Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. கட்டுரை தகவல் எழுதியவர், ஜிம் ரீட் பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மென்மையான அதிர்வலைகள் (Shock wave) கொடுப்பது நோயாளிகளின் இதய திசுக்களை மீண்டும் உருவாக்க உதவும் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரியாவில் 63 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அதிர்வலைகளை கொண்ட புதிய சிகிச்சையைப் பெற்றவர்களால் அதிக தூரம் நடக்க முடிந்தது. அவர்கள் அதிக ரத்த ஓட்ட விகிதங்களைக் கொண்டிருந்தனர். இன்ஸ்ப்ரூக் மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜோஹன்னஸ் ஹோல்ஃபெல்ட் கூறுகையில், "முதன்முறையாக ஒரு மருத்துவ அமைப்பின் உதவியுடன் இதயத் தசைகள் மீண்டும் உருவாக்கப்படுவதை நாங்கள் காண்கிறோம், இந்தச் சிகிச்சை பல கோடி மக்களுக்கு உதவக்கூடும்," என்றார். ஆராய்ச்சியாளர்களால் 'ஸ்பேஸ் ஹேர்டிரையர்' (Space hairdryer) என்று அழைக்கப்படும் இந்தச் சாதனம் குறித்த கூடுதல் ஆய்வுகள் நடத்தப்பட உள்ளது. தற்போது அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை வைத்துப் பரிசோதித்து அதன் விளைவுகளைப் பதிவிடும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். படக்குறிப்பு,இன்ஸ்ப்ரூக் மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜோஹன்னஸ் ஹோல்ஃபெல்ட் இதய திசுக்களின் வளர்ச்சியைத் தூண்டும் சிகிச்சை உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும், இதய நோய் அல்லது பிற இருதய சிக்கல்களால், உலகம் முழுவதும் 1.8 கோடி மக்கள் உயிரிழக்கின்றனர். உயர் ரத்த அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு முறை, மது மற்றும் புகையிலை பயன்பாடு உள்ளிட்டவை இதய நோய் ஏற்படுத்தும் ஆபத்துக் காரணிகளாக கூறப்படுகிறது. உலகில் மிகப் பெரியளவில் மரணங்களை ஏற்படுத்தும் தீவிர இதய நோய்க்கு அறியப்பட்ட சிகிச்சைகள் இல்லை. மாரடைப்பு என்பது உறுப்புகளுக்கான ரத்த விநியோகம் திடீரென துண்டிக்கப்படும் போது ஏற்படும் நிலை ஆகும். மருந்துகள் மற்றும் பிற சிகிச்சைகள் நோயைக் கட்டுப்படுத்தவும் மாரடைப்புக்கான வாய்ப்புகளைக் குறைக்கவும் முடியும். ஆனால் நிரந்தரத் தீர்வாக அவை இருக்காது. நோய் தீவிரமடையும் பட்சத்தில் மருத்துவ நிபுணர்கள் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்கின்றனர். அறுவை சிகிச்சை நிபுணர்கள் மார்பு, கால் அல்லது கை பகுதியிலிருந்து ஆரோக்கியமான ரத்தக் குழாயை எடுத்து, இதயப் பகுதியின் அடைப்பட்ட தமனிக்கு மேலேயும் கீழேயும் இணைத்து அறுவை சிகிச்சை செய்கிறார்கள். இந்த மருத்துவச் செயல்முறையைத் தான் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை (heart bypass) என அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த அறுவை சிகிச்சை இதயத்தைப் பாதுகாக்குமே தவிர அதன் செயல்பாட்டை மேம்படுத்தாது. ஆஸ்திரியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அப்பகுதிகளில் லேசான ஒலி அலைகளைப் (sound waves) பயன்படுத்தி சேதமடைந்த திசுக்களை மீண்டும் உருவாக்க முயற்சித்தனர். சுமார் 10 நிமிடங்கள் எடுக்கும் இந்த செயல்முறை, மாரடைப்புக்குப் பிறகு சேதமடைந்த அல்லது தழும்பு இருக்கும் இடத்தில் புதிய திசுக்களின் வளர்ச்சியைத் தூண்டும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதேபோன்ற 'ஷாக் வேவ்' சிகிச்சைகள் ஏற்கனவே விறைப்புத்தன்மை குறைபாடு மற்றும் தசைநார் காயம் போன்ற பிற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்பாட்டில் உள்ளன. மேலும், ஷாக் வேவ் லித்தோட்ரிப்சி (SWL) என்னும் சிகிச்சையில் சிறுநீரகக் கற்களை இலக்காகக் கொண்ட அதிர்ச்சி அலைகள் (Shock waves) அவற்றை துண்டுகளாக உடைக்கின்றன. 'ஐரோப்பிய ஹார்ட் ஜர்னல்' எனும் மருத்துவச் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், பைபாஸ் நோயாளிகளில் பாதி பேர் பொது மயக்க மருந்துகளின் கீழ் ஒலி அலை சிகிச்சையைப் பெற்றனர், மற்றவர்கள் போலி அறுவை சிகிச்சைக்கு (sham procedure) உட்படுத்தப்பட்டனர். ‘ஆயுட்காலம் அதிகரிக்கலாம்’ அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு வருடம் கழித்து, இதயத்தின் திறன் அதிகரித்து, பம்ப் செய்யப்பட்ட ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரத்தத்தின் அளவு அதிகரித்தது: அதிர்வலைகள் கொடுக்கப்பட்டக் குழு - 11.3% அதிகரிப்பு கொடுக்கப்படாதக் குழுவில் - 6.3% அதிகரிப்பு அதிர்வலை கொடுக்கப்பட்ட நோயாளிகளால் ஓய்வெடுக்காமல் முன்பைவிட நீண்டதூரம் நடக்க முடிகிறது என்றும் ஆரோக்கியம் அதிகரித்ததாகவும் தெரிவித்தனர். "அவர்களால் தங்கள் செல்லப்பிராணியுடன் மீண்டும் நடைப்பயிற்சி செல்ல முடிகிறது. அவர்களின் அன்றாட வாழ்க்கையில் பல்பொருள் அங்காடிக்கு சென்று வர முடிகிறது" என்று பேராசிரியர் ஹோல்ஃபெல்ட் கூறினார். "அவர்களது ஆயுட் காலம் அதிகரித்திருக்கும். மேலும் அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்றார். பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷனின் இணை மருத்துவ இயக்குநர் டாக்டர் சோனியா பாபு-நாராயண், இதய நோய்க்கு தற்போது சிகிச்சை அளிக்கும் விதத்தில் 'முன்னேற்றத்திற்கு அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது' என்று கூறினார். "இந்தச் சோதனையில் உற்சாகமான விஷயம் என்னவென்றால், ஒரு வருடம் கழித்து, அறுவை சிகிச்சையின் போது இதயத்திற்கு அதிர்வலை சிகிச்சையைப் பெற்றவர்கள் சிறந்த இதயச் செயல்பாடு மற்றும் குறைவான அறிகுறிகளைக் கொண்டிருந்தனர்," என்று அவர் கூறினார். "மேலும் இந்தப் புதிய சிகிச்சையின் நீண்ட கால விளைவுகளை ஆராய்ச்சி செய்ய பெரிய மற்றும் நீண்ட சோதனைகள் தேவை," என்றார். இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய ஒழுங்குமுறை நிர்வாகிகள் இந்த 'ஷாக் வேவ்' சாதனத்தை அங்கீகரிப்பார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். 2025-ஆம் ஆண்டு அனைத்து நோயாளிகளுக்கும் இந்தச் சிகிச்சை முறை பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வுக்கு ஆஸ்திரிய அரசாங்கத் தரப்பு, அமெரிக்க தேசிய இதயம், நுரையீரல் மற்றும் ரத்த அமைப்பு (the US National Heart, Lung and Blood Institute) நிதியளித்தது, இன்ஸ்ப்ரூக் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட நிறுவனம் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் குழு ஆகியோரும் நிதி அளித்தனர். https://www.bbc.com/tamil/articles/clwweqx07qqo
  2. இந்திய வம்சாவளித் தமிழ் தலைவர்களை ஒன்றாக சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர் Published By: VISHNU 20 JUN, 2024 | 09:30 PM (எம்.மனோசித்ரா) இந்திய வம்சாவளித் தமிழர்கள் தொடர்பாக இலங்கை - இந்திய வளர்ச்சிக் கூட்டாண்மை மற்றும் கூடுதல் ஒத்துழைப்பு குறித்து வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் மற்றும் இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் நேற்று வியாழக்கிழமை இலங்கை வந்திருந்த நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் அதன் பிரதி தலைவர் வே.இராதாகிருஸ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார் மற்றும் உதயகுமார் ஆகியோரும், இலங்கை தொழிலாளர் காங்ரஸ் சார்பில் அதன் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான், இ.தொ.கா. பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். மேலும் கல்வி இராஜங்க அமைச்சர் அறவிந்த குமார் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஸ் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். இந்த சந்திப்பின் போது நரேந்திர மோடி மூன்றாவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றமைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இந்தியா எப்போதும் பலம் மிக்கதாக இருக்க வேண்டும். அவ்வாறிருந்தால் தான் இலங்கையிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என ஜெய்ஷங்கரிடம் தெரிவித்ததாக த.மு.கூ. பிரதி தலைவர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். சீதையம்மன் ஆலயம் தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டதோடு, இலங்கையில் தேர்தல்கள் நிறைவடைந்ததன் பின்னர் அதனை அபிவிருத்தி செய்வதற்கான வழிவகைகள் குறித்தும் அவதானம் செலுத்துமாறு உயர்ஸ்தானிகருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் 4000 வீடுகளின் நிர்மாணப்பணிகளை நிறைவு செய்யுமாறும், அதன் பின்னர் மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை மலையகத்தில் முன்னெடுப்பது குறித்து அவதானம் செலுத்தப்படும் என்றும் ஜெய்ஷங்கர் குறிப்பிட்டதாக இராதாகிருஸ்ணன் மேலும் தெரித்தார். https://www.virakesari.lk/article/186605
  3. Published By: DIGITAL DESK 3 20 JUN, 2024 | 11:39 AM இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசு சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இலங்கைக் கடற்படையினரால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து IND-TN-08-MM-05 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் 18-6-2024 அன்று கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இத்தகைய சம்பவங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், மீனவ சமுதாயத்தினரிடையே அச்ச உணர்வையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் தற்போது 15 மீனவர்களும், 162 மீன்பிடிப் படகுகளும் உள்ளது. எனவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசை வலியுறுத்திட வேண்டுமென்று வெளியுறவுத் துறை அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/186536
  4. டி20: சூப்பர் 8 ஆட்டங்கள், அணிகள் நிலை, அதிக ரன், அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் - முழு விவரம் பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவிலும், மேற்கிந்தியத் தீவுகளிலும் டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளன. கத்துக்குட்டி அணிகளுடன், வலிமையான பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகளும் லீக் சுற்றுடன் வெளியேறிவிட்டன. லீக் சுற்றில் வலிமையை நிரூபித்த 8 அணிகள் விளையாடும் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் தொடங்கியுள்ளன. இந்த 8 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள், அதிலுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். இதில் அதிக புள்ளிகளைப் பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். குரூப் ஒன்றில் இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் ஒன்றில் அணிகள் மோதும் ஆட்டங்கள் குறித்த அட்டவணையும், புள்ளிப் பட்டியலும் கீழே தரப்பட்டுள்ளன. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். குரூப்-2 அணிகள் நிலவரம் குரூப்2 பிரிவில் தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள், நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன. அந்த அணிகள் மோதும் ஆட்டங்களின் கால அட்டவணை, புள்ளிப் பட்டியல் ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. அதிக ரன் எடுத்த வீரர்கள் நிகோலஸ் பூரன் மே.இ.தீவுகள்) - 200 ரன் ஆன்ட்ரிஸ் கோஸ் (அமெரிக்கா) - 182 ரன் ரஹ்மானுல்லா குர்பாஸ் (ஆஸ்திரேலியா) - 167 ரன் மார்கஸ் ஸ்டாய்னிஸ் (ஆஸ்திரேலியா) - 156 ரன் இப்ராஹிம் ஜாத்ரன் (ஆப்கானிஸ்தான்) - 152 ரன் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் ஃபஸல்ஹாக் ஃபரூக்கி (ஆப்கானிஸ்தான்) - 12 விக்கெட் ஆன்ட்ரிச் நோர்ட்ஜே (தென் ஆப்ரிக்கா) - 10 விக்கெட்டுகள் அகீல் ஹோசைன், அல்ஜாரி ஜோசப் (இருவரும் மே.இ.தீவுகள்), ஆடம் ஜம்பா (ஆஸி.), டிரென்ட் போல்ட்(நியூசி.) தசீம் ஹாசன் (வங்கதேசம்) - 9 விக்கெட்டுகள் https://www.bbc.com/tamil/articles/c0jjxwq8jjko
  5. பிரதமர் தினேஸ் குணவர்த்தனவை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்! Published By: DIGITAL DESK 3 20 JUN, 2024 | 04:10 PM உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று வியாழக்கிழமை (20) பிரதமர் தினேஸ் குணவர்த்தனவை சந்தித்தார். இது தொடர்பில் ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில், இன்று வியாழக்கிழமை பிற்பகல் இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்த்தனவை சந்தித்தமையையிட்டு பெருமகிழ்வடைகின்றேன். அபிவிருத்தி மற்றும் தொடர்புகளுக்கான முன்னெடுப்புகள் ஊடாக இந்தியாவின் வலுவான ஆதரவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. எமது அபிவிருத்தி உதவிகள் மற்றும் ஆளுமை விருத்தி செயற்திட்டங்கள் ஊடாக இலங்கை மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுமென நாம் நம்புகின்றோம் என பதவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/186575
  6. 20 JUN, 2024 | 05:45 PM இலங்கையின் பொருளாதார சமூக அபிவிருத்திக்கும் கடன்நிலைத்தன்மைக்கும் தொடர்ந்து ஆதரவளிக்கப்போவதாக சீனா தெரிவித்துள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் சீனாவின் எக்சிம் வங்கிக்கும் சீனாவின் அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் இறுதி உடன்பாட்டை எட்டும் விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சீனா தன்னால் முடிந்தளவிற்கு இலங்கையின் சமூகபொருளாதார அபிவிருத்திக்கு தனது ஆதரவை வழங்கிவருகின்றது என தெரிவித்துள்ள அவர் இலங்கையின் கடன்பேண்தகுதன்மைக்கு ஆதரவளிப்பதற்காக உரிய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி அமைப்புகளுடன் இணைந்து செயற்பட தயார் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/186565
  7. ஈழப்பிரியன் அண்ணாவின் பேத்தி விரைவாக குணமடைய வேண்டுகிறேன்.
  8. சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு விவகார வழக்கு ஒத்திவைப்பு Published By: DIGITAL DESK 3 20 JUN, 2024 | 02:26 PM மூதூர் கிழக்கு சேனையூர் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்குள மலை பிரதேசத்தில் மலை உடைப்பதால் தமக்கு பாதிப்புள்ளதாக கல்மலை உடைக்கும் போது எதிர்ப்பு தெரிவித்த 10 பொதுமக்கள் 11 ஆம் திகதி சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 12 ஆம் திகதி மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்கள் அனைவரும் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்கள். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் 15 ஆம் திகதி விஜயம் செய்து பார்வையிட்டதுடன், குறித்த வழக்கானது இன்று வியாழக்கிழமை (20) மூதூர் நீதிமன்றில் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இது தொடர்பான வழக்கை மூதூர் நீதிமன்றில் சம்பூர் பொலிஸார் முன்னர் தாக்கல் செய்திருந்தனர். குறித்த வழக்கில் இரு தரப்பினரும் இன்றைய தினம் ஆஜராகியிருந்தனர். கைது செய்யப்பட்டு சொந்த பிணையில் விடுவிக்கப்பட்ட 10 நபர்களுக்கும் சார்பாக சட்டத்தரணிகளான பு.முகுந்தன், நா.மோகன், சிரேஷ்ட சட்டத்தரணி தங்கமுத்து ஜயசிங்கம் ஆகியவர்கள் ஆஜராகியிருந்தனர். குறித்த வழக்கானது எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மூதூர் நீதிமன்ற பதில் நீதவானால் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/186564
  9. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வணிகர்கள் - திமுக நிர்வாகிகள் தொடர்பு குறித்து விசாரணை வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல் Published By: DIGITAL DESK 3 20 JUN, 2024 | 03:01 PM கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முப்பத்தைந்தாக உயர்ந்திருக்கிறது. கள்ளச்சாராயம் அருந்தி மக்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மேலும் இவ்விவகாரத்தில் கள்ளச்சாராய வணிகர்களுக்கும், திமுக நிர்வாகிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, “கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்திருக்கிறது. 50-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சைப் பெற்று வருகின்றனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயத்திற்கு இவ்வளவு பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசும், காவல்துறையும் முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டன என்பதையே இது காட்டுகிறது. கடந்தகால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது தான் நல்ல அரசுக்கு அழகு. அதன்படி, கடந்த ஆண்டு மே மாதத்தில் மரக்காணம், மதுராந்தகம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிகழ்விலிருந்து தமிழக அரசு விழித்துக் கொண்டு கள்ளச்சாராய விற்பனையை தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய அரசு தவறிவிட்டது. மாறாக, சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில், அதில் இது குறித்து எதிர்க்கட்சிகள் சிக்கல் எழுப்பும் என்பதால், இந்த விவகாரத்தை மூடி மறைக்க அரசு முயன்றது. ஒருகட்டத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்ந்த பிறகு தான் தமிழக அரசு உண்மையை ஒப்புக்கொண்டது. கள்ளச்சாராய வணிகத்தை தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதும், காவல்துறை கண்காளிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் சரியான நடவடிக்கை தான் . ஆனால், இது போதுமானதல்ல. கள்ளக்குறிச்சி மாவட்ட கள்ளச்சாராய சாவுகளுக்கு முக்கியக் காரணம் அங்குள்ள கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு திமுகவினர் கொடுத்த ஆதரவு தான். இது குறித்து விசாரணை நடத்துவதுடன், கள்ளச்சாராய வணிகத்திற்கு துணை போன அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என அதில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இவ்விவகாரம் குறித்து சட்டபேரவையில் எதிர்கட்சிகள் நாளை கேள்வி எழுப்பக்கூடும என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பதில் தர ஆளும் திமுகவும் தயாராகி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186568
  10. 20 JUN, 2024 | 10:15 AM புதுடெல்லி: கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் நினைவாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில்மௌன மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை கண்டித்து இந்தியா பதிலடி கொடுத்தது. கடந்த ஆண்டு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ளகுருத்வாரா அருகே மர்ம நபர் களால் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது என்றும் அபத்தம் என்றும் இந்தியா மறுத்துவிட்டது. இதனால் இந்தியா-கனடா நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் கனடா நாடாளுமன்றத்தில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் நினைவாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கனடா நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர். இதற்கு பதிலடியாக 1985-ம் ஆண்டில் ஏர் இந்தியா கனிஷ்கா விமானத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்த 329 அப்பாவிகள் நினைவாக மௌன அஞ்சலி கூட்டம் நடத்தப்போவதாக கனடா நாட்டின் இந்திய தூதரகம் அறிவித்து உள்ளது. இது குறித்து வான்கூவரில் உள்ள இந்திய தூதரகம் ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீவிரவாதத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. உலகளாவிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள அனைத்து நாடுகளுடன் நெருக்க மாக இந்தியா பணியாற்றி வருகிறது. கடந்த 1985-ம் ஆண்டில் ஏர் இந்தியா கனிஷ்கா விமானத்தில் தீவிரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததன் 39-வது ஆண்டு நினைவு நாள் ஜூன் 23-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த விபத்தில் 86 குழந்தைகள் உட்பட 329 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சிவில் விமான வரலாற்றில் கொடூரமான தீவிரவாத தாக்குதலாக இது கருதப்படுகிறது. https://www.virakesari.lk/article/186525
  11. Published By: RAJEEBAN 20 JUN, 2024 | 11:29 AM எல்ஜிபிடிகியு சமூகத்தினரையும்; பால்புதுமையினரின் உரிமைகளையும் ஊக்குவிக்கும் சட்ட மூலத்தினால் உள்ளுர் கலாச்சாரத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என அகில இலங்கை பௌத்தகாங்கிரஸ் எச்சரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பெண்களை வலுப்படுத்தும் சட்டமூலத்தையும் பாலின சமத்துவ சட்டமூலத்தையும் கடுமையாக விமர்சித்துள்ள அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் இந்த சட்டமூலம் எல்ஜிபிடிகியு சமூகத்தினரையும்; பால்புதுமையினரின் உரிமைகளையும் ஊக்குவிக்கும் உள்நாட்டு கலாச்சாரம் நெறிமுறைகள் விழுமியங்களை சமரசம் செய்யும் என தெரிவித்துள்ளது. மேற்குலகில் கூட பிள்ளைகள் பால் மாற்றத்தில் ஈடுபடுவதை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என என அகில இலங்கை பௌத்தகாங்கிரஸின் தலைவர் சந்திரா நிமல் வகிஸ்ட தெரிவித்துள்ளார். இலங்கை ஒரு குடும்ப அடிப்படையிலான தாய்வழி சமூகம் என தெரிவித்துள்ள அவர் இந்த சட்டமூலங்கள் இலங்கையின் நெறிமுறைகள் மற்றும் விழுமியங்களை நிச்சயம் சமரசம் செய்யும் எனவும் தெரிவித்துள்ளார். வெவ்வேறு பாலியல்நோக்குநிலையை கொண்டவர்கள் உள்ளனர் அவர்களின் சார்பில் தனிதனி சட்டங்களை கொண்டுவரக்கூடாது என தெரிவித்துள்ள அவர் எனினும் அனைவரையும் சமமமாக நடத்தவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டமூலங்கை நடைமுறைப்படுத்தினால் அதன் காரணமாக கலாச்சார சட்ட குழப்பங்கள் ஏற்படும் இது இலங்கை ஜனாதிபதி அன்னிய கருத்துக்களை எம்மீது திணிக்க முயலக்கூடாது அவர் தன்னை இலங்கையராக பார்க்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/186539
  12. முல்லைத்தீவு வான் பரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய அதிசய உருவம் Published By: DIGITAL DESK 3 20 JUN, 2024 | 10:18 AM முல்லைத்தீவு வான் பரப்பில் அதிசய உருவம் இரண்டு செவ்வாய்க்கிழமை (18) தோன்றியிருந்ததையடுத்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது நிலவி வரும் சீரற்ற காலநிலையினையடுத்து முல்லைத்தீவு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வேளை வானில் தொடர்ச்சியாக நீல நிறமாக ஒரு உருவம் ஔிர்ந்து கொண்டிருக்க அதனை சுற்றி வேறு நிற ஔி உருவம் விட்டு விட்டு ஔிர்ந்து கொண்டிருந்தது. இதனை அவதானிக்த மக்கள். இயற்கை மாற்றம் ஏற்படுமா என்ற நிலையில் அச்சமடைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/186524
  13. இலங்கை வந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் Published By: DIGITAL DESK 3 20 JUN, 2024 | 10:32 AM இந்திய வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார். இந்த விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர், இருதரப்பு பங்குடைமையின் பரந்தளவான விடயங்கள் குறித்து இலங்கை தலைமைத்துவத்துடன் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார். இந்தியப் பிரதமர் மோடியின் புதிய அரசாங்கத்தின்கீழ் வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும். இந்தியாவின் அயல்நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கையினை மீள வலியுறுத்தும் இந்த விஜயமானது, கடல்மார்க்கமாக மிகவும் நெருக்கமான அயல் நாடாகவும் காலங்காலமாக நல்லுறவைக்கொண்ட நண்பனாகவும் உள்ள இலங்கைக்கு இந்தியாவினது தொடர்ச்சியான அர்ப்பணிப்பினை சுட்டிக்காட்டுகின்றது. அத்துடன், இணைப்புத் திட்டங்கள் மற்றும் பல்வேறு துறைகளிலும் பரஸ்பர நன்மையளிக்கும் ஏனைய ஒத்துழைப்புகள் ஆகியவற்றுக்கும் இந்த விஜயம் மேலும் உத்வேகமளிக்கும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட செய்தியுடன் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் . ஜெய்சங்கர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார். அத்துடன் பிரதமர் தினேஸ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமைச்சர் ஜீவன் தொண்டமான், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதிகள், இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார். இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை உள்ளிட்ட மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டு சகல உட்கட்டமைப்பு வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள 109 வீடுகளையும் மெய்நிகர் ஊடாக உத்தியோகபூர்வமாக பொதுமக்களிடம் கையளிக்கவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது டில்லி விஜயத்தின் போது இலங்கைக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதற்கமைய எதிர்வரும் ஆகஸ்டில் அவர் இலங்கை வரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அது குறித்து ஆராய்வது காலநிதி ஜெய்சங்கரின் விஜயத்தில் முக்கிய அம்சமாகும். அது தவிர இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மேலதிக வலுச்சக்தியை கொள்வனவு செய்தல், அதற்காக இந்தியா - இலங்கைக்கு இடையிலான குழாய் இணைப்பொன்றை கட்டமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல், மன்னார், பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவை மீள் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி மையமாக அபிவிருத்தி செய்யும் திட்டம், இந்தியா - இலங்கைக்கு இடையிலான தரைமார்க்க இணைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்திக்கூறுகள் என்பன தொடர்பிலும் இவ்விஜயத்தில் ஆராயப்படவுள்ளது. மேலும் இந்திய அரசாங்கத்தால் திருகோணமலையை கேந்திரமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ள கைத்தொழில் வலயம் தொடர்பிலும், விவசாய நவீன மயமாக்கல் தொடர்பிலும் முக்கியமாக இரு நாட்டு மீனவர்களுக்கிடையிலான பிரச்சினைகள் குறித்தும் இரு தரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. விசேடமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போது, பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள லயன் அறைகளை பெருந்தோட்டக் கிராமங்களாக்கிய பின்னர் அவற்றின் அபிவிருத்திகளுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186518
  14. Published By: DIGITAL DESK 7 20 JUN, 2024 | 09:13 AM வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அமைய மன்னார் மாவட்டம் விடத்தல் தீவு இயற்கை சரணாலயம் என குறிப்பிடப்பட்ட பகுதி நிறைவுக்கு வருவதாக கடந்த மே மாதம் 6 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இவ்வாறு விடத்தல் தீவு பகுதியில் வனவள திணைக்களத்திற்கு சொந்தமான காணிகள் கடல்சார் பூங்கா/கடல் வேளண்மைக்கு விடுவிக்கப்படுவதாக வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த காணி விடுவிப்பு தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. குறிப்பாக, கடந்த வாரம் இடம் பெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது குறித்த காணி விடுவிக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், அபிவிருத்தி என்ற பெயரில் இயற்கையான கண்டல் காடுகளை அழித்து மீன்பிடி நடவடிக்கைகளை தடுத்து அமைக்கப்படும் கடல்சார் பூங்காவிற்கு அனுமதி வழங்க முடியாது என தெரிவித்திருந்தார். அதே நேரம் மீனவர்கள் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்ட போது இந்த 400 ஏக்கர் நிலமும் ஒரு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பண்ணை அமைப்பதற்கு வழங்குவதற்காகவே விடுவிக்கப்பட்டதாக சந்தேகம் மீனவர்கள் மத்தியில் காணப்படுவதாக தெரிவித்தனர். வெறுமனே அதை 400 ஏக்கர் பிரச்சினையாக கருத கூடாது எனவும் அதை தொடர்ந்து விடத்தல் தீவு பகுதியோடு சேர்ந்த 1400 ஏக்கர் காணிகள் ஆபத்தில் இருப்பதாக வடமாகாண கடற்றொழில் இணையத்தின் ஊடக பேச்சாளர் ஆலம் குறிப்பிட்டிருந்தார். அதே நேரம் குறித்த காணி விடுவிக்கப்பட்டமை தொடர்பாக தங்களுக்கு எந்த ஒரு அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை எனவும் 1000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு தொடர்பில் அளவீடுகள் இடம் பெற்ற நிலையில் 400 ஏக்கராக குறைக்கப்பட்டு தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் தெரிவித்திருந்தார். அதே நேரம் மன்னார் மாவட்ட காணிகளுக்கு பொறுப்பான மேலதிக அரசாங்க அதிபர் இது தொடர்பாக தெரிவித்த போது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியானதை தொடர்ந்து மன்னார் வனவள திணைக்கள அதிகாரிகளிடமும் கொழும்பு மாவட்ட உயர் அதிகாரிகளிடமும் அறிய முற்பட்ட வேளை குறித்த அறிவித்தல் தொடர்பில் அவர்களுக்கே தெரியாத நிலையே காணப்படுவதாக தெரிவித்தார். மேலும் குறித்த வர்த்தமானி அறிவித்தல் சிங்கள மொழியிலே காணப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்ட இணைப்புகள் எதுவும் வர்த்தமானியில் காணப்படவில்லை எனவும் அதில் ஒழுங்கான விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை எனவும் அவ் வர்த்தமானி தொடர்பில் யாருக்கும் ஒழுங்கான விளக்கம் இல்லை என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் குறித்த விடுவிக்கப்பட்ட காணிகள் வேறு எந்த உள்ளூர் நிறுவனங்களுக்கோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுக்கோ வழங்காது அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது இருந்தது. இந்த நிலையில் நேற்று புதன்கிழமை (19) யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் "விடத்தல் தீவு விடுவிக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு பயன்படுத்துவதாக கடற்றொழில் அமைச்சால் தெரிவிக்கப்படுகின்றது. எங்களை பொறுத்த வரையில் விடத்தல் தீவு என்பது கடலால் சூழப்பட்ட பிரதேசம் .அது பூகோள ரீதியில் பெறுமதியான பிரதேசம். பருவ காலத்தில் மீன் இனங்கள் அந்த பிரதேசத்திலேயே இனப்பெருக்கம் செய்து ஆழ்கடலுக்கு செல்கின்றன. இலங்கையின் மிகப்பெரிய மீன் உற்பத்தி வங்கி அதாவது இந்த திணைக்களங்களினால் அறியப்படாத மீன் உற்பத்தி வங்கியும் இதை எமது மக்களின் வாழ்வாதாரத்துக்கும் அபிவிருத்திக்கும் பயன்படுத்துவதாக கூறி மிக பலம் பொருந்திய பல்தேசிய கம்பெனிகளுக்கு மக்கள் என்ற போர்வையில் மக்களை பினாமியாக வைத்து விற்பனை செய்வதற்கான மறைமுகமான திட்டமாகத்தான் இது இருப்பதாக அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் குறித்த காணி விடுவிப்பு தொடர்பில் தெளிவுபடுத்தப்பட வர்த்தமானி அறிவித்தல் சம்பந்தப்பட்ட அமைச்சாலோ அமைச்சராலோ வழங்கப்படாத நிலையில் குறித்த காணிகளை விடுவிக்க வேண்டாம் எனவும் அவை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கோரி விரைவில் விடத்தல் தீவு மக்களால் போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186514
  15. 20 JUN, 2024 | 10:13 AM (நெவில் அன்தனி) இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டுக்கான தலைமைப் பதவியிலிருந்து விலகிக்கொண்டுள்ள கேன் வில்லியம்சன், நியூஸிலாந்து வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தையும் நிராகரித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நீடித்திருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே தலைவர் பதவியைத் துறந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பப்புவா நியூ கினியுடனான சி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டி முடிவடைந்த பின்னர் தனது பதவி விலகல் மற்றும் மத்திய ஒப்பந்தத்தை நிராகரித்தமை தொடர்பான அறிவிப்பை 33 வயதான கேன் வில்லியம்சன் விடுத்தார். இக் குழுவில் மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடனான போட்டிகளில் தோல்வி அடைந்ததால் முதல் சுற்றுடன் நியூஸிலாந்து வெளியேறியது. எவ்வாறாயினும் தொடர்ந்து நடைபெறவுள்ள எட்டு ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளிலும் பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டியிலும் நியூஸிலாந்துக்காக விளையாட அர்ப்பணிப்புடன் இருப்பதாக கேன் வில்லியம்சன் குறிப்பிட்டுள்ளார். ஒரு புறத்தில் வீரர்களுக்கான ஒப்பந்தத்தை நிராகரிப்பதாக குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் அந்த ஒப்பந்தத்தை ஏற்க தயார் எனவும் அவர் கூறினார். ஆனால், வெளிநாடுகளுக்கு செல்லவேண்டிவருவதால் மத்திய ஒப்பந்தத்தை நிராகரிக்க நிர்ப்பந்திக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். 'நியூசிலாந்துக்காக விளையாடுவதை நான் பாக்கியமாக கருதுகிறேன். அணிக்கு பிரதியுபகாராமாக எதையாவது கொடுக்க வேண்டும் என்ற எனது ஆவல் இன்னும் குறையவில்லை. 'கிரிக்கெட்டுக்கு வெளியே எனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவதால் எனது வாழ்க்கை மாறிவிட்டுள்ளது. மேலும் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ குடும்ப உறுப்பினர்களுடன் அனுபவங்களை பகிர்ந்துகொள்வது மிகவும் முக்கியமாகும்' என்றார் கேன் வில்லியம்சன். வில்லியம்சனின் முடிவுக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட நியூஸிலாந்து கிரிக்கெட் (NZC) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் வீனிங்க், 'நியூசிலாந்து கிரிக்கெட்டுக்காக எவ்வளவோ நிறைவேற்றியுள்ள அவர் ஓய்வு எடுத்துக்கொள்வதற்கும் குடும்பக் கடமைகள் உட்பட பிற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கும் வாய்ப்பு வழங்குவது மிகவும் பொருத்தமாகும்' என்றார். 'கேனை (கேன் வில்லியம்சன்) சர்வதேச விளையாட்டில் தக்கவைத்துக்கொள்வது இது ஒரு சிறந்த வழியாகும், இதன் மூலம் அவர் இப்போதும் அடுத்து வரும் வருடங்களிலும் பிளாக் கெப்ஸுக்கு பிரதான பங்கு வகிப்பார்' என வீனிங்க் கூறினார். நியூசிலாந்து வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தங்களின் இறுதி பட்டியல் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் இல்லாத மற்றொரு குறிப்பிடத்தக்க வீரர் லொக்கி பெர்கசன் ஆவார். அவர் மத்திய ஒப்பந்தத்தை ஏற்கப் போவதில்லை என ஏற்கனவே கூறியிருந்தார். https://www.virakesari.lk/article/186523
  16. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 19 ஜூன் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 72 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், பாண்டிச்சேரி, விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 13 பேர் உயிரிழந்துவிட்டதாக நேற்றைய தினம் அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னரும் அடுத்தடுத்து பலர் உயிரிழந்ததாக மருத்துவமனைகளில் இருந்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. தொலைதூர மற்றும் உள்புற கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்த நிலையில், மாவட்ட தலைநகரிலேயே இந்த கள்ளச்சாராய உயிரிழப்புகள் ஏற்பட்டது எப்படி? என்ன நடந்தது? கள்ளச்சாராயம் அருந்தியதால் அடுத்தடுத்து உயிரிழப்பு கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு கருணாபுரத்தைச் சேர்ந்த 4 பேர் கள்ளச்சாராயம் அருந்தியதால் நேற்று உயிரிழந்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த அவர்கள் அனைவரும் கடந்த திங்கட்கிழமை கள்ளச்சாராயம் அருந்தியதாக உறவினர்கள் கூறினர். ஆனாலும், நேற்று (19/06/2024) நண்பகல் 12 மணி முதல் கருணாபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த, மது அருந்திய பலரும் அதிக வயிற்றுப்போக்கு, கை கால் மரத்து போதல் போன்ற பிரச்னைகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர தொடங்கினர். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு கல்லூரி மருத்துவமனை வரை 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு வந்தன. அவர்களை மருத்துவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து அதிக பாதிப்பு உள்ளவர்களை சேலம், பாண்டிச்சேரி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர்களில் மூன்று பேரும், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேரும் இறந்ததாக தகவல் கிடைத்துள்ளது. அடுத்தடுத்த உயிரிழப்புகளால், பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கள்ளக்குறிச்சியில் இறந்தவர்கள் விவரம் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் நேற்று முன் தினம் முதல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாகவும், அதை அருந்தியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரவீன்(29), சுரேஷ்(46), மற்றொரு சுரேஷ்(45), சேகர்(61) ஆகியோர் உயிரிழந்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 7 பேரில் நாராயணசாமி (65), ராமு (50), சுப்பிரமணி(60) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 19 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மணி(58), கிருஷ்ணமூர்த்தி(62), இந்திரா(48) ஆகிய 3 பேர் இறந்தனர். மேலும் 47 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சைக்காக மேலும் பலரும் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சாராய வியாபாரி கைது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இருவரிடம் கள்ளக்குறிச்சி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஆட்சியர் பணியிட மாற்றம், எஸ்.பி. சஸ்பெண்ட் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அம்மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய எஸ்.பி.யாக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார். படக்குறிப்பு,பணியிடை மாற்றம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் 10 அதிகாரிகள் சஸ்பெண்ட் ஆட்சியர், எஸ்.பி. மட்டுமின்றி மேலும் 9 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் விவரம் கீழே தரப்பட்டுள்ளது. மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிசெல்வி மற்றும் உதவி ஆய்வாளர் பாரதி கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் உதவி ஆய்வாளர் சிவசந்திரன் காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு உதவி ஆய்வாளர் மனோஜ் படக்குறிப்பு,சஸ்பெண்ட் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ் பி சமய்சிங் மீனா "காவல்துறையின் கவனக்குறைவே காரணம்" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் அடுத்தடுத்து நேரிடும் உயிரிழப்புகளால் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நபர்களை நேரில் பார்த்து நலம் விசாரித்தார்கள். தொடர்ந்து உயர் தரமான சிகிச்சை வழங்குமாறு மருத்துவர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி நகரம் கருணாபுரம் பகுதியில் பாக்கெட் சாராயம் குடித்ததால் 72 பேர் உடல் உபாதை காரணமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் அனைவரும் மெத்தனால் என்னும் திரவத்தை அருந்தியிருப்பது கண்டறியப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது. மேலும் அந்த அறிக்கையில், "மெத்தனால் கொண்டு வந்த விற்பனை செய்த கன்னுக்குட்டி என்னும் கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது காவல்துறையின் கவனக்குறைவால் நடந்திருப்பது கண்டறியப்பட்டு, கள்ளக்குறிசி எஸ்.பி. உள்ளிட்ட 10 காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்படும். யாருக்கும் அரசு பரிவு காட்டாது." என்று கூறப்பட்டுள்ளது. a சிபிசிஐடி போலீசார் விசாரணை விஷ சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் இருந்து விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இந்த உத்தரவின் பெயரில் விழுப்புரம் சிபிசிஐடி டிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் இந்த விஷ சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்க உள்ளனர். குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி போலீசார் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிபிசிஐடி டிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் மேற்கொள்ளும் விசாரணையில் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளனர். மெத்தனால் உயிரைப் பறிப்பது எப்படி? இந்த உயிரிழப்புகளுக்கு, கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது. மெத்தனால் எந்த வகையில் உயிரைப் பறிக்கிறது? அது நுழைந்ததும் மனித உடலுக்குள் என்ன நடக்கும்? என்பது உள்ளிட்ட கேள்விகளை சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஜெயராமனிடம் முன்வைத்தோம். "கள்ளச்சாராயத்திற்கும், விஷ சாராயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. மதுவை அரசு அனுமதியில்லாமல், உரிமம் இல்லாமல் காய்ச்சி குடித்தால் அது கள்ளச்சாராயம். அதுவே, போதைக்காக மெத்தனால் கலக்கப்படும் போது விஷ சாராயமாகி விடும். எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால் தான் மது வகைகளில் இருக்கக் கூடியது. மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய கொடிய விஷமாகும். அது தொழிற்சாலைகளில் சில வேதிப்பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு வரும் மெத்தனாலில் 90 முதல் 100 சதவீதம் ஆல்கஹால் இருக்கும். அந்த மெத்தனாலை, நீர்த்துப் போகச் செய்யாமல் அப்படியே குடித்தால் ஓரிரு நிமிடங்களில் மரணம் சம்பவிக்கும்." என்று அவர் கூறினார். மேலும் தொடர்ந்த மருத்துவர் ஜெயராமன், மெத்தனால் மனித உடலுக்குள் நுழைந்ததும் உணவு மண்டலம், நரம்பு மண்டலத்தை சீர்குலைத்துவிடும். வயிற்றுக்குள் விஷ சாராயம் சென்றவுடன் மகிழ்ச்சியாக இருப்பது போல் தோன்றும். ஆனால் அடுத்த சில விநாடிகளில் வயிறும், குடலும் வெந்துவிடும். மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்தவர்கள் நுரைநுரையாக வாந்தி எடுப்பார்கள். அந்த வாந்தி எல்லாம் நுரையீரலுக்குச் சென்றுவிடும் என்பதால் சட்டென்று மூச்சு அடைத்துவிடும். அதேநேரத்தில் நரம்பு மண்டலம் வழியாக மெத்தனாலின் விஷத்தன்மை மூளைக்கும் பரவுவதால், மூளை செல்கள் உடனே அழிந்துவிடும். மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு ஓரிரு நிமிடங்களில் அவர்கள் மயக்கமடைந்துவிடுவார்கள். அதிக போதை வேண்டும் என்ற எண்ணத்தில் அறியாமையால்தான் இதனை சிலர் சாப்பிடுகின்றனர். அதிக நேரம் போதையில் மிதக்கச் செய்வதன் மூலம் இது தங்களை நேராக சொர்க்கத்திற்கே கூட்டிச் செல்லும் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால், நடப்பதோ வேறு," என்று விவரித்தார். https://www.bbc.com/tamil/articles/c4nnxx4j8j8o
  17. டி20 உலகக்கோப்பை: சொந்த நாட்டிற்கே தோல்வி பயத்தை காட்டிய வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 20 ஜூன் 2024, 04:39 GMT புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர் டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் கத்துக்குட்டி அமெரிக்க அணிக்கு எதிராக போராடித்தான் தென் ஆப்ரிக்க அணியால் வெல்ல முடிந்துள்ளது. ரபாடா, நோர்க்கியா மட்டும் கடைசி இரு ஓவர்களை கட்டுக்கோப்பாக வீசாமல் இருந்திருந்தால், தென் ஆப்ரிக்காவின் தோற்றுப் போயிருக்கும். சொந்த நாட்டிற்கே தோல்வி பயத்தை காட்டிய ஆன்ட்ரிஸ் கோஸின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது. தென் ஆப்ரிக்கா - அமெரிக்கா ஆட்டத்தில் என்ன நடந்தது? ஃபார்முக்கு வந்த டீ காக் நார்த் சவுண்ட் நகரில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர்-8 சுற்றின் குருப்-பி பிரிவில் தென் ஆப்ரிக்கா - அமெரிக்கா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அமெரிக்காவில் இருந்து பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் சொதப்பலாக பேட் செய்த தென் ஆப்ரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டீ காக் பேட்டர்களுக்கு சாதகமான ஆடுகளம் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளத்தில் ஃபார்முக்கு திரும்பினார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். தொடக்கத்தில் திணறிய டீ காக், பவர்ப்ளேயில் 4 ஓவர்கள் வரை ஒரு பவுண்டரிகூட அடிக்கவில்லை. ஜஸ்தீப் சிங் ஓவரில் மிட்விக்கெட்டில் ஒரு பவுண்டரி அடித்த அவர் அதனைத் தொடர்ந்து 3 சிக்ஸர்களை விளாசி ஃபார்முக்கு திரும்பினார். ஜஸ்தீப் சிங் தனது முதல் ஓவரிலேயே 28 ரன்களை வாரி வழங்கினார். பவர்ப்ளே முடிவில் டீகாக்கின் அதிரடியால் தென் ஆப்ரிக்கா ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் சேர்த்தது. அதன்பின் அதிரடியாக ஆடத் தொடங்கிய டீ காக், கோரி ஆன்டர்சன் பந்துவீச்சில் சிக்ஸர் விளாசி 26 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். அணியின் ஸ்கோர் உயர்வுக்கு துணை செய்த டீ காக் 74 ரன்கள் (5சிக்ஸர்,7பவுண்டரி) சேர்த்து, டி20 உலகக் கோப்பையில் தனது அதிகபட்ச ரன்களை பதிவு செய்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES கிளாசன், ஸ்டெப்ஸ் கூட்டணி தென் ஆப்ரிக்காவின் ரன் குவிப்பில் கேப்டன் மார்க்ரம்(46), கிளாசன்(36நாட்அவுட்), டிரிஸ்டன் ஸ்டெப்ஸ்(20நாட்அவுட்) ஆகியோரும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு செய்தனர். அதிலும் கிளாசன், ஸ்டெப்ஸ் கடைசி நேரத்தில் 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தது பெரிய ஸ்கோர் கிடைக்க உதவியாக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES நெட்ராவல்கர், ஹர்மீத் சிங் அபாரப் பந்துவீச்சு அமெரிக்கா அணியும் பந்துவீச்சு, பேட்டிங்கில் தென் ஆப்ரிக்காவுக்கு சவலாக விளங்கினர். ஒரு கட்டத்தில் தென் ஆப்ரிக்கா 13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் என வலுவாக இருந்தது. ஆனால், அடுத்த 7 ஓவர்களில் 80 ரன்கள் மட்டுமே அமெரிக்க அணியினர் சேர்க்கவிட்டனர். குறிப்பாக நெட்ராவல்கர், ஹர்மீத் சிங் இருவரும் சேர்ந்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். நெட்ராவல்கர் 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ஹர்மீத் சிங் 4 ஓவர்கள் வீசி 24ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் சாய்த்து தென் ஆப்ரிக்க பேட்டர்களுக்கு பெரிய தொந்தரவாக அமைந்தனர். மற்ற 5 பந்துவீச்சாளர்களும் 12 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் 10 சிக்ஸர்கள், 9பவுண்டரி உள்பட 148 ரன்களை வாரி வழங்கினர். பட மூலாதாரம்,GETTY IMAGES சொந்த நாட்டை மிரட்டிய கோஸ் தென் ஆப்பிரிக்காவில் டீன் எல்கர் பிறந்த அதே நகரில்தான் ஆன்ட்ரிஸ் கோஸ் பிறந்தார். கொரோனா காலத்தில் தென் ஆப்ரிக்காவில் நடத்தப்பட்ட பல சிறிய லீக் ஆட்டங்களில் கோஸ், பலவீரர்களுடன் சேர்ந்து விளையாடியுள்ளார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக விளையாடுவதற்கு 3 மாதங்களுக்கு முன்புதான் கோஸ், சர்வதேச போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். கோஸின் பேட்டிங் தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. கோஸ் தான் சந்தித்த 6வது பந்திலேயே பவுண்டரிவிளாசினார். யான்சென் ஓவரில் சிக்ஸரும், நோர்க்கியா ஓவரில் 18 ரன்களும் கோஸ் நொறுக்கினார். அதிரடியாக ஆடிய கோஸ் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஒரு கட்டத்தில் அமெரிக்கா வெற்றி்கு 18 பந்துகளில் 50 ரன்கள் தேவைப்பட்டது. ஷம்சி வீசிய 18-வது ஓவரில் இரு சிக்ஸர்களையும், ஹர்மீத் ஒரு சிக்ஸர் என 22 ரன்களை சேர்த்து தென் ஆப்ரிக்க அணிக்கு கிலி ஏற்படுத்தினார். கோஸ் 47 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்து(5சிக்ஸர், 5பவுண்டரி) இறுதிவரை போராடியும் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. ஹர்மீத் சிங்குடன் சேர்ந்து 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கோஸ் ஆட்டத்தைப் பார்த்த போது, ஆட்டம் தென் ஆப்ரிக்காவின் கையைவிட்டு சென்றுவிட்டது என்று ரசிகர்கள் எண்ணினர். அமெரிக்க அணியில் நடுவரிசை பேட்டர்கள் ஒருவர் கூட சிறப்பான பங்களிப்பை அளிக்காதது தோல்விக்கு முக்கியக் காரணம். கேப்டன் ஜோன்ஸ்(0), அனுபவ வீரர் கோரி ஆன்டர்சன்(12), நிதிஷ் குமார்(8), ஜகாங்கிர்(3) ஆகிய 4 பேட்டர்களும் சொதப்பிவிட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES திருப்புமுனை ரபாடா தென் ஆப்ரிக்காவின் பந்துவீச்சில் ரபாடா, கேசவ் மகராஜ் பந்துவீச்சுதான் நேற்றைய ஆட்டத்தின்” டாப் கிளாஸ்”. இருவரும் வீசிய 8 ஓவர்கள்தான் அமெரிக்காவின் பேட்டிங்கை புரட்டிப்போட்டு, ரன்ரேட்டை இறுகப்பிடித்தது. ரபாடா 4 ஓவர்கள் வீசி18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மகராஜ் 4ஓவர்கள் வீசி24 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இருவரும் சேர்ந்து 21 டாட் பந்துகளை வீசினர். ஏறக்குறைய 3.3 ஓவர்களை டாட் பந்துகளாக வீசிய நிலையில் 5 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதிலும் குறிப்பாக கடைசி 3 ஓவர்களில் அமெரிக்கா வெல்ல 50ர ன்கள் தேவைப்பட்டது. ஷம்சி வீசிய 18-வது ஓவரை வெளுத்து வாங்கிய கோஸ, ஹர்மீத் சிங் சிக்ஸர்களா விளாசினர். ஹர்மீத் ஒரு சிக்ஸர், கோஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 22 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை பரபரப்பாக்கினர். கடைசி 2 ஓவர்களில் அமெரிக்கா வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. ரபாடா 19-வது ஓவரை மிகத் துல்லியமாக, கட்டுக்கோப்பாக வீசி அமெரிக்காவிடம் இருந்து வெற்றியைப் பறித்தார். அது மட்டுமல்லாமல் ரபாடா 19-வது ஓவரில் ஹர்மீத் சிங்(38) விக்கெட்டையும் வீழ்த்தி 2 ரன்கள் மட்டுமே கொடுத்து நெருக்கடி ஏற்படுத்தினார். கடைசி ஓவரில் அமெரிக்கா வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டன. நோர்க்கியாவும் கடைசி ஓவரை கட்டுக்கோப்பாக வீசி தென் ஆப்ரிக்காவுக்கு வெற்றியை உறுதி செய்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES "பந்துவீச்சில் கோட்டை விட்டோம்" அமெரிக்க கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் கூறுகையில் “ வெற்றிக்கு அருகே வந்தபின் தோற்றது வேதனையாக இருக்கிறது. பந்துவீச்சில் நாங்கள் கோட்டைவிட்டுவிட்டோம், இன்னும் கட்டுக்கோப்புடன் பந்துவீசி இருக்க வேண்டும். நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கிவிட்டால், உலகில் எந்த அணியையும் வீழ்த்த முடியும். அதற்கு எங்களிடம் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் அதிகமான ஒழுக்கம் அவசியம்” எனத் தெரிவித்தார் சூப்பர்-8 சுற்றில் முதல் வெற்றி இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்ரிக்க அணி 2 புள்ளிகள் பெற்று நிகர ரன்ரேட்டை 0.90 ஆக உயர்த்தியுள்ளது. அமெரிக்காவின் நிகர ரன்ரேட் மைனஸ் 0.90 ஆகக் குறைந்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/cnkk5yze7zqo
  18. Published By: DIGITAL DESK 7 20 JUN, 2024 | 08:47 AM யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் இன்று வியாழக்கிழமை (20) இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது, குறித்த சம்பவத்தை தொடர்ந்து இரு குழுக்களுக்கு இடையே இன்றையதினம் அதிகாலை ஒரு மணியளவில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் நெடுந்தீவு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவத்தின் போது, 23 வயதுடைய அன்ரன் ஜீவராஜ் அமல்ராஜ் என்பவரே உயிரிழந்துள்ளார். https://www.virakesari.lk/article/186513
  19. முல்லைத்தீவு வான் பரப்பில் இரண்டு மர்ம வெளிச்ச உருவங்கள் தென்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தற்பொழுது நிலவி வரும் சீரற்ற காலநிலையினையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை (18) இரவு முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த மர்ம வெளிச்சங்கள் தோன்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வானில் தொடர்ச்சியாக நீல நிறமாக ஒரு உருவம் ஔிர்ந்து கொண்டிருக்க அதனை சுற்றி வேறு நிற ஒளி உருவம் விட்டு விட்டு ஔிர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அவதானிக்த மக்கள். இயற்கை மாற்றம் ஏற்படுமா என்ற நிலையில் அச்சமடைந்துள்ளனர். https://thinakkural.lk/article/304171
  20. பட மூலாதாரம்,GETTY IMAGES 19 ஜூன் 2024 திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமாவைச் சந்திப்பதற்காக, அமெரிக்காவின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி உள்ளிட்ட அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் பிரதிநிதிகள் குழு ஒன்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் ஏழு பேர் கொண்ட இந்தக் குழு வியாழக்கிழமை (ஜூன் 20) புத்த மதகுரு தலாய் லாமாவைச் சந்திக்கவுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, சீனா-திபெத் பிரச்னை தொடர்பாகச் சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டச் சட்ட மசோதா குறித்து விவாதிக்கப்படவுள்ளது. ஆனால், இந்தச் சந்திப்பிற்கு அதிருப்தி தெரிவித்துள்ள சீனா, திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக ஏற்கும் உறுதிமொழியை அமெரிக்கா மதிக்கவில்லை என்றால், சீனா 'கடுமையான நடவடிக்கைகளை' மேற்கொள்ளும் என்று எச்சரிக்கும் வகையில் கூறியுள்ளது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். சீனா எச்சரிக்கை அறிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் லின் சியென், “14-வது தலாய் லாமா முழுமையான மதம் சார்ந்த நபர் அல்ல, மாறாக மதம் என்ற போர்வையில் சீனாவுக்கு எதிரான பிரிவினைவாதச் செயல்களில் ஈடுபடும் நாடு கடத்தப்பட்ட அரசியல் பிரமுகர் என்பது அனைவரும் அறிந்ததே,” என்றார். மேலும், குறிப்பாக, சீனா-திபெத் பிரச்னையைத் தீர்க்கும் நோக்கில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டச் சட்டத்தை ஆதரிக்க வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் லின். "இந்தச் சட்டத்தில் அமெரிக்கா கையெழுத்திடக் கூடாது," என்றும் லின் கூறினார். "சீனா தனது இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்," என்றும் கூறியுள்ளார் அவர். இந்தியாவிலுள்ள சீனத் தூதரகமும் இது குறித்து ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “தலாய் லாமா குழுவின் சீன-எதிர்ப்பு பிரிவினைவாதத் தன்மையை அமெரிக்கத் தரப்பு புரிந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். மேலும், ஜிசாங் (திபெத்தைக் குறிக்கச் சீனா பயன்படுத்தும் பெயர்) பிரச்னையில் அமெரிக்கா கொடுத்துள்ள உறுதிமொழிகளை மதிக்கவும், உலகிற்கு தவறான சமிக்ஞைகளை அனுப்பாமல் இருப்பதை உறுதி படுத்தவும் வேண்டுகிறோம்,” என்றும் குறிப்பிட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"சீனா தனது இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்." சீனா கூறியது என்ன? சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ஜிசாங் எப்போதும் சீனாவின் ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது. ஜிசாங் முழுக்க முழுக்க சீனாவின் உள்விவகாரம். அதில் வெளியில் இருந்து எந்த தலையீடும் அனுமதிக்கப்படாது. சீனாவைக் கட்டுப்படுத்தும் மற்றும் அடக்கும் நோக்கில் எந்த ஒரு தனி நபரும், எந்த சக்தியும் ஜிசாங்கை சீர்குலைக்க முயற்சிக்கக்கூடாது. அத்தகைய முயற்சிகள் ஒருபோதும் வெற்றியடையாது,” என்றார். “சீனாவின் ஒரு பகுதியாக ஜிசாங்கை அங்கீகரிப்பதுடன், 'ஜிசாங் சுதந்திரத்தை' ஆதரிக்கக் கூடாது என்ற அமெரிக்காவின் உறுதிப்பாட்டை நாங்கள் வலியுறுத்துகிறோம். சீனா தனது இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்,” என்றார். தற்போது தலாய் லாமாவைச் சந்திக்க வந்துள்ள இந்தக் குழுவில் அமெரிக்கக் காங்கிரஸின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் டெக்சாஸின் குடியரசுக் கட்சியின் தலைவரும், அமெரிக்கக் காங்கிரஸின் வெளியுறவுக் குழுவின் தலைவருமான மைக்கேல் மெக்கால் ஆகியோர் உள்ளனர். 'சவுத் சைனா மார்னிங் போஸ்ட்' பத்திரிகை, இந்த நடவடிக்கை சீனாவுடனான தனது உறவைச் சீராக்க ஜோ பைடன் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் பின்னுக்குத் தள்ளும் என்று எழுதியுள்ளது. 2022-ஆம் ஆண்டில், நான்சி பெலோசி தைவானுக்குப் பயணம் செய்தார், அவரது வருகைக்குப் பிறகு, சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அனைத்து மட்டங்களிலுமான ஒத்துழைப்பு பல மாதங்களாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நான்சி பெலோசி நாடுகடந்த திபெத் நாடாளுமன்றத்தில் செவ்வாயன்று உரையாற்றினார். இந்த உரை குறித்த வீடியோ பல செய்தி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் அவர் தனது உரையில் என்ன பேசினார் என்பது குறித்து வெளியிடப்படவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,“நாங்கள் சமீபத்தில் காங்கிரசில் நிறைவேற்றிய மசோதா உட்பட பல விவகாரங்கள் குறித்து தலாய் லாமாவுடன் பேசுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என்று கூறியுள்ளார் மைக்கேல் மெக்கால். சீனா-திபெத் பிரச்னை மசோதா குறித்த விவாதம் தலாய் லாமாவைச் சந்திக்கும் இந்தத் தூதுக்குழு, ஜோ பைடன் விரைவில் கையெழுத்திட உள்ள மசோதாவைப் பற்றி விவாதிக்க உள்ளது. இந்த மசோதாவின் நோக்கம் திபெத்துடன் நடந்து வரும் சர்ச்சையைத் தீர்க்க சீனாவுக்கு அழுத்தம் கொடுப்பதாகும். அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை சமீபத்தில், 'திபெத்-சீனா பிரச்னையைத் தீர்ப்பதற்கான சட்ட மசோதா’ ஒன்றை நிறைவேற்றியது. இந்த மசோதா ஏற்கனவே அமெரிக்க செனட்டில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, திபெத்தின் வரலாறு, மக்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து சீனா பரப்பும் 'தவறான தகவல்களை' எதிர்த்துப் போராட அமெரிக்கா நிதி வழங்கும். இந்த மசோதாவின் மூலம் திபெத் தனக்குச் சொந்தமானது என்று உரிமைகோரும் சீனாவின் வாதம் எதிர்க்கப்படும். மேலும், திபெத் விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படும் வகையில், 2010-இல் இருந்து முடங்கிக் கிடக்கும் திபெத் தலைவர்களுடனான பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு, சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும். இதனுடன், திபெத்திய மக்களின் வரலாற்று, கலாச்சார, மத மற்றும் மொழியியல் அடையாளம் தொடர்பான பிரச்னைகளை சீனா தீர்க்க வேண்டும். தலாய் லாமாவைச் சந்திப்பது குறித்து பேசியுள்ள மைக்கேல் மெக்கால், “நாங்கள் சமீபத்தில் காங்கிரசில் நிறைவேற்றிய மசோதா உட்பட பல விவகாரங்கள் குறித்து தலாய் லாமாவுடன் பேசுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். திபெத் மக்களுடன் அமெரிக்கா நிற்கிறது என்பதை இது காட்டுகிறது” என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தரம்சாலா வந்தடைந்த அமெரிக்கக் குழு இந்தியாவில் என்ன கருத்து நிலவுகிறது? இது ஒருபுறமிருக்க தலாய் லாமாவை ஒரு அரசியல் பிரமுகர் என்றும், மதத் தலைவர் அல்ல என்றும் சீனா கூறியதற்கு, இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலர் கன்வால் சிபல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ள அவர், “தலாய் லாமா ஒரு ஆன்மீகவாதி. திபெத்தின் நாகரீக அடையாளத்தை அழிக்கும் வகையில், திபெத்தின் மக்கள்தொகை, ராணுவ ஆக்கிரமிப்பு, திபெத்தின் நுட்பமான சூழலியல் ஆகியவற்றை மாற்றியமைப்பதற்காக ஹான் மக்களைக் கொண்டு வந்த போதிலும், அதைத் தடுக்க திபெத்திய மக்கள் வன்முறையில் ஈடுபடவில்லை,” என்றார். “திபெத்தின் சுயாட்சியை சீனா ஏற்றுக்கொண்டால், சீனாவுடன் இணைய அவர் ஒப்புக்கொண்டார். சீனா இன்று அமைதியை உருவாக்கும் ஒரு நபராக தன்னைக் காட்டிக்கொள்கிறது. அப்படியானால், ஏன் அந்தக் கூற்றை உண்மையக்குவதற்காக தலாய் லாமாவுடன் சுமூகமாகி, பின்னர் அதன் வழியாக இந்தியாவுடன் அமைதியை ஏற்படுத்தக்கூடாது?” என்றார். சர்வதேச உறவுகள் குறித்து எழுதி வரும் ஜோராவர் தௌலத் சிங், நான்சி பெலோசியின் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். “புவிசார் அரசியல் பார்வையில், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள தைவான் ஜலசந்தியில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. இருவருக்கும் இடையிலான போட்டி மிக வலுவானதாக உள்ளது. ஆனால் இப்போது அதிலிருந்து சீனாவின் கவனத்தைத் திசை திருப்பி, அதன் சொந்த நிலத்தின் தென்மேற்கு பகுதியின் மீது கொண்டு வருவதால் என்ன பயன்?” என்றார். “அதுவும், இந்தியா-பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்னை, இந்தியாவின் மூலோபாயக் கூட்டாளிகள் இந்தியப் பிரிவினைவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் பிரச்னை ஆகியவை நடந்துகொண்டிருக்கும் போது, இது நடக்கிறது,” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மங்கோலிய மன்னர் குப்லா கான் யுவான் வம்சத்தை நிறுவி தனது பேரரசை திபெத் மட்டுமின்றி சீனா, வியட்நாம், கொரியா ஆகிய நாடுகளுக்கும் விரிவுபடுத்தினார். சீனா-திபெத் பிரச்னையின் வரலாறு சீனாவுக்கும் திபெத்துக்கும் இடையேயான சர்ச்சை, திபெத்தின் சட்ட அந்தஸ்து தொடர்பானது. 13-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து திபெத் தனது ஒரு பகுதியாக இருந்து வருவதாக சீனா கூறுகிறது. ஆனால் திபெத்தியர்கள், பல நூற்றாண்டுகளாகவே திபெத் ஒரு சுதந்திர நாடாக இருந்து வருவதாகவும், அதன் மீது சீனாவுக்கு எந்த விதமான அதிகாரமும் இல்லை என்றும் கூறுகின்றனர். மங்கோலிய மன்னர் குப்லா கான், யுவான் வம்சத்தை நிறுவி, தனது பேரரசை திபெத் மட்டுமின்றி சீனா, வியட்நாம், கொரியா ஆகிய நாடுகளுக்கும் விரிவுபடுத்தினார். பின்னர் பதினேழாம் நூற்றாண்டில், சீனாவின் சிங் வம்சம் திபெத்துடன் உறவுகளை ஏற்படுத்தியது. 260 ஆண்டுகள் உறவுக்குப் பிறகு, சிங் ராணுவம் திபெத்தைக் கைப்பற்றியது. ஆனால் மூன்று ஆண்டுகளுக்குள் அவரது ஆட்சி திபெத்தியர்களால் வெளியேற்றப்பட்டது. 1912-இல் பதின்மூன்றாவது தலாய் லாமா திபெத்தின் சுதந்திரத்தை அறிவித்தார். பின்னர் 1951-இல், சீன ராணுவம் மீண்டும் திபெத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது. திபெத்தின் இறையாண்மை சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கூறி திபெத்திய தூதுக்குழுவை நிர்பந்தித்தது. 1959-ஆம் ஆண்டு இந்தியா வந்த தலாய் லாமா, திபெத்தின் சுயாட்சிக்காகப் போராடி வருகிறார். https://www.bbc.com/tamil/articles/cv220kld41ko
  21. நகர்ப்புற சதுப்பு நிலங்களின் தேவை பாதுகாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட முகாமைத்துவம் அவசியம் - சர்வதேச சதுப்பு நில பூங்கா பிரதிநிதிகள் Published By: DIGITAL DESK 7 20 JUN, 2024 | 10:24 AM சர்வதேச சதுப்பு நில பூங்காவின் பிரதிநிதிகள் நகர்ப்புற சதுப்பு நிலங்களின் தேவை பாதுகாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டுகின்றனர். பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நடைபெற்று வரும் சர்வதேச சதுப்பு நிலங்கள் ஒன்றியத்தின் முதலாவது அவுஸ்திரேலிய நியூசிலாந்து மற்றும் ஆசிய மாநாட்டில் அவர்கள் இதனை வலியுறுத்தினர். சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் இது நடத்தப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள 15 நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 100 சதுப்பு நில பூங்கா பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்தக் குழுவும் இன்று காலை தலங்கமவைச் சுற்றிப் பறவைகள் கண்காணிப்புச் சுற்றுலாவில் இணைந்து கொண்டது. உலகின் முதல் நகர்ப்புற சதுப்பு நில பெருநகரமான கொழும்பின் சதுப்பு நிலங்களை தற்போது சதுப்பு நில பிரதிநிதிகள் கண்காணித்து வருகின்றனர். தலங்கம ஏரியை சுற்றியுள்ள சதுப்பு நிலப்பகுதியை அவதானித்தனர். அதனுடன் தொடர்புடைய பறவைகளின் நடத்தை மற்றும் அப்பகுதியைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தினார்கள். மாநாட்டின் மூன்றாவது நாளான புதன்கிழமை (19), முதல் முறையாக இணைந்த பல வெளிநாட்டு சதுப்பு நிலப் பூங்காக்களுக்கு ஆசியா - அவுஸ்திரேலிய சதுப்பு நிலங்கள் ஒன்றியத்தில் அங்கத்துவம் வழங்கப்பட்டது. மாநாட்டின் நிறைவு விழா இன்று வியாழக்கிழமை (20) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது. அங்கு, பத்தரமுல்லை தியசரு சதுப்பு நிலப் பூங்கா, நாட்டின் முன்னணி சதுப்பு நில பூங்காவாக அறிவிக்கப்பட உள்ளது. https://www.virakesari.lk/article/186520
  22. பட மூலாதாரம்,SPUTNIKKREMLIN POOLEPA-EFEREXSHUTTERSTOCK 19 ஜூன் 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வட கொரியாவுக்கு 24 ஆண்டுகளுக்கு பின்னர் பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். இரு நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு தாக்குதலுக்கு இலக்கானால் மற்றொரு நாடு கைகொடுக்க வேண்டும் என்கிறது இந்த ஒப்பந்தம். புதினின் வடகொரிய சுற்றுப்பயணம் குறித்து தென் கொரியா அதிருப்தி தெரிவித்துள்ளது. ரஷ்யா - வடகொரியா இடையிலான ராணுவ ஒப்பந்தம் எத்தகையது? கிம் ஜாங் உன்னுக்கு புதின் பரிசு சர்வதேச அழுத்தங்களை புறந்தள்ளி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் வட கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வட கொரிய தலைநகர் பியாங்யோங்கில் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. வட கொரிய அதிபர் கிம் ஜான் உன்னுக்கு புதின் ரஷ்யாவின் விலை உயர்ந்த சொகுசு காரான ஆரஸ் உள்ளிட்ட பரிசுகளை வழங்கியதாக ரஷ்ய அதிபரின் உதவியாளர் யூரி உஷாகோவை மேற்கோள் காட்டி ரஷ்ய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. புதின் கிம்முக்கு ஆரஸ் காரை பரிசளிப்பது இது முதல் முறையல்ல . கடந்த பிப்ரவரியில் அவருக்கு ஆரஸ் லியூமோசின் காரை புதின் பரிசளித்தார், இருப்பினும் இந்த முறை எந்த மாடலை பரிசாகக் கொடுத்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் காரில் ஒன்றாக சென்றதை காண முடிந்தது. பட மூலாதாரம்,REUTERS ரஷ்யா - வட கொரியா ராணுவ ஒப்பந்தம் ரஷ்யாவும் வட கொரியாவும் தங்களுக்கு எதிராக "ஆக்கிரமிப்பு" நடந்தால் ஒருவருக்கு ஒருவர் "பரஸ்பர உதவி" வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்று புதினை மேற்கொளிட்டு ரஷ்ய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் எதிராக "ஆக்கிரமிப்பு" ஏற்பட்டால் "பரஸ்பர உதவியை" புதிய ஒப்பந்தம் வழங்கும் என்று புதின் தெரிவித்தார். யுக்ரைன் மீதான வடகொரியாவின் நிலைப்பாட்டை "அதன் இறையாண்மைக் கொள்கையின் மற்றொரு சான்று" என்றும் புதின் கூறியுள்ளார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். ரஷ்யாவுக்கு கிம் புகழாரம் ரஷ்யாவுடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கிம் ஜாங் உன் , "வட கொரியா தனது நாடு அல்லது ரஷ்யா எதிர்கொள்ளும் "சம்பவங்கள் அல்லது போர்களுக்கு" "தயக்கமின்றி" பதில்கொடுக்கும்" என்றார். அந்த பதில் என்னவாக இருக்கும் அல்லது "சம்பவம் அல்லது போர்" என்று அவர் கருதுவது எது என்று கிம் ஜாங் உன் விவரிக்கவில்லை. "இரு நாடுகளும் ஏற்கனவே எதிர்கொள்ளும் அல்லது எதிர்காலத்தில் நம்மை எதிர்கொள்ளும் பல்வேறு சம்பவங்கள் அல்லது போர்களுக்கு கூட்டு முயற்சியில் பதிலளிக்கும் கடமையை நிறைவேற்றுவதில் எந்த வித்தியாசமும், தயக்கமும், அலைச்சல்களும் இருக்காது" என்று கிம் ஜாங் உன் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய ஒப்பந்தம் "முற்றிலும் அமைதியானது மற்றும் தற்காப்புத்தன்மை கொண்டது" என்று கிம் மேலும் கூறினார். எந்தவொரு மேலாதிக்க நாடும் மேலாதிக்க சக்தியைப் பயன்படுத்த முடியாத ஒரு "பல்முனை உலகத்தை" உருவாக்குவதை இந்த ஒப்பந்தம் துரிதப்படுத்தும் என்றும் அவர் கூறினார். "கிம் ரஷ்யாவை "மிகவும் நேர்மையான நண்பர் மற்றும் கூட்டாளி" என்று அழைத்தார். புதினை "கொரிய மக்களின் அன்பான நண்பர்" என்று குறிப்பிட்டார்" என்று அரசு ஊடகமான ஆர்.ஐ.ஏ.யின் அறிக்கை தெரிவிக்கிறது. பட மூலாதாரம்,REUTERS ரஷ்ய அதிபர் புதின் பேசியது என்ன? புதின் தனது பேச்சில் ரஷ்யா - வட கொரியா இடையே ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதை பகிரங்கப்படுத்தினார். அத்துடன், பரஸ்பர உதவி, பொருளாதாரத் தடைகள் மற்றும் ஆயுத விநியோகம் ஆகியவை பற்றியும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் முன் முயற்சியால் வட கொரியா மீது காலவரையற்று விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ரஷ்ய பிரதேசத்திற்குள் தாக்குதல் நடத்த வல்ல துல்லியமான நீண்ட தூர ஆயுத அமைப்புகள், எஃப்-16 விமானங்கள் மற்றும் பிற உயர் தொழில்நுட்ப ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவது பற்றிய அமெரிக்கா மற்றும் பிற நேட்டோ நாடுகளின் சமீபத்திய அறிக்கைகளை புதின் தனது பேச்சில் குறிப்பிட்டார். வட கொரியாவுடன் "ராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பை வளர்ப்பதையும் அவர் நிராகரிக்கவில்லை. 'எல்லை மீற வேண்டாம்' - தென் கொரியா புதின் - கிம் சந்திப்புக்கு முன்னதாக, இரு தலைவர்களும் ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள் என்று உளவுத்துறை தகவல் கிடைத்ததாக தென் கொரியா கூறியது. "ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால்" செல்ல வேண்டாம் என்று ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகரை தென் கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாங் ஹோ-ஜின் கேட்டுக் கொண்டார். ரஷ்யாவுக்கான முன்னாள் தென் கொரிய தூதரான சாங் ஜின், "உக்ரைனுடனான தனது போரை ரஷ்யா முடித்தவுடன், வட கொரியா மற்றும் தென் கொரியாவில் எது முக்கியமானது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்" என்று கூறினார். "புதின் - கிம் சந்திப்பு கெட்ட செய்தி" - முன்னாள் சிஐஏ ஆய்வாளர் யுக்ரேன் போரில் இராணுவ உபகரணங்களுக்காக வட கொரியாவை ரஷ்யா நாடியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஒரு முன்னாள் சிஐஏ ஆய்வாளருக்கு, புடினின் பியோங்யாங்கிற்கான விஜயம், சர்வதேச சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட போதிலும் இரண்டு "பரியா மாநிலங்கள்" எவ்வாறு தங்கள் உறவுகளை உறுதிப்படுத்துகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது. "புடின் தனது போர் முயற்சிக்கு உதவ உலகில் 198 வது பொருளாதாரத்தை நம்பியிருப்பது மிகவும் பரிதாபகரமானது என்று நான் நினைக்கிறேன்," என்று அமெரிக்க உளவு நிறுவனமாக சிஐஏ-வின் ஆய்வாளர் சூ மி டெர்ரி, பிபிசியிடம் கூறினார். "உலகின் மற்ற பகுதிகளுக்கு இது மோசமான செய்தியாக இருக்கிறது. ரஷ்யாவுடனான கூட்டாண்மை வட கொரியா தனது ஆயுதங்களை திறம்பட சோதிக்க அனுமதிக்கிறது," என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,REUTERS ரஷ்யா - வட கொரியா கூட்டணியின் எல்லை எது? வட கொரியாவும் ரஷ்யாவும் நெருங்கிய நண்பர்கள், ஆனால் அவை உறுதியான நண்பர்கள் அல்ல என்கிறார் பிபிசியின் சீன செய்தியாளர் லாரா பிக்கர். "ரஷ்யா - வடகொரியா உறவின் முக்கிய வரம்புகளில் ஒன்று சீனாவுடனான அந்நாடுகளின் சொந்த உறவாகும், அதை அவர்கள் ஆபத்தில் ஆழ்த்த முடியாது. அதனால் அமெரிக்கா மட்டும் கவலைப்படவில்லை. சீனாவும் கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கும்." என்று அவர் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்த அவர், "ரஷ்யா வட கொரியாவுக்கு கூடுதல் தொழில்நுட்பத்தை வழங்கப் போகிறது என்றால் அது சீனாவைக் கவலையடையச் செய்யும். புவிசார் அரசியலில் அமெரிக்காவின் இடத்தைப் பிடிக்க சீனா விரும்புகிறது. அது இன்னொரு பனிப்போரை விரும்பவில்லை. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய இரு நாடுகளுடனும் வணிகத்தை விரும்புகிறது, மேலும் ரஷ்யா மற்றும் வட கொரியாவைப் போலவே உலகத்துடனான உறவிலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்ளவும் சீனா விரும்பவில்லை." என்று கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/cjqqjg1n8w3o
  23. இலங்கையின் உச்ச முனைகள் பின்வரும் பட்டியலில் காட்டப்பட்டுள்ளது. வடக்கில் பருத்தித்துறை(திக்கம்), தெற்கில் தேவேந்திரமுனை ஆகியவையும், கிழக்கில் சங்கமன் கண்டியும் மேற்கில் கச்சத்தீவும், மேற்கு பெருநிலப்பகுதியில் கல்பிட்டியும் காணப்படுகின்றன. 2524 மீ உயரமுள்ள பிதுருதலாகலை உயரமான முனையாகவுள்ளது.[1] இலங்கையின் வரைபடம் முனைகள்[தொகு] முனை இடம் ஒருமுக இணைவு வடக்கு திக்கம், பருத்தித்துறை 9°50′8″N 80°12′44″E தெற்கு தேவேந்திரமுனை 5°55′7″N 80°35′29″E கிழக்கு சங்கமன் கண்டி, அம்பாறை மாவட்டம் 7°1′20″N 81°52′45″E மேற்கு கச்சத்தீவு 9°23′N 79°31′E மேற்கு (பெருநிலப்பகுதி) கல்பிட்டி, (புத்தளம்) 8°12′40″N 79°41′33″E உயரம்[தொகு] உயரமான முனை: பிதுருதலாகலை (Mount Pedro), 2,524 m (8,281 அடி) 7°0′3″N 80°46′26″E ஓமண்ணை, நானும் இது எங்க இருக்கு என்று குழம்பி நண்பரிடம் விசாரித்து அறிந்துகொண்டேன்.
  24. South Africa (20 ov) 194/4 United States of America U.S.A. chose to field. Current RR: 9.70 • Last 5 ov (RR): 53/0 (10.60)
  25. உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பிற்கு வடகொரியா முழுமையான ஆதரவு - வடகொரிய ஜனாதிபதி 19 JUN, 2024 | 12:19 PM உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பை முழுமையாக ஆதரிப்பதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்தவேளை கிம்ஜொங் உன் இதனை தெரிவித்துள்ளார். வடகொரியாவில் புட்டினிற்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ரோஜா மலர்களுடன் அவரை வரவேற்றுள்ளனர், இராணுவ அணிவகுப்பு மரியாதையும் புட்டினிற்கு வழங்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/186435

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.