Everything posted by ஏராளன்
-
உலகின் மிக ஆபத்தான இடத்திற்குப் பயணித்த பெண் எழுத்தாளர்!
டூம்ஸ்டே பனிப்பாறை: உலகின் மிக ஆபத்தான இடத்திற்குப் பயணித்த பெண் எழுத்தாளர் எலிசபெத் ரஷ் பட மூலாதாரம்,ELIZABETH RUSH கட்டுரை தகவல் எழுதியவர், எலியட் ஸ்டெய்ன் பதவி, பிபிசி செய்திகள் 49 நிமிடங்களுக்கு முன்னர் புலிட்சர் பரிசுக்கான இறுதிப் போட்டியாளர்களில் ஒருவரான எலிசபெத் ரஷ் தனது சமீபத்திய புத்தகமான ‘தி குயிக்கனிங்’-இல் (The Quickening), உலகின் மிக முக்கியமான, ஆனால் மனிதர்கள் அதிகம் செல்லாத இடங்களில் ஒன்றுக்கு தான் மேற்கொண்ட அரிய பயணத்தை விவரித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டில், 57 விஞ்ஞானிகளும் அவர்களது குழுவினரும், அன்டார்டிகாவின் மிக தொலைதூரப் பகுதிகளுக்குத் தங்கள் 54 நாள் பயணத்தை மேற்கொண்டனர். அவர்களது நோக்கம்: மிக வேகமாக உடைந்து கொண்டிருக்கும் ’த்வைட்ஸ் பனிப்பாறை’-யை (Thwaites Glacier) ஆய்வு செய்வது. இது உலகின் ‘டூம்ஸ்டே பனிப்பாறை’ என்று அழைக்கப்படுகிறது. கடந்த 1990களில் இருந்த அளவுடன் ஒப்பிடும்போது தற்போது 8 மடங்கு குறைந்துள்ள த்வைட்ஸ் பனிப்பாறை உருகுவதால், ஒவ்வோர் ஆண்டும் 8,000 கோடி கிலோ பனிக்கட்டி கடலில் கலக்கிறது. இந்த அளவு, பூமியின் 4% வருடாந்திர கடல்மட்ட உயர்வுக்கு வழிவகுக்கிறது. அதன் மாபெரும் அளவு மற்றும் விரைவாக உருகுவதன் காரணமாக இந்தத் தொலைதூரப் பனிப்பாறை பிரதேசம் பூமியின் பயங்கரமான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும், கூடவே இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் திகழ்கிறது. ஏனெனில், காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தின் துவக்கப்புள்ளி இது. த்வைட்ஸ் முழுவதுமாக உருகினால் கடல் மட்டம் 10 அடி உயர்ந்துவிடும். அது நினைத்துப் பார்க்க முடியாத உலகளாவிய விளைவுகளுக்கு வழிவகுக்கும். ஆனால் ‘டூம்ஸ்டே பனிப்பாறை’ உருகி வரும் போதிலும், அனைவரும் அஞ்சிய அளவிற்கு வேகமாக மறைந்துவிடாது என்று இந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு காட்டுகிறது. பனிப்பாறை தொடர்ந்து உடைந்து கடலில் விழக்கூடும் என்ற அச்சத்தை இந்த ஆய்வு சிறிதே குறைக்கிறது. அது அவ்வளவு சீக்கிரம் நடக்காது என்ற நம்பிக்கையை அளிக்கிறது. "த்வைட்ஸ் பனிப்பாறை தொடர்பாக இப்போது நாம் பார்ப்பது ‘ஸ்லோ மோஷ’னில் நடக்கும் ஒரு பேரழிவு,” என்று இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய துருவ விஞ்ஞானி மேத்யூ மோர்லிங்ஹாம் ‘தி கான்வர்சேஷன்’ இணையதளத்திடம் கூறினார். கடந்த 2019இல் த்வைட்ஸுக்கு பயணம் செய்தவர்களில் ஒருவரான எலிசபெத் ரஷ் எழுதிய காலநிலை மாற்றம் பற்றிய புத்தகமான ‘ரைசிங்’, புலிட்சர் பரிசுக்கான இறுதிப் போட்டியில் இருந்தது. அவருடைய சமீபத்திய புத்தகம், ‘தி குயிக்கனிங்,’ த்வைட்ஸின் உடைந்த பகுதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுப் பயணத்தை விவரிக்கிறது. இது மனிதர்கள் இதுவரை சென்றிராத உறையும் குளிர் வாட்டும் தொலைதூர இடமாகும். ‘விண்வெளியைவிட தனித்திருக்கும் இடம்’ பட மூலாதாரம்,ELIZABETH RUSH படக்குறிப்பு, த்வைட்ஸ் பனிப்பாறையின் உடைந்த பனிக்கட்டிகள் சூழ்ந்த இடத்திற்கு இதற்கு முன் மனிதர்கள் சென்றதில்லை ரஷ் தனது அன்டார்டிகா பயணத்தின் சுவாரஸ்யமான விவரங்களை பிபிசி டிராவலுடன் பகிர்ந்துகொண்டார். உலகத்தைப் பற்றிய தனது பார்வையை அது எவ்வாறு மாற்றியது மற்றும் பூமியின் மிகவும் மென்மையான, எளிதில் உடையக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்புகளின் வழியாக மேற்கொண்ட பயணம், பயண நெறிமுறைகளை எப்படி மாற்றியது என்பதையும் அவர் விவரித்தார். கேள்வி: த்வைட்ஸ் பனிப்பாறை எங்கே உள்ளது, இந்தப் பயணத்தைப் பற்றி முதலில் எப்போது கேள்விப்பட்டீர்கள்? பதில்: "த்வைட்ஸ் பனிப்பாறை அன்டார்டிகாவில் மிகவும் மர்மமான இடம். இது அமுண்ட்சென் கடலின் தொலைதூரப் பகுதிகளில் உள்ளது. அருகிலுள்ள ஆராய்ச்சித் தளத்தை அடைய நான்கு நாட்கள் ஆனது. ‘உங்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் உங்களுக்கு உதவி கிடைக்கச் செய்வதைக் காட்டிலும் விண்வெளி நிலையத்தில் பணிபுரிபவர்களுக்கு உதவிகளைக் கொண்டு செல்வது சுலபம். அது உங்களுக்குத் தெரியுமா?’ என்று ஆய்வுத் திட்ட அதிகாரி என்னிடம் கேட்டார். த்வைட்ஸ் விரைவாகப் பேரழிவை நோக்கிச் செல்கிறது என்ற கவலைகள் உள்ளன. ஆனால் உண்மையில் யாரும் இதற்கு முன் அது சிதையும் இடத்திற்குச் சென்றதில்லை. ‘அன்டார்டிக் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள்’ திட்டத்தின் ஒரு பகுதியாக என்னைச் சேர்த்துக்கொள்ள நான் விண்ணப்பித்தேன். அவர்கள் வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் இரண்டு எழுத்தாளர்கள் அல்லது கலைஞர்களை அன்டார்டிகாவிற்கு அனுப்புவார்கள். நான் 60 பக்க விண்ணப்பத்தைத் தயார் செய்தேன். எனது விண்ணப்பத்தில் ஒரு பத்தி நீள அடிக்குறிப்பு இருந்தது: ‘நான் கடல் மட்ட உயர்வு பற்றி எழுதுகிறேன். நான் அன்டார்டிகாவில் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று கடல்மட்ட உயர்வை நேரடியாகப் பார்க்க விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தேன். இந்தப் பயணத்தில் அவர்கள் என்னைச் சேர்த்துக்கொண்டது என்னுடைய அதிர்ஷ்டம்." அன்டார்டிகா பற்றிய உண்மைகள் பட மூலாதாரம்,ELIZABETH RUSH படக்குறிப்பு, எலிசபெத் ரஷ், பூமியின் 'டூம்ஸ்டே பனிப்பாறை' பகுதிக்கு பயணம் செய்தார் கேள்வி: கடல் மட்டம் 10 அடி அல்லது அதற்கு மேல் உயர்ந்தால் அது உலக அளவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? பதில்: "இது நடக்கும் வேகம் நிறைய வித்தியாசத்தை ஏற்படுத்தும். இரண்டு நூற்றாண்டுகளில் உயரும் 10 அடிக்கும், 40 ஆண்டுகளில் உயரும் 10 அடிக்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது. உண்மையில் கவலை என்னவென்றால், இதற்காக மனிதர்கள் என்ன செய்கிறார்கள்? நான் ‘திட்டமிட்ட பின்வாங்கலை’ (தாழ்வான பகுதிகளில் இருந்து உயரமான பகுதிகளுக்குக் குடிபெயர்வது) ஆதரிக்கிறேன். அதில் ஒரு அரசு நிறுவனம் தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளை, வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு முந்தைய விலைமதிப்பில் வாங்குகிறது. அந்தப் பணத்தை வைத்து மக்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல இது வாய்ப்பளிக்கிறது. நியூயார்க் நகரம் ஏற்கெனவே சில திட்டமிட்ட பின்வாங்கலை ஸ்டேட்டன் தீவில் செய்துள்ளது. ஸ்டேட்டன் தீவில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை அரசாங்கம் தலையிட்டு, விலைக்கு வாங்கி இடித்தது. அந்தக் குடியிருப்பாளர்களில் 80 சதவீதத்தினர் தங்கள் வீட்டிற்காகக் கொடுக்கப்பட்ட பணத்தை எடுத்துக்கொண்டு ஸ்டேட்டன் தீவில் வேறு இடத்திற்குச் செல்ல முடிந்தது. திட்டமிட்ட பின்வாங்கல் சமூகங்களைச் சிதைப்பது போன்றது என்று சில நேரங்களில் நாம் நினைக்கிறோம். ஆனால், அப்படிப்பட்ட சிதைவு உண்மையில் நடந்தாக வேண்டும் என்று கட்டாயமில்லை, இத்தகைய இடப்பெயர்வுகளின்போது அப்படி நிகழாமல் தவிர்க்க முடியும். ஆகவே, நாம் தயார்நிலையில் இருக்கும்பட்சத்தில் கடல்மட்ட உயர்வு ஒரு பேரழிவாக இருக்கப் போவதில்லை. ஆனால், அதற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்பதுதான் பெரிய கேள்வி." கேள்வி: இந்தப் பயணத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் நீங்களும் ஒருவர். இது பற்றி நிங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பதில்: "இந்தப் பயணம் பற்றிய என்னுடைய பார்வை என் கதையின் முக்கிய அம்சமாக இருக்கும். கூடவே அந்த இடங்களில் பணிபுரியும் விஞ்ஞானிகள் மற்றும் குழுவினரின் கருத்துகளையும் அதில் இடம்பெறச் செய்வேன் என்று என் விண்ணப்பத்தில் நான் குறிப்பிட்டேன். அன்டார்டிகா பற்றித் தெரிவிக்கப்படும் பொதுவான கூற்றுகளில் இருந்து விலகி அனைவரின் கருத்துகளையும் உள்ளடக்குவதே எனது குறிக்கோளாக இருந்தது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் அன்டார்டிகாவை கண்டார். இந்த மிகக் குறுகிய காலகட்டத்தில் அன்டார்டிகாவை பற்றி மிகவும் குறைவான தகவல்களே தெரிய வந்துள்ளன. அங்கு சென்றது மனிதர்களால் சிந்திக்கவே முடியாத மாபெரும் வெற்றி என்றும் பல இன்னல்களைக் கடந்து அங்கு சென்றடைந்தது எப்படி என்பதையுமே அவை பெரும்பாலும் விளக்கின. அங்கு சென்ற பெரும்பாலானவர்கள் உலகின் வடபகுதியைச் சேர்ந்த வெள்ளை இனத்தவர்கள். அன்டார்டிகாவை பற்றிய எல்லா கதைகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை. ஆனால் நான் அனைவருடைய கருத்துகளையும், சிந்தனைகளையும் உள்ளடக்கிய ஒரு கதையை உருவாக்க விரும்பினேன். பயணத்தில் உடனிருந்த சமையற்காரர்கள், பொறியாளர்கள், உதவி ஊழியர்கள் ஆகியோரையும் நேர்காணல் செய்ய நான் முன்பே முடிவு செய்தேன். என் விண்ணப்பம் தெரிவு செய்யப்படுவதில் இது குறிப்பிடத்தக்க பங்கை வகித்தது என்று நான் நினைக்கிறேன். ஏனெனில், நான் அறிவியலைப் பற்றி பேசப் போகிறேன். ஆனால் அன்டார்டிகா பற்றி பொதுவாகச் சொல்லப்படும் கதைகளைக் கேள்வி கேட்கும் வகையில் அதைச் செய்யப் போகிறேன்." ‘மனிதர்களிடமிருந்து வெகு தூரம்’ பட மூலாதாரம்,ELIZABETH RUSH படக்குறிப்பு, ஐஸ் பிரேக்கர் கப்பலில் பயணித்த குழுவினர் த்வைட்ஸ் பனிப்பாறையை அடைய மூன்று வாரங்கள் ஆனது கேள்வி: அன்டார்டிகா பற்றிய கதையில் பொதுவாக இடம்பெறாத பயணிகள் உலகத்தைப் பார்க்கும் விதத்தை இந்த அரிய பயணம் எப்படி மாற்றியது என்பதை விளக்கும் ஏதேனும் கதைகள் உங்களிடம் இருக்கிறதா? பதில்: "கப்பலில் சமையல்காரராக இருந்த ஜாக் என்பவரிடம் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. அவர் நியூ ஆர்லியன்ஸை சேர்ந்தவர். பொருளாதார ரீதியாகத் தனது தாத்தாவை நன்றாக கவனித்துக் கொள்ள உதவிகரமாக இருக்கும் என்பதால் இந்தப் பயணத்தில் சமையல்காரராக இருக்க அவர் முடிவு செய்தார். ஆனால் எங்கள் பயணம் துவங்க இரண்டு வாரங்கள் இருந்த நிலையில் அவரது தாத்தா காலமாகிவிட்டார். ஆனாலும் ஜாக் எங்களுடன் வந்தார். அவர் இதுவரை விமானத்தில் கூடச் சென்றதில்லை. அவர் மூன்று வெவ்வேறு விமானங்களில் பயணம் செய்து நியூ ஆர்லியன்ஸில் இருந்து, சிலியில் இருக்கும் புன்டா அரீனாஸுக்கு வந்தார். அங்கிருந்துதான் எங்கள் கப்பல் பயணம் துவங்க இருந்தது. அவர் கப்பலிலும் சென்றதில்லை. பெங்குவின் பறவைகளையும் பார்த்ததில்லை. நியூ ஆர்லியன்ஸை சேர்ந்தவர் என்றாலும்கூட அவர் இதுவரை கடல்மட்ட உயர்வு பற்றி ஒருபோதும் தீவிரமாகச் சிந்தித்ததில்லை. இந்த முழு அனுபவமும் அவருக்குப் பல ’முதல்’களை உள்ளடக்கியதாக இருந்தது. காலநிலை மாற்றம் பற்றிச் சிந்திக்க அவருக்கு அவகாசம் இருந்ததில்லை. ஆனால் அவர் த்வைட்ஸை பார்த்ததும், 'ஓ, எனக்குப் புரிகிறது' என்று கூறினார். ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ கதையில் இருக்கும் சுவர் போல அந்தப் பனிப்பாறை இருந்தது. அது மிகவும் பெரியதாக இருந்தது. நாங்கள் அங்கு சென்றடைய மூன்று வாரங்கள் ஆயின. மனிதர்களிடம் இருந்து வெகுதூரம் வந்துவிட்டதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. அங்கிருந்து வெகுதொலைவில் இருக்கும் நம்முடைய செயல்கள் இந்தப் பனிப்பாறை சுவரின் மீது எப்படிப்பட்ட பேரழிவை ஏற்படுத்துகிறது என்று சிந்திக்கும்போது மயிர்கூச்சல் எடுத்தது." கேள்வி: பூமியில் நாம் எந்த வகையான இடங்களுக்குச் செல்ல வேண்டும் அல்லது செல்லக்கூடாது என்பது பற்றிய விவாதம் தொடர்ந்து நடக்கிறது. எளிதில் அடைய முடியாத, எளிதில் பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்புகள் அமைந்துள்ள இடங்களை அப்படியே விட்டுவிடவேண்டும் என்பது ஒரு கருத்து. அவற்றின் மென்மையான தன்மையை அருகிலிருந்து பார்ப்பது அவற்றைப் பற்றி இன்னும் ஆழமான அக்கறையை ஏற்படுத்த வழிவகுக்கிறது என்பது மற்றொரு பார்வை. நாம் செல்லக்கூடாத இடங்கள் என்று ஏதாவது இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? பதில்: "இதுவொரு நல்ல கேள்வி. என்னுடைய கருத்தை மட்டுமே நான் இங்கு சொல்ல முடியும். நாங்கள் திரும்பும் வழியில் தெற்குப் பெருங்கடலைக் கடந்தபோது, ‘இனி நான் ஒருபோதும் இங்கு [அன்டார்டிகாவுக்கு] வரப் போவதில்லை’ என்ற எண்ணம் தோன்றியது. இது என் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நடக்கும் பயணம். நான் திரும்பி வந்து ஐந்து ஆண்டுகள் உழைத்து அந்தப் பயணத்தைப் பற்றி ஒரு புத்தகம் எழுதினேன். பயணத்தின் பின்னால் அந்த ஆழமான அர்த்தம் அல்லது உந்துதல் இல்லாமல் இருந்திருந்தால் நான் அதைச் செய்திருக்க முடியும் என்று தோன்றவில்லை. சாதாரண சுற்றுலா போல நாம் அன்டார்டிகாவுக்கு செல்லக்கூடாது என்று நான் நினைக்கிறேன். பயணக் கப்பல்கள் அங்கு போக வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ‘தீண்டப்படாத’ அல்லது ‘தொலைதூர’ இடங்களுக்குச் சாதாரண சுற்றுலாப் பயணங்கள் அதிகரிக்கக்கூடாது. இந்தக் கட்டத்தை அன்டார்டிகா, அமேசான் போன்ற இடங்கள் அடைந்துவிட்டன. நாம் ஒன்றை நேரில் பார்க்கும்போது அதன் மீது அதிக அக்கறை காட்டுகிறோம் என்பதே என் பொதுவான எண்ணம். எனக்கு வயதாகும்போது அந்த ஆர்வத்தை வீட்டிற்கு நெருக்கமாக உள்ள இடங்களுக்கு மாற்ற முயல்வேன். என் மூன்று வயதுக் குழந்தையுடன் என் சுற்றுப்புறத்தில் நான் நடக்க முடியும். மேலும் என் அண்டை வீட்டு முற்றங்களில் காணப்படும் அற்புதமான பட்டாம்பூச்சிக் கூட்டம், சிறிய சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பார்க்க முடியும். அன்டார்டிகா அல்லது அமேசானை எவ்வளவு ஆச்சரியத்துடனும் வியப்புடனும் நாம் பார்க்கிறோமோ அதேபோல இந்த இடங்களையும் கருதலாம் என்று நான் நினைக்கிறேன்." அன்டார்டிகாவிற்கு செல்லும் முன்… பட மூலாதாரம்,ELIZABETH RUSH படக்குறிப்பு, முதன்முதலில் மனிதர்கள் அன்டார்டிகாவை பார்த்து 200ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அதை இப்போதும் 'யாராலும் தீண்டப்படாத இடம்' என்று சொல்வது சரியல்ல என்று ரஷ் கருதுகிறார் கேள்வி: அன்டார்டிகாவிற்கு பயணம் செய்யும் ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் என்ன? பதில்: "அன்டார்டிகாவை 200 ஆண்டுகளுக்கு முன்புதான் ஒருவர் சென்றடைந்தார். மனித வரலாற்றின் பெரும்பகுதி காலத்திற்கும் அது மனிதர்களத் தன் பக்கம் அண்ட அனுமதிக்கவில்லை. இந்த பூமியில் வேறு எந்த இடமும் அப்படி இல்லை. நீங்கள் செல்லும் ஒவ்வோர் இடம் குறித்தும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைய பூர்வீகக் கதைகள் இருக்கும். பூமியில் அப்படி எதுவும் இல்லாத ஒரே இடம் இதுதான். எனவே இதுவொரு குறிப்பிட்ட அளவுக்கு மரியாதை மற்றும் விழிப்புணர்வைக் கோருவதாக நான் நினைக்கிறேன். அதை நெருங்குவது இந்தக் கோளின் வரலாற்றில் மிகவும் அரிதானது, மிகவும் புதியது. எனவே நீங்கள் அங்கு செல்லப் போகிறீர்கள் என்றால், அந்தப் பயணம் அசாதாரணமானது. நீங்கள் பார்க்கப் போகும் அன்டார்டிகா எவ்வளவு சக்தி வாய்ந்த இடம் என்பது பற்றிய விழிப்புணர்வுடன் நீங்கள் அங்கு செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." கேள்வி: இந்த மாபெரும் பனிப்பாறை மெதுவாக உருகுவதைப் பார்த்தது உங்களை எப்படி பாதித்தது? பதில்: "நாங்கள் த்வைட்ஸ் பனிப்பாறைக்கு அருகே சென்றடைந்த அந்த நாள் மிகவும் அமைதியாக இருந்தது. எங்கள் கப்பலின் கேப்டன் பனிப்பாறையின் முன்புறமாக எங்களை அழைத்துச் சென்றார். அதுவோர் அற்புதமான நாள். பின்னர் நிலைமை மாறியது. ஆறு நாட்களுக்கு நாங்கள் கடுமையாக வேலை செய்ய வேண்டி வந்தது. வண்டல் மண்ணை [பூமியின் கடந்த கால புவியியல் மற்றும் காலநிலையை வெளிப்படுத்தும் கடற்பரப்பிற்கு அடியில் இருந்து மாதிரிகள்] பக்கவாட்டிற்குத் தள்ளுதல், எலிஃபெண்ட் சீல்களுக்கு முத்திரைக் குறியிடுதல், பனிப்பாறையின் கீழே நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்புதல் போன்ற வேலைகளைச் செய்தோம். அங்குள்ள பனி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாக இருந்தது. ஏழாவது நாள், நான் விழித்தெழுந்தவுடன், கப்பலின் இயங்குதளத்திற்குச் சென்றேன். அங்கிருந்து பார்த்தபோது, முன்பைவிட அதிகமான பனிப்பாறைகள் காணப்பட்டன. ஆனால் எனக்கு அது வித்தியாசமாகத் தெரியவில்லை. நான் என் வேலையைத் தொடர்ந்தேன். மதிய உணவுக்குப் பிறகு கப்பலில் இருந்த தலைமை விஞ்ஞானி இரண்டு செயற்கைக்கோள் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒன்று த்வைட்ஸ், அதில் ஒரு திடமான மாபெரும் பனிப்பாறை காணப்பட்டது. அடுத்த படத்தில் கோபமடைந்த கடவுள் பனிப்பாறையை ஒரு சுத்தியலால் அடித்து 300 பனிக்கட்டிகளாக உடைத்தது போல் இருந்தது. 15 மைல் அகலமும் 10 மைல் ஆழமும் கொண்ட பனிப்பாறையின் ஒரு பகுதியைப் பற்றி இங்கு நாம் பேசுகிறோம். முதல் படம் நாங்கள் அங்கு சென்று சேர்ந்த நாளில் எடுக்கப்பட்டது. இரண்டாவது படம் ஏழாவது நாள் காலையில் எடுக்கப்பட்டது. தலைமை விஞ்ஞானி அவற்றைப் பார்த்து, ‘அடக் கடவுளே, த்வைட்ஸ் விரைவான சரிவின் காலகட்டத்திற்குள் நுழைந்துவிட்டது. அது நம் கண் முன்னே நடக்கிறது’ என்றார். அவர் அந்தத் தகவலை கேப்டனுக்கு அனுப்பினார். ஆய்வுப் பகுதியில் இருந்து உடனடியாக வெளியேற முடிவு செய்யப்பட்டது. இந்தப் பேரழிவுகரமான நிகழ்வு உண்மையில் என் கண்களுக்கு முன்னால் நடந்துள்ளது. அதை நான் உணரவில்லை என்பது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. உங்களுக்கு முன்னால் ஒரு பனிப்பாறை துண்டு துண்டாக உடைந்து கிடப்பதை உங்களால் கண்டு உணர முடியவில்லை என்றால் அந்த நிகழ்வு நீங்கள் முதலில் கற்பனை செய்ததைவிடப் பெரிய அளவில் உள்ளது என்றும், அதைப் பார்க்கும் உங்கள் கண்ணோட்டம் தவறு என்றும் அர்த்தம். இது காலநிலை மாற்றத்திற்கான ஒரு சிறந்த உருவகம் என்று நான் நினைக்கிறேன். அதை உணர்வது மனிதர்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது." 'நம்பிக்கை உள்ளது’ பட மூலாதாரம்,ELIZABETH RUSH படக்குறிப்பு, கடந்த 1990களில் இருந்ததைவிட த்வைட்ஸ் இப்போது 8 மடங்கு வேகமாக உருகி வருகிறது கேள்வி: பூமியின் தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்வது மனித குலத்தைப் பற்றிய உங்கள் பார்வையை எவ்வாறு மாற்றியது? பதில்: "அது வேறு உலகமாக இருந்தது. நம்முடைய இருப்பு எவ்வளவு மதிப்புமிக்கது மற்றும் அதிசயமானது என்பதையும் இது எனக்கு உணர்த்தியது. வேறொரு கிரகத்தைத் தொடும் தூரத்திற்கு நெருங்கிவிட்டதாக நான் உணர்ந்தேன், மற்றொரு கிரகத்தில் மனித இருப்பை நிலைநாட்டுவது எவ்வளவு கடினம் என்பதை உணரும்போது அந்த உணர்வானது இங்கு நமது வாழ்க்கைக்கு நன்றியுள்ளவர்களாக நம்மை ஆக்குகிறது. அன்டார்டிகாவில் நடப்பது அந்தப் பகுதிக்கு மட்டுமானது அல்ல. அன்டார்டிகாவை சுற்றிச் சுழலும் கடல் நீரோட்டங்கள் பிஸ்டன் போல உலகளாவிய கடல் சுழற்சி முறைகளை இயக்குகின்றன. அதை நாம் மாற்ற ஆரம்பித்துள்ளோம். நாம் அதை மாற்றுவதால், உலகம் முழுவதும் உள்ள உலகளாவிய கடல் வடிவங்கள் மாறுகின்றன. அன்டார்டிகாவை பார்த்து, அங்கு அதிக நேரம் செலவிட்டதன் மூலமாக, ஒரு பெரிய, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளின் வலையில் நாம் வாழ்கிறோம் என்ற உணர்வு எனக்குள் நிச்சயமாக வளர்ந்தது." கேள்வி: உங்களுக்குக் குழந்தை பிறந்த பிறகு எதிர்காலத்தைப் பற்றி எப்படி உணர்கிறீர்கள்? பதில்: "ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததை, எதிர்காலத்தைப் பற்றிய என் நம்பிக்கையின் ஒரு பகுதியாக நான் பார்க்கிறேன். இப்போது எனக்கென்று ஒரு குழந்தை உள்ளது. என் வாழ்நாளில் இருப்பதைவிட அவனுடைய வாழ்நாளில் நிலைமை மோசமாகலாம் என்று நான் நினைக்கிறேன். ஆனாலும் ஒரு குழந்தையை இந்த உலகத்திற்குக் கொண்டு வரும் என் முடிவை அது மாற்றவில்லை. ஆனால் என் வாழ்நாளுக்குள் ஓர் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை உணர்த்துவதில் அது உதவியது. சங்கடமான சூழ்நிலைகள் மற்றும் பெரிய மாற்றங்களின்போது எப்படி வாழ வேண்டும் என்பது போன்ற விஷயங்களை அவனுக்குக் கற்பிப்பதில் அதிக அர்ப்பணிப்புடன் செயல்படும் தேவை இருப்பதாக உணர்கிறேன். ஏனென்றால் அந்தச் சூழ்நிலைகள் வரப் போகின்றன என்று நான் நினைக்கிறேன். மற்றவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவது எப்படி, கூட்டாண்மை மற்றும் விசுவாசத்தை உருவாக்குவது எப்படி என்பதை அவனுக்குக் கற்பிப்பது இன்னும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். நெகிழ்வுத்தன்மையுடனும், எதையும் சமாளிக்கும் திறனுடனும் அவன் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கும் அதே நேரம், ஒருவர் மற்றவரை கவனித்துக் கொள்ளும் மனித சமூகத்தின் ஒரு பகுதியாக அவன் இருக்க வேண்டும் என்றும் நான் கருதுகிறேன். https://www.bbc.com/tamil/articles/c98yj85p1ryo
-
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனிற்கு பிடியாணை
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு எதிராக உயர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கில் ஆஜராக தவறியதை தொடர்ந்து நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது. https://www.virakesari.lk/article/196896
-
இலங்கையில் பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல்; அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
நம்பத்தகுந்த தாக்குதல் குறித்து தகவல் : சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு - பொலிஸ் திணைக்களம் நம்பத்தகுந்த தாக்குதல் குறித்து தகவல் கிடைந்துள்ளமையினால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் எதிராக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட பொலிஸ் திணைக்களம், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஏதேனும் அவசரநிலை அல்லது தகவல்களை ‘1997’ என்ற அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/196894
-
ஜோன்ஸ்டன் வெளிநாடு செல்ல தடை
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று புதன்கிழமை (23) முன்னிலையாகியுள்ளார். சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டபிள்யூ ரக வாகனத்தைப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கமைய அவருக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்கு மூலம் அளிப்பதற்காக வருகை தருமாறு விடுக்கப்பட்ட அழைப்பிணை தொடர்ந்தே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். https://www.virakesari.lk/article/196890
-
இந்திய உயர்ஸ்தானிகருக்கும் ஜனாதிபதி செயலாளருக்குமிடையில் சந்திப்பு !
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை நேற்று செவ்வாய்க்கிழமை (22) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். வடக்குக் கடலில் தற்போது நிலவும் கடற்றொழில் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதன்படி, ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். மேலும், இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களை வெற்றிகொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது. இச்சந்திப்பில் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்திய திட்டங்கள் தொடர்பிலும் மீளாய்வு நடத்தப்பட்டது. இந்தியக் கடன்உதவிகள் மூலம் நிதியளிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து மேலும் ஆராயப்பட்டதுடன், திட்டப்பணிகளை உரிய நேரத்தில் நிறைவுசெய்வதற்காக அந்தப் பணிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆராயப்பட்டது. https://www.virakesari.lk/article/196891
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
டிரம்பை ஆதரித்தும் எதிர்த்தும் WWE வீரர்கள் பிரசாரம் - அண்டர்டேக்கர், ஹல்க், பட்டிஸ்டா ஆதரவு யாருக்கு? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் டிரம்பிற்கு ஆதரவாக ஹல்க் ஹோகன் பிரசாரம் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் கட்டுரை தகவல் எழுதியவர், ஸாம் காப்ரல் பதவி, பிபிசி செய்திகள், வாஷிங்டன் 22 அக்டோபர் 2024 டொனால்ட் டிரம்ப் கடைசியாக WWE போட்டிகளில் (World Wrestling Entertainment - WWE)) சிறப்பு விருந்தினராக தோன்றி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு முன்னாள் WWE வீரர்கள் தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர். 'ஹல்க் ஹோகன்' என்று அழைக்கப்படும் டெர்ரி போல்லியா ஒரு பிரபல WWE வீரர் ஆவார். குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் தனது சட்டையை கீழித்து, உள்ளே அணிந்திருந்த சிவப்பு நிற சட்டையை வெளிக்காட்டினார். அதில் "டிரம்ப் 2024" என்று எழுதியிருந்தது. அவர் "டிரம்ப்மேனியா (trumpmania) உலகெங்கும் பரவட்டும்" என்று கோஷமிட்டார். (Wrestlemania என்பது பிரபலமான ஒரு மல்யுத்த போட்டி, அதுபோல ஹல்க் ஹோகன் "டிரம்ப்மேனியா" என்ற சொல்லை குறிப்பிட்டார்) அமெரிக்காவில் மதம் ஒரு கேலிக்குள்ளாக்கப்படுகிறது என்று கடந்த வாரம், முன்னாள் மல்யுத்த வீரராக இருந்து ஊடக ஆளுமையான டைரஸ் உடனான நேர்காணலில் டிரம்ப் தெரிவித்தார். சமீபத்தில் பல்வேறு ஊடகங்களுடனான நேர்காணல்களுக்கு வர மறுத்த டிரம்ப், WWE பிரபலமான 'தி அண்டர்டேக்கர்' என்று அழைக்கப்படும் மார்க் காலவே தொகுத்து வழங்கிய பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். "நீங்கள் என்ன செய்தீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அரசியலை மீண்டும் மகிழ்ச்சியானதாக மாற்றிவிட்டீர்கள்", என்று மார்க் காலவே கூறினார். அதை டிரம்ப் ஆமோதித்தார். அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் டிரம்ப் இவ்வாறு பிரசாரம் செய்வது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக கருதப்படுகிறது. "பெரும்பாலான அமெரிக்க மக்கள் தேர்தல் நெருங்கும் போது மட்டுமே நாட்டின் அரசியல் நிலை எவ்வாறு உள்ளது என்பதை கவனிக்கிறார்கள். அவர்கள் சமீபத்திய விஷயங்களை கருத்தில் கொண்டே வாக்களிக்கின்றனர்", என்று ஜோசஃபின் ரைஸ்மேன் கூறினார். இவர் ஒரு தன்னார்வ பத்திரிகையாளர் மற்றும் Ringmaster: Vince McMahon and the Unmaking of America என்ற நூலின் ஆசிரியர். "இந்த மல்யுத்த வீரர்களின் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை பலரும் கேட்கிறார்கள். இதன் மூலம் அரசியல்மயப்படாதவர்களையும், புதுமையான எண்ணங்களை கொண்டவர்களையும் அவர் ஈர்க்கலாம்", என்று ஜோசஃபின் ரைஸ்மேன் டிரம்பின் இந்த உத்தி குறித்து கூறினார். இதுபோன்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் மல்யுத்த வீரர்களை வைத்து பிரசாரம் செய்வதன் மூலம் டிரம்ப் இளைஞர்களை கவர முயற்சித்து வருகிறார். இது போன்ற தளங்கள் டிரம்பின் பிரசாரத்திற்கு மிக முக்கியமாக இருப்பதாக, அவரது ஆலோசகர்கள் செமாஃபோர் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர். டிரம்ப் 'ஒரு நட்சத்திரம்' என்று மூத்த தகவல் தொடர்பு ஆலோசகர் அலெக்ஸ் புரூஸ்விட்ஸ் அந்நிறுவனத்திடம் தெரிவித்தார். "டிரம்பின் முந்தைய பிரசாரத்தை விட தற்போது நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம். டிரம்பை ஒரு தனி நபராக முன்னிறுத்தி வருகிறோம். இது டிக்டாக்கில் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது", என்று அவர் கூறுகிறார். அமெரிக்க அரசியலில் 78 வயதாகும் டிரம்பின் எழுச்சி, வீழ்ச்சி மற்றும் மறுபிரவேசம் ஆகியவற்றை மல்யுத்தத்துடன் ஒப்பிட்டு புரிந்துகொள்ளலாம் என்று ரிங்மாஸ்டர் என்ற புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இது யதார்த்தத்தையும், கற்பனையையும் இணைக்கும் ஒரு கலை, உணர்ச்சிகளை உயர்த்தும் ஒரு உளவியல் மற்றும் தவறுகளை சரியாக மாற்றும் ஒரு திறன் என்று அவர் விவரித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தி அண்டர்டேக்கர்' என்று அழைக்கப்படும் மார்க் காலவே "சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அரசியலில் ஒருவர் உண்மைகளையும், பொய்களையும், சில நேரம் பாதி உண்மையை மட்டும் சரியான அளவில் உற்சாகத்துடனும் நேர்மையுடனும் கூற வேண்டும்", என்று ஜோசஃபின் ரைஸ்மேன் தெரிவித்தார். "ஆனால் அரசியல் விதிகள் மற்றும் கொள்கைகள் சார்ந்து அல்லாமல் மல்யுத்தம் போல உற்சாகமும், சுய அடையாளம் சார்ந்ததாக மாறலாம்", என்று அவர் எச்சரித்தார். அரசியலுக்கு வருவதற்கு முன், டிரம்ப் நியூயார்க்கில் உள்ள குயின்ஸில் சிறுவயதில் மல்யுத்தம் பார்த்து வளர்ந்தார். அவர் எப்பொழுதும் மல்யுத்த வீரர்களை பொழுதுபோக்காளர்களாக மட்டும் பார்க்காமல் அவர்களுக்கு உரிய மரியாதையையும் அளித்தார். ஒரு காலத்தில் சிறிய நிறுவனமாக இருந்த WWE, அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி வின்சென்ட் கென்னடி மக்மஹோனின் கீழ் உலகின் மிகப் பெரிய மல்யுத்த நிறுவனமாக மாறியதைப் போன்றே டிரம்பும் தொழிலதிபராக வளர்ந்து வந்தார். இருவருமே குடும்ப நிறுவனங்களில் அதிகாரத்திற்கு வந்து, அதை அதிக அளவில் வளர்த்தெடுத்தனர். அதிபர் ரீகனுக்கு பிறகு அமெரிக்காவில் ஏற்பட்ட கட்டுப்பாடற்ற முதலாளித்துவத்தின் கீழ் இந்த நிறுவனம் செழித்து இருந்தது. இவர்கள் இருவரும் விசாரணையில் இருந்து தப்பினர். இதற்கு பிறகே டிரம்ப் அவரது தொழிலாளர்களுக்கு கடுமையான விதிகளை விதித்ததாகவும், வின்சென்ட் கென்னடி மக்மஹோன் WWE விளையாட்டு வீரகளுக்கு வழங்கும் சுகாதார சலுகைகளை நிறுத்தியதாகவும் ஜோசஃபின் ரைஸ்மேன் குற்றம் சாட்டினார். 1980களின் பிற்பகுதியில், நியூ ஜெர்சியில் உள்ள அட்லாண்டிக் சிட்டியில் உள்ள ஹோட்டலில் டிரம்ப் WWE-இன் மார்க்கீ ரெஸில்மேனியா நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தினார். அப்போது தான் இந்த இருவரின் பாதைகள் ஒன்றிணைந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வின்சென்ட் மக்மஹோனை (கீழே நடுவில் இருப்பவர்) பிரதிநிதித்துவப்படுத்தும் மல்யுத்த வீரரான பாபி லாஷ்லியை (வலது) தோற்கடித்த டிரம்பை பிரதிநிதித்துவப்படுத்தும் மல்யுத்த வீரர் 2007 ஆம் ஆண்டு, இருவரும் ஒரே போட்டிக்குள் நுழைந்தனர். அதில் டிரம்ப் WWE-யின் தலைமை அதிகாரிக்கு சவால் விடுத்தார். அவர் அரங்கின் கூரையின் மேல் இருந்து ரசிகர்களின் மீது அமெரிக்க டாலர்களை பொழிந்தார். "ஒரு மிகப்பெரிய கூட்டத்தில் முதல்முறையாக டிரம்ப் பேசியது இதுவே முதல் முறை", என்று ஜோசஃபின் ரைஸ்மேன் கூறினார். இருவருக்கும் இடையேயான பகை 2023 ஆம் ஆண்டு 'ரெஸில்மேனியா' மல்யுத்த நிகழ்ச்சியின் ஒரு போட்டியான 'பாட்டில் ஆஃப் பில்லியனர்ஸ்' -இன் போது தொடங்கியது. அதில் இருவரின் சார்பாக மல்யுத்த வீரர்கள் சண்டையிட்டுக் கொண்டனர். இந்த போட்டியில் தோல்வியடையும் போட்டியாளரின் உரிமையாளர் தலை மொட்டையடிக்கப்பட வேண்டும் என்பது நிபந்தனையாக இருந்தது. இந்த ஒரு போட்டி மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக வருவாயை எட்டியது என்று மல்யுத்த பத்திரிக்கையாளரும் பாட்காஸ்டருமான பிரையன் அல்வாரெஸ் தெரிவித்தார். இந்த மல்யுத்த நிகழ்ச்சியில் எத்தனையோ போட்டி நடந்தாலும், மக்கள் ஒருவர் தலையை மொட்டையடித்துக் கொள்ளும் நிபந்தனையினால் இந்த போட்டியின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார். டிரம்ப் 2013 ஆம் ஆண்டிற்கு பிறகு WWE போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை. மேலும் அது சார்ந்த தயாரிப்புகள் மற்றும் நிறுவனங்களின் தொடர்பிலும் இல்லை. ஆனால் அவர் அதிபரான பிறகு மக்மஹோனின் மனைவி லிண்டாவை தனது அமைச்சரவையில் சிறு வணிக நிர்வாகியாக பணியமர்த்தினார். தற்போது டிரம்ப் சார்பு கொண்ட ஃபர்ஸ்ட் பாலிசி இன்ஸ்டிடியூட்டின் தலைவராக லிண்டா உள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES டிரம்ப் மீண்டும் அதிபராவது குறித்து, WWE-யை சேர்ந்தவர்களில் சிலருக்கு உடன்பாடு இல்லை. 'தி அனிமல் பட்டிஸ்டா' என்று அழைக்கப்படும் டேவ் பட்டிஸ்டா, கடந்த வாரம் ஒளிபரப்பப்பட்ட ஜிம்மி கிம்மலின் நிகழ்ச்சியில் அதிபர் வேட்பாளர் டிரம்பை கேலி செய்தார். "டொனால்ட் டிரம்ப் ஒரு வலிமையான மனிதர் என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். அவர் அப்படி இல்லை", என்று அவர் கூறினார். ஆயினும்கூட, சில பிரபல மல்யுத்த வீரர்கள் வழக்கத்திற்கு மாறான வழிகளில் டிரம்பிற்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்கள். "தெருவில் இருக்கும் ஒரு சாதாரண நபரிடம் ஹல்க் ஹோகனைத் தெரியுமா என்று நீங்கள் கேட்டால், மல்யுத்த ரசிகர் அல்லாத ஒருவர் கூட ஆம் என்று சொல்வார். டிரம்ப் இது போன்ற மிக பிரபலமான நபர்களை தனது பிரசாரத்திற்கு பயன்படுத்தி வருகிறார்", என்று அல்வாரெஸ் பிபிசியிடம் கூறினார். "டிரம்ப் மல்யுத்தத்தை போலவே அரசியலிலும் செயல்பட்டு வருகிறார்", என்று அல்வாரெஸ் கூறினார். திங்கட்கிழமையன்று டிரம்புடனான தனது நேர்காணலின், "அரசியல்வாதிகளைப் போலவே மல்யுத்த வீரர்களும் மக்கள் கவனத்தை பெற்றால்தான் உண்மையிலேயே சிறந்து விளங்க முடியும்", என்று அவர் தெரிவித்தார். டிரம்ப் ஆர்வத்துடன் முன்னோக்கி சாய்ந்த போது, "நீங்கள் இதில் தேர்ச்சி பெற்றுள்ளீர்கள்" என்று அல்வாரெஸ் குறிப்பிட்டார். "நீங்கள் ஒரு வழி அல்லது வேறு வழியில் மக்களின் கவனத்தை பெற்றுள்ளீர்கள். அவர்கள் உங்களை நேசிக்கிறார்கள் அல்லது வெறுக்கிறார்கள்" என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/creje14374no
-
சீனத் தூதுக்குழுவின் பிரதிப் பிரதானிக்கும் ஜனாதிபதி செயலாளருக்கும் இடையே சந்திப்பு!
சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei), ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை நேற்று செவ்வாய்க்கிழமை (22) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். சீனா - இலங்கை இருதரப்பு உறவுகளை பல்வேறு துறைகளில் மேலும் விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர மரியாதை என்பன குறித்து இதன் போது நினைவுகூரப்பட்டதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டது. https://www.virakesari.lk/article/196895
-
இராஜன் (சோழியன்) அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா காலமானார்
சுழிபுரம் பறாளாய் வீதியை சேர்ந்த திருமதி சிவபுஸ்பா சுந்தரராஜன் அவர்கள் ஜேர்மனியில் காலமானார்கள். ஆழ்ந்த இரங்கல்கள், ஓம் சாந்தி.
-
வழிபாட்டுத் தலங்களில் குப்பையாகும் பூக்கள், பூங்காவுக்கு உரமாக மாறுவது எப்படி?
கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் பக்தர்களால் வழங்கப்படும் பூக்களும், மாலைகளும் குப்பைகளாக ஆறுகளிலும், குளங்களிலும், நீர்நிலைகளிலும் கொட்டப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதனை தடுக்க குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சி ஒரு புதுமையான முயற்சியை கையாண்டு வருகிறது. மாநகராட்சியே நேரடியாக கோவில்கள் மற்றும் தர்க்காக்களுக்கு வண்டிகளை அனுப்பி குப்பைகளை சேகரிக்கிறது. அவை முறையே தரம் பிரிக்கப்படுகிறது. பிறகு மண்புழு உர ஆலைகளுக்கு அனுப்பி அங்கே அது மண்புழு உரமாக மாற்றப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 70 டன் உரத்தை தயாரித்துள்ளது சூரத் மாநகராட்சி. இவ்வாறு தயாரிக்கப்பட்ட உரத்தை சூரத்தின் தோட்டக்கலை துறை அங்குள்ள பூங்காக்கள், சாலையோர பூங்காக்களில் பயன்படுத்துகிறது. செய்தியாளர்- ரூபேஷ் சோனாவானே படத்தொகுப்பு- சாகர் படேல் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு காணொளியை பார்க்க கீழுள்ள பிபிசி தமிழ் இணைப்பை அழுத்துங்கள். https://www.bbc.com/tamil/articles/czege5wz53do
-
'தேற்ற முடியாமல் தவிக்கிறோம்' - காஸா, லெபனானில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலைமை
காஸாவில் தினமும் 10 பேர் கை, கால்களை இழக்கும் அவலம்; செயற்கை கை, கால்களுக்கும் பற்றாக்குறை
-
அரிசி விலை குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் அதிகமாகப் பெய்துள்ள மழை(முளை வெள்ளம்) காரணமாக 7000ரூபா விற்ற 70கிலோ நெல் மூட்டை 12000 ரூபா வரை அதிகரித்துள்ளதாக கூறுகிறார்கள்.
-
ஜோன்ஸ்டன் வெளிநாடு செல்ல தடை
நாளை சிஐடியில் முன்னிலையாகவுள்ள ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) நாளை (23) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க தயார் என தகவல் வெளியாகியுள்ளது. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (22) இந்த விடயத்தை அறிவித்துள்ளார். சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்தில் BMW கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை குறித்தே முன்னாள் அமைச்சர் நாளைய தினம் வாக்குமூலம் வழங்கவுள்ளார். தாக்கல் செய்த மனு குறித்த சம்பவம் தொடர்பில் தன்னை கைது செய்வதை தடுத்து உத்தரவொன்றை வெளியிடுமாறு கோரி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு இன்று அழைக்கப்பட்டது. இதன்போது, சம்பவம் தொடர்பில் நாளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை வழங்க தயார் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். இதையடுத்து, குறித்த மனுவை வரும் 25ம் திகதி அழைக்க உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/johnston-to-record-statement-at-cid-tomorrow-1729582937
-
அவசர வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து இலங்கைக்கு 30 மில்லியன் ரூபா உதவி
அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஜென்ஹொங்( Qi Zhenhong) இந்த உதவித் தொகையை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளித்தார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்குவதற்கும் வெள்ளத்தடுப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக எடுக்க வேண்டிய நீண்டகால உத்திகள் குறித்தும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டது. மேலும், எதிர்கால வெள்ள நிலைமைகளைத் தடுப்பதற்கும், அவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவதற்கும் பின்பற்றக்கூடிய நிலையான தீர்வுகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அண்மையில் பெய்த கடும்மழையால், பல மாவட்டங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்ததோடு உட்கட்டமைப்பு மற்றும் விவசாயத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டதாக அறிக்கைகள் தெரிவித்தன. https://www.virakesari.lk/article/196865
-
"நீங்கள் எனது மன்னரில்லை"- அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சார்ல்ஸின் நிகழ்வில் கோசமெழுப்பிய பெண் செனெட்டர்
'நீங்கள் எங்கள் அரசர் அல்ல' - பிரிட்டன் அரசர் சார்ல்ஸை நோக்கி கூச்சலிட்ட ஆஸ்திரேலிய செனட்டர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, செனட்டர் லிடியா தோர்ப் கட்டுரை தகவல் எழுதியவர், கேட்டி வாட்சன் மற்றும் டேனிலா ரெல்ஃப் பதவி, பிபிசிக்காக 22 அக்டோபர் 2024, 11:42 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிட்டன் அரசர் சார்ல்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தின் இரண்டாம் நாளில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய பின்னர் செனட்டர் ஒருவர் அரசரை கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசர் சார்ல்ஸின் உரையை தொடர்ந்து, ஆஸ்திரேலிய பெண் செனட்டரான லிடியா தோர்ப் என்பவர் `நீங்கள் எங்கள் அரசர் அல்ல’ என்று கூச்சலிட்டார். செனட்டர் லிடியா தோர்ப் ஒரு பழங்குடியின ஆஸ்திரேலியப் பெண், தலைநகர் கான்பெராவில் நடந்த விழாவில் சுமார் ஒரு நிமிடத்திற்கு அரசர் சார்லஸுக்கு எதிராக கூச்சலிட்டார். அதன் பின்னர் அவரை காவலர்கள் அழைத்து சென்றனர். "எங்கள் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்யப்பட்டது” என்று குறிப்பிட்டு கூச்சலிட்ட லிடியா, "இது உங்கள் நிலம் அல்ல, நீங்கள் எங்களின் அரசர் அல்ல" என்றார். ஆனால், நிகழ்வின் தொடக்கத்தில் மூத்த பழங்குடியினப் பெண் ஆன்டி வயலட் ஷெரிடன், அரசர் சார்ல்ஸ் மற்றும் ராணி கமிலாவை வரவேற்றார். அவர் லிடியாவின் எதிர்ப்பு "அவமரியாதை செயல். லிடியா எனக்காக பேசவில்லை" என்று கூறினார். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, 2022 செப்டம்பரில் பதவியேற்ற பிறகு, அரசர் சார்ல்ஸ் முதல்முறையாக ஆஸ்திரேலியா வந்துள்ளார் திங்கட்கிழமை ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மன்னர் சார்லஸ் உரை நிகழ்த்தினார். அவர் வெள்ளை நிற சட்டை, நீல நிற டை மற்றும் சூட் அணிந்திருந்தார். அவரது கோட்டில் பல பதக்கங்கள் இருந்தன. கழுத்தில் ஒரு தங்க நெக்லஸ் அணிந்திருந்தார். அவருக்கு பின்னால் ஒரு ஆஸ்திரேலியக் கொடி வைக்கப்பட்டிருந்தது. 2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் பதவியேற்ற பிறகு, அரசர் சார்ல்ஸ் முதல்முறையாக ஆஸ்திரேலியா வந்துள்ளார். ஆஸ்திரேலியா ஒரு காமன்வெல்த் நாடு, இதில் பிரிட்டன் அரசர் தலைவராக இருக்கிறார். ஆனால் சமீபக் காலமாக அந்த பதவியில் இருந்து பிரிட்டன் அரசரை நீக்குவது குறித்து விவாதம் நடந்து வருகிறது. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பிராந்தியத்தைச் சேர்ந்த சுயேச்சையான செனட்டர் லிடியா தோர்ப், ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் அதன் பழங்குடி மக்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்தவர்களில் முக்கியமான நபர். நியூசிலாந்து மற்றும் பிற முன்னாள் பிரிட்டன் காலனிகளைப் போலல்லாமல், ஆஸ்திரேலியாவில் பழங்குடி மக்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. பல பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஜலசந்தி தீவு மக்கள் தங்கள் இறையாண்மையையோ அல்லது நிலங்களையோ பிரிட்டன் மகுடத்திற்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்கவில்லை என்று கூறுகின்றனர். அரசருக்கு எதிராக கூச்சலிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்த பின்னர் பிபிசியிடம் பேசிய லிடியா தோர்ப் "அரசருக்கு நான் தெளிவான செய்தியை அனுப்ப விரும்புகிறேன்” என்று கூறினார். "இறையாண்மையாக இருக்க, நீங்கள் இந்த நிலத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். அவர் இந்த நாட்டைச் சேர்ந்தவர் அல்ல," என்று அவர் மேலும் கூறினார். பழங்குடி மக்களுடன் சமாதான உடன்படிக்கை பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்திற்கு அரசர் அறிவுறுத்த வேண்டும் என்றும் லிடியா விளக்கினார். "எங்களால் அந்த செயல்முறையை வழிநடத்த முடியும், அதைச் செய்ய முடியும், ஒரு சிறந்த நாடாக இருக்க முடியும் . ஆனால் ஒருபோதும் காலனித்துவத்திற்கு தலைவணங்க முடியாது. அரசர் குறிப்பிட்ட அவரின் மூதாதையர்கள், இனப் படுகொலைக்கு காரணமானவர்கள்” என்று அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் அரசர் சார்ல்ஸ் உரையாற்றிய நிகழ்வில் பங்கேற்ற லிடியா, பாரம்பரிய தோல் ஆடையை அணிந்திருந்தார், மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் ஒரு "காலனித்துவவாதி" என்று விமர்சித்தார். அவர் 2022 ஆம் ஆண்டு செனட்டராக பதவியேற்ற போது சொன்ன அரசியலமைப்பு உறுதிமொழியை மீண்டும் கூறினார். மற்றவர்களை ஒப்பிடுகையில் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் மோசமான சுகாதார சேவைகள், வசதியற்ற வாழ்க்கை, தரமற்ற கல்வி சேவை ஆகிய ஏற்றத்தாழ்வுகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது பற்றி நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, நாடாளுமன்றத்தில் அரசர் சார்ல்ஸ் உரையாற்றிய நிகழ்வில் பங்கேற்ற லிடியா, பாரம்பரிய தோல் ஆடையை அணிந்திருந்தார் அரசர் சார்ல்ஸுக்கு சில இடங்களில் எதிர்ப்பு இருந்த போதிலும், அரச குடும்ப உறுப்பினர்களைப் பார்த்து பலர் மகிழ்ச்சியடைந்தனர். மக்கள் நாடாளுமன்ற மாளிகைக்கு வெளியே காலை முழுவதும் வெயிலை பொருட்படுத்தாமல் வரிசையாக நின்று கொண்டு ஆஸ்திரேலிய கொடிகளை அசைத்தனர். "போன முறை ஹாரி மற்றும் மேகன் கடைசியாக இங்கு வந்திருந்தபோது அவர்களை நான் பார்த்தேன். மிகவும் உற்சாகமாக உணர்ந்தேன்” என்று 20 வயதான ஜேமி கார்பாஸ் கூறினார். "திங்களன்று அரச தம்பதியினர் நகரத்திற்கு வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என் கருத்துப்படி, அரசக் குடும்பத்தினர் ஆஸ்திரேலிய கலாசாரத்தின் ஒரு பகுதி. அவர்கள் எங்கள் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்" என்றார் அவர். இதற்கிடையில், ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் அமெரிக்க-ஆஸ்திரேலிய மாணவர் சிஜே.ஆடம்ஸ் கூறுகையில் "அவர் பிரிட்டன் சாம்ராஜ்யத்தின் தலைவர், அவர் கான்பெராவில் இருக்கும் போது உங்களுக்கு கிடைக்கும் எந்த வாய்ப்பையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்." என்றார். நாடாளுமன்ற கட்டடத்திற்கு முன்பாக உள்ள பூங்காவில் குறைந்த எண்ணிக்கையிலான எதிர்ப்பாளர்கள் ஒன்றுகூடியிருந்தனர். படக்குறிப்பு, ஆஸ்திரேலியக் கொடிகளை ஏந்தியபடி நிற்கும் பெண்கள் கான்பெராவிற்கு அரசர் வருகை தருகையில், ஆஸ்திரேலியாவின் பழங்குடி மக்களுடனான வரலாற்றை ஞாபகப்படுத்தும், தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டது தான். ஆனால் லிடியாவின் செயல், அரச தம்பதியர் எதிர்ப்புகளை நேரடியாக எதிர்கொள்ளும் சூழலை ஏற்ப்படுத்தியது. அரச தம்பதியர் திங்கட்கிழமை கான்பெராவிற்கு வந்து சேர்ந்தனர், அவர்களை அரசியல் தலைவர்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் உள்ளூர் பிரதிநிதியான நுன்வாலின் மூத்த பெண் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் வரவேற்றனர். கான்பெராவில் உள்ள நாடாளுமன்ற மாளிகையின் கிரேட் ஹாலில் அவர்களுக்கு டிஜெரிடூ இசைக்கருவி முழங்க பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசர் பழங்குடி சமூகங்களைப் பற்றியும் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டதைப் பற்றியும் பேசினார். "தனது சொந்த அனுபவம் இந்த பாரம்பரிய அறிவால் வடிவமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டது" என்று கூறினார். "ஆஸ்திரேலியாவிற்கு எனது பல பயணங்களின் போது, நல்லிணக்கத்தை நோக்கிய நாட்டின் நீண்ட, கடினமான பயணத்தை வழிநடத்திய தைரியத்தையும் நம்பிக்கையையும் நான் கண்டேன்" என்று அவர் பாராட்டினார். இவ்வாறு பேசி முடித்துவிட்டு அவர் உட்கார்ந்ததும், லிடியாவின் எதிர்ப்புக் குரல் கூட்டத்தில் ஒலித்தது. லிடியா இவ்வாறு செய்ததை சில பழங்குடி நிர்வாகிகள் விரும்பவில்லை. பழங்குடியின மூத்த பெண் ஷெரிடன், லிடியாவின் செயலை விமர்சித்தார். "இது அவமரியாதையான செயல். இதுபோன்ற விஷயங்களைச் சொல்வதற்கான இடம் இது இல்லை. லிடியா எனக்காக பேசவில்லை," என்று ஷெரிடன் கூறினார். பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு, அரச தம்பதியர் கான்பெராவில் உள்ள அரசு இல்லத்தின் மைதானத்தில் மரங்களை நட்டனர் "அரசருக்கு உடல்நிலை சரியில்லை. அவருக்கு கீமோதெரபி செய்யப்பட்டு வருகிறது. அவர் இதுபோன்ற சூழலை சந்தித்திருக்கக் கூடாது. அவர் இங்கு வந்ததை நிச்சயமாகப் பாராட்டுகிறேன். அவர் ஆஸ்திரேலியா வருவது கடைசியாகக் கூட இருக்கலாம். அவரை பார்க்கதான் மக்கள் கூடியுள்ளனர்” என்றார். பக்கிங்ஹாம் அரண்மனை லிடியா தோர்ப்பின் எதிர்ப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. மாறாக கான்பெராவில் அரச தம்பதியைப் பார்க்க வந்த கூட்டத்தின் மீது கவனம் செலுத்தியது. அரண்மனை வட்டாரத்தின் கூற்றுப்படி, அரச தம்பதியர் தங்களுக்கு ஆதரவாக வந்த பல ஆயிரக்கணக்கான மக்களால் ஈர்க்கப்பட்டனர். நெகிழ்ச்சியடைந்தனர். காமன்வெல்த் நாடான ஆஸ்திரேலியாவில் பிரிட்டன் மன்னர் அரச தலைவராக இருக்கிறார். பல ஆண்டுகளாக, ஆஸ்திரேலியா முடியாட்சியைக் கைவிட்டு குடியரசாக வேண்டும் என்று விவாதம் ஆங்காங்கே எழுந்து வருகிறது. 1999 ஆம் ஆண்டு, இந்தக் கேள்வி பொது வாக்கெடுப்பில் வைக்கப்பட்டது. பலரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் தோல்வியடைந்தது. கருத்துக் கணிப்புகளின் படி, ஆஸ்திரேலியாவில் சுதந்திரம் மற்றும் குடியரசாக மாறுவதற்கான இயக்கத்திற்கு ஆதரவு அதிகரித்துள்ளது. செனட்டர் லிடியா எதிர்ப்பு தெரிவிப்பதற்கு முன்னதாக அரசருடன் கைகுலுக்கிய நாட்டின் தற்போதைய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் நீண்ட காலமாக குடியரசுக் கட்சியில் இருந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் அரசராக பதவியேற்ற பிறகு சார்ல்ஸின் முதல் ஆஸ்திரேலிய பயணம் இது. புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருப்பதால், அவரது உடல்நிலை காரணமாக கடந்த அரச வருகைகளை விட இந்த சுற்றுப்பயணம் குறுகியதாக இருந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwylygkrr9no
-
அரிசி விலை குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு
அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். அரிசி வியாபாரிகள் மற்றும் விவசாய திணைக்கள (Department of Agriculture) அதிகரரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, ஒழுங்கமைக்கப்பட்ட விவசாய திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். நெல் கொள்வனவு மேலும் நிர்ணய விலை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் அரிசியின் விலையை மாற்றுவது நியாயமல்ல எனவும் குறிப்பிட்டார். விவசாயிகளிடம் இருந்து அரிசியை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்குவதற்கும் முறையான பொறிமுறை அவசியம் என தெரிவித்தார். அரிசியின் விலை செயற்கையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், நீண்டகால உத்தரவாத விலைகளை நடைமுறைப்படுத்தாததன் காரணமாகவே இந்த விலை ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். உள்ளீட்டு விலைகளை குறைத்தல் மேலும் அரிசியை சேகரித்து வைக்கும் மூன்றாம் தரப்பினர் குறித்து கவனம் செலுத்துமாறு விவசாய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் நிதி நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக உள்ளீட்டு விலைகளை குறைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க வர்த்தகர்கள் மற்றும் விவசாய அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/no-change-in-the-rice-fixed-price-anura-announce-1729594957#google_vignette
-
லலித்-குகன் காணாமலாக்கப்பட்ட விவகாரம் - நீதிமன்றத்தில் ஆஜராக தயார் – கோட்டாபய
லலித்-குகன் காணாமலாக்கப்பட்ட விவகாரம் - யாழ்ப்பாண நீதிமன்றம் தவிர வேறு எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக தயார் – கோட்டாபய லலித், குகன் காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்றம் தவிர வேறு எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணி ரொமேஸ் சில்வா ஊடாக இன்று உயர்நீதிமன்றத்திற்கு இதனை தெரிவித்துள்ளார். மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னைய தீர்ப்பினை சவாலுக்கு உட்படுத்தும் விதத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையே கோட்டாபயவின் சட்டத்தரணி தனது கட்சிக்காரரின் பாதுகாப்பு கரிசனை குறித்து தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196875
-
விண்ணைத் தொடும் தேங்காய் விலை
தேங்காய் விலை அதிகரிப்பு: அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம் தேங்காய் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் சுற்றுச்சூழல், வனவிலங்கு மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சசு நடமாடும் தேங்காய் விற்பனை வேலை திட்டத்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் படி, குறித்த திட்டம் நாளை முதல் (ஒக்டோபர் 23) நடைமுறைப்படுத்தப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டம் கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மற்றும் கடுவெல ஆகிய இடங்களில் நடைமுறைப்படுத்தபடவுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேங்காய் விலை இதேவேளை, தேங்காய் விற்பனை வேலைத்திட்டத்தில் கொழும்பு வெலிக்கடை, கிருலப்பனை மற்றும் நிதி அமைச்சினைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்கள் ஊடாக தேங்காய் கொள்வனவு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் போது, ரூ.100-120 வரையிலான தரமான தேங்காய்களை வாங்குவதற்கான வாய்ப்பு கொள்வனவாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. https://ibctamil.com/article/govt-to-control-rising-coconut-prices-1729606071#google_vignette
-
இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் ரணில் பிரதிவாதி
இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2022 இல் சோசலிஸ மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டங்களை கலைப்பதற்கு பொலிஸார் தாக்குதல் நடத்தியமை குறித்த மனுவிலேயே முன்னாள் ஜனாதிபதியை பிரதிவாதியாக சேர்ப்பதற்கு உயர்நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது. இந்த மனுக்களை இன்று ஆராய்ந்தவேளை சட்டத்தரணிகள் விடுத்த வேண்டுகோள்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் ரணில்விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/196861
-
பங்களாதேஷ் - தென்ஆபிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்
29 வயதில் 300 விக்கெட்டுகள் டெஸ்ட் போட்டிகளில் தென்னாபிரிக்க அணிக்காக ககிசோ ரபாடா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்க அணி பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய பங்களாதேஷ் அணி, தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 106 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த போட்டியில் ககிசோ ரபாடா அவரது முதல் விக்கெட்டினை கைப்பற்றியபோது, தென்னாபிரிக்க அணிக்காக புதிய சாதனை ஒன்றை படைத்தார். தென்னாபிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார் ககிசோ ரபாடா. தென்னாப்பிரிக்க அணிக்காக 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 6-வது வீரராக ரபாடா மாறியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்காக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள் டேல் ஸ்டெயின் – 439 விக்கெட்டுகள் (93 போட்டிகளில்) ஷான் பொல்லக் – 421 விக்கெட்டுகள் (108 போட்டிகளில்) மக்காயா நிட்னி – 390 விக்கெட்டுகள் (101 போட்டிகளில்) ஆலன் டொனால்டு – 330 விக்கெட்டுகள் (72 போட்டிகளில்) மோர்னே மோர்க்கல் – 309 விக்கெட்டுகள் (86 போட்டிகளில்) ககிசோ ரபாடா – 303* விக்கெட்டுகள் (65 போட்டிகளில்) தென்னாப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 3-வது வீரர் என்ற பெருமையையும் ககிசோ ரபாடா பெற்றுள்ளார். அவர் 65 போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளார். https://thinakkural.lk/article/310986
-
மாகாண சபை பொறிமுறை குறித்து ஆளுநர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு
மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பரிந்துரையொன்றைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். மாகாண சபைகளின் கீழ் உள்ள சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதோடு அதற்குச் சாதகமான தீர்வுகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. தற்போதைய நிலைமாறு காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை இலகுபடுத்துவதற்கு மாகாண சபைகளினால் வழங்கக் கூடிய உச்ச சேவையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) முற்பகல் நடைபெற்ற மாகாண ஆளுநர்களுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். மக்களின் வாழ்க்கையை இலகுவாக்கும் வகையில் மாகாண சபைகளினால் சாத்தியமான அனைத்து பொருளாதார மற்றும் சமூக தலையீடுகளையும் மேற்கொள்ளுமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். புதிய அரசியல் கலாசாரமொன்றை ஆரம்பிப்பதற்காகக் கிடைத்துள்ள மக்கள் ஆணையை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, மக்களின் எதிர்பார்ப்பை பாதிக்காத வகையில் செயற்படுமாறும் வலியுறுத்தினார். அரசாங்க சொத்துக்களை பயன்படுத்துவதில் முன்னைய மோசமான முன்னுதாரணங்களை ஒதுக்கி தரமான அரச சேவைக்கு தம்மை அர்ப்பணிக்குமாறு ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இதன்போது வடக்கு கிழக்கு காணிகள் தொடர்பாகவும் மாகாண சபை நிதிப் பயன்பாடு தொடர்பிலும் ஆழமாக ஆராயப்பட்டது. கந்தளாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட காணி தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர, தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிஸ்சந்திர, மத்திய மாகாண ஆளுநர் சரத் பண்டார சமரசிங்க அபயகோன் மற்றும் வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த குமார விமலசிரி ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/196843
-
பாராளுமன்ற பொதுத் தேர்தல் செய்திகள் - 2024
நவம்பர் 21இல் பாராளுமன்றம் கூடும் போது 225 உறுப்பினர்களின் முழுப் பிரதிநிதித்துவமும் இருக்காது பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் அரசியல் கட்சிகள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்குப் பிரதிநிதிகளை நியமிப்பதை தாமதப்படுத்தினால், நவம்பர் 21 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது 225 உறுப்பினர்களின் முழுப் பிரதிநிதித்துவமும் இருக்காது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் 15 அல்லது 16 ஆம் திகதிகளில் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகும் எனவும், பெற்ற வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொரு கட்சி மற்றும் சுயேச்சைக் குழுவிற்கும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையாளர் நாயகம் ரத்நாயக்க, தேர்தல் திகதிக்கும் பாராளுமன்றம் கூடும் திகதிக்கும் இடையில் சுமார் ஒரு வாரகாலம் உள்ளதால் எதிர்வரும் நவம்பர் 18 அல்லது 19 ஆம் திகதிகளில் மக்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிட வேண்டும். அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்கள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு பெயர்களை பரிந்துரைப்பதில் தாமதம் செய்தால், பாராளுமன்றம் கூடும் திகதிக்கு முன்னர் இந்தப் பெயர்களை வர்த்தமானியில் வெளியிட முடியாது. இதனால், நவம்பர் 21ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் போது 225 உறுப்பினர்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட மாட்டார்கள். முந்தைய பாராளுமன்ற கூட்டத்தொடரிலும், முதல் கூட்டத்தில் அனைத்து எம்.பி.க்களின் முழு பிரதிநிதித்துவம் இல்லை. கணிசமான காலதாமதத்தின் பின்னரே ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஒதுக்கப்பட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில், தேசியப் பட்டியலில் பெயர் உள்ளவர் அல்லது தேர்தலில் போட்டியிட்ட ஒருவரை மட்டுமே தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்க முடியும். ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் தேசியப்பட்டியலில் இல்லாவிட்டாலும், அவர் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு வர அனுமதித்திருந்தார். தேர்தலில் போட்டியிடாத அல்லது தேசியப்பட்டியலில் பெயர் இல்லாத ஒருவர் முதலில் பொதுப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஒருவர் இராஜினாமா செய்ததன் காரணமாக ஒரு ஆசனம் வெற்றிடமானால் மட்டுமே எம்.பி.யாக நியமிக்க முடியும். https://thinakkural.lk/article/310979
-
ரஷ்யாவில் 12 வயது மகள் வரைந்த ஓவியத்தால் சிறையிலிருந்த தந்தை விடுதலை - என்ன நடந்தது?
கட்டுரை தகவல் எழுதியவர், நேதன் வில்லியம்ஸ் பதவி, பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு ரஷ்யச் சிறுமி, ரஷ்யா யுக்ரேன் மீது போர் தொடுப்பதை எதிர்க்கும், சமாதானச் செய்தியுடனான ஒரு ஓவியத்தை வரைந்தார். அதற்கு அவரது தந்தை சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் உலகளாவிய செய்தியானது. இப்போது அந்தத் தந்தை, ‘தண்டனை காலனி’ என்றழைக்கப்படும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். அலெக்ஸி மொஸ்கலேவ் என்ற அந்த நபரின் மகள் மாஷா வரைந்த அந்த ஓவியத்தில் ‘போர் வேண்டாம்’ என்றும் ‘யுக்ரேன் புகழ் ஓங்குக’ என்றும் எழுதப்பட்டிருந்தது. இந்த ஓவியத்தைக் குறித்து 2022-ஆம் ஆண்டு காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. அதன்பின்னர், மொஸ்கலேவ் மீது சமூக ஊடகங்களில் ரஷ்ய ராணுவத்தைப் பலமுறை விமர்சித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம், ராணுவத்தை இழிவுபடுத்தியதற்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அக்டோபர் 15-ஆம் தேதி இணையத்தில் சில காட்சிகள் பகிரப்பட்டன. அவற்றில் ரஷ்யாவின் துலா பிராந்தியத்தில் உள்ள ஒரு தண்டனைக் காலனியை (சிறை) விட்டு வெளியேறிய பிறகு, சிறைச் சீருடையில் இருக்கும் மொஸ்கலேவ் தனது, மகளைத் தழுவிக்கொள்வதைக் காட்டுகிறது. ‘அது ஒரு சித்திரவதைக் கூடம்’ மோஸ்கலேவ் தனது இரண்டு மாதச் சிறை அனுபவத்தைக் குறித்து விவரித்தார். "அது ஒரு சித்திரவதைக் கூடம். அது சித்திரவதைக் கூடம்தான். எனது அறை இரண்டு மீட்டர் நீளமும் ஒரு மீட்டர் அகலமும் கொண்டது. உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?” என்றார். "முதலில், நான் எனது அறையில் தனியாக அமர்ந்திருந்தேன். பின்னர் அவர்கள் இரண்டாவது நபரை உள்ளே அனுப்பினார்கள். நாங்கள் இருவரும் இரண்டு மீட்டருக்கு ஒரு மீட்டர் அளவுள்ள ஒரு செல்லில் அமர்ந்திருந்தோம்,” என்கிறார் மோஸ்கலேவ். "தரை அழுக்கடைந்திருந்தது. எங்கும் எலிகள் இருந்தன. சாக்கடைகளில் இருந்தும் மற்ற எல்லா இடங்களில் இருந்தும் பெரிய எலிகள் வந்தன," என்றார் அவர். இதுகுறித்து ரஷ்யாவின் மத்திய சிறைத் துறை கருத்து தெரிவிக்கவில்லை. ராய்ட்டர்ஸ் செய்தி முகமை விளக்கம் கேட்டதற்கும் பதிலளிக்கவில்லை. பட மூலாதாரம்,OLGA PODOLSKAYA படக்குறிப்பு, மாஷா வரைந்த ஓவியத்தில் ‘யுக்ரேன் புகழ் ஓங்குக’ என்றும், ‘போர் வேண்டாம்’ என்றும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன 12 வயதுப் பெண் வரைந்த படம் 2022-ஆம் ஆண்டு, 12 வயதான மாஷா, யுக்ரேன் கொடியை வரைந்து ‘யுக்ரேன் புகழ் ஓங்குக’ என்றும், ரஷ்ய கொடி மற்றும் ராக்கெட்டுகளை வரைந்து ‘போர் வேண்டாம்’ என்றும் எழுதியிருந்தார். அப்போது துவங்கின இந்தக் குடும்பத்தின் பிரச்னைகள். தனது மகள் வரைந்த ஓவியத்தைப் பற்றி அவரது பள்ளி காவல்துறையிடம் புகார் அளித்ததாக மொஸ்கலேவ் கூறினார். அதன் பிறகு, போருக்கு எதிரான அவர் சமூக ஊடகத்தில் ஒரு பதிவு இட்டதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், அந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவரது வீட்டில் சோதனை செய்யப்பட்டது. மேலும், அதற்கு முன்னரே இதேபோன்ற மற்றொரு வழக்கில் அவருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அதனால் அவர் மீது மீண்டும் ரஷ்யாவின் குற்றவியல் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டது. அதிகாரிகள், மாஷாவை அவரது தந்தையிடமிருந்து பிரித்து ஒரு குழந்தைகள் இல்லத்தில் சேர்த்தனர். பின்னர் பிரிந்த போன அவரது தாயிடம் ஒப்படைத்தனர். மொஸ்கலேவுக்கு 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை அறிவிக்கப்படும்போது அவர் ஆஜராகவில்லை. வீட்டுக்காவலில் இருந்து அவர் தப்பி அண்டை நாடான பெலாரூஸுக்கு சென்றதாக OVD-Info தெரிவித்துள்ளது. பின்னர், அவர் கைது செய்யப்பட்டு, அடுத்த மாதம் ரஷ்யாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டார், என்று அக்குழு மேலும் கூறியது. மொஸ்கலேவ் வசிக்கும் பகுதியின் கவுன்சிலர் ஓல்கா பொடோல்ஸ்கயா கடந்த ஆண்டு பிபிசியிடம் பேசினார். அப்போது அவர் மொஸ்கலேவின் கைது குறித்து ‘அதிர்ச்சியில்’ இருப்பதாகக் கூறினார். "உங்கள் கருத்தை வெளிப்படுத்தியதற்காகச் சிறை தண்டனை விதிக்கப்படுவது என்பது ஒரு கொடுமையான விஷயம். இரண்டு வருட சிறைத்தண்டனை என்பது ஒரு கொடுங்கனவு." பட மூலாதாரம்,OVD-INFO படக்குறிப்பு, ரஷ்யாவின் துலா பிராந்தியத்தில் உள்ள ஒரு தண்டனைக் காலனியை (சிறை) விட்டு வெளியேறிய பிறகு, சிறைச் சீருடையில் இருக்கும் அலெக்ஸி மொஸ்கலேவ் ரஷ்யாவில் ஒடுக்கப்படும் கருத்துச் சுதந்திரம் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் யுக்ரேன் மீது ரஷ்யா முழு அளவிலான போரை துவங்கியது. அப்போதிருந்து ரஷ்யாவில் மனித உரிமைகள் மோசமடைந்து வருகின்றன, என்று ஐ.நா-வின் ஒரு சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. மொஸ்கலேவின் வழக்கு இந்தப் பின்னணியில்தான் நிகழ்ந்திருக்கிறது. அந்த அறிக்கையில் காவல்துறையின் வன்முறை, சுதந்திர ஊடகங்கள் மீதான பரவலான அடக்குமுறை, மற்றும் புதிய சட்டங்களைப் பயன்படுத்தி ரஷ்ய அரசை விமர்சிப்பவர்களை ஒடுக்குவது ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அந்த அறிக்கையில் ஆர்டியோம் கமர்டின் என்பவரது வழக்கும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பொது இடத்தில் போர் எதிர்ப்புக் கவிதையைப் படித்ததற்காக அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரது செயல் ‘வெறுப்பைத் தூண்டுவதாக’ அதிகாரிகளால் கருதப்பட்டது. பள்ளிப் பாடங்கள் மூலம் யுக்ரேன் மோதல் குறித்த அரசாங்கத்தின் கருத்துக்களை குழந்தைகளிடையே பரப்புவதற்கு ரஷ்ய அரசாங்கம் முயல்வதாக அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது. இந்தப் பாடங்கள் ‘முக்கியமான உரையாடல்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. "அத்தகைய வகுப்புகளில் கலந்துகொள்ள மறுக்கும் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அழுத்தம் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்," என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. https://www.bbc.com/tamil/articles/c1l4lzplz20o
-
கடவுச் சீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது
இனி கடவுச்சீட்டு தட்டுப்பாடு ஏற்படாது – அரசாங்கம் (எம்.மனோசித்ரா) கடவுச்சீட்டு பிரச்சினைக்கு படிப்படியாக தீர்வு வழங்கப்படவுள்ளது. இன்று 42,000 கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப்பெறவுள்ளதோடு, நவம்பரில் மேலும் ஒரு இலட்சம் கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப்பெறவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (22) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கடவுச்சீட்டு பிரச்சினை கடந்த அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டதாகும். அந்த அரசாங்கத்தால் விலைமனு வழங்கப்பட்ட நிறுவனம் உரிய நேரத்தில் கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கவில்லை. எவ்வாறிருப்பினும் நாம் அந்த பிரச்சினைக்கு தீர்வினை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந்த அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட தவறை சரி செய்வதற்காக நாம் தற்போது பாடுபட்டு வருகின்றோம். கடந்த சனிக்கிழமை 7,500 கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப்பபெற்றன. இன்று புதன்கிழமை 42,000 கடவுசீட்டுக்கள் கிடைக்கப்பெறவுள்ளன. எனவே மக்கள் கலவரமடையத் தேவையில்லை. தற்போது கடவச்சீட்டுக்கு தட்டுப்பாடு இல்லை. இவ்வாரத்துக்குள் 50,000 கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப்பெறும். நவம்பரில் மேலும் ஒரு இலட்சம் கடவுச்சீட்டுக்கள் கொண்டு வரப்படவுள்ளன. எனவே மக்கள் அவசரப்பட்டு கொழும்புக்கு வர வேண்டிய தேவை இல்லை. மீண்டும் கடவுச்சீட்டு தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்றார். https://www.virakesari.lk/article/196867
-
சூரிய குடும்பத்தைக் காட்டிலும் மிகப்பெரிய கருந்துளைகள் கண்டுபிடிப்பு - அவை எப்படி உருவாகின்றன என்று தெரியுமா?
பட மூலாதாரம்,NASA GODDARD கட்டுரை தகவல் எழுதியவர், ஜானத்தன் ஓ கல்லகான் பதவி, பிபிசிக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் விண்வெளியில் உள்ள நட்சத்திர மண்டலங்களுக்கு நடுவே மிகப்பெரிய கருந்துளைகள் உள்ளன. ஆனால், இப்போது அவை அனைத்தையும் சிறிதாகத் தோன்றவைக்கும் அளவுக்கு இன்னும் பெரிய கருந்துளைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவை போன்ற மிகப் பிரமாண்டமான கருந்துளைகள் இருண்ட வானில் இன்னும் இருக்கக் கூடுமா? நம்முடைய நட்சத்திர மண்டலத்தின் மையத்தில் மிகப்பெரிய கருந்துளை உள்ளது. அது நமது சூரியன் அளவுக்கு அகலமானது. ஆனால் அதிக கனம் கொண்டது. இதன் பாரிய ஈர்ப்பு விசை அதனைச் சுற்றியுள்ள விண்மீன் தூசிகளையும், வாயுக்களையும் தனக்குள் இழுத்துக் கொள்கிறது. பால்வெளி நட்சத்திர மண்டலத்தின் மையத்தில் அமைந்திருக்கும் இந்தப் பெரும் கருந்துளை தான் அதன் இதயம். இதுதான் நம்முடைய நட்சத்திர மண்டலத்தின் பிறப்பையும், அதன் 1,300 கோடி ஆண்டுகால வரலாற்றையும் நமது சூரியக் குடும்பத்தின் தோற்றத்தையும் இயக்குகிறது. சில நேரங்களில், ஏதேனும் நட்சத்திரம் அதன் அருகில் சுற்றிச் செல்லலாம். கண்ணிமைக்கும் நேரத்தில் அது உடைந்து, அதன் இருப்பின் அடையாளமே இல்லாமல் மறைந்துவிடும். கருந்துளைகள் இயற்கையின் அச்சுறுத்தும் அம்சங்கள். மிகப் பிரமாண்டமான அளவில் ஆக்கவும் அழிக்கவும் வல்லவை. கிட்டத்தட்ட எல்லா பெரிய நட்சத்திர மண்டலமும் தன் மையத்தில் ஒரு பெரும் கருந்துளையைக் கொண்டுள்ளது. பால்வெளி மண்டலம் என்றழைக்கப்படும் நமது நட்சத்திர மண்டலத்தின் மையத்தில் இருக்கும் கருந்துளை ‘சஜிடேரியஸ் ஏ*’ (Sagittarius A* - ‘Sagittarius a star’) என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் எடை குறைந்தது. கடந்த 10 ஆண்டுகளில் ஆராய்ச்சியாளர்கள் 'அல்ட்ராமாஸிவ் ப்ளாக் ஹோல்ஸ்' என்று அழைக்கப்படும் மிகப் பிரமாண்டமான கருந்துளைகள் உட்பட பல கருந்துளைகளைக் கண்டறிந்துள்ளனர். சில கருந்துளைகள் சஜிடேரியஸ் ஏ*-வைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு பெரியவை. சில நம்முடைய சூரியக் குடும்பத்தைக் காட்டிலும் மிகப்பெரியவை. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி தற்போது வெளியிட்டுள்ள காட்சிகள், காலம் துவங்கும் போது இத்தகைய பிரம்மாண்டமான கருந்துளைகள் எவ்வாறு தோன்றின என்பதைப் பற்றி அறிய புதிய தகவல்களை வழங்குகிறது. ஆனால் இவை எங்கே இருந்து வந்தன? இவை இன்னும் எவ்வளவு பெரிதாக இருக்கக்கூடும் என்பவையெல்லாம் புரியாத புதிராகவே உள்ளன. மிகப்பெரிய கருந்துளை எது? கருந்துளைகளின் அளவை மதிப்பிடுவது (அதன் நேரடி வரையறையின் படி கணிக்க இயலாது) அவ்வளவு எளிமையானது அல்ல. ஆனால் மிகப்பெரிய கருந்துளைகள் பற்றி நாம் அறிவோம். இதுவரை கண்டறியப்பட்ட கருந்துளைகளில் மிகவும் பெரியது டான் 618 ஆகும். புவியிலிருந்து 18 பில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் அது அமைந்துள்ளது. சூரியனைக்காட்டிலும் 66 பில்லியன் எடை கொண்டது இது. சூரியனுக்கும் நெப்டியூனுக்கும் இடையே உள்ள தூரத்தைப் போன்று 40 மடங்கு அகலம் கொண்டது. நம்முடைய பால்வெளி குழுமங்களின் மத்தியில் ஹோம் 15ஏ என்ற கருந்துளை உள்ளது. அதனுடைய எடை சூரியனைப் போன்று 44 பில்லியன் அதிகமாக இருக்கும் என்றும் அதன் தூரம் நெப்டியூனுக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தைப் போன்று 30 மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் சமீபத்தில் கணிக்கப்பட்டுள்ளது. இவை மறுக்க முடியாத அளவுக்கு மிகப்பெரியது. ஆனால் அதனைக் காட்டிலும் மிகப்பெரிய கருந்துளைகள் அங்கே இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இங்கிலாந்தின் நியூகாஸில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கண்காணிப்பு அண்டவியல் நிபுணரான ஜேம்ஸ் நைட்டிங்கேல், "கோட்பாடுகள் என்ற கோணத்தில் பார்த்தால் கருந்துளையின் அளவு இவ்வளவுதான் என்று மதிப்பிட இயலாது," என்று கூறுகிறார். அவர் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சூரியனைப் போன்று 33 பில்லியன் அதிக எடை கொண்ட கருந்துளையை கண்டுபிடித்தவர். நாம் இது நாள் வரை அறிந்திருக்கும் கருந்துளைகள் பல்வேறு அளவைக் கொண்டவை. மிகச்சிறிய கருந்துளைகள் ஒரு அணுவின் அளவிற்கு சிறியதாக இருக்கும். நட்சத்திரங்கள் அழிந்து உருவாகும் ஸ்டெல்லர் மாஸ் கருந்துளைகள் அதிக பரிட்சயமானவை. இவை சூரியனின் எடையைப் போல் மூன்று மடங்கு முதல் 50 மடங்கு வரை பெரியவையாக இருக்கலாம். ஆனால் அவை 'லண்டன் அளவுடைய கருந்துளைகள்' என்ற பொருள்படுத்தப்படுகிறது என்று கூறுகிறார் கனடாவில் உள்ள மாண்ட்ரியால் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஜூலி ஹ்லாவசெக் லாரோண்டோ. அவர் அங்கு விண்வெளி இயற்பியல் ஆராய்ச்சியாளராக பணியாற்றுகிறார். இதற்கு அடுத்த வகை கருந்துளைகள் 'இண்டர்மீடியேட் மாஸ்' கருந்துளைகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை சூரியனைக்காட்டிலும் 50 ஆயிரம் மடங்கு எடை கொண்டவை. வியாழன் கோளின் அளவுக்கு விரிந்து காணப்படுகின்றன. அடுத்தது 'சூப்பர்மாஸிவ்' கருந்துளைகள். அவை சூரியனைக் காட்டிலும் பல மில்லியன், பில்லியன் எடைக் கொண்ட கருந்துளைகள் ஆகும். பட மூலாதாரம்,EHT COLLABORATION படக்குறிப்பு, பால்வீதியின் மையத்தில் அமைந்துள்ள கருந்துளையை சுற்றிக் கொண்டிருக்கும் வாயு வளை அல்ட்ராமாஸிவ் கருந்துளைகள் என்றால் என்ன? 'அல்ட்ராமாஸிவ்' கருந்துளைகளுக்கான வரையறை ஏதும் இதுவரை இல்லை என்ற போதும் அவை பொதுவாக சூரியனைக் காட்டிலும் 10 பில்லியன் அதிகம் எடையில் துவங்கும் என்ற கருத்தை பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர் என்கிறார் லாரோண்டோ. கருந்துளைகள் அவ்வளவு பெரியதாக மாறாது என்று கோட்பாட்டு அளவில் கூற இயலாது. ஒப்பீட்டளவில் பிரஞ்சத்தின் இளம்வயது என்பது 13.7 பில்லியன் ஆண்டுகள் என்பதையும் நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம் என்பதை கருத்தில் கொண்டால், அவற்றின் இருப்பானது மனித எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது. தன்னைச் சுற்றி இருக்கும் பொருட்களை ஈர்ப்பு விசையினால் உள்ளிழுத்துக் கொள்கிறது கருந்துளைகள். இதனை மேற்கோள்காட்டி பேசும் லாரோண்டோ, "இந்த பாரம்பரிய கருத்தாக்கத்தை கணக்கில் கொண்டால் அதிக எடையிலான கருந்துளைகள் உருவாவது சாத்தியமற்றது," என்கிறார். மக்கள் இதன் இருப்பை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் என்றும் அவர் கூறினார். கோட்பாடு அளவில், தொடர்ச்சியாக கருந்துளைக்குள் அதனைச் சுற்றியுள்ள வானியல் கூறுகள் சென்று கொண்டே இருக்கும் போது அது அளவில் பெரிதாகிக் கொண்டே இருக்கும். நடைமுறையில், பிரபஞ்சத்தின் வயது மற்றும் நாம் ஒரு கருந்துளை வளரும் விகிதமாக நாம் கருதும் விகிதம் கருந்துளைகளின் அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும். கோட்பாட்டளவில், காலம் கணக்கிடப்பட்ட நாளில் இருந்து கருந்துளைக்குள் நட்சத்திர கழிவுகளும் இதர வானியல் கூறுகளும் சென்று கொண்டே இருந்திருந்தால் இன்றைய தேதிக்கு அந்த கருந்துளையானது 270 பில்லியன் சோலார் எடை கொண்ட கருந்துளையாக அது மாறியிருக்க வேண்டும். ஆனால், கருந்துளைகள் அவ்வாறு வளரும் என்று யாரும் கருதவில்லை அதனால் தான் 'அல்ட்ராமாசிவ்' கருந்துளைகள் எனப்படும் பாரிய கருந்துளைகள் யாராலும் எதிர்பார்க்கப்படாத ஒன்றாக இருக்கிறது. இருப்பினும், சில ஆராய்ச்சியாளர்கள், சில கருந்துளைகள் எதிர்பார்த்ததை விட வேகமாக அதனைச் சுற்றியுள்ள பொருட்களை ஈர்ப்பு விசை மூலம் கிரகித்துக் கொண்டு, நவீன பிரபஞ்சத்தில் டிரில்லியன் சோலார் எடை கொண்ட கருந்துளைகளாக மாறியிருக்கலாம் என்று கருதுகின்றனர். மிகப் பெரிய கருந்துளைகள் என்ற முத்திரை குத்தப்பட்ட இவை, ஒரு ஒளி ஆண்டின் ஆரத்தைக் கொண்டிருக்க கூடும். ஆனால் அத்தகைய கூறுகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் சில நட்சத்திர மண்டலங்களின் மையங்களில் அவை மறைந்திருக்கலாம் என்ற கருத்தையும் நம்மால் நிராகரிக்க இயலாது. 2010களில் வானியல் ஆராய்ச்சியாளர்கள் முதல் 'அல்ட்ராமாசிவ்' கருந்துளைகளைக் கண்டறிந்தனர். பிறகு, 2023ம் ஆண்டில் நைட்டிங்கேல் மற்றும் அவருடைய குழு கண்டறிந்த கருந்துளை உட்பட கிட்டத்தட்ட 100 கருந்துளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வெகு தூரத்தில் உள்ள விண்மீன் மண்டலத்தில் கருந்துளையைச் சுற்றி ஒளி வளைந்து சென்றதன் விளைவாகவே இத்தகைய கருந்துளைகள் கண்டறியப்பட்டன. "இது மிகவும் தற்செயலான கண்டுபிடிப்பு" என்கிறார் நைட்டிங்கேல். "அவை பிரபஞ்ச வரலாற்றின் ஆரம்பத்தில் பிறந்து, பின்னர் மூர்க்கமாக அதனைச் சுற்றியுள்ள பொருட்களை விழுங்கியிருக்கக் கூடும்," என்கிறார் அவர். பட மூலாதாரம்,SLOAN DIGITAL SKY SURVEY படக்குறிப்பு, குவாசர் அருகே நிலை கொண்டிருக்கும் டான் 618 அல்ட்ராமாஸிவ் கருந்துளை கருந்துளைகள் உருவாக்கத்திற்கு பின்னால் இருக்கும் இயற்பியல் என்ன? கருந்துளைகளை அவற்றின் இயல்பின் காரணமாக நாம் நேரடியாகப் பார்க்க முடியாது. ஈவன்ட் ஹொரைசன் (Event Horizon) என்று அழைக்கப்படும் கருந்துளைகளின் எல்லையில், ஈர்ப்பு விசை மிகவும் தீவிரமாக இருக்கும். அதில் இருந்து எதுவும் தப்பிக்க இயலாது. ஒளியும் கூட. எனவே கருந்துளையால் ஈர்க்கப்படும் அதனைச் சுற்றியுள்ள பிரகாசமான பொருட்களின் மீது விழும் அதனின் நிழலைக் கொண்டே கருந்துளைகளைக் காண இயலும். இருப்பினும், ஒரு பால்வீதியைப் பார்த்து அதில் மத்திய கருந்துளையின் விளைவுகளைக் குறிப்பிடுவதன் மூலம் அவற்றின் இருப்பை நாம்மால் எளிமையாக யூகிக்க இயலும். கருந்துளையின் துருவங்களிலிருந்து வெளியேற்றப்படும் பலமிக்க ஒளிக்கற்றைகளை காண்பது மற்றொரு வழி. "இது போன்ற ஒளிக்கற்றைகளை அது எவ்வாறு உருவாக்குகிறது என்று நமக்கு தெரியாது. ஆனால் அவற்றால் இதனை செய்ய இயலும்," என்கிறார் லாரோண்டோ. ரேடியோ ஜெட்கள் என்று அழைக்கப்படும் இந்த ஒளிக்கற்றைகள் மில்லியன் ஒளி ஆண்டுகள் நீளத்தை கொண்டிருக்கலாம். கருந்துளைகள் சூடான வளையங்களையும் உருவாக்கும். அக்ரிஷன் டிஸ்க்குகள் (Accretion disks) என்று அழைக்கப்படும் இந்த வளையங்கள் கருந்துளைகளைச் சுற்றி சுழலும் பொருட்கள் கருந்துளைக்குள் இழுக்கப்படும் போது உருவாகுகின்றன. கருந்துளையைச் சுற்றி பொருட்கள் அபரிமிதமான ஈர்ப்பு விசையால், "ஒளியின் வேகத்தில்" வேகமாகச் சுழல்கிறது என்கிறார் லரோண்டோ. கருந்துளையை நோக்கி பொருட்கள் விழும் போது, எக்ஸ் கதிர்கள் வெளியிடப்படுகிறது. ஈவன்ட் ஹொரைசன் எனப்படும் அதன் எல்லைக்கு அப்பால் பொருட்கள் விழும். மேலும் அதில் இருந்து தப்பிக்க இயலாது என்ற இயற்பியல் - அல்ட்ராமாஸிவ் மற்றும் சிறிய கருந்துளைகளுக்கு இடையே பெரும்பாலும் ஒரே மாதிரியாக உள்ளது. அல்ட்ராமாசிவ் கருந்துளைகள் அவற்றின் அளவு காரணமாக ஒரு சுவாரஸ்யமான பண்புகளைக் கொண்டிருக்கின்றன. நீங்கள் துரதிர்ஷ்டவசமாக ஒரு நட்சத்திர தூசி கருந்துளையில் விழுந்தால், உங்கள் கால்களுக்கும் உங்கள் தலைக்கும் இடையே உள்ள ஈர்ப்பு வித்தியாசத்தின் காரணமாக, உங்கள் உடல் நீளமாக்கப்பட்டுவிடும். ஸ்பாகெட்டிஃபிகேஷன் என்று அழைக்கப்படும் இந்த மாற்றத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள். ஆனால் ஒரு அல்ட்ராமாசிவ் கருந்துளையில், ஈர்ப்பு மிகவும் குறைவாவும் செங்குத்தானதாகவும் உள்ளது, ஏனெனில் அது விண்வெளியில் மேலும் விரிவடைகிறது. ஈவன்ட் ஹொரைசன் எனப்படும் அதன் எல்லைக்கு அப்பால் விழுவதை நீங்கள் உணரக் கூட இயலாது. "உங்கள் உடல் நீட்டிக்கப்படாது" என்கிறார் நைட்டிங்கேல். கருந்துளையின் ஈர்ப்பு விசையின் காரணமாக உங்களைச் சுற்றியுள்ள நட்சத்திர ஒளியின் சிதைவுதான் உங்கள் விதியை மாற்றி அமைக்கும் ஒரே விசயமாக இருக்கும். பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, சூப்பர்மாஸிவ் கருந்துளைகளில் இருந்து வெளியேறும் ஒளிக்கற்றைகள் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கிக்குத்தான் நன்றி கூற வேண்டும். பிரபஞ்சத்தின் எந்த மூலைகளில் இருந்தும் வரும் வெளிச்சம் நம்மை அடைய எடுத்துக் கொள்ளும் நேரம் காரணமாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் தொலைதூரத்தில் உள்ள வானியல் கூறுகளை ஆய்வு செய்து வருகின்றனர். பிரபஞ்சத்தின் முதல் சில நூறு மில்லியன் ஆண்டுகள் வயதான விண்மீன் திரள்களைப் பார்க்க வழிவகை செய்கிறது இந்த தொலைநோக்கி. அவற்றில் சில ஏற்கனவே பெரிய கருந்துளைகளைக் கொண்டுள்ளன. இத்தகைய தொலைதூர கருந்துளைகள் இவ்வளவு பெரியதாக வளர, அவை பிரபஞ்ச வரலாற்றின் துவக்கத்திலேயே பிறந்திருக்க வேண்டும், பின்னர் கருந்துளைகள் எவ்வாறு உருவாகின்றன என்பதற்கான வரம்புகளைப் பற்றி நமக்கு அறிந்த அனைத்தையும் மீறும் விதமாக அதனைச் சுற்றியுள்ள பொருட்களை கடுமையாக உள்வாங்கியிருக்க வேண்டும். ஆராய்ச்சியாளர்கள், எதிர்பார்த்ததை விட மிகவும் பிரகாசமாக ஒளிரும் நூற்றுக்கணக்கான விசித்திரமான, சிறிய விண்மீன் திரள்களைக் கண்டுபிடித்துள்ளனர். அவை பிக் பேங்கிற்கு சுமார் 600 மில்லியன் ஆண்டுகள் முதல் ஒரு பில்லியன் ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம். நிறம் மற்றும் அளவு காரணமாக அவை லிட்டில் ரெட் டாட் (Little Red Dot) விண்மீன் திரள்கள் என்று அறியப்படுகின்றன. அதில் ஆச்சரியம் என்னவென்றால், அவை வெளியிடும் ஒளி, அவற்றுக்குள் ஏற்கனவே சூப்பர்மாஸிவ் கருந்துளைகள் இருப்பதை குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. ஆராய்ச்சிகள், கருந்துளைகள் உண்மையில் விரைவாக வளரும் தன்மை கொண்டவை என்கின்றன. நமது பிரபஞ்சத்தில், விண்மீன் திரள்களின் மையங்களில் உள்ள பெரிய கருந்துளைகள் ஹோஸ்ட் கேலக்ஸியைக் காட்டிலும் விட சுமார் 1,000 மடங்கு சிறியதாக இருக்கும். ஆனால் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கருந்துளைகள் பிரபஞ்சம் உருவான காலத்தில் இருந்தே அதன் பால்வீதி மண்டலங்களின் அளவைக் கொண்டுள்ளன என்று கண்டறிந்துள்ளது. பால்வீதி மண்டலங்கள் உருவாவதற்கு முன்பே அங்கு கருந்துளைகள் இருந்திருக்கக் கூடும் என்பதை இந்த ஆய்வு முடிவுகள் சுட்டுகின்றன. நம்முடைய பிரபஞ்சத்துடன் ஒப்பிடுகையில், இந்த கருந்துளைகளின் எடையானது நாம் எதிர்பார்ப்பதை விட பத்து முதல் சில நூறு மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் அண்டவியல் நிபுணர் ஹன்னா அப்லெர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வானியல் ஆராய்ச்சியாளர்கள் டைட்டன்கள் எனப்படும் ஆரம்பகால கருந்துளைகளை அதீத எடை கொண்ட கருந்துளைகள் என அழைக்கின்றனர் சூப்பர்மாஸிவ் கருந்துளைகள் எப்படி உருவாகியிருக்கக் கூடும்? கருந்துளைகள் எவ்வாறு வளருகின்றன என்பது புதிராக உள்ளதோ அவ்வாறே ஆரம்பகால பிரபஞ்சத்தில் எவ்வாறு இது தோன்றியது என்பதும் புதிராக உள்ளது. பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரங்கள் அழிந்த போது இது தோன்றியிருக்கக் கூடும் என்று ஒரு சிலர் நம்புகின்றனர். பிரபஞ்சத்தில் முதலில் தோன்றிய நட்சத்திரங்கள் பாப்புலேசன் 3 ஸ்டார்கள் (Population III stars) என்று அழைக்கப்படுகின்றன. மிகப்பெரிய நட்சத்திரங்களான இவை சூரியனைக் காட்டிலும் 100 முதல் 1000 மடங்குகள் நிறை கொண்டவை. ஹீலியம் மற்றும் ஹைட்ரஜனால் அவை உருவானது. அந்த நட்சத்திரங்களின் இறுதி காலத்தில் ஏற்பட்ட சூப்பர்நோவா பெரும்வெடிப்பால் எடை கொண்ட பொருட்களாக அது வெடித்துச் சிதறியது. அவையே பிறகு இதர நட்சத்திரங்களாகவும் கோள்களாகவும் நம்முடைய சூரியனாகவும் பூமியாகவும் உருப்பெற்றன. ஆனால் இதே நட்சத்திர அழிவு பெரிய கருந்துளைகளை உருவாக்கி ஈர்ப்பு விசைக் காரணமாக உள்புறமாக வெடித்துச் சிதறியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இந்த நட்சத்திரங்களில் இருந்து தோன்றிய கருந்துளைகள் நட்சத்திர நிறை கருந்துளைக் காட்டிலும் அதிக எடை கொண்டவை என்று விவரிக்கிறார் வானியல் இயற்பியலாளர் மர் மெஸ்குவா. ஸ்பெயினில் உள்ள வானியல் அறிவியல் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவர், "இந்த நிலையில் இருந்து வளர முடியும். குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அதீத எடை கொண்ட சூப்பர்மாஸிவ் கருந்துளைகளாக மாற இயலும்," என்றும் தெரிவிக்கிறார். முதல் கருந்துளைகள் ஏற்பட்ட மற்றொரு சாதகமான சாத்தியக்கூறாக பின்வரும் கருத்தாக்கம் முன்வைக்கப்படுகிறது. முதல் கருந்துளைகள் நட்சத்திரங்களிலிருந்து உருவாகவில்லை. மாறாக, நேரடி வெடிப்பு கருந்துளைகள் (direct collapse black holes) எனப்படும் வாயு மேகங்களிலிருந்து உருவாகின என்பதாகும். வழக்கமாக, இந்த மேகங்கள் ஈர்ப்பு விசையால் அடர்த்தி அடையும் போது நட்சத்திரங்களை உருவாக்கியிருக்கலாம். ஆனால் வெப்பநிலை போதுமான அளவிற்கு அதிகமாக இருந்தால், சில மேகங்கள் நட்சத்திரங்களை உருவாக்காமல் நேரடியாக கருந்துளைகளாக வெடித்திருக்கலாம். "இது போன்ற சூழலை தற்போதைய பிரபஞ்சத்தில் நாம் காணவில்லை" என்கிறார் மெஸ்குவா. ஆரம்பகால வெப்பமான, கொந்தளிப்பான பிரபஞ்ச சூழ்நிலையில் அது சாத்தியமாகியிருக்கலாம் என்கிறார் அவர். பாப்புலேசன் 3 நட்சத்திரங்கள் (Population III stars) அல்லது நேரடி வெடிப்பு கருந்துளைகளை (direct collapse black holes) நாம் இன்னும் உறுதியாக காணவில்லை. எனவே ஆரம்பகால பிரபஞ்சத்தில் கருந்துளை உருவாக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியவை இந்த இரண்டில் எது என்பதை நம்மால் துல்லியமாக கூற இயலாது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விண்மீன் திரள்கள் அனைத்தும் பிரகாசமாக இருப்பதில்லை. பெரிய கருந்துளைகளை கொண்ட திரள்கள் அனைத்தும் இருண்டே இருக்கின்றன எப்படியாக கருந்துளைகள் உருவாகியிருந்தாலும் அவை பெரிய அளவில் வளர விரைவாக ஒரு வழியை கண்டுபிடித்திருக்கின்றன. அதற்கான சாத்தியமான கருத்தாக்கத்தை முன்வைக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதிக அளவில் அவை உருவாக்கப்பட்டு பிறகு ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பெரிய கருந்துளைகளை அவை உருவாக்கியிருக்க வேண்டும். முதலில் இடைநிலை நிறை கொண்ட கருந்துளைகள். பின்னர் சூப்பர்மாஸிவ் கருந்துளைகள். பின்னர் அல்ட்ராமாஸிவ் கருந்துளைகள். இது பாப்புலஸ் 3 நட்சத்திரங்களிலிருந்து தோன்றிய கருத்தாக்கத்தை ஆதரிக்கும். "இன்று நாம் பல இடைநிலை கருந்துளைகளைக் கண்டால், அவை பாப்புலஸ் 3 நட்சத்திரங்களின் மூலம் உருவாகின்றன என்று அர்த்தம்" என்கிறார் மெஸ்குவா. சிறிய விண்மீன் திரள்கள் மத்தியில் ஒரு சில இடைநிலை எடை கொண்ட கருந்துளைகளைக் கண்டறிந்தால் அவை பெரிதாகும் என்று சில வானியலாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அல்ட்ராமாசிவ் கருந்துளைகள் வெடிப்புகளில் அதனைச் சுற்றியுள்ள வானியல் கூறுகளை விரைவாக உட்கொள்வதன் மூலம் விரைவாக வளர்ந்திருக்கலாம். இதற்கான ஆதாரங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஆய்வு செய்து வருகிறது. பிரகாசமான மற்றும் சுறுசுறுப்பான சில ஆரம்பகால விண்மீன் திரள்களை வானியலாளர்கள் கவனித்துள்ளனர். ஆனால் மற்ற பெரிய கருந்துளைகளுடன் உள்ள விண்மீன் திரள்கள் அனைத்தும் செயலற்றதாகத் தோன்றுகின்றன. இவை இவ்வாறு செயலற்று போவதற்கு முன்பு அதனைச் சுற்றியுள்ள வானியல் கூறுகளை ஈர்ப்பின் காரணமாக உட்கொண்டிருக்கக் கூடும் என்று பரிந்துரைக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். "இந்த சுழற்சி எவ்வளவு காலம் நீடிக்கும் என்று எங்களுக்குத் தெரியாது," என்கிறார் லாரோண்டோ. இருப்பினும், வேகமாக அனைத்தையும் உள்ளே கிரகித்துக் கொள்ளும் போக்கானது அரிதாகவே இருக்கும் என்று அவர் கூறுகிறார். "கருந்துளையின் வாழ்நாளில் 1% இருக்கலாம்." நவீன பால்வெளியில் எவ்வளவு பெரிய கருந்துளைகள் இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. "பிரபஞ்சத்தின் வயதை அடிப்படையாகக் கொண்டே அதன் எடையானது 270 பில்லியன் சோலார் நிறை கொண்டதாக இருக்கலாம் என்று நாங்கள் தோராயமாக மதிப்பிட்டுள்ளோம்" என்று லாரோண்டோ கூறுகிறார். "ஒருவேளை பிரபஞ்சம் நம்மை மீண்டும் ஆச்சரியப்படுத்தும்." என்று கூறினார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvglgr50lz0o
-
ரவி செனிவிரத்னவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி - உதயகம்மன்பில
அரசியல் நோக்கத்துடனேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த இரண்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்- விஜித ஹேரத் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில வெளியிட்டுள்ள அறிக்கைகள் உட்பட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கைகள் குறித்து அரசாங்கம் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இரண்டு அறிக்கைகளும் அரசியல் நோக்கத்துடனேயே வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அரசாங்கம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விசாரணைகள் பூர்த்தியான பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்காக புதிய ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்கவேண்டுமா என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை. எனினும் விசாரணைகளின் பின்னர் இது குறித்து தீர்மானிக்கப்படும். 2019 இல் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவும் உயர்நீதிமன்றமும் இரண்டு சிஐடி உத்தியோகத்தர்கள் மீது எந்த குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை. உயர்நீதிமன்றமும் ஆணைக்குழுவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட பல அரசாங்க அதிகாரிகள் தாக்குதலை தடுக்க தவறியமையால் குற்றவாளிகள் என தெரிவித்திருந்தது. உரிய புலனாய்வு தகவல்கள் கிடைத்த போதிலும் அவர்கள் அதனை தடுத்து நிறுத்த தவறினார்கள் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அவர்களை நஷ்ட ஈட்டை செலுத்துவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.ஆனால் எந்த இடத்திலும் ஷானி அபயசேகரவும் ரவி செனிவிரட்ணவும் குற்றவாளிகள் என தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/196839