Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: DIGITAL DESK 7 08 AUG, 2024 | 02:12 PM யாழ். தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சூட்சுமமாக மறைத்து கடத்திச் செல்லப்பட்ட மரக்குற்றிகளுடன் டிப்பர் வாகனம் ஒன்றை இன்று வியாழக்கிழமை (08) காலை 9 மணியளவில் கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், இருவரை கைது செய்துள்ளனர். கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கொடிகாமம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் சிவலிங்கம் பிரபாகரன் அவர்களின் தலைமையின் கீழ் கொடிகாமம் பொலிஸ் நிலைய நிர்வாகப் பிரிவு பொறுப்பதிகாரியான தினேஸ் குணதிலக மற்றும் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் 44209 பொலிஸ் இலக்கமுடைய பொலிஸ் சார்ஜன்ட் தம்பிராஜா தர்மரட்னம் என்போருடன் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து குறித்த கைது நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். குறித்த, டிப்பர் வாகனத்தினுள் மரக்குற்றிகள் அடுக்கப்பட்டு அதற்கு மேல் சிறிய கற்கல் ஏற்றப்பட்டு சூட்சுமமான முறையில் கடத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 24 தேக்க மரக்குற்றிகளே கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பபொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் சாரதி உட்பட இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை நாளை வெள்ளிக்கிழமை (09) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/190571
  2. பட மூலாதாரம்,@TTHENARASU படக்குறிப்பு,தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 7 ஆகஸ்ட் 2024 தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வந்தது. இந்த வழக்கில் புதன்கிழமையன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு வழங்கினார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது செல்லாது என்றும் இந்த வழக்குகளை விசாரணை நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. வழக்குகளின் பின்னணி பட மூலாதாரம்,@TTHENARASU படக்குறிப்பு,தமிழ்நாட்டின் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தற்போது தமிழ்நாட்டின் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்துவருகிறார் தங்கம் தென்னரசு. 2006 - 2011 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியின்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் பதவி வகித்துவந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.74.58 லட்சம் அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி வழக்குப் பதிவுசெய்தனர். இந்த வழக்கில் அதே ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது. இந்த வழக்கை முதலில் மதுரையில் இருந்த ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் வசாரித்துவந்தது. பிறகு, 2014ல் இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த முதன்மை அமர்வு நீதிமன்றம் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றமாக மாற்றப்பட்ட பிறகு, 2019ல் அந்த நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இதற்குப் பிறகு இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென குற்றம்சாட்டப்பட்டவர்கள் மனு தாக்கல் செய்தனர். இதற்குப் பிறகு வழக்கின் விசாரணை அதிகாரி மீண்டும் வழக்கின் விசாரணையைத் துவங்கி, 2022 அக்டோபரில் துணை அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த துணை அறிக்கையில், அமைச்சர் மற்றும் அவரது மனைவியின் சொத்துகளின் மதிப்பு ஒரு கோடியே 71 லட்ச ரூபாய் என்றும், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல ஒரு கோடியே 81 லட்ச ரூபாய் அல்ல எனக் கூறப்பட்டது. அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரது வருவாய், 1.62 கோடி என குற்றப்பத்திரிகை கூறுகிறது. ஆனால், இந்தக் காலகட்டத்தில் அவரது உண்மையான வருவாய் 2.39 கோடி ரூபாய் என்றும் துணை அறிக்கை கூறியது. ஆகவே, இவர்களிடம் வருமானத்தைவிட 1.54 லட்ச ரூபாய்தான் கூடுதலாக இருக்கிறது என்றும் குற்றப்பத்திரிகையில் இருப்பதைப் போல ரூ. 74.85 லட்சம் அல்ல என்றும் துணை அறிக்கை கூறியது. லஞ்ச ஒழிப்புத் துறையின் இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட முதன்மை அமர்வு நீதிபதி எம். கிறிஸ்டோஃபர், அமைச்சரையும் அவரது மனைவியையும் 2022 டிசம்பர் 12ஆம் தேதி வழக்கிலிருந்து விடுவித்துத் தீர்ப்பளித்தார். சாத்தூர் ராமச்சந்திரன் மீதான வழக்கு பட மூலாதாரம்,@KKSSRR_DMK அதேபோல, தற்போது வருவாய்த் துறை அமைச்சராக இருக்கும் சாத்தூர் ராமச்சந்திரன் 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சிக் காலகட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்துவந்தார். அந்த காலகட்டத்தில் ரூ. 44.59 லட்சம் அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக சாத்தூர் ராமச்சந்திரன் மீதும் அவருடைய மனைவி ஆர். ஆதிலட்சுமி, அவருடைய நண்பர் கே.எஸ்.பி. சண்முகமூர்த்தி ஆகியோர் மீது 2011ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்குப் பதிவுசெய்தது. இந்த வழக்கில் விசாரணை எட்டு மாதங்களில் முடிந்து, மதுரையில் உள்ள ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 2012 செப்டம்பரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதற்குப் பிறகு இந்த வழக்கு 2014ல் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 2019 ஏப்ரலில் அங்கிருந்த முதன்மை அமர்வு நீதிமன்றம் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றமாக மாற்றப்பட்ட பிறகு, அந்த நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. 2019ல் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரும் தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து 2021 செப்டம்பரில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரி இது தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையின் முடிவில் இவர்கள் மீதான குற்றச்சாட்டு சரியானதல்ல என்று அறிக்கை தாக்கல் செய்தார். அமைச்சரிடமும் அவரது மனைவியிடமும் வருமானத்திற்கு அதிகமாக 1.49 லட்சம் ரூபாய் மட்டுமே இருப்பதாகவும் 44.59 லட்ச ரூபாய் இருப்பதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருப்பது சரியானதல்ல என்றும் அந்த அறிக்கை கூறியது. இந்த வழக்கை விசாரித்துவந்த நீதிபதி வி. திலகம், தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு 2023 ஜூலை 28ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் விடுவித்தார். தாமாக முன்வந்து வழக்குகளைப் பதிவுசெய்த நீதிபதி பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த நிலையில், 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதை தாமாக முன்வந்து விசாரிக்கப் போவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தார். இந்த வழக்கில் விசாரணை ஆகஸ்ட் 23ஆம் தேதி துவங்கியது. அதேபோல, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீதான வழக்கில் ஸ்ரீ வில்லிபுத்தூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், ஒத்திவைக்கப்பட்டு அந்த வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க ஆரம்பித்தது. 2023 ஆகஸ்டிலிருந்து செப்டம்பருக்குள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஐ. பெரியசாமி, கே. பொன்முடி, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பி. வளர்மதி ஆகிய ஆறு பேர் மீது தாமாக முன்வந்து வழக்குகளைப் பதிவுசெய்திருந்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 5ஆம் தேதி தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில் இந்த வழக்குகளை யார் விசாரிக்கலாம் என்பதை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே முடிவுசெய்யலாம் எனத் தீர்ப்பளித்தது. இந்த ஆறு வழக்குகளையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷே விசாரிக்கலாம் என சென்னை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி முடிவெடுத்தார். அதன்படி அந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று சென்னை உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அமைச்சர்களை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்துசெய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 11ஆம் தேதி அமைச்சர்கள் இருவரும் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் விசாரணை தினமும் நடக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/c8erl70pdr4o
  3. 08 AUG, 2024 | 12:02 PM தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 10 ம் திகதி தமிநாட்டில் உள்ள சிங்கள வணிகங்களை இழுத்து மூடும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மே 17 இயக்கம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் மே 17 இயக்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த வாரம் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்கள் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியது. இதில் மீனவர் திரு மலைச்சாமி கொல்லப்பட்டார். மற்றொரு மீனவர் திரு இராமச்சந்திரன் என்பவரை காணவில்லை. அவரது உடலும் கிடைக்கவில்லை. மற்ற இருவர் உயிருடன் தப்பி வந்துள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்கள் மீதுஇலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களின் தொடர்ச்சியாக இச்சம்பவம் நடந்துள்ளது. கொல்லப்பட்ட மீனவர் திருமலைச்சாமியின் உடல் கரைக்கு கொண்டுவரப்பட்டு அதிகாரிகளால் உடனடியாக புதைக்கப்பட்டுள்ளது. எவ்வித வழக்கும் பதியவில்லைஇ உடற்கூராய்வும் நடத்தப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கக் கூடிய செய்தியாக அமைந்தது. காணாமல் போன மீனவர் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. கொல்லப்பட்ட மீனவரின் குடும்பத்திற்கு அரசு சார்பாக ரூ.10 லட்சம் கொடுக்கப்பட்டு இப்படுகொலை விவகாரம் முடித்து வைக்கப்பட்டுள்ளது. அரசும் அதிகாரிகளும் இதற்கு காரணமாக இருந்த இலங்கை கடற்படையினர் மீது வழக்கு பதியவுமில்லைஇ எவ்வித விசாரணையும் கோரவில்லை. அப்பாவி மீனவர்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டிய ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் மீனவர்களின் படுகொலையை கைகழுவும் வேலையை தொடர்ந்து செய்வதையே தற்போதைய சம்பவம் உணர்த்துகிறது. இதனால்இ இந்தியாவின் நட்பு நாடான இலங்கையினால் 600க்கும் மேற்பட்ட தமிழ் மீனவத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டும் இதுவரை நீதி கிடைக்கவில்லை. இப்படியாக எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் இந்த சம்பவமும் கடந்துபோனால் தொடர்ந்து இது போன்ற சம்பவம் அரங்கேறிக்கொண்டே இருக்கும். ஆகையால் இலங்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழ்நாட்டின் இலங்கையின் பொருளாதாரத்தை முடக்கும் வேலையை தொடங்குவோம். தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென 2013 ம் ஆண்டு தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள சிங்கள வணிகங்களை இழுத்து மூடும் போராட்டத்தை முன்னெடுப்போம். முதற்கட்டமாக சிங்கள நிறுவனத்தின் தமிழ்நாடு கிளைகளை ஆகஸ்ட் 10 அன்று மே பதினேழு இயக்கம் தோழமை அமைப்புகளோடு இணைந்து முற்றுகையிடும் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த போராட்டத்தில் தமிழர்கள் அனைவரும் தங்களை இணைத்துக்கொள்ளுமாறு மே 17 இயக்கம் அறைகூவல் விடுக்கிறது. தமிழர்களை கொலை செய்யும் சிங்களப் பேரினவாதத்தின் வணிகத்தை தமிழ்நாட்டிலிருந்து அகற்றுவோம். இலங்கையுடனான பொருளாதார உறவுகளை புறக்கணிப்போம். தமிழினம் காக்க ஒன்றுதிரள்வோம். https://www.virakesari.lk/article/190557
  4. விண்வெளிக்குச் சென்றுள்ள சுனிதா வில்லியம்ஸ் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையும் அவரது சக வீரரும் இந்த ஆண்டு முடியும் வரை பூமிக்குத் திரும்பமுடியாது என தகவல் வெளியாகியுள்ளது. சுனிதா வில்லியம்ஸும்(Sunita Williams) அவரது சக விண்வெளி வீரருமான வில்மோரும்(Butch Wilmore) மே 05 அன்று ஒரு சோதனைப் பயணத்திற்காக விண்வெளி சென்றனர். எனினும் அவர்களது விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காலமாக அவர்களால் பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. பூமிக்கு திரும்புவது சாத்தியமில்லை இந்த ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் திகதியே பூமிக்குத் திரும்பியிருக்கவேண்டிய நிலையில் தற்போது 2 மாதங்களாகியும் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. இந்நிலையில், அவர்கள் இப்போதைக்கு பூமிக்கு திரும்புவது சாத்தியமில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுடைய போயிங் ஸ்டார்லைனர் (Boeing's Starliner) விண்கலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை நிவர்த்தி செய்யும் முயற்சியில், பூமியிலிருந்தவண்ணம் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு அடுத்த ஆண்டு, அதாவது, 2025ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் வரை, பூமிக்குத் திரும்ப வாய்ப்பில்லை என நாசா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, எதிர்வரும் 18ஆம் திகதி “Crew 9” என்ற திட்டத்தின் கீழ், எலான் மஸ்க்கின் (Elon Musk) ஸ்பேஸ்-எக்ஸ் (SpaceX) நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 4 பேர் கொண்ட குழுவை அனுப்புவதற்கு நாசா தீர்மானித்துள்ளதாக ஏற்கனவே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/sunita-williams-space-return-postponed-1723108187
  5. ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்தானது Published By: DIGITAL DESK 3 08 AUG, 2024 | 12:04 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (08) இடம்பெற்றது. கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பங்காளி கட்சிகளுடன் ஒப்பந்தநம் கைச்சாத்திடப்பட்டது. அதற்கமைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, மனோ கணேஷன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்ரஸ், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தயாசிறி ஜயசேகர தரப்பு உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்ரஸ் இதற்கு முந்தைய தேர்தல்களில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்தே செயற்பட்டது. எனினும் இம்முறை அக்கட்சி அவ்வாறானதொரு தீர்மானத்தை அறிவிக்கவில்லை. அடுத்த வாரமே தாம் யாருக்கு ஆதரவு என்பதை அறிவிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/190556
  6. வாட்ஸ்அப் (WhatsApp) புதிய அம்சமொன்றை அறிமுகம் செய்யவுள்ள நிலையில் மெட்டா நிறுவனம் விரைவில் AI மூலம் வாட்ஸ்அப்பில் ஒரு பாரிய புதுப்பிப்பைக் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனடிபபடையில், வாட்ஸ்அப்பானது Meta AI Voice Chat உடன் அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பயனர்கள் குரல் மூலம் மெட்டா AI இடம் கேள்விகளைக் கேட்டால் அது உரை (Text) வடிவில் பதில்களை வழங்குவதாகவும் வாட்ஸ்அப், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் இந்த செயலியை எளிதாக அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணொளி அழைப்பு அத்தோடு, வாட்ஸ்அப் விரைவில் AR video calling, background edit, AI studio, user names, double tap to react ஆகிய அம்சங்களும் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், AR (Augmented Reality) காணொளி அழைப்பு (video call) அம்சம் விரைவில் அறிமுகமாவுள்ளதோடு இந்த அம்சம் பயனர்கள் காணொளி அழைப்புகளைச் செய்யும் போது வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குறித்த அம்சத்தின் உதவியுடன் காணொளியின் பின்னணியை மாற்றம் செய்ய முடியுமெனவும் இனி தொலைபேசி எண்ணுடன் வேலை செய்யாமல் பயனர் பெயர்களுடன் வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கும் அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/meta-al-technology-whatsapp-update-1723085496
  7. வலதுசாரி போராட்டக்காரர்களுக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்- பிரிட்டனில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிரிட்டனில் ஆயிரக்கணக்கான ‘இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள்’ அமைதிப் பேரணிகளை நடத்தினர். கட்டுரை தகவல் எழுதியவர், லூசி மானிங், மல்லோரி மோன்ச் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிட்டனை உலுக்கிய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நடந்து பிறகு, நேற்று (07-08-2024) இங்கிலாந்து முழுவதும் உள்ள நகரங்களின் வீதிகளில், அந்தக் கலவரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான ‘இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள்’ அமைதிப் பேரணிகளை நடத்தினர். வடக்கு லண்டன், பிரிஸ்டல் மற்றும் நியூகேஸில் உட்பட, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட இடங்களில் இவர்கள் ஒன்றுகூடி பெரும்பாலும் அமைதியான முறையில் ஊர்வலம் சென்றனர். "அகதிகள் இங்கு வரவேற்கப்படுகிறார்கள்" என்று கோஷமிட்டவாறு இவர்கள் சென்றனர். கடந்த வார நிகழ்வுகளுக்கு பிறகு, மேலும் 100க்கும் மேற்பட்ட ‘புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு போராட்டங்கள்’ நடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆயிரக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் தொடக்கப்புள்ளி, ஜூலை 29 அன்று சவுத்போர்ட்டில் மூன்று சிறுமிகளை கத்தியால் தாக்கி, கொலை செய்த நபர் ‘ஒரு முஸ்லிம் என்றும், அவர் படகு மூலம் பிரிட்டனுக்குள் நுழைந்த அகதி’ என்றும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவியதே ஆகும். இதன் தொடர்ச்சியாக பிரிட்டனில் கலவரங்கள் வெடித்தன. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது தமிழ்நாட்டில் என்ன நடந்தது- காமராஜர் என்ன செய்தார்?5 மணி நேரங்களுக்கு முன்னர் மசூதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் வசிக்கும் விடுதிகள், இந்த கலவரங்களின் போது குறிவைத்து தாக்கப்பட்டன. சில கடைகள் எரிக்கப்பட்டு, சூறையாடப்பட்டன . புதன்கிழமை (07-08-2024), இங்கிலாந்து முழுவதும் உள்ள வணிக வீதிகளில், மேலும் வன்முறை நிகழ்வுகள் நடக்குமோ என்ற அச்சத்தில் கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளை முன்கூட்டியே மூடிவிட்டனர். வழக்கறிஞர்களின் நிறுவனங்கள் மற்றும் ஆலோசனை நிறுவனங்களின் மீது தாக்குதல் நடக்கும் என வாட்சாப் குழுக்களில் எச்சரிக்கைகள் பகிரப்பட்டதால், குடியேற்றம் தொடர்பான வழக்குகளை கையாளும் வழக்கறிஞர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் நேற்று மாலையில் ஒரு சில கைதுகள் மட்டுமே பதிவாகின. இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இங்கிலாந்தில் அமைதியான முறையில் நடத்தப்பட்டன. ‘இனவெறி எதிர்ப்பாளர்கள்’ லிவர்பூல் நகரில் உள்ள புகலிட சேவை அலுவலகத்திற்கு வெளியே, அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான மக்கள் கூடினர். லண்டனில், வால்தம்ஸ்டோ மற்றும் நார்த் ஃபின்ச்லியில் நடந்த இனவெறி எதிர்ப்பு போராட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதாகவும், ‘பெரிய அசம்பாவிதம் இல்லாமல் பேரணிகள் கடந்து சென்றதாகவும்’ காவல்துறை கூறியது. சுமார் 1,500 ‘இனவெறி எதிர்ப்பாளர்கள்’ பிரிஸ்டலில் கூடினர். அங்குள்ள வீதிகள் தொழிற்சங்கவாதிகள், பாசிச எதிர்ப்பாளர்கள், கறுப்பின மக்கள் மற்றும் ஆசிய சமூகத்தின் உறுப்பினர்களால் நிரம்பியிருந்தன. பிரைட்டனில், குடியுரிமை மற்றும் அகதிகள் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு வழக்கறிஞர் அலுவலகம் இருப்பதாக நம்பப்பட்ட கட்டிடத்திற்கு வெளியே எட்டு புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பாளர்கள் கூடினர். ஆனால் அவர்களைச் சூழந்த 2,000 ‘இனவெறி எதிர்ப்பாளர்கள்’, அவர்களை அங்கிருந்து விரட்டினர். பின்னர் காவல்துறை அந்த எட்டு பேர் இருந்த இடத்தைச் சூழ்ந்தது. நியூகேஸில் , சுமார் 1,000 ‘இனவெறி எதிர்ப்பாளர்கள்’, பெரும்பாலும் முஸ்லிம்கள், பீக்கன் மையத்தின் முன் இருந்த நடைபாதையில் கூடினர். அங்குள்ள குடியேற்றச் சேவை வணிக மையம் ஒன்று தாக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டதால் அவர்கள் அங்கு கூடினர். சமூக ஊடகங்களில் பரவிய, உறுதிப்படுத்தப்பட்ட காணொளி ஒன்றில், அக்ரிங்டன் நகரின் வீதிகளில் மக்கள் முஸ்லிம்களைக் கட்டித் தழுவி ஆறுதல் கூறியதைக் காண முடிந்தது. சவுத்தாம்ப்டனில், க்ரோஸ்வெனர் சதுக்கத்தில் கூடிய 300 முதல் 400 பேர், "இனவெறியர்களே திரும்பிச் செல்லுங்கள்" மற்றும் "இங்கு இனவெறிக்கு இடமில்லை" என்று கோஷமிட்டனர் . சுமார் 10 புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பாளர்களும் அந்தப் பகுதிக்கு வந்தனர், இரு குழுக்களும் காவல்துறையினரால் தனித்தனியாக தடுத்து நிறுத்தப்பட்டனர். ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டார். ஷேக் ஹசீனாவை காத்து நின்ற இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்கள் - நடுவானில் என்ன நடந்தது?7 ஆகஸ்ட் 2024 Anti-racism protesters rally after week of riots9 மணி நேரங்களுக்கு முன்னர் இனவெறி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகொண்ட 20 வயது செவிலியர் நாசர், தனது சக செவிலியர்கள் யாரும் ஆங்கிலேயர் அல்ல என்றும், தனது ஆதரவைக் காட்ட இங்கு வந்துள்ளதாகவும் கூறினார். "எனது அப்பா அம்மா பிரிட்டனில் பிறக்கவில்லை, நான் இங்கே பிறந்தேன். எனது பெற்றோர் வாழ இங்கு வந்தார்கள் என்ற காரணத்திற்காக என் மீது தாக்குதல் நடத்த நான் அனுமதிக்கமாட்டேன்" என்று அவர் கூறுகிறார். "எங்கள் எதிர்ப்பு அவர்களை பயமுறுத்துகிறது. அதனால்தான் அவர்கள் (கலவரக்காரர்கள்) வரவில்லை" என்று கிளாரா செர்ரா லோபஸ் கூறுகிறார். "அமைதியை, அன்பை விரும்புபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் (கலவரக்காரர்கள்) தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். குடியேற்றம் இல்லாமல் பிரிட்டன் கிடையாது." என்று கூறினார் கிளாரா. பக்கிங்ஹாம் அரண்மனை கூறியது என்ன? பட மூலாதாரம்,NIKI SORABJEE படக்குறிப்பு,இங்கிலாந்தின் பல பகுதிகளில் ‘இனவெறி எதிர்ப்பு போராட்டங்கள்’ பெரும்பாலும் அமைதியாக நடைபெற்றன கடந்த வாரம் நடைபெற்ற கலவரங்கள் தொடர்பாக மொத்தம் 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டு, சிலர் ஏற்கனவே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. சவுத்போர்ட் மற்றும் லிவர்பூல் நகரங்களில் வன்முறைச் சீர்கேட்டில் ஈடுபட்டதற்காக மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது . புதன் மாலை பெரும்பாலும் அமைதியாக நடத்தப்பட்ட பேரணிகள், கடந்த வார கலவரங்களின் கைதுகள் மற்றும் தண்டனைகள், இனவெறி வன்முறைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் மக்கள் என பிரிட்டனில் பல விஷயங்கள் நடந்துள்ளன. ஆனால், இவையெல்லாம் புதிய கலவரங்களைத் தொடங்க வேண்டும் என திட்டமிடும் கும்பல்களிடம் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பதே கேள்வி. குரோய்டன் நகரில் ஒரு நிகழ்வு பதிவாகியுள்ளது என்றும், ஆனால் அது போராட்டங்களுடன் தொடர்புபடுத்தப்படவில்லை என்று லண்டன் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகம் கூறியது. சுமார் 50 பேர் கூடி, அதிகாரிகள் மீது பொருட்களையும், பாட்டில்களையும் வீசி எறிந்தனர். எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். பெல்ஃபாஸ்ட் நகரிலும் காவல்துறையினர் தாக்குதலுக்கு உள்ளாகினர் , அங்கு சில இடங்களுக்கு தீ வைக்கப்பட்டது மற்றும் அதிகாரிகள் மீது பொருட்கள் வீசப்பட்டன. புதனன்று, துணைப் பிரதம மந்திரி ஏஞ்சலா ரெய்னர், புலம்பெயர்ந்தோர் தங்கியுள்ள விடுதியான ‘ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்ஸை’ பார்வையிட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ரோதர்ஹாமில் உள்ள இந்த விடுதி தாக்கப்பட்டது. கலவரத்தில் ஈடுபடுபவர்கள் "சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவார்கள்" என்று உறுதியளித்த அவர், "அதிலிருந்து விலகி இருக்குமாறு” சாமானிய மக்களை வலியுறுத்தினார். போராட்டக்காரர்களுக்கு உண்மையில் ‘குடியேற்றம்’ குறித்து நியாயமான கவலைகள் உள்ளதா என்று கேட்டதற்கு, "வீதிகளில் இறங்கி, காவல்துறை மீது ஏவுகணைகளை வீசுவது, விடுதிகளைத் தாக்குவது ஆகியவை நியாயமான செயல்கள் அல்ல. இந்த நாட்டில் அத்தகைய அரசியலை நாங்கள் ஊக்குவிக்கவில்லை. அப்படி செய்பவர்களுக்கு இங்கு இடமில்லை. இது மூர்க்கத்தனம்.” என்று கூறினார் ஏஞ்சலா ரெய்னர். பக்கிங்ஹாம் அரண்மனையின் கூற்றுப்படி, நாடு முழுவதும் அரங்கேறும் நிகழ்வுகள் குறித்து அரசர் சார்லஸுக்கு தினமும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் உடனடியாக அவர் இதில் தலையிடுவோ அல்லது பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்லவோ மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://www.bbc.com/tamil/articles/c303l26dz3ro
  8. மன்னார் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை நேற்றைய தினம்(7) மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்பவர்களின் உறவுகள் சார்பாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மன்றில் முன்னிலையாகியுள்ளனார். பிறப்பிக்கப்பட்ட கட்டளைகள் விசாரணைகளின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்பவர்களின் உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் கருத்து தெரிவிக்கையில், “இந்த வழக்கு விசாரணையின் போது நீதி மன்றத்தால் பல்வேறு கட்டளைகள் பிறப்பிக்கப்படிருந்தது. குறிப்பாக பேராசிரியர் ராஜ்சோம தேவ் தலைமையில் சதோச மனிதபுதைகுழி பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஸ்கான் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், சதோச மனித புதை குழியில் மீட்கப்பட்ட என்புகள் மற்றும் பிற பொருள் மாதிரிகளை வெவ்வேறாக பிரிப்பாதற்கான தீர்மானமும் எட்டப்பட்டுள்ளது. அத்துடன், என்புகளை பால், வயது, மரணத்திற்கான காரணம் தொடர்பில் ஆரய்வதற்கான செய்ற்பாடுகளை முன்னெடுக்குமாறும் ஏனைய சான்று பொருட்களை பேரசிரியர் ராஜ் சோம தேவியிடம் கையளிக்குமாறும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த வழக்கு மேலதிக விசாரணைகளுக்காக அக்டோபர் மாதம் திகதியிடப்பட்டுள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த வழக்கு விசாரணையில் அகழ்வுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ச, பேராசிரியர் ராஜ்சோம தேவ், காணாமல் போனோர் சங்க பிரதிநிதிகள்,OMP அலுவளக பிரதிநிதிகள் உள்ளடங்கியோர் கலந்து கொண்டுள்ளனர். https://tamilwin.com/article/case-investigation-related-to-mannar-human-burial-1723100289
  9. வவுனியாவில் காசோலை மோசடி வழக்கில் ஆசிரியை ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம் 37 இலட்சம் ரூபாய் பணத்தை பாதிக்கப்பட்டவருக்கு செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் குறித்த ஆசிரியையின் அரச தொழிலுக்கு பங்கம் ஏற்படாத வகையில் 5 வருட கால ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு 6 காசோலைகளை வழங்கிய மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் ஆசிரியை ஒருவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார். மோசடி இந்நிலையில், நீதிபதி இளஞ்செழியன் அரச செலவாக 50 ஆயிரம் ரூபாவும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 37 இலட்சம் ரூபாவும் செலுத்த தவறும் பட்சத்தில் 18 மாத கால கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கி நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் 2006 ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டமை மன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அரச சட்டவாதி ஆறுமுகம் தனுசன் வழக்கு தொடுத்தவர் தரப்பில் வழக்கை நெறிப்படுத்தியுள்ளார். ஆசிரியை, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 10 இலட்சம் ரூபாய் பணத்தை நீதிமன்றில் வைத்து வழங்கியுள்ளார். சிறைத்தண்டனை இதற்கிடையில் 3 மாத காலத்தில் மீதி தொகையை செலுத்த வேண்டும் என நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் பணம் செலுத்த தவறினால் உடனடியாக சிறைத்தண்டனை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் 14 ஆண்டுகள் ஏமாற்றியது போதும் இனியும் பணம் செலுத்தாது ஏமாற்ற முடியாது என தெரிவித்து 3 மாத காலம் அவகாசம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். https://tamilwin.com/article/fraudulent-act-of-a-woman-in-vavunia-1723084614
  10. மிருசுவில் என நினைக்கிறேன் அண்ணை. வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஆறு பேருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வசித்து வந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் என்பவரை 2013 ஆம் ஆண்டு கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன ஆகியோருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. வாஸ் குணவர்தன மற்றும் ஏனைய பிரதிவாதிகள் தம்மை அந்த தண்டனைகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளதுடன் இன்று (08) இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது. மரண தண்டனை இந்தத் தீர்ப்பை நீண்ட விசாரணைக்குப் பின்னர், உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒரு உப பொலிஸ் அதிகாரி மற்றும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களும் உள்ளடங்குவர். https://tamilwin.com/article/six-people-including-vaas-gunawardena-to-death-1723103562
  11. தொடருங்கோ அண்ணை. சுவியண்ணை கைலாசா போல இடம் தேடுறார், நல்ல தீவாகப் பார்த்து பேசி முடிச்சுக் குடுங்கோ!!
  12. 08 AUG, 2024 | 11:06 AM ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை விட்டுப் பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் ஒன்றிணையுமாறு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (07) புதன்கிழமை காலை இடம்பெற்ற “ 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் களமிறங்கவுள்ள வேட்பாளர் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பில்” ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நான் 1970ஆம் ஆண்டு அரசியலிற்குள் நுழைந்தேன். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருக்கிறேன். எனது அனுபவத்தின்படி கூறுகின்றேன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக எமது கட்சியின் சார்பில் நாமல் ராஜபக்ஷ போட்டியிடவுள்ளார். எனவே, கட்சியை விட்டுப் பிரிந்து சென்றவர்களை நாட்டிற்காகவும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காகவும் கடந்த காலங்களைப் போன்று எம்முடன் இணைந்து செயற்பட நாம் அழைக்கின்றோம். இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில், என் மீது நம்பிக்கை வைத்துள்ள கட்சி உறுப்பினர்களுக்கு எனது மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல சவால்களுக்கு மத்தியில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயாராகியுள்ளேன். எனவே, எமக்கு ஒத்துழைப்பு வழங்கக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்களை அன்புடன் அழைக்கின்றோம். எமது வெற்றி எமது கட்சியின் வெற்றி ஆகும். ஆகவே நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள், வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு கட்சிக்காக நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ , ஜொன்ஸ்டன் பெர்னாண்டொ , ஜயந்த கொடகொட மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/190521
  13. எனக்கு யாருடனும் போட்டி கிடையாது; ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எவரையும் நான் ஒருபோதும் பாதுகாக்க மாட்டேன் - ஜனாதிபதி Published By: DIGITAL DESK 3 08 AUG, 2024 | 10:20 AM ஏனைய வேட்பாளர்கள் தமது எதிர்காலத்திற்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற அதேவேளை, நாட்டினதும் நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காகவே தான் போட்டியிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அந்த நிலையிலிருந்து நாட்டைக் காப்பாற்றி ஆளுமைமைய வெளிப்படுத்தியுள்ளதால் தனக்கு யாருடனும் போட்டி கிடையாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கம் ஆரம்பித்துள்ள பொருளாதார வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும் ஆணையை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களிடம் கோருவதாகவும் தெரிவித்தார். கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் புதன்கிழமை (07) நடைபெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியம் அல்லது கடன் வழங்குநர்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது எனவும், அவ்வாறு செய்தால் இலங்கைக்கு அந்த நிதியை இழக்க நேரிடும் எனவும் எனவே அனைத்து வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு உண்மையை கூற வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். சிலரால் ஊழலைப் பற்றி பேச மட்டுமே முடிகிறது. ஆனால் ஊழலைத் தடுக்க பல சட்டங்களை இயற்றியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மோசடி ஊடாகச் சம்பாதித்த சொத்துகள் தொடர்பாக விசாரிப்பதற்கான சட்டமூலத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தார். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எவரையும் தாம் ஒருபோதும் பாதுகாக்கவில்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது: ''ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்திய பின்னர் முதன்முறையாக ஊடகவியலாளர்களைச் சந்திக்கத் தீர்மானித்தேன்.வேறு எவரும் முன்வராத காரணத்தினால் தான் இன்று நான் ஜனாதிபதியாக செயற்படுகின்றேன். நான் ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்களுக்குள் நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுத்தேன். இலங்கையின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்றும் கூறினார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து கிரீஸ் மீள 10 வருடங்கள் ஆனது. இந்தோனேசியாவிற்கு 8 வருடங்கள் பிடித்தது. இந்த பிரச்சினையை இலங்கை எவ்வாறு தீர்க்கும் என சிலர் கேள்வி எழுப்பினர். ஆனால் இந்த பிரச்சினையை குறுகிய காலத்தில் தீர்க்க முடியும் என்று நான் நம்பினேன். இது தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடினேன். அதனால் அச்சமின்றி இந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். ஆனால் என்னை ஆதரிக்க எந்த ஒரு தனிக் கட்சியும் இருக்கவில்லை. பொதுஜன பெரமுனவின் ஒரு குழு எம்முடன் இணைந்தது. மற்றொரு குழு எதிர்க்கட்சிக்கு சென்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குழுவும் எம்முடன் இணைந்தது. சிலர் எதிர்க்கட்சியில் இணைந்தனர். நான் கட்சியொன்றில்லாமல் ஆட்சி அமைத்து இந்தப் பொறுப்பை ஏற்றேன். இப்போது முதற்கட்ட பணிகளை முடித்துவிட்டோம். நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிக்க நாம் இப்போது வழி வகுத்துள்ளோம். அந்தப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம். இந்த நாட்டின் பொருளாதார முறைமை சீர்குலைந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும், வரிச்சுமை அதிகரித்ததால், சிலர் அதனைச் சுமக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதற்காக நான் வருந்துகிறேன். ஆனால் அதைச் செய்யாமல் நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுக்க முடியவில்லை. நாம் உண்மையைச் சொல்வதற்குத் தயாராக இல்லை என்பதே எமது நாட்டு அரசியலில் உள்ள சிக்கலாகும். ஸ்திரத்தன்மை இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது. பங்களாதேஷில் நடைபெறும் விடயங்களை தொலைக்காட்சியில் பார்த்தபோது, இந்த நாட்டைக் பொறுப்பேற்றிருக்காவிட்டால் எமது நாட்டின் கதி என்னவாக இருந்திருக்கும் என்று சிந்தித்தேன். பங்களாதேஷ் பிரதமருக்கு விலகுமாறு கூறப்பட்டாலும் நிர்வாகத்தை ஏற்க எந்த நிறுவனமும் இருக்கவில்லை. இராணுவம் தலையீடு செய்ய முயன்றாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். முஹம்மது யூனுஸை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர். அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டம் பிரதமராக வருவதற்கு எம்.பி.யாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. அந்த நிலை எமது நாட்டுக்கு வந்தால் என்ன நடக்கும்? எமது நாடு அதிர்ஷ்டகரமான நாடு. எப்படியாவது ஒரு அரசாங்கத்தை உருவாக்கினோம். அதனால்தான் இன்று ஜனாதிபதி தேர்தலை நடத்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் எதிர்காலத்தையே நீங்கள் தீர்மானிக்க வேண்டும். இந்தப் பாதையில் தொடர்ந்து முன்னேறி அபிவிருத்தியடைந்த நாடாக மாறப்போகிறோமா? நாட்டில் கஷ்டப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப் போகிறோமா? இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கப் போகிறோமா? இல்லையேல் பழைய அரசியலில் ஈடுபட்டு பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடைந்து வரிசை யுகத்திற்கு செல்லப் போகிறோமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். முகங்களைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நாட்டைக் காப்பாற்றும் வலிமையும், கொள்கையும் தங்களுக்கு இருக்கிறதா இல்லையா என்பதை தான் மக்கள் தீர்மானிக்க வேண்டும். இந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களின் எதிர்காலத்தையன்றி நாட்டின் எதிர்காலம் மற்றும் மக்களின் எதிர்காலத்தைத் தான் தீர்மானிக்க வேண்டும். இங்கிருந்து படிப்படியாக முன்னேறுவதா, நாட்டின் பிரச்சினைகளை பலத்துடன் தீர்ப்பதா அல்லது 2022இல் இருந்த நிலைக்கு செல்வதா என்பதை முடிவு செய்ய வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனும், எமக்கு கடன் வழங்கும் நாடுகளுடனும் செய்துள்ள ஒப்பந்தங்கள் எதனையும் மீற முடியாது. தற்போதுள்ள இந்த இலக்குகள் மற்றும் வரையறைகளை மாற்ற முடியாது. அப்படி செய்தால் எமக்கு நிதி கிடைக்காது. அந்த நிலையில் நமது நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும். பல்வேறு கட்சிகளும் வெவ்வேறு வாக்குறுதிகளை அளிக்கலாம். ஆனால் அவற்றை நிறைவேற்றுவது சாத்தியமில்லை. அந்த நிலையில் வெட் வரியை அதிகரிக்க நேரிடும். அதுதான் யதார்த்தம். உண்மையைச் சொல்லி நாட்டைக் காப்பாற்றத் தயாரா, பொய் சொல்லி ஆட்சியைப் பிடிக்கத் தயாரா என்பதைச் சிந்திக்க வேண்டும். எனவே, அரசாங்கம் ஆரம்பித்துள்ள இந்த வேலைத் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க மக்கள் ஆணையை கோருகிறேன்" என ஜனாதிபதி தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அளித்த பதில்களும் பின்வருமாறு: கேள்வி : தம்மிக்க பெரேரா போட்டியிலிருந்து விலகிய நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவில் உள்ள பெரும்பாலானோர் உங்களுடன் இருக்கிறார்கள். ஆனால் நாமல் ராஜபக்ச கடும் போட்டியாக இருப்பார் என்று எதிர்பார்க்கிறீர்களா? பதில் : போட்டி எப்படி அமையும் என்பது தெரியவில்லை. நான் யாருடனும் மோதலுக்கு வரவில்லை. நாட்டைக் கட்டியெழுப்பும் கொள்கையை மக்களிடம் முன்வைத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான வழியை காட்டவே முன்வந்துள்ளேன். அந்த கொள்கைகளை விரும்பினால் வாக்களிக்கலாம். மற்றவர்கள் சொல்வதை நான் பொருட்படுத்தப்போவதில்லை. நாமல் ராஜபக்ஷவும் பொதுஜன பெரமுனவும் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்தனர். அதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். இரண்டு வருடங்கள் ஒற்றுமையாக பணியாற்ற இணங்கினோம். இப்போது இரண்டு ஆண்டுகள் கடந்துள்ளன. வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பதா அல்லது முன்னிலைப்படுத்துவதா என்பதை அந்தக் கட்சி தீர்மானிக்க வேண்டும். அதற்கிணங்க, இப்போது நாம் நாட்டுக்கு உண்மைகளை சொல்ல வேண்டும். இது எனக்கான போராட்டம் அல்ல. எதிர்காலம் என்னவென்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். எனது திட்டத்தை ஏற்றால் அதற்கு வாக்களியுங்கள் அல்லது வேறொருவருக்கு வாக்களியுங்கள். கேள்வி : வாகன இறக்குமதிக்கு அனுமதியளிப்பதன் மூலம் அதற்கான வரியை அதிகப்படுத்தி ஏனைய பொருட்களுக்கான வரிகளை குறைக்க முடியுமா? பதில் : அடுத்த வருடம் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதியளிக்க முடியுமென நம்புகிறோம். வருமானம் ஈட்ட எமக்கு சுங்க வரி தேவைப்படுகிறது. மேலும் நமது வெளிநாட்டு கையிருப்பு போதுமான அளவை எட்டும் வரை காத்திருக்கிறோம். அப்போது வாகன இறக்குமதிக்கான வாய்ப்புகளை வழங்க முடியும். வாகன இறக்குமதியின் மூலம் கிடைக்கும் வரி வருமானம் அரசாங்கத்திற்கு ஒரு முக்கிய வருமான ஆதாரமாகும். கேள்வி : இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஏராளமான வேட்பாளர்கள் உள்ளனர். உங்களை மீண்டும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. இந்த நாட்டு மக்களுக்காக நீங்கள் என்ன வாக்குறுதியை வழங்குகிறீர்கள்? பதில் : அடுத்த 05 வருடங்களில் இந்த நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு சென்று நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம். அதை செயலில் நிரூபித்துள்ளேன். இம்முறை மட்டுமல்ல, 2001ஆம் ஆண்டிலும் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டையே நான் பொறுப்பேற்றேன். அப்போதும் அந்த பொறுப்பை நிறைவேற்றி இருக்கிறேன். எனவே, இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் திறன் என்னிடம் உள்ளது. ஆனால் ஏனைய வேட்பாளர்கள் வாக்குறுதிகளை மட்டுமே கொடுக்கிறார்கள். அந்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவது என்று அவர்களிடம் கேட்க வேண்டும். பழைய அரசியல் முறையில் செயற்பட்டதாலேயே இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, நாட்டு மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடத் தீர்மானித்தேன். கேள்வி : இந்த ஜனாதிபதித் தேர்தலில் நிறைவேற்று அதிகாரத்துடன் இருந்த இரண்டு ஜனாதிபதிகளின் புதல்வர்கள் போட்டியிடுகின்றனர். மறுபுறம் அரச அதிகாரம் கிடைக்காத இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த நான்கு முனைச் போட்டியில் மற்ற வேட்பாளர்கள் உங்களுக்கு போட்டியாக அமைவார்களா? பதில் : இவை எதுவும் எனக்கு சவால் இல்லை. நான் இந்த நாட்டு மக்களின் எதிர்காலத்திற்காக பணியாற்றுகிறேன். ஆனால் அவர்கள் தமது எதிர்காலத்திற்காக பணியாற்றுகிறார்கள். எனவே, முடிவை நீங்களே எடுக்க வேண்டும். அனுர திஸாநாயக்க எனது நல்ல நண்பர். அவருடன் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்தும் எதிராகவும் அரசியல் செய்துள்ளேன். ஜனாதிபதி பிரேமதாசவை பதவி நீக்கம் செய்ய திட்டமிட்ட போதும் நானே காப்பாற்றினேன். கேள்வி : தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம் தருவதாக வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் அந்த வர்த்தமானி தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது. இம்முறை அந்த 1700 ரூபா கிடைக்குமா? பதில் : தொழில் அமைச்சினால் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் சிலர் அதற்கெதிராக நீதிமன்றத்திற்கு சென்றனர். தற்போது அந்த நிறுவனங்கள் தொழில் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இலங்கையில் இன்று விவசாய பொருளாதாரம் உருவாகியிருக்கிறது. சில நிறுவனங்களினால் அந்தத் தொகையை வழங்க முடியும் என்றால் மற்றைய நிறுவனங்கள் அதைச் செய்யாமல் இருப்பது நியாயமற்றது. சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென கூறும் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட காணியை சம்பள அதிகரிப்பு வழங்கும் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த தொகையை தோட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். அவர்கள் கஷ்டங்களுடன் வாழ்கின்றனர். அதனால் லயன் அறைகள் உள்ள பகுதிகளை கிராமங்களாக கட்மைக்க நடவடிக்கை எடுப்போம். கேள்வி : IMF உடனான திட்டத்தின் எதிர்காலம், நடைமுறைச் செயற்பாடுகள், இதன் பின்னர் நாம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன? பதில் : சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். அதை செயல்படுத்த வேண்டும். இந்த உடன்படிக்கையை நாம் கடைப்பிடித்தால், எமக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. மாற்றுத் திட்டங்களைக் கொண்டிருப்பவர்கள் அவற்றை வௌியிட வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகள் மற்றும் நியதிகள் மாற்றப்படாது. அவர்கள் ஒவ்வொரு நாடுகளுக்குமான அளவுகோள்களை கொண்டுள்ளனர். யாராவது எதையாவது இலவசமாகக் கொடுக்க முன்வந்தால், VAT வரியை 25% ஆக அதிகரிப்பதன் மூலம் அதை ஈடுசெய்யலாம் என்று எண்ணினால், புள்ளிவிவரங்களை சீரமைக்க முடியும் என்று நினைத்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடுகளை எட்டலாம். ஆனால் இந்த அளவீடுகள், வருமான அளவு மற்றும் செலவு அளவுகளை எவராலும் மாற்ற முடியாது. கேள்வி : 2048 ஆகும் போது எமது நாடு வளர்ச்சியடைந்த நாடாக இருக்கும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் இவர்களில் பலர் 2048 இல் உயிருடன் இருப்பார்களா என்று பலரும் யோசிக்கலாம். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் அதற்காக என்ன செய்வீர்கள்? பதில் : இங்குள்ள பலர் 2048க்குள் ஏன் இல்லை என்று நினைக்கிறீர்கள். இன்று 40 வயதை உடையவர்கள் அப்போது 65 வயதாகுவார்கள். இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் 40 வயதுக்குட்பட்டவர்கள். அப்போது இன்று இருக்கும் பெரும்பாலானவர்கள் இருப்பார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. நாம் வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும். இந்தியா 2047இலும், சீனா 2029 இலும் வளர்ச்சியடைந்த நாடாக மாறும் என்று கூறியுள்ளன. 2048 என்று நாம் கூறுகிறோம். எனவே தமது நாடு வளர்ச்சியடைவதை விருப்பமில்லையா? 50 வருடங்களில் சிங்கப்பூர் வளர்ச்சியடைந்தது. இந்த அரசியல் முறையை நாம் மாற்ற வேண்டும். நாம் தொலை நோக்குடன் சிந்திக்க வேண்டும். பொய் சொல்வதால்தான் இன்று இந்த நிலையில் இருக்கிறோம். இதுதான் அரசியலில் உள்ள பிரச்சினை. அதனால் தான் இந்த ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். இதில் மாற்றம் செய்யப்பட வேண்டும். தனது கட்சியில் இருந்து கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசும்போது நாட்டின் அரசியல் வீழ்ச்சியடைகிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் மாற்றுப் பிரதமர். ஆட்சியைப் பொறுப்பேற்கும் படி கூறும்போது ஏன் ஓட வேண்டும்? அரசியல் கட்சித் தலைவர் ஒருவருக்கு ஆட்சி கிடைத்தால் அவர் அதை ஏற்றுக்கொள்வார். மாறாக கைவிட மாட்டார். ஜனாதிபதி பதவியை ஏற்குமாறு கேட்டபோதும் முடியாது என்று சபாநாயகரிடம் ஒப்படைக்குமாறு கூறினார்கள். பாராளுமன்றத்தை என்னால் நிர்வகிக்க முடியும் .ஆனால் என்னால் இதனை செய்ய முடியாது என சபாநாயகர் தெரிவித்தார். கேள்வி : உங்களுக்கும் நீதிமன்றத்துக்கும் இடையே ஏதேனும் முரண்பாடு உள்ளதா? சபாநாயகருக்கு பிரதம நீதியரசருடன் கலந்துரையாடி பொலிஸ் மா அதிபர் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு அண்மையில் நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். ஆனால் இன்று வரை அது நடக்கவில்லை. பதில் : அது அவர்கள் இருவருக்கும் இடையில் நடக்க வேண்டிய ஒன்று. நான் ஒரு பரிந்துரையையே செய்தேன். இதன்போது நீதிமன்றம் ஒரு விதமான தீர்ப்பை வழங்கியது. பாராளுமன்றம் மற்றுமொரு தீர்மானத்தை எடுத்தது. அன்று நீதித்துறைக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்ட போது, அப்போதைய சபாநாயகராக இருந்த அனுர பண்டாரநாயக்க தீர்மானம் ஒன்றை எடுத்தார். அது அங்கேயே முடிந்தது. நான், வெளியில் இருந்து இந்த பரிந்துரையை முன்வைத்தேன். அதனை செய்யலாமா வேண்டாமா என்பது அவரவர் முடிவு. சபா நாயகரையோ, பிரதம நீதியரசரையோ நான் வற்புறுத்த முடியாது. ஜனாதிபதி என்ற வகையில் நான் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவன். பாராளுமன்றம் வழங்கிய முடிவை நான் அமுல்படுத்த வேண்டும். கேள்வி : தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதை நீங்கள் எவ்வாறு கையாள்கிறீர்கள்? மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி திட்டங்கள் என்ன? பதில் : இரா. சம்பந்தனின் இறுதிக்கிரியையின்போது அதுபற்றி நான் தெளிவாக எடுத்துரைத்தேன். மேலும், தமிழ் எம்.பி.க்கள் மற்றும் ஏனைய கட்சிகளுடன், குறிப்பாக அமைச்சரவையுடன் கலந்தாலோசித்து, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அது குறித்து கலந்துரையாடுவோம். இதை நாம் அவசரமாக செயல்படுத்த வேண்டும். நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அரசியல் ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட வேண்டும். எனவே இந்த பிரச்சினைகளை நாம் முடிக்க வேண்டும். எரிபொருள் மற்றும் மின்சாரம் இல்லாமல் வரிசையில் நிற்கும் யுகத்திற்கு நாம் யாரும் மீண்டும் செல்ல விருப்பமில்லை. கேள்வி : அடுத்த தேர்தலில் மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள் என்று எவ்வளவு தூரம் நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்? பதில் : அது மக்களின் வாக்கு உரிமையைப் பயன்படுத்துவதற்கான உரிமை. பெரும்பான்மையானவர்கள் எனது முன்மொழிவுகளை ஆதரிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கும் தலைவர்கள் தேவையா அல்லது சவால்களை எதிர்கொள்ளப் பயந்து ஓடுகின்ற தலைவர்கள் தேவையா என்பதே வாக்காளர்கள் முன் உள்ள கேள்வி. கேள்வி : பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்கள் உங்களுடன் இருப்பதால் அவர்களுடன் இணைந்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? பதில் : என்னுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருந்தால், அவர்கள் மீது வழக்குத் தொடரலாம். அது எதையும் நான் நிறுத்தவில்லை.குற்றச்சாட்டு உள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதா இல்லையா என்பதை வாக்காளர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இதுவரை யாரும் செய்யாத வகையில் ஊழல் தடுப்புச் சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். குற்றச் செயல்களால் சம்பாதித்த சொத்துக்கள் தொடர்பான சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்படும். அனைவரும் ஊழல், ஊழல் என்று கூக்குரலிட்டாலும், அதற்கு என்ன செய்வது என்று யாரும் கூறவில்லை. ஆனால் நாம் அது தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளோம். எனது அடுத்த பயணம் ஜனாதிபதியாக வேண்டும் என்பதே. அவர்களின் அடுத்த பயணம் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதே. வாக்காளர்கள் அவர்களை நிராகரித்தால், அந்தப் பிரச்சினை அத்துடன் முடிவு பெறும். எனது ஆட்சிக் காலத்தில் யாரேனும் ஒரு எம்.பி.க்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கு நான் எவ்வித அழுத்தங்களையும் பிரயோக்கவில்லை. நான் யாரையும் பாதுகாக்கவில்லை. அரசியலில் நாம் வெவ்வேறு நபர்களுடன்செயற்படுகிறோம். அவர்கள் திருடர்களா இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பது சட்டம் சார்ந்த விடயமாகும். நான் பிரதமராக இருந்த காலத்தில் பல பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இறுதி முடிவு நீதிமன்றத்திடம் உள்ளது. இப்போது ஒரு அமைச்சர் மீது நீதிமன்ற வழக்குகள் உள்ளன. நான் அதை நிறுத்தச் சொன்னேனா? நான் அதனை நிறுத்தினால் தான் அது தவறு" என்று ஜனாதிபதி தெரிவித்தார். https://www.virakesari.lk/article/190552
  14. பங்காளதேஷில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்கிறது! பங்களாதேஷில் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பங்களாதேஷில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் நாளடைவில் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 100 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். நிலைமை மோசமானதை அடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் முகமது ஷஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார். மேலும், இடைக்கால அரசு அமைப்பது குறித்து முப்படைகளின் தலைவர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் குழுக்களின் பிரதிநிதிகள் கொண்ட 13 பேருடன் அந்நாட்டு அதிபர் ஷஹாபுதீன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸை இடைக்கால தலைவராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக முகமது யூனுஸ் அதிபர் முகமது ஷஹாபுதீனால் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் முகமது யூனுஸ் தலைமையில் இன்று இடைக்கால அரசு பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. https://thinakkural.lk/article/307515
  15. 07 AUG, 2024 | 06:53 PM (எம்.ஆர்.எம்.வசீம். இராஜதுரை ஹஷான்) அரசாங்கத்தின் வருமான வழிகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையைச் சரியாக முன்னெடுத்தால் அரச துறைகளில் இடம்பெறும் மோசடிகளைக் குறைக்கலாம் என்பதுடன் அரச வருமானத்தையும் அதிகரிக்கலாம் என சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (07) இடம்பெற்ற அரையாண்டின் அரசிறை நிலைப்பாட்டு அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்குத் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் முன்வைத்துள்ள அரையாண்டு அரசிறை அறிக்கையின் மூலம் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளதாகக் காணப்படுகின்ற போதும் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாகி இருக்கின்றனர். குறிப்பாக மின்சார சபை இலாபமடைந்துள்ளது. என்றாலும் மின் கட்டணம் செலுத்த முடியாமல் 20வீத தொழில் துறைகள் மூடப்பட்டுள்ளன. அந்த துறைகளில் ஈடுபடும் பல்வேறு தரப்பினர்கள் மின் கட்டணம் செலுத்த முடியாமல் சமூக நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அதேபோன்று எரிபொருள் துறையில் சிபெட்கோ, சினபோம் நிறுவனங்கள் என அனைத்து நிறுவனங்களும் இலாபமடைந்துள்ளன. அரசாங்கத்துக்கு பாரியளவில் வரி பணம் வழங்கி இருக்கிறது. இந்த வருடத்தின் இறுதி சில மாதங்களுக்குள் சுத்திகரிக்கப்பட்ட ஒக்டேன் 92 வகை பெற்றோல் ஒரு லீட்டர் 195ரூபாவுக்கும் டீசல் ஒரு லீட்டர் 200ரூபாவுக்கும் நிகரான விலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எஞ்சியது வரியும் இந்த நிறுவனங்களின் இலாபமுமாகும். டீசலுக்கான அதிக வரி, லாபம் பெறுவதால் எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பு ஏற்படும். போக்குவரத்து என்ற விடயத்துடன் பார்க்கையில், உணவு உற்பத்திக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது. இந்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதன் காரணமாகப் பல துறைகள் மூடப்படுவதால் பாரிய சமூக அழிவுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. மேலும் உணவுப்பொருட்களின் விலை கட்டுப்பாட்டை விதிக்க தவறியதால் ஏற்படப்போகும் பாதிப்பு தொடர்பாக நாங்கள் இந்த சபைக்குத் தெரிவித்தோம். இதன் காரணமாக நுகர்வோர் அதிகார சபையின் தலையீட்டின் மூலம் ஓரளவு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள எங்களுக்கு முடியுமாகி இருக்கிறது. என்றாலும் இந்த கட்டுப்பாட்டை எதிர்காலத்தில் பாதுகாத்துக்கொள்ள பொதுச்சந்தையின் கொடுக்கல் வாங்கல் வெளிப்படைத்தன்மையுடன் இடம்பெற வேண்டும். குறிப்பாக மக்கள் சந்தையில் ஒரு பொருளை வாங்கும்போது, அந்த பொருள் எத்தனை ரூபாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காக அனைத்து துறைகளையும் டிஜிடல் மயமாக்க வேண்டும். அந்த நடவடிக்கையைச்ச் சரியாக முன்னெடுத்தால் அரச துறைகளில் இடம்பெறும் மோசடிகளைக் குறைக்கலாம் என்பதுடன் அரச வருமானத்தையும் அதிகரிக்கலாம். அதேபோன்று உணவுப்பொருட்களுக்கு அதிக வரி அறவிடாமல் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கத் தேவையான வேலைத்திட்டம் அமைக்கப்பட வேண்டும். அதற்கான வேலைத்திட்டத்தை எங்களுக்கு ஏற்படுத்த முடியும் என்றார். https://www.virakesari.lk/article/190527
  16. சியாம் படுகொலை - முன்னாள் பிரதிபொலிஸ்மா அதிபருக்கு விதித்த மரண தண்டனையை உறுதிசெய்தது நீதிமன்றம் 08 AUG, 2024 | 10:53 AM முன்னாள் பிரதிபொலிஸ்மா அதிபர் சஜின்வாஸ் குணவர்த்தன அவரது மகன் ரவிந்து குணவர்த்தன ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. 2013 இல் முகமட் சியாம் என்ற வர்த்தகரை கொலை செய்தது தொடர்பில் முன்னாள் பிரதிபொலிஸ்மா அதிபர் சஜின்வாஸ் குணவர்த்தன அவரது மகன் ரவிந்து குணவர்த்தன உட்பட ஆறு பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனையை விதித்திருந்தது. இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் அந்த மனுக்களை தள்ளளுபடி செய்துள்ளதுடன் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது. https://www.virakesari.lk/article/190554
  17. நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் நாளை முதல் ஏற்படவுள்ள மாற்றம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு நாளை காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளது. வீதித் தடை செப்டம்பர் 4 ஆம் திகதி மாலை வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும். வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும். என்பதுடன் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. வீதித்தடைகளை அமைப்பது தொடர்பாக இன்று துறைசார் அதிகாரிகளால் கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது. யாழ் மாநகர ஆணையாளர் என்.கிருஷ்ணேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள், மாநகர சபை அதிகாரிகள் இதன்போது கலந்து கொண்டனர். https://thinakkural.lk/article/307499
  18. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 22பேர் கட்டுப்பணம் செலுத்தல் - தேர்தல்கள் ஆணைக்குழு Published By: VISHNU 08 AUG, 2024 | 01:39 AM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவரை (புதன்கிழமை) 22 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 11 வேட்பாளர்களும், வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 1 வேட்பாளரும், சுயேட்சையாக போட்டியிட 10 வேட்பாளர்களும் இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி புதன்கிழமை வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ள நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 11.30 மணிவரையான காலப்பகுதியில் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலவகாசம் நாளையுடன் ( வெள்ளிக்கிழமை) முடிவடையவுள்ளது. புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கு ஓசல ஹேரத்தும், இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் ஏ.எஸ்.பி.லியககேவும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சஜித் பிரேமதாசவும், தேசிய அபிவிருத்தி முன்னணி சார்பில் எஸ்.கே.பண்டாரநாயக்கவும், தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் விஜயதாஸ ராஜபக்ஷவும், ஐக்கிய சோஷலிச கட்சி சார்பில் சிறிதுங்க ஜயசூரியவும், புதிய சீஹல உருமய கட்சி சார்பில் சரத் மனமேந்திரவும், ஜனசேனா முன்னணி சார்பில் பத்தரமுல்லே சீலரத்ன தேரரும், அருனலு மக்கள் முன்னணியின் சார்பில் கே.ஆர்.கிறிஷானும், தேசிய மக்கள் சக்தி சார்பில் அனுரகுமார திஸாநாயக்கவும், சோசலிச சமத்துவ கட்சி சார்பில் பானி விஜேசிறிவர்தன ஆகியோர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற ரீதியில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். அதேவேளை அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி என்ற பிரிவில் றுஹுணு மக்கள் முன்னணி சார்பில் அஜந்த த சொய்சா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். மேலும் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க,சரத் கீர்த்தி ரத்ன,கே.கே.பியதாஸ, ஆனந்த குலரத்ன, அக்மீமன தயாரத்ன தேரர், சிறிபால அமரசிங்க, சரத் பொன்சேகா, அன்டனி விக்டர் பெரேரா, ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ், மானகே பேமசிறி ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/190543
  19. பட மூலாதாரம்,GETTY IMAGES 8 ஆகஸ்ட் 2024, 01:46 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாட், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இம்முடிவை அவர் எடுத்துள்ளார். ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் 50 கிலோ பிரிவில் வினேஷ் போட்டியிட்டார். ஆனால் நேற்று காலை எடையை அளவிடும் போது, அவரது எடை அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 100 கிராம் அதிகமாக இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்தியக் குழு கூடுதல் அவகாசம் கேட்டது, ஆனால் அவரால் எடையைக் குறைக்க முடியவில்லை, எனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் ''அம்மா, எனக்கு எதிரான போட்டியில் மல்யுத்தம் வென்று விட்டது, நான் தோற்று விட்டேன். என் தைரியம் எல்லாம் உடைந்து விட்டது, எனக்கு இப்போது வலிமை இல்லை. குட்பை மல்யுத்தம், 2001-2024'' என தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். ''நான் உங்கள் அனைவருக்கும் கடமைப்பட்டுள்ளேன். மன்னித்து விடுங்கள்'' எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். வினேஷ் போகாட் உடல் எடை அதிகரிக்க யார் காரணம்? புதிய தகவல்கள் வீராங்கனைகளுக்கு சவால் தரும் மற்றொரு பரிசோதனை - பதக்கம் இழந்த தமிழக வீராங்கனை கூறுவது என்ன? வினேஷ் போகாட் பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் - என்ன காரணம் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் “வினேஷ், தனது எடையைக் குறைக்க இரவு முழுவதும் பல முயற்சிகள் எடுத்தபோதிலும், காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கூடுதல் எடையுடன் இருந்தார்.” எனத் தெரிவித்தது. ''வினேஷ் போகாட்டின் எடை 50 கிலோ 100 கிராம் சோதனையின் போது கண்டறியப்பட்டது. அதன் பிறகு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு உலக மல்யுத்த சம்மேளனத்திடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது'' என்று வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா நேற்று பேசினார். உலகப் பிரபலங்களின் ஆதரவு பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் வினேஷுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, “வினேஷ் நீங்கள் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டீர்கள்” என்று கூறியுள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வினேஷ், நீங்கள் எப்போதும் எங்களுக்கு வெற்றியாளர் தான். நீங்கள் இந்தியாவின் மகள் மற்றும் இந்தியாவின் பெருமை" என்று பதிவிட்டுள்ளார். சாக்ஷி மாலிக் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வினேஷ், நீ தோற்கவில்லை. இந்தியாவின் ஒவ்வொரு மகளுக்காகவும் தான் நீ போராடிக் கொண்டிருந்தாய், இன்று அவர்கள் தோற்றுவிட்டனர். இது ஒட்டுமொத்த இந்தியாவின் தோல்வி. நாடு உன்னுடன் உள்ளது. ஒரு சக வீராங்கனையாக உனது போராட்டத்திற்கும் விடாமுயற்சிக்கும் சல்யூட்" என்று பதிவிட்டுள்ளார். இந்திய மல்யுத்த வீரர்களில் பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் கடந்த ஆண்டு அப்போதைய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும் பாஜக தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை பிரிஜ்பூஷன் சரண் சிங் நிராகரித்து வருகிறார். அந்த நேரத்தில் வினேஷ் போகாட் மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் பெரிய முகமாகவும் இருந்தார். அவர்கள் பல மாதங்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் கூறுகையில், “இந்த பெண் (வினேஷ்) அரசு அதிகாரத்துடன் போராடி களைத்துவிட்டாள்” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்க மல்யுத்த வீரர் ஜோர்டன் பாரோவும் வினேஷுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். வினேஷ் போகாட்டுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், ஒலிம்பிக் விதிகளை மாற்ற வேண்டியது அவசியம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். “போட்டியின் இரண்டு நாட்களிலும் எடை சோதனை செய்யப்படுகிறது அத்தகைய சூழ்நிலையில், இரண்டாவது நாளில் எடையில் ஒரு கிலோ வரை தளர்வு அளித்திருக்க வேண்டும்.” என்கிறார் ஜோர்டன். ஒலிம்பிக் மல்யுத்த போட்டிகளில் காலை 8:30 மணி முதல் 10:30 மணி வரை எடை சோதனை நடைபெறும். அரையிறுதியில் வெற்றி பெற்ற பிறகு, இறுதிப் போட்டியாளர்கள் இருவரும் இரண்டாவது நாளில் எடை அளவை எட்டாவிட்டாலும் பதக்கங்கள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றார். நிர்ணயிக்கப்பட்ட எடைக்குள் இருந்த வீராங்கனைக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டாலும், வினேஷ் போகாட்டுக்கே வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஜோர்டன் வலியுறுத்தினார். https://www.bbc.com/tamil/articles/ce9zj48epj3o
  20. இலங்கை அணியின் வெற்றிக்கு உதவிய இந்திய வீரர் - ஜெயசூர்யா வகுத்த உத்திகள் என்னென்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இலங்கை அணியைத் தயார்படுத்துவதற்கு இந்திய வீரரின் உதவியை நாடியுள்ளார் ஜெயசூர்யா கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சர்வதேச அரங்கில் 27 ஆண்டுகளாக இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணியின் செய்துவந்த ஆதிக்கத்தை அந்த அணி முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. டி20 உலகக் கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் வென்றநிலையில் இந்திய அணியை ஒருநாள் தொடரில் 2-0 என்று மண்ணைக் கவ்வவைத்து, 27 ஆண்டுகளுக்குப்பின் தொடரை இலங்கை கைப்பற்றி தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டது. இலங்கை அணியில் ஆடிவரும் பல வீரர்கள் கடைசியாக இலங்கை அணி ஒருநாள் தொடரை வென்றபோது பிறந்திருக்கவே மாட்டார்கள், அல்லது சிறிய குழந்தைகளாக இருந்திருக்கலாம். ஆனால், அவர்களை வைத்துக்கொண்டு இந்திய அணியின் ஆதிக்கத்தை இலங்கை அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தபின், ஒருநாள் தொடரில் வெகுண்டு எழுந்துள்ளதற்கு பின்புலத்தில் முக்கிய நபர்கள் இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் இலங்கை அணிக்கு தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா. முன்னாள் வீரர் ஜெயசூர்யா குறித்து பெரிதாக அறிமுகம் தேவையில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரர் அதிரடியாக ஆடக்கூடிய பாணியை பிரபலப்படுத்தியவரே ஜெயசூர்யாதான். 1996ம் ஆண்டு உலகக் கோப்பை இலங்கை அணி வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தது ஜெயசூர்யாவின் அதிரடியான பேட்டிங்தான். ஜெயசூர்யாவின் இந்த அதிரடி ஆட்டம் வெற்றி பெறவே அதே பாணியை நீண்டகாலத்துக்கு தொடர்ந்தார், பல அணிகளும் இதே பாணியை கையாண்டன. இன்றைய சூழலில் பல அணிகள் கையாளும் பவர்ப்ளே ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை கையாள்வது, பிஞ்ச் ஹிட்டர்களாக மாறுவது போன்ற உத்திகளை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே ஜெயசூர்யா பரிசோதித்துவிட்டார். ஜெயசூர்யா போன்ற அனுபவசாலியை இலங்கை அணி பயிற்சியாளராக நியமித்தபோதே இந்திய அணிக்கு இந்தத் தொடர் சவாலாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல் ஜெயசூர்யா பயிற்சியில் இலங்கை அணி டி20, மற்றும் ஒருநாள் தொடரில் சிறப்பாகவே செயல்பட்டது. டி20 தொடரை இழந்தாலும், அதில் செய்த தவறுகள் அனைத்தையும் ஒருநாள் தொடரில் திருத்திக்கொண்டு தொடரை 27 ஆண்டுகளுக்குப்பின் வென்றுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து தொடக்கத்திலேயே இலங்கை அணி வெளியேறிய உடனேயே, இந்திய அணிக்கு எதிரான தொடருக்கு தயாராகத் தொடங்கியது. இந்திய அணிக்கு எதிரான தொடரை மனதில் வைத்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே ஜெயசூர்யாவை இடைக்கால தலைமைப் பயிற்சியாளராகவும் இலங்கை கிரி்க்கெட் வாரியம் கொண்டு வந்தது. இந்திய டி20 அணியில் இருந்து ஜாம்பவான் வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றநிலையில் இந்திய அணியை வீழ்த்த இதுதான் சரியான நேரமாக இருக்கும் என நினைத்து உத்திகளை வகுத்தார். “பாம்பின் தடம் பாம்பறியும்” என்பதைப் போல இந்திய அணியை வீழ்த்த முன்னாள் இந்திய வீரர் ஒருவரின் உதவியையும், உத்திகளையும் ஜெயசூர்யா நாடினார். அந்த முன்னாள் வீரர் இந்திய அணியில் ஏராளமான இளம் வீரர்களை பட்டைதீட்டி புதிய பரிமாணத்துக்கு கொண்டுவந்தவர், ஐபிஎல் தொடரிலும் அவரின் பங்களிப்பு அளப்பரியதாக இருப்பதால் அவரின் உதவியோடு ஜெயசூர்யா இந்தியத் தொடரை எதிர்கொண்டார். ஜெயசூர்யா வகுத்த திட்டங்கள் இந்திய அணி பேட்டர்கள் பொதுவாகவே சுழற்பந்துவீச்சுக்கு எதிராக திணறக்கூடியவர்கள், பெரிதாக ரன்சேர்க்க முடியாதவர்கள். இந்திய அணியில் இருக்கும் ஷிவம் துபே, சூர்யகுமார் யாதவ், கோலி, ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல், உள்ளிட்ட பேட்டர்கள் சர்வதேச அளவில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் பெரிதாக ஜொலித்ததில்லை. அதிலும் கொழும்பு பிரேமதேசா மைதானம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரி. இந்த மைதானத்தில் இந்திய அணியின் பேட்டர்களை எளிதாக வீழ்த்த முடியும் என்பதை ஜெயசூர்யா புரிந்து கொண்டார். டி20 தொடர் நடந்த பல்லேகலே மைதானமும் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கக் கூடியது. இந்த மைதானத்தில் இலங்கை அணியினர் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டாலும், பேட்டிங்கில் சொதப்பினர். டாப்ஆர்டர் பேட்டர்கள் தவிர மற்ற எந்த பேட்டர்களும் 3 போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படாததால் தொடரை இழக்க நேர்ந்தது. ஒருவேளை நடுவரிசை, கீழ்வரிசை பேட்டர்கள் ஓரளவுக்கு பேட் செய்திருந்தாலே, டி20 தொடரில் இந்திய அணிக்கு வலுவான போட்டியை இலங்கை அளித்திருக்கும். டி20 தொடரில் செய்த தவறுகளை ஒருநாள் தொடரில் திருத்திக்கொள்ள ஜெயசூர்யா முடிவு செய்து அதற்கான திட்டங்களை வகுத்தார். அதில் குறிப்பானது நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்துவது. இதற்காக ஆல்ரவுண்டர் வெனித் வெலாகலேவை அணிக்குள் கொண்டு வந்தார், ஹசரங்காவுக்கு காயம் ஏற்படவே அவருக்குப் பதிலாக சுழற்பந்துவீச்சாளரான வேன்டர்சேவையும் அணிக்குள் சேர்த்தார். இவர்கள் இருவருமே இந்திய அணிக்கு எதிரான வெற்றிக்கு முக்கியத் துருப்புச் சீட்டாக அமைந்தனர். அதிலும் வெனித் வெலாகலே நடுவரிசை பேட்டிங்கை ஸ்திரப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார். டி20 தொடரில் நடுவரிசை பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தநிலையில், ஒருநாள் தொடரில் வெலாகலே பொறுப்புடன் பேட் செய்து இலங்கை அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுத் தந்தார். அது மட்டுமல்லாமல் கடைசி ஓவர்கள்வரை வெலாகலே களத்தில் இருந்ததால், ஸ்கோர் உயர்வதிலும் இலங்கைக்கு சிக்கல் இல்லாமல் இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை அணியில் வெலாகலேவை கீழ்நடுவரிசையில் களமிறக்கியபின் இலங்கை அணியின் பேட்டிங் ஸ்திரமடைந்தது தெளிவாகத் தெரிந்தது. அடுத்ததாக ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்தது என்பதால், அணியில் இரு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவதற்குப் பதிலாக பெர்னான்டோவை மட்டும் வைத்து ப்ளேயிங் லெவனை உருவாக்கி, சுழற்பந்துவீச்சாளர்களை அதிகமாக வைத்து களமிறக்க வைத்தார். பெர்னான்டோ ஆல்ரவுண்டர் என்பதால் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. முழுநேர வேகப்பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்புத் தரப்படவில்லை. தொடக்கத்திலிருந்தே விதவிதமான சுழற்பந்துவீச்சாளர்களின் தாக்குதலை தொடுத்து இந்திய பேட்டர்களை நிலைகுலைய வைப்பதுதான் ஜெயசூர்யாவின் திட்டமாக இருந்தது. வேகப்பந்துவீச்சை இந்திய பேட்டர்கள் எளிதாக விளையாடிவிடுவார்கள் ஆனால், இடதுகை சுழற்பந்துவீச்சு, ஆஃப்ஸ்பின், லெக் ஸ்பின், ரிஸ்ட் ஸ்பின் போன்ற பல்வேறு வகையான பந்துவீச்சை இந்திய பேட்டர்கள் எதிர்கொண்டு விளையாடுவதில் சிக்கலைச் சந்திப்பார்கள் என்பதை புரிந்து கொண்டு இந்த திட்டத்தை ஜெயசூர்யா செயல்படுத்தினார். ஜெயசூர்யாவின் திட்டத்துக்கு கைமேல் பலன் கிடைத்து. இந்தத் தொடரில் இந்திய அணி 27 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சில் மட்டுமே இழந்தது. ஒட்டுமொத்தத்தில் இந்தத் தொடரில் 43 விக்கெட்டுகளை இரு அணிகளும் சுழற்பந்துவீச்சில் மட்டுமே இழந்தன. அந்த அளவு சுழற்பந்துவீச்சாளர்கள் கொழும்பு ஆடுகளத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள். இந்திய அணியில் தற்போது இடம் பெற்றுள்ள சுழற்பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக் ஆகியோர் இலங்கை கொழும்பு மைதானத்தில் அதிகமாக விளையாடி அனுபவம் இல்லாதவர்கள். அந்த மைதானத்தின் தன்மை, விக்கெட்டின் தன்மை, எப்படி விக்கெட் செயல்படும், எந்த ஓவர்களுக்குப்பின் விக்கெட்டின் தன்மை எப்படி மாறும் என்பது அவர்களுக்குத் தெரியாது. இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்துவீசினாலும் கொழும்பு ஆடுகளத்தின் தன்மையை இலங்கை பந்துவீச்சாளர்களுடன் ஒப்பிடும்போது குறைவாகவே அறிந்திருந்தனர். இவை அனைத்தும் இலங்கை அணிக்கு சாதகமாக அமைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தக் காரணிகளை பயன்படுத்திக்கொண்டு இந்திய அணி பலத்தையே, அந்த அணிக்கு எதிராக பலவீனமாக ஜெயசூர்யா மாற்றினார். சர்வதேச அரங்கில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு பெரிதாக மதிக்கக்கூடியதாக, அச்சுறுத்தக்கூடியதாக இருந்து வருகிறது என்பதில் துளியும் சந்தேகமில்லை. அதே சுழற்பந்துவீச்சை பயன்படுத்தி, இந்திய பேட்டர்களை திணறவைத்து, ஜெயசூர்யாவின் உத்திகள் ஒருநாள் தொடரை வென்றுள்ளன. இதில் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் சர்வதேச ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் இருந்தாலும், செட்டில் ஆனபின்புதான் எந்த பந்துவீச்சையும் வெளுக்கும் தன்மைஉடையவர்கள். மற்றவகையில் இருவருமே சுழற்பந்துவீச்சுக்கு பலமுறை விக்கெட்டை இழந்துள்ளனர், அதிலும் விராட் கோலி, லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஏராளமானமுறை விக்கெட்டை இழந்துள்ளார். இந்த விஷயத்தையும் ஜெயசூர்யா கணக்கில் வைத்து, ரோஹித், கோலிக்கு எதிராக சுழற்பந்துவீச்சு ஆயுதத்தை பயன்படுத்தினார். கோலிக்கு எதிராக சுழற்பந்துவீச்சு உத்தி நன்கு பலன் கொடுத்தது. இந்த ஒருநாள் தொடரில் விராட் கோலி பெரிதாக எந்த ஸ்கோரும் செய்யவில்லை, 3 ஆட்டங்களிலும் கோலி காலை நகர்த்தால் ஆடி விக்கெட்டை இழந்தார். ரோஹித் சர்மா வழக்கம்போல் அதிரடியான ஆட்டத்தைக் கையாண்டாலும் அவரின் பலவீனத்தை அறிந்து அவரையும் சுழற்பந்துவீச்சாளர்கள் வெளியேற்றினர். சீனியர் வீரர்களுக்கு எதிரான உத்திகள் வெற்றியானதால், அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு எதிராக உத்திகளை வகுப்பது ஜெயசூர்யாவுக்கு எளிதாக இருந்தது. ஸ்ரேயாஸ் அய்யர், சாம்ஸன், ராகுல் ஆகியோர் உள்நாட்டு மைதானங்களில் சுழற்பந்துவீச்சை சிறப்பாக கையாண்டு விளையாடியுள்ளார்கள். ஆனால், வெளிநாடுகளில்நடந்த டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் இவர்கள் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இல்லை. இந்த தவலை வைத்து நடுவரிசை பேட்டிங் வரிசையை சிதைக்க திட்டம் வகுக்கப்பட்டது. குறிப்பாக வெலாகலே, வேண்டர்சே ஆகியோரின் சுழற்பந்துவீச்சை இதுவரை இந்திய பேட்டர்கள் எதிர்கொண்டது இல்லை. இந்திய பேட்டர்களுக்கு எதிராக புதிய சுழற்பந்துவீச்சாளர்களைப் பந்துவீசச் செய்து திணறவைத்து, விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்தியது இலங்கை அணி. 2வது ஒருநாள் ஆட்டத்தில் வேண்டர்சே 6 விக்கெட்டுகளையும், 3வதுஆட்டத்தில் வெலாகலே 5 விக்கெட்டுகளை கைப்பற்றியது கவனிக்கத்தக்கது. யார் அந்த இந்திய வீரர் அது மட்டுமல்லாமல் இந்திய அணியை வீழ்த்துவதற்காக இந்திய முன்னாள் வீரர் ஒருவரின் உதவியையும் ஜெயசூர்யா கேட்டுப் பெற்றுள்ளார். அந்த வீரரும் ஜெயசூர்யாவுக்கு தேவையான ஆலோசனைகளையும், உத்திகளையும் வகுத்துக் கொடுத்துள்ளார். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ரியான் பராக், ஜூரெல், சாம்ஸன், கெய்க்வாட், சுப்மான் கில் உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் அவரின் பயிற்சிப் பட்டறையில் இருந்து பட்டைத் தீட்டப்பட்டு வெளியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஜூபின் மினோ பருச்சா என்ற முன்னாள் வீரர்தான் ஜெயசூர்யாவுக்கு உதவியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES மகாராஷ்டிரா அணிக்காக முதல்தரப் போட்டிகளிலும், ரஞ்சிக் கோப்பையிலும் ஆடியுள்ள பரூச்சா, இந்திய அணியில் இடம் பெறவில்லை. ஆனால், அதிகமான கிரிக்கெட் அனுபவத்தால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உயர்திறன் இயக்குநராக 2008 முதல் 2015வரை செயல்பட்டார். அதன்பின் 2018ம் ஆண்டிலிருந்து மீண்டும் அந்த அணியின் இயக்குநராக பருச்சா இருந்து வருகிறார். நாக்பூரில் இருந்து 150 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தலேகான் நகரில்தான் பரூச்சா, வேர்ல்ட் கிரிக்கெட் அகாடெமியை நிறுவி ஏராளமான இளம் வீரர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறார். இந்த அகாடெமியில் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் மைதானங்களின் மாதிரிகளும் அமைக்கப்பட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதாவது ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் பவுன்ஸர் விக்கெட், சென்னையில் இருக்கும் செம்மண் ஆடுகளம், பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என ஏராளமான ஆடுகளங்கள் அமைக்கப்பட்டு எந்தெந்த வீரர்களுக்கு என்ன தேவையோ அதற்கு ஏற்றாற்போல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அகாடெமியில் இருந்துதான் ஜெய்ஸ்வால், சாம்ஸன், துருவ் ஜூரெல், ரியான் பராக், சுப்மான் கில் உள்ளிட்ட ஏராளமான இளம் வீரர்கள் தங்களின் பேட்டிங் திறனை மெருகேற்றிக் கொண்டுள்ளனர். இந்த அகாடெமியை நடத்தும் பரூச்சாதான் இலங்கை பயிற்சியாளர் ஜெயசூர்யாவுக்கு தேவைாயான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும், பந்துவீச்சு, பேட்டிங்கில் புதியதொழில்நுட்பங்கள், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES இது குறித்து ஜெயசூர்யா சமீபத்தில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ இலங்கை டி20 லீக் முடிந்தவுடனேயே நாங்கள் பயிற்சியைத் தொடங்கிவிட்டோம். இந்திய அணியில் ரோஹித் சர்மா, கோலி, ஜடேஜா ஆகிய 3 பெரிய வீரர்கள் ஓய்வு அறிவித்தநிலையில், இந்திய அணியை ஆதிக்கம் செய்து வெல்ல இதுதான் சரியான நேரம் என்று நினைத்தேன். இதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உயர்திறன் இயக்குநர் ஜூபின் பருச்சா உதவியை நாடினேன் அவரின் ஆலோசனைகளை கேட்டேன். இலங்கை வீரர்களுக்கு ஏறக்குறைய 6 நாட்கள் பருச்சா பயிற்சிஅளித்து, தேவையான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார், நவீன காலத்தில் பேட்டிங், பந்துவீச்சில் இருக்கும் மாற்றங்கள், உத்திகளையும் வழங்கினார்." "இதை வைத்துக்கொண்டு டி20 தொடர் தொடங்க 2 நாட்கள் முன்புவரை கண்டி நகரில் பயிற்சியில் இருந்தோம். பரூச்சாவுடன் நாங்கள் செலவிட்ட 6 நாட்களும் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது, வீரர்களும் ஏராளமான அம்சங்களை, நுணுக்கங்களை பரூச்சாவிடம் இருந்து கற்றனர்” எனத் தெரிவித்தார் https://www.bbc.com/tamil/articles/ced10zpqxjxo
  21. ஐ ஆம் வெயிட்டிங்!! ஏதும் கண்காணிப்பாளர் வேலை இருந்தால் சொல்லுங்கோ அண்ணை! 24 மணித்தியாலமும் கண்ணுக்கை எண்ணைவிட்டுக் கண்காணிப்பேன்!!
  22. Published By: DIGITAL DESK 7 07 AUG, 2024 | 08:36 PM (எம் ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கில் சீன இராணுவத்தை நிலைநிறுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. சீன இராணுவத்தின் பிரவேசத்தை அரசாங்கம் அனுமதிக்கிறதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (7) இடம்பெற்ற 'அரையாண்டின் அரசிறை நிலைப்பாட்டு அறிக்கை' தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, மன்னார் வைத்தியசாலையில் மதியராஜன் சிந்துஜா மரணம் தொடர்பில் வைத்தியசாலைக்கு சென்று வைத்தியர்களிடம் பேசியபோது விசாரணைகளை முன்னெடுப்பதாக குறிப்பிட்டார். ஆனால் இந்த விசாரணை ஆட்களை மாற்றும் விசாரணையாக இருக்க கூடாது. நீதியான விசாரணையின் ஊடாக சம்பந்தப்பட்டவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதுடன் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டும் என்பது எங்களின் கோரிக்கையாக உள்ளது. இதேவேளை 9 வைத்தியர்கள் எங்களின் வைத்தியசாலைக்கு வரவுள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வைத்தியசாலைக்கு வருவது கடினமானதாக இருக்கும்.இதேவேளை இந்திய டோலர் படகுகளின் வருகைகளால் எமது மீனவர்கள் கடந்த பல தசாப்தங்களாக துன்பங்களை எதிர்நோக்குகின்றனர். இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கான டோலர் படகுகள் வருவதால் எமது மீனவர்கள் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர். நியாயமான முறையில் எமது மீனவர்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ள வேண்டும்.மீனவர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும். எமது மீனவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விடயத்தில் தமிழ்நாட்டு அரசு நியாயமான தீர்வை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்பதுடன் அதற்கு அவர்கள் உரிய ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டும். இந்திய அரசாங்கமும் தமிழ்நாடு அரசும் அவர்களின் மீனவர்களை ஆழ்கடல் மீன்பிடி துறையில் ஊக்கப்படுத்தி எமது மீனவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். எமது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தட்டிக் கேட்கும் நாடாக இந்தியாவை நாங்கள் கருதுகின்றோம். இதனால் எமது நம்பிக்கையின் படி மீனவர் விடயத்தில் நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில் சீனா எமது மீனவர்களை தம்வசப்படுத்த பல யுக்திகளை கையாளுகின்றனர். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அத்துடன் சீன இராணுவம் எமது தேசத்துக்கு வரவுள்ளதாக செய்திகளும் வருகின்றன. ஏற்கனவே வடக்கு மற்றும் கிழக்கில் மக்கள் இராணுவத்தினரால் பட்ட அனுபவங்கள் உள்ளன. அத்துடன் துப்பாக்கி சத்தங்கள் இல்லாவிட்டாலும் போர் சூழலில் இருப்பதை போன்றே மக்கள் இருக்கின்றனர். எமது வரலாற்றை சிதைக்க வேண்டும் என்ற வகையில் நடவடிக்கை எடுப்பதை போன்று தெரிகிறது. அரசின் முப்படையினரின் ஆக்கிரமிப்புடன் உள்ள வடக்கு, கிழக்கில் புதிதாக சீன இராணுவம் வருவது எதற்கு? இதனை அரசாங்கம் அனுமதிக்கின்றதா? இந்த விடயத்தை நாங்கள் எதிர்ப்பதுடன், இதனை ஒருபோதும் அனுமதிக்கவும் மாட்டோம். எமது மீனவர்களை சீனா தன்வசப்படுத்தும் முயற்சிகளையும் ஏற்க முடியாது. இதேவேளை வன்னி மாவட்டத்தில் குறிப்பாக வவுனியா மாவட்டம் படுகொலைகள் நிறைந்த மாவட்டமாக மாற்றமடைந்துள்ளது. அண்மையில் ஆசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டிருந்தார். பொலிஸாரும், புலனாய்வுத் துறையினரும் என்ன செய்கின்றனர். வன்னி மாவட்டத்தில் பொலிஸாரின் நடவடிக்கை முறையாக இல்லை. சிவில் பிரஜை ஒருவர் முறையிட்டால் அதனை தட்டிக்கழிக்கும் நிலைமை உள்ளது. இங்கு நடக்கும் அநீதிகளை தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களின் பிரச்சினைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.அத்துடன் மன்னாரில் எல்.ஆர்.சி காணிகள் வெளி மாவட்டத்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது. மன்னார் மாவட்ட மக்களுக்கு இந்த காணிகள் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/190509
  23. அண்ணை போட்டியாளர்கள் கூடவாக இருப்பதால் ஓபத்து போட்டுத்தான் பொதுவேட்பாளர் கண்டடையப்படுவாரோ?!
  24. 27 ஆண்டு வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி - இந்தியாவின் பலத்தையே பலவீனமாக மாற்றிய இலங்கை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 50 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய அணி 27 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச அரங்கில் இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இழந்துள்ளது. கொழும்பு பிரமதேசா அரங்கில் இன்று நடந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியை 110 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் வெற்றியை இலங்கை அணி பெற்றது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் சேர்த்தது. 249 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 26.1 ஓவர்களில் 138 ரன்களில் சுருண்டு 110 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைச் சந்தித்தது. இதன் மூலம் ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி 27 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணிக்கு எதிராக வென்றுள்ளது. கடைசியாக 2005ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இந்திய அணியிடம் இலங்கை அணி ஒருநாள் தொடரை பறிகொடுத்து வந்தநிலையில் அதற்கு 2024ம் ஆண்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இலங்கை அணி சிறப்பான தொடக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி சிறப்பான தொடக்கம் கண்டது. டாப் ஆர்டர் பேட்டர்கள் நிசாங்கா(45), பெர்னான்டோ(96), குஷால் மென்டிஸ்(59) ஆகியோரே கணிசமாக ரன் குவித்தனர். மற்றவகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை. 171 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்த இலங்கை அணி அடுத்த 28 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை விரைவாக இழந்தது. 171 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த இலங்கை அணி 199 ரன்கள் சேர்த்தபோது 6வது விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. இலங்கை அணி ஸ்கோர் ஒரு கட்டத்தில் 180 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 250 ரன்களுக்குள் மட்டுமே சேர்த்தது. இலங்கை அணி இந்த ஸ்கோரை எட்டுவதற்கு தொடக்க ஆட்டக்காரர் பெர்னான்டோ 96 ரன்கள் சேர்த்ததுதான் முக்கியக் காரணம். இது தவிர 49வது ஓவர் வரை களத்தில் இருந்த குஷால் மென்டிஸ் 59 ரன்கள் சேர்த்ததும் குறிப்பிடத்தக்க பங்களிப்பாக இருந்தது. வினேஷ் போகாட் உடல் எடை அதிகரிக்க யார் காரணம்? புதிய தகவல்கள்5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய காகங்களை கொடிய பறவையாக கருதும் கென்யா - 10 லட்சம் காகங்களை கொல்லும் முடிவு ஏன்?3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சிராஜ் மோசமான பந்துவீச்சு இந்திய அணியின் பந்துவீச்சில் சுழற்பந்துவீச்சாளர்கள்தான் சிறப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜை மட்டுமே நம்பி களமிறங்கிய இந்திய அணி கையைச் சுட்டுக்கொண்டது. டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்தே ஃபார்மில் இல்லாமல் இருந்த சிராஜை ஒருநாள் தொடரில் திணறவே செய்தார். இந்த ஆட்டத்தில் 9 ஓவர்கள் வீசிய சிராஜ் 78 ரன்களை வாரி வழங்கினார். இதில் 3 சிக்ஸர்கள், 9பவுண்டரிகளை அடிக்கவிட்டு ஓவருக்கு 9 ரன்களை வாரிக் கொடுத்தார். இலங்கை அணியிலும் பெர்னான்டோ எனும் வேகப்பந்துவீச்சாளரை மட்டும் வைத்து அந்த அணி களமிறங்கியது. அவர் ஓரளவு கட்டுக்கோப்புடன் பந்துவீசினார். இலங்கை அணி சேர்த்த ஸ்கோரில் சிராஜ் மட்டும் 33 சதவீத ரன்களை வாரிக் கொடுத்துள்ளார். இதில் பெர்னான்டோ மட்டும் 38 ரன்களை சிராஜ் ஓவரில் விளாசினார். மற்ற வகையில் சுழற்பந்துவீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர், குல்தீப் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி ஓவருக்கு 3 ரன்ரேட்வீதம் வழங்கினர். முதல் போட்டியில் அறிமுகமாகிய ரியான் பராக் 9 ஓவர்கள் வீசி 54 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அக்ஸர் படேலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். ஷிவம் துபே 4 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டுமே வழங்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிவு சவாலான இலக்கை துரத்திய இந்திய அணியில் ரோகித் சர்மா (35), விராட் கோலி (20), ரியான் பராக்(15), வாஷிங்டன் சுந்தர்(30) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். இதில் கடைசி நேரத்தில் வாஷிங்டன் இன்னிங்ஸ் மட்டும் இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு சற்று அழுத்தத்தை கொடுத்தது, அவரை ஆட்டமிழக்கச் செய்ய மட்டுமே சிறிது சிரமப்பட்டனர். மற்ற அனைத்து பேட்டர்களும் ஒற்றை இலக்க ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்திய பேட்டர்கள் 9 பேரும் சுழற்பந்துவீச்சுக்கு இரையாகினர். சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் மோசமான ஃபார்மில் உள்ளனர். அதிலும் சுப்மான் கில் டி20 தொடரிலும் சிறப்பாக ஆடவில்லை, ஒருநாள் தொடரிலும் பேட்டிங்கில் சொதப்பினார். நீண்ட இடைவெளிக்குப் பின் களமிறங்கிய ரிஷப் பந்த் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். சர்வதேச போட்டியில் அறிமுகமான ரியான் பராக்(15) ரன்னில் பெவிலியன் திரும்பினார். பட மூலாதாரம்,GETTY IMAGES நட்சத்திர பேட்டர் விராட் கோலி இந்தத் தொடர் முழுவதும் சுழற்பந்துவீச்சுக்கு விக்கெட்டை பறிகொடுத்து மோசமான ஃபார்மை வெளிப்படுத்தினார். டி20 உலகக் கோப்பைத் தொடரில் முதல் போட்டியிலிருந்து மோசமாக விளையாடி பைனலில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், இந்த ஒருநாள் தொடர் முழுவதும் கோலியின் இயல்பான பேட்டிங் வெளிப்படவில்லை. இந்திய அணி 52 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. ஆனால், அடுத்த 49 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்து தோல்வியின் பிடியில் சிக்கியது. வெலாகலே பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை இந்திய பேட்டர்கள் இழந்தனர். அதிலும் வெலாகலே வீசிய 13வது ஓவரில் மட்டும் ஸ்ரேயாஸ், அக்ஸர் படேல் ஆகிய இருவரும் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். ரோஹித் சர்மா ஆட்டமிழந்தபின் சீரான இடைவெளியில் இந்திய பேட்டர்கள் விக்கெட்டை பறிகொடுத்ததால் அணி தோல்வியை நோக்கி பயணித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியை சிதைத்த பெருமை இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர் வெலாகலே, வேன்டர்சே, தீக்சனா ஆகியோரையே சாரும். இதில் வெலாகலே மட்டும் 5.1 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீக்சனா, வேன்டர்சே தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா மட்டுமே இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பேட் செய்தார். இரு அரைசதங்களை முதல் இரு போட்டிகளில் பதிவு செய்த ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் 35 ரன்கள் சேர்த்து தனது நிலைத்தன்மையை வெளிப்படுத்தினார். ஆனால், இந்தத் தொடர் முழுவதும் ரோஹித் சர்மாவுக்கு ஒத்துழைத்து சுப்மான் கில், விராட்கோலி, உள்ளிட்ட எந்த பேட்டரும் ஆடவில்லை, பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் பலத்தையே பலவீனமாக்கிய இலங்கை இந்திய பேட்டர்கள் பொதுவாக சுழற்பந்து வீச்சில் ரன் குவிக்கக் கூடியவர்கள். சர்வதேச அளவில் சாதித்த சுழற்பந்து வீச்சாளர்கள் கூட இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீச திணறவே செய்துள்ளனர். ஆனால், அந்த பலத்தையே இலங்கை அணி இன்று இந்தியாவின் பலவீனமாக மாற்றியுள்ளது. இந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய பேட்டர்கள் பெரும்பாலும் சுழற்பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்துள்ளனர். மூன்று ஆட்டங்களிலும் தலா 9 விக்கெட் வீதம் மொத்தம் 27 விக்கெட்டுகளை இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர்களே கைப்பற்றியுள்ளனர். ரோஹித், கோலி உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் கூட இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சு இரையாயினர். இரண்டாவது ஆட்டத்தில், வேன்டர்சே பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை இந்திய பேட்டர்கள் பறிகொடுத்தனர், இந்த ஆட்டத்தில் வெலாகலே பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை இந்திய பேட்டர்கள் இழந்தனர். 1997ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றி இருந்தது. அந்த சமயத்தில் சுழற்பந்துவீச்சாளர் வெலாகலே பிறக்கவே இல்லை. ஆனால், இப்போது அவரின் தரமான சுழற்பந்துவீச்சால் 27 ஆண்டுகளுக்குப்பின் ஒருநாள் தொடரை இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி வென்றுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா தோல்விக்கு என்ன காரணம்? இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பேட்டிங், அனுபவமில்லாத வீரர்கள், வெளிநாட்டு மைதானங்களில் தரமான சுழற்பந்துவீச்சை விளையாட போதிய பயிற்சியில்லாதது ஆகியவைதான் காரணம். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கெளதம் கம்பீர் பொறுப்பேற்ற முதல் தொடர் இதுவாகும். இதில் டி20 தொடரை வென்றபோதிலும் ஒருநாள் தொடரை மோசமாக இந்திய அணி இழந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஜெயசூர்யா அன்றும், இன்றும் கடைசியாக கடந்த 1997 ஜூலை மாதம் இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை இலங்கை வென்றிருந்து. அதன்பின் இப்போது 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றி தங்களின் தாகத்தை தீர்த்துக்கொண்டது. 1997ம் ஆண்டு நடந்த ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றது. இதில் முதல் ஆட்டத்தில் 2 ரன்களில் வெற்றியை இந்திய அணி கோட்டைவிட்டது. 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை இலங்கை அணி தோற்கடித்தது. 3வது ஒருநாள் ஆட்டம் மழையால் நடக்காமல் போகவே மறுநாள் நடந்தது. இந்த ஆட்டத்திலும் இந்திய அணி 9 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த 3 போட்டிகளிலும் பேட்டிங்கில் 210 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜெயசூர்யா தொடர் நாயகன் விருது வென்று இலங்கை அணி தொடரை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார். இலங்கை அணிக்கு பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஜெயசூர்யா கால் நூற்றாண்டுக்குப்பின் ஒருநாள் தொடரை பெற்றுக்கொடுத்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/cqjlryd1d9wo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.