Everything posted by ஏராளன்
-
என்னை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சதி - நூல் வெளியிடுகின்றார் கோட்டாபய
கோட்டாபய நாட்டை விட்டு வெளியேற வசதிகளைச் செய்து கொடுத்தேன்! -ஓமல்பே சோபித தேரர் 13 MAR, 2024 | 01:38 PM அன்றைய தினம் (அரகலய) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தான் வசதிகளைச் செய்து கொடுத்ததாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தேவையான வசதிகளை அவருக்கு தான் ஏற்படுத்திக் கொடுத்ததனை கோட்டாபய ராஜபக்க்ஷ நன்கு அறிவார் என்றும் அவர் கூறினார். "நாங்கள் கோட்டாபயவுக்கு எதிரானவர்கள் அல்லர். தற்போதுள்ள முறைமைக்கு எதிரானவர்கள்" என கூறிய சோபித தேரர், கோட்டாபயவை நாட்டை விட்டு வெளியேற்றும் சதி என்ன என்பதை தற்போதைய தலைவரால் ஒரு வார்த்தையில் சொல்ல முடியும் எனவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/178616
-
செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் - செய்திகள்
செவிப்புலனற்றோருக்கான உலக கிண்ணம் : சம்பியனானது பாகிஸ்தான்; உப சம்பியனானது இலங்கை 13 MAR, 2024 | 02:47 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) செவிப்புலனற்ற சர்வதேச கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்திருந்த (Deaf International Cricket Council - DICC) செவிப்புலனற்றோருக்கான உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் செவிப்புலனற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலக சம்பியன் பட்டத்தை வென்றதுடன், செவிப்புலனற்ற இலங்கை கிரிக்கெட் அணி உப சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா ஆகிய 6 நாடுகள் பங்கேற்ற இப்போட்டித் தொடர் கடந்த 6ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவில் ஆரம்பமானது. லீக் முறையின் கீழ் நடைபெற்ற இப்போட்டித் தொடரில் ஒவ்வொரு அணிகளும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு தடவை எதிர்த்தாடியிருந்ததுடன், லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலிய அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன. அவுஸ்திரேலியாவுடனான முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானும், இந்தியாவுடனான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணியும் வெற்றியீட்டிக்கொண்டு உலக சம்பியனை தீர்மானிக்கும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இலங்கை நேரப்படி, நேற்று மாலை 6 மணிக்கு ஆரம்பமான இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 151 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை 62 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 89 ஒட்டங்களால் தோல்வியைத் தழுவியது. கிமந்து மெல்கம் தலைமையிலான செவிபுலனற்ற இலங்கை அணியில் பாலகிருஷ்ணன் தர்மசீலன், அலன்ரோஸ் காலேப் ஆகிய தமிழ் பேசும் வீரர்கள் விளையாடிருந்தனர். அத்துடன், ரஜித்த அசங்க, தாரக்க சம்பத், சுமுது லங்கா, கொயும் வெல்கமகே, அசங்க மஞ்சுள, உதய லக்மால், தினுக்க சச்சின், சச்சித் பெரேரா, நதுன் சமீர, எஸ். மதுரங்க, ஹசித்த பெரேரா, லக்சான் பெர்னாண்டோ ஆகியோரும் செவிப்புலனற்ற இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்தனர். https://www.virakesari.lk/article/178623
-
வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.
கூரிய ஆயுதங்களால் சித்திரவதை செய்யப்பட்டே யாழில் இளம் குடும்பஸ்தர் படுகொலை : உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தகவல் 13 MAR, 2024 | 12:06 PM யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் கடத்தப்பட்டு, உயிரிழந்த இளம் குடும்பஸ்தரை சித்திரவதைக்கு உட்படுத்தியே படுகொலை செய்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று, வீடு திரும்பிக்கொண்டிருந்த கணவன், மனைவி இருவரையும் பொன்னாலை பாலத்துக்கு அருகில் இரண்டு வாகனங்களில் காத்திருந்த வன்முறை கும்பல் கடத்திச் சென்றுள்ளனர். கடத்திச் சென்றவர்கள் கணவனை தாக்கி படுகாயங்களை ஏற்படுத்திய நிலையில் வைத்தியசாலைக்கு முன்பாக வீசிச் சென்றிருந்தனர். மனைவியை சித்தங்கேணி பகுதியில் வீதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றிருந்தனர். படுகாயங்களுடன் விட்டுச் செல்லப்பட்ட கணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், உயிரிழந்தவரின் உடற்கூற்று பரிசோதனைகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (12) யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, உயிரிழந்த நபரின் உடல்களில் வெட்டுக்காயங்கள், கூரிய ஆயுதங்களால் குத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கிய காயங்கள் ஏற்பட்டதாலும், மூச்சுக் குழாய்க்குள் இரத்தம் சென்றதாலுமே மரணம் நேர்ந்துள்ளது என உடற்கூற்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/178605
-
இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை முதல் சோதனை வெற்றி
சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை இந்தியா இப்போது பரிசோதித்தது ஏன்? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, அக்னி-5 13 மார்ச் 2024, 07:55 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரே சமயத்தில் பல குண்டுகளைச் சுமந்து சென்று பல இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கும் திறன்கொண்ட அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்திருப்பதாக இந்தியா அறிவித்தது. இது கடந்த திங்கள் கிழமை (மார்ச் 11-ஆம் தேதி) அன்று நிகழ்த்தப்பட்டது என்று அறிவிக்கப்பட்டிருகிறது. இதற்கு ‘மிஷன் திவ்யாஸ்திரம்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ஒடிஷாவில் அமைந்துள்ள டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் தீவு என்றழைக்கப்படும் சிறிய தீவில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. அக்னி-5 ‘எம்.ஐ.ஆர்.வி’ எனப்படும் ‘மல்டிபிள் இன்டிபென்டெண்ட்லி டார்கெட்டபிள் ரீ-என்ட்ரி’ தொழில்நுட்பத்துடன் கூடியது. இது பல இலக்குகளைத் தாக்குவதற்கான ஆயுதங்களை தாங்கிச்செல்லும் ஒரே ஏவுகணையைக் குறிக்கும். உலகில் ஒரு சில நாடுகளே இந்தத் தொழில்நுட்பத்தை வைத்திருக்கின்றன. இது இந்தியாவுக்கு ஒரு பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் உதவியோடு, ஒரு நாடு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள பல இலக்குகளை ஒரே ஏவுகணை மூலம் குறிவைத்துத் தாக்க முடியும். அக்னி-5 சோதனை வெற்றியடைந்தது குறித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, தனது சமூக வலைதளங்களப் பக்கங்களில் இதில் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். "எம்ஐஆர்வி தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5-ஐ ‘மிஷன் திவ்யாஸ்திரத்தில்’ வெற்றிகரமாக சோதனை செய்ததில் டிஆர்டிஓ விஞ்ஞானிகள் பெருமிதம் கொள்கிறார்கள்," என்று பிரதமர் மோதி தெரிவித்திருக்கிறார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, அக்னி-5 அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லும் திறன்கொண்டது எம்.ஐ.ஆர்.வி தொழில்நுட்பம் என்றால் என்ன? அக்னி-5 ஏவுகணை 5,000 கிலோமீட்டர்கள் தூரம் வரை சென்று இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. இந்தியாவின் நீண்ட கால பாதுகாப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டால் அக்னி-5 நாட்டுக்கு மிக முக்கியமானது என்று PTI செய்தி முகமை தெரிவித்துள்ளது. அக்னி-5 கிட்டத்தட்ட முழு ஆசியாவையும், சீனாவின் முனையில் இருக்கும் வடக்குப் பகுதிகளையும், ஐரோப்பாவின் சில பகுதிகளையும் சென்று தாக்கும் அளவுக்குத் திறன்வாய்ந்தது. முன்னதாக அக்னி-1 முதல் அக்னி-4 வரையிலான ஏவுகணைகள் 700கி.மீ முதல் 3,500கி.மீ தூரம் மட்டுமே சென்று தாக்கும் திறன் கொண்டிருந்தன. தனது இலக்கை ஒரு சிறிய தவறும் இல்லாமல் சென்று தாக்கும் வகையில் அக்னி-5இல் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன என்று இந்தியா கூறுகிறது. இந்தியாவில் 1990 முதல் அக்னி ஏவுகணைகள் உள்ளன. அப்போதிருந்து அதன் நவீன வடிவங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அக்னி-5 ஏவுகணையில் உள்ள எம்.ஐ.ஆர்.வி தொழில்நுட்பம் 50 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது, ஆனால் இப்போது வரை அது சில நாடுகளில் மட்டுமே உள்ளது, என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவித்திருக்கிறது. அக்னி-5 அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லும் திறன்கொண்டது. இதுவரை எம்.ஐ.ஆர்.வி தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணைகள் ரஷ்யா, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிடம் இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை கூறுகிறது. இந்த ஏவுகணைகளை நிலத்தில் அல்லது கடலில் நிறுத்தப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவ முடியும். இதே வகையான ஏவுகணை அமைப்பை உருவாக்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. இஸ்ரேலிடம் இந்த ஏவுகணை அமைப்பு உள்ளது, அல்லது அதை உருவாக்க முயற்சித்து வருகிறது என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உள்ளன. ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் பரவல் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி, எம்.ஐ.ஆர்.வி தொழில்நுட்பத்தை உருவாக்குவது மிகவும் கடினம். அதனால்தான் சில நாடுகளிடம் மட்டுமே இது உள்ளது. இதை உருவாக்க, பெரிய ஏவுகணைகள், சிறிய குண்டுகள், சரியான வழிகாட்டுதல், மற்றும் பறக்கும் போதே குண்டுகளை விடுவிக்கும் திறன் ஆகியவை தேவை. 1970- ஆம் ஆண்டிலேயே அமெரிக்கா இந்தத் தொழில்நுட்பத்தை வைத்திருந்தது. அதன்பிறகு சோவியத் யூனியனும் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இந்தப் படியலில் இந்தியா புதிதாக இணைந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவின் பெண் விஞ்ஞானிகள் அக்னி ஏவுகணைகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. 2019-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் அக்னி-4 ஏவுகணை திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானி டெஸ்ஸி தாமஸ் இருக்கிறார். இவர் ‘அக்னிபுத்ரி’ என்று அழைக்கப்படுகிறார். இந்தியாவிடம் இருக்கும் அக்னி ஏவுகணைகளின் திறன் என்ன? கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் அக்னி ஏவுகணைகள் பலமுறை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டிருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கூறுகிறது. 700கி.மீ. தூரம் வரை செல்லக்கூடிய அக்னி-1 ஏவுகணையிலிருந்து, 5,000கி.மீ. வரை செல்லக்கூடிய அக்னி-5 வரை இது முன்னேறியிருக்கிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம், டிஆர்டிஓ அக்னி-P (ப்ரைம்) ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்தது. இது 1,000கி.மீ. முதல் 2,000கி.மீ. வரையிலான தூரம் செல்லக்கூடியது. இதனை சாலையிலிருந்தோ, ரயில் தளத்தில் இருந்தோ ஏவ முடியும். 2007-ஆம் ஆண்டு அக்னி-5-ஐ உருவாக்குவதாக இந்தியா அறிவித்திருந்தது. அக்னி-5-இன் முதல் வெற்றிகரமான சோதனை 2012-ஆம் ஆண்டு செய்யப்பட்டது. அப்போது டிஆர்டிஓ டைரக்டர் ஜெனரல் வி.கே.சரஸ்வத், இந்தியா எம்ஐஆர்வி தொழில்நுட்பத்தில் செயல்பட்டு வருவதாகக் கூறினார். அக்னி-5 திட்டத்தின் வெற்றியில் பெண்கள் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை இந்திய பாதுகாப்புப் படைகளிடம் இருக்கும் அக்னி-1 700கி.மீ. தூரம் செல்லக்கூடியது, அக்னி-2 2,000கி.மீ. செல்லக்கூடியது, அக்னி-3 2,500 கி.மீ. தூரம் செல்லக்கூடியது, அக்னி-4 3,500 கி.மீ. செல்லக்கூடியது. அக்னி-5 நீண்ட தூரம் செல்லக்கூடியதாலும், அணுசக்தி திறன் கொண்டிருப்பதாலும், சீனாவை மனதில் வைத்தே இந்தியா இந்த ஏவுகணையை வடிவமைக்கத்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில், பாகிஸ்தான் போன்ற நெருங்கிய இலக்குகளுக்கு பழைய அக்னி ஏவுகணைகள் போதுமானது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் அக்னி ஏவுகணைகள் பலமுறை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டிருக்கின்றன இந்தியாவின் நோக்கம் என்ன? அக்னி-5 மூலம் சீனாவின் விடுக்கும் ராணுவ, பாதுகாப்புச் சவால்களை முறியடிக்க முடியும் என இந்தியா நம்புகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, ஆராய்ச்சியாளர்கள் ஜோசுவா டி வைட் மற்றும் கைல் டெமிங் ஆகியோர், இந்தியாவின் எம்.ஐ.ஆர்.வி திட்டம் சீனாவுடனான பிராந்திய போட்டியின் வெளிப்பாடு என்று கருதுகின்றனர். இதிலிருந்து இந்தியா மூன்று நன்மைகளைப் பெற முடியும் என்றனர்: சீனாவின் நகரங்களைக் குறிவைக்கக்கூடிய ஏவுகணைகள் இந்தியாவிடம் குறைவாகவே இருப்பதாக நம்பப்படுவதால், நிலத்திலிருந்து ஏவப்படக்கூடிய ஏவுகணைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது. கடலில் இருந்து இயக்கப்படக்கூடிய, அணு ஆயுதங்களைத் தடுக்கக் கூடிய தொழில்நுட்பத்தில் இந்தியா பின்தங்கி விடாமல் இருப்பது. அணுசக்தியால் இயங்கும் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்களில் (SSBNS) இந்தியாவை விட சீனா மிகவும் முன்னேறியுள்ளது. சீனா பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அதாவது பி.எம்.டி-யை (BMD) உபயோகிக்க நினைத்தால், அதற்கு அக்னி-5 மூலம் பதிலடி கொடுக்க முடியும் என்று இந்தியா கருதுகிறது. இந்தியா 1998-இல் பொக்ரான்-2 சோதனையைச் செய்தது. அணு ஆயுதங்களைப் பொறுத்தவரை, முதலில் அதனை தாம் பயன்படுத்தப்படுவதில்லை, அதாவது முதலில் பயன்படுத்துவதில்லை (‘No First Use’) என்ற கொள்கையை கடைப்பிடிப்பதாகக் கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவுக்கு எதிராக இந்தியா தனது ராணுவத் திறன்களை வெளிப்படுத்தப் போராடி வருகிறது, என்று நிபுணர்கள் கருதுகின்றனர் சீனாவுக்கு சவால் விட முடியுமா? ‘தி ஹிந்து’ நாளிதழிடம் பேசிய அல்பானி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் இணைப் பேராசிரியர் கிறிஸ்டோபர் கிளியரி, “சீனாவுக்கு எதிராக இந்தியா தனது ராணுவத் திறன்களை வெளிப்படுத்தப் போராடி வருகிறது. சீனாவின் பல ராணுவத் தளங்கள் இந்தியாவின் எல்லைக்கு அப்பாற்பட்டவை. அக்னி-5 இந்த இலக்குகளை எட்டுவதற்கு உதவுகிறது.,” என்றார். அக்னி-5 சோதனை நடத்துவதற்காக வங்காள விரிகுடாவின் மீது விமானங்கள் பறக்கக்கூடாது என்று இந்தியா அறிவித்தபோது, சீனா அதைக் கண்காணித்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது. அந்தச் செய்தித்தாளிடம் பேசிய மூலோபாய விஷயங்களில் நிபுணரான ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ்.துத்தா, "நாங்கள் அடிக்கடி டிஆர்டிஓவை விமர்சிக்கிறோம். ஆனால் ஏவுகணைத் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை அந்நிறுவனம் பல வெற்றிகரமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. சீனாவும் தனது அணு ஆயுதங்களை நவீனமயமாக்கி வருவதைப் பார்க்கிறோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியா பின்தங்க முடியாது,” என்று கூறியிருக்கிறார். சர்வதேச அரசியல் விவகாரங்களில் நிபுணரான பிரம்மா செல்லானி, தனது சமூக ஊடகப் பக்கத்தில், "அக்னி -5 ஏவுகணை, எதிரியின் தாக்குதலுக்கு எதிராக இந்தியா தனது அணுசக்தித் திறனை வெளிப்படுத்த உதவும் பாதுகாக்க உதவும். எதிரியின் ஏவுகணை அமைப்பை மறுபக்கத்தில் இருந்து முறியடிக்க இது உதவும். இந்தப் புதிய திறனை நிலைநிறுத்துவதற்கு முன் இந்தியா மேலும் பல சோதனைகளை நடத்த வேண்டும்,” என்று எழுதியிருக்கிறார். தெற்காசிய ராஜதந்திர விவகாரங்களைப் பிந்தொடர்ந்து வரும் டெரெக் ஜே கிராஸ்மேன், தனது சமூக ஊடகப் பக்கத்தில், "எம்.ஐ.ஆர்.வி தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததற்காக இந்தியாவுக்கு வாழ்த்துக்கள். ஆனால் இப்போது ஏன்? எம்.ஐ.ஆர்.வி அணுசக்தி நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைய விரும்புகிறது. மேலும் தேர்தல்கள் நெருங்கிவிட்டன,” என்று பதிவிட்டிருக்கிறார். https://www.bbc.com/tamil/articles/c51j2771206o
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காஸா போர் நிறுத்தத்தை இன்னும் நெருங்கவில்லை: கட்டார் Published By: SETHU 12 MAR, 2024 | 06:09 PM காஸாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் இஸ்ரேலும் ஹமாஸும் இன்னும் நெருங்கிவரவில்லை என பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்ததை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா, கட்டார், எகிப்து ஆகிய நாடுகள் பலவாரங்களாக முயன்றன. இதற்காக எகிப்திய தலைநகர் கெய்ரோவில் பேச்சுவார்ததைகள் நடைபெற்றன. புனித ரமழானுக்கு முன்னர் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அம்முயற்சிகள் பலனளிக்கவில்லை. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான இணக்கப்பாட்டை நாம் நெருக்கவில்லை என கட்டார் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்கின்றபோதிலும், அதற்கான போர்நிறுத்தத்துக்கான காலவரம்பு எதனையும் கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் காஸாவில் யுத்தத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31184 ஆக அதிகரித்துள்ளது என காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/178555
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
15 பேருடன் பறந்த ரஷ்ய இராணுவ விமானம் தீப்பற்றி வீழ்ந்தது Published By: SETHU 12 MAR, 2024 | 04:40 PM ரஷ்ய இராணுவ சரக்கு விமானமொன்று இன்று தீப்பற்றி வீழ்ந்துள்ளது. இவ்விமானத்தில் 15 பேர் இருந்தனர் என ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஐ.எல்.-76 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில், மொஸ்கோவுக்கு அருகிலுள்ள ஐவானோவா பிராந்தியத்தில் வீழ்ந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/178544
-
டிக்டொக்கினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் - முகநூல் பொதுமக்களின் எதிரி - டிரம்ப் கருத்து
Published By: RAJEEBAN 12 MAR, 2024 | 03:06 PM டிக்டொக் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முகநூல் மக்களின் எதிரி என குறிப்பிட்டுள்ளார். டிக்டொக்கினால் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என கருதுவதாக தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் எனினும் இதனை தடை செய்வதை நான் ஆதரிக்கமாட்டேன் ஏன் என்றால் அதனை தடைசெய்தால் மக்களின் எதிரியான முகநூலின் ஆதரவு அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். சிஎன்பிசி நேர்காணலில் டிக்டொக் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானதா என்ற கேள்விக்கே நான் அவ்வாறே நம்புகின்றேன். நாங்கள் அமெரிக்க மக்களின் அந்தரங்கள் மற்றும் தரவு உரிமைகளை பாதுகாக்கின்றோம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என டிரம்ப் பதிலளித்துள்ளார். டிக்டொக் செயலியை அமெரிக்காவில் தடை செய்வதை டிரம்ப் முதலில் ஆதரித்திருந்தார். எனினும் இதற்கான ஆதரவை தற்போது தனது முடிவை மாற்றியுள்ளார். ஏன் டிக்டொக்கினை தடை செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கினீர்கள் என்ற கேள்விக்கு எனது ஆட்சிக்காலத்தில் அதனை தடைசெய்திருக்க முடியும் ஆனால் காங்கிரஸே அதனை செய்யவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். டிக்டொக்கினை தடை செய்வது மக்களின் எதிரி என கடுமையாக விமர்சிக்கப்படும் முகநூலிற்கான ஆதரவை அதிகரிக்கும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். டிக்டொக்கினால் நன்மைகளும் உள்ளன தீமைகளும் உள்ளன. ஆனால் டிக்டொக் பிடிக்காத விடயம் என்னவென்றால் டிக்டொக்கினை இல்லாமல் செய்தால் அது முகநூலை பெரிய விடயமாக்கிவிடும் ஏனைய ஊடகங்கள் பலவற்றுடன் நான் முகநூலை மக்களின் எதிரியாக கருதுகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்தவாரம் சமூக ஊடகங்களில் முகநூலை டிரம்ப் மக்களின் எதிரி என வர்ணித்திருந்தார். https://www.virakesari.lk/article/178531
-
இலங்கையில் இராணுவதளமொன்றை உருவாக்க சீனா முயல்கின்றது - அமெரிக்கா
Published By: RAJEEBAN 13 MAR, 2024 | 11:45 AM இலங்கை உட்பட பல நாடுகளில் இராணுவ கட்டமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து சீனா ஆராய்ந்து வருகின்றது என அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தமது சமீபத்தைய அறிக்கையில் தெரிவித்துள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜிபுட்டியில் உள்ள அதன் இராணுவதளத்தையும் கம்போடியாவில் உள்ள அதன் கடற்படை தளத்தையும் மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சீனா இதற்கு அப்பால் இலங்கை உட்பட பல நாடுகளில் தனது தளங்களை உருவாக்க முயல்கின்றது என அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர் என ஐஏன்என்எஸ் தெரிவித்துள்ளது. சீனா 2035 ஆண்டளவில் முழுமையாக நவீனமயமாக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவ படையை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்துகின்றது 2049ம் ஆண்டுக்குள் சீன இராணுவத்தை உலகதரம் வாய்ந்ததாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது என அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் மதிப்பிட்டுள்ளன. இதேகாலப்பகுதியில் சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி தனது இறையாண்மை பிரதேசம் என கருதும் பகுதிகளை பாதுகாப்பதற்கு சீன இராணுவத்தை பயன்படுத்தவும் பிராந்திய விவகாரங்களி;ல் தனது முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தவும் தனது இராணுவத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவம் சர்வதேச அளவில் தனது வலிமையை வெளிப்படுத்தவும் நீரிணை மோதலின் போது அமெரிக்காவின் தலையீட்டை தடுக்கவும் எதிர்க்கவும் தனது இராணுவத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/178603
-
ஜப்பானில் இந்த நகரமே ஒரு பூனையைக் கண்டு பயந்து போயிருப்பது ஏன்?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புக்கான படம் கட்டுரை தகவல் எழுதியவர், லூ நியூட்டன் பதவி, பிபிசி செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மேற்கு ஜப்பானில் உள்ள புகுயாமா நகரம் ஒரு பூனையைக் கண்டு அஞ்ச வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் அந்தப் பூனை ஏதும் செய்துவிடுமோ என்ற பயம் இல்லை. அந்தப் பூனை மீது ஒட்டியிருக்கும் ரசாயனம்தான். ஒரு தொழிற்சாலையின் விஷத்தன்மைமிக்க ரசாயனம் இருந்த தொட்டியில் இந்தப் பூனை விழுந்தது. அதன்பின் அது அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதனிடமிருந்து விலகி இருக்குமாறு அப்பகுதியின் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நடந்த தொழிற்சாலையில் பணிசெய்யும் ஒரு தொழிலாளி, ரசாயனத் தொட்டியில் இருந்து மஞ்சள் காலடிச் சுவடுகள் வெளியே செல்வதைக் கண்டிருக்கிறார். அதன்பிறகே இந்த எச்சரிக்கை வந்துள்ளது. அங்கு பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைப் பார்த்தபோது, ஒரு பூனை தப்பி ஓடுவதைக் காண முடிந்தது. புகுயாமாவில் உள்ள அதிகாரிகள் பொதுமக்களை இந்தப் பூனையிடம் இருந்து விலகி இருக்குமாறும், அது எங்கேனும் காணப்பட்டால் காவல்துறையினரிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். பட மூலாதாரம்,PROVIDED BY NOMURA PLATING படக்குறிப்பு, ஒரு தொழிலாளி, ரசாயனத் தொட்டியில் இருந்து மஞ்சள் காலடிச் சுவடுகள் வெளியே செல்வதைக் கண்டிருக்கிறார் இவ்வளவு ஆபத்தான ரசாயனமா? ஹெக்ஸாவலன்ட் குரோமியம் என்று அழைக்கப்படும் இந்த ரசாயனம், ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிறத்திலானது. மிக அதிக அமிலத்தன்மை கொண்டது. புற்றுநோயை உண்டாக்கக் கூடியது. இப்படிப்பட்ட ரசாயனத்தில் தான் இந்தப் பூனை விழுந்துள்ளது. பட மூலாதாரம்,PROVIDED BY NOMURA PLATING நமுரா முலாம் பூசும் புகுயாமா தொழிற்சாலை என்ற இடத்தில் நேற்று பணிக்கு வந்தபோது ஒரு ஊழியர் பூனையின் காலடித் தடங்களைக் கண்டறிந்ததாக ஆசாஹி செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது. புகுயாமா நகரின் சுற்றுச்சூழல் குழு, ‘அசாதாரணமாகத் தோன்றும் பூனைகளை’ பொதுமக்கள் தொட வேண்டாம் என்று எச்சரித்திருக்கிறது. ஆனால் இச்சம்பவத்தின் விளைவாக அந்தப் பூனை இறந்திருக்கக்கூடும் என்றும் கூறியது. பட மூலாதாரம்,PROVIDED BY NOMURA PLATING படக்குறிப்பு, ஹெக்ஸாவலன்ட் குரோமியம் என்று அழைக்கப்படும் இந்த ரசாயனம், ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிறத்திலானது எங்கே தவறு நிகழ்ந்தது? இந்தத் தொழிற்சாலையை நடத்தும் நிறுவனம், இந்த ரசாயனத் தொட்டி தாள்போன்ற ஒரு விரிப்பால் மூடப்பட்டிருந்ததாகக் கூறியது. ஆனால் பூனை உள்ளே விழுந்த அந்தப் பகுதி திறந்திருந்ததாகவும் கூறியது. “பூனைகள் போன்ற சிறிய விலங்குகள் தொழிற்சாலைக்குள் வருவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் எங்களுக்கு நினைவுறுத்துகிறது. இது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று," என அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியதாக AFP செய்தி நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. ஹெக்ஸாவலன்ட் குரோமியம் தோல் எரிச்சல், சுவாசப் பிரச்சனைகள், மற்றும் பார்வை இழப்பை ஏற்படுத்தும். இதன் அருகில் பணிசெய்யும் ஊழியர்கள் முகமூடிகள் மற்றும் ரப்பர் கையுறைகளை அணிவது கட்டாயம். செவ்வாய்கிழமை வரை இந்தப் பூனை எங்கும் தென்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர். https://www.bbc.com/tamil/articles/cd19gv9p5r0o
-
வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.
எனது கணவரின் சாவுக்கு காரைநகர் கடற்படையும் ஒரு காரணம் - யாழில் கடத்திக் கொல்லப்பட்டவரின் மனைவி குற்றச்சாட்டு 13 MAR, 2024 | 11:48 AM எனது கணவரின் சாவுக்கு காரைநகர் கடற்படையும் ஒரு காரணம் என யாழ்ப்பாணத்தில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தரின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். காரைநகர் பகுதிக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த கணவன், மனைவி இருவரையும் வழியில் கடத்திச் சென்ற வன்முறை கும்பல் கணவனை படுகொலை செய்தது. இது தொடர்பாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவிக்கையில், காரைநகருக்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் நானும் எனது கணவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில், பொன்னாலை பாலத்துக்கு அருகில் எம்மை வழிமறித்த கும்பல் வாகனத்தில் எம்மை கடத்த முயற்சித்தனர். அவ்வேளை, நானும் கணவரும் அவர்களிடம் இருந்து தப்பித்து அருகில் இருந்த கடற்படை முகாமுக்குள் தஞ்சம் புகுந்தோம். கடற்படையினர் எம்மை அங்கிருந்து விரட்டினார்கள். "எங்களை கடத்த போறாங்க, எங்களை காப்பாற்றுங்க" என கடற்படையிடம் மன்றாடினோம். ஆனால், அவர்கள் எங்களை முகாமில் இருந்து துரத்தினார்கள். அவ்வேளையிலே எம்மை அவர்கள் வாகனத்தில் கடத்திச் சென்றனர். கடற்படையினர் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டு, எமக்கு அடைக்கலம் கொடுத்திருந்தால், எனது கணவரின் உயிர் பிரிந்திருக்காது. எனது கணவரின் சாவுக்கு கடற்படையும் ஒரு விதத்தில் காரணம் என தெரிவித்தார். உயிரிழந்தவரின் உறவினர்கள் கூறுகையில், கடற்படையினர் அடைக்கலம் கொடுக்காமல் இருந்தாலும், தமது முகாமுக்கு அருகில் வாகனத்துடன் நின்ற கும்பலை துரத்திவிட்டு, இவர்களை அனுப்பி வைத்திருக்கலாம். அல்லது வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருக்கலாம். கடற்படையின் கண் முன் இருவரை வாகனத்தில் வந்தவர்கள் கடத்திச் சென்றபோதும், கடற்படையினர் அதனை தடுக்காமலும், கடத்தல் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்காமலும் இருந்ததால், கடற்படை மீதும் எங்களுக்கு சந்தேகம் வருகிறது என தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/178600
-
முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் நாளை இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட மூவரையும் இலங்கை தூதரகத்திற்கு அழைப்பு Published By: DIGITAL DESK 3 13 MAR, 2024 | 10:12 AM முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன், ரொபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோா் கடவுச்சீட்டு பெறுவதற்கான நோ்காணலில் பங்கேற்க சென்னையிலுள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு இன்று புதன்கிழமை (13) அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘என்னுடைய கணவா் முருகனும் நானும் மகளுடன் சோ்ந்துவாழ விரும்புகிறோம். எனவே, எனது கணவா் முருகன் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்குச் சென்று நோ்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். அங்கு சென்று வருவதற்கு பாதுகாப்பு தேவைப்படும்பட்சத்தில், உரிய பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தாா். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, முருகன் கடவுச்சீட்டு பெறுவதற்கான நோ்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்திடம் முன் அனுமதி பெற, திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், குமரேஷ் பாபு ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஆா்.முனியப்பராஜ், முருகனின் நோ்காணலுக்காக புதன்கிழமை அனுமதி பெறப்பட்டுள்ளது. முருகனை தவிர முகாமில் இருக்கும் ராபா்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோரும் கடவுச்சீட்டு பெறுவதற்காக அழைத்துச் செல்ல கோரிக்கை வைத்தனா். எனவே, புதன்கிழமை அவா்களும் அழைத்துச் செல்லப்படுகின்றனா். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு காலை 11.30 மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு அழைத்து வரப்படவுள்ளனா் என தெரிவித்தாா். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நளினி தொடா்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா். https://www.virakesari.lk/article/178590
-
மனித உரிமைகள், நல்லிணக்கத்தில் அடையப்பட்ட முன்னேற்றத்தை சவாலுக்கு உட்படுத்தும் சட்ட உருவாக்கத்தை தொடர்ந்து கண்காணிப்போம் - அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்
Published By: DIGITAL DESK 3 13 MAR, 2024 | 08:52 AM (நா.தனுஜா) சிவில் இடைவெளியையும், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்களையும் சவாலுக்கு உட்படுத்தக்கூடியவகையில் இலங்கையில் இடம்பெற்றுவரும் சட்டவியல் உருவாக்கங்களைத் தாம் தொடர்ந்து கண்காணிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடரில் கடந்த வாரம் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் குறித்து ஆராயப்பட்டது. இதன்போது இலங்கை பற்றிய ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கையைத் தொடர்ந்து பிரிட்டன், கனடா, வடமெசிடோனியா, மாலாவி, மொன்டெனேக்ரோ மற்றும் அமெரிக்கா ஆகிய இணையனுசரணை நாடுகளால் இலங்கை நிலைவரம் குறித்த அறிக்கை வாசிக்கப்பட்டது. அதில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சட்டத்தை உருவாக்க முன்னர் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பக்கூடியவாறான செயன்முறையொன்றைப் பின்பற்றவேண்டியது அவசியமென இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்திய இணையனுசரணை நாடுகள், எதிர்வருங்காலங்களில் ஸ்தாபிக்கப்படக்கூடிய எந்தவொரு ஆணைக்குழுவும் நிலைமாறுகால நீதிப்பொறிமுறையைக் கட்டியெழுப்பும் அதேவேளை, பொறுப்புக்கூறலுக்கான பாதையை வகுத்தளிக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தன. இந்நிலையில் இணையனுசரணை நாடுகளின் அறிக்கையை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், 'சிவில் இடைவெளியையும், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்களையும் சவாலுக்கு உட்படுத்தக்கூடியவகையில் இலங்கையில் இடம்பெற்றுவரும் சட்டவியல் உருவாக்கங்களை நாம் தொடர்ந்து கண்காணிப்போம்' எனத் தெரிவித்துள்ளார். அதேபோன்று அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணையனுசரணை நாடுகளாலும், ஏனைய உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புக்களாலும் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் 'நிகழ்நிலைக்காப்பு சட்டமூலமானது கருத்து வெளிப்படுத்தலைக் குற்றமாக்குவதற்குப் பயன்படுத்தப்படக்கூடும்' என்ற பொதுவான கரிசனை முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/178583
-
வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய பிரதமச் செயலாளர்கள் நியமனம்
Published By: VISHNU 13 MAR, 2024 | 02:46 AM வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக எல். இளங்கோன் மற்றும் வடமேல் மாகாண பிரதமச் செயலாளராக தீபிகா கே குணரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (12) கையளித்தார். இலங்கை நிர்வாகச் சேவையின் தலைசிறந்த அதிகாரியான எல்.இளங்கோவன் வடக்கு மாகாண அமைச்சுக்கள் பலவற்றின் செயலாளர் பதவி வகித்ததுடன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராகும் பணியாற்றியுள்ளார். எல்.இளங்கோவன் வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக நியமனம் பெறும் வரை, வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/178576
-
குடியுரிமை திருத்தச் சட்டம் - அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன? முஸ்லிம்கள் எதிர்ப்பது ஏன்?
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தாமல் இருக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உண்டா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2019-ல் சிஏஏவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 12 மார்ச் 2024 குடியுரிமை திருத்தச் சட்டத்தை தங்கள் மாநிலத்தில் செயல்படுத்தப்போவதில்லை என இந்தியாவின் சில மாநிலங்கள் அறிவித்திருக்கின்றன. குடியுரிமை மத்திய அரசின் சட்டமியற்றும் அதிகாரத்தின் கீழ் வரும் நிலையில், அது சாத்தியமா? குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கான விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் திங்கட்கிழமையன்று வெளியிட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், அஃப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்து, பௌத்தம், பார்சி, கிறிஸ்தவர், சமணம் ஆகிய மதங்களைச் சேர்ந்தவர்கள் 2014ஆம் ஆண்டிற்கு முன்பாக இந்தியாவிற்குள் நுழைந்திருந்தால், அவர்கள் இந்திய குடிமகனாக மாறுவதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த தேதியை நிரூபிக்க தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து இந்த விண்ணப்பத்தைச் செய்யலாம். பிரிவு 1 A, பிரிவு 1 B என இரண்டு பிரிவுகளில் இதற்கான ஆவணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 1 A-வைப் பொறுத்தவரை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வழங்கிய பிறப்புச் சான்றிதழ், வாடகை வீட்டிற்கான ஒப்பந்தம், அடையாள அட்டைகள், ஓட்டுநர் உரிமங்கள், கல்விச் சான்றிதழ்கள் போன்றவை ஆவணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. 1 B-ஐப் பொறுத்தவரை, இந்திய அரசு வழங்கிய விசா, மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவுசெய்யப்பட்ட ஒப்புகைச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், பொது விநியோக அட்டை, PAN அட்டை, திருமணச் சான்றிதழ் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. இவை அனைத்துமே 2014க்கு முன் பெறப்பட்டவையாக இருக்க வேண்டும். இந்த ஆவணங்கள் இருக்கும்பட்சத்தில் இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்கள், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதற்கென உள்ள https://indiancitizenshiponline.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, தங்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். 'தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட மாட்டாது' பட மூலாதாரம்,MK STALIN / FACEBOOK இந்தச் சட்டத்தை இந்திய தேசிய காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேசியவாத காங்கிரஸ் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகியவை எதிர்கின்றன. முன்னதாக இந்தச் சட்டத்தை ஆதரித்த அ.தி.மு.கவும் இப்போது இதனை எதிர்ப்பதாகத் தெரிவித்திருக்கிறது. இன்னும் சில வாரங்களில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருமென சில வாரங்களுக்கு முன்பாக மத்திய அமைச்சர் ஷாந்தனு தாக்கூர் தெரிவித்தபோது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதற்குக் கண்டனம் தெரிவித்ததோடு, அந்தச் சட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட மாட்டாது என்று கூறினார். பட மூலாதாரம்,@MKSTALIN/X பினராயி விஜயன் எதிர்ப்பு அதேபோல மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் மேற்கு வங்கத்தில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது எனக் கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிகள் திங்கட்கிழமையன்று வெளியிடப்பட்ட நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் அதே கருத்தைத் தெரிவித்திருக்கிறார். "இஸ்லாமியச் சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கேரளாவில் செயல்படுத்த மாட்டோம் என இடது ஜனநாயக முன்னணி அரசு பல முறை தெரிவித்திருக்கிறது. அந்த நிலையை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்த வகுப்புவாத, பிரிவினைவாத சட்டத்தை எதிர்ப்பதில் கேரளா ஒற்றுமையுடன் செயல்படும்," என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார் பினராயி விஜயன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பினராயி விஜயன் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா? ஆனால், குடியுரிமை வழங்குவது என்பது மத்திய அரசின் அதிகார வரம்பின் கீழ் வரும் நிலையில், மாநில அரசு ஒன்று குடியுரிமை தொடர்பான சட்டங்களை அமல்படுத்த முடியாது என அறிவிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது பிரிவு எந்தெந்த விவகாரங்கள் மத்தியப் பட்டியலிலும் மாநிலப் பட்டியலிலும் பொதுப் பட்டியலிலும் வருகின்றன என்பதை வரையறுக்கின்றது. இதில் மத்தியப் பட்டியலில் மொத்தம் 97 விவகாரங்கள் இருக்கின்றன. இதில் 17வது அம்சமாக குடியுரிமையைக் குறிப்பிடும் 'Citizenship, naturalisation and aliens' என்ற விவகாரம் வருகிறது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து சட்டமியற்றும் உரிமை முழுக்க முழுக்க நாடாளுமன்றத்திற்கே உரியது. மத்தியத் தொகுப்பில் உள்ள இந்திய நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களை மாநிலங்கள் மீற முடியாது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கபில் சிபல் மாநில அரசு தடுக்க முடியுமா? காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நாட்டின் குறிப்பிடத்தகுந்த வழக்கறிஞர்களில் ஒருவருமான கபில் சிபல், 2020ஆம் ஆண்டில் இதனைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். கேரள மாநிலத்தில் நடந்த கேரள இலக்கியத் திருவிழாவில் கலந்துகொண்ட அவர், "சிஏஏ நிறைவேற்றப்பட்டுவிட்டால், நான் அதைச் செயல்படுத்த மாட்டேன் என எந்த மாநிலமும் சொல்ல முடியாது. நீங்கள் எதிர்க்கலாம். சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரலாம், அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறும்படி மத்திய அரசை வலியுறுத்தலாம். ஆனால், அதைச் செயல்படுத்த மாட்டேன் எனச் சொல்வது அரசியல்சாசன ரீதியாக சிக்கலானது," என்று தெரிவித்தார். மேலும், குடியுரிமை கோருபவர்கள் இதற்கென மத்திய அரசு வடிவமைத்துள்ள இணையதளத்தில் முன்பே பெற்ற ஆவணங்களோடு நேரடியாக விண்ணப்பிப்பார்கள் என்பதால், இதனை மாநில அரசு எப்படித் தடுக்க முடியும் அல்லது செயல்படுத்தாமல் இருக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. 'இது அரசியல் ரீதியான எதிர்ப்பு' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் இதனை ஒரு வகையான அரசியல் எதிர்ப்பு என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியான ஹரி பரந்தாமன். "இது ஒரு அரசியல் ரீதியான எதிர்ப்பு, அவ்வளவுதான். இந்தியாவில் குடியுரிமை என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் இருக்கிறது. இது தொடர்பான சட்டங்களை நாடாளுமன்றம்தான் சட்டம் இயற்றும். இந்திய குடியுரிமை தொடர்பான சட்டம் 1955இல் இயற்றப்பட்டுவிட்டது. அதில்தான் இப்போது திருத்தம் செய்யப்படுகிறது. இதில் மாநிலங்கள் ஏதும் செய்ய முடியாது என்றாலும், இப்படிச் சொல்வது ஜனநாயக ரீதியில் ஆரோக்கியமானதுதான். இது ஒருவகையான எதிர்ப்புதான். "மத்திய அரசின் அலுவல் மொழி விவகாரம்கூட இப்படித்தான். மத்திய அரசு இந்தியை தன் அலுவலில் முழுமையாகப் பயன்படுத்தலாம் என்றாலும் மாநிலங்கள் தங்கள் எதிர்ப்பின் மூலம் அதனைத் தடுத்து வைத்திருக்கின்றன. அப்படித்தான் இதையும் பார்க்க வேண்டும்," என்கிறார் ஹரி பரந்தாமன். 'இதை முழுமையாகச் செயல்படுத்த முடியாது' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் குடியுரிமை என்பதும் குடியுரிமை வழங்காமல் இருப்பதும் மத்திய அரசின் கீழ்தான் வருகிறது என்றாலும் மாநில அரசின் உதவியில்லாமல் எதையும் செய்ய முடியாது என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டன்டீன். "சிஏஏ, தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதுதான். குடிமக்கள் பதிவேட்டை மாநில அரசின் உதவியின்றி உருவாக்கிவிட முடியுமா? உதாரணமாக, இந்த சிஏஏ சட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் குடியுரிமை பெற முடியாது. அதற்காக, தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களை வெளியேற்ற வேண்டும் என சொன்னால், அதை மாநில அரசுதானே செய்ய வேண்டும்? அதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம்," என்கிறார் கான்ஸ்டைன்டீன். ஆனால், இதுபோன்ற சட்டங்களை மத்திய அரசு அரசியலுக்காகத்தான் உருவாக்குகிறது என்கிறார் அவர். "இது பா.ஜ.கவின் மற்றும் ஒரு ஜும்லா. வட இந்தியாவில் இந்துத்துவ சக்திகள் வலுவாக உள்ள பகுதிகளில் தாங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாகக் காட்டி, மத பிரிவினையைச் செய்ய முயல்கிறார்கள். இதையெல்லாம் அவர்களால் முழுமையாகச் செயல்படுத்த முடியாது," என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் 'இதற்கான தேவை என்ன?' இதனை சட்ட ரீதியாகப் பார்ப்பதைவிட, இதற்கான தேவை என்னவெனப் பார்க்க வேண்டும் என்கிறார் மூத்த வழக்கறிஞரான கே.எம். விஜயன். "1947- 48-இல் இந்தியாவுக்கு வந்தவர்கள், 50களில் இந்தியாவில் வசித்தவர்கள் இந்தியக் குடிமக்கள் என ஏற்கனவே வரையறுக்கப்பட்டுவிட்டது. இப்போது புதிதாக இதைச் செய்வதற்கான நோக்கம், இஸ்லாமியர்களை ஒதுக்குவதாகக் காட்டுவதற்குத்தான். தேசிய குடிமக்கள் பதிவேட்டையெல்லாம் மாநில அரசுகளின் உதவியோடுதான் செய்ய வேண்டும். அதெல்லாம் எப்படி நடக்கும் என்பதைப் பார்க்க வேண்டும்," என்கிறார் விஜயன். ஆனால், இந்தியாவின் எல்லைப் பகுதிகள் மூடப்பட்டவை அல்ல என்பதால், அசாம் போன்ற மாநிலங்களில் உள்ள எதிர்ப்பை வேறு மாதிரி பார்க்க வேண்டும் என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/c2v9xvxepq5o
-
ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கப்போகும் பாரிய தொகை
ஜப்பான் கடந்த வருடம் இரண்டு நோயாளர் காவு வண்டிகள் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு வழங்கியிருந்தது.
-
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு - காபன் பரிசோதனைக்கான செலவீனம் தொடர்பில் அவதானம்
12 MAR, 2024 | 09:57 PM மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கில் சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கை 4 மாதங்களில் சமர்பிக்கப்பட உள்ளதாகவும் திருக்கேதீஸ்வர மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகளை காபன் பரிசோதனை மேற்கொள்வது தொடர்பாக விவாதிக்க பட்டதாகவும் சட்டத்தரணி வி.எஸ். நிறைஞ்சன் தெரிவித்தார். மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணையானது திங்கட்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் CID யினரால் சட்ட வைத்தியர் கேவகேயின் அறிக்கை நான்கு மாதங்களில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றின் ஆஜரான சட்டத்தரணி நிறைஞ்சன் தெரிவித்தார். திருக்கேதீஸ்வர மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகள் காபன் பரிசோதனைக்காக அனுப்பப்பட இருந்த நிலையில் அதற்கான நிதி வசதிகள் மேற்கொள்வதற்காக காணாமல் போனோருக்கான அலுவலகத்திடம் அதற்கான விலை மனு கோரப்பட்டு இருந்ததாகவும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் அதற்கான பதிலை அளிக்க முடியாத நிலை காணப்பட்டமையால் அதற்கு பிரிதொரு தவணையை கோரியதாகவும் தெரிவித்தார். அதன் அடிப்படையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் மே மாதம் 13 திகதி அழைப்பதற்காக திகதியிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/178556
-
இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை முதல் சோதனை வெற்றி
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணை முதல் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரே ஏவுகணையில் பல்வேறு வெடிபொருட்களுடன் ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் எம்.ஐ.ஆர்.வி. தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனை நேற்று (11) மேற்கொள்ளப்பட்டது. இது வெற்றி அடைந்ததாக விஞ்ஞானிகளுக்கு இந்திய பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அக்னி-5 ஏவுகணை இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘மிஷன் திவ்யாஸ்திரா திட்டத்தின் கீழ் எம்ஐஆர்வி தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனையை வெற்றிகரமாக நடத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை விஞ்ஞானிகளால் பெருமை கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார். இந்த அக்னி1 முதல் 4 வரையிலான ஏவுகணைகள் 700 கிலோ மீற்றர் முதல் 3,500 கிலோ மீற்றர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை. அக்னி-5, சுமார் 5000 கிலோ மீற்றர் தூரம் வரை செல்லக் கூடியது. இதன் மூலம் சீனாவின் வடக்கு பகுதி உட்பட முழு ஆசியாவையும் தாக்கும் எல்லைக்குள் கொண்டு வர முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. https://ibctamil.com/article/first-successful-test-of-a-missile-made-in-india-1710225591?itm_source=parsely-api
-
செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் - செய்திகள்
செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை 12 MAR, 2024 | 11:47 AM (எம்.எம்.சில்வெஸ்டர்) செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் உலக சம்பியனை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் செவிபுலனற்ற கிரிக்கெட் அணிகள் இன்று (12) பலப்பரீட்சை நடத்தவுள்ளன. உலக சம்பியனை தீர்மானமிக்கவுள்ள இறுதிப் போட்டியானது, ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவில் இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்கொண்ட இலங்கை அணியானது, சுப்பர் ஓவரில் 9 ஓட்டங்களால் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கடந்த 6 ஆம் திகதியன்ற ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமான இப்போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று (11) நடைபெற்றன. இப்போட்டித் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை , இந்திய அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை குகே்கவே போட்டியில் சமநிலையில் முடிந்தது. இதையடுத்து, வெற்றியாளரை தீர்மானிப்பதற்கு சுப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடி இலங்கை அணி 14 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. சுப்பர் ஓவரில் இலங்கை சார்பாக துடுப்பெடுத்தாட கிமந்து மெல்கம், பாலகிருஷ்ணன் தர்மசீலன் களமிறங்கினர். இலங்கை அணி 14 ஓட்டங்களை குவித்து, இந்திய அணிக்கு 15 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. சுப்பர் ஓவரில் இந்திய அணி 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டதால், 9 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிக்கொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்று முதலாவது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது. இந்நிலையில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று (12) நடைபெறவுள்ள உலக சம்பியனை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ளவுள்ளன. https://www.virakesari.lk/article/178508
-
ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
பாரிஸ் ஒலிம்பிக்கில் இஸ்ரேலுக்கு தடையில்லை: - சர்வதேச ஒலிம்பிக்குழு Published By: SETHU 12 MAR, 2024 | 10:03 AM (ஆர்.சேதுராமன்) காஸா யுத்தம் காரணமாக, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இஸ்ரேலுக்கு தடை விதிக்கும் திட்டம் எதுவுமில்லை என சர்வதேச ஒலிம்பிக்குழு தெரிவித்துள்ளது. உக்ரேன் யுத்தத்தின் அடிப்படையில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் போட்டியாளர்கள் அவ்விரு நாடுகளின் சார்பாக போட்டிகளில் பங்குபற்றுவதற்கு ஐ.சி.சி. தடைவிதித்துள்ளது. அவர்கள் நடுநிலை போட்டியாளர்களாகவே பங்குபற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர். காஸா யுத்தம் காரணமாக, இஸ்ரேலுக்கும் ஒலிம்பிக்கில் தடை விதிக்குமாறு பலஸ்தீன செயற்பாட்டாளர்கள் மற்றும் பிரான்ஸின் இடதுசாரி எம்.பிகள் சிலரும் ஐ.ஓ.சி.யை வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், கடந்தவாரம் பாரிஸுக்கு விஜயம் மேற்கொண்ட, பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (ஐ.ஓ.சி.) இணைப்புக் குழுத் தலைவர் பியர் ஒலிவியே பெக்கர்ஸ் வியூஜன்ட்டிடம், காஸா யுத்தம் காரணமாக இஸ்ரேலுக்குத் தடை விதிக்கப்படுமா என நேற்றுமுன்தினம் கேட்கப்பட்டது. அப்போது, அவர் பதிலளிக்கையில், இஸ்ரேலுக்கு தடைவிதிக்கப்படுவதற்கு சாத்தியமில்லை எனத் தெரிவித்தார். ஆரம்பத்தில் ரஷ்யாவுக்கும் பின்னர் ரஷ்ய ஒலிம்பிக் குழுவுக்கும் தடை விதிக்கப்பட்டமைக்கான காரணங்கள் தனித்துவமானைவ. ரஷ்யாவும், ரஷ்ய ஒலிம்பிக் குழுவும் ஒலிம்பிக் சாசனத்தின் அத்தியாவசியமான பகுதிகளை பலவீனப்படுத்தின. பலஸ்தீன ஒலிம்பிக் குழு அல்லது இஸ்ரேலிய குழு விடயத்தில் இந்நிலைமை இல்லை, அவை அமைதியாக ஒருங்கிருக்கின்றன' என அவர் கூறினார். 2022 ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் முடைந்து 4 நாட்களின் பின், அதாவது 2022 குளிர்கால பராலிம்பிக் ஆரம்பமாகுவதற்கு 9 நாட்களுக்கு முன் உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தது. இதனால் ஒலிம்பிக் கால போர் நிறுத்தத்தை ரஷ்யா மீறிவிட்டதாக ஐ.ஓ.சி தலைவர் தோமஸ் பாக் கூறியிருந்தார். ரஷ்யாவினால் கைப்பற்றப்பட்ட உக்ரேனிய பிராந்தியங்களைச் சேர்ந்த பிராந்திய விளையாட்டு அமைப்புகளையும் தனது அங்கத்தவர்களாக ரஷ்ய ஒலிம்பிக்குழு உள்ளடக்கியதையடுத்து, ரஷ்ய ஒலிம்பிக் குழுவுக்கும் ஐ.ஓ.சி. கடந்த ஒக்டோபர் மாதம் தடை விதித்தது. https://www.virakesari.lk/article/178492
-
முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் நாளை இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலை
ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான முருகன் என்ற ஸ்ரீஹரன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் நாளைய தினம்(13) இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சென்னை மேல்நீதிமன்றில் இதனை தெரிவித்துள்ளார். முருகன், ஜெயகுமார், ரொபர்ட் பயஸ் சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை பெறுவதற்காக இலங்கை உயர்ஸ்தானிகரகத்தினால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்கு தமது கணவரை அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடக் கோரி முருகனின் மனைவியான நளினி சென்னை மேல் நீதிமன்றில் நீதிப்பேராணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மீண்டும் சென்னை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று அதிகாலை ஐந்து மணிக்கு திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு மதியம் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகிய இவர்கள் 2022ஆம் ஆண்டளவில் விடுதலையாகியமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/santhan-death-rajiv-gandhi-murder-india-srilanka-1710243159
-
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டர்களுக்கு கைவிலங்குடன் தொடர்ந்தும் சிகிச்சை
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரின் விளக்கமறியல் நீடிப்பு Published By: DIGITAL DESK 3 12 MAR, 2024 | 04:45 PM வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஆலயத்திற்குள் நுழைந்த பொலிசார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் வழிபாட்டில் ஈடுபட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். அவர்களை கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் விசாரணைகள் நிறைவுபெறாத காரணத்தால் இன்று செவ்வாய்க்கிழமை (12) வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்றைய தினம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. காலை 9 மணி முதல் மூன்று தடவைகள் குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், தொல்பொருள் திணைக்களத்தினர் அங்குள்ள தொல் பொருட் சின்னங்களை சேதப்படுத்தியதாக மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதனையடுத்து குறித்த 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் சார்பில் ஜனாபதிதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான ஸ்ரீகாந்தா, க.சுகாஸ், தி.திருஅருள், கிறிஸ்ரினா, ஜிதர்சன், சஜித்தா, சாருகேசி, விதுசினி, கீர்த்தனன், யூஜின் ஆனந்தராஜா, கொன்சியஸ் உள்ளிட்ட பலர் மன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/178545
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
சிஎஸ்கேவின் அடுத்த தலைவர் யார்! நிர்வாகம் எடுத்துள்ள முடிவு ஐபிஎல் 2024 ஆரம்பமாகவுள்ள நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் எதிர்கால திட்டம் பற்றி அணியின் தலைமை நிர்வாக அதிகாரியான காசி விஸ்வநாதன் பேசியுள்ளார். தோனியின் கடைசி சீசன் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அவருக்கு பின்னர் அணியின் தலைவர் யார் என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை அணியை தோனியே வழிநடத்துவார் என்று காசி விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார். அடுத்த அணித்தலைவர் அதேவேளை சிஎஸ்கே அணியின் புதிய அணித்தலைவரை தெரிவு செய்ய அவசரப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளதுடன் சென்னை அணியின் பயிற்சியாளரும் தோனியும் சேர்ந்து தான் இதனை பற்றி முடிவு எடுக்க வேண்டும் என்று நிர்வாகிகள் தரப்பு விரும்புவதாக தெரிவித்துள்ளார். அணித்தலைவர் உட்பட முதன்மையான இரு பொறுப்புகள் குறித்து நாம் விவாதிக்க தேவையில்லை, அதை தோனியும் பயிற்சியாளரும் முடிவு செய்யட்டும் அவர்கள் முடிவை தம்மிடம் தெரிவிக்கட்டும், அதை உங்களுக்கு தெரிவிப்பேன் என ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டுள்ளதாக விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணி முன்பு ரவீந்திர ஜடேஜாவை அணித்தலைவராக நியமித்திருந்த நிலையில் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. எனவே மீண்டும் அணித்தலைவராக தோனியே களமிறங்கினார். ஐபிஎல் 2024 இம்மாதம் 22 ஆரம்பமாகவுள்ளதோடு அன்று சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. https://ibctamil.com/article/replace-ms-dhoni-csk-captain-ceo-big-revelation-1710246797
-
குடியுரிமை திருத்தச் சட்டம் - அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன? முஸ்லிம்கள் எதிர்ப்பது ஏன்?
குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன? ஓர் எளிய விளக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES 12 மார்ச் 2024, 03:37 GMT புதுப்பிக்கப்பட்டது 12 மார்ச் 2024, 04:31 GMT குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியா முழுவதும் அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. இச்சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த, முஸ்லிம் அல்லாத மதப்பிரிவினர் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள்; மேலும் அவர்களுக்கு இந்திய குடியுரிமை பெறவும் வழிவகை செய்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன? பொதுவாக வெளிநாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தியக் குடிமகனாக முடியாது. அவர்கள் பொதுவாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள். ஆனால், இந்தச் சட்டத் திருத்தம் இதில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அவர்களை இந்தியக் குடிமகனாக அங்கீகரிக்க வழிவகை செய்யப்படுகிறது. கடந்த 1955ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று விவரிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தச் சட்டத்தில் திருத்தத்தின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள்,பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம். மேலும், கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த சட்டத்தில் உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுவது என்ன? மதச்சார்பின்மை எனும் இந்தியாவின் அடித்தளத்தையே இது சிதைத்துவிடும் என்கிறார்கள் இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள். மதத்தை அடிப்படையாகக் கொண்டு குடியுரிமை வழங்கப்படுவதை இந்தியாவின் எதிர்க்கட்சிகள் எதிர்கின்றன. "இந்திய அரசமைப்பு மதத்தின் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்கிறது. அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. ஆனால், இந்தச் சட்டம் மதபாகுபாட்டிற்கு சட்ட அங்கீகாரம் தருகிறது" என்கிறார்கள் இதனை எதிர்ப்பவர்கள். "சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகத்தான் இந்த சட்டம் என்றால் இதில் இஸ்லாமியர்களையும் சேர்த்து இருக்க வேண்டும். ஏன் பாகிஸ்தான் அகமதியாக்களையும், மியான்மர் ரோஹிஞ்சாகளையும் விட்டுவிட்டார்கள்" என கேள்வி எழுப்புகிறார்கள் அவர்கள். டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் கெளதம் பாட்டியா, வெளிப்படையாகவும் அப்பட்டமாகவும், மத பாகுபாட்டிற்குச் சட்ட அங்கீகாரம் தருகிறது இந்த சட்டத் திருத்தம் என்றார். இலங்கையில் இன்னல்களை சந்தித்த இலங்கை தமிழர்களை ஏன் இந்த பட்டியலில் சேர்க்கவில்லை என்ற கேள்வியையும் முன் வைக்கிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES எந்தெந்தக் கட்சிகள் எதிர்க்கின்றன? காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சி, சிபிஎம், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இதனை எதிர்கின்றன. இந்தச் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டபோது, இது கண்களுக்குப் புலப்படாத வகையில் இந்து-முஸ்லிம் பிரிவினைவாதத்தை முன்னெடுப்பதாக சிவ்சேனா சாம்னாவில் தலையங்கம் எழுதியது. ஆனால், நாடாளுமன்றத்தில் இதனை ஆதரித்து இருக்கிறது சிவசேனா. நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இதனைக் கடுமையாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தார்கள். ஆனால், அதிமுக இந்தச் சட்டமசோதவை ஆதரித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? இரண்டுக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. அஸ்ஸாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறியும் நோக்கில், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்கான நிர்ணயிக்கப்பட்ட தேதி, 1971-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆக இருந்தது. என்ஆா்சி நடவடிக்கையின்படி, அஸ்ஸாம் மக்கள் மேற்குறிப்பிட்ட காலகட்டத்துக்கு முன்னதாக இந்தியாவில் வசித்து வந்தவா்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். இந்த நடவடிக்கை மதத்தை அடிப்படையாகக் கொண்டது அன்று. அதே வேளையில், குடியுரிமை திருத்தச் சட்டம் மதத்தை அடிப்படையாகக் கொண்டது. அதேநேரம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விலக்கப்பட்ட வங்கதேச இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்க இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகை செய்கிறது. அப்படியானால், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விலக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடியேறிகள் இந்திய குடியுரிமை பெற்று அஸ்ஸாம் மாநிலத்திலேயே தங்க முடியும். இதன் காரணமாக வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பல அமைப்புகள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,GETTY IMAGES விலக்கப்பட்ட பகுதிகள் என ஏதேனும் இருக்கிறதா? நுழைவு அனுமதிப் படிவம் (இன்னா்-லைன் பொ்மிட்) மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய பகுதிகளுக்கும் சட்டத் திருத்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்? பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளும் இஸ்லாமியப் பெரும்பான்மை நாடுகள். ஒன்று அரசே இஸ்லாமிய அரசாக இருக்கிறது, அல்லது அங்கு இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவர்கள் அங்குள்ள சிறுபான்மை மக்களைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு தேவை என சிவராஜ் இதழின் ஆசிரியர் ஆர் ஜெகநாதன் இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பாஜக அரசு என்ன சொல்கிறது? குடியுரிமை பெறக் குறிப்பிட்ட பிரிவினா் அனுபவிக்கும் துயரங்களைப் போக்குவதற்கு இந்த மசோதா வழிவகுக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியபோது பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "காங்கிரஸ்தான் மதத்தின் பெயரால் நாட்டை பிரித்தது. அதனை சரி செய்யவே இந்த சட்டமசோதா" என்றார். "ஏற்கெனவே வங்கதேச பிரிவினையின் போதும், உகாண்டாவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் தாக்கப்பட்ட போதும் சில சட்டப்பிரிவுகளை பயன்படுத்தி அங்கிருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு இருக்கிறது," என்றும் அவர் அப்போது அவையில் தெரிவித்தார். "இது .001 சதவீதம் கூட சிறுபான்மை மக்களுக்கு எதிரானது இல்லை. இது ஊடுருவல்காரர்களுக்கு எதிரானது," என்றார். இந்த சட்டதிருத்த மசோதாவை ஆதரித்து 293 நாடாளுமன்ற உறுப்பினர்களும் , எதிர்த்து 82 உறுப்பினர்களும் வாக்களித்தனர். https://www.bbc.com/tamil/articles/cev9g79kvgqo
-
ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கப்போகும் பாரிய தொகை
1600 மில்லியன் ஜப்பானிய யென் உதவித் தொகையைப் பெற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்கி, நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த பொதுத்துறைக்கு அதிகாரம் அளித்து ஜப்பான் அரசாங்கம் தனது ஒத்துழைப்பை விரிவுபடுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. வடக்கில் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்கு இதன்படி, ஜப்பான் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 1600 மில்லியன் (3.3 பில்லியன் ரூபா) வழங்க ஜப்பான் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்தப் பணம் கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும், வடக்கில் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்கான தாய் மற்றும் குழந்தை சிகிச்சை உபகரணங்களைப் பெறுவதற்கும், வடக்கு மற்றும் கிழக்கில் மீன்பிடி உபகரணங்களைப் பெறுவதற்கும் பயன்படுத்தப்படவுள்ளது. அதிபர் ரணில் முன்வைத்த யோசனை மேற்படி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஜப்பான் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக ஜப்பானிய அரசாங்கத்துடன் பரிமாற்ற பத்திரங்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய ஆவணங்களில் கையொப்பமிடுவதற்கு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://ibctamil.com/article/1600-million-yen-aid-from-japan-1710228079 மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கும் தாய் மற்றும் குழந்தை சிகிச்சை உபகரணங்களைப் பெறுவதற்கு நிதி வழங்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
-
மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு
திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற மாணவனின் மரணம் தொடர்பில் கடிதம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பிலான பூரண அறிக்கையுடனனான கடிதம் ஒன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை மாணவன் கடந்த 11ஆம் திகதி திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணம் குறித்த பூரண அறிக்கை இது தொடர்பாக முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு மாணவனின் மரணம் குறித்த பூரண அறிக்கையே இவ்வாறு திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடிதத்தில் , மாணவனின் மரணத்திற்கு தீர்வினை பெற்றுத்தருமாறு பொது மக்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த மாணவனின் உறவினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, வைத்தியசாலை அபிவிருத்தி குழு இந்த கடித்தை அனுப்பி வைக்கும் செயற்பாட்டில் ஈப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/thirukkovil-hospital-development-committee-1710239822