Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. Published By: DIGITAL DESK 7 07 APR, 2024 | 06:31 PM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி தேர்தலில் எமது தரப்பின் சார்பில் சிறந்த வேட்பாளரை களமிறக்குவோம். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு இன்னும் காலமுள்ளது என முன்னாள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அநுராதபுரத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டாறு குறிப்பிட்டார். இதன்போது ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விகளுக்கு பின்வருமாறு பதிலளித்தார். கேள்வி – உங்களின் தாய் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. உங்களின் அரசியல் அந்த கட்சியின் இருந்து ஆரம்பமானது. ஆகவே கட்சியின் தற்போதைய நிலைமை தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன? பதில் - ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் ஊடாக வெகுவிரைவில் தீர்வு காணப்பட வேண்டும். கேள்வி - உங்களின் பங்காளிகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ளார்களே... அது உங்களுக்கு சவாலாக அமையாதா? பதில் - சவால் ஏதுமில்லை. தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கூட்டணிகள் ஸ்தாபிக்கப்படுவது இயல்பானதே. கேள்வி – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளாரே? பதில் - அது அவரது நிலைப்பாடு. நாங்கள் எமது வேட்பாளரை அறிவிப்போம். கட்சியின் நிறைவேற்று சபை ஊடாக சிறந்த தீர்மானத்தை எடுப்போம். கேள்வி – பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப் போகின்றீர்களா? பதில் - ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு இன்னும் காலம் உள்ளது. கேள்வி – புத்தாண்டு தொடர்பில் மக்களுக்கு ஏதேனும் குறிப்பிட விரும்புகின்றீர்களா? பதில் - அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மகிழ்வுடன் புத்தாண்டை கொண்டாட வேண்டும். https://www.virakesari.lk/article/180641
  2. இலங்கையில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! இலங்கையில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இலங்கையில் சுமார் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுவதாக உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கை கூறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். அதிக பணவீக்கம், மக்களின் வருமானம் அதிகரிப்பு, வேலை இழப்பு மற்றும் வருமானம் வீழ்ச்சி போன்ற காரணங்களால் இவர்கள் வறுமையில் வாடுவதாக உலக வங்கி குறிப்பிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறைந்த நடுத்தர வருமானம் ஒரு நாளைக்கு 3.65 டொலர் என்ற வரம்பை கணக்கில் எடுத்துக்கொண்டு உலக வங்கி நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. இதேவேளை, வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரண்டு இலட்சத்தாலும், அடுத்த ஆண்டு மூன்று இலட்சத்தாலும் குறையும் என்று வங்கி கணித்துள்ளது. இலங்கையின் அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/298397
  3. நாளை சூரிய கிரகணம்: பகலிலும் எங்கெல்லாம் 4 நிமிடம் இருள் சூழும்? இந்தியாவில் தெரியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சூரிய குடும்பத்தில் முழு சூரிய கிரகணத்தைக் காணக்கூடிய ஒரே கிரகம் பூமி மட்டுமே. ஒவ்வொரு 18 மாதங்களுக்கும், பூமியின் ஒரு பகுதியில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. ஏப்ரல் 8 ஆம் தேதி சூரிய கிரகணத்தைக் காண உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். வட அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும். இந்த சூரிய கிரகணத்தின் போது, நான்கு நிமிடங்கள் மற்றும் ஒன்பது வினாடிகளுக்கு முழு இருள் இருக்கும். இந்த சூரிய கிரகணம் கனடா, அமெரிக்கா முதல் மெக்சிகோ வரை தெரியும். முந்தைய சூரிய கிரகணங்களை விட இந்த சூரிய கிரகணம் நீடிக்கும் நேரம் மிக அதிகமாக இருப்பதால், இந்த காலக்கட்டத்தில் பல சோதனைகளை நடத்த நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். அரிய முழு சூரிய கிரகணம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் இந்த நூற்றாண்டில், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே இந்த முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும் என்பதிலிருந்து இது எவ்வளவு அரிதான நிகழ்வு என்பதை அறியலாம். சந்திரன் சூரியனை விட பூமிக்கு 400 மடங்கு நெருக்கமாக உள்ளது, ஆனால் சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறியது. இதன் காரணமாக, சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டு புள்ளியாக வரும்போது, அது சூரியனை மறைப்பதல் நாம் கிரகணத்தைக் காண்கிறோம். சூரிய கிரகணத்தைப் பொறுத்தவரை சில நேரங்களில் தெரியும், சில நேரங்களில் தெரியாது. இந்த சூரிய கிரகணம் முக்கியமானது. ஏனெனில், இந்த நிகழ்வை லடசக்கணக்கான மக்கள் காண முடியும். இந்த கிரகணத்தை 31 லட்சம் பேர் பார்க்க முடியும் என ஒரு மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள என்.சி. ஸ்டேட் பல்கலைக்கழகம், இந்த கிரகணத்தின் போது வனவிலங்குகளுக்கு ஏற்படும் விளைவு குறித்து ஆய்வு செய்யவுள்ளது. இந்த ஆய்வில், டெக்சாஸ் மாகாண உயிரியல் பூங்காவில் உள்ள 20 விலங்குகளின் நடத்தை ஆய்வு செய்யப்படும். நாசாவின் எக்லிப்ஸ் சவுண்ட்ஸ்கேப்ஸ் (Eclipse Soundscapes) திட்டமும் விலங்குகளின் நடத்தையை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. கிரகணத்தின் காரணமாக ஏற்படும் முழு இருளில் விலங்குகளின் சத்தம் மற்றும் அவற்றுக்கு ஏற்படும் விளைவுகளைப் பதிவு செய்ய மைக்ரோஃபோன் போன்ற சிறிய உபகரணங்களை பொருத்துவதும் இத்திட்டத்தில் அடங்கும். நாசாவின் திட்டம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள நாசாவின் வாலோப்ஸ் தளத்தில் இருந்து கிரகணப் பகுதியில் இருந்து மூன்று ஆராய்ச்சி ராக்கெட்டுகள் ஏவப்படும். எம்ப்ரி ரிடில் ஏரோநாட்டிக்கல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆரோஹ் பர்ஜாத்யா இந்தப் பரிசோதனையை முன்னின்று நடத்துகிறார். சூரிய கிரகணத்தின் போது வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களை இந்த ராக்கெட் பதிவு செய்யும். மூன்று ராக்கெட்டுகளும் பூமியில் இருந்து 420 கிலோமீட்டர் உயரத்திற்குச் சென்று பின்னர் பூமியில் விழுந்துவிடும். முதல் ராக்கெட் கிரகணத்திற்கு 45 நிமிடங்களுக்கு முன்பும், இரண்டாவது ராக்கெட் கிரகணத்தின் போதும், மூன்றாவது ராக்கெட் கிரகணம் முடிந்த 45 நிமிடங்களுக்குப் பிறகும் ஏவப்படும். பூமியின் மேற்பரப்பில் இருந்து 80 கி.மீ. மேலிருந்து தொடங்கும் வளிமண்டலத்தின் அடுக்கு அயனோஸ்ஃபியர் எனப்படும். இந்த அடுக்கில் அயனிகள் மற்றும் எலக்ட்ரான்கள் உள்ளன. இது விண்வெளி மற்றும் வளிமண்டலத்திற்கு இடையில் பூமியின் ஒரு வகையான பாதுகாப்பு அடுக்கு ஆகும். இது ரேடியோ அலைகளை வெளியிடும் ஓர் அடுக்காகும். ராக்கெட் உதவியுடன், கிரகணத்தின் போது இந்த அடுக்கில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து முக்கியமான ஆய்வு நடத்தப்படும். பொதுவாக, அயனி மண்டல ஏற்ற இறக்கங்கள் செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளைப் பாதிக்கின்றன. சூரிய கிரகணம் இந்த மாற்றத்தை விரிவாக ஆய்வு செய்ய ஓர் அரிய வாய்ப்பை வழங்குகிறது. ஏனெனில், நமது தகவல் தொடர்பு அமைப்பை எந்தெந்த விஷயங்கள் பாதிக்கலாம் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தும். செயற்கை நுண்ணறிவு உதவியுடன் புகைப்படங்கள் சேகரிப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் எக்லிப்ஸ் மெகா மூவியில், நாசாவின் உதவியுடன் ஒரு சுவாரஸ்யமான பரிசோதனை செய்யப்படும். இந்த சோதனையின் படி, சூரிய கிரகணத்தைப் பார்க்கும் நபர்கள் அதை புகைப்படம் எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் எடுக்கும் புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஒருங்கிணைக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படும். இதன் மூலம், சூரிய வட்டத்திற்கு வெளியே வெவ்வேறு வாயுக்களால் ஆன வளிமண்டலத்தின் வெவ்வேறு படங்கள் கிரகணத்தின் போது பெறப்படும். சூரியனின் மேற்பரப்பில் உள்ள அதீத ஒளியின் காரணமாக, அதைச் சுற்றியுள்ள உறைகள் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதைப் பார்க்க சிறப்பு உபகரணங்கள் தேவை. இந்த கிரகணத்தின் போது சூரியனைச் சுற்றி ஒரு வளையம் தெரியும். சூரியனுக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரங்களும் தெரியும். அவற்றை ஆய்வு செய்யவும் நாசா திட்டமிட்டுள்ளது. சூரிய கிரகணத்தைப் படம் எடுக்கும் நாசா விமானம் பட மூலாதாரம்,GETTY IMAGES நாசாவின் அதிக உயரத்தில் பறக்கும் ஆய்வு விமானம் 50,000 அடி உயரத்தில் இருந்து கிரகணத்தைப் புகைப்படம் எடுக்கும். பல உபகரணங்களும் இந்த விமானங்களில் நிறுவப்பட்டுள்ளன. மேலும், கிரகணத்தின் போது வளிமண்டல மற்றும் தட்பவெப்ப மாற்றங்களை பதிவு செய்ய எக்லிப்ஸ் பலூன் (Eclipse Balloon) திட்டமும் செயல்படுத்தப்படும். சுமார் 600 பலூன்கள் வளிமண்டலத்தில் பறக்க விடப்படும். பூமியின் மேற்பரப்பில் இருந்து 35 கிலோமீட்டர்கள் வரை பறக்கும் திறன் கொண்ட இந்த பலூன்களில் உள்ள பல்வேறு கருவிகள் கிரகணத்தின் விளைவுகளை பதிவு செய்யும். இது தவிர, பார்க்கர் சோலார் ப்ரோப் (Parker Solar Probe), ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் நாசாவின் சோலார் ஆர்பிட்டர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையம் ஆகியவற்றில் உள்ள விண்வெளி வீரர்களும் இந்த கிரகணத்தின் தாக்கத்தை ஆய்வு செய்வார்கள். சூரிய கிரகணத்தைக் காண கனடாவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி அருகே பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு சூரிய கிரகணத்தின் போது செய்யப்பட்ட முக்கிய கண்டுபிடிப்புகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கடந்த காலங்களிலும், கிரகணத்தின் போது நடத்தப்பட்ட ஆய்வுகள் வரலாற்றில் சில முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்துள்ளன. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு மே 19, 1919 அன்று முழு சூரிய கிரகணத்தின் போதுதான் ஆர்தர் எடிங்டன் எடுத்த புகைப்படத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. 1866 இல் சூரிய கிரகணத்தைப் பதிவு செய்யும் போது ஹீலியம் கண்டுபிடிக்கப்பட்டது. சந்திர கிரகணத்தின் போது பூமியில் வளைந்த நிழலைப் பார்த்த பிறகுதான் அரிஸ்டாட்டில் பூமி தட்டையானது அல்ல, வட்டமானது என்பதை நிரூபித்தார். நாளைய சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவில் நிகழும் என்பதால், இந்தியாவில் அதனை பார்க்க முடியாது. https://www.bbc.com/tamil/articles/cjmx9lkj2ndo
  4. 2028ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் இல்லாத நாடாக இலங்கை மாறும் - பிரசன்ன ரணதுங்க 07 APR, 2024 | 07:01 PM 2028ஆம் ஆண்டளவில் இலங்கையை கண்ணிவெடி மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகள் இல்லாத நாடாக நாங்கள் மாற்றுவோம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் சுமார் 23 கிலோமீற்றர் கண்ணிவெடிகளே அகற்றப்பட உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். கண்ணிவெடிகள் இருந்த முழு நிலத்திலிருந்து 1,340.87 கிலோமீற்றர் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளதாகவும், அந்தப் பகுதியில் 2,492,081 கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். வட மாகாணத்தில் கண்ணிவெடிகளை அகற்றுவதன் மூலம் பொதுமக்களின் எதிர்கால பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற தேசிய கண்ணிவெடி அகற்றும் விழிப்புணர்வு நிகழ்வில் நேற்று (06) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். உலக கண்ணிவெடிகள் தினம் ஏப்ரல் 4ஆம் திகதி கடைப்பிடிக்கப்படுவதோடு, அந்த நிகழ்வில் "தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையம்" மூலம் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. கண்ணிவெடி அகற்றும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கிடையில் நட்புறவை வளர்க்கும் வகையில் கிரிக்கெட் போட்டியும் பெண்களுக்கான கயிறு இழுக்கும் போட்டியும் இடம்பெற்றது. கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு பயிற்சியளிக்கப்பட்ட நாய்களின் விஷேட செயல்விளக்கம் மற்றும் கண்ணிவெடி அகற்றும் உபகரணங்களை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களால் அவதானிக்கப்பட்டது. கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், இங்கு பணிபுரியும் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கும் விசேட வேலைத்திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார். 2002ஆம் ஆண்டு முதல் கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டம் நாட்டுக்குள் இயங்கி வந்ததுடன், 2010ஆம் ஆண்டு 'தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையம்' ஆரம்பிக்கப்பட்டது. கடந்த காலங்களில் பல்வேறு அமைச்சுக்களின் கீழ் இயங்கிய இந்த நிலையம் தற்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவின் கீழ் இயங்குகிறது. இது கண்ணிவெடி அகற்றும் முகவர் நிறுவனங்களை ஒருங்கிணைத்து வழிநடத்தி மற்றும் மேற்பார்வை செய்கிறது. இலங்கை இராணுவம் நாட்டில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு நேரடி பங்களிப்பை வழங்குகிறது மற்றும் அது இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் பிரிவின் ஊடாக செய்யப்படுகிறது. மேலும், HaloTrust மற்றும் Mag ஆகிய இரண்டு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் Dash மற்றும் SHAF ஆகிய இரண்டு உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. நாட்டில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான தரைத்தள அகற்றல் பிரிவுக்கு அரசாங்கம் நிதி உதவி வழங்குகிறது. மற்ற 4 அரசு சாரா நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் 17.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்த திட்டத்திற்கு ஆதரவை வழங்கும் சர்வதேச அமைப்புகளிடமிருந்து வழங்கப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க பல விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களும் நிம்மதியாக இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதே அரசாங்கத்தின் விருப்பம் எனவும், அதனை சீர்குலைக்க முயற்சிக்கும் வடக்கு அல்லது தெற்கில் உள்ள இனவாத மதவாத அமைப்புக்களோ அல்லது தனி நபர்களோ ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்த ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/180648
  5. காசாவின் 12 வயது மருத்துவ உதவியாளர் : மருத்துவமனையில் இடம்பெயர்ந்து தஞ்சமடைந்த சிறுவனின் மனிதாபிமான செயல் ! Published By: RAJEEBAN 05 APR, 2024 | 01:02 PM இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து மருத்துவமனையில் தஞ்சமடைந்த 12 வயது சிறுவன் அந்த மருத்துவமனையில் தற்போது மருத்துவ உதவியாளராக பணிபுரிகின்றான் என அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. 12 வயது ஜகாரியாஸ் சர்சாக் காசாவின் அல்அக்சா மருத்துவமனையில் மருத்துவ தொண்டராக பணியாற்றுகின்றான். காசாவில் காயமடைபவர்கள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக இந்த மருத்துவமனையின் மருத்துவர்களிற்கு உதவியாளர்கள் தேவைப்படுகின்றனர். நான் மருத்துவர்களிடமிருந்து அனைத்தையும் கற்றுக்கொண்டேன் மனப்பாடம் செய்துகொண்டேன் என சேர்செக் தெரிவிக்கின்றான். நான் கனுலாசை பொருத்துவேன் ஐஎவ திரவங்களை பொருத்துவேன் அகற்றுவேன் ஊசிகளையும் கையாள்வேன் என அந்த சிறுவன் தெரிவிக்கின்றான். மருத்துவ குழுக்களிடம் ஸ்கான் அறிக்கைகளை கொண்டு சென்று கொடுத்தல் தாதிமார்களிற்கு மருந்துகள் மருத்துவ உபகரணங்களை வழங்குதல் போன்றவற்றில் அவன் ஈடுபடுகின்றான். என அல்அக்ஷா மருத்துவமனையின் இயக்குநர் இயாட் அபு ஜஹெர் தெரிவிக்கின்றார். அல்அக்ஷா மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் தொடர்ச்சியாக 170 நாட்களிற்கு மேல் பணியாற்றிவருகின்றனர். காசாவின் உயிரிழப்புகள் காயங்கள் காரணமாக அவர்கள் அதிகளவு சுமையை சுமக்கவேண்டியுள்ளது என அவர் தெரிவிக்கின்றார். இந்த சிறுவன் இடம்பெயர்ந்த நிலையில் எங்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான் அவன் மருத்துவமனையில் மருத்துவர்கள் தாதிமார் தொடர்ச்சியாக 24 மணிநேரம் பணியாற்றுவதை பார்த்தான் என அல்அக்ஷா மருத்துவமனையின் இயக்குநர் தெரிவிக்கின்றார். வெளிப்படையாக தெரிவிப்பதென்றால் இந்த குழந்தை மிகவும் உயர்குணம் படைத்தது என அவர் தெரிவிக்கின்றார். ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல் காரணமாக 364 மருத்துவ பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசா பள்ளத்தாக்கின் மருத்துவமனைகளை இஸ்ரேல் தொடர்ந்தும் இலக்குவைத்து வருகின்றது. நான் வளர்ந்ததும் மருத்துவனாவேன் என்கின்றான் 12 வயது ஜகாரியாஸ் சர்சாக் யுத்தம முடிந்ததும் என நம்பிக்கை வெளியிடும் அவன் நாங்கள் சிறுவர்கள் குறித்து அச்சமடைந்துள்ளோம் அவர்கள் அச்சத்தினால் நடுங்குவதை பார்ப்பது மனக்கவலையை அளிக்கின்றது எனவும் குறிப்பிடுகின்றான். கடவுள் அருள்புரிந்தால் நாங்கள் விரைவில் வீடு திரும்பலாம் என அவன் தெரிவிக்கின்றான். நீங்கள் ஒரு நாயகன் என 12 வயது சிறுவனின் கரங்களை பிடித்து அல்அக்ஷா மருத்துவமனையின் இயக்குநர் தெரிவிப்பதை அல்ஜசீராவின் வீடியோவில் காணமுடிகின்றது. நீங்கள் ஆற்றுகின்ற தொண்டர் பணியை உலகின் சில நாடுகள் புரிவதில்லை என அந்த சிறுவனிடம் தெரிவிக்கும் அவர் அந்த சிறுவனை கட்டியணைத்து நெற்றியில் முத்தமிடுகின்றார். இதேவேளை இந்த சிறுவன் குறித்து ஏபிசி நியுஸ் விபரங்களை வெளியிட்டுள்ளது அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. நான் வழமையாக எனது சகோதரர்களுடன் விளையாடுவேன் அல்லது பள்ளிப்பாடங்களை படிப்பேன் என தெரிவிக்கும் 12வயது ஜகாரியா சர்சாக் எனக்கு தற்போது அதற்கான சந்தர்ப்பம் இல்லை என்கின்றான் அதற்கு பதில் அவன் காசா பள்ளத்தாக்கின் மருத்துவமனையின் ஒரு அவசரசேவை பிரிவிலிருந்து மற்றுமொரு அவசரசேவை பிரிவி;ற்கு ஒடிக்கொண்டிருக்கி;ன்றான். இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக காயமடைந்தவர்களை காப்பாற்றவும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கவும் அவன் அம்புலன்ஸ் பணியாளர்களுடன் இணைந்து தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளிற்கு விரைகின்றான். யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள காசாவின் நம்பமுடியாத இளம் மருத்து தொண்டரான ஜகாரியா சர்சாக் ஒக்டோர் ஏழாம் திகதிக்கு பின்னர் தான் நாளாந்தம் சந்திக்கும் அனுபவங்கள் தனது வயதுக்கு சற்று அதிகமானவை என தெரிவித்தான். ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிற்குள் நுழைந்து மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலிய இராணுவம் தொடர்ச்சியாக மேற்கொண்ட ஏவுகணை மற்றும் தரை தாக்குதல் காரணமாக ஜகாரியாவின் தாயகம் தலைகீழாக புரட்டிப்போட்டது. இஸ்ரேலின் இந்த தாக்குதல் தற்போது 32000 உயிர்களை பலியெடுத்துள்ளதுஇஎன ஹமாசின் மருத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.74000 பேர் இந்த தாக்குதல் காரணமாக காயமடைந்துள்ளனர். தனது உதவியை ஏனைய அம்புலன்ஸ் பணியாளர்கள் வரவேற்கின்றனர் என அவர் தெரிவிக்கின்றார். இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகளவானவர்கள் ஜகாரியாவின் வயதை உடையவர்கள் அல்லது குறைவான வயதினர். அதிகரிக்கும் மந்தபோசனை மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக 13000 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. காசா சிறுவர்களிற்கான பிரேதப்பெட்டி போல மாறிவிட்டது என யுனிசெவ் அதிகாரியொருவர் கடந்த வாரம் தெரிவித்தார். தியாகிகளின் உடல்களை நாங்கள் பொறுப்பேற்போம் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வோம் மீண்டும் காயமடைந்தவர்கள் உயிரிழந்தவர்களை கொண்டு செல்வதற்காக அந்த இடத்திற்கு செல்வோம் என்கின்றான் ஜகாரியா. ஒருநாள் ஜகாரியா டெய்ர் அல் பலாவில் உள்ள அக்அக்ஸா மருத்துவமனையின் அவசரசிகிச்சை பிரிவிற்குள் கையுறைகளை அணிந்தவாறு சென்றான் மருத்துவர்களிடம் உரையாடினான்இ அம்புலன்ஸில் தேவையான பொருட்களை வைத்திருப்பது குறித்து ஆராய்ந்தான் அதன் பின்னர் பான்டேஜ்கள் உட்பட தேவையான பொருட்களுடன் வந்த அவன் அவற்றை அம்புலன்சில் வைத்தான். தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்ததும் அவன் அம்புலன்சில் முன் ஆசனத்தில் அமர்ந்து தாக்குதல் இடம்பெற்ற இடத்திற்கு விரைந்தான். மீண்டும் மருத்துவமனைக்கு வந்துசேர்ந்தவேளை அவன் ஸ்டிரெச்சரில் இருந்து காயமடைந்தவரை அகற்ற உதவினான்.காயமடைந்தவரை உடனடியாக மருத்துவர்களிடம் கொண்டுசென்றான். நான் சிறிது அச்சமடைகின்றேன் காயமடைந்த எவரையாவது பார்க்கும்போது இதயம் கனக்கின்றது என அவன் தெரிவித்தான். ஏனையவர்களிற்கு உதவுவது யுத்தத்தினால் தனது குடும்பம் இடம்பெயர்ந்த வேதனையை சமாளிக்க உதவுகின்றது என அவன் தெரிவித்தான். தனது வீட்டிற்கு வெளியே டாங்கியொன்று காணப்பட்டதாகவும் இதனை தொடர்ந்து தனது குடும்பத்தினர் அங்கிருந்து தப்பியோடி அல்அக்சா மருத்துவமனையில்தஞ்சமடைந்ததாகவும் ஜகாரியா தெரிவித்தான். நான் மருத்துவர்களுடன் பழகத்தொடங்கினேன் என தான் மருத்துவ தொண்டராக மாறியது குறித்து அவன் தெரிவித்தான். https://www.virakesari.lk/article/180500
  6. தீவகத்தில் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் : நெடுந்தீவிலும் பூமி பூஜை! Published By: DIGITAL DESK 7 07 APR, 2024 | 01:56 PM தீவகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்திக்கான வேலைத்திட்டத்தின் மற்றுமோர் அம்சமாக இன்று (07) காலை நெடுந்தீவிலும் பூமி பூஜை நடத்தப்பட்டது. இலங்கை, இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கமைய, இந்திய தனியார் நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் இந்த பாரிய மின் உற்பத்தித் திட்ட செயற்பாடுகள் கடந்த வாரம் அனலை தீவில் இடம்பெற்றது. இந்நிலையில், சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கான காற்றாலை அமையவுள்ள நெடுந்தீவில் இந்திய நிறுவன மின் பொறியியலாளர் தினேஷ் பாண்டியன் முன்னிலையில் இந்த "பூமி பூஜை" நிகழ்வு இன்று இடம்பெற்றது. https://www.virakesari.lk/article/180630
  7. Published By: NANTHINI 07 APR, 2024 | 12:59 PM நாட்டில் எரிபொருள் பாவனை 50 சதவீதமளவு குறைந்துவிட்டதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் பாவனை குறைய நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நிலையே காரணம் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ கூறுகிறார். எவ்வாறாயினும், தற்போது அனைத்து வகையான எரிபொருட்களும் தட்டுப்பாடின்றி கிடைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார். https://www.virakesari.lk/article/180628
  8. Published By: DIGITAL DESK 7 07 APR, 2024 | 02:18 PM கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று (06) விசேட நிகழ்வும் கிரிக்கெட் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸும் கலந்துகொண்டார். இதன்போது உரையாற்றிய வட மாகாண ஆளுநர், கண்ணிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது 2030ஆம் ஆண்டுக்குப் பின்னரே இலங்கையை கண்ணிவெடி அற்ற நாடாக பிரகடனப்படுத்த முடியும் என்ற ஒரு நிலைப்பாடு எழுந்ததாகவும், எனினும் இந்த வருட இறுதிக்குள் பெரும்பாலான வகையில் கண்ணிவெடி அகற்றப்பட்டு மக்கள் தங்களுடைய குடியிருப்புகளுக்குள் செல்லக்கூடிய நிலை ஏற்படும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார். இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் சர்வதேச அமைப்புகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இதன்போது நன்றி தெரிவித்த ஆளுநர், மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளுக்கு கண்ணிவெடி அகற்றப்படாமை பாரிய சவாலாக காணப்படுவதாகவும் கூறினார். அத்தோடு, பூநகரி மற்றும் முகமாலை பகுதிகளில் அதிகளவு கண்ணிவெடி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். இந்த செயற்பாடுகளில் பணியாற்றிக்கொண்டிருப்போர், தங்களின் உயிர்களை பணயம் வைத்து ஆற்றிவரும் சேவைக்காகவும் ஆளுநர் நன்றி தெரிவித்ததோடு, மீள்குடியேற்ற செயற்பாடுகளை நிறைவு செய்ய கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்றும் குறிப்பிட்டார். இதேவேளை, நிலக்கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் பெண்களை ஈடுபடுத்திய நாடு என்ற பெருமையை இலங்கை கொண்டுள்ளது. அந்த வகையில், இலங்கையில் பெண்கள் முதன் முதலாக கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை வவுனியாவில் ஆரம்பித்தமையை நினைவுபடுத்திய ஆளுநர், கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு விசேடமாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் கூறினார். https://www.virakesari.lk/article/180611
  9. அண்ணை ஒரு போர்வையும் ஏசியும் போதும் தானே?!😜 எதுக்கு போ(பொ)ண்டாட்டி?!!!😂 சோழியபுரம் எனும் சுழிபுரம்.
  10. கச்சதீவு இந்தியாவின் உள்ளகப் பிரச்சினை - அலி சப்ரி Published By: DIGITAL DESK 7 07 APR, 2024 | 11:13 AM ஆர்.ராம் கச்சதீவு சம்பந்தமாக பல்வேறு விதமான கருத்துக்கள் வெளிப்பட்டு வருகின்ற நிலையில், அந்த விவகாரம் இந்தியாவின் உள்ளகப் பிரச்சினையாகும் என்று வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். அரை நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே நிறைவடைந்த கச்சதீவு விடயம் சம்பந்தமாக தற்போது எவ்விதமான உரையாடல்களும் இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கைக்குச் சொந்தமாக கச்சதீவு தற்போது கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இந்த கச்சதீவானது 1974இல் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியினால் இலங்கைக்கு வழங்கப்பட்டதாகும். இந்நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி கச்சதீவு மீட்புக் கோசத்தினை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளது. அத்துடன், காங்கிரஸ் கட்சியும் தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான திராவிட முன்னேற்ற கழகமும் தான் கச்சதீவினை இலங்கைக்கு தாரைவார்த்தது என்பதையும் வெளிப்படுத்தி வருகிறது. இவ்வாறான நிலையில் கருத்து வெளியிடுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி தமிழ்நாட்டில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இத்தகையதொரு சூழல் தான் கச்சதீவு விடயம் இந்திய அரசியல் கட்சிகளால் சீர்தூக்கப்பட்டுள்ளது. ஆகவே எம்மைப் பொறுத்தவரையில் இந்தியா இந்த விடயம் சம்பந்தமாக எம்முடன் உத்தியோகபூர்வமாக இன்னமும் உரையாடவில்லை. எனினும், அயல்நாடு என்ற வகையில் நாம் குறித்த விடயம் சம்பந்தமாக கரிசனைகளைக் கொண்டுள்ளோம். உண்மையில் கச்சதீவு 50 ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கைக்கு வழங்கப்பட்ட நிலமாகும். ஆகவே, கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதாகிவிட்டது. இவ்வாறான நிலையில், தற்போது அதனைப் மீளப்பெறுமாறு வலியுறுத்துவதானது யதார்த்ததுக்கு புறம்பானதாகும். அதுமட்டுமன்றி, தமிழகத்தில் காணப்படுகின்ற உள்ளக அரசியல் நிலைமைகளே இந்த விடயம் சம்பந்தமாக பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுவதற்கு காரணமாகின்றது. எனவே, பிறிதொரு நாட்டின் உள்ளக அரசியல் விடயங்கள் சம்பந்தமாக தலையீடு செய்ய முடியாது. அதுவொரு முடிந்துபோன விடயமாகும் என்றார். https://www.virakesari.lk/article/180619
  11. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 39 நிமிடங்களுக்கு முன்னர் ஒருவர், “எனக்கு உடல்நிலை சரியில்லை, காய்ச்சல், தொடர் இருமல், ஜலதோஷம்” என்றால் உடனே ஒரு மருத்துவரைப் பார்த்து ஊசி போட்டுக் கொண்டால் சரியாகிவிடும் என்று சொல்வோம். ஆனால் அதே நபர் “எனக்கு மனநிலை சரியில்லை” என்று கூறினால் அவரை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கும்? உடல்நிலை சார்ந்த பிரச்னைகள், அவை உயிர்க்கொல்லி நோயாக இருந்தாலும்கூட இயல்பாகக் கடந்து செல்லும் சமூகம், ஒருவருக்கு மனநிலை சார்ந்த பிரச்னைகள் இருக்கிறது என்று சொன்னால் அவரை பல அடிகள் தள்ளியே வைக்கிறது. இந்தியன் ஜர்னல் ஆஃப் சைக்கியாட்ரி என்னும் மருத்துவ இதழ் (Indian Journal of Psychiatry) மனநலப் பிரச்னைகள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என ஆய்வு நடத்தியது. அதில் பதிலளித்தவர்களில் 47% பேர் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வன்முறையாளர்களாக இருப்பார்கள் என நம்புகின்றனர், மேலும் 60% பேர் மனநோயைத் தனிப்பட்ட பலவீனத்தின் அறிகுறியாகக் கருதுகின்றனர். இது ஒருபக்கம் இருக்க, மன அழுத்தம் (stress) அல்லது மனச்சோர்வு (Depression) போன்ற வார்த்தைகள் இப்போது பொதுவான வார்த்தைகளாக மாறிவிட்டன. ஆனால் அவற்றைத் தீவிர மனநலப் பிரச்னைகளாக யாரும் கருதுவதில்லை. பள்ளி மாணவர்கள் முதல் ஓய்வு பெற்றவர்கள் வரை இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். ஒரு சுற்றுலா சென்றால் அல்லது ஒரு நல்ல திரைப்படம் பார்த்தால் அல்லது நல்ல பிரியாணி சாப்பிட்டால் அல்லது உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்ந்தால் மன அழுத்தம் சரியாகிவிடும் எனப் பலரும் மருத்துவர்களாக மாறி கருத்து கூறுகின்றனர். இதில் எந்தளவு உண்மையுள்ளது? உண்மையில் மன அழுத்தம், மனச்சோர்வு என்றால் என்ன? எப்போது ஒருவர் மனநல மருத்துவரை அணுக வேண்டும்? மன அழுத்தம் (Stress) Vs மனச்சோர்வு (Depression) பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் இளைஞர்களிடையே மனநலப் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் மென்டல் ஹெல்த் சிஸ்டம்ஸ் (International Journal of Mental Health Systems) ஆய்வின்படி, 13-17 வயதுடைய இந்திய இளம் பருவத்தினரில் 7.3% பேர் குறிப்பிடத்தக்க மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். “இதற்கு முக்கியக் காரணம் மன அழுத்தம்தான். இந்த மன அழுத்தம்தான் நாளடைவில் மனச்சோர்வாக மாறுகிறது. மன அழுத்தம் என்பது தற்காலிகமானது, சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு உருவாகக் கூடியது. உதாரணமாக தேர்வில் குறைவான மதிப்பெண் பெறுவது, அலுவலகத்தில் குறித்த நேரத்திற்குள் வேலையை முடிக்கத் திணறுவது, பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொள்வது போன்ற சூழ்நிலைகளில் ஏற்படுவது மன அழுத்தம். ஆனால் மனச்சோர்வு நீண்ட நாட்களுக்கு இருக்கக் கூடியது,” என்கிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி. “தூக்கமின்மை, எப்போதும் ஒரு சோக உணர்வு, எதிலும் ஆர்வமின்மை, குற்ற உணர்வு, முடிவெடுப்பதில் சிரமம், தனது எண்ணங்களை வெளிப்படுத்த முடியாமல் அவதிப்படுவது ஆகியவை மனச்சோர்வின் அறிகுறிகள். இவை ஒருவருக்கு நீண்ட நாட்களுக்கு இருந்தால் அவர் கண்டிப்பாக ஒரு மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். சில பரிசோதனைகள் மூலம் ஒருவர் மனச்சோர்வின் எந்தக் கட்டத்தில் இருக்கிறார் என்பதை அறிந்து, அவருக்குத் தேவையான மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார்,” என்கிறார் ராஜலக்ஷ்மி. ‘மது, புகை, சுற்றுலா, மனச்சோர்வுக்கு தீர்வல்ல’ பட மூலாதாரம்,GETTY IMAGES அதிகமானோர் மனஅழுத்தத்தையும் மனச்சோர்வையும் ஒன்று என நினைக்கிறார்கள், ஆனால் நாள்பட்ட மனச்சோர்வு என்பது ஒரு தீவிரமான பிரச்னை என்றும், அத்தகைய மனச்சோர்வு உடையவர்களுக்கு கண்டிப்பாக மருத்துவ உதவி தேவை என்றும் கூறுகிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி. “ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு மனநலப் பிரச்னைகள் குறித்து இருந்த விழிப்புணர்வைவிட இப்போது மக்களுக்கு ஓரளவு விழிப்புணர்வும் புரிதலும் இருக்கிறது. ஏனென்றால் மனச்சோர்வு என்ற வார்த்தையை இப்போது பலரும் பயன்படுத்துகிறார்கள். அதுகுறித்து சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பேசவும் செய்கிறார்கள். ஆனால் ஒரு மனநல மருத்துவரிடம் செல்ல பலரும் தயங்குகிறார்கள். ஏதோ பெரிய பிரச்னை வந்தால் மட்டும்தான் மருத்துவரிடம் செல்வது பலரின் வழக்கம், அதுவும் மனநலம் சார்ந்த பிரச்னை என்றால் சொல்லவே வேண்டாம். அன்றாட வாழ்வில் மன அழுத்தம் அல்லது தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம். இதற்கு ஒரு பிரியாணி சாப்பிட்டால், புகைப் பிடித்தால் அல்லது மது அருந்தினால் சரியாகிவிடும் என சிலர் நினைக்கிறார்கள். சிலர் தனியாக அல்லது நண்பர்களுடன் சுற்றுலா செல்கிறார்கள். அதெல்லாம் தற்காலிக தீர்வுகள். சில நேரங்களில் கைகொடுக்கலாம். ஆனால் அதே மன அழுத்தம் நாளடைவில் மனச்சோர்வாக மாறும்போது, இந்த தற்காலிக தீர்வுகள் பிரச்னையை மேலும் அதிகரிக்கும். அப்போதும் மருத்துவ உதவியை நாடாமல் இருப்பது மிகவும் ஆபத்து. எனவே எப்படி உடல்நலப் பிரச்னைகள் வந்தால் மருத்துவரிடம் செல்கிறோமோ, அது போல நாள்பட்ட மனச்சோர்வின் அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக ஒரு மனநல மருத்துவரை அணுக வேண்டும்,” என்கிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி. ‘மனச்சோர்வு, தற்கொலை எண்ணங்களுக்கு வழிவகுக்கும்’ படக்குறிப்பு, உளவியலாளர் ராஜலக்ஷ்மி. “மன அழுத்தத்தை மிகச் சாதரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் தொடர் மன அழுத்தத்தால் பல உடல்நலப் பிரச்னைகள் உருவாகும். செரிமானக் கோளாறுகள் முதல் இதய நோய், பக்கவாதம் எனப் பல்வேறு நோய்களுக்கும் மன அழுத்தத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது” என்கிறார் கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் பேராசிரியர், மருத்துவர் பூர்ணா சந்திரிகா. தொடர்ந்து பேசிய அவர், “மனச்சோர்வை எடுத்துக்கொண்டால், அது நேரடியாக உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தாது. ஆனால் மனச்சோர்வு பிரச்னை உடையவர்கள் எப்போதும் ஒரு சோக உணர்வுடன் இருப்பார்கள். அவர்களுக்கு எதிலும் ஆர்வமிருக்காது, உணவைக்கூட பெரிதாக விரும்பி உண்ண மாட்டார்கள், எல்லா உணர்வுகளையும் தங்களுக்குள் பூட்டி வைத்துக் கொள்வார்கள். இது குற்ற உணர்விற்கு வழிவகுக்கும். ஒரு சிறிய தவறு நடந்தால்கூட இதற்குக் காரணம் நான்தான் எனப் பழி போட்டுக்கொள்வார்கள். இறுதியில் தற்கொலை எண்ணங்கள் உருவாகத் தொடங்கும். தற்கொலை செய்துகொள்பவர்கள் ஒருநாளில் அந்த முடிவை எடுப்பதில்லை. பல நாட்கள் அவர்கள் மனச்சோர்வால் அவதிப்பட்டிருப்பார்கள். ஆனால் அதை யாரிடமும் சொல்லாமல் அல்லது சொல்ல யாரும் இல்லாமல், அந்த முடிவை எடுத்திருப்பார்கள். எனவே மன அழுத்தம், மனச்சோர்வு இரண்டையும் புரிந்துகொண்டு அதற்கான உதவியை நாட வேண்டும்,” என்கிறார் மருத்துவர் பூர்ணா சந்திரிகா. மனநல மருத்துவரை அணுகுவதில் உள்ள தயக்கம். படக்குறிப்பு, கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் பேராசிரியர், மருத்துவர் பூர்ணா சந்திரிகா. “இப்போது பிரபலங்கள்கூட தங்களது மனநலப் பிரச்னைகள் குறித்து வெளிப்படையாகப் பேசுகிறார்கள். பணம் இருந்தால் மன அழுத்தம் அல்லது மனச்சோர்வு வராது என்பது பொய், யாருக்கு வேண்டுமானாலும் அது வரலாம். எனவே சமூகம் என்ன சொல்லும் எனத் தயங்காமல் மனநல சிகிச்சைகளை எடுத்துக்கொள்வது சாதாரண ஒரு விஷயமாக பார்க்கப்பட வேண்டும்,” என்கிறார் மருத்துவர் பூர்ணா சந்திரிகா. மத நம்பிக்கைகளும் இதில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறுகிறார் அவர். “ஒருவருக்கு மனநலப் பிரச்னை என்றால் அவரை ஏதேனும் கோவிலுக்கோ அல்லது தர்காவுக்கோ அழைத்துச் செல்வது இன்னும் பல இடங்களில் நடக்கத்தான் செய்கிறது. கல்வி மற்றும் தொடர் விழிப்புணர்வு மூலமாகத்தான் இதை மாற்ற முடியும்.” யோகா, தியானம் உதவுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்குப் பலரும் யோகா மற்றும் தியான முறையைப் பரிந்துரைக்கிறார்கள். இதுகுறித்து உளவியலாளர் ராஜலக்ஷ்மியிடம் கேட்டபோது, “யோகா மற்றும் தியானம் என்பது உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் மனச்சோர்விற்கு அது தீர்வா எனக் கேட்டால் கண்டிப்பாக இல்லை," என்கிறார். "முன்பு சொன்னது போல, இதுவும் ஒரு தற்காலிக தீர்வாகத்தான் இருக்கும். இதுபோல மருத்துவ உதவியை நாடாமல், தற்காலிக தீர்வுகளையே நாடிக்கொண்டிருந்தால் அது மனச்சோர்வை தீவிரமாக்கும்." நாள்பட்ட மனச்சோர்வு இருப்பவர்கள், மனநல மருத்துவரை அணுகவில்லை என்றால் தங்கள் இயல்பான குணத்தை நிரந்தரமாக இழந்து விடும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கிறார். "ஒரு கட்டத்திற்கு மேல் தற்கொலை எண்ணங்கள் எழுவதை அவர்களால் தவிர்க்க முடியாமல் போகும். இத்தகைய தற்காலிக தீர்வுகள் உதவாது எனப் புரிந்துகொண்டு அவர்கள் தவறான முடிவு எடுக்க தள்ளப்படுவார்கள்,” என எச்சரிக்கிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி. மனநல சிகிச்சைக்கு அதிகம் செலவாகுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES மனநல சிகிச்சை என்றால் அதற்கு அதிகம் செலவாகும் அல்லது மேல்தட்டு மக்களுக்கான ஒன்று என்ற பிம்பம் உள்ளது. ஆனால், மாவட்ட மனநலத் திட்டம் என்ற பெயரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல சிகிச்சைக்கும், ஆலோசனைக்கும் தமிழக அரசு பல வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. அடுத்ததாக இத்தகைய வசதிகளை தாலுகா வாரியாகக் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார் மருத்துவர் பூரண சந்திரிகா. அரசு மருத்துவமனைகளில் மனநல மருத்துவத்திற்கு எனத் தனிப்பிரிவு செயல்படுகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த வசதி உள்ளது, மக்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். “என்னைச் சுற்றி எதுவும் சரியில்லை, உலகமே என்னை மட்டும் ஏமாற்றுகிறது, எனக்கு எதிர்காலம் கிடையாது, இதெல்லாம் மனச் சோர்வு இருப்பவர்களுக்கு அடிக்கடி தோன்றும் எண்ணங்கள். இவ்வாறு இருப்பவர்கள் பல நல்ல வாய்ப்புகளை, மனிதர்களை வாழ்வில் இழந்து விடுவார்கள். நாம் நினைப்பதைவிடப் பல மோசமான விளைவுகள் மனநலப் பிரச்னைகளால் ஏற்படுகின்றன. எனவே உங்களுக்கோ அல்லது உங்கள் நெருங்கியவர்களுக்கோ அத்தகைய பிரச்னைகள் இருந்தால் தயங்காமல் மருத்துவரை நாடுங்கள். அந்தப் பிரச்னைகளில் இருந்து வெளியே வந்த பிறகு வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதைக் கண்டிப்பாக உணர்வீர்கள்,” என்கிறார் மருத்துவர் பூர்ணா சந்திரிகா. https://www.bbc.com/tamil/articles/c4njn530j54o
  12. மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிராகரிக்க முடியாது - பொன்னாவெளி சம்பவம் தொடர்பில் சமத்துவக் கட்சி கண்டனம் Published By: DIGITAL DESK 7 07 APR, 2024 | 11:22 AM தாங்கள் காலம் காலமாக வாழ்ந்த பூர்வீக நிலங்கள் பாதிக்கப்பட்டு தங்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டு மக்களுக்கும் பிரதேசத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் முதலீட்டு முயற்சிகளை தங்களது பிரதேசத்துக்குள் அனுமதிக்காதீர்கள் என்ற பொன்னாவெளி மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஒருபோதும் நிராகரிக்க முடியாது. அவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை சமத்துவக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். பொன்னாவெளியில் நேற்று (05) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : பொன்னாவெளி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சுன்னக்கல் அகழ்வு காரணமாக அப்பிரதேசத்தில் ஐந்துக்கு மேற்பட்ட கிராமங்கள் முற்றுமுழுதாக பாதிக்கப்படும். 100 மீற்றருக்கு மேல் ஆழத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சுன்னக்கல் அகழ்வு காரணமாக அந்த பிரதேசம் முழுவதும் உவராக மாறிவிடும். இதனால் காலம் காலமாக பூர்வீகமாக வாழ்ந்து வந்த மக்கள் தங்களின் சொந்த நிலத்தை விட்டு வெளியேறவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை உருவாகும். எனவே தங்களது பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சுன்னக்கல் அகழ்வு நடவடிக்கையினை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என அம்மக்கள் தெரிவிப்பதில் எவ்வித தவறும் இல்லை. அந்த மக்கள் இன்றைக்கு 270 நாட்களை கடந்து அமைதி வழியில் தங்களது நிலத்தை பாதுகாக்க போராடி வருகின்றார்கள். எனவே அவர்களின் நியாயமான போராட்டத்தை மதித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, வன்முறைகளை தூண்டிவிடும் வகையில் வெளி பிரதேசங்களிலிருந்து மக்களை அழைத்துச் சென்று இனத்துக்குள்ளே மோதவிட்டு அதில் தங்களின் சுயலாபங்களை நிறைவேற்றிக்கொள்ளும் மிக மோசமான நடவடிக்கைகளை மக்களோடு நின்று சமத்துவக் கட்சியும் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், பொன்னாவெளி மக்களோடு நாம் தொடர்ந்தும் நிற்போம். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை குரல் கொடுப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/180614
  13. இன்றைய வானிலை 07 APR, 2024 | 06:35 AM வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ,மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், சூரியனின் வடக்கு நோக்கியநகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.12 மணியளவில் கடவத்த, பதுளை, லுனுகல, கொங்கஸ்பிட்டிய, வக்மிட்டியாவ மற்றும் கொத்மலே போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரேலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய,சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாரை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். நீர்கொழும்பு தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 15 ‐ 25 கிலோமீற்றர் வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார். https://www.virakesari.lk/article/180608
  14. கரைவலையும் லைலா வலை போல கடல் வளத்தை அழிக்கக் கூடியதா? வலையைப் பார்க்கையில் குஞ்சு மீனும் தப்பாது போல இருக்கே?!
  15. RCB vs RR: சதம் அடித்தும் விமர்சிக்கப்படும் விராட் கோலி - ராஜஸ்தான் ஹீரோவாக உருவெடுத்த பட்லர் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐபிஎல் தொடரில் அதிகமான சதங்கள், டி20 போட்டிகளில் 3வது அதிகபட்ச சதங்கள் என சாதனைகள் படைத்தும், அணியின் ஸ்கோர் உயர்வுக்காக தனி ஒருவனாகப் போராடி சதம் அடித்தும் விராட் கோலி சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருவது வியப்பாகவும், பரிதாபமாகவும் இருக்கிறது. GOAT பேட்டர் வரிசையில் விராட் கோலி உண்டு என்பதை அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஏற்றுக்கொண்டாலும், அவரின் சமீபத்திய பேட்டிங்கில் ரன் குவிக்கும் வேகம் அதிகரித்த போதிலும் அவர் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறார். விராட் கோலி 20 ஓவர்களையும் தனக்கானதாக மாற்றி களமாடி, ரன்களை குவித்தாலும் அது அவரின் சுயநலமாகவே ரசிகர்களில் ஒரு தரப்பினரால் பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணி தோற்றதுகூட சமூக ஊடகங்களில் பெரிதாக விமர்சிக்கப்படவில்லை, கிங் கோலி அடித்த சதமும், அவர் எடுத்துக்கொண்ட பந்துகளும் கடுமையாக விமர்சிக்கப்பட்டும், கிண்டல் செய்யப்பட்டும் வருகிறது. “ஆங்கர் ரோல்” அவதாரம் எடுக்கும் கோலியின் பேட்டிங் நிச்சயமாக டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடத்தைப் பெற்றுத் தராது என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டித் தொடரின் 20வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்தது. 184 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வீணடித்த ராஜஸ்தான் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து 4வது வெற்றியைப் பெற்று புள்ளி அட்டவணையில் 8 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. ஆனால் நிகர ரன்ரேட் 1.120 ஆக மட்டுமே வைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணி 6 புள்ளிகள் பெற்றிருந்தாலும், நிகர ரன்ரேட் 2.518 ஆக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி விரைவாக சேஸிங் செய்திருந்தால், நிகர ரன்ரேட் உயர்ந்திருக்கும். ஆனால், 15 ஓவர்களுக்கு பின் ராஜஸ்தான் ரன் குவிப்பு வேகம் குறைந்து கடைசி ஓவர் வரை இழுத்து வந்துவிட்டனர். ஆர்சிபி அணி 5 போட்டிகளில் 4 தோல்வி, ஒரு வெற்றி என 2 புள்ளிகளுடன் 8வது இடத்தில் நீடிக்கிறது. அதன் நிகர ரன்ரேட் மைனஸ் 843 ஆகச் சரிந்துவிட்டது. ஃபார்முக்கு வந்த பட்லர் கடந்த ஐபிஎல் சீசனில் இருந்து இங்கிலாந்து பேட்டர் ஜாஸ் பட்லர் சரியாக எந்தப் போட்டியிலும் ஆடவில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து இருந்து வந்தது. இதற்குப் பதில் அளிக்கும் வகையில் அற்புதமான சதத்தை பட்லர்(100) அடித்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமானார். தொடக்க வீரராகக் களமிறங்கிய பட்லர் 20 ஓவர்கள் வரை களமாடி 58 பந்துகளில் இந்த சத்ததை நிறைவு செய்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். அது மட்டுமல்லாமல் பட்லருக்கு நேற்றைய ஐபிஎல் ஆட்டம் 100வது போட்டி. தனது 100வது போட்டியில் சதம் அடித்து மறக்க முடியாத நினைவுகளை வைத்துள்ளார். இரண்டாவது விக்கெட்டுக்கு கேப்டன் சஞ்சு சாம்ஸனுடன் இணைந்து பட்லர் 148 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தார். இதுதான் இந்த சீசனில் அதிகபட்ச பாட்னர்ஷிப் ஸ்கோராக அமைந்தது. இருவரின் ஆட்டம்தான் ஆர்சிபியின் வெற்றிக் கனவை சுக்குநூறாக உடைத்தது. கேப்டனுக்குரிய பொறுப்புடன் ஆடிய சாம்ஸன்(69) அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். பந்துவீச்சுக்கு 9 மார்க் பட மூலாதாரம்,SPORTZPICS ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்ஸன் கூறுகையில் “190 ரன்களுக்கு குறைவாக வரும் என நினைத்தேன், கடைசி நேரத்தில் பனிப்பொழிவு இருந்தது. எங்களின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. சில போட்டிகளுக்குப் பின் பட்லர் ஃபார்முக்கு வந்தது மகிழ்ச்சி. எங்களின் பந்துவீச்சும் அபாரமாக இருந்தது. எங்களுக்குக் கிடைத்த சிறிய இடைவெளியால்தான் நாங்கள் புத்துணர்ச்சியுடன் வர முடிந்தது. பேட்டிங்கிற்கு 8.7 மார்க், பந்துவீச்சுக்கு 9 மதிப்பெண் கொடுப்பேன்,” எனத் தெரிவித்தார். விராட் கோலிக்கு ஏன் இந்த நிலை? ராஜஸ்தான் அணியைப் போன்றே ஆர்சிபி அணியிலும் விராட் கோலி(113) சதம் அடித்தார், கேப்டன் டூப்ளெஸ்ஸியுடன் சேர்ந்து 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளம் அமைத்தார். பட மூலாதாரம்,SPORTZPICS கோலி இவ்வளவு சிறப்பாக ஆடியும், பிரயத்தனம் செய்தும் அவரின் சதமும் புகழப்படவில்லை, பார்ட்னர்ஷிப்பும் மதிக்கப்படவில்லை. மாறாக ரசிகர்களில் ஒரு தரப்பினரின் கிண்டலுக்கும், விமர்சனத்துக்கும் ஆர்சிபியும், கோலியும் ஆளாகியுள்ளனர். விராட் கோலி தனது ஐபிஎல் வாழ்க்கையில் அடித்த 8வது சதம். தொடர்ந்து 7 ஐபிஎல் இன்னிங்ஸில் கோலி அடித்த 3வது சதம். இருப்பினும் கோலியின் ரசிகர்கள் தவிர மற்றவர்களால் நகைப்புக்கு உள்ளாகிறார். கோலியால்தான் ஆர்சிபி தோற்றது, கோலிக்கு பதிலாக வேறு பேட்டர் கடைசி நேரத்தில் களமிறங்கி இருந்தால், கூடுதலாக 20 ரன்கள் கிடைத்திருக்கும் என ரசிகர்கள் சமூக ஊடகங்களில் விமர்சிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ஜெய்ப்பூர் ஆடுகளம் மெதுவான விக்கெட்டை கொண்டது. இங்கு 183 ரன்கள் ஸ்கோர் என்பது டிபெண்டபிள் ஸ்கோர்தான். இந்த அளவு பெரிய ஸ்கோரை அடித்தும் ஆர்சிபியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்றால் எங்கோ பெரிய தவறு இருக்கிறது என்று ரசிகர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் விமர்சிக்கிறார்கள். பதிலடி கொடுத்த பட்லர் பட மூலாதாரம்,SPORTZPICS பட்லர் கடந்த 3 போட்டிகளாக அடித்த ஸ்கோர், 11,11,13. அதிலும் கடந்த சீசனில் ஒரு அரைசதம் மட்டுமே, பெரிதாக எந்த ஸ்கோரும் செய்யவில்லை. இதனால் பட்லரின் அதிரடி பேட்டிங்கும், அவரின் தொடக்க வரிசை பேட்டிங்கும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. ஆனால் அனைத்துக்கும் நேற்றைய ஆட்டத்தில் அவரின் பேட்டால் பதில் அளித்துள்ளார். ஆனால், கடந்த சீசனில் கலக்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்னும் ஃபார்முக்கு வர முடியாமல் தவிக்கிறார். கடந்த 4 போட்டிகளிலும் ஜெய்ஸ்வால் பெரிதாக இதுவரை எந்த ஸ்கோரும் செய்யவில்லை, இந்த ஆட்டத்தில் டாப்லி பந்துவீச்சில் டக்-அவுட்டில் வெளியேறினார். இரண்டாவது விக்கெட்டுக்கு சாம்ஸனுடன் பட்லர் ஜோடி சேர்ந்தபின் மெல்ல தனது ரிதத்துக்கு திரும்பினார். யாஷ் தயால் ஓவரையும், மயங்க் தாகர் ஓவரையும் குறிவைத்து பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசி பட்லர் தனது ஃபார்மை மெல்ல மீட்டார். குறிப்பாக அனுபவமில்லாத சுழற்பந்துவீச்சாளர்களான மயங்க் டாகர், ஹிமான்சு ஷர்மா ஓவர்களை பட்லர் வெளுத்து வாங்கிவிட்டார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய பட்லர் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். பட்லருக்கு துணையாக பேட் செய்த கேப்டன் சாம்ஸனும் தனது பங்கிற்கு அவ்வப்போது பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி, 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரும் சேர்ந்து ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர், இருவரையும் பிரிக்க பல பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் டுப்ளெஸ்ஸியால் முடியவில்லை. சிராஜ் 15-வது ஓவரை வீச அழைக்கப்பட்டார். சிராஜ் தான் வீசிய 4வது பந்தை பவுன்ஸராக வீச அதை சாம்சன் தூக்கி அடித்து பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அங்கு நின்றிருந்த யாஷ் தயால் கேட்ச் பிடிக்கவே சாம்சன் 42 பந்துளில் 69 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கடந்த சில போட்டிகளாக ராஜஸ்தான் ஹீரோவாக வலம் வரும் ரியான் பராக் ஒரு பவுண்டரி அடித்த நிலையில் யாஷ் தயால் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். துருவ் ஜூரெல் 2 ரன்னில் டிகேவிடம் கேட்ச் கொடுத்து டாப்லி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு ஹெட்மயர் களமிறங்கி, பட்லருடன் சேர்ந்தார். இருவரும் வெற்றி நோக்கி அணியை நகர்த்தினர். 24 பந்துகளில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. டாப்லி வீசிய 17வது ஓவரில் பவுண்டரியுடன் 10 ரன்களை ஹெட்மயர் விளாசினார். கேமரூன் கிரீன் வீசிய 18வது ஓவரில் பவுண்டரி இல்லாமல் ராஜஸ்தான் 5 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சிராஜ் வீசிய 19வது ஓவரிலும் ஹெட்மயர் பவுண்டரி அடித்து 8 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டது. 94 ரன்களுடன் களத்தில் இருந்த பட்லர் சதத்துக்காகக் காத்திருந்தார். கிரீன் வீசிய முதல் பந்தில் டீப் ஸ்குயர் லெக் திசையில் சிக்ஸர் விளாசி சதத்தை நிறைவு செய்து அணியையும் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஹெட்மயர் 11 ரன்களுடனும், பட்லர் 100 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அஸ்வின், சஹல் மிரட்டல் பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் போல்ட், பர்கர் இருவரும் பவர்ப்ளேவில் வழக்கமாக விக்கெட்டை வீழ்த்திவிடுவார்கள். ஆனால் நேற்று கோலி, டுப்ளெஸ்ஸியை வீழ்த்த முடியவில்லை. பவர்ப்ளேவில் விக்கெட் இழப்பின்றி ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால், நடுப்பகுதியில் யஜூவேந்திர சஹல், அஸ்வின் இருவரையும் கேப்டன் சாம்சன் மாறி, மாறி பயன்படுத்தி, ஆர்சிபி பேட்டர்கள் டுப்ளெஸ்ஸி, கோலியை சித்ரவதை செய்தார். இதில் சஹல் பந்துவீச்சில் மட்டும் கோலி 2 சிக்ஸர்களை விளாசினார். ஆனால், அஸ்வின் பந்துவீச்சில் ஒரு பவுண்டரிகூட அடிக்க முடியில்லை. இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 62 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில் 13 டாட் பந்துகள் அடங்கும். இருவரும் 7.75 எக்கானமி வைத்தனர். தரமற்ற பந்துவீச்சு ஆனால், ஆர்சிபி அணியில் மயங்க் டாகர், ஹிமான்சு சர்மா இருவரும் சேர்ந்து 4 ஓவர்கள் வீசி 63 ரன்களை வாரி வழங்கினர். இருவரும் பல பந்துகளை லைன் லென்த்தில் இருந்து தவறி வீசி பட்லரிடமும், சாம்சனிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டனர். இதில் ஆர்சிபி அணியிடம் இருந்த ஷான்பாஸ் அகமதுவை சன்ரைசர்ஸிடம் வழங்கிவிட்டு அங்கிருந்து மயங்க் டாகரை ஆர்சிபி வாங்கி கையைச் சுட்டுக்கொண்டது. இதிலிருந்து ஆர்சிபி அணியிடம் தரமான வேகப்பந்துவீச்சாளர்களும் இல்லை, சுழற்பந்துவீச்சாளர்களும் இல்லை என்பது தெரிய வருகிறது. அனுபமில்லாத இதுபோன்ற பந்துவீச்சாளர்களை வைத்துக் கொண்டு பட்லர், சாம்சன் போன்ற பெரிய பேட்டர்களுக்கு பந்துவீசினால் கையில் இருக்கும் வெற்றி வாய்ப்பையும் இழக்க வேண்டியதிருக்கும். கோலியை ‘காலி’ செய்த அஸ்வின் பட மூலாதாரம்,SPORTZPICS கோலியின் சதம் எந்த அளவு சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்படுகிறதோ அதே அளவு அஸ்வினை வைத்து கோலியை கிண்டல் செய்கிறார்கள். ஏனென்றால், நேற்றைய ஆட்டத்தில் கோலிக்கு தண்ணி காட்டும் விதத்தில் அஸ்வின் பந்துவீச்சு அமைந்திருந்தது. அஸ்வின் பந்துவீச்சில் பவுண்டரி, சிக்ஸர் அடிக்க கோலி பல பிரயத்தனங்கள் செய்தும், பலவிதமான ஷாட்களுக்கு முயன்றும் கடைசி வரை நடக்கவில்லை. அஸ்வின் வீசிய 15 பந்துகளை கோலி எதிர்கொண்டு பேட் செய்து அதில் 14 ரன்கள் சேர்த்தார். அதில், ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட கோலியால் அடிக்க முடியவில்லை என்பதே நிதர்சனம். கோலிக்கும், அஸ்வினுக்கும் இடையிலான போரில் இறுதியில் அஸ்வின் வென்றார். அஸ்வின் பந்துவீச்சில் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 93.33 என்று குறைந்திருந்தது. ஆனால், ஆவேஷ் கான் பந்துவீச்சை வெளுத்த கோலி 17 பந்துகளில் 39 ரன்கள் குவித்து 8 பவுண்டரிகள் அடித்தார். அஸ்வின் தனது கடைசி ஓவரில் ஒரு சிக்ஸரை அடிக்கவிட்டுவிட்டார். அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால், அஸ்வின் ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட வழங்காமல் தனது ஸ்பெல்லை சிறப்பாக முடித்திருப்பார். ஒட்டுமொத்ததில் கோலிக்கு சிம்மசொப்னமாக அஸ்வின் பந்துவீச்சு இருந்தது. கோலி ஏன் விமர்சிக்கப்படுகிறார்? பட மூலாதாரம்,SPORTZPICS ஜெய்ப்பூரில் இதற்கு முன் கோலி ஆட வந்தபோது அவர் இந்த மைதானத்தில் சராசரி 21.90 ரன்கள்தான். இதனால் இந்த மைதானத்தில் இந்த முறையும் கோலி சொதப்புவார் என்று ரசிகர்கள் எண்ணினர். ஆனால், யாரும் எதிர்பாரா வகையில் 20 ஓவர்கள் களமாடி 8வது சதத்தை கோலி நிறைவு செய்தார். தொடக்க ஆட்டக்கார் டுப்ளெஸ்ஸியுடன் 125 ரன்கள் கோலி பார்ட்னர்ஷிப் அமைத்தாலும், அதில் பெரும்பங்கு கோலி சேர்த்ததுதான். ஆர்சிபி அணி நேற்று சேர்த்த 183 ரன்களில் கோலியின் பங்கு 61.70 சதவீதம். இவ்வளவு சிறப்பாக கோலி பேட் செய்தும் ஏன் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறார் என்பதுதான் கேள்வி. ஏனென்றால் கோலி ஆங்கர் ரோல் எடுக்கிறேன் என்று கூறிக்கொண்டு பந்துகளை வீணாக்குகிறார் என்ற குற்றச்சாட்டு ரசிகர்களாலும், கிரிக்கெட் விமர்சிகர்களாலும் வைக்கப்படுகிறது. அதாவது சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் வாய்ப்புள்ள பந்துகளைக்கூட கோலி பெரிய ஷாட்களாக மாற்றத் தயங்குகிறார். இருபது ஓவர்களையும் தானே ஆக்கிரமிக்க வேண்டும், சுயநலத்துடன் ஆடி சதம் அடிக்க வேண்டும், தன்னை யாரும் பேட்டிங்கில் குறை கூறிவிடக்கூடாது என்ற கோணத்தில்தான் கோலி பேட் செய்கிறார் என்று விமர்சிக்கப்படுகிறது. பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஆட்டத்தில் கோலி 67 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார். இது ஐபிஎல் வரலாற்றில் மெதுவாக அடிக்கப்பட்ட சதம். கடந்த 2009ஆம் ஆண்டில் மணிஷ் பாண்டே 67 பந்துகளில் சதம் அடித்ததுதான் மெதுவான சதமாக இருந்து வந்தது, அதோடு கோலியும் இணைந்துவிட்டார். கோலி ஒட்டுமொத்தமாக 72 பந்துகளில் 113 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 4 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள், ஸ்ட்ரைக் ரேட்டும் 156.94 ஆக இருந்தது. ஆனால், ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக பந்துகளை சந்தித்ததில் 3வது பேட்டர் கோலிதான். கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் மெக்கல்லம் 73 பந்துகளைச் சந்தித்து 158 ரன்களை விளாசினார். ஆனால் கோலி 72 பந்துகளில் 113 ரன்கள்தான் சேர்த்தார். 2009இல் மணிஷ் பாண்டேவும் 73 பந்துகளில் 113 ரன்கள் சேர்த்திருந்தார். விராட் கோலியின் சிக்ஸர், பவுண்டரிகளை மட்டும் கொண்டாடும் அவரின் ரசிகர்கள் அவர் பவுண்டரி அடிக்கும் முன், எத்தனை பந்துகளைச் சந்தித்தார் என்பதைக் கணக்கிடுவதில்லை. பட மூலாதாரம்,SPORTZPICS களத்தில் கோலி செட்டில் ஆவதற்கு எத்தனை பந்துகளை வீணாக்குகிறார் என்பதையும் பார்ப்பதில்லை. இந்த ஆட்டத்தில்கூட கோலி முதல் 25 பந்துகளைச் சந்தித்து 32 ரன்கள் சேர்த்தார், அதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 128 ஆக இருந்தது. கோலி சந்தித்த அடுத்த 25 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரி உள்பட 39 ரன்கள் சேர்த்து, 156 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். கடைசி 22 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரி என 42 ரன்கள் சேர்த்து 191 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடினார். மெதுவான ஆடுகளம், பந்து பேட்டரை நோக்கி மெதுவாக வருகிறது என்று பேட்டியில் கூறிய கோலியால், தொடக்கத்தில் ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்த முடியவில்லை. கடைசி 22 பந்துகளில் மட்டும் ஸ்ட்ரைக் ரேட்டை எவ்வாறு உயர்த்த முடிந்தது, 42 ரன்கள் எவ்வாறு சேர்க்க முடிந்தது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். கோலியின் ஆங்கர் ரோல் ஆர்சிபி அணிக்கு பெரிய வலியாகவே முடிந்துள்ளது என்பதுதான் சமீபத்திய நிதர்சனமாக இருந்து வருகிறது. இதுபோன்று மெதுவாக பேட் செய்யும் பேட்டரை, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் எவ்வாறு இடம் பெறச் செய்வது என்று ரசிகர்கள் தரப்பில் கேட்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கோலி, அஸ்வின், ஆர்சிபி பெயர் எக்ஸ் தளத்தில் டிரண்டாகியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cy0z0zvng9jo
  16. நமக்கும் அதிஸ்டம் அடிக்குதோ பார்ப்போம்! 😂
  17. கொழுப்பைத் தான் குறைக்கமாட்டுது, ஆனால் வேறு நன்மைகள் உண்டாமே! பூண்டு ஆரோக்கியத்திற்குப் பயனுள்ளதா? "பூண்டில் பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் கந்தகம் அதிகம் உள்ளது. மிதமான அளவில் மெக்னீசியம், மாங்கனீசு, இரும்புச் சத்து உள்ளது. இதுவொரு அற்புதமான உணவு மூலப்பொருள்," என்கிறார், குழந்தைகளுக்கான உணவியல் நிபுணரும் பிரிட்டிஷ் உணவுக் கழகத்தின் செய்தித் தொடர்பாளருமான பாஹி வான் டி போயர். பச்சைப் பூண்டில் அல்லிசின் அதிகம் உள்ளது. இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட கந்தக கலவை. பட மூலாதாரம்,GETTY IMAGES இது நிச்சயமாக ஆரோக்கியத்திற்கு நல்லது. இது ஊட்டச்சத்துகளை வழங்குவது மட்டுமல்லாமல், ப்ரீபயாடிக் நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாகவும் உள்ளது. உங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை வளர்ப்பது முக்கியம். "குடலில் உள்ள இந்த நல்ல பாக்டீரியாக்களுக்கு செரிமான அமைப்பை ஆரோக்கியமாகவும் சரியாகவும் வைத்திருக்க நார்ச்சத்து தேவை." புற்றுநோய்க்கு எதிராக பூண்டு பயனுள்ளதா? நார்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மரிட் ஓட்டர்லி மற்றும் அவரது சகாக்கள், தங்கள் புற்றுநோய் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக பூண்டு குறித்து ஆராய்ச்சி செய்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES அவர் கூறுகையில், "இந்த ஆய்வில், பசுமையான, புதிய பூண்டின் கூறுகள் செல்லுலார் அழுத்த வழிமுறைகளைத் தூண்டுவதில் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்தோம். புரத உற்பத்தி அல்லது புரதத்தைப் புதுப்பிப்பதில் சிக்கல் உள்ள செல்களை கொல்வது முக்கியம் என்று நாங்கள் நினைக்கிறோம்," என்கிறார். மரிட் ஓட்டர்லியின் குழு, பசுமையான பூண்டு மற்றும் எத்தனாலை பயன்படுத்தி பூண்டு சாற்றை உருவாக்கியது. சில வகையான புற்றுநோய்களில் இது பயனுள்ளதாக இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். "பூண்டு பெருங்குடல், மலக்குடல், மார்பகம் மற்றும் புரோஸ்டேட் போன்ற புற்றுநோய் பாதிப்புகளில் நன்மை பயக்கும் என்பதை நிரூபித்துள்ள பல அறிவியல் ஆய்வுகள் உள்ளன. நாங்கள் எலிகளில் பூண்டு சாற்றைச் சோதித்தோம். இந்தச் சாறு புற்றுநோய் எதிர்ப்பு விளைவைக் காட்டியது." இருப்பினும், இந்த முடிவுகளுக்கும் சில நிபந்தனைகள் பொருந்தும். பூண்டு கலவையைப் போலவே, இது திரவ வடிவில் இருக்க வேண்டும். இந்த பூண்டு சாறு உறைந்தாலோ அல்லது காய்ந்தாலோ, அது விளைவை ஏற்படுத்தாது. பட மூலாதாரம்,GETTY IMAGES இரண்டாவதாக, இந்த ஆய்வு விலங்குகள் மீது நடத்தப்பட்டது, மனிதர்கள் மீது அல்ல. ஆனால் இதே போன்ற முடிவுகளை மனிதர்களிடமும் பெற முடியும் என்று ஓட்டர்லி உறுதியாக நம்புகிறார். பச்சைப் பூண்டு, பூண்டு சாறு அல்லது அல்லிசின் பயன்படுத்தி, மனிதர்கள் மீது 83 சோதனைகள் நடைபெற்றுள்ளன. அதில், பூண்டு சாப்பிடுவதால் புற்றுநோய் உட்படப் பல பிரச்னைகளில் நன்மை பயக்கும் விளைவுகளைக் காட்டியது. "வாரத்திற்கு இரண்டு பல் பச்சைப் பூண்டுக்கு மேல் சாப்பிடுபவர்கள் மீதும் பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய உணவுகள் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது." சளி குணமாகுமா? சில நிபுணர்கள் இதுகுறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஆனால், சில ஆய்வுகள் பூண்டு சளியைக் குணப்படுத்துவதாகக் கூறுகின்றன. வெஸ்டர்ன் சிட்னி பல்கலைகழகப் பேராசிரியர் மார்க் கோஹன் இதை ஆய்வு செய்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த முடிவை நிரூபிப்பதற்கு அல்லது நிராகரிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், பூண்டு பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் நம்புகிறார். குளிர்கால நோய்த் தொற்றுகளைத் தடுக்க பூண்டு பயன்படுத்துவதை ஆதரிக்கும் சான்றுகள் உள்ளன. பூண்டில் ஆன்டிபயாடிக், ஆன்டிவைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பூண்டின் ஆன்டிவைரல் பண்புகள் பற்றிய ஆய்வுகள், பூண்டில் பல வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளதாகவும், செல்களுக்குள் வைரஸ்கள் நுழைவதைத் தடுக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. வாரத்திற்கு ஒரு முறையாவது பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வான் டி போயர் பரிந்துரைக்கிறார்.
  18. இங்கு வேலை செய்யாமலே வியர்வை ஆறாக ஓடுகிறது! நாக்கு வறள்கிறது. மனமும் உடலும் குளிர்மையை விரும்புகிறது.
  19. இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் தமிழர்களின் நிலங்களை மிக வேகமாக ஆக்கிரமிக்கின்றன - அருட்தந்தை மா.சத்திவேல் 06 APR, 2024 | 10:24 PM இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் தமிழர்களின் நிலங்களை மிக வேகமாக ஆக்கிரமிக்கின்றன என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவர் நேற்று (05) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : மட்டக்களப்பு மயிலத்தமடு தமிழ் பண்ணையாளர்களின் மேய்ச்சல் நில மீட்புக்கான போராட்டம் 200 நாட்களை கடந்தும் தொடர்கின்றது. அரசிடமிருந்து எத்தகைய உதவிகளையும் எதிர்பாராது தமது பொருளாதாரத்தை கட்டி எழுப்பிட சுய தொழிலில் ஈடுபடும் பண்ணையாளர்களின் பொருளாதாரத்துக்கு ஆதாரமான நிலத்தை ஆக்கிரமிக்கவும், கால்நடைகளை கொல்வதற்கு குண்டர்களுக்கு இடம் அளித்தும் தமிழ் பண்ணையாளர்களின் வாழ்வை அழித்து வீதியில் தள்ளி இருப்பது இன அழிப்பும் இனப்படுகொலையும் தொடர்கின்றது என்பதன் வெளிப்பாடு எனலாம். தமிழ் கால்நடை பண்ணையாளர்களின் பொருளாதாரத்தை அழிக்கும் இனவாத குண்டர்களை அரச பயங்கரவாதம் பார்த்துக்கொண்டிருப்பதோடு பாதுகாப்பும் கொடுப்பதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். 1977 மற்றும் 1983ஆம் ஆண்டுகளிலும் அரச பயங்கரவாதம் இதையே செய்தது. இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் தமிழர்கள் நிலங்களை மிக வேகமாக ஆக்கிரமிக்கின்றன. யுத்த காலத்தில் கிழக்கில் தமிழர்களின் விவசாய நிலங்கள் எல்லாம் பறிபோன நிலையில் தற்போது சுயமாக தொழில் செய்யும் பண்ணையாளர்களின் பொருளாதாரத்தை சீரழித்து நிலத்தை ஆக்கிரமிக்க குண்டர்களை ஏவிவிட்டுள்ள பேரினவாதம் மகாவலி அதிகார சபையின் கீழ் வெறும் நிலங்களை சூறையாடவும் திட்டமிட்டு இருப்பது இஸ்ரேல் வழிமுறையிலான இன அழிப்பாகும். பாதிக்கப்பட்டுள்ள பண்ணையாளர்களின் நியாயத்தன்மையை ஏற்று நீதிமன்றங்கள் வழங்கியுள்ள தீர்ப்பினையும் அரச அதிகாரிகள் நடைமுறைப்படுத்த பின் நிற்பது மனித உரிமை மீறலோடு நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலுமாகும். அது மட்டுமல்ல, தங்களுடைய பிரச்சினையை கதைப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் போதுமான காலத்தை அளிக்காது தீர்வு காண வழிகளையும் திறக்காதிருப்பது பண்ணையாளர்களை அழிக்கும் செயலுக்கு அப்பால் தமிழர்களுக்கு எதிரான பேரினவாத அரசியல் சாதியாகும். ஆயிரம் பொங்கல் வைத்து தமிழர்களின் திருநாளாம் பொங்கல் விழாவினை எடுத்தவர் பண்ணையாளர்களுக்கு எதிராக நிற்பது பேரினவாதத்தின் கைக்கூலியாக செயல்படுவதன் அடையாளம் எனலாம். இத்தகைய பின்புலத்தில் தமிழ் பண்ணையாளர்களின் மேய்ச்சல் நில மீட்புக்கான போராட்டம் என்பது அவர்கள் சார்ந்த விடயமாக இருந்தாலும் அது தமிழர்களின் பாரம்பரியம் தமிழர் அடையாளம் மற்றும் அரசியல் சார்ந்த விடயமாகும். இதற்கு கிழக்கின் தமிழ் பண்ணையாளர்களால் மட்டும் முகங்கொடுக்க முடியாது. அது வடகிழக்கு சார்ந்த மக்கள் அரசியல் போராட்டமாக உருமாறல் வேண்டும். ஒரு சில அரசியல்வாதிகளின் ஆதரவைத் தவிர பொதுவாக தாம் கைவிடப்பட்டுள்ளோம் என்ற மன நிலையிலேயே 200 நாட்களை கடந்தும் பண்ணையாளர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர். இதனை பயன்படுத்தி தமிழர்களின் தாயக அரசியலை ஏற்காத தெற்கின் போராட்டக் குழு ஒன்றும் தமது அரசியலுக்காக இவர்களை பயன்படுத்த முனைகிறது. எமது போராட்டங்கள் குடும்ப விழாக்களைப் போன்றும், ஊர் திருவிழாக்களை போன்றும், மாவட்ட, மாகாண மட்ட விழாக்கள் போன்றும் காலத்துக்கு காலம் நடத்துவது தோல்விக்கே வழிவகுக்கும். இதனையே ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர். தமிழர்களின் தாயக அரசியலுக்கு எதிரான சக்திகளும் விரும்புகின்றன. இதற்கு இடமளிக்காமல், புதிய வடிவிலான மக்கள் போராட்டங்கள் முன்னெடுப்பது காலத்தின் கட்டாயமாகும். வடகிழக்கு தமிழர்களின் சுதந்திரம், கௌரவம் என்பன தாயகம் காக்கும் அரசியல் செயற்பாடு என்பதை நாம் அறிவோம். அதற்காகவே ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. இத்தகைய போராட்டங்களை ஒழுங்கமைக்க போராட்ட மையம் தோற்றுவிக்கப்படல் வேண்டும். இது குளிர் அறையில் இருந்து கதைக்கும் விடயமல்ல. போராட்டம் மையம் என்பது சகல பிரதேசங்களையும் உள்ளடக்கிய தலைமைத்துவ குழுவின் தன்மையைக் கொண்டது. பொதுவானதும் உறுதிமிக்கதுமான அரசியல் வேலைத்திட்டத்தின் கீழ் போராட்ட வடிவங்களை உருவாக்கி அதனை முன்னெடுக்க வேண்டும். ஏனெனில், தமிழர்கள் போராடுவது அரசிடமிருந்து இலவசங்களையோ சலுகைகளையோ பெற்றுக்கொள்வதற்கு அல்ல என்பது நாம் அறிந்ததே. இது வலுவிழக்கக் கூடாது. https://www.virakesari.lk/article/180567
  20. இலங்கையில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை 57 இலட்சமாக அதிகரிப்பு 06 APR, 2024 | 12:30 PM இலங்கையில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை 57 இலட்சத்து 77 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழக பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார். உலக வங்கியினால் வெளிப்பட்டுள்ள புதிய ஆய்வறிக்கையைச் சுட்டிக்காட்டும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, வருமானமின்மை, தொழிலின்மை மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு போன்றவை இதற்குக் காரணம் என அவர் தெரிவித்தார். இவ்வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் மாத்திரம் இலங்கையில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சமாக அதிகரித்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு இதன் எண்ணிக்கை மூன்று இலட்சமாகக் குறையலாம் என உலக வங்கி கணித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/180576
  21. உக்ரைன் யுத்தம் - ஒரேதாக்குதலில் ரஸ்யாவின் ஆறு போர் விமானங்களை அழித்ததாக உக்ரைன் தகவல் Published By: RAJEEBAN 06 APR, 2024 | 09:21 AM ரஸ்யாவின் தென்பகுதி விமானதளம் மீது உக்ரைன் மேற்கொண்ட பாரிய ஆளில்லா விமானதாக்குதலில் ரஸ்யாவின் ஆறு போர் விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 8 விமானங்கள் சேதமடைந்துள்ளன 20க்கும் மேற்பட்ட ரஸ்ய படையினர் காயமடைந்திருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் போர்முனையில் பயன்படுத்தப்படும் எஸ்யு27- 34 விமானங்களின் மொரெஜொவ்ஸ்க் தளத்தின் மீதே இஸ்ரேல் ஆளில்லா விமானதாக்குதலை மேற்கொண்டுள்ளது. ரஸ்யா இதுவரை இந்த தாக்குதல் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை எனினும் உக்ரைனின் 40 ஆளில்லா விமானங்கள் இலக்குவைக்கப்பட்டன என தெரிவித்துள்ளது. உக்ரைன் 40க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை பயன்படுத்தியதால் ரஸ்யாவின் வான்வெளி பாதுகாப்பு பொறிமுறை செயற்பட முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/180557
  22. பாட்டி குளிப்பாட்டிய குழந்தை பருவ படத்தை பதிவேற்றியதால் ஜிமெயில் கணக்கை முடக்கிய கூகுள் - என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY/NEEL SHUKLA கட்டுரை தகவல் எழுதியவர், பார்கவ பரிக் பதவி, பிபிசி குஜராத்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "என்னுடைய பாட்டி சிறுவயதில் என்னைக் குளிப்பாட்டிய போது எடுத்த படத்தைப் பதிவேற்றுவதால் கூகுளுக்கு என்ன பிரச்னை? அந்தக் குழந்தைப் பருவப் புகைப்படத்தால் கூகுள் எனது கணக்கைத் முடக்கியுள்ளது." என்கிறார் அகமதாபாத்தில் வசிக்கும் நீல் சுக்லா என்ற 26 வயது இளைஞர். தனது குழந்தைப் பருவத்தின் புகைப்படம் தொடர்பான கூகுள் போன்ற ஒரு மாபெரும் நிறுவனத்தை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் நீல். தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப (ICT) பொறியாளராக பணியாற்றுகிறார் நீல் சுக்லா. தனது குழந்தைப் பருவப் புகைப்படத்தை (அவரது பாட்டி அவரைக் குளிப்பாட்டும் புகைப்படம்) டிஜிட்டல் வடிவத்தில் கூகுள் கணக்கில் பதிவேற்றிய பிறகு, அவரது கணக்கை கூகுள் நிறுவனம் முடக்கியது. குஜராத் உயர் நீதிமன்றத்தில் நீல் தாக்கல் செய்த விண்ணப்பத்தின்படி, படம் ஆபாசமாக உள்ளதா இல்லையா என்பது கூகுள் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு திட்டம் மூலம் சரிபார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கூகுளில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மேல்முறையீட்டு மனுக்களின் முடிவும் செயற்கை நுண்ணறிவு திட்டத்தால் தீர்மானிக்கப்பட்டது என்று நீல் தனது விண்ணப்பத்தில் கூறியுள்ளார். இது மட்டுமின்றி, கூகுள் கொள்கையின்படி, தொழில்முறை சார்ந்த, தனிப்பட்ட மற்றும் கல்வி தொடர்பான ஆவணங்கள், கூகுள் பே (யுபிஐ) போன்ற நிதி பரிவர்த்தனை வசதி போன்றவற்றின் தரவுகள் அடங்கிய மின்னஞ்சல்களின் தரவை நீக்குமாறும் ஒரு செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம், குஜராத் அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, குஜராத் காவல்துறையின் சைபர் கிரைம் துறை என பல இடங்களுக்கு எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தும் இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காததால், குஜராத் உயர் நீதிமன்றத்தில் நீல் சுக்லே வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவகாரத்தில், மாண்புமிகு உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், குறிப்பிட்ட கேள்விகளுக்கு நிறுவனத்தால் பதிலளிக்க முடியாது என்று பிபிசியிடம் கூகுள் தெரிவித்தது. ஆனால் கூகுள் நிறுவனம் CSAM (Child Sexual Abuse Material- குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகப் பொருள், சிஎஸ்ஏஎம்) உள்ளடக்கம் தொடர்பான தனது கொள்கை மற்றும் திட்டத்தை மேற்கோள் காட்டியதுடன், குழந்தைகள் தொடர்பான சிஎஸ்ஏஎம் அல்லது பாலியல் உள்ளடக்கம் உடனடியாக அகற்றப்பட்டு கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த வழக்கு சர்ச்சையானது ஏன்? இந்தியாவில் மில்லியன்கணக்கான மக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் தங்கள் கணக்குகள் மூலம் பல்வேறு கூகுள் சேவைகளைப் பயன்படுத்துவதால், விஷயம் நாம் நினைப்பதை விட மிகவும் தீவிரமானது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கான புரிதலும் வசதியும் எல்லா மக்களுக்கும் இல்லை. கூகுள் பெரும்பாலும் இந்தச் சேவைகளை இலவசமாக வழங்குகிறது, ஆனால் சில சேவைகளுக்கு மக்களும் நிறுவனங்களும் கூகுளுக்கு பணம் செலுத்துகின்றன. இது குறித்து நீலின் தந்தை சமீர் சுக்லா கூறும்போது, ”இது வாடிக்கையாளருக்கும் நிறுவனத்துக்கும் இடையிலான மோதல் மட்டுமல்ல. மில்லியன்கணக்கான மக்களின் தனியுரிமை மீறப்பட்டதற்கு எதிராக சட்டத்தின் பாதுகாப்பைக் உறுதி செய்வதற்கான வழக்கு இது” என்றார். நீல் மற்றும் அவரது குடும்பத்தினரின் கூற்றுப்படி, “கூகுள் மற்றும் அதன் பணியாளர்கள் உங்களின் தனிப்பட்ட தரவை உங்கள் அனுமதியின்றி அணுகலாம். அந்த தரவுகளை தனக்கு ஏற்றவாறு பயன்படுத்தவும் நிறுவனத்தால் முடியும். இதுமட்டுமின்றி வழக்கை முன்வைக்க உங்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்காமல் உங்கள் கணக்கை முடக்குவதால், உங்களுக்கு நிதி இழப்பு, மன உளைச்சல் மற்றும் உங்கள் சமூக பிம்பத்திற்கு எதிராக கேள்விகளை இந்தப் பிரச்னை எழுப்பலாம்' என்கிறார்கள். நீல் சுக்லாவும் இதேபோன்ற கேள்விகளுடன், கூகுள் தனது கணக்கை நீக்குவதை நிறுத்துமாறு உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். ஆகஸ்ட் 2023 முதல் தனது கணக்கை நீக்குவதைத் தடுக்க நீல் சுக்லா கூகுளுக்கு அனுப்பிய சட்டப்பூர்வ அறிவிப்புக்கு கூகுள் நிறுவனம் இதுவரை பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று குஜராத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில் கூட கூகுள் நிறுவனத்தின் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை. நீல் சுக்லாவின் கணக்கு ஏப்ரல் 5ஆம் தேதி நிரந்தரமாக நீக்கப்படும் என்று கூகுளால் கூறப்பட்டது. ஆனால் அவரது தரவைப் பதிவிறக்க அவரது முடக்கப்பட்ட கணக்கிற்கான அணுகல் அவருக்கு வழங்கப்படவில்லை. எனினும், இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை நீல் சுக்லாவின் கணக்கை நீக்க கூகுள் நிறுவனத்துக்கு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி வைபவி நானாவதி தடை விதித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES ‘கூகுளின் எதேச்சதிகாரம்’ பிபிசியிடம் பேசிய நீல் சுக்லா, "என்னுடைய பாட்டி என்னைக் குளிப்பாட்டுவதைப் பற்றி கூகுள் ஏன் கவலைப்பட வேண்டும்? எனது குழந்தைப் பருவத்தின் புகைப்படத்தால் கூகுள் எனது கணக்கைத் முடக்கியுள்ளது. கூகுளுடன் இணைக்கப்பட்ட எனது அனைத்து சமூக ஊடகக் கணக்குகளும் அதனால் தடுக்கப்பட்டுள்ளன. எனது வணிகச் செயல்பாடுகள், எனது சேமிப்பு மற்றும் முதலீட்டுத் தரவு அனைத்தும் அந்தக் கணக்கில் இருந்தன. கூகுளின் இந்த எதேச்சதிகாரத்துக்கு என்னைப் போல் மற்றவர்கள் பலியாகிவிடக் கூடாது என்பதற்காக குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்” என்றார். தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப (ICT) பொறியியல் படிப்பை முடித்துள்ள நீல், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்படும் விரைவான மாற்றங்களைத் தெரிந்துகொள்ள ஆன்லைன் படிப்புகளைத் தொடர்ந்தார். “2013ஆம் ஆண்டு முதல் இந்த கூகுள் கணக்கை வைத்திருந்தேன். படிப்பு முடிந்ததும் ஒரு தொழிலைத் தொடங்கி, அந்த கணக்கு மூலம் தொழிலை வளர்க்க மார்க்கெட்டிங் மற்றும் ப்ரோமோஷன் செய்தேன். எனக்கும் புதிய வாய்ப்புகள் கிடைத்து வந்தது” என்கிறார் நீல். தொடர்ந்து அவர் கூறுகையில், "மென்பொருள் துறையின் புதிய மேம்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள இந்த கணக்கு மூலம் செயற்கை நுண்ணறிவு குறித்த பல்வேறு ஆன்லைன் படிப்புகளை முடித்துள்ளேன். எனது அனைத்து திட்டங்களையும் சமூக ஊடகங்களில் தான் பதிவிட்டு வைத்துள்ளேன். ஆன்லைன் படிப்புகளின் சான்றிதழ்களும் மின்னஞ்சலில் தான் உள்ளன." "எனது பங்குச் சந்தை முதலீடுகள், எனது வங்கிக் கணக்கு விவரங்கள், எனது வாடிக்கையாளர்களுடனான வணிக மின்னஞ்சல் தொடர்புகள் அனைத்தும் அந்தக் கணக்கில் தான் இருந்தன. இது முடக்கப்பட்டுள்ளதால், எனது வாடிக்கையாளர்கள் எனக்கு அனுப்பும் மின்னஞ்சல்களை என்னால் பார்க்க முடியவில்லை." என்கிறார். கூகுள் நிர்ணயித்த கட்டணத்தில் தனது தரவை ஆன்லைனில் சேமித்து வைப்பதற்காக 2 TB (2 டெராபைட்) சேமிப்பக இடத்தையும் கூகுளிடமிருந்து வாங்கினார் நீல். "எங்கள் குடும்பத்தின் புகைப்படங்கள் அதிகமாக இருந்தன. அவற்றை டிஜிட்டல்மயமாக்கி ஆன்லைன் டிரைவில் சேமிக்க முடிவு செய்தேன், ஏனென்றால் ஹார்ட் டிஸ்க்குகள் கூட வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகின்றன. எங்களிடம் உள்ள நூற்றுக்கணக்கான படங்களில் ஒன்று தான், சிறுவயதில் என் பாட்டி என்னைக் குளிப்பாட்டும் புகைப்படம்" என்கிறார் நீல். நீல் தனது கூகுள் கணக்கில் படத்தைப் பதிவேற்றிய சிறிது நேரத்திலேயே, அவருக்கு மே 11, 2023 அன்று கூகுளில் இருந்து ஒரு அறிவிப்பு வந்தது. கணக்கு முடக்கப்பட்டதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. கூகுளின் கூற்றுப்படி, நீல் அவர்களின் சேவை விதிமுறைகளை மீறியுள்ளார். நீலின் குற்றச்சாட்டுகள் என்ன? கூகுள் செயற்கை நுண்ணறிவு திட்டத்தால் தனது தனிப்பட்ட உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீல் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “நீல் சுக்லாவின் உரிமைகளை ஐந்து விஷயங்களில் கூகுள் நிறுவனம் மீறியுள்ளது. அவரது தரப்பு வாதத்தைக் கேட்காமல் அவரது கணக்கு முடக்கப்பட்டது அவர்களின் உரிமைகளை மீறும் இந்த முடிவு முற்றிலும் தொழில்நுட்பத்தால் எடுக்கப்பட்டதே தவிர மனிதர்களால் அல்ல. கூகுளின் சேவை விதிமுறைகள் சிஎஸ்ஏஎம் திட்டத்தை ஆதரிக்கின்றன (ஆபாச உள்ளடக்கத்தைக் கண்டறிய கூகுள் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு திட்டத்தின் பெயர்) இது பொருத்தமற்றது மற்றும் இடையூறு விளைவிக்கக்கூடியது. சிஎஸ்ஏஎம் முடிவுகள் உலகெங்கிலும் உள்ள பயனர்களைப் பாதிக்கிறது, ஆனால் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து பெற்ற தவறான நடத்தை மற்றும் பாரபட்சமான அணுகுமுறைகள் தொடர்பான தரவுகள் மூலம் சிஎஸ்ஏஎம் திட்டத்திற்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. நீலின் குழந்தைப் பருவத்தின் கடந்தகால புகைப்படங்கள் உட்பட, குழந்தையின் உடலை குழந்தைகளின் உரிமை மீறலாகக் காட்டும் அனைத்துப் பொருட்களையும் கருத்தில் கொள்ள சிஎஸ்ஏஎம் திட்டத்திற்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. 1999-2000 காலகட்டத்தில் எடுக்கப்பட்ட படங்கள் என்று விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ளது. கண்காணிப்பு இல்லாத தொழில்நுட்பம் மக்களின் வாழ்க்கையை மாற்றும் முடிவுகளை எடுக்கும் என்று அந்த நேரத்தில் யாரும் கற்பனை செய்திருக்க முடியாது. "கூகுள் விதிமுறைகளின் கீழ் அந்த படங்களை எனது சேமிப்பகத்திலிருந்து அகற்ற வேண்டும், ஆனால் அவற்றை அகற்ற கூட எனக்கு எந்த வழியும் இல்லை" என்று நீல் கூறினார். சிஎஸ்ஏஎம் திட்டத்தைப் பற்றி கூகுள் கூறுவது என்ன? இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் குறிப்பிட்ட கேள்விகளுக்கு எங்களால் பதிலளிக்க முடியாது என்று கூகுள் நிறுவனம் பிபிசியிடம் மின்னஞ்சலில் தெரிவித்தது. ஆனால் சிஎஸ்ஏஎம் உள்ளடக்கம் தொடர்பான எங்கள் கொள்கைகள் மற்றும் திட்டங்களைத் தெரிவிக்கலாம் என்று கூறியது. கூகுள் பிபிசியிடம், "சட்டவிரோதமான குழந்தை பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் எங்களின் எந்தவொரு தளத்திலும் விநியோகிக்கப்படுவதை நாங்கள் தடுக்கிறோம். சுரண்டலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" "சிஎஸ்ஏஎம் அல்லது குழந்தைகளை உள்ளடக்கிய பாலியல் உள்ளடக்கத்தை நாங்கள் கண்டறிந்தால், உடனடியாக அதை அகற்றிவிட்டு கணக்கை நிறுத்தவும் கூடும்" என்று கூகுள் கூறியுள்ளது. “எங்கள் தளத்தில்பதிவேற்றப்பட்ட அல்லது பகிரப்பட்ட உள்ளடக்கத்தில் உள்ள சிஎஸ்ஏஎம் உள்ளடக்கத்தின் அளவு மிகக் குறைவாக இருந்தாலும், இந்த விஷயத்தில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம்” “எங்களின் சிஎஸ்ஏஎம் உள்ளடக்க வரையறையைப் பூர்த்தி செய்யும் எந்தவொரு பதிவேற்றப்பட்ட உள்ளடக்கத்தையும் விரைவாகக் கண்டறிந்து அகற்றும் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். சிஎஸ்ஏஎம் உள்ளடக்கத்தை அடையாளம் காண, செயற்கை நுண்ணறிவு மற்றும் ஹாஷ்-பொருந்தும் தொழில்நுட்பத்தின் கலவையைப் பயன்படுத்துகிறோம்” "எங்கள் தொழில்நுட்பம் உலகம் முழுவதிலும் இருந்து பதிவேற்றப்படும் இந்த வகையான வெறுக்கத்தக்க உள்ளடக்கத்தின் அளவையும் வேகத்தையும் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று கூகுள் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GUJARATHIGHCOURT.NIC.IN உயர் நீதிமன்ற வழக்கு அவசியமா? நீலின் தந்தை சமீர் சுக்லா ஒரு கட்டடக் கலைஞர் மற்றும் சட்டமும் படித்தவர். அவர் பிபிசியிடம் கூறியதாவது, "இந்திய கலாசாரம் மற்றும் இந்தியர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு கூகுள் பெரிய நிறுவனமாக மாறிவிட்டதா? இந்திய கலாசாரத்தில், பாட்டி குழந்தையை குளிப்பாட்டுவது ஆபாசம் அல்ல. இங்கு செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தானாகவே முடிவுகள் எடுக்கப்படுகின்றன" என்றார். “இது போன்ற விஷயங்களில் நடவடிக்கை எடுக்க தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் சிவில் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பது மற்றொரு பெரிய பிரச்னை. இந்த நடவடிக்கை 2000ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய விதியின்படி சைபர் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்கிறார் சமீர் சுக்லா. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதிகளின்படி, இதுபோன்ற வழக்குகளில் குற்றவியல் புகார்கள் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவால் விசாரிக்கப்பட வேண்டும் மற்றும் சர்ச்சைகள் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளரால் ஒரு நீதிபதியின் பொறுப்பில் இருந்து விசாரிக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக நீல் சுக்லா, குஜராத் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலர் மோனா கந்தரிடம் முறையிட்டார். இந்த விவகாரம் குறித்து மோனா கந்தர் பிபிசியிடம், “தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ், இதுபோன்ற புகார்கள் எங்களுக்கு வருகின்றன” என்றார். இருப்பினும், விவரங்களை சரிபார்க்காமல் ஒரு தனிப்பட்ட வழக்கில் கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டம் கூறுவது என்ன? குஜராத் அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தச் செயலை நன்கு அறிந்த அதிகாரி ஒருவர், பெயர் குறிப்பிட விரும்பாமல், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 9வது அத்தியாயத்தில் பிரிவுகள் (43) மற்றும் 43(A) இருந்ததாகக் கூறினார். இந்தச் சட்டப்பிரிவு 43(A)ன் கீழ், இந்த விவகாரத்தில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பதில் கேட்கலாம். ஆனால் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம், 2023 (DPDP Act, 2023)க்குப் பிறகு, மத்திய அரசு ஐடி சட்டத்தில் இருந்து பிரிவு 43(A) ஐ நீக்கியுள்ளது. எனவே இந்த சம்பவத்தில் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதில் தெளிவு இல்லை. இருப்பினும், சைபர் சட்ட நிபுணரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான பவன் துக்கல் கருத்துப்படி, ஐடி சட்டத்தின் பிரிவு 43(A) இந்த வழக்கில் பயன்படுத்தப்படலாம். அவர் கூறுகையில், "அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்து, 43(ஏ) பிரிவை நீக்கியது உண்மை தான். ஆனால், டிபிடிபி சட்டம்-2023 இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. எனவே நாம் இப்போது பேசுவது போல், 43(ஏ) சட்டமன்ற செயல்முறை தகவல் தொழில்நுட்பச் சட்டம் இன்னும் நிலுவையில் உள்ளது. அவற்றை பயன்படுத்த முடியும்" என்கிறார். நீல் சுக்லாவின் வழக்கறிஞர் தீபன் தேசாய் பிபிசியிடம் பேசுகையில், “இந்த விவகாரத்தில் பதில் அளிக்க குஜராத் அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கும், மத்திய அரசின் சைபர் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கும் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் உத்தரவு வரும் வரை நீல் சுக்லாவின் கணக்கு கூகுள் நிறுவனத்தால் நீக்கப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார். இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மேலும் விசாரணை ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறும். செயற்கை நுண்ணறிவின் ஆபத்து என்ன? கூகுள் போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மற்றும் அதன் ஆபத்துகள் பற்றி டாக்டர். பவன் துக்கல் பேசுகையில், "தொழில்நுட்பம் மனித விவகாரங்களுக்கான முடிவுகளை எடுக்கத் தொடங்கும் போது, தவறுகள் நடக்கும். ஏனென்றால், மனித கலாச்சாரம், மனித உணர்வுகள் மற்றும் மனித நடத்தை ஆகியவற்றின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் இன்னும் முதிர்ச்சியடையவில்லை." "தொழில்நுட்பம் படத்தில் உள்ள மனிதனை ஒரே வகையான தரவுகளாகப் பார்க்கிறது, பின்னர் அந்தத் தரவை சிஎஸ்ஏஎம் (குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் பொருள்) விதிகளுக்கு எதிராக ஒப்பிடுகிறது, அது விதிகளை பூர்த்தி செய்தால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அந்த முடிவுகளை எடுக்கும். அதனால் இது நடந்திருக்கலாம்" என்கிறார் சைபர் சட்ட நிபுணரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான பவன் துக்கல். இந்த சம்பவத்தை ஒரு எச்சரிக்கையாக பார்க்கிறார் துக்கல், "இது ஒரு பெரும் எச்சரிக்கை. இனியும் இது நடக்காமல் இருக்க கூகுள் ஏதாவது செய்ய வேண்டும்." "கூகுள் போன்ற இடைத்தரகர்கள் தங்கள் செயல்பாடுகள் மற்றும் நோக்கங்களுக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தொடங்கும் போது, மனிதக் கட்டுப்பாட்டின் சரியான அளவைப் பராமரிக்க வேண்டுமா என்ற பெரிய கேள்வியை இந்தச் சிக்கல் சுட்டிக்காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவுக்கு முழு உரிமையும் சுயாட்சியும் வழங்குவது நியாயமற்றது." என்கிறார். https://www.bbc.com/tamil/articles/ce979gjm696o
  23. Published By: RAJEEBAN 06 APR, 2024 | 04:45 PM இலங்கை அதன் கடன்களை மீள செலுத்துவதை 2028ம் ஆண்டுவரை இடைநிறுத்துவது குறித்த இறுதிபேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் ஈடுபட்டுள்ளதாக நிக்கேய் ஏசியா தெரிவித்துள்ளது. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதை தடுப்பதற்காக ஜப்பான் உட்பட நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக நிக்கேய் ஏசியா தெரிவித்துள்ளது. கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்டன, அடுத்த சில வாரங்களில் முழுமையான அறிவிப்பு வெளியாகும் என இலங்கையின் தேசிய பாதுகாப்பு விடயங்களிற்கான ஆலோசகர் சாகலரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை கடன்களை 15 வருடங்களிற்குள் மீள செலுத்தவேண்டியிருக்கும் 2028 முதல் 2043ம் ஆண்டிக்குள் என தெரிவித்துள்ள அவர் இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் கடன்கள் குறைக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை 2022 ஏப்பிரலில் வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்திருந்தது. இதன் மூலம் இலங்கை தன்னை வங்குரோத்து நிலைக்கு உட்படுத்தியது. 2023 ஏப்பிரலில் கூட்டத்தில் இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகள் குழு ஏற்படுத்தப்பட்டது. சீனாவிற்கு பின்னர் இலங்கைக்கு அதிகளவு கடன்களை வழங்கிய நாடான ஜப்பான் இந்தியா பிரான்சுடன் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளது. இலங்கை கடன்களை மீள செலுத்துவதை இடைநிறுத்தி வைப்பது தொடர்பிலும் வட்டியை செலுத்துவது தொடர்பிலும் கடன்வழங்கிய நாடுகளிற்கும் இலங்கைக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. சீனா இந்த கூட்டத்தில் பார்வையாளராக மாத்திரம் கலந்துகொண்டுள்ளது. எனினும் சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு ஏனைய நாடுகளுடனான கடன்மறுசீரமைப்பை ஒத்ததாகவே காணப்படும் என தெரிவித்துள்ள இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டின் இறுதியில் இலங்கை செலுத்தவேண்டிய வெளிநாட்டு கடன் 37.3 பில்லியன் டொலராக காணப்பட்டது இதில் சீனாவிற்கு 4.7 பில்லியன் டொலர்களை செலுத்தவேண்டும். 2017 இல் இலங்கை தனது தென்பகுதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கியது. இது கடன்களை வழங்குவது தாமதமானால் உட்கட்டமைப்பு திட்டங்களை கைப்பற்றும் கடன்பொறிக்கான உதாரணமாக கருதப்பட்டது. இலங்கையை தளமாக கொண்டு இந்தோ பசுபிக்கில் சீனா அகலக்கால் பதிப்பது குறித்து இந்தியா ஜப்பான் உட்பட இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் சில கவலை கொண்டுள்ளன. எனினும் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கை முற்றிலும் வர்த்தக நோக்கங்களை கொண்டது என தெரிவித்த சாகலரத்நாயக்க இதில் இராணுவ நோக்கம் எதுவுமில்லை. இலங்கை வெளிநாட்டு முதலீட்டுக்கு தயாராக உள்ளது நாங்கள் எந்த நாடு என்ற அடிப்படையில் முதலீட்டாளர்களை தெரிவு செய்வதில்லை. தேசிய பாதுகாப்பிற்கு பாதுகாப்பு ஏற்படுத்தினால் மாத்திரம் அது குறித்து கரிசனை கொள்வோம் என தெரிவித்துள்ளார். எனினும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுதக்கூடிய நாட்டின் வடபகுதி குறித்து நாங்கள் கவனத்துடன் இருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/180595
  24. தோனி போல் ருதுராஜ் கெய்க்வாட் சாதிப்பதில் உள்ள 3 முக்கிய சவால்கள் என்ன தெரியுமா? பட மூலாதாரம்,SPORTZPICS படக்குறிப்பு, ருதுராஜ் கெய்க்வாட் கட்டுரை தகவல் எழுதியவர், அஷ்ஃபாக் பதவி, பிபிசி தமிழ் 5 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் "ரெடியா இரு; அடுத்த வருஷம் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கும்" கேப்டன்சி மாற்றம் குறித்து ஓராண்டுக்கு முன்னதாகவே ருதுராஜிடம் சூசகமாக சொல்லிட்டார் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த நட்சத்திர ஆட்டக்காரர் எம்.எஸ்.தோனி விட்டுச் செல்லும் மரபை ருதுராஜால் தொடர முடியுமா? "ஸ்பார்க் இல்லை என விமர்சிக்கப்பட்டவர்" ருத்து, ஸ்பார்க், ராக்கெட் ராஜா இதெல்லாம் ருதுராஜ் கெய்க்வாட்டின் செல்லப் பெயர்கள். மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்ட ருதுராஜை 2019 ஐபிஎல் தொடருக்காக டிசம்பர் 2018-ல் நடந்த ஏலத்தில் 20 லட்ச ரூபாய்க்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். அப்போது அவருக்கு வயது 21. 2019 சீசனில் ஒரு போட்டியில் கூட ருதுராஜ் களமிறக்கப்படவில்லை. 2020-இல் ருதுராஜுக்கு சி.எஸ்.கேவில் ஆடும் லெவனில் இடம் கிடைத்தது. அதுவும் வெறு ஆறு போட்டிகளில். இதில் 2 முறை டக் அவுட்டாகி வெளியேறினார். சி.எஸ்.கேவுக்காக களமிறங்கிய தொடக்கத்திலேயே கடும் நெருக்கடிக்குள்ளானார். கிடைத்த வாய்ப்பை வீணடிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இளம் வீரர்களிடம் போதிய ஸ்பார்க் இல்லை என தோனியும் காட்டமாக பேசினார். அதன் பிறகு ருதுராஜின் ஆட்டப்பாணி வேறொரு திசையில் நகர்ந்தது. அதே தொடரில், தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் அரைசதம் விளாசினார். 65*(51) vs RCB; 72(53) vs KKR; 62*(49) vs KXIP. பட மூலாதாரம்,SPORTSPICZ படக்குறிப்பு, Gaikwad 13 ஆண்டுகால சி.எஸ்.கே வரலாற்றில் தொடர்ந்து 3 போட்டிகளில் அரைசதம் விளாசிய முதல் வீரர் எனும் பெயரை தனது துடிப்பான பேட்டிங்கால் நிலைக்கச் செய்தார். சி.எஸ்.கேவின் ஜாம்பவான்கள் மைக்கேல் ஹஸி, ஷேன் வாட்சன், மேய்த்யூ ஹேடன், முரளி விஜய், சுரேஷ் ரெய்னாவால் கூட இந்த மைல்கல்லை எட்ட முடிந்ததில்லை. “ஸ்பார்க் இல்லை என்றார்கள்; கொளுந்துவிட்டு எரிகிறாரே” என சமூக ஊடகங்களில் அப்போது பாராட்டுகள் குவிந்தன. 2021-ல் ருதுராஜின் பங்களிப்பு சென்னை அணிக்கு கோப்பையை வென்று கொடுக்க முக்கிய காரணியாக அமைந்தது. டு பிளெசி உடன் அவர் ஓபனிங் ஆடினார். 16 போட்டிகளில் 4 அரைசதம் ஒரு சதம் என மொத்தம் 635 ரன்களை குவித்து ‘ஆரஞ்சு கேப்பை’ பெற்றார். அந்த சீசனில் சென்னை அணி கோப்பையை வென்றது. அதன் பின் 2022-ல் 6 கோடி ரூபாய்க்கு ருதுராஜ் கெய்க்வாட்டை தக்க வைத்தது சி.எஸ்.கே. பட மூலாதாரம்,SPORTSPICZ தோனி போல் வெற்றிகரமான கேப்டனாக வலம் வர முடியுமா? தோனிக்கு தற்போது 42 வயதாகிறது. நடப்பு தொடருடன் அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், “எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என்கிற பாணி தோனியுடையது. 2022-இல் தனது கேப்டன்ஸியை ஜடேஜா வசம் வழங்கினார். அப்போதே அவரது ஓய்வு குறித்து பரவலாக பேசப்பட்டது. ஆனால் ஜடேஜாவால் அணியை திறம்பட வழிநடத்த முடியவில்லை. முதல் 8 ஆட்டங்களில் 6-இல் சி.எஸ்.கே தோல்வியைத் தழுவியது. இதனால் தொடரின் நடுவிலேயே மீண்டும் கேப்டன் பொறுப்பை தோனி வாங்கிக்கொண்டார். இருந்தாலும் அந்த சீசனில் சி.எஸ்.கே 7-ஆம் இடத்திற்கு பின் தங்கியது. அதன் பிறகு அடுத்த ஆண்டே சி.எஸ்.கே ‘கம்பேக்’ கொடுத்தது. குஜராத்தை வீழ்த்தி கோப்பையையும் வென்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் பல தருணங்களில் முடியாததை முடித்துக் காட்டியிருக்கிறது. 2 ஆண்டு தடைக்குப் பிறகு 2018 கோப்பையை வென்றது. 2020-இல் மோசமான தொடராக அமைந்தாலும் 2021-இல் சாம்பியன் பட்டம் வென்றது. இப்படியான அணியை வெற்றிப்பாதைக்கு வழிநடத்துவதில் தோனி வல்லவராகவே திகழ்ந்திருக்கிறார். அதை ருதுராஜாலும் செய்ய முடியுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் "தோனிக்கு ஒத்த காலத்தில் விளையாடிய வீரர்கள் பலர் இப்போது வர்ணணையாளர்களாக மாறிவிட்டனர். சிலர் பயிற்சியாளராகிவிட்டனர். ஆனால் தோனி இன்னும் துடிப்பாக பேட்டிங் ஆடிக்கொண்டிருக்கிறார். தோனி தோனிதான். அவரை யாருடனும் ஒப்பிட முடியாது." என்கிறார் கிரிக்கெட் வல்லுநர் ஷ்யாம் பட மூலாதாரம்,SPORTSPICZ படக்குறிப்பு, CSK Fans "தோனியுடன் ஒப்பிடுவது நியாயமில்லை" “புதிதாக கேப்டன் பொறுப்பை ஏற்றிருக்கும் ருதுராஜை ஆரம்ப கட்டத்திலேயே தோனியுடன் ஒப்பிடுவது நியாயமற்றது” என கிரிக்கெட் விமர்சகர் கிஷோர் வைத்தியநாதனும் கூறுகிறார். “2007 டி20 உலகக்கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்த கையோடு தோனி தனது ஐபிஎல் பயணத்தை துவங்கினார். அதன் பிறகு படிப்படியாக சிறந்த தலைவராக மெருகேறினார். அவரது கேப்டன்ஸி ஸ்டைலே தனித்துவமாக இருக்கும்.” என அவர் குறிப்பிடுகிறார். “ருதுராஜ் இயல்பிலேயே அமைதியானவர் என்பதால் அது சி.எஸ்.கேவின் சூழலுக்கும் ஒத்துப்போகிறது. தொடக்கத்தில் ருதுராஜ் கடுமையாக தடுமாறியபோது சி.எஸ்.கே அவருக்கு பக்கமலமாக நின்றது. அதன் பிறகு தனது ஆட்டத்தை சிறப்பாக எடுத்துச் சென்றார். அதிலிருந்து ஒரு 3 – 4 ஆண்டுகளில் சி.எஸ்.கேவின் கேப்டனாக உயர்ந்திருப்பதே நல்ல சாதனைதான்” என்கிறார் கிஷோர் வைத்தியநாதன். சி.எஸ்.கே.வின் 'ரிக்கி பாண்டிங்காக' உருவெடுப்பாரா ருதுராஜ்? சில அனுபவம் வாய்ந்த பேட்டர்களுக்கே கேப்டன் பொறுப்பை கையாளுவதில் சிக்கல் இருக்கும்போது ஓபனிங் பேட்டராக உள்ள ருதுராஜ் எப்படி இரண்டையும் கையாளுவார்?, கேப்டன் பணி ருதுராஜின் பேட்டிங் திறனை பாதிக்குமா என கிரிக்கெட் வல்லுநர் ஷ்யாமிடம் கேட்டோம். "சச்சின், லாரா போன்றவர்கள் சிறந்த பேட்டர்கள். ஆனால் அவர்கள் சிறந்த கேப்டன்களாக இருந்ததில்லை. கேப்டனாக இருந்துகொண்டே ஒரு நல்ல பேட்டராக அணியை வழிநடத்தியதில் ரிக்கி பாண்டிங் தனித்துவமானவர். 1995-ல் ஆஸ்திரேலிய அணியில் பாண்டிங் அறிமுகமானபோது அவர் மிடில் ஆர்டரில் இறங்கினார். அதன் பிறகு கேப்டனானதும் பேட்டிங்கில் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கினார். அணியை பலமுறை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு உலகக்கோப்பைகளை வென்று கொடுத்திக்கிறார். கேப்டனாக இருந்துகொண்டும் பேட்டிங்கில் மிரட்ட முடியும் என்பதை நிரூபித்தவர் ரிக்கி பாண்டிங்." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரிக்கி பாண்டிங் "பாண்டிங்கை போலவே பேட்டிங், கேப்டன்ஸி இரண்டிலும் ஜொலிக்கும் வீரராக ருதுராஜ் உருவாக முடியும். ருதுராஜ் இந்திய அணியில் தனக்கான இடத்தை தக்க வைக்கும் கட்டாயத்தில் இருக்கிறார். டி20 உலகக்கோப்பை நெருங்குகிறது. ஐபிஎல் 2 மாதங்கள்தான். இதில் விளையாடும் ஒவ்வொருவருமே இந்திய அணியில் இடம்பிடிப்பதை மனதில் வைத்தே செயல்படுகின்றனர். ருதுராஜுக்கு ஒத்த காலத்தில் வந்த கில், யஷஷ்வி ஜெய்ஷ்வால், இஷான் கிஷன் போன்ற வீரர்கள் இந்திய அணியில் தங்களுக்கான இடத்தை பிடிக்க உறுதியான பங்களிப்பை கொடுத்ததோடு பெயர் சொல்லும் அளவுக்குச் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றனர். அடுத்தடுத்து நிறைய வீரர்களும் இந்திய அணியில் இடம்பிடிக்க போட்டிப்போடுகின்றனர். இது ருதுராஜுக்கும் நன்கு தெரியும். இதனால் கேப்டன் பொறுப்போடு பேட்டிங்கையும் நேர்த்தியாகச் செய்து அதன் மூலம் கவனம் பெற முயற்சிப்பார்." என்கிறார் கிரிக்கெட் வல்லுநர் ஷ்யாம். பட மூலாதாரம்,GETTY IMAGES ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இருக்கும் முக்கியமான 3 சவால்கள் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு முன் உள்ள சவால்கள் குறித்து கிஷோர் வைத்தியநாதன் பின் வருமாறு கூறுகிறார். கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயம் சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு வெற்றிகரமான அணி. இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. ரசிகர்களுக்கு எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கும். மற்ற அணிகளை விட, சென்னை அணி கோப்பையை வெல்லத் தவறினால் அது ரசிகர்கள் மத்தியில் பெரும் தோல்வியாகவே கருதப்படும். காரணம் அந்தளவுக்கு சி.எஸ்.கேவின் மதிப்பு இன்று வரை உயர்ந்து விளங்குகிறது. மூத்த வீரர்களை கையாளுதல் தோனி உள்பட அணியில் நிறைய மூத்த வீரர்கள் இருக்கின்றனர். சர்வதேச வீரர்கள் உள்ளனர். இவர்களை எப்படி கையாளப்போகிறார் என்பது மற்றொரு சவால். களத்திற்கு உள்ளே மட்டுமின்றி வெளியிலும் வீரர்களை கையாளுவதில் சில சவால்கள் இருக்கின்றன. அவர்களை எப்படி கையாளுகிறார். அணியை எப்படி கட்டமைக்குகிறார் என்பதும் முக்கியமானது. தோல்வியின்போது அணியை கையாளும் பக்குவம் சி.எஸ்.கே தோல்வியடையும் தருணங்களில் அணியை எவ்வாறு பார்த்துக்கொள்கிறார் என்பதிலும் ருதுராஜுக்கு சவால் இருக்கிறது. சி.எஸ்.கேவிடம் உள்ள ஒரு பலமே அந்த அணி வெற்றியின்போதும் தோல்வியின்போதும் சமநிலையை பேணுவதுதான். வீரர்களை சமச்சீரான நிலையில் எப்போது அமைதியாக வைத்திருப்பார் தோனி. ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் தொடர்ந்து தோல்வியைத் தழுவினால் சக வீரர்களுக்கு எந்த அழுத்தமும் ஏற்படாமல் எவ்வாறு பார்த்துக்கொள்கிறார் என்பதும் ருதுராஜுக்கு ஒரு சவாலாக இருக்கும். பட மூலாதாரம்,SPORTSPICZ 'கேப்டன்' ருதுராஜை சி.எஸ்.கே ரசிகர்கள் எப்படி பார்க்கிறார்கள்? “தோனி எப்போது வேண்டுமானாலும் ஓய்வு அறிவிப்பை வெளியிடலாம். அதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதேசமயம், மாற்று வீரரை அவரே அடையாளம் கண்டு கேப்டன்ஸியை வழங்கியது நல்ல உத்தி" என்கிறார் தோனியின் தீவிர ரசிகரான சரவணன். “கேப்டன் பொறுப்புக்கு ஒரு இளம் வீரரை கொண்டு வர வேண்டும் என்பதே அணி நிர்வாகமும் விரும்பியது. அந்த வகையில் ருதுராஜ் கெய்க்வாட் திறமைமிக்க வீரர். அவர்தான் தகுதியானவரும் கூட காரணம், உள்ளூர் கிரிக்கெட் மட்டுமின்றி ஆசிய கோப்பையிலும் இந்தியாவை வெற்றிப்பாதைக்கு வழிநடத்தியவர்” என சரவணன் குறிப்பிட்டார். 2023 அக்டோபரில், சீனாவில் நடைபெற்ற 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ருதுராஜ் தலைமையிலான இந்திய அணி கிரிக்கெட்டில் தங்கப் பதக்கம் வென்றது. ஆசிய விளையாட்டில் முதல்முறையாக தங்கம் வென்ற இந்திய கேப்டன் எனும் பெருமை ருதுராஜுக்கு கிடைத்தது. அதோடு, தோனிக்கு பிறகு கேப்டனாக பொறுப்பேற்ற முதல் முறையே சர்வதேச அரங்கில் கோப்பையை வென்ற வீரர் என்கிற பெருமையும் கிடைத்தது. முன்னதாக 2023-ல் அயர்லாந்திற்கு இந்தியா சுற்றுப்பயணம் செய்தபோது துணை கேப்டனாக செயல்பட்டார் ருதுராஜ். அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் துணை கேப்டனாக செயல்பட்டிருக்கிறார். பட மூலாதாரம்,SPORTSPICZ படக்குறிப்பு, தோனி ரசிகர் சரவணன் (மஞ்சம் நிறம் பூசியிருப்பவர்) "ருதுராஜ் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம்" ருதுராஜால் ஐபிஎல்லில் கோப்பையை வெல்ல முடியுமா? என்கிற கேள்விக்கு பதிலளித்த சரவணன், "தோனிக்கு சி.எஸ்.கே கேப்டன் பொறுப்பை வழங்கியபோது அவர் இவ்வளவு சிறப்பாக அணியை வழிநடத்தி, 5 முறை கோப்பைகளை வென்று கொடுப்பார் என நாம் யாருமே நினைத்திருக்க மாட்டோம். வாய்ப்பு கொடுத்தால்தான் ஒருவர் எப்படி செயல்படுகிறார் என்பது தெரியும். தோனி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். அதே பாணியை ருதுராஜும் தொடர்வார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது" என்றார். "களத்திற்கு நேரடியாகச் சென்று பார்க்கும்போது ருதுராஜும் தோனியும் அதிகம் பேசிக்கொள்வதை கவனிக்க முடிகிறது. அவர்களுக்கு ஒரு புரிதல் இருக்கிறது. இது அணிக்கு தேவை மற்றும் ஆரோக்கியமான விஷயமும் கூட" என்கிறார் சரவணன். "தோனி சி.எஸ்.கேவுக்காக மட்டும் ருதுவை கைகாட்டவில்லை, இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு ருதுராஜ் அவசியமானவர் என்பதை சொல்லாமலேயே உணர்த்தியிருக்கிறார். தோனியை போன்றே ருதுராஜும் ஐசிசி கோப்பைகளை இந்தியாவுக்கு வென்று கொடுப்பார்" என நம்பிக்கையுடன் பேசினார் சரவணன். https://www.bbc.com/tamil/articles/c9rvv2xgxdyo
  25. மரக்கறிகளின் விலை 10 வருடங்களின் பின்னர் குறைவடைந்தன! 06 APR, 2024 | 05:57 PM தம்புள்ளை பொருளாதார மையத்தில் மரக்கறிகளின் விலை 10 வருடங்களின் பின்னர் குறைவடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது . தினசரி காய்கறிகளின் வருகை அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாகப் வியாபாரிகள் தெரிவித்தனர். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் , ஒரு கிலோ போஞ்சி 40 ரூபா தொடக்கம் 50 ரூபா வரையிலும், கோவா மற்றும் வெண்டக்காய் கிலோ 100 ரூபாவாகவும், கரட் 200 ரூபாவாகவும், வெள்ளரிக்காய் 15 ரூபாவாகவும் குறைந்துள்ளது. https://www.virakesari.lk/article/180590

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.