Everything posted by ஏராளன்
-
இந்தியத் தூதுவரை சந்தித்தது தமிழரசின் நாடாளுமன்றக் குழு..!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (21) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான தமிழரசின் நாடாளுமன்றக் குழுவுக்கும், இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான இந்த சந்திப்பின் போது, நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலும், தமிழரசுக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அத்தகைய அரசியல் நகர்வுகளில் இந்தியாவின் வகிபங்கு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/199367
-
யாழ்ப்பாணத்தில் அடை மழையால் 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பதிப்பு!
யாழ்ப்பாணத்தில் மழை வெள்ளத்தால் 610 குடும்பங்கள் பாதிப்பு! யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 610 குடும்பங்களை சேர்ந்த 2294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 20 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனைத்து முக அமைத்துவ பிரிவின் பிரதிபலிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில் அவர் மேலும் தெரிவிக்கையில், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் இதுவரை 34 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏழு வீடுகளும் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன. ஊர்காவல்துறை பிரதேச செயலர் பிரிவில் 111 குடும்பங்களை சேர்ந்த 475 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 10 குடும்பங்களை சேர்ந்த 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் எட்டு வீடுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தம் மற்றும் இடி மின்னல் தாக்கத்தால் 5 குடும்பங்களைச் சேர்ந்த 14பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது. தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் ஏழு குடும்பங்களை சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் 174 குடும்பங்களை சேர்ந்த 641 பேர் வெள்ள அணுத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது வீடு ஒன்றும் பகுதியளவில் செய்த அடைந்துள்ளது. காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 18 குடும்பங்களை சேர்ந்த 68 பேர் வெள்ள அர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 145 குடும்பங்களை சேர்ந்த 494 பேர் பல அர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 14 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு கொண்டும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது. யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 103 குடும்பங்களை சேர்ந்த 424 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/199364
-
புதிய சபாநாயகராக அசோக ரங்வெல தெரிவு
சபாநாயகர் பாரபட்சமின்றி, வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்வார் என நாம் நம்பிக்கை கொள்கிறோம் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) "சபாநாயகர் பாரபட்சமின்றி, வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்வார் என நாம் நம்பிக்கை கொள்கிறோம்" பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை, 10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக நியமிக்கப்பட்ட கலாநிதி அசோக சபுமல் ரன்வலவுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் உங்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். சகல பாராளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும், 225 உறுப்பினர்களும் பொதுமக்கள் சேவைக்காக அவர்கள் ஆற்ற வேண்டிய சேவைகளில் தங்கள் பங்கை சரியாகச் செய்வதற்கும் பக்கச்சார்பற்றவராகவும் வெளிப்படைத்தன்மையுடனும் செயற்படுவது உங்களது பொறுப்பாகும். அதேபோல், புதிய சபாநாயகரின் பொறுப்பையும் கடமையையும் அரசியலமைப்பிற்கு உட்பட்டவாறு, சட்டப்பூர்வமாக நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் முன்கொண்டு செல்வதற்கு இயலுமை கிட்ட வேண்டும் என மனமான எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். https://www.virakesari.lk/article/199334
-
தரமற்ற மருந்து விநியோகம்; 18 முன்னாள் அமைச்சர்களிடம் வாக்கு மூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
மருந்து மோசடி குறித்த விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பேன் - முன்னாள் சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண (எம்.மனோசித்ரா) சுகாதார அமைச்சில் கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மருந்து கொள்வனவு மோசடிகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு விசாரணைக்கும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க நான் தயார் என முன்னாள் சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்தார். மருந்து மோசடிகள் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக வியாழக்கிழமை (21) குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வருகை தந்த போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மருந்து கொள்வனவு மோசடிகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு விசாரணைக்கும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க நான் தயாராக இருக்கின்றேன். அமைச்சரவை தீர்மானங்கள் வெவ்வேறு அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய நிதி அமைச்சின் அங்கீகாரத்துடனேயே எடுக்கப்படுகின்றன. எனவே இவை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் எமது தரப்பில் பிரச்சினைகள் இல்லை. எவ்வாறிருப்பினும் நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் அவற்றுக்கு ஒத்துழைப்பதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம். உற்பத்தியின் போது மருந்து பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. அவை தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே நான் இங்கு முன்னிலையாகியிருக்கின்றேன். புதிய சுகாதார அமைச்சர் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/199325
-
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் ராணுவ தளபதிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த சர்வதேச நீதிமன்றம்
பட மூலாதாரம்,EPA / REUTERS / SUPPLIED படக்குறிப்பு, பெஞ்சமின் நெதன்யாகு, யோகவ் கேலண்ட், முகமது டெய்ப் இஸ்ரேல் பிரதமர், அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சருக்கும் மற்றும் ஹமாஸ் ராணுவ தளபதிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) நீதிபதிகள் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளனர். சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்பு குறித்த இஸ்ரேலின் மேல்முறையீட்டை சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணை பிரிவு (pre trial chamber - குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த முடியுமா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் விசாரணை பிரிவு) நிராகரித்த நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோகவ் கேலண்ட் மற்றும் ஹமாஸின் ராணுவ தளபதி முகமது டெய்ப் ஆகியோருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் சர்வதேச நீதிமன்றத்தின் வழக்கறிஞர் கரீம் கான், நெதன்யாகு, கேலண்ட் மற்றும் டெய்ப் மற்றும் (கொல்லப்பட்ட) இரு ஹமாஸ் தலைவர்களான இஸ்மாயில் ஹனியே மற்றும் யாஹ்யா சின்வாருக்கும் எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க கோரினார். மேலும், ஜூலை மாதம் காஸாவில் நடைபெற்ற வான்வழி தாக்குதலில் முகமது டெய்ப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறிய நிலையில் அவருக்கு எதிராகவும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு எதிராக நடைபெறும் போரில், போர் குற்றஙகள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களுக்கு இம்மூவரும் "பொறுப்பானவர்கள்" என்ற குற்றச்சாட்டுக்கு "நம்பத்தகுந்த ஆதாரங்கள்" உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த பிடிவாரண்டை அமல்படுத்தலாமா, வேண்டாமா என்பது குறித்த முடிவு, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளை தவிர்த்து, சர்வதேச நீதிமன்றத்தின் 124 உறுப்பினர் நாடுகளையும் பொறுத்தது. கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் அமைப்பினர் தெற்கு இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 251 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம்தான் இவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க கோரும் மனுவுக்கு அடிப்படையாகும். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸை அழித்தொழிக்கும் நோக்கத்துடன் ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியது. இதில், காஸாவில் குறைந்தது 44,000 பேர் கொல்லப்பட்டதாக, ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் கூறுவது என்ன? சர்வதேச நீதிமன்றத்தின் இந்த முடிவுக்கு இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு, “யூத எதிர்ப்பு மனநிலையிலானது” என்றும் “நவீன கால டிரேஃபஸ் விசாரணை (Dreyfus trial)” என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. டிரேஃபஸ் விசாரணை என்பது, 19-ஆம் நூற்றாண்டில் பிரான்சில் உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் யூத ராணுவ அதிகாரி மீது நடத்தப்பட்ட விசாரணை ஒரு தேசிய நெருக்கடியைத் தூண்டியது. ''பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டார், [காஸாவில்] ராணுவ நடவடிக்கையின் தொடக்கத்தில் இஸ்ரேல் நிர்ணயித்த அனைத்து போர் இலக்குகளையும் அடையும் வரை பின்வாங்க மாட்டார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cje0gx7w83zo
-
இராஜன் (சோழியன்) அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா காலமானார்
எனது நண்பரின் அண்ணா என்பதாலும் கூடுதல் தகவல்கள் தெரிந்ததாலும் இணைத்தேன். முதன் முதலில் தகவலை இணைத்த உங்களும் ஆறுதல் தெரிவித்த உறவுகளுக்கும் நன்றிகள்.
-
முன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு!
ஒரு வகையில் நல்லது என்றாலும் குழந்தைகளின் வாழ்க்கையை தீர்மானிக்கும் அடிப்படைக் கல்வி என்பதால் தகுதியானவர்கள் மூலம் சரியாக வழங்கப்படவேண்டும் என நினைக்கிறேன் அண்ணை.
-
சுவிஸ் பிரஜையான வயோதிபப் பெண் மீது தாக்குதல்: 2 கோடிக்கும் அதிக வௌிநாட்டு நாணயங்கள் கொள்ளை
அண்ணை, இவ்வளவு சுவிஸ் பிராங்கை உத்தியோகபூர்வமாக நாட்டிற்குள் கொண்டுவர முடியாதென நினைக்கிறேன். Persons departing from or arriving in Sri Lanka Persons departing from or arriving in Sri Lanka may carry any amount of foreign currencies in the form of currency notes, bank drafts, cheques, travel cards, etc. However, a person shall make a declaration to the Sri Lanka Customs if that amount exceeds USD 15,000 or its equivalent in any other foreign currency; or if he/she arriving in Sri Lanka intends to take back foreign currency notes exceeding USD 10,000 or its equivalent in any other foreign currency. https://www.dfe.lk/web/index.php?option=com_content&view=article&id=142:gold-trade&catid=81&lang=en
-
பரம்பரை அரசியல் செய்யும் தேவையும் விருப்பமும் எனக்கில்லை - அங்கஜன் இராமநாதன்
அப்ப இவர் அவற்ற பினாமி இல்லையா?!
-
யாழ். சுழிபுரத்தில் வாளுடன் அட்டகாசம் செய்த இளைஞனை மடக்கி பிடித்த ஊரவர்கள்!
அண்ணை, பிடிச்சுக் குடுத்தால் வெளில விடமாட்டினம் என நம்புதோ சனம்?!
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை
21 NOV, 2024 | 07:31 PM வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (21) பிடியாணை பிறப்பித்துள்ளது. தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு காசோலைகளை வழங்கிய சம்பவம் தொடர்பில் 2016 ஆம் ஆண்டு முன்னாள் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகரான சுப்பிரமணியம் மனோகரனுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு வியாழக்கிழமை (21) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சாட்சியமளிக்க டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தாலும், அதை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை. இதன்படி, டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார். https://www.virakesari.lk/article/199359
-
முன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு!
இதுவரை சாதரண/உயரதரம் கற்ற பெண்பிள்ளைகள் தான் முன்பள்ளி ஆசிரியர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு அரசு உதவிப்பணமாக 6000ரூபா வழங்குகிறது. பெற்றோரிடம் இருந்து ஒரு பிள்ளைகளுக்கு 1000ரூபா பெறுகிறார்கள்! அரசு முன்பள்ளிகளை உள்வாங்கினால் பட்டதாரிகளுக்கு(உலக அளவில் முன்பள்ளிக் கல்வி கற்பிக்க சிறப்பு பட்டதாரிகளையே அனுமதிக்கிறார்கள்) வேலைவாய்ப்பும் ஏற்கனவே இருந்தவர்களுக்கு உதவி ஆசிரியர் பணியும் கொடுக்கலாம் என எண்ணுகிறேன் அண்ணை.
-
உக்ரைன் மீது ரஸ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல்
ரஸ்யா உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ரஸ்ய உக்ரைன் போரில் ரஸ்யா முதல்தடவையாக இந்த ஆயுதத்தை பயன்படுத்தியுள்ளது. எனினும் இது குறித்து ரஸ்யா கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. இன்று அதிகாலை தாக்குதலின் போது அஸ்ட்ராகன் பகுதியிலிருந்து ஐசிபிஎம் ஏவுகணையை ரஸ்யா செலுத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. நிப்ரோவை பல்வேறு ஏவுகணைகளால் ரஸ்யா இலக்குவைத்தது என உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. ரஸ்யாவின் ஆறு கேஎச்-101 ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தியதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஸ்யா மீது தனது ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கிய மறுநாள் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/199338
-
யாழ்ப்பாணத்தில் அடை மழையால் 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பதிப்பு!
வடக்கு ஆளுநர் தலைமையில் அவசர கூட்டம் நாளை பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை (22) காலை 10 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெறவுள்ளது. வட மாகாண பிரதம செயலர், மாவட்டச் செயலர்கள், உள்ளூராட்சி அமைச்சின் செயலர், உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், நீர்பாசன திணைக்களப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர், இலங்கை மின்சார சபையின் பிராந்திய முகாமையாளர், யாழ். மாநகர சபை ஆணையாளர், வட மாகாண மூத்த பிரதி பொலிஸ் மாஅதிபர், இராணுவக் கட்டளைத்தளபதி, கடற்படைத் தளபதி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றவுள்ளனர். வட மாகாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் எதிர்வுகூறப்பட்டுள்ள வளிமண்டலக் குழப்பதால் ஏற்படும் பாதிப்புக்களை தணிப்பது தொடர்பாக இக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/199343
-
மன்னார் கடலில் வெடிப்புச் சம்பவம் - இரு மீனவர்கள் படுகாயம்!
21 NOV, 2024 | 05:45 PM மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சௌத்பார் கடற்பரப்பில் இன்று வியாழக்கிழமை (21) பகல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு மீனவர்கள், கடலில் மிதந்து வந்த பொதியொன்றை சோதனையிட்டபோது அப்பொதி வெடித்துள்ளது. இந்த வெடிப்பில் இரண்டு மீனவர்களும் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் பனங்கட்டு கொட்டு பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இரு மீனவர்களே படுகாயமடைந்துள்ளனர். இந்த மீனவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மன்னார் பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் சிலர் தடை செய்யப்பட்ட டைனமைட் வெடிபொருளை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த மீனவர்கள் இருவரும் டைனமைட் வெடிபொருளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டபோது இந்த வெடிப்பு இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/199355
-
சுவிஸ் பிரஜையான வயோதிபப் பெண் மீது தாக்குதல்: 2 கோடிக்கும் அதிக வௌிநாட்டு நாணயங்கள் கொள்ளை
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் தனிமையில் இருந்த பெண்ணொருவரின் வீட்டை உடைத்து பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். சுவிட்சர்லாந்திலிருந்து வருகைதந்திருந்த குறித்த பெண்ணின் வீட்டை இன்று புதன்கிழமை (20) அதிகாலை 12.00 மணியளவில் உடைத்து உள்நுழைந்த நபர்கள், பெண்ணை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து இரண்டு கோடி 40 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள், 1 1/4 பவுண் தங்க சங்கிலி மற்றும் 29,000 ரூபா இலங்கை நாணயம் என்பவற்றை கொள்ளையிட்டு தப்பியோடியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் . இது பற்றி தெரியவருவதாவது கல்லடி பேபிசிங்கம் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய சுப்பையாபிள்ளை கோணேஸ்வரி 1990 ஆம் ஆண்டு குடும்பத்துடன் இடம்பெயர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டுக்குச் சென்ற குடியேறியுள்ளார். அங்கு அவர் தாதியாக பணியாற்றுவதோடு கணவன் பொறியலாளராகவும் மகள் விஞ்ஞானியாகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் அவர் தாதி சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் இலங்கையிலுள்ள தனது வீட்டை பார்ப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்து வீட்டில் தற்காலிகமாக தனிமையில் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவதினமான இன்று (20) அதிகாலை 12 மணியளவில் வீட்டின் குளியலறை பகுதியில் யன்னல் கதவை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் குறித்த பெண்ணை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்த அலுமாரியை உடைத்து 72 ஆயிரம் ஸ்விஸ் பிராங் (இரண்டு கோடி 40 இலட்சம்) மற்றும் 1 1/4 பவுண் தங்க சங்கிலியும் 29,000 ரூபா பணத்தையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.ஏ.றஹீம் தலைமையில சென்ற பொலிஸார், தடயவியல் பிரிவு மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். -மட்டக்களப்பு நிருபர் சரவணன்- https://tamil.adaderana.lk/news.php?nid=196176
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
பார்டர் கவாஸ்கர் தொடர்: ஃபார்மில் இல்லாதபோதும் கோலியை கொண்டாடும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக விராட் கோலி இந்த ஆண்டில் டெஸ்டில் மொத்தமாக 250 ரன்கள் சேர்த்து 22 சராசரி மட்டுமே வைத்துள்ளார். இந்நிலையில், மோசமான ஃபார்மில் இருந்தும், அவர் பார்டர் கவாஸ்கர் தொடருக்காக ஆஸ்திரேலியா வந்தவுடன் அவரை ஆஸ்திரேலிய ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக்கிக் கொண்டாடுகின்றன. இதற்குக் காரணம் என்ன? கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், செளரவ் கங்குலி, தோனி போன்ற பல முக்கியமான வீரர்களை இந்திய கிரிக்கெட் கண்டிருக்கிறது. அந்த வரிசையில் விராட் கோலியும் கவனிக்கப்படுகிறார். அதனால்தான் கோலியின் ரசிகர்கள் அவரை “கிங் கோலி” என்று புகழ்கிறார்கள். களத்தில் சுறுசுறுப்பு சச்சின், திராவிட், கங்குலி, லாரா, உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் எட்டிய இலக்கை குறைந்த வயதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அடைந்தவர் விராட் கோலி. விராட் கோலி களத்தில் சக வீரர்களை குஷிப்படுத்துவது, விக்கெட் வீழ்த்தினால் பாராட்டுவது, எதிரணி வீரர்கள் சீண்டினால் பதில் தருவது என களத்தை எப்போதுமே பரபரப்பாக வைத்திருப்பார். கோலி இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தபோதும் சரி, அவரிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்ட பின்பும் சரி அவரது நடவடிக்கைகளில் பெரிய அளவில் மாறிவிடவில்லை. கோலியின் கடைசி பார்டர் கவாஸ்கர் தொடரா? பட மூலாதாரம்,GETTY IMAGES வரும் 22-ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இந்திய அணிக்கு மிகவும் முக்கியவத்துவம் வாய்ந்த தொடராக உள்ளது. அதேநேரம், தனது கிரிக்கெட் வாழ்க்கை தோல்வியுடன் முடிந்துவிடக் கூடாது என்பதால் விராட் கோலிக்கும் இந்தத் தொடரில் வெற்றி பெறுவது அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசியாக விளையாடும் பார்டர்-கவாஸ்கர் தொடராக இது இருக்கக்கூடும். அதன் காரணமாகவும் இந்தத் தொடர் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது. கோலியை கொண்டாடும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES விராட் கோலி, 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9,040 ரன்களை சேர்த்துள்ளார். 29 சதங்கள், 31 அரைசதங்கள் என கோலியின் பேட்டிங் புள்ளிவிவரங்கள் அவரை முன்னணி வீரராகக் காட்டுகின்றன. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் விராட் கோலியின் டெஸ்ட் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தால் சராசரியை சரிய வைக்கும் விதத்தில் இருந்துள்ளது. ஏனென்றால், 2020ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை கோலி டெஸ்ட் அரங்கில் 2 சதங்கள், 7 அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார். இந்த ஆண்டில் கோலி 250 ரன்கள் மட்டுமே டெஸ்டில் சேர்த்து 22 சராசரி வைத்துள்ளார் என கிரிக்இன்ஃபோ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கோலியின் டெஸ்ட் சராசரி 2019-ஆம் ஆண்டு நவம்பரில் 55 ஆக இருந்த நிலையில் சமீபத்திய மோசமான ஃபார்ம் காரணாக 47 ஆகக் குறைந்துவிட்டதாகவும் அந்தப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இவ்வளவு மோசமான ஃபார்மில் விராட் கோலி இருந்தும், அவர் பார்டர்-கவாஸ்கர் தொடருக்காக ஆஸ்திரேலியா வந்தவுடன் அவரை பல ஆஸ்திரேலிய ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்துப் பேசுவது வியப்பை ஏற்படுத்தியது. ‘தி சிட்னி மார்னிங் ஹெரால்ட்’, ‘தி வெஸ்ட் ஆஸ்திரேலியன்’, உள்ளிட்ட பல நாளேடுகள் கோலிக்கு முக்கியத்துவம் அளித்து செய்தி வெளியிட்டன. “தி ஹெவி கிரவுன்”, “கோட்”, “தி ரிட்டன் ஆஃப் தி கிங்”, “கோலி'வுட் இன் ஆஸ்திரேலியா”, “ஹோலி கோலி” என அவை கோலியைப் பற்றிக் குறிப்பிட்டன. ஒரு பேட்டர் ஃபார்ம் இழந்த நிலையில் அவர் விளையாட வரும்போது அவருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைவிட விமர்சனங்களே அதிகம் இருக்கும். ஆனால், கோலியின் விவகாரத்தில் அவர் ஃபார்மில் இல்லாமல் இருந்தாலும், ஆஸ்திரேலிய மண்ணில் கால்பதித்தவுடன் அவரை அந்நாட்டு ஊடகங்கள் கொண்டாடுகின்றன. விராட் கோலி ஃபார்மில் இல்லாவிட்டாலும் ஏன் ஆஸ்திரேலிய ஊடகங்கள் கொண்டாடுகின்றன என்பதற்கு அந்நாட்டு அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சுவரஸ்யமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். ஆஸ்திரேலிய ரசிகர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES ரிக்கி பாண்டிங் ஐசிசி தளத்துக்கு அளித்த பேட்டியில், "விராட் கோலியின் செயல்பாடுகள், சவாலான பேட்டிங், ஆஸ்திரேலியர்களின் திறமைக்கு சவால்விடும் போக்கு, ஸ்லெட்ஜிங்கில் பதிலடி தருவது ஆகியவை ஆஸ்திரேலியரை போன்று இருப்பதால், அவரை சக நாட்டவராக நினைத்து ஆஸ்திரேலிய நாளேடுகளும், ஊடகங்களும் கொண்டாடுகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார். திறமையான எந்த நாட்டு கிரிக்கெட் வீரருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தனி மரியாதை இருக்கும். சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு அதிகமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் வீரராகத் தற்போது கோலி பார்க்கப்படுகிறார். கோலியின் ஃபார்ம் குறித்து விமர்சித்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கூட கோலியை புகழாமல் இருக்கவில்லை. ஐசிசி தளத்துக்கு பாண்டிங் அளித்த பேட்டியில் “கோலி ஒரு சூப்பர் ஸ்டார் பேட்டர். அவர் விளையாடும் போக்குதான் அவருக்கு ரசிகர்களைக் கொடுத்துள்ளது. களத்துக்கு வந்துவிட்டால் கிரிக்கெட்டின் மீதான அர்ப்பணிப்பு, வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை, போராட்டக் குணம், கிரிக்கெட் திறமை ஆகியவைதான் ஆஸ்திரேலிய ரசிகர்களை ஈர்த்துள்ளது. அதனால்தான் கோலிக்கு தனியாக ரசிகர்கள் கூட்டம் ஆஸ்திரேலியா முழுவதும் இருக்கிறது. இதுபோன்ற சூப்பர் ஸ்டார் பேட்டர்கள் உலகம் முழுவதும் தங்களுக்கென தனித்துவமான ரசிகர்களை உருவாக்கிக் கொள்வார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். கோலியின் உச்சமும் சரிவும் பட மூலாதாரம்,GETTY IMAGES விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 2016 முதல் 2019 வரை உச்சகட்ட ஃபார்மில் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் டெஸ்ட் போட்டியில் 4,208 ரன்கள் சேர்த்தார், இதில் 16 சதங்கள், 10 அரைசதங்கள் அடங்கும். இதில் 7 இரட்டை சதங்களை அடித்துள்ளார். ஆனால், 2020ஆம் ஆண்டுக்குப் பின் டெஸ்ட் போட்டியில் கோலியின் ஃபார்ம் ஆட்டம் கண்டது. குறிப்பாக அவரிடம் இருந்து கேப்டன் பதவியைப் பறித்த பிறகு அவரின் பேட்டிங் மந்தமானது. கடந்த 2020-ஆம் ஆண்டிலிருந்து கோலி 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,838 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். அதில் 2 சதங்கள், 9 அரைசதங்கள் அடங்கும். அதிலும் சமீபத்தில் வங்கதேசம், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலியின் மோசமான ஃபார்ம் உச்சத்துக்குச் சென்றது. ஐசிசி டெஸ்ட் பேட்டர்கள் பட்டியலில் டாப்-20 வரிசையில் இருந்தே கோலியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கோலியின் பெயர் ஐசிசி டெஸ்ட் பேட்டர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது இதுதான் முதல்முறை. அசைக்க முடியாத நம்பிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES இருப்பினும் கோலி போன்ற வீரர் ஒரு போட்டியில் சிறந்து ஆடினாலும் இழந்த ஃபார்மை மீட்பார் என அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள். கோலி போன்ற கிரிக்கெட்டை நேசிக்கும் வீரருக்கு ஃபார்ம் ஒரு பொருட்டல்ல என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் கூறுகின்றன. ஆஸ்திரேலிய ஊடகங்கள் கோலி குறித்து தலைப்பிட்டு பல செய்திகள் வெளியிட்டுள்ளன. அதில் கோலியின் ஃபாரம் குறித்து பெரிதாக எந்த ஊடகமும் விமர்சித்து எழுதவில்லை. மேலும், மைக்கேல் கிளார்க், பாண்டிங், லாங்கர், மேத்யூ வேட், அலெக்ஸ் கேரே, சேப்பல் போன்ற பலரும் புகழ்ந்துள்ளனர். முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பேட்டி ஒன்றில், “ஆஸ்திரேலியாவில் விராட் கோலியின் சாதனை அளப்பரியது. இந்தியாவில் கோலி சாதித்த சாதனைகளைவிட, ஆஸ்திரேலிய மண்ணில் கோலி சாதித்தது அதிகம். இந்த டெஸ்ட் தொடரை இந்தியா வென்றால், அதில் நிச்சயம் கோலி அதிக ரன்கள் சேர்த்த பேட்டராக இருப்பார் என்று கணிக்கிறேன்” என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். கோலி ஆஸ்திரேலியாவில் சாதிப்பாரா? பட மூலாதாரம்,GETTY IMAGES பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சவாலான பேட்டராக கோலி இருப்பார் என்று ஆஸ்திரேலிய ஊடகங்களும், முன்னாள் வீரர்களும் நம்புகிறார்கள். கோலியின் ஃபார்ம் மீதான நம்பிக்கையைவிட, அவரின் திறமை, கிரிக்கெட் மீதான அர்ப்பணிப்பு உணர்வுக்கு மிகுந்த மரியாதை அளிக்கிறார்கள். கடந்த காலங்களில் கோலி தனது அடையாளத்தை ஆஸ்திரேலிய மண்ணில் அழுத்தமாக விட்டுச் சென்றது இதற்கு முக்கியக் காரணமாகும். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2011 முதல் 2023ஆம் ஆண்டு வரை 25 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2,042 ரன்களை கோலி குவித்துள்ளார். இதில் 8 சதங்கள் அடங்கும். ஆஸ்திரேலிய மண்ணில் 2011 முதல் 2020 வரை ஆடிய கோலி, 1,352 ரன்கள் சேர்த்துள்ளார், இதில் 6 சதங்கள் அடங்கும். அதாவது கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த 8 சதங்களில் 6 சதங்கள் அந்நாட்டு மண்ணில் அடிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய மண்ணில் கோலியின் சராசரி 54 ரன்கள் என்றபோதே அங்கு கோலியின் ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை அறியலாம். இந்தத் தொடரில் விராட் கோலி ஏராளமான சாதனைகளைப் படைக்க வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன் சேர்த்த இந்திய பேட்டர் என்ற வகையில் 1,809 ரன்களுடன் சச்சின் முதலிடத்தில் உள்ளார். சச்சினின் சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 458 ரன்கள் தேவை, தற்போது கோலி 1,352 ரன்களுடன் உள்ளார். அடிலெய்ட் ஓவல் மைதானம் கோலிக்கு ராசியானது. இந்த மைதானத்தில்தான் 2012ஆம் ஆண்டு முதன்முதலில் கோலி தனது சதத்தைப் பதிவு செய்தார். இந்த மைதானத்தில் மட்டும் கோலி 509 ரன்கள் சேர்த்து 63 சராசரி வைத்துள்ளார். லாராவின் 610 ரன்கள் சாதனையை இந்த மைதானத்தில் கோலி இந்த முறை முறியடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அது மட்டுமல்ல ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகத் தனது 100வது சர்வதேச போட்டியையும் ஆஸ்திரேலிய மண்ணில்தான் கோலி 3வது டெஸ்டில் விளையாடுவார். இந்தத் தொடருக்கு சிறப்பாகத் தயாராகும் விதத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தரையிறங்கும் முன்பாகவே கோலி அங்கு சென்றுவிட்டார். பெர்த் நகரில் 22ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்காக கோலி தீவிரமான பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx281wdy47po
-
யாழ்ப்பாணத்தில் அடை மழையால் 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பதிப்பு!
யாழில் வீதிகள், தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின! யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று (21) தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மாவட்டத்தின் பல இடங்களிலும் உள்ள வீதிகள் மற்றும் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. https://www.virakesari.lk/article/199342
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நவீன இயந்திரங்களின் வரவால் வரப்பை இலகுவாக கோதிவிடுகிறார்கள்!
-
ப்ளூ ஸ்கை: ஈலோன் மஸ்கின் எக்ஸ் தளத்துடன் போட்டி போட முடியுமா? இதை உருவாக்கியது யார்?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாளொன்றுக்குப் பல லட்சம் பயனாளர்கள் ப்ளூ ஸ்கையில் இணைகின்றனர் எழுதியவர், டாம் கெர்கன் பதவி, தொழில்நுட்ப செய்தியாளர் சமீபத்தில் உங்கள் சமூக ஊடக பக்கங்களில் “ப்ளூ ஸ்கை” என்ற வார்த்தையைப் பார்த்திருப்பீர்கள். அதைப் பற்றி அப்படி என்ன விவாதிக்கப்படுகிறது என்று நீங்கள் சிந்தித்திருக்கலாம். ப்ளூ ஸ்கை என்பது ஈலோன் மஸ்க்கின் எக்ஸ் தளத்திற்கு மாற்றான ஒரு சமூக ஊடக செயலி. மேலும் இதன் நிறம் மற்றும் லோகோ எக்ஸ் தளத்தை ஒத்திருக்கும். ப்ளூ ஸ்கை செயலியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தற்போது நாளொன்றுக்குச் சுமார் 10 லட்சம் பயனாளர்கள் இதில் இணைகிறார்கள். இந்தக் கட்டுரையை எழுதும்போது இதில் 1.67 கோடி பயனர்கள் இருந்தார்கள். ஆனால் நீங்கள் இதைப் படிக்கும்போது இந்த எண்ணிக்கை அதிகரித்து இருக்கும். இந்த ப்ளூ ஸ்கை சமூக ஊடக செயலியில் என்ன இருக்கிறது? இதில், ஏன் அதிக மக்கள் இணைகிறார்கள்? ப்ளூ ஸ்கை என்றால் என்ன? ப்ளூ ஸ்கை தன்னை "ஒரு சமூக ஊடகம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படிப்பட்ட ஓர் ஊடகம்" என்று விவரித்துக் கொள்கிறது. இருப்பினும், அது மற்ற சமூக ஊடக தளங்களைப் போலவே இருக்கிறது. ப்ளூ ஸ்கை பக்கத்தின் இடது புறத்தில் உங்களுக்குத் தேவையான முகப்பு பக்கம்(home page), தேடல்(search), அறிவுப்புகள்(notifications) எனப் பல்வேறு சேவைகள் இருக்கும். இந்த ஊடகத்தில் மக்கள் தங்கள் கருத்துகளை, புகைப்படங்களை, காணொளிகளைப் பதிவிடலாம், மீள்பதிவு செய்யலாம், தங்களுக்குப் பிடித்த பதிவுகளில் கமென்ட் மற்றும் லைக் செய்யலாம். எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், எக்ஸ் தளம் முன்னாள் டிவிட்டர் என அறியப்பட்டபோது இருந்ததைப் போலவே இது காட்சியளிக்கும். ப்ளு ஸ்கையின் முக்கிய வேறுபாடே இதுவொரு மையப்படுத்தபடாத (decentralized) ஊடகம். சிக்கலான இந்த வார்த்தையின் எளிமையான அர்த்தம் என்னவென்றால், இதன் பயனர்கள் தங்களது தரவுகளை அந்த நிறுவனம் சேமித்து வைப்பதைக் கடந்து, தங்களுக்கான தனிப்பட்ட சர்வர்களிலும் சேமித்து வைக்கலாம். அதாவது, ப்ளூ ஸ்கையின் பெயருடன் கூடிய தனிப்பட்ட கணக்கு கொண்டிருப்பதைவிட, பயனர்கள் (விருப்பம் இருந்தால்) அவர்களே நிர்வகிக்கக் கூடிய வகையில் அவர்களின் தனிப்பட்ட, சொந்தக் கணக்குகளை உருவாக்கிக் கொள்ளலாம். பெரும்பாலான பயனர்கள் இதைச் செய்ய மாட்டார்கள் எனக் குறிப்பிடுவது மிகையல்ல. புதிய பயனர்கள் பெரும்பாலும் ".bsky.social" என்ற வார்த்தை தங்களின் பயனர் பெயருக்குப் பின்னால் இருப்பதையே விரும்புவர். ப்ளூ ஸ்கை செயலியை உருவாக்கியது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ப்ளூ ஸ்கையை உருவாக்கியது டிவிட்டரின் முன்னாள் தலைவரான ஜாக் டோர்சி ப்ளூ ஸ்கை செயலியின் தோற்றம் பலவும் எக்ஸ் தளத்தைப் போல் உள்ளதாக நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால், அதற்கான காரணம் உங்களை வியப்பில் ஆழ்த்தாது. டிவிட்டரின் முன்னாள் தலைவரான ஜாக் டோர்சிதான், இதை உருவாக்கியவர். ஒரு தனி நபராலோ, ஒரு நிறுவனத்தாலோ சொந்தம் கொண்டாட முடியாத வகையில், ப்ளூ ஸ்கையை டிவிட்டரின் பரவலாக்கப்பட்ட பதிப்பாக உருவாக்க வேண்டும் என்று அவர் முன்பு ஒருமுறை கூறியிருந்தார். ஆனால் இப்போது, ப்ளூ ஸ்கையை இயக்கும் குழுவில் டோர்சி இல்லை. கடந்த மே 2024இல் அவர் இந்தக் குழுவில் இருந்து விலகினார். அவர் தனது கணக்கை முழுவதுமாக செப்டெம்பர் மாதமே நீக்கிவிட்டார். இது தற்போது அமெரிக்காவில் பொது ஆதாய நிறுவனமாக, ஜே கிராபரை தலைமை செயல் அதிகாரியாகக் கொண்டு செயல்படுகிறது. இவர்தான் இந்த நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வைத்துள்ளார். பொதுமக்கள் ஏன் ப்ளூ ஸ்கை மீது ஆர்வம் காட்டுகின்றனர்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதும், ப்ளூ ஸ்கை தளத்தில் அதிக மக்கள் இணைகின்றனர் கடந்த 2019ஆம் ஆண்டு முதலே ப்ளூ ஸ்கை புழக்கத்தில் இருந்தது. ஆனால் கடந்த பிப்ரவரி வரை, அழைப்பு விடுக்கப்பட்டால் மட்டுமே இதில் இணைய முடியும். பொது மக்களின் சேவைக்காக இது அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன், டெவலப்பர்கள் இதைப் பலப்படுத்துவது, சிக்கல்களைக் களைவது போன்ற வேலைகளைச் செய்தனர். இந்தத் திட்டம் ஓரளவுக்கு வேலை செய்துள்ளது. ஆனால், நவம்பர் மாதத்தில் இருந்து அதிக அளவிலான பயனர்கள் இந்த செயலியில் இணைந்து வருவதால் இதில் சில தொழில்நுட்பக் கோளாறுகளும் ஏற்படுகின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதும், ப்ளூ ஸ்கை தளத்தில் அதிக மக்கள் இணைவதும் வெறும் தற்செயலாக நடப்பது அல்ல. டிரம்பின் தேர்தல் பிரசாரத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்தவர் ஈலோன் மஸ்க். இந்த ஆட்சியில் பெரிய அரசாங்கப் பொறுப்பிலும் மஸ்க் இடம் பெறவுள்ளார். தவிர்க்க முடியாதபடி, இது அரசியல் பிளவிற்கு வழிவகை செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பலர் எக்ஸ் தளத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். ஆனால், சிலர் இதற்கு வேறு சில காரணங்களையும் குறிப்பிடுகின்றனர். உதாரணமாக கார்டியன் இணையதளம் எக்ஸ் தளத்தை "ஒரு நச்சு ஊடக தளம்" என விமர்சித்து அதில் பதிவிடுவதை நிறுத்த முடிவு செய்துள்ளது போன்றவற்றைக் கூறுகின்றனர். அதேவேளையில், ப்ளூ ஸ்கை செயலி தொடர்ந்து உலக அளவில் அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த வியாழனன்று ஐரோப்பாவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் தரவிறக்கப்பட்ட இலவச செயலியாக இது இருந்தது. பாப் பாடகர் லிசோ முதல் டாஸ்க்மாஸ்டரின் கிரெக் டேவிஸ் வரை பல பிரபலங்கள் ப்ளூ ஸ்கை செயலியில் இணைவதாகவும் எக்ஸ் தளத்தின் பயன்பாட்டைக் குறைப்பதாகவும் அல்லது சில காரணங்களுக்காக எக்ஸ் தளத்தில் இருந்து முழுவதுமாக வெளியேறுவதாகவும் அறிவித்துள்ளனர். ப்ளூ ஸ்கையின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், அதன் போட்டியாளரான எக்ஸ் தளத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு வளர இன்னும் நீண்ட காலத்திற்கு மக்கள் பயன்பாட்டில் நிலைத்திருக்க வேண்டும். எக்ஸ் தளம், தனது பயனர்களின் எண்ணிக்கையை வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும் அது பல கோடிக்கணக்கில் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு முறை ஈலோன் மஸ்க் எக்ஸ் தளத்தை நாளொன்றுக்கு 250 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ப்ளூ ஸ்கை தளத்திற்கு எங்கிருந்து வருமானம் வருகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிவிட்டர் அதிகம் பயன்படுத்தப்பட்ட காலத்தில் பெரும்பாலான நிதி அதற்கு விளம்பரங்கள் மூலம்தான் கிடைத்தது. உண்மையில், இதுவொரு மில்லியன் டாலர் கேள்வி. தொடக்கத்தில் ப்ளூ ஸ்கை நிறுவனம் முதலீட்டாளர்களிடம் இருந்தும் முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்தும் பல மில்லியன் டாலர் நிதியைத் திரட்டியுள்ளது. ஆனால் இப்போது அதிக பயனர்கள் கிடைத்துள்ள காரணத்தால், சுயமாகத் தனக்கான நிதியை அதனால் உருவாக்க முடியும். டிவிட்டர் அதிகம் பயன்படுத்தப்பட்ட காலத்தில் பெரும்பாலான நிதி அதற்கு விளம்பரங்கள் மூலம்தான் கிடைத்தது. ப்ளூ ஸ்கை இந்த நடைமுறையைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறது. அதற்கு மாற்றாக, கட்டண முறையில் சேவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக, அதாவது பயனர் பெயரில் உள்ள தனிப் பயனர் டொமைன்களை விலையுடன் கூடிய சேவையாக வழங்கவுள்ளதாக ப்ளூ ஸ்கை கூறுகிறது. உதாரணமாக, என்னுடைய - @twgerken.bsky.social பயனர் பெயர், வருங்காலத்தில் இதைவிட அதிகாரப்பூர்வமானதாக -@twgerken.bbc.co.uk என்று இருக்கலாம். இந்தத் திட்டத்தின் ஆதரவாளர்கள் கூறுகையில், இந்த இணையதளத்தின் உரிமையாளர் இதன் பயன்பாட்டிற்கான அனுமதியைக் கொடுக்க வேண்டியிருப்பதால், சரிபார்ப்பு நடைமுறையை இது இரட்டிப்பாக்கியுள்ளது. இப்படியே ப்ளூ ஸ்கையின் உரிமையாளர்கள் விளம்பரங்களைத் தவிர்த்துக் கொண்டே வந்தால், அது அவர்கள் மேலும் பல விரிவான வாய்ப்புகளைப் பற்றிச் சிந்திக்க வழிவகுக்கும். நிதி திரட்டுவதற்காக சந்தா அம்சங்கள் போன்ற வழிகளையும் உருவாக்கலாம். பணம் ஈட்டாமல் இருப்பது புதிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் புதிதல்ல. சொல்லப் போனால், 2022ஆம் ஆண்டு டிவிட்டரை மஸ்க் வாங்குவதற்கு முன்பு அது செயல்பட்ட 8 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே லாபம் ஈட்டியது. உலக பணக்காரரான மஸ்க் டிவிட்டரை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது அனைவரும் அறிந்ததே, அதன் முதலீட்டாளர்களுக்கு அன்று பெரும் சம்பள நாளாக இருந்தது. இப்போதைக்கு பார்த்தால் ப்ளூ ஸ்கையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் அதன் வளர்ச்சி தொடர்ந்தால், எதுவும் சாத்தியமே! - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gvy59gevzo
-
பாடசாலை மாணவிகளை இலக்கு வைத்து நிர்வாண புகைப்பட மோசடி அதிகரிப்பு!
பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்வாண புகைப்படங்களாக வடிவமைத்து மாணவிகளை அச்சுறுத்தி மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மோசடி கும்பல் சமூக ஊடகங்களில் காணப்படும் பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்வாண புகைப்படங்களாக மாற்றி உரிய மாணவிகளிடம் அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து அவர்களை அச்சுறுத்தி பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் இந்த மோசடி கும்பலுக்கு அஞ்சி தங்களது நிர்வாண புகைப்படங்களை அனுப்பும் மோசடி கும்பலின் ஆலோசனைகளைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறான சம்பங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதாகவும் உயர் தர மாணவிகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/199318
-
முன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு!
என்னுடைய தந்தையார் தனியார் கல்வி, மருத்துவ துறைகளை கடுமையாக எதிர்க்கிறார்! ஆனால் நான் கேட்பேன் ஒரு சிறந்த ஆசிரியரிடம் கல்வி கற்கும் வாய்ப்பு, சிறந்த மருத்துவரிடம் மருத்துவம் செய்யும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்க என்ன வழி என்று கேட்பேன்? அதற்கு பாடசாலையிலும் மருத்துவமனையிலும் சரியாக பணிபுரிந்தால் வேற இடம் போகத்தேவையில்லை என்பார்!
-
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்கள்; முல்லைத்தீவிலிருந்து ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கையெழுத்து மடல்
இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த கோரி கையெழுத்திடப்பட்ட தபாலட்டைகள் இன்று வியாழக்கிழமை (21) ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மக்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கார்த்திகை 21 சர்வதேச மீனவர் தினமாகிய இன்று சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் (ECDO) ஏற்பாட்டில் இந்திய இழுவைப் படகுகளை இலங்கை கடற்பரப்பிற்குள் வரவிடாது தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கோரிய தபாலட்டைகள் முல்லைத்தீவு மக்கள், முல்லைத்தீவு மீனவர்களினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய மீனவர் தினத்தில் இலங்கை முழுவதுமாக விஷேடமாக முல்லைத்தீவு மாவட்டம் இந்திய மீனவர்களுடைய இழுவை படகுகளினுடைய அத்துமீறல்களும், முல்லைத்தீவு கடற்பரப்பில் காணப்படுகின்ற கடற் திரவியங்கள் அனைத்தும் இந்திய இழுவை படகுகள் மூலமாக அபகரித்து செல்லுகின்ற துர்ப்பாக்கிய நிலை இச்சூழலில் அதிகமாக காணப்படுகின்றது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு சென்று பாரிய நட்டத்துடனே தமது வாழ்வினை கழித்து வருகிறார்கள். இலங்கையினுடைய மாற்றத்தினை கொண்டு வருகின்ற மாற்றமே தீர்வு என்று ஒரு பாரிய விம்பத்தை உருவாக்கி இருக்கின்ற இலங்கையினுடைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவிற்கு முல்லைத்தீவு மக்கள், முல்லைத்தீவு மீனவர்களினால் பெயர், முகவரி பொறிக்கப்பட்டு கையெழுத்திடப்பட்ட தபாலட்டையினை அனுப்பி வைக்கும் முகமாக இன்றையதினம் 500 ற்கும் மேற்பட்ட தபாலட்டைகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய இழுவைப் படகுகளை இலங்கை கடற்பரப்பிற்குள் வரவிடாது தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கோரியே தபாலட்டைகள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/199317
-
சிங்கள பௌத்த தேசத்தின் ஒற்றையாட்சிக்கான திசைகாட்டியே தவிர தமிழர் தேசத்துக்கான திசைகாட்டி அல்ல - அருட்தந்தை மா.சத்திவேல்
தற்போது வெற்றிக் களிப்பில் இருக்கும் திசைகாட்டி சிங்கள பௌத்த தேசத்தின் ஒற்றை ஆட்சிச்கான திசை காட்டியே தவிர தமிழர் தேசத்திற்கான திசை காட்டி அல்ல. எமக்கான தீர்வு இவர்கள் காலத்தில் கிட்டப்போவதில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் இன்று வியாழக்கிழமை (21) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம், அதன் தேசியம், சுயநிர்ணய உரிமை, சமஸ்டி தீர்வு எனும் தமிழர் அரசியல் மையக்கருத்தியலை 2009ம் ஆண்டுக்குப் பின்னரும் சயனைட் குப்பி போல் நெஞ்சில் /மனதில் சுமந்த அரசியல் வாழ்வை தமதாக்கிக் கொண்டோருக்கு தேர்தல் முடிவுகள் முள்ளிவாய்க்கால் வலியை கொடுத்துள்ளது. போர்க்காலத்தில் பல்வேறு விதமான காட்டிக் கொடுப்புகளினால் அடைந்த தோல்விகள், பின்னடைவுகள், வீழ்ச்சிகள் என்பவற்றை சந்தித்தபோதும் மாவீரர் வாரமும் தமிழ் தேசிய நாளும் புத்தெழுச்சியை தந்தன. சவால்களை வென்று பயணிக்கும் திசை காட்டின என்பதிலே நம்பிக்கை வைத்து இவ்வருட மாவீரர் வாரத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுப்போம். அதுவே எம் தேச எழுச்சியை மீள நிலை நிறுத்தும் ஏற்றும் சுடர் உள்ளங்களை புதுப்பிக்கும். தற்போது வெற்றிக் களிப்பில் இருக்கும் திசைகாட்டி சிங்கள பௌத்த தேசத்தின் ஒற்றை ஆட்சிச்கான திசை காட்டியே தவிர தமிழர் தேசத்திற்கான திசை காட்டி அல்ல. தற்போதைய ஜனாதிபதியும் அவர் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வேட மக்கள் விடுதலை முன்னணியினரும் நடைபெற்று முடிந்த இரு தேர்தல் பிரச்சார காலங்களிலும் தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் தமது உறுதியான நிலைப்பாட்டை அறிவித்து விட்டனர்.எமக்கான தீர்வு இவர்கள் காலத்தில் கிட்டப்போவதில்லை. நல்லாட்சி காலத்தில் நாடாளுமன்ற கட்சிகளின் பங்களிப்போடு (தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்போடும்) தயாரிக்கப்பட்ட ஒற்றை ஆட்சியையும் பௌத்த முன்னுரிமை கொண்ட அரசியல் யாப்பு முன்மொழிவினை மக்கள் கருத்தறிவு தேர்வு மூலம் நடைமுறையாக்குவதே இவர்களின் நோக்கம். இவ் வரைவு தமிழர்களின் அரசியல் தீர்வு அபிலாசைகளை மூழ்கடித்துவிடும். இதுவும் இன்னுமொரு முள்ளிவாய்க்காலாக அமைந்துவிடும். இதனை கலந்துரையாட நாடாளுமன்றத்தில் முன்வைக்கும் போது தற்போது 3/2 பெரும்பான்மை கொண்டுள்ள சிங்கள தேசத்தின் திசை காட்டி வடக்கு கிழக்கு இணைய விடாத வகையிலும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றாத வகையிலும் அரசியல் சட்டமாக்குவதற்கான சாத்தியக்கூறுகளே தற்போது தென்படுகின்றன. இதற்கு தமிழ் தேசமாக ஜனநாயக ரீதியில் எம் நிலைப்பாட்டை வெளிப்படுத்த திரட்சி கொள்ளல் வேண்டும். இந்நிலையில் தமிழர் தேசியம், சுயநிர்ணய உரிமை, சமஸ்டி தீர்வு தொடர்பில் கருத்துக்களை முன்வைத்து வாக்கு கேட்டவர்களும் அதற்கு வாக்களித்தவர்களும், தேசிய தலைவருக்கு சிலை வைப்போம் என்றவர்களும் கடந்த கால போலி வேசங்களை களைந்து தமிழருக்கு எதிரான அரசியல் துரோக செயல்களை கைவிட்டு; தெற்கின் அரசியல் அரசியலுக்கு விலை போகாது தமிழர் அரசியல் சார்பு எடுக்க வேண்டும். அதற்கான மன மருந்துக் காலமும் மனம் திருந்தும் காலமே தற்போதைய மாவீரர் வாரம். அதேபோன்று எமது சமூகத்தின் இன்னும் ஒரு பிரிவினர் அரசியல் வழி தவறி தமிழர் தேசத்தின் எழுச்சி நாட்களை எல்லாம் (முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், திலீபன் தியாக தினம், மாவீரர் வாரம்) வருடம் ஒரு தடவை வரும் தீபாவளி, பொங்கல், திருக்கார்த்திகை நாட்களாக்கினர். அதற்கு அப்பால் ஆன அரசியல் பயணத்தை தவிர்த்துக் கொண்டவர்களும் உண்டு. வேறு பலர் திருவிழா கால வியாபாரிகள் போல உழைத்தவர்கள் உண்டு. இதுவும் அரசியல் துரோகமே. இவர்களும் மாவீரர் காட்டிய மற்றும் பயணித்த திசை நோக்க வேண்டும். அது மட்டுமல்ல தமிழர் தேச எழுச்சி நாட்கள் எமக்கு முன் நிறுத்தம் அரசியல் வழிதடத்தை சரியான வகையில் அடுத்த தலைமுறைகளுக்கு கடத்துத்துவதில் கடந்த 15 வருடங்களாக தோல்வி கண்டுள்ளோம் என்பதை அரசியல் களச்சூழ்நிலையும் தேர்தல் முடிவுகளும் எமக்கு உணர்த்துகின்றன. இதற்கு நாம் அனைவரும் பொறுப்பு கூறல் வேண்டும். ஆயுத யுத்தத்தை காணாதவர்களும் ஈர்த்த வழி சுமக்காதவர்களின் ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் சுகபோக கலாச்சாரத்துக்கு அடிமையானவர்களும் தமிழர் வரலாற்றை படிக்கவும் அதனின்று கற்றுக் கொள்ள ஆர்வமற்றவர்களும் தெற்கின் மாற்றத்தின் கவர்ச்சிக்குள் அடித்த செல்லப்பட்டுள்ளனர். இவர்களையும் மாவீரர் வாரம் எம் அரசியலுக்குள் உள்ளிழுக்கும் எனவும் நம்புகின்றோம். அரசியலுக்குள் நின்று நிலைப்பதற்கான வேலைத்திட்டங்களை தொடரத்தவரின் அது மாவீரருக்கும் தேசத்திற்கும் இழைக்கும் அரசியல் குற்றமாகும். தேசிய மக்கள் சக்தியினர் சிங்கள பௌத்த பேரினவாத வாக்குகளையும் தமதாக்கியே 3/2 தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளனர். இவர்கள் சிங்கள பௌத்த கருத்தியலையும் பெரும்பான்மை தேசிய வாதத்தையும் உடைத்து வெளியேறப் போவதில்லை. காரணம் முந்தைய ஆட்சியாளர்களைப் போல தசாப்தங்களை தாண்டியும் ஆட்சி தன் கையில் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அதுவே இவர்களின் அரசியல் எதிர்பார்ப்புமாகும். இவர்களின் காலத்தில் அரசியல் தீர்வு என்பது எட்டா கனியே. இனி எவரும் தீபாவளிக்கு, பொங்கலுக்கு, புதுவருசத்துக்கு தீர்வு கிடைக்கும் என எம்மை ஏமாற்றவும் முடியாது. கடந்த காலங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், திலீபன் உயிர் தியாக நாள் மாவீரன் வாரம் போன்ற தமிழர் தேச எழுச்சி நாட்களை பொலிசாரின் கெடுபிடிகள் அச்சுறுத்தல்கள் நீதிமன்ற தடை உத்தரவுகள் குண்டர்களின் தாக்குதல் போன்றவற்றிற்கு முகம் கொடுத்தும் எழுச்சியோடு நினைவு கூர்ந்தோம். அதேபோன்று இவ்வருடமும் மாவீரர் நாளை எழுச்சியின் நாளாக்குவோம். தமிழ் தேசத்தை திரட்சி கொள்ளச் செய்வோம். அரசியல் நீக்கம் செய்து கொண்டவர்கள் மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிக்கவும், அரசியல் துரோகப் பாதையில் பயணித்தவர்கள் தமிழர்கள் தாயக தேசிய தலைவரின் திசை காட்டி பக்கம் திரும்பவும், போட்டி அரசியலை தவிர்த்து குறுகிய அரசியலை நலன்களை கைவிட்டு தேச அரசியலுக்காக மாவீரர் வாரத்தில் உறுதியேற்றல் வேண்டும். அத்கைய தீர்மானத்தோடு மாவீரர் நாளில் சுடரேற்றுவோம். அது தேசத்தின் சுடராக அமையட்டும். அதுவே மாவீரருக்கு நாம் செய்யும் கௌரவமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/199331
-
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் : யாழ். சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் மாவீரர் வாரம் இன்று (21) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ். தீவகம் - சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நடைபெற்றது. தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வருடந்தோறும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது, அந்த வகையில் இந்த வருடமும் மாவீரர் நாள் நினைவேந்தலை தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது, இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தீவகம் - சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி, உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/199316