Everything posted by ஏராளன்
-
ஓமந்தை ஏ-9 பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியது!
யாழ்ப்பாணம் ஏ9 வீதி மீண்டும் வழமைக்கு திரும்பியது 28 NOV, 2024 | 11:40 AM சீரற்ற வானிலை காரணமாகப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் ஏ9 வீதி தற்போது மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். ஓமந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நொச்சிமோட்டை மற்றும் ஓமந்தை நகரம் ஆகிய பகுதிகளில் ஏ9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவில் வெள்ள நீர் வழிந்தோடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது வெள்ள நீர் குறைவடைந்துள்ளதால் யாழ்ப்பாணம் ஏ9 வீதி மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/199908
-
இளைஞர்கள் இடையே வேகமாக பரவும் எய்ட்ஸ்!
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் கூட்டாளர்களைக் கண்டறிதல் மற்றும் முறையான பாலியல் கல்வி இல்லாதது போன்ற காரணங்களால் இளைஞர்களிடையே எச்ஐவி தொற்று அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் பதிவான எச்.ஐ.வி தொற்றுக்களில் 15 சதவீதம் பேர் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என அந்த திட்டத்தின் இயக்குநர், சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் விந்தியா குமரிபெலி தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார். “கடந்த ஆண்டு, எச்.வி.ஐ வைரஸால் பாதிக்கப்பட்ட 694 புதிய நோயாளிகள் நம் நாட்டில் பதிவாகியுள்ளனர். தரவுகளைப் பார்க்கும்போது, புதிதாக HVI வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது தெளிவாகிறது. குறிப்பாக இளைஞர்களிடையே கிடைக்கும் தரவுகளைப் பார்க்கும்போது, புதிய நோயாளிகள் 15% பேர் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களாகும். இதை மேலும் ஆராயும் போது செல்போன் உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் மூலம் புதிய உறவுமுறை கூட்டாளர்களை கண்டுபிடிப்பதே இதற்குக் காரணம் என்று தெரிகிறது. அல்லது சரியான பாலியல் கல்வி பெறவில்லை. சில மருந்துகளுக்கு அடிமையாதல் போன்ற விடயங்கள் இளைஞர்களிடையே புதிய தொற்றுநோய்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது" என்றார். https://tamil.adaderana.lk/news.php?nid=196541
-
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற 'ஃபெங்கல்' புயல் - எங்கு மழை பெய்யக்கூடும்?
வேகம் குறைந்த 'ஃபெங்கல்': எங்கே நிலைகொண்டுள்ளது? எப்போது கரையைக் கடக்கும்? - சமீபத்திய தகவல்கள் பட மூலாதாரம்,IMD.GOV.IN படக்குறிப்பு, தமிழகத்தின் கனமழை எச்சரிக்கை டிசம்பர் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வரும் 30-ம் தேதி கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக தீவிரமடையும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போதைய அறிக்கைபடி, நவம்பர் 30 ஆம் தேதி தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைக்கு அருகில் கரையைக் கடக்கும் முன் வலுவிழக்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து, தமிழகத்தின் கனமழை எச்சரிக்கை டிசம்பர் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நவம்பர் 28 முதல் 30 வரை கனமழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 2 கி.மீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, திருகோணமலைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 110 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் இலங்கை கடற்கரையை ஒட்டி வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் வாய்ப்பு அதிகம். அதன்பிறகு, இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை நவம்பர் 30-ஆம் தேதி காலை கடக்கும், அப்போது மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் காற்று வீசும். இதனிடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. நவம்பர் 28 மாலை முதல் 29 நவம்பர் காலை வரை தென்மேற்கு வங்கக் கடலில் மணிக்கு 65-75 கிமீ வேகத்தில் (இடையிடையே 85 கிமீ) காற்று வீசக்கூடும்.” என்று குறிப்பிட்டுள்ளது. வேகம் குறைந்த புயல் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நேற்று புயலாக வலுப்பெறக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரம்பத்தில் தெரிவித்தது. இதற்கு ‘ஃபெங்கல்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "தென் மேற்கு வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது வேகம் குறைந்து வெறும் 3 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது" என தெரிவித்திருந்தது. நேற்று (27 நவம்பர்), மாலை 5.30 மணி நிலவரப்படி, இலங்கையின் திருகோணமலைக்கு கிழக்கு-வடகிழக்கில் 100 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 320 கி.மீ. தூரத்திலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கே 420 கி.மீ. தூரத்திலும், சென்னை தென் கிழக்கே 500 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டு இருக்கிறது. ” எனக் குறிப்பிட்டிருந்தது. புயல் வரும் 30 ஆம் கரையை கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், இன்று (வியாழக்கிழமை) முதல் டிசம்பர் 2ம் தேதி வரை மழை தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். இன்றைய மழை நிலவரம் தமிழகத்திற்கு புயல் ஆபத்து சற்று தணிந்துள்ள நிலையில் இன்று, வியாழக்கிழமை கடலூர், காரைக்கால், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்வாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களில் எங்கு மழை பெய்யும்? காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கனமழையின் காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா விவசாயிகள் கவலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக, டெல்டா பகுதிகளில் உள்ள விளைநிலங்களை மழைநீர் சூழ்ந்துள்ளதாக ஊடக செய்திகள் கூறுகின்றன. திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் விளை நிலங்களில் கனமழையால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மீனவர்களுக்கான எச்சரிக்கை தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, நவம்பர் 28-ஆம் தேதி மாலை முதல் 29-ஆம் தேதி காலை வரை புயலாக வலுவடையும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. `29ஆம் தேதி முதல் தீவிர மழை’ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுயாதீன வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான், ``இன்று டெல்டா முதல் சென்னை வரை பகல்/இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யும். பகலில் குளிர்ந்த காற்று வீசக்கூடும். 29ம் தேதி முதல் தீவிர மழை தொடங்கி 30ம் தேதி வரை காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும். டிசம்பர் 1 மற்றும் 2ல் மிதமான மழை பெய்யலாம்” என்று கணித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c704p4wzpy7o
-
அருச்சுனாவுக்கு நீதிமன்றம் பிடியாணை
அர்ச்சுனா எம்.பி நீதிமன்றில் முன்னிலை வாகன விபத்தில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாதமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது. அவர் சட்டத்தரணி ஊடாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்வதற்கு யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க அண்மையில் (26) உத்தரவிட்டிருந்தார். 2021ஆம் ஆண்டு பேஸ்லைன் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பிலான வழக்கு, இன்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=196551
-
க.பொ.த உயர்தர பரீட்சை 3 நாட்களுக்கு ஒத்திவைப்பு!
க.பொ.த. உயர்தர பரீட்சை டிசம்பர் 4 ஆம் திகதி மீள ஆரம்பம் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் 28 NOV, 2024 | 03:22 PM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மேலும் மூன்று நாட்கள் பிற்போடப்படுவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உயர்தரப் பரீட்சையை நவம்பர் மாதம் 30 ஆம் திகதியும் டிசம்பர் மாதம் 2 ஆம் மற்றும் 3 ஆம் திகதிகளில் நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. பிற்போடப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகளில் சில எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். இது தொடர்பில் கருத்துத்தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவிக்கையில், சீரற்ற வானிலை தணிந்து வரும் போதிலும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை பரீட்சையை நடத்த மாட்டோம். எனவே 6 நாட்களுக்கு பரீட்சைகள் நடைபெறாது. மீண்டும் டிசம்பர் 4ஆம் திகதி புதன்கிழமை முதல் பரீட்சை நடைபெறும். இதுவரை வெளியிடப்பட்டுள்ள பரீட்சை அட்டவணையின்படி, டிசம்பர் 4 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ள பாடங்களுக்கான பரீட்சையே அன்றைய தினம் நடத்தப்படும். இதேவேளை, பொது அறிவுப் பரீட்சை டிசம்பர் மாதம் 7ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும். அன்றைய தினம் புதிய நேர அட்டவணையை வேறு நிறத்தில் அச்சிட்டு வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள் மீண்டும் இடம்பெறும் திகதிகள் பின்வருமாறு திகதிகளில் நடைபெறவுள்ளன. அந்தவகையில், நவம்பர் மாதம் 27 ஆம் திகதி நடைபெறவிருந்த பரீட்சைகள் டிசம்பர் 21 ஆம் திகதி நடைபெறும். நவம்பர் 28 ஆம் திகதி நடைபெறவிருந்த பரீட்சைகள் டிசம்பர் 23 ஆம் திகதி நடைபெறும். நவம்பர் 29 ஆம் திகதி நடைபெறவிருந்த பரீட்சைகள் டிசம்பர் 27 ஆம் திகதி நடைபெறும். நவம்பர் 30 ஆம் திகதி நடைபெறவிருந்த பரீட்சைகள் டிசம்பர் 28 ஆம் திகதி நடைபெறும். டிசம்பர் 2 ஆம் திகதி நடைபெறவிருந்த பரீட்சைகள் டிசம்பர் 30 ஆம் திகதி நடைபெறும். டிசம்பர் 3 ஆம் திகதி நடைபெறவிருந்த பரீட்சைகள் டிசம்பர் 31 ஆம் திகதி நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/199903
-
உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் பல குழந்தைகளை காணவில்லை
உழவு இயந்திர விபத்து - காணாமல் போன சாரதியின் உதவியாளர் பொலிஸ் நிலையம் வருகை அம்பாறை, கரைத்தீவு பிரதேசத்தில் இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் நீரில் மூழ்கி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட உழவு இயந்திரத்தின் உதவியாளர் காரைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (28) காலை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியிருந்த அவர், வெள்ளச் சூழ்நிலையின் போது பாதுகாப்புப் படையினரின் அறிவுறுத்தலை மீறி உழவு இயந்திரத்தில் பணத்திற்காக ஆட்களை ஆபத்தான முறையில் ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக காரைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, உழவு இயந்திரம் கவிழ்ந்து காணாமல் போன 4 பாடசாலை மாணவர்கள், உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் மற்றுமொருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனினும், இரண்டு மாணவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சீரற்ற காலநிலையின் போது வவுனியாவில் ஏரி ஒன்றில் நீர் வெளியேற்றத்தை பார்வையிடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், திருகோணமலை யான் ஓயா ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற நபரும் படகு கவிழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மக்கள் ஆபத்தான சூழ்நிலையை கருத்திற் கொள்ளாததன் காரணமாகவே அனர்த்தத்தினால் அதிகளவான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஜனக ஹந்துன்பதிராஜா தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=196552
-
அஸ்வெசும கொடுப்பனவு : விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு முக்கிய அறிவித்தல்
அஸ்வெசும விண்ணப்பதாரர்களுக்கான விசேட அறிவிப்பு அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கூடுதல் அவகாசம் மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிவாரணத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசத்தை 09.12.2024 வரை நீட்டிக்க நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது. இதுவரை அஸவெசும நிவாரணப் பயனாளிகள் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாத குடும்பங்கள் மற்றும் நபர்களுக்கு 25.11.2024 முதல் 02.12.2024 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் நாட்டில் நிலவும் மோசமான வானிலையை கருத்திற்கொண்டு இந்த காலவகாசம் மேலும் ஒருமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=196526
-
க.பொ.த உயர்தர பரீட்சை 3 நாட்களுக்கு ஒத்திவைப்பு!
உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை மேலும் மூன்று நாட்கள் பிற்போடப்படுவதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சையை நவம்பர் 30, டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 3 ஆம் திகதிகளில் நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக 27, 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் உயர்தரப் பரீட்சையை நடத்துவதில்லை என முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் சீரற்ற வானிலை தணிந்து வரும் போதிலும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=196533
-
போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் அதிகளவில் உயிர்மாய்ப்பு
நாட்டில் அதிகளவில் உயிரைமாய்த்துக்கொள்பவர்கள் ஐஸ் மற்றும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் கம்பஹா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் 10 பேர் உயிரை மாய்த்துக்கொண்டு உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 16 மற்றும் 65 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பயன்பாடானது உடல் ஆற்றலை அதிகரிப்பதுடன், குழப்பம், பதற்றம், விரைவான இதயத்துடிப்பு உள்ளிட்ட உடல் நலப்பாதிப்புகளை ஏற்படுத்துவதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். அத்துடன், தூக்கமின்மை, நினைவாற்றல் இழப்பு உள்ளிட்ட உடல் நலப்பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றமையால் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. https://thinakkural.lk/article/312773
-
எச்சரிக்கை; இன்று சூறாவளியாக வலுவடையும் தாழமுக்கம்!
திருகோணமலைக்கு வடகிழக்கில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் : நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு சாத்தியம்! 28 NOV, 2024 | 06:53 AM சக்தி மிக்க தாழ் அமுக்கமானது வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் திருகோணமலையிலிருந்து வடகிழக்குத் திசையில் சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருப்பது இன்று அதிகாலை 2.30 மணியளவில் அவதானிக்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இந்த தாழமுக்கமானது, மெதுவாக நகர்ந்து செல்கின்றது. மேலும் தீவிரமடைவதுடன் இன்று சூறாவளியாக வலுவடைந்து இலங்கையின் கிழக்குக் கரையை அண்மித்து வடக்கு - வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் சூழ்ந்து காணப்படும். வட மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றுடன் கூடிய மிகப் பலத்த மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 150 மில்லிமீற்றரிலும் கூடிய மிகப் பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் கேகாலை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு,வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி மிகப் பலத்த காற்று வீசக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும். பலத்த காற்று, மின்னல் தாக்கங்கள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட்டு இழப்புகளை அல்லது சேதங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். வங்காள விரிகுடாவில் சக்தி மிக்க தாழ் அமுக்கம் சூறாவளியாக வலுவடைய இருப்பதனால் நாட்டை சூழ உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். இந்த காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோமீற்றராக அதிகரித்ததும் காணப்படும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் அடிக்கடி மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 - 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெழக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இது கரையை தொடக்கூடும் தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என்றார். https://www.virakesari.lk/article/199890
-
உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் பல குழந்தைகளை காணவில்லை
அம்பாறையில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் காணாமல்போன மாணவர்களில் நால்வர் சடலங்களாக மீட்பு 28 NOV, 2024 | 09:34 AM அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகில் உழவு இயந்திரம் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்த 6 மாணவர்களில் 4 மாணவனின் சடலங்கள் புதன்கிழமை (27) மீட்கப்பட்டுள்ளதுடன் காணாமற்போன ஏனைய இரு மாணவர்கள், மற்றும் உழவு இயந்திரத்தின் சாரதி உதவியாளரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நிந்தவூர் பிரதேசத்தில் இருந்த மதுரசா ஒன்றிலிருந்து சம்பவதினமான செவ்வாய்க்கிழமை (26) மாலை சம்மாந்துறை பிரதேசத்தை நோக்கி 11 மாணவர்களுடன் பயணித்த உழவு இயந்திரம் மாவடிப்பள்ளி பாலத்துக்கு அருகில் வீதியைவிட்டு விலகி தடம்புரண்ட விபத்திற்குள்ளானதையடுத்து வெள்ள நீரில் மூழ்கியதில் 5 பேர் காப்பாற்றப்பட்ட நிலையில் 6 மாணவர்கள் மற்றும் சாரதி, உதவியாளர் உட்பட 8 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காணாமல் போனவர்களைக் கடற்படையினரின் உதவியுடன் புதன்கிழமை (27) தேடும் நடவடிக்கையின் போது 4 மாணவர்களை நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்டனர் இருந்தபோதும் காணாமல் போன இரு மாணவர்கள் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரையும் சீரற்ற கால நிலைக்கும் மத்தியில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/199889
-
வழமைக்கு திரும்பியது யாழ்.போதனா வைத்தியசாலையின் சேவைகள்
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனைத்து சேவைகளும் வழமை போல நடைபெறுவதாக வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெள்ளப் பெருக்கு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சில விடுதி பகுதிகளில் நீர் புகுந்துள்ளது. மேலும், பல ஊழியர்களின் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அவர்கள் வேலைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமது வீட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் பொருட்படுத்தாமல் பல ஊழியர்கள் சேவையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால், சாதாரண வைத்திய சேவைகளை வழங்குவதில் சிக்கல்கள் இருக்கக்கூடும் என அறிவித்திருந்தோம். இருப்பினும் பெரும்பாலான ஊழியர்கள் மக்களுக்கான சேவைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடமைக்கு வந்துள்ளார்கள். ஆகையால் அனைத்து சேவைகளும் வழமை போல நடைபெறுகின்றன. அனர்த்தம் காரணமாக விபத்துக்களால் பாதிக்கப்பட்ட அல்லது தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இனிமேல்தான் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் எதிர்காலத்தில் டெங்கு தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் வைத்தியசாலைக்கு வருகை தரக்கூடும் என எதிர்பார்க்கின்றோம். ஆகையால் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். https://thinakkural.lk/article/312775
-
வடக்கு கிழக்கில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு தொடர்பான செய்திகள்
கட்டைபறிச்சான் இறால் பாலத்தையும் அரபாநகர் பாலத்தினுடைய நிலைமைகளையும் ஆராய்ந்தார் கிழக்கு ஆளுநர் 28 NOV, 2024 | 10:07 AM திருகோணமலை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மூதூர் கிழக்கு - கட்டைபறிச்சான் இறால் பாலம் மற்றும் மூதூர்- அரபாநகர் பாலம் ஆகியவற்றின் நிலைமைகளை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்தலால் ரத்னசேகர நேரில் சென்று ஆராய்ந்தார். திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா மற்றும் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோர் நேற்று புதன்கிழமை (27) மாலை குறித்த இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தனர். இதன் போது பிரதேச மக்களிடம் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/199894
-
புதிய அரசியலமைப்பில் பொதுத் தேர்தல் முறைமை மாற்றமும் உள்ளடக்கப்படவேண்டும்
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் போல கலப்புத் தேர்தல் முறை ஒன்று கட்டாயம் தேவை. தேசியப்பட்டியலில் கட்டாயம் 25பேர் (மாவட்டத்திற்கு ஒருவர்) பெண்களுக்கு வாய்ப்பும் 9பேர் (மாகாணத்திற்கு ஒருவர்) மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பும் வழங்கப்படவேண்டும்.
-
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற 'ஃபெங்கல்' புயல் - எங்கு மழை பெய்யக்கூடும்?
புயல் நிலவரம்: தமிழகத்தில் நவ.30 வரை மழை எச்சரிக்கை; மீனவர்கள் கரைக்குத் திரும்ப அறிவுறுத்தல் 27 NOV, 2024 | 04:02 PM சென்னை: சென்னையில் இருந்து தெற்கு - தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக் கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் நவம்பர் 30 வரை மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி மாலை வரை மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நேற்று (நவ.26) காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ.27) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, இலங்கை – திரிகோணமலையிலிருந்து கிழக்கு - தென்கிழக்கே சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 370 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தென்கிழக்கே 470 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு - தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக் கூடும். அதன்பிறகு, மேலும் வடக்கு - வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, இன்று (நவ.27) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நவ.28-ம் தேதி வியாழக்கிழமை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நவ.29-ம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவ.30-ம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிச.1-ம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிச.2-ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிச.3-ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தரைக்காற்று எச்சரிக்கை: இன்று (நவ.27) தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.நாளை (நவ.28) தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நவ.29 மற்றும் நவ.30-ம் தேதிகளில், வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில், இன்று (நவ.27) முதல் நவ.29ம் தேதி வரை, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நவ.30 மற்றும் டிச.1-ம் தேதிகளில், வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வங்க க்கடலின் ஆந்திர கடலோரப்பகுதிகளில், இன்று (நவ.27) காலை முதல் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு, காற்றின் வேகம் உயர்ந்து, இன்று மாலை முதல் 30-ம் தேதி காலை வரை காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று (நவ.27) காலை முதல் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு, காற்றின் வேகம் உயர்ந்து, மாலை முதல் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும், நவ.28-ம் தேதி காலை காற்றின் வேகம் மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு, காற்றின் வேகம் சற்று குறைந்து நவ.29-ம் தேதி வரை மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும், நவ.30-ம் தேதி காலை காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று (நவ.27) காலை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு, காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து, 29-ஆம் தேதி மாலை வரை மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அரபிக்கடல் பகுதிகளில், நவ.27ம் தேதி முதல் நவ.29ம் தேதி வரை, தெற்கு கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/199856
-
புதிய அரசாங்கத்தின் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற வேலைத்திட்டத்துக்கு அவுஸ்திரேலியா பாராட்டு
27 NOV, 2024 | 09:37 PM புதிய அரசாங்கத்தின் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற வேலைத்திட்டம் முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன் (Paul Stephens) தெரிவித்தார். இலஞ்சம் மற்றும் ஊழலற்ற பொறிமுறையை நாடு முழுவதிலும் ஸ்தாபிக்க அரசாங்கம் கொண்டுச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு எந்த நேரத்திலும் ஆதரவளிக்க தயாரெனவும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்தார். இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன் (Paul Stephens) இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்தார். அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையில் காணப்படும் 75 வருட உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொண்டு இரு நாடுகளுக்கு இடையிலான நெருக்கமான தொடர்புகளை மேலும் பலப்படுத்தி முன்னோக்கி கொண்டுச் செல்ல எதிர்பார்ப்பதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு, கடல்சார் அலுவல்கள், டிஜிட்டல் மயமாக்கம், அரச துறை நவீனமயப்படுத்தல், தொழில் கல்வி, வலுசக்தி உள்ளிட்ட துறைகளில் அவுஸ்திரேலியாவின் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (கிளீன் ஸ்ரீலங்கா) வேலைத்திட்டத்தை பாராட்டிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், அதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார். இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் பிரதி உயர்ஸ்தானிகள் லலிதா கபூர் ( Lalita Kapur ) ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் ரொஷான் கமகே உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/199885
-
"வடக்கு கிழக்கில்" வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட வாய்ப்பு!!
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் இராணுவத்தினர் 27 NOV, 2024 | 06:55 PM வசந்தபுரம் தாழ்வு நில பகுதியில் வெள்ள நீர் வீட்டுக்குள் புகுந்த நிலையில் விரைந்து சென்று மீட்பு பணியில் இராணுவத்தினர், பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையில் தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மழை பெய்துவருகின்றது. இதனால் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததனால் பாடசாலைகளில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (26) பெய்த கனமழையால் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வசந்தபுரம் கிராமத்தின் தாழ்வு நில பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. அதனையடுத்து கேப்பாப்பிலவு இராணுவ முகாம் பொறுப்பதிகாரி ஜெனரல் கெட்டியாராய்ச்சி தலைமையிலான இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட மக்கள் தற்போது கரிவேலன்கண்டல் பாடசாலை இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/199876
-
கனேடிய இலங்கை இரட்டைக் குடியுரிமை பெற்ற யாழ் கணக்காளர் விமான நிலையத்தில் கைது!
உங்களுக்கு கழுகுப் பார்வை!!
-
இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம் தொடங்கியது
இஸ்ரேல் - ஹெஸ்பொலா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் - எப்படி அமல்படுத்தப்படும்? முழு தகவல் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, செப்டம்பர் மாத இறுதியில் ஹெஸ்பொலாவுக்கு எதிராக இஸ்ரேல் படையெடுப்பை தொடங்கியது இஸ்ரேலுக்கும் இரானின் ஆதரவுடன் இயங்கும் ஆயுதக்குழுவான ஹெஸ்பொலாவுக்கும் இடையே 13 மாத கால மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். “லெபனானில் நடைபெறும் மோதலை நிறுத்தவும், ஹெஸ்பொலா மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல்களில் இருந்து இஸ்ரேலைப் பாதுகாப்பதாகவும் இந்த ஒப்பந்தம் இருக்கும்" என்று அமெரிக்காவும் பிரான்ஸும் வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன. அதிகாரப்பூர்வ விளக்கங்கள் மற்றும் ஊடக செய்திகளில் இருந்து இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றி நமக்கு தெரிந்த தகவல்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. அதிபர் பைடன் கூறியதென்ன? “நிரந்தர போர் நிறுத்தம் கொண்டுவருவதற்கு ஏற்ப இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது", என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, 60 நாட்களில் ஹெஸ்பொலா தனது படைகளையும், ஆயுதங்களையும் நீலக் கோடு (Blue Line) பகுதிக்கும் அங்கிருந்து வடக்கே 30 கிமீ தொலைவில் உள்ள லிடானி நதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்து அகற்றும். நீலக் கோடு பகுதி என்பது லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற எல்லை ஆகும். அந்த பகுதியில் உள்ள ஹெஸ்பொலா குழுவினருக்கு பதில் லெபனான் ராணுவப் படைகள் அமர்த்தப்படுவார்கள். மீண்டும் கட்டியெழுப்ப முடியாத அளவுக்கு அங்குள்ள உள்கட்டமைப்பு, ஆயுதங்களை லெபனான் ராணுவம் அகற்றும் என்று மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதே 60 நாட்களில், இஸ்ரேல் படிப்படியாக அங்கு எஞ்சியுள்ள தனது படைகளையும் பொதுமக்களையும் திரும்பப் பெறும். எல்லையின் இருபுறமும் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கு இந்த நடவடிக்கை உதவும் என்று அதிபர் பைடன் கூறியுள்ளார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஹெஸ்பொலா ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள், ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இஸ்ரேல் மீது ஏவியுள்ளது ஹெஸ்பொலாவுக்கு மாற்றாக லெபனான் படை ஒப்பந்தத்தின் படி லெபனான் ராணுவம் 5,000 ராணுவ வீரர்களை தெற்கில் நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனாலும், போர்நிறுத்தத்தை அமல்படுத்துவதில் அவர்களின் பங்கு என்ன என்பதை பற்றியும் தேவைப்பட்டால் அவர்கள் ஹெஸ்பொலாவை எதிர்கொள்வார்களா என்பது பற்றியும் கேள்விகள் எழுந்துள்ளன. அவ்வாறு எதிர்கொள்ளும் நடவடிக்கையால், ஏற்கனவே அதிகமான பிளவுகள் உள்ள நாட்டில் மேலும் பதற்றம் அதிகரிக்கக்கூடும் என்றும் கருதப்படுகின்றது. போர்நிறுத்த ஒப்பந்தத்தில் தனது பொறுப்புகளை நிறைவேற்ற போதுமான பணம், படைகள் மற்றும் ஆயுதங்கள் தங்களிடம் இல்லை என்று லெபனான் ராணுவம் கூறியுள்ளது. ஆனால், லெபனானின் சில சர்வதேச நட்பு நாடுகள் ஆதரவு வழங்கி, அவர்களின் இந்தப் பிரச்னைக்கு உதவ முடியும். ஹெஸ்பொலா இப்போது முன்பை விட பலவீனமாக உள்ளது என்றும் லெபனான் அரசாங்கம் தங்கள் நாட்டில் முழு கட்டுப்பாட்டையும் எடுத்து அதன் அதிகாரம் எல்லா இடங்களிலும் நிலைநிறுத்துவதை உறுதி செய்வதற்கு இதுவே சரியான நேரம் என்றும் பல மேற்கத்திய நாடுகள் கருதுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிரந்தர போர் நிறுத்தம் கொண்டு வருவதற்கு ஏற்ப இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ளார். போர் நிறுத்த அமலாக்கத்தை யார் கண்காணிப்பார்கள்? இந்த ஒப்பந்தம், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 1701ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்த தீர்மானம் 2006-ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உதவியது. தீர்மானம் 1701-இன் படி, லிடானி நதியின் தெற்கே உள்ள பகுதிகளில் லெபனான் அரசாங்கம் மற்றும் ஐ.நா.வின் அமைதி காக்கும் படையினரை தவிர, ஆயுதக் குழுக்களோ அல்லது ஆயுதங்களோ இருக்கக்கூடாது. ஆனால் இரு தரப்பினரும் தீர்மானத்தை மீறியதாகக் கூறப்படுகின்றது. அப்பகுதியில் விரிவான உள்கட்டமைப்புகளை உருவாக்க ஹெஸ்பொலா அனுமதிக்கப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. அதே நேரத்தில் லெபனான் எல்லையில் ராணுவ விமானங்களை இயக்கியதன் மூலம் இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை மீறியதாக லெபனான் கூறுகிறது. இந்த முறை, அமெரிக்காவும் பிரான்ஸூம் தற்போதைய முத்தரப்பு குழுவில் இணையும். இதில் ஏற்கனவே ஐ.நா.வின் அமைதி காக்கும் படை, லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகியவை இருக்கின்றன. “ஒப்பந்தம் எந்த வகையிலாவது மீறப்படுகின்றதா என இந்த குழு கண்காணிக்கும்”என்று ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி தெரிவித்தார். “இப்பகுதியில் அமெரிக்கப் போர் படைகள் இருக்காது, ஆனால் முன்பு நடந்தது போலவே லெபனான் ராணுவத்திற்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை வழங்கும். ஆனால், இந்த விஷயத்தில் லெபனான் ராணுவம், பிரான்ஸ் ராணுவத்தினருடனும் இணைந்து செயல்படும்", என்று அந்த அதிகாரி கூறுகிறார். இஸ்ரேலின் கவலைகளைக் குறிப்பிட்டு, ''தெற்கு லெபனானில் உள்ள ஹெஸ்பொலாவின் பயங்கரவாதத் தளங்கள் மீண்டும் உருவாக அனுமதிக்கப்பட மாட்டாது'' என்று அதிபர் பைடன் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒப்பந்தத்தை மீறி, ஹெஸ்பொலா தாக்குதல் நடத்த முயற்சித்தால் இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தும் என்று நெதன்யாகு எச்சரித்தார். இந்த ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் கூறுவதென்ன? “லெபனானில் 'அமெரிக்காவின் முழு புரிதலுடன்' ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் முழு சுதந்திரத்தை இஸ்ரேல் வைத்திருக்கும்'' என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறினார். “ஒப்பந்தத்தை மீறி, ஹெஸ்பொலா ஆயுத தாக்குதல் நடத்த முயற்சித்தாலோ, எல்லையில் பயங்கரவாத உட்கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்கமுயற்சித்தாலோ, ராக்கெட்டை ஏவினாலோ, சுரங்கம் தோண்டினாலோ இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தும்", என்று நெதன்யாகு எச்சரித்தார். “ஹெஸ்பொலா அல்லது வேறு யாரோ இந்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேலை நேரடியாக அச்சுறுத்தினால், சர்வதேச சட்டத்தின்படி இஸ்ரேலுக்குத் தற்காத்துக் கொள்ள உரிமை இருக்கிறது” என்று இஸ்ரேலின் நிலைப்பாட்டை அமெரிக்க அதிபர் பைடன் ஆதரித்தார். மேலும் இந்த ஒப்பந்தம் லெபனானின் இறையாண்மையையும் மதிக்கிறது என்றும் அவர் கூறினார். தேவைப்பட்டால் திருப்பி தாக்குவதற்கான உரிமையை இஸ்ரேல் கோரியுள்ளது. ஆனால் இதனை லெபனான் நிராகரித்துள்ளதால், இஸ்ரேலின் நிலைப்பாடு, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக நம்பமுடியவில்லை என கருதப்படுகின்றது. இந்த பிரச்னையை தீர்க்க, இஸ்ரேலின் இந்த நிலைபாட்டை ஆதரித்து, அமெரிக்கா ஒரு கடிதம் அனுப்பக்கூடும் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cvgw6plye1no
-
வடக்கு கிழக்கில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு தொடர்பான செய்திகள்
மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம் 27 NOV, 2024 | 06:59 PM முள்ளியவளை பகுதியில் மரம் முறிந்து வீட்டுக் கூரையின் மீது விழுந்ததால் வீட்டின் மேற்பக்கக் கூரை முற்றாக சேதமடைந்த சம்பவம் இன்று புதன்கிழமை (27) இடம்பெற்றுள்ளது. காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்துவரும் நிலையில், கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை 1ம் வட்டாரம் கிராமத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் அதிகாலை வீட்டின் அருகில் இருந்த பெரிய புளிய மரம் முறித்து விழுந்துள்ளது. அதனையடுத்து வீட்டின் மேற்பக்கக் கூரை முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது. குறித்த சம்பவத்தின்போது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர். https://www.virakesari.lk/article/199877
-
கனேடிய இலங்கை இரட்டைக் குடியுரிமை பெற்ற யாழ் கணக்காளர் விமான நிலையத்தில் கைது!
விமானத்தில் பெண்ணின் கைப் பையை திருடினார்! லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை (26.11.24) மதியம் வந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் அலுவலக உதவியாளரின் கைப்பையை திருடிய கணக்காளர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய காவற்துறையினர் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவில் வசிக்கும் பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த, இரட்டைக் குடியுரிமையுடைய 55 வயதான அலுவலக உதவியாளர் சிறி ஷ்யாமலி வீரசிங்கவின் கைப் பையே திருடப்பட்டிருந்தது. அவர் செவ்வாய்க்கிழமை (26.11.24) மதியம் 01.30 மணியளவில் லண்டனில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-504 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்தார். அவளது கைப்பையில் 14 இலட்சத்து இருபத்து மூவாயிரத்து ஐந்நூறு ரூபாய் பெறுமதியான 2,700 ஸ்டெர்லிங் பவுண்ஸ், 02 புதிய வகை கையடக்கத் தொலைபேசிகள் (ஐ போன்) மற்றும் 02 சாம்சுங் ரக கைத்தொலைபேசிகள் இருந்தன. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், இந்த கைப் பை தொலைந்து போனதால், அந்த பெண் இலங்கை விமான போக்குவரத்து அதிகாரசபையிடம் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த விமானத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலையில், இது தொடர்பில் விமானத்தின் விமானிக்கு அறிவித்ததையடுத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விசாரணை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், கட்டுநாயக்க விமான நிலைய காவற்துறை அதிகாரிகளுடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் புலனாய்வு அதிகாரிகள் பயணிகளையும் அவர்களது பயணப் பொதிகளையும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். காணாமல் போன கைப்பையை, இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 60 வயதுடைய கணக்காளர் ஒருவரிடமிருந்த மீட்ட அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். இவர், கனடாவிலும் இலங்கையிலும் இரட்டைக் குடியுரிமையைப் பெற்றவர் ஆவார். அந்த நேரத்தில், அவர் ஏற்கனவே திருடப்பட்ட ஸ்ரேலிங் பவுண்டுகளைப் பயன்படுத்தி விமானத்தில் விற்கப்பட்ட 06 விஸ்கி போத்தல்கள் மற்றும் 03 சுவடா விலவுன் போத்தல்களை வாங்கியுள்ளார், மேலும் மீதமுள்ள ஸ்டெர்லிங் மற்றும் மொபைல் போன்களும் அவரது கைப்பையில் இருந்து மீட்கப்பட்டன. பின்னர், இலங்கை புலனாய்வு அதிகாரிகள், அந்த பயணியை கட்டுநாயக்க விமான நிலைய காவற்துறையிடம் ஒப்படைத்துள்ளனர், அவர்கள் பயணியை கைது செய்து கட்டுநாயக்க விமான நிலைய காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். கட்டுநாயக்க விமான நிலைய காவற்துறை உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அ திருடப்பட்ட பணம் மற்றும் பொருட்களுடன் அவரை, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (27.11.24) ஆஜர்படுத்தப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2024/208729/
-
கூகுள் மேப்ஸை நம்பி பயணித்ததால் ஏற்பட்ட விபரீதம்!
உ. பி: பாதி கட்டப்பட்ட பாலத்திலிருந்து விழுந்த கார்; மேப்ஸ் மீது புகார் - கூகுள் அளித்த பதில் என்ன? பட மூலாதாரம்,VIRAL VIDEO படக்குறிப்பு, பரேலியில் முழுமையாக கட்டிமுடிக்கப்படாத பாலத்தில் இருந்து ஒரு கார் விழுந்து மூன்று பேர் உயிரிழந்தனர். எழுதியவர், சையத் மொஸிஸ் இமாம் பதவி, பிபிசி செய்தியாளர் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலியில் நடந்த கார் கார் தொடர்பாக நான்கு பொதுப் பணித் துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அளிக்கப்பட்ட புகாரில் கூகுள் மேப்ஸின் மண்டல மேலாளரின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கவனக் குறைவின் காரணமாக மூன்று இளைஞர்கள் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தனர். இவர்கள் கூகுள் மேப்ஸின் வழிக்கட்டுதல்களின் படி அங்குள்ள பாலத்தின் மீது காரை ஓட்டிச் சென்றுள்ளதாக நம்பப்படுகிறது. அந்த பாலம் முழுமையாக கட்டிமுடிக்கப்படவில்லை. இதனால் அதில் சென்று கொண்டிருந்த கார் கீழே விழுந்தது. இந்த சம்பவத்தில் கூகுள் மேப்ஸின் மண்டல மேலாளர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.மேலும் இந்த வழக்கு விசாரணையில் தங்களது முழு ஆதரவையும் வழங்குவதாக கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் உறுதியளித்துள்ளார். புகாரின் படி, அஜீத், நிதின், அமித் ஆகிய மூன்று நபர்களும் பதாயுனில் இருந்து பரேலியில் உள்ள ஃபரித்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். ராம்கங்கா ஆற்றின் மேல் பாதி கட்டப்பட்டுள்ள பாலத்தின் மீது அவர்கள் கார் சென்ற போது பாலத்தின் மேலிருந்து கிழே விழுந்தது. இதில் மூவரும் உயிரிழந்தனர். படக்குறிப்பு, இந்த விபத்தில் அஜித், அமித் மற்றும் நிதின் (இடமிருந்து) ஆகியோர் உயிரிழந்தனர். கூகுள் மேப்ஸ் மீது புகார் பொதுப் பணித் துறையின் துணை பொறியாளர்களான அபிஷேக் குமார் மற்றும் முகமத் ஆரிப் ஆகியோர் மீதும், இளநிலை பொறியாளர்களான மகாராஜ் சிங் மற்றும் அஜய் கங்வார் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "இந்த பொதுப்பணித் துறை அதிகாரிகள் அந்த பாலத்தின் அருகில் எந்த விதமான தடுப்போ அல்லது எச்சரிக்கை பலகைகளையோ நிறுவவில்லை. மேலும் இந்த பாலம் முழுவதும் கட்டப்படவில்லை என்பதை குறிக்க எந்த வித அறிவிப்பும் வைக்கவில்லை" என புகார்தாரர் குற்றஞ்சாட்டியுள்ளார். அந்த பாலத்தின் ஏற்றத்தில் இருந்த மெல்லிய சுவர் அடையாளம் தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளது என்று முதல் தகவல் அறிக்கை கூறுகிறது. இந்த வழியை கூகுள் மேப்ஸில் தேடினால், இங்கு எந்த தடையும் இல்லை என்றும், இது வாகனங்கள் செல்லக்கூடிய பாதைதான் என்றும் காட்டியதாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. "இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. கூகுள் மேப்ஸ் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை கூகுள் நிர்வாகிகளின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்படவில்லை", என்று ததாகஞ்ச் காவல் நிலைய ஆய்வாளர் கௌரவ் விஷனோய் பிபிசி ஹிந்தியிடம் கூறினார். பட மூலாதாரம்,VIRAL VIDEO கூகுள் நிறுவனம் கூறியதென்ன? இந்த சம்பவத்திற்கு பிறகு கூகுள் மேப்ஸுக்கு பிபிசி ஹிந்தி மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியது. "இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விஷயத்தில் தொடர்புடைய அதிகாரிகளுடன் இணைந்து வழக்கு விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறோம்" என்று கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் பதில் அளித்துள்ளார். இதில் உயிரிழந்தவர்கள் நிதின் குமார்(30) மற்றும் அவரது சகோதரர்களான அமித் குமார் மற்றும் அஜீத் குமார் ஆவார். நிதின் மற்றும் அமித் ஆகிய இருவரும் ஃபரூகாபாத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் தூரத்து உறவினர்தான் அஜீத். நிதினும் அஜித்தும் குருகிராமில் ஓட்டுநாராக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் மூவரும் தங்களது குடும்பத் திருமணத்தில் பங்கேற்க ஃபரித்பூர் சென்றுகொண்டிருந்தனர். குருகிராமில் இருந்து கிளம்பிய இவர்கள், பதாயுனில் உள்ள ததாகஞ்ச் வழியாக ராம்கங்கா பாலத்தில் ஏறியுள்ளனர். ''இவர்கள் மூவரும் திருமண நிகழ்ச்சிக்காக எனது வீட்டிற்கு காரில் வந்துகொண்டிருந்தனர். மொபைலில் மேப் மூலமாக வழி தேடி வந்துக்கொண்டிருந்த இவர்களின் கார், ராம்கங்கா பாலம் அருகே வந்தபோது கிழே விழுந்துள்ளது'' என்கிறார் நிதினின் மாமா ராஜேஷ் குமார். ராம்கங்கா பாலத்தருகே வரும்பொழுது எந்த வித எச்சரிக்கை அறிவிப்பையும் மேப் வழங்கவில்லை என அவர்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இந்த விபத்திற்கு பிறகு அங்கு கூடி இருந்த மக்கள் மேப்பில் பாலத்தருகே எந்த தடையையும் காட்டவில்லை என்று தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம்,UP POLICE படக்குறிப்பு, ஃபரித்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அஷுதோஷ் ஷிவம் விபத்து எப்படி நடந்தது? இதற்கு யார் பொறுப்பு? ஃபரித்பூர் துணை காவல் கண்காணிப்பாளரான அஷுதோஷ் ஷிவம், சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்ததாக தெரிவித்தார். அந்த பாலம் முழுமையாக கட்டப்படவில்லை. மேலும் அங்கு எச்சரிக்கை பலகைகள் எதுவும் வைக்கப்படவில்லை. கார் மிகுந்த வேகத்தில் வந்ததால் கீழே விழுந்துள்ளது என்றார் அவர். இந்த பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தால் இடிந்து விழுந்தது, அதன் பிறகு இதனை மக்கள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது. பாலத்தில் எந்த வித எச்சரிக்கைப் பலகையும் இடம்பெறவில்லை என்ற பிடிஐ வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களும் 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த பாலத்தின் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டது என்று கூறுகின்றனர். “இந்த பாலம் உத்தர பிரதேசத்தின் மாநில பாலம் கார்ப்பரேஷனால் கட்டப்பட்டது. கட்டுமானப்பணி முடியாத பாலத்தின் வழி மூடப்படாமல் இருந்ததால் விபத்து நடந்துள்ளது. இதற்கு காரணமாக இருந்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ஃபரித்புர் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் குலாப் சிங் ஊடகங்களிடம் தெரிவித்தார். அதிகாலையில் நடந்த இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் காலை 9.30 மணி அளவில்தான் தங்களுக்கு தகவல் வழங்கியதாக காவல்துறை தெரிவித்தது. அந்த பாலத்தில் எந்த பாதுகாப்பு எச்சரிக்கையும் இல்லை என்றும் அந்த நேரத்தில் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்றும் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர்களின் உறவினர்கள்,நிர்வாகத்தின் அலட்சியமே இவர்களின் மரணத்திற்கு காரணம் என்று குற்றம்சாட்டினர். “அவர்களுடைய மொபைலில் எந்த மேப் சேவை பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை", என்று ஃபரித்புர் காவல் நிலைய ஆய்வாளர் ராகுல் சிங் பிபிசியிடம் கூறினார். மறுபுறம், விபத்தில் உயிரிழந்தவர்களின் மொபைலில் மேப் சேவை பயன்பாட்டில் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு அங்குள்ள அனைத்து சாலைகள் மற்றும் பாலங்களை ஆய்வு செய்ய பொதுப் பணித்துறைக்கு பதாயுன் மாவட்ட ஆட்சியர் நிதி ஸ்ரீவத்சவா உத்தரவிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c5ygnkp04rqo
-
மட்டக்களப்பில் வெள்ளம் - வயலுக்குள் சிக்கியுள்ள 7 விவசாயிகள்!
மட்டக்களப்பில் வயலில் சிக்கிய விவசாயிகள் - கெலிகொப்டர் மூலம் ஒருவர் மீட்பு 27 NOV, 2024 | 06:38 PM மட்டக்களப்பு புல்லுமலை தம்பட்டி மற்றும் மாவடி ஓடை வண்ணாத்தி ஆறு பகுதிகளில் உள்ள வயல்களில் வேளாண்மை நடவடிக்கைக்கு சென்ற 7 விவசாயிகள் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அங்கிருந்து வெளியேறி வீடு திரும்ப முடியாமல், இரு தினங்களாக வயலில் சிக்கியிருந்துள்ளனர். இந்நிலையில், அவர்களில் ஒரு விவசாயியை விமானப்படையினர் ஹெலிகொப்டர் மூலம் இன்று புதன்கிழமை (27) மீட்டனர். அந்த பகுதியிலுள்ள வயல்களில் வேளாண்மை காவலுக்கு கடந்த திங்கட்கிழமை (25) சென்ற மற்றும் வேளாண்மை நடவடிக்கைகளுக்காக புல்லுமலை தம்பட்டி வயல் பிரதேசத்தில் 3 விவசாயிகளும் மாவடி ஓடை வண்ணாத்தி ஆறு வயல் பிரதேசத்தில் 4 பேர் உட்பட 7 விவசாயிகள் சென்றிருந்தனர். இந்நிலையில் கடும் மழை காரணமாக அந்த பகுதியிலுள்ள குளங்களின் வான்கதவு திறக்கப்பட்டதையடுத்து வயல் நிலங்கள் வெள்ளத்தில் முழ்கியதுடன், பல வீதிகள் நீரில் மூழ்கியதையடுத்து அந்த விவசாயிகள் தமது வாடிகளில் இருந்து வீடுகளுக்கு வெளியேற முடியாமல் சிக்கியிருந்துள்ளனர். இவ்வாறு சிக்குண்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் இன்று ஈடுபட்ட விமானப்படையினர் மலைவெட்டுவான் வயல் பகுதியில் சிக்குண்ட ஒருவரை ஹெலிகொப்டர் மூலம் மீட்டெடுத்தனர். அதேவேளை புல்லுமலை தம்பிட்டி வயல் பிரதேசத்தில் சிக்குண்ட 3 பேரில் ஒருவர் வெள்ளத்தில் நீந்தி கரையேறியுள்ளார். அத்துடன் ஏனைய இருவரையும் பொலிஸார் மீட்டுள்ளனர். அதேவேளை கொக்கச்சிமடு பகுதியில் வெள்ளத்தில் சிக்குண்டுள்ள 4 குடும்பங்களை மீட்பதற்காக ஹெலிகொப்டரில் இருந்து கயிறு இறக்கப்பட்டபோதும், அவர்கள் கயிற்றில் ஏறுவதற்கு அச்சப்பட்டு, கயிற்றில் ஏற மறுத்துள்ளனர். இதனால் அவர்களை மீட்க முடியாமல் ஹெலிகொப்டர் திரும்பிச் சென்றுள்ளது. மேலும், கொக்கச்சிமடு பகுதியில் சிக்குண்டிருக்கும் 4 குடும்பங்களை படகின் மூலம் மிட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. https://www.virakesari.lk/article/199875
-
வெள்ள அனர்த்தம் தொடர்பான உதவிகளை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்குங்கள்
உதவிகளை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்குங்கள் யாழில் 634 பேர் இடைத்தங்கல் முகாமில் யாழ்ப்பாணத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் தொடர்பான கந்துரையாடலானது மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட செயலர், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வழங்க முன்வரும் தனியார் தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் உரிய பிரதேச செயலகங்கள் ஊடாக உதவிப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதற்காக பிரதேச செயலகத்தில் பதவி நிலை உத்தியோகத்தர் ஒருவர் பொறுப்பில் உதவிப் பொருட்கள் உரிய நபருக்கு உரிய நேரத்தில் வழக்கப்படடும் என்பதனை பிரதேச செயலாளர்கள் உறுதிப்படுத்திக்கொள்வதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலகத்திலும் இதற்கான தனி அலகு உருவாக்கப்பட்டுள்ளது. உணவு அல்லது உணவு அல்லாத பொருட்களை வழங்க முடியும். அதனை, மாவட்டச் செயலகத்தில் பிரதம கணக்காளர் பொறுப்பாகவிருந்து வழங்கப்பட்ட உதவிப் பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வெளிப்படைத் தன்மையுடன் உரிய உதவிப் பொருட்கள் பிரதேச செயலகங்களாலும், மாவட்டச் செயலகத்தாலும் வழங்கப்படும் என தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், உதவி மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். யாழில் 634 பேர் இடைத்தங்கல் முகாமில் யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 634 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் தொடரும் மழை காரணமாக மாவட்டத்தில் இன்றைய தினம் மதியம் வரையிலான கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 2ஆயிரத்து 855 குடும்பங்களை சேர்ந்த 09 ஆயிரத்து 854 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 46 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன. நல்லூர் , சாவகச்சேரி , நெடுந்தீவு மற்றும் சங்கானை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் 12 பாதுகாப்பு இடத்தங்கள் முகாம்களில் மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறித்த முகாம்களில் 191 குடும்பங்களை சேர்ந்த 634 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிர்வரும் மூன்று நாட்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குமாறு அப்பகுதி பிரதேச செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு , நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ள மக்கள் பிரதேச செயலர்களுக்கு அறிவித்து அவரின் சிபாரிசில் உலர் உணவு பொருட்களை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேங்கி நிற்கும் வெள்ளங்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் , யாழ் . மாநகர சபையும் , பிரதேச சபைகளும் ஈடுபட்டுள்ளனர். அதற்காக அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். கடல் மட்டம் உயர்வடைந்துள்ளமையால் , நிலத்தில் இருந்து கடலை நோக்கி செல்லும் நீரின் வேகம் குறைவடைந்துள்ளது. கடல் மட்டம் குறையும் போதே நீர் வழித்தோடும் அது வரையில் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் இனிவரும் காலங்களில் தொற்று நோய்கள் ஏற்பட கூடிய அபாயம் உள்ளது. அதனால் சுகாதாரம் சார்த்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவைப்பாடுகள் உள்ளன. அது தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையுடன் இணைந்து செயற்பட உள்ளோம் என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/208742/
-
'இரண்டே நிமிடங்களில் செய்து முடிப்போம்' - ரஷ்ய அணு ஆயுத தளத்தின் தயார் நிலை பற்றி முன்னாள் அதிகாரி தகவல்
பட மூலாதாரம்,RUSSIAN DEFENCE MINISTRY படக்குறிப்பு, ரஷ்யாவின் அணு ஆயுத தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாலிஸ்டிக் ஏவுகணை எழுதியவர், வில் வெர்னோன் பதவி, பிபிசி செய்திகள் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் யுக்ரேன் மீது ரஷ்யா முழுமையான தாக்குதலை ஆரம்பித்த போதே, அதன் அணு ஆயுத தளம் ராணுவ நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டதாக கூறுகிறார் ரஷ்யாவின் அணு ஆயுத தளம் ஒன்றில் பணியாற்றிய ஆண்டன். "அதற்கு முன்பு நாங்கள் பயிற்சிகளை மட்டுமே மேற்கொண்டிருந்தோம். ஆனால் போர் ஆரம்பித்த நாளில் ஆயுதங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன," என்று கூறுகிறார் அந்த முன்னாள் ராணுவ வீரர். "கடல் மற்றும் வான்வழியாக (அணு ஆயுத) தாக்குதல் நடத்த நாங்கள் தயார் நிலையில் இருந்தோம்," என்று அவர் கூறுகிறார். ரஷ்யாவுக்கு வெளியே உள்ள ஒரு ரகசிய அறையில் நான் ஆண்டனை சந்தித்தேன். பாதுகாப்பு காரணங்களுக்காக பிபிசி அவரை எங்கே சந்தித்தது என்பதை வெளியிடாது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவருடைய பெயர் மற்றும் முகம் உள்ளிட்ட அடையாளங்களும் வெளியிடப்படாது. ரஷ்யாவின் ரகசிய அணு ஆயுத தளம் ஒன்றில் பணியாற்றியவர் ஆண்டன். அவர் பிபிசியிடம் காட்டிய ஆவணங்களில் அவருடைய யூனிட், ரேங்க் மற்றும் அவர் எங்கே பணியாற்றினார் என்பது போன்ற தகவல்கள் இடம் பெற்றிருந்தன. பிபிசியால் அவர் கூறிய நிகழ்வுகளை சுயாதீனமாக உறுதி செய்ய இயலவில்லை. இருப்பினும் ரஷ்யா அந்த நேரத்தில் வெளியிட்ட அறிக்கைகளோடு அவர் கூறிய நிகழ்வுகள் ஒத்துப்போகின்றன. ரஷ்ய அதிகாரி கூறியது என்ன? யுக்ரேன் எல்லையில் ரஷ்ய துருப்புகள் நிறுத்தப்பட்ட பிறகு, ரஷ்யாவின் அணு ஆயுதப் படை பிரிவினர் (Russia’s nuclear deterrence forces) தங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்று விளாதிமிர் புதின் அறிவித்ததாக அவர் தெரிவித்தார். ஆண்டன் இதுகுறித்து கூறும் போது, போரின் முதல் நாளிலேயே தங்களது படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருடைய குழு அந்த தளத்தின் உள்ளே இருந்ததாகவும் கூறினார். எங்களிடம் ரஷ்ய அரசு தொலைக்காட்சி மட்டுமே இருந்தது என்று தெரிவித்த அவர், "அதற்கு என்ன அர்த்தம் என்று எனக்கு தெரியவில்லை. நான் என்னுடைய பணிகளை அப்படியே செய்தேன். போரில் நாங்கள் சண்டையிடவில்லை. நாங்கள் அணு ஆயுதங்களை பாதுகாத்து வந்தோம்," என்று அவர் தெரிவிக்கிறார். தயார் நிலைக்கான எச்சரிக்கை அறிவிப்பு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டது என்று அவர் கூறுகிறார். ஆண்டன் தெரிவித்த தகவல்கள், ரஷ்யாவில் உள்ள ரகசிய அணு ஆயுத தளங்களில் வீரர்கள் எப்படி பணியாற்றுகின்றனர் என்பதைப் பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்துகிறது. அங்கே பணியாற்றும் வீரர்கள் ஊடகவியலாளர்களை சந்தித்துப் பேசுவது மிகவும் அரிதானதாகவே உள்ளது. "இங்கு பணியாற்ற ஆட்களை தேர்வு செய்ய கடுமையான நடைமுறைகள் உள்ளன. ஒவ்வொருவரும் சிறந்த ராணுவ வீரர்கள்" என்று அவர் தெரிவித்தார். தொடர் சோதனைகள் நடைபெறும். பொய் பேசுகிறார்களா என்பதை கண்டறியும் 'லை-டிடெக்டர்' சோதனையும் நடத்தப்படும். சம்பளம் மிகவும் அதிகம். இந்த படையினர் போருக்கு அனுப்பப்பட மாட்டார்கள். அங்கு படை வீரர்களின் வாழ்க்கை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்று கூறுகிறார் அவர். "அங்குள்ள ராணுவ வீரர்கள் யாரும் தங்களின் அலைபேசிகளை அணு ஆயுத தளத்திற்கு கொண்டு வரவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டியது என்னுடைய கடமை," என்று அவர் கூறினார். "இது மிகவும் ரகசியமாக செயல்படும் ஒரு பிரிவாகும். இங்கே புது ஆட்கள் யாரும் கிடையாது. நீங்கள் உங்களின் பெற்றோர்களை காண விரும்பினால் மூன்று மாதங்களுக்கு முன்பே எஃப்.எஸ்.பி. அமைப்பிடம் அனுமதி வாங்கி இருக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார். படக்குறிப்பு, அணு ஆயுத தளத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் பிபிசி செய்தியாளரிடம் ரகசிய இடத்தில் சந்தித்து பேசினார் ஆண்டன் அந்த தளத்தின் பாதுகாப்புப் பிரிவில் அங்கம் வகித்தார். "எங்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு நிமிடங்களுக்குள் எங்களுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவுகளை நிறைவேற்றுவோம் (Our reaction time was two minutes)," என்று பெருமித உணர்வுடன் கூறுகிறார். ரஷ்யாவில் மட்டும் 4,380 அணு ஆயுதங்கள் உள்ளன என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. அவற்றில் 1700 மட்டுமே தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது நேட்டோ உறுப்பு நாடுகளில் உள்ள அணு ஆயுதங்களின் மொத்த எண்ணிக்கை சமமாக உள்ளது. பெரிய அளவிற்கு கதிரியக்கத்தை ஏற்படுத்தாத சிறிய ரக அணுஆயுதங்களை பயன்படுத்த புதின் தீர்மானிப்பாரா என்ற கவலை அதிகரித்து வருகிறது. அவற்றின் பயன்பாடு போரை அச்சுறுத்தும் அளவிற்கு ஆபத்தில் கொண்டு போய் விடக்கூடும். மேற்கத்திய நாடுகளின் பொறுமையை சோதிக்க தன்னாலான அனைத்தையும் ரஷ்யா செய்து வருகிறது. கடந்த வாரம் தான் அணு ஆயுத கொள்கைகளில் மாற்றத்தை அறிவித்தார் புதின். இந்த கொள்கைகள் எப்போது, எப்படி அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டும் நெறிமுறைகளை கொண்டது. அணு ஆயுதங்களை கொண்டிராத நாடுகள், அணு ஆயுத நாடுகளின் ஆதரவுடன், ரஷ்யாவை ஏவுகணைகள் மூலம் தாக்க முற்பட்டால் ரஷ்யா அணுஆயுத தாக்குதல் நடத்தும் என்று புதிய நெறிமுறை தெரிவிக்கிறது. பட மூலாதாரம்,RUSSIAN DEFENCE MINISTRY படக்குறிப்பு, அணு ஆயுத தளத்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட ராணுவ வீரர்கள் பலரும் சிறப்பு பயிற்சிகளைப் பெற்றவர்கள் ரஷ்யாவின் அணு ஆயுதங்களின் நிலை என்ன? இந்த புதிய நெறிமுறைகள் ரஷ்யா போரில் தோல்வி அடைவதற்கான சாத்தியங்களை அகற்றும் என்று ரஷ்ய அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் அனைத்தும் முழுமையாக செயல்படும் திறனுடன் உள்ளனவா? சில மேற்கத்திய நிபுணர்கள் இந்த ஆயுதங்கள் பலவும் சோவியத் காலத்தை சேர்ந்தவை. அவற்றில் பலவும் சரிவர வேலை கூட செய்யாமல் போகலாம் என்று கூறுகின்றனர். இந்த கூற்றை மறுக்கிறார் ஆண்டன். நிபுணர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் நபர்களின் கண்ணோட்டம் இது என்கிறார் அவர். சில இடங்களில் இதுபோன்ற பழமையான ஆயுதங்கள் இருக்கலாம். ஆனால் ரஷ்யாவிடம் மிகப்பெரிய ஆயுத கிடங்கு உள்ளது என்றும் அதில் அதிக ஆயுதங்கள் உள்ளன என்றும் அவர் கூறுகிறார். ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் அனைத்தும் செயல்படக்கூடியவை என்று அவர் கூறுகிறார். "அணு ஆயுத பராமரிப்பு பணிகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கும். ஒரு நிமிடம் கூட அந்த பணி நடைபெறாமல் இருப்பதில்லை," என்கிறார் அவர். முழுமையான அளவில் போர் துவங்கியதும், அவருக்கு 'க்ரிமினல் ஆர்டர்' என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அவருடைய படையினருக்கு எழுதப்பட்ட சில நெறிமுறைகள் குறித்து வகுப்பு எடுக்கப்பட்டதாக ஆண்டன் தெரிவிக்கிறார். "யுக்ரேன் மக்கள் அனைவரும் எதிராளிகள். அவர்கள் அழிக்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டது," என்று தெரிவிக்கும் அவர், எனக்கு அது ஒரு எச்சரிக்கையை அளித்தது. அது போர் குற்றம். நான் இந்த பரப்புரையை மேற்கொள்ளமாட்டேன் என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன். ஆனால் அவருடைய நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. போரில் பங்கேற்க நாட்டின் மற்றொரு பகுதியில் உள்ள படைக்கு, அனுப்பப்படுவார் என்றும் அவரிடம் கூறியுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யா மீது தாக்குதல் நடத்தும் யுக்ரேன் வீரர்கள் (கோப்பு காட்சி) ஆண்டனுக்கு நெருக்கடி போர்க் களத்தில் இருந்து தப்பி ஓடிய ரஷ்ய ராணுவத்தினர் பலரும் பிபிசியிடம் பேசும் போது, போரை எதிர்க்கும் 'பிரச்னைக்குரிய நபர்கள்' பீரங்கிகளுக்கு இரையாக்கப்பட்டனர் என்று கூறினார்கள். லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்திடம் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை. ஆண்டன் போர் முனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, போரில் பங்கேற்பதற்கு மறுப்பு தெரிவித்து ஒரு அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளார். அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது பதியப்பட்ட வழக்கு மற்றும் அவரின் பணிமாற்ற ஆணைகளை நிரூபிக்கும் ஆவணங்களை அவர் எங்களிடம் காண்பித்தார். பின்னர் போரில் இருந்து தப்பியோடி வந்த ரஷ்ய வீரர்கள் நடத்தும் தன்னார்வ அமைப்பின் உதவியோடு நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார் ஆண்டன். "நான் அணுசக்தி தளத்திலிருந்து தப்பித்து வந்திருந்தால், எஃப்.எஸ்.பி. கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கும். நான் நாட்டை விட்டு வெளியேற முடியாது" என்று தெரிவிக்கிறார் ஆண்டன். ஆனால் அவர் ஒரு சாதாரண படைக்கு மாற்றப்பட்டதால், உயர்மட்ட பாதுகாப்பு அனுமதி முறை தோல்வியடைந்தது என்று அவர் நம்புகிறார். பல ரஷ்ய வீரர்கள் இந்த போருக்கு எதிரானவர்கள் என்பதை உலகம் அறிய விரும்புவதாக ஆண்டன் கூறினார். போரில் இருந்து தப்பியோடியவர்களுக்கு உதவும் தன்னார்வ அமைப்பு, இடிடே லெஸோம் (Idite Lesom) (காடு வழியாக செல் அல்லது தொலைந்து போ என்று பொருள்) பிபிசியிடம் பேசும் போது, அவர்களின் உதவியை நாடுவோரின் எண்ணிக்கை மாதத்திற்கு 350 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தது. தப்பிச் செல்பவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளும் அதிகரித்து வருகின்றன. வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற பிறகு, தப்பியோடிய ஒருவர் கொல்லப்பட்டார். அப்படி தப்பியோடியவர்கள் மீண்டும் ரஷ்யாவுக்கு அழைத்துவரப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆண்டன் ரஷ்யாவை விட்டு வெளியேறிய பிறகும், பாதுகாப்பு படையினர் அவரை இன்னும் அங்கு தேடிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார். "நான் இங்கே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறேன்.” என்றார். அணு ஆயுத தளத்தில் உள்ள தனது நண்பர்களிடம் பேசுவதை நிறுத்திவிட்டதாக அவர் கூறுகிறார். ஏனெனில் அவர் அவர்களை ஆபத்தில் ஆழ்த்தலாம் என்று கூறுகிறார். "அவர்கள் பொய்யைக் கண்டறியும் லை டிடெக்டர் சோதனைகளுக்கு ஆளாவார்கள். அந்த சூழலில் நான் அவர்களுடன் பேசுவது அவர்களை குற்ற வழக்குகளை சந்திக்கும் நிலைக்கு ஆளாக்கும்," என்று கூறினார். ஆனால் மற்ற வீரர்கள் தப்பிக்க உதவுவதால் அதிக ஆபத்து அவருக்கு இருக்கிறது என்பதையும் உணர்ந்துள்ளார். "நான் உதவிகளை எவ்வளவு அதிகமாகச் செய்கிறேனோ, அவ்வளவு அதிகமாக என்னைக் கொல்ல அவர்களுக்கு வாய்ப்புகள் இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன்" என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx28zww9z33o