Everything posted by ஏராளன்
-
ரயில் ஆசன முன்பதிவில் இன்று முதல் புதிய மாற்றம்!
ரயில் இருக்கைகளுக்கான முன்பதிவுகள் இன்று முதல் ஒன்லைன் மூலம் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ஒன்லைன் மூலம் ரயில் நிலையங்களின் ஊடாக தமக்கான இருக்கைகளை முன்பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் எம்.ஜே இந்திபொல தெரிவித்துள்ளார். இதன்படி, பயணிகள் பயணிப்பதற்கு 30 நாட்களுக்கு முன்னதாக தமக்கான இருக்கைகளை முன்பதிவு செய்ய முடியும் என்பதுடன், இன்று காலை 7 மணிமுதல் அதற்கான பதிவு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/295697
-
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு 9 இலட்சம் ரூபா கடனாம்!
14 MAR, 2024 | 11:21 AM நவகமுவ பெரஹரவின் நேரடி ஒலிபரப்புக்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட வேண்டிய 9 இலட்சம் ரூபாவை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே செலுத்தத் தவறியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற நவகமு பிரதேச விஹாரை ஒன்றின் 188 ஆவது ரந்தோலி பெரஹராவை நேரடியாக ஒளிபரப்புவதற்காக இந்தத் தொகை செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. டயானா கமகேவின் வேண்டுகோளுக்கிணங்க ரூபாவாஹினி கூட்டுத்தாபனம் நவகமுவ பெரஹராவை நேரடி ஒளிபரப்பு செய்துள்ளது. இந்நிலையில், குறித்த நிலுவைத் தொகை தொடர்பில் ரூபவாஹினி கூடடுத்தாபன கணக்காளர் இராஜாங்க அமைச்சரிடம் பலமுறை நினைவூட்டியும் இதுவரை குறித்த தொகை வழங்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. https://www.virakesari.lk/article/178693
-
கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய
வைத்தியர் ஏ.டி சுதர்ஷன கைது! சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஏ.டி சுதர்ஷன கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அவர் நேற்றிரவு வருகைத் தந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல மற்றும் அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக வழக்கு இன்று மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/295681
-
ஒருமித்து குரல் எழுப்புங்கள் ! வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்
14 MAR, 2024 | 11:15 AM அடக்குமுறைகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி சி.ஜெனிற்றா தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…… நீதிக்கான பொறிமுறைகளை தேடும் நோக்குடன் ஜனநாயக போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம். தற்போது இந்த நாட்டிலே தமிழ் மக்கள் மேற்கொள்ளும் அறவழியான போராட்டங்களை கூட நசுக்கும் வகையான உத்தரவுகளை வழங்கி கைது செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இது ஒரு மோசமான நிலையினையே காட்டுகின்றது. ஆலயத்தை வழிபடுவதற்கு கூட தமிழர்களுக்கு இன்று உரிமை இல்லை. இப்படியான நாட்டில் இனி நாம் எப்படி வாழமுடியும். வெடுக்குநாறி மலை ஆலயத்தில் பூஜை பொருட்கள் கூட சப்பாத்துகால்களால் தட்டிவிடப்பட்டது. அப்பாவிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எனவே இவ்வாறான அடக்குமுறைகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருமித்து குரல் கொடுக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. அத்துடன் காணாமல் போனோர் அலுவலகத்தால் மரணச்சான்றிதழ் வழங்கும் விடயத்தை நாம் எப்போதோ நிராகரித்து விட்டோம். இருப்பினும் அப்பாவி மக்களை ஏமாற்றி வலுக்கட்டாயமாக பதியும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றது. இவ்வாறானா கேவலமான செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுக்கின்றனர். இருப்பினும் நாம் சர்வதேச நீதியை கோரி தொடர்ச்சியாக போராடிவருகின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/178679
-
சாகல ரத்நாயக்கவின் சகோதரர் இலங்கை வங்கியின் தலைவராக நியமனம்
இலங்கை வங்கிக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வங்கி நேற்று(13) கொழும்பு பங்குச்சந்தைக்கு அறிவித்தது. இலங்கை வங்கியின் புதிய தலைவராக காவன் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை தலைவராக செயற்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா, நேற்று முதல் அந்த பதவியில் இருந்து விலகுவதாகவும் புதிய தலைவர் நாளை முதல் கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் வங்கி தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சாகல ரத்நாயக்கவின் சகோதரரான காவன் ரத்நாயக்க கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் பட்டதாரியாவார். https://thinakkural.lk/article/295663
-
வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.
யாழ். வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை; சந்தேகநபர்களை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி Published By: DIGITAL DESK 3 14 MAR, 2024 | 10:06 AM யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதான ஐவரையும் 24 மணி நேரம் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க மல்லாகம் நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. காரைநகர் பகுதிக்கு சென்று விட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்த கணவன் மனைவியை பொன்னாலை பாலத்திற்கு அருகில் வைத்து இரு வாகனத்தில் வன்முறை கும்பல் கடத்தி சென்று கணவனை தாக்கி படுகாயம் ஏற்படுத்திய நிலையில் கணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கிளிநொச்சி பகுதியில் தலைமறைவாக இருந்த அராலி பகுதியை சேர்ந்த நான்கு சந்தேக நபர்களை கைது செய்தனர். அதேவேளை வட்டுக்கோட்டை பகுதியில் வைத்தும் ஒரு சந்தேகநபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அராலி பகுதியில் ஆட்களற்ற வீடொன்றில் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பொலிஸார் மீட்டனர். காரினுள் இரத்த கறைகள் காணப்பபட்டதுடன், கொட்டான்கள், இரும்பு கம்பி என்பவையும் காணப்பட்டுள்ளன. இந்நிலையில் கைது செய்யப்பட்ட 05 சந்தேக நபர்களையும், மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய பொலிஸார், பிரதான சந்தேக நபரை கைது செய்யவில்லை எனவும், கொலை சம்பவம் தொடர்பிலும், கொலை தொடர்பிலான சான்று ஆதாரங்களை பெற வேண்டிய தேவைகளும் உள்ளதனால், ஐந்து சந்தேக நபர்களையும் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய மன்றில் அனுமதி கோரினர். அதனை அடுத்து ஐந்து சந்தேகநபர்களையும் பொலிஸ் காவலில் வைத்து 24 மணி நேரம் விசாரணைகளை முன்னெடுக்க மன்று அனுமதி அளித்தது. https://www.virakesari.lk/article/178680
-
சீன இராணுவத்திடமிருந்து வெடிகுண்டுகளை செயழிலக்கச் செய்யும் இயந்திரங்கள் அன்பளிப்பு
Published By: DIGITAL DESK 3 14 MAR, 2024 | 11:09 AM (எம்.மனோசித்ரா) சீன இராணுவ உதவி திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சிற்கு வெடிகுண்டுகளை செயழிலக்கச் செய்யும் இயந்திரங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூ சென்ஹொங், பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோரிடம் குறித்த உபகரணங்கள் புதன்கிழமை (13) கையளிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தலைமையகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உபகரணங்களைப் பெற்றுக் கொள்ளும் ஆவணத்தில் ஜெனரல் கமல் குணரத்தன கையெழுத்திட்தோடு, அவற்றை கையளிக்கும் ஆவணத்தில் சீனத்தூதுவர் கையெழுத்திட்டார். இவ்வாறு கைளிக்கப்பட்ட உபகரணத் தொகுதியில் வெடிபொருட்களை இனங்கண்டு அவற்றை செயழிக்கச் செய்யும் REOD 4000 என்ற ரொபோ இயந்திரங்கள் 18, வெடிபொருட்களை ஒரு இடத்திலிருந்து பிரிதொரு இடத்துக்கு கொண்டு செல்லும் இயலுமையுடைய REOD 400 ரக ரோபோக்கள் 18, வெடி பொருட்களிடமிருந்து பாதுகாக்கக் கூடிய 10 பாதுகாப்பு அங்கிகள், வெடி பொருட்களிடமிருந்து பாதுகாப்பு பெறக் கூடிய 10 வாயு தாங்கிகள் மற்றும் வெடிபொருட்களை செயழிக்கச் செய்யும் இயந்திரங்கள் என்பன உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/178691
-
அஞ்சல் திணைக்களத்தின் எச்சரிக்கை!
அஞ்சல் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி குறுந்தகவலை அனுப்பி இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற குறுஞ்செய்திகளுக்கு மக்கள் தங்கள் ரகசிய தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு அஞ்சல் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இலங்கை அஞ்சல் மூலம் விநியோகிக்கப்படும் பொதிகளுக்கான கட்டணத்தை செலுத்துமாறு பொதுமக்களுக்கு போலியான குறுஞ்செய்தி அனுப்பி கடனட்டை தரவு திருட்டு மோசடி இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. இலங்கை அஞ்சல், இலங்கை அஞ்சல் திணைக்களம், SL POST, Sri Lanka Post போன்றவற்றின் பெயர்களைப் பயன்படுத்தியும் இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பயன்படுத்தியும் இந்த மோசடி இடம்பெற்று வருகிறது. இதன்படி, கடனட்டை தொடர்பான தகவல்களை குறுஞ்செய்தி மூலம் விசாரிக்கும் போது அதனை வழங்க வேண்டாம் என்றும், கடனட்டை மூலம் பொதி தொடர்பான எந்தப் பரிவர்த்தனையும் மேற்கொள்ளப்படாது எனவும் அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களைக் அறிய விரும்பினால், அஞ்சல் திணைக்களத்தின் ஹெல்ப்லைன் 1950, தகவல் தொழில்நுட்பப் பிரிவு 011 2542104, 011 2334728, 0112335978, 011 2687229, 011 2330072 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். https://thinakkural.lk/article/295702
-
சென்னையில் ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் - ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் பற்றி அதிகாரிகள் கூறுவது என்ன?
ஜாபர் சாதிக்கின் உண்மைமுகம் இதுதான்- உடைக்கும் பாரிசாலன் | கொடி பறக்குது | Aadhan Tamil
-
தென்னாசிய பிராந்தியத்தில் அதிக நீரிழிவு நோயாளர்களைக் கொண்ட நாடாக இலங்கை ; சீனி, பால் மா பாவனையே பிரதான காரணம் - ரமேஷ் பத்திரன
மருத்துவர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் தொடர்ச்சியாக மக்களை அறிவுறுத்தவேண்டும். சமவிகித உணவு, உடலுழைப்பு போன்றவை அருகிவருகிறது.
- மயிலம்மா.
-
மேய்ப்பன்
அந்த முயலா(ஆ)மை கதை இங்க என்னமா பொருந்திப் போகுது!
- மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு
-
குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்: தெற்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி
அமெரிக்க அதிபர் தேர்தல்: மீண்டும் பைடன் vs டிரம்ப் - பெரும்பான்மை பெற்றது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கைலா எப்ஸ்டீன் பதவி, பிபிசி செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரும் நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான தமது கட்சிகளின் சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான பிரதிநிதித்துவ பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவைப் பெற்றுள்ளனர். நான்கு மாகாணங்கள், ஒரு அமெரிக்க பிரதேசம் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் ஜனநாயகக் கட்சியினர் செவ்வாயன்று தங்கள் முதன்மைத் தேர்வுகளை நடத்தினர். இதன் விளைவாக, அமெரிக்க வாக்காளர்கள் எட்டு மாதங்களில் அதிபர் தேர்தலை எதிர்கொள்வார்கள். இந்தக் கோடையில் நடைபெறும் கட்சி மாநாடுகளில் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள். கடந்த செவ்வாயன்று 81 வயதான அதிபர் ஜோ பைடன் பேசியபோது, "டிரம்ப் முன்வைக்கும் அச்சுறுத்தல் முன்னெப்போதையும் விட அதிகமாக இருக்கும் தருணத்தில் வாக்காளர்கள், தான் மீண்டும் போட்டியிடும் முயற்சியை ஆதரிப்பதை கௌரவமாகக் கருதுவதாக" கூறினார். நேர்மறையான பொருளாதாரப் போக்குகளை மேற்கோள் காட்டி, அமெரிக்கா "மீண்டும் வருவதற்கான(பாதையின்) நடுவில்" இருப்பதாக அவர் கூறினார். ஆனால் ஒரு ஜனநாயக நாடாக அதன் எதிர்காலத்திற்கு சவால்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES அத்துடன் கருக்கலைப்பு கட்டுப்பாடுகளை நிறைவேற்றவும் சமூக திட்டங்களைல் குறைக்கவும் முயல்பவர்களிடம் இருந்தும் சவால்களை எதிரக்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார். "அமெரிக்க மக்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எங்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்," என பைடன் தனது பிரசாரத்திற்கான தேர்தல் அறிக்கையில் கூறினார். பைடன் தற்போது அதிபர் பதவியில் இருப்பதால், இது அவருக்கு இயல்பாகவே பலத்தைத் தருகிறது. அவர், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்வாவதற்கு அவர் கடுமையான சவால்களை எதர்கொள்ளவில்லை. அவர் வயது மூப்பின் காரணமாக, அவர் அதிபர் பதவிக்கான கடமைகளை நிறைவேற்றுவதில் சிக்கல் இருப்பதாக வாக்காளர்களிடம் இருந்து கருத்துகள் வந்தபோதிலும், அவர் சார்ந்திருந்த கட்சி அவருக்கு பக்கபலமாக இருந்தது. இதற்கிடையில், 77 வயதான டிரம்ப், குடியரசுக் கட்சியின் வாக்காளர் தளத்தில் மிகவும் பிரபலமாக இருக்கிறார். இது அவரை நன்கு நிதியளிக்கப்பட்ட போட்டியாளர்களைவிட அதிக ஆதரவு பெற்று வேட்பாளர் தேர்வில் வெற்றி பெறுவதற்கு உந்தியது. பட மூலாதாரம்,GETTY IMAGES டிரம்ப், குற்றங்களுக்கு எதிராகப் போராடவும், உள்நாட்டு எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிநாட்டு இறக்குமதிக்கு வரி விதிக்கவும், யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், உலக விவகாரங்களில் அமெரிக்காவை முதன்மைப்படுத்தும் அணுகுமுறையை மீண்டும் தொடங்கவும் சபதம் செய்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் இருவரும் இதுவரை கட்சியில் நடந்த வேட்பாளர் தேர்வுக்கான போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். நவம்பரில் அதிபர் பைடனுக்கும், முன்னாள் அதிபர் டிரம்புக்கும் இடையில் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால், அமெரிக்கர்கள் அதிருப்தி அடையும் வகையில் சில சமிக்ஞைகள் இருந்தபோதிலும், அவர்கள் மீண்டும் போட்டியிடுவது தீர்மானிக்கப்பட்டதாகவே தோன்றியது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் தங்கள் முதன்மை வேட்பாளர் தேர்வு செய்வதற்கான விதிகளில் சிறு வித்தியாசங்கள் இருந்தாலும், செயல்முறை அடிப்படையில் இண்டும் ஒன்றுதான். ஒவ்வொரு மாகாணத்திற்கும் கட்சி பிரதிநிதிகளுக்கு ஒரு குறிப்பிட்ட பங்கு ஒதுக்கப்படுகிறது, அவை வெற்றிபெறும் வேட்பாளருக்கு ஒட்டுமொத்தமாகவோ அல்லது விகிதாசாரமாகவோ முடிவுகளின் அடிப்படையில் வழங்கப்படும். குடியரசுக் கட்சி வேட்பாளர் தனது அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற முதன்மை சீசனில் குறைந்தபட்சம் கட்சியின் 1,215 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற வேண்டும். அதேநேரம் ஒரு ஜனநாயகக் கட்சி 1,968 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற வேண்டும். செவ்வாயன்று, குடியரசுக் கட்சியினர் மிசிசிப்பி, ஜார்ஜியா மற்றும் வாஷிங்டன் மாகாணத்தில் முதன்மைக் கூட்டங்களையும், ஹவாயில் ஒரு காக்கஸையும் நடத்தினர். ஜனநாயகக் கட்சியினர், இதற்கிடையில், ஜார்ஜியா, வாஷிங்டன் மற்றும் மிசிசிப்பி மாகாணங்களிலும், வடக்கு மரியானா தீவுகளிலும், வெளிநாடுகளில் வாழும் ஜனநாயகக் கட்சியினருக்காகவும் முதன்மைப் போட்டிகளை நடத்தினர். பட மூலாதாரம்,GETTY IMAGES பைடன் மற்றும் டிரம்பின் முக்கிய போட்டியாளர்கள் செவ்வாய்கிழமை முதன்மை போட்டிகளுக்கு முன்பே வெளியேறிவிட்டனர், எனவே முடிவுகள் அனைத்தும் உறுதியாக இருந்தன. டிரம்பின் கடைசி போட்டியாளரான முன்னாள் ஐநா தூதர் நிக்கி ஹேலி, சூப்பர் செவ்வாய் அன்று டிரம்பிடம் 14 மாகாணங்களை இழந்த பின்னர் இந்த மாதத் தொடக்கத்தில் போட்டியில் இருந்து வெளியேறினார். இன்னும் பல மாகாணங்கள் தங்கள் முதன்மைப் போட்டிகளை நடத்தவில்லை என்றாலும், டிரம்ப் மற்றும் பைடனுக்கு தேவைப்படும் பிரதிநிதிகளின் ஆதரவுக்கு மேல் உள்ளது. இதனால், 2024 பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடும் இப்போது திறம்பட நடந்து வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5, 2024 அன்று நடைபெறவுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cnekg3rze2ro
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ஐ.பி.எல் 2024 தொடர்: பயிற்சியை தொடங்கிய சி.எஸ்.கே கெப்டன் டோனி இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22 ஆம் திகதி தொடங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதற்காக சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனையொட்டி அணியின் கெப்டன் மகேந்திர சிங் டோனி சென்னை வந்தடைந்தார். இந்நிலையில் கெப்டன் டோனி தனது பயிற்சியை இன்று தொடங்கியுள்ளார். இது தொடர்பாக புகைப்படத்தை சி.எஸ்.கே அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு ஒன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி, கறுப்பு சந்தையில் அதிக விலைக்கு விற்றதாக சர்ச்சை எழுந்ததை ஒட்டி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/295433
-
முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் நாளை இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலை
முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார்: இலங்கை பாஸ்போர்ட் கிடைத்ததும் எங்கே செல்கின்றனர்? பட மூலாதாரம்,HANDOUT கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு இலங்கை அரசின் கடவுச் சீட்டை பெறுவதற்கான முயற்சிகள் துவங்கியுள்ளன. அவர்கள் எங்கே செல்லவிருக்கிறார்கள்? முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 2022ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு மே மாதத்தில் பேரறிவாளனும் நவம்பர் மாதத்தில் நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர். இதில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இந்தியர்கள். ஸ்ரீஹரன் என்ற முருகன் (நளினியின் கணவர்), சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இவர்களில் சாந்தன் இலங்கை பாஸ்போர்ட் மூலமாகவே இந்தியா வந்தவர். முருகனிடமும் இலங்கையின் பாஸ்போர்ட் இருந்தது. ராபர்ட் பயஸும் ஜெயக்குமாரும் 1990 செப்டம்பரில் தமிழகத்திற்கு வந்தவுடன் அகதிகளாகப் பதிவுசெய்து கொண்டவர்கள். ராபர்ட் பயஸின் மைத்துனர்தான் ஜெயக்குமார். உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இந்தியர்கள் என்பதால் தத்தம் வீடுகளுக்குச் சென்றனர். ஆனால், இலங்கை குடிமக்களான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய நான்கு பேரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். பட மூலாதாரம்,STR/AFP VIA GETTY IMAGES முகாமில் இருந்து விடுவித்து தாங்கள் விரும்பும் நாட்டிற்குத் தங்களை அனுப்பி வைக்க வேண்டுமென தொடர்ந்து இவர்கள் கோரி வந்தனர். ஆனால், இவர்களிடம் செல்லத்தக்க பாஸ்போர்ட்கள் இல்லாத காரணத்தால், தொடர்ந்து திருச்சி சிறப்பு முகாமிலேயே வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் இருந்த சாந்தனுக்கு உடல்நலம் குன்றியது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கான பயண ஆவணங்கள் வழங்கப்பட்டன. இருந்தபோதும், அவர் மருத்துவமனையிலேயே காலமானார். அவரது உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து மீதமுள்ள மூவருக்கும் பயண ஆவணங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது. இந்நிலையில்தான், சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், லண்டனில் வசிக்கும் தன் மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதால் தனக்கும் தன் கணவருக்கும் விசாவுக்காக விண்ணப்பித்து இருந்ததாகவும் நேர்காணலுக்காக ஜனவரி 30ஆம் தேதி அழைக்கப்பட்ட நிலையில், தான் மட்டும் நேர்காணலில் கலந்துகொண்டதாகவும் தெரிவித்திருந்தார். முருகன் சிறப்பு முகாமில் இருந்ததால் நேர்காணலில் கலந்துகொள்ள முடியவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். திருச்சி சிறப்பு முகாமில் உள்ள மோசமான சூழிலின் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் இரண்டு பேர் இறந்துவிட்ட நிலையில், தனது கணவருக்கு எதுவும் நடப்பதற்கு முன்பாக அவருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனவும் நளினி கோரியிருந்தார். பட மூலாதாரம்,HANDOUT இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் மார்ச் 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மூவரின் நேர்காணலுக்காக புதன்கிழமையன்று சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலையில் திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவரும் காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். நண்பகல் 12 மணியளவில் அவர்கள் தூதரகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இவர்களைக் காண்பதற்கு, நளினி, ஜெயக்குமாரின் குடும்பத்தினர், அவர்களது வழக்கறிஞர்கள் ஆகியோர் வந்திருந்தனர். சுமார் 2 மணியளவில் விண்ணப்பிப்பதற்கான பணிகள் முடிந்து அவர்கள் மீண்டும் திருச்சி சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் எங்கே செல்லவிருக்கின்றனர்? பட மூலாதாரம்,GETTY IMAGES நளினிக்கு இந்திய குடியுரிமை இருப்பதால் விடுதலைக்குப் பிறகு அவர் இங்கேயே வசித்து வருகிறார். நளினி - முருகன் தம்பதியின் மகள் பிரிட்டனில் இருப்பதால், முருகனுக்கு பாஸ்போர்ட் கிடைத்தால் இருவரும் பிரிட்டன் செல்ல விரும்புகின்றனர். இதற்கான விண்ணப்பங்களை நளினி சமர்ப்பித்திருக்கிறார். ஜெயக்குமாரை பொறுத்தவரை அவருடைய மனைவி இந்தியாவை சேர்ந்தவர். அவர் தனது மகன் பார்த்திபன் மற்றும் பேரக் குழந்தைகளுடன் சென்னையில்தான் வசித்து வருகிறார். ஆனால், பாஸ்போர்ட் கிடைக்கும் பட்சத்தில் ஜெர்மனியில் உள்ள தனது சகோதரருடன் சென்று வசிக்க ஜெயக்குமார் விரும்புவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ராபர்ட் பயஸை பொறுத்தவரை, அவருடைய உறவினர்கள் நெதர்லாந்தில் வசிக்கின்றனர். ஆகவே அவர் நெதர்லாந்து செல்ல விரும்புவதாகச் சொல்லப்படுகிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 பேர் தண்டிக்கப்பட்டனர். இதில் 13 பேர் இலங்கைத் தமிழர்கள். உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டபோது ஏழு பேரைத் தவிர மற்ற 19 பேர் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட 19 பேரில் 9 பேர் இலங்கைத் தமிழர்கள். இவர்கள் அனைவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அகதிகளுக்கான சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டனர். அவர்களில் பாஸ்போர்ட் வைத்திருந்த, முறையான விசாக்களில் இந்தியா வந்த 3 பேர் உடனடியாக இலங்கைக்குச் சென்றனர். மீதமிருந்தவர்கள் சில நாட்களில் இலங்கையிலும் அதன் பிறகு வெளிநாடுகளிலும் குடியேறினர். https://www.bbc.com/tamil/articles/cy6zdvd6056o
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக உள்ளோம் – அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த புதின் ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு ரஷியா போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, அணு ஆயுத போரைத்தூண்டும் வகையில் எந்த ஒரு செயலிலும் அமெரிக்கா ஈடுபடாது என்று நம்புகிறோம். ஆனாலும் நாங்கள் அதற்கு தயாராகவே உள்ளோம். என்றார். அப்போது அவரிடம் உக்ரைன் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்துவது குறித்து சிந்தித்தது உண்டா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு புதின், அதற்கான அவசியம் இருந்ததில்லை. உக்ரைனில் மாஸ்கோ அதன் இலக்கை அடையும். பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் எப்போதும் தயாராவே உள்ளோம். என்றார் இவ்வாறு அணு ஆயுதங்கள் பயன்படுத்துவது தொடர்பாக புதின் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. https://thinakkural.lk/article/295606
-
விரைவில் தேசிய கல்விக் கொள்கை : பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு - விஜயதாச ராஜபக்ஷ
தேசிய கல்விக் கொள்கை விரைவில் தேசிய கல்விக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண சபை பாடசாலைகள் என்ற பாகுபாடின்றி ஒரே வகையான பாடசாலைகளை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “கல்வி சீர்திருத்தக் கொள்கைக் கட்டமைப்பில் தேசியப் பாடசாலைகள் மற்றும் மாகாண சபைப் பாடசாலைகள் என்றவாரு இன்றி ஒரே வகையான பாடசாலையே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் கண்காணிப்புக் குழு ஆலோசித்து வருகிறது. இது ஒரேயடியாக முடியாது, ஆனால் அது படிப்படியாக, படிப்படியாக சாத்தியமாகும். மாணவர்களுக்கான அனைத்தும் கல்வி சீர்திருத்தங்களுடன் வருகின்றன. வகுப்பறையில், ஒரு பாடத்தின் அலகு முடிந்ததும், ஒரு பயிற்சி செய்யப்படுகிறது. அது புள்ளிகள் வழங்கப்பட்டு முடிக்கப்படும். பல நாடுகள் இப்படித்தான் இயங்குகின்றன. கல்விக் கொள்கை உள்ளது. இது காலப்போக்கில் மாற வேண்டும். அந்த வித்தியாசத்தை நாங்கள் ஏற்படுத்துகிறோம். இது பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் செய்யப்படும். அப்போது அமைச்சர் மாறினாலும் திட்டங்கள் மாறாது. மாற்றம் வேண்டும் எனில் அதை மீண்டும் பாராளுமன்றத்திலேயே செய்ய வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/295630
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
6 இலங்கையர்கள் படுகொலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்! கனடாவில் 6 இலங்கையர்களை படுகொலை செய்ய வேட்டையாடும் கத்திக்கு ஒத்த கத்தியையே சந்தேகநபர் பயன்படுத்தியுள்ளதாக ஒட்டாவா பொலிஸ் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். மேலும், இலங்கையர்கள் ஆறு பேரையும் கொலை செய்ய சந்தேகநபர் ஒரு கத்தியினை பயன்படுத்தினாரா அல்லது பல கத்திகள் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படுகொலைச் சம்பவத்தின் சந்தேகநபரான 19 வயதான இலங்கையைச் சேர்ந்த ஃபேப்ரியோ டி சொய்சா எதிர்வரும் வியாழக்கிழமை ஒட்டாவா நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார். இதேவேளை, ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் ஒட்டாவா பொலிஸார் பல தவறான தகவல்களை வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த புதன்கிழமை இரவு கனடாவின் ஒட்டாவா பகுதியில் இலங்கையை சேர்ந்த தாயும், அவரது நான்கு குழந்தைகளும் மற்றுமொரு இலங்கையரும் கொல்லப்பட்டதுடன் பெண்ணின் கணவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார். இந்நிலையில், இந்த சம்பவத்தை துப்பாக்கிச்சூடு என்று ஒட்டாவா பொலிஸாரால் முதலில் தவறாக தகவல் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், பொலிஸ் ஊடக சந்திப்பின் போது சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 19 வயதுடைய சந்தேகநபரின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இறந்தவர்களின் பெயர் பட்டியலை மூன்று முறை சரி செய்து, மூன்றாவது மின்னஞ்சல் செய்தியில் இருந்து இறுதி பெயர் பட்டியல் பெறப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த தவறுகளை ஒப்புக்கொண்ட ஒட்டாவா பொலிஸார், கொலை விசாரணைகள் மிகவும் சிக்கலானது என்றும், அவ்வப்போது தகவல்கள் மாறுவதாகவும் கூறியுள்ளனர். https://thinakkural.lk/article/295593
-
பாடசாலை பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி
தரம் எட்டு மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவை கற்கும் வாய்ப்பு தரம் எட்டு மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்துடன் (IT) செயற்கை நுண்ணறிவை (AI) கற்க மார்ச் 19 முதல் வாய்ப்பு கிடைக்கிறது. எதிர்காலத்தில் நாட்டிலுள்ள ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அவர்களின் திறன்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப எதிர்கால இலக்குகளை அடைவதற்குத் தேவையான பின்னணியை ஏற்படுத்திக் கொடுப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/295578
-
இணையத்தளம் ஊடாக அதிகரிக்கும் குற்றச்செயல்கள்
இணையத்தளம் ஊடாக இடம்பெறும் குற்றச் செயல்கள் தற்போது அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை 423 கணினி மோசடிகள் பதிவாகியுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுகோல தெரிவித்துள்ளார். “இணையத்தளம் மூலம் ஒன்லைன் வேலைகளை வழங்குவதாகக் கூறி மோசடிகள் அதிகரித்துள்ளன, அதே போல் கடந்த ஆண்டு முதல் இந்த ஆண்டின் கடந்த இரண்டு மாதங்களில் கிரிப்டோ-கரன்சி மோசடிகள் மற்றும் பிரமிட் மோசடிகள் அதிகரித்துள்ளன. 2023 இல் 1,609 இணைய மோசடிகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டில் , ஜனவரி மாதத்தில் மாத்திரம் இதுபோன்ற 110 மோசடிகள் பதிவாகியுள்ளன. பெப்ரவரியில் 213 இணைய மோசடிகள் பதிவாகியுள்ளன, மார்ச் மாதத்தில் இதுவரை 100 மோசடிகள் பதிவாகியுள்ளன. சில பண மோசடி முறைப்பாடுகள் கிடைத்தவுடன் அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை அளித்து, கணினி குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இணையத்தில் நிகழும் கணினி குற்றங்கள் குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், இணையத்தளம் ஊடாக நிர்வாண புகைப்படங்கள் வெளியிடப்படும் என விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளன. 2023ல் இதுபோன்ற 775 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அத்தோடு 1609 இணையதள மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் தொடர்பில் 5,188 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. குழந்தைகள் சம்பந்தப்பட்ட 98 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில், தனிநபர்கள் கணக்குகளுக்குள் ஊடுருவியமை தொடர்பில் 7,499 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. ஊடுருவியமை மற்றும் போலி கணக்குகளின் முறைப்பாடுகளே அதிகரித்துள்ளன.” என்றார். https://thinakkural.lk/article/295572
-
இன்றைய வானிலை
மே வரை வெப்பமான காலநிலை தொடரும் நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை இந்த ஆண்டு மே மாதம் வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன, வரட்சியான காலநிலை மார்ச் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து ஏப்ரல் இறுதி வரை தொடரும். மே மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் போதுதான் வெப்பமான காலநிலை முடிவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/295542
-
மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை இலட்சக்கணக்கில் அதிகரிப்பதில் எந்தளவுக்கு நியாயம் - விமல் வீரவன்ச
ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் கையளிப்பு இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹங்ச அபேரத்னவிடம் கையளித்துள்ளார். இன்று கையளிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்தில் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் நிதியமைச்சரின் இணக்கப்பாட்டைப் பெறுவது கட்டாயமாக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கி சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம், சட்டமா அதிபரின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும் என பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார். https://thinakkural.lk/article/295620
-
வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.
யாழில் இளம் குடும்பஸ்தரின் கொலைக்கு பயன்படுத்திய கார் மீட்பு! Published By: DIGITAL DESK 3 13 MAR, 2024 | 02:48 PM யாழ்ப்பாணம் பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகில் இருந்து திங்கட்கிழமை 23 வயதுடைய தவச்செல்வம் பவித்திரன் என்ற குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கொலை குற்றச்சாட்டின் கீழ் ஐந்து சந்தேகநபர்கள் செவ்வாய்க்கிழமை (12), யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸாரால் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கார் அராலி மேற்கு நொச்சிக்காட்டு பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அவ்விடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸாரும் தடயங்களை சேகரித்து வருகின்றனர். குறித்த குடும்பஸ்தர் மீது, காரில் வைத்தே தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாவனையற்ற வீடு ஒன்றிற்கு முன்னால் இருந்து இந்த கார் மீட்கப்பட்டுள்ளது. குறித்த காரானது நீண்ட காலம் பாவனை இல்லாமல் இருந்தது போல் தூசிபடிந்தவாறு காணப்படுவதுடன், காரின் உள்ளே இரத்தக்கறையும், கொட்டன்களும் காணப்படுகிறது. https://www.virakesari.lk/article/178622
-
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டர்களுக்கு கைவிலங்குடன் தொடர்ந்தும் சிகிச்சை
வெடுக்குநாறிமலை சம்பவம்; கைதுசெய்யப்பட்டவர்கள் உண்ணாவிரதம்!! Published By: DIGITAL DESK 3 13 MAR, 2024 | 02:45 PM வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர். வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் நேற்றையதினம் மாலை அடைக்கப்பட்டனர்.இந்நிலையில் தங்களை விடுதலைசெய்யகோரி அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக நேற்றயதினம் காலை நீதிமன்றிற்கு கொண்டுசெல்லப்படும் போதே அவர்கள் உணவினை எடுத்திருக்கவில்லை. இந்நிலையில் இன்றையதினமும் அவர்கள் உணவினை உட்கொள்வதற்கு மறுத்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட எட்டுபேரில் ஆலய பூசாரியார் த.மதிமுகராசா மற்றும் து. தமிழ்ச்செல்வன், தி.கிந்துயன், சு.தவபாலசிங்கம், விநாயகமூர்த்தி ஆகியோரே உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/178625