Everything posted by ஏராளன்
-
கொஞ்சம் ரசிக்க
அண்ணை, இது உண்மையாயின் பாராட்டத்தான் வேணும்.
-
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கொங்கிறீட் சுவர் இடிந்து வீழ்ந்தது
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் கடந்த 2018ம் ஆண்டு இபாட் திட்டத்தின் கீழ் பிரதான நீர்ப்பாசன வாய்க்காலில் அமைக்கப்பட்ட கொங்கிறீட் சுவர் உரிய முறையில் அமைக்கப்படாத நிலையில் தற்போது இடிந்து வீழ்ந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழ் கடந்த 2015 முதல் 2018ம் ஆண்டுவரை இபாட் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமான வேலைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகளால் ஏற்கனவே குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் முரசுமோட்டை ஊரியான் ஆகிய பகுதிகளுக்கு நீரை கொண்டு செல்லும் பிரதான வாய்க்காலில் 2018ம் ஆண்டு இபாட் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளகொங்கிறீட் சுவர்கள் உரிய முறையில் அமைக்கப்படாத நிலையில் தற்போது குறித்த கொங்கிறீட் சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளன. இதனை விட பன்னங்கண்டி மற்றும் கோரக்கண் கட்டு ஊரியான் மேற்கு ஆகிய பகுதிகளுக்கு நீரை கொண்டு செல்லும் பிரதான வாய்க்காலில் தற்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கொங்கிறீட் சுவர் உரிய முறையில் அமைக்கப்படாது சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பெருந்தொகை நிதிகளை செலவிட்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் இது தொடர்பாக விவசாயிகள் பல தடவை சுட்டி காட்டிய போதும் துறைசார் அதிகாரிகள் அசம்பந்தப் போக்கை காட்டி வருவதாகவும் விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/199107 வடக்கு என்பிபி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இச்செய்தி போய்ச்சேரட்டும்.
-
வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த வட பிராந்திய கடற்படையின் கட்டளைத் தளபதி
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை இலங்கைக் கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் துஷார கருணதுங்க(Thushara Karunatunga) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பானது இன்று (18)ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தம் இடம்பெற்றுள்ளது. கடல் போக்குவரத்து வசதி இதன்போது யாழ். தீவுப் பகுதி மக்களின் கடல் போக்குவரத்து மற்றும் தீவுகளில் வசிக்கும் மக்களுக்கான வசதி வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கைக் கடற்படை முன்னெடுத்துள்ள செயற்பாடுகளின் முக்கியத்துவம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/north-governer-meet-for-sl-navy-1731932865#google_vignette
-
ரஷ்ய – உக்ரைன் போர் 1,000 நாட்கள்: இதுவரை 659 குழந்தைகள் பலி
ரஷ்ய – உக்ரைன் போர் 1,000 நாட்களை எட்டும் நிலையிலும், தீவிரமாக யுத்தம் நடைபெற்று வருகிறது. ‘இந்தப் போரில் இதுவரை 2,406 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, 659 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்; 1,747 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்’ என யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக் கூடாது என்பதற்காக, ரஷ்யா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது கண்மூடித் தனமாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும், ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்தப் போர் இரண்டு ஆண்டுகளை கடந்திருக்கும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக சில நாடுகளும், ரஷ்யாவுக்கு ஆதரவாக சில நாடுகளும் செயல்பட்டு வருகின்றன. ஐ.நா. பொதுச் செயலாளர் தொடங்கி உலக நாடுகள் வரை பலரும் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தன. ஆனால், ரஷ்யா அதையெல்லாம் காதில்கூட போட்டுக் கொள்ளாமல் தாக்குதல் நடத்தி வந்தது. இந்த நிலையில், உலக நாடுகளே இந்தியாவைதான் போரை நிறுத்த உதவிக்கு நாடினர். குறிப்பாக, ”இந்திய பிரதமர் மோடி உலகின் செல்வாக்குமிக்க தலைவராக விளங்குகிறார். உக்ரைன் போரை நிறுத்த அவரால் உதவ முடியும்” என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து வந்தார். ஆனால், இந்தியாவோ நடுநிலையாகவே செயல்பட்டு வந்தது. இந்தச் சூழலில், டொனால்டு ட்ரம்ப் ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் விரைவில் முடிவுக்கு வரும் என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி நம்பிக்கையுடன் தெரிவித்தார். இந்நிலையில், நேற்று கூட 120 ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மூலம் மின் கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இத்தகைய தாக்குதலால் அனல் மின் நிலையங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளதாக ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்ததும் கவனிக்கத்தக்கது. தற்போது, யுனிசெஃப் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, ரஷ்ய – உக்ரைன் போர் 1,000 நாட்களை எட்டும் நிலையில், இதுவரை 659 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,747 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். ஒவ்வொரு வாரமும் குறைந்தது 16 குழந்தைகள் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘கோடிக்கணக்கான குழந்தைகள் தொடர்ச்சியான தாக்குதல்களால் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். உணவு, மின்சாரம், குடிநீர் மற்றும் பிற தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜூலையில் இருந்து உக்ரைனில் தாக்குதல் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் உயிரிழப்புகள் மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பும் நிலைகுலைந்துள்ளது’ என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது. யுனிசெஃப் நிர்வாக இயக்குநர் கேத்தரின் ரஸ்ஸல் கூறுகையில், “அதிகப்படியான குழந்தைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியளிக்கக் கூடிய மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம். குழந்தைகள் தங்கள் படுக்கைகளில், மருத்துவமனைகள் மற்றும் விளையாட்டு மைதானங்களிலேயே கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு இளம் உயிர்கள் பலியானது அவர்களின் குடும்பங்களுக்கு மிகப் பெரிய வலியை ஏற்படுத்தும். மேலும், பல குழந்தைகள் பயத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். இது போன்ற விஷயங்கள் அவர்களின் உளவியலை பாதிக்கும். கடந்த 1000 நாட்களில், குறைந்தது 1,496 கல்வி நிறுவனங்கள், 662 சுகாதார வசதிகள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. பள்ளிகள், மருத்துவமனைகள் வெறும் கற்கலால் மட்டுமே ஆன கட்டிடங்கள் அல்ல; அவை குழந்தைகளின் நம்பிக்கைக்கான உயிர்நாடிகள். இந்தப் போரின் பயங்கரங்களில் இருந்து இவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். உக்ரைனில் குழந்தைகள் பாதிக்கப்படுவதை இனி மேலும் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது” என்று அவர் கூறியுள்ளார். https://thinakkural.lk/article/312313
-
இலங்கையில் அமெரிக்க போர்க்கப்பல்!
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த மற்றொரு அமெரிக்க போர்க்கப்பல் (எம்.மனோசித்ரா) அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான மற்றுமொரு போர்க்கப்பல் திங்கட்கிழமை (18) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சேவை மற்றும் வழங்கல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வருகை தந்த யு.எஸ்.எஸ். ஸ்புரூன்ஸ் கப்பல் இலங்கை கடற்படை மரபுகளுக்கேற்ப வரவேற்கப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள ஏவுகணை எதிர்ப்பு வகைக் கப்பலான யு.எஸ்.எஸ். ஸ்புரூன்ஸ் 160 மீற்றர் நீளமுடையதாகும். 334 பணியாளர்களைக் கொண்டுள்ள இக்கப்பலின் கப்டனாக தோமஸ் அடாம்ஸ் செயற்படுகின்றார். இக்கப்பல் சேவை மற்றும் வழங்கல் தேவைகளை நிறைவு செய்து கொண்டு செவ்வாய்கிழமை (19) நாட்டிலிருந்து புறப்படவுள்ளது. இதேபோன்று அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யு.எஸ்.எஸ் மைக்கேல் மர்பி என்ற போர்க்கப்பலொன்று கடந்த சனிக்கிழமை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/199113 வழங்கல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமா?!
-
இன்று இலங்கை வரும் IMF குழு!
சர்வதேச நாணய நிதியம் சமநிலையான அணுகுமுறையை பின்பற்றவேண்டும் - ஜனாதிபதி பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை கவனத்திலெடுக்கும் சமநிலையான அணுகுமுறையான சர்வதேச நாணய நிதியம் பின்பற்றவேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினரை சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். பொதுமக்கள் எதிர்கொள்ளும் கடுமையான நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளியிட்டுள்ள ஜனாதிபதி பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை கவனத்திலெடுக்கும் சமநிலையான அணுகுமுறையான சர்வதேச நாணய நிதியம் பின்பற்றவேண்டும் என தெரிவித்துள்ளார். பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளியிட்டுள்ள ஜனாதிபதி பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை கவனத்திலெடுக்கும் சமநிலையான அணுகுமுறையான சர்வதேச நாணய நிதியம் பின்பற்றவேண்டும் என தெரிவித்துள்ளார். தனது தலைமைத்துவத்தின் கீழ் செலவீனங்களிற்காக ஒதுக்கீடுகள் பயனுள்ள விதத்தில் செலவிடப்படும் என தெரிவித்துள்ள அவர் சிறுவர் வறுமை, போசாக்கின்மை போன்றவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படும் மாற்று திறனாளிகளிற்கு சிறந்த ஆதரவு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ஊழலிற்னுகு எதிராக போரிடுவது குறித்த தனது அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/199112
-
'ஸ்க்விட் கேம்'- விரைவில் வெளியாகும் இரண்டாம் பாகம்; தொடரின் இயக்குநர் கூறுவது என்ன?
'ஸ்க்விட் கேம் படமாக்கப்பட்டபோது 9 பற்களை இழந்தேன்'- விரைவில் வெளியாகும் இரண்டாம் பாகம்; தொடரின் இயக்குநர் கூறுவது என்ன? பட மூலாதாரம்,NETFLIX படக்குறிப்பு, கொரிய நாடகமான ஸ்க்விட் கேம் 2021-இல் வெளியிடப்பட்டபோது உலகளவில் பேசப்பட்டது எழுதியவர், ஜீன் மெக்கென்சி பதவி, சோல் செய்தியாளர் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பிரபலமான கொரிய வெப் சீரிஸான ‘ஸ்க்விட் கேமை’ உருவாக்கியவர் அந்த தொடரின் படப்பிடிப்பின் போது மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானார், படப்பிடிப்புத் தளத்தில் அவருக்கு ஆறு பற்கள் உடைந்தன என்றெல்லாம் செய்திகள் வந்தன. இதைப்பற்றி அவரிடமே கேட்டபோது, "ஆறு அல்ல, எட்டு-ஒன்பது பற்கள் உடைந்திருக்கலாம்," என்று கூறி அவர் சிரிக்கிறார். ஹ்வாங் டோங்க்-யுக் (Hwang Dong-hyuk) தனது இருண்ட எதிர்காலத்தைப் பற்றிய த்ரில்லர் நாடகமான ஸ்க்விட் கேமின் இரண்டாவது பாகத்தைப் படமாக்கிக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்புத் தளத்தில் அமர்ந்து என்னிடம் பேசினார். இந்த வெப் சீரிஸ்-இன் கதை: கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் பலர், ஒரு மிகப்பெரும் பரிசுத்தொகையை வெல்வதற்கு மிகவும் ஆபத்தான விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்கின்றனர். இதன் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்கும் திட்டம் முதலில் இல்லை. ‘இரண்டாம் பாகம் எடுக்கவே மாட்டேன்’ என்று ஹ்வாங் டோங்க் யுக் சபதம் எடுத்திருந்தார். முதல் பாகம் எடுத்ததே அவருக்கு கடும் மனஅழுத்தத்தைக் எற்படுத்தியது. அப்படியிருக்க, இரண்டாம் பாகம் எடுக்க அவரது மனதை மாற்றியது எது? "பணம்," என்று தயக்கமின்றி பதிலளிக்கிறார். "முதல் தொடர் உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தாலும், உண்மையைச் சொன்னால், அதிலிருந்து நான் அதிகம் சம்பாதிக்கவில்லை," என்கிறார். "எனவே இரண்டாம் பாகம் எடுப்பது அதனை ஈடுகட்ட உதவும்," என்கிறார். மேலும், "முதல் பாகத்தில் நான் கதையை முழுதாக முடிக்கவில்லை," என்கிறார் அவர். மிகவும் வெற்றிகரமான வெப் சீரிஸ் ஸ்க்விட் கேமின் முதல் பாகம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தின் மிகவும் வெற்றிகரமான தொடராகும் இது தென் கொரிய தொலைக்காட்சி நாடகங்களின் மீது மிகப்பரவலான கவனத்தை ஈர்த்தது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிய அதன் அதிர்ச்சிகரமான வர்ணனை உலகெங்கிலும் மக்களிடையே ஒரு உணர்வைத் தூண்டியது. ஆனால், தொடரின் முதல் பாகத்தில் கிட்டத்தட்ட எல்லா கதாபாத்திரங்களையும் கொன்றுவிட்டதால், புதிய நடிகர்கள், கதையில் புதிய விளையாட்டுக்கள் என அனைத்தையும் புதிதாக உருவாக்க வேண்டும். பார்வையாளர்களின் வேறு உச்சகட்ட எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். "இப்போது என்னுடைய ‘ஸ்ட்ரெஸ்’ முன்பைவிட பல மடங்கு அதிகமாக இருக்கிறது,” என்கிறார் ஹ்வாங் டோங்க்-யுக். முதல் தொடர் ஒளிபரப்பப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஹ்வாங் உலகின் நிலையைப் பற்றி இன்னும் அவநம்பிக்கையுடன் இருக்கிறார். தற்போது நடந்துவரும் போர்கள், காலநிலை மாற்றம், மோசமாகும் உலகளாவியப் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியவையே அவநம்பிக்கைக்குக் காரணங்கள், என்கிறார் அவர். தற்போது, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் மட்டும் மோதல்கள் நடக்கவில்லை. தலைமுறைகளுக்கிடையே, பாலினங்களுக்கிடையே, வெவ்வேறு அரசியல் கொள்கைகள் கொண்டவர்களுக்கு இடையே என பல நிலைகளிலும் தீவிரமான மோதல்கள் நடப்பதாக அவர் கூறுகிறார். "புதிய கோடுகள் வரையப்படுகின்றன. ‘நாம் vs அவர்கள்’ என்ற யுகத்தில் நாம் வாழ்கிறோம். யார் சரி, யார் தவறு?" பட மூலாதாரம்,NETFLIX படக்குறிப்பு, ஸ்க்விட் கேம் 2-இல் போட்டியாளர்களிடையே கடும் சண்டைகள் இருக்கும் என்று தொடரின் படைப்பாளிகள் கூறுகின்றனர் இன்றைய உலகின் பிரச்னைகள் ஸ்க்விட் கேமின் இரண்டாம் பகுதி படமாக்கப்படும் ‘செட்’-ஐ சுற்றிப்பார்த்தேன். புதிய தொடரில் இருக்கப்போகும் விளையாட்டுக்கள், அதன் தனித்துவமான, பிரகாசமான-வண்ணப் படிக்கட்டுகள் ஆகியவற்றைப் பார்த்தபோது, இயக்குநரின் விரக்தி இரண்டாம் பகுதியில் எவ்வாறு வெளிப்படும் என்பதற்கான சில குறிப்புகள் எனக்குப் புலப்பட்டன. தொடரின் முதல் பகுதியில் வெற்றியாளராகக் காட்டப்பட ஜி-ஹன் (Gi-hun), இந்த ஆட்டத்தை வீழ்த்தி, போட்டியில் புதிதாகப் பங்குபெறுபவர்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன் இரண்டாம் பாகத்தில் மீண்டும் தோன்றுகிறார். முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் லீ ஜங்-ஜேவின் (Lee Jung-jae) கூற்றுப்படி, அவர் முன்பை விட "அதிக அவநம்பிக்கையுடனும் உறுதியுடனும் தோன்றுகிறார்." போட்டியாளர்கள் இரவில் உறங்கும் விடுதியின் தளம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பாதி பெரிய சிவப்பு நியான் எக்ஸ் சின்னத்துடன் முத்திரையிடப்பட்டுள்ளது, மற்றொன்றில், ஒரு நீல வட்டம். இப்போது, ஒவ்வொரு ஆட்டத்திற்குப் பிறகும், வீரர்கள் ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது அவர்கள் போட்டியை முன்கூட்டியே முடித்துவிட்டு உயிர்வாழ விரும்புகிறீர்களா, அல்லது தொடர்ந்து விளையாடுகிறார்களா? தொடர்ந்து விளையாடினால், அவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் இறந்துவிடுவார்கள். பெரும்பான்மையான போட்டியாளர்கள் எந்தப் பக்கத்தைத் தேர்வு செய்கிறார்களோ அந்தப் பக்கத்தின் முடிவு செயல்படுத்தப்படும். இது, கடும் கோஷ்டி பூசல் மற்றும் சண்டைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. இதன்மூலம், உலகில் பெருகிவரும் குழு மனப்பான்மையால் ஏற்படும் ஆபத்துகளை அம்பலப்படுத்த நினைக்கிறார் இயக்குநர் ஹ்வாங். இன்றைய உலகில் மக்கள் எதாவது ஒரு பக்கத்தைச் சார்ந்து இருக்கும்படி வற்புறுத்தல்கள் உள்ளன. இது அவர்களிடையே மோதலைத் தூண்டுவதாக அவர் கருதுகிறார். ஸ்க்விட் கேமின் முதல் பாகத்தின் அதிர்ச்சியூட்டும் கதையால் பலர் கவர்ந்திழுக்கப்பட்டனர். ஆனால், அதன் தேவையில்லாத வன்முறையைப் பார்க்கவே மிகவும் கடினமாக இருந்ததாகப் பலர் கருதினர். ஆனால் ஹ்வாங்குடன் பேசினால், இந்த வன்முறை முழுமையாக திட்டமிடப்பட்டே அந்தத் தொடரில் வைக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. ஹ்வாங் உலகத்தைப் பற்றி ஆழமாகச் சிந்திக்கும் நபர். உலகின் மீது அக்கறை கொண்டவர். உலகில் இன்று பெருகிவரும் அமைதியின்மையால் மிகவும் கவலையடைகிறார். "இந்தத் தொடரை உருவாக்கும் போது, இந்த அழிவுப் பாதையில் செல்லாமல் உலகை திசைதிருப்ப மனிதர்களாகிய நம்மால் முடியுமா? என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். உண்மையில் எனக்கு அதற்கான பதில் தெரியவில்லை,” என்கிறார். பட மூலாதாரம்,NETFLIX படக்குறிப்பு, நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இந்த சீரிஸ்-ஆல் சம்பாதித்ததாகச் சொல்லப்படும் 650 மில்லியன் பவுண்டுகளில் (இந்திய மதிப்பில் சுமார் 7,000 கோடி ரூபாய்) ஹ்வாங்குக்குப் பங்கு கிடைக்கவில்லை ஸ்க்விட் கேமின் இரண்டாம் பகுதியில் என்ன இருக்கிறது? தொடரின் இரண்டாவது பகுதியைப் பார்ப்பவர்களுக்கு இந்தப் பெரும் கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்காமல் போகலாம். ஆனால், முதல் பாகத்தில் விடுபட்ட சில தகவல்கள் கிடைக்கலாம். இந்த விளையாட்டு ஏன் உள்ளது, முகமூடி அணிந்த ‘ஃபிரண்ட் மேன்’ (Front Man) ஏன் அதனை இயக்குகிறார் போன்ற தகவல்கள். "[இந்த பாகத்தில்] இந்த ‘ஃபிரண்ட் மேன்’-இன் கடந்தகாலம், அவரது வாழ்க்கைக் கதை, அவரது உணர்ச்சிகளை மக்கள் அதிகம் பார்ப்பார்கள்," என்று இந்த மர்மமான பாத்திரத்தில் நடிக்கும் நடிகர் லீ பியுங்-ஹன் (Lee Byung-hun) கூறுகிறார். "இது பார்வையாளர்களுக்கு அவர் மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்தாது. ஆனால் அவர் ஏன் சில விஷயங்களைத் தேர்வு செய்கிறார் என்பதை நன்கு புரிந்துகொள்ள உதவும்," என்கிறார் அவர். தென் கொரியாவின் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவரான லீ, முதல் பாகம் முழுவதும் தனது முகம் மற்றும் கண்களை மூடியிருந்ததும், அவரது குரல் சிதைந்திருந்ததும் ‘கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தியது’ என்று ஒப்புக்கொள்கிறார். இந்தத் தொடரில் அவர் முகமூடி இல்லாமல் தோன்றும் காட்சிகளை ரசித்துள்ளார். அதில் அவர் தன்னை முழுமையாக வெளிப்படுத்த முடியும். ஆனால் இம்முறையும் இந்த வாய்ப்பு அவருக்குக் கிடைக்காமல் போயிருக்கக்கூடும். படைப்பாளிகள் வஞ்சிக்கப்படுகிறார்களா? இயக்குநர் ஹ்வாங், ஸ்க்விட் கேம் தொடரைத் தயாரிக்க 10 ஆண்டுகள் முயன்றார். நெட்ஃபிளிக்ஸிடம் இருந்து பணம் வருவதற்கு முன்பு, தனது குடும்ப செலவுகளுக்காக அதிக அதிக கடன்களை வாங்கவேண்டி இருந்தது. ஆனால் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அவருக்கு ஒரு சிறிய முன்பணத்தைத்தான் தந்தது. அதனால் அவரால் அந்த சீரிஸ் வசூலித்ததாகச் சொல்லப்படும் 650 மில்லியன் பவுண்டுகளில் (இந்திய மதிப்பில் சுமார் 7,000 கோடி ரூபாய்) அவருக்குப் பங்கு கிடைக்கவில்லை. தென்கொரியாவின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படைப்பாளிகள் தற்போது சர்வதேச ஸ்ட்ரீமிங் தளங்களுடன் கொண்டுள்ள சிக்கலான உறவை இது விளக்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக, நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தென்கொரியச் சந்தையில் பல நூறு கோடி அமெரிக்க டாலர்களை முதலீடு செய்தது. இது கொரிய திரைப்படங்கள் மற்றும் நாடகங்களுக்கு உலகளாவிய அங்கீகாரத்தையும் அன்பையும் கொண்டு வந்துள்ளது. ஆனால் இதலிருந்து படைப்பாளிகளுக்கு மிகச் சொற்பனான தொகையே சென்றடைந்திருக்கிறது. ஒப்பந்தங்களில் கையொப்பமிடும்போது அவர்களது காப்புரிமையைக் கைவிடுமாறு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கட்டாயப்படுத்துகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதனால் லாபத்தில் பங்குகேட்கும் உரிமையையும் கைவிட அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்கின்றனர். இது உலகளாவிய பிரச்சனை. கடந்த காலத்தில், திரைப்பட மற்றும் சீரியல் இயக்குநர்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் அல்லது தொலைக்காட்சி ஒளிபரப்பில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கினை பெற்றனர். ஆனால், ஆன்லைன் தளங்கள் இதனைப் பின்பற்றுவதில்லை. தென் கொரியாவில் இது இன்னும் மோசமாக உள்ளது. அதன் காலாவதியான பதிப்புரிமைச் சட்டம் தங்களைப் பாதுகாக்கவில்லை என்று படைப்பாளிகள் கூறுகிறார்கள். "தென் கொரியாவில், ஒரு திரைப்பட இயக்குநராக இருப்பது பெயருக்காகத்தான். அது சம்பாதிப்பதற்கான வழி அல்ல," என்று கொரிய திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ஓ கி-ஹ்வான் (Oh Ki-hwan), சோலில் நடந்த ஒரு நிகழ்வில் கூறுகிறார். அவரது இயக்குநர் நண்பர்கள் சிலர், சேமிப்பு கிடங்குகளில் பகுதி நேரமாகவும், டாக்சி ஓட்டுநர்களாகவும் வேலை செய்கிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2022-இல், ஸ்க்விட் கேம் தொடரின் நடிகர் லீ ஜங்-ஜே (இடது) மற்றும் இயக்குநர் ஹ்வாங் சிறந்த ஆண் நடிகர் மற்றும் இயக்குநருக்கான எம்மி விருதுகளை வென்ற முதல் ஆசியர்கள் ஆனார்கள் லாபத்தில் நியாயமான பங்கு பார்க் ஹே-யங் (Park Hae-young) ஒரு திரைக்கதை ஆசிரியர். நெட்ஃப்ளிக்ஸ் அவரது நிகழ்ச்சியான 'மை லிபரேஷன் நோட்ஸ்'-ஐ வாங்கியபோது, அது உலகளவில் வெற்றி பெற்றது. “என் வாழ்நாள் முழுவதும் எழுதிகொண்டிருக்கிறேன். உலகெங்கிலும் உள்ள படைப்பாளர்களுடன் போட்டியிடும் போது, உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறுவது மகிழ்ச்சியான அனுபவமாக உள்ளது,” என்று அவர் கூறுகிறார். ஆனால் தற்போதைய ஆன்லைன் ஸ்ட்ரீமிங் முறையால், தனது அடுத்த தொடரில் ‘அனைத்தையும் முதலீடு’ செய்யத் தயங்குவதாகப் பார்க் கூறுகிறார். “வழக்கமாக, ஒரு நாடகத்தை உருவாக்க, நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் செலவழிப்பேன். அது வெற்றியடைந்தால், அது எனது எதிர்காலத்தை ஓரளவு பாதுகாக்கும். ஏனெனில் எனது நியாயமான பங்கு தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கும். அப்படி இல்லாமல், இவ்வளவு கஷ்டப்பட்டு என்ன பயன்?” என்கிறார் அவர். அவரும் பிற படைப்பாளிகளும் தென்கொரியாவின் பதிப்புரிமைச் சட்டத்தை மாற்றுவதற்கு அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கின்றனர். இது நடந்தால் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் லாபங்களை படைப்பாளிகளுடன் பகிர்ந்து கொள்வது கட்டாயமாகும். பிபிசி-க்கு தென்கொரிய அரசாங்கம் அனுப்பிய ஒரு அறிக்கையில், இந்தப் பிரச்னையை அங்கீகரித்தாலும், இந்தச் சிக்கலைத் தீர்ப்பது திரைத்துறையின் கையில்தான் உள்ளது என்று கூறியது. நெட்ஃப்ளிக்ஸ்-இன் செய்தித் தொடர்பாளர் பிபிசி-யிடம், அந்நிறுவனம் மிக நல்ல தொகையை வழங்குகிறது என்றார். படைப்பாளிகளுக்கு ‘நிகழ்ச்சிகளின் வெற்றி தோல்வியைப் பொருட்படுத்தாமல் நல்ல தொகை’ வழங்கப்படுவதாகக் கூறினார். ஸ்க்விட் கேம் இயக்குநர் ஹ்வாங், தனது சொந்த ஊதியப் போராட்டங்களை பற்றி வெளிப்படையாகப் பேசுவது அந்த மாற்றத்தைத் துவங்கும் என்று நம்புகிறார். அவர் நிச்சயமாக நியாயமான ஊதியம் பற்றிய ஒரு உரையாடலைத் துவங்கியிருக்கிறார். மேலும், இந்த இரண்டாவது தொடர் நிச்சயமாகத் தென்கொரியத் திரைத்துறைக்கு மற்றொரு ஊக்கத்தைக் கொடுக்கும். ஆனால் படப்பிடிப்பு முடித்த பிறகு நாங்கள் சந்தித்தபோது, அவர் என்னிடம் மீண்டும் தனது பல் வலிக்கிறது என்று கூறுகிறார். "நான் இன்னும் பல் மருத்துவரைப் பார்க்கவில்லை. சீக்கிரம் சில பற்களைப் பிடுங்க வேண்டியிருக்கிறது," என்றார். https://www.bbc.com/tamil/articles/cz0mxyyj17vo
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
தனது கடமைகளை பொறுப்பேற்றார் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித ஹேரத் தனது கடமைகளை இன்று திங்கட்கிழமை (18) பொறுப்பேற்றுக் கொண்டார். வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சராக விஜித ஹேரத் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் காலை நடைபெற்றது. களனிப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை விஞ்ஞானப் பட்டம் பெற்ற இவர் இதற்கு முன்னர் கலாச்சார விவகாரங்கள், மற்றும் தேசிய மரபுரிமை, துறைமுகம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகக் கடமையாற்றியுள்ளார். https://www.virakesari.lk/article/199106
-
அவுஸ்திரேலியா பாகிஸ்தான் ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்
பாகிஸ்தானுடனான ரி - 20 தொடரை 3 - 0 என முழுமையாக கைப்பற்றியது அவுஸ்திரேலியா (நெவில் அன்தனி) பாகிஸ்தானுக்கு எதிராக ஹோபாட், பெலேரிவ் ஓவல் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றியீட்டியது. பிறிஸ்பேனில் நடைபெற்ற முதலாவது போட்டியில் 29 ஓட்டங்களாலும் சிட்னியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 13 ஓட்டங்களாலும் வெற்றிபெற்றிருந்த அவுஸ்திரேலியா, இன்றைய வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3 - 0 என முழுமையாகக் கைப்பற்றியது. இன்றைய போட்டியில் ஆரோன் ஹார்டியின் சிறப்பான பந்துவீச்சும் மாக்கஸ் ஸ்டொய்னிஸின் அதிரடி துடுப்பாட்டமும் அவுஸ்திரேலியாவை இலகுவாக வெற்றிபெறச் செய்தன. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் 18.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 117 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பாகிஸ்தான் 7ஆவது ஓவரில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 61 ஓட்டங்களைப் பெற்றிருந்ததால் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தானின் எஞ்சிய 9 விக்கெட்கள் 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன. முன்னாள் அணித் தலைவர் பாபர் அஸாம் 41 ஓட்டங்களையும் ஹசீபுல்லா கான் 24 ஓட்டங்களையும் ஷஹீன் ஷா அப்றிடி 16 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஆரோன் ஹார்டி 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அடம் ஸம்ப்பா 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஸ்பென்சர் ஜோன்சன் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 11.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது. மாக்கஸ் ஸ்டொய்னிஸ் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 27 பந்துகளில் 5 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 67 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அணித் தலைவர் ஜொஷ் இங்லிஷ் 27 ஓட்டங்களைப் பெற்றதுடன் 3ஆவது விக்கெட்டில் மாக்கஸ் ஸ்டொய்னிஸுடன் 55 ஓட்டங்களைப் பகிர்ந்தார். அவர்களைவிட ஜேக் ப்ரேஸர் மெக்கேர்க் 18 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி, ஜஹாந்தாத் கான், அபாஸ் அப்றிடி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: மாக்கஸ் ஸ்டொய்னிஸ். தொடர்நாயகன்: ஸ்பென்சர் ஜோன்சன் https://www.virakesari.lk/article/199111
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஜேவிபி அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார தெரிவித்துள்ளார் அதனால தான் இணைத்தேன் அண்ணை. இருந்தாலும் சந்தேகம் வரும் தான்!
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர் ஹரிணி இலங்கையின் 17ஆவது பிரதமராக ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) இன்றையதினம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். பிரதமராக, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பிரதமர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சுப் பொறுப்புக்கள் புதிய அரசாங்கத்தின் 21 பேர் கொண்ட அமைச்சரவை இன்று முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. புதிய அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள ஹரிணி அமரசூரிய கொழும்பு மாவட்டத்தில் இருந்து அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானவராவார். 655,289 விருப்பு வாக்குகளை அவர் பெற்றுக் கொண்டிருந்தார். மேலும், பிரதமர் ஹரிணி அமரசூரியகல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். https://tamilwin.com/article/sri-lanka-new-prime-minister-1731940764#google_vignette
-
வாட்ஸ்ஆப் பதிவுகளை ஃபார்வேர்டு செய்வது குற்றமா? எந்த மாதிரியான பதிவுகளில் கவனம் தேவை?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சமூக ஊடகங்களில் மற்றவர்களின் பெயர்களில் கணக்கு வைத்திருப்பது குற்றம் எழுதியவர், பல்லா சதீஷ் பதவி, பிபிசி இணையத்தைப் பயன்படுத்தி கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் செய்யப்படும் குற்றங்கள் சைபர் குற்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில், நிதிக் குற்றங்கள், பதிப்புரிமை மீறல், ஹேக்கிங், பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் போன்ற குற்றங்களும், தனிநபர்களைத் துன்புறுத்தும் குற்றங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இணையத்தில் ஒருவரை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்தல், அவமானப்படுத்துதல், அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். இதில் சுமார் 24 வகையான சைபர் குற்றங்கள் அடங்கும். பிபிசியிடம் பேசிய வழக்கறிஞர் ஸ்ரீனிவாஸ், "சபித்தல், மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துதல், சங்கடமான, ஆபத்தான வார்த்தைகள், புகைப்படங்கள், வீடியோக்களை மற்றவர்களுக்கு அனுப்புதல், ஒருவர் பெயரில் வேறொருவர் கணக்கு வைத்திருப்பது, மற்றவர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்தல், திருடுதல், அவதூறு பரப்புதல், இரு குழுக்களிடையே மோதலைத் தூண்டும் மற்றும் சேதம் ஏற்படுத்தும் வகையில் செய்திகளை அனுப்புதல் ஆகியவை காவல்துறையால் குற்றமாக கருதலாம்" என்று கூறினார். வாட்ஸ்ஆப் பதிவை ஃபார்வேர்ட் செய்வது “வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்திகளை ஃபார்வர்டு செய்வதற்கும் இது பொருந்தும். அதுமட்டுமின்றி, தனியுரிமையை மீறுவதும் சைபர் குற்றத்தின் கீழ் வரும்,” என்றார் ஸ்ரீனிவாஸ். "செய்தியின் முடிவில் 'Forwarded as Received' (கிடைத்த செய்தியில் எந்த மாற்றமும் செய்யாமல் ஃபார்வர்டு செய்வது) என்று போடுவதாலோ, சர்ச்சைக்குரிய செய்திக்குப் பிறகு 'இது உண்மையா?' என்று போடுவதாலோ, இந்த வழக்குகளை முழுமையாகத் தவிர்க்க முடியாது. வழக்கின் தீவிரத்தைப் பொறுத்தே அது அமையும்” என்கிறார் ஸ்ரீநிவாஸ். உச்ச நீதிமன்றம் 2023இல், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் மீது தொடரப்பட்ட ஒரு வழக்கில், “பொய்யான அல்லது தவறான செய்தியைப் பதிவிட்டு, பிறகு நீக்கிவிட்டு மன்னிப்புக் கேட்டாலும் பயனில்லை” என்று கூறியது. தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் ஒருவர் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டு, அதை நீக்கிவிட்டு மன்னிப்பும் கேட்டார். இருப்பினும் அவர் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாகவே உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை வெளியிட்டது. இதே வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு சுவாரஸ்யமான கருத்தை தெரிவித்துள்ளது என்கிறார் ஸ்ரீனிவாஸ். “‘சமூக வலைதளங்களில் பதிவிடுவது என்பது, வில்லில் இருந்து அம்பு எய்வது போல. நீங்கள் இடுகையிடாத வரை எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் அம்பு வில்லிலிருந்து விடுபட்டவுடன், அது எந்த திசையில் சென்றாலும், எவ்வளவு சேதம் விளைவிக்கிறதோ அதற்கு நீங்களே பொறுப்பு. சேதம் ஏற்பட்ட பிறகு மன்னிப்பு கேட்டால் போதுமானதாக இருக்காது’ என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது" என்று ஸ்ரீனிவாஸ் விளக்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 65 முதல் 78 வரையிலான பிரிவுகள் குற்றங்களை விவரிக்கின்றன என்று வழக்கறிஞர் ஸ்ரீனிவாஸ் பிபிசியிடம் கூறினார் கடுமையான இணைய சட்டங்கள் இந்தியாவில் பதிவு செய்யப்படும் அனைத்து சைபர் குற்றங்களுக்கும், 2000-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு, தண்டனை அளிக்கப்படுகிறது. அதன் பிறகு 2008 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் இந்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. 2023இல் 'டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு' சட்டமும் அமலுக்கு வந்தது. “முந்தைய ஐபிசியில் உள்ள பல பிரிவுகள் மற்றும் சமீபத்திய சட்ட நெறிமுறைகளின் அடிப்படையில் ஐடி-சைபர் வழக்குகள் தாக்கல் செய்யலாம். இது குற்றத்தின் அமைப்பு மற்றும் பதிவின் தீவிரத்தை பொறுத்தது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 65 முதல் 78 வரையிலான பிரிவுகள், குற்றங்களை விவரிக்கின்றன" என்று வழக்கறிஞர் ஸ்ரீனிவாஸ் பிபிசியிடம் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES யாரிடம் புகார் செய்வது? சமூக ஊடகங்கள், ஸ்மார்ட்போன், கணினி அல்லது வேறு ஏதேனும் தகவல் பரிமாற்றக் கருவி மூலம் உங்களை யாராவது துன்புறுத்தினால் எப்படி புகார் செய்வது என்ற கேள்வி எழுகிறது. காவல்துறையினர் சில சமயங்களில் சைபர் குற்றங்களை தன்னிச்சையாகவும் (Suo moto) பதிவு செய்யலாம். யாராவது உங்களை ஏதேனும் ஒரு சமூக ஊடக தளத்தில் துன்புறுத்தினால், உதாரணமாக ஃபேஸ்புக் என்றால், அதே தளத்தில் புகார் அளிக்க முடியும் இரண்டாவது கட்டமாக நீங்கள் நேரடியாக காவல்துறையில் புகார் செய்யலாம். இதற்காக மாநில வாரியாக சைபர் கிரைம் பிரிவுகள், காவல் நிலையங்கள் உள்ளன. காவல் நிலையங்களுக்கு போகாமல் வீட்டிலேயே அமர்ந்து புகார் அளிக்கும் ஏற்பாட்டை இந்தியா முழுக்கச் செய்துள்ளது மத்திய அரசு. நாட்டில் எங்கிருந்து புகார் அளித்தாலும் அந்தந்த மாநில காவல்துறைக்கு புகார் சென்றடையும். cybercrime.gov.in எனும் இணையதளத்தில், 'Register a Complaint' என்பதை அழுத்தி, அதில் புகார் அளிக்கலாம். ஹெல்ப்லைன் எண் 1930க்கு நேரடியாக அழைத்து புகார் செய்யலாம். இந்த எண் நாடு முழுவதும், 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சமூக ஊடகங்கள் மூலம் நடக்கும் பல்வேறு குற்றங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உரிமை உள்ளது சங்கடத்தை ஏற்படுத்தும் பதிவுகள் தற்போதைய அரசாங்க விதிமுறைகளின்படி பின்வரும் பதிவுகள் தொல்லை (Nuisance) தருவதாகக் கருதப்படுகிறது. அவதூறான, ஆபாசமான, குழந்தைகள் தொடர்பான, தனியுரிமையை பாதிக்கக்கூடிய, பாலினம் மற்றும் இனம் தொடர்பான ஆட்சேபனைக்குரிய, பணமோசடி மற்றும் சூதாட்டம் தொடர்பான, சட்டவிரோதமான பதிவுகள். குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பதிவுகள். பதிப்புரிமை, காப்புரிமை வர்த்தக முத்திரை, அறிவுசார் சொத்துரிமை மீறல். போலியான தகவல் (போலி செய்தி) பரப்புவது. பிறரது அடையாளத்தைப் பயன்படுத்துவது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாதகமான அல்லது தீங்கு விளைவிக்கும், நாட்டின் பாதுகாப்பிற்கு (இந்தியாவின் பாதுகாப்பு படைகள்), மாநிலத்தின் பாதுகாப்பிற்கு (மாநிலத்தின் பாதுகாப்பு அமைப்பு) மற்றும் வெளிநாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவுக்கு பாதகமான பதிவுகள், பொது ஒழுங்குக்கு கேடு விளைவிக்கும், ஆத்திரமூட்டும் வகையிலான பதிவுகள். மத வெறுப்புகளைத் தூண்டும் பதிவுகள். இந்தப் பட்டியலில் வன்முறையைத் தூண்டும் பதிவுகளும் அடங்கும். சமூக ஊடகங்கள் மூலம் நடக்கும் பல்வேறு குற்றங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உரிமை உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cd0grvlez54o
-
1650 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் மீட்பு
ஒரு வாரத்தில் 2802 மில்லியன் ரூபா பெறுமதியான 112 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு (எம்.மனோசித்ரா) கடற்படையினரால் நாட்டின் மேற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கைகளில் ஒரே வாரத்தில் 2802 மில்லியன் ரூபா பெறுமதியான 112 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கைற்றப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி 1650 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய 66 கிலோ ஹெரோயின் கைற்றப்பட்டது. அதேபோன்று ஞாயிற்றுக்கிழமை (17) கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பல நாள் மீன்பிடி படகொன்றுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் திங்கட்கிழமை (18) காலி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இதன் போது குறித்த படகு சோதனைக்குட்படுத்தப்பட்ட போது அதிலிருந்து 46 கிலோ 116 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் பெறுமதி 1152 மில்லியன் ரூபாவென கடற்படை தெரிவித்துள்ளது. இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 - 33 வயதுக்குட்பட்ட கந்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் 18,790 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/199114
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
அண்ணை, இராஜங்க அமைச்சுகள் இல்லை என்று அறிவித்ததாக நினைவு, பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுவினமோ தெரியல?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் சம்பளம் பெற்றுக் கொள்ளாது தமது கடமைகளை முன்னெடுக்க ஆயத்தமாக உள்ளனர் என கட்சியின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார தெரிவித்துள்ளார். https://yarl.com/forum3/topic/297133-அநுர-அரசில்-சம்பளமின்றி-பணியாற்றவுள்ள-அமைச்சர்கள்-நாடாளுமன்ற-உறுப்பினர்கள்/
-
அநுர அரசில் சம்பளமின்றி பணியாற்றவுள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் சம்பளம் பெற்றுக் கொள்ளாது தமது கடமைகளை முன்னெடுக்க ஆயத்தமாக உள்ளனர் என கட்சியின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான ஆரம்ப இனக்கப்பாடு ஏட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் ஊடக சந்திப்பு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கடந்த 76 வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்வது என்பது மக்களுக்கு வெறும் கனவாக காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் கூறுவது போன்று தற்போதைய அரசாங்கம் குறுகிய காலத்தில் விழுந்து விடாது என சுசந்த குமார மேலும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/npp-mps-ministers-will-not-get-salary-1731898420#google_vignette
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
அமெரிக்காவிற்கான அநுரவின் குரல்தரவல்ல அதிகாரி அண்ணன் ரசோதரன் அவர்கள் அமைச்சரவை பதவியேற்பின் யாழுக்கு விஜயம்!
-
உன் கை விரலை புடிச்சு நடந்த காலம் மறக்கல.
பகிர்விற்கு நன்றி வளவன் அண்ணா. நல்ல குரலும் அர்த்தம் தொனிக்கும் பாடலும்.
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
கடற்றொழில் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தமிழில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்கள்.
-
பைடனை எச்சரிக்கும் புடின்!
அமெரிக்க ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த யுக்ரேனுக்கு பைடன் அனுமதி - போரின் போக்கு மாறுமா? பட மூலாதாரம்,WHITE SANDS MISSILE RANGE படக்குறிப்பு, ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணைகள் 300கிமீ (186 மைல்கள்) வரை செல்லக்கூடும் எழுதியவர், பால் ஆடம்ஸ் மற்றும் கேத்ரின் ஆம்ஸ்ட்ராங் பதவி, பிபிசி நியூஸ் ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை யுக்ரேன் பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்துள்ளார். ரஷ்யா - யுக்ரேன் போரில் அமெரிக்கா கடைபிடித்து வந்த கொள்கையின் முக்கிய மாற்றமாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. இதை அமெரிக்க அதிகாரி ஒருவர் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி முகமையிடம் உறுதி செய்துள்ளார். யுக்ரேனின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஏடிஏசிஎம்எஸ் (ATACMS) எனப்படும் ஏவுகணைகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்று பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறார். இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் யுக்ரேன், தனது நாட்டின் எல்லைக்கு அப்பாலும் அதனை பயன்படுத்தி தாக்குதல் நடத்த முடியும். ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியான இந்த செய்திகளுக்கு பதிலளித்த ஜெலென்ஸ்கி, “ஏவுகணைகளின் மொழி என்பது வேறு. இது குறித்த விஷயங்கள் அறிவிக்கப்படவில்லை" என்று கூறினார். ‘நேட்டோ கூட்டணியின் நேரடி பங்கேற்பு’ இந்த விவகாரத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மேற்கத்திய நாடுகளுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தார். கட்டுப்பாடுகளை நீக்குவது, யுக்ரேன் போரில் நேட்டோ ராணுவ கூட்டணியின் ‘நேரடி பங்கேற்பை’ பிரதிநிதித்துவப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை வெளியான அறிக்கைகள் குறித்து புதின் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும் மற்ற மூத்த ரஷ்ய அரசியல்வாதிகள், இந்த அறிக்கைகள் பதற்றத்தை அதிகரித்துள்ளன என்று விவரிக்கிறார்கள். ஏடிஏசிஎம்எஸ் தொடர்பான அமெரிக்காவின் முடிவு என்பது, ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்திற்குள் யுக்ரேனிய படைகளின் பாதுகாப்புடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அங்கு கடந்த ஆகஸ்டில், யுக்ரேன் திடீரென தாக்குதலைத் தொடங்கியது. அதாவது, இப்போது தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ரஷ்ய நிலப்பரப்பின் சிறு பகுதியை தக்க வைத்துக் கொள்ளும் யுக்ரேனின் முயற்சிகளுக்கு உதவுவோம் என பைடனின் நிர்வாகம் உறுதியளிக்கிறது. வருங்கால பேச்சுவார்த்தைகளில் இந்த நிலப்பரப்பை ஒரு பேரம் பேசும் கருவியாக பயன்படுத்தலாம் என யுக்ரேன் நினைக்கிறது. போரின் போக்கை மாற்றுமா? யுக்ரேன் தலைநகர் கீவை தளமாகக் கொண்ட யுக்ரேனிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு மையத்தின் தலைவர் செர்ஹி குசான், ஜோ பைடனின் முடிவு தனது நாட்டிற்கு ‘மிகவும் முக்கியமானது’ என்று பிபிசியிடம் கூறினார். "இது போரின் போக்கை மாற்றும் ஒன்று அல்ல, ஆனால் அது எங்கள் படைகளை மேலும் வலிமை கொண்டதாக மாற்றும் என்று நான் நினைக்கிறேன்." என்றார். ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணைகள் 300கிமீ (186 மைல்கள்) வரை தாக்குதல் நடத்தக் கூடியவை. பெயர் கூற விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட்டிடம் பேசுகையில், ‘யுக்ரேன், ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணையைப் பயன்படுத்தலாம் என்ற பைடனின் அனுமதி, வட கொரிய வீரர்களை யுக்ரேனில் சண்டையிட அனுமதிக்கும் ரஷ்யாவின் முடிவிற்கு பதிலடியாக வந்தது’ என்று கூறியுள்ளனர். ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் இருந்து யுக்ரேனியப் படைகளை வெளியேற்றுவதற்காக திட்டமிடப்பட்ட ரஷ்ய மற்றும் கொரிய துருப்புகளின் தாக்குதலுக்கு முன்னதாகவே, ஏடிஏசிஎம்எஸ் குறித்து முடிவு வந்துள்ளதாக குசான் கூறினார். ரஷ்ய-வடகொரிய வீரர்களின் கூட்டுத் தாக்குதல் சில நாட்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குர்ஸ்க் பகுதியில் 11,000 வட கொரிய வீரர்கள் இருப்பதாக யுக்ரேன் முன்னதாக மதிப்பிட்டிருந்தது. அமெரிக்க அதிபர் பைடனின் முடிவால், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள், ரஷ்யாவிற்குள் நீண்ட தூர ‘ஸ்டார்ம் ஷேடோ’ (Storm shadow) ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த யுக்ரேனுக்கு அனுமதி அளிக்கக்கூடும். பைடனின் முடிவுக்கு பிரிட்டன் அல்லது பிரான்ஸ் இதுவரை பதிலளிக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஞாயிற்றுக்கிழமை வெளியான அறிக்கைகள் குறித்து புதின் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை கடந்த மாதம், யுக்ரேனின் கிழக்குப் பிராந்தியங்களில் உள்ள ரஷ்ய துருப்புகளைத் தாக்குவதற்கு முதன்முறையாக அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை யுக்ரேன் பயன்படுத்தியதாக ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தினார். யுக்ரேனிய படைகளுக்கான முக்கிய விநியோக மையமாக இருக்கும் போக்ரோவ்ஸ்க் நகரை நோக்கி மெதுவாக முன்னேறி வரும் ரஷ்ய துருப்புகளை பின்னுக்குத் தள்ள, யுக்ரேன் பல மாதங்களாக போராடி வருகிறது. யுக்ரேன் மீதான ட்ரோன் தாக்குதல்களின் எண்ணிக்கையையும் ரஷ்யா சமீப நாட்களில் பெருமளவில் அதிகரித்துள்ளது. யுக்ரேன் அதிகாரிகளின் கூற்றுப்படி, அக்டோபரில் 2,000க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் யுக்ரேன் மீது ஏவப்பட்டன. இந்தப் போரில் இதுவொரு புதிய உச்சமாகும். சனிக்கிழமை அன்று ஒரே இரவில், கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஒருங்கிணைந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியது. இதனால் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர். ஜெலென்ஸ்கியின் கூற்றுப்படி, சுமார் 120 ஏவுகணைகள் மற்றும் 90 ட்ரோன்கள் ரஷ்யாவால் ஏவப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை மாலையும் தாக்குதல்கள் தொடர்ந்தன. ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள யுக்ரேனின் சுமி பகுதியில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏவுகணை தாக்கியதில் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் 8 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரையன்ஸ்க் எல்லைப் பகுதியில் உள்ள ரஷ்ய அதிகாரிகள், ஞாயிற்றுக்கிழமை இரவு யுக்ரேன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறினர். ஆனால் தங்களது பாதுகாப்பு அமைப்பு யுக்ரேனின் 26 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அவர்கள் கூறினர். ‘நட்பு நாடுகள் போதுமான ஆதரவை வழங்கவில்லை’ பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, யுக்ரேனின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஏடிஏசிஎம்எஸ் (ATACMS) எனப்படும் ஏவுகணைகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்று பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறார் யுக்ரேன் பல மாதங்களாக அதன் நட்பு நாடுகள் தனக்கு போதுமான ஆதரவை வழங்கவில்லை என்று வாதிட்டு வந்தது. வரும் ஜனவரியில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் ஜோ பைடன், யுக்ரேனுக்கான உதவிகளை விரைவுபடுத்த முயன்று வருகிறார். அமெரிக்காவின் அடுத்த அதிபராக பொறுப்பேற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப், யுக்ரேனுக்கான ஆதரவை குறைப்பார் அல்லது நிறுத்துவார் என்ற ஊகங்கள் நிலவுகின்றன. பிற நாடுகளுக்கான ராணுவ உதவிகளால் அமெரிக்காவின் வளங்கள் வீணாகின்றன என்பது அவரது கருத்து. தன்னால் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று கூறிய அவர், அதை எவ்வாறு செய்யப் போகிறார் என்று கூறவில்லை. ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்குவதில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. ஜெர்மனியின் ஒரு ஆராய்ச்சி நிறுவனமான, ‘உலகப் பொருளாதாரத்திற்கான கீல் கழகத்தின்’ தகவலின் படி, போரின் தொடக்கத்திற்கும் ஜூன் 2024 இறுதிக்கும் இடைப்பட்ட காலத்தில், யுக்ரேனுக்கு 55.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை அனுப்புவதற்கு அமெரிக்கா உறுதியளித்தது அல்லது வழங்கியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjw0822we2no
-
எல்லையற்ற அதிகாரத்தை அமைச்சர்கள் பொறுப்புடன் கையாள வேண்டும் - ஜனாதிபதி
அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். எமது வெற்றி மகத்தானது எனவும், வெற்றியினால் எமக்கு வழங்கப்பட்ட பொறுப்பின் எடை அதே அளவானது எனவும், அதற்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறிப்பாக இலங்கை அரசியலில் மிகவும் முக்கியத்துவமான திருப்புமுனை செப்டம்பர் 21 ஆம் திகதி நிகழ்ந்தது. நீண்டகால எமது நாடு பயணித்த பாதையை மாற்றியமைப்பதற்கு மக்கள் செப்டம்பர் 21 ஆம் திகதி தீர்மானம் எடுத்தனர். அதன் பின்னர் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் செப்டம்பர் 21 ஆம் திகதி எடுத்த தீர்மானத்தை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் எம்மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த மாற்றத்திற்காக எமது நாட்டு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இலங்கை வரலாற்றில் எப்பொழுதும் வடக்கிற்கு எதிராக தெற்கு அரசியலும் தெற்கிற்கு எதிரான வடக்கு அரசியலும் தான் அரசியல் வரைபடத்தில் பொதிந்திருந்தது. அல்லது ஒவ்வொரு மக்கள் குழுக்களிடையில் சந்தேகம் அவநம்பிக்கை, குரோதம் என்பவற்றை தூண்டும் அரசியலே காணப்பட்டது. ஆனால் இந்த தேர்தல் முடிவுகள், இனியும் எமது நாட்டுக்கு பிரித்தாளும் அரசியல் செல்லுபடியற்றது என்பதை காட்டுகிறது. வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் மேற்கிலும் பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை ஒரே மையப்புள்ளியில் இணைக்க இந்தத் தேர்தலால் முடிந்துள்ளது. அதற்காக தேசிய மக்கள் சக்திக்கு பலம் வாய்ந்த மக்கள் ஆணையை வழங்குவதற்காக ஆர்வம் காட்டிய அர்ப்பணித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். அதே போன்று எமக்கு வாக்களிக்காமல் வேறு கட்சிக்கு வாக்களித்தாலும் நாம் எதிர்பாக்கும் பணிகள் மற்றும் நோக்கங்கள் அவர்களினதும் நோக்கமாகும் என்பது திண்ணம். பிரித்தாளும் அரசியலை எந்தப் பிரஜையும் விரும்புவார்கள் என நான் நினைக்கவில்லை. ஜனநாயகத்தை முடக்குவதை எந்த அரசியல்வாதியும் விரும்புவர் என்று கருதவில்லை. இவ்வாறான சாதகமான விடயங்கள் அனைத்து பிரஜைகளின் மனங்களிலும் பொதிந்துள்ளது. எமக்கு வாக்களித்தவர்கள் சாதகமான விடயத்தை தேர்தலின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர். எமக்கு வாக்களிக்காதவர்களிடமும் எமது எதிர்பார்ப்புகள் உள்ளன என நாமும் முழுமையாக நம்புகிறோம். எனவே இனியும் இந்தத் தேர்தலில் மகிழ்ச்சி அடையும் குழு மற்றும் இந்தத் தேர்தலினால் விரக்தியடைந்த குழு என இரண்டு குழுக்கள் நாட்டில் இல்லை. தேசிய மக்கள் சக்தியின் மூலம் இந்த நாடு விரும்பிய இலக்குகளை அடைவதற்கு இந்த மக்கள் அனைவரின் ஆதரவும் நம்பிக்கையும் எங்களுக்குத் தேவை. எனவே, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும், இந்த நாட்டில் ஜனநாயகத்தை எவ்வாறு அமைதியான முறையில் நிலைநிறுத்துவது, மற்றவர்களின் அரசியல் உரிமைகளை எவ்வாறு மதிப்பது என்பதை நாம் தேர்தல் முடிவுகளின் பின்னர் காட்டியுள்ளோம். இந்நாட்டு மக்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக நான் கருதுகிறேன். ஆனால் அந்த அனுபவம் நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எதிர்பார்க்கும் அனுபவம் என்று நாங்கள் கருதுகிறோம். அத்துடன், பொதுத் தேர்தலின் பின்னரும், தேர்தல் காலத்திலும் இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு எமது ஆட்சியில் வாய்ப்பளிக்கப்பட்டது. அது அவர்களின் உரிமையாகும். அத்துடன், இத்தேர்தல் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலாகும். இத்தேர்தலில் பல தனித்துவங்கள் உள்ளன, அளவுரீதியாக நோக்கினால், இலங்கை வரலாற்றில், பொதுத் தேர்தலொன்றில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது. அரசியல் கட்சியென்ற ரீதியில் பெற்ற பாரிய வெற்றியாகும். தேர்தல் வரலாற்றில் ஒரு அரசாங்கம் அடைந்த முதல் வெற்றியாகும். மறுபுறம், இது மக்கள் மகிழ்ச்சியடையக் கூடிய வெற்றியாகும். அவ்வாறான வெற்றியொன்று நமக்கும் நமது குடிமக்களுக்கும் எப்படி கிடைத்தது. நம் நாட்டிற்கு அந்த மாற்றங்கள் தேவை. நமது நாட்டுக்கு பல்வேறு வகையான வெற்றிகள் கிடைத்த போதெல்லாம், நமது பொதுவான இயல்பு தோல்வியுற்றவரின் அல்லது மற்ற தரப்பினரின் மனதை நோகடிக்கும் மற்றும் காயப்படுத்தும் வரலாற்றைக் கண்டுள்ளோம். ஆனால் இந்த தேர்தலின் பின்னர் நிரந்தரமாக புதிய அரசியல் கலாசாரத்தை எமது நாட்டுக்கு உருவாக்கியுள்ளோம். பொதுத் தேர்தலுக்குப் பிறகு, அதனை தொடர்ச்சியாக நாங்கள் பாதுகாத்துள்ளோம். சம்பவங்கள் நடக்கலாம். மற்றொரு கட்டத்தில், அமைதியான ஜனநாயகம் இருக்கலாம். மற்ற சமயத்தில், மோதல் நிலைமை இருக்கலாம். ஆனால் அவை மீண்டும் மீண்டும் நிகழும் போது மட்டுமே அது சரி செய்யப்படுகின்றன. எனவே, இந்த ஜனநாயகத்திற்காக நாம் திறந்துள்ள கதவுகளும், பொதுமக்களுக்கிருக்கும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நமது கடமையும் ஓரிரு சந்தர்ப்பங்களுக்கு மட்டுப்படுத்தினால் அவை வெறும் நிகழ்வுகளாக மாறிவிடும். ஆனால் அதனை தொடர்ச்சியாக பேணினால் அவை வெறும் சம்பவங்களாக மாறிவிடாது. எனவே, இந்த ஜனநாயகத்தில், குடிமக்களின் உரிமைகளைத் தொடர்ந்து பாதுகாத்து, அவர்களை உயர்த நிலைக்குக் கொண்டு வருவது நமது பொறுப்பாகும் . இது அரசாங்கத்தின் முக்கியமான பொறுப்பு என்று நான் கருதுகிறேன். குறிப்பாக இந்த தேர்தல் பிரச்சாரத்தில் வெளிநாளில் வாழும் இலங்கையர்கள் எமக்கு மிகுந்த உற்சாகத்தையும் தைரியத்தையும் கொடுத்தனர். தேர்தல் வரலாற்றில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தலில் அதிக ஆர்வம் காட்டிய மற்றொரு சந்தர்ப்பம் இருக்கிறது. அந்த சந்தர்ப்பத்தை மிஞ்சும் வகையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் தலையீடும் பங்களிப்பும் செயற்பாடும் இத்தேர்தலில் கொடுக்கப்பட்டதாகவே கருதுகிறேன். அவர்கள் இலங்கைக்கு வெளியில் இருந்தாலும் இந்தத் தேர்தல் முடிவுகளை மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடியதை நாம் அறிவோம். அவர்களுக்கு நாம் எமது நன்றிகளை தெரிவிக்கிறோம். பொதுவாக தேர்தலின் போது அரசியலின் மிக முக்கியமான பகுதி நமது கருத்தையும் நிலைப்பாடுகளையும் சமூகத்திற்கு எடுத்துச் செல்வது என்பதை நாம் அறிவோம். அதனைச் சமூகத்திற்குக் கொண்டு செல்வதில் ஒரு அரசியல் இயக்கமாக நாங்கள் சில பணிகளைச் செய்தோம். சமூக ஊடகங்களில் அந்தப் பொறுப்பை தானாக முன்வந்து முன்னெடுத்த புதிய தலைமுறையொன்றும் இருந்தது. அந்த இளம் தலைமுறையினரின் விசேட எதிர்பார்ப்புகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்களில் வெறும் பந்தயம், போட்டி, வெற்றி தோல்வியை பகிர்ந்து கொள்ளும் போட்டி என்பன வெளிப்படுத்தப்படவில்லை. இது புதிய இளைஞர் தலைமுறையின் எதிர்பார்ப்புகளையும் இலக்குகளையும் வெளிக்காட்டியது. எனவே நாம் அதற்கு கடப்பட்டுள்ளோம். அது முக்கியமானது என்று நான் கதுதுகிறேன். எனவே, இந்த வெற்றியை அடைய பல்வேறு வழிகளில் உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒருவிடயம் இருக்கிறது. பெரும் நம்பிக்கையுடன் இந்த மக்கள் எழுச்சி பெற்றதன் இரகசியம் என்ன? நீண்டகாலமாக எமது நாட்டுக் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வந்தனர். நம் நாட்டின் குடிமக்கள் சட்டத்தின் முன் அநாதரவாகவும் ஒடுக்கப்பட்டும் இருப்பது வழமையான காட்சியாகும். மேலும் பொருளாதார ரீதியில் புறக்கணிக்கப்பட்ட ஒரு குழுவினர் உள்ளனர். பொருளாதாரத்தில் அவர்கள் மனிதத் தூசியாகி விட்டனர். போதிய உணவின்றி, சரியான வீடின்றி, ஆரோக்கியமாக வாழ வாய்ப்பில்லாமல் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் குழுவொன்று உள்ளது. மேலும், அவர்கள் தங்கள் அறிவையும் திறனையும் தங்கள் ஈடுபட்டுள்ள தொழிலில் சுதந்திரமாகப் பயன்படுத்த முடியுமா? எனவே தொழில் வல்லுநர்கள் தங்கள் தொழில்துறையில் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அழுத்தங்களை எதிர்கொண்டனர். மேலும், தாம் பேசும் மொழியின்படி, பின்பற்றும் மதத்தின்படி, அவர்களின் கலாச்சாரத்தின்படி ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டம் இருந்தது. எப்போதும் தாம் இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டதாக நினைக்கிறார்கள். அவர்கள் இலங்கையில் ஒதுக்கப்பட்ட மக்கள் என்று நினைக்கிறார்கள். அவர்கள் இலங்கையில் சம உரிமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பதிலாக, உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் குழுவென கருதுகிறார்கள். எனவே, அத்தகைய துன்புறுத்தல் இருந்தது. ஒவ்வொரு துறையிலும் உள்ள மக்கள் குழுக்களை அவதானித்தால், அவர்களுக்கே உரித்தான, அவர்களுக்கே தனித்துவமான பல அடக்குமுறைகளை பொதுமக்கள் எதிர்கொண்டனர். சட்டத்தை அமுல்படுத்த முயலும் அரச அதிகாரிகள் இந்த அடக்குமுறைக்கு பலியாகி இருப்பதை நான் அறிவேன். அதுதான் உண்மை நிலை. எனவே, இந்தத் தேர்தல் முடிவுகள் ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரத்தின் அழைப்பாகும். அவர்கள் இந்த சுதந்திரத்தை எதிர்பார்த்தனர். இந்த பல்வேறு வழிகளிலுமான அடக்குமுறைகளில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும். இந்த தேர்தல் முடிவு சுதந்திரத்தின் அவசியத்தை எடுத்துரைக்கிறது. எனவே அந்த குடிமக்களுக்குக் கிடைக்கும் சுதந்திரத்தை மட்டுப்படுத்த எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே, ஒவ்வொரு துறையிலும் முழு சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும். தொழில் வல்லுநர்களாகிய நாம் அவர்களின் அறிவுக்கு ஏற்ப தங்கள் பங்கை சரியாகச் செய்ய வழங்கப்படும் சுதந்திரம், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரிகளுக்கு அவர்களின் பங்கைச் செய்ய நாம் வழங்கும் சுதந்திரம், பொருளாதாரத்தில் நியாயமான பங்கைப் பெறுவதற்கு நாம் வழங்கும் சுதந்திரம், தமது மதம், மொழி மற்றும் கலாச்சாரத்தின் படி நாம் வாழ்வதற்கான உரிமை போன்ற அனைத்தையும் நாம் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். அதனால்தான் இலங்கையை மறுமலர்ச்சி யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறுகிறோம். இந்த நாட்டு மக்களுக்கு இதனை விட சுதந்திரமான சூழலை உருவாக்க வேண்டும். இந்த வெற்றியை அடைவதில் பொது மக்களின் பெரும் ஈடுபாடு இருந்ததை நாம் அறிவோம். எங்களுடைய அரசியல் இயந்திரத்துடன் தொடர்பில்லாத, எங்களைச் சந்திக்காத, எங்களுடன் கதைக்காத, ஊர், இடம் தெரியாத ஏராளமான மக்கள் எங்களுக்காகப் பாடுபட்டனர். பஸ்ஸில், ரயிலில், பணியிடத்தில், நிகழ்வுகளில் எங்கள் வெற்றிக்காக பெருமளவானவர்கள் பங்களித்தனர். இந்த வெற்றிக்காக நாங்கள் நீண்ட காலமாக போராடினோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பல தசாப்தங்களாக போராடினோம். இங்குள்ள பலர் தங்கள் இளமைக் காலத்திலிருந்தே இந்தக் கனவுக்காகப் போராடியதை நான் அறிவேன். இந்தப் போராட்டத்தில், அவர்களின் நேரத்தையும் உழைப்பையும் மட்டுமல்ல, இந்த வெற்றிக்காக அவர்களின் உயிரையும் கூட தியாகம் செய்தனர். அது மட்டுமின்றி, ஆரம்பத்தில் மிகவும் கடினமான சந்தர்ப்பங்களில் இந்த இயக்கத்தைப் பாதுகாக்க தலையிட்டோம். சிலர் நடுவழியில் சென்றுவிட்டனர். பாதியில் விட்டு சென்றாலும், இந்த வெற்றியை அடைவதற்கு, ஆரம்பத்தில், நடுவில், எந்த கட்டத்திலும் எங்களுக்கு ஆதரவு வழங்கினர். அவைகளும் இந்த வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தது. எனவே, எங்களுக்கு இரு வகையான பொறுப்புகள் உள்ளன. ஒன்று பொது மக்களின் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளுக்கான பொறுப்பு. இரண்டாவது இயக்கம் தொடர்பான பொறுப்பு. அதிகாரம் என்பது மிகவும் விசேடமான ஒன்று என்று நாங்கள் கருதுகிறோம். அதிகாரத்தில் இருந்து அதிகாரம் பிறப்பிக்கப்படுகிறது. அதிகாரத்தில் இருந்து அதிகாரம் விரிவுபடுத்தப்படுகிறது. அதிகாரத்தில் இருந்து மேலும் அதிகாரம் வளர்க்கிறது. ஆனால் சிலர் அதிகாரத்தை மோசடி என்று கூறுகின்றனர். அந்த எல்லையற்ற அதிகாரமானது எல்லையில்லாத அளவு மோசமானது என்கிறார்கள். அது நிரூபிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் இதுபோன்ற அதிகாரங்கள் உருவாக்கப்பட்ட பல சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால், அந்த அதிகாரங்களின் இறுதி முடிவை எடுத்துக் கொண்டால், அவை மக்களுக்கு நியாயமான பெறுபேறுகளை கொண்டு வரவில்லை. அந்த அதிகாரங்கள் எப்போதும் நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராகவே பயன்படுத்தப்பட்டன. எல்லையில்லா அதிகாரம் கிடைத்திருப்பதால் அந்த எல்லையற்ற அதிகாரம் நம்மை எங்கே தள்ளும் என்ற சந்தேகம் சமூகத்தில் உருவாக்கி இருக்கிறது. கொஞ்சமாவது சந்தேகம் கொள்ளும் அனைவருக்கும், நாம் சொல்வது ஆம் எமக்கு அதிகாரம் கிடைத்திருப்பது உண்மைதான். ஆனால் இந்த அதிகாரத்தின் எல்லைகளையும், இந்த அதிகாரம் நமக்குக் கையாளக் கொடுத்துள்ள எல்லையின் அளவையும் நாங்கள் அறிவோம். அதிகாரம் இருக்கிறது. ஆனால் அந்த அதிகாரத்திற்கு நமக்கு வரம்புகள் உண்டு. நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அதிகாரத்தில் ஒரு நோக்கம் இருக்கிறது. மக்களுக்கு வழங்கப்பட்ட நல்ல இலக்குகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் பொறுப்பு நீண்ட காலமாக அந்த அதிகாரத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த அதிகாரத்துடன் பொறுப்பும் இருக்கிறது. யாருக்கு? ஒருபுறம், குடிமக்களுக்கான பொறுப்பு. மறுபுறம் இயக்கத்திற்கான பொறுப்பு. எனவே, சட்டங்கள் மற்றும் அரசியலமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் எங்களுக்காக எந்த வகையான அதிகாரத்தை உருவாக்கினாலும், இந்த அதிகாரத்தை நாம் கையாள்வதில் நாம் பொறுப்புக் கூற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எமக்கு பொறுப்பு உள்ளது. பிணைப்பு இருக்கிறது. எனவே, ஒரு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சருக்கு ஒரு சாதாரண குடிமகனை விட பாரிய பொறுப்பு உள்ளது. உங்களுக்கெல்லாம் அது புரியும். நான் புதிதாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை. உங்களிடம் அந்த வரம்புகள் உள்ளன. உங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. உங்களிடம் ஒரு பிணைப்பு உள்ளது. அதனைப் பாதுகாப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும், இங்கு அமைச்சரவைக்கு மாத்திரமன்றி பாராளுமன்றத்துக்கும் பலர் புதியவர்கள். ஆனால் நாங்கள் வெவ்வேறு நோக்கங்களுக்காக பல்வேறு துறைகளில் நீண்ட காலமாக பணியாற்றியுள்ளோம். நீங்கள் ஒரு தொழிற்துறையைப் போலவே வேகமாக பணியாற்றியிருக்கிறீர்கள். அரசியல் செயற்பாட்டாளராக பணியாற்றியுள்ளீர்கள். எனவே, நீங்கள் அனைவரும் அமைச்சரவைக்கு புதியவர்கள், பாராளுமன்றத்திற்கு புதியவர்கள், ஆனால் அரசியலுக்கு புதியவர்கள் அல்ல. பணியாற்றுவதில் புதியவர்களல்ல, எனவே, இந்த அமைச்சரவையினால் புதுவிதமான முன்மாதிரிகள் பலவற்றை மக்களுக்கு வழங்க முடியும் என்று நினைக்கிறோம். நாடு எதிர்பார்க்கும் சாதனைகளை முன்னெடுக்க இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையால் முடியும் என்று நான் நம்புகிறேன். நாங்கள் சிறப்பாக வழிநடத்தி பாடுபட்டால் அந்த இலக்கை அடையலாம். அதற்கான திறமை உங்களுக்கு இருக்கிறது. உங்களுக்கு அந்த நோக்கம் இருக்கிறது. நீங்கள் மோசடியற்றவர்கள். நீங்கள் நேர்மையானவர் என்று தனிப்பட்ட முறையில் நான் அறிவேன். இந்தப் பணியை நிறைவேற்றும் தைரியம் உங்களுக்கு இருக்கிறது. எனவே, இந்தப் பணியை நேர்மையாகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அந்த நம்பிக்கையுடன் தான் நாம் செயல்படுகிறோம். மேலும், ஒரு சமயத்தில் அரசியலில், அரசியல் நோக்கங்களுக்காக இயக்கத்தைக் கட்டியெழுப்ப அதற்காக பங்காற்ற வேண்டியிருந்தது. எங்களிடம் நல்ல நோக்கங்கள் இருந்தன. அந்த நோக்கங்களை அடைவதற்கான அதிகாரத்தைப் பெறுவதற்கு நாங்கள் பாடுபட்டோம். நமது கோசங்கள், நமது செயல்பாடுகள், இவை அனைத்தும் அதிகாரத்தைப் பெறும் போராட்டத்தின் போக்கில் தான் இருந்தன. நாம் முட்டிமோதி இந்த நாட்டு மக்களுக்கு இந்தத் தேவையை உணர்த்தியுள்ளோம். அதுதான் பெறுபேறு. அரசியல் வெற்றி கிடைத்துள்ளது. எம்மை இனி அரசியல் கோஷங்களால் மட்டும் அளவிடக் கூடாது. செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னரும், நவம்பர் 14 ஆம் திகதிக்கு முன்னரும், எங்கள் கோஷங்களின் அடிப்படையில் தான் எம்மை அளவிட்டார்கள். ஆனால், நவம்பர் 14ஆம் திகதிக்குப் பிறகு, ஆட்சியில் நாம் சிறப்பானவர்களா இல்லையா என்ற காரணிக்கமையவே அளவிடுவர். முன்பெல்லாம் நமது அரசியல் செயல்பாடு நல்லதா கெட்டதா என்பதை வைத்து அளவிடப்பட்டது. இனிமேல் நமது ஆட்சி நல்லது கெட்டது என்ற காரணியால் எம்மை அளவிடுவர். எனவே, எமது நீண்டகால முயற்சிகளையும், மக்களின் எதிர்பார்ப்புகளையும், அவர்கள் எதிர்பார்த்த இலக்குகளையும் வெற்றியடையச் செய்வதற்கு நல்லாட்சி அவசியமாகும். இனியும் நாம் கோஷங்களாலும் சித்தாந்தங்களாலும் அளக்கப்படப் போவதில்லை. இன்றிலிருந்து நமது கோஷங்களுக்கு எவ்வளவு உயிர் கொடுக்க முடிந்துள்ள ஆட்சி என்பதை வைத்து அளவிடப்படுவோம். எனவே, எங்கள் வெற்றி பாரியது என்பதோடு வெற்றி ஊடாக ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பின் பாரமும் அதற்கு சமமானது. சில சமயங்களில் வெற்றிக்காக போராடுவோம் என்றும், வெற்றிக்குப் பிறகு திறமையுள்ள குழுக்கள் அடுத்த அடியை எடுத்து வைக்கும் என்றும் எமக்குக் கூறப்பட்டது. ஆனால் நல்லதோ கெட்டதோ வெற்றிக்காக போராட வேண்டியிருந்தது. வெற்றிக்குப் பிறகு அந்தப் பணியில் வெற்றிபெறும் முன்னோடிகளாகிவிட்டோம். எனவே அனைத்தும் உங்கள் மீது தான் சுமத்தப்பட்டுள்ளது. நீங்கள்தான் பிரதானம். உங்களால் எந்த அளவிற்கு உங்கள் துறைகளை திறம்பட நிர்வகித்து உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்ற முடியும்? தனிப்பட்ட போக்குகள், பொறுப்புகள் என்பவற்றை எந்தளவு உங்களால் நிறைவேற்ற முடியும்? இந்த அடிப்படையில் தான் நமது அடுத்த வெற்றி அல்லது தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. செப்டம்பர் 21 மற்றும் நவம்பர் 14 ஆகிய இரு கட்டங்களிலும் நாம் சித்தியடைந்துள்ளோம். அடுத்து, நாங்கள் சித்தியடைவோமா இல்லையா என்பதை தீர்மானிப்பதில் உங்கள் வகிபாகம் பெரியது. சிறந்த ஆட்சிக்கான உங்களின் பொறுப்புக்கூறல் மற்றும் அர்ப்பணிப்பினால் தான் இதனை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும். அதற்காக ஒன்றுபட்டு செயற்படுவோம். அதற்காக ஒன்றுபட்டு குரல் கொடுப்போம். https://www.virakesari.lk/article/199105
-
பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு
(எம்.மனோசித்ரா) நாடளாவிய ரீதியிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதற்கட்ட கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் (22) நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய 23ஆம் திகதியிலிருந்து 2025 ஜனவரி முதலாம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மீண்டும் 2025ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் திகதி முதல் 17ஆம் திகதி வரை 2024 கல்வியாண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன. இந்த விடுமுறை காலப்பகுதியில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளும் இடம்பெறவுள்ளன. 2025 கல்வியாண்டுக்கான முதலாம் தவணை ஜனவரி 20ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/199099
-
இரசித்த.... புகைப்படங்கள்.
நீங்கள் பகிடி விடக்கூடாதண்ணை! இது வரிக்குதிரை தனது உயிரைக் காப்பாற்றும் இறுதி முயற்சி.
-
பிரிவினைவாத அரசியல் இனிமேலும் எடுபடாது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன - ஜனாதிபதி
நாடாளுமன்ற தேர்தல் இலங்கையில் பிரிவினைவாத அரசியலிற்கு முடிவுகண்டுள்ளது என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியல் கலாச்சாரம் வடக்கை தெற்கிற்கு எதிராகவும்தெற்கை வடக்கிற்கு எதிராகவும் நிலைநிறுத்தும் அரசியலால் நீண்டகாலமாக வரையறுக்கப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார். எனினும் இந்த தேர்தல் பிரிவினைவாத அரசியல் பிளவுபடுத்தும் அரசியல் இனி எடுபடாது என்பதை இந்த தேர்தல் காண்பித்துள்ளது என தெரிவித்துள்ள ஜனாதிபதி புதிய அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்களிற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/199070
-
லொஹான் ரத்வத்தவின் வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
லொஹான் ரத்வத்தைக்கும் அவரது மனைவிக்கும் விளக்கமறியல் நீடிப்பு பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மற்றும் அவரது மனைவி ஷஷி பிரபா ரத்வத்தை ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (18) நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லொஹான் ரத்வத்தையை டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி வரையும், ஷஷி பிரபா ரத்வத்தையை நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லொஹான் ரத்வத்தையின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தைக்குச் சொந்தமான நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மிரிஹான பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், லொஹான் ரத்வத்தை மற்றும் அவரது மனைவி ஷஷி பிரபா ரத்வத்தை ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/199069