Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. ஜேர்மனியில் நாளை முதல் அமுலுக்கு வருகிறது 4 நாள் வேலை திட்டம் உலகம் முழுவதும் பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தை செயற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், அவுஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் குறைந்த நேரம் மட்டுமே வேலை செய்யப்படுகின்றன. இந்தப் பட்டியலில் தற்போது ஜேர்மனி நாடும் இணைந்து உள்ளது. ஜேர்மனி நாட்டில் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு புதிய சோதனை முயற்சியை மேற்கொள்ளப்பட இருக்கிறது. நாளை 1 ஆம் திகதி முதல், வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை என்ற திட்டம் நடைமுறைக்கு வருகிறது. வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. 4 நாட்கள் வேலை செய்வதன் மூலம் பணியாளர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியம் அடைவதோடு பணியாளர்களின் செயல்திறனும் அதிகரிக்கும் என ஜேர்மனி நாடு எதிர்பார்க்கிறது. தொழிற்சங்கங்கள் 4 நாள் வேலையை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில் சோதனை நடைமுறையாக நாளை முதல் இது அமுல்படுத்தப்படுகிறது. இது நல்ல பலன்களை தரும் என தொழிற்சங்கங்களும் அரசும் எதிர்பார்க்கின்றன. இந்த சோதனையில் ஜேர்மனி நாட்டில் உள்ள முக்கிய 45 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்வது ஒரு நிறுவனத்தின் உற்பத்தி திறனை அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என ஜேர்மனி எதிர்பார்க்கிறது. இந்த சோதனை அடுத்த ஆறு மாதங்களுக்கு ஜேர்மனியில் நடைமுறைபடுத்தப்படுகிறது. உற்பத்தி திறனை அதிகரிப்பதன் மூலம் ஜேர்மனியில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்சினையும் தீர்வுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெல்ஜியத்தில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். வாரத்தில் 40 மணி நேரம் வேலை. நெதர்லாந்தில் வாரத்திற்கு 29 மணிநேரம் மட்டுமே மக்கள் வேலை செய்கிறார்கள். இந்த நடைமுறைகள் நல்ல பலன்களை அளிப்பதாக பல நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/290049
  2. பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க செனட் சபையில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின்போது, சமூக ஊடகங்களால் தங்கள் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகப் புகாரளித்த குடும்பத்தினரிடம், மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கோரினார். இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கை நிர்வகிக்கும் ஜூக்கர்பெர்க், புகாரளித்த குடும்பத்தினரை நோக்கி நீங்கள் பட்ட துயரத்தை வேறு யாரும் படக்கூடாது என்றார். மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் டிக்டாக், ஸ்னாப், எக்ஸ், டிஸ்கார்ட் நிறுவனங்களின் தலைவர்களும் செனட் சபையின் இரு கட்சிகளைச் சேர்ந்த செனட்டர்களால் கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஆன்லைன் தளங்களில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதை அறிய அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் விரும்பினர். சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் விஷயங்களுக்கு அந்தந்த நிறுவனங்களே பொறுப்பேற்கும் விதமாக ஒரு சட்டத்தை இயற்ற தற்போது அமெரிக்க காங்கிரஸ் பரிசீலித்து வருகிறது. கடந்த புதன்கிழமை அன்று தொழில்நுட்ப நிறுவன தலைவர்களைக் கேள்வி கேட்பதற்கான ஓர் அரிய வாய்ப்பு அமெரிக்க செனட்டர்களுக்கு கிடைத்தது. அமெரிக்க செனட் சபை விசாரணை மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் டிக்டாக் தலைமை நிர்வாக அதிகாரி ஷௌ ஜி செவ் ஆகியோர் தானாக முன்வந்து சாட்சியமளிக்க ஒப்புக்கொண்டனர். ஆனால் ஸ்னாப், எக்ஸ் (முன்னர் ட்விட்டர்), மெசேஜிங் தளமான டிஸ்கார்டின் தலைவர்கள் முதலில் செனட் சபை விசாரணைக்கு வர மறுத்தனர். பின்னர் கண்டிப்பாக விசாரணைக்கு வர வேண்டுமென அரசு ஆணைகள் அவர்களுக்கு அனுப்பப்பட்டன. விசாரணையின்போது ஐந்து தொழில்நுட்ப தலைவர்களின் இருக்கைகளுக்குப் பின்னால், சமூக ஊடக பதிவுகளின் விளைவாக தங்கள் குழந்தைகள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொண்டதாக அல்லது தற்கொலை செய்துகொண்டதாகப் புகாரளித்த குடும்பங்கள் அமர்ந்திருந்தனர். நிறுவன தலைவர்கள் உள்ளே நுழைந்தபோது அவர்களிடம் இருந்த எரிச்சல், சட்டமியற்றுபவர்கள் நிறுவன தலைவர்களிடம் கடினமான கேள்விகளைக் கேட்டபோது கைதட்டியது என அந்தக் குடும்பங்கள் தங்கள் உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்தினர். பெரும்பாலும் விசாரணையின்போது ஆன்லைன் பாலியல் சுரண்டலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டன. ஐந்து சக்தி வாய்ந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை சாதகமாகப் பயன்படுத்தி செனட்டர்கள் பல்வேறு கடினமான கேள்விகளையும் கேட்டனர். சீன நிறுவனமான பைட் டான்ஸுக்கு சொந்தமானது டிக்டாக். அதன் தலைவர் ஷௌ ஜி செவ்விடம் அமெரிக்க பயனர்கள் குறித்த தரவுகள் சீன அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறதா என்று கேட்கப்பட்டது, அதை அவர் மறுத்தார். படக்குறிப்பு, உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் தொழில்நுட்ப நிறுவன தலைவர்கள் சிங்கப்பூரை சேர்ந்த செவ்விடம், "எப்போதாவது நீங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்ததுண்டா?" என அமெரிக்க செனட்டர் டாம் காட்டன் கேட்டார். அதற்கு செவ் "இல்லை செனட்டர், என் நாடு சிங்கப்பூர்" எனக் கூறினார். "நீங்கள் எப்போதாவது சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஏதேனும் தொடர்பில் இருந்ததுண்டா?" என காட்டன் மீண்டும் கேட்டார். அதற்கு செவ், "இல்லை செனட்டர். மீண்டும் சொல்கிறேன், என் நாடு சிங்கப்பூர்" எனக் கூறினார். மூன்று இளம் குழந்தைகளின் தந்தையாக, இந்த விசாரணையில் விவாதிக்கப்படும் பிரச்னைகள் "மோசமானவை மற்றும் ஒவ்வொரு பெற்றோரின் கொடுங்கனவாகவும் அவை உள்ளன" என்று தனக்குத் தெரியும் என்றும் செவ் கூறினார். சிங்கப்பூரில் உள்ள 13 வயதுக்கு உட்பட்டவர்கள் டிக்டாக் கணக்குகளை உருவாக்குவதைத் தடுக்கும் விதிகளின் காரணமாக, தனது சொந்த பிள்ளைகள் டிக்டாக் பயன்படுத்துவதில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார். காங்கிரஸில் எட்டாவது முறையாக சாட்சியமளிக்கும், மெட்டாவின் தலைமை நிர்வாகி மார்க ஜூக்கர்பெர்க் தான் அதிக கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டார். "எச்சரிக்கை: குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான உள்ளடக்கங்கள் இதில் இருக்கலாம். ஆனால் பயனர்கள் விரும்பினால் இதைப் பார்க்கலாம்," என்ற ஒரு இன்ஸ்டாகிராம் அறிவிப்பை ஜூக்கர்பெர்கிடம் காட்டி, குடியரசுக் கட்சியின் செனட்டர் டெட் குரூஸ், "மிஸ்டர் ஜூக்கர்பெர்க், நீங்கள் என்ன நினைத்து இதைச் செய்தீர்கள்?" என்றார். "இத்தகைய அறிவிப்புக்குப் பின்னால் இருக்கும் அடிப்படை அறிவியலானது, அதைத் தடுப்பதற்குப் பதிலாக, அதை நோக்கிப் பயனர்களை வழிநடத்துவதற்குப் பெரும்பாலும் உதவியாக இருக்கிறது" என்றார். மார்க் ஜூக்கர்பெர்க், "தனிப்பட்ட முறையில் இதை பரிசீலிப்பதாக" உறுதியளித்தார். குடியரசுக் கட்சியின் செனட்டர் ஜோஷ் ஹவ்லி உடனான மற்றொரு விவாதத்தின்போது, பின்னால் அமர்ந்திருக்கும் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க அழைக்கப்பட்டார் மார்க் ஜூக்கர்பெர்க். அவர் எழுந்து, பார்வையாளர்களை நோக்கி, "நீங்கள் கடந்து வந்த அனைத்திற்கும் நான் வருந்துகிறேன், இது பயங்கரமானது. உங்கள் குடும்பங்கள் அனுபவித்த துயரங்களை யாரும் அனுபவிக்கக் கூடாது," என்றார். ஆன்லைன் பாதுகாப்பில் முன்னேற்றம் இல்லாததால் செனட்டர்கள் விரக்தி படக்குறிப்பு, டிக்டாக் தலைமை நிர்வாக அதிகாரி ஷௌ ஜி செவ் தற்போது அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஆன்லைன் பாதுகாப்பு சட்டத்திற்கு நிறுவனங்களின் அணுகுமுறை என்ன என்பதே இந்த விசாரணையின் முக்கிய அம்சமாக இருந்தது. டிஸ்கார்டின் தலைவர் ஜேசன் சிட்ரான் மற்றும் குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் ஆகியோருக்கு இடையிலான பதற்றமான விவாதத்தில் இது வெளிப்பட்டது. கிரஹாம், ஆன்லைன் பாதுகாப்பு தொடர்பான காங்கிரஸின் பல மசோதாக்களை பட்டியலிட்டு, சிட்ரான் அவற்றை ஆதரிக்கிறாரா இல்லையா என்று கேட்டார். இந்தக் கேள்வி உட்பட வேறு சில கேள்விகளுக்கும் பதிலளிப்பதில் டிஸ்கார்ட் தலைவர் சிட்ரானுக்கு தயக்கம் இருந்தது. அதே நேரத்தில் அவர் பதிலளிக்கப் போதுமான வாய்ப்பையும் கிரஹாம் கொடுக்கவில்லை. இறுதியாக "நீங்கள் இங்கே விசாரணையில் இருக்கிறீர்கள். பிரச்னையைத் தீர்க்க இவர்களுக்காக (நிறுவன தலைவர்கள்) நாம் காத்திருந்தால், சாகும் வரை காத்திருக்க வேண்டியது தான்," என்று கிரஹாம் கூறினார். விசாரணைக்கு முன்னதாக, மெட்டா புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்தது. சிறார்களுக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சரில் அந்நியர்கள் யாரும் செய்திகளை அனுப்ப முடியாது என்ற புதிய விதியும் அதில் இருக்கிறது. சமூக ஊடகத் துறை ஆய்வாளர் மாட் நவர்ரா பிபிசியிடம், "பல அமெரிக்க அரசியல் பிரமாண்டங்கள்" மற்றும் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டதன் மூலம் கிடைத்த சரியான வாய்ப்பு போன்ற பல நிகழ்வுகள் இந்த விசாரணையில் நடந்ததாகக் கூறினார். சமூக தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கு இருதரப்பு சட்ட ஒத்துழைப்பின் அவசியத்தை செனட்டர்கள் ஒப்புக்கொண்ட போதிலும், அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்விக்கான பதில் தெளிவாக இல்லை என்றும் அவர் கூறினார். "இதுபோன்ற விசாரணைகளை மீண்டும் மீண்டும் பார்த்துவிட்டோம். அவை பெரும்பாலும், குறிப்பிடத்தக்க அல்லது கணிசமான ஒழுங்குமுறைகளை இதுவரை உருவாக்கவில்லை. நாம் 2024இல் இருக்கிறோம். சமூக ஊடக நிறுவனங்களைப் பொறுத்தவரை, விசாரணைகளின்போது சுட்டிக்காட்டப்பட்டபடி, அமெரிக்காவில் நடைமுறையில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை," என்று அவர் கூறினார். நிறுவன தலைவர்கள் தங்கள் தளங்களில் உள்ளடக்கத்தைத் தணிக்கை செய்வதற்கு எத்தனை பேரை வேலைக்கு அமர்த்தினார்கள் என்பதையும் வெளிப்படுத்தினர். 'குழந்தைகள் ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தை' நிறைவேற்ற வலியுறுத்தல் இணையத்தில் மிகப்பெரிய அளவு பயனர்களைக் கொண்டுள்ள மெட்டா மற்றும் டிக்டாக், தங்களிடம் தலா 40,000 உள்ளடக்க மதிப்பீட்டாளர்கள் இருப்பதாகவும், ஸ்னாப் 2,300 என்றும், எக்ஸ் 2,000 என்றும், டிஸ்கார்ட் சிறிய நிறுவனம் என்பதால் "நூற்றுக்கணக்கில்" மட்டுமே மதிப்பீட்டாளர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறியது. டிஸ்கார்ட் என்பது ஒரு மெசேஜிங் தளம். இது எவ்வாறு அதன் தளம் முழுவதும் "சிறார் துஷ்பிரயோகத்தை" கண்டறிந்து தடுக்கிறது என்பது குறித்து முன்னர் கேள்வி எழுப்பப்பட்டது. விசாரணைக்குப் பிறகு, அறையில் இருந்த சில பெற்றோர்கள் வெளியே பேரணி நடத்தினர். சமூக ஊடக நிறுவனங்களைப் பொறுப்பேற்கச் செய்யும் சட்டத்தை அவசரமாக நிறைவேற்றுமாறு பலர் சட்டமியற்றுபவர்களுக்கு அழைப்பு விடுத்தனர். "நான் நினைத்ததைப் போலவே, இன்று நாம் பேசும் இந்தத் தீங்குகள் தங்கள் குடும்பங்களைப் பாதிக்காது என்று பல பெற்றோர்கள் தொடர்ந்து நினைக்கிறார்கள்," என்று ஜோன் போகார்ட் கூறினார். மே 2019இல் ஒரு டிக்டாக் டிரெண்டில் பங்கேற்றதன் மூலமாகத் தனது மகன் மேசன் இறந்தார் என அவர் கூறினார். "இந்தத் தீங்குகள் எங்கள் குழந்தைகளைப் பாதிக்கிறது, எங்களிடம் சாட்சியங்கள் உள்ளன. 'குழந்தைகள் ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தை' சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றுவதற்கான நேரம் இது. நவம்பர் 2023இல் காங்கிரஸ் சபையில் சாட்சியமளித்த முன்னாள் மூத்த ஊழியர் ஆர்டுரோ பெஜரும் அங்கு இருந்தார். அவர் பிபிசியிடம், "பதின்ம வயதினருக்கான பாதுகாப்பான சூழலை வழங்கும் பொறுப்பில் இருந்து மெட்டா நிறுவனம் தப்பிக்க முயல்கிறது. பதின்பருவ பிள்ளைகள் தாங்கள் சந்தித்த கொடுமைகளைச் சொல்ல அந்தத் தளத்தில் வசதி இல்லை. அது இல்லாமல் பதின்ம வயதினருக்கு மெட்டா எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்?" எனக் கூறினார். இன்றைய விசாரணையின்போது, ஆன்லைனில் பதின்ம வயதினருக்கான பாதுகாப்பான சூழலை ஆதரிக்க "30க்கும் மேற்பட்ட புதிய கருவிகளை" அறிமுகப்படுத்தியுள்ளதாக மெட்டா கூறியது. https://www.bbc.com/tamil/articles/cek721xpxlno
  3. தெற்கில் ஒரு சட்டம்; வடக்கு, கிழக்கில் ஒரு சட்டம் என்றால் பிரித்து தனிநாடு தரவேண்டும் - கோ. கருணாகரன் 01 FEB, 2024 | 05:07 PM சட்டம் இல்லாத நாட்டில் ஒரு சட்டத்துக்கான அமைச்சர் தேவையில்லை. தெற்கில் ஒரு சட்டம்; வடக்கு, கிழக்கில் ஒரு சட்டத்தை அமுல்படுத்துவீர்களாக இருந்தால் வடக்கு, கிழக்கை பிரித்து தனிநாடாக தர வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்காக உயிரிழந்த அனைத்து தமிழ் மக்களுக்காக எவ்விதம் அச்சுறுத்தப்பட்டாலும், எத்தனை பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டாலும், தொடர்ச்சியாக நினைவேந்தல்களை செய்வோம் என பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தலை கடந்த 2022ஆம் ஆண்டில் அனுஷ்டித்த கோ. கருணாகரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் ஆகியோருக்கு எதிராக, நீதிமன்ற தடை உத்தரவை மீறி நினைவேந்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.முகமட் ஹம்சா முன்னிலையில் நேற்று புதன்கிழமை (31) விசாரணக்கு எடுக்கப்பட்டது. அவ்வேளை, கோ. கருணாகரன், த.சுரேஸ் ஆகிய இருவரும் நீதிமன்றில் ஆஜராயினர். அடுத்து, விசாரணையின் பின்னர், இந்த வழக்கு எதிர்வரும் மே 5ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதவான் உத்தரவிட்டார். அதன் பின்னர், கருணாகரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில், கடந்த 1987ஆம், 1991ஆம் ஆண்டு கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்ட 152 பேருக்காக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் ஜனவரி 28ஆம் திகதி வருடா வருடம் நினைவுகூருவது வழக்கம். 2022 ஜனவரி 28 வழமை போல நானும் எனது கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் சென்று நினைவேந்தலுக்கு விளக்கேற்றினோம். எந்தவிதமான தடை உத்தரவும் கிடைத்திருக்கவில்லை. அதன் பின்னர், எனக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸுக்கும் பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவு வழங்கினர். 2021, 2022, 2023, 2024 விளக்கேற்றினோம். எந்த விதமான பிரச்சினையும் இல்லை. ஆனால், 2022ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த காலத்தில், அவரின் உத்தரவின் பெயரில் தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. இந்த நாடு ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டிலே ஒரு சட்டம் இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. இந்த நாட்டை ஆள வருகின்ற ஆட்சியாளர்கள், அரச அதிபர்கள் தாங்கள் நினைத்ததையே சட்டமாக கொண்டு நடத்துவதுதான் ஒரு முறையாக இருக்கிறது. இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றதா? அல்லது ஒரே நாடு என்ற சட்ட முறை இருக்கின்றதா? என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும். வடக்கு, கிழக்கில் இறந்தவர்களுக்கு நாங்கள் நினைவுகூர, விளக்கேற்ற முடியாது என கூறினால், தெற்கில் இந்த நாட்டில் பெரும் கிளர்ச்சி ஏற்படுத்திய ஜே.வி.பி தங்களது தலைவர்கள் மற்றும் மரணித்தவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் சிலை வைத்து நினைவுகூரலாம் என்றால் ஏன் வடக்கு, கிழக்கில் இப்படியான தடைகள் இருக்கிறது? இந்த தடைகளை மாறி மாறி ஆட்சிக்கு வருபவர்கள், தான் விரும்பியபடி செய்பவர்களாக இருந்தால் இந்த நாட்டில் ஜனநாயக சட்டமும் இல்லை. ஒரே நாட்டில் ஒரே சட்டத்தை பேணி பாதுகாக்க முடியாவிட்டால், ஒரே நாடு தேவையில்லை. அந்த நிலைமைக்கு நீங்கள் எங்களை தள்ளிவிடுகின்றீர்கள். தெற்கிலே நடைபெறுவது வட, கிழக்கில் நடைபெற வேண்டும். ஒரே நாடு ஒரே சட்டமாக இருந்தால் இப்படியான தொந்தரவுகளை கொடுக்கக்கூடாது. தமிழ் தேசியத்துடன் இணைந்திருக்கும் தமிழ் தேசிய தலைவர்களை எங்கள் இறந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்தக்கூடாது என அச்சுறுத்துவதன் மூலம் நாங்கள் இதை நிறுத்தப் போவதில்லை. எங்களுக்காக உயிர் நீத்தவர்களை தொடர்ச்சியாக நாங்கள் நினைவுகூருவோம். அவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்காக மரணித்தவர்கள் அதில் பொதுமக்களும் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர். எனவே எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும், எத்தனை பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தாலும், தொடர்ச்சியாக நினைவேந்தல்களில் ஈடுபட்டுக்கொண்டே இருப்போம். அதை செய்ய வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது என்றார். https://www.virakesari.lk/article/175330
  4. கல்விக்கும் சுகாதாரத்திற்கும் இல்லாத பணம் அடக்குமுறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது - சஜித் பிரேமதாச Published By: VISHNU 01 FEB, 2024 | 03:40 PM நாட்டில் கல்வி,சுகாதாரம் போன்றவற்றுக்கு அரசாங்கத்தினால் நிதி ஒதுக்க முடியாவிட்டாலும் மக்களை அடக்குவதற்காக கண்ணீர் புகை, இறப்பர் தோட்டாக்கள், நீர் தாரை தாக்குதலை நடத்தும் இயந்திரம் வாங்குவதற்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் வழங்கப்பட்ட மதிய உணவைக் கூட வழங்குவதற்கு அரசாங்கத்திடம் பணம் இல்லாவிட்டாலும், மக்கள் அடக்குமுறைக்குட்படுத்த பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பாடசாலை மாணவர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 31 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய போக்கு வரத்து வீதி ஒழுங்குத் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது. அரசாங்கம் இவ்வாறு செய்யும் போது, 31 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையிலும் அதன் பிறகும் ஐக்கிய மக்கள் சக்தி மாத்தறை,காலி மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் தொடர்ச்சியாக 17 பாடசாலைகளுக்கு 17 ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்குகின்றது. பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, உண்மையான இலவச கல்வியின் அர்த்தப்பாட்டை நனவாக்குவதே இதன் நோக்கம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 74 ஆவது கட்டமாக, மாத்தறை, கொம்பத்தன விஜயபா கனிஷ்ட வித்தியலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் புதன்கிழமை (31) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 88 மற்றும் 89 இல் ஏற்பட்ட பாரிய உள்நாட்டு கிளர்ச்சிகள் காரணமாக அப்போதைய ஜனாதிபதி இளைஞர் ஆணைக்குழுவை நியமித்தார். அமைச்சர் ஜி.எல். பீரிஸும் அதன் அங்கத்தவர்களில் ஒருவராவார். இந்த ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம், நகரத்துக்கு ஒரு கவனிப்பும், கிராமத்துக்கு வேறு ஒரு கவனிப்புமே இளைஞர்களின் அமைதியின்மைக்குக் காரணம் என அடையாளப்படுத்தின. இந்தக் குறைபாட்டைக் கண்டறிந்து, கிராமப்புறங்களில் கல்வி அபிவிருத்திக்கு பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, உடனடியாகச் செயல்படுத்தப்பட்டது. என்றாலும் இது 1993 வரை மட்டுமே முன்னெடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இன்று 220 இலட்சம் மக்களும் நாட்டில் நிலவும் பொருளாதார,சமூக,அரசியல் பிரச்சினைகளின் தீர்வுக்காக காத்திருக்கின்றனர்.இவ்வாறான தீர்வுகளை வழங்கக்கூடிய குழு யார் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். அரசியல் நாடகங்களுக்கு ஏமாற வேண்டாம், நாட்டுக்கு தீர்வுகளும் பதில்களுமே தேவை. அதிகாரம் இல்லாமல் முழு நாட்டிற்கும் சேவை செய்த ஒரே அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே என்றும்,முன்னைய எதிர்க்கட்சிகளோ அல்லது தற்போதைய எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளோ இவ்வாறான சேவையை செய்யவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். நாட்டின் 9 மாகாண சபைகளை மையமாகக் கொண்டு 9 புதிய தாதியர் கல்லூரிகளை ஆரம்பித்து,இதை அரச தனியார் கூட்டுத் திட்டமாக நடைமுறைப்படுத்துவோம். இதனூடாக உயர்தர தாதியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி சிறந்த வாழ்க்கை தரத்தை உருவாக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். எனவே,நாட்டை புதிய தொழில்நுட்ப புரட்சிக்கும்,புதிய கல்வி முறையின் மூலம் கல்வியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் யுகத்திற்கும் இட்டுச்செல்லும் பாரிய அபிவிருத்தி பயணத்தின் முன்னோடிகளாக மாறுவதற்கு அனைவரையும் தயாராகுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/175325
  5. உ/த பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து ஆசிரியர்கள் விலகல்! கடந்த முறை வழங்கப்பட்ட 2,000 ரூபா கொடுப்பனவு இம்முறை 1,450 ரூபாவாக குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உ/த பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து ஆசிரியர்கள் இன்று விலகியுள்ளனர். உடனடியாக இதற்கு தீர்வு காணாவிட்டால் தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட போவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/290160
  6. ஐ.சி.சி. 19இன் கீழ் சுப்பர் 6 சுற்றில் அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ் வெற்றி 01 FEB, 2024 | 09:40 AM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் சுப்பர் 6 சுற்றின் இரண்டாம் நாளான இன்று புதன்கிழமை (31) அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய அணிகள் வெற்றிபெற்றன. டக்வேர்த் லூயிஸ் முறைமையில் அவுஸ்திரேலியா இலகு வெற்றி கிம்பர்லி, டயமண்ட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாம் குழுவுக்கான சுப்பர் 6 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 110 ஓட்டங்களால் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் அவுஸ்திரேலியா இலகுவாக வெற்றிகொண்டது. இந்த வெற்றியுடன் அரை இறுதியில் விளையாடும் வாய்ப்பை அவுஸ்திரேலியா அதிகரித்துக்கொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 266 ஓட்டங்களைக் குவித்தது. அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் ஹியூ வெய்ப்ஜென் 126 பந்துகளில் 15 பவுண்டறிகளுடன் 120 ஓட்டங்களை விளாசினார். ஹெரி டிக்சன் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி 53 ஓட்டங்களைப் பெற்றார். அவுஸ்திரேலியா ஒரு ஓட்டம் பெற்றிருந்தபோது முதல் விக்கெட்டை இழந்தது. எனினும் வெய்ப்ஜென், டிக்சன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 105 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறப்பான நிலையில் இட்டனர். அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழ 38ஆவது ஓவரில் அவுஸ்திரேலியா 5 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்று சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது. ஆனால், வெய்ப்ஜென், ஒலிவர் பீக் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். ஒலிவர் பீக் 25 ஓட்டங்களுடனும் ரெவ் மெக்மிலன் 19 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் தியோ வில்லி 42 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். 267 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 9.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 60 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடும் மின்னல் காரணமாக பிற்பகல் 2.45 மணியளவில் மத்தியஸ்தர்கள் ஆட்டத்தை இடைநிறுத்தினர். மின்னல் தொடர்ந்ததாலும் பிற்பகல் 3.50 மணிக்கு மழை பெய்ய ஆரம்பித்ததாலும் ஆட்டம் தொடர்ந்து தடைப்பட்டது. பிற்பகல் 5.10 மணி அளவில் ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் இங்கிலாந்தின் வெற்றி இலக்கு 24 ஓவர்களில் 215 ஓட்டங்கள் என திருத்தி அமைக்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்து 16.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 110 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் சார்லி அலிசன் (26), அணித் தலைவர் பென் மெக்கின்னி (22) ஆகிய இருவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் கெலம் விட்லர் 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ராவ் மெக்மிலன் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். தென் ஆபிரிக்கா 9 விக்கெட்களால் வெற்றி பொச்சேஸ்ட்ரூம், சென்வென் பார்க் அரங்கில் நடைபெற்ற இதே குழுவுக்கான மற்றொரு போட்டியில் ஸிம்பாப்வேயை 9 விக்கெட்களால் தென் ஆபிரிக்கா வெற்றிகொண்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 29.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றது. ரோனக் பட்டேல் 32 ஓட்டங்களையும் ரெயான் கம்வெம்பா 24 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் க்வெனா மெப்ஹக்கா 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ட்ரைஸ்டன் லுஸ் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 13.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 103 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. லிஹுவான் ட்ரே ப்ரிட்டோரியஸ் 53 ஓட்டங்களையும் ஸ்டீவ் ஸ்டோக் 37 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் 5 விக்கெட்களால் வெற்றி புளூம்பொன்டெய்ன், மங்குவாங் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாம் குழுவுக்கான 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண சுப்பர் 6 போட்டியில் நேபாளத்தை 5 விக்கெட்களால் பங்களாதேஷ் வெற்றிகொண்டது. அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பிஷால் பிக்ரம் கே.சி. 48 ஓட்டங்களையும் அணித் தலைவர் தேவ் கணல் 35 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரொஹானத் தௌல்லா போசன் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷெய்க் பாவெஸ் ஜிபொன் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 25.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. துடுப்பாட்டத்தில் ஆரிபுல் இஸ்லாம் ஆட்டம் இழக்காமல் 59 ஓட்டங்களையும் ஜிஷான் அலாம் 55 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சுபாஷ் பண்டாரி 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/175280
  7. Published By: RAJEEBAN 31 JAN, 2024 | 11:44 AM போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர் என நினைத்து தொற்றுநீக்கியை அருந்தியதால் இந்திய அணிவீரர் மயங்அகர்வால் கடும் உடல்நிலை பாதிப்பை எதிர்கொண்டமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மயங்அகர்வால் ரஞ்சிடிரொபி போட்டிகளிற்காக விமானத்தில் பயணிக்கவிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்டிகோவிமானசேவையின் விமானத்தில் மயங்அகர்வால் போத்தலில் அடைக்கப்பட்டுள்ள குடிநீர் என நினைத்து அவர் தொற்றுநீக்கியை அருந்தினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. உடனடியாக அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது அவர் வாந்தியெடுத்தார் இதனை தொடர்ந்து அவரை விமானத்திலிருந்து இறக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிரகிசிக்சை பிரிவில் அனுமதித்தனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மயங் அகர்வாலின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் அவரை பெங்களுரில் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவர்கள் அனுமதிக்கலாம் என இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விமானத்தில் மயங்அகர்வால் அமர்ந்திருந்த ஆசனத்தின் முன்னால் சிறிய போத்தல் ஒன்று காணப்பட்டது அது தண்ணீர் என நினைத்து அவர் அதனை அருந்தியுள்ளார் உடனடியாக அவர் எரிவை உணர்ந்துள்ளார் வாயில் புண்கள் மற்றும் வீக்கம் காணப்பட்டன என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/175214
  8. சட்டத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் இன்னும் சிறை கொட்டடியில் வாடுகின்றோம்; முருகன், ராபர்ட்பயஸ் தமிழக முதலமைச்சருக்கு கடிதம்; கால வரையறையற்ற உண்ணாவிரதம்! Published By: RAJEEBAN 01 FEB, 2024 | 11:14 AM திருச்சி சிறப்பு முகாமில் உரிமைகளும் உணர்வுகளும் பறிக்கப்படுவதாக கூறி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக முருகன் ராபர்ட் பயஸ் அகியோர் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். இந்த கடிதத்தில் இருவரும் தெரிவித்துள்ளதாவது, "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில்இ ஏறக்குறைய ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டோம். சட்டத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் இன்னும் சிறை கொட்டடியில் இருந்து விடுவிக்கப்படவில்லை. சிறப்பு முகாம் எனப்படும் மற்றொரு சிறையில் அடைத்தார்கள். திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் ராபர்ட் பயஸ் ஜெயக்குமார்இ சாந்தன் முருகனும் அடைத்து வைக்கப்பட்டுள்ளோம். சிறப்பு முகாம் எனப்படுவது சிறையை விட கொடுமையானதாக இருக்கிறது. இங்கு நடைபயிற்சி செய்வதற்கோ நண்பர்களை பார்ப்பதற்கோ முடியவில்லை. சிறைவாசிகளோடு பழகுவதற்கு கூட எந்தவித அனுமதியும் வழங்கப்படுவதில்லை. சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து பல மாதங்கள் ஆரம்பத்தில் அறையிலேயே தங்க வைக்கப்பட்டதால் பல நோய்களுக்கு உள்ளாகி உள்ளனர். எங்களது உடல் நலத்தை சரி செய்ய நடைபயிற்சி செய்ய அனுமதி கேட்டும்இ இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இதனால் நோய்வயப்பட்டுள்ளோம். கடந்த மாதம் திருச்சி அரசு மருத்துவமனை சென்று ஆய்வு செய்த போது ரத்த அழுத்தம் கொழுப்பு சிறுநீரகக் கல் மூட்டு வலி இருப்பதாக மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். அதனால் கடந்த 22.1.2024 ஆம் தேதி அன்று மீண்டும் மாவட்ட ஆட்சியருக்கு நடைப்பயிற்சி செய்யவும் விளையாடவும் அனுமதி கேட்டு கடிதம் எழுதியும் இதுவரை எந்தவித பதிலும் இல்லை. இந்த முகாமில் எங்களது உரிமைகளுக்கோ உணர்வுகளுக்கோ எந்த மதிப்பும் இல்லை. இதனால் தான் சாந்தன் உடல்நலக் குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதே நிலை தொடர்ந்தால் நாங்கள் இங்கேயே இறப்பது உறுதி. எங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் அதற்கு இங்குள்ள அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும். அகதிகள் நேரடியாக பிற நாடு செல்வதற்கு இலங்கை அரசு பாஸ்போர்ட் வழங்கிட அனுமதி வழங்கி வருகிறது. அதற்கு இலங்கை தூதரகம் அழைத்து போய் கடவுச்சீட்டு பெறவும் அனுமதி கேட்டுள்ளோம். இதுவரை எந்த பதிலும் கிடைக்காததால் வேறு வழியின்றி இன்று முதல் கால வரையற்ற உண்ணா மறுப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்" என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய கோரியும் சிறப்பு முகாமை இழுத்து மூடக் கோரியும் நாம் தமிழர் கட்சியின் தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான சீமான் தலைமையில் வருகின்ற பிப்.3 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/175291
  9. 01 FEB, 2024 | 10:58 AM தொடர்ந்து தமிழர்களை அரசு ஏமாற்றுவதால் எதிர்வரும் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (01) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் பேரினவாத ஆட்சியாளர்கள் கடந்த 76 வருட காலமாக தமிழர்களின் அரசியல் உரிமைக்கான நீதியான கோரிக்கைகளை ஏற்காது தீர்வு என தொடர்ந்து ஏமாற்றுகின்றனர். தமிழர்களின் தாயகத்தை பல்வேறு வகைகளில் ஆக்கிரமித்து அவர்களை அவர்கள் சொந்த நிலத்திலேயே அன்னியர்கள் ஆக்கும் முயற்சியை தீவிரபடுத்தியும் உள்ளனர். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அரசியல் செயற்பாட்டாளர்களை எப்போதும் கைது செய்யும் நிலை தொடர்கின்றது. படையினரின் கட்டுப்பாட்டுக்குள் நிலமும், மக்களும் வைக்கப்பட்டுள்ளனர். யுத்த குற்றங்கள் மூடி மறைக்கப்படுகிறன. அதற்கான நீதியை சர்வதேசமும் காலம் தாழ்த்தி வருவது என்பது நீதியை கொலைக்கு உட்படுத்தும் செயலாகும். இவை எல்லாவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் பெப்ரவரி 4 ம் திகதி வடகிழக்கு எங்கும் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி நடாத்தப்படவிருக்கும் அறவழிப் போராட்டத்திற்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தனது பூரண ஆதரவை தெரிவிப்பதோடு சிவில் சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றது. சுதந்திரம் கிடைத்ததாக பெருமிதம் கொண்ட ஆண்டின் முதலாவது நாடாளுமன்றிலேயே மலையக மக்களின் வாக்குரிமையை பறித்து அடுத்த ஆண்டில் குடியுரிமை சட்டம் கொண்டு வந்து அவர்களை அரசியல் அனாதைகளாக்கி மகிழ்ந்தனர். அதன் நீட்சியாக 1964 சினிமா- சாஸ்திரி ஒப்பந்த மூலம் அவர்களை ஆடு, மாடுகளாக சிதைத்து இன அழிப்பை மேற்கண்டவர்கள் கடந்த இருநூறு ஆண்டு காலமாக தொடர்ந்தும் அவர்களை கூலிகளாக பார்ப்பதோடு அவர்கள் இரத்தம் சிந்தி உருவாக்கிய மலையகம் எனும் தேசத்திற்கு அவர்களை தூரமாக்கி நில உரிமை அற்றவர்களாக வைத்துள்ளதோடு அவர்களுக்கு எதிராக சலனமற்ற இன அழிப்பையும் முன்னெடுத்து வருகின்றனர். வடகிழக்கு தமிழர்களின் தாயக கோட்பாட்டை சிதைக்க பேரினவாத குடியேற்றத்தை 1940 களிலிருந்து விரிவுபடுத்தியவர்கள் ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டதை தொடர்ந்தும் அரச பயங்கரவாதத்தின் ஆயுதமான படையினரின் துணையோடும், மதவாத காவி உடை தரித்தோரின் துணையோடு பலவந்தமாக பௌத்த மயமாக்கலையும் அரச தரப்பினர் மௌனமாக அங்கீகரித்து அதனை வேகப்படுத்திடவும் அனுமதித்துள்ளனர். வடக்கில் சமூக புதைகுழிகள் பல கண்டுபிடிக்கப்பட்ட போதும் அவை எழுப்பும் குரலுக்கு ஆட்சியாளர் செவிமடுக்க மறுக்கின்றனர். அவற்றுக்கான நீதியும் மௌனிக்கப்பட்டுள்ளது. அதேபோன்றே கணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் நிலையும் இன்று உள்ளது. தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாத தடை சட்டம் கொண்டுவரப்பட்டு அரசியல் ரீதியில் அடக்குமுறை விரிவுபடுத்தப்பட்டபோது அதற்கு ஆதரவை தெரிவித்த தெற்கின் சமூகம் தற்போது நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்பு சட்டத்தை தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அரசாங்கம் கொண்டு வர உள்ள நிலையில் சுதந்திரம் பறிக்கப்படுவதாக இருளுக்குள் தள்ளப்படுவதாக குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர். சுதந்திரம் என்பது ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் தமக்கு மட்டும் சொந்தமாக்கி கொண்டுள்ளனர் என்பதை தெற்கில் சமூகம் தற்போதைய அரசியல் பொருளாதாரம் சமூக சூழ்நிலையில் உணரத் தொடங்கியுள்ளது அவர்களின் எதிர்காலம் இருளுக்கு செல்வதாக சிந்திக்க தொடங்கி உள்ளனர். இதனையே கடந்த 76 ஆண்டு காலமாக தமிழர்கள் உரத்து கூறி வந்திருக்கின்றார்கள். அதனை மீண்டும் அழுத்தி கூறுவதற்கு எதிர்வரும் 4 ம் திகதியை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி நடத்தப்படவருக்கும் அறவழி போராட்டம் தெற்கின் சமூகத்திற்கு விழிப்பு ஏற்படுத்தும் என எதிர்பார்ப்போம். அவர்கள் விழித்துக் கொண்டு தமிழர்களோடு இணைந்தால் மட்டுமே அவர்களுக்கும் முழு நாட்டுக்கும் எதிர்காலம் உண்டு. சுபீட்சம் உண்டு என்றார். https://www.virakesari.lk/article/175286
  10. 18 இந்திய மீனவர்கள் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை Published By: DIGITAL DESK 3 01 FEB, 2024 | 10:03 AM இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 18 இந்திய மீனவர்கள் புதன்கிழமை (31) மன்னார் நீதி மன்றத்தினால் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தினால் மன்றில் இன்றைய தினம் 3 குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டது. பணிப்பாளரின் அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டமை, இலங்கை கடற்பரப்பில் கடற் தொழிலில் ஈடுபட்டமை மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவை மடி தொழில் முன்னெடுத்தமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டது. குறித்த குற்றச்சாட்டுக்களை விசாரணைக்கு உட்படுத்திய நீதவான் 1 ஆம் மற்றும் 2 ஆம் குற்றச்சாட்டுகளுக்கு 12 மாதங்களும், 3 ஆவது குற்றச்சாட்டுக்கு 6 மாதங்களுக்கு விதிக்கப்பட்டு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை வழங்கப்பட்டு இவர்களை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். மேலும், படகிற்கு குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படவுள்ளது. இதன்போது அன்றைய தினம் படகின் உரிமையாளர் மன்றில் முன்னிலையாகுமாறு மன்று கட்டளை பிறப்பித்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட 18 இந்திய மீனவர்களும் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஊடாக மிரிஹான நிலையத்துக்கு அனுப்பப்பட்டு நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கடல் பகுதியை அண்மித்த கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்து இரண்டு டோலர் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் 18 பேர் கடந்த 16ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைதான 18 கடற் தொழிலாளர்களும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு டோலர் படகுகளும் கடற்படையினரால் தாழ்வுபாடு கடற்படை முகாமுக்கு கொண்டுவரப்பட்டன. அதன்பின்னர் 18 கடற் தொழிலாளர்களும் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணைகளின் பின்னர் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் 17 ஆம் திகதி புதன்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/175284
  11. 31 JAN, 2024 | 04:44 PM (இராஜதுரை ஹஷான்) டெலிகொம் நிறுவனத்தின் 53.23 சதவீத பங்குகளை போட்டித்தன்மையான இந்தியாவின் ஜியோ பிளாட்போர்ம் நிறுவனம், சீனாவின் கொட்யுன் இன்டர்நெஷனல் இன்வெஷ்ட்மன்ட் ஹோல்டிங் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதி மற்றும் பொருளாதார ஸ்தீரப்படுத்தல் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, டெலிகொம் நிறுவனத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 50.23 சதவீதமான பங்குகளை விற்பனை செய்யும் இறுதி தீர்மானத்தில் சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்துள்ளது. இதற்கமைய அமைச்சு மட்டத்தில் துறைசார் குழுக்கள் நியமிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை பெற்றுக்கொள்வதற்கு இந்தியாவின் ஜியோ பிளாட்போர்ம் நிறுவனம், சீனாவின் கொட்யுன் இன்டர்நெஷனல் இன்வெஷ்ட்மன்ட் ஹோல்டிங் நிறுவனம், ஐக்கிய இராச்சியத்தின் லய்கா கூட்டிணைவுக்கு சொந்தமான பெட்டிகோ கொமர்ஷியோ இன்டர்னெஷனல் நிறுவனம் என்பன முன்னிலையாகியிருந்தன. இதற்கமைய நிதி அமைச்சின் செயற்திட்ட விசேட குழு மற்றும் அமைச்சரவை நியமித்த விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை பெற்றுக்கொள்வற்கு பூரண தகுதி உள்ள போட்டித்தன்மையான நிறுவனங்களாக ஜியோ பிளாட்போர்ம் நிறுவம் மற்றும் சீனாவின் கொட்யூன் ஹோல்டிங் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஜியோ பிளாட்போர்ம் நிறுவனம் இந்தியாவின் கோடிஸ்வர வர்த்தகரும்,முதனிலை தொழிலதிபருமான முகேஸ் அம்பானிக்கு சொந்தமானது. போஃபஸ் வர்த்தக வலைத்தளத்தின் தரப்படுத்தலுக்கு அமைய உலகில் செல்வந்தர்களின் பட்டியலில் முகேஸ் அம்பானி 11 ஆவது இடத்தில் உள்ளார். https://www.virakesari.lk/article/175251
  12. நிகழ்நிலைக் காப்புச் சட்டம் இன்றுமுதல் நடைமுறைக்கு Published By: DIGITAL DESK 3 01 FEB, 2024 | 10:57 AM ஜனவரி மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று வியாழக்கிழமை (01) சான்றுரைப்படுத்தினார். இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2024 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டமாக இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது. https://www.virakesari.lk/article/175293
  13. இலங்கைக்கு ஏமாற்றம்; 3 பந்துகள் மீதம் இருக்க மே.தீவுகளிடம் தோல்வி 30 JAN, 2024 | 10:18 PM (நெவில் அன்தனி) இலங்கைக்குக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் கிம்பர்லி, டயமண்ட் ஓவல் விளையாட்டரங்கில் கடுமையாக மோதிக்கொள்ளப்பட்ட 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண சுப்பர் 6 இரண்டாம் குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் 3 பந்துகள் மீதமிருக்க 3 விக்கெட்களால் இலங்கை தோல்வி அடைந்து ஏமாற்றத்திற்குள்ளானது. 232 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் 49.3 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 232 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. அணித் தலைவர் ஸ்டெஃபான் பஸ்கால் (33), ஸ்டீவன் வெடபேர்ன் ஆகிய இருவரும் 49 பந்துகளில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். பஸ்காலைத் தொடர்ந்து ஜொஷுவா டோன் 7 ஓட்டங்களுடன் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய வெடபேரன், ஜொர்டன் ஜோன்சன் (39) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 86 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்தனர். வெடபேர்ன் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களைப் பெற்றார். எனினும், 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 4 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டதால் (184 - 4 விக்.) மேற்கிந்தியத் தீவுகள் தடுமாற்றத்தை எதிர்கொண்டதுடன் ஓட்ட வேகமும் வெகுவாக குறைந்தது. ஆனால், நேதன் சோலி (27 ஆ.இ.), தாரிக் எட்வர்ட் (11 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 26 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெறுவதை உறுதிசெய்தனர். பந்துவீச்சில் விஷ்வா லஹிரு 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தினுர கலுபஹன, சினேத் ஜயவர்தன ஆகிய இருவரும் தலா 39 ஓட்டங்களுக்கு தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இப் போட்டியில் இலங்கை 8 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்றாகும். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றது. தினுர கலுபஹன, சுப்புன் வடுகே, மல்ஷா தருப்பதி ஆகிய மூவர் 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றதாலேயே இலங்கை நல்ல நிலையை அடைந்தது. இலங்கையின் ஆரம்பம் நான்காவது தடவையாக சிறப்பாக அமையவில்லை. விஷேன் ஹலம்பகே (0), அணித் தலைவர் ஸ்னேத் ஜயவர்தன (11) ஆகிய இருவரும் பிரகாசிக்கத் தவறினர். லீக் சுற்றில் 3 போட்டிகளில் 6 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற புலிந்து பெரேரா இந்தப் போட்டியில் ஓரளவு சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 24 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து சுப்புன் வடுகே 31 ஓட்டங்களையும் தினுர கலுபஹன 53 ஓட்டங்களையும் மல்ஷ தருப்பதி 42 ஓட்டங்களையும் பெற்று அணியை ஓரளவு பலப்படுத்தினர். அவர்களை விட ஷாருஜன் சண்முகநாதன் 14 ஓட்டங்களையும் விஹாஸ் தெவ்மிக்க 15 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கையின் மொத்த எண்ணிக்கைக்கு 23 உதிரிகள் கிடைத்தது. பந்துவீச்சில் ரனெய்க்கோ ஸ்மித் 47 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நேதன் எட்வர்ட் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/175193
  14. இந்தியா வழங்கியதைப் போன்று வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் வெளிநாட்டுக் குடியுரிமை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் எம்.பி மனோ கணேசன் இலங்கை அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். இந்தியச் சட்டம் இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்காது, ஆனால் இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்து வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய வெளிநாட்டுக் குடியுரிமை (ஓசிஐ) அந்தஸ்தை வழங்குகிறது தனது X பதிவில் தெரிவித்துள்ளார். “OCI வைத்திருப்பவர்கள் இந்தியாவில் குடியிருப்பு மற்றும் வணிக சொத்துக்களை வாங்கலாம், ஆனால் விவசாய நிலங்களை வாங்கவோ அல்லது அரசியலில் ஈடுபடவோ முடியாது. அவர்களுக்கு விசா இல்லாத நுழைவு மற்றும் தங்குதல் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. இரட்டைக் குடியுரிமை தொடர்பாக சண்டையிடுவதை நிறுத்திவிட்டு, இந்தியாவை முன்னுதாரணமாக கொள்வோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிட்டத்தட்ட மூன்று மில்லியன் வெளிநாட்டு இலங்கையர்கள், அதாவது, சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள், அவர்களது மனைவி மற்றும் பிள்ளைகள் இலங்கையின் வெளிநாட்டுக் குடியுரிமையாக (OCSL) அங்கீகரிக்கப்பட்டால், இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் OCSL.அது நன்கு வரையறுக்கப்பட்ட பங்கை வழங்கும். “உள்ளடக்க உணர்வுடன் தொந்தரவு இல்லாத பயண பாரம்பரியம் மற்றும் பழக்கவழக்க வருகைகளை இது தீவிரப்படுத்தும், அத்துடன் அந்நிய செலாவணி மற்றும் செயற்திறனை கொண்டு வரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/290087
  15. அயர்லாந்துடனான சுப்பர் 6 போட்டியில் பாகிஸ்தான் 3 விக்கெட்களால் வெற்றி 30 JAN, 2024 | 10:15 PM (நெவில் அன்தனி) அயர்லாந்துக்கு எதிராக பொச்சேஸ்ட்ரூம் சென்வெஸ் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண சுப்பர் 6 முதலாம் குழுவுக்கான இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் 3 விக்கெட்களால் வெற்றியீட்டியது. அயர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 182 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 43.4 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. பாகிஸ்தான் துடுப்பாட்டத்தில் சற்று தடுமாறியபோதிலும் அஹ்மத் ஹசன் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் அரைச் சதம் குவித்து தனது அணி வெற்றி பெறுவதை உறுதிசெய்தார். பந்துவீச்சிலும் அவர் 2 விக்கெட்களை வீழ்த்தி தனது சகலதுறை ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார். ஆரம்ப வீரர்களான ஷாபாஸ் கான் (11), ஷமில் ஹுசெய்ன் (7) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். அஸான் அவாய்ஸ் (21), அஹ்மத் ஹசன் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சற்று தெம்பைக் கொடுத்தனர். எனினும் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 3 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டதால் பாகிஸ்தான் மீண்டும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. அஹ்மத் ஹசன், ஹரூன் அர்ஷாத் (25) ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானுக்கு தெம்பூட்டினர். அர்ஷாத் 6ஆவதாக ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து அரபாத் மின்ஹாஸ் 3 ஓட்டங்களுடன் வெளியேறினார். (162 - 7 விக்.) அஹ்மத் ஹசன், அலி அஸ்பந்த் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி பாகிஸ்தானின் வெற்றியை உறுதிசெய்தனர். அஹ்மத் ஹசன் 57 ஓட்டங்களுடனும் அலி அஷ்பந்த் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் ஹரி டயர் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 48.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றது. அயர்லாந்து துடுப்பாட்டத்தில் ஆறு வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்ற போதிலும் இருவர் மாத்திரமே 30 ஓட்டங்களைக் கடந்தனர். ஜோன் மெக்னலி 53 ஓட்டங்களையும் ஹெரி டயர் 31 ஓட்டங்களையும் பெற்று 7ஆவது விக்கெட்டில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்ததால் அயர்லாந்து கௌரவமான நிலையை அடைந்தது. பந்துவீச்சில் உபைத் ஷா 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அலி ராஸா 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அமிர் ஹசன் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அஹ்மத ஹசன் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: அஹ்மத் ஹசன். https://www.virakesari.lk/article/175192
  16. 31 JAN, 2024 | 04:55 PM பொது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்த பாரிய ஆர்ப்பாட்டத்தின் போது அரசாங்கம் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டது. இதற்கு அரசாங்கம் பெருமளவு பணத்தைச் செலவிட்டுள்ளது. இந்தப் பணத்தை பாடசாலைக் கல்வியை மேம்படுத்துவதற்கு ஒதுக்க முடியுமாக இருந்தால் பெரும் நலன் விளையும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 73 ஆவது கட்டமாக, மாத்தறை திக்வெல்ல மின்ஹாத் தேசிய பாடசாலைக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் புதன்கிழமை (31) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில், உயர் தரம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மற்றொரு சமூக சேவை நிறுவனம் மூலம் ஊதியம் வழங்கப்படும் நாட்டில், கண்ணீர்ப்புகை, தோட்டாக்கள் மற்றும் நீர்த்தாரைகளுக்குத் தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு பணம் செலவிடப்பட வேண்டுமா, இல்லை என்றால் ஆசிரியர் பற்றாக்குறையையும் வளப்பற்றாக்குறையையும் தீர்த்து கல்வித்துறையைக் கட்டியெழுப்புவது குறித்து சிந்திக்க வேண்டும் என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அரச பயங்கரவாதம், அரச மிலேச்சத்தனம், அரச வன்முறை, அரச கெடுபிடிகள் மூலம் ஐக்கிய மக்கள் சக்தியின் பயணத்தை தடுத்து நிறுத்த முடியாது. 220 இலட்சம் மக்களுக்காக வேண்டி, அமைதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் வீதியில் பேராட்டம் நடத்தினாலும், சட்டவிரோத அரசாங்கத்தின் சட்டவிரோத தாக்குதல்களுக்கு உட்பட வேண்டி ஏற்பட்டது. மக்களால் தெரிவு செய்யப்படாத, மக்கள் ஆணை இல்லாத, சட்ட ரீதியான அங்கீகாரம் இல்லாத அரசாங்கமே இவ்வாறான தாக்குதல்களை மேற்கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். ஜனாதிபதி உட்பட தற்போதைய அரசாங்கம் மக்கள் ஆணையில்லாமலயே ஆட்சியை நடத்தி வருகிறது. கண்ணீர் புகை, குண்டாந்தடிகள், பொலிஸ் மிரட்டல், அரச பயங்கரவாதம் என்பவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக, நாட்டிலுள்ள 10126 பாடசாலைகளில் கற்கும் 41 இலட்சம் மாணவ மாணவிகளின் மனித மற்றும் அடிப்படை உரிமைகளில் கவனம் செலுத்துங்கள். குறைபாடுகள், எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து கனம் செலுத்துங்கள். நாட்டின் 220 இலட்சம் மக்களுக்காக வேண்டி, உரத்து குரல் எழுப்பிய மக்களின் மனித உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் அரசாங்கம் மீறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். அரச பயங்கரவாதத்திற்கு மட்டுமே இந்த அரசாங்கம் கெட்டித்தனம். இந்த அரசாங்கம், வருடத்தின் 365 நாட்களும் அரச வன்முறை, அரச பயங்கரவாதம், அரச மிருகத்தனத்தை பிரயோகித்து மக்களின் வாயை மூடச் செய்யும் விடயத்திலயே கெட்டித்தனம் காட்டி வருகிறது. தெளிவாக, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், கல்விச் சுதந்திரம் உட்பட அனைத்து சுதந்திரங்களும் வழங்கப்பட்டு, எந்த சவாலையும் எதிர்கொண்டு, உலகிற்கு ஏற்ற உயர்தர கல்வி முறையை ஸ்தாபித்து, வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கையை முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/175257
  17. 31 JAN, 2024 | 09:54 PM எரிபொருள் விலையில் இன்று புதன்கிழமை (31) நள்ளிரவு முதல் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் ஐ.ஓ.சி. நிறுவனமும் அறிவித்துள்ளன. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு்ள்ள நிலையில் அதன் புதிய விலை 371 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவல் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன்புதிய விலை 456 ரூபாவாகும். ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன்புதிய விலை 363 ரூபாவாகும். சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 468 ரூபாவாகும். இதேவேளை, மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 26 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 262 ரூபாவாகும். https://www.virakesari.lk/article/175275
  18. மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை கிராமங்களுக்கே சென்று ஆராயும் நடவடிக்கையை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆரம்பித்துள்ளார். பல கிராமங்களின் மக்களை சனசமூக நிலையங்களூடாக ஒன்றிணைத்து, அவர்களுடன்ஆளுநர் சந்திப்புக்களை நடத்த வடக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய முதலாவது சிநேகபூர்வ மக்கள் சந்திப்பு யாழ்ப்பாணம், அரியாலை கிழக்கு, பூம்புகார் பகுதியில் நேற்று மாலை நடைபெற்றது. அரியாலை கிழக்கு, பூம்புகார், நாவலடி, மணியந்தோட்டம், உதயபுரம் ஆகிய கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சனசமூக நிலையங்களின் அங்கத்தவர்களை ஆளுநர் சந்தித்து கலந்துரையாடினார். மேற்குறித்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்டது. அந்தவகையில், காணி உறுதி இன்மை, வீட்டுத்திட்டம் கிடைக்காமை, கிணறுகள், சிறு குளங்கள் புனரமைக்கப்படாமை, வீதி சீரின்மை, மைதானம் இன்மை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கிராம மக்கள் ஆளுநருடன் கலந்துரையாடினார்கள். இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள், நோயாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கருத்து தெரிவிக்கப்பட்டது. தொழில் இன்மை, பொழுதுபோக்கு செயற்பாடுகளுக்கான வசதிகள் இன்மை, போதைபொருள் பாவனைக்கு அடிமையாதல், பாடசாலை இடைவிலகல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் மக்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர் . மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பில் கேட்டறிந்த ஆளுநர், அபிவிருத்தி திட்டங்கள் கிராம மட்டத்தில் உரிய முறையில் முன்னேடுக்கப்படாமை தொடர்பில் கவலை தெரிவித்தார். கிராமங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், அந்ததந்த கிராம மக்கள் விரும்பி , உரிமை கோரும் செயற்திட்டங்களாக அமைய வேண்டும் என குறிப்பிட்டார். அத்துடன், அரியாலை கிழக்கு, பூம்புகார், நாவலடி, மணியந்தோட்டம், உதயபுரம் ஆகிய கிராமங்களின் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் உள்ளுராட்சி மன்றங்களூடாக மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஆளுநர், அந்த விடயங்கள் தொடர்பில் எழுத்து மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கைகளை சமர்பிக்குமாரும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். https://thinakkural.lk/article/290053
  19. Leap Year வராமல் போனால் என்ன அபாயம் வரும் தெரியுமா? Leap Year Reason Explained
  20. சினிமா போல, குற்றம் நடக்கும் முன்பே கண்டுபிடித்து எச்சரிக்கும் 'செயற்கை நுண்ணறிவு' - எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜேன் வேக்ஃபீல்ட் பதவி, தொழில்நுட்ப செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பல நாடுகளில் காவல் துறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) சேவைகளின் பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வருகிறது. குடும்ப வன்முறையை எதிர்கொண்ட சாரா, உடனடி உதவிக்காக தனது மொபைல் பேசியிலிருந்து அவசர எண்ணை அழைத்தார். தனது முன்னாள் கணவர் வீட்டுக்குள் நுழைய வன்முறையை பிரயோகிப்பதைக் கண்டு அவர் திகிலடைந்தார். கால் சென்டர் நபரிடம் சாரா பேசும்போது ஏ.ஐ. மென்பொருள் அமைப்பு அவருடைய அழைப்பை படியெடுக்கிறது. அவர் பேசுவது அனைத்தும் பிரிட்டன் காவல் துறையின் தரவுத்தளத்தில் சேமிக்கப்படும். சாரா தனது முன்னாள் கணவரின் முழுப்பெயர் மற்றும் பிறந்த தேதியை சொன்னவுடன், ஏ.ஐ. மென்பொருள் சாரா அளித்த விவரங்களுடன் தரவுத்தளத்தைத் தேடி அவரது முன்னாள் கணவரின் விவரங்களைக் கண்டறியும். அதில், சாராவின் முன்னாள் கணவருக்கு துப்பாக்கி உரிமம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தவுடன் விரைவிலேயே அவருக்கு உதவச் சென்றனர். மேலே கூறப்பட்ட சம்பவம் உண்மையில் நடக்கவில்லை. ஆனால், 2023-ம் ஆண்டில், ஏ.ஐ. அவசர அழைப்பு மென்பொருள் சேவையின் மூன்று மாத சோதனை ஓட்டத்தின் போது ஹம்பர்சைட் காவல்துறை அத்தகைய ஒரு முன்மாதிரி சோதனையை நடத்தியது. பட மூலாதாரம்,KAMILA HANKIEWICZ படக்குறிப்பு, ஏ.ஐ. ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் இணை-இயக்குனர் கமிலா நேரத்தை சேமிக்கும் தொழில்நுட்பம் ஏ.ஐ. ஸ்டார்ட்-அப் நிறுவனமான அன்ட்ரைட் (Untrite) உருவாக்கிய இந்த மென்பொருளின் உதவியுடன், காவல்துறை ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான அழைப்புகளை ஏற்கவும் அவற்றை பகுப்பாய்வு செய்து திறமையாகவும் விரைவாகவும் செயல்பட உதவும் என்று அந்நிறுவனம் கூறுகிறது. இந்த மென்பொருளை உருவாக்க, ஹம்பர்சைடில் இரண்டாண்டு காலப் பகுதியை உள்ளடக்கிய குடும்ப வன்முறை வழக்குகள் பற்றிய தரவு சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி கமிலா கூறுகையில், “நாங்கள் உருவாக்கிய ஏ.ஐ. மென்பொருள், ஆபரேட்டர்களுக்கு உதவியாளராக செயல்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் உழைப்பையும் மிச்சப்படுத்துகிறது. அந்த நேரத்தில் அவர்கள் திறமையாக வேலை செய்ய உதவுகிறது,'' என்றார். இந்த மென்பொருள் பெரியளவிலான தரவை பகுப்பாய்வு செய்கிறது. ஒவ்வொரு அழைப்புக்கும் ஆடியோ பதிவை படியெடுத்து, பகுப்பாய்வு செய்து அதன் அடிப்படையில் அந்த அழைப்பின் முன்னுரிமையை தீர்மானிக்கிறது. அதற்கேற்ப மதிப்பெண்களையும் வழங்குகிறது. அதன் முடிவைப் பொறுத்து, காவல்துறை அதிகாரிகள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளைப் பெறுவர். குறைந்த, நடுத்தர மற்றும் அதிக மதிப்பெண்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதிக மதிப்பெண் என்றால் காவல் துறை அதிகாரி ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்குள் அழைப்பு வந்த இடத்தை அடைய வேண்டும். அன்ட்ரைட் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த மென்பொருள் ஆபரேட்டர்களின் நேரத்தை மூன்றில் ஒரு பங்கு வரை சேமிக்கும். மேலும், ஒவ்வொரு அழைப்புக்கும் ஒதுக்கப்படும் நேரம் குறைக்கப்படுகிறது என்கிறார் கமிலா. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "இந்த மென்பொருள் ஆபரேட்டர்களின் நேரத்தை மூன்றில் ஒரு பங்கு வரை சேமிக்கும்." எதிர்பாராத சேவை இந்த ஏ.ஐ தொழில்நுட்பத்தை பலகட்ட சோதனை செய்த பிறகு, இதன் அடுத்த கட்டம் நேரடி கண்காணிப்பு தான். இதற்காக ஏற்கனவே அன்ட்ரைட் நிறுவனம் அவசர சேவைகள் மற்றும் காவல்துறையை அணுகியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு காவல்துறை விசாரணைகள் மற்றும் வழக்குகளின் தீர்வை கண்டறிதலில் உதவும் திறன் உள்ளது. குறிப்பாக இதனால் மனிதர்களை விட வேகமாக தரவுகளை அலசி ஆராய முடியும். ஆனால், சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக தவறுகளும் நடக்கும். உதாரணத்திற்கு, அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்ட ஏ.ஐ. அடிப்படையில் முகத்தை அடையாளம் காணக் கூடிய தொழில்நுட்பத்தால் கறுப்பின மக்களை அடையாளம் காண முடியவில்லை. மேலும் ஏ.ஐ தொழில்நுட்பம் செய்த தவறால் சில நிரபராதிகளும் கூட கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ மற்றும் சியாட்டில் போன்ற நகரங்களில் அதன் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அமெரிக்காவின் அட்லாண்டிக் பகுதிகளில் காவல்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால் ஆல்பர்ட் கானுக்கு இதுபோன்ற பல மாற்றங்கள் மகிழ்ச்சி அளிக்கவில்லை. இவர் அமெரிக்க கண்காணிப்பு தொழில்நுட்ப மேற்பார்வைத் திட்டத்தின் (Surveillance Technology Oversight Project - STOP) கண்காணிப்புக்கு எதிரான அழுத்தம் கொடுக்கும் குழுவின் தலைவர் ஆவார். இதுகுறித்து பேசும்போது, “முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் மீது அதிக பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த தொழில்நுட்பமோ பல வழக்குகளில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றாலும் கூட, கறுப்பின மக்கள், லத்தீன் மக்கள் மற்றும் ஆசியர்களுக்கு எதிரான அணுகுமுறையோடு செயல்படுகிறது. இதனாலேயே இந்த தொழில்நுட்பம் ஒன்றும் செய்யாதவர்களையும் கூட தவறு செய்தவர்கள் என்ற முடிவுக்கு வந்து விடுகிறது” என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அட்லாண்டிக் பகுதிகளில் காவல்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. குற்ற வழக்குகளில் ஏ.ஐ. எவ்வாறு உதவுகிறது? மூன்று முக்கியமான கோணங்களில் செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஒன்று நேரலையில் முகத்தை அடையாளம் காணுதல். இதன் மூலம் ஒரு நபரின் முகத்தை படம் பிடித்து, தன்னிடம் உள்ள தரவுகளில் அதை சோதனை செய்து, உடனடியாக அந்த நபர் குறித்த விவரங்களை அது தருகிறது. இரண்டாவது, பழைய வரலாற்றில் இருந்து அந்த முகத்தை அடையாளம் காணுதல். தரவு தளத்தில் உள்ள ஆயிரக்கணக்கான படங்களுடன் ஒருவரின் முகத்தை பொருத்திப் பார்த்து அதை அடையாளம் காணுதல். மூன்றாவது, ஆப்பரேட்டர் மற்றும் முக அடையாளம் மூலம் சந்தேகத்திற்கிடமான நபரின் முழு விவரங்களை தெரிந்து கொள்வது. இதில் ஆபரேட்டர் குறிப்பிடும் நபரின் போட்டோவை தரவுத்தளத்தில் தேடி அவர் குறித்த முழு விவரங்களை கொடுக்கும். 2023 அக்டோபர் மாதம், இங்கிலாந்து காவல்துறை அமைச்சர் கிறிஸ் பிலிப்ஸ், “இங்கிலாந்து காவல்படையில் அடுத்த இரண்டு வருடத்திற்குள் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை இரண்டு மடங்கு அதிகரிக்க போகிறோம்” என்று தெரிவித்திருந்தார். அதே சமயம், இங்கிலாந்தின் நேஷனல் பிஸிக்கல் லேப் (NPL) மாநகர மற்றும் சவுத் வேல்ஸ் காவல் துறையினரால் பயன்படுத்தப்பட்ட மூன்று வெவ்வேறு ஏ.ஐ மாதிரிகளை சோதித்து பார்த்தது. அவர்களது பரிசோதனையின்படி, இந்த செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த புதிய தொழில்நுட்பத்தை மதிப்பீடு செய்ய வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை நெறிமுறைக் குழு ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த குழுவின் தலைவராக நார்த்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மரியன் ஓஸ்வால்ட் பொறுப்பு வகிப்பார். இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அவர், “இந்த சோதனைக்காக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சந்தேகப்படும் நபரை போட்டோ எடுக்க வேண்டும். அதன்பிறகு இந்த தொழில்நுட்பம் எப்படி அவரது தகவல்களை தேடுகிறது என்பதை குழு சோதனை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழு எதிர்காலத்தில் நடக்கப்போகும் குற்றங்களை, ஒரு வாரத்திற்கு முன்பே 90% துல்லியமாக கணிக்கும் அல்காரிதம் ஒன்றை உருவாக்கியுள்ளது. குற்றம் நடக்கும் முன்பே கண்டுபிடித்து தடுக்க முடியுமா? குற்றங்களை தடுப்பதிலும் கூட செயற்கை நுண்ணறிவின் பங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எந்தெந்த பகுதிகளில் குற்றம் அதிகம் நடக்கும்?, யாரெல்லாம் அந்த குற்றங்களில் அதிகம் ஈடுபடுகிறார்கள்? உள்ளிட்ட விவரங்களை தரவுத்தளத்தில் வைத்திருப்பதால், முன்பே இந்த தகவல்களை ஆராய்ந்து குற்றங்கள் நடப்பதை கணித்து அவற்றை தடுக்க ஏ.ஐ. தொழில்நுட்பம் முக்கியமானதாக இருக்கும். 2002 இல் வெளியான அறிவியல் புனைகதை திரில்லர் படமான 'மைனாரிட்டி ரிப்போர்ட்' இந்தக் கருவை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அந்த கற்பனை கதையை அப்படியே உண்மையாக்கிவிட்டது. சிகாகோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஒரு குழு எதிர்காலத்தில் நடக்கப் போகும் குற்றங்களை, ஒரு வாரத்திற்கு முன்பே 90% துல்லியமாக கணிக்கும் செயல்முறை ஒன்றை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து கூறும் கான், அந்த மென்பொருள்கள் அனைத்தும் தன்னிச்சையான வரலாற்றுத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை என்கிறார். “இதுபோன்ற பல மென்பொருள் செயலிகள் அமெரிக்காவில் இருப்பதாகவும், அவை அனைத்துமே எதிர்கால குற்றங்கள் குறித்து எச்சரிக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும்” அவர் கூறுகிறார். இவ்வளவு தொழில்நுட்பங்கள் இருந்தும் கூட, அமெரிக்காவில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகம். பேராசிரியர் மரியன் கூறுகையில், “எதிர்காலத்தில் வரும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான மென்பொருள்கள் பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டிருக்கும். இன்னும் விரிவாக சொல்ல வேண்டுமெனில், இந்த தொழில்நுட்பம் உண்மையில் நடக்கப் போகும் குற்றங்களை முன்கூட்டியே எச்சரிப்பதில்லை, ஆனால் மென்பொருளில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து குற்றங்கள் நடக்கலாம் என்ற சாத்தியத்தை தான் கணிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கிறார். மேலும், இங்கு அடையாளம் காணப்பட வேண்டிய பிரச்னை என்னவெனில், கடந்த காலங்களில் ஏற்கனவே குற்றங்களில் ஈடுபட்டவரின் தரவுகள், தற்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள நபரின் தரவுகளோடு ஒப்பிடப்படுகிறது. குறைந்தபட்ச தகவல்களை வைத்துக்கொண்டு, இதர காரணங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், இவர்தான் குற்றவாளி என்ற முடிவுக்கு வர முடியாது” என்கிறார் அவர். இருப்பினும், குற்றங்களை தடுக்கவும், வழக்குகளுக்கு தீர்வை கண்டறியவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/c72gkd2g14do
  21. அம்மாவும் நீயே அப்பாவும் நீயே....
  22. நண்பன் ஆனந்தழகனும் அவனது அம்மாவும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டனர். அன்றிரவு அந்த இடத்தால் குடும்பத்தோடு நடந்து(மானிப்பாய் சேர்ச் என நினைத்திருந்தோம்) ஆனைக்கோட்டை மூத்தவிநாயகர் கோவிலருகில் இருந்த பாடசாலையில் தங்கினோம். அடுத்த பகல் அவ்விடத்திற்கு மிக அருகில் மீண்டும் ஒரு தடவை ஆகாயத்தில் இருந்து குண்டு வீசப்பட்டது, அந்த சத்தத்தில் அப்பிடியே முகத்தடிய நிலத்தில் வீழ்ந்தது நல்ல நினைவு.
  23. இலங்கை மின்சார சபையினால் அமுல்படுத்தப்பட்ட மேற்கூரை சோலர் பேனல் நிறுவும் திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டில் தேசிய மின்கட்டமைப்பில் 630 மெகாவாட்கள் இணைக்கப்பட்டுள்ளன. இலங்கை முழுவதிலும் உள்ள மின்சார நுகர்வோர் இந்த தனித்துவமான தேசிய நோக்கத்திற்கு ஆதரவளித்துள்ளனர் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள CEB தெரிவித்துள்ளது. மின்சாரத்தைப் பயன்படுத்தும் பாரம்பரிய முறையிலிருந்து விலகி, புதிய தொழில்நுட்ப அனுபவத்தின் மூலம் தேசிய மின்கட்டமைப்பிற்கு மின்சாரத்தை விற்பனை செய்வதில் நுகர்வோர் திரும்பியதற்காக CEB மேலும் பாராட்டியுள்ளது. https://thinakkural.lk/article/290083

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.