Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 15 JUN, 2024 | 11:56 AM (ஆர்.சேது­ராமன்) 2023 ஆரம்பம் முதல் 2024 மே மாதம் வரை உலகில் சுமார் 120 மில்­லியன் மக்கள் பல­வந்­த­மாக இடம்­பெ­யரச் செய்­யப்­பட்ட நிலையில் இருந்­தனர் என ஐ.நா வியா­ழக்­கி­ழமை (13) தெரி­வித்­துள்­ளது. அக­தி­க­ளுக்­கான ஐ.நா. உயர் ஸ்தானி­க­ரா­ல­யத்தின் அறிக்­கை­யொன்றில் இத்­த­ர­வுகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. அக­திகள், புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் மற்றும் உள்­ளக ரீதி­யாக இடம்­பெ­யர்ந்தோர், நாடாற்ற நிலையில் உள்­ள­வர்கள் குறித்த புள்­ளி­வி­ப­ரங்கள் இந்த அறிக்­கையில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. 2023 இறு­தியில், துன்­பு­றுத்­தல்கள், சண்­டைகள், வன்­மு­றைகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் படு­மோ­ச­மான சட்டம் ஒழுங்கு மீறல்­க­ளி­லி­ருந்து தப்­பு­வ­தற்­காக உலகில் 117.3 மில்­லியன் மக்கள் இடம்­பெ­யர்ந்­தி­ருந்­தனர் என மேற்­படி அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மே மாதம் 120 மில்­லியன் மக்கள் உல­க­ளா­விய ரீதியில் இடம்­பெ­யர்ந்­தி­ருந்­தனர். இது 2022 ஆம் ஆண்டின் நிலை­மை­யை­விட 10 சத­வீதம் அதி­க­மாகும். இந்த எண்­ணிக்கை உலக மக்கள் தொகையில் 1.5 சத­வீ­த­மாகும் எனவும் அவ்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பெரும் அள­வி­லான இடப்­பெ­யர்­வு­க­ளுக்கு மோதல்­களே கார­ண­மாக இருந்­தன என அக­தி­க­ளுக்­கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் பிலிப்போ கிராண்டி தெரி­வித்­துள்ளார். "சர்­வ­தேச புவிசார் அர­சி­யலில் மாற்­ற­மொன்று ஏற்­பட்டால் தவிர, துர­திஷ்­ட­வ­ச­மாக இந்த எண்­ணிக்கை உயர்­வ­டையும் நிலை­யையே நான் காண்­கிறேன்" என அவர் கூறினார். "தொடர்ச்­சி­யாக 12 ஆவது வரு­ட­மாக அதிகள் மற்றும் இடம்­பெ­யர்ந்­தோரின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. 114 மில்­லி­ய­னி­லி­ருந்து 120 மில்­லி­ய­னாக அது அதி­க­ரித்­துள்­ளது. இந்த எண்­ணிக்­கைக்குப் பின்னால் பல மனித துய­ரங்கள் உள்­ளன. ஒற்­றுமை மற்றும் ஒரு­மு­கப்­பட்ட செயற்­பா­டுகள் மூலமே இத்­து­ய­ரங்­களைப் போக்க முடியும்" எனவும் அவர் தெரி­வித்துள்ளார். 2023 ஏப்­ரலில் ஆரம்­ப­மான சூடான் மோதல் கார­ண­மாக, உலகின் மிகப் பெரிய மனி­தா­பி­மான மற்றும் இடம்­பெ­யர்வு பிரச்­சி­னை­யொன்று ஏற்­பட்­ட­தா­கவும் இதனால் 2023 டிமெம்பர் வரை 6 மில்­லியன் பேர் இடம்­பெ­யர்ந்­தி­ருந்­தன்ர எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது தொடரும் காஸா யுத்தம் கார­ண­மாக 1.7 மில்­லியன் பேர், அதா­வது காஸா மக்­களில் 75 சத­வீ­த­மானோர் காஸா­வுக்குள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர் எனவும் மேற்­படி அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பலஸ்­தீ­னத்­துக்­கான ஐ.நா நிவா­ரண முக­வ­ரத்தின் (UNRWA) தக­வ­லின்­படி, 60 இலட்சம் பலஸ்­தீ­னர்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர் எனவும், அவர்­களில் சுமார் 1.6 மில்­லியன் பேர் காஸாவில் உள்­ளனர் எனவும் தெரி­வித்­துள்­ளது. மியன்மார், ஆப்­கா­னிஸ்தான், உக்ரேன், கொங்கோ ஜன­நா­யகக் குடி­ய­ரசு, சோமா­லியா, ஹெய்ட்டி, சிரியா, ஆர்­மே­னியா ஆகிய நாடு­க­ளி­லி­ருந்தும் மோதல்கள் மற்றும் வன்­மு­றைகள் கார­ண­மாக மக்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது, அக­திகள் மற்றும் குடி­யேற்­ற­வா­சி­களில் பெரும்­பா­லானோர் செல்­வந்த நாடு­க­ளையே நாடு­வ­தாக எண்­ணப்­ப­டு­கின்ற போதிலும், அவர்­களில் 75 சத­வீ­த­மானோர் குறைந்த மற்றும நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்குச் சென்றுள்ளனர் எனவும் மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், புதிய புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களில் அரைப்பங்கு 5 நாடுகளுக்கே கிடைத்துள்ளதாகவும் ஆகக்கூடுதலாக அமெரிக்காவுக்கு 1.2 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/186122
  2. Published By: DIGITAL DESK 3 15 JUN, 2024 | 03:18 PM இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு 20ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர், இந்த வியஜயத்தின் போது இலங்கையில் இந்திய முதலீடுகள் மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்துவார் என தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/186140
  3. எமது சட்டப் புத்தகத்திலேயே இருக்கின்ற அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துகின்ற போது ஏன் பிரச்சினைகள் வருகின்றன என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கேள்வியெழுப்பியுள்ளார். எனவே, மக்கள் ஓரணியில் திரண்டு இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டியது மிக மிக அவசியம், கமராக்களுக்காக அல்லாமல் மனதளவில் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு எதிராக தென்னிலங்கையில் மீண்டும் எழுந்துள்ள எதிர்ப்புக்கள் தொடர்பில் கேட்டபோதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 13ஆவது திருத்தம் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசமைப்பின் 13ஆவது திருத்தம் என்பது எமது சட்டப் புத்தகத்தில் இன்று அல்லது நேற்று வந்த ஒன்றல்ல. இந்த 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றபோது ஏன் பிரச்சினைகள் வருகின்றன? நாட்டிலுள் இனங்களும் மதங்களும் ஏனைய இனங்களையும் மதங்களையும் மதிப்பதில்லை. அதுவே இதற்கான பிரதான காரணமாக உள்ளது. ஆகவே, சற்று சிந்தித்துப் பாருங்கள். சிங்கள மொழி பேசும் எமது சிங்கள மக்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தொடர்பில் நம்பிக்கையின்றிச் செயற்படுகின்றனர். அதேபோன்றே தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் தொடர்பில் நம்பிக்கையின்றி செயற்படுகின்றனர். அவ்வாறே முஸ்லிம் மக்களும் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் தொடர்பில் நம்பிக்கையின்றிச் செயற்படுகின்றனர். இவ்வாறு ஒவ்வொருவரும் நம்பிக்கையற்ற நிலையிலேயே இருக்கின்றனர். இதுவே இங்குள்ள பாரிய பிரச்சினையாகும். எனவே, அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதனூடாகவே நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். அதுவே மிக முக்கியமான விடயமாக உள்ளது. கமராக்களுக்காக அதனை ஏற்படுத்தாமல் மனதளவில் அவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/13th-amendment-act-sajith-question-1718420761
  4. 15 JUN, 2024 | 12:03 PM யாழ். நகர்ப்பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பொது மலசலகூட தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கான திட்டவரைபுகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் நகரப் பகுதிகளுக்கு தினமும் வரும் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் அவசர அவசிய தேவைகருதி நகரப்பகுதியில் நவீன வசதிகளை கொண்ட பொது மலசலகூடம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன் வைக்கப்பட்ட திட்டத்திற்கு அமையவே இன்று சனிக்கிழமை (15) குறித்த திட்டவரைபுகளை இறுதிசெய்யும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், குறித்த மலசல கூட தொகுதியை அமைப்பதற்கான திட்டவரைபுகள் இறுதி செய்யப்பட்டதுடன், குறித்த திட்டத்தை துரிதமாக முன்னெடுக்குமாறும் அமைச்சத் துறைசார் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். நகர அபிவிருத்தி அதிகார சபையின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள குறித்த திட்டமானது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திட்டமிடல்களை அடுத்து விரைவில் நிமாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்கலந்துரையாடலின் பொது யாழ் மாநகர ஆணையாளர் , பொறியியலாளர்கள் அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186120
  5. இணையம் மூலமான வங்கி கொடுக்கல் வாங்கள் பரிவர்த்தனைகளுக்கு பூட்டு சின்னம் இல்லாத இணையதளங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் எவ்வாறு தொடர வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை வங்கி விளக்கமளித்துள்ளது. பூட்டு சின்னம் அல்லது https என்ற இணைய பயன்பாட்டு நெறிமுறை இல்லாமல் இணையதளங்களைப் பயன்படுத்தும் போது சைபர் ஊடுருவல் மூலம் உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைத் திருடலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி இணையப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது பூட்டு சின்னம் உள்ள இணையதளங்களை மட்டும் பயன்படுத்துவதில் கவனமாக இருக்குமாறு இலங்கை வங்கி அறிவுறுத்தியுள்ளது. மேலும், நிதி மோசடிக்கு சிக்காமல் கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. https://www.facebook.com/BANKOFCEYLON/videos/429021386666008/?ref=embed_video&t=54 https://tamilwin.com/article/online-transaction-problem-solving-1718391097?itm_source=parsely-detail
  6. 15 JUN, 2024 | 12:24 PM (எம்.நியூட்டன்) உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கப் பொன்விழா மற்றும் 17ஆவது சர்வதேச மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை (14) யாழ்ப்பாணம் தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது. 4வது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு நினைவாலயத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு பண்பாட்டுக் குழு வரவேற்புடன் விழா அரங்கிற்கு பேராளர்கள் அழைத்து வரப்பட்டனர். மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் நிகழ்வில் சர்வதேச மாநாட்டிற்கான நூல் வெளியிடப்பட்டது. நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டதுடன் நிகழ்வில் மதத்தலைவர்கள், புதுவைப் பல்கலைக்கழகம் பேராசிரியர் பாஞ். இராமலிங்கம், லண்டனை சேர்ந்த அமுது இளஞ்செழியன் வி ஐ டி பல்கலைக்கழகம் நிறுவநர் - வேந்தர், முனைவர் ஜி.விசுவநாதன் அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர், பேராசிரியர் இரா. வேல்ராஜ், வைத்தியர் பகீரதன் அமிர்தலிங்கம் துணைத் தலைவர் IMTC இலண்டன், மாவை சோ. தங்கராஜா, ஆலோசகர், IMTC, ஜெர்மனி வவுனியா பல்கலைக்கழக தூணைவேந்தர் பேராசிரியர் த. மங்களேஸ்வரன் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எ. இளங்கோவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சோ.சேனாதிராஜா, எம்.கே சிவாஜிலிங்கம் யோகேஸ்வரன் மற்றும் இலங்கை இந்தியா, மலேசியா என கல்வியலாளர்கள் முதல்நாள் நிகழ்வில் கலந்து கொண்டார்கள். நிகழ்வில் மாநாட்டு புத்தக வெளியீடு மற்றும் சிறப்புரைகள் இடம்பெற்றதுடன் மூன்று நாட்கள் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186117
  7. கனடாவில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவொன்றில் பங்குற்ற தமிழ் யுவதியொருவர் இலங்கை படையினரை கடுமையாக சாடியுள்ளார். சரிகா நவநாதன் என்ற தமிழ் யுவதியின் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உரை சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. கனடாவின் வின்ட்ஸோர் பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்வில் இந்த யுவதி உரையாற்றியிருந்தார். இன வன்முறை எவ்வித தடையும் இன்றி பாதுகாப்பான முறையில் கனடாவில் தாம் பட்டப் படிப்பினை பூர்த்தி செய்ததாகத் தெரிவித்துள்ளார். இந்த வரப்பிரசாதம் தமது தாயக பூமியான இலங்கை மாணவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இன வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்த மாணவர்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அடக்குமுறை இன்று வரையிலும் தமிழ் மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை தொடர்வதாக சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பலஸ்தீனத்தில் தற்பொழுது இதே நிலைமை நீடித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த காணொளிக்கு எதிர்ப்பும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சரிகா சட்டக் கல்லூரியின் கட்டக் கற்கைநெறியை பூர்த்தி செய்து பட்டம் பெற்றுக்கொண்டுள்ளார். https://tamilwin.com/article/canadaian-tamil-woment-accuesed-sl-forces-1718417103
  8. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மயக்க மருந்து பற்றாக்குறையினால் சத்திரசிகிச்சைகளை இரத்து செய்ய நேரிட்டதாக நேற்று(14) அறிவிக்கப்பட்டது. Isoflurane மயக்க மருந்திற்கே தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டது. குறித்த மயக்க மருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவற்றை பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் வைத்திய விநியோக பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். மருந்துகளை விடுவிப்பதற்கான ஆவணங்களை இறக்குமதியாளர்கள் சமர்ப்பிக்காமையால், மருந்துகளை பகிர்ந்தளிப்பதில் தாமதம் நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/303772
  9. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 14 ஜூன் 2024 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் 2017ஆம் ஆண்டு குரூப் 2 தேர்வில் கலந்துகொண்டு 121.5 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற திருநங்கை அனுஸ்ரீ தொடர்ந்த வழக்கில், மாற்று பாலினத்தவரை சிறப்பு பிரிவினராக கருதி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநங்கைகளுக்கான நலவாரியம், தொழில் தொடங்குவதற்கான நிதி, கட்டணமில்லா பேருந்து பயணம், கட்டணமில்லா கல்வி என பல்வேறு சமூகநலத் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மாற்று பாலினத்தவருக்கான சிறப்பு இடஒதுக்கீடு தேவை என்ற கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை. தமிழ்நாட்டின் திருநங்கைகள் நலவாரியத்தின் உறுப்பினராகவும், செயற்பாட்டாளராகவும் இருந்து வரும் திருநங்கை அனுஸ்ரீ சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஒன்றில் தான், தமிழக அரசு மாற்று பாலினத்தவர்களை சிறப்பு பிரிவாக கருதி அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். வழக்கு என்ன? தான் தொடர்ந்த வழக்கு குறித்து பிபிசி தமிழிடம் திருங்கை அனுஸ்ரீ பேசினார். கீழ்கண்ட தகவல்களை அவர் தெரிவித்தார். 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வை எழுதியுள்ளார் அனுஸ்ரீ. ஆனால், தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அவரது கட்-ஆஃப் மதிப்பெண் போதவில்லை என்று அவருக்கு பணி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யாமல் நிராகரித்து விட்டது டிஎன்பிஎஸ்சி. திருநங்கையர் பிரிவில் தேர்வெழுதியிருந்தாலும், அந்த பிரிவுக்கான சிறப்பு ஒதுக்கீடு எதுவும் இல்லை என்று சுட்டிக்காட்டிய டிஎன்பிஎஸ்சி, அனுஸ்ரீ சார்ந்த சமூகத்தின் பெண்களுக்கான இடஒதுக்கீட்டு வரிசைப்படி அவரது மதிப்பெண் போதவில்லை என்று அவரை நிராகரித்துள்ளது. இதை எதிர்த்துதான் 2018-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் அனுஸ்ரீ. இந்த வழக்கில் தற்போது அவருக்கு சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் பணி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பட மூலாதாரம்,ANUSREE படக்குறிப்பு,திருநங்கை அனுஸ்ரீ டிஎன்பிஎஸ்சி கூறியது என்ன? இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விளக்கமளிக்கக்கோரி உத்தரவிட்டது உயர்நீதிமன்றம். டிஎன்பிஎஸ்சி தாக்கல் செய்த பதில் மனுவில், “நாங்கள் வெறும் அரசுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யும் குறிப்பிட்ட அதிகாரங்களை கொண்ட முகமை மட்டுமே. மற்றபடி யாரையும் குறிப்பிட்ட பிரிவிற்குள் சேர்க்கவோ அல்லது விலக்கவோ அரசுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.” “திருநங்கைகளை சிறப்பு பிரிவின் கீழ் சேர்க்க வேண்டும் என்பது தொடர்பாக எந்த வித அரசு வழிகாட்டுதலும் இல்லாத காரணத்தால், சம்மந்தப்பட்ட நபர் அவர் சார்ந்த சமூகத்தின் பெண்கள் பிரிவிற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, அனுஸ்ரீ 121.5 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்திருந்த நிலையிலும், அவரை சிறப்பு பிரிவில் சேர்க்காமல், அவர் சார்ந்த சமூகத்தின் பெண்கள் பிரிவிற்கான 222 கட்-ஆஃப் மதிப்பெண் எடுக்கவில்லை என்று கூறி டிஎன்பிஎஸ்சி நிராகரித்துவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,திருநங்கைகள் இடஒதுக்கீடு தொடர்பாக 2014இல் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம் உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டிய உயர்நீதிமன்றம் இந்நிலையில் தனக்கு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவிற்கான இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுஸ்ரீ தொடர்ந்த வழக்கின் மீது 12.6.2024 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பின்படி, வருகின்ற 22.6.2024-க்குள் அனுஸ்ரீயின் சான்றிதழ் சரிபார்ப்பை முடித்திருக்க வேண்டும் என்றும், தமிழக அரசு மாற்று பாலினத்தவருக்கு சிறப்பு பிரிவின் கீழ் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக 2014-ஆம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “மத்திய, மாநில அரசுகள் மூன்றாம் பாலினத்தவரை சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியவர்களாக கருதி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து விதமான இடஒதுக்கீடும் அவர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அதே தீர்ப்பில் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்தல், சுகாதாரம் மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் வழிகாட்டப்பட்டுள்ளது. ஆனாலும், இன்றளவும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அதிகாரபூர்வமாக இடஒதுக்கீடு அமல்படுத்தப்படாத நிலையே நிலவுகிறது. பட மூலாதாரம்,TNPSC படக்குறிப்பு,தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டு கொள்கை தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு கொள்கையின்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 26.5%, இஸ்லாமிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3.5%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20%, பட்டியலினத்தவருக்கு 18% மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு 1% என மொத்தமாக 69% இடஒதுக்கீடு அமலில் உள்ளது. இதிலேயே உள்ஒதுக்கீடுகளும் அடங்கும். இது இல்லாத 31%, பொதுப்பிரிவில் வந்து விடும். இதைத் தாண்டி டிஎன்பிஎஸ்சி அறிவிக்கும் ஒவ்வொரு பணிகளுக்கு ஏற்றாற்போல் சிறப்பு பிரிவிற்கும் ஒதுக்கீடுகள் உண்டு. அதனடிப்படையில், கணவனை இழந்த பெண்கள், தமிழ் வழி கல்விகற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாட்டுப்பணி செய்து ஓய்வு பெற்றவர்களுக்கான இடஒதுக்கீடுகளும் உண்டு. ஆனால், இது எதிலுமே உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் படி திருநங்கைகளுக்கான சிறப்பு ஒதுக்கீடு சேர்க்கப்படவில்லை. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, திருநங்கைகளை ஆண் அல்லது பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் சேர்க்காமல், சிறப்பு பிரிவில் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இடஒதுக்கீட்டு விதிகளில் பின்பற்றப்படும் சிறப்பு பிரிவுகளின் கீழ் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். பட மூலாதாரம்,P. GEETHA JEEVAN / X படக்குறிப்பு,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ‘வழக்கு முடிந்தவுடன் வழங்கப்படும்’ இந்தியாவிலேயே முதன் முறையாக திருநங்கைகளுக்கான நலவாரியம் அமைத்த மாநிலம் தமிழ்நாடுதான். எனவே விரைவில் திருநங்கைகளுக்கான இடஒதுக்கீடும் வழங்கப்படும் என்று பிபிசி தமிழிடம் கூறினார் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன். அவர் பேசுகையில், “இது தொடர்பாக திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஒரு வழக்கு நடந்துக் கொண்டிருக்கிறது. அது முடிந்த பிறகு சட்டத்துறை உள்ளிட்ட பிற துறைகளோடு கலந்தாலோசித்து அதற்கான முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார். ‘திருநங்கைகளுக்கான கணக்கெடுப்பு நடத்தவேண்டும்’ தமிழ்நாட்டில் திருநங்கைகளுக்கான நலவாரியம், தொழில் தொடங்கும் திருநங்கைகளுக்கு 50000 ரூபாய் உதவித்தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம், கட்டணமில்லா கல்வி, அடையாள அட்டைகளை பெறுவதற்கான முகாம், மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இருந்தாலும் மாநில அளவில் முழுமையான கணக்கெடுப்பு தேவை என்கிறார் செயற்பாட்டாளரான பிரியா பாபு. நம்மிடம் பேசிய அவர், “மற்ற மாநிலங்களை விட திருநங்கைகளுக்கான திட்டங்களில் தமிழ்நாடு தனித்து நின்றாலும், மாநில அளவிலான கணக்கெடுப்பு எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். திருநங்கைகள் எந்த சமூக பின்புலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் ஒட்டுமொத்த சமூகத்தால் ஒதுக்கப்படுகிறார் என்ற அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்க வேண்டியது அவசியம்” என்கிறார். அப்படியெனில் அவர்களுக்கு குறிப்பிட்ட பிரிவில் உள் இடஒதுக்கீடாக வழங்க வேண்டுமா என்ற கேள்வியை முன்வைக்கையில், அதனால் பலனில்லை என்கிறார் அவர். “எந்த இனம், சமூகம் என்று இல்லாமல், அனைத்து பின்புலத்தை சேர்ந்த திருநங்கைகளும் ஒதுக்கப்படும் நிலையில், அவர்களை தனியாக சிறப்பு பிரிவினராக அங்கீகரித்து இடஒதுக்கீடு வழங்குவதே நல்லது” என்கிறார் பிரியாபாபு. பட மூலாதாரம்,PRIYA BABU படக்குறிப்பு,திருநங்கைகளுக்கான வள மையத்தின் நிறுவனர் பிரியா பாபு திருநங்கைகளுக்கான அமைப்பு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின்படி, தமிழ்நாடு , கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், சண்டிகர், உத்தர பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய 12 மாநிலங்களில் திருநங்கைகளுக்கான நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் ஒரு மாநிலத்தில் கூட உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு இடஒதுக்கீடு இல்லை என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இருக்கும் இடஒதுக்கீட்டு பிரிவுகளின் கீழ் வேண்டுமானால் அவர்கள் பலன் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அது தெரிவித்தது. திருநங்கைகளுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று பல்வேறு செயற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புகள் சட்டரீதியாக போராடி வருகின்றனர். https://www.bbc.com/tamil/articles/cw99vn3ng17o
  10. Published By: DIGITAL DESK 3 15 JUN, 2024 | 09:40 AM மீன் பிடி இழுவை படகில் 150 கிலோ கிராம் போதைப்பொருளுடன் ஆறு சந்தேக நபர்களை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் நேற்று வெள்ளிக்கிழமை (14) மாலை தென் கடல் பகுதியில் 400 கடல் மைல் தொலைவில் ஹெரோயின் கடத்தியதாக சந்தேகிக்கப்பட்ட இழுவை படகு கைப்பற்றப்பட்டது. இந்த இழுவை படகு காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு சோதனை மேற்கொண்டதில் அதிலிருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், படகிலிருந்த 6 பேரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/186106
  11. பட மூலாதாரம்,GETTY IMAGES 14 ஜூன் 2024 டெல்லியில் கடந்த 2010-ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாடு ஒன்றில், ‘அமைதியைச் சீர்குலைக்கும் வகையில்’ பேசியதாக, பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் முன்னாள் பேராசிரியர் ஷேக் ஷௌகத் ஹுசைன் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யு.ஏ.பி.ஏ) கீழ் வழக்குத் தொடர டெல்லி துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். துணைநிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும், காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டத்துறை முன்னாள் பேராசிரியர் முனைவர் ஷேக் ஷௌகத் ஹுசைன் ஆகியோருக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யு.ஏ.பி.ஏ) பிரிவு 45 (1)-இன் கீழ் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த டெல்லி துணைநிலை ஆளுநர் வி.ஜி. சக்சேனா அனுமதி அளித்துள்ளார். 2010-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை துணைநிலை ஆளுநர் எடுத்திருக்கிறார். தொடர்புடைய சம்பவத்தில் சுஷில் பண்டிட் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் 28.10.2010 அன்று வழக்குத் தொடரப்படப்பட்டது. முன்னதாக, 2023 அக்டோபரில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153A / 153B மற்றும் 505-இன் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களுக்காக இருவர் மீதும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு (சி.ஆர்.பி.சி) 196-இன் கீழ் வழக்குப்பதிவு செய்ய துணைநிலை ஆளுநர் அனுமதி வழங்கினார். படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பட மூலாதாரம்,X/ALL INDIA RADIO NEWS என்ன சம்பவம்? புதுடெல்லியில் எல்.டி.ஜி அரங்கில், 21.10.2010 அன்று 'ஆசாதி - தி ஒன்லி வே' (‘சுதந்திரம் தான் ஒரே வழி’) என தலைப்பிடப்பட்ட மாநாடு ஒன்றில் அருந்ததி ராய் மற்றும் ஷேய்க் ஹுசைன் இருவரும் 'அமைதியைச் சீர்குலைக்கும் வகையில்' பேசியதாகப் புகார் எழுந்தது. இந்த மாநாட்டில், 'இந்தியாவிலிருந்து காஷ்மீரைப் பிரிக்கும் வகையில்' பிரசாரம் செய்யும் விதமாக பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது. இந்த மாநாட்டில் சையது அலி ஷா கிலானி, எஸ்.ஏ.ஆர்.கிலானி (மாநாட்டைத் தொகுத்து வழங்கியவர் மற்றும் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முதன்மையாக குற்றம்சாட்டப்பட்டவர்), அருந்ததி ராய், முனைவர் ஷேக் ஷௌகத் ஹுசைன் மற்றும் மாவோயிஸ்ட் ஆதரவாளர் வர வர ராவ், ஆகியோர் உரையாற்றினர். 'காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை' என்றும் 'இந்திய ஆயுதப் படையால் வலுக்கட்டாயமாக காஷ்மீர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும்', 'இந்திய அரசிடமிருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சுதந்திரத்திற்காக சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்' எனவும் கிலானி மற்றும் அருந்ததி ராய் தீவிரமாகப் பிரசாரம் செய்யும் வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் பேச்சுக்களின் பதிவுகளும் புகார் அளித்தவரால் வழங்கப்பட்டுள்ளது. புகார் அளித்த, சுஷில் பண்டிட் சி.ஆர்.பி.சி பிரிவு 156 (3)-இன் கீழ், டெல்லி எம்.எம். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து, 27.11.2010 அன்று தேதியிட்ட உத்தரவின்படி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கான வழிமுறைகளுடன் இந்தப் புகாரை நீதிமன்றம் முடித்துவைத்தது. அதன்படி, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அருந்ததி ராய், 1989-ஆம் ஆண்டில் ‘இன் விச் ஆனி கிவ்ஸ் தோஸ் ஒன்ஸ்’ படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை வென்றார் யார் இந்த அருந்ததி ராய்? நாவலாசிரியரும், கட்டுரையாளருமான அருந்ததி ராய், தன்னுடைய ‘காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ (சிறிய விஷயங்களின் கடவுள்) என்ற நாவலுக்காக, 1997-ஆம் ஆண்டு ஆங்கில நாவல்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘புக்கர் பரிசை’ வென்றார். சூழலியல் ஆர்வலராக அறியப்படும் அருந்ததி ராய், சமூக ஆர்வலர் மேதா பட்கருடன் இணைந்து நர்மதை அணை திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கு பெற்றார். தொடர்ந்து, மாவோயிசம், காஷ்மீர் பிரச்னை ஆகிய சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். 1989-ஆம் ஆண்டில் ‘இன் விச் ஆனி கிவ்ஸ் தோஸ் ஒன்ஸ்’ என்ற படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை வென்றார். எனினும், 2015-ஆம் ஆண்டில், “மதச் சகிப்புத்தன்மை மற்றும் இந்தியாவில் வலதுசாரி குழுக்களால் அதிகரித்து வரும் வன்முறைக்கு எதிராக,” அவர் அந்த விருதைத் திருப்பி அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cz448xje5qyo
  12. 14 JUN, 2024 | 05:33 PM (இராஜதுரை ஹஷான்) தேர்தல் தொடர்பில் இலங்கை மக்களே தீர்மானிக்க வேண்டும்.தேர்தல் இடம்பெறுமாயின் உரிய காலவரைபை தயாரித்துக் கொள்ள வேண்டும். தேர்தலை நடத்துவது எமக்கு பிரச்சினையில்லை.இருப்பினும் தற்போதைய செயற்திட்டத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ஏனெனில் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை இன்னும் மீளவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் தெரிவித்தார். இலங்கைக்கு விடுவிக்கப்பட்டுள்ள மூன்றாம் தவணை தொடர்பில் வெள்ளிக்கிழமை (14) காலை இடம்பெற்ற நிகழ்நிலை முறைமை ஊடான ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் இலங்கை முன்னேற்றகரமான நிலையில் இருப்பதை அவதானிக்க முடிகிறது. ஏற்றுக்கொள்ளப்பட்ட செயற்திட்ட நிபந்தனைகள் தாமதமான நிலையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளமை சிறந்ததொரு நிலையாகும். இலங்கையின் தற்போதைய சீர்த்திருத்தங்களினால் பொருளாதாரத்தின் ஆரம்பக்கட்டமைக்கு சீரடைந்துள்ளது. நிதி ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் அதிகாரிகளின் வலுவான செயல்பாட்டை நிர்வாக இயக்குநர்கள் பாராட்டினர். பொருளாதாரம் மீட்சிப்பெற்றுள்ளது. பணவீக்கம் குறைவாகவே உள்ளது. வருவாய் சேகரிப்பு மேம்பட்டுள்ளது. நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு ஸ்திரமடைந்துள்ளது. எவ்வாறாயினும், தற்போதைய கடன் மறுசீரமைப்பு மற்றும் இடம்பெறவுள்ள தேர்தல்கள் ஆகியவற்றால் பாதிப்புகள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் காணப்படுகின்றன. பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், நீண்ட கால உள்ளடக்கிய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு சீர்திருத்த வேகத்தை நிலைநிறுத்துவதற்கும் பொருளாதாரக் கொள்கைகளைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்காக கடன் மறுசீரமைப்பை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை பணிப்பாளர்கள் வரவேற்றுள்ளனர். உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைவாக நிறைவு செய்யவும், சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியுடனான ஒப்பந்தம் இறுதிப்படுத்தப்பட வேண்டும். இலங்கையில் தேர்தல் ஜனநாயக ரீதியில் இடம்பெற வேண்டும்.உள்ளக தேர்தல் விவகாரங்களில் சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் தலையிடவில்லை. தேர்தல் தொடர்பில் இலங்கை மக்களே தீர்மானிக்க வேண்டும்.தேர்தல் ஒன்று இடம்பெறுமாயின் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி புதிய காலவரைபை தயாரித்துக் கொள்ள வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஏற்றுக் கொண்டுள்ள அத்துடன் தற்போது செயற்படுத்தியுள்ள யோசனைகளையும்,மறுசீரமைப்புக்களையும் தொடர வேண்டும் என்பது அவசியமாகும். ஏனெனில் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னும் முழுமையாக மீட்சிப்பெறவில்லை என்றார். https://www.virakesari.lk/article/186085
  13. அமெரிக்க - அயர்லாந்து போட்டி மழையால் கைவிடல்! அமெரிக்கா உள்ளே! பாகிஸ்தான் வெளியே.... 15 JUN, 2024 | 06:57 AM அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டதை அடுத்து, இடம்பெற்றுவரும் இருபதுக்கு - 20 உலகக்கிண்ண சூப்பர் 8 ல் விளையாட அமெரிக்கா தகுதி பெற்றுள்ளது. தென்னாபிரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்குப் பிறகு அமெரிக்கா 6 ஆவது அணியாக சுப்பர் 8 இல் விளையாட தகுதிபெற்றுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா இரு வெற்றிகளைப் பெற்று 5 புள்ளிகளைப் பெற்றிருந்த நிலையில், மழையால் போட்டி கைவிடப்பட்ட நிலையில் இந்தப் போட்டிக்கு ஒரு புள்ளிகள் கிடைத்த நிலையில், 5 புள்ளிகளைப் பெற்று குழு ஏ யில் 2 ஆம் இடத்திற்கு முன்னேறி சுப்பர் 8 க்கு தகுதி பெற்றுள்ளது. குழு ஏ யில் பாகிஸ்தான் அணி 3 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றிபெற்று 2 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில், சுப்பர் 8 க்கு முன்னேறுவதற்கு சாத்தியமில்லாத நிலையில், சுப்பர் 8 க்கு தகுதி பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருபதுக்கு - 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் 30-வது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டி புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நடைபெற இருந்த நிலையில், அங்கு மழை பெய்தமையால் நாணயச் சுழற்சிக்கு தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், மழை தொடர்ந்து பெய்தமையால் ஒரு பந்து கூட வீசாது போட்டி கைவிடப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இந்த போட்டி நடைபெறாமல் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கு தலா ஒவ்வொரு புள்ளிகள் கிடைத்த நிலையில், அமெரிக்க அணி 5 புள்ளிகளுடன் சுப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. அமெரிக்கா 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளில் இரண்டாவது இடத்தில் இருந்தது மழையால் போட்டி கைவிடப்பட்ட நிலையில் கிடைத்த ஒரு புள்ளியுடன் 5 புள்ளிகளைப் பெற்று சுப்பர் 8 சுற்றை உறுதிசெய்தது. பாகிஸ்தான் 3 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 3-வது இடத்தில் உள்ள நிலையில், பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186105
  14. An elephant in Thailand has delivered a rare set of twins in a dramatic birth that left a carer injured as he protected one of the newborns from her mother's attack.
  15. அவரைத் தெரிந்தால் சொல்லமாட்டங்களா அண்ணை?!
  16. கட்டுரை தகவல் எழுதியவர், யோலண்டே நீல், அனஸ்டசியா ஸ்லடோபோல்ஸ்கி பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “அவர்கள் கிசுகிசுத்த குரல்களில் பேசுவற்குக் கட்டாயப்படுத்தப்பட்டனர்,” என்கிறார் மைக்கேல் கஸ்லோஃப். இவர், மத்திய காஸாவில் ஹமாஸ் குழுவினரால் சிறைபிடிக்கப்பட்டு, இஸ்ரேல் சிறப்புப் படைகளால் கடந்த சனிக்கிழமை (ஜூன் 8-ஆம் தேதி) ஆச்சரியகரமான வகையில் மீட்கப்பட்ட நான்கு பணயக்கைதிகளுள் ஒருவரான அந்த்ரேய்-இன் தந்தை. இஸ்ரேல் ராணுவத்தால் 'ஆபரேஷன் டைமண்ட்' என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, ரஷ்ய இஸ்ரேலியரான அண்ட்ரே-யின் பெற்றோரை பொறுத்தவரை ஓர் 'அதிசயத்திற்குக்' குறைவானதல்ல. தங்களுடைய மகன் மீட்கப்பட்டது எப்படி என்ற செய்தியையும், கடந்த எட்டு மாதங்களாக அவர் அனுபவித்த சோதனைகள் குறித்தும் யூஜினியா மற்றும் மைக்கேல் கஸ்லோஃப் இருவரும் உணர்வுபூர்வமாக பிபிசியிடம் பகிர்ந்துகொண்டனர். இஸ்ரேல் ராணுவத்தால் வெளியிடப்பட்ட, உடலில் பொருத்தப்பட்ட கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோவில், 27 வயதான அந்த்ரேய்-உம் மற்றொரு பணயக்கைதியும் பயத்துடன் தங்கள் கைகளை பற்றிக்கொண்டு, மெத்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருந்தபோது, சிறப்புப் படையினர் அந்த அறைக்குள் புகுந்து அவர்களை மீட்டனர். பல மாதங்களாக தங்களைப் பிடித்து வைத்திருந்தவர்களால் அவர்கள் மூளைசலவை செய்யப்பட்டிருந்ததால், இந்த நடவடிக்கை 'தங்களை கொல்வதற்காகவா அல்லது காப்பாற்றுவதற்காகவா' என்பது பணயக்கைதிகளுக்குத் தெரியவில்லை என, யூஜினியா தெரிவிக்கிறார். ‘கெட்ட செய்தி அல்ல, நல்ல செய்தி’ பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,கடந்த வார இறுதியில் மத்திய காஸாஸாவில் இருந்து இஸ்ரேலியப் படைகளால் மீட்கப்பட்ட நான்கு பணயக்கைதிகளில் அந்த்ரேய்-உம் ஒருவர் அவர்களிடம், பணயக்கைதிகள் குறித்து இஸ்ரேல் மக்கள் மறந்துவிட்டதாகவும் அவர்களை ஒரு பிரச்னயாக இஸ்ரேல் அதிகாரிகள் பார்ப்பதாகவும் அதனால் அவர்களின் இடத்தைக் கண்டறிந்தால் அவர்களை அழிக்க அவர்கள் இலக்கு வைக்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. “ஹீப்ரு மொழியில் அவர்கள் என்ன பேசுவார்கள் என்பதைக் கேட்பதற்காக, ஆளில்லா உளவு விமானம் உள்ளதாகவும்,” அதனால் அவர்களை கிசுகிசுத்த குரல்களில் பேசுமாறு தன் மகன் உள்ளிட்ட பணயக்கைதிகளிடம் அங்கு காவலுக்கு இருந்தவர்கள் கூறியதாகவும் மைக்கேல் கஸ்லோஃப் தெரிவித்தார். “இதனால் எங்கள் மகனுக்கு தீவிரமான உளவியல் அதிர்ச்சி ஏற்பட்டு, அவர்களின் வார்த்தைகளை நம்பும் அளவுக்குச் சென்றது,” என அவர் கூறுகிறார். “தன்னைக் காப்பாற்றிவிட்டார்கள் என உணரும் வரை அவன் குழப்பமான மனநிலையில் இருந்தான்,” என்கிறார் அவர். காஸாவின் நியூசிராட் முகாமிலிருந்து மீட்கப்பட்ட அந்த்ரேய், நோவா அர்கமானி, அல்மோக் மீர் ஜன், மற்றும் ஷ்லோமி ஜிவ் நால்வரும், கடந்தாண்டு அக்டோபர் 7-ஆம் தேதி நோவா இசை நிகழ்ச்சியிலிருந்து கடத்தப்பட்டனர். அண்ட்ரே அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தார். ரஷ்யாவில் இருந்து இஸ்ரேலுக்கு 18 மாதங்களுக்கு முன் தான் சென்றார். ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வசிக்கும் யூஜினியா, பணயக்கைதிகளின் குடும்பத்தினரின் பேரணிகளில் கலந்துகொள்ளவும் அரசியல் தலைவர்கள், ராணுவ பிரதிநிதிகளை சந்திக்கவும் தொடர்ச்சியாக இஸ்ரேல் வருவார். டெல் அவிவ் நகருக்கு யூஜினியா திரும்பிச் செல்லவிருந்த போது தான், இஸ்ரேல் அதிகாரிகள் அவருடைய மகன் குறித்த செய்தியுடன் அவரை தொடர்புகொண்டனர். “அது கெட்ட செய்தியாக இருக்கும் என நினைத்து ‘இல்லை!’ என நான் கத்தினேன். என் மொபைல் போனை தூக்கி எறிந்தேன். அது எங்கோ ஒரு மேசையின் கீழே போய் விழுந்தது,” என அவர் நினைவுகூர்ந்தார். “மேசையின் கீழே போனிலிருந்து அவர்கள், ‘நல்ல செய்தி இருக்கிறது!’ என கூறியதை என்னால் கேட்க முடிந்தது,” என்கிறார் அவர். “நான் மேசையின் கீழே தவழ்ந்துகொண்டே, ‘என்ன சொல்கிறீர்கள்?’ என்றேன்,” என்கிறார். “மிகவும் நல்ல செய்தி: 'அந்த்ரேய் மீட்கப்பட்டார்'. என்னுடைய ஆங்கிலம் அவ்வளவு நன்றாக இருக்காது. அவர்களை திரும்ப கூறுமாறு சொன்னேன்,” என்கிறார் அவர். 'ஜோக் அடித்த' அந்த்ரேய் பட மூலாதாரம்,ISRAEL POLICE படக்குறிப்பு,அந்த்ரேய் மற்றும் அல்மோக் மீர் ஜன் ஆகியோரை இஸ்ரேலியப் படைகள் கண்டுபிடித்த தருணம் குறித்து உடலில் பொருத்தப்பட்ட கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகின முதலில், வீடியோ அழைப்பில் அந்த்ரேய்-ஐ மைக்கேல்-யூஜினியா இருவரும் பார்த்தபோது, தன் மகன் எப்படி இருப்பாரோ என கவலை கொண்டிருந்தனர், ஆனால் அண்ட்ரே அப்படியே இருந்ததைக் கண்டு நிம்மதி அடைந்தனர். “அவன் சிரித்தன், ஜோக் அடித்தான். காஸாவில் இருந்து திரும்பிய வெறும் மூன்று மணிநேரங்களிலேயே, அவனால் ஜோக் அடித்தான் முடிந்தது,” என்கிறார் அவரின் தாய். “அவன் சிறையில் இருந்தான், ஒரு கைதியாக இருந்தான். ஆனால், சில மணிநேரங்களிலேயே இஸ்ரேல் பிரதேசத்தில் அவனால் வழக்கத்திற்கு திரும்ப முடிந்தது,” என்கிறார் யூஜினியா. தான் மீட்கப்பட்ட சூழல் குறித்து தன்னுடைய மகன் என்ன கூறினார் என்பது குறித்த விவரங்களுக்குள் அவர்கள் இருவரும் செல்லவில்லை. நியூசிராட் அகதிகள் முகாமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து மூன்று பணயக்கைதிகளை மீட்ட பின்னர், ஹமாஸ் பாதுகாப்பு குழுவினருடன் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. பின்னர், பணயக்கைதிகளும் படுகாயமடைந்த சிறப்புப் படையினரும் லாரி மூலம் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் இஸ்ரேல் அதிகாரிகள் ஆயுததாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர். பணயக்கைதிகள் தப்பிப்பதற்கு போதிய நேரம் மற்றும் மற்றும் அவர்களை பாதுகாப்பதற்காகவே இஸ்ரேல் விமானப்படை தீவிர குண்டுவீச்சில் ஈடுபட்டதாக தெரிகிறது. போர் தொடங்கியதிலிருந்து நிகழ்ந்த மிக மோசமான நிகழ்வு இது எனக்கூறியுள்ள காஸா சுகாதார அதிகாரிகள், 270-க்கும் அதிகமான பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர். 100-க்கும் குறைவானவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. பணயக்கைதிகளை அதிக மக்கள் வாழும் இடத்தில் மறைத்து வைத்திருந்ததால், பொதுமக்களின் உயிரிழப்புக்கு ஹமாஸ் தான் பொறுப்பு என இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,27 வயதான இவர் நோவா இசை விழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தாக்குதல் நடத்தியது மகிழ்ச்சி வெள்ளத்தில் இஸ்ரேல் “இரண்டு மாதங்கள் அவனுடைய கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்தது,” என அந்த்ரேய்-இன் தாய் படபடக்கும் குரலில் கூறினார். 'ஒரு விலங்கு போல' சாப்பிடுவதை வெறுத்த அந்த்ரேய், தன் கைகளைப் பின்னால் இருந்து வளைத்து முன்னே கொண்டு வர முயற்சித்துள்ளார். “காஸாவில் அவனுடைய கைகள் முன்பகுதியில் கட்டப்பட்ட போது அதனை ஒரு பரிசாகக் கருதினான்,” என அவருடைய தந்தை கூறுகிறார். பணயக்கைதிகளை சிறைபிடித்தவர்கள் அவர்களை, “அவமானப்படுத்தி, அடித்ததாக”, கூறும் மைக்கேல், அவர்கள் செய்த கொடூரமான கேலிதான் மிக மோசமானது என்று தெரிவித்தார். “பணயக்கைதிகள் எப்போதும் உளவியல் அழுத்தத்துடனேயே இருந்திருக்கின்றனர். ‘உன் அம்மா கிரீஸுக்கு விடுமுறையை கழிக்கச் சென்றுவிட்டார். எங்களுக்குத் தெரியும். நாங்கள் பார்த்தோம். உன் மனைவி வேறு ஒருவரை 'டேட்' செய்கிறார்,” என அவர்கள் கூறியதாக யூஜினியா கூறுகிறார். இத்தகைய வியக்கத்தக்க மீட்பு நடவடிக்கை குறித்து இஸ்ரேலில் பரவலாக பலரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். “தங்கள் கார்களில் இருந்து இறங்கி மக்கள் அந்த்ரேய்-ஐ வாழ்த்துகின்றனர். நான்கு பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதற்கு இஸ்ரேல் முழுவதும் நடைபெறும் கொண்டாட்டம் குறித்த செய்திகளை பார்த்து திகைக்கிறேன்,” என்கிறார் யூஜினியா. எட்டு மாதங்களுக்கு முன்னர் சுமார் 1,200 பேரைக் கொன்ற ஹமாஸின் தாக்குதலில் இருந்து இஸ்ரேல் இன்னும் தடுமாற்றத்துடன் உள்ளது. பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டு காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்ட 240 பேரில் 100-க்கும் அதிகமானோர் நவம்பர் மாதத்தில் ஒருவார கால தற்காலிக சண்டை நிறுத்தத்தின் போது விடுவிக்கப்பட்டனர். அந்நாளில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இன்னும் 116 பேர் காஸாவில் இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அவர்களுள் மூன்றில் ஒருபகுதி பணயக்கைதிகள் உயிருடன் இல்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். 'இது உண்மையா?' ஜூன் 8-ஆம் தேதி பணயக்கைதிகள் மீட்கப்படுவதற்கு முன்னர், மூன்று பணயக்கைதிகள் மட்டுமே தரைப்படை தாக்குதலால் விடுவிக்கப்பட்டனர். சமீபத்திய ராணுவ நடவடிக்கை இஸ்ரேலுக்கு ஒரு உந்துசக்தியை அளித்துள்ளது. பணயக்கைதிகளின் உறவினர்கள் பலரைச் சந்தித்துள்ள யூஜினியா, தன்னை அதிர்ஷ்டசாலியாக உணர்கிறார். டெல் அவிவ் மற்றும் மத்திய இஸ்ரேலில் அந்த்ரேய்-இன் இல்லத்திற்கு அருகில், இன்னும் காணாமல் போன பலரின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. “அந்தப் படங்களைக் காண்பதற்கு வருத்தமாக இருக்கிறது,” என்கிறார் யூஜினியா. “அவர்களின் முகங்களை காணும்போது எனக்கு குற்ற உணர்வு ஏற்படுகிறது. ஏனெனில், நாங்கள் (குடும்பத்தினரை) ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டுள்ளோம், இதுவொரு அதிசயம் என தினமும் பலமுறை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்வோம்!” என்கிறார் அவர். தன் மகன் பட்ட துன்பங்களை தாண்டியும், பல இஸ்ரேலிய பணயக்கைதிகள் நிலத்தடி சுரங்கங்களில் வெளிச்சமின்றி இருட்டில் அடைத்து வைக்கப்பட்டதை விடச் சிறந்த சூழ்நிலையிலேயே வைக்கப்பட்டதாக தன் மகனிடம் அங்கிருந்த பாதுகாவலர்கள் கூறியதை இருவரும் நம்ப முனைகின்றனர். “அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து நாங்கள் தொடர்ச்சியாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். அவர்களை நிச்சயம் காப்பாற்ற வேண்டும்,” என மைக்கேல் அழுத்தமாக கூறுகிறார். பணயக்கைதிகளை மீட்பதற்கான பிரசாரத்தைக் கைவிடாத அவர்கள் இருவரும், மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அந்த்ரேய் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்புவதற்காக உதவுவதில் தங்கள் சக்தியை செலுத்துகின்றனர். சிறைபிடிக்கப்பட்டு 245 நாட்களுக்குப் பின் நடந்த எல்லாவற்றையும் குறித்து, பணயக்கைதிகளை மீட்பதற்காக இஸ்ரேல் அரசாங்கத்தை வலியுறுத்திய பேரணிகள் குறித்தும் அறிந்துவருகிறார் அந்த்ரேய். “பல விஷயங்கள் குறித்து அவர் ஆச்சர்யப்படுகிறார். அவருக்குத் தெரியாத விஷயங்கள் சில அவரை தூங்கவிடாமல் செய்கின்றன,” என அவரின் தாய் கூறுகிறார். “சில கட்டுரைகளையும் அவர் படித்துவிட்டு, “இது உண்மையா? இது உண்மையா? இப்படி நடந்ததா?” என கேட்கிறார். https://www.bbc.com/tamil/articles/c10091rzy59o
  17. ஆப்கானிஸ்தன் உள்ளே! நியூஸிலாந்து வெளியே! இங்கிலாந்து ஊசலாடுகிறது! 14 JUN, 2024 | 01:52 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் கூட்டாக நடத்தப்பட்டுவரும் 9ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் சகலதுறைகளிலும் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்திவரும் ஆப்கானிஸ்தான் (சி குழு) சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றது. இக் குழுவிலிருந்து மேற்கிந்தியத் தீவுகளும் ஆப்கானிஸ்தானும் சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றதால் நியூஸிலாந்து முதல் சுற்றுடன் வெளியேறவுள்ளது. பப்புவா நியூ கினிக்கு எதிராக ட்ரினிடாட் டரூபா ப்றயன் லாரா விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் 7 விக்கெட்களால் வெற்றிபெற்றதன் மூலமே ஆப்கானிஸ்தான் சுப்பர் 8 சுற்றில் விளையாட 5ஆவது அணியாக தகதிபெற்றது. தென் ஆபிரிக்கா (டி குழு), இந்தியா (ஏ குழு), அவுஸ்திரேலியா (பி குழு), மேற்கிந்தியத் தீவுகள் (சி குழு) ஆகிய அணிகள் ஏற்கனவே சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ளன. பஸால்ஹக் பாறூக்கியின் துல்லியமான பந்துவிச்சு, குல்பாதின் நய்பின் சிறப்பான துடுப்பாட்டம் என்பன ஆப்கானிஸ்தானை இலகுவாக வெற்றிபெறச்செய்தன. பஸால்ஹக் பாறூக்கி 3 போட்டிகளில் 12 விக்கெட்களுடனும் அவரது சக வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 3 போட்டிகளில் 167 ஓட்டங்களுடனும் முறையே பந்துவிச்சிலும் துடுப்பாட்டத்திலும் முதலிடங்களில் இருக்கின்றனர். எண்ணிக்கை சுருக்கம் பப்புவா நியூ கினி 19.5 ஓவர்களில் சகலரும் ஆட்டம் இழந்து 95 (கிப்லின் டொரிகா 27, அலெய் நாஓ 13, பஸால்ஹக் பாறூக்கி 16 - 3 விக்., நவீன் உல் ஹக் 4 - 2 விக்.) ஆப்கானிஸ்தான் 15.1 ஓவர்களில் 101 - 3 விக். (குல்பாதின் நய்ப் 49 ஆ.இ., மொஹமத் நபி 16 ஆ.இ.) ஆட்டநாயகன்: பஸால்ஹக் பாறூக்கி இங்கிலாந்து ஊசலாடுகிறது அன்டிகுவா, நொர்த் சவுண்ட் சேர் விவியன் றிச்சர்ட்ஸ் விளையாட்டரங்கில் 16.3 ஓவர்களில் நிறைவடைந்த சி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஓமானை 8 விக்கெட்களால் இங்கிலாந்து வெற்றிகொண்டது. ஆதில் ராஷித், ஜொவ்ரா ஆச்சர், மார்க் வூட் ஆகியோர் 10 விக்கெட்களையும் பகிர்ந்து இங்கிலாந்தின் வெற்றிக்கு அடிகோலினர். ஆனால், இந்த வெற்றிக்கு மத்தியிலும் நடப்பு சம்பியன் இங்கிலாந்தின் சுப்பர் 8 சுற்று வாய்ப்பு தொடர்ந்தும் ஊசலாடிக்கொண்டிருக்கறது. அவுஸ்திரேலியாவுக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையிலான போட்டியில் ஸ்கொட்லாந்து வெற்றிபெற்றால் அல்லது அப் போட்டியில் முடிவு கிடைக்காவிட்டால் ஸ்கொட்லாந்து சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெறும். அதேவேளை ஸ்கொட்லாந்து தோல்வி அடைந்து இங்கிலாந்து தனது கடைசிப் போட்டியில் நமிபியாவை வெற்றிகொண்டால் இங்கிலாந்து சுப்பர் 8 சுற்றுக்குள் நுழையும். இப் போட்டி கைவிடப்பட்டால் முதல் சுற்றுடன் இங்கிலாந்து வெளியேற நேரிடும். சி குழுவிலிருந்து சுப்பர் 8 சுற்றுக்கு அவுஸ்திரேலியா ஏற்கனவே தகுதிபெற்றுள்ள நிலையில் ஸ்கொட்லாந்து 5 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும் இங்கிலாந்து 3 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலும் இருக்கின்றன. ஓமானை 80 பந்துகளில் 47 ஓட்டங்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து வெற்றி இலக்கை வெறும் 19 பந்துகளில் கடந்து வெற்றியீட்டியது. இப் போட்டியில் இங்கிலாந்து பெற்ற 50 ஓட்டங்களில் 3 சிக்ஸ்களும் 7 பவுண்டறிகளும் அடங்கியிருந்தன. எண்ணிக்கை சுருக்கம் ஓமான்: 13.2 ஓவர்களில் சகலரும் ஆட்டம் இழந்து 47 (ஷொய்ப் கான் 11, ஆதில் ராஷித் 11 - 4 விக்., ஜொவ்ரா ஆச்சர் 12 - 3 விக்., மார்க் வூட் 12 - 3 விக்.) இங்கிலாந்து 3.1 ஓவர்களில் 50 - 2 விக். (ஜொஸ் பட்லர் 24 ஆ.இ., பில் சொல்ட் 12) ஆட்டநாயகன்: ஆதில் ராஷித் https://www.virakesari.lk/article/186056
  18. 14 JUN, 2024 | 07:26 PM வடக்கின் மூன்று மாவட்டங்களில் உள்ள 6 இடங்களில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் 3 பேர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றினை உடைத்து 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும், தொலைபேசி ஒன்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருடப்பட்டிருந்தன. இது தொடர்பாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் பாதிக்கப்பட்டவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்கு இடமான மூவரை கைது செய்தனர் . அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வடக்கின் மூன்று மாவட்டங்களில் 6 இடங்களில் திருட்டில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா, புளியங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும், புளியங்குளத்தில் பிறிதொரு வீடு உடைத்து கிரேண்டர், லெப்டொப், லைற் உள்ளிட்ட பொருட்களும் குறித்த சந்தேக நபர்களால் திருடப்பட்டுள்ளன. மேலும், மன்னார் பகுதியில் வீடு உடைத்து 5 இலட்சம் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதுடன், மன்னார், பேசாலைப் பகுதியில் 3 வயது பிள்ளை அணிந்திருந்த ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சங்கிலியும் அறுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி பகுதியில் மோட்டர் சைக்கிள் ஒன்றும் குறித்த நபர்களால் திருடப்பட்டுள்ளது. திருடப்பட்ட நகைகள் வவுனியாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் அடைவு வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனைய திருடப்பட்ட பொருட்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த 6 திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியியைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவரும், வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவரும், யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/186094
  19. பட மூலாதாரம்,SJB MEDIA படக்குறிப்பு,அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை தமது ஆட்சியின் கீழ் நடைமுறைப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வட மாகாண விஜயத்தின் போது தெரிவித்திருந்தார். கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் இந்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் பிரசாரத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில், தமிழர்களின் வாக்குகளை கவரும் நோக்கத்துடன், பிரதான எதிர்க்கட்சிகள் அடுத்தடுத்து, வட மாகாணத்திற்கு பயணம் மேற்கொள்வதை காண முடிகின்றது. அதிபர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாட்கள் பயணமாக வட மாகாணத்திற்கு சென்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், காணி உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்டவற்றை மக்களுக்கு வழங்கிய பின்னணியில், ஏனைய பிரதான எதிர்க்கட்சிகளும் தமது பார்வையை வட மாகாணத்தை நோக்கி நகர்த்தியுள்ளன. இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும், வட மாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது. அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட உறுப்பினர்களும் வட மாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறான பின்னணியில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த பேச்சு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. சஜித் பிரேமதாஸ கூறியது என்ன? பட மூலாதாரம்,SJB MEDIA படக்குறிப்பு,சஜித் பிரேமதாஸ (கோப்புப்படம்) அரசியலமைப்பின் 13-ஆவது திருத்தத்தை தமது ஆட்சியின் கீழ் நடைமுறைப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வட மாகாண விஜயத்தின் போது தெரிவித்திருந்தார். இது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளதை தற்போது அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ''சில அரசியல்வாதிகள் வடக்கு மக்களை, அரசியல் சங்கீத நாற்காலி விளையாட்டுக்கு உட்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு நேரத்தில் பறந்து வந்து, ஒவ்வொரு விடயங்களை செய்கின்றனர். அரசியலமைப்பின் 13-ஆவது திருத்தம் என்பது புதுமையானது ஒன்றல்ல. அது எமது சட்டத்தில் உள்ள ஒன்றாகும்," என்றார், சஜித் பிரேமதாஸ. 13-ஆவது திருத்தத்தின் ஊடாக கொண்டு வரப்பட்ட மாகாண சபைகள் அனைத்தும் செயலிழந்துள்ளதாக அவர் கவலை தெரிவித்தார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். மாகாண சபைத் தேர்தல், இதற்கு முன்னர் நடத்தப்பட்ட விதத்திலேயே நாடாளுமன்றத்தில் அனுமதி பெற்று, இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என்று சஜித் உறுதி தெரிவித்தார். மேலும், "மாகாண சபைத் தேர்தலை கூட நடத்த முடியாத தலைவர்கள் எவ்வாறு, 13-ஆவது திருத்தம் குறித்துப் பேசுவார்கள். வடக்கு மாகாணத்திற்கு மாத்திரம் அல்ல, முழு நாட்டிற்கும் நல்லிணக்கம் தேவைப்படுகின்றது," என்றார். 13-ஆவது திருத்தத்தையும் மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்து, படிப்படியாக நடைமுறைப்படுத்துவோம் எனவுஎனவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். சஜித் பிரேமதாஸவின் கருத்துக்கு எதிர்ப்பு பட மூலாதாரம்,SJB MEDIA 1313-ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வெளியிட்ட கருத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்பை வெளியிட்டது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன, கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் இந்த எதிர்ப்பை வெளியிட்டார். ''தான் ஆட்சிக்கு வந்ததும், 13-ஆவது திருத்தத்தை நடைமுறை படுத்துவதாக சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார். போலீஸ் மற்றும் காணி அதிகாரங்கள் போன்ற விடயங்களில் எவ்வாறு இந்த அதிகாரத்தை வழங்குவீர்கள் என்ற கேள்வியை நாங்கள் எதிர்க்கட்சித் தலைவரிடம் எழுப்புகின்றோம்," என்றார். 30 வருடங்களாக போர் இடம்பெற்ற நாட்டில் வாழ்ந்த மக்கள் வாழும் நாடு இது எனக்கூறிய அபேகுணவர்தன, அவ்வாறான நிலைமையிலிருந்து மீட்கப்பட்ட நாட்டை மீண்டும் பிரிப்பதற்கான முயற்சியா என கேள்வி எழுப்புவதாக தெரிவித்தார். அதிபர் தேர்தலை கருத்தில் கொண்டே சஜித் இக்கருத்தைக் கூறியுள்ளதாக தெரிவித்த அபேகுணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் தனது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்வதற்காக மிகவும் கீழ்மட்டத்திற்கு சென்றுள்ளார் என்று விமர்சித்தார். படக்குறிப்பு,திஸ்ஸ அத்தநாயக்க (கோப்புப்படம்) '13-ஆவது திருத்தம் என்பது இந்த நாட்டிலுள்ள சட்டம்' சஜித் பிரேமதாஸவின் கருத்தை ஐக்கிய மக்கள் சக்தி தெளிவூட்டியது. ''13-ஆவது திருத்தம் என்பது இந்த நாட்டிலுள்ள சட்டம். இந்த நாட்டிலுள்ள சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என எவரேனும் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்களாயின், அதுவும் அரசியலமைப்பிற்கு முரணான கருத்தாகும்," என, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க கூறுகின்றார். போலீஸ், காணி அதிகாரங்கள் அல்ல, மாகாண சபைத் தேர்தலை உரியவாறு நடத்தாது 13-ஆவது திருத்தத்தை கைவிட்டதனாலேயே இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டதாக தெரிவித்த அவர், ஸ்தம்பிதமடைந்துள்ள மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என்ற பொருளிலேயே சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டிருந்தார் என தெளிவுபடுத்தினார். 13-ஆவது திருத்தம் தொடர்பிலான பேச்சு மீண்டும் பேசுப்பொருளாக மாறிய நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கு காரணமாக அமைந்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, மாகாண சபை முறைமை தொடர்பில் கருத்து வெளியிட்டது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை அண்மையில் மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது, அநுர குமார திஸாநாயக்கவிற்கும், இலங்கை தமிழரசு கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றதுடன், அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். பட மூலாதாரம்,ANURA MEET TNA படக்குறிப்பு,அநுர குமார திஸாநாயக்கவிற்கும், இலங்கை தமிழரசு கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற விசேட சந்திப்பு இதன்போது, வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கு காரணம் மக்கள் விடுதலை முன்னணி என்ற நிலைப்பாட்டை தமிழர்கள் கொண்டிருக்கின்றார்கள். அது தொடர்பில் என்ன பதில் கூற விரும்புகின்றீர்கள் என செய்தியாளர் ஒருவர், அநுர குமார திஸாநாயக்கவிடம் கேள்வி எழுப்பியிருந்தார். ''எதிர்காலத்தை எப்படித் தீர்மானிப்பது என்றே எண்ணமே தற்போது எம்மிடம் உள்ளது. எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக தமிழ் மொழியை பேசுகின்ற மக்களுக்கு, குறிப்பாக அரசியல் தொடர்பில் என்னால் உறுதியொன்று வழங்க வேண்டியுள்ளது. அந்த மக்கள் தொடர்பிலான தீர்மானங்களை எடுக்கும் போது அவர்களுக்கான உரிமையை வழங்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்கள் தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட வேண்டும். அனைவரும் கடந்த காலங்கள் தொடர்பில் சிந்தித்தால், எதிர்காலத்தை எம்மால் தீர்மானிக்க முடியாது," என அநுர குமார திஸாநாயக்க பதிலளித்தார். மாகாண சபை என்பது அதிகார பகிர்வு என்பதால், தற்போது நடைமுறையிலுள்ள மாகாண சபை தொடர்பில் இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளதாக தெரிவித்த திஸாநாயக்க மாகாண சபை முறையில் தீர்வொன்று கிடைக்கவில்லை என்பதையும் புரிந்துகொண்டுள்ளதாகக் கூறினார். அதனையும் தாண்டிய ஒரு நடைமுறையொன்று தேவைப்படுகின்றது என வலுயுறுத்திக் கூறிய அவர், அரசியலமைப்பு, சட்டம், நடைமுறை சாத்தியமான, பொருளாதார ரீதியான பல்வேறு துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் ஊடாகவே சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என தான் நம்புவதாக கூறினார். பட மூலாதாரம்,NPP MEDIA படக்குறிப்பு,அநுர குமார திஸாநாயக்க தமிழ்த் தேசிய பிரச்னைக்கு தீர்வா? தேசிய மக்கள் சக்தி, மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் தலைவர்களுடன், இலங்கை தமிழரசு கட்சி, யாழ்ப்பாணத்தில் அண்மையில் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தது. இந்த கலந்துரையாடல்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிட்டார். 13-ஆவது திருத்த மாகாண சபை முறைமை, தமிழ்த் தேசிய பிரச்னைக்கு தீர்வு இல்லை என்பதை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவித்தார். ''தேசிய மக்கள் சக்தியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை முன்னேற்றகரமான பேச்சுவார்த்தை என்று வர்ணிக்கலாம். எல்லா விடயங்களுக்கும் தீர்வு கண்டுவிடவில்லை. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் வகையில் ஆரம்ப பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கின்றது," எனத் தெரிவித்தார். ஊழல் ஒழிப்பு, மக்கள் மத்தியில் சமவுரிமைகள், பொருளாதார சமத்துவம் போன்ற விடயங்களில் அவர்களுடன் நேரடியாகவே இணங்கி போக முடிகின்றது என சுமந்திரன் கூறினார். "தமிழ் தேசிய பிரச்னைக்கான தீர்வு என்ற விடயத்தில் பல ஏற்றத் தாழ்வுகள், பழைய சரித்திரங்கள் இருந்தாலும் கூட இருக்கின்ற மாகாண சபை முறைமையை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள். அதனை நடைமுறைப்படுத்துவார்கள் என்று சொல்லியிருக்கின்றார். மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்றும் சொல்லியிருக்கின்றார்," என அவர் கூறினார். ஆனால், தற்போதுள்ள 13-ஆவது திருத்த மாகாண சபை முறைமை, தமிழ்த் தேசிய பிரச்னைக்கு தீர்வு இல்லை என்பதை அவர்களும் ஏற்றுக்கொள்கின்றார்கள் எனக்கூறிய சுமந்திரன், இந்த விடயத்தில் இரு தரப்பினரும் சேர்ந்து போக வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிவித்தார். தமிழ் மக்களின் தாயகத்தில் வடக்கு-கிழக்கு இணைந்ததான ஒரு அலகிலே பூரண அதிகாரப் பகிர்வு, அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு என்பதை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கூறியதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார். மேலும் பேசிய அவர், ''13-ஆவது திருத்தத்தை இன்றைக்கு அமல்படுத்துவேன் என்று சொல்வது கூட அர்த்தமில்லாது இருக்கின்றதை தெளிவாக எடுத்து சொன்னோம். அவர் விசேடமாக ஒன்றை சொல்லியிருந்தார். நிதி பகிர்வு தொடர்பில் சொல்லியிருந்தார். அதிகாரப் பகிர்வை கொடுத்து விட்டு, நிதி பகிர்வை கொடுக்கா விட்டால், அந்த அதிகார பகிர்வைக் கொடுத்து எந்தவித பிரயோசனமும் இல்லை என சொல்லியிருந்தார்," என்றார். தமிழ் மக்களின் தாயகத்தில் வடக்கு-கிழக்கு இணைந்ததான ஒரு பூரண அதிகார பகிர்வு, அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு என சுமந்திரன் கூறினார். "தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அதிகார பகிர்வு பற்றிப் பேசாமல், அது குறித்த வாக்குறுதிகளை கொடுக்காமல், வேறு விடயங்களை சொல்வது, அதிகார பகிர்விலிருந்து தப்பியோடுகின்ற விடயமாக எங்களுடைய மக்கள் கருதுவார்கள்," எனவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார். படக்குறிப்பு,எம்.ஏ.சுமந்திரன் 13-ஆவது திருத்தம் என்றால் என்ன? இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோருக்கு இடையில் 1987-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29-ஆம் தேதி இந்த 13-ஆவது திருத்தச்சட்ட உடன்படிக்கை கையெழுத்தானது. அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையிலேயே இந்த உடன்படிக்கை அப்போது கைச்சாத்திடப்பட்டது. இதன்படி, நாட்டில் மாகாண சபைகளை உருவாக்கும் நோக்கில், இந்த 13-ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த மாகாண சபை முறையின் ஊடாக, காணி மற்றும் போலீஸ் அதிகாரங்கள் மாகாண சபை வசமாகின்றன. எனினும், மத்திய அரசாங்கம் இன்று வரை மாகாண சபைகளுக்கு அந்த அதிகாரங்களை வழங்காதிருக்கின்றது. இலங்கையில் தமிழ் மொழி பேசும் சமூகம், நாட்டின் ஏனைய பகுதிகளில் கலந்து காணப்படுகின்ற போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் வகையிலேயே இந்த 13-ஆவது திருத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த திருத்தச் சட்டத்தின் ஊடாக, இலங்கையில் 9 மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததுடன், வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் இணைந்த மாகாண சபைகளாக அப்போது அறிவிக்கப்பட்டிருந்தன. எனினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக இருக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி 2006-ஆம் ஆண்டு இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன்படி, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால், வடக்கு கிழக்கு இணைப்புச் சட்டமானது, சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் 2007-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இரண்டாக பிரித்து உத்தரவு பிறப்பித்தது. அரசியலமைப்பிலுள்ள மாகாண சபை முறைமையை அமல்படுத்துமாறு தமிழர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற போதிலும், இன்று வரை அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதியை வழங்க மத்திய அரசாங்கம் தவிர்த்து வருகின்றது. https://www.bbc.com/tamil/articles/cv22ez13043o
  20. 14 JUN, 2024 | 07:43 PM இந்நாட்டில் காணப்பட்ட பிரிவினைவாத யுத்தத்தில் போர் முறையில் போராடிய வீரர்கள் யுத்தக் குற்றம் இழைத்ததாகக் குற்றஞ்சாட்டி அவர்களுக்கு எதிராகவும், அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் யுத்தக் குற்றச் சாட்சியங்களைச் சேகரிக்கும் வெளியகப் பொறிமுறையொன்று இரண்டு வருடங்களாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் 46/1 பிரேரணைக்கு அமைய அமைக்கப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புப் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார். இந்நாட்டு இராணுவத் தலைவர்களுக்கு எதிராகக் கணிசமானளவு சாட்சிகள் அவர்களிடம் இருப்பதாக குறித்த பொறிமுறையின் ஊடாக அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்புப் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் அவரது தலைமையில் கூடியபோதே பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இதனைத் தெரிவித்தார். இவ்வாறு யுத்தக் குற்றம் இழைத்ததாக சாட்சி கிடைத்திருக்கும் இந்நாட்டு இராணுவத் தலைவர்களுக்கு எதிராக நீதிமன்ற சட்ட அதிகாரத்தின் கீழ் சர்வதேச நீதிமன்றத்தில் வழங்குத் தொடர்வதற்கு ஏற்கனவே சில நாடுகள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்திருப்பதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இந்த வெளியகப் பொறிமுறை வெளிவிவகார அமைச்சினால் நிராகரிக்கப்பட்டுள்ள போதும், இந்நாட்டு இராணுவத் தலைவர்களுக்கு எதிராகத் தொடர்ந்தும் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு வருவதால் இலங்கையின் இராணுவ அதிகாரிகள் எந்த நாட்டிலும் கைது செய்யப்படலாம் என்பதே இங்குள்ள ஆபத்தான நிலைமையாகும் என இங்கு தெரிவிக்கப்பட்டது. இந்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் புலிகள் அமைப்புக்கு எதிரான யுத்தம் அன்றி தமிழ் இனத்துக்கு எதிரான யுத்தமாக அடையாளப்படுத்துவதற்கான வாய்ப்பு இந்த வெளியகப் பொறிமுறைக்கு வாய்ப்புக் காணப்படுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த நடைமுறையானது இராணுவ வீரர்களின் சுயமரியாதைக்கும், தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவும், இவர்கள் மீது ஏனைய நாடுகள் போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதையும், சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதைத் தடுப்பதற்கும் வெளிவிவகார அமைச்சு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது. ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைகளுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதாகவும், இது தொடர்பில் பக்கச்சார்பற்ற முறையில் செயற்படும் நாடுகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமது அமைச்சு நடவடிக்கை எத்திருப்பதாவும் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டனர். குழுவின் அமர்வுக்கு அழைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி தர்ஷன வீரசேகர இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், வலுவான தேசிய பொறிமுறையொன்று காணப்பட்டாலே வெளியகப் பொறிமுறையினால் சேகரிக்கப்படும் சாட்சிகளைத் தோற்கடிக்க முடியும் என்றும், இது தொடர்பில் எல்.எல்.ஆர்.சி அறிக்கை மற்றும் பரணகம அறிக்கையில் உள்ள விடயங்களை உள்ளடக்கியதாக தேசிய தகவல் கோப்புத் தயாரிக்கப்பட வேண்டும் என்றார். உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இந்நாட்டுக்கு எதிராக செயற்படும் வெளியகப் பொறிமுறையை மேலும் ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அமையும் என்றும் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேக தெரிவித்தார். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமும் அன்றையதினம் குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், உயர்நீதிமன்றத்தினால் சுட்டிக்காட்டப்பட்டமைக்கு அமைய சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்துத் திருத்தங்களுக்கும் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் இந்நாட்டுக்குப் பொருந்தும் வகையில் பயங்கரவாதம் என்ற பதம் சரியாக அர்த்தப்படுத்தப்படவில்லையென்றும் பல பயிற்சிகளின் விளைவாக பயங்கரவாதியொன்று உருவாவதால், இந்தப் பயிற்சிகள் மற்றும் சிந்தனை மாற்றங்கள் ஆரம்பிக்கும்போது போது பயங்கரவாதியைப் பிடிப்பதற்கு எந்த முறையும் இல்லை என்பது தேசிய பாதுகாப்புப் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. https://www.virakesari.lk/article/186099
  21. கெஹலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் 14 JUN, 2024 | 06:28 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று (14) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/186096
  22. அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் I, II மற்றும் III ஆம் தரத்திற்கான பரீட்சைகள் நடத்தப்படும் திகதி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி இந்த பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரீட்சைக்கு சுமார் 52,756 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த பரீட்சை நாடளாவிய ரீதியில் 353 நிலையங்களில் நடைபெறவுள்ளது. மேலும் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனைப் பெற்றுக்கொள்ளாத பரீட்சார்த்திகள் www.slida.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தங்களின் அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. https://thinakkural.lk/article/303750
  23. Published By: DIGITAL DESK 7 14 JUN, 2024 | 02:43 PM முறையான அனுமதியின்றி உணவு பொருளை இறக்குமதி செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவருக்கு 12 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் இருந்து முறையான இறக்குமதி அனுமதியின்றி உணவு உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்து, யாழில் உள்ள பல்பொருள் அங்காடிகளுக்கு விற்பனை செய்து வந்த நபர் ஒருவருக்கு எதிராக மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகரினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை (13) வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை எச்சரித்த மன்று , 12 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. https://www.virakesari.lk/article/186058
  24. கின்னஸ் உலக சாதனை அமைப்பு குறிப்பிடத்தக்க சாதனைகளை அங்கீகரித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அந்த அமைப்பு, உலகின் குள்ளமான ஜோடியின் திருமணத்தை அங்கீகரித்திருப்பது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரேசிலை சேர்ந்த பவ்லோ கேப்ரியல் டி சில்வா- கட்யூசியா லி ஹோஷினோ ஜோடி உலகின் மிகவும் குள்ளமான ஜோடி என பெயர் பெற்றவர்கள். பவ்லோவின் உயரம் 90.28 சென்டி மீற்றர் (35.54 அங்குலம்) ஆகும். கட்யூசியாவின் உயரம் 91.13 சென்டி மீற்றர் (35.88 அங்குலம்) ஆகும். இருவருமே எலும்பு வளர்ச்சி குறைபாடு கொண்டவர்கள் . சமூக வலைதளம் மூலம் நட்பான இவர்கள் கடந்த 2006-ம் ஆண்டு சந்தித்து கொண்டனர். அதன்பிறகு 15 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு முறை சந்தித்து பேசிய அவர்கள் தங்களது 31-28 வயதில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் உலகின் மிகவும் குள்ளமான ஜோடி என இவர்களை கின்னஸ் சாதனை அமைப்பு அங்கீகரித்து, தங்களின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/303734

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.