Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர், மொசாட் தலைவர் பேச்சுவார்த்தை Published By: SETHU 18 MAR, 2024 | 03:46 PM காஸா போர் நிறுத்தம் தொடர்பில், கட்டார் பிரதமர், இஸ்ரேலின் புலனாய்வு அமைப்பான மொஸாட்டின் தலைவர் மற்றும் எகிப்திய அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கத்தார் பிரதமர் மொஹம்மத் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, மொசாட் தலைவர் டேவிட் பார்னியா, மற்றும் எகிப்தி அதிகாரிகள் ஆகியார் இன்று கட்டார் தலைநகர் தோஹாவில் எதிர்பார்க்கப்படுவதாக தன்னை அடையாளப்படுத்த விரும்பாத வட்டாரமொன்று ஏ.எவ்.பியிடம் தெரிவித்துள்ளது. காஸாவில் 6 வார கால போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான திட்டத்தை பேச்சுவார்த்தை மத்தியஸ்தர்களான எகிப்து மற்றும் கட்டாரிடம் ஹமாஸ் கடந்த வெள்ளிக்கிழமை முன்வைத்திருந்தது. எனினும் அதை இஸ்ரேல் நிராகரித்தது. இத்திட்டத்தின்படி, 42 நாட்களுக்கு போர் நிறுத்தம் கடைபிடிக்கப்படும். அக்காலப்பதியில் 42 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும். ஒவ்வொரு பணயக் கைதிக்கும் 20 முதல் 50 வரையான எண்ணிக்கையிலான பலஸ்தீன சிறைக்கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் 7 ஆம் திகதி, இஸ்ரேலின் தென் பகுpயிலிருந்து சுமார் 250 பேரை பணயக் கைதிகளாக காஸாவுக்குள் ஹமாஸ் இயக்கம் கொண்டு சென்றது. அவர்களில் சுமார் 130 பேர் காஸாவிலிருந்து விடுவிக்கப்படாதுள்ளனர் என இஸ்ரேல் நம்புகிறது. உயிரிழந்துவிட்டதாக கருதப்படும் 32 பேரும் இவர்களில் அடங்குவர். பெண்கள், சிறார்கள், வயோதிபர்கள், நோயாளிகள் முதலில் விடுவிக்கப்படுவர். ஆண் சிப்பாய்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை பின்னர் விடுவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. புனித ரமழான் நோன்புக்காலம் ஆரம்பமாகுவதற்கு முன்னர் 6 வாரகால போர் நிறுத்தத்தை அறிவிப்பதற்கு மத்தியஸ்தர்கள் முயற்சித்தனர். எனினும், 6 நிரந்தரமான போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படுவதுடன், காஸாவிலிருந்து இஸ்ரேலியப் படையினர் முழுமையாக வாபஸ்பெற்றால் மாத்திரமே பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவர் என ஹமாஸ் நிபந்தனை விதித்திருந்தது. புதிய திட்டத்தின்படி, காஸாவிலுள்ள அனைத்து நகரங்கள் மற்றும் மக்கள் நிறைந்த பகுதிகளிலிருந்து இஸ்ரேலிய படையினர் வெளியேற வேண்டும் என ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது. யுத்தத்துக்கு முந்தைய காலத்தில் போன்று தினமும் 500 மனிதாபிமான உதவிப் பொருட்கள் காஸாவுக்கு அனுப்பபட வேண்டும் எனவும் ஹமாஸ் கோரியுள்ளது. இதேவேளை, காஸாவிலிருந்து தனது படையினரை வாபஸ்பெறுவதற்கு இதுவரை இஸ்ரேல் மறுத்துவருகிறது. அது ஹமாஸுக்கு வெற்றியாக அமைந்துவிடும் என இஸ்ரேல் கூறுகிறது. போர் நிறுத்தத்துக்கான ஹமாஸின் யோசனைகள் யதார்த்தமற்றை எனவும், ஆனால், கட்டாரில் நடைபெறவுள்ள அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு தனது பிரதிநிதிகளை இஸ்ரேலிய அரசாங்கம் அனுப்பும் எனவும் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு தெரிவித்திருந்தார். அண்மையில் எகிப்தில் நடைபெற்ற பேச்சுவார்ததைளுக்கு இஸ்ரேலிய பிரதிநிதிகள் அனுப்பப்படவில்லை. செப்டெம்பர் 7 ஆம் திகதியிலிருந்து, இஸ்ரேலின் தாக்குதல்களால் காஸாவில் 31,726 பேர் உயிரிழந்துள்ளனர் என காஸா சுகாதார அமைச்சு இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179048
  2. பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8 பேர் பலி Published By: SETHU 18 MAR, 2024 | 02:05 PM ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் இன்று நடத்திய வான்வழித் தாக்குதல்களால் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என தலிபான் அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கோஸ்ட் மற்றும் பக்திக்கா மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், உயிரிழந்தவர்கள் அனைவரும் பெண்கள் மற்றும் சிறார்கள் எனவும் ஸபிஹுல்லா முஜாஹித் கூறியுள்ளார். வீடுகளை இலக்குவைத்து விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக அவர் கூறியுள்ளார். தீவிரவாதிகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் வடக்கு வஸிரிஸ்தான் மாவட்டத்தில் பொலிஸ் நிலையமொன்றின் மீது நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 படையினர் உயிரிழந்திருந்தனர். இத்தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிப் அலி ஸர்தாரி சூளுரைத்திருந்தார். https://www.virakesari.lk/article/179016
  3. 18 MAR, 2024 | 04:19 PM (எம்.மனோசித்ரா) கச்சதீவு உரிமையை அடிப்படையாகக் கொண்டு மீனவர்களின் பிரச்சினைகள் உதாசீனப்படுத்தப்படவில்லை என இலங்கை அரசாங்கம் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் கச்சதீவு தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளன. கடந்த காலத்தில் தி.மு.க செய்த பாவத்தால்தான் இலங்கை அரசால் இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ள கருத்துக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விசனம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், 'தி.மு.க. அரசின் கடும் எதிர்ப்பையும் மீறித்தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது என்ற உண்மை வரலாற்றை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள். நாட்டின் ஒரு பகுதியை மாநில அரசால் மற்றொரு நாட்டுக்கு வழங்க முடியும் என நம்பும் அளவுக்குத்தான் பிரதமர் அப்பாவியாக இருக்கிறாரா? கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து சிறைப் பிடிக்கப்படுவதையும் சித்திரவதைக்கு ஆளாவதையும் தடுத்து நிறுத்தாதது ஏன்? அவர்கள் இந்தியர்கள் இல்லையா? அதானி நிறுவனத்தின் வர்த்தக நலன்களுக்காக இலங்கை அரசுக்கு அழுத்தம் தந்த ஒன்றிய பா.ஜ.க அரசு இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைக்காக வாய் திறக்காதது ஏன்? படகுகளைப் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கிவிட்டதாக அறிவிக்கிறது இலங்கை அரசு. இந்திய அரசு இதை அதிகாரபூர்வமாக, வெளிப்படையாகக் கண்டிக்காதது ஏன்? இரண்டாவது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்குச் சிறைத்தண்டனை வழங்கும் நடைமுறை என்பதே, பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டதுதான். இதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? இதற்கெல்லாம் பதிலில்லை. தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டுக்குச் செய்து கொடுத்த சிறப்புத் திட்டங்கள் என்ன என்று பதில் கூறுங்கள் பிரதமரே என்று தமிழ்நாட்டு மக்கள் கேட்ட கேள்விக்கும் பதில் இல்லை. ஆனால், வழக்கமான பொய்களும் புலம்பல்களும் மட்டும் மேடையில் எதிரொலித்தன. விஷ்வகுரு என மார்தட்டிக்கொள்ளும் பிரதமர் மௌனகுருவாக இருப்பது ஏன்? தன் சொந்த இயலாமையை மறைக்கத் தி.மு.க மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகத்தை எங்கள் மீனவர்கள் தோலுரிப்பார்கள். இது அரிதாரங்கள் கலைகிற காலம்!' எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/179054
  4. போதைப்பொருள், பாதாள உலக நடவடிக்கைகளை நாட்டிலிருந்து ஒழிக்கப் பாடுபடுவேன் - டிரான் அலஸ் 18 MAR, 2024 | 04:35 PM எந்த அழுத்தங்களுக்கும் அடிபணியாது, போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளை நாட்டிலிருந்து ஒழிக்கப் பாடுபடுவேன் என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள 19 பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கி உரையாற்றிய அமைச்சர் டிலான் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பிரசன்னமாகியிருந்தார். https://www.virakesari.lk/article/179053
  5. Published By: DIGITAL DESK 3 18 MAR, 2024 | 12:47 PM யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் உரிமையாளருக்கு யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றால் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில் உள்ள இரண்டு பல்பொருள் அங்காடிகளில் பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் போது, காலாவதியான பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியமை , வண்டுகள் மொய்த்த பழுதடைந்த பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட பொருட்களை சான்று பொருட்களாக மன்றில் முற்படுத்திய சுகாதார பரிசோதகர் அங்காடி உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். குறித்த வழக்கு இன்று திங்கட்கிழமை மன்றில் அழைக்கப்பட்ட போது ஒருவர் மன்றில் முன்னிலையாகத நிலையில் , மன்றில் முன்னிலையான ஒரு அங்காடி உரிமையாளருக்கு எதிராக 18 குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. தன் மீதான குற்றச்சாட்டுக்களை உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவரை கடுமையாக எச்சரித்த மன்று , அவருக்கு ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. https://www.virakesari.lk/article/179015
  6. வெடுக்குநாறி மலையில் கைதானவர்களை விடுவிக்கக் கோரி மூதூரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் Published By: DIGITAL DESK 3 18 MAR, 2024 | 07:27 PM வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், மத வழிபாட்டு உரிமையை உறுதி செய்யக் கோரியும் இன்று திங்கட்கிழமை (18) மூதூரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மூதூர் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்புப் போராட்டம் மூதூர் பிரதேச செயலகம் வரை இடம்பெற்றது. இப்போராட்டத்தின் இறுதியில் மகஜர் ஒன்றும் மூதூர் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/179012
  7. இலங்கையுடனான 3 ஆவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் வெற்றி; ஒருநாள் தொடரை கைப்பற்றியது Published By: VISHNU 18 MAR, 2024 | 05:21 PM இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான கடைசி ஒரு நாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்படி 03 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியது. இன்றைய (18) போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியால் 50 ஓவர்கள் நிறைவில் 235 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக ஜனித் லியனகே ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் எடுத்தார். அணித்தலைவர் குசல் மெண்டிஸ் 29 ஓட்டங்களையும் சரித் நசங்க 37 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் பந்துவீச்சில் தஸ்கின் அஹமட் 03 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி வீரர்கள் 40.2 ஓவர்களில் வெற்றி பெற்றது. அங்கு தன்சித் ஹசன் 84 ஓட்டங்களையும், முஸ்பிகுர் ரஹிம் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும் பெற்றனர். ரிஷாத் ஹொசைன் 18 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக லஹிரு குமார 04 விக்கெட்டுகளை கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/179059
  8. அறியாத வயதில் தவறாக விளங்கிச் செய்த செயல். சேகர் கற்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தால் அவருடைய வாழ்க்கையும் மாறியிருக்க வாய்ப்புள்ளது.
  9. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பாகிஸ்தானிலிருந்து கரோலின் டேவிஸ் & லண்டனிலிருந்து ஃப்ளோரா ட்ரூரி பதவி, பிபிசி 18 மார்ச் 2024, 12:10 GMT புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் ஒரே இரவில் 2 இடங்களில் பாகிஸ்தான் நடத்திய திடீர் வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் எட்டு பேர் கொல்லப்பட்டதாக தாலிபன்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திங்கள்கிழமை (மார்ச் 18) உள்ளூர் நேரப்படி 03:00 மணியளவில் நடந்த இந்த "பொறுப்பற்ற" தாக்குதல்களில், பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகிலுள்ள வீடுகள் தாக்கப்பட்டதாக, தாலிபன் அரசின் செய்தித் தொடர்பாளர் ஸைபுல்லா முஜாஹித் தெரிவித்தார். பாகிஸ்தான் இதுகுறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் துருப்புகள் 7 பேரை அடையாளம் தெரியாத ஆயுதக்குழுவினர் கொன்றதற்காக, “வலுவான பதிலடியை கொடுப்போம்” என, அந்நாட்டு குடியரசு தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி உறுதியளித்ததைத் தொடர்ந்து இத்தாக்குதல் நடந்துள்ளது. உயிரிழந்த பாகிஸ்தான் படையினர் இருவரின் இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆசிஃப் அலி சர்தாரி, இதற்கு காரணமானவர்கள் “யாராக இருந்தாலும், எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பதிலடி கொடுக்கப்படும்” என தெரிவித்தார். வடக்கு வசீரிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் பாகிஸ்தான் ராணுவ தளத்தின் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானிலிருந்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது. பாகிஸ்தான் அரசாங்கத்தின்படி, இத்தகைய தாக்குதல்களின் எண்ணிக்கை சமீப மாதங்களாக அதிகரித்து வருகின்றன. பாகிஸ்தான் துருப்புகள் மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடியாகவே இன்று ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் தாக்குதல் நடைபெற்றதாக, பெயர் தெரிவிக்க விரும்பாத உள்ளூர் அரசு அதிகாரியை மேற்கோள் காட்டி ஏ.எஃப்.பி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு தாலிபன் பதிலடி தலிபான் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் ஒரு அறிக்கையில், "ஆப்கானிஸ்தான் பிரதேசத்தின் பாதுகாப்பில் சமரசம் செய்ய யாரையும் அனுமதிக்காது. இந்த தாக்குதல்களில் கிழக்கு எல்லையான கோஸ்ட் மற்றும் பக்திகா மாகாணங்களில் ஐந்து பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர்", என்று குறிப்பிட்டுள்ளார். தலிபான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடியாக எல்லையில் பாகிஸ்தான் துருப்புகளை அதன் பாதுகாப்புப் படைகள் குறிவைத்ததாகக் கூறியுள்ளது. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே மோதல்கள் நடந்ததாக அல்ஜசீரா மற்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே உச்சக்கட்ட பதற்றம் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, உயிரிழந்த பாகிஸ்தான் படையினரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட ஆசிஃப் அலி சர்தாரி ஆனால், தாலிபன் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஸைபுல்லா முஜாஹித் சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், "கட்டுப்பாடு இல்லாதது மற்றும் தங்கள் பிரதேசத்தில் உள்ள பிரச்னைகளுக்கு ஆப்கானிஸ்தானை குறை கூற வேண்டாம்" என்று பாகிஸ்தானை எச்சரித்தார். ”இதுபோன்ற சம்பவங்கள், பாகிஸ்தானால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்,” என்றும் அவர் கூறினார். இந்த தாக்குதல்களில் "மக்கள் குடியிருந்த வீடுகள்" தாக்கப்பட்டதாகவும் இதில் ஐந்து பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார். 2021-ம் ஆண்டில் தாலிபன்கள் நாட்டை மீண்டும் கைப்பற்றியதில் இருந்து ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் பிற்பகுதியில், பாகிஸ்தான் பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்களை பாகிஸ்தானை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தியது. பாகிஸ்தானில் தங்குவதற்கு அவர்களிடம் சரியான ஆவணங்கள் இல்லை என அந்நாடு கூறியது. பல அகதிகள் மற்றும் புகலிடம் கோரி வந்தவர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதாக மனித உரிமைக் குழுக்கள் விமர்சித்தன. பாதுகாப்புக் காரணங்களுக்காக இதைச் செய்ததாக அந்த நேரத்தில் பாகிஸ்தான் காபந்து அரசாங்கத்தின் அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் மீண்டும் கைப்பற்றிய பிறகு, அதனை ஆயுதக் குழுக்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், ஆயுதக் குழுக்களை ஆதரிக்கவில்லை என தாலிபன்கள் மறுத்துள்ளதாக, ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/cx9zxqy4er5o
  10. இப்ப முகப் புத்தகமும், சமூக ஊடகங்களும் நேரடித் தொடர்பை ஏற்படுத்துவதால அவை தேவையில்லை.
  11. காசாவில் இதுவரை 13,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொலை! காசாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையை இஸ்ரேலிய படைகள் சுற்றிவளைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக, அல்-ஷிஃபா மருத்துவமனையில் உள்ள அறுவைச்சிகிச்சை பிரிவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு குண்டுவீச்சு தாக்குதல்களும் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளன. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 13,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/296160
  12. சீனாவில் பிறந்த ஆண் குழந்தைக்கு 10cm அளவில் வால் இருந்ததால் வைத்தியர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். Tethered Spinal Cord எனப்படும் மருத்துவ நிலையே இதற்கு காரணம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், வாலில் எந்தவித அசைவும் இருக்காது எனவும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தநிலையில் குழந்தையின் பின்புறம் இருக்கும் வாலை அகற்றுமாறு குழந்தையின் பெற்றோர்கள் வைத்தியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் குறித்த வால் நரம்பு மண்டலத்துடன் இணைந்துள்ளதால், அறுவை சிகிக்சை செய்து வாலை அகற்றினால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://thinakkural.lk/article/296122
  13. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்கு புதிய நடவடிக்கையை ஆரம்பிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி ஆகியோரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. தற்போது அதிக கொலைகள் இடம்பெறும் மேல் மற்றும் தென் மாகாணங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி இப்பகுதிகளில் 20 ஆயுதம் தாங்கிய தாக்குதல் பொலிஸ் பட்டாலியன்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளன. இதேவேளை, அனைத்து கிராமிய சேவை பிரிவுகளிலும் ஸ்தாபிக்கப்பட்ட சமூக பொலிஸ் பிரிவை மேலும் பலப்படுத்தி அதன் ஊடாக தேசிய பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பாரிய பொறுப்பு கிராம மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குழுக்களுக்கு உண்டு என பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சமூகப் பொலிஸ் பிரிவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார். https://thinakkural.lk/article/296140
  14. ‘107’ என்ற எண் மூலம் 24 மணி நேரமும் பொலிசாரை தமிழில் தொடர்பு கொள்ளலாம்! 107 என்ற குறுகிய எண் மூலம் 24 மணி நேரமும் செயல்படும் அவசர அழைப்பு மையம் தமிழ் மொழியில் பொலிஸாருக்கு புகார் மற்றும் தகவல் தெரிவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மொழிப் பிரச்சனையின்றி அனைவரும் பொலிஸாருக்குத் தகவல்களைத் தெரிவிப்பதை இலகுவாக்கும் நோக்கில், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸின் அறிவுறுத்தலின் பேரில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தலைமையில் அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க மற்றும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த அழைப்பு நிலையம் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டது. வவுனியா, மன்னார் பிரதேசங்களில் குற்றச்செயல்கள் மற்றும் வன்முறைகளுக்கு அஞ்சாமல் மக்கள் நம்பிக்கையுடன் வாழக்கூடிய அமைதியான சூழலை உருவாக்குதல் என்ற தொனிப்பொருளில் பொது மக்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட வேலைத்திட்டமும் இடம்பெற்றது. இதன் மூலம் இலங்கையில் எங்கிருந்தும் 107ஐ அழைத்து தமிழ் மொழியில் தகவல்களை வழங்குவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும்,சிங்களவர், தமிழர், முஸ்லிம் என இன வேறுபாடின்றி அனைத்து இலங்கையர்களுக்கும் சட்டத்தின் பாதுகாப்பை வழங்குவதே தமது நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த இலக்கங்களைப் பயன்படுத்தி பொலிஸாருக்கு தகவல்களை வழங்குவது ஒரு சிறந்த பணி எனவும், அது நாட்டுக்கான சேவை எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/296184
  15. பட மூலாதாரம்,GETTY IMAGES 17 மார்ச் 2024 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் 18வது மக்களவை தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்படும். தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் அட்டவணையை வெளியிடுவதற்கு முன், தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் எவ்வாறு தயாராகி வருகின்றது என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கினார். மேலும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படுவது ஏன் என்பது குறித்தும் அவர் ஊடகங்களுக்கு விளக்கினார். இந்த கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) குறித்த சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கப்பட்டது. ஏழு கட்ட வாக்குப்பதிவு ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES "ஏழு கட்டங்களாக தேர்தலை நடத்துவது தேவையற்றது என்றும், அது ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமையும் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. அதற்கு உங்கள் பதில் என்ன?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “நாட்டின் புவியியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டால் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் சென்றடைவது என்பது சாத்தியமில்லை. பாதுகாப்புப் படையினருக்கு ஏற்படும் அழுத்தத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அந்தந்த மாநிலங்களில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஏழு கட்டங்களாக தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார். தொடர்ந்து பேசிய அவர், “இது பண்டிகை காலம். ஹோலி, ரமலான் மற்றும் ராமநவமி பண்டிகைகள் வரவுள்ளன. தேர்தல் அட்டவணை அதை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. யாருக்கும் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமைக்கப்படவில்லை. அந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை" என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இவிஎம் குறித்த குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்கிறார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன என்று செய்தியாளர்கள் கேட்டனர். “இந்தக் கேள்விகள் பலமுறை எழுந்துள்ளன. பல மாநிலங்களின் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த வழக்குகளை விசாரித்து, குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று கூறி அனைத்தையும் நிராகரித்துள்ளன” என்று அவர் கூறினார். இவிஎம் மூலம் நடத்தப்பட்ட சில தேர்தல்களில் ஆளும் கட்சியினரும் தோல்வியடைந்ததை சுட்டிக்காட்டிய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், இவிஎம் குறித்த ஒரு புத்தகத்தையும் செய்தியாளர்களிடம் காட்டினார். “இவிஎம் தொடர்பான 40க்கும் மேற்பட்ட வழக்குகளில் நாட்டின் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகள் குறித்து இதில் விரிவாக கூறப்பட்டுள்ளது. நிபுணர்கள் இந்த புத்தகத்தையும் படிக்க வேண்டும்'' என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES வாக்குச்சாவடி வாரியாக தேர்தல் முடிவுகள் வெளியாவது ஏன்? ஒரு வாக்குச்சாவடிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முடிவுகளின் அடிப்படையில் எந்தச் சாவடியில் எந்த வேட்பாளர் அதிகமான அல்லது குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பதை அறிய முடியும், அதற்கு பதிலாக ஒரு தொகுதியின் அனைத்து வாக்குச்சாவடிகளின் முடிவுகளையும் ஒரே நேரத்தில் டோட்டலைசர் (Totaliser) என்ற கருவி மூலம் தெரிந்து கொள்ள முடியும். அந்த கருவியை ஏன் பயன்படுத்துவதில்லை என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “பூத் வாரியாக முடிவுகளை அறிவது நல்லதல்ல என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், பெரும்பாலான மின்னணு இயந்திரங்களை டோட்டலைசர் சாதனத்துடன் இணைத்து முடிவுகளை வெளியிடுவது கடினம். ஏனெனில் மின்னணு இயந்திரத்தின் செயல்திறன் குறித்து பலர் கேள்வி எழுப்புகின்றனர். டோட்டலைசர் சாதனம் மூலம் எண்ணினால், மேலும் பல குற்றச்சாட்டுகள் எழும்" என்றார். மேலும் புதிய தொழில்நுட்பத்தை இந்திய அரசியல் அமைப்பு வரவேற்க வேண்டும் என்றும், அதற்கான நேரம் வரும் என்று தான் நம்புவதாகவும் கூறினார் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார். பட மூலாதாரம்,ECI படக்குறிப்பு, தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து அருண் கோயல் சமீபத்தில் ராஜினாமா செய்தார். அருண் கோயல் ராஜினாமா கடந்த வாரம் தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்தார். இது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், "எங்கள் குழுவின் முக்கியமான நபராக அவர் இருந்தார். அவருடன் இணைந்து பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. ஆனால் ஒவ்வொருக்கும் சொந்த முடிவுகள் எடுக்க வெவ்வேறு காரணங்கள் இருக்கும். அதை மதிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தில் கருத்து வேறுபாடுகள் எப்போதும் இருக்கும். அனைவரின் கருத்துக்கும் நாங்கள் மதிப்பளிப்போம்” என்றார். தேர்தல் விதிமுறை மீறல்கள் “தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்துவது தான் தங்கள் முன்னால் உள்ள நான்கு சவால்களில் மிக முக்கியமான சவால்” என்றார் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார். பிரதமர் நரேந்திர மோதி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து அதிக புகார்கள் உள்ளன, ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்களைப் போல அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஒரு பத்திரிகையாளர் அவரிடம் கேட்டார். இதற்கு ராஜீவ்குமார் தெளிவான பதில் அளிக்கவில்லை. “நீங்கள் இப்படிக் கேள்விகள் கேட்பதற்கு முன்னால், கடந்த 11 தேர்தல்களின் போது வந்த புகார்களுக்கு நாங்கள் அளித்த பதில்களையும் பார்க்கவும்'' என்றார். “தேர்தல் விதிமுறை மீறல் குறித்து புகார் வந்தவுடன் அதற்கு உரிய பதில் அளிப்போம். பிரசாரம் செய்பவர் யாராக இருந்தாலும், உரிய நடவடிக்கை எடுப்போம்,'' என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு ஏன் தேர்தல் இல்லை? ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தாததற்கு தலைமை தேர்தல் ஆணையர் இரண்டு காரணங்களை கூறியுள்ளார். ஒன்று, “ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019 அமலுக்கு வந்தது. அப்போது காஷ்மீர் மாநிலத்தில் 107 சட்டமன்ற தொகுதிகள் இருந்ததன. அதில் 47 தொகுதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ளன. பின்னர் 2022இல் மீண்டும் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு இடங்களின் எண்ணிக்கை 107இல் இருந்து 114ஆக உயர்த்தப்பட்டது. அந்த தொகுதிகளுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மறுசீரமைப்புச் சட்டம் கடந்த டிசம்பரில் திருத்தப்பட்டது. ஆனால் மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் ஏற்கனவே முழுவீச்சில் ஈடுபட்டு வருவதால், காஷ்மீர் சட்டசபை தேர்தலை இப்போதைக்கு நடத்த முடியாது” என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்தார். இரண்டாவது காரணமாக, “நாங்கள் காஷ்மீர் மக்களைச் சந்திக்கச் சென்றோம். மக்களவை தேர்தலுடன், தங்கள் மாநிலத்தில் சட்டசபை தேர்தலையும் நடத்த, அங்குள்ள அரசியல் கட்சிகள் விரும்பின. ஆனால், அது சாத்தியமில்லை என அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏனெனில் குறைந்தது 1,000 வேட்பாளர்களாவது சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது. அவர்களின் நலனுக்காக பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட வேண்டும்” எனக் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES பணம் கைப்பற்றப்பட்டால் என்ன நடவடிக்கை? சமீபத்தில் நடந்த 11 மாநில தேர்தல்களில், சுமார் 3,500 கோடி ரூபாய் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர் ஒருவர், இவ்வளவு பணம் எப்போது பிடிபட்டது, யார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்டார். ஆனால், அந்த தகவலை தலைமை தேர்தல் ஆணையர் வெளியிடவில்லை. இதற்கு நேரடியாக பதில் அளிக்காமல், 2019 தேர்தலின்போது தமிழகத்தின் வேலூரில் பிடிபட்ட பணம் குறித்து பேசினார் ராஜீவ்குமார். “பல மாநிலங்களில் பணம் மிகவும் சக்தி வாய்ந்த தேர்தல் கருவியாக மாறிவிட்டது. இந்த பிரச்னையை நாங்கள் தீவிரமாக அணுகி வருகிறோம். சமீபத்தில் நடந்த தென் மாநிலத் தேர்தல்களில் இதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இந்த விஷயம் குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை,'' என பதிலளித்தார். https://www.bbc.com/tamil/articles/cyrzy2vpxero
  16. Gujarat University: Ramadan தொழுகையில் ஈடுபட்ட Muslim Students மீது தாக்குதல்? என்ன நடந்தது? குஜராத் பலகலைக்கழக விடுதியில் இரவு நேர தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு இஸ்லாமிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. என்ன நடந்தது இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்..
  17. பட மூலாதாரம்,BBC/UGC கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி குஜராத்தி குழு பதவி, நியூ டெல்லி 17 மார்ச் 2024 "எங்கள் படிப்பை எப்படி முடிப்போம் என்று நினைத்து நாங்கள் மிகவும் பயப்படுகிறோம்." குஜராத் பல்கலைக் கழக விடுதியில் சனிக்கிழமை இரவு தொழுகை நடத்தியதாகக் கூறப்படும் வெளிநாட்டு மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து, பிபிசி குஜராத்தி செய்தியாளர் ராக்ஸி கக்டேகர் சராவுடன் உரையாடியபோது, ஒரு மாணவர் தனது கவலையை இவ்வாறு வெளிப்படுத்தினார். பல்கலைக்கழக விடுதியின் ’ஏ’ பிளாக்கில் ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மாணவர்கள் மீது 25 பேர் கொண்ட கும்பல் நடத்திய இந்த தாக்குதலில், இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பிபிசி குஜராத்தி குழுவினர் அந்த இடத்தை அடைந்தபோது, விடுதி முழுவதும் அனைத்து இடங்களிலும் காவல்துறையினரும் பல்கலைக்கழக அதிகாரிகளும் காணப்பட்டனர். இதுதவிர, கல்வீச்சு தாக்குதலை உணர்த்தும் வகையில் ஆங்காங்கே கற்களும் உடைந்த வாகனங்களும் காணப்பட்டன. மேலும் மாணவர்களும் பயந்து, மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த மாணவர்களில் ஒருவரான நௌமன் பிபிசியிடம் பேசுகையில், “வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் இங்கு தங்குவது தற்போது பெரும் சவாலாக உள்ளது. சர்வதேச மாணவர்கள் தங்கும் விடுதி இது. இவர்கள் இங்கு எப்படி கூட்டம் கூட்டமாக வந்தனர் என்பது விசாரணைக்கு உரியது. அவர்கள் இங்கு அடிக்கடி வந்து, ’ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லுங்கள், இல்லையென்றால் கத்தியால் குத்தி கொன்று விடுவோம்’ என்று கூறிய சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடந்துள்ளன. மற்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இங்கு பெரும் ஆபத்து உள்ளது” என கூறினார். இதுதொடர்பாக, ஆமதாபாத் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். எனினும், இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் சில வீடியோக்கள் சனிக்கிழமை இரவு முதல் சமூக ஊடகங்களில் வெளியாகின. அதில், தாக்குதல் கும்பல் மாணவர்களின் வாகனங்களை சேதப்படுத்தியதையும் கற்களை வீசியதையும் காண முடிந்தது. மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் மதவாத முழக்கங்களை எழுப்பியதையும் கேட்க முடிந்தது. குஜராத் காங்கிரஸ் தலைவர் கியாசுதீன் ஷேக் மற்றும் எம்எல்ஏ இம்ரான் கெடவாலா ஆகியோர் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடு, குஜராத் காவல்துறை மற்றும் அரசின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பினர். மேலும், இந்த சம்பவத்தை 'வெகுஜன தீவிரவாதம்' என தெரிவித்துள்ள ஏஐஎம்ஐஎம் எம்.பி. அசாதுதீன் ஒவைசி, இதுகுறித்து பிரதமர் மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கேள்வி எழுப்பினார். இருப்பினும், குஜராத் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் நீரஜா குப்தா, இந்த முழு விஷயத்தையும் 'இரு குழுக்களிடையே ஏற்கனவே இருக்கும் கருத்து வேறுபாடுகள்' என்று குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “இரு குழுக்களிடையே ஏற்கனவே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்த நிலையில், இந்த சம்பவம் தற்போது நடந்துள்ளது. இது ஏன் நடந்தது என்பது இன்னும் விசாரணைக்கு உட்பட்டது. வெளிநாட்டு மாணவர்கள் வெளியில் தொழுகை நடத்திய போது மற்றொரு கூட்டத்தினருடன் கைகலப்பு ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த முழு விஷயத்தையும் பல்கலைக் கழகம் தீவிரமாகக் கவனித்து வருகிறது. போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்" என்றார். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் மாநில அரசின் உள்துறையும் ஆலோசனை நடத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இதை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கெடவாலா மற்றும் முன்னாள் எம்எல்ஏ கியாசுதீன் ஷேக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களையும் சந்தித்தனர். தொழுகை செய்ததால் தாக்குதலா? ஞாயிற்றுக்கிழமை முழு விஷயமும் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, ஆமதாபாத் நகர காவல்துறை ஆணையர் ஜி. எஸ். மாலிக்கும் சம்பவ இடத்திற்கு வந்தார். இச்சம்பவம் குறித்த முழு விவரங்களையும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது: “இந்த விடுதியில் சுமார் 75 மாணவர்கள் தங்கியுள்ளனர். இரவில், சில மாணவர்கள் வராண்டாவுக்கு வெளியே தொழுகை செய்து கொண்டிருந்தனர். அப்போது சிலர் வந்து மாணவர்களிடம் ஏன் இங்கு பிரார்த்தனை செய்கிறீர்கள் என்று கேட்டனர்” என்கிறார் அவர். பின்னர், இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது என காவல்துறை ஆணையர் தெரிவித்தார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, ஆமதாபாத் காவல்துறை ஆணையர் ஜி.எஸ். மாலிக் இதுகுறித்து போலீசார் அளித்த விவரத்தின்படி, இரவு 10 மணிக்கு சம்பவம் நடந்த சுமார் 50 நிமிடங்களில் இந்த விவகாரம் குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் உடனடியாக அங்கு வந்தனர். இச்சம்பவம் குறித்து கல்லூரியின் பாதுகாவலர் புகார் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மொத்தம் 25 பேர் கற்களை வீசியதாக காவல்துறை கூறுகிறது. "இந்த விவகாரத்தில் நாங்கள் உடனடியாக 20-25 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம், மேலும் எங்களின் ஒன்பது குழுக்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளன" என்று காவல்துறை ஆணையர் கூறினார். “இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் கைது செய்யப்படுவர். இந்த நடவடிக்கை முழுவதையும் இணை ஆணையர் (குற்றப்பிரிவு) கண்காணிப்பார்” என்றார். இச்சம்பவத்தில், இலங்கை மற்றும் தஜிகிஸ்தானை சேர்ந்த தலா ஒரு மாணவர் என இரு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாலிக் கூறினார். உண்மை சரிபார்ப்பு தளமான ஆல்ட் நியூஸ்-இன் (Alt News) இணை நிறுவனர், இச்சம்பவம் தொடர்பாக வைரலான வீடியோக்களை சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, ஏ.ஐ.எம்.ஐ.எம் எம்.பி அசாதுதீன் ஒவைசியும் இதுதொடர்பாக விமர்சித்து ட்வீட் செய்தார். காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கியாசுதீன் ஷேக் இந்த சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில், “மகத்தான ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியாவில் குஜராத் பல்கலைக் கழகத்தில் வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கில் நானும், எம்எல்ஏ இம்ரான் கெடவாலாவும் நீதி கேட்கிறோம்" என பதிவிட்டுள்ளார். அசாதுதீன் ஓவைசி கூறியது என்ன? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, அசாதுதீன் ஒவைசி முழு சம்பவத்தையும் விமர்சித்து ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி சமூக ஊடக தளமான எக்ஸ்-ல், "என்ன ஒரு அவமானம். ஒரு முஸ்லிம் அமைதியாக தனது மதத்தை கடைப்பிடிக்கும் போதுதான் உங்கள் பக்தியும், மத முழக்கங்களும் வெளிப்படுகின்றன. முஸ்லிம்களைப் பார்த்தாலே கோபம் வரும். இது வெகுஜன தீவிரவாதம் இல்லையா? இது நரேந்திர மோதி மற்றும் அமித்ஷாவின் சொந்த மாநிலம். ஒரு வலுவான செய்தியை வழங்க அவர்கள் இந்த விவகாரத்தில் தலையிடுவார்களா?" என கேள்வி எழுப்பினார். ஒவைசி வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை ’டேக்’ செய்து, இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வு நாட்டின் நற்பெயரைக் கெடுக்கிறது என்று அப்பதிவில் தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/cerw2m2xwy1o
  18. Published By: RAJEEBAN 18 MAR, 2024 | 12:07 PM காசாவின் அல்ஸிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் நள்ளிரவில் தாக்குதலொன்றை மேற்கொண்டது என பிபிசி தெரிவித்துள்ளது. மருத்துவமனைக்குள் டாங்கி மற்றும் துப்பாக்கி பிரயோக சத்தங்கள் கேட்கின்றன எனவும் தெரிவித்துள்ள பிபிசி தாங்கள் மிகவும் துல்லியமான உயர் இலக்கை மையப்படுத்திய தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர் எனவும் செய்தி வெளியிட்டுள்ளது. மருத்துவமனைக்குள் ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் ஒன்றுசேர்ந்து தாக்குதலில் ஈடுபடுகின்றனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாநகரில் உள்ள மருத்துவமனையில் பதற்றநிலை காணப்படுகின்றது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். டாங்கிகள் எங்களை சூழ்ந்துள்ளன நாங்கள் கூடாரங்களுக்குள் மறைந்திருக்கின்றோம் டாங்கிகளின் சத்தங்களை எங்களால் கேட்க முடிகின்றது என ஒருவர் தெரிவிக்கும் குரல்பதிவு கிடைத்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் வெளியாகும் உறுதிப்படுத்தப்படாத வீடியோக்களில் மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் துப்பாக்கி சத்தங்களை கேட்க முடிகின்றது. மருத்துவமனைக்குள் இராணுவத்தினர் காணப்படுகின்றனர். பலர் கொல்லப்பட்டுள்ளனர், காயமடைந்துள்ளனர், சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பேரழிவு நிலை காணப்படுகின்றது என ஊடகவியலாளர் ஒருவர் மருத்துவமனைக்குள் இருந்து தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய படையினர் மிகவும் உறுதியான புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் செயற்படுகின்றனர் என இஸ்ரேலிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179008
  19. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், யூ.எல். மப்றூக் பதவி, பிபிசி தமிழுக்காக 29 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் மட்டக்களப்பு பகுதியில் ஒரு வழக்கில் சிறைதண்டனை விதிக்கப்பட்ட இந்து நபர், அதிலிருந்து தப்பிப்பதற்காக இஸ்லாம் மதத்துக்கு மாறி, கடந்து எட்டு ஆண்டுகளாக மறைந்து வாழ்ந்து வந்திருக்கிறார். சமீபத்தில், அவரது உறவினர் ஒருவரின் காதல் விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் அவரை விசாரித்தபோது உண்மை வெளிவந்து, அவர் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். திரைப்படங்களில் வருவதுபோன்ற திருப்பங்கள் நிறைந்த இச்சம்பவத்தில் என்ன நடந்தது? இலங்கையில் ஒரு நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாகி – தனது மதத்தையும் பெயரையும் மாற்றிக் கொண்டு, எட்டு ஆண்டுகள் வேறொரு பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் வாழ்ந்து வந்த ஒரு நபரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமை காவல் நிலையத்தினர் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற உத்தரவுக்கிணங்க, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை நடராஜசிவம் என்பவர் (வயது 48) இந்து மதத்திலிருந்து இஸ்லாத்துக்கு மாறி, முஹம்மட் ஹுசைன் எனும் பெயரில் பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள வெலிக்கந்தை எனும் பகுதியில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார் என காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த 2016-ஆம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இவருக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், கடந்த எட்டு வருடங்களாக தலைமறைவாக இவர் வாழ்ந்து வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES என்ன நடந்தது? மட்டக்களப்பு – திருப்பெருந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த கிருஷ்ணப்பிள்ளை நடராஜசிவம் என்பவர் கடந்த 2007-ஆம் ஆண்டு நாவற்கேணி பகுதியைச் சேர்ந்த தங்கராசா தர்ஷினி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தர்ஷினியும் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு முதல் திருமணத்தில் இரண்டு ஆண், ஒரு பெண் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் நடராஜசிவம் தனது இரண்டாவது மனைவியின் குழந்தைகள் இருவரை அடித்து துன்புறுத்தியதாக 2009-ஆம் ஆண்டு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில், இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் நடராஜசிவம் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு எதிரான நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் அவர் ஆஜராகவில்லை என காவல்துறையினர் கூறுகின்றனர். இறுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடராஜசிவம் நீதிமன்றுக்கு சமூகமளிக்காத நிலையிலேயே அவருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி நடராஜசிவம் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு ஐந்து வருட சிறைதண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. மேலும், பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் இரண்டு லட்சம் ரூபாவை நஷ்ட ஈடாகச் செலுத்த வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் இரண்டு வருடங்கள் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் நீதிபதி தீர்ப்பளித்தார். அதேவேளை அந்த வழக்கில் அவருக்கு 20,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. அதனைச் செலுத்த தவறினால் மூன்று மாதங்கள் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது. படக்குறிப்பு, அவருக்கு எதிரான நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் நடராஜசிவம் ஆஜராகவில்லை காணாமல் போன நடராஜசிவம் ஆனால், தீர்ப்பு வழங்கப்பட்டபோது நீதிமன்றில் நடராஜசிவம் ஆஜராகாமையினால், அவருக்கு எதிரான பிடியாணையை நீதிபதி பிறப்பித்தார். இதனையடுத்து நடராஜசிவம் வசித்து வந்த முகவரியில் அவரை காவல்துறையினர் தேடிச்சென்றனர். ஆனால் அவர் அங்கு இருக்கவில்லை என்றும், குடும்பத்துடன் நடராஜசிவம் தலைமறைவாகியிருந்தார் எனவும் காவல்துறையினர் கூறுகின்றனர். இந்தப் பின்னணியில், தற்போது ‘யுத்திய’ எனும் பெயரில், இலங்கை காவல்துறையினர் மேற்கொண்டு வரும் சிறப்பு நடவடிக்கையின்கீழ், நடராஜசிவம் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமை காவல் நிலையத்தினர் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். போதைப்பொருள் தொடர்பான சந்தேக நபர்கள் மற்றும் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களை தேடிக் கைது செய்வதே ‘யுத்திய’ நடவடிக்கையின் இலக்காகும். அவ்வகையில், காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த மாதம் 11-ஆம் தேதி நடராஜசிவம் கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, அவர் ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். நடராஜசிவத்தின் மனைவி சொல்வது என்ன? இது தொடர்பாக நடராஜசிவத்தின் மனைவியிடம் பிபிசி தமிழ் பேசியது. 44 வயதாகும் அவர், இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு, தர்ஷினி எனும் தனது பெயரை தற்போது ராஷிதா என மாற்றிக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தனது கணவருக்கு எதிரான வழக்கு, முடிவுக்கு வந்து விட்டதாக தாம் விளங்கிக் கொண்டமையினால்தான், வேறு ஊருக்கு குடும்பத்துடன் தாங்கள் இடம்பெயர்ந்ததாகவும் கூறினார். தனது இரண்டாவது கணவர் துன்புறுத்தியதாகக் கூறப்படும் தன்னுடைய இரண்டு குழந்தைகள் நீதிமன்ற உத்தரவின்படி பராமரிப்பு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும், ஒரு கட்டத்தில் தன்னிடம் குழந்தைகளை நீதிமன்றம் ஒப்படைத்தமையினால், வழக்கு முடிவுக்கு வந்து விட்டதாக தாங்கள் நினைத்துக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். ”நடராஜசிவம் என்பவரை 2007-ஆம் ஆண்டு திருமணம் செய்தேன். அவர் எனது முதல் திருமணத்தில் பிறந்த மூன்று பிள்ளைகளையும் என்னுடன் வைத்து நன்றாகவே பராமரித்து வந்தார். இடையில் எனது முதல் கணவர், அவருக்கும் எனக்கும் பிறந்த பிள்ளைகளைத் தொடர்பு கொள்ள முயற்சித்ததில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. அதனால்தான் எனது முதல் திருமணத்தில் பிறந்த பிள்ளைகள் இருவரை, எனது இரண்டாவது கணவர் துன்புறுத்தியதாக வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது,” என்கிறார். கடந்த 2009-ஆம் ஆண்டு தனது இரண்டாவது கணவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டமையினை அடுத்து, அவர் துன்புறுத்தியதாகக் கூறப்படும் தன்னுடைய இரண்டு பிள்ளைகளும் சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும், கடந்த 2012-ஆம் ஆண்டு அந்தப் பிள்ளைகள் இருவரையும் நீதிமன்றம் தன்னிடம் ஒப்படைத்ததாகவும் நடராஜசிவமுடைய மனைவி கூறுகின்றார். ”குழந்தைகளை நீதிமன்றம் என்னிடம் ஒப்படைத்தமையினால் எனது கணவருக்கு எதிரான வழக்கு முடிவுக்கு வந்து விட்டதாக நாங்கள் நினைத்துக் கொண்டோம். அதனையடுத்து எனது முதற்கணவர் இருக்கும் பிரதேசத்தில் வசிப்பதற்கு விருப்பம் இல்லாமையினால் நாங்கள் வேறு இடத்துக்குச் சென்றோம்,” என அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES இஸ்லாம் மதத்துக்கு மாறியது ஏன்? இதன்போது, ‘இஸ்லாம் மதத்துக்கு ஏன் திடீரென மாறினீர்கள்?’ என நடராஜசிவத்தின் மனைவியிடம் கேட்டோம். “அப்போது எனக்கு வாழ்வதற்குச் சொந்தமாக வீடு இல்லை. ஒரு காணித்துண்டு நிலம் கூட இருக்கவில்லை. எனது சொந்தங்கள் எனக்கு உதவவில்லை. அப்போது எனது முதல் கணவரும் நான் வசித்த பகுதியில்தான் இருந்தார். அந்த நிலை எனக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. அதனால் குடும்பத்துடன் ஏறாவூர் பிரதேசத்துக்கு சென்றோம். அங்கு நாங்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறவுள்ளதாகச் சொன்னோம். எங்களின் கஷ்ட நிலையைக் கண்ட முஸ்லிம் காவல் உத்தியோகத்தர் ஒருவர் எங்களுக்கு அவரின் வீட்டில் மூன்று மாதங்கள் இருப்பதற்கு இடம் தந்தார். இஸ்லாத்துக்கு நாங்கள் மாறுவதற்கான சம்மதக் கடிதத்தை வழங்கினோம். காவல்துறை அறிக்கையினையும் பெற்றுக் கொடுத்தோம். அதன் பின்னர் ஏறாவூர் பள்ளிவாசலில் கடந்த 2012-ஆம் ஆண்டு நாங்கள் இஸ்லாத்தை குடும்பத்துடன் ஏற்றுக் கொண்டோம்,” என்றார். தானும் தனது கணவரும், தன்னுடைய முதல் திருமணத்தில் பிறந்த இரண்டு பிள்ளைகள் மற்றும் இரண்டாவது திருமணத்தில் அப்போது பிறந்திருந்த இரண்டு பிள்ளைகளுடனும் இஸ்லாத்தில் இணைந்து கொண்டதாக ராஷிதா கூறினார். தனது முதல் திருமணத்தில் பிறந்த ஆண் பிள்ளையொன்று அப்போது தனது அம்மாவிடம் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ராஷிதாவுக்கு இரண்டாவது திருமணத்தில் ஒரு பெண், இரண்டு ஆண் என, மூன்று பிள்ளைகள் உள்ளனர். தற்போது, தனது இரண்டாவது திருமணத்தில் பிறந்த பிள்ளைகள்தான் தங்களுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். முதல் திருமணத்தில் பிறந்த பிள்ளைகளில் பெண் பிள்ளை மீண்டும் இந்து மதத்துக்கு திரும்பி விட்டதாகவும், ஆண் பிள்ளைகள் இருவரில் ஒருவர் இஸ்லாமியப் பெயருடன் இருப்பதாகவும் அவர் கூறினார். “பின்னர் ஏறாவூரிலிருந்து பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள வெலிகந்தை சேனபுர எனும் பகுதிக்கு சென்றோம். எனது வற்புறுத்தலின் பேரில்தான் அங்கு நாங்கள் இடம்பெயர்ந்தோம்,” என்றார். “அங்கே ஒருவர் அன்பளிப்பாக ஒரு துண்டு நிலத்தை வழங்கினார். அதில் வீடு ஒன்றை நிர்மாணிக்கத் தொடங்கினோம். ஆனால் எனது கணவரின கூலித் தொழிலில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, வீட்டைக் கட்டி பூரணப்படுத்த எங்களால் முடியவில்லை. அதனால் அங்குள்ள மசூதி நிர்வாகம் எங்கள் வீட்டுக்கு கூரை அமைத்துக் கொடுத்தார்கள். அந்த ஊரில் வாக்காளர் பட்டியலில் எங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளோம். அரச நிவாரணங்கள் பெறுவதற்காக எங்கள் பெயர்களையும் அங்கு பதிந்துள்ளோம். எனது கணவர் பல மாவட்டங்கள் தாண்டி வேலைக்குச் சென்றுவருவார். நாங்கள் தலைமறைவாகியிருந்தால், இவ்வாறு எங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தி இருக்க மாட்டோம்,” என ராஷிதா குறிப்பிட்டார். படக்குறிப்பு, நடராஜசிவம் தனது இரண்டாவது மனைவியின் குழந்தைகள் இருவரை அடித்து துன்புறுத்தியதாக 2009-ஆம் ஆண்டு காவல்துறையினர் அவரை கைது செய்தனர் காதலால் வெளிவந்த குற்றம் இந்தப் பின்னணியில் தனது அக்காவின் மகன் ஒருவர், அவரின் காதலியை குடும்பத்தினருக்குத் தெரியாமல் திருமணம் செய்யும் பொருட்டு அழைத்துக் கொண்டு, வெலிக்கந்தையிலுள்ள தங்கள் வீட்டுக்கு அண்மையில் வந்ததாக ராஷிதா கூறினார். ”எனது அக்காவின் மகன், யுவதியொருவரை அழைத்து வந்து, எங்கள் வீட்டில் தங்கியிருந்தமை எனது கணவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அக்காவின் மகனையும் அவருடன் வந்திருந்த அவரின் காதலியையும் ஊருக்கு திருப்பி அனுப்பி விட்டேன்,” என்றார். ”அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியமை தொடர்பாக, காவல் நிலையத்தில் அவர்கள் குடும்பத்தினர் முறையிட்டிருந்ததால், எனது அக்கா மகனை காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அதன்போது எங்கள் வீட்டில் அவர் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது. அதனையடுத்து காவலர்கள் எங்களை விசாரித்தனர். அப்போதுதான் எனது கணவருக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை வழங்கப்பட்டமை பற்றி காவலர்கள் கூறினார்கள். எனது கணவருக்கு சிறைததண்டனை விதிக்கப்பட்டதை அப்படித்தான் அறிந்து கொண்டோம்,” என, ராஷிதா விவரித்தார். இதனையடுத்து தனது கணவரை இம்மாதம் 11-ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்ததாகவும், அவர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ராஷிதா கூறினார். இந்த நிலையில் தனது கணவரின் வழக்கு நடவடிக்கைக்காக நீதிமன்றில் ஆஜராகுவதற்கு சட்டத்தரணியொருவரை அணுகியுள்ளதாக ராஷிதா கூறினார். https://www.virakesari.lk/article/178997
  20. Published By: DIGITAL DESK 3 18 MAR, 2024 | 10:37 AM மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மேலதிக சேவைகள் இன்று திங்கட்கிழமை (18) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச கதிரியல் தொழிநுட்பவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் கடமை புரியும் கதிர் வீச்சு சிகிச்சையாளர்களுக்கு வழங்க வேண்டிய மேலதிக சேவைக்கால கொடுப்பனவை வைத்தியசாலை நிருவாகம் தமக்கு வழங்குவதில்லை எனத் தெரிவித்து மேலதிக சேவைகளை இடைநிறுத்தியுள்ளனர். இதே பதவி நிலையில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு ஏனைய வைத்தியசாலையில் இக்கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் நிலையில் தமக்கு மாத்திரம் வழங்கப்படுவதில்லை என கதிர் வீச்சு சிகிச்சையாளர்கள் தெரிவித்தனர். இதனால் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் ஏனைய சில மாவட்டங்களிலிருந்து சிகிச்சை பெற வரும் நோயாளர்கள் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த கொடுப்பவை வழங்காமை தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு தாம் அறிவித்ததற்கமைவாக, இந்த கொடுப்பனவை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும் அக்கொடுப்பனவு கதிர் வீச்சு சிகிச்சையாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்படவில்லை என கதிரியல் தொழிநுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/178985
  21. கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை சோம. அழகு பிற உயிரின் துயருக்கு நெக்குருகும் கண்ணோட்டம் வாய்க்கப் பெற்ற மனங்களெல்லாம் ஆசீர்வதிக்கப் பெற்றவையா? அல்லது கொடுஞ்சாபத்திற்கு உள்ளானவையா? மிகச் சாதாரண காட்சிகளே போதுமானவையாக இருக்கின்றன, நம்மை மொத்தமாக உருக்குலையச் செய்ய. பரவலான பொருளில் பயன்படுத்தியிருக்கிறேன் எனினும் ‘சாதாரணம்’ என்பதற்கு இங்கு அளவுகோல் என்ன? உங்கள் சாதாரணங்கள் எனக்குப் பெரும்பாலும் ‘ரணங்கள்’. உதாரணமாக, நம் தாத்தா பிறப்பதற்கு முன்பிருந்தே நிற்கும் மரம் ஒன்று ‘சாலை விரிவாக்கம்’, ‘மின்கம்பிக்கு இடைஞ்சல்’… போன்ற அற்பக் காரணங்களுக்காக வெட்டப்படுவதை யாரேனும் நேரில் நின்று பார்த்திருக்கிறீர்களா? சுருங்கிய மனங்களுடன் விசாலமான உலகைக் காண முயலும் விந்தை, ‘மண்ணோ டியைந்த மரத்தனையர்’க்கு மட்டுமே கைவந்த கொலை! யாருக்கும் எத்தீங்கும் இழைக்காத மரத்தோடான மாந்தர்களின் ஒப்பீடே இங்கு தவறு! இது survival of the fittest கோட்பாட்டினுள் வராது; வேண்டுமானால் Survival of the foolest என்று கொள்ளலாம். கண்களுள் சிறையிட முடியாத அளவு பெரிதாக கம்பீரமாக நின்ற மரம் பரிதாபமாகச் சாய்ந்து விழும் போது தரையுடன் சேர்ந்து நம் மனதும் ஒரு கணம் அதிர்ந்து அடங்கும். நிலத்தில் லேசாகக் கிளம்பும் புழுதியில் அம்மரத்திற்காகப் பூமியில் இருந்து எழும் விசும்பல்களைக் கேட்டிருக்கிறீர்களா? காய்ந்து கிடக்கும் நம் மனங்களுக்கும் சேர்த்துத் தன் வேர்களில் சேமித்து வைத்திருக்கும் ஈரத்தைக் காட்சிப்படுத்தி ஒரு அலட்சியப் பார்வையில் கடைசியாக ஒரு முறை நம்மை எள்ளி நகையாடும். எத்தனை மனிதர்களுக்கு நிழல் தந்திருக்கும்! எத்தனை சிறுவர்களின் விளையாட்டுத் தோழனாய் இருந்திருக்கும்! கால சுழற்சியில் மாறிப் போன மனிதர்களுக்கும் அருகிப் போன கருணைக்கும் நின்ற சாட்சி அல்லவோ இப்போது வீழ்த்தப்பட்டுக் கிடக்கிறது! இரை தேடச் சென்று மாலை வீடடையும் பறவைகள் இன்று ஸ்தம்பித்துப் போகாதா? மனசாட்சியே இல்லாமல் ஒறுத்தாற்றுபவர்களிடம் எல்லாம் எப்படி பொறுத்தாற்றும் பண்புடன் நடந்து கொள்வது? இப்படியே நீண்டு கொண்டிருக்கும் சிந்தனையிலிருந்து எங்ஙனம் மீள்வது? ‘நம்ம பொழப்ப பாப்போம்’ போன்ற வழமையான வறட்டுத்தனத்தின் பின் ஒளிந்து கொண்டா? இது போலவே இன்னும் நிறைய… கிழிந்த சட்டையும் கலைந்த தலையும் காய்ந்த வயிறுமாகக் குப்பைத்தொட்டியை நிறைத்திருக்கும் மனிதத்திற்கு இடையே போனகம் தேடி ஆர்வத்தோடு துழாவும் ஒரு சக உயிர்; யாரிடமேனும் இரந்து நிற்கும் வாழ்ந்து கெட்டவர்கள்; உயிருக்கு உயிரான ஒருவரைப் போதிய பண வசதி இல்லாததால் ஒரு கொடூர நோய்க்குக் கண் முன்னரே கொஞ்சம் கொஞ்சமாக இழப்பது கண்டு செய்வதறியாது நிர்க்கதியாகிப் போனவர்கள்; குடும்பத்தினரின் வயிறு காயாமல் இருக்கவென, அவர்களுள் சிலரே தன் மகளை/சகோதரியை/மனைவியை நெறிபிறழ்ந்த வாழ்வுமுறைக்கு வற்புறுத்தும் கொடுமை அரங்கேற, அதை கனத்துக் காய்ந்து வற்றிப் போன உணர்வுகளுடன் ஏற்கத் துணியும் பெண்; விண்ணில் போர் விமானங்களின் விகாரமான சத்தத்தையும் அதனை விஞ்சும் வகையில் மண்ணில் இருந்து கிளம்பும் ஓலத்தையும் மொத்தமாகத் தன்னுள் அடக்கியபடி அமைதியாக நடு சாலையில் கிடக்கும் குருதி தோய்ந்த குழந்தையின் ஷூ (எவ்வளவு கோரமான புகைப்படம்!); பட்டாம்பூச்சியின் வண்ணத்திற்குப் பதில் பணியின் பொருட்டு கரி அப்பிய பிஞ்சு விரல்கள் – இவை போன்ற இன்னும் எத்தனையோ அவலங்களையெல்லாம் கேட்க/காண நேர்ந்த அந்நொடிக்குப் பிறகு கண்கள் காணும் எதுவும் மூளைக்குச் செல்வதில்லை. “ஏன் இவர்களுக்கு இப்படி நிகழ்கிறது? எனக்கு மட்டும் என்ன பெரிய தகுதி இருக்கிறது பாதுகாப்பான சூழலும் ஓரளவு நல்ல பொருளாதார நிலையும் வாய்க்கப் பெற? மனிதனின் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட உலகில் நிலவும் பாரபட்சம் எதன் அடிப்படையில்? இதற்கெல்லாம் சட்டையைப் பிடித்து உலுக்கி வளமான வசவுகளைப் பொழியவாவது அந்தக் கடவுள் என்ற ஒன்று இருந்து தொலைத்திருக்கலாம்……” ஒரு குமிழ் போல என்னுள் பெரிதாகிக் கொண்டே செல்லும் எண்ணவோட்டங்களை உடைக்கும் பொருட்டு ஒவ்வொரு முறையும் சிறிய கல் ஒன்று எறியப்படும் – “என்ன யோசிச்சுட்டு இருக்க?” என்னும் கேள்வியாக. சட்டென நிகழ் உலகத்திற்குத் தரதரவென இழுத்து வரும் இக்கேள்விக்குரியவரிடம் உண்மை பதிலைத் தர நான் என்ன பித்தியா? கொஞ்சம் பித்திதான் என்றாலும் கூட உலகத்தவரின் அளவீட்டில் இன்னும் பிரகடனப்படுத்தும் அளவிற்குச் செல்லவில்லை. உண்மையில் நான் யோசித்தவற்றை அப்படியே சொன்னால் என்னவாகும்? ஏற இறங்க ஒரு பார்வை கிட்டும். மிதமிஞ்சிப் போனால் ஒரு “சரி விடு… அதுக்கு நீ என்ன செய்ய முடியும்? இப்படி எத்தனையோ பேர் இருக்காங்க”. “என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்பதே இங்கு வெட்கக்கேடுதானே? இந்தக் குற்றவுணர்வை எப்படி அநாயசமாகத் தூக்கிப் போடுகிறீர்கள்?” என்றெல்லாம் பதிலுக்குக் கேட்டு வைக்க முடியாது. பின்னர் அக்மார்க் முத்திரையே குத்திவிடுவார்கள். எனவே ஆழ்மனதில் ஒரு நொடி மௌன அஞ்சலி செலுத்தி இந்நுண்ணுணர்வுகளில் இருந்து விடுபட இயலாத தருணங்களில் எல்லாம் Weltschmerz என்னும் வார்த்தைக்கு என்னை ஒப்புக்கொடுக்க முயல்கிறேன். முயற்சி மட்டும்தானே செய்ய முடியும்? இதற்கெல்லாம் ஆறுதல் என்று ஒன்று இருக்கவா செய்கிறது? உச்சகட்டமாக மனம் அழுந்தி பச்சாதாபத்தில் மேலெழும் கோபம் அவர்களை அந்நிலைக்குத் தள்ளிய சூழல்கள், அதற்குக் காரணமாய் அமைந்தவர்கள் ஆகியவற்றின் பக்கம் திரும்பி ஏதோ நெறிப்படுத்தப்பட்டுவிட்டதைப் போல் போலி ஆறுதலடைய முயலும். இல்லையெனில் ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்…’ல் இருந்து ‘நமக்கு இருக்குற பிரச்சனையில இதையெல்லாம்….’க்கு மனம் மடைமாறி கழிவிரக்கத்தில் முற்று பெறும். ‘இப்படியே ஒவ்வொண்ணா பாத்துட்டு இருந்தா நம்ம வாழ்க்கைய வாழவே முடியாது’ – நடைமுறைக்கு ஒவ்வாதவை என வகுக்கப்பட்டுக் கழித்துக் கட்டப்பட்ட ‘ஒவ்வொன்று’களில்தான் நானும் ஒரு ஓரத்தில் ஒண்டிக் கிடக்கிறேன் போலும். உலகம் இப்படித்தான் இயங்கும் என்ற எதார்த்தம் எனக்கும் தெரியாமல் இல்லை. ஆனாலும் ‘கண்ணோட்டம்’ என்னும் இவ்வுணர்வு சில நேரங்களில் மனதளவில் முடக்கித்தான் போடுகிறது. கண்ணில் படுபவர்களுக்கும் ஓரளவுதான் உதவ முடிகிறது. அப்படி அவர்கள் ‘ஒவ்வொருவருக்கும்’ உதவி செய்வதென்பது ஒரு தனியாளாக சாத்தியமில்லை ஆகையால் நான் முழுமையாகச் சூடிக் கொள்ள இயலாத அக்கழிபெருங் காரிகை, நான் ‘உண்மை(உள்ளமை) நிலக்குப் பொறை’ என மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறது. மனிதத்திற்கான அச்சாரமே பச்சாதாபம் தானே? உலகின் குரூரங்களை எல்லாம் காணுற்ற பிறகும் அவற்றை மனதின் ஏதோ ஒரு இடுக்கில் அமுக்கி ஆழப் புதைத்த பின் நிகழும் இயல்பான நகர்தலில் மனித மனங்கள்(என்னுடையதும்தான்!) ரொம்பவே பயங்கரமானதாகத் தெரிகின்றன. சோம. அழகு https://puthu.thinnai.com/2024/03/17/கண்ணோட்டம்-என்னும்-கழிபெ/
  22. தமிழ் மக்களின் பாரம்பரிய நிலத்தினை சிதைத்து அவற்றை சிங்கள பௌத்த அடையாளங்களால் உருமாற்றம் செய்து தமிழர் தாயகம் உரிமை கோரிக்கையை சிதைக்க முயற்சி - வெடுக்குநாறி சம்பவங்கள் குறித்து பிரித்தானிய தமிழர் பேரவை Published By: RAJEEBAN 18 MAR, 2024 | 10:43 AM வெடுக்குநாறிமலை ஆலய சிவராத்திரி வழிபாட்டு நிகழ்வில் பொலிஸாரால் ஏற்படுத்தப்பட்ட தடங்கல்கள் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம்வெளியிட்டுள்ளது இது தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது சிறிலங்கா அரசும் அதன் இராணுவஇ போலீஸ் நிர்வாகங்களும் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் கைதுகள் நில அபகரிப்பு மற்றும் பொது மக்களின் அன்றாட செயற்பாடுகளில் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள் இடையூறுகள் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. கடந்த வெடுக்குநாறிமலை ஆலய சிவராத்திரி வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட ஆலய பூசகரின் கைதும் பக்தர்களின் கைதும் கண்டனத்துக்கு உரியதுடன் இவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். மேலும் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் விக்கிரகங்கள் மீள கையளிக்கப்பட்டு அவற்றினை அபகரித்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்க வேண்டிய அரச நிர்வாகம் அதற்கு மாறாக பல்லாண்டு காலமாக வழிபட்டு வரும் தமிழ் மக்களின் மீது அரச படைகளை ஏவி விட்டு அச்சுறுத்த முனைகின்றது. அடக்குமுறைகள்தான் எம் மக்களை போராட நிர்ப்பந்தித்தது என்ற யதார்த்தத்தை சிங்கள தேசம் புறக்கணித்தபடியால்தான் இன்று அது கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறன கைதுகளும் தமிழர்களின் வழிபாட்டு உரிமைகளை தடுத்து வழிபாட்டு தளங்களை அபகரிப்பதும் தொல்லியல் திணைக்களம் போன்ற அரச இயந்திரத்தின் அங்கங்களை ஏவி விடுவதும் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலத்தினை சிதைத்து துண்டம் துண்டமாக்கி அவற்றை சிங்கள பௌத்த அடையாளங்களால் உருமாற்றம் செய்து தொடர்ச்சியான நிலப் பரப்பினை கொண்ட தமிழர் தாயகம் என்ற எம் உரிமை கோரிக்கையை சிதைப்பது சிறிலங்கா அரசின் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பின் திட்டமிட்ட மூலோபாயம் ஆகும். நல்லிணக்கம் பற்றிக் கூறி கொள்ளும் ரணில் அரசு இவ்வாறான செயற்பாடுகள் மூலம் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வது இலங்கை தீவில் நிலையான அமைதி ஸ்திரத் தன்மைஇ வளர்ச்சி ஒரு போதும் சாத்தியப்படாது என்பதனை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சர்வதேச தளத்தில் பன்முனைப்பட்ட முடிவெடுக்கும் சக்திகளிடம் எடுத்துரைக்க வேண்டும் என்பதனை தோழமையுடன் வேண்டிக் கொள்கின்றோம். பிரித்தானிய தமிழர் பேரவை கடந்த பல வருடங்களாக தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் இவ்வாறான இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் சர்வதேச சமூகத்திடமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையிலும் எடுத்துரைத்து வருவது போன்று இப்பொழுது இடம்பெறும் ஐ.நா.மனித உரிமைக்கழக மார்ச் மாதக் கூட்டத் தொடரிலும் தகமை வாய்ந்த முடிவெடுக்கும் மையங்களுக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் பதிவு செய்யப்படும். இவ்வாறான தொடரும் நில ஆக்கிரமிப்பு சமூக பொருளாதார அடிப்படைகளில் தமிழர் தேசத்தினை சிதைத்து பலவீனப்படுத்தல்இ தங்குநிலையில் வைத்திருத்தல் தாயகத்தில் தமிழ் மக்கள் வாழ முடியாத சூழ்நிலைகளை உருவாக்கி அவர்களை மண்ணிலிருந்து வெளியேற்றுவது தமிழர் அரசியல் பிரதிநிதித்துவத்தை சிதைப்பதும் செயலிழக்கச் செய்வதுமான செயல்பாடுகளை இடைநிறுத்தி தம்மை தாமே நிர்வகிக்கக் கூடிய இடைக்கால நிர்வாகப் பொறிமுறை ஒன்றினை உடனடியாக உருவாக்குமாறு இந்தியா உட்பட சர்வதேச தளப் பரப்பில் முக்கிய உறுப்பு நாடுகளிடம் எமது இக் கோரிக்கையை முன்வைக்கின்றோம். https://www.virakesari.lk/article/178984
  23. 18 MAR, 2024 | 10:50 AM புத்தளம் மாவட்டத்தில் 'தலக்கூரா' என மக்களால் அழைக்கப்படும் சுமார் 5 அடிக்கு அதிக நீளமுடைய கொம்பன் யானை நேற்று (17) மாலை மற்றுமொரு யானையுடன் உணவு உட்கொண்ட காட்சி கமராவில் பதிவாகியது. புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மயிலாங்குளம் மாந்தோட்டம் பகுதியில் நேற்று மாலை கொம்பன் யானை மற்றுமொரு யானையுடன் மேய்ந்துகொண்டிருந்தது. இந்த கொம்பன் யானை கடந்த காலங்களில் கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட தேவனுவர காட்டுப் பகுதியில் நடமாடிய நிலையில், தற்போது உணவுக்காக பல கிலோமீற்றர் சென்று மயிலாங்குளம் பகுதியில் சுற்றித் திரிந்து உணவுகளை உட்கொண்டு வருகிறது. இதன் தந்தம் தரையில் உரசுமளவு சுமார் 5 அடிக்கும் அதிக நீளத்தை கொண்டிருப்பதே இக்கொம்பன் யானையின் விசேட அம்சமாகும். இதனாலேயே இந்த யானைக்கு 'தலக்கூரா' என பெயரை அப்பகுதி மக்கள் சூட்டியுள்ளனர். குறித்த அப்பாவி கொம்பன் யானை இதுவரை எவரையும் தாக்கி, எந்தவொரு தொல்லையும் கொடுக்காத 'தலக்கூரா' பட்டாசு கொழுத்தினால் பயத்தில் காட்டினுள் விரண்டு ஓடிவிடும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் மயிலாங்குளம் மற்றும் தேவனுவர பகுதிகளில் சஞ்சரித்து வந்த 'வலகம்பா' மற்றும் 'வாசல' என மக்களால் பெயர் சூட்டப்பட்ட தந்தம் கொண்ட யானைகள் மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்தன. நாட்டிலுள்ள இதுபோன்ற தந்தம் கொண்ட யானைகளை பாதுகாப்பது மிகப் பெரும் கடமை என்றும் பல்வேறு தரப்பினர் தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/178982
  24. கோலியால் முடியாததை ஸ்மிரிதி மந்தனா சாதிக்க உதவிய 8-ஆவது ஓவரில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எட்டாவது ஓவரில் ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறிப் போனது 18 மார்ச் 2024, 03:02 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐ.பி.எல். தொடரில் 16 ஆண்டுகளாக ஆர்.சி.பி. ஆடவர் அணி கோப்பை வெல்ல முடியாமல் தவிக்கும் நிலையில், மகளிர் போட்டிகள் தொடங்கிய இரண்டாவது சீசனிலேயே அந்த அணி பட்டம் வென்று அசத்தியுள்ளது. அதுவும், நடப்புத் தொடரில் மிகவும் வலுவான அணிகளாக வலம் வந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி ஆர்.சி.பி. மகளிர் அணி மகுடம் சூடியுள்ளது. மகளிர் பிரீமியர் லீக் தொடரில் அச்சுறுத்தும் தொடக்க ஜோடியாக வலம் வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் மெக் லேன்னிங் - ஷாஃபாலி வர்மா இணையின் அதிரடி சரவெடியுடன் ஆட்டத்தை தொடங்கினாலும் எட்டாவது ஓவரில் ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறிப் போனது. அந்த ஓவரில் என்ன நிகழ்ந்தது? அதிக எதிர்பார்ப்புடன் தொடங்கிய ஆர்.சி.பி. - டெல்லி கேப்பிட்டல்ஸ் இறுதிப் போட்டி மகளிர் பிரீமியர் லீக் இரண்டாவது சீசனின் இறுதிப்போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், லீக் போட்டிகளில் முதலிடம் பிடித்து வலுவான அணியாக கம்பீரமாக வலம் வந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை ஆர்.சி.பி. அணி எதிர்கொண்டது. இறுதிப்போட்டியில் பங்கேற்ற இரு அணிகளுமே முதலில் பேட்டிங் செய்வதையே விரும்பின என்பது அந்த அணி கேப்டன்களின் பேட்டியில் வெளிப்பட்டது. நடப்புத் தொடரில் 7 முறை முதலில் பேட் செய்தே வெற்றி பெற்ற டெல்லி அணி டாஸில் வென்றதும் தயக்கமே இல்லாமல் அந்த பாணியை தொடர தீர்மானித்தது. டெல்லி கேப்டன் மெக் லேன்னிங் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். ஆர்.சி.பி. கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவும் தனது அணி முதலில் பேட்டிங் செய்வதையே விரும்பியதாக கூறினார். எனினும், சரியான லைன் மற்றும் லென்த்தில் பந்துவீசி டெல்லி அணிக்கு நெருக்கடி கொடுப்போம் என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES மெக் லேன்னிங் - ஷாஃபாலி வர்மா அதிரடி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு வழக்கம் போல் மென் லேன்னிங் - ஷாஃபாலி வர்மா ஜோடி அதிரடி தொடக்கம் தந்தது. குறிப்பாக, ஷாஃபாலி வர்மாவின் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமைந்தது. இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் மளமளவென எகிறியது. இருவரையும் கட்டுப்படுத்த முடியாமல் ஆர்.சி.பி. பவுலர்கள் திணறித்தான் போனார்கள். ஏழே ஓவர்களில் டெல்லி அணி 64 ரன்களைக் குவித்து ஆர்.சி.பி. மகளிர் அணியை திகைக்க வைத்தது. திருப்புமுனையாக அமைந்த எட்டாவது ஓவர் மெக் லேன்னிங் - ஷாஃபாலி இணையின் அதிரடியால் விழி பிதுங்கிப் போயிருந்த ஆர்.சி.பி. அணிக்கு சோஃபி மெலினெக்ஸ் வீசிய ஆட்டத்தின் எட்டாவது ஓவர் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஓவரின் முதல் பந்திலேயே அதிரடி வீராங்கனை ஷாஃபாலி வர்மாவை வீழ்த்தி ஆர்.சி.பி. அணிக்கு நிம்மதி தந்தார் சோஃபி. ஷாஃபாலி 27 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 2 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 44 ரன்களை குவித்திருந்தார். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், அலைஸ் கேப்சே ஆகிய இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு அதிர்ச்சி தந்தார். இருவரையும் கிளீன் போல்டாக்கி அசத்தினார் சோஃபி. இந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து அதிரடி வீராங்கனை ஷாபாஃலி உள்ளிட்ட 3 பேரை அவுட்டாக்கி ஆர்.சி.பி. அணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார் சோஃபி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மெக் லேன்னிங் - ஷாஃபாலி இணையின் அதிரடியால் விழி பிதுங்கிப் போயிருந்த ஆர்.சி.பி. அணிக்கு சோஃபி மெலினெக்ஸ் வீசிய ஆட்டத்தின் எட்டாவது ஓவர் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஆர்.சி.பி. சுழற்பந்துவீச்சில் அடங்கிப் போன டெல்லி ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணியை தூக்கி நிறுத்த கேப்டன் மெக் லேன்னிங் கடுமையாக போராடினார். ஆனால், அவரை 23 ரன்களில் எல்.பி.டபிள்யூ முறையில் ஸ்ரேயங்கா பாட்டில் அவுட்டாக்கினார். அதன் பின்னர் டெல்லி அணியை தலைநிமிர ஆர்.சி.பி. சுழற்பந்துவீச்சாளர்கள் விடவே இல்லை. டெல்லி அணி வீராங்கனைகள் களமிறங்குவதும் அவுட்டாகி வெளியேறுவதுமாக இருந்தனர். முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.3 ஓவர்களிலேயே 113 ரன்களுக்கு அடங்கிப் போனது. ஆர்.சி.பி. அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்ரேயங்கா பாட்டில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சோபி மெலினெக்ஸ் மொத்தம் 20 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். சுழற்பந்துவீச்சாளர் ஆஷா சோபனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்.சி.பி. சிறப்பான தொடக்கம் நடப்புச் சாம்பியனாக திகழ்ந்த வலுவான மும்பை இந்தியன்சை எலிமினேட்டர் சுற்றில் வீழ்த்திய ஆர்.சி.பி. அணி, டெல்லி கேப்பிட்டல்சை குறைந்த ரன்களில் சுருட்டிவிட்டதால் நம்பிக்கையுடன் இலக்கைத் துரத்த களமிறங்கியது. கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவும், சோஃபி டிவைனும் ஆட்டத்தை தொடங்கினர். இருவருமே அவசரப்படாமல், அதேநேரத்தில் ஏதுவான பந்துகளை அடித்தாடி வெற்றிக்குத் தேவையான ரன்களை சேகரித்த வண்ணம் இருந்தனர். இதனால், ஆர்.சி.பி. அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்தது. இருவருமே இறுதிப்போட்டி தந்த அழுத்தத்தையும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பந்துவீச்சையும் திறம்பட சமாளித்தனர். முதல் விக்கெட்டிற்கு 49 ரன் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. சோஃபி டிவைன் 27 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 32 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து களம் கண்ட எலிஸி பெர்ரியும் கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார். பட மூலாதாரம்,GETTY IMAGES மந்தனா அவுட்டானதும் சற்று நெருக்கடி கேப்டன் ஸ்மிரிதி மந்தனா கடைசி வரை நின்று வெற்றியை உறுதி செய்திட போராடினார். ஆனால், அது நடக்கவில்லை. ஆர்.சி.பி. அணியின் ஸ்கோர் 82 ஆக இருந்த போது மந்தனா 31 ரன் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அப்போது, ஆர்.சி.பி. அணி வெற்றி பெற 36 பந்துகளில் 32 ரன்கள் தேவைப்பட்டன. மந்தனா அவுட்டானதும் சற்றே நம்பிக்கை பெற்ற டெல்லி மகளிர் அணியினர் தாக்குதலை தீவிரப்படுத்தினர். அவர்களது துல்லியமான பந்துவீச்சால் ஆர்.சி.பி. அணியின் ரன் வேகம் மந்தமானது. ஆர்.சி.பி. எளிதான வெற்றி டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டி, கடைசி ஓவர் வரை நீடித்தது. எனினும், 8 விக்கெட்டுகள் கைவசம் இருந்ததால் ஆர்.சி.பி. அணியினர் முகத்தில் பெரிய அளவில் நெருக்கடி தென்படவில்லை. கடைசி ஓவரின் முதலிரு பந்துகளிலும் தலா ஒரு ரன் வர, மூன்றாவது பந்தில் ரிச்சா கோஷ் பவுண்டரி அடித்து ஆர்.சி.பி. அணியை எளிதாக வெற்றிபெறச் செய்தார். இந்த வெற்றியின் மூலம், மகளிர் பிரீமியர் லீக் தொடங்கிய இரண்டாவது சீசனிலேயே ஆர்.சி.பி. அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றிய ஆர்.சி.பி. வீராங்கனை சோஃபி மெலினெக்ஸ் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கேப்டன் ஸ்மிரிதி மந்தனா கடைசி வரை நின்று வெற்றியை உறுதி செய்திட போராடினார். ஆனால், அது நடக்கவில்லை. ஆர்.சி.பி. அணிக்கு வெற்றி தேடித்தந்த வியூகம் இறுதிப்போட்டியில் டெல்லி அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய கடைசிப் போட்டியில் ஆடிய அதே வீராங்கனைகளே இறுதிப்போட்டியிலும் இடம் பெற்றனர். டெல்லியின் சொந்த மைதானமான இந்த மைதானத்தில் ஆடிய இரு போட்டிகளிலுமே அந்த அணி வெற்றி பெற்றிருந்தது. அத்துடன், மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஆர்.சி.பி. அணிக்கு எதிராக அதுவரை ஆடியிருந்த 4 போட்டிகளிலுமே டெல்லி அணியே வெற்றி பெற்றிருந்தது. இறுதிப்போட்டியில் டாசும் சாதகமாக அமைய, நடப்புத் தொடரில் மிகவும் வலுவான அணியாக வலம் வந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியே கோப்பையை வெல்லும் என்று நிபுணர்கள், ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆட்டத்தில் தொடக்கத்தில் டெல்லி அணியின் கேப்டன் மெக் லேன்னிங்கும் ஷாஃபாலி வர்மாவும் ஆடிய அதிரடி ஆட்டம் அதனை நிரூபிப்பது போன்றே அமைந்தது. ஆனால், சோஃபி மெக்னேக்ஸ் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்த, அதன் பிறகு ஆட்டத்தை ஆர்.சி.பி. அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். இதனால், 64/0 என்றிருந்த டெல்லி அணியின் ஸ்கோர் 113 ரன்களுக்கு ஆல்அவுட் என்றாகிப் போனது. சுழற்பந்துவீச்சாளர் ஸ்ரேயங்கா பாட்டில் வைத்த பொறியில் சிக்கி டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் மெக் லேன்னிங் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவர் டெல்லி அணியின் பின்வரிசை விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்தினார். மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் ஷோபனா சிக்கனமாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டெல்லி அணி குறைந்த ரன்களில் சுருண்டதில் ஆர்.சி.பி. சுழற்பந்துவீச்சாளர்களே பெரும் பங்கு வகித்தனர். 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய ஆர்.சி.பி. அதற்கான பலனையும் பெற்றது. அதேநேரத்தில், 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களம் கண்ட டெல்லி அணிக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. வெற்றி இலக்கும் எளிதானது என்பதால் ஆர்.சி.பி. அணிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சாளர்களால் பெரிய அளவில் நெருக்கடி கொடுக்க முடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்.சி.பி. அணியின் கோப்பை தாகம் மகளிர் போட்டிகள் தொடங்கிய இரண்டாவது சீசனிலேயே தணிந்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகும் ஆர்.சி.பி. மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஆர்.சி.பி. மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதுமே பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பெரிய அளவில் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். காரணம், ஐ.பி.எல். தொடரில் 16 ஆண்டுகளாக கோலி, டிவில்லியர்ஸ், கெயில் போன்ற முன்னணி வீரர்களுடன் வலுவான அணியாக ஆர்.சி.பி. திகழ்ந்தாலும் அந்த அணியால் இன்றுவரை கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆர்.சி.பி. அணியின் கோப்பை தாகம் மகளிர் போட்டிகள் தொடங்கிய இரண்டாவது சீசனிலேயே தணிந்துள்ளது. அந்த அணியின் வீராங்கனைகள் கோப்பையை வென்று அதன் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளனர். ஆர்.சி.பி. மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றிருப்பதை குறிப்பிட்டு, கோலி புகைப்படத்துடன் அந்த அணி ரசிகர்கள் பலரும் எதிர்வரும் ஐ.பி.எல்.லில் கோப்பை வெல்ல வேண்டி தங்களது எதிர்பார்ப்புகளை பகிர்ந்து வருகின்றனர். https://www.bbc.com/tamil/articles/cn3m2xxz14eo
  25. Published By: VISHNU 17 MAR, 2024 | 08:25 PM பாதாள உலக குழுவைச் சேர்ந்தவர்களுக்கு போலியான கடவுச்சீட்டு தயாரித்தார்கள் என்ற சந்தேகத்தில் குடிவரவு- குடியகல்வு திணைக்கள பிரதிக் கட்டுப்பாட்டாளரும் முன்னாள் கட்டுப்பாட்டாளரும் ஞாயிற்றுக்கிழமை (17) மாலை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவருக்கு போலிக் கடவுச்சீட்டு தயாரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரோஹன பிரேமரத்ன தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. https://www.virakesari.lk/article/178960

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.