Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by ஏராளன்

  1. தனிமனிதர்களின் முன்னேற்றம் சமூக மாற்றத்தின் முதற்படி. வாழ்த்துகள் ஐயா. உண்மையோ கற்பனையோ வரவேற்கிறேன் இவ் ஊக்கமான ஆக்கத்தை.
  2. Published By: VISHNU 23 APR, 2024 | 06:13 PM (இராஜதுரை ஹஷான்) தேசிய மக்கள் சக்தி அரசியல் ரீதியில் துரிதமாக வளர்ச்சியடைந்து மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளதாக சீன கம்யூனிசக் கட்சியின் சர்வதேச விவகார திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சன் ஹய்ன் தலைமையிலான தூதுக்குழுவினர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிடம் குறிப்பிட்டுள்ளனர். இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன கம்யூனிச கட்சியின் சர்வதேச விவகார திணைக்களத்தின் பிரதி அமைச்சர் உட்பட தூதுக்குழுவினர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவை மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (23) சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இச்சந்திப்பில் சீன கம்யூனிச கட்சியின் சர்வதேச விவகார திணைக்களத்தின் பிரதி அமைச்சரும் அக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினருமான சன் ஹயன், சீன கம்யூசின கட்சியின் சர்வதேச விவகார திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் லின் தோ, கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் கவுன்ஸிலர் சென் சியன்ஜியான், சீன கம்யூனிச கட்சியின் சர்வதேச விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் லி ஜின்யன், பிரதி பணிப்பாளர் வென் ஜின், பிரதி அமைச்சின் செயலாளர் ஜின் வன், கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் இரண்டாம் செயலர் ஜின் என்ஸ் மற்றும் மொழி பெயர்ப்பாளர் சாங் குயு ஆகியோர் கலந்துக் கொண்டனர். தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பேராசிரியர் சுனில் ஜயந்த பெர்னாண்டோ, சுனில் அதுன்னெத்தி ஆகியோர் கலந்துக் கொண்டனர். இச்சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலைவரம், இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்கள், பொருளாதார மற்றும் சமூக மீட்சி உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசப்பட்டன. தேசிய மக்கள் சக்தி அரசியல் ரீதியில் துரிதமாக வளர்ச்சியடைந்து மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளதாக சீன தூதுக்குழுவினர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர். சீன கம்யூனிச கட்சியுடனான இருதரப்பு ஒத்துழைப்பு, சமூக கலாசார தொடர்பாடல் மற்றும் சர்வதேச உறவு என்பன தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் பலப்படுத்துவதற்கும், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பிலும் இரு தரப்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181793
  3. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அல்ஹரேத் அல்ஹாப்ஷ்னேஹ் பதவி, பிபிசி அரபு சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேலிய ராணுவத்தில் உள்ள யூத பழமைவாத படைப் பிரிவான நெட்ஸா யெஹூதா (Netzah Yehuda) என்ற படைப்பிரிவின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்கத் திட்டமிடுவதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதற்கு இஸ்ரேலிய அரசியல்வாதிகள் கோபமாக எதிர்வினையாற்றியுள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏக்சியோஸ் (Axios) செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு அமலுக்கு வந்தால், ஓர் இஸ்ரேலிய ராணுவப் பிரிவின் மீது அமெரிக்க அரசு தடை விதிப்பது இதுவே முதல் முறையாக இருக்கும். இதுகுறித்து பதிலளித்த இஸ்ரேல் ராணுவம், நெட்ஸா யெஹூதா படை மீது ‘அமெரிக்கத் தடைகள் பற்றி எதுவும் தெரியாது’ என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) கூறியது. மேலும், அந்தப் படை ‘சர்வதேசச் சட்டத்தின் கொள்கைகளின்படி செயல்படும் ஒரு போர்ப் பிரிவு’ என்றும் கூறியது. "இது தொடர்பாக ஒரு முடிவு எடுக்கப்பட்டால், அது மறுபரிசீலனை செய்யப்படும்," என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியிருக்கிறது. மேலும், “எந்தவொரு அசாதாரணமான சம்பவம் நடந்திருந்தாலும் அதை நடைமுறை அளவிலும், சட்டத்தின் படியும் விசாரிக்கத் தொடர்ந்து பணியாற்றும்," என்றும் கூறியது. நெட்ஸா யெஹுதா மீது அமெரிக்கா தடை விதித்தால், அந்தப் பிரிவுக்கு அமெரிக்க ராணுவ உதவி அல்லது பயிற்சிகள் கிடைக்காது என அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாலத்தீனயர்களுக்கு எதிராக இந்தப் படைப்பிரிவு நடத்திய தாக்குதல்கள் பற்றிய விசாரணைகளின் முடிவுகளை அமெரிக்கா இஸ்ரேலிடம் பலமுறை கோரியதாக, இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய பொது ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது. பட மூலாதாரம்,AFP/GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேலில் பழமைவாத யூதக் குழுவினாரன ‘ஹரேடி யூத’ சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் கட்டாய ராணுவச் சேவையில் சேர மறுக்கிறார்கள் இஸ்ரேலின் காட்டமான எதிர்வினை அமெரிக்கத் தடைகள் குறித்த இந்தச் செய்தியறிக்கைகளுக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோபமாக எதிர்வினை ஆற்றியிருக்கிறார். இந்தத் தடைகள் அமலுக்கு வந்தால், அவை ‘அபத்தத்தின் உச்சமாகவும், தார்மீக வீழ்ச்சியாகவும்’ இருக்கும் என பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். இஸ்ரேல் அரசின் போர்க்குழு அமைச்சர் பென்னி காண்ட்ஸ், இந்த இஸ்ரேலிய ராணுவப் பிரிவின் மீது அமெரிக்கா தடைகளை விதிப்பது ஒரு ‘ஆபத்தான முன்னுதாரணம்’ என்று கூறினார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடனான ஒரு தொலைபேசி உரையாடலில், அமெரிக்கா இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். நெட்ஸா யெஹூதா படையின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது, நடந்துவரும் போரின் போது ‘இஸ்ரேலின் சட்டபூர்வமான நிலைப்பாட்டுக்குத் தீங்கு விளைவிக்கும்’ என்று காண்ட்ஸ் கூறினார். “ராணுவப் படைப் பிரிவுகள் சர்வதேச சட்டத்தின் உத்தரவுகளுக்கு உட்பட்டவை என்பதால் அவற்றின் மேல் தடைகளை விதிப்பதற்கு எந்த நியாயமும் இல்லை," என்று அவர் கூறினார். அமெரிக்கா பரிசீலித்துவரும் தடைகளுக்கு எதிர்வினையாற்றிய இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர், இஸ்ரேல் மூலம் பாலத்தீன அதிகார அமைப்புக்கு வழங்கப்பட்ட அனைத்து நிதியையும் பறிமுதல் செய்ய அழைப்பு விடுத்தார். பாலத்தீன வங்கிகளுக்கு எதிராகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு அவர் இஸ்ரேலிய பிரதமருக்கு அழைப்பு விடுத்தார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இந்தத் தடைகள் அமலுக்கு வந்தால், அவை ‘அபத்தத்தின் உச்சமாகவும், தார்மீக வீழ்ச்சியாகவும்’ இருக்கும் என பெஞ்சமின் நெதன்யாகு கூறினார் எதிர்ப்புக் குரல்கள் நெட்ஸா யெஹூதா படைப்பிரிவுக்கு எதிரான எந்தவொரு தடையும் "பாலத்தீன அதிகாரத்தில் இருக்கும் இஸ்ரேலின் எதிரிகளை ஆதரிப்பதாக" இருக்கும் என்று பென்-க்விர் கூறினார். இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சர் காடி ஐசென்கோட், நெட்ஸா யெஹூதா படைப்பிரிவின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது ‘அடிப்படையில் தவறானது’ என்று கூறினார். இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், இந்த நடவடிக்கை ‘பைத்தியக்காரத்தனமானது மற்றும் பாலத்தீன அரசை உருவாக்கும் முடிவை இஸ்ரேல் மீது திணிக்கும் முயற்சி’ என்று விவரித்தார். இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் யேர் லாபிட், "இஸ்ரேலிய அரசாங்கத்தின் சட்டவிரோத கொள்கை மற்றும் அரசியல் தோல்வியால் முதலில் பாதிக்கப்படுவது இஸ்ரேலிய ராணுவமும் அதன் தலைவர்களும்தான்," என்றார். ஆனாலும் அவர் நெட்ஸா யெஹூதா படைப்பிரிவின் மீதான பொருளாதாரத் தடைகள் ‘தவறானவை, தடுக்கப்படவேண்டியவை’ என்றார் ஆனால் இவை அனைத்திற்கும் எதிரான கருத்தைத் தெரிவித்த இஸ்ரேலிய தொழிலாளர் கட்சியின் தலைவரான மெராவ் மைகெலி, நெட்ஸா யெஹூதா படைப்பிரிவை கலைக்க அழைப்பு விடுத்தார். இப்படையின் ‘மூர்க்கத்தனமான, ஊழல் மலிந்த’ செயல்பாடுகள் ‘பல வருடங்களாக அனைவருக்குக் தெரிந்ததே’ என்றார். பட மூலாதாரம்,NAHAL HAREDI பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆயிரக்கணக்கான ஹரேடி வீரர்களைக் கொண்ட நெட்ஸா யெஹூதா படைப்பிரிவு உருவாக்கப்பட்டது ‘நெட்ஸா யெஹூதா’ படைப்பிரிவில் இருப்பது யார்? இஸ்ரேலில் ராணுவ சேவை கட்டாயமாகும். ஆண்கள் சுமார் மூன்று ஆண்டுகளும், பெண்கள் இரண்டு ஆண்டுகளும் கட்டாய ராணுவச் சேவை செய்யவேண்டும். ஆனால், யூத மத நம்பிக்கையில் வேரூன்றிய பழமைவாத யூதக் குழுவினாரன ‘ஹரேடி யூத’ சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் கட்டாய ராணுவச் சேவையில் சேர மறுக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் தோரா (ஹீப்ரு யூத பைபிளின் முதல் ஐந்து புத்தகங்கள்) மற்றும் மத புத்தகங்களின் விளக்கங்களை கற்றுக்கொள்வதில் தங்கள் நேரத்தை செலவிடுகிறார்கள், என்று தலைமை ராபி (யூத மதகுரு) யிட்சாக் யோசெப் கூறுகிறார். இருப்பினும், அனைத்து இளம் ஹரேடி யூதர்களும் மதக் கல்லூரியில் சேருவதில்லை. சிலர் தங்கள் மதக்கல்வி பாதிக்காததை உறுதி செய்துகொண்டு, சிறப்பு நிபந்தனைகளோடு ராணுவத்தில் சேர்கிறார்கள். கடந்த 1999-ஆம் ஆண்டு, ‘நஹால் ஹரேடி’ என்ற லாப நோக்கற்ற அமைப்பு செயல்படத் துவங்கியது. இதில் ஹரேடி யூத மதகுருக்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்கள் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இஸ்ரேலிய ராணுவத்துடன் இணைந்து மதப்பள்ளிகளில் படிக்காத இளம் ஹரேடிகளுக்கு அவ்வமைப்பில் இடமளித்தனர். இந்த ஒத்துழைப்பின் விளைவாக ஆயிரக்கணக்கான ஹரேடி வீரர்களைக் கொண்ட நெட்ஸா யெஹூதா படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. நஹால் ஹரேடி அமைப்பு, ‘ஹரேடி ஆண்கள் தங்கள் ஹரேடி வாழ்க்கை முறையை சமரசம் செய்துகொள்ளாமல் இஸ்ரேலிய ராணுவத்தில் மதிப்புமிக்க பதவிகளில் பணியாற்ற உதவும் கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறது,’ என்று கூறுகிறது. ஆனால், கடந்த சில மாதங்களில், ஹரேடி யூதர்களுக்கு கட்டாய ராணுவத்தில் சேவையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவது மற்ற இஸ்ரேலிய பொதுமக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,AFP/GETTY IMAGES படக்குறிப்பு,நெட்ஸா யெஹூதா துருப்புக்கள் 2007-இல் யூத பாலைவனத்தில் உள்ள பழங்கால மலைக் கோட்டையான மசாடாவில் பிரார்த்தனை செய்கின்றனர் நெட்ஸா யெஹூதா தோன்றிய வரலாறு கடந்த 1999-ஆம் ஆண்டு, 30 ஹரேடி வீரர்களைக் கொண்ட முதல் படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. ஹரேடிகளை ராணுவத்தில் அறிமுகப்படுத்தும் யோசனையை முன்வைத்த பொதுமக்கள் அமைப்பின் பெயரால் இப்படை ‘நஹல் ஹரேடி’, ‘நெட்சா யெஹுதா’ அல்லது ‘பட்டாலியன் 97’ என்று பெயரிடப்பட்டது. இஸ்ரேலிய ராணுவம் முதல் ஹரேடி போர் படைப்பிரிவினை உருவாக்கி, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாலத்தீனப் பகுதியான மேற்குக் கரையில் இருக்கும் ரமல்லா மற்றும் ஜெனின் ஆகிய நகரங்களில் செயல்பட்டது. கடந்த 2019-ஆம் ஆண்டில், ஹீப்ரு செய்தித்தாளான ‘யெடியோத் அஹ்ரோனோத்’, இஸ்ரேலிய ராணுவம் நெட்ஸா யெஹூதா படைப்பிரிவினை ரமல்லாவிலிருந்து ஜெனினுக்கு மாற்ற முடிவு செய்ததாகத் தெரிவித்தது. இந்த மாற்றம் ‘தொடர் தோல்விகள்’ அமல்படுத்தப்பட்டது என்று அச்செய்தித்தாள் தெரிவித்தபிறகு, ஒரு இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர், அம்மாற்றம் ‘செயல்பாட்டுக் காரணங்களுக்காக’ செய்யப்பட்டது என்று கூறினார். பட மூலாதாரம்,AFP/GETTY IMAGES படக்குறிப்பு,தற்போது, நெட்சா யெஹூதா படைப்பிரிவில் சுமார் 1,000 வீரர்கள் உள்ளனர். இவர்கள் பயிற்சியிலோ அல்லது போர்ப் பணியிலோ உள்ளனர் நெட்ஸா யெஹூதா படையில் எத்தனை வீரர்கள் உள்ளனர்? கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்குக் கரையில் இருந்த நெட்ஸா யெஹூதா படைப்பிரிவினை இஸ்ரேல் பட்டாலியனை இடம் மாற்றியது. ஆனாலும் இந்த மாற்றம் அப்படை வீரர்களின் நடத்தை காரணமாக இந்த மாற்றம் செய்யப்படவில்லை என்று இஸ்ரேலிய ராணுவம் கூறிவருகிறது. அதிலிருந்து இப்படை இஸ்ரேலின் வடக்கில் இயங்கி வருகிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில், ஜெருசலேம் போஸ்ட் செய்தித்தாளின் ஓர் அறிக்கையின்படி, காஸாவில் நடக்கும் போரில் இந்தப் படைப்பிரிவு சண்டையிடத் தொடங்கியது. லெபனான், சிரியா மற்றும் காஸாவில் நெட்சா யெஹூதா படையினரை உள்ளடக்கிய ‘க்ஃபிர்’ (Kfir) படை சண்டையிடும் என்று இஸ்ரேலின் முன்னாள் ராணுவத் தளபதி அவிவ் கொச்சாவி கூறினார். தற்போது, நெட்சா யெஹூதா படைப்பிரிவில் சுமார் 1,000 வீரர்கள் உள்ளனர். இவர்கள் பயிற்சியிலோ அல்லது போர்ப் பணியிலோ உள்ளனர். இந்தப் படைப்பிரிவின் வீரர்கள் இஸ்ரேல் ராணுவத்தில் மொத்தம் இரண்டு ஆண்டுகள் 8 மாதங்கள் பணியாற்றுகின்றனர். ‘டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ செய்தித்தாளின் அறிக்கையின்படி, இந்தப் படையின் ஆண் வீரர்கள், பெண் துருப்புகளுடன் தொடர்பு கொள்வதில்லை. மேலும் அவர்களுக்கு தொழுகை மற்றும் மதநூல்கள் படிப்பதற்கு கூடுதல் நேரம் கொடுக்கப்படுகிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,போஸ்டரில் இருப்பவர் 79 வயதான பாலஸ்தீன-அமெரிக்கர் உமர் அசாத். இவரை நெட்ஸா யெஹூதா படையினர் கொலை செய்ததாகக் குற்றம் எழுந்தது அமெரிக்கா ஏன் பொருளாதாரத் தடை விதிக்க நினைக்கிறது? கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 79 வயதான பாலத்தீன-அமெரிக்கர் உமர் அசாத்தை நெட்ஸா யெஹூதா படைப்பிரிவின் உறுப்பினர்கள் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அவர் ஒரு சோதனைச் சாவடி அருகே கைது செய்யப்பட்டார். ஆசாத்தின் குடும்பத்தினர், ராணுவ வீரர்கள் அவரது கைகளை மற்றும் வாயைக் கட்டி, தரையில் கிடத்தியதாகக் கூறினர். பின்னர் அவர் தரையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவத்தை விசாரித்த இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள், இதனை “படைகளின் தார்மீக தோல்வி, அவர்களது தவறான முடிவு, மற்றும் மனித கண்ணியத்தின் மதிப்பை கடுமையாக பாதிக்கும் செயல்," என்று அறிவித்தன. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நெட்ஸா யெஹூதா படைப்பிரிவின் தளபதி கண்டிக்கப்பட்டார். அப்படையின் நிறுவனத் தளபதி மற்றும் சிப்பாய்களின் படைப்பிரிவு தளபதி பணியிலிருந்து நீக்கப்பட்டனர். ஆனால், இப்படையின் வீரர்களுக்கு எதிரான குற்றவியல் விசாரணை அவர்களை விசாரிக்காமலேயே மூடப்பட்டது. பாலத்தீன குடிமக்களுக்கு எதிரான பல வன்முறைச் சம்பவங்களில் அப்படையினர் ஈடுபட்டதையடுத்து, அமெரிக்க வெளியுறவுத்துறை 2022-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நெட்ஸா யெஹுதா படைப்பிரிவினை விசாரிக்கத் துவங்கியது. இந்த விசாரணைகளில் உமர் அசாத் கொல்லப்பட்ட சம்பவமும் அடங்கும் என்று ‘ஹாரெட்ஸ்’ செய்தித்தாள் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி காஸா பகுதியை இஸ்ரேலிய ராணுவம் தாக்கத் துவங்கியதில் இருந்து, பாலத்தீனர்களுக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவங்கள் காரணமாக, தனிப்பட்ட இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கு எதிராக அமெரிக்கா மூன்று தடைகளை விதித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தச் சட்டத்தை முன்மொழிந்த அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் லேஹியின் நினைவாக இச்சட்டத்திற்கு பெயரிடப்பட்டது அமெரிக்கா அமல்படுத்த விரும்பும் லேஹி விதிகள் என்றால் என்ன? அமெரிக்க வெளியுறவுத்துறையின் கூற்றுப்படி, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்ட வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு அமெரிக்க உதவி செய்வதை லேஹி விதிகள் தடை செய்கிறது. தடை செய்யப்பட்ட உதவி வகைகளில், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் பயிற்சித் திட்டங்களும் அடங்கும். இத்தகைய மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான அரசாங்கங்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்பட்டால், அமெரிக்க வெளிநாட்டு உதவி மீண்டும் துவங்கப்படலாம். லேஹி விதிகள் "வெளிநாட்டுப் படைப்பிரிவுகள் தீவிர மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டதுபற்றி நம்பத்தகுந்த தகவல் இருந்தால், அப்படைப் பிரிவுகளுக்கு வழங்கப்படும் நிதிக்கும் பொருந்தும்," என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கூறுகிறது. அமெரிக்கா கொண்டுவர விரும்பும் விசாரணைகளில் அரசியல், பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிற பிரச்சினைகளும் அடங்கும். அமெரிக்க அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் பொது மற்றும் ரகசியப் பதிவுகளை மதிப்பாய்வு செய்வர். அமெரிக்க அரசாங்கம் ‘சித்ரவதை, சட்டத்தை மீறிய கொலை, வலிந்து காணாமல் ஆக்கப்படுவது மற்றும் சட்டத்தின் போர்வையில் நடத்தப்படும் பாலியல் வன்புணர்வு ஆகியவற்றை தீவிர மனித உரிமை மீறலாகக் கருதுகிறது. இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்படும்போது லேஹி விதிகள் அமலுக்கு வரும். 1990-களின் பிற்பகுதியில் இந்தச் சட்டத்தை முன்மொழிந்த அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் லேஹியின் நினைவாக இச்சட்டத்திற்கு பெயரிடப்பட்டது. https://www.bbc.com/tamil/articles/cd1dg56dzwxo
  4. மும்பை அணியின் தோல்விக்கு யார் காரணம்? ஹர்திக் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 7 போட்டிகளாக 121 ரன்கள், ஒரு அரைசதம், சதம் கூட இல்லை, அதிகபட்சமாக 39 ரன்கள் என இந்த சீசன் தொடங்கியதில் இருந்து ஃபார்மின்றி ஜெய்ஸ்வால் திணறிக்கொண்டிருந்தார். திறமையான தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் மீது தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வைத்திருந்த நம்பிக்கையை நேற்றை ஆட்டத்தில் சதம் அடித்து நிரூபித்தார். அது மட்டுமல்லாமல் காயத்தால் பல போட்டிகளாக பந்துவீசாமல் இருந்த டெத் ஓவர் பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா நேற்றைய ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணியின் ஒட்டுமொத்த சரிவுக்கும் காரணமாகினார். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் எனும் சாதனையை யஜுவேந்திர சஹல் நேற்று பெற்றார். டி20 போட்டிகளிலேயே 200 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் இங்கிலாந்தின் டேனி பிரிக்ஸ், சமித் படேலுக்கு அடுத்தார்போல் சஹல் இடம் பெற்றார். இதுபோன்ற பல இனிமையான நினைவுகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை அணியை எளிதாகவே வீழ்த்திவிட்டது. ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 38-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. பட மூலாதாரம்,GETTY IMAGES முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. 180 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 பந்துகள் மீதமிருக்கையில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டிகளில் 7 வெற்றி, ஒரு தோல்வி என 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஆனால், நிகர ரன் ரேட் அடிப்படையில் 2வது இடத்தில் 10 புள்ளிகளுடன் இருக்கும் கொல்கத்தா(1.206) அணியைவிட, ராஜஸ்தான் குறைவாகவே 0.698 என்ற அளவிலேயே இருக்கிறது. அதேசமயம், மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் 5 தோல்விகள், 3 வெற்றி என 6 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.227 என்ற அளவில் இருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை அணியைவிட நிகர ரன்ரட்டில் குறைவாக இருந்தாலும், புள்ளிக்கணக்கில் அதிகமாக இருப்பதால் 6வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பையைச் சாய்த்த சந்தீப் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாக இருந்தது சந்தீப் சர்மா, டிரன்ட் போல்ட் இருவரும்தான். இதில் டிரன்ட் போல்ட் ஏற்கெனவே மும்பை வான்ஹடே மைதானத்தில் உள்ள ரசிகர்களை தனது பந்துவீச்சால் நிசப்தமாக்கி அதிர்ச்சியளித்தார். அதேபோல ஜெய்ப்பூர் மைதானத்திலும் மும்பை அணியின் ரசிகர்களையும் மவுனமாக்கினார். காயத்திலிருந்து மீண்டுவந்து பந்துவீசிய சந்தீப் சர்மா அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இதற்கு முன் டெத் ஓவர்களில் மட்டுமே பந்துவீசி வந்த சந்தீப் சர்மா பவர்ப்ளேயில் பந்துவீசினார். ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து கொண்டு வீசிய சந்தீப் சர்மா, பவர்ப்ளேயில் 2 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து மும்பைக்கு அதிர்ச்சி அளித்தார். கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி டெத் ஓவரில் மும்பை அணிக்கு சிம்ம சொப்னமாகத் திகழ்ந்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஃபார்முக்கு வந்த ஜெய்ஸ்வால் இந்த ஆட்டத்தில் 31 பந்துகளில் அரைசதம் அடித்தபின், ஜெய்ஸ்வால் பேட்டிலிருந்து பந்துகள் சிக்ஸர், பவுண்டரி என பறந்தன, அடுத்த 28 பந்துகளில் 50 ரன்களுடன் சதத்தை நிறைவு செய்து 60 பந்துகளில் 104 ரன்களுடன் (7 சிக்ஸர், 9பவுண்டரிகள்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடந்த சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்திருந்த ஜெய்ஸ்வால், இந்த சீசனிலும் சதம் அடித்துள்ளார். ஒற்றை பேட்டராக இருந்து ராஜஸ்தான் அணியை ஜெய்ஸ்வால் கரை சேர்த்துள்ளார். கடந்த போட்டியில் ஒற்றை பேட்டராக இருந்து வெற்றி தேடித்தந்த ஜாஸ் பட்லர் இந்த போட்டியில் 35 ரன்களில் பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். முதல் விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் பட்லர் கூட்டணி 74 ரன்கள் சேர்த்தனர். 2வது விக்கெட்டுக்கு கேப்டன் சாம்ஸன், ஜெய்ஸ்வாலுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து 38 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 2வது விக்கெட்டுக்கு சாம்ஸன்-ஜெய்ஸ்வால் கூட்டணி 109 ரன்கள் சேர்த்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பையின் தொடக்க வரிசையை உடைத்த போல்ட், சந்தீப் மும்பை அணியின் தொடக்க வரிசை பேட்டிங்கை டிரன்ட் போல்ட், சந்தீப் சர்மா இருவரும் சேர்ந்து நிலைகுலையச் செய்தனர். ஆடுகளத்தின் தன்மை, பனிப்பொழிவு, காற்று ஆகியவற்றை சாதகமாகப் பயன்படுத்தி, துல்லியமான லைன் லென்த்தில் வீசி பேட்டர்களை திணறடித்தனர். பவர்ப்ளே ஓவருக்குள் மும்பை அணியின் முதுகெலும்பு பேட்டிங் வரிசை சுக்குநூறாக இருவரும் சேர்ந்து உடைத்துவிட்டனர். மூன்று வாரங்களுக்கு முன் மும்பை வான்ஹடே மைதானத்தில் மும்பை அணி ரசிகர்களை தனது பந்துவீச்சால் ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்தி டிரன்ட் போல்ட் அரங்கையே நிசப்தமாக்கினார். அதேபோன்று நேற்றும் தனது பந்துவீச்சால் முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா(6) விக்கெட்டை வீழ்த்தி ரசிகர்களுக்கு ஷாக் அளித்தார். ஐபிஎல் தொடரில் டிரன்ட் போல்ட் முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்துவது இது 26-வது முறையாகும். இந்த சீசனில் மட்டும் போல்ட் 5-ஆவதுமுறையாக முதல் ஓவரில் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். சந்தீப் சர்மா தான் வீசிய முதல் ஓவரிலேயே இஷான் கிஷனை அவுட் ஸ்விங் மூலம் சாம்ஸனிடம் கேட்ச் கொடுக்கவைத்து டக்அவுட்டில் வெளியேற்றினார். அடுத்துவந்த 360 டிகிரி பேட்டர் சூர்யகுமாரும், தனக்குரிய ரிதம் கிடைக்காமல் பேட்டிங்கில் தடுமாறினார். அவர் தனது இயல்பான பேட்டிங்கிற்கு திரும்பவிடாமல், போல்ட், சந்தீப் இருவரும் துல்லியமாகப் பந்துவீசினர். ஒரு கட்டத்தில் சந்தீப் வீசிய ஸ்லோ-பாலோ தூக்கி அடிக்க ரோவ்மன் பாவலிடம் கேட்சானது. சூர்யகுமார் 10 ரன்னில் வெளியேறியது, மும்பையின் பெரிய நம்பிக்கையே உடைந்தது. அடுந்து வந்த முகமது நபி, அதிரடியாக ஆவேஷ் கான் ஓவரில் கேமியோ ஆடி 18 ரன்கள் சேர்த்து, சஹல் வீசிய முதல் ஓவரிலேயே அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பவர்ப்ளே ஓவரில் மும்பை அணி 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் சேர்த்தும், 52 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. 5-ஆவது விக்கெட்டுக்கு நேஹல் வதேரா, திலக் வர்மா ஜோடி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். நிதானமாகவும், மோசமான பந்துகளை மட்டும் பவுண்டரி, சிக்ஸர் அடித்து ஆடிய திலக் வர்மா 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். மிகக் குறைந்த வயதில் 21 வயது 166 நாட்களில் ஐபிஎல் தொடரில் 1000 ரன்களை எட்டிய வீரர் எனும் பெருமையை திலக் பெற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் பங்கேற்ற நேஹல் வதேரா அதிரடியாக பேட் செய்து 24 பந்துகளில் 49 ரன்கள்(4சிக்ஸர், 3பவுண்டரி) சேர்த்து போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இவர்கள் இருவரும் சேர்த்ததுதான் அணியில் பெரிய ஸ்கோராகும். இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்காமல் இருந்தால், மும்பை அணி 140 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். அதன்பின் வந்த பேட்டர்களான கேப்டன் ஹர்திக் பாண்டியா(10), டிம் டேவிட்(3), கோட்ஸி(0) எனவரிசையாக ஆட்டமிழந்தனர். திலக் வர்மா 65 ரன்களில் சந்தீப் சர்மா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 18 ஓவர்களில் மும்பை அணி 170 ரன்களை எட்டியநிலையில் கடைசி இரு ஓவர்களில் அதிரடியாக ஆடி 200 ரன்களை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி இரு ஓவர்களில் மும்பை அணி 9 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிலும் சந்தீப் சர்மா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் திலக் வர்மா, 2வது பந்தில் கோட்ஸீ, 5வது பந்தில் டிம் டேவிட் என 3 விக்கெட்டுகளை மும்பை இழந்தது. அதாவது ஒரு ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை மும்பை இழந்தது. கடைசி 28 ரன்களுக்குள் மும்பை அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. என்ன சொல்கிறார் பாண்டியா? மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ தொடக்கத்தில் இருந்தே நாங்கள் சிக்கல்களைச் சந்தித்தோம். ஆனால், திலக், வதேரா ஆடியவிதம் அருமை.அதேபோல ஃபினிஷிங்கிலும் சிறப்பாகச் செயல்படவில்லை. நாங்கள் எதிர்பார்த்ததைவிட 15 ரன்கள் குறைவாகச் சேர்த்துவிட்டோம். அதேபோல பந்துவீச்சிலும், பீல்டிங்கிலும் எங்களுக்கு சிறந்தநாளாக அமையவில்லை. பவர்ப்ளே ஓவர்களில் ரன்கள் சேர்க்க முடியாத பிரச்னை தொடர்கிறது.” “ஒவ்வொரு வீரரும் தங்களுக்குரிய பணியை, பொறுப்பை உணர்வார்கள். தவறுகளை திருத்துவது அவசியம், மீண்டும் தவறுகள் வராமல் பார்க்கவேண்டும். தனிப்பட்ட முறையில் ஏற்படும் தவறுகள், பணியையும் ஏற்க வேண்டும். சரியாக விளையாடாத வீரர்களை உடனே நீக்குபவன் நான் அல்ல, வீரர்களுக்கு போதுமான வாய்ப்புத் தருவேன். நல்ல கிரிக்கெட்தான் என்னுடைய நோக்கம், எங்கள் திட்டங்களை நோக்கிச் செல்வோம்”எ னத் தெரிவித்தார்” பட மூலாதாரம்,SPORTZPICS மும்பை அணியின் தோல்விக்கான காரணங்கள் மும்பை அணியின் பந்துவீச்சு, பீல்டிங், கேட்ச் பிடிக்கும் திறன் ஆகியவை நேற்று சுமாராகவே இருந்தது. ஜெய்ஸ்வாலுக்கு மட்டும் நேற்று இரு கேட்சுகளை டிம் டேவிட், வதேரா இருவரும் தவறவிட்டனர். இருவரும் கேட்சுகளை பிடித்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கக்கூடும். அதேபோல பவுண்டரிகளை தடுக்கும் பீல்டிங்கிலும் மும்பை வீரர்கள் பெரிதாக முயற்சி எடுக்காமல் பீல்டிங்கில் கோட்டைவிட்டனர். கேப்டன் ஹர்திக் பாண்டியா மட்டும் 2 பவுண்டரிகளை விட்டார்.. பந்துவீச்சிலும் 7 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் சராசரியாக ஓவருக்கு 9 ரன்களுக்கு குறைவில்லாமல் வாரி வழங்கினர். ஹர்திக் பாண்டியா 2 ஓவர்கள்வீசி 21 ரன்களை வாரிக் கொடுத்தார். உலகக் கோப்பை நெருங்கும் நேரத்தில் ஐபிஎல் தொடரில் இதுவரை ஹர்திக் பாண்டியா பேட்டிங், பந்துவீச்சு இரு பிரிவுகளிலும் பெரிதாக ஜொலிக்கவில்லை. இது நிச்சயமாக உலகக் கோப்பைக்கான அணியில் எதிரொலிக்கும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். சிறப்பாகப் பந்துவீசக்கூடிய பும்ரா 4 ஓவர்கள் வீசி 37 ரன்களை வழங்கினார். முகமது நபி, துஷாரா பந்துவீச்சும் எடுபடவில்லை. ராஜஸ்தான் பேட்டர்கள் குறிப்பாக ஜெய்ஸ்வாலைக் கட்டுப்படுத்தக்கூடிய பந்துவீச்சு நேற்று மும்பையிடம் இல்லாததே தோல்விக்கு முக்கியக் காரணமாகும். பட மூலாதாரம்,SPORTZPICS சஹலின் சாதனைகள் யஜுவேந்திர சஹல் நேற்று முகமது நபி விக்கெட்டை வீழ்த்தியபோது, ஐபிஎல் தொடரில் 200-வது விக்கெட்டை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் எனும் பெருமையைப் பெற்றார். டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது பந்துவீச்சாளராகவும் சஹல் இடம் பெற்றார். இதற்கு முன் டேனி பிரிக்ஸ்(219), சமித் படேல்(208) வீழ்த்தியுள்ளனர். சஹல் தனது 200 விக்கெட்டுகளில் 158 விக்கெட்டுகளை 125 போட்டிகளில் இந்திய மண்ணில் விளையாடி எடுத்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் 42 விக்கெட்டுகளை சஹல் வீழ்த்தியுள்ளார். உள்நாட்டு மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை புவனேஷ்வர் குமார்(160) வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல் தொடரில் 7 முறை 4 விக்கெட்டுகளை சஹல் வீழ்த்தி மலங்காவுக்கு அடுத்தார்போல் இடம்பெ ற்றுள்ளார். 20 முறை 3 அல்லது அதற்கு மேல் அதிகமான விக்கெட்டுகளை சஹல் கைப்பற்றியுள்ளார். இரு அணி நிர்வாகங்களுக்கு 50 விக்கெட்டுகளை4 பந்துவீச்சாளர்கள் இதுவரை வீழ்த்தியுள்ளனர். இதில் சஹல் ஆர்சிபி அணிக்கும், ராஜஸ்தானுக்கும் 50 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திக் கொடுத்துள்ளார். இதில் ஆர்சிபி அணிக்காக மட்டுமே சஹல் 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துக் கொடுத்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு வந்தபின் 61 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக சஹல் கைப்பற்றியுள்ளார். அதிலும் பெங்களூரு சின்னசாமி அரங்கில் மட்டும் சஹல் 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நடுப்பகுதி ஓவர்களில் சஹல் சிறப்பாகப் பந்துவீசக் கூடியவர். சஹல் எடுத்த 200 விக்கெட்டுகளில் 152 விக்கெட்டுகள் 7 முதல் 16-வது ஓவர்களுக்குள் எடுக்கப்பட்டவையாகும். https://www.bbc.com/tamil/articles/ckr530mxp1ko
  5. இஸ்ரேல் காசா: இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதாயின் கருப்பையிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை Published By: RAJEEBAN 23 APR, 2024 | 09:10 AM இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட தாயின் கருப்பையிலிருந்து குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் காசாவில் இடம்பெற்றுள்ளது. சபிரீன் என்ற பெண்ணின் கருப்பையிலிருந்து குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. அந்த இளம்தாய் ஏழு மாதங்களாக பிள்ளையை தன் வயிற்றில் சுமந்துள்ளார் – கடும் மோதல்கள் அச்சங்களிற்கு மத்தியில். யுத்தம் முடிவடையும் வரை தங்கள் குடும்பத்தின் அதிஸ்டம் நீடிக்கும் என அவர் எதிர்பார்த்தார். எனினும் ஏப்பிரல் 20 திகதி நள்ளிரவிற்கு முன்னர் இடம்பெற்ற பாரியவெடிப்பினால் ஏற்பட்ட சத்தங்கள் தீ பரவலிற்கு மத்தியில் அவர் எதிர்பார்த்த அதிஸ்டம் காணாமல்போனது. சப்ரீனும் கணவரும் அவரின் மூன்றுவயது மகள் மலாக்கும் உறங்கிக்கொண்டிருந்த ரபா வீட்டின் மீது இஸ்ரேலிய படையினர் குண்டொன்றை வீசினர். சபிரீன் கடும் காயங்களிற்குள்ளானார் அவரது கணவர் கொல்லப்பட்டார் எனினும் மீட்பு பணியாளர்கள் அந்த வீட்டை நெருங்கிய வேளை சிசு தாயின் வயிற்றில் இன்னமும் உயிருடன் இருந்தது. மீட்பு பணியாளர்கள் சப்ரீனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு சிசேரியன் மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. சப்ரீனை காப்பாற்ற முடியவில்லை ஆனால் குழந்தையை உயிர்ப்பிப்பதற்காக மருத்துவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர் சுவாசத்தை தூண்டுவதற்காக அவளின் நெஞ்சில் மெதுவாக தட்டினார்கள் அவளது நுரையீரலிற்குள் காற்றை செலுத்தினர். அவள் மிகக்கடுமையான சுவாசக்கோளாறின் மத்தியில் பிறந்திரு;கின்றாள் என தெரிவிக்கின்றார் ரபாவின் எமிராட்டி மருத்துவமனையின் நியோநட்டல் அவசர பிரிவின் தலைவர் மருத்துவர் முகமட் சலாமா. எனினும் 1.45 கிலோ உடைய அந்த குழந்தை தான் பிறந்தவேளை எதிர்கொண்ட சோதனைகளில் இருந்து மீண்டுள்ளாள். தியாகி சப்ரீன் அல்ஹானியின் குழந்தை என்ற வாசகத்தை ஒரு சிறிய டேப்பில் எழுதிய மருத்துவர்கள் அதனை அவளது உடலில் ஒட்டினார்கள் பின்னர் அவள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டாள். அவளது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது என தெரிவிக்க முடியும் என்கின்றார் மருத்துவர் சலாமா. ஆனால் நிலைமை இன்னமும் ஆபத்தானதாக காணப்படுகின்றது உரிய மாதத்திற்கு முன்னர் பிறந்த குழந்தை என்பதால் சுவாசக்கோளாறு நோய் அறிகுறி காணப்படுகின்றது இந்த நாட்களில் குழந்தை தாயின் வயிற்றில் இருந்திருக்கவேண்டு;ம் ஆனால் அதற்கான அவளின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவிக்கின்றார். மேலும் சில மாதங்களிற்கு குழந்தையை மருத்துவமனையிலேயே வைத்திருக்கவேண்டியிருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.அதன்பின்னர் அவளை மருத்துவமனையிலிருந்து அனுப்புவது குறித்து சிந்திப்போம் இங்கு பெரும் துயரம் இடம்பெற்றுள்ளது இந்த குழந்தை உயிர்பிழைத்தாலும் அநாதையே என வைத்தியர் சலாமா தெரிவிக்கின்றார். அந்த குழந்தைக்கு பெயரிடுவதற்கு பெற்றோர்கள் எவரும் இல்லை கொல்லப்பட்ட அவளது மூன்று வயது சகோதரி ரூஹ் என பெயரிட விரும்பினால் எனினும் அவளது தாயின் நினைவாக சப்ரீன் என அழைக்கின்றனர். https://www.virakesari.lk/article/181738
  6. Published By: DIGITAL DESK 3 23 APR, 2024 | 11:58 AM இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை நடத்தும் மேலும் 8 நிறுவனங்களின் விபரங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலொன்றை விடுத்து மத்திய வங்கி குறித்த நிறுவனங்கள் தொடர்பான விபரங்களை தெரிவித்துள்ளது. அதுமாத்திரமன்றி இத்தகைய திட்டங்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்படுமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடங்கும், வழங்குகின்ற, விளம்பரப்படுத்துகின்ற, நடத்துகின்ற, நிர்வகிக்கின்ற எந்தவொரு நபரும் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்கிறார் என்று மத்திய வங்கி கூறுகிறது. சில பிரமிட் திட்டங்களை நடத்தும் நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியுடன் சில உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கும் சில தரப்பினரின் கூற்றுக்களை நிராகரிப்பதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறான பிரமிட் திட்டங்கள் தொடர்பில், இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 83 (இ) பிரிவின்‌ ஏற்பாடுகளின்‌ நியதிகளுக்கமைய சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் பரிசீலனை மேற்கொள்ளுமாறு சட்ட மாஅதிபரைக்‌ கோரியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181752
  7. Published By: DIGITAL DESK 3 23 APR, 2024 | 02:54 PM எம்.நியூட்டன் வடக்கு மாகா­ணத்தில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நான்கு இளை­ஞர்கள் போதைப்­பொருள் பாவனை காரண­மாக மர­ணித்­துள்­ளார்கள். இவர்கள் அனை­வரும் 20 முதல் 30 வய­துக்கு உட்­பட்­ட­வர்கள். குறிப்­பாக, மர­ணித்­த­வர்­களில் சாவ­கச்­சே­ரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறை­யி­லி­ருந்து நீதி­மன்­றத்தின் பிணையில் விடு­விக்­கப்­பட்ட நிலையில் தனது விடு­த­லையை கொண்­டாடும் முக­மாக ஏற்­பாடு செய்த போதை விருந்­து­ப­சா­ரத்தின் போது மர­ண­ம­டைந்­துள்ளார். மற்­றை­ய­வர்கள், அதி­க­ள­வான போதைப்­பொ­ருளை பயன்படுத்தியமை உள்ளிட்ட கார­ணங்­களால் உயி­ரி­ழந்­த­வர்­க­ளாக உள்­ளனர். இந்த மர­ணங்கள் நிகழ்ந்த பின்­னரும் கூட போதைப்­பொருள் பாவனை குறைந்­த­தாக தக­வல்கள் இல்லை. கடந்த வாரத்தில் குறிப்­பாக 2024.03.26 முதல் 2024.04.16 வரை­யான காலப்­ப­கு­தியில் யாழ்ப்­பா­ணத்தில் போதைப்­பொருள் தொடர்பில் 29 வழக்­கு­களும் தொட­ரப்­பட்­டுள்­ளன. அதில் 23.075 கிராம் அளவு ஹெரோயின் வைத்­தி­ருந்­தமை தொடர்பில் இரண்டு வழக்­கு­களும் 0.08 கிராம் அளவு ஐஸ் வைத்­தி­ருந்த­மைக்­காக ஒரு வழக்கும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. அத்­துடன், கஞ்சா பயன்­பாடு மற்றும் வியா­பாரம் தொடர்பில் 21 வழக்­குகள் தொட­ரப்­பட்­டுள்­ள­தோடு 21.299 கிலோ­கிராம் கஞ்­சாவும் கைப்பற்றப்­பட்­டுள்­ளது. கைது செய்­யப்­பட்­ட­வர்கள் தொடர்பில் சட்ட நட­வ­டிக்கை எடுக்கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்கும் அதே­நேரம் வடக்கில் போதைப்­பொருள் விவகாரமானது, சமூகப் புற்­று­நோ­யாக தொடர்ந்து கொண்டே செல்கிறது. பூகோள ரீதியில் ஆப்­கா­னிஸ்தான், பாகிஸ்தான், இந்­தியா போன்ற நாடு­க­ளி­லி­ருந்து போதைப்­பொருள் வர்த்­த­கத்தின் தெற்குப் பாதை இந்து சமுத்­தி­ரத்­துக்­கூ­டாகச் செல்­கின்­றது. இதற்­கான முக்­கிய கார­ணி­யாக கடல்­வழி அமை­கின்­றது. அந்தக் கடல்­வ­ழியில் கேந்­திர ஸ்தான­மாக இருப்­பது இலங்கை. இதனால் இலங்கை பூகோள போதைப்­பொருள் வர்த்­த­கத்தில் பிராந்­திய மைய­மாக விளங்­கு­கின்­றது என்று ஆய்­வுகள் தெளி­வு­ப­டுத்­து­கின்­றன. நாடொன்றின் கடல் எல்­லை­யாக தரை­யி­லி­ருந்து 12 கடல்­மைல்கள் காணப்­ப­டு­கின்ற நிலையில் அந்தக் கடல் எல்­லைக்குள் தான் கைது­களை மேற்­கொள்ள முடியும் என்­பது சர்­வ­தேச கடல் எல்லை விதி­யா­க­வுள்­ளது. அதற்கு அப்­பாற்­பட்ட கடல்­வெ­ளி­யா­னது எந்­த­வொரு தரப்­பி­ன­ராலும் கண்­கா­ணிக்­கப்­ப­டா­மலேயே உள்­ளது. இதுதான் போதைப்­பொருள் கடத்தல்காரர்­க­ளுக்கு நம்­பிக்­கை­யான ஏது­நி­லையை வழங்­கு­வ­தாக உள்­ளது. அந்த வகையில், இலங்­கையின் கடல் எல்­லைக்குள் கடத்­தப்­ப­டு­கின்ற போதைப் பொருள் சர்­வ­தேச கடல் எல்­லைக்கு அண்­மையில் வைத்து கொள்­க­லன்­க­ளுக்குள் அடைக்­கப்­பட்டு கொண்­டு­வ­ரப்­பட்டு அதி­லி­ருந்து வெவ்வேறு இடங்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றது. இந்தக் கடத்­தலின் யுக்தி­யாக, சர்­வ­தேச கடல் எல்­லை­யி­லி­ருந்து மீன்­பிடி பட­குகள் மூலம் தான் அதி­க­ளவில் கொண்­டு­வ­ரப்­ப­டு­கின்­றன. இன்னும் சில போதைப்­பொ­ருள்கள் அதி­காரம் மிக்­க­வர்­களின் செல்­வாக்கால் கொண்டு வரப்­ப­டு­கின்­றன. இதற்கு வேலியே பயிரை மேய்­வது போன்று பாது­காப்புத் தரப்­பினர் சில­ரது பூர­ண­மான ஆத­ரவும் இருக்­கின்­றது. தேசிய அபா­ய­கர ஒள­ட­தங்கள் கட்­டுப்­பாட்டுச் சபையின் கடந்த 2023 ஜன­வரி முதல் ஜூன் வரை போதைப்­பொருள் துஷ்­பி­ர­யோக கண்­கா­ணிப்பு அமைப்­பினால் பெறப்­பட்ட போதைப்­பொருள் தொடர்­பான குற்­றங்­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்ட நபர்கள் பற்­றிய பகுப்­பாய்வு அறிக்கையை அவ­தா­னிக்­கின்­ற­போது போதைப்­பொ­ருளின் வெகு­வான தாக்கம் வெளிப்­ப­டு­கின்­றது. அத­ன­டிப்­ப­டையில், போதைப்­பொருள் தொடர்­பான குற்­றங்­க­ளுக்­காக 19,544 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தோடு அவர்­களில் 10,396 பேர் கஞ்சா பயன்­ப­டுத்­து­ப­வர்­க­ளா­கவும் 7,778 பேர் 25 முதல் 29 வய­துக்­குட்­பட்­ட­வர்கள் என்­பதும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் 98 சத­வீ­த­மா­ன­வர்கள் ஆண்­க­ளாக இருப்­ப­தோடு 2சத­வீ­த­மா­ன­வர்கள் பெண்­க­ளாக உள்­ளனர். மேலும், 10,029 நபர்கள் திரு­ம­ண­மா­ன­வர்­க­ளா­கவும் 7,621 பேர் தனி­மையில் இருப்­ப­வர்­க­ளா­கவும் உள்­ளனர். அவர்­களின் கல்விப் பின்­ன­ணியைக் கருத்திற் கொள்­ளும்­போது கா.பொ.த. சாதா­ரண தரம் முடித்­த­வர்­க­ளி­ட­மி­ருந்தே அதிக அளவு போதைப்­பொருள் பாவனை பதி­வா­கி­யுள்­ளது. 12 பேர் தொழில்­வான்­மை­யா­ளர்­க­ளா­கவும் உள்­ளனர். அத்­தோடு இக்­கா­லத்தில் 23 சத­வீ­த­மா­ன­வர்கள் சதா­ரண தொழி­லா­ளர்­க­ளா­கவும் 12.8 சத­வீ­த­மா­ன­வர்கள் வேலை­யில்­லா­த­வர்­க­ளா­கவும் 8.8 சத­வீ­த­மா­ன­வர்கள் விவ­சா­யி­க­ளா­கவும் 3.2 சத­வீ­த­மா­ன­வர்கள் சார­திகள் அல்­லது போக்­கு­வ­ரத்து துறையில் பணி­யாற்­று­ப­வர்­க­ளா­கவும் உள்­ளனர். நாடா­ள­விய ரீதியில் நிலை­மைகள் மேற்­கண்­ட­வாறு அமைந்­தி­ருந்­தாலும், போதைப்­பொ­ருளின் தாக்­கத்­துக்கு வடக்கு, கிழக்கு விதி­வி­லக்­கல்ல. வடக்கு, கிழக்கில் போதைப்­பொருள் என்­பது தமிழ் பேசும் இனத்தின் மீது திட்­ட­மிட்டு திணிக்­கப்­படும் ஒரு­வி­ட­யமா என்ற சந்­தேகம் எழு­கின்­றது. . தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான ஆயுதப் போராட்டம் முடி­வுக்கு வந்த பின்­னரும் மாறி­மாறி ஆட்­சிப்­பீ­டத்தில் அம­ரு­கின்ற அர­சாங்­கங்கள் வடக்கு, கிழக்கை தொடர்ந்தும் போர்க்­கால சூழ­லி­லேயே வைத்­துக்­கொள்­வ­தையே வெகு­வாக விரும்­பு­கின்­றன. இதற்­கா­கவே மூன்று பொது­ம­க­னுக்கு ஒரு படை­வீரர் என்ற விகி­தத்தில் முப்­ப­டை­க­ளையும் வடக்கு, கிழக்கில் குவித்து வைத்­துள்­ளது இலங்கை அர­சாங்கம். இதற்கு அப்பால் பொலிஸ், இரா­ணுவப் புல­னாய்வுப் பிரி­வி­னரும் செயற்­பட்டு வரு­கின்­றார்கள். இவ்­வாறு அதி­க­ரித்த எண்­ணிக்­கை­யான படை­களை வடக்கு, கிழக்கில் இருந்து குறைத்­துக்­கொள்ள வேண்­டு­மென்ற அழுத்­தங்கள் ஏற்­பட்­ட­போது, ஆரம்­பத்தில் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் மீளெ­ழுச்சி பெற்­று­வி­டு­வார்கள் என்று காரணம் கற்­பி­தித்­தது இலங்கை அர­சாங்கம். உண்­மையில், வடக்கு, கிழக்கில் போதைப்­பொருள் விநி­யோ­க­மா­னது ஆரம்­பத்தில் போதைப்­பொ­ரு­ளுக்­கான தேவையை அதி­க­ரித்து, வழங்­கலைக் மட்­டுப்­ப­டுத்­து­கின்றபோது, போதைப்­பொ­ருளின் விலை அதி­க­ரிப்­ப­தோடு, பல விநி­யோக வழி­களை திறப்­ப­தற்­காக வலிந்து தள்­ளப்­ப­டு­வதை நோக்­காக கொண்டே காய்கள் நகர்த்­தப்­பட்­டன. அந்த நோக்கம் தற்­போது வடக்கு, கிழக்கில் வெற்­றி­கண்­டு­விட்­டது. இலங்­கையின் ஏனைய மாவட்­டங்­க­ளுடன் ஒப்­பிடும்போது இப்­பி­ராந்­தி­யத்தில் உள்ள எட்டு மாவட்­டங்­களில் இளை­ஞர்­களின் சமூக அக்­க­றைகள் திசை­த்தி­ருப்­பப்­பட்டு போதைப்­பொருள் பாவ­னையை நோக்­கி வலிந்து தள்­ளப்­பட்­டுள்­ளது. இதனால் அதி­க­ள­வான இளை­யோரே போதைப்­பொருள் பாவ­னை­யா­ளர்­க­ளாக மாறி­யுள்­ளனர். அண்­மைய காலத்தில் அவர்கள் போதைப்­பொருளுடன் தொடர்­பு­பட்ட குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் கைது செய்­யப்­பட்டு சிறையில் அடைக்­கப்­ப­டு­கின்ற சந்­தர்ப்­பங்கள் அதி­க­ரித்­துள்­ளன. இதனால், வடக்கு இளை­ஞர்­களின் எதிர்­காலம் என்­பது கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ள­தோடு, அடுத்த சந்­த­தி­யா­னது, இன­வி­டு­தலைச் சிந்­த­னையில் இருந்தும், அறி­வு­சார்ந்த சமூக கட்­ட­மைப்­பி­லி­ருந்தும் திசை திருப்­பப்­ப­டு­கின்ற செயற்­பாடே சூட்­சு­ம­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. தேசிய அபா­ய­கர ஒள­ட­தங்கள் கட்­டுப்­பாட்டுச் சபையின் கடந்த 2023 ஜன­வரி முதல் ஜூன் வரை போதைப்­பொருள் துஷ்­பி­ர­யோக கண்­கா­ணிப்பு அமைப்­பினால் பெறப்­பட்ட போதைப்­பொருள் தொடர்­பான குற்­றங்­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்ட நபர்கள் பற்­றிய பகுப்­பாய்வு அறிக்­கையின் தர­வு­களின் பிர­காரம் அம்­பா­றையில் 438 பேரும், திரு­கோ­ண­ம­லையில் 891பேரும் மட்­டக்­க­ளப்பில் 143 பேரும் வவு­னி­யாவில் 181 பேரும் முல்­லைத்­தீவில் 113 பேரும், மன்­னாரில் 121 பேரும், கிளி­நொச்­சியில் 32பேரும் யாழ்ப்­பா­ணத்தில் 371 பேரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அதே­நேரம், கடற்­படைத் தக­வல்­களின் பிர­காரம் இந்த ஆண்டின் பெப்­ர­வரி 18ஆம் திகதி வரை­யி­லான காலப்­ப­கு­தியில் 120 கிலோ­கிராம் ஹெரோயின் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தோடு 13 நபர்கள் கைது­செய்­யப்­பட்டும் 3 பட­குகள் கைப்­பற்­றப்­பட்­டு­முள்­ளன. 203 கிலோ­கிராம் கேரள கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தோடு 9 நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். 189 கிலோ­கிராம் ஐஸ் போதைப்­பொருள் மீட்­கப்­பட்­டுள்­ள­தோடு 17 நபர்­களும் பட­கொன்றுடன் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். 39,301 போதை மாத்­தி­ரைகள் மீட்­கப்­பட்­டுள்­ள­தோடு அது­கு­றித்த குற்­றச்­சாட்டில் 9 நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். எனினும், தற்­போதும் கூட வடக்கு, கிழக்கு கடற்­ப­ரப்பில் இனந்­தெ­ரி­யாத பட­குகள் போதைப்­பொ­ருட்­க­ளுடன் ஒதுங்­கு­வதும், பொதி­செய்­யப்­பட்ட போதைப்­பொ­ருட்கள் மிதந்து வரு­வதும் தொடர்ந்­துக்­கொண்டே இருக்­கின்­றன. உண்­மையில் வடக்கு, கிழக்கில் முப்­ப­டை­யி­னரும், புல­னாய்­வா­ளர்­களும் குவிக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும், போதைப்­பொருள் பாவ­னையும், போதைப்­பொருள் உள்­வ­ரு­கையும் தொடர்­வ­தாக இருக்­கின்­ற­தென்றால் நிச்­ச­ய­மாக அதன் மூலங்கள் யார் என்­பது தான் தற்­போ­துள்ள பெருங்­கேள்­வி­யாக உள்­ளது. அதே­நேரம், 1984ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க தேசிய அபா­ய­கர ஒள­ட­தங்கள் கட்­டுப்­பாட்டு சபை, 2007ஆம் ஆண்டின் 54ஆம் இலக்க போதைப்­பொருள் சார்ந்த நபர்கள் (சிகிச்சை மற்றும் மறு­வாழ்வு) சட்டம், 1984 ஆம் ஆண்டு 13ஆம் இலக்க விஷம், ஓபியம் மற்றும் ஆபத்­தான மருந்­துகள் (திருத்தம்) சட்டம், 2006 ஆம் ஆண்டு 27ஆம் இலக்க புகை­யிலை மற்றும் மது­பானம் மீதான தேசிய ஆணையம், 2022ஆம் ஆண்டின் 41இலக்க விஷம், ஓபியம் மற்றும் ஆபத்­தான மருந்­துகள் (திருத்தம்) சட்டம் ஆகிய சட்­டங்கள் போதைப்­பொ­ருட்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக ஏற்­பா­டு­க­ளா­கி­யுள்­ளன. இத­னை­வி­டவும், 2007ஆம் ஆண்டின் 54ஆம் இலக்க போதைப்­பொருள் சார்ந்த நபர்கள் (சிகிச்சை மற்றும் மறு­வாழ்வு) ஒழுங்­கு­ப்ப­டுத்தல் ஏற்­பாடு, போதைப்­பொருள் மற்றும் மன­நோய்க்­கான சட்­ட­வி­ரோத போக்­கு­வ­ரத்­துக்கு எதி­ரான உடன்­ப­டிக்­கைகள், 2008ஆம் ஆண்டின் முத­லா­மி­லக்க போதைப் பொருள்கள் ஒழுங்­கு­ப­டுத்­தல்கள் ஆகி­ய­னவும் காணப்­ப­டு­கின்­றன. இத­னை­வி­டவும், இலங்­கையின் போதைப்­பொருள் பாவ­னையைத் தடுப்­ப­தற்கும் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கு­மான தேசியக் கொள்­கையும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆனால் இவை­ய­னைத்தும் காணப்­பட்­டாலும், போதைப்­பொ­ரு­ளுக்கு எதி­ரான போராட்­ட­மா­னது வெறு­மனே அதி­காரிகள், பாது­காப்புத் துறை­யி­ன­ருக்கு அப்பால் இளம் தலை­மு­றை­யி­னரின் பெற்­றோர்கள் மற்றும் உற­வி­னர்­க­ளாலும் முன்­னெ­டுக்க வேண்­டிய துர்ப்­பாக்­கி­யத்­துக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில், யாழ்.மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கடந்தவாரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றபோது, போதைப்பொருள் விடயம் பேசுபொருளானது. அதன்போது, போதைப்பொருள் தொடர்பில் சிறுமீன்களே அகப்படுகின்றன. ஆனால் பெரும் முதலைகள் பாதுகாப்பாக உள்ளன என்ற தொனிப்படக் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன. இந்தச் சந்தர்ப்பத்தில், ஹெரோயின் போன்றபோதைப்பொருட்கள் கிடைப்பதில்லை. அதற்காக மனோநிலை சரியில்லாதவர்கள் பயன்படுத்தும் மாத்திரைகளே போதைக்கு அடிமையானவர்கள் பயன்படுத்துகின்றார்கள் என்று பொலிஸார் தரப்பில் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், மீண்டும் பொலிஸாரும் வடக்கின் போதைப்பொருள் வியாபாரத்துக்கு துணைபோவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. வடக்கினைப் பொறுத்தவரையில் ஒரேயொரு தரைவழித்தொடர்பு தான் காணப்படுகின்றது. ஏனைய மூன்று பக்கங்களும் கடல்வழித் தொடர்புகளே காணப்படுகின்றது. ஆகவே, போதைப்பொருள் உட்பிரவேசிப்பதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றபோது தான் அவற்றை கட்டுப்படுத்தி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181767
  8. ஐபிஎல்லில் 200 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் சஹால் Published By: VISHNU 22 APR, 2024 | 11:34 PM (நெவில் அன்தனி) இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் 200 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை ராஜஸ்தான் றோயல்ஸ் சுழல்பந்துவீச்சாளர் யுஸ்வேந்த்தர சஹால் படைத்துள்ளார். மும்பை இண்டியன்ஸுக்கு எதிராக ஜெய்பூர், சவாய் மான்சிங் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றுவரும் போட்டியிலேயே அவர் இந்த மைல்கல் சாதனையை எட்டினார். தனது பந்துவீச்சில் மொஹமத் நபியின் பிடியை தானே எடுத்து ஐபிஎல்லில் 200 விக்கெட்களை சஹால் பூர்த்தி செய்தார். ட்வேன் ப்ராவோவின் 183 விக்கெட்கள் என்ற சாதனையை கடந்த வருடம் முறிடித்த சஹால், தனது 153ஆவது போட்டியில் இந்த அரிய சாதனையை படைத்தார். 'ஐபிஎல்லில் அதிக விக்கெட்களை வீழ்த்துவேன் என நான் ஒருபோதும் எண்ணியதில்லை' என ப்ராவோவின் சாதனையை கடந்த வருடம் முறியடித்த பின்னர் சஹால் தெரிவித்திருந்தார். 'நான் ஐபிஎல்லில் விளையாட ஆரம்பத்ததும் மும்பை இண்டியன்ஸுடன் 3 வருடங்கள் இருந்தேன். ஆனால் எனது பயணம் 2014இலிலேயே ஆரம்பித்தது. மேடு, பள்ளங்கள் நிறைய இருந்தன. அதேபோல் நான் நிறைய ரசித்தேன். நான் எனது சரிவுகளின்போது நிறைய கற்றுக்கொண்டேன். எனது வீழ்ச்சிகளும் எனது நெருங்கிய சகாக்களினது ஆதரவுமே இன்று இந்த நிலைக்கு என்னைஉயர்த்திவிட்டுள்ளன' என்றார். மும்பை இண்டியன்ஸினால் 2011இல் ஒப்பந்தும் செய்யப்பட்ட சஹால், 2013இலேயே ஐபிஎல்லில் அறிமுகமானார். அடுத்த வருடம் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருவினால் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அங்குதான் அவரது ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கை பிரகாசிக்கத் தொடங்கியது. றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகாக 2014 முதல் 2021வரை 113 போட்டிகளில் விளையாடிய சஹால், 139 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார். இன்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு சார்பாக அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை சஹால் தன்னகத்தே கொண்டுள்ளார். எவ்வாறாயினும் 2022இல் அவரை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மீண்டும் எடுக்கவில்லை. ஆனால், ராஜஸ்தான் றோயல்ஸ் அவரை 6.5 கோடி ரூபா (இந்திய நாணயப்படி) ஏலத்தில் வாங்கியது. ராஜஸ்தான் றோயல்ஸ் சார்பாக 2022இல் 27 விக்கெட்களையும் 2023இல் 21 விக்கெட்களையும் கைப்பற்றிய சஹால், இந்த வருடம் இதுவரை 13 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். அவரது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதி 2022இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக பதிவான 40 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களாகும். அவர் ஒரு 5 விக்கெட் குவியலையும் ஆறு 4 விக்கெட் குவியல்களையும் பதிவுசெய்துள்ளார். அவரது பந்துவீச்சு சராசரி 21.57ஆகவும் எக்கொனொமி ரேட் 7.72ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 16.74 ஆகவும் இருக்கின்றன. https://www.virakesari.lk/article/181722
  9. Published By: VISHNU 23 APR, 2024 | 02:34 AM மன்னார் பேசாலை பொலிஸ் நிலையப் பிரிவில் பட்டப்பகலில் வீட்டுக்குள் இருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் திங்கள் கிழமை (22) காலை பத்து மணிக்குப் பிற்பாடு பேசாலை பகுதியிலுள்ள அரச ஊழியர்களின் வீட்டிலேயே இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறையீடு செய்யப்பட்டத்திலிருந்து தெரிய வருவதாவது சம்பவம் அன்று மாவட்ட செயலகத்தில் கடமைபுரியும் இவ்வீட்டின் மனைவி வழமைபோன்று காலையில் தனது கடமைக்காக அலுவலகம் சென்ற பின் ஒரு பிரபல பாடசாலையில் பிரதி அதிபராக கடமைபுரியும் கணவன் பாடசாலை விடுமுறையாக இருந்தபோதும் தனது பிள்ளைகளை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வேறு அலுவலுக்காக வெளியில் சென்றுள்ளார். பின் பகல் ஆசிரியரான கணவர் வீட்டுக்குத் திரும்பி வந்தபொழுது கதவு உடைபட்டு இருந்ததைக் கண்டுள்ளார். இதன்போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த மனைவியின் தாலிக்கொடி உட்பட பதின்மூன்று அரை பவுன் நகைகளும் ஐம்பதாயிரம் ரூபா பணமும் களவாடிச் செல்லப்பட்டதாக பொலிசில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருடனை கண்டு பிடிக்கும் நோக்குடன் பொலிஸ் மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளது. இது வரைக்கும் சந்தேக நபர் எவரும் கைது செய்யப்படாத போதும் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அன்மைக்காலமாக பேசாலை பொலிஸ் பிரிவில் பட்டப்பகலில் அரச ஊழியர்களின் வீடுகள் கொள்ளையர்களால் கண்ணமிடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181724
  10. Published By: VISHNU 22 APR, 2024 | 11:27 PM யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் அமைந்துள்ள விடுதி ஒன்றினுள் மதுபான விற்பனை நிலையம் ஒன்றினை திறப்பதற்குப் பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். திங்கட்கிழமை (22) காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பதாகைகளைத் தாங்கியவாறு கோஷமெழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். நெடுந்தீவு பகுதியில் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்க வேண்டிய நிலையில் மதுபான விற்பனை நிலையத்தைக் கொண்டு வருவதால் இளம் சந்ததியினர் வழி தவறிப் போகக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு பிரதேச மக்களால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. நெடுந்தீவு சந்தியிலிருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்டம், ஊர்வலமாகச் சென்று நெடுந்தீவு பிரதேச செயலரிடம் மகஜரொன்றை கையளித்த பின்னர் அரசாங்க அதிபருடன் பேசி குறித்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாகப் பிரதேச செயலர் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. https://www.virakesari.lk/article/181721
  11. Published By: VISHNU 22 APR, 2024 | 09:43 PM (நா.தனுஜா) இலங்கை தற்போது காலநிலைசார் சவால்களுக்கும் முகங்கொடுத்து வருவதாகவும், அதிகரித்துவரும் வெப்பநிலையும், மிகையான உஷ்ணமும் மக்களின் உடல் ஆரோக்கியத்துக்கும், வாழ்க்கைத்தரத்துக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாகவும் உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் நிலைவரம் மற்றும் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகள் என்பவற்றை உள்ளடக்கி வெளியிட்டுள்ள மாதாந்த மதிப்பீட்டு அறிக்கையிலேயே உலக உணவுத்திட்டம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. 'இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் முகங்கொடுத்த மிகமோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து தற்போது படிப்படியாக மீட்சியடைந்துவருகின்றது. இந்நெருக்கடியானது 2022 ஆம் ஆண்டில் சுமார் 6.2 மில்லியன் பேரை உணவுப்பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளியது. 2023 ஒக்டோபரில் 24 சதவீதமான குடும்பங்கள் மிதமான உணவுப்பாதுகாப்பின்மை நிலைக்கு முகங்கொடுத்திருப்பதாக மதிப்பிடப்பட்டது. இருப்பினும் இவ்வாண்டில் பணவீக்க வீழ்ச்சியுடன் நிலைமை ஓரளவுக்கு ஸ்திரமடைந்துவருகின்றது. எவ்வாறெனினும் நாடளாவிய ரீதியில் 43 சதவீதமான குடும்பங்கள் வாழ்வாதாரத்துக்கான மாற்றுவழிகளையும், 42 சதவீதமான குடும்பங்கள் உணவைப் பெற்றுக்கொள்வதற்கான மாற்றுவழிகளையும் கையாண்டுவருவதனால், இதுகுறித்த கரிசனை இன்னமும் தொடர்கின்றது' என உலக உணவுத்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்தோடு தற்போது இலங்கை காலநிலை சார்ந்த சவால்களுக்கும் முகங்கொடுத்துவருகின்றது எனத் தெரிவித்துள்ள அவ்வமைப்பு, அதிகரித்துவரும் வெப்பநிலையும், மிகையான உஷ்ணமும் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்துக்கும், வாழ்க்கைத்தரத்துக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதுடன் விவசாயத்துறை மீதும் அழுத்தங்களைத் தோற்றுவித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையின் உணவுப்பாதுகாப்பு நிலைவரம் படிப்படியான முன்னேற்றத்தைப் பதிவுசெய்துவரும் வேளையில், பின்தங்கிய நிலையிலுள்ள சமூகங்களுக்கான உடனடி உதவி, ஆரம்ப மீட்சிக்கான உதவி மற்றும் நீண்டகால அடிப்படையில் மீண்டெழும் தன்மையைக் கட்டியெழுப்புவதற்கான உதவி என்பவற்றை உலக உணவுத்திட்டம் வழங்கிவருகின்றது. அதற்கமைய கடந்த ஜனவரி மாதம் பதிவான அதிக மழைவீழ்ச்சியின் விளைவாகப் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்திலுள்ள 255 குடும்பங்களுக்கு 2 வாரங்களுக்குத் தேவையான உணவுப்பொருள் உதவிகளை வழங்கியிருக்கும் உலக உணவுத்திட்டம், உணவுப்பாதுகாப்பு தொடர்பில் 379 பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களுக்கும், அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள 2 கல்வி வலயங்களின் கல்வியியல் அதிகாரிகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறைகளையும் நடாத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/181720
  12. Published By: VISHNU 22 APR, 2024 | 08:13 PM (நெவில் அன்தனி) ஐக்கிய இராச்சியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லண்டன் மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 16 நிமிடங்கள், 16 செக்கன்களில் நிறைவு செய்த ஒலிம்பிக் சம்பியன் கென்ய வீராங்கனை பெரெஸ் ஜெப்ச்சேர்ச்சேர், பெண்கள் மட்டும் (London Marathon Women's only) உலக சாதனையை நிலைநாட்டினார். அப் போட்டியில் எதியோப்பியாவின் உலக சாதனையாளர் டிக்ஸ்ட் அசேஃபா முதல் தடவையாக லண்டன் மரதனில் வெற்றிபெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏழு வருடங்கள் நீடித்த பெண்கள் மட்டும் உலக சாதனையை பெரெஸ் செப்ச்சேர்ச்சேர் முறியடித்து பெரும் புகழ்பெற்றார். லண்டன் மரதனின் பெரும் பகுதியில் கடுமையான போட்டி நிலவியது. ஆனால், கடைசி கட்டத்தில் முன்னிலை அடைந்த ஜெப்ச்சேர்சேர், 7 வருடங்களுக்கு முன்னர் மேரி கெய்ட்டானியினால் நிலைநாட்டப்பட்ட 2:17.01 என்ற பெண்கள் மட்டும் சாதனையை முறிடியத்தார். லண்டன் மரதனில் எதியோப்பிய வீராங்கனை டிக்ஸ்ட் அசேஃபா (2:16.24) இரண்டாம் இடத்தையும் கென்ய வீராங்கனை ஜொய்ஸ்லின் ஜெப்கோஸ்கெய் (2:16.24) மூன்றாம் இடத்தையும் பெற்றனர். ஆண்களுக்கான லண்டன் மரதன் ஓட்டம் ஆண்களுக்கான லண்டன் மரதன் ஓட்டப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் கடந்த பெப்ரவரி மாதம் கார் விபத்தில் பலியான முன்னாள் மரதன் உலக சாதனையாளர் கென்யாவின் கெல்வின் கிப்டுமுக்கு கௌரவஞ்சலி செலுத்தப்பட்டது. ஆண்களுக்கான லண்டன் மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 04 நிமிடங்கள், 15 செக்கன்களில் நிறைவுசெய்த மற்றொரு கென்யரான 27 வயதுடைய அலெக்ஸாண்டர் முட்டிசோ முனியாஓ வெற்றிபெற்றார். ஆனால் அவருக்கு வெற்றி இலகுவாக அமையவில்லை. எதியோப்பியாவைச் செர்ந்த 41 வயதான கெனெனிசா பெக்கெலிடம் கடும் சவாலை முனியாஓ எதிர்கொண்டார். மூன்று தடவைகள் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை சுவீகத்தவரும் 5 தடவைகள் உலக சம்பியனுமான பெக்கெலி இதுவரை லண்டன் மரதனில் வெற்றிபெற்றதில்லை. ஆனால், தன்னைவிட 14 வயது குறைந்த முனியாஓவுக்கு கடும் சவாலாக விளங்கினார். முனியாஓவைவிட 14 செக்கன்கள் வித்தியாசத்திலேயே பெக்கெல் (2:04.15) இரண்டாம் இடத்தைப் பெற்றார். அப் போட்டியில் பெரிய பிரித்தானியாவைச் செர்ந்த எமில் கெயாரெஸ் (2:06.46) மூன்றாம் இடத்தைப் பெற்றார். https://www.virakesari.lk/article/181716
  13. 22 APR, 2024 | 11:41 AM பெங்களூரு: கர்நாடக பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நேஹா என்ற மாணவியை சக மாணவர் ஃபயாஸ் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கொலையாளி ஃபயஸின் தந்தை பாபா சாஹேப் சுபானி தனது மகனின் செயலுக்காக இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹுப்ளியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன் ஹிரேமத். தார்வாட் மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் நேஹா ஹிரேமத், ஹுப்பள்ளியில் உள்ள கே.எல்.இ. தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருடன் படித்த ஃபயாஸ் (23) என்ற மாணவர் பல்கலைக்கழக வளாகத்தில் நேஹாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த சம்பவத்துக்கு லவ் ஜிகாத் தான் காரணம் என மாணவியின் தந்தை குற்றம் சாட்டி உள்ளார். இந்த நிலையில் கொலை செய்த ஃபயாஸின் தந்தை இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்துள்ளதாக கூறியதுடன் இருகரம் கைகூப்பி மன்னிப்பும் கோரியுள்ளார். இதுகுறித்து பாபா சாஹேப் சுபானி கூறியதாவது: இந்த கொலை சம்பவம் குறித்து வியாழன் மாலை 6 மணிக்குத்தான் தகவல் தெரிந்தது. அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். எதிர்காலத்தில் இதுபோன்ற செயலை யாரும் செய்யத் துணியாத வகையில் அவன் (மகன் ஃபயாஸ்) தண்டிக்கப்பட வேண்டும். நேஹாவை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களிடமும், கர்நாடக மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவளும் என் மகள் போன்றவள்தான். நானும் எனது மனைவியும் 6 வருடங்களாக பிரிந்து வாழ்கிறோம். ஃபயாஸ் அவரது தாயாருடன்தான் தங்கியுள்ளான். ஃபயாஸும், நேஹாவும் ஒருவரையொருவர் விரும்புவதாகவும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறினான். ஆனால் அதற்குநான் மறுப்பு தெரிவித்தேன். என் மகனின் இந்த செயல் முனவல்லிக்கே (ஃபயாஸின் சொந்த ஊர்) கரும்புள்ளியை ஏற்படுத்தி விட்டது. இதற்காக என்னை மன்னித்து விடுங்கள். இவ்வாறு சுபானி கூறினார். நேஹாவை குத்தி கொலை செய்த ஃபயாஸை தூக்கிலிட வேண்டும். அப்போதுதான் தங்களது மகளின் ஆன்மா சாந்தி அடையும் என மாணவியின் குடும்பத்தினர் கூறி வருகின்றனர். https://www.virakesari.lk/article/181644
  14. ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதல் - பதவியை இராஜினாமா செய்தார் இஸ்ரேலின் இராணுவ புலனாய்வு பிரிவின் தலைவர் Published By: RAJEEBAN 22 APR, 2024 | 03:53 PM ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிற்குள் நுழைந்து மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலின் இராணுவ புலனாய்வு பிரிவின் தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஹமாஸ் தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதை கண்டுபிடிக்க தவறியமை உட்பட தவறுகளிற்கு பொறுப்பேற்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக இஸ்ரேலின் இராணுவ புலனாய்வு பிரிவின் தலைவர் மேஜர் ஜெனெரல் அகாரொன் ஹலிவா தெரிவித்துள்ளார். எங்களிற்கு வழங்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றும் அளவிற்கு எங்களின் புலனாய்வு பிரிவு செயற்படவில்லை என்பதை தனது இராஜினாமா கடிதத்தில் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். ஒக்டோபர் ஏழாம் திகதி சம்பவங்களிற்கு பொறுப்பேற்று பதவி விலகிய இஸ்ரேலின் முதலாவது உயர் அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலிய இராணுவமும் புலனாய்வு பிரிவினரும் பல முன்னெச்சரிக்கைகளை தவறவிட்டனர் என தெரிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181674
  15. வீட்டில் தயாரித்து பாவிப்பதே மசாலாக்கள் எனப்படும் வாசனைப் பொருட்கள் தரமாக இருக்கும் வாய்ப்பு அதிகம்.
  16. இலங்கைக்கு பணம் அனுப்புவதில் புலம் பெயர் தமிழர்களின் திடீர் முடிவு #udaruppu
  17. Published By: VISHNU 22 APR, 2024 | 06:32 PM (இராஜதுரை ஹஷான்) வெளிநாட்டு அரசுமுறை கடன்களுக்காகச் சர்வதேச பிணைமுறியாளர்களுடன் அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் கடன் மறுசீரமைப்பு விவகாரம் இழுபறி நிலைக்கு உள்ளாக்கப்படும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் மூன்று தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. முதலாவதாகச் சீனாவைத் தவிர்த்து ஏனைய கடன் வழங்குநர்களை உள்ளடக்கிய உத்தியோகபூர்வ குழு, இரண்டாவது சீனா, மூன்றாவதாகச் சர்வதேச பிணைமுறியாளர்கள் என்ற அடிப்படையில் இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. சீனா உட்பட ஏனைய கடன் வழங்குநர்களுடனான கலந்துரையாடல்களில் கடன் மறுசீரமைப்புக்கான இணக்கப்பாட்டு தீர்மானம் எடுக்கப்பட்டாலும், சர்வதேச பிணைமுறியாளுக்கும், இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. அண்மையில் லண்டனில் சர்வதேச பிணைமுறியாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பிணைமுறியாளர்கள் முன்வைத்த திட்ட யோசனையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இலங்கை அரசாங்கம் முன்வைக்கும் திட்ட யோசனைகளைச் சர்வதேச பிணைமுறியாளர்கள் ஏற்க தயாரில்லை. கடன் மறுசீரமைப்பு தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளதால் சர்வதேச பிணைமுறியாளர்கள் தாமத கட்டணத்துக்கான வட்டியை எதிர்வார்த்துள்ளார்கள். 2023.12.31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 1,678 மில்லியன் டொலர் தாமத கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. வங்குரோத்து அடைந்து விட்டோம் என்று அறிவித்து இரண்டாண்டுகள் நிறைவடைந்துள்ளன. இருப்பினும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் பின்னர் இலங்கையைப் போன்று பல நாடுகள் நிதி வங்குரோத்து நிலையடைந்தன. எகிப்து, எத்தியோப்பியா, கானா, கென்யா, லெபனான் மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகள் இரண்டாண்டுக் காலமாக கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவில்லை. கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்தால் கடன் வழங்குநர்களுக்கு குறிப்பிட்ட கடன் தொகைளை செலுத்த வேண்டும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் வெளிநாட்டு கையிருப்பு பாதிக்கப்படும். ஆகவே ஜனாதிபதி தேர்தல் இடம் பெறும் வரை கடன் மறுசீரமைப்பு விவகாரத்தை அரசாங்கம் இழுபறி நிலைக்கு உள்ளாக்கும் என்றார். https://www.virakesari.lk/article/181703
  18. 22 APR, 2024 | 04:48 PM இந்திய - இலங்கை சமய மற்றும் கலாசார இணைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கும் வகையிலும் நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டும், உலகின் மிக நவீன தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா முறையுடன் “ஸ்ரீ ராமாயண பாதை” (Ramayana trail) யாத்திரை திட்டத்தின் உத்தியோகபூர்வ தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில், இடம்பெற்றது. அயோத்தியில் உள்ள மிகப் பெரிய ஸ்ரீ ராம பூஜை மாளிகையின் தலைமைப் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மஹராஜ் சுவாமியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இந்த சந்தர்ப்பத்தில், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார். "ஸ்ரீ ராமாயண பாதை" யாத்திரைத் திட்டம் மூலம் இராமாயண காவியத்தில் குறிப்பிடப் பட்டுள்ள இலங்கை முழுவதும் உள்ள பிரதான ஒன்பது முக்கிய இடங்களை இந்து பக்தர்களின் புனித யாத்திரை மற்றும் சுற்றுலாப் பயணத்திற்காக பிரபல்யப்படுத்தப்படும். இது ஆன்மீக மற்றும் கலாசார பாரம்பரியத்தில் ஆர்வமுள்ள மில்லியன் கணக்கான இந்திய மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இடங்களுக்குச் செல்வதற்கான வாய்ப்பை பக்தர்களுக்கு வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்த வரலாற்று ஆலயங்களுடன் தொடர்புடைய பண்டைய ஆன்மீக நிகழ்வுகள் செயற்கை நுண்ணறிவு (AI), Augmented reality, மற்றும் மெய்நிகர் யதார்த்தம் (Virtual reality) போன்ற அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் அனிமேஷன் செய்து பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மன்னாரிலுள்ள ஆதாம் பாலம் முதல் நுவரெலியா சீதா எலிய வரை இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு இடமும் இந்த யாத்திரைத் திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஐரோப்பிய மற்றும் பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் நிரஞ்சன் தேவ் ஆதித்யா மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/181684
  19. வாழ்த்துகள் பிரியன் தாத்தா! வாழ்த்துக்கள் (எலிக்)குட்டிப்பையா, வாழ்க வளத்துடன்.
  20. ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி அன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் உட்பட நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 407 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் தாக்குதலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் ஏப்ரல் 21 தாக்குதலின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நேற்று பிற்பகல் விசேட ஆராதனை நடைபெற்றது. ஆராதனையின் பின்னர் அருட்தந்தைமார்கள், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கத்தோலிக்க சமூகத்தினர் கலந்து கொண்ட நடைப்பயணம் குறித்த தேவாலயத்திலிருந்து கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தை நோக்கி ஆரம்பமானது. இந்த நடைப்பயணம் கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தை சென்றடைந்த பின்னர் சர்வ மத தலைவர்கள் மற்றும் முக்கியஸ்த்தர்கள் பங்குகொள்ளும் விசேட ஆராதனையும் இடம்பெறவுள்ளது. அத்துடன், இன்று பிற்பகல் 3.30 க்கு நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரி மைதானத்தில் இருந்து சர்வ மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளும் பிரார்த்தனை அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நம்பிக்கையின் நாயகர்கள் என்று பெயரிடும் கையெழுத்துப் பிரதிகளை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திடம் கையளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரம், இன்றைய தினம் ஆராதனைகள் இடம்பெறும் தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இதேவேளை, ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளிவராத எட்டு உண்மைகள் ஆதாரங்களுடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வழங்கிய அறிக்கை தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/299753
  21. பட மூலாதாரம்,FIDE கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 22 செப்டெம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் 17 வயதான சதுரங்க கிராண்ட் மாஸ்டரான சென்னையைச் சேர்ந்த குகேஷ் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான மிக இளைய போட்டியாளர் ஆகியிருக்கிறார். இந்த நிலையில் இந்தக் கட்டுரை புதுப்பிக்கப்பட்டு மறுபகிர்வு செய்யப்படுகிறது. சென்னையில் நடைபெற்ற ‘தி கேண்டிடேட்’ போட்டியில் பெற்ற வெற்றி மூலம் சாதனைப் பயணத்தைத் தொடங்கினார் குகேஷ். ஆதன்பிறகு, டொராண்டோவில் நடந்த இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவுடன் போட்டியை ‘டிரா’ செய்தார். இருப்பினும், இறுதி முடிவுக்காக, அமெரிக்காவின் ஃபாபியானோ கருவானா மற்றும் ரஷ்யாவின் இயான் நெபோம்னியாச்சி ஆகியோர் விளையாடிய ஆட்டத்தின் முடிவுக்காக குகேஷ் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்தப் போட்டி ‘டிரா’வில் முடிவடைந்த பின்னர், உலக செஸ் சாம்பியன்ஷிப்பிற்கான இளைய போட்டியாளராகத் தேர்வானார் குகேஷ். இந்திய சதுரங்க அரங்கில் ஒலிக்கும் முக்கியப் பெயர்களில் ஒன்று குகேஷ். சென்னையைச் சேர்ந்த 17 வயதான குகேஷ் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சதுரங்கம் ஆடி வருகிறார். குடும்பத்தில் சதுரங்கம் சொல்லித் தரவோ, முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளவோ சதுரங்க வீரர்கள் யாரும் இல்லை. சதுரங்கத்தின் மீது இயல்பாக உருவான தனது ஆர்வத்தின் காரணமாக தற்போது சர்வதேச அரங்குகளை எட்டியுள்ளார். பள்ளி மாணவரான குகேஷ் இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர் என கூறிக் கொள்வதில் அவரது பெற்றோர்கள் மிகவும் பெருமை கொள்கின்றனர். படக்குறிப்பு,கடந்த 2017ஆம் ஆண்டு, சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) ரேட்டிங் முதல்முறையாகக் கிடைத்தது. பொழுதுபோக்காக ஆரம்பித்த விளையாட்டு வீட்டில் பொழுதுபோக்காக குடும்பத்தினருடன் சதுரங்க ஆட்டத்தை விளையாடத் தொடங்கியவர் குகேஷ். சதுரங்க ஆட்டத்தின் அடிப்படை நகர்வுகள், விதிகளை இப்படித்தான் அவர் கற்றுக் கொண்டார். தந்தை தன் அன்றாடப் பணியை முடித்து வரும் வரை பள்ளியில் தனியாக அமர்ந்திருக்க வேண்டாம் என்பதற்காக சதுரங்கப் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஓரிரு மாதங்களிலேயே அவருக்கு இருக்கும் சதுரங்க ஆர்வத்தை அவரது பயிற்சியாளர் அறிந்து கொண்டார். அவரை சிறப்புப் பயிற்சிகளுக்கு அனுப்ப பெற்றோரிடம் வலியுறுத்தினார். அவரது ஆர்வம் சதுரங்கத்தில் அதிகரிக்கவே, அதிக நேரத்தை சதுரங்கம் ஆடுவதில் செலவழித்தார். அவரது பெற்றோர்களும் பள்ளியும் குகேஷின் ஆர்வத்தை அங்கீகரித்து அதற்கான ஒத்துழைப்பை வழங்கினர். “வார இறுதி நாட்களில் சதுரங்கப் போட்டி எங்கு நடைபெற்றாலும் அதில் பங்கேற்று வெற்றி பெற்றுவிடுவார். அந்தப் போட்டிகளுக்காகவே காத்திருப்பார். அவர் பெறும் ஒவ்வொரு பரிசுக்கும் அவரை மேடையில் ஏற்றி, பள்ளி அவரை ஊக்கப்படுத்தியது,” என்கிறார் குகேஷின் தந்தை ரஜினிகாந்த். படக்குறிப்பு,குகேஷின் தந்தை ரஜினிகாந்த், காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவராக இருந்தார். மகனுக்காக பணியை கைவிட்ட தந்தை மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு, சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) ரேட்டிங் அவருக்கு முதல்முறையாக கிடைத்தது. அது குகேஷை மிகவும் ஊக்கப்படுத்தியது என்கிறார் அவரது தந்தை. குகேஷ் உடன் போட்டிகளில் விளையாடுபவர்கள் அவரைவிட வயதில் மூத்தவர்களாகவும், அதிக ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்களாகவும் இருந்தனர். எனினும் "குகேஷ் தனது ஆர்வம் மற்றும் திறமையின் காரணமாக போட்டிகளை எளிதாக வெல்ல முடிந்தது,” என்கிறார் ரஜினிகாந்த். குகேஷின் தந்தை ரஜினிகாந்த், காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவராக இருந்தார். சதுரங்கத்தில் குகேஷின் ஆர்வம் அதிகமாக இருப்பதைப் பார்த்து, கடந்த 2017ஆம் ஆண்டு தனது மருத்துவர் பணியைக் கைவிட்டார். “எல்லா நாடுகளுக்கும் குகேஷை பத்திரமாக அழைத்துச் சென்று அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக் கொள்வது குகேஷின் தந்தைதான். இதற்காகத் தனது பணியைக்கூட கடந்து ஆறு ஆண்டுகளுக்கு முன் அவர் நிறுத்திவிட்டார். "நான் குகேஷுக்கு தேவையான உளரீதியான ஆதரவைத் தருகிறேன்,” என்கிறார் குகேஷின் தாய் பத்மகுமாரி. மருத்துவரான அவர், சென்னை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஹாட்ரிக் வெற்றி கடந்த 2015ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற நேஷனல் ஸ்கூல்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் குகேஷ். 2015ஆம் ஆண்டு மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு ஆண்டுகளும் தொடர்ந்து அந்தப் பட்டத்தை வென்றார். குகேஷ் தற்போது இந்தியாவில் முதல் இடத்திலும் உலகத்தில் எட்டாவது இடத்திலும் உள்ளார். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலோ தரவரிசையில் 2750 புள்ளிகளை கடந்த இளம் சதுரங்க வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவ்வளவு போட்டிகளை எதிர்கொண்டு, பதக்கங்களை பெற்று வரும் சென்னையைச் சேர்ந்த குகேஷ்-இன் குடும்பத்தில் இவரே முதல் சதுரங்க வீரர். “எனக்கு சதுரங்கம் தெரியாது. மிக அடிப்படையாக அதைப் பற்றி சில விஷயங்கள் தெரியும். இப்போதும்கூட எனக்கு அதைப் பற்றி தெரியாது. அவை எல்லாம் குகேஷும் அவரது பயிற்சியாளரும்தான் பேசிக் கொள்வார்கள். நான் அவரை போட்டிகளுக்கு அழைத்துச் சென்று அவருக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பேன்,” என்கிறார் குகேஷின் தந்தை. படக்குறிப்பு,சதுரங்கத்தில் மட்டுமல்லாமல் படிப்பிலும் முதலிடத்தில் இருந்தவர் குகேஷ். நிறைவேறிய கனவு சதுரங்க வீரர்கள் அனைவருக்கும் இருக்கும் கனவு கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்பது. குகேஷுக்கு இந்த கனவு 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவேறியது. அவர், கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற இளம் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அது மட்டுமல்லாமல், சதுரங்க வரலாற்றில் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற மூன்றாவது நபர் என்ற பெயரையும் இவர் பெற்றுள்ளார். சதுரங்கத்தில் மட்டுமல்லாமல் படிப்பிலும் முதலிடத்தில் இருந்தவர் குகேஷ். ஆனால் சதுரங்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்ற காரணத்தால் தற்போது தினசரி பாடங்களைக் கற்பதில் இருந்து சற்று விலக்கு பெற்றுள்ளார். குகேஷின் இன்னொரு முகம் போட்டிகளின்போது, பொதுவெளியில் காணப்படும் குகேஷுக்கு மற்றொரு முகம் இருக்கிறது என குகேஷை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் அவரது தந்தை. “வெளியில் காணப்படுவது மிகவும் சாதுவான, அமைதியான குகேஷ். ஆனால், உண்மையில் அவன் மிகவும் சேட்டைக்காரன். எப்போதும் ஏதாவது குறும்புத் தனம் செய்து கொண்டு, விளையாட்டாக வீட்டில் இருப்பவர்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கும் சிறுவன்,” என்று கூறும் அவரது தந்தை, சதுரங்கப் போட்டிகளுக்குத் தயாராகும் நேரத்தில், குகேஷ் யாரிடமும் பேசமாட்டார்,” என்றும் தெரிவித்தார். போட்டிகளுக்குத் தயாராகும்போது தனது பயிற்சியாளரிடம் மட்டுமே குகேஷ் பேசுவார். “அவர் அருகில் அமர்ந்து நான் செல்ஃபோனில்கூட யாரிடமும் பேசமாட்டேன். அதுகூட அவரது கவனத்தை சிதறடிக்கும். அவரும் அதை விரும்ப மாட்டார். போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கும்போது, போட்டிக்கு முன், சில வார்த்தைகள் தொலைபேசியில் தன் தாயிடம் பேசுவார். நான் கூடவே இருப்பதால் எனக்கு அதுகூட கிடைக்காது,” என பெருமையும் சிரிப்பும் கலந்து தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் குகேஷுன் தந்தை. முதலில் உள்ளூர், வெளிமாநிலங்களில், தேசிய அளவில் என போட்டிகளில் பங்கேற்று வந்த குகேஷ், வெகு சீக்கிரமே சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற ஆரம்பித்தார். படக்குறிப்பு,2023ஆம் ஆண்டு எலைட் நார்வே போட்டிகள் உட்பட 10 ஓபன் போட்டிகளில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுள்ளார். குகேஷ் குவித்துள்ள பதக்கங்கள் ஸ்பெயினில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் அவர் உலக சாம்பியன் பட்டம் வென்றது அவரது சதுரங்க பயணத்தில் ஒரு முக்கியமான மைல் கல். அதற்கு முன்பாக, 2016ஆம் ஆண்டில் காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். ஐரோப்பிய கிளப் கோப்பை எனப்படும் சதுரங்க வீரர்கள் முக்கியமாக கருதும் போட்டிகளில் 2021ஆம் ஆண்டு தங்கப் பதக்கம் வென்றார். அந்தப் போட்டிகளின் போது, மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டுள்ளார். குகேஷ் தனது வயதுக்கு உட்பட்டோர் விளையாடும் போட்டிகளில் மட்டுமல்லாமல் அனைத்து வயதினரும் கலந்து கொள்ளும் ஓபன் போட்டிகளிலும் பங்கேற்று சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார். பிரான்ஸில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் ஓபன் போட்டிகள், 2021ஆம் ஆண்டு நார்வே மாஸ்டர்ஸ் போட்டிகள், 2022ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற சாம்பியன் மெனார்கா போட்டிகள், 2023ஆம் ஆண்டு எலைட் நார்வே போட்டிகள் உட்பட 10 ஓபன் போட்டிகளில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுள்ளார். இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்கும்போது சக போட்டியாளர்கள் இடையே மிகவும் ஆரோக்கியமான போட்டி நிலவும் எனக் குறிப்பிடுகிறார் அவரது தந்தை ரஜினிகாந்த். “போட்டிகளில் பங்கேற்கும் முன் அவ்வளவாகப் பேசிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் போட்டிகள் முடிந்த பிறகு, அனைத்து பிள்ளைகளும் ஒரே அறையில் குழுமி இரவெல்லாம் ஆட்டம் போடுவார்கள். எனினும் போட்டியின்போது நண்பரின் மீது கருணையே காட்டமாட்டார்கள்,” என்று புன்னகைக்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/cndedlg48k8o
  22. 22 APR, 2024 | 12:22 PM அயோத்தியின் ஸ்ரீ ராமர் கோவிலின் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், கோவிந்த் தேவ் கிரி மகராஜ் கண்டிக்கு சென்றபோது, அங்கு அவரை மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் கண்டி தமிழ் வர்த்தக சங்க தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்றனர். https://www.virakesari.lk/article/181648
  23. 15 ஆவது ஆண்டில் முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் : புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் மயப்படுத்துமாறு சிவில் சமூகம் வலியுறுத்தல் 22 APR, 2024 | 11:43 AM எதிர்வரும் மே மாதம் -18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் 15 ஆவது ஆண்டாக அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பல்வேறு புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் மயப்படுத்த வேண்டுமெனச் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் புனித தெரேசா தேவாலய முன்றலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மாலை - 04 மணியளவில் சிவில் - சமூக அமைப்புக்களின் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். இந்தக் கலந்துரையாடலில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தலைப் பல்வேறு புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் மயப்படுத்தி மேற்கொள்வதற்கான முன்மொழிவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. இதன்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நினைவேந்தல் செயற்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்து கொண்ட மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் விளக்கமளித்தனர். கலந்துரையாடலைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், முள்ளிவாய்க்கால் பேரவலம் 15 ஆவது ஆண்டாக நினைவு கூரப்படவிருக்கின்றது. இந்த நினைவேந்தல் மிகவும் முக்கியமானது. இந்த நினைவேந்தலை நாங்கள் பரவலாக்கம் செய்ய வேண்டும். இந்த நினைவேந்தல் மூலம் மீள நிகழாமை உறுதி செய்யப்பட வேண்டும். காஸாவில் தற்போது இன்னுமொரு மனிதப் பேரவலம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட அவலம் மீண்டும் நடைபெறாமலிருப்பதை மனதிலே கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நாங்கள் முக்கியத்துவப்படுத்த வேண்டும். இந்த நினைவேந்தல் நிகழ்வை ஒரு இடத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தி வைக்காமல் பரந்த அளவில் எல்லோரும் இயல்பாக நினைவேந்தலை அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுக்கின்றோம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒரு நீடித்த நினைவேந்தலாக, ஒரு இன அழிப்பின் நினைவேந்தலாக எவ்வாறு மேற்கொள்ளலாம்? என்பதைக் கிராம மட்டப் பொது அமைப்புக்கள் தீர்மானித்து முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். https://www.virakesari.lk/article/181629
  24. 22 APR, 2024 | 11:37 AM வடக்கு மாகாணத்தில் கால்நடைகள் திருடப்படுவதைத் தடுக்கும் வகையில் அனைத்து கால்நடைகளையும் பதிவு செய்யும் நடவடிக்கையைக் கட்டாயமாக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். கால்நடைகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பதிவாகின்றமையை கருத்திற்கொண்டு ஆளுநர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். கால்நடைகளை வளர்ப்போர் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் எனவும், வெளிவட்டங்களுக்குக் கால் நடைகளைக் கொண்டு செல்வதற்கான அனுமதியை வழங்கும் போது உரியச் சட்ட விதிகளை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கன்று பிறந்து 18 மாதங்களுக்குள் காது அடையாள வில்லைகளை (Ear Tag) பொருத்திக் கொள்வதைக் கட்டாயமாக்க வேண்டும் எனவும், அவ்வாறு செய்யாத கால்நடை வளர்ப்பார்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் இறைச்சிக்காக வெட்டப்படும் மாடுகளின் காது அடையாள வில்லைகள் (Ear Tag) பரிசோதிக்கப்பட வேண்டும் எனவும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாத இறைச்சி வெட்டும் இடங்கள் மற்றும் விற்பனை செய்யும் இடங்களுக்குச் சீல் வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181637

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.