Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 29 SEP, 2024 | 10:03 AM தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணையுமாறு தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் பாராளுமன்றத் தேர்தலில் வடகிழக்குக்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பிலும் பரிசீலிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை (28) வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. அதன் பின்னர், நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கட்சியின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரனால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், விசேடமாக ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னரான விடயங்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக இன்று கலந்துரையாடப்பட்டது. அந்த வகையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சி எடுத்த மூன்று தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என்று தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் ப.அரியநேத்திரனை கட்சியில் இருந்து விலக்குமாறு பலமான கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் சில விடயங்கள் தொடர்பாக அவரிடம் விளக்கத்தினை கேட்டுவிட்டு தீர்மானங்களை எடுப்பதாக முடிவெடுக்கப்பட்டது. அத்துடன் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களுடைய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் இன்று விசேடமான அறிவிப்பு ஒன்றை மனம் உவந்து விடுக்கின்றோம். தமிழ்த் தேசியப் பரப்பிலே இருக்கின்ற, விசேடமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்து வெவ்வேறு காலகட்டங்களில் விலகிச்சென்ற கட்சிகளை மீண்டும் எங்களுடன் இணைந்து தேர்தலுக்கு முகங்கொடுக்கவேண்டும் என்று வினயமாக ஒரு அறிவிப்பு விடுக்கின்றோம். சவால் மிக்க ஒரு சூழலில் இந்த தேர்தல் இருப்பதனால் இணங்கிவந்து இந்த தேர்தலுக்கு முகங்கொடுக்குமாறு இரு கரம் நீட்டி அழைக்கின்றோம். அந்த வகையில் தமிழரசுக் கட்சியின் பெயரிலும் அதன் சின்னத்திலும் தான் நாங்கள் கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட்டிருந்தோம். அவ்வாறே இந்த தேர்தலிலும் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருக்கின்றொம். அந்த அழைப்பை ஏற்று வந்தால் மிக விரைவாக நாங்கள் பேச்சுவார்த்தை மூலம் வேட்பாளர்களை நிறுத்தும் விடயங்களை இணைந்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம். அடுத்துவரும் ஒருசில நாட்களில் அவர்களின் பதிலை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அவ்வாறு இணங்கி வராவிட்டால் தமிழரசுக் கட்சி தனித்தும் போட்டியிடும். அத்துடன் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் விசேட கரிசனை ஒன்று வெளிப்படுத்தப்பட்டது. ஒரு உறுப்பினரே அங்கு தெரிவுசெய்யப்படும் சூழ்நிலை இருப்பதால் அந்த விடயங்களை அந்ததந்த மாவட்டக் கிளைகளோடு பேசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரலாம் என தீர்மானித்திருக்கின்றோம். அத்துடன் இந்த தேர்தலில் வடகிழக்குக்கு வெளியே தலைநகர் உட்பட தமிழர்கள் வாழ்கின்ற ஏனைய சில மாவட்டங்களிலும் போட்டியிடுவது தொடர்பாகவும் பரிசீலனை செய்வதாக எமது மத்திய குழு தீர்மானித்துள்ளது தமிழ் பொதுக் கட்டமைப்பிடம் இருந்து இதுவரை எந்தவித அழைப்புகளும் வரவில்லை. நாங்கள் பிரதானமான தமிழ்க் கட்சி. இதுவரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக வேறு பல கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டபோதும் எமது சின்னத்திலும் பெயரிலுமே தேர்தலில் போட்டியிட்டோம். அந்த வகையில் பிரதான கட்சி என்ற வகையிலேயே இந்த அழைப்பை விடுக்கின்றோம். வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக சரியான அணுகலை நாங்கள் மேற்கொள்வோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது. மக்களிடத்தில் பாரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது. தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பிறகு பல்வேறு எண்ணப்பாடுகள் கூடியிருக்கின்றது. அது நல்ல விடயம். எனவே இளைஞர்கள், ஆற்றல் உள்ளவர்கள், படித்தவர்கள், பெண்கள் என்று அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் வகையிலேயே வேட்பாளர் தெரிவு இடம்பெறும். அதனை ஆராய்வதற்காக நியமனக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டிருக்கின்றது. அந்த குழு இறுதி முடிவுகளை எடுக்கும். மாவட்ட ரீதியாக கலந்தாலோசித்து அந்த முடிவுகளை எடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/195022
  2. பேஸ்புக் பண மோசடி - யுக்ரைன் பிரஜைகள் இருவர் கைது தனியார் வங்கி ஒன்றின் ஆண்டு நிறைவுக்கு பரிசுகள் தருவதாக பேஸ்புக்கில் விளம்பரம் செய்து இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் மேல் மோசடி செய்த யுக்ரைன் பிரஜைகள் இருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நாட்டில் தனியார் வங்கி ஒன்றின் ஆண்டு நிறைவை முன்னிட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக கடந்த சில நாட்களாக பேஸ்புக்கில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தன. விளம்பரத்தைப் பார்க்கும் நபர்களின் வங்கிக் கணக்குத் தகவல் உட்பட பல தனிப்பட்ட தகவல்கள் அதில் இணைக்கப்பட வேண்டும். இவ்வாறு பிரவேசிக்கும் நபர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்ட பணத்தை ஒரு குழுவினர் கடத்திச் செல்வதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்திருந்தது. இதன்படி, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், உனவட்டுன பிரதேசத்தில் இருந்து இந்த மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் விடயத்தை கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த விசாரணை அதிகாரிகள் அங்கு சென்று 2 பேரை கைது செய்தனர். கைதான இருவரும் யுக்ரைன் பிரஜைகள் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ள இவர்கள், டெலிகிராம் குழு ஒன்றின் ஊடாக இந்த மோசடி செயலை மேற்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இன்று (28) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். https://tamil.adaderana.lk/news.php?nid=193692
  3. மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வௌியான தகவல் ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துவரும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் எம்.ஜே.குணசிறி தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கை பிரகாரத்தின் அடிப்படையில் கடந்தாண்டு மே மாதம் முதல் 172 மதுபான அனுமதிப்பத்திரங்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனூடாக, சுமார் 220 கோடி ரூபா வருமானம் ஈட்ட முடியும் எனவும் அவர் நம்பிக்கை வௌியிட்டார். இதேவேளை, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகையை நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துவதற்கு அனைத்து நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் தெரிவித்துள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=193707
  4. 29 SEP, 2024 | 09:16 AM இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ. ஜெய்சங்கர் எதிர்வரும் நான்காம் திகதி இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். முன்னதாக அனுரகுமார திசநாயக்க புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தவேளை ஜெய்சங்கர் அவரை சந்தித்திருந்தார். இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின்போது இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பல திட்டங்கள்குறித்து ஆராயப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/195021
  5. தமிழக மீனவர்கள் 17 பேர் கைது நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரை அங்கு வந்த இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களையும் காங்கேசந்துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்படுவது மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://tamil.adaderana.lk/news.php?nid=193710
  6. 28 SEP, 2024 | 05:59 PM எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள முன்னாள் போராளிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் ஆதரவாளர்கள் மக்களின் அனுசரணையுடன் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி சுயேட்சையாக வடக்கு, கிழக்கில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கே.இன்பராசா தெரிவித்தார். மன்னாரில் இன்று சனிக்கிழமை (28) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது அதிகூடிய சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினர் சுயேட்சையாக போட்டியிடவுள்ளோம். தமிழ் மக்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இந்த தேர்தல் குறித்து நாங்கள் உங்களைத் தேடி வருவோம். எங்களுக்குப் பூரண ஆதரவை வழங்க வேண்டும். வடக்கு, கிழக்கு மக்களுக்காக நாங்கள் எங்கள் உயிரையே அர்ப்பணித்தோம். அங்கவீனமாக்கப்பட்டுள்ளோம். அனாதரவாக்கப்பட்டுள்ளோம். எனவே முன்னாள் விடுதலைப்புலிகள் ஆகிய நாங்கள் இத்தேர்தலில் களமிறங்கவுள்ளோம். தற்போதைய ஜனாதிபதியின் ஊழல் அற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை போல் வடக்கு, கிழக்கில் ஊழலற்ற அரசியலை முன்னெடுக்க நாங்கள் போராடுவோம். மன்னார் மாவட்ட முன்னாள் விடுதலைப்புலிகளும் எங்களுடன் இணைந்துள்ளனர். எனவே, தமிழ் மக்களும் எங்களுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/195010
  7. தேர்தல் பத்திரம் தொடர்பாக நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு - என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (கோப்புபுப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், இம்ரான் குரேஷி பதவி, பிபிசி ஹிந்திக்காக, பெங்களூருவில் இருந்து 28 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர் தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அமலாக்க இயக்குநரகம் மீது பெங்களூரு சிறப்புப் பிரதிநிதிகள் நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் குற்றவியல் சதி வழக்கைப் பதிவு செய்ய பெங்களூருவில் உள்ள சிறப்பு பிரதிநிதிகளுக்காக நியமிக்கப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களதிகார சங்கர்ஷ பரிஷத் எனும் (ஜேஎஸ்பி) அமைப்பின் இணைத் தலைவர் ஆதர்ஷ் ஐயர் தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த மார்ச் மாதம் உள்ளூர் காவல் நிலையத்தில் ஆதர்ஷ் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அவர் நீதிமன்றத்தை நாடினார். ஜேஎஸ்பி என்பது கல்வி உரிமைச் சட்டம் மற்றும் பிற விவகாரங்கள் தொடர்பான பிரச்னைகளுக்குக் குரல் எழுப்பி வரும் ஓர் அமைப்பு. இந்த வழக்கில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜேந்திரா ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாநில பாஜக முன்னாள் தலைவர் நளின் குமார் கட்டீல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஜேஎஸ்பி வழக்கறிஞர் எஸ்.பாலன் பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், "நிர்மலா சீதாராமன், அமலாக்க இயக்குநரகம் ஆகியவை இந்த வழக்கில் வழிநடத்தியவர்கள் (facilitators), நட்டா மற்றும் விஜேந்திரா ஆகியோர் இதில் குற்றங்களை ஊக்குவித்தவர்கள் (abettors)." நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகாரில், “குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரின் (நிர்மலா சீதாராமன்) ரகசிய உதவியுடனும், குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது நபரின் (அமலாக்க இயக்குநரகம்) ஆதரவுடனும் மூன்றாம் (நட்டா) மற்றும் நான்காம் நபரின் (விஜேந்திரா) நலனுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. மூன்றாம் நபர் (நட்டா) தேசியளவிலும், நான்காம் நபர் கர்நாடகா மாநில அளவிலும் சம்பந்தப்பட்டுள்ளனர். புகாரில் கூறப்பட்டிருப்பது என்ன? புகாரில், “குற்றம் சாட்டப்பட்ட முதல் நபர் (நிர்மலா சீதாராமன்), பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள், அவற்றின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு ரெய்டுகள், பறிமுதல்கள் மற்றும் கைதுகளை நடத்துவதற்காக குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது நபரின் (அமலாக்க இயக்குநரகம்) சேவைகளைப் பயன்படுத்திக் கொண்டார். குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரின் அழுத்தத்தால் இரண்டாம் நபர் மேற்கொண்ட ரெய்டுகளுக்கு பயந்ததால், பல கார்ப்பரேட் நிறுவனங்களும் பணக்காரர்களும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது," என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இதன்மூலம் 8,000 கோடி வசூலித்திருப்பதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. அதோடு, ஏப்ரல் 2019, ஆகஸ்ட் 2022 மற்றும் நவம்பர் 2023க்கு இடையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 230.15 கோடி வழங்கிய அலுமினியம் மற்றும் தாமிர நிறுவனங்களான ஸ்டெர்லைட், வேதாந்தா ஆகியவற்றின் உதாரணத்தை இந்தப் புகார் குறிப்பிடுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாஜக தலைவர் ஜேபி நட்டா அலுமினியம் மற்றும் தாமிர நிறுவனமான, மெசர்ஸ் ஸ்டெர்லைட் மற்றும் மெசர்ஸ் வேதாந்தா நிறுவனம், ஏப்ரல் 2019, ஆகஸ்ட் 2022 மற்றும் நவம்பர் 2023க்கு இடையில் ரூ. 230.15 கோடி செலுத்தியுள்ளது. மெசர்ஸ் அரபிந்தோ ஃபார்மா குழும நிறுவனங்கள் 5 ஜனவரி 2023, 2 ஜூலை 2022, 15 நவம்பர் 2022 மற்றும் 8 நவம்பர் 2023 ஆகிய தேதிகளுக்கு இடையே ரூ.49.5 கோடி வழங்கியுள்ளது. இந்த உதாரணங்களை புகாரில் மேற்கோள் காட்டியுள்ளனர். வழக்கறிஞர் பாலன் கூறுகையில், ''எங்கள் கருத்தை நிரூபிக்கும் வகையில் ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளோம். நாங்கள் நீண்ட காலமாக முன்வைத்த வாதங்களை மீண்டும் முன்வைத்தோம். எங்களின் வழக்கு சுமார் பத்து முறை ஒத்தி வைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிடுவதற்கு முன்பு, போதுமான ஆதரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதை (prima facie case) நீதிமன்றம் ஒப்புக்கொண்டது," என்று தெரிவித்தார். தரைக்கு மேலே ஒரு நாள் என்பது பூமிக்கடியில் 2 நாளுக்கு சமமா? நேரம் பற்றிய ஆய்வு உணர்த்தும் உண்மை24 செப்டெம்பர் 2024 இந்தப் புகார் CrPC-இன் பிரிவு 156 (3) இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவின் கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் (XLII) நீதிமன்றம், அபராதம் அல்லது அபராதம் இல்லாமல் ஏழு ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன் கூடிய குற்றங்களுக்காக நியமிக்கப்பட்ட ஒரு நீதிமன்றம் ஆகும். இந்தக் குற்றங்களுக்காக, ஐபிசி பிரிவுகள் 384 (பணம் பறித்தல்), 120B (குற்றச் சதி) மற்றும் ஐபிசி பிரிவு 34 (பொது நோக்கத்திற்காகப் பலரின் ஒருங்கிணைந்த நடவடிக்கை) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வரவில்லை. அவர் உஸ்பெகிஸ்தானுக்கு சென்றிருப்பதாகவும், இந்த நேரத்தில் அவரைத் தொடர்புகொள்வது கடினம் என்றும் அவருடைய அலுவலகத்தில் கூறப்பட்டது. அவர்களின் பதில் வந்ததும் இந்தக் கட்டுரை புதுப்பிக்கப்படும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yjkxz07wlo
  8. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சியோடு இணைந்து பயணிக்க முடியாது - சிவகரன் 28 SEP, 2024 | 06:52 PM சிவில் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முடியாது. மாறாக அவ்வாறு செயற்பட்டால் அது அரசியல் கட்சியாகவே மாறிவிடும் என்று தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று சனிக்கிழமை (28) தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மாற்றத்துக்கான மாற்றுவழி எனும் கருப்பொருளில் நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், இன்று சிவில் அமைப்புக்கள் மற்றும் சமூக மாற்றத்தை விரும்புபவர்களை பகிரங்கமாக அழைத்திருந்தோம். எந்தவித வேறுபாடுகளும் இன்றி ஆரோக்கியமான, வெளிப்படையான கலந்துரையாடல் நடைபெற்றது. அதன் பிரகாரம் தேர்தல் அரசியல் கடந்து ஏனைய விடயங்களை கையாளும் நோக்கில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவானது ஏனைய மாவட்டங்களில் உள்ளவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்திக்கொண்டு தமிழ் மக்களின் அடிப்படை சார்ந்த விடயங்களை தேர்தல் அரசியலுக்கு அப்பால் முன்னெடுக்க வேண்டிய விடயங்களை ஆராய்ந்து முன்னோக்கி நகர்த்துவதற்கான செயற்பாட்டில் ஈடுபடும். இக்குழுவானது எவ்வித அரசியல் விவகாரங்களிலும் ஈடுபடாது. அரசியல் கட்சிகள் சார்ந்தோ அல்லது இணைந்தோ எந்த செயற்பாட்டையும் முன்னெடுப்பதற்கான தீர்மானம் எவையும் எடுக்கவில்லை. எதிர்வரும் வாரங்களில், பொதுக் கட்டமைப்புடன் கலந்துரையாடி நாங்கள் தொடர்ந்து, இணைந்து எவ்வாறு பயணிக்கலாம் என்ற நிகழ்ச்சி நிரலை வகுக்க வேண்டும் எனவும் தீர்மானித்துள்ளோம். பொதுக்கட்டமைப்பானது ஜனாதிபதி தேர்தலுக்காக உருவாக்கப்பட்டு அரசியல் கட்சிகளுடன் இணைந்து பயணிக்கக்கூடியவர்களாக இருக்கிறது. சிவில் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முடியாது. மாறாக அவ்வாறு செயற்பட்டால் அது அரசியல் கட்சியாகவே மாறிவிடும். ஆகவே சிவில் அமைப்பின் தனித்துவம் இல்லாமல் போய்விடும். இப்போது தேர்தல் அரசியலில் உடன்படிக்கை செய்திருப்பதால் அவர்களும் அரசியல் கட்சிகளாகவே சமூக நிலையில் நோக்கப்படும். நாங்கள் அவர்களோடு உரையாடத்தான் இருக்கின்றோம். எதிர்காலத்தில் அரசியலில் செயற்படுவார்களேயானால் அதற்கு நாம் சம்மதிக்கப்போவதில்லை. எந்தவிதமான குழப்பங்களும் விரிசல்களும் எங்களுக்குள் இல்லை. அவர்கள் அரசியல் விவகாரங்களுக்காக தேர்தலுக்காக முன்னெடுக்கிறார்கள். கடந்த 10 வருடங்களாக இவ்விதமான கூட்டங்களை நடாத்திவந்திருக்கின்றோம் என்ற அடிப்படையிலேயே இதனை நாம் நடாத்தினோம். இது ஏட்டிக்குப் போட்டியாக தொடங்கப்படவில்லை. அவ்வாறான நோக்கமும் எமக்கில்லை. தேர்தல் அரசியலில் இந்த அமைப்பு எப்போதும் ஈடுபடாது என்றார். https://www.virakesari.lk/article/195011
  9. ஹெஸ்பொலா தலைவர் மரணம்: இஸ்ரேலை பழிவாங்க இரான் சூளுரை - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹஸன் நஸ்ரல்லா 28 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொலா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதைத் தனது டெலிகிராம் பதிவில் ஹெஸ்பொலா உறுதி செய்துள்ளது. இதைத் தொடர்ந்தும், லெபனானில் ஹெஸ்பொலா இலக்குகளைக் குறிவைத்து தாக்கி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. அதேநேரத்தில், ஹெஸ்பொலா தரப்பும் இஸ்ரேலுக்கு எதிராக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. மறுபுறம், நஸ்ரல்லா மரணத்திற்காக, இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று இரான் மிரட்டல் விடுத்துள்ளது. மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது? அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க துருப்புகளுக்கு பைடன் பிறப்பித்துள்ள உத்தரவு என்ன? ரகசிய இடத்தில் காமனெயி ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மரணத்திற்கு பழிவாங்குவோம் என்று இரான் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி சூளுரைத்துள்ளார். நஸ்ரல்லா மறைவை முன்னிட்டு இரானில் 5 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. நஸ்ரல்லா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஆயதுல்லா அலி காமனெயி பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டதாக ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது. காமனெயி ரகசிய இடத்திற்கு சென்றுவிட்டதாக 2 அதிகாரிகளை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது. ஹசன் நஸ்ரல்லா மரணத்தைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து ஹெஸ்பொலாவுடன் இரான் ஆலோசித்து வருவதாகவும் அந்த செய்தி கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆயதுல்லா அலி காமனெயி, இரான் உச்ச தலைவர் ஐநா பாதுகாப்பு அவை கூட்டத்திற்கு இரான் அழைப்பு ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதையடுத்து, ஐ.நா பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்திற்கு இரான் அழைப்பு விடுத்துள்ளது. அதுதொடர்பாக, ஐ.நா. பாதுகாப்பு அவையின் 15 உறுப்பினர்களுக்கும் ஐ.நா.வுக்கான இரான் தூதர் அமீர் இரவானி கடிதம் எழுதியுள்ளார். ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை உறுதி செய்த ஹெஸ்பொலா ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை ஹெஸ்பொலா உறுதி செய்துள்ளது. அதுகுறித்த அதன் நீண்ட டெலிகிராம் பதிவில், இஸ்ரேலுக்கு எதிரான சண்டையைத் தொடரப் போவதாகவும் கூறியுள்ளது. அவர் பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதல்களின்போது இறந்துவிட்டார் என்று ஹெஸ்பொலா தனது டெலிகிராம் பதிவில் உறுதி செய்துள்ளது. “தெற்கு புறநகர்ப் பகுதியில் நடந்த தாக்குதலில்” அவர் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது. அதோடு, இஸ்ரேலுக்கு எதிரான அதன் சண்டையைத் தொடரப் போவதாகவும் ஹெஸ்பொலா “உறுதிமொழி அளித்துள்ளது” மற்றும் “காஸா, பாலத்தீனத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும், லெபனான் மற்றும் அதன் உறுதியான, மரியாதைக்குரிய மக்களைப் பாதுகாப்பதாகவும்” உறுதியளித்துள்ளது. ஹெஸ்பொலா தலைவருக்கு இஸ்ரேல் குறி முன்னதாக, வெள்ளிக்கிழமை மாலையில் ஹெஸ்பொலா தலைமையகத்தை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்திருந்தார். இந்த தாக்குதலால் என்ன பலன் கிடைத்தது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார். இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலின் இலக்கு ஹெஸ்பொலா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா என்ற பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் உள்ளிட்ட அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இருப்பினும், இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்கான கட்டடத்தில் நஸ்ரல்லா இருந்தாரா என்பது குறித்து எந்தவொரு உறுதியான தகவலும் இல்லாமல் இருந்தது. ஹெஸ்பொலா இயக்கத்தின் மற்ற மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதாக லெபனான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை உறுதி செய்ய முடியவில்லை என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் முன்கூட்டியே தங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், இந்த மோதல் மேலும் தீவிரமாகும் வாய்ப்பு இருப்பது குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பட மூலாதாரம்,REUTERS ஹஸன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு இந்நிலையில் ஹெஸ்பொலா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF-ஐடிஎப்) தெரிவித்துள்ளது. ஐடிஎப்-இன் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு அறிக்கையில், "ஹசன் நஸ்ரல்லா இனி உலகத்தை அச்சுறுத்த முடியாது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ரூட்டில் ஒரே இரவில் நடந்த தொடர்ச்சியான இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நஸ்ரல்லா மற்றும் பிற ஹெஸ்பொலா தளபதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது. ஹெஸ்பொலாவின் மத்திய தலைமையகத்தின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், ஹெஸ்பொலாவின் இந்த தளம் பெய்ரூட்டின் தாஹிஹ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் கீழே செயல்பட்டு வந்ததாகவும் ஐடிஎப் கூறியது. Twitter பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு ‘இஸ்ரேலை யார் அச்சுறுத்தினாலும் விடமாட்டோம்’ பட மூலாதாரம்,IDF படக்குறிப்பு, ஐடிஎப் லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் (ஐடிஎப்) தலைமை அதிகாரி, லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி, ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். "நாங்கள் கூற வரும் செய்தி மிகவும் தெளிவானது. இஸ்ரேலிய குடிமக்களை யார் அச்சுறுத்தினாலும், அவர்களை எப்படி பிடிப்பது என எங்களுக்கு தெரியும். வடக்கு, தெற்கு அல்லது அதற்கு அப்பால் என அவர்கள் எங்கு சென்றாலும் சரி" என்று அதில் அவர் கூறியுள்ளார். ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக அறிக்கை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே இந்த காணொளி ஐடிஎப்-இன் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடப்பட்டது. "பல்வேறு கட்ட ஆயுத்தப்பணிகளுக்கு பிறகு, இஸ்ரேலிய ராணுவம், நஸ்ரல்லா மற்றும் ஹெஸ்பொலாவின் தலைமையகத்தை குறிவைத்து தாக்குதல் திட்டத்தை செயல்படுத்தியது" என்று லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி கூறியுள்ளார். "மிகச்சரியான நேரத்தில், மிகவும் துல்லியமான முறையில் அந்தத் தாக்குதலை நாங்கள் மேற்கொண்டோம். ஆனால் இது முடிவல்ல என்பதில் தெளிவாக இருக்கிறோம். முன்னோக்கிச் செல்லும் திறன் எங்களிடம் அதிகமாகவே உள்ளது" என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,REUTERS ‘ஹெஸ்பொலாவின் தளபதி கொலை’- இஸ்ரேல் தெற்கு லெபனானில், ஹெஸ்பொலாவின் ஏவுகணைப் பிரிவு தளபதி முஹம்மது அலி இஸ்மாயில் மற்றும் துணைத் தலைவர் ஹுசைன் அஹ்மத் இஸ்மாயில் ஆகியோர் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய பிரதேசத்தை நோக்கி ராக்கெட்டுகளை ஏவியது மற்றும் மத்திய இஸ்ரேலை நோக்கி புதன்கிழமை அன்று ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியது உட்பட இஸ்ரேல் மீதான ஏராளமான தாக்குதல்களின் பின்னணியில் அலி இஸ்மாயில் இருந்தார் என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது. தாக்குதலைப் பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இரான் கூறியது என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு இரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி கண்டனம் தெரிவித்துள்ளார். இரானின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர் இதை தெரிவித்துள்ளார். ஆனால் தனது அறிக்கையில் நஸ்ரல்லாவை குறித்து அவர் ஏதும் குறிப்பிடவில்லை. லெபனானின் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்த அவர், "இது இஸ்ரேல் தலைவர்களின் குறுகிய பார்வை மற்றும் முட்டாள்தனமான கொள்கைகளை நிரூபிக்கிறது" என்று கூறினார். “லெபனானில் உள்ள ஹெஸ்பொலாவின் தளங்களில் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தங்களுக்கு வலிமையில்லை என்பதை இஸ்ரேலிய குற்றவாளிகள் அறிந்திருக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார். பிராந்தியத்தில் உள்ள அனைத்து சக்திகளும் ஹெஸ்பொலாவை ஆதரித்து, உடன் நிற்க வேண்டும் என்று ஆயத்துல்லா அலி காமனெயி தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் அமெரிக்கப் படைகளுக்கு புதிய உத்தரவு மத்திய கிழக்கில் நிலைமையை ஆய்வு செய்து அதற்கேற்ப, அங்குள்ள அமெரிக்கப் படையினரை உஷாராக இருக்கச் செய்யுமாறு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனை அதிபர் பைடன் உத்தரவிட்டிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. "மத்திய கிழக்கில் நிலைமையை முழுமையாக ஆராய்ந்து, அந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் நலன்களை காக்கவும், தற்காப்பை உறதிப்படுத்தவும் தேவைக்கேற்ப அமெரிக்கப் படைகளை உஷார் நிலையில் வைத்திருக்க பென்டகனுக்கு பைடன் உத்தரவிட்டுள்ளார்" என்கிறது வெள்ளை மாளிகை அறிக்கை. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தூதரகங்களும் தேவையான தற்காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பைடன் உத்தரவிட்டுள்ளார். ‘எந்த சக்தியாலும் இஸ்ரேலைத் தடுக்க முடியாது’ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் தலைவர் ஜோசப் பொரெல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்கா உட்பட எந்த சக்தியாலும் ‘தடுக்க முடியாது’ என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் தலைவர் ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார். ஜோசப் பொரெல் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "நாங்கள் செய்வது போர்நிறுத்தத்திற்கு தேவையான அனைத்து அழுத்தங்களையும் கொடுப்பது தான். ஆனால் காஸாவில் அல்லது மேற்குக் கரையில் நெதன்யாகுவின் நடவடிக்கைகளை யாராலும் தடுக்க முடியாது என்று தான் தெரிகிறது" என்றார். “ஹெஸ்பொலா அழிக்கப்படும் வரை இஸ்ரேலிய ராணுவம் தனது நடவடிக்கைகளை நிறுத்தாது” என்று நெதன்யாகு தெளிவுபடுத்தியதாக பொரெல் கூறினார். 21 நாள் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்கா மற்றும் பிரான்ஸின் அழைப்பையும் அவர் ஆதரித்து பேசினார். மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது? ஹியூகோ பச்சேகா பிபிசி நிருபர், பெய்ரூட்டில் இருந்து பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், ஹெஸ்பொலாவின் செல்வாக்கு மிக்க நீண்டகால தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார் என்ற இஸ்ரேலிய ராணுவத்தின் செய்தியை லெபனான் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை, ஹெஸ்பொலாவிடமிருந்தும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வரவில்லை. இது மிகவும் குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளால் பயங்கரவாத அமைப்பாகக் கருதப்படும் ஹெஸ்பொலா, வெறும் ஒரு போராளி இயக்கம் மட்டுமல்ல அதுவொரு அரசியல் கட்சியும் கூட. இந்த அமைப்புக்கு லெபனான் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ளது மற்றும் அரசாங்கத்தின் ஒரு அங்கமாகவும் உள்ளது. ஒரு குறிப்பிடத்தக்க ஆதரவுடன், லெபனான் சமூகத்தின் ஒரு பகுதியாக ஹெஸ்பொலா விளங்குகிறது. ஹெஸ்பொலா இந்த தாக்குதலுக்கு எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்பது தெரியாது. இஸ்ரேலுக்குள் ஊடுருவி சென்று தாக்கக்கூடிய துல்லியமான ஏவுகணைகள் உட்பட, தங்களிடம் இருக்கும் அதிநவீன ஏவுகணைகளை ஹெஸ்பொலா இன்னும் பயன்படுத்தவில்லை. இஸ்ரேலுடனான ஒரு பெரிய போருக்கு அக்குழு இதுவரை ஆர்வம் காட்டாமல் இருந்தது, அத்தகைய ஒரு போர் அதன் உள்கட்டமைப்பை அழிக்க வழிவகுக்கும் மற்றும் அதன் முக்கிய தலைவர்களின் படுகொலைக்கு வழிவகுக்கும் என்பதால். ஆனால் இப்போதும் அதுதான் நடந்துள்ளது எனும்போது, அடுத்து என்ன என்ற மிகப்பெரிய கேள்வி உள்ளது. இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையே ஏதேனும் மிகப்பெரிய மோதல் வெடித்தால், அத்தகைய சூழ்நிலை பிராந்தியத்தில் உள்ள மற்ற இரானிய ஆதரவு குழுக்களையும் இந்த சண்டையில் ஹெஸ்பொலாவுடன் சேர கட்டாயப்படுத்தலாம் என்ற கவலையும் உள்ளது. கணிக்க முடியாத விளைவுகளுடன் கூடிய மிகவும் ஆபத்தான தருணம் மத்திய கிழக்கில் நிலவுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy80g54e8y4o
  10. Published By: DIGITAL DESK 3 29 SEP, 2024 | 06:00 AM 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 452,979 விண்ணப்பதாரர்கள் பங்குபற்றிய இந்த ஆண்டுக்கான சாதாரணதரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் நடைபெற்றது. 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறுபேறுகளை doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவேளை, அனைத்து அதிபர்களுக்கும் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு வழங்கப்பட்ட பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பரீட்சைப் பெறுபேறுகளின் அச்சிடப்பட்ட நகலை பெற்றுக்கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் வினவ வேண்டுமாயின் 1911 அல்லது 011 2 785 922, 0112 786 616, 011 2 784 208 அல்லது 011 2 784 537 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கலாம் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/195019
  11. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல் 28 SEP, 2024 | 05:50 PM வினாத்தாள் சர்ச்சை நிலவும் சூழ்நிலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்காக 07 பேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதமர் ஹரினி அமரசூரியவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசியப்பட்டமை தொடர்பில் பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த விசாரணைகளைக் கருத்தில் கொண்டு இக்குழுவால் தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/195009
  12. 29 SEP, 2024 | 09:57 AM பெங்களூரு: மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை பெற்றதாக இந்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்ய பெங்களூரு போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பெங்களூருவில் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜன அதிகார சங்கர்ஷ சங்கத்தின் துணைத் தலைவர் ஆதர்ஷ் அய்யர் கடந்த மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ''மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை வைத்து தொழிலதிபர்களை மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை பெற்றுள்ளனர். தேர்தல் பத்திர நடைமுறையை கொண்டு வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கோரி இருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ''இந்த புகார் தொடர்பாகஇ மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூருவில் உள்ள திலக் நகர் போலீஸார் உடனடியாக‌ வழக்கு பதிவு செய்ய வேண்டும்'' எனக்கூறி இவ்வ‌ழக்கின் அடுத்த கட்ட விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. குமாரசாமி எடியூரப்பாவிடம் விசாரணை: கடந்த 2006-ம் ஆண்டு கர்நாடகாவில் மஜத‍ - பாஜக‌ கூட்டணி ஆட்சி நடைபெற்றது அப்போது பெங்களூரு நகர வளர்ச்சி ஆணையம் தனியார் நிறுவனத்திடம் இருந்து 1.11 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. இதனை அப்போது முதல்வராக இருந்த குமாரசாமியும் துணை முதல்வராக இருந்த எடியூரப்பாவும் விடுவித்து உத்தரவிட்டனர். இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த இவ்வழக்கை லோக் ஆயுக்தா போலீஸார் மீண்டும் விசாரிக்க முடிவெடுத்தனர். இதையடுத்து மத்திய அமைச்சர் குமாரசாமி முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோரிடம் நேற்று விசாரணை நடத்தினர். https://www.virakesari.lk/article/195024
  13. தமிழ்நாட்டின் துணை முதல்வராகிறார் உதயநிதி - 3 அமைச்சர்கள் நீக்கம், செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பதவி பட மூலாதாரம்,UDHAYANIDHI STALIN FACEBOOK PAGE படக்குறிப்பு, உதயநிதி ஸ்டாலின், அமைச்சர், தமிழ்நாடு (கோப்புப் படம்) 28 செப்டெம்பர் 2024, 22:47 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். அண்மையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்கவுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 3.30 மணிக்கு பதவியேற்பு விழா நடக்கிறது. அமைச்சரவை மாற்றம் தொடர்பாக சனிக்கிழமை இரவில் ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. இதன்படி தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோ.வி.செழியன் மற்றும் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்க உள்ளனர். பட மூலாதாரம்,UDHAYANIDHI படக்குறிப்பு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மெய்யநாதன், கயல்விழி ஆகியோரின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ராஜகண்ணப்பனுக்கு பால் வளத்துறையும், தங்கம் தென்னரசுக்கு நிதித்துறையுடன் சுற்றுச்சூழல் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சர் வி.மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ள 4 பேருக்கும் என்னென்ன துறைகள் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. பட மூலாதாரம்,UDHAYANIDHI படக்குறிப்பு, செந்தில் பாலாஜியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் விவாதத்தை தொடங்கி வைத்த அன்பில் மகேஷ் உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்று திமுகவில் பலரும் கூறிவந்தாலும், அது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிப்படையாக எதையும் அறிவிக்காமல் இருந்தார். இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு முன்னொருமுறை பதில் அளித்த அமைச்சர் உதயநிதி, "நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருக்கிறோம்" என்று மட்டும் பதில் அளித்தார். "தமிழ்நாடு அரசில் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார்" என, தி.மு.க. அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வந்தாலும், ‘அதற்கான வாய்ப்பு பழுக்கவில்லை’ என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், உதயநிதியை முன்னிறுத்தி மீண்டும் துணை முதல்வர் விவாதம் கிளம்பியது. இதனை உதயநிதி ஸ்டாலினின் நீண்டநாள் நண்பரும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். கடந்த ஜூன் மாதம் பள்ளிக்கல்வித்துறை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் உதயநிதி செயல்பட்டு வருகிறார். விளையாட்டுத் துறை அமைச்சர், இளைஞர் நலத்துறை அமைச்சர் என பொறுப்பு வகித்தாலும் எங்களைப் போன்றவர்களுக்கு அவர் தான் துணை முதலமைச்சர்," என்றார். அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பட மூலாதாரம்,UDHAYANIDHI படக்குறிப்பு, உதயநிதி ஸ்டாலின், அமைச்சர், தமிழ்நாடு அரசியலில் வேகமாக வளர்ந்த உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்டபோதும் கட்சிக்குள் பதவியளித்தபோதும் பல கடுமையான விமர்சனங்கள் கட்சிக்குள் இருந்தும் கட்சிக்கு வெளியில் இருந்தும் எழுந்தன. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பளித்தபோதும், அவருக்கு அமைச்சர் பதவியளித்தபோதும் இதேபோன்ற விமர்சனங்கள் கடுமையாக எழுந்தன. தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின், தனது வாரிசு என்பதால் மட்டுமே உதயநிதி ஸ்டாலினை மிகத் தீவிரமாக முன்னிறுத்துவதாக இந்த விமர்சனங்கள் இருந்தன. ஆனால், கடந்த ஆண்டு உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசிய பேச்சு, பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பினரிடம் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தினாலும் கட்சிக்குள் நல்ல வரவேற்பைப் பெற்றது. திராவிட இயக்கங்களில் உதயநிதி ஸ்டாலினை இதுவரை ஏற்காமல் இருந்தவர்களிடமும் அவருடைய இந்தப் பேச்சு ஒரு மன மாற்றத்தை ஏற்படுத்த உதவியதாக அரசியல் விமர்சர்கள் கூறினார்கள். மு.க. ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையோடு ஒப்பிட்டால், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை மிக வேகமானதாகவே நகர்கிறது. 14 வயதில் இருந்து தீவிரமாக அரசியலில் ஈடுபாடுகாட்டி வந்த மு.க. ஸ்டாலினுக்கு 31 வயதில்தான் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக் கிடைத்தது. 1989ல் முதல் முறையாக எம்.எல்.ஏவான மு.க. ஸ்டாலின், 2006ஆம் ஆண்டில் தனது 53வது வயதில்தான் அமைச்சரானார். ஆனால், திரைத்துறையிலேயே தனது ஆர்வத்தைக் காட்டிய உதயநிதி ஸ்டாலின், 2018ஆம் ஆண்டில்தான் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். 2019 ஆண்டு நடைபெற்ற நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழகச் சட்டசபையின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் உதயநிதி. தி.மு.க. கூட்டணி பெரும் வெற்றிபெற்ற நிலையில், 2019ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி தி.மு.கவின் இளைஞர் அணி செயலாளராகத் தேர்தெடுக்கப்பட்டார். அரசியலுக்கு வந்து ஒன்றரை ஆண்டிலேயே கட்சியில் முக்கிய பதவிக்கு வந்தார் உதயநிதி ஸ்டாலின். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, அடுத்த ஆண்டிலேயே அமைச்சராகவும் பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின். தி.மு.க. பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவான நிலையில், உதயநிதி ஸ்டாலினைப் போட்டியிட வைத்து வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை உருவாக்கிக் கொள்ள ஸ்டாலின் விரும்பவில்லை என்று கூறப்பட்டது. இருந்தபோதும் அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றது. இப்போது அவர் துணை முதலமைச்சராக இருக்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2m095vjplo
  14. கொழும்பில் போட்டியிடும் தமிழரசு கட்சி..! பங்காளி கட்சிகளுக்கு கால அவகாசம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமானது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. இதற்கமைய, ரெலோ மற்றும் ப்ளொட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மூன்று நாட்களுக்குள் தமது முடிவு எட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடுவதாகவும் இதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு ஒரு குழுவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த கூட்டம் அதேவேளை, குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 03ஆம் திகதி மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கியவர்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கடிதம் ஒன்றை முன்வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, கிட்டத்தட்ட 2018ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இடம்பெற்றிருக்க கூடிய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் விளக்கம் கோர வேண்டுமே தவிர தற்போது நடந்த விடயங்கள் தொர்பில் மாத்திரம் விளக்கம் கோரப்பட கூடாது எனவும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்தியக்குழு கூட்டமானது, பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் முடிவுக்கு வந்துள்ளது. அதேவேளை, கூட்டத்திற்கு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், "தமழிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான விடயங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கூடி ஆராய்ந்தோம். ஜனாதிபதி தேர்தலில் கட்சி எடுத்த 3 தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. அதிலே அப்படியாக கட்சியின் முடிவை மீறி செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என முடிவு எடுக்கப்பட்டது. அரியநேத்திரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பலமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தாலும், முதலாம் திகதி எடுத்த தீர்மானத்தில் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று கோரியிருந்தோம். அதற்கு அவருடைய விளக்க கடிதத்தில் பதில் சொல்லப்பட்டிருக்கவில்லை. அது காலம் கடந்து கிடைத்தாலும் வாசித்து காட்டப்பட்டது. ஆகவே அது சம்மந்தமாக கேட்டு விட்டு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம். முக்கிய விடயமாக ஆராயப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆகும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் விசேட அறிவிப்பை மனவுவந்து விடுவதற்கு தீர்மானித்துள்ளோம். அதாவது தமிழ் தேசிய பரப்பில் இருக்கிற கட்சிகள் விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் விலகிப் போன கட்சிகள் திரும்பவும் எங்களுடன் சேர்ந்து தேர்தலை முகங்கொடுங்க விரும்பினால் வரமுடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்கள் வருகிற தேர்தல் சவால் மிக்க தேர்தலாக இருப்பதால் இணங்கி வந்து இந்த தேர்தலில் போட்டியிட முடியும். தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலும் தான் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டோம். அந்த விதமாக இந்த தேர்தலில் போட்டியிட நாங்கள் தீர்மானித்துள்ளோம். அப்படியாக அந்த அழைப்பை ஏற்று வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்ப்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடி முடிவு எடுப்போம். அப்படி அவர்கள் வராவிட்டால் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அங்கே ஒரு தமிழ் உறுப்பினர் மட்டும் தான் தெரிவு செய்யப்படும் நிலை இருப்பதால் அந்த விடயங்களை அந்த மாவட்ட கிளைகளுடன் பேசி முடிவுக்கு கொண்டு வரலாம் என தீர்மானித்துள்ளோம். அதற்கு மேலதிகமாக இம்முறை வடக்கு - கிழக்குக்கு வெளியே உள்ள கொழும்பு உட்பட தமிழர்கள் வாழும் ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிட பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள அழைப்பு எதிர்வரும் 4 ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல செய்தல் ஆரம்பிக்கவுள்ளதால் பிரிந்து சென்றவர்கள் மீள வருவது தொடர்பாக மிக விரைவாக அவர்களது பதிலை எதிர்பார்க்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் வந்து இணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கு வெளியே வேறு கட்சிகள் வந்தால் அதனை பரிசீலிக்கலாம். ஏனெனில் எங்களது கட்சியில் இருந்து பிரிந்து போனவர்களது கட்சியும் மேலும் பிரிந்து இருக்கின்றது. அவர்களை உள்வாங்கும் போது சில ஆட்சேபனைகள் இருக்கும். அது பற்றி பேசியே முடிவு எடுப்போம். ஆனால் தீர்மானமாக அழைப்பு விடுப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை வாருங்கள் சேர்ந்து பயணிப்போம் என்று புன்முறுவலோடு அவர்களை அழைக்கின்றோம். புதியவர்களை தேர்தலில் உள்வாங்குவது, இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பிலும் நீண்ட நேரம் பேசினோம். அதனை சரியாக நாம் அணுகுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களிடத்தில் இது தொடர்பான பாரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விசேடமாக தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றிக்கு பிற்பாடு அத்தகைய எண்ணப்பாடு எங்களது பிரதேசங்களிலும் உயர்ந்துள்ளது. அது நல்ல விடயம். இளைஞர்கள், ஆளுமையுள்ளவர்கள், படித்தவர்கள், பெண்கள் என அவர்களுக்கான பிரதிநித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அதற்கான நியமனக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இறுதி முடிவுகளை எடுக்கும். ஆனால் மாவட்ட ரீதியாக கலந்து ஆலோசித்து தான் அந்த முடிவுகள் எடுக்கபடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சிலர் எம்முடன் பேசியுள்ளார்கள். தம்முடன் இணையுமாறு அவர்கள் அழைப்பு எதனையும் விடவில்லை. நாங்கள் பிரதானமான தமிழ் கட்சி. இது வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக வேறு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்ட போது தேர்தலுக்கு முகம் கொடுத்தது இலங்கை தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலுமே தான். அதே முறையில் நாங்கள் இந்த தேர்தலையும் சந்திப்பதற்கு பிரதான கட்சி என்ற வகையில் நாங்கள் அவர்களுக்கும் அழைப்பு விடுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/ilankai-tamil-arasu-katchi-meeting-in-colombo-1727533785?itm_source=parsely-detail
  15. 26 SEP, 2024 | 12:24 PM பிரசாத் வெலிக்கும்புர தென்னிலங்கையின் பிராந்தியங்களில் இருந்து குறிப்பாக, சிங்கள பௌத்தர்கள் அதிக பெரும்பான்மையாக வாழும் பாகங்களில் இருந்து பெரும்பான்மையானவர்களின் ஆதரவைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இலங்கையின் ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கிறார். இதற்கு மாறாக, சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளின் குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கூடுதலான ஆதரவைப் பெற்றிருக்கிறார்கள். அதன் விளைவாக, திசாநாயக்கவுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக சிறுபான்மைச் சமூகங்களை குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களை அவரின் ஆதரவாளர்கள் கண்டனம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். திசாநாயக்கவுக்கு பதிலாக பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் வாக்களிப்பதற்கு இந்த சமூகங்களை தமிழ் அரசியல்வாதிகள் தவறாக வழிநடத்தியிருக்கிறார்கள் என்று வாதிடும் அவர்கள் அரசியல் யதார்த்தங்களை விளங்கிக்கொள்ளாதவர்களாக "அறிவிலிகள்" என்று அந்த மக்களைக் குற்றஞ்சாட்டுகிறார்கள். அதேவேளை, பிரேமதாசவையும் விக்கிரமசிங்கவையும் ஆதரித்த தாராளவாத முகாமைச் சேர்ந்த ஆதரவாளர்கள் தெற்கைச் சேர்ந்த இரு சிங்கள பௌத்த பேரினவாதிகளான நாமல் ராஜபக்ஷ மற்றும் திலித் ஜயவீரவுடன் தமிழ்ப் பொதுவேட்பாளரான பாக்கியசெல்வம் அரியநேத்திரனை ஒப்பிட்டிருப்பதுடன் மூவரும் ஒரே விதமான கோட்பாடுகளை கொண்டவர்கள் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். மேலும், பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்ச் சமூகம் வழங்கிய ஆதரவு அவர்கள் பெருமளவுக்கு பொதுமைப்பட்ட, தேசிய அரசியலுக்கு சாதகமாக தமிழ் அடையாள அரசியலை நிராகரித்திருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது என்று அந்த தாராளவாத போக்குடைய முகாமைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். முதல் கண்ணோட்டத்தில், இந்த இரு வாதங்களும் வேறுபட்டவையாக தோன்றலாம். ஆனால், உன்னிப்பாக அவதானித்தால் அவை ஒரே மாதிரியானவை. இருப்பதையும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இந்த இரு கருத்துக் கோணங்களுமே இந்த சமூகங்களுக்கு இடையில் இருக்கும் தனித்துவமான கலாசாரம், நடத்தை ஒழுக்கங்களையும் அடையாள வேறுபாடுகளையும் கொண்டவை என்பதை ஏற்றுக்கொள்ளத் தவறுகின்றன. இந்த குழுக்களின் தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் அபிலாசைகள் ஒற்றைத்தன்மை கொண்டவையல்ல. இந்த கருத்துக்களைக் கொண்டிருப்பவர்கள் இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை இப்போது இல்லை என்று கருதுவதுடன் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வினை கண்டுவிட்டால் சமத்துவமும் இணக்கநிலையும் ஏற்பட்டுவிடும் என்று நம்புகிறார்கள். அனால், இந்த கருத்தியல் நோக்கு யதார்த்தத்தில் இருந்து வேறுபட்டது. நாம் ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ, இலங்கை தனித்துவமான அடையாளங்களையும் முன்னுரிமைகளையும் கொண்ட பிராந்தியங்களாக பிளவுபட்டிருக்கிறது. இந்தப் பிளவு இலங்கை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே மிகவும் வெளிப்படையாகத் தெரியும். வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்கள் வேறுபட்ட ஒரு நிலப் பிராந்தியம், வரலாறு, சிங்களவர்களிடமிருந்து வேறுபட்ட அடையாள உணர்வு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார்கள். நாடு சுதந்திரமடைந்த பிறகு பல தசாப்தங்களாக அவர்கள் பாரபட்சமான முறையில் நடத்தப்பட்டமை, 30 வருடகால உள்நாட்டுப்போர், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஆகியவை காரணமாகவும் அரசாங்கங்கள் பொறுப்புக்கூறத் தவறியமை காரணமாகவும் இடைவெளி விரிவடைந்துவிட்டது. இந்த காரணிகள் சிங்கள பௌத்த பெரும்பான்மை இனத்தவர்களிடமிருந்து தமிழ்ச் சமூகத்தை மேலும் தூர விலக்குகின்றன. 2009ஆம் ஆண்டுக்கு பிறகு, வடக்கு, கிழக்கு தமிழ்ச் சமூகம் போரின் இறுதிக்கட்டங்களில் ஒப்பீட்டளவில் குறைந்தளவு ஈடுபாட்டைக் கொண்டிருந்த அரசியல் பிரிவுகளுடன் தொடர்ச்சியாக அணிசேர்ந்து வந்திருக்கிறார்கள். இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் வரை அவர்கள் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராகவே வாக்களித்தார்கள். ஆனால், இந்த தேர்தலில் பிரதான வேட்பாளர்களில் ஒரு ராஜபக்ச இல்லாத நிலையில் தற்போது தேசிய மக்கள் சக்தியின் அங்கமாக இருக்கும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) மீது கவனம் குவிந்தது. குறிப்பாக, போரின் இறுதிக்கட்டங்களில் ஜே.வி.பி. சம்பந்தப்பட்டிருந்தது. "எந்த வழியில் என்றாலும்" போருக்கு முடிவைக் கட்டிவிடுமாறு மகிந்த ராஜபக்சவை தாங்களே வலியுறுத்திக் கேட்டதாக ஜே.வி.பி.யினர் தேர்தல் பிரசாரங்களின்போது பெருமை பேசியதைக் காணக்கூடியதாக இருந்தது. இறுதிக்கட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் சுமார் ஒரு இலட்சம் பேர் மாண்டார்கள். வடக்கில் உள்ள ஒவ்வொரு தமிழனும் தனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த ஒருவரை அந்த படுகொலைகளில் இழந்திருக்கிறார் என்ற உண்மை நிலைவரத்தின் பாரதூரத்தன்மையை தெளிவுபடுத்தி நிற்கிறது. அதனால் தேசிய மக்கள் சக்தி தோற்கடிக்கப்படவேண்டிய ஒரு கட்சி என்று அவர்கள் கருதியது இயல்பானதேயாகும். தேர்தல் பிரசாரங்களின்போது ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்களில் ஒருவரான லால்காந்த போரில் தனது கட்சியின் ஈடுபாடு குறித்து பெருமையாகப் பேசினார். மேலும், கறைபடிந்த சிங்கள பௌத்த பேரினவாத வரலாறு ஒன்றைக் கொண்ட ஜே.வி.பி. ஒரு குறைந்தபட்ச அதிகாரப் பரவலாக்கல் வடிவத்தைக் கூட கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறது. வடக்கு பிராந்தியத்தில் உள்ள வர்த்தகர் குழாத்துடன் ஊடாட்டங்களைச் செய்வதற்கு சில முயற்சிகளை ஜே.வி.பி. மேற்கொண்ட அதேவேளை தமிழ் மக்களுடனான அல்லது ஏனைய சிறுபான்மைக் குழுக்களுடன் அர்த்தபுஷ்டியான முறையில் பிணைப்பை ஏற்படுத்துவதற்கு எதையும் செய்யவில்லை. அதனால் ஜே.வி.பி.க்கு வாக்களிப்பதை தமிழர்கள் தவிர்த்துக்கொண்டது முற்றிலும் நியாயமானதே. அதேபோன்று தமிழர்கள் இப்போது தேசிய இனப்பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை என்ற காரணத்தினால் அவர்கள் தமிழ் வேட்பாளரை நிராகரித்து பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் வாக்களித்தார்கள் என்ற தாராளவாத போக்குடைய முகாமின் வாதமும் தவறானது. சிங்கள பௌத்த பேரினவாத வரலாற்றையும் 2009 முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் தொடர்பையும் கொண்ட ஜே.வி.பி.யை ஓரங்கட்டுவதற்கு ஒரே வழி என்று நம்பியதன் காரணத்தினாலேயே தமிழர்கள் அந்த இருவருக்கும் வாக்களித்திருப்பார்கள் எனலாம். (கட்டுரையாளர் சமூக - அரசியல் சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாட்டாளர்) https://www.virakesari.lk/article/194830
  16. 25 SEP, 2024 | 11:00 AM "மாலைதீவு விவகாரத்தில் கடைப்பிடித்ததை போன்று இலங்கை விவகாரத்திலும் இந்தியா பொறுத்திருந்து பார்க்கும் அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்." "நெருக்கடியான நேரங்களில் முதலில் உதவிக்கு ஓடிவருகின்ற நட்பிணக்கமும் அன்பாதரவும் கொண்ட ஒரு பிராந்திய வல்லரசு இந்தியா என்பதை இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுராகுமார திசாநாயக்க புரிந்துகொள்வதற்கு புதுடில்லி கால அவகாசத்தை வழங்கவேண்டும்." "தற்போது ஆட்சியதிகாரத்துக்கு வந்துவிட்ட ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. ) அதன் பிரத்தியேகமான சிங்கள தேசியவாதத்தைக் கைவிட்டு சிறுபான்மைச் சமூகங்களின் குறிப்பாக தமிழர்களின் அக்கறைகளை கையாளுவதற்கு சகல சமூகங்களையும் அரவணைக்கும் அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்." "இலங்கையில் புதிய அரசியலமைப்பை வரைவது என்பது பிரச்சினைகளை கிளறிவிடக்கூடிய சாத்தியம் இருக்கிறது. அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்தில் ஏதாவது மாற்றங்களைச் செய்வதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய எந்த முயற்சியும் இந்தியாவுடனான இலங்கையின் உறவுகளில் தமிழர் பிரச்சினையை மீண்டும் முன்னரங்கத்துக்கு கொண்டுவரும்." இவ்வாறான கருத்துக்களை இந்தியாவின் முக்கியமான ஆங்கில தேசியப் பத்திரிகைகள் இலங்கையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றிருப்பது குறித்து எழுதிய ஆசிரிய தலையங்கங்களில் தெரிவித்திருக்கின்றன. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்துஸ்தான் ரைம்ஸ், டெக்கான் ஹெரால்ட் ஆகிய பத்திரிகைகள் செவ்வாய்க்கிழமை (24) தீட்டிய ஆசிரிய தலையங்கங்களை முழுமையாக தருகிறோம். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் "இடதுபக்கம் திரும்பிய இலங்கையை பொறுமையுடன் கையாளவேண்டும்" என்ற தலைப்பில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரிய தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் 2019 ஜனாதிபதி தேர்தலில் மூன்று சதவீத வாக்குகளை மாத்திரம் பெற்ற ஒரு மார்க்சியக் கட்சி 2024ஆம் ஆண்டில் மக்களின் ஆணையைப் பெறுகிறது என்றால் அது அந்த நாட்டு மக்களின் தெரிவில் ஒரு அடித்தள நகர்வு ஏற்பட்டிருப்பதை காட்டுகிறது. தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவரான 56 வயதான அநுராகுமார திசாநாயக்க இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். முதலாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் திசாநாயக்க 50 சதவீத வாக்குகளைப் பெறாத நிலையில், இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக இரண்டாவது விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு அவர் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். 1970களிலும் 1980களிலும் இரு ஆயுதக் கிளர்ச்சிகளை முன்னெடுத்த ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) இது காலவரையில் அரசியலில் விளிம்பு நிலையில் இருந்தது. நாளடைவில் திசாநாயக்க தனது கட்சியின் தீவிரவாதப் போக்கைத் தணித்து அதை மக்கள் பெருமளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக மாற்றினார். ஒரு குறுகிய காலத்துக்கு ஜே.வி.பி. ஜனாதிபதிகள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டரசாங்கங்களில் பங்கேற்றது. ஆனால், கிளர்ச்சி செய்யும் ஒரு அமைப்பு என்ற நிலையில் இருந்து அரசாங்கத்துக்கு தலைமைதாங்குகின்ற கட்சியாக மாறுவதென்பது சுலபமானதல்ல. அதை புதிய ஜனாதிபதி விரைவில் கண்டுகொள்வார். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைளுக்கு இணங்கச் செயற்படுகின்ற அதேவேளை, வரிகளைக் குறைப்பதாகவும் மககளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாகவும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திசாநாயக்கவின் ஆற்றல் இனிமேல் தான் பரீட்சித்துப் பார்க்கப்பட வேண்டியதாக இருக்கிறது. ஊழலை ஒழித்து ஆட்சி முறைமையை துப்புரவாக்குவதாகவும் பொதுவாழ்வில் நேர்மையை உறுதி செய்வதாகவும் திசாநாயக்க அளித்த வாக்குறுதியினால் உந்தப்பட்டு இலங்கை தீர்க்கமான முறையில் இடது பக்கம் திரும்பியிருக்கிறது. படுமோசமான பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டில் மூண்ட அறகலய என்று அறியப்பட்ட மக்கள் கிளர்ச்சியின் பிரதான பயனாளியாக திசாநாயக்க மாறினார். அந்த கிளர்ச்சி ஊழலும் அகங்காரமும் நிறைந்த ராஜபக்சாக்களை அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிந்தது. ஆனால் சூழ்ச்சித் திறமுடைய ராஜபக்சாக்கள் ஜனாதிபதி மாளிகையில் தங்களது பதிலாளாக ரணில் விக்கிரமசிங்கவை அமர்த்தினார்கள். அறகலயவுக்கு பிறகு நடைபெற்ற முதல் தேர்தலில் ஜனநாயகச் சுழல் காறாறினால் அவர்கள் எல்லோரும் தூக்கிவீசப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடி மிகவும் விரைவாகவே திசாநாயக்கவை வாழ்த்தி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பன்முகத்தன்மை கொண்ட இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவதற்கு அவருடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு ஆர்வத்துடன் இருப்பதாக கூறியிருக்கிறார். வங்குரோத்து அடைந்த அந்த நாட்டை 2022ஆம் ஆண்டில் இந்தியாவின் 4 பில்லியன் கடனுதவியே காப்பாற்றியது. ஆனால், தேர்தலுக்கு முன்னதாக இந்திய விரோதப் உரைகளை திசாநாயக்க நிகழ்த்தியதை காணக்கூடியதாக இருந்தது. சீனா நோக்கிய சாய்வே அதற்கு காரணமாகும். ஒரு மார்க்சிய கட்சியிடமிருந்து எதிர்ப்பார்க்கக் கூடியதே. மாலைதீவு விவகாரத்தில் கடைப்பிடித்ததை போன்று இலங்கை விவகாரத்திலும் பொறுத்திருந்து பார்க்கும் அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்தியா கடும் வட்டிக்கு கடன் கொடுக்கின்ற மற்றறைய நாடுகளைப் போலன்றி நெருக்கடி நேரங்களில் முதலில் உதவிக்கு ஓடிவருகின்ற நட்பிணக்கமும் அன்பாதரவும் கொண்ட ஒரு பிராந்திய வல்லரசு என்பதை புரிந்து கொள்வதற்கு திசாநாயக்கவுக்கு கால அவகாசத்தை வழங்கவேண்டும். இந்துஸ்தான் ரைம்ஸ் "இலங்கையில் இடதுபக்கத் திருப்பம் " என்ற தலைப்பில் இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம் வருமாறு : இடதுசாரிப் போக்குடைய கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி. பி.) தலைவரான அநுராகுமார திசாநாயக்க இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருப்பது அந்த நாட்டின் அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை குறித்து நிற்கிறது. ஒரு வகையில் நோக்குகையில், 1971ஆம் ஆண்டிலும் 1987 - 89 காலப்பகுதியிலும் இரு ஆயுதக் கிளர்ச்சிகளை முன்னெடுத்த ஜே.வி. பி.யின் உயர்ச்சியும் கொழும்பில் அதிகாரத்தில் ஏகபோக உரிமை செலுத்திய மூன்று பிரதான அரசியல் கட்சிகளையும் அது கிரகணம் செய்திருப்பதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியைத் துறந்து நாட்டை விட்டு ஓடவைத்த 2022 மக்கள் கிளர்ச்சியுடன் தொடங்கிய ஒரு அரசியல் நிகழ்வுச் சுழற்சியை பூர்த்தி செய்கின்றன. அறகலய என்று அழைக்கப்பட்ட கிளர்ச்சி மக்களின் அணிதிரட்சியின் அளவில் முன்னென்றும் இல்லாததாக அமைந்ததுடன் விடுதலை புலிகளை போரில் தோற்கடித்தமைக்காக "வீரபுருஷர்கள்" என்று ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட ராஜபக்சாக்களின் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் பாதிப்புகளையும் அரசியல் அதிகார வர்க்கத்தின் மீதான மக்களின் வெறுப்புணர்வையும் துலாம்பரமாக வெளிக்கொண்டுவந்த விதத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாகவும் விளங்கியது. அறகலயவுக்கு ஆதரவான முக்கியமான ஒரு குரலாக திசாநாயக்க விளங்கினார். மாற்று ஆட்சியை வழங்கக்கூடிய ஒரு அரசியல் கட்சியாக ஜே.வி.பி. தன்னை முன்னிறுத்துவதற்கு அறகலய உதவியது. சில வருடங்களுக்கு முன்னர் சந்திரிக்கா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் திசாநாயக்க ஒரு அமைச்சராக இருந்த போதிலும், ஜே.வி.பி. ஒருபோதும் கொழும்பில் அதிகாரத்தில் இருந்ததில்லை என்ற உண்மை அரசியல் அதிகார வர்க்கத்தின் மீதான வாக்காளர்களின் வெறுப்புணர்வை வெளிக்காட்டிய தேர்தல் ஒன்றில் மக்களின் ஆணையை அந்த கட்சி தலைமையிலான கூட்டணி வென்றெடுப்பதற்கு உதவியது. இலங்கை இன்னமும் 2022ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடவில்லை. அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியிலேயே தங்கியிருக்கிறது. அதேவேளை வரிக்குறைப்பையும் கூடுதலான நலன்புரி உதவிகளையும் மக்கள் எதிர்பார்த்து நிற்கிறார்கள். அதனால் நாட்டை நிருவகிப்பதில் உள்ள நெருக்குதல்களை கையாள்வதில் திசாநாயக்க தனது கொள்கைகளில் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். பதவியில் இருந்து இறங்கிச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் மீதான மக்களின் கடுமையான வெறுப்புணர்வுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையின் பேரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த சிக்கனத் திட்டங்கள் ஒரு முக்கியமான காரணமாகும். சர்வதேச நாணய நிதியத்தின் உதவித்திட்டம் குறித்து மீள்பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக திசாநாயக்க உறுதியளித்திருக்கிறார். கோட்டாபய ராஜபக்சவுக்கு பிறகு பதவிக்கு வந்த விக்கிரமசிங்க நாணய நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் நாட்டையும் பொருளாதாரத்தையும் நிலையுறுதிப்படுத்துவதற்கும் சர்வதேச சமூகத்திடமிருந்து உதவியை நாடவேண்டியிருந்தது. மீண்டும் பொருளாதாரம் குழப்பநிலைக்குள் செல்லாதிருப்பதை உறுதிசெய்வதற்கு திசாநாயக்க தனது கட்சியின் ஜனரஞ்சகவாதத்தை தணித்து ஒரு மத்தியபாதையை கண்டறிய வேண்டியிருக்கலாம். தற்போது ஆட்சியதிகாரத்துக்கு வந்துவிட்ட ஜே.வி.பி. அதன் பிரத்தியேகமான சிங்கள தேசியவாதத்தை கைவிட்டு சிறுபான்மைச் சமூகங்களின் குறிப்பாக தமிழர்களின் அக்கறைகளை கையாள்வதற்கு சகல சமூகங்களையும் அரவணைக்கும் அணுகுமுறையை தழுவவேண்டும். ஜே.வி.பி.யின் இந்திய விரோதப் போக்கு கூடுதலான அளவுக்கு அதன் தேசியவாத சிந்தனையுடன் சம்பந்தப்பட்டதே தவிர சீனாவுடனான கோட்பாட்டு ரீதியான எந்த நெருக்கத்துடனும் தொடர்புபட்டதல்ல. இலங்கை நெருக்கடிகளை எதிர்நோக்கிய நேரங்களில் இந்தியா ஆதரவாக இருந்து வந்திருக்கிறது. 2022 அமைதியின்மைக்கு பிறகு இரு நாடுகளும் மேலும் நெருக்கமாக வந்திருக்கின்றன. கடந்த பெப்ரவரியில் டில்லியில் இந்திய உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்த திசாநாயக்க இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவதைப் பற்றி பேசினார். அவ்வாறு செய்வதே இரு நாடுகளின் நலன்களுக்கும் உகந்தது. டெக்கான் ஹெரால்ட் "மீளமைத்துக்கொள்வதற்கான இலங்கையின் வாய்ப்பு" என்ற தலைப்பில் டெக்கான் ஹெரால்டின் ஆசிரிய தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையின் ஜனாதிபதியாக ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டமை ஒன்றும் எதிர்பார்க்கப்படாதது அல்ல. "முறைமை மாற்றத்துக்கான" ஒரு வேட்பாளராகவே அவரது பிரசாரங்கள் அமைந்திருந்தன. நாட்டின் பொருளாதாரத்தை தவறாக முகாமைத்துவம் செய்த ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிரான 2022 மக்கள் கிளர்ச்சியின் பிரதான முழக்கமாக "முறைமை மாற்றமே" விளங்கியது. அவர்கள் அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்ட பிறகு தலைமைத்துவத்தில் மெய்யான ஒரு மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்தார்கள். பதவியில் இருந்து இறங்கிச் சென்றிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த மாற்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்காக 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியை வழங்கிய சர்வதேச நாணய நிதியம் விதித்த நிபந்தனைகளின் விளைவாக மக்கள் அனுபவிக்கும் துன்பத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதாக வாக்குறுதியளித்த திசாநாயக்க இப்போது தனது ஆணையை நிறைவேற்ற வேண்டியவராக இருக்கிறார். ஜே.வி.பி.க்கு மூன்று உறுப்பினர்களே இருக்கும் தற்போதைய பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலுக்கு உத்தரவிடுவதே திசாநாயக்கவின் அடுத்த நடவடிக்கையாக இருந்தது. தேர்தலில் போட்டியிட்டபோது பொருளாதாரத்தை எவ்வாறு சீர்செய்து உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கான திட்டம் பற்றி அவருக்கு தெளிவிருக்கவில்லை. ஆனால் அவர் நடைமுறைச்சாத்தியமான அணுகுமுறைகளைப் பற்றி சிந்திக்கும் ஒரு அரசியல்வாதியாக தெரிகிறார். ஜே.வி.பி.யின் தீவிர இடதுசாரிப் போக்கையும் சிங்கள தேசியவாதத்தையும் தணிப்பதில் அக்கறை கொண்டவராக அவர் இருக்கிறார். திசாநாயக்கவைப் பற்றிய டில்லியின் ஐயுறவுகள் ஜே.வி.பி.யின் இந்திய விரோத வரலாற்றையும் அதன் சீனச்சார்பையும் அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கின்றன. அந்த இரண்டு அம்சங்களையும் ஜே.வி.பி. மறைக்கவில்லை. கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட திசாநாயக்க கொழும்பின் நெருங்கிய அயல்நாடு என்ற வகையிலும் தெற்காசியாவின் மிகப் பெரிய பொருளாதாரம் என்ற வகையிலும் இந்தியா எந்தளவுக்கு இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஏற்றுக்கொள்வதாக பல நேர்காணல்களில் கூறியிருக்கிறார். இந்தியாவுடன் இலங்கைக்கு புவிசார் பகைமை எதுவும் கிடையாது என்றும் அவர் கூறியிருக்கிறார். தனது இந்த நிலைப்பாட்டை பொருளாதார ரீதியில் ஆழக் காலூன்றியிருக்கும் சீனாவுடனான ஜே.வி.பி.யின் உறவுகளுடன் எவ்வாறு சமநிலைப்படுத்துவார் என்பதிலேயே அவரைப் பற்றிய இந்தியாவின் புரிதலும் அதன் சொந்த பாதுகாப்பு கணிப்பீடுகளும் தங்கியிருக்கின்றன. திசாநாயக்கவுக்கு முன்கூட்டியே இந்தியா நீட்டிய நேசக்கரமும் இவ்வருடம் மார்ச் மாதத்தில் அவர் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயமும் இரு தரப்பினரும் பழக்கமற்றவர்கள் அல்ல என்பதை உறுதிசெய்திருக்கிறது. இலங்கையில் சீனாவின் செல்வாக்குப் பற்றிய இந்தியாவின் அக்கறைகள் காரணமாக டில்லி முன்னுரிமை கொடுத்துக் கவனிக்கின்ற ஒரு விவகாரமாக தமிழர் பிரச்சினை இப்போது இல்லை என்ற போதிலும், புதிய அரசியலமைப்பு ஒனறைக் கொண்டுவரும் உத்தேசம் குறித்து திசாநாயக்க கூறியிருப்பதை இந்தியா கவனத்தில் எடுக்காமல் இருந்திருக்காது. 1987ஆம் ஆண்டில் இந்தியாவின் அனுசரணையுடன் இலங்கை அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட 13வது திருத்தத்தை நீக்கிவிடவேண்டும் என்ற ஆர்வம் ஜே.வி.பி. உட்பட பல வட்டாரங்களில் இருந்து வருவதால் அரசியலமைப்பை மீளவரைவது என்பது பல பிரச்சினைகளைக் கிளறிவிடக்கூடிய சாத்தியம் இருக்கிறது. தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு இலங்கையின் அரசியலமைப்பில் இருக்கும் ஒரேயொரு ஏற்பாடு 13வது திருத்தம் மாத்திரமேயாகும். அவ்வாறு இருந்தபோதிலும் அந்த திருத்தம் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவோ அல்லது நடைமுறைப்படுத்தப்படவோ இல்லை. அதில் ஏதாவது மாற்றங்களைச் செய்வதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய எந்தவொரு முயற்சியும் இந்தியாவுடனான இலங்கையின் உறவுகளில் தமிழர் பிரச்சினையை முன்னரங்கத்துக்கு கொண்டுவரும். திசாநாயக்க பெரும்பான்மையான சிங்கள வாக்காளர்களினாலேயே தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அவர்களது தெரிவையும் அதிகார மாற்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முறையில் மிகவும் அமைதியாக இடம்பெற்றிருப்பதையும் இந்தியா மதிக்கிறது. உறவுமுறையில் சிக்கல்கள் தொடரலாம் என்கிற அதேவேளை அவை மோசமடையாமல் இருப்பதை இராஜதந்திரம் உறுதிசெய்யவேண்டும். https://www.virakesari.lk/article/194748
  17. சீனாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் மூழ்கியது சீனாவின்(china) புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்(nuclear-powered submarines) ஒன்று கடலில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் வுஹான் அருகே உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியுள்ளது, இது தொடர்பான தகவல்களை சீனா மூடிமறைத்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புப் படைகள் சுட்டிக்காட்டியுள்ளன. சீனாவினால் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் சீனாவினால் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலே இவ்வாறு மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நீர்மூழ்கிக் கப்பலில் அணு எரிபொருள் ஏற்கனவே ஏற்றப்பட்டதா அல்லது கப்பல் மூழ்கியபோது எரிபொருள் நிரப்பப்படவில்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அமெரிக்க(us) மூத்த பாதுகாப்பு அதிகாரி கூறினார். எந்தத் தகவலும் இல்லை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கிய செய்தியை முதலில் வெளியிட்டது. வோஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், "நீங்கள் குறிப்பிட்டுள்ள சூழ்நிலையை நாங்கள் அறிந்திருக்கவில்லை, தற்போது அது தொடர்பில் வழங்குவதற்கு எந்தத் தகவலும் இல்லை" என்று கூறினார். https://ibctamil.com/article/chinas-newest-nuclear-powered-submarine-sank-1727537407
  18. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் (University of Jaffna) சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகபீடத்தின் வணிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரையும், விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரையும் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று (28) ஒப்புதல் வழங்கியது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா (S.Srisatkunarajah) தலைமையில் இன்று (29) நடைபெற்றது. பேராசிரியராக பதவி உயர்வு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் (UGC) சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய, திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகபீடத்தின் வணிகவியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சிவபாலன் அச்சுதன் மற்றும் விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முருகதாஸ் தணிகைச்செல்வன் ஆகியாரின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் என்பன இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில், வணிகவியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சிவபாலன் அச்சுதன் வணிகவியலில் பேராசிரியராகவும், பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முருகதாஸ் தணிகைச்செல்வன் இலத்திரனியலில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். https://ibctamil.com/article/2-lecturers-promoted-as-professors-in-jaffna-uni-1727520875#google_vignette
  19. தமிழர் அபிலாசைகளை முன்கொண்டு செல்லக்கூடியவர்களை அரசியலில் களமிறக்க வேண்டும்; வவுனியா மாவட்ட உண்மை மற்றும் நல்லிணக்க மன்றம் தமிழ் அரசியல் தலைமைகளிடம் கோரிக்கை 28 SEP, 2024 | 05:04 PM சட்டவாக்க சபைக்கு செல்பவர்கள் குற்றச்செயலோடு சம்பந்தமற்றவர்களாகவும் சுயநலம் அற்றவர்களாகவும் ஊழல் மற்றும் அரசியலால் தனிநபர் முன்னேற்றம் போன்றவற்றை தவிர்த்து சமூகம் சார் அறிவுடன் அவை சார்ந்த சிந்தனையை மேலோங்கி கொண்டு செல்லக்கூடிய முற்போக்காளர்களையும் அரசியலில் களமிறக்க வேண்டும் என வவுனியா மாவட்ட உண்மை மற்றும் நல்லிணக்க மன்றம் கோரிக்கை விடுத்து கட்சித் தலைவர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது. இக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை தேசம் தற்போது மீண்டும் ஒரு தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறது. மக்கள் தங்களுக்கான சட்டவாக்க சபைக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்கின்ற இந்த தீர்க்கமான காலகட்டத்தில் அரசியல் தலைமைகளும் ஜனநாயக ரீதியானதும் காலச்சூழலுக்கு ஏற்றதுமான முடிவுகளை எட்டவேண்டிய தருணத்தில் உள்ளார்கள். இந்த களச்சூழலில் உண்மை மற்றும் நல்லிணக்க மன்றமாகிய நாம் தமிழ் மக்கள் மத்தியில் பல தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இருந்தோம். அதன் பிரகாரம் அம்மக்களின் அபிலாசைகளை முன்னெடுத்து செல்லும் பொருட்டு சில வெளிப்படுத்தல்களை அரசியல் தலைமைகளுக்கு வழங்குவதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க மன்றம் பொறுப்புடன் செயற்பட தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் உண்மை மற்றும் நல்லிணக்க மன்றம் சில பரிந்துரைகளை முன்வைக்க எண்ணுகின்றது. அவையாவன, இனங்களுக்கு இடையில் குரோதங்களையோ முரண்பாடுகளையோ ஏற்படுத்தாத வகையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு உண்மைகளை வெளிப்படுத்தி யதார்த்த பூர்வமான வாக்குறுதிகளை வழங்கி இந்தத் தேர்தலில் அரசியல் தலைமைகள் தங்களுக்கான தேர்தல் தளத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இதேவேளை தமிழர் தரப்பில் பல்வேறு நியாயப்பாடான தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. காலாகாலமாக அவர்கள் தங்களுடைய அரசியல், சமூக, சமய, கலாசார விடயங்களில் தங்களுக்கான ஒரு உறுதிப்பாடானதும் நிலையானதுமான தீர்வினை வேண்டி நிற்கின்றனர். அந்த வகையில் கடந்த காலங்களைப் போல் அல்லாமல் ஒரு தீர்க்கமானதும் அர்த்தபுஷ்டியானதும் தற்கால அரசியல் தளத்துக்கு ஏற்றாற்போல் நகர்ந்து செல்லக்கூடிய அரசியல் தலைமைகள் உருவாக வேண்டும் என்பதோடு சட்டவாக்க சபைக்கு செல்பவர்கள் குற்றச்செயலோடு சம்பந்தமற்றவர்களாகவும் சுயநலம் அற்றதும் ஊழல் மற்றும் அரசியலால் தனிநபர் முன்னேற்றம் போன்றவற்றைக் தவிர்த்து சமூகம் சார் அறிவுடன் அவை சார்ந்த சிந்தனையை மேலோங்கி கொண்டு செல்லக்கூடிய முற்போக்காளர்களை இந்த அரசியல் களத்தில் களமிறக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை தமிழ் மக்கள் முன்வைத்திருக்கின்றார்கள். ஆகவே, தமிழர்கள் தங்கள் பிரதிநிதித்துவத்தின் வலிமையை நிலை நாட்டுவதற்காக தமிழர் தரப்பில் செயல்பட்டு வரும் அரசியல் கட்சிகள் ஓர் அணியில் நின்று அவர்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என கோருவதுடன் இளம் சமூகத்தினரையும் புதியவர்களையும் களம் இறக்கி ஆரோக்கியம் உள்ள ஒரு அரசியல் தளத்தை உருவாக்க வேண்டும் என்பதோடு தமிழ் மக்களின் உணர்வுசார் விடயங்களை சகோதர சிங்கள மொழி பேசும் மக்களிடம் கொண்டு செல்லும் ஆற்றல் உள்ளவர்களையும் தெரிவு செய்ய ஆவன மேற்கொள்ளுமாறும் உண்மை மற்றும் நல்லிணக்க மன்றமானது அரசியல் தலைமைகளிடம் முன்வைக்கின்றது. தமிழர் தரப்பு அரசியல் கட்சிகள் அனைத்தும் விட்டுக்கொடுப்புகளோடும் மக்களுடைய அபிலாசைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் சிந்தித்து ஓரணியில் செயற்படுவதற்கு ஏற்றாற்போல் ஆரோக்கியமான கலந்துரையாடல்களை நடத்தி இந்த பாராளுமன்றத் தேர்தல் களத்தை சந்திக்க வேண்டும் என உண்மை மற்றும் நல்லிணக்க மன்றம் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் அரசியல் தலைமைகளிடமும் கோரி நிற்கிறது. https://www.virakesari.lk/article/194997
  20. ஹெஸ்பொலாவுக்கு எதிராக இஸ்ரேலின் மிகப்பெரிய வெற்றி - புறக்கணிக்கப்பட்ட அமெரிக்காவின் ஆலோசனைகள் பட மூலாதாரம்,GETTY/AFP கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரிமி போவன் பதவி, பிபிசி செய்தியாளர் 41 நிமிடங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கில் மிகவும் கடுமையான போர் மூளும் அபாயம் இருப்பதைப் பற்றிப் பேசுவதை நிறுத்த வேண்டிய நேரம் இது. அதை நிறுத்துவதற்கான செயலில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. லெபனான் மீதான இஸ்ரேல் நடத்திய பேரழிவுகரமான தாக்குதலைத் தொடர்ந்து, ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொன்றதாக இஸ்ரேல் அறிக்கை வெளியிட்டது. ஹெஸ்பொலாவும் தனது டெலிகிராம் பதிவில் இந்தத் தகவலை உறுதி செய்தது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்தவர்களின் கூற்றுப்படி, அதுவொரு பெரிய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல். இதுவரை நான் லெபனான் மோதல்கள் பற்றிக் கேள்விப்பட்டதில் இதுதான் மிகவும் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு என்று நகரத்தில் உள்ள எனது நண்பர் ஒருவர் கூறினார். தாக்குதல் நடந்த இடங்களில், மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளுக்கு மத்தியில் தேடுதல் பணிகளை மேற்கொண்டுள்ளனர். முன்னேற்றிச் செல்ல முடிவெடுத்த இஸ்ரேல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹெஸ்பொலாவின் தலைவரைக் குறிவைத்து இந்தக் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது ஹஸன் நஸ்ரல்லா கொல்லப்பட்டது, இஸ்ரேலின் மிகப்பெரிய வெற்றியைக் குறிக்கிறது. இஸ்ரேலின் 'பெரிய எதிரி' எனக் கருதப்பட்ட ஓர் அமைப்புக்கு எதிராக அவர்கள் பெற்றுள்ள இந்த மிகப்பெரிய வெற்றி அவர்களுக்கு மேலும் நம்பிக்கையூட்டும். இஸ்ரேல் மேலும் பல வீரர்களைத் திரட்டியுள்ளது. லெபனான் மீது தரைவழித் தாக்குதலைக்கூட மேற்கொள்ள அவர்கள் பரிசீலித்துக் கொண்டிருக்க வாய்ப்புகள் அதிகமுள்ளது. லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மிகப்பெரிய தீவிரத்தை எட்டக்கூடிய நடவடிக்கை இது. கடந்த 11 மாதங்களாக இரு தரப்பினருக்கும் இடையே மாறி மாறி மோதல்கள் இருந்து வருகின்றன. இருப்பினும் இஸ்ரேல் தரப்பு லெபனானுக்கு அதிக அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த மோதலில் முன்னேறிச் செல்ல இஸ்ரேல் முடிவெடுத்துள்ளது. ஹமாஸுக்கு எதிரான போரைப் போலன்றி, இஸ்ரேல் 2006இல் இருந்து இந்தப் போரைத் திட்டமிடுகிறது. ஹமாஸ் உடனான மோதலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஹெஸ்பொலாவுக்கு எதிரான போரை நீண்ட காலமாகத் திட்டமிட்டு வருகின்றனர். இப்போது அந்தத் திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள். ஹெஸ்பொலாவிற்கு முன்னால் பெரிய சவால்கள் உள்ளன, இஸ்ரேலிய ராணுவம் ஹெஸ்பொலாவின் தலைவர் கொல்லப்பட்டு விட்டார் என்று சொல்வது உண்மையாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் இஸ்ரேல் அவர்களுக்கு முன் பெரிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. ஹெஸ்பொலா முன்பாகப் பெரிய சவால்கள் உள்ளன. இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து தனது தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹெஸ்பொலா நிலைகள் மீது தொடர்ந்து குண்டுவீசி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. நெதன்யாகுவின் அச்சுறுத்தல் பட மூலாதாரம்,GETTY IMAGES முன்னதாக வெள்ளியன்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறைந்தபட்சம் 21 நாள் போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவு பற்றி விவாதிக்கத் தயாராக இருக்கிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. இந்த முன்மொழிவு இஸ்ரேலின் மிக முக்கியமான மேற்கத்திய நட்பு நாடுகளால் ஆதரிக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் மூலம் முன்மொழியப்பட்டது. ஆனால் நியூயார்க்கில் உள்ள ஐ.நா பொதுச் சபையில் நெதன்யாகு முன்வைத்த பிடிவாதமான மற்றும் ஆக்ரோஷமான உரையில், ராஜதந்திரம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இஸ்ரேலை "அழிக்க விரும்பும் மூர்க்கமான எதிரியுடன் போரிடுவதைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை" என்றார் நெதன்யாகு. ஹெஸ்பொலாவை தோற்கடித்து காஸாவில் ஹமாஸ் மீது முழுமையான வெற்றி கிடைத்தால் மட்டுமே இஸ்ரேலிய பணயக் கைதிகள் நாடு திரும்புவது உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நெதன்யாகு, படுகொலை செய்யப்படவிருக்கும் ஆட்டுக்குட்டியாக இருப்பதற்குப் பதிலாக, இஸ்ரேல் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகக் கூறினார். இது நாஜி இனப்படுகொலையைக் குறிக்கும் இஸ்ரேலிய பழமொழி. நெதன்யாகு உரை முடிந்ததும், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பெரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டன. எனவே, லெபனானில் போர் நிறுத்தம் பற்றிய விவாதம் இஸ்ரேலின் திட்டத்தில் இல்லை என்பதற்கான அறிகுறி இது. எதிரிகள் எங்கிருந்தாலும், இஸ்ரேல் அவர்களைக் குறிவைத்துத் தாக்கும் என்ற நெதன்யாகுவின் அச்சுறுத்தலுக்குப் பிறகு உடனடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. மறுபுறம், இந்தப் பெரிய தாக்குதல் குறித்து இஸ்ரேல் தங்களுக்கு எந்த முன் தகவலும் தெரிவிக்கவில்லை என்று பென்டகன் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்த நெதன்யாகு பட மூலாதாரம்,ISRAEL PRIME MINISTER'S OFFICE படக்குறிப்பு, நியூயார்க்கில் உள்ள தனது ஹோட்டல் அறையில் இருந்து வான்வழித் தாக்குதலை நடத்த நெதன்யாகு அனுமதி அளித்ததாககக் கூறப்படுகிறது ஜெருசலேமில் உள்ள பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், பல தகவல் தொடர்பு சாதனங்களுக்கு மத்தியில் நெதன்யாகு அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. மேலும் அந்தப் புகைப்படம் நியூயார்க் நகரில் உள்ள ஹோட்டலில் இருந்து எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. தாக்குதலுக்கு அவர் அனுமதி வழங்கிய தருணத்தின் படம் இது என்று அந்தப் படத்தின் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தான் பல மாதங்களாக முன்னிறுத்த முயன்று வரும் கொள்கையின் பக்கமே நிற்கிறார். அவர் பேச்சுவார்த்தைக்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாக நம்புகிறார். இருப்பினும், அந்தக் கூற்று நம்ப முடியாத ஒன்றாகத் தெரிகிறது. இரு தரப்புக்கும் அழுத்தம் கொடுக்கும் வாய்ப்பு அமெரிக்காவுக்கு இல்லை. ஹெஸ்பொலா மற்றும் ஹமாஸ் அமைப்புகளை வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளாக அறிவித்துள்ளதால் சட்டரீதியாக அவர்களுடன் பேச முடியாது. மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு சில வாரங்களே எஞ்சியிருக்கும் நிலையில், கடந்த ஆண்டைப் போல் இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அமெரிக்காவின் ஆலோசனைகளைப் புறக்கணித்த இஸ்ரேல் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சமீபத்திய தாக்குதலைத் தொடர்ந்து இடிபாடுகளில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய அடுத்த சில நாட்களிலேயே, ஹெஸ்பொலா தாக்கப்பட வேண்டுமென்று இஸ்ரேல் அரசாங்கத்திலும் ராணுவத்திலும் உள்ள சக்திவாய்ந்த நபர்கள் வாதிட்டனர். இருப்பினும், அமெரிக்கா அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அவர்களை வற்புறுத்தியது. முழு பிராந்தியத்திலும் ஒரு போர் வெடிப்பது இஸ்ரேலின் பாதுகாப்பிற்குப் பயனளிக்காது என்று அமெரிக்கர்கள் வாதிட்டனர். ஆனால், கடந்த ஆண்டிலிருந்து இஸ்ரேல் போரிடும் விதம் குறித்த அமெரிக்க அதிபர் பைடனின் அறிவுறுத்தல்களை மீறுவதை நெதன்யாகு வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். பெய்ரூட் மீதான தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட போர் விமானங்கள் மற்றும் குண்டுகளை இஸ்ரேலுக்கு வழங்கிய போதிலும், அதிபர் பைடனும் அவரது குழுவினரும் வெறும் பார்வையாளர்களாகவே இருந்து வருகின்றனர். ஆதரவளிப்பது, ஆயுதங்களை வழங்குவது, ராஜதந்திர பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் நெதன்யாகு மீது செல்வாக்கு செலுத்த வேண்டும் என்பதாகவே, இஸ்ரேலின் வாழ்நாள் ஆதரவாளராக கடந்த ஆண்டு முதல் அதிபர் பைடனின் கொள்கை இருந்தது. இஸ்ரேல் போர்புரியும் விதத்தை மாற்றுவது மட்டுமின்றி, அதனுடன் இணைந்து சுதந்திர பாலத்தீனிய அரசை உருவாக்க வேண்டுமென்ற அமெரிக்காவின் திட்டத்தை நெதன்யாகு ஏற்றுக்கொள்வார் என்று ஜோ பைடன் நம்பினார். இந்தப் போரில் பல பாலத்தீன மக்கள் கொல்லப்படுவதாகவும், இந்தப் போர் மக்களுக்குப் பெரும் துன்பத்தை அளிப்பதாகவும் அதிபர் பைடன் தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனாலும், நெதன்யாகு பைடனின் ஆலோசனைகளை முற்றிலுமாக நிராகரித்தார். ஹெஸ்பொலாவின் நிலை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES பெய்ரூட் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, மத்தியக் கிழக்கில் பெரியளவிலான போரைத் தவிர்ப்பதற்கு ஆதரவு மற்றும் ராஜதந்திரத்தின் கலவை தேவை என்று பிளிங்கன் தனது கருத்தை மீண்டும் வலியுறுத்தினார். ஆனால், நிலைமை அமெரிக்காவின் கையை மீறிவிட்டதால், அவர்களின் பார்வை நம்பத்தகுந்ததாகத் தெரியவில்லை. இனி வரும் காலங்களில் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்படும். முதலில், ஹெஸ்பொலா தனது ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்தப் போகிறது என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அதைப் பயன்படுத்தி இஸ்ரேல் மீது பெரிய தாக்குதலை நடத்துவார்களா? மீதமுள்ள ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தாவிட்டால், இஸ்ரேல் அவற்றை அழித்துவிடும் என்று அவர்கள் நினைக்கலாம். இஸ்ரேல் தரப்பு அதன் முடிவுகளின் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அவர்கள் ஏற்கெனவே லெபனானில் தரைவழி ராணுவ நடவடிக்கையைத் தொடங்குவது பற்றிப் பேசியுள்ளனர். மேலும் அவர்கள் இன்னும் தேவையான படைகளை நிலைநிறுத்தவில்லை என்றாலும், அவர்களின் ராணுவம் சனிக்கிழமையன்று "ஒரு பெரியளவிலான நடவடிக்கைக்குத் தயாராக இருப்பதாக” கூறியது. லெபனானில் உள்ள சிலர் தரைவழித் தாக்குதலில் இஸ்ரேலிய ராணுவத்திற்குப் பெருமளவிலான சேதத்தை ஹெஸ்பொலா ஏற்படுத்தக்கூடும் என்று நம்புகின்றனர். மேற்கத்திய ராஜ்ஜீய அதிகாரிகள் ராஜதந்திர தீர்வை ஏற்றுக்கொள்ளுமாறு இஸ்ரேலுக்கு வேண்டுகோள் விடுப்பதன் மூலம் பிரச்னையைச் சரிசெய்ய நம்புகின்றனர். இந்த ராஜ்ஜீய அதிகாரிகளில் சிலர் இஸ்ரேலின் உறுதியான நட்பு நாடுகளாகவும் உள்ளனர். இப்போது இந்த அதிகாரிகள் பெரும் ஏமாற்றத்துடனும், ஆதரவற்ற உணர்வுடனும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். https://www.bbc.com/tamil/articles/c0lw4eg0g45o
  21. தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் “மாற்றத்துக்கான மாற்றுவழி” கலந்துரையாடல் 28 SEP, 2024 | 04:26 PM தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “மாற்றத்துக்கான மாற்றுவழி” எனும் கருப்பொருளில் அரசியல் கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இன்று சனிக்கிழமை (28) நடைபெற்றது. தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன், சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன், முன்னாள் மாகாண அமைச்சர் ப.டெனிஸ்வரன், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/194994
  22. இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் மேல் மோசடி செய்த உக்ரைன் (Ukraine) பிரஜைகள் இருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேபர்கள் இருவரும் தனியார் வங்கி ஒன்றின் ஆண்டு நிறைவுக்கு பரிசுகள் தருவதாக முகப்புத்தகத்தில் விளம்பரம் செய்து இந்த பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விளம்பரத்தைப் பார்த்து இணைப்பை உள்ளிடுபவர்களின் வங்கிக் கணக்குத் தகவல் உட்பட பல தனிப்பட்ட தகவல்கள் அதில் சேர்க்கப்பட வேண்டும். கைது நடவடிக்கை இவ்வாறு பிரவேசிக்கும் நபர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்ட பணத்தை ஒரு குழுவினர் மோசடி செய்து செல்வதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் உனவடுன பிரதேசத்தில் இருந்து இது தொடர்பான மோசடி இடம்பெறுவதை கண்டுபிடித்துள்ளனர். விசாரணை அதிகாரிகள் அங்கு சென்று 2 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள். நீதிமன்ற உத்தரவு கடந்த 5 நாட்களுக்கு முன்னர் இந்த நாட்டுக்கு வந்துள்ள இவர்கள், டெலிகிராம் குழு ஒன்றின் ஊடாக இந்த மோசடிகளை மேற்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இன்று (28) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். https://ibctamil.com/article/ukrainians-arrested-for-money-laundering-gifts-1727533926?itm_source=parsely-api#google_vignette
  23. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கை காட்டினால் மட்டுமே ஜனாதிபதி உண்மையான மாற்றத்தை கொண்டுவந்ததாக கூற முடியும் - வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் 28 SEP, 2024 | 03:37 PM ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும் என்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி சி.ஜெனிற்றா தெரிவித்தார். இன்று (28) தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ளது. இறுதி யுத்தத்தின்போது சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் செல்வீச்சுக்களினாலும் விமான குண்டு தாக்குதலாலும் உடல் சிதறி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. மேலும், இறுதி யுத்தம் முடிவடைந்த நிலையில் குடும்பம் குடும்பமாக இடம்பெயரும்போது தங்களது பிள்ளைகளை கையிலே ஒப்படைத்தனர். இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பள்ளி மாணவர்களும் பச்சிளங்குழந்தைகளும் ஆயுதம் ஏந்தி போராடியவர்களா? இவர்களுக்கு என்ன நடந்தது? கடந்த எட்டு தசாப்த காலமாக பதவி வகித்த எட்டு ஜனாதிபதிகளுக்கே யுத்தத்தை நடாத்திய பொறுப்பு இருக்கிறது. இந்நிலையிலே கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் வீதியிலே போராடிக் கொண்டிருக்கிறோம். ஆட்சியாளர்கள் மாறுகின்றார்கள், ஆட்சியும் மாறுகின்றது. தற்போது மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது என்றாலும் கூட அது எந்த வகையில் எமக்கான மாற்றத்தை தரும் என்பது தெரியாது. சர்வதேச நீதி நெறிமுறைமையை மட்டுமே நாம் இன்று வரை நம்பியிருக்கின்றோம். குறிப்பாக உள்ளக முறையில் எந்தவித நம்பிக்கையும் இல்லாத காரணத்தினால் நாங்கள் சர்வதேச நீதிப் நெறிமுறைக்காகவே இதுவரை போராடிக்கொண்டிருக்கின்றோம். 300க்கு மேற்பட்ட தங்களது பிள்ளைகள் எங்கே என்று தெரியாமல் போராடிக்கொண்டிருந்த தாய், தந்தையரை இழந்த நிலையிலும் அவர்களின் ஏக்கத்துக்காகவும் நாம் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்றோம். இலங்கையில் சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடுபவர்களுக்கு ஒரு வேண்டுகோளினை விடுக்கின்றோம். எமது உறவுகள் எத்தனை பச்சிளம் குழந்தைகளையும், பாடசாலை மாணவர்களையும் இழந்து அவர்கள் மீண்டும் வருவார்களா என்ற ஏக்கத்துடனும் தவிப்புடனும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை உங்கள் பிள்ளைகளாக நேசியுங்கள். எனவே, சர்வதேச சிறுவர் தினமான ஒக்டோபர் முதலாம் திகதியன்று வடக்கு, கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க உள்ளோம். அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக காலை 10 மணிக்கு இந்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். எனவே இப்போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இலங்கை அரசானது 75 வருடகாலமாக தமிழ் மக்களை ஏமாற்றி இருந்தது. பரம்பரை பரம்பரையாக 08 ஜனாதிபதிகள் மாறி மாறி ஆட்சி செய்திருந்த நிலையிலே எங்களுக்கு எந்தவித மாற்றங்களும் நிகழவில்லை. எனவே, எந்த நிலையிலும் எந்த ஒரு அரசையும் நம்பவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஜனாதிபதியாக பதவியேற்க முன்னர் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக, சர்வதேச பொறிமுறையின் ஊடாக உண்மைகளை கண்டறிந்து, குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக்கொடுத்து மீள் நிகழாமையை உறுதிப்படுத்தும் நிலையில் புதிய ஜனாதிபதியை பற்றி யோசிக்க முடியும். எந்த ஜனாதிபதி வந்தாலும் எமக்கான தீர்வு கிடைக்கப் பெற வேண்டும் என்பதையே சர்வதேசத்திடம் கேட்டுக்கொள்கிறோம். எனவே, புதிய ஜனாதிபதி ஏதாவது ஒரு சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/194991
  24. நஸ்ரல்லாவை சாய்த்த இஸ்ரேல்: நிலை தடுமாறி அமைதியாய் நிற்கும் ஈரான் ஈரான் (Iran) ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா (Nasrallah)படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் (Israel) அறிவித்தும், ஈரான் அமைதி காத்து வருவது அந்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலின் அறிவிப்பிற்கு ஹிஸ்புல்லா, லெபனான் தரப்பிலிருந்தும் எவ்வித உறுதிபடுத்தப்பட்ட தகவல்களும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், இதற்கு எதிராக ஈரான் மற்றும் ஏமன் நாடுகளில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஈரானின் செயற்பாடு எவ்வாறானெதொரு பின்னணியில், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக ஈரான் அமைதியாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, இத்தகைய சூழலில் ஈரான் கடுமையான பதிலடிகளை வழங்கும், ஆனால் இப்போது மிதவாதம் காட்டுவதாக உள்ளதாக ஈரானின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இது ஈரானில் உள்ள பழமைவாதிகள் மத்தியில் பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்காலத்தில் இது அரசியல் மாற்றங்களுக்கு காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இறுதி இலக்கு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்றிரவு நடத்தப்பட்ட தொடர் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் மொத்தம் 18 பேர் முக்கிய தளபதிகள் இருந்த நிலையில்,17 பேரை இஸ்ரேல் ஏற்கனவே படுகொலை செய்தது. இறுதியாக நஸ்ரல்லா மட்டுமே உயிருடன் இருந்த நிலையில் தற்போது அவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. https://ibctamil.com/article/death-of-hassan-nasrallah-pressure-on-iran-1727524484#google_vignette
  25. இஸ்ரேலின் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா பலி- உறுதி செய்தது ஹெஸ்புல்லா அமைப்பு 28 SEP, 2024 | 07:08 PM ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் வான்தாக்குதலில் தனது தலைவர் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளது. லெபனான் தலைநகரின் தென்புறநகர் பகுதியில் சியோனிஸ்ட்கள் மேற்கொண்ட துரோகத்தனமான நடவடிக்கையில் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார் என ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிற்கு எதிராக தொடர்ந்தும் போராடப்போவதாக உறுதியளித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பு காசாவிற்கும் பாலஸ்தீனத்திற்கும் தொடர்ந்தும் ஆதரவளிக்கப்போவதாக தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/195018

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.