ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக ஒத்துழைப்பு வழங்கிய சிலர் கைது - சாகர காரியவசம்
Everything posted by ஏராளன்
-
கண்ணகி - முருகேசன்: ஆணவக்கொலை என்ற சொல்லாடல் உருவாகக் காரணமான கொடூர சம்பவம்
பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, கண்ணகி முருகேசன் 25 நிமிடங்களுக்கு முன்னர் ஜூலை 8, 2003. கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் முந்திரிக்காடு. எப்போதுமே ஆள் அரவம் இல்லாத அந்தக் காட்டிற்குள் அன்று ஊரே கூடியிருந்தது. குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த முருகேசனும், அவரது சித்தப்பாவும் கை கால்கள் கட்டப்பட்டு கிழே தள்ளப்பட்டிருந்தனர். இவர்கள் இருவரும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள். சற்று தள்ளியிருந்த ஒரு மரத்தில், கண்ணகி கட்டப்பட்டிருந்தார். இவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். எழுத்தில் விவரிக்க முடியாத சித்திரவதைக்குப் பிறகு, முருகேசன், கண்ணகி ஆகியோரின் மூக்கு மற்றும் காதுகளில் விஷம் ஊற்றப்பட்டது. வாயைத் திறக்க மறுத்து இறுக்கி மூடியிருந்த இருவரின் காது மற்றும் மூக்கில் நஞ்சை ஊற்ற, இருவரும் அலறித் துடித்திருக்கிறார்கள். ஊரே பார்க்க, இருவரும் துடிதுடிக்க இறந்த பிறகு, இருவரின் உடல்களையும் அவர்களின் குடும்பத்தினர் எடுத்துச் சென்று தனித்தனியாக எரித்தனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருவேறு சாதியைச் சேர்ந்த கண்ணகியும் முருகேசனும், மே 5, 2003 அன்று காதல் திருணம் செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் இப்படி ஆணவக்கொலை செய்யப்பட்டார்கள். கொலை நடந்து ஒராண்டுக்கு பிறகு வெளியே எப்படித் தெரிந்தது? இந்த வழக்கை எப்படி சிபிஐ விசாரித்தது? வழக்கின் விசாரணையில் காவல்துறையினர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் என்ன? இங்கு விரிவாகப் பார்ப்போம்... என்ன நடந்தது? பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, ஆணவப் படுகொலை செய்யப்பட்டவர்கள் ஜூலை 7, 2003. ஊரில் எப்போதும் போல வயல் வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த முருகேசனின் தந்தை சாமிக்கண்ணுவை மறித்த கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியன், “உம்மவன் முருகேசன் எங்கே?” எனக் கேட்டுள்ளார். ஒன்றும் புரியாத சாமிக்கண்ணு, என்ன விஷயம் எனக் கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு முறையான பதில் எதுவும் சொல்லாமல், “உன் மகன் எங்க இருந்தாலும், அவனை உடனடியாக கூட்டிக்கிட்டு வா,” எனக் கூறியுள்ளார் மருது பாண்டியன். மருதுபாண்டியனின் மிரட்டல் மற்றும் அவர்களுடன் வந்த ஆட்கள் செய்த களேபரத்தில், குப்பநத்தம் புதுக்காலனியே பதற்றமானது. இதற்கிடையில், முருகேசனின் தம்பி வேல்முருகன் அவர்களின் கண்ணில் பட, “முருகேசன் எங்கே?” எனக் கேட்டு, அவரை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்ற மருதுபாண்டியனும் அவரது ஆட்களும், சரமாரியாகத் தாக்கியுள்ளனர். சம்பவம் அறிந்து சமாதானத்திற்கு முயன்ற முருகேசனின் சித்தப்பாவிற்கும் கெடு விதிக்கப்பட்டு, முருகேசனை அழைத்து வருவதே ஒரே வழி, இல்லையேல், வேல்முருகனை விடமாட்டோம் என மருதுபாண்டியன் கூறியுள்ளார். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, தன் மகன் எங்கிருப்பான் என அறிந்துகொண்ட முருகேசனின் சித்தப்பா, முருகேசனை விருதாச்சலம் வண்ணான்குடிகாட்டில் உள்ள அவரது அக்கா வீட்டில் இருந்து அழைத்து வந்தார். “வந்தவனை அவர்கள் சற்றும் இறக்கமின்றிக் கொடுமைப் படுத்தினார்கள். அவன் அவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியிலும் கண்ணகி எங்கிருக்கிறாள் என்று சொல்லவே இல்லை. ஒரு கட்டத்தில், அவனைக் கயிற்றில் கட்டி, தலைகீழாகத் தொங்கவிட்டு அடித்தபோதும், அவன் தலை கீழே அடித்தபோதுதான், அவன் கண்ணகியை எங்கே வைத்திருந்தான் என்பதையே சொன்னான்,” எனக் கூறியிருந்தார் முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி. கண்ணகியையும் அழைத்து வந்த அவரது குடும்பத்தினர், இருவரையும் துன்புறுத்தி, காது மற்றும் மூக்கில் விஷம் ஊற்றிக் கொலை செய்தனர். எப்படித் தெரிந்தது? பட மூலாதாரம்,KIZHAKU PATHIPAGAM படக்குறிப்பு, ஓராண்டுக்குப் பிறகு இச்சம்பவம் ஒரு தமிழ் இதழில் வெளிவர, அப்போதுதான் இந்தக் கொடூரக் கொலை வெளியுலகத்திற்கே தெரிய வந்தது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மகன் முருகேசன், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலையில் இளங்கலை பொறியியல் படித்து வந்தார். அதே பல்கலையில் துரைசாமியின் மகள் கண்ணகி வணிகவியல் துறை படித்து வந்தார். இருவரும் தங்களது கல்லூரி நாட்களில் இருந்து காதலித்து வந்த நிலையில், மே 5, 2003 அன்று கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரகசியத் திருமணம் செய்துள்ளனர். இந்த நிலையில்தான், இருவரும் ஊரைவிட்டு வெளியே சென்று வாழ முடிவெடுத்து, ஜூலை 6ஆம் தேதி ஊரை விட்டு வெளியேறியுள்ளனர். ஆனால், இரண்டு மணிநேரத்திலேயே இருவரும் பிடிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். “முருகேசனை அழைத்து வந்ததுதான் என் வாழ்நாளில் நான் செய்த மிகப்பெரிய தவறு. அன்று நான் அவனை அழைத்து வராவிட்டால், இந்நேரம் எங்காவது சென்று வாழ்ந்திருப்பான்,” என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி. இந்தக் கொலைக்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் முதன்முதலாக ஆணவப் படுகொலை என்னும் பதத்தை தமிழ்நாடு பாவிக்கத் தொடங்கியதாக மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன், தனது ‘சாதியின் பெயரால்’ என்னும் நூலில் குறிப்பிடுகிறார். “இதற்கு முன்பே இத்தகைய நிகழ்வுகள் நடத்திருக்கின்றன என்றாலும், சாதிய மோதல், சாதியக் கொலை என்றெல்லாம் எவை அழைக்கப்பட்டு வந்தன. சாதியம் எப்படி இயல்பானதாக, எங்கும் நிறைந்ததாக இருக்கிறதோ, அதேபோல சாதியக் கொலைகளும் இயல்பானவையாகவும் அவ்வப்போது நிகழ்பவையாகவும் கருதப்பட்டு வந்தன,” என எழுதியுள்ளார் இளங்கோவன். கண்ணகியும், முருகேசனும் கொலை செய்யப்பட்டு, 10 நாட்களுக்குப் பிறகுதான் முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யப்பட்டதாக இந்த வழக்கை ஓராண்டுக்குப் பிறகு கையில் எடுத்த தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட உதவி மையத்தில் இருந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான சுகுமாரன் தெரிவித்தார். சுமார் 10 நாட்களுக்குப் பிறகு ஜூலை 17ஆம் தேதி, கண்ணகியும் முருகேசனும் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டதால், கண்ணகியை அவரது குடும்பத்தினரும், முருகேசனை அவரது குடும்பத்தினரும் கொலை செய்ததாக காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கண்ணகியின் அப்பா துரைசாமி, அண்ணன் மருதுபாண்டி மற்றும் அவர்களது உறவினர்கள் இருவர் என நான்கு பேர், முருகேசனின் அப்பா சாமிக்கண்ணு, சித்தப்பா அய்யாசாமி மற்றும் இவர்களது உறவினர்கள் இரணடு பேர் என மொத்தம் எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எட்டு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சுமார் ஓராண்டுக்கு பிறகு இச்சம்பவம் ஒரு தமிழ் இதழில் வெளிவர, அப்போதுதான் இந்தக் கொடூரக் கொலை வெளியுலகத்திற்கே தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, அம்பேத்கர் சட்ட உதவி மையத்தில் இருந்த மூத்த வழக்கறிஞர் ரத்தினம் மற்றும் சமூக ஆர்வலர் சுகுமாரன் இணைந்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதன் விளைவாக, இந்த வழக்கு சிபிஐ.க்கு மாற்றப்பட்டது. போலீஸ் மீதும் வழக்குப் பதிவு செய்த சிபிஐ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கண்ணகி மற்றும் முருகேசனுக்கு விஷத்தை ஊற்றிய டம்ளரை சிபிஐ கைப்பற்றியது. ஏப்ரல், 2004இல் வழக்கைக் கையில் எடுத்த சிபிஐ, வழக்கு தொடர்பாக அனைவரையும் விசாரணை செய்தது. இதில், சம்பவ இடத்தில் இருந்த முக்கிய ஆதாரங்களையும் சிபிஐ சேகரித்தது. கண்ணகி மற்றும் முருகேசனுக்கு விஷத்தை ஊற்றிய டம்ளரையும் சிபிஐ கைப்பற்றியது. மேலும், இந்தக் கொலையை நேரில் பார்த்த முருகேசனின் சகோதரி தமிழரசி, அப்பா சாமிக்கண்ணு, முருகேசனின் தம்பி வேல்முருகன், பழனிவேலு ஆகியோர் முக்கிய சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர். சிபிஐ.யின் விசாரணையில், விருத்தாச்சலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் தமிழ்மாறன் மற்றும் உதவி ஆய்வாளர் செல்லமுத்து ஆகியோரையும் குற்றவாளிகளாகச் சேர்த்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்த முருகேசனின் குடும்பத்தினர், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையில், 15 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். கடலூர் சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 2021இல் தீர்ப்பளித்தது. அதில், குற்றம் சாட்டப்பட்ட 15 பேரில், 13 பேரை குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்த நீதிமன்றம், கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனை வழங்கியது. மற்ற 12 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தண்டனையை ரத்து செய்யக் கோரி 13 பேர் தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீடு மனுக்களை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில், முதலில் தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப் பதியப்பட்ட நிலையில், பின் கொலை வழக்காகப் பதியப்பட்டதாகவும், சம்பவத்தைக் கண்ணால் கண்ட சாட்சியங்கள் ஏதும் இல்லை எனவும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் பட்டியலினத்தவர்கள் என்பதால் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பொருந்தாது என்றும் வாதிடப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சென்னை உயர்நீதி மன்றம் சிபிஐ தரப்பிலும், முருகேசன் குடும்பத்தினர் தரப்பிலும், இந்தக் கொலை சம்பவத்திற்குத் தொடர் சாட்சியங்கள் உள்ளதாகவும், இது ஆணவக்கொலைதான் என்பதால், கடலூர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டனர். மேலும், அப்போதைய உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் மீதான ஆயுள் தண்டனையை ரத்து செய்த நீதிபதிகள், வேறு ஒரு பிரிவில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனையையும் உறுதி செய்து உத்தரவிட்டனர். இந்த வழக்கு ஒரு முன்மாதிரி வழக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நடந்த சங்கர் ஆணவக்கொலை வழக்கில், கெளசல்யாவின் தந்தை விடுவிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார் மூத்த வழக்கறிஞர் ரத்தினம். “கண்ணகி முருகேசன் வழக்கில் அப்படி எதுவும் நடைபெறவில்லை. இந்த வழக்கில் நேரடி சாட்சியங்கள் இருந்தபோதும், அவற்றை முறையாக வழக்கில் சேர்த்து, சாட்சிகளைக் காப்பாற்றி, நீதிமன்றத்தில் வெற்றி பெற கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. அதனால், இந்த வழக்கு அனைத்து ஆணவக்கொலை வழக்குகளுக்கும் ஒரு முன்மாதிரி வழக்கு,” என்றார். https://www.bbc.com/tamil/articles/c84ng8wx0dgo
-
மக்களை துன்புறுத்துவதற்கான அதிகாரங்களை அரசாங்கத்திற்கு வழங்கும் சட்டங்கள் குறித்து சந்திரிகா கவலை – அவற்றை விலக்கிக்கொள்ளவேண்டுகோள்
Published By: RAJEEBAN 03 FEB, 2024 | 09:30 AM நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும், ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி அரசாங்கத்தை விமர்சிக்கின்ற எதிர்ப்பு தெரிவிக்கின்ற மக்களை துன்புறுத்துவதற்கான அதிகாரங்களை இந்த சட்டமூலங்கள் அரசாங்கத்திற்கு வழங்குகின்றன என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது நாடாளுமன்றத்தில் காணப்படுகின்ற இரண்டு சட்டங்கள் குறித்து நாட்டில் பெரும் கரிசனைகள் காணப்படுகின்றன – முதலாவது நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் மற்றையது பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டுள்ளார் என நான் நினைக்கின்றேன். இந்த சட்டமூலங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதால் கலந்துரையாடப்பட்டுள்ளதால் போராட்டங்கள் வீதிகளில் இடம்பெற்றுள்ளதால் இந்த சட்டங்கள் குறித்து நான் தெளிவுபடுத்தப்போவதில்லை. ஒரு சிரேஸ்ட பிரஜை என்ற அடிப்படையில் எனது கருத்து என்னவென்றால் இரண்டும் மிகவும் பாரதூரமானவை ஆபத்தானவை. இவை மிகவும் ஆபத்தான விதத்தில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்றன . இந்த சட்டங்கள் ஜனநாயக வழியில் செயற்படும் மக்களை துன்புறுத்துவதற்கான தேவைக்கு அதிகமான அதிகாரங்களை அரசாங்கத்திற்கு வழங்குகின்றன, ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி அரசாங்கத்தை விமர்சிக்கின்ற எதிர்ப்பு தெரிவிக்கின்ற மக்களை துன்புறுத்துவதற்கான அதிகாரங்களை இந்த சட்டமூலங்கள் அரசாங்கத்திற்கு வழங்குகின்றன. இந்த சட்டங்களை விலக்கிக்கொள்ளுங்கள் என அரசாங்கத்திற்கு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். https://www.virakesari.lk/article/175425
-
அமெரிக்காவிடம் இந்தியா வாங்கும் ராணுவ ட்ரோன்கள் என்ன செய்யும்? சிறப்புகள் என்ன?
பட மூலாதாரம்,GA-ASI.COM படக்குறிப்பு, இந்தியாவுக்கு ஆளில்லா விமானங்கள் வழங்க அமெரிக்கா ஒப்புதல் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவுக்கு 31 MQ-9B ட்ரோன்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு ஆளில்லா விமானங்களுடன் கூடவே அதில் பொருத்தப்படும் ஏவுகணைகள் மற்றும் பிற உபகரணங்களும் விற்கப்படும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் குறித்து இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக பேச்சுக்கள் நடந்து வந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது. ராணுவ பயன்பாட்டிற்காக இத்தகைய ஆளில்லா விமானங்களை வாங்குவது பற்றி இந்தியா 2018இல் பேச்சுகளைத் தொடங்கியது. ஆனால் ஆயுதங்கள் இல்லாத ஆளில்லா விமானங்கள் மீது அதற்குப் பல காலம் முன்பே இந்தியா ஆர்வம் காட்டியது. இருப்பினும், அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதால் இந்த ஒப்பந்தம் இப்போது முடிவாகிவிட்டதாகச் சொல்ல முடியாது. பட மூலாதாரம்,GA-ASI.COM படக்குறிப்பு, இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அளித்துள்ள ஒப்புதல், ஒரு பெரிய தடை விலகியதற்கு சமம். ரஷ்யாவுக்கு நெருக்கமாகச் செல்லும் இந்தியாவைக் கவரும் முயற்சியாக இந்த ஆயுத விற்பனை பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அளித்துள்ள ஒப்புதல், ஒரு பெரிய தடை விலகியதற்குச் சமம் என்று சொல்லலாம். இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன், அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுவை கொல்வதற்கான சதித்திட்டம் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து இந்தியா முழு மனதுடன் விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியதாக செய்திகள் வெளியாகின. அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எம்.பி பென் கார்டின், செனட் வெளியுறவுக் குழுவின் தலைவராக உள்ளார். அமெரிக்க மண்ணில் நடந்த கொலைச் சதியை விசாரிப்பது தொடர்பாக அதிபர் ஜோ பைடனிடம் இருந்து உத்தரவாதம் பெற்ற பின்னரே இந்த விஷயத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக அவர் கூறினார். "இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இந்தியாவிலும் இதுபோன்ற செயல்களுக்குப் பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும் என்றும் பைடன் நிர்வாகம் கூறியுள்ளது" என்று அவர் குறிப்பிட்டார். இந்திய பிரதமர் நரேந்திர மோதி கடந்த ஆண்டு அதிகாரபூர்வ பயணமாக அமெரிக்கா சென்றபோது இந்த ஒப்பந்தத்தை விரைவுபடுத்துமாறு பைடன் நிர்வாகத்தை இந்தியா கேட்டுக் கொண்டதாக ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது. ஒப்பந்தத்தில் என்னவெல்லாம் சேர்க்கப்பட்டுள்ளது? பட மூலாதாரம்,GA-ASI.COM படக்குறிப்பு, 170 ஏஜிஎம் 114R ஹெல்ஃபயர் ஏவுகணைகள் மற்றும் 310 லேசர் ஸ்மால் டயமீட்டர் குண்டுகளும் விற்பனை செய்யப்பட உள்ளன. தற்போது இந்தியா உளவுத் தகவல்கள் சேகரிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக MQ-9B விமானங்களைக் குத்தகைக்கு எடுத்துள்ளது. வியாழனன்று பென்டகனின் டிஃபென்ஸ் செக்யூரிட்டி ஒத்துழைப்பு நிறுவனம் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. இந்த விமானங்களுக்கான ஒப்பந்தம் ஜெனரல் அட்டாமிக்ஸ் ஏரோநாட்டிக்கல் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்பு உபகரணங்களும் அடக்கம். இவை தவிர, 170 ஏஜிஎம் 114R ஹெல்ஃபயர் ஏவுகணைகள் மற்றும் 310 லேசர் ஸ்மால் டயமீட்டர் குண்டுகளும் விற்பனை செய்யப்பட உள்ளன. அவை மிகவும் துல்லியமானவை. இந்த ட்ரோனில் என்ன சிறப்பு? பட மூலாதாரம்,GA-ASI.COM படக்குறிப்பு, இத்தகைய விமானங்கள் ரிமோட்லி பைலட்டட் ஏர்கிராஃப்ட் சிஸ்டம் (ஆர்பிஎஸ்) என்று அழைக்கப்படுகின்றன. இது தொலைவில் இருந்து பறக்கச் செய்யவும், கட்டுப்படுத்தவும் முடியக்கூடிய ஆளில்லா விமானம் என்று ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் அட்டாமிக்ஸ் ஏரோநாட்டிக்கல் MQ-9B பற்றிக் கூறியது. இத்தகைய விமானங்கள் ரிமோட்லி பைலட்டட் ஏர்கிராஃப்ட் சிஸ்டம் (ஆர்பிஎஸ்) என்று அழைக்கப்படுகின்றன. சாதாரண விமானத்தைப் பறக்கச் செய்யும்போது பார்க்கும் அனைத்தையுமே தொலைவில் இருந்துகொண்டு அதை இயக்கும் பைலட் பார்க்க முடியும். இதில் நவீன ரேடார் அமைப்புகள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது தானாகவே டேக் ஆஃப் செய்யும், தரையிறங்கும். இதை செயற்கைக்கோள் உதவியுடன் கட்டுப்படுத்தலாம். 40 மணி நேரத்திற்கும் அதிகமாக இரவும் பகலும், எல்லா வகையான வானிலையிலும் இதைப் பறக்கச் செய்ய முடியும். இது 2155 கிலோ எடையை தாங்கியபடி பறக்கக் கூடியது. போர் முதல் சுற்றுச்சூழல், மனிதாபிமான பணிகள் வரை உலகம் முழுவதும் ஸ்கை கார்டியன் பயன்படுத்தப்படுகிறது. ஸ்கை கார்டியனால் சாதாரண விமானம் போலப் பறக்க முடியும். ராணுவங்கள் அல்லது அரசுகள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப இதைப் பயன்படுத்த முடியும். இந்த விமானம் உளவுத் தகவல் சேகரிப்பு, தேடுதல் மற்றும் கண்காணிப்பு போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்படலாம். MQ-9B ட்ரோனை எங்கு பயன்படுத்தமுடியும் மனிதாபிமான உதவிகளை கொண்டு சேர்த்தல் உளவு தகவல்களைச் சேகரித்தல் எல்லைக் கண்காணிப்பு விமான தாக்குதல்கள் தேடுதல் மற்றும் மீப்புப் பணிகள் ஆபத்தான பணிகளில் உதவி செய்தல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல் உள்ளிட்ட சேவைகளுக்காக இந்த ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்த முடியும். இந்த ட்ரோன்களை இந்தியா என்ன செய்யும்? பட மூலாதாரம்,GA-ASI.COM படக்குறிப்பு, இந்த ட்ரோன்கள் கண்காணிப்பு மற்றும் உளவு பார்க்கும் திறன் கொண்டவை இத்தகைய ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்கள், போர் விமானிகள் மூலம் இயக்கப்படும் போர் விமானங்கள் போலவே எதிரி இலக்குகளை நோக்கி ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளை வீசும் திறன் கொண்டவை. இந்த ட்ரோன்கள் கண்காணிப்பு மற்றும் உளவு பார்க்கும் திறன் கொண்டவை. அவற்றில் ஹெல்ஃபயர் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. நீண்ட தூரம் பறந்து உளவுத் தகவல் சேகரிப்பு மற்றும் கண்காணிப்பை மேற்கொள்ளும் திறன் கொண்ட இந்த விமானங்களை மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரணம், தேடுதல் மற்றும் மீட்பு, வான்வழி முன்னறிவிப்பு, மின்னணு போர், மேற்பரப்பு எதிர்ப்பு போர் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் ஆகியவற்றிலும் பயன்படுத்தலாம். அதுதவிர போதைப் பொருள் கடத்தல், கடற்கொள்ளையர் பிரச்னை போன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்கவும் இந்த ட்ரோன்களை பயன்படுத்தலாம். மொத்தமுள்ள 31 ஆளில்லா விமானங்களில் 15 இந்திய கடற்படைக்கும், தலா 8 ட்ரோன்கள் ராணுவம் மற்றும் விமானப் படைக்கும் வழங்கப்படும் என்று தற்போது கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன. MQ9 தொடரின் கீழ் கிடைக்கப்பெறும் MQ9B ஸ்கை கார்டியன், MQ9B ஸீ கார்டியன் ஆகிய இரண்டு வகையான ட்ரோன்களையும் வாங்குவது குறித்து இந்தியா பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸீ கார்டியன் ட்ரோன்கள் கடல் கண்காணிப்புக்குப் பயன்படுத்தப்படும். அதே நேரத்தில் ஸ்கை கார்டியன் ட்ரோன்கள் எல்லைகளைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்படும். பட மூலாதாரம்,GA-ASI.COM படக்குறிப்பு, "இந்தியா எம்டிசிஆர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருந்திருந்தால், இந்த ட்ரோன்கள் அதற்குக் கிடைத்திருக்காது" கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியா, ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பில் (எம்டிசிஆர்) அதிகாரப்பூர்வ உறுப்பினரானபோது இந்த ட்ரோன்களை வாங்குவது குறித்த பேச்சு தொடங்கியது என்று பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடி பிபிசி இந்தியிடம் தெரிவித்தார். இந்தியா எம்டிசிஆர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருந்திருந்தால், இந்த ட்ரோன்கள் அதற்குக் கிடைத்திருக்காது என்று அவர் மேலும் கூறினார். "எம்டிசிஆர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சிறிது காலம் கழித்து இந்தியா இந்த ஆயுதமேந்திய ட்ரோன்களை வாங்குவதற்காக அமெரிக்காவுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியது. இதுவரை நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு மட்டுமே அமெரிக்கா இந்த ஆளில்லா விமானங்களை வழங்கி வந்தது. எனவே இந்தியா இந்த ட்ரோன்களை வாங்க முடிந்தால், நேட்டோ அல்லாத ஒரு நாடு இதைப் பெறுவது முதல் முறையாக இருக்கும்,” என்றார் அவர். இந்த ட்ரோன்களை வாங்குவதற்கான இந்தியாவின் திட்டம் தனது ஆளில்லா பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்தியா தனது எல்லைகளில் கண்காணிப்புத் திறனை அதிகரிக்கவும், சாத்தியமான அச்சுறுத்தல்களை மிகவும் திறம்படக் கண்காணிக்கவும் இந்த ட்ரோன்கள் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதைக் கண்காணிக்கவும் இந்த ஆளில்லா விமானங்கள் பயன்படும் என்பது உறுதி. https://www.bbc.com/tamil/articles/c89nj87dx0zo
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் 27 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 18 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு அக்.7 -ஆம் திகதி ஹமாசின் அத்துமீறலைத் தொடர்ந்து இஸ்ரேல், காசா மீது நடத்திவரும் தாக்குதல் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 18 பாலஸ்தீனியர்கள் பலியானதாகவும், 190 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹாமஸ் மோதல் வெடித்ததிலிருந்து இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 27,019 ஆகவும், காயமடைந்த பாலஸ்தீனியர்கள் 66,139 ஆகவும் உயர்ந்துள்ளது. இஸ்ரேலியப் படைகள் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தற்காப்புக் குழுவினரை அணுகுவதைத் தடுப்பதால், இடிபாடுகளுக்கு அடியிலும் சாலைகளிலும் இன்னும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அமைச்சகம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/290367
-
நிகழ்நிலை காப்புச் சட்டம் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி
02 FEB, 2024 | 07:19 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் மனித உரிமைகள் அம்சங்களில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அலுவலகம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை மீளாய்வு செய்து சட்டத்தை திருத்தம் செய்யுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்துள்ளது. நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டத்தினால் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்துக்கு தடையேற்படும்.இந்த சட்டத்தின் ஊடாக சிவில் சமூகம்,கைத்தொழிற்றுறை உள்ளிட்ட பல துறைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களை மீள்பரிசீலனை செய்து சட்டத்தை திருத்தம் செய்ய இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/175416
-
அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்
நடிகர் விஜய்: தமிழக வெற்றிக் கழகம் பற்றி மக்கள், அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM / YOUTUBE 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நடிகர் விஜய் அறிவித்தார். மேலும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பதுதான் தனது கட்சியின் இலக்கு என்றும் அறிக்கையில் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், கமலஹாசன் ஆகியோரது வரிசையில் நடிகர் விஜய்யும் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று கடந்த பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதை உறுதி செய்யும் வகையில் சமீப காலமாக நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் கட்சியின் பெயரோடு அறிக்கை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் விஜய். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் விஜய் ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் ஒன்று சேர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அரசியல் தலைவர்களின் எதிர்வினை என்ன? பட மூலாதாரம்,X/@RATHNAKUMAR "இந்திய ஜனநாயகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் அரசியலுக்கு வர உரிமை இருக்கிறது. நடிகர் விஜயின் முடிவுக்குப் பாராட்டுகள். அவரது மக்கள் பணி சிறக்கட்டும்," என்று கூறியுள்ளார் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், "மண்ணை ஆள்வதற்கு முன்னால், தமிழக மக்களின் மனங்களை விஜய் வெல்ல வேண்டும். யாருடன் கூட்டணி என்பதை தம்பி விஜய்தான் முடிவு செய்ய வேண்டும். அவர் அரசியலுக்கு வருவதை, 'வா தம்பி' என தட்டிக் கொடுத்துதான் வரவேற்க வேண்டும். இந்த அரசியல் களத்தில் கூடுதலாக ஒருவர் வந்து வேலை செய்வது வலிமைதான். நான் ஒரு வகையில் உதவுகிறேன் என்றால் அவர் ஒருவகையில் உதவ வருகிறார்," என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், "பிற நடிகர்கள், முதல்வரிடமும், உதயநிதியிடமும் நிவாரண நிதியைக் கொடுத்துவிட்டுச் சென்று விட்டார்கள். ஆனால் விஜய் களத்தில் நின்று உதவினார். இதெல்லாம் மற்ற நடிகர்களுக்கு ஒரு முன்மாதிரியான செயல். நூலகம் திறக்கிறார், புத்தகங்களைப் படிக்கச் சொல்கிறார், நான் சொல்வதைவிட ஒரு புகழ் பெற்ற நடிகர் வந்து சொல்வது நல்லதுதானே. இது வரவேற்கத்தக்கது," என்றும் சீமான் தெரிவித்துள்ளார். ஆனால் "நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடக் கூடாது. தலைகீழாக நின்று தண்ணி குடித்தாலும், நம்மை இந்தியாவை ஆள விடமாட்டார்கள். பெருந்தலைவர் காமராஜரால்கூட முடியவில்லையே! அதனால் சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்தட்டும்," என்றார். "ஏற்கெனவே ஒருமுறை இதுகுறித்துக் கேட்கப்பட்ட போது, அதை வரவேற்றிருந்தேன். இப்போதும் அதேதான். அவரிடம் முற்போக்குப் பார்வை, சிந்தனை இருப்பதாகத் தெரிகிறது. நடிகர் விஜய் கட்சி தொடங்குவதாக அறிவித்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்," எனக் கூறினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, "விஜய் கட்சி தொடங்கியுள்ளதை வரவேற்கிறேன். ஆனால் சினிமாவில் தொடர்ந்து அவர் நடிக்க வேண்டும்," என்று கூறியுள்ளார். 'விஜய் அரசியலில் கரை சேர்வாரா என பார்ப்போம்' பட மூலாதாரம்,VIJAY/X அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சியை ஆரம்பிக்கலாம். 10 பேர் சேர்ந்துகூட கட்சியை ஆரம்பிக்கலாம். அதில் மாறுபட்ட கருத்து கிடையாது. அரசியல் என்பது ஒரு பெருங்கடல், ஒரு சமுத்திரம். அந்த சமுத்திரத்தில் நீந்திக் கரை சேரும் நபர்களும் உண்டு, மூழ்கிப் போகும் நபர்களும் உண்டு. எனவே, இப்போது அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள விஜய் நீந்திக் கரை சேர்கிறாரா அல்லது மூழ்கிப் போகிறாரா என்பதைத் தேர்தலில்தான் பார்க்க வேண்டும்," என்றார். மேலும், "அ.தி.மு.க. ஒரு மாபெரும் இயக்கம். 50 ஆண்டுகள் கடந்தும் எழுச்சியாக உள்ளது. அதற்குக் காரணம் எம்.ஜி.ஆர். போட்ட விதை. அதிமுக என்ற கட்சியைக் கட்டுக்கோப்பாகக் கட்டிக்காத்து 1.5 கோடி தொண்டர்கள் இருக்கும் கட்சியாக மாற்றியவர் அம்மா ஜெயலலிதா. அதேபோல இப்போது அண்ணன் எடப்பாடி தலைமையில் 2 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். அதிமுகவின் அடிப்படை வாக்கு வங்கியில் யாராலும் கை வைக்க முடியாது. யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பித்துக் கொள்ளட்டும். ஆனால், இங்கே மக்கள்தான் எஜமானர்கள்," என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், "பல பேர் அறிவிப்போடு நிறுத்தியதை, வாபஸ் பெற்றதை, தோல்வி அடைந்ததைச் செய்து காட்டிவிட்டார் விஜய். ஆனால், இனிமேல்தான் அவருக்கு சோதனை காலம். இதுவரை ஆதரித்த பத்திரிக்கையாளர்கள், அவரது கொள்கையைப் பொறுத்துதான் அவரை ஆதரிப்பார்கள். மக்களுக்கு என்ன செய்வார் என்பதை வைத்துதான் அவரது வெற்றி அமையும். திரைப்படத்தில் நடிக்கப் போவதில்லை எனக் கூறியுள்ளார். படத்தில் நடித்தால்தான் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்க முடியும். எனவே ஆண்டுக்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும்," என்றார். தொடர்ந்து பேசிய அவர், "தமிழ் சினிமாவில் பெரிய வசூல் நடிகரான விஜய் திரைத்துறையை விட்டு விலகுகிறேன் என்று அறிவித்திருப்பது திரையரங்கு உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அரசியலுக்காக சினிமாவை விட்டு விலக வேண்டியதில்லை. ஏனென்றால், எம்.ஜி.ஆர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டே 'உலகம் சுற்றும் வாலிபன்', 'இதயக்கனி' போன்ற மெகா ஹிட் படங்களில் நடித்தார். அதனால், விஜய் நடித்துக்கொண்டே அரசியலிலும் இயங்கலாம். அதுதான், சினிமாத்துறைக்கும் நல்லது," என்றார். "தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்," என நடிகர் விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. 'தமிழ்நாடு', 'தமிழகம்' சர்ச்சை பட மூலாதாரம்,VIJAY/X கட்சிப் பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் திரைப்படப் பணிகளை முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளதாக நடிகர் விஜய் தனது அறிக்கையில் கூறியுள்ளார். இந்நிலையில், அவர் நடிப்பதை நிறுத்திவிடக்கூடாது எனவும், அரசியலில் தொடர்ந்து கொண்டே நடிக்கவும் வேண்டுமென அவரது ரசிகர்கள் இணையத்தில் கோரிக்கை வைக்கின்றனர். அதேவேளையில் கட்சியின் பெயரில் 'தமிழ்நாடு' என்பதைத் தவிர்த்து 'தமிழகம்' என வைத்ததும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. "ஆறு மாதங்களுக்கு முன்பு “தமிழகம்” என்ற வார்த்தை தவறு "தமிழ்நாடு" என்றுதான் சொல்ல வேண்டும் என ஒட்டு மொத்த மக்களும் பாஜகவினருக்கு எதிராகப் போராடினார்கள். இன்று அதுவே ஒரு கட்சியின் பெயராகப் பதிவு செய்யப்பட்டது வியப்பளிக்கிறது" என்பது போன்ற கருத்துகளை சமூக ஊடகங்களில் பார்க்க முடிந்தது. இதுகுறித்துப் பேசிய மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த கவிஞர் சினேகன், "தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சிப் பெயர் குறித்து குறை சொல்கிறார்கள். பெயரில் எந்த பிரச்னையும் இல்லை. தமிழ்நாடோ தமிழகமோ, பெயரைவிட கட்சியின் கொள்கை என்ன என்பதில்தான் கவனம் இருக்க வேண்டும்," என்றார். "புதிதாக அரசியலுக்கு வரும் ஒரு நபரின் மீது உடனடியாக விமர்சனங்களை வைப்பது நல்லதல்ல. வரவேற்கத்தான் வேண்டும். மக்கள் நீதி மய்யத்திற்கோ அல்லது வேறு எந்தக் கட்சிக்கோ அவர் போட்டியில்லை. எல்லோருக்கும் தனித்தனி பாதைகள் உண்டு. சமூகத்தில் நல்லது நடக்க யார் வந்து கேள்வி கேட்டாலும் அதை வரவேற்போம்," என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/cd18knrdrdpo
-
அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்
விஜய்க்கு நாமல் வாழ்த்து புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு நாமல் ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கும் அவர் ஆரம்பித்துள்ள புதிய அத்தியாயத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக நாமல் ராஜபக்ஷ X தளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளதுடன், ‘தமிழக வெற்றி கழகம்’ என அதனை பதிவு செய்துள்ளார். டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்ற நடிகர் விஜயின் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அதனை கட்சியாக உத்தியோகபூர்வமாக பதிவு செய்துள்ளார். இதனை நடிகர் விஜய் X தளத்தில் பதிவிட்டுள்ளார். https://thinakkural.lk/article/290370
-
கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய
02 FEB, 2024 | 07:53 PM முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று காலை 9 மணியளவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கினார். இதையடுத்து ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். முன்னதாக, தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலத்தை வழங்குவதற்காகவே கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றைய தினம் (1) குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமுகமளித்திருக்கவில்லை. இந்நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை (2) காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் நேற்றையதினம் (1) உத்தரவிட்ட நிலையில், அவர் இன்று காலை ஆஜராகினார். இவ்வாறு இன்று காலை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி கெஹலிய ரம்புக்வெல்ல வாக்கு மூலம் அளித்திருந்த நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரை கைதுசெய்துள்ளனர். இதேவேளை, முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்தும் மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/175418
-
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் தாய்லாந்து பிரதமர்
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (4) இடம்பெறவுள்ள 76 ஆவது சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக பங்கேற்பதற்காக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். திடீர் சுகயீனம் காரணமாக இலங்கைக்கான தாய்லாந்து பிரதமரின் இரண்டு நாள் விஜயம் ஒரு நாளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். எனினும் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு மதிப்பளித்து தாய்லாந்து பிரதமர் சுமார் ஒரு மணிநேரம் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்க உள்ளார். https://thinakkural.lk/article/290326
-
ஆசியக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள்
ஆசியக் கிண்ண கால்பந்தாட்ட கால் இறுதி போட்டிகளில் ஜப்பான், ஈரான் 02 FEB, 2024 | 11:20 AM (நெவில் அன்தனி) கத்தாரில் நடைபெற்றுவரும் 2023 ஆசிய கிண்ண கால்பந்தாட்ட கால் இறுதிப் போட்டிகளில் விளையாடுவதற்கு கடைசி இரண்டு அணிகளாக ஜப்பானும் ஈரானும் தகுதிபெற்றன. கத்தாரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 7ஆவது முன்னோடி கால் இறுதிப் போட்டியில் பஹ்ரெய்னை 3 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் ஜப்பானும் கடைசி முன்னோடி கால் இறுதிப் போட்டியில் சிரியாவை 5 - 3 என்ற பெனல்டி முறையில் ஈரானும் வெற்றிகொண்டு கால் இறுதிக்கு முன்னேறின. ஜப்பானுக்கு இலகுவான வெற்றி அல் துமாமா விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் ஆரம்பம் முதல் கடைசி வரை பஹ்ரெய்னை விஞ்சும் வகையில் விளையாடிய ஜப்பான் மிக இலகுவாக வெற்றிபெற்றது. நான்கு தடவைகள் ஆசிய சம்பியனான ஜப்பான் சார்பாக போட்டியின் 31ஆவது நிமிடத்தில் ரிட்சு டோஆன் முதலாவது கோலை போட்டார். சுமார் 35 யார் தூரத்திலிருந்து செய்யா மல்குமா ஓங்கி உதைத்த பந்து பஹ்ரெய்னின் வலது கோல் கம்பத்தில் பட்டு திரும்பிவந்தபோது வேகமாக செயற்பட்ட டோஆன் இடதுகாலால் பந்தை உதைத்து அலாதியாக கோலை போட்டார். இடைவேளையின் போது ஜப்பான் 1 - 0 என முன்னிலையில் இருந்தது. இடைவேளையின் பின்னர் மிகத் திறமையாக விளையாடிய ஜப்பான் 49ஆவது நிமிடத்தில் தனது கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தியது. பஹ்ரெய்ன் வீரர் ஹஸா அலி தவறாக பரிமாறிய பந்தை தனதாக்கிக்கொண்ட டக்கேஃபுசா குபோ மிக இலாவகமாக பந்தை நகர்த்திச் சென்று கோலினுள் புகுத்தினார். போட்டியின் 69ஆவது நிமிடத்தில் பஹ்ரெய்ன் வீரர் அயாசே உவேடா 30 யார் தூரத்திலிருந்து ப்றீ கிக் மூலம் உதைத்த பந்தை சய்யத் பாக்வெர் கோலை நோக்கி தலையால் முட்டினார். ஜப்பான் கோல் காப்பாளர் இஸட். சுசிக்கி பந்தைத் தடுக்க முயன்றபோது குறுக்கே பாய்ந்த ஆயாசே உவேடா பந்தை சொந்த கோலினுள் புகுத்தி பஹ்ரெய்னுக்கு இனாம் கோல் ஒன்றைக் கொடுத்தார். எவ்வாறாயினும் 3 நிமிடங்கள் கழித்து செய்யா மைக்குமா பரிமாறிய பந்தை ஆயாசே உவேடா கோலாக்கி தனது முன்னைய தவறை நிவர்த்திசெய்தார். இறுதியில் ஜப்பான் 3 - 1 என வெற்றிபெற்று கால் இறுதிக்கு முன்னேறியது. பெனல்டி முறையில் ஈரான் வெற்றி ஈரானுக்கும் சிரியாவுக்கும் இடையில் தோஹா, அப்துல்லா பின் கலிபா விளையாட்டரங்கில் நடைபெற்ற கடைசி முன்னோடி கால் இறுதிப் போட்டியில் 5 - 3 என்ற பெனல்டி முறையில் ஈரான் வெற்றிபெற்று கால் இறுதிக்கு முன்னேறியது. இரண்டு அணிகளும் ஒன்றொக்கொன்று சளைக்காமல் விளையாடி அரங்கிலிருந்த பார்வையாளர்களை விறுவிறுப்பின் உச்சத்திற்கு இட்டுச் சென்றன. போட்டியின் முதலாவது பகுதியின் 34ஆவது நிமிடத்தில் ஈரான் வீரர் மெஹ்மதி தரேமியை சிரியா வீரர் ஆய்ஹாம் ஒளசூ தனது பெனல்டி எல்லைக்குள் வைத்து வீழ்த்தியதால் ஈரானுக்கு பெனல்டி வழங்கப்பட்டது. அந்த பெனல்டியை மெஹ்தி தரேமி கோலாக்கி ஈரானை 1 - 0 என முன்னிலையில் இட்டார். இடைவேளையின் பின்னர் 64ஆவது நிமிடத்தில் சிரியா வீரர் பப்லோ சபாக்கை ஈரான் வீரர் அலிரீஸா பெய்ரான்வாந்த் வீழ்த்தியதால் சிரியாவுக்கு பெனல்டி கிடைத்தது. இந்த பெனல்டியை ஓமர் க்ர்பின் இலக்கு தவறாமல் உதைத்து கோல் நிலையை 1 - 1 என சமப்படுத்தினார். அதன் பின்னர் இரண்டு அணிகளும் வெற்றி கோலைப் போடத் தவறியதால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது. மேலதிக நேர நிறைவில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோலை போட்டிருந்ததால் வெற்றி அணியைத் தீர்மானிக்க மத்தியஸ்தர் பெனல்டி முறையை அமுல்படுத்தினார். இரான் சார்பாக கரிம் அன்சாரிபார்ட், ரமின் ரீஸாயான், ஓமித் இப்ராஹிம், மெஹ்தி தோராபி, ஈஷான் ஹாஜிசபி ஆகிய ஐவரும் தங்களது பெனல்டிகளை இலக்கு தவறாமல் உதைத்தனர். சிரியா சார்பாக பெப்லோ சபாக், ஆய்ஹாம் ஒளசூ, அலா அல் தலி ஆகியோர் பெனல்டிகளை கோலாக்கினர். சிரியா வீரர் பாஹ்த யூசெவ் உதைத்த இரண்டாவது பெனல்டியை ஈரான் கோல் காப்பாளர் தடுத்து நிறுத்தினார். இதன் பிரகாரம், ஈரான் 5 - 3 என்ற பெனல்டி முறையில் வெற்றிபெற்று கால் இறுதியில் விளையாட தகுதிபெற்றது. https://www.virakesari.lk/article/175366
-
லண்டன் பிரமுகருடன் தொடர்பு – நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில், NIA அதிகாரிகள் சோதனை!
சிறிய யூடியூப் சேனல் நடத்தி விடுதலைப் புலிகளுக்கு எப்படி நிதி திரட்ட முடியும்? விடுதலைப் புலிகள் அமைப்பு எங்கிருக்கிறது? அதற்கு எப்படி பணம் திரட்ட முடியும்? சீமான் 02 FEB, 2024 | 03:20 PM தேர்தல் நேரத்தில் அச்சுறுத்தும் முயற்சியாக என்ஐஏ சோதனை நடைபெறுகிறது என சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை நடத்துவதை எதிர்த்து நீதிமன்றில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. பிற்பகலில் விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் அறிவித்துள்ளார். இந்நிலைலையில் இது குறித்து சென்னை நீலாங்கரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்; தேர்தல் நேரத்தில் இதெல்லாம் நடக்கும் என்று ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான். தேர்தல் நேரத்தில் அச்சுறுத்தும் முயற்சியாக என்ஐஏ சோதனை நடைபெறுகிறது. நியாயப்படி என்ஐஏ அதிகாரிகள் என்னிடம் தான் விசாரணை நடத்தி இருக்க வேண்டும். அச்சுறுத்தலுக்கு அஞ்சும் நபர்கள் நாங்கள் இல்லை. சிறிய யூடியூப் சேனல் நடத்தி விடுதலைப் புலிகளுக்கு எப்படி நிதி திரட்ட முடியும்? விடுதலைப் புலிகள் அமைப்பு எங்கிருக்கிறது? அதற்கு எப்படி பணம் திரட்ட முடியும்? தேர்தல் சமயத்தில் என்னையும் கட்சியையும் முடக்க பா.ஜ.க. திட்டமிட்டிருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க.வின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு நான் தடையாக இருப்பதால் என்.ஐ.ஏ. சோதனை நடைபெறுகிறது. நாட்டை கொள்ளையடித்தவர்கள் அச்சமின்றி இருக்கும்போது நாங்கள் ஏன் பயப்பட வேண்டும். சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். என்ஐஏ சோதனையின் மூலம் எனக்கு ஒன்று தெரிகிறது; நான் சரியான பாதையில் செல்கிறேன். பிப்.5ம் தேதி நிர்வாகிகளுடன் சேர்ந்து நானும் ஆஜராகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/175395
-
பணிப்புறக்கணிப்பு தொடர்பில் சுகாதார தொழிற்சங்கங்களின் தீர்மானம் !
72 சுகாதார தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பை தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று மதியம் தீர்மானிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது. இன்று கூடவுள்ள சங்கத்தின் நிறைவேற்றுகுழு கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எட்டப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். வைத்தியர்களுக்கு வழங்கப்படும், 35,000 ரூபா கொடுப்பனவை அனைத்து சுகாதார தொழிற்சங்கத்தினருக்கும் வழங்க வேண்டும் என கோரி, நேற்று முதல் 72 சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/290253
-
உல்ஃப்காங் பௌலி: ஐன்ஸ்டீன் தனது அறிவுசார் வாரிசாக அறிவித்த சிறந்த இயற்பியலாளர்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், டாலியா வென்ச்சுரா பதவி, பிபிசி முண்டோ 1 பிப்ரவரி 2024 உல்ஃப்காங் பௌலி 20ஆம் நூற்றாண்டில் இயற்பியல் துறையில் மிகவும் சிறந்து விளங்கிய ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். இருப்பினும் இயற்பியல் துறையில் அவர் வாழ்ந்த காலகட்டத்தில் இருந்த மற்றவர்களைப் போல் அவர் நன்கு அறியப்படவில்லை. இயற்கையின் புதிய விதி ஒன்றை அவர் கண்டுபிடித்ததற்காக அவருக்கு 1945இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவரது சகாக்களின் ஆய்வுகள் மற்றும் கோட்பாடுகள் பற்றிய அவரது கடுமையான விமர்சனங்களைக் கடந்து அவரை சமமாகப் பாராட்டினர். மேலும், அவர்கள் அவரை "இயற்பியலின் மனசாட்சி" என்று அழைத்தனர் என்ற தகவல்கள் தொடர்ந்து அவர் குறித்துப் பேசும்போது மேற்கோள் காட்டப்படுகின்றன. மேலும், தெளிவற்ற நியூட்ரினோ துகள் இருப்பதை உறுதி செய்வதற்கு பல தசாப்தங்களுக்கு முன்பே அப்படி ஒன்று இருப்பதாக அவர் கணித்திருந்தார். "நான் ஒரு பயங்கரமான உண்மையைக் கண்டறிந்துள்ளேன். நான் யாரும் கண்டுபிடிக்க முடியாத ஒரு துகள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளேன்," என்று அவர் அப்போது அறிவித்தார். இது எப்போதோ ஒருமுறை சாத்தியமானதுதான். ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அது உண்மையில் சாத்தியமாயிற்று. அது போன்ற தெளிவற்ற துகள்கள் இன்னும் பிரபஞ்சத்தில் நம்பமுடியாத அளவிற்கு ஏராளமாக இருந்தாலும், கண்டறியக் கடினமாக இருக்கும் கண்ணுக்குத் தெரியாதவற்றைப் போலவே இருக்கின்றன. அவரது சகாக்கள் "பௌலி விளைவு" என்று அவரது பெயரை வைத்தே மூடநம்பிக்கையாக ஒரு கருத்துருவை உருவாக்கினர். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், அவர் அருகில் இருந்தபோது, சில அழிவுகள் ஏற்பட்டன என்பதால் அவர் ஒரு துரதிர்ஷ்டசாலி என்பது போன்று அவருடன் இருந்தவர்கள் கருதினர். பல ஆண்டுகளாக, அவர் அருகில் இருந்தாலே துரதிர்ஷ்டவசமானது எனக் கருதப்படுவதற்கு என்ன காரணம் என்றால் அவர் இருந்த போதெல்லாம் ஆய்வகத்தில் இருந்த சோதனை உபகரணங்களில் ஏற்பட்ட தோல்விகள் பற்றிய நிகழ்வுகள் பரப்பப்பட்டன என்பதுதான். இது அவரது பெரும்பாலான சக ஊழியர்களுக்கு ஒரு திசை திருப்பலாக இருந்தது. இந்நிலையில், சிலர் அவரைத் தங்கள் ஆய்வகங்களுக்குள் நுழையவே தடை விதித்தனர். ஆனால் அது உண்மை என்று அவரும் நம்பினார். மேலும் 1948இல் பிரஸ்ஸல்ஸில் நடந்த ஒரு சர்வதேச மாநாட்டில் அவர் கலந்து கொண்டபோது அவர்கள் அவரைப் பற்றி வெளிப்படையாகப் பேசிய நகைச்சுவைப் பேச்சுக்கள், அவரே அதை மேலும் அழுத்தமாக நம்ப வழிவகுத்தது. இத்தாலிய இயற்பியலாளர் பெப்போ ஒச்சியாலினி ஒரு நடைமுறையைக் கொண்டு வந்தார். அதனால் பௌலி தனது ஆய்வகத்திற்குள் நுழைந்தபோது கூரையில் இருந்து ஒரு விளக்கு கீழே விழுந்து உடைவதைப் போல் ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். ஆனால் பௌலி அங்கே இருந்தபோது சாதனங்கள் வழக்கமாக பாதிப்படைந்ததைப் போலவே அந்தச் செய்முறையும் தோல்வியடைந்தது. அதேநேரம், பௌலி செல்வாக்கு மிக்க சுவிஸ் மனநல மருத்துவர் கார்ல் ஜங்குடன் எதார்த்தத்தின் தன்மையைப் பற்றி நீண்ட ஆய்வு செய்து கொண்டிருந்தார். மேலும் அறிவியலுக்கான ஆதாரமாகத் தொடர்ந்து விஞ்ஞானிகளுடனான கடிதப் பரிமாற்றத்தின் ஏராளமான மரபுகளையும் அவர் விட்டுச் சென்றார். ஐன்ஸ்டீன் வட்டத்திற்குள் உல்ஃப்காங் பௌலியின் குடும்பம் பட மூலாதாரம்,CERN படக்குறிப்பு, பௌலி பிறந்து 20 மாதங்களில் அவரது தாயுடன் இருந்தபோது எடுத்த படம். பௌலி வியன்னாவில் 1900ஆம் ஆண்டு பிறந்தார். அந்த ஆஸ்திரிய தலைநகரம் கலாசாரம் மற்றும் அறிவியல் படைப்பாற்றலின் மையமாக இருந்தது. அவரது பெற்றோர் ஐரோப்பாவில் வளர்ந்து வரும் யூத எதிர்ப்பு காரணமாக கத்தோலிக்க மதத்திற்கு மாறி மதச் சார்பற்ற யூதர்களாக இருந்தனர். இருப்பினும், நாஜிக்களின் நடவடிக்கைகளில் இருந்து தப்பும் நோக்கத்துடன் அவர் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு இடம் பெயரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவரது இயல்பான திறமைகளுக்கும் மேலாக, அவரைச் சுற்றியிருந்த அனைத்தும் அவரது அறிவுக்கு ஊக்கமளித்தன. அவருடைய அப்பா மருத்துவ வேதியியல் துறையில் ஒரு மரியாதைக்குரிய பல்கலைக்கழக பேராசிரியராக இருந்தார். இந்நிலையில், அவரது அம்மா பெர்தா கமிலா ஷூட்ஸ், ஒரு பிரபல எழுத்தாளர், சோசலிஸ்ட் மற்றும் பெண்ணியவாதியாக இருந்தார். மேலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் தத்துவஞானி எர்ன்ஸ்ட் மாக் போன்ற ஆளுமைகளை அவரது சமூக வட்டம் உள்ளடக்கியதாக இருந்தது. பள்ளியில், பௌலி கணிதம் மற்றும் இயற்பியலில் மிகச் சிறந்த மாணவராக விளங்கினார். மற்ற பாடங்களில் அவர் அதிக ஆர்வம் காட்டவில்லை. மேலும் 18 வயதில் அவர் மியூனிச் பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு இயற்பியலாளர் அர்னால்ட் சோமர்ஃபெல்டுடன் படிக்கச் சென்றார். அவர்தான் பௌலிக்கு கனவு வழிகாட்டியாக இருந்தார். அவரது மாணவர்களில் 6 பேர் நோபல் பரிசு பெற்றவர்கள். ஐன்ஸ்டீன் மறுத்த கட்டுரையை எழுதிய பௌலி பட மூலாதாரம்,CERN படக்குறிப்பு, இயற்பியலாளர் உல்ஃப்காங் பௌலிக்கு (1900-1958), ‘விலக்கு கொள்கையை’ கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. பௌலியின் கணிதத் திறனால் சோமர்ஃபெல்ட் மிகவும் ஈர்க்கப்பட்டார். மதிப்புமிக்க கணித அறிவியல் கலைக் களஞ்சியத்திற்கு சார்பியல் கோட்பாடு பற்றிய கட்டுரையை எழுதுவதற்கான அழைப்பை ஐன்ஸ்டீன் நிராகரித்தபோது, அதைச் செய்யும்படி அவரிடம் கேட்டார். சார்பியல் கோட்பாடு புரட்சிகரமானது மட்டுமல்ல - அது இன்னும் புதியதாக இருந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்; அந்த நேரத்தில் பெரும்பாலான இயற்பியலாளர்களே கூட அதை நன்கு அறிந்திருக்கவில்லை. இயற்பியலாளர் ஹான்ஸ் வான் பேயர் மெட்டானெக்ஸஸில் வலியுறுத்துவது போல, உயர்நிலைப் பள்ளியில் இருந்து புதிதாக வெளியேறும் மாணவரிடம் விமர்சன மதிப்பாய்வை உருவாக்கும் பணியை ஒப்படைப்பது விவேகமற்றது. ஆனால், சோமர்ஃபெல்டின் பந்தயம் வெற்றிகரமாக முடிந்தது. பௌலியின் 200 பக்கங்களுக்கு மேல் இருக்கும் விமர்சனம் அக்காலத்தின் சிறந்த கணிதவியலாளர்களால் பாராட்டப்பட்டது. "கோட்பாட்டின் ஓர் எளிய ஆய்வை எழுதுவதற்கு அப்பால், அவர் சார்பியல் கோட்பாடுகளில் உள்ள வெளிப்படையான பிரச்னைகளைச் சுட்டிக்காட்டினார்," என்று எடின்பர்க் பல்கலைக்கழக அறிவியல் தத்துவ பேராசிரியர் மைக்கேலா மஸ்ஸிமி பிபிசியிடம் கூறினார். "இது அனைவரையும் கவர்ந்தது என்பதுடன் சர்வதேச அரங்கில் அவரை உறுதியாக நிலைநிறுத்தியது," என்று அவர் மேலும் கூறினார். அதுமட்டுமின்றி ஐன்ஸ்டீனே அதைப் பாராட்டினார். "இந்த முதிர்ந்த மற்றும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட படைப்பைப் படிக்கும் யாரும், அதன் ஆசிரியர் 21 வயதுடையவர் என்று நம்ப மாட்டார்கள்," என்று இந்த சார்பியல் கோட்பாட்டின் ஆசிரியர் கருத்து தெரிவித்தார். அந்த மதிப்பாய்வு உடனடி கிளாசிக் ஆனது என்பதுடன் நிலையான படைப்பாக இருந்தது. அவரது துறையில் நிபுணர்களின் பார்வையில், அந்த இளம் மாணவர் நிறைய வாக்குறுதிகளைக் காட்டினார். 24 வயதில் தனித்தன்மை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1940களில் அணு மற்றும் குவாண்டம் இயற்பியலில் முன்னோடி விஞ்ஞானியாக இருந்த அர்னால்ட் சோமர்ஃபெல்டை (1868-1951) பௌலி சந்தித்தபோது எடுத்த படம். டாக்டர் பட்டம் பெற்ற பிறகு, பௌலி கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் ஜெர்மன் கணிதவியலாளரும் இயற்பியலாளருமான மேக்ஸ் பார்னின் (நோபல் 1954) உதவியாளராகப் பணியாற்றினார். அடுத்த ஆண்டு, அணுவைப் பற்றிய புரிதலில் புரட்சியை ஏற்படுத்திய டேனிஷ் இயற்பியலாளர் நீல்ஸ் போரை (நோபல் 1922), டென்மார்க்கின் கோபன்ஹேகனில் தன்னுடன் பணியாற்ற அழைத்தார். ஆனால் ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தில் கற்பிக்க ஜெர்மனிக்கு சென்றபோதுதான், அணுவின் கட்டமைப்பில் உள்ள அடிப்படைச் சிக்கல்களைத் தீர்க்கும் இரண்டு தீவிரமான கருத்துருக்களை முன்வைத்தார். அவற்றில் ஒன்று அவருக்கு நிச்சயமாக நோபல் பரிசைப் பெற்றுத் தரும்: அது விலக்கு கொள்கை (Pauli exclusion principle) அல்லது பௌலி கொள்கை என அறியப்பட்டது. அதை நன்கு புரிந்துகொள்வது சிக்கலானது. ஆனால் இது எதைப் பற்றியது அல்லது அது ஏன் மிகவும் அடிப்படையானது என்பதை பிபிசிக்கு விளக்கிய இயற்பியலாளர் க்ளோஸின் உதவியுடன் அதைப் புரிந்துகொள்ள முயல்வது பயனளிக்கும் விதத்தில் இருக்கும். அந்த நேரத்தில், அணுக்களுக்கு நேர்மறை மின்னூட்டம் உள்ளது என்றும், எலக்ட்ரான்கள் ஏணியில் உள்ள படிகளைப் போல பிரிக்கப்பட்ட நீள்வட்ட சுற்றுப்பாதையில் அவற்றைச் சுற்றி வருகின்றன என்றும் அறியப்பட்டிருந்தது. ஒவ்வொரு கட்டத்திலும், அல்லது குவாண்டம் நிலையிலும், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எலக்ட்ரான்கள் இருக்கலாம். மிகக் குறைந்த அளவில், எடுத்துக்காட்டாக இரண்டு எலக்ட்ரான்கள் மட்டுமே இருக்க முடியும். மேலும் அவை என்ன என்பதை அந்தக் கருத்துரு வரையறுக்கிறது. ஹைட்ரஜன் அதன் மிகக் குறைந்த அளவில் ஒற்றை எலக்ட்ரானை கொண்டுள்ளது; இரண்டு எலக்ட்ரான்கள் இருந்தால், அது ஹீலியம். அடுத்த உறுப்பு லித்தியம். ஆனால் அதில் மூன்று எலக்ட்ரான்கள் இருப்பதால், அவை அடுத்த கட்டத்தை ஆக்கிரமிக்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐன்ஸ்டீனும் பௌலியும் ஒருவரையொருவர் போற்றிக் கொண்டனர். (1930களில் எடுக்கப்பட்ட படம்). குளோஸ் குறிப்பிட்டுள்ள கொள்கை, "அந்த குவாண்டம் நிலைகளில் ஒன்றை ஏற்கெனவே எலக்ட்ரான் ஆக்கிரமித்திருந்தால், அங்கு மற்றொரு எலக்ட்ரானை வைக்க முடியாது: அது விலக்கப்பட்டது," என்று கூறுகிறது. இதை விளக்குவதற்காக, அவர் ஒரு உதாரணம் கூறினார். "நான் மேசையைத் தட்டினால், என் கையிலிருந்து எலக்ட்ரான்கள் மேசை மீது செல்லாது. ஏனென்றால் என் கைகளில் வெளிப்புற விளிம்பில் உள்ள எலக்ட்ரான்கள், அந்த மர மேசையில் எலக்ட்ரான்கள் ஏற்கெனவே ஆக்கிரமித்துள்ள நிலையை ஆக்கிரமிக்க முயல்கின்றன." "எலக்ட்ரான்கள் எங்கும் செல்ல முடியாது. அவை ஆக்கிரமித்துள்ள இடங்களில் இருந்து ஏற்கெனவே விலக்கப்பட்டிருப்பதால் அவற்றைத் தனி இடங்களில் வைக்க வேண்டும் என்பது அணுக்களின் வெவ்வேறு ரசாயன இயல்புகளுக்கு வழிவகுக்கிறது." அதன் விளைவாக, நீங்களும், நானும், பிரபஞ்சம் மற்றும் அனைத்தும் உள்ளன என்று அவர் கூறினார். விதிவிலக்குக் கொள்கை தொடர்பான புதிரில் வெவ்வேறு இடங்களில் எலக்ட்ரான்களை உருவாக்கி கட்டமைப்புகளைக் கட்டமைக்கவில்லை என்றால், அவை மிதந்து கொண்டிருக்கும் என்பதுடன் அணுக்கள், திடப் பொருள்கள் அல்லது படிகங்கள் என எதையும் உருவாக்காது. "பிரபஞ்சத்தில்கூட, நட்சத்திரங்களின் முடிவு விலக்கு கொள்கையுடன் தொடர்புடையதாகவே இருக்கிறது. நட்சத்திரம் அதன் ஆயுள் முடிந்து வீழ்ச்சியடையும்போது, அதன் கூறுகள் தங்களைத் தாங்களே மேன்மேலும் சுருக்கிக்கொள்ள முயல்கின்றன. ஏனெனில் அவை விலக்கப்படுகின்றன." தலை சுற்ற வைத்த பௌலியின் விலக்கு விதி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பௌலி 1949ஆம் ஆண்டு சர்வதேச அணு இயற்பியல் காங்கிரஸில் அவர் பங்கேற்றபோது எடுத்த படம். எல்லோரும் எதிர்பார்க்கிறபடி, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அறிஞர்கள் அதை விரைவாக அடையாளம் கண்டுகொண்டனர். "இந்தச் செய்தி மிக வேகமாகப் பரவியது," என்கிறார் மாசிமி. "பௌலி ‘விலக்கு விதியை’ அறிவித்தார். மேலும் அவர் அதை ஒரு விதி என்றே அழைத்தார். அதை ஒரு கொள்கை என்று அவர் கருதவில்லை,” என ஆல்ஃபிரட் லாண்டே, ஒரு முக்கிய பரிசோதனை இயற்பியலாளருக்கு எழுதிய கடிதத்தில், இறுதியில் 1924 தெரிவித்தார். "ஒரு மாதம் கழித்து, நீல்ஸ் போர் (Niels Bohr) கோபன்ஹேகனில் இருந்து அவருக்கு எழுதிய கடிதத்தில், ‘நீங்கள் கண்டுபிடித்த பல அழகான விஷயங்களால் நாங்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். மேலும் நான் எந்த விமர்சனத்தையும் மறைக்க வேண்டியதில்லை. ஏனென்றால் நீங்கள் எல்லாவற்றையும் பைத்தியம் என்று விமர்சித்தீர்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார்," என்று மாசிமி கூறினார். "எதார்த்தம் என்னவென்றால், விலக்கு விதியைப் புரிந்துகொள்ள முடியாமல் அவர்கள் தலையைச் சொறிந்தனர்.” "ஆனால் பௌலியின் தொலைநோக்குப் பார்வை 1924இல் அறிமுகப்படுத்தப்பட்டது. உண்மையில் குவாண்டம் இயக்கவியலின் அடித்தளம் அமைக்கப்படுவதற்கு முன்பு, பல தசாப்தங்களாக இயற்பியலாளர்களைப் பாதித்த ஒரு பிரச்னைக்கு இந்த விதி இறுதியாக ஒரு தீர்வை வழங்கியது," என்று அவர் கூறி முடித்தார். பின்னர் இந்த விதி ஒரு கொள்கையாக உறுதிப்படுத்தப்பட்டு, இயற்பியலுக்கான நோபல் கமிட்டியின் உறுப்பினர் பேராசிரியர் ஐ. வாலர் கூறியது போல், அதை வழங்கும்போது, இது இயற்கையின் அடிப்படை விதியாக வகைப்படுத்தப்பட்டது. "எலக்ட்ரான்களுக்காக முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கை, புரோட்டான்கள் எனப்படும் ஹைட்ரஜன் கருக்களுக்கும் மற்றும் பல அணுக்கரு வினைகளில் உருவாகும் நியூட்ரான்களுக்கும் செல்லுபடியாகும் என நிரூபிக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார். "இந்த விதியை ஆதரிக்க எலக்ட்ரான்களுக்கு இடையில் எந்த புதிய சக்தியையும், எந்த பொறிமுறையையும், தர்க்கத்தையும்கூட அவர் முன்மொழியவில்லை.” "இது வெறுமனே ஒரு விதியாக இருந்தது. அதன் இயல்பான தன்மையில் கட்டாயமானது என்பதுடன் நவீன இயற்பியலின் முழு பகுதியிலும் வேறு எதையும் போலல்லாமல் இருந்தது.” "எலக்ட்ரான்கள் ஒன்றுக்கொன்று தனிப்பட்ட குவாண்டம் எண்களைத் தவிர்க்கின்றன. இது வேறு எந்த காரணத்திற்காகவும் இல்லாமல், பௌலியின் விலக்கு கொள்கையின் காரணமாகவே நடைபெறுகிறது.” பட மூலாதாரம்,CERN படக்குறிப்பு, "ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் அவருக்கு 1945இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வழங்கியது" என்று தந்தி மூலம் அறிவித்தது. அதைப் பெற அவரால் செல்ல முடியவில்லை. ஆனால் அவர்கள் அதை பிரின்ஸ்டனில் கொண்டாடினர். அக்கால அணு இயற்பியலின் சோதனை மற்றும் கோட்பாட்டு அறிவை ஆழமாகப் பகுப்பாய்வு செய்வதன் மூலமும், அவரது அற்புதமான கணிதத் திறன்களைப் பயன்படுத்துவதன் மூலமும் பௌலி தனது அனைத்து கண்டுபிடிப்புகளையும் உருவாக்கினார். அது அவரை மற்றவர்களின் வேலையைக் கடுமையாக விமர்சிக்கவும் செய்தது. இயற்பியல் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது நிராகரிக்கப்படுவதற்கு புதிய யோசனைகள் பற்றிய அவரது கருத்து மிகவும் முக்கியமானது. அவர்கள் அவரை "இயற்பியலின் மனசாட்சி" என்று கருதினர். பௌலியின் தலையாட்டுதலைவிட வேறு எந்த வகையான ஒப்புதலும் இயற்பியலாளர்களுக்கு மதிப்புமிக்கதாக இருக்காது," என்று பெல்ஜிய இயற்பியலாளர் லியோன் ரோசன்ஃபெல்ட் குறிப்பிட்டார். அந்த அளவுக்கு அவரை முக்கியமானவராகக் கருதினார்கள். அந்த பாத்திரத்திற்காக, அவர் தொடர்ந்து மேற்கோள் காட்டப்படும் சொற்றொடர்களின் பாரம்பரியத்தை விட்டுச் சென்றார். அவற்றில் மிகவும் பிரபலமானது அழிவுகரமானது. இயற்பியலாளர் ருடால்ப் பீயர்ல்ஸ் பௌலியின் வாழ்க்கை வரலாற்று நினைவுக் குறிப்பில் எழுதியது போல், நண்பர் ஓர் இளம் இயற்பியலாளரின் கட்டுரையை அவருக்குக் காட்டினார்; அவர் மிகவும் மதிப்புமிக்கவர் அல்ல, ஆனால் அவர் பௌலியின் கருத்தை அறிய விரும்பினார். "இது போலியானதுகூட இல்லை' என்று பௌலி வருத்தத்துடன் கருத்து தெரிவித்தார்.” "அது சரியல்ல என்பது மட்டுமல்ல, பொய்யும்கூட இல்லை" என்பதே அவரது பதிலுக்கான பொருள் என்று மற்ற ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் உண்மை என்னவென்றால், தத்துவஞானி கார்ல் பாப்பரின் பொய்யான கொள்கைக்கு அவை தகுதி பெறாத அளவுக்கு ஊகமான வாதங்களை நிராகரிக்க இந்த சொற்றொடர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு குறைபாடுள்ள கருதுகோளைச் சோதிப்பதன் மூலம், ஒருவர் செயல்பாட்டில் ஏதாவது கற்றுக்கொள்கிறார். அது அறிவியல் கண்டுபிடிப்புக்குத் தூண்டுகிறது. ஆனால் அது பொய்யாகக்கூட இல்லாவிட்டால், அவர் நேரத்தை வீணடிக்கிறார் என பாப்பர் கூறினார். இவ்வாறு, அவரது பல விமர்சனங்கள் நினைவில் நிலைத்திருந்தன. ஏனெனில், கசப்பானவையாக இருந்தாலும், அவை வேடிக்கையாகவும் பொதுவாக வரவேற்கத்தக்கதாகவும் இருந்தன. இருப்பினும், சிலர் புண்படுத்தப்பட்டனர் என்பதுடன் 1933 முதல் 1944 வரை அவர் சிறந்த விஞ்ஞானிகளால் 20 முறை பரிந்துரைக்கப்பட்ட போதிலும், நோபல் கமிட்டி அவருக்குப் பரிசு வழங்குவதற்கு இவ்வளவு காலம் எடுத்ததற்கு இது காரணமா என்று சந்தேகிப்பவர்களும் உள்ளனர். ஆனால் 1945இல், அதாவது அவர் தனது பிரத்தியேகக் கொள்கையை வகுத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அவருக்கு ஏன் இந்த விருது வழங்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. அந்த ஆண்டு, அவரைப் பரிந்துரைத்த மூவரில் ஒருவரான ஐன்ஸ்டீன், இரண்டாம் உலகப் போரின்போது ஐரோப்பாவை விட்டு வெளியேறியதில் இருந்து பௌலி பணியாற்றிய பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புதிய நோபல் பரிசு வென்றவரைக் கொண்டாடிய விழாவில் பங்கேற்றார். செர்ன் (CERN) இணையதளம் விவரித்தபடி, பல புகழ்பெற்ற விருந்தினர்கள் பேசிய பிறகு, ஐன்ஸ்டீன் எழுந்து நின்று, பௌலியை அவரது அறிவுசார் வாரிசாகக் குறிப்பிட்டு ஒரு திடீர் உரையை நிகழ்த்தினார். இதைக் கேட்டபோது பௌலி மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். ஐன்ஸ்டீன் இறந்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மேக்ஸ் பர்னுக்கு எழுதிய கடிதத்தில் அவர் அதை நினைவு கூர்ந்தார். மேலும் அந்தப் பேச்சு தன்னிச்சையாக இருந்ததால், அதைப் பற்றிய பதிவு எதுவும் இல்லை என்றும் வருந்தினார். அவரது அறிவுசார் வாரிசாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அவருக்குப் போதுமான நேரம் இல்லை. பௌலி தனது தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்த சூரிச்சில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு காலமானார். https://www.bbc.com/tamil/articles/czvq8r5r882o
-
இரண்டாம் பயணம்
யாழ் இணையம் 26 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
-
அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்
"தமிழக வெற்றி கழகம்" என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய் பட மூலாதாரம்,AGS 2 பிப்ரவரி 2024, 08:03 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். அதற்கு தமிழக வெற்றிக் கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவுமில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலைக் குறிவைத்து தனது கட்சி செயல்படும் என்றும் விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் விவரம் : "விஜய் மக்கள் இயக்கம்" பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு நிவாரண உதவிகளையும் மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும்,செய்து வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. "தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் "ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. " "ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. " "மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" (பிறப்பால் அனைவரும் சமம் ) என்கிற சமத்துவ கொள்கைப்பற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்." பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM / YOUTUBE '2026 சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' "இந்நிலையில், என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். "எண்ணித் துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, "தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின்,வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM 'சினிமாவிலிருந்து விலகுகிறேன்' அந்த அறிக்கையில் மேலும், "இடைப்பட்ட காலத்தில், எமது கட்சியின் தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் கட்சி விரிவாக்கபணிகளுக்கு தேவையான கால அவகாசத்தை கணக்கில் கொண்டே தற்போது எமது கட்சி பதிவிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவும் இல்லை என்றும் பொதுக்குழ, மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக, என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்." என்று விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,PIB ARCHIVE நடிகர் விஜய் பற்றிய அரசியல் பிம்பம் எப்போது தொடங்கியது? 2006ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் வைத்து பொங்கல் சிறப்பு தபால்தலையை வெளியிட்டார். முதல் தபால்தலையை பெற்றுக்கொண்டவர் நடிகர் விஜய். தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் போன்றோர் உடன் இருந்தனர். அரசு சார்ந்த நிகழ்ச்சியாக இது இருந்தாலும் அப்போதே விஜய் மீது அரசியல் வெளிச்சம் பாயத் தொடங்கியது. 2009ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றத்தின் பெயரை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். இயக்கத்திற்கென தனி கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. ரத்த தானம், அன்னதானம் போன்ற நலத்திட்ட உதவிகளையும் ரசிகர்கள் மூலம் தொடங்கினார். அப்போது மன்றம் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கையில் இருந்தது. நடிகர் விஜயின் அரசியல் பிம்பம் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இருந்து வந்தது என்று கூறுகிறார் மூத்த செய்தியாளர் தராசு ஷ்யாம். இது தொடர்பாக பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், `விஜயின் அரசியல் என்பது அவரது அப்பாவிடம் இருந்தே தொடங்கிவிட்டது. திராவிட சித்தாந்தம் சார்ந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். விஜயகாந்துடன் சேர்ந்து எஸ்.ஏ.சி.யும் ஒன்றாக 90களிலேயே அரசியலுக்கு வந்திருக்க வேண்டியவர்கள். ஏனோ, எஸ்.ஏ.சி.யால் அரசியல் அடிகளை எடுத்துவைக்க முடியவில்லை` என்றார் பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM / YOUTUBE சர்ச்சையில் சிக்கிய விஜயின் திரைப்படங்கள் 2011ல் விஜயின் 'காவலன்' திரைப்படம் வெளியாவதில் அரசியல் தலையீடு காரணமாக சிக்கல் ஏற்பட்டது. தீவிர முயற்சிக்கு பின்னர் காவலன் வெளியானாலும் , வெளியீட்டில் ஏற்பட்ட `காயம்` விஜயை வெகுவாக பாதித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்ற நிலையில் 'இந்த வெற்றியில் ஒரு அணிலைப் போல் உதவினோம்' என்று விஜய் தரப்பில் கூறப்பட்டது. இதை தொடர்ந்து தலைவா திரைப்படமும் அரசியல் தலையீட்டை சந்தித்து. பிற மாநிலங்களில் வெளியான நிலையில் தமிழ்நாட்டில் படம் வெளியாகவில்லை. திரையரங்கங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டன. விஜய் கோடநாடு சென்று, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முயன்றார். ஆனால், சந்திக்க நேரம் ஒதுக்கப்படாமல் அவர் திருப்பி அனுப்பப்பட்டார். இந்த நேரத்தில் விஜய் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், ` முதலமைச்சர் அம்மா(ஜெயலலிதா)வை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறோம். 'தலைவா' பிரச்சனையில் தலையிட்டு அம்மா ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்` என்று கூறியிருந்தார். பின்னர், தலைவா படத்தின் தலைப்பில் இடம்பெற்றிருந்த டைம் டூ லீட் என்ற வாசகம் நீக்கப்பட்டு படம் தமிழ்நாட்டில் வெளியானது. பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM கத்தி திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்ததை முன்னிறுத்தி பிரச்சனைகள் கிளம்பின. இந்த படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று சில அமைப்புகள் போர்க்கொடி எழுப்பின. இதையெல்லாம் தாண்டி கத்தி படம் வெளியானபோது, படத்தில் இடம்பெற்ற `காற்றை வைத்து ஊழல் செய்கின்ற நாடு இது ` என்ற வசனம் அரசியல் ரீதியான அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின்னர் விஜயின் மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, மருத்துவத் துறைக்கு எதிரான வசனம் இடம்பெற்றிருந்ததற்கு பாஜகவினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. சர்கார் படத்தில் அரசு தரும் இலவசங்கள் குறித்து அவர் விமர்சித்திருந்தது பேசுபொருள் ஆனது. இது ஒருபுறம் இருக்க தனது திரைப்படங்களின் நிகழ்ச்சியில் விஜய் அரசியல் பேச தொடங்கினார். சர்கார் பட ஆடியோ வெளியீடு விழாவில் முதலமைச்சர் ஆனால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி விஜயிடம் எழுப்பப்பட்டபோது, ` முதலமைச்சர் ஆனால் முதலமைச்சராக நடிக்க மாட்டேன், உண்மையாக இருப்பேன்` என்று பதிலளித்தார். அரசியல் தொடர்பான விஜயின் ஒவ்வொரு கருத்தும் அவரது ரசிகர்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தரத் தொடங்கின. தமிழ்நாட்டை தலைமை தாங்க விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சார்பில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன, தற்போதும் ஒட்டப்பட்டு வருகின்றன. பட மூலாதாரம்,YOUTUBE/SONY MUSIC INDIA தந்தையுடன் ஏற்பட்ட முரண்பாடு 2020ல் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை தொடங்குவதாக எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவித்தார். இது குறித்த அறிவிப்பு வந்த போதே அதற்கு எதிர்வினையாற்றிய நடிகர் விஜய், தனக்கும் தன் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எந்த தொடர்பும் இல்லை எனவும், தனது பெயரையும் புகைப்படத்தையும் அரசியல் அமைப்புக்கு பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று அறிவித்தார். அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடவும், பொதுக்கூட்டங்களை நடத்தவும் தனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்த கூடாது, அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் இயக்குநர் எஸ்.ஏ.சி, தாய் ஷோபா மற்றும் அவருடன் இருந்த மற்ற நிர்வாகிகள் மீது நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். https://www.bbc.com/tamil/articles/c51w53dx1lno
-
கேம்ப்ரிட்ஜில் இருந்து வெளியேற்றப்பட்ட நியூட்டன் - ஈர்ப்பு விசையை அவர் எப்படி கண்டுபிடித்தார்?
நியூட்டன் தலையில் ஆப்பிள் விழவே இல்லையா? ஈர்ப்பு விசையை அவர் எப்படி கண்டுபிடித்தார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐசாக் நியூட்டன் ஆப்பிள் மரத்தடியில் அமரவுமில்லை, அந்த மரத்திலிருந்து அவர் தலைமீது பழம் விழவுமில்லை. கட்டுரை தகவல் எழுதியவர், க. சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது யார்? இந்தக் கேள்விக்குப் பள்ளிப்பருவத்தில் அனைவருமே ஒருமித்த குரலில் ஐசாக் நியூட்டன் என்று உரக்கச் சொல்லியிருப்போம். அவர் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது எப்படி என்ற கேள்விக்கும் அதேபோல் ஒருமித்த குரலில், நியூட்டன் தலையில் விழுந்த ஆப்பிள்தான் காரணம் என்றும் உரக்கச் சொல்லியிருப்போம். ஆனால் இதில் பாதிதான் உண்மை, மீதி பொய். நியூட்டன் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார் என்பது உண்மை. ஆனால், அவரது தலையில் ஆப்பிள் விழுந்ததுதான் அவர் அதைக் கண்டுபிடிக்கத் தூண்டியது என்பது பொய். அப்படியென்றால் ஈர்ப்பு விசை கண்டுபிடிக்கப்பட்டதில் ஆப்பிளுக்கு பங்கு இல்லையா என்றால் இருக்கிறது. ஒரே வித்தியாசம். நியூட்டன் ஆப்பிள் மரத்தடியில் அமரவுமில்லை, அந்த மரத்திலிருந்து அவர் தலைமீது பழம் விழவுமில்லை. ஆனால் ஆப்பிள் விழுந்தது. அதைச் சற்றுத் தள்ளியிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்த நியூட்டன் தற்செயலாகப் பார்த்தார். அப்படிப் பார்த்தபோது அவரது மூளையில் நீண்டநாட்களாக ஓடிக் கொண்டிருந்த ஒரு கேள்விக்கான பொறி தூண்டப்பட்டது. அந்தப் பொறி தட்டிய தருணத்தை நியூட்டன் எப்படி அடைந்தார்? அதற்குப் பின் ஈர்ப்பு விசையை அவர் எப்படி கண்டுபிடித்தார்? இங்கு விரிவாகக் காண்போம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இருந்த நியூட்டன் தனது சொந்த ஊரான வூல்ஸ்தார்ப் என்ற பகுதிக்குத் திரும்பிச் சென்றார். கேம்ப்ரிட்ஜில் இருந்து வெளியேற்றப்பட்ட நியூட்டன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கத்தோலிக்க ஆட்சி நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் பூமியைச் சுற்றியே சூரியன், நிலா உட்பட அனைத்து கோள்களுமே சுற்றுகின்றன என நம்பப்பட்டது. அதை உடைத்து, சூரியனையே பூமி உட்பட அனைத்து கோள்களும் சுற்றுகின்றன என கலிலியோ நிரூபித்தார். பிறகு வந்த கோப்பர்நிகஸ் கோள்கள் சூரியனை வட்டப் பாதையில் சுற்றுகின்றன எனக் கூறினார். ஆனால், உண்மையில் அவையனைத்தும் நீள்வட்டப் பாதையில்தான் சுற்றுகின்றன என நிரூபித்துக் காட்டியவர் கெப்லர். இவர்களுக்குப் பிறகு வந்த நியூட்டனே கோள்கள் ஏன் நீள்வட்டப் பாதையில் சுற்றுகின்றன, அவற்றை அப்படி நிலைநிறுத்திய ஆற்றல் எது என்பதைக் கண்டறிந்தர். அத்தகைய ஆற்றலான ஈர்ப்பு விசை மட்டுமின்றி நியூட்டனின் இன்னும் பல கண்டுபிடிப்புகளுக்கான தொடக்கப் புள்ளியாக இருந்த 1665, 1666 ஆகிய ஆண்டுகள் அமைந்தன. அந்தக் காலகட்டத்தில் லண்டன் நகரத்தில் வரலாற்றிலேயே மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திய பிளேக் பரவல் ஏற்பட்டிருந்தது. சுமார் 5 லட்சம் மக்கள்தொகை கொண்ட லண்டன் நகரத்தில் மக்கள் திடீரென நோய்வாய்ப்படத் தொடங்கினார்கள். கடுமையான தலைவலி, மயக்கம் எனத் தொடங்கிய நோய், மோசமான காய்ச்சல் மற்றும் இறுதியில் மரணம் வரை இட்டுச் சென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிளேக் நோய் லண்டனில் உச்சத்தைத் தொட்டிருந்த 1665ஆம் ஆண்டில்தான் நியூட்டன் நவீன அறிவியலுக்கான தனது முக்கியக் கண்டுபிடிப்புகளிலும் மூழ்கியிருந்தார். கருப்பு மரணம் என வரலாற்றில் குறிப்பிடப்படும் இந்த பிளேக் பரவல், 1660களில் லண்டன் முழுக்கப் பரவியது. 1347ஆம் ஆண்டில் மத்திய கிழக்கில் இருந்து வந்த கப்பலில் எலிகள் சுமந்து வந்த உண்ணிகளில் இருந்து ஐரோப்பாவில் முதன்முதலாகப் பரவத் தொடங்கியது. பணக்காரர், வணிகர்கள், ஏழைகள், பிச்சைக்காரர்கள் என எந்தப் பாகுபாடும் இன்றி அனைவருமே இந்த நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி மடிந்து கொண்டிருந்த காலகட்டம் அது. வணிகம், விவசாயம் என அனைத்துமே முடங்கியது; நகரத்தின் பல்வேறு பகுதிகள் கைவிடப்பட்டன. அந்தப் பெருநகரத்தின் கிட்டத்தட்ட பாதி மக்கள்தொகை இதற்குப் பலியானதாக சில பதிவுகள் குறிப்பிடுகின்றன. செப்டம்பர் 1665ஆம் ஆண்டின்போது, இந்த நோய்ப் பரவல் உச்சத்தைத் தொட்டிருந்தது. அப்போது வாரத்திற்கு 8,000 பேர் என்ற அளவில் பலியாகிக் கொண்டிருந்ததாக கருப்பு மரணம் குறித்த பதிவுகள் கூறுகின்றன. இதற்கு அடுத்த மாதத்தில் கேம்ப்ரிட்ஜ் நிர்வாகம், பாதுகாப்பு கருதி பல்கலைக்கழகத்தை மூடுவதாக முடிவெடுத்தது. இதனால், அங்கிருந்த நியூட்டன் பிளேக் நோய்த்தொற்றுப் பரவலில் இருந்து தப்பிக்கத் தனது சொந்த ஊரான வூல்ஸ்தார்ப் என்ற பகுதிக்குத் திரும்பிச் சென்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லிங்கன்ஷயரில் உள்ள வூல்ஸ்தார்ப்பில் நியூட்டன் பிறந்த வீடு நியூட்டனின் கண்டுபிடிப்புக்கான தொடக்கம் பிளேக் நோய் லண்டனில் உச்சத்தைத் தொட்டிருந்த 1665ஆம் ஆண்டில்தான் நியூட்டன் நவீன அறிவியலுக்கான தனது முக்கியக் கண்டுபிடிப்புகளிலும் மூழ்கியிருந்தார். அவர் கேம்ப்ரிட்ஜில் இருந்து அனுப்பப்பட்ட பிறகு, லிங்கன்ஷயர் மாவட்டத்தில் இருந்த தனது வூல்ஸ்தார்ப் கிராமத்தில் தனது பணியைத் தொடர்ந்தார். அந்தக் காலகட்டம் குறித்து பின்னாட்களில் நியூட்டன் பிரெஞ்சு அறிஞர் பியர் டிமெசுவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக ஐசாக் நியூட்டன் அண்ட் தி சயின்டிஃபிக் ரெவல்யூஷன் என்ற நூலில் கேல்.இ.கிறிஸ்டியன்சன் எழுதியுள்ளார். பிரெஞ்சு அறிஞர் பியருக்கு நியூட்டன் எழுதிய கடிதத்தில், “அந்த நாட்களில் நான் எனது கண்டுபிடிப்புகள் காலகட்டத்தின் உச்சத்தில் இருந்தேன். வேறு எந்தக் காலத்தையும்விட அதிகமாக எனது சிந்தனை கணிதம் மற்றும் சித்தாந்தத்தில் ஆட்கொண்டிருந்தது,” என்று குறிப்பிட்டிருந்ததாக அந்நூல் கூறுகிறது. ஐசாக் நியூட்டன், 1666ஆம் ஆண்டின் இறுதியில் தனது 24வது பிறந்தநாளை நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டம். அப்போதே அவர் உலகம் அதுவரை அறிந்திராத மிகச் சிறந்த கணிதவியலாளர்களில் ஒருவராகப் புகழ் பெற்றிருந்தார். இன்று கால்குலஸ் என அழைக்கப்படும் அப்போது ஃப்லுக்சியான்ஸ் (Fluxions) என்றழைக்கப்பட்ட கணித பிரிவை அவர் கண்டுபிடித்திருந்தார். அதை வைத்து அவரால் மிக நுண்ணிய அளவிலான கணித மதிப்பீடுகளையும் மிகத் துல்லியமாகக் கணக்கிட முடிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆப்பிள் கதை குறித்து அறிஞர்கள் மத்தியில் வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. ஆனால் அனைவருமே அவர் தலையில் ஆப்பிள் விழுந்து, ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார் என்பதை மறுக்கின்றனர். நியூட்டன் ஈர்ப்பு விசையைப் புரிந்துகொள்ள ஆப்பிள் உதவியதா? பிளேக் பரவலின்போது தனது சொந்த ஊரான வூல்ஸ்தார்ப்பில் இருந்தபோதுதான் நியூட்டன் ஈர்ப்பு விசையை முழு வீச்சில் புரிந்துகொள்வதற்கான தொடக்கப்புள்ளியை அடைந்தார் என்று கூறுகிறது கிறிஸ்டியன்சனின் நூல். அதற்கு வித்திட்ட ஆப்பிள் மரமும் கீழே விழுந்த ஆப்பிளும் அங்குதான் இருப்பதாகவும் அந்நூல் குறிப்பிடுகிறது. ஆனால், ஐசக் நியூட்டனின் வாழ்க்கை வரலாற்றை 1980ஆம் ஆண்டில் எழுதிய ரிச்சர்ட் வெஸ்ட்ஃபால், நியூட்டனை போன்ற ஒரு மேதைக்கு இத்தகைய சிந்தனைகள் ஓரிரவில் உதித்துவிடவில்லை எனக் குறிப்பிடுகிறார். மேலும், இந்தச் சிந்தனை அவரது மூளையில் தோன்றிக்கொண்டே இருந்ததாகவும் அதற்கு விடையைக் கண்டுபிடிக்கும் முயற்சியையும் அவர் முன்பே மேற்கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அறிஞர்கள் மத்தியில் வேறுபட்ட கருத்துகளைக் கொண்ட இந்த ஆப்பிள் கதையைப் பொறுத்தவரை, நியூட்டன் இறப்பதற்கு ஓராண்டு முன்பு அவர் தன்னிடம் பகிர்ந்துகொண்டதாக அவரது நண்பரும் பழங்காலம் குறித்து ஆய்வு செய்தவருமான வில்லியம் ஸ்டுக்லி குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூட்டன், ராபர்ட் ஹூக் இருவருமே ஈர்ப்பு விசை கோட்பாட்டை முன்வைத்தபோது, அதை நிரூபித்துக் காட்டுவதில் நியூட்டனுக்கு கால்குலஸ் உதவியது. நியூட்டன் இறப்பதற்கு ஓராண்டு முன்பு, லண்டனுக்கு அருகே கென்சிங்டனில் உள்ள நியூட்டனின் வீட்டில் அவரைச் சந்தித்தபோது, இரவு உணவை முடித்துவிட்டு அவர்கள் இருவரும் தோட்டத்தில் அமர்ந்து தேநீர் பருகச் சென்றுள்ளனர். அப்போது நியூட்டன் வூல்ஸ்தார்ப்பில் நடந்த ஆப்பிள் கதையைக் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “மற்ற பல உரையாடல்களுக்கு மத்தியில், அவர் இதே போன்றதொரு சூழ்நிலையில் இருக்கும்போதுதான் ஈர்ப்பு விசை குறித்துத் தன் மூளையில் தோன்றியதாகக் கூறினார். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த நேரத்தில் மரத்திலிருந்து ஆப்பிள் பழம் கீழே விழுந்ததாகவும் அந்த நாளில் நடந்ததை அவர் நினைவுகூர்ந்து கூறினார்,” என்று வில்லியம் ஸ்டுக்லி எழுதியுள்ளார். ஆனால், ஆப்பிள் விழுந்ததைப் பார்த்துதான் நியூட்டன் ஈர்ப்பு விசை கோட்பாட்டை ஆராயத் தொடங்கினார் என்பதற்கு வலுவான ஆதாரம் இல்லை என்கிறார் சென்னையிலுள்ள கணித அறிவியல் கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் கோவிந்தராஜன் கூறுகிறார். “நியூட்டன் ஆப்பிள் மரத்தடியில் அமர்ந்து தனது பணிகளை மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். கேம்ப்ரிட்ஜில் அந்த ஆப்பிள் மரம் மிகப் பிரசித்தி பெற்றும் இருந்தது என்பது உண்மை. ஆனால், ஆப்பிள் விழுந்தது, ஈர்ப்பு விசையை நியூட்டன் கண்டறிந்தார் என்பதற்கு வலுவான ஆதாரம் இல்லை. அதுகுறித்து எங்கும் அவராகக் குறிப்பிடவும் இல்லை,” என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆப்பிள் மட்டுமின்றி, நிலா, கோள்கள் உட்பட அனைத்துவிதமான இரண்டு பொருட்களுக்கும் இடையே ஒரு விசை இருக்கும் என்பதை நியூட்டன் கண்டறிந்தார். நியூட்டன் நிலாவை ஆப்பிளுடன் ஒப்பிட்டாரா? நிலாவை ஒரு பிரமாண்ட ஆப்பிளை போல் கற்பனை செய்து, அது ஏன் பூமியையே சுற்றி வருகிறது என்ற கேள்விக்கு நியூட்டன் விடை கண்டுபிடித்தார் என்று 'ஐசாக் நியூட்டன் அண்ட் தி சயின்டிஃபிக் ரெவல்யூஷன்' என்ற நூல் கூறுகிறது. நியூட்டனுடைய பொருளின் நகர்வு விதிகள்படி, ஒரு பொருளின் மீது வெளிப்புற விசை செயல்படும் வரை எந்தவொரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக்கொள்ளாது. இதை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், ஒரு பந்தை வீசும்போது அது வேறு விசையேதும் கொடுக்கப்படாத வரை மேலே மேலே சென்றுகொண்டேயிருக்க வேண்டும். ஆனால் மாறாக வேறொன்று நடக்கிறது. பந்து ஓர் அளவு வரை உயரப் பறந்து, பிறகு கீழே விழுகிறது. அப்படியென்றால், அந்த இடத்தில் வேறொரு விசை அதன்மீது தாக்கம் செலுத்துகிறது. அதுதான் ஈர்ப்பு விசை. உயரப் பறக்கும் பந்தின்மீது ஈர்ப்பு விசை செலுத்தப்பட்டு அதைக் கீழே தரையை நோக்கித் தள்ளுகிறது. இதைப் புரிந்துகொண்ட நியூட்டன் இதுதானே நிலா, புதன், வெள்ளி, சனி, செவ்வாய் என அனைத்து கோள்களிலுமே நடந்திருக்க வேண்டும் என்பதைக் கண்டறிய முற்பட்டார். இங்கு இன்னொன்றையும் நியூட்டன் கண்டறிந்தார். அதாவது, ஒவ்வொரு பொருளுக்குமே அதன் அளவுக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவிலான ஈர்ப்பு விசை இருக்கும். ஆப்பிளின் அளவுக்கு ஏற்ப ஒரு விசை இருக்கும். அதேபோல் நிலாவுக்கும் இருக்கும். நிலா ஒருபுறம் பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்படுகிறது. அதேபோல், நிலாவுக்கு இருக்கும் ஈர்ப்பு விசையும் இந்தச் செயல்முறையில் பங்கு வகிக்கிறது. இங்கு நிலாவை ஒரு பிரமாண்ட ஆப்பிளாக உருவகப்படுத்திய நியூட்டன், ஈர்ப்பு விசை எப்படிச் செயல்படுகிறது என்பது குறித்த கோட்பாட்டை உருவாக்கத் தொடங்கினார் எனக் குறிப்பிட்டுள்ளார் கேல்.இ.கிறிஸ்டியன்சன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூட்டன், ராபர்ட் ஹூக் இருவரும் இதே கோட்பாட்டை 1684ஆம் ஆண்டில் ஆங்கிலேய வானியலாளரும் கணித அறிஞருமான எட்மண்ட் ஹாலியிடம் முன்வைத்தனர். ஈர்ப்பு விசையை நிரூபிக்க நியூட்டனுக்கு உதவிய கால்குலஸ் (நுண்கணிதம்) ஆப்பிள் விழும்போது அது ஏன் கீழ்நோக்கி விழுகிறது, ஏன் மேல்நோக்கிப் போவதில்லை என்று நியூட்டன் சிந்தித்தார் எனப் பொதுவாகச் சொல்லப்படுவது உண்டு. அதேபோல் அவர் நிலா குறித்தும் சிந்தித்தார். “ஆப்பிள் விழும்போது கீழ்நோக்கி விழுகிறது. ஆனால், நிலா ஏன் கீழ்நோக்கி விழாமல் அங்கேயே இருக்கிறது?” என்ற கேள்வியை நியூட்டன் கேட்டுக்கொண்டார். இதைக் கண்டுபிடித்து நிரூபிப்பதில் அவருக்கு கால்குலஸ் உதவியாக இருந்தது. ஆப்பிளுக்கும் பூமிக்கும் அல்லது பூமிக்கும் நிலாவுக்கும் என இரண்டு பொருட்களுக்கு இடையே ஒரு விசை இருந்தது என்பதை நியூட்டன் உணர்ந்தார். அதேபோல், “நிலா போன்ற துணைக் கோள்கள் உட்பட, கோள்கள் பூமியையோ சூரியனையோ ஏன் சுற்றி வருகிறது, அதுவும் நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது என்பதற்கான விடையையும் அவர் தேடினார்,” என்கிறார் கோவிந்தராஜன். கோள்கள் வட்டப் பாதையில் சுற்றவில்லை, நீள்வட்டப் பாதையில்தான் சுற்றுகின்றன என்பதை முன்பே கெப்லர் கண்டுபிடித்திருந்தார். ஆனால், அது ஏன் என்பதே நியூட்டனின் கேள்வியாக இருந்தது. அதாவது, கோள்களை நீள்வட்டப் பாதையில் நிறுத்தும் விசை எது என்பதைக் கண்டறிய அவர் முயன்றார். “அங்குதான் அவருக்கு எதிர் இருமடி விதி பயன்பட்டது. எந்தவொரு இயற்பொருளின் செறிவும் மூலத்தில் இருந்து அதன் தொலைவின் இருமடிக்கு எதிர்விகிதத்தில் அமையும் என்பதே எதிர் இருமடி விதி,” என விளக்கினார் ஓய்வுபெற்ற கணித அறிவியல் பேராசிரியர் கோவிந்தராஜன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூட்டன் ஈர்ப்பு விசை உட்படத் தனது பல்வேறு கண்டுபிடிப்புகள் அடங்கிய ப்ரின்சிபியா என்ற நூலை 1687ஆம் ஆண்டு வெளியிட்டார். நியூட்டனின் போட்டியாளர் ராபர் ஹூக்கின் குற்றச்சாட்டு இதை 1684ஆம் ஆண்டில் நியூட்டன், அவரது போட்டியாளர் மற்றும் கணித அறிஞரும் இயற்பியலாளருமான ராபர்ட் ஹூக் ஆகிய இருவருமே இதை இங்கிலாந்தில் உள்ள ராயல் சொசைட்டியில் இருந்த ஆங்கிலேய வானியலாளரும் கணித அறிஞருமான எட்மண்ட் ஹாலியிடம் முன்வைத்தனர். ஹாலி அதை நிரூபிப்பதற்கான அறிவியல்பூர்வ ஆதாரத்தைக் கோரினார். அப்போது நியூட்டனின் கையில் கால்குலஸ் இருந்த காரணத்தால், கணிதரீதியாக ஈர்ப்பு விசையின் இருப்பை நிரூபித்துக் காட்டினார். ஆனால், ராபர்ட் ஹூக் அவர் முன்வைத்த கோட்பாட்டை நிரூபிக்கவில்லை. நிலாவின் நகர்வுகள், அது பூமியை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவது, பூமியிலுள்ள கடல்கள் நிலாவால் ஈர்க்கப்படுவது, அதன் சார்பில் மாற்றங்களைச் சந்திப்பது ஆகியவை நியூட்டன் முன்வைத்த கணித ஆதாரங்களில் மேற்கோள் காட்டப்பட்டன என விவரிக்கிறார் கோவிந்தராஜன். ஆனால், இத்தகைய ஆதாரங்களை ஹூக் முன்வைக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐசாக் நியூட்டனின் ப்ரின்சிபியா நூலுக்கு எட்மண்ட் ஹாலி எழுதிய அணிந்துரை. இதைத் தொடர்ந்து 1987ஆம் ஆண்டு நியூட்டன் தனது புகழ்பெற்ற ‘ப்ரின்சிபியா (Principia)’ என்ற நூலை ஹாலியின் உதவியுடன் வெளியிடுகிறார். அப்போதும்கூட, ராபர்ட் ஹூக் இந்தக் கோட்பாட்டைக் கூறியது தானே என்றும் அதற்கு எந்தவித ஒப்புகையும் நூலில் கொடுக்கப்படவில்லை என்றும் நியூட்டனுடன் சண்டை போட்டுள்ளார். மேலும், தனது கோட்பாட்டை அவர் எடுத்துக்கொண்டார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார். இதுகுறித்து நெவர் அட் ரெஸ்ட் என்ற நியூட்டனின் வாழ்க்கை வரலாற்று நூலில் அதன் ஆசிரியர் ரிச்சர்ட் எஸ்.வெஸ்ட்ஃபால் நியூட்டன், ஹாலி, ஹூக் இடையிலான கடிதப் பரிமாற்றங்களைக் குறிப்பிட்டு விவரித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டால் நியூட்டன் ராபர் ஹூக் மீது கோபம் கொண்டதாகவும் அந்தக் கோபம் நீண்ட நாட்களுக்கு நீடித்ததாகவும் ரிச்சர்ட் வெஸ்ட்ஃபால் தனது நூலில் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்னையில் எட்மண்ட் ஹாலி நியூட்டனுக்கே ஆதரவாக இருந்ததாகக் கூறுகிறார் பேராசிரியர் கோவிந்தராஜன். மேலும், பின்னாட்களில் நியூட்டன் ராயல் சொசைட்டியின் தலைவர் ஆனபோதும்கூட ராபர்ட் ஹூக்கின் உருவப்படத்தை நியூட்டன் அங்கு நிறுவாமலே தவிர்த்துவிட்டார் எனவும் சொல்லப்படுவதுண்டு. https://www.bbc.com/tamil/articles/cv27p0z50l6o
-
கிளிநொச்சியில் அதிகாலை நடந்த கோர விபத்து!
கிளிநொச்சி - ஆனையிறவு விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு Published By: DIGITAL DESK 3 02 FEB, 2024 | 10:04 AM கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கோபாலசிங்கம் சதீஸ்குமார் (வயது 25) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த குடும்பஸ்தர் கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் இருந்து இரணைமடுவுக்கு மாடுகளை கொண்டு சென்றுள்ளார். இதன்போது வீதியால் வந்த அரச பஸ் குறித்த நபரையும் அவரது 8 மாடுகளையும் மோதிவிட்டு, தவறான பக்கத்துக்கு சென்று, எதிரே வந்த ஹையேஸ் ரக வாகனத்தையும் மோதியது. இதன்போது 8 மாடுகளும், இளம் குடும்பப்பெண் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்றையதினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். அரச பஸ் சாரதி அளவுக்கு அதிகமான மது போதையில் காணப்பட்டதாக, மரண விசாரணைகளின் போது பொலிஸார் தெரிவித்தனர். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/175356
-
லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை
லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவித்தல்! Published By: DIGITAL DESK 3 02 FEB, 2024 | 11:38 AM எரிவாயு விலையில் இம்முறை மாற்றங்கள் செய்யப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு பெப்ரவரி மாதம் லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், தற்போதைய விலையையே பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/175362
-
மதுவால் ஏற்படக்கூடிய உடல் மற்றும் மனரீதியான விளைவுகள்
பாதுகாப்பான மது குடிக்கும் அளவு என்ன? குடிப்பதை திடீரென நிறுத்தும்போது என்ன நடக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மது அருந்துதல் உடலை என்ன செய்யும்? கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் பிப்ரவரி 1 முதல் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்ற தமிழக அரசின் சமீபத்திய அறிவிப்பு மதுபிரியர்கள் பலருக்கும் கவலை தரக்கூடியதாக அமைந்திருக்கலாம். ஆனால், அதே மதுவை இவ்வளவு விலைகொடுத்து வாங்கி அருந்துவதன் மூலம் வரக்கூடிய உடல் பாதகங்கள் அதை விட அதிர்ச்சி தரக்கூடியவை. எப்போதாவது மது அருந்தினாலும் சரி, அன்றாடம் மது அருந்தினாலும் சரி அது உடலின் முக்கிய பாகங்களை மோசமாக பாதிக்கும் என்ற மருத்துவர்களின் அறிவுரை இன்னும் அதிகமாகக் கவலைப்பட வேண்டிய அம்சம். அப்படி மதுவால் ஏற்படக்கூடிய உடல் மற்றும் மனரீதியான விளைவுகள், மதுக் குடிப்பதை திடீரென நிறுத்துவதால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உடலின் உட்பகுதி நாம் அருந்தும் மது எங்கு செல்கிறது? பலரும் தாங்கள் அருந்தும் மது நேரடியாக வயிற்றுக்குள் சென்று அப்படியே சிறுநீர் வழியாக வெளியேறி விடுவதாகவே நினைத்து கொள்கின்றனர். ஆனால், போகிற வழியில் உள்ள உடல் பாகங்களை அது எந்தளவு பாதிக்கிறது என்பது குறித்து பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதுகுறித்து தெரிந்து கொள்வதற்காக எம்ஜிஎம் ஹெல்த்கேரின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் தியாகராஜனிடம் பேசினோம். “மது எப்படி, எவ்வளவு, எத்தனை நாட்கள் அருந்தினாலும் கேடுதான். அதிலும் ஆண்களை விட பெண்கள் மிக எளிதில் மதுவால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது” என்கிறார் அவர். உடலுக்குள் ஆல்கஹாலின் பயணம் குறித்து விவரிக்கும் மருத்துவர் தியாகராஜன், “ஆல்கஹால் நேரடியாக வயிற்றைத் தாண்டி சிறுகுடல் பெருங்குடல் பகுதிகளுக்கு செல்கிறது. அங்கு ஆல்ஹகால் ஆல்டிகைடு என்ற சேர்மமாக உடைக்கப்படும்." "வயிறு மற்றும் குடல் பகுதிகளில் உள்ள ரத்தம் அனைத்தும் கல்லீரல் வழியாக சென்றே உடலின் மற்ற பகுதிகளுக்கு செல்லும். அந்த சமயத்தில் உணவில் உள்ள உடலுக்கு தேவையான சத்துக்களை பிரித்து ரத்தம் வழியாக முழு உடலுக்கும், கழிவுகளை மலம் மற்றும் சிறுநீர் வழியாக வெளியேயும் அனுப்புவது கல்லீரலின் வேலை." "இந்நிலையில் கல்லீரலுக்கு சேதத்தை உண்டாக்கும் ஹெபட்டோடாக்சிக் கூறான ஆல்டிகைடு ரத்தம் வழியாக கல்லீரலை அடைகிறது. எனவே மிக குறைவான நேரத்தில் அதிகமாக ஆல்கஹாலை அருந்தும்போது இந்த சேர்மம் அதிமாகி கல்லீரல் செயலிழப்பு வரை கொண்டு செல்லும்” என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெண்கள் மதுவால் எளிதில் கல்லீரல் சார் நோய்களுக்கு ஆளாவதாக கூறுகிறார் மருத்துவர். பெண்களுக்கு அதிக அபாயம் உண்டு மது அருந்தும் நபர்கள் எந்த பாலினத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அது பாதகத்தை ஏற்படுத்தும். அதே பெண்கள் என்று வரும்போது அவர்களது மரபணு அமைப்பு காரணமாக ஆல்கஹாலால் எளிதில் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுகிறார் மருத்துவர் தியாகராஜன். இதுகுறித்து கூறும் அவர், “தொடர்ச்சியாக மது அருந்துவதால் கல்லீரலில் தீங்கு விளைவிக்கும் கூறுகள் அதிகமாகி லிவர் ஸ்காரிங் ஏற்படுகிறது. இது ஃபைரோசிஸ் நிலையை ஏற்படுத்தி விடும். இதோடு மற்ற சுற்றுசூழல் காரணங்களும் இணைந்து காலம் செல்ல செல்ல கல்லீரல் சிரோசிஸ் நிலையை அடைந்து விடும்” என்கிறார். ஆனால், நோயின் தீவிரம் தனிநபரின் மரபணுத்தன்மை மற்றும் மது அருந்தும் அளவு ஆகியவற்றை பொறுத்தே உடனடியாக அல்லது மெதுவாக அதிகரிக்கும். அதேசமயம், பெண்கள் மதுவால் எளிதில் கல்லீரல் சார் நோய்களுக்கு ஆளாவதாக கூறுகிறார் மருத்துவர். பட மூலாதாரம்,THIAGARAJAN படக்குறிப்பு, மருத்துவர் தியாகராஜன் மதுவால் உண்டாகும் கல்லீரல் நோய்கள் ஆல்கஹாலால் பல விதமான கல்லீரல் சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றன. கடந்த பத்தாண்டுகளாகவே இந்தியாவில் கல்லீரல் சார் நோய்கள் அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதிலும் 5இல் 1 இந்தியர் கல்லீரல் சார் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லீரல் சார்ந்த இறப்புகளும் அதிகரித்துள்ளன. அப்படி ஆல்கஹாலால் கல்லீரலுக்கு ஏற்படும் முக்கிய பாதிப்புகளாக மருத்துவர் தியாகராஜன் தெரிவிப்பவை., நாள்பட்ட கல்லீரல் சிரோசிஸ் (Chronic Liver Cirrhosis) இந்த நிலையானது பல ஆண்டுகளாக கல்லீரல் சேதமடைந்து கொஞ்சம் கொஞ்சமாக அழற்சி அதிகரித்து இறுதியில் கல்லீரல் செயலிழப்பு வரை ஏற்படுத்தும். இதன் அறிகுறிகளாக ஆற்றல் இழப்பு, தசை பலவீனம், நீர்கோர்த்தல், மஞ்சள்காமாலை உயர்தல், ரத்த வாந்தி ஆகியவற்றை குறிப்பிடுகிறார் மருத்துவர். அக்யூட் ஆல்கஹாலிக் ஹெபடைட்டிஸ் அல்லது அக்யூட் கல்லீரல் செயலிழப்பு தொடர்ந்து பகல் இரவாக மது அருந்துதல், மோசமான உணவு பழக்கம் மற்றும் இதர காரணிகளோடு சேர்ந்து இந்த நிலைக்கு ஒருவர் தள்ளப்படலாம். இதில் கடுமையான மஞ்சள் காமாலை , ரத்தம் உறையாமல் போதல் மற்றும் தொடக்க நிலை கோமா கூட ஏற்படலாம். நாள்பட்ட கல்லீரல் நோய் நீண்ட நாட்களாகவே கல்லீரல் குறிப்பிட்ட அளவு பாதிப்படைந்திருக்கும். இந்த நிலையில் குறைவாக அல்லது அதிகமாக என எப்படி மது அருந்தினாலும் திடீரென்று கல்லீரல் செயலிழந்து விடும் என்கிறார் மருத்துவர் தியாகராஜன். இந்த மூன்று நிலைக்குமே மருத்துவ ரீதியில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமென கூறும் அவர், நோயாளிகள் எந்த நிலையில் இருக்கிறார்களோ அதற்கேற்ற சிகிச்சைகள் உண்டு என்று கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, “ஆல்கஹால் சார்ந்த கல்லீரல் கொழுப்பு, ஆல்கஹால் சாராத கல்லீரல் கொழுப்பு என இருவகை உண்டு” ஃபேட்டி லிவருக்கும், ஆல்கஹாலுக்கும் என்ன தொடர்பு? கடந்த ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டிருந்த ஆய்வு முடிவு ஒன்றில் 38% இந்தியர்களுக்கு ஆல்கஹால் சாராத கல்லீரல் கொழுப்பு (ஃபேட்டி லிவர்) இருப்பதாக தெரிவித்திருந்தது. கல்லீரல் செல்களில் கொழுப்பு சேர்வது இயல்பான ஒன்று. ஆனால், அது 5% த்திற்கும் கீழ்தான் இருக்கும். இதே 20 - 25%க்கு மேல் செல்லும்போது அது கல்லீரலின் செயல்பாடுகளை பாதிக்கும். இதையே நாம் கல்லீரல் கொழுப்பு என்கிறோம். கல்லீரல் கொழுப்பை பொறுத்தவரை இரண்டு வகைகள் இருப்பதாக கூறுகிறார் மருத்துவர் தியாகராஜன். அதை விவரிக்கும் அவர், “ஆல்கஹால் சார்ந்த கல்லீரல் கொழுப்பு, ஆல்கஹால் சாராத கல்லீரல் கொழுப்பு என இருவகை உண்டு” என்கிறார். இந்த கல்லீரல் கொழுப்பு ஏற்பட அதிக காரணமாக வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள், மோசமான உணவு பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டும் அவர் ஆல்கஹால் சாராத கல்லீரல் கொழுப்பு நோய்களே அதிகம் ஏற்படுவதாக அவர் குறிப்பிடுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரு நாளைக்கு பாதுகாப்பான ஆல்கஹால் அளவு என்பது 30மி.லி ஒரு நாளைக்கு எவ்வளவு ஆல்கஹால் பாதுகாப்பானது? என்னதான் மது அருந்தினாலும் அதில் தான் சுயகட்டுப்பாடு கொண்டுள்ளதாகவும், குறைவாகவே மது அருந்துவதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால், உண்மையில் பாதுகாப்பான மது அளவு ஒரு மூடி இருமல் மருந்து அளவு மட்டுமே. “ஒரு நாளைக்கு பாதுகாப்பான ஆல்கஹால் அளவு என்பது 30மி.லி. இதை தினசரி அருந்தினாலும் பெரும்பாலும் தீங்கு ஏற்படாது. ஆனால், அதற்கு மரபணு ரீதியாகவே உங்கள் கல்லீரல் நலமாக இருக்க வேண்டும், வேறு எந்த பிரச்சனைகளாலும் பாதிப்பு இல்லாத கல்லீரலாக இருக்க வேண்டும்” என்கிறார் மருத்துவர். அதே சமயம் ஆல்கஹாலின் போதை தன்மையால் அப்படி சுயகட்டுப்பாடோடு பாதுகாப்பான அளவை மட்டுமே அருந்துவது சாத்தியமல்ல. நாளாக நாளாக அளவு அதிகரிக்குமே தவிர குறையாது. எனவே மதுப்பழக்கத்தையே மொத்தமாக தவிர்ப்பதே நல்லது என்கிறார் அவர். மதுப்பழக்கத்தை நிறுத்தினால் கல்லீரல் சரியாகி விடுமா? சில நேரங்களில் நீண்ட காலம் மது அருந்துபவர்கள் கூட திடீரென முடிவு செய்து மதுப்பழக்கத்தை விட்டு விடுகிறார்கள். இதனால் தங்களது உடல் சீராகி விடும் என அவர்கள் நம்புகின்றனர். ஆனால், மதுப்பழக்கத்தை விட்டு பல ஆண்டுகள் ஆனவர்களுக்கு கூட கல்லீரல் நோய்கள் வரலாம் என்று கூறுகிறார் மருத்துவர். இதுகுறித்து விவரிக்கும் அவர், “ஆல்கஹாலால் கல்லீரல் கொழுப்பு அல்லது பைப்ரோசிஸ் நிலை ஏற்பட்டு தொடக்க நிலையில் இருக்கும்போது நீங்கள் மது அருந்துவதை விட்டுவிட்டால், மேலும் கல்லீரல் சேதமடையாமல் தடுக்கலாம். மருத்துவ உதவிகளோடு சில நாட்களில் மீண்டு வர முடியும்” என்கிறார். “ஆனால், அதுவே சிரோசிஸ் நிலைக்கு சென்று விட்டால் நீங்கள் முழுமையாக மதுபழக்கத்தை விட்டாலும் கல்லீரலால் மீண்டு வர முடியாது. அதற்கு மேலதிக சிகிச்சைகள் தேவை. ஆனால், கல்லீரலின் பாதிப்பு எந்த நிலையில் இருந்தாலும் முதலில் மது பழக்கத்தை விட்டால் மட்டுமே அது அடுத்தகட்டத்தை நோக்கி செல்லாது” என்கிறார் மருத்துவர் தியாகராஜன். பட மூலாதாரம்,POORNA CHANDRIKA படக்குறிப்பு, கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் மருத்துவர் பூர்ண சந்திரிகா மதுப்பழக்கத்தால் ஏற்படும் மனநல கோளாறுகள் மது அருந்துவதால் பாதிக்கப்படும் மற்றுமொரு முக்கிய உறுப்பு மூளை. இதனால் மனரீதியான பல சிக்கல்களுக்கு மது குடிப்போர் ஆளாகின்றனர். இது குறித்து கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் மருத்துவர் பூர்ண சந்திரிகாவிடம் பேசினோம். மதுவின் அளவு மற்றும் அதை ஒருவரின் உடல் தாங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஒரு நபர் மதுவினால் பாதிக்கப்படும் தன்மையும், காலமும் தீர்மானிக்கப்படுகிறது என்று கூறும் மருத்துவர் பூர்ண சந்திரிகா முக்கியமான நான்கு மனநல பிரச்சனைகள் குறித்து கூறுகிறார். அதீத மதுவினால் வரும் சிக்கல் சிலர் கொஞ்சம் மது அருந்தினால் கூட மோசமான வெறிபிடித்தவர்கள் போல் ஆகிவிடுவார்கள். பொருட்களை உடைப்பது, சண்டையிடுவது போன்றெல்லாம் செய்வார்கள். இதுதான் முதல்கட்டம் என்கிறார் அவர். மேலும் இதற்கு அடுத்த கட்டமாக டெலிரியம் ட்ரமன்ஸ் (Delirium Tremens) என்ற பிரச்னை ஏற்படும் என்கிறார். “இதில் அடிக்கடி பூச்சி ஊறுவது போல் இருக்கிறது என்பார்கள், என்னை போலீஸ் துரத்தி வருகிறது என்பார்கள். இந்த மனநல பிரச்னையில் தூக்கமின்மை, குழப்பம், மறதி, சோர்வு, காதில் குரல் கேப்பது ஆகிய அறிகுறிகள் இருக்கும்” என கூறுகிறார் மருத்துவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நீண்டநாள் மதுப்பழக்கத்தை திடீரென்று விடும்போது மனரீதியான சில பாதிப்புகள் ஏற்படுகிறது. மதுப்பழக்கத்தை விட்டதற்கு பிறகு என்ன நடக்கும்? மதுப்பழக்கத்தினால் எவ்வளவு துன்பமோ, அதை விட்டொழிந்த பிறகும் கூட பெரும் சவால்களை சிலர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதையே Withdrawal Syndrome என்கிறோம். இதில் குழப்பம், பதற்றம், கைகால் உதறுதல், சோர்வு என நபருக்கேற்ற பிரச்னைகள் உண்டு. ஆனால் அதை தாண்டி நீண்டநாள் மதுப்பழக்கத்தை திடீரென்று விடும்போது மனரீதியான சில பாதிப்புகள் ஏற்படுகிறது. அதுகுறித்து மருத்துவர் பூர்ண சந்திரிகா விளக்குகிறார். ஆல்கஹால் இண்ட்யூஸ்ட் ஹேலுசினேஷன் (Alcohol Induced Hallucinations) “சிலர் குடியை நிறுத்தினாலும் கூட காதில் சலங்கை ஒலி கேட்பது, யாரோ கூப்பிடுவது போல் போன்ற பிரம்மை மட்டும் இருக்கும் அதற்கு பெயர் ஆல்கஹால் இண்ட்யூஸ்ட் ஹேலுசினேஷன்” என்று கூறும் அவர் இதிலேயே ‘லில்லிபுட் ஹேலுசினேஷன்’ என்ற காட்சி ஹேலுசினேஷன் பிரச்னைகளும் ஏற்படும் என்கிறார். ஆல்கஹால் இண்ட்யூஸ்ட் சைக்காட்ரிக் டிஸார்டர் (Alcohol Induced Psychiatric Disorder) இந்த பிரச்னையில் , பல வருடங்களாக மது அருந்துபவர்களாக இருப்பார்கள். திடீரென்று ஒரு நாள் ஏதோ ஒரு காரணத்திற்காக அதை நிறுத்தியிருப்பார்கள். அவர்களுக்கு ஒரு மூன்று நாட்களிலேயே குழப்பம், கோவம், எதிரில் இருப்பவர் யார் என்று தெரியாமல் போவது போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்கிறார் மருத்துவர். வெர்னிக் என்செபலோபதி கொரஸ்காஃப் இந்த மனரீதியான நோய்கள் நாள்பட்ட பிரச்னையாக மாறும்போது அடுத்தடுத்த கட்டமாக நரம்பு சார் பிரச்னைகளையும் தூண்டுகிறது. அதன் அடுத்த நிலை வெர்னிக் என்செபலோபதி கொரஸ்காஃப் (Wernicke encephalopathy and Korsakoff). இதனால் மறதி ஏற்படும். ஆனால், அந்த நபர் மறதி இருப்பது போலவே காட்டிக்கொள்ள மாட்டார்கள். திடீரென்று ஒரு கேள்வி கேட்டால் பதில் தெரியவில்லை என்றாலும், அதை தெரியாது என்று சொல்லாமல் தோராயமான பதிலை சொல்வார்கள். இதெல்லாம் நரம்பியல் சார்ந்த மனநலப் பிரச்னைகள் என்று கூறுகிறார் மருத்துவர் பூர்ண சந்திரிகா. இவை இல்லாமல் நரம்பு சம்பந்தமான வேறு பிரச்னைகளும் கூட ஏற்படும். அதில் மயோபதி, நியூரோபதி சார்ந்த பிரச்னைகளும் அடங்கும். இதனால் உட்கார்ந்து எழுந்திருக்க முடியாது, சில வேலைகளை செய்ய முடியாது. உடலில் ஊசி போல குத்துதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "இதற்கு மருந்தியல் சிகிச்சையே தீர்வு" மறுவாழ்வு மையங்கள் மூலம் பலன் கிடைக்கிறதா? இப்போதெல்லாம் போதை ஒழிப்பு மையங்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்கான மறுவாழ்வு மையங்கள் அதிகரித்து விட்டன. ஆனால், அது போன்ற பல இடங்களில் அடிக்கிறார்கள், அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறார்கள் என்று அடிக்கடி குற்றச்சாட்டு எழுவதும் உண்டு. இந்நிலையில் இது போன்ற மறுவாழ்வு மையங்கள் பயனளிக்குமா என்ற கேள்வியை மருத்துவர்களிடம் முன்வைத்தோம். இதற்கு பதிலளித்த மருத்துவர் தியாகராஜன், "சில நல்ல மையங்கள் இருந்தாலும், பல மறுவாழ்வு மையங்கள் முறைப்படுத்தப்படாமல் தான் இருக்கின்றன. அங்கு என்ன நடக்கிறது என்றே தெரிவதில்லை. எனவே மருத்துவ ரீதியிலான சிகிச்சை மட்டுமே இதற்க்கு தீர்வு. அதை தாண்டி அதில் முக்கியம் குறிப்பிட்ட நபரின் மனஉறுதி. இதில் கட்டாயப்படுத்தி ஒருவரை மாற்ற முடியாது” என்று கூறுகிறார். மாநில மனநல ஆணையத்தின் மூலம் உரிமம் வழங்கப்பட்டே பல மறுவாழ்வு மையங்கள் இயங்கி வருவதாக கூறும் மருத்துவர் பூர்ணசந்திரிகா, மக்கள் உரிமம் இல்லாத மையங்களை நம்ப வேண்டாம் என்கிறார். இதுகுறித்து பேசிய அவர், “ஏதாவது ஒரு மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ள நபரை வந்து குடும்பத்தினர் பார்க்க வேண்டாம், அவர் தனித்து இருக்கட்டும் என்று சொன்னால் அந்த இடங்களை நம்ப வேண்டாம். சொல்லப்போனால் தினசரி சென்று அவர்களை பார்ப்பதே, நமது குடும்பம் நம்முடன் இருக்கிறது என்ற உத்வேகத்தை கொடுக்கும். எனவே கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் மக்கள் மாநில மனநல ஆணையத்தில் புகார் தெரிவிக்கலாம்” என்று கூறியுள்ளார். பட மூலாதாரம்,IMH / FACEBOOK படக்குறிப்பு, கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம் , சென்னை அரசு வழங்கும் சிகிச்சைகள் போதை ஒழிப்புக்கெனவே தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. இதை விவரித்து பேசிய மருத்துவர் பூர்ண சந்திரிகா, “மதுபழக்கத்தை கைவிட மருந்தியல் சிகிச்சையே தீர்வு. அதற்கான அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுத்துள்ளதாக” தெரிவிக்கிறார். “இதற்கான சிகிச்சை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவ மனைகள், மருத்துவ கல்லூரி மனநல பிரிவுகள், மாவட்ட அரசு போதை ஒழிப்பு மையங்கள் என அனைத்து இடங்களிலும் வழங்கப்படுவதாக” கூறுகிறார் அவர். மேற்கூறிய இடங்களில் 21 நாள் முதல் 1 மாதம் வரை அல்லது 10 முதல் 15 நாட்கள் உட்பிரிவு நோயாளியாக வைத்து மருந்தியல் சிகிச்சைகள் வழங்கப்படும். மேலும், மருந்து சாராத சிகிச்சைகளான மனநல ஆலோசனை உள்ளிட்டவையும் வழங்கப்படும். இதன் மூலம் மதுப்பழக்கத்தில் இருந்து மக்களை விடுவிக்க அரசு முயற்சித்து எடுத்து வருகிறது என்கிறார் மருத்துவர் பூர்ணசந்திரிகா. https://www.bbc.com/tamil/articles/cv20pzmeejlo
-
லண்டன் பிரமுகருடன் தொடர்பு – நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில், NIA அதிகாரிகள் சோதனை!
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை 2 பிப்ரவரி 2024, 05:00 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்திவருகிறது. சட்டவிரோதமாக ஆயுதம் தயாரிக்கப்பட்டது தொடர்பான ஒரு வழக்கு தொடர்பாகவே இந்த சோதனைகள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள பல இடங்களில் பிப்ரவரி இரண்டாம் தேதி அதிகாலை முதல் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே இருக்கும் விஸ்வநாதபேரியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.இவர் 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். திருச்சி சண்முகா நகரில் வசிக்கும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகனின் வீட்டிற்கு அதிகாலையில் வந்த என்ஐஏ அதிகாரிகள், சில மணி நேரம் சோதனை நடத்திவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர். பட மூலாதாரம்,SAATTAIDURAI/X படக்குறிப்பு, 'சாட்டை' துரைமுருகன் அதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி பிரமுகரான விஷ்ணு பிரதாப் என்பவரது வீட்டிலும் அதிகாலை ஐந்து மணி முதல் என்ஐஏ சோதனை நடத்திவருகிறது. இவர் நாம் தமிழர் கட்சியில் தகவல் தொழில்நுட்ப பாசறையின் மாவட்ட நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். யு டியூப் சானல் ஒன்றையும் நடத்திவருகிறார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் ஆலாந்துறை ஆர்.ஜி. நகரில் வசிக்கும் ரஞ்சித் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. காளப்பட்டியில் முருகன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான இடும்பாவனம் கார்த்திக்கு, விசாரணைக்கு ஆஜராகும்படி கட்சி அலுவலக முகவரிக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி அவர் ஆஜராக வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. படக்குறிப்பு, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் இந்தச் சோதனைகள் எதற்காக? கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் சேலம் மாவட்டம் ஓமலூரில் துப்பாக்கி தயாரித்ததாக சிலர் கைதுசெய்யப்பட்டனர். அந்த வழக்குத் தொடர்பாகத்தான் இந்தச் சோதனைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. 2022ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி ஓமலூர் காவல்துறையினர் புளியம்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலத்திலிருந்து ஓமலூர் நோக்கிவந்த இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை நிறுத்தி சோதனை இட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு கைத்துப்பாக்கிகள், துப்பாக்கி தயாரிப்பதற்கான உதிரி பாகங்கள், கத்தி, தோட்டா, வெடிமருந்து, முகமூடி ஆகியவை கைப்பற்றப்பட்டன. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சஞ்சய் பிரகாஷ், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த எம்.சி.ஏ. பட்டதாரி நவீன் சக்கரவர்த்தி என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் சேலம் செட்டிச்சாவடியில் வாடகைக்கு அறை ஒன்றை எடுத்து துப்பாக்கி தயாரித்தது தெரிய வந்தது. இவர்களுக்கு உதவியதாக சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த கபிலர் என்பவரையும் காவல்துறை கைதுசெய்தது. இந்த வழக்கை முதலில் சேலம் மாவட்ட 'க்யூ' பிரிவு காவல்துறை விசாரித்து வந்தது. அந்த விசாரணையில், பணத்திற்காக இயற்கையைச் சீரழிப்பவர்களை அழித்தொழிப்பதற்காக ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்த அந்த இளைஞர்கள் முடிவெடுத்திருந்ததாகவும் இதற்காக கல் குவாரிகளில் பயன்படுத்தப்படும் வெடி மருந்துகளைச் சேகரித்ததாகவும் தெரியவந்தது. இதற்குப் பிறகு இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இப்போது இந்த வழக்கு தொடர்பாகத்தான், சோதனைகளும் விசாரணைகளும் நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.bbc.com/tamil/articles/ceqjyqw74gxo
-
மலேசியாவின் புதிய மன்னருக்கு தனி இராணுவம், 300 கார்கள் மற்றும் விமானங்கள் உள்ளன
தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியா, கடந்த 1957 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அங்கு தேர்தல்கள் நடத்தப்பட்டு பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். ஆனாலும் மலேசியாவில் இன்னும் மன்னர் அதிகாரம் நீடித்து வருகிறது. முக்கிய அரசியல் நியமனங்களை மேற்பார்வையிடுவது, இஸ்லாத்தின் அதிகாரப்பூர்வ தலைவராக இருப்பது, மலேசியா நாட்டின் ஆயுதப்படைகளின் தளபதி என பல்வேறு பொறுப்புகளில் மன்னர் இருக்கிறார். நீதிமன்றங்கள், காவல் துறை, சட்டத்துறை ஆகியவற்றால் கொடுக்கப்பட்ட தண்டனையை இரத்து செய்வதற்கும் மன்னருக்கு அதிகாரம் இருக்கிறது. மலேசியாவில் 9 அரச குடும்பங்கள் உள்ளன.இவர்களில் ஒருவர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மன்னராக தேர்ந்தெடுக்கப்படுவார். இந்நிலையில் முன்னாள் மன்னரான பகாங் ஆட்சியாளர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத்ஷாவின் பதவிக்காலம் நேற்று நிறைவு பெற்றதையடுத்து நாட்டின் 17 ஆவது மன்னராக ஜோகூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் பொறுப்பேற்றுக்கொண்டார். கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் அவரது பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. புதிய மன்னர் இப்ராஹிம் இஸ்கந்தருக்கு மலேசியாவை தவிர பிற இடங்களிலும் சொத்துக்கள் அதிகமாக உள்ளன. இவரிடம் 300 கார்கள் மற்றும் ஜெட் விமானங்கள் உள்ளன. இதில் ஒரு கார் ஜேர்மனி சர்வாதிகாரியான ஹிட்லர் பரிசளித்தது. தனியாக இராணுவம் வைத்துள்ளார். இவரது குடும்பமும் சிங்கப்பூரில் நிலம் மற்றும் பாமாயில், ரியல் எஸ்டேட் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் முதலீடுகளை கொண்டிருக்கிறது. இதன் இந்திய மதிப்பில் ரூ.47 ஆயிரம் கோடி ஆகும். மன்னர் இப்ராஹிம் இஸ்கந்தர் கூறும்போது, நான் அரசாங்கத்தை ஆதரிப்பேன். ஆனால் அவர்கள் தவறாக ஏதாவது செய்கிறார்கள் என நினைத்தால் அது குறித்து எச்சரிப்பேன் என்றார். https://thinakkural.lk/article/290229
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஷ்யா- உக்ரைன் இடையே போர்க்கைதிகள் பரிமாற்றம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிவடைய இருக்கிறது. இரு நாடுகளும் மிகப்பெரிய அளவில் சேதங்களை எதிர்கொண்டுள்ளன.என்ற போதிலும் போர் நிறுத்தத்திற்கான வாய்ப்பு இன்னும் ஏற்படவில்லை. போர் நிறுத்தம் என்பது ரஷ்யாவுக்கு சாதகமானது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்து வருகிறார். உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் வழங்கி வருகின்றன. ரஷ்யாவுக்கு சீனா மற்றும் வடகொரியா ஆகியவை மறைமுகமாக ஆயுதங்கள் கொடுத்து வருகின்றன. இதனால் தற்போதுகூட மாறிமாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் ரஷ்யாவின் போர் விமானம் போர்க்கைதிகளை ஏற்றிக்கொண்டு செல்லும்போது சுட்டு வீழ்த்தப்பட்டது. உக்ரைன்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டியது. விமானத்தில் 77 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் ஆறு விமான ஊழியர்கள் மற்றும் மூன்று ரஷ்ய வீரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சர்ச்சை பெரிதாக வெடித்த நிலையில் போர்க்கைதிகளை மாற்றிக்கொள்ள இருதரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் 195 போர்க்கைதிகள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் கைதிகள் பரிமாற்றம் நடைபெற இருந்தது. ஆனால், அது நிறுத்தப்பட்டது என உக்ரைன் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/290200
-
ஜோர்தான் சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி 30 பேர் காயம்
சிரியா மற்றும் இராக்கில் இரானிய இலக்குகளை தாக்க அமெரிக்கா அனுமதி: காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மேன் ஜூனியர் பதவி, பிபிசி நியூஸ், வாஷிங்டன் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சிரியா மற்றும் இராக்கில் உள்ள இரானிய இலக்குகள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தும் திட்டங்களுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் செய்தியிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல்கள் பல நாட்களுக்கு நடைபெறும் என்றும், வானிலையைப் பொறுத்து இந்தத் தாக்குதல்களை எப்போது தொடங்க வேண்டும் என்ற ஆணை வரும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை சிரியா எல்லைக்கு அருகிலுள்ள ஜோர்டானில், டிரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இரானிய ஆதரவு போராளிக் குழுவே காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இரானின் புரட்சிகர காவலர் படையின் ஆதரவையும் நிதியுதவியையும் பெற்ற, இராக்கில் உள்ள இஸ்லாமிய தடுப்புப் படை இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பு ஏற்றுள்ளது. இந்தப் படையில் ஆயுதப் பயிற்சி பெற்ற பல போராளிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டது மட்டுமல்லாது, 41 அமெரிக்க வீரர்கள் காயமடைந்த இந்தத் தாக்குதலில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என இரான் அரசு மறுத்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/c72gz7ljzmxo
-
வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை: மகிழ்ச்சியில் மக்கள்
ஜேர்மனியில் நாளை முதல் அமுலுக்கு வருகிறது 4 நாள் வேலை திட்டம் உலகம் முழுவதும் பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தை செயற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், அவுஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் குறைந்த நேரம் மட்டுமே வேலை செய்யப்படுகின்றன. இந்தப் பட்டியலில் தற்போது ஜேர்மனி நாடும் இணைந்து உள்ளது. ஜேர்மனி நாட்டில் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு புதிய சோதனை முயற்சியை மேற்கொள்ளப்பட இருக்கிறது. நாளை 1 ஆம் திகதி முதல், வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை என்ற திட்டம் நடைமுறைக்கு வருகிறது. வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. 4 நாட்கள் வேலை செய்வதன் மூலம் பணியாளர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியம் அடைவதோடு பணியாளர்களின் செயல்திறனும் அதிகரிக்கும் என ஜேர்மனி நாடு எதிர்பார்க்கிறது. தொழிற்சங்கங்கள் 4 நாள் வேலையை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில் சோதனை நடைமுறையாக நாளை முதல் இது அமுல்படுத்தப்படுகிறது. இது நல்ல பலன்களை தரும் என தொழிற்சங்கங்களும் அரசும் எதிர்பார்க்கின்றன. இந்த சோதனையில் ஜேர்மனி நாட்டில் உள்ள முக்கிய 45 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்வது ஒரு நிறுவனத்தின் உற்பத்தி திறனை அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என ஜேர்மனி எதிர்பார்க்கிறது. இந்த சோதனை அடுத்த ஆறு மாதங்களுக்கு ஜேர்மனியில் நடைமுறைபடுத்தப்படுகிறது. உற்பத்தி திறனை அதிகரிப்பதன் மூலம் ஜேர்மனியில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்சினையும் தீர்வுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெல்ஜியத்தில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். வாரத்தில் 40 மணி நேரம் வேலை. நெதர்லாந்தில் வாரத்திற்கு 29 மணிநேரம் மட்டுமே மக்கள் வேலை செய்கிறார்கள். இந்த நடைமுறைகள் நல்ல பலன்களை அளிப்பதாக பல நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/290049
-
அமெரிக்க செனட் விசாரணையில் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்ட மார்க் ஜூக்கர்பெர்க்
பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க செனட் சபையில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின்போது, சமூக ஊடகங்களால் தங்கள் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகப் புகாரளித்த குடும்பத்தினரிடம், மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கோரினார். இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கை நிர்வகிக்கும் ஜூக்கர்பெர்க், புகாரளித்த குடும்பத்தினரை நோக்கி நீங்கள் பட்ட துயரத்தை வேறு யாரும் படக்கூடாது என்றார். மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் டிக்டாக், ஸ்னாப், எக்ஸ், டிஸ்கார்ட் நிறுவனங்களின் தலைவர்களும் செனட் சபையின் இரு கட்சிகளைச் சேர்ந்த செனட்டர்களால் கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஆன்லைன் தளங்களில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதை அறிய அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் விரும்பினர். சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் விஷயங்களுக்கு அந்தந்த நிறுவனங்களே பொறுப்பேற்கும் விதமாக ஒரு சட்டத்தை இயற்ற தற்போது அமெரிக்க காங்கிரஸ் பரிசீலித்து வருகிறது. கடந்த புதன்கிழமை அன்று தொழில்நுட்ப நிறுவன தலைவர்களைக் கேள்வி கேட்பதற்கான ஓர் அரிய வாய்ப்பு அமெரிக்க செனட்டர்களுக்கு கிடைத்தது. அமெரிக்க செனட் சபை விசாரணை மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் டிக்டாக் தலைமை நிர்வாக அதிகாரி ஷௌ ஜி செவ் ஆகியோர் தானாக முன்வந்து சாட்சியமளிக்க ஒப்புக்கொண்டனர். ஆனால் ஸ்னாப், எக்ஸ் (முன்னர் ட்விட்டர்), மெசேஜிங் தளமான டிஸ்கார்டின் தலைவர்கள் முதலில் செனட் சபை விசாரணைக்கு வர மறுத்தனர். பின்னர் கண்டிப்பாக விசாரணைக்கு வர வேண்டுமென அரசு ஆணைகள் அவர்களுக்கு அனுப்பப்பட்டன. விசாரணையின்போது ஐந்து தொழில்நுட்ப தலைவர்களின் இருக்கைகளுக்குப் பின்னால், சமூக ஊடக பதிவுகளின் விளைவாக தங்கள் குழந்தைகள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொண்டதாக அல்லது தற்கொலை செய்துகொண்டதாகப் புகாரளித்த குடும்பங்கள் அமர்ந்திருந்தனர். நிறுவன தலைவர்கள் உள்ளே நுழைந்தபோது அவர்களிடம் இருந்த எரிச்சல், சட்டமியற்றுபவர்கள் நிறுவன தலைவர்களிடம் கடினமான கேள்விகளைக் கேட்டபோது கைதட்டியது என அந்தக் குடும்பங்கள் தங்கள் உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்தினர். பெரும்பாலும் விசாரணையின்போது ஆன்லைன் பாலியல் சுரண்டலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டன. ஐந்து சக்தி வாய்ந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை சாதகமாகப் பயன்படுத்தி செனட்டர்கள் பல்வேறு கடினமான கேள்விகளையும் கேட்டனர். சீன நிறுவனமான பைட் டான்ஸுக்கு சொந்தமானது டிக்டாக். அதன் தலைவர் ஷௌ ஜி செவ்விடம் அமெரிக்க பயனர்கள் குறித்த தரவுகள் சீன அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறதா என்று கேட்கப்பட்டது, அதை அவர் மறுத்தார். படக்குறிப்பு, உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் தொழில்நுட்ப நிறுவன தலைவர்கள் சிங்கப்பூரை சேர்ந்த செவ்விடம், "எப்போதாவது நீங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்ததுண்டா?" என அமெரிக்க செனட்டர் டாம் காட்டன் கேட்டார். அதற்கு செவ் "இல்லை செனட்டர், என் நாடு சிங்கப்பூர்" எனக் கூறினார். "நீங்கள் எப்போதாவது சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஏதேனும் தொடர்பில் இருந்ததுண்டா?" என காட்டன் மீண்டும் கேட்டார். அதற்கு செவ், "இல்லை செனட்டர். மீண்டும் சொல்கிறேன், என் நாடு சிங்கப்பூர்" எனக் கூறினார். மூன்று இளம் குழந்தைகளின் தந்தையாக, இந்த விசாரணையில் விவாதிக்கப்படும் பிரச்னைகள் "மோசமானவை மற்றும் ஒவ்வொரு பெற்றோரின் கொடுங்கனவாகவும் அவை உள்ளன" என்று தனக்குத் தெரியும் என்றும் செவ் கூறினார். சிங்கப்பூரில் உள்ள 13 வயதுக்கு உட்பட்டவர்கள் டிக்டாக் கணக்குகளை உருவாக்குவதைத் தடுக்கும் விதிகளின் காரணமாக, தனது சொந்த பிள்ளைகள் டிக்டாக் பயன்படுத்துவதில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார். காங்கிரஸில் எட்டாவது முறையாக சாட்சியமளிக்கும், மெட்டாவின் தலைமை நிர்வாகி மார்க ஜூக்கர்பெர்க் தான் அதிக கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டார். "எச்சரிக்கை: குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான உள்ளடக்கங்கள் இதில் இருக்கலாம். ஆனால் பயனர்கள் விரும்பினால் இதைப் பார்க்கலாம்," என்ற ஒரு இன்ஸ்டாகிராம் அறிவிப்பை ஜூக்கர்பெர்கிடம் காட்டி, குடியரசுக் கட்சியின் செனட்டர் டெட் குரூஸ், "மிஸ்டர் ஜூக்கர்பெர்க், நீங்கள் என்ன நினைத்து இதைச் செய்தீர்கள்?" என்றார். "இத்தகைய அறிவிப்புக்குப் பின்னால் இருக்கும் அடிப்படை அறிவியலானது, அதைத் தடுப்பதற்குப் பதிலாக, அதை நோக்கிப் பயனர்களை வழிநடத்துவதற்குப் பெரும்பாலும் உதவியாக இருக்கிறது" என்றார். மார்க் ஜூக்கர்பெர்க், "தனிப்பட்ட முறையில் இதை பரிசீலிப்பதாக" உறுதியளித்தார். குடியரசுக் கட்சியின் செனட்டர் ஜோஷ் ஹவ்லி உடனான மற்றொரு விவாதத்தின்போது, பின்னால் அமர்ந்திருக்கும் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க அழைக்கப்பட்டார் மார்க் ஜூக்கர்பெர்க். அவர் எழுந்து, பார்வையாளர்களை நோக்கி, "நீங்கள் கடந்து வந்த அனைத்திற்கும் நான் வருந்துகிறேன், இது பயங்கரமானது. உங்கள் குடும்பங்கள் அனுபவித்த துயரங்களை யாரும் அனுபவிக்கக் கூடாது," என்றார். ஆன்லைன் பாதுகாப்பில் முன்னேற்றம் இல்லாததால் செனட்டர்கள் விரக்தி படக்குறிப்பு, டிக்டாக் தலைமை நிர்வாக அதிகாரி ஷௌ ஜி செவ் தற்போது அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஆன்லைன் பாதுகாப்பு சட்டத்திற்கு நிறுவனங்களின் அணுகுமுறை என்ன என்பதே இந்த விசாரணையின் முக்கிய அம்சமாக இருந்தது. டிஸ்கார்டின் தலைவர் ஜேசன் சிட்ரான் மற்றும் குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் ஆகியோருக்கு இடையிலான பதற்றமான விவாதத்தில் இது வெளிப்பட்டது. கிரஹாம், ஆன்லைன் பாதுகாப்பு தொடர்பான காங்கிரஸின் பல மசோதாக்களை பட்டியலிட்டு, சிட்ரான் அவற்றை ஆதரிக்கிறாரா இல்லையா என்று கேட்டார். இந்தக் கேள்வி உட்பட வேறு சில கேள்விகளுக்கும் பதிலளிப்பதில் டிஸ்கார்ட் தலைவர் சிட்ரானுக்கு தயக்கம் இருந்தது. அதே நேரத்தில் அவர் பதிலளிக்கப் போதுமான வாய்ப்பையும் கிரஹாம் கொடுக்கவில்லை. இறுதியாக "நீங்கள் இங்கே விசாரணையில் இருக்கிறீர்கள். பிரச்னையைத் தீர்க்க இவர்களுக்காக (நிறுவன தலைவர்கள்) நாம் காத்திருந்தால், சாகும் வரை காத்திருக்க வேண்டியது தான்," என்று கிரஹாம் கூறினார். விசாரணைக்கு முன்னதாக, மெட்டா புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்தது. சிறார்களுக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சரில் அந்நியர்கள் யாரும் செய்திகளை அனுப்ப முடியாது என்ற புதிய விதியும் அதில் இருக்கிறது. சமூக ஊடகத் துறை ஆய்வாளர் மாட் நவர்ரா பிபிசியிடம், "பல அமெரிக்க அரசியல் பிரமாண்டங்கள்" மற்றும் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டதன் மூலம் கிடைத்த சரியான வாய்ப்பு போன்ற பல நிகழ்வுகள் இந்த விசாரணையில் நடந்ததாகக் கூறினார். சமூக தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கு இருதரப்பு சட்ட ஒத்துழைப்பின் அவசியத்தை செனட்டர்கள் ஒப்புக்கொண்ட போதிலும், அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்விக்கான பதில் தெளிவாக இல்லை என்றும் அவர் கூறினார். "இதுபோன்ற விசாரணைகளை மீண்டும் மீண்டும் பார்த்துவிட்டோம். அவை பெரும்பாலும், குறிப்பிடத்தக்க அல்லது கணிசமான ஒழுங்குமுறைகளை இதுவரை உருவாக்கவில்லை. நாம் 2024இல் இருக்கிறோம். சமூக ஊடக நிறுவனங்களைப் பொறுத்தவரை, விசாரணைகளின்போது சுட்டிக்காட்டப்பட்டபடி, அமெரிக்காவில் நடைமுறையில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை," என்று அவர் கூறினார். நிறுவன தலைவர்கள் தங்கள் தளங்களில் உள்ளடக்கத்தைத் தணிக்கை செய்வதற்கு எத்தனை பேரை வேலைக்கு அமர்த்தினார்கள் என்பதையும் வெளிப்படுத்தினர். 'குழந்தைகள் ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தை' நிறைவேற்ற வலியுறுத்தல் இணையத்தில் மிகப்பெரிய அளவு பயனர்களைக் கொண்டுள்ள மெட்டா மற்றும் டிக்டாக், தங்களிடம் தலா 40,000 உள்ளடக்க மதிப்பீட்டாளர்கள் இருப்பதாகவும், ஸ்னாப் 2,300 என்றும், எக்ஸ் 2,000 என்றும், டிஸ்கார்ட் சிறிய நிறுவனம் என்பதால் "நூற்றுக்கணக்கில்" மட்டுமே மதிப்பீட்டாளர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறியது. டிஸ்கார்ட் என்பது ஒரு மெசேஜிங் தளம். இது எவ்வாறு அதன் தளம் முழுவதும் "சிறார் துஷ்பிரயோகத்தை" கண்டறிந்து தடுக்கிறது என்பது குறித்து முன்னர் கேள்வி எழுப்பப்பட்டது. விசாரணைக்குப் பிறகு, அறையில் இருந்த சில பெற்றோர்கள் வெளியே பேரணி நடத்தினர். சமூக ஊடக நிறுவனங்களைப் பொறுப்பேற்கச் செய்யும் சட்டத்தை அவசரமாக நிறைவேற்றுமாறு பலர் சட்டமியற்றுபவர்களுக்கு அழைப்பு விடுத்தனர். "நான் நினைத்ததைப் போலவே, இன்று நாம் பேசும் இந்தத் தீங்குகள் தங்கள் குடும்பங்களைப் பாதிக்காது என்று பல பெற்றோர்கள் தொடர்ந்து நினைக்கிறார்கள்," என்று ஜோன் போகார்ட் கூறினார். மே 2019இல் ஒரு டிக்டாக் டிரெண்டில் பங்கேற்றதன் மூலமாகத் தனது மகன் மேசன் இறந்தார் என அவர் கூறினார். "இந்தத் தீங்குகள் எங்கள் குழந்தைகளைப் பாதிக்கிறது, எங்களிடம் சாட்சியங்கள் உள்ளன. 'குழந்தைகள் ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தை' சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றுவதற்கான நேரம் இது. நவம்பர் 2023இல் காங்கிரஸ் சபையில் சாட்சியமளித்த முன்னாள் மூத்த ஊழியர் ஆர்டுரோ பெஜரும் அங்கு இருந்தார். அவர் பிபிசியிடம், "பதின்ம வயதினருக்கான பாதுகாப்பான சூழலை வழங்கும் பொறுப்பில் இருந்து மெட்டா நிறுவனம் தப்பிக்க முயல்கிறது. பதின்பருவ பிள்ளைகள் தாங்கள் சந்தித்த கொடுமைகளைச் சொல்ல அந்தத் தளத்தில் வசதி இல்லை. அது இல்லாமல் பதின்ம வயதினருக்கு மெட்டா எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்?" எனக் கூறினார். இன்றைய விசாரணையின்போது, ஆன்லைனில் பதின்ம வயதினருக்கான பாதுகாப்பான சூழலை ஆதரிக்க "30க்கும் மேற்பட்ட புதிய கருவிகளை" அறிமுகப்படுத்தியுள்ளதாக மெட்டா கூறியது. https://www.bbc.com/tamil/articles/cek721xpxlno