ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: இருதய சத்திரசிகிச்சைக்காக வரும் 25 - 30 வயதுக்குட்பட்ட இளையவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
Everything posted by ஏராளன்
-
விண்ணைத் தொடும் தேங்காய் விலை
Published By: VISHNU 06 OCT, 2024 | 08:03 PM சந்தையில் தேங்காய் விலை மேலும் அதிகரித்துள்ளது. சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று 180 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர்கள் தெரிவித்தனர். கடந்த காலத்தில் ஒரு தேங்காய் 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்பட்டது. இதேவேளை, கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்திருந்த முட்டையின் விலை மீண்டும் அதிகரித்து வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில பகுதிகளில் முட்டையின் விலை 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சில நாட்களுக்கு முன்பு முட்டை விலை 30 ரூபாய்க்கும் குறைவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195648
-
கம்பஹாவில் இணையம் மூலம் மோசடி செய்த 40 வெளிநாட்டவர்கள் கைது
Published By: VISHNU 06 OCT, 2024 | 07:43 PM கம்பஹாவில் உள்ள ஹோட்டல் மற்றும் ஹன்வெல்லவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இணையம் மூலம் மோசடி செய்த 40 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 30 சீனர்கள், 4 இந்தியர்கள் மற்றும் 6 தாய்லாந்து பிரஜைகள் உட்பட 40 வெளிநாட்டவர்கள் ஆவர். தடயவியல் பரிசோதனைக்காக 499 மொபைல் போன்கள், 25 மடிக்கணினிகள் மற்றும் 29 டெஸ்க்டாப் கணினிகள் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195647
-
உலகத்திலேயே அதிக மக்கள் கண்டுகளித்த இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி
சென்னை: இந்திய விமானப்படை சாகச நிகழ்வில் என்ன நடந்தது? புகைப்படத் தொகுப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சென்னையில் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி 6 அக்டோபர் 2024, 14:24 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 6) நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த பல்வேறு வகையான விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன. பணயக் கைதிகளை மீட்பது போன்ற சாகசங்களையும் விமானப்படை வீரர்கள் செய்து காட்டினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சாகசங்களை செய்து காட்டிய இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சென்னையில் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சியின் ஒரு காட்சி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சென்னை மெரினா கடற்கரையில் திரண்டிருந்த மக்கள் இந்த நிகழ்ச்சியை நேரில் காண பெரும் திரளான மக்கள் மெரினா கடற்கரையில் திரண்டிருந்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் விமான சாகசங்களை நேரில் பார்க்க கூடியிருந்தனர். பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வருகையால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பட மூலாதாரம்,X/MKSTALIN படக்குறிப்பு, சென்னை மெரினா கடற்கரை மற்றும் காமராஜர் சாலையில் குவிந்த மக்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வானில் சாகங்களை செய்து காட்டிய இந்திய விமானப்படை போர் விமானம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகத்திலேயே அதிக மக்கள் கண்டுகளித்த சாகச நிகழ்ச்சி என்ற சாதனையை இந்த நிகழ்வு படைத்திருக்கிறது பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லிம்கா புத்தகத்தில் இந்த சாகச நிகழ்வு இடம்பெற இருப்பதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய விமானப்படை நிகழ்ச்சியில் சாகசங்களை செய்து காட்டிய போர் விமானங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. உலகத்திலேயே அதிக மக்கள் நேரில் பார்த்த சாகச நிகழ்ச்சி என்ற சாதனையை இந்த நிகழ்வு படைத்திருப்பதாகவும், இந்த சாதனை லிம்கா புத்தகத்தில் இடம்பெற இருப்பதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்திய விமானப்படையின் மெய் சிலிர்க்க வைக்கும் சாகசங்களை காட்டும் சில புகைப்படங்களை பார்க்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் மெரினா கடற்கரையில் திரண்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியில் ஒரு காட்சி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c1wnz327z2qo
-
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் - ஜனாதிபதி!
06 OCT, 2024 | 05:11 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலை நிலைநாட்டப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) நீர்க்கொழும்பு, கட்டுவாபிட்டிய சென். செபஸ்தியன் தேவாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு உறுதியளித்தார். இன்று காலை கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபிக்கும் மலர் அஞ்சலி செலுத்தினார். ஜனாதிபதியின் வருகையை நினைவூட்டும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது. பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் ஜனாதிபதி கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் இதன்போது நேரடியாக ஜனாதிபதியிடம் அவர்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறினர். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்நாட்டில் அண்மைய காலத்தின் மிக மோசமாக அழிவு 2019 ஏப்ரல் 21 ஆம் திகதியே நிகழ்ந்தது என்றும் அந்த விடயங்கள் மண்ணுக்குள் புதையுண்டு அழிவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தனக்கு வாக்களித்ததன் பின்னணியில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான நீதியும் நியாயமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்ததென நம்புகிறோம். இந்நாட்டு மக்களின் நோக்கங்களும், எதிர்பார்ப்புக்களும் தான் கொண்டிருக்கும் நோக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்களுக்கு மாறுபட்டவை அல்லவெனவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து மக்கள் எதிர்பார்க்கும் நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படும் என்பதுடன், அதற்கான முன்னெடுப்புக்கள் தற்போதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பிலான முழுமையான முடிவொன்றுக்கு வந்து, அந்த முடிவை அடிப்படையாக கொண்டு சாட்சிகளை திரட்டுவதுவதால் மாத்திரம் இந்த விசாரணைகளை கொண்டு நடத்த முடியாதெனவும், வௌிப்படைத் தன்மையுடன் இந்த விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசியல் மாற்றத்துக்காக இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருப்பதாகவும், அரசியலுக்காக நூற்றுக் கணக்கில் அப்பாவி உயிர்களை பலியிடுவது பாரிய அழிவாகும் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அவ்வாறான நிலைப்பாடு நாட்டின் அரசியலுக்குள் காணப்படுமாயின் அந்த நிலைமையை முழுமையாக துடைத்தெறிய வேண்டும் இரண்டாவது விடயமாக அப்போதைய ஆட்சிப் பொறிமுறையும் இதனுடன் தொடர்பு பட்டிருந்ததா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் நிலவுவதாகவும் அவ்வாறான நிலை மிகவும் பாதுகாப்பற்றதும் ஆபத்தானதுமான நிலை என்பதோடு, அதன்படி இதற்குள் நடந்தது என்னவென்பதை கண்டறிய வேண்டியது மிக அவசியமானது. அடுத்தபடியாக, 274க்கும் மேற்பட்டவர்களின் உயிர்களை பறித்த மற்றும் பெருமளவானவர்களை காயத்துக்கு உள்ளாக்கிய அழிவினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது அன்புக்குரியவர்கள் மீது கொண்டிருக்கும் அன்புக்கான நீதியை நிலைநாட்ட வேண்டியது அவசியமாகும். அதேபோல் இவ்வாறான பிரச்சினையினால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய பாதிப்பிலிருந்து சமூகத்தை பாதுகாத்தமைக்காக மதகுருமார்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி. சமூகத்திற்குள் காணப்பட்ட இணைவு,ஒருமைப்பாடு, நம்பிக்கை சிதைந்து போயிருப்பதாகவும் மற்றுமொரு சமூகத்தின் மீது குரோதத்துடன் பார்க்கும் நிலை உருவாவது சமூக நல்வாழ்விற்கு மிகப்பெரிய ஆபத்தெனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனால் ஈஸ்டர் தாக்குதல் குறித்து நியாயமான விசாரணையொன்றை நடத்த வேண்டியது அவசியமாகும். கடந்துபோன 05 வருடங்களில் ஒவ்வொரு ஏப்ரல் 21 ஆம் திகதியும் வீதிகளிகளிலும் சந்திகளிலும் ஒன்றுகூடிய மக்கள் அவர்களின் மனதிலிருந்த நீதி தொடர்பிலான எதிர்பார்ப்புக்களையே வௌிப்படுத்தினர் என்றார். இங்கு கருத்து தெரிவித்த கொழும்பு பேராயர் கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்த போதும் அதற்கான நியாயம் கிடைக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கங்களினால் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டாலும் பிரச்சினைக்கு காரணம் என்னவென்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது என்றும் தெரிவித்தார். இந்நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீது நம்பிக்கை உள்ளதெனவும், அவரின் நேர்மையை பாராட்டுவதாகவும் தெரிவித்த கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அந்த நேர்மையை மக்கள் மத்தியில் வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்படுவார் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், அதன்படி உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவார் என்ற நம்பிக்கையும் கொண்டிருப்பதாக மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் கட்டுவாப்பிட்டிய தேவாலய பொறுப்பாளர் அருட்தந்தை மஞ்சுள நிரோஷன் மற்றும் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களும் பெருமளவில் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/195640
-
சமஸ்டியை ஏற்காத - சமாதான முயற்சிகளை எதிர்த்த ஜேவிபி - பிரித்தானிய தமிழர் பேரவை அறிக்கை
சமஸ்டியை - பாரம்பரிய தமிழர் தாயகத்தை - யுத்த குற்றங்களிற்கான சர்வதேச பொறிமுறையை ஏற்காத - சமாதான முயற்சிகளை எதிர்த்த ஜேவிபி - பிரித்தானிய தமிழர் பேரவை Published By: RAJEEBAN 06 OCT, 2024 | 03:04 PM ஜேவிபியின் தமிழர் விரோத கடந்த காலங்கள் சமாதான முயற்சிகளை குழப்புவதற்கு அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரித்தானிய தமிழர் பேரவை, இலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் ஒரு மூலோபாய கூட்டணியை உருவாக்கி எதிர்கால ஜனநாய செயல்முறையை ஒற்றுமையாக எதிர்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது, சிறிலங்காவில் அடுத்தடுத்து வரும் நெறிமுறை அற்ற அரசாங்கங்களின் ஆட்சியின் கீழ் போராடும் போது, கட்டமைப்பு ரீதியான தீவிரமான மாற்றங்களை கொண்டு வரும் வாக்குறுதியுடன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் (AKD) வருகை, சிறிலங்காவில் உள்ள மக்களுக்கு பெரும் நிம்மதியாகத் தெரிகிறது. தமிழ் மக்களுக்கு எதிரான 75 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் வன்முறை சுழற்சி மற்றும் இனவழிப்புக்கு இந்த உற்சாகம் முடிவு கட்டுமா? இந்த அறிக்கை AKD இன் அடித் தளமான ஜனதா விமுக்தி பெரமுனாவின் (ஜேவிபி) மோசமான கடந்த காலத்தை வெளி கொண்டு வருகிறது. இலங்கையின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க (AKD) யார், அவருடைய பின்னணி என்ன? அவர் கூறுவது போல் அவர் ஒரு மார்க்சிஸ்ட் அல்ல; இலங்கை அரசியலில் மையக் கோட்டிற்கு இடது புறம் சாய்ந்த ஒரு சிங்கள தேசியவாதி. அவரது அரசியல் வாழ்க்கை ஜனாதிபதியாக அவரின் கீழ் இன்னும் வரவிருக்கின்ற விஷயங்களுக்கு சிறந்த சான்றாக உள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) இந்த அறிக்கையில் ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) மற்றும் AKD-யின் உண்மையான முகத்தை ஆராய்ந்து தமிழ் மக்களின் முன் வைக்க விரும்புகிறது. AKD தனது மாணவ பராயத்தில் JVPயில் சேர்ந்தார். அது தன்னை ஒரு தமிழ்-எதிர்ப்பு, மேற்கு-எதிர்ப்பு சித்தாந்தம் கொண்ட, இந்திய-எதிர்ப்பு, சிங்கள பௌத்த அடிப்படைவாத குழுவாக கட்டமைத்து உள்ளது. 1987இல் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து வன்முறை பிரச்சாரம் செய்தது. கீழே உள்ள ஆராய்ச்சிக் கட்டுரையின் சில பகுதிகள் இதை விளக்கும்: (chromeextension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://personal.lse.ac.uk/venugopr/jvp%20 modern%20asian%20studies.pdf) https://personal.lse.ac.uk/.../jvp modern asian... https://www.ft.lk/.../The-1989-war-against-India.../4-759967 ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணி (UNF) அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (LTTE) இடையிலான நோர்வே சமாதான முன்னெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தான் 2001-2004 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பிரதான அரசியல் சக்தியாக ஜே.வி.பி மகத்தான முக்கியத்துவத்தைப் பெற்றது. பெப்ரவரி 2002 போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜே.வி.பி., சர்வதேச ரீதியில் அனுசரணையளிக்கப்பட்ட சமாதான முன்னெடுப்புகளுக்கு எதிரான சக்தி வாய்ந்த மற்றும் ஒத்திசைவான கருத்தியல்-அரசியல் வேலைத் திட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது. அது 2003இல் கொழும்பில் மாதத்திற்கு ஒரு முறை என்ற அளவில் பாரிய வீதி ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தது. இது கொழும்பு தலைநகரை பல சந்தர்ப்பங்களில் முற்றிலுமாக ஸ்தம்பிக்க வைத்தது. UNF இன் சந்தை சீர்திருத்தக் கொள்கைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் பொருளாதார அதிருப்தியின் வேகத்தை வெற்றிகரமாக பயன்படுத்திக் கொண்டது. 2003இன் பிற்பகுதியிலும் 2004இன் தொடக்கத்திலும் சுகாதாரத் துறை மற்றும் ரயில்வேயில் தொடர்ச்சியான பொதுத் துறை வேலை நிறுத்தங்களைத் தூண்டுவதற்கு தொழிற்சங்க இயக்கத்தில் அதன் செல்வாக்கைப் பயன்படுத்தியது. எனவே, ஜே.வி.பி., சமாதான முன்னெடுப்புகளுக்கு எதிராக பொதுக் கருத்தைத் திரட்டி ஒன்றிணைப்பதில் ஒரு தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்ததுடன், ஜனாதிபதி குமாரதுங்கவின் மீதான வளர்ந்து வரும் அழுத்தத்திற்கு பெரும் ஆதரவினை வழங்கியது. இது ஐ.தே.மு அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்வதில் சனாதிபதி சந்ந்திரிக்காவின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக ஆற்றல் மிக்க ஏப்ரல் 2004 தேர்தல் பிரச்சாரத்தின் மூலம், UNF அரசாங்கத்தின் தோல்வியையும், சமாதான முன்னெடுப்புகளின் சீர்குலைவையும் உறுதி செய்தது. 2004 ஏப்ரலுக்குப் பின்னரும், புதிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (UPFA) அரசாங்கத்திற்குள் சமரசமற்ற பிடிவாதமான கூட்டணிப் பங்காளியாக ஜே.வி.பி.யின் செல்வாக்கு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மீண்டும் அமைதிக்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததில் குறிப்பிடத் தக்க பங்கைக் கொண்டிருந்தது. சமாதானப் பேச்சுக்களை ஆதரிக்க உடன்படுவதற்கு அவர்கள் (ஜேவிபி) நிறைவேற்ற முடியாத முன் நிபந்தனைகளை முன் வைத்தனர். கூட்டு சுனாமி உதவி விநியோகம் (PTOMS – Post Tsunami Operational Management Structure) தொடர்பாக விடுதலைப் புலிகளுடனான எந்தவொரு உடன்பாட்டையும் சகித்துக் கொள்ள மறுத்து, நவம்பர் 2005 இல் மகிந்த இராஜபக்ஷவின் வெற்றிகரமான ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை சமாதானத்திற்கு எதிரானதாக மேடையாக மாற்றினார்கள். 2006ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, ஜே.வி.பி., இராணுவத் தீர்வை வெளிப்படையாக முன் வைத்து, இறுதியாக ஆகஸ்ட் 2006இல் போரை மீண்டும் தொடங்க அரசாங்கத்தை வலியுறுத்தியது. மார்க்சியம் மற்றும் சிங்கள தேசியவாதத்தின் கலவையானது ஜே.வி.பி.க்கு ஒரு பலமாக மாறி, சிங்கள தேசிய சக்தியாக உருவெடுக்க உதவியது. ஜூன் 1998 முதல் டிசம்பர் 1999 வரை, ஜே.வி.பி., அவர்களின் நிகழ்ச்சி நிரலின் சிங்கள தேசியவாத கூறுகளை தற்காலிகமாக தவிர்த்ததுடன், ஆளும் மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் தீவிர இடது பக்கம் தங்களை நிலைநிறுத்திய மூன்று சிறிய கட்சிகளுடன் ஒரு பரந்த கூட்டணி அமைத்தது. ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய மாதங்களில், ஜே.வி.பி. இந்த இடதுசாரிக் கூட்டாளிகளுடன் இருந்து முற்றாகப் பிரிந்து, மார்க்சியத்திலிருந்து சிங்கள தேசியவாதத்தை நோக்கி கருத்தியல் வலியுறுத்தலை மாற்றியது. 1999ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து, குறிப்பாக 2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆனையிறவில் விடுதலைப் புலிகளின் அற்புதமான இராணுவ வெற்றிகள் அரசாங்கத்தின் இராணுவ நிகழ்ச்சி நிரலின் நம்பகத் தன்மையை முற்றிலுமாக சீர்குலைத்திருந்தன. இது நோர்வேயின் நுழைவுக்கும், மோதலில் மத்தியஸ்தராக ஏற்றுக் கொள்ளும் அங்கீகாரத்துக்கும் மற்றும் விடுதலைப் புலிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் மூலம் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியத்திற்கும் ஒரு சந்தர்ப்பமளித்தது. இது 1995ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வந்த அரசாங்கத்தின் முக்கிய அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் அதிகாரப் பகிர்வுப் பொதி இறுதியாக ஆகஸ்ட் 2000இல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட ஏதுவானது. அரசியலமைப்பு அதிகாரப் பகிர்வு மற்றும் வெளிநாட்டு மத்தியஸ்த பேச்சுவார்த்தைகள் ஆகிய இரண்டு யோசனைகளும் நீண்ட காலமாக சிங்கள தேசியவாதிகளுக்கு பெரும் விசனத்தை ஏற்படுத்தி இருந்தது. இராணுவ வெற்றி தவிர்த்த எந்த தீர்வும், சிங்கள தேசியவாதிகளுக்கு முற்றிலும் எதிரானதாக இருந்தது. பிரதான எதிர்க் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியானது, அதிகாரப் பகிர்வு, வெளிநாட்டு மத்தியஸ்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளின் அவசியம் குறித்து அரசாங்கத்துடன் பரந்த உடன்பாட்டில் இருந்ததால், சமாதான நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான சிங்கள தேசியவாத வகிபாகத்தினை ஜே.வி.பி. பிடிப்பதற்கு பரந்த அளவில் ஒரு வெளி திறந்து விடப்பட்டது. அக்டோபர் 2000இல் வரவிருந்த பாராளுமன்றத் தேர்தல்களின் பின்னணியில், வளர்ந்து வரும் சிங்கள தேசியவாத வெளியின் சுவீகரிப்பு, 1994க்குப் பிந்தைய புத்துயிர் பெற்ற ஜே.வி.பி.க்கு அதன் கவனமாக வளர்த்தெடுக்கப்பட்ட அடித்தள பலத்தை தேசிய அரங்கிற்கு மாற்றுவதற்கான முதல் வாய்ப்பை வழங்கியது. உண்மையில் ஜே.வி.பி.க்கு அதன் 35 ஆண்டு கால வரலாற்றில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான முதல் அர்த்தமுள்ள வாய்ப்பாக அது அமைந்தது. மேலும் ஆளும் கூட்டணியின் இடதுசாரிகளில் இருந்து அதிருப்தியடைந்த வாக்காளர்களை வெளியேற்றி பெரும் வெற்றியை ஜே.வி.பி. பெற்றது. 2000 ஆம் ஆண்டின் முற் பகுதிக்கும் 2005ஆம் ஆண்டின் பிற் பகுதிக்கும் இடையில், சமாதான முன்னெடுப்புகளை மையமாகக் கொண்ட தொடர்ச்சியான பிரச்சாரங்களில், சிங்கள தேசியவாத நிலப் பரப்பில் மார்ச் 2000 முதல், நோர்வே மத்தியஸ்தர்களை அறிமுகப்படுத்துவதற்கு எதிராக ஜே.வி.பி நீண்ட பிரச்சாரத்தை ஆரம்பித்தது. சில மாதங்களுக்குப் பின்னர், ஆகஸ்ட் 2000இல், ஜனாதிபதி குமாரதுங்கவின் புதிய அரசியலமைப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு முன்மொழிவுகளுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்களில் ஜே.வி.பி மீண்டும் முன்னணியில் இருந்தது. டிசம்பர் 2001 தேர்தலுக்குப் பின்னர், விரக்தியடைந்த மற்றும் மனச் சோர்வடைந்த SLFPக்கு எதிராக ஜே.வி.பி., உற்சாகமாக இருந்ததுடன், ஒன்றிணைவதிலும் கவனம் செலுத்துவதிலும், வளர்ச்சியடைந்து வரும் போர்நிறுத்தம் மற்றும் சமாதான முன்னெடுப்புகளுக்கு எதிர்ப்பை வழிநடத்துவதிலும் முன்னின்றது. அடுத்த மாதங்களில், 2002 பெப்ரவரியில் முறையான போர் நிறுத்த உடன்படிக்கையை (CFA), செப்டம்பர் 2002 மற்றும் மார்ச் 2003 க்கு இடையில் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை திட்டவட்டமாக எதிர்ப்பதற்கு முன்முயற்சியை எடுத்துக்கொண்டு, ஜே.வி.பி மற்ற எதிர்க் கட்சிகளை பின் தள்ளி திறம்பட முன்னேறியது. ஏப்ரல் 2004 தேர்தலுக்குப் பின்னரும் கூட, 2004 மே மற்றும் டிசம்பர் மாதங்களில் LTTE உடனான எந்தவொரு பேச்சுவார்த்தைகளையும் மீண்டும் தொடங்குவதற்கு ஜே.வி.பி கடும் விரோதமாக இருந்தது. சுனாமிக்குப் பிந்தைய உதவிப் பகிர்வு பொறிமுறையான 'P-TOMS' ஐத் தடுப்பதில் முனைப்பாக இருந்தது (https://www.lankaweb.com/.../agreements-that-betrayed... -structure-p-toms/) மார்ச் மற்றும் ஜூலை 2005க்கு இடையில், இது சமாதான முன்னெடுப்புகளின் இறுதி மூச்சாக இடம் பெற்றது. 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிங்கள தேசியவாதத்துடன் ஜே.வி.பி.யின் அதிகரித்து வரும் தொடர்பு பாரம்பரியமான மார்க்சியப் பிரச்சினைகளில் அதன் செயற்பாடுகளை கை விடுவதைக் குறிக்கவில்லை. 2000-2001 பொருளாதார நெருக்கடியினால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பின்மை மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த UNF அரசாங்கத்தின் சந்தை சீர்திருத்த நிகழ்ச்சி நிரல், விவசாயிகள், வேலையற்றோர் மற்றும் பொதுத் துறை ஊழியர்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து JVP க்கு வளரும் ஆதரவை வழங்கியது. ஒரு கருத்தியல் மற்றும் நடைமுறை மட்டத்தில், ஜே.வி.பி.யின் வெற்றியானது, பெரும்பாலும் தன்னெழுச்சியான பொருளாதார எதிர்ப்பின் இந்த ஆதாரங்களை பரந்துபட்ட சிங்கள தேசியவாத கட்டமைப்பின் கூறுகளாக கட்டமைக்கும் அவர்களின் திறனாக அமைந்தது. எனவே, பொருளாதார பூகோளமயமாக்கலுக்கான எதிர்ப்பானது கொள்ளையடிக்கும் நவகாலனித்துவ சக்திகள், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச மூலதனத்தின் அரசியல் சூழ்ச்சிகளுக்கு எதிரான பரந்துபட்ட எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றியது. இவை அனைத்தும் சேர்ந்து நாட்டை பிளவுபடுத்தி மீண்டும் காலனியாக்க சதி செய்வதாக ஜே.வி.பி குற்றம் சாட்டியது. சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் சமாதான முன்னெடுப்புகளில் முன்னேற்றம் ஆகியவற்றை நிபந்தனையாகக் கொண்டு சர்வதேச சமூகம் தாராளமான அளவிலான வளர்ச்சி உதவிகளை வழங்க முன் வந்தது, இந்த தர்க்கத்தை கட்டமைப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் பெரிதும் உதவியது. ஆளும் ஐ.தே.மு. சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் அதிக உலகளாவிய ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான பொருளாதார அபிவிருத்தி மூலோபாயத்தின் ஒரு அங்கமாக சமாதான நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் கருதியது போல், ஜே.வி.பி சமாதான முன்னெடுப்புகள் மற்றும் சந்தை சீர்திருத்தங்கள் வெளிநாட்டு சக்திகளின் கூட்டத்தின் ஒருங்கிணைந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும் என்று வாதிட்டது. சமாதான முன்னெடுப்புகளுக்கு எதிரான அதன் பிரச்சாரத்தில், ஜே.வி.பி தமிழ் தேசியவாதத்தை ஒரு ஜனநாயகமற்ற, இனப் பிரத்தியேகவாதத்தின் பேரினவாத சித்தாந்தமாக வகைப்படுத்தியது; ஒரு பயங்கரவாத அமைப்பால் ஊக்குவிக்கப்பட்ட, தீவை பிரித்து மீண்டும் கைப்பற்ற வெளிநாட்டு நவ-காலனித்துவ சக்திகளால் புனையப்பட்ட சதி என்று உருவகித்தது. 2001-2004 காலப் பகுதியில் தமிழ் தேசியவாதம் குறித்த ஜே.வி.பி.யின் கண்ணோட்டம், 1980களின் நடுப்பகுதியில் கட்சியின் நிறுவன தலைவரான ரோகண விஜேவீரவினால் உருவாக்கப்பட்ட ஆய்வறிக்கையால் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. லெனினின் சுயநிர்ணய உரிமை முழுமையானது அல்ல என்று விஜேவீர வாதிட்டார்: கொடுக்கப்பட்ட தேசியவாத இயக்கத்திற்கான ஆதரவு, அது உலக ஏகாதிபத்தியத்திற்கும் கம்யூனிச இயக்கத்திற்கும் அதன் மூலோபாய மதிப்பிற்கும் இடையே நிபந்தனைக்குட்பட்டது; சில வரலாற்று தருணங்களில், தேசியவாத இயக்கங்கள் முற்போக்கானதாகவும், ஜனநாயகமாகவும், சுதந்திரமாகவும் இருக்கலாம். ஆனால் மற்ற நேரங்களில், அவை பிற்போக்குத்தனமான மேட்டுக் குடி உயரடுக்கின் புகலிடமாக இருந்தாலும் அல்லது மூன்றாம் உலகத்தைப் பிரித்து மீண்டும் காலனித்துவப்படுத்த முயலும் கொள்ளையடிக்கும் ஏகாதிபத்திய சக்திகளின் கைக்கூலியாக இருந்தாலும் தெளிவாக ஆபத்தானவையாக இருக்கலாம். விஜேவீர தமிழ் தேசியவாதம் (தமிழ்நாட்டின் திராவிட இயக்கத்தை இலங்கையின் தமிழீழ இயக்கத்துடன் இணைப்பது) பிந்தைய வகையைச் சேர்ந்தது என்றும், கொள்கை அடிப்படையில் எதிர்க்கத் தகுதியானது என்றும் வலியுறுத்தினார். இந்திய மற்றும் இலங்கை தமிழ் தேசியவாதங்களுக்கிடையில் தற்செயலான மற்றும் தவறாக வழி நடத்தும் குழப்பத்திற்கு அப்பால், ஏகாதிபத்திய மற்றும் பெரிய நாடுகளின் அடக்குமுறை மற்றும் ஜனநாயகமற்ற தேசியவாதத்துடன் அடிப்படையில் ஜனநாயக தன்மை வாய்ந்த சிறிய மற்றும் காலனித்துவ நாடுகளின் தேசியவாதத்தினை வேறுபடுத்தும் லெனினிச பாரம்பரியத்தை திரிபுபடுத்தும் ஒரு சந்தர்ப்பவாத தவறாக விஜேவீரவின் பணி இருந்தது. இலங்கை நிலைமைகளில், லெனினின் இந்த மரபுதான், பிரதான நீரோட்ட மார்க்சிச இடதுசாரிகளை வரலாற்று ரீதியாக பாரபட்சம் காட்டப்பட்ட சிறுபான்மையினரின் ஜனநாயக வெளிப்பாடாக தமிழ் தேசியவாதத்தை நோக்கும் பரந்த அனுதாப நிலைக்கு கொண்டு வந்தது. அதற்கு பதிலாக விஜேவீர, தமிழ் தேசியவாதம், ஏகாதிபத்தியத்துடன் உடந்தையாக இருப்பதாக கூறி, ஒரு ஆபத்தான பிற்போக்கு அச்சுறுத்தல் என்று வாதிட்டார். தமிழ் தேசியவாத நிகழ்ச்சி நிரலின் மிக மிதமான போக்குகளை கூட அயராத எதிர்ப்பின் மூலம், ஜே.வி.பி., சிங்கள பேரினவாதத்தை உணர்வுபூர்வமாக அலசி, வளர்த்து, பயன் பெற்று, வெளிப்படையான தீவிரவாதிகளுடன் கூட்டணி வைத்து, சிங்கள பெருந் தேசியவாதத்துடன் மிக மையமான பிரச்சினைகளுக்கு முன்னணி வக்கீலாக மாறியது. இந்த நடவடிக்கைகளின் அடிப்படையில், ஜே.வி.பி சிறிலங்காவில் பெரும் பகுதியினரால் குறிப்பாக தமிழ் சமூகத்தால், சிங்கள பேரினவாத அமைப்பாக பார்க்கப்படுகிறது. ஜே.வி.பி.யானது வரலாற்று ரீதியாக சிங்கள-பௌத்தர்களால் ஆனது; அதன் தரவரிசையிலும், மற்றும் தலைமை மட்டத்திலும் அவர்கள் தமிழ் மக்களின் வடக்கு-கிழக்கிற்கான அதிகாரங்களை பரவலாக்குவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் முற்றாக எதிர்க்கின்றனர். 2024 ஆம் ஆண்டு தனது பிரச்சாரத்தின் போது கூட, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில், 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் எது விதமான உறுதிமொழியையும் வழங்க தாம் விரும்பவில்லை என அநுரகுமார தெளிவுபடுத்தினார். நடந்து கொண்டிருக்கும் இனத்துவ மோதலுக்கு கணிசமான அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வை முன்வைக்க அவர் மறுத்து விட்டார். ஜே.வி.பி. கிராமப்புற சிங்கள மக்களை அணி திரட்டி, 2002 – 2006ல் பல்லாயிரக் கணக்கான சிங்கள இளைஞர்களை பாதுகாப்புப் படைகளில் இணைத்துக் கொண்டார்கள். ஆயுதப் படைகளில் நடுத்தர வரிசை அல்லது மூத்த நிலை தளபதிகள் பலர் ஜே.வி.பி.யால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள். தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பல அட்டூழியக் குற்றங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். 2009 இல் போர் நிறுத்தத்தை கொண்டு வர எடுத்த முற்சிகளை ஜே.வி.பி. கடுமையாக எதிர்த்தது. ஜே.வி.பி.யின் ஆழமான வேரூன்றிய அரசியல் நிலைப்பாடுகள்: ஒற்றையாட்சி - பாராளுமன்றத்தின் அதிகாரங்களைப் பகிர கூடாது. தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தை அங்கீகரிக்க மறுத்தல். அரசியல் விவகாரங்கள் மற்றும் பொருளாதாரத்தில் வெளிநாட்டு தலையீடு வர அனுமதிக்க விடாது தடுத்தல். தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறையை நிறுவுவதற்கான எந்தவொரு சர்வதேச நடவடிக்கையையும் எதிர்க்க வேண்டும். தமிழ் மக்களின் தற்போதைய அவலநிலை "கொதிக்கும் சட்டியில் இருந்து நெருப்புக்குள் குதிக்கப் போகின்றதா?". இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் ஒரு மூலோபாய கூட்டணியை உருவாக்கி, எதிர்கால ஜனநாயக செயல்முறையை ஒற்றுமையாக எதிர்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இலங்கையின் வடக்கு-கிழக்கில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் கோரியபடி பாதிக்கப்பட்ட தமிழர்களின் கருத்துக்கள் மற்றும் முன்னுரிமைகளை அங்கீகரிப்பதுடன் எந்தவொரு அரசியல் தீர்வும் தமிழ் மக்களின் உள்ளார்ந்த சுயநிர்ணய உரிமையை ஒப்புக் கொண்டு கூட்டாட்சிக் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைய வேண்டும். ஒரு சர்வதேச நடுவர் செயல்முறை மூலம் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். இந்தத் தீர்வைச் செயல்படுத்துவதற்கு இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய முக்கிய குழுவால் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். சர்வதேச நடுவர்கள், உள்நாட்டுச் சண்டைகள் மற்றும் வன்முறைச் சுழற்சிகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்யவும், சமமான மற்றும் நிலையான அமைதியை அடைவதற்கும், பிராந்தியத்தின் புவிசார்-அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டவும் பராமரிக்கவும், ஏற்படுத்தப்படும் ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். மேற்கூறிய அனைத்து நோக்கங்களுக்காகவும் சர்வதேச சமூகம் காலக்கெடுவுடன் செயல்படுத்தும் திட்டத்தை அமைக்க வேண்டும். ஒன்றுபட்டு நிற்போம். https://www.virakesari.lk/article/195625
-
திருவண்ணாமலை: பட்டியல் பிரிவு பெண்ணின் உடலை பொது வழியில் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல எதிர்ப்பா?
படக்குறிப்பு, ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக சடலத்தை வைத்துக் கொண்டு பட்டியல் பிரிவு மக்கள் போராடினர். கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் 'பட்டியல் பிரிவைச் சேர்ந்த பெண்ணின் உடலை பொது வழியில் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாது' என்று பிற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக திருவண்ணாமலையில் சர்ச்சை எழுந்துள்ளது. "பாதை மறுக்கப்பட்டதால் நாள் முழுக்க சடலத்தை வைத்துப் போராடினோம்", என்று பட்டியலின மக்கள் கூறுகின்றனர். "சுடுகாட்டுப் பாதையை வழிமறித்து தனி நபர் ஒருவர் வீடு கட்டியதால் தான் பிரச்னை ஏற்பட்டது" என்கிறார், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன். பட்டியல் பிரிவு பெண்ணின் சடலத்தைக் கொண்டு செல்வதில் என்ன பிரச்னை? திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்துள்ள மோத்தக்கல் கிராமத்தில் ஆயிரத்துக்கும் குறைவான பட்டியல் பிரிவினரும், மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட பிற சமூகத்தினரும் வசிக்கின்றனர். பட்டியல் பிரிவைச் சேர்ந்த 54 வயதான கிளியம்மாள் என்பவர், தனது மகளுடன் சென்னையில் வசித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி உயிரிழந்தார். சடலத்தை அடக்கம் செய்ய எதிர்ப்பு ஏன்? சொந்த ஊரில் அடக்கம் செய்ய தீர்மானித்து கிளியம்மாளின் உடலை சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மோத்தக்கல் கிராமத்திற்கு உறவினர்கள் கொண்டு வந்துள்ளனர். "கிராமத்தின் ஒருபுறம் பட்டியல் பிரிவினர் வசிக்கும் பகுதி உள்ளது. அதன் பின்புறம் வழியாக இறந்தவர்களின் உடலை வழக்கமாக கொண்டு செல்வோம். தற்போது அந்தப் பாதை கரடுமுரடாக இருப்பதால் அதனை பயன்படுத்த முடியவில்லை. இதனால், வேறுவழியின்றி பொதுப் பாதையில் கிளியம்மாளின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல நாங்கள் தீர்மானித்தோம்" என்று மோத்தக்கல் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாதன் கூறினார். . ஆனால், பொதுப் பாதையில் கிளியம்மாளின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல பிற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக சடலத்தை வைத்துக் கொண்டு போராட்டம் "பொதுப் பாதை வழியாக ஆம்புலன்ஸில் கிளியம்மாளின் சடலம் வந்தது. ஆனால், அதே பாதையில் சுடுகாட்டுக்குக் கொண்டு செல்வதற்கு மட்டும் எங்களை அவர்கள் (பிற சமூகத்தினர்) விடவில்லை. இதைப் பற்றி டி.எஸ்.பி முருகனிடம் முறையிட்ட போது, 'சடலத்தைக் கொண்டு செல்லுங்கள். ஆனால் பட்டாசு வெடிக்க வேண்டாம்' என கூறினார்" என்று பிபிசி தமிழிடம் மஞ்சுநாதன் குறிப்பிட்டார். அங்கே, இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். ஒருகட்டத்தில், சடலத்தைக் கொண்டு செல்ல வசதியாக, 'சுடுகாட்டுக்குச் செல்லும் சாலையை சீரமைத்துத் தருமாறு' அதிகாரிகளிடம் பட்டியல் பிரிவினர் கோரிக்கை வைத்துள்ளனர். "சாலையை சீரமைத்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் மாலை வரையில் பாதை சரிசெய்யப்படவில்லை" என்று மஞ்சுநாதன் கூறினார். ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக சடலத்தை வைத்துக் கொண்டு பட்டியல் பிரிவு மக்கள் போராடினர். இதையடுத்து, அங்கிருந்த நில உரிமையாளர்கள் சிலரிடம் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நில உரிமையாளர் ஒருவர் தனது நிலம் வழியாக உடலைக் கொண்டு செல்ல சம்மதம் தெரிவித்த பின்னரே, அவ்வழியே சுடுகாட்டுக்கு கிளியம்மாவின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. படக்குறிப்பு, நில உரிமையாளர்கள் சிலரிடம் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பிற சமூகத்தினர் கூறுவது என்ன? பட்டா நிலம் வழியாக பட்டியல் பிரிவு பெண்ணின் சடலத்தைக் கொண்டு சென்றதால் தான் பிரச்னை ஏற்பட்டதாக கூறுகிறார், மோத்தக்கல் கிராமத்தில் வசிக்கும் பிற சமூகத்தைச் சேர்ந்த ரமேஷ். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பட்டியல் பிரிவினர் வசிக்கும் பகுதியின் பின்புறம் வழியாக சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்வது அவர்களின் வழக்கம். அந்தப் பாதையில் ஒருவர் வீடு கட்டி வருகிறார். இதன் காரணமாக பட்டா நிலத்தில் உடலைக் கொண்டு சென்றுள்ளனர். இதனால் தேவையற்ற பிரச்னை ஏற்பட்டது" என்று கூறினார். வருவாய்த்துறை அதிகாரிகள் தலையிட்டதால் பிரச்னை சுமூகமாக முடிந்துவிட்டதாக ரமேஷ் கூறினார். மாவட்ட ஆட்சியர் சொல்வது என்ன? இதுகுறித்து டி.எஸ்.பி முருகனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசியபோது, "பிரச்னை என்பது பாதை தொடர்பானது. மாவட்ட ஆட்சியரிடம் தான் நீங்கள் பேச வேண்டும்" என்றார். இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். "சுடுகாட்டுக்குச் செல்வதற்கு பட்டியல் பிரிவு மக்களுக்கு பாதை ஒன்று உள்ளது. அந்தப் பாதையை அதே சமூகத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் வீடு கட்டி மறித்துவிட்டார். பிரச்னைக்கு அடிப்படைக் காரணம் இது தான். மோத்தக்கல் கிராமத்தில் பட்டியல் பிரிவினர் வசிக்கும் இடத்தில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் சுடுகாடு உள்ளது. அதற்கான பாதையில் 13 தனி நபர்களின் பட்டா நிலங்கள் உள்ளன. இவர்கள் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் யாரும் சடலத்தைக் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவிக்கவில்லை" என்று பாஸ்கர பாண்டியன் கூறினார். சுரேஷ் என்பவர் கட்டி வரும் வீட்டுக்கு எதிரில் உள்ள பட்டா நிலத்தை சமன்படுத்தி, அதன் வழியே பெண்ணின் உடல் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறிய ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், "அந்த பட்டா நிலத்தின் உரிமையாளர் பிற சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை" என்று விளக்கம் அளித்தார். படக்குறிப்பு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பொதுவழியில் செல்வதற்கு அனுமதி மறுப்பா? பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் கிளியம்மாளின் உடலை பொதுவழியில் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல எதிர்ப்பு கிளம்பியதா என்ற கேள்விக்குப் பதில் அளித்த பாஸ்கர பாண்டியன், "பொது வழியில் யார் வேண்டுமானாலும் செல்லலாம். அதில் எந்த தடையும் இல்லை." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c0m0pydvnnlo
-
ஷைலஜா பாயிக்: நகர்ப்புற குடிசை வாழ்க்கை டூ அமெரிக்க பேராசிரியர் - ரூ.6.7 கோடி நிதியுதவி பெற்றது எப்படி?
பட மூலாதாரம்,MACARTHUR FOUNDATION & SHAILAJA PAIK படக்குறிப்பு, பேராசிரியர் ஷைலஜா பாயிக் கட்டுரை தகவல் எழுதியவர், விநாயக் ஹோகடே பதவி, பிபிசி செய்தியாளர் 6 அக்டோபர் 2024, 04:37 GMT "நாங்கள் வசித்த பகுதியில் தண்ணீர் வசதி இருக்காது. கழிவறைகள்கூட இல்லை. எங்கள் குடியிருப்புகளைச் சுற்றி குப்பை மேடுகள் சூழ்ந்திருக்கும். பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்திய அந்தக் காலகட்டத்தைப் பற்றிய நினைவுகள் இன்னமும் என்னை நிலைகுலைய வைக்கிறது.” 'கழிவறை வசதிகூட இல்லாமல் இருந்த நகர்புற குடிசைப் பகுதியில் இருந்து அமெரிக்காவில் பேராசிரியராக' பணியில் அமர்ந்தார் ஷைலஜா பாயிக். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை. தற்போது மதிப்புமிக்க 'மேக்ஆர்தர்' ('MacArthur') ஃபெல்லோஷிப்பை (ஆதரவு ஊதியம்) பெறும் முதல் தலித் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இந்த ஆதரவு ஊதியத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் 8 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 6 கோடியே 71 லட்சம்) நிதியை ஐந்து ஆண்டுகளுக்கு வெவ்வேறு கட்டங்களில் பெறுவார்கள். ஷைலஜா பாயிக் தனது ஆராய்ச்சியின் மூலம் தலித் பெண்களின் வாழ்க்கையை முழுமையாக விளக்கியுள்ளார். தலித் பெண்களின் வரலாற்றுப் பங்களிப்புகள் மற்றும் அவர்களின் அதிகரித்து வரும் சுய விழிப்புணர்வு ஆகியவற்றைப் பதிவு செய்த புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியராக ஷைலஜா பாயிக் கருதப்படுகிறார். `ஜான் டி. மற்றும் கேத்தரின் டி. மேக்ஆர்தர்’ அறக்கட்டளையால் ஒவ்வோர் ஆண்டும், மேக்ஆர்தர் ஃபெல்லோஷிப் / 'ஜீனியஸ் கிராண்ட்' பெல்லோஷிப் அமெரிக்காவில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த 20 முதல் 30 படைப்பாளிகள் மற்றும் வல்லுநர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும், எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூகவியலாளர்கள், ஆசிரியர்கள், ஊடகப் பணியாளர்கள், தகவல் தொழில்நுட்பம், தொழில்துறை, ஆராய்ச்சி போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த நபர்களுக்கு இந்த ஃபெல்லோஷிப் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஷைலஜா பாயிக்கும் ஒருவர். பிபிசி மராத்தியிடம் பேசிய அவர், "இந்த ஃபெலோஷிப்பை பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறினார். குடிசைப்பகுதி டூ அமெரிக்கா - ஒரு பேராசிரியரின் பயணம் பட மூலாதாரம்,SARITA PAIK படக்குறிப்பு, ஷைலஜா பாயிக் வளர்ந்த வீடு மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாநகராட்சியில் இருக்கும் எரவாடா (Yerawada) பகுதியைச் சேர்ந்தவர் ஷைலஜா பாயிக். அவர் எரவாடாவின் குடிசைப் பகுதியில் தனது மூன்று சகோதரிகளுடன் ஒரு சிறிய வீட்டில் வளர்ந்தார். தனது குழந்தைப் பருவத்தைப் பற்றி பிபிசி மராத்தியிடம் பேசிய அவர், "எங்கள் வீட்டில் தண்ணீர் வசதி இல்லை, கழிப்பறை இல்லை. குப்பை மேடுகளில் பன்றிகள் சுற்றித் திரியும். இப்படிப்பட்ட குப்பை மேடுகள் சூழ்ந்த பகுதியில்தான் நான் வளர்ந்தேன். பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்திய அந்தக் கோர நாட்களை மறக்கவே முடியாது." "எங்கள் பகுதியில் ஒரு பொதுக் குழாய் இருக்கும். அதில் வரும் தண்ணீரை சமையல், குளிப்பது போன்ற வழக்கமான பணிகளுக்குப் பயன்படுத்துவோம்." இந்தத் தண்ணீருக்காக அவர்கள் நீண்ட வரிசையில் சென்று தண்ணீர் எடுக்க வேண்டியிருந்தது என்பதையும் அவர் நினைவு கூர்கிறார். இருந்த போதிலும் ஷைலஜா, "தனது எதிர்காலத்தைப் பிரகாசமாக்க ஆங்கில வழியில் கல்வி கற்க மிகவும் சாதகமான சூழலை அவரின் தந்தை தேவ்ராம் மற்றும் தாயார் சரிதா ஏற்படுத்திக் கொடுத்ததாக" கூறுகிறார். "நான் வாழ்ந்த சமூகச் சூழல், எனது கல்வி, உணர்வு மற்றும் மனரீதியாக என அனைத்து நிலைகளிலும் நிச்சயமாக ஆழமான விளைவை ஏற்படுத்துகின்றன. இவ்வளவு கடினமான வாழ்க்கையை வாழ்ந்து, எரவாடா போன்ற பகுதியில், பல வசதிகள் மற்றும் சலுகைகள் இல்லாமல், இந்தச் சூழ்நிலையிலிருந்து வெளியே கல்வி பெறுவது எவ்வளவு முக்கியம்." அதை உணர்ந்த அவரது பெற்றோர், அவரை ஊக்கப்படுத்தியதாகவும், அதனால்தான் படிப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடிந்ததாகவும் ஷைலஜா தெரிவித்தார். அன்றைய நினைவுகளை நினைவுகூர்ந்த அவர், ``சிறிய வீட்டில் போர்வைகளைப் போர்த்தி கொண்டு, குடும்பத்தினரை அமைதியாக இருக்கச் சொல்லி, படிப்பேன். படிக்கும் சூழல் அங்கு இல்லை என்ற போதிலும், நானாக அந்தச் சூழலை உருவாக்கி கொண்டேன்.” "உண்மையில் இப்படிப்பட்ட சூழலில் படிப்பது பெரிய சவாலாக இருந்தது. மாலை 7:30 மணிக்கு தூங்கி நள்ளிரவு 2-3 மணிக்கு எழுந்திருப்பேன். காலை 6-7 வரை படிப்பேன். அதன் பின்னர் பள்ளிக்குப் போவேன்" என்று விவரித்தார். தனது போராட்டத்தைப் பற்றி மேலும் பேசிய அவர், "ஒரு தலித் என்பதால், என் வாழ்க்கையில் பல தருணங்களில் பாரபட்சம் காட்டப்பட்டது. அந்த வலிகளை அனுபவித்திருக்கிறேன். உதாரணமாக, நான் 'ஃபோர்ட் ஃபவுண்டேஷன் ஃபெல்லோஷிப்' பெற்றபோது, என்னைச் சுற்றியுள்ள சிலரால் அதை நம்ப முடியவில்லை. 'உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?' என்று அவர்கள் என்னிடம் அடிக்கடி கேட்டார்கள்." தனக்குக் கிடைத்த ஆதரவுத் தொகை என் பணிக்காகக் கிடைத்தது என்றும் ஆனால் ஒரு தலித் பெண் என்பதால் கிடைத்த தொகை என்று அவர்கள் நினைத்ததாகவும் ஷைலஜா கூறுகிறார். ஆதரவு ஊதியத் தொகையின் முக்கியத்துவம் பட மூலாதாரம்,MACARTHUR FOUNDATION படக்குறிப்பு, ஷைலஜா பாயிக் 'ஜீனியஸ் கிராண்ட்' (Genius Grant') எனப்படும் இந்த ஃபெல்லோஷிப் இந்த ஆண்டு 22 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 'படைப்பாற்றல்' என்பதே மேக்ஆர்தர் ஃபெல்லோஷிப்பின் அடிப்படை அளவுகோல். இந்த பெல்லோஷிப்பின் நோக்கம் புதுமையான யோசனைகளுடன் வளர்ந்து வரும் ஆய்வாளர்களின் பணிகளில் முதலீடு செய்வது, ஊக்குவிப்பது மற்றும் ஆதரவளிப்பதாகும். இந்த பெல்லோஷிப்பை வழங்குவதன் முக்கியக் குறிக்கோள், கடினமான சூழலை அனுபவித்து சாதிக்கத் துடிக்கும் ஆய்வாளர்களுக்கு வாய்ப்புகளைப் வழங்கி முன்னிலைப்படுத்துவதுதான். சமூகப் பிரச்னைகளைச் சமாளித்து, புதுமையான மற்றும் ஊக்கமளிக்கும் விஷயங்களை உருவாக்க ஆக்கப்பூர்வமாகவும் கற்பனையாகவும் சிந்திக்க அவர்களை ஊக்குவிப்பார்கள். இந்த ஃபெல்லோஷிப்பின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு 8 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 6 கோடியே 71 லட்சம்) பெறுவார்கள். இது பற்றிப் பேசுகையில், "தெற்காசியாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள தலித்துகள் மற்றும் தலித் அல்லாதவர்களுக்கான சாதிய வேறுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தை இந்த ஃபெல்லோஷிப் வலுப்படுத்தும்" என்று தான் நம்புவதாகக் கூறினார் ஷைலஜா. இந்த ஃபெல்லோஷிப்பின் முக்கியத்துவம் பற்றிப் பேசிய சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைத் தலைவர் ஷ்ரத்தா கும்போஜ்கர் பிபிசி மராத்தியிடம், "இந்த ஃபெல்லோஷிப் அதிக நிபந்தனைகள் அற்றது” என்று கூறினார். அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இந்த ஃபெல்லோஷிப்பிற்கு ஈடாக சிறப்பாக அல்லது வேறுபட்ட எதையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதில்லை. இது குறிப்பிடத்தக்கது” என்றார். "இந்திய மதிப்பில் இந்த ஃபெல்லோஷிப்பின் தொகையும் மிகப் பெரியது. திறமையானவர்களுக்கு முதலீடு செய்யும் நோக்கில் மேக்ஆர்தர் அறக்கட்டளை இந்த ஃபெல்லோஷிப்பை வழங்குகிறது” என்கிறார் கும்போஜ்கர். இந்த ஃபெல்லோஷிப்பிற்கு விண்ணப்பம் அல்லது நேர்காணல் செயல்முறைகள் எதுவும் இல்லை. பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்ட அறிவார்ந்த மற்றும் நம்பிக்கைக்குரிய நபர்கள் இந்த ஆதரவு ஊதியத் தொகையைப் பெறுகிறார்கள். `தலித் பெண்கள் மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள்’ பட மூலாதாரம்,MACARTHUR FOUNDATION படக்குறிப்பு, ஷைலஜா பாயிக் ஷைலஜா பாயிக்கின் ஆய்வு நவீன இந்தியாவில் சாதி, பாலினம் மற்றும் பாலுறவு ஆகியவற்றை தலித் பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ஆராய்கிறது. அவர் தனது ஒட்டுமொத்த ஆய்வைப் பற்றிப் பேசுகையில், "இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் தலித்துகள் 17 சதவீதம் உள்ளனர். தலித் பெண்களின் கல்விக்காக அதிக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதை நான் கவனித்தேன். புள்ளிவிவரங்கள் உள்ளன, ஆனால் சரியான நிலைமை குறித்து தரமான ஆராய்ச்சி எதுவும் இல்லை. தலித் பெண்களின் சரித்திரத்தை யாரும் சரியாக எழுதாததால், அந்த வேலையை நான் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்." "வரலாற்று ரீதியாக இவ்வளவு பெரிய மக்கள் தொகைக்கு கல்வி, பொது உள்கட்டமைப்பு, பொது நீர்நிலைகள் அனுமதிக்கப்படவில்லை. செருப்புகள் அல்லது புதிய ஆடைகளை அணிவதுகூட அனுமதிக்கப்படவில்லை. ஒருவரால் வாங்க முடிந்தாலும்கூட அவற்றை அணியக் கூடாது என்னும் ஒடுக்குமுறை இருந்தது." "தலித் பெண்கள் சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள். 'தலித்துகளிலும் தலித்துகள்'தான் தலித் பெண்கள். ஏனெனில் பாலினம் மற்றும் அரசியலின் கண்ணோட்டத்தில் அவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது." மேலும், "இது நான் வளர்ந்த சமூகம். அதனால்தான் கடந்த 25 ஆண்டுகளாக எனது ஆய்வு, ஆராய்ச்சி, எழுத்து அனைத்துமே அதை மையமாகக் கொண்டுள்ளது" என்று கூறினார். தலித் பெண்களின் வாழ்க்கை பற்றிய ஆழமான ஆய்வு பட மூலாதாரம்,SHAILAJA PAIK படக்குறிப்பு, சிறுவயதில் ஷைலஜா பாயிக் தனது தாயார் சரிதா பாயிக் உடன்... ஷைலஜா பாயிக் ஒரு நவீன வரலாற்றாசிரியர். அவர் தலித் பெண்களின் வாழ்க்கையை சாதி, பாலினம் ஆகியவற்றின் மூலம் ஆய்வு செய்கிறார். சாதி ஆதிக்க வரலாற்றில் புதிய கண்ணோட்டத்தைத் தனது ஆய்வின் மூலம் வழங்கியுள்ளார் பாயிக். அதனுடன், பாலினம் மற்றும் பாலுணர்வு எவ்வாறு தலித் பெண்களின் சுயமரியாதை மற்றும் அவர்களின் ஆளுமையின் ஒட்டுமொத்த சுரண்டலை பாதித்துள்ளது என்பதையும் தனது எழுத்துகளின் மூலம் அவர் விவாதித்துள்ளார். தலித்துகள் மற்றும் தலித் பெண்களின் அவரது எழுத்துகள் அனைத்திலும் மையப்படுத்தப்பட்டுள்ளனர். ஆங்கிலம், மராத்தி, இந்தி மொழிகளில் இலக்கியம் மட்டுமின்றி, சமகால தலித் பெண்களுடனான நேர்காணல்களையும் அவர்களின் அனுபவங்களையும் இணைத்து இன்றைய சூழலில் ஒரு புதிய பார்வையை உருவாக்கியுள்ளார். 'Dalit Women's Education in Modern India : Double Discrimination' (2014) மற்றும் 'The Vulgarity of Caste: Dalits, Sexuality and Humanity in Modern India' ஆகிய இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார். முதல் புத்தகத்தில் மகாராஷ்டிராவின் நகர்ப்புறங்களில் தலித் பெண்கள் கல்விக்காக நடத்திய போராட்டத்தை ஆங்கிலேயர் காலத்துச் சூழ்நிலையுடன் ஒப்பிட்டுள்ளார். ஷைலஜாவின் கல்விப் பயணம் பட மூலாதாரம்,MACARTHUR FOUNDATION தற்போது ஷைலஜா 2010ஆம் ஆண்டு முதல் சின்சினாட்டி பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்றுகிறார். அங்கு அவர் 'பெண்கள், பாலினம், பாலியல் சார்ந்த ஆய்வுகள் மற்றும் ஆசியாவை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளின்' ஆய்வுப் பேராசிரியராக உள்ளார். கீழ்நிலை நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்த ஷைலஜா வரலாறு பாடத்தில் எம்.ஏ. பட்டப் படிப்பை முடித்தார். 1994-96இல் சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகத்தில் படித்தார். கடந்த 2000ஆம் ஆண்டில், எம்.ஃபில் படிப்பிற்காக வெளிநாடு செல்ல இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICSSR) ஃபெல்லோஷிப்பை பெற்றார். பின்னர் அவர் பிரிட்டன் சென்றார். அதன் பிறகு மேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இதுவரை அவர் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சிக்கு, அமெரிக்கன் கவுன்சில் ஆஃப் லேர்ன்டு சொசைட்டி, ஸ்டான்ஃபோர்ட் மனிதநேய மையம், மனிதநேயத்திற்கான தேசிய அறக்கட்டளை, அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியன் ஸ்டடீஸ், யேல் பல்கலைக்கழகம், எமோரி பல்கலைக்கழகம், ஃபோர்டு அறக்கட்டளை, சார்லஸ் ஃபெல்ப்ஸ் டாஃப்ட் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றில் இருந்து நிதியுதவிகளைப் பெற்றுள்ளார். பிரிட்டனின் வார்விக் பல்கலைக்கழகத்தில் 2007இல் முனைவர் பட்டம் பெற்றார். யூனியன் கல்லூரியில் (2008-2010) விசிட்டிங் வரலாற்று உதவிப் பேராசிரியராகவும், யேல் பல்கலைக்கழகத்தில் (2012-2013) தெற்காசிய வரலாற்றின் போஸ்ட்-டாக்டோரல் அசோசியேட் மற்றும் உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr54zl9567vo
-
திருகோணமலையில் கூட்டிணைந்து போட்டியிட ஆயர் முன்னிலையில் இணங்கியது தமிழரசு - அம்பாறை விடயத்தினை உரையாடித் தீர்க்குமாறும் அறிவுரை!
06 OCT, 2024 | 01:17 PM (ஆர்.ராம்) பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் இணைந்து போட்டியிடுவதற்கு சாதகமான சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா, பொதுச்செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம், சுமந்திரன், சிறிதரன், குகதாசன் ஆகியோர் நேற்று மாலை திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேல் ஆண்டகையை நேரில் சந்தித்து உரையாடி இருந்தார்கள். திருகோணமலை மாவட்டத்தில் ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தினையே தக்க வைத்துக்கொள்ளும் நிலைமைகள் காணப்படுகின்ற நிலையில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என்ற அடிப்படையில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேல் ஆண்டகை முயற்சிகளை எடுத்திருந்தார். அந்த வகையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியையும் ஒன்றிணைத்து போட்டியிடச் செய்வதற்கான ஆரம்பகட்டப் பேச்சுக்கள் நிறைவுக்கு வந்திருந்த நிலையில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேல் ஆண்டகையுடனான சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி திருகோணமலை மாவட்டத்தில் தமது சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் 5 ஆசனங்களை தமக்கு வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது. எனினும், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேல் ஆண்டகையுடனான உரையாடல்களை அடுத்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 4 ஆசனங்களை தம் வசம் வைத்துக்கொண்டு மூன்று ஆசனங்களை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு வழங்குவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளனது. அதன் அடிப்படையில் திருகோணமலையில் இரு தரப்புக்களும் இணைந்து போட்டியிடுவதில் எவ்விதமான பிரச்சினைகளும் காணப்படவில்லை. ஆனால் அம்பாறையில் தமது சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி வலியுறுத்துகிறது. இந்த விடயம் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேல் ஆண்டகையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது, உரையாடல்கள் ஊடாக அந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் அம்பாறை ஆசனப்பகிர்வு மற்றும் சிறு விடயம் சம்பந்தமாக தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, வடக்கு, கிழக்கில் ஐந்து மாவட்டங்களிலும் தமிழ் அரசுக் கட்சி வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் என்று ஏகமனதாக தீர்மானம் எடுத்து அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195609
-
மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சியில் சிற்றரசர்கள் இடையிலான எல்லை ஒப்பந்தம் கூறும் சுவாரஸ்ய தகவல்
கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 8 மணி நேரங்களுக்கு முன்னர் தற்காலத்தில் அரசுகள் தங்களுக்குள் ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதைப் போலவே, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவும் அரசுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த ஒப்பந்தங்கள் பற்றி கிடைக்கக்கூடிய கல்வெட்டுகள் பல சுவாரஸ்யமான தகவல்களை நமக்குத் தருகின்றன. விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் ஒப்பில்லாமணீஸ்வரர் கோவிலில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டு, இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசுகிறது. கி.பி.1178ஆம் ஆண்டு முதல் கி.பி.1218ஆம் ஆண்டுவரை ஆட்சி செய்தவராகக் கருதப்படும் சோழ அரசரான மூன்றாம் குலோத்துங்கனுக்கு பல சிற்றரசர்கள் உறுதுணையாக இருந்தனர். கிளியூர் மலையமான், அதிகமான், இராசராசத்தேவன், அமராபரணன் சீயகங்கன், ராசராச வாணகோவரையன், வீரசேகர காடவராயன் போன்ற மன்னர்கள் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். இந்தச் சிற்றரசர்களில் சிலர், தங்களுக்குள் சில ஒப்பந்தங்களைச் செய்து கொண்டனர். அந்த ஒப்பந்தங்கள் கல்வெட்டுகளாகவும் பொறிக்கப்பட்டன. அதில் ஒரு கல்வெட்டுதான் 20 வரிகளைக் கொண்ட அரகண்டநல்லூர் கல்வெட்டு. கல்வெட்டு என்ன சொல்கிறது? அந்தக் கல்வெட்டில் பின்வரும் செய்தி காணப்படுகிறது. "(ஸ்வஸ்தி) ஸ்ரீ திரிபுவனச் சக்கரவ(ர்)த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு உயஅ ஆவது கிளியூர் மலையமான் இரை -யான் ஆன இரா[ஜ|ரா|ஜ]" சேதிராயற்கு கிளியூர் மலையமான் அழகிய நாயன் ஆகாரசூரநாந இராஜகெம்பீரச் சேதிராயநேந் இ.... ...க்கு திருவறையணி நல்லூர் ஒப்பொருவருமில்லாத நாயனார் கோவிலிலே கல்லும் வெட்டிக் குடுத்தேன் இரா[ஜ]ரா[ஜ]ச்சேதியராயற்கு இராஜகம்பீரச் சேதியராயனேன்" என்பது இந்தக் கல்வெட்டு வாசகம். படக்குறிப்பு, விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் உள்ள ஒப்பில்லாமணீஸ்வரர் கோவில் அதாவது, இந்த ஒப்பந்தம் மூன்றாம் குலோத்துங்கனின் 28ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1205-06 ஆண்டு) சிற்றரசர்கள் கிளியூர் மலையமான்களான "இராசராச சேதி ராயனும், அழகிய நாயன் ஆகாச சூரனான ராஜ கம்பீர சேதிராயனும் விஷி ஆண்டு ஐப்பசி மாதம் செவ்வாய்க்கிழமை" (27-09-1205) செய்து கொண்ட ஒப்பந்தம் என விவரிக்கிறார் விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் ரமேஷ். "ஒருவருக்கு ஒருவர் போர் புரியாமல் இருக்கவும் உறவினர்கள் என்றாலும் எதிரிகள் என்றாலும் இருவருக்கும் ஒன்று போலவே அமைத்துக்கொள்ளவும் இரு நாட்டினரும் அவரவர் சொத்துகளுக்குப் பாதுகாப்பாகவும் சேதம் விளைவிக்காமலும் இருக்கவும் எந்தச் சூழலிலும் இரு தரப்பும் சண்டையிடாமல் இணக்கமாகவே இருக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் நிபந்தனைகளை உருவாக்கி, அதை ஓர் ஒப்பந்தமாக மாற்றி உறுதி செய்தனர். அதைத்தான் இந்தக் கல்வெட்டு கூறுகிறது," என்கிறார் ரமேஷ். 12 நிபந்தனைகள் படக்குறிப்பு, விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் ரமேஷ் அந்தக் கல்வெட்டில் பின்வரும் ஒப்பந்த நிபந்தனைகள் இடம்பெற்றிருந்தன. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதில்லை. இருவரில் விருந்தினர்கள் யாருடைய விருந்தினர்களானாலும் இருவருக்கும் விருந்தினர்கள்தான். இருவரில் யாருடைய எதிரிகளானாலும் இருவருக்கும் எதிரிகள்தான். இருவரும் ஒருவருக்கொருவர் யாருடைய சொத்துகளுக்கோ அல்லது உயிர்களுக்கோ சேதம் ஏற்படுத்தவோ அல்லது சேதப்படுத்துவதற்குக் காரணமாகவோ அமைய மாட்டோம். இருவரும் ஒருவருக்கொருவர் ஒரே முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும். படக்குறிப்பு, விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் ஒப்பில்லாமணீஸ்வரர் கோவில் மூன்றாம் குலோத்துங்க சோழ தேவரின் 27ஆம் ஆட்சியாண்டில் எந்த அளவு தங்கள் நாட்டின் எல்லை இருந்ததோ அதே அளவையே எல்லைகளாக வைத்துக்கொள்ள வேண்டும். புதிய நிலங்களை வென்றால் அதைச் சமமாகப் பங்கிட்டு கொள்ள வேண்டும். தங்களுடைய போர்ப் படைகளை வாணகோவரையனுக்கோ அல்லது அவரது சகோதரர்களுக்கோ அனுப்பி வைத்துப் போரிடமாட்டோம். அவர்களுடன் நட்போ அல்லது உடன்பாடோ ஏற்படுத்த வேண்டுமெனில் அதை உடனுக்குடன் பேரரசன் மூன்றாம் குலோத்துங்கனுக்கு தெரிவிப்பது. இருவரும் சூழ்நிலைக்குத் தக்கவாறு பேரரசுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வது. எதிரி ஒருவரால் தாக்கப்படும்போது தேவையான போர்ப் படைகளைத் தங்கள் ராஜ்யத்தில் உள்ள பிள்ளை மற்றும் படை முதலிகளைத் தயங்காமல் அளித்து பயமின்றி போரிடச் செய்து வெற்றிகொள்ளச் செய்தல். ராஜ காரியம் செய்யும்போது இருவரும் இணைந்தே செயல்பட வேண்டும். இந்த ஒப்பந்தம் அகரம் பிடாரியாருக்கு பலி கொடுத்து ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. போர்க்காலத்தில் உதவ ஒப்பந்தம் தொடர்ந்து இதே கிளியூர் மலையமான், வாணகோவரையன் என்ற சிற்றரசனுடன் கி.பி.1191ஆம் ஆண்டு (15 ஆண்டுகளுக்கு முன்பு) ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தக் கல்வெட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் கோட்டையில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோவிலில் இருக்கிறது. அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோவிலின் வெளிப்பிரகாரத்தின் மேற்குச் சுவற்றில் உள்ள இந்தக் கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழனின் 18வது ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பட்டது. "ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவந சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோ தூங்க சோழ தேவர்க்கு யாண்டு 13வது திருக்கோவலூருடைய கிளியூர் மலையமான் சூரிய தேவர் நீரேற்றா...." என்று தொடங்கும் இந்தக் கல்வெட்டு திருக்கோவிலூரை தலைநகராகக் கொண்டு மலையமான் நாட்டை ஆண்டு வந்த சூரிய தேவன் நீரேற்றனான ராஜராஜ தேவனும், ஆறகளூரை தலைநகராகக் கொண்டு வானகப்பாடி நாட்டை ஆண்டு வந்த பொன் பரப்பினான குலோத்துங்க சோழ வாண கோவரையனும் உடன்பாடு செய்துகொண்ட ஒப்பந்தக் கல்வெட்டு. இதில் ஒருவருக்கொருவர் போர்க்காலத்தில் உறுதுணையாக இருக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒருவர் கல்யாணபுரத்துக்குக் கிழக்கிலும் மற்றொருவர் வடக்கிலும் தங்கள் படைகளை நிறுத்த வேண்டும் என்றும், யாராவது ஒருவர் படையெடுத்து வேறு மன்னரிடம் போரிட்டால் மற்றவர் படை முதலிகளையும் படையையும் குதிரைகளையும் வழங்க வேண்டும் என்றும் போர்க் காலத்தில் உதவி செய்வது தொடர்பான ஒப்பந்தத்தை விளக்குகிறது என்கிறார் பேராசிரியர் ரமேஷ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c8rd3nnrnpeo
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 2 முக்கிய தலைவர்கள் வீழ்த்தப்பட்டனர் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 2 முக்கிய தலைவர்கள் வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி போர் மூண்டது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் லெபனான் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகம் மீது நடத்திய தாக்குதலில் அதன் தலைவர் கொல்லப்பட்டார். அதனைத்தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியது. இருந்தபோதிலும் லெபனான் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், லெபனானில் ஹமாஸின் இராணுவப் பிரிவில் இருந்த இரண்டு பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதன்படி, முகமது ஹுசைன் அலி மற்றும் நயிஃப் அலி ஆகியோர் கொல்லப்பட்டதாகவும், இவர்கள் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களில் முக்கிய பங்காற்றியவர்கள் எனவும் அந்நாடு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/310335
-
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்தியா செல்வார் என தகவல்
தேர்தலுக்கு முன்னர் டெல்லி செல்ல ஜனாதிபதி அநுர அவதானம் : சீன உயர்மட்ட குழு விரைவில் கொழும்பு வரும் 06 OCT, 2024 | 11:56 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கு வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆகியோரின் வாழ்த்துச் செய்திகளை கையளித்திருந்தார். இதன்போது டெல்லி விஜயத்துக்கான பிரதமர் மோடியின் அழைப்பையும் வழங்கினார். இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார விரைவில் இந்திய விஜயத்துக்கான அறிவிப்பை விடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதன் பிரகாரம் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் டெல்லிக்கு விஜயம் செய்வது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவதானம் செலுத்தியுள்ளார். எனினும், இறுதி திகதி உறுதிப்படுத்தப்படவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் இந்திய விஜயம் குறித்து அறிவிக்கப்படவுள்ள நிலையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரத்துறையின் விசேட குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்றிருந்த அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயம் மிகவும் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. இரு தரப்புகளுமே விஜயம் குறித்து எவ்விதமான தகவல்களையும் இன்றளவில் வெளிப்படுத்தவில்லை. இந்த விஜயத்துக்கான ஏற்பாடுகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரத் துறையின் துணை அமைச்சரும் அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான சன் ஹையான் முன்னெடுத்திருந்தார். மேலும், பெய்ஜிங்கில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளின்போது இலங்கையில் தாம் ஆட்சியைக் கைப்பற்றினால் நெருக்கடியின்றி நாட்டை நிர்வகிப்பதற்கு சீனாவிடமிருந்து என்ன வகையான உதவிகளை வழங்க முடியும் என சீன அதிகாரிகளிடம் அநுரகுமார திசாநாயக்க கேட்டிருந்தார். இந்த கலந்துரையாடலின் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்த துணை அமைச்சர் சன் ஹையான் பெலவத்தையில் உள்ள ஜே.வி.பி அலுவலகத்துக்கு சென்று, அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, சீனாவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய விசேட முன்மொழிவுகளையும் உறுதிமொழிகளையும் கையளித்திருந்தார். உள்நாட்டு பொருளாதார ஊக்குவிப்பின் முதல் கட்டமாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு உலகில் வேறு எந்த நாடும் செய்ய முடியாத வகையில் சீனா இலங்கைக்கு உதவ முடியும் என்று உறுதியளிக்கப்பட்டது. இரு வருடங்களுக்குள் சீனாவில் இருந்து ஒரு மில்லியன் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அனுப்ப முடியும் என துணை அமைச்சர் சன் ஹையான் அந்த சந்திப்பின்போது தெரிவித்தார். இதை ஒரே நேரத்தில் செய்ய முடியும் என்றாலும், இலங்கையில் தற்போதுள்ள உட்கட்டமைப்பு போதுமானதாக இல்லாததால், சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை படிப்படியாக ஒரு கோடி வரை அதிகரிக்க முடியும். எனவே தேர்தலில் வெற்றி பெற்றால் உங்களது வேண்டுகோளுக்கிணங்க சீரான பொருளாதார முன்னேற்றம் மற்றும் மறுசீரமைப்புகளுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை சீனா வழங்கும் என்ற உறுதிப்பாட்டை சீன துணை அமைச்சர் வழங்கியிருந்தார். தேர்தல் வெற்றியின் பின்னர் சீன தூதுவரை சந்தித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஏற்கனவே திட்டமிடப்பட்ட விடயங்கள் மற்றும் புதிய பொருளாதார திட்டங்கள் குறித்து கலந்துரையாடியிருந்தார். இதற்கு அமைவாக எதிர்வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் சுற்றுலாப் பருவத்தில் 30 இலட்சம் சீன சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட குழுவை இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். அடுத்த சுற்றுலா பருவத்தில் அந்த தொகையை 60 இலட்சமாக உயர்த்த சீனா ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் அடுத்தகட்ட ஒத்துழைப்புகளுக்காக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரத் துறையின் உயர்மட்ட குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி அநுரவின் சீன நட்பு குறித்து மேற்குலகம் உள்ளிட்ட பிற நாடுகள் கவனம் செலுத்தியுள்ளன. எவ்வாறாயினும், சீனா, இந்தியா, மேற்கு நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய நாடுகளை சமநிலைப்படுத்தும் மிகவும் கவனமான பயணத்துக்கான ஆரம்ப நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எடுத்துள்ளமை வெளிப்படுகின்றது. அதேபோல் இந்தியாவின் அழைப்பை ஏற்று ஏனைய ஜனாதிபதிகள் போல் அநுரகுமார திசாநாயக்க மிக விரைவில் டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195601
-
அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறும் மகிந்த ராஜபக்ச
மஹிந்த ஓய்வு? அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ள நிலையில் அவர் அரசியலில் இருந்து ஓய்வு தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. சமகால அரசியலில் நிலவும் பாதகமான சூழல், உடல்நிலை, வயது போன்றவற்றை கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக மகிந்தவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாரம்பரிய அரசியல் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களும் இந்த முடிவிற்கு காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின் போது இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மகிந்த அரசாங்கமே காரணம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/310325
-
இலங்கை சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ் கட்சிகளை சந்திக்காதது ஏன்?
தமிழ் தரப்புகளை சந்திக்காமல் சென்ற ஜெய்சங்கர் 06 OCT, 2024 | 11:13 AM (லியோ நிரோஷ தர்ஷன்) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை (4) இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்புகளை சந்திக்காது நாடு திரும்பினார். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை இராஜதந்திர மட்டத்தில் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்த எஸ்.ஜெய்சங்கர், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் சந்தித்திருந்தார். மேலும் பாத்ஃண்டர் அமைப்பின் மிலிந்த மொரகொட உள்ளிட்ட அந்த அமைப்பின் நிர்வாகிகளையும் சந்தித்திருந்தார். எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட முஸ்லிம் தரப்புகளை வழமையாகவே இலங்கை விஜயத்தின்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட ஏனைய இந்திய பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடுவது இயல்பானது. ஆனால் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னரான முக்கியமானதொரு தருணத்தில் கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமிழ் தரப்புகளை சந்திக்காது நாடு திரும்பியுள்ளார். இது குறித்து கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிடுகையில், இத்தகைய இந்திய முக்கிய பிரதிநிதிகள் இலங்கைக்கு வரும் போது எம்முடனான சந்திப்புகள் திட்டமிடப்பட்டு எமக்கு அறிவிக்கப்படும். ஆனால் இம்முறை இடம்பெற்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் விஜயத்தில் எம்முடனான சந்திப்பு இடம்பெறவில்லை. இது ஏன் என்று எமக்கு தெரியாது என குறிப்பிட்டார். எனினும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருடனான சந்திப்பின்போது இனப்பிரச்சினை சார்ந்த விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாகவும் வினைத்திறன் மிக்க வகையில் நடைமுறைப்படுத்தல் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவில் நடத்துவதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கொழும்பு சந்திப்புகளில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. ஆனால், 13ஆவது திருத்தத்தின் எதிர்காலம் அடுத்து வரக்கூடிய புதிய பாராளுமன்றத்தில் தீர்மானிக்கப்படும் என்று தெளிவாகவே ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்தியா வலியுறுத்துகின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டங்கள் மற்றும் 13ஆவது திருத்தம் என்பன சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட உள்ள புதிய அரசியலமைப்பு ஊடாகவே தீர்மானிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் வெளிவிவகார அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195598
-
யாழ். பல்கலைக்கழக பொன் அகவை நாள் நிகழ்வுகள் இன்று ஆரம்பம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு நாள் இன்று ஞாயிற்றுக்கிழமை சர்வமத நிகழ்வுடன் கொண்டாடப்படவுள்ளது. பொன் அகவை நிறைவு நாளான இன்று பல்கலைக்கழகத்தில் உள்ள இந்து மாமன்றம், பௌத்த சகோதரத்துவ சமூகம், கத்தோலிக்க மாணவர் மன்றம் மற்றும் முஸ்லிம் மஜ்லிஸ் ஆகியவற்றின் ஏற்பாட்டில் பல்வேறு மதப் பிரார்த்தனைகள் இடம்பெற்று கைலாசபதி கலையரங்கத்தில் கூட்டு மத நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பரமேஸ்வரன் ஆலயத்தில் விசேட அபிஷேகமும், விசேட பூஜையும், சிறப்பு வழிபாடுகளும், பௌத்த சகோதரத்துவ சமூகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் ஶ்ரீ நாகவிகாரை சர்வதேச மத்திய நிலையத்தில் பௌத்த மதப் பிரார்த்தனைகளும், கத்தோலிக்க மாணவர் மன்ற ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழக நல்லாயன் நிலையத்தில் விசேட ஆராதனைகளும், பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள இஸ்லாமியத் தொழுகை நிலையத்தில் இஸ்லாமிய மதப் பிரார்த்தனைகளும் இடம்பெறவுள்ளன. தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார நுழைவாயில் சம்பிரதாய பூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது. தொடந்து பலகலைக்கழக நலச்சேவைகள் கிளையால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள சர்வமத நிகழ்வுகள் கைலாசபதி கலையரங்கத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாணம் வளாகமாக 1974 ஒக்டோபர் 6ஆம் திகதி இலங்கையின் அப்போதைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் பொன் விழா நிகழ்வுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இடம்பெற்று வருகின்றன. பொன்விழாவையொட்டி பல்கலைக்கழகத்தால் மாநாடுகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் என்பன ஒழுங்குபடுத்தப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதன் ஒரு அங்கமாக ஐந்தாவது அனைத்துலகத் தமிழியல் மாநாடும், முத்தமிழ் விழாவும் நாளை 7 ஆம் திகதியும், நாளை மறுதினம் 8 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/310323
-
உருளைக் கிழங்கு, வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரி அதிகரிப்பு!
உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரியை நிதி அமைச்சு அதிகரித்துள்ளது. 1 கிலோ உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரியை 10 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 1 கிலோ பெரிய வெங்காயத்திற்கான வரியை 20 ரூபாவால் அதிகரிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரி 50 ரூபாவில் இருந்து 60 ரூபாவாகவும், பெரிய வெங்காயத்திற்கான வரி 10 ரூபாவில் இருந்து 30 ரூபாவாகவும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்தின் விலைகள் கனிசமான அளவு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. https://thinakkural.lk/article/310319
-
யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுகட்சியின் சார்பில் தந்தை செல்வாவின் பேரன் இளங்கோவன் களத்தில் - சுமந்திரன்
06 OCT, 2024 | 07:13 PM எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழரசு கட்சியின் யாழ். மாவட்டத்திற்கான வேட்பாளர்களின் பெயர் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தந்தை செல்வா மற்றும் இரும்பு மனிதர் நாகநாதன் ஆகியோரின் பேரனும் சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான இளங்கோவன் தேர்தலில் போட்டியிட கட்சியின் தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/195645
-
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2023ம் ஆண்டிற்கான 28 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா
Published By: DIGITAL DESK 7 06 OCT, 2024 | 10:00 AM கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2023ம் ஆண்டிற்கான 28 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா நேற்று சனிக்கிழமை (05) மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்று வருகின்றது. கிழக்குப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்களின் ஒருங்கிணைப்பில் நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றுவருகின்றது. இந் நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஓய்வு பெற்ற பேராசிரியர் மா.செல்வராஜா பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்குவதுடன் பட்டதாரிகளின் பட்டங்களையும் உறுதிசெய்துள்ளார். இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் (யாழ்ப்பாணம்) ஸ்ரீ சாய் முரளி அவர்கள் இந்நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார். வரலாற்றில் முதல் தடவையாக அதிகூடிய எண்ணிககையிலான மாணவர்கள் இம்முறை பட்டம் பெற்றுள்ளனர். ஏறத்தாழ 2340 உள்வாரி, வெளிவாரி, கலாநிதி மற்றும் பட்டப்பின்படிப்பு பட்டங்கள் இம்முறை பொது பட்டமளிப்பு விழாவில் பட்டம் வழங்க உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் - பேராசிரியர் கலாநிதி வ.கனகசிங்கம் தெரிவித்தார். பிரதி உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி ரீ.பிரபாகரன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர். பட்டமளிப்பு விழாவின் 1ம் நாளில் முதலாவது அமர்வின் போது இரு கலாநிதிப்பட்டம், ஒரு முதுதத்துவமாணி இரு விஞ்ஞான கல்வியில் முதுமாணி, ஒரு விவசாய விஞ்ஞானத்தில் முதுமாணி, 58 கல்வியியல் முதுமாணி, 04 கலை முதுமாணி, 05 வியாபார நிர்வாக முதுமாணி, 31 அபிவிருத்தி பொருளியல் முதுமாணி, மற்றும் 153 இளங்கலைமாணி பட்டங்கள் (வைத்தியமாணி,சத்திரசிகிச்சைமாணி, சிறப்பு தாதியியல் விஞ்ஞானமாணி, தாதியியல் விஞ்ஞானமாணி, சிறப்பு விவசாய விஞ்ஞானமாணி, விவசாய விஞ்ஞானமாணி) போன்றவை வழங்கப்பட்டுள்ளன. வணிக நிர்வாகமாணி, சிறப்பு வணிக நிர்வாகமாணி, சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தில் சிறப்பு வணிக நிர்வாகமாணி, மனிதவள முகாமைத்துவத்தில் சிறப்பு வணிக நிர்வாகமாணி, சிறப்பு வணிகவியல்மாணி, வணிகவியல்மாணி, கணக்கீடு மற்றும் நிதியியல் சிறப்பு வணிகவியல் மாணி, வணிக பொருளியல் சிறப்பு வணிகவியல் மாணி, விஞ்ஞானமாணி, சிறப்பு விஞ்ஞானமாணி எனும் வகையில் 333 பட்டங்களும், சித்தமருத்துவம் - சத்திர சிகிச்சை இளமாணி, சிறப்பு விஞ்ஞானமாணி, கணினி விஞ்ஞானமாணி விவசாய தொழில்நுட்பம் மற்றும் முயற்சியாண்மையில் உயிர்முறைமைகள் தொழில்நுட்ப கௌரவ இளமாணி, தொடர்பாடல் கற்கைகளில் கலைமாணி, மொழியியல் கலைமாணி, எனும் வகையில் 424 பட்டங்களும், மற்றும் நுண்கலைமாணி - இசைஇ நுண்கலைமாணி – நடனம், நுண்கலைமாணி – நாடகமும் அரங்கியலும், நுண்கலைமாணி - கட்புலமும் தொழிநுட்பவியல் கலையும் எனும் வகையில் 204 பட்டங்களும் முதலாம் நாளில் 2வது 3வதுஇ 4வது அமர்வுகளில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கல்விமாணி, மற்றும் கலைமாணி (விசேட பட்டம்) எனும் வகையில் 321 பட்டங்களும் கலைமாணி (பொதுப்பட்டம்), எனும் வகையில் 740 பட்டங்களும் வியாபார முகாமைத்துவமாணி (வெளிவாரி) எனும் வகையில் 61 பட்டங்களும் 2ம் நாளின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் அமர்வுகளில் பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/195591
-
இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை நிறுத்தியுள்ள பிரான்ஸ்: மேக்ரானின் அதிரடி நடவடிக்கை!
காஸா (Gaza) போரில் பயன்படுத்தப்படும் ஆயுத விநியோகத்தை பிரான்ஸ் (France) நிறுத்துவதாகவும், இனி ஆயுதங்களை இஸ்ரேலுக்கு (Israel) விநியோகம் செய்வதில்லை என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார். மேலும், காஸா மீதான தாக்குதலுக்கு பிரான்ஸ் ஆயுத விற்பனை முன்னெடுக்கவில்லை என்றும் மேக்ரான் (Emmanuel Macron) அழுத்தமாக பதிவு செய்துள்ளார். போர் தற்போதும் தொடரும் நிலையில் காஸாவில் பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுவரும் நிலையில் அமெரிக்கா, ஜேர்மனி, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை இரத்து செய்யாததை அடுத்து மனித உரிமை அமைப்புகளால் விமர்சிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனை ஆனால் இதுவரை இஸ்ரேலுக்கு வெறும் உதிரி பாகங்கள் மட்டுமே பிரான்ஸ் ஏற்றுமதி செய்து வந்துள்ளதாகவும், 2022ல் 15 மில்லியன் யூரோ தொகைக்கு மட்டும் உதிரி பாகங்களை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளதாகவும் பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டின் லெகோர்னு வலியுறுத்தி வந்துள்ளார். இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் எதுவும் பிரான்ஸ் வழங்கவில்லை என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். ஆனால் உதிரி பாகங்கள் விற்பனையும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பிரான்ஸில் வலுப்பெற்றுள்ளது. கடந்த மாதம் இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனை உரிமங்களில் சிலவற்றை பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் இரத்து செய்துள்ளது. ஜனாதிபதி மேக்ரான் இந்த முடிவை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். கடந்த வாரம், இஸ்ரேலுக்கான புதிய ஆயுத ஏற்றுமதி உரிமங்களுக்கு ஜேர்மனி இடைநிறுத்தம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. காஸா மீதான தாக்குதல் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் நிலையில், இஸ்ரேல் இராணுவம் தற்போது ஹிஸ்புல்லா படைகள் மீது போர் தொடுக்கத் தொடங்கியுள்ள நிலையிலேயே பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் ஆயுத ஏற்றுமதி தடை குறித்து உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/macron-urges-halt-deliveries-weapons-used-in-gaza-1728153076
-
ஐ.நாவில் இலங்கை குறித்த தீர்மானத்தை காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளியுங்கள் - புதிய அரசாங்கத்திடம் 25 சிவில் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தல்!
06 OCT, 2024 | 09:39 AM (நா.தனுஜா) ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளித்தல் உள்ளடங்கலாக ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக நாட்டில் கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளைப் புதிய அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என 25 சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. இதுகுறித்து சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையம், சட்டம் மற்றும் சமூக நிதியம், பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு, இனக்கற்கைளுக்கான சர்வதேச நிலையம் உள்ளிட்ட 25 அமைப்புக்கள் ஒன்றிணைந்து வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: நாட்டில் நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித்தேர்தல் முடிவுகள் மற்றும் புதிய அரசாங்கத்தின் நியமனத்தை இலங்கையின் அரசியல் மாற்றத்தின் மிகமுக்கிய மைல்கல்லாகக் கருதுகிறோம். தேர்தலும், ஆட்சி மாற்றமும் அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றமை குறித்து மகிழ்ச்சியடைகிறோம். நாடு இப்போது பாராளுமன்றத்தேர்தலுக்குத் தயாராகி வருகிறது. நாட்டை ஜனநாயகப் பாதையில் கொண்டுசெல்வதாகவும், ஊழலை இல்லாதொழிப்பதாகவும், தனக்கு வாக்களிக்காதோர் உள்ளடங்கலாக நாட்டின் பிரஜைகள் சகலருக்கும் ஜனாதிபதியாக செயற்படுவதாகவும் அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுயளித்திருந்தார். அதுமாத்திரமன்றி நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் 'அரகலய' போராட்டத்தின் ஊடாக மக்களால் வலியுறுத்தப்பட்ட கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்திருக்கிறது. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பின்தங்கிய மற்றும் நலிவுற்ற சமூகப்பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அரசாங்கம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தும் என நம்புகிறோம். அதேவேளை அனைவருக்குமான நீதியை நிலைநாட்டுவதை முன்னிறுத்தி நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து, அதிகாரப்பகிர்வை வழங்கக்கூடிய புதிய அரசியமைப்பை உருவாக்கல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தல், சகல இனங்களுக்கு இடையிலும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பல், பொது ஒழுங்கைப் பேணுவதற்கும் பொலிஸ் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கும் இராணுவத்துக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் வெளியிடப்பட்டுவரும் வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்தல், போர்க்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்தல், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளித்தல் ஆகிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என அக்கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/195589
-
இஸ்ரேல் - இரான்: மத்திய கிழக்கில் அணு ஆயுதப் போர் மூளும் ஆபத்தா? 6 முக்கியக் கேள்விகள்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி, தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் தனது தரைவழி படையெடுப்பைத் துவங்கியது. சிறிது நேரம் கழித்து, இரான் இஸ்ரேலை நோக்கி 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியது. காஸாவில் போர் இன்னும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மத்திய கிழக்கில் ஒரு முழுமையான பிராந்திய மோதல் ஏற்படும் என்ற அச்சம் பரவலாக உள்ளது. அதிகரிக்கும் இந்த அச்சுறுத்தல் எவ்வளவு பெரிய ஆபத்து? மோதல் ஏன் அதிகரித்தது? அடுத்து என்ன நடக்கலாம்? இவை குறித்த பகுப்பாய்வைப் பகிர்ந்து கொள்ளுமாறு ‘பிபிசி இன்டெப்த் (BBC InDepth)’ பிரிவுக்காகப் பல நிபுணர்களிடம் கேட்டோம். அவர்களது கருத்துகள் இங்கே தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. லெபனானில் இஸ்ரேலின் நீண்டகாலத் திட்டம் என்ன? இஸ்ரேலின் நோக்கம் முதலில், ஹெஸ்பொலாவை வலுவிழக்கச் செய்வதாக இருந்தது எனக் கூறும் லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்கத் துறைகளுக்கான பள்ளியின் (School of Oriental and African Studies) பேராசிரியர் லினா கதீப், "ஆனால் இப்போது, இஸ்ரேலின் வடக்குப் பகுதியைப் பாதுகாக்கும் வகையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவதும், ஹெஸ்பொலாவை நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்வதும் இஸ்ரேலின் இலக்குகளாக மாறிவிட்டதாகத் தெரிகிறது," என்கிறார். இஸ்ரேலின் இலக்கு இப்படி இருந்தாலும்கூட, “ஹெஸ்பொலாவுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்த முடிந்தாலும், இஸ்ரேலின் ராணுவத் தாக்குதலால் ஹெஸ்பொலாவை முற்றிலுமாக அழித்துவிட முடியாது,” என்கிறார் அவர். எழுத்தாளரும், ‘செஞ்சுரி இண்டர்நேஷனல்’ ஆராய்ச்சி மையத்தின் உறுப்பினருமான டாலியா ஷிண்ட்லின் இஸ்ரேல் தனது பரப்பளவை விரிவாக்கும் நோக்கத்தைக் கொண்டிருப்பதாகக் கருதுகிறார். முதலில் வடக்கு இஸ்ரேல் மக்களை இடம்பெயர வைத்த ஹெஸ்பொலாவின் தாக்குதலை எதிர்த்து, அந்தப் பிரச்னையைச் சரி செய்வதன் மூலம், அப்பகுதி மக்களை மீண்டும் அங்கு குடியமர்த்த இஸ்ரேல் நினைத்தது என்கிறார் அவர். ஆனால் “இப்போது இஸ்ரேல் அரசு மதக் குழுக்களையும் அங்கு அனுப்புகிறது. எனவே அதன் எல்லையை விரிவுபடுத்துவதும் நோக்கமாகக்கூட இது இருக்கலாம்,” என்கிறார். சிரியா மற்றும் இராக்கிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் ராபர்ட் எஸ் ஃபோர்ட், ஹெஸ்பொலா மீது லெபனான் அரசு தனது அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று இஸ்ரேல் விரும்புவதாகச் சொல்கிறார். ஆனால், இது மோசமான விளைவுகளை உண்டாக்கக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கிறார். “இஸ்ரேல் லெபனானுக்கு எதிராக தரைவழிப் போரை 1982இல் முன்னெடுத்தது. பாலத்தீனிய விடுதலை அமைப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இந்தப் போர், லெபனான் எல்லையில் வசிக்கும் இஸ்ரேலிய குடிமக்களை நீண்டகாலத்திற்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆகவே தற்போதைக்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவது மட்டுமே இஸ்ரேலின் நோக்கமாக இருந்தால், வடக்கு இஸ்ரேலில் இடம்பெயர்ந்த 60,000 மக்கள் வீடு திரும்ப வாய்ப்பு உண்டு,” என்று அறிவுறுத்துஅறிவுறுத்துகிறார். மத்தியக் கிழக்கின் வரைபடம் மாறுகிறதா? பட மூலாதாரம்,GETTY IMAGES அப்படி உடனடியாகச் சொல்லிவிட முடியாது என்றாலும், ஆனால் கண்டிப்பாக மத்தியக் கிழக்கின் அரசியல் அதிகாரச் சமன்பாடுகள் மாறி வருவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். மத்தியக் கிழக்கில் இரானின் ஆதிக்கத்தைக் குறைக்கும் வகையில் மத்தியக் கிழக்கின் அதிகாரச் சமநிலை மாறி வருவதாகக் கூறுகிறார் பேராசிரியர் லினா கதீப். ஆனால் அது முழுதாக நடப்பதற்கு நெடுங்காலம் ஆகும் என்கிறார் அவர். இதே கருத்தைப் பிரதிபலிக்கிறார் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் முன்னாள் ஆலோசகர் பிலால் சாப். “மத்தியக் கிழக்கில் இரானின் கூட்டணி நாடுகள் வலுவிழந்து வருகின்றன. இஸ்ரேலுக்கு ராஜ்ஜீயரீதியாகச் சில ஆதாயங்கள் கிடைத்துள்ளன. இவை மூலோபாய ஆதாயங்களாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேலை தாக்கியதில் இருந்தே, இஸ்ரேல்-இரானின் சமநிலை தகர்ந்து இஸ்ரேலின் கை ஓங்கி வருவதாக மத்தியக் கிழக்கு இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த பால் சலேம் தெரிவித்தார். இரான் அணு ஆயுதம் உருவாக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அயதுல்லா அலி கமேனியை பொறுத்தவரை, இஸ்ரேலை அழிக்கும் திட்டம் மிகவும் முக்கியமானது. இதற்கு பதிலளித்த எழுத்தாளரும், பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியருமான அராஷ் அஸிஸி, ஹமாஸ், ஹெஸ்பொலா ஆகிய தடுப்பான்களை இழந்த இரான், அணு ஆயுதத்தை உருவாக்க விரும்பும், என்கிறார். “ஒருவேளை இரான் இதைச் செய்தால், அதன்மூலம் அந்நாடு மிகவும் ஆபத்தான பகுதிக்குள் நுழைகிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில், இஸ்ரேலுடன் ஒப்பிட்டால் இரானின் ராணுவ திறன்கள் பலவீனமானது. இதன் காரணமாக, இரான் ஆயுதக்குழுக்களைச் சார்ந்திருப்பது என்ற வியூகத்தைப் பின்பற்றி வருகிறது. இருப்பினும், இந்த அணுகுமுறை மிகச் சிறிய பயனையே அளித்துள்ளது," என்று விளக்குகிறார் அஸிஸி. இஸ்ரேல் எதிர்ப்பு உணர்வு இரான் ஆட்சியின் மையமாக இருப்பதால், இரானின் அணுசக்திக் கனவுகள் இஸ்ரேலுக்கு கவலை அளிப்பதாகக் கூறுகிறார் அஸிஸி. அதற்குக் காரணம், “அயதுல்லா அலி கமேனியை பொறுத்தவரை, இஸ்ரேலை அழிக்கும் திட்டம் மிகவும் முக்கியமானது. அவர் முன்னெடுத்துச் செல்ல முடிந்த ஒரே திட்டம் இதுதான். இஸ்ரேலுக்கு எதிரான திட்டம்தான், இஸ்லாமிய குடியரசு தலைமை வகிக்கும் ஒரே விஷயம். உலகில் இஸ்ரேலை தாக்கும் ஒரே நாடு இரான்தான்,” என்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், "தனது அணுசக்தி கட்டமைப்புகள் மீதான இஸ்ரேலிய தாக்குதல் அபாயம் இருப்பதை உணர்ந்துள்ள இரான், அவற்றைப் பாதுகாக்க என்ன வேண்டுமானாலும் செய்யும்" என்கிறார் லினா கதீப். மத்திய கிழக்கில் மோதல் பரவினால், காஸாவில் இஸ்ரேலின் நிலை கடினமாகுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மோதல் பரவினால் இஸ்ரேலிய படைகள் பரவலாகப் பிரிய வேண்டிய நிலை வரும் காஸாவில் கடந்த ஓர் ஆண்டாக இஸ்ரேல் போரிட்டு வருகிறது. ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே பெருமளவிலான உயிரிழப்புகளும் அழிவுகளும் ஏற்பட்டுள்ளன. ஆனால், "காஸாவில் இஸ்ரேலின் நோக்கங்கள் நிறிவேறுவதில் உள்ள மிகப்பெரிய பிரச்னை, ஹமாஸுக்கு மாற்றாக இஸ்ரேலிடம் எந்தத் திட்டமும் இல்லை என்பதுதான்," என்கிறார் டாலியா ஷிண்ட்லின். “[மோதல் பரவினால்] இஸ்ரேலிய படைகள் பரவலாகப் பிரிய வேண்டிய நிலை வரும். ஆனால் அதுவல்ல பிரச்னை. பாலத்தீன சுயநிர்ணய உரிமைக்கு வழிவகுக்கும், சர்வதேச மற்றும் பாலத்தீன் வரவேற்பைப் பெறும் அரசாங்கக் கட்டமைப்பிற்கான அரசியல் உத்தி இஸ்ரேலுக்கு தேவை. அது இல்லாமல் போனால், இஸ்ரேலுக்கு ஓர் அச்சுறுத்தலாகவும், இஸ்ரேல் ராணுவத்தைச் சோர்வடையைச் செய்வதாகவுமே காஸா இருக்கும்,” என்கிறார் அவர். இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள், மத்தியக் கிழக்கு மக்களுக்கு இஸ்ரேல் மீது கோபத்தை அதிகரித்து வருவதாகக் கூறுகிறார் பேராசிரியர் லினா கதீப். “மத்தியக் கிழக்கின் மக்கள் பாலத்தீனம் மீது கரிசனம் கொள்ளத் துவங்கி இருக்கிறார்கள். இது அந்தப் பகுதியில் அமைதி ஏற்படுவதைக் கடினமாக்குகிறது,” என்கிறார். புதிய அமெரிக்க அதிபர் இஸ்ரேலை கட்டுப்படுத்துவாரா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதில், ஜோ பைடனைவிட கமலா ஹாரிஸுக்கு நீண்ட கால நிர்பந்தங்கள் குறைவு என்கிறார் டாலியா ஷிண்ட்லின். எந்தவொரு அமெரிக்க அதிபரும் விரும்பினால் பெஞ்சமின் நெதன்யாகு மீது செல்வாக்கு செலுத்த முடியும், என்கிறார் டாலியா ஷிண்ட்லின். “ஆனால் அது ஆதாயமானது என்று யாரும் நினைக்கவில்லை. இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதில், ஜோ பைடனைவிட கமலா ஹாரிஸுக்கு நீண்ட கால நிர்பந்தங்கள் குறைவே. ஆனால் அவரது கட்சிக்குள் இதுகுறித்து ஒரு பிளவு உள்ளது. ஒரு பக்கம் இஸ்ரேலுக்கு வலுவான ஆதரவு உள்ளது, மறுபுறம், ஒரு சிலர் இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத் தடை விதிக்க அழைப்பு விடுத்துள்ளனர்,” என்கிறார் அவர். “ஆனால் எப்படியாவது இஸ்ரேலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஜனநாயகக் குரல்கள் கணிசமாக வளர்ந்து வருகின்றன. டிரம்ப் பெரிதாகப் பேசுவார், ஆனால் அமெரிக்கா போர்களுக்குள் இழுக்கப்படுவதை அவர் விரும்பமாட்டார்,” என்கிறார் அவர். சிரியா மற்றும் இராக்கிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் ராபர்ட் எஸ் ஃபோர்ட், "பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவியாக 10 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 84,000 கோடி ரூபாய்) வழங்கும் எந்தவொரு அமெரிக்க நிர்வாகமும், அதன்மீது ஆதிக்கம் செலுத்தும்," என்கிறார். ஆனால், "ஆனால், அதன் விளைவாக உள்நாட்டில் ஏற்படும் அரசியல் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் ஒரு அமெரிக்க அரசியல்வாதி அதிகாரப் பதவியில் இருக்கிறாரா என்பதுதான் கேள்வி. ஆனால், ரொனால்ட் ரீகன், ஜார்ஜ் புஷ் போன்றவர்கள் இப்போதைக்கு அப்படி ஒருவர் எந்தக் கட்சியிலும் இல்லை,” என்கிறார் அவர். மத்தியக் கிழக்கில் போர் பெரிதாவதைத் தடுக்க என்ன வழி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒப்புக்கொள்ளப்பட்ட இடங்களில் படைகளைப் பின்வாங்கச் செய்து மனிதாபிமான உதவிகளை அனுப்புவது ஒரு தீர்வாக இருக்கும் என்கிறார் ராபர்ட் எஸ் ஃபோர்ட். முன்னாள் மூத்த எஃப்.பி.ஐ உறுப்பினர் ஜாவேத் அலி, போர் தடுக்கப்படும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்கிறார். “இஸ்ரேல் ராணுவமும் சரி, அரசியல்ரீதியாக நெதன்யாகுவின் போர்க்குழுவும் சரி, தங்கள் கை ஓங்கியிருப்பதாக நினைக்கிறார்கள். போர்ச்சூழலில் ஒரு தரப்பு தனது கை ஓங்கியிருப்பதாக நினைக்கும் சூழலில், போர் தடுக்கப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு. ஏனெனில், தங்கள் கை ஓங்கியிருக்கும்போது எதிரி மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்க முடியும் என்று நினைப்பார்கள்,” என்கிறார் அவர். ராபர்ட் எஸ் ஃபோர்ட், இதற்கு இரண்டு தீர்வுகள் உள்ளது என்கிறார். “முதலாவது, இஸ்ரேல் காஸாவில் ஒரு போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வது. ஒப்புக்கொள்ளப்பட்ட இடங்களில் படைகளைப் பின்வாங்கச் செய்து மனிதாபிமான உதவிகளை அனுப்புவது. இஸ்ரேலியர்களோ, அமெரிக்கர்களோ அல்ல, பாலத்தீனர்கள் தேர்ந்தெடுக்கும் புதிய பாலத்தீன அதிகாரத்தை அனுமதிப்பது. இரண்டாவதாக, லெபனானில் ஒரு போர்நிறுத்தம். இஸ்ரேல் தனது விமானத் தாக்குதல்கள் மற்றும் தரைவழிப் படையெடுப்புகளை நிறுத்த வேண்டும். அதற்கு ஈடாக இஸ்ரேல் மீது ஹெஸ்பொலா ராக்கெட்/ஏவுகணைத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும்,” என்கிறார் ராபர்ட் எஸ் ஃபோர்ட். https://www.bbc.com/tamil/articles/c2lnvyljjpdo
-
'இந்திய வழி: நிலையற்ற உலகுக்கான உத்திகள்' நூலின் சிங்கள மொழிபெயர்ப்பை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் கையளித்தார் மிலிந்த மொரகொட
05 OCT, 2024 | 09:39 PM (நா.தனுஜா) இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரால் எழுதப்பட்ட 'இந்திய வழி: நிலையற்ற உலகுக்கான உத்திகள்' எனும் நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல் 'பாத்பைன்டர் பவுன்டேஷனின்' ஸ்தாபகரும், இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொடவினால் நேற்று முன்தினம் நாட்டுக்கு வருகைதந்திருந்த அமைச்சர் ஜெய்சங்கரிடம் கையளிக்கப்பட்டது. குறுகிய உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை (04) நாட்டுக்கு வருகைதந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். அதனையடுத்து கொழும்பில் அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த பாத்பைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகர் மிலிந்த மொரகொட, ஜெய்சங்கரால் எழுதப்பட்ட 'இந்திய வழி: நிலையற்ற உலகுக்கான உத்திகள்' எனும் நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு நூலை அவரிடம் கையளித்தார். இதன்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பாத்பைன்டர் பவுன்டேஷனின் தலைவர் பேர்னாட் குணதிலக்க, தொடர்பாடல் பிரிவு ஆலோசகர் காமினி சரத் கொடகந்த ஆகியோரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். மேற்குறிப்பிட்ட நூலின் சிங்கள மொழிபெயர்ப்பானது பாத்பைன்டர் பவுன்டேஷனின் ஏற்பாட்டில் அஜித் பெரகும் ஜயசிங்க என்பவரால் செய்யப்பட்டது. உலகளாவிய கொள்கைசார் உரையாடல்களில் இலங்கையர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்துவதும், இந்தியாவின் இராஜதந்திர நோக்குநிலைகள் குறித்த ஆழமான புரிதலை ஊக்குவிப்பதுமே இதன் பிரதான நோக்கங்களாகும். கலாநிதி எஸ்.ஜெய்சங்கரால் எழுதப்பட்ட 'இந்திய வழி' எனும் நூலானது 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலக நிதி நெருக்கடி மற்றும் 2020 இல் ஏற்பட்ட கொவிட் - 19 பெருந்தொற்றுப்பரவல் ஆகியவற்றினால் தூண்டுதலளிக்கப்பட்ட பூகோள அரசியல் மாற்றங்கள் தொடர்பில் மிக ஆழமாக ஆராய்கிறது. அதுமாத்திரமன்றி இத்தகைய நிலையற்றதும், போட்டித்தன்மை மிகுந்ததுமான உலகில் அசைக்கமுடியாத ஒரு பெரும் சக்தியாக இந்தியா எவ்வாறு எழுச்சியடைந்துவருகிறது என்பது பற்றியும் இந்நாள் அமைச்சரும், முன்னைய இராஜதந்திரியுமான ஜெய்சங்கர் இந்நூலில் நுணுக்கமாக விபரித்திருக்கிறார். இவ்வாறானதொரு பின்னணியில் அந்நூலை சிங்களத்தில் மொழிபெயர்ந்து, விநியோகிப்பதற்கான உரிமத்தைப்பெற்ற பாத்பைன்டர் பவுன்டேஷன், அம்மொழிபெயர்ப்பு நூல் முக்கிய கல்வி நிலையங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195579
-
முடக்கப்படவுள்ள அரசியல்வாதிகள் உட்பட எழுவரின் சொத்துக்கள்
அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட ஏழு நபர்களுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்குவதற்கு சட்ட நடவடிக்கை எடுக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) தீர்மானித்துள்ளது. இதன்படி, இந்த சந்தேக நபர்கள் அவர்களது சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் காப்புறுதிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஆணைக்குழு வட்டாரங்கள் இது தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழு வட்டாரங்கள் கூறுகையில், இந்த ஏழு நபர்களிடம் அவர்கள் சாதாரண சம்பளத்தில் வாங்க முடியாத அளவுக்கு அதிக சொத்துக்களை எப்படி சம்பாதித்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் சிலர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மூலம் இவ்வளவு பெரிய சொத்துக்களை பெற்று வந்ததாக கூறுவது முற்றிலும் தவறானது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பல அரசியல்வாதிகள், விசாரணைகளுக்கு உதவும் வகையில் அறிக்கைகளை வழங்குவதற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முன்பாக வருவதற்கு தயக்கம் காட்டுவதாக அறியமுடிகிறது. கடந்த அரசாங்கத்தின் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் சில சொத்துக்களை எவ்வாறு சம்பாதித்தார்கள் என்பதை விளக்க முடியாமல் அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. முன்னாள் அமைச்சரின் சாரதி கறுவாத் தோட்டத்தில் சொகுசு வீடு மற்றும் நிலம் வாங்கியதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சரின் சாரதி ஒருவரைப் பற்றியும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரின் 16 வங்கிக் கணக்குகள் மற்றும் 5 காப்புறுதிகளை முடக்கும் உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த வாரம் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் தனது நெருங்கிய சகாக்களின் பெயர்களில் சம்பாதித்ததாகக் கூறப்படும் ஏராளமான சொத்துக்கள் குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. https://ibctamil.com/article/seven-politicos-officers-face-asset-freeze-1728157669
-
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கலந்துரையாடல்கள்
கடின முயற்சிகளின் ஊடாக வென்றெடுக்கப்பட்ட அடைவுகளை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை இலங்கை ஏற்றுக்கொண்டது; மறுசீரமைப்புக்களைத் தொடர்வதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதையிட்டு மகிழ்ச்சி - ஐ.எம்.எப் 05 OCT, 2024 | 04:35 PM (நா.தனுஜா) பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்சிப் பாதையில் கொண்டுசெல்வதற்கு உதவிய, மிகக் கடினமான முயற்சிகளின் ஊடாக வென்றெடுக்கப்பட்ட அடைவுகளைத் தொடர்ந்து பாதுகாப்பதுடன், அவற்றை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்லவேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய, பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன், மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதனையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்திருக்கிறார். நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், கடந்த 21ஆம் திகதி நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பதாக சுமார் ஒரு மாதகாலம் நாடளாவிய ரீதியில் சகல வேட்பாளர்களாலும் முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்களின் பிரதான பேசுபொருளாக பொருளாதார மீட்சியும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளுமே காணப்பட்டன. இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டின் சமகால பொருளாதார மேம்பாடுகள் மற்றும் விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்றிட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் பொருளாதார மறுசீரமைப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனும், அவர் தலைமையிலான புதிய அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய, பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தலைமையில் நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்றிட்டப் பிரதானி பீற்றர் ப்ரூவர் முதலான அதிகாரிகள் குழுவினர் கடந்த புதன்கிழமை (2) நாட்டை வந்தடைந்தனர். இதன்போது அவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் புதிய அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தனர். இச்சந்திப்புக்களின் முடிவில் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன், 'இலங்கை பொருளாதாரம் முகங்கொடுத்துவரும் பொருளாதார மற்றும் நிதியியல் சவால்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனும், அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர் குழுவினருடனும் செயற்றிறன்மிக்க பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம். இதன்போது 2022ஆம் ஆண்டு மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் வீழ்ந்ததன் பின்னர், நாட்டை மீண்டும் பொருளாதார மீட்சிப்பாதையில் கொண்டுசெல்வதற்கு உதவிய, மிகக் கடினமான முயற்சிகளின் ஊடாக வென்றெடுக்கப்பட்ட அடைவுகளைத் தொடர்ந்து பாதுகாப்பதுடன், அவற்றை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்லவேண்டியதன் அவசியத்தை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டோம்' என அதில் குறிப்பிட்டிருக்கிறார். அத்தோடு, மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாகவும், இலங்கை அதன் பொருளாதார மறுசீரமைப்பு இலக்குகளை அடைந்துகொள்வதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாகவும் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்திருக்கிறார். மேலும், 'சர்வதேச நாணய நிதியத்தினால் அனுசரணை அளிக்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்றிட்டம் தொடர்பான மூன்றாம் கட்ட மீளாய்வுக்கான திகதியொன்றை நிர்ணயிப்பதற்குரிய நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியமும் இலங்கையின் பொருளாதாரக் குழுவும் இணைந்து முன்னெடுக்கும்' எனவும் அவர் அறிவித்திருக்கிறார். https://www.virakesari.lk/article/195548
-
பேச்சுவார்த்தைகள் வெற்றி - நிதியமைச்சு அறிவிப்பு
உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழுவுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவு - நிதியமைச்சு அறிவிப்பு! 05 OCT, 2024 | 04:37 PM (நா.தனுஜா) உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான கொள்கை இணக்கப்பாட்டு நிபந்தனைகள் குறித்த பேச்சுவார்த்தை செயன்முறை வெற்றிகரமாக முடிவுக்குக்கொண்டுவரப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. கடன்மறுசீரமைப்பு செயன்முறையின்போது ஆரம்பகட்டமாக எட்டப்படும் கொள்கை இணக்கப்பாடு தொடர்பான நிபந்தனைகள் அனைத்துக் கடன்வழங்குனர்களும் ஒரேவிதமாக நடத்தப்படல் என்ற கோட்பாட்டுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கின்றனவா என்பது குறித்து உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழுவுடனும், சர்வதேச நாணய நிதியத்துடனும் முன்னெடுக்கப்பட்டுவந்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டிருக்கும் கொள்கை இணக்கப்பாட்டு நிபந்தனைகள் அனைத்துக் கடன்வழங்குனர்களும் ஒரேவிதமாக நடத்தப்படல் என் கோட்பாட்டுக்கு ஏற்புடையவையாகக் காணப்படுவதாக உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழு உறுதிப்படுத்தியிருப்பதாகவும், அதேவேளை அந்நிபந்தனைகள் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின் மட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருப்பதாக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளும் உறுதிப்படுத்தியிருப்பதாகவும் நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது. சர்வதேச பிணைமுறி உரித்தாளர்களுடன் கொள்கை மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாகக் கடந்த செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி அரசாங்கம் அறிவித்தது. அதனையடுத்து கடந்த மாதம் 21 ஆம் திகதி ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் நடைபெற்று, 25 ஆம் புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியிலேயே தற்போது உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழுவுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவுக்குக்கொண்டுவரப்பட்டிருப்பதுடன், இச்செயன்முறையைப் பூர்த்திசெய்வதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய சர்வதேச நாணய நிதியம் மற்றும் உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழு உள்ளடங்கலாக சகல கடன்வழங்குனர்களுக்கும் அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/195562
-
இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகை: அதிருப்தியை வெளிப்படுத்தினாரா அநுர!
அநுரகுமார திசாநாயக்கவை (Anura Kumara Dissanayake) தோற்கடிக்க வேண்டுமென்று ஆசைப்பட்ட ஒரு நாடு ( இந்தியா) எப்படி அவருடன் ஒரு சுமூகமான ஒரு உறவை பேண முடியும் என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா கேள்வியெழுப்பியுள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அநுரகுமார திசாநாயக்கவும் இந்தியாவும் ஒருவரையொருவர் கைவிட முடியாத நிலையிலே உள்ளனர். இந்திய வெளிவிவகாரதுறை அமைச்சரின் இலங்கைகைக்கான பயணம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கையில் ஏனைய நாடுகள் தலையீடுவதை விரும்பவில்லை. இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதியோ பிரதமரோ சென்று வரவேற்க விமான நிலையத்திற்கு செல்லவில்லை. இதனால் இவர்கள் ஜனாதிபதி தேர்தலின் போது சஜித்திற்கு ஆதரவளித்த அதிருப்தியை வெளிப்படுத்தினார்களா என தோற்றுகின்றது என்றார். மேலும், தேர்தலுக்கு முன்னரான அஜித் டோவலின் வருகை தேர்தலுக்கு பின்னரான ஜெய்சங்கரின் (S.Jaishankar) வருகை என்பவற்றை அலசி ஆராய்கின்றது இன்றைய லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி. https://ibctamil.com/article/india-sri-lanka-relationship-jaishankar-visit-sl-1728171442#google_vignette