Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS Michael Murphy’ என்ற போர்க்கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நேற்று (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கடற்படை மரபுகளுக்கு அமைய கப்பலை வரவேற்க இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதன்படி, 155.2 மீற்றர் நீளம் கொண்ட, மொத்தம் 333 பணியாளர்களை கொண்ட ‘USS Michael Murphy’ என்ற Arleigh Burke class guided missile destroyer போர்க்கப்பலே இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கப்பலின் கட்டளை அதிகாரியாக Commander Jonathan B. Greenwald செயற்படுகிறார். மேலும், வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்த பின்னர், 'USS Michael Murphy' கப்பல் இன்று (17) நாட்டை விட்டு புறப்பட உள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=196016
  2. 2024 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வைத்தியர் அர்ச்சுனாவை நேற்று சனிக்கிழமை (16) சாவகச்சேரி மக்கள் வரவேற்றிருந்தனர். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் முதல் தடவையாக வைத்தியர் அர்ச்சுனா சனிக்கிழமை பிற்பகல் யாழ். சாவகச்சேரி சென்றிருந்த நிலையில் மக்கள் அவருக்கு அமோக ஆதரவளித்தனர். https://www.virakesari.lk/article/198956
  3. புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை (18) காலை 10 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=196012
  4. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (17) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. இவர்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தலைமையிலான குழுவொன்று நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவான கடன் நிதி வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வை மேற்கொள்வதற்காக இந்தக் குழு நாட்டுக்கு வரவுள்ள நிலையில், இந்த மீளாய்வின் பின்னர் சர்வதேச நாணய நிதியம் அடுத்த கடன் தவணையை இலங்கைக்கு வழங்கவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=196011
  5. நமது நிருபர் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஏற்கனவே கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் அல்லது சமீபத்திய பொதுத் தேர்தலில் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்பட்டு தெரிவு செய்யப்படாதவர்கள் மட்டுமே தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றத்திற்கு பெயரிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளுக்கு அமைவாக தேசியபட்டியல் ஆசனங்களின் ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் தங்களது தேசியப்பட்டியலை சமர்ப்பித்துள்ளன. அவ்வாறான நிலையில், அக்கட்சிகள் தமது தேசியப்பட்டியல் ஊடாக தெரிவாகும் உறுப்பினர்களை இறுதி செய்து எமக்கு அறிவிக்க வேண்டும். அவர்கள் தேசியப் பட்டியலில் உள்ளவர்களையோ அல்லது தேர்தலில் போட்டியிட்டு தெரிவுசெய்யப்படாத வேட்பாளர்களையோ உறுப்பினர்களாக அறிவிக்க முடியும். அதனைத் தாண்டி வேறு எவரையும் அவர்களால் பெயரிட முடியாது. தேசியப்பட்டியலுக்காக பெயரிடப்படுபவர்கள் பட்டியல் கட்சியின் செயலாளரால் எமக்கு குறித்துரைக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/198947
  6. ஆர்.ராம் தமிழ்த் தலைவர்கள் நீண்டகாலமாக வாக்குறுதிகளை நிறைவேற்றாதிருக்கின்ற நிலையில் அவர்கள் மீதான ஏமாற்றமே வடக்கு, கிழக்கில் எமது வெற்றிக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீதும், தேசிய மக்கள் சக்தியின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையை குலைக்கப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார். தேசிய மக்கள் சக்தி, வடக்கு, கிழக்கில் பெற்றுள்ள தேர்தல் வெற்றி சம்பந்தமான கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலின்போது, ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் அவரை ஆதரித்த பரிவாரங்களும் எம்மை தமிழ் மக்களின் எதிரிகளாக சித்தரித்து பிரசாரங்களை செய்தார்கள். சொற்ப காலமே ஆட்சியில் இருப்பார்கள். வன்முறைகள் தோற்றம் பெறும் என்றும் கூறினார்கள். இதனால் தமிழ் மக்கள் மத்தியில் எம்மீது சந்தேகங்கள் இருந்தன. இதனால் 25ஆயிரத்துக்கு உட்பட்டதாகவே வாக்குகளை அளித்தார்கள். ஆனால் ஜனாதிபதி தேர்தலின் பின்னரான 45நாட்களில் ஜனாதிபதி அநுரகுமாரவின் ஆட்சியை மக்கள் நேரடியாகவே பார்த்தார்கள். எந்தவிதமான வன்முறைகளும் இடம்பெறவில்லை. சுமூகமான நிலையில் நாடு செயற்பட்டது. இதனால் தமிழ் மக்களுக்கு எம்மீதான நம்பிக்கை ஏற்பட்டது அதுமட்டுமன்றி, எழுபது ஆண்டுகளாக பிரபுத்துவ தமிழ் அரசியல்வாதிகள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்கள். ஆனால் அவர்கள் அளித்த வாக்குறுதிகள் எவற்றையும் நிறைவேற்றவில்லை. தமிழ் மக்களுக்கான உரிமைகளையும் பெற்றுக்கொடுக்கவில்லை. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அன்றாடம் அவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கின்றார்கள். போதைப்பொருள் பாவனைக்கு இளையோர் அடிமையாதல் உள்ளிட்ட நெருக்கடிகள் பல உள்ளன. அந்தப்பிரச்சினைகள் கூட சரியாகக் கையாளப்படவில்லை. இதனால் அவர்கள் அரசியல் பிரச்சினைகளுக்கு முன்னதாக தமது அன்றாடப் பிரச்சினைகளை களைவதற்காக மாற்றத்தை எதிர்பார்த்தார்கள். அந்த மாற்றத்துக்காவே எமக்கு வாக்களித்துள்ளார்கள். நாம் நிச்சயமாக அவர்கள் கொண்டிருக்கின்ற எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம். ஜனாதிபதி அநுரகுமாரவும்ரூபவ் தேசிய மக்கள் சக்தியும் தமிழ் மக்களின் நம்பிக்கையை குலைக்காது பாதுகாக்கும் என்றார். https://www.virakesari.lk/article/198945
  7. ரஷ்யா நாட்டில் செக்ஸிற்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்த ஜனாதிபதி விளாடிமிர் புதின் திட்டமிட்டுள்ளார். இதற்கான காரணம் குறித்த பின்னணி தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. ரஷ்யாவுக்கும் – உக்ரைன் நாட்டிற்கும் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இருநாட்டு எல்லையில் உள்ள ஏராளமான பொதுமக்கள் இடம்பெயர்ந்து வருகிறார்கள். இதனால் இந்த இரு நாடுகளிலும், மக்கள் தொகை எண்ணிக்கையில் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வலிமையான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் ரஷ்யாவுக்கு இந்த மக்கள் தொகை பெருக்கம் குறைவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் ரஷ்யாவில் மக்கள் தொகை குறைந்து வருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே மக்கள் தொகையை அதிகரிப்பது குறித்து நிபுணர் குழுவிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் பாலியல் அமைச்சகம் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் மக்கள் தொகையை அதிகரிக்கச் செய்யலாம் என்று சிலர் ஆலோசனை கூறியிருந்தனர். இந்த ஆலோசனை ஏற்று செக்ஸ் விவகார அமைச்சகத்தை ஏற்படுத்த ரஷ்ய அதிபர் புதின் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதே போன்று மக்கள் தொகையை அதிகரிக்க மற்ற எந்தெந்த வழிகளை கையாளலாம் என்பது பற்றியும் நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்கள். அந்த ஆலோசனையில் பின்வரும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதாவது பொதுமக்கள் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை தங்கள் வீடுகளில் இன்டர்நெட், விளக்குகளை அணைத்து விட்டு குழந்தைகளை உருவாக்க உடலுறவு கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இன்னொரு ஆலோசனையில், வீட்டிலேயே தங்கி தங்களது குழந்தைகளை வழக்கும் பெண்களுக்கு அரசு தரப்பில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/312202
  8. தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக ஜெனிவாவில் இனி கேள்வியெழுப்ப முடியாது; அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் - சட்டத்தரணி பிரதீபா மஹாநாம (இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். அரசியல் கட்டமைப்பில் இருந்து தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று ஜெனிவாவில் இனி கேள்வியெழுப்ப முடியாது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சட்டத்தரணி பிரதீபா மஹாநாம தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பொதுத்தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 21 தேர்தல் மாவட்டங்களிலும் அமோக வெற்றிப் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பாரம்பரியமான அரசியல் கலாச்சாரத்தில் இருந்து விலகி புதிய அரசியல் கலாச்சாரத்துக்குள் பிரவேசித்துள்ளார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். எவ்விதமான அரசியல் கூட்டணியுமில்லாமல் தேசிய மக்கள் சக்தி வெற்றிப் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பொது அரசியல் கட்டமைப்பில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவே கடந்த காலங்களில் சர்வதேச மட்டத்திலும், சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் தொடர்ச்சியாக குறிப்பிட்டது. இந்த விடயங்களை முன்னிலைப்படுத்தி இலங்கைக்கு எதிரான பிரேரணைகளும் முன்வைக்கப்பட்டன. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். ஆகவே, பொது அரசியல் கட்டமைப்பில் இருந்து தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள் என்று இனி ஜெனிவாவில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் 2025 பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. தமிழ் மக்கள் புதிய அரசியல் கட்டமைப்புக்குள் பிரவேசித்துள்ளார்கள், பழைய பாரம்பரியமான அரசியல் கட்டமைப்பை புறக்கணித்துள்ளார்கள் என்ற செய்தியை அரசாங்கம் சர்வதேச அரங்கில் எடுத்துரைக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எவ்விதமான எதிர்பார்ப்பு மற்றும் நிபந்தனைகளின்றி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவளித்துள்ளார்கள். ஆகவே தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி நாட்டின் சட்ட கட்டமைப்புக்குள் இருந்துக் கொண்டு தீர்மானங்களை எடுக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும். அத்துடன் நாட்டில் மனித உரிமையை மென்மேலும் வலுப்படுத்த பாராளுமன்ற பொறிமுறைக்குள் விசேட செயற்திட்டங்களை வகுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/198926
  9. நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தலில் 22,20,311 வாக்காளர்களைக் கொண்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 14,70,549 பேர் வாக்களித்த நிலையில் 7,49,762 பேர் வாக்களிக்காததுடன் 94,489 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தில் யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டம் 5,93,187 வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 3,58,079 பேர் வாக்களித்த நிலையில் 2,35,108 பேர் வாக்களிக்கவில்லை. அதேநேரம் வாக்களித்த 3,58,079 பேரில் 32,767 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன இதற்கமைய 3,25,312 பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதேபோன்று வன்னி மாவட்டம் 3,06,081 வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 2,11,140 பேர் வாக்களித்த அதேநேரம் 94,941 பேர் வாக்களிக்கவில்லை. வாக்களித்த 2,11,140 பேரில் 15,254 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன .இதற்கமைய 1,95,886 பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் 3,30,049 பேர் வாக்களிக்காத நிலையில் 48,021 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் 4,49,686 வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 3,02,382 பேர் வாக்களித்த நிலையில் 1,47,304 பேர் வாக்களிக்கவில்லை. அதேநேரம் வாக்களித்த 3,02,382 பேரில் 15,329 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன இதற்கமைய 2,87,053 பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதேபோன்று திருகோணமலை மாவட்டம் 3,15,925 வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 2,18,425 பேர் வாக்களித்த அதேநேரம் 97,500 பேர் வாக்களிக்கவில்லை. வாக்களித்த 2,18,425 பேரில் 13,537 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன .இதற்கமைய 2,04,888 பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று திகாமடுல்ல மாவட்டம் (அம்பாறை ) 5,55,432 வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 3,80,523 பேர் வாக்களித்த அதேநேரம் 1,74,909 பேர் வாக்களிக்கவில்லை. வாக்களித்த 3,80,523 பேரில் 17,599 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 3,62,924 பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் 4,19,713 பேர் வாக்களிக்காத நிலையில் 46,465 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/312194
  10. 2024 பாராளுமன்றத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆவது நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள 196 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய விசேட வர்த்தமானியே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. 1981 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்துக்கமைய, இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை தங்களது கட்சியின் சார்பில் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களைக் கட்சிகள் அறிவிக்க வேண்டும். அதன் பின்னர் 29 தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும். https://www.virakesari.lk/article/198942
  11. இலங்கையின் 3 ஆவது பலமிக்க அரசியல் கட்சியாக தமிழரசு இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் 8 ஆசனங்களைக் கைப்பற்றியதன் மூலம் இலங்கையின் 3 ஆவது பலமிக்க அரசியல் கட்சி என்ற இடத்தி இலங்கை தமிழரசுக்கட்சி பிடித்துள்ளது. நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமையிலான தேசிய மக்கள் சக்தி 68,63,186 வாக்குகளை பெற்று 141 நேரடி ஆசனங்கள் 18 தேசிய பட்டியல் ஆசனங்கள் என 159 ஆசனங்களைக் கைப்பேரறி மூன்றி இரண்டு பெரும்பான்மை பலத்தை நிலைநாட்டியுள்ளது. அதற்கு அடுத்தாக ஐக்கிய மக்கள் சக்தி 19,68,716 வாக்குகளை பெற்று 35 நேரடி ஆசனங்கள், 5 தேசியப்பட்டியல் ஆசனங்கள் என 40 ஆசனங்களைக் ஆசனங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதுடன் எதிர்கட்சியாகயாகவும் உருவாகியுள்ளது. மூன்றாம் இடத்தில் இலங்கை தமிழரசு கட்சி 2,57,813 வாக்குகளை பெற்று மட்டக்களப்பில் 3 ஆசனங்களையும், அம்பாறையில் 1 ஆசனத்தையும், திருகோணமலையில் 1 ஆசனத்தையும், வன்னியில் 1 ஆசனத்தையும், யாழ்ப்பாணத்தில் 1 ஆசனத்தையும் என 7 நேரடி ஆசனங்கள். தேசியப்பட்டியல் ஆசனம் என 8 ஆசனங்களைக்கைப்பற்றி 3 ஆவது பலமிக்க அரசியல் கட்சியாக உருவாகியுள்ளது. இதேவேளை புதிய ஜனநாயக முன்னணி 5 ஆசனங்களையும், கடந்தமுறை 145 ஆசனங்களை கைப்பற்றி ஆட்சி புரிந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெர முன 3 ஆசனங்களையும், முஸ்லிமும் காங்கிரஸ் 3 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய கட்சி 1 ஆசனத்தையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 1 ஆசனத்தையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 ஆசனத்தையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1 ஆசனத்தையும், சுயேச்சை குழு 17 ஒரு ஆசனத்தையும் இலங்கைத் தொழிலாளர் கட்சி 1 ஆசனத்தையும், சர்வஜன அதிகாரம் கட்சி 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன. https://thinakkural.lk/article/312180
  12. வடக்கில் தமிழ் கட்சிகளை ஐக்கியப்படுத்த முயற்சி - தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அறிவிப்பு..! எதிர்வரும் நாள்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் ஈடுபடவுள்ளதாக தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அறிவித்திருக்கின்றது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் வி.எஸ். சிவகரன் வெளியிட்டுள்ளள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம். கடந்த எழுபது ஆண்டு கால அரசியல் உரிமைக்கான ஜனநாயக மற்றும் ஆயுதப் போராட்டங்களை எதிர்கொண்ட தமிழினம் பல்வேறு விதமான இழப்புகளையும், நெருக்கடிகளையும், வலிகளையும், வாழ்வியல் சுமைகளையும் எதிர்கொண்டு வருகின்றது. ஆனால் 2009க்கு பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிக்குள் தமிழினம் சிக்கித் தவிக்கின்றது. காலத்துக்கு காலம் ஆட்சிக்கு வருபவர்கள் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பைத் தொடர்ச்சியாக வன்வலு கடந்த மென் வலுவில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதனை எதிர்கொள்வதே பாரிய சவாலாக உள்ளது. அதிலும் பிரிந்து நின்று எதிர்கொள்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஆகவே ஒன்றாக இணைந்து அரசின் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழ்க் கட்சிகளின் பதவி சண்டையால் தங்களுக்குள் முரண்பட்டு, பல அணிகளாகப் பிரிவடைந்துள்ளனர். அவர்களுக்கு இடையிலான முரண்பாடு பொது எதிரியை மகிழ்விக்கும். இந்தத் தேர்தல் களம் தமிழ்க் கட்சிகள் தமது முரண்பாட்டையே பேசு பொருளாக்கின. இதனால் வெறுப்படைந்த பொதுமக்கள் தமிழ்த் தேசியக் கோட்பாட்டுச் சித்தாந்தத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். தமிழ்க் கட்சிகளிலும் பல்வேறு விதமான தவறுகளும், குறைபாடுகளும் காணப்படுகின்றன. அவற்றை அவர்கள் விரைவில் தீர்த்துக்கொள்ள வேண்டும். ஒரே இலக்கில் செயற்பட முனைவோர்கள் பிரிந்திருந்ததனால் வடக்கு மாகாண தேர்தல் களம் பல்வேறு விதமான சோதனைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. கிழக்கு மக்கள் விழித்துக் கொண்டமையால் தம்மைத் தற்காத்துக் கொண்டனர். அவர்களுக்கு எமது பாராட்டுக்களும், வாழ்த்துகளும் ஆனால், வடக்கில் உள்ள நிலைமை மிக மோசமாகிவிட்டது. ஆளும் அரசே வெற்றி பெற்றிருப்பதனால் எமது தமிழ்த் தேசியவாத அபிலாஷைகளை எவ்வாறு பூர்த்தி செய்யப் போகின்றோம் என்கின்ற கேள்வி எழுகின்றது. எனவே, தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குள் இருக்கின்ற பகைமையை மறந்து குறைந்தபட்சம் ஒன்றாக இணைந்து மீண்டும் கூட்டமைப்பாக இயங்க வேண்டியது காலத்தின் கட்டாயமும் நிர்ப்பந்தமும் ஆகும். இவ்வாறான ஐக்கியமில்லாவிட்டால் அசுர பலத்தோடு வெற்றி பெற்றுள்ள அரசை எதிர்கொள்ளக்கூடிய வலிமை தமிழர் தரப்பிடம் இல்லாமல் போய்விடும். ஆகவே, எதிர்காலத்தில் நடைபெறுகின்ற தேர்தல்களிலும் சரி, தமிழ்த் தேசிய உரிமை ஜனநாயகப் போராட்ட விடயங்களிலும் சரி, ஒன்றாக இணைந்து எதிர்கொள்வதே அவசியமாகும். அதனையே மக்களும் விரும்புகின்றார்கள். கடந்த பல வருடங்களாக இவ்வாறான ஐக்கிய முயற்சிகளை ஏற்படுத்தியவர்கள் என்கின்ற வகையிலும் தேர்தலில் தமிழ்த் தேசியத்திற்கு வாக்களியுங்கள் எனக் கோரிக்கை விடுத்ததன் உரிமையிலும் , எதிர்வரும் நாள்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட இருக்கின்றோம். அதற்கு நீங்கள் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். ஆளுக்கு ஆள் துரோகிப்பட்டம் வழங்குவதையும், ஒரு கட்சி வந்தால் இன்னொரு கட்சி வரமாட்டேன் எனக் கூறும் வரட்டு வாதங்களையும் அடியோடு மறந்து விடுங்கள் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடந்து முடிந்த தேர்தல் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய நீக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதற்குத் தார்மீக பொறுப்பெடுக்க வேண்டியது சகல தமிழ்த் தேசியக்கட்சிகளும் ஆகும். தமது குறைபாடுகளையும், செயல்பாடின்மையும் இனிமேலாவது திருத்திக் கொள்வதற்கு அவை முன் வர வேண்டும். ஆனாலும் தமிழ் மக்கள் இன ரீதியான சிந்தனைதுவத்தை மறந்து தேசிய கட்சிக்கு வாக்களித்தமை என்பது மிகவும் வேதனைக்குரிய பரிதாபகரமான நிலைப்பாடு ஆகும். தமிழ் மக்களுக்குப் பிரச்சினை எதுவும் இல்லை எனும் தோற்றப்பாட்டை வெளிப்படுத்திவரும் ஆபத்துண்டு. அந்த மக்கள் எதிர்வரும் காலத்தில் தங்களுடைய எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் நாம் கேட்டுக்கொள்கின்றோம். ஏனெனில் தேசிய கட்சிகளுக்குள் கரைந்து போவது என்பது தமிழ்த் தேசிய இருப்பை ஒருபோதும் கூர்மையாக தக்க வைக்க கூடிய கள நிலையை உருவாகாது என்பதனையும் எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே, எமது முயற்சிக்கு சகல கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்." - என்றுள்ளது. https://www.virakesari.lk/article/198941
  13. அனைவரையும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் ஒரே அணியாக செயற்பட தீர்மானம் என்கிறார் செல்வம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில், ஒரே அணியாக பொது பிரச்சனைகளை நாங்கள் கையாளுகின்ற வகையிலே செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இனப்பிரச்சினை குறித்தும், அபிவிருத்தி தொடர்பாகவும் கூடிய கவனம் செலுத்துவதாக கோரி மக்களிடம் நாங்கள் வாக்கு சேகரித்தோம். குறித்த இரு விடையங்கள் குறித்து அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்படுகின்ற ஒரு சாத்தியப்பாட்டை மேற்கொள்கின்ற சூழலை உருவாக்குவதாகவும் நாங்கள் கூறியிருந்தோம். குறித்த இரு விடயங்களிலும் நாங்கள் கவனம் செலுத்துவோம். கிராமிய ரீதியாக மக்களின் குறைகளை கேட்டறிந்து கிராமங்களை முன்னேற்றுவதே நோக்கமாக இருக்கும். மேலும் இனப்பிரச்சினை தொடர்பான விடையங்களை நாங்கள் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுவதற்கான ஒரு சூழலை நாங்கள் உருவாக்குவோம். மேலும் இம்முறை பாராளுமன்ற தேர்தலின் போது தெரிவு செய்யப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து பாராளுமன்றத்தில் ஒரே அணியாக பொது பிரச்சனைகளை நாங்கள் கையாளுகின்ற வகையிலே செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளேன். ஜனாதிபதி கூறியது போல் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து, காணாமல் போனவர்கள் குறித்து அவர்களின் உறவுகள் போராட்டத்தின் ஊடாக நீதியை கோரி வருகின்றனர். அவர்களுக்கு நியாயம் கிடைக்கின்ற வகையில் ஒரு வழி முறையை நாங்கள் கையாளுகின்ற ஒரு சூழலை உருவாக்குதல், எமது நிலங்கள் பரிபோகாத ஒரு சூழலை ஏற்படுத்துதல், எமது மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம். எனவே இம்முறை சங்கு சின்னத்துக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள். மக்கள் சார்ந்த பிரச்சினைகளை கவனத்தில் எடுத்து, மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முறையை நாங்கள் கையாளுவோம்.என அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/312185
  14. செலவு அறிக்கையை சமர்ப்பிக்காதவர்களுக்கு எதிராக வழக்கு தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத அனைத்து வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கும் எதிராக வழக்கு தொடரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் அனைத்து செலவு அறிக்கைகளையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். பொதுத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 8,888 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், உரிய நேரத்தில் வருமான அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் சிந்தக குலரத்ன தெரிவித்தார்.AN https://www.tamilmirror.lk/செய்திகள்/சலவ-அறககய-சமரபபககதவரகளகக-எதரக-வழகக/175-347291
  15. கொழும்பில் சறுக்கிய சஜித்! இம்முறை பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கடந்த பாராளுமன்ற தேர்தலை விட கணிசமாக குறைந்துள்ளது. 2020 பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் சஜித் பிரேமதாச 305,744 வாக்குகளை பெற்றிருந்தார். எனினும், இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் அவரால் 145,611 வாக்குகளையே பெற முடிந்தது. அதன்படி, 2020 பாராளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்தத் தேர்தலில் அவர் 160,133 வாக்குகளை இழந்துள்ளார். இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பலமான பல கோட்டைகளின் பலத்தை முறியடித்து இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு வடக்கு, மத்திய, கிழக்கு, மேற்கு போன்ற பல தொகுதிகள் நீண்ட தேர்தல் வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பல வெற்றிகளைப் பெற்றுத்தந்த சிறப்பு கோட்டைகளாக இருந்தன. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி அந்த கோட்டைகளில் வெற்றிப் பெற்றிருந்த போதும், இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியி குறித்த கோட்டைகளை தம்வசம் படுத்தி வெற்றிப் பெற்றுள்ளது. அதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் இதயமாக இருந்த கொழும்பில் உள்ள பல தொகுதிகளின் அதிகாரமும் இம்முறை சஜித் பிரேமதாசவிடம் இருந்து பறிபோயுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=195990
  16. எங்களுக்கு வெற்றி வாகை வந்து இருக்கலாம் ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது. இங்கே காலம் காலமாக இருந்தவர்கள் அந்த அலையில் வீசப்பட்டு விட்டார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்தார். இன்று (16) யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நான் இரண்டு தடவைகள் பாராளுமன்றத்தில் இருந்துள்ளேன். நான் வந்து மீண்டும் பாராளுமன்றத்திற்கு செல்லவதற்காக இதை செய்யவில்லை தமிழ் தேசியத்திற்காக தான் சுயேட்சையாக கேட்கப்பட்டது. தேசியப்பட்டியல் ஆசனம் ஒரு போதும் எனக்கு வேண்டாம் என கூறிய சுமந்திரன், ஆனால் மத்திய குழு எடுக்கும் தீர்மானத்திற்கு கட்டுப்படுவேன் என தெரிவித்துள்ளார், மத்திய குழுவை நடத்தி செல்வதே சுமந்திரன் தான் என தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=195987
  17. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்கு, நெல்லியான் பகுதியில் உள்ள கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் ஒன்று இன்று காலை வட்டுக்கோட்டை பொலிஸாரால் சுற்றிவளைப்பு செய்யப்பட்டது. இதன்போது, 166 லீட்டர்கள் கோடா, 10.5 லீட்டர் கசிப்பு என்பவற்றுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய இரண்டு பெரிய கொள்கலன்கள், இரண்டு சிறிய கொள்கலன்கள், இரண்டு செப்பு சுருள் என்பவற்றுடன் 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சி.ஐ.கொஸ்தா அவர்களது தலைமையின் கீழ் இயங்கும் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி, கெட்டியாராய்ச்சி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ரத்நாயக்க, பி.எஸ். ரத்நாயக்க (இலக்கம் - 45714) பி.சி விஜேரத்ன (இலக்கம் 83244) பி.எஸ் ரத்நாயக்க (இலக்கம் 75227) பி.சி பத்திராஜ (இலக்கம் 22872) பி.சி மிகிர்சன் (இலக்கம் 91737) பி.சி. பெரேரா ( இலக்கம் 102046) ஆகியோரை உள்ளடக்கிய பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/198922 ஆகா அநுர சுனாமி அங்கயுமா?!
  18. 3-ல் இருந்து 159 இடங்கள்; எதிர்க்கட்சிகளுக்கு Shock கொடுத்த அநுர குமாரவின் வெற்றி உணர்த்துவது என்ன? இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி அபார வெற்றியைப் பெற்றிருக்கிறது. இவ்வளவு பெரிய வெற்றியை அக்கட்சிப் பெறக் காரணம் என்ன? இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  19. இலங்கையின் 10வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைக் கைப்பற்றி, வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. நேரடி வாக்களிப்பின் மூலம் 141 ஆசனங்களையும், தேசிய பட்டியல் மூலம் 18 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 3 இடங்களை மட்டுமே கைப்பற்றிய தேசிய மக்கள் சக்திக்கு இது மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் பல்வேறு விஷயங்களை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார். முழு விவரங்கள் காணொளியில்... - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cd0g3ll9j27o
  20. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒட்டுமொத்தப் போட்டியில் டைசன் 18 குத்துக்களை மட்டுமே பதிவு செய்தார். எழுதியவர், கல் சஜாத் பதவி, டெக்சாஸ், பிபிசி ஸ்போர்ட் பத்திரிகையாளர் உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற மைக் டைசனை, யூடியூபராக இருந்து குத்துச்சண்டை வீரராக மாறிய ஜேக் பால் வென்றுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸில் AT &T மைதானத்தில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் மைக் டைசனை அவர் வீழ்த்தியுள்ளார். இந்த ஆட்டத்தை 70 ஆயிரம் ரசிகர்கள் நேரிலும், லட்சக்கணக்கானோர் நெட்ஃபிளிக்ஸ் மூலம் நேரலையிலும் கண்டு களித்தனர். 58 வயதான மைக் டைசன் இரண்டு முறை ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் வென்றவர். அவர் 19 வருடங்களாக தொழிற்முறை குத்துச்சண்டைப் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. அவரை எதிர்த்து களம் கண்ட 27 வயதான ஜேக் பால் ஒரு குத்துச்சண்டை களத்துக்கு புதியவர். டைசனுடன் ஒப்பிடுகையில் அவர் மிகவும் இளமையாகவும், தடகள வீரரைப் போன்ற உடற்தகுதியுடனும் இருந்தார். இரண்டு நிமிட சுற்றுகள் கொண்ட எட்டு-சுற்றுப் போட்டியில் அவர் டைசனை தன் கட்டுக்குள் வைத்திருந்தார். தன் துல்லியமான தாக்குதல்களால் (jabs and accurate punches) டைசனை வீழ்த்தினார். இந்த போட்டியில் டைசன் மெதுவாகவும் மந்தமாகவும் செயல்பட்டார். குத்துச்சண்டை போட்டிக் களத்திற்குள் டைசன் நுழையும் போது அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்தது. மக்கள் அவரை நாயகனாக பாவித்து கோஷங்கள் எழுப்பினர். ஆனால் சண்டை முடிவடையும் போது அங்கு பெரும் கூச்சல்கள் எழுந்தன. விரக்தியின் அலைப் பரவியது. ரசிகர்கள் சந்தேகம் போட்டியின் நடுவர்கள் 80-72, 79-73 மற்றும் 79-73 என்ற புள்ளிகளை அறிவிப்பதற்கு முன்பே சில ரசிகர்கள் வெளியேறினர். இந்த போட்டியின் உண்மைத் தன்மை மற்றும் போட்டியாளர்கள் எவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொண்டு விளையாடினார்கள் என்பதில் ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் இருந்தன. போட்டிக்குப் பிந்தைய ஒரு சங்கடமான தருணத்தில், டைசன், ஜேக் பாலின் சகோதரர் லோகனை அழைத்து, இதுவரை அவர் விளையாடிய 57 போட்டிகளில் இது தனது ஏழாவது தோல்வி என்றும் இதற்கு பின்னரும் மீண்டும் போட்டியிடுவேன் என்றும் கூறினார். டெக்சாஸ் கமிஷன் நிர்ணயித்த நிபந்தனைகளின் ஒரு பகுதியாக இருவரும் கூடுதல் ஸ்பாஞ்ச் நிரப்பப்பட்ட கனமான கையுறைகளை அணிந்திருந்தனர். இது தொழிற்முறை போட்டிக்கான (pro fight) ஒரு அம்சம். ஆனால் போட்டி முடிந்ததும் இந்த கையுறைகள் விவகாரம் கேலிக்குரியதாகத் தோன்றியது. இலகுவான கையுறைகள் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தியிருக்காது. இரண்டு வீரர்களும் வீசிய எந்த குத்துகளும் நாக் அவுட் நிலையை நெருங்கவில்லை. பால் ஒட்டுமொத்தப் போட்டியில் 78 குத்துகளை பதிவு செய்தார். ஆனால் டைசன் 18 குத்துகள் மட்டுமே விட்டார். பால் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்பதற்கு முன், ஆன்லைனில் காமெடி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அவரை சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றன்ர. இது ஜேக் பாலின் 11-வது தொழிற்முறை குத்துச்சண்டைப் போட்டி. கடந்த ஆண்டு டாமி ப்யூரியிடம் அவர் தோற்றார். மேலும் மெக்சிகன் சூப்பர் ஸ்டார் சவுல் 'கனெலோ' அல்வாரெஸுடன் சண்டையிடுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் தெரிவித்தார். "அவர் பணம் பெற விரும்புவதை அறிந்ததால், பணம் எங்குள்ளது என்பது அவருக்குத் தெரியும்." என்று பால் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c99rjr1enn3o
  21. பத்தாவது பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற மரபு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் மூன்று நாள் செயலமர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த செயலமர்வு இம்மாதம் 25, 26, 27 ஆகிய திகதிகளில் நடத்தப்படவுள்ளதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று சனிக்கிழமை (16) வெளியிடப்படவுள்ளது. புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நாளை ஞாயிற்றுக்கிழமை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கைகள் காரணமாக பாராளுமன்ற ஊழியர்களின் விடுமுறையும் 18 முதல் 22 வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 21ம் திகதி காலை 10 மணிக்கு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/198907
  22. பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், நிஹாரிகா ராம ராவ் பதவி, பிபிசி செய்தியாளர் பல்வேறு நாடுகளில் பெண்ணுரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் போன்றவை அவர்களை ஒரு இயக்கம் அமைக்க வழிவகுத்துள்ளது. தென் கொரியாவில் உருவான 4B இயக்கத்தினால் (4B Movement) இந்த இயக்கம் உந்துதல் பெற்றிருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனல்ட் டிரம்ப் வெற்றிபெற்ற அடுத்த நாள், 4B இயக்கத்தைப் பற்றி கூகுளில் 2 லட்சம் நபர்களுக்கு மேல் தேடியுள்ளனர். சில பெண்கள் இந்த 4B இயக்கத்தில் பங்கேற்கப் போவதாகவும் அறிவித்தனர். இந்த இயக்கத்தைப் பின்பற்றும் பெண்கள் ஆண்களோடு உடலுறவு கொள்வதில்லை என்று கூறுகின்றனர். இந்த இயக்கத்தின் மூலம் அமெரிக்கப் பெண்கள் ஏன் ஈர்க்கப்படுகின்றனர்? இந்த இயக்கத்தின் எந்தெந்த நோக்கங்கள் தற்போது விவாதப் பொருளாகியுள்ளன? 4B இயக்கம் என்றால் என்ன? 4B இயக்கம் தென்கொரியாவில் தொடங்கியது. இந்த இயக்கம், அந்த நாட்டில் ‘மீ டூ’ (Me Too) இயக்கத்திலிருந்து உருவானது. தென் கொரியாவில் காணப்படும் பாலினச் சமத்துவமின்மைக்கு எதிராகப் பெண்ணியச் செயற்பாட்டாளர்கள் இந்த இயக்கத்தை முன்னெடுத்தனர். 4B இயக்கத்தில் உள்ள 4B என்பது எதைக் குறிக்கின்றன? பி ஹான் (திருமணம் வேண்டாம்) பி யேனி (டேட்டிங் வேண்டாம்) பி செக்ஸ் (உடலுறவு வேண்டாம்) பி சுல்சன் (குழந்தைகள் வேண்டாம்) அதாவது, இந்த இயக்கத்தின் நோக்கம், திருமணம், டேட்டிங், உடலுறவு, குழந்தை பெற்றுக் கொள்வது போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பது. இத்தகைய தீவிரமான முடிவை தென் கொரியப் பெண்கள் எடுப்பதற்கு என்ன காரணம்? அவர்களை இப்படி முடிவெடுக்க வைத்த காரணிகள் என்ன? இந்த இடத்தை அடைய அவர்களை எது ஊக்கப்படுத்தியது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 4B இயக்கம் தென்கொரியாவில் தொடங்கியது அமெரிக்கப் பெண்களுக்கு இருக்கும் அச்சம் என்ன? அமெரிக்காவில் 4B இயக்கம் வேகமெடுக்க, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றி முக்கியக் காரணமாக உள்ளது. அவருடைய தேர்தல் பிரசாரத்தின் போது, கருக்கலைப்புக்கான உரிமையைக் கூட்டாச்சி அந்தஸ்திலிருந்து நீக்குவதாக அறிவித்திருந்தார். அவருடைய இந்த அறிவிப்பு பெண்களுக்கு கருக்கலைப்பு உரிமையை வழங்குகிறதா? அல்லது நீக்குகிறதா? அதனை அந்தந்த மாகாணங்கள் தீர்மானிக்கும். குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கருக்கலைப்பை வெளிப்படையாக எதிர்க்கின்றனர். டிரம்ப் வெற்றி பெற்ற மாகாணங்கள் கூட கருக்கலைப்பு உரிமைக்கு எதிராக உள்ளன. டிரம்பிற்கு வாக்களித்த ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள மாட்டோம் என்று சில பெண்கள் அறிவித்திருந்தனர். அவர்களது உரிமையை அங்கிகரிக்காத ஆண்களுடனான காதல் உறவுகளிலிருந்து அவர்கள் விலகப் போவதாகக் கூறுகின்றனர். ‘டிக்டாக்’ போன்ற சமூக வலைதளச் செயலிகளிலும் இந்தப் போக்குப் பரவியுள்ளது. இதற்கு மேலும் வலிமை சேர்க்கும் விதமாகச் சமூக வலைதளத்தில் செல்வாக்கு உடையவரான நிக் ஃபண்டெஸ் தனது எக்ஸ் வலைதளத்திப் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர், ‘உங்கள் உடல் மீது எங்களுக்கு எப்போதும் அதிகாரம் உள்ளது,’ என அதில் குறிப்பிட்டுள்ளார். நிக் ஃபண்டெஸ் டிரம்பின் மிகப்பெரிய ஆதரவாளர். அவர் தனது சமூக வலைதளத்தில் டிரம்பிற்காகப் பிரசாரங்களையும் மேற்கொண்டார். நிக்கின் பதிவு பல இளைஞர்களால் ஆதரிக்கப்பட்டது. அந்தப் பதிவு 35,000 முறை மறுபதிவு செய்யப்பட்டுள்ளது. 26 வயதான அலெக்ஸா, இந்த இயக்கம் பற்றி டிரம்பின் வெற்றிக்குப் பிறகு பல காணொளிகளை உருவாக்கியுள்ளார். அமெரிக்காவில் உள்ள பெண்களை அவர்களது உரிமைக்காக இந்த இயக்கத்தில் இணைய அவர் அழைப்பு விடுத்துள்ளார். என்.பி.சி செய்தி முகமையுடனான நேர்காணலில், உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த இயக்கத்தில் பங்கேற்கப் போகிறீர்களா? என்று கேட்டபோது, அவர், "இல்லை. நாங்கள் எங்கள் உரிமை மீறப்படுவதற்கு எதிராகப் போராட விரும்புகிறோம். எங்களுக்கு கருக்கலைப்பு உரிமை இல்லையெனில், நாங்கள் உடலுறவு கொள்ள ஒப்புக்கொள்ள மட்டோம். டிரம்பின் வெற்றிக்குப் பின், நாங்கள் இந்த நாட்டில் பாதுகாப்பாக உணரவில்லை," என்கிறார். இதுகுறித்துப் பேசிய பெண்ணியச் செயற்பாட்டாளர், சுனிதா, “பெண்களின் குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமை அமெரிக்காவில் அரசியலாக்கப்படுவது புதிதல்ல. பல தசாப்தங்களாக நடந்துகொண்டிருக்கும் அரசியலின் ஒரு பரிமாணமே. இருப்பினும், ஆண்களுடனான உறவை முற்றிலுமாகத் துண்டிப்பது தற்காலத்தில் ஒரு புதிய செய்தி. இந்த இயக்கம் தன்னிச்சையாக உருவாகவில்லை. இது பெண்ணுரிமைகள் மறுக்கப்பட்டதற்கான எதிர்வினை. அது இணையத்தின் மூலம் நடைபெறுவதால் அதனுடைய தாக்கத்தை அறியமுடியவில்லை. ஆனால், இந்தச் செயற்பாட்டாளர்கள் இணையத்தில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்,” என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 4B இயக்கத்தில் பங்குபெறும் பெண்கள், நாடு முழுவதும் தங்கள் உரிமைகளுக்கு எதிராக வளர்ந்துவரும் சமூக மற்றும் அரசியல் ரீதியான அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடுகின்றனர் 4B இயக்கம் உருவானது எப்படி? 2019-ஆம் ஆண்டு பர்னிங் சன் (Burning Sun) அவதூறு தென் கொரியாவை உலுக்கியது. கங்னம் மாவட்டத்தில் (Gangnam) உள்ள பெண்களுக்குப் போதை வஸ்துக்கள் கொடுக்கப்பட்டு, அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, அதைப் படம்பிடித்து, அவர்கள் துன்புறுத்தப்பட்டது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. இந்தப் பாலியல் குற்றத்தில் பல தென் கொரிய பிரபலங்களின் பங்கு இருந்தது, அந்த நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்களுடன் உடலுறவு கொள்ளும்போது, அவர்களுக்குத் தெரியாமல் தனிப்பட்ட முறையில் அவர்களைப் படம் எடுக்கும் செயல்முறை தென் கொரியாவில் 'மோல்கா' (molka) என்று அழைக்கப்படுகிறது. இது தென் கொரியா முழுவதும் அடிக்கடி நிகழும் குற்றமாகும். பல குற்றவாளிகள் பொது ஓய்வறைகள், தங்கும் விடுதிகள், மற்றும் வேறு பல இடங்களில் ரகசிய கேமராக்களைப் பொருத்திப் பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் படம்பிடித்து அவற்றை இணையத்தில் வெளியிட்டனர். இந்தக் குற்றம் வெளிச்சத்துக்கு வந்ததும், மோல்காவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள் வீதிகளில் இறங்கி ‘மீ டூ’ என்ற பெயரில் போராட்டம் நடத்தினர். இந்த குற்றச் செயல்களைத் தடுக்க அந்நாட்டு அரசு சட்டம் கொண்டு வந்தது. தென் கொரியாவில், ஆண்களது ஊதியத்தைவிட பெண்களுக்கான ஊதியம் மூன்றில் ஒரு பங்கு குறைவு. தென் கொரியா தான் ஆண்-பெண் ஊதியத்தில் இவ்வளவு வித்தியாசம் உள்ள பணக்கார நாடு. இந்த இடைவெளியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், மாற்றங்கள் மிகவும் மெதுவாகவே நடந்து வருகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 4B இணையத்தை முதன்மையாகக் கொண்ட ஒரு இயக்கம். இந்த இயக்கத்தில் இயங்குபவர்கள் அவர்களைப் பற்றிய தகவல்களை வெளியிடுவதில்லை மாற்றம் சாத்தியமா? தேர்தலுக்கு முன்னதாக, தென் கொரியாவின் தற்போதைய அதிபர், யூன் சுக் யோல், பாலியல் சமத்துவத்திற்காக அமைக்கப்பட்டுள்ள அமைச்சகத்தை நீக்குவதாகவும், அரசாங்கத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாகவும் பல முறை தெரிவித்திருந்தார். அந்நாட்டில் குறைந்து வரும் மக்கள்தொகைக்கு பெண்ணியவாதிகளே காரணம் என அவர் குற்றம் சாட்டினார். ஆனால், 4B இயக்கத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள், அரசாங்கம் அவர்களைக் குழந்தை பெற்றெடுக்கும் இயந்திரமாகக் கருதுவதாகக் கூறுகின்றனர். தென் கொரியாவில், பெண்ணியத்திற்கு எதிரான ஆணாதிக்கம் வேரூன்றி இருப்பதாகத் தென்கொரியாவின் பிபிசி செய்தியாளர் ரேச்சல் லீ தெரிவிக்கிறார். 4B இயக்கத்தில் பங்குபெறும் பெண்கள், நாடு முழுவதும் தங்கள் உரிமைகளுக்கு எதிராக வளர்ந்துவரும் சமூக மற்றும் அரசியல் ரீதியான அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடும் விதமாக ஆண்களுடனான பாலியல் உறவை முற்றிலும் தவிர்ப்பதாகக் கூறுகின்றனர். 4B இணையத்தை முதன்மையாகக் கொண்ட ஒரு இயக்கம். இந்த இயக்கத்தில் இயங்குபவர்கள் அவர்களைப் பற்றிய தகவல்களை வெளியிடுவதில்லை. இது ‘மீ டூ’ (MeeToo) இயக்கத்திலிருந்து உருவான ஒரு சிறிய இயக்கமாகும். இது தென்கொரியாவில் 2010 முதல் 2016 வரை வலுவாகப் பரவியது. கூடுதலாக, ‘எஸ்கேப் தி கார்செட்’ (Escape the Corset) என்ற பெயர் கொண்ட இயக்கமும் அந்நாட்டில் பிரபலமடைந்தது. தென் கொரியப் பெண்களுக்கு விதிக்கப்பட்டக் கடுமையான அழகு சார்ந்த நிபந்தனைகளுக்கு எதிராக இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்திற்கு எதிரானவர்கள், தென் கொரியாவில் இந்த இயக்கத்தின் முக்கியத்துவம் மிகச் சொற்பமானது என்றும், பாலினச் சமத்துவத்தை அடைவதில் அதன் இலக்கை இது அடையவில்லை எனவும் கூறுகின்றனர். ஆண்களுடன் உறவுகொள்ளாமல், ஆனால் சமூகத்தில் அவர்களுடன் தங்களுக்கான உரிமைகளை கோருவதற்கு போராடுவதன் மூலம் சமத்துவதிற்கான மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என அவர்கள் கூறுகின்றனர். https://www.bbc.com/tamil/articles/c36p8zg2dnjo
  23. நுவரெலியாவில் வெற்றிப்பெற்ற நபர்கள் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட மஞ்சுள சுரவீர அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். தேசிய மக்கள் சக்தி (NPP) - 05 ஆசனங்கள் 01. மஞ்சுள சுரவீர - 78,832 02. மதுர செனவிரத்ன - 52,546 03. ஆர்.ஜி. விஜேரத்ன - 39,006 04. அனுஷிகா திலகரத்ன - 34,035 05. கிருஷ்ணன் கலைச்செல்வி - 33,346 ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 02 ஆசனம் 1. பழனி திகாம்பரம் - 48,018 2. வேலுசாமி ராதாகிருஷ்ணன் - 42,273 ஐக்கிய தேசிய கட்சி - 01(unp) 1. ஜீவன் தொண்டமான் -46,478 https://tamil.adaderana.lk/news.php?nid=195954
  24. வெள்ளை மாளிகைக்கு இளம் ஊடக செயலாளர் நியமனம் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு கரோலின் லீவிட் என்ற இளம் பெண்ணை ஊடக செயலாளராக நியமித்துள்ளார். டொனால்ட் ட்ரம்பின் பிரச்சார நடவடிக்கைகளின் ஊடக பேச்சாளராக கரோலின் லீவிட் செயற்பட்டுள்ளார். அத்தோடு, முன்பு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் உதவி ஊடக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், 27 வயதான கரோலின் லீவிட் அமெரிக்க வரலாற்றில் வெள்ளை மாளிகைக்கு நியமிக்கப்பட்ட முதல் இளம் ஊடக செயலாளராவார். "கரோலின் புத்திசாலி, திடமானவர், மிகவும் திறமையான செய்தி தொடர்பாளர் என்பதை நிரூபித்துள்ளார்" என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நியூ ஹாம்ப்ஷையர் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட லீவிட், தனது சொந்த மாநிலத்தில் உள்ள கத்தோலிக்கக் கல்லூரியான செயிண்ட் அன்செல்ம் கல்லூரியில் தகவல் தொடர்பு மற்றும் அரச அறிவியலைப் படித்துள்ளார். https://www.virakesari.lk/article/198898

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.