Everything posted by ஏராளன்
-
IMF கடன் திட்டத்தின் இரண்டாவது மீளாய்வு இன்று
இலங்கையின் கடன் திட்டம் தொடர்பான இரண்டாவது மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இன்று (12) கலந்துரையாடவுள்ளது. இந்த நிறைவேற்று சபை கூட்டத்தில், 2024 ஆம் ஆண்டுக்கான 4வது பிரிவின் கீழ் ஆலோசனை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் பணிப்பாளர் ஜூலி கோசெக், சமீபத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இலங்கை கடன் மறுசீரமைப்பில் போதுமான மற்றும் வலுவான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார். கடன் திட்டத்தின் தரத்திற்கு ஏற்ப வெளி வணிகக் கடன் வழங்குநர்களுடன் இலங்கை விரைவில் ஒரு உடன்பாட்டை எட்டிவிடும் என்று தான் மிகவும் எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், கையிருப்பு அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக ஜூலி கோசெக் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/303549
-
யாழ். அனலைதீவில் கடலுக்குச் சென்ற இருவரைக் காணவில்லை
Published By: DIGITAL DESK 3 12 JUN, 2024 | 10:26 AM யாழ்ப்பாணம் அனலைதீவிலிருந்து நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (10) கடற்றொழிலுக்குச் சென்ற இருவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமரசிங்கம் மற்றும் கேதீஸ்வரன் ஆகிய இருவரையே காணவில்லை. இது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. காணாமல் போனோரை கடலில் தேடும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/185885
-
உயர்தரப் பரீட்சையை நவம்பரில் நடத்த திட்டம்!
இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் 2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை (2025) செப்டெம்பர் மாதம் நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிள்ளைகளின் நேரத்தை வீணடிப்பதைத் தடுக்க பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தரக் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்து, பல்கலைக்கழக நுழைவை விரைவுபடுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/303517
-
வெருகல் படுகொலை 38வது நினைவேந்தல் நிகழ்வு இன்று!
12 JUN, 2024 | 11:24 AM ஈச்சிலம்பற்று முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை கொண்டுசென்ற அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டு 38 வருடங்களாகியும் நீதி கிடைக்கவில்லையென படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள். திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை சேருவில பகுதியில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி கொண்டுசென்ற போது மகிந்தபுர பகுதியில் வைத்து மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21பேர் படுகொலை செய்யப்பட்ட வெருகல் படுகொலையின் 38வது நினைவுதினம் இன்று புதன்கிழமை (12) அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்று நாட்டில் நிலவிய யுத்தசூழலின் காரணமாக வெருகல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்கள் ஈச்சிலம்பற்று, பூமரத்தடிச்சேனை மற்றும் மாவடிச்சேனை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தார்கள். இவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் அரசாங்கத்தினால் வெருகல் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக வழங்கப்பட்டு வந்தன. அந்தவகையில் 1986ம் ஆண்டு யூன் மாதம் 12ம் திகதி அகதிகளுக்கான நிவாரணங்களை ஏற்றிச் செல்லுமாறு அப்போது மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த வர்ணசூரிய அவர்களினால் மக்களுக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் முகாம்களுக்கு பொறுப்பான அரச அதிகாரிகள் மூவர் உட்பட 21பேர் வண்டில் மாடுகளுடன் வெருகல் நோக்கிச் சென்றார்கள். அங்கிருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ஈச்சிலம்பற்று நோக்கி சென்றபோது மகிந்தபுரவில் வைத்து ஆயுதம் தாங்கிய நபர்களினால் இவர்கள் வழிமறிக்கப்பட்டு பிரதான வீதியில் இருந்து 50 மீற்றர் தூரம் அழைத்துச் செல்லப்பட்டு முழங்காலில் இருக்க வைத்து பின்னர் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். இதில் மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21பேர் படுகொலை செய்யப்பட்டதோடு மூன்றுபேர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் உயிர் தப்பியிருந்தார்கள். படுகொலை செய்யப்பட்டவர்களில் இருவர் முஸ்லீம் சகோதரர்களாவர். இப்படுகொலைச் சம்பவத்தில் பின்வரும் நபர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள் 1.அண்ணாமலை தங்கராஜா – கிராம சேவகர் (தம்பலகாமம்) - ஈச்சிலம்பற்று முகாம் 2.அலிபுகான் - கிராம சேவகர் (தோப்பூர்) - பூமரத்தடிச்சேனை முகாம் 3.அயாசு முகம்மது அப்துல் லத்தீப் - (பாலத்தோப்பூர்) - மீள்குடியேற்ற உத்தியோகத்தர் - பூநகர் முகாம் 4.கோணாமலை வேலாயுதம் - பூமரத்தடிச்சேனை 5.கதிர்காமத்தம்பி -விநாயகமூர்த்தி - பூமரத்தடிச்சேனை 6.தெய்வேந்திரம் நவரெட்ணம் பூமரத்தடிச்சேனை 7.தம்பிராசா நவரெட்ணம் பூநகர் 8.கனகசபை கனகசுந்தரம் - பூநகர் 9.கதிர்காமத்தம்பி செல்லத்தம்பி - பூநகர் 10.மூத்ததம்பி காசிப்பிள்ளை - பூநகர் 11.கதிர்காமத்தம்பி நாகராசா - பூநகர் 12.வீரபத்திரன் நடேசபிள்ளை - பூநகர் 13.முத்தையா காளிராசா - பூநகர் 14.முத்துக்குமார் வேலுப்பிள்ளை - பூநகர் 15.வேலுப்பிள்ளை சித்திரவேல் - விநாயகபுரம், ஈச்சிலம்பற்று 16.சித்திரவேல் சிவலிங்கம் - விநாயகபுரம், ஈச்சிலம்பற்று 17.வீரபத்திரன் சோமசுந்தரம் - விநாயகபுரம், ஈச்சிலம்பற்று 18.சித்திரவேல் தம்பாப்பிள்ளை - விநாயகபுரம், ஈச்சிலம்பற்று 19.நல்லையா பரமேஸ்வரன் இலங்கைத்துறை முகத்துவாரம் 20.தாமோதரம் தர்மலிங்கம் - ஈச்சிலம்பற்று 21.புண்ணியம் மதிவதனன் - பூமரத்தடிச்சேனை அத்துடன் வீரபத்திரன் சோமசுந்தரன், வேலுப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் தப்பியிருந்தார்கள். https://www.virakesari.lk/article/185878
-
13வது திருத்தம் தொடர்பில் சஜித்தின் கருத்து!
13ஆவது திருத்தச் சட்ட விவகாரத்தில் சஜித் நழுவல் : அமைச்சர் டக்ளஸ் சாடல் 11 JUN, 2024 | 05:33 PM (எம்.மனோசித்ரா) அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அதனை எந்தெந்த அதிகாரங்களுடன் எவ்வாறு அமுல்படுத்துவார் என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை. இந்த விடயத்தில் நழுவல் பாங்கிலேயே அவர் செயற்பட்டிருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நான் அறிந்த வகையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவேன் தான் என்று தான் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்திருக்கின்றார். மாறாக முழுமையாக எனக் கூறவில்லை. என்னென்ன அதிகாரங்களுடன் அவர் 13ஐ அமுல்படுத்துவார் என எவராவது கேள்வியெழுப்பியிருந்தால் அவரது உண்மையான நிலைப்பாட்டை அறிந்திருக்க முடியும். அரசியலுக்காக அவர்கள் இதைப் பற்றிப் பேசுகின்றனர். எனவே நாம் அது தொடர்பில் பேசத் தேவையில்லை என்பதே எனது நிலைப்பாடு. 13ஆவது திருத்தம் எமது அரசியல் யாப்பிலுள்ள ஒன்றாகும். எனவே யார் ஆட்சிக்கு வந்தாலும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இதனை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். அதனை முழுமையாக அமுல்படுத்தக் கூடிய சந்தர்ப்பம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கிடைத்தது. ஆனால் அவர்கள் அதனைச் செய்யவில்லை. 1987இல் எமக்கு அந்த ஒப்பந்தம் கிடைக்கப் பெற்ற போது அனைத்தையும் சேர்த்தே வழங்கினர். தமிழ் தரப்பினரே அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் நழுவ விட்டனர். பிரபாகரனுக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தது. அவர் தனது சுயநல அரசியலுக்காக அதனைத் தூக்கி எறிந்துவிட்டார். தமிழ் தரப்பினர் அதனை முறையாகப் பயன்படுத்தியிருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்றார். https://www.virakesari.lk/article/185849
-
ஆப்பிள் போனுடன் இணைந்த Chat GPT!
AI தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்க, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நேரத்தில், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது அடுத்த தயாரிப்பு வரிசையை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, நேற்று நடைபெற்ற வருடாந்திர டெவலப்பர்கள் மாநாட்டில், ஆப்பிளின் அடுத்த ஐபோன் தயாரிப்பில் AI அல்லது செயற்கை நுண்ணறிவு பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, Open AI இன் பிரபலமான Chat GPT செயற்கை நுண்ணறிவு செயலி ஐபோன்களில் சேர்க்கப்படும் என்று ஆப்பிள் அறிவித்தது. அதேபோல், குரல் மூலம் செயற்படுத்தக்கூடிய “Siri” செயலி ஊடாக ஆப்பிள் ஃபோன்களின் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு பதிலளிக்க முடியும் என ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார். உங்களுக்காக மின்னஞ்சல்களை எழுதவும் மற்றும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப குரல் செய்திகளை அனுப்பவும் “Siri” AI செயலி தேர்ச்சி பெற்றுள்ளது. ஆப்பிள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐபோன்களில் பிரபலமான Chat GPT AI பயன்பாட்டைக் கொண்டுவரும். ஆப்பிள் இந்த வழியில் AI தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும்போது, ஐபோன் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஐபோன் பாவனையாளர்கள் தமது கைப்பேசிகளை AI தொழில்நுட்பத்துடன் அப்டேட் செய்ய விரும்புபவர்கள் இவ்வாறு புதிய ஐபோன் மொடல்களை வாங்குவதற்கு ஆசைப்படுவார்கள் என சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். https://thinakkural.lk/article/303539
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
கனடாவை வென்றாலும், பாகிஸ்தான் செய்யத் தவறியது என்ன? சூப்பர் 8 செல்வதில் என்ன சிக்கல்? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் தொடர்ந்து 2 தோல்விகளுக்குப்பின் பாகிஸ்தான் அணி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. இருப்பினும் சூப்பர்-8 சுற்றுக்கு முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி செல்வது இன்னும் சந்தேகமாகவே இருக்கிறது. நியூயார்க் நகரில் செவ்வாய்க்கிழமை நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் ஏ பிரிவில் 22வது லீக் ஆட்டத்தில் கனடா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி. முதலில் பேட் செய்த கனடா அணி 7 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்தது. 107 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் கடும் போராட்டத்துக்குப்பின் 15 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். சூப்பர்-8 செல்லுமா பாகிஸ்தான்? இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 3 போட்டிகளில் 2 தோல்விகள், ஒரு வெற்றி என 2 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டும் 0.191 என்ற ரீதியில் இருக்கிறது. பாகிஸ்தான் அணியைவிட அமெரிக்கா அணி கூடுதலாக 2 புள்ளிகள் பெற்று மொத்தம் 4 புள்ளிகளுடன், 0.626 நிகர ரன்ரேட்டுடன் வலுவாக இருக்கிறது. பாகிஸ்தான் அணிக்கு வரும் 16-ஆம் தேதி அயர்லாந்து அணியுடன் கடைசி லீக் ஆட்டம் இருக்கிறது. இந்த ஆட்டம் ஃப்ளோரிடாவில் நடக்க இருக்கிறது. ப்ளோரிடாவில் வரும் 16-ஆம் தேதி நல்ல மழை பெய்வதற்கான சூழல் இருப்பதாக வானிலை அறிவிப்பு குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழலில் போட்டி நடந்து பாகிஸ்தான் வென்றிருந்தாலும், அமெரிக்க அணியின் கடைசி 2 லீக் ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். ஒருவேளை அமெரிக்க அணி இந்தியாவிடம் தோற்று, 14-ஆம் தேதி நடக்கும் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வென்றுவிட்டாலே 6 புள்ளிகள் பெற்று சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும். அதன்பின் பாகிஸ்தான் அணி அயர்லாந்து அணியை வென்றாலும் 4 புள்ளிகளுடன் சூப்பர்-8 சுற்றுக்கு செல்லாமல் வெளியேற வேண்டியதுதான். பாகிஸ்தான் அணி சூப்பர்-8 சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால் அமெரிக்க அணி அடுத்த 2 லீக் ஆட்டங்களிலும் தோற்க வேண்டும், அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மழை வராமல் போட்டி நடந்து பாகிஸ்தான் வெல்ல வேண்டும். ஒருவேளை அமெரிக்கா தனது கடைசி இரு லீக் ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து, பாகிஸ்தான்-அயர்லாந்து ஆட்டம் மழையால் நடைபெறாமல் போகும் பட்சத்தில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். அப்போது அமெரிக்கா 4 புள்ளிகளுடன் இயல்பாக சூப்பர்-8 சுற்றுக்கு சென்றுவிடும். பாகிஸ்தான் 3 புள்ளிகளுடன் வெளியேற வேண்டியதிருக்கும். ஆதலால் பாகிஸ்தான் சூப்பர்-8 சுற்றுக்கு செல்வது இன்னும் உறுதியாகவில்லை, அதேசமயம், கனடா அணி 3 போட்டிகளில் 2 தோல்வி, ஒரு வெற்றி என 2 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. கனடா அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தின் முடிவும் சூப்பர்-8 இடங்களைத் தீர்மானிக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES கனடாவை பாகிஸ்தான் வீழ்த்தியது எப்படி? பாகிஸ்தான் தரப்பில் நேற்று வேகப்பந்துவீச்சாளர்கள் சேர்ந்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். குறிப்பாக முகமது அமிர் 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால், இதில் 17 டாட் பந்துகள் அடங்கும். சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது அமிர் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தானின் முழுமையாக வெற்றிக்கு காரணம் வேகப்பந்துவீச்சாளர்கள்தான். கனடா அணியை 106 ரன்களுக்குள் சுருட்டி வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தினர். ஆனால், பாகிஸ்தான் பேட்டர்கள் இந்த ரன்னை சேஸ் செய்வதற்குள் திணறிவிட்டனர். அதிலும் பவர்ப்ளே ஓவரில் பாகிஸ்தான் பேட்டர்களை ஷார்ட் பந்தாக வீசி கனடா பந்துவீச்சாளர்கள் திணறவைத்தனர். ஆனால், கேப்டன் பாபர் ஆஸம், அனுபவ வீரர் முகமது ரிஸ்வான் இருவரும் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்து அணியின் வெற்றிக்கு உதவி செய்தனர். ரிஸ்வான் நிதானமாக பேட் செய்து அரைசதம் அடித்து 53 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பாபர் ஆஸம் 33 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். கனடா அணியின் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு பெரிதாக தொந்தரவு இல்லாத நிலையில் குறைந்த ஸ்கோரை விரைவாக சேஸ் செய்து நிகர ரன்ரேட்டை பாகிஸ்தான் உயர்த்தி இருக்கலாம். ஆனால், பாகிஸ்தான் பேட்டர்கள் மந்தமாக பேட் செய்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES கனடாவின் ஜான்சன் அதிரடி பேட்டிங் கனடா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஜான்ஸன் 44 பந்துகளில் 52 ரன்களுடன் அதிரடியாக பேட் செய்தார். இவரின் குறிப்பிடத்தகுந்த பங்களிப்புதான் கனடா அணியால் 100 ரன்களைக் கடக்க முடிந்தது. கனடா அணியில் ஜான்சனைத் தவிர மற்ற 6 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். கனடா அணியின் ஜான்சன் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக பேட் செய்தார். அப்ரிதி வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே பிளிக் ஷாட்டில் பவுண்டரி அடித்தார், அடுத்த பந்திலும் பவுண்டரி் அடித்தார். இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் முதல் ஓவரின் இரு பந்துகளில் பவுண்டரி அடித்த முதல் பேட்டர் ஜான்சன்தான். 3-ஆவது பந்தும் பவுண்டரி சென்றிருக்கும் ஆனால், கடைசி நேரத்தில் பீல்டிங் செய்துவிட்டனர். பாகிஸ்தான் பேட்டர்கள் பேட்டிங் செய்ய திணறிய நிலையில் கனடாவின் ஆரோன் ஜான்சன் பாகிஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். நசீம்ஷா, இமாத் வாசிம், அப்ரிதி ஓவர்களில் சிக்ஸர் விளாசிய ஆரோன் ஜான்சன், 4 பவுண்டரிகளை விளாசி 118 ஸ்ட்ரேக் ரேட்டில் பேட் செய்தார். கத்துக்குட்டி அணியான கனடாவின் ஜான்சன் அதிரடியாக பேட் செய்தநிலையில், அனுபவமான பாகிஸ்தான் பேட்டர்களால் ஏன் பேட்டிங் செய்ய முடியவில்லை என்பது கேள்வியாக எழுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES கனடா அணியின் சிறந்த பேட்டர் என்று கூறப்படும் நிகோலஸ் கிர்டன் ரன் அவுட் செய்யப்பட்டது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. ஒருபுறம் கனடா அணி விக்கெட்டுகளை இழந்தாலும் ஜான்சன் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தார். கனடாவின் ஸ்ரேயாஸ் மோவாவின் விக்கெட்டை வீழ்த்தியபோது, டி20 வரலாற்றில் அதிவிரைவாக 100 விக்கெட்டுகளை எட்டிய வேகப்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஹேரிஸ் ராப் இணைந்தார். பாகிஸ்தான் பேட்டர்களுக்கு பாடம் எடுக்கும் வகையில் பேட் செய்த ஜான்சன் 39 பந்துகளில் அரைசதம்அடித்தார். எந்த பந்துவீச்சாளரையும் சளைக்காமல் எதிர்த்து பவுண்டரி சிக்ஸர், அடித்த ஜான்சன் 52 ரன்னில் இமாத் வாசிம் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். டெத் ஓவரில் பாகிஸ்தான் அணி 29 ரன்களை வழங்கியது. டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே அதிகமான டாட் பந்துகளை சந்தித்த அணியாக கனடா அணி பெயர் பெற்று நேற்றைய ஆட்டத்தில் 76 டாட் பந்துகளைச் சந்தித்தது. அதாவது, 44 பந்துகளில் மட்டும்தான் கனடா பேட்டர்கள் ரன் சேர்த்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES திணறிய பாகிஸ்தான் பேட்டர்கள் 107 ரன்கள் இலக்கை விரட்டிய பாகிஸ்தான் பேட்டர்கள் தொடக்கத்திலிருந்தே ரன் சேர்க்கத் திணறினர். நடுவரிசையில் ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்காக கேப்டன் பாபர் ஆஸம் ஒன்டவுனில் களமிறங்கினார். தொடக்க வீரராக ரிஸ்வான், சயீம் அயுப் களமிறங்கினர். ஆனால், இளம் வீரர் சயூப் பெரிய ஷாட்டுக்கு முயன்று 6 ரன்னில் வெளியேறினார். ஆனால், பவர்ப்ளே ஓவர்களில் கனடா வேகப்பந்துவீச்சாளர்கள் கார்டன், ஹேலிகர், சனா ஆகியோர் லைன் லென்த்தில் பந்துவீசி பாகிஸ்தான் பேட்டர்களை திணறவைத்தனர். பவர்பளேயில் பாகிஸ்தான் ஒரு விக்கெட்டைஇழந்து 28 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கனடா அணி பவர்ப்ளேயில் 5 பவுண்டரிகள் அடித்த நிலையில், பாகிஸ்தான் அணி ஒரே பவுண்டரிதான் அடித்திருந்தது. பவர்ப்ளேயில் 36 பந்துகளில் 31 பந்துகளை கனடா அணி துல்லியமாக லென்த்தில் வீசி பாகிஸ்தான் பேட்டர்களை திணறவைத்தது. 9.1 ஓவர்களில்தான் பாகிஸ்தான் அணி 50 ரன்களை எட்டியது. பட மூலாதாரம்,GETTY IMAGES “ரன்ரேட்டை உயர்த்தமுடியவில்லை” வெற்றிக்குப்பின் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் கூறுகையில் “ எங்களுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. பந்துவீச்சில் சிறப்பாகத் தொடங்கி, பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை வீழ்த்தினோம். நிகர ரன்ரேட்டை உயர்த்த முயன்றோம், அதை நோக்கித்தான் விளையாடினோம். 14 ஓவர்களுக்குள் இலக்கை அடைவது இந்த ஆடுகளத்தில் கடினமாக இருந்தது. நான் எனக்கு பிடித்தமான ஷாட்டை ஆடியபோதுதான் ஆட்டமிழந்தது எனக்கு வேதனையாக இருந்தது. இந்திய அணிக்கு எதிராகவும் இதே ஷாட்டை ஆடியபோதுதான் ஆட்டமிழந்தேன். சில நேரங்களில் இதுபோன்ற ஷாட்களை ஆடும்போது வெற்றி தேவை”எ னத் தெரிவித்தார் பாபர் ஆஸம், ரிஸ்வான் சேர்ந்தபின் ரன்சேர்ப்பில் ஓரளவு வேகம் காட்டியது பாகிஸ்தான் இதனால் 17வது ஓவரில் 100 ரன்களை எட்டியது. பாபர் ஆஸம் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 33 ரன்களில் ஹேலிகர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த வெற்றியால் பாகிஸ்தான் நிகர ரன்ரேட் அமெரிக்காவின் நிகர ரன்ரேட்டைவிடக்கூட உயரவில்லை. இந்த குறைந்த இலக்கை 10 ஓவர்களில் சேஸ் செய்திருந்தால், அமெரிக்காவின் நிகர ரன்ரேட்டைவிட உயர்ந்திருக்கலாம். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. https://www.bbc.com/tamil/articles/czvv7e299yyo
-
உறங்கிக்கொண்டிருந்த காட்டு யானையை இளைஞரொருவர் தொடும் காணொளி; விசாரணை ஆரம்பம்
Published By: DIGITAL DESK 3 12 JUN, 2024 | 10:27 AM உறங்கிக்கொண்டிருந்த காட்டு யானையை இளைஞர் ஒருவர் தொடும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவருகிறது. இது தொடர்பில் அநுராதபுரம் வனவிலங்கு உதவிப் பணிப்பாளரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த காணொளி அநுராதபுரம் ரணஜயபுர காட்டுப் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரணஜயபுர காட்டுப்பகுதிக்குள் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் உறங்கிக்கொண்டிருந்த யானையின் அருகில் மெதுவாகச் சென்று அதைத் தொட்டுவிட்டுவரும் காட்சி காணொளியில் பதிவாகியுள்ளது. காட்டு யானையை எப்படி நெருங்குவது என்பதை காண்பிக்க, ஒரு சாகச செயலாக இந்த காணொளியை இளைஞர்கள் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த காணொளி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள வனவிலங்கு திணைக்களம், இது ஆபத்தான செயல், காணொளியை பார்த்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட எவரும் முயற்சிக்க வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/185877
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கணனியில் தான் அண்ணை. நான் செய்திகளை இணைக்க முன்னர் தேடுவேன்(search)(நிழலியண்ணையின் அறிவுறுத்தலின் படி, ஒரே செய்தியை திரும்ப திரும்ப இணைக்காதிருக்க), பின்னர் பின்(back) சென்று பொருத்தமான பகுதியில் செய்தியை இணைப்பேன். Activity பகுதிக்கு சென்று செய்திகளை வாசிக்கலாம், பொருத்தமான பகுதிக்குள் செய்தியை இணைக்க கருத்துக்களத்திற்கு வரவேண்டும் என நினைக்கிறேன்.
-
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் யாழ் விஜயம்!
சஜித் பிரேமதாச நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலுக்கு விஜயம்! 11 JUN, 2024 | 06:52 PM எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று செவ்வாய்க்கிழமை (11) நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலுக்கு விஜயம் செய்து விசேட வழிபாடுகளை மேற்கொண்டார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாசந்திரா பிரகாஸ் உள்ளிட்ட கட்சியின் அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு வருகிறார். https://www.virakesari.lk/article/185850
-
சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்புக்கு மக்கள் கடும் எதிர்ப்பு..!
11 JUN, 2024 | 05:37 PM திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு சனிக்கிழமை (08) பாறை உடைப்பு இயந்திரத்துடன் மலை உடைப்பு வேலைகளை ஆரம்பிக்க முயன்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக மலை உடைப்பு வேலைகள் நிறுத்தப்பட்டன. ஆனால் இன்று (11) செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணிக்கு மீண்டும் மலை உடைப்பு வேலைகளை ஆரம்பித்த போது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாறை உடைப்பு இயந்திரம் வேலைகளை ஆரம்பித்த போது அப்பகுதி மக்கள் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று எதிர்ப்பை தெரிவித்து மலை உடைப்பு வேலைகளை தடுத்து நிறுத்தினர். இவ்விடயத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் அரசியல் வாதிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். https://www.virakesari.lk/article/185845
-
ஏமனில் படகு கவிழ்ந்து விபத்து – 38 பேர் பலி: 100 பேர் காணாமற் போயுள்ளதாக தகவல்
ஏமனின் ஏடனில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த படகு ஹார்ன் ஒ ஃப் ஆப்பிரிக்காவிலிருந்து ஏடனின் கிழக்கே பகுதியை நோக்கிய பயணித்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. படகிலிருந்த மீனவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் என 78 பேர் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றனது. மேலும் 100 பேர் காணாமற்போயுள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உயர்அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, கடந்த வருடம் மாத்திரம் 97,000 புலம்பெயர்ந்தோர் ஹார்ன் ஒஃப் ஆப்பிரிக்காவிலிருந்து யேமனுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://thinakkural.lk/article/303486
-
போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார்.. அறிவித்த ஹமாஸ் – ஏற்குமா இஸ்ரேல்?
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் – பாலஸ்தீன போர் நிறுத்தத்தை முன்மொழிந்துள்ள நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அதனை அங்கீகரித்து போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அரசு மற்றும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் அமைப்புக்கு அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்ற ஹமாஸ் அமைப்பு முக்கிய முடிவை அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான தீர்வை ஏற்படுத்துவது, ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள படைகளை முழுவதுமாக திரும்பப்பெறுவது, ஹமாஸ் – இஸ்ரேல் ஆகிய இரு தரப்பிலும் பிடித்துவைத்துள்ள கைதிகளை விடுதலை செய்வது, நிரந்தர போர் நிறுத்தத்துக்கு வழிவகை செய்வது உள்ளிட்ட முக்கிய கூறுகளை உள்ளடக்கிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி இஸ்ரேல் அரசு மற்றும் ஹமாஸ் அமைப்பிடம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியது. காசாவில் 36,000 மக்களை கொன்று குவித்த பிறகு, தற்போது ரஃபாவில் உள்ள அகதி முகாம்கள், மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பை சந்தித்தாலும் தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்துவதாக இல்லை. இந்நிலையில் பாலஸ்தீனிய சுதந்திர அரசும், ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் அமைப்பும் ஐ.நாவின் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தை வெற்றிபெறும் பட்சத்தில் தங்களிடம் உள்ள கைதிகளை விடுவிக்கவும் தாயாராக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இந்த போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ஏற்று பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வை அழித்த இந்த இரக்கமற்ற போரை முடிவுக்கு கொண்டுவருமா என்பதே இப்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது. இதற்கிடையில் காசா தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் பென்னி காண்ட்ஸ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளது கவனிக்கத்தக்கது. https://thinakkural.lk/article/303489
-
300 தொன் பேரீச்சம்பழங்கள் உலக உணவுத் திட்டத்திடம் இன்று கையளிப்பு!
11 JUN, 2024 | 07:11 PM மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையத்தின் ஒரு குழு, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பல பிராந்தியங்களில் விநியோகிப்பதற்கான 300 தொன் பேரீச்சம்பழங்களை உலக உணவுத் திட்டத்திடம் இன்று, செவ்வாய்கிழமை (11), கையளித்தது. இலங்கை குடியரசிற்க்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி மற்றும் இலங்கையில் உள்ள சர்வதேச உணவுத் திட்டத்தின் துணைப் பணிப்பாளர்/ ஜெரார்ட் ரெபெல்லோ மற்றும் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் பின் அப்துல்லா அல்-கலாஃப் போன்றோர் இந் நிகழ்வில் பங்கேற்றனர் . உலக உணவுத் திட்டமானது இப்பேரீத்தம் பழங்களை 200,000க்கும் அதிகமான பயனாளிகளுக்கு விநியோகிக்கும் நோக்கோடு, இப்பேரீத்தம் பழங்களை, KSrelief இடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சவூதி அரேபிய இராச்சியத்தின் மனிதாபிமான மற்றும் முன்னோடி பாத்திரத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கிய இந்த தாராள நன்கொடைக்காக, இரண்டு புனிதத் தளங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் ஆகியோருக்கு, கெளரவத் தூதுவர் அல்கஹ்தானி தனது நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொண்டார். மேலும், தேவையுடையோர்களின் துன்பத்தைப் போக்கும் நோக்கோடு மேற்கொள்ளப்படும், இதுபோன்ற மனிதாபிமானத் திட்டங்களை செயல்படுத்துவதை நேரடியாக மேற்பார்வையிட்டு வரும் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரண மையத்திற்கும் கெளரவத் தூதுவர் அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். இது தொடர்பாக, உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கெளரவ ஜெரார்ட் ரெபெல்லோ, “இந்தத் தாராளமான பங்களிப்பிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, சவூதி அரபிய இராச்சியமானது இவ் உலக உணவுத் திட்டத்திற்கு, மிகப் பெரிய நன்கொடை வழங்கும் நாடுகளில் சவூதி அரேபியா இராச்சியமும் ஒன்றாகும்” என்றார். இரண்டு புனிதத் தளங்களின் பாதுகாவலரின் அரசாங்கத்தால் உலகின் பல்வேறு சகோதர மற்றும் நட்பு நாடுகளுக்கு அங்கு வாழும் மிகவும் தேவையுடைய குடும்பங்களுக்கு விநியோகிப்பதற்க்காக வழங்கும் உதவித் திட்டங்களுக்குள் இதுவும் உள்ளடங்கும். https://www.virakesari.lk/article/185843
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கனம் யாழ் கள நிர்வாகிகளுக்கு @மோகன் @நிழலி @இணையவன், யாழில் தேடுவதற்கும்(Search) தேடிய பின்னர் மீளப் பழைய(Back) நிலைக்குச் செல்வதற்கும் நீண்ட நேரம் செல்கிறது. கொஞ்சம் கவனித்து சீர்செய்துவிடுங்கோ. நன்றி
-
வவுனியாவில் காணி அளவீட்டுக்குச் சென்ற வனவள திணைக்கள அதிகாரிகளை திருப்பி அனுப்பிய பொதுமக்கள்!
11 JUN, 2024 | 07:08 PM வவுனியா கதிர்வேலர் பூவரசங்குளத்தில் காணிகள் எல்லையிட்டு அளவீடு செய்வதற்காக வருகை தந்த வனவள திணைக்கள அதிகாரிகளை பொதுமக்கள் திருப்பி அனுப்பிய சம்பவம் ஒன்று இன்று இடம் பெற்றுள்ளது. 1997 ஆம் ஆண்டு கதிர்வேலர் பூவரசங்குளத்திலிருந்து யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் 2011 ஆம் ஆண்டு குறித்த பகுதியில் மீள்குடியேறியிருந்தனர். அவர்கள் வசித்த பிரதேசம் அனைத்தும் பற்றை காடுகள் நிறைந்ததாக காணப்பட்ட நிலையில் அவர்கள் குறித்த பகுதியை துப்புரவு செய்து விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குறித்த பகுதியில் வன வளத்திற்குரிய காணிகள் இருப்பதாக தெரிவித்து வனவள திணைக்களத்தினர் இன்று (11) அளவீட்டுப் பணிகளை மேற்கொள்ளனர் . அவர்கள் குறித்த பொதுமக்களுடைய வயல் நிலங்கள் மற்றும் தோட்டம் செய்கின்ற பகுதிகளையும் வனவளத்திற்கு உரியதாக அடையாளப்படுத்தி இருந்தமையினால் அவர்களை குறித்த பகுதியில் அளவீடு செய்ய விடாது பொதுமக்கள் அவர்களோடு முரண்பட்டனர் . தமது கிராமத்துக்குரிய கிராம சேவையாளரை அழைத்து வருமாறும் அதன் பின்னரே அளவீட்டுப் பணியை மேற்கொள்ள அனுமதிப்போம் என்றும் தாம் விவசாயம் செய்யும் பகுதியை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாது எனவும் அவர்கள் இதன் போது தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அங்கு வருகை தந்திருந்த வன வள திணைக்களத்தினர் தாம் செய்மதி ஊடாக பெறப்பட்ட அடையாளப்படுத்தப்பட்ட இடங்களை சரி பார்ப்பதற்கு வந்திருப்பதாகவும் தமது பணியை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரியுள்ளனர் . எனினும் கிராம மக்கள் 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனமாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களை ஜனாதிபதி விடுவிப்பதாக தெரிவித்துள்ள நிலையில் தற்போது தமது விவசாய நிலங்களையும் சேர்த்து வனவளத்துக்குரியதாக அடையாளப்படுத்துவதானது ஜனாதிபதியின் கருத்து பொய்யா அல்லது வன வள திணைக்களத்தின் கருத்து பொய்யானதா என்பதை உறுதிப்படுத்துமாறும் கேட்டதற்கு இணங்க வனவள திணைக்களத்தினர் குறித்த பகுதியில் இருந்து சென்றதோடு கிராம சேவையாளரையும் அழைத்து வருவதாக தெரிவித்துள்ளனர் . https://www.virakesari.lk/article/185840
-
இன்று பூமியைத் தாக்கும் சூரியப் புயல்!
மிதமான சூரியப் புயல் இன்று (11) பூமியைத் தாக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது. இதனால் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் அதிகம் பாதிக்கப்படலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இன்றைய சூரியப் புயல் தாக்கமானது 2017ஆம் ஆண்டுக்கு பின் பூமியில் ஏற்பட்ட மிக வலுவான தாக்கம் என நாசா குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/303535
-
யாழில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கொல்களம் முற்றுகை - கன்றுத்தாச்சி மாடு உட்பட 3 பசுக்கள் மீட்பு!
11 JUN, 2024 | 05:35 PM யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, துன்னாலைப் பகுதியில் சட்டவிரோத இயங்கி வந்த மாடு வெட்டும் கொல்களமொன்றை சவகச்சேரிப் பொலிஸார் முற்றுகையிட்டதுடன் இறைச்சியாக்கப்படவிருந்த கன்றுத்தாச்சி மாடு உட்பட மூன்று பசு மாடுகளை மீட்டுள்ளனர் . இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றுள்ளதுடன் மாடுகளை கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன், நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் பிரதேசத்தில் அண்மையில் வளர்ப்பு மாடுகள் திருடப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீண்ட தேடுதலுக்கு பின்னர் பொலிஸார் குறித்த சட்டவிரோதமாக இயங்கி மாடு வெட்டும் இடத்தை கண்டுபிடித்துள்ளனர். இதன்போது சாவகச்சேரி- மட்டுவில் கிராமத்தில் திருடப்பட்ட ஒரு மாட்டினை பொலிஸார் மீட்டுள்ளதுடன் ஏனைய இரண்டு மாடுகள் அடையாளம் காணப்படாத நிலையில் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றது. https://www.virakesari.lk/article/185848
-
இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்களை யாழில் சந்தித்து கலந்துரையாடினார் அநுரகுமார
மாகாண சபை முறைமை தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையாது - தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொண்டுள்ளது என்கிறார் சுமந்திரன் 11 JUN, 2024 | 03:39 PM (எம்.நியூட்டன்) 13 ஆம் திருத்தச் சட்டத்திலுள்ள மாகாண சபை முறைமை தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையாது என்பதை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக் கொண்டுள்ளது எனவும் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கை வெளியான பின்னரே தமிழரசுக் கட்சி இறுதி முடிவு எடுக்கும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திஸ்ஸநாயக்க தலைமையிலான குழுவினருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான சி.வி.கே.சிவஞானம், எஸ்.குலநாயகம், ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (11) நண்பகல் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்புத் தொடர்பிலே ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னேற்ற கரமான பேச்சுவார்த்தை எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் கண்டு விடவில்லை. ஆரம்ப கலந்துரையாடல் என்ற போர்வையில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் வகையிலான கலந்துரையாடல் இடம் பெறுகின்றது. நம்பிக்கை தருகின்ற பேச்சுவார்த்தையாக இடதுசாரி இயக்கம் என்ற வகையில் அவர்களுடன் எங்களுக்கு இணங்கிச் செல்லக்கூடிய பல விடயங்கள் இருக்கின்றன. குறிப்பாக ஊழல் ஒழிப்பு, மக்கள் மத்தியில் சம உரிமை என்ற பல விடயங்கள், பொருளாதார சமத்துவம், போன்ற பல விடயங்களில் நேரடியாகவே இணங்கக்கூடியதாக இருந்தது. தமிழ்த்தேசிய பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் பல ஏற்றத்தாழ்வுகள் பழைய சரித்திரங்கள் இருந்தாலும் கூட அவர் கூறியது போன்று தற்போது இருக்கின்ற மாகாண சபை முறைமையை அப்படியே ஏற்றுக்கொள்வதாகவும் அதனை நடைமுறைப்படுத்துவதாகவும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த 13 ஆம் திருத்தச் சட்டத்திலுள்ள மாகாண சபை முறைமை தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கான தீர்வு அல்ல என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள் இதில் இருந்து முன்னேறிச் செல்வதற்கான வழிவகைகளை இரு தரப்பாகவும் இணைந்து பேசி செல்ல வேண்டும். இரு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு அப்பால் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தாங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்கள் அதன் பின்னர் அவர்களுடன் நடத்தப்படுகின்ற பேச்சுவார்த்தையை அடிப்படையாக வைத்து இலங்கை தமிழரசுக் கட்சி உரிய நேரத்தில் முடிவுகளை எடுக்கும் என்றார். https://www.virakesari.lk/article/185831
-
மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி சென்ற விமானம் மாயம்…! தேடுதல் பணி தீவிரம்..!
மலாவியின் துணை ஜனாதிபதி பயணித்த விமானம் காட்டுபகுதியில் விபத்தில் சிக்கியிருக்கலாம் - பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் 11 JUN, 2024 | 03:37 PM மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமாவுடன் காணாமல்போன ஹெலிக்கொப்டரை தேடும் பணிகள் தொடர்கின்ற அதேவேளை குறிப்பிட்ட ஹெலிக்கொப்டர் காட்டுபகுதியில் விபத்திற்குள்ளாகியிருக்கலாம் என மலாவி இராணுவம் தெரிவித்துள்ளது. தலைநகரிலிருந்து புறப்பட்ட பின்னர் ஹெலிக்கொப்டருடான தொடர்பு அற்றுப்போயுள்ளதாக மலாவியின் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி உடனடி தேடுதல் நடவடிக்கைகளிற்கு உத்தரவிட்டுள்ளார் நாட்டின் வடபகுதியில் உள்ள காட்டில் ஹெலிக்கொப்டர் விபத்திற்குள்ளாகியிருக்கலாம் என சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மோசமான காலநிலைக்கு மத்தியிலேயே இராணுவ ஹெலிக்கொப்டர் பயணத்தை மேற்கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெலிக்கொப்டரை கண்டுபிடிப்பதற்காக படையினர் சிகாங்கவா காட்டுபகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பனி காரணமாக காட்டிற்குள் எவற்றையும் சரியாக பார்க்கமுடியவில்தை இதனால் மீட்புநடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என மலாவியின் பாதுகாப்பு தளபதி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/185832
-
யாழில் இராணுவ வாகனம் - மோட்டார் சைக்கிள் விபத்து - இரு இளைஞர்கள் படுகாயம்!
11 JUN, 2024 | 03:05 PM யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலாலி இராணுவ முகாமை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த, இராணுவத்தினருக்கு சொந்தமான பௌசர் வாகனம், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/185821
-
இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்களை யாழில் சந்தித்து கலந்துரையாடினார் அநுரகுமார
Published By: DIGITAL DESK 3 11 JUN, 2024 | 02:00 PM தேசிய மக்கள் சக்தியினருக்கும் தமிழ் அரசுக் கட்சியினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை யாழில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ள அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் மாவை சேனாதிராசா தலைமையிலான தமிழ் அரசுக் கட்சியினரை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை இச் சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது பிரதானமாக ஜனாதிபதித் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைமைகள் பற்றி கலந்துரையாடப்பட்டன. இச் சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராசா, துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், நிர்வாக செயலாளர் குலநாயகம், ஊடகப் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். அதே போன்று தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் அக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பிமல் ரத்நாயக்கா, இராமலிங்கம் சந்திரசேகரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185815
-
பாதுகாப்பற்ற ரயில் கடவையை புனரமைத்துத் தருமாறு கோரி பிரதேச மக்கள் போராட்டம்!
11 JUN, 2024 | 12:58 PM கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இந்திராபுரம் பிரதான வீதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையினை பாதுகாப்பான ரயில் கடவையாக புனரமைத்துத் தருமாறு கோரி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று செவ்வாய்க்கிழமை காலை (11) முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீள் குடியேற்ற கிராமமான முகமாலை இந்திராபுரம் மக்கள் கடந்த 2000 ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமது சொந்த இடங்களில் குடியேறியுள்ளனர் . இந்த நிலையில் குறித்த பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையானது இதுவரை புனரமைக்கப்படாமலும் பாதுகாப்பற்ற ரயில் கடவையாகவும் காணப்படுவதனால் இதனை பாதுகாப்பான நிரந்தரமான கடவையை அமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் குறித்த பிரதேசத்தில் 350 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் குறித்த பிரதேசங்களில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு வருவதனால் மாற்றுவழிப்பாதை எதனையும் பயன்படுத்த முடியாது உள்ளதாகவும் பிரதேச மக்கள் இவ்வீதியையே பயன்படுத்த வேண்டி இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே குறித்த பாதையை பாதுகாப்பான ரயில் கடவையாக புனரமைத்து தருமாறு கோரி ரயில்வே திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றிற்கு மகஜர்களையும் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185803
-
யாழ். வட்டுக்கோட்டையில் வாள் வெட்டு ; இளைஞன் படுகாயம்!
11 JUN, 2024 | 01:11 PM யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை, துணைவி பகுதியில், வாள் வெட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை (10) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் வன்முறை கும்பல் இந்த வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு தப்பி சென்றுள்ளனர். வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185812
-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் பயணித்த வாகனம் விபத்து : ஒருவர் காயம்
11 JUN, 2024 | 03:24 PM மட்டக்களப்பு வீதி தளங்குடா பிரதேசத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோன் பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி மின்சார தூணில் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை 2.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன் உள்ளிட்ட 3 பேர் சம்பவதினமான இன்று செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை பொத்துவில் அறுகம்பையில் இருந்து வவுனியா நோக்கி வாகனத்தில் பயணித்துள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185819