Everything posted by ஏராளன்
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
நெதர்லாந்துடனான போட்டியில் அதிகூடிய மொத்த எண்ணிக்கையை சமப்படுத்திய இலங்கைக்கு ஆறுதல் வெற்றி 17 JUN, 2024 | 11:23 AM (நெவில் அன்தனி) நெதர்லாந்துக்கு எதிராக சென். லூசியா, க்ரொஸ் ஐலட் டெரன் சமி விளையாட்டரங்கில் இன்று அதிகாலை நடைபெற்ற டி குழுவுக்கான கடைசி ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் சகல துறைகளிலும் திறமையை வெளிப்படுத்திய இலங்கை 83 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டு பெரும் ஏமாற்றம் அடைந்த இலங்கை, தனது கடைசி முதல் சுற்றுப் போட்டியில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான அதிகூடிய மொத்த எண்ணிக்கையை சமப்படுத்தி ஆறுதல் அடைந்தது. ஐக்கிய அமெரிக்காவில் தந்திரமான ஆடுகளங்களில் துடுப்பாட்டத்தில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு தென் ஆபிரிக்காவிடமும் பங்களாதேஷிடமும் தோல்வி அடைந்த இலங்கை, இந்த வெற்றியுடன் 3 புள்ளிகளைப் பெற்று டி குழுவில் 3ஆம் இடத்தைப் பெற்றது. இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான போட்டி கடும் மழையினால் முழுமையாக கைவிடப்பட்டிருந்தது. ஐக்கிய அமெரிக்க ஆடுகளங்களில் தடுமாறிய இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் ஆடுகளத்தில் சகலதுறைகளிலும் பிரகாசித்து வெற்றிபெற்றது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க (0) இரண்டாவது பந்தில் ஆட்டம் இழந்ததும் இலங்கை மீண்டும் மோசமான நிலைக்கு தள்ளப்படும் என கருதப்பட்டது. ஆனால், குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலன்க, ஏஞ்சலோ மெத்யூஸ், வனிந்து ஹசரங்க ஆகியோர் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணியை பலமான நிலையில் இட்டனர். குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ் (17) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களையும் சரித் அசலன்க, ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ், வனிந்து ஹசரங்க ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களையும் பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்துக்கொடுத்தனர். இவ்வாறான இணைப்பாட்டங்கள் தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ஏற்படுத்தப்படாததே இலங்கை தோல்வி அடைவதற்கு காரணமாக அமைந்தது. இன்றைய போட்டியில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய சரித் அசலன்க 21 பந்துகளில் ஒரு பவுண்டறி, 5 சிக்ஸ்களுடன் 46 ஓட்டங்களைக் குவித்தார். குசல் மெண்டிஸ் 29 பந்துகளில் 46 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 26 பந்துகளில் 34 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 15 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 30 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க 6 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 20 ஓட்டங்களையும் பெற்றனர். நெதர்லாந்து பந்துவீச்சில் லோகன் வன் பீக் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 16.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 118 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. எனினும் நெதர்லாந்தின் ஆரம்பம் இலங்கைக்கு அச்சத்தைக் கொடுப்பதாக இருந்தது. மைக்கல் லெவிட், மெக்ஸ் ஓ'தௌத் ஆகிய இருவரும் 27 பந்களில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 10 விக்கெட்களும் சரிந்தன. மைக்கல் லெவிட், அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் ஆகிய இருவரே திறமையாகத் துடுப்பெடுத்தாடி தலா 31 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் நுவன் துஷார 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். மஹீஷ் தீக்ஷன, தசுன் ஷானக்க ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: சரித் அசலன்க https://www.virakesari.lk/article/186245
-
சீக்கிய பிரிவினைவாதியை கொலை செய்ய திட்டமிட்ட இந்தியர் - அமெரிக்காவிற்கு நாடு கடத்தியது செக்குடியரசு
Published By: RAJEEBAN 17 JUN, 2024 | 10:40 AM அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாதியொருவரை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டிய நபர் செக்குடியரசிலிருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். அமெரிக்காவின் சிறைச்சாலை சமஸ்டி பணியகம் இதனை தெரிவித்துள்ளது. நிக்கில் குப்தா என்பவரே நாடு கடத்தப்பட்டுள்ளார். நிக்கில் குப்தாக காலிஸ்தானிற்காக குரல்கொடுத்த குர்பட்வன்ட் சிங் பனுன் என்பவரை கொலை செய்ய திட்டமிட்டார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. செக்குடியரசிற்கு சென்றவேளை கடந்தவாரம் நிக்கில் குப்தா கைதுசெய்யப்பட்டார். தான் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படவேண்டாம் என்ற அவரது மனுவை நீதிமன்றமொன்று நிராகரித்திருந்தது. இதனை தொடர்ந்து அவர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கான நிலை உருவானது. நிக்கில் குப்தா புரூக்ளினின் மெட்ரோ பொலிட்டன் தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/186243
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதற்கு தோல்வி பயம் காரணமா? திமுக விமர்சிப்பது ஏன்? பட மூலாதாரம்,EDAPPADI PALANISWAMI/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் அ.தி.மு.க-வின் தொடர் தோல்விகளுக்கு மத்தியில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது, தமிழக அரசியல் அரங்கில் தற்போது பெரிதாக பேசப்பட்டு வருகிறது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சில நாட்களிலேயே அறிவிக்கப்பட்டிருக்கும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பது ஏற்கத்தக்கதா? இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி தான் வெல்லும், பணப்பட்டுவாடா அதிகம் நடக்கும் என்பதுதான் தமிழக தேர்தல் களத்தின் வரலாறா? போட்டியில் அ.தி.மு.க இல்லாதது யாருக்கு சாதகமாக இருக்கும்? 2021 சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி வெற்றி பெற்றார். அவர் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் காலியான அத்தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புறக்கணிப்பு ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக, பா.ம.க மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிடுகிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 8 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சி அந்தஸ்துக்கான தகுதி பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஹோமியோபதி மருத்துவர் அபிநயா களம் காண்கிறார். ஆனால், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க இத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. “தி.மு.க-வினரும் அமைச்சர்களும் ஆட்சி அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துவதோடு, பணபலம் மற்றும் படைபலத்துடன் பல்வேறு அராஜக மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவார்கள்”, “மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க மாட்டார்கள்” என்பதால், இந்த இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக, எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். தி.மு.க ஆளுங்கட்சியாக இருந்தபோது, நடைபெற்ற இடைத்தேர்தல்களில் இத்தகைய பணப்பட்டுவாடா மூலம் அக்கட்சி வென்றதாக எடப்பாடி பழனிசாமி சில உதாரணங்களையும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோதும் இதே வார்த்தைகளை அவர் பிரதிபலித்தார். “இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற எல்லா ஆட்சி அதிகார பலத்தையும் தி.மு.க பயன்படுத்தும். பணத்தை வாரி இறைப்பார்கள், பரிசுப்பொருட்களை வழங்குவார்கள். அமைச்சர்கள் பூத் வாரியாக சென்று பண மழை பொழிவார்கள். ஜனநாயக படுகொலை நடக்கும். மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாது,” எனக் கூறினார். சரியான முடிவா? படக்குறிப்பு,பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்தத் தேர்தல் புறக்கணிப்பின் மூலம் நல்ல வாய்ப்பை அ.தி.மு.க இழந்துவிட்டதாகக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். “இந்தத் தேர்தலில் அ.தி.மு.க நின்றிருந்தால் அக்கட்சிக்கு இரண்டாம் இடம் கிடைத்திருக்கும். இந்தப் புறக்கணிப்பால், தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகள் பா.ம.க, நாம் தமிழர் கட்சிக்குப் பிரிய வாய்ப்புகள் உண்டு,” என்கிறார் ப்ரியன். இப்படிப் பிரியும் வாக்குகளில் கணிசமாக 60% வாக்குகள் பா.ம.க-வுக்குச் செல்ல வாய்ப்புகள் உண்டு என்கிறார் அவர். அதற்கு, விக்கிரவாண்டி தொகுதியில் கணிசமாக வன்னியர் வாக்குகள் பா.ம.க-வுக்குச் செல்லும் என்பதே காரணம் என்கிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி அடங்கியுள்ள விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் நின்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார், 70,703 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பெற்ற வாக்கு சதவிகிதம் 41.39%. இரண்டாம் இடத்தை அ.தி.மு.க-வின் பாக்யராஜ் (35.25%) பிடித்தார். பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க வேட்பாளர் முரளிசங்கர் (15.78%) வாக்குகளைப் பெற்றார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர் புகழேந்தி 49% வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், அ.தி.மு.க வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 43% வாக்குகளைப் பெற்றார். விக்கிரவாண்டி தொகுதியில் தங்கள் இருப்பை நிலைநிறுத்த வாய்ப்பு கிடைத்தும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் போன்ற வலுவான தலைவர்கள் அம்மாவட்டத்தில் இருந்தும் அ.தி.மு.க தவறவிட்டுவிட்டதாக ப்ரியன் கூறுகிறார். அ.தி.மு.க-வின் தேர்தல் புறக்கணிப்பை பிரதான அரசியல் கட்சி எனும் முறையில் ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறும் ப்ரியன், தி.மு.க தேர்தல் அத்துமீறலில் ஈடுபட்டால் அதை களத்தில் நின்று மக்களிடம் கொண்டு செல்வதுதானே எதிர்க்கட்சியின் வேலையாக இருக்கும் என்றும் கூறினார். “பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்த தேர்தலையொட்டி அத்தொகுதிக்குச் சென்று தொடர்ந்து பேசுவார். அதன்மூலம் கவனம் பெறுவார். அப்போது அ.தி.மு.க எங்கு இருக்கும், என்ன செய்யும்?” என அவர் கேள்வி எழுப்புகிறார். முந்தைய தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமியின் மீது குறை கூறினாலும், இடைத்தேர்தலில் நின்று தோற்றிருந்தாலும் மக்கள் அவ்வாறு பேச மாட்டார்கள் என்கிறார் ப்ரியன். 'தோல்வி பயம்' படக்குறிப்பு,பத்திரிகையாளர் ப்ரியன் அ.தி.மு.க, தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே தேர்தலை புறக்கணித்துள்ளதாகக் கூறுகிறார், தி.மு.க செய்தித்தொடர்பாளர் ரவீந்திரன் கான்ஸ்டன்டைன். “தி.மு.க மீது விமர்சனங்களை எழுப்பும் அ.தி.மு.க, முன்பும் இடைத்தேர்தல்களில் நின்றிருக்கக் கூடாது. இந்தத் தேர்தல் நியாயமான முறையிலேயே நடக்கும்,” என்றார். அ.தி.மு.க எனும் கட்சியை நிலைநிறுத்தியதே தி.மு.க ஆட்சியில் நடந்த இடைத்தேர்தல் தான் என, 1973-இல் நடந்த திண்டுக்கல் தொகுதி இடைத்தேர்தலை நினைவுகூர்கிறார் அவர். 1972-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் தொடங்கி சில மாதங்களில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அதில், அ.தி.மு.க சார்பில் முதன்முறையாக இரட்டை இலை (தனிச்சின்னம்) சின்னத்தில் போட்டியிட்ட கே. மாயத்தேவர் 2.60 லட்சம் வாக்குகள் பெற்று அ.தி.மு.க-வின் முதல் வெற்றியைப் பதிவு செய்தார். தி.மு.க-வின் பொன் முத்துராமலிங்கத்தால் மூன்றாம் இடத்தையே பிடிக்க முடிந்தது. சிண்டிகேட் காங்கிரசின் வேட்பாளர் வி.சி.சித்தன் இரண்டாம் இடம் பெற்றார். தமிழக இடைத்தேர்தல்கள் வரலாற்றில் ஆளுங்கட்சி அல்லாத ஒரு புதிய கட்சி பெற்ற இந்த வெற்றி இன்று வரை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க இடைத்தேர்தலை புறக்கணிப்பது இது புதிதல்ல. 2009-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், தி.மு.க ஆட்சியிலிருந்தபோது நடந்த இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் அதே ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலையும் அப்போதைய அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா புறக்கணித்தார். “ஆனால், முன்பு 5 இடைத்தேர்தல்களை புறக்கணித்த ஜெயலலிதா தான், தருமபுரி பென்னாகரம் இடைத்தேர்தலில் போட்டியிட்டார்,” என்கிறார், கான்ஸ்டன்டைன். 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க போட்டியிட்டதைத்தான் கான்ஸ்டன்டைன் குறிப்பிடுகிறார். ஆனால், அந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் இன்பசேகரன் சுமார் 36,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பா.ம.க சார்பில் போட்டியிட்ட தமிழ்க்குமரன் இரண்டாமிடம் பெற்றார். ஆனால், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட அன்பழகன், டெபாசிட் இழந்தார். தொடர் தோல்விகளுக்கு மத்தியில் இந்த இடைத்தேர்தலிலும் தோற்றால், 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு யாரும் வர மாட்டார்கள் என்ற அச்சத்திலேயே அ.தி.மு.க புறக்கணித்துள்ளதாக கான்ஸ்டன்டைன் கூறுகிறார். ப.சிதம்பரம் விமர்சனம் பட மூலாதாரம்,HINDUSTAN TIMES அ.தி.மு.க குறித்த தி.மு.க-வின் இத்தகைய விமர்சனங்கள் குறித்து பதிலை அறிய அ.தி.மு.க செய்தித்தொடர்பாளர் கோவை சத்யனிடம் பேசினோம். அப்போதும், “தி.மு.க-வின் எட்டு அமைச்சர்கள் விக்கிரவாண்டி தொகுதியை முகாமிட்டுள்ளனர். பணப்பட்டுவாடா அதிகளவில் நடக்கும். தேர்தல் புறக்கணிப்பு குறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் தெளிவாக விளக்கியுள்ளார், அதைத்தவிர சொல்வதற்கு வேறொன்றுமில்லை,” என்றார். இதையே அ.தி.மு.க-வின் மூத்தத் தலைவர் வளர்மதியும் எதிரொலித்தார். “தேர்தலைப் புறக்கணித்துவிட்டதால் இதுகுறித்து கருத்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை,” என்கிறார் அவர். இதனிடையே, காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம், “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்காக, மேலிட உத்தரவின் பேரிலேயே அ.தி.மு.க இத்தேர்தலை புறக்கணித்துள்ளதாக,” எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு கட்சியும் அதன் முடிவுகளை தானாக எடுப்பதாகவும் பா.ஜ.க இதில் ஒன்றும் செய்யவில்லை என்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல்களும் பணப்பட்டுவாடா புகாரும் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படபடம் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல்கள் என்றாலே ஆளுங்கட்சித் தரப்பில் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார்கள் எழுவது வழக்கம். “தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் வெற்றி கௌரவப் பிரச்சினையாக பார்க்கப்படுவதாலேயே ஆளுங்கட்சியின் மீது பணப்பட்டுவாடா புகார்கள் எழுகின்றன,” என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ‘தராசு’ ஷ்யாம். தி.மு.க-வுக்கு ‘திருமங்கலம் ஃபார்முலா’வும், அ.தி.மு.க-வுக்கு 'கும்மிடிப்பூண்டி ஃபார்முலா'வும் உள்ளது எனக்கூறுகிறார் ஷ்யாம். 2009 -ம் ஆண்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா மூலம் தி.மு.க வெற்றியடைந்ததாகக் கூறப்படும் நிகழ்வின் தொடர்ச்சியாகத் தேர்தலில் பணம் வழங்கி வெற்றி பெறும் முறைக்குத் 'திருமங்கலம் ஃபார்முலா' எனப் பரவலாக அறியப்படுகிறது. தமிழ்நாட்டில் நடந்த சுமார் 35 இடைத்தேர்தலில் 30 இடைத்தேர்தல்களை ஆளுங்கட்சியே வென்றிருப்பதாக அவர் கூறுகிறார். “இடைத்தேர்தல் புறக்கணிப்பு எப்போதுமே அரசியல் நகர்வுதான். அடுத்த தேர்தலில் கூட்டணிக்கு அது கட்டியம் எனும் ரீதியில்தான் அ.தி.மு.க-வின் புறக்கணிப்பைப் பார்க்க முடியும்,” என்கிறார் ‘தராசு ஷ்யாம். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அவருடைய ஆர்.கே. நகர் தொகுதிக்கு 2017-ஆம் ஆண்டு, டிசம்பரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் குக்கர் தனிச்சின்னத்தில் போட்டியிட்ட டி.டி.வி தினகரன், அப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வின் மதுசூதனனை சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ் டெபாசிட் இழந்தார். இத்தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக ‘டோக்கன்’ வழங்கியதாக டிடிவி தினகரன் மீது புகார் எழுந்தது. எனினும் அப்புகாரை தினகரன் மறுத்திருந்தார். 2019-இல் மக்களவைத் தேர்தலோடு சேர்ந்து 22 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் தி.மு.க-வும் 9 தொகுதிகளில் அன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவும் வெற்றி பெற்றன. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா இறந்ததையடுத்து, 2023-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தி.மு.க சார்பில் பணிமனை அமைத்து, பட்டியில் கால்நடைகளை அடைப்பது போல அடைத்து அங்கேயே மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு, பணமும் வழங்கப்பட்டதாக அ.தி.மு.க புகார் எழுப்பியது. அதேபோன்று, ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட எண்ணற்ற பரிசுப்பொருட்கள் வழங்கியதாகவும் புகார் எழுந்தது. இதுபோன்று, பல இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி மீது புகார் எழுவதும் அதனை அக்கட்சி மறுப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. https://www.bbc.com/tamil/articles/cp66rejnn64o
-
இனப்படுகொலையாளிகள் மீது நம்பிக்கை வைக்க தமிழர்கள் தயார் இல்லை - அருட்தந்தை மா.சத்திவேல்
Published By: DIGITAL DESK 3 17 JUN, 2024 | 09:29 AM இனப்படுகொலையாளிகள் மீது நம்பிக்கை வைக்க தமிழர்கள் தயார் இல்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (17) திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடு ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கி கொண்டிருக்கையில் தெற்கின் வேட்பாளர்களாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளோரில் பிரதானமானவர்களாக கருதப்படுவோர் தமது தேர்தல் களச் சந்தையை வடக்கிலும் விரித்து தமது முகவர்களோடு இரகசிய பேச்சு வார்த்தை நடத்துவதோடு திறந்த வெளியில் ஊடக சந்திப்புகள் நடாத்தி வடக்கு கிழக்கு தமிழ் மக்களை மதி மயங்கச் செய்யவும் வாக்கு சாவடிக்குள் அனுப்பவும் முயலுவதாக தோன்றுகிறது. இவர்களின் சதி வலைக்குள் சிக்க வேண்டாம் என தமிழ் தேச உணர்வாளர்களை கேட்டுக் கொள்கின்றோம். வடகிழக்கில் தமிழர்கள் மத்தியில் பேரினவாத கட்சிகளின் நேரடி முகவர்களாக செயற்படுவோரை மக்கள் அறிவர். தமிழர் தேசத்தில் தேசியத்தின் ஊற்று என்றும் தாமே சுயநிர்ணயத்தின் தோற்றுவாய் எனவும் பகிரங்கமாக மேடையமைத்து கொக்கரிக்கும் கூட்டம் தற்போது இனப்படுகொலையாளர்களுக்கு துணை முகவர்களாக பொதுவெளியில் செயற்பட தொடங்கி விட்டனர். அத்தோடு கூட்டாக ஊடகங்களில் தோன்றி இது நட்பு ரீதியான பேச்சு வார்த்தை, சுமூக பேச்சு வார்த்தை, நம்பிக்கை தருகின்ற பேச்சு வார்த்தை, தொடர வேண்டிய பேச்சு வார்த்தை என கூறுவது யாரை ஏமாற்றுவதற்கு? தமிழ் பொது வேட்பாளர் தொடர்பிலான கலந்துரையாடல்கள் வலுப்பெற்று வரும் களச்சூழலில் அதற்கு "எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும். பிரச்சாரம் செய்வேன்" என சூளுரைத்தவரும் அவரின் கட்சியினரும் தமிழர் வாக்குகளை இரண்டாவது தெரிவிற்கு விட்டு தள்ளுவதற்கு நேரடியாகவே முயற்சி எடுப்பதாக தோன்றுகின்றது. இது தோற்கடிக்கப்படல் வேண்டும். தெற்கில் ஜனாதிபதி வேட்பாளர்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள அத்தனை பேரும் பேரினவாதிகளே. யுத்த குற்றவாளிகளே. இவர்களே தமிழர்களை முள்ளிவாய்க்கால் வரை இழுத்து வந்து இனப்படுகொலை செய்தவர்கள். இனியும் இவர்களில் நம்பிக்கை வைக்க முடியாது. தமிழர்கள் நாம் சுயநிர்ணய உரிமையுடையவர் இதனை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் யுத்த குற்றங்களுக்கு இந்த குற்றங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு தண்டனை கொடுக்க வேண்டும் அதுவே அரசியல் நீதி என ஒட்டுமொத்த தமிழர்களின் சிந்தித்துக் கொண்டிருக்கையில் "வடகிழக்கு தமிழர்கள் அரசியல் அதிகாரத்தை எம்மிடமே கொடுத்துள்ளார்கள்" எனக் கூறுவோர் இனப்படுகொலையாளர்களுடன் சல்லாபம் புரிவது எவ்வாறு? இதற்காக உங்களுக்கு அதிகாரம் கொடுத்தார்கள்? தமிழர்களின் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்று தமிழர்களின் அரசியலுக்கு துரோகம் செய்து கொண்டிருப்பவர்கள் உங்கள் நாடாளுமன்ற நட்பு அரசியலை நாடாளுமன்றத்தில் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள் கொழும்பின் நட்சத்திர ஹோட்டல்களுக்கும் விடுதிகளுக்கும் மட்டுப்படுத்தி கொள்ளுங்கள் தமிழர்களின் தேச அரசியலுக்கு நீங்கள் ஏற்கனவே அடையாளப்படுத்தி விட்டோம் அதற்கான தீர்ப்பினை ஜனாதிபதி தேர்தலிலும் அதற்கு அடுத்து பொதுத் தேர்தலிலும் ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்துவோம். வடக்கிற்கு அரசியல் நச்சு சுற்றுலா மேற்கொண்டுள்ள பிரதான வேட்பாளர்கள் மூவரும் 13 அமுல்படுத்துவோம் எனக் கூறி உள்ளனர். ரணில் ஜனாதிபதி அதிகாரத்தில் நின்று அதற்கான அனுமதி தொடர்பில் நாடகமாடியவர். தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார "13 போதாது என்பதே நாம் அறிவோம். அதற்கு அப்பால் தொடர்ந்து பேசுவோம்" எனக் கூறியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் "சர்வதேச விளையாட்டரங்கை அன்பளிப்புகள் மூலம் உருவாக்கி தருவேன்" என சபதம் எடுத்து உள்ளார். தமிழர்கள் இவற்றை எல்லாம் கேட்கவில்லை என்று மீண்டும் கூறுகின்றோம் எமக்கு எதிரான கருத்தை எமக்கு இடையே மீண்டும் மீண்டும் கூறி சிதைக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் தெளிவாக கூறுகின்றோம். வடகிழக்கு தமிழர்கள் இனப்படுகொலைக்கு முகம் கொடுத்து அதன் வலிகளோடு சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்தை சர்வதேசத்திடம் முன்வைக்கையில் இவர்கள் 13 என்பதும் 13 பிளஸ் என்பதெல்லாம் தமிழர்களின் வாக்குகளை சிதறிப்பதறடிப்பதற்கே. அது மட்டுமல்ல இந்தியாவை அமைதிபடுத்தி அவர்களின் கைக்கூலிகளை தமதாக்கி தமது அரசியலை தமிழ் மண்ணில் தொடரவே முயற்சிக்கின்றனர். நாம் கேட்கின்றோம் கூறும் 13 கருத்தினை உங்ளுடைய பொது மேடைகளிலும் நீங்கள் ஆதரவு தேடும் சிங்கள பௌத்த பிக்குகள் இடமும் பகிரங்கமாக கூறுங்கள். தமிழகத்தில் உள்ள அரசியல் கூத்தாடிகள் சலுகைகளுக்காகவும் பதவிகளுக்காகவும் உங்களை பின் தொடரலாம் ஆனால் தமிழ் மக்கள் சலுகைகளுக்கும் நிவாரணங்களுக்கும் பாட்டு வார்த்தைகளுக்கும் சோகம் போக மாட்டார் யுத்தம் பாதிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 15 வருட காலமாக எம்மை ஏமாற்றியது போதும் இம்முறை தேர்தல் தேர்தலில் சர்வதேசம் கண் திறக்க வேண்டும். அதற்கான அரசியல் உறுதியே மக்கள் சக்தி. தமிழர்கள் மத்தியில் காணப்படும் அரசியல் புல்லுருவிகள் அகற்றப்பட வேண்டும்.தெற்கின் பேரினவாத இனப்படுகொலையாளர்களின் அரசியல் முகவர்கள் அரசியலில் இருந்து வரும் நீக்கப்பட்டு அவர்களின் முகாம்களும் தமிழரின் தேசத்திற்கு வெளியே தள்ள வேண்டும். இல்லையேல் ஜனாதிபதி தேர்தல் மட்டுமல்ல எதிர்காலமே முள்ளிவாய்க்காலாக அமையலாம். இதற்கு ஜனாதிபதி தேர்தலுக்கான பொது கட்டமைப்பு மட்டும் போதாது. அதற்கப்பால் மக்களை அரசியல் மயமாக்கி அரசியலில் தொடர்ந்து பயணிப்பதற்கான தெளிவான வழி வரைபடம் உருவாக்கி முன்வைக்க வேண்டும். உருவாக்குவாக்கிகள் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கையும் ஏற்பட வேண்டும். கடந்த பதினைந்து வருட காலத்தில் அத்தகைய நம்பிக்கைகள் எல்லாம் சீரழிக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை. https://www.virakesari.lk/article/186236
-
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில் இன்று
பொது வேட்பாளர் விடயம் : தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் முடிவெடுக்கப்படவில்லை - சுமந்திரன் 16 JUN, 2024 | 08:33 PM ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தும் விடயத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் இன்றும் முடிவுகள் எடுக்கப்படவில்லையென எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை இடம்பெற்றது. அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானம் எடுப்போம். தேர்தலில் வேட்பாளர்கள் யார் என்று இன்னமும் தெரியாது. அவர்களுடைய தேர்தல் அறிக்கைகள் இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை. அதன்பின்னர் தீர்மானிப்பதாகவே முடிவெடுத்திருந்தோம். அத்துடன் தங்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ள இருவர் தமிழரசுக்கட்சியின் தலைமைகாரியாலத்திற்கு வந்து எங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். இது ஒரு ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை. நாங்கள் தொடர்ந்தும் இவ்வாறானவர்களுடன் பேசுவோம். ரணில் விக்கிரமசிங்க தன்னை வேட்பாளராக அறிவித்தால் அவரோடும் பேசுவோம். முடிவு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஆனால் இதுவரை அதிகாரபகிர்வு தொடர்பாக பொதுவெளியில் சொல்ல கூச்சப்பட்டுக்கொண்டிருந்த வேட்பாளர்கள் போட்டிபோட்டுக்கொண்டு 13 ஆம் திருத்தத்தினை முழுமையாக அமுல் படுத்துவோம் என்று சொல்லத்தலைப்பட்டுள்ளனர். அது முழுமையான தீர்வுஅல்ல அதனை நாம் ஏற்கவில்லை ஆனால் அரசியலமைப்பில் உள்ளதையாவது அமுல்படுத்தவேண்டும் என்பதை நாம் சொல்லியிருக்கின்றோம். எனவே அந்த பேச்சுவார்த்தைகள் ஆராக்கியமாக இருந்தது. அவர்கள் சொன்னதை செய்வார்களா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கின்றது. மும்முனைப்போட்டி ஒன்று ஏற்ப்படுமாக இருந்தால் தமிழ் பேசுகின்ற மக்களின் வாக்குப்பலம் பிரதானமாக இருக்கும். இதனை நாம் உதாசீனம் செய்யக்கூடாது. மிகவும் கவனமாக எமது பேரம்பேசுதலை நடத்தவேண்டும். சந்தர்ப்பத்தை சரியாக உபயோகப்படுத்தவேண்டும் என்ற கருத்தோடு நாங்கள்இருக்கின்றோம். தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பாக கடந்த மத்தியகுழு கூட்டத்திலேயே பலர் எதிரான கருத்துக்களை தெரிவித்திருந்தனர். எனவே இன்று அதைப்பற்றி பேசவில்லை. மக்களது கருத்துக்களையும் அறிந்து தனிப்பட்ட கருத்துக்களை சொல்வதற்கான சுயாதீனம் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன சிவாஜிலிங்கம் வழமையாகவே நிற்ப்பவர். பழக்கதோசத்தில் அவர் நிற்கலாம் அதில் எனக்கு பிரச்சனையில்லை என்றார். https://www.virakesari.lk/article/186218
-
யாழில் ஊடகவியலாளாின் வீட்டின் மீது தாக்குதல் : சொத்துக்களுக்கும் சேதம்!
யாழில் ஊடகவியலாளரின் வீடு தாக்குதல் : பின்னணியில் இராணுவத்திரே - சிவஞானம் சிறீதரன் Published By: VISHNU 16 JUN, 2024 | 09:09 PM யாழில் ஊடகவியலாளரின் வீடு தாக்குதலுக்குள்ளாகி மூன்று தினங்களாகியும் இதுவரை எவரையும் பொலிஸார் கைது செய்யவில்லை என குற்றஞ்சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், குறித்த தாக்குதலின் பின்னணியில் இராணுவத்தின் மறைகரங்கள் உள்ளதென தெரிவித்தார். அச்சுவேலியில் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளரின் இல்லத்தை 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நீண்டகாலத்திற்கு பின்னர் ஊடகவியலாளரை இலக்கு வைத்து குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் கடந்த 13 ம் திகதி நடைபெற்று இன்றுடன் மூன்று நாள்களாகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸார் ஆகியோர் தேடுகிறோம் பிடிக்கிறோம் என்கிறார்கள். எதுவும் நடப்பதாக இல்லை. இதே ஜனாதிபதியை பற்றியோ அரச உயர் அதிகாரிகள் பற்றியோ யாராவது பதிவு போட்டால் ஒரு சில மணிநேரங்களில் கைது செய்யப்படுவார். யாழ் மாவட்டத்தில் மூலைக்கு மூலை இராணுவம், கடற்படை, விமானப்படை பொலிஸார் குவிக்கப்பட்டு இருக்கும்போது எவ்வாறு இவர்களுக்கு தெரியாமல் மோட்டார் சைக்கிள்களில் துணிகரமாக வாள்கள் பொல்லுகளுடன் வரமுடிகிறது. வீட்டுக்கு வெளியே நின்ற பேருந்து, முச்சக்கரவண்டியை தாண்டி ஊடகவியலாளரின் மோட்டார் சைக்கிளை இனங்கண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த விடயத்தை திசைதிருப்புவதற்காக திருநங்கைகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நாட்டின் ஜனாதிபதி பலாலி வசாவிளான் பகுதியில் காணி துண்டு விடுவிப்புக்காக வந்தபோது, காணி விடுவிக்கப்படவில்லை மக்கள் கூடியநிலையில் அது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற த.பிரதீபன், க.பரதன் ஆகிய இரண்டு ஊடகவியலாளர்களும் இராணுவத்தினரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகப்பட்டு இராணுவப் புலனாய்வாளர்களால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அரசாங்கம் திறந்தவெளி சிறைச்சாலைக்குள் அடக்குறைகளை விரிவுபடுத்தி பிரயோகிப்பதையே இதன்மூலம் பார்க்கமுடிகிறது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/186220
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அண்ணை ஆனால் வாங்கிற 2வது அணியும் வெற்றிகளைக் குவிக்காததாக இருப்பதை அவர்கள் விரும்புவார்களோ தெரியலயே!
-
போலிக் கடவுச்சீட்டின் மூலம் நாட்டை விட்டுச் செல்ல முயன்ற யுவதி கைது!
போலி கடவுச்சீட்டின் மூலம் நாட்டை விட்டு தப்பிக்க சென்ற யுவதி கைது! Published By: VISHNU 16 JUN, 2024 | 08:06 PM போலி கடவுச்சீட்டின் மூலம் ஐக்கிய இராச்சியத்திற்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்ற இலங்கைப் பெண் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்ற பெண் திருகோணமலையில் வசிக்கும் 24 வயதுடையவர். விமான நிலைய குடிவரவு அதிகாரிகளின் கூற்றுப்படி, குறித்த பெண்ணுக்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்லவதற்கு உதவியவரும் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் அனைத்து அனுமதி நடைமுறைகளையும் முடித்துவிட்டு குடிவரவு சேவை கவுண்டருக்கு வந்து பாஸ்போர்ட் மற்றும் பிற ஆவணங்களை சமர்பித்தார், அங்கு பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படம் அவருடையது அல்ல என்பதை அவதானித்த அதிகாரிகள் அவரை தலைமை குடிவரவு அதிகாரியிடம் அழைத்துச்செல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து நடந்த தொழில்நுட்ப சோதனையில், இந்த விமான டிக்கெட் போலியானது என தெரியவந்துள்ளதையடுத்து கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் இருவரும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/186219
-
மன்னாருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில்
மூன்று தசாப்த கால யுத்தத்துக்கு முகங்கொடுத்த மன்னார் இன்று புனரமைக்கப்படுகிறது; இதன் அபிவிருத்தி நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பு - ஜனாதிபதி ரணில் 16 JUN, 2024 | 07:07 PM மூன்று தசாப்த கால யுத்தத்துக்கு முகம் கொடுத்த மன்னார் மாவட்டம் இன்று புனரமைக்கப்படுகிறது. இம்மாவட்டத்தின் விரிவான அபிவிருத்தி மூலம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பை வழங்க முடியும். இம்மாவட்டத்தில் சுற்றுலாத்துறை, மீன்பிடி தொழில் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று (16) நடைபெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மடு தேவாலயத்துக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தற்போது உள்ள மடு வீதியை உடனடியாக செப்பனிடுமாறு இராணுவத்தினருக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, மன்னார் ஆயர், வன பாதுகாப்பு திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் காவல்துறையை தொடர்புகொள்ள வேண்டும். மடு தேவாலயத்தில் நடைபெறவுள்ள வருடாந்த திருவிழாவுக்கு முன்னதாக இந்த சுத்திகரிப்பு பணிகளை முடிக்குமாறு ஜனாதிபதி மேலும் பணித்தார். மன்னார் மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் கூட்டப்பட்ட இந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பிரதேசத்தின் அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். மாவட்டத்தில் சுகாதாரம், கல்வி, நீர்ப்பாசனம் உள்ளிட்ட சகல துறைகளிலும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ஜனாதிபதியிடம் நேரடியாக முன்வைக்கப்பட்டதுடன், இவற்றில் பல பிரச்சனைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை முன்னெடுத்தார். மன்னார் வைத்தியசாலைக்கு நீண்டகாலமாக பற்றாக்குறையாக உள்ள CT ஸ்கேன் இயந்திரமொன்றை வழங்குமாறு வைத்தியசாலை பணிப்பாளரின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அதை உடனடியாக நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார். மன்னார் மாவட்டம் இழந்த அபிவிருத்தியை மீண்டும் பெற்றுக் கொடுத்து இந்த ஆண்டு செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படும் என மேலும் குறிப்பிட்டார். எதிர்வரும் ஐந்து தசாப்தங்களில் மாறிவரும் கால நிலைக்கேற்ப இலங்கையில் அமுல்படுத்தக்கூடிய தீர்வுகளை காணவேண்டியதன் அவசியத்தையும் விளக்கிய ஜனாதிபதி, அடுத்த ஐம்பது வருடங்களில் ஈரமான பிரதேசங்களில் அதிக மழை மற்றும் வறண்ட பிரதேசங்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். மழை பெறாது, மாறிவரும் உலகுக்கு ஏற்ற வகையில் பொருளாதார, சமூக, கல்வி மற்றும் விவசாயத்துறையில் புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். மூன்று தசாப்த கால யுத்தத்துக்கு முகங்கொடுத்த மன்னார் மாவட்டம் இன்று புனரமைக்கப்படுகிறது. இம்மாவட்டத்தின் விரிவான அபிவிருத்தி மூலம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பை வழங்க முடியும். இம்மாவட்டத்தில் சுற்றுலாத் தொழில், மீன்பிடி தொழில் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்திக்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம். காற்றாலை உற்பத்தி செய்து இந்தியாவுக்கு விற்கும் முறை குறித்து இந்திய அரசுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. வட மாகாணமானது பசுமை ஆற்றலை உற்பத்தி செய்வதில் விசேட ஆற்றலைக் கொண்டுள்ளது. ஏரிகள் மற்றும் காற்றாலைகளில் சோலார் பேனல் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதன் மூலம் அதிகளவில் மின் உற்பத்தி செய்ய முடியும். அந்த சக்தியை இந்தியாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் விற்பனை செய்வதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பை வழங்க முடியும். பசுமை ஆற்றல் மற்றும் பச்சை ஐதரசன் ஆகியவை பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. மன்னாரில் நிர்மாணிக்கப்படும் புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தேவையான நிதி எதிர்வரும் காலங்களில் வழங்கப்படும். புத்தளம் ஊடாக மன்னாருக்கான வீதி திறப்பது தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடி பதில் வழங்க முடியும். மன்னார் வைத்தியசாலைக்கு CT ஸ்கேன் இயந்திரம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நவீன விவசாயத்தை உருவாக்குவதற்கான முறையான திட்டத்தை முன்வைத்துள்ளோம். அதற்குத் தேவையான வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு அபிவிருத்திக் குழுவைக் கூட்டி கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்குமாறு தெரிவிக்க விரும்புகிறேன். இந்தப் பிரதேசத்தில் உள்ள ஏரிகள் பாதுகாப்பதற்கும் மல்வத்து ஓயா திட்டத்தில் இருந்து மன்னாருக்கு வரும் நீரை பாதுகாப்பதற்கான முறையான செயற்றிட்டம் தேவை. அடுத்த ஐந்து தசாப்தங்களுக்கு ஈரமான பிரதேசங்களில் மழை அதிகரிப்பு மற்றும் வறண்ட பகுதிகளில் மழை பற்றாக்குறை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த நிலைமைக்கு தீர்வு காண இப்போதிலிருந்தே செயல்பட வேண்டும். மடு தேவாலயத்துக்கு செல்லும் பாதை அந்த யாத்திரிகர்களுக்கானது. ஸ்ரீ பாதத்துக்கு செல்லும் பாதை ஸ்ரீ பாதஸ்தானத்துக்கு வரும் யாத்திரிகர்களுக்கானது. எனவே, யாத்திரிகர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முப்பது லட்சம் அபராதம் விதித்தால், அதை நான் நியாயமான விஷயமாக பார்க்கவில்லை. எனவே, மன்னார் மறைமாவட்ட பிரதிநிதி, வனப் பாதுகாப்புத் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த வீதியைச் சுத்தப்படுத்தி அபிவிருத்தி செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைகள் மடு தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கு முன்னதாக நிறைவு பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள காவலரண்களை ஒரே நேரத்தில் அகற்ற முடியாது. பாதுகாப்புப் படையினருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுப்பேன் என நம்புகிறேன். மன்னார் மாவட்டத்துக்கு தேவையான அபிவிருத்திகளை வழங்குவோம். இந்த ஆண்டு அதற்கான அடிப்படை அடித்தளம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மன்னாரைச் சுற்றி நடைபெறும் இந்த விரிவான அபிவிருத்திச் செயற்பாடுகள் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்பினேன். அதனால் யாரிடமும் சிக்கிக்கொள்ள வேண்டியதில்லை. இப்பிரதேசத்தில் விரிவான அபிவிருத்திகளை மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் மாவட்டமாக மன்னார் மாவட்டத்தை உருவாக்குவோம். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் "ஜனாதிபதி மன்னாருக்கு வந்து அங்குள்ள மக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கினார். அத்துடன், மன்னார் மாவட்டத்தை முழுமையான அபிவிருத்தியாக மாற்றுவதற்குத் தேவையான திட்டங்களை அவர் வகுத்துள்ளார். அதற்காக மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரின் சார்பாக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நல்லாட்சி அரசாங்கத்தின்போது மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பணம் ஒதுக்கப்பட்டது. ஆனால், வளர்ச்சிப் பணிகள் செயற்படுத்தப்படாமல் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டது. மேலும், கடந்த 4 ஆண்டுகளாக மாவட்டத்தின் வளர்ச்சிக்கு எந்த பணமும் ஒதுக்கப்படவில்லை. மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தியில் விசேட கவனம் செலுத்தி இவ்வருடம் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக பெருமளவு நிதியை ஒதுக்கியமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன். இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், குலசிங்கம் திலீபன், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாகாணத்தின் பொது பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/186217
-
ஹட்டன் நகரில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்
Published By: DIGITAL DESK 7 16 JUN, 2024 | 05:43 PM அரசாங்க வேலைகளை வழங்குமாறு கோரி பெருந்தோட்ட வேலையற்ற பட்டதாரிகளால் இன்று (16) ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் நகரில் கவனயீர்ப்பு பேரணியும் போராட்டமும் இடம்பெற்றது. ஹட்டன் நகர மத்தியில் இருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணி ஹட்டன் மல்லியப்பு சந்தி வரை சென்று அங்கு போராட்டம் இடம்பெற்றது. தற்போது தோட்டப் பகுதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளில் அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும், அந்த ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்புவதற்கு வேலையற்றிருக்கும் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பதவிகளை வழங்க முடியும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கின்றனர். மேலும், பல்வேறு அரசுப் பணிகள், பதவிகளை பட்டதாரிகளாக உள்ள தமக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/186214
-
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை மூடிவிட்டு தொழிலாளர்களை வெளியேற சொல்வது ஏன்? முழு பின்னணி
பட மூலாதாரம்,மாஞ்சோலை செல்வகுமார் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 15 ஜூன் 2024 புதுப்பிக்கப்பட்டது 16 ஜூன் 2024 திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கான குத்தகை காலம் முடிந்து விட்டதால் தோட்டத்தை மூடிவிட்டு, அங்கிருக்கும் தொழிலாளர்களை வெளியேறச் சொல்லிவிட்டது நிர்வாகம். வேறு எங்கு செல்வது எனக் கேள்வி எழுப்புகிறார்கள் தொழிலாளர்கள். ஜூன் 14-ஆம் தேதி. திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் கூடியிருக்கும் பெண்கள் மொத்தமாக கதறி அழுதுகொண்டிருக்கிறார்கள். அந்தக் காட்சியைப் பார்ப்பவர்கள் யாரும் கண்கலங்காமல் இருக்க முடியாது. அவர்கள் நான்கு தலைமுறையாக வேலை பார்த்துவந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் கடைசி நாள் அது. கண்ணீரைத் துடைத்தபடி, விருப்ப ஓய்வுத் திட்டப் படிவத்தில் கையெழுத்திடுகிறார்கள். அந்தத் தொழிலாளர்கள் வாழ்ந்த வீடு, வேலைபார்த்த நிலம், படித்த பள்ளி, முன்னோர்களின் கல்லறைகள், சக தொழிலாளர்களுடனான உறவு என எல்லாவற்றின் மீதும் ஒரு விலக்க முடியாத திரை விழுந்துவிட்டது. "இப்படி ஒரு நாள் வந்திருக்கவே கூடாது. இன்னைக்கு மாஞ்சோலையே ஒரு இழவு வீட்டைப்போல இருந்தது. இப்படி ஒரு சூழல் வரும்னு நாங்கள் ஒருபோதும் எதிர்பார்த்ததில்லை. இனிமேல் என்ன செய்யப்போகிறோம என்று தெரியவில்லை," என்கிறார் நான்காவது தலைமுறையாக இங்கே வேலை பார்க்கும் ஜெயஸ்ரீ. இவரது முன்னோர்கள் கேரளாவிலிருந்து வந்து மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் வேலையில் சேர்ந்தார்கள். இப்போது இவரும் இவரது கணவர் பாக்கியராஜும் இங்கேதான் வேலைபார்க்கிறார்கள். "46 வயதாகிவிட்டது எனக்கு. இனிமேல் எங்கே போய் என்ன வேலையை என்னால் கற்றுக்கொண்டு செய்ய முடியும்?" என்கிறார் ஜெயஸ்ரீ. அந்த இடி முதன்முதலில் விழுந்தது 2018-ஆம் ஆண்டில்தான். அப்போதுதான். தமிழ்நாடு அரசுக்கும் தோயிலைத் தோட்டத்தை நடத்திவரும் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிட்டெடிற்கும் இடையில் நடந்த வழக்கில், குத்தகை காலம் முடிந்ததும் அந்தப் பகுதியை அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்தது. "அந்தச் செய்தி வந்ததும் அதிர்ந்துபோனோம். பிறகு சில ஆண்டுகளாக அதைப் பற்றிப் பேச்சே இல்லை. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக, மீண்டும் எஸ்டேட்டை மூடுவது பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். கடந்த சில மாதங்களாக இந்தப் பேச்சு தீவிரமடைந்து, இப்போது எல்லாம் முடிந்துவிட்டது," என்கிறார் இந்தத் தோட்டத் தொழிலாளர்களில் ஒருவரும் இப்பகுதியின் கவுன்சிலருமான பாமா கௌசல்யா. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பட மூலாதாரம்,மாஞ்சோலை செல்வகுமார் படக்குறிப்பு,வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் (கோப்பு படம்) தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த இடம் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது மாஞ்சோலை தேயிலைத் தோட்டம். இந்தத் தேயிலைத் தோட்டத்தை வாடியா குழுமத்திற்குச் சொந்தமான ‘பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட்’ (பி.பி.டி.சி.எல்) என்ற நிறுவனம் நடத்தி வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக இந்தத் தோட்டம் அமைந்திருக்கும் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீன்தாரிடமிருந்து 99 வருட குத்தகைக்கு எடுத்த பி.பி.டி.சி.எல், இப்பகுதியில் தேயிலை, ஏலக்காய், கொய்னா, மிளகு தோட்டங்களை உருவாக்கியது. சிங்கம்பட்டி ஜமீனுடனான குத்தகை, 1929-ஆம் ஆண்டு துவங்கியதால், 2028-ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. அதற்குப் பிறகு, இந்த வனப்பகுதி தமிழ்நாடு அரசின் வசம் சென்றுவிடும். இந்த எஸ்டேட்டைச் சுற்றியுள்ள பல பகுதிகளை காப்புக்காடுகளாக அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்தப் பகுதியையும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்படவுள்ளது. 2028-க்குள் நிலத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதால், இதில் பணியாற்றிவந்த 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வுக்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுவிட்டது. விருப்ப ஓய்வுத் திட்டத்தை ஏற்பவர்களுக்கு அவர்களது வயதைப் பொறுத்து, ஒன்றே முக்கால் லட்சம் முதல் மூன்று லட்சம் வரை இழப்பீட்டுத் தொகையாகக் கிடைக்கும். ஜூன் 14-ஆம் தேதி கடைசி வேலை நாளாகாவும் அறிவிக்கப்பட்டுவிட்டது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் என பேச்சு வழக்கில் குறிப்பிடப்படும் 'சிங்கம்பட்டி எஸ்டேட் தேயிலைத் தோட்டம்', ஆரம்பத்தில் காக்கச்சி, ஊத்து, குதிரைவெட்டி, நாலுமுக்கு ஆகிய ஐந்து ஊர்களைக் குறிப்பிடுகிறது. குதிரைவெட்டி, காக்காச்சி ஆகிய இடங்களில் இருந்த தோட்டங்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்ட நிலையில், தற்போது மீதமுள்ள ஊர்களில் உள்ள தேயிலைத் தோட்டங்களும் மூடப்படுகின்றன. இதனால், தலைமுறை, தலைமுறையாக இங்கு வசித்தவர்கள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர். பட மூலாதாரம்,மாஞ்சோலை செல்வகுமார் எஸ்டேட் பிபிடிசி நிறுவனத்திற்கு கிடைத்தது எப்படி? பட மூலாதாரம்,SINGAMPATTY ZAMIN படக்குறிப்பு,சிங்கம்பட்டி அரண்மனை மேற்குத் தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை உள்ளிட்ட சுமார் 74,000 ஏக்கர் வனப்பகுதி சிங்கம்பட்டி ஜமீனுக்குச் சொந்தமானதாக இருந்தது. இந்த நிலம் சிங்கம்பட்டி ஜமீனுக்கு கிடைத்தது தொடர்பாக ஒரு வரலாறு சொல்லப்படுகிறது. 18-ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூரின் இளவரசராக இருந்த மார்த்தாண்ட வர்மருக்கு (1706–1758) ஒரு போரில் உதவுவதற்காக அப்போதைய சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்தவர்கள் சென்றனர். அந்தப் போரில் சிங்கம்பட்டியின் இளவரசர் இறந்துவிட்டார். இதனை ஈடுசெய்ய சிங்கம்பட்டி ஜமீனுக்கு திருவிதாங்கூர் அரசர் இந்த 74,000 ஏக்கர் நிலத்தை வழங்கினார். இதற்குப் பிறகு 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், சிங்கம்பட்டியின் இளவரசரான சிவசுப்பிரமணிய சங்கர தீர்த்தபதி சென்னையில் படித்துவந்தபோது, அந்தக் கல்லூரியின் துணை முதல்வராக இருந்த க்ளெமென்ட் டி லா ஹே என்பவரைக் கொலை செய்த வழக்கில் அவரும் கடம்பூர் இளவரசரும் சிக்கினர். இந்த வழக்கில் சிங்கம்பட்டி இளவரசர் அப்ரூவரானாலும், அவருக்காக டி ரிச்மென்ட் என்ற வழக்கறிஞர் அமர்த்தப்பட்டார். முடிவில் வழக்கில் இருந்து கடம்பூர் இளவரசர், சிங்கம்பட்டி இளவரசர் ஆகிய இருவருமே விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான செலவுகளுக்கு சிங்கம்பட்டி ஜமீன் கிட்டத்தட்ட 3 லட்ச ரூபாய் வரை செலவழிக்க நேர்ந்தது. அந்தச் செலவை ஈடுகட்டவே, 8,373.57 ஏக்கர் நிலத்தை பி.பி.டி.சி நிறுவனத்திற்கு சிங்கம்பட்டி ஜமீன் குத்தகையாக அளித்தது. இந்தத் தகவலை, சிங்கம்பட்டியின் கடைசி ஜமீனாக இருந்து சமீபத்தில் மறைந்த டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி பல ஊடக பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, The Tamil Nadu Estates (Abolition and Conversion into Ryotwari) Act, 1948 என்ற சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இருந்த ஜமீன்களின் அனைத்து நிலங்களும் அரசால் கையகப்படுத்தப்பட்டன. அதன்படி 1952-ஆம் ஆண்டு பிப்ரவரியில் சிங்கம்பட்டி ஜமீனுக்குச் சொந்தமான இந்த நிலங்களும் அரசின் வசம் வந்தன. இந்நிலையில், ஏற்கனவே சிங்கம்பட்டி ஜமீனுக்கும் பி.பி.டி.சி-க்கும் இடையிலான ஒப்பந்தம் குறித்து ஆலோசித்த அரசு, இது தொடர்பாக ஒரு அரசாணையை வெளியிட்டது. 1958-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த அரசாணையின்படி, குத்தகைக்கு விடப்பட்ட 8,373 ஏக்கர் 57 சென்ட் நிலத்தை குத்தகையின் மீதிக் காலத்திற்கும் அந்த நிறுவனம் பயன்படுத்திக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், 1976-இல் களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. அப்படி அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் சிங்கம்பட்டி எஸ்டேட்டும் உள்ளடங்கிய நிலையில், இதனை எதிர்த்து பி.பி.டி.சி நிறுவனம் 1978-இல் நீதிமன்றத்தை நாடியது. 40 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில் 2017-ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. புலிகள் காப்பகமாக அந்தப் பகுதி அறிவிக்கப்பட்டது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருந்தபோதும், குத்தகை காலம் முடியும்வரை, அந்தப் பகுதியில் புதிதாக தோட்டங்களை ஏற்படுத்தாமல் ஏற்கனவே இருக்கும் தோட்டப் பகுதியை மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு 2018-இல் உச்ச நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டது. பி.பி.டி.சி நிறுவனத்திற்கு சுமார் 8,373 ஏக்கர் நிலம் குத்தகைக்கு அளிக்கப்பட்டாலும், அந்த நிலத்தில் சுமார் 1,000 ஏக்கர் நிலத்தில் மட்டுமே தேயிலைத் தோட்டங்கள் செயல்பட்டு வந்தன. சுமார் 500 ஏக்கர் நிலத்தில், தோட்டப் பணியாளர்களின் வீடுகள் இருந்துவந்தன. மாஞ்சோலை எங்கேயிருக்கிறது? பட மூலாதாரம்,மாஞ்சோலை செல்வகுமார் திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் கல்லிடைக்குறிச்சியை வந்தடைந்த பிறகு, இடதுபுறம் செல்லும் சாலையில், மணிமுத்தாறு செல்லும் சாலையில் ஏறினால், மாஞ்சோலை ஊரை அடையலாம். இதற்குப் பிறகு காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய ஊர்கள் உள்ளன. இந்த ஐந்து ஊர்களும் சேர்ந்தே மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் எனக் குறிப்பிடப்படுகின்றன. 1930-களில் இந்தத் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்ற வந்தவர்கள் பெரும்பாலும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கேரளாவிலிருந்தும் சிலர் இங்கு வந்து தொழிலாளர்களாகச் சேர்ந்தனர். தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். தற்போது இந்த பி.பி.டி.சி நிறுவனத்தில் 562 தொழிலாளர்கள் பணியில் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 2,100 பேர் இந்த கிராமங்களில் வசித்துவருகின்றனர். இந்த கிராமங்களில் தபால் அலுவலகம், தொலைபேசி டவர்கள், ரேஷன் கடைகள், அரசு உயர்நிலைப் பள்ளி, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள், கூட்டுறவு பண்டக சாலை, எஸ்டேட் நிர்வாகத்திற்குப் பாத்தியப்பட்ட தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகள், தேயிலைத் தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள், இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள், வனத்துறை விடுதி, சிங்கவால் குரங்கு கண்காணிப்பு கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களும் குடியிருப்புகளும் உள்ளன. திருநெல்வேலி மற்றும் பாபநாசம் பகுதிகளிலிருந்து தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மூன்று பேருந்துகள் இரண்டு முறை எஸ்டேட் பகுதிகளுக்குச் சென்று வருகின்றன. ‘காலி செய்துவிட்டு எங்கே செல்வது?’ படக்குறிப்பு,ஜெயஸ்ரீ, அவரது கணவர் பாக்கியராஜ், இந்த நிலையில், தற்போது பி.பி.டி.சி நிறுவனம் விருப்ப ஓய்வைப் பெற முன்வரும் தொழிலாளர்கள், ஜூன் 14-ஆம் தேதிக்குள் இதற்கான ஒப்புதலைத் தர வேண்டும். இந்தத் திட்டத்தை ஏற்பவர்களுக்கு முதலில் 25% பணம் தரப்படும். ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் தங்கள் வீட்டைக் காலி செய்து அதற்கான சாவியைத் தந்துவிட்டால் அப்போது மீதமுள்ள 75% பணம் தரப்பட்டுவிடும். பெரும்பாலானவர்கள் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில், ஜெயஸ்ரீ, அவரது கணவர் பாக்கியராஜ், கௌரி உள்ளிட்டோர் இதனை ஏற்காமல் இருந்தனர். ஆனால், வேறு வழியில்லாத நிலையில், ஜூன் 14-ஆம் தேதி இவர்களும் இந்தத் திட்டத்தில் கையெழுத்திட்டுவிட்டனர். "எல்லாக் கதவுகளையும் தட்டியாகிவிட்டது. இந்தத் தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டுமென அரசின் எல்லா மட்டங்களிலும் கேட்டுப் பார்த்தாகிவிட்டது. எதுவும் நடக்கவில்லை என்ற நிலையில், விட்டால் இதுவும் கிடைக்காது என்பதால் இதனை ஏற்றுக்கொண்டுவிட்டோம்," என்கிறார் ஜெயஸ்ரீ. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வன விலங்குகள் ஊருக்குள் நுழைவது, மனிதர்களைத் தாக்குவது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கும் நிலையில் மாஞ்சோலை வனப்பகுதியில் அதுபோல எந்த ஒரு சம்பவமும் இங்கே நடந்ததில்லை என்று சுட்டிக்காட்டும் இப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரான ராபர்ட், அதற்குக் காரணம் இப்பகுதி மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்வதுதான் என்கிறார். "மாஞ்சோலை என்பது வெறும் ஒரு தேயிலை எஸ்டேட் அல்ல. இங்கே வேலை பார்ப்பவர்களில் பலர் நான்கு தலைமுறைகளாக இங்கே வேலை பார்த்திருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு இந்தத் தேயிலைத் தோட்டம் இருக்கும் ஊரைத் தவிர, வேறு ஊரையே தெரியாது. இவர்கள் மூதாதையர்களின் சொந்த ஊரும் தெரியாது. தெரிந்தாலும் அங்கு போய் வாழ்வதும் இப்போது சாத்தியமில்லை. ஆகவே, இந்தத் தேயிலைத் தோட்டங்களை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும்," என்கிறார் மாஞ்சோலை பகுதியில் பிறந்து வளர்ந்தவரான ராபர்ட். இங்குள்ள வனப்பகுதியின் மரங்கள் சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்படுவது போன்ற நிகழ்வுகள் நடக்காததற்கும் இங்குள்ள மக்களே காரணம் என்கிறார் அவர். இங்கு தொழிலாளியாக உள்ள ஜெயா இன்னொரு கேள்வியை எழுப்புகிறார். "எங்களுடைய ரேஷன் கார்டு, ஓட்டுரிமை எல்லாம் இங்கே இருக்கிறது. பிள்ளைகள் இங்கே படிக்கிறார்கள். 45 நாட்களில் இந்த இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்கிறார்கள். எல்லாவற்றையும் வேறொரு இடத்திற்கு எப்படி மாற்றுவது?" என்கிறார் அவர். இந்தத் தோட்டத்தின் பணியாளர்கள் தற்போது ஒரு நாள் கூலியாக 453 ரூபாயைப் பெற்றுவந்தனர். விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் 56 முதல் 59 வயதுவரை உள்ளவர்களுக்கு மூன்று லட்ச ரூபாயும் 53 முதல் 56 வயதுவரை உள்ளவர்களுக்கு 2 லட்சத்து 93 ஆயிரம் ரூபாயும் 53 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்கு இரண்டே கால் லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூலி உயர்வு கேட்டு நடந்த போராட்டம் பட மூலாதாரம்,மாஞ்சோலை செல்வகுமார் 1863 வாக்கில் துவங்கப்பட்ட பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிட்டட் நிறுவனம் ஆரம்ப காலத்தில் பர்மாவுடன் மரங்களைக் கொண்டுவந்து வர்த்தகம் செய்துவந்தது. 1913 வாக்கில் தேயிலை உற்பத்தியின் மீது இந்த நிறுவனத்தின் கவனம் திரும்பியது. ஆரம்பத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை மலைப் பகுதியில் தேயிலைத் தோட்டங்களை வாங்கியது. 1920-களில் திருநெல்வேலி மாவட்டத்தில் சிங்கம்பட்டி ஜமீனுக்குச் சொந்தமான மாஞ்சோலை மலைப் பகுதியில் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கியது. இது 'சிங்கம்பட்டி க்ரூப் ஆஃப் எஸ்டேட்ஸ்' என அழைக்கப்படுகிறது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 70 ரூபாயாக உள்ள தங்களது கூலியை 100 ரூபாயாக உயர்த்த வேண்டுமெனக் கோரி, 1999-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அப்போது காவல்துறை தடியடி நடத்தியதில், பலர் தாமிரபரணி ஆற்றுக்குள் குதித்தனர். ஒட்டுமொத்தமாக 17 பேர் இறந்துபோயினர். இந்த சம்பவம் குறித்து விசாரித்த நீதிபதி மோகன் கமிஷன், 17 பேரில் 11 பேர் நீரில் மூழ்கி இறந்ததாகவும், மீதமுள்ளவர்கள் காயங்களால் இறந்ததாகவும் தெரிவித்தது. தமிழக வரலாற்றில் மிக மோசமான காவல்துறை வன்முறைகளில் ஒன்றான இந்த நிகழ்வையடுத்து, மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் குறித்த கவனம், தமிழ்நாட்டின் பிற பகுதி மக்களுக்கும் ஏற்பட்டது. https://www.bbc.com/tamil/articles/cxww1n08w82o
-
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில் இன்று
எதிராளிகள் ஒரு நிலைப்பாட்டை பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்த தீர்மானம்! - சுமந்திரன் 16 JUN, 2024 | 05:27 PM இலங்கை தமிழ் அரசுக் கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரது மறுமொழியையும் ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (16) காலை இடம்பெற்றது. அதன் பின்னர், ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், இன்றைய கூட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியின் வழக்கு தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது தொடர்பான விளக்கம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. கடந்த தவணையில் எதிராளிகளாக பெயரிடப்பட்ட ஏழு பேருடன் கிளிநொச்சியை சேர்ந்த ஜீவராஜா என்பவர் தன்னையும் இணைத்துக்கொள்ளுமாறு விண்ணப்பம் செய்திருந்தார். அவரது விண்ணப்பம் தொடர்பாக ஆட்சேபனைகள் இருப்பின் அந்த ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்காக, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் யோகேஸ்வரன் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி அவகாசம் வழங்குமாறு தவணை கேட்டிருந்தார். நானும் அப்படி கேட்டிருக்கின்றேன். அதனையடுத்து எதிர்வரும் ஜூலை 19ஆம் திகதிக்கு வழக்கு அழைக்கப்படவுள்ளது. அந்த வகையில், கடந்த தவணைக்கு முன்பாக கட்சியின் மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்துக்கமைய வழக்கை முடிவுறுத்திக்கொள்வது தொடர்பாக நீதிமன்றிலே நான் கூறியிருக்கின்றேன். எதிராளிகள் அழைத்துள்ள ஆட்சேபனைகள் தொடர்பாக வழக்காளி தன் நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும் என்ற காரணத்துக்காகவே கடந்த தவணை வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதுபோன்ற சிவில் வழக்குகள் தாக்கல் செய்யப்படும்போது அதில் பல படிமுறைகள் உள்ளது. அவற்றை கடந்த பின்னரே வழக்கு விசாரணைக்கு நியமிக்கப்படலாம். சாதாரணமாக இவ்வாறான வழக்கில் ஒரு வருடத்துக்கு பின்னரே முதலாவது விளக்கத்துக்கான திகதி குறிக்கப்படும். ஆனால், இந்த வழக்கில் வழக்கை முடிவுறுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக நாங்கள் குறுகிய தினத்தை கேட்டிருக்கின்றோம். அன்றைய தினம் வழக்காளி நீதிமன்றிலே தெரிவித்த விடயத்துடன், எதிராளிகள் ஏழு பேரும் அழைத்திருக்கின்ற ஆட்சேபனைகளின் அடிப்படையில் மூன்று வித்தியாசமான நிலைப்பாடுகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக, நானும் கட்சியின் பொதுச்செயலாளரும் நிர்வாக செயலாளரும் ஒரு நிலைப்பாட்டையும், மாவை சேனாதிராஜா மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் வேறொரு நிலைப்பாட்டையும் சிறிதரன், குகதாசன் ஆகியோர் இன்னொரு நிலைப்பாட்டையும் எடுத்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் கட்சி ஒரு பொதுவான நிலைப்பாட்டை எடுக்காத சூழ்நிலையில் நாங்கள் எப்படி எமது நிலைப்பாட்டை இதற்கு தெரியப்படுத்துவது என்று அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இருப்பினும், கட்சி தற்போது ஒரு நிலைப்பாட்டுக்கு வந்துள்ளது. வழக்காளி கோரும் நிவாரணங்களை வழங்கி தெரிவுகளை மீள செய்வதற்கு நான் இணங்குகின்றேன் என்று சிறிதரன் கூறியிருந்தார். அதனை நீதிமன்றிலே நான் சொல்லியிருக்கின்றேன். இப்போது நாங்கள் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்துள்ள காரணத்தினால் நாங்கள் ஏழு பேரும் எட்டாவது எதிராளியான ரத்தின வடிவேலும் இணைந்து, வழக்கிலே எமது மறுமொழியை ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்காக வழக்காளியோடு இணக்கப்பாட்டுக்கு வருகிறோம் என்று கூறி வழக்கை முடிவுறுத்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக வழக்காளியின் சட்டத்தரணியோடு நான் பேசியிருக்கின்றேன். ஏனையவர்களின் சட்டத்தரணிகளுடன் பேசி பொது நிலைப்பாட்டுக்கு இணங்கிக்கொள்வதுடன், எதிர்வரும் மாதம் 14ஆம் திகதி வவுனியாவில் மத்திய குழு மீண்டும் கூடி அந்த மறுமொழியின் வரைபை மத்திய செயற்குழுவுக்கு சமர்ப்பித்து அதன் அங்கீகாரத்தை பெறவேண்டும். அதனையடுத்த தவணையில் நீதிமன்றில் சமர்ப்பித்து, அதன் பின்னர் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரலாம் என்று தீர்மானித்திருக்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/186213
-
கதிர்காம காட்டுப்பாதை திறக்கும் திகதியில் மாற்றம் : குழப்பத்தில் யாத்திரிகர்கள்!
கதிர்காம பாத யாத்திரைக்கான காட்டுப் பாதையை திறக்கும் தினத்தை பிற்போட்டமை பெரும் கவலையளிக்கிறது - செந்தூரன் Published By: DIGITAL DESK 7 16 JUN, 2024 | 06:11 PM கதிர்காம பாத யாத்திரையின்போதான காட்டுப் பாதையை திறக்கும் தினத்தை பிற்போட்டமை பெரும் கவலையளிக்கிறது என இராவணசேனை அமைப்பின் தலைவரும் திருக்கோணேசர் பாத யாத்திரை குழுவின் வேல்சாமியுமான செந்தூரன் தெரிவித்தார். திருகோணமலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவசரமாக சென்று யாத்திரை கடமைகளையும் நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்ற முடியாது என்றும் பக்தர்களின் வருகையை இது குறைக்கும் செயலாகிறது என்றும் குற்றஞ்சாட்டினார். அவர் மேலும் கூறுகையில், பண்டைய காலம் தொடக்கம் மரபு ரீதியாக இந்த யாத்திரை நடைபெறுகிறது. நேர்த்திக்கடனுக்காக சிறுவர்கள் முதல் பெரியோர், கர்ப்பிணித் தாய்மார்கள் என உகந்தை முதல் கதிர்காமம் வரை பாத யாத்திரை மேற்கொள்வது வழக்கம். ஆனால், தற்போது அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை பிற்போட்டிருப்பதும் குறுகிய காலத்தில் செல்லவைப்பதும் யாத்திரிகர்களை தடுக்கும் செயலாக காணப்படுகிறது. சிங்களவர்கள், தமிழர்கள் என பலரும் கதிர்காம யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இது ஈழத்து சைவர்களின் வாழ்வியலில் ஒன்றாக காணப்படுகிறது. நடந்து சென்று நேர்த்திக்கடனை செலுத்துவது தொன்றுதொட்டு நடந்து வருகிறது. இதில், கடினமான பாதை வழியே காடுகள் ஊடாக செல்ல வேண்டும். இந்த மாதம் 30ஆம் திகதி திறக்கப்படவிருந்த பாதையின் திறப்பு நாள் பிற்போடப்பட்டுள்ளது. நான்கு நாட்களுக்குள் பாத யாத்திரையை நிறைவேற்றுவது கடினம். இதனால் பல்லாயிரக்கணக்கான பாத யாத்திரை குழுக்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். வழமை போன்று இந்த பாத யாத்திரை நடைபெற வேண்டும். எனவே, உரிய அரச தரப்பினர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/186215
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பையன் உங்க பெயரையும் சசோதரன் என்றே குறிப்பிட்டுள்ளார். ஆகவே அது எழுத்துப்பிழையே தவிர உள்குத்து அல்ல. என்றாலும் ஜம்பவான் என்பதும் பொருந்திப்போகுது!
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
ஸ்கொட்லாந்தை வீழ்த்தியது அவுஸ்திரேலியா; சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது இங்கிலாந்து! 16 JUN, 2024 | 02:49 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் கூட்டாக நடத்தப்பட்டுவந்த 9ஆவது ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் நடப்பு சம்பியன் இங்கிலாந்து ஏழாவது அணியாக சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றது. பி குழுவில் இங்கிலாந்தின் சுப்பர் 8 சுற்று வாய்ப்பு ஊசலாடிக்கொண்டிருந்த நிலையில் ஸ்கொட்லாந்தை 5 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டதை அடுத்து இங்கிலாந்து சுப்பர் 8 சுற்றில் விளையாடுவது உறுதியானது. சென் லூசியா, க்ரொஸ் ஐலட் டெரன் சமி தேசிய கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று காலை நடைபெற்ற பி குழுவுக்கான கடைசிப் போட்டியில் ஸ்கொட்லாந்தின் சவாலுக்கு மத்தியில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது. ஸ்கொட்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 181 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 19.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. எனினும், ஆரம்பத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்ட அவுஸ்திரேலியா 13 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 92 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. அதன் பின்னர் அதிரடியில் இறங்கிய மாக்கஸ் ஸ்டொய்னிஸ் 17ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கையை 155 ஓட்டங்களாக உயர்த்தி ஐந்தாவதாக ஆட்டம் இழந்தார். அதற்கு முன்னர் ஸ்டொய்னிஸுடன் 4ஆவது விக்கெட்டில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்த ட்ரவிஸ் ஹெட் அரைச் சதம் குவித்து அசத்தியிருந்தார். அதன் பின்னர் டிம் டேவிட், மெத்யூ வேட் ஆகிய இருவரும் வெற்றி இலக்கை அடைய உதவினர். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது. ஜோர்ஜ் மன்சே, ப்றெண்டன் மெக்முலன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 89 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். தொடர்ந்து அணித் தலைவர் ரிச்சி பெரிங்டன் ஆட்டம் இழக்காமல் அரைச் சதம் குவித்தார். எண்ணிக்கை சுருக்கம் ஸ்கொட்லாந்து: 20 ஓவர்களில் 180 - 5 விக். (ப்றெண்டன் மெக்முலன் 60, ரிச்சி பெரிங்டன் 42 ஆ.இ., ஜோர்ஜ் மன்சே 35, க்ளென் மெக்ஸ்வெல் 44 - 2 விக்.) அவுஸ்திரேலியா 19.4 ஓவர்களில் 181 - 5 விக். (ட்ரவிஸ் ஹெட் 68, மாக்கஸ் ஸ்டொய்னிஸ் 59, டிம் டேவிட் 24 ஆ.இ., மார்க் வொட் 34 - 2 விக்., சபியான் ஷரிப் 42 - 2 விக்.) டக்வேர்த் லூயிஸ் முறைமையில் இங்கிலாந்து வெற்றி அன்டிகுவா, நோர்த் சவுண்ட் சேர் விவியன் றிச்சர்ட்ஸ் விளையாட்டரங்கில் இன்று அதிகாலை சீரற்ற காலநிலை காரணமாக 10 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு நடத்தப்பட்ட பி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நமிபியாவை டக்வேர்த் லூயிஸ் முறைமையில் இங்கிலாந்து 41 ஓட்டங்களால் வெற்றிகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து, நான்கு துடுப்பாட்ட வீரர்களின் அதிரடி துடுப்பாட்ட உதவியுடன் 4 விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்களைக் குவித்தது. திருத்தப்பட்ட 126 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமிபியா 10 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 84 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. எண்ணிக்கை சுருக்கம் இங்கிலாந்து 10 ஓவர்களில் 122 - 5 விக். (ஹெரி ப்றூக் 20 பந்துகளில் 47 ஆ.இ., ஜொனி பெயாஸ்டோவ் 18 பந்துகளில் 31, மொயீன் அலி 6 பந்துகளில் 16, லியாம் லிவிங்ஸ்டோன் 4 பந்துகளில் 13, ரூபன் ட்ரம்ப்ள்மன் 31 - 2 விக்.) நமிபியா 10 ஓவர்களில் 84 - 3 விக். (மைக்கல் வன் லிங்கென் 33, டேவிட் வைஸ் 12 பந்துகளில் 27, நிக்கலஸ் டெவின் 18 சுய ஆட்டமிழப்பு) இது இவ்வாறிருக்க, பாகிஸ்தானுக்கும் அயர்லாந்துக்கும் இடையில் ப்ளோரிடா, லௌடர்ஹில் விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கும் அயர்லாந்துக்கும் இடையிலான போட்டியுடன் அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நிறைவுக்கு வருகிறது. எஞ்சிய முதல் சுற்று போட்டிகள், சுப்பர் 8 சுற்று, மற்றும் இறுதிச் சுற்று என்பன மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது. இதுவரை இந்தியா, ஐக்கிய அமெரிக்கா (ஏ குழு), அவுஸ்திரேலியா, இங்கிலாந்து (பி குழு), ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் (சி குழு), தென் ஆபிரிக்கா (டி குழு) ஆகிய ஏழு அணிகள் சுப்பர் 8 றில் விளையாட தகுதிபெற்றுள்ளன. கடைசி அணியாக பங்களாதேஷ் அல்லது நெதர்லாந்து டி குழுவிலிருந்து தெரிவாகும். https://www.virakesari.lk/article/186197
-
தேர்தலில் படுதோல்வி அடையும் ரிஷி சுனக் கட்சி.. அடித்துக் கூறும் கருத்துக் கணிப்புகள்
பிரிட்டனில் வரும் ஜூலை 4 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியடைந்து தேர்தலிலிருந்து முற்றிலுமாக துடைத்தெறியப்படும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் தொழிலாளர் கட்சிக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த வாரம் இரு கட்சிகளும் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருந்தன. பிரிட்டனில் 40 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் முந்தைய பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 2022 ஆம் ஆண்டு பதிவு விலகிய நிலையில் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்த்த வலதுசாரியான ரிஷி சுனக் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவரின் செயல்பாடுகள் மீதான அதிருப்தி இந்த தேர்தலில் எதிரொலிப்பதை தேர்தல் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. கடந்த ஜூன் 12 முதல் 14 வரை Savanta நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு சண்டே டெல்கிராப் இதழில் வெளியானது. அதில் தொழிலாளர் காட்சியைச் சேர்ந்த கெயர் ஸ்டாமருக்கு 46 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 21 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சண்டே டைம்ஸ் இதழில் வெளியயான SURVATION நிறுவனம் மே31 முதல் ஜூன் 13 வரை நடத்திய கருத்துக்கணிப்பில், மொத்தம் 650 இடங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் தொழிலாளர் கட்சி 456 இடங்களைப் பிடிக்கும்(46%) என்றும், ரிஷி சுனக்கின் கன்செர்வேட்டிவ் கட்சி வெறும் 72 இடங்களைப் பிடிக்கும் (24%) எனவும் தெரியவந்துள்ளது. கடந்த காலங்களில் கன்சர்வேட்டிவ் கட்சி 200 இடங்கள் வெற்றி பெற்றிருந்ததே குறைந்த பட்ட எண்ணிக்கை என்பது கவனிக்கத்தக்கது. சண்டே அப்சர்வர் இதழில் வெளியான OPINIUM நிறுவனம் ஜூன் 12 முதல் 14 வரை நடத்திய கருத்துக்கணிப்பில், தொழிலாளர் கட்சி 40% இடங்களைப் பிடிக்கும் எனவும் கன்சர்வேட்டிவ் கட்சி 23% இடைகளைப் பிடிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/303902
-
விழிப்புணர்வைப் போதித்த அஷ்டவக்கிரர்
ஒரு மனிதரின் வெளிப்புறத் தோற்றத்தை வைத்து நாம் அவரை எடைபோடுகிறோம். அவருடைய ஞானம், தகுதிகள் ஆகியவற்றை அறியாமல் இத்தவறைப் பெரும்பாலோர் செய்கிறார்கள். மெய்மையைப் போதித்ததால் தந்தையின் சாபம் பெற்று எட்டுக் கோணல்களுடன் பிறந்து ஜனக மன்னருக்கு விழிப்புணர்வைப் போதித்துத் தந்தையையும் காப்பாற்றி சாபவிமோசனம் பெற்ற ஒரு முனிவர் பற்றி அறிந்து கொள்வோம். உத்தாலக ஆருணி என்ற வேத முனிவருக்கு சுவேதகேது என்ற மகனும் சுஜாதா என்ற மகளும் இருந்தார்கள். வேதம் கற்பிக்கும் பள்ளியை நடத்தி வந்தார் உத்தாலகர். இப்பள்ளியில் பயின்று வந்தார் கஹோடர். இவருக்குத் தன் மகள் சுஜாதாவை மணம் முடித்துக் கொடுத்தார் உத்தாலகர். திருமணமானது கர்ப்பமுற்றாள் சுஜாதா. அவளும் வேதப் பயிற்சியில் சிறந்தவள் என்பதால் கருவில் இருக்கும் குழந்தை அவள் வேதம் ஓதுவதைக் கேட்டுச் சரியான உச்சரிப்பைப் பாராயணம் செய்து கொண்டது. ஒருமுறை கஹோடர் வேதம் ஓதும்போது ஒரிரு இடங்களில் தப்பும் தவறுமாக ஓதுவதைக் கேட்ட அக்குழந்தை கர்ப்பத்திலிருந்தே அவரது தவறான உச்சரிப்பைத் திருத்தியது. கோபமுற்ற கஹோடர் அக்குழந்தை எட்டுக் கோணல்களுடன் பிறக்கும்படிச் சாபமிட்டார். குழந்தை அஷ்டவக்கிரன் பிறந்த சில காலத்துக்குப் பின் வாழ்வாதாரத்துக்குப் பொருள் வேண்டி கஹோடர் விதேகதேசம் சென்றார். அங்கே ஜனகரின் அவையில் வந்தின் என்ற முனிவரின் விவாதங்களுக்குப் பதில் அளிக்கத் தெரியாமல் தோற்கடிக்கப்பட்டு நீரில் மூழ்கடிக்கப்பட்டார். இது நிகழ்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஷ்டவக்கிரர் விதேக தேசம் சென்றார். அங்கே யாகமும் ஹோமமும் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. அச்சமயம் ஜனகர் தொடர் துர்க்கனவுகளால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். கனவில் அவர் பிச்சைக்காரராகக் கடுமையாகத் துன்புறுவது போல் தோன்றும். விழித்தபின் தான் மன்னர் என்பதை உணர்வார். இதில் எது உண்மை என்பதை உரைக்கவேண்டும் என அவர் தன் சபை முன் கேள்வியாக வைத்தபோது யாருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. தன் தந்தை தனக்களித்த சாபம் பற்றியும் ஜனகரின் அவையில் தன் தந்தை வாதப் போரில் தோற்று நீரில் மூழ்கடிக்கப்பட்டது குறித்தும் தாய் மூலம் அறிந்த அஷ்டவக்கிரர் ஜனகரின் அவையை அடைந்தார். எட்டுக் கோணல்களுடன் கூடிய உடலமைப்புடன் சென்ற முனிவரைப் பார்த்து ஜனகனின் அவையே சிரித்துக் கூத்தாடியது. கோபமுற்ற முனிவர்,”மன்னா உம் கேள்விக்குப் பதில் நான் தருகிறேன். ஆனால் இந்தத் தோல் வியாபாரிகளையும், கசாப்புக் கடைக்காரர்களையும் வெளியேற்றுங்கள்” என்று கூறினார். கொந்தளித்த சபை ஆட்சேபம் தெரிவித்தது. மன்னர் ”அஷ்டவக்கிரரே, ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள். இது பண்டிதர்கள் நிறைந்த சபை” என்று பதிலளித்தார். ”ஒருவரின் உடலின் வெளிப்புறத் தோற்றத்தையும் தோலையும் பார்த்து எடைபோடும் இவர்கள் தோல் வியாபாரிகள் மற்றும் கசாப்பு கடைக்காரர்கள்தானே “ என்று சாடினார் அஷ்டவக்கிரர். அவமானம் அடைந்த அப்பண்டிதர்கள் அவையை விட்டு வெளியேறினார்கள். பின்னர் அஷ்டவக்கிரர் மன்னரிடம், ”கனவில் பிச்சைக்காரனாக இருப்பதற்கு வருந்துவது, விழித்தவுடன் ராஜாவாக இருப்பதற்கு மகிழ்வது என இருக்காதே. இரண்டையுமே சமமாகக் கருதக் கற்றுக் கொள். உன் இதயத்தை எப்போதும் உயர்ந்த விழிப்புணர்வோடு வைத்திரு” என்று போதித்தார். இது அஷ்டவக்கிர கீதை எனப்படுகிறது. இதைக் கேட்டு ஜனகர் தெளிவடைந்தார். மேலும் அஷ்டவக்கிரர் ஜனக மகாராஜாவிடம், ”ஏகாதிபதிகளில் மிகச் சிறந்த மன்னரே, இச்சபையில் வந்தின் என்பவனுடன் நான் வாதப்போர் புரிய வந்துள்ளேன். அவன் எங்கிருக்கிறான் ? அவனை என் முன்னிலையில் கொண்டு வரும்படிச் செய்யுங்கள்” என்று கூறினார். இதைக் கேட்டதும் அஷ்டவக்கிரர் முன்பு வந்த வந்தின் “நெருப்பு, சூரியன், இந்திரன், யமன் ஆகியோர் ஒருவரே” என்று அவர்களின் பராக்கிரமத்தைப் பற்றிக் கூறினான். அதற்கு மறுமொழியாக அஷ்டவக்கிரர் இரண்டின் சிறப்பைப் புலப்படுத்தும் வண்ணம் “ இந்திரன் – அக்னி, நாரதர் – பர்வதர், அசுவினி குமாரர்கள், கணவன் மனைவி ஆகியவர்கள் தெய்வீக இணைகள்” என இருவர் சிறப்பைக் கூறினார். இதைக்கேட்டு வந்தின் மூன்றின் சிறப்பாக சொர்க்கம் நரகம் பூமி மற்றும் சூரியன் சந்திரன் நெருப்பைப் பற்றிக் கூற அஷ்டவக்கிரரோ நான்கின் சிறப்பாக நான்கு திசைகள், வர்ணாசிரமம் பற்றிக் கூறுகிறார். தொடர்ந்து வந்தின் வேள்விகள், நதிகள் ஐந்து என்று கூற, அஷ்டவக்கிரரோ வேள்விக்கொடையாக ஆறு பசுக்கள், பருவங்கள் ஆறு, புலன்கள் ஆறு என அடுக்குகிறார். வீணையின் தந்திகள் ஏழு, சப்தரிஷிகள் ஏழு என வந்தின் கூற அஷ்ட வசுக்கள், சரபத்தின் கால்கள் எட்டு எனக் கூறுகிறார் அஷ்டவக்கிரர். கணக்கில் ஒன்பது என்ற எண்களே உள்ளன என்று வந்தின் கூற ஞானாசிரியர்கள் பத்து, பெண்கள் கருச்சுமக்கும் காலம் பத்து என அஷ்டவக்கிரர் பதில் அளிக்கிறார். விடாமல் வந்தின் ருத்திரர்கள் பதினோரு பேர் என்று கூற அஷ்டவக்கிரரோ ஆதிதியர்கள் பன்னிருவர் எனப் புகல்கிறார். திரியோதசி எனப்படும் பதிமூன்றாவது நாள் சிறப்பு பதிமூன்று தீவுகள் உள்ளன என்று கூறிய வந்தின் பாதியில் நிறுத்திவிட, அஷ்டவக்கிரர் தொடர்ந்து கேசியால் பதிமூன்று வேள்விகள் செய்யப்பட்டன. வேதத்தின் அதிச்சந்தங்களால் பதிமூன்றும் விழுங்கப்பட்டன என்று மீதி சுலோகத்தைச் சொல்லி முடிக்கிறார். இதைக் கேட்டு வந்தின் தோல்வியால் தலை குனிய அஷ்டவக்கிரரோ தன் தந்தையை முன்பு வாதப்போரில் ஜெயித்து வந்தின் நீரில் மூழ்கடித்ததைப் போல வந்தினையும் நீரில் மூழ்கடிக்க வேண்டும் என்று மன்னரிடம் கேட்கிறார். அப்போது நீரில் மூழ்கிய அஷ்டவக்கிரரது தந்தை கஹோடர் இன்னும் பதினோரு முனிவர்களுடன் அங்கே தோன்றுகிறார். வந்தினோ தன் தந்தை வருணன் செய்து வந்த யாகத்துக்கு வேதம் ஓத அவர்களை நீரில் மூழ்கடித்து அனுப்பியதாகவும் இப்போது யாகம் முடிந்து திரும்பப் பெற்றதாகவும் கூறுகிறான். அஷ்டவக்கிரர் கேட்டுக்கொண்டதுபோல் வந்தின் நீரில் மூழ்கித் தன் தந்தை வருணனை அடைகிறான். அஷ்டவக்கிரருடன் ஆசிரமம் திரும்பிச் சென்ற கஹோடர் தன் மனைவி சுஜாதாவின் முன்னிலையில் சமங்கா நதியில் இறங்குமாறு பணிக்கிறார். தந்தையின் ஆணைக்கு ஏற்ப அஷ்டவக்கிரர் சமங்கா நதியில் மூழ்கி எழ அவரின் அஷ்டகோணலான உடல் உறுப்புகள் அனைத்தும் சீராகின. அவர் தன் தந்தை தனக்களித்த சாபவிமோசனம் விலகி முழுமையாக மனிதராக மேலெழுந்து வந்து தன் பெற்றோரை வணங்கினார். ஜனக மன்னருக்கு விழிப்புணர்வைப் போதித்தது மட்டுமல்ல தன் தந்தையையும் நீரிலிருந்து மீட்டெடுத்த அஷ்டவக்கிரர் தன் மனத்தின்மைக்காகவும், ஞானத்தெளிவுக்காகவும் போற்றப்பட வேண்டியவர் என்பது உண்மை. http://honeylaksh.blogspot.com/2024/06/blog-post_15.html
-
இலங்கை - சீன இராஜதந்திர உறவுகள் பெய்ஜிங்கில் மீளாய்வு!
16 JUN, 2024 | 02:17 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பல்துறைசார் இராஜதந்திர உறவுகள் தொடர்பில் வட்டமேசை கலந்துரையாடல் நாளை திங்கட்கிழமை (17) பெய்ஜிங்கில் இடம்பெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேசேகர தலைமையில் விசேட பிரதிநிதிகள் குழு சென்றுள்ளது. பெய்ஜிங்கில் இடம்பெறும் இந்த இருதரப்பு கலந்துரையாடலில் சீன வெளியுறவு துணை அமைச்சர் சன் வெய்டாங் கலந்துகொள்வார். அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு ஈடுபாட்டின் துறைகளில் முன்னேற்றம் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்படவுள்ளது. இதற்கு முன்னர் இத்தகையதொரு கலந்துரையாடல் 2023ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பில் நடைபெற்றது. இலங்கை - சீன உறவுகள் மற்றும் கூட்டுத்திட்டங்கள் என்பவை தொடர்பில் முழுமையாக பெய்ஜிங்கில் கலந்துரையாடலில் மீளாய்வு செய்யப்படும். அத்துடன் இருதரப்பு புதிய அணுகுமுறைகளுக்கான வாய்ப்புகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும். பொருளாதார உறவுகளை பொறுத்தவரையில் இலங்கையின் முக்கியமானதொரு பங்காளியாக சீனா உள்ளது. குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தற்போது முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது. அதாவது மூன்றாம் கடன் தவணையை சர்வதேச நாணய நிதியம் விடுவித்து இலங்கையின் பொருளாதாரத்துக்கு உத்தரவாதம் அளித்துள்ளது. அதை தொடர்ந்து, சர்வதேச கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் இலங்கை கைச்சாத்திட வேண்டும். இதற்கான இறுதிக்கட்ட தீர்மானங்களுக்காக வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு இவ்வாரத்தில் ஜப்பான் செல்கின்றது. ஆனால் சர்வதேச கடன் மறுசீரமைப்பு விடயத்தில் சீனா தனித்து செயற்படுவதனால் இலங்கைக்கு நெருக்கடியானதொரு நிலைமையே உருவாகியுள்ளது. இவ்வாறானதொரு தருணத்தில் பெய்ஜிங்கில் இடம்பெறுகின்ற இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பல்துறைசார் இராஜதந்திர உறவுகள் தொடர்பான கலந்துரையாடல், கடன் மறுசீரமைப்புக்கு சாதகமான சூழலை உருவாக்கும் என்ற நம்பிக்கையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/186196
-
பிரிட்டிஸ் இளவரசி கேட்மிடில்டனிற்கு புற்றுநோய் - வீடியோ அறிக்கையில் விபரங்களை வெளியிட்டார்
புற்றுநோய் கண்டறிந்த பிறகு முதன்முறையாக பொது நிகழ்ச்சியில் தோன்றிய கேட் மிடில்டன் இங்கிலாந்து மன்னர் சார்லஸின் மூத்த மகன் வில்லியம். இவரது மனைவி கேட் மிடில்டன். வில்லியம்- கேட் மிடில்டன் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பிறகு கேட் மிடில்டனை பொது வெளியில் காண முடியவில்லை. இது தொடர்பாக கேள்வி எழுந்த நிலையில், கேட் மிடில்டன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என அதிர்ச்சி தகவல் வெளியானது. புற்றுநோய் குணமாக கேட் மிடில்டன் ஹீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் வெளியுலகில் தோன்றாமல் இருந்தார். இந்த நிலையில் நேற்றுதான் பொது வெளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என்றார். மன்னர் சார்லஸின் பிறந்த நாளை முன்னிட்டு லண்டனில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கேட் மிடில்டன் கலந்து கொண்டார். இதன்மூலம் சுமார் ஆறு மாதத்திற்கு பிறகு பொது வெளியில் கேட் மிடில்டன் காணப்பட்டார். கேட் மிடில்டனுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்ட அதேவேளையில் மன்னர் சார்லஸ்க்கும் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டதால், சிசிக்சை மேற்கொண்டு சில வாரங்களிலேயே பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கேட் மிடில்டன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் சிகிச்சை மூலம் நல்ல முன்னேற்றம் அடைந்ததாக தெரிவித்தார். https://thinakkural.lk/article/303864
-
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த திருகோணமலையை சேர்ந்த சாதனை வீரன் ஹஷன் ஸலாமா!
16 JUN, 2024 | 01:25 PM திருகோணமலையை சேர்ந்த முஹம்மட் ஹஷன் ஸலாமா நேற்று சனிக்கிழமை (15) இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு இடையிலான 42 Km தூரத்தினை உடைய பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். நேற்று அதிகாலை 02.00 மணிக்கு நீந்தத் தொடங்கி முற்பகல் 11.00 மணியளவில் தனது நீச்சல் பயணத்தை நிறைவு செய்துள்ளார். பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த இலங்கையின் எட்டாவது நபராகவும், பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த உலகின் முதலாவது இஸ்லாமிய நபராகவும் ஹஷன் ஸலாமா திகழ்கிறார். தரம் 10இல் கல்வி கற்கும் 15 வயதுடைய இவர், கடந்த மூன்று மாதங்களாக இச்சாதனை முயற்சிக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார். கடந்த மாதம் 18ஆம் திகதி இவர் பாக்கு நீரிணையின் இலங்கை கடல் எல்லையில் இருந்து தலைமன்னார் வரையான தூரத்தை பயிற்சி அடிப்படையில் நீந்திக் கடந்துள்ளார். இவருக்கான நீச்சல் பயிற்சிகளை விமானப்படை கோப்ரல் றொசான் அபேசுந்தர வழங்கி வருகிறார். மேலும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த திருகோணமலையைச் சேர்ந்த ஹரிகரன் தன்வந்தையும் இவரே பயிற்றுவித்திருந்தார். இலங்கையரான இள வயதையுடைய பஹ்மி ஹஸன் சலாமா இலங்கையின் விளையாட்டுத்துறை வரலாற்றில் தனது பெயரை பதிந்துகொள்வதற்காக தனது இலக்கினை அடையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமன்றி, திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் நடத்தப்பட்ட அகில இலங்கை கடல் நீச்சல் போட்டியில் வெற்றியாளராக தெரிவாகியிருக்கிறார். பஹ்மி ஹஸன் சலாமா விளையாட்டுத்துறைக்கு அப்பால் சென்று, தனது அர்ப்பணிப்புணர்வோடு நீருக்குக் கீழான சுத்திகரிப்புப் பணிகள் மற்றும் கடற்பாதுகாப்பு செயன்முறைகள் தொடர்பாகவும் தனது நேரடி பங்களிப்பினை வழங்கியுள்ளார். https://www.virakesari.lk/article/186188
-
மன்னாருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில்
மன்னாரில் 442 காணி உறுதிப்பத்திரங்களை வழங்கினார் ஜனாதிபதி 16 JUN, 2024 | 02:25 PM நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான "உறுமய" தேசிய செயற்றிட்டத்தின் கீழ், மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிப் பத்திரங்களை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சற்று முன்னர் மன்னார் நகர மண்டப கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்துக்கு 5000 காணி உறுதிகள் வழங்கப்படவுள்ள நிலையில், அவற்றில் 442 உறுதிப்பத்திரங்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. இதன்போது விவசாயிகளுக்கான கடன் திட்டம் மற்றும் காப்புறுதிக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் தலைவர் காதர் மஸ்தான், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், றிசாட் பதியூதின், திலீபன், அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் உட்பட அரச திணைக்கள உயர் அதிகாரிகள் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இந்த அமர்வில் மன்னார் தீவில் கனியவள மணல் அகழ்வு, மின் காற்றாலை அமைத்தல், மடு பெருவிழாவை முன்னிட்டு மடு வீதியிலிருந்து மடு தேவாலயம் வரை யானைகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள வீதியின் ஓரங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் துப்பரவு செய்யும்போது, அதை வன இலாகா பகுதியினர் தடை செய்து தொழிலாளர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவது மற்றும் விவசாயம் முதலான விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன. https://www.virakesari.lk/article/186190
-
பொது வேட்பாளர் என்பது அவசியமில்லை – ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா
பொது வேட்பாளர் என்பது அவசியமில்லை என்றே நான் நினைக்கிறேன். அந்த முயற்சியானது தமிழ் மக்களுக்கு பயனற்றது மாத்திரமல்ல அது பாதிப்பையே ஏற்படுத்தும் என ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று (15) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் சிலர் பேசி வருகின்றனர். அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் என்னைப் பொறுத்த வரையில் பொது வேட்பாளர் என்பது அவசியமில்லை என்றே நினைக்கிறேன். அந்த முயற்சியானது தமிழ் மக்களுக்கு பயனற்றது மாத்திரமல்ல அது பாதிப்பையே ஏற்படுத்தும். உண்மையில் தமிழ் மக்களுக்கு நீண்ட காலமாக இருந்து வருகின்ற பிரச்சனைகளை தீராத பிரச்சனைகளாக வைத்திருப்பதற்கான ஒரு முயற்சியாகவே இதனை நான் பார்க்கிறேன். இவர்கள் எல்லோரையும் உருளைக் கிழங்கு மூட்டையில் கட்டி வைத்திருந்தது போன்று ஒன்றாக கட்டி வைத்திருந்தாலும் இன்றைக்கு பிரபாகரன் இல்லாத சூழலில் கட்டு கழன்டு உள்ளதால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்கு உருண்டோடியது போன்று சிதறுப்பட்டு இருக்கின்றனர். இவ்வாறான நிலைமையில் இவர்களுக்குள் ஐக்கியம் ஒற்றுமை எங்கே இருக்கிறது. பர வருடமாக இப்படி கட்டி வைத்து என்ன கிடைத்தது. அழிவை கட்டுப்படுத்த முடிந்ததா அல்லலது முன்னேற்றம் ஏதும் வந்ததா? ஒன்றும் இல்லாத நிலையில் இப்ப தேர்தல் வருகிறபடியால் மீண்டும் அந்த என்றும் பற்றி பேசுகின்றர். எம்மைப் பொறுத்தவரையில் இவர்களைப் போன்று அல்லாமல் கடந்த காலங்களில் நாம் மக்களுக்கு எதை கூறினோமே அதனையே இப்போதும் கூறுகிறோம். ஆக சொல்வதை செய்வதும் செய்வதை சொல்வதும் தான் நான். எனவே எங்களை நம்பி மக்கள் எம்மோடு பயணிப்பதன் ஊடாக பல்வேறு விடயங்களை பெற்றுக் கொடுக்க முடியும் என தெரிவித்தார். https://thinakkural.lk/article/303892
-
ஜப்பானில் பரவுகிறது சதையை உண்ணும் பாக்டீரியா.. இரண்டே நாட்களில் உயிரைப் பறிப்பதால் பீதியில் மக்கள்
பாதித்த இரண்டே நாட்களில் உயிரைப் பறிக்கும் சதையை உண்ணும் அரிய வகை பாக்டீரியா ஜப்பானில் பரவி வருவது மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ட்ரெப்டோகோக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் (Streptococcal toxic shock syndrome) (STSS) எனப்படும் நச்சு அதிர்ச்சி நோய் பாதிப்பு நச்சுக்களை இரத்த ஓட்டத்தில் பரவச் செய்து உடல் உறுப்புகளுக்கு கடுமையான சேதத்தை விளைவிக்கிறது. ஜப்பானில் கொரோனா கட்டுப்பாடுகள் சமீபத்தில் முழுவதுமாக தளர்த்தப்பட்ட நிலையில் இந்த சதையை உண்ணும் பாக்டீரிய ஜூன் 2 நிலவரப்படி சுமார் 977 பேரை தாக்கியுள்ளது. கடந்த வருடம் இதனால் 941 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அறிவியலாளர்கள் கூற்றுப்படி கடந்த 1999 ஆம் ஆண்டு இந்த பாக்டீரியா முதல் முதலில் கண்டறியப்பட்டது. இந்த பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தொண்டை வறட்சி, காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம், மூட்டுகளில் வலி, வீக்கம் ஆகியவை முதலில் ஏற்படும். பின் படிப்படியாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் உறுப்புக்கள் செயலிழப்பு ஏற்பட்டு இறுதியில் மரணத்துக்கு வழிவகுக்கும். இந்த உயிரிழப்புகள் அதிகபட்சமாக பாக்டீரியா தாக்கிய 48 மணி நேரத்துக்குள் ஏற்படும் என்று டோக்கியோ மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த நோய்த்தொற்றுகள் பிரிவு மருத்துவர் கென் கிகுச்சி தெரிவிக்கிறார். அதிகாலையில் முதலில் கால் வீக்கம் ஏற்பட்டு மதியத்துக்குள் மூட்டு வரை பரவும் அளவுக்கு பாதிப்பின் வீரியம் வேகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது உள்ள பாக்டீரியா பரவல் வரும் நாட்களில் வேகம் எடுத்து பாதிப்பு எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. https://thinakkural.lk/article/303868
-
இளநீர் ஏற்றுமதி மூலம் இலங்கை ஒரு மாதத்தில் ஈட்டிய வருமானம் 3,400 மில்லியன்!
இளநீர் ஏற்றுமதி 30% வீழ்ச்சி! வெண்ணிற ஈ தாக்கத்தினால் இளநீர் செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. வெண்ணிற ஈ நோய்த் தாக்கத்தினால் இளநீர் ஏற்றுமதியில் 30% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நிலவிய வறட்சியினால் வெண்ணிற ஈக்களின் பரவல் அதிகரித்துள்ளது. வெண்ணிற ஈ, மஞ்சள் நிறத்தினால் அதிகம் ஈர்க்கப்படுவதால், இளநீர்ச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/303823
-
மன்னாருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில்
மன்னார் ஆயரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் 16 JUN, 2024 | 02:22 PM மன்னாரில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள இன்று ஞாயிற்றுக்கிழமை (16) மன்னாருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காலை 10 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மன்னார் ஆயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின்போது ஜனாதிபதி ரணில் மன்னார் ஆயரிடம் ஆசி பெற்றார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மன்னார் விஜயத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல இடங்களிலும் விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/186185