Everything posted by ஏராளன்
- புதிய நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம்!
-
தேசிய பட்டியல் ஆசனத்துக்கு நானும் பொருத்தமானவள் - ஹிருணிகா பிரேமசந்திர
(எம்.மனோசித்ரா) ஐக்கிய மக்கள் சக்தியில் எஞ்சியுள்ள 4 தேசிய பட்டியல் ஆசனங்களில் ஒன்று பெண்ணொருவருக்கு வழங்கப்படும் என்று நம்புகின்றேன். அவ்வாறான ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டால் அதற்கு நானே பொருத்தமானவராக இருப்பேன் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய மக்கள் சக்தி தேசிய பட்டியலுக்காக எனது பெயர் பல தரப்பினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விவகாரம் செயற்குழுவில் கலந்துரையாடல் மட்டத்திலேயே காணப்படுகிறது. எவ்வாறிருப்பினும் எஞ்சியுள்ள 4 ஆசனங்களில் பெண்னொருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று நான் நம்புகின்றேன். கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை நான் முழுமையாக நம்புகின்றேன். அதேபோன்று அவரும் என்னை முழுமையாக நம்புகின்றார் என்பதை நான் அறிவேன். காரணம் கிராம மட்டங்களிலிருந்து சகல பகுதிகளிலும் அவருக்காக அர்ப்பணிப்புடன் பிரசாரங்களை முன்னெடுத்திருக்கின்றேன். எனவே தேசிய பட்டியலில் ஒரு ஆசனம் பெண்ணொருவருக்கு கிடைக்கும் எனில் அதற்கு நான் தகுதியானவள் என்று நம்புகின்றேன். ஐக்கிய மக்கள் சக்தி என்பது எந்தவொரு தீர்மானத்தையும் ஒருமித்து எடுக்கும் ஜனநாயகக் கட்சியாகும். அந்த வகையில் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தின் கீழ் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் என்பதே எமது தீர்மானமாகும். எந்தவொரு கட்சிக்கும் தோல்வி என்பது வழமையானதொரு விடயமாகும். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 1994ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தோல்வியடைந்த ஒரு தலைவராகவே காணப்படுகிறார். ஆனால் ஐக்கிய தேசிய கட்சியில் அவரது தலைமைத்துவம் மாற்றமடையவில்லை. அதேபோன்று அநுரகுமார திஸாநாயக்கவும் அரசியலுக்குள் பிரவேசித்த நாள் முதல் தோல்வியடைந்த தலைவராகவே இருந்தார். ஆனால் இன்று அவர் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாச பொறுப்பேற்று 4 ஆண்டுகள் மாத்திரமே நிறைவடைந்துள்ளன. இரு தேர்தல்களில் நாம் தோல்வியடைந்துள்ள போதிலும், பெற்றுக் கொண்ட பல வெற்றிகள் உள்ளன. ஆளுங்கட்சியை விமர்சிப்பதை மாத்திரமே எமது பணியாகக் கொண்டிருக்காமல் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அபிவிருத்திக்கு உதவிய ஒரே எதிர்க்கட்சி தலைவராக சஜித் விளங்குகின்றார் என்றார். https://www.virakesari.lk/article/199255
-
ஈ.கோலை: அமெரிக்காவில் ஆர்கானிக் கேரட்டுகள் மொத்தமாக திரும்ப பெறப்பட்டது ஏன்?
பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், அலெக்ஸ் பாய்ட் பதவி, பிபிசி செய்தி அமெரிக்காவில், ஈ.கோலை (E. Coli.) தொற்று ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, நாடு முழுவதும் உள்ள உணவுப் பொருள் விற்பனையகங்களில் விற்கப்படும் ஆர்கானிக் மற்றும் பேபி கேரட்டுகளை மொத்தமாக திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈ.கோலை தொற்று பாதிப்பால் இதுவரை, 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 18 மாகாணங்களில் 39 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) தெரிவித்துள்ளது. டிரேடர் ஜோஸ், ஹோல் ஃபுட்ஸ் 365, டார்கெட்ஸ் குட் & கேதர், வால்மார்ட், வெக்மேன்ஸ் உள்ளிட்ட பிரதான சூப்பர்மார்க்கெட்டுகள் மற்றும் பிற பெரிய பல்பொருள் அங்காடிகளுக்கு கிரிம்வே ஃபார்ம்ஸ் விநியோகம் செய்த கேரட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ''ஈ.கோலை தொற்றுக்குள்ளான காய்கறிகள் இனி விற்பனையகங்களில் இருக்காது. ஆனால் தடை செய்யப்படுவதற்கு முன்பே வாங்கியவர்களின் வீடுகளில் இருக்கக் கூடும். அப்படி இருப்பின் மக்கள் அந்த காய்களை தூக்கி எறிய வேண்டும் அல்லது பணத்தைத் திரும்பப் பெற விரும்பினால் கடைகளுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும்” என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஏபி செய்தி முகமையின் செய்திப்படி, ''தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் நியூயார்க், மினசோட்டா மற்றும் வாஷிங்டனில் வசிக்கின்றனர். அதைத் தொடர்ந்து கலிபோர்னியா மற்றும் ஓரிகானிலும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ''திரும்பப் பெறப்பட்ட ஆர்கானிக் பெரிய ரக கேரட்டுகளின் பேக்கேஜில் 'best-if-used-by date’(இந்த நாளுக்குள் பயன்படுத்தலாம்) குறியீடு இல்லை. ஆனால், ஆகஸ்ட் 14 முதல் அக்டோபர் 23-ம் தேதி வரை அவை விற்பனைக்கு இருந்துள்ளது.” என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியுள்ளது. அதே போல் செப்டெம்பர் 11 முதல் நவம்பர் 12 வரையில் பயன்படுத்தலாம் என அச்சடிக்கப்பட்டிருந்த 'பேபி கேரட்’ என அழைக்கப்படும் கேரட் ரகங்களும் திரும்ப பெறப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், திரும்பப் பெறப்பட்டிருக்கும் கேரட்டுகள் வீட்டில் இருப்பின் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அவை வைக்கப்பட்டிருந்த இடத்தையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. 'O121 ஈ.கோலை (E. coli)' தொற்றின் முக்கிய அறிகுறிகளில் கடுமையான வயிற்றுப் பிடிப்புகள், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவை அடங்கும். பொதுவாக பாக்டீரியா தொற்று இருந்த உணவுகளை உட்கொண்டு மூன்று முதல் நான்கு நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் தொடங்கும். பெரும்பாலான மக்கள் சிகிச்சை இல்லாமல் குணமடைகிறார்கள், ஆனால் சிலர் தீவிர சிறுநீரக பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும், அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும், என்றும் சிடிசி கூறியது. முன்னதாக மெக் டொனால்டின் குவார்ட்டர் பவுண்டர் பர்கர்களில் சேர்க்கப்பட்ட வெங்காயத்தினால், ஈ.கோலை (E. coli) தொற்று ஏற்பட்டு 104 பேர் நோய்வாய்ப்பட்டனர். அதன் பிறகு இப்படி நடப்பது இதுவே முதல்முறை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gv07gv2n4o
-
முன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு!
நீங்கள் சொல்வது உண்மை தான் அண்ணா! ஆனால் நடைமுறையில் போட்டிப் பரீட்சையாக பிள்ளைகளுக்கு மோசமான உளவியல் அழுத்தத்தை தானே வழங்குகிறது?
-
புதிய சபாநாயகராக அசோக ரங்வெல தெரிவு
21 NOV, 2024 | 10:25 AM புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வெல வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார். பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு வைபவரீதியாக ஆரம்பமான நிலையில், பத்தாவது பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பில் ஜனாதிபதி பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபைக்கு அறிவித்தார். இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வெல சபாநாயகராக வாக்கெடுப்பின்றி நியமிக்கப்பட்டார். இதையடுத்து, புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக பதவி பிரமாணம் செய்துக் கொண்டனர். இதையடுத்து, புதிய சபாநாயகருக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்தார். பின்னர், புதிய சபாநாயகருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வாழ்த்து தெரிவித்தார். இதன்போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், புதிதாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவரை சபாநாயகராக நியமித்துள்ளதை வரவேற்கிறேன். மக்களாணைக்கு தலை வணங்குகிறேன் என்றார். இதன்போது கருத்தவெளியிட்ட சபாநாயகர் அசோக ரங்வெல, பாராளுமன்றத்தின் கௌரவம் மற்றும் சுயாதினத்தை முழுமையாக பாதுகாப்பேன். சகல உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பேன். அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் அனைவரும் ஒன்றிணைந்து மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/199292
-
வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படுகின்றன – நாமல் கடும் கரிசனை
வடக்கில் சமீபத்தில் இராணுவ முகாம் அகற்றப்பட்டமை குறித்தும் மேலும் பல முகாம்களை அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறித்தும் நாமல் ராஜபக்ச கடும் கரிசனை வெளியிட்டுள்ளார். சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் பொதுமக்களிடம் மீள நிலங்களை ஒப்படைப்பது பொதுவாக பிரச்சினைக்குரிய விடயம் இல்லை என்றாலும் நாட்டின் தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்வதற்காக இது குறித்து பாதுகாப்பு தரப்பினருடன் கலந்தாலோசனைகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை 30 வருடங்களாக பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட்டது. ஆயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்ட நிலையில் இன்று அனைத்து சமூகத்தினரும் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர் வடக்கு தெற்கு என எந்த பகுதியாகயிருந்தாலும் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/199275
-
வடக்கு மக்களின் வாழ்வாதாரத்துக்கு 12 மில்லியன் ரூபா நிதி உதவி சீனத்தூதுவரால் வடக்கு ஆளுநரிடம் கையளிப்பு
வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சீன அரசாங்கத்தால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் இன்று புதன்கிழமை (20) கையளித்தார். வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (20) காலை இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தலைமையிலான குழுவினர் சந்தித்தனர். இதன்போதே அவர் இந்தக் காசோலையைக் கையளித்தார். வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்த இலங்கைக்கான சீனத்தூதுவர், இந்தப் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு தமது பங்களிப்பு இருக்கும் என்று உறுதியளித்தார். வடபகுதியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அவதானிக்கையில் சந்தோசமாக இருப்பதாக சீனத் தூதுவர் குறிப்பிட்டார். இலங்கைக்கான சீனத் தூதுவரை வரவேற்ற வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாணத்தில் ஊழல் ஒழிப்பு, அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். வடபகுதி விவசாயிகளின் நீண்ட காலப் பிரச்சினையாக அவர்களின் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குரிய வாய்ப்புக்கள் குறைவாக உள்ளன என்பதை ஆளுநர் சுட்டிக்காட்டினார். மேலும், வடக்கு மாகாணத்தின் மற்றொரு முக்கிய வளமான மீன்பிடி மூலமாக பிடிக்கப்படும் மீன்கள் அப்படியே ஏற்றுமதி செய்யப்படுகின்றன எனவும் அவை உற்பத்திப் பொருள்களாக ஏற்றுமதி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர் குறிப்பிட்டார். வடக்கு மாகாணத்துக்கு சீன அரசாங்கம் தொடர்ச்சியாக உதவிகளைச் செய்யும் என்பதைக் குறிப்பிட்ட சீனத் தூதுவர், வடக்கு மாகாண மக்கள் மிகவும் அன்பாக வரவேற்பு உபசரிப்பது தமக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும் தெரிவித்தார். மேலும், சீனாவில் 800 மில்லியன் மக்களின் வறுமையை கடந்த தசாப்த காலத்தில் இல்லாதொழித்ததாகவும் அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் சீனத் தூதுவர் குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடன், ஆளுநரின் செயலர் மு.நந்தகோபாலனும் பங்கேற்றார். https://www.virakesari.lk/article/199274
-
மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலே பலி. ஒருவர் படுகாயம்
மாங்குளம் வெள்ளாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று புதன்கிழமை (20) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மாங்குளம் பகுதியில் இருந்து மல்லாவி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், மல்லாவியில் இருந்து மாங்குளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மாங்குளம் வன்னிவிளாங்குளம் ஐந்தாவது மைல் கல் பகுதியில் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து சம்பவத்தில் மாங்குள பகுதியில் வசிக்கும் விஜயகுமார் விதுசன் (20 வயது), ஜெயகுமார் விதுசன்( 23வயது ) ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். மரியதாஸ் சுவாமிகீர்த்தி (31 வயது) எனும் இளைஞர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/199273
-
பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழப்பு; மன்னாரில் சோகம்
மன்னாரில் இறந்த இளம் தாயின் மரணதுக்கு நீதி கோரி போராட்டம் மன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணத்துக்கு நீதி கோரி மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக புதன்கிழமை (20) மாலை 4.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது. தாயின் மரணத்துக்கு நீதி வழங்கவேண்டும், தவறு செய்தவர்கள் கைது செய்யப்படவேண்டும், வைத்தியசாலை நிர்வாகம் மாற்றப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராட்டம் இடம் பெற்றது. போராட்டத்தின் போது பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்குள் போராட்டகாரர்கள் நுழைய முற்பட்ட நிலையில் கலவரம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பொலிஸாருக்கும் மக்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கலகம் அடக்கும் பொலிஸாரும் வரவலைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் இறந்த பெண்ணின் பெற்றோரிடம் கலந்துரையாடிய போதும் சுமூகமான நிலை ஏற்படவில்லை. போராட்டகாரர்கள் தொடர்ந்தும் கொட்டும் மழையில் மன்னார் பொது வைத்தியசாலைக்கும் முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/199271
-
நிதி மோசடி குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபட வேண்டிய கட்டாயம் உள்ளது - நாமல்
(இராஜதுரை ஹஷான்) தேர்தல் காலத்தில் ராஜபக்ஷர்கள் மீது முன்வைத்த நிதி மோசடி குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக சட்டத்தின் முன் நிரூபிக்குமாறு ஜனாதிபதியிடம் தொடர்ந்து வலியுறுத்துவேன். குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட வேண்டிய கட்டாயம் எமக்கு உள்ளது என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அநுராதபுரம் -ருவன்வெலிசாயவில் இன்று புதன்கிழமை (20) மத வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான நிர்வாகத்தின் மீது நாட்டு மக்கள் அதீத நம்பிக்கை வைத்துள்ளார்கள்.மக்களின் எதிர்பார்ப்பை அரசாங்கம் சிறந்த முறையில் நிறைவேற்ற வேண்டும். மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கைகள் மற்றும் அபிலாசைகளை நிறைவேற்றுவது சவால்மிக்கது என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாட்டின் ஒற்றையாட்சி, தேசிய அபிலாசைகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி செயற்படுவோம். சந்தர்ப்பத்துக்கு ஏற்றாட் போல் ஒற்றையாட்சி தொடர்பான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள போவதில்லை. ஒற்றையாட்சி தொடர்பில் ராஜபக்ஷர்கள் என்றும் ஒரே நிலைப்பாட்டையே கடைப்பிடிப்பார்கள். தேர்தல் பிரச்சாரங்களின் போது ராஜபக்ஷர்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களும் ஆட்சி மாற்றத்துக்கான பிரதான காரணியாகும். 2015 ஆம் ஆண்டும் இவ்வாறான தன்மையே காணப்பட்டது. இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலிலும் ராஜபக்ஷர்கள் மீது பல நிதி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. ராஜபக்ஷர்கள் மீது முன்வைத்த நிதி குற்றச்சாட்டை ஆதாரபூர்வமாக சட்டத்தின் முன் நிரூபிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறோம். எம்மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட வேண்டிய தேவை எமக்கு உள்ளது. குறுகிய அரசியல் இலாபத்துக்காக எம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்கள் அவற்றை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். பாராளுமன்றத்தின் கௌரவத்தை மதித்தே செயற்படுவோம். பாராளுமன்றத்தின் கௌரவத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஒருபோதும் செயற்படவில்லை. பாரம்பரியமான எதிர்க்கட்சியாகவும், மக்கள் விடுதலை முன்னணியை போன்றும் நாங்கள் செயற்பட போவதில்லை. நாட்டு மக்களின் நலன் கருதி எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார். https://www.virakesari.lk/article/199240
-
பாராளுமன்றத்துக்கு பஸ்ஸில் வருகை தந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள்
(இராஜதுரை ஹஷான்) ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் 50 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை (20) பாராளுமன்றத்துக்கு பிரத்தியேக பேருந்தில் வருகைத் தந்து தகவல்களை பதிவு செய்தனர். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை (20) பத்தரமுல்லை பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்த விசேட கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் கலந்துக் கொண்டனர். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவாகிய உறுப்பினர்களுக்கு இதன்போது பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சியின் பொதுச்செயலாளர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன்போது பாராளுமன்றத்தில் நடந்துக் கொள்ளும் முறைமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். ஆகவே மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையிலும், மக்களால் வெறுக்கப்படும் வகையிலும் எந்நிலையிலும் செயற்பட வேண்டாம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த சந்திப்பின் பின்னர் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் பாராளுமன்றத்துக்கு ஒன்றாக சென்று தகவல்களை பதிவு செய்தனர். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு எதிர்வரும் 24,25,27 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/199268
-
ஒற்றையாட்சிக்கு துணையாகி இந்தியா வரலாற்றுத் தவறைச் செய்யக்கூடாது; இந்திய உயர்ஸ்தானிகரிடம் கஜேந்திரகுமார் நேரில் கோரிக்கை
ஆர்.ராம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் ஒற்றையாட்சியை மையப்படுத்திய அரசியலமைப்பு உருவாக்கத்தினை தமிழர்களின் ஆதரவுடன் முன்னெடுக்கவுள்ளதாக காண்பிப்பதற்கு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு ஆதரவளித்து இந்தியா வரலாற்றுத் தவறைச் செய்துவிடக்கூடாது என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார். பத்தாவது பாராளுமன்றத் தேர்தல் நிறைவின் பின்னரான நிலையில் சமகால மற்றும் எதிர்கால அரசியல்,பொருளாதார நிலைமைகள் சம்பந்தமான கலந்துரையாடலொன்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் நேற்றையதினம் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றிருந்தது. இந்தச் சந்திப்பில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார், மற்றும் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்தச் சந்திப்பு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்ததாவது, இந்திய உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில் நானும், எமது கட்சியின் பொதுச்செயலாளரும் சந்திப்பில் பங்கேற்றிருந்தோம். இதன்போது புதிய அரசாங்கத்தின் அடுத்தகட்டச் செயற்பாடுகள் சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டது. அச்சமயத்தில் நாம் எமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியதோடு கோரிக்கையொன்றையும் முன்வைத்துள்ளோம். அந்தவகையில், தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்தியா தலையீடுகளைச் செய்ததன் விளைவாகவே இந்திய, இலங்கை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஒப்பந்தத்தில் சமஷ்டியை மையப்படுத்திய குணாம்சங்கள் காணப்படுகின்றன. இருப்பினும் இந்திய, இலங்கை ஒப்பந்தத்தினை மலினப்படுத்தும் வகையிலும் தமிழ் மக்களின் சமஷ்டிக் கோரிக்கையை வலுவிழக்கச் செய்யும் வகையிலும் தான் 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. 13ஆவது திருத்தச்சட்டம் ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை வலிந்து திணப்பதாகும். அதன் காரணத்தினாலேயே நாம் அதனை நிராகரிக்கின்றோம். நாம் இந்திய, இலங்கை ஒப்பந்தத்தினை நிராகரிக்கவில்லை. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இவ்வாறான நிலையில், தற்போது அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் வடக்கு,கிழக்கிலும் ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. வழக்கமாகவே அரசாங்கத்துக்கு ஆதரவாக செல்கின்ற வாக்குகளின் அடிப்படையில் அவர்களுக்கு ஆசனங்கள் கிடைத்துள்ளன. மாறாக தமிழ் தேசியத்துக்கு எதிராக மக்கள் வாக்களிக்கவில்லை. அதனை புள்ளிவிபரங்கள் மிகத்தெளிவாக காண்பிக்கின்றன. அவ்வாறு பெற்றுக்கொண்ட ஆசனங்களையும் வைத்துக்கொண்டு அநுரகுமார திசாநாயாக்க ஒற்றையாட்சியை மையப்படுத்திய புதியதொரு அரசியலமைப்பினை உருவாக்கவுள்ளார். தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்து அதனை எதிர்த்தாலும் கூட, வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்தியானது தனது பிரதிநிதித்துவங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு குறித்த ஒற்றையாட்சி அரசியலமைப்பை வடக்கு,கிழக்கு தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று உள்நாட்டிலும், உலகத்துக்கும் காண்பிக்கவுள்ளார்கள். இந்த விடயத்துக்கு இந்தியா துணைபோய்விடக்கூடாது. அநுர தலைமையிலான அரசாங்கத்தின் ஒற்றையாட்சியை மையப்படுத்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு தமிழ் மக்களை நடுத்தெரிவில் விடுகின்ற செயற்பாட்டிற்கு துணைபோய் வரலாற்றுத் தவறை இழைத்துவிடக்கூடாது என்பது எமது கோரிக்கையாகும். எம்மைப்பொறுத்தவரையில் நாம் சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வுயோசனையை முன்வைக்கின்றபோது அதனை மையப்படுத்தி பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தயாராகவே உள்ளோம். குறிப்பாக எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியதைப்போன்று, தமிழ் மக்கள் பேரவையின் தேர்தல் விஞ்ஞாபனத்தை மையப்படுத்தியதாக அந்த கலந்துரையாடல் ஆரம்பமாகினால் அதில் பங்கேற்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். அதேநேரம், பொறுப்புக்கூறல் விடயத்தினை முன்னெடுப்பதற்கு நாம் இந்தச் சந்தர்ப்பத்தினை சரியானதொரு தருணமாகவே பார்க்கின்றோம். இந்தியா, இந்த விடயத்தில் நேரடியாக ஈடுபடுவதற்கு நெருக்கடியான நிலைமைகள் காணப்படுமாக இருந்தால் நிச்சயமாக மூன்றாவது தரப்பை மையப்படுத்திய நகர்வுகளை மேற்கொள்வதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவது பொருத்தமானதாக இருக்கும். குறிப்பாக, ராஜபக்ஷக்களும், இனவாதிகளும் தென்னிலங்கையில் பலமிழந்துபோயுள்ள நிலையில், இலங்கையில் இழைக்கப்பட்ட மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுவதற்கு சர்வதேச குற்றவியல் நீதிவிசாரணையை முன்னெடுப்பது அவசியமாகும். அதன் மூலமாகவே நியாயமானதொரு நீதி நிலைநாட்டப்படும். தற்போதைய நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஏதுநிலைகள் காணப்பட்டாலும் அவற்றை கட்டுறுத்தி அடுத்தகட்டமாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான எந்தவொரு சூழல்களும் காணப்படவில்லை. ஆகவே, சாட்சியங்கள் திரட்டப்பட்டு, அதற்கான ஆதரங்கள் வலுவாக்கப்பட்டு அடுத்தகட்ட விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்தியா பகிரங்கமான ஒத்துழைப்புக்களை வெளியிட முடியாது போனாலும் கூட, எதிர்மறையான பிரதிபலிப்புக்களைச் செய்யாது இருக்க வேண்டும் என்றும் கோரியுள்ளோம். எமது கருத்துக்களை உயர்ஸ்தானிகர் செவிமடுத்துக்கொண்டதோடு அடுத்தகட்டமாக மேற்படி விடயங்களை ஆராய்வதாகவும் குறிப்பிட்டார் என்றார். https://www.virakesari.lk/article/199242
-
ஆசிய - பசுபிக் பொருளாதார வளர்ச்சி எமது தோள்களில் சுமக்கப்படும் பொறுப்பு - சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்
ஆசிய - பசுபிக் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது எமது தோள்களில் சுமக்கப்படுகின்ற பொறுப்பாக உள்ளது என்று சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். பொருளாதார தலைவர்கள் பங்கேற்புடன் நடைபெற்ற 31ஆவது ஆசிய - பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அழகிய தோட்ட நகரமான லிமாவுக்கு மீண்டும் வருகை தந்து ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பைப் பற்றி விவாதிப்பதில் உங்களுடன் கலந்துகொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக ஜனாதிபதி போலுவார்டே மற்றும் பெருவியன் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பல தசாப்தங்களாக, ஆசிய மற்றும் பசுபிக் பகுதிகளின் வளர்ச்சி, செழிப்பு மற்றும் இணைப்பு ஆகிய விடயங்களில் பெரும் வெற்றிக்கு இட்டுச்செல்வதில் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மன்றம் முக்கிய பங்காற்றியுள்ளது, மேலும், இப்பகுதியை உலகப் பொருளாதார வளர்ச்சியின் மிகவும் ஆற்றல் மிக்க பொருளாதாரம் மற்றும் முதன்மை இயந்திரமாக மாற்றுகிறது. உலகம் தற்போது ஒரு நூற்றாண்டில் காணப்படாத மாற்றத்தை துரிதமாக காண்கிறது. ஆசிய-பசுபிக் ஒத்துழைப்பு, புவிசார் அரசியல், ஒருதலைப்பட்சமான செயற்பாடுகள், பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் சவால்களை எதிர்கொள்கிறது. ஆசிய-பசுபிக் நாடுகளாகிய நாம் நமது தோள்களில் அதிக பொறுப்புகளைச் சுமக்கிறோம். சவால்களைச் சந்திக்க, புத்ராஜெயா விஷன் 2040ஐ முழுமையாக வழங்க, ஆசிய-பசுபிக் சமூகத்துடன் பகிரப்பட்ட எதிர்காலத்துடன் உருவாக்க, மற்றும் ஆசிய-பசுபிக் வளர்ச்சியில் ஒரு புதிய சகாப்தத்தை ஆரம்பிப்பதற்கு நாம் ஒற்றுமையுடனும் ஒத்துழைப்போடும் செயற்பட வேண்டும். இந்த நோக்கத்துக்காக, நான் பின்வருவனவற்றை முன்மொழிய விரும்புகிறேன். முதலில், ஆசிய-பசுபிக் ஒத்துழைப்புக்கான திறந்த மற்றும் ஒன்றோடொன்று இணைந்த முன்னுதாரணத்தை நாம் உருவாக்க வேண்டும். நாம் பலதரப்பு மற்றும் திறந்த பொருளாதாரத்துக்கு உறுதியுடன் இருக்க வேண்டும், உலக வர்த்தக அமைப்பின் மையத்தில் உள்ள பலதரப்பு வர்த்தக முறையை உறுதியாக நிலைநிறுத்த வேண்டும், உலக பொருளாதார மற்றும் வர்த்தக விதிகளின் காப்பகமாக இம்மன்றத்தின் பங்கை முழுமையாக மீண்டும் செயற்படுத்த வேண்டும். பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் இணைப்பை மேம்படுத்த வேண்டும். வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் சேவைகளின் போக்கைத் தடுக்கும் சுவர்களை இடித்து, நிலையான, மென்மையான தொழில்துறை விநியோகச் சங்கிலிகளை நிலைநிறுத்தி, பிராந்தியத்திலும் உலகிலும் சுமுகமான பொருளாதார சுழற்சியை ஊக்குவிக்க வேண்டும். ஆசிய-பசுபிக் பகுதியின் சுதந்திர வர்த்தகப் பகுதி என்பது பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்புக்கான ஒரு இலட்சியப் பார்வையாகும். நமது பிராந்தியத்தின் நீண்டகால வளர்ச்சி மற்றும் செழிப்புக்கும் அது முக்கியமானதாகும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு பீஜிங்கில் நடந்த ஆசியப்-பசுபிக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்தில் ஆசியப் பசுபிக் சுதந்திர வர்த்தக வலயச் செயல்முறையைத் தொடங்குவதற்கான ஒரு வரலாற்று முடிவு எடுக்கப்பட்டது. தற்போது அந்தச் செயல்முறைக்கு வழிகாட்ட ஒரு புதிய ஆவணத்தை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். திறந்த ஆசிய-பசிபிக் பொருளாதாரத்தை நோக்கிய எமது முயற்சிகளுக்கு இது புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று நான் நம்புகிறேன். தற்போது திறக்கப்படுவது சீன நவீனமயமாக்கலின் ஒரு தனித்துவமான அடையாளமாகும். சீனா எப்போதும் சீர்திருத்தத்தை திறப்பதன் மூலம் ஊக்குவிக்கிறது. நாங்கள் தானாக முன்வந்து உயர்தர சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக விதிகளுக்கு குழு சேர்ந்துள்ளோம். மேலும், திறப்பதற்கு முன்முயற்சி நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். மேலும் தொலைத்தொடர்பு, இணையம், கல்வி, கலாசாரம், மருத்துவ சேவை மற்றும் பிற துறைகளை மேலும் திறக்க முறையான நடவடிக்கைகளை எடுக்கிறோம். பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். திறந்த பசுபிக் பங்காண்மைக்கான விரிவான மற்றும் முற்போக்கான ஒப்பந்தம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் ஆகியவற்றில் இணைவதற்கும் நாங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். பெருவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்துவதற்கான நெறிமுறையில் நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம். மேலும், சுதந்திர வர்த்தக பகுதி 3.0க்கு மேம்படுத்துவதற்கு ஆசியானுடன் பேச்சுவார்த்தைகளை கணிசமாக முடித்துள்ளோம். தொடர்புடைய தரப்பினருடன் சேர்ந்து டிஜிட்டல் மற்றும் பசுமையான பகுதிகளில் வர்த்தக ஒப்பந்தங்களைப் பற்றி விவாதிக்க முயல்வோம். மேலும், உயர்தர தடையற்ற வர்த்தகப் பகுதிகளின் உலகளாவிய - சார்ந்த நெட்வொர்க்கை சீராக விரிவுபடுத்துவோம். இரண்டாவதாக, ஆசியா-பசுபிக் பகுதிக்கு பசுமையான கண்டுபிடிப்புகளை ஊக்கியாக மாற்ற வேண்டும். புதிய சுற்று அறிவியல் - தொழில்நுட்ப புரட்சி மற்றும் தொழில்துறை மாற்றத்தால் வழங்கப்படும் வாய்ப்புகளை நாம் உறுதியாக பயன்படுத்த வேண்டும். மேலும், செயற்கை நுண்ணறிவு, வாழ்க்கை, ஆரோக்கியம், எல்லைப் பகுதி பரிமாற்றங்கள், ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். புதுமைக்கான திறந்த, நியாயமான, பாரபட்சமற்ற சுற்றுச்சூழல் அமைப்பை நாம் வளர்க்க வேண்டும். எமது பிராந்தியம் முழுவதும் உற்பத்திச் சக்திகளின் பாய்ச்சல் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். சுத்தமான மற்றும் அழகான ஆசியா-பசுபிக் பகுதியை உருவாக்க, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். வளங்களை பாதுகாத்தல் மற்றும் அவற்றின் திறமையான பயன்பாடு மற்றும் பசுமை மற்றும் குறைந்த கார்பன் மேம்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் அனைத்து சுற்று பசுமை மாற்றத்தையும் உருவாக்க வேண்டும். ஆசியா-பசுபிக் வளர்ச்சிக்கான புதிய வேகம் மற்றும் புதிய இயக்கிகளை உருவாக்க ஒருங்கிணைந்த டிஜிட்டல் மற்றும் பசுமை மாற்றம் மற்றும் மேம்பாட்டை நாம் முன்னோக்கி நகர்த்த வேண்டும். சீனா புதிய தரமான உற்பத்தி சக்திகளை வளர்த்து வருகிறது. பசுமை கண்டுபிடிப்புகளில் ஆர்வமுள்ள தரப்பினருடன் ஒத்துழைப்பை ஆழமாக்குகிறது. சீனா உலகளாவிய எல்லை தாண்டிய தரவு ஓட்ட ஒத்துழைப்பு முன்முயற்சியைத் தொடங்கும். மேலும், திறமையான, வசதியான மற்றும் பாதுகாப்பான எல்லை தாண்டிய தரவு ஓட்டங்களை மேம்படுத்துவதற்கு மற்ற தரப்பினருடன் ஆழமான ஒத்துழைப்பை நாடுகிறது. ஆசியப் -பசுபிக் பொருளாதார கட்டமைப்பில் சீனா முன்முயற்சிகளை முன்வைத்துள்ளது. மற்றவற்றுடன் டிஜிட்டல் மேம்பாட்டு பயன்பாடு, பசுமை விநியோகச் சங்கிலிகளில் திறன் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவுக்கான அணுகுமுறைகளில் பரிமாற்றங்கள் மற்றும் உரையாடல் மற்றும் உணவு விநியோகச் சங்கிலிகளின் டிஜிட்டல் மயமாக்கல், பங்களிக்கும் நோக்கத்துடன் ஆசிய-பசிபிக் உயர்தர வளர்ச்சிக்கு நாம் துணையாக இருப்போம். மூன்றாவதாக, ஆசிய-பசுபிக் வளர்ச்சிக்கான உலகளாவிய நன்மை மற்றும் உள்ளடக்கிய பார்வையை நாம் நிலைநிறுத்த வேண்டும். பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்த ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு தளத்தை நாம் நன்கு பயன்படுத்த வேண்டும். நாம் வளரும் பொருளாதாரங்கள் மற்றும் பின்தங்கிய குழுக்களுக்கான ஆதரவை அதிகரிக்க வேண்டும். மேலும், பல பொருளாதாரங்கள் மக்கள் வளர்ச்சியில் இருந்து பயனடைய அனுமதிக்கவும் மேம்படுத்துவதற்கும் விநியோகிப்பதற்கும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்த ஆண்டு, முறைசாரா பொருளாதாரத்தில் இருந்து முறையான மற்றும் உலகப் பொருளாதாரத்துக்கு மாறுவதற்கான ஒத்துழைப்பை பெரு நாடு தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. மக்களை முதன்மைப்படுத்துதல், சமூக நீதி மற்றும் நீதியை மேம்படுத்துதல் மற்றும் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துதல் ஆகிய வளர்ச்சித் தத்துவத்துடன் இணைந்த இந்த முயற்சியை சீனா வரவேற்கிறது. ஆசிய-பசுபிக் பொருளாதாரங்களின் உலகளாவிய நன்மை மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் கொண்டுவரும் நோக்கத்திற்காக குடியிருப்பாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில்துறை மேம்பாட்டை மேம்படுத்துவதற்கும் சீனா முன்முயற்சிகளை முன்னெடுக்கும். ஆசியப்-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு 2026ஐ சீனா நடத்தவுள்ளது. பிராந்தியத்தில் உள்ள மக்களின் நலனுக்காக ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பை ஆழப்படுத்த அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்பட நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். சீர்திருத்தம் மற்றும் திறப்பு என்பது ஒரு வரலாற்று செயல்முறையாகும், இதில் சீனாவும் உலகமும் ஒன்றாக வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை அடைகின்றன. சில மாதங்களுக்கு முன்பு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய குழு, சீன நவீனமயமாக்கலை முன்னெடுத்துச் செல்வதற்கு ஆழமான சீர்திருத்தத்துக்கான முறையான திட்டங்களை வகுத்தது. உயர்தர சோசலிச சந்தைப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல், உயர்தரப் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுதல், உயர்தரத் திறப்பை ஊக்குவித்தல், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் அழகான நாட்டைக் கட்டியெழுப்புதல் தொடர்பாக 300க்கும் மேற்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் வெளியிடப்பட்டன. சீனாவின் வளர்ச்சியானது ஆசிய-பசுபிக் பிராந்தியத்துக்கும் உலகிற்கும் புதிய வாய்ப்புகளை வழங்கும். ஒரு பழங்கால சீன முனிவர், “நல்லொழுக்கம் உள்ள ஒரு மனிதன், தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வெற்றியைத் தொடரும்போது, மற்றவர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும் வெற்றி பெறவும் உதவுவதற்காகச் செயல்படுகிறார்" என்று குறிப்பிட்டார். இலத்தீன் அமெரிக்காவில் இதேபோன்றதொரு பழமொழி உள்ளது, இது ‘இலாபகரமான தேசியமாக இருக்க ஒரே வழி தாராளமாக உலகளாவியதாக இருக்க வேண்டும்’ என்பதாகும். அமைதியான வளர்ச்சி, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பு மற்றும் பொதுவான செழிப்பு ஆகியவற்றைக் கொண்ட அனைத்து நாடுகளின் நவீனமயமாக்கலுக்கு நாம் அனைவரும் பங்களிக்கும் வகையில், அதன் வளர்ச்சியின் ‘எக்ஸ்பிரஸ் ரயிலில்’ தொடர்ந்து பயணிக்கவும், சீனப் பொருளாதாரத்துடன் இணைந்து வளரவும் அனைத்து தரப்பினரையும் சீனா வரவேற்கிறது என்றார். https://www.virakesari.lk/article/199246
-
யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய சித்த மருத்துவ பீடாதிபதி!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக சித்த வைத்தியக் கலாநிதி விவியன் சத்தியசீலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று (18) இடம்பெற்ற சித்த மருத்துவ பீடச்சபை கூட்டத்தில் நடாத்தப்பட்ட பீடாதிபதி தெரிவின் போது 04 மேலதிக வாக்குகளைப் பெற்று கலாநிதி விவியன் சத்தியசீலன் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இதுவரை காலமும் சித்த மருத்துவ அலகாகச் செயற்பட்டு வந்த சித்த மருத்துவ கற்கை அலகு கடந்த ஜூலை 26 ஆம் திகதி பீடமாகத் தரமுயர்த்தப்பட்டது. சித்த மருத்துவ பீடத்தில் நஞ்சியல் மற்றும் பரம்பரை மருத்துவம், மனித உயிரியல், சமூகநல மருத்துவம், சிரோரோகமும் அறுவை மருத்துவமும், நோய் நாடல் சிகிச்சை, குணபாடம், மூலதத்துவம், குழந்தை மற்றும் மகளிர் மருத்துவம் ஆகிய கற்றல் துறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. சித்த மருத்துவ அலகு பீடமாகத் தரமுயர்த்தப்பட்ட நாளில் இருந்து முன்னாள் துறைத் தலைவரும், சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி விவியன் சத்தியசீலன் பதில் பீடாதிபதியாகச் செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். -யாழ். நிருபர் பிரதீபன்- https://tamil.adaderana.lk/news.php?nid=196127
-
அழுத்தமில்லாத கல்வியை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் - புதிய பிரதமர்
அடுத்த மறுமலர்ச்சி யுகத்திற்கு ஏற்ற பிரஜைளை உருவாக்கக்கூடிய மன அழுத்தமில்லாத கல்விக்காக மாணவர்களின் நம்பகத்தன்மையை நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். புதிய அரசாங்கத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் தனது அமைச்சுப் பதவியை இன்று (20) பொறுப்பேற்றுக்கொண்ட போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், கல்வி போன்றதொரு விடயத்துடன் தொடர்புடைய அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார். விடயத்தின் ஆழத்தை தான் முழுமையாக புரிந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். புதிய அரசின் கொள்கைகளின்படி, கல்விக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு, பாடசாலைக் கல்வியானது முறையாகவும் கால ஒழுங்கிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றார். குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கல்வி கற்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் எனவும், தற்போது கல்வித்துறையில் நிலவும் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், மக்கள் அனைவரினதும் கணிசமான ஆதரவு அதற்கு அவசியம் என்றும் அவர் மேலும் கூறினார். இதேவேளை, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளராக கே. எம். ஜி. எஸ். என். களுவெவவும் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். https://tamil.adaderana.lk/news.php?nid=196165
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
பட மூலாதாரம்,GETTY IMAGES ஆஸ்கர் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 ஆண்டு கால திருமண பந்தத்தில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளனர். இதுதொடர்பாக தம்பதியர் சார்பில் வழக்கறிஞர் மூலம் நவம்பர் 19 (செவ்வாய்க்கிழமை) அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதி சார்பில் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், உணர்வு ரீதியான காரணங்களால் இருவரும் பிரிய முடிவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார். "மணமாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு சாய்ராவும் அவரது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானும் பிரிவது என்ற கடினமான முடிவை எடுத்திருக்கிறார்கள். திருமண பந்தத்தில் ஏற்பட்ட உணர்வு ரீதியான சில அழுத்தங்களால் பிரியும் முடிவுக்கு இருவரும் வந்தார்கள்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்தாலும், இருவரின் பந்தத்தில் ஒருவித அழுத்தம் இருந்தது. இருவருக்கும் நடுவே இட்டு நிரப்ப முடியாத அளவுக்கு இடைவெளி ஏற்பட்டுள்ளது. இருவராலும் அந்த இடைவெளியை குறைக்க முடியவில்லை" என்று வந்தனா ஷா குறிப்பிட்டுள்ளார். "நாங்கள் 30 ஆண்டுகளை நிறைவு செய்வோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அனைத்துமே எதிர்பாராத முடிவுகளைத்தான் கொண்டுள்ளன. கடவுளின் சிம்மாசனம்கூட உடைந்த இதயங்களினால் நடுங்கும். மேலும், உடைந்தவை மீண்டும் சேராது. இந்த இக்கட்டான சமயத்திலும் உங்கள் அன்பிற்கும், எங்கள் தனியுரிமையை மதித்ததற்கும் நன்றி" என்று அவர் பதிவிட்டுள்ளார். ஏ.என்.ஐ. செய்தி முகமை தகவலின்படி, விவாகரத்து முடிவை சாய்ரா பானு முதலில் வெளியிட, பின்னர் இருவர் தரப்பிலும் கூட்டாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மிகுந்த வலியுடன் திருமண பந்தத்தில் இருந்து வெளியேறும் முடிவுக்கு வந்ததாக சாய்ராவும் ஏஆர் ரஹ்மானும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். வாழ்க்கையின் இந்த கடினமான கட்டத்தில் இருந்து வெளியே வர, மக்கள் தங்களது தனியுரிமையை மதித்து நடந்து கொள்ளுமாறு இருவரும் கேட்டுக் கொண்டுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES சாய்ரா பானு - ஏ.ஆர்.ரஹ்மான் திருமணம் 1995-ஆம் ஆண்டு நடந்தது. அவர்களுக்கு கதீஜா, ரஹிமா ஆகிய இரு மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர். ஏ.ஆர். அமீன், தனது இன்ஸ்டா வலைதள பக்கத்தில் "இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் புரிதலுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை வாழ்க்கை பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ், மலையாள திரைப்படங்களுக்கு குழு இசையமைப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சேகர் என்பவரின் மகன் தான் ஆஸ்கார் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான். சிறுவயது முதலே இசைக் கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளதால் அவருடைய தந்தையிடம் இருந்து பல நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார். எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரின் இசைக்குழுவில் பணியாற்றியுள்ளார். பள்ளிக்கல்வியைக்கூட முடிக்காதவர், தன்னுடைய இசைப் புலமையால் பின்னாளில் லண்டன் இசைக் கல்லூரியில் ஸ்காலர்ஷிப் பெற்று இசை கற்றிருக்கிறார். விளம்பரப் படங்களுக்கு டியூன் போட்டுக் கொண்டிருந்தவர், இயக்குநர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படமே தேசிய விருதைப் பெற்றுத் தந்தது அவருடைய கூடுதல் பலம். 1992 முதல் 2000ஆம் ஆண்டு வரை அவர் இசையமைத்த படங்கள் தொடர்ந்து அவருக்கு ஃப்லிம் ஃபேர் விருதைப் பெற்றுத் தந்தன. ஏ.ஆர்.ரஹ்மான் தனது 32 ஆண்டுகால இசை வாழ்க்கையில் ஆஸ்கர், கிராமி உள்ளிட்ட உலகின் உயரிய பல விருதுகளை வென்றுள்ளார். திலீப்குமார் என்ற இயற்பெயர் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் தனது 23-வது வயதில் 1989-ஆம் அண்டு இஸ்லாமைத் தழுவினார். தன்னைப் பொருத்தவரை இஸ்லாம் என்பது எளிய வாழ்க்கை மற்றும் மனித நேயம் என்று அவர் கூறினார். ராய்ட்டர்ஸ் செய்தி முகமைக்கு அளித்த ஒரு நேர்காணலில், "இஸ்லாம் என்பது ஒரு பெருங்கடல். அதில் 70-க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. அன்பை போதிக்கும் சூஃபி தத்துவத்தை நான் பின்பற்றுகிறேன்." என்று தெரிவித்தார். 57 வயதான ஏ.ஆர்.ரஹ்மான் 2 ஆஸ்கர், 2 கிராமி மற்றும் ஒரு கோல்டன் குளோப் விருதுகளை வென்றுள்ளார். ஆஸ்கர் விருது வென்ற ஸ்லம்டாக் மில்லியனர் உள்பட தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்லம்டாக் மில்லினியனர் படத்திற்காக சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த பாடல் ஆகிய 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றார் 2009ம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழாவில், ஸ்லம்டாக் மில்லினியனர் படத்திற்காக சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த பாடல் ஆகிய 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான். இதன் மூலம் ஆஸ்கர் வென்ற முதல் தமிழர் என்கிற பெருமையை பெற்றார். விழா மேடையில் ஏ ஆர்.ரஹ்மான் எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் பேசினார். "நான் கீழே அமர்ந்திருந்தபோது பெனோலோபி கிருஸ் ஸ்பானிஷ் மொழியில் பேசினார். ஓ.. இது நன்றாக உள்ளதே. நாமும் தமிழிலேயே பேசிவிடலாம் என நினைத்தேன். மேடையில் எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் கூறினேன். நான் சொன்ன இந்த வார்த்தைகள் புனித நூலில் இருந்து எடுக்கப்பட்டவை. கடவுள் அனைவருக்கும் பொதுவானவர்." என்று பின்னர் ஒரு தருணத்தில் அவர் கூறினார். உலகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய கலைஞர்களுடன் இணைந்து ரஹ்மான் பணிபுரிந்துள்ளார். மக்களை ஒருங்கிணைக்க இசை ஒரு கருவியாக இருக்கும் என்பது ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்து. தேசிய கீதம் முதல் தமிழ் செம்மொழி மாநாடு பாடல் வரையில் இவருடைய இசை பரவியிருந்திருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cy872nzz4l3o
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
சிந்துஜாவின் மரணம் - பொலிஸாருக்கு காலவகாசம் மன்னார் கட்டையடம்பன் பகுதியை சேர்ந்த இளம் தாய் சிந்துஜா, மன்னார் வைத்தியசாலையில் மரணம் அடைந்த நிலையில், குறித்த மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்வைத்த முறைப்பாடுக்கு அமைவாக பொலிஸாரால் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நம்பப்பட்டு வந்த போதும் விசாரணைகள் மந்த கதியில் இடம்பெற்றுள்ளமை நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது. சிந்துஜாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று செவ்வாய் (19) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பாக தான் குறித்த வழக்கு மன்னார் பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மன்னார் குற்றத்தடுப்பு பொலிஸார் மன்றில் தெரிவித்திருந்தனர். இதுவரை காலமும் மன்னார் மடு பொலிஸார் குறித்த வழக்கு விசாரணையை B வழக்காக பதிவு செய்யாது சாதாரண வழக்காக பதிவு செய்து விசாரணைகளை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரனி டெனிஸ்வரன் மற்றும் சர்மிலன் டயசின் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை துரிதப்படுத்தி இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்குமாறும் அதே நேரம் வழக்கை B அறிக்கையாக தாக்கல் செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். குறித்த வழக்கு மேலதிக விசாரணைக்காக டிசம்பர் மாதம் 03 திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் சிந்துஜாவின் விடயத்தில் தங்களை முன்னிறுத்தி விளம்பரம் தேடிய எவரும் வழக்கு விசாரணைக்கு வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. -மன்னார் நிருபர் லெம்பட்- https://tamil.adaderana.lk/news.php?nid=196152
-
அனுரவால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காது | சுமந்திரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
அனுரவால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காது | MA Sumanthiran | Rj Chandru Report
-
7 கோடி கொள்ளை! சந்தேக நபர் கைது!
7 கோடி கொள்ளையின் சந்தேகநபர் ஒருவர் கைது! பணத்தை பாதுகாப்பாக கொண்டு செல்லும் தனியார் நிறுவனமொன்றின் சாரதி ஒருவர் 7 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மினுவாங்கொடையில் வைத்து கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மினுவாங்கொட பொலிஸாரும் இணைந்து நேற்று (19) பிற்பகல் கம்பஹா கடுவங்கஹா பகுதியில் வைத்து சந்தேக நபரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்து 5 கிராம் 420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில், கொள்ளையிடப்பட்ட பணத்தில் இருந்து 31,515,291 ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது. தம்மிட்ட மாகவிட பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுயை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பணத்தை பாதுகாப்பாக கொண்டு செல்லும் தனியார் நிறுவனமொன்றின் நான்கு பேர் கொண்ட அதிகாரிகள் குழுவொன்று நேற்று காலை பணப்பைகளுடன் வேனில் மினுவாங்கொடையில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றுள்ளனர். வங்கிக்கு அருகில் வந்த பிறகு, சாரதி மட்டும் வேனில் இருந்த நிலையில் ஏனையவர்கள் வேனில் இருந்து இறங்கிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அப்போது வேனில் 7 கோடியே 13 லட்சத்து 27 ஆயிரத்து 296 ரூபாய் பணம் இருந்த நிலையில் குறித்த பணத்துடன் சாரதி குறித்த வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். பின்னர் அவர் கம்பஹா உக்கல்கொட பிரதேசத்தில் வேனை கைவிட்டு மோட்டார் சைக்கிளில் மற்றுமொரு நபருடன் தப்பிச் சென்றது அங்கிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியிருந்தது. https://tamil.adaderana.lk/news.php?nid=196146
-
யாழ்ப்பாணத்தில் அடை மழையால் 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பதிப்பு!
யாழ். குருநகர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்! யாழ்ப்பாணம் - குருநகர் தொடர்மாடிக்கு அருகாமையில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். அண்ணளவாக 60 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் உறவினர்களது வீடுகளுக்கு இடம்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வெள்ள நீர் வடிந்தோடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும், வெள்ளம் புகுந்த பல வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலையே காணப்படுகிறது. https://www.virakesari.lk/article/199234
-
பிள்ளையான் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பு
5 மணிநேர வாக்குமூலத்தின் பின் குற்றப்புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறினார் பிள்ளையான் குற்றப் புலனாய்வுப் பிரிவில் 5 மணிநேர வாக்குமூலம் வழங்கிய பிள்யைான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அங்கிருந்து வெளியேறினார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட காணொளியொன்றில் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானா என்பவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார். அதில் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதல்தாரிகளுக்கும் தொடர்பு இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில் அவர் வெளிப்படுத்திய இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றையதினம் அங்கு முன்னிலையாகி 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதையடுத்து, அங்கிருந்து வெளியேறியுள்ளார். https://www.virakesari.lk/article/199236
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
இடதுசாரிகள் பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம் காரணமாக தமது குடும்பங்களை வெளிப்படுத்த/முன்னுரிமை அளிப்பதில்லையாம் அண்ணை. அவரின் மனைவி ஒன்றுவிட்ட சகோதரரின்(ஜேவிபியில் இருந்து கொல்லப்பட்ட) மனைவி என வாசித்த ஞாபகம்.
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
செய்தியை இணைக்கும் ஆர்வத்தில் நலிந்தவை கவனிக்கவில்லை அண்ணை, திருத்தி விடுவம்!
-
பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழப்பு; மன்னாரில் சோகம்
பிரசவத்தின் போது மரணமடைந்த இளம் தாய் மற்றும் சேயின் சடலங்கள் யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன மன்னார் பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் (19) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய் மற்றும் சேயின் சடலங்கள் மேலதிக பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (19) இரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான இளம் தாய் வேணுஜா என அழைக்கப்படும் ஜெகன் ராஜ சிறி, திருமணமாகி 10 வருடங்கள் குழந்தை இல்லாத நிலையில் நேற்றைய தினம் (19) பிரசவத்திற்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் போது, தாயும் சேயும் மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில் உறவினர்கள், பெற்றோர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றிணைந்து மகப்பேற்று விடுதியில் போராட்டம் நடத்திய நிலையில் வைத்தியசாலையில் பதட்டமான நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் நீதவான், இறந்த தாய் மற்றும் சேயின் சடலங்களை பிரதே பரிசோதனைக்காகவும் மேலதிக விசாரணைகளுக்காவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார். நீதவானின் உத்தரவுக்கு அமைய சடலங்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. -மன்னார் நிருபர் லெம்பட்- https://tamil.adaderana.lk/news.php?nid=196155
-
யாழ்.செல்கிறார் சீனத் தூதுவர்
பருத்தித்துறையில் சீன தூதர் மகிழ்ச்சி! வடக்கை வென்ற முதல் தெற்கை சேர்ந்த தலைவர் அநுர குமார திசாநாயக்க என இலங்கைக்கான சீன தூதர் கீ சென்ஹொங் பருத்தித்துறை - சக்கோட்டை முனையில் வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினர் பருத்தித்துறைக்கு நேற்று (19) விஜயம் மேற்கொண்டனர். வடக்கு மாகாணத்திற்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ள சீன தூதுவர் நேற்று மதியம் 01.00 மணிக்கு பருத்தித்துறை - சக்கோட்டை முனைக்கு குழுவினரோடு வந்து சென்றுள்ளார். இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது சீன தூதுவர் இவ்வாறு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். வடக்கிற்கு வரும் சந்தர்ப்பங்களில் பருத்தித்துறை - சக்கோட்டை முனைக்கு வந்து செல்லவதனை வழக்கமாக கொண்டிருப்பது தொடர்பில் கேள்வி எழுப்பிய போது, இந்த இடம் மிகவும் அழகான இடம் என்றும் மிகவும் விருப்பமான இடம் எனவும் கூறியதுடன் வடக்கு கிழக்கில் சீன அரசாங்கத்தின் சார்பில் தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்ததுடன் வடக்கு கிழக்கில் உள்ள யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள சிறியளவிலான கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு கடற்றொழில் உபகரணங்கள் மற்றும் மீனவ குடும்பங்களுக்கான உலருணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள் என்பன பல கட்டங்களாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது என்றார். இலங்கையில் புதிய அரசாங்கம் அமைந்துள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பிய போது, இலங்கை வரலாற்றில் தெற்கை சேர்ந்த தலைவர் ஒருவர் வடக்கை வெற்றி பெற்றிருப்பது முக்கியமான நிகழ்வாகும் என மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். இடதுசாரி பின்னணி கொண்ட அரசு இலங்கையில் ஆட்சிக்கு வந்திருப்பது தொடர்பில் சீனா எப்படி பார்க்கிறது என கேள்வி எழுப்பிய போது, இலங்கை அரசு என்று அடிப்படையில் சீன அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் வேறுபாடு இல்லை. யாராக இருந்தாலும் அரசு என்ற முறையில் சீனாவின் ஆதரவு தொடரும் என்றார். வட கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குவது மகிழ்ச்சி என்றும் இருப்பினும் அரசியல் தீர்வு விடயத்தில் சீன அரசின் நிலைப்பாடு தொடர்பில் கேள்வி எழுப்பிய போது, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களர்கள் என எல்லோரும் வேறுபாடுகளை கடந்து எல்லோரும் இலங்கையர்களாக வாழ்வதற்கு சீனா ஒத்துழைப்புகளை வழங்கும் என்று பதிலளித்தவர் சக்கோட்டை முனையில் நிறுவப்பட்டிருக்கும் நல்லிணக்க நினைவுத்தூணில் பொறிக்கப்பட்டிருக்கும் பன்முகத்தன்மையில் ஒற்றுமையே இலங்கையின் பலம் (unity in diversity is the stength of srilanka) என்ற வாசகத்தை படித்துக்காட்டி சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://tamil.adaderana.lk/news.php?nid=196167