Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: VISHNU 15 MAR, 2024 | 01:49 AM வடபகுதியின் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகப் பல மில்லியன் நிதியை வழங்க சீனா, இந்தியா, மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தைச் சரியானதாக பயன்படுத்திக்கொள்வது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறுகையில்; பாரிய பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்திருந்தாலும் தற்போதுள்ள அரசின் சரியான அரசியல் வழிநடத்தல் காரணமாக அந்த நிலையிலிருந்து நாடு தற்போது மீண்டு வருகின்ற நிலையில் வடக்கின் அபிவிருத்திக்கு இன்றைய அரசு அதிகளவான முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. அதன் அடிப்படையில் வெளிநாடுகளுடன் நாம் குறித்த நாடுகளுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள இராஜதந்திர நடவடிக்கைகளின் பயனாக வடக்கின் அபிவிருத்திக்காக சீனா 1500 மில்லியன் நிதியை வழங்க முன்வந்துள்ளது. குறித்த 1500 மில்லியனில் வீட்டுத்திட்டத்துக்காக 500 மில்லியனும், மக்களுக்கு அரிசி வழங்குவதற்காக 500 மில்லியனும், கடற்றொழிலாளர்களுக்கான வலை வழங்குவதற்காக 500 மில்லியனும் வழங்கப்படுகின்றது. குறிப்பாக பிரதமர் தினேஸ் குணவர்த்தனா எதிர்வரும் 22 ஆம் திகதி சீனா செல்கின்றார். இதற்கான ஒப்பந்தத்தை சீனா செல்லும் பிரதமர் எதிர்வரும் வாரம் கைச்சாத்திடுவார் என நம்புகின்றேன். இதேநேரம் இந்திய அரசும் வடபகுதியின் அபிவிருத்திக்காக 3000 மில்லியன் நிதியை வழங்க முன்வந்துள்ளது. குறிப்பாக கடல் ஆய்வு நடவடிக்கைகள், கடற் பகுதியில் பாரியளவிலாள கூடுகளில் மீன் வளர்ப்பதற்கான திட்டங்கள் மக்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கென இந்த நிதி வழங்கப்படுகின்றது. இதேவேளை ஜப்பான் அரசும் வடக்கின் அபிவிருத்தி மற்றும் மக்களின் கடற்பாதுகாப்பு செயற்றிட்டங்களுக்காக 415 மில்லியன் வழங்க முன்வந்துள்ளது. அந்தவகையில் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை நாம் எமது மக்களுக்கானதாக சரியான வகையில் கொண்டுசென்று மக்களின் வாழ்வியலில் சிறப்பான மாற்றத்தை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/178762
  2. திருக்கேதீஸ்வரம் புதைகுழி: காபன் பரிசோதனை தாமதமாகும்? Published By: VISHNU 15 MAR, 2024 | 01:40 AM ஒரு தசாப்தத்திற்கு முன்னர் வடக்கின் மன்னார் பிரதேசத்தில் கண்டறியப்பட்ட மனித புதைகுழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பான காபன் பரிசோதனைகள் மேலும் தாமதமாகுமென இந்த வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சடடத்தரணிகள் தெரிவிக்கின்றனர். மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய வளாக மனித புதைகுழி குறித்த வழக்கு விசாரணை கடந்த திங்கட்கிழமை (மார்ச் 14) மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணைகளில் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகும் சடடத்தரணி வி. எஸ். நிரஞ்சன் நிதியை பெற்றுக்கொடுப்பது குறித்த செயற்பாட்டில் காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தின் பணிகள் தாமதமடைவதாக குறிப்பிட்டார். “C14 பரிசோதனைக்காக எலும்பு மாதிரிகள் அனுப்பப்படவிருந்த நிலையில் அதற்கான நிதி வசதி செய்வதற்காக, காணாமல் போனோருக்கான அலுவலகத்திடம் அதற்கான விலை மனு கோரப்பட்டு இருந்தது. அவர்கள் அதற்கான பதிலை இன்று (மார்ச் 11) அளிக்க முடியாத நிலை காணப்பட்டமையால் அதற்கு பிரிதொரு தவணையை கேட்டுக்கொண்டமைக்கு அமைய இந்த வழக்கு மே 13ஆம் திகதி அழைக்கப்படவுள்ளது.” மேலும் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி நிரஞ்சன், கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நிதி குறித்த கோரிக்கை காணாாமல்போனோர் குறித்த அலுவலகத்திற்கு விடுக்கப்பட்டதாகவும், ஆகவே அவர்கள் இந்த பணிகளை மேற்கொள்வவதில் காலத்தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். காபன் பரிசோதனைக்குத் தயார் திருக்கேதீஸ்வரம் வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் எக்காலத்திற்குரியது என்பதை கண்டறிவதற்கான காபன் பரிசோதனையை மேற்கொள்வதற்கான (கதிரியக்கக்கார்பன் காலக்கணிப்பு - C-14 Carbon Dating Test) மாதிரிகள் பெறப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் தனஞ்சய வைத்தியரத்ன தெரிவிக்கின்றார். எலும்புக்கூட்டு அகழ்வுப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டவன் என்ற அடிப்படையில், இந்தப் பணியை மேற்கொள்ளத் தான் தயார் என வைத்தியர் தனஞ்சய வைத்தியரத்ன குறிப்பிடுகின்றார். “மரண பரிசோதனைக்குப் பின்னர் குறித்த எலும்புக்கூடுகள் எந்தக் காலத்திற்குரியது என்பது தொடர்பில் கண்டறிய காபன் பரிசோதனை என ஒன்று உள்ளது. அதனை அமெரிக்க ஆய்வுக்கூடத்தில் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு மாதிரிகளை நாம் எடுத்துள்ளோம். அதனை மேற்கொள்ளுமாறு நீதிமன்ற கட்டளை ஒன்றும் உள்ளது. அந்த மாதிரிகள் நீதிமன்ற வழக்கு பொருட்கள் களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மாதிரிகளை அமெரிக்க ஆய்வுக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும். அதற்கு செலவு ஒன்று ஆகும்தானே? அதிகாரி ஒருவர் செல்ல வேண்டும். மரண பரிசோதனையை செய்தவர் என்ற அடிப்படையில் நான்தான் மாதிரிகளை எடுத்துக்கொண்டு அமெரிக்காச் செல்ல வேணடும். சென்று ஒப்படைக்க வேண்டும். மாதிரியை பரிசோதிப்பதற்கு கொடுப்பனவு ஒன்றை ஆய்வுக்கூடத்திற்கு செலுத்த வேண்டும். ஆகவே இந்த நிதியை நீதிமன்றத்தால் வழங்க முடியாதல்லவா? ஆகவே ஓஎம்பியிடம் இதற்கு நிதியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கலாம். எனினும் அரசாங்கம் நிதியை கொடுத்தால் நான் நான் அமெரிக்காச் சென்று பணிகளை மேற்கொள்ள முடியும்.” ஒரு தசாப்தம் 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் நீர் விநியோகத்திற்கென அகழ்வுப் பணியில் ஈடுபட்டவர்களினால் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. மன்னார் பொலிஸார் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட குறித்த பகுதியை பார்வையிட்டதோடு, 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். மன்னார் நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு அமைய, திருக்கேதீஸ்வரம் பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது பாரிய மனித புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டடது. தொடர்ந்து இடம்பெற்ற அகழ்வுப் பணிகளுக்கு அமைய 81 மனித எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டுள்ளதாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் நீதிமன்றில் தொடர்ந்து முன்னிலையாகிவரும் சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன் தெரிவிக்கின்றார். இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால் வலிந்து காணாமலாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்களுக்கு என்ன நடந்தது என இதுவரை எவ்வித தகவல்களும் வெளியவரவில்லை. திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவினர்களுடையதாக இருக்கலாம் என 2,000 நாட்களைக் கடந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களான தமிழ்த் தாய்மார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/178761
  3. Published By: RAJEEBAN 15 MAR, 2024 | 10:42 AM மத்தியதரை கடலில் இயந்திரம் பழுதடைந்ததை தொடர்ந்து படகு dinghy நடுக்கடலில் பல நாட்கள் தத்தளித்ததால் குடியேற்றவாசிகள் பலர் உணவு நீரின்றி உயிரிழந்துள்ளனர். 25 பேரை எஸ்ஓஎஸ் மெடிட்டரானி என்ற மனிதாபிமான அமைப்பின் படகுகள் இவர்களை காப்பாற்றியுள்ளன. லிபியாவின் ஜாவியா கடற்கரையிலிருந்து தாங்கள் புறப்பட்டதாகவும் பலநாட்களின் பின் மீட்கப்பட்டதாகவும் உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர். படகு பயணத்தை ஆரம்பித்து மூன்று நாட்களின் பின்னர் அதன் இயந்திரம் பழுதடைந்ததாகவும் இதனால் தாங்கள் நடுக்கடலில் தத்தளித்ததாகவும் உயிருடன் மீட்கப்பட்ட குடியேற்றவாசிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெண்களும் ஒரு குழந்தையும் உள்ளதாக மீட்கப்பட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கடலில் மூழ்கி இறக்கவில்லை உணவு குடிநீர் இன்மையால் உயிரிழந்தனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட படகினை தொலைக்காட்டிகளை வைத்து அவதானித்த அரசசார்பற்ற அமைப்பு இத்தாலிய கடலோர காவல்படையினருடன் சேர்ந்து மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. உயிர்தப்பியவர்கள் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளனர் என அரசசார்பற்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இருவர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டனர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஏனைய 23 பேரை எங்களின் கப்பலில் வைத்திருக்கின்றோம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஒரு வார காலமாக கடலில் தத்தளித்ததால் படகில் இருந்தவர்கள் பெரும் துயரத்தில் சிக்குண்டனர். உணவும் குடிநீரும் விரைவில் தீர்ந்துவிட்டது என உயிர்தப்பியவர்கள் தெரிவித்தனர் என எஸ்ஓஸ்எஸ் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். படகு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவேளை பலர் உயிரிழந்தனர். தனது மனைவியையும் ஓன்றரை வயது குழந்தையையும் பறிகொடுத்த ஒருவரை பார்த்தேன். முதலில் குழந்தை உயிரிழந்துள்ளது நான்கு நாட்களின் பின்னர் தாயார் உயிரிழந்துள்ளார் என அரசசார்பற்ற அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/178775
  4. பட மூலாதாரம்,GOFUNDME கட்டுரை தகவல் எழுதியவர், இடோ வோக் மற்றும் கேட் ஸ்னோடன் பதவி, பிபிசி நியூஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் 'இரும்பு நுரையீரல் கொண்ட மனிதர்' என்று அழைக்கப்பட்ட போலியோ போராளி பால் அலெக்சாண்டர் 78 வயதில் காலமானார். கடந்த 1952இல் பால் அலெக்சான்டர் தனது ஆறு வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டார், இதனால் அவரின் கழுத்துக்கு கீழ் உள்ள பகுதி முழுமையாகச் செயலிழந்தது. இந்த நோயால் அவரால் சுதந்திரமாகச் சுவாசிக்க முடியாமல் போனது. எனவே மருத்துவர்கள் அவரை உலோக சிலிண்டருக்குள் வைத்து அதன் மூலம் உயிர்வாழ வழிவகுத்தனர். வாழ்நாள் முழுவதும் அந்த இரும்பு சிலிண்டருடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் பின்னர் அலெக்சாண்டர் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றார். மேலும், வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார், அத்துடன் ஒரு சுய சரிதை நூலையும் வெளியிட்டிருக்கிறார். "பால் அலெக்சாண்டர், 'தி மேன் இன் அயர்ன் லங்'(The Man in Iron Lung) நேற்று காலமானார்" என்று நிதி திரட்டும் இணையதளம் ஒன்று வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது. 'பால் ஒரு அற்புதமான மனிதர்' பட மூலாதாரம்,PHILIP ALEXANDER படக்குறிப்பு, பாலின் சகோதரர், பிலிப் அலெக்சாண்டர். "இரும்பு சிலிண்டர் உதவியோடு வாழ்ந்த பால், கல்லூரிக்குச் சென்றார், ஒரு வழக்கறிஞரானார், மேலும் ஒரு எழுத்தாளராகவும் இருந்தார். பால் ஒரு அற்புதமான முன்மாதிரி," என்கிறார் பாலின் சகோதரர், பிலிப் அலெக்சாண்டர். பால் அலெக்சாண்டர் பற்றிக் குறிப்பிடுகையில் "எப்போதுமே பிறரை புன்னகையுடன் வரவேற்கும் அன்பான நபர் அவர்" என்று நினைவு கூர்ந்தார், மேலும் பாலின் புன்னகை புத்துணர்ச்சியூட்டக் கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். "என் சகோதரர் பால் என்னைப் பொறுத்தவரையில் ஓர் இயல்பான மனிதர். அனைத்து சகோதரர்களைப் போன்று நாங்களும் சண்டையிடுவோம், விளையாடினோம், நேசித்தோம், ஒன்றாக கச்சேரிகளுக்குச் சென்றோம். அவர் ஒரு இயல்பான சகோதரர், நான் அவரின் நிலை பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை," என்று பிலிப் பிபிசியிடம் கூறினார். நோயின் தாக்கத்தால், உணவு உண்பது உட்பட சுயமாக எந்த அன்றாடப் பணிகளையும் செய்ய முடியாமல் போன சூழலிலும், தனது சகோதரர் தன்னிறைவு பெற்ற மனிதராக வாழ்ந்ததாக பிலிப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மேலும் "அவரது ராஜ்ஜியத்தில் அவரே ராஜா. அவருக்கு உதவும் நபர்களுக்கும் சிரமம் கொடுக்காமல் உதவுபவர்," என பிலிப் கூறினார். கடந்த சில வாரங்களில் பாலின் உடல்நிலை மோசமானது. அவரின் இறுதி நாட்களை தன் சகோதரருடன் கழித்தார். அவர்கள் மகிழ்ச்சியாக ஐஸ்கிரீம்களை பகிர்ந்து கொண்டனர். "அவரது வாழ்வின் இறுதி தருணங்களில் அவருடன் இருப்பது என் பாக்கியம்" என்று பிலிப் குறிப்பிட்டார். உலோக உருளைக்குள் வாழ்ந்தவர் பட மூலாதாரம்,GETTY IMAGES பால் அலெக்சாண்டர் 1952இல் நோய்வாய்ப்பட்டபோது, அவரது சொந்த ஊரான டல்லாஸில் உள்ள மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது உயிரைக் காப்பாற்றினர். ஆனால் போலியோ பாதிப்பால் அவரால் சுயமாகச் சுவாசிக்க முடியவில்லை. அதன் விளைவாக இரும்பு நுரையீரல் என்று அழைக்கப்படும் - ஒரு உலோக உருளை அவரது கழுத்து வரை உடலைச் சுற்றிப் பொருத்தப்பட்டது. அந்த உலோக உருளைக்குள்தான் அவர்தம் வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டது. செயற்கை இரும்பு நுரையீரலை பால் 'பழைய இரும்புக் குதிரை' என்றே குறிப்பிடுவார். அந்த பழைய இரும்புக் குதிரையால்தான் அவர் சுவாசித்தார். பெல்லோஸ் என்னும் உபகரணம் சிலிண்டரில் இருந்து காற்றை உறிஞ்சி, அவரது நுரையீரலை விரிவடையச் செய்து, காற்றை உள்வாங்கச் செய்தது. காற்று மீண்டும் உள்ளே நுழையும்போது, அதே செயல்முறை தலைகீழாக நிகழ்ந்து அவரது நுரையீரலைச் சுருங்க செய்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அலெக்சாண்டர் சுயமாக சுவாசிக்கவும் கற்றுக்கொண்டார், இதனால் அவர் குறுகிய காலத்திற்கு அந்த இரும்பு நுரையீரலை விட்டு வெளியேற முடிந்தது. இரும்பு நுரையீரல் பொருத்தப்பட்ட பெரும்பாலான போலியோ போராளிகள் போல, அவரும் நீண்ட காலம் உயிர்வாழ மாட்டார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நீண்டகாலம் உயிர் வாழ்ந்தார். 1950களில் போலியோ தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகும், மேற்கத்திய நாடுகளில் போலியோவை ஒழித்த பிறகும் அவர் உயிர் வாழ்ந்தார். கின்னஸ் உலக சாதனை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவர் பட மூலாதாரம்,GETTY IMAGES பால் உயர்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றார், பின்னர் தெற்கு மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1984இல், ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கறிஞராகப் பயிற்சி மேற்கொள்ள அவருக்கு அனுமதி கிடைத்தது. அதன் பின்னர் பல ஆண்டுகளுக்கு வழக்கறிஞராகப் பணியாற்றினார். "நான் என் வாழ்க்கையில் ஏதேனும் செய்யப் போகிறேன் என்றால், அது கண்டிப்பாக மனம் சார்ந்த விஷயமாக மட்டுமே இருக்க முடியும் என்பதை நான் அறிவேன்’’ என்று பால் 2020இல் கார்டியன் செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில் கூறினார். அதே ஆண்டு, அவர் தன் சுயசரிதை நூலையும் வெளியிட்டார், நண்பரின் உதவியுடன் ஒரு பிளாஸ்டிக் குச்சியைப் பயன்படுத்தி ஒரு விசைப் பலகையில் தட்டச்சு செய்து இந்த நூல் எழுதப்பட்டது. இதை எழுதி முடிக்க அவருக்கு எட்டு ஆண்டுகள் எடுத்ததாகக் கூறப்படுகிறது. பாலின் சகோதரர் பிலிப், அந்த சுயசரிதை புத்தக வெளியீட்டைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அவரது சகோதரர் எவ்வளவு உத்வேகம் அளித்து முன்னோடியாகத் திகழ்கிறார் என்பதை உணர்ந்ததாகக் கூறினார். மருத்துவத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களால் 1960களில் இரும்பு நுரையீரல் மருத்துவ முறை வழக்கற்றுப் போய்விட்டது, அதற்குப் பதிலாக வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அலெக்சாண்டர் இரும்பு சிலிண்டருக்கு பழகிவிட்டதால் அந்த உருளையிலேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தார். இரும்பு நுரையீரலில் அதிக காலம் வாழ்ந்தவர் என்று கின்னஸ் உலக சாதனை அமைப்பால் அவர் அங்கீகரிக்கப்பட்டார். https://www.bbc.com/tamil/articles/czdzkp5452go
  5. வனங்களில் வாழ கூடிய உயிரினங்களை நேரிடையாக சென்று பார்வையிட என அதற்கென தனித்த, பயிற்சி பெற்ற திறமையான வழிகாட்டிகள் உள்ளனர். இவர்கள், சுற்றுலாவாசிகளை அழைத்து கொண்டு வாகனங்களில் செல்வார்கள். வனங்களில் பல்வேறு வகையான விலங்குகளின் வாழ்க்கை முறை, இரை தேடுதல், வலம் வருதல் உள்ளிட்ட பிற விசயங்களை பார்வையிடவும், அவற்றை பற்றி அறிந்து கொள்ளவும், பொழுது போக்கும் வகையிலும் இந்த பயணம் அமையும். எனினும், இதில் சில ஆபத்துகளும் உள்ளன. வனத்தில் சிங்கம், புலி போன்ற பலசாலியான விலங்குகளும் காணப்படும். இதனால், வாகனங்களில் செல்வோர் அதற்கான பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செல்ல வேண்டியது அவசியம். இல்லையெனில், அவற்றால் தாக்கப்படும் ஆபத்துகளும் உள்ளன. இந்த நிலையில், வனவழிகாட்டி ஒருவர் கையில் கேமிராவுடன் காட்டில், திறந்த நிலையிலான ஜீப் ஒன்றின் முன்னே அமர்ந்தபடி இருக்கிறார். வனவிலங்குகளை பார்ப்பதற்காக சென்ற அவர், அடுத்து வரவுள்ள ஆபத்து பற்றி அறியாமல் இருக்கும்போது, சிங்கம் ஒன்று பின்னால் இருந்து அவரை பார்த்தபடி வந்தது. அவர் மெல்ல திரும்பி பார்க்கும்போது, ஏறக்குறைய அவரை நெருங்கி விட்டது. இருவரும் நேருக்கு நேராக பார்க்கும் காட்சியுடன் வீடியோ நிறைவடைகிறது. 2.1 கோடி பேர் பார்வையிட்டு உள்ள இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு உள்ளது. அந்த வீடியோவில், நீங்கள் என்ன செய்வீர்கள்? என தலைப்பும் காணப்படுகிறது. இதற்கு பலரும் விமர்சனங்களை பகிர்ந்துள்ளனர். இதுபோன்ற தருணத்தில் ஒவ்வொருவருக்கும் என்னென்ன தோன்றுமோ? அதனை பகிர்ந்துள்ளனர். அதில் ஒருவர், நீ காட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என சிங்கம் பார்ப்பதுபோல் உள்ளது என்றும், மற்றொருவர், சிங்கங்களை பார்க்க அவர் போனார். ஆனால், சிங்கம் அவரை பார்த்து விட்டது என்றும் தெரிவித்து உள்ளனர். எனக்கு அப்போதே வாந்தி வந்து விடும் என்று இன்னொருவர் தெரிவித்து உள்ளார். இதற்கு முன்பும் இதேபோன்றதொரு சம்பவம் நடந்தது. அதில், சுற்றுலாவாசி ஒருவர் பைனாகுலர் உதவியுடன், ஜீப்பின் முன்னால் அமர்ந்தபடி காடு முழுவதும் அலசி, ஆராய்ந்து கொண்டிருக்கிறார். ஆனால், அவர் அறியாத வகையில், சிங்கம் ஒன்று அமைதியாக அவரை நெருங்கியது. இருவரும் சரியாக ஒருவரை ஒருவர் பார்க்கும் தருணம் ஏற்பட்டபோது, பதற்றம் அதிகரித்தது. அப்போது, எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அந்நபரை அலட்சியப்படுத்தி விட்டு, தன்னுடைய பார்வையை வேறு பக்கம் திருப்பி கொண்டு சிங்கம் சென்று விட்டது. இந்த நிலையில், இந்த புதிய வீடியோ வெளிவந்துள்ளது. இதற்கு அடுத்து என்ன நடந்தது என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. https://thinakkural.lk/article/295789 https://www.facebook.com/everseensa/videos/serious-connection-between-tracker-and-young-male-lion-follow-on-instagram-for-m/850616529230171/
  6. தேர்தல் பத்திரங்கள்: எந்தக் கட்சி எவ்வளவு பணம் பெற்றது? பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம் பட மூலாதாரம்,GETTY IMAGES 25 நிமிடங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எஸ்பிஐ தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை தங்களிடம் வழங்கியுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தனது அதிகாரப்பூர்வமான எக்ஸ் பக்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தேர்தல் ஆணையம் தற்போது அந்தப் பட்டியலைத் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து எந்தெந்த கட்சிகள் ரொக்கமாக மாற்றின என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக 300 பக்கத்திற்கும் மேற்பட்ட இரண்டு பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், முதல் பட்டியலில் பத்திரத்தை வாங்கிய நிறுவனங்களின் பெயர்கள், எந்த தேதியில் அவை வாங்கப்பட்டன, பத்திரத்தின் தொகை ஆகிய விவரங்கள் உள்ளன. இரண்டாவது பட்டியலில் அவை எந்தெந்த அரசியல் கட்சிகளுக்கு எந்தத் தேதியில், எவ்வளவு தொகை வழங்கப்பட்டன என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் அதிகம் நிதி பெற்ற கட்சியாக இருப்பது ஆளும் பாரதிய ஜனதா கட்சி, அதற்கடுத்த இடங்களில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற காட்சிகள் உள்ளன. இந்தப் பட்டியலில் வேதாந்தா போன்ற நிறுவனங்களும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியளித்துள்ளன. https://www.bbc.com/tamil/articles/crgvwrkledwo
  7. மக்களுக்கு சேவை செய்யும் விதானைமாரும் இருக்கினம், அதனை துஸ்பிரயோகம் செய்பவர்களும் இருக்கிறார்கள்.
  8. தந்தை VS மகன் | அதிமுகவை விரும்பும் ராமதாஸ், பாஜகவுடன் செல்ல துடிக்கும் அன்புமணி 14 MAR, 2024 | 02:39 PM அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் விரும்பும் நிலையில், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை அன்புமணி நடத்தி வருவதால் பாமக யாருடன் கூட்டணி என்ற இழுபறி நீடித்து வருகிறது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் கணிசமாக வாக்கு வங்கியை வைத்துள்ள பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுகவும், பாஜகவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டன. அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், பாமக நிறுவனர் ராமதாஸை 2 முறை நேரில் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகும் நிலையில் இருந்தது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் விருப்பம் தெரிவித்த நிலையில், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி, பாஜகவுடன் கூட்டணி வைக்கவே விரும்புவதாக கூறப்படுகிறது. அன்புமணியிடம் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய பாஜக குழுவினர் மத்திய அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் அதிமுக கொடுப்பதைவிட கூடுதல் தொகுதிகளை வழங்குவதாக உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது. 2004 - 2009 வரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணிக்கு, மீண்டும் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்காததால், பாஜகவுடன் கூட்டணி வைக்க அன்புமணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவுடன் கூட்டணி அறிவிப்பை வெளியிட இருந்த நிலையில், அன்புமணியின் இந்த முடிவு ராமதாஸுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சென்னை வந்த மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி ஆகியோரை நேற்று காலை அன்புமணி தனியாக சந்தித்து கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசியதாகவும், பாஜக - பாமக கூட்டணி உறுதியாகும் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸும், பாஜகவுடன் கூட்டணி வைக்க அன்புமணியும் விரும்பும் நிலையில், இறுதியில் வெற்றி பெறப்போவது தந்தையா? மகனா? என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்துவிடும். https://www.virakesari.lk/article/178716
  9. திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலைகள் 14 MAR, 2024 | 07:29 PM தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (14) மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்பட்டன. இதன்படி , ஒரு கிலோ கரட் 400 ரூபாவாகவும் , ஒரு கிலோ பயற்றங்காய் 180 ரூபாவாகவும் , ஒரு கிலோ பீட்ரூட் 220 ரூபாவாகவும் , ஒரு கிலோ பீர்க்கங்காய் 120 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. மேலும் , ஒரு கிலோ கத்தரிக்காய் 180 ரூபாவாகவும் , ஒரு கிலோ தக்காளி 300 ரூபாவாகவும் , ஒரு கிலோ பச்சை மிளகாய் 300 ரூபாவாகவும் ,ஒரு கிலோ புடலங்காய் 160 ரூபாவாகவும் , ஒரு கிலோ பூசணிக்காய் 160 ரூபாவாகவும் , ஒரு கிலோ வாழைக்காய் 200 ரூபாவாகவும் , ஒரு கிலோ தேசிக்காய் 180 ரூபாவாகவும் ,ஒரு கிலோ இஞ்சி 1,800 ரூபாவாகவும் , ஒரு கிலோ உருளைக்கிழங்கு 180 ரூபாவாகவும் , ஒரு கிலோ பாவக்காய் 180 ரூபாவாகவும் காணப்பட்டன. https://www.virakesari.lk/article/178746
  10. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உங்கள் சிறுநீரின் நிறத்தைக் கொண்டே சிக்கலை அறிய முடியும் 1 ஜனவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் சிறுநீரகம் உடலின் ஒரு முக்கியமான உறுப்பு. சிறுநீரகம் மூலம் தான் நம் உடலில் திரவ கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு சுத்தமான ரத்தம் தொடர்ந்து பரவுகிறது. மேலும், உடலில் உள்ள அதிகப்படியான நீர், சிறுநீரகம் மூலம் வடிகட்டப்பட்டு அது சிறுநீர் வாயிலாக வெளியேற்றப்படுகிறது. இந்தியாவில் தீவிர நோய்களால் இறப்பதற்கான முதல் பத்து காரணங்களில், பல்வேறு சிறுநீரக நோய்கள் ஒன்பதாவது இடத்தில் இருக்கின்றன. “இந்தியா: தேசத்தின் ஆரோக்கியம்”-2017 எனும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி, இந்தியாவில் ஏற்படும் இறப்புகளுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் ஒன்பதாவது முக்கிய காரணமாகும். இந்நோய் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் வயது ஆகியவையாகும். ’நேச்சர்’ இதழின் (Nature) பகுப்பாய்வின்படி, உலகில் 6.97 கோடி பேர் கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 1.15 கோடி பேர் இந்தியாவில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். 2010-13-இல், சிறுநீரக செயலிழப்பு 15-69 வயதுடையவர்களிடையே 2.9 சதவீத இறப்புகளுக்கு காரணமாகும். இது 2001-03-ஐ விட 50 சதவீதம் அதிகரித்துள்ளது. சிறுநீரக செயலிழப்பு இறப்புகளுக்கு நீரிழிவு நோய் மிக முக்கிய காரணமாக உள்ளது. இந்தியாவில் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD-Chronic kidney disease) 8-17 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளவர்களுள் சுமார் 10-20 சதவீதம் பேருக்கு சிறுநீரக செயலிழப்பு உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES சிறுநீரகத்திற்கும் சிறுநீருக்கும் என்ன தொடர்பு? இந்த நோய்க்கான காரணங்களை ஆழமாகப் புரிந்துகொள்ள சிறுநீரக மருத்துவர் சித்தார்த் ஜெயினிடம் பேசினோம். சிறுநீருக்கும் சிறுநீரகத்துக்கும் உள்ள தொடர்பை அவர் விளக்குகிறார். "உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் வளர்சிதை மாற்ற பொருட்களை சிறுநீர் வாயிலாக சிறுநீரகம் நீக்குகிறது. சிறுநீரகத்தின் செயல்பாடு உடலில் இருந்து அதிகப்படியான வளர்சிதை மாற்ற கழிவுகளை அகற்றுவதாகும். சிறுநீரின் உதவியுடன் இதைச் செய்கிறது" என்றார். சிறுநீரகம் நமது உடலின் ஒரு வடிகட்டி அமைப்பு. சிறுநீரகங்கள் ரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்றி சிறுநீரை உற்பத்தி செய்கின்றன. "சிறுநீரகத்தின் செயல்பாடு சிறுநீரின் உதவியுடன் உடலில் இருந்து அதிகப்படியான வளர்சிதை மாற்றக் கழிவுகளை அகற்றுவதாகும். உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் வளர்சிதை மாற்ற பொருட்களை சிறுநீரகம் நீக்குகிறது" என்று அவர் விளக்குகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த புரதம் உடலில் இருந்து அசாதாரண அளவில் வெளியேற்றப்படும்போது, அது ஆபத்தானது. புரோட்டினூரியா என்றால் என்ன? புரோட்டினூரியா (சிறுநீரில் புரதத்தின் குறிப்பிடத்தக்க இருப்பு) பற்றி மருத்துவர் சித்தார்த் ஜெயின் விரிவாக விளக்குகிறார். “ஒவ்வொரு ஆரோக்கியமான மனித உடலும் சிறுநீரின் மூலம் சில அளவு புரதத்தை வெளியேற்றுகிறது. ஆனால், இந்த புரதம் உடலில் இருந்து அசாதாரண அளவில் வெளியேற்றப்படும்போது, அது ஆபத்தானது மற்றும் இந்த கசிவு புரோட்டினூரியா என்று அழைக்கப்படுகிறது" என்கிறார். "புரோட்டீனூரியா உற்பத்திக்கு மிகவும் பொதுவான காரணம் நீரிழிவு நோய். ஒருவருக்கு கட்டுப்பாடற்ற நீரிழிவு இருந்தால், அதிகப்படியான புரதம் சிறுநீரில் கசிகிறது" என்றார், மருத்துவர் சித்தார்த். "இதனால் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயின் முதல் அறிகுறி புரோட்டினூரியா ஆகும்" என்றார். புரோட்டினூரியாவின் பிற காரணங்கள் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிற நோய்கள். புரோட்டினூரியாவின் அறிகுறிகளைப் பற்றி பேசுகையில், "சிறுநீர் நுரையுடன் இருப்பதாக உணர்ந்தால், அது புரோட்டினூரியாவின் அறிகுறியாகும்." புரோட்டினூரியாவின் மேம்பட்ட நிலைகளில், நோயாளிகள் கைகள் மற்றும் கால்களில் வீக்கம், சோர்வு, வயிற்று வலி அல்லது வயிற்று தொற்று ஆகியவற்றை அனுபவிக்கலாம். இந்த நோய்க்கான பிற காரணங்கள் ரத்த அழுத்தம் மற்றும் பிற சிறுநீரகம் தொடர்பான நோய்கள் ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிறுநீரில் நீர், யூரியா மற்றும் உப்புகள் உள்ளன. சிறுநீரின் நிறத்தை வைத்தே சிறுநீரகத்தில் உள்ள பிரச்னையை தெரிந்து கொள்வது எப்படி? சிறுநீரில் நீர், யூரியா மற்றும் உப்புகள் உள்ளன. அதிகப்படியான அமினோ அமிலங்கள் உடைக்கப்படும்போது யூரியா கல்லீரலில் உற்பத்தியாகிறது. சிறுநீரின் மூலம் வெளியேற்றப்படும் முக்கிய கழிவுப்பொருள் யூரியாவாகும். ஏனெனில், அது சிறுநீரகத்தால் மீண்டும் உறிஞ்சப்படாது. உங்கள் ரத்தத்தில் இருந்து வடிகட்டிய அதிகப்படியான நீர் மற்றும் கழிவுகள்தான் சிறுநீர் என, ’ஹார்வர்ட் ஹெல்த்’ கூறுகிறது. அதன் நிறம் பொதுவாக வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர் பழுப்பு வரை இருக்கும். அதன் செறிவு, நீரில் உள்ள கழிவுகளின் அளவைப் பொறுத்தது. இது, நீங்கள் எவ்வளவு திரவத்தை உட்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. ஒரு நபர் தனது சிறுநீர் சிவப்பு, கருப்பு அல்லது பழுப்பு அல்லது வேறு ஏதேனும் நிறத்தில் இருப்பதாக உணர்ந்தால், அவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவர் சித்தார்த் மேலும் கூறுகிறார். மேலும், சிறுநீரின் அளவு, இயல்பை விட மிகக் குறைவாகவோ அல்லது இயல்பை விட அதிகமாகவோ, அல்லது ஒருவர் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்ல வேண்டியிருந்தாலோ அல்லது சிறுநீர் கழிக்கும்போது அதிக அழுத்தத்தை உணர்ந்தாலோ, கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ, சிறுநீரகப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிறுநீரகங்கள் சிறுநீரை உற்பத்தி செய்து, நீர் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. சிறுநீரகத்தின் செயல்பாடு என்ன? சிறுநீரகம் உடலின் இன்றியமையாத உறுப்பு. அதன் செயல்பாடுகள்: உங்கள் உடலில் உள்ள கால்சியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் ரத்தத்தில் பி.ஹெச். எனும் அமிலத்தன்மையை சமநிலையுடன் பராமரித்தல். உங்கள் உடலில் இருந்து நீரில் கரையும் கழிவுகளை நீக்குகிறது. சிறுநீரின் வாயிலாக அதிகப்படியான நீர், உப்புகள் மற்றும் யூரியாவை நீக்குகிறது. சிறுநீரக தமனி மூலம் ரத்தம் சிறுநீரகங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ரத்தம் உயர் அழுத்தத்தில் வடிகட்டப்படுகிறது மற்றும் சிறுநீரகமானது குளுக்கோஸ், உப்பு அயனிகள் மற்றும் நீர் போன்ற பயனுள்ள பொருட்களைத் தேர்ந்தெடுத்து மீண்டும் உறிஞ்சுகிறது. சுத்திகரிக்கப்பட்ட பிறகு, ரத்தம் சிறுநீரக நரம்பு வழியாக ரத்த ஓட்ட அமைப்புக்குத் திரும்புகிறது. சிறுநீரகங்கள் சிறுநீரை உற்பத்தி செய்து, நீர் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. சிறுநீர்ப்பை சிறுநீரை உடலில் இருந்து வெளியேறும் வரை சேமிக்கிறது. நீரிழிவு நோயின் விளைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது மற்றும் உலகளவில் 41.5 மில்லியன் மக்களை இது பாதிக்கிறது. சிறுநீரக செயலிழப்புக்கு நீரிழிவு நோய் முக்கிய காரணமாக உள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 40 சதவீதம் பேருக்கு இறுதியில் சிறுநீரக நோய் ஏற்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரத்த நாள நோய்கள் பொதுவாக உங்கள் சிறுநீரகங்களுக்கு ஆபத்தானவை தீவிர சிறுநீரக நோய்கள் என்ன? நாட்பட்ட சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஆகும். ஒவ்வொரு சிறுநீரகமும் நெஃப்ரான்கள் எனப்படும் சுமார் ஒரு மில்லியன் சிறிய வடிகட்டி அலகுகளைக் கொண்டுள்ளது. நெஃப்ரான்களை காயப்படுத்தும் அல்லது பாதிக்கும் எந்த நோயும் சிறுநீரக நோயை ஏற்படுத்தும். நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இரண்டும் நெஃப்ரானை பாதிக்கும். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகங்கள், இதயம் மற்றும் மூளையில் உள்ள ரத்த நாளங்களையும் பாதிக்கும். சிறுநீரகங்கள் அதிக ரத்த நாளங்களை கொண்டவை. எனவே, ரத்த நாள நோய்கள் பொதுவாக உங்கள் சிறுநீரகங்களுக்கு ஆபத்தானவை. நாள்பட்ட சிறுநீரக நோய், நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது சிறுநீரகம் செயல்பாட்டை படிப்படியாக இழப்பதாகும். சிறுநீரகங்கள் ரத்தத்திலிருந்து கழிவுகள் மற்றும் அதிகப்படியான திரவத்தை வடிகட்டுகின்றன. பின்னர் அவை சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றன. நாள்பட்ட சிறுநீரக நோய் ஒரு மேம்பட்ட நிலையை அடையும் போது, திரவம், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் கழிவுகள் ஆகியவை ஆபத்தான அளவுக்கு உடலில் சேரும். நாள்பட்ட சிறுநீரக நோயின் அறிகுறிகள் காலப்போக்கில் உருவாகின்றன. சிறுநீரக பாதிப்பு படிப்படியாக நிகழ்கிறது. குமட்டல், வாந்தி, பசியின்மை, சோர்வு மற்றும் பலவீனம், தூக்க பிரச்னைகள், சிறுநீரில் ஏற்படும் மாற்றங்கள், மனக் கூர்மை குறைதல், தசைப்பிடிப்பு மற்றும் கைகளின் வீக்கம் ஆகியவையும் அறிகுறிகளாகும். பாதங்கள் மற்றும் கணுக்கால் சுளுக்கு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவையும் இந்நோயுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம். நாள்பட்ட சிறுநீரக நோய் முற்றிலும் மீளமுடியாத நோயாகும். இது காலப்போக்கில் தீவிரமடையும். இதனால், சிறுநீரகம் அதன் செயல்பாடுகளை செய்ய முடியாத நிலை ஏற்படும். https://www.bbc.com/tamil/articles/c972d83qmgeo ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை அன்று இந்த உலக சிறுநீரக தினம் கொண்டாடப்படுகிறது.
  11. 40-யும் வெல்ல வியூகம்: சிக்கலான இடங்களில் திமுகவே களமிறங்க திட்டம் 14 MAR, 2024 | 02:36 PM தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் வெல்லும் வகையில் வியூகம் அமைத்துள்ள திமுக,கூட்டணி கட்சிகளால் வெல்ல முடியாத,சிக்கலானதாக கருதப்படும் தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டு அத்தொகுதிகளை பெற நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோதே 2019 மக்களவைத் தேர்தலில் தேனியைத் தவிர அனைத்து தொகுதிகளையும் வசமாக்கியது திமுக.இந்த முறை, எந்த ஒரு தொகுதியையும் யாரும் பிடித்து விடக்கூடாது என்பதற்காகவே, கூட்டணியில் எந்த கட்சியையும் விட்டுக் கொடுக்காமல், வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. இந்த தேர்தலில், திமுக நேரடியாக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் கொமதேக மட்டுமே போட்டியிடுகிறது. மதிமுக, விசிக கட்சிகள் தனிச்சின்னத்தில் போட்டியிடுகின்றன. ஐஜேகே விலகியதால், பெரம்பலூர் தொகுதியை திமுக எடுத்துக் கொண்டது. மதிமுகவை பொறுத்தவரை கடந்த முறை ஈரோட்டில் போட்டியிட்டது. இந்த முறை கொங்கு மண்டலத்தை திமுக வைத்துக் கொள்ள நினைப்பதால் ஈரோட்டில் திமுக போட்டியிடுகிறது. அதற்கு பதில், காங்கிரஸ் வசம் உள்ள திருச்சி அல்லது விருதுநகரை மதிமுக கோரியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 மற்றும் புதுச்சேரி என 10 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த முறை தமிழகத்தில் போட்டியிட்ட, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், ஆரணி, சிவகங்கை, கன்னியாகுமரி, தேனி, கரூர், திருச்சி தொகுதிகளை அப்படியே ஒதுக்கும்படி கேட்டது. ஆனால், கள நிலவரம், வேட்பாளர்கள் மீதான மக்களின் நம்பிக்கை ஆகியவற்றை சுட்டிக்காடி, இந்த முறை கரூர், ஆரணி, கிருஷ்ணகிரி, திருச்சி, விருதுநகர், சிவகங்கை தொகுதிகளில் சிலவற்றை தங்கள் வசம் வைத்துக் கொள்ள திமுக திட்டமிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/178714
  12. வெடுக்குநாறி மலை விவகாரம்: மனிதவுரிமை ஆணைக்குழுவும் சட்டவிரோத கைதுகளுக்கு துணை போகின்றதா? - கஜேந்திரன் எம்.பி ஆதங்கம் Published By: DIGITAL DESK 3 14 MAR, 2024 | 04:46 PM மனிதவுரிமை ஆணைக்குழுவும் சட்டவிரோத கைதுகளுக்கும், குற்றச்சாட்டுக்களுக்கும் துணை போகின்றதா என்ற கேள்வி எழுகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் வெடுக்குநாறி மலை ஆலய பூசகர் உள்ளிட்ட கைதிகளை இன்று வியாழக்கிழமை (14) பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சிறைச்சாலைக்கு சென்று 8 பேரையும் பார்வையிட்டு இருந்தேன். அதில் 5 பேர் 3 ஆவது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பொய்யான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. அவர்களது உடல் நிலை மோசமடைகின்றது. அதில் சிலருக்கு ஆஸ்மா, சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உள்ளன. அவர்கள் உரிய முறையில் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்படவில்லை. மனிதவுரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் இதுவரை அவர்களை பார்வையிடவில்லை. கைது இடம்பெற்ற அன்றே மனிதவுரிமை ஆணைக்குழுவுக்கு அறிவித்த போதும் இதுவரை பார்வையிடவில்லை. மனிதவுரிமை ஆணைக்குழுவும் சட்டவிரோத கைதுகளுக்கும், குற்றச்சாட்டுக்களுக்கும் துணை போகின்றதா என்ற கேள்வி எழுகின்றது. சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் தெரிவித்த கருத்து முற்றுமுழுதாக பொய். கடந்த செவ்வாய்கிழமை நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பிருந்தே அவர்கள் உணவு எதனையும் உண்ணவில்லை. அதற்கு பிற்பாடும் அவர்கள் உணவு உண்ணவில்லை. மூன்றாவது நாளாக அவர்கள் உணவு உண்ணவில்லை. அவர்களது குடும்பத்தினர் நேரடியாக சென்று பார்வையிட்ட போதும் அவர்கள் உணவு உண்ணவில்லை என்பதை தெரிவித்திருக்கிறார்கள். ஆலய நிர்வாகத்தினரும் சென்று பார்வையிட்டிருந்தனர். அவர்களும் உண்ணாவிரதம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். ஆகவே, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் கூறியது தவறானது. இவர்கள் மீது நெருக்குவாரத்தை உருவாக்கி பொய்யாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அவர்களை ஏற்றுக் கொள்ள வைக்க இவ்வாறு செயற்படுகின்றார்களா அல்லது அவர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்த வைக்க முயல்கின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே, இதனை விளங்கிக் கொண்டு புலம்பெயர் தமிழ் மக்களும் இராஜதந்திர அழுத்தங்களை கொடுக்க வேண்டும். கொழும்பில் உள்ள இராஜதந்திர செயலங்களும் இந்த விடயத்தில் கரிசனை செலுத்த வேண்டும். வெள்ளிக்கிழமை நெடுங்கேணியில் ஆலய நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரண்டு ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன், சனிக்கிழமை கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் வவுனியாவில் இடம்பெறவுள்ள போராட்டத்திலும் சகலரும் அணிதிரண்டு அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொளகின்றேன் எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/178736
  13. உண்மையான மஞ்சும்மல் பாய்ஸ் பேட்டி: குணா குகை குழிக்குள் சுபாஷ் விழுந்தபோது என்ன நடந்தது? படக்குறிப்பு, உண்மையான மஞ்சும்மல் பாய்ஸ் கட்டுரை தகவல் எழுதியவர், ச. பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 8 மணி நேரங்களுக்கு முன்னர் கேரளா மற்றும் தமிழகத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் வரும் சம்பவத்தின் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ குழுவினர், சுபாஷ் குழியில் விழுந்தது முதல் மீட்கப்பட்டது வரை நடந்த உண்மையையும், திரைப்படத்தில் காண்பிக்கப்படாத சம்பவங்களையும் பிபிசி தமிழ் நேர்காணலில் பகிர்ந்துள்ளனர். சமீபத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மலையாள திரைப்படம், கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கமல் நடித்த ‘குணா’ திரைப்படத்தில் காட்டப்படும் கொடைக்கானல் பகுதியில் உள்ள குகையை மையமாக வைத்து இக்கதை நகர்கிறது. கேரள மாநிலம் கொச்சினை அடுத்த மஞ்சும்மல் கிராமத்தைச் சேர்ந்த, 11 பேர் கொண்ட நண்பர்கள் குழுவினர் 2006இல், தமிழ்நாட்டின் கொடைக்கானல் பகுதியில் உள்ள ‘குணா குகை’க்கு சுற்றுலா செல்கின்றனர். அப்போது, குழுவில் இருந்த சுபாஷ் என்பவர் பல நூறு அடி ஆழமுள்ள குகையின் குழியில் விழுந்த நிலையில், சுபாஷை அந்தக் குழுவில் இருந்த குட்டன் என்கிற சிஜூ டேவிட் தன் உயிரைப் பணயம் வைத்து குழியில் இறங்கி காப்பாற்றுவதும், அதற்கு அவர்களின் நண்பர்கள் உதவுவதும்தான் படத்தின் கதை. கடந்த 2006இல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, சிதம்பரம் எஸ்.பொடுவால் இயக்கத்தில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ‘நட்பின் இலக்கணம்’ எனக் கூறி சமூக ஊடகங்களில் பாராட்டப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட உண்மையான, சுபாஷ், குட்டன் மற்றும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ குழுவுடன், மஞ்சும்மல் கிராமத்திற்குச் சென்று பிபிசி தமிழ் நேர்காணல் நடத்தியது. அவர்கள் திரைப்படத்தில் காண்பிக்கப்படாத பல சம்பவங்களையும், சுபாஷ் மீட்கப்பட்டது எப்படி என்ற தங்களின் உண்மையான ‘த்ரில்’ அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்துள்ளனர். படக்குறிப்பு, சுபாஷ் மற்றும் குட்டன் மஞ்சும்மல் பாய்ஸ் - பெயர்க் காரணம் என்ன? கேள்வி: உங்கள் குழுவுக்கு ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பெயர் வரக் காரணம் என்ன? 11 பேர் குழுவாக மாறியது எப்படி? ஊரினுள் இந்தக் குழு என்ன செய்துகொண்டிருந்தது? சுபாஷ் பதில்: மஞ்சும்மல் என்பது எங்களது கிராமத்தின் பெயர். நாங்கள் 11 பேர் சிறு வயதில் இருந்தே நல்ல நண்பர்கள், நாங்கள் குழுவாகச் சேர்ந்து ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ குழுவை உருவாக்கினோம். ஊரினுள் விளையாட்டுகள், ‘டக் ஆஃப் வார்’ எனப்படும் கயிறு இழுத்தல் என மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தோம். ஆனால், இப்போது பொறுப்புகள் அதிகமானதால் விளையாட்டுகள் எல்லாம் இல்லை, குழுவாக எப்போதாவது எங்காவது சுற்றுலா செல்வோம். கேள்வி: 2006இல் சுற்றுலா செல்ல கொடைக்கானல் தேர்வு செய்ததற்கான காரணம் என்ன? அங்கு என்னென்ன செய்தீர்கள்? குட்டன் பதில்: நாங்கள் மூணாறு போன்று சில இடங்களுக்குச் சென்றுள்ளதால், புதிதாக எங்காவது செல்லலாம் என எங்கள் குழுவில் இருந்த சுதீஸ்தான் கொடைக்கானலை தேர்வு செய்தார். அவர் ஏற்கெனவே இரண்டு முறை கொடைக்கானல் ‘குணா குகை’க்கும் சென்றிருந்தார். ஒன்பது பேர் இருக்கை அளவே கொண்ட டொயோடா குவாலிஸ் வாகனத்தில் டிரைவருடன் சேர்த்து, 12 பேராகப் பயணித்தோம். அங்கு கொடைக்கானல் ஆறு, ‘பைன் காடு’ எனப் பல இடங்களைப் பார்வையிட்டு மகிழ்ச்சியாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். படக்குறிப்பு, மஞ்சும்மல் பாய்ஸ் கொடைக்கானல் சென்ற புகைப்படம் குகைக்குள் சுபாஷ் விழுந்தபோது என்ன நடந்தது? கேள்வி: ‘குணா குகை’ தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்தும் ஏன் தடுப்பை மீறிச் சென்றீர்கள்? சுபாஷ் விழுந்ததும் அங்கு சென்றது தவறு என உணர்ந்தீர்களா? குட்டன் பதில்: குணா குகை அருகே தமிழில் மட்டும் அறிவிப்புப் பலகை வைத்திருந்ததால், அது தடை செய்யப்பட்ட பகுதி என்பது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் சென்றபோது அங்கு எங்களுக்கு முன்பு சில சுற்றுலா பயணிகள் குகை பகுதிக்குச் சென்றதால், அவர்களைப் பின்தொடர்ந்துதான் நாங்களும் சென்றோம். நாங்கள் சென்றபோது சுபாஷ் குழியில் விழுந்தபின், இங்கு வந்தது தவறு என்பதை உணர்ந்தோம். கேள்வி: குகைக்குள் விழுந்ததும் சுபாஷூக்கு சுயநினைவு இருந்ததா? குகைக்குள் எட்டிப் பார்த்தபோது எப்படி இருந்தது? குட்டன் பதில்: குகைக்குள் விழுந்து அரை மணிநேரத்திற்கு சுபாஷூக்கு சுயநினைவே இல்லை. அவனிடம் இருந்து எந்த சத்தமும் வராததால் அவன் உயிருடன் இருக்கிறானா இல்லையா என எதுவும் எங்களுக்குத் தெரியவில்லை. குகைக்குள் சுபாஷ் விழுந்ததும் நாங்கள் அனைவரும் என்ன செய்வது எனத் தெரியாமல் அலைமோதினோம். குகைக்குள் நாங்கள் பார்த்த போது இருட்டாக, பயங்கரமாக இருந்தது. அரை மணிநேரத்துக்குப் பின் சுபாஷ் வலியில் மரண ஓலமிடும் சத்தம் கேட்டுத்தான் அவன் உயிருடன் இருக்கிறான், எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் எனத் தோன்றியது. அதன் பிறகுதான் காவல் நிலையம், வனத்துறை, தீயணைப்புத் துறை எனப் பலருக்கும் தகவல் தெரிவித்து, உதவிகள் பெற்றோம். படக்குறிப்பு, சம்பவ இடத்திற்கு வந்து சுபாஷ் குழிக்குள் இருந்து சத்தமிடுவதைக் கேட்டவுடன்தான் போலீஸார், தீயணைப்புத் துறையினர் ஓரளவுக்கு உதவி செய்தார்கள். படத்தில் வருவது போல் காவல்துறையினர் தாக்கினார்களா? கேள்வி: சுபாஷை மீட்க காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் போதிய உதவிகள் செய்தார்களா? திரைப்படத்தில் வருவது போல் தாக்கினார்களா? கிருஷ்ணா பதில்: சுபாஷ் குழியில் விழுந்ததும் உதவி கேட்டு கொட்டும் மழையில் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு என்னுடன் சேர்த்து நான்கு பேர் சென்றிருந்தோம். போலீசாரிடம் நாங்கள் நடந்ததைக் கூறியபோது, ‘குணா குகை’ அருகே சில கொலைகள் நடந்துள்ளதாகக் கூறிய போலீஸார், நாங்களும் அதேபோல் சுபாஷை குழிக்குள் தள்ளிக் கொலை செய்துவிட்டோம் எனக் கூறி எங்களை லத்தியால் அடித்துத் துன்புறுத்தினார்கள். பின், சம்பவ இடத்திற்கு வந்து சுபாஷ் குழிக்குள் இருந்து சத்தமிடுவதைக் கேட்டவுடன்தான் போலீஸார், தீயணைப்புத் துறையினர் ஓரளவுக்கு உதவி செய்தார்கள். பெரிய அளவிலான உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. குகைக்குள் இறங்க துணிச்சலாக முன்வந்தது எப்படி? கேள்வி: சுபாஷை மீட்க குகைக்குள் யாரும் இறங்க முன்வராதபோது குட்டன் மட்டும் எப்படி முன்வந்தார்? அதற்கான தைரியம் எப்படி கிடைத்தது? குட்டன் பதில்: சுபாஷ் விழுந்த சில நிமிடங்களில் கடும் மழை பெய்து, அவர் விழுந்த குழியில் மழைநீர் வழிந்தோடியது. மழைநீருடன் சில கற்களும் சென்றதால், மழைநீருடன் குழிக்குள் கற்கள் செல்வதைத் தடுக்க நாங்கள் அனைவரும் குழியைச் சுற்றி படுத்துக்கொண்டோம். மழை நின்றவுடன் தீயணைப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால், வெகு நேரமாகப் பேசிக்கொண்டிருந்த அவர்கள் குழிக்குள் இறங்கி சுபாஷை காப்பாற்றுவதாக எங்களுக்கு நம்பிக்கையே இல்லை. அந்த நேரத்தில் சுபாஷை காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும்தான் எனக்குத் தோன்றியது. அதனால், நானாக முன்வந்து சுபாஷை காப்பாற்ற குழிக்குள் இறங்கினேன், அதற்கு அரசு அதிகாரிகளும் சம்மதித்தனர். அந்த இக்கட்டான சூழலில் எங்கள் அனைவரது மனதில் சுபாஷை காக்க வேண்டுமென்பதைத் தவிர வேறெதுவும் இல்லை. எனக்கு சுபாஷை மிகப் பிடிக்கும், அவன் என் நண்பன், அதனால் எதையும் பொருட்படுத்தாமல் உடனடியாக இறங்கிவிட்டேன். படக்குறிப்பு, "படத்தில் காண்பிப்பது போல் நான் நெற்றியில் டார்ச் விளக்கு கட்டவில்லை. உண்மையில் டார்ச் விளக்கை கயிற்றில் சுற்றி என் கழுத்தில் கட்டியிருந்தேன்" குகையின் குழிக்குள் சென்றபோது எப்படி இருந்தது? கேள்வி: குகையின் குழிக்குள் சென்றபோது எப்படி இருந்தது? சுபாஷை பார்த்த போது எப்படி உணர்ந்தீர்கள்? குட்டன் பதில்: குகையின் குழி சாதாரணமாக இல்லை, கும்மிருட்டாக குறுக்கும் நெடுக்குமாக கூர்மையான பாறைகளுடன், மிகவும் வழுக்கும் விதமாக, வெளவால் எச்சங்களின் நாற்றத்துடன் இருந்தது. படத்தில் காண்பிப்பது போல் நான் நெற்றியில் டார்ச் விளக்கு கட்டவில்லை. உண்மையில் டார்ச் விளக்கைக் கயிற்றில் சுற்றி என் கழுத்தில் கட்டியிருந்தேன். பாறைகளில் கால் வைத்து ஊன்றி நிற்க வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், டார்ச் லைட் பயன்படுத்தி சுபாஷை தேடினேன். கீழே இறங்க இறங்க சுபாஷ் கதறும் சத்தம் அதிகமானது. 70 அடி ஆழத்திற்கு மேல் செல்லும்போது கயிறு தீர்ந்துவிட, கூடுதல் கயிறு இணைக்கப்பட்டது. 90வது அடியில் சுபாஷை கண்டேன். அப்போது எனக்கு உயிர் வந்து போனது போல் இருந்தது, அந்த மகிழ்ச்சியை என்னால் வார்த்தைகளில் கூற முடியவில்லை. சுபாஷ் குகைக்குள் எப்படி சிக்கியிருந்தார்? கேள்வி: குகையில் இருந்து வெளிவருவதற்கான போராட்டம் எத்தகையது? குட்டன் பதில்: 98-ஆவது அடியில் கொக்கி போல் இருந்த ஒரு பாறையின் சிறு துண்டில், தனது தம்பியிடம் வாங்கி அவன் அணிந்திருந்த பெல்ட் சிக்கிக்கொண்டிருந்தது, அவன் செங்குத்தாக நிற்பது போல் சிக்கிக் கொண்டிருந்தான். தான் இறந்து வேற்று உலகில் இருப்பது போன்ற வார்த்தைகளுடன் உளறிக் கொண்டிருந்தான். அவனை நான் தொட்டதும், பயத்தில் என்னைத் தாக்க கையை உயர்த்தினான். பின் வலியில் கதறி அழ ஆரம்பித்து விட்டான். அவன் உடல் முழுதும் காயம், ரத்தம், சேறும் சகதியுமாக இருந்தான். வெளியில் எடுக்க கயிறு கட்டவே முடியவில்லை, தொட்டாலே கதறி அழுதான். கயிற்றைக் கட்டி மேலே வரும்போது, 3 முறைக்கு மேல் கயிறு பாறை இடுக்கில் சிக்கிக்கொண்டது, மீண்டும் எங்களைக் கீழே இறக்கி மேல ஏற்றியபோது இந்த சிக்கல்களைச் சமாளித்து மேலே வந்தோம். படக்குறிப்பு, "இதுவரை இந்தக் குழியில் விழுந்த 13 பேர் இறந்துள்ளனர், யாரும் பிழைக்கவில்லை. சுபாஷ் கடவுளின் பிள்ளை, கடவுளின் அருளால் பிழைத்துள்ளான் என அனைவரும் கூறினார்கள்" உயிருடன் மீண்ட தருணம் கேள்வி: சுபாஷை உயிருடன் மீட்டு குழியில் இருந்து வெளியே அழைத்து வந்ததும் எப்படி உணர்ந்தீர்கள்? குட்டன் பதில்: வெளியே வந்ததும் சுபாஷை காப்பாற்றி வீட்டுக்கு அழைத்துச் செல்ல உள்ளேன் என நினைத்து மகிழ்ச்சியில் அழுதேன். என் நண்பர்கள் எங்களைத் தூக்கிக்கொண்டு மருத்துவ உதவிக்காக அழைத்துச் சென்றனர். இதுவரை இந்தக் குழியில் விழுந்த 13 பேர் இறந்துள்ளனர், யாரும் பிழைக்கவில்லை. சுபாஷ் கடவுளின் பிள்ளை, கடவுளின் அருளால் பிழைத்துள்ளான் என அனைவரும் கூறினார்கள். கேள்வி: 2006 சம்பவத்திற்குப் பின் ‘குணா குகை’ சென்றீர்களா? உங்களுக்கு உதவிய ‘டூர் கைடு’, புகைப்படக் கலைஞர், பெட்டிக்கடை உரிமையாளர் ஆகியோரைச் சந்தித்தீர்களா? சுபாஷ் பதில்: சம்பவத்திற்குப் பின் நாங்கள் அனைவரும் கூட்டாக கடந்த வாரம் ‘குணா குகை’ சென்றிருந்தோம். 2006 சம்பவம் நினைவு வந்தாலும், எங்களுக்கு அச்ச உணர்வு இல்லை. அங்குள்ள கடைக்காரரை மட்டுமே எங்களால் பார்க்க முடிந்தது, ‘டூர் கைது’, புகைப்படக் கலைஞரைப் பார்க்க முடியவில்லை. கேள்வி: குகைக்குள் விழுந்ததற்கு மது போதைதான் காரணமா? திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டது போலத்தான் விழுந்தாரா? குட்டன் பதில்: நாங்கள் கொடைக்கானலில் தங்கியபோது மது அருந்தியது உண்மைதான். ஆனால், குகைக்குச் செல்லும்போதும், அதற்கு முன்பும் நாங்கள் மது அருந்தவில்லை. ஒரு பாறையில் இருந்து மற்றொரு பாறைக்கு நாங்கள் தாண்டித்தான் சென்றோம். அப்போது, நான்காவதாக தாண்டிய சுபாஷ் செருப்பு இடறி குழிக்குள் விழுந்து விட்டார், இதுதான் உண்மைக் காரணம். கேள்வி: ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் குறித்து தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன், மது குடித்துவிட்டு கூத்தடித்ததாக கடும் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து உங்கள் கருத்து? சுபாஷ் பதில்: எங்களை மக்கள் ஹீரோவாக பார்க்கிறார்கள், எங்களுக்கு நடந்த சம்பவத்தை அனைவரும் பரவலாகப் பேசுகிறார்கள். குறிப்பாக தமிழ் மக்கள் இந்தத் திரைப்படத்திற்கும், எங்களுக்கும் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். எங்களைப் பற்றி யாரோ என்னமோ பேசட்டும், அவர்களுக்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல விரும்பவில்லை, அதை ஒரு பொருட்டாகவும் நாங்கள் நினைக்கவில்லை. https://www.bbc.com/tamil/articles/c06l3d02002o
  14. மூன்றாவது நாளாக தொடரும் உண்ணாவிரதம்; சட்டத்தரணிகள் பார்வையிட்டனர் Published By: DIGITAL DESK 3 14 MAR, 2024 | 03:11 PM வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களின் உண்ணாவிரத போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவர்களை வவுனியா சட்டத்தரணிகள் சிலர் இன்று வியாழக்கிழமை (14) பார்வையிட்டனர். வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று நேற்றுமுன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தமக்கான நீதி வழங்கக்கோரி அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்றுமுன்தினம் தொடங்கிய குறித்த உண்ணாவிரத போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் நீடித்து வருகின்றது. கைதுசெய்யப்பட்ட எட்டுபேரில் ஆலயபூசாரியார் த.மதிமுகராசா மற்றும்து தமிழ்ச்செல்வன், தி.கிந்துயன்,சு.தவபாலசிங்கம், விநாயகமூர்த்தி ஆகியோரே உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை அவர்கள் வழமை போல உணவினை உட்கொள்வதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நேற்றயதினம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வவுனியாவைசேர்ந்த சட்டத்தரணிகளான கொன்சியஸ் மற்றும் திலிப்காந் ஆகியோர் இன்றையதினம் சிறைச்சாலைக்கு சென்று அவர்களை பார்வையிட்டனர். இதன்போது அவர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றமையினை அவர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர். https://www.virakesari.lk/article/178721
  15. கெஹலிய உட்பட்டோருக்கு வழக்கு விசாரணைகள் முடியும்வரை விளக்கமறியல்! 14 MAR, 2024 | 03:46 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் நால்வருக்கு எதிரான தடுப்பூசி விவகார வழக்கு நிறைவடையும் வரை அவர்களுக்குப் பிணை வழங்க நீதிமன்றம் இன்று (14) மறுத்துள்ளது. மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றமே பிணைக் கோரிக்கையை மீண்டும் நிராகரித்துள்ளது. இதேவேளை, தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசி போட்ட சம்பவம் தொடர்பில் மருத்துவ வழங்கல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் துசித சுதர்சன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதிப் பணிப்பாளர் வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பிய பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். https://www.virakesari.lk/article/178726
  16. இன்னும் கவி ஐயாவின் படங்களைக் காணவில்லையே?! தொடக்கத்தில் மயிலம்மாவை அவ்வளவு ஆர்வமில்லாமல் தான் வாசிக்கத் தொடங்கினேன், இப்போது அடுத்த பகுதி எப்போது என காத்திருக்க வைத்துவிட்டார் யாழ் களச் சாம்பியன் சுவி அண்ணா.
  17. டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி ஆடுவதில் என்ன சிக்கல்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 23 நிமிடங்களுக்கு முன்னர் விராட் கோலி தான் ஆடும் ஆட்டங்களின் சூழலை உன்னிப்பாக ஆய்வு செய்து அதற்கேற்றாற்போல் ஆடுவது அவரது பலம் என்று பலராலும் பாராட்டப்படுகிறார். ஆனால் இப்போது அவர் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுவாரா என்பது ஒரு பெரும் கேள்வியாகியிருக்கிறது. விராட் கோலிக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் என்ன? “விராட் கோலியின் பலமே சூழலுக்கு ஏற்றபடி தன்னை தகவமைத்துக் கொள்வதுதான். போட்டி குறித்த அவரது விழிப்புணர்வு அற்புதமானது. 4 ஓவர்களுக்குப்பின், 6 ஓவர்களுக்குப்பின் ஆட்டத்தை எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் அவரது பார்வை மகத்தானது. சேஸிங்கின்போது, தேவைப்படும் ரன்ரேட்டை கணக்கிட்டு பேட்டிங் செய்வதில் வல்லவர்” இந்த வார்த்தைகள் விராட் கோலி குறித்து இந்திய கிரிக்கெட் வரலாற்றின் முக்கிய வீரர்களுள் ஒருவரான சச்சின் டெண்டுல்கர் கூறியது. ஆனால், கோலி வரும் ஜூன் மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியில் விளையாடுவாரா என்ற கேள்விகள் வலம் வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் ஆங்கில நாளேடுகள், இணையதளங்கள் வெளியிட்ட செய்தியில் “2024-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலி இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை,” என்று தெரிவித்திருந்தன. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி, விராட் கோலியின் பெயர் ட்ரெண்டாகியது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் சர்வதேச டி20 போட்டியில் 14 மாதங்களாக விளையாடவில்லை. அதன்பின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித் சர்மா மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், விராட் கோலி சொந்தப் பணி காரணமாக அந்தத் தொடரிலிருந்து விலகினார். அது மட்டுமல்லாமல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்தும் கோலி விலகிக் கொண்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இந்திய அணியில் எந்தப் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை டி20 உலகக் கோப்பை போட்டிகளில் கோலி ஆடுவாரா? பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா சமீபத்தில் கூறுகையில் “வரும் ஜூன் மாதம் அமெரிக்கா, கரீபியன் தீவுகளில் நடக்கும் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு ரோகித் சர்மாதான் இந்திய அணியை வழி நடத்துவார்,” என்று உறுதி செய்தார். ஆனால் விராட் கோலி குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை, அவர் உலகக் கோப்பைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பதும் தெரியாது. இந்நிலையில், ஆங்கில இணையதளங்கள், நாளேடுகள் ஆகியவை ‘பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாக’ வெளியிட்ட செய்தியில் “மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் உள்ள ஆடுகளங்கள் ‘ஸ்லோ விக்கெட்டைக்’ கொண்டவை. இங்கு பந்து மெதுவாக, தாழ்வாக பேட்ஸ்மேனை நோக்கி வரும், அதனால் பொறுமையாக பேட் செய்ய வேண்டும். பவர் ஹிட்டராக இருக்க வேண்டும். இதுபோன்ற ஆடுகளங்கள் விராட் கோலி பேட்டிங் ஸ்டைலுக்கு உகந்ததாக இருக்காது. பவர் ஹிட்டர் வீரர்களுக்குத்தான் இந்த ஆடுகளம் பொருந்தும். ஆதலால், இந்திய அணியிலிருந்து கோலி நீக்கப்பட வாய்ப்புள்ளது,” என்று தெரிவித்திருந்தன. மேலும், “விராட் கோலியை உலகக் கோப்பைக்குத் தேர்ந்தெடுக்காமல் அவரை நீக்குவது தேர்வாளர்களுக்கு கடினமான முடிவாகத்தான் இருக்கும். ஆனால், வேறு வழியில்லை. எதிர்காலத்தில் அணியை வழிநடத்திச் செல்லவும், இளம் வீரர்களை உருவாக்கவும், வளர்த்தெடுக்கவும், அவர்களுக்கு அதிக வாய்ப்புகளைத் தர வேண்டும். சர்வதேச அரங்கில் இளம் வீரர்கள் திறமையை வெளிப்படுத்தினால்தான் அவர்களுக்கு ஊக்கமாக அமையும். ஆதலால் விராட் கோலி அணியிலிருந்து நீக்கப்படலாம்,” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கடினமான செய்தியை தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர்தான், விராட் கோலிக்கு தெரிவித்து அவருக்கு புரிய வைக்க வேண்டும் என்று அச்செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. டி20 உலகக் கோப்பை போட்டிகள் எப்போது நடக்கின்றன? மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பைத் தொடர் ஜூன் 1-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதிவரை நடக்கவுள்ளது. 2022-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் 16 அணிகள் போட்டியிட்ட நிலையில், இந்த முறை 20 அணிகள் போட்டியிடுகின்றன. மொத்தம் 55 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை மேற்கிந்தியத் தீவுகளும், அமெரிக்காவும் சேர்ந்து நடத்துகின்றன. மேற்கிந்தியத் தீவுகள் தவிர, நியூயார்க், டெக்ஸாஸ், புளோரிடா ஆகிய அமெரிக்க மாநிலங்களில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடக்கின்றன. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி உள்ளிட்ட தரவரிசையில் உள்ள 8 அணிகள் தானாகவே தகுதி பெற்றுவிட்டன. முதல் முறையாக கனடா, உகாண்டா, போட்டியை நடத்தும் அமெரிக்கா ஆகிய அணிகள் உலகக் கோப்பையில் பங்கேற்கின்றன. பட மூலாதாரம்,TWITTER/ SURYA KUMAR YADAV படக்குறிப்பு, விராட் கோலி இல்லாவிட்டால் அவரின் இடத்துக்கு சூர்யகுமார் யாதவ், போன்ற இளம் வீரர்கள் பட்டியல் நீள்கிறது. விராட் கோலிக்கு பதிலாக யார்? விராட் கோலி இல்லாவிட்டால் அவரின் இடத்துக்கு யாரைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது? சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ரவீந்திர ஜடேஜா,திலக் வர்மா, இஷான் கிஷன், சஞ்சு சாம்ஸன், ஸ்ரேயாஸ் அய்யர், போன்ற இளம் வீரர்கள் பட்டியல் நீள்கிறது. கடந்த 2022 டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஒட்டுமொத்த இந்திய அணியும் சரிந்து வீழ்ந்தபோது, விராட் கோலி என்ற ஒற்றை பேட்டர்தான் இந்திய அணியைத் தூக்கி நிறுத்தினார். அவரை நீக்குவது எந்த விதத்தில் நியாயம், கோலி போன்ற அனுபவமான பேட்டர் அணிக்கு அவசியம் என்று சமூக வலைத்தளத்தில் கோலியின் ரசிகர்கள், ஆதரவாளர்கள் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால், டி20 போட்டியில் விராட் கோலியின் புள்ளிவிவரங்கள், அவரது பேட்டிங் ஸ்டைல் போன்றவை அவருக்கே தெரியாமல் அவருக்கு பாதகமாக அமைந்துவிட்டன என்றும் விமர்சனங்கள் இருக்கின்றன. விராட் கோலியின் பேட்டிங் சராசரி, ஸ்ட்ரைக் ரேட் போன்றவை இன்றுள்ள அதிவேக டி20 போட்டிக்கு எதிர்பார்ப்பைவிட குறைவாக இருக்கிறது என்று கிரிக்கெட் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலி பவுண்டரிகள், சிக்ஸர் அடிப்பதற்கு பவர் ஹிட்டராக மாறத் தயங்குகிறார் கோலியின் பலவீனங்கள் என்ன? விராட் கோலி 117 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 4,037 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதம், 37 அரைச் சதங்கள் ஆகியவையும் அடங்கும். சராசரி 51.75, ஸ்ட்ரைக் ரேட் 138 என்று வைத்துள்ளார். டி20 போட்டிகளில் விராட் கோலி 361 பவுண்டரிகள், 117 சிக்ஸர்கள் அடித்துள்ளார். பவுண்டரி எடுத்துக் கொண்டால் விராட் கோலி இன்னிங்ஸ் ஒன்றுக்கு 3.30 பவுண்டரியும், சிக்ஸராக 1.07 மட்டுமே அடிக்கிறார். ரன்கள் வீதம் கணக்கிட்டால், பவுண்டரிகள் வாயிலாக 19 முதல் 20 ரன்கள் வரை சராசரியாக கோலி சேர்க்கிறார். விராட் கோலி டி20 போட்டியில்கூட விக்கெட்டுகளுக்கு இடையே ஓடி ரன்கள் எடுப்பதற்குதான் முன்னுரிமை அளிக்கிறாரே தவிர, பவுண்டரிகள், சிக்ஸர் அடிப்பதற்கு பவர் ஹிட்டராக மாறத் தயங்குகிறார் என்கிறார்கள் விமர்சகர்கள். விராட் கோலியின் டி20 போட்டிகளில் இன்னிங்ஸ் ஒன்றுக்கு பேட்டிங் சராசரி 27.1 பந்துகளில் அவர் 37.5 ரன்களை அணிக்காக எடுக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலி 117 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 4,037 ரன்கள் குவித்துள்ளார் டி20 ஆட்டத்துக்கு தேவை என்ன? கசப்பான உண்மை என்னவென்றால், ‘டி20 கிரிக்கெட் போட்டி என்பது நிதானமான ஸ்ட்ரைக்ரேட்டுடன், சூழலுக்கு ஏற்ப பேட்டிங் செய்யும் போட்டி அல்ல, அதிரடியாக, பேய்த்தனமாக பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்யும் ஆட்டம் என்பதை உணர வேண்டும்,’ என கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர். டி20 போட்டியில் மொத்தம் 10 பேட்டர்களும் சந்திக்கப் போவது 120 பந்துகளைத்தான். சராசரியாக ஒரு விக்கெட் 12 பந்துகளை மட்டுமே சந்திக்க முடியும். இது ஒரு நாள் போட்டியில் 30 பந்துகளுக்கு ஒரு விக்கெட் என்றால், டெஸ்ட் போட்டியில் 62 பந்துகளுக்கு ஒரு விக்கெட் என எடுக்கலாம். ஆதலால், டி20 போட்டிகளில் ஒரு விக்கெட் அல்லது பேட்டர் களத்தில் இருக்கும் நேரம், சந்திக்கும் பந்துகள் குறைவு. இந்த முதல் 12 பந்துகளுக்குள் ஒரு விக்கெட் அல்லது பேட்டர் தனது விக்கெட்டை இழந்துவிடக்கூடாது. அதற்காக களத்தில் நிற்க வேண்டுமே என்பதற்காக பந்துகளை வீணடித்து ஸ்ட்ரைக் ரேட்டையும், ரன்ரேட்டையும் குறைத்துவிடக்கூடாது. அதனால்தான் டி20 போட்டியில் ஒரு பேட்டர் களமிறங்கும்போது சந்திக்கும் ஒவ்வொரு பந்துக்கும் எதிர்பார்க்கும் ரன் என்ற கணக்கீடு வைக்கப்பட்டுள்ளது. இதை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். தோல்வி(ஃபெய்லியர்), கேமியோஸ், சக்சஸ்(வெற்றி), அன்டர் பார்(சராசரிக்கும் கீழ்) தோல்வி: டி20 இன்னிங்ஸில் ஒரு பேட்டர் 12 பந்துகளுக்குள் ஆட்டமிழந்து, சந்தித்த பந்துகளில் இருந்து எதிர்பார்க்கும் ரன்களைவிட குறைவாக எடுத்தால் அது தோல்வியாகும். கேமியோஸ்: ஒரு பேட்டர் 12 பந்துகளுக்குள் ஆட்டமிழந்தாலும், சந்தித்த பந்துகளில் இருந்த எதிர்பார்க்கும் ரன்களைவிட அதிகமாக சேர்த்தால்அது கேமியோஸ். வெற்றி: ஒரு பேட்டர் 12 பந்துகளைச் சந்தித்து, சந்தித்த பந்துகளில் எதிர்பார்க்கும் ரன்களைவிட அதிகமாக சேர்ப்பது. சரிசரிக்கும் குறைவு: ஒரு பேட்டர் குறைந்தபட்சம் 12 பந்துகளைச் சந்தித்து, சந்தித்த பந்துகளில் இருந்து எதிர்பார்க்கும் ரன்களைவிட குறைவாகச் சேர்ப்பதாகும். பட மூலாதாரம்,TREVOR COLLENS படக்குறிப்பு, கோலி சந்தித்த பந்துகளில் இருந்து எதிர்பார்க்கும் ரன்களைவிட குறைவாகச் சேர்த்துள்ளார் கோலி ‘அன்டர் பார்’ பேட்டரா? இந்த வகையில் பார்த்தால், டி20 போட்டிகளில் இந்திய அணியில் இப்போதுள்ள இளம் வீரர்களுடன் ஒப்பிடும்போது, விராட் கோலி சராசரிக்கும் குறைவான ‘அன்டர் பார்’ ஆட்டங்களைத்தான் அதிகமாக விளையாடியுள்ளார். அதாவது கோலி சந்தித்த பந்துகளில் இருந்து எதிர்பார்க்கும் ரன்களைவிட குறைவாகச் சேர்த்துள்ளார். அதேபோல கேமியோஸ் எனப்படும் அதிரடியான ஆட்டங்கள் வரிசையில் கோலி தனது 107இன்னிங்ஸ்களில் வெறும் 8.7% மட்டுமே ஆடியுள்ளார். ஆனால், சந்தித்த பந்துகளில் எதிர்பார்க்கும் ரன்களைவிட அதிகமாக சேர்க்கும் வெற்றியாளர் பேட்டர்கள் சராசரியில் 30.8% வைத்துள்ளார். இது சிறப்பானது என்றாலும் டி20 போன்ற வேகமான ஆட்டத்துக்கு இது பொருந்தாது. விராட் கோலியின் ரன்சேர்க்கும் வேகம், ரோகித் சர்மாவுடன் ஒப்பிடும்போது 5.7% மெதுவாகவும், கே.எல்.ராகுலுடன் ஒப்பிடும்போது 5.2% மெதுவாகவும், சூர்யகுமாருடன் ஒப்பிடும்போது 27% சதவீதம் மெதுவாகவும் இருக்கிறது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. விராட் கோலி தான்சந்திக்கும் முதல் 100 பந்துகளில் 128 ரன்களைச் சேர்க்கிறார். ரோகித் சர்மா 139 ரன்களாகவும், கே.எல்.ராகுல் 134 ரன்களாக சேர்க்கிறார்கள். ஆனால், முதல் 20 பந்துகளைச் சந்திக்கும் வகையில் ரோகித் சர்மா 127 ரன்கள் என கோலியைவிடப் பின்தங்கினாலும், போட்டியில் ரன்ரேட்டை வேகப்படுத்துவதில் கோலியைவிட சிறந்தவராக திகழ்கிறார் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, டி20 போட்டியில் விராட் கோலி மெதுவாக ரன்சேர்க்கும் வீரர் கோலியைப் போன்ற பிற வீரர்கள் யார்? இந்த புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, டி20 போட்டியில் விராட் கோலி மெதுவாக ரன்சேர்க்கும் வீரர். இதனால் 120 பந்துகளைக் கொண்ட போட்டியில் கோலியின் ஆங்கர் ஆட்டத்தால் அடுத்தார்போல் காத்திருக்கும் பேட்டர்கள் பல போட்டிகளில் பேட் செய்யாமல்கூட போகலாம். பாகிஸ்தானின் பாபர் ஆஸம், முகமது ரிஸ்வான் போன்றோரில் ஆட்டம் கூட கூட கோலி போன்றதுதான். இதே சிக்கல்தான் நியூசிலாந்தில் கேன் வில்லியம்ஸனிடமும் இருக்கிறது. இதனால்தான் அதிவேகமான ஆட்டத்தைக் கொண்ட டி20 போட்டிகளில் வில்லியம்ஸனால் ஈடுகொடுக்க முடியவில்லை. கரீபியனில் கோலியின் பேட்டிங் எப்படி? கரீபியன் ஆடுகளங்களில் கோலி 7 இன்னிங்ஸ்களில் 229 ரன்களும், அமெரிக்காவில் 3 போட்டிகளில் 63 ரன்களும் சேர்த்துள்ளார். கோலியின் சராசரி இந்த மைதானங்களில் 29 ரன்கள், ஸ்ட்ரைக் ரேட் 120.66 என இருக்கிறது. இங்கு கோலி 30 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அவரின் ஒட்டுமொத்த ரன்களில் 49% பவுண்டரி அடங்கும். 100 டி20 போட்டிகளுக்கு மேல் அனுபவம் கொண்டவராக இருந்தாலும் கரீபியன், அமெரிக்க ஆடுகளங்களில் அவருக்கு பெரிதாக அனுபவம் இல்லை, அங்கு அவர் பவர்ஹிட்டராக இல்லை, அன்டர்பார் பேட்டராகவே இருக்கிறார் என்பது தெரிகிறது. பட மூலாதாரம்,BCCI/IPL படக்குறிப்பு, கோலி டி20 ஏற்றார்போல் பேட்டிங் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது ஐபிஎல் தொடரில் கோலிக்கு என்ன வாய்ப்பு? விராட் கோலி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இந்திய அணியில் எந்தப் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கோலி விளையாடவில்லை. வரும் 22-ஆம் தேதி சென்னையில் தொடங்கும் ஐபிஎல் டி20 தொடரில் 3 மாதங்களுக்குப்பின் கோலி கிரிக்கெட் விளையாட உள்ளார். முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியை எதிர்த்து விராட் கோலி இருக்கும் ஆர்சிபி அணி மோதுகிறது. இந்தத் தொடரின் முதல் பாதியில் விராட் கோலியின் பேட்டிங் திறமை சிறப்பாக இருந்தால், கடைசி நேரத்தில்கூட தேர்வாளர்கள் இந்திய அணிக்குள் கோலியைத் தேர்ந்தெடுக்கலாம், அல்லது பாராமுகமாகவும் இருக்கலாம். கோலியின் மனநிலை என்ன? விராட் கோலி உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படாமல் இருக்க 3 காரணங்கள் இருக்கலாம் என்று மூத்த விளையாட்டுத்துறை பத்திரிகையாளர் முத்துகுமார் பிபிசி செய்திகளிடம் தெரிவித்தார். அவர் கூறுகையில் “ஐபிஎல் மூலம் புதிய இளம் வீரர்கள் அறிமுகமாகிறார்கள் இந்திய அணிக்குள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதற்காக கோலி நீக்கப்படலாம். அடுத்ததாக கோலியின் மனநிலை. எந்தெந்த போட்டியில் தான் விளையாட வேண்டும் என்பதை கோலிதான் முடிவு செய்கிறாரே தவிர, தேர்வுக்குழுவினர் அல்ல. தான் விரும்பினால், டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார், பிடிக்கவில்லையென்றால், டி20 தொடரில்கூட விளையாடுவதில்லை. இதுபோன்ற கோலியின் மனநிலை, இப்போதுள்ள தேர்வாளர்கள் சகிக்கமாட்டார்கள்,” என்றார். அவர் மேலும் பேசுகையில், “14 மாதங்களாக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடாத கோலியை, திடீரென டி20 உலகக் கோப்பைக்கு மட்டும் தேர்ந்தெடுப்பது என்பது மற்ற வீரர்களின் திறமையை, மனநிலையை பாதிக்கும். அணியின் ஓய்வு அறையில் ஒற்றுமையைப் பாதிக்கும். அது மட்டுமல்லாமல் இளம் வீரர்கள் பலர் புதிதாக அணிக்குள் வரும்போது, கோலியால் அவர்களுடன் உடனடியாக ஒத்துப்போவது கடினம். அணிக்குள் தொடர்ந்து இருக்கும்போதுதான் சகவீரர்களுடன் புரிதல், ஒற்றுமை, உத்வேகம், ஸ்பிரிட் போன்றவை உருவாகும்,” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES ‘மாற்றுவீரர் இல்லாமல் கோலியை நீக்குவது தவறு’ முத்துக்குமார் மேலும் பேசுகையில், “கோலிக்குப் பதிலாக வலிமையான பேட்டரை உருவாக்கிவிட்டுத்தான் அவரை நீக்க வேண்டும். இல்லாவிட்டால், உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் கோலி இல்லாதது எதிரணிக்கு மனரீதியாக வலிமையைக் கொடுத்துவிடும். ஆதலால், கோலியும் அணியில் இருக்க வேண்டும், அவரை முக்கியமான ஆட்டங்களுக்குப் பயன்படுத்திவிட்டு, முக்கியமற்ற ஆட்டங்களில் அவருக்குப்பதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்,” எனத் தெரிவித்தார். கோலி டி20 போட்டிகளுக்கு ஏற்றாற்போல் பேட்டிங் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து முத்துக்குமார் பதில் அளிக்கையில் “ஒரு நேரத்தில் டெஸ்ட் போட்டிகளில் புஜாரா மெதுவாக விளையாடுகிறார் என்று குற்றம்சாட்டிய விராட் கோலி மீது, இப்போது டி20 போட்டியில் மெதுவாக ஆடுகிறார் என்று குற்றச்சாட்டு வந்துள்ளது. இது ஏறக்குறைய உண்மைதான் என்றாலும், ஆங்கர் ரோல் எடுத்து கோலி விளையாடும்போது இதுபோன்றுதான் விளையாட முடியும்,” என்றார். மேலும், “மற்றவகையில், 190 ரன்கள் அடிக்க வேண்டிய ஆட்டத்தில் கோலி கடைசிவரை நிலைத்து நின்றால் 170 ரன்கள்தான் வந்தது என்ற குற்றச்சாட்டு ஏற்கக்கூடியதுதான். தொடக்கத்தில் நிதானமாக, மெதுவாக பேட் செய்தாலும், ஸ்ட்ரைக் ரேட்டை பராமரித்து கோலி கொண்டு செல்கிறார், கடைசி நேரத்தில் கேமியோ ஆடுகிறார். கடந்த ஐபிஎல் தொடரில் கோலியின் பேட்டிங்கில் பெரிய மாற்றம் இருந்தது. வரும் ஐபிஎல் தொடரில் கோலியின் பேட்டிங் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cn0e4e16llwo
  18. போரை தீவிரப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு; இஸ்ரேல் அதிரடி 2024-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், காசாவிலுள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரால் ஏற்பட்டு உள்ள செலவுகளை ஈடுகட்டுவதற்காக கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், போரை இஸ்ரேல் அரசு தீவிரப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. 2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், காசாவிலுள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரால் ஏற்பட்டு உள்ள செலவுகளை ஈடுகட்டுவதற்காக கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி, மொத்த பட்ஜெட்டுக்கான தொகை ரூ.13 லட்சத்து 41 ஆயிரத்து 981 கோடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனால், ரூ.5 லட்சத்து 79 ஆயிரத்து 868 கோடி செலவினத்தில் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதில் ராணுவ செலவினத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது. போருக்கான செலவினங்களை ஈடுகட்டுவது மற்றும் ராணுவ அமைப்பை பலப்படுத்துவது என்ற இரண்டு நோக்கங்களும் அடங்கும். இந்த கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீட்டால், 2024-ம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.6 சதவீத பற்றாக்குறை ஏற்படும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. அதனுடன், 2024 மற்றும் 2025 ஆண்டில் ரூ.46 ஆயிரத்து 389 கோடி அளவுக்கு நிதியானது சரிகட்டப்படும். இதேபோன்று, நாட்டில் வருவாயை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளுக்கும் அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. வங்கிகளில் இருந்து கிடைக்கும் லாப தொகைக்கு வரி விதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் அடங்கும். இந்த மேம்பட்ட பட்ஜெட்டானது, போருக்கான முயற்சிகளை அமல்படுத்த உதவியாக இருக்கும் என இஸ்ரேல் நிதியமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் ஷ்லோமி ஹெய்ஸ்லர் கூறியுள்ளார். https://thinakkural.lk/article/295706
  19. "சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை வழங்குவதற்கு இந்திய ஒன்றிய அரசு தொடர்ந்து பின்னடித்து வருகின்றது!" இலங்கையல்லவா வழங்கவேண்டும்?!
  20. இலங்கைக்கு எதிராக ஷன்டோவின் சதமும் ரஹிமின் அரைச் சதமும் பங்களாதேஷின் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் வெற்றியை இலகுவாக்கின 13 MAR, 2024 | 10:18 PM (நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிராக சட்டோக்ரம், ஸஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (12) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ குவித்த அபார சதம் பங்களாதேஷுக்கு இலகுவான 6 விக்கெட் வெற்றியை ஈட்டிக்கொடுத்தது. இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 256 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 44.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 257 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ, முஷ்பிக்குர் ரஹிம் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த பெறுமதிமிக்க 165 ஓட்ட இணைப்பாட்டம் பங்களாதேஷின் வெற்றியை இலகுபடுத்தியது. பங்களாதேஷ் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது டில்ஷான் மதுஷன்கவின் முதலாவது பந்திலேயே ஆரம்ப வீரர் லிட்டன் தாஸை இழந்தது. டில்ஷான் மதுஷன்க தனது இரண்டாவது ஓவரில் சௌம்யா சர்க்காரின் (3) விக்கெட்கடையும் வீழ்த்தினார். (14 - 2 விக்.) மொத்த எண்ணிக்கை 23 ஓட்டங்களாக இருந்தபோது தௌஹித் ரிதோயின் (3) விக்கெட்டை ப்ரமோத் மதுஷான் கைப்பற்ற பங்களாதேஷ் நெருக்கடியை எதிர்கொண்டது. இந் நிலையில் ஜோடி சேர்ந்த ஷன்டோவும் மஹ்முதுல்லாவும் 4ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷுக்கு உயிரூட்டினர். மஹ்முதுல்லா 37 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் ஷன்டோவும் முஷ்பிக்குர் ரஹிமும் ஜோடி சேர்ந்து மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 32 பந்துகள் மீதம் இருக்க பங்காளேதேஷின் வெற்றியை உறுதிசெய்தனர். அணித் தலைவருக்கே உரிய பொறுப்புணர்வுடன் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 129 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 122 ஓட்டங்களுடனும் முஷ்பிக்குர் ரஹிம் 84 பந்துகளில் 4 பவுண்டறிகள் உட்பட 73 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் டில்ஷான் மதுஷன்க 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 255 ஓட்டங்களைப் பெற்றது. அணித் தலைவர் குசல் மெண்டிஸ், ஜனித் லியனவே ஆகிய இருவரின் அரைச் சதங்களும் பெத்தும் நிஸ்ஸன்க, அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோரின் நிதானம் கலந்த துடுப்பாட்டங்களுமே இலங்கை அணியின் மொத்த எண்ணிக்கைக்கு கைகொடுத்தன. ஏனையவர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர். ஆப்கானிஸ்தானுடனான கடைசி ரி20 கிரிக்கெட் போட்டியின்போது உபாதைக்குள்ளானதால் பங்ளாதேஷுக்கு எதிரான ரி20 தொடரில் இடம்பெறாமல் ஒய்வுபெற்றுவந்த பெத்தும் நிஸ்ஸன்க, ஒருநாள் தொடரில் மீண்டும் இடம்பெறுகிறார். இன்றைய போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்கவும் அவிஷ்க பெர்னாண்டோவும் 59 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், இருவரும் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். அவிஷ்க பெர்னாண்டோ 33 ஓட்டங்களுடனும் பெத்தும் நிஸ்ஸன்க 36 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (72 - 2 விக்.) சதீர சமரவிக்ரம களம் புகுந்த சொற்ப நேரத்தில் 3 ஓட்டங்களுடன் வெளியேறினார். குசல் மென்டிஸும் உதவி அணித் தலைவர் சரித் அசலன்கவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். அசலன்க 18 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். தொடர்ந்து குசல் மெண்டிஸும் ஜனித் லியனகேயும் 5ஆவது விக்கெட்டில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர். பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் 75 பந்துகளை எதிர்கொண்டு 59 ஓட்டங்களைப் பெற்றார். மத்திய வரிசையில் வனிந்து ஹசரங்க 13 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஜனித் லியனகே 69 பந்துகளில் 67 ஓட்டங்களைப் பெற்று 8ஆவதாக ஆட்டம் இழந்தார். பின்வரிசையில் எவரும் இரட்டை இலக்கை எண்ணிக்கையை எட்டவில்லை. பந்துவீச்சில் தன்ஸிம் ஹசன் சக்கிப் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷொரிபுல் இஸ்லாம் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தஸ்கின் அஹ்மத் 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: நஜ்முல் ஹொசெயன் ஷன்டோ. https://www.virakesari.lk/article/178674
  21. மீன்பிடித் தொழிலுக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன செயற்பாட்டு முறைகளுடன் கூடிய புதிய ஆழ்கடல் கப்பலை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த இதனைத் தெரிவித்தார். மீன்பிடி தொழில்துறையின் வளர்ச்சிக்காக, மீன்களின் தரத்தை பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் மீன்பிடி உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக மீனவர்களின் வருமானத்தில் ஓரளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் நிலைமையை தணிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மீன்பிடித் தொழிலுக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன இயக்க முறைகள் கொண்ட புதிய ஆழ்கடல் மீன்பிடிக் கப்பலை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை நிபுணர்கள் அடங்கிய குழு திட்டமிட்டு வருகிறது. அதன் பணிகள் முடிந்ததும், புதிய மீன்பிடிக் கப்பல் தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்படும். மீன்பிடி உள்ளீடுகளை நிர்வகிப்பதன் மூலம் நிலையான மீன்பிடித் தொழிலைப் பேணுவதே இதன் நோக்கமாகும். மேலும், உலக உணவு அமைப்பு பல முன்னோடி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு புதிய OFRP கப்பல் அறிமுகத்தின் கீழ், உலக உணவு அமைப்பு மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் மாற்று தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் திட்டத்துடன் இணைந்து, மாறும் காலத்திற்கு ஏற்றவாறு ஒரு புதிய கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், சோலார் தொழில்நுட்பம் கொண்ட இயந்திர படகுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களுடன் எமது அமைச்சு கலந்துரையாடியுள்ளது. மேலும், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவின் கீழ், இந்த நாட்டில் ஆழ்கடல் மீன்பிடி கப்பல்களுக்கு கப்பல் கண்காணிப்பு அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை, 2350 ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்களில் இந்த அமைப்பு நிறுவப்பட்டுள்ளது, அடுத்த ஆண்டு முதல் காலாண்டு இறுதிக்குள், 4200 கப்பல்களிலும் கப்பல் கண்காணிப்பு அமைப்புகள் நிறுவப்படும். கப்பல் கண்காணிப்புத் தரவுகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தளங்களை முன்னறிவிப்பதும் தற்போது ஆராய்ச்சி மட்டத்தில் செய்யப்படுகிறது. இது தொடர்பான பகுப்பாய்வு மென்பொருள் தயாரிப்புப் பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் கப்பல் கண்காணிப்பு அமைப்பு முழுமையாக செயல்படும். அதே நேரத்தில் இந்த மீன் தரை முன்கணிப்பு சேவையை சேர்க்க எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மீன்பிடி சட்டத்தை மறுசீரமைத்து, 1996ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்த மீன்பிடி சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டத்தை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன்போது காலத்துக்கேற்ற மாற்றங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பதைக் கூற வேண்டும். சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் கடுமையான சட்டம் இயற்றவும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இராஜதந்திர மட்டத்தில் நாடுகளுக்கிடையிலான கலந்துரையாடல்களை மேற்கொண்டு மீன்பிடித் தொழில் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விரிவான திட்டமொன்றை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், லொரென்சோ புதா – 4 கப்பல் தொடர்பில் கடற்றொழில் திணைக்களம், கடற்படை மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியோர் கலந்துரையாடியுள்ளன. சட்ட நடவடிக்கைகள் சீஷெல்ஸ் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. சீஷெல்ஸ் நாட்டில் சட்ட நடவடிக்கைகளை முடித்து மீனவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருமாறு ஜனாதிபதி சட்டமா அதிபர் ஊடாக வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/295705
  22. Published By: RAJEEBAN 13 MAR, 2024 | 12:00 PM காசாவில் பட்டினி ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கை தலைவர் தெரிவித்துள்ளார். காசாவிற்குள் போதியளவு மனிதாபிமான பொருட்கள் செல்ல முடியாமல் உள்ளதை மனிதர்கள் ஏற்படுத்திய பேரழிவு என ஜோசப்பொரொல் வர்ணித்துள்ளார். போதிய தரைப்பாதைகள் இல்லாததே காசாவில் உருவாகியுள்ள மனிதாபிமான நெருக்கடிக்கான காரணம் என ஐநாவில் உரையாற்றுகையி;ல் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கை தலைவர் தெரிவித்துள்ளார். மக்கள் தற்போது தங்களது உயிர்வாழ்தலிற்காக போராடுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் செல்லவேண்டும் ஐரோப்பிய ஒன்றியம் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது இது மனிதனால் உருவான நிலைமை கடல் மற்றும் வான்வெளி மூலம் விநியோகங்களை மேற்கொள்வதற்கான மாற்றுவழிகளை ஆராய்ந்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வீதிவழியாக மனிதாபிமான உதவிகளை வழங்கும் நடவடிக்கைகள் செயற்கையாக முடக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். பட்டினி என்பது போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது உக்ரைனில் இது இடம்பெறும்போது கண்டிக்கும் நாங்கள் காசாவிலும் அதேவார்த்தைகளை பயன்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/178604
  23. Published By: SETHU 13 MAR, 2024 | 01:18 PM நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தபோது, கடையொன்றில் திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோல்ரிஸ் கஹ்ரமான், தான் குற்றவாளி என நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். 43 வயதான கஹ்ரமான் திருட்டுக் குற்றச்சாட்டையடுத்து கடந்த ஜனவரி 16 ஆம் திகதி, பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பான வழக்கில், தான் குற்றவாளி என ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை கஹ்ரமான் ஒப்புக்கொண்டார். ஈரானில் பிறந்த கோல்ரிஸ் கஹ்ரமான், தனது குடும்பத்தினருக்கு நியூஸிலாந்தில் அரசியல் புகலிடம் கிடைத்தபோது நியூஸிலாந்துக்கு புலம்பெயர்ந்தவர். சட்டத்தரணியான அவர் 2017 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். நியூஸிலாந்துக்கு அகதியாக வந்த பின்னர் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவான முதல் நபர் கோல்ரிஸ் கஹ்ரமான் ஆவார். https://www.virakesari.lk/article/178617

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.