Everything posted by ஏராளன்
-
காசா எகிப்திய எல்லையில் முக்கிய பகுதியை கைப்பற்றியது இஸ்ரேல் - காசாவின் முழு நிலப்பரப்பும் இஸ்ரேலின் பிடியில்
30 MAY, 2024 | 11:33 AM எகிப்தின் எல்லையில் ஒரு சிறிய பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து காசாவின் முழு நிலப்பரப்பும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இஸ்ரேலிய படையினர் குறிப்பிட்ட பகுதியை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். காசா பள்ளத்தாக்கிற்கும் எகிப்திற்கும் இடையில் உள்ள 14 கிலோமீற்றர் நீளமான பிலாடெல்பி கொறிடோரை கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேலின் தலைமை இராணுவ பேச்சாளர் டானியல் ஹகாரி தெரிவித்துள்ளார். இதுவரை இந்த பகுதி மாத்திரமே இஸ்ரேலின் நேரடிகட்டுப்பாட்டின் கீழ் இல்லாமலிருந்த பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதியே ஹமாசிற்கான உயிர்நாடியாக விளங்கியது காசாவிற்குள் ஆயுதங்களை கொண்டுவருவதற்கு ஹமாஸ் இந்த பகுதியை பயன்படுத்தியது என தெரிவித்துள்ளஇஸ்ரேலின் தலைமை இராணுவ பேச்சாளர் டானியல் ஹகாரி 20 சுரங்கப்பாதைகளை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தனது ரபா தாக்குதலை நியாயப்படுத்துவதற்காக எகிப்திய எல்லையில் சுரங்கப்பாதைகளை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கின்றது என எகிப்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/184843
-
பாதணிகளில் கார்த்திகை பூ ; தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - ஐங்கரநேசன்
கார்த்திகை மலர் பொறிக்கப்பட்ட பாதணிகளை மீளப்பெற அதிகாரத்தை பயன்படுத்துவார்களா? - பொலிஸ் மா அதிபரிடம் வினவியுள்ள அருட்தந்தை மா.சத்திவேல் Published By: DIGITAL DESK 3 30 MAY, 2024 | 03:24 PM கார்த்திகை மலர் மிதிபடும் ஒன்றாக்கியதன் மூலம் தமிழர்களின் அரசியலை மிதித்தழிப்போம் என பகிரங்கமாகவே கர்ஜிப்பதாகவே உள்ளது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று வியாழக்கிழமை (30) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் பிரபல பாதணி உற்பத்தி நிறுவனமான டி.எஸ். ஐ கம்பெனி அண்மையில் சந்தைப்படுத்தியுள்ள தனது உற்பத்தி ஒன்றில் கார்த்திகை மலரை பதிவிட்டுள்ளது. இது இலங்கையின் பேரினவாத அரசியல் முதலாளித்துவத்தினையும் எந்த அளவிற்கு ஆக்கிரமித்துள்ளது என்பதை காட்டுவதோடு தமிழர்களின் அரசியல் அடையாளங்களில் ஒன்றான கார்த்திகை மலரை மிதிபடும், மிதிக்கப்படும் ஒன்றாக்கியதன் மூலம் தமிழர்களின் அரசியலை மிதித்தழிப்போம் என பகிரங்கமாகவே கர்ஜிப்பதாக உள்ளது. இதனை வன்மையாக கண்டிப்பதோடு தமிழ் உணர்வு மிக்க தேசப்பற்றார்கள் இதற்கு தகுந்த பாடத்தை வெளிப்படுத்த வேண்டும். யாழ் தெல்லிப்பளையில் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டி ஒன்றில் இம் மலர் அலங்காரத்துக்கு பாவிக்கப்பட்ட போது அப்பாடசாலையில் அதிபர் உட்பட ஆசிரியர்களை பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தினர். இதே போன்று மேற்படி குறித்த பாதணி கம்பனியின் திட்டமிடல் வடிவமைப்பு சந்தைபடுத்துனர்கள் விற்பனை முகவர்கள் என பலதரப்பினரையும் பொலிசார் விசாரணைக்கு உட்படுத்துவார்களா? சந்தையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ள பாதணிகளை மீளப்பெற அதிகாரத்தை பயன்படுத்துவார்களா? என பொலிஸ் மா அதிரை கேட்கிறோம். கடந்த ஒரு கிழமைக்கு முன்னர் கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்ட போது சுகாதாரத்தை காரணம் காட்டி அதனை தடுத்து நிறுத்தி அடவாடித்தனம் புரிந்த பொலிசார் அதற்கடுத்து கடந்த கிழமை விசாக பண்டிகை காலத்தில் அதே சுகாதாரத்தை காரணம் காட்டி எந்த ஒரு உணவு பகிர்களையும் தடுத்து நிறுத்தியதாக அடவாடித்தனம் புரிந்ததாக செய்திகள் வரவில்லை. இது தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்கள பௌத்தர்களுக்கு ஒரு நீதி எனும் பௌத்த பேரனவாதத்தின் அரசியலை வெளிப்படுத்தியது. ஒரு உற்பத்தி நிறுவனம் தன்னுடைய நீண்ட கால கள ஆய்வில் மக்களின் மனநிலையை அறிந்த பின்னரே உற்பத்தியினை வடிவமைக்கும். சந்தையில் விற்பனைக்கு விடும். அவ்வாறெனில் டி. எஸ்.ஐ கம்பெனி நீண்ட கால திட்டமிடலின் அடிப்படையில் காலனியில் கார்த்திகை மலரை அடையாளப்படுத்தி உற்பத்தி செய்து சந்தைப்படுதைக்கு விட்டுள்ளது எனில் இலாபத்திற்கு அப்பால் அதன் அரசியல் நோக்கம் தெளிவானது. தமிழர்களை அடக்கி ஒடுக்கி அரசியல் ரீதியாக துவம்சம் செய்வோம் எனும் பேரினவாத மனநிலையை மக்கள் மயப்படுத்தி தமது அரசியல் கூலித்தன்மையை வெளிப்படுத்தி உள்ளது எனலாம். அரச திணைக்களங்கள், சிங்கள பௌத்த பிக்குகள் தமது பேரினவாத செயற்பாட்டுக்குள் இழுத்து தமிழர்களின் நிலைகளை பறித்து ஆக்கிரமிக்கும் ஆட்சியாளர்கள் தனியார் உற்பத்தி நிறுவனங்கள் வேலைத் தளங்கள் என்பவற்றையும் தமது அரசியலுக்கு பாவிக்க தொடங்கிவிட்டனர் என்பதையே டி. எஸ். ஐ கம்பெனி வெளிப்படுத்தி உள்ளது. பேரினவாதம் பலம் வாய்ந்த ஒன்றாக கட்டமைக்கப்பட்டு பல்வேறு முகங்களில் கிளைகளை பரப்பி சிங்கள பௌத்த அரச மரம் போல் வியாபித்திருக்கின்றது என்பதை நாம் உணர வேண்டும். இதற்கு தமிழர் தேசிய கொள்கை உருவாக்கிகள், பரப்புரையாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர் எவ்வாறு பதில் அளிக்க போகின்றனர்? தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள் ஒன்றிணைய வேண்டும்,மக்கள் திரட்சி கொள்ள வேண்டும், அடுத்த தேர்தலுக்கு மக்களை ஆயத்தப்படுத்த வேண்டும் என்று கூறுவார்கள் உடனடியாக பாதணி விடயத்தில் தலையிட்டு அரசுக்கும் கம்பெனிக்கும் தமது எதிர்ப்பினை வடகிழக்கு தழுவிய ரீதியில் வெளிக் காட்டுதல் வேண்டும். எமது எதிர்ப்பு பாதணிக்கும், பாதணி கம்பெனிக்கும் எதிரானது மட்டுமல்ல. அது அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலுக்கும் அதன் சக்திகளுக்கும் எதிரானதுமாகும். பல இலட்சம் உயிர்கள் எமது அரசியலுக்காக கொல்லப்பட்ட பின்னரும் எமது அரசியலை கைவிடாத தேசமாக ஒன்று திரண்டு எதிர்ப்பு காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.இச் சந்தர்ப்பத்தில் அமைதி காப்போம் எனில் எமது அரசியலுக்கு நாமே எதிரிகளாவோம். https://www.virakesari.lk/article/184879
-
யாழில் மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்
யாழில் மாணவிகளுடன் துர்நடத்தை : ஆசிரியருக்கு கற்பிக்க தடை Published By: DIGITAL DESK 3 30 MAY, 2024 | 03:09 PM யாழ்ப்பாணத்தில் 10 வயது மாணவிகளுடன் துர்நடத்தையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியருக்கு வடமாகாண கல்வி அமைச்சினால் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 05 இல் கல்வி கற்கும் 10 வயதான மாணவிகளுடன் ஆசிரியர் ஒருவர் தவறாக நடந்து கொண்டதாக பாதிக்கபப்ட்ட மாணவி ஒருவரின் பெற்றோர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் , பொலிஸார் ஆசிரியரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கபட்டுள்ள நிலையில் மன்றில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் திணைக்களம் ஊடான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் , விசாரணை அறிக்கை கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் , ஆசிரியர் தனது பணியினை தொடர தடை விதிக்கப்பட்டு , குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/184874
-
முன்னாள் போராளியின் துயரம் : புதிய கோணத்தில் உதவிகள் தேவைப்படுவதை உணராத ஈழத்தமிழ்ச் சமூகம்
முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் துயரங்கள் எண்ணிலடங்காதவை. அண்ணா இருந்திருந்தால் இப்படியெல்லாம் நாங்கள் ஏன் கஷ்டப்படப் போகின்றோம் என முன்னாள் பெண் போராளியொருவார் தனது துயரங்களை வெளிப்படுத்தியுள்ளார். சோதியா படையணியின் திறமைமிக்க போராளியாக இருந்த இவர் திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தாயாக இப்போது இருக்கின்றார். குடிபோதையில் நித்தம் சண்டை போடும் கணவரோடு அவரது வாழ்க்கை தொடர்ந்து சொல்கின்றதை அவருடனான உரையாடலின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைந்து வாழ வாய்ப்பளிக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தினால் சொல்லப்பட்ட போதும் அவர்களது புனர்வாழ்வு விடுதலைப்புலிகளின் அமைப்பின் கொள்கைப் பிடிப்புக்களில் இருந்து அவர்களை விடுவிப்பதை மட்டுமே நோக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதனை முன்னாள் போராளிகள் இன்று எதிர்நோக்கும் சவால்களில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடியும் என சமூக விட ஆய்வாளர் வரதன் இது தொடர்பில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். முன்னாள் போராளிகளின் தியாகங்களைச் மதித்து செயற்பட்டு வருவோர் அவர்களது உளவியல் சார் விடயங்களில் தங்களின் கவனத்தினைச் செலுத்துவதில் உள்ள அவசியத்தை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். திசைமாறிய வாழ்வு சோதியா படையணியில் இருந்தவாறு தேச விடுதலைக்காக போராடி விழுப்புண்களைச் சுமந்து விட்ட முன்னாள் போராளியான இவரை திருமணம் செய்து கொண்டவர் ஒரு சிங்களவர் என்பது ஆச்சரியமான விடயமாகும் என ஈழ விடுதலைப்போராட்ட வரலாற்றை கொண்டு ஈழத் தமிழருக்கான தீர்வுகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு வரும் எழுத்தாளர் ஒருவர் குறிப்பிட்டார். தமிழர்களின் நியாயமான சுயநிர்ணய உரிமைகளை மதித்து நடந்து கொள்ள முடியாத போதே ஆயுதம் ஏந்தி போராட தலைப்பட்டனர் தமிழர்கள். அப்படியான சூழலில் அன்று யாருக்கு எதிராக போராடினார்களோ அவர்களின் சமூகத்தில் இருந்து ஒருவரை திருமணம் செய்து தன்னுடைய வாழ்க்கைத் துணையாக கொள்ள முடிந்தது எப்படி என்ற கேள்வியின் போதுதான் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்ற கேள்வி எழுந்துள்ளது. நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தில் தோல்விகளும் வெற்றிகளும் மாறி மாறி வந்து போவது ஆச்சரியமானதல்ல. ஆனாலும் ஏன் நாம் போராடினோம். யாரோடு போராடினோம். அவர்கள் எப்படி எங்களுக்கு நல்லது செய்வார்கள் என்று நம்பி நடப்பதற்கான ஏதுக்கள் என்ன இருக்கின்றன என்றவாறான பல கேள்விகளுக்கு விடைகளைக் தேடிக்கொள்ள முயன்றவாறு நாம் நம் அன்றாட வாழ்வியலை முன்னகர்த்திச் செல்ல தவறிப் போகின்றோம். இதனை அந்த முன்னாள் போராளியின் இன்றைய வாழ்வு நிலை உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்களவரான கணவரின் வார்த்தைப் பிரயோகங்கள் அந்த முன்னாள் போராளியினை சொல்லால் கொன்று விடுவதாக இருக்கின்றது. மனதால் ஒரு முன்னாள் போராளி அனுபவித்து வரும் சித்திரவதைகளை தடுப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகளையும் இதுவரை யாரும் முன்னெடுக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயம். போதையின் தாக்கம் குடும்ப வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் நன்றாகவே இருந்தார். நாளடைவில் பொருளாதார கஷ்டம் ஏற்பட்ட போது அவர் குடிக்கத் தொடங்கி விட்டார். ஆரம்பத்தில் கள்ளு மற்றும் சாராயத்தை குடித்தவர் நாளடைவில் கசிப்புக்கு பழக்கப்பட்டு விட்டார். கசிப்பு குடித்து விட்டு வரும் நாளெல்லாம் வீட்டில் கடுமையாக சண்டையிட்டுக் கொள்வார் என்று அந்த முன்னாள் போராளியுடனான உரையாடலில் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த முன்னாள் போராளி தன் மூன்று பிள்ளைகளுக்கும் சிங்களத்தில் பெயரிட்ட இருக்கின்றார். 2009ஆம் ஆண்டு ஓமந்தையில் படையினரிடம் சரணடைந்த பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட இவர் சிங்களவரான தன் கணவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். ஒரு முன்னாள் போராளியான உங்களால் எப்படி ஒரு சிங்களவரைக் காதலிக்க முடிந்தது என்ற கேள்விக்கு மௌனமாக ஒரு புன்னகையை உதிர்ந்து கொண்டார். போதையில் இருக்கும் சந்தர்ப்பங்களில் தன் கணவரின் செயற்பாடுகள் தொடர்பில் அவர் குறிப்பிடும்போது குடும்ப வாழ்வை வெறுத்து விட்டதான தன் உணர்வையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். கணவனை குறிப்பிடும் போது மரியாதைக் குறைவான சொல்லாடலைப் பயன்படுத்தி இருந்ததோடு தனக்கேதும் உதவிகளை செய்ய யாரேனும் முன்வந்தால் தன் கணவனிடமிருந்து விவகாரத்து வாங்கித் தந்தாலே அது பெரிய உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். ஈழ விடுதலைப் போரின் போது விழுப்புண் பட்டு உடலில் அதன் தழும்புகளைப் கொண்டுள்ள இந்த முன்னாள் பெண் போராளியினை விழுப்புண்ணால் ஏற்பட்ட மாற்றங்களை குறிப்பிட்டு அவரது கணவர் போதையில் உள்ள போது அவரை தரக்குறைவான வார்த்தைப் பிரயோகத்தினால் இழிவுபடுத்தி பேசுவதாகவும் தன்னை திருமணம் செய்து கொண்டதாலேயே தான் கஷ்டப்படுவதாக அவர் திட்டிக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். தன் அயலவர்கள் மற்றும் உறவினர்களை சண்டைக்கு இழுத்துக் கொள்வார். அவர்கள் இவரது சுபாவத்தைப் புரிந்து கொண்டு நடப்பதால் முரண்பாடுகளைத் தவிர்த்துக்கொள்ள முடிவதாக முன்னாள் போராளி கூறியுள்ளார். மன உளைச்சல் விழுப்புண் பட்டு இயல்பு நிலையில் வாழ முடியாதவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டிய சூழலில் அவர்களது அசாதாரண நிலையைச் சுட்டிக்காட்டி அவர்களை இழிவுபடுத்தல் என்பது அவர்களுக்கு பெரும் மனவுளைச்சலை ஏற்படுத்தும் என உளவள ஆலோசகர் ஒருவருடன் உரையாடும் போது இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். சாதாரணமாக வாழ்பவர்களிடையே ஏற்படும் மனவுளைச்சலை இலகுவில் மாற்றியமைத்து அதிலிருந்து அவர்களை விடுவிக்க முடியும். ஆனாலும் கொள்கைப் பிடிப்போடு உயிர்த்தியாகம் செய்து விடத் துணிந்த முன்னாள் போராளிகளிடையே ஏற்பட்டு விடும் மனவுளைச்சலை மாற்றியமைத்து அவர்களை விரக்தியில் இருந்து விடுவித்துக் கொள்வது கடினமானது. இலங்கை அரசினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட புனர் வாழ்வளிப்புக் கூட யதார்த்த சூழலை விளக்கி வன்முறையற்ற வாழ்வு ஒன்று உங்களுக்கு உறுதிப்படுத்தப்படுவதாக மட்டுமே அமைந்துள்ளது. முன்னாள் போராளிகளினால் அந்த யதார்த்தத்தினை இலகுவாக ஏற்றுக்கொண்டு செயற்பட முடியும். ஏனெனில் அவர்களால் நேர்த்தியான முறையில் சிந்திக்க முடியும். சிங்கள தேசத்தினால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இன்னல்களைப் புரிந்து கொண்டு தங்கள் வாழ்வை தியாகிக்கும் படி வாழ்ந்தவர்கள் முன்னாள் போராளிகள் ஆகும். ஆயினும் நாட்கள் கடந்து போகும் போது ஏற்படும் சூழல் மாற்றங்கள் அவர்களை வெகுவாகப் பாதிக்கின்றன. அந்தப் பாதிப்பில் இருந்து அவர்களை காத்துக்கொள்ள வேண்டும். முன்னாள் போராளிகளின் நலன்களில் அக்கறை காட்டுவோர் அவர்களது அன்றாட வாழ்வியலை எதிர்கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அவர்கள் மனவுளைச்சலுக்கு உள்ளாகும் வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன என்பதை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். நிர்வாக இயக்கம் விடுதலைப் புலிகளின் நிர்வாக இயக்கத்தில் இருந்து இன்றைய சமூகத்தின் நிர்வாக இயக்கம் பாரியளவிலான வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. அவர்களது நிர்வாக இயக்கத்தில் சாதாரண குடிமக்களின் இயல்பு வாழ்வை பாதுகாத்துக் கொடுக்கும் கட்டமைப்புக்கள் இருந்தன. அதனால் இயல்பு வாழ்வுக்கு நல்ல பண்புகள் மட்டும் போதுமாக இருந்தது. எனினும் இன்றைய நாட்களில் உள்ள நிர்வாக இயக்கத்தில் ஊழல், ஏமாற்று போன்ற நற்பண்பியலுக்கு முரணான பல விடயங்களை எதிர் கொண்டு வாழ வேண்டும். அதனை எதிர்கொள்ளும் போது இவர்கள் மனவுளைச்சலுக்கு உள்ளாகி வருவதனை ஈழத்தில் அவதானிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை அரசாங்க நிர்வாகம் உறுதிப்படுத்தும் வகையில் கட்டமைப்புக்களை கொண்டுள்ள போதும் அவை முழு நிறைவாக செயற்படாத போக்கு இருப்பதை நாம் உணர்ந்தாக வேண்டும். முதியோர்களை அவர்களது வயதனுபவம் மற்றும் பெரியோர் என்ற அடிப்படையில் அவர்களை மதித்து நடத்தாத அரச அலுவலகங்களில் உள்ள அதிகாரிகள், ஊழியர்களை நம் அன்றாட வாழ்வில் அவதானிக்க முடிவதை இங்கே சுட்டிக்காட்டலாம். முன்னாள் போராளிகளின் மனநிலை ஆயினும் விடுதலைப்புலிகளின் காலத்தில் முதியவர்களுக்கு மற்றும் பொது மக்களுக்கும் உரியளவிலான மரியாதைகள் வழங்கப்பட்டிருந்தன என்பதை உள்ளூர் மக்களோடு மேற்கொள்ளும் நீண்ட கலந்துரையாடல்கள் மூலம் அறிய முடியும் என்பது இங்கே நோக்கத்தக்கது. ஒவ்வொரு முன்னாள் போராளியும் ஏதோவொரு மனவுளைச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என்பதை மறுதலிக்க முடியாது. உலகளவில் உள்ள புலம்பெயர் தமிழ்ச் சமூகம் மற்றும் தாயக வாழ் ஈழத்தமிழ்ச் சமூகம் போன்றன முன்னாள் போராளிகளை அவர்களது மனவுளைச்சலில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைகளைப் புரிந்து கொண்டு தங்கள் வாழ்வை திட்டமிட்டு முன்கொண்டு செல்ல வழிகாட்ட ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டும். அது ஒன்றே அவர்களது இன்னல்களுக்கான குறைந்தபட்ச மருந்தாக இருக்கும். அவர்கள் கொண்ட ஈழத் தாகத்தின்பால் அவர்களின் தியாகத்திற்கான கைமாறாக அமையும் என்பதும் திண்ணம். https://tamilwin.com/article/ex-combatant-s-grief-1717049562?itm_source=parsely-detail
-
கறையானால் அறிக்கப்பட்ட மின்கம்பங்களை மாற்றி தரும்படி மக்கள் கோரிக்கை!
Published By: DIGITAL DESK 7 30 MAY, 2024 | 04:17 PM கறையானால் அறிக்கப்பட்ட மின்கம்பங்களை மாற்றி தரும்படி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் ஹங்குராங்கெத்த ராத்துங்கொட தோட்டப்பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள மரத்தூன்களிலான மின்கம்பங்கள் அடியில் கறையான்களால் அறிக்கப்பட்டு விழும் தருவாயில் உள்ளது. ஹங்குரன்கெத பிரதேச சபைக்குட்பட்ட ஹேவாஹெட்ட ராத்துங்கொட தோட்ட பகுதியில் காணப்படும் மரத்திலான மின்கம்பங்கள் கறையானால் அறிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதனால் பலத்த காற்று காரணமாக அது உடைந்து வீடுகளின் மேல் விழும் அபாயம் உள்ளது. இதனால் இப்பிரதேச மக்களுக்கு மின்கம்பங்களினால் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாக பொது மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர் ஆகையால் இக்கம்பங்களை மாற்றி தருமாறு இப்பிரதேச பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். https://www.virakesari.lk/article/184872
-
இலங்கையின் இனப்படுகொலைக்கு எதிரான பிரேரரணையை தயாரிக்கும் அமெரிக்கா!
தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை இலங்கை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற 3 காரணிகளை முன்வைத்து அமெரிக்க காங்கிரஸ் இலங்கைக்கு எதிரான பிரேரரணையை தயாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழ தமிழ் மக்களுடன் இராஜதந்திர தொடர்புகளை பலப்படுத்த வேண்டும், அமெரிக்காவும் ஏனைய சர்வதேச சமூகங்களும் இணைந்து தமிழ் மக்களின் சுய உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் மற்றும் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை இலங்கை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற 3 காரணிகளை முன்வைத்து பிரேரரணை தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அண்மையில் அமெரிக்க தூதுவர் வடக்கிற்கு சென்று முன்னாள் போராளிகளை சந்தித்திருந்தார். இலங்கையின் பாதுகாப்பு தரப்பு தூதுவருக்குரிய நடவடிக்கைகக்கு அப்பால் சென்று இலங்கையின் உள்ளக விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக இலங்கையின் பாதுகாப்பு தரப்பு குற்றம் சுமத்தியிருந்தது. இந்நிலையில், இலங்கையின் இராணுவ அதிகாரிகள் சிலர் மீது அமெரிக்கா போன்ற நாடுகள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தன. இவ்வாறான ஒரு பின்னணியில் அமெரிக்காவின் காங்கிரஸ் கட்சி இலங்கைக்கு எதிராக பிரேரணையொன்றை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் அமெரிக்கர்களின் ஐக்கிய அரசியல் நடவடிக்கைக் குழு, இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் குழு மற்றும் உலகளாவிய தமிழ் அமைப்புக்கான கூட்டமைப்பு ஆகியவையே இதற்கான அழுத்தத்தினை பிரயோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://tamilwin.com/article/us-prepares-resolution-against-sri-lanka-genocide-1717060750
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தலுக்கும் போராட்டத்திற்கும் ஏற்பாடு
30 MAY, 2024 | 01:43 PM மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தல் நாளை வெள்ளிக்கிழமை (31) மாலை 4.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெறவுள்ளது. கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிள்ள இந்த நினைவேந்தலில் இலங்கை தொழில் சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் வடக்கு, கிழக்கு ஊடக அமைப்புக்கள் உட்பட பல தரப்பினர் பற்கேற்கவுள்ளனர். இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டதன் பின்னர், இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டமும் இடம்பெறவுள்ளது. இதில் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், பொது அமைப்புகளையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி தனது அலுவலகத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து சிரேஸ்ட ஊடகவியலாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டார். https://www.virakesari.lk/article/184858
-
யாழில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு : மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
சுழிபுரம் திருவடிநிலை காணி அளவீட்டுப் பணி மக்கள் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது 30 MAY, 2024 | 12:54 PM (எம்.நியூட்டன்) யாழ். சுழிபுரம் திருவடிநிலை காட்டுப்புலத்தில் கடற்படை முகாமிற்காக காணி சுவீகரிப்பு இடம்பெறவிருந்த நிலையில், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், காணி உரிமையாளரின் எதிர்ப்பினையடுத்து அந்த காணி சுவீகரிப்பு செயற்பாடு கைவிடப்பட்டது. கடற்படையினரின் காணி சுவீகரிப்புக்காக சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் உள்ள 4 பரப்பு தனியார் காணியினை அளப்பதற்காக திணைக்களத்தினர் காட்டுப்புலத்துக்கு வருகை தந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் தாம் திரும்பிச் செல்வது தொடர்பில் மேலதிகாரிக்கு அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இதனையடுத்து இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேலதிகாரியுடன் தொடர்புகொண்டு பொதுமக்களின் எதிர்ப்பு பற்றி தெரிவித்தார். இந்நிலையில் திணைக்களத்தினர் காணியை விட்டு திரும்பிச் செல்ல மேலதிகாரியினால் உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து சட்டத்தரணி சுகாசினால் உரிமையாளர்களின் எதிர்ப்பு கடிதமும் பாரப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவ்விடத்தை விட்டு நில அளவை திணைக்களத்தினர் அகன்று சென்றனர். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், பொதுமக்கள் என பலரும் களத்தில் இருந்தனர். https://www.virakesari.lk/article/184856
-
சிகரெட் பாவனையால் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பு!
சிகரெட் பாவனையால் இந்நாட்டில் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 பேர் புகைப்பிடிப்பதால் உயிரிழப்பதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டுகிறது. நாளை (31) அனுசரிக்கப்படும் உலக புகையிலை எதிர்ப்பு தினம் தொடர்பாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. புகையிலைத் தொழிலின் குறுக்கீட்டிலிருந்து நமது குழந்தைகளைப் பாதுகாப்பதே இந்த ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் தொனிப்பொருளாகும். தற்போது இலங்கையில் சிகரெட் பாவனை 9.1 வீதத்தால் குறைந்துள்ளதுடன் இளைஞர்கள் மத்தியில் சிகரெட் பாவனை வேகமாக குறைந்து வருவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. புகையிலை நிறுவன அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டில் சிகரெட் உற்பத்தி 19 சதவீதம் குறைந்துள்ளது. உலகில் சிகரெட் பாவனை குறைவடைந்து வரும் நாடுகளில் இலங்கையில் நல்ல போக்கு காணப்பட்டாலும் இன்னும் சுமார் 1.5 மில்லியன் மக்கள் சிகரெட் பாவனையில் ஈடுபடுவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை சிகரெட் பயன்படுத்துவதற்கு பன்னாட்டு புகையிலை நிறுவனங்கள் பல தந்திரங்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதேவேளை, பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய் வைத்திய நிபுணர் சந்தன டி சில்வா தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/302770
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: அட்டவணை, அணிகள் உள்பட அவசியம் அறியவேண்டிய முக்கிய தகவல்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜான்வி மூலே பதவி, பிபிசி மராத்தி 29 மே 2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை விரைவில் தொடங்கவுள்ளது, இந்த முறை அமெரிக்காவிலும் சில போட்டிகள் நடைபெறவுள்ளன. 2024 ஜூன் 1 முதல் 29 வரை நடைபெற உள்ள இந்தப் போட்டிகளை அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இணைந்து நடத்துகின்றன. இது மார்கியூ கிரிக்கெட் போட்டியின் ஒன்பதாவது பதிப்பு. அது மட்டுமல்லாது 20 அணிகளைக் கொண்ட மிகப்பெரிய கிரிக்கெட் போட்டி. இந்தப் போட்டியைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. போட்டிகள் எப்போது, எங்கு நடக்கின்றன, இந்தியா எங்கு விளையாடும் என்பன போன்ற தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம். டி20 உலகக்கோப்பையின் வழிமுறை மற்றும் குழுக்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டி20 உலகக் கோப்பையுடன் அமெரிக்க கிரிக்கெட் அணியின் வீரர்கள் இம்முறை டி20 போட்டிகள் மீண்டும் பழைய வழிமுறையைப் பின்பற்றி நடக்கிறது. அதன்படி மூன்று சுற்றுகளாக விளையாடப்படுகிறது, குழு நிலை (Group stage), சூப்பர் 8 மற்றும் நாக் அவுட் (அரையிறுதி மற்றும் இறுதி) (Knockout) ஆகிய மூன்று சுற்றுகளாக விளையாடப்படுகிறது. இருபது அணிகளும் ஐந்து பேர் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் ரவுண்ட் ராபின் ஃபார்மட்டில் (Round Robin format) ஒருவருக்கொருவர் எதிராக விளையாடுவார்கள். நான்கு குழுக்களில் இருந்து இரண்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குச் செல்லும். ஏ பிரிவில் பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இந்தியா இடம்பெற்றுள்ளது. குரூப் A: கனடா, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா குரூப் B: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நமீபியா, ஓமன், ஸ்காட்லாந்து குரூப் 😄 ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, பப்புவா நியூ கினி, உகாண்டா, மேற்கிந்திய தீவுகள் குரூப் D: வங்கதேசம், நேபாளம், நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை உலகக்கோப்பை போட்டிகளை எப்போது, எங்கே, எப்படி பார்ப்பது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டி20 உலகக்கோப்பை அறிவிப்பு நிகழ்வில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கேல். ஆண்களுக்கான டி20 உலகக்கோப்பையின் முதல் கட்டமாக, குரூப் ஸ்டேஜ், ஜூன் 1ஆம் தேதி தொடங்கி ஜூன் 18ஆம் தேதி வரை நடக்கும். இரண்டாம் கட்டமாக, 'சூப்பர் 8’ போட்டி ஜூன் 19 முதல் 25 வரை நடைபெறும். அரையிறுதிப் போட்டிகள் 27ஆம் தேதியும், இறுதிப் போட்டி ஜூன் 29ஆம் தேதியும் நடைபெறுகிறது. உலகம் முழுவதும் போட்டிகள் வெவ்வேறு நாடுகளில் நடப்பதால், சில போட்டிகள் உள்ளூர் நேரப்படி காலையிலும் சில போட்டிகள் மாலையிலும் நடைபெறும். எனவே அந்தந்த அணிகளின் ரசிகர்கள் போட்டிகளைப் பார்த்து ரசிக்க முடியும். இந்தியாவின் முதல் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கும் மற்ற மூன்று போட்டிகளும் இரவு 8 மணிக்கும் நடைபெறுகிறது. இந்தியா அரையிறுதிக்கு முன்னேறினால் இரண்டாவது போட்டியில் விளையாடும் என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கான அதிகாரப்பூர்வ ஊடக உரிமையை 'டிஸ்னி ஸ்டார்’ (Disney Star) பெற்றுள்ளது, மேலும் பிபிசி இணையதளத்தில் அவ்வப்போது போட்டிகளைப் பற்றிய தகவல்கள் வழங்கப்படும். போட்டிகளுக்கான கால அட்டவணை ஐசிசி ஆடவர் டி20யில் மொத்தம் 55 போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டியின் அட்டவணை பின்வருமாறு. இந்திய அணி பங்குபெறும் போட்டிகள் ஜூன் 5, புதன், இரவு 7:30 மணி: இந்தியா vs அயர்லாந்து, இடம் - நியூயார்க் ஜூன் 9, ஞாயிறு, இரவு 8:00 மணி: இந்தியா vs பாகிஸ்தான், இடம் - நியூயார்க் ஜூன் 12, புதன், இரவு 8:00 மணி: அமெரிக்கா vs இந்தியா, இடம் - நியூயார்க் ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை, இரவு 8:00 மணி: இந்தியா vs கனடா, இடம் - லாடர்ஹில் எந்தெந்த மைதானங்களில் போட்டிகள் நடக்கின்றன? மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள பல்வேறு நாடுகளில் உள்ள 6 மைதானங்களிலும், அமெரிக்காவில் உள்ள 3 மைதானங்களிலும் போட்டிகள் நடைபெறுகிறது. இந்தியாவின் 'குரூப் ஸ்டேஜ்’ போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி மைதானத்தில் மூன்று போட்டிகளும், ஃப்ளோரிடாவின் லாடர்ஹில்லில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் பார்க் மைதானத்தில் ஒரு போட்டியும் நடக்கிறது. நியூயார்க்கில் உள்ள லாங் தீவில் நாசாவ் கவுண்டி மைதானம் அமைந்துள்ளது. டி20 போட்டிக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த மைதானத்தில் தற்காலிக இருக்கை வசதியும் ஆஸ்திரேலியாவில் இருந்து ஆடுகளமும் கொண்டு வரப்பட்டுள்ளது. அரையிறுதிப் போட்டிகளில் டிரினிடாட்டில் உள்ள பிரையன் மைதானத்தில் ஒரு போட்டியும் மற்றொன்று கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்திலும் நடைபெறும். இறுதிப்போட்டி பார்படாஸ், பிரிட்ஜ் டவுனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. 2024 ஆடவர் டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடக்கும் இடங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நியூயார்க்கில் உள்ள லாங் தீவில் நாசாவ் கவுண்டி மைதானம் அமைந்துள்ளது. இந்த கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளம் தற்போது கட்டப்பட்டு வருகிறது. நார்த் சவுண்ட், ஆன்டிகுவா & பார்புடாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம். பார்படாஸின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானம். கயானாவின் பிராவிடன்ஸில் உள்ள பிராவிடன்ஸ் மைதானம். செயின்ட் லூசியாவின் க்ரோஸ் ஐலெட் அருகே டேரன் சமி மைதானம். கிங்ஸ்ஸ்டவுனில் உள்ள அர்னோஸ் வேல் மைதானம், செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் சான் பெர்னாண்டோ, டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் ஸ்டேடியம் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள லாடர்ஹில் சென்ட்ரல் ப்ரோவர்ட் பூங்கா மைதானம் அமெரிக்காவின் டல்லாஸ்-டெக்சாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானம். நாசாவ் கவுண்டி சர்வதேச அரங்கம், லாங் ஐலாந்து - நியூயார்க், அமெரிக்கா ஆடவர் டி20 உலகக்கோப்பை போட்டிகளுக்கான விதிகள் என்ன? முதல்முறையாக, டி20 போட்டியில் 'ஸ்டாப்-கடிகாரம்' (stop-clock) பயன்படுத்தப்பட உள்ளது. பந்துவீவீசும் அணி முந்தைய ஓவர் முடிந்த 60 விநாடிகளுக்குள் அடுத்த ஓவரை வீசத் தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு போட்டியும், 3 மணிநேரம் 10 நிமிடங்களில் முடிக்கப்பட வேண்டும், (ஒவ்வொரு இன்னிங்ஸிற்கும் ஒரு மணிநேரம் 25 நிமிடங்கள் ஒதுக்கப்படும் மற்றும் 20 நிமிட இடைவெளி வழங்கப்படும்). வெவ்வேறு ஃபீல்டிங் கட்டுப்பாடுகளுடன் இன்னிங்ஸின் முதல் ஆறு ஓவர்களுக்கு பவர் பிளே இருக்கும். ஒவ்வொரு அணிக்கும் இரண்டு மதிப்புரைகள் (reviews) கிடைக்கும். ஆட்டம் சமநிலையில் இருந்தால், சூப்பர் ஓவர் வெற்றி முடிவைத் தீர்மானிக்கும். அதாவது ஒவ்வொரு அணியும் ஆறு பந்துகளை எதிர்கொள்ளும். சூப்பர் ஓவரும் டையில் முடிந்தால், வெற்றியாளரைத் தீர்மானிக்கும் வரை சூப்பர் ஓவர்கள் தொடரும். மழை பெய்தால் என்னவாகும்? பட மூலாதாரம்,GETTY IMAGES போட்டிக்கு நடுவில் மழை பெய்து இடையூறு ஏற்பட்டால், டிஎல்எஸ் (டக்வொர்த்-லூயிஸ்-ஸ்டெர்ன், DLS) முறையானது முடிவுகளைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும். ஆனால் டிஎல்எஸ் நடைமுறைக்கு வர, ஒவ்வொரு அணியும் குரூப்/சூப்பர் 8 கட்டத்தில் குறைந்தது 5 ஓவர்கள் அல்லது நாக் அவுட் கட்டத்தில் 10 ஓவர்கள் விளையாடியிருக்க வேண்டும். முதல் அரையிறுதியில் ரிசர்வ் டே (Reserve day) இருக்கும் மற்றும் இறுதிப் போட்டிக்கும் ரிசர்வ் டே இருக்கும். இருப்பினும், இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தை முடிக்க கூடுதலாக 250 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும். முந்தைய வெற்றியாளர்கள் மற்றும் இந்தியாவின் பங்கீடு இதுவரை, ஆறு அணிகள் முந்தைய டி20 போட்டிகளில் வென்றுள்ளன. இந்தியா இரண்டாவது முறையாகப் பட்டம் வெல்வதை இலக்காகக் கொண்டுள்ளது. 2007ஆம் ஆண்டு நடந்த முதல் போட்டியில் இந்திய அணி அற்புதமான வெற்றியைப் பதிவு செய்தது. இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றது மறக்க முடியாத நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2014இல் இந்தியா மீண்டும் பட்டத்தை வெல்லும் சூழலில் இருந்தது. ஆனால் இலங்கைக்கு எதிரான அந்தப் போட்டியில் இரண்டாம் இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. பாகிஸ்தான் 2009இல் ஒருமுறை வெற்றி பெற்றது. அதன் பிறகு மூன்று முறை இறுதிப் போட்டி வரை வந்துள்ளது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, 2010 மற்றும் 2022இல் போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு, டி20 உலகக்கோப்பையில் மூன்றாவது பட்டத்தைப் பெற இலக்கு நிர்ணயித்துள்ளனர். போட்டிகளை நடத்தும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் 2012 மற்றும் 2016இல் இரண்டு பட்டங்களைப் பெற்றுள்ளது. 2021இல் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. அடுத்த டி20 பதிப்பை தொகுத்து வழங்கப் போவது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நடப்பு சாம்பியனாக இங்கிலாந்து களமிறங்கும் கோவிட் கால இடைவெளியைத் தவிர்த்து, ஆண்கள் டி20 உலகக் கோப்பை போட்டிகள் தொடர்ந்து விளையாடப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் டி20 பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆடவர் டி20 உலகக் கோப்பை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் என ஐசிசி தெரிவித்துள்ளது. போட்டியின் அடுத்த பதிப்பை 2026இல் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும். 2028 பதிப்பை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் கூட்டாக நடத்தும். ஆடவர் டி20 உலகக்கோப்பை போட்டிகளில் இடம்பெற்ற வரலாற்று சாதனைகள் அதிக ரன்கள்: விராட் கோலி (இந்தியா) 27 போட்டிகளில் 1,141 ரன்கள் ஒரு போட்டித் தொடரில் அதிக ரன்கள்: விராட் கோலி (இந்தியா) 2014இல் 319 ரன்கள் எடுத்தார் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்: 2012இல் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கல்லம் 123 ரன்கள் குவித்தார். அதிக சதங்கள்: கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) 2007 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் இரண்டு சதங்கள் அடித்தார் அதிக விக்கெட்டுகள்: ஷகிப் அல் ஹசன் (வங்காளதேசம்) 36 போட்டிகளில் 47 விக்கெட்டுகள் ஒரு போட்டித் தொடரில் அதிக விக்கெட்டுகள்: வனிந்து ஹசரங்க (இலங்கை) 2021 பதிப்பில் 16 விக்கெட்டுகள் சிறந்த பந்து வீச்சாளர்: அஜந்தா மெண்டிஸ் (இலங்கை) 2012இல் ஜிம்பாப்வேக்கு எதிராக 8 ரன்களில் 6 விக்கெட்டுகள். அதிக ‘Dismissals’ (விக்கெட் கீப்பர்): எம்எஸ் தோனி (இந்தியா) - 33 போட்டிகளில் 32 விக்கெட்டுகள் அதிக கேட்சுகள் (ஃபீல்டர்): ஏபி டி வில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா) - 30 போட்டிகளில் 23 கேட்சுகள் அதிகபட்ச ஸ்கோர்: இலங்கை vs கென்யா - 2007இல் 260/6 குறைந்த ஸ்கோர்: நெதர்லாந்து vs இலங்கை - 2014இல் 39 (ஆல் அவுட்) மகளிர் டி20 உலகக்கோப்பை எப்போது நடக்கும்? கடந்த 2016இல் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளுக்கான இரண்டு போட்டிகளும் ஒரே நேரத்தில் விளையாடப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு, மகளிர் டி20 உலகக்கோப்பை தனிப் போட்டியாக நடத்தப்படும். இது 2024 அக்டோபரில் வங்கதேசத்தில் நடைபெறும். https://www.bbc.com/tamil/articles/c8004xq5wg4o
-
இந்தியாவின் வரலாற்றில் மிக உயர்வாகப் பதிவான 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை
வெப்ப அலையின் தாக்கத்தால் மயங்கி விழுந்த மாணவர்கள் – பீகாரில் ஜூன் 8வரை பள்ளிகளுக்கு விடுமுறை! 30 MAY, 2024 | 10:26 AM பீகாரில் வெப்ப அலையின் தாக்கத்தை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளி மற்றும் பயிற்சி மையங்களுக்கு ஜூன் 8ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மேற்கு மற்றும் வடமாநிலங்களில் வெப்பம் கொளுத்தி வருகிறது. டெல்லி, உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது. இதனால் பகல் நேரங்களில் தேவையில்லாமல் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டத்தில் உள்ளது மன்கவுல் நடுநிலைப் பள்ளி. இப்பள்ளியில் நேற்று காலை நடைபெற்ற இறைவணக்க நிகழ்ச்சியின்போது வெயிலின் தாக்கத்தால் அடுத்தடுத்து 7 மாணவர்கள் மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தின் எதிரொலியாக மாணவர்களின் நலன் கருதி பீகாரில் இயங்கி வரும் அனைத்து பள்ளிகளுக்கும், பயிற்சி மையங்களுக்கும் ஜூன் 8-ஆம் தேதி வரை விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/184836
-
மாகாண சுகாதாரத்துறை நிர்வாகம் இறுக்கமாக செயற்பட வேண்டும் - யாழ் போதனா வைத்தியசாலையில் வடக்கு மாகாண ஆளுநர்
Published By: VISHNU 30 MAY, 2024 | 02:31 AM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான கட்டடம் திறக்கப்பட்டு 05 வருட பூர்த்தியை முன்னிட்டு 29 ஆம் திகதி புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும் கலந்துக்கொண்டார். இந்நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், “மருத்துவ துறையினர் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தங்களின் சேவையை முன்னெடுத்து வருகின்றனர். அதேபோல சுகாதார அமைச்சின் செலவுகளுக்கே அதிகளவான நிதி தேவைப்படுகிறது. இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. இடப்பற்றாகுறை, கட்டட வசதியின்மை, ஆளணி பற்றாகுறை உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு மத்தியிலேயே சேவைகளை வழங்க வேண்டியுள்ளது. எனினும் மாகாணத்திலுள்ள ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து, வார இறுதி நாட்களில் நோயாளர்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படுவதால் வைத்தியசாலை நிருவாகம் மேலதிக செலவுகளை சந்திக்க வேண்டியுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு இயலுமான சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும். இதன்காரணமாக நோயாளர்களும் சிரமங்களை எதிர்நோக்குவதுடன் அவர்களின் குடும்பங்களை சார்ந்தவர்களும் சிரமப்படுகின்றனர். ஆகவே இந்த விடயம் தொடர்பில் மாகாண சுகாதார துறை நிர்வாகம் மிக இறுக்கமான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். அதேபோல அரச நிறுவனங்களுக்குள் எவரும் அத்துமீறி பிரவேசிக்க முடியாது. இது தண்டனைக்குரிய குற்றம். நேற்று முன்தினம் யாழ் வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குறைகள் உரியவாறு சுட்டிக்காட்டப்பட வேண்டும். அந்த விடயங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தவறுகள் திருத்தப்பட வேண்டும். அத்துடன் ஊடகங்களும் எங்களுடன் இணைந்து பொதுமக்களுக்கான சிறந்த சேவையை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். சிறந்த நண்பர்களாக எங்களுடன் ஊடகங்கள் பயணிக்கும் என நம்புகின்றேன்.” என கருத்து தெரிவித்தார். https://www.virakesari.lk/article/184825
-
யாழில் மாணவிகள் உடம்பில் தழும்புகள்:
யாழில் மாணவிகளை தாக்கிய குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அருட்சகோதரி பிணையில் விடுவிப்பு Published By: VISHNU 30 MAY, 2024 | 02:36 AM யாழில் மாணவிகளை தாக்கிய குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அருட்சகோதரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள பாடசாலை விடுதியில் தங்கி கல்வி கற்று வந்த தம்மை விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி அடித்து துன்புறுத்தியதாக கூறி 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விடுதியில் இருந்த மாணவிகள் 11 பேர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். அதனை அடுத்து மாணவிகளை யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் முன் முற்படுத்திய வேளை மாணவிகளின் உடலில் தழும்புகள் இருந்தமை கண்டறியப்பட்டது. அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்றுறை பொலிஸார் அருட்சகோதரியை கைது செய்து, ஊர்காவற்றுறை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை, அவரை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் புதன்கிழமை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அருட்சகோதரி மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில், அருட்சகோதரியை 50 ஆயிரம் ரூபாய் காசு பிணை, ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்த மன்று, மாணவ விடுதிக்கு அருட்சகோதரி செல்ல கூடாது எனவும், பாதிக்கப்பட்ட மாண்வர்களுடனோ, அவர்களின் பெற்றோர்களுடனோ தொடர்பு கொள்ள கூடாது எனவும் நிபந்தனையும் விதித்துள்ளது. https://www.virakesari.lk/article/184826
-
சிகரெட்டுக்கு அடிமையாகும் பாடசாலை மாணவர்கள்!
13 முதல் 15 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். நாளை (31ஆம் திகதி) அனுஷ்டிக்கப்படும் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று (29ஆம் திகதி) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பதின்ம வயதினரிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிபுணர் தெரிவித்துள்ளார். இந்த கணக்கெடுப்பில், 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களில் 5.7% பேர் ஒரு முறையாவது புகைபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த மாணவர்களில் 3.7% பேர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது, இந்த சிறார்கள் பெரும்பாலும் இ-சிகரெட்டைப் பயன்படுத்திய பின்னர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். இ-சிகரெட்டுக்கு அடிமையாகும் இவர்கள் மிக விரைவாக சிகரெட்டுக்கு அடிமையாகி விடுகின்றனர் என நிபுணர் தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/302747
-
வைத்தியர்கள் இல்லாமல் மருத்துவமனை பணிகளை முன்னெடுப்பதில் சிக்கல்; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
போதிய வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால், நாடு முழுவதிலும் உள்ள பல வைத்தியசாலைகளில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை பேணுவது பாரிய சவாலாக மாறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் கடுமையான வைத்தியர் பற்றாக்குறை நிலவுகின்றது . இதேவேளை 1390 வைத்தியர்கள் அடங்கிய குழு மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சியை நிறைவு செய்த போதிலும், அவர்களது நியமனம் 8 மாதங்களாக தாமதமாகியுள்ளது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். ஆறு வருடங்களாக அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கை புதுப்பிக்கப்படவில்லை எனவும், நாடு பூராகவும் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுகின்ற போதும் புதிய வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கப்படாமை பாரதூரமான பிரச்சினை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/302757
-
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும் என கனேடிய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்
Published By: VISHNU 30 MAY, 2024 | 02:40 AM வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்சை இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh), கனடாவின் சர்வதேச அபிவிருத்திகளுக்கான பிரதி அமைச்சர் கிரிஸ்டோபர் மக்லணன் (Christopher MacLennan) உள்ளிட்ட குழுவினர் 28ஆம் திகதி புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்கள். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. நல்லிணக்கச் செயற்பாடுகள், மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றல், காணிவிடுவிப்பு, கல்வித்துறை மேம்பாடு, தொழில் முனைவோருக்கான ஒத்துழைப்புகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. கல்வி முறையில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் அதற்கான மாதிரி செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அளுநர் தெரிவித்தார் . ஜனாதிபதி கடந்த வாரம் வடக்கிற்கு விஜயம் செய்தபோது, வைத்தியசாலைகளுக்கான புதிய பிரிவுகளை திறந்துவைத்ததுடன், பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களையும், மக்களுக்கான காணி உறுதிகளையும் வழங்கி வைத்தார். இதனூடாக வடக்கு மாகாண மக்களுக்கு சிறந்த கல்வி மற்றும் சுகாதார சேவை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். காணி உறுதிகளை வழங்கியமையால் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கும், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும் அதிக நன்மைகள் கிட்டும் என தெரிவித்த கௌரவ ஆளுநர் தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளும், கடன் வசதிகளும் தேவைப்படுவதாக கூறினார். இந்த விடயங்களை கேட்டறிந்த கனேடிய தூதுக்குழுவினர் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்க தாம் தயாராக உள்ளதாக தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/184827
-
சாமி சிறீ பாஞ்
வாங்கோ பாஞ்ச் ஐயா, தொடருங்கோ தொடர்கிறேன்.
-
தமிழ்நாட்டில் 42 யானை வழித்தடங்கள் - வனத்துறை பரிந்துரைக்கு கூடலூர், மசினகுடியில் எதிர்ப்பு ஏன்?
நீலகிரி: யானை வழித்தடத்தில் உள்ள விடுதியில் குடும்பத்துடன் வனத்துறை அமைச்சர் தங்கியதாக சர்ச்சை பட மூலாதாரம்,MATHIVENTHAN/FACEBOOK படக்குறிப்பு, தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 10 நிமிடங்களுக்கு முன்னர் நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் தனியார் தங்கும் விடுதியில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் குடும்பத்துடன் தங்கியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை முன்வைக்கும் சூழலியாளர்கள் என்ன சொல்கிறார்கள்? அதற்கு மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு வனத்துறை மற்றும் அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் அளித்த பதில் என்ன? யானைகள் வழித்தடத்தில் 821 கட்டுமானங்கள் பட மூலாதாரம்,TNFORESTDEPARTMENT நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் ஆக்கிரமித்தும் அனுமதியின்றியும் கட்டப்பட்ட தங்கும் விடுதிகள், கட்டடங்களை அகற்ற வேண்டும் என்று 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது, நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் மொத்தமாக 821 கட்டுமானங்கள் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதில், தங்கும் விடுதிகள் மற்றும் தங்கும் விடுதியைச் சேர்ந்த கட்டுமானங்கள் 309, வீடுகள், பள்ளி, கோவில், தண்ணீர் தொட்டி போன்றவை அடங்கும். அனுமதியின்றி சட்ட விரோதமாக செயல்படுவதாக 27 தனியார் தங்கும் விடுதிகளுக்கு 2018ம் ஆண்டு அக்டோபரில் மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. வனத்துறை அமைச்சர் செயலால் சர்ச்சை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உதகை - மசினகுடி சாலை (கோப்பு படம்) இந்த நிலையில், தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தனது குடும்பத்தினருடன் தங்கிய தனியார் விடுதி, மாவட்ட நிர்வாகத்தால் சீல் வைக்கப்பட்ட ஒன்று என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மசினகுடியை அடுத்துள்ள சிகூர் வனப்பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் மே 27ஆம் தேதி அவர் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். அந்த விடுதி யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள சட்ட விரோத தனியார் தங்கும் விடுதி என்று குற்றம் சாட்டும் சூழலியாளர்கள், அதில் தங்கியதன் மூலம் சட்ட விரோதமாக செயல்படும் தனியார் தங்கும் விடுதிகளுக்கு வனத்துறை அமைச்சரே ஆதரவாக உள்ளாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சூழலியாளர்கள் கேள்வி படக்குறிப்பு, சூழலியலாளர் கே.மோகன்ராஜ் யானைகள் வழித்தடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்பை பகிர்ந்து, நம்மிடம் பேசிய நீலகிரியைச் சேர்ந்த சூழலியலாளர் கே.மோகன்ராஜ், “யானைகளின் வாழ்விடத்தை பாதுகாக்க, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, சில விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து விடுதி உரிமையாளர்கள் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளதால், அனுமதியற்ற கட்டடங்கள் முழுமையாக அகற்றப்படாமல் சில அப்படியே இருக்கின்றன,’’ என்கிறார் அவர். மேலும் தொடர்ந்த மோகன்ராஜ், ‘‘2023ஆம் ஆண்டு சிகூர் பகுதியில் யானைகள் வழித்தட விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி விசாரணையில் அப்பகுதியில் 12 தனியார் தங்கும் விடுதிகளில் 74 கட்டடங்கள் அனுமதியின்றி இருப்பதாக கண்டறிந்தனர். அந்த 12 தங்கும் விடுதிகளில் ஒன்றான, சிகூர் பகுதியில் உள்ள விடுதியில் மாநிலத்தின் வனத்துறை அமைச்சரே தங்கியுள்ளார். நீலகிரியில் தமிழக வனத்துறையின் பல விடுதிகள் இருக்கும் போது சர்ச்சைக்குரிய தனியார் தங்கும் விடுதியை அமைச்சர் தேர்வு செய்தது ஏன்? அவர் தனியாருக்கு ஆதரவாக செயல்படுகிறாரா?,’’ என கேள்விகளை முன்வைத்தார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூறியது என்ன? படக்குறிப்பு,நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா உண்மையில் அமைச்சர் தங்கிய விடுதி யானை வழித்தடத்தில் உள்ளதா? அது ‘சீல்’ வைக்கப்பட்ட விடுதியா? என்பதை அறிய, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது. நம்மிடம் பேசிய ஆட்சியர் அருணா, அந்த தங்கும் விடுதியின் ஒரு பகுதி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது, அது தற்போது செயல்பாட்டில் இல்லை. சீல் வைக்கப்படாத மற்றொரு பகுதி மட்டுமே செயல்பாட்டில் உள்ளது, அங்கு தான் அமைச்சர் தங்கியுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறை திரும்பப் பெறப்பட்ட பிறகு, நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடத்தில் அனுமதியின்றி செயல்படும் விடுதிகள், கட்டடங்களை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார் ஆட்சியர் அருணா. ஆட்சியரின் விளக்கத்தின் மூலம், விடுதியின் ஒரு பகுதி யானைகள் வழித்தடத்தில் இருப்பதை நம்மால் உறுதிப்படுத்த முடிகிறது. வனத்துறை கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானை (கோப்பு படம்) பிபிசி தமிழிடம் பேசிய முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அருண்குமார், அந்த குறிப்பிட்ட விடுதி முறையான அனுமதி பெற்று செயல்பட்டு வருகிறது. இருப்பினும் அந்த விடுதியில் சில கட்டடங்களுக்கு அவர்கள் அனுமதி பெறவில்லை. யானை வழித்தடத்தில் அனுமதியின்றி உள்ள அந்த விடுதியின் சில கட்டடங்களுக்கு நாங்கள் சீல் வைத்துள்ளோம், அவை தற்போது செயல்பாட்டில் இல்லை. அனுமதி பெற்று செயல்படும் கட்டடத்தில் தான் அமைச்சர் தங்கியுள்ளார்," என்று கூறினார். வனத்துறை அமைச்சரின் விளக்கம் என்ன? சூழலியலாளர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து, தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் தொலைபேசி வாயிலாக பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது. நம்மிடம் பேசிய அவர், ‘‘தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், அரசு விடுதியில் என்னால் தங்க இயலாது. ஏதாவது ஆய்வுக்காக வந்திருந்தால் நான் அரசு விடுதியில் தங்கியிருக்கலாம். நான் குடும்பத்துடன் நீலகிரிக்கு சுற்றுலா வந்துள்ளேன். இதனால், தனியார் விடுதியில் தங்கியுள்ளேன். இந்த விடுதி பல ஆண்டுகளாக உரிய அனுமதி பெற்று தான் செயல்பட்டு வருகிறது,’’ என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/cl441zgen3ro
-
மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிடத் தயாராகும் அமெரிக்க கோடிஸ்வரர்
Published By: DIGITAL DESK 3 29 MAY, 2024 | 04:10 PM அமெரிக்காவின் ஒகாயோ பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரரான லேரி கானர் (Larry Connor), கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்க புதிய நீர்மூழ்கி ஒன்றை வடிவமைத்து வருகிறார். இதன்படி, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு கடலுக்கு அடியில் அவர் செல்ல திட்டமிட்டுள்ளார். 74 வயதான சாகச பிரியர் லேரி டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக ட்ரைடன் சப்மரைன்ஸ் என்ற நிறுவனத்தை அவர் அணுகியுள்ளார். அவருக்காக வடிவமைக்கப்பட்டு வரும் இந்த நீர்மூழ்கியில் இரண்டு பேர் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலில் சுமார் 12,500 அடி ஆழத்தில் செல்லும் இந்த நீர்மூழ்கி பயணத்தில் அறிவியல் பூர்வமான ஆய்வுகளும் மேற்கொள்ள உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இது குறித்து லேரி தெரிவித்துள்ளதாவது, டைட்டானிக் கப்பலை பார்க்க செல்லும் வெறும் பயணம் அல்ல. இது ஆய்வு சார்ந்த விடயமாகும். இதன் மற்றொரு நோக்கம் என்னவென்றால் பாதுகாப்பான முறையில் ஆழ்கடலுக்கு பயணிக்கலாம் என்பதை உலகுக்கு நிரூபிப்பது. இதன் மூலம் மீண்டும் மீண்டும் ஆழ்கடல் பயணம் மேற்கொள்ள முடியும் என கூறியுள்ளார். இந்த நீர்மூழ்கிக்கு ‘தி எக்ஸ்புளோரர் - ரிட்டர்ன் டு தி டைட்டானிக்’ என பெயர் வைத்துள்ளதாக தகவல். மேலும், சுமார் 2 மணி நேரத்தில் கடலில் 13,000 அடி ஆழம் வரை இதில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலை பார்வையிடும் சாகச சுற்றுலாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் என்ற நிறுவனம் கடந்த ஆண்டு மேற்கொண்டது. இதற்காக 21 அடி நீளத்தில் ‘டைட்டன்’ என்ற சிறப்பு நீர்மூழ்கியை அந்த நிறுவனம் தயாரித்திருந்தது. கடந்த ஆண்டு இதில் ஐந்து பேர் பயணம் மேற்கொண்ட நிலையில் அதன் தகவல் தொடர்பு துண்டானது. தீவிர தேடுதலுக்கு பிறகு அவர்கள் ஐந்து பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர். https://www.virakesari.lk/article/184763
-
யாழில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு : மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - சுழிபுரத்தில் கடற்படைக்குக் காணி சுவீகரிப்பதற்காக அளவீட்டுப் பணிகள் இடம்பெறப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் (K.Sugash) குறிப்பிட்டுள்ளார். மேலும், இது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், நாளை காலை 9.00 மணிக்கு பணிகள் நடைபெறப்போவதாகவும் தெரிவித்துள்ளார். மக்களுக்கு அழைப்பு விடுப்பு இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். “எமது மக்களுக்குச் சொந்தமான காணிகளைக் கடற்படைக்குச் சுவீகரிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எமது மண்ணைக் காக்க நாளை (30) காலை சுழிபுரத்தில் அணிதிரளுமாறு தாயகத்தை நேசிக்கும் அனைவரையும் அன்புரிமையோடு அழைக்கின்றோம்” எனவும் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/sukash-calls-navy-land-acquisition-protest-jaffna-1716994307
-
இந்தியாவின் வரலாற்றில் மிக உயர்வாகப் பதிவான 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை
ராஜஸ்தானை விஞ்சிய டெல்லி: நாட்டிலேயே அதிகபட்சமாக 126.1 பாரன்ஹீட் வெப்பம் பதிவு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தலைநகர் டெல்லியின் சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், மெரில் செபாஸ்டியன் பதவி, பிபிசி செய்திகள் 29 மே 2024, 14:38 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் (120 பாரன்ஹீட்) தாண்டியுள்ளது. தீவிர வெப்ப அலையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள் வட இந்திய மற்றும் மத்திய இந்திய பகுதி மக்கள். இந்த வாரம், நாட்டின் 37க்கும் மேற்பட்ட நகரங்களில் 45 டிகிரி செல்சியஸுக்கும் (113 F) அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. செவ்வாயன்று, வடமேற்கு டெல்லியில் உள்ள முங்கேஷ்பூரில் உள்ள வானிலை நிலையத்தில் 49.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. செவ்வாய்க்கிழமை, டெல்லியின் நசாஃப்கர் வானிலை நிலையத்தில் 49.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. ஏசி செய்யப்படாததால், வெப்பமான சூழ்நிலையில் வேலை செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது என்று நீதிபதி கூறியதை அடுத்து, டெல்லியில் உள்ள நுகர்வோர் நீதிமன்றம் வழக்குகளின் விசாரணையை நிறுத்தி வைத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அடுத்த சில நாட்களுக்கு இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப அலை நிலைகள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது நாட்டிலேயே டெல்லியில் அதிக வெப்பநிலை பதிவு புதன்கிழமை, தலைநகர் டெல்லியில் வெப்பநிலை 52.3 டிகிரி செல்சியஸ் (126.1 பாரன்ஹீட்) என்ற வரலாறு காணாத அளவை எட்டியது. இந்திய வானிலை ஆய்வு நிலைய இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா, இந்த வெப்பநிலை பதிவானதை பிபிசியிடம் உறுதிப்படுத்தினார். வடமேற்கு டெல்லியில் உள்ள முங்கேஷ்பூரில் உள்ள வானிலை நிலையத்தில் புதன்கிழமை மதியம் 2.30 மணியளவில் 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது டெல்லியில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை என்று இந்திய வானிலை ஆய்வு நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டெல்லியின் இரண்டு வானிலை நிலையங்களில் (தெற்கு டெல்லியில் ஒன்று, ஆர்யா நகரில் ஒன்று) பதிவு செய்யப்பட்ட வெப்பநிலையின் முந்தைய அளவு செவ்வாய்க்கிழமையே முறியடிக்கப்பட்டது. அதையும் விஞ்சும் வகையில் இன்று வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவின் எந்தப் பகுதியிலும் 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியதில்லை. டெல்லி நகரின் சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராஜஸ்தானில் தகிக்கும் வெப்பம் ராஜஸ்தானின் சூரூ நகரம் மற்றும் ஹரியாணா மாநிலத்தில் உள்ள சிர்சா நகரம் ஆகியவை நாட்டின் மிகவும் வெப்பமான இடங்களாகும். இங்கு வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸுக்கும் (120 பாரன்ஹீட்) அதிகமாக பதிவாகியுள்ளது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில், செவ்வாய்க்கிழமை அன்று வெப்பத்தின் தாக்கத்தால் மூன்று பேர் உயிரிழந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வட இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை உச்சத்தை எட்டியுள்ளது மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான இந்திய கோடை காலம் பொதுவாக வெப்பமாகவும் ஈரப்பதத்துடனும் (Humid) இருக்கும். ஆனால், இந்த ஆண்டு இந்தியாவில் நீண்ட மற்றும் கடுமையான வெப்ப அலைகளை சந்திக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் கூறியுள்ளது. இந்த மாதம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் 9 முதல் 12 நாட்களுக்கு தொடர்ந்து வெப்ப அலை காணப்பட்டது. வெப்பநிலையும் 45-50 டிகிரி செல்சியஸுக்கு இடையில் இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜூன் மாதத்தில் அதிக வெப்ப அலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது ஜூன் மாதத்தில், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலைய (ஐஎம்டி) தலைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா இந்த வாரம் தெரிவித்தார். வடமேற்கு இந்தியாவில் பொதுவாக மூன்று நாட்களுக்கு தான் வெப்ப அலை நீடிக்கும், ஆனால் இம்முறை நான்கு முதல் ஆறு நாட்களுக்கு வெப்ப அலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார். இந்த ஆண்டு இந்தியாவில் சராசரிக்கும் அதிகமாக பருவமழை இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு நிலையம் கணித்துள்ளது. கேரள கடற்கரையில் மே 31ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cv22nj2ndl7o
-
நாளையும் நாளை மறுதினமும் பாடசாலை இயங்குமா ? - கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்!
Published By: DIGITAL DESK 3 29 MAY, 2024 | 01:49 PM நாளை வியாழக்கிழமையும் (30) நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையும் (31) வழமை போன்று நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இயங்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் ஆசிரியர் சங்கங்களால் முன்னெடுக்கப்படவுள்ள பணிப்பகிஷ்கரிப்புக்கு மத்தியில் பாடசாலைகள் இயங்காது என தெரிவிக்ககப்பட்ட நிலையிலேயே கல்வி அமைச்சு இந்த செய்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/184776
-
முச்சக்கரவண்டியுடன் பஸ் மோதி விபத்து; 03 வருடங்களின் பின் வீடு திரும்பிய பெண் பலி
Published By: VISHNU 29 MAY, 2024 | 08:36 PM பெல்மடுல்ல பகுதியில் முச்சக்கரவண்டியுடன் பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் வீதியை விட்டு விலகிய முச்சக்கரவண்டி 15 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த உயிரிழந்த பெண் உட்பட மூன்று பயணிகளும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பெல்மடுல்ல, கஹவத்த மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் பலத்த காயமடைந்த பசறை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஏறக்குறைய 03 வருடங்களாக குவைத்தில் பணிபுரிந்துவிட்டு தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அவர்களின் சடலங்கள் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/184820
-
மின் கட்டணம் 10 முதல் 20 வீதம் வரை குறையும் சாத்தியம்
மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 சதவீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த வருடத்தின் 2ஆவது மின் கட்டணத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரணையை எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள மின்சார சபை மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம், மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்குத் தேவையான அனுமதிகள் கிடைத்துள்ளதாகவும், வெளிநாட்டு நிறுவனங்களின் தேவைக்கேற்ப மின்சார சபையின் தற்போதைய நிர்வாகம் செயற்பட்டு வருவதாகவும் தனுஷ்க பராக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/302736
-
7 வயதுடைய சிறுவனை தலைகீழாக கட்டிதொங்க விட்ட தாய் கைது
7 வயது சிறுவனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தாக்கிய தாய் கைது Published By: VISHNU 29 MAY, 2024 | 07:29 PM 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஏறாவூர் சாதாட் கிராமத்தில் 7 வயது சிறுவனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 35 வயதுடைய குறித்த சிறுவனின் தாய் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் குறித்த பெண்ணின் 24 வயதுடைய சகேதரரும் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 29 ஆம் திகதி புதன்கிழமை இருவரையும் ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது எதிர்வரும் 6ஆம் மாதம் 12ஆம் திகதி வரை இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு சிறுவர்களையும் ஏறாவூர் ஆயிஷா லு அபூபக்கர் சித்திக் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/184816