Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: DIGITAL DESK 3 16 SEP, 2024 | 10:33 AM கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஜ்மா நகர் பகுதியில் நடக்க முடியாமல் யானை ஒன்று கண்ணீர் சிந்திய நிலையில் காணப்படுகிறது. இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை (16) மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.எல்.சமீம் வனவிலங்கு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். இவ்வாறு நடக்க முடியாமல் விழுந்து கிடக்கும் யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் சிகிச்சையளிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/193821
  2. Published By: DIGITAL DESK 3 16 SEP, 2024 | 11:08 AM போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கு ஒரு விசேட புனர்வாழ்வு நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இந்த அமையம் வவுனியா பகுதியில் அமைந்துள்ளது. இங்கு 100 பெண்களுக்கு புனர்வாழ்வு அளிக்க முடியும். நீதிமன்ற உத்தரவுக்கமைய போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ள பெண்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படும். இந்த புனர்வாழ்வு மையம் குறித்து நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்கு புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பணியகம் அறிவித்துள்ளது. அதன்படி, போதைப் பொருளுக்கு அடிமையான பெண்களை புதிய புனர்வாழ்வு மையத்துக்கு புனர்வாழ்விற்காக பரிந்துரைக்குமாறு நீதிச் சேவை ஆணைக்குழு அனைத்து நீதிபதிகளுக்கும் அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/193819
  3. தமிழ் பொது வேட்பாளரை சந்தித்த மாவைசேனாதிராசா! 16 SEP, 2024 | 10:29 AM இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், அவரது மகனான வலி வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கலையமுதனும் பொது வேட்பாளரை சந்தித்து தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ் பொது வேட்பாளரின் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற குறித்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பிரச்சார கூட்டத்தில் தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களான நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் பிரச்சார மேடையில் ஏறி தமது ஆதரவை தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/193816
  4. Published By: VISHNU 16 SEP, 2024 | 02:43 AM கிளிநொச்சியில் 95 கிலோ கஞ்சாவுடன் பெண்ணெருவர் ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்திரையான் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 95 கிலோ 520 கிராம் கேரளா கஞ்சா சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (15) விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து அப்பகுதியை சுற்றி வளைப்பை மேற்கொண்ட சிறப்பு அதிரடிப்படையினர், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை மீட்டுள்ளனர். அத்துடன், அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திலும் ஒரு பொதி கஞ்சா இருந்தத்துடன் அப்பகுதியில் காணப்பட்ட கப்வாகனத்தையும் சிறப்பு அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர் அத்துடன் இச்சம்வத்துடன் தொடர்புடைய பெண் ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் தடையை பொருட்கள் அனைத்தும் பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பளை பொலிஸ் மேற்கொண்டு வருவதாக பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/193802
  5. Published By: VISHNU 16 SEP, 2024 | 02:37 AM விளையாடுவதற்கு தந்தை கைப்பேசி கொடுக்காததால் 13 வயதுச் சிறுவன் ஒருவன் தவறான முடிவெடுத்து ஞாயிற்றுக்கிழமை (15) உயிர்மாய்த்துள்ளான். யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவனுக்கு அவனது தந்தை கைப்பேசியை கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த மாணவன் வீட்டின் அறையில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளான். அவனது சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அளவெட்டி அருணோதயாவில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். https://www.virakesari.lk/article/193801
  6. Published By: DIGITAL DESK 2 15 SEP, 2024 | 10:01 PM இலங்கை மக்களால் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் (X) தளத்தில் இந்த விடயத்தினை பதிவிட்டுள்ளார். சர்வதேச ஜனநாயக தினமான இன்றையதினத்தில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, சர்வதேச ஜனநாயக தினமான இன்றைய தினத்தில், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள், நீதி போன்ற வலுவான மற்றும் நிலையான ஜனநாயகத்தின் கொள்கைகளை நாங்கள் கொண்டாடுகிறோம். தேர்தல்கள் மூலம் தங்கள் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு கருத்து இருப்பதை உறுதிசெய்கிறோம். இலங்கை மக்களால் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது. சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவது இலங்கையின் ஜனநாயகத்திற்காக ஆற்றப்பட வேண்டிய முக்கிய கடமை எனவும் குறித்த பதிவில் அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் மேற்படி கருத்துக்களை பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/193722
  7. அமெரிக்காவில் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சியா? துப்பாக்கியால் சுட்ட நபர் பிடிபட்டார் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், மெடலின் ஹால்பெர்ட் மற்றும் லாரன்ஸ் பீட்டர் பதவி, பிபிசி நியூஸ் 16 செப்டெம்பர் 2024, 02:56 GMT புதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், தற்போதைய அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதல் நடத்த மீண்டும் முயற்சி நடந்துள்ளது. புளோரிடாவில் உள்ள அவரது கோல்ப் மைதானத்தில் நடந்த தாக்குதல் முயற்சியில் இருந்து தப்பி அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். புதரில் மறைந்திருந்தபடி டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அமெரிக்க ரகசிய சேவைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நேரத்தில் டிரம்ப் சுமார் 275 முதல் 455 மீட்டர் தொலைவில் இருந்ததாக எஃப்.பி.ஐ. கூறுகிறது. ஏகே-47 துப்பாக்கி, ஸ்கோப், கோ-புரோ கேமரா மற்றும் 2 பைகள் அந்த இடத்தில் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டன. ரகசிய சேவை ஏஜெண்டுகள் தன்னை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால், சந்தேகத்திற்குரிய அந்த நபர் புதரை விட்டு ஓடி, கருப்பு நிற நிசான் காரில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டதாக அதனை நேரில் பார்த்த சாட்சி கூறியுள்ளார். அத்துடன், கார் மற்றும் அதன் நம்பர் பிளேட்டை அவர் புகைப்படமும் எடுத்துள்ளார். பின்னர் அந்த கார் மார்ட்டின் கவுண்டியில் தடுத்து நிறுத்தப்பட்டது. "மார்ட்டின் கவுண்டி ஷெரீஃப் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அவர்கள் உஷாராக இருக்குமாறு கேட்டுக் கொண்டோம். அவர்கள் அந்த கார் இருந்த இடத்தை கண்டுபிடித்து அந்த நபரை பிடித்தனர்" என்று பாம் பீச் கவுண்டி ஷெரீஃப் ரிக் பிராட்ஷா தெரிவித்தார். "அதன் பிறகு சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றோம். புதரில் இருந்து ஓடி, காருக்குள் ஏறிய நபர் அவர்தான் என்று அந்த சாட்சி உறுதிப்படுத்தினார்" என்று ரிக் பிராட்ஷா கூறினார். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, புதரில் ஆயுததாரி மறைந்திருந்த இடத்தில் ஏகே-47 துப்பாக்கி, ஸ்கோப், கோ-புரோ கேமரா மற்றும் 2 பைகள் கண்டுபிடிக்கப்பட்டன. டிரம்ப் இல்லத்திற்கு கூடுதல் பாதுகாப்பு டிரம்ப் தான் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதாக இமெயில் மூலம் தனது ஆதரவாளர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். "எதுவும் என் வேகத்தை மட்டுப்படுத்த முடியாது. நான் ஒருபோதும் சரணடைய மாட்டேன்" என்று அவர் கூறியுள்ளார். பென்சில்வேனியாவில் கூட்டம் ஒன்றில் டிரம்பை ஒருவர் துப்பாக்கியால் சுட முயன்றதற்கு 2 மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு தாக்குதல் முயற்சி சம்பவம் நடந்துள்ளது. டிரம்பை தாக்க முயற்சி நடந்தது பற்றி விசாரித்து வருவதாக ரகசிய சேவைப் பிரிவு தனது எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. "கோல்ப் மைதானத்தில் இருந்த ரகசிய சேவைப் பிரிவு ஏஜெண்ட் சிறப்பான பணி செய்துள்ளார்" என்று ஷெரீஃப் பிராட்ஷா தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, புளோரிடாவில் உள்ள டிரம்பின் மார்-அ-லாகோ இல்லத்தைச் சுற்றிலும் உள்ள சாலை மற்றும் நீர் நிலைகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேற்கு பாம் பீச்சில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, டிரம்பின் மார்-அ-லாகோ இல்லத்தைச் சுற்றிலும் உள்ள சாலை மற்றும் நீர் நிலைகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிடிபட்ட நபர் யார்? பிடிபட்ட நபரின் பெயர் ரியான் வெஸ்லி ரூத், 58 வயதான அவர் ஹவாயைச் சேர்ந்தவர் என்று பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமூக ஊடகங்களில் கணக்குடன் அந்த பெயர் பொருந்திப் போவதை பிபிசி வெரிஃபை கண்டறிந்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக போரிட வெளிநாட்டு வீரர்கள் யுக்ரேனுக்கு செல்ல வேண்டும் என்று ரூத் அழைப்பு விடுப்பதை அந்த சமூக ஊடகக் கணக்கு காட்டுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கமலா ஹாரிஸ் கமலா ஹாரிஸ் கருத்து டிரம்ப் மீதான தாக்குதல் முயற்சி சம்பவம் குறித்து அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரிடமும் விவரிக்கப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. "டிரம்ப் பாதுகாப்பாக இருக்கிறார் என்ற செய்தியை அறிந்து அவர்கள் நிம்மதியடைந்தனர். இதுகுறித்த விவரங்கள் உடனுக்குடன் குழுவினரால் அவர்களுக்கு தெரியப்படுத்தப்படும்" என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. டிரம்ப் மீதான தாக்குதல் முயற்சி பற்றி தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், டிரம்ப் காயமின்றி தப்பியது குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும் கமலா ஹாரிஸ் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் வன்முறைக்கு இடமே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ஜூலை 13-ஆம் தேதியன்று பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் நடந்த கொலை முயற்சியின் போது டிரம்ப் காயமடைந்தார். பட்லர் நகரில் என்ன நடந்தது? கடந்த ஜூலை 13-ஆம் தேதியன்று பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் நடந்த கொலை முயற்சியின் போது டிரம்ப் காயமடைந்தார். அருகில் இருந்த கட்டடத்தின் மேற்கூரையில் இருந்தபடி தாமஸ் மேத்யூ குரூக்ஸ் என்ற நபர் ஏஆர்15 துப்பாக்கியைப் பயன்படுத்தி டிரம்பை சுட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய 20 வயதான குரூக்சும் ரகசிய சேவை படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். டிரம்பை 200 மீட்டர் அளவுக்கு நெருங்கி அவரால் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றது எப்படி என்று ரகசிய சேவைப் பிரிவினர் மீது அப்போதே சர்ச்சைகள் எழுந்தன. அடுத்த இரண்டே வாரங்களில் ரகசிய சேவைப் பிரிவு இயக்குநர் கிம்பர்லி பதவியை ராஜினாமா செய்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cwyee1qg7rxo
  8. தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவிலுள்ள அனைவரிடமும் கலந்தாலோசிக்காமல் தனிப்பட்ட ரீதியில் சிலர் எடுத்த முடிவானது தமிழரசுக் கட்சி விட்ட மாபெரும் தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) குற்றம் சுமத்தியுள்ளார். அத்தோடு, சிலர் கட்சிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துவிட்டு கட்சியின் கூட்டங்களில் பங்குபற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். செயற்குழு கூட்டம் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கட்சியில் நாங்கள் கடந்த காலங்களில் எடுத்த முடிவுகள் குறித்து மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். இவ்வாறு, மக்கள் விரக்தியின் அமுக்கம்தான் தமிழ் பொது வேட்பாளர் என்றவொரு வடிகாலை திறந்து வைத்துள்ளது. இவ்வாறு தமிழ் மக்கள் எடுத்துள்ள முடிவுகளுக்கு எதிராக தமிழரசுக் கட்சி தன்னிச்சயாக முடிவுகளை எடுத்தால் அது தமிழரசுக் கட்சியின் உள்ளக மோதல்களை மட்டும் அல்ல கட்சியிலிருந்து தமிழ் மக்களை அந்நியப்படுத்தும் செயற்பாடாகும். இவ்வாறு இருக்கையில், வவுனியாவில் கூடிய மத்திய செயற்க்குழு கூட்டத்தில் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah), சிவஞானம் சிறீதரன், சி.வி.கே சிவஞானம் (C. V. K. Sivagnanam), மருத்துவர் சத்தியலிங்கம் (Sathyalingam), சுமந்திரன் (M. A. Sumanthiran) மற்றும் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் மேயர் என ஆறு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது. தேர்தல் விஞ்ஞாபனங்கள் தென்பகுதி வேட்பாளர்களுடைய தேர்தலில் விஞ்ஞாபனங்கள் வெளிவந்ததும் அதில் எந்த கட்சி தமிழர்களுக்காக சிந்திக்கும் நோக்குடன் இருக்கின்றதோ அவர்களுக்கான ஆதரவு தொடர்பில் பரிசீலனை செய்யும் நோக்கில் குறித்த குழு நியமிக்கப்பட்டது. ஆனால் அவ்வறான சிறப்புக் குழு கூடாமல் எவ்வாறான ஆலோசனைகளும் நடத்தாமல் நான் பிரித்தானியாவிற்கு (United Kingdom) சென்றிருந்த வேலை அவசர அவசரமாக குறித்த கூட்டமானது நடத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், நினைத்து இருந்தால் 18 ஆம் திகதிக்கு முன்பதாக கூட அனைவரும் கலந்தாலோசித்து ஒரு முடிவை எடுத்து இருக்கலாம் இருப்பினும் அவசரமாக எடுக்கப்பட்ட குறித்த முடிவினால் கட்சியின் எதிர்காலமானது பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எடுக்கப்பட்ட இந்த முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதை நான் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கின்றேன். எடுக்கப்பட்ட முடிவு நான் நடைப்பெற்ற அனைத்து கூட்டங்களிலும் தமிழ் பொது வேட்பாளருக்கு எனது ஆதரவினை தெரிவித்திருந்ததுடன் பிரித்தானியா சென்ற போதும் அதனை எழுத்து மூலமாக அறிவித்திருந்தேன். இந்தநிலையில், இது தொடர்பாக நாளை (16) சிறப்புக்குழுவுடன் கலந்துரையாட தயாராகவுள்ளோம். சுமந்திரன் எடுத்த முடிவானது அந்த நேரத்தில் அவரால் எடுக்கப்பட்ட முடிவு, நியமிக்கப்பட்ட விசேட குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்த பின்னரே மத்தியகுழுவில் தீர்மானம் எடுத்து நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யத்தவறியது கட்சி விட்ட மாபெரும் தவறு. எனவே தமிழ் இனத்திற்காக தமிழ் பொது வேட்ப்பாளருக்கே நான் ஆதரவை வழங்குகின்றேன். இந்தநிலையில், தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் பொது வேட்ப்பாளருக்கு ஆதரவளித்து தங்களுடைய நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு அறியத்தர வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/srilanka-2024-president-election-updates-1726405952
  9. 15 SEP, 2024 | 09:38 PM (இராஜதுரை ஹஷான்) தேசியம், பௌத்தம் பற்றி நாமல் ராஜபக்ஷ மாத்திரமே பேசுகிறார். ஏனைய வேட்பாளர்கள் புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டை பிளவுப்படுத்துவது பற்றி பேசுகிறார்கள். எக்காரணிகளுக்காவும் நாட்டை பிளவுபடுத்த நாங்கள் இடமளிக்க போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாறையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டின் தேசிய பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் நான் உறுதிப்படுத்தினேன். அபிவிருத்திகளை துரிதமான மேற்கொண்டு தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தினேன். 2005 ஆம் ஆண்டு அரசாங்கத்தை பொறுப்பேற்கும் போது பொருளாதார நிலைமை 15 பில்லியன் டொலர்களாக காணப்பட்டது. 2014 ஆம் ஆண்டு 85 பில்லியன் டொலர் கையிறுப்புடன் அரசாங்கத்தை ஒப்படைத்தேன். ஊழலை முடிவுக்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டுக் கொண்டு 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் தேசிய பொருளாதாரத்தையும், தேசிய பாதுகாப்பையும் பலவீனப்படுத்தியது. 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எம்மை ஊழல்வாதிகளாக சித்தரித்து அதிகாரத்தை கோரியவர்கள் இம்முறையும் அதிகாரத்தை கோருகிறார்கள். வெறுப்பினை முன்னிலைப்படுத்தி செயற்படும் இவர்களால் பொருளாதாரத்தை ஒருபோதும் மேம்படுத்த முடியாது. சூழ்ச்சிகளினால் தான் நாங்கள் 2015 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டோம். அந்த சூழ்ச்சி இன்றும் தொடர்கிறது. ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார மேடைகளில் நாமல் ராஜபக்ஷவை தவிர்த்து எவரும் தேசியம் மற்றும் பௌத்தம் பற்றி பேசுவதில்லை. நாட்டை பிளவுப்படுத்தும் புதிய அரசியலமைப்பு பற்றி பேசுகிறார்கள். எக்காரணிகளுக்காகவும் நாட்டை பிளவுபடுத்த நாங்கள் இடமளிக்கமாட்டோம். தேசியத்தை பாதுகாப்பதற்கு அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும். பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் நிச்சயம் தோற்றம் பெறும் என்பதை உறுதியாக குறிப்பிடுகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/193789
  10. ஈரான் (Iran) ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களால் இஸ்ரேல் (Israe) மீது பலஸ்டிக் ஏவுகணை ஒன்று ஏவப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu), வடக்கு ஏமனை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பெரும் பதிலடியை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். மத்திய இஸ்ரேலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இவ்வாறான தாக்குதலை முன்னெடுத்த முதல் தடவையாக இது தெரிவிக்கப்படுகிறது. 2,040 கிலோமீற்றர் தூரம் இந்த நிலையில், குறித்த தாக்குதலுக்கு 2,040 கிலோமீற்றர் தூரம் சென்று தாக்கும் ஹைபோசோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டதாக ஹூதியின் செய்தி தொடர்பாளர் யாஹ்யா செரியா தெரிவித்துள்ளார். ஹைபோசோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையானது அந்த தூரத்தை கடக்க வெறும் 11 1/2 நிமிடங்கள் மட்டுமே எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஏவுகணையின் பாகங்கள் மத்திய இஸ்ரேலில் உள்ள பண்ணை ஒன்றில் விழுந்துள்ளதுடன் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. இஸ்ரேலின் பதிலடி இந்த ஆண்டு ஜூலை மாதம், ஹவுதி போராளிகள் முதல் முறையாக இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் நான்கு பேர் காயமடைந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. அதில் 6 பேர் உயிரிழந்ததுடன், 80 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/houthi-missile-from-yemen-lands-in-central-israel-1726403266
  11. அமெரிக்காவில் டிரம்ப், புஷ் இருவரும் மக்கள் வாக்குகளை குறைவாக பெற்றும் அதிபரானது எப்படி? படக்குறிப்பு, அமெரிக்காவில் 2024ஆம் ஆண்டுக்கான அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. 15 செப்டெம்பர் 2024, 07:02 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் 2024ஆம் ஆண்டுக்கான அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால் அதில் மக்கள் வாக்குகளை அதிகம் பெற்ற வேட்பாளர், வெற்றியாளராக முடியாது. ஏனென்றால், வாக்காளர்கள் நேரடியாக அதிபரை தேர்ந்தெடுப்பதில்லை. அவர்களைத் தேர்ந்தெடுப்பது எலக்டோரல் காலேஜ் எனப்படும் வாக்காளர் குழுதான். அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். அமெரிக்க மக்கள் யாருக்கு வாக்களிக்கின்றனர்? நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான கமலா ஹாரிஸ் அல்லது குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கே மக்கள் தங்களது வாக்கைச் செலுத்துவர். ஆனால் உண்மையில் இந்த வாக்குகள் அனைத்தும் வாக்காளர் குழுவில் கமலா ஹாரிஸ் அல்லது டொனால்ட் டிரம்ப் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் வாக்காளர் குழுவின் உறுப்பினர்களை நோக்கியே செலுத்தப்படுகிறது. 'காலேஜ்' என்பது கூட்டுப் பணி செய்யும் ஒரு குழுவைக் குறிக்கிறது. இந்த வாக்காளர் குழுவின் பணி என்பது அதிபர் மற்றும் துணை அதிபரை தேர்ந்தெடுப்பதாகும். தேர்தல் நடைபெற்ற ஒரு சில வாரங்களுக்குப் பிறகு, இந்தப் பணியைச் செய்வதற்காக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்காளர் குழு கூடுகின்றது. வாக்காளர் குழு எவ்வாறு செயல்படுகிறது? ஒவ்வோரு மாகாணத்தின் மக்கள் தொகை அளவைப் பொறுத்தே வாக்காளர் குழுவில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அமைகிறது. ஒவ்வொரு மாகாணத்திலும் எவ்வளவு அமெரிக்க காங்கிரஸ் (சபை மற்றும் செனட்) சட்டமியற்றுபவர்களின் எண்ணிக்கை உள்ளதோ அதே அளவில் வாக்காளர் குழுவில் உறுப்பினர்கள் இருப்பார்கள். கலிஃபோர்னியா மாகாணத்தில் இருந்துதான் வாக்காளர் குழுவில் அதிகமாக உறுப்பினர்கள் (54 ) உள்ளனர். வயோமிங், அலாஸ்கா மற்றும் வடக்கு டகோட்டா (மற்றும் வாஷிங்டன் DC) போன்ற குறைந்த மக்கள்தொகை கொண்ட சில மாகாணங்களில் குறைந்தபட்சம் மூன்று உறுப்பினர்களே உள்ளனர். வாக்காளர் குழுவில் மொத்தமாக 538 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொரு உறுப்பினருக்கும் தேர்தலில் ஒரு வாக்கு இருக்கிறது. ஒரு வேட்பாளர் அதிகபட்சம் 270 அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றால் அதிபர் தேர்தலில் வெற்றி பெறலாம். அதிபர் தேர்தலில் ஒரு மாகாணத்தைச் சேர்ந்த எந்த வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுகிறாரோ, அவர்களுக்கே வாக்காளர் குழு உறுப்பினர்கள் சார்பில் அனைத்து வாக்குகளும் செலுத்தப்படுகிறது. உதாரணமாக, டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு வேட்பாளர் 50.1% வாக்குகளைப் பெற்றால், அவர்களுக்கு அந்த மாகாணத்தின் தேர்தல் குழுவின் அனைத்து 40 வாக்குகளும் வழங்கப்படும். அதேபோல, ஒரு வேட்பாளர் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்றாலும் அவர் அனைத்து வாக்காளர் குழு உறுப்பினர்களின் வாக்குகளையும் பெறுவார். நாடு முழுவதும் குறைவான வாக்குகளைப் பெற்றிருந்தாலும், சில மாகாணங்களில் கடுமையான போட்டிகளின் மூலம் வெற்றி பெறுவதால் ஒரு வேட்பாளர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும். வாக்காளர் குழுவின் நிறை, குறைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2000ஆம் ஆண்டு ஜார்ஜ் டபிள்யூ புஷ், அல் கோரேவைவிட 5 லட்சம் வாக்குகள் பின்னடைவில் இருந்தாலும் அவர் அதிபர் தேர்தலில் வெற்றி அடைந்தார். நிறைகள்: சிறிய மாகாணங்கள் வேட்பாளர்களுக்கு முக்கியமானதாக இருக்கின்றன. வேட்பாளர்கள் நாடு முழுவதும் பயணம் செய்யத் தேவையில்லை ஒவ்வொரு மாகாணத்திலும் ஏற்படும் பிரச்னை என்பதைக் குறிப்பாகக் கண்டறிந்து அதற்குத் தீர்வு காண முடியும். குறைகள்: பல வாக்காளர்கள் தங்கள் வாக்குகளுக்கு முக்கியத்துவம் இல்லை எனக் கருதுகிறார்கள் ஸ்விங் மாகாணங்களுக்கே அதிக வலிமை உள்ளது (விளக்கம் கீழே உள்ளது) மக்கள் வாக்குகளை வென்றவர், எலக்டோரல் காலேஜ் தேர்தலில் தோல்வியடையலாம் போலி வாக்காளர்களின் ஆபத்து உள்ளது. இவை குறித்த விளக்கங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்விங் மாகாணம் என்றால் என்ன? பெரும்பாலான மாகாணங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் ஒரே கட்சிக்கே தொடர்ந்து வாக்களிக்கின்றன. இதனால்தான் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள், குறிபிட்ட "ஸ்விங் மாகாணங்களை" மட்டும் குறிவைக்கின்றனர். இதுபோன்ற ஸ்விங் மாகாணங்களில் எந்தக் கட்சி வேட்பாளருக்கு வேண்டுமானாலும் மக்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தக்கூடும். இதனால் நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதைவிட இந்த 'ஸ்விங்' மாகாணங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. வரும் நவம்பரில் நடைபெறவுள்ள 2024 அதிபர் தேர்தலில், அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை சிறந்த ஸ்விங் மாகாணங்களாக இருக்கின்றன. பொது மக்கள் வாக்குகளை இழந்த ஒரு வேட்பாளர் அதிபராகி உள்ளாரா? பட மூலாதாரம்,GETTY IMAGES ஆம், கடந்த ஆறு தேர்தல்களில் இரண்டில் பொது மக்களிடமிருந்து குறைவான வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்களே வெற்றி பெற்று அதிபராகி உள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டு, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் தனது போட்டியாளரான ஹிலாரி கிளிண்டனைவிட சுமார் 30 லட்சம் வாக்குகள் குறைவாக பெற்றிருந்தார். கடந்த 2000ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் வென்ற ஜார்ஜ் புஷ் தனது போட்டியாளரான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல் கோரை விட 5 லட்சம் வாக்குகள் குறைவாக பெற்றிருந்தார். இதுபோல, 19ஆம் நூற்றாண்டில் மூன்று முறை மக்கள் செலுத்திய வாக்குகளைக் குறைவாகப் பெற்ற வேட்பாளர்கள் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எலக்டோரல் காலேஜ் முறை ஏன்? கடந்த 1787ஆம் ஆண்டு அமெரிக்க அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது, அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நாடு முழுவதும் வாக்கெடுப்பு நடத்துவதில் அப்போது நிலவிய, நாட்டின் பரப்பளவு மற்றும் தகவல் தொடர்பு சிக்கல்களைக் கருத்தில் கொண்டு சாத்தியமற்றதாக இருந்தது. எனவே, அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் ஒவ்வொரு மாகாணங்களிலும் வாக்காளர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் எலெக்டோரல் காலேஜ் எனப்படும் வாக்காளர் குழுவை உருவாக்கினார்கள். அதிபரைத் தேர்ந்தெடுக்க நாடு முழுவதும் மக்கள் வாக்களிப்பதைவிட, வாக்காளர் குழு மூலம் அவர்களின் குரலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதற்காக, சிறிய மாகாணங்கள் இந்த முறையை ஆதரித்தனர். அடிமைகளை மக்கள் தொகையில் பெரும்பான்மையாகக் கொண்ட தென் மாகாணங்களிலும் இந்த வாக்காளர் குழு முறை ஆதரிக்கப்பட்டது. அடிமைகள் வாக்களிக்கவில்லை என்றாலும், அவர்கள் அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பில் கணக்கிடப்பட்டனர். வாக்காளர் குழுக்களின் உறுப்பினர் எண்ணிக்கை ஒரு மாகாணத்தின் மக்கள்தொகை அளவைப் பொறுத்தே அமைவதால், அதிபரைத் தேர்ந்தெடுப்பதில் நேரடி பொதுமக்கள் நேரடியாக வாக்களிப்பதைக் காட்டிலும் வாக்காளர் குழு தேர்தலில் தென் மாகாணங்கள் அதிக செல்வாக்கைப் பெற்றிருந்தன. பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு தான் உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES சில மாகாணங்களில், உறுப்பினர்கள் அவர்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்கலாம். ஆனால் தற்போது, தங்கள் மாகாணத்தில் மக்கள் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளருக்கே வாக்காளர் குழு உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர். ஒரு உறுப்பினர், தங்கள் மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் வேட்பாளருக்கு எதிராக வாக்களித்தால், அவர்கள் "நம்பிக்கையற்றவர்கள்" என்று அழைக்கப்படுவார்கள். கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில், ஏழு வாக்காளர் குழு உறுப்பினர்கள் இவ்வாறு வாக்களித்தனர். ஆனால் நம்பிக்கையற்றவர் என்று கூறப்படும் உறுப்பினர்களால் எந்த முடிவும் மாற்றியமைக்கப்படவில்லை. சில மாகாணங்களில், "நம்பிக்கையற்ற" உறுப்பினர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது அவர்கள் வாக்களிக்காமல் இருந்தாலோ அல்லது மற்ற வேட்பாளர்களுக்கு வாக்களித்தாலோ அவர் மீது வழக்கு தொடரலாம். போலி வாக்காளர் என்றால் என்ன? "போலி வாக்காளர்கள்" 2020ஆம் ஆண்டின் போதுதான் என்ற கருத்து பரவலானது. ஏழு அமெரிக்க மாகாணங்களில் டிரம்ப் சார்ந்த குடியரசுக் கட்சியினர் சிலர், தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் முயற்சியில் அவர்களுக்குச் சாதகமான தேர்தல் குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்தனர். அவர்கள் அதிகாரப்பூர்வமாக உள்ள ஆவணங்களைப் போலியாக உருவாக்கி அதில் கையொப்பமிட்டு, நாடு முழுவதும் உள்ள தேர்தல் குழு உறுப்பினர்கள் வாக்களிக்க இருந்த நாளான டிசம்பர் 14ஆம் தேதி அன்று மாகாணத் தலைநகரங்களுக்கு வந்தனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட சிலரின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கான விசாரணைகள் இன்றுவரை நடந்து வருகின்றன. மக்கள் தேர்தல் வாக்கெடுப்பும் தேர்தல் குழு வாக்கெடுப்பும் இணையாக இருந்தால் என்ன ஆகும்? தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெறவில்லை என்றால், அமெரிக்க சட்டமியற்றுபவர்களின் கீழ்சபையான பிரதிநிதிகள் சபை, அதிபரைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கும். இதுபோல ஒருமுறை மட்டுமே 1824ஆம் ஆண்டின்போது நடைபெற்றுள்ளது. அப்போது நான்கு வேட்பாளர்களுக்குள் வாக்குகள் பிரிந்து எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனது. அமெரிக்க அமைப்பில் இரண்டு கட்சிகள் மட்டும் தற்போது ஆதிக்கம் செலுத்துவதால், இதுபோல நடக்க வாய்ப்பில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/ce9zlyn317lo
  12. ச் வராது அண்ணை! நமசிவாய---சிவாயநம
  13. என்ன ஆத்திரமோ கட்டிப்பிடிச்சு கடிக்குது! நடைப்பயிற்சியின் நன்மை எல்லாம் வீணாப்போச்சே!
  14. தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதானது மக்கள் தங்கள் ஜீவிய உரித்தான வாக்கை அவர்களே குழி தோண்டி புதைக்கின்ற ஒரு செயல் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பனர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்றையதினம் (15) இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) தேர்தல் பரப்புரையில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “ஜனநாயகத்திலே ஒவ்வோரு தருணத்திலும் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வரும் போது, ஒரு பிரஜைக்கு தான் அளிக்கின்ற அந்த புள்ளடி நாட்டிலே மாற்றத்தையும், விருப்பமான ஆட்சியாளனை தேர்ந்தடுக்கின்ற உரித்தை வழங்குகிறது. அவ்வாறானதொரு உரித்தை வீணடிப்பதற்கான பல விதமான மோசடிகளிலே ஒன்று தான் இந்த தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம்” தொடர்ந்தும் அவர் கூறுகையில், https://ibctamil.com/article/tamil-candidate-presidential-election-sumanthiran-1726410417
  15. 15 SEP, 2024 | 09:37 PM இந்த நாட்டில் இனியும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதம மந்திரியாக வர முடியாது என்ற கருத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கின்ற காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது, அதையும் நாங்கள் இறைவன் உதவியால் எங்கள் அரசியல் சரித்திரத்தில் சாதித்துக் காட்டுவோம். ஆட்சியையும் அந்தஸ்தையும் அடைந்து கொள்வதில் எந்த சிரமமும் இருக்கப் போவதில்லை என வடமேல் மாகாண ஆளுநர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார். எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து ஏறாவூரில் ஏறாவூரில் கடந்த 13 சனிக்கிழமை இரவு இடம்பெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு உரையாற்றினார். அவர் மேலும் தெரிவிக்கையில் , தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் நஸீர் அஹமட், இந்த நாட்டில் புரையோடிப் போய் இருக்கின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இந்த நாட்டுக்கு சிறுபான்மைச் சமூகத்திலிருந்து பிரதமர் ஒருவர் கட்டாயம் தேவை. அரசியல் அந்தஸ்தை அடைந்து கொள்வதற்கும் ஆட்சியதிகாரங்களில் அமர்ந்து கொள்வதற்கும் சிறுபான்மைச் சமூகங்களாகிய நாங்கள் பயப்பட வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. இந்த விடயங்களை வெளியில் சொல்வதற்கும் அஞ்சத் தேவையில்லை. ஏனென்றால், இந்த நாட்டில் உள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரே குடியியல் அந்தஸ்துதான் உள்ளது. அரசியல் அதிகாரத்தில் உள்ள ஒருவருக்கும் அடிமட்டத்தில் உள்ள ஒரு குடிமகனுக்கும் ஒரே அந்தஸ்துதான். மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் கொல்லப்பட முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்து அதற்கு மாற்றீடாக தேசிய ஐக்கிய முன்னணி எனும் கட்சியை உருவாக்கி விட்டுத்தான் மறைந்தார்கள். கடைசியாக அந்தக் கட்சி சார்பாகத்தான் வேட்பு மனுத் தாக்கல் செய்தாரே தவிர ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் அல்ல. அவர் தேசிய ஐக்கியத்தை உணர்ந்தவராக எதிர்வு கூறலுடன் தேசிய ஐக்கியத்தை வலியுறுத்தும் வகையில் இதனைச் செய்தார். இந்த யதார்த்தத்தை சகவாழ்வை விரும்பும் இந்த நாட்டு மக்கள் அனைவரும் கட்டாயம் புரிந்து கொண்டாக வேண்டும். அப்படிப்பட்ட ஒரு தூரநோக்கு சிந்தனையாளரை வைத்து வியாபாரம் செய்வதைத்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தற்போது செய்து கொண்டிருக்கின்றார். ஆனால், றவூப் ஹக்கீம் அப்படி அரசியல் வியாபாரம் செய்ய, நாங்கள் சமூகத்துக்காக குரல் கொடுத்துக் கொண்டு வருகின்றோம். இந்த நாட்டில் முஸ்லிம் என்ற அடையாளத்தோடு நடமாட முடியாத அச்சம் பீதி நிறைந்திருந்த காலத்தில் மத்ரசாக்கள் மூடப்பட்ட காலத்தில் தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்குச் செல்ல முடியாத காலகட்டத்தில், புனித அல்குர் ஆன் பிரதிகளை வீட்டில் வைத்திருக்க முடியாது ஆற்றிலோ குளத்திலோ குப்பைத் தொட்டியிலோ கிணற்றிலோ போட்ட அச்சமும் பீதியும் அராஜகமும் தலைவிரித்தாடிய காலகட்டத்தில்தான் ரணில் விக்கிரமசிங்ஹ இந்த நாட்டைப் பொறுப்பெடுத்தார். அன்றிலிருந்து இன்றுவரை இந்த நாட்டில் மேற்சொன்ன நிலைமைகள் எதுவும் இல்லை. சிறுபான்மை பெரும்பான்மை எனும் அச்சம் இல்லை. சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்பட்டு மக்கள் மூவேளையும் உணவு உண்ண முடிகிறது. மாணவர்கள் கல்வியைத் தொடர்கிறார்கள். இந்த நிலை இனியும் தொடர வேண்டும். நாடு இனவாதம், மதவாதம் இன்றி கண்குளிர்ச்சி காணும் வகையில் அபிவிருத்தி அடைய வேண்டும் அதற்கு இன்னும் ஐந்தாண்டுகளுக்கு ரணில் விக்கிரமசிங்ஹவின் ஆட்சி நீடிக்க மக்களாணை வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/193791
  16. தேர்தல் ஆணைக்குழு பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு தேர்தலில் தாம் வாக்களிக்கும் வேட்பாளர் தொடர்பில் கருத்து வெளியிட கூடாதென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவ்வாறு வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வாக்களிக்கும் வேட்பாளரைப் பற்றி யாரேனும் ஒருவரிடம் கேட்பதும் சட்டவிரோதமானதென அவர் குறிப்பிட்டுள்ளார். கடுமையான உத்தரவு கடந்த தேர்தல்களிலும் இவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார் https://tamilwin.com/article/no-permission-to-ask-about-voting-candidate-1726378271
  17. கிளிநொச்சியில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் பொதுக்கூட்டம் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து கிளிநொச்சியில் (Kilinochchi) மாபெறும் பொதுக்கூட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த கூட்டமானது நாளையதினம் (16) மாலை மூன்று மணிக்கு கிளிநொச்சி பசுமை பூங்கா டிப்போச்சந்தியில் இடம்பெறவுள்ளது. மேற்படி, கூட்டத்தில் அனைவரையும் கலந்துகொண்டு தமிழ் பொது வேட்பாளருக்கு தங்களது ஆதரவை அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் அத்தோடு, நேற்றையதினம் (14) திருகோணமலை (Trincomalee) வெலிக்கடை தியாகிகள் அரங்கு கடற்கரை பகுதியிலும் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து மாபெறும் பொதுக்கூட்டம் இடம்பெற்றது. மேலும், இந்த கூட்டமானது அரசியல் ஆய்வாளர் ஆ. யதீந்திரா (Yathindra) தலைமையில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/public-rallykilinochchi-tamil-general-candidate-1726392797
  18. வடகிழக்கு மக்களுக்காக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை கூட்டுவோம் - சஜித் பிரேமதாச 15 SEP, 2024 | 05:32 PM வட கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அபிவிருத்தியை கொண்டு வருவதற்கு வேறெந்த தலைவரும் செய்யாத விடயத்தை நாம் செய்வோம். தாம் அதிகாரத்துக்கு வந்த பிறகு வடகிழக்கு மக்களை மையப்படுத்தியதாக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை கூட்டுவோம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பிரதேசத்தை பாரிய அபிவிருத்தியின் பால் இட்டுச் செல்வோம். இதன் ஊடாக ஒன்பது மாகாணங்களையும் அபிவிருத்தியடையச் செய்ய நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். ஐந்து தடவைகள் பிரதமராக இருந்த தற்போதைய பதில் ஜனாதிபதி வடகிழக்கு மக்களை சந்திக்க சென்றார். அவரால் வடகிழக்கு மக்களுக்காக நன்கொடையாளர்கள் மாநாட்டைக் கூட்ட முடியுமாக இருந்தாலும், அதற்கான இயலுமை அவரிடம் இல்லாத காரணத்தினால் அந்த மாநாட்டை கூட்டவில்லை. ஐக்கிய மக்கள் சக்திக்கு அந்த இயலுமை இருக்கின்றது. எனவே அதிகாரத்திற்கு வந்த உடனே சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை கூட்டுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 57ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (15) கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக அனைத்து பாடசாலைகளையும் மாற்றி தகவல் தொழில்நுட்பம், கணினி விஞ்ஞானம், நவீன தொழில்நுட்பம், மற்றும் ஆங்கில மொழிக் கல்வி என்பனவற்றை பயில்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி, புதிய கல்வி முறை ஒன்றின் ஊடாக சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம். சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலைகளாக அனைத்து வைத்தியசாலைகளையும் மாற்றி உயர்தரத்திலான அனைத்து வசதிகளையும் கொண்ட வைத்தியசாலை கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவோம். சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு கணக்குக்கு மீண்டும் 15 வீத வட்டி அத்தோடு ஓய்வூதிய முரண்பாடுகளைத் தீர்த்து சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்பட்ட 15 வீத வட்டியை மீண்டும் பெற்றுக் கொடுப்போம். வீடமைப்பு திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்போம். கோட்டாபய ராஜபக்சவும் ரணில் விக்கிரமசிங்கவும் வீடமைப்பு திட்டத்தை நிறுத்தினாலும் தாம் அதிகாரத்திற்கு வந்த உடனே உதா கம்மான திட்டத்தை நிறைவு செய்து அதனை மக்களிடம் கையளிப்போம். விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் பல சலுகைகள் விவசாயிகளுக்கு 5000 ரூபாவுக்கு 50 கிலோ கிராம் உரமூடை ஒன்றை வழங்குவோம். மீனவர்களுக்கான எரிபொருள் நிவாரணத்தை வழங்குவோம். விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் தொடர்ந்து இந்த நிவாரணங்களை வழங்குவோம். செல்வந்தர்களுக்கு இந்த நிவாரணங்கள் தேவைப்படுவதில்லை. மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்குமே இந்த நிவாரணம் பெறுமதியாக அமைகின்றது. இளைஞர்களுக்கான புதிய வேலைத்திட்டங்கள் இளைஞர் சமூகத்துக்காக இளைஞர் தொழில்நுட்ப மத்திய நிலையங்களை உருவாக்கி, அதன் ஊடாக தகவல் தொழில்நுட்பம், கணினி விஞ்ஞானம் ஆங்கில மொழி கல்வி, தொழில் உருவாக்கம் போன்றவற்றை சர்வதேச தரத்தில் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். தொழில் வாய்ப்பில்லாத இளம் தலைமுறையினருக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். வறுமை ஒழிக்கும் புதிய வேலைத்திட்டங்கள் வறுமையை ஒழிக்கின்ற நோக்கில் 24 மாதங்களுக்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம். முதலீடு, உற்பத்தி, நுகர்வு, சேமிப்பு மற்றும் ஏற்றுமதி ஆகிய ஐந்து திட்டங்களின் கீழ் மாதமொன்றுக்கு 20,000 ரூபா வீதம் வழங்கி வறுமையை ஒழிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/193774
  19. யாழில் (jaffna) திருநாவுக்கரசு நாயனார் திருவுருவச்சிலை ஒன்று சமூக விரோதிகளால் தலை துண்டிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. யாழ். கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் உள்ள சுமார் 20 வருடங்கள் பழமை வாய்ந்த சிலையே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் முறைப்பாடு இது தொடர்பாக பாடசாலை சமூகத்தினர் கோட்டக்கல்வி அலுவலகத்தினரிடமும் வலயக் கல்வி அலுவலகத்தினரிடமும் அறிவித்து கொடிகாமம் காவல் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொடிகாமம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். கடந்த 2004 ஆம் ஆண்டு கல்லூரியின் பழைய மாணவனால் இலவசமாக நிர்மாணிக்கப்பட்டு அன்பளிப்பாக வழங்கிய திருவுருவச்சிலையானது இடித்து சேதப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/20-year-old-statue-was-broken-in-jaffna-1726377984#google_vignette
  20. ஜனாதிபதி தேர்தலில் அச்சுறுத்தல்: தமிழ் பொது வேட்பாளருக்கு காவல்துறையால் அனுப்பட்ட கடிதம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அச்சுறுத்தல்கள் தொடர்பில் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு (P. Ariyanethiran) பிரதி காவல்துறை மா அதிபரால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுவதால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அதிருப்தியில் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கை மேலும், பொதுமக்கள் சந்திப்பு மற்றும் நிகழ்வுகளின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் போது அந்த விடயங்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, கீழ் குறிப்பிட்ட பொது விடயங்களின் கீழ் அச்சுறுத்தல் உள்ளது என்றும், அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் கோரப்பட்டுள்ளது.. பிரதான வீதிகளுக்கு மிக நெருக்கமாக மேடைகளை அமைத்தல்/ மக்கள் கூட்டங்களை நடத்துதல். பிரமுகர் மற்றும் பிரமுகர் வாகனங்களில் மக்களை நெருங்கி செல்லல், பேசுவது, புகைப்படம் எடுத்தல். பொது இடங்களை கூட்டங்களுக்காக பயன்படுத்துதலால் எந்தவொரு நபருக்கும் சோதனை இன்றி உள்நுழைதல் மற்றும் வெளியேறுவதற்கான சந்தர்ப்பம் (உதாரணம்: வாரச் சந்தை) பொதுமக்கள் சந்திப்பு, நிகழ்வுகள் மற்றும் வேறு தேவைகளுக்காக செல்லும் போது பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றாது இருத்தல். அவ்வாறான சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்டுள்ள பிரமுகர் பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமை தேவையான பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றல். பொதுமக்கள் சந்திப்பு, நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போது எதிரான நிலைப்பாட்டில் உள்ளவர்கள் மற்றும் அடையாளம் தெரியாதவர்கள். கடும்போக்குவாதத்தில் இருப்பவர்கள், தன்னூக்க செயற்பாட்டாளர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ஏதேனும் திடீர் Placement தாக்குதல்கள் நடத்தக்கூடிய வாய்ப்புகள். https://ibctamil.com/article/presidential-election-threats-ariyanethran-polcie-1726387024
  21. தவறான தீர்மானத்தை எடுத்தால் கிரீஸில் நடந்தது போல் VAT வரியை 13% - 23% ஆக அதிகரித்து அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 50 சதவீத்தினால் குறைக்க வேண்டிய நிலை வரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் நேற்று (14) நடைபெற்ற யாழ். தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். புதிய பொருளாதார முறைமை தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாம் இதுவரை பெற்ற வெற்றிகளை உறுதிப்படுத்த வேண்டும். நாட்டை ஸ்திரப்படுத்தியுள்ளோம். ஆனால் நாம் புதிய பொருளாதார முறையுடன் நிலையாக முறைமையொன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டியுள்ளது. அடைந்துகொண்ட ஸ்திரத்தன்மையை பலப்படுத்த வேண்டும். இதுவரையான பயணத்தின் போது, பணம் அச்சிடுவதை நிறுத்துவது, அதிக கடன் பெற்றுக்கொள்வதை நிறுத்துவது போன்ற கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. சர்வதேச நாணய நிதியம் இதற்கான ஆலோசனைகளை வழங்கியது. அரசாங்க வருமானத்தை அதிகரிக்க VAT வரியை அதிகரிக்க வேண்டியிருந்தது. இதனால் ரூபாயின் பெறுமதி வலுவடைந்து டொலரின் பெறுமதியும் 300 ரூபாயாக குறைந்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலை 10% - 40% வரை குறைந்தது. அது போதுமானதல்ல இன்னும் மக்கள் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர் என்பது எனக்குத் தெரியும். அடுத்த வருடம் ரூபாயின் பெறுமதி மேலும் வலுவடையும் போது வாழ்க்கைச் செலவை இன்னும் குறைக்க முடியும். சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இலங்கை மீண்டும் வீழ்ச்சியடையாமல் தற்போதுள்ள ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக செயற்பட வேண்டும். எனது எதிர்தரப்பு வேட்பாளர்கள் வரி குறைப்பு தொடர்பில் பேசுகின்றனர். வரிகளை குறைப்பதையே நானும் விரும்புகிறேன். இருப்பினும் பொருளாதாரத்தை பாதகத்தில் தள்ளிவிட்டு அதை செய்ய முடியாது. தவறான தீர்மானத்தை எடுத்தால் கிரீஸில் நடந்தது போல் VAT வரியை 13% - 23% ஆக அதிகரித்து அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 50 சதவீத்தினால் குறைக்க வேண்டிய நிலை வரும். கிரீஸ் எதிர்கொண்ட விளைவினால் சிலர் தொழிலையும் இழந்தனர். தொழில் இரத்து மற்றும் வருமான குறைப்பை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும். போதிய வெளிநாட்டு வருமானம் இல்லாமல், இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்தில் தங்கியிருக்க முடியாது. வீட்டுக்காக வாங்குவதை போல் தொடர்ந்தும் நாம் கடன் வாங்க முடியாது. எனவே, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக கொண்ட நாடாக மாற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/government-employee-salary-sri-lanka-1726392034#google_vignette
  22. மூதூரில் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வேண்டி பொது மக்களுக்கு பணம் கொடுத்த தமிழ் வர்த்தகவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பம் ஒன்றுக்கு 5000 ரூபா பணம் வழங்கிய 26 வயதான வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார். பெரிய முல்லை பாலத்திற்கு அருகிலுள்ள சந்தேகநபரின் வீட்டில் வைத்து பணம் வழங்குவதாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் அங்கு சென்றுள்ளனர். மக்களுக்கு பணம் இதன்போது மேற்கொண்ட விசாரணையை அடுத்து குறித்த வர்த்தகர் கைது செய்யப்பட்டதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியை சேர்ந்த வைத்தியர் ஒருவர் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். https://tamilwin.com/article/money-to-promote-a-president-candidate-in-trinco-1726388748
  23. தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து திருகோணமலையில் பொதுக்கூட்டம் 15 SEP, 2024 | 12:17 PM தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து திருகோணமலை வெலிக்கடை தியாகிகள் அரங்கு கடற்கரை பகுதியில் சனிக்கிழமை (14) பொதுக் கூட்டம் நடைபெற்றது. அரசியல் ஆய்வாளர் ஆ.யதீந்திரா தலைமையில் நடைபெற்ற இந்த தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரனுக்கு மக்கள் அமோக வரவேற்பளித்தனர். இந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பெருமளவு பொது மக்கள் கலந்துகொண்டார்கள். https://www.virakesari.lk/article/193734
  24. குரங்கம்மை தடுப்பூசிக்கு அனுமதி ஆபிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 700 க்கும் மேற்பட்டோர் இந்த நோய் பாதிப்புக்கு பலியாகி உள்ளனர். கடந்த வாரம் மட்டும் 107 பேர் குரங்கம்மை பாதித்து உயிரிழந்தனர். தொடர்ந்து பரவி வருவது மற்றும் உயிரிழப்பு அதிகரிப்பதைத் தொடர்ந்து, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில் பெரியவர்கள் குரங்கம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது. இது ஆபிரிக்கா மற்றும் இதர நாடுகளில் குரங்கம்மை நோய்த்தடுப்பு நடவடிக்கையில் முக்கிய படி என்று உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது. பவேரியன் நார்டிக் ஏ/எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசியை கவி (GAVI) மற்றும் யுனிசெப் (UNICEF) போன்ற நன்கொடையாளர்கள் மட்டுமே வாங்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. ஒரே ஒரு உற்பத்தியாளர் மட்டுமே இருப்பதால் தடுப்பூசி இருப்பு குறைவாகவே இருக்கிறது. நன்கொடையாளர்கள் தடுப்பூசியை கொள்முதல் செய்து உடனடியாக தேவைப்படும் பகுதியில் விரைவாக விநியோகம் செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் கோரிக்கை விடுத்துள்ளார். https://thinakkural.lk/article/309432

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.