்ஸ் அணி முதல்நாள் ஏலத்தில் 8 வீரர்களை போட்டிபோட்டு வாங்கியது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரருக்கு இஷான் கிஷனை ரூ.11.50 கோடிக்கும், வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை ரூ.10 கோடிக்கும் சன்ரைசர்ஸ் வாங்கியது. ஹர்சல் படேலை ரூ.8 கோடிக்கும், சுழற்பந்துவீச்சுக்கு ராகுல் சஹரை ரூ.3.20 கோடிக்கும், ஆடம் ஜம்பாவை ரூ.2.40 கோடிக்கும் சன்ரைசர்ஸ் வாங்கியது. அன்கேப்டு வீரர் அபினவ் மனோகரை ரூ.3.20 கோடிக்கும், சிமர்சிஜ் சிங்கை ரூ.1.20 கோடிக்கும் வாங்கியது. முதல் நாளில் வலுவான விக்கெட் கீப்பர் பேட்டர், வேகப்பந்துவீச்சாளர்களை சன்ரைசர்ஸ் வளைத்துப் போட்டது. அந்த அணியிடம் ரூ.5.10 கோடி மட்டுமே இருப்பு உள்ளது, 12 வீரர்கள் வரை வாங்கலாம் என்பதால், உள்நாட்டு வீரர்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கும், பட மூலாதாரம்,GETTY IMAGES வெங்கடேஷுக்கு ஜாக்பாட் கொல்கத்தா அணியால் விடுவிக்கப்பட்ட வெங்கடேஷ் அய்யர் மீண்டும் அந்த அணியால் வாங்கப்பட்டார். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ரூ.23.75 கோடிக்கு வெங்கேடேஷை கொல்கத்தா அணி வாங்கியது. இது தவிர வேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியாவை ரூ.6.50 கோடிக்கும், குயின்டன் டீ காக்கை ரூ.3.60 கோடிக்கும், ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸை ரூ2 கோடிக்கும் வாங்கியது. அன்கேப்டு வீரர்கள் ரகுவன்சி(ரூ.3 கோடி), வைவப் அரோரா(ரூ.1.80கோடி), மயங்க் மார்கண்டேவை(ரூ.30லட்சம்) வாங்கியது. கொல்கத்தா அணிக்கு தற்போது வலுவான நடுவரிசை பேட்டர்கள் தேவை. ரூ.10.05 கோடி கையிருப்பு இருப்பதால் அதற்கு முக்கியத்துவம் வழங்கும், 12 வீரர்களை வாங்க முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES ரிஷப் பந்தை வாங்கிய லக்னெள லக்னெள அணிக்கு இந்த சீசனுக்கு நல்ல கேப்டன் தேவை என்பதால், ரிஷப் பந்தை அதிகபட்சமாக ரூ.27 கோடிக்கு வாங்கியது. வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கானை ரூ.9.75 கோடிக்கும், டேவிட் மில்லர் ரூ.7.50 கோடிக்கும், மிட்ஷெல் மார்ஷ் ரூ.3.40 கோடிக்கும் வாங்கியது. மார்க்ரம் ரூ.2 கோடி, அப்துல்சமது ரூ.4.20 கோடிக்கும் விலைபோகினர். குஜராத் அணியிடம் தற்போது ரூ.14.85 கோடி கையிருப்பு இருக்கிறது, தொடக்க வீரர், வெளிநாட்டு வேகப்பந்துவீ்ச்சாளர்கள், கூடுதல் சுழற்பந்துவீச்சாளர்கள் தேவை என்பதால், 2வது நாள் ஏலத்தில் இதற்கு கவனம் செலுத்தும். இன்னும் 13 வீரர்களை ஏலத்தி்ல் எடுக்க முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES கே.எல்.ராகுல், நடராஜனை வளைத்த டெல்லி 9 வீரர்களை டெல்லி கேபிடல்ஸ் அணி முதல் நாள் ஏலத்தில் வாங்கியது. அதில் குறிப்பாக கே.எல்.ராகுலை ரூ.14 கோடிக்கு வாங்கியது. இது தவிர மிட்ஷெல் ஸ்டார்க்கை ரூ.11.75 கோடிக்கு வாங்கியது. கடந்த சீசனில் ரூ.24 கோடிக்கு ஏலம் போகிய ஸ்டார்க் இந்தமுறை பாதிவிலைக்கே வாங்கப்பட்டார். தமிழக வீரர் டி நடராஜனை ரூ.10.75 கோடிக்கும், ஜேக்பிரேசர் மெக்ருக்கை ரூ.9 கோடிக்கும், ஹேரி ப்ரூக்கை ரூ.6.25 கோடிக்கும் வாங்கியது. சிஎஸ்கேயில் கடந்த முறை இருந்த சமீர் ரிஸ்வியை ரூ.95 லட்சத்துக்கும், மோகித் சர்மாவை ரூ.2.20 கோடிக்கும், கருண் நாயரை ரூ.50 லட்சத்துக்கும், அசுடோஷ் சர்மாவை ரூ.3.80 கோடிக்கும் வாங்கியது. அதிரடி பேட்டர்கள், கேப்டன், நடுவரிசை பேட்டர்கள், வேகப்பந்துவீச்சாளர்களை நேற்று முதல்நாளில் டெல்லி அணி வாங்கியது. டெல்லி அணியிடம் தற்போது ரூ.13.80 கோடி கையிருப்பு இருக்கிறது, 12 வீரர்கள் வரை வாங்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES குழப்பத்தில் ராஜஸ்தான் அணி ராஜஸ்தான் அணி நேற்றைய ஏலத்தில் குறிப்பிடத்தகுந்த வீரர்களை வாங்கவில்லை. ஜோப்ரா ஆர்ச்சரை மட்டும் ரூ.12.50 கோடிக்கு வாங்கியது. சுழற்பந்துவீச்சுக்காக தீக்சனா ரூ.4.40 கோடி, ஹசரங்கா ரூ.5.25 கோடிக்கு வாங்கியது. மும்பை அணியில் இருந்த ஆகாஷ் மத்வாலை ரூ.1.20 கோடிக்கும் வாங்கியது. ராஜஸ்தான் இன்றைய ஏலத்தில் டாப்ஆர்டர் பேட்டர்கள், நடுவரிசை பேட்டர்கள், கூடுதல் வேகப்பந்துவீச்சாளர்களை எடுக்க கவனம் செலுத்தும். அந்த அணியிடம் ரூ.17.35 கோடி கையிருப்பு இருக்கிறது. 14 வீரர்களை வாங்கலாம். பெரிய மீன்களை எடுத்த குஜராத் குஜராத் அணி முதல்நாள் ஏலத்தில் ஜாஸ் பட்லர்(ரூ.15.75 கோடி), முகமது சிராஜ் ரூ.12.25 கோடி, காகிசோ ரபாடா ரூ.10.75 கோடி, பிரசித் கிருஷ்ணா ரூ.9.50 கோடி ஆகிய முக்கிய வீரர்களை வாங்கியது. இது தவிர மகிபால் லாம்ரோர், அனுஜ் ராவத் ஆகியோரையும் அந்த அணி வாங்கியது. நடுவரிசை பேட்டர்கள், தரமான சுழற்பந்துவீச்சாளர்கள் தேவை. இன்னும் ரூ.17.50 கோடி கையிருப்பு இருக்கிறது, 11 வீரர்களை வாங்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சாஹலை வாங்கிய பஞ்சாப் அணி பஞ்சாப் அணிக்கு சரியான கேப்டன் இந்த சீசனுக்குத் தேவை என்பதால் ஸ்ரேயாஸ் அய்யரை ரூ.26.75 கோடிக்கு வாங்கியது. சுழற்பந்துவீச்சாளர் சஹலை ரூ.18 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது. ஐபிஎல் வாழ்க்கையில் சஹல் பெறும்அதிகபட்ச விலையாகும். ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஷை ரூ.11 கோடிக்கும், மேக்ஸ்வெலை ரூ.4.20 கோடிக்கும், அர்ஷ்தீப் சிங்கை ரூ.18 கோடிக்கும் வாங்கியது. மும்பை அணியில் ஆடிய நேஹல் வதேராவை ரூ.4.20 கோடிக்கும், ஆர்சிபியில் ஆடிய விஜயகுமாரை ரூ.1.80 கோடிக்கும் வாங்கியது. பஞ்சாப் அணிக்கு தற்போது தொடக்க ஆட்டக்காரர்கள், கூடுதல் வேகப்பந்துவீச்சாளர்கள், வெளிநாட்டு வீரர்கள் தேவை என்பதால் அதில் இன்றைய ஏலத்தில் கவனம் செலுத்தும். அந்த அணியிடம் இன்னும் ரூ.22.50 கோடி கையிருப்பு இருக்கிறது, 13 வீரர்களை வாங்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES வார்னருக்கு இந்த நிலையா? ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை பலமுறை பெற்ற டேவிட் வார்னர், தேவ்தத் படிக்கல், இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ, மூத்த வீரர் பியூஷ் சாவ்லா, ஸ்ரேயாஸ் கோபால், வேகப்பந்துவீச்சாளர் கார்த்திக் தியாகி, யாஷ் துல் ஆகியோரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. இவருடன் சேர்த்து ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமதுவையைும் சிஎஸ்கே வாங்கியுள்ளது. கொல்கத்தா அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர் ரூ.23.75 கோடிக்கு அந்த அணி மீண்டும் வாங்கியது. ஆல்ரவுண்டர்களில் அதிகபட்ச விலைக்கு வெங்கடேஷ் ஏலம் எடுக்கப்பட்டார். குஜராத் டைட்டன்ஸ் அணி, ஜாஸ் பட்லர், சிராஜ், ரபாடா, பிரசித் கிருஷ்ணா, மகிபால் லாம்ரோர் ஆகிய தரமான வீரர்களை முதல்நாளில் விலைக்கு வாங்கியது. லக்னெள அணிக்கு சரியான கேப்டன் அமையாததால், கேப்டன் பதவிக்கு ரிஷப் பந்தை அதிகபட்ச விலைக்கு வாங்கியது. அதைத் தொடர்ந்து, டேவிட் மில்லர், ஆவேஷ் கான், மிட்ஷெல் மார்ஷ், மார்க்ரம், அப்துல் சமது ஆகியோரை வாங்கியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல்நாள் ஏலத்தில் பெரிதாக வீரர்களை வாங்கவில்லை. கடந்த 4 சீசன்களுக்கு முன் ஆடிய வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை வாங்கியது. சுழற்பந்துவீச்சுக்கு தீக்சனா, ஹசரங்கா, ஆல்ரவுண்டர் மத்வால் ஆகியோரை வாங்கியது. https://www.bbc.com/tamil/articles/c05zrnzqvmpo
-
தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்த வேண்டாம்; அநுர அரசை எச்சரிக்கும் ரொஷான்
வடக்கு மற்றும் கிழக்கில் பிரபல்யமடைவதற்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். பொலன்னறுவை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஆதரவு வழங்கியுள்ளதை முழுமையாக வரவேற்கிறோம். தெற்கு அரசியல் கட்சிக்கு வடக்கு மக்கள் ஆதரவளித்துள்ளமை சிறந்த அரசியல் மாற்றமாகும். தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எளிமையானவர், பாராளுமன்றத்துக்கு எளிமையான முறையில் வருகை தந்தார் என்று தற்போது ஜனாதிபதியின் புகழ்பாடுகிறார்கள். முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவும் தனது வீட்டில் இருந்து எளிமையான முறையில் பாராளுமன்றத்துக்கு சென்றார். இறுதியில் நேர்ந்தது என்னவென்பதை மக்கள் அறிவார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளை விடுவிக்கவும், இராணுவ முகாம்கள், பாதுகாப்பு தடுப்புக்களை அகற்றவும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. உலகில் 38 நாடுகளில் விடுதலை புலிகள் மீதான தடை இன்றும் அமுலில் உள்ளது என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிரபல்யமடைவதற்காக தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய அம்சங்களை பலவீனப்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பாரிய இழப்புகளுக்கு மத்தியில் தான் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். https://thinakkural.lk/article/312561
-
17 வயதின்கீழ் இலங்கை கிரிக்கெட் குழாத்தில் பருத்தித்துறை ஹாட்லி வீரர் ஆகாஷ்; அணித் தலைவர் ஆனந்த வீரர் கித்ம
இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ளபங்களாதேஷ் 17 வயதுக்குட்பட்ட அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 37.5 ஒவர்களில் 141 ஒட்டங்களை பெற்று சகல விக்கட்களையும் இழந்தது. இப் போட்டியில் யாழ்ப்பாணம் ஹார்ட்லி கல்லூரியின் வீரா் விக்கினேஸ்வரன் ஆகாஷ் ஐந்து விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். வாழ்த்துகள்டா தம்பி https://www.facebook.com/story.php?story_fbid=877041127750040&id=100063324813479&post_id=100063324813479_877041127750040&rdid=T6Q4XnNUs5hTXSp3
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
வனிதுவையும் ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான்! ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஏலத்தில் ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் ஆகிய இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. Live Update - அப்துல் சமத்தை ரூ.4.20 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ. நமன் திர்ரை ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை. சமீர் ரிஸ்வியை ரூ.95 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது டெல்லி. நிஷாந்த் சிந்துவை ரூ.30 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது குஜராத். அபினவ் மனோகரை ரூ.3.20 கோடிக்கு ஏலம் எடுத்தது ஐதராபாத். கருண் நாயரை ரூ. 50 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது டெல்லி. அங்கிரிஷ் ரகுவன்ஷிவை ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா. நேஹால் வதேராவை ரூ.4.20 கோடிக்கு ஏலம் எடுத்தது ஐதராபாத். அடிப்படை விலை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.4.20 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அதர்வ தைடேவை ரூ.30 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது ஐதராபாத். நூர் அகமதுவை ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே. அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.10 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ஆடம் சம்பாவை ரூ.2.40 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத். ராகுல் சாஹரை ரூ.3.20 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத். அடிப்படை விலை ரூ.1 கோடியில் இருந்து ரூ.3.20 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். டிரென்ட் போல்ட்டை ரூ.12.50 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை. அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.12.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். நடராஜன் ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி. அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இலங்கை வீரர் வனிது ஹசரங்கவையும் ராஜஸ்தான் ரோயல் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ 5.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்ததுள்ளது ராஜஸ்தான் ரோயல் அணி இலங்கை வீரர் மகேஷ் தீக்ஷனவை ரூ.4.40 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ரோயல் அணி அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.4.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். கலீல் அஹ்மத்தை ரூ.4.80 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே. அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.4.80 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ஆர்சரை ரூ.12.50 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான். அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.12.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அன்ரிச் நோர்ட்ஜேவை ரூ.6.50 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா. அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.6.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ஆவேஷ் கானை ரூ.9.75 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ. அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.9.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். பிரசித் கிருஷ்ணாவை ரூ.9.50 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத். அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.9.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ஹேசில்வுட்டை ரூ.12.50 கோடிக்கு ஏலம் எடுத்தது ஆர்சிபி. அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.12.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ஜிதேஷ் சர்மாவை ரூ.11 கோடிக்கு ஏலம் எடுத்தது ஆர்சிபி. அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.11 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இஷான் கிஷனை ரூ.11.25 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத். அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.11.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். குர்பாஸை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா. இங்கிலாந்து அணி வீரர் ஃபில் சால்ட் ரூ.11.50 கோடிக்கு ஏலம் எடுத்தது ஆர்சிபி. அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.11.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஜோனி பேர்ஸ்டோவை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை! குவின்டன் டி கொக்கை ரூ.3.60 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா. அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.3.60 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். கிளென் மேக்ஸ்வெலை ரூ.4.2 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப். அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.4.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். மிட்செல் மார்ஷை ரூ.3.4 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ. அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.3.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். மார்கஸ் ஸ்டோனிஸை ரூ.11 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப். அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.11 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். வெங்கடேஷ் அய்யரை ரூ.23.75 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா. ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே. அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.9.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தமிழக வீரர் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு சென்னை அணி ஏலம் எடுத்துள்ளது. அஷ்வினை வரவேற்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எக்ஸ் தள பதிவில், "திரும்ப வந்துடேன்னு சொல்லு", "நாயகன் மீண்டும் வரார்" என பதிவிட்டுள்ளது. ரச்சின் ரவீந்திராவை ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே. ஹர்சல் படேலை ரூ.8 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத். அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ஜேக் ஃப்ரேஸர்-மெக்கர்க்கை ரூ.9 கோடிக்கு ஆர்டிஎம் முறையில் ஏலம் எடுத்தது டெல்லி. ராகுல் த்ரிபாதி ரூ.3.40 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே. அடிப்படை விலை ரூ.75 லட்சத்தில் இருந்து ரூ.3.40கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். டெவன் கான்வே ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே. அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். தேவ்தத் படிக்கலை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. எய்டன் மார்க்ரமை அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ. ஹேரி ப்ரூகை ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி. அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். கே. எல். ராகுல் ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி. அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். லியம் லிவிங்ஸ்டனை ரூ.8.75 கோடிக்கு ஏலம் எடுத்தது ஆர்சிபி. அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.8.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். முகமது சிராஜ் ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் அணி. அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.12.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். யுஸ்வேந்திர சாஹலை ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ். அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.18 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். டேவிட் மில்லரை ரூ.7.5 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ. அடிப்படை விலை ரூ. 1.5 கோடியில் இருந்து ரூ.7.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். முகமது சமியை ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத். அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.10 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ரிஷப் பண்டை ரூ.27 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ. ஸ்ரேயாஸ் ஐயரின் சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட். அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ரிஷப் பண்ட் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். மிட்செல் ஸ்டார்கை ரூ.11.75 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி. அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.11.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ஜாஸ் பட்லரை ரூ.15.75 கோடிக்கு குஜராத் அணி ஏலம் எடுத்தது. அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.15.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ். அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.26.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை ஷ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்கா வீரர் ககிசோ ரபாடாவை ரூ. 10.75 கோடி தொகைக்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. அர்ஷ்தீப் சிங்கை பஞ்சாப் கிங்ஸ் ஆர்டிஎம் முறையில் ரூ.18 கோடிக்கு ஏலத்தில் தக்க வைத்தது. அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ.18 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=196346
-
நல்ல மனிதனாக நினைவில் நிற்க விரும்புகிறேன்; ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் நெகிழ்ச்சி
தொழில்முறை டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரஃபேல் நடால். டேவிஸ் கோப்பை தொடரின் காலிறுதி சுற்றில் நெதர்லாந்து வீரரிடம் தோல்வியடைந்த நிலையில் கலங்கிய கண்களுடன் நடால் விடைபெற்றார். இந்த டேவிஸ் கோப்பை தொடருடன் தான் ஓய்வு பெறுவதை கடந்த மாதமே நடால் அறிவித்துவிட்டதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. நெதர்லாந்து அணியின் போடிக் வான் டி-யை எதிர்த்து களமிறங்கிய நடால், ஆரம்பத்தில் முன்னேறினாலும், முதல் செட்டில் 4-6 என்ற கணக்கிலும் இரண்டாவது செட்டில் 4-6 என்ற கணக்கிலும் தோல்வி அடைந்தார். இது இந்த போட்டியை பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு சோகத்தை தந்தது. போட்டி தொடங்கியபோது ஆரவாரமாக இருந்த அரங்கம் இதன்பிறகு அமைதியானது. பிரியாவிடையின் போது பேசிய ரஃபேல் நடால், “நான் ஒரு மரபை விட்டுச் சென்றேன் என்ற மன அமைதியுடன் நான் வெளியேறுகிறேன். என்னைப் பொறுத்தவரை இது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, எனக்கு மனதுக்கு நெருக்கமான ஒன்றாகும். எனக்கு கிடைத்த அன்பு என்பது, மைதானத்தில் நடந்தவற்றுக்காக மட்டும் என்பதாக இருந்தால், அது ஒரே மாதிரியாக இருந்திருக்காது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். மக்களாகிய உங்கள் அனைவருக்கும் நன்றி. 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது, இதில் நல்ல ஆண்டுகளும் கெட்ட ஆண்டுகளும் இருந்தன. என்னால் உங்கள் அனைவருடனும் வாழ முடிந்தது. உலகம் முழுவதும், குறிப்பாக ஸ்பெயினில் இருந்து இத்தனை அன்பை பெற முடிந்ததில் நான் மிகவும் அதிர்ஷ்டக்காரனாக உணர்ந்தேன். பட்டங்கள், எண்ணிக்கைகள் இருந்தாலும், மல்லோர்காவைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதான நினைவில் இருக்க விரும்புகிறேன். நான் தொழில்முறை டென்னிஸ் உலகத்தை விட்டு வெளியேறுகிறேன். இந்த பயணத்தில், வழியில் பல நல்ல நண்பர்களை சந்தித்தேன். இனி டென்னிஸ் விளையாட விரும்பவில்லை என்று என் உடல் என்னிடம் கூறியது. நான் அதை ஏற்க வேண்டும். நான் பாக்கியம் பெற்றவன். எனது பொழுதுபோக்குகளையே எனது தொழிலாக என்னால் மாற்ற முடிந்தது. நான் அதிர்ஷ்டசாலி” இவ்வாறு ரஃபேல் நடால் நெகிழ்ச்சியாக பேசினார். 38 வயதாகும் ரஃபேல் நடால், இதுவரை ஆடவர் ஒற்றையர் பிரிவில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதில் 14 பட்டங்கள் பிரெஞ்சு ஓபன் தொடரில் வென்றதாகும். சுமார் 20+ ஆண்டு காலம் களிமண் களத்தில் தனது ஆட்டத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்தியவர். கடைசியாக கடந்த 2022-ல் பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்றிருந்தார். https://thinakkural.lk/article/312470
-
மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு செல்ல வேண்டாம்!
தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என மன்னார் வளிமண்டலவியல் திணைக்கள வானிலை அதிகாரி தர்மரட்ணம் பிரதீபன் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது தொடர்ந்து வளர்ச்சியடைந்து வடமேற்கு நோக்கி மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதியை சுற்றி வரும் நவம்பர் 25 ஆம் திகதிக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த அமைப்பு தொடர்ந்து வளர்ச்சியடைந்து நாட்டின் வடக்கு கடற்கரையை நோக்கி நகரும் என்று நம்பப்படுகிறது. காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்ப்பரப்புக்களிலுள்ள மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://tamil.adaderana.lk/news.php?nid=196335
-
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எந்த வித தடையும் கிடையாது, அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்தார். யாழில் தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் மாவீரர் தினத்தை இம்முறை எவ்விதமான கெடுபிடிகளும் அடக்குமுறைகளும் இல்லாமல் அனுஷ்டிக்க முடியும். நினைவேந்தல் நிகழ்வு அதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது. மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களை ஒளிப்படம் எடுக்க வேண்டாம் என பாதுகாப்புத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் சுதந்திரமான முறையில் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க முடியும். அது அவர்களின் உரிமை. அதற்கு அரசு தடை எதுவும் போடாது“ என தெரிவித்தார் இதேவேளை தமிழின விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு தமிழர் தாயகமெங்கும் மாவீரர் வாரத்தின் இறுதி நாளான கார்த்திகை 27ஆம் நாள் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/anura-govt-allowed-to-commemorate-maaveerar-naaal-1732445376#google_vignette
-
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதானி மீது அமெரிக்காவில் வழக்கு
அதானிக்கு அமெரிக்கா அழைப்பாணை! பிரபல இந்திய தொழிலதிபர் கௌதம் அதானிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இலஞ்ச குற்றச்சாட்டுக்கு அமைய அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அழைப்பாணை பிறப்பித்துள்ளது. மேலும் அவரது மருமகனும் 'அதானி கிரீன்' நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளருமான சாகர் அதானிக்கும் இதே குற்றச்சாட்டுகள் தொடர்பாக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. தனது நிறுவனத்திற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களைப் பெறும் நோக்கில் இந்திய அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்ததாகவும், அமெரிக்க முதலீட்டாளர்கள் உள்ளிட்ட சர்வதேச முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தியதாகவும் அதானிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. https://tamil.adaderana.lk/news.php?nid=196351
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
இமாலய இலக்கை நிர்ணயித்த ஜெய்ஸ்வால், கோலியின் சதம், மிரட்டிய பும்ரா - நெருக்கடியில் ஆஸ்திரேலியா பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 534 ரன்கள் என்னும் இமாலய இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது. ஜெய்ஸ்வாலின் சாதனை சதம் (150), 491 நாட்களுக்குப் பின் கோலி அடித்த சதம் ஆகியவற்றால் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. ஆட்டம் எப்படி செல்லும்? ஆஸ்திரேலிய அணி 534 ரன்கள் மிகப்பெரிய இலக்கைத் துரத்தியது. ஆனால், பும்ராவின் துல்லியமான லைன் அண்ட் லென்த் பந்துவீச்சில் சிக்கி 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியுள்ளது. இன்னும் 2 நாட்கள் முழுமையாக இருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுமா அல்லது டிரா செய்யுமா அல்லது தோல்வியடையுமா என்பது மதில் மேல் பூனையாக இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் ஸ்மித், கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்ஷ் ஆகிய 4 பேரில் ஏதேனும் இருவர் பெரிய இன்னிங்ஸ் ஆடினால்தான் தோல்வியிலிருந்து தப்பிக்க முடியும், குறைந்தபட்சம் டிரா செய்ய முடியும். பெர்த் ஆடுகளம் கடைசி இரு நாட்களில் அதிகமான பிளவுகளைக் கொண்டிருக்கும். பும்ரா, ஹர்ஷித் ராணா, சிராஜ் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் கள் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். பிட்ச்சில் பிளவுகளை மறைக்க “ரோலர்” உருட்டி இறுக வைத்தால் மட்டுமே பேட்டிங்கிற்கு ஓரளவு சாதகமாக இருக்கும். இல்லாவிட்டால் நாளை நான்காவது நாள் ஆட்டத்தில் புதிய பந்தில் பும்ரா, சிராஜின் ஸ்விங் பந்துவீச்சை எதிர்கொள்வதும், பவுன்சர்களை சமாளிப்பதும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும். கூக்கபுரா பந்து தேய்ந்து, மெதுவாக மாறும் வரை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழக்காமல் பொறுமையாக பேட் செய்ய வேண்டும். ஒருவேளை விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழக்க நேர்ந்தால் நாளையே ஆட்டம் முடிந்தாலும் வியப்பில்லை. தடுமாறாத பும்ரா - மிரளும் ஆஸி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒருவேளை இந்தியாவின் பந்துவீச்சில் ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை இழக்க நேர்ந்தால் நாளையே ஆட்டம் முடிந்தாலும் வியப்பில்லை. ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள்கூட பெர்த் பிட்ச்சில் சரியான லைன் அண்ட் லென்த்தை கண்டு பந்துவீச முடியாமல் கோட்டைவிட்டனர். ஆனால், பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு, லைன் அண்ட் லென்த்தில் பட்டு பந்து சீறிப் பாய்வது, பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைக்கிறது. இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்தபோது, முதல் ஓவரை வீசிய பும்ரா நான்காவது பந்திலேயே நேதன் மெக்ஸ்வீனை கால்காப்பில் வாங்க வைத்து ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்ததாக லபுஷேன் 10 பந்துகளைக்கூட எதிர்கொள்ளவில்லை, பும்ராவின் கத்திபோன்ற பந்தைவீச்சை எதிர்கொண்டு கால்காப்பில் வாங்கி வெளியேறினார். லபுஷேன் ஆட்டமிழந்த அந்தப் பந்தை எதிர்த்து நின்று பேட்டில் வாங்க முடியாத அளவுக்குத் துல்லியமான பிரமாஸ்திரமாக பும்ரா பந்துவீச்சு இருந்தது. இந்தப் பந்தை எவ்வாறு எதிர்கொள்வது எனத் தெரியாமல் லபுஷேன் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். நைட்வாட்ச் மேனாக களமிறங்கிய கம்மின்ஸின் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தவே ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது. ஆஸ்திரேலிய வீரர்களின் உற்சாகத்தை, நம்பிக்கையை, ஆவேசத்தை ஒற்றை மனிதராக பும்ரா தனது பந்துவீச்சில் குறைத்துள்ளார். இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில் ஆட்டத்தை எவ்வாறு ஆஸ்திரேலியா கொண்டு செல்லப் போகிறது என்பது விவாதத்துக்குரியது. ஆனால், இந்திய அணிக்கு அதன் திட்டம் தெளிவாக இருக்கிறது, வெற்றி ஒன்று மட்டும்தான் இலக்கு என்று விளையாடி வருகிறது. கோலி 491 நாட்களுக்குப் பின் சதம் பட மூலாதாரம்,GETTY IMAGES நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 93 ரன்கள் மட்டுமே சேர்த்து கடுமையான விமர்சனத்தை கோலி எதிர்கொண்டார். ஆனால், அனைத்துக்கும் இந்த டெஸ்டில் கோலி சதம் அடித்து பதிலடி கொடுத்தார். டெஸ்ட் அரங்கில் 491 நாட்களுக்குப் பின், கோலி இன்று 143 பந்துகளில் சதம் அடித்தார். 70 ரன்களில் இருந்து 100 ரன்களை எட்ட கோலி 20 பந்துகளையே எடுத்துக்கொண்டார் ஒரு சிக்சர், 4 பவுண்டரிகளை அடித்து கோலி சதத்தை நிறைவு செய்தார். சர்வதேச அரங்கில் கோலியின் 30வது டெஸ்ட் சதம், ஒட்டுமொத்தத்தில் 81வது சதமாகும். சச்சின், சுனில் கவாஸ்கர், டிராவிட்டுக்கு அடுத்தாற்போல் 30 சதங்களை கோலி எட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பெர்த் மைதானத்தில் விராட் கோலி தொடர்ந்து இரண்டாவது சதத்தையும் பதிவு செய்தார். 2018ஆம் ஆண்டு இதே மைதானத்தில் கோலி கடைசியாக சதம் அடித்தநிலையில் தொடர்ந்து இந்த முறையும் சதம் விளாசியுள்ளார். கடைசியாக 2023, ஜூலை மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக கோலி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார். அதன்பின் இப்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் விளாசியுள்ளார். இது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி அடிக்கும் 10வது சதம். அதோடு, அந்நாட்டு மண்ணில் 7வது சதம். இதன் மூலம் சச்சினின் சாதனையை கோலி முறியடித்தார். ஆஸ்திரேலிய மண்ணில் அந்நாட்டுக்கு எதிராக சச்சின் அடித்த 6 சதங்களை அடித்திருந்த நிலையில் கோலி அதை முறியடித்து 7வது சதத்தை பதிவு செய்தார். இந்திய அணி நேற்றைய 2வதுநாள் ஆட்டநேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 57 ஓவர்களில் 172 ரன்கள் சேர்த்திருந்தது. ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 62 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 218 ரன்கள் முன்னிலையுடன் இருந்தது. இன்றை 3வது நாள் ஆட்டத்தை ஜெய்ஸ்வால், ராகுல் தொடர்ந்தனர். 205 பந்துகளில் ஜெய்ஸ்வால் 122 ரன்கள் அடித்து, ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிரான அறிமுக ஆட்டத்திலேயே சதத்தைப் பதிவு செய்தார். இதற்கு முன் ஆஸ்திரேலிய மண்ணில் தனது அறிமுக டெஸ்டில் சதத்தை, ஜெய்சிம்மா(1968), சுனில் கவாஸ்கர்(1968) ஆகிய இரண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமே பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் இப்போது மூன்றாவது பேட்ஸ்மேனாக ஜெய்ஸ்வால் அந்தப் பெருமையைப் பெற்றுள்ளார். வரலாற்று பார்ட்னர்ஷிப் பட மூலாதாரம்,GETTY IMAGES ராகுல், ஜெய்ஸ்வால் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு வெற்றிகரமாக 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால், அடுத்த சிறிது நேரத்திலேயே ராகுல் 77 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட் கீப்பர் கேரெயிடம் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 201 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய தொடக்க ஜோடி 38 ஆண்டுகளுக்குப் பின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பையும், 200 ரன்களுக்கு மேலும் குவித்த பெருமையை ஜெய்ஸ்வால், ராகுல் பெற்றனர். இதற்கு முன் கடந்த 1986ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த டெஸ்டில் ஸ்ரீகாந்த், கவாஸ்கர் கூட்டணி தொடக்க ஜோடியாக 181 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்ததே அதிகபட்சமாக இருந்தது. அதை ஜெய்ஸ்வால், ராகுல் ஜோடி கடந்துள்ளனர். இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா சார்பில் தொடக்க ஜோடி மூன்றாவது முறையாக 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது. இதற்கு முன் 1970ஆம் ஆண்டு ஓவலில் கவாஸ்கர், சேத்தன் சௌகான் ஜோடி 213 ரன்களும, 1936ஆம் ஆண்டு விஜய் மெர்ச்சன்ட்- முஸ்தாக் அலி ஜோடி 203 ரன்களும் சேர்த்திருந்தனர். குறிப்பாக கே.எல்.ராகுல் மட்டுமே தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக தொடக்க ஜோடியில் ஒருவராக இருந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பேட்ஸ்மேனாக உள்ளார். லாட்ஸ் மைதானத்தில் ரோஹித் சர்மாவுடன் இணைந்த 2021 ஆம் ஆண்டில் 121 ரன்கள் பார்ட்னர்ஷிப், 2021ஆம் ஆண்டில் செஞ்சூரியனில் மயங்க் அகர்வாலுடன் இணைந்து 117 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் ராகுல் அமைத்துள்ளார். அடுத்து களமிறங்கிய படிக்கல், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். முதல் இன்னிங்ஸில் டக்அவுட் ஆனதால், படிக்கல் மிகுந்த கவனத்துடன் தேவையற்ற பந்துகளைத் தொடாமல் பேட் செய்தார். கால்களை நகர்த்தி நன்றாக ஆடியதால், எளிதாக டிபென்ட் செய்து ஆட்டத்தைக் கையாள முடிந்தது. மதிய உணவு இடைவேளையின் போது இந்திய அணி 275 ரன்கள் சேர்த்திருந்தது. சாதனை நாயகன் ஜெய்ஸ்வால் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராகுல், ஜெய்ஸ்வால் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு வெற்றிகரமாக 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். உணவு இடைவேளைக்குப் பின் சற்று வேகமாக ரன்களை குவித்த ஜெய்ஸ்வால், 275 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். இதில் 3 சிக்சர்கள், 14 பவுண்டரிகள் அடங்கும். ஜெய்ஸ்வால் 23 வயதைக் கடக்கும் முன்பே டெஸ்ட் போட்டியில் நான்காவது முறையாக 150 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். டான் பிராட்மேனின் ஐந்தாவது சதத்தை எட்ட ஜெய்ஸ்வாலுக்கு இன்னும் ஒரு சதம் தேவை. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் தனது முதல் 4 சதங்களையும் 150 ரன்களாக மாற்றிய வகையில் இரண்டாவது வீரராக ஜெய்ஸ்வால் பெருமை பெற்றார். இதற்கு முன் தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் மட்டுமே இந்தச் சாதனையைச் செய்திருந்தார். மேலும் சர்வதேச அளவில், முதல் இன்னிங்ஸில் டக்-அவுட்டில் ஆட்டமிழந்து, இரண்டாவது இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு மேல் குவித்த ஏழாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். இந்திய அணி அளவில் நான்காவது இந்திய பேட்ஸ்மேன் (ஆப்தே, நயன் மோங்கியா, சர்ஃபிராஸ் கான்) என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல் ஒரு காலண்டர் ஆண்டில் 150 ரன்களை 3 அல்லது அதற்கு அதிகமாக 3 இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமே வைத்திருந்தனர். சச்சின்(2002, 2004), சேவாக்(2004, 2008), கோலி(2016, 2017). இப்போது நான்காவது வீரராக அந்தப் பட்டியலில் ஜெய்ஸ்வாலும் சேர்ந்துள்ளார். அனுபவமற்ற பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கலை ஹேசல்வுட் எளிதாக வெளியேற்றினார். அரவுண்ட் ஸ்டெம்பில் இருந்து பந்து வீசிய ஹேசல்வுட் ஆஃப் ஸ்டெம்பில் இருந்து சற்று விலக்கி வீசியபோது படிக்கல் அதை அடிக்க முற்பட்டு, ஸ்லிப்பில் ஸ்மித்திடம் கேட்சானது. படிக்கல் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி களமிறங்கி, ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். கோலியும் ஜெய்ஸ்வால் ஆட்டத்தைப் பார்த்துப் புகழ்ந்து சல்யூட் செய்து மைதானம் சென்றார். கோலி - ஜெய்ஸ்வால் பார்ட்னர்ஷிப் நீண்டநேரம் நிலைக்கவில்லை. மார்ஷ் பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் ஸ்குயர்கட் ஷாட் அடித்தபோது அதை எட்ஜ் எடுத்து ஸ்மித்திடம் கேட்சானது. ஜெய்ஸ்வால் 161 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்து வெளியேறினார். ஜெய்ஸ்வால் பெவிலியன் திரும்பும்போது அரங்கில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி வரவேற்பு அளித்தனர். திடீர் சரிவு பட மூலாதாரம்,GETTY IMAGES ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த பிறகு அடுத்தடுத்து 8 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. ரிஷப் பந்த்(1), ஜூரெல் (1) என விரைவாகச் சரிந்தனர். ஆறாவது விக்கெட்டுக்கு வந்த வாஷிங்டன் சுந்தர், கோலியுடன் இணைந்து ஆடினார். முதல் இன்னிங்ஸில் சொதப்பிய சுந்தர், இந்த முறை கோலிக்கு அதிகமாக ஸ்ட்ரைக்கை வழங்கி, நிதானமாக பேட் செய்தார். விராட் கோலி 94 பந்துகளில் அரைசதம் அடித்து, கடந்த கால விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். இருவரும் 6வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பொறுமையாக ஆடிய சுந்தர், ஸ்வீப் ஷாட் அடிக்கும் முயற்சியில் லயன் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிதிஷ் குமார், கோலியுடன் இணைந்தார். கோலி வேகமாக ரன் சேர்க்கத் தொடங்கினார். மிட்செல் ஸ்டார்க் வீசிய ஒவரில் அப்பர் கட் ஷாட் அடித்து கோலி சிக்சர் விளாசினார். கோலி அடித்த அப்பர் கட் ஷாட்டில் பவுண்டரி எல்லையில் அமர்ந்திருந்த பாதுகாவலரின் தலையில் பந்து பட்டு அவருக்குக் காயம் ஏற்பட்டது. நிதிஷ் குமார், வந்ததில் இருந்து அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரி என விளாசினார். விராட் கோலி சதம் அடிப்பதற்காக கேப்டன் பும்ரா காத்திருந்தார். 70 ரன்களை எட்டிய கோலி, அடுத்த 30 ரன்களை 20 பந்துகளில் எட்டி 30வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். கோலி, 100 ரன்களும், நிதிஷ்குமார் 38 ரன்களும் சேர்த்திருந்தபோது, டிக்ளேர் செய்வதாக கேப்டன் பும்ரா அறிவித்தார். 134.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் சேர்த்து இந்திய அணி டிக்ளேர் செய்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/czr7jd0eg7lo
-
1650 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் மீட்பு
பாரியளவான போதைப்பொருளுடன் படகொன்று சிக்கியது சுமார் 344 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் சுமார்124 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருளையும் ஏற்றிச் சென்ற இந்நாட்டு நெடுநாள் மீன்பிடி படகொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது அந்த படகில் இருந்த 5 சந்தேகநபர்கள், மாலைத்தீவு கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படை மற்றும் மாலைத்தீவு கடலோர காவல்படை இணைந்து நடத்திய வெற்றிகரமான புலனாய்வு பரிமாற்றத்தின் விளைவாக நேற்று (23) இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=196348
-
"வடக்கு கிழக்கில்" வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட வாய்ப்பு!!
வௌ்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகள் அறிவிப்பு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதாலும், அடுத்த சில நாட்களில் அதன் வளர்ச்சி சாத்தியம் என்பதாலும் 12 ஆற்றுப்படுகைகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாளை (25) முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் கீழே பெயரிடப்பட்டுள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய ஆற்றுப்படுகைகள் 1. மல்வத்து ஓயா ஆற்றுப்படுகை 2. கலா ஓயா ஆற்றுப்படுகை 3. கனகராயன் ஆற்றுப்படுகை 4. பரங்கி ஆறு ஆற்றுப்படுகை 5. மா ஓயா ஆற்றுப்படுகை 6. யான் ஓயா ஆற்றுப்படுகை 7. மகாவலி ஆற்றுப்படுகை 8. மதுரு ஓயா ஆற்றுப்படுகை 9. முந்தெனியாறு ஆற்றுப்படுகை 10. கலோயா ஆற்றுப்படுகை 11, ஹடோயா ஆற்றுப்படுகை 12. வில ஓயா ஆற்றுப்படுகை https://tamil.adaderana.lk/news.php?nid=196343
-
மூளாயில் மழையால் இடம்பெயர்ந்த மக்களை சந்தித்த கடற்றொழில் அமைச்சர்
மழையால் இடம்பெயர்ந்த மக்களை சந்தித்த கடற்றொழில் அமைச்சர் தொடர்ச்சியாக பெய்த அடை மழையால் வாழ்விடங்கள் பாதிப்படைந்த நிலையில் மூளாய்ப் பகுதி (ஜே/171) மக்கள் அங்குள்ள தேவாலயம் ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து அவர்களது நிலைமை குறித்து கலந்துரையாடினர். அதன் பின்னர் கடற்றொழில் அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இன்றையதினம் காக்கைதீவு மற்றும் மூளைப் பகுதிகளுக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினோம். அவர்கள் மிகவும் பாதிப்படைந்திருதிப்பதை நாங்கள் அவதானித்தோம். உண்மையில் இந்த நிலைமைகளுக்கு தீர்வு தேடிக் கொடுக்க வேண்டியவர்கள் அரசாங்கமும், அரசியல்வாதிகளும், அரசு நிறுவனங்களும் தான். இது ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாக உள்ளது. எனவே எதிர்வரும் காலங்களில் இந்த நிலைமையில் இருந்து உங்களை மீட்பதற்கு நாங்கள் சகல வேலை திட்டங்களையும் முன்னெடுப்போம். அதற்கான செயல்பாடுகளை நாங்கள் அண்மையிலேயே ஆரம்பித்து இருக்கின்றோம். இதன் போது குறித்த பகுதி மக்களின் கருத்துகளையும் நாங்கள் உள்வாங்கி செயல்படுவோம். இன்னும் சில நாட்களில் கடும்மழை பெய்யலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் அந்த நிலைமையையும் எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றேன் என்றார். https://thinakkural.lk/article/312552
-
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்
திருகோணமலை சம்பூர் கலாச்சார மண்டபத்தில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு கௌரவிப்பு திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளித்து கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (24) சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இதனை சம்பூர் - ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் மலர் தூவி விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்களினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு உயிர்நீத்த உறவுகளுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 350 மாவீரர்களின் பெற்றோர்களுக்கு தென்னைமரக் கன்றுகள் வழங்கப்பட்டிருந்தன. அத்தோடு அவர்களது குடும்பங்களுக்கான மதியபோசனமும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், மாவீரர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/199582
-
300 பில்லியன் டாலர் நிதி: ஐநா காலநிலை மாநாட்டு ஒப்பந்தம் குறித்து இந்தியா அதிருப்தி ஏன்?
பட மூலாதாரம்,EKO SISWONO TOYUDHO/GETTY IMAGES எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட், எஸ்மே ஸ்டல்லர்ட் பதவி, காலநிலை & அறிவியல் குழு, பிபிசி காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை தடுக்கவும், அதற்காக தங்களை தயார்படுத்திக் கொள்ளவும் வளரும் நாடுகளுக்கு ஆண்டுக்கு 300 பில்லியன் அமெரிக்க டாலர் பணம் வழங்க COP29 உச்சி மாநாட்டில் பணக்கார நாடுகள் உறுதியளித்துள்ளன. அஜர்பைஜானில் ஐநா காலநிலை மாநாடு COP29 துவங்கி, அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. "இது மிகவும் சவாலான பயணம் ஆனால் எங்களால் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடிந்துள்ளது" என்று ஐநா காலநிலை அமைப்பின் தலைவர் சிமோன் ஸ்டியெல் கூறினார். ஆனால், உலக நாடுகள் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. மாநாட்டில் என்ன நடந்தது? சனிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில், வளரும் நாடுகள், குறிப்பாக காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடுகள் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறின. சிறு தீவு நாடுகள் கூட்டணியின் தலைவர் செட்ரிக் ஷஸ்டர் இதுகுறித்து பேசும் போது, "எங்களின் தீவுகள் மூழ்கிக் கொண்டிருக்கின்றன என்பதை நான் மிகைப்படுத்திக் கூறவில்லை. ஒரு மோசமான ஒப்பந்தத்தை வைத்துக் கொண்டு எங்கள் மக்களை நாங்கள் எப்படி சந்திப்போம் என்று எதிர்பார்க்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார். ஆனால் ஞாயிற்றுக்கிழமை இந்திய உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு (சனிக்கிழமை 23:00 GMT), சில மாற்றங்களை செய்த பிறகு, ஒப்பந்தம் இறுதியாக நிறைவேற்றப்பட்டது. கைத்தட்டல்கள் ஆரவாரத்துடன் இதனை பலரும் வரவேற்றனர். ஆனால் இந்த விவகாரம் குறித்து இந்தியா தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்ட ஆவேசமான கருத்துக்கள், அதன் விரக்தியை காட்டியது. இந்தியா சார்பில் பங்கேற்ற லீலா நந்தன், இந்த ஒப்பந்தத்தில் வழங்கப்படுவதாக கூறப்பட்ட நிதி மிகவும் குறைவானது என்று வாதிட்டார். மேலும்,"எங்களால் இதை ஏற்க முடியாது ... முன்மொழியப்பட்ட இலக்கு எங்களின் பிரச்னைகள் எதையும் தீர்க்காது. எங்கள் நாடு தப்பிப்பதற்கு தேவையான காலநிலை நடவடிக்கைகளுக்கு இந்த இலக்கு உகந்தது இல்லை," என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மிகவும் வெப்பமான ஆண்டாக இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெப்ப அலைகளாலும், தீவிர புயல்களாலும் இந்த ஆண்டு பல பாதிப்புகளை சந்தித்துள்ளது சுவிட்சர்லாந்து, மாலத்தீவு, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் புதைபடிவ எரிபொருட்களின் உலகளாவிய பயன்பாட்டைக் குறைக்கும் ஒப்பந்தம் மிகவும் பலவீனமாக இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்தன. அதனால் அந்த முடிவு 2025-ஆம் ஆண்டு நடைபெறும் அடுத்த காலநிலை பேச்சுவார்த்தைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கால நிலை மாற்றத்தால், ஏழை நாடுகள் அதிக சவால்களை எதிர்கொள்கின்றன. ஆனால் வரலாற்று ரீதியாக, தற்போது ஏற்பட்டுள்ள கால நிலை நெருக்கடிகளுக்கு இந்த ஏழை நாடுகளின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நாடுகள் கால நிலை மாற்றத்திற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வழங்கப்படும் நிதியானது அவர்களின் குறைவான பங்களிப்பு, அதிக பாதிப்புகளை அங்கீகரிக்கும் அம்சமாக பார்க்கப்படுகிறது. புதிதாக அறிவிக்கப்பட்ட நிதியை பணக்கார நாடுகளின் மானியங்கள் மற்றும் வங்கிகள், வணிகம் உள்ளிட்ட தனியார் துறைகளில் இருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடுகள் புதைபடிவ எரிசக்தியிலிருந்து விலகி புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்த உதவும் வகையில் இந்த நிதி இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,SEAN GALLUP/GETTY IMAGES படக்குறிப்பு, பல நாடுகள் இந்த நிதியும் இலக்கும் போதுமானதாக இருக்காது என்று கூறியுள்ளன. அமெரிக்காவின் பங்கு நவம்பர் 11-ஆம் தேதியன்று பேச்சுவார்த்தையின் தொடக்கமானது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தேர்தல் தொடர்பான விவாதங்களால் ஆதிக்கம் செலுத்தியது. அவர் வரும் ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ளார். காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றுவதாகக் கூறிய டிரம்ப், காலநிலை மாற்றத்தை ஏற்க மறுக்கும் ஒரு நபராக அறியப்படுகிறார். "டிரம்ப் ஒரு பைசா கூட கொடுக்க மாட்டார் என்பதை மற்ற வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த நன்கொடையாளர்கள் நன்கு அறிந்திருக்கின்றனர். அவர்கள் இதனால் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட வேண்டும்,”என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச காலநிலை பேச்சுவார்த்தைகள் நிபுணர் பேராசிரியர் ஜோனா டெப்லெட்ஜ், பிபிசியிடம் கூறினார். காலநிலை விவகாரங்களில் இணைந்து செயல்படுவதற்கு உலக நாடுகள் உறுதியாக உள்ளன என்பதையே இந்த ஒப்பந்தம் குறிக்கிறது. ஆனால் இந்த பூமியில் இயங்கிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பொருளாதாரம் இதில் தன்னுடைய பங்களிப்பை செலுத்தாது என்று வரும் போது, பல பில்லியன் டாலர் நிதி திரட்டும் இலக்கை அடைவது கடினமாகக் கூடும். "COP29 மாநாட்டின் இறுதி கட்டத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் கடினமான புவிசார் அரசியலைக் கொண்டுள்ள நிலப்பரப்புகளை (நாடுகளை) பிரதிபலிப்பதாகவே இருந்தது. நன்கொடை வழங்கும் நாடுகளுக்கும், மிகவும் பாதிப்படையக் கூடும் நாடுகளுக்கும் இடையே உள்ள சமமற்ற சமரசம் தான் இந்த நிதி தொடர்பான இறுதி அறிவிப்பு," என்று ஆசியா சொசைட்டி பாலிசி நிறுவனம் என்ற சிந்தனைக் குழுவில் பணியாற்றும் லி ஷுவோ கூறினார். "இது காலநிலை விவகாரத்தில் முக்கியமான கட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவு ஆகும். நாமோ அல்லது பிறரோ விரும்பி எடுக்கப்பட்ட முடிவல்ல இது. ஆனால் நம் அனைவருக்காகவும் எடுத்து வைக்கப்படும் ஒரு முன்னெடுப்பாகும்," என்று பிரிட்டனின் எரிசக்தித் துறை செயலாளர் எட் மிலிபந்த் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வருவதால் காலநிலை நிதியில் பற்றாக்குறை ஏற்படும் என உலக நாடுகள் கவலை பிரேசிலில் அடுத்த உச்சி மாநாடு அதிக நிதி தருவதாக உறுதியளித்ததற்கு ஈடாக, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை, புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்கு, நாடுகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. கடந்த ஆண்டு துபாயில் நடந்த பேச்சுவார்த்தையில் "புதைபடிவ எரிசக்தியில் இருந்து (இதர எரிசக்திகளுக்கு) மாறுதல்" என்ற ஒப்பந்தம் வலுப்பெறும் என்று அவர்கள் நம்பினாலும், இறுதியாக முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் குறித்து மட்டுமே மீண்டும் மீண்டும் பேசப்பட்டது. கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியை நம்பியிருக்கும் நாடுகள் மேலும் முன்னேற்றத்தைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. "புதைபடிவ எரிபொருள்கள் உட்பட குறிப்பிட்ட துறைகளை குறிவைக்கும் எந்த முடிவையும் அரபு நாடுகள் குழு ஏற்காது" என்று சௌதி அரேபியாவின் அல்பரா தவ்பிக் இந்த வார தொடக்கத்தில் ஒரு நிகழ்வில் தெரிவித்தார். தங்கள் நாடுகளில் ஏற்படும் பருவநிலை மாற்றத்திற்கு தீர்வு காண புதிய திட்டங்களுடன் பல நாடுகள் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அடுத்த உச்சி மாநாடு பிரேசிலில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், 2035-ஆம் ஆண்டுக்குள் பிரிட்டன் கார்பன் உமிழ்வை 81% குறைக்கும் என்று உறுதி அளித்தார். இது பலராலும் வரவேற்கப்பட்டது. காலநிலை மாற்ற மாநாடு நடக்கும் அஜர்பைஜான், இந்த முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுகளை நடத்துவதற்கான சர்ச்சைக்குரிய தேர்வாக இருந்தது. அடுத்த பத்தாண்டுகளில் எரிவாயு உற்பத்தியை மூன்று மடங்கு விரிவுபடுத்த இருப்பதாக அந்நாடு ஏற்கனவே அறிவித்திருந்தது. அடுத்த ஆண்டு காலநிலை உச்சி மாநாட்டை நடத்துவதற்கு பிரேசில் சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. அந்நாட்டு அதிபர் லூலாவின் காலநிலை மாற்றம் மற்றும் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த அமேசான் மழைக்காடுகளின் அழிப்பைக் குறைப்பதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகள் காரணமாக பெலெம் நகரில் இந்த மாநாடு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c75lg9449q2o
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
ஜய்ஸ்வால், கோஹ்லி அபார சதங்கள்; மிகப் பலம் வாய்ந்த நிலையில் இந்தியா, ஆஸி.க்கு வெற்றி இலக்கு 534 ஓட்டங்கள் 24 NOV, 2024 | 05:16 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் பேர்த் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மிகப் பலம் வாய்ந்த நிலையில் இருக்கிறது. இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜய்ஸ்வால், விராத் கோஹ்லி ஆகியோர் குவித்த சதங்கள், கே.எல். ராகுல் பெற்ற அரைச் சதம் என்பன இந்தியாவை மிகவும் பலம்வாய்ந்த நிலையில் இட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் விராத் கோஹ்லி சதம் குவித்தவுடன் அணித் தலைவர் ஜஸ்ப்ரிட் பும்ரா இரண்டாவது இன்னிங்ஸை நிறுத்துவதாக அறிவித்தார். போட்டியில் 2 நாட்களுக்கு மேல் மீதமிருந்த நிலையில் இந்தியா 534 ஓட்டங்களை வெற்றி இலக்காக அவுஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்தது. போட்டியின் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா அதன் 2ஆவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 12ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆரம்ப வீரர் நேதன் மெக்ஸ்வீனி (0), இராக்காப்பாளனாக களம் புகுந்த அணித் தலைவர் பெட் கமின்ஸ் (2), மானுஸ் லபுஸ்ஷேன் (3) ஆகிய மூவரே ஆட்டம் இழந்த வீரர்களாவர். மூன்றாம் நாள் ஆட்டத்தில் 4.4 ஓவர்கள் மீதம் இருந்தபோதிலும் லபுஸ்ஷேன் ஆட்டம் இழந்ததும் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. உஸ்மான் கவாஜா 3 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா ஒரு ஓட்டத்திற்கு 2 விக்கெட்களையும் மொஹமத் சிராஸ் 7 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். போட்டியின் 3ஆம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை விக்கெட் இழப்பின்றி 172 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தொடர்ந்து இந்தியா 6 விக்கெட்களை இழந்த 487 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. தனது இன்னிங்ஸை 62 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த கே. எல். ராகுல் முதலாவது விக்கெட்டில் ஜய்ஸ்வாலுடன் 201 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் 77 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து ஜய்ஸ்வாலுடன் 2ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்த தேவ்டத் படிக்கல் 25 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஜய்ஸ்வால் 297 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 161 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து ரிஷாப் பான்ட், த்ருவ் ஜுரெல் ஆகிய இருவரும் தலா ஒரு ஓட்டத்துடன் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். எனினும் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய முன்னாள் தலைவர் விராத் கோஹ்லி, 6ஆவது விக்கெட்டில் வொஷிங்டன் சுந்தருடன் 89 ஓட்டங்களையும் பிரிக்கப்பட்டாத 7ஆவது விக்கெட்டில் நிட்டிஷ் குமார் ரெட்டியுடன் 77 ஓட்டங்களையும் பகிர்ந்தார். 143 பந்துகளை எதிர்கொண்ட விராத் கோஹ்லி 8 பவுண்டறி கள், 2 சிக்ஸ்கள் உட்பட 100 ஓட்டங்களைப் பெற்றவுடன் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸை பும்ரா டிக்ளயா செய்தார். வொஷிங்டன் சுந்தர் 29 ஓட்டங்களையும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய நிட்டிஷ் குமார் ரெட்டி ஆட்டம் இழக்காமல் 38 ஓட்டங்களையும் பெற்றனர். இப் போட்டியில் 161 ஓட்டங்களைக் குவித்த ஜய்ஸ்வால் மிகக் குறைந்த வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 தடவைகள் 150 ஓட்டங்களுக்கு மேல் பெற்று சச்சின் டெண்டுல்கரின் இந்திய சாதனையை சமப்படுத்தினார். அவுஸ்திரேலியாவின் டொனல்ட் ப்ரட்மன் மிகக் குறைந்த வயதில் 8 தடவைகள் 150 ஓட்டங்களுக்கு மேல் குவித்ததுடன் பாகிஸ்தானின் ஜாவேட் மியண்டாட், தென் ஆபிரிக்காவின க்ரேம் ஸ்மித் ஆகியோர் 4 தடவைகள் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். இது இவ்வாறிருக்க, 16 மாதங்களுக்குப் பின்னர் விராத் கோஹ்லி முதல் தடவையாக சதம் குவித்துள்ளார். இது அவரது 30ஆவது டெஸ்ட் சதமாகும். https://www.virakesari.lk/article/199567
-
குடும்ப சிகிச்சை: அமீர் கான் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட மனநல சிகிச்சை எதற்காக அளிக்கப்படுகிறது?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மகள் ஐராவும், தானும் கூட்டுக் குடும்பச் சிகிச்சையில் இருப்பதாக அமீர் கான் கூறினார் எழுதியவர், அனகா பதக் பதவி, பிபிசி செய்தியாளர் "நான் என் தந்தையிடம் ஒருபோதும் பேசுவதில்லை, நான் சொல்வதை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டர்." "முன்பு எங்களிடையே நல்ல உறவு இருந்தது. ஆனால், இப்போது இடைவெளி அதிகமாகிவிட்டது." என்ன உறவாக இருந்தாலும் இரு நபர்களுக்கு இடையே இடைவெளி ஏற்படுகிறது, அவர்களுக்குள் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. "நான் பல ஆண்டுகளாக எனது நண்பர்/சகோதரி/சகோதரர்/உறவினர்களுடன் பேசவில்லை," என்று மற்றவர்கள் கூறுவதை நாம் அடிக்கடி கேட்கிறோம். தாயுடன் உடன்படவில்லை, தந்தையுடன் உடன்படவில்லை என இருப்பவர்கள் ஒரே வீட்டிலே ஒன்றாக வாழ்ந்து அவர்களுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், அவர்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள விரும்பாத நபர்களையும் நான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு இடையிலான உறவு நாளுக்கு நாள் மோசமடைகிறது. இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா? இதற்கு குடும்ப மனநல சிகிச்சை அல்லது கூட்டு மனநல சிகிச்சை தீர்வாக இருக்கலாம். நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவில் விவேக் மூர்த்திக்கு அளித்த பேட்டியில், தானும் தனது மகள் ஐராவும் கூட்டுக் குடும்ப மனநல சிகிச்சையில் இருப்பதாக அமீர் கான் கூறினார். அடிப்படையில், இத்தகைய தெரபி அல்லது மனநல மருத்துவரிடம் செல்வது ஒரு பலவீனமாக இன்னும் கருதப்படுகிறது. மனநோய் கொண்டவர்களே மனநல மருத்துவர்களிடம் செல்வார்கள் என்ற பார்வை உள்ளது. ஆனால் விவாகரத்து கட்டத்தை அடைந்த தம்பதிகள், மனநல ஆலோசகரிடம் சென்று தங்கள் உறவை மேம்படுத்தலாம், தங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, விவாகரத்தை தவிர்க்கலாம் என்பது மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மனநல மருத்துவரிடம் செல்வது இன்னும் பலவீனமாகக் கருதப்படுகிறது ஆனால், மற்ற உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவும், தொடர்பை மேம்படுத்தவும் வேறுபாடுகளைக் குறைக்கவும், நாம் எவ்வித சிகிச்சைகளையும் பரிந்துரைப்பதில்லை. இதற்கொரு தீர்வாக இருக்கும் குடும்ப மனநல சிகிச்சை அல்லது கூட்டு மனநல சிகிச்சை குறித்து இக்கட்டுரை விளக்குகிறது. குடும்ப மனநல சிகிச்சை என்பது பேச்சு சிகிச்சையின் ஒரு வடிவம். (அதாவது உரையாடுவதன் மூலமாக பிரச்னைகளை சரிசெய்யக் கூடிய சிகிச்சை, இதில் மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை.) இந்த சிகிச்சை, ஒரு குடும்பம் அல்லது குடும்பத்தின் ஒரு சில உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு, தங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள உதவும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த சிகிச்சையின் நோக்கம் இருவருக்கு இடையிலான கோபம் மற்றும் வெறுப்பைக் குறைப்பது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களிடையே தொடர்பை மேம்படுத்தி, அவர்களின் உறவை மேம்படுத்தி, கோபம் மற்றும் வெறுப்பைக் குறைப்பதுதான் இந்த சிகிச்சையின் நோக்கம். தங்களின் வாழ்க்கையில் நிகழும் எல்லாவற்றுக்கும் ஒட்டுமொத்த குடும்பத்தையோ அல்லது குடும்பத்தில் நிகழும் விஷயங்களையோ குற்றம் சாட்டும் போதோ அல்லது குடும்பத்தில் உள்ள சில உறுப்பினர்களின் நடத்தை ஒருவரைத் தொந்தரவு செய்கிறது என்றாலோ, அல்லது அந்நபரின் நடத்தையாலேயே ஒட்டுமொத்த குடும்பமும் சூழப்பட்டிருக்கிறது என்றாலோ இந்த சிகிச்சை பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகிறது. அப்படியிருக்கும்போது, குடும்பத்தில் உள்ள அனைவரும் அமர்ந்து பேசி பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது அவசியம். ஆனால், அர்த்தமில்லாத பேச்சுவார்த்தைகள் அல்லது குற்றச்சாட்டுகளை மட்டுமே பேசும் அளவுக்கு உறவில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். அந்த நேரத்தில்தான் மனநல ஆலோசகரிடம் சென்று இத்தகைய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குடும்பத்தின் உள் விவகாரங்களை எப்படி வெளியே கொண்டு செல்வது என மக்கள் இந்த சிகிச்சையைத் தவிர்க்கிறார்கள். நிகிதா சுலே மும்பையில் மருத்துவ உளவியல் ஆலோசகராகப் பணியாற்றுகிறார். அவர் கூறுகையில், "இந்தியாவில் குடும்பத்தை மையப்படுத்திய கலாசாரம் நிலவுகிறது. இதில், நீங்கள் ஒரே நேரத்தில் பல நபர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டியிருக்கும். அவர்களுடன் உளரீதியாகவும், நிதி, சமூகரீதியாகவும் இணைக்கப்பட்டு இருப்பீர்கள். அப்படியிருக்கும்போது, இந்தியாவுக்கு இத்தகைய குடும்ப சிகிச்சை மிகவும் தேவையான ஒன்று" என்கிறார். "உணர்வுரீதியாகத் தொடர்புகொள்வதற்கான வழிகளோ, அந்த உணர்வுகளை மட்டுப்படுத்துவதற்கான வழிகளோ நம்மிடம் இல்லை. இரவு உணவு குறித்தோ அல்லது பணம் அல்லது தொலைக்காட்சியில் என்ன நடந்தது என்பது குறித்தோதான் நாம் பேசுகிறோம். ஒரே நேரத்தில் குடும்பத்தில் உள்ள பலர் காயப்பட்டிருப்பார்கள். பிரச்னைகளைப் பேசினாலோ அல்லது நிபுணரின் உதவியை நாடும்போதோ தீர்க்கப்பட்டுவிடும். ஆனால், வீட்டுக்கு வெளியே பிரச்னைகளைப் பேசுவதை அவர்கள் தவிர்க்கின்றனர்" என்கிறார் அவர். க்ளெவ்லேண்ட் கிளீனிக் (Cleveland Clinic) எனும் இணையதளம், வெவ்வேறு குடும்ப உறுப்பினர்கள் நிபுணரிடம் ஒன்றாகவோ அல்லது வெவ்வேறு குழுக்களாகவோ அமர்ந்து மேற்கொள்ளும் சிகிச்சை குறித்த தகவல்களை வழங்குகிறது. குழந்தைகள், பெற்றோர்கள், உடன் பிறந்தோர் அல்லது மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்கள்கூட ஒன்றாக அமர்ந்து தங்கள் கேள்விகளுக்குப் பதிலைக் கண்டறியலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குடும்ப விவகாரங்களை வெளியே சொல்ல முடியாமல் பலரும் தவிக்கின்றனர் இந்த சிகிச்சை மேலும் சில விஷயங்களில் பயனளிக்கும் என்று இந்த இணையதளம் கூறுகிறது. வீட்டில் யாராவது இறந்துவிட்டாலோ அல்லது ஒருவரையொருவர் குற்றம் சாட்டினாலோ என்ன செய்வது? வயதான பெற்றோர்கள், அவர்களின் நடுத்தர வயது குழந்தைகள் மற்றும் இளம் வயது பேரக் குழந்தைகள் இடையிலான தொடர்புப் பாலத்தை எவ்வாறு உருவாக்குவது? பெற்றோர்கள் பிரிவதால், குழந்தைகள் பாதிப்படையும்போது என்ன செய்வது? வீட்டில் யாராவது மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால், அல்லது மன நோயுடன் போராடினால், அந்தக் குடும்பம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த சிகிச்சை மூலம் கற்றுக்கொள்ளலாம். சீரடியை சேர்ந்த மனநல மருத்துவர் ஓம்கர் ஜோஷி "ஒருவருக்கு மன அழுத்தமோ அல்லது மனச் சிதைவோ (schizophrenia) ஏற்பட்டால், அவர்களுடைய நடத்தை மிகவும் தொந்தரவை ஏற்படுத்தும். பல நேரங்களில் அவர்கள் ஆலோசனைக்குத் தயாராக இருக்க மாட்டார்கள்," என்கிறார். அப்படியிருக்கும்போது "அவர்களை எப்படிச் சமாளிப்பது என அவர்களின் குடும்பத்தினருக்கு அறிவுறுத்துவோம். ஒருவருடைய மனநல பிரச்னையை அவர்களின் குடும்பத்திற்கு விளக்குவதும் குடும்ப சிகிச்சையில் ஒன்றுதான்" என்கிறார் அவர். ஆனால், எத்தனை பேர் இத்தகைய குடும்ப மனநல சிகிச்சைக்குச் செல்வார்கள்? எத்தனை பேர் தங்களுக்குள் உறவு முறிந்துவிட்டதாக ஒப்புக்கொண்டு அதை சரிசெய்ய ஒப்புக்கொள்வார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒருவருடைய மனநல பிரச்னையை அவரின் குடும்பத்திற்கு விளக்குவதும் இந்த சிகிச்சையின் ஒரு பகுதிதான் என்கிறார் மருத்துர் ஜோஷி "சிகிச்சை தேவை என்பதைப் பலரும் ஒப்புகொள்வதில்லை. சில தினங்களுக்கு முன்பு ஒரு தாயும் மகளும் வந்திருந்தனர். தாய்க்கு 70 வயதுக்கு மேல் இருக்கலாம், மகள் 40களில் இருக்கலாம். மகள் நன்றாகப் படித்துப் பெரிய பதவியில் உள்ளார். அவருக்கு விவாகரத்தாகி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்," என்றார் ஜோஷி. "மகளுக்கு மறுமணம் செய்ய வேண்டும் என அவரின் தாய் நினைக்கிறார். இதனால் இருவருக்கும் தொடர்ந்து சண்டை ஏற்பட்டுள்ளது. தனது தாய் இறந்தால்கூட தான் கவலைப்பட மாட்டேன் என மகள் கூறும் அளவுக்கு இது சென்றிருக்கிறது. தனக்கு உதவி தேவை என்பது நன்கு படித்த அவருக்குத் தெரியவில்லை. தனக்கு தாய்தான் பிரச்னை, அவருக்கு அறிவுரை கூறுங்கள் என்கிறார் மகள்." அடிப்படையில், "மகளின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அதன் பிறகு, அவர்களுக்கு குடும்ப சிகிச்சை அளிக்கலாம். ஆனால், தங்களுக்கு சிகிச்சை வேண்டும் என்பதையே பலரும் ஏற்றுக் கொள்வதில்லை" என்கிறார் அவர். இதனால், சிகிச்சைக்கு வருபவர்களிடம் நிபுணர்கள் முதலில் சில மருத்துவப் பரிசோதனைகளைப் பரிந்துரைப்பதாகவும், அதன்பின் அவர்களின் மனநலன் குறித்துப் பரிசோதிப்பதாகவும் கூறுகிறார் ஜோஷி. மேலும், "ஒருவருடைய இயல்பு, பல்வேறு விஷயங்களுக்கு அவர் எப்படி எதிர்வினையாற்றுகிறார், அவர் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசுபவரா அல்லது தனக்குள்ளேயே வைத்துக் கொள்பவரா என்பதைப் பார்க்க வேண்டும். அந்தப் பரிசோதனைகளின் மூலம், அவர்களின் குணநலன்கள், குறைகள் அவருக்கு முன்பாக விளக்கப்படும். இந்த சிகிச்சையில் நாங்கள் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதில்லை. நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதைத்தான் கூறுவோம். என்ன செய்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதைக் கூறுவோம்," என்றார். தலைமுறை அதிர்ச்சிக்கான தீர்வு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தலைமுறை இடைவெளியால் ஏற்படும் பிரச்னைகளுக்கு ஒரே பதில் குடும்ப மனநல சிகிச்சைதான் என மருத்துவர் ஸ்ருத்தி கீர்த்தி ஃபட்னாவிஸ் கூறுகிறார் தலைமுறை இடைவெளியால் ஏற்படும் குழப்பமும் மனநல ரீதியிலானதுதான். உதாரணமாக, ஒரு தந்தை எப்போதும் கோபம் கொண்டு சிறு விஷயங்களுக்கு எல்லாம் தனது மகனை அடித்தால், அந்த மகனும் வளர்ந்து குழந்தை பெற்ற பிறகு இவ்வாறே செய்வார். ஒரு தலைமுறைக்கு ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சிக்கு சிகிச்சை மேற்கொள்ளாமல், அது தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகிறது. "இதற்கு இருக்கும் ஒரே தீர்வு குடும்ப மனநல சிகிச்சைதான். நம்முடைய கடந்த கால அனுபவங்களில் இருந்துதான் நம்முடைய நடத்தைகள் உருவாகின்றன. நாம் நினைப்பது தவறு என்பதை ஒருவர் கூற வேண்டும். சரியானது எது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த சிகிச்சையின் மூலம், இந்தத் தலைமுறை அதிர்ச்சியைக் குணப்படுத்தி, அடுத்த தலைமுறையுடன் தொடர்பை ஏற்படுத்த முடியும்," என்கிறார் புனேவை சேர்ந்த தெரபிஸ்ட் ஷ்ருதிகீர்த்தி பட்னாவிஸ். இதன் அடுத்த கட்டம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அனைத்து வல்லுநர்களும் சமூகத்தில் குடும்ப மனநல சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை என ஒருமனதாக ஏற்றுக் கொள்கிறார்கள் குடும்ப உறவுகள் சிதைவதற்கு என்ன காரணம் என்பதை நிபுணர்கள் கண்டறிகின்றனர். ஏதாவதொரு விஷயம் நடக்கும்போது அதனால் ஏற்படும் கோபத்தைப் பல ஆண்டுகளாக மனதில் வைத்திருப்பதே பெரும்பாலும் இதற்குக் காரணம். பலரும் அந்தச் சம்பவங்களை மறப்பதில்லை. "அப்படிப்பட்ட நேரத்தில் அவற்றை ஏற்றுக்கொண்டு எப்படி உறவை நகர்த்துவது (Acceptance and Commitment Therapy) என்பதற்கான சிகிச்சை வழங்கப்படும். என்ன நடந்ததோ அதை ஏற்றுக்கொண்டு, பிரச்னைகளைத் தீர்ப்பதே இந்த சிகிச்சை" என்கிறார் ஷ்ருதிகீர்த்தி. "நம்மால் எந்தளவு பொறுத்துக்கொள்ள முடியும் என்பதற்கான எல்லையை வரையறுக்க வேண்டும்" என்கிறார் ஜோஷி. இதே கருத்தை வலியுறுத்தும் ஷ்ருதிகீர்த்தி, "நாம் எல்லைகளை நிர்ணயிப்பது இல்லை. முதலில் இது சுயநலமாக இருப்பது போன்று தோன்றும். ஆனால், அதன்மூலம் உறவு மேம்படும். ஏனெனில், ஒருவருக்கொருவர் உள்ள எதிர்பார்ப்புகள் கட்டுப்படுத்தப்படும்" என்கிறார் அவர். குடும்ப மனநல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு சமூகத்தில் அவ்வளவாக இல்லை என அனைத்து நிபுணர்களும் ஒருமனதாக ஏற்றுக் கொள்கின்றனர். நிகிதா சுலே கூறுகையில், "குடும்ப விவகாரங்களை ஏன் வெளியே சொல்ல வேண்டும் எனப் பலரும் கருதுகின்றனர். சிகிச்சைக்காக நீங்கள் சந்திப்பவர்கள் நிபுணர்கள், அவர்கள் உங்களை மதிப்பிடுவதில்லை. பிரச்னைகளைத் தீர்க்க உதவுகின்றனர்." "உதவியை நாடாமல் உங்களுக்குள்ளேயே பிரச்னைகளைப் போட்டுக் கொண்டால் வாதங்களும் சண்டைகளும் தொடர்ந்து, உங்கள் முழு வாழ்க்கையையும் ஆக்கிரமித்துவிடும்" என்றார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gxydpmzyvo
-
"நீரின்றி உலகில்லை நீயின்றி நானில்லை"
நீரின்றி அமையாது உலகு எனும் வள்ளுவன் வரியில் இருந்து பிறந்த கவிதை நன்று. மழையை நீலக்கண்ணீர் என்பதும் இம்மழைக்காலத்திற்கு பொருத்தமாக இருக்கிறது. பிரிவின் வலியும் உணர்த்தப்படுகிறது.
-
2024இல் இதுவரை 497 இந்திய மீனவர்கள் கைது!
24 NOV, 2024 | 10:40 AM இந்த ஆண்டில் எல்லை மீறி இலங்கை கடற்பரப்பினுள் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 497 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன், 66 மீன்பிடி படகுகளில் வந்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், இந்நாட்டு மீனவர்களின் கடற்றொழில் சார்ந்த பிரச்சினைகள், குறைபாடுகளை தீர்ப்பதற்கும் கடற்படை அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/199521
-
ரூ.50 லட்சம் கோடி இழப்பு: இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு 5 முக்கிய காரணங்கள் - இப்போது முதலீடு செய்யலாமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இதுவரை இல்லாத அளவில், இந்த ஆண்டு செப்டம்பரில் சென்செக்ஸ் 85,978 புள்ளிகள் என்ற உச்சத்தைத் தொட்டது. எழுதியவர், நாகேந்திரசாயி குந்தவரம் பதவி, வணிக ஆய்வாளர், பிபிசிக்காக அமெரிக்கா தும்மினால், இந்தியாவுக்கு ஜலதோஷம் பிடிக்கும் என்று ஒரு கூற்று உண்டு. அது பங்குச் சந்தை விஷயத்திற்கும் பொருந்தும். அமெரிக்க பங்குச் சந்தையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அது நேரடியாக நமது பங்குச் சந்தையைப் பாதிக்கும். அங்குள்ள முதலீட்டாளர்களின் திட்டங்கள் மாறினால், அதுவும் நமது பங்குச் சந்தைகளையே முதலில் பாதிக்கும். பத்து ஆண்டுகளாக இதுபோன்று நடப்பது குறைந்திருந்தாலும், கடந்த மூன்று மாதங்களாக பங்குச் சந்தைக் குறியீடுகள் கடுமையான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகின்றன. இதுவரை இல்லாத அளவில், இந்த ஆண்டு செப்டம்பரில் சென்செக்ஸ் 85,978 புள்ளிகள் என்ற உச்சத்தைத் தொட்டது. அனைத்து சில்லறை முதலீட்டாளர்களும் ஒரு லட்சத்தை எட்டப் போகிறோம் என்று கொண்டாடுவதற்குள், வேகமாக ஏறுவது போல் ஏறி, சென்செக்ஸ் புள்ளிகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. தனிநபர் நிதி: நிரந்தர வைப்புத் தொகையில் அதிக வட்டி வழங்கும் திட்டங்கள் என்ன? டாடாவும் தமிழ்நாடு அரசும் சேர்ந்து 'டைட்டன்' நிறுவனத்தை தொடங்கிய கதை - அந்த பெயர் வந்தது எப்படி? வங்கியில் சேமிப்பதை விட்டு பங்குச் சந்தை முதலீட்டிற்கு மாறும் இந்தியர்கள் - லாபமும் அபாயமும் அமெரிக்கா தொடங்கி உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளில் சரிவு - இந்தியா தாக்குப் பிடிக்குமா? இதுவரை இல்லாத உச்சத்திற்குச் சென்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 10 சதவீதம் வரை சரிந்தன. இதன் விளைவாக, மொத்த பங்கு மதிப்பை (market capitalization) வைத்துப் பார்க்கும்போது, முதலீட்டாளர்கள் சுமார் 50 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை இழந்துள்ளனர். இந்த இழப்பு இத்துடன் நின்றுவிடவில்லை. பங்குச் சந்தைகள் ஏன் இவ்வளவு வீழ்ச்சி அடைகின்றன? அப்படி என்ன மாற்றங்கள் நடந்தன? இதற்கான ஐந்து முக்கியக் காரணங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். கடந்த 4 ஆண்டுகளாக நமது சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன. 2020 நிஃப்டி, கொரோனாவின் போது 8,084 புள்ளிகளுக்கு குறைந்தது. அதிலிருந்து 4 ஆண்டுகளில் அதிகபட்சமாக 26,178 புள்ளிகள் வரை ஏறியது. அங்கிருந்து 10% சரிந்தாலும், இந்த ஆண்டுக்கான லாபம் 8 சதவீதம் வரை இருந்தது. ஓராண்டில் 19 சதவீதமும், இரண்டு ஆண்டுகளில் 28 சதவீதமும், 3 ஆண்டுகளில் 32 சதவீதமும், நான்கு ஆண்டுகளில் 81 சதவீதமும் லாபம் கிடைத்துள்ளது. ஆறே நாட்களில் கோட்டை கட்டி ஆங்கிலேயருக்கு எதிராக சைகை மொழியில் படை நடத்திய 'ஊமைத்துரை'16 நவம்பர் 2024 சீனாவில் முதலீடுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் புதிய சாதனை உச்சத்தை எட்டியுள்ளதால், இந்திய சந்தைகளின் மதிப்பு அதிகரித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை சீனாவின் சந்தைகள் தேக்க நிலையில் இருந்தன. கொரோனாவுக்கு பிறகு சீன சந்தைகள் மீளவில்லை. சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீட்டு எண்(Composite Index) 2007இல் 5,818 புள்ளிகளை எட்டியது. அதன்பிறகு, அந்தச் சாதனையை மீண்டும் எட்டவில்லை. கொரோனா காலத்தில் பாதிக்கு மேல் சரிந்த ஷாங்காய் குறியீடு, அன்றிலிருந்து இந்த செப்டம்பர் வரை கிட்டத்தட்ட அதே அளவில்தான் உள்ளது. இப்போதுதான் 3,300 புள்ளிகளை எட்டியுள்ளது. இந்த நேரத்தில் நமது சந்தைகளின் அளவு மூன்று மடங்கு அதிகரித்துள்ளன. சீன அரசின் வளர்ச்சி அதிகரித்திருந்த போதும் பொருளாதாரம் பலவீனமாகவே உள்ளது. ஆனால், வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் புதிய சாதனை உச்சத்தை எட்டியுள்ளதால், இந்திய சந்தைகளின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FPIs- Foreign Portfolio Investor ) நமது சந்தைகளில் இருந்து லாபம் ஈட்டி, தங்கள் முதலீடுகளை சீனாவின் பக்கம் திருப்பினர். நமது பங்குச் சந்தை குறியீடுகள் நஷ்டம் அடைவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். புல்டோசர் நடவடிக்கைக்கு புதிய வழிகாட்டுதல்கள் - ஏற்கனவே இடிக்கப்பட்ட கட்டடங்கள் பற்றிய வழக்குகள் என்ன ஆகும்?17 நவம்பர் 2024 டிரம்பின் வெற்றியைத் தொடர்ந்து வலுப்பெறும் டாலர் மதிப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்பின் வெற்றிக்குப் பிறகு அமெரிக்க சந்தைகள் பெரும் ஏற்றம் கண்டன. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, நமது சந்தைகளில் சில மாற்றங்கள் தெரிந்தன. டிரம்பின் வெற்றிக்குப் பிறகு அமெரிக்க சந்தைகள் பெரும் ஏற்றம் கண்டன. அங்கு டாலரின் மதிப்பு கூடியது. அதிகப்படியான வட்டி விகிதங்களைக் கட்டுப்படுத்த டிரம்ப் தயங்க மாட்டார். அதற்கான அறிகுறிகள் தென்படுவதால், சில நிதிகள் நமது சந்தைகளில் இருந்து திருப்பி விடப்பட்டுள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து 34வது அமர்வு வரை (நவம்பர் 14) நமது சந்தைகளில் நிகர விற்பனையாளர்களாக (Net Sellers) இருந்தனர். அதாவது தொடர்ந்து 34 நாட்களாக நமது சந்தைகளில் இருந்து தங்களது முதலீடுகளைத் திரும்பப் பெற்று வருகின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விற்பனை அக்டோபர் மாதத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.94,017 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச விற்பனை. நவம்பர் மாதத்தில் சந்தைகளில் இருந்து இதுவரை ரூ.22,420 கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டு முழுவதும் அவர்கள் எடுத்த தொகை ரூ.15,827 கோடி. இது, நிகர விற்பனையாளர்கள் ஒரே மாதிரியாகச் செயல்படுவதை குறிக்கிறது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் 2024 நேரலை: முன்னணி வகிப்பது யார்?23 நவம்பர் 2024 மெக்கா: ஆயுதக்குழு கைப்பற்றிய முஸ்லிம்களின் புனித தலத்தை சௌதி மீட்டது எப்படி?23 நவம்பர் 2024 கார்ப்பரேட் லாபத்தில் சரிவு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெரிய லாபத்தை எதிர்பார்க்க வேண்டாம் என்று முதலீட்டாளர்கள் கூறுகின்றனர் சந்தையின் உயர்வு மற்றும் வீழ்ச்சிக்கு, கார்ப்பரேட் முடிவுகள் மற்றொரு முக்கியக் காரணம். கார்ப்பரேட் முடிவுகள் சரியில்லை என்றால் எவ்வளவு பணம் வந்தாலும் பங்குகள் சரியும். இரண்டாம் காலாண்டு முடிவுகள் இப்பொது வெளிவந்துள்ளன. இந்த முடிவுகள் சந்தைப் பிரிவுகளை ஏமாற்றமடையச் செய்துள்ளன. இதனால், அதிகம் விற்பனையாகும் நுகர்வுப் பொருட்கள் (Fast moving consumer goods, FMCG), பிற நுகர்வுப் பொருட்கள், சில்லறை விற்பனை, ரியல் எஸ்டேட், மைக்ரோ ஃபைனான்ஸ், கட்டடப் பொருட்கள், பெயின்ட், சிமென்ட், நகர எரிவாயு விநியோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, கெமிக்கல்ஸ் போன்ற பிற துறைகள் வலுவான தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளன. `ஜே.எம் பைனான்சியல்', 275 நிறுவனங்களை ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. 44 சதவீத நிறுவனங்கள் லாப எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டன என அந்த ஆய்வறிக்கை தெரிவித்தது. வருவாய் வளர்ச்சி மற்றும் லாபம் கணிசமாகக் குறைந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. 66 சதவீத நிறுவனங்கள் தங்களது (Employee Pension Scheme) இபிஎஸ் தரத்தைக் குறைத்துள்ளன. இதனால் சந்தைகளும் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. செளதி அரேபியாவில் நடந்த ஃபேஷன் ஷோவுக்கு எதிர்ப்பு - இஸ்லாமிய அறிஞர்கள் சீற்றம் ஏன்?19 நவம்பர் 2024 பிரிட்டன் செயற்கைக்கோளை நகர்த்தியது யார்? விண்வெளியில் நடந்தது என்ன? விடை தெரியாத மர்மம்19 நவம்பர் 2024 பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் தற்போது உயர்ந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6.21 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. குறிப்பாக காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. அரசு மதிப்பிட்டதைவிட சந்தையில் பணவீக்கம் அதிகமாக உள்ளது. ரிசர்வ் வங்கியின் கணிப்புகளை மீறி பணவீக்கம் உயர்ந்துள்ளது. இதற்காக வட்டி விகிதத்தைக் குறைக்க ரிசர்வ் வங்கி தயாராக இல்லை. மேலும் 2020 மே மாதத்தில் 4 சதவீதமாக இருந்த ரெப்போ விகிதம் தற்போது 6.5 சதவீதமாக உள்ளது. அடுத்த ஆண்டுதான் வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தைகளைப் பொறுத்த வரை இதுவொரு மோசமான செய்தி. இவை தவிர, பதற்றமான அரசியல் சூழலும், (யுக்ரேன் - ரஷ்யா, இரான் - இஸ்ரேல்) கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களும் சந்தைகளின் வீழ்ச்சிக்கு மற்றொரு காரணம். பிரிட்டனில் ஏலம் விடப்பட இருந்த இந்தியரின் மண்டை ஓடு - மீட்கப் போராடும் பழங்குடியினர்21 நவம்பர் 2024 இந்தியா-பாகிஸ்தான் இடையே 'ட்ரோன் ரேஸ்': யாருடைய கை மேலோங்கி இருக்கிறது?22 நவம்பர் 2024 உண்மையாகவே ரூ.50 லட்சம் கோடி சொத்து கரைந்துவிட்டதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சந்தைகள் வாழ்நாள் உச்சத்திலிருந்து 10 சதவீதம் வரை சரிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தையில் (BSE) பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. அந்த மதிப்பு, சந்தை மூலதனமாகக் கருதப்படுகிறது. பொதுவாக சந்தை வீழ்ச்சியடையும் போது பங்கு விலைகள் குறையும். அப்போது அவற்றின் சந்தை மதிப்பும் குறையும். ஆனால் முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோவில் இழப்புகள் ஏற்படும்போது, அவை அனுமான இழப்பாகக் கருதப்பட வேண்டும். அது போலவே செப்டம்பர் 27 முதல், முதலீட்டாளர்கள் சுமார் ரூ.50 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்துள்ளனர். கடந்த 27 செப்டம்பர் 2024 நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சந்தை மூலதனம் ரூ.478 லட்சம் கோடி. தற்போது ரூ.429 லட்சம் கோடியாக உள்ளது. அதாவது சந்தை மூலதனம் சுமார் ரூ.50 லட்சம் கோடி. அதில்தான் இழப்பும் ஏற்பட்டுள்ளது. டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா - சீனா உறவு எப்படி இருக்கும்? ஓர் அலசல்20 நவம்பர் 2024 அமெரிக்க ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவுக்குள் தாக்குதல் - அணுசக்தி கொள்கையில் முக்கிய மாற்றம் செய்த புதின்19 நவம்பர் 2024 சந்தை நிலவரம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. 6-7 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதத்தை எட்டுவதில் இந்தியா வெற்றி பெற்று வருகிறது. அதனால்தான் சந்தைக் குறியீடுகளும் அதே அளவில் ஜிடிபி வளர்ச்சியைப் பதிவு செய்தன. இதுதவிர, சில்லறை முதலீட்டாளர்களால், சந்தையில் அதிகளவு நிதி பெருகியதால் சந்தைக் குறியீடுகளும் பெருமளவில் அதிகரித்தன. உலகின் வளர்ச்சி விகிதம் இரண்டு அல்லது மூன்று சதவீதமாக மட்டுமே இருக்கும் நேரத்தில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் அதைவிட இரண்டு மடங்காக இருக்கிறது. கொரோனாவுக்கு பிறகு மக்களின் பணப் பரிமாற்ற முறைகள் வியத்தகு முறையில் மாறியுள்ளன. வீடு, கார், உணவு, உடை, தங்கம் ஆகியவற்றின் விற்பனையிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் தெரிகின்றன. தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக வளர்ச்சியைப் பதிவு செய்த பொருளாதாரம், தற்போது மந்தமடைந்துள்ளது. ஆனால் கச்சா எண்ணெய் விலை 70 டாலராக உள்ளது (ரஷ்யாவிடம் இருந்து இந்தியா குறைவான கச்சா எண்ணெய் பெறுகிறது), வயது முதிர்ந்தோர் மக்கள் தொகை, அதிகரிக்கும் அவர்களின் பரிவர்த்தனை செலவு, சேமிப்பில் இருந்து செலவு செய்தலை நோக்கி நகரும் மக்களின் எண்ணிக்கை, தனிநபர் நுகர்வு அதிகரிப்பு, அதிகரிக்கும் முதலீட்டாளர் முதிர்வு கணக்கு எண்ணிக்கை, பங்குச் சந்தையில் அதிகளவு வரவு நிதிகள், மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் குறித்த மாறும் மக்களின் மனநிலை போன்று பல காரணிகள் இந்தியாவிற்கு உள்ளன. இலங்கை: தமிழர் பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி - தமிழ் தேசிய கட்சிகளின் அரசியல் எதிர்காலம் என்ன?20 நவம்பர் 2024 ஸ்காட்லாந்து யார்டு போலீசையே திகைக்கச் செய்த மிகப்பெரிய வங்கி கொள்ளை - 53 ஆண்டுகளாகியும் விலகாத மர்மம்21 நவம்பர் 2024 இப்போது முதலீடு செய்யலாமா? நிதி ஆய்வாளர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இப்போதுள்ள சூழ்நிலையில் வருடத்திற்கு 10-12 சதவீத லாபம் கிடைத்தாலும் திருப்தியாக இருக்க வேண்டும். "சில்லறை முதலீட்டாளர்கள், மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய லாபத்தைப் போன்று அதே அளவிலான லாபத்தை எதிர்பார்க்கக்கூடாது. இப்போது உள்ள சூழ்நிலையில் வருடத்திற்கு 10-12 சதவிகித லாபம் கிடைத்தாலும் திருப்தியாக இருக்க வேண்டும்," என்று கூறுகிறார் மூத்த சந்தை ஆய்வாளர் பாலசுப்ரமணியம் பிரபாலா. ஜனவரி 2025இல் இருந்துதான், சந்தை நமக்கு சாதகமாக மாற முடியும் எனக் கூறும் அவர், ஜனவரியில் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அவரது முடிவுகள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார். மேலும், "சில்லறை முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். தரமான பங்குகளுக்கு மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். தரகு நிறுவனங்கள் வழங்கும் மார்ஜின் டிரேடிங் வசதியை (Margin Trading Facility - MTF) பயன்படுத்தும் நடைமுறையைக் குறைக்க வேண்டும். நம்மிடம் 10 ரூபாய் இருந்தால் 50 ரூபாய் வரை அதிகரிக்க, அவர்கள் வாய்ப்பு தருகிறார்கள். ஆனால், இதனால் சிறு இழப்பு ஏற்பட்டாலும், அதை மீட்கப் பல மாதங்கள் ஆகும்," என்றார். அதோடு, வட்டி அதிகமாகச் செலுத்த வேண்டும் எனக் கூறும் பிரபாலா, அதனால்தான் நீங்கள் முதலீடு செய்து உங்கள் நிதியில் மட்டுமே வர்த்தகம் செய்ய வேண்டும் என்றும் மார்ஜின் டிரேடிங் வசதியை எடுக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார். அதேநேரம், இங்குள்ள சந்தை முதலீட்டாளர்களுக்கு இது எளிதானது இல்லை என்றும் கூறுகிறார் என்று மூத்த சந்தை ஆய்வாளர் பாலசுப்ரமணியம் பிரபாலா. பட மூலாதாரம்,GETTY IMAGES நிஃப்டி இங்கிருந்து பெரிதாக வீழ்ச்சியடையாமல் இருக்கலாம். ஆனால் பங்குகள் சரிய வாய்ப்புள்ளது. பங்குகள் சார்ந்த திருத்தம் வரவும் வாய்ப்புள்ளது. இங்கிருந்து படிப்படியாக சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கலாம். சேவை, சுகாதாரம் மற்றும் கட்டுமானத் துறைகள் சிறப்பாகச் செயல்பட்டன. அந்தத் துறைகளின் மீது கவனம் செலுத்துங்கள். அது ஓரளவு பாதுகாப்பானது. தரமான பங்குகள் இருந்தால் பதற்றம் தேவையில்லை. சரிவில் இருந்து சந்தை மீண்டு வரும்போது, அந்தப் பங்குகள்தான் முதலில் லாபம் பெறும். அதைக் கருத்தில் கொண்டு கவனமாகச் செயல்பட வேண்டும். ஐபிஓ-க்களில் (Initial Public Offering) இருந்து விலகியிருப்பது நல்லது. இங்கு ஐபிஓ-க்களில் பெரியளவு லாபம் இருக்காது. சமீபத்திய ஐபிஓ-க்களில் பங்குகள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருந்தால், அவற்றில் லாபத்தைப் பதிவு செய்வது நல்லது. மேலும், எஸ்ஐபி (SIP-Systematic Investment Plan) முறையில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்,'' என சந்தை ஆய்வாளர் ஏ.சேசு விளக்கினார். "பொதுவாகப் பல நாட்கள் வீழ்ச்சிக்குப் பிறகு பங்குகள் உயர வேண்டும். இப்போது அப்படி நடப்பதாகத் தெரியவில்லை. மேலும் பங்குகள் வீழ்ச்சியடையும்போது சராசரி லாபத்திற்காகக் காத்திருக்க வேண்டாம். மோசமான இரண்டாம் காலாண்டு முடிவுகள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. உங்கள் போர்ட்ஃபோலியோவில் நல்ல முடிவுகளைக் கொண்ட நிறுவனங்களின் பங்குகளை அடையாளம் காணுங்கள். பிறகு அவற்றில் மீண்டும் முதலீடு செய்யலாம். நீங்கள் ரூ.100 முதலீடு செய்ய விரும்பினால், இப்போது அதில் ரூ.20 மட்டும் முதலீடு செய்யுங்கள்” என்று படிப்படியாகப் பங்குகளை வாங்க, சந்தை ஆய்வாளர் சி.சேகர் பரிந்துரைக்கிறார். (குறிப்பு: இந்தத் தகவல்கள் அனைத்தும் தகவலுக்காக மட்டுமே. நிதி சார்ந்த எந்த முடிவுகளையும் நிதி நிபுணரிடம் கலந்தாலோசித்த பின்னரே எடுக்க வேண்டும்.) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd9nv97q9veo
-
பத்து அம்சங்களை முன்வைத்து ஜனாதிபதி அநுரவுக்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கடிதம்
ஆர்.ராம் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதன் ஊடாக இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வினைக் காணுதல் உட்பட பத்தம்சங்களை முன்வைத்து சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான ஜயசூரிய கடிதமொன்றை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மக்கள் வழங்கிய ஆணையை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்பதோடு நாட்டில் தேசிய ஒற்றுமை, சாந்தி, சமாதானத்தினை நிலைபெறச்செய்து சுபீட்சமான நாட்டில் அனைவரும் அச்சமின்றி இலங்கையர்களாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அதனடிப்படையில் பின்வரும் விடயங்களில் அதிகமான கவனத்தினைக் கொள்கின்றேன். குறித்த விடயங்கள் வருமாறு, 1. ஜனாதிபதி மற்றும் பிரதமர் அரசாங்கத்தின் முதற் செயல்பாடாக நாட்டின் ஜனரஞ்சக கட்டமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் சட்டத்தை மதிக்கும் திறமையான பொதுநிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். விசேடமாக இலங்கையில் 14 பேருக்கு ஒரு அரச ஊழியர் என்ற விகிதம் மாற்றயமைக்கப்பட வேண்டும். 2. நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் ஆகியவற்றை தாமமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும். 3. புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். புதிய அரசியலமைப்பு தொடர்பில் எட்டாவது ஆவது பாராளுமன்றம் சிறப்பான பணியை செய்துள்ளது. லால் விஜேநாயக்க மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவராக இருந்ததோடு மட்டுமன்றி அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை ஒருங்கிணைத்தவராகவும் உள்ளார். அந்த வகையில் தற்போதைய தருணத்தில் அந்தச் செயற்பாட்டில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே முடிக்க வேணடியுள்ளதால் அந்த விடயத்திலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். 4. தேசிய இனப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். தேசியப் பிரச்சினைக்கு சமஷ்டித் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வரலாற்றில் முதல் தடவையாக வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே இந்த சிறந்த சந்தர்ப்பத்தை நழுவவிடாது எதிர்கால சந்ததியினரை கவனம் செலுத்தி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து கட்சி தலைவர்களையும் கேட்டுக்கொள்கின்றோம். 5. இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராட வேண்டும்; என்பதோடு அதற்குத் தேவையான சட்டங்களை இயற்றுதல் முக்கியமானதாகின்றது. 6. அடுத்துவரும் காலத்தில் இரண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் தேர்தல் முறைமைகள் மற்றும் விதிமுறைகளை திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட முன்னாள் நீதியரசர் பிரியசாத் டெப் கமிஷன் தலைமையிலான தேர்தர்தல் சட்ட திருத்தத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை வெளிப்படுத்தி அதனை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானது. 7. பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள துறைசார் மேற்பார்வைக் குழுக்களை வலுவாகச் செயற்படுத்தப்படும். 8. அனைத்து சமூகத்தால் வெறுப்படைந்த கட்சி தாவுகின்ற செயற்பாடுகளைத் தடுப்பதற்குத் தேவையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். 9. நிறைவேற்று ஜனாதிபதி பதவியை இரத்து செய்தல். இந்த விடயத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசார காலத்தின் போது ஜனாதிபதியாகிய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இறுதிக்கட்டமாக அமையும் என்று பல சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கொள்கை அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி தற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். நிறைவேற்று அதிகாரத்தை திடீரென ஒழிக்க முடியாவிட்டாலும் அரசாங்கத்தின் இருப்பை ஒருகுறித்த திகதியை சாதாரண பொதுமக்களுக்கு வாக்குறுதியை வழங்கினால் அது அரசாங்கத்தின் கௌரவத்திற்கும் ஜனாதிபதியின் நற்பெயருக்கும் மேலும் வழிவகுக்கும். 10. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம். சம்பந்தமான கோவை 25 ஆண்டுகளுக்குப் பிறகு 8ஆவது பாராளுமன்றத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீட்டு முறைமை தயாரிக்க முடிந்தது. பிமல் ரத்நாயக்க மிகவும் பெறுமதியான பணியை செய்தார். அதன் அடிப்படையில் ஒழுக்கக் கோவையின் சிலவிதிகளை உள்வாங்க முடியும். இல்லையேல் அவற்றை முழுமையாக அமுலாக்க முடியும். மேலும், 2015 ஆம் ஆண்டு வரை நிலவிய சர்வாதிகார ஆட்சியை மாற்றுவதற்கு வணக்கத்திற்குரிய மாதுலுவே சோபித தேரரின் தலைமையில் சமூகத்திற்கான தேசிய இயக்கம் பல்வேறு நடவடிக்கைளை முன்னெடுத்திருந்தது. அந்த வகையில் தற்போதும் நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டையும், அனைவரும் இலங்கையர்களாகவும் வாழ்வதற்காக நாம் எந்தவிதமான அரசியல் இணைந்து செயற்பட்டதை நாம் நினைவுகூருகின்றோம். எமக்கு எந்தவொரு அசரியல் நோக்கங்களும் இல்லை என்பதோடு இந்தப் பணியை முன்னெடுப்பது மிகவும் அசியமானது என்றும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/199518
-
அதானி குழுமத்திடம் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்படும் தமிழக அதிகாரி யார்? செந்தில் பாலாஜி கூறுவது என்ன?
பட மூலாதாரம்,SENTHIL BALAJI /FACEBOOK எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி செய்தியாளர், சென்னை சூரிய சக்தி மின்சாரத்தை இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விற்பதற்காக 250 மில்லியன் டாலர் அளவுக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாகவும் அதை மறைக்கத் திட்டமிட்டதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அரசியல் கட்சிகள் கூறுகின்றன. அதானி குழுமத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளாக வர்த்தக ரீதியாக எந்த உறவும் இல்லை என தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகிறார். தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்ட சூரிய மின் சக்தி ஒப்பந்தத்துக்கும் அதானி குழுமத்துக்கும் என்ன தொடர்பு? இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் பெயர் அடிபடுவது ஏன்? அதானி மோசடி வழக்கில் எதிர்கொள்ளப் போகும் சவால்கள் - நிபுணர்கள் விளக்கம் அதானி ரூ.1750 கோடி லஞ்சம் கொடுத்தாரா? அமெரிக்கா குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது ஏன்? - முழு விவரம் அதானி மீது குற்றச்சாட்டு - வெள்ளை மாளிகை கூறியது என்ன? அதானி தொடர்பான சர்ச்சை: தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் கூறுவது என்ன? அதானி குழுமத்தின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு என்ன? கௌதம் அதானியின் கிரீன் எனர்ஜி நிறுவனம் 8 ஜிகா வாட் சூரிய சக்தி மின்சாரத்தை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசின் சோலார் பவர் கார்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்திடம் (SECI) பெற்றுள்ளது. சூரிய சக்தி மின்சாரத்தை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பதற்காக 250 மில்லியன் டாலர் அளவுக்கு அதானி குழுமம் லஞ்சம் லஞ்சம் கொடுத்ததாகவும் அதை மறைக்கத் திட்டமிட்டதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்திற்கான அரசு வழக்கறிஞர் ( US Attorney) அலுவலகம் பதிவு செய்துள்ள குற்றச்சாட்டின்படி, 2021-2022 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவில் பல்வேறு மாநில மின் அதிகாரிகளை சந்தித்து மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையொப்பமிட லஞ்சம் கொடுப்பதற்கான பேரத்தில் அதானி ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிஷா, சத்தீஸ்கர், மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின், மின்வாரியங்கள், மத்திய அரசின் சோலார் பவர் கார்பரேஷனுடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை அதன் ஊடக தொடர்பாளர் மறுத்துள்ளார். "லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதித்துறை கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை" எனத் தெரிவித்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்படும் வரையில் தாங்கள் நிரபராதிகளாகவே கருதப்படுவதாக கூறியுள்ள அதானி குழும ஊடக தொடர்பாளர், வெளிப்படைத்தன்மை, தரமான நிர்வாகம், சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்படுவது ஆகியவற்றில் தாங்கள் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அதானி குழுமம் மட்டுமின்றி, இந்த ஊழலில் அஸூர் பவர் என்ற நிறுவனத்தின் பெயரும் குற்றச்சாட்டில் இணைக்கப்பட்டு அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உட்பட 8 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இந்த விவகாரம் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பேசுபொருளாக மாறியுள்ளது. "அதானி நிறுவனத்துக்கு துணை நின்ற அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் அனைவரையும் கைது செய்து சி.பி.ஐ விசாரணைக்கு இந்த வழக்கை உட்படுத்த வேண்டும்" என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். "கூடுதல் கட்டணத்தில் அதானி குழுமத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ள கே.பாலகிருஷ்ணன், "அதானி குழுமத்தால் லஞ்சம் வழங்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடும் இருப்பதால் முழு விசாரணைக்கு உத்தரவிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். என்ன நடந்தது? 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டில் மத்திய அரசின் சோலார் பவர் கார்பரேஷன் ஆஃப் இந்தியாவிடம் (SECI) இருந்து சூரிய மின் சக்தி ஒப்பந்தத்தை அதானி குழுமம் பெற்றுள்ளது. இதில், தமிழ்நாடு மின்சார வாரியத்தைக் கொள்முதல் செய்ய வைப்பதற்காக அதானி பேசியதாகவும் அதற்காக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது தொடர்பாக விவாதித்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என்ற விவரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2019 - 2020 ஆம் ஆண்டில் மத்திய அரசின் SECI - இருந்து சூரிய மின் சக்திக்கான ஒப்பந்தத்தை அதானி குழுமம் பெற்றுள்ளது யார் அந்த அரசு அதிகாரி? "ஆந்திராவில் 2200 மெகாவாட் அளவுக்கு சூரிய சக்தி மின்சாரத்தைக் கொள்முதல் செய்துள்ளனர். ஆனால், தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஒடிஷா ஆகிய மாநிலங்கள் 650 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் பெற ஒப்பந்தம் செய்துள்ளதாக அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது" என்கிறார், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன். "அதானியிடம் இருந்து தமிழ்நாடு அரசு மின்சாரம் வாங்கியதா... இல்லையா என்பது தற்போதைய பிரச்னை இல்லை" எனக் கூறும் ஜெயராம், "மத்திய அரசின் சோலார் பவர் கார்பரேஷனுக்கு அதானி மின்சாரத்தை விநியோகம் செய்கிறார். அதை வாங்க வைப்பதற்காக மாநில அரசுகளின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்கான பேச்சுவார்த்தையில் அதானியே ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது" என்கிறார் அவர். "2020-2021 ஆம் ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சியில் இருந்தது. தற்போது தி.மு.க ஆட்சியில் இருக்கிறது. இங்குள்ள எந்த அரசு அலுவலரிடம் பேரம் பேசப்பட்டது என்பது விசாரிக்கப்பட வேண்டும்" என ஜெயராம் வெங்கடேசன் கூறுகிறார். பட மூலாதாரம்,JEYARAM VENKATESAN / FACEBOOK படக்குறிப்பு, இங்குள்ள எந்த அரசு அலுவலரிடம் பேரம் பேசப்பட்டது என்பது விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார் ஜெயராம் வெங்கடேசன் ஒப்பந்தம் போடப்பட்டது எப்போது? இதே கருத்தை வலியுறுத்தி பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'வழக்கு ஆவணத்தின் 50-ஆம் பத்தியில், 'ஜுலை 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலான காலத்தில் இந்திய சூரிய ஒளி மின் உற்பத்திக் கழகத்திடமிருந்து (SECI)) சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் (Power Sale Agreement) மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆந்திர மின்வாரிய அதிகாரிக்கு 1750 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற விவரம் இடம் பெறவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார். 2021 செப்டம்பர் 16-ஆம் தேதி அதானி குழுமத்தால் உற்பத்தி செய்யப்படும் 1000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை சோலார் பவர் கார்பரேஷன் மூலமாக பெறுவதற்கான ஒப்பந்தத்தில் தமிழ்நாடு கையெழுத்திட்டுள்ளதாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். யானைகளுக்கு மதம் பிடிப்பது ஏன்? பெண் யானைகளுக்கு மதம் பிடிக்காதா?22 நவம்பர் 2024 இந்தியா-பாகிஸ்தான் இடையே 'ட்ரோன் ரேஸ்': யாருடைய கை மேலோங்கி இருக்கிறது?22 நவம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இருப்பவர்கள் உட்பட பல தலைவர்களும் இதில் விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் செந்தில் பாலாஜி சொன்னது என்ன? இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். "அதானி குழுமத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு வணிகரீதியில் எந்த உறவும் இல்லை" என செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி, அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டில், பல மாநிலங்களைக் குறிப்பிட்டுக் கூறியதில் தமிழ்நாட்டின் பெயரையும் ஒரு வரியில் சேர்த்துவிட்டதாகத் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "தமிழ்நாட்டின் மின் தேவையைக் கணக்கில் கொண்டு மத்திய மின்வாரியத்துடன் 1500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்கிறார். இந்த ஒப்பந்தம் மத்திய அரசு நிறுவனமான சோலார் பவர் கார்பரேஷனுடன் மட்டுமே கையெழுத்தாகியுள்ளதாக, அவர் கூறினார். சூரிய மின்சக்தி கொள்முதல் குறித்துப் பேசிய செந்தில் பாலாஜி, "யாருக்கெல்லாம் சூரிய மின்சக்தி தேவைப்படுகிறதோ, அவர்கள் சோலார் எனர்ஜி கார்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் பேசி விலையை இறுதி செய்து ஒப்பந்தம் மேற்கொள்கின்றனர்" என்றார். அந்த வரிசையில், 1500 மெகாவாட் சூரிய சக்தியைப் பெறுவதற்கு 25 ஆண்டு காலத்துக்கு கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் பெற்றுள்ளதாக அவர் கூறினார். பட மூலாதாரம்,JAISANKAR / FACEBOOK படக்குறிப்பு, தமிழ்நாட்டில் மின்சார கொள்முதல் என்பது 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகரித்ததாக கூறுகிறார், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் ஜெய்சங்கர் விரிவான விசாரணை நடத்த வலியுறுத்தல் செந்தில்பாலாஜி கருத்தைச் சுட்டிக் காட்டி பிபிசி தமிழிடம் பேசிய அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன், "அ.தி.மு.க ஆட்சியில் சூரிய ஒளி மின்சக்தியை ஒரு யூனிட் 7.01 ரூபாய்க்கு வாங்கப்பட்டது. அன்றைய சந்தை மதிப்புக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டதாக அ.தி.மு.க அரசு கூறியது. தற்போதைய சந்தை விலை என்பது 2 ரூபாய் என்கின்றனர். சந்தை நிலவரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டதா என்பது ஒப்பந்த விவரங்களை ஆராய்ந்தால் தான் தெரியும்" என்கிறார் ஜெயராம் வெங்கடேசன். தமிழ்நாட்டில் மின்சார கொள்முதல் என்பது 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகரித்ததாக கூறுகிறார், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் ஜெய்சங்கர். "தற்போது 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் இயங்குகிறது. இதற்கு, தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதுதான் காரணமா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqj0xvrr1x8o
-
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த - கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்தும் முன்மொழிவு
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான நகர்வுகளை மேற்கொள்ளுங்கள் - கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்தும் முன்மொழிவு அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு 23 NOV, 2024 | 09:10 PM (நா.தனுஜா) இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான நகர்வுகளை கனேடிய அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தும் முன்மொழிவு அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஷோன் சென்னால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தைச்சேர்ந்த புலம்பெயர் தமிழரான நிருஜன் ஞானகுணாலனால் தயாரிக்கப்பட்டு, அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் பரந்துபட்டு வாழும் புலம்பெயர் தமிழர்கள் 636 பேர் கையெழுத்திட்டிருக்கும் ஈ-5058 இலக்க முன்மொழிவையே பாராளுமன்ற உறுப்பினர் ஷான் சென், கடந்த வாரம் (20) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இலங்கையில் தமது பாரம்பரிய தாயகமான தமிழீழத்தில் 75 வருடங்களுக்கும் மேலாக நீடித்துவரும் இனவழிப்புக்கு முகங்கொடுத்திருக்கும் ஈழத்தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் 'புலம்பெயர்ந்தோரின் வீடாக' கனடா திகழ்வதாகவும், இலங்கை அரசினால் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை மீறப்பட்டிருப்பதாகவும் அம்முன்மொழிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி '1956 இல் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரத்திலிருந்து 2009 மேமாதம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட 'இனவழிப்பு' யுத்தம் வரை தமிழர்களுக்கு எதிராக அரச அனுசரணையுடன்கூடிய இனப்படுகொலை பல்வேறு வழிகளில் முன்னெடுக்கப்பட்டுவந்திருக்கிறது' எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை தொடர்பில் அதற்குப் பொறுப்புக்கூறவேண்டிய இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான நகர்வுகளை கனேடிய அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்றும், சுதந்திர தமிழீழ உருவாக்கம் தொடர்பில் இலங்கைவாழ் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் சர்வதேச சமூகத்தின் தலையீட்டுடனான பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்றும் அந்த முன்மொழிவில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/199508
-
ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்குங்கள் - எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு
ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்குங்கள் - தேர்தல் பிரசார வாக்குறுதியை நடைமுறைப்படுத்துமாறு எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வலியுறுத்தல் 23 NOV, 2024 | 09:09 PM (நா.தனுஜா) பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாக தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து செயற்படவேண்டும் என எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஊடக சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், தகவல் சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் பிரான்ஸின் பாரிஸ் நகரைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பினால் (ரிப்போட்டர்ஸ் வித்தௌட் போர்டர்ஸ்), ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் முன்னுரிமை அளிக்கவேண்டும் என வலியுறுத்தி வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது: ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியானது கடந்த 14 ஆம் திகதி நடைபெற்றுமுடிந்த பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றியீட்டிருக்கிறது. ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் உரியவாறு தண்டனை வழங்கப்படாததும், ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்தும் வகையிலான ஒடுக்குமுறைச்சட்டங்களைக் கொண்டதுமான நாட்டில் முறையான நிலைமாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளவேண்டிய நிலையில் அரசாங்கம் இருக்கிறது. அதற்கமைய இப்புதிய அரசாங்கமானது அவசியமான கட்டமைப்பு மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதுடன், தணிக்கைக்கு வழிகோலும் ஒடுக்குமுறைச் சட்டங்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்தோடு குறிப்பாக தமிழ், முஸ்லிம் சிறுபான்மையின சமூகங்களைச்சேர்ந்த ஊடகவியலாளர்கள் உள்ளடங்கலாக சகல ஊடகவியலாளர்களுக்குமான நியாயமான பாதுகாப்பு செயன்முறையை அறிமுகப்படுத்தவேண்டும். சுதந்திரமானதும், பாதுகாப்பானதுமான ஊடக இடைவெளியை உறுதிப்படுத்துவதாக தேர்தல் பிரசாரத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியை நடைமுறைப்படுத்துவதற்கு தற்போதைய புதிய பாராளுமன்றத்தில் முன்னுரிமை அளிக்கவேண்டும். இலங்கையின் அண்மையகால வரலாற்றில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதுடன், அவை ஊடகங்கள் கொண்டிருக்கும் மிகமுக்கிய வகிபாகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் சார்ந்து தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு உடனடியாக முடிவுக்குக்கொண்டுவரப்படவேண்டும். ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு அவசியமான ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு இந்த வரலாற்று முக்கியத்தும் மிக்க வாய்ப்பை புதிய அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அதேவேளை ஊடகங்களின் சுதந்திரமான இயங்குகைக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய சர்ச்சைக்குரிய சட்டங்கள் மற்றும் சட்டமூலங்கள் நீக்கப்படுவதுடன், பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டம் என்பன ஊடகவியலாளர்களுக்கு எதிராகத் தவறான முறையில் பிரயோகிக்கப்படுவதை உடனடியாக முடிவுக்குக்கொண்டுவரவேண்டும் என அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/199510
-
ராஜநாகம் தீண்டி உயிர் பிழைத்தவர் செய்த ஆய்வில் உடைபட்ட 180 ஆண்டு ரகசியம்
பட மூலாதாரம்,P. GOWRI SHANKAR படக்குறிப்பு, ராஜநாகம் குறித்த புதிய கண்டுபிடிப்பை ஊர்வன ஆய்வாளர் முனைவர் கௌரி ஷங்கர் மற்றும் அவரது குழுவினர் வெளிக்கொண்டு வந்துள்ளனர். எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் ராஜநாகம்... பெயருக்கு ஏற்ப பிரமிக்க வைக்கும் நீளமான உருவமும், மூன்று முதல் நான்கு அடி உயரம் வரை படமெடுத்து நிற்கும் அதன் தோற்றமும் பார்ப்பவரை கதிகலங்கச் செய்துவிடும். அடிப்படையில் மனிதர்களிடம் இருந்து விலகியே இருக்கும் என்றாலும், ஆய்வுகளின் போது அல்லது மீட்பு முயற்சியில் அதைக் கையாளும் போது அரிதான சூழ்நிலைகளில் ராஜநாகம் மனிதர்களைத் தாக்கும் அபாயமும் இருக்கிறது. அத்தகைய ஒரு சூழ்நிலையின் போது, ஊர்வன ஆராய்ச்சியாளர் முனைவர் கௌரி ஷங்கரை 2005இல் ராஜநாகம் கடித்தது. ஒரு யானையையே வீழ்த்தக்கூடிய நஞ்சுள்ள இந்தப் பாம்பின் கடிக்கு ஆளாகி, மரணத்தின் வாசல் வரை சென்று திரும்பிய அவர், அதன் பிறகு அதுகுறித்த ஆய்வில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். அதன் விளைவாகத் தற்போது, கடந்த 180 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவராமல் இருந்த ஓர் அறிவியல் ரகசியத்தை அவரது ஆய்வுக்குழு சமீபத்தில் வெளிக்கொண்டு வந்துள்ளது. முனைவர் கௌரி ஷங்கர் மற்றும் அவரது ஆய்வுக் குழுவினரின் இந்தப் புதிய கண்டுபிடிப்பு வெளிக்கொண்டு வந்துள்ள உண்மை என்ன? ராஜநாகம் பற்றிய நமது புரிதலை இது எப்படி மாற்றுகிறது? உயிர் பிழைக்க நடந்த போராட்டம் இந்தியாவில் மனிதர்கள் மத்தியில், பாம்புக்கடி மரணங்கள் அதிகம் ஏற்படக் காரணமாக இருப்பவை நான்கு வகைப் பாம்புகள் மட்டுமே. நாகம், கட்டு விரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் ஆகிய இந்த நான்கு வகைப் பாம்புகளால்தான் அதிக உயிரிழப்புகள் இந்தியாவில் நிகழ்வதாகக் கூறுகிறார் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நஞ்சுமுறி மருந்து குறித்த ஆய்வுத் திட்ட விஞ்ஞானியும் யுனிவெர்சல் பாம்புக்கடி கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனருமான முனைவர் என்.எஸ்.மனோஜ். “இந்தியாவில் இந்த நான்கு பாம்புகளின் நஞ்சுக்கு மட்டுமே மருந்து உள்ளது. அதுவும், அனைத்துக்குமே கூட்டுமுறையில் (Polyvalent) பயன்படுத்தக் கூடிய நஞ்சுமுறி மருந்தே உள்ளது,” என்று கூறுகிறார் மனோஜ். இதுதவிர, இந்தியாவில் குறிப்பாக ராஜநாகக் கடிக்கென தனியாக நஞ்சுமுறி மருந்து இல்லை. அதற்கான மருந்து தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்படுகிறது. இருப்பினும், முனைவர் கௌரி ஷங்கர் கடிபட்ட போது அவரது உடல் தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட நஞ்சுமுறி மருந்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல், இந்தியாவில் கிடைக்கும் கூட்டுமுறை நஞ்சுமுறி மருந்தும் ஒவ்வாமையை ஏற்படுத்தியது. பட மூலாதாரம்,GETTY IMAGES நல்வாய்ப்பாக, “என்னைக் கடித்த பாம்பு முழு வீரியத்துடன் கடிக்கவில்லை. அதனால், நஞ்சின் அளவு குறைவாகவே என் உடலில் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ராஜநாகத்தின் நஞ்சால் ஏற்படக்கூடிய நரம்பியல் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றாலும், அதன் விளைவுகள் மிகத் தீவிரமாகவே இருந்தன.” என்று கௌரி ஷங்கர் கூறினார். நஞ்சுமுறி மருந்துகள் சரிவர வேலை செய்யாத நிலையில், பாம்புக் கடியால் ஏற்பட்ட அறிகுறிகளின் அடிப்படையில் சிகிச்சைகள் தோராயமாக வழங்கப்பட்டதாக கௌரி ஷங்கர் கூறுகிறார். அதுகுறித்துப் பேசிய அவர், கோவிட் பேரிடரின் ஆரம்பக் காலத்தில் உரிய மருந்து இல்லாத காரணத்தால், அறிகுறிகளின் அடிப்படையில் எப்படி சிகிச்சை அளிக்கப்பட்டதோ, அதேபோல ராஜநாகக் கடியால் தனக்கு ஏற்பட்ட அறிகுறிகளைப் பொறுத்தே சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். பல இன்னல்களை எதிர்கொண்டு இறுதியாக உயிர் பிழைத்தார் கௌரி ஷங்கர். மற்ற நான்கு வகை நச்சுப் பாம்புகளுடன் ஒப்பிடுகையில், ராஜநாகத்தின் கடிக்கு மக்கள் ஆளாவதற்கான ஆபத்து குறைவுதான் என்றாலும், அதன்மீது மக்கள் மத்தியில் இருக்கும் அச்சத்தைப் போக்க அதன் குறிப்பிட்ட நஞ்சுக்கான நஞ்சுமுறி மருந்து (monovalent) அவசியம் என்று வலியுறுத்துகிறார். 180 ஆண்டுகளாக வெளிவராமல் இருந்த ‘ரகசியம்’ பட மூலாதாரம்,P. GOWRI SHANKAR முதன்முதலாக 1836ஆம் ஆண்டு டென்மார்க்கை சேர்ந்த ஆராய்ச்சியாளர் தியோடோர் எட்வர்ட் கேன்டோர், ராஜநாகத்தை விவரித்து முதன் முறையாக அறிவியல் ரீதியாகப் பதிவு செய்தார். இதர பல வகைப் பாம்புகளில் ஆய்வுகள் நடந்த அளவுக்கு ஆழமாக ராஜநாகத்தில் ஆய்வுகள் நடக்காமல் இருந்ததாகக் கூறும் முனைவர் எஸ்.ஆர் கணேஷ், கடந்த 15 ஆண்டுகளில்தான் அத்தகைய ஆய்வுகள் நடக்கத் தொடங்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். முனைவர் கணேஷ், கௌரி ஷங்கருடன் இணைந்து சமீபத்திய கண்டுபிடிப்புக்குக் காரணமான ஆய்வில் பங்கெடுத்தவர். அவரது கூற்றுப்படி, பல்லாண்டு காலமாக நடந்த ஆய்வுகள் அனைத்துமே காப்பிடங்களில் இருக்கும் ராஜநாகங்கள் மீது நடத்தப்பட்டவைதான். "ராஜநாகங்களை அவற்றின் இயல்பான வாழ்விடங்களில் அவதானித்து, ஆழமான ஆய்வுகள் பெரியளவில் மேற்கொள்ளப்படாமலேயே இருந்தது. அதுவே, இத்தனை ஆண்டுகளாக அதுகுறித்த அறிவியல்பூர்வ உண்மை வெளிவராமல் இருந்ததற்குக் காரணம்" என்கிறார் அவர். பட மூலாதாரம்,P. GOWRI SHANKAR படக்குறிப்பு, ஓபியோஃபேகஸ் ஹன்னா, கிழக்கு பாகிஸ்தான் மற்றும் வடக்கு, கிழக்கு இந்தியாவில் வாழக்கூடிய ராஜநாகம் கௌரி ஷங்கர் மற்றும் அவரது குழுவினரின் ஆய்வு முடிவுகள், "உலகில் மொத்தம் நான்கு வகை ராஜநாகங்கள் உள்ளதை உறுதி செய்தன. அதிலும் குறிப்பாக, "இரண்டு வகை ராஜநாகங்களைப் புதிதாக வகைப்படுத்தி பெயரிட்டோம்,” என்று விளக்கினார் கௌரி ஷங்கர். இந்த ஆய்வுக்காகப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ராஜநாகங்களின் மரபணுக்களை ஆய்வு செய்ததாகவும், அதில் இருந்த மாறுபாடுகளை வைத்து ஆதாரப்பூர்வமாக, ராஜநாகத்தில் மொத்தம் நான்கு வகைகள் இருப்பதை உறுதி செய்ததாகவும் கூறுகிறார் கணேஷ். மேலும், "கடந்த 1961ஆம் ஆண்டு வரை ராஜநாகங்களை வகைப் பிரிக்கும், பெயரிடும் முயற்சிகள் தொடர்ந்தன என்றாலும் அவற்றில் திருப்தி அளிக்கக் கூடிய முடிவுகள் கிடைக்கவில்லை. இந்த முறைதான் முழு தரவுகளுடன் ஆதாரப்பூர்வமாக இதை உறுதி செய்ய முடிந்தது" என்றார். இந்த வெவ்வேறு வகை ராஜநாகங்கள், ஒன்றுக்கொன்று இனப்பெருக்கம் செய்துகொள்வதில்லை. அதுமட்டுமின்றி, குறிப்பிட்ட ஒரு நிலவியல் அமைப்பில் ஒரேயொரு வகை ராஜநாகம் மட்டுமே வாழும் என்கிறார் கணேஷ். அதாவது, மேற்கு தொடர்ச்சி மலையில் இருவேறு வகைகளைச் சேர்ந்த ராஜநாகங்கள் வாழாது. ஒரே வகை ராஜநாகம்தான் இருக்கும். மேற்குத்தொடர்ச்சி மலையில் தனித்துவமான ராஜநாகம் பட மூலாதாரம்,P. GOWRI SHANKAR படக்குறிப்பு, ஓபியோஃபேகஸ் காளிங்கா, மேற்குத்தொடர்ச்சி மலையில் மட்டுமே வாழும் ராஜநாக வகை இத்தனை ஆண்டுகளாக ஓபியோஃபேகஸ் ஹன்னா என்ற அறிவியல் பெயரைக் கொண்ட ஒரேயொரு வகை ராஜநாகமே இந்தியா முழுக்க வாழ்வதாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது தனது பத்தாண்டு கால ஆய்வின் மூலம், அந்தக் குறிப்பிட்ட அறிவியல் பெயருக்குச் சொந்தமான ராஜநாக இனம், கிழக்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்வதையும், அந்த ராஜநாகமும் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் வாழும் ராஜநாகமும் வெவ்வேறு வகைகளைச் சேர்ந்தவை என்பதையும் முனைவர் கௌரி ஷங்கர் மற்றும் அவரது ஆய்வுக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளில் வாழ்வது ஒரு தனி வகை என்பதும், இது உலகின் வேறு எந்தப் பகுதிகளிலும் காணப்படாத ஓரிடவாழ் உயிரினம் என்பதும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தனித்துவமான ராஜநாகத்திற்கு ஓபியோஃபேகஸ் காளிங்கா என்றும் ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர். “காளிங்கா என்பது கர்நாடகாவில் உள்ள பூர்வகுடி மக்கள் ராஜநாகத்திற்குக் குறிப்பிடும் ஒரு பெயர். அவர்களது மரபார்ந்த பெயரிலேயே அதன் அறிவியல் பெயரும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் பெயரைச் சூட்டினோம். இனி உலகம் முழுக்க அனைவரும் அந்த மக்கள் அழைக்கும் பெயரிலேயே ராஜநாகத்தை அழைப்பார்கள்,” என்கிறார் முனைவர் கௌரி ஷங்கர். பட மூலாதாரம்,P. GOWRI SHANKAR படக்குறிப்பு, ஓபியோஃபேகஸ் பங்காரஸ், இந்தோ-சீன பகுதிகளில் வாழக்கூடிய ராஜநாகம் “உத்தர கன்னடா போன்ற பகுதிகளைச் சுற்றி வாழக்கூடிய பூர்வகுடிச் சமூகங்கள் ராஜநாகங்களை அச்சமூட்டக் கூடிய உயிரினமாகப் பார்ப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை அவை மிகவும் அவசியமான, விரும்பத்தக்க உயிரினம்.” “ராஜநாகம் தங்கள் பகுதிகளில் இருப்பதை அவர்கள் மிகவும் விரும்புகிறார்கள். நாகம், சாரை, வரையன், நீர்க்கோலி என இதர வகைப் பாம்புகளை அவை சாப்பிடுவதும் இதற்கொரு முக்கியக் காரணம். அதன்மூலம், மற்ற நச்சுப் பாம்புகளால் ஏற்படும் அபாயம் தவிர்க்கப்படுவதாக அவர்கள் கருதுகின்றனர். ஆகையால், ராஜநாகத்தின் இருப்பை அவர்கள் அவசியமானதாகக் கருதுகின்றனர்,” என்கிறார் கௌரி ஷங்கர். இந்த மரபார்ந்த சிந்தனை அனைவருக்கும் பரவலாகச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே பிராந்திய பெயரைச் சூட்டியதாகவும், பிலிப்பைன்ஸ் பகுதியில் உள்ள லூஸான் தீவுக்கூட்டத்தில் உள்ள ராஜநாக வகைக்கும் அதேபோல், பிராந்திய மக்கள் குறிப்பிடும் பெயரான சால்வட்டானா என்பதையே சூட்டியதாகவும் அவர் தெரிவித்தார். நான்கு வகை ராஜநாகங்கள் பட மூலாதாரம்,P. GOWRI SHANKAR படக்குறிப்பு, ஓபியோஃபேகஸ் சால்வட்டானா, பிலிப்பைன்ஸில் உள்ள லூஸான் தீவுக் கூட்டத்தில் வாழக்கூடிய ராஜநாக வகை இந்த ஆய்வின்படி, மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டுமே வாழும் வகை - ஓபியோஃபேகஸ் காளிங்கா (Ophiophagus kaalinga) கிழக்கு பாகிஸ்தான் மற்றும் வடக்கு, கிழக்கு இந்தியாவில் வாழக் கூடியவை – ஓபியோஃபேகஸ் ஹன்னா (Ophiophagus hannah) இந்தோ-சீன பகுதிகளில் வாழக்கூடியவை – ஓபியோஃபேகஸ் பங்காரஸ் (Ophiophagus bangarus) இந்தோ-மலேசிய பகுதிகளில் வாழக்கூடியவை மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ள லூஸான் தீவுக் கூட்டத்தில் வாழக்கூடியவை – ஓபியோஃபேகஸ் சால்வட்டானா (Ophiophagus salvatana) இவற்றுக்கு இடையே உடல் தோற்றத்தில் சில வேறுபாடுகள் உள்ளதாகவும், குறிப்பாக அவற்றின் உடலில் இருக்கும் வெள்ளை நிறப் பட்டைகளை வைத்து ஒவ்வொன்றையும் வகைப்படுத்தி தனியாக அடையாளம் காண முடியும் என்றும் விளக்குகிறார் கௌரி ஷங்கர். உதாரணமாக, "காளிங்காவின் உடலில் வெள்ளை நிற பட்டைகள் அதிகபட்சமாக சுமார் 40 வரை இருக்கும். அதுவே ஹன்னாவில் 70 வரை இருக்கும். பங்காரஸில் இந்த எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவும், சால்வட்டானா கிட்டத்தட்ட பட்டைகளே இல்லாத நிலையிலும் காணப்படுவதாக" விளக்கினார் அவர். ராஜநாகம் – நாகம் என்ன வேறுபாடு? பட மூலாதாரம்,GETTY IMAGES பெயரளவில் ராஜநாகம் என்று அழைக்கப்பட்டாலும், அவை அறிவியல் ரீதியாக நாகப் பாம்பு குடும்பத்தைச் சேர்ந்தவை இல்லை என்கிறார் ஊர்வன ஆராய்ச்சியாளர் ரமேஷ்வரன். இரண்டுக்குமான வாழ்விடம், வாழ்வுமுறை, நடத்தை ஆகியவற்றில் வேறுபாடுகள் உள்ளதாகவும் அவர் கூறுகிறார். நாகப் பாம்புகள் நாஜா (Naja) என்ற பேரினத்தின்கீழ் வருகின்றன. ஆனால், ராஜநாகம் ஓபியோஃபேகஸ் (Opiophagus) என்ற பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உடல் அளவிலேயே இரண்டுக்கும் பெரிய வேறுபாடு உள்ளதாகக் கூறும் ரமேஷ்வரன், “நாகப்பாம்பு 6 முதல் 10 அடி வரை வளரும். ஆனால், ராஜநாகம் 18 அடி வரை வளரக்கூடியது” என்றார். “நாகப் பாம்பின் உடல் முழுக்க ஒரே நிறத்தில் இருக்கும். ஆனால், ராஜநாகத்தின் உடலில் சீரான இடைவெளியில் வெள்ளை நிறப் பட்டைகள் இருக்கும். அந்தப் பட்டைகளின் தன்மை ராஜநாக வகைகளுக்கு இடையே வேறுபட்டாலும் அவை இருக்கும்.” “நாகம் மனிதர்கள் வாழும் பகுதிகளில் அதிகம் தென்படும். ஆனால், ராஜநாகம் பெரும்பாலும் அடர்ந்த, உயரமான காடுகளில் வாழக் கூடியவை. இருப்பினும், அவை சில தருணங்களில் காடுகளை ஒட்டியுள்ள கிராமங்களிலும் அவ்வப்போது தென்படுகின்றன.” "நாகப் பாம்புகள் பல தருணங்களில் கூட்டமாகவும் தென்பட்டுள்ளன. ஆனால், ராஜநாகம் வாழ்விட எல்லைகளை வகுத்துத் தனிமையில் வாழக்கூடியது." பட மூலாதாரம்,GETTY IMAGES இவைபோக, இரண்டின் இனப்பெருக்கம், உணவுமுறை ஆகியவற்றிலும் வேறுபாடுகள் உள்ளதாகக் கூறுகிறார் ரமேஷ்வரன். அவரது கூற்றுப்படி, ராஜநாகம் தனது உடலால் சருகுகளைக் குவித்து, கூடு அமைத்து, அதில் முட்டையிடக்கூடிய பழக்கம் கொண்டவை. குட்டிகள் பிறக்கும்வரை, கூட்டில் இருந்து முட்டைகளைப் பாதுகாக்கும் தன்மை கொண்டவை என்றும் அவர் விளக்கினார். நாகப் பாம்புகளும் முட்டைகளைப் பாதுகாப்பதை அவதானித்து இருந்தாலும், கூடு அமைக்கும் பழக்கம் அவற்றுக்கு இல்லை என்கிறார் ரமேஷ்வரன். இவை போக, உணவுமுறையில் ஒரு முக்கியமான வித்தியாசம் இரண்டுக்கும் உள்ளது. எலி, பெருச்சாளி போன்றவற்றையும் பறவைகள், நீர்நில வாழ்விகளான தவளை, தேரை ஆகியவற்றையும் நாகப் பாம்புகள் உணவாக கொள்கின்றன. ஆனால், ராஜநாகம் மற்ற பாம்புகளையே தனது உணவுப் பட்டியலில் முதன்மையாக வைத்துள்ளது. சிறிய அளவு மலைப்பாம்பு, நாகம், பச்சைப் பாம்பு, சாரை, நீர்க்கோலி, விரியன் போன்ற பல வகைப் பாம்புகளை அவை அதிகம் உண்ணுகின்றன. ராஜநாக நஞ்சுக்கான மருந்து தயாரிப்பில் இதன் முக்கியத்துவம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES நஞ்சுமுறி மருந்து தயாரிக்கும் செயல்முறை மிகச் சிக்கலானதாகவும் செலவு மிக்கதாகவும் இருப்பதால், மிகவும் அவசியமான, அதிகம் தேவைப்படக் கூடிய மருந்துகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்குமாறு உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல் இருப்பதாகக் குறிப்பிடுகிறார் நஞ்சுமுறி மருந்து குறித்து ஆய்வு செய்துவரும் விஞ்ஞானியான முனைவர் மனோஜ். ராஜநாகத்தின் கடியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்பதும் இந்தியாவில் அதற்கான நஞ்சுமுறி மருந்துகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தப்படாதமைக்குக் காரணம் என்கிறார் அவர். அதேவேளையில், எதுவுமே இல்லாமல் இருப்பதற்குப் பதிலாக 80% தீர்வு தரக்கூடிய நஞ்சுமுறி மருந்து தாய்லாந்தில் இருந்து கிடைத்து வருவதை, இப்போதைக்கு நிலவும் நல்ல விஷயமாகப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தும் மனோஜ், குறிப்பிட்ட பாம்புகளின் நஞ்சுகளுக்குத் தனித்துவமான நஞ்சுமுறி மருந்துகளைத் (monovalent) தயாரிக்க, அதன் தயாரிப்பு முறை எளிதாக வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் ராஜநாகத்தின் கடிக்கு ஆளாவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும், அவை சமீப காலமாக கிராமப் பகுதிகளிலும் அதிகம் தென்படுவதைக் கருத்தில் கொண்டு, நஞ்சுமுறி மருந்து தயாரித்துக் கொள்வது அவசியம் என்கிறார் கௌரி ஷங்கர். அதற்கு இந்த ஆய்வு முக்கியப் பங்காற்றும் என்றும் அவர் கருதுகிறார். காளிங்கா ராஜநாகத்தின் நஞ்சுக்கு, தாய்லாந்து நஞ்சுமுறி மருந்தோ, நம்மிடம் இருக்கும் கூட்டுமுறை மருந்தோ நூறு சதவீதம் தீர்வு கொடுப்பதில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார் அவர். அப்படியிருக்கும் நிலையில், "காளிங்கா ராஜநாகத்தின் நஞ்சுக்கு நஞ்சுமுறி மருந்து தயாரித்து வைத்துக்கொள்வது அவசியம்." “மக்கள் மத்தியில் பாம்புகள் குறித்த மிகத் தீவிரமான பயம் நிலவுகிறது. அதுவே அவற்றை அடித்துக் கொல்லக் காரணமாக இருக்கிறது. ராஜநாகத்தைப் பொருத்தவரை, அவற்றின் நஞ்சை முற்றிலுமாக முறிக்கக்கூடிய மருந்து நம்மிடம் இருந்தால், அதுவே மக்களுக்கு தைரியத்தைக் கொடுக்கும். அதன்மூலம், பயத்தால் அவற்றைக் கொல்வதைத் தடுத்து, பாதுகாப்பில் கவனம் செலுத்த வைக்க முடியும்,” என்று நம்புகிறார் முனைவர் கௌரி ஷங்கர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c6291vz5z30o