Everything posted by ஏராளன்
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
தேர்தல் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்களை மீறும் ஊடக நிறுவனங்களுக்குத் தேர்தல் முடிவுகளை வழங்க மாட்டோம் - தேர்தல் ஆணைக்குழு 17 SEP, 2024 | 10:56 AM ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை மீறும் ஊடக நிறுவனங்களுக்கு உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை வழங்க மாட்டோம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்களை மீறும் அல்லது கடைப்பிடிக்காத ஊடக நிறுவனங்களுக்கு எதிராகத் தேர்தல் ஆணைக்குழுவினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாமல் இருந்தாலும் அத்தகைய ஊடகங்களிடமிருந்து விலகி இருக்க முடியும். மின்னஞ்சல், வாட்ஸ்அப் போன்ற ஊடகங்கள் ஊடாக அனைத்து ஊடக நிறுவனங்களுக்குத் தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ முடிவுகள் பகிரப்பட்டு வருகின்றது. ஊடக நிறுவனங்களுக்கான தேர்தல் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்கள் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/193903
-
உணவுப் போட்டியில் அதிக உணவை வேகமாக உண்ணும் போது உடலில் என்ன நடக்கிறது?
பட மூலாதாரம்,YOUTUBE/WAKE AND BITE படக்குறிப்பு, உணவுப் போட்டிகளுக்கு அறிவிக்கப்படும் பரிசுத் தொகை பலரை ஈர்க்கின்றது. கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 16 செப்டெம்பர் 2024 கேரள மாநிலம் பாலக்காட்டில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த இட்லி சாப்பிடும் போட்டியின் போது 49 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். போட்டியில் பங்கேற்ற அவருக்கு இட்லிகள் தொண்டையில் சிக்கிக் கொண்டதாகவும், சுற்றியிருந்தவர்கள் அவரை காப்பாற்றுவதற்காக தொண்டையிலிருந்த இட்லிகளை வெளியே எடுத்தனர் என்று காவல்துறை கூறியதாக பி டி ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. இது இயற்கைக்கு மாறான மரணம் என்று காவ்லதுறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் உணவு விடுதிகளும் உணவு உற்பத்தி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக இதுபோன்ற உணவுப் போட்டியை அறிவிப்பது வாடிக்கையான ஒன்றாகி வருகிறது. அத்தகைய உணவுப் போட்டிகளில் யார் பங்கேற்கிறார்கள்? அவர்களை போட்டியில் பங்கேற்க தூண்டுவது எது? இந்தப் போட்டி எப்போது உயிருக்கே ஆபத்தாக மாறுகிறது? போட்டியாளர் உடலில் என்ன நடக்கிறது? எந்த வகையான உணவாக இருந்தாலும் ஒரே நேரத்தில் அதிகமான உணவை எடுத்துக் கொள்வது உடலுக்கு ஆபத்தானது என்கிறார் மருத்துவர் சந்திரசேகர். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பொது மருத்துவத்துறை தலைவராக இருக்கும் அவர், உணவுப் போட்டிகளில் பங்கேற்கும் போது, அது யாருடைய உயிருக்கு ஆபத்தாக இருக்கும், யாருக்கு இருக்காது என்பதை கணிக்க முடியாது என்கிறார். “உணவுப் போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு போட்டியில் வெல்ல வேண்டும் என்ற பதற்றம் இருக்கும். எனவே அவர்களது இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும். ஒரே நேரத்தில் அதிக அளவிலான உணவை எடுத்துக் கொள்ளும் போது, உணவு குழாய் மற்றும் வயிற்றுப்பகுதி தொந்தரவுக்கு உள்ளாகும். வேகஸ் எனும் நரம்பு உணவுக் குழாய்க்கு அருகிலேயே தொடர்ந்து இருக்கக் கூடிய நரம்பாகும். அதிக அளவு உணவு உள்ளே செல்லும் போது, இதய செயல்பாட்டை குறைக்குமாறு வேகஸ் நரம்புக்கு சமிக்ஞை கிடைக்கும். மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பதற்கு பல நேரங்களில் இதுவே காரணமாகும். சாப்பிடுபவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற இணை நோய்கள் இருந்தால் அவர்களுக்கு ஆபத்து அதிகமாக இருக்கும்” என்கிறார். பட மூலாதாரம்,DR.CHANDRASEKAR படக்குறிப்பு, உணவுக் குழாய்க்கு பதில் சுவாசக்குழாயில் சிக்கிக் கொள்ளும் உணவு, மூச்சு திணறலை ஏற்படுத்தும் என்று மருத்துவர் சந்திரசேகர் கூறுகிறார் அதிக உணவை வேகமாக உண்ணும் போது உடலில் என்ன நடக்கிறது? கேரளாவில் இட்லி சாப்பிட்ட நபர் எப்படி உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் மருத்துவர் சந்திரசேகர் விளக்கம் தந்தார். “ நமது வாயினுள் இருக்கும் உணவை லாவகமாக உணவுக் குழாய்க்குள் அனுப்புவது நமது நாக்கு. ஒரு கடி சாப்பிட்டு, அடுத்த கடி சாப்பிடுவதற்குள்ளாக இது நடக்கும். அதிக உணவை வேகமாக எடுத்துக் கொள்ளும் போது, உணவுக்குழாய்க்கு பதிலாக நுரையீரலுக்கு செல்லும் சுவாசக் குழாயில் உணவு சென்றுவிட வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் தண்ணீர் குடித்தால், உணவு சுவாசக் குழாயில் இன்னும் கீழ் இறங்கும். இதன் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தாக முடியலாம்.” என்று அவர் கூறினார். மேலும் தொடர்ந்த அவர், "மனித உடல், பழக்கத்தின் மூலமே எந்தவொரு நடவடிக்கையையும் செய்ய கற்றுக்கொள்ளும். பல ஆண்டுகளாக ஒரு விதமாக பழகிய உடலில் திடீரென அதிக அளவிலான உணவு, ஒரே நேரத்தில் உள்ளே சென்றால், அது உடலுக்கு அதிர்ச்சியாக இருக்கும்." என்றார். உணவுப் போட்டிகளில் ஏன் பங்கேற்கிறார்கள்? பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, குழந்தையின் மருத்துவச் செலவுக்காக கால் டாக்சி ஒட்டுநர் கோவையில் நடைபெற்ற உணவுப் போட்டியில் பங்கேற்றார். கோவையில் இரண்டு வாரங்களுக்கு முன், ஓட்டல் திறப்பு விழாவுக்காக பிரியாணி உண்ணும் போட்டி நடத்தப்பட்டது. அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ரூ.1 லட்சம், 5 பிரியாணி சாப்பிட்டால் ரூ.50 ஆயிரம், 3 பிரியாணி சாப்பிட்டால் ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் வாகன ஓட்டுநர்கள் மற்றும் கூலித்தொழிலாளி ஆவர். இரண்டாம் இடம் பிடித்த வாடகை கார் ஓட்டுநரான கணேச மூர்த்தி, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தனது மகனின் மருத்துவ செலவுக்கும் படிப்பு செலவுக்கும் பணம் வேண்டும் என்பதால் போட்டியில் பங்கேற்றதாக கூறினார். சென்னையை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஐ.டி. ஊழியர் ஒருவர், “நான் சிறு வயதிலிருந்தே நன்றாக சாப்பிடுவேன். அதேபோன்று நன்றாக உடற்பயிற்சியும் செய்வேன். ஒரு முறை பரோட்டா உண்ணும் போட்டி நடைபெறுவதாக முகநூலில் பார்த்தேன். எப்படி இருக்கிறது என்று தெரிந்துக் கொள்வதற்காக பங்கேற்றேன். எட்டு பரோட்டாவுக்கு மேல் சாப்பிட முடியவில்லை. நான் கலந்து கொண்ட போது பலர் சாப்பிட முடியாமல் வாந்தி எடுத்தனர். அவர்கள் போட்டியிலிருந்து விலக்கப்பட்டனர்” என்றார். பட மூலாதாரம்,R ARCHANA படக்குறிப்பு, அர்ச்சனா, மனநல ஆலோசகர் “நமக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விசயங்களை செய்யும் போது உடலில் டோபமைன் சுரக்கும். இந்தப் போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு குறிப்பிட்ட உணவை சாப்பிடும் போது டோபமைன் சுரக்கும். அதனால் அந்த செயலை மீண்டும்மீண்டும் செய்ய வேண்டும் என்ற உந்துதல் இருக்கும்.” என்கிறார் மனநல ஆலோசகர் அர்ச்சனா. இந்தப் போட்டிகளில் பங்கேற்பதற்கு அவர்கள் கொண்டிருக்கும் காரணங்கள் முக்கியம் என்று குறிப்பிடுகிறார் அவர். “ இந்த உணவுப் போட்டிகளுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை தான் பலரை ஈர்க்கிறது. பொருளாதார தேவை இருப்பவர்கள், ஒரு வேளை உணவு கிடைத்துவிடும் என்று நினைப்பவர்கள் இதில் பங்கேற்கின்றனர். சிலர், உள்ளக் கிளர்ச்சிக்காக முயன்று பார்ப்போமே என்று சாப்பிடுவார்கள். சிலருக்கு இந்தப் போட்டியில் பங்கேற்று அதன் மூலம் கிடைக்கும் பாராட்டும் அங்கீகாரமும் ஒரு உந்துதலாக இருக்கலாம்.” என்கிறார். பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, ஒரே நேரத்தில் அதிக அளவில் உணவு உட்கொள்வது உயிரை பறிக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் பிஞ்ச் ஈட்டிங் செய்பவர்களுக்கும் உணவுபோட்டிகளில் பங்கேற்பவர்களுக்கும் என்ன வித்தியாசம்? “பிஞ்ச் ஈட்டிங்- Binge eating” என்ற சொல் நாம் அடிக்கடி கேள்விப்படும் சொல்லாக இருக்கிறது. ‘தொடர்ந்து சாப்பிடுவது’ என்று இந்த சொல்லுக்கு அர்த்தம். “எடை குறைப்பு, சர்க்கரை குறைப்பு என பல்வேறு காரணங்களுக்காக சாப்பிடாமலே இருந்துவிட்டு, பிறகு ஜங்க் புட்-ஐ தொடர்ந்து சாப்பிடுவார்கள். திடீரென இரண்டு நாட்கள் உணவின் அளவு குறைந்து விட்டால், அடுத்த சில நாட்களுக்கு அதீத பசி எடுக்கும். அப்போது என்ன வேண்டுமானாலும் சாப்பிடவேண்டும், தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்று தோன்றும்” என்கிறார். இப்படி உண்பதும் உணவுப் போட்டிகளில் பங்கேற்பதும் ஒன்றல்ல என்கிறார் அவர். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c7811dm38pno
-
ஏறேறு சங்கிலி - T. கோபிசங்கர்
பகிர்வுக்கு நன்றி.
-
தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
தமிழ் தேசியத்திற்கு துரோகம் இழைக்கும் வடக்கு - கிழக்கு அரசியல் தலைமைகள்: கருணாகரம் எம்.பி குற்றச்சாட்டு புதிய இணைப்பு வடக்கு - கிழக்கில் சில தமிழ் அரசியல் தலைவர்கள் சிங்கள பேரினவாத அரசுக்கும் சிங்கள பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் வாக்குச் சேர்ப்பதாக தெரிவித்துக் கொண்டு தமிழ் தேசியத்திற்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்கும் வகையிலான பிரசார நடவடிக்கைகள் இன்று(16.09.2024)மட்டக்களப்பு நகரில் முன்னெடுக்கப்பட்டது. கோவிந்தன் கருணாகரம் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த பிரசார நடவடிக்கைகளில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார்,இரா.துரைரெட்னம் உட்பட கட்சி ஆதரவாளர்கள்,தமிழ் தேசிய கட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை 21 ஆம் திகதி இந்த நாட்டில் நடைபெற இருக்கின்றது. உரிமை கோரிக்கை கடந்த காலங்களில் 8 ஜனாதிபதி தேர்தல்கள் இடம்பெற்று மக்களினால் தெரிவு செய்யப்பட்ட 6 ஜனாதிபதிகளும் இலங்கையின் பூர்விக குடிகளான தமிழ் மக்களை இரண்டாம் தர பிரஜைகளாகவே இன்று வரை நினைத்துக் கொண்டு தங்களது ஆளுமைக்கு கீழ் தங்களது அடிமைகளாக வழிநடத்திக் கொண்டு வருகின்றார்கள். அந்த வகையில் நீண்ட காலமாக அகிம்சை ஆயுத ரீதியிலே எமது உரிமைகளை பெறுவதற்காக நாங்கள் போராடியாக ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான உயிர்களை இழந்து இருக்கின்றோம். பெருமளவான சொத்துக்கள் எங்களுடைய கலை கலாச்சாரங்களை எல்லாம் இழந்து இன்று நாங்கள் நிற்கதியான நிலையில் நடு சந்தியில் நிற்கும் ஒரு நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது” என்றார். செய்தி - குமார் முதலாம் இணைப்பு மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியேந்திரனின் கூட்டத்திற்கு ஆதரவு தேடி நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெட்ணம் உட்பட குழுவினர் பிரசார நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். குறித்த பிரசார நடவடிக்கையானது இன்று (16) மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை (17) பிற்பகல் 3 மணிக்கு கல்லடியில் உள்ள மீன் பூங்காவிற்கு அருகிலுள்ள மைதானத்தில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியேந்திரனின் மாபெரும் பிரசார கூட்டம் இடம்பெறவுள்ளது. துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் இந்த கூட்டத்திற்கு மக்களை வருமாறு அழைப்பு விடுத்து இந்த பிரசார நடவடிக்கையை இன்று ரேலோ கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரன். ஈ.பிஆர்.எல்.எப் கட்சி முக்கியஸ்தரும் கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான இரா, துரைரெட்ணம், கிழக்கு மாகாண முன்னாள் பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கொண்ட குழுவினர் பொது வேட்பாளரின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து பிரசார நடவடிக்கையினை ஆரம்பித்து வைத்தனர். இதனை தொடர்ந்து மக்களிடம் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கோரியும் நாளை இடம்பெறவுள்ள கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு விநியோகித்தனர். பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் மேலும், தமிழ் மக்கள் சங்குச் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் என துணுகாய் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் சுயன்சன் தெரிவித்துள்ளார். இகு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், https://www.facebook.com/LankasriTv/videos/490666260501955/?ref=embed_video&t=0 https://tamilwin.com/article/election-campaign-batticaloa-general-candidate-1726482719?itm_source=parsely-api
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
டிரம்பை கொல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் நபர் யார்? அவர் பின்னணி என்ன? பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ரியான் வெஸ்லி ரூத் கட்டுரை தகவல் எழுதியவர், ஆன் பட்லர் பதவி, பிபிசி செய்தியாளர் 24 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதல் நடத்த மீண்டும் முயற்சி நடந்துள்ளது. புளோரிடாவில் நடந்த இந்த கொலை முயற்சி சம்பவத்தைத் தொடர்ந்து, ரியான் வெஸ்லி ரூத் என்பவரை சந்தேகத்துக்குரிய நபராக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன. புளோரிடாவில் உள்ள கோல்ப் மைதானத்தில் நடந்த தாக்குதல் முயற்சியில் இருந்து டிரம்ப் தப்பிவிட்டார் என்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் சந்தேகிக்கப்படும் 58 வயதான ரியான் வெஸ்லி வட கரோலினாவைச் சேர்ந்தவர். அவரது சொத்து பதிவுகளின்படி, அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை வட கரோலினாவில் கழித்தார். ஆனால், அவர் சமீபத்தில் ஹவாயில் வசித்து வந்தார். ரியான் வெஸ்லியின் சில செயல்பாடு, அவரது அரசியல் நிலைப்பாட்டின் கலவையான பிம்பத்தை பிரதிபலிக்கிறது. யுக்ரேன் ரஷ்யா போரில் தீவிர யுக்ரேனின் ஆதரவு நிலைப்பாட்டையும் அவர் கொண்டிருப்பதாக தெரிகிறது. அவர் பல சட்ட சிக்கல்களையும் எதிர்கொண்டுள்ளார். மேலும் அவரைப் பற்றி நமக்கு கிடைத்த சில தகவல்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,PALM BEACH COUNTY SHERIFF'S OFFICE/REUTERS படக்குறிப்பு, புதரில் ரூத் மறைந்திருந்த இடத்தில் ஏகே-47 துப்பாக்கி, ஸ்கோப், கோ-புரோ கேமரா மற்றும் 2 பைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ரியான் வெஸ்லி ரூத் என்ன செய்தார்? ஞாயிற்றுக்கிழமை அன்று புளோரிடாவில் உள்ள டிரம்ப்பின் சர்வதேச கோல்ஃப் மைதானத்திற்கு ரூத், ஏகே 47 ரக துப்பாக்கியுடன் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த நபர் ஒரு புதரில் மறைந்திருந்ததாக எஃப்.பி.ஐ(FBI) சந்தேகிக்கிறது. அந்த புதரில் இருந்து ஆயுதம், ஸ்கோப்,கோ-புரோ கேமரா மற்றும் 2 பைகள் ஆகியவற்றை எஃப்.பி.ஐ மீட்டுள்ளது. ரூத் தனது காரில் தப்பிச் சென்ற போதிலும், அவர் ஓட்டிச் சென்ற கருப்பு நிற நிசான் காரை ஒரு நபர் புகைப்படம் எடுத்தார். அவர்தான் இந்த விவகாரத்தின் முக்கிய சாட்சி. அந்த காரின் அடையாளம் வெளியிடப்பட்டு அவசர எச்சரிக்கை விடப்பட்டது. கோல்ஃப் மைதானத்தில் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட 45 நிமிடங்களுக்குப் பிறகு இரண்டு அதிகாரிகள் ரூத்தின் வாகனத்தை பின்தொடர்ந்ததாக பாம் பீச் கவுண்டியின் காவல் உயர் அதிகாரி ரிக் பிராட்ஷா கூறினார். அந்த நபர் இறுதியில் இன்டர்ஸ்டேட் 95 சாலையில் நிறுத்தப்பட்டு, காவலில் வைக்கப்பட்டார். ரூத்தின் சமூக ஊடகங்கள் வெளிப்படுத்துவது என்ன? பிபிசி வெரிஃபை ரூத்தின் பெயருடன் பொருந்தும் சமூக ஊடக கணக்குகளை கண்டறிந்தது. ரஷ்யாவுக்கு எதிராக போரிட வெளிநாட்டு வீரர்கள் யுக்ரேனுக்கு செல்ல வேண்டும் என்று ரூத் அழைப்பு விடுப்பதை அந்த சமூக ஊடகக் கணக்கு காட்டுகிறது. "உங்கள் குழந்தைகள், குடும்பம் மற்றும் ஜனநாயகத்திற்காக நான் ஹவாயில் இருந்து யுக்ரேனுக்கு வருகிறேன். உங்களுக்காக நான் உயிரையும் கொடுப்பேன்." என்று எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு கூறுகிறது என்று பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி நிறுவனமான சிபிஎஸ் கூறுகிறது. அவரது சமூக ஊடக கணக்குகளில் பாலத்தீன ஆதரவு, தாய்வான் ஆதரவு மற்றும் சீனாவுக்கு எதிரான பதிவுகளும் உள்ளன. சீன "உயிரியல் போர்" பற்றிய குற்றச்சாட்டுகள் மற்றும் கோவிட்-19 வைரஸை "தாக்குதல்" என்று குறிப்பிடும் விமர்சனமும் உள்ளது. ஒரு கட்டத்தில் அதிபர் டிரம்ப்பை ஆதரித்த ரூத், "2016-ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சிக்கு நான் ஆதரவளித்தேன்" என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் அவர் நடவடிக்கைகள் "மோசமடைந்து, வலுவிழந்தது" "நீங்கள் இல்லை என்றால் நான் மகிழ்ச்சியடைவேன்" என்று அவர் பதிவிட்டதாக சிபிஎஸ் தெரிவித்துள்ளது. ஜூலை மாதம் டிரம்பின் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். பென்சில்வேனியாவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்குமாறு அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை ரூத் வலியுறுத்தி பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,MARTIN COUNTY SHERIFF'S OFFICE படக்குறிப்பு, காவல்துறையால் வெளியிடப்பட்ட புகைப்படம் ரூத்துக்கும் யுக்ரேனுக்கும் என்ன தொடர்பு? ரூத் 2023 இல் நியூயார்க் டைம்ஸிடம் யுக்ரேனில் போர் முயற்சிகளுக்கு உதவ விரும்புவதாகவும், தாலிபன்களிடம் இருந்து தப்பி ஓடிய ஆப்கானிஸ்தான் வீரர்களை பணியில் அமர்த்த விரும்புவதாகவும் கூறினார். தொலைபேசி வாயிலாக அவர் அந்த அளித்தப் பேட்டியில், 10க்கும் மேற்பட்ட வீரர்கள் ஆர்வமாக இருப்பதாகவும், அவர்களை பாகிஸ்தான் மற்றும் இரானில் இருந்து யுக்ரேனுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் இதனை சட்டவிரோதமாக செய்யவும் தயார் என்று பேட்டியளித்தார். "பாகிஸ்தான் ஊழல் நிறைந்த நாடு என்பதால் நாங்கள் சில பாஸ்போர்ட்டுகளை பாகிஸ்தான் மூலம் வாங்க முடியும்" என்று அவர் கூறினார். யுக்ரேனுக்கு கூடுதல் ஆதரவை வழங்கி உதவுவதற்காக, ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமெரிக்க ஆணையத்தை சந்திக்க தான் வாஷிங்டனில் இருப்பதாகவும் ரூத் பேட்டியில் கூறியிருந்தார். ஜூலை மாதம் வரை ஆட்சேர்ப்பு முயற்சிகளில் ரூத் ஈடுபட்டதாகத் தெரிகிறது. ஜூலை மாதத்தில் அவர் பதிவிடப்பட்ட ஒரு முகநூல் பகிர்வில் , “வீரர்களே, தயவுசெய்து என்னை அழைக்காதீர்கள். ஆப்கானிஸ்தான் வீரர்களை யுக்ரேன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக முயற்சிகளை செய்து வருகிறோம், வரும் மாதங்களில் பதில்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம். தயவுசெய்து பொறுமையாக இருங்கள்." என கூறப்பட்டுள்ளது யுக்ரேனின் சர்வதேச வெளிநாட்டு தன்னார்வலர்களின் அமைப்பு, ரூத்தின் பதிவுக்கும் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளது. . இந்த அரசியல் வன்முறைக்கு யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் மேற்கோள் காட்டப்பட்ட கருத்துக்களில், "நெருப்புடன் விளையாடுவது அதன் விளைவுகளை ஏற்படுத்தும்" என்று ரஷ்ய அரசாங்க செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார். ரூத் மீது குற்றப் பதிவு உள்ளதா? சிபிஎஸ் செய்தியின்படி, 1990 களில் காசோலை மோசடி உட்பட ரூத் சில சட்ட சிக்கல்களை எதிர்கொண்டதாக பதிவுகள் காட்டுகின்றன. ரூத் 2002 மற்றும் 2010க்கு இடையில் வட கரோலினாவில் உள்ள கில்ஃபோர்ட் கவுண்டியில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டார் என்றும் சிபிஎஸ் தெரிவித்துள்ளது. 2002 இல், மிக ஆபத்தான முழு தானியங்கி துப்பாக்கி வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றது, கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தல், ஆயுத விதிமீறல்களை மறைத்தது போன்ற செயல்களில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதாக பதிவுகள் காட்டுகின்றன. ரத்து செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமத்துடன் வாகனம் ஓட்டுதல், திருடப்பட்ட சொத்தை வைத்திருந்தல் ஆகிய குற்றச்சாட்டுகளும் அவர் மீது உள்ளது. ரூத்தின் முன்னாள் பக்கத்து வீட்டார் கிம் முங்கோ, ரூத் "அன்பானவர்" என்று விவரிக்கிறார், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஒருமுறை ரூத்தின் சொத்துக்களை சோதனையிட்டதாகக் கூறினார். அவர் தனது வீட்டில் "திருடப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொருட்களை" வைத்திருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் ரூத் மற்றும் அவரது குடும்பத்தினர் திறந்த வெளியில் துப்பாக்கியால் சுடுவதைக் கண்டதாகவும் அவர் கூறினார். அவரது அரசியல் நிலைப்பாடு என்ன? 2024-ம் ஆண்டு வட கரோலினாவில் கட்சிகளுக்குள் யாரை வேட்பாளரை முன்னிறுத்து என்பதை முடிவு செய்வதற்காக நடத்தப்படும் முதற்கட்ட தேர்தலில், இவர் நேரடியாக வந்து ஜனநாயக கட்சிக்கு வாக்களித்ததாக மாகாண தேர்தல் வாரிய தரவுகள் கூறுவதாக சிபிஎஸ் தெரிவித்துள்ளது. அவர் 2016-ஆம் ஆண்டு டிரம்ப்பை ஆதரித்ததாக அவரது சமூக ஊடகப் பதிவுகள் இருந்தபோதிலும், அவர் எந்த கட்சியிலும் சாராத வாக்காளர் என பதிவு செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பட மூலாதாரம்,REUTERS ரெளத்தின் குடும்பம் பற்றி ரூத் மகன் அவரை "அன்பான மற்றும் அக்கறையுள்ள தந்தை. நேர்மையான கடின உழைப்பாளி" என்று கூறியுள்ளார். அவரது மூத்த மகன் ஓரான், குறுஞ்செய்தி மூலம் சிஎன்என் உடன் பேசினார். "புளோரிடாவில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, எதிர்பார்க்காத விஷயங்கள் நடந்திருப்பதாக நான் நம்புகிறேன், ஏனென்றால் நான் சிறிய வயதில் இருந்த பார்த்த நபர் அப்படியானவர் இல்லை. எனக்குத் தெரிந்த மனிதர் மிகவும் ஆக்ரோஷமானவர் இல்லை” என கூறியுள்ளார். அடுத்து என்ன நடக்கும்? ரூத் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக அதிகாரப்பூர்வ குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. அவர் திங்கட்கிழமை பாம் பீச் கவுண்டி நீதிமன்றத்தில் நீதிபதியின் முன் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பவத்தின் போது அவர் தனது ஆயுதத்தை பயன்படுத்தி உண்மையில் துப்பாக்கி சூடு நடத்தினாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ''ஒரு தனிநபரால் எங்களது அதிகாரிகளை சுடமுடியுமா என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக சந்தேக நபரிடம் எங்கள் அதிகாரிகள் பதில் தாக்குதல் நடத்தியிருப்பார்கள்'' என்று ரகசிய சேவையின் மியாமி கள அலுவலகத்தின் ரஃபேல் பாரோஸ் கூறினார். பென்சில்வேனியாவில் டிரம்ப் மீதான முந்தைய கொலை முயற்சிக்குப் பிறகு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், "அச்சுறுத்தல் அளவு அதிகமாக உள்ளது" என்றும் அவர் கூறினார். எஃப்பிஐ தனது விசாரணையை அறிவித்துள்ளது, மேலும் உள்ளூர் சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதாகக் கூறுகிறது. ரகசிய சேவை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் வட கரோலினாவின் கிரீன்ஸ்போரோவில் ரூத் முன்பு தங்கியிருந்த வீட்டையும் சோதனை செய்துள்ளனர். https://www.bbc.com/tamil/articles/cvgxx0034g7o
-
தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் பரப்புரைக் கூட்டத்தில்; தமிழின விடுதலைக்கான இலட்சியத்துக்காக அணிதிரண்டுள்ள உங்களைப்போன்று என்னுடைய வாக்கினையும் அளிப்பேன் - மாவை.சோ.சேனாதிராஜா Published By: VISHNU 16 SEP, 2024 | 10:28 PM தமிழின விடுதலைக்கான இலட்சியத்துக்கான பயணத்தில் அணிதிரண்டுள்ள பெருந்தொகையான உங்களைப்போன்று என்னுடைய வாக்கினையும் அளிப்பேன் என்ற உறுதிப்பாட்டுடன் தெரிவிக்கின்றேன் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார். கிளிநொச்சி பசுமைப்பூங்கவில் திங்கட்கிழமை (16) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து ‘தமிழ்த் தேசிய இனத்தின் எழுச்சியே தமிழ்த் தேசத்தின் மீட்சி’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், தமிழர்களின் எழுச்சி நிகழ்வான நாளாகவும் தமிழனம் விடுதலை பெறதாத நிலையில் நடைபெறுகின்ற மற்றொரு ஜனாதிபதி தேர்தலாகவும் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறுகின்ற தேர்தல் அமைகின்றது. அவ்விதமான தேர்தலில் எமது விடுதலையையும், அதற்கான இலட்சியப் பயணதுக்காகவும் எங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவோம் என்ற உறுதியோடு இந்த எழுச்சி நிகழ்வில் பங்கெடுத்துள்ளீர்கள். விடுதலைக்கான போராட்டத்தில் மக்களையும், போராளிகளையும் பலிகொடுத்துள்ளோம். அந்த வகையில் நாம் எமது பயணத்திலே உறுதியாக இருக்கின்றோம், அந்தப் பயணத்தினை வலுவானதாக மேற்கொள்ள வேண்டும் என்ற இலட்சியத்துடன் இருக்கும் உங்கள் முன்னிலையில் அந்த இலட்சியத்துக்காக என்னுடைய வாக்கினையும் அளிப்பேன் என்ற உறுதிப்பாட்டுடன் வருகைதந்துள்ளேன். அது மட்டுமன்றி, நீங்கள் அனைவரும், தமிழர்களின் இட்சியத்துக்கான எழுச்சியை வெளிப்படுத்தும் வகையில் உங்களது வாக்குகளை எதிர்வரும் 21ஆம் திகதி உங்களுடைய வாக்குகளை அளிக்க வேண்டும் என்றும் நான் வலியுறுத்துகின்றேன். கடந்த காலத்தில் எமது விடுதலைக்காக அர்ப்பணிக்கப்பட்ட உயிர்களை நெஞ்சில் நிறுத்தியவனாக , அதற்காக பயணிக்கும் எமது உயிர்களும் எப்போது வேண்டுமானாலும் போகலாம், பணயம் வைக்கப்படலாம் என்பதை நினைவு படுத்தியவனாக, எதிர்கால எமது இலட்சியத்துக்கான பயணத்தில் அர்ப்பணிப்புச் செய்வதற்கு தயாராக உள்ள மக்களுக்கும் நன்றி உடையவனாக தேசமாக எழுச்சி அடைவோம். அதற்காக உழைப்போம் என்று உரைத்து விடைபெறுகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/193882
-
கூட்டணி சலசலப்புக்கு மத்தியில் மு.க. ஸ்டாலின் - திருமாவளவன் சந்திப்பு: என்ன நடந்தது?
பட மூலாதாரம்,X/M.K.STALIN படக்குறிப்பு, திருமாவளவன் மற்றும் மு.க. ஸ்டாலின் (கோப்புக்காட்சி) கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் மதுவிலக்கு மாநாட்டிற்கு அ.தி.மு.கவுக்கு அழைப்பு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான வீடியோ வெளியீடு என தி.மு.க. - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணி குறித்த சலசலப்பு எழுந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். என்ன நடந்தது? முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மாநாட்டில் தி.மு.க.வின் சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியும் செய்தித் தொடர்புப் பிரிவின் செயலர் டி.கே.எஸ். இளங்கோவனும் பங்கேற்பார்கள் என்று முதலமைச்சர் கூறியதாக தெரிவித்திருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மது விலக்கை வலியுறுத்தி மாநாடு நடத்தப்போவதாகவும் அதில் அ.தி.மு.கவும் கலந்துகொள்ளலாம் என செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த மாநாடு தொடர்பான அழைப்பையும் தேர்தல் கூட்டணியையும் இணைத்துப் பார்க்க வேண்டாம் என அவர் குறிப்பிட்டாலும் இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மதுவிலக்கு விவகாரத்தை வைத்து தி.மு.க. கூட்டணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் அழுத்தம் கொடுக்கிறதா என்பதில் துவங்கி, கூட்டணியைவிட்டு வெளியேறுகிறதா என்பதுவரை பல்வேறு கருத்துகள் இதனைச் சுற்றி எழுந்தன. உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களும் இந்த விவகாரத்தை வைத்து விவாதங்களை நடத்தின. செப்டம்பர் 14-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியபோது, இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இதற்கு அவரே (திருமாவளவன்) விளக்கமளித்துவிட்டார், அதற்கு மேல் ஏதும் சொல்ல வேண்டியதில்லை என்று கூறினார். ஆனால், அதே நாளில், "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு" என்பது குறித்து திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்று அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. விரைவிலேயே அது நீக்கப்பட்டது. பிறகு மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, மீண்டும் தி.மு.க. - வி.சி.க. கூட்டணி குறித்த பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில்தான், திங்கட்கிழமையன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப்பேசியிருக்கிறார் திருமாவளவன். காலை 11.30 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "கள்ளக்குறிச்சியில் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள 'மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு' தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றை முதல்வரிடம் வழங்கினோம். அதில் இடம்பெற்றுள்ள முதலாவது கோரிக்கை, தமிழ்நாட்டில் அரசு மதுபானக் கடைகளின் விற்பனை இலக்கை படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்பதாகும். இரண்டாவது கோரிக்கை தேசிய அளவிலானது. அரசமைப்புச் சட்டம் உறுப்பு எண் 47ன் படி, படிப்படியாக மதுவிலக்கை இந்தியா அளவில் கொண்டு வருவதற்கு அனைத்து மாநில அரசுகளும் முன்வர வேண்டும் என்பதாகும். கோரிக்கையை படித்துப் பார்த்த முதல்வர் மதுவிலக்கு தமிழ்நாட்டில் அமலுக்கு வரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நிர்வாகச் சிக்கலைக் கருத்தில் கொண்டு அதைப் படிப்படியாக எவ்வாறு நிறைவேற்ற முடியுமோ அவ்வாறு செய்வோம். வி.சி.கவின் மாநாட்டில் தி.மு.கவின் சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு செலாளர் டிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்பார்கள் என்று சொன்னார்" என்று தெரிவித்தார். மேலும், தி.மு.க. - வி.சி.க. கூட்டணியில் எந்த நெருடலும் இல்லை என்றும் கூறினார். படக்குறிப்பு, ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன். "மதுவிலக்கு மாநாடு தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் எல்லாக் கட்சிகளும் வரலாம், அ.தி.மு.கவும் வரலாம் என திருமாவளவன் பேசியது, எதிர்பாராத அளவில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. அதற்குப் பிறகு, அமெரிக்காவிலிருந்து முதல்வர் தமிழ்நாட்டிற்குத் திரும்பும் நாளில், 'அதிகாரத்தில் பங்கு' குறித்த வீடியோ ஒன்றை தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு, நீக்கி பிறகு மீண்டும் வெளியிடப்பட்டது. இதெல்லாம் சேர்த்து திருமா கூட்டணி மாறப்போகிறாரோ என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டது. வி.சி.க.விற்குள்ளேயே தி.மு.கவுக்கு கூடுதல் அழுத்தம் அளிக்கவேண்டும் எனக் கருதும் சக்திகள் இருக்கலாம். அவர்கள் இதனைச் செய்திருக்கலாம். ஆனால், இப்போது அந்த மதுவிலக்கு மாநாட்டில் கலந்துகொள்வதாக அறிவித்ததன் மூலம், கூட்டணிக்கு வெளியில் உள்ள கட்சிகள் யாரும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள முடியாதபடி செய்துவிட்டது தி.மு.க.. தி.மு.க. தலைமையகத்தில் வந்து முதல்வரைச் சந்தித்ததைப் போல, கூட்டணிக்கு வெளியில் உள்ள கட்சிகளின் தலைவர்களைப் போய் திருமாவளவன் சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லை. ஆகவே, கூட்டணியைப் பொறுத்தவரை இப்போதைக்கு போர் நிறுத்தம் வந்திருப்பதாகச் சொல்லலாம்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன். மதுவிலக்கு மாநாட்டில் அ.தி.மு.கவும் கலந்துகொள்ளலாம்; தேர்தல் அரசியலுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என திருமாவளவன் சொல்வதை ஏற்கலாம் என்றாலும் வீடியோ வெளியிடப்பட்டதுதான் கூட்டணி தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். "மதுவிலக்கு குறித்து பலரும் பேசினாலும் இப்போதைக்கு அது நடைமுறை சாத்தியமில்லாதது என்பது எல்லோருக்குமே தெரியும். மதுவிலக்கு மாநாட்டிற்கு தி.மு.கவின் கூட்டணிக் கட்சியாக இருந்தபடி, தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் அழைப்பது என்பதே வித்தியாசமாக இருந்தது. அ.தி.மு.கவின் சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொள்வதாகவே வைத்துக்கொள்வோம். அவர் பேசிய பிறகு ஆர்.எஸ். பாரதி பேசினால் என்னவாகும்? இது ஒருபுறமிருக்க, அதிகாரத்தில் பங்கு குறித்து பேசிய வீடியோவை இந்தத் தருணத்தில் வெளியிட்டு, நீக்கி, மீண்டும் வெளியிட்டதும் ஏன் என்ற கேள்வியும் இருக்கிறது" என்கிறார் குபேந்திரன். ஆனால், கூட்டணி மாற்றம் தொடர்பாக, இந்தத் தருணத்திலேயே ஒரு முடிவுக்கு வருவது சரியாக இருக்காது என்கிறார் அவர். மதுவிலக்கு மாநாட்டை ஒட்டி எழுந்த யூகங்கள் அனைத்தும் தவறானவை என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான வன்னியரசு. "இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை ஆரம்பத்தில் இருந்து சொல்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் தலைவரின் பிறந்த நாளை ஒட்டி ஒரு மாநாட்டை நடத்துவோம். அதுவும் ஒரு கருப்பொருளை மையமாக வைத்து நடத்துவோம். கடந்த ஆண்டு 'வெல்லும் ஜனநாயகம்' என்ற பெயரில் நடத்தினோம். அதற்கு முந்தைய ஆண்டு, 'சமூக நீதி சமூகங்களுடைய ஒற்றுமை மாநாடு' என்ற பெயரில் நடந்தினோம். இந்த ஆண்டு 'மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு' என்ற பெயரில் நடத்த முடிவுசெய்யப்பட்டது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் நாங்களாக அ.தி.மு.கவுக்கு அழைப்புவிடுக்கவில்லை. எல்லோரும் வரலாம் என்று சொன்னபோது, அ.தி.மு.கவும் பங்குபெறலாமா எனக் கேட்டபோது, பங்கு பெறலாம் என திருமாவளவன் பதிலளித்தார். மதுவிலக்கு தொடர்பாக, எல்லா கட்சிகளுமே தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. அ.தி.மு.கவும் அதனைச் சொல்ல வேண்டும். தி.மு.க. கூட்டணி தற்போது வலிமையாக இருக்கிறது. ஆகவே அந்தக் கூட்டணியைச் சிதைக்க வேண்டும், அதற்காக அந்தக் கூட்டணியிலிருந்து வி.சி.கவை வெளியேற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் இப்படி கிளப்பிவிடுகிறார்கள்" என்கிறார் வன்னியரசு. வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு பிறகு நீக்கப்பட்டது குறித்து கேட்டபோது, "அதிகாரத்தில் பங்கு என்பது 1999ஆம் ஆண்டிலிருந்து வி.சி.க. முன்வைத்துவரும் கருத்துதான். அதில் புதிதாக ஏதும் இல்லை. செப்டம்பர் 13-ஆம் தேதி நடந்த மண்டல செயற்குழு கூட்டத்திலும் அதைத்தான் திருமாவளவன் பேசினார். அந்த வீடியோதான் பதிவேற்றப்பட்டது. ஆனால், அதன் ஒரு பகுதி மட்டும் பதிவேற்றப்பட்டதால் முழுவதையும் பதிவேற்றும்படி சொன்னார். ஆகவே, அது நீக்கப்பட்டு மீண்டும் பதிவேற்றப்பட்டது. அதில் வேறு எதுவும் இல்லை" என்றார் அவர். படக்குறிப்பு, தி.மு.க. கூட்டணி தற்போது வலிமையாக இருக்கிறது என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான வன்னியரசு வி.சி.கவின் கூட்டணி 1999ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் வி.சி.க. இடம்பெற்று, த.மா.கா. சின்னத்திலேயே 2 இடங்களில் போட்டியிட்டது. 2001-ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று 8 இடங்களில் போட்டியிட்டது. 2004-ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் கூட்டணி என்ற பெயரில் ஜனதா தளம், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து 8 இடங்களில் போட்டியிட்டது. 2006-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்ணியில் போட்டியிட்டது. 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 2 இடங்களில் போட்டியிட்டது. 2011 சட்டமன்றத் தேர்தலிலும் அதே கூட்டணியில் இடம்பெற்றது. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் அதே கூட்டணி. 2 இடங்களில் போட்டியிட்டது. 2016 சட்டமன்றத் தேர்தலில் வி.சி.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., இடதுசாரிகள் ஆகியவை இணைந்து மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் வி.சி.க. 25 இடங்களில் போட்டியிட்டது. 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் வி.சி.க இடம்பெற்றது. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் விசிக தொடர்ந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cr7551evjyjo
-
தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து மேடையேறிய மாவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை ஆதரித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேடையேறி உரையாற்றியுள்ளார். தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் கூட்டம் கிளிநொச்சியில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. தமிழரசுக்கட்சியின் தீர்மான அறிக்கை இந்த கூட்டத்தில் மேடையேறிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றியுள்ளார். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் தீர்மான அறிக்கையை வவுனியாவில் இன்று முற்பகல் நடைபெற்ற கட்சியின் விசேட குழு கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்கள் முன்னிலையில் மாவை சேனாதிராஜா வாசித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/mavai-senathiraja-support-in-ariyanendren-1726495223#google_vignette
-
மந்துவில் படுகொலையின் 25 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வுப்பூர்வமாக இடம்பெற்றது
Published By: VISHNU 16 SEP, 2024 | 07:34 PM முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 25 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (15) உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக கடந்த 1999ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதியன்று மந்துவில் சந்திப் பகுதியில் இலங்கை வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 24 அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாய்த் தமிழ் பேரவை அமைப்பின், தாய்த்தமிழ் நினைவேந்தல் குழுவால் மேற்கொள்ளப்பட்டது. குறித்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற மந்துவில் சந்தி வளாகத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அந்தவகையில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு இந்த நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. இந்த படுகொலைச் சம்பவத்தின்போது உயிரிழந்தவர்களின் உறவுகள் பொதுச்சுடரை ஏற்றி, நிகழ்வேந்தல் நிகழ்வை ஆரம்பித்துவைத்தனர். தொடர்ந்து குறித்த படுகொலைச் சம்பவத்தின்போது உயிர்நீத்தவர்களின் திருவுருவப் படங்களுக்கு, உயிர்நீத்தவர்களின் உறவுகள் மலர்மாலை அணிவித்து, ஈகைச்சடேரேற்றி, மலர்தூவி, கண்ணீர் சொரிந்து உணர்வெழுச்சியுடன் தமது அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தனர். மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் தாய்த்தமிழ் பேரவை அமைப்பின் ஸ்தாபகர் எஸ்.சத்தியரூபன், தாய்த் தமிழ் பேரவை அமைப்பு நிர்வாகிகள், படுகொலைச் சம்பவத்தின்போது உயிர்நீத்தவர்களின் உறவுகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/193880
-
மூன்று வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியை வழங்கச்செய்திருக்கிறோம்; எந்த வேட்பாளர் வென்றாலும் தீர்வை முன்னிறுத்திப் பணியாற்றுவோம் - சுமந்திரன்
துண்டு போட்டாச்சு!!
-
அனைவரது கலாசார அடையாளங்களையும் ஏற்றுக்கொண்டு சுதந்திரமான நாட்டை உருவாக்குவது தான் எமது எதிர்பார்ப்பு - அநுர குமார
16 SEP, 2024 | 05:27 PM பல கலாசாரங்களைக் கொண்ட மக்கள் வசிக்கின்ற நாடே எமது நாடு. அதனால் இந்த நாட்டின் எதிர்காலம் இந்த பல்வகைமை கொண்ட மக்கட்குழுக்கள் மத்தியில் ஒற்றுமை நிலவினால் மாத்திரமே நிலைத்திருக்கும். அதனால் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி உங்களின் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமையை, மொழியைப் பேசுவதற்கான உரிமையை வழங்குகின்ற ஆட்சியாகும். உங்கள் கலாசார அடையாளத்தை ஏற்றுக்கொண்டு சுதந்திரமான நாட்டை உருவாக்குவதுதான் தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். "நாடு அநுரவோடு" என்கிற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம் சாய்ந்தமருதில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி நிச்சயம் நீண்ட காலமாக இந்த ஆட்சியாளர்கள் எமது நாட்டை ஆட்சி செய்தார்கள். நாடும் மக்களும் வறுமையின் அடிமட்டத்துக்கே போய் வீழ்ந்தனர். ஆட்சியாளர்கள் கட்டியெழுப்பப்பட்டார்கள், நாடு வீழ்ந்தது. நாங்கள் செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று அரசாங்கமொன்றை அமைப்போம். இந்த நாட்டைக் கட்டியெழுப்புகின்ற தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை நாங்கள் அமைத்துக்கொள்வோம். இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி நிச்சயம். தெற்கில் வசிக்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்து இருக்கிறார்கள். சாய்ந்தமருதில் வசிக்கின்ற முஸ்லிம் மக்களின் தீர்மானம் என்ன? நீங்கள் உரத்த குரலில் கூறுவது போல் தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விப்பது உறுதியானது. உங்கள் கலாசார அடையாளத்தை ஏற்றுக்கொண்டு சுதந்திரமான நாட்டை உருவாக்குவதுதான் தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பு. எமது வெற்றியை தடுப்பதற்காக இன்று பல்வேறு தரப்பினர்கள் எமக்கு எதிரான சேறுபூசுதல்களிலும் பொய்யான தகவல்களை பரப்புவதிலும் ஈடுபட்டுள்ளார்கள். அண்மையில் ஹிஸ்புல்லா இங்கு வந்தாரா? அவர் வந்து எம்மைப் பற்றிய பல அவதூறுகளையும் பொய்களையும் கூறியிருக்கிறார். முஸ்லிம் மக்கள் மத ரீதியாக கொண்டாடுகின்ற இரண்டு தருணங்கள் இருக்கின்றன. ஒன்று, ரமழான் வைபவம். அடுத்தது, ஹஜ்ஜி வைபவம். நாங்கள் வந்ததும் இதில் ஒன்றை நிறுத்துவோமென ஹிஸ்புல்லா கூறியுள்ளார். அவருடைய மண்டையை பரிசோதித்துப் பார்க்கவேண்டும். மக்களை பள்ளிவாசலுக்குப் போக அனுமதிக்கமாட்டோம் எனவும் கூறியுள்ளார். இவர்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் வந்து அவ்வாறான கதைகளைக் கூறுகிறார்கள். ஐக்கிய மக்கள் சக்தியின் திஸ்ஸ அத்தநாயக்க, நாங்கள் அதிகாரத்துக்கு வந்ததும் கண்டி பெரஹெரவை நடாத்தவிடமாட்டோம் என்று கூறுகிறார். அவர்களின் மேடைகளில் ஏறுகின்ற ஒருசில பிக்குமார்கள் நாங்கள் வந்தால் தானம் கிடைக்கமாட்டாதெனக் கூறுகிறார்கள். இவை அரசியல் கதைகளா? அவை அரசியல் விமர்சனங்களா? அவை குறைகூறல்கள். அவைதான் பொய்கள். உண்மையாகவே மதம் பற்றிய கௌரவம் இருக்குமானால், மதம் சம்பந்தமான சுதந்திரத்தை உண்மையாகவே எதிர்பார்ப்பின் அவற்றை அரசியல் மேடைகளில் கூறக்கூடாது. அவை மதவாதத்தைக் கிளப்புகின்ற பேச்சுகள். எமது நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம், மலாயர், பறங்கியர் வசிக்கின்ற நாடு. சிங்களவர்களுக்கு தமக்கே உரித்தான கலாசாரமொன்று தமிழர்களுக்கு தனித்துவமான கலாசாரமொன்று முஸ்லிம்களுக்கு தனித்துவமான கலாசாரமொன்று என்ற வகையில் பல கலாசாரங்களைக் கொண்ட மக்கள் வசிக்கின்ற நாடே எமது நாடு. அதனால் இந்த நாட்டின் எதிர்காலம் இந்த பல்வகைமை கொண்ட மக்கட்குழுக்கள் மத்தியில் ஒற்றுமை நிலவினால் மாத்திரமே நிலைத்திருக்கும். அதனால் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி உங்களின் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமையை, மொழியைப் பேசுவதற்கான உரிமையை வழங்குகின்ற ஆட்சியாகும். உங்கள் கலாச்சார அடையாளத்தை ஏற்றுக்கொண்டு சுதந்திரமான நாட்டை உருவாக்குவதுதான் தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பு. தேசிய ஒற்றுமை நிலவுகின்ற ஒரு நாடே எங்களுக்குத் தேவை இப்போது ஹிஸ்புல்லா பொய்யான உண்மையற்ற விடயங்களை பரப்பத் தொடங்கியிருக்கிறார். நாங்கள் எங்கள் கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டுள்ளோம். ஏதேனும் மதம் பற்றி, கலாசாரம் பற்றி, மொழி பற்றி எவரேனும் தீவிரவாதக் கருத்தினைப் பரப்புவாராயின் அதற்கெதிராக முறைப்பாடு செய்து சட்டத்தினால் தண்டனை வழங்கவதற்கான ஆணைக்குழுவொன்றை நியமிப்போம். அரசியலில் மதவாதக் கூற்றுகளை வெளியிடுவதை, இனவாதக் கூற்றுகளை வெளியிடுவதை நிறுத்துவதுதான் தேசிய சக்தி அரசாங்கத்தின் பொறுப்பாகும். தேசிய ஒற்றுமை நிலவுகின்ற ஒரு நாடே எங்களுக்குத் தேவை. அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ்கின்ற நாடே எமக்குத் தேவை. அதனால்தான் உங்களை சந்திக்க வந்திருக்கிறோம். செப்டெம்பர் 21ஆம் திகதி நாங்கள் வெற்றிபெற வேண்டும். தெற்கிலுள்ள மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது மாத்திரமல்ல, கிழக்கிலுள்ள உங்களின் நம்பிக்கையும் எமக்குத் தேவை. வடக்கிலுள்ள மக்களின் நம்பிக்கையும் எமக்குத் தேவை. இலங்கையில் முதல் தடவையாக தெற்கின் மக்களும் கிழக்கின் மக்களும் வடக்கின் மக்களும் மலையக மக்களும் ஏற்றுக்கொள்கின்ற அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரதும் நம்பிக்கையை வென்றெடுத்த ஓர் அரசாங்கத்தை நாங்கள் அமைத்திடுவோம். ஒற்றுமையின் இயக்கமொன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது இதற்கு முன்னர் அரசியல் கட்சிகள் போட்டிக்கு வருவது எப்படியென உங்களுக்குத் தெரியும். சஜித் வருவது ஹக்கீமை தோளில் வைத்துக்கொண்டே. ரணில் வருவது அதாவுல்லாவை தோளில் வைத்துக்கொண்டே. நாங்கள் வருவது மக்களை தோளில் வைத்துக்கொண்டு... உங்களின் நம்பிக்கையால்தான். அதோ அவ்வாறான ஒற்றுமையின் இயக்கமொன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. அது தமிழ் மக்களை, சிங்கள மக்களை, முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சியையோ தலைவர்களையோ பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒன்றல்ல. அதுதான் தேசிய மக்கள் சக்தி. இன்று இங்கே பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் எமது சகோதர சகோதரிகள் ஒன்றுசேர்ந்து எமக்கு கூறுவது என்ன? எம்மை நம்பியமைக்காக உங்களுக்கு நன்றி. நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு துளியளவிலேனும் சேதமேற்படுத்தாமல் அதனைப் பாதுகாப்போமென நாங்கள் உங்களுக்கு உத்தரவாதமளிக்கிறோம். இனவாதத்தில் வீழ்ந்திடாத, அந்த சேற்றில் அமிழ்ந்துவிடாத ஒரே அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே 2015இல் மகிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தது உங்களுக்குத் தெரியும். அவர்கள் மீண்டும் அரசியலில் கரைசேர ஒரு பாதையைத் தேடிக்கொண்டு இருந்தார்கள். அவர்களால் திருட்டுகளை நிறுத்துகிறோம் எனக்கூறி அதிகாரத்தைப் பெறமுடியாது, ஜனநாயகத்தை நிலைநாட்டுவொம் எனக் கூறி அதிகாரத்தைப் பெறமுடியாமல், 2015இன் பின்னர் நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க முடியுமெனக் கூறி அதிகாரத்தைப் பெற முடியாது. அதனால் ராஜபக்ஷாக்கள் அதிகாரத்தைப் பெறுவதற்கான வீதி வரைபடமொன்றை தயாரித்து விரித்தார்கள். அதற்காக முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத இயக்கமொன்றை ஆரம்பித்தார்கள். உண்டால் மலடாகின்ற கொத்து ரொட்டி தயாரிப்பதாகக் கூறினார்கள். மீண்டும் வருவதற்காக இனவாதத்தை விதைக்கத் தொடங்கினார்கள். முஸ்லிம் கடைகளில் மலட்டு உடைகளை விற்பதாகக் கூறினார்கள். அவற்றை அணிந்தால் மலட்டுத்தன்மை ஏற்படுமெனக் கூறினார்கள். இனவாதத்தைக் கிளப்பினார்கள். சிங்களப் பெண்களை மலடாக்குகின்ற மலட்டு மருத்துவர்கள் இருப்பதாகக் கூறினார்கள். 2019இல் நாட்டைக் காப்பாற்றிக்கொள்ள மதத்தைப் பாதுகாத்துக்கொள்ள அவரை வெற்றியீட்டச் செய்விக்குமாறு கோட்டாபய கூறினார். சிங்கள மக்கள் முண்டியடித்துக்கொண்டு போய் வாக்குகளைப் போட்டு வெற்றிபெறச் செய்வித்தார்கள். இப்போது அந்த மொட்டு எங்கே? அந்த மொட்டு அரசாங்கம்தான் கொவிட் பெருந்தொற்றுவேளையில் முஸ்லிம்கள் இறந்தால் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்காமல் தகனம் செய்யுமாறு கூறியது. இப்போது அந்த மொட்டின் பெரும்பான்மையினர் ரணிலோடுதான் இருக்கிறார்கள். இப்போது மொட்டின் தலைவர் ரணில். ஏனையோர் எவருடன் இருக்கிறார்கள்? மொட்டின் தவிசாளர் ஜீ்.எல். பீரிஸ் உள்ளிட்ட இனவாதத்தை விதைத்தவர்கள் முஸ்லிம் ஜனாஸாக்களை தகனம் செய்யுமாறு தீர்மானிக்கையில் அமைச்சரவையில் இருந்த ஜீ. எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும, நாலக்க கொடஹேவா இன்று எங்கே இருக்கிறார்கள்? சஜித் பிரேமதாசவிடம். இனவாதக் கும்பல்கள் எல்லாமே இன்று அவர்களிடமே இருக்கின்றது. அதனால் நீங்கள் ரணிலைப் பார்த்தாலும் மொட்டின் அரைப்பகுதியுடன். சஜித்தைப் பார்த்தாலும் மொட்டின் அரைப்பகுதியுடன். அவர்கள் அனைவருமே இனவாதத்தை விதைத்தவர்கள். அதோ அந்த இனவாதத்தில் வீழ்ந்திடாத, அந்த சேற்றில் அமிழ்ந்துவிடாத ஒரே அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. நான் உங்களிடம் கேட்கிறேன் யாரை தெரிவுசெய்யப் போகிறீர்கள்? தெரிவுசெய்ய வேண்டியது தேசிய மக்கள் சக்தியையாகும். அங்குமிங்கும் தாவுகின்ற இந்த அரசியலை நிறுத்தவேண்டாமா? இந்த அரசியலில் ஓர் அசிங்கமான சூதாட்டம் நிலவுகின்றது. அங்குமிங்கும் தாவிக்கொண்டு இருக்கிறார்கள். அங்கும் வாங்கிக்கொள்கிறார்கள். இங்கும் வாங்கிக்கொள்கிறார்கள். இப்போது அதாவுல்லா எந்தப் பக்கத்தில்? அங்குமிங்கும் தாவுகின்ற இந்த அரசியலை நிறுத்தவேண்டாமா? இந்த அசிங்கமான அயோக்கியத்தனமான அரசியல் காரணமாகவே எமது நாடு நாசமாகியது. கடந்த மாதம் ஏசுகிறார்கள். இந்த மாதம் போய் கட்டிப்பிடிக்கிறார்கள். இதனை மாற்றியமைத்திட வேண்டாமா? வேண்டும். இப்போது அந்த கீதா நோனாவைப் பாருங்கள். சென்ற வாரம் ரணில்தான் டொப் எனக் கூறுகிறார். இந்த வாரம் சஜித் தான் டொப் எனக் கூறுகிறார். அவர்களுக்கு வெட்கம் கிடையாது. எடுப்பவர்களுக்கும் வெட்கம் கிடையாது. வடக்கிற்குச் சென்றும், கிழக்கிற்குச் சென்றும், தெற்கிற்குச் சென்றும் ஒரே கதையைக் கூறுகின்ற ஒரே இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. மகரகம பொதுபல செனையின் மேடையில் ஏறிய சம்பிக்க ரணவக்க இப்போது சஜித்துடன். ரிசாட் பதுருதீனும் சஜித் பிரேமதாசவுடன். சஜித் பிரேமதாச கிழக்கிற்கு வரும்போது ஹக்கீமை அழைத்து வருகிறார், சம்பிக்கவை ஒளித்துவைத்துவிட்டு வருகிறார். மாத்தறைக்குப் போகும்போது ஹக்கீமை ஒளித்துவைத்துவிட்டு சம்பிக்கவை கூட்டிக்கொண்டு போகிறார். மன்னாருக்கு போகும்போது றிசாட் பதுருதீனை கூட்டிக்கொண்டு போகிறார். சம்பிக்கவை ஒளித்துவைத்துவிட்டுப் போகிறார். காலிக்குப்பொகும்போது ரிசாட்டை ஒளித்துவைத்துவிட்ட சம்பிக்கவை கூட்டிக்கொண்டு போகிறார். கொள்கைப்பிடிப்பு இல்லாத அரசியல்வாதி. இன்று வடக்கிற்குச் சென்றும், கிழக்கிற்குச் சென்றும், தெற்கிற்குச் சென்றும் ஒரே கதையைக் கூறுகின்ற ஒரே இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. நாங்கள் இந்த விளையாட்டை மூடிமறைத்து 'பிளே' பண்ணவில்லை. அவர்கள் மறைமுகமாகவே விளையாடுகிறார்கள். அவர்களைத் தோற்கடித்திட இந்த அசிங்கமான விளையாட்டே போதும். இவையனைத்தையும் கருத்தில்கொண்டு நாங்கள் செப்டெம்பர் 21ஆம் திகதி நல்லதொரு முடிவினை எடுக்கவேண்டும். அவர்கள் வருவது பகிர்ந்துகொள்வதற்காகவே. சிறப்புரிமைகளைக் கைவிடுகின்ற அரசியல்வாதிகள் இருக்கின்ற ஓர் அரசாங்கத்தை நாங்கள் அமைத்திடுவோம். எமது நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவேண்டும் இந்த நாட்டில் தூள் வியாபாரம், பாதாள உலகின் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பது உங்களுக்குத் தெரியும். இந்த தேர்தலுக்காக அவர்கள் செலவுசெய்வது தூள் வியாபாரிகளின் பணத்தையாகும். எமது நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவேண்டும். தூள் வியாபாரத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். அதோ அந்த வேலையை செய்வது தேசிய மக்கள் சக்தியாகும். இந்த ஆட்சியார்கள் ஒருபோதுமே அதனை செய்யமாட்டார்கள். விரும்பிய எல்லாவற்றையும் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவந்து இங்கே விற்பனை செய்கின்ற வழிமுறையையே அவர்கள் விரும்புகிறார்கள். அப்போதுதான் ஆட்சியாளர்களக்கு கொமிஸ் கிடைக்கும். ரணிலின் அரசாங்கத்தில் படகுகள் கரையில் குவிந்துள்ளன. மாலைதீவிலிருந்து கருவாடு இறக்குமதி செய்கிறார்கள். மீன்களுக்கு வாக்குரிமை இருந்தால் ரணிலுக்கே வாக்குகள் கிடைக்கும். நாங்கள் இந்த நாட்டில் கடலுக்குச் செல்கின்ற அனைத்து மீனவர்களுக்கும் அவசியமான நிவாரணங்கள் அனைத்தையும் வழங்குவோம். இந்தப் பிரதேசத்தில் கடலரிப்பு காரணமாக கரையோரம் உள்நாட்டை நோக்கி வருகின்றது. ஒருசில தென்னந்தோட்டங்கள், கட்டடங்கள் கடலில் அமிழ்ந்துள்ளன. அதனால் இந்த கரையோரத்தை பேணிப் பாதுகாத்து கடலரிப்பினைத் தடுக்க அவசியமான சுற்றாடல் ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும். அவ்வாறு செய்து பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயமாக அதனை செய்யும். இந்நாட்டின் இளைஞர்கள் தொழிலை தேடிக்கொள்வதென்பது கனவாகும். இயலுமானவர்கள் தொழில் தேடி வெளிநாடு செல்கிறார்கள். நாங்கள் மக்கள் வாழக்கூடிய அழகான ஒரு நாட்டை உருவாக்கிடவேண்டும். அதற்காக செப்டெம்பர் 21ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விப்போம். நாட்டை சீராக்குகின்ற அரசாங்கமொன்றைக் கட்யெழுப்புவோம். திருட்டுகளை நிறுத்துகின்ற, மக்களின் சொத்துக்களை திருடிய அரசியல்வாதிகளுக்கு தண்டனை வழங்குகின்ற அரசாங்கமொன்றை, திருடிய பொதுமக்களின் சொத்துக்களை பறிமுதல் செய்கின்ற, உண்மையான மக்கள் நேயமுள்ள அரசாங்கமொன்றை நாங்கள் இந்த நாட்டில் கட்டியெழுப்புவோம். செப்டெம்பர் 21ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் வெற்றி நிச்சயமே. https://www.virakesari.lk/article/193868
-
இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் தொடர்
சென்னை டெஸ்ட்: இந்திய அணி எப்படித் தயாராகிறது? வங்கதேசத்தின் 24 ஆண்டு தாகம் நிறைவேறுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்தி ராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. அதில் முதல் போட்டி வரும் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. 2வது டெஸ்ட் போட்டி வரும் 27-ஆம் தேதி உத்தரப்பிரசேதம் மாநிலம் கான்பூரில் நடக்கிறது. 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க இரு அணிகளுக்கும் இந்தத் தொடரின் வெற்றி அவசியம் என்பதால் தீவிரமாக இரு அணிகளும் தயாராகி வருகின்றன. பாகிஸ்தான் பயணம் சென்ற வங்கதேச கிரிக்கெட் அணி அந்நாட்டு மண்ணில் வைத்தே பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில், தற்போது இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இதுவரை டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை ஒருமுறை கூட வங்கதேசம் வென்றதில்லை என்ற வரலாறு இந்திய அணிக்கு சாதகமாக இருக்கிறது. இருப்பினும் சென்னை மைதானத்தில் சுழற்பந்துவீச்சில் மாயஜாலம் நிகழ்த்த இந்திய அணியில் இருப்பது போன்று வலுவான சுழற்பந்துவீச்சாளர்கள் வங்கதேச அணியிலும் உள்ளனர். ஆதலால் சென்னையில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சுழற்பந்துவீச்சில் எந்த அளவு நெருக்கடி அளிக்குமோ அதே அளவு அழுத்தத்தை வங்கதேசமும் அளிக்கும். கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இந்திய அணியுடன் 13 டெஸ்ட் போட்டிகளில் வங்கதேசம் அணி விளையாடியுள்ளது. ஆனால், இதுவரை ஒரு போட்டியிலும் கூட அது வெற்றி பெறவில்லை, இந்திய அணி 11 வெற்றிகளைப் பதிவு செய்து ஆதிக்கம் செய்கிறது. கவனிக்கப்படும் வீரர்கள் இந்திய அணியில் இரு வீரர்கள் நீண்ட இடைவெளிக்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்கிறார்கள். விராட் கோலி, ஏறக்குறைய 9 மாதங்களுக்குப்பின் டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார். அடுத்ததாக ரிஷப் பந்த், கார் விபத்துக்குப்பின் டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடாமல் இருந்தார். தற்போது அவர் 2 ஆண்டுகளுக்குப்பின் டெஸ்ட் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இருவரின் பேட்டிங் திறமையும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. ஏனென்றால், கோலி இடத்துக்கு ஷூப்மன் கில், சர்ஃபிராஸ் கான், கே எல் ராகுலும்; ரிஷப் பந்த் இடத்துக்கு துருவ் ஜூரெல், கே எல் ராகுலும் போட்டியிடுகிறார்கள். ஆதலால் இருவரும் சிறப்பாக செயல்பட வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் ஜஸ்ப்ரீத் பும்ரா டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். இடதுகை பந்துவீச்சாளர் யாஷ் தயால் முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது தவிர இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக மோர்ன் மோர்கல் புதிதாக நியமிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். "இந்திய பந்துவீச்சாளர்கள் ஏற்கெனவே திறமையாகப் பந்துவீசுகிறார்கள். அவர்களின் திறமையை மெருகேற்றவே முடிந்தவரை உழைப்பேன் பெரிதாக மாற்றம் செய்யமாட்டேன்", என மோர்கல் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,BCCI படக்குறிப்பு, சேப்பாக்கம் மைதானத்தில் இருவிதமான பிட்ச் இருக்கிறது. ஒன்று கருப்பு மண் கொண்ட பிட்ச், மற்றொன்று செம்மண் பிட்ச். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வங்கதேசத்துடன் இந்த 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்தவுடன், நியூசிலாந்து அணியுடன் அக்டோபர் மாதத்தில் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கிறது. இந்தத் தொடர் முடிந்தவுடன், ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடரில் விளையாட இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இந்திய அணிக்கு இந்த 10 போட்டிகளும் மிகுந்த முக்கியமானதாகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 74 புள்ளிகளுடன், 68.5% புள்ளிகள் சதவீதமும் (PCT) பெற்று முதலிடத்தில் இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பங்கேற்க குறைந்தபட்சம் 7 டெஸ்ட் போட்டிகளில் வெல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது, அப்போதுதான் புள்ளிகள் சதவீதத்தை 69.3 ஆக உயர்த்தி இறுதிப்போட்டிக்குள் செல்ல முடியும். சென்னையில் பயிற்சி ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி வீரர்கள் விராத் கோலி, யஷஷ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, கே.எஸ்.ராகுல் உள்ளிட்ட பல வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த சில நாட்களாக தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் நடக்கும் டெஸ்ட் போட்டி என்பதால் உள்ளூர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட அதிக வாய்ப்புள்ளது. இதுதவிர கடந்த சில நாட்களாக ஜெய்ஸ்வால் பந்து வீசிப் பயிற்சி எடுத்து வருகிறார். இதனால் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு பந்துவீச வாய்ப்பு வழங்கப்படலாம். சேப்பாக்கம் மைதானத்தில் சுழற்பந்துவீச்சு நன்கு எடுபடும் என்பதால், கடந்த சில நாட்களாக சுழற்பந்துவீச்சுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால், ரோஹித், கோலி, கில் ஆகியோர் பயிற்சி எடுத்தனர். இவர்களுக்கு தமிழக கிரிக்கெட் வீரர்கள் அஜித் ராம், எம். சித்தார்த் ஆகியோர் வலைபயிற்சி பந்துவீச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர வருண் சக்ரவர்த்தி, அஸ்வினைப் போல பந்துவீசக்கூடிய மும்பை பந்துவீச்சாளர் ஹிமான்சு சிங்கும் பந்து வீசினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானம் (2016 புகைப்படம்) சேப்பாக்கமும் – இந்திய அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 1934-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டுவரை 36 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி மட்டும் 16 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது. அதிலும் கடந்த 2001-ஆம் ஆண்டிலிருந்து சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நடந்த 10 டெஸ்ட் போட்டிகளில் 6 போட்டிகளை இந்திய அணி வென்றுள்ளது. முந்தைய செயல்பாடுகளை பொறுத்தவரை, உள்நாட்டில் நடைபெறும் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு அதிக வெற்றிகளை குவித்துள்ளது. அதனால் வங்கதேச அணிக்கு இந்திய அணியை சமாளிப்பது பெரிய சவாலாக இருக்கலாம். சேப்பாக்கத்தின் பிட்ச் எப்படி உள்ளது? சேப்பாக்கம் மைதானத்தில் இருவிதமான பிட்ச் இருக்கிறது. ஒன்று கருப்பு மண் கொண்ட பிட்ச், மற்றொன்று செம்மண் பிட்ச். இந்த இரு ஆடுகளமும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானவை. மைதானத்தின் மையத்தில் புற்கள் கொண்ட ஒரு பிட்ச் இருக்கிறது. இந்த பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானதாக அமைந்தாலும், அதில் பெரும்பாலும் போட்டிகள் நடத்தப்படுவதில்லை இரு அணிகளிலுமே சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் டாஸ் வெல்வது முக்கியமானதாக இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த சில நாட்களாக ஜெய்ஸ்வால் பந்து வீசிப் பயிற்சி எடுத்து வருகிறார். ரோஹித் சாதிப்பாரா? வங்கதேச அணிக்கு எதிராக கேப்டன் ரோஹித் சர்மா நீண்டகாலமாக அவப்பெயரை சுமந்து வருகிறார். பல அணிகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அரைசதம், சதம் அடித்தாலும் வங்கதேசத்துக்கு எதிராக மட்டும் அவர் இன்னும் ஒரு அரைசதம் கூட அடித்ததில்லை. அதிலும் குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ரோஹித் சர்மா, 33 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார் அதிகபட்சம் 21 ரன்கள்தான். ஆதலால், வங்கதேச அணிக்கு எதிராக ரோஹித் சர்மாவின் ஆட்டம் உன்னிப்பாக கவனிக்கப்படும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புக்காட்சி மைல்கல் எட்டுமா இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஒரு வெற்றி பெற்றால் டெஸ்ட் போட்டிகளில் 178 வெற்றிகளை இந்திய அணி எட்டும். இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் தோல்விகளைவிட அதிகமான வெற்றிகளை பெற்ற அணி, என்ற வரிசையில் இடம்பெறும். 24 ஆண்டுகள் தாகம் நிறைவேறுமா வங்கதேச அணி 24 ஆண்டுகளாக இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதுவரை ஒரு டெஸ்ட் வெற்றிகூட பெறாதநிலையில் வெற்றி தாகத்துடன் அந்த அணி களமிறங்குகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக2-0 என டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனையுடன் இந்திய அணியை வங்கதேசம் எதிர்கொள்கிறது. இதனால், வங்கதேச அணியை எளிதாக எடைபோட முடியாது. இந்திய அணிக்கு இணையாக வலுவான சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ளது வங்கதேசம். நஜ்முல் ஹூசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச அணியும் சென்னை வந்துவிட்டனர். பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் ஆடாத தொடக்க பேட்டர் மெகமதுல் ஹசன் இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடுகிறார். இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஷோரிபுல் இஸ்லாம் காயத்தால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் இவருக்குப் பதிலாக கலீல் அகமது சேர்க்கப்பட்டுள்ளார். ஜக்கர் அலி அனிக் எனும் இளம் வயது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இந்திய அணிக்கு எதிராக முதல்முறையாக வங்கதேச அணிக்காக களமிறங்க உள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c2066z6ldxyo
-
பிரேசிலில் பொழிந்த கருப்பு மழை - மழைநீர் ஏன் கருப்பாக மாறியது?
பட மூலாதாரம்,METSUL METEOROLOG கட்டுரை தகவல் எழுதியவர், லூயிஸ் அண்டோனியா அரௌஹொ பதவி, பிபிசி நியூஸ் பிரேசில் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிரேசிலைச் சேர்ந்த 44 வயதான கால்நடை பண்ணை உரிமையாளர் டியாகோ க்ளூக், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒன்றை முயற்சிக்க முடிவு செய்தார். தெற்கு பிரேசிலிய நகரமான பெலோடாஸில் உள்ள தனது வீட்டின் பின் புறத்தில் உள்ள தோட்டத்தின் மையத்தில் ஒரு சுத்தமான வெள்ளை வாளியை வைத்தார். கருப்பு மழை என்று அழைக்கப்படும் ஒரு நிகழ்வு பற்றிய எச்சரிக்கைகள் அப்போது வழங்கப்பட்டிருந்தன. "இந்த வாளியில் சேகரிக்கப்படும் நீர், கூரைகள் அல்லது சுவர்களில் இருந்து விழாமல், மேகங்களிலிருந்து நேரடியாக விழுவதற்காக சுவர்கள் அல்லது கூரைகளிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் ஒரு இடத்தை நான் தேர்ந்தெடுத்தேன்", என்று க்ளூக் விளக்குகிறார். அடுத்த நாள் அவர் வாளியைப் பார்த்த போது, அதில் சேகரிக்கப்பட்ட மழைநீர் கருப்பு நிறத்தில் இருந்தது. "நான் இதுபோன்ற எதையும் பார்த்ததில்லை. இது மிகவும் வருத்தமாக இருந்தது," என்று அவர் பிபிசி நியூஸ் பிரேசிலிடம் கூறினார். தெற்கு பிரேசிலைத் தவிர, வடக்கு உருகுவே மற்றும் தெற்கு பராகுவே ஆகிய பகுதிகளிலும் கருப்பு மழை பொழிந்தது. அங்குள்ள மக்கள் சேகரித்த கருப்பு நீரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. அர்ஜென்டினா மற்றும் உருகுவேயில் இருந்து வரும் குளிர்ந்த காற்று பிரேசில் மற்றும் பொலிவியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயின் புகையை எதிர்கொள்ளும்போது, வரும் நாட்களில் அதிக கருப்பு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரேசிலின் தென்கோடியில் உள்ள ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் வியாழக்கிழமை பதிவானது, தென் அமெரிக்காவில் இதுவரை பதிவான அதிக அடர்த்தி கொண்ட புகைகளில் ஒன்றாகும் என்று மெட்சுல் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கருப்பு மழை என்றால் என்ன? பட மூலாதாரம்,TIAGO KLUG படக்குறிப்பு, மக்கள் சேகரித்த கருப்பு நீரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. மெட்சுல் வானிலை மைய ஆய்வாளர் எஸ்டேல் சியாஸ் கருப்பு மழை என்பது, புகையால் கொண்டு வரப்படும் புகைக்கரியுடன் நீர் கலக்கும் போது உருவாகும் என்று விளக்குகிறார். "புதைபடிம எரிபொருட்கள், இயற்கை பொருட்கள் முழுமையாக எரிபடாத போது உருவாகும் கருப்பு கரிம நுண் துகள்களால் ஆனது புகைக்கரி" என்று சியாஸ் கூறுகிறார். "இவை முழுமையாக எரியாதபோது, நுண்துகள்கள் புகை மூலம் வளிமண்டலத்திற்குள் செல்கின்றன." 1,500 மீட்டர் உயரத்தில் புகை எங்கு செல்கிறது என்பதை காற்று வீசும் திசையே தீர்மானிக்கிறது என்று அவர் விளக்குகிறார். "காற்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீசும்போது, புகை அர்ஜென்டினா, உருகுவே மற்றும் தெற்கு பிரேசிலை நோக்கி செல்கிறது." மேகத்தின் ஈரப்பதத்துடன் கலந்து, கருப்பு கரிம நுண்துகள்கள் ஒடுக்க (ஒடுக்கம்-வாயு நிலையில் உள்ள நீர், திரவ வடிவில் மாறுவது) அணுக்கருக்களாக செயல்பட முடியும் , அதைச் சுற்றி மழைத்துளிகள் உருவாகின்றன. "மழை வரும் போது, வளிமண்டலத்தில் உள்ள கருப்பு கரிமத்துடன் கலந்து வருவதால், கருப்பு மழை பொழிகின்றது", என்கிறார் சியாஸ். கருப்பு மழை உடல் நலத்துக்கு ஆபத்தா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருப்பு மழையால் பீதியடைவதை தவிர்ப்பது முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மெட்சுல் வானிலை மைய ஆய்வாளர் கருப்பு மழை மாசுபட்டது, ஆனால் அது எப்போதும் நச்சுத்தன்மை கொண்டதாக இருக்காது என்று கூறுகிறார். "இது கருப்பு கரிமத்தை கொண்டிருப்பதால், பூமியின் மேற்பரப்புகளை அழுக்காக்கும்" என்று சியாஸ் கூறுகிறார். பெலோடாஸ் பெடரல் பல்கலைக்கழகத்தின் (UFPel) நீர் பொறியியல் பேராசிரியர் கில்பர்டோ கோலாரஸ், மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, நீர் மாசுபாடு தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்கிறார். "கருப்பு மழை சில சேதங்களை ஏற்படுத்தக்கூடும், ஆனால் இந்த புகை காடுகள் மற்றும் புல்வெளி நிலங்களை எரிவதால் ஏற்படுவதாக நம்பப்படுகிறது" என்று கோலாரஸ் கூறினார். "இவற்றுடன் கூடுதலாக, நச்சுத் தன்மை கொண்ட தொழிற்சாலை கழிவுகள் இருந்தால், இது அமில மழையை உருவாக்கலாம். அது மிகவும் ஆபத்தானது" என்று அவர் மேலும் கூறினார். தெளிவாக மற்றும் சுத்தமாக இல்லாத மழைநீரை பயன்படுத்துவது குறித்தும் எச்சரிக்கை தேவை என்றும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உரிய வடிகட்டுதல் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு அது போன்ற நீரை பருகலாம் என்று அவர் தெரிவிக்கிறார். "சுத்திகரிப்பு நிலையங்கள் இருக்கும் நகர்ப்புறங்களில் மனித நுகர்வுக்கான நீர் இதனால் பாதிக்கப்படாது" என்று அவர் குறிப்பிடுகிறார். கருப்பு மழையால் பீதியடைவதை தவிர்ப்பது முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். "மக்களுக்கு தண்ணீர் தேவை, எனவே நாம் இவ்வளவு கண்டிப்பாக இருக்க முடியாது. இதனை நாம் பொறுப்பான முறையில் கையாள வேண்டும்" என்று கோலரஸ் கூறினார். "வெள்ளத்தின் போது (இந்த ஆண்டு மே மாதம்) இது போன்ற நிகழ்வுகளை நாங்கள் நிறைய அனுபவித்தோம். மக்கள் இவற்றை எதிர்கொள்கிறார்கள், அதனால் நாம் அவர்களை அக்கறையுடனும் கருணையுடனும் நடத்த வேண்டும்” என்கிறார் அவர். காலநிலை மாற்றம் இந்த மழை குறைந்த சேதத்தையே ஏற்படுத்தக் கூடும் என்றாலும், காலநிலை மாற்றத்தால் மக்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இந்த நிகழ்வு குறிக்கிறது என்று கோலாரஸ் கூறுகிறார். "போர்டோ அலெக்ரேவில் [ரியோ கிராண்டே டோ சுலின் தலைநகர்], குறைந்தபட்சம் ஞாயிற்றுக்கிழமை வரை பள்ளிகள் மாணவர்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று பள்ளிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இவற்றுடன் நாம் இனிமேல் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்" என்று அவர் கூறுகிறார். ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் மத்திய பிரேசிலில் நடந்த காட்டுத்தீயின் புகையால் ரியோ கிராண்டே டோ சுல் பகுதி பாதிக்கத் தொடங்கியது. "குறைந்த உயர ஜெட்கள்" அல்லது காற்றுப் பாதை என்று பிரபலமாக அழைக்கப்படும் காற்றால் எடுத்துச் செல்லப்பட்ட புகைக்கரி அர்ஜென்டினா மற்றும் உருகுவேயையும் அடைந்தது. பல நாட்களுக்கு, மூடுபனி காரணமாக சூரியன் முழுமையாக பிரகாசிக்காததால், “சிவப்பு சூரியன்” என்று அழைக்கப்படும் நிகழ்வை உருவாக்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES போர்டோ அலெக்ரே மற்றும் ரியோ கிராண்டே டோ சுலில் உள்ள பிற நகராட்சிகளில், குளிர்ந்த காற்று மற்றும் ஈரப்பதத்துடன் புகை இணைந்து குளிர்காலத்தின் முடிவில் அசாதாரண வெப்பத்தை உருவாக்கியது. அங்கு வெப்பநிலை 36ºC ஐ எட்டியது. கோவிட்-19 தொற்றுநோய் முடிவடைந்ததன் காரணமாக காணாமல் போன முக கவசங்கள் சமீபத்திய புகை காரணமாக போர்டோ அலெக்ரேவின் மக்களிடம் மீண்டும் காணப்படுகிறது. பள்ளிகளுக்கான அறிவுரைகள் மட்டுமல்லாமல், சுவாச பாதிப்பு அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவ உதவியை நாடவும், மக்கள் அனைவரும் நீர்சத்தை பராமரித்து, திறந்தவெளிகளில் செல்வதைத் தவிர்க்கவும், கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும் உள்ளூர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ரியோ கிராண்டே டோ சுலில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், சுவிஸ் நிறுவனமான IQAir செவ்வாயன்று போர்டோ அலெக்ரேவை உலகின் இரண்டாவது மிகவும் மாசுபட்ட பெருநகரமாக வகைப்படுத்தியது. முதல் இடத்தில், சாவோ பாலோ (பிரேசிலில் உள்ள நகரம்) உள்ளது. செயற்கைக்கோள் படங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை தயாரிக்கப்படுகிறது. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c78dd3w028lo
-
தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான்; தேர்தலைப் பகிஷ்கரிப்பதே சிறந்த வழி - கஜேந்திரகுமார்!
16 SEP, 2024 | 07:09 PM (நா.தனுஜா) தமிழ் மக்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதும், ஒற்றையாட்சியை வலியுறுத்தும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான். பொதுவேட்பாளருக்கு வாக்களிக்கும் பட்சத்தில், தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த்தேசிய அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கான சகல சதித்திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என எச்சரித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எனவே தமிழ்த்தேசியக் கொள்கைக்கு உண்மையாக இருப்பதற்கான வாய்ப்பு எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலமாக மாத்திரமே சாத்தியமாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இம்முறை ஜனாதிபதித்தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கவேண்டும் என வலியுறுத்திவரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் வகையில் இன்று திங்கட்கிழமை (16) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது, இம்முறை ஜனாதிபதித்தேர்தலைத் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கவேண்டும் என்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு பற்றி நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். இருப்பினும் இவ்விடயத்தைப் பொறுத்தமட்டில் நான் இங்கு இருந்திருந்தால் எனது நிலைப்பாடு வேறானதாக இருந்திருக்கும் என்று சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு சில கருத்துக்கள் பகிரப்பட்டுவருகின்றன. இருப்பினும் 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் கொள்கை ரீதியில் சில விடயங்களை நாம் தெளிவுபடுத்தியிருந்தோம். குறிப்பாக 2009 உடன் தமிழ்த்தேசிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தவிட்டதாகவே சிங்கள தேசம் நம்பியது. சிங்கள தேசியவாதத்தின் ஊடாக தமிழ்த்தேசியவாதத்தை முடிவுக்குக்கொண்டுவந்துவிடலாம் என நம்பப்பட்ட சூழலில், நாம் அதனை நிராகரித்து தமிழ்த்தேசிய தொடர்பான நிலைப்பாட்டை உறுதியாகக் கடைப்பிடித்துவந்திருக்கிறோம். அந்த வகையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்காமல், அதேநேரம் தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்தி, சிங்கள பௌத்த தேசியவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிக்காட்டக்கூடிய ஒரேயொரு தேர்தல் ஜனாதிபதித்தேர்தல் மாத்திரமேயாகும். ஏனெனில் இத்தேர்தலின் ஊடாக நாம் அடைந்துகொள்ளப்போவது எதுவுமில்லை. எனவே இத்தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் ஊடாக சிங்கள தேசியவாதம் உச்சத்தில் இருக்கையில் தமிழ்த்தேசியவாதம் மூலம் வலுவான அழுத்தத்தைப் பிரயோகிக்கமுடியும். அடுத்ததாக எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுக்கட்டமைப்பினரால் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் தமிழர்களுக்கு சாபக்கேடாக இருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை ஆதரித்தவர்களும், ரணில் விக்ரமசிங்கவே சிறந்த ஆட்சியாளர் எனக் கூறியவர்களுமே தற்போது அந்தப் பொதுக்கட்டமைப்பில் இருக்கிறார்கள். எனவே அவர்கள் பொதுவேட்பாளரைக் களமிறக்குவதன் ஊடாக தமிழ்த்தேசியத்தைக் கைவிட்டு, ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தத்தை முன்னிலைப்படுத்தக்கூடிய சூழலை உருவாக்க முயற்சிக்கிறார்கள். எனவே தமிழ் மக்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதும், ஒற்றையாட்சியை வலியுறுத்தும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான். பொதுவேட்பாளருக்கு வாக்களிக்கும் பட்சத்தில், தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த்தேசிய அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கான சகல சதித்திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என்பதை இப்போதே கூறிவைக்கிறோம். அதேபோன்று இங்கு நாம் பூகோள அரசியல் சூழலையும் கருத்திற்கொள்ளவேண்டும். மேற்குலக நாடுகளும், இந்தியாவும் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றியீட்டுவதையே விரும்புகின்றன. ஆனால் ரணில் விக்ரமசிங்கவை தமிழ் மக்களுக்கு சாதகமானவராகக் காண்பித்துவந்த நிலை மாறியிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், அவருக்கு தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதை இந்தியாவும், மேற்குலகமும் புரிந்துகொண்டிருக்கிறது. ஆகவே ஏனைய வேட்பாளர்களுக்கு அளிக்கப்படக்கூடிய வாக்குகளை ரணில் விக்ரமசிங்கவுக்கு அளிக்கச்செய்வதிலும் அல்லது ரணிலுக்குக் கிடைக்காத வாக்குகள் ஏனைய வேட்பாளர்களுக்கும் கிடைக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதையும் இலக்காகக்கொண்டு சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இவ்வாறானதொரு பின்னணியிலேயே இதுவரையில் சமஷ்டி என்ற வார்த்தையை உச்சரிக்காமல் இருந்த தமிழரசுக்கட்சி, இம்முறை தேர்தலில் சமஷ்டியை வலியுறுத்தி சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருக்கிறது. எனவே இன்றளவிலே தமிழ்த்தேசியக் கொள்கைக்கு உண்மையாக இருப்பதற்கான வாய்ப்பு எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலமாக மாத்திரமே சாத்தியமாகும். ஆகவே இனிவருங்காலங்களில் தமிழர்களை எவ்வகையிலும் ஏமாற்றமுடியாது என்பதை இந்தத் தேர்தலில் காண்பிக்கவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/193863
-
ரஷ்ய ராணுவத்தினரால் அடிமைகள் போல் நடத்தப்பட்டோம்: மீட்கப்பட்ட இந்திய இளைஞர்கள் வேதனை
16 SEP, 2024 | 02:56 PM புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்தினரால் தாங்கள் அடிமைகள் போல் நடத்தப்பட்டதாக தாய் நாடு திரும்பிய இந்திய இளைஞர்கள் கூறியுள்ளனர். ரஷ்யாவில் பாதுகாவலர் வேலை, உதவியாளர் வேலை என மோசடி கும்பல் இங்குள்ள 60 இளைஞர்களை ரஷ்யாவுக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் அனுப்பியுள்ளது. இவர்கள் அனைவரும் ரஷ்யாவின் தனியார் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிலர் டிரோன் தாக்குதலில் இறந்துள்ளனர். குஜராத்தைச் சேர்ந்த ஹமில் என்பவர் டிரோன் குண்டு தாக்குதலில் உயிரிழந்தார். அபாயமான சூழலில் சிக்கியுள்ளதை அறிந்த தெலங்கானாவைச் சேர்ந்த முகமது சுபியன் என்பவர் 7 மாதங்களுக்கு முன்பு ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் தங்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். வெளியுறவுத் துறை முயற்சி: இதையடுத்து ரஷ்ய ராணுவத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க அந்நாட்டு அரசிடம்வெளியுறவுத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்தது. தற்போது ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்தியர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் 4 பேர் தற்போது நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் தெலங்கானாவைச் சேர்ந்த முகமது சுபியன், கர்நாடகாவைச் சேர்ந்த சையத் இலியான் உசைனி ஆகியோர் கூறியதாவது: வேலை மோசடி: வெளிநாட்டு வேலை எனக் கூறி இந்தியாவில் இருந்து 60-க்கும்மேற்பட்ட இளைஞர்கள் மோசடியாக கடந்தாண்டு ரஷ்யா அனுப்பப்பட்டோம். நாங்கள் அனைவரும் ராணுவத்தில் சேர்க்கப்பட்டோம். காலை 6 மணியிலிருந்து தொடர்ந்து 15 மணி நேரம் எங்களுக்கு ஓய்வின்றி வேலை கொடுக்கப்பட்டது. பதுங்கு குழிகள் தோண்டுவது, துப்பாக்கி சுடுவது, கையெறிகுண்டுகளை வீசுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. குறைவான உணவு அளிக்கப்பட்டு கடினமான வேலைகள் வழங்கப்பட்டன. நாங்கள் சோர்வடைந்தால் துப்பாக்கியால் சுட்டு மிரட்டுவர். செல்போன்களை பறித்து வைத்துக்கொள்வர். அதிக மனஅழுத்தமான சூழ்நிலையில் நாங்கள் உக்ரைன் போரில் பணியாற்றினோம். எங்களுடன் வந்த குஜராத்தைச் சேர்ந்தஹமில் ட்ரோன் குண்டு தாக்குதலில் உடல் சிதறி உயிரிழந்தது, எங்களைஉலுக்கியது. இதனால் நாங்கள் எங்கள் குடும்பத்தினரை தொடர்புகொண்டு மீட்பதற்கு வேண்டுகோள் விடுத்தோம். நாங்கள் நாடு திரும்ப வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நடவடிக்கை எடுத்தார், இவ்வாறு அவர்கள் கூறினர். https://www.virakesari.lk/article/193854
-
மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
Wednesday, August 20, 2014 மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. இந்த வரிகளைக் கேட்டு வியக்காமல் எவ்வண்ணம் இருப்பது? அனைவரும் சமம் எனக் கொள்வது அத்தனை எளிதான காரியம் இல்லை! சிறியோரையிகழ்தலதனினுமிலமே என்பதைக் கூடக் கடைபிடிக்கலாம் ஆனால் பெரியாரை வியத்தலும் இலமே என்பதைக் கடைபிடிப்பது எப்படி என்ற கேள்வி முதலில் எழுந்தது. ஆனால் கவிதையை மீண்டும் மீண்டும் படிக்கும் போதுதான் கவியின் சொல் வீச்சும் கருத்தாழமும் தெரிகிறது! கவிதையின் முதல் வரி மிகவும் பிரசித்திபெற்றது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகளைப் பிரயோகிக்காத தமிழர்கள் உலகில் இல்லையெனவேகொள்ளலாம்! உள்ளூரில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் வாழ்ந்தாலும் சரி, எல்லா தமிழர்களும் தம் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த வரிகளைக் கையாளுகிறார்கள் !! சரி, முழுக்கவிதையும் உங்கள் பார்வைக்கு இதோ! யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே, மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. எளிமையாகத் தொடங்கினாலும் ஒவ்வொரு வரியிலும் கருத்தாழம் கூடிக்கொண்டேசெல்கிறது! நன்மை தீமைகள் பிறர் தர வரவில்லையென்றால் எப்படி வருகின்றன? நியூட்டன் விதி போல பிறர்கின்னா செய்தால் தமக்கு தானே வரும் என்பது உள்கருத்து! அதைக்கூட நம்பிக்கையின்பாற்பட்டதாகக் கொள்ளலாம்! ஆனால் துன்பப்படுத்தலும் அது தணிதலும் அதுபோலவேதான் என்ற வரி இன்னும் ஆழமானதென நினைக்கிறேன். ஒரு நிகழ்வு குறித்து துன்பப்படுவதும் துனபம் தணிவதும் பிறராலா அல்லது நாம் உள்மனத்தின் தெளிவாலா? இறப்பு புதிதில்லை, வாழ்தல் இனிதென்று கொண்டாடவுமில்லை! ஆஹா! மரணம் இயல்பானது, பாவத்தின் சம்பளமில்லை என்ற தெளிவு எத்தனை பெரியது! வாழ்வு இனிதென்று கொண்டாடாத அதே நேரத்தில் கோபம்/வெறுப்பினால் வாழ்வு இனியதல்லவென்றும் சொல்வதில்லை! அடேயப்பா! எத்தனை எதிரெதிரான கருத்துகளை ஒன்றுக்கொன்று முரணாமால் அடுக்கிச்செல்கிறார்! ஆற்றில் மிதக்கும் தெப்பம்போல வாழ்வுசெல்லும் என்று உணர்ந்ததால் புகழில் பெரியோரை வியத்தலும் சிறியோரை இகழ்தலும் இல்லை என்று முடிக்கிறார்! சிறியோரையிகழ்தல் அதனினுமிலமே என்பதை முன்னிலைப்படுத்தினால் யாவரும் கேளிர் என்பது கேலிக்குறியதாகிவிடும்! சிறியோர் என நினைத்தால் கேளிராய் நினைத்தல் எங்ஙனம்? பெரியோர் என்று மதிக்கலாம்; ஆனால் மலைத்துப்போனால் இயல்பாகப் பழக இயலாது போகலாம்! அன்பு ஒளிந்துகொள்ளும்; மாறாகப் பணிவு நாடகம் அரங்கேறும்! பெரியோராய்ப் பார்க்கப்படுபவர் நம்மைச் சிறியோராய்க் கருத நேரிடும்! கேளிராய் நினைத்தல் இயலாமல் போகும்! இது தவிர, "வியவற்க எஞ்ஞான்றும் தன்னை"என்ற தெளிவு இருந்தால் மட்டுமே மற்ற இரண்டும் கைகூடும்! இல்லாவிடில் இது ஒரு வெற்று வேடமாகவோ அல்லது கர்வத்தின் மூலகாரணமாகவோ முடியக்கூடும். அதுமட்டுமில்லை புகழ்பெறுவதும் பெறாமற்போவதும் வெளியுலகு சார்ந்தது. புகழ்பெற்றவர் எல்லோரும் அறிவுடையவர் என்று சொல்வதற்கில்லை! அறிவில் பெரியோர் சொன்ன கருத்துக்களை உணர்ந்து தெளிந்ததால் மாட்சியின் பெரியோரை வியத்தலும் சிறியோரை இகழ்தலும் இல்லை என்று கூறிய கூரிய அறிவை வியக்காமல் எப்படியிருப்பது!! அடேயப்பா, பாட்டின் ஒவ்வொரு வரியையும் கடைபிடிப்பதுடன், வள்ளுவரையும் சேர்த்துக் கடைபிடிக்கவேண்டும்! எண்ணிப்பார்க்கையில் மலைப்பாகத்தானிருக்கிறது! http://geethajustin.blogspot.com/2014/08/blog-post_20.html
-
நிலம் எனும் நல்லாள் - சு.வேணுகோபால்
நிலம் எனும் நல்லாள் - சு.வேணுகோபால் Monday, September 16, 2024 மனிதர்களுக்கு எங்கே சுற்றினாலும், எங்கே இருந்தாலும் அவர்களுக்கு சொந்த ஊரைப் பற்றிய ஏக்கம் மனதை விட்டுப் போகாத ஒன்று. அவர்களின் சிறு வயதில் சுற்றித் திரிந்த இடங்கள், பழகிய மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என அதுவொரு திரும்பிப் போக முடியாத காலம். சொந்த ஊரின் நினைவுகள் இருந்தாலும், தம் பிள்ளைகளுக்கு அந்த பொக்கிஷங்கள் கிடைக்கவில்லையே என கழிவிரக்கம் கொண்டாலும், கடைசியில் யாதும் ஊரே யாவரும் கேளிரே என இந்த நாவலில் நாயகன் பழனிக்குமார் உணர்கிறான். விவசாயம் செய்த தனது கிராமத்தில் இருந்து மதுரைக்கு வேலைக்குப் போனவன் பழனிக்குமார். அவனுடைய மனைவி ராதாவின் ஊர் கோவை. இரண்டு ஆண் குழந்தைகளோடு அவள் கோவையில் வசிக்கிறாள். பழனி அவ்வப்பொழுது விடுமுறையில் கோவைக்கு சென்று குழந்தைகளைப் பார்த்துவிட்டு வருவான். அவனுக்கு கோவை பிடிப்பதே இல்லை. கோவையின் பேச்சு வழக்கும், கொடுக்கும் மரியாதையையும் பார்த்து அவனுக்கு கோபம் வருகிறது. ராதாவோடு அடிக்கடி சண்டையும், அவனுடைய குறைவான வருமானமும் பிரச்சினை ஆகிறது. அவள் வேலைக்குப் போய்க்கொண்டு இருப்பதால் பழனியின் சொந்த ஊருக்கு வர மறுக்கிறாள். அவனுக்கோ தனது பிள்ளைகள் கிராமத்தில் வளராமல் இந்த ஊரில் வளர்கிறார்களே என்ற கவலை. மூன்று ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை என இருக்கும் பழனியின் குடும்பத்துக்கு விவசாயம்தான் தொழில். அவனுடைய ஒரு தம்பி குமரன் இறந்துவிட்டான். அவன் இருக்கும்பொழுது நிலமே கதி என்று கிடந்து நல்ல மகசூல் எடுக்கிறான். குடும்பம் கொஞ்சம் தலை நிமிர்ந்தது அவனால்தான். அவனின் இறப்புக்கு பின்னர் விவசாயம் செழிக்காமல் ஏனோ தானோ என்று நடக்கிறது. அண்ணன் பாஸ்கரன் இப்போது நிலத்தை பார்த்துக்கொள்கிறான். எந்த வருமானமும் அந்த நிலத்தில் கிடைக்காததால் அதை விற்றுவிட்டு கோவையில் வீடு கட்ட மனை வாங்கச் சொல்கிறாள் பழனியின் மனைவி ராதா. நகரத்தில் வீடு கட்ட வேண்டும் என்பது எல்லோருக்கும் உள்ள ஆசை போல ராதாவுக்கும் உண்டு. அவள் வேலைக்கும் போவதால் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து வைத்து வாங்கலாம் என நினைக்கிறாள். நிலத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்து கொண்டிருக்க, பழனியிடம் விவசாய பூமியை விற்றுவிட்டு வா என்கிறாள். விற்க கூட வேண்டாம், தென்னை, கரும்பு போல பணப்பயிர்களை போட்டால் வருமானம் வருமே என்கிறாள். அவள் சொல்வது எதுவுமே நடைமுறை சாத்தியம் இல்லை என்கிறான் பழனி. பிறகு வார்த்தைகள் தடித்து கை வைப்பதில் போய் முடிகிறது. நீயா நானா என தடித்த வார்த்தைகள் என்று எதற்கெடுத்தாலும் சண்டைகள் நிம்மதியை குலைக்கின்றன. குழந்தைகளுக்கு கூட அவனின் சொந்த ஊர் பிடிப்பதில்லை. மாமனார், மாமியார் மேல் வைத்திருக்கும் பாசத்தில் கொஞ்சம் கூட தன் தாயுடன் இல்லையே என வருத்தப்படுகிறான். கால்நடைகளுக்கான வைத்தியம் பழனிக்கு கொஞ்சம் தெரியும். கோவைக்கு வரும்பொழுது பக்கத்தில் இருக்கும் ஆடு மாடு வளர்ப்பவர்களுக்கு அவன் ஆலோசனை சொல்லி வைத்தியம் பார்க்கிறான். பையன்களை நொய்யல் ஆற்றுக்கு கூட்டிச் சென்று குளிக்க வைக்கிறான்.ஆறு குளம் போன்றவற்றிலும், இயற்கையுடனும் கலந்து பிள்ளைகள் வளர வேண்டும் என்ற ஆசை பழனிக்கு. ஆற்றில் குளித்து சளி பிடித்தால் ராதா அதற்கு அவனைத் திட்டுகிறாள். பையன்களை கெடுக்கிறாய் என்கிறாள். மொத்தத்தில் அவனுக்கு கோவையை விட்டு ஓடி விட வேண்டும் எனத் தோன்றுகிறது. நொய்யல் ஆற்றின் கரையில் ஒருநாள் அவன் அமர்ந்திருக்கும் பொழுது கொஞ்சம் மனநலம் சரியில்லாத ஒரு சிறுபெண் அவனை அண்ணா என அழைத்து அவனிடம் பேசுகிறாள். இன்னொரு நாள் குட்டிகளை ஈன முடியாமல் தவிக்கும் ஆட்டுக்கு வைத்தியம் பார்க்கிறான். அந்த ஆட்டுக்கு சொந்தக்காரி எங்கேயோ இருந்து வந்து கணவன் குடியினால் இறக்க ஆடு வளர்ப்பு, தோட்ட வேலை என தன் குடும்பத்தை நிலைநிறுத்த பிள்ளைகளோடு போராடிக் கொண்டிருக்கிறாள். அவர்களின் வறுமையைப் பார்த்த பழனி காசு வேண்டாம் என்கிறான். ஆட்டை பிழைக்க வைத்த அவனுக்கு ஏதாவது தர வேண்டும் என எண்ணி மறுநாள் காலையில் ஒரு வாழைத் தாரோடு அவன் வீட்டுக்கு கொண்டு வந்து கொடுக்கிறார்கள். பழனிக்கு இங்கேயும் நமக்கு சுற்றமும், சொந்தமும் உண்டு என எண்ணி மகிழ்கிறான். நாவலில் ஒரு வரி வருகிறது "எல்லா ஊர்களிலும் அபூர்வமான சிலர் வேருக்கு நீரூற்றி விடுகிறார்கள்" . அவனுக்கு இப்பொழுது இதுவும் சொந்த ஊரே, இங்கேயும் அவனுக்கு சுற்றம் உண்டு. சொந்த ஊர் என்பது உண்மையில் யாருக்குமே கிடையாது. நாவலில் வரும் பழனிக்கு கூட. அவனுடைய தாத்தா காலத்தில் அந்த கிராமத்தில் வந்து தங்கியவர்கள். நாம் எங்கே பிறக்கிறோமோ, எங்கே பால்ய காலங்களை கழிக்கிறோமோ அதுவே சொந்த ஊர் என நினைக்கிறோம். மற்றபடி சொந்த ஊர் என்பது நிரந்தரம் கிடையாது. அதனை பழனி உணர்ந்து கொள்கிறான். இனிமேல் ராதாவோடு அவன் இணங்கியே போவான். "நிலம் எனும் நல்லாள்" எங்கேயும் நம்மை ஆதரிக்க, அரவணைக்க காத்திருக்கிறாள். http://ippadikkuelango.blogspot.com/2024/09/nilamenumnallal.html
-
சீனாவின் ஷங்காயை தாக்கிய சூறாவளி; 400,000 பேர் வெளியேற்றம்
Published By: DIGITAL DESK 3 16 SEP, 2024 | 01:48 PM 1949 ஆம் ஆண்டுக்கு பின்னர் சீனாவின் ஷங்காய் நகரத்தை திங்கட்கிழமை (16) அதிகாலை சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியுள்ளது. இதனை தொடர்ந்து பாரிய காற்றும் வீசியதோடு, பலத்த மழையுடன் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கிருந்து 400,000 க்கும் அதிகமானவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்தோடு, விமானங்கள், படகுகள் மற்றும் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவில் மூன்று நாள் இலையுதிர்கால கொண்டாட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஷாங்காய்க்கு தென்மேற்கே 170 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியதால் ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை 180 க்கும் மேற்பட்ட விமானங்களை இரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 60,000 க்கும் மேற்பட்ட அவசர உதவியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஷாங்காயில் உதவி வழங்க தயாராக உள்ளதாக மாநில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், திங்கட்கிழமை 414,000 க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். புடாங் வணிக மாவட்டத்தில் அதன் மையத்திற்கு அருகில் பெபின்கா சூறாவளியினால் 151 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியது. இந்த சூறாவளி அருகில் உள்ள ஜெஜியாங், ஜியாங்சு மற்றும் அன்ஹுய் மாகாணங்களையும் பாதிக்கும் என அதிகாரிகள் எதிர்பார்த்தனர். பொதுவாக சீனாவின் தெற்கே மண்சரிவை தூண்டும் சக்தி வாய்ந்த சூறாவளிகளால் 25 மில்லியன் மக்களைக் கொண்ட ஷங்காய் அரிதாகவே தாக்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் சீனாவின் தெற்கு ஹைனான் தீவை தாக்கிய யாகி சூறாவளி தென்கிழக்கு ஆசியாவில் பேரழிவை ஏற்படுத்தியது. மியன்மாரில் குறைந்தது 74 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காணாமல் போயுள்ளனர். ஹைனானில் நான்கு பேர் உயிரிழந்துள்ளன. தாய்லாந்தில் 10 பேரும், பிலிப்பைன்ஸில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர். அத்தோடு வியட்நாமில் சூறாவளியால் ஏற்பட்ட ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி 230 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காணாமல் போயுள்ளனர். https://www.virakesari.lk/article/193845
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
டிரம்பை கொலை செய்ய முயற்சித்தவர் உக்ரைன் ஆதரவு செயற்பாட்டாளர் – அமெரிக்க ஊடகங்கள் தகவல் 16 SEP, 2024 | 11:47 AM அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினை கொலை செய்ய முயற்சித்தவர் உக்ரைன் ஆதரவு செயற்பட்டாளர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரயான் வெஸ்லே ரூத் என்ற 58 வயது நபரே டிரம்பினை கொல்வதற்கு திட்டமிட்டார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைனின் சார்பில் போரிடுவதற்காக வெளிநாட்டவர்களை சேர்க்க முயன்றார் உக்ரைனிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. புளோரிடாவின் கோல்ப் மைதானத்தில் டிரம்பினை கொலை செய்வதற்கு இந்த நபர் முயற்சிசெய்தார் என எவ்பி ஐ அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மைதானத்தில் புதர்கள் காணப்பட்ட பகுதிக்குள் ஏகே 47 துப்பாக்கி தெரிவதை பார்த்த இரகசிய சேவை பிரிவினர் உடனடியாக துப்பாக்கிபிரயோகத்தில் ஈடுபட்டனர். சந்தேகநபர் காரில் தப்பியோடினார் அவரை துரத்திச்சென்ற இரகசிய சேவை பிரிவினர் 38 மைல்களிற்கு அப்பால் அவரை கைதுசெய்தனர். https://www.virakesari.lk/article/193831
-
தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக திட்டம் தீட்டும் தமிழரசுக் கட்சி எம்.பிக்கள் : அம்பலமாகியுள்ள பல விடயங்கள் ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நிலையில் பொது வேட்பாளர் பதவியிலிருந்து நான் விலகி விட்டேன் மற்றும் வேறொரு வேட்பாளரை ஆதரிப்பதற்கு ஒப்புக்கொண்டேன் என்று வெளிவரும் தகவல்ளை நம்ப வேண்டாம் என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் (P. Ariyanethiran) தமிழ் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) மற்றும் சாணக்கியன் (Shanakiyan) ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் அதிருப்தியாக இருப்பதனால் என்னை அவதானமாக இருக்குமாறு பிரதி காவல்துறை மா அதிபர் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த ஜனாதிபதி தேர்தலில் எனக்கு பலத்த ஆதரவு கிடைக்கவுள்ளது என்பதை குழப்புவதற்காக பலர் செயற்பட்டு வருகின்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இம்முறை 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ள நிலையில் எனக்கு மட்டும் இவ்வாறான அச்சுறுத்தல் வந்துள்ளமை குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும். இதற்கான பதிலை மக்களே வாக்களிப்பு மூலமாக காட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார். நேற்று (15) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்ட அவர், தொடர்ந்தும் தெரிவிக்கையில்..... https://ibctamil.com/article/hreat-to-tamil-general-candidate-itak-mps-in-back-1726470223#google_vignette
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
சஜித்திற்கே வாக்களியுங்கள் - தமிழரசுக் கட்சி உயர்மட்டக்குழு Published By: DIGITAL DESK 3 16 SEP, 2024 | 02:35 PM எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற எமது கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்திற்கு அமைவாக வாக்காளர்கள் உரியவாறு தங்கள் வாக்கை அவருக்கு வழங்க வேண்டும் என தமிழரசுக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதித்தேர்தல் தொடர்பான தீர்மானம் மிக்க உயர்மட்ட கலந்துரையாடல் வவுனியா தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (16) நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன், சி.சிறிதரன், செயலாளர் ப.சத்தியலிங்கம், முன்னாள் மட்டுமாநகரசபை மேயர் சரவணபவன், சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டனர். குறித்த கலந்துரையாடலின் பின்னர் தமிழரசுக்கட்சியின் தீர்மான அறிக்கை கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜாவால் வாசிக்கப்பட்டது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கின்றது. இத்தேர்தலில் மூன்று பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் பரிசீலிக்கப்பட்டன. இத்தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்களின் பிரதேசங்களின் பொருளாதார மேம்பாடு பற்றி கவனம் செலுத்தப்பட்டது. இவ்விஞ்ஞாபனங்களில் புதிய அரசியலமைப்பு உருவாக்குதலும் ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுலாக்குவதும் ஆகும். ஒற்றையாட்சி மற்றும் புத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாதனவாகும். அதற்குப் பதிலாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஷ்டிக் கட்டமைப்பின் மூலம் தீர்வு காணப்படுதல் வேண்டும் என்பது பிரதானமாகும். முக்கியமாக இவ்விடயங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் கூட்டணி தலைவர் சஜித் பிரேமதாச, ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக ஆகியோருடன் நேரடியாக பேச்சுக்கள் நடைபெற்றன. தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ்ப் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு இணைப்பாட்சி அடிப்படையிலான சமஷ்டிக் கட்டமைப்பில் முழுமையான தன்னாட்சி சம்பந்தமாக தொடர்ந்து போராடி வந்துள்ளோம். ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் பொருட்டு தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தீர்வுக்கான பிரேரணை முன்வைக்கப்படுதல் வேண்டும். தமிழ்ப் பேசும் மக்கள் என்ற வகையில் முஸ்லீம் சமூகத்துடனும் மலையக தமிழர்களுடன் இணைந்து செயல்படுதல் வேண்டும். 13ஆவது அரசியல் திருத்தம் அரசியலமைப்பின் ஒற்றையாட்சிக்குட்பட்டது. இதனை அரசியல் தீர்வாக எம்மால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். இருப்பினும் தமிழினத்தின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றை அடையும் வரை இந்திய அரசின் நட்புறவுடன் 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நடைமுறையிலிருக்கும் மாகாண அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். 2002 டிசம்பரில் ஏற்பட்ட ஒஸ்லோ உடன்பாட்டில் சில அடிப்படைக் கோட்பாடுகளின் மீது இணக்கம் காணப்பட்டது. அக்கோட்பாடு பின்வருமாறு அமைந்தது. இந்த வரலாற்று நிகழ்வு இன்றும் பரிசீலனைக்குரியது. "ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ்பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப்பகுதிகளில் உள்ளக சுயநிர்ணய கொள்கையின் பிரகாரம் சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையிலமைந்த தீர்வொன்றை ஆராய்தல் என்பதாகும். சர்வதேச நியமங்களின் படியும், சர்வதேச சாசனங்களின் படியும் தமிழர்களாகிய நாங்கள் தனிச்சிறப்புமிக்க மக்கள் குழாமாவோம். ஒருமக்கள் குழாமான நாங்கள் பேரினவாதத்தின் பிடிக்கு ஆட்படாது கெளரவத்துடனும் சுயமரியாதையுடனும், சுதந்திரமாகவும், அச்சமின்றியும் நாட்டின் ஏனைய மக்களுடன் சமத்துவமுள்ள மக்களாக வாழ விரும்புகிறோம். 2015 இல் இலங்கை வந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 13இல் இலங்கையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது பின்வருமாறு கூறினார். “எமது சமூகத்திலுள்ள அனைத்துப் பாகங்களின் அபிலாசைகளுக்கு நாம் மதிப்பளிக்கும் போது எம்நாட்டின் ஒவ்வொரு பிரஜையின் சக்திகளையும் எமதுநாடு உள்வாங்கிக் கொள்ளும். மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் கிராமங்களை இவ்வாறு வலுவூட்டும் பொழுது நாடு மென்மேலும் மேம்படும் கூட்டுச் சமஷ்டியில் நான் திடமான நம்பிக்கை கொண்டவன்" என்பதையும் குறிப்பிட்டார். "இறையாண்மை என்பது மக்களிடமே உண்டு அரசிடம் அல்ல என்பதை நாம் வலியுறுத்துகிறோம். "ஜனாதிபதித் தேர்தல் முடிந்தபின் எங்களால் சமர்ப்பிக்கப்படும் அரசியலமைப்புக்கான அறிக்கையில் குறிப்பிடப்படும் தமிழ்த்தேசிய இனத்திற்கான அரசியல் தீர்வை அடைவதற்கும், தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கும் தீர்வுகாண வெற்றிபெறும் ஜனாதிபதியுடனும் அரசுடனும் வேண்டிய பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்போம்." தமிழ்த்தேச மக்கள் அரசியல் தீர்வைத் தீர்மானிப்பதிலும் அந்த இலட்சியத்தை அடைவதற்கும் இடர்களோ முரண்பாடுகளோ ஏற்படாமல் நல்லெண்ணத்துடன், ஒற்றுமை உணர்வுடன் தேர்தலின் போதும், எதிர்காலத்திலும் ஒன்றாக நின்று உழைப்போம் என திடமான தீர்மானத்தைக் கொண்டிருக்கிறோம்.' இந்த நோக்கத்தை நாடளாவிய ரீதியில் செயல்படுத்துவதற்கென நாம் கடந்த காலத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் எமது பெரும் பங்களிப்பை வழங்கி இருந்தோம். ஆனால் பெரும் ஏமாற்றங்களும், வெறுப்பும், வேதனைகளுமே எஞ்சியுள்ளன. இப்போதைய ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எம்மால் பரிசீலிக்கப்பட்ட மூன்று பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் எதுவும் எமது அடிப்படை அரசியல் கோரிக்கைகளை முழுமையாக உள்ளடக்கவில்லை என்பதைக் கருத்தில் கொள்கிறோம். இந்த விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் எமது தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற எமது அடிப்படைக் கோட்பாடுகளில் எந்தவித விட்டுக்கொடுப்பும் இல்லாத வகையில் ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனம் ஒப்பீட்டு ரீதியில் ஓரளவு திருப்தியாகக் காணப்படுகின்றது. எனவே, 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பின் போது ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற எமது கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்திற்கு அமைவாக வாக்காளர்கள் உரியவாறு தங்கள் வாக்கை அவருக்கு வழங்க வேண்டும் என அன்புடன் கோருகின்றோம் என்றுள்ளது. இதேவேளை இன்றையதினம் கலந்துகொண்ட ஆறு உறுப்பினர்களில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மாத்திரம் குறித்த தீர்மானத்திற்கு இணக்கப்பாடு தெரிவிக்காதநிலையில் ஏனைய ஐவரும் தமது இணக்கப்பாட்டினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/193852
-
வடக்கிற்கான புகையிரத சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
யாழ். கொழும்பு தொடருந்து சேவை - திணைக்களம் வெளியிட்ட தகவல் கொழும்பிலிருந்து (colombo) யாழ். காங்கேசன்துறைக்கு ஐந்தரை மணித்தியாலங்களில் செல்ல முடியும் என திட்ட பணிப்பாளர் சிந்தக ஜயசேகர தெரிவித்துள்ளார். அநுராதபுரம் – மஹவ பகுதியின் நிர்மாணப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், குறித்த பாதையில் மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் தொடருந்து பயணிக்குமென திட்டப்பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். 3,000 கோடி ரூபா (92 மில்லியன் அமெரிக்க டொலர்) செலவில் புனரமைக்கப்பட்ட அநுராதபுரம் – மஹவ தொடருந்து பாதை கடந்த (12) தொடருந்து திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. புனரமைப்புப் பணிகள் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தொடருந்து சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமென தொடருந்து திணைக்களம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்நிலையில், மஹவ சந்தியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த விரைவு தொடருந்து ராகம தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதன் காரணமாக பிரதான தொடருந்து பாதையில் செல்லும் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராகம ஊடாக செல்லும் அனைத்து தொடருந்துகளும் காலதாமதமாக இயங்குவதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://ibctamil.com/article/train-service-between-jaffna-to-colombo-1726379514#google_vignette
-
யாழில் தந்தை கைப்பேசி கொடுக்காததால் 13 வயதுச் சிறுவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
யாழில் 13 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் தவறான முடிவால் உயிர்மாய்ப்பு Published By: DIGITAL DESK 3 16 SEP, 2024 | 11:48 AM யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) வெவ்வேறு பகுதிகளில் மூவர் தவறான முடிவெடுத்து தமது உயிரை மாய்த்துள்ளார்கள். யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவர் , வீட்டார் வெளியில் சென்ற சமயம் வீட்டில் தனது உயிரை மாய்த்துள்ளார். பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த 13வயது சிறுவன், தொலைபேசியில் கேம் விளையாட தந்தையிடம் தொலைபேசியை கேட்ட போது தந்தை தொலைபேசியை கொடுக்காததால் வீட்டின் அறை ஒன்றுக்குள் சென்று தனது உயிரை மாய்த்துள்ளான். நெடுந்தீவு பகுதியில் 33 வயதுடைய இளைஞன் தனது உயிரை மாய்த்துள்ளான். https://www.virakesari.lk/article/193832
-
தமிழ்ப் பொது வேட்பாளர்: ரணிலின் வெற்றிக்காகவும் சுமந்திரனை தோற்கடிக்கவும் எடுக்கப்பட்ட ஆயுதமே!
(புருஜோத்தமன் தங்கமயில்) “...தாயகத்தில் இனியும் சம்பந்தன் காலத்து அரசியலை அனுமதிக்க முடியாது. முள்ளிவாய்க்கால் முடிவுகளின் பின்னர் தாயக அரசியல் – சமூக செயற்பாடுகளில் புலம்பெயர் தரப்புக்கள் ஆளுமை செலுத்த விரும்பின; அதாவது, முடிவுகளை எடுக்கும் தரப்புக்களாக இருக்க நினைத்தன. ஆனால், சம்பந்தனும் சுமந்திரனும் அதற்கு பெரும் தடையாக இருந்தனர். அவர்களின் நிலைப்பாடுகளை தாண்டி தாயகத்தில் எதுவும் செய்ய முடியாத நிலை இருந்தது. ஆனால், சம்பந்தனின் மறைவுக்குப் பின்னர், தாயகத்திலுள்ள அரசியல்வாதிகளை இலகுவாக கையாள முடிகின்றது. அவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு பக்கமாக பிரிந்து நிற்கிறார்கள். இப்போது, தாயக அரசியலை சுமந்திரன் ‘ஆதரவு – எதிர்’ அரசியலாக மாற்றுவதன் மூலம், இலகுவாக பிரித்தாளும் நிலை இருக்கின்றது. அதனால்தான், தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரத்தில் பெரும் அணியொன்றை கட்ட முடிந்தது. புலம்பெயர் தேசத்தில் தங்களுக்குள் அடித்துக் கொள்ளும் தரப்பினரும் கூட, பொது வேட்பாளர் விடயத்தில் ஒன்றாகவே நிற்கின்றனர். அதன்மூலம், சுமந்திரனுக்கு எதிரான அரசியலை பலப்படுத்தி, தங்களின் ஆளுமையை தாயகத்தில் செலுத்தலாம் என்று நம்புகின்றன...” என்று கனடாவில் வதியும் (தமிழ்த் தேசியச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபடும்) மூத்தவர் ஒருவர் இந்தப் பத்தியாளரிடம் குறிப்பிட்டார். ஓர் அரசியல் செயற்பாட்டினை முன்னெடுக்க நினைக்கும் தரப்பினர், தங்களின் தீர்க்கமான இலக்குகள் தொடர்பில் மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். அதுதான், அந்த அரசியல் செயற்பாடு – அதன் செல்நெறி தொடர்பில் மக்களை வழிப்படுத்தும். ஆனால், தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினரும், அவர்களின் ஜனாதிபதி வேட்பாளரும் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் எந்தவித தெளிவூட்டல்களையும் செய்கிறார்கள் இல்லை. மாறாக, தனிநபர் ஒருவருக்கு எதிரான அரசியலை கட்டிக் கூட்டி முன்னெடுக்கும் வேலைகளையே முன்னெடுத்து வருகின்றனர். பிரச்சாரக் கூட்டங்களிலும் ஊடகங்களிலும் வழங்கப்படும் பேட்டிகளிலும் கூட பொதுக் கட்டமைப்பின் கட்சியினரும், பேச்சாளர்களும், பத்தியாளர்களும் அதனையே பிரதிபலித்து வருகின்றனர். கிட்டத்தட்ட தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் சுமந்திரனுக்கு எதிராக திரளும் தரப்பினரின் கருவியாக மாறிவிட்டது. தேர்தல் பிரச்சார மேடைகளில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஏன் அவசியம் என்று பேசுவதைக் காட்டிலும், சுமந்திரனுக்கு எதிரான விமர்சனங்களே அதிகம் முன்வைக்கப்படுகின்றன. ஏற்கனவே, பொதுக் கட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர், தன்னுடைய பத்தியொன்றில் ‘எம்.ஜி.ஆர் – நம்பியார்’ திரை பிம்பத்தினை பிரதிபலிக்கும் ‘நாயக – வில்லன்’ கட்டத்தினை ‘பொது வேட்பாளர் எதிர் சுமந்திரன்’ நிலையோடு நண்பர் ஒருவர் ஒப்பிட்டு கூறியதாக எழுதியிருந்தார். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்ற விடயத்தை முதலில் அரங்கிற்கு தூக்கி வந்தவர்கள் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர். தமிழரசுக் கட்சியினர், ரெலோவையும் புளொட்டையும் வீட்டுச் சின்னத்தில் இனியும் அனுமதிக்க முடியாது என்ற நிலைப்பாட்டை எடுத்த தருணத்தில், புதிய அரசியல் கூட்டொன்றை அவர்கள் கட்டினார்கள். அதில், ஏற்கனவே தமிழரசுக் கட்சியினால் கூட்டமைப்புக்குள் இருந்து வெளித்தள்ளப்பட்ட ஈபிஆர்எல்எப்பும் இணைந்து கொண்டது. அத்தோடு ஜனநாயகப் போராளிகள், ஏற்கனவே ரெலோவில் இருந்து பிரிந்து சென்ற சிறீகாந்தா – சிவாஜிலிங்கம் அணியும் இணைந்தது. இந்தப் புதிய கூட்டின் மீது முன்னாள் ஆயுதக் குழுவினர் என்ற அடையாளம் இருந்தது. அந்தப் புதிய கூட்டின் தலைமையை எதிர்பார்த்த விக்னேஸ்வரன், அது கிடைக்காது என்ற நிலை வந்த போது, முன்னாள் ஆயுதக் குழுவினரோடு இணைந்து இயங்க முடியாது என்று கூறிவிட்டு விலகினார். முன்னாள் ஆயுதக் குழுவினர் என்ற அடையாளத்தை வைத்துக் கொண்டு தேர்தல் அரசியலில் கோலோச்சுவது அவ்வளவுக்கு சாத்தியமில்லை என்பது, அவர்களுக்கு நன்கு தெரியும். அதன் போக்கில், தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை அவர்கள் முன்மொழிந்தார்கள். அதன்மூலம் தமிழரசுக் கட்சிக்கு எதிரான அனைத்துத் தரப்புக்களையும் ஓரணியில் திரட்ட முடியும் என்று நம்பினார்கள். அது, காலப்போக்கில் நடந்தும் விட்டது. பொதுக் கட்டமைப்பின் திரட்சியை உறுதி செய்ததில் பல காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன. அதில், முதலாவது ரணிலின் ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக் கனவு. ராஜபக்ஷக்களுக்கு எதிராக ‘அரகலய’ வெற்றிபெற்றதும், ரணில் ஜனாதிபதியானார். அவர் ஜனாதிபதியானதும், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அக்கறையோடு செயற்படத் தொடங்கினார். அதற்காக அவர் கட்சிகளைப் பிரித்தும் சேர்த்தும், அணிகளை புதிதாக கட்டத் தொடங்கினார். அதற்காக கொடுக்கல் – வாங்கல்களை தாராளமாகக் செய்தார். இன்றளவும் அதனை தயங்காமல் செய்கிறார். அதில், தமிழ்த் தேசியக் கட்சிகளும், சில பாராளுமன்ற உறுப்பினர்களும்கூட சேர்ந்து கொண்டுவிட்டார்கள். அதன் ஒருகட்டமாகவே, தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை முன்வைக்க வேண்டும் என்று ரணில் தங்களுக்கு அழுத்தம் வழங்கியதாக பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களில் மூத்தவர் ‘ஒருவர்’ தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருக்கிறார். தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் முன்னாள் ஆயுத இயக்கங்களின் தலைவர்களில் அவர்தான் மூத்தவர். பொது வேட்பாளர் எண்ணக்கருவின் சூத்திரதாரி ரணில் என்பது அவரின் வாக்குமூலம். தமிழரசுக் கட்சிக்குள் எழுந்த தலைமைத்துவப் போட்டியும் அதன் பின்னரான உட்பிளவும், பொதுக் கட்டமைப்பினரை பலப்படுத்துவதில் இரண்டாவதாக தாக்கம் செலுத்தியது. தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ தேர்வில் சிறீதரன் வெற்றிபெற்றாலும், அவரினால் செயலாளர் உள்ளிட்ட மத்திய குழுத் தெரிவில் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடிவில்லை. அதனால், அவர் பொதுக் குழுவின் தீர்மானத்துக்கு எதிராக கொல்லைப்புற தீர்மானங்களின் வழியாக தெரிவுகளை மாற்றியமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால், அதனை நீதிமன்றங்களினூடாக தடுத்து நிறுத்திவிட்டார்கள். அத்தோடு, பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வே, கட்சியின் யாப்புக்கு எதிரானது, அதனால் புதிய தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால், தமிழரசுக் கட்சியின் பிளவு அதிகரித்தது. இப்போதுள்ள கட்சியின் மத்திய குழுவை சுமந்திரன் ஆளுமை செலுத்துகின்றார் என்பது வெளிப்படையானது. அப்படியான கட்டத்தில், கட்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான கருவியாக அல்லது எதிர்காலத்தில் புதிய பயணத்துக்கான ஏற்பாடுகளின் போக்கில் பொது வேட்பாளர் விடயத்தினை சிறீதரன் கையாள்கிறார். அதுதான், தமிழரசுக் கட்சிக்குள் இருந்தே பொது வேட்பாளரை தேர்வு செய்வதற்கும், அதற்கான ஒத்துழைப்பை வழங்க ஒரு தரப்பினரையும் கட்சிக்குள் இருந்தே திரட்டவும் முடிந்திருக்கின்றது. பொதுக்கட்டமைப்பினரையோ, பொது வேட்பாளரையோ தமிழரசுக் கட்சி ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வந்தது. அது, சுமந்திரனின் நிலைப்பாடுகளை பிரதிபலிப்பதாகவும் இருந்தது. அப்படியான கட்டத்தில் சுமந்திரனுக்கு எதிரான அணியைப் பலப்படுத்தும் கட்டத்தில் இணைய விரும்பிய தமிழரசுக்குள் இருக்கும் குழுவினர், பொதுக்கட்டமைப்பினை பலப்படுத்தினர். மூன்றாவது, ஏற்கனவே தேர்தல்களில் தோற்றவர்களும் அடுத்த தேர்தலில் எப்படி வெற்றிபெறுவது என்ற சிந்தனையோடு இருந்த தரப்பினருக்கும் பொது வேட்பாளர் விடயத்தினை இறுகப்பற்றினர். அதனால், பொதுக் கட்டமைப்பை அவர்களும் வரிந்து கொண்டார்கள். குறிப்பாக, முன்னாள் ஆயுத இயக்கங்களை, அவர்களின் இரத்தக்கறையை தன்னோடு பூசிக்கொள்ள முடியாது என்று கடந்த காலங்களில் வாதிட்ட விக்னேஸ்வரன் போன்றோர், பொதுக் கட்டமைப்புக்குள் அவர்களோடு கூடிக்குலாவும் நிலைக்கு வரவும் அது வித்திட்டது. நான்காவது, தமிழ்த் தேசிய அரசியலில் ஆளுமை செலுத்த விரும்பிய மூத்த பத்தியாளர்கள் குழாத்தினர். தமிழ்த் தேசிய அரசியல் தங்களைக் கேட்டுத்தான் செயற்பட வேண்டும். அதற்கு இணங்காத தரப்பினர், தமிழ்த் தேசிய அரசியலில் நீடித்திருப்பதற்கு இலாயக்கற்றவர்கள் என்பது, இந்த பத்தியாளர்களில் சிலரின் நிலைப்பாடு. அவர்களின் அரசியல் கொள்கை- கோட்பாடு – செல்நெறியில் பாரிய முரண்பாடுகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, சிலர் 13வது திருத்தச் சட்டத்தை தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக ஏற்க வேண்டும் என்று வாதிடுபவர்கள். இன்னும் சிலரோ, பொது வாக்கெடுப்பினூடாக சுயாதீன தேசம் அமைக்கப்பட வேண்டும் என்று எழுதுபவர்கள். (அதற்கான செல்நெறி – ஒழுங்கு பற்றி அவர்கள் ஒருபோதும் தெளிவுபடுத்தவில்லை). இன்னும் சிலரோ, எந்த அரசியல் நிலைப்பாட்டினை முன்னெடுப்பது என்று தெரியாமல் குழம்பிக் கொள்பவர்கள். ஆனால், இவர்கள் எல்வோரும் சம்பந்தன்– சுமந்திரன் எதிர்ப்புப் புள்ளியில் ஒருங்கிணைவார்கள். ஐந்தாவது, தாயக அரசியலில் ஆளுமை செலுத்தி முடிவுகளை எடுக்க நினைக்கும் புலம்பெயர் அமைப்புக்களும், தனி நபர்களும், சில வர்த்தகர்களும். இவர்களுக்குள்ளும் பல உள்முரண்பாடுகள் உண்டு. தாயக அரசியலில் ஆளுமை செலுத்துவதை சில தரப்பினர் ஒரு வரட்டு வாதத்துக்காக முன்னெடுக்கிறார்கள். அங்கும், சம்பந்தன் – சுமந்திரன் தங்களின் எதிர்பார்ப்பை ஒருபோதும் கண்டுகொண்டதில்லை என்ற எரிச்சல் பிரதானமானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக கஜேந்திரகுமார் தலைமையிலான ‘முன்னணி’யை மாற்றுச் சக்தியாக கட்டமைக்க நினைத்தார்கள். அது தோற்றுப்போன தருணத்தில் தமிழ் மக்கள் பேரவை ஊடாக விக்னேஸ்வரனை மாற்றுத் தலைவராக முன்னிறுத்தினார்கள். ஜனவசியத் தலைவர் என்று சித்தரித்து கட்டுரைகள் எல்லாம் எழுதப்பட்டன. ஆனால், அதுவும் தோற்றுப்போனது. இப்போது பொதுக்கட்டமைப்பின் பின்னால் திரண்டிருக்கிறார்கள். புலம்பெயர் வர்த்தகர்கள் சிலர் தங்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக தமிழ்த் தேசியக் கட்சிகளை தங்களின் கைப்பாவையாக ஆட்டி வைக்க நினைக்கிறார்கள். அதற்கு இணங்காத சம்பந்தன் – சுமந்திரனை கடந்த பொதுத் தேர்தலிலேயே எப்படியாவது அகற்றிவிட வேண்டும் என்று துடியாய் துடித்தார்கள். கோடிகளில் பணத்தினை இறக்கி வேலையும் செய்தார்கள். ஆனால், அது சாத்தியமாகவில்லை. அப்படியான நிலையில், வேண்டா வெறுப்பாகவேனும் பொதுக் கட்டமைப்பின் பின்னால் அவர்களும் இப்போது நிற்கிறார்கள். மேற்கண்ட ஐந்து காரணிகளில் வெளிப்படுவது ரணிலை வெற்றிபெற வைக்கும் உத்திகளும், சுமந்திரனின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ‘அவர்கள்’ நம்பும் தமிழ்த் தேசிய அரசியலை தங்களின் கட்டுக்குள் கொண்டுவருவதுமாகும். தமிழ்த் தேசிய அரசியலை தங்களின் சுய இலாப நோக்கங்கள், பதவிப் போட்டிகள், வர்த்தக நலன்கள், தன்முனைப்பு (ஈகோ) மனநிலை உள்ளிட்ட காரணிகளுக்காக கையாள முயல்வது என்பது அறமற்ற அரசியல். தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்துக்கு முன்னால் இப்போது திரண்டிருப்பவர்களும், அவர்களின் நடவடிக்கைகளும் நாளுக்கு நாள் அதனையே பிரதிபலிக்கின்றன. இவ்வாறான நிலை, மக்கள் மீட்சியை ஒருபோதும் சாத்தியப்படுத்தாது. தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினர், தங்களின் அரசியல் இலக்கு என்ன என்பது தொடர்பில் எந்தவித தெளிவுபடுத்தல்களையும் இதுவரை செய்தது இல்லை. அவர்கள் ஆரம்பத்தில், ஜனாதிபதித் தேர்தலை பொது வாக்கெடுப்பாக தமிழ்த் தேசிய அரசியல் களம் கையாள முடியும் என்ற வாதத்தை முன்வைத்தார்கள். ஆனால், அது அபத்தமானது என்ற விடயம் சுட்டிக்காட்டப்பட்டதும், அதனை கைவிட்டார்கள். சர்வதேசத்துக்கு செய்தி சொல்வோம் என்றும் கூறினார்கள். ஆனால், தமிழ் மக்களின் செய்தி என்ன என்பது, கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே குரலில் சொல்லப்பட்டுவிட்டது என்பதும், புதிதாக என்ன செய்தியை சொல்வது என்று கேள்வி எழுப்பியதும், அதனையும் கைவிட்டார்கள். இப்போது, இறுதியாக அவர்கள் எடுத்துக் கொண்டிருப்பது தமிழ்த் தேசிய வாக்குளை ஓரணியில் திரட்டுவது என்ற வாதம். தமிழ்த் தேசிய அரசியலில் நம்பிக்கையிழந்துள்ள மக்களை, மீண்டும் நம்பிக்கை அரசியலின் பக்கத்திற்கு நகர்த்துவது என்பது எப்போதும் முக்கியமானது. ஆனால், அந்த நம்பிக்கை அரசியலை எதன் மேல் கட்டமைக்கிறோம் என்ற தெளிவு இருக்க வேண்டும். மேம்போக்கான எந்த அரசியல் அணுகுமுறையும் எதனையும் பெற்றுத் தராது. தமிழ்த் தேசிய வாக்குகளை ஓரணியில் திரட்டுவதற்காக தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தியதாக சொல்லிக் கொள்ளும் பொதுக் கட்டமைப்பினர், தமிழரசுக் கட்சி என்ற பிரதான கட்சிக்குள் இருந்து நபர்களை உடைத்து எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. அது என்ன வகையிலான ஒற்றுமையை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. பொது வேட்பாளரை முன்னிறுத்துதல் என்பது அடிப்படையில் ரணிலின் வடக்கு கிழக்கு முகவர்களின் தேர்வாகவும், சுமந்திரனுக்கு எதிரான அரசியலை ஓரணியில் கட்டமைக்கும் நோக்கத்தையுமே இறுதிப்படுத்தியிருக்கின்றது. ஏனெனில், அந்த அணியினரின் நடவடிக்கைகளே அதனை அப்பட்டமாக பிரதிபலிக்கின்றன. கொள்கையும் இலக்குமற்ற ஒருங்கிணைவு என்பது, எந்தவித நல்ல மாற்றங்களையும் ஏற்படுத்தாது. கடந்த காலத்தில் தமிழ் மக்கள் பேரவை, எந்தவித இலக்குமற்று திரட்டப்பட்டு கைவிடப்பட்டு காணாமற்போனது. அது மாதிரியே, ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், பொதுக் கட்டமைப்பினரும் காணாமற்போவார்கள். அப்படியான ஒரு தரப்பினரை நம்பி தமிழ் மக்கள் வாக்களிப்பது என்பது அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது. தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது ஒரு அபத்தக்கனவு, அதனை நோக்கி திரள்வது 'தேசமாக திரள்வதாக' ஒருபோதும் கொள்ள முடியாது. ஏனெனில், அப்படியான காட்சிகளை பொதுக் கட்டமைப்பினரோ, அதற்குள் இருக்கும் கட்சியினரோ ஒருபோதும் பிரதிபலிக்கவில்லை. காலைமுரசு பத்திரிகையில் செப்டம்பர் 15, 2024 வெளியான பத்தி. http://maruthamuraan.blogspot.com/2024/09/blog-post_15.html
-
சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
Published By: DIGITAL DESK 3 16 SEP, 2024 | 11:00 AM "சுமந்திரம்" எனும் பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். யாழ்ப்பாணம் மானிப்பாயில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸாவின் பிரச்சார கூட்டத்தில் குறித்த பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து, பத்திரிகையை அறிமுகம் செய்ததுடன், கூட்டத்திற்கு வந்தவர்களுக்கும் பத்திரிகை இலவசமாக விநியோகிக்கப்பட்டது. குறித்த பத்திரிகையில் சஜித்தை ஏன் தமிழரசு கட்சி ஆதரிக்கிறது, ரணிலை ஏன் விழுத்த வேண்டும், தமிழ் பொது வேட்பாளர் அரசியல் தற்கொலை என சில கட்டுரைகள் வெளிவந்துள்ளன. https://www.virakesari.lk/article/193826