Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு! கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நாளை செவ்வாய்க்கிழமை (19) நள்ளிரவுடன் நிறைவடைய வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆலோசனைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதேவேளை, 333,185 மாணவர்கள் பரீட்சார்த்திகளாக பதிவு செய்துள்ள நிலையில் அவர்களில் 253,390 பாடசாலை பரீட்சார்த்திகளும் 79,795 தனியார் பரீட்சார்த்திகளும் ஆவர். https://www.virakesari.lk/article/199053
  2. ஜனாதிபதி அநுர தலைமையிலான புதிய அரசாங்கத்தின் பிரதமராக ஹரிணி! புதிய அமைச்சர்களின் விபரம் வருமாறு! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்துகொண்டதுடன் 21 பேர் கொண்ட புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். பாதுகாப்பு, நிதி, திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியன ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்கவின் கீழ் காணப்படும் அதேவேளை, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கீழ் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுகள் காணப்படுகின்றன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று திங்கட்கிழமை (18) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது. புதிய அமைச்சரவை 21 பேருக்கு மட்டுப்படுத்தப்படுவதோடு பாதுகாப்பு, நிதி ,திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி, டிஜிட்டல் பொருளாதார ஆகிய அமைச்சுக்கள் ஜனாதிபதியின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய அரசாங்கத்தின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்துகொண்டதுடன் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் பின்வருமாறு. 01. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க: பாதுகாப்பு, நிதி ,திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி, டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் 02. கலாநிதி ஹரிணி அமரசூரிய: பிரதமர், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் 03. விஜித ஹேரத் : வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் 04. பேராசிரியர் சந்தன அபேரத்ன : பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் 05. சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார : நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் 06. சரோஜா சாவித்ரி போல்ராஜ் : மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் 07. கே.டி லால் காந்த : விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் 08. அநுர கருணாதிலக : நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் 09. ராமலிங்கம் சந்திரசேகர் : கடற்றொழில் மற்றும் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் 10. பேராசிரியர் உபாலி பன்னிலகே : கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் 11. சுனில் ஹந்துன்னெத்தி : கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் 12. ஆனந்த விஜேபால : பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் 13. பிமல் ரத்னாயக்க : போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர் 14. பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி : புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் 15. வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ : சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் 16. சமந்த வித்யாரத்ன : பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் 17. சுனில் குமார கமகே : இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் 18. வசந்த சமரசிங்க : வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் 19. பேராசிரியர் கிரிசாந்த அபேசேன : விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சர் 20. பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணான்டோ : தொழில் அமைச்சர் 21. பொறியியலாளர் குமார ஜயகொடி: வலுசக்தி அமைச்சர் 22. வைத்தியர் தம்மிக பட்டபெந்தி: சுற்றாடல் அமைச்சர் இந்த நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டார். https://www.virakesari.lk/article/199062
  3. போலித் தகவல் குறித்து தெளிவுபடுத்தல்! தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் போலியானது ஆகும். போர்களில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு நவம்பர் மாதத்தில் பொது இடங்களில் நினைவேந்தல்களை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் போலியான முறையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பம் இடப்பட்ட அறிக்கை ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது. இவ்வாறான அறிக்கை ஒன்று ஜனாதிபதி தரப்பிலிருந்து வெளியாகவில்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலியான தகவல்கள் குறித்து பொதுமக்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/199068
  4. தேசிய மக்கள் சக்தியானது விசேட தேவையுடைய ஒருவருக்கு தனது தேசிய பட்டியலில் வாய்ப்பளித்துள்ளது. இலங்கை பார்வையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் சுகத் வசந்த டி சில்வாவுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை பாராளுமன்றத்தில் முதல் தடவையாக உடல் ஊனமுற்ற ஒருவர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பார்வையற்றவர்களின் பிரதிநிதியாக பாராளுமன்றில் செயற்படவிருப்பதால் அவரது நியமனம் மிகவும் முக்கியத்துவமிக்கதாக கருதப்படுகின்றது. மேலும் அனைவருக்கும் சமத்துவம் என்ற கொள்கையில் இருக்கும் தேசிய மக்கள் சக்தியின் இந்த முயற்சி மிகவும் முற்போக்கானதாகவும் பார்க்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/199076
  5. புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்ட விதத்தை சவாலுக்குட்படுத்தி அதில் பங்குபற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்ததன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரிதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மகிந்த சமயவர்தன ஆகிய நீதியரசர்கள் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. https://thinakkural.lk/article/312289
  6. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாதிக்கப்பட்டவர்களின் டூ வீலர்களில் ஜிபிஎஸ் பொருத்தி, அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதைக் கண்காணித்து, பகலில், வீட்டில் கொள்ளையடித்துள்ளனர் (சித்தரிப்பு படம்) எழுதியவர், சேவியர் செல்வக்குமார் பதவி, பிபிசி தமிழ் கோவையில் ஹைடெக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்த கும்பல் பிடிபட்டுள்ளது. கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த வீட்டில் இருந்தவர்களின் ஸ்கூட்டரில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி, அவர்களது நடமாட்டத்தை கண்காணித்து இந்த கொள்ளையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆள் இல்லாத வீட்டில் நடந்த கொள்ளை பற்றி போலீசார் துப்பு துலக்கியது எப்படி? கொள்ளையடித்துவிட்டுச் சென்ற கும்பலை ஒரே வாரத்தில் போலீசார் பிடித்தது எப்படி? என்ன நடந்தது? கோவை மாநகர காவல்துறைக்கு உட்பட்ட ஆர்எஸ் புரம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு (வழக்கு எண்: 352/2024), கடந்த அக்டோபர் 21 அன்று பதிவானது. கிழக்கு சம்பந்தம் சாலையில், ஒரு மாடி வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் குமார் என்பவர் தான் அந்த புகாரை அளித்திருந்தார். முதல் தகவல் அறிக்கையில், அந்த திருட்டு தொடர்பான விபரங்கள் இடம் பெற்றுள்ளன. குமார், ஆர்எஸ் புரம் விசிவி ரோட்டில் மளிகைக் கடையும், ஓர் உணவகமும் வைத்துள்ளார். அவரும் அவருடைய மனைவியும் காலையில் இரண்டு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி விட்டு, வீட்டைப் பூட்டி விட்டு, காலை பத்தரை மணிக்குக் கடைக்குப் போய் விடுவது வழக்கம். அதே வீட்டின் கீழ் தளத்தில், வீட்டின் உரிமையாளர் செல்வராஜ் குடியிருந்து வருகிறார். அக்டோபர் 21 அன்று, மதியம் இரண்டரை மணியளவில், குமாரை உடனே வருமாறு செல்வராஜ் அவசரமாக அழைத்துள்ளார். அங்கே சென்று பார்த்த போது, குமாரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு பீரோக்களும் உடைக்கப்பட்டு, 60 சவரன் நகையும், ரூ.14 ஆயிரம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. ‘கார்களில் ஹெல்மெட் அணிந்து வந்து கொள்ளை’ இரண்டு பேர், மாடி வீட்டிலிருந்து ஹெல்மெட் உடன் இறங்கிச் சென்றதைப் பார்த்து, வீட்டு உரிமையாளர் செல்வராஜ், நீங்கள் யாரென்று கேட்டதும், இருவரும் நிற்காமல் ஓடிச் சென்று, வெளியில் நின்ற காரில் ஏறி, பூ மார்க்கெட் பக்கமாக வேகமாகச் சென்று விட்டனர். அவரும், அருகில் கடை வைத்துள்ள ஒரு பெண்ணும் சத்தம் போட்டும் காரை நிறுத்தவில்லை. அதன்பின், மாடியில் சென்று பார்த்தபோது, வீட்டுப் பூட்டு உடைக்கப்பட்டதைப் பார்த்து செல்வராஜ் அதிர்ச்சியடைந்து, குமாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். மேற்கண்ட தகவல்கள் யாவும் காவல்துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டிலிருந்த ‘சிசிடிவி’ பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் இருவரும் ஹெல்மெட் போட்டிருந்ததால் ஆட்களை அடையாளம் கண்டறிய முடியவில்லை. ஆனால் ஏழே நாட்களில் இருவரையும் போலீசார் கைது செய்து விட்டனர். அவர்கள் இருவரும் கேரளாவைச் சேர்ந்த ஜாஹீர் உசேன், மோனிஸ் என்பதைக் கண்டு பிடித்தனர். இருவரும் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கொள்ளையடிப்பதற்கு முன், கொள்ளையர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்குப் பயன்படுத்திய அதிநவீன தொழில் நுட்பங்கள், அவர்களைக் கைது செய்வதற்கு மேற்கொண்ட புலனாய்வு முறைகள் பற்றிய பல சுவராஸ்யமான தகவல்களை, ஆர்எஸ் புரம் போலீசார் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, (சித்தரிப்பு படம்) ‘வாகனத்தில் மேக்னடிக் ஜிபிஎஸ் கருவி பொருத்தம்’ ‘‘திருட்டு நடந்த வீட்டில் இருந்த சிசிடிவி பதிவுகளை வைத்து ஆட்களை அடையாளம் காண முடியவில்லை. அதன்பின், அவர்கள் பயன்படுத்திய காரின் எண்ணை வைத்துத் தேடினோம். அதில் இருந்த கேரளா பதிவெண் போலி என்பது தெரியவந்தது. அதே நிறமுள்ள கார் அப்பகுதியில் உள்ள வேறு இடங்களில் வலம் வந்துள்ளதை வேறு சில சிசிடிவி பதிவுகளில் கண்டுபிடித்தோம். அந்த காரின் ஒரிஜினல் எண்ணைக் கண்டுபிடித்த போது, அது சேரன் மாநகரில் ஓரிடத்தில் தினசரி ரூ.1750-க்கு வாடகைக்கு எடுக்கப்பட்டது தெரியவந்தது.’’ என்று தெரிவித்த போலீசார், தொடர்ந்து விவரித்தனர். ‘‘அந்த காரை வாடகைக்குக் கொடுக்கும் போது, ஒரு மெசேஜ் அனுப்பி, கார் எடுப்பவரின் எண்ணை உறுதி செய்கின்றனர். அதில் தரப்பட்ட எண்ணை வைத்து, அந்த நாளில் எந்தெந்த நேரத்தில் எந்தெந்த டவர்களுக்கு உட்பட்ட பகுதியில் அந்த மொபைல் போன் பயன்பாட்டில் இருந்தது என்று பார்த்தபோது, அவர்கள் எங்கெங்கு காரை நிறுத்தி, என்னென்ன வாங்கினார்கள் என்று தெரியவந்தது." "பூட்டை உடைப்பதற்காக சுக்ரவார்பேட்டையில் ஒரு கடையில் நிறுத்தி, டூல்ஸ் வாங்கியுள்ளனர். அந்த சிசிடிவியில்தான் அவர்களின் முகங்களைத் தெளிவாக அடையாளம் காண முடிந்தது.’’ என்று போலீசார் கூறினர். இருவரில் ஜாஹீர் உசேன் மீது ஏற்கெனவே கோவில்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சில காவல் நிலையங்களில் கார் திருட்டு, அன்னுாரில் ஒரு கூட்டுக் கொலை வழக்கு என பல்வேறு வழக்குகள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிய ஆர்எஸ் புரம் போலீசார், "மோனீஸ் மீது குனியமுத்துார் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்குப் பதிவாகியுள்ளது. இவர்களிடம் விசாரித்ததில், குமாரையும், அவரின் மனைவியையும் நீண்ட காலமாகக் கண்காணித்து, அவர்களின் வீட்டில் பெரிய அளவில் பணமும், நகையும் இருக்குமென்று திட்டமிட்டு கொள்ளையடித்துள்ளனர்.’’ என்று கூறினர். பட மூலாதாரம்,AMAZON படக்குறிப்பு, 'கார்களில், டூ வீலர்களில் பொருத்தக்கூடிய அதிநவீன மேக்னடிக் ‘ஜிபிஎஸ்’கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன' என்கிறார் ஆராய்ச்சியாளர் மோகன் இந்த கொள்ளை நடப்பதற்கு முன்பாக, குமார், அவரின் மனைவி இருவரின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக அவர்கள் கடைபிடித்த உத்திதான் இதுவரை கேள்விப்படாத ஒன்று என்று ஆர்எஸ் புரம் போலீசார் கூறினர். அதுபற்றி அவர்கள் கூறுகையில், ‘‘குமாரும், அவரின் மனைவியும் தனித்தனியாக டூ வீலர்கள் வைத்துள்ளனர். அவர்களின் கடைகளுக்கு அடிக்கடி சென்று வந்த கொள்ளையர் இருவரும், குமாருக்கும், அவரின் மனைவிக்கும் தெரியாமல், அவர்களின் டூ வீலர்களில் ‘மேக்னடிக் ஜிபிஎஸ்’ கருவியை, பொருத்தியுள்ளனர். அதை வைத்து அவர்கள் கடையில் இருப்பதை உறுதி செய்து கொண்டு, வீட்டிற்கே சென்று பகலில் கொள்ளையடித்துள்ளனர்.’’ என்றனர். ‘குழந்தைகளின் பாதுகாப்புக்காக பொருத்தப்படும் கருவி’ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இத்தகைய ஜிபிஎஸ் கருவிகளை குழந்தைகளின் பாதுகாப்புக்காக பலரும் கார்களில் பொருத்தியுள்ளனர் என்கிறார் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஜெயக்குமார் இந்த வழக்கின் புகார்தாரரான குமாரிடம், உங்கள் டூ வீலரில் ‘மேக்னடிக் ஜிபிஎஸ் பொருத்தியது உங்களுக்குத் தெரியவில்லையா என்று பிபிசி தமிழ் கேட்டபோது, ‘‘கடைசி வரை எனக்கு அது தெரியவே இல்லை. போலீசார்தான் ‘என்னுடைய வாகனத்தில் அதைப் பொருத்தியிருப்பதாக குற்றவாளிகள் சொன்னதாகத்’ தெரிவித்து, அதை எடுத்துள்ளனர். எப்படிப் பொருத்தினார்கள், எப்போது பொருத்தினார்கள் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. நீண்ட நாட்களாக எங்களை கண்காணித்துள்ளனர்’’ என்றார். இது போன்று ‘மேக்னடிக் ஜிபிஎஸ்’களை வாகனங்களில், உரிமையாளருக்குத் தெரியாமல் பொருத்த முடியுமா என்பது பற்றி, வனத்துறைக்காக ‘ஜிபிஎஸ்’ பணிகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர் மோகன் பிபிசி தமிழிடம் விளக்கியபோது, ‘‘இப்போது கார்களில், டூ வீலர்களில் பொருத்தக்கூடிய அதிநவீன மேக்னடிக் ‘ஜிபிஎஸ்’கள் வந்து விட்டன. அமேசானில் 1,400 ரூபாய்க்கு இவை கிடைக்கின்றன.” என்கிறார். மேலும், “வாய்ஸ் ரிக்கார்டர் உடன் ஜிபிஎஸ் கருவிகளே, 3000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. இந்த கருவிகள் வாகனத்தின் ஒரு பாகம் போலவே இருக்கும். மிகவும் சக்தி வாய்ந்த காந்தத்துடன் வைத்து, வாகனத்தின் இரும்பு பாகத்தில் ஒட்ட வைத்துவிட்டால் யாராலும் எளிதில் கண்டறிய முடியாது. வாகனத்தைப் பற்றி சற்று தெரிந்தவர்களே இதைக் கண்டுபிடிக்க முடியும்.’’ என்று தெரிவித்தார். கார் ஒர்க் ஷாப் நடத்தி வரும் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஜெயக்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், ‘‘இத்தகைய ‘ஜிபிஎஸ்’கள் செயல்பட பேட்டரி அவசியம். முன்பு கார்களில் உள்ள பேட்டரிகளில் இவற்றை இணைக்க வேண்டியிருந்தது. இப்போது மொபைல் போன்களில் உள்ள லித்தியம் பேட்டரியுடன் இயங்கும் கைக்கு அடக்கமாக ‘ஜிபிஎஸ்’ கருவிகள் வந்து விட்டன.” என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், “கார்களில் உள்ள பழுதுகளை சென்சார் மூலமாக ‘ஸ்கேன்’ செய்வதற்கு உதவும் ‘டயாக்னஸ்டிக் டிரபிள் கோடு கப்ளர்’ (Diagnostic Trouble Code coupler) இருக்கும். அதில் ‘ஜிபிஎஸ்’ பொருத்தினால் பேட்டரி தேவையில்லை. அதை மொபைலில் ‘ஆப்’ டவுன்லோடு செய்து, இணைத்துக் கொண்டால், வாகனத்தின் நடமாட்டத்தை, மொபைலிலேயே கவனித்துக் கொள்ளலாம். குழந்தைகளின் பாதுகாப்புக்காக பலரும் இவற்றை கார்களில் பொருத்தியுள்ளனர்.’’ என்று விளக்கினார். ‘‘இந்த ‘ஜிபிஎஸ்’ கருவிகள், நகருக்குள் இருக்கும்போது, வாகனத்தின் நகர்வைத் துல்லியமாகக் காண்பிக்கும். டவர்கள் அதிகமில்லாத பகுதியாக இருந்தாலும், அதிகபட்சமாக ஒரு நிமிடம் வரை மட்டுமே தாமதமாகக் காண்பிக்கும். அதனால் இந்த கருவி பொருத்திய வாகனம், எங்கே வந்து கொண்டிருக்கிறது, எவ்வளவு வேகத்தில் இயக்கப்படுகிறது என்பதையும் கண்டுபிடித்து விட முடியும். வாகனதாரர்கள் விழிப்புணர்வாய் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை’’ என்று தெரிவித்தார் ஆராய்ச்சியாளர் மோகன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ced9elq6z4xo
  7. புதிய அமைச்சரவை விபரம் - நேரலை புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து வருகின்றனர். அதற்கமைய; 1. ஹரிணி அமரசூரிய - (பிரதமர்) – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் 2. விஜித ஹேரத் - வெளிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு,சுற்றுலாத்துறை 3. சஞ்சன அபேரத்ன - பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் 4. ஹர்ஷண நாணயக்கார - நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு 5. சரோஜா சாவித்திரி போல்ராஜ் - மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் விவகாரம் 6. கே,டி.லால்காந்த - விவசாயம், கால்நடைகள், காணி மற்றும் நீர்ப்பாசனம் 7. அநுர கருணாதிலக – நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு 8. ராமலிங்கம் சந்திரசேகர் – கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் 9. உபாலி பன்னிலகே – கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை 10. சுனில் ஹந்துன் நெத்தி - கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி 11. ஆனந்த விஜயபால - பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் 12. பிமல் ரத்நாயக்க - போக்குவரத்து நெடுஞ்சாலைகள் 13. ஹினிதும சுனில் செனவி – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் 14. நளிந்த ஜயதிஸ்ஸ - சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு 15. சமந்த வித்யாரத்ன – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு 16. சுனில் குமார கமகே - இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை 17. வசந்த சமரசிங்க – வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி 18. கிருஷாந்த சில்வா அபேசேன – விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் 19. அணில் ஜயசுந்தர பெர்னாண்டோ - தொழில் அமைச்சர் 20. குமார ஜெயக்கொடி - வலுசக்தி அமைச்சர் 21. டாக்டர் தம்மிக்க பட்டபெந்தி - சுற்றாடல் அமைச்சர் https://thinakkural.lk/article/312253
  8. சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சராக வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ பதவிப் பிரமாணம் சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சராக வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது. https://www.virakesari.lk/article/199051 விவசாயம், கால்நடை, நீர்பாசனம் மற்றும் காணி அமைச்சராக கே.டி. லால்காந்த பதவிப் பிரமாணம் ! விவசாயம்,கால்நடை, நீர்பாசனம் மற்றும் காணி அமைச்சராக கே.டி. லால்காந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது. https://www.virakesari.lk/article/199052 பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சராக சமந்த வித்யாரத்ன பதவிப் பிரமாணம் பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சராக சமந்த வித்யாரத்ன ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது. https://www.virakesari.lk/article/199054 இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சுனில் குமார கமகே பதவிப்பிரமாணம் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சுனில் குமார கமகே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது. https://www.virakesari.lk/article/199058 வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக வசந்த சமரசிங்க பதவிப் பிரமாணம் வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக வசந்த சமரசிங்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது. https://www.virakesari.lk/article/199059
  9. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சராக ஆனந்த விஜேபால பதவிப் பிரமாணம் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சராக ஆனந்த விஜேபால ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது. https://www.virakesari.lk/article/199048 போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக பிமல் ரத்நாயக்க பதவிப் பிரமாணம் போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக பிமல் ரத்நாயக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது. https://www.virakesari.lk/article/199049 புத்தசாசனம், மத மற்றும் கலை ,கலாசார விவகாரங்கள் அமைச்சராக பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி பதவிப் பிரமாணம் புத்தசாசனம், மத மற்றும் கலை, கலாசார விவகாரங்கள் அமைச்சராக பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது. https://www.virakesari.lk/article/199050
  10. இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தலில் தமிழ் மக்களிடமிருந்து வடக்கு மாகாணம் பறிபோயுள்ள நிலையில் கடந்த தேர்தலில் பறி போயிருந்த கிழக்கு மாகாணம் தமிழ் மக்களினால் மீண்டும் கைப்பற்றப்படுள்ளது கடந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி 3 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி. ) 1 ஆசனத்தையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 1 ஆசனத்தையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 1 ஆசனத்தையும் என 7 ஆசனங்களையும் கைப்பற்றி வடக்கு மாகாணத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. அதே நேரம் வன்னிமாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 1ஆசனத்தையும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 1ஆசனத்தையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி ) 1ஆசனத்தையும் கைப்பற்றிய நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆதிக்கத்திலேயே வன்னி மாவட்டமும் இருந்தது. அதே நேரம் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள 4 ஆசனங்களில் இலங்கை தமிழரசுக்கட்சி ஒரு ஆசனத்தையும் ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 1ஆசனத்தையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 5 ஆசனங்களில் இலங்கை தமிழரசு கட்சி 2 ஆசனங்களையும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 1 ஆசனத்தையும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 2 ஆசனத்தையும் திகாமடுல்ல மாவட்டத்தில் உள்ள 7 ஆசனங்களில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும் தேசிய காங்கிரஸ் 1 ஆசனத்தையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தன இதற்கமைய 2020 பாராளுமன்றத்தேர்தலில் வடக்கு மாகாணத்தில் இருந்த 13 ஆசனங்களில் தமிழ் கட்சிகள் 10 ஆசனங்களை கைப்பற்றியிருந்ததுடன் கிழக்கு மாகாணத்திலிருந்த 16 ஆசனங்களில் தமிழ் கட்சிகள் 4 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றியிருந்தன இந்நிலையில் தான் வியாழக்கிழமை நடந்த பாராளுமன்றத்திற்கான தேர்தலில் வடக்கு மாகாணத்தில் உள்ள 12 ஆசனங்களில் தமிழ் கட்சிகள் 5 ஆசனங்களை மட்டும் கைப்பற்றி வடக்கு மாகாணத்தை தேசிய மக்கள் சக்தியிடம் பறிகொடுத்துள்ளன. அதேவேளை கிழக்கு மாகாணத்தில் உள்ள 16 ஆசனங்களில் கடந்த முறை 4 ஆசனங்களை தமிழ் கட்சிகள் கைப்பற்றியிருந்த நிலையில் இம்முறை இலங்கை தமிழரசுக்கட்சி தனியாக 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 5 ஆசனங்களில் இலங்கை தமிழரசுக்கட்சி 3 ஆசனங்களைக்கைப்பற்றி தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துள்ளதுடன் திருகோணமலையில் இரா.சம்பந்தனின் வெற்றிடத்தையும் நிரப்பியுள்ளதுடன் கடந்த முறை திகாமடுல்ல மாவட்டத்தில் பறிகொடுத்த தமிழர் பிரதிநிதித்துவத்தையும் இம்முறை தக்கவைத்துள்ளது. https://thinakkural.lk/article/312222
  11. நகர அபிவிருத்தி, கட்டுமானத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சராக அநுர கருணாதிலக்க பதவிப் பிரமாணம் நகர அபிவிருத்தி, கட்டுமானத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சராக அநுர கருணாதிலக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது. https://www.virakesari.lk/article/199044 கடற்றொழில் மற்றும் நீரியல்வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் பதவிப் பிரமாணம் கடற்றொழில் மற்றும் நீரியல்வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது. https://www.virakesari.lk/article/199045 கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக பேராசிரியர் உபாலி பன்னிலகே பதவிப்பிரமாணம் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக பேராசிரியர் உபாலி பன்னிலகே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது. https://www.virakesari.lk/article/199046 கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சராக சுனில் ஹந்தநெத்தி பதவிப் பிரமாணம் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சராக சுனில் ஹந்தநெத்தி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது. https://www.virakesari.lk/article/199047
  12. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார பதவிப்பிரமாணம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது. https://www.virakesari.lk/article/199042 மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் பதவிப் பிரமாணம் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது. https://www.virakesari.lk/article/199043
  13. மணிப்பூரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 6 பேரின் உடல்களை கண்டெடுக்கப்பட்ட சில மணி நேரத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் முதல்வர், எம்எல்ஏக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். போராட்டக்காரர்கள், மாநில முதல்வர் பிரேன் சிங்கின் மருமகன் உட்பட ஆறு எம்எல்ஏக்களின் மூன்று பேரின் வீடுகளில் சூறையாடினர், சொத்துக்களை தீ வைத்து சேதப்படுத்தினர். இம்பால் நகரின் பல பகுதிகளில் போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டு வீசி கலைத்ததாக போலீஸார் தெரிவித்தனர். போரட்டத்தைத் தடுக்கும் விதமாக ஐந்து மாவட்டங்களில் அரசு காலவரையற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. சில இடங்களில் இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் தலைமைச் செயலர் வினீத் ஜோஷி, பாதிக்கப்பட்டுள்ள இம்பால் மேற்கு மற்றும் கிழக்கு, பிஷ்னுபூர், தவுபாங்க், கக்சிங், காங்போக்பி மற்றும் சுரசந்த்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு இரண்டு நாட்களுக்கு இணையம் மற்றும் மொபைல் டேட்டா சேவைகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மீண்டும் போராட்டம் ஏன்? மணிப்பூரில் ஆயுதம் தாங்கிய குகி தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக கூறப்படும் ஆறு பேரில் ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகளின் உடல்கள் வெள்ளிக்கிழமை இரவு, ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள போரோபெக்ராவில் இருந்து 16 கி.மீ. தொலைவில் கண்டெடுக்கப்பட்டன. மேலும் 3 பேரின் உடல்கள் சனிக்கிழமை பிற்பகல் கண்டெடுக்கப்பட்டன. அழுகிய நிலையில் காணப்பட்ட உடல்கள், பிரேதப் பரிசோதனைக்காக எஸ்எம்சிஎச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து மணிப்பூரில் மீண்டும் போராட்ட பதற்றம் வெடித்தது. இந்நிலையில் அமைச்சர்கள் சபம் ரஞ்சன், எல். சுசிந்த்ரோ சிங் மற்றும் ஒய்.ஹேம்சந்த் ஆகியோரின் வீடுகளை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இம்பால் மேற்கு மற்றும் கிழக்கு, பிஷ்னுபூர், தவுபால் மற்றும் கக்சிங் ஆகிய ஐந்து மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. AFSPA ரத்து செய்ய கோரிக்கை: மாநிலத்தில் ஆறு காவல்நிலையத்தில் மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தினை மறுபரிசீலனை செய்து திரும்பப்பெறுமாறு மத்திய அரசுக்கு, மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அமித் ஷாவின் தேர்தல் பேரணிகள் ரத்து: இதனிடையே, மணிப்பூர் பள்ளத்தாக்கில் மீண்டும் போராட்டமும் பதற்றமும் அதிகரித்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகாராஷ்டிராவில் திட்டமிடப்பட்டிருந்த தனது தேர்தல் பேரணிகளை ரத்து செய்துள்ளார். வடகிழக்கு மாநிலத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அமித் ஷா டெல்லி திரும்பியுள்ளார். முன்னதாக, மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில் மைதேயி - குகி குழுவினர் இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக மாறி, இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். வன்முறை காரணமாக சுமார் 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்தனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மாநில அரசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. ராகுல் காந்தி கோரிக்கை: மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்டிருக்கும் பதற்றம் மற்றும் போராட்டம் மிகவும் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி மணிப்பூருக்கு சென்று அங்கு சட்ட ஒழுங்கு மற்றும் அமைதி ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதேபோல், மிசோரமின் மாணவர் அமைப்பான, மிசோ ஸிர்லை பாவ்ல் (எம்இசட்பி), கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் உள்ள மிசோ மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/199036
  14. இந்த ஆண்டின் பிரபஞ்ச அழகியாக டென்மார்க்கைச் சேர்ந்த விக்டோரியா கேயா தெய்ல்விக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டென்மார்க் போட்டியாளர் ஒருவர் இச்சிறப்பைப் பெற்றிருப்பது இதுவே முதன்முறை.21 வயதாகும் அவர், நடனமணி, தொழில்முனைவர், விலங்குநல ஆர்வலர் எனப் பன்முகத் திறன்களைக் கொண்டவர். மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற 73வது பிரபஞ்ச அழகிப் போட்டியில் 120க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர். இரண்டாம் பரிசுக்குத் தேர்வானார் நைஜீரியாவின் சிடிம்மா அடெட்ஷினா. இவர் சட்டம் பயிலும் மாணவி. போட்டியில் மூன்றாம், நான்காம், ஐந்தாம் பரிசுகளை முறையே மெக்சிகோ, தாய்லாந்து, வெனிசுவேலா நாட்டு அழகிகள் பெற்றனர். வெனிசுவேலா போட்டியாளரான 28 வயது மார்க்கெஸ், பிள்ளை பெற்ற பிறகும் அந்நாட்டில் அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியாவார். 2023ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகிப் போட்டியில் திருமணமான, பருமனான, பாலின மாற்றம் செய்துகொண்ட போட்டியாளர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இந்த ஆண்டு, 28 வயதுக்குமேல் வயதுடைய பெண்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இதற்குமுன் அத்தகையோர் போட்டியில் பங்கேற்க இயலாது. மெக்சிகோ ஐந்தாவது முறையாக இந்தப் போட்டியை ஏற்றுநடத்தியுள்ளது. https://thinakkural.lk/article/312229
  15. வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சராக விஜித ஹேரத் பதவிப் பிரமாணம் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சராக விஜித ஹேரத் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது. https://www.virakesari.lk/article/199040 அரச நிர்வாகம், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக பேராசிரியர் சந்தன அபேரத்ன பதவிப் பிரமாணம் அரச நிர்வாகம், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக பேராசிரியர் சந்தன அபேரத்ன ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது. https://www.virakesari.lk/article/199041
  16. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டின் அருகே குண்டு வீச்சு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் அருகே 2 வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள நகரம் கேசேரியா. இந்த நகரில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்குச் சொந்தமான பங்களா உள்ளது. இந்த வீட்டைக் குறிவைத்து அடையாளம் தெரியாத கும்பல் சனிக்கிழமை இரவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடந்தபோது நெதன்யாகு மற்றும் அவரின் குடும்பத்தினர் யாரும் அந்த வீட்டில் இல்லை. மேலும் வீசப்பட்ட வெடிகுண்டுகள் நெதன்யாகுவின் வீட்டின் அருகே புல்வெளியில் விழுந்து தீப்பிடித்தன. இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபரில் இதே பாணியில் ஹிஸ்புல்லா அமைப்பினர், நெதன்யாகுவின் வீட்டின் அருகே டிரோன் தாக்குதல் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, நெதன்யாகு வீட்டின் அருகே குண்டு வீசப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. https://thinakkural.lk/article/312220
  17. பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மேன் ஜூனியர் பதவி, பிபிசி செய்தி, வாஷிங்டன் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப் தன் அமைச்சரவைக்குத் தேர்வு செய்திருக்கும் நபர்களில் பலர் தவறான நடத்தை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர். டிரம்பின் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்படவுள்ள பீட் ஹெக்செத் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். டிரம்பின் அமைச்சரவையில் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட அதிகம் சாத்தியங்கள் இருக்கும் மாட் கேட்ஸ், ஒரு நெறிமுறை விசாரணையை எதிர்கொள்கிறார். சுகாதார செயலாளராக நியமிக்கப்பட சாத்தியங்கள் இருக்கும் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர், தடுப்பூசிக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர். அதற்காக அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறார். வரும் ஜனவரியில் டிரம்ப் பதவியேற்கும்போது, அவரின் அமைச்சரவைக்கு அமெரிக்க செனட் சபையின் ஒப்புதலைப் பெற வேண்டியிருக்கும். செனட் சபை குடியரசுக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற போதிலும், அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் இருதரப்பு விசாரணைகளின் போதும் தீவிரமான கேள்விகளை எதிர்கொள்வார்கள். டிரம்பின் சர்ச்சைக்குரிய பாதுகாப்பு செயலாளர் தேர்வு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பீட் ஹெக்செத் கடந்த 2017ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் டிரம்பின் பாதுகாப்பு செயலாளராகத் தேர்வு செய்யப்படவுள்ள ஹெக்செத் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக போலீசார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளரும், ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் நடந்த போர்களில் அனுபவம் பெற்றவருமான ஹெக்சேத், கைது செய்யப்படவில்லை, மேலும் அவர் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்தார். டிரம்பின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சுங் கூற்றுபடி, "ஹெக்செத் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுக்கிறார் மற்றும் அவர்மீது எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை" என்றார். பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்-இன் செய்தி அறிக்கையில் மற்றொரு முக்கியத் தகவலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹெக்சேத் ஒரு "வெள்ளையின மேலாதிக்கத்தை" குறிக்கும் டாட்டூவை உடலில் குத்தியிருப்பதாக நினைத்த அவரது சக ராணுவ வீரர்களே அவரை அச்சுறுத்தலாகக் கருதியதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது. ஆனால் ஹெக்சேத் தனக்கு எந்தக் கடும்போக்குவாதக் குழுக்களுடனும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளார். மினசோட்டா நேஷனல் கார்டின் முன்னாள் உறுப்பினரான அவர், தனது தோள்பட்டையில் "Deus Vult" என்ற வார்த்தைகளை பச்சை குத்தியுள்ளார். இந்த லத்தீன் சொற்றொடருக்கு "கடவுளின் சித்தம்" என்று பொருள். இந்த முழக்கம் இடைக்காலத்தில் சிலுவைப் போர்களின்போது கிறிஸ்தவர்களால் பயன்படுத்தப்பட்டது. ஓய்வுபெற்ற மாஸ்டர் சார்ஜென்ட் டெரிகோ கெய்தர் சிபிஎஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "அவர் தனது தோள்பட்டையில் பச்சை குத்தியிருப்பதை நான் பார்த்தேன், அந்த வாக்கியம் கடும்போக்கு குழுக்களுடன் தொடர்புடையது" என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஜே.டி.வான்ஸ் இதுதொடர்பாக ராணுவத் தலைமைக்குத் தகவல் தெரிவித்து அவர்களுக்குத் தெளிவுபடுத்தியதாகவும் டெரிகோ கெய்தர் கூறினார். அமெரிக்க துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜே.டி.வான்ஸ் ஹெக்சேத்தை ஆதரித்துப் பேசினார். "டாட்டூவில் இருந்த அந்த லத்தீன் சொற்றொடர் ஒரு கிறிஸ்தவ பொன்மொழி மட்டுமே. அதைத் தவிர வேறொன்றுமில்லை” என்று கூறினார். இதுபோன்ற செய்தியை வெளியிட்டு, ஏபி செய்தி முகமை "வெறுக்கத்தக்க கிறிஸ்தவ எதிர்ப்பு மனநிலையைப்" பரப்புவதாக ஜே.டி.வான்ஸ் குற்றம் சாட்டினார். கடந்த 2021ஆம் ஆண்டு அதிபர் ஜோ பைடன் பதவியேற்கும் வரை ஹெக்செத் வாஷிங்டன் டி.சி.யில் அதிகாரியாகப் பணியாற்றத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ஒரு புத்தகத்தில் இதுதொடர்பாகப் பகிர்ந்திருந்த ஹெக்சேத், தனது டாட்டூவால் தான் பணியை இழந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் தேர்வு செய்திருக்கும் அட்டர்னி ஜெனரல் மீதான குற்றச்சாட்டுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாட் கேட்ஸ் அட்டர்னி ஜெனரல் பதவிக்கு டிரம்பின் தேர்வான மாட் கேட்ஸும் சர்ச்சைக்குரிய பிம்பத்தைக் கொண்டுள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அவர் மீது தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கடந்த வியாழன் அன்று, அமெரிக்க நீதித்துறையை வழிநடத்த டிரம்ப் அவரின் பெயரைப் பரிந்துரைத்த சில மணிநேரங்களில், மாட் கேட்ஸ் அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் உள்ள தனது ஃப்ளோரிடா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறியதன் மூலம் அவர் மீதான சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு, பிரசார நிதியை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான காங்கிரஸ் அறிக்கை வெளியிடுவது நிறுத்தப்பட்டது. அறிக்கையை பகிரங்கப்படுத்த கோரிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப் தன் அமைச்சரவைக்குத் தேர்வு செய்திருக்கும் நபர்களில் பலர் தவறான நடத்தை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர். அவையின் சபாநாயகர் மைக் ஜான்சனும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். கேட்ஸ் அவையில் உறுப்பினராக இல்லாததால் அறிக்கை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக அவர் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்தார். அதைப் பகிரங்கப்படுத்துமாறு உறுப்பினர்கள் கோரிய போதிலும், அது ரகசியமாக வைக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார். சில மணிநேரங்களுக்குப் பிறகு, கேட்ஸ் பற்றி `ஹவுஸ் எதிக்ஸ் கமிட்டிக்கு’ (அவையின் நெறிமுறைக் குழு)சாட்சியம் அளித்த இரண்டு பெண்களுக்கான வழக்கறிஞர், விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு சட்ட வல்லுநர்களிடம் வலியுறுத்தினார். வழக்கறிஞர், ஜோ லெப்பார்ட், சிபிஎஸ் நியூஸிடம், தான் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் ஒருவர் 2017ஆம் ஆண்டில் ஃப்ளோரிடாவில் கேட்ஸ் ஒரு மைனர் பெண்ணுடன் உடலுறவு கொண்டதைக் கண்டதாகக் கூறினார். எனவே, அவையின் நெறிமுறைக் குழு கேட்ஸ் தொடர்பான அறிக்கையை வெளியிடுமாறு லெப்பார்ட் வலியுறுத்தினார். இருப்பினும், கடந்த ஆண்டு நீதித்துறை இதுகுறித்து விசாரணை நடத்தி, கேட்ஸ் மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவிட மறுத்துவிட்டது. முன்னதாக, ஆர்லாண்டோவில் ஒரு பார்ட்டியில் 17 வயது சிறுமியுடன் உடலுறவு கொண்டதாகக் கூறப்பட்டதையும் கேட்ஸ் மறுத்தார். ஃப்ளோரிடாவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட 42 வயதான கேட்ஸ், "என்னை அழிக்க பொய்களை ஆயுதமாகப் பயன்படுத்த முயல்கிறார்கள்" என்று எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை என்று பதிவிட்டார். டிரம்ப்பின் சுகாதார செயலாளர் தேர்வுக்கு எழுந்த விமர்சனம் பட மூலாதாரம்,GETTY IMAGES சுகாதார செயலாளராக (அமெரிக்க சுகாதாரம் மற்றும் மக்கள் சேவைகள் துறையின் தலைவர்) டிரம்ப் தேர்வு செய்திருக்கும் நபரான ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் மீதும் சர்ச்சையான பிம்பம் உள்ளது. கென்னடி, ஆர்.எஃப்.கெ ஜூனியர் என்று அறியப்படும் இவர் ஒரு தடுப்பூசி எதிர்ப்பு ஆர்வலர். அமெரிக்க பங்குச் சந்தையில், உலகெங்கிலும் உள்ள தடுப்பூசி தயாரிப்பாளர்கள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் பங்குகள் வெள்ளிக்கிழமை கடுமையாகச் சரிந்தன. "பிக் ஃபார்மாவை" (Big Pharma) முறியடிப்பதாக சபதம் செய்த ஒரு நபரை டிரம்ப் சுகாதாரத் துறையில் நியமிக்கத் தேர்வு செய்திருப்பது மருந்து நிறுவனங்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. இந்த முடிவுக்கு முதலீட்டாளர்கள் எதிர்வினையாற்றினர். சுமார் 25,000 உறுப்பினர்களைக் கொண்ட சுகாதார நிபுணர்களைக் கொண்ட அமெரிக்க பொது சுகாதார சங்கத்தின் தலைவர் ஜார்ஜ் சி பெஞ்சமின் பிபிசியிடம், நோய்த்தடுப்பு மருந்துகள் குறித்த கென்னடியின் விமர்சனம் "ஏற்கெனவே நாட்டில் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக" கூறினார். ஜார்ஜ் சி பெஞ்சமின் மேலும் கூறுகையில், ``சுகாதாரத் துறைக்கு கென்னடி முற்றிலும் தவறான தேர்வு" என்று கூறினார். டிரம்ப் இதுவரை தனது தேர்வுகள் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை. அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு சில நாட்கள் கடந்த நிலையில் டிரம்ப் இன்னும் தன் அமைச்சரவையின் முழு பணியிடங்களுக்கும் நியமனங்களைத் தேர்வு செய்யவில்லை. நிதியமைச்சர் மற்றும் எஃப்.பி.ஐ. தலைவர் நியமனம் குறித்து இதுவரை அவர் யாருடைய பெயரையும் அறிவிக்கவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce3ygqzr0vxo
  18. நியூஸிலாந்துடனான தொடரையும் இலங்கை கைப்பற்றியது; சொந்த மண்ணில் இலங்கை ஈட்டிய 6ஆவது தொடர்ச்சியான தொடர் வெற்றி (நெவில் அன்தனி) கண்டி, பல்லேகலையில் இன்று ஞாயற்றுக்கிழமை மழையினால் தடைப்பட்டு தொடர்ந்து நடைபெற்ற இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 பந்துகள் மீதம் இருக்க 3 விக்கெட்களால் இலங்கை அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரைக் கைப்பற்றிய இலங்கை, சொந்த மண்ணில் 6ஆவது தொடர்ச்சியான தொடர் வெற்றியை ஈட்டி வரலாறு படைத்தது. மேலும் சொந்த மண்ணில் 10 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக ஒரே வருடத்தில் 5 தொடர்களை இலங்கை தனதாக்கிக்கொண்டுள்ளது விசேட அம்சமாகும். இவ் வெற்றியில் மஹீஷ் தீக்ஷனவின் சகலதுறை ஆட்டம், குசல் மெண்டிஸ் குவித்த ஆட்டமிழக்காத அரைச் சதம் என்பன முக்கிய பங்காற்றின. 210 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 46 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 210 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இந்தப் போட்டியில் இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. அவிஷ்க பெர்னாண்டோ (5), பெத்தும் நிஸ்ஸன்க (28), கமிந்து மெண்டிஸ் (0) ஆகிய மூவரும் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். துடுப்பாட்ட வரிசையில் 4ஆம் இலக்கத்திற்கு உயர்த்தப்பட்ட கமிந்து மெண்டிஸ் 3 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்து இரசிகர்களைப் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தினார். தொடர்ந்து சரித் அசலன்க (12), சதீர சமரவிக்ரம (8) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். குசல் மெண்டிஸ், ஜனித் லியனகே ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து அணியை மீட்டெடுக்க முயற்சித்தனர். ஆனால், இருவரும் 39 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஜனித் லியனகே 22 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதிரடியாக துடுப்பாட்டத்தை ஆரம்பித்த துனித் வெல்லாலகே 7ஆவது விக்கெட்டில் குசல் மெண்டிஸுடன் 25 பந்துகளில் 31 பகிர்ந்த நிலையில் 18 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். ஒரு பக்கத்தில் உபாதைக்கு மத்தியில் மிகவும் நிதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் மஹீஷ் தீக்ஷனவுடன் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தார். குசல் மெண்டிஸ் 6 பவுண்டறிகள் உட்பட 74 ஓட்டங்களுடனும் மஹீஷ் தீக்ஷன 2 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 27ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் மைக்கல் ப்றேஸ்வெல் 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினர். குறிப்பிட்ட நேரப்படி பிற்பகல் 2.30 அணிக்கு ஆரம்பமான போட்டியில் முதலில் துடுபெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து 18.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 71 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை பெய்ததால் பிற்பகல் 4.19 மணிக்கு ஆட்டம் தடைப்பட்டது. சுமார் ஒரு மணித்தியாத்திற்குப் பின்னர் ஆட்டம் தொடர்ந்தபோது போட்டியில் 6 ஓவர்கள் குறைக்கப்பட்டு அணிக்கு 47 ஓவர்கள் என நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 45.1 ஒவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றது. மார்க் செப்மன், மிச்செல் ஹே ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 173 ஓட்டங்களாக உயர்த்தினர். ஆனால், கடைசி 6 விக்கெட்கள் 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தப்பட்டது. மார்க் செப்மன் 70 ஓட்டங்களையும் மிச்செல் ஹே 49 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களை விட ஆரம்ப வீரர் வில் யங் 26 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெவ்றி வெண்டசே 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: குசல் மெண்டிஸ் https://www.virakesari.lk/article/199025
  19. இலங்கைக்கான சீனத் தூதுவர் நாளை யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கின்றார். பாராளுமன்றத் தேர்தலின் பின்பு முதலாவது இராஜதந்திரியாக யாழ்ப்பாணத்துக்கு சீனத் தூதுவர் இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொள்கின்றார். இதன்போது அவர் பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். https://thinakkural.lk/article/312232
  20. பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம்! இலங்கையின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது. https://www.virakesari.lk/article/199037 கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்றுறை கல்வி அமைச்சராக பிரதமர் ஹரிணி பதவிப் பிரமாணம் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்றுறை கல்வி அமைச்சராக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை இடம்பெற்றது. https://www.virakesari.lk/article/199039
  21. (எம்.மனோசித்ரா) தேசிய சொத்துக்களை கொள்ளையடித்த கள்வர்களை கைது செய்வதாகவும், அந்த சொத்துக்களை மீட்பதாகவும் அரசாங்கம் மக்களுக்கு வாக்குறுதியளித்திருக்கிறது. அதனை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சியாக எமது முழுமையான ஒத்துழைப்பை நாம் அரசாங்கத்துக்கு வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரதான எதிர்க்கட்சியாக மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவாகியுள்ளது. மூன்றில் இரண்டுக்கும் அதிக பெரும்பான்மையுடைய ஆளுங்கட்சியுடன் பாராளுமன்றத்தில் செயற்பட வேண்டியுள்ளது. அதேபோன்று தாம் இரு தேர்தல் காலங்களிலும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு காணப்படுகிறது. அவை தொடர்பில் நாம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். குறிப்பாக தேசிய சொத்துக்களை கொள்ளையடித்த கள்வர்களை கைது செய்வதாகவும், அந்த சொத்துக்களை மீட்பதாகவும் அரசாங்கம் மக்களுக்கு வாக்குறுதியளித்திருக்கிறது. அதனை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சியாக எமது முழுமையான ஒத்துழைப்பை நாம் அரசாங்கத்துக்கு வழங்குவோம். அதேவேளை இந்த இடத்திலிருந்து எமது அடுத்த வெற்றிக்கான பணத்தையும் ஆரம்பிக்கவுள்ளோம். இலங்கையின் தேர்தல் வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இடம்பெறும் எந்தவொரு பொதுத் தேர்தலிலும் இதேபோன்ற பெறுபேறுகளே கிடைத்துள்ளன. இம்முறைத் தேர்தலிலும் அதுவே இடம்பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அம்பாந்தோட்டையில் தனது பணத்தை ஆரம்பித்தார். அவர் அன்றிலிருந்து மக்களுடனேயே இருக்கின்றார். எனவே புதிதாக வீதிஸ்ரீக்கிறங்கி தன்னை வெளிப்படுத்த வேண்டிய தேவை அவருக்கு இல்லை. ஜே.வி.பி. இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் கடும் தோல்விகளை சந்தித்திருக்கிறது. ஆனால் அந்த தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை. தற்போது அந்த கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது. ஆனால் எமது தலைவர் ஒரு கட்சியைப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் மாத்திரமே கடந்துள்ளன. எதிர்காலத்தில் நாமும் அதிகாரத்தை கைப்பற்றுமளவுக்கு எம்மை பலப்படுத்திக் கொள்வோம் என்றார். https://www.virakesari.lk/article/199006
  22. 150 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அரசியலிலிருந்து வெளியேற்றம் க.பிரசன்னா கடந்த காலங்களில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய 150 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அரசியலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் 92 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றுள்ளதுடன் 58 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் 77 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தோல்வியடைந்த நிலையில் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் இத்தொகை 94 ஆக அதிகரித்துள்ளது. இதில் 70 க்கும் மேற்பட்டோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏனையோர் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்தனர். மஹிந்த அமரவீர, அஜித் ராஜபக்ச, நிபுன ரணவக்க, கஞ்சன விஜேசேகர, கலாநிதி மனுச நாணயக்கார, கலாநிதி ரமேஷ் பத்திரன, சம்பத் அத்துகோரள, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம்.சந்திரசேன, சசீந்திர ராஜபக்ச, சுசில் பிரேமஜயந்த, ரொஷான் ரணசிங்க, திலும் அமுனுகம, ஜனக வக்கும்புர, விதுர விக்ரமநாயக்க, இந்திக்க அநுருத்த, பிரசன்ன ரணவீர, மதுர விதானகே, பிரேமநாத் சி.தொலவத்த, ஜகத் குமார சுமித்ராராச்சி, பியல் நிஷாந்த, கலாநிதி சன்ன ஜயசுமன, துமிந்த திஸாநாயக்க, வீரசுமண வீரசிங்க, சஞ்சீவ எதிரிமான்ன, ஹரின் பெர்னாண்டோ, கோகிலா ஹர்சனி, டி.பி.ஹேரத், அனுப பெஸ்குவல் ஆகியோரும் இந்தத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளனர். டிலான் பெரேரா, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பிரமித்த பண்டார தென்னக்கோன், பந்துலால் பண்டாரிகொட, சரித ஹேரத், சிசிர ஜயக்கொடி, சந்திம வீரக்கொடி, டீ.வீரசிங்க, அநுர பிரியதர்ஷன யாப்பா, அசங்க நவரத்ன, சாந்த பண்டார, மஞ்சுளா திசாநாயக்க, ருவன் விஜயவர்தன, நிமல் லன்சா, அசோக்க பிரியந்த, சிந்தக்க மாயாதுன்னே, லசந்த அழகியவன்ன, வசந்த யாப்பா பண்டார, திஸ்ஸ அத்தநாயக்க, ஹேர்ல் குணசேகர, ரஞ்சன் ராமநாயக்க, வடிவேல் சுரேஸ், நளின் பெர்னாண்டோ, உபுல் மஹேந்திர, டிலான் ஜயதிலக்க, சரத் வீரசேகர, சுசில் பிரேமஜயந்த, இசுரு தொடங்கொட, மொஹான் பிரியதர்சன டி சில்வா, பிரேமலால் ஜயசேகர, சந்திரசிறி முத்துகுமாரன, ராஜிக்கா விக்ரமசிங்க ஆகியோரும் தோல்வியுற்றுள்ளனர். தாரக்க பாலசூரிய, நாலக்க பண்டார, முதித்தா பிரியதர்சினி, ஜகத் பிரியங்கர, சுமித் உடுகும்புர, அருந்திக்க பெர்னாண்டோ, விஜித்த பேருகொட, ராஜித்த சேனாரத்ன, சிவநேசத்துரை சந்திரகாந்தன், நிமல் சிறிபால டி சில்வா, புத்திக்க பத்திரன, ஹெரான் விக்ரமரத்ன, மனோ கணேசன், ஹிருணிக்கா பிரேமசந்திர, அசோக்க அபேசிங்க, துசார இந்துனில், லலித் எல்லாவெல, லலித் வர்ணகுமார, விஜித் விஜித்தமுனி, நியோமல் பெரேரா, பியசேன கமகே, லசந்த சேனாநாயக்க, ஜயரத்ன ஹேரத், எம்.ஏ.சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, வேலு குமார், மயில்வாகனம் உதயகுமார், மருதபாண்டி ராமேஸ்வரன், கோவிந்தம் கருணாகரன் ஆகியோரும் தோல்வி பட்டியலில் உள்ளடங்குவர். https://thinakkural.lk/article/312242
  23. Update : மன்னார் இராணுவ முகாமில் 25 இராணுவ வீரர்கள் காய்ச்சலால் பாதிப்பு! மன்னார், விடத்தல்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் சுமார் 25 இராணுவ வீரர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கு காய்ச்சல் பரவியதையடுத்து, அங்குள்ள இராணுவ வீரர்களை குறித்த முகாமிலேயே தனிமைப்படுத்தியுள்ளதாக இராணும் தெரிவித்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் குழுவொன்றை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முகாமில் உள்ள மேலும் 500 இராணுவத்தினரை தனிமைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 11 ஆம் திகதி முதல் இராணுவ வீரர்களுக்கு காய்ச்சல் பரவி வருவதாக தெரியவந்துள்ளது. தொடர்புடைய செய்திக்கு https://www.virakesari.lk/article/199020 https://www.virakesari.lk/article/199031
  24. புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்கின்றனர். ஹரிணி அமரசூரிய-(பிரதமர்) – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் விஜித ஹேரத்-வெளிநாட்டு அலுவல்கள்,வௌிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை சஞ்சன அபேரத்ன -பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் ஹர்ஷண நாணயக்கார- நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு சரோஜா சாவித்திரி போல்ராஜ்- மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் விவகாரம் கே,டி.லால்காந்த -விவசாயம் ,கால்நடைகள்,காணி மற்றும் நீர்ப்பாசனம் https://thinakkural.lk/article/312253
  25. விடுமுறை எடுக்க முடியாததால் ஒரு இலட்சம் தனியார்துறை ஊழியர்கள் வாக்களிக்கவில்லை சுமார் ஒரு இலட்சம் தனியார்துறை ஊழியர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். விடுமுறை எடுக்க முடியாமல் அவர்கள் வாக்களிப்பதை தவிர்த்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் 12 நிறுவனங்களின் ஊழியர்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இதற்கான எதிர் நடவடிக்கைகள் குறித்து அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை என கூறப்படுகிறது. https://thinakkural.lk/article/312244

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.