Everything posted by ஏராளன்
-
17 வயதின்கீழ் இலங்கை கிரிக்கெட் குழாத்தில் பருத்தித்துறை ஹாட்லி வீரர் ஆகாஷ்; அணித் தலைவர் ஆனந்த வீரர் கித்ம
(நெவில் அன்தனி) 17 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள 3 ஒருநாள் மற்றும் இரண்டு 4 நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்த குழாத்தில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் விக்னேஸ்வரன் ஆகாஷ் இடம்பெறுகின்றமை சிறப்பம்சமாகும். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட 17 வயதுக்குட்பட்ட பிராந்திய (மாகாணம்) அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிரகாசித்ததன் அடிப்படையிலேயே ஆகாஷுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. 17 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக கொழும்பு ஆனந்த கல்லூரி வீரர் கித்ம வித்தானபத்திரன நியமிக்கப்பட்டுள்ளார். உப தலைவர் பதவி மருதானை புனித சூசையப்பர் கல்லூரி வீரர் செனுஜ வெகுங்கொடவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்த கிரிக்கெட் தொடர் ஞாயிற்றுக்கிழமை 24ம் திகதி ஆரம்பமாகிறது. கடைசிப் போட்டி டிசம்பர் 8ஆம் திகதி நடைபெறும். 17 வயதின்கீழ் இலங்கை குழாம் கித்ம வித்தானபத்திரன (தலைவர்), செனுஜ வெகுங்கொட (உப தலைவர்), ஜேசன் பெர்னாண்டோ, ஜொசுவா செபஸ்தியன், ரெஹான் பீரிஸ், துல்சித் தர்ஷன, ஜனிந்து ரணசிங்க, செத்மிக செனவிரத்ன, சலன தினேத், ராஜித்த நவோத்ய, விக்னேஸ்வரன் ஆகாஷ், கெனுல பிலியங்க, ரெயான் கிரகறி ரசித் நிம்சார, ஓஷந்த பமுதித்த https://www.virakesari.lk/article/199461
-
அஸ்வெசும கொடுப்பனவு : விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு முக்கிய அறிவித்தல்
23 NOV, 2024 | 11:02 AM அஸ்வெசும திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகளை பெறுவதற்காக விண்ணப்பிக்கத் தவறிய பயனாளிகள் இம்மாதம் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி வரை மீண்டும் விண்ணப்பிக்கலாம். இக்கொடுப்பனவுகளை பெறுவதில் உள்ள பிரச்சினைகள், முறைப்பாடுகள் தொடர்பில் பயனாளிகள் உரிய அதிகாரிகளுக்கு இம்மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 15ஆம் திகதி வரை தெரிவிக்க முடியும். https://www.virakesari.lk/article/199466
-
மக்கள் காணும் கனவுகள் பொய்யாக கூடாது! - ஜனாதிபதி
மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற அரசியல் தலைமைத்துவம் வழங்குவதைத் தவிர வேறெந்த நோக்கமும் கிடையாது - ஜனாதிபதி மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு அரசியல் தலைமைத்துவம் வழங்குவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் கிடையாது. அனைவரும் எதிர்பார்க்கும் புதிய மாற்றத்தில் அரச சேவையின் மீதான பொது மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தாமல் முன்னேற்றமடைய முடியாது. அரசியலமைப்பிலும், சட்டங்களிலும் எத்தகைய கட்டளைகள் காணப்பட்டாலும் மக்கள் சக்தி தான் பலமிக்கதாகவுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (22) அமைச்சின் கடமைகளை ஜனாதிபதி பொறுப்பேற்றுக் கொண்டார். பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பிரதானிகள் ஆகியோருடன் ஜனாதிபதி விரிவாக கலந்துரையாடினார். தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரச உத்தியோகஸ்த்தர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். அரசியலமைப்பின் சட்டங்கள், சட்ட ஒழுங்குகள் காணப்பட்டாலும் மக்களின் அதிகாரம் தான் பலமிக்கது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் வழங்கப்பட்ட ஆணைகளின் கட்டமைப்பு மற்றும் வடிவங்களைப் பார்க்கும் போது அவர்களின் எதிர்பார்ப்புக்கள் பிரதிபலிக்கின்றன. இந்த மாற்றம் அவர்களினது எதிர்பார்ப்பு என்பது அண்மைக்கால தேர்தல் வரலாற்றில் அரச சேவையினால் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட சுமார் 80 சதவீத ஆணையை எடுத்துக்காட்டுகின்றனது என ஜனாதிபதி குறிப்பிட்டார். தமது அரசாங்கத்துக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு அரசியல் தலைமைத்தவத்தை வழங்குவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் கிடையாது. அனைவரும் எதிர்பார்க்கும் இந்த புதிய மாற்றத்தில் அரச சேவையின் மீதான பொது மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தாமல் முன்னேற்றமடைய முடியாது. வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு அரச சேவை இன்றியமையாததாக காணப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார். இச்சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொண்த, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பாதுகாப்பு படை உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர். https://www.virakesari.lk/article/199460
-
பொன்னாலையில் 14 வயது மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். பொன்னாலை மேற்கு பகுதியை சேர்ந்த நடனேஷ்வரன் தாரணி (வயது 14) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவிக்கும் அவரது தாய் மற்றும் சகோதரனுக்கு இடையே இன்று காலை முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறித்த மாணவியின் பேர்த்தியார் புதன்கிழமை (20) உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த மாணவியின் குடும்பத்தினர் அங்கு சென்றிருந்தனர். இதன்போது வீட்டில் யாரும் இல்லாதபோது தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/199458
-
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கமைய ஜனாதிபதி செயற்படக்கூடாது - ஜயந்த சமரவீர
(இராஜதுரை ஹஷான்) வடக்கு மக்கள் இனவாதம், பிரிவினைவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்துள்ளார்கள். பிரிவினைவாதத்தை போசிக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செயற்பட கூடாது என தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது கொள்கை பிரகடனத்தில் இந்த நாட்டில் இனி இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அண்மைகாலமாக இவ்வாறு குறிப்பிடுவதை அவதானிக்க முடிகிறது. தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ள ஆணை அமோகமானது. வடக்கு மக்கள் இனவாதம், பிரிவினைவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்கள். பிரிவினைவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட்ட எம்.ஏ. சுமந்திரனையும் தோற்கடித்துள்ளார்கள். இருப்பினும் ஏனைய பிரிவினைவாதிகள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். வடக்கு மக்கள் வழங்கியுள்ள இனவாதமற்ற ஆணையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கும் உண்டு. ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கனடா வாழ் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் யோசனைகளை முன்வைத்துள்ளன. பிரிவினைவாதத்தை போசிக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செயற்பட கூடாது. வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு கொள்கை அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த பல்வேறு தரப்பினர் அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கின்றனர். நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்த இராணுவத்தினரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கும் ,அரசாங்கத்துக்கும் உண்டு. நாட்டின் ஒற்றையாட்சிக்கு முன்னுரிமை வழங்கி அரசாங்கம் செயற்பட வேண்டும். தேசியத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அரசாங்கம் தீர்மானங்களை எடுத்தால் சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகள் ஏற்படும். நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. புதிய யாப்பு வரைவின் உள்ளடக்கம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். வெகுவிரைவில் அவற்றையும் பகிரங்கப்படுத்துவோம் என்றார். https://www.virakesari.lk/article/199434
-
பிள்ளையான் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும் எனக்கும் தொடர்பில்லை - சிவநேசதுரை சந்திரகாந்தன் (எம்.மனோசித்ரா) நல்லாட்சி அரசாங்கத்தை மக்கள் 2018ஆம் ஆண்டிலேயே புறக்கணித்துவிட்டனர். அதனாலேயே அவ்வாண்டு இடம்பெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றது. எனவே கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சியில் அமர்த்துவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், நான் சிறைச்சாலையிலிருந்து கொண்டு சதித்திட்டம் தீட்டியதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (22) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலமளிப்பதற்காக முன்னிலையானபோது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், செனல் 4 வெளியிட்ட காணொளி தொடர்பில் அருட் தந்தையொருவரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமையவே சீ.ஐ.டி.யில் முன்னிலையாகுமாறு எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சியில் அமர்த்துவதற்காகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அஸாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார். உண்மையில் 2015 இல் நல்லாட்சி அராசங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றதன் பின்னர் 2018இல் நடத்தப்பட்ட உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றி பெற்றது. ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் 2019ஆம் ஆண்டு தான் மேற்கொள்ளப்பட்டன. நல்லாட்சி அரசாங்கத்தை 2018ஆம் ஆண்டே மக்கள் புறக்கணித்துவிட்டனர். அந்த வகையில் 2018இல் கோட்டாபய ராஜபக்ஷ மாத்திரமல்ல, பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக யாரை நியமித்திருந்தாலும் அவர் வெற்றி பெற்றிருப்பார். மக்களின் மனநிலை அவ்வாறு தான் காணப்பட்டது. எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் இதனை தொடர்புபடுத்துவது அடிப்படையற்றது. எனக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எனவே யாரையாவது மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர்கள் செயற்படக் கூடாது. எனக்கு எந்த பயமும் இல்லை. பழிவாங்கல் நோக்கத்துடனேயே என்னை விசாரணைக்கு அழைக்கின்றனர். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை கண்டறிய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன போன்றவர்களிடம் கேட்க விடயங்களை என்னிடம் கேட்கக் கூடாது. அவ்வாறில்லை என்றால் இது தொடர்பில் ஜனாதிபதியிடமே கேட்க வேண்டும். புலனாய்வுப்பிரிவினர் ஜனாதிபதியின் கண்களைப் போன்று இருக்க வேண்டும். அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தால் எம்மால் எதுவும் செய்ய முடியாது. சிறைச்சாலையிலிருந்து கொண்டு இவ்வாறானதொரு சதித்திட்டத்தை திட்டமிட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றார். https://www.virakesari.lk/article/199425
-
வெயாங்கொடை மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் புதையல் தோண்டும் பணி ஆரம்பம்!
வெயாங்கொடை, வதுரவ பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட புதையல் தேடும் பணிகள் இன்றைய தினத்திலும் (23) முன்னெடுக்கப்படவுள்ளது. நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக வீதிக்கு அருகில் உள்ள இடத்தில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இன்று மூன்றாவது நாளாகவும் குறித்த பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வெயாங்கொட பொலிஸார் தெரிவித்தனர். கடந்த காலங்களில் பல்வேறு நபர்கள் புதையல் தேடும் நோக்கில் சட்டவிரோதமான முறையில் இங்கு அகழாய்வு மேற்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தனகல்ல நீதவான் வழங்கிய உத்தரவுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட ஸ்கேன் பரிசோதனையின் போது பூமிக்குள் ஏதோ ஒன்று இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த பின்னர் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றம், பொதுமக்கள் முன்னிலையில் குறித்த இடத்தில் அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு வெயாங்கொடை பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. அகழ்வாராய்ச்சிக்கு இரண்டு நாள் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், அதன்படி நேற்றும், முந்தினநாளும் அங்கு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் நேற்று பிற்பகல் வரையிலும் அதனை நிறைவு செய்ய முடியாத நிலையில், பாரிய கல் ஒன்று கிடைத்ததையடுத்து நேற்றைய அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. https://tamil.adaderana.lk/news.php?nid=196277
-
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதானி மீது அமெரிக்காவில் வழக்கு
அதானி மோசடி வழக்கில் எதிர்கொள்ளப் போகும் சவால்கள் - நிபுணர்கள் விளக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், ஜுகல் புரோஹித் பதவி, பிபிசி செய்தியாளர் கௌதம் அதானியின் பெயர் இந்தியாவின் செல்வந்தர்கள் மற்றும் சக்தி வாய்ந்த தொழிலதிபர்களின் பட்டியலில் உள்ளது. அவரும் அவரது கூட்டாளிகள் சிலரும் அமெரிக்காவில் மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இதுவே மிகவும் தீவிரமானதாக இருக்கக்கூடும். அமெரிக்காவின் நீதித்துறை, அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC) ஆகிய அந்நாட்டு அரசு அமைப்புகள், இந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளன. இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் கூறியுள்ளது. மேலும், சட்ட வழிகள் குறித்து ஆராய இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் கடந்த வியாழனன்று பெரும் சரிவு ஏற்பட்டது. குற்றச்சாட்டுகளின் தீவிரத்தையும் அவற்றுக்கான எதிர்வினைகளையும் பார்க்கும்போது, இந்த விவகாரம் இதோடு நிற்கப் போவதில்லை என்பது தெளிவாகிறது. இப்போது பல கேள்விகள் நமக்கு முன்னே உள்ளன. அமெரிக்காவில் இந்த வழக்கு தொடர்பான சட்ட நடைமுறை என்னவாக இருக்கும்? இந்தக் குற்றச்சாட்டுகள் அதானி குழுமத்தின் வணிகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? கெளதம் அதானியும் அவரது கூட்டாளிகளும் சிறைக்குச் செல்லும் சாத்தியகூறு உள்ளதா? அதானி குழுமம் எதிர்காலத்தில் தனது திட்டங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து எப்படி நிதி திரட்ட முடியும்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ள பிபிசி ஹிந்தி, இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பல நிபுணர்களிடம் பேசியது. சட்ட செயல்முறை மற்றும் சவால்கள் பிரையன் பீஸ், நியூயார்க்கில் அரசு வழக்கறிஞராக உள்ளார். கெளதம் அதானி மற்றும் பிறர் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி விளக்கம் அளித்த அவர், “பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெற இந்தியாவில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கத் திட்டம் தீட்டப்பட்டது. கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெய்ன் ஆகியோர் அமெரிக்க மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடம் இருந்து மூலதனத்தைத் திரட்ட முயன்றனர். அதனால்தான் அவர்களிடம் இவர்கள் பொய் கூறினார்கள்,” என்றார். ஆனந்த் அஹுஜா அமெரிக்காவில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக உள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அங்கு பணியாற்றி வருகிறார். பிபிசி ஹிந்தியிடம் பேசிய அவர், குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது எனத் தான் கருதுவதாகவும் அதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகவும் கூறினார். "முதலாவதாக, லஞ்சம் பெற்றவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் இந்தியாவில் உள்ளவர்களின் வாக்குமூலத்தை அமெரிக்க அதிகாரிகள் எப்படிப் பெறுவார்கள்? இதில் இந்தியாவின் சட்டங்களையும் பார்க்க வேண்டும். ஒருவர் அரசு அதிகாரியாக இருந்தால், அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதுவொரு சிக்கலான வழக்காக மாறலாம்," என்று விளக்கினார் ஆனந்த் அஹூஜா. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் இருப்பவர்களை, குறிப்பாக அரசு அதிகாரிகளை அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் எந்த அளவுக்கு விசாரிக்க முடியும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார் அவர். அதோடு, எதிர்காலத்தில் இந்திய உச்சநீதிமன்றமும் இதில் பங்கு வகிக்கலாம், ஏனென்றால் சட்டம் என்ன சொல்கிறது என்பதை உச்சநீதிமன்றம் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று குறிப்பிட்டார் அஹூஜா. “இரண்டாவது காரணம், மோசடி வழக்கில் ஒரு முக்கியமான விஷயத்தை நீதிபதி முன்னிலையில் நிரூபிக்க வேண்டும். அதாவது குற்றம் சாட்டப்பட்டவரின் செயல் மற்றும் நோக்கம் ஆகிய இரண்டுமே மோசடியை வெளிப்படுத்துவதாக இருக்கவேண்டும். உதாரணமாக நீங்கள் சில வேலைகளைச் செய்தீர்கள், ஆனால் நீங்கள் அதைத் தவறான நோக்கத்துடன் செய்யவில்லை என்று நிரூபிக்க முடியும் என்றால் அதை மோசடி எனக் கூறுவது கடினம். அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் இதை நிரூபிக்க முடியுமா என்பதைக் காலம்தான் சொல்லும்,” என்கிறார் ஆனந்த் அஹூஜா. முழு செயல்முறையும் முடிவதற்கு எவ்வளவு காலம் ஆகும்? என்ற கேள்விக்கு பதில் அளித்த அஹுஜா “நீதித்துறையின் முந்தைய வழக்குகளைப் பார்த்தால், வழக்கமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் இருந்து விசாரணை முடிவதற்கு ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகும்,” என்றார். தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதா? பட மூலாதாரம்,GETTY IMAGES ஹெச்பி ரனினா ஒரு மூத்த கார்ப்பரேட் வழக்கறிஞர். “குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. இவை நிரூபிக்கப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். ஜூரி (நடுவர் குழு) குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று கருதினால், தண்டனை பெரும்பாலும் அங்குள்ள நீதிபதியைப் பொறுத்து இருக்கும்,” என்று அவர் தெரிவித்தார். “அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தைப் பொறுத்த வரை அந்த அமைப்பு அபராதம் தொடர்பாக ஓர் ஒப்பந்தத்தை எட்ட முடியும். இருப்பினும் குற்றச்சாட்டுகளின் தன்மையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது அபராதத்தின் அளவு பெரியதாக இருக்கலாம். அந்த அபராதத்தைச் செலுத்துவது அதானி குழுமத்தின் மற்ற நிறுவனங்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்,” என்றார் அவர். கடந்த 1997ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே குற்றம் சாட்டப்பட்டவரை நாடு திருப்பி அனுப்புவது தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டது. கௌதம் அதானியை கைது செய்ய அமெரிக்கா கோர முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இப்படி நடந்தால் இந்தியாவின் பதில் என்னவாக இருக்கும்? “இது அந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளைப் பொறுத்தது. இதில் இரு அரசுகளும் சம்பந்தப்படலாம் என்று நான் கருதுகிறேன். இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இருவருக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படலாம்,” என்று ரனினா குறிப்பிட்டார். அதானி பிராண்ட் மீது ஏற்படும் தாக்கம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அதானி குழுமத்துடனான இரண்டு ஒப்பந்தங்களை ரத்து செய்ய கென்யா அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்தங்களின்படி, கென்யாவின் தலைநகரான நைரோபியில் உள்ள ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தில் அதானி குழுமம் 1.85 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது. அதற்கு ஈடாக விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு நடத்துவதற்கான ஒப்பந்தம் பெறப்படவிருந்தது. இதுதவிர, 736 மில்லியன் டாலர்களுக்கு மற்றோர் ஒப்பந்தமும் இருந்தது. இதன் கீழ் அங்கு மின்கம்பிகள் அமைக்கும் பணியை அதானி குழுமம் பெற்றிருந்தது. இந்த இரண்டு விவகாரங்களிலும் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்துள்ளது. கென்யாவின் அதிபர் வில்லியம் ரூட்டோ வியாழன்று இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக அறிவித்தபோது அதற்கு ஊழலைக் காரணம் காட்டினார். கென்யாவின் நாடாளுமன்றத்தில் பேசிய ரூட்டோ, "எங்கள் புலனாய்வு அமைப்புகள் மற்றும் நட்பு நாடுகள் வழங்கிய புதிய தகவல்கள் ஊழல் பற்றிய மறுக்க முடியாத ஆதாரங்கள் மற்றும் நம்பகமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன. இதுதொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுக்க நான் தயங்கமாட்டேன்,” என்று கூறினார். அதானி குழும நிறுவனங்கள் கென்யாவை போலவே பல நாடுகளில் இயங்குகின்றன அல்லது திட்டங்களைத் தொடங்க முயல்கின்றன. இந்தக் குழுமம் இந்தியாவில் உள்ள பல மாநில அரசுகளுடனும், வெளிநாடுகளில் உள்ள பல அரசுகளுடனும் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இருப்பினும் கென்யாவின் நடவடிக்கை போலவே மற்ற நாடுகளிலும் நடக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. வியாழனன்று அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் பங்கு விலைகளில் சரிவு ஏற்பட்டது. இருப்பினும் இதற்கு முன்பு குற்றச்சாட்டுகள் காரணமாகப் பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்து பின்னர் ஏறுமுகமாக ஆனதும் நடந்துள்ளது. அம்பரிஷ் பலிகா ஒரு பங்குச் சந்தை நிபுணர் மற்றும் எந்த நிறுவனத்துடனும் தொடர்பு இல்லாதவர். ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு அதானி குழும பங்கு விலைகள் பெருமளவு சரிந்தன. ஆனால் இந்த முறை பங்கு விலை வீழ்ச்சி அந்த அளவுக்கு இருக்காது என்று தான் நினைப்பதாக அவர் பிபிசி இந்தியிடம் கூறினார். கடந்த 2023 ஜனவரியில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற அமெரிக்க நிறுவனம் தனது அறிக்கையில் அதானி குழுமத்திற்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அந்த வாரத்தில் அதானி குழும நிறுவனங்களின் மொத்த பங்குச் சந்தை மதிப்பு சுமார் 50 பில்லியன் டாலர்கள் வீழ்ச்சி அடைந்தது. “இந்தக் குழுமம் சவால்களை எதிர்கொள்வதில் தன் வழியைக் கண்டுபிடிப்பதில் வெற்றிகரமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் இத்தகைய அறிக்கைகள் அதன் பிம்பத்தின் மீது கேள்விகளை எழுப்புகின்றன என்பது உண்மைதான். இதன் காரணமாக குழுமம் நிதி திரட்டுவதில் தாமதத்தை எதிர்கொள்கிறது. இந்த முறை குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்தநேரத்தில் ’அதானி கிரீன்’ நிறுவனத்துக்கு நிதி திரட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தபோது குழுமம், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு நிதி திரட்டிக்கொண்டிருந்தது,” என்று பலிகா குறிப்பிட்டார். பிராண்ட் இந்தியாவும் பாதிக்கப்படுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES சந்தோஷ் தேசாய் ஓர் ஆய்வாளர். இந்த சர்ச்சை அதானி குழுமத்தின் பிம்பத்தைப் பாதிக்கும் என்று அவர் கருதுகிறார். முதலீட்டாளர்கள் பயப்படுவார்கள், எதிர்காலத்தில் அதானி குழுமம் வெளிநாடுகளில் இருந்து 'நிறுவன நிதி' பெறுவது அவ்வளவு சுலபமாக இருக்காது என்று அவர் நினைக்கிறார். "அதேநேரம் பொதுமக்கள் அவரைப் பார்க்கும் விதத்தில் இந்த விஷயம் வித்தியாசத்தை ஏற்படுத்துமா என்பது கேள்வி. அதானி அரசியல் துருவமுனைப்பின் சின்னமாக மாறிவிட்டார் என்று நான் நினைக்கிறேன். யாருக்கு அதானியை பிடிக்குமோ அவர்கள் தொடர்ந்து அவரை சாம்பியனாகவே பார்ப்பார்கள். அவர் வேண்டுமென்றே குறிவைக்கப்படுகிறார் என்று கருதுவார்கள். இந்தக் குழுமத்தைப் பற்றித் தாங்கள் எப்போதுமே சரியாகச் சொன்னதாக அவரைப் பிடிக்காதவர்கள் கூறுவார்கள்," என்று தேசாய் கூறினார். “முதலீட்டாளர்கள் லாபத்தையும் ஸ்திரத்தன்மையையும் விரும்புகிறார்கள். இந்தியா இதை வழங்க முடிந்தால், எந்த நிறுவனம் என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும் ஒரு வித்தியாசமும் ஏற்படாது," என்கிறார் சந்தோஷ் தேசாய். ஆயினும் 'ஒருவர் மற்றவரைச் சுட்டிக்காட்டும் யோக்கியதை’ உள்ள ஒரு உலகில் நாம் வாழ்கிறோமோ என்பதே சந்தேகமாக உள்ளதாகக் குறிப்பிடுகிறார் அவர். அவரது கூற்றுப்படி, வணிக உலகில் ஓரளவு அரசியல் ஆதரவு அவசியம் என்ற கருத்தை இந்த விவகாரம் வலுவாக்கக்கூடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yrzd2nnl2o
-
ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
இனவாத, பிரிவினைவாத கருத்துக்களை நாம் ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை - விமலுக்கு கனடியத் தமிழர் பேரவை பதில் (நமது நிருபர்) இன, மதவாதக் கருத்துக்களை தெரிவித்து மக்களை ஏமாற்ற நினைப்பதை தவிர்த்து முறையான முன்னேற்றகரமான அனைவரையும் உள்ளடக்கிய அரசியலில் ஈடுபடுவதே சிறந்தது என்று கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் குமார் இரத்தினம் தெரிவித்துள்ளார். நாம் ஜனாதிபதி மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு அண்மையில் எழுதியிருந்த கடிதத்தில் இனவாத பிரிவினைவாத கருத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கனடிய தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் இனவாத பிரிவினைவாத கோரிக்கைகளை முன்வைக்கின்றன என்று விமல் வீரவன்ச அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். ஜனாதிபதிக்கு கனடிய தமிழர் பேரவை அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை சுட்டிக்காட்டியே விமல் வீரவன்ச இந்த குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். அதில் அவர் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கனடிய தமிழர் பேரவை ஜனாதிபதி மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு அண்மையில் எழுதியிருந்த கடிதத்தில் இனவாத பிரிவினை வாத கருத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகளுடன் நீதி மற்றும் நியாயமான தீர்வுகளை முன்வைத்தே அந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் இன, மத வேறுபாடின்றி அனைத்து இலங்கையர்களும் தங்கள் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை மதிக்கும் ஒரு சமூகத்தில் இணைந்து வாழ முடியும் என்பதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் அனுப்பப்பட்டுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில் மிக நீண்ட காலமாக, இனவெறி மற்றும் பிரிவினைவாதத்தை தூண்டும் கருத்துக்கள் மக்களின் உணர்ச்சிகளைக் கையாளவும், சமூகங்களைப் பிளவுபடுத்தவும், குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்யவும் ஆயுதமாக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். இந்த தந்திரோபாயம் காலகாலமாக தவறான புரிதல்களை நிலைநிறுத்தியுள்ளது என்பதோடு அவநம்பிக்கையை வளர்த்து, இலங்கையின் சமூக மற்றும் கலாசார ஒற்றுமைக்கு நிரந்தரமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இனவாதம் மற்றும் பிரிவினைவாதம் என்ற சொல்லாடல்கள் பல அரசியல்வாதிகளால் தங்கள் சொந்த நலனுக்காக பயன்படுத்தப்பட்டதையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் அனைவரும் அறிவர். இதுபோன்ற வார்த்தைகள் மக்களின் உணர்வுகளைத்தூண்டி இனங்களுக்கிடையில் அமைதியின்மையை ஏற்படுத்தி தங்கள் அதிகாரங்களை தக்கவைத்துக்கொள்ளவே பலரால் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற கருத்துக்களால் எந்த சாதாரண குடிமகனுக்கும் எந்த நன்மையையும் எப்பொழுதும் நேர்ந்ததில்லை. மாறாக சமூகங்களுக்கிடையில் பிளவுகளை ஆழமாக்கி உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைதிருப்பி அர்த்தமுள்ள முன்னேற்றங்களை தடுக்கின்றது. இனியும் இவ்வாறான கருத்தாடல்களால் மக்களை ஏமாற்ற நினைப்பதை தவிர்த்து முறையான முன்னேற்றகரமான அனைவரையும் உள்ளடக்கிய அரசியலில் ஈடுபடுவதே சிறந்தது என நாங்கள் குறிப்பிட விரும்புகின்றோம். கனடிய தமிழர் பேரவையினால் ஜனாதிபதிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில் எந்த இனவாத தேசியவாத கருத்துக்களும் இல்லை என்பதையும் அவை நியாயமான, தசாப்தங்களாக தமிழ் மக்களால் எதிர்கொள்ளப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வாகவே அமைந்துள்ளது என்பதையும் நிலைநாட்டவிரும்புகின்றோம். உதாரணமாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல்: இந்தச் சட்டம் தமிழ் சமூகங்களுக்கு மட்டுமன்றி சிங்கள தனிநபர்களுக்கும் மற்றவர்களுக்கும் பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் தவறான பயன்பாடு தன்னிச்சையான தடுப்புக்காவல்களுக்கும் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கும் வழிவகுத்தது, அதை ரத்து செய்வது அனைவருக்கும் நீதியை நோக்கிய ஒரு அவசியமான நடவடிக்கையாக கருதப்பட வேண்டும். அரசியல் கைதிகளை விடுவித்தல்: பல நபர்கள் விசாரணையின்றி பல ஆண்டுகளாக தடுப்புக்காவலில் உள்ளனர். நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும் சட்டத்தின் கீழ் நியாயத்தை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களின் விடுதலை அவசியமாகும். காணி உரிமைகள்: வடக்கு மற்றும் கிழக்கில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் காணிகளை மீள அதன் உரிமையாளர்களிடமே கையளிப்பது என்பது சரியான உரிமையை மீட்டெடுப்பதோடு இடம்பெயர்ந்த குடும்பங்கள் அவர்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும் உதவும். தமிழ் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட சட்ட ரீதியாக அவர்களிற்கு உரிமையான காணிகளை திரும்பக்கோருதல் அவர்களின் உரிமை என்றே கருதப்பட வேண்டும். கலாசார மற்றும் மத வழிபாட்டுத்தலங்களை பாதுகாத்தல்: புனித தளங்கள் மற்றும் கலாசார அடையாளங்களை பாதுகாப்பது அனைத்து சமூகங்களின் அடையாளத்தை பாதுகாக்க மற்றும் பரஸ்பர மரியாதையை மேம்படுத்துவதற்கான முக்கியமான செயற்பாடாகும். பிராந்திய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல்: 13ஆவது திருத்தம் போன்ற தற்போதைய அரசியலமைப்பு விதிகளை முழுமையாக செயல்படுத்துவதன் மூலம் அர்த்தமுள்ள பிராந்திய நிர்வாகத்திற்காக வாதிடுவது சமமான நிர்வாகத்தை நோக்கிய ஒரு படியாகும் அன்றி அது பிரிவினைவாதம் அல்ல. இங்கு குறிப்பிடப்பட்டவை எவையும் பிரிவினைக்கான அல்லது இனவாதத்திற்கான கோரிக்கைகள் அல்ல. அவை உள்ளடக்கம் மற்றும் சமத்துவத்திற்கான அழைப்புகள். ஒரு தேசத்தின் பலம் அதன் அனைத்து குடிமக்களின் கவலைகளையும் நியாயமாக அங்கீகரித்து நிவர்த்தி செய்யும் திறனில் உள்ளது. நியாயமான கோரிக்கைகளை மௌனமாக்குவதற்கும் சமூகப் பிளவுகளை ஆழப்படுத்துவதற்கும் பிரிவினைவாத, இனவாத முத்திரைகளும் குற்றச்சாட்டுகளும் பயன்படுத்தப்பட்ட கடந்த காலத்தின் அழிவுகரமான விளையாட்டுகளுக்கு அப்பால் நாம் நகர்வது இன்றியமையாதது. இத்தகைய அணுகுமுறைகள் நீடித்த துன்பத்தையும் தாமதமான முன்னேற்றத்தையும் மட்டுமே தருகின்றன. இனவாதம் மற்றும் பிளவுபடுத்தும் அரசியல் உத்திகள் சமூகத்திற்குள் விரிசல்களை ஆழப்படுத்துவதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. மேலும் இந்த தந்திரோபாயங்களுக்கு அப்பால் செல்ல வேண்டிய நேரம் இது. அனைத்து இலங்கையர்களின் தேவைகளையும் நிவர்த்தி செய்யும் ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் நடைமுறை தீர்வுகளில் ஈடுபடுவதற்கான நேரம் இது. https://www.virakesari.lk/article/199457
-
மக்கள் காணும் கனவுகள் பொய்யாக கூடாது! - ஜனாதிபதி
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க அரச ஊழியர்கள் அர்ப்பணிக்க வேண்டும் - நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்ற ஜனாதிபதி தெரிவிப்பு மக்கள் ஆணைக்கும் பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்கால தொடர்பில் மக்கள் காணும் கனவுகளும் பொய்யாகிவிடும் என்றும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க அரச ஊழியர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக வெள்ளிக்கிழமை (22) பதவியேற்றதன் பின்னர் அமைச்சின் பணிக்குழாம் முன்னிலையில் ஆற்றிய உரையிலேயே இதனைத் தெரிவித்தார். அமைச்சுக்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு பணியாளர்கள் அன்புடன் வரவேற்பளித்தனர். கடந்த காலத்தில் பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுத்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு நிதியமைச்சின் அதிகாரிகள் வழங்கிய பங்களிப்பை நன்றியுடன் பாராட்டிய ஜனாதிபதி, எதிர்கால இலக்குகளை அடைவதற்கு அனைவரினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரசியல் மாற்றங்களின் போது அரச ஊழியர்களை முன்னைய செயற்பாடுகளை கருத்தில் கொண்டு மதிப்பீடு செய்த வரலாறுகள் உண்டு எனவும் ஆனால் இனிவரும் காலங்களில் அரச ஊழியர்கள் ஆற்றப்போகும் பணியே அவர்களை மதிப்பீடு செய்யும் காரணியாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார். அரச ஊழியர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதில் ஏதேனும் அநீதி அல்லது தவறுகள் இடம்பெற்றால் அவர்களுக்காக முன்னிலையாவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார். வருமானம் ஈட்டும் திணைக்களங்கள் தொடர்பில் மக்களிடம் நல்ல விம்பம் இல்லை என்றும், அந்த நிலைப்பாட்டினை மாற்றுவது கடினமானது என்ற போதிலும், தம்மைப் பற்றி ஏதேனும் மோசமான விம்பம் இருக்குமாயின், புதிய அரசாங்கத்தின் கீழ் அந்த அனைத்து அதிகாரிகளும் தம்மைப் பற்றிய விம்பங்களை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஊடகங்களுக்கு முன்பாக அதிகாரிகளை அச்சுறுத்துவது, அவர்களின் கருத்துக்களைப் புறக்கணிப்பது போன்ற செயற்பாடுகள் தமது அரசாங்கத்தின் கொள்கையல்ல எனவும், சுய ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உருவாக்குவதே புதிய மாற்றத்தின் அணுகுமுறையாக அமையும் எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதற்காக ஒன்றுபடுமாறு அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிகழ்வில் பிரதி அமைச்சர்களான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/199452
-
மக்கள் காணும் கனவுகள் பொய்யாக கூடாது! - ஜனாதிபதி
மக்கள் ஆணைக்கும் பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்கால தொடர்பில் மக்கள் காணும் கனவுகளும் பொய்யாகிவிடும் என்றும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க அரச ஊழியர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இன்று (22) பதவியேற்றதன் பின்னர் அமைச்சின் பணிக்குழாம் முன்னிலையில் ஆற்றிய உரையிலேயே இதனைத் தெரிவித்தார். அமைச்சுக்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு பணியாளர்கள் அன்புடன் வரவேற்பளித்தனர். கடந்த காலத்தில் பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுத்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு நிதியமைச்சின் அதிகாரிகள் வழங்கிய பங்களிப்பை நன்றியுடன் பாராட்டிய ஜனாதிபதி, எதிர்கால இலக்குகளை அடைவதற்கு அனைவரினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரசியல் மாற்றங்களின் போது அரச ஊழியர்களை முன்னைய செயற்பாடுகளை கருத்தில் கொண்டு மதிப்பீடு செய்த வரலாறுகள் உண்டு எனவும் ஆனால் இனிவரும் காலங்களில் அரச ஊழியர்கள் ஆற்றப்போகும் பணியே அவர்களை மதிப்பீடு செய்யும் காரணியாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார். அரச ஊழியர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதில் ஏதேனும் அநீதி அல்லது தவறுகள் இடம்பெற்றால் அவர்களுக்காக முன்னிலையாவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார். வருமானம் ஈட்டும் திணைக்களங்கள் தொடர்பில் மக்களிடம் நல்ல விம்பம் இல்லை என்றும், அந்த நிலைப்பாட்டினை மாற்றுவது கடினமானது என்ற போதிலும், தம்மைப் பற்றி ஏதேனும் மோசமான விம்பம் இருக்குமாயின், புதிய அரசாங்கத்தின் கீழ் அந்த அனைத்து அதிகாரிகளும் தம்மைப் பற்றிய விம்பங்களை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஊடகங்களுக்கு முன்பாக அதிகாரிகளை அச்சுறுத்துவது, அவர்களின் கருத்துக்களைப் புறக்கணிப்பது போன்ற செயற்பாடுகள் தமது அரசாங்கத்தின் கொள்கையல்ல எனவும், சுய ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உருவாக்குவதே புதிய மாற்றத்தின் அணுகுமுறையாக அமையும் எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதற்காக ஒன்றுபடுமாறு அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=196272
-
ஊழலில் ஈடுபட்ட அரசியல் திமிங்கிலங்களை ஜனாதிபதி பிடிக்கவேண்டும் - பாக்கியசோதி சரவணமுத்து
ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையின் கட்டமைப்பிற்குள் அதனுடன் இணைந்து செயற்படும் ஊழலில் ஈடுபட்ட திமிங்கிலங்களை பிடிக்கவேண்டும் என தெரிவித்துள்ள மாற்றுக்கொள்கை நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து இந்திய சீன உறவுகளில் சமநிலையை பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். அல்ஜசீராவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் ஊழலில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக உரிய ஆதாரங்கள் இல்லாதபோது அவர்களிற்கு எதிரான சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கும் ஆபத்து குறித்தும் எச்சரித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கேள்வி:- இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி நெருக்கடிகளிற்கு ஜனாதிபதி தீர்வை காண்பார் என மக்கள் எதிர்பார்ப்பது நாடாளுமன்ற தேர்தல் மூலம் தெரியவந்துள்ளது? ஜனாதிபதியிடம் இதற்கான பதில்கள் உள்ளனவா? பதில்- அவரிடம் இதற்கான அனைத்து பதில்களும் இருக்கும் என என்னால் உறுதியாக கூற முடியாது. ஆனால் அவர் நிச்சயமாக முயற்சி செய்வார் என நம்புகின்றேன். முக்கியமான விடயம்- சர்வதேச நாணயநிதியத்தின் கட்டமைப்பிற்குள் பணியாற்றுவது அதனுடன் இணைந்து பணியாற்றுவது எங்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பது. ஜனாதிபதி பல மானியங்களை நலன்புரி சேவைகளை வழங்குவது குறித்து பேசுகின்றார். வரிகளை குறைப்பது, மாற்றங்களின் சுமைகளை சுமக்க முடியாதவர்களிற்கு நிவாரணங்களை வழங்குவது குறித்தும் அவர் தெரிவிக்கின்றார். அவரால் இதனை சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்குள் செய்ய முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அவர்கள் இலங்கை வரவுள்ளனர். பேச்சுவார்த்தைகள் எவ்வாறானதாக காணமுடியும் என்பதை நாங்கள் பார்க்க முடியும். அவருக்கு உள்ள மிகப்பெரிய சவால் என்னவென்றால், ஊழல் ஒழிப்பு என்பதன் அடிப்படையிலேயே அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். இந்த அரசாங்கத்தின் அடிப்படையே அதனை அடிப்படையாக கொண்டது. இதன் காரணமாக ஊழலில் ஈடுபட்ட பெரிய மீன்களை ஜனாதிபதி சிறையில் தள்ளவேண்டும், இல்லாவிட்டால் இவ்வளவு பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் அவரது கட்சியை சேர்ந்தவர்களே நாங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என தெரிவிக்க கூடும். ஊழலில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வது அவ்வளவு சுலபமான விடயமல்ல. கேள்வி:- ஊழலை ஒளிப்பது என்பது ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட்டவேளை முன்வைத்த மிகப்பெரிய வாக்குறுதியாக காணப்பட்டது. அனுரகுமார திசநாயக்க அதனை எவ்வாறு செய்யப்போகின்றார்? தன்மீது களங்கத்தை ஏற்படுத்தாமல் அவர் இதனை எவ்வாறு செய்யப்போகின்றார்? பதில்- அனுரகுமார திசநாயக்கவிற்கு எதிராக எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. செய்தியாளர் - இல்லை, நான் அவ்வாறு எதனையும் தெரிவிக்கவில்லை கேள்வி - இந்த கூட்டணியில் உள்ள அரசியல்வாதிகளிற்கு எதிராக ஏதாவது ஒரு கட்டத்தில் விரல்கள் நீட்டப்படலாம்,? பதில்- இந்த அரசாங்கம் தனியொரு கட்சியை அடிப்படையாக கொண்டது அவர்களிற்கு எதிராக எந்த ஊழல் குற்றச்சாட்டும் பாரிய ஊழல் குற்றசாட்டுகளும்இல்லை. இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான ஆதாரங்கள் ஜனாதிபதியிடம் உள்ளதா என்பதே. அரசியல் ரீதியாக செய்தே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்படும்போது, அரசாங்கத்திடம் ஆதாரங்கள் இல்லாத போது அவர்கள் நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்ட பொறிமுறைகளிற்கு செல்வார்களா? இதுவே முக்கியமான கேள்வி? அது ஜனநாயக சுதந்திரம் உரிமைகளிற்கான மிகமிக ஆபத்தானதாக காணப்படும். கேள்வி- இது எங்களை இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்த கேள்விக்கு கொண்டுவருகின்றது. இலங்கை மறுசீரமைப்பை முன்னெடுக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் போன்ற அமைப்புகள் மாத்திரம் விரும்பவில்லை-உலக வங்கி உள்ளது. இலங்கை சீனாவிற்கு அதிக கடனை செலுத்தவேண்டியுள்ளது. சீனாவுடனான அந்த விசேட தொடர்பு காரணமாக அயல்நாடான இந்தியா மற்றும் அமெரிக்கா போன்றவை பிராந்திய மூலோபாய உறவுகள் குறித்து கவலையடைந்துள்ளன? பதில் - ஆம், ஆனால் அவர்கள் சீனா குறித்த அச்சத்தினை மிகைப்படுத்திவிட்டனர் என நான் கருதுகின்றேன். சீனர்கள் நிச்சயமாக இலங்கையில் கால்பதித்திருக்கவே வந்துள்ளனர். இதுவரையில் அபிவிருத்தி திட்டங்களை பொறுத்தவரை அதுவே உண்மை. இதுவரையில் நாங்கள் அந்த விடயத்தை இந்தியா விவகாரத்தில் சமநிலைப்படுத்துவதில் வெற்றியடைந்துள்ளோம். வெளிவிவகார கொள்கை தொடர்பில் இதுவே மிகப்பெரிய சவால் எங்களால் சீனர்களை அகற்ற முடியாது. இந்தியர்கள் எங்களுடன் எப்போதும் இருந்துள்ளனர். ஆகவே இருவரையும் சீற்றப்படுத்தாமல், அதிருப்தியடைய செய்யாமல் இருவருக்கும் இடையில் சமநிலை காண்பதற்கான வழிமுறைகளை நாங்கள் கண்டறியவேண்டும். https://www.virakesari.lk/article/199147
-
"வடக்கு கிழக்கில்" வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட வாய்ப்பு!!
கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 26.11.2024 மற்றும் 27.11.2024 திகதிகளை உள்ளடக்கிய 48 மணி நேரத்தில் 350 மி.மீ.இனை விட கூடுதலாக மழைவீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்புள்ளது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் தற்போது கிடைத்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக நிலம் நிரம்பு நிலையை எட்டியுள்ளது. சில பகுதிகளில் வெள்ள அனர்த்த நிலமைகள் ஏற்பட்டுள்ளன. எனவே கிடைக்கவுள்ள கனமழை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம். விவசாயிகளும் இக்கனமழையை கருத்தில் கொண்டு தங்களுடைய விவசாய நடவடிக்கைகளில் குறிப்பாக நெற் செய்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது அவசியம். எதிர்வரும் 26 மற்றும் 27ம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காற்று மணிக்கு 60 தொடக்கம் 80 கி.மீ. வரையான வேகத்தில் வீசும் வாய்ப்புள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் உள் நிலப்பகுதிகளில் காற்று 50 தொடக்கம் 70 கி.மீ. வேகத்தில் வீசும் வாய்ப்புள்ளது. எனவே கடுமையான காற்று வேகத்தினால் பாதிக்கப்படக் கூடிய மரங்கள் மற்றும் பழைய கட்டிடங்கள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். இதன் காரணமாக எதிர்வரும் 24.11.2024 முதல் 28.11.2024 வரை இலங்கையின் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது. அத்தோடு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை தொடர்ந்து கிடைக்கும். அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களே…. இத்தாழமுக்கம் புயலாக மாறாது விட்டாலும் மேலுள்ள அதி தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் கடற் கொந்தளிப்பான நிலைமைகள் நிகழும். எனவே முன்கூட்டிய பாதுகாப்பு தயார்ப்படுத்தல் முறைமைகளைப் பின்பற்றுவது எமக்கு ஏற்படும் பாதிப்புக்களை கணிசமாகக் குறைக்கும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிர்வாக அதிகாரிகள் இந்த தாழமுக்கம்/புயல் தொடர்பாக அவதானம் செலுத்துவது சிறந்தது. இரா சுரேன் முன்னாள் தவிசாளர் நகராட்சி மன்றம் வல்வெட்டித்துறை https://www.facebook.com/story.php?story_fbid=122118624032561987&id=61566859632700&rdid=ji5djbeZajyRmKg7# முகப்புத்தக இணைப்பை பிரதான செய்தியாக நான் இணைப்பதில்லை, ஆனாலும் தகவலின் உள்ளடக்கம் சம்பந்தமாக இணைய வானிலைத் தரவுகளைப் பார்வையிட்டபோது தீடீர் வெள்ள(flash flood) எச்சரிக்கை காணப்பட்டது.
-
யாழ்ப்பாணத்தில் அடை மழையால் 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பதிப்பு!
சமைத்த உணவு அரசாங்கம் வழங்குகிறது அக்கா.
-
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதானி மீது அமெரிக்காவில் வழக்கு
US-ன் அதிரவைக்கும் குற்றச்சாட்டுகள்; படிக்க படிக்க என்ன இருக்கிறது? Adani Issue Full Details இந்தியாவின் பெருங்கோடீஸ்வர்களின் ஒருவரான கௌதம அதானி மீது அமெரிக்காவில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று ஒரே நாளில் Adani Enterprises-ன் சந்தை மதிப்பு 23 சதவீதமும் Adani Green Energy-ன் சுமார் 19 சதவீதமும், Adani Energy Solutions 20 சதவீதமும் சரிவை கண்டன. அதானி குழுமத்தின் பிற நிறுவனங்களின் பங்குகள் 10 முதல் 20 சதவீதம் வரை சரிவை கண்டன. மொத்தத்தில் இன்றைய வர்த்தகத்தின் முடிவில் அதான் குழுமத்தின் பங்கு மதிப்பு 2 லட்சத்து 30 ஆயிரம் கோடி வரை சரிந்தது. ஆனால் அமெரிக்க நீதிமன்றத்தின் அந்நாட்டின் அரசு வழக்கறிஞர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அதானி குழுமம், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளது. சரி, அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டு என்ன? இந்தியாவில் இது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்ன? இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
பாதிக்கப்பட்டவரின் ஆதங்கம்!!
-
யூடியூப் தளத்தால் புது வாழ்வு பெற்ற பார்வை மாற்றுத் திறனாளி தபேலா இசைக் கலைஞர் - காணொளி
பார்வை இல்லனா என்ன? YouTube-ல் கவனம் ஈர்க்கும் இசைக்கலைஞர் இவர் தான் அருண் ஜஞ்சால், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகோலா மாவட்டத்தின் மோர்காவோன் கிராமத்தில் பிறந்த இவருக்கு பிறவியிலேயே பார்வைத் திறன் கிடையாது. தபேலா இசைக்கலைஞரான இவர் தன்னுடைய திறமையால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
இந்தியா, ஆஸி. துடுப்பாட்ட வரிசைகள் வேகப்பந்துவீச்சாளர்களால் சின்னாபின்னம்; முதல் நாளில் 17 விக்கெட்கள் (நெவில் அன்தனி) பேர்த் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் உலகின் முதல்நிலை டெஸ்ட் அணிகளுக்கு இடையிலான முதலாவது போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் வேகப்பந்துவீச்சுக்களை எதிர்கொள்ள முடியாமல் திக்குமுக்காடிப் போயின. போட்டியின் ஆரம்ப நாளான வெள்ளிக்கிழமை (22) 17 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டதுடன் அவை அனைத்தும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சொந்தமாகின. வேகப்பந்துவீச்சாளர்கள் இருவர் தலைவர்களாக விளையாடும் இப் போட்டியின் முதல் நாளன்று வேகப்பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா 49.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 150 ஓட்டங்களுக்கு சுருண்டது. இந்தியாவின் முன்வரிசை வீரர்கள் யஷஸ்வி ஜய்ஸ்வால் (0), டேவ்டத் படிக்கல் (0), மூத்த அனுபவசாலி விராத் கோஹ்லி (5), கே.எல். ராகுல் (26), மத்திய வரிசையில் த்ருவ் ஜுரெல் (11), வொஷிங்டன் சுந்தர் (4) ஆகியோர் ஆட்டம் இழக்க இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 73 ஓட்டங்களாக இருந்தது. எனினும் ரிஷாப் பான்ட், நிட்டிஷ் குமார் ரெட்டி ஆகிய இருவரும் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி இந்தியாவை பெரு வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றினர். ரிஷாப் பான்ட் 37 ஓட்டங்களையும் நிட்டிஷ் குமார் ரெட்டி 41 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் இருவரும் 7ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 48 ஓட்டங்களே முதலாம் நாள் ஆட்டத்தில் அதிசிறந்த இணைப்பாட்டமாக இருந்தது. பின்வரிசையில் எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டவில்லை. பந்துவீச்சில் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும், மிச்செல் மார்ஷ் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், மிச்செல் ஸ்டார்க் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், அணித் தலைவர் பெட் கமின்ஸ் 67 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலியா முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்களை இழந்து 67 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இந்தியாவைப் போன்றே அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வரிசையும் வேகப்பந்துவீச்சில் சிதறிப்போனது. உஸ்மான் கவாஜா (8), மானுஸ் லபுஸ்ஷேன் (2), ஸ்டீவன் ஸ்மித் (0), மிச்செல் மார்ஷ் (6), பெட் கமின்ஸ் (3) ஆகிய அனைவரும் தங்களது விக்கெட்களை எதிரணியின் வேகப்பந்துவீச்சில் தாரைவார்த்தனர். அவுஸ்திரேலிய துடுப்பாட்டத்தில் மூவர் மாத்திரமே 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர். அலெக்ஸ் கேரி 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார். அவரை விட ட்ரவிஸ் ஹெட் (11), நேதன் மெக்ஸ்வீனி (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் பதில் அணித் தலைவர் ஜஸ்ப்ரிட் பும்ரா 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும், மொஹமத் சிராஜ் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், ஹர்ஷித் ரானா 33 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/199454
-
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் செய்திகள்
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் : இலங்கை அணியில் நியூட்டன், மாதுளன் | 17 வயதுக்குட்பட்ட பங்களாதேஷுக்கு எதிரான இலங்கை அணியில் ஆகாஷ் (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி மற்றும் பங்களாதேஷுக்கு எதிரான 17 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் தொடர் ஆகியவற்றில் பங்குபற்றவுள்ள இலங்கை கனிஷ்ட அணிகளில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளம் வீரர்கள் இடம்பெறுகின்றனர். கனிஷ்ட இலங்கை அணிகளில் ஒரே நேரத்தில் 3 யாழ். வீரர்கள் இடம்பெறுவது இதுவே முதல் தடடைவயாகும். சில வருடங்களுக்கு முன்னர் யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தார். யாழ். மத்திய கல்லூரியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ரஞ்சித்குமார் நியூட்டன், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் மாலிங்க பாணி வேகப்பந்துவீச்சாளர் கே.மாதுளன் ஆகிய இருவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியில் இடம்பெறுகின்றனர். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் வீ. ஆகாஷ் 17 வயதுக்குட்பட்ட பங்களாதேஷுடனான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் இடம்பெறுகிறார். இந்த மூன்று வீரர்களும் தம்புள்ளை பிராந்திய அணியில் திறமையை வெளிப்படுத்தியதன் பலனாக இலங்கை கனிஷ்ட அணிகளில் இடம்பிடித்துள்ளனர். இது இவ்வாறிருக்க, இந்த மூன்று வீரர்களுக்கும் கிரிக்கெட் உபகரணங்களை இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்வான்களில் ஒருவரான குமார் சங்கக்கார அன்பளிப்பு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/199324
-
தென் ஆபிரிக்கா - இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென் ஆபிரிக்க குழாத்தில் மீண்டும் டெம்பா நெவில் அன்தனி இலங்கைக்கு எதிராக அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான தென் ஆபிரிக்க குழாத்தில் மீண்டும் அணித் தலைவர் டெம்பா பவுமா இணைந்துகொண்டுள்ளார். இடது முழங்கையில் காயமடைந்ததால் அண்மையில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் விளையாடாமல் இருந்த வழமையான அணித் தலைவர் டெம்பா பவுமா பூரண குணமடைந்ததை அடுத்து குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை முன்னிட்டு 14 வீரர்களைக் கொண்ட குழாத்தை தென் ஆபிரிக்கா நேற்றுமுன்தினம் அறிவித்தது. பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியவர்களில் மேலும் இருவர் நீக்கப்பட்டு மார்க்கோ ஜென்சென், ஜெரால்ட் கோயெட்ஸி ஆகியோர் அணிக்கு மீளழைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு எதிராக இந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடிய பின்னர் அவர்கள் இருவரும் முதல் தடவையாக டெஸ்ட் குழாத்தில் இடம்பெறுகின்றனர். 'டெம்பா குணமடைந்த பிறகு அணியை மீண்டும் வழிநடத்த இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. அவரது தலைமைத்துவமும் திறிமையும் அணிக்கு விலைமதிப்பற்றவை' என தென் ஆபிரிக்க டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்றுநர் ஷுக்ரி கொன்ரட் தெரிவித்தார். 'டெம்பா ஓய்வில் இருந்தபோது பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் அணித் தலைமையைப் பொறுப்பேற்று அதனை வெற்றிகரமாக நிறைவேற்றிய ஏய்டனுக்கு நன்றிகூற விரும்புகிறேன்' எனவும் அவர் குறிப்பிட்டார். வேகப்பந்துவீச்சாளர்களான ஜென்சன், கோயெட்ஸீ ஆகியோரது மீள்வருகையும் அணிக்கு வலு சேர்ப்பதாக அவர் தெரிவித்தார். தென் ஆபிரிக்க ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமையும் என்பதால் கெகிசோ ரபாடா, டேன் பேட்டர்சன், வியான் முல்டர் ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர். இதற்கு அமைய 5 பந்துவீச்சாளர்கள் குழாத்தில் இடம்பெறுகின்றனர். அதேவேளை, கேஷவ் மஹாராஜ், சேனுரன் முத்துசாமி ஆகிய இருவரும் பிரதான சுழல்பந்துவீச்சாளர்களாக அணியில் இடம்பெறுகின்றனர். நடப்பு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்புகள் இலங்கைக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இருப்பதால் இந்த டெஸ்ட் தொடர் இரண்டு அணிகளுக்கும் முக்கியம் வாய்ந்ததாக அமையவுள்ளது. டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகளுக்கான தரவரிசையில் அவுஸ்திரேலியா 62.50 சதவீத புள்ளிகளுடன் முதலாம் இடத்திலும் இந்தியா 58.33 சதவீத புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இலங்கை 55.56 சதவீத புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் நியூஸிலாந்து 54.55 சதவீத புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும் தென் ஆபிரிக்கா 54.17 சதவீத புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றன. தென் ஆபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டேர்பனில் எதிர்வரும் 27ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதிவரையும் இரண்டாவது டெஸ்ட் போட்டி போர்ட் எலிஸபெத்தில் எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதியிலிருந்து 9ஆம் திகதிவரையும் நடைபெறவுள்ளது. தென் ஆபிரிக்கா டெஸ்ட் குழாம் டெம்பா பவுமா (தலைவர்) டேவிட் பெடிங்ஹாம் ஜெரால்ட் கோயெட்ஸீ டோனி டி ஸோர்ஸி மார்க்கோ ஜென்சன் கேஷவ் மஹராஜ் ஏய்டன் மார்க்ராம் வியான் முல்டர் சேனுரன் முத்துசாமி டேன் பெட்டர்சன் கெகிசோ ரபாடா ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் ரெயான் ரிக்கெல்டன் கய்ல் வெரின் https://www.virakesari.lk/article/199290
-
இலங்கை நியூஸிலாந்து ரி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்
முதலாவது விக்கெட்டை ஷிராஸ் கைப்பற்றிய ஆட்டம் 21 ஓவர்களுடன் மழையினால் கைவிடப்பட்டது (நெவில் அன்தனி) கண்டி, பல்லேகலையில் செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்ற இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி 21 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழையினால் கைவிடப்பட்டது. எவ்வாறாயினும் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றியீட்டிய இலங்கை, 3 போட்டிகள் கொணட தொடரை 2 - 0 என தனதாக்கிக்கொண்டது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து 21 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது பிற்பகல் 4.00 மணியளவில் கடும் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. வில் யங் 8 பவுண்டறிகள் உட்பட 56 ஓட்டங்களுடனும் ஹென்றி நிக்கல்ஸ் 46 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். 9 ஓட்டங்களுடன் ஹென்றி நிக்கல்ஸை ஆட்டம் இழக்கச் செய்த மொஹமத் ஷிராஸ், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது முதலாவது விக்கெட்டைக் கைப்பற்றினார். சுமார் ஒன்றரை மணித்தியாலங்களின் பின்னர் மழை விட்டதால், ஆடுகளமும் மைதானமும் மாலை 6.00 மணியளவில் பரீச்சிக்கப்படும் என பிற்பகல் 5.30 மணிக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த அறிவிப்பு விடுக்கப்பட்ட சற்று நேரத்தில் மீண்டும் மழை பெய்ததால் ஆடுகள பரிசீலனை கைவிடப்பட்டது. இரவு 7.30 மணியளவில் மழை ஓய்ந்தபோதிலும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் மீண்டும் கடும் மழை பெய்யத் தொடங்கியது. இதனை அடுத்து இரவு 7.53 மணிக்கு போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது இவ்வாறிருக்க, முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸன்க, கமிந்து மெண்டிஸ், அசித்த பெர்னாண்டோ ஆகிய நால்வருக்கும் ஓய்வு வழங்கப்பட்டது. தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள அவர்கள் நால்வருக்கும் போதிய ஓய்வு வழங்க தேர்வாளர்கள் தீர்மானித்தனர். அத்துடன் துனித் வெல்லாலகேயும் இப் போட்டியில் விளையாடவில்லை. இந்த ஐவருக்குப் பதிலாக நிஷான் மதுஷ்க, நுவனிது பெர்னாண்டோ, மொஹமத் ஷிராஸ், அறிமுக வீரர் சமிந்து விக்ரமசிங்க, ஜனித் லியனகே ஆகியோர் இறுதி அணியில் இடம்பிடித்தனர். ஆனால், மழை காரணமாக அவர்களால் முழு போட்டியை அனுபவிக்க முடியாமல் போனது. மூன்றாவது போட்டி கைவிடப்பட்ட நிலையில் தொடர்நாயகன் விருது குசல் மெண்டிஸுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகனுக்கான பரிசை குசல் மெண்டிஸ் சார்பில் அவிஷ்க பெர்னாண்டோ பெற்றார். https://www.virakesari.lk/article/199188
-
தென் ஆபிரிக்கா - இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இலங்கை குழாத்தில் ஓஷத, நிஷான் - நெவில் அன்தனி தென் ஆபிரிக்காவுக்கு எதிராக இந்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட 17 வீரர்களைக் கொண்ட இலங்கை டெஸ்ட் குழாத்தில் துடுப்பாட்ட வீரர் ஓஷத பெர்னாண்டோ, சுழல்பந்துவீச்சாளர் நிஷான் பீரிஸ் ஆகியோர் இடம்பெறுகின்றனர். நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பிரகாசிக்கத் தவறிய ரமேஷ் மெண்டிஸ் நீக்கப்பட்டுள்ளார். அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா உட்பட 10 வீரர்கள் ஏற்கனவே தென் ஆபிரிக்கா சென்று அங்கு நீல் மெக்கென்ஸியின் கீழ் விசேட பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். எஞ்சிய 7 வீரர்கள் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை இங்கிருந்து தென் ஆபிரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளனர். இலங்கைக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டேர்பன், கிங்ஸ்மீட் விiயாட்டரங்கில் நவம்பர் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 2ஆவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டி கெபெர்ஹா, சென். ஜோர்ஜஸ் பார்க் அரங்கில் டிசம்பர் 2ஆம் திகதி ஆரம்பமாகும். இலங்கை டெஸ்ட் குழாம் தனஞ்சய டி சில்வா (தலைவர்) பெத்தும் நிஸ்ஸன்க திமுத் கருணாரட்ன தினேஷ் சந்திமால் ஏஞ்சலோ மெத்யூஸ் குசல் மெண்டிஸ் கமிந்து மெண்டிஸ் ஓஷத பெர்னாண்டோ சதீர சமரவிக்ரம ப்ரபாத் ஜயசூரிய நிஷான் பீரிஸ் லசித் எம்புல்தெனிய மிலன் ரத்நாயக்க அசித்த பெர்னாண்டோ விஷ்வா பெர்னாண்டோ லஹிரு குமார கசுன் ராஜித்த https://www.virakesari.lk/article/199136
-
யாழ்ப்பாணத்தில் அடை மழையால் 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பதிப்பு!
அடை மழை காரணமாக 2,294 பேர் பாதிப்பு! தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக யாழ். குடா நாட்டில் 610 குடும்பங்களைச் சேர்ந்த 2,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதில் தென்மராட்சி பிரதேசத்தில் 13 குடும்பங்களை சேர்ந்த 43 பேர் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மராட்சி பிரதேசத்தின் நாவற்குழி மற்றும் கொடிகாமம் பிரதேச குடியிருப்புகளுள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் நாவற்குழி அன்னை சனசமூக நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://tamil.adaderana.lk/news.php?nid=196257
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
STUMPS 1st Test, Perth, November 22 - 26, 2024, India tour of Australia India 150 Australia (27 ov) 67/7 Day 1 - Australia trail by 83 runs. Current RR: 2.48 • Last 10 ov (RR): 29/2 (2.90)
-
உக்ரைன் மீது ரஸ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல்
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பயன்படுத்தியே தாக்கினோம் - புட்டின் ரஸ்யா புதிய கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பயன்படுத்தியே உக்ரைனின் நிப்ரோ நகரின் மீது தாக்குதலை மேற்கொண்டதுஎன என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். அமெரிக்க பிரிட்டனின் நீண்டதூர ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலிற்கு பதிலடியே இந்த தாக்குதல் என அவர் தெரிவித்துள்ளார். ரஸ்யாவின் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு ஆயுதங்களை வழங்கும் நாடுகளின் ஆயுததளபாட தொழிற்சாலைகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படும் என புட்டின் எச்சரித்துள்ளார். அஸ்ட்ராகன் பகுதியிலிருந்து ஐசிபிஎம் ஏவுகணையை ரஸ்யா செலுத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. நிப்ரோவை பல்வேறு ஏவுகணைகளால் ரஸ்யா இலக்குவைத்தது என உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. ரஸ்யாவின் ஆறு கேஎச்-101 ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தியதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஸ்யா மீது தனது ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கிய மறுநாள் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/199399