Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. வயநாடு நிலச்சரிவில் சிக்கிய பலரை மீட்டவர் மாயம் 06 AUG, 2024 | 09:41 AM திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் சிக்கிய பலரை தனது உயிரை பணயம்வைத்து மீட்டவர் மாயமாகி உள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையால் சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூலை 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். இவர்களை மீட்கும் பணியில் தன்னார்வலர்கள், மீட்புக் குழுவினர் மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டனர். அந்த வகையில், சூரல்மலை கிராமத்தைச் சேர்ந்த லாட் பிரஜீஷ் என்பவரும் நிலச்சரிவில் சிக்கிய பலரின் விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்றி உள்ளார். ஆனால் அவர் இப்போது காணாமல் போய் உள்ளார். நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பே சூரல்மலை பகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ள பிரஜீஷை சூப்பர்ஹீரோ என அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். இதுகுறித்து சூரல்மலை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, “முண்டக்கை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதாக முதலில் தகவல் கிடைத்ததும் பிரஜீஷ் தனதுஜீப்பில் மலைப்பகுதிக்கு 2 முறைசென்று அங்கு சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டு வந்தார்.அதன் பிறகு தனது குடும்பத்தினருடன் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். அப்போது ஒரு செல்போன் அழைப்பு வந்தது. இதையடுத்து, 3-வது முறையாக ஜீப்பில் மலைப் பகுதிக்குச் சென்றார். அதன் பிறகுஅவர் திரும்பி வரவே இல்லை. பின்னர் அவருடைய ஜீப் சேதமடைந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. ஆனால் பிரஜீஷ் என்ன ஆனார் என இதுவரை தெரியவில்லை” என்றார். மற்றொரு கிராமவாசி கூறும்போது, “எங்கள் ஊரில் நடக்கும் அனைவருடைய குடும்ப நிகழ்ச்சியிலும் பிரஜீஷ் கலந்து கொள்வார். திருமணமாக இருந்தாலும் ஒருவரின் மரணமாக இருந்தாலும் அந்தநிகழ்ச்சியின் தொடக்கம் முதல் இறுதி வரையில் உடன் இருந்து தேவையான உதவிகளை செய்வார். என் மகளின் திருமணத்துக்கும் உதவினார். அவரை இழந்துவிட்டோம்” என்றார். சட்டவிரோத சுரங்க நடவடிக்கையே காரணம்: மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி: வயநாடு பகுதியில் கேரள அரசின் ஆதரவுடன் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. மேலும் மனிதர்கள் அங்கு குடியேறுவதும் சட்டவிரோதமாக நடைபெற்று வருகிறது. இதற்கு அங்குள்ள உள்ளூர் அரசியல்வாதிகள் உதவி வருகின்றனர். சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் அங்கு ஆக்கிரமிப்புகள் நடக்கின்றன. சட்டவிரோதமாக இடங்களை ஆக்கிரமித்து அங்கு வீடுகள் கட்டப்படுகின்றன. இதுதொடர்பாக ஆய்வு செய்ய முன்னாள் வனத்துறை தலைமை இயக்குநர் சஞ்சய் குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் ஆதரவுடன் அங்கு தொடர்ந்து சட்டவிரோத குடியேற்றம், சட்டவிரோத சுரங்கப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு கேரள அரசுதான் முழு காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார் https://www.virakesari.lk/article/190387
  2. தமிழ் பொது வேட்பாளர் யார் என்பது இன்றைய தினமும் அறிவிக்கப்படவில்லை Published By: VISHNU 05 AUG, 2024 | 06:47 PM சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் ஏழு பிரதிநிதிகளும் தமிழ்த் தேசிய அரசியல்கட்சிகள் ஏழினது பிரதிநிதிகளும் கூட்டிணைந்து தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பை உருவாக்கியிருந்தனர். அவ்வாறு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (05) யாழ்ப்பாணத்தில் உள்ளதனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. மதியம் ஒரு மணியளவில் ஆரம்பமான கூட்டம் மாலை 5 மணி வரையிலான சுமார் 04 மணி நேரத்திற்கு மேலாக கூட்டம் இடம்பெற்ற நிலையில் முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் சந்திப்பு நிறைவுற்றுள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமைக்கு முன்னர் தமிழ் பொது வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இலங்கைத்தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆகியோரது பெயர்களே இறுதிப் பட்டியலில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/190364
  3. அதிரப்போகும் போர்க்களம் : உக்ரைனுக்கு வந்து சேர்ந்த நவீன விமானங்கள் உக்ரைன்(ukraine) தனது முதல் அமெரிக்கத் தயாரிப்பான F-16 போர் விமானங்களைப் பெற்றுள்ளதாக அந்நாட்டு அதிபர் வெலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். "உக்ரைனில் F-16 விமானங்கள். நாங்கள் அதைச் செய்தோம்," ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, பெயரிடப்படாத விமானப்படை தளத்தில் இரண்டு விமானங்களால் சூழப்பட்ட ஒரு நிகழ்வில் கூறினார். இன்னும் பல தேவை உக்ரைன் தலைவர் ஒரு காலத்தில் இந்த விமானங்களை வழங்கத் தயங்கியதற்கு நட்பு நாடுகளுக்கு நன்றி தெரிவித்தார் - இருப்பினும் இன்னும் பல தேவை என்று அவர் கூறினார். ஜெட் விமானங்களின் வருகை உக்ரைனின் விமானப்படையின் திறன்களை அதிகரிப்பதில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது. உக்ரைன் தற்போது பழைய சோவியத் கால ஜெட் விமானங்களையே நம்பியுள்ளது. இன்னும் சில எஃப்-16 விமானங்கள் வரும் மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்றன. எங்கிருந்து வந்தன..! இருப்பினும் உக்ரைனில் இன்னும் போதுமான பயிற்சி பெற்ற விமானிகள் இல்லை என்பதை ஜெலென்ஸ்கி ஒப்புக்கொண்டார். உக்ரைனுக்கு எத்தனை விமானங்கள் வந்தன என்பதை அவர் குறிப்பிடவில்லை.அவை அனைத்தும் டென்மார்க்(denmark), நெதர்லாந்து (netherland)மற்றும் அமெரிக்காவால்(us) அனுப்பப்பட்டதா என்பதையும் அவர் குறிப்பிடவில்லை. இதேவேளை கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், உக்ரைனுக்குள் பறக்கும் மேற்கத்திய தயாரிப்பான F-16 விமானங்கள் "சுட்டு வீழ்த்தப்படும்" என்று முன்னர் தெரிவித்திருந்தார். "ஆனால் இந்த விமானங்கள் முன்னணி களமுனையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது," என்று அவர் மேலும் கூறினார். https://ibctamil.com/article/ukraine-receives-first-f-16-fighter-jets-1722845093
  4. Lyles wins men’s 100m gold, Mahuchikh takes women’s high jump, and more | Day 9 Athletics Highlights https://youtu.be/vaNFOBQNdyM?si=_vb4pZprrMt10wfe
  5. பாரிஸ் ஒலிம்பிக் : மின்னல் வேக பெண்ணால் சிறிய தீவிற்கு கிடைத்த தங்கப் பதக்கம் பிரான்ஸ்(france) தலைநகர் பாரிஸில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் மின்னல் வேகத்தில் ஓடி முடித்து தனது நாட்டின் கனவை நிறைவேற்றி தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார் 23 வயதேயான யுவதி. செயின்ட் லூசியாவைச் சேர்ந்த 23 வயதான ஜூலியன் ஆல்பிரட்(Julian Alfred) என்ற யுவதியே முதல் தங்கப் பதக்கத்தை வென்றவராவார். இந்த ஓட்டப்பந்தயத்தில் 10.72 விநாடிகளில் எல்லைக்கோட்டைக் கடந்து அவர் தனது வெற்றியை உறுதிப்படுத்தினார். வெற்றி தந்தைக்கு அர்ப்பணம் இந்த வெற்றியை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாக ஜூலியன் ஆல்பிரட் தெரிவித்தார். சோபிக்காத அமெரிக்க வீராங்கனை எனினும் உலக சம்பியனான அமெரிக்க வீராங்கனை ஷாகாரி ரிச்சர்ட்சன் இரண்டாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. அவர் 10.87 விநாடிகளில் போட்டி தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.மூன்றாவது இடத்தை மெலிசா ஜெபர்சன் (10.92பிடித்தார். இதேவேளை டோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்ததைப் போல, இந்த முறை பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்கா வீரர்களின் ஆதிக்கம் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/julian-alfred-win-gold-medal-1722840804 Julien Alfred stuns with gold in women’s 100m final and more 🏃‍♀️‍➡️🥇 | Day 8 Athletics Highlights https://youtu.be/70rY3wyIh5k?si=r-uhQBR1ywpHhMhQ
  6. மன்னார் வைத்தியசாலை இளம் தாயின் மரணம்..! மயங்கி விழும் வரை சிகிச்சை அளிக்கப்படவில்லை - கடுமையான குற்றச்சாட்டு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் (Mannar District Hospital) நள்ளிரவில் குருதிப் போக்கினால் அனுமதிக்கப்பட்ட இளம் பெண் மரியராஜ் சிந்துஜா, அடுத்த நாள் காலையில் மயங்கி விழும் வரை உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என சிரேஷ்ட சட்டத்தரணியான கனகரத்தினம் சுகாஷ் (Kanagaratnam Sugash) தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிட்டுள்ள பதிவில் கனகரத்தினம் சுகாஷ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பிறந்து சில நாட்களேயான சிசுவைத் தவிக்கவிட்டுத் தாயார் மரணித்துள்ளார். நீதியான - வெளிப்படையான விசாரணை உடனடியாகச் சிகிச்சையளித்திருந்தால் நிச்சயம் அவரைக் காப்பாற்றியிருக்கலாம். விடுதிக்குப் பொறுப்பான வைத்தியர்கள், தங்கும் விடுதியிலிருந்தும் தாதிய உத்தியோகத்தர் அறிவித்தும் விடியும்வரை சிகிச்சையளிக்க முன்வரவில்லை. இது தவறல்ல, குற்றம். நீதியான - வெளிப்படையான விசாரணைகள் மூலம் குற்றவாளிகள் அம்பலப்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். உயிர்கள் அநியாயமாகக் காவு அதன் மூலமே சுகாதாரத்துறை மீதான மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க முடியும் என்பதோடு நேர்மையாகப் பணிபுரியும் வைத்தியர்களின் சேவையும் போற்றப்படும். இந்நிலை தொடர்ந்தால் அரசியல் பிரச்சனைகளுக்காகப் போராடும் நாங்கள், மருத்துவ அலட்சியங்களுக்கு எதிராகவும் போராட வேண்டி ஏற்படும். எமது உயிர்கள் அநியாயமாகக் காவு கொள்ளப்படுவதை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தயவுசெய்து பொறுப்போடு செயற்படுங்கள். உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என கனகரத்தினம் சுகாஷ் குறிப்பிட்டுள்ளார். https://ibctamil.com/article/mannar-hospital-young-mother-death-case-1722827117
  7. வைத்தியர் அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு : நீடிக்கப்பட்டுள்ள விளக்கமறியல் மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் மகபேற்று வைத்தியர் அறைக்குள் நுழைந்து புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்சுனாவை (Archuna) தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இன்றைய தினம் திங்கட்கிழமை (5) நகர்தல் பத்திரம் ஊடாக வைத்தியர் அர்சுனா வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் பிணை மனு நிராகரிக்கப்பட்டு தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார். அதேநேரம் வைத்தியசாலையினுல் அனுமதி இன்றி வைத்தியருடன் நுழைந்து காணொளி பதிவுகளை மேற்கொண்ட இருவரையும் விசாரணைக்கு உட்படுத்துமாறு நீதவான காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். நீதவான் உத்தரவு மன்னார் பொது வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனுமதியின்றி நுழைந்து பெண்கள் மகபேற்று விடுதிக்குள் பணியாற்றிய வைத்தியருக்கு இடையூறு விளைவித்ததுடன் வைத்தியரின் அறைக்கு சென்று அனுமதி இன்றி புகைப்படங்கள் மற்றும் காணொளி எடுத்தமை தொடர்பில் மன்னார் காவல்நிலையத்தில் வைத்தியர் அர்சுனாவிற்கு எதிராக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது. வைத்தியர் கடந்த சனிக்கிழமை மன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இந்தநிலையில், இன்றைய தினம் திங்கட்கிழமை (05) சட்டத்தரணிகள் ஊடாக வைத்தியருக்கு பிணைமனு மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில் குறித்த நகர்தல் பத்திரம் ஊடான பிணை மனு நிராகரிக்கப்பட்டதுடன் தொடர்ந்து வைத்தியரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/bail-plea-rejected-for-dr-archuna-remand-ordered-1722852373
  8. தீ வைக்கப்பட்ட ஷேக் ஹசீனா அலுவலகம்...! பதவி விலகிய பங்களாதேஷ் பிரதமர் - நாட்டை விட்டு தப்பியோட்டம் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) பதவி விலகல் செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்களாதேஷ் (Bangladesh) தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் நாடு முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதேவேளை, தன்மோண்டியில் உள்ள அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனாவின் அலுவலகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இராணுவ உலங்கு வானூர்தி இதனையடுத்து பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஏஎஃப்பி (AFP) செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகோதரி ஆகியோர் அங்கிருந்து இராணுவ உலங்கு வானூர்தி மூலம் இந்தியாவுக்குப் (India) புறப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு வங்காளதேசத்தில் சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு நடைமுறைக்கு முடிவு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நடந்து வரும் போராட்டத்தில் கடந்த மாதத்தில், வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்து இருந்தது. இந்த நிலையில் ஆளும் அவாமி லீக் அரசின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே நேற்று மீண்டும் கடுமையான மோதல் ஏற்பட்டது. அரசுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் உட்பட 100 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/bangladesh-prime-minister-sheikh-hasina-resigned-1722851699
  9. உலக போருக்கான நாளை அறிவித்த பிரபல ஜோதிடர் இந்தியாவின் பிரபல ஜோதிடராக அறியப்படுபவர் குஷால் குமார். இந்தியாவின் நாஸ்ட்ரடாமஸ் என அறியப்படுபவர். இதற்கு முன் ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரை கணித்தவர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போரையும் முன்கூட்டியே அறிவித்தவர் இந்த போர்களால் உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, உணவு தட்டுப்பாடு போன்றவை ஏற்பட்டன. கொரோனா பெருந்தொற்றில் இருந்து உலகம் மீண்டு வந்த சூழலில், இந்த போர்கள் ஆப்பிரிக்கா போன்ற வளர்ச்சி அடையாத நாடுகளை பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாக்கி விட்டன. இந்த நிலையில், 3-ம் உலக போர் தொடக்கம் பற்றிய தேதியை குஷால் அறிவித்து உள்ளார். அவருடைய கணிப்பின்படி, இந்த போர் இன்று அல்லது நாளை தொடங்கும் ஆகஸ்டு 4 அல்லது ஆகஸ்டு 5 ஆகிய இரு தேதிகளில் போர் தொடங்கும் என அவர் கூறினார். அவருடைய கணிப்பின்படி, அந்த நாள் இன்று தொடங்குகிறது ஆனால், அது மெய்யாவதற்கான சாத்தியங்கள் பின்னரே தெரிய வரும். இதற்கு முன்பும் அவர் பல முறை 3-ம் உலக போர் தொடங்கும் திகதியை அறிவித்துள்ளார் இதன்படி, நடப்பு ஆண்டின் ஜூன் 18-ந்திகதி போர் தொடங்கும் என கூறினார். ஆனால், அன்று எதுவும் நடக்கவில்லை. இதன்பின், புதிய திகதியை அறிவித்த அவர், ஜூலை 26 அல்லது ஜூலை 28 ஆகிய நாட்களில் ஏதேனும் ஒரு திகதியில் 3-ம் உலக போர் தொடங்கும் என கணிப்பு வெளியிட்டார். ஆனால், அதுவும் தவறாகி போனது இஸ்ரேல் மீது போரை தொடுக்க ஈரான் தலைவர் அலி காமினி உத்தரவிட்டு சில தினங்கள் ஆன நிலையில், பிரபல ஜோதிடரின் 3-ம் உலக போர் பற்றிய அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://thinakkural.lk/article/307342
  10. மன்னார் வைத்தியசாலையில் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட இளம் தாயின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் மன்னார் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் பல வருட காலமாக இடம் பெற்று வரும் தென்பகுதியில் உள்ள வீட்டில் இருந்துகொண்டு சம்பளம் பெறும் மற்றும் மேலதிக நேரத்துக்கான கொடுப்பனவாக பல இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்படும் ஊழலை அண்மையில் எனது "மருத்துவ மாபியா" கட்டுரையில் அம்பலப்படுத்தியிருந்ததுடன் ஊறுபடும் நிலையில் உள்ள நோயாளிகளை குறிப்பாக இரவில் உடனடியாக வைத்தியர்கள் கவனிக்காவிட்டால் மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவித்து இருந்தேன். இந்த கட்டுரை வெளியிட்டு சில தினங்களுக்குள் மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற கவனக்குறைவு காரணமாக இரவு அனுமதிக்கப்பட்ட 27 வயது தாய் காலை வரை எந்த வித சிகிச்சையுமின்றி இருந்ததனால் உடல்நிலை மோசமாகி உயிரிழந்து இருக்கிறார். வழமை போல வைத்தியசாலைக் குறிப்புகளில் பொய்யாக உரிய சிகிச்சை இடம்பெற்றதாக குறிப்பிட்டு பின்னர் விசாரணை என்று சில குழுக்களை அமைத்து அனைத்தையும் முடிமறைக்கும் செயல்பாடுகள் இடம் பெறும் . இவை அனைத்தையும் GMOA மாபியா குழுவினர் மேற்பார்வை செய்து இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கடைசியில் குற்றமற்றவர்கள் என்று நிர்வாகத்தையும் மிரட்டி முடிக்கும். இந்த அவலத்துக்கு இந்த சந்தர்ப்பத்தில் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்தக் கொடுமைகள் தொடரும். இதற்கிடையில் நிர்வாகமும் GMOA மாபியாவும் இணைந்து மக்களை ஏமாற்றும் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். ஸ்தாபன கோவையின் 31.5.2.பிரிவு (கீழ் இணைக்கப்பட்டுள்ளது ) மிகவும் தெளிவாக ஒரு அரசாங்க அதிகாரியின் பொறுப்பற்ற செயலால் மோசமான பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அவர் உடனடியாக பணி நீக்கம் (interdiction ) செய்யப்படவேண்டும் என்று கூறுகிறது. இதுவரை இந்த அனாவசிய உயிரிழப்புக்கு காரணமான வைத்தியசாலை ஊழியர்கள் எவரும் ஏன் பணி நீக்கம் செய்யப்படவில்லை? அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்தால் அவர்களது பெயர்கள் ஏன் இன்னமும் வெளியிடப்படவில்லை ? வைத்தியசாலைக்கு அப்பால் பட்ட வேறு அரசாங்க திணைக்களங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றால் ஊழியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரணையின் பின்பு குற்றமற்றவராக இருந்தால் மட்டுமே மீண்டும் பணிக்கு இணைத்துக் கொள்ளப்படுவார். ஆனால் இங்கே தெளிவாக ஒரு உயிரிழப்பு கவனக் குறைவு காரணமாக இடம் பெற்று இருக்கிறது. ஆனால் எவரும் பணி நீக்கம் செய்ய படவுமில்லை. அதே நேரம் பல விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் நீதியான விசாரணை இடம்பெறும் என்றும் அதன் பின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்ற தமது வழமையான பம்மாத்துக் கதைகளை GMOA மாபியா மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலை நிர்வாகம் கூறி வருகிறது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க மன்னாரில் உள்ள தமிழ் பேசும் மக்கள் முன்வர வேண்டும். குற்றவாளிகள் எந்த வித தாமதமும் இன்றி பணி நீக்கம் செய்யப்படும் வரை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதை நீங்கள் செய்ய தவறினால் தொடர்ந்து கவனக் குறைவு காரணமாக பல உயிரிழப்புகளை சந்திக்க வேண்டி வரும். அதே வேளை இறந்த நோயாளியின் உறவினர்கள் தாமதம் இன்றி போலீஸ் நிலையத்தில் கவனக் குறைவால் இடம்பெற்ற இந்த இறப்பு தொடர்பாக உரிய முறைப்பாட்டை செய்ய வேண்டும். மன்னாரை சேர்ந்த சட்டத்தரணிகள் இலவசமாக இந்த அநியாயத்துக்கு எதிராக போராட முன்வரவேண்டும். நீதிமன்றின் ஊடாக, 1. பொலிஸ் மூலம் குற்றச் செயலுக்கான வழக்கு மற்றும் 2. இறப்புக்கான நட்டஈடு கோரி சிவில் வழக்கும் தாக்கல் செய்யப்பட வேண்டும் ஒரு குற்றவாளி ஆவது முறையாக தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டால் தான் இந்த மருத்துவ மாபியா திருந்த வாய்ப்புள்ளது. அதைவிடுத்து பல கட்டுரைகள் விரிவுரைகள் சமூக ஊடக பதிவுகள் மூலமாக இவர்கள் திருந்தப் போவதில்லை மனம் வருத்தப் போவதும் இல்லை. உடனடியாக மன்னாருக்கு நான் வரும் சூழ்நிலை காணப்படாத நிலையில் இது தொடர்பாக ஆலோசனை பெற விரும்புவோர் என்னுடன் 0779068868 தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள முடியும் நன்றி Dr முரளி வல்லிபுரநாதன் 4.8.2024 https://www.facebook.com/share/p/ifukxJct4R8pBWu4/ விசுகண்ணையின் பகிர்வு. நன்றியோடு இத்திரியிலும் அங்கே என்ன நடந்தது?? அந்த இளம் தாய்க்கு இழைக்கப்பட்ட அநீதியும் கொடுமையும் அதிர்ச்சியையும் கடுங்கோபத்தையும் ஏற்படுத்துகிறது. என்ன நடந்தது என்பதை வாசித்துப் பாருங்கள். மன்னார் முருங்கன் பிரதேசத்திலுள்ள தம்பனை எனும் கிராமத்தைச் சேர்ந்த பெண் திருமதி.சிந்துஜா தனது முதலாவது பிரசவத்தை மன்னார் பொது மாவட் வைத்தியசாலையில் பலத்த போராட்டத்தின் பின்னர் சிசேரியன் சத்திர சிகிச்சை மூலம் குழந்தையினைப் பெற்றுக் கொண்டார். திருமதி.சிந்துஜா பட்டப் படிப்பினை மேற்கொண்டு முடிக்கும் தறுவாயில் உள்ள வேளையில் தனது எதிர்கால கனவுகளுடன் தாயாகும் பாக்கியம் பெற்றிருந்தார். வைத்தியசாலையிலிருந்து தாயும் குழந்தையும் சுகமாக வெளியேறி தங்களது வீட்டில் தனது தாயாரின் அரவணைப்பில் இருந்த நிலையில் 5வது நாள் மட்டில் அசாதாரணமாக பெண்ணுறுப்பின் வழியில் இரத்தம் கசிவதை அவதானித்துள்ளார். மாலை நேரம் நெருங்கும் போது, கூடுதலான இரத்தம் வெளியேறத் தொடங்கிய நிலையில், அசிரத்தையாக இருந்ததை உணர்ந்து, தாயாரினதும் மற்றும் உறவினர்களின் வற்புறுத்தலின் முடிவில் 1990 அம்புலன்ஸ் வண்டியை வரவழைத்து பிரதேச வைத்தியசாலை முருங்கனிற்குக் கொண்டு சென்று அங்கு காலதாமதமின்றி மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டார். தயார் மிகவும் நம்பிக்கையுடன் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு இரவு 2.00 மணியளவில் கொண்டு சென்று தனது மகளை விடுதி இலக்கம் 06 இல் அனுமதித்தார். அங்கு கடமையில் இருந்த தாதிகள் கொண்டுவரப்பட்ட நோயாளியை குளியலறைக்குச் சென்று இரத்தம் தோய்ந்திருந்த உடுப்புக்களை கழுவிவரும்படி பணித்துள்ளனர். அதன் படி கழுவிவிட்டு வந்த நோயாளியை கட்டிலில் படுக்கவைத்துவிட்டு ஏதோ ஒரு கருவியைக் கையில் பொருத்திவிட்டு தங்களது ஓய்வு அறைக்குச் சென்றுவிட்டனராம். தனது மகளிற்கு ஏதாவது பரிகாரம் நடக்கும், வைத்தியர் வருவார் என ஏக்கத்துடன் இருந்த தாய் பொறுக்கமுடியாது தாதியர்களின் ஓய்வு அறைக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு தாதியர்கள் கைத்தொலைபேசியை வைத்து நோண்டிக் கொண்டிருந்ததை அவதானித்தார். தயார் பொறுத்துக் கொள்ள முடியாது ‘மகளின் நிலையைப் பாருங்கள்’ என்று அழுத போது, தாதியர்கள் அதட்டலான குரலில் ‘கையில் கருவி பொருத்தியுள்ளோம். நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்’ என்று தாயாரை விரட்டியுள்ளனர். ‘கையில் பொருத்திய கருவியை கைத்தொலைபேசியில் பார்த்தால் மட்டும் போதுமா? மகளின் உடம்பிலிருந்து வெளியேறும் இரத்தத்தை பார்க்க முடியுமா?’ என்று தாயார் தனக்குத்தானே கூறிக்கொண்டு வந்து, மீண்டும் மகளின் கட்டிலருகில் வந்து கடவுளை வேண்டிக் கொண்டு கையில் மகளின் சிறு குழந்தையையும் வைத்துக் கொண்டு காலை வரையும் இருந்ததாகவும் தயார் கூறுகிறார். காலை ஏழு மணியளவில் புதிய தாதியர்கள் கடமைக்கு வந்ததும் மீண்டும் தாதியர்களிடம் அணுகி தனது மகளின் பரிதாப நிலையை சொல்லி அழுதுள்ளார். நிலைமையினை உணர்ந்த புதிய தாதியர்கள் மீண்டும் மகளை பாத்றூம் போய்க் கழுவிவிட்டு வரும்படி கூறியுள்ளார்கள். தாயார் மிகவும் கஷ்டப்பட்டு கைத்தாங்கலாக மகளைக் கூட்டிக்கொண்டு சென்று கழுவிவிட்டு மீண்டும் கட்டிலடிக்கு வரும் வழியில் மகள் தலைசுற்றுவதாகக் கூறி திடீரெனக் கீழே விழுந்துவிட்டார். இந்நிலையில் தாயார் போட்ட கூக்குரலில் எல்லோரும் ஓடி வந்து கீழே கிடந்த மகளைத் தூக்கி கட்டிலில் வளர்த்தினார்கள். பின்பு ஏதோ ஏதோவெல்லாம் செய்தார்கள். காலை 7.30 மணியளவில் மூன்று வைத்தியர்கள் அவசர அவசரமாக வந்து மயக்க நிலையில் இருந்த மகளை தள்ளு வண்டிக்கு மாற்றி வைத்து தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு ஒப்பரேசன் அறைக்குக் கொண்டு சென்றனர். தாயார் மகளின் கைக்குழந்தையுடன் காவல் இருந்ததாகவும், 11 மணியளவில் ஒரு வைத்தியர் வந்து தாயாரைப் பார்த்து பெரிய ஐயா கதைக்க வரும்படி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பெரிய ஐயா பின்வருமாறு தயாரிடம் கூறினாராம். “அம்மா உங்கள் மகளிற்கு நிறைய இரத்தம் போய்விட்டது. இப்போது மூச்சுவிட முடியாது கஷ்டப்படுகிறா. நாங்கள் குழாய் போட்டு சுவாசிக்க காற்று கொடுக்கிறோம். இனி அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப் போகிறோம்” என்றாராம். அதற்குத் தாயார் “நாங்கள் நடுச்சாமத்தில் இங்கு கொண்டுவந்தோம். மகள் மயங்கி விழும்வரை ஏன் ஐயா நீங்கள் ஒருத்தரும் வந்து பார்க்கவில்லை” என்று கூறி அழுததாகவும் தயார் கூறுகிறார். அவ்வேளையில், அங்கு வந்த இன்னுமொரு டொக்டர் ஏதோ இங்கிலீசில் பெரிய டொக்டருடன் கதைத்த முறையை அவதானித்த போது, ஏதோ விபரீதமாக மாறுவதை தான் உணர்ந்ததாகத் தாயார் கூறுகிறார். அவ்விடத்தை விட்டு உடனே டொக்டர்மார் உள்ளே சென்று விட்டனராம். ஏறத்தாழ அரைமணித்தியாலம் கழித்து பெரிய டொக்டர் மீண்டும் வந்து தாயாரிடம் இவ்வாறு கூறினாராம். “உங்கள் மகளைப் போய்ப் பாருங்கள். நாங்கள் என்ன செய்ய முடியும்” என்றாராம். தாயார் மிகவும் ஆத்திரப்பட்டு “அடப்பாவிகளா! எல்லோரும் சேர்ந்து எனது மகளைக் கொன்று விட்டீர்களா? என பத்திரகாளியாக மாறியது மட்டும்தான் செய்யக் கூடியதாக இருந்ததாம். தன் மகளின் உயிர் மீண்டும் வருமா? சிறு கைக்குழந்தை தன் தாயின் பாலைக் குடிக்குமா? அதற்கு என்ன பதில்? பணிப்பாளர் வந்து கூறுகிறார் தாய் இறந்ததற்குக் காரணம் தெரியாதாம். பிணப்பரிசோதனை செய்துவிட்டுத்தான் கண்டுபிடிக்க வேண்டுமாம். இது என்ன கதை? எங்களுக்கே தெரியும். இரத்தம் வெளியேறுவதை எப்படி நிற்பாட்டுவது என்று தெரிந்தால் நாங்கள் ஏன் இங்கு கொண்டு வரவேண்டும்? இரத்தம் ஓடுவதை நிற்பாட்ட அதைக் கண்டுபிடிக்க பிணப்பரிசோதனை செய்து தான் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் வைத்தியசாலையை சுடலையாக மாற்றுங்கள். பிணப்பரிசோதனை செய்பவர் உடல் பாகங்களை வெட்டியெடுத்து கொழும்புக்கு அனுப்புவார். அதற்கான பதில்கள் கொழும்பிலிருந்து கடைசி வரை வராது. வரும், வரும் என்று கடைசி வரை கூறி எங்களை இப்படி ஏமாற்றிக் கொண்டிருக்க, அலுத்துப்போய் நாங்களாகவே விலகிச் செல்வதற்கு செய்யும் தந்திர வேலைகைள் தான் என அறியாமல் போவதற்கு மன்னார் காட்டில் வாழும் நரிக் கூட்டமோ அல்லது கழுதைக் கூட்டமோ அல்ல நாங்கள். இவ்விடயம் தொடர்பாக கடந்த நான்கு நாட்களாக நாம் பல்வேறுபட்டவர்களிடம் ஆலோசனை நடாத்தியிருந்தோம். அதன் தொகுப்பை இங்கு முன்வைக்கிறோம். 1. வைத்தியசாலையிலிருந்து பிரசவத்தின் பின் தாய் வீடு திரும்பியிருந்தால் உடனடியாகவும்மேலும், ஐந்து தடவைகள் அடுத்துவரும் பத்து நாட்களிற்குள் பிரதேச குடும்பநலமாது கள விஐயம் செய்து தாயினதும், சிசுவினதும் சுகாதார நிலைமைகளை அவதானித்து அப்பகுதிக்குரிய சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிக்கையிடல் வேண்டும் என கடமை அறிவுறுத்தல் பட்டியல் உள்ளது என்று சொல்லப்படுகிறது. இது நடைமுறைப்படுத்தப்பட்டதா? 2. சிசேரியன் சத்திரசிகிச்சைக்குட்படுத்தப் பட்ட தாய் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டார். விடுதியில் அனுமதிக்கப்படும் நோயாளரை உடனடியாகக் கவனித்து அது பற்றி கடமை வைத்தியருக்கு அறிவிக்க வேண்டிய கடமைப் பொறுப்பினை தாதியர்கள் மேற் கொண்டனரா? (எந்நிலையில் நோயாளர் வருகை தந்தாலும் உடனடியாக அவ்வேளையில் பொறுப்பிலுள்ள வைத்தியருக்கு அறிவிக்க வேண்டும்) 3. புதிதாக விடுதிகளுக்கு அனுமதிக்கப்படும் நோயாளர்களை 15 நிமிடங்களிற்குள் வைத்தியர் பார்வையிடல் வேண்டும் என்ற கடமைப் பட்டியல் உள்ள போதும், ஏன் வைத்தியர் இரவு 2.00 மணிக்கு வந்து நோயளரைப் பார்வையிடாது காலை 7.30 மணிக்கு வந்தார்? 4. விடுதி 06 இற்குரிய இரவுக் கடமைக்குரிய வைத்தியர் அன்றைய தினம் கடமைக்கு வந்திருந்தாரா? அவர் இரவு வைத்தியசாலையில் தங்கியிருந்தாரா? 5. சிசேரியன் சத்திரசிகிச்சைக்குட்பட்ட நோயாளி இரத்தப் பெருக்குக் காரணமாக விடுதிக்கு வந்த போது, தாதியர்கள் நடந்து கொண்ட கடமைப்பொறுப்பு நடவடிக்கைகள் ஏற்புடையதா? மேற்படி இளம் குடும்பப் பெண் வைத்தியசாலையில் வைத்து மனிதப் படுகொலைக்குட்படுத்தப்பட்டதற்கு சமூகம் எடுக்கும் நடவடிக்கைகள் தான் என்ன? இச்சம்பவத்தில் வைத்தியசாலைச் சமூகம் நடந்து கொண்டுள்ள முறைமை வைத்தியசாலை முறைமைக்கு உட்பட்டதா? இதுதான் இலங்கை மாவட்ட வைத்தியசாலைகளின் சாதாரண நடைமுறைகளா? இவை பொதுமக்களிற்குத் தெரியாதா? நோயாளிகளுடனான தொடர்பாடல்களில் அரச வைத்தியசாலைகளின் பொதுவான நடைமுறைகள் என்ன? சாதாரண பொதுமக்கள் தொடக்கம் மதப் பெரியார்களே!, கற்றோரே!, இளம் குடும்பத் தலைவர்களே!, எதிர்காலத்தில் தாயாகக் காத்திருக்கும் இளம் பெண்களே! நீங்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள்? நேற்று சிந்துஜா. நாளை யாரோ ? copied post https://www.facebook.com/share/b8EK2FpTq7HrEq8S/
  11. ஹமாஸ் தலைவர் கொலை செய்யப்பட்ட விவகாரம்; ஈரான் அதிகாரிகள் மீது சந்தேகம்! ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா கொலை செய்யப்பட்டதில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) அதிகாரிகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அப்போது முதல் இஸ்ரேல் உளவுப் படையான மொசாட், ஹமாஸ் முக்கியபுள்ளிகளை குறிவைத்து தாக்கி வருகிறது. இந்த வரிசையில் ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஜூலை 31-ல் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நாள்தோறும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: ஈரான் ராணுவத்தின் உயர் பிரிவான இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (ஐஆர்ஜிசி) கட்டுப்பாட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஹனியா தங்கினார். அவர் தங்கியிருந்த அறையில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இதில் ஹனியா உயிரிழந்தார். இதன் பின்னணியில் இஸ்ரேல் உளவுப் படையான மொசாத் இருக்கிறது. மொசாத்தின் ஏஜெண்டுகளாக செயல்பட்ட ஈரானின் ஐஆர்ஜிசி படையின் அதிகாரிகள், வீரர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்துள்ளது. பிரிட்டனின் டெலிகிராப் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், “இஸ்மாயில் ஹனியா அடிக்கடி தங்கும் டெஹ்ரானில் உள்ள விருந்தினர் மாளிகையின் 3 அறைகளில் முன்கூட்டியே வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டன. இந்த வெடிகுண்டுகளை ஈரானின் ஐஆர்ஜிசி படையை சேர்ந்த 2 அதிகாரிகள் மறைத்து வைத்தனர். இவர்கள் மொசாட்டின் ஏஜெண்டுகள் ஆவர். குறிப்பிட்ட அறையில் ஹனியா தங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டதும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிகுண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டன” என தெரிவித்துள்ளது. இஸ்மாயில் ஹனியா கொலையில் ஐஆர்ஜிசி படையினருக்கு தொடர்பு இருப்பது குறித்து ஈரான் அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் ஐஆர்ஜிசி படையை சேர்ந்த அதிகாரிகள், வீரர்கள் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. ஈரான் ராணுவம் உட்பட அனைத்து துறைகளிலும் இஸ்ரேலின் மொசாத் ஏஜெண்டுகள் ஊடுருவி இருப்பதாகக் கூறப்படுகிறது. https://thinakkural.lk/article/307333
  12. சிரேஷ்ட பிரஜைகளின் வட்டி விகிதத்தை திருத்த தீர்வு அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு - சியம்பலாபிட்டிய 05 AUG, 2024 | 04:35 PM சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புத் தொகைக்கான வட்டி வீதத்தை திருத்துவதற்கான தீர்வு யோசனை அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை (05) காலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர், பல சிரேஷ்ட பிரஜைகளின் முக்கிய வருமானம், அவர்களின் ஓய்வு காலத்தின்போது வழங்கப்படும் பணிக்கொடை அல்லது வங்கி வைப்புத்தொகை போன்றவற்றில் பெறப்படும் நிலையான வட்டியே என்று குறிப்பிட்டார். கடந்த காலங்களில் நாட்டில் வங்கி வட்டி வீதத்தை குறைக்குமாறு கடன் பெற்றவர்கள் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், அதற்கமைய வங்கி வட்டி வீதமும் பொதுவாக கடன் வட்டி வீதத்தை குறைக்கும்போது குறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கடந்த காலங்களில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டபோது அரசாங்கம் குறிப்பிட்ட சதவீத வட்டியை சேர்த்து சிரேஷ்ட பிரஜைகளுக்கு வழங்கியதாக அமைச்சர் குறிப்பிட்டார். அதன்படி, ஒருபுறம், வங்கிகளுக்கு 88 பில்லியன் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. மறுபுறம், கிட்டத்தட்ட 15 லட்சம் கணக்கு வைத்திருப்பவர்கள் வட்டி விகிதத்தைக் குறைப்பதில் சிக்கலை எதிர்கொண்டுள்ள நேரத்தில், ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி இப்பிரச்சினைக்கு திறைசேரி வழங்கக்கூடிய பதில் தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் சாதகமான பதில் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/190335
  13. 05 AUG, 2024 | 03:57 PM எமது நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது தானாக இடம்பெற்ற ஒன்றல்ல. இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் பிறப்பித்த ஒன்றாகும். அதைப்போலவே இந்த நாட்டில் இருக்கின்ற பதினாறு இலட்சம் வலதுகுறைந்தவர்களில் எவருமே இந்த வங்குரோத்துநிலைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களல்ல என சமூக ஆர்வலர் சுகத் வசந்த த சில்வா தெரிவித்தார். கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் கடந்த 03 ஆம் திகதி சனிக்கிழமை மாற்றுத்திறனாளிகள் பற்றிய தேசிய மக்கள் சக்தியின் தேசிய கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் வெளியிடுதல் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே சமூக ஆர்வலர் சுகத் வசந்த த சில்வா இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக இன்றளவில் பலர் கட்டுப்பணம் செலுத்தியிருந்தாலும் கூருணர்வுமிக்க ஒருவராக ஜனாதிபதி பதவிக்காக நியமிக்கப்படுகின்ற ஒருவராக அநுர குமார திசாநாயக்க மாத்திரமே இருக்கிறார். எமது நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது தானாக இடம்பெற்ற ஒன்றல்ல. இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் பிறப்பித்த ஒன்றாகும். அதைப்போலவே இந்த நாட்டில் இருக்கின்ற பதினாறு இலட்சம் வலதுகுறைந்தவர்களில் எவருமே இந்த வங்குரோத்துநிலைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களல்ல. எனினும் பொருளாதார சீரழிவினால் மூச்செடுக்க இயலாதநிலைக்கு ஆளாகியவர்கள் வலதுகுறைந்தவர்கள் அனைவருமேயாவர். எமது உழைப்பினை விற்க நாங்கள் தயார். அதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். வலதுகுறைந்தவர்கள் அத்தகைய இயலாமைநிலையை வெற்றிகண்டு சமூகமயமாகத் தயார். இற்றைவரை சுயதொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வலதுகுறைந்தோருக்கு நிலவிய வாய்ப்புகள் அனைத்துமே அற்றுப்போய்விட்டன. குறைந்தபட்சம் ஊதுபத்தியைக்கூட தயாரித்து விற்கமுடியவில்லை. இந்த நிலைமையை மாற்றியமைத்துக்கொள்ள இன்று வெளியிடுகின்ற தேசிய கொள்கை நடைமுறைப்படுத்தப்படுமென்ற தீவிர நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என்றார். https://www.virakesari.lk/article/190310
  14. பொது வேட்பாளர் யார்?; இன்று முடிவாகும் ஜனாதிபதி தேர்தலில், தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சார்பில் களமிறக்கப்படும் பொதுவேட்பாளர் குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவேட்பாளர் பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரநேரு சந்திரகாந்தன், அரியநேத்திரன், தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் கே.வி.தவராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையிலேயே, ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படும் பொதுவேட்பாளர் குறித்து வவுனியாவில் இன்று கூடி முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/307317
  15. Published By: DIGITAL DESK 7 05 AUG, 2024 | 05:23 PM யாழில் குற்றச்செயலினை மேற்கொள்வதற்காக பற்றைக்குள் மறைத்து வைத்திருந்த 3 வாள்கள், காலணிகள், முகமூடிகள் மற்றும் மேல் அங்கிகள் என்பன இன்று திங்கட்கிழமை (05) மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஏழாலை மேற்கு , ஏழாலை, புளியங்கிணற்றடி என்ற இடத்தில் உள்ள பற்றைக்குள் இருந்தே மேற்குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/190349
  16. ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் தகுதி செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. https://thinakkural.lk/article/307383
  17. இஸ்ரேலில் கத்திகுத்து தாக்குதல் - இருவர் பலி Published By: RAJEEBANvvv05 AUG, 2024 | 03:51 PM இஸ்ரேலின் ஹொலொன் நகரில் கத்திக்குத்து தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேற்குகரையை சேர்ந்த நபர் ஒருவரே இந்த கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டார் என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 66வயது யூத பெண் ஒருவரும் 80 வயது ஆணும் கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். நான் எனது நாயுடன் நடந்துசென்றுகொண்டிருந்தவேளை நபர் ஒருவர் ஒடிவந்து முதுகில் கத்தியால் குத்தினார் என காயமடைந்த 26 வயது நபர் தெரிவித்துள்ளார். நான் பேருந்து தரிப்பிடத்தை நோக்கி தப்பிச்சென்றேன் கத்திக்குத்திற்கு மேலும் பலர் இலக்கானது அதன் பின்னரே எனக்கு தெரியவந்தது என அந்த நபர் தெரிவித்துள்ளார். ஹெலொனில் சம்பவம் ஒன்று இடம்பெற்றதை இஸ்ரேலிய பிரதமர் அமைச்சரவை கூட்டத்தில் உறுதி செய்துள்ளார். https://www.virakesari.lk/article/190338
  18. பதவியை இராஜினாமா செய்தார் ஷேக் ஹசீனா 05 AUG, 2024 | 02:58 PM பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். மாணவர்கள் ஆயிரக்கணக்கில் தலைநகர் டாக்காவை நோக்கி பேரணியாக சென்றுகொண்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/190330
  19. எவ்வேளையிலும் இஸ்ரேல் மீது ஈரானும் ஹெஸ்புல்லா அமைப்பும் தாக்குதலை மேற்கொள்ளலாம் - அமெரிக்கா 05 AUG, 2024 | 01:27 PM அடுத்த 24 முதல் 48 மணித்தியாலங்களிற்குள் ஈரானும் ஹெஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொள்ளலாம் என அமெரிக்க இராஜாங்க அமைச்சர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார். ஜி7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் அந்த அமைப்பின் வெளிநாட்டு அமைச்சர்களிடம் பிளிங்கென் இதனை தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை தாக்குதல் இடம்பெறலாம் என பிளிங்கென் தனது சகாக்களிடம் தெரிவித்துள்ளார். ஈரானும் ஹெஸ்புல்லா அமைப்பும் பதில் தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என பிளிங்கென் வலியுறுத்தினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/190319
  20. Published By: VISHNU 05 AUG, 2024 | 05:55 PM நான் ஜனாதிபதியுடன் ரகசியமான சந்திப்பில் ஈடுபடவில்லை. பரகசியமான சந்திப்பிலேயே ஈடுபட்டேன் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் ஈழ மக்கள் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமான ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (4) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வேட்பாளர்கள் என்ற வகையில் கடந்த மாதம் சஜித் பிரேமதாச அவர்களை சந்தித்து இருந்தேன். வடக்கு கிழக்கு மக்கள் தொடர்பான அவர்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை நான் கேட்டுக் கொண்டேன். அதேபோல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களையும் நான் சந்தித்திருந்தேன். நான் ஏற்கனவே வடக்கு மாகாண சபையின் உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்துகின்றேன். தற்பொழுது ஈழத் தமிழர் சிவாஜி கழகத்தினுடைய செயலாளர் நாயகமாகவும் பணியாற்றுகின்றேன். ஒரு மரியாதையின் நிமித்தமே நான் ஜனாதிபதி வேட்பாளரை சந்திக்கின்றேன். அந்த சந்திப்பில், பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக அவருடைய நிலைப்பாடு என்ன? அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தான தீர்வுகள் என்ன என்பது தொடர்பாக கேட்டுத் தெரிந்து கொள்கின்ற நிலையில் இந்த சந்திப்பை மேற்கொண்டேன். இந்த சந்திப்பானது இரகசியம் அல்ல. பரகசியமான சந்திப்பு தான். அந்த வகையில் நான், தொடர்ந்தும் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் எனக்கு அழைப்பு விடுக்கின்ற சந்தர்ப்பத்தில் அவர்களையும் சந்தித்து அவர்களுடைய நிலைப்பாடுகள் என்ன என்பதை அறிந்து மக்களுக்கு சொல்வதில் நான் தயாராக இருக்கின்றேன். https://www.virakesari.lk/article/190362
  21. வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே? பட மூலாதாரம்,GETTY IMAGES 5 ஆகஸ்ட் 2024, 09:24 GMT புதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர் வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருப்பதுடன், அந்த நாட்டை விட்டே வெளியேறியுள்ளார். ஹசீனாவுடன் அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவும் சென்றிருப்பதாக பிபிசி பங்களா உறுதி செய்துள்ளது. அவர் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹசீனா எங்கே? வங்கதேச பிரதமர் ராஜினாமா - எங்கே சென்றார்? வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது. இதில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நிலைமை மோசமாகியுள்ளது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் டாக்காவில் உள்ள அதிகாரப்பூர்வ பிரதமர் இல்லத்திற்குள் நுழைந்துவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார் என்பதை அங்குள்ள பிபிசி செய்தியாளர் உறுதி செய்துள்ளார். நிலைமை நிமிடத்திற்கு நிமிடம் மோசமாவதை உணர்ந்த அவர், தனது சகோதரியுடன் வங்கதேசத்தை விட்டே வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவும் அவருடன் சென்றிருப்பதாக பிபிசி பங்களா செய்தி வெளியிட்டிருந்தது. ஷேக் ஹசீனா இந்தியாவில் தரையிறங்கியதாக தகவல் வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் எழுந்த அசாதரண சூழல் எதிரொலியாக நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தரையிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் உள்ள ஹிண்டர் விமானப்படை தளத்தில் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்கியதாக கூறப்படுகிறது. ஹசீனா இந்தியாவிலேயே தொடர்ந்து தங்கியிருக்க தீர்மானித்துள்ளாரா அல்லது வேறு ஏதேனும் நாட்டிற்கு செல்லப் போகிறாரா என்பதை பிபிசியால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், அவர் லண்டன் செல்லப் போவதாக சில இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல. பிரதமர் இல்லத்தை சூறையாடிய போராட்டக்காரர்கள் வங்கதேசத்தையே உலுக்கியுள்ள மாணவர் போராட்டத்தின் உச்சக்கட்டமாக, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்த பொருட்களை எடுத்துச் செல்லும் வீடியோக்கள் வெளியான வண்ணம் உள்ளன. சில வீடியோக்களில், பிரதமர் இல்லத்தில் இருந்து நாற்காலிகள், சோஃபா போன்றவற்றை போராட்டக்காரர்கள் எடுத்துச் செல்லும் காட்சிகள் உள்ளன. வங்கதேச வன்முறையில் இருந்து தப்பி வந்த தமிழக மாணவியின் நேரடி அனுபவம் என்ன? வங்கதேசம்: மாணவர் போராட்டத்தில் வன்முறை - புகைப்படங்கள் கூறும் உண்மைகள் வங்கதேசத்தில் மீண்டும் தீவிரமடையும் மாணவர் போராட்டம் - என்ன நடக்கிறது? வங்கதேசம்: மாணவர் போராட்டத்தின் போது நிகழ்ந்த கொடூரம் -அடுத்தடுத்து வெளியாகும் வீடியோக்கள் பட மூலாதாரம்,CHANNEL 24 பட மூலாதாரம்,CHANNEL 24 இடைக்கால அரசு - ராணுவ தளபதி வங்கதேசத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ள நிலையிநிலையில், அந்நாட்டு ராணுவ தளபதி வகெர்-உஸ்-ஜமான் தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். வங்கதேசத்தில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என்று அவர் கூறினார். குடியரசுத் தலைவர் முகமது சஹாபுதீனை சந்திக்கப் போவதாகவும், இன்றிரவுக்குள் தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஏற்கனவே பேசிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். வங்கதேசத்தில் அமையவிருக்கும் இடைக்கால அரசுக்கு யார் தலைமையேற்பார் என்பதில் இன்னும் தெளிவு பிறக்கவில்லை. வங்கதேசத்தின் அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்கச் செய்ய ராணுவ தளபதி உறுதியளித்தார். அங்கே, கடந்த சில வாரங்களாக நீடிக்கும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்புக்கு நீதி வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர். படக்குறிப்பு,வங்கதேச ராணுவ தளபதி வகெர்-உஸ்-ஜமான் ஷேக் ஹசீனா இந்தியா வந்தது ஏன்? வங்கதேசத்தில் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக, ஷேக் ஹசீனா பாதுகாப்பு தேடி இந்தியா செல்கிறார். கடந்த பல ஆண்டுகளாகவே, வங்கதேசத்திற்கு இந்தியா முக்கிய கூட்டாளியாக திகழ்ந்து வருகிறது. இதனால் இரு நாடுகளுமே பலன் பெற்றுள்ளன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுடன் வங்கதேசம் தனது எல்லையை பகிர்ந்து கொள்கிறது. வங்கதேசத்தில் நட்பான அரசு அமைவது இந்தியாவுக்கு பலன் தரும் ஒன்று. ஷேக் ஹசீனா தனது ஆட்சிக் காலத்தில், வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான போராளிக் குழுக்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்தியதன் மூலம் இந்தியாவில் அதிகார மட்டத்தில் நட்பை பலப்படுத்தினார். வடகிழக்கு மாநிலங்களுக்கு இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து பொருட்களை வங்கதேசம் வழியாக எடுத்துச் செல்ல அவர் அனுமதி கொடுத்தார். பட மூலாதாரம்,EPA ஷேக் ஹசீனா 1996-ஆம் ஆண்டு முதன் முறையாக பிரதமராக தேர்வான போதே இந்தியாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டார். இந்தியா - வங்கதேசம் இடையே நெருக்கமான உறவு நிலவ வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தி வந்துள்ளார். 2022-ஆம் அண்டு இந்தியாவுக்கு வருகை தந்த போது, இந்தியா, இந்திய அரசு, இந்திய மக்கள் மற்றும் இந்திய ராணுவம் ஆகியவை 1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலையில் முக்கிய பங்காற்றியதை அவர் நினைவுகூர்ந்தார். இந்தியாவுடன் ஷேக் ஹசீனாவுக்கு இருந்த நெருக்கமான உறவு, அவரை இந்தியா ஆதரித்தது ஆகியவை வங்கதேச எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இந்தியா, வங்கதேச மக்களை மட்டுமே ஆதரிக்க வேண்டும், ஒரு குறிப்பிட்ட கட்சியை ஆதரிக்கக் கூடாது என்பது அவர்களது நிலைப்பாடு. போராட்டங்கள் மீண்டும் வெடித்தது எப்படி? வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவின் ஆட்சியின் தவறான அரசியல் நடவடிக்கைகள் நிலைமையை மோசமாக்கியது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, ஹசீனா தற்போதைய ஒதுக்கீட்டு சீர்திருத்த முறையைக் குறிப்பிட்டு, அதை விடுதலைக்கு ஆதரவான மற்றும் விடுதலைக்கு எதிரான சக்திகள் என இருவகையாக ஒப்பிட்டார். கடந்த காலக்கட்டத்தில் அவரது கட்சி அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திய கதை இது. அவர் கூறுகையில்: "சுதந்திரப் போராட்ட வீரர்களின் பேரக் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என்றால், ரசாக்கர்களின் பேரப்பிள்ளைகள் (பாகிஸ்தான் ஒத்துழைப்பாளர்கள்) ஒதுக்கீடு பெற வேண்டுமோ? அதுதான் எனது கேள்வி." என்று பேசினார் அவர் இவ்வாறு பேசிய சில மணி நேரங்களில், பல்வேறு வளாகங்களில் மாணவர்கள் அவரின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடத் தொடங்கினர். காவல்துறை மற்றும் உயரடுக்கு பாதுகாப்பு படை, ரேபிட் ஆக்ஷன் பட்டாலியன் (RAB) படையுடன் இணைந்து போராட்டக்காரர்களுக்கு பதிலடி கொடுத்தது. ஆளும் கட்சியின் மாணவர் பிரிவும் அவர்களின் தாக்குதலில் இணைந்தது. இது நிலைமையை மேலும் மோசமாக்கியது. அடுத்த 72 மணி நேரத்தில், வங்கதேசத்தின் பல இடங்களில் வன்முறை மோதல்கள் வெடித்தது. தேசிய தொலைக்காட்சி கட்டிடம் எரிக்கப்பட்டது. ஒரு சிறைச்சாலையின் வாயில் உடைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான கைதிகள் தப்பியோடினர், நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,வங்கதேசப் போராட்டம் ஷேக் ஹசீனாவுக்கு இது மிகப்பெரிய சோதனை ஷேக் ஹசீனாவுக்கு இது மிகப்பெரிய சோதனை. வங்க தேசத்தின் பொது மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சாதாரண மாணவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த பெண்ணான ஹசீனாவின் வலிமையை அசைத்து பார்த்தனர். பதினாறு ஆண்டுகளாக, பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேசத்தை வறுமையில் இருந்து மீட்டெடுத்தார். அவரின் ஆட்சியில் சர்வாதிகார தலைமை போக்கு இருந்தபோதிலும் தேசத்தில் நிகழ்ந்த பெரிய முன்னேற்றங்களுக்கு அவரே காரணம் என்று சிலர் கூறுகிறார்கள். பெரிய பிரச்னைகள் ஏற்பட்ட போதிலும் அவரை யாராலும் அசைக்க முடியவில்லை. ஆனால் இம்முறை அவரின் சக்தியை மாணவர் சக்தி அசைத்துவிட்டது. பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களின் போராட்டங்கள் நாடு முழுவதும் பெரும் அமைதியின்மை, கலவரம் மற்றும் குழப்பங்களுக்கு வழிவகுத்துள்ளன. பிரிட்டனில் அதிகரிக்கும் வன்முறை, அவசர கால கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த பிரதமர்- என்ன நடக்கிறது?5 மணி நேரங்களுக்கு முன்னர் இரான்- இஸ்ரேல் போர் பதற்றம்: மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இந்தியர்கள் நிலை என்ன?5 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ஜூலை 21, 2024 அன்று டாக்காவில், அரசு வேலை ஒதுக்கீட்டிற்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து மோதல்களின் போது தீ வைத்து எரிக்கப்பட்ட சேதமடைந்த வாகனங்களை ஒருவர் கடந்து செல்கிறார். 'இது பிரஷர் குக்கர் திடீரென வெடிப்பது போன்ற நிலை' ஆசியாவில் சர்வாதிகாரம் பற்றி விரிவாக ஆய்வு செய்த ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் டாக்டர் முபாஷர் ஹசன், இது ஒரே இரவில் ஏற்பட்ட போராட்டம் அல்ல, மாறாக கொஞ்சம் கொஞ்சமாக கோவம் அதிகரித்து, "பிரஷர் குக்கர் திடீரென வெடித்தால் எப்படி இருக்கும் அவ்வாறான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது" இது என்று விவரித்துள்ளார். டாக்டர் ஹசன் பிபிசி பங்களாவிடம் கூறுகையில் : "நினைவில் கொள்ளுங்கள், பத்திரிகை சுதந்திர குறியீட்டில் ரஷ்யாவிற்கும் கீழே இருக்கும் ஒரு நாட்டைப் பற்றி இங்கே பேசுகிறோம். "ஷேக் ஹசீனா மற்றும் அவரது கட்சியினரின் விடுதலைப் போரின் உணர்வை அதிகமாக அரசியலாக்குவது, குடிமக்களுக்கு ஆண்டுதோறும் அடிப்படை வாக்குரிமை மறுப்பது மற்றும் அவரது ஆட்சியின் சர்வாதிகாரத் தன்மை ஆகியவை சமூகத்தின் ஒரு பெரிய பிரிவினரை கோபப்படுத்தியுள்ளன.” "துரதிர்ஷ்டவசமாக, அவர் நாட்டிலுள்ள அனைவருக்கும் பிரதமராக நடந்து கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, அவர் ஒரு குழுவுக்கு மட்டுமே தலைவராக இருந்தார்." வங்கதேசத்தில் கடந்த ஒரு வாரமாக நடக்கும் நிகழ்வுகளால் டாக்டர் ஹசன் வியப்படையவில்லை. 1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்ற வீரர்களின் பிள்ளைகளுக்கு அரசு பணிகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, மாணவர்கள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். கடந்த மாதம் சர்ச்சைக்குரிய இந்த ஒதுக்கீட்டு முறையை உயர்நீதிமன்றம் மீண்டும் நடைமுறைப்படுத்திய போது எதிர்ப்புகள் அதிகரித்தன, ஆளும் கட்சியினர், போராட்டக்காரர்களைத் தாக்கியபோது போராட்டம் வன்முறையாக மாறியது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, வங்கதேச உச்ச நீதிமன்றம், இட ஒதுக்கீடு முறையை மீண்டும் நிறுவிய மற்றும் மாணவர் போராட்டங்களைத் தூண்டிய சர்ச்சைக்குரிய உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்தது. உருளைக்கிழங்கால் இரு மாநிலங்களில் அரசியல் சிக்கல் - பின்னணி என்ன?7 மணி நேரங்களுக்கு முன்னர் பாஸ்போர்ட்டில் அமெரிக்கா, ஆதாரில் தமிழ்நாடு - மகாராஷ்டிர காட்டில் மீட்கப்பட்ட பெண் யார்? தொடரும் மர்மம்3 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ராணுவ வீரர்கள் ஊரடங்கு உத்தரவின் இரண்டாவது நாளில் பணியில் ஈடுபட்டுள்ளனர். https://www.bbc.com/tamil/articles/cp8nne7zxy3o
  22. பட மூலாதாரம்,EMMA J LONG கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி 4 ஆகஸ்ட் 2024 52 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த, கடுகளவு சிறிதான ஓர் அரிய வகையிலான நுண்ணுயிரனத்தின் உடலின் உட்புற அமைப்பினை மிக நுண்ணிய அளவில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த புதைபடிமத்தை சக்தி வாய்ந்த எக்ஸ்ரே கருவிகளைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் ஸ்கேன் செய்துள்ளனர். பிரசித்திபெற்ற அறிவியல் சஞ்சிகையான ‘நேச்சர்’-இல் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளில், அந்த உயியினத்தின் மிக நுண்ணிய ரத்த நாளங்கள் மற்றும் நரம்பு மண்டலத்தைப் பற்றிய தெளிவான விவரங்கள் பகிரப்பட்டுள்ளன. இந்த உயிரினம், இன்றைய பூச்சிகள், சிலந்திகள், மற்றும் நண்டுகளின் மூதாதையாக ஆரம்ப காலத்தில் தோன்றிய முதல் உயிரினம். இந்த ஆய்வு அதன் உடலின் உட்பகுதி தோற்றத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. மிக அரிதான கண்டுபிடிப்பு இந்த ஆய்வின் தலைமை ஆய்வாளரான டாக்டர் மார்ட்டின் ஸ்மித், இந்தப் புதைபடிவம் மிக அரிதானது என்றார். இது ஏனெனில், அந்த நுண்ணுயிரி முழுமையாக வளராத ல்ஆர்வா பருவத்தில் இருந்தபோது புதைபடிவமாக மாறியிருக்கிறது. “இந்த லர்வா புதைபடிவத்தை ஆராய்வதன் மூலம் இவை எப்படி வளர்ந்து முதிர்ந்த வடிவங்களாக ஆயின என்பதை அறிந்துகொள்ள முடியும். அவை இளமையாக இருந்த போது எப்படி இருந்தன என்பதை காண வேண்டியது மிகவும் முக்கியம். இது, காலப்போக்கில் இவை எப்படி உடல் வடிவத்தில் பரிணாம வளர்ச்சி பெற்றன என்பதை அறிய உதவும்,” என்று அவர் கூறினார். “ஆனால், இந்த லார்வாக்கள் அளவில் மிகவும் சிறியவை, எளிதில் உடையக்கூடியவை, புதைபடிவ நிலையில் இவற்றைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக அரிது,” என்கிறார். பட மூலாதாரம்,EMMA J LONG படக்குறிப்பு,இந்த புதைபடிவமானது இயற்கையால் மிகச்சரியாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஊசி முனையில் வைத்து ஆராய்ச்சி டாக்டர் ஸ்மித் குழுவினர், வட சீனாவில் உள்ள மிகப் பழமையான பாறைகளை ஆராய்ந்து கொண்டிருந்தபோது இந்தப் புதைபடிவத்தைக் கண்டுபிடித்தனர். "அந்தப் பாறைகள் சுமார் 50 கோடி (500 மில்லியன்) ஆண்டுகள் பழமையானவை. அவற்றில் சிறிய புதைபடிவங்கள் இருந்தன. பழைய, கடினமான அழுக்குக் குவியலில் இந்தப் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டது,” என்கிறார். "சீனாவில் எங்களோடு பணிபுரிபவர்களிடம் இந்தப் பழைய பாறைப் பொருட்கள் அதிகமாக இருக்கிறது. அவர்கள் அதை அமிலத்தில் கரைத்து இந்த புதைபடிவங்களைப் பிரித்தெடுக்கின்றனர்,” என்கிறார் டாக்டர் ஸ்மித். யுனான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு, சிறிய பாறைத் துண்டுகளில் இருந்து புதைபடிவங்களைப் பிரித்து எடுக்க நிறைய ஆண்டுகள் செலவிட்டனர். டாக்டர் ஸ்மித் சீனா சென்றிருந்த போது இந்தக் குறிப்பிட்டப் புதைபடிவத்தை நுண்ணோக்கியின் கீழ் ஆராய்ச்சி செய்தார். அப்போது அது மிகவும் முக்கியமானது என்று அவர் அறிந்தார். அதை இன்னும் உன்னிப்பாக ஆய்வு செய்ய, இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லலாமா என்று கேட்டார். விஞ்ஞானிகள் அந்தப் புதைபடிவத்தை ஒரு சிறிய ஊசியின் நுனியில் வைத்து அதன் உள்ளே பார்க்க மிகவும் வலுவான எக்ஸ்-ரேக்களைப் பயன்படுத்தினர். இதற்காக ஆக்ஸ்போர்டில் உள்ள டயமண்ட் லைட் சோர்ஸ் (Diamond Light Source) என்ற சிறப்பு இயந்திரத்தைப் பயன்படுத்தினார்கள். அப்போது தான் புதைபடிவத்தின் உள்ளே என்ன இருக்கிறது என்று அவர்கள் கண்டறிந்தனர். டாக்டர் ஸ்மித், “புதைபடிவத்தின் உள்ளே இருக்கும் அற்புதமான விஷயங்களைப் பார்த்தபோது மிகவும் ஆச்சரியப்பட்டோஂ,” என்றார். பிறகு ஆராய்ச்சிக் குழுவினர் அதன் முப்பரிமாணப் புகைப்படங்களை உருவாக்கி, அதனுடைய மிகச்சிறிய மூளைப் பகுதிகள், செரிமானச் சுரப்பிகள், கால்கள், கண்கள் மற்றும் நார்மபுகளின் தடையங்களைக் கண்டனர். விண்வெளிக்குச் செல்ல தயாராகும் இரண்டாவது இந்தியர் - யார் இவர்?4 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,MARTIN R SMITH/EMMA J LONG படக்குறிப்பு,ஆய்வளார்களால் உயிரினத்தின் உடற்கூறியல் மூலம் செரிமான பாதை, மூளை உட்பட குறிப்பிட்ட பகுதிகளை பிரித்து காண முடிந்தது ஆரம்பகால உயிரினத்தின் மூளை எப்படி இருந்தது? இந்த உயிரினத்தின் மூளை இருக்கும் இடம், பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அதில் மூளையின் ஆரம்பத் தோற்றம் எப்படி இருந்தது என்பதைக் கண்டறிய முடிந்தது. இது இன்றைய பூச்சிகள், சிலந்திகள், மற்றும் நண்டுகளின் தலை எவ்வாறு உருவாகத் தொடங்கியிருக்கலாம் என்பதை விஞ்ஞானிகள் அறிய இது உதவியது. பின்னாட்களில் இந்த நவீன உயிரினங்களின் உணர்கொம்புகள் (antennae), கண்கள், வாய், போன்ற இணை உறுப்புக்கள் பரிணாம வளர்ச்சி எப்படி நடந்தது என்பதையும் இது விளக்குகிறது. ஸ்ட்ராத்க்ளைட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்த ஆய்வின் இணை-ஆசிரியர் டாக்டர் கேத்தரின் டாப்சன், “இந்தப் புதைபடிவமானது இயற்கையால் மிகச் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார். நிறைய பாஸ்பரஸ் உள்ள கடல் தண்ணீரில் இந்த உயிரினம் சிறிது காலம் வாழ்ந்து, இறந்திருக்கலாம் என்று டாக்டர் ஸ்மித் கூறினார். இது அதன் உடலை புதைபடிவமாகப் பாதுகாக்க உதவியிருக்கலாம். “புதைபடிவத்தின் மீது நிரம்பியிருந்த பாஸ்பரஸ், இதனைப் படிகம்போலக் கடினமானதாக உருவாக்கியிருக்கலாம்,” என்கிறார் டாக்டர் ஸ்மித். https://www.bbc.com/tamil/articles/c72vvrl07rno
  23. வயநாடு மண்சரிவு பலி 350 ஆக அதிகரிப்பு: கடற்படையின் மீட்புப் பணி நிலவரம் என்ன? - அரசு விளக்கம் 04 AUG, 2024 | 02:14 PM புதுடெல்லி / வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டமண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 350 ஆக அதிகரித்துள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொடரும் கடற்படையின் பங்களிப்பு குறித்து மத்திய அரசு விவரித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மோசமான வானிலை, கடினமான நிலப்பரப்பு அமைப்புகளுக்கு மத்தியில், வயநாடு மாவட்டத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய கடற்படை மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முழு வீச்சில் தீவிரமாகத் தொடர்கிறது. நிவாரண முயற்சிகளை அதிகரிக்கவும், பேரழிவால் பாதிக்கப்பட்ட உள்ளூர் மக்களுக்கு ஆதரவளிக்கவும் கூடுதல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது 78 கடற்படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் குழுக்கள் சூரல்மலா, முண்டக்கை பகுதிகளின் பல இடங்களில் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், பேரிடர் நிவாரணப் படையினர், உள்ளூர் நிர்வாகத்துடன் கைகோர்த்து செயல்படுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், உணவு மற்றும் இதர பொருட்களை தொடர்ந்து வழங்குவதற்காக ஒரு குழு செயல்படுகிறது. மற்ற குழுக்கள் பிழைத்தவர்களைத் தேடுதல், இடிபாடுகளை அகற்றுதல், உடல்களை மீட்டெடுக்கும் பணி போன்றவற்றில் ஈடுபடுகின்றது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக சூரல்மலாவில் மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், 30 மாலுமிகளைக் கொண்ட ஒரு குழு, ஆகஸ்ட் 1 அன்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலா, முண்டக்கை பகுதிகளை இணைக்கும் ஆற்றின் மீது முக்கியமான பெய்லி பாலத்தை நிர்மாணிப்பதில் இந்திய ராணுவத்துக்கு உதவியது. கனரக இயந்திரங்கள், ஆம்புலன்ஸ்களின் இயக்கத்துக்கு உதவும் போக்குவரத்தின் முதுகெலும்பாக இந்தப் பாலம் செயல்படுகிறது. ஆகஸ்ட் 2 அன்று, கோழிக்கோட்டில் இருந்து இயக்கப்படும் ஐஎன்எஸ் கருடாவின் இந்திய கடற்படையின் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வான்வழி மீட்புப் பணியை மேற்கொண்டது. சிக்கித் தவிக்கும் மக்களை விரைவாக வெளியேற்றுதல், அடிப்படை வசதிகள், மருத்துவ உதவிகளை வழங்குவதை உறுதி செய்வதற்காக இந்திய கடற்படை உள்ளூர் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது’ என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேடுதல் பணி தீவிரம்: வயநாடு நிலச்சரிவு உயிரிழப்பு 350 ஆக அதிகரித்துள்ள நிலையில், 341 பிரேத பரிசோதனைகள் முடிந்துள்ளதாகவும், அதில் 146 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவத்தின் குழு ஒன்று வியாழனன்று 190 அடி நீளமுள்ள பெய்லி பாலத்தின் கட்டுமானப் பணிகளை முடித்தது. இதன்மூலம், கனரக இயந்திரங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் செல்ல வசதியாக, தேடுதல் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. நிவாரண முகாம்: மேப்பாடியில் உள்ள 17 நிவாரண முகாம்களில் 707 குடும்பங்களைச் சேர்ந்த 2,597 பேர் தங்கியுள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் உள்ள 91 முகாம்களில் கிட்டத்தட்ட 10,000 பேர் தங்கியுள்ளனர். உயிர் பிழைத்தவர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பேரிடரின் பின்விளைவுகளைக் கையாளும் அதிகாரிகளுக்கு உளவியல் ஆதரவை வழங்குவதற்காக மனநலப் பேரிடர் மேலாண்மைக் குழுவை மாநில அரசு உருவாக்கியுள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ மேஜர் ஜெனரல் வி.டி.மேத்யூ கூறும்போது, “பாதிக்கப்பட்ட இடங்களில் சிக்கியிருந்த மக்களை மீட்கும் பணி ஏறத்தாழ நிறைவடைந்துவிட்டது. இப்போது உடல்களைத் தேடும் பணியில் மட்டுமே ஈடுபட்டிருக்கிறோம். எனினும், தெர்மல் ஸ்கேனரை பயன்படுத்தி, யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்றும் தேடி வருகிறோம்” என்றார். அதேவேளையில், நிலச்சரிவு பேரிடரில் இதுவரை 206 பேர் காணாமல் போயுள்ளதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/190240
  24. பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், அலெக்ஸ் பின்லி, டான் ஜான்சன் பதவி, பிபிசி செய்தி நிருபர் 4 ஆகஸ்ட் 2024 பிரிட்டன் முழுவதும் தீவிரமான போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஜூலை 29-ஆம் தேதியன்று பிரிட்டனின் சவுத்போர்ட் நகரில் நடைபெற்ற ‘டெய்லர் சுவிஃப்ட் யோகா மற்றும் நடனப் பயிலரங்கில்’ கலந்து கொண்ட மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை அன்று (ஆகஸ்ட் 3) பிரிட்டனின் பல்வேறு நகரங்களில் தீவிர வலதுசாரி ஆர்ப்பாட்டங்கள் கலவரமாக மாறியதையடுத்து 90-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஹல், லிவர்பூல், பிரிஸ்டல், மான்செஸ்டர், ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட், பிளாக்பூல், மற்றும் பெல்ஃபாஸ்ட் ஆகிய இடங்களில் அமைதியின்மை ஏற்பட்டது. இங்கு ஏவுகணைகள் வீசப்பட்டன, கடைகள் சூறையாடப்பட்டன, மற்றும் சில இடங்களில் காவல்துறையினர் தாக்கப்பட்டனர். மற்ற இடங்களில் நடந்த சிறிய ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறவில்லை. ‘வெறுப்புணர்வை விதைக்க’ முயற்சிக்கும் ‘தீவிரப் போராட்டக்காரர்களுக்கு’ (extremists) எதிராக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முழு ஆதரவை வழங்குவதாக பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் உறுதியளித்துள்ளார். லிவர்பூல் நகரத்தில், செங்கற்கள், பாட்டில்கள், மற்றும் வெடிப்பொருட்கள் ஆகியவை போலீசார் மீது வீசப்பட்டன. ஒரு அதிகாரி மீது போராட்டக்காரர்கள் நாற்காலி வீசியபோது அவருக்குத் தலையில் பலமாக அடிப்பட்டது. மற்றொரு அதிகாரியை அவரது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இழுத்து தள்ளித் தாக்கினர். பட மூலாதாரம்,PA என்ன நடந்தது? சுமார் 1,000-க்கும் மேற்பட்ட குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் இறங்கினர். அவர்களில் சிலர் இஸ்லாமியர்களுக்கு எதிரான அவதூறு கருத்துக்களைச் சொல்லிக் கூச்சலிட்டனர். அவர்களுக்கு எதிராக மற்றொரு தரப்பு போராட்டத்தில் குதித்தது. இதனைத் தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பாசிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் லிவர்பூலின் லைம் ஸ்ட்ரீட் ஸ்டேஷன் அருகே மதிய உணவு நேரத்தில் கூடி, ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மைக்கு அழைப்பு விடுத்து கோஷங்கள் எழுப்பினர். ‘அகதிகள் இங்கு வரவேற்கப்படுகிறார்கள்’ மற்றும் ‘நாஜி கொள்கைகளை, எங்கள் தெருக்களுக்கு வெளியே வைத்து கொள்ளுங்கள்’ என்று அவர்கள் கோஷமிட்டனர். இருதரப்பு போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரங்களைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் நாய்களுடன் அங்கு திரண்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) அதிகாலை வரை அமைதியின்மை தொடர்ந்தது. பாதுகாப்பு உடைகள் அணிந்திருந்த காவல்துறை அதிகாரிகளை நோக்கி வெடிகள் வீசப்பட்டன. நகரின் வால்டன் பகுதியில் ஒரு நூலகத்திற்குத் தீ வைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அதை அணைக்க முயன்றனர் என்று மெர்சிசைட் போலீசார் தெரிவித்தனர். கடைகள் உடைக்கப்பட்டன. இந்தப் போராட்டங்கள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதாகவும் பல அதிகாரிகள் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தியது. இதில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,SHUTTERSTOCK அரசு தரப்பு கூறுவது என்ன? பிரிட்டனின் உதவித் தலைமைக் காவலர் ஜென்னி சிம்ஸ் கூறுகையில், "மெர்சிசைடில் ஒழுங்கின்மை, வன்முறை நடவடிக்கைகளுக்கு இடமில்லை," என்றார். மேலும், "இதுபோன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கும் இந்த நகரத்திற்கும் அவமானத்தைத் தவிர வேறு எதையும் தேடித் தரவில்லை," என்றார். ஞாயிற்றுக்கிழமையும் (ஆகஸ்ட் 4) போராட்டங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சனிக்கிழமை நடந்த அளவுக்கு இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) அன்று நடந்த அமைச்சர்கள் கூட்டத்தைப் பற்றி அதிபர் கியர் ஸ்டாமரின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், "கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் வன்முறை நிகழ்வுகள் ஆகிய இரண்டும் வெவ்வேறு விஷயங்கள்," என்று பிரதமர் அந்தக் கூட்டத்தில் பேசியதாகக் குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில், "எந்தவிதமான வன்முறைக்கும் மன்னிப்பு இல்லை. நம் நகரத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசாங்கம் காவல்துறைக்கு ஆதரவளிக்கிறது," என்று மீண்டும் வலியுறுத்தினார். சனிக்கிழமையன்று, உள்துறைச் செயலாளர் "ஏற்றுக்கொள்ள முடியாத கலவரத்தில் ஈடுபடுவோர் சிறைத்தண்டனை மற்றும் பிற தண்டனைகளுடன் பயணத் தடைகளையும் எதிர்கொள்ள நேரிடும்,” என்றும் எச்சரித்தார். மேலும் அனைவரையும் கைது செய்யப் போதுமான சிறைச்சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறினார். பட மூலாதாரம்,PA இரு குழுக்களுக்கு இடையே மோதல் பிரிட்டனின் உள்துறைஸ் செயலாளர் யவெட் கூப்பர், "கிரிமினல் குற்றங்களுக்கும் வன்முறை மற்றும் ஒழுங்கின்மைக்கும் பிரிட்டனின் சாலைகளில் இடமில்லை," என்று கூறினார். கலவரத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு அரசின் முழு ஆதரவு உள்ளது என்றும் அவர் கூறினார். பிரிஸ்டல் நகரில், போராட்டக்காரர்களும் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழுக்களும் முற்றுகையில் ஈடுபட்டனர். ஒரு குழு ‘Rule Britannia’ என்ற பிரிட்டனின் தேசபக்திப் பாடலை பாடியது. "நான் இறக்கும் வரை இங்கிலாந்து தான். எங்கள் நாடு எங்களுக்கு திரும்ப வேண்டும்," என்று அந்தக் குழு உரத்தக் குரலில் பாடுவதைக் கேட்க முடிந்தது. இனவெறிக்கு எதிரான குழு மீது பீர் கேன்கள் வீசப்பட்டன, மேலும் சில எதிர்ப்பாளர்கள் மீது அதிகாரிகள் தடியடி நடத்தினர். மான்செஸ்டரில், போலிசாருடன் போராட்டக்காரர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பிளாக்பூலில், ‘Rebellion Festival’ நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு எதிராக ஒரு குழு போராட்டத்தில் இறங்கியது. இரு குழுக்களிடையே மோதல் வெடித்ததால், பாட்டில்கள் மற்றும் நாற்காலிகள் வீசப்பட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். 20-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளதாக லங்காஷயர் போலீசார் தெரிவித்தனர். பெல்ஃபாஸ்டில் ஒரு மசூதிக்கு வெளியே எதிர்ப்பாளர்கள் பத்திரிகையாளர்கள் மீது பாட்டில், கற்கள் உள்ளிட்டவற்றை வீசியதால் சிலர் கைது செய்யப்பட்டனர். இதுபோன்று பல்வேறு இடங்களில் சிறிய அளவிலான போராட்டங்கள் முதல் பெரிய கலவரங்கள் வரை நடந்தன. சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) அன்று பிரிட்டன் முழுவதும் நடத்தப்பட்ட அனைத்து ஆர்ப்பாட்டங்களும் வன்முறையாக மாறவில்லை. சில இடங்களில் எதிர்ப்பாளர்கள் மாலைக்குள் கலைந்து சென்றனர். சண்டர்லேண்டில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) இரவு நடந்த வன்முறையைத் தொடர்ந்து சனிக்கிழமை அன்று நடந்த போராட்டங்களில் காயமடைந்த நான்கு போலீஸ் அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 'ஹமாஸ் தலைவர் அறையில் மொசாட் உளவாளிகள் குண்டு வைத்தனர்' - இரான் கூறியது என்ன?4 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,LEANNE BROWN / BBC வலதுசாரி ஆர்வலர்களின் திட்டம் நூற்றுக்கணக்கான மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். ஒரு மசூதிக்கு வெளியே போராட்டத் தடுப்பு போலீஸார் மீது பீர் கேன்கள் மற்றும் செங்கற்கள் வீசப்பட்டன மற்றும் குடிமக்கள் ஆலோசனை அலுவலகம் எரிக்கப்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சவுத்போர்ட்டில் ஒரு புதிய போராட்டம் உட்பட, வார இறுதியில் பிரிட்டன் முழுவதும் தீவிர வலதுசாரி ஆர்வலர்களால் குறைந்தபட்சம் 30 ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டதாக பிபிசி கண்டறிந்துள்ளது. வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக இந்த வார இறுதியில் கூடுதலாக 70 வழக்கறிஞர்கள் தயார் நிலையில் உள்ளனர். ரகசிய உள்துறை செயலர் ஜேம்ஸ் (Shadow home secretary) பொது ஒழுங்கை மீட்டெடுக்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கவும் மற்றும் கலவரக்காரர்களுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்பவும் அதிபர் மற்றும் உள்துறை செயலாளரையும் அழைத்தார். இந்த வாரத் துவக்கத்தில் ஒரு புதிய தேசிய வன்முறைத் தடுப்பு முன்முயற்சியை பிரிட்டன் பிரதமர் வெளியிட்டார். இது வன்முறை அமைப்புகளை எதிர்த்துப் போராடும் முயற்சியில் உளவுத்துறையுடன் இணைந்து பணியாற்ற காவல்துறைக்கு உதவுகிறது. https://www.bbc.com/tamil/articles/clmyy9py93yo
  25. கிரிமியாவில் ரஸ்யாவின் நீர்மூழ்கி அழிப்பு - உக்ரைன் அறிவிப்பு 04 AUG, 2024 | 01:40 PM கிரிமியாவில் ரஸ்யாவின் நீர்மூழ்கியொன்றை மூழ்கடித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா வளைகுடாவில் நங்கூரமிடப்பட்டிருந்த ரஸ்யாவின் நீர்மூழ்கியை தாக்கி அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. செவஸ்டபோல் நகரில் உள்ள துறைமுகத்தில் ஏவுகணை தாக்குதல் காரணமாக ரஸ்ய நீர் மூழ்கி அழிக்கப்பட்டது என உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஸ்யாவின் கருங்கடல் கடற்படைபிரிவினால் பயன்படுத்தப்பட்ட நான்கு நீர்மூழ்கிகளில் ஒன்றையே உக்ரைன் தாக்கி அழித்துள்ளது. இந்த நீர்மூழ்கிகளை பயன்படுத்தியே கலிப்ர் குரூஸ் ஏவுகணைகளை ரஸ்யா ஏவிவந்துள்ளது. கிரிமியாவின் பாதுகாப்பிற்கு என ரஸ்யா பயன்படுத்தி வந்த நான்கு எஸ்- 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்புமுறையையும் அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/190238

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.